PDA

View Full Version : நண்பனே...!



அமரன்
23-08-2007, 05:35 PM
நண்பனே...!

காற்று காற்று வாங்க
கடற்கரை போகையில்
கடலை வட்டமிடும்
பறவை பார்ப்பதில்லையா...?

இலை நறுக்கவென
கொல்லை ஏகுகையில்
அம்மியுடன் மல்லுக்கட்டும்
ஆடு அறிவதில்லையா....?

பனங்காய் பொறுக்கவென
வடலியை நாடுகையில்
காவோலையை வளைக்கும்
காளை காண்பதில்லையா...,

காலியாய் கிடந்த காணி
பாரமாகும் காரணி தேடுகையில்
சுடுமணல் கும்பியில் நடமிடும்
கோழி தெரிவதில்லையா....?

போகுமிடம் எங்கும்
போதி மரங்கள் இருந்தாலும்
உனக்கு மட்டுமேன்
கிட்டுவதில்லை புத்தர்நிலை...?

உருவத்தை அழித்து
நிழலையேன் தேடுகிறாய்
உச்சியில் சூரியன்
பார்த்துச் சிரிக்கையில்..?

எழுதிவிட்டு யோசித்தால்
அர்த்தம் மறையுமென்
கவிதைகள் போலல்ல
நமது வாழ்க்கை..!

எத்திசை நோக்கினும்
உனைபார்த்து புன்னகைக்கும்
மோனாலிசா ஓவியம்.....!

கலங்களுக்கு மட்டுமல்ல
காலங்களும் உள்ளதடா
காலாவதி திகதி...!

காலத்தை பத்திரப்படுத்தும்
களமமைக்க புறப்படு
காலத்தை பதப்படுத்தி
கவிதை வடித்திடு....!

ஷீ-நிசி
23-08-2007, 05:40 PM
போகுமிடம் எங்கும்
போதி மரங்கள் இருந்தாலும்
உனக்கு மட்டுமேன்
கிட்டுவதில்லை புத்தர்நிலை...?

மிகவும் பிரமாதமான வரிகள்..... வாழ்த்துக்கள் அமர்!

இலக்கியன்
23-08-2007, 05:42 PM
வாழ்க்கையைப்புரிந்து கவிதை வடித்தீர்கள் அமரன்
வாழ்த்துக்கள் நல்ல அறிவுரை

alaguraj
23-08-2007, 05:44 PM
போகுமிடம் எங்கும்
போதி மரங்கள் இருந்தாலும்
உனக்கு மட்டுமேன்
கிட்டுவதில்லை புத்தர்நிலை...?


சூப்பரான வரிகள்....பாராட்டுக்கள்.....அமரன்....தொடர்ந்து கலக்குங்க...

பூமகள்
23-08-2007, 05:59 PM
நண்பனே...!
எத்திசை நோக்கினும்
உனைபார்த்து புன்னகைக்கும்
மோனாலிசா ஓவியம்.....!

காலத்தை பத்திரப்படுத்தும்
களமமைக்க புறப்படு
காலத்தை பதப்படுத்தி
கவிதை வடித்திடு....!

மோனாலிசா புன்னகையோடு அழகான ஒப்புமை திசை எங்கும் மகிழ்ச்சியே என்று கூறுவது. காலத்தை வசப் படுத்தும் விந்தை கற்றுத் தந்தது உங்கள் கடைசி வரிகள்.. அற்புதம் அமர் அண்ணா.

வாழ்த்துக்கள்..அண்ணா.

இனியவள்
23-08-2007, 06:28 PM
அற்புதம் அமர் வாழ்த்துக்கள்

வாழ்வை வீணாக்கித் திரியும் ஒர்
நண்பனுக்கும் அன்போடு கூறும்
ஒரு அறிவுறை இதனை விட
சிறப்பாக கூற முடியாது...

