PDA

View Full Version : ♔. ஆ! 10! ♔. - முதல் சுற்று

Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14

நம்பிகோபாலன்
22-07-2008, 06:42 AM
10. நம்பிகோபாலன்
உங்களின் பதிப்பில் அதிகமாகக் காதற் கவிதைகளைக் கண்டேன். சில கவிதைகள் ரொம்பவே நடைமுறைக்குத் தகுந்தாற்போல் அருமையாக உள்ளன. காதலை நன்கு காதலிக்கவும். என் பாராட்டுக்கள்.

கேள்வி இதுதான்:
தற்பொழுது உலகில் அனைத்து நாடுகளிலும் சிறார் குற்றம் பெருகி வருகின்றது, பெற்றொர்களாலே அனாதையாக்கப்படுவதும், குடும்ப வறுமையும், முறையான கல்வியறிவு இல்லாமையும், முக்கியமாக இளவயதிலே வேலைக்குச் செல்வதும் இதற்க்கு முக்கிய காரணிகளாகின்றன. (பணக்காரக் குழந்தைகள் பொழுது போக்கிற்காகச் செய்யும் சேட்டைகளை, இங்கு சேர்த்துக்கொள்ள வேண்டாம்.) தனக்கு எதிர்காலமே இல்லை என்ற உணர்வை எற்றுக்கொண்டு வாழும் குழந்தைகள்தான் இவர்களில் அதிகம். இவர்களை எப்படிக் கரைசேர்ப்பது? இவர்களின் எதிர்காலம் தான் என்ன?

புதுமுகங்களிடம் கேள்விகனை தொடுத்தற்க்கும் அதற்க்கு ஆதரவாய் இருக்கும் மன்ற சான்றோர்களுக்கும் முதற்க்கண் நன்றிகள்.

தாதாவின் இந்தகேள்விக்கு என்னால் முடிந்த பதிலை தருகிறேன்.
பிழை இருப்பின் மன்னிக்கமால் திருத்தவும்.

சிறார் குற்றங்கள் : இளவயது வறுமை , ஏழ்மை காரனமாக பெருகி வரும் குற்றங்கள் அனைத்திற்க்கும் காரணம் ஆராய்ந்தால் பெற்றோருடைய வளர்ப்பு மட்டும் புறக்கணிக்க படவில்லை ,சமுதாயமும் இவர்களை கைவிட்டது என்றே சொல்ல வெண்டும்.

சமுதாயம் என்பது நீங்களும் நானும் தான். நம்ம எப்படி இதற்க்கு காரணம் ஆவோம் என்று பார்த்தால் இவர்களுக்கு சேர வேண்டிய வசதிகள் அனைத்தும் சரி வர சேர்ந்ததா என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை.

வரிகள் கட்டரோம் சரி வர மக்களுக்கு சேர்ந்ததா …. எங்கேயோ பதுக்க படுகிரதே அதுதான் நிதர்சனம்.

ஜென்ட்டில்மென், சிவாஜி போன்ற படங்கள் சொல்வதும் இதுதான்.

ஏன் , எதற்க்கு என்ற கேள்விகள் குழந்தைகள் நம்மிடம் கேட்க்கும் பொழுது ரசித்து கொண்டே பதில் அளிக்கிரோம் ஆனால் நாம் கேள்விகேட்ப்பதையே நிறுத்திவிட்டோம் என்பதை உணரலாம்.

பணக்கார வீட்டு செல்வங்கள் சீரழிவது வந்து முழுக்க முழுக்க பொறுபேற்க்க வேண்டியவர்கள் பெற்றொர்களே. பணம் சம்பாதிப்பதில் மட்டுமே விழிப்போடு இருப்பவர்கள் பிள்ளைகள் மேலும் அக்கறை கொண்டால் சுலபமாக தீர்க்க படும் விஷயம். கண்காணிப்பு இல்லாத ஒரெ குறைதான் இவர்களின் குறை.

எதிர்காலம் என்ற நினைப்பு இல்லாதவர்கள் எவருமே இல்லை. ஒரு சின்ன துளி இவர்களிடம் இருந்தால் போதும் சாதிக்க நிறைய விஷயங்கள் இவர்களின் காலடியில்…

கடைசியாக சேவை செய்யும் அமைப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்தாலே போதும் புறக்கணிக்க படுபவர்கள் இல்லாமல் போவார்கள் , சமுதாயமும் அழகாகவே காட்சியளிக்கும்.

தீபன்
22-07-2008, 07:18 AM
என்ன அவசரம் நம்பி...? கேள்வியையும் போட்டு விடையை விரிவாகத் தந்திருக்கலாம் அல்லவா...?

இதயம்
22-07-2008, 07:51 AM
தங்கை ஓவியாவின் பதில் தரப்போகிறவர் தொடர்பான ஆரம்ப குறிப்பும், அதனை தொடர்ந்த அசத்தலான கேள்விகளும் அபாரம்..அபாரம்..!! அதுமட்டுமல்லாமல், வாய்ப்பு கிடைத்தவர்களிடமே மீண்டும் கேட்காமல் புத்தம்புதியவர்களை மட்டும் தேர்ந்தெடுத்த அவரின் புதுமையான சிந்தனைக்கு ஒரு சபாஷ்..! வாய்ப்புகள் என்பது அனைவருக்கும் கிடைக்கும் போது தான் ஒன்றின் நோக்கமே நிறைவடையும். அந்த வகையில் இந்த திரியின் நோக்கம் நிறைவடைய பெரும்பங்கை ஓவியா அளித்திருக்கிறார். ஓவியாவின் வழக்கமான சிறு, சிறு எழுத்துப்பிழைகள் கேள்விகளில் களையப்பட்டது இது ஓவியாவின் கேள்விகள் தானா என சந்தேகிக்க வைக்கிறது..!! ஆனால், அவர் கேள்வியில் இருக்கும் சிந்தனைகள் அதே புத்திசாலி ஓவியா தான் என்று உறுதிப்படுத்துகிறது. நல்ல பல புதிய சிந்தனைகள் வெளிப்பட களம் அமைத்து கொடுத்த அவருக்கு என் பாராட்டுக்கள் + நன்றிகள்..!!

(மனதுக்கு பிடித்தவர் ஒருவர் தன்னை இந்த பகுதியில் கேள்வி கேட்காததற்காக நல்லதொரு திரியையே பிடிக்கவில்லை என்று சொன்ன ஓவியாவின் கருத்து கொஞ்சமும் பொருத்தமில்லாதது. யாராலும் ஏற்க இயலாதது. இருந்தாலும் மனதில் உள்ளதை அப்பட்டமாய் சொன்ன ஓவியாவின் திறந்த மனதிற்காக அதை பொறுத்துக்கொள்ளலாம்..!!!)

ராஜா
22-07-2008, 07:56 AM
2000 பதிவுகளைத் தாண்டி திரியை முன்னெடுத்துச் செல்லத் தகுதியான பதில்(வு).

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து, ஓவியா "நம்பி" விடுத்த வினாவுக்கு சிறப்பாகவே விடையளித்திருக்கிறார் கோபாலன்.

பதிலில் இருக்கும் சமூகப் பொறுப்புணர்வும், பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்த நோக்கும் பாராட்டத்தக்கது.

நன்றி தம்பி..!

அகத்தியன்
22-07-2008, 08:49 AM
5. அகத்தியன்[/COLOR]
வணக்கம்... அம்மா, அப்பா, அவள் எனப் பல கவிதைகளைப் படைத்து, மன்றத்து கவிஞர் பட்டியலில் இடம் பெற்று விட்டீர்கள். தாங்கள் இன்னும் அதிகம் எழுத வேண்டும் என்பதே எங்கள் அவா. வாழ்த்துக்கள்.

கேள்வி இதுதான்:
ஈழத் தமிழ் மக்கள், போர் என்னும் காரணத்தால், உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழ்கின்றனர். அங்கு, எதற்காகப் புலம்பெயர்ந்தோம் என்பதை மறந்து, மேல் நாட்டுக் கலாச்சாரங்களைப் பின்பற்றி, பணம், பொருள் சேர்ப்பதிலேயே அதிக நாட்டம் காட்டுகின்றனர், அவர்களின் குழந்தைகளும் மொழி, கலை, கலாச்சாரங்களை மறந்து வாழப் பழக்கப்படுகின்றனர் அல்லது பழகுகின்றனர். இனி இ(அ)வர்கள் மாறப்போவதில்லை என்பது சரியான கருத்தா?

*************************************************************************** :icon_b::icon_b: என் வாழ்த்துக்கள் :icon_b::icon_b: *************************************************************

அன்புள்ள ஓவியா அக்காவிற்கு,
என்னையும் உங்கள் கேள்வி வட்டத்திற்குள் இணைத்தமைக்கு நன்றி.

இருந்தும் எனக்குள் ஒரு கேள்வி, என்னிடம் இக்கேள்வியினைத்தான் கேட்க வேண்டும் என ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? என்ற என் வினாவிற்கு விடையினை எதிர்பார்த்தவனாக என் நன்றியினை தெரிவித்துக்கொண்டு உங்களது வினாவிற்கு வருகின்றேன்.

உண்மையில் ஈழப்போர் தந்த இழப்புக்கள் மிக அதிகம் அதன் வடு ஒவ்வொரு இலங்கையினருக்கும் மறக்க முடியாத காயத்தினை தந்துள்ளது என்பது உண்மை.
இதன் மூலம் ஏற்பட்ட பட்டுக்கொண்டிருக்கின்ற இழப்புக்கள் மிக அதிகம்.அவை உயிர்களாகவும் உடமைகளாகவும், உறவுகளாகவும் இன்னும் எவை எவை எல்லாமோ.
இன்றைய கால சூழ்நிலையில் ஈழப்போர் தமிழர்களிடையே ஏற்படுத்திய இடப்பெயர்வானது இன்னொரு பக்கத்தில் நன்மையினையும் கொண்டுவந்தது என்பது கற்றோர் கருத்து. இது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றே. அதற்கான காரணங்கள் சில:
1. தமிழிற்கான சர்வதேச அங்கீகாரம்,

2. தமிழர்களின் பிரச்சினை சர்வதேசமயப்படுத்தப்பட்டமை.

3. புலம்பெயர் இலக்கியம் எனும் புதிய இலக்கிய வகை
தமிழில் இணைந்து கொண்டமை.

4. அறிவியல் தமிழ் தொடர்பான குரல்கள் சற்று ஓங்கி
ஒலிக்கத்தொடங்கின.

