PDA

View Full Version : வெளிச்சம் தேடி....!!

பூமகள்
24-08-2007, 07:00 AM
http://img26.picoodle.com/img/img26/9/10/7/f_meenavanpoom_bd51c34.jpg

இருட்டு அப்பிய
இரவு நேரம்..

அலையும் தூங்கும்..
அந்திச் சாமம்..

ஆழ்கடல் அருகே..
தனியே பயணம்
துடிப்பே துணையாய்..

உப்புக் காற்றும்
உவர்ப்புக் கொண்டே
உறங்கும் மெல்ல..

வெள்ளிப் பரள்கள்
வான முகட்டில்
வந்து வந்து
வெளிச்சம் காட்டும்...!!

விண்ணில்
நகபதி நகர்வலம்..
நட்சத்திரத் திருவிழா..!!

வெளிச்சம் பிடிக்க..
வலையை வீசியேன்..
விண்ணை நோக்கி....

முகிலில் மாட்டிய
விண்மீன்களாய்..
வலையில் சிக்கின
வண்ணமீன்கள்..!!

சிவா.ஜி
24-08-2007, 07:24 AM
பிரமாதம் பூமகள்...அருமையான முன்னிரவு வர்ணனைகள்.

ஆழ்கடல் அருகே..
தனியே பயணம்
துடிப்பே துணையாய்..

துடுப்பே துணை என்பதற்கு பதிலாய் துடிப்பே துணை என்று பாவித்திருப்பது அசத்தல் சிந்தனை.
முகிலில் மாட்டிய
விண்மீன்களாய்..
வலையில் சிக்கின
வண்ணமீன்கள்..!!
இதை......
முகிலில் மறைந்த
வின்மீன்கள்
வலையில் சிக்கின
வண்ண மீன்களாய்...

இப்படி எழுதினால் எப்படி இருக்கும்...?அழகான கவிதை,ரம்மியமான சூழலை காட்சியாய் முன்னிறுத்துகிறது,தேர்ந்த வரிகள்..வாழ்த்துக்கள் பூமகள்.

பூமகள்
24-08-2007, 07:32 AM
பிரமாதம் பூமகள்...அருமையான முன்னிரவு வர்ணனைகள்.
முகிலில் மறைந்த
வின்மீன்கள்
வலையில் சிக்கின
வண்ண மீன்களாய்...

இப்படி எழுதினால் எப்படி இருக்கும்...?அழகான கவிதை,ரம்மியமான சூழலை காட்சியாய் முன்னிறுத்துகிறது,தேர்ந்த வரிகள்..வாழ்த்துக்கள் பூமகள்.

ஆகா...அருமையான கவித்திறன் சிவா.ஜி அவர்களே... :062802photo_prv:கடைசி வரிகள் அசத்தி விட்டீர்கள்... அழகாய் இருக்கிறது உங்களின் சொல்லாடல்..:smartass:
நன்றிகள் சகோதரரே..!

அமரன்
24-08-2007, 09:08 AM
கவிதையின் வர்ணனையையும் வனப்பையும் சிவா அட்சரசுத்தமாக சொல்லி என்னையும் என்னால் பூமகளின் கவிதை கடித்துக்குதறப்படுவதையும் காப்பாற்றி விட்டார் சிவா.
நெய்தலின் உயிர்வாயுவான வலை வீசுவதை கவித்துவமாக சொன்னமைக்கு பாராட்டுக்கள் பூமகள். துள்ளும் மீன்கள் சிமிட்டும் உடுக்களாக...ஒப்புமை நன்றி...வலை வீசுகையில் அடிவானை நோக்கி வீசப்படுவதை அழகாக சொன்னது மிகச் சிறப்பு. தலைப்பு முத்தாய்ப்பு. அதுவே போதும் கவிதையின் கரு சொல்ல. நெய்தலின் வலி சொல்ல. தொடருங்கள்.

பூமகள்
24-08-2007, 09:26 AM

நன்றிகள் அமர் அண்ணா.:nature-smiley-003:

ஷீ-நிசி
24-08-2007, 09:36 AM
ரொம்ப நல்லாருக்கு பூமகள்... வாழ்த்துக்கள்!

இலக்கியன்
24-08-2007, 11:14 AM
நெய்தல் காட்சி மிகவும் அற்புதம் நானும் பயணித்த அனுபவம் பெற்றேன் வாழ்த்துக்கள் சகோதரி. தொடரட்டும் உங்கள் கவிதைகள்

பூமகள்
24-08-2007, 11:24 AM
ரொம்ப நல்லாருக்கு பூமகள்... வாழ்த்துக்கள்!

ரொம்ப நன்றிங்க ஷீ−நிசி அண்ணா.

