PDA

View Full Version : கரைசேராக் காதல்!



ஷீ-நிசி
23-08-2007, 03:06 PM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Photo%20Poems/MANALONEBEACH1.jpg


கரையில் நின்றிருந்தேன்....

ஒரு அலையினைப்போல...
வேகமாய் வந்தாய்!
கால்களை தழுவினாய்!

குனிந்து உன்னை
தொடுமுன்னே.. மீண்டும்
அதே வேகத்தில்
சென்றுவிட்டாய்!

மீண்டும் வா...
மீண்டும் எனைத்
தீண்ட வா..

உனக்காய் காத்திருப்பேன்..
என் சிற்றலையே! -இதோ,
இந்த கரையிலேயே....

lolluvathiyar
23-08-2007, 03:08 PM
3000 ஆவது பதிப்பு பதித்த நன்பரே இப்பொழுதுதான் உங்கள் 2999 ஆவது படைப்பை இந்த் நொடியில் பார்த்தேன். வாழ்த்துகள்.

அலைகள் உங்களை 3000 முரை முத்தமிட்டு விட்டதோ

மனோஜ்
23-08-2007, 03:09 PM
அருமை அருமை கடல்அலை போன்று எங்களுக்கு மீண்டும் மீண்டும் கவிதைகள் எங்கள் மனதில் அடக்க வாழ்த்துக்கள் ஷீ

அக்னி
23-08-2007, 03:10 PM
பதித்த என் சுவடுகளை,
அழித்த போதும்,
உனக்காகக் காத்திருப்பேன்...
உன்னை மிதிக்கவல்ல,
உன்னால் சிலிர்ப்படைய...

பாராட்டுக்கள் ஷீ−நிசி...
3000 ஆக ஒரு முத்தாய்ப்பான கவிதை...
அலைகளின் தொடரோட்டம் போல, உங்கள் எண்ணவலைகளின் ஓட்டத்திலும்,
கவிதைகள் சீறி வரட்டும்...

ஷீ-நிசி
23-08-2007, 03:23 PM
நன்றி வாத்தி! நன்றி மனோஜ்!

நன்றி அக்னி.....

(பதித்த என் சுவடுகளை,
அழித்த போதும்,
உனக்காகக் காத்திருப்பேன்...
உன்னை மிதிக்கவல்ல,

விமர்சனம் அழகு)

அமரன்
23-08-2007, 03:23 PM
வாழ்த்துக்கள் ஷீ. மூவாயிரம் பதிவுக்கும் முத்தான கவிதைக்கும். இக்கவி கருவர்ண ஆடைபோன்றது. எதனுடன் பொருத்திப்பார்த்தாலும் பொருந்துகின்றது. காதலா? நட்பா?உறவா?.........இத்யாதி இத்யாதி...எந்தக்கோணத்தில் பார்த்தாலும் சரியாக அமைகிறது. ஆனாலும் என்னைக் கவர்ந்த கோணம் அரும்பிய மொட்டு விரியமுன்னே வாடி மடிந்ததை நினைத்து பூத்த கொடி ஏங்கும் கோணம். நீங்கள் என்ன நினைத்து எழுதினீர்கள் என்பதை அறிய ஆவல். (உங்கள் கருவை சிதைத்திருந்தால் மன்னித்து விடுங்கள்). வார்த்தை ஆடலில் மயிலின் நளினம். அடுக்கில் ரோஜாவின் அழகு. பாராட்டுக்கள். தொடருங்கள்.

ஷீ-நிசி
23-08-2007, 03:44 PM
எந்த கோணத்தில் பார்த்தாலும் பொருந்துகிறதல்லவா... அதுதான் கரு அமரன்....


அரும்பிய மொட்டு விரியமுன்னே வாடி மடிந்ததை நினைத்து பூத்த கொடி ஏங்கும் கோணம்

உவமை வடிவம் ரொம்ப நன்றாக உள்ளது அமரன்... நன்றி! நன்றி!

அக்னி
23-08-2007, 03:50 PM
அடடா... ஒரு கவிக்குள் இத்தனை பார்வைகளா?
அபாரம்...
அமரன், ஷீ−நிசி இருவரிடமும் கற்கவேண்டியவை அதிகம்.

இனியவள்
23-08-2007, 06:47 PM
3000வது பதிப்பு
முத்தாய் வந்து
விழ்ந்து தென்றலாய்
தழுவிச் செல்கிறது
வாழ்த்துக்கள் ஷீ

leomohan
23-08-2007, 09:04 PM
மூவாயிரத்திற்கு முத்தாய்ப்பாய் ஒரு கவிதை.