5.அதோடு அது தொடர்பான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இது போன்ற இன்னும் பல நல்ல விடயங்கள் இடப்பெயர்வினால் ஏற்பட்ட போதும்.இவை தொடர்பான மதிப்பீடுகள் ஏதோ ஓருவகையில் இன்று நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இருந்த போஒதும்ம் இடப்பெயர்வின் மூலம் ஏற்பட்ட விளைவுகளின் வீரியம் இப்போது வெவ்வ்வேறு ரூபங்களின் எம் மக்கள்ன் மீது தாக்குகின்றது என்பது உணமை.
அந்த வகையில் எமது புலம்பெயர்வு தொடர்பான விளைவுகள் பற்றி பேசுகின்ற போது, மிக முக்கியமான இரு சொல்லாடல்கள் இக்காலத்க்தில் புலம்பெயர் இலக்கியங்களிலும். எம்மிடையிலும் முக்கிய இடம் பெற்றுள்ளதை காணலாம். அவை:
1.கலாச்சார இடைவெளி
2.தலைமுறை இடைவெளி

ஓவியா அவர்களின் கேள்வி இது இரண்டினையும் அடியொற்றியே காணப்படுகின்றது எனது நம்பிக்கை.

அவ்வாறென்றால், எனது இப்பதிவினை எனது பதிலுக்கான முன்னுரையாக வைத்துக்கொள்ளுங்கள். மீதிய்னை சற்று நேரம் கழித்து தொடர்கின்றேன்.

(இன்றைக்கு ஒரு முக்கிய மீட்டிங் மக்களே, இப்படி அக்கா என்னையும் மாட்டுவார் என நினைக்கவில்லை. இன்றைக்குள் எப்படியாவது எனது கடமையினை முடிப்பேன் என உறுதி கூறுகின்றேன்.)

தொடரும்..............:icon_b:

ராஜா
22-07-2008, 10:06 AM
வாங்க.. வாங்க..!

பொறுமையா வாங்க..!

உங்கள் பதிலுக்கான முன்னுரை, மிகுந்த எதிர்பார்ப்புகளைத் தூண்டியிருக்கிறது ..!

ஆவலுடன் காத்திருக்கிறேன் அகத்தி(னி)யரே..!

விகடன்
22-07-2008, 11:16 AM
எப்படி அக்கா இந்த குறுகிய காலத்தில் இந்தளவிற்கு தரமான வினாக்களை உருவாக்க முடிந்தது?
கேட்கப்பட்ட கேள்விகளுக்கே பாராட்டலாம்.
அதிலும் என்னை மிகக் கவர்ந்தவை என்றால், வினா எண்கள் முறையே; 2, 3, 4, 5, 8.

சிவா.ஜி
22-07-2008, 11:19 AM
தாமதாமாய்த் தந்தாலும் தரமான கேள்விகளை தந்திருக்கும் தங்கைக்கு மனமார்ந்த பாராட்டுகள். ஒவ்வொருவரைப் பற்றியும் அழகான முன்னுரையுடன் கனைகளைத் தொடுத்திருப்பது பிரமாதம். கேட்கப்பட்டவர்களும் சாமான்யமானவர்களல்ல. எனவே சிறப்பான பதில்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம். அதற்கு அச்சாரமாக வந்திருக்கும் நம்பியின் பதிலும், அகத்தியனின் முன்னுரையும் மிக அருமை.

அமரன்
22-07-2008, 11:52 AM
அக்கா.....
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே சபை நடுவில் கொட்டும் பண்பு எத்தனை பேருக்குண்டு. மெய்யாகவே சிலிர்த்தேன். உங்கள் மென்னுள்ளம் கண்டு கனிந்தேன். ராஜா அண்ணா சொன்னது போல ஒருவர் மேல் கொண்ட வருத்தத்தில் சுடரை எட்டிப்பார்க்காததில் வருத்தம் இருந்தாலும் அந்த நபர் மேல் பொல்லாப்பில்லாப் பொறாமை பிறக்கிறது.

தேர்ந்தெடுத்த நபர்கள்.. தொடுத்த கேள்விகள்.. புதுசு அக்கா புதுசு.. அருமை அக்கா அக்கா...
உங்கள் தொலைநோக்கும் திறமையும் மட்டுமல்லாது பதிலாளர்கள் திறமைக்கும் தீனி..
மனமார்ந்த நன்றியும் பாராட்டும்..

அகத்தியன்
22-07-2008, 02:28 PM
உண்மையில் கலாச்சார இடைவெளி என்பது.. தமிழர்களுக்கு கிடைத்த பெரும் சாபம் என்றே கூறலாம். இதற்கும் தலைமுறை ரீதியாக் எம் புலம் பெயர் சமூகத்தவர்களுக்கும் இடையில் காணப்படுகின்ற இடைவெளிக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு என்றே கூற வேண்டும்.
இலங்கையினை விட்டு புலம்பெயர்ந்த சமூகம் இப்போது 25 ஆண்டுகளினை கடத்திவிட்டது. இவ் இருபத்தி ஐந்து ஆண்டுகளிலும், தமிழ் சமூகத்தின் பாரம்பரியத்தினை சந்திக்காத இரு தலை முறைகள் வெளிநாடுகளில் தற்போது காணப்படுகின்றன்.
இங்குதான் நாம் சந்திக்கும் அனைத்து நடைமுறை பிரச்சினைகளும் ஆரம்பமாகின்றன. இலங்கயிலிருந்து முதலில் புலம்பெயர்ந்த சமூகம்- வாழ வழி தேடி ஓடிய சமூகம் என்ற என் கருத்துக்கு யாரும் மாற்றுக்கருத்து சொல்லமாட்டார்கள் என்பது என் எண்ணம். அவர்கள் தங்களோடு கொண்டு சென்றது எமது கலாச்சாரத்தினையும் விழுமியங்களினையும் என்றால் யாரும் மறுப்பதற்கில்லை. அதன் பிரதிபலிப்புத்தான். மேற்குலகில் இப்போது நடக்கின்ற கோவில் கும்பாபிசேகங்கள். இது போல இன்னும்பல அடையாளங்களினை அவர்கள் தாம் சென்ற இடங்கள்இல் எல்லாம் நிறுவி உள்ளனர். இது அவர்கள் தமது கலாச்சாரத்தினை விட தயாரில்லை என்பதனை எமக்கு தெளிவுபடுத்துகின்றது. இதற்கு காரணம் அவர்களது நடத்தை கோலங்கள் எமது மண்ணில் இருந்து போனவை.
ஆனால் இரண்டாம் தலைமுறையானது எமது பாரம்பரியம் பற்றிய வாய் மொழி அறிவினை மட்டும் கொண்டு வழர்கின்ற ஒரு சமூகமாக கிடக்கின்றது. ஒருவரின் ஆளுமையில் மிக முக்கிய பங்கு அவகிக்கும் சூழலானது அத்தலைமுறையினருக்கு, நாம் காத்துவருகின்ற பாரம்பரியங்களில் இருந்து மாறுபட்ட ஒன்றினையே புலம்பெயர்ந்த நாடுகளில் காணக்கிடைக்கின்றது. இதனால், அவர்களும் அதனை தமது கலாச்சாரமாக வரிந்து கட்டிக்கொள்கின்றனர். இதனால் ஏற்படுவதாக நாம் சொல்லும் சமூக பாதிப்புகள், அவர்களுக்கு ஒரு பாதிப்பாக தெரிய நியாமமில்லை. ஏனெனில் நாம் இயங்கும் தளங்களும் அவ் இரண்டாம் தலைமுறை இயங்கும் தளங்களும் வேறுவேறானவை.
இவ்வாறான ஒரு சூழலில் இரண்டாம் தலைமுறை காணப்படுகின்ற நிலையில். எமது புலம்பெயர்வு தொடர்பான பின்னணி அவர்களுக்கு அவசியமற்றுப்போகின்றன. அதற்கு நான் மேற்சொன்ன காரணங்களுடன், அவர்களின் அடையாளங்கள் சொந்த மண்ணினை விட்டு தூரமாகிப்போய்விட்டது. எனவே தான் வாழுகின்ற நாட்டில் தனது இருத்தலை உறுதிப்படுத்துவதில் முனைப்பாக இருக்கின்றது இரண்டாம் தலை முறை. அவர்களுடன் இணைந்த வகையில் ஏனைய தலைமுறைகளும் அப்படியே போகும்.

இதில் இன்னொரு விடயம் பற்றியும் கூற வேண்டும் கீழைத்தேய மக்களிற்கு மேலைத்தேயம் பற்றிய ஒரு மயக்கம் உண்டு. இதனை ஒரு அந்தஷ்த்தின் அடையாளமாக பாவிப்போர் அதிகம். அதன் பயனாக, பொருளீட்டல் முன்னிலைப்படுத்தப்படுகின்றது.
எம்மண்ணின் பாரமபரியம் தெரியா பரம்பரை ஒன்றின் தோற்றத்திற்கு மூத்த இடம்பெயர்ந்த சமுகமும் ஒரு காரணம் ஆகின்றது.
ஏனெனில் அவர்களிற்கு உரிய வகையில் எமது சமூகத்தின் பண்பாடுகள் கடத்தப்படவில்லை. தமது ஆத்ம திருப்தியினை மட்டும் கவனித்த மூத்தவர்கள் இளைய தலை முறை தொடர்பான கவனத்தினை குறைவாகவே கொண்டிருந்தனர் என்பது என் எண்ணம்.
ஏனெனில் எமக்கும் 'எனக்கு ஆங்கிலம் தெரியாவிட்டாலும் என் பிள்ளை ஆங்கிலத்தில் பேசுகின்றான்' என சொல்வதில்தானே பெருமை.
இவ்வாறு முதல் தலைமுறையினால் கவனியாமல் விடப்பட்ட தவறுகளே இப்போது பிரச்சினையாக வந்துள்ளது என்பது என் வாதம்.
ஆனால் அவர்கள் எதனையும் மறக்கவில்லை. ஆனால் அதனை தனது இளைய தலைமுறைக்கு உரிய வகையில் கொடுப்பதற்கு மறந்துவிட்டார்கள்.
எனவே இப்போதுள்ள புலம்பெயர் சமூகம் தனது அடையாளங்களை இழப்பதில் முனைப்பாக இருக்கின்றது. அதற்கு காரணம் தனது இருத்தலினை உறுதி செய்ய.