ஷீ ரசித்த அதே வரிகளை நானும் ரசித்தேன்
அழகிய கற்பனை வளம் வாழ்த்துக்கள் அமர்

அமரன்
23-08-2007, 08:14 PM
நன்றி நண்பர்களே...!உங்கள் ஒவ்வொருவரின் வரிகளும் உற்சாகம் அளிக்கும் மருந்துகள். .பூமகள்,இனியவள் இருவரும் கவிதை சார்ந்த எனது அலைவரிசைக்கு கிட்டத்தில் வந்துள்ளீர்கள்.மிக்க நன்றி.

-அமரன்

aren
23-08-2007, 11:36 PM
அழகான கவிதைவரிகளில் நண்பருக்கு புத்திமதி. நன்றாக இருக்கிறது, படிக்க சுவையாகவும் இருக்கிறது. அதுவே இந்த கவிதையின் வெற்றி. பாராட்டுக்கள்.


நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
24-08-2007, 05:10 AM
நண்பனே...!

காற்று வாங்கவென
கடற்கரை போகையில்
கடலை வட்டமிடும்
பறவை பார்ப்பதில்லையா...?


போகுமிடம் எங்கும்
போதி மரங்கள் இருந்தாலும்
உனக்கு மட்டுமேன்
கிட்டுவதில்லை புத்தர்நிலை...?
எவ்வளவு அரிய உண்மை நிலையை அறியத் தந்திருக்கிறீர்கள்..வாழ்க்கைப் பாடம் வாழும் நேரங்களின் ஒவ்வொரு நொடியிலுமிருக்கிறது..அதை அறியா மனிதன் அறியாமையில் ஆழ்ந்து விடுகிறான்..புத்தருக்கு கிட்டியது ஏன் சாதாரணுக்கு கிட்டவில்லை...அவனும் புத்தரின் புத்தியிலிருந்து யோசித்தால் பார்க்கும் மரங்களெல்லாம் போதிமரமே....

உருவத்தை அழித்து
நிழலையேன் தேடுகிறாய்
உச்சியில் சூரியன்
பார்த்துச் சிரிக்கையில்..?

கலங்களுக்கு மட்டுமல்ல
காலங்களும் உள்ளதடா
காலாவதி திகதி...!

காலத்தை பத்திரப்படுத்தும்
களமமைக்க புறப்படு
காலத்தை பதப்படுத்தி
கவிதை வடித்திடு....!

நில்லாது ஓடும் காலநதிக்கும் காலாவதியுண்டு...அது காத்திருக்கும் காலைத்தை கருத்துடன் பயன்படுத்தினால் கொடுங்காற்றிலும் குலையா கலமாக நிற்கலாம்....வசீகரிக்கும் வரிகளில் வன் உண்மை.

எழுதிவிட்டு யோசித்தால்
அர்த்தம் மறையுமென்
கவிதைகள் போலல்லாது

எத்திசை நோக்கினும்
உனைபார்த்து புன்னகைக்கும்
மோனாலிசா ஓவியமாய்
ஆக்கிடு உன்வாழ்க்கை...!

அழகான உவமையில் ஆயிரம் அர்த்தமுரைக்கும் வரிகள்.மோனாலிசா ஓவியத்தின் அர்த்தம் பொதிந்த புன்னகையைப்போல வாய்ப்புகள் உன்னைப்பார்த்து நமட்டு சிரிப்பு சிரிக்கிறது...அதை வசப்படுத்தி நிறைவுப் புன்னகை பூக்கவைப்பது உன் கையில்தான் உள்ளது....வாழ்க்கைப்பாடமெடுத்த முத்தாய்ப்பு வரிகள் அருமை அமரன்.
கொஞ்சம் இடைவெளிவிட்டு வந்த அமர முத்திரையணிந்த அழகு கவிதை.வாழ்த்துக்கள்.

அமரன்
24-08-2007, 06:11 PM
நன்றி ஆரென் அண்ணா.
சிவா..புரிதலுடன் கூடிய பின்னூட்டம். நன்றி.

அக்னி
24-08-2007, 07:02 PM
தேடிய இலக்குகள் தனியே
தென்பட...
பூமி ஏகாந்தமல்ல...
நாடிய திசைகள் யாவும்,
பயன்படுத்தினால்,
நாமும் பண்படுவோம்...
பலன் தருவோம்...


