PDA

View Full Version : ♔. ஆ! 10! ♔. - முதல் சுற்று

Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

ராஜா
23-08-2007, 02:36 PM
வணக்கம் நண்பர்களே..!

இதோ இன்னொரு திரி.. உங்கள் அனைவரின் ஆதரவையும் நாடி.. உங்கள் அனைவரது பங்கேற்பையும் வேண்டி.. இதுவும் நாம் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள உதவும் என்று நம்புகிறேன்.

நம்மில் ஒரு உறுப்பினர் மற்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கேள்வி கேட்கவேண்டும்.எப்படிப்பட்ட கேள்வி என்றால், நாம் ஒவ்வொரு உறுப்பினரைப் பற்றியும் ஒரு கற்பனை வடிவம் வைத்திருப்போம். அவரது செயல்பாடுகளில் சில நமக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தரும். அவரை நேரில் பார்த்தால் இதுபற்றி கேட்கவேண்டும் என்று நினைத்திருப்போம்.. அந்த கேள்விகளாக இருந்தால் நலம்..!

ஒவ்வொரு கேள்வியும் கேட்கப்படும் உறுப்பினரைப் பற்றியதாக இருக்கலாம்.. [உ-ம். ராஜா சார்.. இவ்ளோ ஜோக் போடறீங்களே எங்கேருந்து இதையெல்லாம் சுடறீங்க.?]

அந்த உறுப்பினரின் வசிப்பிடம் குறித்ததாக இருக்கலாம்.. [உ-ம். அறிஞர் அய்யா.. அமெரிக்காவிலே உங்க பொழுது எப்படிப் போகுது..?]

அந்த உறுப்பினரின் தனித்திறமை குறித்ததாக இருக்கலாம்..[உ−ம். வாத்தியாரே.. எல்லா டாபிக்குலேயும் பொளந்து கட்டறீங்களே.. அதுவா வருதா.. இல்லே இதுபற்றி பக்காவா வீட்டுப்பாடம் செஞ்சுட்டு வருவீங்களா..?.]

அந்த உறுப்பினரின் நண்பர் குறித்த ஜாலியான் கேள்வியாக இருக்கலாம். .[ உம். அன்புரசிகருக்கு ஒரு பட்டப்பெயர் வைக்கச் சொன்னா, என்ன பேர் வைப்பீங்க ஓவியன்..?]

இப்படி எண்ணற்ற கேள்விகள்.. வானமே எல்லை.. ஆனால் ஒன்று .. கேள்விகள் சுவையாக இருக்க வேண்டும்.. !

விதிமுறைகள்..

1. ஒவ்வொருவரிடமும் வேறு வேறு கேள்விகள் கேட்கவேண்டும்..குறைந்தது 10 உறுப்பினர்களிடம் கேட்க வேண்டும்..

2. ஒரு சுற்று கேள்வி-பதில்கள் 24 மணி நேரத்துக்குள் முடிந்தால் நன்று.

3. கேள்வியாளரைத் தேர்ந்தெடுப்பது திரி ஆசிரியரின் பொறுப்பு.[ முதலில் கேள்வியாளர் சம்மதத்தை தனிமடலில் பெற வேண்டி இருப்பதால் இந்த ஏற்பாடு.]

4. பதில் அளிப்போரில் ஒருவரே அடுத்தக் கேள்வியாளராக இருப்பார்.

5. சிறப்பான கேள்வியையும், பதிலையும் மற்ற உறுப்பினர்கள் மனமாரப் பாராட்டலாம்.. பரிந்துரைக்கலாம்.

வழக்கம்போல இந்தத் திரியிலும் உதவிபுரிய அமரை அழைக்கிறேன்.

முதன் முதலில் கேள்வி கேட்கும் பொறுப்புக்கு [தொட்டது துலங்கும்.. வைத்தது விளங்கும்.. .] மரியாதைக்குரிய நண்பர் இளசு அவர்களை அழைக்கிறேன்.

வாருங்கள் இளசு.. 10 உறுப்பினர்களிடம் கேட்கக்கூடிய ஒரு 10 கேள்விகளுடன்..1

ஓவியன்
23-08-2007, 02:40 PM
ஆ பத்து!
அசத்தட்டும்...........!!!

ஆவலுடனும் நம்பிக்கையுடனும்
ஓவியன்........!

அக்னி
23-08-2007, 02:43 PM
ஆ பத்து போலத்தான் இருக்கிறது...
சிறப்பான சுவாரசியமான திரிகளைத் தொடங்கும் ராஜா அண்ணாவுக்கு பாராட்டுதல்கள்...
ஊக்கத் தொகையாக 500 iCash.

மலர்
23-08-2007, 02:46 PM
ஆகா..ராஜா அண்ணா அருமை...
ஆ பத்து சீக்கிரம் வரட்டும்

அமரன்
23-08-2007, 02:46 PM
அசத்தலான திரிகளை ஆரம்பித்து வெற்றிக்கனியை லாவகமாக எட்டிப்பறிக்கும் ராஜா அண்ணாவின் இன்னொரு திரி. வெற்றி பற்றி இருகருத்து இல்லை. வெற்றி நடை ஆரம்பமாகட்டும் அண்ணா. தொடர நான் தயாராக உள்ளேன்.

மதி
23-08-2007, 02:52 PM
ஆ....பத்து....
சுடர் போல இதுவும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
ராஜாண்ணா...எங்கிருந்து இப்படி உங்களுக்கு தோணுது...?

ஷீ-நிசி
23-08-2007, 03:19 PM
ஆ!பத்து வந்தாச்சு.... வாழ்த்துக்கள் ராஜா சார்!

lolluvathiyar
23-08-2007, 03:24 PM
வித்தியாசமான உருப்பினர்களை கவரும் போட்டிகளை நடத்துவதில் ராஜா ராஜா தான். இளசு அவர்களே சீக்கிரம் வந்து உங்கள் ரவுசை ஆரம்பியுங்கள்

அறிஞர்
23-08-2007, 03:27 PM
10 உறுப்பினர் கொஞ்சம் அதிகமாக இருக்கே... ராஜா அண்ணா...

ராஜா
23-08-2007, 03:32 PM
ஆளுக்கொரு கேள்வி..!

கஷ்டமா இருந்தால் குறைச்சுக்கலாம்..! ஆனா கஷ்டம் இருக்காது..!

ஒவ்வொருத்தர் பண்ற அழும்பையும், குறும்பையும் அவர்கள் திறமையையும் மனசுல வச்சுகிட்டு கேட்டா 10க்கு மேலேயே கேட்கலாம்..!

lolluvathiyar
23-08-2007, 03:58 PM
10 உறுப்பினர் கொஞ்சம் அதிகமாக இருக்கே... ராஜா அண்ணா...

ஆமாம் ஆனாலும் விதியை மாற்ற வேண்டாம். அப்புரம் ஆளாளுக்கு ஒரு நம்பர சொல்ல ஆரம்பிச்சுருவாங்க*

இளசு
23-08-2007, 07:00 PM
இளசு : ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹா..... ராஜாவின் திருவிளையாடல்களில் மற்றொன்று இனிதே ஆரம்பம்...

ரவுசு: தெய்வீகச் சிரிப்பய்யா உமது எனப் புகழப்போவதில்லை..இளசு..
ஏன்னா மயங்கி இங்கேயே நின்னுட்டிருப்பீங்க... கேள்விகளை எப்போ தரப்போறீங்க?

இளசு : இன்னும் கொஞ்ச நேரத்தில் .....

அற்புதமான எண்ணங்களை அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ராஜா அவர்கள் திரிகளாக்க..

செயல் நெய் ஊற்றி அன்பு அமர் வளர்க்க...

பாசவெளிச்சமும் வெற்றி வெப்பமும் எங்கும் என்றும் பரவ

வாழ்த்துகள்!

நம்பி, என்னை முதலில் களமிறக்கிய தைரியத்துக்கு சபாஷ் ராஜா !!!

இணைய நண்பன்
23-08-2007, 07:08 PM
ராஜா கையவச்சா அது ராங்கா போறதில்ல..ஆம்..ஆ.பத்து வெற்றி நடை போட வாழ்த்துக்கள்

இளசு
24-08-2007, 06:33 AM
அனைவரும் மன்னிக்கவும்.. நேற்று அவசர பணி அழைப்பு.. அதனால் தாமதம்..
இப்போதும் பணிக்குக் கிளம்பும் அவசரம்.. ஆனாலும் தள்ளிப்போடாமல்...

கேள்விகளை அள்ளிப்போடுகிறேன்.. (அஜீஸ் பண்ணிக்குங்க மக்கா)

(ரவுசு: பெருசா சிரிச்சு பில்டப் குடுக்கும்போதே நெனச்சேன்... சரிசரி...
கேள்விகளைப் பதிங்க..)

1) அண்ணல் கரிகாலன் : பெரிய அறிவாளிகளுக்குத்தான் ஒற்றைத்தலைவலி வரும் என்பார்கள் − உங்களால் அதை நம்புகிறேன் அண்ணலே... அடிக்கடி பயணம், நனையல் என படிக்கும்போது உங்கள் மகிழ்ச்சியால் மகிழ்ந்தாலும், உங்கள் உடல் நலம் பற்றி கவலையும் உள்ளுக்குள்...

அதனாலேயே நீங்கள் கொஞ்சநாள் மன்றம் வரவில்லை என்றாலும் மனது அலைகிறது...
உடலும் உள்ளமும் நலந்தானா அண்ணலே..

2) தலை மணியா −

தலை, உங்களிடம் சில லட்ச ரூபாய் (வட்டியில்லாக்) கடனாய் வாங்கிய ஒருவர் ( நானாய்க்கூட இருக்கலாம்) பலகாலம் டபாய்க்கிறார். உங்களுக்கும் நெருக்கடி.. தேவை... திரும்ப வராத கடனால், நீங்கள் புதிதாய் கடன் வாங்கி (வட்டி கட்டி) அல்லாடுகிறீர்கள்..

அந்த கொடாநண்பர் ஒருமுறை உங்கள் எதிரில்... நல்ல உணவு+ நீர் விடுதியில்.. அப்போதும் உங்களால் ஜோக்(குகள்) அள்ளி வீசாமல் இருக்க முடியுமா????

3) இனியவள்:

நீங்கள் என்ன பணி செய்கிறீர்கள் இனியவள்? சரியான நேரம் தூங்குகிறீர்களா? உங்கள் தட்டச்சு வேகம் எவ்வளவு? (உங்கள் கற்பனை வேகம் மன்றம் அறியும்)

4) வாத்தியார்:

உணவுப்பழக்கம் எல்லாம் சரிதான்.. அதிலும் தயிர்சாதம் +மாதுளம்பழம் சூப்பர்!

ஆனாலும் வயதாகும் பருவம் − சிகரெட்டை விலக்க நாள் குறிக்க எண்ணமில்லையா?

4) இதயம் :

உங்கள் காதல் மணச் சேதி அறிந்து மிகப் பூரித்தவன் நான்..

உங்கள் வாரிசு(கள்) எதிர்காலத்தில் காதல் + கலப்பு மணம் புரிய நேர்ந்தால் உங்கள் நிலை?

5)ராஜா −

சன், விஜய் அசத்தல், கலக்கல் மன்னர்கள் எல்லாம் உங்களுக்கு ரொம்ப ரொம்ப ஜூனியர் குறுநில ராஜாக்கள்தாம் என் பார்வையில்!

இத்தனை திறமையை இன்னும் பெரிய அளவில் ''ஷோகேஸ்'' பண்ணவேண்டும் நீங்கள் என விரும்புகிறேன்... உங்கள் எண்ணம்?

6) அன்பின் ஆரென் −

நல்ல படைப்பாளிகள் ( கிரியேட்டிவ்) நல்ல வியாபாரிகளாய் இருக்க முடியாது... உங்கள் மூதாதையர் கதையே சொல்லும் பாடம் இது..

கவிதைகள் உட்பட படைப்பாளியாய் பரிமளிக்கும் நீங்கள், வியாபாரத்திலும் ஜெயிக்க வேண்டும்.. தொழில் நலமாய்ப் போகிறதா?

இந்த ஊர்ப்பக்கம் அடுத்த விஜயம் எப்போது?

7) அறிஞர் :

ஆராய்ச்சிகள் பணி, ஊதியம் தந்தாலும், கூடவே திருப்தியும் அளிக்கின்றன..

இதுவரை அதிக திருப்தி தந்த ஆராய்ச்சி எது?

8)லியோமோகன் −

அஷ்டாவதானி, தசாவதானி என மல்டி=டாஸ்க் திறன் உள்ளவர் நீங்கள்.. சரிதானே? உங்கள் மூதாதையரில் யாரிடம் இந்தத் திறன் இருந்தது/ இருக்கிறது?

9) ஷீ−நிசி :

அழகுணர்ச்சி உங்களுக்கு மிக மிக அதிகம் ஷீ! உங்கள் உடை, அறை எல்லாம் நேர்த்தியாக இருக்கும் என மனக்காட்சி... சரியா?

10) சிவா.ஜி:

சொல்லின் செல்வராய் உலாவரும் சிவா..

கருத்து மாறுபாடுகள் இருப்பினும் நட்பு இறுகி வளரும் என்பதில் நம்பிக்கை உள்ளவர்தானே நீங்கள்?

−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

அவசரக்கேள்விகள்.. தவறுகளைப் பொறுத்தருளுங்கள் மக்களே!

ஓவியன்
24-08-2007, 06:54 AM
அண்ணா அவிழ்த்து போட்ட ஆ பத்து அருமை − விடைகளுடன் ஓடி வாருங்களேன் அன்பு உறவுகளே..............!!! :nature-smiley-003:

lolluvathiyar
24-08-2007, 06:55 AM
கேள்விகனைகளை தொடுத்து விட்டார் இளசு அவர்கள். இந்த திரியின் முதல் போட்டியாளர். மன்றத்தில் மூத்த உறுப்பினர் என்னை நியாபகம் வைத்து கேள்வி பட்டியலில் என்னையும் தேர்ந்தெடுத்ததுக்கு மிகவும் பூரிப்பு அடைகிறேன். நன்றி இளசு. அடுத்தது கேள்விக்கு போவோம்

4) வாத்தியார்:
உணவுப்பழக்கம் எல்லாம் சரிதான்.. அதிலும் தயிர்சாதம் +மாதுளம்பழம் சூப்பர்!
ஆனாலும் வயதாகும் பருவம் − சிகரெட்டை விலக்க நாள் குறிக்க எண்ணமில்லையா?

நெத்தியடி கேள்வி. எனது சிகரேட் பழக்கம் விடும் எண்ணம் எப்போது.
இதில் முக்கிய பிரச்சனை என்னவென்றால் நீண்டகாலமாக ஒரே சீராக இருக்கும் இந்த பழக்கம் தினமும் 4 சிகரேட். அதுவும் முழுவதும் அடிக்க மாட்டேன் கால் வாசி தான் அடிப்பேன். 4 தானே என்ற எண்ண*மே அதை விட மறுக்கிறது. நாள் குறித்து நிறுத்தி பார்க்கலாம் என்றால் அடுத்த நாள் அதிகரிக்கிறது.

அம்மா அப்பா திட்டி, நண்பர்கள் விட சொல்லி, மனைவி சண்டைபோட்டும் விடாமலே இருகிறேன்.
நான் சிகரெட் அடிக்கும் போது என் மனைவி அதை குறைக்கலாமல்ல என்று கேட்கும் போது. தம் இழுக்க இழுக்க சிகரெட் நீளம் குறைஞ்சுட்டுதானே இருக்கு. அடிச்சு குறைக்கிறேன் என்று நக்கல் பண்ணியே பழக்க பட்டு விட்டேன்.

இளசு கேட்டது போல் விடும் நாள் குறிக்கமாலே இருகிறேன்.
ஒருவேளை என் மகள் என்னை பார்த்து ஏன் டாடி நீங்க சிகரெட் குடிக்கறீங்க என்று கேட்டாலோ. அல்லது என் மகன் சிகரேட் அடிக்கும் செய்தி கேட்டாலோ நிறுத்த நாள் குறிப்பேன் என்று நம்புகிறேன்.

மனற நண்பர்களே, களவும் கற்று மற என்பார்கள். ஒன்றை நினைவில் வைத்திருங்கள் சிகரெட் கற்று கொள்ள மட்டுமே முடியும் மறக்க முடியாது. ஆகையால் பழக்கமில்லாதவர்கள் பழகாமல் இருப்பதே நல்லது. எனக்கு கன்ட்ரோல் இருக்கு நான் நிறுத்தனும்னு நினைச்சா நிறுத்திடுவேன் என்ற வீராப்பு எல்லாம் வேண்டாம்.

நன்றி

சிவா.ஜி
24-08-2007, 07:03 AM
நெத்தியடி கேள்விக்கு அசத்தலான பதில்.
ஒரவேலை என் மகள் என்னை பார்த்து ஏன் டாடி நீங்க சிகரெட் குடிக்கரீங்க என்று கேட்டாலோ. அல்லது என் மகன் சிகரேட் அடிக்கும் செய்தி கேட்டாலோ நிறுத்த நாள் குறிப்பேன் என்று
நம்புகிறேன்.
இது சூப்பர் வாத்தியாரே. கடைசியாய் சொன்னது கனகச்சிதம்.வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
24-08-2007, 07:13 AM
வாத்தியார் சொன்னதைப்போல மன்றத்தின் நிஜமான தூண்..மதிப்பிற்குரியவரின் கேள்விப்பட்டியலில் நானும் இடம் பெற்றதை நினைத்து மனம் நெகிழ்கிறது.

10) சிவா.ஜி:

சொல்லின் செல்வராய் உலாவரும் சிவா..

கருத்து மாறுபாடுகள் இருப்பினும் நட்பு இறுகி வளரும் என்பதில் நம்பிக்கை உள்ளவர்தானே நீங்கள்?

கருத்து மாறுபாடுகள் என்பது என்னைப் பொறுத்தவரை அறிவை வளர்க்கும் ஒரு காரணி.ஒத்த கருத்தில் புதிதான மாற்று சிந்தனை வெளி வராது.எதிராளியின் மாறுபட்ட கருத்து நமக்கும் பல புது விடயங்களை கற்றுத்தரும்.
என்னுடைய மிகச்சிறந்த ரொம்பவும் நெருக்கமான நன்பர்களோடுதான் நான் நிறைய கருத்து வேறுபட்டிருக்கிறேன்.அடித்துக்கொள்ளாத குறையாக எங்கள் வாக்குவாதமிருக்கும்.எல்லா கூத்தும் முடிந்து யாரோ ஒருவர் அந்த இடத்தை விட்டு போன பிறகு இருவருமே நினைத்துக்கொள்வோம்...
"அவன் சொன்னதும் சரிதான்"
பிறகென்ன விஷயம் தெரிந்த ஒருவரோடுதான் நாம் நட்பாக இருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றியதும் அந்த நட்பு மேலும் இறுகும்.

ஆ'பத்தில் ஆபத்தை கடந்துவிட்டதாக ஒரு எண்ணம்...சரியா இளசு.....?

lolluvathiyar
24-08-2007, 07:32 AM
ஒத்த கருத்தில் புதிதான மாற்று சிந்தனை வெளி வராது.எதிராளியின் மாறுபட்ட கருத்து நமக்கும் பல புது விடயங்களை கற்றுத்தரும்.

மிக சரியாக சொல்லிவிட்டீர்கள் சிவா ஜி. எனக்கு இதே குணம் தான்.

ஷீ-நிசி
24-08-2007, 07:48 AM
ஷீ−நிசி :

அழகுணர்ச்சி உங்களுக்கு மிக மிக அதிகம் ஷீ! உங்கள் உடை, அறை எல்லாம் நேர்த்தியாக இருக்கும் என மனக்காட்சி... சரியா?

நன்றி இளசுஜி...

உங்கள் கூற்று சரியானதுதான்...

சுத்தம் என்பது என்னோடு கலந்துவிட்ட ஒன்று.. நான் இருக்கும் அறை, வேலை செய்யும் என் இடம் எப்பொழுதும் சுத்தமாய் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்..

ஆனால் கொஞ்சம் சோம்பேறியும் கூட... மூன்று நாள் தாடியை எடுக்கவும் கொஞ்சம் சோம்பேறித்தனப்படுவேன்... :) :)

அமரன்
24-08-2007, 08:34 AM
ஆ!பத்தில் மூன்று முத்துக்கள்...! வாழ்த்துக்கள்...!மீதிமுத்துக்கள் வாருங்கள்...!

mania
24-08-2007, 08:57 AM
..

2) தலை மணியா −

தலை, உங்களிடம் சில லட்ச ரூபாய் (வட்டியில்லாக்) கடனாய் வாங்கிய ஒருவர் ( நானாய்க்கூட இருக்கலாம்) பலகாலம் டபாய்க்கிறார். உங்களுக்கும் நெருக்கடி.. தேவை... திரும்ப வராத கடனால், நீங்கள் புதிதாய் கடன் வாங்கி (வட்டி கட்டி) அல்லாடுகிறீர்கள்..

அந்த கொடாநண்பர் ஒருமுறை உங்கள் எதிரில்... நல்ல உணவு+ நீர் விடுதியில்.. அப்போதும் உங்களால் ஜோக்(குகள்) அள்ளி வீசாமல் இருக்க முடியுமா????

உங்கள் சொல் முகூர்த்தம் எனக்கு அந்த மாதிரி சில லட்சங்களை அள்ளி வீசும் காலம் பிறக்கட்டும்....!!!!!
கதைக்கு வருவோம். சரியாக என்னுடைய வீக் பாயிண்ட்டை பிடிச்சிட்டீங்களே....!!!!(மூன்று வருடங்களுக்கும் மேல் சம்பளமே வராமல் இருந்தபோதும் என்னுடன் பணி புரிந்தவர்களுக்கு சில ஆயிரங்களை அள்ளி கொடுத்துவிட்டு நான் சில லட்சங்கள் கடன் வாங்கி என் மகளின் திருமனத்தை நடத்தினேன்).
இப்போவும் அவர்களை நேருக்கு நேர் சந்திக்கும்போது என்னால் நேரிடையா கேக்கவும் முடியவில்லை.....அவர்களும் கொடுப்பதாக இல்லை....ஆனாலும் அதற்காக அவர்ககள் என்னிடம் ஜோக் கேட்பதை நிறுத்தவும் இல்லை....நானும் சொல்லாமலும் இருப்பதுமில்லை.....(இதற்கும் உணவு+ நீருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை)...ஹி...ஹி...ஹி...

அன்புடன்
எப்போதும் ஏமாளி
மணியா...:icon_wink1::icon_wink1::icon_wink1:

ராஜா
24-08-2007, 09:01 AM
5)ராஜா −

சன், விஜய் அசத்தல், கலக்கல் மன்னர்கள் எல்லாம் உங்களுக்கு ரொம்ப ரொம்ப ஜூனியர் குறுநில ராஜாக்கள்தாம் என் பார்வையில்!

இத்தனை திறமையை இன்னும் பெரிய அளவில் ''ஷோகேஸ்'' பண்ணவேண்டும் நீங்கள் என விரும்புகிறேன்... உங்கள் எண்ணம்?

அன்பு நண்பரே..!

என்பால் உள்ள அன்பால் இப்படி என்னைப்பற்றி அதிகமான மதிப்பு போட்டிருக்கிறீர்கள். நன்றி.

இங்கு எனக்குக் கிடைக்கும் பாராட்டுகளே போதுமானவை. இவை உளமார உரைக்கப்படுபவை. என் வீச்சைப் பெருக்க முனைந்தால் பொய் சொல்ல நேரும், பொறாமை வரும், போற்றுதலுக்கு ஆசை கொண்டால் தூற்றுதலைத் தாங்கவும் தயாராக இருக்கவேண்டும்.

ஆனால் நான் அமைதியான வாழ்க்கையை விரும்புபவன். எளிதில் மனம் குழைந்து போய்விடக் கூடியவன்.. எனக்கு அந்த வாழ்க்கை சரிப்பட்டு வராது.

இறைவன் என் தகுதிக்கு மீறிய வாழ்க்கை வசதிகளையும், இனிய துணைவியையும், குடும்ப சூழ்நிலை உணர்ந்த குழந்தைகளையும் கொடுத்திருக்கிறான். இவற்றை நான் இழக்க விரும்பவில்லை.

இதுவே போதும்.. உங்கள் இதயத்தில் எனக்கென்று இருக்கும் சிறு இடமே போதும்.

கேள்விக்கு நன்றி நண்பரே..!

ராஜா
24-08-2007, 09:04 AM
திருச்சி மணியா அண்ணா..!

எனக்கு கொஞ்சம் பணம் வேணும்.. எப்போ வாங்கிக்கலாம்..?

ராஜா
24-08-2007, 09:06 AM
கேள்விப் பட்டியல் அருமை..!

பதில் அளிப்போர் ஒவ்வொருவரும் அசத்துகிறார்கள்..!

நன்றி நண்பர்களே..!

சக்திவேல்
24-08-2007, 09:08 AM
ஆகா ஆரம்பிச்சுட்டரா ராஜா, வழக்கம் போல வெற்றிச்சாதனைகள் செய்ய வாழ்த்துக்கள். அமரன் அன்னாச்சி என்னையும் கவனித்துக்கொள்ளுங்கள்.

mania
24-08-2007, 09:10 AM
திருச்சி மணியா அண்ணா..!

எனக்கு கொஞ்சம் பணம் வேணும்.. எப்போ வாங்கிக்கலாம்..?

இப்போ கரீட்டா ஊரு பேரு எல்லாம் சொல்லி கூப்பிடுவீங்களே....!!!! ஹி...ஹி...ஹி...

கொடாக்கண்டன்
மணியா...

அமரன்
24-08-2007, 09:11 AM
சக்திவேல்...மக்கள் விட மாட்டாய்ங்க....

ராஜா
24-08-2007, 09:51 AM
மனற நண்பர்களே, களவும் கற்று மற என்பார்கள். ஒன்றை நினைவில் வைத்திருங்கள் சிகரெட் கற்று கொள்ள மட்டுமே முடியும் மறக்க முடியாது. ஆகையால் பழக்கமில்லாதவர்கள் பழகாமல் இருப்பதே நல்லது. எனக்கு கன்ட்ரோல் இருக்கு நான் நிறுத்தனும்னு நினைச்சா நிறுத்திடுவேன் என்ற வீராப்பு எல்லாம் வேண்டாம்.

நன்றி

தங்கள் பதில் கண்டு மதிப்பு இன்னும் உயர்கிறது வாத்தியாரே..!

ராஜா
24-08-2007, 09:55 AM
கருத்து மாறுபாடுகள் என்பது என்னைப் பொறுத்தவரை அறிவை வளர்க்கும் ஒரு காரணி.ஒத்த கருத்தில் புதிதான மாற்று சிந்தனை வெளி வராது.எதிராளியின் மாறுபட்ட கருத்து நமக்கும் பல புது விடயங்களை கற்றுத்தரும்.

உண்மைதான் சிவாஜி.

ஆ! பத்துல ஒரு கண்டத்தைத் தாண்டியிருக்கீங்க... வெற்றிகரமா..!

அமரன்
24-08-2007, 09:56 AM
சிறந்த பத்துப் பேரை தெரிவுசெய்து நல்ல கேள்விகளை தொடுத்த அண்ணாவுக்கு நன்றி.

வாத்தியாரின் பதிலில் அவரைப்பற்றி இதுவரை நினைத்திருந்த குணவியல்புடன் ஒத்துப்போகின்றார். கொஞ்சம் லொல்லு, அதிக அறிவு, மிதமான கோபம் ,குறைச்சலான நாரதர்த்தனம் போன்றவற்றுடன் நுணுக்கமான சிந்தனாவாதி என்பதையும் புரிந்துகொண்டேன். பாராட்டுக்கள் வாத்தியாரே...!

ராஜா
24-08-2007, 09:59 AM
சுத்தம் என்பது என்னோடு கலந்துவிட்ட ஒன்று.. நான் இருக்கும் அறை, வேலை செய்யும் என் இடம் எப்பொழுதும் சுத்தமாய் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்..

ஆனால் கொஞ்சம் சோம்பேறியும் கூட... மூன்று நாள் தாடியை எடுக்கவும் கொஞ்சம் சோம்பேறித்தனப்படுவேன்... :) :)

பச்சையும் சிவப்பும் கொஞ்சம் மாறுபட்டு இருக்காப்பல இருக்கே ஷீ..!

அமரன்
24-08-2007, 10:01 AM
சிவாவின் பதிலில் அவரது தமிழைப்போலவும் சிந்தனையைப் போலும் கனம் அதிகம். கருத்து முரண்படும்போது ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகள் எழுதுவது தவிர்க்கமுடியாது. கேள்விகள் உதித்தால் முன்னேற்றம் தேடி வரும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அக்கேள்விகளின் விடைகள் புரிந்துவிட்டால் முரண்பட்டவர் சீரிய மனிதன் என்பது தெரிந்து நட்பு வலுப்படும் சாத்தியமுண்டு. எதிர் வினைகளும் உண்டு. நல்ல பதிலுக்கு சிவாவுக்கு ஒரு சபாஷ்.

மதி
24-08-2007, 10:04 AM
அருமையான பத்து கேள்விகளுக்கு சிறந்த பதில்கள்..
கலக்குங்க நண்பர்களே..!

ராஜா
24-08-2007, 10:04 AM
ஆ! பத்து − 1. கேள்வியாளர்; இளசு.

1) அண்ணல் கரிகாலன் : பெரிய அறிவாளிகளுக்குத்தான் ஒற்றைத்தலைவலி வரும் என்பார்கள் − உங்களால் அதை நம்புகிறேன் அண்ணலே... அடிக்கடி பயணம், நனையல் என படிக்கும்போது உங்கள் மகிழ்ச்சியால் மகிழ்ந்தாலும், உங்கள் உடல் நலம் பற்றி கவலையும் உள்ளுக்குள்...

அதனாலேயே நீங்கள் கொஞ்சநாள் மன்றம் வரவில்லை என்றாலும் மனது அலைகிறது...
உடலும் உள்ளமும் நலந்தானா அண்ணலே..

2) தலை மணியா −

தலை, உங்களிடம் சில லட்ச ரூபாய் (வட்டியில்லாக்) கடனாய் வாங்கிய ஒருவர் ( நானாய்க்கூட இருக்கலாம்) பலகாலம் டபாய்க்கிறார். உங்களுக்கும் நெருக்கடி.. தேவை... திரும்ப வராத கடனால், நீங்கள் புதிதாய் கடன் வாங்கி (வட்டி கட்டி) அல்லாடுகிறீர்கள்..

அந்த கொடாநண்பர் ஒருமுறை உங்கள் எதிரில்... நல்ல உணவு+ நீர் விடுதியில்.. அப்போதும் உங்களால் ஜோக்(குகள்) அள்ளி வீசாமல் இருக்க முடியுமா????

3) இனியவள்:

நீங்கள் என்ன பணி செய்கிறீர்கள் இனியவள்? சரியான நேரம் தூங்குகிறீர்களா? உங்கள் தட்டச்சு வேகம் எவ்வளவு? (உங்கள் கற்பனை வேகம் மன்றம் அறியும்)

4) வாத்தியார்:

உணவுப்பழக்கம் எல்லாம் சரிதான்.. அதிலும் தயிர்சாதம் +மாதுளம்பழம் சூப்பர்!

ஆனாலும் வயதாகும் பருவம் − சிகரெட்டை விலக்க நாள் குறிக்க எண்ணமில்லையா?

4) இதயம் :

உங்கள் காதல் மணச் சேதி அறிந்து மிகப் பூரித்தவன் நான்..

உங்கள் வாரிசு(கள்) எதிர்காலத்தில் காதல் + கலப்பு மணம் புரிய நேர்ந்தால் உங்கள் நிலை?

5)ராஜா −

சன், விஜய் அசத்தல், கலக்கல் மன்னர்கள் எல்லாம் உங்களுக்கு ரொம்ப ரொம்ப ஜூனியர் குறுநில ராஜாக்கள்தாம் என் பார்வையில்!

இத்தனை திறமையை இன்னும் பெரிய அளவில் ''ஷோகேஸ்'' பண்ணவேண்டும் நீங்கள் என விரும்புகிறேன்... உங்கள் எண்ணம்?

6) அன்பின் ஆரென் −

நல்ல படைப்பாளிகள் ( கிரியேட்டிவ்) நல்ல வியாபாரிகளாய் இருக்க முடியாது... உங்கள் மூதாதையர் கதையே சொல்லும் பாடம் இது..

கவிதைகள் உட்பட படைப்பாளியாய் பரிமளிக்கும் நீங்கள், வியாபாரத்திலும் ஜெயிக்க வேண்டும்.. தொழில் நலமாய்ப் போகிறதா?

இந்த ஊர்ப்பக்கம் அடுத்த விஜயம் எப்போது?

7) அறிஞர் :

ஆராய்ச்சிகள் பணி, ஊதியம் தந்தாலும், கூடவே திருப்தியும் அளிக்கின்றன..

இதுவரை அதிக திருப்தி தந்த ஆராய்ச்சி எது?

8)லியோமோகன் −

அஷ்டாவதானி, தசாவதானி என மல்டி=டாஸ்க் திறன் உள்ளவர் நீங்கள்.. சரிதானே? உங்கள் மூதாதையரில் யாரிடம் இந்தத் திறன் இருந்தது/ இருக்கிறது?

9) ஷீ−நிசி :

அழகுணர்ச்சி உங்களுக்கு மிக மிக அதிகம் ஷீ! உங்கள் உடை, அறை எல்லாம் நேர்த்தியாக இருக்கும் என மனக்காட்சி... சரியா?

10) சிவா.ஜி:

சொல்லின் செல்வராய் உலாவரும் சிவா..

கருத்து மாறுபாடுகள் இருப்பினும் நட்பு இறுகி வளரும் என்பதில் நம்பிக்கை உள்ளவர்தானே நீங்கள்?

ராஜா
24-08-2007, 10:08 AM
இப்போவும் அவர்களை நேருக்கு நேர் சந்திக்கும்போது என்னால் நேரிடையா கேக்கவும் முடியவில்லை.....அவர்களும் கொடுப்பதாக இல்லை....ஆனாலும் அதற்காக அவர்ககள் என்னிடம் ஜோக் கேட்பதை நிறுத்தவும் இல்லை....நானும் சொல்லாமலும் இருப்பதுமில்லை...

அன்புடன்
எப்போதும் ஏமாளி
மணியா...

அண்ணா..!

இப்போதான் கொடாக்கண்டன் ஆகிட்டீங்களே..!

அமரன்
24-08-2007, 10:08 AM
ஷீயின் கவிதைகளில் காணும் நேர்த்தியைக் கண்டு என்னுள் எழுந்த அவர் பற்றிய கற்பனை உருவம் நிஜமாகியுள்ளது சின்ன முரணுடன். சவரம் செய்ய காட்டும் சோம்பேறித்தனம். எதிர்பாக்கவில்லை. (அதுகூட அழகுதான் இல்லையா)

சிரிக்க வைப்பவர்கள் தங்க மனசுக்காரர்கள் என்பது தலை,ராஜா அண்ணா இருவர் பதிலிலும் உறுதிபடுத்தப்படுகிறது. ராஜா அண்ணா நான் நினைத்தது போலவே எளிமை விரும்பியாக இருப்பது மட்டற்ற மகிழ்ச்சி.

mania
24-08-2007, 10:15 AM
அண்ணா..!

இப்போதான் கொடாக்கண்டன் ஆகிட்டீங்களே..!

