PDA

View Full Version : அன்புத் தோழி



இனியவள்
23-08-2007, 06:10 PM
காற்றடித்தால் கலைந்து போய்
பின் சேர்து கொள்ளும் மேகம்
போன்றதல்ல எம் நட்பு...

ஒரு முறை போனால் திரும்பவும்
உடலோடு வந்து சேராதா
உயிரைப் போன்றது எம் நட்பு..

என் கோபத்தில் கூட துளிர்க்கிறது
உன் மேலான என் அன்பு

இரு கரங்கள் கொண்டு பிண்ணிப்
பிணைக்கப்பட்ட இரு இதயங்களின்
வார்த்தைப் பரிமாறல் எம் நட்பு...

உன் மனதினை நோகடிப்பவர்களை
நான் விரட்டுக்கின்றேன் என் மனதில்
இருந்து என் உறவாய் இருந்தாலும்
இந்தக் கோபம் வேண்டாம் என்கின்றாய் நீ
அடிப் போடி என் கோபமே உன்மேலான
அன்பின் நிமித்தம் உருவானதல்லவா...

வயது பார்த்து வசதி பார்த்து உருவம் பார்த்து
வந்ததல்ல எம் நட்பு - என் கண்கள்
உன் உருவத்தை நேரில் கண்டதில்லை இதுவரை
என் இதயம் ஓவ்வொரு நிமிடமும் தரிசித்துக்
கொண்டிருக்கிறது உன் அன்பான உருவத்தை
ஒவ்வொரு நொடிப்பொழுதும்...

அமரன்
23-08-2007, 06:27 PM
கற்பனைக் காட்சிகளை கவிதை ஆக்குவதும் கண்ட காட்சிகளை கவிதை ஆக்குவதும் சம்பவக் கோர்வைகளால் கவிமாலை புனைவதும் கவிமக்கள் இயல்பு. கண நேர மனவலைகளை கட்டி இழுத்து சேர்த்து வடிப்பது தனிச் சிறப்பு. அந்த சிறப்பை இக்கவியில் காண்கின்றேன். சரியா தப்பா முடிவு இனியவள் கையில். பாராட்டுக்கள். அடித்தளம் மிக நன்று. கட்டடம் நன்று. தொடருங்கள் இனியவள்.

இனியவள்
26-08-2007, 08:48 PM
நன்றி அமர்..

என் உயிர்த்தோழியோடு ஏற்பட்ட சிறு கோபத்தின்
அடிப்படையில் உருவானது இக் கவி
அதனை அன்றே அப்படியே கவியாக
வடித்து விட்டேன்...

அமரன்
26-08-2007, 08:51 PM
புரிந்தது இனியவள்....விலக விலகத்தான் நிழல் பெரிதாகும்..அதுபோல இப்படியான சிறு சல சலப்புகளால் நட்பு இறுக்கமாகும்..
=அமரன்