எனவே இனிவரும் காலங்கள், எம் புலம்பெயர் இளம் சமுதாயத்தின் விழுமியங்கள் மாறுவது என்பது என்னை பொறுத்தவரையில் முடியாத ஒன்று. இது கசப்பாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றே.

அறிஞர்
22-07-2008, 02:42 PM
புதியவர்களை அறிய நல்ல வாய்ப்பு... கேள்வி கேட்ட ஓவியாவுக்கும்..பதில் சொல்லும் அனைவருக்கும் நன்றிகள்.

2000 பதிவை தாண்டி வீறுநடை போடும் இந்த பதிவின் காரணகர்த்தாவுக்கு நன்றி..

ராஜா
22-07-2008, 03:27 PM
அகத்தி(னி)யரின் ஆழ்ந்த திறனாய்வு பெரும் பிரமிப்பைத் தருகிறது.

கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் பார்த்து வளர்ந்த தலைமுறையைவிட, கேட்டு வளரும் தலைமுறைக்கு அவை பற்றிய தாக்கம் ஒரு மாற்று குறைவாகவே இருக்கும் என்ற நுட்பமான விளக்கம் நியாயமான ஒன்றுதான்.

இளந்தலைமுறையினரின் தற்காலப் போக்குக்கு பெற்றோரும் காரணமே என்று ஆணித்தரமாக வாதிடும் அகத்தியர், எதிர்கால வளரும் தலைமுறை இப்போதுள்ளவர்களைவிட இன்னும் கலாச்சார வழுக்கல்கள் கூடுதலாக உள்ளோராக இருப்பதற்கே வாய்ப்பதிகம் என்ற நிதர்சனத்தையும் எடுத்துரைத்திருக்கிறார்.

கேள்வி எனும் பாறை தரமானதாக அமைந்ததால், பதில் என்னும் அற்புதச் சிலை திறமையான சிற்பியினால் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

சகோதர மாணிக்கங்களுக்கு நெகிழ்ந்த நன்றிகள்..!

Keelai Naadaan
22-07-2008, 04:34 PM
6. கீழை நாடான்”தேடல்” என்று ஒரு அருமையான சிறுகதையை எழுதி, எனக்கும் நன்கு எழுதத் தெரியும் என்பதைக் காட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள். ஆனாலும் நல்ல எழுத்துத்திறமை மிக்க நீங்கள், உங்களின் திறமைகளை இன்னும் வளர்க்க, அதிகம் சுய படைப்புகளைத் தர வேண்டும் என்பது என அவா. வாழ்த்துகள்.

கேள்வி இதுதான்:
நீங்கள் ஒருவரை அதிகமாக நேசிக்கின்றீர்கள். ஆனால், அது காதல் இல்லை. ஏதோ ஒரு தெய்வீகப் பாசம் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஏதோ ஒரு காரணத்தினால் மற்றவரின் சொற் கேட்டு, உங்களிடம் எதுவுமே கேட்காமல் உங்களின் மேற் கோபம் கொண்டு, உங்களை ஒதுக்கி விடுகின்றார். எதற்க்குக் கோபம், ஏன் ஒதுக்கினார் என்று உங்களுக்கு இன்றுவரை தெரியாது. கேட்க முனையும்பொதெல்லாம் அவர் ஒன்றுமே பேசாமல் விலகிவிலகியே போகின்றார். உங்கள் மனம் அனலிலிட்ட புழுவாய்த் துடிக்கின்றது. இதிலிருந்து விடுபட எவ்வளவோ முயற்சித்தும் உங்களால் முடியவில்லை. இதனால் உங்களால் முன்பு போல் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையிருந்து விடுபடவும், சகஜ நிலைக்கு மாறவும் என்ன செய்வீர்கள்?

அருமையான திரி. அற்புதமான கேள்விகள். கேள்விகளை கொண்டே கேட்பவரை புரிந்து கொள்ள முடிகிறது.
இங்குள்ள பலருடைய படைப்புகளையும் பார்த்திருப்பதால் சான்றோர் நிறைந்த சபையில் நிற்பதை போன்ற உணர்வு.
இந்த கேள்வி வட்டத்துக்குள் என்னையும் சேர்த்ததற்கு மிகவும் நன்றி.

மனதில் படுவதை அப்படியே சொல்கிறேன். இந்த கேள்வியை சில வருடங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் தற்கொலை செய்து கொள்வேன் ஆ...ஊ.. என வசனம் பேசியிருப்பேன். இப்போது நான் அந்த நிலையில் இல்லை.
நான் என்னுடைய வேளையிலும் (தொழில்), மேலும் மேலும் புத்தகங்கள் படிப்பதிலும் ஈடுபடுவேன். (சொல்வது எளிது தானே)
தொழிலும், புத்தகங்களும் என் நண்பர்கள். எவ்வளவு பெரிய துயரத்தையும் போக்க கூடிய ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறது.
வெளியாகாத ரகசியங்கள் இல்லை. ஆதலால் காலப்போக்கில் நேசிக்கும் நபர் அவராகவே புரிந்து கொள்வார்.
(உண்மையில் அப்படி ஒரு நிலை வரவேண்டாம்)

மேலும், இந்த "ஆனால்" "இருந்தால்" இந்த மாதிரி வார்த்தைகளால் கனவு காணும் ஒரு சுகத்தை தவிர வேறு பயண் இல்லை என்பது என் கருத்து.

அலுவலக விசயங்களில் அதிக நேரம் செலவிடுவதால் சுய பதிப்புகள் எழுத நேரம் ஒதுக்க முடியவில்லை. இனி வரும் காலங்களில் முயற்சி செய்கிறேன்.
இந்த திரிக்கு காரணமான அனைவருக்கும் மிக்க நன்றி.

Keelai Naadaan
22-07-2008, 04:47 PM
அகத்தியனின் விரிவான பதில் பிரமிக்க வைக்கிறது.
நம்பி கோபாலனின் பதிலில் சமூக பொறுப்புணர்வு மிளிர்கிறது.

ராஜா
22-07-2008, 04:58 PM
வெட்டு ஒன்று.. துண்டு இரண்டு என்று தேங்காய் உடைத்ததுபோலத் தெள்ளத் தெளிவான பதில்.. !

வாழ்த்துகள் கீழை நாடான்..!

பாலகன்
22-07-2008, 06:15 PM
1. அழகிய மணவாளன்
அண்ணா, தாங்கள் ஒரு நேர்மையான அதிகாரியாகப் பொறுப்பேற்றுப், பல கெட்ட சம்பவங்களின் மத்தியில் போராடி, அதற்கான நல்ல பலனைக் கடவுளிடமிருந்து அடைந்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

இதோ கேள்வி :
கணவன் - மனைவி, இருவரும் விட்டுக்கொடுத்து வாழ, பழக வேண்டுமென்று பலர் கூறுகின்றனர். ஆனால் விட்டுக்கொடுப்பது என்பது அவ்வளவு சாதாரண விசயமல்ல. விட்டுகொடுப்பதனால் நாம் சில சந்தோஷங்களைத் தியாகம் செய்ய வேண்டிவரும். அப்படியிருப்பின், தியாகம் செய்து வாழ்வதனால், சந்தோசம் எப்படி வரும்?

முதல் கேள்விக்கு என்னை தேர்தெடுத்த தங்கை ஓவியாவிற்கு முதலில் நான் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன். இதனால் என் மனம் மகிழ்ச்சியில் நிறைந்துள்ளது.

இந்த கேள்விக்கு நான் முதலில் ஒரு கதையை சொல்லி ஆரம்பிக்கிறேன்..... இது அனைவரும் கேள்விபட்ட கதை தான் என்றாலும் என்னுடைய பதிலுடன் இது கொஞ்சம் சம்மந்தபட்டிருப்பதால் பயன்படுத்துகிறேன்.....

இரு மான்கள் ஒரு சிறு நீர்நிலையில் தண்ணீர் பருகியது, அங்கு இருந்ததோ கொஞசம் நீர்தான், அந்த நீரின் அளவு ஒரு மான் குடிக்கும் அளவே இருந்தது ஆனால் இருமான்கள் தண்ணீர் குடித்தபிறகும் அங்கு தண்ணீர் இருந்தது, பிறகு தான் தெரியவந்தது இரண்டு மானுமே தண்ணீர் அருந்துவதுபோல பாவனை செய்தது ஒன்றுக்கு ஒன்று விட்டுகொடுத்து தியாகம் செய்தது என்று,,,

இந்த கதையை நான் பார்க்கையில் மிகவும் எளிமையானதாக இருக்கும், இப்படியும் மான்கள் செய்திருக்கலாம், அதாவது சரிபாதியாக தண்ணீரை குடித்து இரண்டும் பாதி தாகத்தையாவது தீர்த்திருக்கலாம். ஆனால் இங்கு மிகைபடுவது அன்பே, ஒன்று மற்றொன்றின் மீது கொன்ட அன்பால் ஒருவராவது முழு திருப்தியை அடையட்டும் என்று இரன்டும் மாறி மாறி விட்டுக்கொடுத்ததாம்,,

இதுவே வாழ்க்கை, ஒருவருக்காக மற்றொருவர் விட்டுக்கொடுப்பது, அதில் தானே நிறைவே அடங்கியுள்ளது, விட்டுக்கொடுத்தல் இருந்தால் அங்கு மனதிருப்தி கிடைக்கும், மனதிருப்தி கிடைப்பதால் அன்பு பெருகும், அன்பு பெருகுவதால் இல்லறம் சிறக்கும்.

தங்கையின் கேள்வியின் இரண்டாம் பாகம்

விட்டுகொடுப்பதனால் நாம் சில சந்தோஷங்களைத் தியாகம் செய்ய வேண்டிவரும். அப்படியிருப்பின், தியாகம் செய்து வாழ்வதனால், சந்தோசம் எப்படி வரும்?

தாய் தன் பெற்ற குழந்தை இரவில் அழுவதை நிறுத்தவும் அதன் தேவையை நிறைவேற்றவும் எத்தனை இரவுகளை தியாகம் செய்திருப்பாள்... ஒரு உதாரணத்திற்காக நம் தாய்மார்களை கேட்போமே அந்த தியாகத்தால் அவர்கள் சந்தோசத்தை இழந்தார்களா என்று,

பிள்ளைகளை பற்றி பார்ப்போம்..... வயதான தாய் தந்தையரை வைத்துக்கொன்டு ஒன்டி குடித்தனத்தில் மனைவியை நினைத்த நேரத்தில் கொஞ்சமுடியாமல் எத்தனை வீடுகளில் தியாகங்கள் நடைபெற்று கொன்டிருக்கின்றது.