இப்போதைக்கு கொடுப்பதற்கு ஒன்றும் இல்லாத காரணத்தால் கொடாக்கண்டன் ஆகிவிட்டேன் அண்ணலே.....!!!!இளசு சொல் படி நடக்கட்டும்....பிறகு கொடுக்கண்டனாகிவிடுகிறேன்....சரியா ராஜா.....
ஆசையுடன்
மணியா...

lolluvathiyar
24-08-2007, 10:29 AM
இப்போதைக்கு கொடாக்கண்டன் ஆகிவிட்டேன்
.பிறகு கொடுக்கண்டனாகிவிடுகிறேன்

எப்போதைக்கும்
மனசு, நட்பு, சிரிப்பு விசயத்தில் கொடுக்கண்டனா இருங்கள்
பணம், ஆதாயம் விசயத்தில் கொடாக்கண்டன்னா இருங்கள்

அனுபவத்தில் அடியேன் சொல்லும் செய்தி

கடன் நட்பை முறிக்கும்

ஷீ-நிசி
24-08-2007, 10:34 AM
பச்சையும் சிவப்பும் கொஞ்சம் மாறுபட்டு இருக்காப்பல இருக்கே ஷீ..!

முரணாக இருக்கிறது என்பதால் உண்மையை மாற்ற முடியாது அல்லவா ராஜா சார்.... :)

mania
24-08-2007, 10:36 AM
எப்போதைக்கும்
மனசு, நட்பு, சிரிப்பு விசயத்தில் கொடுக்கண்டனா இருங்கள்
பணம், ஆதாயம் விசயத்தில் கொடாக்கண்டன்னா இருங்கள்

அனுபவத்தில் அடியேன் சொல்லும் செய்தி

கடன் நட்பை முறிக்கும்

நன்றி வாத்தியாரே.....கேட்க நல்லாத்தான் இருக்கு....ஆனா நடைமுறையிலே.....???
அன்புடன்
மணியா....:icon_wink1:

ராஜா
24-08-2007, 10:45 AM
முரணாக இருக்கிறது என்பதால் உண்மையை மாற்ற முடியாது அல்லவா ராஜா சார்.... :)

நான் கேட்க எண்ணியதை முழுதும் கேட்டிருக்க வேண்டும்..!

நான் கேட்க நினைத்தது, அறையின் தோற்றத்தில் கவனம் செலுத்தும் நீங்கள் முகத்தோற்றத்திலும் அவ்வாறு இருக்கலாமே.. இளம் வயதினராயிற்றே என்று..!

இனியவள்
24-08-2007, 10:54 AM
3) இனியவள்:
நீங்கள் என்ன பணி செய்கிறீர்கள் இனியவள்? சரியான நேரம் தூங்குகிறீர்களா? உங்கள் தட்டச்சு வேகம் எவ்வளவு? (உங்கள் கற்பனை வேகம் மன்றம் அறியும்)

வணக்கம் இளசு அண்னா..

தற்பொழுது படிப்போடு சேர்த்து வேலை ஒன்றும்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்..கணனி சம்பந்தமான
வேலை.....

ஒரு நிமிடத்த்ல் ஒரு பந்திக்கு மேல் தட்டச்சு செய்ய முடியும் என்னால்..

சரியான நேரத்திற்கு நித்திரை கொள்வது குறைவது ஒரு நாளைக்கு ஆகக்
குறைந்தது ஜந்து மணித்தியாலங்கள் நித்திரை கொள்வேன்..ஹீ ஹீ அவ்வளவு வேலை....

அமரன்
24-08-2007, 10:57 AM
கவிதைக்குப் பொய்யழகு. இவ்விழைக்கு மெய்யழகு. புரிதலுடன் பதிலுரைத்த இனியவளுக்கு பாராட்டும் நன்றியும்.

ராஜா
24-08-2007, 11:06 AM
தற்பொழுது படிப்போடு சேர்த்து வேலை ஒன்றும்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்..கணனி சம்பந்தமான
வேலை.....
.

வாழ்த்துகள் இனி..!

நீங்கள் வாழ்வில் மென்மேலும் முன்னேற வாழ்த்துகள்..!

mania
24-08-2007, 11:08 AM
வணக்கம் இளசு அண்னா..

தற்பொழுது படிப்போடு சேர்த்து வேலை ஒன்றும்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்..கணனி சம்பந்தமான
வேலை.....

ஒரு நிமிடத்த்ல் ஒரு பந்திக்கு மேல் தட்டச்சு செய்ய முடியும் என்னால்..

சரியான நேரத்திற்கு நித்திரை கொள்வது குறைவது ஒரு நாளைக்கு ஆகக்
குறைந்தது ஜந்து மணித்தியாலங்கள் நித்திரை கொள்வேன்..ஹீ ஹீ அவ்வளவு வேலை....

புரியலையே எனக்கு....???
அன்புடன்
மணியா..

அமரன்
24-08-2007, 11:15 AM
புரியலையே எனக்கு....???
அன்புடன்
மணியா..

(வி)வேகம் பத்தல.
அன்புடன்
-அமரன்

mania
24-08-2007, 11:17 AM
(வி)வேகம் பத்தல.
அன்புடன்
-அமரன்

இதுவும் புரியலையே எனக்கு....?????
அன்புடன்
மணியா...

அமரன்
24-08-2007, 11:24 AM
இதுவும் புரியலையே எனக்கு....?????
அன்புடன்
மணியா...

ஒரு நிமிடத்தில் ஒரு பத்தி தட்டச்சுவாங்க.
மனித்தியாலத்தில் ஒரு பந்தி கட்டுவாங்க. வேகம் பத்தல.

ஓவியன்
24-08-2007, 11:28 AM
கருத்து மாறுபாடுகள் என்பது என்னைப் பொறுத்தவரை அறிவை வளர்க்கும் ஒரு காரணி.ஒத்த கருத்தில் புதிதான மாற்று சிந்தனை வெளி வராது.எதிராளியின் மாறுபட்ட கருத்து நமக்கும் பல புது விடயங்களை கற்றுத்தரும்.

உண்மைதான் சிவா நாம் எப்போதும் எதிராளியின் பலத்தை, அவரது திறமைகள் மூலம் எம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும்.:nature-smiley-003:

மனற நண்பர்களே, களவும் கற்று மற என்பார்கள். ஒன்றை நினைவில் வைத்திருங்கள் சிகரெட் கற்று கொள்ள மட்டுமே முடியும் மறக்க முடியாது. ஆகையால் பழக்கமில்லாதவர்கள் பழகாமல் இருப்பதே நல்லது. எனக்கு கன்ட்ரோல் இருக்கு நான் நிறுத்தனும்னு நினைச்சா நிறுத்திடுவேன் என்ற வீராப்பு எல்லாம் வேண்டாம்.
ஏற்றுக் கொள்கிறேன் வாத்தியாரே, பழகாமல் இருப்பதே சாலச் சிறந்தது. ஆனால் விட முடியாது என்று கூறும் உங்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. முயன்றால் முடியாதது எதுவுமேயில்லை இந்த உலகிலே............

முயன்று பாருங்கள் - உங்களால் விட்டொழிக்க முடியும், விட்டொழியுங்கள் உங்கள் குழந்தைகள் கேள்வி கேட்க முன்னரே.......! :nature-smiley-003:

அன்புடன்
எப்போதும் ஏமாளி
மணியா...:icon_wink1::icon_wink1::icon_wink1:
ஹீ!,ஹீ!
மணியா அண்ணா!
எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறதே.........
இன்னா செய்யலாம்.............!!! :innocent0002:

குறைந்தது ஜந்து மணித்தியாலங்கள் நித்திரை கொள்வேன்..ஹீ ஹீ அவ்வளவு வேலை....

அடடே இனியவள்!
நீங்கள் மன்றத்திலே இருக்கும் நேரத்தைக் கணக்குப் பண்ணிப் பார்த்தால் உங்கள் 5 மணி நேரக் கணக்கு உதைக்கிறதே.....! :icon_wink1:

ஆனால் கொஞ்சம் சோம்பேறியும் கூட... மூன்று நாள் தாடியை எடுக்கவும் கொஞ்சம் சோம்பேறித்தனப்படுவேன்... :) :)
தாடி- நிசி!:sport-smiley-007:

mania
24-08-2007, 11:29 AM
ஒரு நிமிடத்தில் ஒரு பத்தி தட்டச்சுவாங்க.
மனித்தியாலத்தில் ஒரு பந்தி கட்டுவாங்க. வேகம் பத்தல.

2லைனும் ஒரு பத்தியாகலாம் 20 லைனும் ஒரு பத்தியாகலாம்......??? ம்ம்ம்ம்ம்ம்ம் உங்களுக்கெல்லால் புரியுது....!!!!
அன்புடன்
ப(பை)த்தியக்காரன்
மணியா...

ஓவியன்
24-08-2007, 11:35 AM
ஆனால் கொஞ்சம் சோம்பேறியும் கூட... மூன்று நாள் தாடியை எடுக்கவும் கொஞ்சம் சோம்பேறித்தனப்படுவேன்... :) :)

அட இதை சிம்பிளா டீல் பண்ணலாமே..........!!! :nature-smiley-003:
மூன்று நாள் தாடியை எடுக்கத் தானே சோம்பறிப்படுறீங்க.........
இனிமே ஒரு நாள் தாடியா இருக்கும் போதே எடுத்துடுங்க - சோம்பறித்தனம் வராது:icon_p: (எதனையும் முளையிலேயே கிள்ளிடணும்....:icon_wink1:)

mania
24-08-2007, 11:37 AM
ஹீ!,ஹீ!
மணியா அண்ணா!
எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறதே.........
இன்னா செய்யலாம்.............!!! :innocent0002:

ம்ம்ம்ம்ம் இன்னா செய்வாரை ஒதுக்க வேண்டியதுதான்....நன்றி ....வாத்தியார்....
கொஞ்சம் குறைவான அன்புடன்
ஏமாணியா....:icon_wink1:

ஓவியன்
24-08-2007, 11:41 AM
கொஞ்சம் குறைவான அன்புடன்
ஏமாணியா....:icon_wink1:

ஆமா!
எப்படீங்க அன்பை கூட, குறைய என்றெல்லாம் அளக்கிறீங்க? :icon_wink1:

ராஜா
24-08-2007, 11:49 AM
ஆ! பத்து − 1. கேள்வியாளர்; இளசு.

1) அண்ணல் கரிகாலன் : பெரிய அறிவாளிகளுக்குத்தான் ஒற்றைத்தலைவலி வரும் என்பார்கள் − உங்களால் அதை நம்புகிறேன் அண்ணலே... அடிக்கடி பயணம், நனையல் என படிக்கும்போது உங்கள் மகிழ்ச்சியால் மகிழ்ந்தாலும், உங்கள் உடல் நலம் பற்றி கவலையும் உள்ளுக்குள்...

அதனாலேயே நீங்கள் கொஞ்சநாள் மன்றம் வரவில்லை என்றாலும் மனது அலைகிறது...
உடலும் உள்ளமும் நலந்தானா அண்ணலே..

2) தலை மணியா −

தலை, உங்களிடம் சில லட்ச ரூபாய் (வட்டியில்லாக்) கடனாய் வாங்கிய ஒருவர் ( நானாய்க்கூட இருக்கலாம்) பலகாலம் டபாய்க்கிறார். உங்களுக்கும் நெருக்கடி.. தேவை... திரும்ப வராத கடனால், நீங்கள் புதிதாய் கடன் வாங்கி (வட்டி கட்டி) அல்லாடுகிறீர்கள்..

அந்த கொடாநண்பர் ஒருமுறை உங்கள் எதிரில்... நல்ல உணவு+ நீர் விடுதியில்.. அப்போதும் உங்களால் ஜோக்(குகள்) அள்ளி வீசாமல் இருக்க முடியுமா????

3) இனியவள்:

நீங்கள் என்ன பணி செய்கிறீர்கள் இனியவள்? சரியான நேரம் தூங்குகிறீர்களா? உங்கள் தட்டச்சு வேகம் எவ்வளவு? (உங்கள் கற்பனை வேகம் மன்றம் அறியும்)

4) வாத்தியார்:

உணவுப்பழக்கம் எல்லாம் சரிதான்.. அதிலும் தயிர்சாதம் +மாதுளம்பழம் சூப்பர்!

ஆனாலும் வயதாகும் பருவம் − சிகரெட்டை விலக்க நாள் குறிக்க எண்ணமில்லையா?

4) இதயம் :

உங்கள் காதல் மணச் சேதி அறிந்து மிகப் பூரித்தவன் நான்..

உங்கள் வாரிசு(கள்) எதிர்காலத்தில் காதல் + கலப்பு மணம் புரிய நேர்ந்தால் உங்கள் நிலை?

5)ராஜா −

சன், விஜய் அசத்தல், கலக்கல் மன்னர்கள் எல்லாம் உங்களுக்கு ரொம்ப ரொம்ப ஜூனியர் குறுநில ராஜாக்கள்தாம் என் பார்வையில்!

இத்தனை திறமையை இன்னும் பெரிய அளவில் ''ஷோகேஸ்'' பண்ணவேண்டும் நீங்கள் என விரும்புகிறேன்... உங்கள் எண்ணம்?

6) அன்பின் ஆரென் −

நல்ல படைப்பாளிகள் ( கிரியேட்டிவ்) நல்ல வியாபாரிகளாய் இருக்க முடியாது... உங்கள் மூதாதையர் கதையே சொல்லும் பாடம் இது..

கவிதைகள் உட்பட படைப்பாளியாய் பரிமளிக்கும் நீங்கள், வியாபாரத்திலும் ஜெயிக்க வேண்டும்.. தொழில் நலமாய்ப் போகிறதா?

இந்த ஊர்ப்பக்கம் அடுத்த விஜயம் எப்போது?

7) அறிஞர் :

ஆராய்ச்சிகள் பணி, ஊதியம் தந்தாலும், கூடவே திருப்தியும் அளிக்கின்றன..

இதுவரை அதிக திருப்தி தந்த ஆராய்ச்சி எது?

8)லியோமோகன் −

அஷ்டாவதானி, தசாவதானி என மல்டி=டாஸ்க் திறன் உள்ளவர் நீங்கள்.. சரிதானே? உங்கள் மூதாதையரில் யாரிடம் இந்தத் திறன் இருந்தது/ இருக்கிறது?

9) ஷீ−நிசி :

அழகுணர்ச்சி உங்களுக்கு மிக மிக அதிகம் ஷீ! உங்கள் உடை, அறை எல்லாம் நேர்த்தியாக இருக்கும் என மனக்காட்சி... சரியா?

10) சிவா.ஜி:

சொல்லின் செல்வராய் உலாவரும் சிவா..

கருத்து மாறுபாடுகள் இருப்பினும் நட்பு இறுகி வளரும் என்பதில் நம்பிக்கை உள்ளவர்தானே நீங்கள்?

paarthiban
24-08-2007, 12:04 PM
கேள்வி பதில்கள் அருமை. ராஜா சார் கைய வச்சா ராங்கா போனதில்லை.

அறிஞர்
24-08-2007, 02:12 PM
7) அறிஞர் :
ஆராய்ச்சிகள் பணி, ஊதியம் தந்தாலும், கூடவே திருப்தியும் அளிக்கின்றன..

இதுவரை அதிக திருப்தி தந்த ஆராய்ச்சி எது?
!
ஆராய்ச்சி என்றால் ஏற்ற தாழ்வுகள் அதிகம்...

சில ஆராய்ச்சிகளை.. எந்த வசதியும் இல்லாத இடத்தில் ஆரம்பித்து... அதில் சில பயனுள்ள தகவல்களை கண்டுபிடிக்கும்பொழுது... அதில் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது.

என்னுடைய முனைவர் பட்டம் பெற ஆராய்ச்சி செய்த பொழுது.... நானோ தொழில் நுட்பத்தில் சில சர்க்கரை மூலக்கூறுகளை சிறிய நானோபார்ட்டிக்கலில் இணைத்தேன். பின் அவற்றை விந்தணுக்களுடன் இணைத்து இனச்சேர்க்கையில் ஏற்படும் விளைவுகளுக்கான (பழைய விதிகளுக்கு ஒத்துபோகும்) ஆதாரத்தை கண்டுபிடித்தேன். இதற்கு நான் செலவிட்ட 3 வருடங்கள்... கடுமையானது. அதே நேரத்தில் அது ஆராய்ச்சி பிரதியாக வெளியான பொழுது ஏற்பட்ட மகிழ்ச்சி அளவிடமுடியாதது.

leomohan
24-08-2007, 02:14 PM
8)லியோமோகன் −

அஷ்டாவதானி, தசாவதானி என மல்டி=டாஸ்க் திறன் உள்ளவர் நீங்கள்.. சரிதானே? உங்கள் மூதாதையரில் யாரிடம் இந்தத் திறன் இருந்தது/ இருக்கிறது?

நன்றி இளசு.

அஷ்டாவதானி, தாசவதானி, ஆயக்கலைகள் 64 கற்றவர் என்பதெல்லாம் இந்த நூற்றாண்டில் சாத்தியம் இல்லை என்கிறேன். ஏனென்றால் இந்த நூற்றாண்டில் பிறந்தவர்கள் வேறு பலவற்றையும் துரத்துகிறார்கள். மேலும் அவர்களுக்கு சினிமா, டிவி போன்று diversions அதிகம்.

அஷ்டாவதானி, தசாவதானி என்று சொல்ல வேண்டுமானால் அனைத்து கற்ற கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வெறும் சிலவற்றை தெரிந்து வைத்திருப்பது மட்டுமே போதாது. அதனால் எனக்கு தெரிந்த diverse துறைகளில் உள்ள ஞானம் அனைத்தும் வெறும் அடிமட்ட அல்லது சராசரி (basic or average) ஞானம் மட்டுமே. அதனால் இந்த பட்டங்களுக்கு தகுதி இன்னும் வரவில்லை.

என் தந்தை அவருடைய மூன்று வயதில் அவருடைய தந்தையை இழந்தவர். என்னுடைய தாயின் தந்தை பல காலம் இருந்தாலும் அதிக காலம் எங்களுடன் இருக்கவில்லை.

இந்த பல்துறை ஆர்வம் எங்கிருந்து வந்தது?

என் தந்தை ராணுவத்தில் 17 வருடங்கள் இருந்தவர். அதனால் வீட்டில் மரவேலை, தச்சு வேலை, plumbing, electrical வேலை, தையல் வேலை, மேலும் handicraft என்று அனைத்தும் செய்வார். இப்போது 75 இருந்தாலும் மிகவும் சுறுசுறுப்பாக ஏதாவது செய்துக் கொண்டிருப்பார். எங்களுடைய உடைகளும் துணி வாங்கி வீட்டிலே தைப்பார். இது என்னுடைய 12ம் வகுப்பு வரை தொடர்ந்தது. அதன் பிறகு தான் ready made வாங்கும் பழக்கம் உருவானது. Free Hand Drawing, Painting, collage என்று அனைத்து வேலைகளும் சுய ஆர்வத்தால் கற்றார். அவர் வேலை செய்யும் போது, இதை எடுத்துக் கொடு, அதை எடுத்துக் கொடு என்று சித்தாள் வேலை செய்து கற்றுக் கொண்டது பல. சித்தாள் என்று சொல்லும் போது தான் நினைவுக்கு வருகிறது - எங்கள் முதல் வீட்டையும் அவர் தான் வடிவமைத்தார், மேஸ்திரி-சித்தாட்களை ஏற்பாடு செய்து அவரே கட்டி முடித்தார். ஆக சுறுசுறுப்பு, பல புதிய விஷயங்களை சுயமாக கற்பது என்பது அவரிடம் இருந்து வந்தது.

என் தாய் பல விதமான handicraft, திருமணங்களுக்கு வைக்கும் அலங்கார பொருட்களை வடிவமைப்பது - உதாரணத்திற்கு சக்கரையால் வடிவமைக்கப்பட்ட பொம்மைகள், கடலை உருண்டையால் உருவங்கள் போன்றவற்றை செய்வார். அது மட்டுமல்ல சுமார் 20 தையல் எந்திரங்களை வைத்துக் கொண்டு தையல் கலையும் சொல்லிக் கொடுப்பார். அவரும் யாரிடமும் எதுவும் பயிலவில்லை. சொந்தமாக கற்றது, என் தந்தையை மணந்த பிறகு நவீனமயமாக்கப்பட்டது.

ஆக இருவரும் சேர்ந்து வீட்டில் எப்போதும் எதாவது புதுமைகள் செய்துக் கொண்டே இருப்பார்கள். அந்த சூழ்நிலை இருந்தால் குருடர்களும் அக்கலைகளை கற்றிருப்பார்கள்.

நான் தேனீ கைப்பிரதி துவக்கியபோது அதற்கு அட்டைபடம் அமைத்து அதில் உள்ள ஓவியங்கள் வரைந்தது என் தந்தை தான். நான் தமிழ் மீடியத்தில் சில காலம் பயின்றபோதும் என் ஆங்கிலம் நன்றாக வர உதவி செய்தது அவருடைய அறிவுரைகள் தான்.பிற மாநில மொழிகளில் ஆர்வமும் அவர் பலரிடம் பேசியது கண்டு தான் ஏற்பட்டது.

இசை - பள்ளிப்பருவத்தில் சில ஆண்டுகள் கற்க முயன்று பிறகு ஊர் மாற்றமும், வாத்தியார் மாற்றமும் ஏற்பட நின்றுபோனது.

பல மொழிகள் கற்பது, ஓவியம், இசையில் நாட்டம், தையல் கலையில் ஆர்வம், கதை, கட்டுரை,கவிதை எழுதுவது, மேடையில் பேசுவது, பல நாடுகளை பற்றி அறிவது போன்றவை என்னுடைய ஆர்வங்கள்.

இதில் மேடை பேச்சு, கவிதை எழுதுவது மட்டுமே நான் சொந்தமாக வளர்த்துக் கொண்ட கலைகள்.

இவை அனைத்தும் கொண்டு சம்பாதிக்காவிட்டாலும், என்னுடைய career வெற்றிக்கு பின்னால் இவை அனைத்தும் சின்ன சின்ன பங்காற்றுகின்றன என்பதில் சந்தேகமே இல்லை.

இன்னுமும் கூட என்னுடைய சிறு சிறு முயற்சிகள் அவர்களுடைய முகத்தில் வரும் புன்னகைக்காகவே.

உறைந்த சிறுகதை படித்துவிட்டு என் தந்தை அற்புதமாக எழுதுகிறாய் என்று பாராட்டியதும் இங்கு நினைவு கூறுகிறேன்.

மீண்டும் நன்றி இளசு.

leomohan
24-08-2007, 02:20 PM
ஆராய்ச்சி என்றால் ஏற்ற தாழ்வுகள் அதிகம்...

சில ஆராய்ச்சிகளை.. எந்த வசதியும் இல்லாத இடத்தில் ஆரம்பித்து... அதில் சில பயனுள்ள தகவல்களை கண்டுபிடிக்கும்பொழுது... அதில் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது.

என்னுடைய முனைவர் பட்டம் பெற ஆராய்ச்சி செய்த பொழுது.... நானோ தொழில் நுட்பத்தில் சில சர்க்கரை மூலக்கூறுகளை சிறிய நானோபார்ட்டிக்கலில் இணைத்தேன். பின் அவற்றை விந்தணுக்களுடன் இணைத்து இனச்சேர்க்கையில் ஏற்படும் விளைவுகளுக்கான (பழைய விதிகளுக்கு ஒத்துபோகும்) ஆதாரத்தை கண்டுபிடித்தேன். இதற்கு நான் செலவிட்ட 3 வருடங்கள்... கடுமையானது. அதே நேரத்தில் அது ஆராய்ச்சி பிரதியாக வெளியான பொழுது ஏற்பட்ட மகிழ்ச்சி அளவிடமுடியாதது.

உங்கள் ஆராய்ச்சிகள் மேன்மேலும் வெற்றி அடைந்து உலகிற்கு பயனுள்ள பலவற்றை கண்டுபிடிக்க எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அறிஞரே.

ஓவியன்
24-08-2007, 02:31 PM
அறிஞர் அவர்களது பதில் அருமை − உங்களது ஆராட்சிகள் மேன் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்!:nature-smiley-003:

மோகன்!.
நல்ல ஆர்வமிக்க தாய் தந்தையர்களது வளர்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது.......!

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!. :nature-smiley-003:

lolluvathiyar
24-08-2007, 02:36 PM
இளசுவின் கேள்விகளுக்கு வந்திருக்கும் அனைத்து பதிகளும் அருமை
ஒவ்வொருவரிடமும் ஒரு பாடம் கற்க வேண்டும்

அமரன்
24-08-2007, 03:22 PM
மூன்று நிமிட உழைப்பு தரும் வெற்றியே மனசுக்கு இதமாக இருக்கும். அறிஞரின் மூன்று வருட உழைப்பின் ஊதியம் மட்டற்ற மகிழ்ச்சி என்பதில் யாதொரும் ஐயமில்லை.

மோகனில் பல் துறைத் திறமைக்கு காரணம் புரிந்தது. உங்களால் பெற்றோரும் பெற்றவர்களால் நீங்களும் பெருமை வரப் பெற்றவர்கள்.

மனோஜ்
24-08-2007, 03:45 PM
எங்கள் மன்ற அரசர் ராஜா அண்ணாவிற்கு என் நன்றிகள் மன்ற உறவுகளை அதிகமாக அறிந்து கொள்ள அருமையான திரி இது

முதல் வெற்றி முற்றும் வெற்றி என்பார்கள் முதல் கேள்வியை அருமையாக கொடுத்த இளசு அண்ணாவிற்கு என் வாழ்த்துகள் நன்றிகள்

அதற்கு பதில் தரும் உறவுகள் பற்றி மோலும் அறிந்து மனம் மகிழ்கிறது

ஷீ-நிசி
24-08-2007, 03:48 PM
நான் கேட்க எண்ணியதை முழுதும் கேட்டிருக்க வேண்டும்..!

நான் கேட்க நினைத்தது, அறையின் தோற்றத்தில் கவனம் செலுத்தும் நீங்கள் முகத்தோற்றத்திலும் அவ்வாறு இருக்கலாமே.. இளம் வயதினராயிற்றே என்று..!

நான் சாதாரணமாகத்தான் பதிலளித்தேன் ராஜா சார்....

நான் சேவ் செய்வதற்கு ரொம்ப யோசிப்பேன்... அதாவது, வீட்ல பன்னலாமா. கடைக்கு போகலாமா என்று.. சரி நாளைக்கு பார்த்துக்கலாம், அப்படின்னு.. ஆனால், சில நாட்களில் ரொம்ப சுறுசுறுப்பா இருப்பேன்.. சில நாட்களில் இப்படியும் இருப்பேன்... இளம் வயதினர்கள் தான் இப்படி இருக்கிறார்கள்... எங்கப்பா காலையில 5 மனிக்கு எழுந்து ரெகுலரா வாக்கிங் போறார்.. அவரை பார்த்து பலமுறை ஆச்சரியபட்டிருக்கிறேன்... பெரியவர்களிடம் இருக்கும் சுறுசுறுப்பு இளம் வயதினரிடம் இல்லை ராஜா சார்...

paarthiban
24-08-2007, 03:57 PM
கேள்விகளும் ஒவ்வொருவர் பதிலும் அருமையோ அருமை.

ஓவியா
24-08-2007, 05:20 PM
திரி துவங்கிய ராஜா அண்ணாவிற்க்கு எனது நன்றியும் வாழ்த்தும்.

மன்றத்தின் (தன் மன*திலும்) சிறந்த 10 பதிவாளர்களை தேர்ந்தெடுத்து அற்புதமான 10 கேள்விகளை தொடுத்து அதற்க்கு அருமையான பின்னூடங்களை வாங்கி இங்கு வழங்கிய இளசுவிற்க்கு எனது பாராட்டுக்கள்.

முக்கியமாக நன்றிகள் இளசு.

அனைவரின் பதில்கலும் கலக்கல். நன்று.

அக்னி
24-08-2007, 05:30 PM
கேள்விகள் சிறப்பு என்றால், பதில்கள் மலைப்பு...
உண்மைத்தன்மையும், சுவையும் நிறைந்த பதில்கள், மனதில், மன்றத்து உறவுகளின் விம்பங்களை சிறிதுசிறிதாக முழுமையான உருவாக்குகின்றன.
தொடரும் காலங்களில், காணாமலே, உறவுகளின் உருவும் உளமும்,
எம் கண்ணில் நிழலாடும் என்று உணருகின்றேன்.
அனைவருக்கும் பாராட்டுக்கள்...

leomohan
24-08-2007, 09:17 PM
நன்றி இளசுஜி...

உங்கள் கூற்று சரியானதுதான்...

சுத்தம் என்பது என்னோடு கலந்துவிட்ட ஒன்று.. நான் இருக்கும் அறை, வேலை செய்யும் என் இடம் எப்பொழுதும் சுத்தமாய் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்..

ஆனால் கொஞ்சம் சோம்பேறியும் கூட... மூன்று நாள் தாடியை எடுக்கவும் கொஞ்சம் சோம்பேறித்தனப்படுவேன்... :) :)

சுவாரஸ்யமான மனிதர்கள் சோம்பேறியாகவும் இருப்பது சகஜமோ ? :−)

சிவா.ஜி
25-08-2007, 05:09 AM
ஷீ−−நிசி அக அழகுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை புற அழகுக்கு கொடுப்பதில் சுனங்குகிறார்.

இனியவளின் வேகமும் ஈடுபாடும் மலைக்க வைக்கிறது.பணியிலிருந்து கொண்டே படிக்கும் அவர் மேலும் உயர வாழ்த்துக்கள்.

மனியாவின் பதிலைப் படித்து மேலும் மேலும் அவர் மீது மதிப்பு கூடுகிறது.

ராஜா சார் தெளிந்த நீரோடை போன்ற வாழ்க்கையமைந்தவர்..அதுதான் எந்த நேரமும் உற்சாகமாய் இருந்து,மற்றவரையும் உற்சாகப்படுத்துகிறார்.தெளிவான அவரின் பதில் அவரைப்பற்றின தெளிவைத் தருகிறது.

அறிஞரின் ஆராய்ச்சி பிரமிக்க வைக்கிறது..கூடவே அவரால் இம்மன்றம் நிர்வகிக்கப்படும் காலக்கட்டத்தில் நாமும் அவருடன் இணைந்திருப்பது பெருமையாக உள்ளது.

மோகன் அவர்களின் தாய் தந்தையரை நினைக்கும்போது...மோகன் உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்டவாராக தெரிகிறார்.பல்திறன் உள்ள இவர் ஒரு காலத்தில் எல்லோராலும் பேசப்படுவார் என்று உறுதியாகத் தெரிகிறது.

இந்த திரியின் பிதாமகன் ராஜாவுக்கும்,அற்புதமான பதில்களை வெளிக்கொணர்ந்த இளசுவிற்கும் மனமார்ந்த நன்றிகள்.

இதயம்
25-08-2007, 05:10 AM
வாரவிடுமுறை முடிந்து சனிக்கிழமை சற்றே சோர்வோடு பணிக்கு திரும்பிய என்னை, ராஜா அவர்களால் தொடங்கப்பட்ட ஆ..!பத்து என்ற திரியும், அதன் தொடர்ச்சியாக இளசு அவர்களின் "தேடப்படும் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியல்" போல் குறித்திருந்த 10 பேரின் பெயரும் இருந்தது. ஆர்வத்துடனும், பரபரப்புடனும் அதை படிக்க ஆரம்பித்த நான், அந்த ஹிட் லிஸ்டில் என் பெயரும் இருந்தது கண்டு (இன்ப)அதிர்ச்சியடைந்தேன்.!! நல்லவேளை எனக்கு தெரியாத விஷயம் பற்றி கேட்காமல், எனக்குள் உறைந்திருக்கும் விஷயம் பற்றி கேட்டதால் தப்பித்தேன். இருந்தாலும் இத்தனை முக்கியத்துவம் கொடுத்து முதல் பதிவிலேயே என் பெயரை இட்டதெல்லாம் கொஞ்சம் அதிகமாகத்தான் தோன்றுகிறது, இந்த பதிவால் எனக்கு ஏற்பட்டிருக்கும் பெருமையையும் சேர்த்து தான் சொல்கிறேன்.! இளசு அவர்களின் கேள்விகள் அற்புதம். அதற்கு நண்பர்கள் தன் மன உணர்வுகளை தோண்டி எடுத்து நம் பார்வைக்கு வைத்த பதில்கள் என்னை பரவசப்படுத்தின.. சரி..எனக்கான கேள்விக்கு போவோம்.

இன்றைய உலகம் இருக்கும் சூழ்நிலையில் மனிதர்கள் மதம், இனம், மொழி, தேசம், கலாச்சாரம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு மனிதர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி, அதன் ஏற்படும் தீய விளைவுகளால் மனித பொருளாதார, உயிரழிவுக்கு காரணமாக இருந்து வருகிறார்கள். தன்னலம் கருதி மிகக்குறைந்த சிலரின் தூண்டுதலால் செய்யப்படும் இந்த செயல்களால் அப்படி செய்யும் அவர்களுக்கு மட்டுமே நன்மையன்றி, உலகமக்களுக்கு எந்த பயனுமில்லை. இந்த பிரிவினைகளை அழித்து உலகமக்களுக்குள் ஒற்றுமை, அதன் மூலம் உலகத்தின் மகிழ்ச்சியான இயக்கத்திற்கு அடிகோலிட அவசியமான காரணிகளில் ஒன்றாக நான் காதலை நினைக்கிறேன். காரணம், காதல் ஒன்று தான் உலக இன்பங்கள் எதையும் நோக்காமல், இதய அன்பை அடிப்படையாக கொண்டு, இதயங்களை இணைத்து தொடங்குகிறது, தொடர்கிறது. ஆனால், அது முடிவதும் இல்லை, அழிவதும் இல்லை என்பது சிறப்பு..!! காதல் அதைக்கொண்டவர்களின் மகிழ்ச்சிக்கு மட்டும் காரணமாக அமையாமல், மனித குல ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கும் காரணமாக அமைவதால் நாம் ஒவ்வொருவரும் எடுக்கவேண்டிய நல்ல முடிவு என்பது காதல் பற்றிய என் கருத்து.!!

அடுத்து என் வாரிசுகளின் காதலுக்கு என் பிரதிபலிப்பு என்ன..? என்னைப்பொருத்தவரை காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் உயர்ந்த சந்தோஷத்தை கொடுக்கும் ஒரு விஷயம். இந்த சந்தோஷம், நிம்மதி காதலிக்கப்படும் இருவருக்குமிடையே மிகுந்த புரிந்துணர்வு, அனுசரித்தலை, விட்டுக்கொடுத்தல் ஏற்படுத்தி அவர்கள் வாழ்க்கையில் இன்பத்தை ஏற்படுத்தும். இதை நான் திருமணத்திற்கு முன் உணர்ந்ததாலேயே தான் பலரின் எதிர்ப்பை மீறி, நாங்கள் இருவரும் இணைய அதிக மனதிடத்தையும், விடாமுயற்சியையும் ஏற்படுத்தியது. எங்களுடைய முடிவு சரி தான் என்பதை நாங்களும், எங்கள் காதலுக்கு எதிராக இருந்தவர்களும் இன்றைய எங்கள் சந்தோஷ வாழ்க்கையை கொண்டு புரிந்து கொண்டார்கள். இதை என் பிள்ளைகளும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். எனவே, எங்கள் காதலுக்கு எதிரானவர்கள் செய்த அதே தவறை நான் செய்ய விரும்பவில்லை. எனவே அவர்களின் காதலுக்கு என் மனப்பூர்வ ஆதரவு எப்போதும் உண்டு.