இணைய நண்பன்
24-08-2007, 11:44 AM
வாழ்த்துக்கள் பூமகள்

Narathar
24-08-2007, 11:50 AM
வாழ்த்துக்கள் நன்றாக இருக்கிறது பூ மகள்

பூமகள்
24-08-2007, 12:15 PM
நெய்தல் காட்சி மிகவும் அற்புதம் நானும் பயணித்த அனுபவம் பெற்றேன் வாழ்த்துக்கள் சகோதரி. தொடரட்டும் உங்கள் கவிதைகள்

நன்றி நண்பரே... தொடர்ந்து விமர்சியுங்கள்..!! :nature-smiley-003:

ஓவியன்
24-08-2007, 12:51 PM
பூமகள் கவிதை என்பது ஒவ்வொருவரது மனம், சூழலுக்கு ஏற்றபவே வெளிப்படும் என்பது தான் எவ்வளவு உண்மை.........

உங்கள் கவிதையில் இயற்கையழகும் ரம்மியமும் கொஞ்சி விளையாடுகிறது, ஆனால் உண்மையில் மீனவரது வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது............
கடலிலே இறங்குவார், மீளக் கரையேறுவோமோ என்ற நம்பிக்கையையும் கரையிலே வைத்து விட்டுத் தான் கடலிலே இறங்குகின்றனர்..........
அந்த நம்பிக்கையைக் கையிலே இருக்கிப் பிடித்தபடி அவர்களது துணைவிமார் கரையிலே தூக்கமின்றி................
அவர்கள் மீள வரும் தருணத்திற்காக கடலிலே விழி வைத்து.........
அப்பப்பா கொடுமையான வாழ்க்கை அது பூமகள்!

அந்த கொடுமை அங்கே இழையோடும் இயற்கை அழகோடு முரணாகவே எப்போதும் இருக்கின்றது...........

இப்போது உங்கள் கவிதைக்கு வருகிறேன் பூமகள், அழகான வரிகள் பூமகள், வரிகளில் நேர்த்தி தெரிகிறது − பாராட்டுக்கள், இன்னமும் நிறையப் படையுங்கள் சகோதரி........!

அக்னி
24-08-2007, 07:56 PM
அலையாடும் கடல் மடியில்,
தாலாட்டப்படும் படகுத் தொட்டில்கள்..,
மீன்கள் நிறைந்து திரும்புவது ரசனை...
ரவைதுளைத்த சடலங்கள் நிறைந்து,
சவப்பெட்டிகளாய்த் திரும்புவது வேதனை...

சமகாலத்தில், இலங்கை, இந்திய தமிழ் மீனவர்கள் அனுபவிக்கும் கொடுமை.
அடையாளம் தெரியாமல், அப்பாவிகளைச் சிதைக்கும் அரக்கர்கள்,
யாரானாலும் வேரறுக்கப்படவேண்டியவர்களே....

அழகுக் கவிதைக்குப் பாராட்டுக்கள் பூமகள்...
அழகுக் கவிதைக்குள் என் மனச்சலனத்தை பதிவாக்கியது,
இந்த இன்பநிமிஷங்கள் மீண்டும் நிரந்தரமாய் வராத என்ற ஏக்கத்திலேயே...

பூமகள்
25-08-2007, 05:02 AM
உங்கள் கவிதையில் இயற்கையழகும் ரம்மியமும் கொஞ்சி விளையாடுகிறது, ஆனால் உண்மையில் மீனவரது வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது............
இப்போது உங்கள் கவிதைக்கு வருகிறேன் பூமகள், அழகான வரிகள் பூமகள், வரிகளில் நேர்த்தி தெரிகிறது − பாராட்டுக்கள், இன்னமும் நிறையப் படையுங்கள் சகோதரி........!
ஆமாம்... ஓவியரே. உண்மை தான்.. மீனவரின் வாழ்க்கை எப்போதும் துன்பம் நிறைந்ததே... ஆழிப்பெருங்கடலில் நித்தம் போராட்டம் அவர்களுக்கு..
தங்களின் பாராட்டுதலுக்கு நன்றிகள் சகோதரரே.. இன்னும் படைக்க உற்சாகம் கொடுக்கிறது.:icon_rollout:

நன்றிகள் ஓவியரே..!

பிச்சி
25-08-2007, 05:28 AM
அக்கா பின்னுறீங்க. (வலையை இல்ல. ) கவிதை ரொம்ப இயல்பா இருக்கு. இயற்கையா இருக்கு...

சாராகுமார்
26-08-2007, 06:11 PM
மீனவர்களின் இதயதுடிப்பை அருமையான கவி மூலமும்,படத்தின் மூலமும் சொல்லியுள்ளீர்.அருமை.

ஓவியன்
26-08-2007, 06:22 PM
அக்கா பின்னுறீங்க. (வலையை இல்ல. ) கவிதை ரொம்ப இயல்பா இருக்கு. இயற்கையா இருக்கு...

ஆகா!

பிச்சி நேற்று மன்றம் வந்தீர்களா?
கண்ணிலேயே படலையே...............?

அமரன்
26-08-2007, 06:23 PM
ஆகா!