உங்கள் கேள்விப்படி கணவன் மனைவி வாழ்க்கையில் பார்த்தால், சில வேளைகளில் கணவன் மனைவிக்காக தனது உணவு பழக்கவழக்கத்தை மாற்றிக்கொள்கிறான், மனைவியும் அவ்வாறே செய்கிறாள்.. சில விதிவிலக்குகளும் உண்டு அவர்களை பற்றி நாம் ஏன் இங்கு பேச வேன்டும்,,

மனைவி கருவுரும் காலத்தில் கணவனின் தியாகம் மகத்தானது.... தன் மனைவிக்கு பக்க பலமாக இருக்கும் கணவர்கள் நாட்டில் அதிகம் பேர்,,, வீணர்கள் ஒருசிலரே,, மேலும் இல்லற வாழ்வில் அந்த பத்துமாதங்கள் தாம்பத்ய தியாகம் நடைபெறுகிறதல்லவா..

எனவே வாழ்வில் விட்டுகொடுத்தல் இருந்தால் தான் சிறந்த இல்லறம் சிறக்கும், நாம் நமக்கு என்ற எண்ணம் இல்லாமல் குடும்பத்தில் ஒருவர் ஒருவரின் உணர்வுகளை புரிந்து கொன்டு மதித்து வாழ்வதே சால சிறந்தது.

தருவதில் இன்பம்
பெறுவதில் இல்லை
தந்தேன் என்னை உன்னிடமே
சரணடைந்தேனே சரணடைந்தேனே
என்னில் பாதியே உன்னில் சரணடைந்தேனே

இந்த பாடலில் உள்ள அர்த்தத்தை பாருங்கள் சொந்தங்களே, மனைவி கணவன் இருவரும் இவ்வாறு ஒருவர் ஒருவரிடத்து சரணடைய வேன்டும். ஆம் அன்றன்று உள்ள சச்சரவுகளை பேசி தீர்த்தபிறகே அடுத்த கூடலுக்கு செல்லவேன்டும்... அதுவே உண்மையான வாழ்க்கை மற்றவை போலியே

நண்பர்களே இவ்வளவு பெரிய பதிலை பதித்தது இதுவே முதல்முறை, குற்றங்குறைகள் இருப்பின் அடியேனை மன்னியுங்கள்

அன்புடன்

மதுரை மைந்தன்
23-07-2008, 12:22 AM
முழு விடையும் இஙகுள்ளது.
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=368789&postcount=2042

Keelai Naadaan
23-07-2008, 12:55 AM
வெட்டு ஒன்று.. துண்டு இரண்டு என்று தேங்காய் உடைத்ததுபோலத் தெள்ளத் தெளிவான பதில்.. !

மிக்க நன்றிகள் ராஜா அண்ணா.

தருவதில் இன்பம்
பெறுவதில் இல்லை
தந்தேன் என்னை உன்னிடமே
சரணடைந்தேனே சரணடைந்தேனே
என்னில் பாதியே உன்னில் சரணடைந்தேனே

இந்த பாடலில் உள்ள அர்த்தத்தை பாருங்கள் சொந்தங்களே, மனைவி கணவன் இருவரும் இவ்வாறு ஒருவர் ஒருவரிடத்து சரணடைய வேன்டும்.

ஆகா..ஆகா..ஆகா..
பிரமாதம் அசத்திட்டிங்க அழகிய மணவாளன்.

[B]ஆனால் இதே அணு சக்தியைப் பயன் படுத்தி உலகையே அழிக்க வல்ல அணுகுண்டுகளையும் விஞ்ஞானிகள் உருவாக்குகிறார்கள். இது அவர்கள் விரும்பிச் செய்வதில்லை. வருங்காலத்தில் நிச்சயம் ஒரு விஞ்ஞானி அணுகுண்டுகளுக்கான மாற்று சக்தியைக் கண்டு பிடித்து உலகைக் காப்பாற்றுவார் என்று நம்புகிறேன்.

உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கடினமான கேள்விக்கு திருப்திகரமான வகையில் பதில் எழுதியிருக்கிறீர்கள் மதுரை வீரன்.
வருங்காலத்தில் அணுகுண்டுக்கு மாற்று கண்டுபிடித்து உலகை காப்பாற்றுவார்கள் என்ற உங்கள் வாக்கு பலிக்கட்டும்.

கண்மணி
23-07-2008, 01:10 AM
மதுரை வீரன் ஆரம்பத்தில் எப்படி ஆரம்பிக்கிறதுன்னு குழம்பின மாதிரி தெரிந்தாலும் முடிவில் உங்கள் பதிலில் மிகுந்த தெளிவிருக்கு..

சின்ன திருத்தம். பகாசூரன், மஹாபாரதத்தில் வரும் ஒரு சாப்பாட்டு அசுரன். ஒரு கிராமத்தில் இருந்து தினம் ஒரு வண்டிச் சோறும், ஒரு ஆளும் அவனுக்குச் சாப்பாடா தினம் தினம் அணுப்புவாங்க.. அரக்கு மாளிகயில் இருந்துத் தப்பிச்ச பாண்டவர்கள் ஒரு வீட்டில் அடைக்கலமா இருக்கும்பொழுது பீமன் அந்தப் பகாசூரனை அழிப்பதாகக் கதை..

நீங்கச் சொல்றது சம்பாசூரன்.

அகத்தியன்

மதுரை மைந்தன்
23-07-2008, 01:36 AM
மிக்க நன்றிகள் ராஜா அண்ணா.

ஆகா..ஆகா..ஆகா..
பிரமாதம் அசத்திட்டிங்க அழகிய மணவாளன்.

உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கடினமான கேள்விக்கு திருப்திகரமான வகையில் பதில் எழுதியிருக்கிறீர்கள் மதுரை வீரன்.
வருங்காலத்தில் அணுகுண்டுக்கு மாற்று கண்டுபிடித்து உலகை காப்பாற்றுவார்கள் என்ற உங்கள் வாக்கு பலிக்கட்டும்.

உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
23-07-2008, 01:45 AM
மதுரை வீரன் ஆரம்பத்தில் எப்படி ஆரம்பிக்கிறதுன்னு குழம்பின மாதிரி தெரிந்தாலும் முடிவில் உங்கள் பதிலில் மிகுந்த தெளிவிருக்கு..

சின்ன திருத்தம். பகாசூரன், மஹாபாரதத்தில் வரும் ஒரு சாப்பாட்டு அசுரன். ஒரு கிராமத்தில் இருந்து தினம் ஒரு வண்டிச் சோறும், ஒரு ஆளும் அவனுக்குச் சாப்பாடா தினம் தினம் அணுப்புவாங்க.. அரக்கு மாளிகயில் இருந்துத் தப்பிச்ச பாண்டவர்கள் ஒரு வீட்டில் அடைக்கலமா இருக்கும்பொழுது பீமன் அந்தப் பகாசூரனை அழிப்பதாகக் கதை..

நீங்கச் சொல்றது சம்பாசூரன்.

அகத்தியன்

கண்மணி அவர்களே,

சம்பாசூரன் என்று திருத்தியமைக்கு நன்றி.

நான் சற்று நகைச் சுவையாக பதிலளிக்க ஆரம்பித்து கடைசியில் சீரியஸாக பதிலளித்துள்ளேன் என்று நினைக்கிறேன்.

ராஜா
23-07-2008, 04:20 AM
விட்டுக் கொடுப்பதில்தான் இல்லற இன்பம்

தொட்டுத் தொடருமென்று..

நல்லா சொன்னார் பில்லா..!

ராஜா
23-07-2008, 04:29 AM
சபாஷ் மதுரை வீரன்..!

அறிவியல் கண்டுபிடிப்புகள் யாருடைய பயன்பாட்டில் இருக்கிறதோ, அவர்களின் மனநிலைக்கேற்ப ஆக்கத்தையோ, அழிவையோ தர வல்லவை என்று நகைச்சுவை இழையோட கூறியுள்ளீர்கள்.

கடவுள் இருக்கிறார்.. காப்பாற்றுவார் என்றும் நம்பிக்கை விதை தூவி, ஆன்மீக நீரும் பாய்ச்சியுள்ளீர்கள்.

நீங்களெல்லாம் புது முகங்களல்ல..
தமிழ் மன்றத்தின் புது யுகங்கள்..!
உங்கள் கரங்களில் மன்றம் இன்னும் சீர்மை பெறும்..!!!

ராஜா
23-07-2008, 04:34 AM
சின்ன திருத்தம். பகாசூரன், மஹாபாரதத்தில் வரும் ஒரு சாப்பாட்டு அசுரன். ஒரு கிராமத்தில் இருந்து தினம் ஒரு வண்டிச் சோறும், ஒரு ஆளும் அவனுக்குச் சாப்பாடா தினம் தினம் அணுப்புவாங்க.. அரக்கு மாளிகயில் இருந்துத் தப்பிச்ச பாண்டவர்கள் ஒரு வீட்டில் அடைக்கலமா இருக்கும்பொழுது பீமன் அந்தப் பகாசூரனை அழிப்பதாகக் கதை..

நீங்கச் சொல்றது சம்பாசூரன்.

நான் அறிந்தவரை அந்த அசுரனின் பெயர் பஸ்மாசுரன் என்று நினைவு.

ஒருவேளை தவறாகவும் இருக்கலாம்.

அகத்தியன்
23-07-2008, 04:37 AM
அகத்தி(னி)யரின் ஆழ்ந்த திறனாய்வு பெரும் பிரமிப்பைத் தருகிறது.

கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் பார்த்து வளர்ந்த தலைமுறையைவிட, கேட்டு வளரும் தலைமுறைக்கு அவை பற்றிய தாக்கம் ஒரு மாற்று குறைவாகவே இருக்கும் என்ற நுட்பமான விளக்கம் நியாயமான ஒன்றுதான்.

இளந்தலைமுறையினரின் தற்காலப் போக்குக்கு பெற்றோரும் காரணமே என்று ஆணித்தரமாக வாதிடும் அகத்தியர், எதிர்கால வளரும் தலைமுறை இப்போதுள்ளவர்களைவிட இன்னும் கலாச்சார வழுக்கல்கள் கூடுதலாக உள்ளோராக இருப்பதற்கே வாய்ப்பதிகம் என்ற நிதர்சனத்தையும் எடுத்துரைத்திருக்கிறார்.