காதலின் பலனை அவர்கள் அதிகம் நேசிக்கும் தன் பெற்றோர்கள் வழியே அறிந்து விட்டதால், பருவ வயதில் அவர்களும் காதலால் ஈர்க்கப்பட வாய்ப்பதிகம் என்பதை நான் அறிவேன். அதை புரிந்து, அவர்களின் முடிவை சரியான வழியில் எதிர்கொள்ள நான் தயாராகி வருகிறேன். காதல் என்ற அற்புத விஷயம் தவறாக புரிந்து கொள்ளப்படுவது அதை வெறு இனக்கவர்ச்சியாக புரியும் போதும், தனக்கு பொருத்தமான இணையை தேர்ந்தெடுக்க தவறும் போதும் நடக்கிறது. இந்த இரண்டு தவறுகளும் நடக்காமல் இருக்க ஒரு தந்தையாக என்னால் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு உதவி செய்து வழி காட்டுவேன். அவர்களுக்குள் காதல் தொடங்கும் அந்த நிமிடத்தை கூட என்னோடு உடன் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து, அவர்களின் நன்மை, தீமை, எதிர்பார்ப்பு, தேவை புரிந்து நடந்து அவர்களுக்கு என் மேலும், எனக்கு அவர்கள் மேலும் முழு நம்பிக்கை ஏற்பட வழி வகுப்பேன். தன் பிள்ளைகள் மீதான ஒரு தந்தையின் கடமை, விருப்பம் என்பது அவர்களின் சிறந்த, மகிழ்ச்சியான வாழ்க்கை தான். அதை அவர்களுக்கு காதல் கொடுக்கும் பட்சத்தில் நான் யார் அதை தடுக்க..? அப்படி தடுத்தால் நான் பெற்ற சந்தோஷத்தை என் பிள்ளைகள் பெறக்கூடாது எனக்கு நினைக்கும் சுயநல தந்தை ஆவேன். அதை நான் செய்ய மாட்டேன். காரணம், நான் காதலால் நான் ஏமாற்றப்பட்டவன் கிடையாது, சிறந்தவனாக மாற்றப்பட்டு, ஏற்றமிகு வாழ்க்கையை பெற்றவன்..!!

பிச்சி
25-08-2007, 05:25 AM
அடடா. இந்த திரியின் மூலம் பல ருசியான தகவல் வரும்..

lolluvathiyar
25-08-2007, 06:52 AM
காதலை பற்றிய இதயம் அவர்களின் பதில் அருமை. காதல் என்ற வார்த்தையை டைப் அடிக்கும் போதே இதயத்தின் உனர்ச்சிகள் பொங்கி வழிந்து விட்டது போல் தெரிகிறது. கீ போர்டே உடையர அளவுக்கு அடிச்சு தள்ளிட்டாரு.
பிள்ளைகள் காதல் செய்வதை வலுகட்டாயாமாக தடுக்க நினைத்தால் அது எல்லை மீரி போய் விடும். நல்லதோ கெட்டதோ நமது பிள்ளைகள் பட்டு தான் அனுபவிக்க வேண்டும்.

அமரன்
25-08-2007, 08:08 AM
இதயமே கொன்னுடீங்க.....ஃபினிஷிங் கலர் ஃபுல்..

மதி
25-08-2007, 08:43 AM
அட்டகாசமான பதில் இதயம்.. காதலை பற்றி உணர்ந்தவராலேயே கூற முடியும்..அதை நன்றாகவே உணர்ந்திருக்கிறீர்.
வாழ்த்துக்கள்

மனோஜ்
25-08-2007, 08:53 AM
இதயம் தங்களின் இதயத்தின் ஓசை உண்மையில் அதிசயித்தேன் விளங்கமும் ஒரு தந்தையாக செயல்பட போகும் விதமும் என்னை மெய்சிலிர்க வைத்தது நன்றி நண்பரே தங்கள் விளக்கத்திற்கு

ராஜா
25-08-2007, 12:46 PM
நன்றி அறிஞர் பெருமானே..!
தங்கள் ஆராய்ச்சி மனிதகுலத்துக்கு இன்னும் அதிகமாகப் பயன்பட இறைவனை வேண்டுகிறேன்.

நன்றி இதயம்.. !
நெடிய பதிலாக இருந்தாலும் மிகச் சுவையான பதில்.. ஆரம்ப வரிகளில் என்னையறியாமல் சிரித்துவிட்டேன்..!

மோகன் பதிலும் நன்று.

ராஜா
25-08-2007, 12:51 PM
ஆ! பத்து − 1. கேள்வியாளர்; இளசு.

1) அண்ணல் கரிகாலன் : பெரிய அறிவாளிகளுக்குத்தான் ஒற்றைத்தலைவலி வரும் என்பார்கள் − உங்களால் அதை நம்புகிறேன் அண்ணலே... அடிக்கடி பயணம், நனையல் என படிக்கும்போது உங்கள் மகிழ்ச்சியால் மகிழ்ந்தாலும், உங்கள் உடல் நலம் பற்றி கவலையும் உள்ளுக்குள்...

அதனாலேயே நீங்கள் கொஞ்சநாள் மன்றம் வரவில்லை என்றாலும் மனது அலைகிறது...
உடலும் உள்ளமும் நலந்தானா அண்ணலே..

2) தலை மணியா −

தலை, உங்களிடம் சில லட்ச ரூபாய் (வட்டியில்லாக்) கடனாய் வாங்கிய ஒருவர் ( நானாய்க்கூட இருக்கலாம்) பலகாலம் டபாய்க்கிறார். உங்களுக்கும் நெருக்கடி.. தேவை... திரும்ப வராத கடனால், நீங்கள் புதிதாய் கடன் வாங்கி (வட்டி கட்டி) அல்லாடுகிறீர்கள்..

அந்த கொடாநண்பர் ஒருமுறை உங்கள் எதிரில்... நல்ல உணவு+ நீர் விடுதியில்.. அப்போதும் உங்களால் ஜோக்(குகள்) அள்ளி வீசாமல் இருக்க முடியுமா????

3) இனியவள்:

நீங்கள் என்ன பணி செய்கிறீர்கள் இனியவள்? சரியான நேரம் தூங்குகிறீர்களா? உங்கள் தட்டச்சு வேகம் எவ்வளவு? (உங்கள் கற்பனை வேகம் மன்றம் அறியும்)

4) வாத்தியார்:

உணவுப்பழக்கம் எல்லாம் சரிதான்.. அதிலும் தயிர்சாதம் +மாதுளம்பழம் சூப்பர்!

ஆனாலும் வயதாகும் பருவம் − சிகரெட்டை விலக்க நாள் குறிக்க எண்ணமில்லையா?

4) இதயம் :

உங்கள் காதல் மணச் சேதி அறிந்து மிகப் பூரித்தவன் நான்..

உங்கள் வாரிசு(கள்) எதிர்காலத்தில் காதல் + கலப்பு மணம் புரிய நேர்ந்தால் உங்கள் நிலை?

5)ராஜா −

சன், விஜய் அசத்தல், கலக்கல் மன்னர்கள் எல்லாம் உங்களுக்கு ரொம்ப ரொம்ப ஜூனியர் குறுநில ராஜாக்கள்தாம் என் பார்வையில்!

இத்தனை திறமையை இன்னும் பெரிய அளவில் ''ஷோகேஸ்'' பண்ணவேண்டும் நீங்கள் என விரும்புகிறேன்... உங்கள் எண்ணம்?

6) அன்பின் ஆரென் −

நல்ல படைப்பாளிகள் ( கிரியேட்டிவ்) நல்ல வியாபாரிகளாய் இருக்க முடியாது... உங்கள் மூதாதையர் கதையே சொல்லும் பாடம் இது..

கவிதைகள் உட்பட படைப்பாளியாய் பரிமளிக்கும் நீங்கள், வியாபாரத்திலும் ஜெயிக்க வேண்டும்.. தொழில் நலமாய்ப் போகிறதா?

இந்த ஊர்ப்பக்கம் அடுத்த விஜயம் எப்போது?

7) அறிஞர் :

ஆராய்ச்சிகள் பணி, ஊதியம் தந்தாலும், கூடவே திருப்தியும் அளிக்கின்றன..

இதுவரை அதிக திருப்தி தந்த ஆராய்ச்சி எது?

8)லியோமோகன் −

அஷ்டாவதானி, தசாவதானி என மல்டி=டாஸ்க் திறன் உள்ளவர் நீங்கள்.. சரிதானே? உங்கள் மூதாதையரில் யாரிடம் இந்தத் திறன் இருந்தது/ இருக்கிறது?

9) ஷீ−நிசி :

அழகுணர்ச்சி உங்களுக்கு மிக மிக அதிகம் ஷீ! உங்கள் உடை, அறை எல்லாம் நேர்த்தியாக இருக்கும் என மனக்காட்சி... சரியா?

10) சிவா.ஜி:

சொல்லின் செல்வராய் உலாவரும் சிவா..

கருத்து மாறுபாடுகள் இருப்பினும் நட்பு இறுகி வளரும் என்பதில் நம்பிக்கை உள்ளவர்தானே நீங்கள்?

ஷீ-நிசி
25-08-2007, 01:32 PM
ஷீ−நிசி :

அழகுணர்ச்சி உங்களுக்கு மிக மிக அதிகம் ஷீ! உங்கள் உடை, அறை எல்லாம் நேர்த்தியாக இருக்கும் என மனக்காட்சி... சரியா?

நன்றி இளசுஜி...

உங்கள் கூற்று சரியானதுதான்...

சுத்தம் என்பது என்னோடு கலந்துவிட்ட ஒன்று.. நான் இருக்கும் அறை, வேலை செய்யும் என் இடம் எப்பொழுதும் சுத்தமாய் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்..

ஆனால் கொஞ்சம் சோம்பேறியும் கூட... மூன்று நாள் தாடியை எடுக்கவும் கொஞ்சம் சோம்பேறித்தனப்படுவேன்... :) :)

சுவாரஸ்யமான மனிதர்கள் சோம்பேறியாகவும் இருப்பது சகஜமோ ? :−)

பச்சையும் சிவப்பும் கொஞ்சம் மாறுபட்டு இருக்காப்பல இருக்கே ஷீ..!

ஷீயின் கவிதைகளில் காணும் நேர்த்தியைக் கண்டு என்னுள் எழுந்த அவர் பற்றிய கற்பனை உருவம் நிஜமாகியுள்ளது சின்ன முரணுடன். சவரம் செய்ய காட்டும் சோம்பேறித்தனம். எதிர்பாக்கவில்லை. (அதுகூட அழகுதான் இல்லையா)

நான் கேட்க எண்ணியதை முழுதும் கேட்டிருக்க வேண்டும்..!

நான் கேட்க நினைத்தது, அறையின் தோற்றத்தில் கவனம் செலுத்தும் நீங்கள் முகத்தோற்றத்திலும் அவ்வாறு இருக்கலாமே.. இளம் வயதினராயிற்றே என்று..!

தாடி- நிசி!:sport-smiley-007:

அட இதை சிம்பிளா டீல் பண்ணலாமே..........!!! :nature-smiley-003:
மூன்று நாள் தாடியை எடுக்கத் தானே சோம்பறிப்படுறீங்க.........
இனிமே ஒரு நாள் தாடியா இருக்கும் போதே எடுத்துடுங்க - சோம்பறித்தனம் வராது:icon_p: (எதனையும் முளையிலேயே கிள்ளிடணும்....:icon_wink1:)

ஷீ−−நிசி அக அழகுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை புற அழகுக்கு கொடுப்பதில் சுனங்குகிறார்.

மன்னிச்சிடுங்க மக்களே! இனிமேல் ஒழுங்க சேவ் செய்துடுறேன்...

3 நாள் தாடி தாங்க... 3 மாச தாடி இல்ல...

நான் மட்டும்தான் இப்படி இருக்கேனா......:icon_blush:

அமரன்
25-08-2007, 01:34 PM
[COLOR="Navy"]மன்னிச்சிடுங்க மக்களே! இனிமேல் ஒழுங்க சேவ் செய்துடுறேன்...

3 நாள் தாடி தாங்க... 3 மாச தாடி இல்ல...

நான் மட்டும்தான் இப்படி இருக்கேனா......:icon_blush:

நான் உங்களை விட சோம்பேறிங்க..ஒருவாரம் பத்து நாள்...

leomohan
25-08-2007, 01:42 PM
நன்றி இளசுஜி...

உங்கள் கூற்று சரியானதுதான்...

சுத்தம் என்பது என்னோடு கலந்துவிட்ட ஒன்று.. நான் இருக்கும் அறை, வேலை செய்யும் என் இடம் எப்பொழுதும் சுத்தமாய் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்..

ஆனால் கொஞ்சம் சோம்பேறியும் கூட... மூன்று நாள் தாடியை எடுக்கவும் கொஞ்சம் சோம்பேறித்தனப்படுவேன்... :) :)

மன்னிச்சிடுங்க மக்களே! இனிமேல் ஒழுங்க சேவ் செய்துடுறேன்...

3 நாள் தாடி தாங்க... 3 மாச தாடி இல்ல...

நான் மட்டும்தான் இப்படி இருக்கேனா......:icon_blush:

இடத்தை கொடுத்தா மடத்தை பிடிக்க மக்கள் காத்திருக்கிறார்கள் ஷீ :-)

ராஜா
25-08-2007, 03:16 PM
அடுத்து,

நம் மன்றத்தின் இளைய "இளசு" ஷீ நிசியாரை கேள்விக்கணைகள் தொடுக்க அன்புடன் அழைக்கிறோம்..!

ஓவியன்
25-08-2007, 03:18 PM
ஓ அன்பான ஷீ!
ஓடிவாங்கோ முத்தான கேள்விகளுடன்..........!

அமரன்
25-08-2007, 03:19 PM
இளைய இளசு மிகப்பொருத்தமானது...!
வாங்க ஷீ.

அமரன்

aren
25-08-2007, 04:51 PM
நான் ஊரில் இல்லை, ஆகையால் மன்றம் வரவில்லை. இன்றுதான் இதைப் பார்த்தேன்.

6) அன்பின் ஆரென் −

நல்ல படைப்பாளிகள் ( கிரியேட்டிவ்) நல்ல வியாபாரிகளாய் இருக்க முடியாது... உங்கள் மூதாதையர் கதையே சொல்லும் பாடம் இது..

கவிதைகள் உட்பட படைப்பாளியாய் பரிமளிக்கும் நீங்கள், வியாபாரத்திலும் ஜெயிக்க வேண்டும்.. தொழில் நலமாய்ப் போகிறதா?

இந்த ஊர்ப்பக்கம் அடுத்த விஜயம் எப்போது?

சொந்தமாக தொழில் ஆரம்பித்து மூன்று வருடம் ஆகிறது. இதுவரை நன்றாகவே செல்கிறது இருந்தாலும் இன்னும் கொஞ்சம் நன்றாக போகனும் என்று மனது சொல்கிறது, முயற்சிகள் பல மேற்கொண்டு வருகிறோம். அடுத்த வருடம் இன்னும் கொஞ்சம் முழு மூச்சுடன் தொழிலில் ஈடுபடவேண்டும் என்று நினைக்கிறோம். காலம் பதில் சொல்லும். நான் பிறருக்காக நிர்வகித்த நிறுவனங்களுக்கு நிறைய வியாபாரமும், லாபம் கிடைக்க உதவினேன், என்னுடைய தொழில் என்று வரும்பொழுது அதே மாதிரி செய்யவேண்டுமே, நடக்கவேண்டுமே என்ற பிரஷர் கொஞ்சம் இருந்தாலும் அது கொஞ்சம் சந்தோஷமான பிரஷர் என்றே நினைக்கிறேன். ஆகையால் வாழ்க்கைச் சக்கரம் சுழன்றுகொண்டிருக்கிறது. பார்க்கலாம்.

இந்த வருடம் உங்கள் ஊர் வந்திருக்கவேண்டும் கடந்த மே மாதத்தில். இப்பொழுது வருவதற்கு சந்தர்பம் கிடையாது. அடுத்த மார்ச் மாதம் சந்தர்பம் இருக்கிறது அல்லது மே மாதத்தில் நிச்சயம் வருவேன். இடைப்பட்ட காலத்தில் ஏதாவது நன்றாக அமைவதாக இருந்தால் உங்கள் ஊருக்கு ஒரு விஜயம் செய்யமுடியும். நிச்சயம் முன்னதாகவே சேதி அனுப்புகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
25-08-2007, 04:53 PM
இளசு அவர்களே, வேலை விஷயமாக இல்லாவிட்டாலும் நீங்கள் கூப்பிடுங்கள், உடனே வந்துவிடுகிறேன். உங்களை அப்படியாவது பார்த்து பேசமுடியுமே.

ஓவியன்
25-08-2007, 05:00 PM
சொந்தமாக தொழில் ஆரம்பித்து மூன்று வருடம் ஆகிறது. இதுவரை நன்றாகவே செல்கிறது இருந்தாலும் இன்னும் கொஞ்சம் நன்றாக போகனும் என்று மனது சொல்கிறது, முயற்சிகள் பல மேற்கொண்டு வருகிறோம். அடுத்த வருடம் இன்னும் கொஞ்சம் முழு மூச்சுடன் தொழிலில் ஈடுபடவேண்டும் என்று நினைக்கிறோம். காலம் பதில் சொல்லும்.

அன்பான அண்ணா!

உங்கள் சொந்த தொழிலில் நீங்கள் நினைப்பது போலவே வெற்றிகள் கிடைக்க என் வாழ்த்துக்கள்! − இங்கே அசத்துவது போல அங்கேயும் அசத்துங்க!.

ஓவியா
25-08-2007, 05:01 PM
இளசு அவர்களே, வேலை விஷயமாக இல்லாவிட்டாலும் நீங்கள் கூப்பிடுங்கள், உடனே வந்துவிடுகிறேன். உங்களை அப்படியாவது பார்த்து பேசமுடியுமே.

இந்தியாவிலிருக்கும் இளசுவை நீங்கள் உங்க ஊரில் இருந்து பார்த்து பேசுவீங்களா??????????/ ம்ம்ம்ம்

சரி அப்படியே எனக்கும் கூப்பிட சொல்லுங்களேன், பிலிஸ், நானும் லண்டனிலிருந்து உடனே இந்தியாவிலுள்ள இளசு சாரை பார்த்து பேசுறேன்.

− சைக்கில் கேப்பில் ஆட்டோ ஒட்டும்
ஓவியா

அமரன்
25-08-2007, 05:04 PM
ஆரென் அண்ணா பதில் முதிர்ச்சி.
அன்பில் நீங்கள் உயர்ச்சி..
-அமரன்

ராஜா
25-08-2007, 05:05 PM
நன்றி மாட்டிரிக்ஸ்..!

ராஜா
25-08-2007, 05:06 PM
அமர்..!

அநியாய [அன்பு] தாதாவை எப்போ புடிச்சுப் போடுவோம்..?

அமரன்
25-08-2007, 05:11 PM
அமர்..!

அநியாய [அன்பு] தாதாவை எப்போ புடிச்சுப் போடுவோம்..?

ஹி...ஹி.....ஷீயுக்கே வெளிச்சம்..அண்ணா.

ஓவியா
25-08-2007, 05:11 PM
என்னை பிடிக்கும் பக்கியம் இந்த மன்றத்திலே ஒரே ஆளுக்குதான் கிடைச்சி இருக்கு!!! ஆனால் எனக்கு பிடிக்கும் ஆளுங்க என்ற பாகியம் இந்த மன்றதிலே பல பேருக்கு கிடைச்சு இருக்கு......

அக்குறும்பு அழகி
− ஓவிகுட்டி

ஓவியன்
25-08-2007, 05:23 PM
அக்குறும்பு அழகி
− ஓவிகுட்டி

எனக்கு இதுக்கு விளக்கம் நீங்க சொல்லியே ஆகணும்...........!
அங்குறும்புனா என்ன? :sport-smiley-018::sport-smiley-018:

ஓவியா
25-08-2007, 05:26 PM
அட்டகாசம் செய்யும் குழந்தைனு அர்த்தமாம்.

அது சரி, எழுத்துபிழை இருக்கா தம்பி? அது அக்குரும்பா அக்குறும்பா?

ஷீ-நிசி
25-08-2007, 05:42 PM
நன்றி ராஜா சார் / நன்றி அமரன்

1. அன்பு இளசு அவர்களே! உங்களின் கவிதை விமர்சனங்களை கண்டு பலமுறை பரவசப்பட்டிருக்கிறேன். பல பணிகளுக்கு மத்தியிலும், பலர் எழுதுகின்ற கவிதைகளை மேம்போக்காய் படிக்காமல் மிக ஆழமாக படித்து, மிக ஆழமாக விமர்சிக்கும் உங்களின், பண்பு + அன்பு க்கு நான் அடிமை.. கவிதையினை விமர்சிக்க விரும்பும் விமர்சகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

2. அன்பு அறிஞர் அவர்களே, எல்லோரையும் அரவணைக்கும் குணம் உங்களிடம் நான் பழகியவரையில் கண்டுள்ளேன். அப்படி மிக நம்பிக்கையாய் பழகிய உங்கள் நண்பர் யாராகிலும் 'இப்படி செய்துவிட்டானே' என்று நீங்கள் வருந்த வைத்த சம்பவம் ஏதேனும் உண்டா?

3. அன்பு பாரதி அவர்களே! எப்பொழுதும் சிரித்தமுகமாய், எல்லோருக்கும் நண்பனாய் இருப்பது எல்லோராலும் முடிகிற காரியம் அல்ல. நீங்கள் அப்படி இருக்கிறீர்கள். உங்கள் இயல்பே அப்படித்தானா, இல்லை வாழ்க்கை பயணத்தில் அவ்வாறு உங்களை மாற்றிக்கொண்டீர்களா? (எங்களுக்கும் அப்படி இருக்க சில டிப்ஸ் கொடுங்க)

4. அன்பு மணியா அவர்களே! மன்றத்தின் மிக மூத்த உறுப்பினர் நீங்கள். மன்றத்தின் இன்றைய நிலையினை உங்கள் பார்வையில் சொல்லுங்கள்.

5. அன்பு மன்மதன், உங்களின் எதிர்கால இலட்சியம் அறிவேன். நீங்கள் கண்டிப்பாய் வெற்றியடைவீர்கள். வெற்றியடைந்த பிறகு அதில் நுழைய ஆர்வம் உண்டா? அதாங்க பாலாய் இருந்து பாழாய்ப்போன அரசியல். அதில் நுழைவீர்களா? :)

6. அன்பு மோகன் அவர்களே! தமிழ் வளர்க்கும் உங்களின் முயற்சியை நான் ஓரளவிற்கு அறிவேன். உங்களின் இதேனீ மன்றம் நீங்கள் எதிர்பார்த்த அளவு பிரபலமடைந்திருக்கிறதா இணைய உலகில்? தமிழுக்காய் செய்ய விரும்பும் எதிர்கால இலக்குகள் என்ன?

7. அன்பு ஆதவா, எனக்கு மன்றம் தந்த ஒரு மிக நல்ல நண்பர் நீங்கள். மிக இளம் வயதிலேயே இத்தனை வெளியுலக அறிவை நீங்கள் அடைந்திருக்க மிக முக்கிய காரணம் எது என்று கூறுவீர்கள்?

8. அன்பு ஓவியா, பாரதி கண்ட புதுமைப்பெண் என்று நீங்கள் உங்களை நினைக்கிறீர்களா? (நான் நினைக்கிறேன்) பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

9. அன்பு அமரன், மன்றத்தில் முதலில் நரன் என்ற பெயரில் வந்தீர்கள்... இன்று அமரனாய் வளர்ந்திருக்கிறீர்கள்...
மன்றத்தின் செயல்பாடுகளில் நரன் vs அமரன் ஒப்பிடுங்கள்.

10. அன்பு மனோஜ் முதலில் வெறும் பின்னூட்டங்கள், பின் கணித திரிகள், விளையாட்டு, இன்று கவிதைகள்.. தமிழ் பிழைகள் கூட வெகுவாய் குறைந்துள்ளது. மன்றத்தில் இணைந்தது முதல் இன்றுவரை இந்த நண்பர்களுடனான ஐக்கியத்தை எப்படி உணர்கிறீர்கள்?

ஓவியன்
25-08-2007, 05:48 PM
அருமையான கேள்விகள் ஒவ்வொருவருக்கும் ஏற்றதாக தெரிந்தமைக்கு பாராட்டுக்கள் ஷீ!

முக்கியமாக இளசு அண்ணாவிடம் நான் கேட்க நினைத்ததை நீங்கள் கேட்டு விட்டீர்கள் நன்றிகள்!. :nature-smiley-008:

அமரன்
25-08-2007, 06:09 PM
நானும் மாட்டினேனா...விரைவில் வருகின்றேன்.

நற நற நன்றியுடன்
அமரன்

ராஜா
25-08-2007, 06:13 PM
கேள்வித் தொகுப்புக்கு நன்றி ஷீ..!
அனைவர் பதிலும் அறிய ஆவலைத் தூண்டும் கேள்விகள்..!

வாங்க மக்கா..!

ஓவியா
25-08-2007, 06:22 PM
நானும் விரைவில் இரவில் விடையுடன் வருகிறேன்.

நன்றி ஷீ.
நன்றி ராஜா அண்ணா.

ராஜா
25-08-2007, 06:43 PM
பதிலைக் கேட்டுட்டுப் போறதுக்கு இப்போவே தரை டிக்கெட்டில் துண்டு போட்டு இடம் பிடிச்சு உக்காந்துட்டோமில்ல..!
வாங்க.. வாங்க.. !

அமரன்
25-08-2007, 06:51 PM
பதிலைக் கேட்டுட்டுப் போறதுக்கு இப்போவே தரை டிக்கெட்டில் துண்டு போட்டு இடம் பிடிச்சு உக்காந்துட்டோமில்ல..!
வாங்க.. வாங்க.. !

ஐந்து நிமிடம் தாங்க..அண்ணா

அமரன்
25-08-2007, 06:56 PM
ஒவ்வொரு உறவுகளின் ஆட்டோகிராஃப்பை வெளிக்கொணரும் திரியை ஆரம்பித்த ராஜா அண்ணாவுக்கும் என்னை எழுத அழைத்த ஷீக்கும் நன்றி.

9. அன்பு அமரன், மன்றத்தில் முதலில் நரன் என்ற பெயரில் வந்தீர்கள்... இன்று அமரனாய் வளர்ந்திருக்கிறீர்கள்...
மன்றத்தின் செயல்பாடுகளில் நரன் vs அமரன் ஒப்பிடுங்கள்.

நரன் - அமரன் இது எனது வளர்ச்சி மாற்றம் மன்றத்திலும் வாழ்விலும். தமிழில் மாற்ற வரைபு மிக உயர்வு. அறிவில் உயர்வு. அந்த உயர்வுக்கு மன்றப் பட்டங்கள் மட்டுமே காரணம். பதவிகள் எதுவும் என்னை மாற்றவில்லை. தனி வாழ்வை விடுத்து மன்றத்தில் செயல்பாடுகளைப் பட்டியலிடுகின்றேன்.

தெரிவிப்பது நான். தீர்மானிப்பது நீங்கள்

நரன்:-

எந்தப் பதிவானாலும் அப்படியா என விழி விரித்தவன்.
எண்ணிக்கையை கணக்கில் கொண்டு பதிவுகள் தந்தவன்.
சர்ச்சைகளை விரும்பி படித்து சுகித்தவன்.
நகைச்சுவைன்னா நகைத்து நழுவியவன்.
சீண்டல்கள் கண்டால் கொம்பு சீவியவன்.
தனிமை, அமைதி இருவரின் காதலன்.
கவிதை என்றால் காத தூரம் ஓடியவன்.
மன்றத்தில் பொழுதுபோக்க வந்தவன்
குப்பையையும் வைரங்களையும் ஒன்றாக பார்த்தவன்

அமரன்:-
எந்தப்பதிவானாலும் எப்படி என சிறகுவிரிப்பவன்.
கண்ணான பதிவுகளை உண்ண நினைப்பவன்.
பதிவுகள் பொன்னாக இருக்க முயற்சிப்பவன்(என்னுடையதும் சகாக்களதும்)
சர்ச்சைகளைக் கண்டால் தகிப்பவன்.
நகைச்சுவைன்னா நனைய விரும்புபவன்(ஜலதோசம் பிடிக்காத அளவுக்கு)
சீண்டல்களை கண்டும் சகிப்பவன். ஆனாலும் சபிப்பவனல்ல.
இனிமைத் திருவிழா இவனின் காவலன்.
கவிதையின் காலடியில் நிற்பவன்.
மன்றம் பழுதாகமல் இருக்க முயல்பவன்.
வைரங்கள் மட்டும் ஜொலிக்க பாடுபடுபவன்.

=நிழல்களின் நிஜம்

ராஜா
25-08-2007, 07:04 PM
ஆஹா..! அட்டகாசம் அமர்..!

சுயபரிசோதனை என்பது ஞானிகளுக்கும், மகான்களுக்குமே கைவரப் பெறும் பயிற்சி. மூன்றாவது மனிதனாய் ஒதுங்கிநின்று விருப்பு வெறுப்பின்றி திறனாய்வு செய்ய எல்லோருக்கும் ஆகாது. எனக்கு நரன் பரிச்சயமில்லை. சுடர் துவக்கியபோது அறிவார்ந்த பின்னூட்டங்கள் இட்டு என்னைத் தன்பக்கம் திருப்பிய இந்த என் அமரைத் தான் தெரியும்.

என்றாலும் நரன், அமரன் இருவர் குறித்தும் தெள்ளத்தெளிவாகச் சொல்லப்பட்ட கருத்துகளில் தெறிக்கும் நாணயமும், நேர்மையும் என்னைக் கவர்கிறது.

இந்த அமரை எங்களுக்குத் தந்த அந்த நரனைப் போற்றுகிறோம்.

மனோஜ்
25-08-2007, 07:06 PM
நரன் − கத்துகுட்டி
அமரன் − வளர்ந்த மாடு ஹ ஹ ஹ வளர்ச்சிய சென்னங்க
தங்களின் ஒப்பு நோக்கள் அருமை அமரன்

அமரன்
25-08-2007, 07:18 PM
எனக்கு நரன் பரிச்சயமில்லை.
இந்த அமரை எங்களுக்குத் தந்த அந்த நரனைப் போற்றுகிறோம்.

அண்ணா....பொதுவாக நரனை யாருக்குமே பரிச்சியம் இருக்காது....ஒளிஞ்சிருந்து பார்த்திட்டு போய்விடுவான்..

நரன் − கத்துகுட்டி
அமரன் − வளர்ந்த மாடு ஹ ஹ ஹ வளர்ச்சிய சென்னங்க
தங்களின் ஒப்பு நோக்கள் அருமை அமரன்

உண்மைதான் மனோஜ்..காளை இப்போ ஜல்லிக்கட்டுக்கு முயற்சிக்கிறது..

மனோஜ்
25-08-2007, 07:51 PM
நன்றி ராஜா சார் / நன்றி அமரன்
10. அன்பு மனோஜ் முதலில் வெறும் பின்னூட்டங்கள், பின் கணித திரிகள், விளையாட்டு, இன்று கவிதைகள்.. தமிழ் பிழைகள் கூட வெகுவாய் குறைந்துள்ளது. மன்றத்தில் இணைந்தது முதல் இன்றுவரை இந்த நண்பர்களுடனான ஐக்கியத்தை எப்படி உணர்கிறீர்கள்?
இந்த திரியை தொடங்கிய ராஜா அண்ணாவற்கு என் நன்றிகள்

இந்த திரியில் என்னையும் இணைத்த ஷீக்கு என் மனமார்ந்த நன்றிகள்

நான் முதல் முதல் இணைந்ததும் பதிவுகள் இட யோசிப்பேன் அப்படியே மீறி பதிவுகள் தந்ததும் அதில் வார்த்தைக்கு வார்த்தை பிழைஇருக்கும் இதை என் அன்பு அண்ணா இளசு பென்ஸ் அவர்களும் அறிஞர் மற்றும் ஆதவாவும் இணைந்து மாற்றினார்கள் அவர்கள் முயற்சியல் இன்று சற்று பிழையில்லாமல் எழுத முயற்சித்து வருகிறேன்

எனக்கு கணிதம் வராது என்றாலும் ஏதாவது நல்லவிளையாட்டை தொடங்க வேண்டும் என்று தொடங்கியதுதான் தமிழ்கணபுலி ஆனால் இன்று வெற்றிகரமாக மூன்றாவது சுற்றில் வந்து நிற்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது இதற்கு காரணமான பிரதிப் சுட்டி அமரன் அன்பு விராடன் ஓவியன் இன்னும் இன்னும் அனைவருக்கும் நன்றிகள்
ஆடுத்து சமையல் விளையாட்டு இதில்மன்ற உறவுகள் அனைவரும் பங்கு பெற்றதில் அளவில்லா மகிழ்ச்சி

கவிதைகள் என்றால் அது பெயர் கவிதைகள் தான் ஆனால் ஓவியா ஷீநிசியின் உதவியால் கவிதைபோட்டிக்கும் கவிதை எழுத முடித்தது தற்பொழுது எனக்கு தமிழ்மன்றம் பல அருமையான உறவுகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது இங்கு இவ்வளவு தான் விரிவான பதிவு மிகவிரைவில்...

karikaalan
26-08-2007, 03:39 AM
அனைவரும் மன்னிக்கவும்.. நேற்று அவசர பணி அழைப்பு.. அதனால் தாமதம்..
இப்போதும் பணிக்குக் கிளம்பும் அவசரம்.. ஆனாலும் தள்ளிப்போடாமல்...

கேள்விகளை அள்ளிப்போடுகிறேன்.. (அஜீஸ் பண்ணிக்குங்க மக்கா)

(ரவுசு: பெருசா சிரிச்சு பில்டப் குடுக்கும்போதே நெனச்சேன்... சரிசரி...
கேள்விகளைப் பதிங்க..)

1) அண்ணல் கரிகாலன் : பெரிய அறிவாளிகளுக்குத்தான் ஒற்றைத்தலைவலி வரும் என்பார்கள் − உங்களால் அதை நம்புகிறேன் அண்ணலே... அடிக்கடி பயணம், நனையல் என படிக்கும்போது உங்கள் மகிழ்ச்சியால் மகிழ்ந்தாலும், உங்கள் உடல் நலம் பற்றி கவலையும் உள்ளுக்குள்...

அதனாலேயே நீங்கள் கொஞ்சநாள் மன்றம் வரவில்லை என்றாலும் மனது அலைகிறது...
உடலும் உள்ளமும் நலந்தானா அண்ணலே..

−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

அவசரக்கேள்விகள்.. தவறுகளைப் பொறுத்தருளுங்கள் மக்களே!

இளவல்ஜி

கவலையுடன் கூடிய தங்களது கேள்விகளுக்கு விடை சொல்ல முயல்கிறேன்.

பயணம் அடிக்கடி மேற்கொள்வதில்லை. என்னுடைய தொழில் தில்லியின் நான்கு சுவர்களுக்குள். அதிகபட்சம் செல்வது மும்பை −− மாதத்தில் ஒருமுறை. சென்னை செல்வது பெரும்பாலும் சொந்த விஷயங்களுக்காகத்தான். கடந்த ஒரு ஆண்டில் 6/7 முறை சென்றிருக்கிறேன்.... அதிசயமாக தொழில் சம்பந்தமாக. கூட்டணி ஆட்சியல்லவா! புரிந்திருக்கும்!!

தனியாக நனைவதில்லை, வெளியே சென்றால். வீட்டினுள் உண்டு. மிதமாக. அடியேனுடைய மருத்துவர், எனக்கு டையபிடீஸ் இருப்பதை உறுதி (1997) செய்த பிறகு கொடுத்த அறிவுரை −−− இனிப்புகளை அறவே தொடாதே. சில பழங்களை முகர்ந்துகூட பார்க்காதே. மது அருந்தலாம். ஆனால் பியரைத் தொடாதே.

கொடுத்த மருந்தை தவறாமல் உட்கொள்ளவும். உடற்பயிற்சி அவசியம் செய்யவும்.

மருத்துவர் மதுவுக்கு அனுமதியளித்தது ஏன் என்று பிறகு சொன்னார். அவருடன் சிலசமயம் அவருடைய வீட்டிலோ, அல்லது எனது வீட்டிலோ நேரம் கழிப்போம். அவ்வப்போது மது உண்டு! அதற்காக எனக்கு அனுமதி!!மற்ற நாட்களில் மிதமாக இருப்பதால், அருமையான சந்தர்ப்பம் கிடைத்தால், நிதானத்துடன் அனுபவித்து நனைவேன். எவ்வளவு நனைந்தாலும் மறுநாள் காலையில் ஃப்ளைட் பிடிக்க வேண்டியிருந்தால், உடலிலுள்ள கடிகாரம் எழுப்பிவிடுகிறது.