பிச்சி நேற்று மன்றம் வந்தீர்களா?
கண்ணிலேயே படலையே...............?

காதுல பூ வைச்சிட்டாங்களோ

இனியவள்
26-08-2007, 06:26 PM
அழகிய கவிதை
சொல்வளம் பூத்துக் குலுங்குகின்றது
வாழ்த்துக்கள் பூமகள்

பூமகள்
27-08-2007, 05:20 AM
அக்கா பின்னுறீங்க. (வலையை இல்ல. ) கவிதை ரொம்ப இயல்பா இருக்கு. இயற்கையா இருக்கு...

நன்றி பிச்சி.. உன் கவிகளை நான் படித்திருக்கிறேன். அழகான சொல்லாடல்கள்.. வியந்துபோய் இருக்கிறேன் பல சமயம். மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கையே...!!:icon_clap:

பூமகள்
27-08-2007, 05:30 AM
மீனவர்களின் இதயதுடிப்பை அருமையான கவி மூலமும்,படத்தின் மூலமும் சொல்லியுள்ளீர்.அருமை.

மிக்க நன்றி தோழரே...!

பூமகள்
05-10-2007, 05:30 AM
வாழ்த்துக்கள் பூமகள்
மிகுந்த நன்றிகள் இக்ராம்.

பூமகள்
05-10-2007, 05:30 AM
வாழ்த்துக்கள் நன்றாக இருக்கிறது பூ மகள்
நன்றிகள் நாரதரே..!!
தொடர்ந்து விமர்சியுங்கள்.

ஆதவா
05-10-2007, 10:14 AM
இருட்டு அப்பிய
இரவு நேரம்..

அலையும் தூங்கும்..
அந்திச் சாமம்..

ஆழ்கடல் அருகே..
தனியே பயணம்
துடிப்பே துணையாய்..

உப்புக் காற்றும்
உவர்ப்புக் கொண்டே
உறங்கும் மெல்ல..

வெள்ளிப் பரள்கள்
வான முகட்டில்
வந்து வந்து
வெளிச்சம் காட்டும்...!!

விண்ணில்
நகபதி நகர்வலம்..
நட்சத்திரத் திருவிழா..!!

வெளிச்சம் பிடிக்க..
வலையை வீசியேன்..
விண்ணை நோக்கி....

முகிலில் மாட்டிய
விண்மீன்களாய்..
வலையில் சிக்கின
வண்ணமீன்கள்..!!

நெய்த நிலத்தொழில் (நன்றி ஜெபிஎல்.)

மீனவருக்கு பொழுதில்லை. சூரியனும் சந்திரந்தான். சந்திரனும் சூரியந்தான். எத்தனையோ இன்னல்களை இடுக்கில் வைத்தலைபவர்களுக்கு இரவு ஒரு இன்னலாய் இல்லை. இரவு அல்லது வைகறை மீன்பிடித் தொழிலுக்கு உகந்த நேரம். மின்னும் நிலவொளி போதும் மீன்களை துடிக்க வைக்க..

அலையும் தூங்கும் அந்திச் சாமம்.

அலை என்றும் தூங்கியதில்லை. இதயத்துடிப்பைப் போலவே! அலை உறங்கிய நேரம் மிக நள்ளிரவாய் எடுத்துக் கொள்ளலாம்.

துடிப்பே துணையாய்..

துடுப்பும் தான்..

விண்மீன்களுக்கு கலைஞர்கள் வலை வீசட்டும். கடல் மீன்களுக்கு வலைஞர்கள் வீசட்டும். மீன்கள் சிக்கினால் இருவருக்குமே நன்று,

வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது. மன்ற வானில் வீசிய "வெளிச்ச" வலைக்கு நன்றாகவே மீன்கள் விழுந்திருக்கின்றன.

பூமகள்
07-10-2007, 06:02 PM
நெய்த நிலத்தொழில் (நன்றி ஜெபிஎல்.)
இரவு அல்லது வைகறை மீன்பிடித் தொழிலுக்கு உகந்த நேரம். மின்னும் நிலவொளி போதும் மீன்களை துடிக்க வைக்க..

வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது. மன்ற வானில் வீசிய "வெளிச்ச" வலைக்கு நன்றாகவே மீன்கள் விழுந்திருக்கின்றன.
மிகுந்த நன்றிகள் ஆதவா... தாமதமாக வந்தாலும் முத்தாய்ப்பாய் விமர்சித்த விதம் அருமை.
உங்களின் பின்னூட்ட ஊக்கத்திற்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.:icon_rollout:

lolluvathiyar
09-10-2007, 08:13 AM
ஒரு மீன் பிடிக்கும் செயலை எவ்வளவு அழகாக கவிதையாய் வடித்திருகிறார் பூமகள்.

பூமகள்
09-10-2007, 08:23 AM
நன்றிகள் வாத்தியார் அண்ணா.
உங்களின் பின்னூட்ட ஊக்கம் கண்டு மிகுந்த மகிழ்ச்சி.