அலைகள் மேல் காதல் கொள்ளாதே நண்பா அது தினமும் உன்னை விட்டுச் செல்லும், அங்கேயே இருக்கும் கரையை காதலித்து பார்.

aren
23-08-2007, 11:22 PM
மூவாயிரம் முத்துக்களை
மன்றத்தில் கொடுத்து
எங்களை
மிகிழ்வித்த கவிதைமன்னரே
நீ
நீடூடி வாழ்க!!!!

தொடரட்டும் உங்கள் தொண்டு. வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஷீ-நிசி
24-08-2007, 03:33 AM
நன்றி இனியவள்.....


அருகே இருப்பதின் அருமை யாருக்கும் புரிவதில்லை... அழகான விளக்கம் மோகன்ஜி நன்றி!

ஷீ-நிசி
24-08-2007, 03:34 AM
மூவாயிரம் முத்துக்களை
மன்றத்தில் கொடுத்து
எங்களை
மிகிழ்வித்த கவிதைமன்னரே
நீ
நீடூடி வாழ்க!!!!

தொடரட்டும் உங்கள் தொண்டு. வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

நன்றி ஆரென் அவர்களே!:thumbsup:

சிவா.ஜி
24-08-2007, 04:55 AM
மனதைக்கவரும் படம்..அதில் பதித்த வரிகள் இடம்பெயர்ந்து எங்கள் இதயத்துக்குள் நுழைந்துவிட்டது.கரைவரும் அலைகள் கால் தொட்ட் திரும்புகிறது அது அலையின் இயல்பு...ஆயின் இந்த கவிதையின் நாயகனின் எதிர்பார்ப்பு ஈடேறும்போது ஆங்கோர் விதிமாற்றம் நிகழும்.விரும்பிய அலை இவனருகே இருந்துவிடும்...எப்படிப்பட்டதாயினும்.
மூன்றாயிர முத்திரைக் கவிதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஷீ−நிசி.

ஷீ-நிசி
24-08-2007, 05:13 AM
நன்றி சிவா... ஆழ்ந்த பார்வை...

ஓவியன்
25-08-2007, 10:34 AM
கரைகளைத் தொடுவதற்குத் தான் அலைகளோ..........?
அன்றி,
அலைகளுக்காகக் காத்திருக்கத் தானோ கரைகளோ.....?

கரைகளையும் அலைகளையும் காதலுடன் கன கச்சிதமாகப் பொருத்தி மூவாயிரம் பதிப்பாக வந்த வரிகள் அருமை ஷீ!!!

பாராட்டுக்கள்.................................!!!!


:nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002:

ஷீ-நிசி
25-08-2007, 10:42 AM
நன்றி ஓவியன்

jpl
26-08-2007, 03:07 AM
விபாவனை அணி கவி, அலையால் கொள்ளை போன மனம் போல்
கொள்ளை கொள்கிறது ஷீ−நிசி.

உனக்காய் காத்திருப்பேன்..
என் சிற்றலையே! -இதோ,
இந்த கரையிலேயே....
விபாவனை அணி :ஒன்றன் வினையை உரைக்குங்கால் அவ்வினைக்குப் பலரும் அறிய வந்த காரணத்தை காரணத்தை ஒழித்துப் பிறிதொரு காரணத்தால் உரைப்பது விபாவனை அணி.

ஷீ-நிசி
26-08-2007, 04:52 AM
விபாவனை அணி கவி, அலையால் கொள்ளை போன மனம் போல்
கொள்ளை கொள்கிறது ஷீ−நிசி.

விபாவனை அணி :ஒன்றன் வினையை உரைக்குங்கால் அவ்வினைக்குப் பலரும் அறிய வந்த காரணத்தை காரணத்தை ஒழித்துப் பிறிதொரு காரணத்தால் உரைப்பது விபாவனை அணி.

விபாவனை அணி கவி......

பாருங்க இப்படி ஒரு அணி இருக்கு என்பதே எனக்கு இன்றைக்குத்தான் தெரியும். இப்படியான அழகான விளக்கம் கவிதைக்கு கிடைப்பது என்னுடைய அதிர்ஷடம் தான்...

உங்களின் விமர்சனங்களை (நிறை/குறை) இரண்டையும் என்றும் எங்களின் கவிதைகளுக்கு எதிர்பார்க்கிறோம்...

நன்றி தோழியே!

இளசு
29-08-2007, 08:42 PM
மூவாயிரம் இனிப்புகள் வழங்கிய ஷீ−நிசிக்கு
முதலில் சுவைத்த நாவால் ஆயிரமாயிரம் நன்றிகள்!

மனமகிழ்ச்சி ஒன்றே இவர் இனிப்புகளின் ஒரே வினை!
பக்கவிளைவுகள் தரா பல்சுவை இனிப்புகள் இவை!



இக்கவிதைக்கு அமரன், ஜெயபுஷ்பலதா, சிவாஜி போன்றவர்களின்
பின்னூட்டங்களை மீறி என்னிடம் ஏதுமில்லை ஷீ!!!!