பயணம் மேற்கொண்டாலும், தில்லியிலேயே இருந்தாலும், எந்த நேரம் காலையில் வீட்டைவிட்டு வெளியே செல்வதாக இருந்தாலும், இரு விஷயங்கள் தவறுவதில்லை: 40 நிமிட விரைவுநடை; 40 நிமிட தியானம். பிறகு காலை உணவு.

ஒற்றைத்தலைவலிக்கும் அறிவுக்கும் தொடர்பு உண்டு என்பது மகிழ்ச்சி அளித்தாலும், உண்மை என்னவோ அஃதில்லையே, இளவல்ஜி!!

வணக்கங்கள், இளவல்ஜி!

===கரிகாலன்

சிவா.ஜி
26-08-2007, 04:34 AM
நரன்+அமரன்...ராஜா சார் சொன்னது போல..சுய பரிசோதனை என்பது எல்லோருக்கும் கைவராது.மனசு உண்மை சொன்னாலும்,மூளை சிறிது முரண்டு பிடிக்கும்.ஆனால் இங்கு மனசும்,மூளையும் ஒன்றிணைந்த வெளிப்பாடு அருமை அமரன்.உங்களின் இடையறாத பின்னூட்டங்களாலும்,உற்சாகப்படுத்துதலாலும் படைப்பாளிகளின் படைப்புகளின் எண்ணிக்கை மட்டும் கூடவில்லை...நீங்கள் விரும்புவதைபோல அவைகளின் தரமும் கூடுகிறது.என்றும் இப்படியே இருந்து எல்லா நலமும் பெற வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
26-08-2007, 04:36 AM
மனோஜ் அருமையான பதில்.தோள்கொடுத்த தோழர்களை நினைவுகூர்ந்த விதம் பிரமாதம்.வெற்றிகரமான திரிகளுக்கு சொந்தக்காரரான நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

ஷீ-நிசி
26-08-2007, 04:49 AM
கரிகாலன் அவர்களே! உங்கள் உடல்நலம் சிறப்பாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்..

அமரன்... உம் அலசல் மிக நன்றாக இருந்தது...வாழ்த்துக்கள்!

மனோஜ் பதில் மிகவும் தெளிவாக இருந்தது. வாழ்த்துக்கள்!

mania
26-08-2007, 05:08 AM
[QUOTE=ஷீ-நிசி;262919][B][U]4. அன்பு மணியா அவர்களே! மன்றத்தின் மிக மூத்த உறுப்பினர் நீங்கள். மன்றத்தின் இன்றைய நிலையினை உங்கள் பார்வையில் சொல்லுங்கள்./QUOTE]

என்னுடைய வயதை மறைமுகமாக பகிரங்கப்படுத்திய நண்பனுக்கு
என் நன்றி.(அடுத்த முறை சந்திக்கும்போது இருக்கு உனக்கு....) :rolleyes:

இன்றைய நிலையில் மன்றத்தை பற்றி என் பார்வை (ஒன்றரை கண்ணில்....ஹி...ஹி...ஹி...)

அன்றைய மன்றத்தில் முதலாக இவ்வளவு அங்கத்தினர் இருக்கவில்லை. ஆயினும் சிறந்த அறிவாளிகளுக்கும், கவிதைத்திறன் வாய்த்தவர்களும் குறைவில்லாமல் இருந்தார்கள்(நான் சிலரை சொல்லி சிலரை விடுவதற்கு .இஷ்ட்டமில்லாததால் நான் பேரை சொல்லாமல் விட்டு விடுகிறேன்)
சுலபமாக எல்லா பதிவுகளையுமே ஒரு பார்வை பார்க்க முடிந்தது. மேற்பார்வையாளர்களுக்கு அதிக வேலை இருந்தது கிடையாது ..
தயிரை கடைந்தால் ஒதுங்கும் வெண்ணை போலே லைக் மைண்டட் பியூப்பிள் நாங்கள் சிலர் அவர் அவரது எழுத்துத்திறனை பார்த்து ஈர்க்கப்பட்டு ஒன்றாக இணைந்தோம்.(ஐவரணி). தினமும்
ஒரே குதூகலம்தான்..:grin::grin:.. ஒருவரை ஒருவர் வாரிக்கொண்டு....:080402cool_prv::080402cool_prv:.அப்பப்பா....ஒரு பதிவு போடவேண்டியது தான்.,. வாரிக்கட்டிக்கொண்டு பதில்கள்....சுடச்சுட... என்றாவது ஒரு நாள் வரவில்லை என்றாலும் ஒரே சோகம்தான்.
. இந்த அன்புப் பிணைப்பில் ஆரம்பித்தது தான் சந்திப்புகள்.... இதுவரை சுமாராக 25 நண்பர் நன்பிகளை சந்தித்திருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.:icon_good::icon_good: அந்த சந்திப்புகளில் ஏற்படும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது....(என்னால் முடியாது என்பது வேற விஷயம்.)...:grin::grin:
இதனிடையே போட்டிகள்...கணக்கு போட்டி, பகுத்தறிவு போட்டி,குறுக்கெழுத்து போட்டி.விடுகதைகள் போட்டி,
லாஜிகல் சொல்யூஷன்ஸ் சிறுவர் மையம்.etc...etc....
......அடடா அருமையான நேரம். மூளைக்கும் சரியான வேளை... கவிதைகள் பக்கம் மட்டுமென்னா...
நல்ல தரமான கவிதைகள்...
ஆனால் இன்றோ.....
எண்ணற்ற அங்கத்தினர்கள்.....பவகையான திறமைசாலிகள் க*ணக்கிலடங்காத பதிவுகள்......போதுவாக தமிழ்
மன்றமாக இருந்தது இப்போது கவிதை மன்றமாகி விட்டது.....(ஆரெனே போட்டு வெளுத்து வாங்குகிறார்
என்றால் பாருங்களேன்...!!!!!(ஆச்சர்யத்தில் சொல்கிறேன் ஆரென்.....பொறாமையால் இல்லை....):4_1_8:
அதே நேரத்தில் மன்றத்தின் மேற்பார்வையாளர்களுக்கு பொறுப்பும் வேலையும் அதிகமாகிவிட்டது.:grin:
கண்களில் விளக்கெண்னைய் ஊற்றிக்கொண்டு எல்லா பக்கங்களும் அலையவேண்டிய நிலை....சில பதிவுகளும் அப்படித்தான் கம்பி மேல் நடப்பதுபோலே.....:smilie_abcfra:.????இதையேல்லாம் மீறி கட்டுக்கோப்பாக கொண்டுசெல்லும் சிறந்த குழு..... அனைவருக்கும் என் ஹேட்ஸ் ஆஃப்....:aktion033::aktion033::aktion033:.மொத்தத்தில் என்னை
பிரம்மிக்க வைக்கும் பலர் அன்றும் இன்றும் இருக்கிறார்கள்.:grin:
அன்புட*ன்
ம*ணியா தாத்தா....:grin:

ஷீ-நிசி
26-08-2007, 05:13 AM
[QUOTE=ஷீ-நிசி;262919][U]4. அன்பு மணியா அவர்களே! மன்றத்தின் மிக மூத்த உறுப்பினர் நீங்கள். மன்றத்தின் இன்றைய நிலையினை உங்கள் பார்வையில் சொல்லுங்கள்./QUOTE]

என்னுடைய வயதை மறைமுகமாக பகிரங்கப்படுத்திய நண்பனுக்கு
என் நன்றி.(அடுத்த முறை சந்திக்கும்போது இருக்கு உனக்கு....) :rolleyes:

மொத்தத்தில் என்னை
பிரம்மிக்க வைக்கும் பலர் அன்றும் இன்றும் இருக்கிறார்கள்.:grin:
அன்புட*ன்
[B]ம*ணியா தாத்தா....:grin:

ஹப்பா! நான்கூட தப்பாத்தான் சொல்லிட்டேனேனோன்னு ரொம்ப யோசிச்சேன்.... :grin:

ராஜா
26-08-2007, 07:11 AM
நன்றி மனோஜ்...!

உங்கள் விடாமுயற்சி என்னைக் கவர்ந்த ஒன்று.. அதிகமாக நிகழும் எழுத்துப்பிழைகளால் தயக்கம் கொள்ளாமல், அதை சுட்டுவோர் மீது சினம் கொள்ளாமல், மேலும் மேலும் மேம்பட்டுத் திகழும் உங்களை எண்ணி வியக்கிறேன்.

leomohan
26-08-2007, 07:11 AM
[B]

6. அன்பு மோகன் அவர்களே! தமிழ் வளர்க்கும் உங்களின் முயற்சியை நான் ஓரளவிற்கு அறிவேன். உங்களின் இதேனீ மன்றம் நீங்கள் எதிர்பார்த்த அளவு பிரபலமடைந்திருக்கிறதா இணைய உலகில்? தமிழுக்காய் செய்ய விரும்பும் எதிர்கால இலக்குகள் என்ன?

நன்றி ஷீ−நிசி.

நான் முன்பொருமுறை கூறியிருந்தது போல 1978ல் கும்பகோணத்தில் சில பள்ளி மாணவர்கள் சேர்ந்து துவங்கிய கைபிரதி தான் தேனீ. அதன் ஆசிரியர்களில் ஒருவர் எங்கள் குடும்ப நண்பர். அவர் 1985ல் அந்த புத்தகத்தை காட்டிய போது inspire ஆகி 1986ல் விழுப்புரத்தில் நாங்கள் சில மாணவர்கள் சேர்ந்து அதே பெயரில் கைப்பிரதியை துவங்கினோம். சில காலம் வந்த பிறகு அது நின்றது. பஹ்ரைனில் வந்த பிறகு மீண்டும் ஒத்த அலைவரிசை உடைய தமிழர்கள் கிடைக்கவே மீண்டும் தேனீ வெளிவந்தது. ஒரு வருட காலம் pdf வடிவில் மின்னிதழாக வந்த பிறகு அதை இணைய இதழாக மாற்றினோம். நவீனத்திற்கு ஏற்ப பல பகுதிகள் புகுத்தினோம். சிலர் இலக்கியம், கட்டுரைகள் இணைய மூலம் பங்களிக்கின்றனர்.

தமிழ் மன்றங்கள், கருத்துக் களங்கள் பல நோக்கிய பிறகு யதார்த்ததில் தமிழ் தட்டச்சு தெரிந்து, கருத்துக் களங்களில் வர விரும்பும் தமிழர் சுமார் 100 க்குள் எனலாம். பல மன்றங்களில் 20-25 பேர் மட்டுமே வந்து செல்கின்றனர். ஆனால் உறுப்பினர்களின் எண்ணிக்கை பல ஆயிரம் இருக்கும். இவர்கள் தமிழர்கள் தான். ஆர்வத்தில் கணக்கை துவங்கிவிட்டு பிறகு பதிப்பதில்லை. ஆக regularஆக பதிப்பதிலும் ஆர்வம் கொண்ட உங்களை போன்று என்னை போன்றவர்கள் ஏற்கனவே பல களங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். அது மட்டுமின்றி இவற்றில் இல்லாத புதுமைகள் கொண்டு வந்தால் ஒழிய அவர்களுக்கு புதிய களங்களில் சேர வேறு உந்துதல் இல்லை.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் பல களங்கள் இணையத்தில் பல வருடங்களாக வீர நடை போட்ட வண்ணம் உள்ளனர். Rome was not built in a day என்பது போல, அவர்கள் போல வர இதேனீக்கும் பல காலம் ஆகும். அதுவரையில் நிறுவனர்கள் எதிர்பார்ப்பின்றி உழைத்தால் மட்டுமே. இது போன்ற வெற்றிகரமான தளங்களை பார்த்து ஏகலைவன் போல குருவின்றி வளர்கிறது இதேனீ. இதன் வெற்றி காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

தமிழுக்கு நான் சேவை செய்கிறேன் என்று சொன்னால் அது அபத்தமாகிவிடும். காரணம் தமிழுக்கு யாருடைய சேவையும் தேவையில்லை. அதன்பால் ஈர்ப்பு கொண்டு காதல் கொண்டு வருபவர்களே அதிகம். அவர்களில் நானும் ஒருவன்.

தமிழில் தளம் நடத்த வேண்டும் என்று நாங்கள் சில நண்பர்கள் விரும்பியதால் துவங்கினோம். கமலஹாசன் போல் அவருக்கு விரும்பிய வாறு நடிக்கிறார். மக்கள் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும். அது போல எங்கள் கூத்தையும் பார்க்க விரும்பும் சிலருக்காக கூத்து தொடரும். நாடக அரங்கம் முழுவதும் சீட்டு விற்பனை ஆகாவிட்டால் நாடகம் ஒத்திவைக்க முடியாது அல்லவா. ஒருவர் வந்தாலும் நாடகம் நடத்தி ஆகவேண்டும். அவரும் உங்கள் கூத்தில் ஏதோ வித்தியாசம் இருக்கிறது என்று நம்பி வருகிறார்.

இணையதளத்தில் முதல் முறையாக தமிழில் துரித அரட்டை வசதி, தமிழ் தூதூவன், தமிழில் E-learning என்று பல புதுமைகளை துவக்கினோம்.

சில பழைய யோசனைகளையும் புதுவகையாக செய்தோம். Online Radio, Tamil Blog Aggregator போன்றவை.

இதேனீ தளத்திற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை உற்சாகத்தை தருகிறது. ஆனால் பங்களிப்புகள் குறைவாகவே உள்ளது. இணையத்தில் தேனீ இன்னும் குழந்தை தான். வளரும்....

நன்றி.

ராஜா
26-08-2007, 07:16 AM
நன்றி மணியா அண்ணா..!

என்போன்ற புதிய உறுப்பினர்களுக்குத் தெரியாத மன்ற தொடக்ககால நடைமுறைகளையும், ஐவரணி அமைந்த வரலாற்றையும் சுவையாகத் தந்திருக்கிறீர்கள். 25 உறுப்பினர்களைச் சந்திருப்பது வியக்க வைக்கும் சந்தோஷ் நிகழ்வு.

leomohan
26-08-2007, 07:22 AM
இந்த திரியை தொடங்கிய ராஜா அண்ணாவற்கு என் நன்றிகள்

இந்த திரியில் என்னையும் இணைத்த ஷீக்கு என் மனமார்ந்த நன்றிகள்

நான் முதல் முதல் இணைந்ததும் பதிவுகள் இட யோசிப்பேன் அப்படியே மீறி பதிவுகள் தந்ததும் அதில் வார்த்தைக்கு வார்த்தை பிழைஇருக்கும் இதை என் அன்பு அண்ணா இளசு பென்ஸ் அவர்களும் அறிஞர் மற்றும் ஆதவாவும் இணைந்து மாற்றினார்கள் அவர்கள் முயற்சியல் இன்று சற்று பிழையில்லாமல் எழுத முயற்சித்து வருகிறேன்

எனக்கு கணிதம் வராது என்றாலும் ஏதாவது நல்லவிளையாட்டை தொடங்க வேண்டும் என்று தொடங்கியதுதான் தமிழ்கணபுலி ஆனால் இன்று வெற்றிகரமாக மூன்றாவது சுற்றில் வந்து நிற்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது இதற்கு காரணமான பிரதிப் சுட்டி அமரன் அன்பு விராடன் ஓவியன் இன்னும் இன்னும் அனைவருக்கும் நன்றிகள்
ஆடுத்து சமையல் விளையாட்டு இதில்மன்ற உறவுகள் அனைவரும் பங்கு பெற்றதில் அளவில்லா மகிழ்ச்சி

கவிதைகள் என்றால் அது பெயர் கவிதைகள் தான் ஆனால் ஓவியா ஷீநிசியின் உதவியால் கவிதைபோட்டிக்கும் கவிதை எழுத முடித்தது தற்பொழுது எனக்கு தமிழ்மன்றம் பல அருமையான உறவுகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது இங்கு இவ்வளவு தான் விரிவான பதிவு மிகவிரைவில்...

என்றும் இணைந்திருங்கள் மனோஜ். மன்றம் வைரங்களை அடையாளம் கண்டுக் கொள்ளும், கரிகளை விலக்கித் தள்ளும்.

leomohan
26-08-2007, 07:24 AM
[QUOTE=ஷீ-நிசி;262919][B][U]4. அன்பு மணியா அவர்களே! மன்றத்தின் மிக மூத்த உறுப்பினர் நீங்கள். மன்றத்தின் இன்றைய நிலையினை உங்கள் பார்வையில் சொல்லுங்கள்./QUOTE]

என்னுடைய வயதை மறைமுகமாக பகிரங்கப்படுத்திய நண்பனுக்கு
என் நன்றி.(அடுத்த முறை சந்திக்கும்போது இருக்கு உனக்கு....) :rolleyes:

இன்றைய நிலையில் மன்றத்தை பற்றி என் பார்வை (ஒன்றரை கண்ணில்....ஹி...ஹி...ஹி...)

அன்றைய மன்றத்தில் முதலாக இவ்வளவு அங்கத்தினர் இருக்கவில்லை. ஆயினும் சிறந்த அறிவாளிகளுக்கும், கவிதைத்திறன் வாய்த்தவர்களும் குறைவில்லாமல் இருந்தார்கள்(நான் சிலரை சொல்லி சிலரை விடுவதற்கு .இஷ்ட்டமில்லாததால் நான் பேரை சொல்லாமல் விட்டு விடுகிறேன்)
சுலபமாக எல்லா பதிவுகளையுமே ஒரு பார்வை பார்க்க முடிந்தது. மேற்பார்வையாளர்களுக்கு அதிக வேலை இருந்தது கிடையாது ..
தயிரை கடைந்தால் ஒதுங்கும் வெண்ணை போலே லைக் மைண்டட் பியூப்பிள் நாங்கள் சிலர் அவர் அவரது எழுத்துத்திறனை பார்த்து ஈர்க்கப்பட்டு ஒன்றாக இணைந்தோம்.(ஐவரணி). தினமும்
ஒரே குதூகலம்தான்..:grin::grin:.. ஒருவரை ஒருவர் வாரிக்கொண்டு....:080402cool_prv::080402cool_prv:.அப்பப்பா....ஒரு பதிவு போடவேண்டியது தான்.,. வாரிக்கட்டிக்கொண்டு பதில்கள்....சுடச்சுட... என்றாவது ஒரு நாள் வரவில்லை என்றாலும் ஒரே சோகம்தான்.
. இந்த அன்புப் பிணைப்பில் ஆரம்பித்தது தான் சந்திப்புகள்.... இதுவரை சுமாராக 25 நண்பர் நன்பிகளை சந்தித்திருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.:icon_good::icon_good: அந்த சந்திப்புகளில் ஏற்படும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது....(என்னால் முடியாது என்பது வேற விஷயம்.)...:grin::grin:
இதனிடையே போட்டிகள்...கணக்கு போட்டி, பகுத்தறிவு போட்டி,குறுக்கெழுத்து போட்டி.விடுகதைகள் போட்டி,
லாஜிகல் சொல்யூஷன்ஸ் சிறுவர் மையம்.etc...etc....
......அடடா அருமையான நேரம். மூளைக்கும் சரியான வேளை... கவிதைகள் பக்கம் மட்டுமென்னா...
நல்ல தரமான கவிதைகள்...
ஆனால் இன்றோ.....
எண்ணற்ற அங்கத்தினர்கள்.....பவகையான திறமைசாலிகள் க*ணக்கிலடங்காத பதிவுகள்......போதுவாக தமிழ்
மன்றமாக இருந்தது இப்போது கவிதை மன்றமாகி விட்டது.....(ஆரெனே போட்டு வெளுத்து வாங்குகிறார்
என்றால் பாருங்களேன்...!!!!!(ஆச்சர்யத்தில் சொல்கிறேன் ஆரென்.....பொறாமையால் இல்லை....):4_1_8:
அதே நேரத்தில் மன்றத்தின் மேற்பார்வையாளர்களுக்கு பொறுப்பும் வேலையும் அதிகமாகிவிட்டது.:grin:
கண்களில் விளக்கெண்னைய் ஊற்றிக்கொண்டு எல்லா பக்கங்களும் அலையவேண்டிய நிலை....சில பதிவுகளும் அப்படித்தான் கம்பி மேல் நடப்பதுபோலே.....:smilie_abcfra:.????இதையேல்லாம் மீறி கட்டுக்கோப்பாக கொண்டுசெல்லும் சிறந்த குழு..... அனைவருக்கும் என் ஹேட்ஸ் ஆஃப்....:aktion033::aktion033::aktion033:.மொத்தத்தில் என்னை
பிரம்மிக்க வைக்கும் பலர் அன்றும் இன்றும் இருக்கிறார்கள்.:grin:
அன்புட*ன்
ம*ணியா தாத்தா....:grin:

மணியா தாத்தா − ஹா ஹா.

உங்களை போன்ற சிலரால் இன்று இணையத்தில் இது போன்ற களங்கள் காணக்கிடைக்கின்றன. அதற்கு எங்கள் நன்றிகள். பிறமொழிகளில் ஆயிரக்கணக்கான தளங்களும், களங்களும், வலைப்பூக்களும் காணோம் போது, 10 கோடி தமிழர்கள் இணையத்தில் கோட்டை விட்டார்கள் என்று தோன்றும் போது, திஸ்கி காலத்திலிருந்து மன்றம் நடத்தி வரும் உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் அவர்களுடைய தொலை நோக்கு பார்வைக்கு வாழ்த்துகிறேன்.

ஷீ-நிசி
26-08-2007, 07:50 AM
மோகன்ஜி... உங்களின் பதிலில் உங்களின் உழைப்பு தெரிகிறது..

உங்களின் எல்லா எண்ணங்களும் ஈடேற என் வாழ்த்துக்கள்!

ராஜா
26-08-2007, 07:58 AM
நன்றி மோகன்..!

தங்கள் நம்பிக்கை வெல்லட்டும்.. நம்பிக்கைதானே மனித வாழ்வின் ஆதாரம்..

செல்வனுக்கு தன் பொருள் நாளைக்கும் இருக்குமென்ற நம்பிக்கை. திருடனுக்கு திருடியபின் பத்திரமாக மீள்வோம் என்ற நம்பிக்கை.

அமரன்
26-08-2007, 08:28 AM
மணியா அண்ணாவின் (எனக்கு 18 அவருக்கு 20) பதில் படித்ததும் மன்றத்தின் மீதான மதிப்பு இன்னும் அதிகரிக்கிறது. மன்றத்தின் தற்போதைய நிலையை தனக்கே உரிய பாணியில் சுவையாக சொல்லியுள்ளார். ஒரே ஒரு கேள்வி. மீண்டும் பழைய (ஐவரணி) மணியா அண்ணாவை எப்போ காண்பது.
=அமரன்

பாரதி
26-08-2007, 02:30 PM
3. அன்பு பாரதி அவர்களே! எப்பொழுதும் சிரித்தமுகமாய், எல்லோருக்கும் நண்பனாய் இருப்பது எல்லோராலும் முடிகிற காரியம் அல்ல. நீங்கள் அப்படி இருக்கிறீர்கள். உங்கள் இயல்பே அப்படித்தானா, இல்லை வாழ்க்கை பயணத்தில் அவ்வாறு உங்களை மாற்றிக்கொண்டீர்களா? (எங்களுக்கும் அப்படி இருக்க சில டிப்ஸ் கொடுங்க)

அன்பு ஷீ-நிசி, நீங்கள் சொல்வது கொஞ்சம் அதிகம் போல தோன்றுகிறது. இளம் வயதில் எனக்கு கூச்ச சுபாவம் மிக அதிகம். யாருடனும் அதிகம் பேசமாட்டேன், யார் வீட்டுக்கும் செல்ல மாட்டேன், வீட்டைத்தவிர்த்து எங்கும் சாப்பிட மாட்டேன். கர்வமும் முன்கோபமும் மிக அதிகமாக வரும்! என்னை முன்னிறுத்தியே எல்லாமும் நடைபெற வேண்டும் என்று எண்ணுவேன்.

உண்மையான உலகம் எப்படிப்பட்டது, நட்பு என்பது என்ன, அன்பு என்பது என்ன என்பதை அறிய நான் முதன் முதலில் வேலைக்கு சேர்ந்த
இடத்தில் கிடைத்த அனுபவங்கள் உதவின. எல்லோரையும் அலட்சியப்படுத்தும் என்னை, முதன் முதலில் நான் நட்பு கொள்ள விரும்பியவன் கொஞ்சமும் பொருட்படுத்தாத போது என் கர்வத்திற்கு பலத்த அடி கிடைத்தது. அதன் பின்னர் அவன் என்னைப் புரிந்து கொள்ளுமாறு நான் நடந்து கொள்ள வேண்டும்; என் நட்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விடாமல் முயற்சி செய்தேன். கொஞ்சம் கொஞ்சமாக என்னிடம் இருந்த முன்கோபமும், கர்வமும் கரைந்தன. நண்பனும் என்னைப் புரிந்து கொண்டான். அன்று ஏற்பட்ட நட்பு இன்று வரை தொடர்கிறது. நாளையும் தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவன் ஒரு முறை கூறியதை மீண்டும் பல வருடங்களுக்கு பின்பு உங்களுடைய வார்த்தைகள் நினைவூட்டுகின்றன. உண்மையிலேயே நீங்கள் கூறும் விதமாக நான் இருக்கிறேனா என்பது தெரியவில்லை.

வேலைக்கு சேர்ந்த இடத்தில் இருந்த நண்பர்களின் பழக்கம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது. புத்தக வாசிப்பும் ஓரளவுக்கு உதவியது. தொழிற்சங்கத்தில் ஏற்பட்ட ஈடுபாடு, மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்தது. காந்தியின் சத்திய சோதனையும், இன்னும் சில நூல்களும் மனித நேசிப்பைக் கற்றுக்கொடுத்தன. நம் மன்றத்தின் மூலம் கிடைத்த உறவுகளும் இதை வலியுறுத்துபவர்களாகவே அமைந்ததில் வியப்பு ஒன்றுமில்லை.

நேசிக்க கற்றுக்கொண்டால் எல்லாமே எளிதாகி விடும். கொடுப்பதற்கு மிகவும் எளிதானது, எந்த வித ஏற்பாடுகளும் தேவை இல்லாதது, எப்போதும் நம்மிடம் இருப்பது - அன்பு. அன்பைக் கொடுப்பதால் நாம் இழப்பது ஒன்றுமில்லை.

நம் அன்பு உதாசீனம் செய்யப்பட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை என்ற மன இயல்பு வந்து விட்டால் அமைதி தானாக வந்து விடும். ஆகவே முடிந்த வரை உண்மையாய் இருங்கள். உண்மையில் சொன்னால் உண்மையை சொல்வதுதான் மிகவும் எளிதானது. அனைவரையும் நேசியுங்கள்; ஒரு முறை "அன்பே சிவம்" படத்தைப் பாருங்கள்.

மனோஜ்
26-08-2007, 02:31 PM
மோகன் சார் உங்களின் கனவுகள் இடேரமட்டும் வாழத்துக்கள்

மணியா அண்ணா பதில்கள் கலக்கல் பழையது போல எங்களுடன் இனைந்து கலக்க ஆசை வாருங்கள்

பாரதி அவர்களின் பதில் மனம் திறக்கபட்டுள்ளது அன்பு என்றும் நிலைத்துநிற்கும் வாழத்துக்கள்

சிவா.ஜி
26-08-2007, 02:56 PM
மோகன் மீண்டும் உங்கள் விசால எண்ணங்களை வாசிக்க முடிந்தது.ஒரு கையெழுத்துப்பத்திரிக்கை நடத்துவதென்பது எவ்வளவு சிரமமென்று எனக்கும் தெரியும்.மும்பையில் பூபாளம் என்றொரு கையெழுத்துப் பிரதியை நன்பர்கள் அனைவரும் இணந்து நடத்தினோம்..20 பக்கங்கள் கைகளால் எழுதி அதை சைக்கிளோஸ்டைல் செய்து வினியோகிப்போம்.கடைசி மூன்று பக்கங்கள் வாசகர் கருத்துக்காக.அதில் வரும் விமர்சனங்கள்,வாழ்த்துக்கள் எங்களுக்கு எப்படிப்பட்ட சந்தோஷத்தை அளித்தது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.நீங்கள் குறிப்பிட்ட அந்த 1978 ஆம் ஆண்டுவரை நானும் கும்பகோண*த்தில்தான் இருந்தேன்.ஆனால் படித்தது ஆடுதுறையிலிருந்த ஒரு பள்ளியில்.
ஈதேனீயில் என்னுடைய கவிதைகளையும் நீங்கள் பதித்து அங்கீகாரமளித்தீர்கள்..அந்த தேனீ மேலும் வளர வாழ்த்துக்கள்.

அமரன்
26-08-2007, 02:56 PM
பாரதி அண்ணா..! உங்கள் பதிலில் என்னைக் காண்கின்றேன். ஆனாலும் உங்களிடம் பூரணமாக குடிகொண்டுள்ள அந்த எண்ணம் என்னுள் பாதிதான் வந்துள்ளது. மீதியும் வருவதற்கு உங்கள் இப்பதிவு உந்துதலாக உள்ளது. நன்றி அண்ணா.

=அமரன்

சிவா.ஜி
26-08-2007, 02:57 PM
பாரதி அண்ணாவின் பதில் மனதை நெகிழ்த்திவிட்டது.அன்பை உச்சத்தில் வைத்த அவரின் பதில் அவரையும் உச்சத்தில் வைக்கிறது.

ராஜா
26-08-2007, 03:19 PM
நன்றி பாரதி..!

உங்களின் ஆரம்பகால மனநிலையில் என்னைப்போன்ற பலர் இன்னும் இருக்கிறோம். இன்னும் மாறாமலேயே..!

உங்கள் பதில் மனம் நெகிழச்செய்துவிட்டது. மாசுகளை அகற்றி மனத்தை தூய்மையாக்குவோரை மானுடம் மதிக்கும். நீங்களும் மதிக்கத்தகுந்தோர் பட்டியலில் எப்போதோ இணைந்துவிட்டீர்கள்.

ராஜா
26-08-2007, 03:26 PM
ஆ! பத்து..! கேள்வியாளர் ; ஷீ நிசி.
********************************************************

1. அன்பு இளசு அவர்களே! உங்களின் கவிதை விமர்சனங்களை கண்டு பலமுறை பரவசப்பட்டிருக்கிறேன். பல பணிகளுக்கு மத்தியிலும், பலர் எழுதுகின்ற கவிதைகளை மேம்போக்காய் படிக்காமல் மிக ஆழமாக படித்து, மிக ஆழமாக விமர்சிக்கும் உங்களின், பண்பு + அன்பு க்கு நான் அடிமை.. கவிதையினை விமர்சிக்க விரும்பும் விமர்சகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

2. அன்பு அறிஞர் அவர்களே, எல்லோரையும் அரவணைக்கும் குணம் உங்களிடம் நான் பழகியவரையில் கண்டுள்ளேன். அப்படி மிக நம்பிக்கையாய் பழகிய உங்கள் நண்பர் யாராகிலும் 'இப்படி செய்துவிட்டானே' என்று நீங்கள் வருந்த வைத்த சம்பவம் ஏதேனும் உண்டா?

3. அன்பு பாரதி அவர்களே! எப்பொழுதும் சிரித்தமுகமாய், எல்லோருக்கும் நண்பனாய் இருப்பது எல்லோராலும் முடிகிற காரியம் அல்ல. நீங்கள் அப்படி இருக்கிறீர்கள். உங்கள் இயல்பே அப்படித்தானா, இல்லை வாழ்க்கை பயணத்தில் அவ்வாறு உங்களை மாற்றிக்கொண்டீர்களா? (எங்களுக்கும் அப்படி இருக்க சில டிப்ஸ் கொடுங்க)

4. அன்பு மணியா அவர்களே! மன்றத்தின் மிக மூத்த உறுப்பினர் நீங்கள். மன்றத்தின் இன்றைய நிலையினை உங்கள் பார்வையில் சொல்லுங்கள்.

5. அன்பு மன்மதன், உங்களின் எதிர்கால இலட்சியம் அறிவேன். நீங்கள் கண்டிப்பாய் வெற்றியடைவீர்கள். வெற்றியடைந்த பிறகு அதில் நுழைய ஆர்வம் உண்டா? அதாங்க பாலாய் இருந்து பாழாய்ப்போன அரசியல். அதில் நுழைவீர்களா?

6. அன்பு மோகன் அவர்களே! தமிழ் வளர்க்கும் உங்களின் முயற்சியை நான் ஓரளவிற்கு அறிவேன். உங்களின் இதேனீ மன்றம் நீங்கள் எதிர்பார்த்த அளவு பிரபலமடைந்திருக்கிறதா இணைய உலகில்? தமிழுக்காய் செய்ய விரும்பும் எதிர்கால இலக்குகள் என்ன?

7. அன்பு ஆதவா, எனக்கு மன்றம் தந்த ஒரு மிக நல்ல நண்பர் நீங்கள். மிக இளம் வயதிலேயே இத்தனை வெளியுலக அறிவை நீங்கள் அடைந்திருக்க மிக முக்கிய காரணம் எது என்று கூறுவீர்கள்?

8. அன்பு ஓவியா, பாரதி கண்ட புதுமைப்பெண் என்று நீங்கள் உங்களை நினைக்கிறீர்களா? (நான் நினைக்கிறேன்) பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

9. அன்பு அமரன், மன்றத்தில் முதலில் நரன் என்ற பெயரில் வந்தீர்கள்... இன்று அமரனாய் வளர்ந்திருக்கிறீர்கள்...
மன்றத்தின் செயல்பாடுகளில் நரன் vs அமரன் ஒப்பிடுங்கள்.

10. அன்பு மனோஜ் முதலில் வெறும் பின்னூட்டங்கள், பின் கணித திரிகள், விளையாட்டு, இன்று கவிதைகள்.. தமிழ் பிழைகள் கூட வெகுவாய் குறைந்துள்ளது. மன்றத்தில் இணைந்தது முதல் இன்றுவரை இந்த நண்பர்களுடனான ஐக்கியத்தை எப்படி உணர்கிறீர்கள்?

ஓவியன்
26-08-2007, 03:51 PM
.
இனிமைத் திருவிழா இவனின் காவலன்.
கவிதையின் காலடியில் நிற்பவன்.
மன்றம் பழுதாகமல் இருக்க முயல்பவன்.
வைரங்கள் மட்டும் ஜொலிக்க பாடுபடுபவன்.
அன்பு அமர்!
என்னே ஒரு சுய மதிப்பீடு.......
எனக்கு நரனுடன் அதிகம் பரிட்சயம் இல்லை, ஆனால் அமரனை நன்றாக அறிவேன் ஆதலால் அமரன் பற்றி நீங்கள் மதிப்பீட்ட மதிப்பீடுகள் என்னைத் திகைக்க வைத்தன......
அவ்வளவு தத்ரூபமாக இருந்தது உங்கள் மதிப்பீடு........
உன்னையறிந்தால், உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற பாடலை ஞாபகப் படித்தியது உங்கள் பதில்கள். ஆமாம் இப்போது நீங்கள் உலகத்தில் போராடும் தகுதியில் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்!.

தற்பொழுது எனக்கு தமிழ்மன்றம் பல அருமையான உறவுகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது...
அன்பு மனோஜ் உங்கள் ஆர்வமும் இடை விடாத முயற்சியுமே உங்களை இது வரை வளர்த்தது என்று அறிந்தவன் நான்.........
தொடர்ந்து உங்கள் முயற்சியை கைவிட்டு விட்டதீர்கள், தொடர்ந்து வருவேன் நானுயம் சேர்ந்தே சாதிப்போம்.........!

இளவல்ஜி

கவலையுடன் கூடிய தங்களது கேள்விகளுக்கு விடை சொல்ல முயல்கிறேன்.அன்பு அண்ணா!