கேள்வி எனும் பாறை தரமானதாக அமைந்ததால், பதில் என்னும் அற்புதச் சிலை திறமையான சிற்பியினால் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

சகோதர மாணிக்கங்களுக்கு நெகிழ்ந்த நன்றிகள்..!

நன்றி உங்கள் பாராட்டிற்கு ராஜா சார்.
உண்மையில் இக்கேள்விகான பதில் இன்னும் எவ்வளவோ உள்ளன.
ஆனால் கால நேர வர்த்தமானக்களுக்கேற்ப இயங்க வேண்டி இருப்பதால். கோடிட்டு காட்டியுள்ளேன் அவ்வளவே.

பாலகன்
23-07-2008, 04:39 AM
[COLOR="DarkRed"]

கடைசியாக சேவை செய்யும் அமைப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்தாலே போதும் புறக்கணிக்க படுபவர்கள் இல்லாமல் போவார்கள் , சமுதாயமும் அழகாகவே காட்சியளிக்கும்.

அருமையானதொரு முடிவை சொல்லி அசத்திவிட்டீர் நம்பி

சேவை செய்யும் அமைப்புகள் எல்லாம் ஒன்று சேர்வதற்கு பதிலாக அவர்கள் கடமைகளையும் பணிகளையும் உணர்ந்து சமுதாயத்திற்கு சேவைசெய்தாலே போதும், நாட்டில் இது மாதிரி கைவிடபடும் சிறார்கள் குறைவார்கள்

மக்களாகிய நாம் அவர்களுக்காக என்ன செய்யமுடியும் என்று என்னுவதைவிட நல்லதொரு சேவை அமைப்புக்கு மாதந்தோருமோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ நம்மாலான உதவிகளை செய்வதும் அவசியமாகிறது......

மீன்டும் ஒரு முறை நம்பிக்கு வாழ்த்துகள்

அன்புடன்

நம்பிகோபாலன்
23-07-2008, 05:25 AM
" உண்மையில் இக்கேள்விகான பதில் இன்னும் எவ்வளவோ உள்ளன.
ஆனால் கால நேர வர்த்தமானக்களுக்கேற்ப இயங்க வேண்டி இருப்பதால். கோடிட்டு காட்டியுள்ளேன் அவ்வளவே. "

அகத்தியன் அண்ணா கூறியது போல என் கேள்விக்கும் ஆராய்ந்து பார்த்தால் பதில் இன்னும் நிறையவே உள்ளது.

அனைவரின் பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

கண்மணி
23-07-2008, 05:55 AM
நான் அறிந்தவரை அந்த அசுரனின் பெயர் பஸ்மாசுரன் என்று நினைவு.

ஒருவேளை தவறாகவும் இருக்கலாம்.

பஸ்பம் ஆனதால் அப்படிப் பெயர் வந்திருக்குமோ?

ம்ம்ம் அப்போ சம்பாசூரன் யாரு? இந்திரனோட போராடி, தசரதன் உதவி செய்து கொன்ன அரக்கனோ?

எனக்கும் சரியா தெரியலையே ராசாண்ணா!

ஆனால் பகாசூரன் நல்லா ஞாபகம் இருக்கு!!

இளசு
23-07-2008, 06:20 AM
அருமை.. அருமை.. அருமை..

ராஜா அவர்களின் திரி பட்டொளி வீசும் அழகு அருமை..

ஓவியாவின் சிறந்த கேள்விகளுக்கு,
நண்பர்களின் சீரிய/கூரிய பதில்கள் ஒவ்வொன்றும் அருமை..

குடும்ப வாழ்வின் சாத்திரம் சொன்ன அழகிய மணவாளன்
சோகம் மாற்றும் சூத்திரம் சொன்ன கீழைநாடான்
தலைமுறை மாற்றங்கள் தவிர்க்க முடியாமல் ஏன் ஆயின என்ற அகத்தியன்
மாற்றங்களில் இரண்டுவகை..நல்லவை பெருகட்டும் என்ற மதுரை வீரன்
சமூகப் பொறுப்பு வளர வகை சொன்ன நம்பிகோபாலன்

அனைவருமே அசத்தியிருக்கிறார்கள்.
அனவைருக்கும் சிறப்பான பாராட்டுகள்!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
23-07-2008, 07:10 AM
என்னையும் மதிப்பளித்து கேள்விகள் கேட்டதுக்கு நன்றிகள் பல ஓவியா. பொதுவாக வெற்றி என்பது ஒரு வட்டத்துக்குள் கட்டுண்டு போகும் விஷயமல்ல. ஒவ்வொருவன் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் துறைகளுக்கேற்ப அவரவர்களின் வெற்றிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆனால் பொதுவான உங்கள் வெற்றி என்ற கருத்தை வைத்து நானும் பொதுவான பதில் ஒன்றை தருகிறேன். இந்த பதில் ஏகமனதுகளின் தீர்ப்பாக இருந்தால் அந்த வெற்றி உங்களைச் சாரும். ஒரு வேளை பதில் திருப்திகரமாக இல்லையென்றால் அந்த குறை என்னை மட்டுமே சாரும்.

எனது கையொப்ப வாசகம்தான் உங்கள் கேள்விக்கான பதில். நீங்கள் குறிப்பிட்ட மூன்று (1,2,4) பதில்களில் அவரவர் வெற்றிகளில் அவரவர்களுக்கான சில சுயநலங்கள் அதில் ஒளிந்திருக்கின்றன. மூன்றாம் பதில் வெற்றியின் காரணமாய் ஓரளவிற்கு திருப்திகரமாக அமைந்தாலும் பிறருக்காக தன்னை வருத்திக்கொள்வது என்பது எனக்கு திருப்திகரமானதாக படவில்லை. வெற்றிக்கான காரணத்தை நான் தேர்ந்தெடுக்க காரணமாய் அமைந்த நபிகளாரின் சில கூற்றுகளை இங்கு கூறுகிறேன்.

1) எவனொருவன் தன் கரங்களாலும் தன் நாவுகளாலும் பிறருக்கு துன்பமிழைக்கிறானோ அவன் முஸ்லிம் அல்ல.

2) தன் விரும்பும் பொருள்களை தன்னுடைய சகோதரனுக்கும் விரும்பும்வரை அவன் முஸ்லிம்களின் பட்டியலில் இல்லை.

3) மனிதன் மனிதனுக்கு செய்த தீங்குகளை அந்த மனிதன் மனமுவந்து மன்னிக்கும் வரை இறைவன் அவனை மன்னிப்பதில்லை.

எவனொருவன் இன ஜாதி பேதம் பார்க்காமல் முடிந்தவரை பிறர்களுக்கு வலிய சென்று உதவும் வரை அல்லது அவனால் உதவ முடியாவிடினும் குறைந்த பட்சம் தன்னால் எவனும் துன்பமடைந்து விடக்கூடாது என்று நினைக்கும் வரை அவன் இவ்வுலகத்தாரின் பார்வையிலும் இறைவன் பார்வையிலும் வெற்றியாளனாகவே வலம் வருவான் என்பது இந்த எளியோனின் கருத்து.

இறுதியாக ஒரு விஷயத்திற்காக சிறு குறிப்பளிக்க என்னை கேட்டிருக்கின்றீர்கள். உங்கள் நோக்கத்தை நான் சரியாக புரிந்து கொண்டிருப்பின் எனது பதில் இதுதான். நேரமின்மை என்று பொய்யான ஒரு காரணத்தை சொல்லி தப்பித்துக் கொள்ள விரும்;பவில்லை. சோம்பல்தான் உண்மையான காரணம். பிறகு பின்னூட்டமிடலாம் என்ற ஒத்திவைப்பு ஓரவஞ்சமாய் போய் விடுகிறது. பலரின் படைப்புகளை பார்த்து அப்படியே பிரமித்துப்போய் நிமிடக்கணக்கில் உறைந்து உட்கார்ந்திருக்கிறேன். பூமகள் அகத்தியன் ஆதவா ராஜா இளசு ஓவியன் மற்றும் ஓவியா கவிதா இதயம் நாகரா ஷிப்லி இவர்களின் வார்த்தைகளின் வளைவுகளில் பல நேரங்கள் கட்டுண்டு அமர்ந்திருக்கிறேன். நல்ல கேள்விகளுக்கு நன்றி ஓவியா.

( ஒரு வேளை என் புரிந்து கொள்தல் தவறாக இருந்திருப்பின் தயவு கூர்ந்து எனக்கு விளக்கவும்)

ராஜா
23-07-2008, 10:12 AM
ம்ம்ம் அப்போ சம்பாசூரன் யாரு? இந்திரனோட போராடி, தசரதன் உதவி செய்து கொன்ன அரக்கனோ?

அதே... அதே..!

இந்த யுத்தத்தில்தான் கைகேயி தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தேர் ஓட்டி கணவனுக்கு உதவி செய்தாள்..!

அதன் விளைவாகக் கிடைத்தது அவளுக்கு இரண்டு வரங்களும், நமக்கு இராமாயணம் என்னும் இதிகாசமும்..!

(என்று நினைக்கிறேன்.)

ராஜா
23-07-2008, 10:24 AM
நன்றி அசனீ..!

உத்தமத் திரு நபியின் சத்திய வார்த்தைச் சாகரத்தில் சில துளிகளாக, அறிவுரைகளை சுருக்கமாக எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.

அந்தப் பெருமகனார் தொட்டுச் செல்லாத துறைகளும், விட்டுச் செல்லாத அறிவுரைகளும் இல்லை என்றே கொள்ளலாம்.

புனிதப்போர் என்று முழங்குவோர், அப்பாவி மக்களுக்கு துயர் விளைவிப்போர், இவற்றையெல்லாம் நினைவில் கொண்டால் உலகம் அமைதிப் பூங்காவாக விளங்கும். இது உறுதி.

அசனீ..

நீங்கள் இருக்கும் மன்றில் நானும் இருப்பது, எனக்குப் பெருமையாக இருக்கிறது.

ராஜா
23-07-2008, 10:34 AM
அருமை.. அருமை.. அருமை..

ராஜா அவர்களின் திரி பட்டொளி வீசும் அழகு அருமை..

இந்தத் திரியைத் துவக்கி வைத்தது தங்கள் திருக் கரங்களல்லவா..?