கலங்களுக்கு மட்டுமல்ல
காலங்களும் உள்ளதடா
காலாவதி திகதி...!
காலாவதி திகதி
உணராதவன்,
காலம் முழுதும் அவதி...

பாராட்டுக்கள் அமரன்...

அமரன்
25-08-2007, 09:04 AM
நன்றி அக்னி. அழகான பின்னூட்டம் பாராட்டுக்கள்.

மனோஜ்
25-08-2007, 09:09 AM
அருமையான சிந்தனை அமரன்
வாழ்த்துக்கள் சிந்தனை சிற்பமே சிறப்பாய் கவிதை வடித்தமைக்கு

ஓவியன்
25-08-2007, 11:12 AM
கடலை வட்டமிடும் பறவைகளும், கட்டி வைத்தாலும் ஓயாமால் அம்மியோடு முட்டி மோதும் ஆடும், சுடும் மணலிலும் ஓயாமல் தீனி தேடும் கோழிகளும், ஓயாமல் உழைக்கையில் கிட்டாதென தெரிந்தும் எட்டாப் பொருளுக்காய் வெட்டியாய் அலைபவனுக்கு சம்மட்டி அடியாய் வந்த கவிதை...........!

அழித்து அழித்து கருவைத் திருத்தும் கவிதையல்ல வாழ்க்கை.... மாறாக காலத்தோடு இணைந்து காலத்தாற் கிடைக்கும் வாய்ப்புக்களைச் சரிவர பயன் படுத்தி வளமாக்குவதே வாழ்க்கை என்று முடித்த விதம் அருமை அமர்!.

இன்றைய இளைஞன் ஒவ்வொருவனுக்கும் கட்டாயம் நெஞ்சிலே உறைக்க வேண்டிய வரிகள் - பாராட்டுக்கள் அமரன்...........!

அமரன்
25-08-2007, 07:07 PM
நன்றி மனோஜ்...
நன்றி ஓவியன். எப்படிப்பு இப்பிடி...சம்மட்டியால் அடித்தமாதிரி ஆழப்பதிந்தது கவிதை உமது மனத்தில். மெய்சிலிர்கின்றது...பொய்யல்லப்பா நிஜம். தொடர்க...பாராட்டுக்கள்.

இளசு
05-09-2007, 07:38 PM
அமரனின் எழுச்சிக்கவிதையும்
ஓவியனின் பொழிப்புரையும்.. அருமை!

காலம் என்னும் குடத்துநீர்
நிச்சயிக்கப்பட்ட அள்வுடன் நம் கையில் உள்ளது..
எப்படி செலவழிப்பது என்பதும் நம் கையில்தான்!


அமரனின் கவிதையில் நெறிகாட்டல் உள்ளது!

ஆதவா
06-09-2007, 08:59 AM
அறிவுரைகள்............ மன்றத்தில் ஒரு பதிவர் சொல்லுவார்... பழங்கால நூல்களைக் காட்டிலும் வேறென்ன அறிவுரைகள் சொல்லமுடியும்? அவர் சொன்னதிலிருந்து ஒருவேளை நமக்கே அறிவுரைகளைக் கவிதையில் புகுத்த வேண்டுமெனில் அதற்கு மரபு சார் கவிதைக்குச் செல்லலாமே என்று தோணுகிறது. ஏனெனில் இவ்வாறாக எழுதுவது புதுமை ஆகாது..

கொல்லை ஏகையில் - ஏகுகையில் என்று போடலாம்.

இன்னும் வார்த்தைகளைச் சுருக்குங்கள்...

காற்று வாங்கவென - "காற்று வாங்க" என்று கூட இடலாம்..

சுடுமணல் கும்பியில் நடமிடும் - நடமாடும்..... சரிதானே?

ஒருசில வார்த்தைகள் சேர்த்தி எழுதியிருப்பதால்தான் என்னவோ மீண்டும் படிக்கத் தோணுகிறது.... கவனிக்கவும்.

அமரன்
09-09-2007, 04:16 PM
நன்றி அண்ணலே..!
நன்றி ஆதவா...!
திருத்தி விட்டேன்..உணர்ந்து விட்டேன்..!
~~அமரன்