உங்கள் உடல் நலத்தில் கவனமெடுங்கள், உங்களுக்கு எல்லாருக்கும் பொதுவான ஆண்டவனின் துணை என்றும் இருக்கட்டும்.

அன்புடன்
ஓவியன்.

பிரம்மிக்க வைக்கும் பலர் அன்றும் இன்றும் இருக்கிறார்கள்.:grin:
அன்புடன்
மணியா தாத்தா....:grin:அன்பான மணியா அண்ணா!

உங்கள் பதிவுகளால் வியந்தேன், வியக்கிறேன், தொடர்ந்தும் கலக்கி என்னை வியக்க வையுங்கள் வழமை போலவே.............:nature-smiley-007:

இன்னொரு கோணத்தில் பார்த்தால் பல களங்கள் இணையத்தில் பல வருடங்களாக வீர நடை போட்ட வண்ணம் உள்ளனர். Rome was not built in a day என்பது போல, அவர்கள் போல வர இதேனீக்கும் பல காலம் ஆகும். அதுவரையில் நிறுவனர்கள் எதிர்பார்ப்பின்றி உழைத்தால் மட்டுமே. இது போன்ற வெற்றிகரமான தளங்களை பார்த்து ஏகலைவன் போல குருவின்றி வளர்கிறது இதேனீ. இதன் வெற்றி காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...

அன்பான மோகன்!

உள்ளதை தெளிவாக எடுத்துரைத்த பார்வையில் பிரமித்தேன்......
அந்த தீர்க்கதரிசனம் ஒன்று போதுமே உங்களை உயர்த்தி வைக்க......
உங்கள் இ-தேனியின் வருங்கால அமர்க்கள வெற்றிகளுக்கு என் முன் வாழ்த்துகள்.......

நம் அன்பு உதாசீனம் செய்யப்பட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை என்ற மன இயல்பு வந்து விட்டால் அமைதி தானாக வந்து விடும். ஆகவே முடிந்த வரை உண்மையாய் இருங்கள். உண்மையில் சொன்னால் உண்மையை சொல்வதுதான் மிகவும் எளிதானது. அனைவரையும் நேசியுங்கள்; ஒரு முறை "அன்பே சிவம்" படத்தைப் பாருங்கள்.

அன்பான பாரதி அண்ணா!

யதார்த்தத்தையும் நிதர்சனத்தையும் தெளிவாக எடுத்துரைத்தீர்கள்.......
ஒரு சிறந்த வழிகாட்டலாக அமைந்தது உங்கள் பதில்.........
மிக்க நன்றிகள் அண்ணா.

இளசு
26-08-2007, 04:23 PM
பயணம் மேற்கொண்டாலும், தில்லியிலேயே இருந்தாலும், எந்த நேரம் காலையில் வீட்டைவிட்டு வெளியே செல்வதாக இருந்தாலும், இரு விஷயங்கள் தவறுவதில்லை: 40 நிமிட விரைவுநடை; 40 நிமிட தியானம். பிறகு காலை உணவு.

===கரிகாலன்

நன்றி அண்ணலுக்கு...

அக்கறையுடன் கேட்ட வினாவுக்கு ஆறுதலாய் நல்ல பதில்...

எங்கள் எல்லாரின் அன்பும் துணைவரும் உங்களுக்கு அண்ணலே!

இளசு
26-08-2007, 04:26 PM
உங்கள் சொல் முகூர்த்தம் எனக்கு அந்த மாதிரி சில லட்சங்களை அள்ளி வீசும் காலம் பிறக்கட்டும்....!!!!!

மணியா...

நிச்சயம் அந்தக்காலம் வரும்
காலம் வந்தால் கூட்டம் வரும்
கூட்டம் வந்தால் அனைவரையும்
குளிர வைப்போமே!!

நல்ல மனசுக்காரர் நீங்கள் தலை!
மனம் போலே வாழ்வு!

வணங்குகிறேன்!

இளசு
26-08-2007, 04:32 PM
.

தற்பொழுது படிப்போடு சேர்த்து வேலை ஒன்றும்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்..
.

படிப்போடு பணி செய்வோரை இரட்டிப்பாய் பிடிக்கும் எனக்கு..
வாழ்த்துகள் தங்கைக்கு!

எழும்போது புத்துணர்வும், புதுநாளுக்கான உத்வேகமும் வழங்கும் அளவுக்கு
தினசரி உறக்கம் இருக்கவேண்டும்...
அண்ணனாய் அக்கறையில் இந்த சின்ன அறிவுரை..
(ஆதவா, ஓவியா போன்ற ஆந்தைக்கூட்டங்களுக்கும் சேர்த்துதான்..:animal-smiley-026:)

சரிதானே?

இளசு
26-08-2007, 04:37 PM
மனற நண்பர்களே, களவும் கற்று மற என்பார்கள். ஒன்றை நினைவில் வைத்திருங்கள் சிகரெட் கற்று கொள்ள மட்டுமே முடியும் மறக்க முடியாது. ஆகையால் பழக்கமில்லாதவர்கள் பழகாமல் இருப்பதே நல்லது. எனக்கு கன்ட்ரோல் இருக்கு நான் நிறுத்தனும்னு நினைச்சா நிறுத்திடுவேன் என்ற வீராப்பு எல்லாம் வேண்டாம்.

நன்றி

மிக மிக மிக மிக முக்கியமான அறிவுரை
அடுத்த தலைமுறைக்கு உண்டென்றால் அது இதுதான்...

யார் அடிமையாவோம் என முன்னறிய முடியாத கரடிப்பிடி பழக்கம் புகை..

பழகாமல் இருப்பதே மிகச் சிறந்த தடுப்பு முறை!

வாத்தியார் −
நான்குக்கு மேல் இப்போது வேண்டாம்..
நாள் குறித்தபின் எப்போதும் வேண்டாம்..

தங்கள் அருமையான பதிலுக்கு நன்றி!

ஷீ-நிசி
26-08-2007, 04:39 PM
நம் அன்பு உதாசீனம் செய்யப்பட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை என்ற மன இயல்பு வந்து விட்டால் அமைதி தானாக வந்து விடும். ஆகவே முடிந்த வரை உண்மையாய் இருங்கள். உண்மையில் சொன்னால் உண்மையை சொல்வதுதான் மிகவும் எளிதானது. அனைவரையும் நேசியுங்கள்; ஒரு முறை "அன்பே சிவம்" படத்தைப் பாருங்கள்.

மிக* அருமையான டிப்ஸ்......

உண்மை பேசுறதுல ஒரு செளகரியம் இருக்கு.. என்ன தெரியுமா.. நாம் எதையுமே ஞாபகம் வச்சிக்க வேண்டியது இல்ல......

நன்றி பாரதியாரே! :)

இளசு
26-08-2007, 04:42 PM
.

காதல் ஒன்று தான் உலக இன்பங்கள் எதையும் நோக்காமல், இதய அன்பை அடிப்படையாக கொண்டு, இதயங்களை இணைத்து தொடங்குகிறது, தொடர்கிறது. ஆனால், அது முடிவதும் இல்லை, அழிவதும் இல்லை என்பது சிறப்பு..!! காதல் அதைக்கொண்டவர்களின் மகிழ்ச்சிக்கு மட்டும் காரணமாக அமையாமல், மனித குல ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கும் காரணமாக அமைவதால் நாம் ஒவ்வொருவரும் எடுக்கவேண்டிய நல்ல முடிவு என்பது காதல் பற்றிய என் கருத்து.!!

, நான் காதலால் நான் ஏமாற்றப்பட்டவன் கிடையாது, சிறந்தவனாக மாற்றப்பட்டு, ஏற்றமிகு வாழ்க்கையை பெற்றவன்..!!

உங்கள் இதயம் முழுதும் அன்பால் நிரம்பப்பெற்றது..
தூயகாற்றும், நறுமலர்களும், பசுமை மரங்களும் நிறைந்த
அழகிய நந்தவனம் உங்கள் மனம்...

என் மனக்காட்சியை நிறுவிக்காட்டிய பதிலுக்கு நன்றி இதயம்!

இளசு
26-08-2007, 04:47 PM
போற்றுதலுக்கு ஆசை கொண்டால் தூற்றுதலைத் தாங்கவும் தயாராக இருக்கவேண்டும்.

இறைவன் என் தகுதிக்கு மீறிய வாழ்க்கை வசதிகளையும், இனிய துணைவியையும், குடும்ப சூழ்நிலை உணர்ந்த குழந்தைகளையும் கொடுத்திருக்கிறான். இவற்றை நான் இழக்க விரும்பவில்லை.

இதுவே போதும்.. உங்கள் இதயத்தில் எனக்கென்று இருக்கும் சிறு இடமே போதும்.

..!

[/COLOR][/SIZE][/FONT][/B]

எங்கள் அன்பு ராஜா,

குத்து விளக்கு '' ரிக்கார்டு டான்ஸ்'' மேடையேற

கூச்சப்படுவதில் என்ன வியப்பு?

வணங்கிப் போற்றுகிறேன் உங்களை..

மதிப்பேணியில் இன்னும் இன்னும் நம் நண்பர்களை மேலேற்றும்
உயர்ந்த நோக்கம் உள்ள திரி தந்த உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனம்...

இளசு
26-08-2007, 04:55 PM
. நான் பிறருக்காக நிர்வகித்த நிறுவனங்களுக்கு நிறைய வியாபாரமும், லாபம் கிடைக்க உதவினேன், என்னுடைய தொழில் என்று வரும்பொழுது அதே மாதிரி செய்யவேண்டுமே, நடக்கவேண்டுமே என்ற பிரஷர் கொஞ்சம் இருந்தாலும் அது கொஞ்சம் சந்தோஷமான பிரஷர் என்றே நினைக்கிறேன்.

உங்கள் திறமைக்கும் நல்ல மனதுக்கும்
எண்ணிய எல்லாம் இனிதே ஈடேறும் அன்பின் ஆரென்..

நல்ல வெற்றிகள், மகிழ்ச்சிகளுடன் நம் சந்திப்பு இனிதே நடக்கும்!

இளசு
26-08-2007, 04:59 PM
எந்த வசதியும் இல்லாத இடத்தில் ஆரம்பித்து... அதில் சில பயனுள்ள தகவல்களை கண்டுபிடிக்கும்பொழுது... அதில் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது.

ஆராய்ச்சி ....பிரதியாக வெளியான பொழுது ஏற்பட்ட மகிழ்ச்சி அளவிடமுடியாதது.

வாள்கொண்டு வேட்டையாடுவதைவிட
கவண் கொண்டு வீழ்த்துவதில் திருப்தி அதிகமே!

உங்களுக்கு இன்னும் இன்னும் வெற்றிகள் குவிய வாழ்த்துகள் அறிஞரே!

நோபல் பரிசு பெற வயது உச்ச வரம்பு இல்லைதானே??!!!

இளசு
26-08-2007, 05:08 PM
இந்த பல்துறை ஆர்வம் எங்கிருந்து வந்தது?

என் தந்தை ராணுவத்தில் 17 வருடங்கள் இருந்தவர். இப்போது 75 இருந்தாலும் மிகவும் சுறுசுறுப்பாக ஏதாவது செய்துக் கொண்டிருப்பார். சுறுசுறுப்பு, பல புதிய விஷயங்களை சுயமாக கற்பது என்பது அவரிடம் இருந்து வந்தது.

என் தாய் பல விதமான handicraft, திருமணங்களுக்கு வைக்கும் அலங்கார பொருட்களை வடிவமைப்பது - தையல் கலையும் சொல்லிக் கொடுப்பார். அவரும் யாரிடமும் எதுவும் பயிலவில்லை. சொந்தமாக கற்றது, .

பல மொழிகள் கற்பது, ஓவியம், இசையில் நாட்டம், தையல் கலையில் ஆர்வம், கதை, கட்டுரை,கவிதை எழுதுவது, மேடையில் பேசுவது, பல நாடுகளை பற்றி அறிவது போன்றவை என்னுடைய ஆர்வங்கள்.

இதில் மேடை பேச்சு, கவிதை எழுதுவது மட்டுமே நான் சொந்தமாக வளர்த்துக் கொண்ட கலைகள்.

இவை அனைத்தும் கொண்டு சம்பாதிக்காவிட்டாலும், என்னுடைய career வெற்றிக்கு பின்னால் இவை அனைத்தும் சின்ன சின்ன பங்காற்றுகின்றன என்பதில் சந்தேகமே இல்லை.

இன்னுமும் கூட என்னுடைய சிறு சிறு முயற்சிகள் அவர்களுடைய முகத்தில் வரும் புன்னகைக்காகவே.

.

அன்புள்ள மோகன்

எட்டாவதாய் கேட்ட கேள்வி அஷ்டாவதானி என உங்களை..
யதேச்சையாய் வந்த பொருத்தம்!

இந்த நூற்றாண்டுக்கான இப்பதங்களின் பொருளில் நீங்கள் நிச்சயமாய்!

பத்தடி பெற்றவர் போட்ட பாதையில்..
பல அடி சுயப் பாய்ச்சலில்..

இன்னும் பலகாதம் உங்கள் வீச்சும் வெற்றியும் பரவ வாழ்த்துகள்!

உங்களைப் பெற்றவர் முகங்களில் புன்னகை அடிக்கடி குடிவரட்டும்!

நெகிழ வைத்த நல்ல பதிலுக்கு நன்றி மோகன்!

இனியவள்
26-08-2007, 06:09 PM
படிப்போடு பணி செய்வோரை இரட்டிப்பாய் பிடிக்கும் எனக்கு..
வாழ்த்துகள் தங்கைக்கு!

எழும்போது புத்துணர்வும், புதுநாளுக்கான உத்வேகமும் வழங்கும் அளவுக்கு
தினசரி உறக்கம் இருக்கவேண்டும்...
அண்ணனாய் அக்கறையில் இந்த சின்ன அறிவுரை..
(ஆதவா, ஓவியா போன்ற ஆந்தைக்கூட்டங்களுக்கும் சேர்த்துதான்..:animal-smiley-026:)

சரிதானே?

நன்றி அண்ணா...

ஹீம் எழும்பும் பொழுது சோம்பேறித் தனமாகவே இருக்கும்
என்றாலும் எழும்பிவிடுவேன்...உங்கள் அறிவுறையை ஏற்றுக்
கொள்கிறேன் அண்ணா.

ஓவியா
26-08-2007, 06:25 PM
நன்றி ராஜா சார் / நன்றி அமரன்

8. அன்பு ஓவியா, பாரதி கண்ட புதுமைப்பெண் என்று நீங்கள் உங்களை நினைக்கிறீர்களா? (நான் நினைக்கிறேன்) பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

என்னை பாரதி கண்ட புதுமைப்பெண் என்ற தங்களின் கருத்துக்கு என் முத்தான நன்றிகள்.

நான் முதன் முறையாக இங்கு பதித்த என் கையொப்பமே இதுதான் 'பாரதி காணா புதுமைப்பெண்' பாரதி இறந்து விட்டார் இனி என்னை அவர் காணமுடியாது என்று (குறும்பாக) வைத்தது, ஆனால் பாரதியின் எண்ணத்தில் பெண்கள் இவ்வுலகில் எப்படி வாழ வேண்டும் என்று நினைத்தாரோ அதே (சில) கொள்கைகளுடன்தான் நான் இன்னமும் வாழ்கிறேன்.

பெண்களுக்கு நான் சொல்ல ஒன்றுமில்லை, ஏனென்றால் இந்த 'அட்வைஸ்' என்பது எந்த பெண்களுக்குமே பிடிக்காத விசயம். :music-smiley-010::music-smiley-010:ஆனாலும் பொதுவாக சொல்ல ஒன்று உண்டு இது அனைத்து பெண்களுக்கும் பொருந்தும். பெண்களின் பலமும் பலவீனமும் உலகத்தில் ஒரு விசயம்தான் அது 'ஆண்கள்'. பல பெண்கள் பல கனவுகள் பல கற்பனைகளுடன் வாழ நினைப்பார்கள் ஆனால் அவை அனைத்தையும் ஒருவனின் அன்பிற்காகவோ அல்லது ஆதிக்கத்திலோ மூட்டைக்கட்டி தீயில் இட்டு விடுபவர்களே எம் அருமை பெண்கள்.

முதலில் ஒரு பெண் தன் தந்தையின் அணைப்பில் வளரும் பொழுதே பல விசயங்களில் முடக்கி வைக்கப்படுகிறாள், உதாரணம் படிப்பு, படித்தது போதும் இனி வெலைக்குச் செல், கல்யாணங்கட்டிக் கொள், (ஒரு சிலர் இதற்கு விதிவிலக்கு) பின் கணவனின் சொற்களுக்குள் கட்டி வைக்கப்படுகிறாள் (ஒன்று அன்பால் இன்னோன்று ஆதிக்கத்தால்). காலமும் செல்ல அன்பிற்கும் அரவணைப்பிற்கும் பிள்ளைகளின் கைகளில் சிக்கிக்கொள்கிறாள் . பெரும்பாலான பெண்கள் ஒரு ஆண்மகனை சார்ந்தே தன் வாழ்கையை ஓட்டி முடித்து விடுகின்றனர். எம்மின பெண்களுக்கு ஆண்களை சார்ந்து இருப்பதுதான் அழகும் மரியாதையும்கூட. ஆனால் அவர்கள் முற்றிலும் ஆளப்படுவதுதான் வேதனையும் முக்கிய பிரச்சனையும்.

என் கருத்துப்படி
1. ஒரு பெண்ணானவள் முதலில் தன் கைகளில் ஏதாவது ஒரு வித்தையை அவசியம் கற்றிருக்க வேண்டும் அது பாடக்கல்வியோ அல்லது தொழிற்கல்வியோ, ஆனால் எதுவுமே தெரியாமல் இருக்கக்கூடாது.

2 தெளிவான சிந்தனை ஒரு பெண்ணுக்கு மிக−மிக அவசியம். ஆனால் பல பெண்கள் ஆழ சிந்திக்கும் வயதும் திறனும் பெறும் முன்னே இழப்பவைகள் அதிகம்.

3. எப்பொழுதும் கடந்ததை நினைத்து வருந்தக்கூடாது. அடுத்த என்ன செய்யலாம் எப்படி உயரலாம் என்று முடிவெடுக்கும் பக்குவம் வேண்டும்.

4. தைரியமும் துணிச்சலும் அவசியம் இருக்கவேண்டும், ஆனால் அது பஜாரிதனதிற்காக இருக்ககூடாது.

.5. தன்னம்பிக்கையை ஒருபோதும் இழக்கக்கூடாது, இதை இழந்தால் கையிருந்தும் பயனில்லை நண்பிகளே!!

6. இது முடியாது என்று எண்ணும் எண்ணத்தை மாற்றுங்கள். விடாமுயற்ச்சி செய்யுங்கள், காலம் பதில் சொல்லும்.

7. வாழ்க்கைக்கு கூடாத நட்பினை அடியோடு வெட்டி விடுங்கள். இது நமக்கு என்றும் ஆபத்தே!!

8. தன்னுரிமையை விட்டுக்கொடுக்காதீர்கள், எத்தருணத்திலும் உங்களுக்கு சேர வேண்டியவைகளை விட்டுக் கொடுக்காதீர்கள்.

9 நீங்கள் யாருக்கும் இவ்வுலகில் அடிமையில்லை, அன்பிற்கு மட்டும் கட்டுப்படுங்கள்.

10. சில விசயங்களில் சுயநலமாக இருங்கள், அவை உங்களை உயர்த்தும். பல விசயங்களில் பொதுநலமாக இருங்கள். அவை உங்கள் மதிப்பை கூட்டும்.

11. பிறந்த வீட்டை நேசியுங்கள் அதேசமயம் புகுந்த வீட்டினரையும் அன்பால் மயக்குங்கள். எந்த பிரச்சனையிலும் மனம் தளராமல் இருங்கள். காரணத்தை அலசி விளக்கம் காணுங்கள். அடுத்த முறை அதனை தவிருங்கள்.

12. எங்கும் விட்டுகொடுக்கும் மனப்பான்மையை அதிகம் காட்டுங்கள், அக்கறை என்ற சொல்லை எண்ணாமல் பயன் படுத்துங்கள். ஆனால் ஏமாளியாக இருக்காதீர்கள்,

13, ஆரோக்கியமான உடல் வளத்தினை வைத்துக்கொள்ளுங்கள், சத்துள்ள பல நல்ல உணவுகளை உண்ணுங்கள், உடலுக்கு தேவையான விசயங்களை அவசியம் நாடுங்கள். அழகாக உடையணியும் பழங்கங்களையும் ஆதரியுங்கள். இது மிகவும் முக்கியம்.

14. இறைவனின்மேல் அன்பு வையுங்கள், எந்த மதமானாலும் இறைவனை எப்பொழுதும் மறவாதீர்கள். அவசியம் வழிபடுங்கள்.

15. ஏதாவது ஒரு பொழுதுபோக்கை உருவாக்கி வையுங்கள், கலை சம்பந்தமான விசயங்களில் ஈடுபடுங்கள். நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள், தியானம் செய்யுங்கள்.

16. பணம் வாழ்க்கைக்கு மிக அவசியம், இருந்தால் அவசியம் கொஞ்சம் சேமித்து வையுங்கள், முடிந்தால் சிறிது தான*ம் செய்யுங்கள்.

17. தினமும் ஏதாவது படியுங்கள். செய்தி பாருங்கள், நாட்டு நடப்புகளை தெரிந்துக்கொள்ளுங்கள். அறிவுத்திரனை வளரவிடுங்கள்.

18. தூர நோக்கு சிந்தனையுடன் செயல்படுங்கள், நம் கலாச்சாரம், மொழி, பண்பாட்டை அவசியம் தொடருங்கள்,

19.பெண்மை மென்மைதான் ஆனால் கோழையல்ல என்று கண் விழித்து உலகத்தை நோக்குங்கள்.

20. சுற்றத்தாருடன் அன்பாக பழகுங்கள், அன்பைக் கொட்டி வாழ்வை வரப்பிரசாதகமாக அணைத்துக்கொள்ளுங்கள்.

பெண்களே,
நான் ஒரு விசயத்தை மட்டும் இங்கு மிகவும் வழியுருத்தி கூருகிறேன், எந்த சூழ்நிலையிலும், தன்மானம், சுயமரியாதை, தைரியம், தன்னம்பிக்கை, விடாமுயற்ச்சி, நேர்மை, கண்ணியம், உண்மை, துனிச்சல் மற்றும் இறைவன் மேல் அன்பு இவைகளை உங்கள் மூச்சே நின்றாலும் கைவிடாதீர்கள்.

இதுதான் பெண்களை எல்லா வகையிலும் வாழ்வில் உயர்த்தும்.
ஆனால் இவை அனைத்தும் ஒருவரிடம் மொத்தமாகக் காண்பது மிகவும் அரிது.

ஒரு போனஸ் பதில்.
என்னை போல் அன்பே தெய்வம் என்றும், அதற்க்காக உயிரையும் விடலாம் என்று எண்ணும் ஏமாளி பெண்ணாக இல்லாமல், சமத்தா இருங்கள் மக்கா. :sport-smiley-014:

எழுத்துப் பிழைகளை திருத்தி, என்னிடம் கோடி நன்றிகளை பீஸாக பெற்றுக்கொள்கிறார் தம்பி அமரன். வாழ்த்துக்கள் அமர்.

மலர்
26-08-2007, 06:54 PM
பாரதி கண்ட புதுமைப்பெண் ஓவியா அக்கா கொடுத்த,, பெண்களை எல்லா வகையிலும் வாழ்வில் உயர்த்தும் கருத்துக்கள் அருமை....

என்னை போல் அன்பே தெய்வம் என்று ஏமாளியாக இல்லாமல், சமத்தா இருங்கள் மக்கா.

சொல்லிட்டீங்க இல்ல அக்கா..இனி செஞ்சிருவோம்...

இளசு
26-08-2007, 09:13 PM
...

சுத்தம் என்பது என்னோடு கலந்துவிட்ட ஒன்று.. நான் இருக்கும் அறை, வேலை செய்யும் என் இடம் எப்பொழுதும் சுத்தமாய் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்..

நன்றி ஷீ...

என் மனஓவியம் சரி என்பதில் கூடுதல் மகிழ்ச்சி!

மௌனராகம் கார்த்திக் வந்ததில் இருந்தே
இரண்டு மூன்று நாள் தாடிதான் அழகென்று..
இன்றைய வரைக்கும் நீடிப்பதால் −
அதிலும் அழகுதான் நம் ஷீ.. இல்லையா மக்களே!

இளசு
26-08-2007, 09:17 PM
கருத்து மாறுபாடுகள் என்பது என்னைப் பொறுத்தவரை அறிவை வளர்க்கும் ஒரு காரணி.மாறுபட்ட கருத்து நமக்கும் பல புது விடயங்களை கற்றுத்தரும்.

மிகச் சரியாகச் சொன்னீர்கள் சிவா!

மெய்ப்பொருள் காணவைக்கும் அறிவைத் தர
இடம் வலமாய் பிரதிபலிக்கும் கண்ணாடியாக
மாற்றுக் கருத்தும் மாறா நேசமும் உள்ளவர் தேவை!

பாராட்டும் நன்றியும்..சிவா!

இளசு
26-08-2007, 09:24 PM
அடுத்து,

நம் மன்றத்தின் இளைய "இளசு" ஷீ நிசியாரை கேள்விக்கணைகள் தொடுக்க அன்புடன் அழைக்கிறோம்..!

ஹாஹ்ஹா.. இதைவிட '' பெரிய'' பட்டத்துக்குத்
தகுதியானவர் நம் ஷீ!

ஷீயின் கேள்விகளும் நம் நண்பர்களின் பதில்களும் அருமை!

ஒவ்வொன்றாய் வாசித்துக் கருத்தளிக்க முயல்கிறேன்..

திரி நாயகர்கள் ராஜா −அமருக்கு மீண்டும் என் நன்றிகள்..பாராட்டுகள்!

(பத்து பேர் அதிகமோ என முதலில் நினைத்தேன்...
பின்னார் பத்தாது என ஆகிவிட்டது..

விடுபட்டவர்கள் என் நினைவில் விடுபட்டவர்கள் அல்லர்..
நான் என்னைக் கவர்ந்தவர்கள் எல்லோரையும் ஆளுக்கொரு கேள்வி
கேட்க வேண்டுமெனில், பத்து சுற்று வந்தாலும் பத்தாது...

ஒவ்வொருவராய் கேள்வியாளராய் மாறி மாறி வர..
நாம் ஒவ்வொருவரும் இங்கே மனம் திறப்போம்...
அந்தக் குழு மனப்பான்மையை வளர்ப்பதாலேயே
என் நெஞ்சுக்கு நெருக்கமான திரியாகிவிட்டது இது..)

இளசு
26-08-2007, 09:38 PM
1. அன்பு இளசு அவர்களே! உங்களின் கவிதை விமர்சனங்களை கண்டு பலமுறை பரவசப்பட்டிருக்கிறேன். பல பணிகளுக்கு மத்தியிலும், பலர் எழுதுகின்ற கவிதைகளை மேம்போக்காய் படிக்காமல் மிக ஆழமாக படித்து, மிக ஆழமாக விமர்சிக்கும் உங்களின், பண்பு + அன்புக்கு நான் அடிமை.. கவிதையினை விமர்சிக்க விரும்பும் விமர்சகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

நன்றி ஷீ!

ஆதவா ஒரு திரியே திரித்து என்னைக் கட்டியிழுக்க முயற்சி செய்தது நினைவுக்கு வருகிறது..

எனக்குள் ஒரு நல்ல ரசிகன் இருப்பது முன்னமே நான் அறிந்தது..

ஆனால் ஒரு '' விமர்சகன்'' இருப்பதைக் கண்டு சொன்னது மன்றமே!

நான் என்ன எழுதினாலும் அதைச் சிலாகிக்கும் உங்கள் அன்பு மட்டுமே
எனக்கு நம்பிக்கையூட்டி, அதைரியம் போக்கி என்னை வளர்க்கிறது..

அதிகமாய் உலவும் சரக்கு சந்தையில் மலிவாகிவிடும் என்ற கூற்றை மாற்றி
மிக அதிகமாய் பின்னூட்டமிட்ட எனக்கு இன்னும் நீங்கள் அனைவரும் காட்டும் அன்பான வரவேற்பே என்னை எழுதத் தூண்டுகிறது..

நான் ஒரு ''ஏகலை −வன்'' − ஒரு நேரம் ஒன்று மட்டுமே!
நாவல் வாசிக்கும்போது, மற்றவர் அழைத்தாலும் காதில் விழாது.
தொலைபேசும்போது கண்கள் மூடும் − கவனம் குவிக்க!

ஆக்கங்களை வாசிக்கும்போதும் அப்படித்தான்..
மனம் அமிழ்ந்து வாசித்தால், முடித்த கணம் தோன்றுவது
உடனே பின்னூட்டமாக...

அவசரமாய் வாசிக்க மட்டும் என எண்ணி வரும் உலாக்களில்
நான் பின்னூட்டமே தரமாட்டேன்!

படைத்தவரின் பார்வையில் இருந்து பார்க்கும் '' எம்பத்தி''
படித்த மனம் சிலிர்க்கும் பக்கவிளைவான உணர்வுகள்..
முன்பு படித்ததை ஒப்பிடும் நினைவேட்டுத் தூசிகள்..
இப்படி ஏதோ ஓர் உருவம் கொண்டு வரும் என் பின்னூட்டங்கள் −
நல்ல அமைதியில் வாசித்தவுடன் அவ்வப்போது தோன்றுபவை..

தட்டச்சும் வேகம் அதிகம்..
சொற்சுருக்கினால் இன்னும் சுலபம்..
நண்பன், ராம்பால் தொடங்கி சிவா, நீங்கள், மோகன் வரை
எல்லாரும் காட்டும் நியாயமான எதிர்ப்பார்ப்பு...

இவையே என்னையும் விமர்சகனாய் புடம் போட்ட ரகசியங்கள்!

நல்லதைக் கண்டால், அனுபவித்துவிட்டு, பாராட்டாமல் போகாதே
என்ற உபநிடதம் கற்றுத் தந்ததும் மன்ற உறவுதான்..

இரண்டு நிமிடத்தில் ஒரு செயலை முடிக்க முடியுமென்றால்
உடன் அதை செய்துமுடி என
நேர மேலாண்மை கற்றுத்தந்ததும் மன்றப் பதிவுதான்!

எனக்கு ஏதாவது இதில் நல்ல பெயர் இருந்தால்,,
அது முழுதும் சேர வேண்டியது − தமிழ்மன்றத்துக்குத்தான்!

ஷீ-நிசி
27-08-2007, 03:52 AM
ஹாஹ்ஹா.. இதைவிட '' பெரிய'' பட்டத்துக்குத்
தகுதியானவர் நம் ஷீ!

ஷீயின் கேள்விகளும் நம் நண்பர்களின் பதில்களும் அருமை!

ஒவ்வொன்றாய் வாசித்துக் கருத்தளிக்க முயல்கிறேன்..

திரி நாயகர்கள் ராஜா −அமருக்கு மீண்டும் என் நன்றிகள்..பாராட்டுகள்!

இது ராஜா சார் ம*ற்றும் உங்க*ளின் பெருந்த*ன்மை......

என் அன்பின் ந*ன்றி!

சிவா.ஜி
27-08-2007, 04:47 AM
நான் ஒரு ''ஏகலை −வன்'' − ஒரு நேரம் ஒன்று மட்டுமே!
நாவல் வாசிக்கும்போது, மற்றவர் அழைத்தாலும் காதில் விழாது.
தொலைபேசும்போது கண்கள் மூடும் − கவனம் குவிக்க!

இந்த குணம் ஒன்று போதும் ஒருவர் தன் வாழ்க்கையில் உயர்நிலை அடைய.எந்த காரியமானானுல் முழு ஈடுபாட்டுடன்..எண்ணங்களை அதிலேயே குவித்து செய்யப்படும் எந்த காரியமும் மேலானதாக இருக்கும்.
மிகச்சிறந்த ஓர் பழக்கத்தைக் கடைபிடித்து அதை எங்களையும் செய்யத்துண்டுவதாய் அமைந்திருக்கும் இந்த பதிலுக்காக உங்களுக்கு வந்தணம்.

நல்லதைக் கண்டால், அனுபவித்துவிட்டு, பாராட்டாமல் போகாதே
என்ற உபநிடதம் கற்றுத் தந்ததும் மன்ற உறவுதான்..

மீண்டுமோர் நல்குணம். நல் ஆசானாய் நீங்கள்...

இரண்டு நிமிடத்தில் ஒரு செயலை முடிக்க முடியுமென்றால்
உடன் அதை செய்துமுடி என
நேர மேலாண்மை கற்றுத்தந்ததும் மன்றப் பதிவுதான்!

எனக்கு ஏதாவது இதில் நல்ல பெயர் இருந்தால்,,
அது முழுதும் சேர வேண்டியது − தமிழ்மன்றத்துக்குத்தான்!

கற்றுத்தேர்ந்த ஆசிரியர்களால் எங்களையும் கற்க வைப்பதும் இதே மன்றம்தான். மிகச்சிறந்த பதிவு இளசு. வாழ்த்துக்கள்.

ஆதவா
27-08-2007, 05:08 AM
ஆஹா! அருமையான திரி..... இன்று என்னால் விடை அளிக்க இயலாது. ஆகவே தயவு செய்து பொறுத்தருளுங்கள்.....

ராஜா
27-08-2007, 07:07 AM
நன்றி நண்பரே..!

உங்கள் பதில் மிகவும் சிறப்பு என்று சொல்வது தேன் இனிக்கும் என்று சொல்வதற்கு ஒப்பானது. அனைவரும் அறிந்த உண்மையை யாரும் எடுத்துச் சொல்லத் தேவை இராது.

வெறும் குறும்புக்காரக் குழந்தை என்று எண்ணியிருந்த என் பாசமலர் 2007, இவ்வளவு விவரமான, தெளிவான பெண் என்றறிய, ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தந்தையின் சிந்தை கொண்டு மகிழ்கிறேன்.

எதிர்காலம் உனக்கு இனிப்பாக இருக்கும் தாயே..!

lolluvathiyar
27-08-2007, 07:11 AM
மற்ற திரிகளை போல் அல்லாமல் இந்த திரியில் அதிக முதிய*வர்களின் அனுபவங்கள் கிடைகிறது. தனி தனியாக கோட் பன்னி சொல்ல முடியவில்லை, அதனால் தான் கேள்விகளை பதில்களை படித்து விட்டு பார்த்தால் சிறியவர்கள் பதிவிலும் ஒரு பக்குவம் (மெச்சூரிட்டி) தெரிகிறது.

ராஜா
27-08-2007, 07:11 AM
ஆ! பத்து..! கேள்வியாளர் ; ஷீ நிசி.
********************************************************

1. அன்பு இளசு அவர்களே! உங்களின் கவிதை விமர்சனங்களை கண்டு பலமுறை பரவசப்பட்டிருக்கிறேன். பல பணிகளுக்கு மத்தியிலும், பலர் எழுதுகின்ற கவிதைகளை மேம்போக்காய் படிக்காமல் மிக ஆழமாக படித்து, மிக ஆழமாக விமர்சிக்கும் உங்களின், பண்பு + அன்பு க்கு நான் அடிமை.. கவிதையினை விமர்சிக்க விரும்பும் விமர்சகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

2. அன்பு அறிஞர் அவர்களே, எல்லோரையும் அரவணைக்கும் குணம் உங்களிடம் நான் பழகியவரையில் கண்டுள்ளேன். அப்படி மிக நம்பிக்கையாய் பழகிய உங்கள் நண்பர் யாராகிலும் 'இப்படி செய்துவிட்டானே' என்று நீங்கள் வருந்த வைத்த சம்பவம் ஏதேனும் உண்டா?