தொடரச் செய்ய துவளாது உழைக்கும் என் இளவல் அமர், ..
வேலைபளுவுக்கிடையிலும் தன்னாலியன்றதைத் தவறாது செய்யும் திறனாய்வுப்புலியார், ..

அன்புத்தம்பி ஓவியன்..

ஆகியோரை நன்றியுடன் பாராட்டுகிறேன்.

இப்படி ஒரு திரி துவங்க அனுமதி நாடி விண்ணப்பித்தபோது, "உங்களுக்கில்லாத அனுமதியா..?" என்று பெருந்தன்மையுடன் அனுமதி வழங்கியதோடல்லாது, அடிக்கடி இந்தத் திரியின் செயல்பாடுகள் குறித்து கவனமுடன் கண்காணித்து உதவி வரும் அறிஞர் பெருமானுக்கும் நன்றி..!

lolluvathiyar
23-07-2008, 12:14 PM
நீண்ட நாள் கழித்து வந்த ஓவியா இந்த திரியில் தன் மனதில் ஆழமாக ஊன்றிய அழுத்தமான கேள்விகளை புதுமுகங்களை தேர்ந்தெடுத்து கேட்டு அசத்தி விட்டார். இந்த கேள்விகள் மூலம் புரட்சியே ஏற்படுத்தி விட்டார் (ரொம்ப பெரிய வார்த்தையோ). எப்படி புதுமுகங்களுக்கு நிரைய சிந்தித்து எழுத ஒரு வாய்பளித்து விட்டார். சபாஸ் ஓவியா பதில்கள் பொருமையாக படித்து கருத்து சொல்கிறேன், அதற்க்கு முன்பு ஆழமான கேள்விகளால் அற்புதமான சிந்தனையை தூண்டிய ஓவியாவை பாராட்டி 250 இபணம் பரசளிக்கிறேன்.

சுஜா
23-07-2008, 12:51 PM
வணக்கம் ஓவியா அக்கா .

நீங்கள் தொடுத்த கேள்விகளுக்கு பதில்யளிக்க என்னைதேர்வு
செய்த உங்கள் அன்பிற்கு நன்றி .
இனி உங்களுடைய கேள்வி :

படிக்கும் பருவத்தில் காதல் வயப்படலாமா? அன்பிற்க்கும் காதலுக்கும் என்ன வேற்றுமை? காதல் என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும்? காதலை வெல்லும் சக்தி வேறு எதற்க்கு உண்டு? (அன்னையின் பாசம் என்று சொல்லக்கூடாது) காதலித்துத் திருமணம் செய்பவர்கள் கூட வரதட்சணை கேட்கின்றார்களே. ஏன் இப்படி? இது சரியா? (முடிந்தால் ஐந்துப் பேர்களிடம் நேர்முகத் தேர்வு வைத்து விடையளிக்கவும்.)

இங்கே பாருங்கள் ஒருகேள்வி என்று கூரிவிட்டு மொத்தம் ஏழு கேள்விகள் கேட்டுவிடிர்கள் .
சரி என்னசெய்வது அன்பு அக்கவாயிற்றே .இந்த கேள்விகளுக்கெல்லாம் என்பார்வையில்- என்னைபோருத்தமட்டில் ,என்னால் முடிந்த அளவு பதில் எழுதுகிறேன் .

படிக்கும் பருவத்தில் காதல் வயப்படலாமா?

படிக்கும் வயது என்று நிங்கள் சொல்வது 9-25 என்றுநினைக்கிறேன் (ஏன்னென்றால் படிப்பது நாற்பது வயதில்கூட இருக்கலாம் அல்லவா ). இந்தபருகாதல்
வயபடலாமா என்பாது பசிவந்தால் சாப்பிடலாம் என்பதை போல் உள்ளளது .
இந்தபுமியை தங்குதடையின்றி வழிநடத்தி செல்ல முததையினரின் ஜீனில் எழுதப்பட்டு பின்வரும் சந்ததியினரின் ஜீனிலும் பிரதி எடுக்கப்பட்டுவரும் கட்டளை நிரலே இந்தவகையான வயபடலுகான காரணம் அதில்நம்பிழை ஒன்றும் இல்லையே .
என்ன........படிப்பிற்கு சற்று இடங்சலாயிருக்கும் .ஆனால் இதை காதல் என்று சொல்வது தவறு என்று நான் நினைக்கிறேன் .

அன்பிற்க்கும் காதலுக்கும் என்ன வேற்றுமை?

அன்பு எதையும் எதிர்பார்க்காமல் செய்வது மற்றும் பெறுவது .
காதல் எதையும் எதிர்பார்க்காமல் செய்வது மற்றும் பெறுவது என்று சொலிக்கொண்டு இலைமறை காய்மறை போன்ற ரகசிய திருட்டு .

அது எத்தனை வகைப்படும்?

காதல் ஒருவகைபடும் என்றுதான் நான் நினைக்கிறேன் .
பலவகைபட்டால் அது பலசரக்குகடை ஆகிவிடும்

காதலை வெல்லும் சக்தி வேறு எதற்க்கு உண்டு?

வெல்லும் அளவிற்கு மருந்துகள்
கண்டுபிடிகிகபடலாம் ;கண்டுபிடித்திருக்கலாம்
இப்பொழுது புழக்கத்தில் உளது 'சுயனலபான்மை ' மட்டுமே ...

காதலித்துத் திருமணம் செய்பவர்கள் கூட வரதட்சணை கேட்கின்றார்களே. ஏன் இப்படி? இது சரியா?

காதலித்தவன் கேட்பதில்லை ;அப்படி கேட்டிருந்தாலோ -பிறர் கேட்கும் பொழுது வபோத்திகொண்டு நின்றாலோ காதலியின் தேர்ந்தெடுப்பில் தவறு இருக்கிறது .

இது முழுக்கமுழுக்க என்னுடய பார்வையில்
சொனவைதான் தவறிருந்தால் சுட்டிகாட்டவும்
நன்றி .

மதுரை மைந்தன்
23-07-2008, 01:34 PM
சபாஷ் மதுரை வீரன்..!

அறிவியல் கண்டுபிடிப்புகள் யாருடைய பயன்பாட்டில் இருக்கிறதோ, அவர்களின் மனநிலைக்கேற்ப ஆக்கத்தையோ, அழிவையோ தர வல்லவை என்று நகைச்சுவை இழையோட கூறியுள்ளீர்கள்.

கடவுள் இருக்கிறார்.. காப்பாற்றுவார் என்றும் நம்பிக்கை விதை தூவி, ஆன்மீக நீரும் பாய்ச்சியுள்ளீர்கள்.

நீங்களெல்லாம் புது முகங்களல்ல..
தமிழ் மன்றத்தின் புது யுகங்கள்..!
உங்கள் கரங்களில் மன்றம் இன்னும் சீர்மை பெறும்..!!!

நண்பர் ராஜா அவர்களே,

தங்களின் பாராட்டுக்கள் என்னை மிகவும் பரவசமடையச் செய்து விட்டது.

மிக்க நன்றி அன்பரே.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
23-07-2008, 02:01 PM
உங்களைப் போன்ற ஆலமரங்களின் நிழலில் சற்று இளைப்பாறுவனாய் நான் ஒட்டியிருக்கிறேன் ராஜா. உங்களால்தான் எனக்குப் பெருமை. இருந்தாலும் விட்டுக்கொடுக்கும் உங்கள் பெரிய மனதிற்கு நன்றிகள் கோடி.

ஓவியா
23-07-2008, 02:10 PM
ஆ பத்தின் மூலம் நூறு கேள்விச் சுடர்கள் நூராது பற்றி எரியட்டும்.
புதுமுகங்கள் தத்தமது முகங்களை வெளிப்படுத்தட்டும்.
அனைவருக்கும் வாழ்த்துகள்.

வலுவான கேள்விக் கணைகளைத், தகுந்த குறிகளை நோக்கி எய்த,
ஓவியா அக்காவிற்கு நன்றிகளும் பாராட்டுக்களும்...

கேள்விகள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்புடன் தொடுக்கப்பட்டுள்ளன.
மீண்டும் விசேட பாராட்டுக்கள்...

பாராட்டிற்க்கு நன்றி அக்னி.
நீங்கள் எழுத்துப்பிழை திருத்தித்தந்தல்தான் இந்தச்சுடர் கேள்விகளுக்கு ஒளியே வந்தன. :D :D :D அதுக்கும் நன்றி.

அடடா ஆ பத்து பத்தி எரிகிறது... ஓவியாவின் பல நாள் ஆதங்கங்களுடன்.... இந்தத் தீயில் புடம்போடப்பட்டு வெளிப்படப்போவது கேள்வியாளரா விடையிறுப்பவர்களா..? காணக் காத்திருக்கிறேன்.

நன்றி தீபன்,

என் முதல் லிஸ்ட்டில் உங்கள் பெயரையும் தேர்ந்தெடுத்தேன். அதிஸ்டவசமாக நீங்கள் இங்கு 2005 ஆண்டு உருப்பினரராகியதால் விடுபட்டுவிட்டீர்கள். :) என்ன கேள்ள்விகேட்டிருந்தாலும் நீங்கள் விடையை பிரமாதமாக கொடுத்திருப்பீர்கள்.

கேள்விகள் ம்ம்ம் பார்த்தாலே சிலரை ஐயோ பாவம்னு சொல்ல வைக்குதே!

ஏன் அண்ணா :cool::cool: இங்கு நான் தேர்ந்தெடுத்த மக்கள் அனைவரும் நல்ல வல்லமை உள்ளவர்கள், அவசியம் அட்டகாசமான விடையை பரிசாக மன்றத்திற்க்களிப்பார்கள்.

ஓவியாக்கா, கேள்வி + தேர்ந்தெடுத்த நபர்கள் அருமை.

வாங்க மக்களே பதில் போடுங்க படிக்க ஆவலா இருக்கோமில்ல.

நன்றி மீரா, உங்கள் தோழி என்பதில் எப்பொழுதுமே எனக்கு பெருமை.

பாராட்டுகள் பாசமலரே..!

அருமையான, அறிவுப்பூர்வமான, அசத்தல் கேள்விகள்..

உன்னுடைய அடையாளமான, மழலைப்பிழைகள் இல்லாமல் கேள்விகள் இருப்பது, இது ஒரு வித்தியாசமான ஓவியா என்று எண்ண வைக்கிறது. "அதற்கும்" வாழ்த்துகள்..!