ஆனாலும் மைல்கல்கவிதைக்குப் பாராட்டாய் நானும் :




ஏறும் அலைகளை மட்டும்ரசித்தது அன்று..
இறங்கும் அலைகளும் அழகென்பது இன்று..

அமர்ந்த பறவைக்காய் மகிழ்ந்த மரக்கிளை − அது
பறந்த பிறகும் வருந்தாதிருக்கட்டும்!

இலக்கியன்
30-08-2007, 10:45 AM
அழகான கவிதை காத்திருப்பது ஒருவித சுகம்

ரிஷிசேது
30-08-2007, 07:44 PM
மிக அருமை. வார்த்தைகள் ஜாலமிட அலைகள் கால்களை நனைத்துப்போனது.... வாழ்த்துக்கள்

ஆதவா
31-08-2007, 07:55 AM
கண்கள் பார்ப்பதைப் படம்பிடிக்கும் கவிதைகள் எனக்கு அலாதி பிரியம். அதிலும் இந்த வகைக்கவிதைகள் எதிலும் பொறுத்திப் பார்க்கலாம். அமரன் சொன்ன கரு வித்தியாசமாகவும் அட்டகாசமாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள் இருவருக்கும்.

விபாவனை அணி!!! ஜெபில் அவர்களின் விளக்கத்தில் இலக்கணம் மிகுந்த இக்கவிதையை மீண்டும் படிக்கையில் நிறைந்த திருப்தி. கவிதை சாதாரண நிகழ்ச்சியை அல்லது ஒரு செயலை ஒளித்து உவமையாக சொன்னாலும் அதிலுள்ள அர்த்தங்களும் இலக்கணமும் வியக்கவைக்கின்றன.

வாழ்த்துக்கள் ஷி-நிசி.

ஷீ-நிசி
01-09-2007, 07:04 AM
மூவாயிரம் இனிப்புகள் வழங்கிய ஷீ−நிசிக்கு
முதலில் சுவைத்த நாவால் ஆயிரமாயிரம் நன்றிகள்!

மனமகிழ்ச்சி ஒன்றே இவர் இனிப்புகளின் ஒரே வினை!
பக்கவிளைவுகள் தரா பல்சுவை இனிப்புகள் இவை!



இக்கவிதைக்கு அமரன், ஜெயபுஷ்பலதா, சிவாஜி போன்றவர்களின்
பின்னூட்டங்களை மீறி என்னிடம் ஏதுமில்லை ஷீ!!!!

ஆனாலும் மைல்கல்கவிதைக்குப் பாராட்டாய் நானும் :




ஏறும் அலைகளை மட்டும்ரசித்தது அன்று..
இறங்கும் அலைகளும் அழகென்பது இன்று..

அமர்ந்த பறவைக்காய் மகிழ்ந்த மரக்கிளை − அது
பறந்த பிறகும் வருந்தாதிருக்கட்டும்!

நன்றி அன்பு இளசுஜி!

அமர்ந்த பறவைக்காய் மகிழ்ந்த மரக்கிளை − அது
பறந்த பிறகும் வருந்தாதிருக்கட்டும் :) இதுவே ஒரு கவிதையாய்...

ஷீ-நிசி
01-09-2007, 07:09 AM
நன்றி இலக்கியன்,

நன்றி ரிஷி

ஷீ-நிசி
01-09-2007, 07:11 AM
கண்கள் பார்ப்பதைப் படம்பிடிக்கும் கவிதைகள் எனக்கு அலாதி பிரியம். அதிலும் இந்த வகைக்கவிதைகள் எதிலும் பொறுத்திப் பார்க்கலாம். அமரன் சொன்ன கரு வித்தியாசமாகவும் அட்டகாசமாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள் இருவருக்கும்.

விபாவனை அணி!!! ஜெபில் அவர்களின் விளக்கத்தில் இலக்கணம் மிகுந்த இக்கவிதையை மீண்டும் படிக்கையில் நிறைந்த திருப்தி. கவிதை சாதாரண நிகழ்ச்சியை அல்லது ஒரு செயலை ஒளித்து உவமையாக சொன்னாலும் அதிலுள்ள அர்த்தங்களும் இலக்கணமும் வியக்கவைக்கின்றன.

வாழ்த்துக்கள் ஷி-நிசி.

நன்றி ஆதவா..... லேட்டா வந்தாலும் நல்ல ஹாட்டான விமர்சனம்.. :)

சுகந்தப்ரீதன்
01-09-2007, 09:23 AM
மீண்டும் மீண்டும் தீண்டும்...எந்நாளும் ஓயாது...என் இனிய கவிஞரே...வாழ்த்துக்கள்...!

ஷீ-நிசி
02-09-2007, 12:27 PM
நன்றி ப்ரீதன்... ஒற்றை பின்னூட்டத்தில் அழகிய கவிதை...