3. அன்பு பாரதி அவர்களே! எப்பொழுதும் சிரித்தமுகமாய், எல்லோருக்கும் நண்பனாய் இருப்பது எல்லோராலும் முடிகிற காரியம் அல்ல. நீங்கள் அப்படி இருக்கிறீர்கள். உங்கள் இயல்பே அப்படித்தானா, இல்லை வாழ்க்கை பயணத்தில் அவ்வாறு உங்களை மாற்றிக்கொண்டீர்களா? (எங்களுக்கும் அப்படி இருக்க சில டிப்ஸ் கொடுங்க)

4. அன்பு மணியா அவர்களே! மன்றத்தின் மிக மூத்த உறுப்பினர் நீங்கள். மன்றத்தின் இன்றைய நிலையினை உங்கள் பார்வையில் சொல்லுங்கள்.

5. அன்பு மன்மதன், உங்களின் எதிர்கால இலட்சியம் அறிவேன். நீங்கள் கண்டிப்பாய் வெற்றியடைவீர்கள். வெற்றியடைந்த பிறகு அதில் நுழைய ஆர்வம் உண்டா? அதாங்க பாலாய் இருந்து பாழாய்ப்போன அரசியல். அதில் நுழைவீர்களா?

6. அன்பு மோகன் அவர்களே! தமிழ் வளர்க்கும் உங்களின் முயற்சியை நான் ஓரளவிற்கு அறிவேன். உங்களின் இதேனீ மன்றம் நீங்கள் எதிர்பார்த்த அளவு பிரபலமடைந்திருக்கிறதா இணைய உலகில்? தமிழுக்காய் செய்ய விரும்பும் எதிர்கால இலக்குகள் என்ன?

7. அன்பு ஆதவா, எனக்கு மன்றம் தந்த ஒரு மிக நல்ல நண்பர் நீங்கள். மிக இளம் வயதிலேயே இத்தனை வெளியுலக அறிவை நீங்கள் அடைந்திருக்க மிக முக்கிய காரணம் எது என்று கூறுவீர்கள்?

8. அன்பு ஓவியா, பாரதி கண்ட புதுமைப்பெண் என்று நீங்கள் உங்களை நினைக்கிறீர்களா? (நான் நினைக்கிறேன்) பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

9. அன்பு அமரன், மன்றத்தில் முதலில் நரன் என்ற பெயரில் வந்தீர்கள்... இன்று அமரனாய் வளர்ந்திருக்கிறீர்கள்...
மன்றத்தின் செயல்பாடுகளில் நரன் vs அமரன் ஒப்பிடுங்கள்.

10. அன்பு மனோஜ் முதலில் வெறும் பின்னூட்டங்கள், பின் கணித திரிகள், விளையாட்டு, இன்று கவிதைகள்.. தமிழ் பிழைகள் கூட வெகுவாய் குறைந்துள்ளது. மன்றத்தில் இணைந்தது முதல் இன்றுவரை இந்த நண்பர்களுடனான ஐக்கியத்தை எப்படி உணர்கிறீர்கள்?

இளசு
27-08-2007, 07:42 AM
கற்றுத்தேர்ந்த ஆசிரியர்களால் எங்களையும் கற்க வைப்பதும் இதே மன்றம்தான். .

அன்பு சிவா..

ஒவ்வொருவரிடம் கற்க நிச்சயம் எதோ இருக்கிறது..
அதைத்தான் மன்றம் ஏதுவாக்குகிறது...

உங்கள் வாழ்த்துக்கு நன்றி..

நண்பன், ராம்பால் எல்லாம் மிகச் சிறந்த கவிஞர்கள் மட்டுமல்ல..
மிக வீரியமான விமர்சகர்களும் கூட..

கண்ஸ், பூ, அண்ணல் போல இன்னும் பல கவர்ந்த விமர்சகர்கள் இருக்கிறார்கள்..

இப்போது அமரன், ஆதவா, ஓவியன், அக்னி, நீங்கள், ஷீ, இதயம், சிவா, ஓவியா என மிக அழகான, ஆழமான விமர்சகர்கள் இருக்கிறீர்கள்..
மன்றத்தில் பெருகிவரும் கவிதை ஊற்றுக்குக் காரணி நீங்கள்தான்..

உண்மையில் சிவா.... மற்ற கவிதைகளுக்குக் கிடைக்கும் உங்களின்
அழகான பின்னூட்டங்களைப் பார்க்கும்போது,
நானும் கவிதை எழுதி இதே போல் அங்கீகாரம் பெற வேண்டும்
என என் மனம் ஏங்குவது உண்மை!

இளசு
27-08-2007, 07:45 AM
[QUOTE=ஷீ-நிசி;262919][B][U]4. அன்பு மணியா அவர்களே! மன்றத்தின் மிக மூத்த உறுப்பினர் நீங்கள். மன்றத்தின் இன்றைய நிலையினை உங்கள் பார்வையில் சொல்லுங்கள்./QUOTE]

என்னுடைய வயதை மறைமுகமாக பகிரங்கப்படுத்திய நண்பனுக்கு
என் நன்றி.(அடுத்த முறை சந்திக்கும்போது இருக்கு உனக்கு....) :rolleyes:

கட்டுக்கோப்பாக கொண்டுசெல்லும் சிறந்த குழு..... அனைவருக்கும் என் ஹேட்ஸ் ஆஃப்....:aktion033::aktion033::aktion033:.மொத்தத்தில் என்னை
பிரம்மிக்க வைக்கும் பலர் அன்றும் இன்றும் இருக்கிறார்கள்.:grin:
அன்புட*ன்
ம*ணியா தாத்தா....:grin:

எங்கப்பன் குதிருக்குள் இல்லை...! நுணலும் தன் வாயால்....

ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஆஆ!

தலை,

மூத்த உறுப்பினர் என்றால் முன்னாளிலியே மன்றம் சேர்ந்தவர் − அப்படித்தானே!!!!

பிறந்தநாள் சான்றிதழ் வைத்தா அந்த வரிசை?????!!!!!!!!

பல 'நகைப்பான்'களுக்கிடையில் நீங்கள் எழுதிய மற்ற கருத்துகள்
அருமை தலை!!!

இளசு
27-08-2007, 07:49 AM
3. .

நேசிக்க கற்றுக்கொண்டால் எல்லாமே எளிதாகி விடும். கொடுப்பதற்கு மிகவும் எளிதானது, எந்த வித ஏற்பாடுகளும் தேவை இல்லாதது, எப்போதும் நம்மிடம் இருப்பது - அன்பு. அன்பைக் கொடுப்பதால் நாம் இழப்பது ஒன்றுமில்லை.

நம் அன்பு உதாசீனம் செய்யப்பட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை என்ற மன இயல்பு வந்து விட்டால் அமைதி தானாக வந்து விடும். ஆகவே முடிந்த வரை உண்மையாய் இருங்கள். உண்மையில் சொன்னால் உண்மையை சொல்வதுதான் மிகவும் எளிதானது. அனைவரையும் நேசியுங்கள்; .

பாரதியை − பேரிதயப் பாரதி என அடிக்கடி அழைப்பவன் நான்..

ஒரு சில நடவடிக்கைகளைக் கவனித்து அப்படி சொன்னது..அன்று!
அடிப்படையிலேயே பாரதி அப்படித்தான் என நிரூபணம் ஆனது இன்று!

பாரதிக்கு அண்ணன் என்பதில் எனக்குப் பெருமிதம் − என்றும்!

இளசு
27-08-2007, 07:59 AM
யதார்த்ததில் தமிழ் தட்டச்சு தெரிந்து, கருத்துக் களங்களில் வர விரும்பும் தமிழர் சுமார் 100 க்குள் எனலாம். பல மன்றங்களில் 20-25 பேர் மட்டுமே வந்து செல்கின்றனர். ஆனால் உறுப்பினர்களின் எண்ணிக்கை பல ஆயிரம் இருக்கும். இவர்கள் தமிழர்கள் தான். ஆர்வத்தில் கணக்கை துவங்கிவிட்டு பிறகு பதிப்பதில்லை. ஆக regularஆக பதிப்பதிலும் ஆர்வம் கொண்ட உங்களை போன்று என்னை போன்றவர்கள் ஏற்கனவே பல களங்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.
தமிழுக்கு நான் சேவை செய்கிறேன் என்று சொன்னால் அது அபத்தமாகிவிடும். காரணம் தமிழுக்கு யாருடைய சேவையும் தேவையில்லை. அதன்பால் ஈர்ப்பு கொண்டு காதல் கொண்டு வருபவர்களே அதிகம். அவர்களில் நானும் ஒருவன்.

. ஒருவர் வந்தாலும் நாடகம் நடத்தி ஆகவேண்டும்.

இணையத்தில் தேனீ இன்னும் குழந்தை தான். வளரும்....

சுய − அப்ரைசல் அருமை மோகன்..
வளர்ச்சிக்கு அடிப்படை உரம் அது!
காலமும் உழைப்பும் வெற்றியை வழங்கட்டும்!
தமிழ்க்காதலர்கள் அனைவரின் காதலும் வெற்றி பெறட்டும்!

leomohan
27-08-2007, 08:13 AM
அன்புள்ள மோகன்

எட்டாவதாய் கேட்ட கேள்வி அஷ்டாவதானி என உங்களை..
யதேச்சையாய் வந்த பொருத்தம்!

இந்த நூற்றாண்டுக்கான இப்பதங்களின் பொருளில் நீங்கள் நிச்சயமாய்!

பத்தடி பெற்றவர் போட்ட பாதையில்..
பல அடி சுயப் பாய்ச்சலில்..

இன்னும் பலகாதம் உங்கள் வீச்சும் வெற்றியும் பரவ வாழ்த்துகள்!

உங்களைப் பெற்றவர் முகங்களில் புன்னகை அடிக்கடி குடிவரட்டும்!

நெகிழ வைத்த நல்ல பதிலுக்கு நன்றி மோகன்!

நன்றி இளசு.

leomohan
27-08-2007, 08:18 AM
சுய − அப்ரைசல் அருமை மோகன்..
வளர்ச்சிக்கு அடிப்படை உரம் அது!
காலமும் உழைப்பும் வெற்றியை வழங்கட்டும்!
தமிழ்க்காதலர்கள் அனைவரின் காதலும் வெற்றி பெறட்டும்!

நன்றி இளசு

பல காரியங்கள் நாம் வெற்றி அடைவதற்காக மட்டுமே துவங்குவதில்லை. நமக்கு மன மகிழ்ச்சி, நிம்மதி அளிக்கும் விஷயங்களை நாம் செய்கிறோம். நாம் செய்வதல்லாம் வெற்றியடைய வேண்டும் என்று நினைப்பது unrealistic expectation. வெற்றியடைந்தாலும் அடையாவிட்டாலும் நம் வரை நாம் முழுவதும் முயற்சித்தோம் என்பதே ஆத்ம திருப்தி தரும் விஷயம். அப்படி ஒருவேளை நாம் ஒரு காரியத்தில் முழு அளவு ஈடுபாடு தரமுடியாவிட்டால் அது தோல்வியில் முடியும் என்பது foregone conclusion.

leomohan
27-08-2007, 08:23 AM
இரண்டு நிமிடத்தில் ஒரு செயலை முடிக்க முடியுமென்றால்
உடன் அதை செய்துமுடி என
நேர மேலாண்மை கற்றுத்தந்ததும் மன்றப் பதிவுதான்!

!

நன்றி இளசு. நல்ல time management பாடம்.

இளசு
27-08-2007, 09:47 AM
அமரன்:-
எந்தப்பதிவானாலும் எப்படி என சிறகுவிரிப்பவன்.
கண்ணான பதிவுகளை உண்ண நினைப்பவன்.
பதிவுகள் பொன்னாக இருக்க முயற்சிப்பவன்
சர்ச்சைகளைக் கண்டால் தகிப்பவன்.
நகைச்சுவைன்னா நனைய விரும்புபவன்
சீண்டல்களை கண்டும் சகிப்பவன். ஆனாலும் சபிப்பவனல்ல.
இனிமைத் திருவிழா இவனின் காவலன்.
கவிதையின் காலடியில் நிற்பவன்.
மன்றம் பழுதாகமல் இருக்க முயல்பவன்.
வைரங்கள் மட்டும் ஜொலிக்க பாடுபடுபவன்.

=நிழல்களின் நிஜம்

சொலல்வல்லன் சோர்விலான் அஞ்சான்...
இகல்வெல்ல இயலா பன்முக வல்லான்..
என் அன்பு அமரனுக்கு பாராட்டு முத்தங்கள்!

இளசு
27-08-2007, 09:51 AM
நான் முதல் முதல் இணைந்ததும் பதிவுகள் இட யோசிப்பேன் அப்படியே மீறி பதிவுகள் தந்ததும் அதில் வார்த்தைக்கு வார்த்தை பிழைஇருக்கும் ...இன்று சற்று பிழையில்லாமல் எழுத முயற்சித்து வருகிறேன்

எனக்கு கணிதம் வராது என்றாலும் ஏதாவது நல்லவிளையாட்டை தொடங்க வேண்டும் என்று தொடங்கியதுதான் தமிழ்கணபுலி ...அடுத்து சமையல் விளையாட்டு இதில்மன்ற உறவுகள் அனைவரும் பங்கு பெற்றதில் அளவில்லா மகிழ்ச்சி.....
கவிதைபோட்டிக்கும் கவிதை எழுத முடிந்தது
தற்பொழுது எனக்கு தமிழ்மன்றம் பல அருமையான உறவுகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது..
இங்கு இவ்வளவு தான் விரிவான பதிவு மிகவிரைவில்...

இது ராஜபாட்டை அன்று...
என கடந்து வந்தவர்கள் சொல்லக் கேட்பதில்
பல நல்ல பாடங்கள் இருக்கும்!
மனோஜ் சொன்ன பாடங்களுக்கு நன்றி!
முயற்சி தன் மெய்வருத்தக்கூலி தரும்!

இளசு
27-08-2007, 09:58 AM
அனைத்தையும் ஒருவனின் அன்பிற்காகவோ அல்லது ஆதிக்கத்திலோ மூட்டைக்கட்டி தீயில் இட்டு விடுபவர்களே எம் அருமை பெண்கள். ....
. எம்மின பெண்களுக்கு ஆண்களை சார்ந்து இருப்பதுதான் அழகும் மரியாதையும்கூட. ஆனால் அவர்கள் முற்றிலும் ஆளப்படுவதுதான் வேதனையும் முக்கிய பிரச்சனையும்....

எந்த சூழ்நிலையிலும், தன்மானம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நேர்மை, கண்ணியம், துணிச்சல் மற்றும் இறைவன் மேல் அன்பு இவைகளை உங்கள் மூச்சே நின்றாலும் கைவிடாதீர்கள்.[/SIZE][/B][/COLOR]

உண்மை நிலை அறிக்கையை முன்னுரையாய்த் தந்து
பல நல்ல பாடங்களைத் தொகுத்த நல்ல பதில்..

பாராட்டுகள் ஓவியா!

தன்மானம் உள்ளிட்ட குணங்கள் ஆணுக்கும் பொருந்தும்!
நாங்களும் கடைப்பிடிக்க முயல்கிறோம்!

மன்மதன்
27-08-2007, 01:00 PM
5. அன்பு மன்மதன், உங்களின் எதிர்கால இலட்சியம் அறிவேன். நீங்கள் கண்டிப்பாய் வெற்றியடைவீர்கள். வெற்றியடைந்த பிறகு அதில் நுழைய ஆர்வம் உண்டா? அதாங்க பாலாய் இருந்து பாழாய்ப்போன அரசியல். அதில் நுழைவீர்களா? :)

நான் போகும் ரூட்டே சரியில்லை என்று அனைவரும் என்னை அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருக்க நீங்க என்னடான்னா இப்பவே அரசியலில் நுழைவேனா இல்லையான்னு எல்லாம் கேள்வி கேட்டு என்னை உசுப்பேத்தி விடுரீங்களே.. உங்க பாச உணர்ச்சிய பாராட்டுறேன்.. (எனக்கு ஒரு பெரிய பில்டிங்க் போனாவே entrance கண்டுபிடித்து நுழைவதற்கே கஷ்டப்படுவேன்.. :D:D நானாவது அரசியலில் நுழைவவாவது..அய்யோ அய்யோ:D:D)

ராஜா
27-08-2007, 01:11 PM
நன்றி மன்மதன்..!

ஷீ-நிசி
27-08-2007, 01:21 PM
நான் போகும் ரூட்டே சரியில்லை என்று அனைவரும் என்னை அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருக்க நீங்க என்னடான்னா இப்பவே அரசியலில் நுழைவேனா இல்லையான்னு எல்லாம் கேள்வி கேட்டு என்னை உசுப்பேத்தி விடுரீங்களே.. உங்க பாச உணர்ச்சிய பாராட்டுறேன்.. (எனக்கு ஒரு பெரிய பில்டிங்க் போனாவே entrance கண்டுபிடித்து நுழைவதற்கே கஷ்டப்படுவேன்.. :D:D நானாவது அரசியலில் நுழைவவாவது..அய்யோ அய்யோ:D:D)

இப்ப பில்டிங்ல entrance கண்டுபிடிக்க கஷ்டபடுவீங்க... அப்புறம் பில்டிங் பில்டிங்கா கட்டுவீங்க! ஹி ஹி

நன்றி மன்மதா....:food-smiley-008:

ஷீ-நிசி
27-08-2007, 01:24 PM
மிக சிறப்பான பதில் ஓவியா..

பெண்களுக்கு மிக அருமையான வழிமுறைகள்...

mania
27-08-2007, 02:57 PM
நான் போகும் ரூட்டே சரியில்லை என்று அனைவரும் என்னை அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருக்க நீங்க என்னடான்னா இப்பவே அரசியலில் நுழைவேனா இல்லையான்னு எல்லாம் கேள்வி கேட்டு என்னை உசுப்பேத்தி விடுரீங்களே.. உங்க பாச உணர்ச்சிய பாராட்டுறேன்.. (எனக்கு ஒரு பெரிய பில்டிங்க் போனாவே entrance கண்டுபிடித்து நுழைவதற்கே கஷ்டப்படுவேன்.. :D:D நானாவது அரசியலில் நுழைவவாவது..அய்யோ அய்யோ:D:D)

அன்னிக்கு கரிகாலன்ஜி தங்கியிருந்த ஹோட்டலை கண்டுபிடிக்க ஒன்னும் கஷ்டப்பட்டதா தெரியலையே....!!!!????

போட்டுக்கொடுக்கும்
மணியா....:D:D:D

mania
27-08-2007, 02:59 PM
இப்ப பில்டிங்ல entrance கண்டுபிடிக்க கஷ்டபடுவீங்க... அப்புறம் பில்டிங் பில்டிங்கா கட்டுவீங்க! ஹி ஹி

நன்றி மன்மதா....:food-smiley-008:

பில்டப் நல்லாத்தான் இருக்கு....!!!!
அன்புடன்
மணியா....:D:D

ராஜா
28-08-2007, 06:20 AM
ஆ! பத்து..! கேள்வியாளர் ; ஷீ நிசி.
********************************************************

1. அன்பு இளசு அவர்களே! உங்களின் கவிதை விமர்சனங்களை கண்டு பலமுறை பரவசப்பட்டிருக்கிறேன். பல பணிகளுக்கு மத்தியிலும், பலர் எழுதுகின்ற கவிதைகளை மேம்போக்காய் படிக்காமல் மிக ஆழமாக படித்து, மிக ஆழமாக விமர்சிக்கும் உங்களின், பண்பு + அன்பு க்கு நான் அடிமை.. கவிதையினை விமர்சிக்க விரும்பும் விமர்சகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

2. அன்பு அறிஞர் அவர்களே, எல்லோரையும் அரவணைக்கும் குணம் உங்களிடம் நான் பழகியவரையில் கண்டுள்ளேன். அப்படி மிக நம்பிக்கையாய் பழகிய உங்கள் நண்பர் யாராகிலும் 'இப்படி செய்துவிட்டானே' என்று நீங்கள் வருந்த வைத்த சம்பவம் ஏதேனும் உண்டா?

3. அன்பு பாரதி அவர்களே! எப்பொழுதும் சிரித்தமுகமாய், எல்லோருக்கும் நண்பனாய் இருப்பது எல்லோராலும் முடிகிற காரியம் அல்ல. நீங்கள் அப்படி இருக்கிறீர்கள். உங்கள் இயல்பே அப்படித்தானா, இல்லை வாழ்க்கை பயணத்தில் அவ்வாறு உங்களை மாற்றிக்கொண்டீர்களா? (எங்களுக்கும் அப்படி இருக்க சில டிப்ஸ் கொடுங்க)

4. அன்பு மணியா அவர்களே! மன்றத்தின் மிக மூத்த உறுப்பினர் நீங்கள். மன்றத்தின் இன்றைய நிலையினை உங்கள் பார்வையில் சொல்லுங்கள்.

5. அன்பு மன்மதன், உங்களின் எதிர்கால இலட்சியம் அறிவேன். நீங்கள் கண்டிப்பாய் வெற்றியடைவீர்கள். வெற்றியடைந்த பிறகு அதில் நுழைய ஆர்வம் உண்டா? அதாங்க பாலாய் இருந்து பாழாய்ப்போன அரசியல். அதில் நுழைவீர்களா?

6. அன்பு மோகன் அவர்களே! தமிழ் வளர்க்கும் உங்களின் முயற்சியை நான் ஓரளவிற்கு அறிவேன். உங்களின் இதேனீ மன்றம் நீங்கள் எதிர்பார்த்த அளவு பிரபலமடைந்திருக்கிறதா இணைய உலகில்? தமிழுக்காய் செய்ய விரும்பும் எதிர்கால இலக்குகள் என்ன?

7. அன்பு ஆதவா, எனக்கு மன்றம் தந்த ஒரு மிக நல்ல நண்பர் நீங்கள். மிக இளம் வயதிலேயே இத்தனை வெளியுலக அறிவை நீங்கள் அடைந்திருக்க மிக முக்கிய காரணம் எது என்று கூறுவீர்கள்?

8. அன்பு ஓவியா, பாரதி கண்ட புதுமைப்பெண் என்று நீங்கள் உங்களை நினைக்கிறீர்களா? (நான் நினைக்கிறேன்) பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

9. அன்பு அமரன், மன்றத்தில் முதலில் நரன் என்ற பெயரில் வந்தீர்கள்... இன்று அமரனாய் வளர்ந்திருக்கிறீர்கள்...
மன்றத்தின் செயல்பாடுகளில் நரன் vs அமரன் ஒப்பிடுங்கள்.

10. அன்பு மனோஜ் முதலில் வெறும் பின்னூட்டங்கள், பின் கணித திரிகள், விளையாட்டு, இன்று கவிதைகள்.. தமிழ் பிழைகள் கூட வெகுவாய் குறைந்துள்ளது. மன்றத்தில் இணைந்தது முதல் இன்றுவரை இந்த நண்பர்களுடனான ஐக்கியத்தை எப்படி உணர்கிறீர்கள்?

ராஜா
28-08-2007, 06:22 AM
அறிஞரும், ஆதவரும் பதில் சொல்லிவிட்டால் அடுத்த கேள்வியாளரை அழைக்கலாம்.

வாருங்கள் நண்பர்களே.. தாருங்கள் பதில்களை..

ராஜா
28-08-2007, 04:56 PM
அறிஞரும், ஆதவனும் இன்னும் இதைப் பார்க்கலையோ..!

aren
29-08-2007, 01:53 AM
அறிஞரும் ஆதவாவும் இன்னும் நேரம் எடுத்துக்கொண்டால் அடுத்த பத்து கேள்விகளை அவர்களே கேட்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.

mania
29-08-2007, 05:06 AM
ஆமாம்......ஆமாம்....;););)
பின் பாட்டுக்காரன்
மணியா...;)

ஆதவா
29-08-2007, 05:48 AM
அன்பு ஆதவா, எனக்கு மன்றம் தந்த ஒரு மிக நல்ல நண்பர் நீங்கள். மிக இளம் வயதிலேயே இத்தனை வெளியுலக அறிவை நீங்கள் அடைந்திருக்க மிக முக்கிய காரணம் எது என்று கூறுவீர்கள்?-------------------

அன்பு ஷீ-நிசி மற்றூம் நண்பர்களுக்கு....

மன்றத்திற்கு முன்பிருந்தே நாம் இருவரும் நண்பர்கள் என்பது மீண்டும் நினைவுறுத்துகிறேன். சரி நான் பதிலுக்கு வருகிறேன்.

வெளியுலக அறிவு அத்தனை என்னிடம் உள்ளதா? மன்றம் வந்த பிறகுதான் எனக்கு அறிவு இருப்பதே தெரிந்தது... :D. ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால் தனிமை என்று சொல்லிவிடுவேன். ஏனோ தெரியவில்லை. எனக்கு ஆரம்பம் முதலே தனிமை விதிக்கப்பட்டிருக்கிறது. மன்றம் வருவதற்கு முன்பு புத்தகங்கள் நண்பர்களுடன் அரட்டை என்று போய்க்கொண்டிருந்தது. உண்மையிலேயே நான் ஒரு வாயாடி. ஆனால் என் வாயை அடக்கியது மன்றமே!. முன்பு யோசிக்காமல் பேசிவிடுவேன். இன்று நீண்டநேரம் யோசிக்கிறேன். அதோடு பல விஷயங்களையும் நோண்டி தெரிந்துகொள்வதும் ஒரு காரணம். இல்லையென்றால் பதினைந்து வயதில் காமக் கவிதைகள் எழுதியிருக்கமுடியாது இல்லையா? நோண்டி தெரிந்து கொண்டவைகள் ஏராளம். எனக்கு கிட்ட இருந்து சொல்லிக் கொடுத்தது என்று பார்த்தால் மிகச் சில விஷயங்களே தான் மிஞ்சும்.

சில விஷயங்கள் இங்கே சொல்லத் தகுந்தது என்று நினைக்கிறேன். உண்மையிலேயே நான் நன்றாக வரைவேன். இப்போதல்ல. மிகச் சிறு வயதில். என் தந்தையிடமே காந்தி ராட்டை சுற்றுவது போலவும் பகத் சிங்க் போலவும் வரைந்து காண்பித்து அசத்தியவன். (அதற்குப் பரிசாக ஒரு கேக் வாங்கிக் கொடுத்தார்.. இன்றும் மறக்க முடியாதது.) அதிலும் வரைய கற்றுக் கொள்வதற்கு முன்பாக இரு கோடு நோட்டுகள் வாங்கி அதில் இரு கோடுகளுக்கு மத்தியில் சுருள் சுருளாகவும் (Spiral) வட்டவட்டமாகவும், நேர்கோணலாகவும் (Zigzag) வரைய கற்றுக் கொடுத்ததும் அவரே! ஆனால் அதன் பின்னர் ஏனோ தெரியவில்லை எனது ஆர்வத்தை குழி தோண்டி புதைத்துவிட்டார். அதற்கான காரணம் இன்னும் என்னால் அறியமுடியவில்லை... இன்று ஓவியம் என்றால் என்ன என்ற அளவிற்கு வந்துவிட்டேன்... அதேபோல மோட்டார் வாகனம் பழுது பார்ப்பதிலும் ஆர்வம் அதிகம். அதிலும் தடை விழுந்தது. ஆனாலும் நோண்டி தெரிந்துகொண்டது எவ்வளவோ... குறிப்பாக கணிணியில் பார்ட்டிசன் பிரிப்பது கடினம் என்று சொன்னார்கள். இன்று அது ஒரு விளையாட்டு போல உள்ளது. எல்லாமே நானாக தெரிந்துகொண்டவை..

இன்றைய தனிமை ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டிருக்கச் சொல்லுகிறது. ஒருவேளை எனது கவிதைகளின் பிறப்பிடம் அதுதான் என்றூ நினைக்கிறேன். கர்வப்படாதிருத்தல் எனது இன்னொரு பிளஸ்.. எத்தனை பாராட்டுக்கள் குவிந்தாலும் கர்வம் இருந்தால் முன்னேறமுடியாது. இது என் தந்தை வாயிலாகவே தெரிந்துகொண்டது. வாழ்க்கையில் சில இடங்களில் விழுந்ததும் சில இடங்களில் எழுந்ததும் சில காரணங்கள்.. வெளி உலகத்திற்கு இன்னும் எட்டிப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஒரு முறை நீங்கள் (ஷி-நிசி) என்னைப் பற்றி குறிப்பிடும் போது, " எந்த டாபிக் கொடுத்தாலும் பேசத் தகுந்தவன் ஆதவன்" என்று குறிப்பிட்டபோது மிகவும் பெருமிதம் கொண்டேன். காரணம் எனது தகுதிக்கும் மீறிய திறமையைத்தான் இருப்பதாக சொன்னீர்கள். எத்தனையோ டாபிக்குகள் தெரியாமல் கிடக்கின்றன. விரலுக்கொன்று வைத்திருக்கிறேன். அதை வைத்துத்தான் காலம் தள்ளுகிறேன். ஆனால் ஒரே ஒரு மைனஸ் பாயிண்ட்

எனது ஞாபக மறதி. அதுமட்டும் இல்லையென்றால் இன்னும் பல விஷயங்கள் தெரிந்துகொண்டிருப்பேன். உதாரணத்திற்கு நான் கடைசியாக எழுதிய கவிதையின் தலைப்பு கூட இன்று எனக்கு ஞாபகம் இல்லை. உடனுக்குடன் சில விஷயங்கள் மறந்து போனது மட்டுமே நிலைத்துநிற்கிறது என்னுள்.. தெரிந்த ஒருவரிடம் நான் கவிதை எழுதுவேன் என்று சொல்லி, அவர், பழைய கவிதைகள் ஏதாவது ஒன்று சொல்லு என்றதும் ஒரு வரி கூட சொல்லாமல் திரும்பி வந்தது ஞாபகத்திற்கு வருகிறது.

வெளியுலக அறிவு கம்மியாக இருந்தாலும் இந்த வயதிற்கு இது போதும் என்று நான் நினைத்து திருப்தி படுத்திக்கொண்டு மேலும் தேடுகிறேன்.. அறிவில்லை என்று தேடுவதை விட, திருப்தி பட்டு தேடுவதே சிறந்ததும் கூட... இல்லையா?

ஆதவா
29-08-2007, 05:52 AM
அறிஞரும், ஆதவனும் இன்னும் இதைப் பார்க்கலையோ..!

அறிஞரும் ஆதவாவும் இன்னும் நேரம் எடுத்துக்கொண்டால் அடுத்த பத்து கேள்விகளை அவர்களே கேட்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.

மிகவும் மன்னிக்கவும்..

மதி
29-08-2007, 06:13 AM
-------------------

இன்றைய தனிமை ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டிருக்கச் சொல்லுகிறது. ஒருவேளை எனது கவிதைகளின் பிறப்பிடம் அதுதான் என்றூ நினைக்கிறேன். கர்வப்படாதிருத்தல் எனது இன்னொரு பிளஸ்.. எத்தனை பாராட்டுக்கள் குவிந்தாலும் கர்வம் இருந்தால் முன்னேறமுடியாது. இது என் தந்தை வாயிலாகவே தெரிந்துகொண்டது.

வெளியுலக அறிவு கம்மியாக இருந்தாலும் இந்த வயதிற்கு இது போதும் என்று நான் நினைத்து திருப்தி படுத்திக்கொண்டு மேலும் தேடுகிறேன்.. அறிவில்லை என்று தேடுவதை விட, திருப்தி பட்டு தேடுவதே சிறந்ததும் கூட... இல்லையா?
உண்மையான* நேர்மையான* ப*திலுக்கு ஒரு ச*பாஷ்...

இளசு
29-08-2007, 06:20 AM
அறிஞரும் ஆதவாவும் இன்னும் நேரம் எடுத்துக்கொண்டால் அடுத்த பத்து கேள்விகளை அவர்களே கேட்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.

ஆமாம்......ஆமாம்....;););)
பின் பாட்டுக்காரன்
மணியா...;)

மாட்ரிக்ஸ் தெரியும்..

அது யாரு பின்னாடி − சூப்பர் மாட்ரிக்ஸ்?

ராஜா
29-08-2007, 06:38 AM
மாட்ரிக்ஸ் தெரியும்..

அது யாரு பின்னாடி − சூப்பர் மாட்ரிக்ஸ்?

ஹா..ஹா..ஹா..

மாட்டிரிக்ஸ் என்னன்னு உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா..?

இளசு
29-08-2007, 06:41 AM
அன்பு ஆதவா..

ஆழ்ந்து அகழ்ந்து தந்த பதிலுக்குப் பாராட்டுகள்!

1) திறமைகள் ஊடுருவக்கண்டு தந்தை உள்ளம் மகிழ்ந்தாலும்
''என்னை விட நல்ல வாழ்க்கை அமைய வேண்டும்'' என்ற உந்தில்
தந்தை அப்படி செய்திருக்கலாம்..

2) திருவிழா நடுவில் தனிமை உணர்வது கவியுள்ளங்களின் இயல்பே!

3) நினைவில் சில நிற்கும், பல நிற்காது என்பது பல மேதைகளின் கதைகளில் கேட்டதுண்டு.. அதை ஒரு குறையாய் எண்ணி மருகாதே!

மீண்டும் ஓர் அசாத்திய மேதைமை கொண்ட மனிதனை வெளிக்கொணர்ந்த பதிவு.. பாராட்டுகள்!

ராஜா
29-08-2007, 06:42 AM
நன்றி ஆதவா..!

சிந்தனை வேகத்திற்கு நினைவாற்றல் ஈடு கொடுக்க இயலாதபோது, மறதி ஏற்படுவது இயற்கையே.. உதாரணங்கள் ஐன்ஸ்டீனும் நீங்களும்..!

இன்னொரு வியத்தகு குணம் உங்களிடம் இருப்பதையும் நான் உங்களுடன் தொலைபேசும்போது அறிந்திருக்கிறேன்..

எதிராளியைப் பேசவிட்டு அவனிடம் எவ்வளவு சரக்கு இருக்கிறது என்று கணக்கிடும் துல்லியம்..!

நான் எண்ணி வியக்கும் இந்திய இளைஞர்களில் நீங்களும் ஒருவர்..!

இளசு
29-08-2007, 06:43 AM
ஹா..ஹா..ஹா..

மாட்டிரிக்ஸ் என்னன்னு உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா..?

அன்பு ராஜா

தமிழில் ''கொக்கி''ன்னு ஒரு சொல் இருக்கே ..அதானே இது?!!!

சிவா.ஜி
29-08-2007, 06:48 AM
கர்வமில்லா ஆதவா,கவிதையுள்ள ஆதவா,விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்ட தனிமையுடனான ஆதவா,பல விஷயங்களை தெரிந்தும்...இன்னும் தேடலை தொடரும் ஆதவா...என ஆதவாவின் பல முகங்கள் பளிச்சிடுகிறது பதிலில்.ஆதவா மன்றத்தின் சொத்தானதில் ஆச்சரியமில்லை.வாழ்த்துக்கள் ஆதவா.

ஆதவா
29-08-2007, 06:53 AM
அன்பு ஆதவா..

ஆழ்ந்து அகழ்ந்து தந்த பதிலுக்குப் பாராட்டுகள்!

1) திறமைகள் ஊடுருவக்கண்டு தந்தை உள்ளம் மகிழ்ந்தாலும்
''என்னை விட நல்ல வாழ்க்கை அமைய வேண்டும்'' என்ற உந்தில்
தந்தை அப்படி செய்திருக்கலாம்..

2) திருவிழா நடுவில் தனிமை உணர்வது கவியுள்ளங்களின் இயல்பே!

3) நினைவில் சில நிற்கும், பல நிற்காது என்பது பல மேதைகளின் கதைகளில் கேட்டதுண்டு.. அதை ஒரு குறையாய் எண்ணி மருகாதே!

மீண்டும் ஓர் அசாத்திய மேதைமை கொண்ட மனிதனை வெளிக்கொணர்ந்த பதிவு.. பாராட்டுகள்!

அன்பு இளசு அண்ணா.. மிகவும் நன்றி,. எல்லாம் நன்மைக்கு என்ற சொல் எத்தனை தூரம் உண்மை என்பதை மிகவும் புரிந்து வைத்திருக்கிறேன்.. பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி

ஆதவா
29-08-2007, 06:59 AM
நன்றி ஆதவா..!

சிந்தனை வேகத்திற்கு நினைவாற்றல் ஈடு கொடுக்க இயலாதபோது, மறதி ஏற்படுவது இயற்கையே.. உதாரணங்கள் ஐன்ஸ்டீனும் நீங்களும்..!

இன்னொரு வியத்தகு குணம் உங்களிடம் இருப்பதையும் நான் உங்களுடன் தொலைபேசும்போது அறிந்திருக்கிறேன்..

எதிராளியைப் பேசவிட்டு அவனிடம் எவ்வளவு சரக்கு இருக்கிறது என்று கணக்கிடும் துல்லியம்..!

நான் எண்ணி வியக்கும் இந்திய இளைஞர்களில் நீங்களும் ஒருவர்..![/QUOE]

மிகவும் நன்றி ராஜா அண்ணா. இத்தகைய பாராட்டுக்கள் வாங்கிக் கொடுத்த மன்றத்திற்கும் நன்றி.. தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் என்று ஒரு பாடல் வரி ஞாபகத்திற்கு வருகிறது... நேற்றுகூட எனது மொபைலைக் கழற்றி (முற்றிலும்) சுத்தம் செய்து மாட்டினேன். எனக்கு யாரும் சொல்லித் தரவும் இல்லை.. நோண்டிக் கொண்டு இருக்கவேண்டும்.. அதுதான் பல முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும்...

நன்றி அண்ணா.

[QUOTE=சிவா.ஜி;264610]கர்வமில்லா ஆதவா,கவிதையுள்ள ஆதவா,விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்ட தனிமையுடனான ஆதவா,பல விஷயங்களை தெரிந்தும்...இன்னும் தேடலை தொடரும் ஆதவா...என ஆதவாவின் பல முகங்கள் பளிச்சிடுகிறது பதிலில்.ஆதவா மன்றத்தின் சொத்தானதில் ஆச்சரியமில்லை.வாழ்த்துக்கள் ஆதவா.

இத்தனை ஆதவா போட்டு உள்ளம் கவர்ந்துவிட்டீர்கள்.:music-smiley-010: உடன் யாராவது இருந்தால் உள்ளம் எதுவும் நினைப்பதில்லை. ஆனால் தனிமை அப்படியல்ல.. ஏதாவது நினைத்துக் கொண்டே இருக்கும். புதுப்புது விஷயங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும்...நன்றி சிவா அவர்களே.

ராஜா
29-08-2007, 07:02 AM
அறிஞருக்கு தனிமடல் போட்டுதான் வரவழைக்கணும் போல இருக்கு..!

மதி
29-08-2007, 07:14 AM
மிகவும் நன்றி ராஜா அண்ணா. இத்தகைய பாராட்டுக்கள் வாங்கிக் கொடுத்த மன்றத்திற்கும் நன்றி.. தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் என்று ஒரு பாடல் வரி ஞாபகத்திற்கு வருகிறது... நேற்றுகூட எனது மொபைலைக் கழற்றி (முற்றிலும்) சுத்தம் செய்து மாட்டினேன். எனக்கு யாரும் சொல்லித் தரவும் இல்லை.. நோண்டிக் கொண்டு இருக்கவேண்டும்.. அதுதான் பல முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும்...

நன்றி அண்ணா.

வழக்கம் போல என் நம்பர் டெலீட் ஆயிருக்குமே..
ச்ச்ச்ச்சும்மாஆஆஆ.... :icon_cool1:

ஆதவா
29-08-2007, 07:33 AM
வழக்கம் போல என் நம்பர் டெலீட் ஆயிருக்குமே..
ச்ச்ச்ச்சும்மாஆஆஆ.... :icon_cool1:

அதென்னவோ தெரியலை. உங்க நம்பர் மட்டும் தங்க மாட்டேங்குது...:grin: அதனாலதான் ரெண்டு தடவை சேவ் பண்ணி வைக்கிறேன்... (ரெண்டுதடவை சேமிச்சா பெயர் வராது.. )

மன்மதன்
30-08-2007, 05:38 AM
இப்ப பில்டிங்ல entrance கண்டுபிடிக்க கஷ்டபடுவீங்க... அப்புறம் பில்டிங் பில்டிங்கா கட்டுவீங்க! ஹி ஹி

நன்றி மன்மதா....:food-smiley-008:

அப்ப கண்டிப்பா உங்களுக்கு ஒரு பில்டிங் உண்டு ... :icon_wink1:

மன்மதன்
30-08-2007, 05:39 AM
அன்னிக்கு கரிகாலன்ஜி தங்கியிருந்த ஹோட்டலை கண்டுபிடிக்க ஒன்னும் கஷ்டப்பட்டதா தெரியலையே....!!!!????

போட்டுக்கொடுக்கும்
மணியா....:D:D:D

கஷ்டப்படலையா.. நான் தான் அப்பவே சொன்னேனே.. உங்க காதிலே அப்ப விழுந்திருக்காது...:food-smiley-022::food-smiley-022: எத்தனை யு டர்ன் எடுத்தேன் தெரியுமா?? :icon_wacko:

ராஜா
30-08-2007, 06:17 AM
அமர்...!

அடுத்த கேள்வியாளரை அழைப்போமா..?

mania
30-08-2007, 06:18 AM
கஷ்டப்படலையா.. நான் தான் அப்பவே சொன்னேனே.. உங்க காதிலே அப்ப விழுந்திருக்காது...:food-smiley-022::food-smiley-022: எத்தனை யு டர்ன் எடுத்தேன் தெரியுமா?? :icon_wacko:

ஆமாம் ஆமாம் அங்கே ரவுண்ட்டானால இருந்த போலீஸ் சொன்னாரு..."இங்கே ஒருத்தர் வண்டியே இல்லாம வெறுமனே யூ டர்னா எடுத்துக்கிட்டிருக்காருன்னு,,,????

அன்புடன்
மணியா...:icon_wacko:

மன்மதன்
30-08-2007, 09:45 AM
ஆமாம் ஆமாம் அங்கே ரவுண்ட்டானால இருந்த போலீஸ் சொன்னாரு..."இங்கே ஒருத்தர் வண்டியே இல்லாம வெறுமனே யூ டர்னா எடுத்துக்கிட்டிருக்காருன்னு,,,????

அன்புடன்
மணியா...:icon_wacko:

அது ஹோட்டல் வர்ரதுக்கு முன்னாடி.. நீங்க நினைச்சது பின்னாடி.. நீங்க பின்னாடி முன்னாடி நினைச்சிருந்தீங்கன்னா பரவாயில்லை.. ஆனா முன்னாடி பின்னாடி நினைச்சிட்டிங்க.. வர்ரத்து முன்னாடி யூ டர்ன், லெஃப்ட், ரைட் கட்டிங் எல்லாம் இருந்தது..:food-smiley-008::icon_shout:

mania
30-08-2007, 09:55 AM

இப்போ மன்றம் வருவதுக்கு முன்னாடி நீ எங்கே போயிருந்தாய்.....பின்னாடி என் மேலே வருத்தப்படக்கூடாது...????
அன்புடன்
க்ரேஸி மணியா...

மன்மதன்
30-08-2007, 11:09 AM
இப்போ மன்றம் வருவதுக்கு முன்னாடி நீ எங்கே போயிருந்தாய்.....பின்னாடி என் மேலே வருத்தப்படக்கூடாது...????
அன்புடன்
க்ரேஸி மணியா...

நான் போன இடத்துக்கு நீங்களும்தானே வந்தீங்க... ஆனாலும் நீங்க வந்த பின்னாடிதான் நான் வந்தேன்.. எனக்கு முன்னாடி நீங்க.. நான் பின்னாடி வந்தேன். அப்புறம் என் பின்னாடி நீங்க பைக்ல.. அப்புறம் ரெண்டு பேரும்தானே சாப்பிட்டோம்... :D :D தோசை... :icon_dance:

இளசு
01-09-2007, 06:00 AM
அறிஞருக்கு தனிமடல் போட்டுதான் வரவழைக்கணும் போல இருக்கு..!

அமர்...!

அடுத்த கேள்வியாளரை அழைப்போமா..?

அன்புள்ள ராஜா...
அறிஞர் பதில் மட்டுமே பாக்கி...
அமர் இன்னும் 10 நாட்கள் விடுப்பில்..
அதுவரை உங்களுக்கு உதவிட என்னால் இயலும்!

ஷீநிசியை கொஞ்சநாளாய்க் காணாம் போலிருக்கே!!

நல்ல திரியில் தொய்வு வேண்டாமே?!

அடுத்த கேள்வியாளர் யார்?

நண்பர்களே, உங்களில் ஒருவர் முன்வந்து இங்கே ஒப்புதல் சொல்லிவிட்டு −
பிறகு கேள்விகளைப் பதிக்கலாம் − இது என் யோசனை!

ஷீ-நிசி
01-09-2007, 07:20 AM
ஆதவாவின் பதில் நான் எதிர்பார்த்ததுபோலவே...

நன்றி ஆதவா.....

எல்லோரது பதில்களும் முடிந்துவிட்டதால்...

அடுத்து ஆதவா பத்து கேள்விகளை தயாரிக்கலாம்... என்ன சொல்றீங்க இளசுஜி மற்றும் ராஜா சார்...

mania
01-09-2007, 09:26 AM
நான் தாயார்.....நீங்கள் தாயாரா....???
அன்புடன்
மணியா...

ராஜா
02-09-2007, 06:41 AM
நான் தாயார்.....நீங்கள் தாயாரா....???
அன்புடன்
மணியா...

தாயாரை, வாயார வரவேற்கிறோம்..! கரும்பு தி[ன்]னக் கூலியா..?

அன்பு மணியா அண்ணா..! உங்கள் கேள்விப்பட்டியலைத் தாருங்கள்..!

ஓவியன்
02-09-2007, 06:49 AM
மணியா அண்ணாவின் கேள்விப் பட்டியலையும் அதனை எதிர் கொள்ள இருப்போரையும் காண மிக்க ஆவல்...........!!:sport-smiley-013:

mania
02-09-2007, 07:14 AM
1)ராஜா...(நான் வியக்கும் ஒரு அதிசய நபர்)..உங்களுக்கு கோபமே வராதா...???அப்படியே
எப்போதாவது வந்திருந்தால் அதை கொஞ்சம் எங்களுடன் பகிர்ந்துகொள்ளமுடியுமா...???
(அதிலேயும் காமெடி வேண்டாம்....!!!!)[/COளோற்]

2)[COLOR="Red"]அன்புரசிகன்.... உன்னுடைய முதல் வருகை தமிழ் நாட்டிற்கு. அதைபற்றி உன் முதல் அபிப்பிராயம்...
(ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன்)... சில வரிகள்..(இதற்கு பதில் 8ம் தேதிக்கு மேல்தான் கிடைக்கும்...!!!)

3ஆதவா....இன்னும் எத்தனை நாட்கள் (மாதங்கள், வருடங்கள்)இப்படி கவிதைகள் (காதல்)
எழுதியே காலத்தை ஓட்டுவதாக உத்தேசம்...???சென்னையிலேயே நான் கவனித்தேன்.....
இந்த ரேஞ்சிலே போனால் கண்ணுக்கு கடிவாளம்தான் போடவேண்டி வரும்....???!!!

4) ஓவியன்... உன் தனித்திறமை பற்றி சில வரிகள்...(வரிந்துகட்டிக்கிகொண்டு ஏட்டிக்குபோட்டி
வருவதை தவிற....!!!!... நான் மிகவும் ரசிப்பதும் அதுவே.....)[/

5[COLOR="Blue"])ஆரென்... உங்களிடம் உறங்கிக்கொண்டிருந்த கவிதை பிசாசை எப்படி தட்டி உசுப்பினீர்கள்...???
இப்போதெல்லாம் வீட்டிலே கூட கவிதை நயத்திலேதான் உரையாடுகிறீர்களாமே....!!! எப்படிங்க
இப்படி....!!!! (வர வர என்னை விட்டு வெகு தூரம் சென்றுவிட்ட மாதிரி ஒரு பிரமை, ஏக்கம் எனக்கு,,,,!!!!)6)

6) தாமரை....ஒரு 'ச்' கொடுத்து கலக்கலாக ஆரம்பித்து இன்றுவரை கலக்கிக்கொண்டிருக்கும் சகல கலா
வல்லுவர். நான் சந்திக்க விரும்பும் இன்னொரு முக்கியமான நபர்....ம்ம்ம்ம்ம் இன்னும் சரியான சந்தர்ப்பம்
இன்னும் அமையவில்லை.....ஆரம்பத்தில் இருந்த வேகம் தற்போது கொஞ்சம் குறைந்தார்போல் எனக்கு
தோன்றுகிறதே...!!!??? உங்கள் திறமைக்கு சவாலான விவாத மேடைகள் இல்லையா...??? இல்லை வேறு
காரணங்களா....(நான் பல சமயங்களில் இவரது திறமையை கண்டு வியந்து வாயடைத்து
அமைதி காத்திருக்கிறேன்...)
7) அமரன்.... ஒரு பொறுப்பாளராக இருந்துகொண்டும் எப்படி உங்களால் அனைவருக்கும் இனியவராக
இர்க்கமுடிகிறது....???(நான் சந்திக்க விரும்பும் நபர்களில் நீங்களும் ஒருவர்...)8)

8நாரதர்.... உங்களின் அஞ்ஞாதவாசத்தை பற்றி சில வரிகள்...????(உங்களுடைய
சுப்புடு பஞ்ச் இல்லாமல் நிறைய திரிகள் நிறைவு பெறவில்லையே....!!! நாராயணா....!!!)
9) ப்ரதீப்குமர்...எதோ கல்யாணம் ஆனால் ஆளே மாறிடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.....
ஆனா அதுக்குன்னு இப்படியா....!!!!(அந்த தலகாணி மந்திரத்தின் ஒரு பகுதியையாவது
எங்களுக்கு தெரியப்படுத்துவாயா.....தைரியமிருந்தால்....!!!???(உன்னை இழந்து இந்த மன்றம்
தவிக்கிறது தம்பி...!!!!
10)நடராஜ ப்ரகாஷ்...வாரம் ஒரு ஆலயம்...அருமையான பதிவு. எப்படி இந்த எண்னம் தோன்றியது,
,.... எங்கிருந்து நேரம் கிடைக்கிறது..??? (இவ்வளவு ஒரு நல்ல பதிவுக்கு நான் எதிர்பார்க்கும்
ஆதரவு இல்லையென்பது ஒரு குறை....)

ராஜா
02-09-2007, 07:21 AM
நன்றி மணியா அண்ணா..!

எனக்கு கோபம் வராதுன்னு உங்களுக்கு யார் தந்தி கொடுத்தாங்க..?
பரம்ஸ்ட்ட கேட்டுப்பாருங்க..! கோபம்தான் என் முன்னேற்றத்துக்கு பெரும் எதிரி.

என் பதிலைப் பிறகு தருகிறேன்.

mania
02-09-2007, 07:26 AM
நன்றி மணியா அண்ணா..!

எனக்கு கோபம் வராதுன்னு உங்களுக்கு யார் தந்தி கொடுத்தாங்க..?
பரம்ஸ்ட்ட கேட்டுப்பாருங்க..! கோபம்தான் என் முன்னேற்றத்துக்கு பெரும் எதிரி.

என் பதிலைப் பிறகு தருகிறேன்.

அந்த கோபம் உங்கள் குணத்தை காட்டும் முன்னோடி....
அன்புடன்
மணியா...

ஓவியன்
02-09-2007, 07:29 AM
மணியா அண்ணா அருமையான கேள்விகள்......
என்னை வேறு மாட்டி விட்டுட்டீங்க........
ஏட்டிக்குப் போட்டியாக விடையுடன் வெருவேன் மாலை............!

mania
02-09-2007, 07:31 AM
மணியா அண்ணா அருமையான கேள்விகள்......
என்னை வேறு மாட்டி விட்டுட்டீங்க........
ஏட்டிக்குப் போட்டியாக விடையுடன் வெருவேன் மாலை............!

நானும் காத்திருப்பேன் மாலையுடன்...
அன்புடன்
மணியா...

ராஜா
02-09-2007, 07:41 AM
ஆ! பத்து, 3. கேள்வியாளர் மணியா.
***********************************************

1.ராஜா...(நான் வியக்கும் ஒரு அதிசய நபர்)..உங்களுக்கு கோபமே வராதா...???அப்படியே
எப்போதாவது வந்திருந்தால் அதை கொஞ்சம் எங்களுடன் பகிர்ந்துகொள்ளமுடியுமா...???
(அதிலேயும் காமெடி வேண்டாம்....!!!!)

2)அன்புரசிகன்.... உன்னுடைய முதல் வருகை தமிழ் நாட்டிற்கு. அதைபற்றி உன் முதல் அபிப்பிராயம்...
(ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன்)... சில வரிகள்..(இதற்கு பதில் 8ம் தேதிக்கு மேல்தான் கிடைக்கும்...!!!)

3ஆதவா....இன்னும் எத்தனை நாட்கள் (மாதங்கள், வருடங்கள்)இப்படி கவிதைகள் (காதல்)
எழுதியே காலத்தை ஓட்டுவதாக உத்தேசம்...???சென்னையிலேயே நான் கவனித்தேன்.....
இந்த ரேஞ்சிலே போனால் கண்ணுக்கு கடிவாளம்தான் போடவேண்டி வரும்....???!!!

4) ஓவியன்... உன் தனித்திறமை பற்றி சில வரிகள்...(வரிந்துகட்டிக்கொண்டு ஏட்டிக்குபோட்டி
வருவதை தவிர....!!!!... நான் மிகவும் ரசிப்பதும் அதுவே.....)

5)ஆரென்... உங்களிடம் உறங்கிக்கொண்டிருந்த கவிதை பிசாசை எப்படி தட்டி உசுப்பினீர்கள்...???
இப்போதெல்லாம் வீட்டிலே கூட கவிதை நயத்திலேதான் உரையாடுகிறீர்களாமே....!!! எப்படிங்க
இப்படி....!!!! (வர வர என்னை விட்டு வெகு தூரம் சென்றுவிட்ட மாதிரி ஒரு பிரமை, ஏக்கம் எனக்கு,,,,!!!!)

6) தாமரை....ஒரு 'ச்' கொடுத்து கலக்கலாக ஆரம்பித்து இன்றுவரை கலக்கிக்கொண்டிருக்கும் சகல கலா
வல்லுவர். நான் சந்திக்க விரும்பும் இன்னொரு முக்கியமான நபர்....ம்ம்ம்ம்ம் இன்னும் சரியான சந்தர்ப்பம்
இன்னும் அமையவில்லை.....ஆரம்பத்தில் இருந்த வேகம் தற்போது கொஞ்சம் குறைந்தாற்போல் எனக்கு
தோன்றுகிறதே...!!!??? உங்கள் திறமைக்கு சவாலான விவாத மேடைகள் இல்லையா...??? இல்லை வேறு
காரணங்களா....(நான் பல சமயங்களில் இவரது திறமையை கண்டு வியந்து வாயடைத்து
அமைதி காத்திருக்கிறேன்...)

7) அமரன்.... ஒரு பொறுப்பாளராக இருந்துகொண்டும் எப்படி உங்களால் அனைவருக்கும் இனியவராக
இருக்கமுடிகிறது....???(நான் சந்திக்க விரும்பும் நபர்களில் நீங்களும் ஒருவர்...)

8)நாரதர்.... உங்களின் அஞ்ஞாதவாசத்தை பற்றி சில வரிகள்...????(உங்களுடைய
சுப்புடு பஞ்ச் இல்லாமல் நிறைய திரிகள் நிறைவு பெறவில்லையே....!!! நாராயணா....!!!)

9) ப்ரதீப்குமார்...எதோ கல்யாணம் ஆனால் ஆளே மாறிடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.....
ஆனா அதுக்குன்னு இப்படியா....!!!!(அந்த தலகாணி மந்திரத்தின் ஒரு பகுதியையாவது
எங்களுக்கு தெரியப்படுத்துவாயா.....தைரியமிருந்தால்....!!!???(உன்னை இழந்து இந்த மன்றம்
தவிக்கிறது தம்பி...!!!!

10)நடராஜ ப்ரகாஷ்...வாரம் ஒரு ஆலயம்...அருமையான பதிவு. எப்படி இந்த எண்னம் தோன்றியது,
,.... எங்கிருந்து நேரம் கிடைக்கிறது..??? (இவ்வளவு ஒரு நல்ல பதிவுக்கு நான் எதிர்பார்க்கும்
ஆதரவு இல்லையென்பது ஒரு குறை....)

ஓவியன்
02-09-2007, 07:46 AM
நானும் காத்திருப்பேன் மாலையுடன்...
அன்புடன்
மணியா...

நீங்கள் காத்திருக்கலாம், ஆனால் மாலை காத்திருக்காதே - காய்ந்து விடுமே.....?:icon_hmm:

மலர்
02-09-2007, 07:48 AM
நீங்கள் காத்திருக்கலாம், ஆனால் மாலை காத்திருக்காதே - காய்ந்து விடுமே.....?:icon_hmm:

இது கூட தெரியாத பச்ச புள்ளையா இருக்கியே....
அது பிளாஸ்டிக் மாலை....

ஓவியன்
02-09-2007, 08:14 AM
இது கூட தெரியாத பச்ச புள்ளையா இருக்கியே....
அது பிளாஸ்டிக் மாலை....

ஏன் பச்சைப் புள்ளைக்கு பிளாஸ்டிக் மாலையைத் தெரியாதா? :spudnikbackflip:
அதுசரி,
அது என்ன பச்சைப் புள்ளை, நீலப்புள்ளை......?:icon_hmm:

ஓவியா
02-09-2007, 10:00 AM
இந்த அநியாயத்தை கேட்க ஆளே இல்லையா!!!!

இதென்ன மொத்த 10 கேள்வியையும் அரசியல் 'சீட்' போல் ஆண் வர்கத்திற்க்கே!!!!!!

மேசையை தட்டி, தடவி, கொட்டி சொல்கிறேன் இது முற்றிலும் ஒருதலை பட்சமான செயல்.

உங்கு உலவும் எங்கள் பெண் வர்க்கத்தில் யாருமே பதில் சொல்லுமளவிற்க்கு அறிவாளியா, திறமையா இல்லையா....இல்லையா....இல்லையா!!!

மன்றத்திலே எத்தனை பெண்கள் உலாவருகின்றனர், யாராவது ஒரு பெண்ணையவது இங்கு மட்டி விட்டிருக்களாமே!!!
உ.தா. மலர், வெண்தாமரை, பூமகள், பிச்சி மற்றும் பலர் இருக்கின்றன்ர்.

இனியவளும் நானும் பதிலளித்து விட்டோம்.

மாதர் சங்க மந்திரி (தலை பாஷையில் சொன்னால், முந்திரி)
− ஓவியா.

ஓவியன்
02-09-2007, 10:03 AM
மேசையை தட்டி, தடவி, கொட்டி சொல்கிறேன் இது முற்றிலும் ஒருதலை பட்சமான செயல்.
− ஓவியா.

ஆமா அது உண்மை தானே.......! :icon_good:

RRaja
02-09-2007, 10:49 AM
எல்லோரையும் ஈர்க்கும் பதிவு. மிகவும் கலகலப்பாக இருக்கிறது.

ராஜா
02-09-2007, 12:49 PM
ஒரு விளக்கம்..

இது சுடர் போல் அல்ல..

ஒருவரை மீண்டும் மீண்டும் அடுத்த அடுத்த கேள்வியாளர்கள் பதிலளிக்கச் சொல்லலாம். ஒருவர் ஒருமுறைதான் என்ற தடையே இந்தத் திரியில் கிடையாது.

ராஜா
02-09-2007, 12:51 PM
ஆ! பத்து, 3. கேள்வியாளர் மணியா.
***********************************************

1.ராஜா...(நான் வியக்கும் ஒரு அதிசய நபர்)..உங்களுக்கு கோபமே வராதா...???அப்படியே
எப்போதாவது வந்திருந்தால் அதை கொஞ்சம் எங்களுடன் பகிர்ந்துகொள்ளமுடியுமா...???
(அதிலேயும் காமெடி வேண்டாம்....!!!!)

2)அன்புரசிகன்.... உன்னுடைய முதல் வருகை தமிழ் நாட்டிற்கு. அதைபற்றி உன் முதல் அபிப்பிராயம்...
(ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன்)... சில வரிகள்..(இதற்கு பதில் 8ம் தேதிக்கு மேல்தான் கிடைக்கும்...!!!)

3ஆதவா....இன்னும் எத்தனை நாட்கள் (மாதங்கள், வருடங்கள்)இப்படி கவிதைகள் (காதல்)
எழுதியே காலத்தை ஓட்டுவதாக உத்தேசம்...???சென்னையிலேயே நான் கவனித்தேன்.....
இந்த ரேஞ்சிலே போனால் கண்ணுக்கு கடிவாளம்தான் போடவேண்டி வரும்....???!!!

4) ஓவியன்... உன் தனித்திறமை பற்றி சில வரிகள்...(வரிந்துகட்டிக்கொண்டு ஏட்டிக்குபோட்டி
வருவதை தவிர....!!!!... நான் மிகவும் ரசிப்பதும் அதுவே.....)

5)ஆரென்... உங்களிடம் உறங்கிக்கொண்டிருந்த கவிதை பிசாசை எப்படி தட்டி உசுப்பினீர்கள்...???
இப்போதெல்லாம் வீட்டிலே கூட கவிதை நயத்திலேதான் உரையாடுகிறீர்களாமே....!!! எப்படிங்க
இப்படி....!!!! (வர வர என்னை விட்டு வெகு தூரம் சென்றுவிட்ட மாதிரி ஒரு பிரமை, ஏக்கம் எனக்கு,,,,!!!!)

6) தாமரை....ஒரு 'ச்' கொடுத்து கலக்கலாக ஆரம்பித்து இன்றுவரை கலக்கிக்கொண்டிருக்கும் சகல கலா
வல்லுவர். நான் சந்திக்க விரும்பும் இன்னொரு முக்கியமான நபர்....ம்ம்ம்ம்ம் இன்னும் சரியான சந்தர்ப்பம்
இன்னும் அமையவில்லை.....ஆரம்பத்தில் இருந்த வேகம் தற்போது கொஞ்சம் குறைந்தாற்போல் எனக்கு
தோன்றுகிறதே...!!!??? உங்கள் திறமைக்கு சவாலான விவாத மேடைகள் இல்லையா...??? இல்லை வேறு
காரணங்களா....(நான் பல சமயங்களில் இவரது திறமையை கண்டு வியந்து வாயடைத்து
அமைதி காத்திருக்கிறேன்...)

7) அமரன்.... ஒரு பொறுப்பாளராக இருந்துகொண்டும் எப்படி உங்களால் அனைவருக்கும் இனியவராக
இருக்கமுடிகிறது....???(நான் சந்திக்க விரும்பும் நபர்களில் நீங்களும் ஒருவர்...)

8)நாரதர்.... உங்களின் அஞ்ஞாதவாசத்தை பற்றி சில வரிகள்...????(உங்களுடைய
சுப்புடு பஞ்ச் இல்லாமல் நிறைய திரிகள் நிறைவு பெறவில்லையே....!!! நாராயணா....!!!)

9) ப்ரதீப்குமார்...எதோ கல்யாணம் ஆனால் ஆளே மாறிடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.....
ஆனா அதுக்குன்னு இப்படியா....!!!!(அந்த தலகாணி மந்திரத்தின் ஒரு பகுதியையாவது
எங்களுக்கு தெரியப்படுத்துவாயா.....தைரியமிருந்தால்....!!!???(உன்னை இழந்து இந்த மன்றம்
தவிக்கிறது தம்பி...!!!!

10)நடராஜ ப்ரகாஷ்...வாரம் ஒரு ஆலயம்...அருமையான பதிவு. எப்படி இந்த எண்னம் தோன்றியது,
,.... எங்கிருந்து நேரம் கிடைக்கிறது..??? (இவ்வளவு ஒரு நல்ல பதிவுக்கு நான் எதிர்பார்க்கும்
ஆதரவு இல்லையென்பது ஒரு குறை....)

இளசு
02-09-2007, 03:49 PM
தலையின் சுவையான கேள்விகளுக்கு
பதில்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

(தாயார், மாலை போல அவலுடன், அவளுடன் என லூட்டி அடிக்க
ஆரம்பிக்க யோசிப்பது புரிகிறது....ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹா!)

மாதவர்
02-09-2007, 04:04 PM
நாங்கள் வேடிக்கை பார்பவர்களா?

ஓவியன்
02-09-2007, 06:36 PM
4) ஓவியன்... உன் தனித்திறமை பற்றி சில வரிகள்...(வரிந்துகட்டிக்கொண்டு ஏட்டிக்குபோட்டி
வருவதை தவிர....!!!!... நான் மிகவும் ரசிப்பதும் அதுவே.....)

நல்ல ஒரு கேள்வி அண்ணா, உங்களது இந்தக் கேள்வியால் இன்று என்னை நானே கேள்வி கேட்டுக் கொண்டேன், ஓவியனே உன் தனித் திறமை என்னவென்று.............?

சட்டென்று ஒரு பதில் வந்தது, நீ ஓரளவு ஓவியம் வரைவாயே அதுதான் உனது தனித்திறமையென்று........
இல்லை இப்போதெல்லாம் கவிதை என்ற பெயரில் மன்றத்து மக்களை அழ வைப்பாயே அது தான் உன் திறமை என்று இன்னும் கொஞ்ச நேரத்தில்..........
மன்றத்திலே கலாய்ப்பது என்ற பெயரில் தொடங்கிவிட்டு மன்றவர்களிடம் வாங்கிக் கட்டுவாயே அது தான் உன் திறமை என ஒரு நீண்ட இடை வெளியின் பின்.....

ஆனால் எனக்கென்னவோ அந்த பதில்களிலே திருப்தி வரவில்லை, தொடர்ந்து யோசித்து யோசித்து மண்டை காய்ந்து போனது தான் மிச்சம்:icon_hmm:. (ஏற்கனவே காய்ந்து போய்த் தானே இருக்கு என்று யாரோ முணுமுணுப்பது கேட்கிறதே......!:spudnikbackflip:). மாலையில் மாலையுடன் இருப்பேன் பதிலோடு வா என்று மணியா அண்ணா வேற சொல்லிட்டார், மண்டை காய்ந்தாலும் பரவாயில்லை, அவரது மாலை காயக் கூடாதே என்று மீள மூளையைக் கசக்க சட்டென்று பல்ப் எரிந்தது பிரகாசமாக......... :natur008: :icon_good:

அதனை இங்கே தருகின்றேன்............

எனது தனித் திறமை என்ன என்று நினைத்தால் அது எனது ஆழமான இரசனை என நினைக்கின்றேன், என்னாலே எந்த ஒரு சூழ் நிலையையும் அருவருக்காமல் கோபப்படாமல் இரசிக்க கூடியதாக இருக்கிறது என்றால் அது ஒரு தனித் திறமைதானே....?.
அதாவது ஒரு கட்டுப் பாட்டில்லாத இரசனைக்கு சொந்தக் காரனாக உலா வருகின்றேன் என்னால் ஒரு உயர்தர ஹோட்டல் உணவையும் இரசிக்க முடிகிறது, நடைவீதிக் கடைகளில் கிடைக்கும் உணவையும் இரசித்து உண்ணக் கூடியதாக இருக்கிறது.
இரைச்சலான இசையும் பிடிக்கிறது, நல்ல மெலோடிகளும் பிடிக்கிறது..........
தனிமையும் பிடிக்கிறது, நண்பர்களுடன் கூடிக் கும்மாளமடிக்கவும் பிடிக்கின்றது..........
ஒரு வட்டத்திற்குள் முடங்கிக் கிடக்காமல் இப்படி நிறைய விடயங்களை சலிக்காமல் என்னால் இரசிக்க முடிகிறது, அந்த வரையறையற்ற ஆழ்ந்த இரசனையே என்னை முதலில் ஒரு ஓவியனாக்கியது.........!

நான் இரசித்தவற்றை பத்திரப்படுத்தவும் மற்றவர்களுக்கு விளக்கவும் நான் சிறு வயதில் எடுத்த முயற்சிகள் என்னை ஓவியனாக்கியது, இப்படி ஆழ்ந்த வரையறையற்ற இரசிகனாக இருந்த என்னை தமிழால் தமிழ் மன்றம் தாலாட்டிய போது நான் ஒரு கவிஞனாக, கட்டுரையாசிரியனாக என்று பல் வேறு பரிமாணங்களெடுத்தேன். நான் எத்தனை வேறுபட்ட பரிமானங்களை எடுத்தாலும் அவை எல்லாவற்றுக்கும் ஆணி வேராக இருக்கும் இந்த எதனையும் இரசிக்கும் இயல்பையே நான் எனது தனித் திறமையாகக் கருதுகிறேன். இந்த திறமை எனக்குள் இருப்பதனால் தானோ என்னவோ வாழ்க்கையைக் கூட எத்தனை சோகங்களைச் சந்தித்த போதும் சந்தோசமாக முன்னகர்த்தக் கூடியதாக இருக்கிறது அதனை வாழ்க்கையில் எனக்களித்த இறைவனுக்குத் நன்றிகள் பல..........

:natur008:

ராஜா
02-09-2007, 06:55 PM
தம்பி ஓவியன் மனதைக் கிளறும் அளவுக்கு கேள்விகள் கேட்ட மணியா அண்ணாவுக்கு முதல் நன்றி..!

கேள்விக்கான பதிலளிக்குமுன் தன்னைத் தானே எடைபோட்டுக் கொண்ட தம்பிக்கு இரன்டாவது நன்றி.

அனைத்தையுமே இரசிக்கத் தெரிந்த மனிதன் கொடுத்துவைத்தவன். அவனது ரசனைக்கும், அதை அனுபவிப்பதற்கும் வரையறை இருப்பதில்லையே..! உலகில் அவன் இரசிக்க கணக்கிலடங்கா காரணங்கள் இருக்கின்றனவே..!

ஓவியன்
02-09-2007, 06:57 PM
உண்மைதான் அண்ணா!

அதனாலேயே எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்க முடிகிறது......
உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள்!.

ராஜா
02-09-2007, 07:00 PM
நாங்கள் வேடிக்கை பார்பவர்களா?

என்னங்க இப்படிக் கேட்டுட்டீங்க..? நல்ல பதில்களைப் பாராட்டி பின்னூட்டம் போடுங்க..! கேள்வியாளருக்கு வாழ்த்துச் சொல்லுங்க..!

10 உறுப்பினர்களை உங்களுக்குத் தெரியுமா..? அடுத்த கேள்வியாளராப் போட்டுடுவோம்..!

அனைவரும் பங்களிக்க வேண்டும் என்றுதானே மூளையை [?] கசக்கிப் பிழிந்து ஒவ்வொரு திரியையும் உருவாக்குகிறோம்.. நீங்களும் பங்கெடுத்துக்கங்க மாதவர்..!

ஓவியன்
02-09-2007, 07:00 PM
நாங்கள் வேடிக்கை பார்பவர்களா?

மாதவரே மன்றத்தோடு தொடர்ந்து இணைத்திருங்கள், எல்லாப் பகுதிகளிலும் புகுந்து கலக்குங்கள்..........

எல்லாமே தானாகவே உங்களை நாடி ஓடி வரும்...........! :icon_good:

இளசு
02-09-2007, 08:44 PM
அனைத்தையுமே இரசிக்கத் தெரிந்த மனிதன் கொடுத்துவைத்தவன். அவனது ரசனைக்கும், அதை அனுபவிப்பதற்கும் வரையறை இருப்பதில்லையே..! உலகில் அவன் இரசிக்க கணக்கிலடங்கா காரணங்கள் இருக்கின்றனவே..!