உனக்கு விருப்பமானதொரு உறவு உன்னிடம் கேள்வி எழுப்பவில்லை என்ற காரணத்துக்காக, இந்த அண்ணனின் திரியைப் புறக்கணித்தேன் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறாய்.. உன் மேல் எனக்கு வருத்தமில்லை.. ஆனால் இந்த அளவுக்கு, நீ அன்பு வைத்திருக்கும் "அவர்" மேல் எனக்கு பொறாமையாக இருக்கிறது..!

நன்றி பாசமலரே..!

வஞ்சனையில்லாமல் பாராட்டும் உங்கள் நல்ல உள்ளத்திற்க்கு எனது நன்றிகள் :)

பதிவிற்க்கு எழுத்து பிழைத்திருத்தம் செய்தவர் அன்பின் அக்னி, அதனால்தான் பிழையில்லை, பதிவும் அழகிய இலங்கைத்தமிழில் பதிந்திருக்கு.

அண்ணா திரியை புறக்கணித்ததற்க்கு மன்னியுங்கள், அந்த மிஸ்டர் x மேல் நல்லா போறாமைப்படுங்கள், இதில் எனக்கு சந்தோஷம்தான்.....

ஓவியாக்கா....

வியந்தேன்.... எப்படி அக்காவால் மட்டும் அத்தனை புது முகங்களையும் சரியாக இனம் காண முடிகிறது??

அத்தனை கேள்விகளிலும் அக்காவின் முத்திரை... கலக்கல் அக்கா...

பின்னாடி உளவுத் துறை ஏதும் வைச்சிருக்கீங்களோ??!! :D:D

மனம் பிரம்மித்தது... ஆபத்தில் மாட்டிய அத்தனை புது முக ஆட்களுக்கும் இது நல்ல வாய்ப்பு...

சிறப்பான பதில்கள் சொல்லி ஓவியாக்கா மனதில் மட்டுமல்ல.. எங்கள் எல்லா மனதிலும் நிலைக்க வாழ்த்துகள்..

நன்றி பூ,
முதலில் இந்த திரி இன்னும் எரிய வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டுமென்று யோசித்து, பின் புது வரவுகளை தேடினேன், 10 முத்தை கோர்த்தேன், அவார்களின் சில பதிவுகளை புரட்டி பார்த்தேன், படித்தேன், அனைவரும் தமிழின்பால் காதல் கொண்டிருந்தனர்... அதனால் அவர்களின் பங்கு மன்றத்தை மகிழ வைக்கலாம் என்று தோன்றவே இங்கு இணைத்தேன்.

ஓவியா
23-07-2008, 02:18 PM
நல்ல கேள்விகள்.. நல்ல நபர்களிடம்..

ஒவ்வொருவருக்கும் சிறுகுறிப்பு - ஓவிய முத்திரை!

பாராட்டுகள் ஓவியாவுக்கு

நன்றி பிழை திருத்தியவருக்கு :icon_b:( ஓரிடத்தில் ற்-வல்லின ஒற்றுப்பிழை தப்பிவிட்டது...:cool:)

வாழ்த்துகள் அந்த ஆ-பத்து பேருக்கும்!

அடுத்த பதிவு எண் : 2000!

அட்டகாச வாழ்த்துகள்: ராஜா, அமரன் ,அக்னி, அன்புரசிகன், ஓவியன் கூட்டணிக்கு!

-------------------------------------

ஆங்கிலக் கலப்பால் கவலை கொண்டு கேள்வி கேட்ட ஓவியாவின் திரிக்குத் தலைப்பு -
ஹிட் லிஸ்ட்!
இதையும் முரண்தொடரில் போடுங்கப்பா!:)

நன்றி இளசு சார், உங்களின் ஊக்கம் பலருக்கு மல்டி வைட்டமின். என்னையும் சேர்த்துதான்.

திரியின் முடிவுவை கண்டால் அந்த 2000'தாவது பின்னூட்டம் உங்கள் திருக்கரங்களால் தான் போடப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் தலைவா :D

சார், இந்த 'ற்' எங்கே விடுபட்டுள்ளது என்று தெரியவில்லையே :confused:

தங்கை ஓவியாவின் பதில் தரப்போகிறவர் தொடர்பான ஆரம்ப குறிப்பும், அதனை தொடர்ந்த அசத்தலான கேள்விகளும் அபாரம்..அபாரம்..!! அதுமட்டுமல்லாமல், வாய்ப்பு கிடைத்தவர்களிடமே மீண்டும் கேட்காமல் புத்தம்புதியவர்களை மட்டும் தேர்ந்தெடுத்த அவரின் புதுமையான சிந்தனைக்கு ஒரு சபாஷ்..!

வாய்ப்புகள் என்பது அனைவருக்கும் கிடைக்கும் போது தான் ஒன்றின் நோக்கமே நிறைவடையும். அந்த வகையில் இந்த திரியின் நோக்கம் நிறைவடைய பெரும்பங்கை ஓவியா அளித்திருக்கிறார்.

ஓவியாவின் வழக்கமான சிறு, சிறு எழுத்துப்பிழைகள் கேள்விகளில் களையப்பட்டது இது ஓவியாவின் கேள்விகள் தானா என சந்தேகிக்க வைக்கிறது..!! ஆனால், அவர் கேள்வியில் இருக்கும் சிந்தனைகள் அதே புத்திசாலி ஓவியா தான் என்று உறுதிப்படுத்துகிறது. நல்ல பல புதிய சிந்தனைகள் வெளிப்பட களம் அமைத்து கொடுத்த அவருக்கு என் பாராட்டுக்கள் + நன்றிகள்..!!

(மனதுக்கு பிடித்தவர் ஒருவர் தன்னை இந்த பகுதியில் கேள்வி கேட்காததற்காக நல்லதொரு திரியையே பிடிக்கவில்லை என்று சொன்ன ஓவியாவின் கருத்து கொஞ்சமும் பொருத்தமில்லாதது. யாராலும் ஏற்க இயலாதது. இருந்தாலும் மனதில் உள்ளதை அப்பட்டமாய் சொன்ன ஓவியாவின் திறந்த மனதிற்காக அதை பொறுத்துக்கொள்ளலாம்..!!!)

அண்ணா உங்கள் பாராட்டிற்க்கு நன்றி. நல்ல புரிந்துணர்வு உங்களுக்கு, மகிழ்ந்தேன். நான் எதை யோசித்து செய்தேனோ அதை அப்படியே உங்கள் எழுத்தில் 'கப்புன்னு' பிடித்து சொல்லியுள்ளீர்கள். அசந்தேன்.

ஆமாம் அண்ணா என் கருத்து பொருத்தமில்லாததுதான். எற்றுக்கொள்கிறேன். மற்றவர்கள் இவைகளை ஏற்க்க இயலாதுதான், ஆனால் என் முடிவில் மாற்றமில்லை, காரணம் அன்பின் வலிமை காதலைவிட ஆழம்.

சிலருடைய அன்பிற்க்கு விலைமதிப்பே இல்லை. :) ஆனாலும் நாம நாய்குட்டிபோல் சுற்றி வருவோம்.. அவர்கள் பெரிய மகாராஜா/ராணிக்கள் கணக்கா முகத்தை திருப்பிக்கொண்டு கண்டும் காணாமல் ரொம்பதான் 'பிலிம்' காட்டுவாங்க........ :cool::cool::cool: இவர்களுக்கு கடவுள் ஒருநாள் வைப்பார் ஆப்பு :) அப்ப விளங்கும் நம் வலி.

ஓவியா
23-07-2008, 02:52 PM
எப்படி அக்கா இந்த குறுகிய காலத்தில் இந்தளவிற்கு தரமான வினாக்களை உருவாக்க முடிந்தது?
கேட்கப்பட்ட கேள்விகளுக்கே பாராட்டலாம்.
அதிலும் என்னை மிகக் கவர்ந்தவை என்றால், வினா எண்கள் முறையே; 2, 3, 4, 5, 8.

ரொம்ப நன்றி யாவா (ஆசையாய் இருக்கு அதான் ஒருமுறை கூறிக்கொள்கிறேன்) :)

ஆமாம் கொஞ்சம் யோசித்து தான் இந்த கேள்விகளை தொடுத்தேன். கேள்விகள் தங்களை கவந்தனவா!! மிக்க மகிழ்ச்சி.

தாமதாமாய்த் தந்தாலும் தரமான கேள்விகளை தந்திருக்கும் தங்கைக்கு மனமார்ந்த பாராட்டுகள். ஒவ்வொருவரைப் பற்றியும் அழகான முன்னுரையுடன் கனைகளைத் தொடுத்திருப்பது பிரமாதம். கேட்கப்பட்டவர்களும் சாமான்யமானவர்களல்ல. எனவே சிறப்பான பதில்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம். அதற்கு அச்சாரமாக வந்திருக்கும் நம்பியின் பதிலும், அகத்தியனின் முன்னுரையும் மிக அருமை.

ஆமாம் அண்ணா, நானும் இவர்களின் விடையினை காண ஆவலாக உள்ளேன். மனதார பாராட்டியமைக்கு நன்றிகள்.

அக்கா.....
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே சபை நடுவில் கொட்டும் பண்பு எத்தனை பேருக்குண்டு. மெய்யாகவே சிலிர்த்தேன். உங்கள் மென்னுள்ளம் கண்டு கனிந்தேன். ராஜா அண்ணா சொன்னது போல ஒருவர் மேல் கொண்ட வருத்தத்தில் சுடரை எட்டிப்பார்க்காததில் வருத்தம் இருந்தாலும் அந்த நபர் மேல் பொல்லாப்பில்லாப் பொறாமை பிறக்கிறது.

தேர்ந்தெடுத்த நபர்கள்.. தொடுத்த கேள்விகள்.. புதுசு அக்கா புதுசு.. அருமை அக்கா அக்கா...
உங்கள் தொலைநோக்கும் திறமையும் மட்டுமல்லாது பதிலாளர்கள் திறமைக்கும் தீனி..
மனமார்ந்த நன்றியும் பாராட்டும்..

பாராட்டிற்க்கு நன்றி அமர், ஏதோ என்னால் முடிந்த கேள்விகளை கேட்டேன்.

நான் சில சமயம் கொஞ்சம் வெளிப்படையாகவே இருப்பேன். வீட்டிலும் திட்டுவார்கள். ஒருசிலர் சரியான ரகசிய பேர் விழிகள், நான் அப்படியில்லை.