ஓவியா
02-09-2007, 09:49 PM
அழகிய அர்த்தம் பொதிந்த கவிதை. ஆழ யோசித்தேன் இதன் கரு பல விசயத்திற்க்குள் அடக்கம்.

நன்றியுடன் என பாராட்டுக்களும்.

ஷீ-நிசி
03-09-2007, 04:35 AM
நன்றி ஓவியா.....

மன்மதன்
04-09-2007, 12:32 PM
எந்த கோணத்தில் பார்த்தாலும் பொருந்துகிறதல்லவா... அதுதான் கரு அமரன்....



இப்படியெல்லாம் எழுத ஒருசிலரால் மட்டுமே முடிகிறது.. பாராட்டுகள் ஐயா...:thumbsup:

ஷீ-நிசி
04-09-2007, 02:21 PM
நன்றி மன்மதரே!

தளபதி
04-09-2007, 02:31 PM
காத்திருப்பது மிகக் கடினமான வேலை. :080402gudl_prv:

அதுவும் அலையென வந்தவருக்காக காத்திருப்பது. அதுவும் எதிர்பார்த்து காத்திருந்தால் மிகக் கடினம்.:food-smiley-015:

சாராகுமார்
04-09-2007, 03:31 PM
திரு.நிசி உங்கள் கரைசேராக் காதல்

கரை சேரும்
அதில் கன்னியும்
இருப்பாள்
கடல் தேவதையும்
இருப்பாள்.
அருமை.

ஷீ-நிசி
04-09-2007, 03:33 PM
நன்றி தளபதி!

பென்ஸ்
04-09-2007, 04:02 PM
கவிதைகள் எப்போதும் இப்படிதான்
வாசிப்பவன் மனதிற்க்கு ஏற்ப ஒரு எண்ணத்தை கொடுத்து "அடடே..!!!" என்று சொல்ல வைத்துவிடும்....
அந்த ரக கவிதைகள் எழுதி நம்ம ஷீயும் நம்மை "அடடே..!!!" போட வைத்துவிடுவார்...

கால் நனையும் வரை வராத ஒரு சுகம்
நனைந்த பின் விலகி செல்லும் அலை
அடுத்த அலைக்காகா காத்திருக்கும் மனசு...

சொல்லிவிட்டு போனதோ இந்த அலை,
சொல்லாமலே மனம் அலைபாய...

அலை வரும் என்று தானே மனமும்
உன் பாதம் தொடதானே அலையும்
மீண்டும் மீண்டும்...

உங்கள் கவிதைகளை தேடும் எங்கள் உள்ளங்கள் போல...

பென்ஸ்
04-09-2007, 04:02 PM
3000க்கு வாழ்த்து சொல்ல மறந்திட்டேனே....

ஷீ-நிசி
05-09-2007, 03:52 AM
மிக சிறப்பான விவரிப்பு பென்ஸ்.. நன்றி....

வாழ்த்து சொல்லலையா.. சீக்கிரம் சொல்லிடுங்க :)

இளசு
05-09-2007, 06:30 AM
கவிதைகள் எப்போதும் இப்படிதான்
வாசிப்பவன் மனதிற்க்கு ஏற்ப ஒரு எண்ணத்தை கொடுத்து "அடடே..!!!" என்று சொல்ல வைத்துவிடும்....
அந்த ரக கவிதைகள் எழுதி நம்ம ஷீயும் நம்மை "அடடே..!!!" போட வைத்துவிடுவார்...

கால் நனையும் வரை வராத ஒரு சுகம்
நனைந்த பின் விலகி செல்லும் அலை
அடுத்த அலைக்காகா காத்திருக்கும் மனசு...

சொல்லிவிட்டு போனதோ இந்த அலை,
சொல்லாமலே மனம் அலைபாய...

அலை வரும் என்று தானே மனமும்
உன் பாதம் தொடதானே அலையும்
மீண்டும் மீண்டும்...

உங்கள் கவிதைகளை தேடும் எங்கள் உள்ளங்கள் போல...

இதை வாசிக்கும் சுகம்..
அடுத்து எப்போது இதுபோல என ஏக்கம்..
ஏன் அடிக்கடி இதுபோல் இல்லை என வருத்தம்..

வெட்கம் விட்டு சொன்னால் − ஐ மிஸ் யூ பென்ஸ்!

பென்ஸ்
05-09-2007, 06:51 AM
இதை வாசிக்கும் சுகம்..
அடுத்து எப்போது இதுபோல என ஏக்கம்..
ஏன் அடிக்கடி இதுபோல் இல்லை என வருத்தம்..

வெட்கம் விட்டு சொன்னால் − ஐ மிஸ் யூ பென்ஸ்!

ஊஊலலலா.. ஊஊஊலலலா.... :music-smiley-010::music-smiley-010: