PDA

View Full Version : பச்சோந்தி



இலக்கியன்
23-08-2007, 05:52 PM
http://img211.imageshack.us/img211/496/lizardvb6.jpg (http://imageshack.us)


வர்ணங்கள் காட்டுகின்றாய்
இருக்கும் இடம் கொண்டு

படைத்தவன் பெருமையது
பாரினில் அது மிகச்சிறப்பு

உயிர் காக்கதந்த வரம்
உத்தமனார் கொடுத்த நிறம்

பகுத்தறிவு கொண்ட
மானிடா...

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுகின்றாய்

சந்தர்ப்பம் கண்டு-நீயும்
மாறுகின்றாய்

பச்சோந்தி மனிதனாக...

நியாயமா?

பூமகள்
23-08-2007, 06:11 PM
இச்சையாய்ச் சொன்ன பச்சோந்திக் கவிதை... பச்சோந்தியின் இடத்திற்கேற்ப நிறமாற்றம் அதன் அழகு. ஆனால்.. மனித மனங்களின் சந்தர்பத்திகேற்ப மனமாற்றம் ஆபத்தானது, நியாயமற்றது.
அழகாய்ச் சொன்னீர்கள் இலக்கியன் அவர்களே. வரிகள் இன்னும் கொஞ்சம் கூட்டியிருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
சுருங்கச் சொன்னாலும் அற்புதமாக விளங்க வைத்துவிட்டீர்கள்.
பாராட்டுக்கள் இலக்கியன் அவர்களே.

அமரன்
23-08-2007, 06:18 PM
சூரியன் வெடித்துச் சிதறி பூமி பிறந்ததிலிருந்து ஒவ்வொரு உயிரிகளாக தோன்றி இறுதியாக மனிதன் தோன்றினான். எல்லா உயிரிக்கும் தனிக்குணம் இருக்க மனிதனுக்கு மட்டும் பகுத்தறியும் தன்மையை கொடுத்தது இயற்கை. காரணம். இதர உயிரிகளின் குணம் அறிந்து அவற்றை நல்ல விதத்தில் மனிதன் பயன்படுத்தட்டும் என்ற நல்ல நோக்கம். மனிதனோ சுயநலத்தில் கட்டுண்டு தப்பாக பயன்படுத்துகிறான். அப்படியான ஒன்று பச்சோந்திக்குணம். அதை அழகான கவிதையில் சொல்லி அசத்திய இலக்கியனுக்கு பாராட்டுக்கள். இன்னும் உயரவேண்டும் மனிதனும் இலக்கியன் கவிதைகளும். தொடருங்கள்

இனியவள்
23-08-2007, 06:23 PM
சில இடங்களில் பச்சோந்தித்தனம்
தேவைப்படுகின்றது மானிடர்களுக்கு

ஆனால் அதனையே வாழ்வென
நினைத்து வாழ்பவர்களை என்ன
செய்வது....

கண்ணற்ற குழந்தை தாயின்றி
தவிக்கின்றது
தாயாய் தன் உருவத்தை
மாற்றிக்கொள்கிறாள் ஒரு பெண்..

கண்ணற்ற குழந்த தாயின்றி
தவிக்கின்றது
தாயாய் தன் உருவத்தை
மாற்றிக் கொள்கிறாய் ஒரு பெண்
கழுத்தினிலே ஜொலிக்கும் தங்கத்திற்காய்...

இலக்கியன்
25-08-2007, 08:43 AM
அழகான கருத்துக்கள் தந்த பூமகள் அமரன் இனியவள் அணைவருக்கும் என் நன்றிகள்