ஓவியனின் அழகான பதிலுக்கு ராஜாவின் அருமையான பின்னூட்டம்..
அதை அப்படியே வழிமொழிகிறேன்..

மூலவர் தலை மணியாவுக்கு நன்றி..
மற்ற உற்சவர்களின் உற்சாக உலாக் காண ஆவல்!

திருவிழா களைகட்டட்டும் இன்னும்!

mania
03-09-2007, 01:31 AM
பாராட்டுகிறேன் ஓவியன் .:icon_clap: சிறப்பான மனப்பக்குவம்...இந்த நிலையில் தான் உன்னால் சிறந்த ஓவியங்களை தீட்டமுடியும்.;) உன் மூளையும் அதனால் தீட்டப்பட்டு கூர்மையாக இருக்கிறது. உனக்கு நான் என்றும் வாடாத சந்தன மாலை அணிவிக்கிறேன் ஓவியன்...:icon_v:.வாழ்த்துகள்....(நான் சிறப்பாக ஓவியங்கள் வரைவேன் என்று சொல்லியிருந்தால் நான் நொந்தே போயிருப்பேன்...):Nixe_nixe02b:
அன்புடன்
மணியா...:icon_good:

மதி
03-09-2007, 03:05 AM
அன்பு ஓவியன்..
சிறப்பான பதில்.. எந்த சூழ்நிலையிலும் ரசிக்கத் தக்கவாறு மனதை ஒருமுகப்படுத்தி வைத்திருக்கிறீர்கள்..பாராட்டுக்கள்..!
கொடுத்து வைத்தவரைய்யா நீங்கள்..!

விகடன்
03-09-2007, 03:29 AM
ஓவியனின் வசீகரிக்கும் வரிகள் அபாரம். :icon_good:

நான் சிறப்பாக ஓவியங்கள் வரைவேன் என்று சொல்லியிருந்தால் நான் நொந்தே

மணி அண்ணாவின் மனக்காயத்திற்கு ஆளாகாமல் தப்பிவிட்டாயடாப்பா ஓவியன்.

சிவா.ஜி
03-09-2007, 04:54 AM
மிக அருமையான பதில் ஓவியன்..ஒவ்வொரு கலைஞனுக்குள்ளும் ஒரு மகாப்பெரிய ரசிகன் இருக்கிறான் என்பது மிக மிக உண்மை.எல்லாவற்றையும் ரசிக்கும் மனமென்பது ஒரு வரம்.அதைப் பெற்றுள்ள நீங்கள் மாபெரும் பாக்கியசாலி.அந்த ரசனையின் வெளிப்பாடாக வரும் உங்கள் பதிவுகளே சொல்கிறது உங்கள் ரசனையின் தரத்தை.என்று இப்படியே இருக்க வாழ்த்துக்கள் ஓவியன்.

aren
03-09-2007, 05:04 AM
நண்பர்களே என்னுடைய புதிய கணிணி பழுதடைந்து முற்றுலும் காலியாகிவிட்டது. ஆகையால் புதுக்கணிணி வாங்கித்தான் என்னால் முன்போல் மன்றம் வரமுடியும். அதுவரை பொருமையுடன் இருக்கமுடியுமா. முடிந்தால் இந்த கணிணி மூலம் பதிலளிக்க முயற்சி செய்கிறேன்.

நொந்துபோயிருக்கும்
ஆரென்

ஷீ-நிசி
03-09-2007, 05:07 AM
பலே! ஓவியா....

மிக அழகான சுய பரிசோதனையிட்ட பதில்...

என மனதை தொட்ட பதில்...

வாழ்த்துக்கள்!

ராஜா
03-09-2007, 07:20 AM
1.ராஜா...(நான் வியக்கும் ஒரு அதிசய நபர்)..உங்களுக்கு கோபமே வராதா...???அப்படியே
எப்போதாவது வந்திருந்தால் அதை கொஞ்சம் எங்களுடன் பகிர்ந்துகொள்ளமுடியுமா...???
(அதிலேயும் காமெடி வேண்டாம்....!!!!)

நிறையக் கோபம் வரும் அண்ணா..!

கோபமே என் முன்னேற்றத்தின் தடைக்கற்கள். இருந்தாலும் அதை என்னால் கைவிடவே முடிவதில்லை. கோபத்தால் இழந்தவை பல.. பெற்றவை..? எதுவுமே இல..!

நான் பணியாற்றும் நிறுவனத்தில் இயக்குநராகும் வாய்ப்பு கைவிட்டுப் போனது, என்னை மிகவும் மதித்த பல வருட நண்பர்களை சில வினாடிகளில் இழந்தது, உறவுமுறைகளை பக்கம் நெருங்கவிடாமல் செய்வது, தடகள விளையாட்டுகளில் தமிழ்நாடு அளவிலாவது பெயர் தெரியும் அளவுக்கு ஒரு ஆட்டக்காரனாகும் வாய்ப்பு போனது.. இன்னும் எத்தனையோ..

நான் கல்லூரியில் படிக்கும்போது பல்கலைக்கழகங்களுக்கிடையேயான ஈட்டி எறியும் போட்டியில் நான் இரண்டாமிடம் பிடித்தேன்.முதல் இடம் யார் தெரியுமா..? இளையதிலகம் பிரபு..! அவர் ஒரு சிறந்த அத்லெட் என்பது பலருக்குத் தெரியாது. இந்திய அளவில் முதலிடம் பிடித்தோருக்கான ஒரு பயிற்சி முகாம் விசாகப்பட்டினத்தில் நடந்தது. அதில் பயிற்சி பெற்று திறமையைக் காட்டினால், மாநில, தேசிய அணிகளில் இடம்பிடிக்கலாம். தேசிய அளவில் ஏதாவது மெடல் அடித்தால் கூட போதும்.. ரயில்வே, ஏர் இந்தியா போன்ற நிறுவனங்களில் "அதிகாரி" ஆகிவிடலாம். பிரபு முகாமில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டாமல் போகவே, எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.

பயிற்சியாளர் ஒரு வடவர். இந்தியிலேயே அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்கிக் கொண்டிருக்க, நான் மிகப்பணிவுடன் ஆங்கிலத்தில் பயிற்சியுரைகளைக் கூறுமாறு வேண்டினேன். உனக்கு இந்தி தெரியாதா என்று கேட்டுவிட்டு, அவர் சொன்னார்..

ஹிந்துஸ்தான் மெய்ன் ஹிந்தி நஹி மாலும்..? குத்தே.. பீச்சே ஜா..!

அவருடைய கெட்ட நேரமோ, என்னுடைய கெட்ட நேரமோ எனக்கு :குத்தே" வுக்கு பொருள் தெரிந்திருந்தது. விளைவு.. அவருடைய மூக்கிலிருந்து சில மில்லி இரத்தத்தையும் , என் விளையாட்டு எதிர்காலத்தையும் இழக்கும்படி ஆயிற்று.

இதுவும் ஒரு கோப வரலாறுதான்..!

தாமரை
03-09-2007, 09:28 AM
[B][SIZE="4"]ஆ! பத்து, 3. கேள்வியாளர் மணியா
***********************************************
6) தாமரை....ஒரு 'ச்' கொடுத்து கலக்கலாக ஆரம்பித்து இன்றுவரை கலக்கிக்கொண்டிருக்கும் சகல கலா
வல்லுவர். நான் சந்திக்க விரும்பும் இன்னொரு முக்கியமான நபர்....ம்ம்ம்ம்ம் இன்னும் சரியான சந்தர்ப்பம்
இன்னும் அமையவில்லை.....ஆரம்பத்தில் இருந்த வேகம் தற்போது கொஞ்சம் குறைந்தாற்போல் எனக்கு
தோன்றுகிறதே...!!!??? உங்கள் திறமைக்கு சவாலான விவாத மேடைகள் இல்லையா...??? இல்லை வேறு
காரணங்களா....(நான் பல சமயங்களில் இவரது திறமையை கண்டு வியந்து வாயடைத்து
அமைதி காத்திருக்கிறேன்....)

ஆரம்ப வேகம் குறைந்தது போல் தோற்றமளிப்பதற்கு என்னுடைய வேலை மாற்றம் முக்கிய காரணமாகும்.

மன்றத்தில் இணைந்த பொழுது மோடோரோலாவில் பணி செய்து கொண்டிருந்தேன். பணிப் பளு மிகக் குறைவு. 2006 ஆகஸ்ட் மாதம் டெல்லில் இணைந்தேன்.

சென்ற நவம்பர் மாதம் மூத்த அண்ணன் நோய்வாய்ப்பட்ட பொழுதிருந்து மன்றம் வருதல் குறைந்தது. அதன் பின் குடும்ப பாரமும், அலுவலகப் பணியும் பலமணி நேரங்களை எடுத்துக் கொண்டன.

இரண்டாவது அண்ணனின் மறுமணம், மூத்த அண்ணன் மகனின் திருமணம், புதியதாகக் கட்டிக் கொண்ட இல்ல வேலை என என்னை ஆட்கொண்ட பணிகள் ஏராளம்..

இடையிலே சந்தர்ப்பம் கிடைத்த பொழுதெல்லாம் மன்றத்திற்கு வந்து பங்கு கொண்டிருக்கிறேன்.

விவாத மேடைகளைப் பொறுத்தவரை என்னால் எனக்கெதிரே வாதாடிக் கொள்ள முடியும், பலமுறை இதைச் செய்திருக்கிறேன். பதில் கவிதைகள் என ஒரு கருவைப் பல கோணங்களில் காணும் முயற்சியும் அதில் ஒன்று.

எனக்கென்று சமமான விவாதப் பிரதிவாதி தேவை என இதுவரை நான் உணர்ந்ததில்லை. எனக்குள் உள்ள நிழல் மனிதர்கள் அந்தத் தேவையை எளிதில் தீர்த்து விடுகிறார்கள்.

இன்னும் ஓரிரு மாதங்கள் வீட்டிற்குத் தேவையான அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டால் மீண்டும் நிறைய எழுத இயலும்.

ஒரு சிறு வருத்தம் மட்டும் உண்டு. மன்றங்களில் சிலர் அதிக உணர்ச்சி வசப்பட்டு விடுகிறார்கள். சில நல்ல திரிகள், திரிந்து போய் விடுகின்றன. திறந்த மனதுடன் விவாதிப்போர் சதவிகிதம் குறைந்து கொண்டு இருக்கிறது. இதை இப்படியும் நோக்கலாமே என்ற வித்தியாசச் சிந்தனைகள் குறைந்து வருகிறது.

தமிழ் மன்றத்தில் நல்ல பங்காற்றி வருபவர்களைக் குறிவைத்து அவதூறு பரப்பிய சிலரது எண்ணங்களை மதியாமல் நான் இன்னும் மன்றத்தில் வளைய வருகிறேன் என்பது தாங்கள் அறியாத ஒன்றல்ல.

எழுத்தை விட பேச்சில் எனக்கு ஆர்வமதிகமுண்டு.
அது இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

ஷீ-நிசி
03-09-2007, 09:42 AM
உங்க வாழ்க்கை சம்பவங்கள் தொடுத்து வழங்குங்க ராஜா சார்.. மிக பயனுள்ளதாய் இருக்கும் அனைவருக்குமே...

சிவா.ஜி
03-09-2007, 09:54 AM
ராஜா சார்..கோபம் என்ற குணத்தால் நீங்கள் இழந்தது மிக அதிகமாகவே இருக்கிறது.ஆனால் அந்த வடவரிடம் நீங்கள் காட்டிய கோபம் நியாயமானது.ஆனால் என்ன எதிராளிக்கும் நியாய அநியாயம் தெரிந்திருக்க வேண்டுமே.போகட்டும் விடுங்கள்.ஷீ−நிசி சொன்னதைப்போல் உங்களின் வாழ்க்கை உங்களால் எழுதப்படுமானால் அது ஒரு அற்புத களஞ்சியமாக அனைவருக்கும் இருக்கும்.மனதை நெகிழ வைத்த பதில்.

mania
03-09-2007, 01:22 PM
அன்பு ராஜா, உங்கள் பதிவு என்னை நெகிழ வைத்துவிட்டது. உங்களின் பழைய நினைகளை கிண்டும் வகையில் என் கேள்வி அமைந்திருந்தால் நான் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
ஆனாலும் உங்களுக்கு வந்த கோபம் நியாயமானதே...எங்களுடைய அதிர்ஷ்ட்டம் தான் உங்களை எங்களுடன் இணைத்திருக்கிறது. மற்றபடி அனைவரின் விருப்பப்படி உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனைகளை உங்களால் முடிந்த போது எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்களா...??? வாழ்த்துகள் ராஜா...
அன்புடன்
மணியா

mania
03-09-2007, 01:25 PM
நன்றி தாமரை. இன்னும் சில காலத்தில் உன் பங்கு அதிகமாக இருக்கும் என்பது பற்றி மகிழ்சி. உன் கருத்துக்களோடு நானும் ஒத்துப்போகிறேன்....வாழ்த்துகள் தாமரை
அன்புடன்
மணியா

Narathar
03-09-2007, 02:03 PM
8)நாரதர்.... உங்களின் அஞ்ஞாதவாசத்தை பற்றி சில வரிகள்...????(உங்களுடைய
சுப்புடு பஞ்ச் இல்லாமல் நிறைய திரிகள் நிறைவு பெறவில்லையே....!!! நாராயணா....!!!)

உண்மைதான் நான் அடிக்கடி மன்றத்தில் காணமல் போய் விடுகின்றேன்.........
அது என்னாலேயே கட்டுப்படுத்த முடியாத ஒரு நிகழ்வாக மாறிவிட்டது!!!!

என்ன செய்வது நான் தலையேற்றிருக்கும் பணி அத்தகையது!!!

இங்கு மன்றத்தில் ராசகுமாரன் அறிஞர் போன்றோர் அறிவர் நான் செய்யும் பணி எதுவென்று.....
அதை சில காரணங்களுக்காக மன்றத்தில் வெளிப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை அவ்வளவே.. அதனால் நான் அடிக்கடி காணாமல் போவது பற்றி உங்களூக்கு எவ்வளவு விளக்கமாக சொன்னாலும் அது ஒரு புரியாத புதிராகத்தான் இருக்கும்

ஏன் சில வேளைகளில் எனக்கே அது புரியாத புதிர்தான்.:icon_hmm:

சுருங்கச்சொன்னால்.... நான் இலங்கைக்கும் ஐக்கியராச்சியத்துக்குமிடையில் அடிக்கடி சஞ்சரித்துக்கொண்டிருப்பதால் இப்படி சில நேரங்களில் இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது!!!!

இந்தமுறை நான் ஐக்கியராச்சியத்தில் கொஞ்சம் எக்குத்தப்பாகவே மாட்டிக்கொன்டேன்.........
அதாவது பணிச்சுமை அவ்வளவு கடுமை!!!

இப்போது நான் கொஞ்சம் இறங்கி வருகின்றேன் ஆனால் சில விதிமுறைகளோடு...

நான் ஒரு வானொலி அறிவிப்பாளன்!!!! இலங்கையில் எப். எம் வானொலிகளில் கொஞம் பிரபலமானவன் அதுபோல் ஐக்கியராச்சியத்திலிருந்து வரும் சில தொலைக்காட்சிகளிலும் என் முகம் அடிக்கடி வரும்!!! மத்திய கிழக்கு அன்பர்களும் என்னை பார்த்திருப்பீர்கள்................அதனாலேயே இங்கு எனக்கொரு முகமூடி தேவைப்பட்டது.
ஏனென்றால் இங்கு இலங்கை அன்பர்களும் உறுப்பினர்களாக இருப்பதால் அவர்களோடு சகஜமாக பழகும் வாய்ப்பை இழந்துவிடுவேனோ என்ற பயமும் ஒரு காரணம்.

அதுமட்டுமல்லாமல் அந்த அறிவிப்பாளன் வேறு மன்றத்தில் உலாவும் இந்த நாரதர் வேறு.....

( டபுள் எக்டிங்!!! ) மாதிரி.....
அதனால் நான் யார் ? எந்த வானொலியில் வேலை செய்கின்றேன் என்பதை இனி யாரும் கேட்க வேண்டாம்... நீங்கள் கேட்டு அதை நான் சொல்லதயங்கினால் எனக்கு சங்கடமாக இருக்கும் உங்களுக்கும் சங்கடமாக இருக்கும்.........

சொன்னதுபோல் அங்குமிங்கும் ....... அடுத்தவர் திரிகளில் போய் வம்பு வளர்ப்பவனாகவே கடைசிவரை இங்கு இருந்துவிடுகின்றேன்.......... அதுவே எனக்கு போதும்!!!!!! அதில் கொஞம் திருப்தியும் எனக்கு ஹீ ஹீ

இன்று கூட பாருங்கள் இக்கேள்விக்கு பதில் அளிக்க காலையில் வந்தவுடன் நினைத்தேன் ஆனால் இப்போது இலங்கை நேரம் இரவு ஏழரை இன்னுமெழுதிக்கொண்டிருக்கின்றேன்...........

உங்கள் கேள்விக்கு ஒரே வரியில் பதில் தந்திருக்கலாம்......

அது "பணிச்சுமை"

ஆனாலும் இன்று கொஞம் நேரம் கிடைத்தது அதனால் இவ்வளவு எழுதக்கிடத்தது.....

ஆனால் முன்புபோல இங்கு அங்குமிஙுமாய் சஞ்சரித்து கிறுக்குத்தனமாய் பலரை கலாய்க்க ஆசைதான் என்றாலும் முடிவதில்லை...... முயற்சித்துக்கொண்டிருக்கின்றேன்.......

mania
03-09-2007, 02:10 PM
ஹிந்துஸ்தான் மெய்ன் ஹிந்தி நஹி மாலும்..? குத்தே.. பீச்சே ஜா..!

அவர் சொன்னதை தானே செய்திருக்கிறீர்கள்....!!! குத்தே ந்னா குத்தவேண்டியதுதானே....சபாஷ் ராஜா....
அன்புடன்
மணியா

mania
03-09-2007, 02:18 PM
நன்றி நாரதரே.... இது போதும் (கொஞ்சம் அதிகமாகவே சொல்லியிருக்கிறீர்கள்....) நீங்கள் மன்றத்தில் அடிக்கடி உலா வரவேண்டும் என்ற ஒரே ஆசையில் கேட்கப்பட்ட கேள்விதான் என்னுடையது. உங்களுக்கு அதுமாதிரி நேரம் கிடைக்கவேண்டுமே என்று நாராயணனை நான் வேண்டிக்கொள்கிறேன். வாழ்த்துகள் நாரதரே...
அன்புடன்
மணியா;);)

ராஜா
03-09-2007, 02:36 PM
அன்பு ராஜா, உங்கள் பதிவு என்னை நெகிழ வைத்துவிட்டது. உங்களின் பழைய நினைகளை கிண்டும் வகையில் என் கேள்வி அமைந்திருந்தால் நான் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
ஆனாலும் உங்களுக்கு வந்த கோபம் நியாயமானதே...எங்களுடைய அதிர்ஷ்ட்டம் தான் உங்களை எங்களுடன் இணைத்திருக்கிறது. மற்றபடி அனைவரின் விருப்பப்படி உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனைகளை உங்களால் முடிந்த போது எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்களா...??? வாழ்த்துகள் ராஜா...
அன்புடன்
மணியா

அண்ணா... பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீர்கள்.. இந்தத் திரியே பலரின் மனம் திறக்கும் சாவிதான்.. உங்கள் கேள்வி மீண்டும் ஒருமுறை என் கடந்தகாலத்தை அசைபோட வைத்திருக்கிறது. அதற்கு நான் உங்களுக்கு நன்றி அல்லவா சொல்லவேண்டும்..!

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8687

இங்கே என் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் சிலவற்றைச் சொல்லியுள்ளேன். நேரம் கிடைத்தால் சென்று பார்த்து உங்கள் மதிப்புமிகு பின்னூட்டமிட்டு சிறப்பியுங்கள்.

ஆதவா
03-09-2007, 02:38 PM
3ஆதவா....இன்னும் எத்தனை நாட்கள் (மாதங்கள், வருடங்கள்)இப்படி கவிதைகள் (காதல்)
எழுதியே காலத்தை ஓட்டுவதாக உத்தேசம்...???சென்னையிலேயே நான் கவனித்தேன்.....
இந்த ரேஞ்சிலே போனால் கண்ணுக்கு கடிவாளம்தான் போடவேண்டி வரும்....??!!!

கவிதைகள் எழுதுவது என்பது சரக்குக்கு சைடிஸ் போல.. அது இல்லையென்றாலும் ஓட்டிவிடலாம்.. குறிப்பாக நான் காதல் கவிதைகள் எழுதுவதில்லை... முன்பு எழுதுவதுன்டு. இவ்வளவு ஏன், திறந்த மனதோடு சொல்கிறேன் காதல் கவிதைகளுக்கு பின்னூட்டம் கூட (படிப்பதுகூட) இடுவதில்லை. எனக்கு இன்னும் ரசிப்புத் தன்மை இருக்கிறது. இன்னும் ரசித்துக் கொண்டு இருக்கிறேன். என்றாலும் சென்னையில் உண்மையிலேயே அப்ப*டி நடந்துகொள்ளவில்லை. (எல்லாம் ஷீ−நிசி பண்ணினது.... அவருக்கு ஒருநாளைக்கு ஆப்பு வைக்கணூம்) கடிவாளம் போட்டால் என் வாழ்க்கையே அவ்வளவுதானுங்க...

(விரிவாக தரமுடியாததற்கு மன்னிக்கவும் தலை. இப்போது எனக்கும் நேரம் சரியில்லை..)

ராஜா
03-09-2007, 02:43 PM
சிறப்பாகவும், சுவையாகவும் பதிலளித்த தாமரை, நாரதர், ஆதவா ஆகியோருக்கு நன்றி..!

lolluvathiyar
03-09-2007, 03:50 PM
தனிதனியாக பின்னூட்டம் விட முடியவில்லை மன்னிக்கவும்
இந்த திரியில் நிரைய பெரிசுகளின் அனுபவங்கள் சுபாவங்கள் வருகின்றன. படிக்க அருமையாக இருகிறது.
ஒரு சின்ன வருத்தம் ஆதவா, தாமரை நீங்கள் பழைய உருப்பினர்கள், நிரைய பதிவுகள் செய்திருகிறீர்கள்.
ஆனால் இந்த திரியில் இருக்கும் மிக பெரிய பதிவுகளில் நட்சத்திர குறீயீடை நீக்காமல் இருகிறீர்கள். மூத்த உருப்பினர்களே இந்த தவறை செய்தால், உங்களை பார்த்து பழகும் புதியவர்களும் அசால்ட் ஆகி விடுவார்கள். நீக்கிவடலாமல்லவா.

ஓவியன்
03-09-2007, 05:12 PM
ஓவியனின் அழகான பதிலுக்கு ராஜாவின் அருமையான பின்னூட்டம்..
அதை அப்படியே வழிமொழிகிறேன்!
மிக்க நன்றிகள் அண்ணா!
உனக்கு நான் என்றும் வாடாத சந்தன மாலை அணிவிக்கிறேன் ஓவியன். மிக்க நன்றிகள் அண்ணா, அழகான ஒரு கேள்வியையும் அதற்கேற்ற பின்னூட்டத்தையும் தந்த உங்களுக்கு நன்றிகள் பல........

அன்பு ஓவியன்..
சிறப்பான பதில்...! அன்பான மதி!, உங்கள் அன்புக்கு நன்றிகள் கோடி!.

ஓவியனின் வசீகரிக்கும் வரிகள் அபாரம். :icon_good:நன்றிகள் விராடா!
என்னை நன்கு அறிந்தவர் ஒருவரிடமிருந்து பாராட்டுக் கிடைப்பது அலாதி சுகம்தான்.

அந்த ரசனையின் வெளிப்பாடாக வரும் உங்கள் பதிவுகளே சொல்கிறது உங்கள் ரசனையின் தரத்தை.என்று இப்படியே இருக்க வாழ்த்துக்கள் ஓவியன்.
மிக்க நன்றிகள் சிவா!

பலே! ஓவியா....
மிக அழகான சுய பரிசோதனையிட்ட பதில்...
என மனதை தொட்ட பதில்!ஆகா ஷீ!
உண்மயாகவா.........?
மிக்க நன்றிகள் அன்பரே!

ஓவியன்
03-09-2007, 05:18 PM
[COLOR="Navy"]நிறையக் கோபம் வரும் அண்ணா..!
கோபமே என் முன்னேற்றத்தின் தடைக்கற்கள். இருந்தாலும் அதை என்னால் கைவிடவே முடிவதில்லை. கோபத்தால் இழந்தவை பல.. பெற்றவை..? எதுவுமே இல..!

சத்தியமான வார்த்தைகள் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்தவை என்று கூறியது போன்று நானும் நேரடியாகப் பார்த்துள்ளேன், அதனால் அப்படிக் கோவம் எனக்கு வரக் கூடாதென்று எப்பவோ முடிவெடுத்திருக்கின்றேன், ஆனாலும் இடைக்கிடை எல்லை மீறுவதுண்டு..........

மனதை அசைத்தது உங்கள் பதில் அண்ணா...........

அறிவுரைக்கும் அனுபவப் பகிர்வுக்கும் நன்றிகள் பல......

ஓவியன்
03-09-2007, 05:28 PM
ஒரு சிறு வருத்தம் மட்டும் உண்டு. மன்றங்களில் சிலர் அதிக உணர்ச்சி வசப்பட்டு விடுகிறார்கள். சில நல்ல திரிகள், திரிந்து போய் விடுகின்றன. திறந்த மனதுடன் விவாதிப்போர் சதவிகிதம் குறைந்து கொண்டு இருக்கிறது. இதை இப்படியும் நோக்கலாமே என்ற வித்தியாச சிந்தனைகள் குறைந்து வருகிறது.

தமிழ் மன்றத்தில் நல்ல பங்காற்றி வருபவர்களைக் குறிவைத்து அவதூறு பரப்பிய சிலரது எண்ணங்களை மதியாமல் நான் இன்னும் மன்றத்தில் வளைய வருகிறேன் என்பது தாங்கள் அறியாத ஒன்றல்ல.
உண்மைதான் அண்ணா!

அந்த வித்தியாசமான சிந்தனைகள் நிச்சயமாக வளரவேண்டும், எல்லோருமாக சேர்ந்து வளர்க்கப் பாடு பட வேண்டும்.

செல்வண்ணா நீங்கள் மீள புத்து வேகத்துடன் விரைவில் வர இருக்கின்றீர்களென்பதே மிகுந்த பலத்தைச் சேர்கின்றது என் மனதுக்கு.....:natur008:
இனி வரும் காலங்கள் பிரகாசமாக் ஜொலிக்கட்டும்.........!!! :icon_good:

ராஜா
03-09-2007, 05:31 PM
ஆ! பத்து, 3. கேள்வியாளர் மணியா.
***********************************************

1.ராஜா...(நான் வியக்கும் ஒரு அதிசய நபர்)..உங்களுக்கு கோபமே வராதா...???அப்படியே
எப்போதாவது வந்திருந்தால் அதை கொஞ்சம் எங்களுடன் பகிர்ந்துகொள்ளமுடியுமா...???
(அதிலேயும் காமெடி வேண்டாம்....!!!!)

2)அன்புரசிகன்.... உன்னுடைய முதல் வருகை தமிழ் நாட்டிற்கு. அதைபற்றி உன் முதல் அபிப்பிராயம்...
(ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன்)... சில வரிகள்..(இதற்கு பதில் 8ம் தேதிக்கு மேல்தான் கிடைக்கும்...!!!)

3ஆதவா....இன்னும் எத்தனை நாட்கள் (மாதங்கள், வருடங்கள்)இப்படி கவிதைகள் (காதல்)
எழுதியே காலத்தை ஓட்டுவதாக உத்தேசம்...???சென்னையிலேயே நான் கவனித்தேன்.....
இந்த ரேஞ்சிலே போனால் கண்ணுக்கு கடிவாளம்தான் போடவேண்டி வரும்....???!!!

4) ஓவியன்... உன் தனித்திறமை பற்றி சில வரிகள்...(வரிந்துகட்டிக்கொண்டு ஏட்டிக்குபோட்டி
வருவதை தவிர....!!!!... நான் மிகவும் ரசிப்பதும் அதுவே.....)

5)ஆரென்... உங்களிடம் உறங்கிக்கொண்டிருந்த கவிதை பிசாசை எப்படி தட்டி உசுப்பினீர்கள்...???
இப்போதெல்லாம் வீட்டிலே கூட கவிதை நயத்திலேதான் உரையாடுகிறீர்களாமே....!!! எப்படிங்க
இப்படி....!!!! (வர வர என்னை விட்டு வெகு தூரம் சென்றுவிட்ட மாதிரி ஒரு பிரமை, ஏக்கம் எனக்கு,,,,!!!!)

6) தாமரை....ஒரு 'ச்' கொடுத்து கலக்கலாக ஆரம்பித்து இன்றுவரை கலக்கிக்கொண்டிருக்கும் சகல கலா
வல்லுவர். நான் சந்திக்க விரும்பும் இன்னொரு முக்கியமான நபர்....ம்ம்ம்ம்ம் இன்னும் சரியான சந்தர்ப்பம்
இன்னும் அமையவில்லை.....ஆரம்பத்தில் இருந்த வேகம் தற்போது கொஞ்சம் குறைந்தாற்போல் எனக்கு
தோன்றுகிறதே...!!!??? உங்கள் திறமைக்கு சவாலான விவாத மேடைகள் இல்லையா...??? இல்லை வேறு
காரணங்களா....(நான் பல சமயங்களில் இவரது திறமையை கண்டு வியந்து வாயடைத்து
அமைதி காத்திருக்கிறேன்...)

7) அமரன்.... ஒரு பொறுப்பாளராக இருந்துகொண்டும் எப்படி உங்களால் அனைவருக்கும் இனியவராக
இருக்கமுடிகிறது....???(நான் சந்திக்க விரும்பும் நபர்களில் நீங்களும் ஒருவர்...)

8)நாரதர்.... உங்களின் அஞ்ஞாதவாசத்தை பற்றி சில வரிகள்...????(உங்களுடைய
சுப்புடு பஞ்ச் இல்லாமல் நிறைய திரிகள் நிறைவு பெறவில்லையே....!!! நாராயணா....!!!)

9) ப்ரதீப்குமார்...எதோ கல்யாணம் ஆனால் ஆளே மாறிடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.....
ஆனா அதுக்குன்னு இப்படியா....!!!!(அந்த தலகாணி மந்திரத்தின் ஒரு பகுதியையாவது
எங்களுக்கு தெரியப்படுத்துவாயா.....தைரியமிருந்தால்....!!!???(உன்னை இழந்து இந்த மன்றம்
தவிக்கிறது தம்பி...!!!!

10)நடராஜ ப்ரகாஷ்...வாரம் ஒரு ஆலயம்...அருமையான பதிவு. எப்படி இந்த எண்னம் தோன்றியது,
,.... எங்கிருந்து நேரம் கிடைக்கிறது..??? (இவ்வளவு ஒரு நல்ல பதிவுக்கு நான் எதிர்பார்க்கும்
ஆதரவு இல்லையென்பது ஒரு குறை....)

ஓவியன்
03-09-2007, 05:33 PM
நான் ஒரு வானொலி அறிவிப்பாளன்!!!! இலங்கையில் எப். எம் வானொலிகளில் கொஞம் பிரபலமானவன் அதுபோல் ஐக்கியராச்சியத்திலிருந்து வரும் சில தொலைக்காட்சிகளிலும் என் முகம் அடிக்கடி வரும்!!! மத்திய கிழக்கு அன்பர்களும் என்னை பார்த்திருப்பீர்கள்................அதனாலேயே இங்கு எனக்கொரு முகமூடி தேவைப்பட்டது

ஆகா அண்ணா!

நீங்கள் எனக்கு நங்கு தெரிந்தவர் என்று அறிந்த போது நீங்கள் யாரென்று அறியும் ஆவலை என்னால் கட்டுப் படுத்த முடியவில்லையே.....? :spudnikbackflip:

உங்கள் பணிகள் சிறக்கட்டும், உங்கள் எதிர்காலமும் உங்கள் குரலைப் போலவே வளமாக இருக்கட்டும்!!! :natur008:

ஓவியன்
03-09-2007, 05:38 PM
(விரிவாக* த*ர*முடியாத*த*ற்கு ம*ன்னிக்க*வும் த*லை. இப்போது என*க்கும் நேர*ம் ச*ரியில்லை..)

அன்பு ஆதவா!

உங்கள் போதாத காலங்கள் ஓடி மறைந்து, உங்கள் வாழ்வில் வளம் கொலிக்க என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் என்றுமே உங்களுடன் கூட வரும்........!!! :icon_good:

இளசு
03-09-2007, 07:54 PM
கோபம் இருக்கும் இடத்தில் குணமும் இருக்கும் என
வாழ்ந்து காட்டும் ராஜா.. வந்தனங்கள்!
குணமென்னும் குன்றேறி நின்றார் சினம்
கணமேனும் காத்தல் அரிது!

(பிரபு நல்ல கூடைப்பந்து வீரர் கல்லூரி நாட்களில் என
நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..
அந்த உடம்புடன் நடனம், சண்டை எனச் சமாளிக்க
முந்தைய தடகளப்பயிற்சிதான் மூலம் அவருக்கு..சரிதானே?)

ஆதவனின் அவசரப்பதிலிலும் நிதான உண்மை ஆழமாய் உள்ளது..
பாராட்டுகள் ஆதவா..

தாமரையின் சுயவிளக்கப்பதிவில் அவரின் அறிவுச்சுடர் பளிச்சிடுகிறது−− வியப்புகள்!

நாரதரின் விரிவான பதிலுக்கு நன்றி.. மேலும் முன்னேற்றம், வெற்றிகள் குவிய வாழ்த்துகள் நண்பரே!

தொடரட்டும் மன்ற மனங்களின் ஊர்வலம்!

மன்மதன்
03-09-2007, 08:13 PM
எனது தனித் திறமை என்ன என்று நினைத்தால் அது எனது ஆழமான இரசனை என நினைக்கின்றேன், என்னாலே எந்த ஒரு சூழ் நிலையையும் அருவருக்காமல் கோபப்படாமல் இரசிக்க கூடியதாக இருக்கிறது என்றால் அது ஒரு தனித் திறமைதானே....?.

கண்டிப்பா.. உங்க பதிலை ரசித்தேன் ஓவியன்.. சபாஷ்..:icon_good:

மன்மதன்
03-09-2007, 08:18 PM
நான் ஒரு வானொலி அறிவிப்பாளன்!!!! இலங்கையில் எப். எம் வானொலிகளில் கொஞம் பிரபலமானவன் அதுபோல் ஐக்கியராச்சியத்திலிருந்து வரும் சில தொலைக்காட்சிகளிலும் என் முகம் அடிக்கடி வரும்!!! மத்திய கிழக்கு அன்பர்களும் என்னை பார்த்திருப்பீர்கள்......

இது எனக்கு ஏற்கனவே தெரியுமே....

அக்னி
03-09-2007, 08:53 PM
ராஜா அண்ணாவின் கோபம்...
ஆதவானின் கவித் தாகம்...
ஓவியனின் ரசனை...
தாமரை அவர்களின் வேகம்...
நாரதரின் அஞ்ஞாதவாசம்...

அனைத்துமே ஒவ்வொருவர் இயல்புகளையும் பிரதிபலிக்கின்றது...
வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...
நன்றிகள்...

மதி
04-09-2007, 05:54 AM
ஒவ்வொரு பதிலும் அசத்தல்..
வேலைப் பளு குறைந்து தாமரையும், தற்கால விடுப்புக்கு பின் ஆதவனும் மீண்டும் மன்றம் வருவார்கள்.... இன்னும் புத்துணர்ச்சியோடு என நம்புகிறேன்.
நாரதர் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.
சரியாக பத்து பேரை தேர்ந்தெடுத்து கேள்வி கேட்ட தலை மணியாவுக்கு நன்றி...