ஏலே அந்த x பார்டி மேலே நான் வருத்தமிருக்குனு சொன்னதற்க்கே போறாமை வருதுனா எவ்வலோ பாசமிருக்குனு சொன்னா உமக்கு போறாமை வானத்தை தொடும்லே. :D:D அம்புட்டுபாசமிருக்கு.. :):)

மீரா
23-07-2008, 03:02 PM
8. மீரா (தமிழ் மீரா)வணக்கம் மீரா... மன்றத்தின் புது வரவு நீங்கள். சிக்கனமான எழுத்துக்களுடன் கவிதை விளையாட்டிலும், விரிவான விளக்கங்களுடன் தினம் ஒரு திருக்குறளிலிலும் உங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தி வருகின்றீர்கள். வாழ்த்துகள். என்றும் மன்றத்துடன் இணைந்திருங்கள்.

உங்கள் அன்பான மனதிற்கு என் வணக்கம் முதலில் சொல்லி கொள்கிறேன்... கேள்வி கேட்குமுன் என்னிடம் அழகாய் கேட்டது தனிமடலில் எனக்கு பிடித்திருந்தது... நன்றி ஓவியா கேள்வி கேட்டு என் மனதில் இருந்தவைகளை பகிர எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தமைக்கு...

கேள்வி இதுதான்:

பெண் சுதந்திரம் வரவேற்கப்படவேண்டிய விடயமா?

பெண்களுக்கு என்று இல்லை சுதந்திரம் இல்லாமல் எல்லோருமே ஒரு கால கட்டத்தில் எத்தனை சிரமப்பட்டோம் ஆங்கிலேயர் கையில் படாதபாடுப்பட்டு சுதந்திரம் பெற்றோம்.. பெற்ற சுதந்திரத்தை சரியான விதத்தில் பயன்படுத்தினோமா என்று பார்த்தால் வேதனையான பதிலே மிஞ்சுகிறது இல்லை என்பது தான் அந்த பதில்.. சரி பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கோமே அது வரவேற்கப்பட வேண்டிய விஷயமான்னு கேட்கிறீங்க...

பெண்கள் அந்த காலத்தில் எத்தனை அறிவாய் எத்தனை படிக்க ஆசைப்பட்டிருந்தாலும் கட்டுப்பெட்டியாகவே வளர்த்து வயதுக்கு வந்தப்பின் மாப்பிள்ளை குணநலன் பார்த்து திருமணம் பண்ணி கொடுத்துடறாங்க.. பெண்கள் அந்த காலத்தில் வேலைக்கு போக கூடாது.. ஆண்களுக்கு ஒரு சட்டம் பெண்களுக்கு ஒரு சட்டம் என்று பிரித்தார்கள்... ஆனால் இப்போது ஆணுக்கு சரி நிகராக பெண்களும் எல்லா துறையிலும் முன்னேறிக்கிட்டு தான் இருக்காங்க.. சாதித்துக்கொண்டும் இருக்காங்க...

இக்கால பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு அளவுக்கதிகமாக சுதந்திரம் கொடுத்ததன் விளைவு பிள்ளைகள் தவறான வழிக்கு போக வழி வகுக்கிறது.. ஆனால் எல்லாரும் அப்படி என்று சொல்ல வரவில்லை.. எங்கோ ஒரு சில இடத்தில் மட்டுமே அப்படி.. மற்றப்படி தொண்ணூறு சதவீதம் பெண்கள் சுதந்திரத்தை நல்ல முறையில் தான் பயன்படுத்துகிறார்கள்..

பெண்கள் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்துவிட்டனர்.
சுயதொழில் செய்து முன்னேற ஆரம்பித்துவிட்டனர்.
பஸ் ஓட்ட தொடங்கியாச்சு பெண்கள்..
குடும்பத்தை காப்பாற்ற கணவனை இழந்தப்பின் ஒரு பெண் தனியாக இந்த சமுதாயத்தில் போராட தொடங்கிவிட்டாள் என்று சொல்லலாம். கழுகு பார்வையில் இருந்து தன்னையும் காத்துக்கொண்டு தன் பிள்ளைகளையும் காக்க ஒரு தாய் எத்தனை பாடுபடுகிறாள்... சுதந்திரத்தை கன்னா பின்னா என்று எல்லோருமே பயன்படுத்துவது இல்லை என்று சொல்லலாம்..

நான் பார்த்தவரை ஒரு பெண்மணி தனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததும் புருஷன் ஓடி போய்விட்டார்... அதனால் அதிர்ச்சியில் சிலநாட்கள் உண்ணாமல் உறங்காமல் தவித்தார்.. எப்படி வாழ்வது என்பது அவர்களின் கேள்வி.. பெண் குழந்தை வேறு.. அந்த பெண் அதிகம் படித்தவரும் இல்லை.. என்ன செய்வது?? ஒழுக்கம் மீறாமல் கண்ணியமாக பிழைக்க எத்தனையோ வழி இருக்க தான் செய்கிறது.. ஆனால் இந்த சமூகம் அழகான பெண்ணை அதுவும் கணவன் ஓடிப்போய்விட்ட பெண்ணை ஆதரிப்பதை விட அவதூறு சொல்லி தன் பக்கம் இழுக்க தான் முயல்கிறது.. ஆனாலும் எத்தனையோ சின்ன சின்ன வேலைகள் செய்தார்.. பட்டினி இருந்து பிள்ளையை அருமையாய் வளர்த்தார்.. அந்த தாய் வளர்த்த குழந்தை இன்று நன்றாய் படித்து அமெரிக்காவில் வேலை கிடைத்து எனக்கு நேற்று மெயில் அனுப்பி இருந்தாள்... எப்படி தெரியுமா?? அக்கா உங்க எல்லாருடைய ஆசீர்வாதத்திலும் நான் நல்லமுறையில் இங்கு வந்து சேர்ந்துவிட்டேன். என்றும் உங்கள் எல்லோருடைய ஆசி வேண்டும். இன்னும் சில மாதங்களில் இத்தனை கஷ்டப்பட்ட அம்மாவையும் கூப்பிட்டுக்கொள்வேன் என்பதே... சுதந்திரத்தை சரியான முறையில் தாயும் மகளும் பயன்படுத்தினர். கடுமையான உழைப்பும் நேர்மையான சிந்தனையும் இதோ இன்று தாய் மகள் இருவரின் குணத்தையும் புடம் போட்டு விட்டது... என் ப்ரார்த்தனை என்னவென்றால் இனியாவது அவர்கள் சௌக்கியமோடு எப்போதும் இருக்கவேண்டும் இறையின் அருளால் அந்த மகளுக்கும் நல்ல இடத்தில் நல்ல வரன் அமையவேண்டும் என்பதே....

பெண்னுரிமை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

முதல் கேள்விக்கும் இந்த கேள்விக்கும் பெரிய வித்யாசம் இல்லை என்பது என் தாழ்மையான எண்ணம் ஓவியா அவர்களே.... பெண்ணுரிமையை கூட சரியான முறையிலேயே தான் பயன்படுத்தவேண்டும் என்பதே என் விருப்பம்..

அதனைப் பாட்டாய்ப் பாடும் சில ஆண்கள்கூட, அதைத் தம் குடும்பப்பெண்களிடம் காட்டுவதே மிகக் குறைவு என்கின்றன பல மாதர் சங்கங்கள்.

ம்ம் இதை ஒத்துக்கொள்கிறேன்.. வெளியே எல்லாரிடமும் பெண்ணுரிமை பற்றி வாய் கிழிய பேசும் கனவான்கள் வீட்டில் பெண்களை நடத்தும் முறை மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கிறது.... மனம் ஒத்து அமையும் கணவன் கிடைக்க உண்மையிலேயே ரொம்ப கொடுத்து வெச்சிருக்கணும்.. இவளும் நம்மை போல மனுஷி தானே என்ற எண்ணம் வரவேண்டும்... பொண்டாட்டின்னா வீட்டு வேலை செய்யவும் கணவனுக்கு பணிவிடை செய்யவும் மட்டும் தான் என்று எண்ணவே கூடாது.... மனைவி என்பவள் தாயாய், சேயாய், தோழியாய், நல்ல மணையாளாய் இப்படி எல்லாமாய் இருந்து தன்னை கவனிக்கும் மனைவி கிடைக்கும்போது கணவன் பாக்கியவான் ஆகிவிடுகிறான்.. அதே போல் அருமையாய் கிடைத்த வாழ்க்கையை அன்பாய் நடத்தும் கணவனை சுடுசொல் பேசி மனம் புண்படவைத்து கணவன் மேல் சந்தேகப்பட்டு குத்தி குத்தி பேசுவது ஜாடையாய் பேசுவது இப்படி கணவன் மனதை நெருப்பில் இட்டு துடிக்கவைத்து ஆ ஊ என்றால் உடனே செத்துருவேன் என்று பயமுறுத்துவது வீட்டை விட்டு ஓடிப்போறேன் என்று மிரட்டுவது சில சமயம் பெட்டி தூக்கிக்கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடியே போய்விடுவது தன் கணவன் வந்து தான் சமாதானம் படுத்தனும்னு எதிர்ப்பார்ப்பது இப்படி தன் வாழ்க்கையையும் நரகமாக்கிக்கொள்ள கூடாது பெண்ணுரிமை என்ற பெயரில்... இப்படி இரு பக்கமுமே அருமையான துணை அமைந்துவிட்டாலோ ஆஹா ஆஹா அருமையான அற்புதமான சொர்க்கமல்லவா ஆகிவிடும் வாழ்க்கை.... இப்படியே எல்லார் வீட்டிலும் இருந்துவிட்டால் சண்டை ஏது ப்ரச்சனை ஏது..

அதே வேளையில் இந்த விடயத்தில் பெண்களுக்கு எதிரி பெண்களே என்கின்றனர் பலர். இதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? இன்றைய காலத்தில் பெண்களுக்குப் பெண்னுரிமை உண்மையிலே கிடைத்திருக்கின்றதா? விளக்கமாக விடையளிங்கள்.

ஏன் எல்லோரும் இப்படி நினைக்கனும்??? பெண்களுக்கு எப்படி பெண்களே எதிரி ஆக முடியும்?? ம்ம் மாமியாரை மனசுல வெச்சு சொல்றீங்களான்னு எனக்கு ஒரு சந்தேகம் :-) அப்படி என்றால் மன்னித்துக்கொள்ளுங்கள்.. தாய் வீட்டில் இருந்து மாமியார் வீட்டுக்கு போகும் எந்த ஒரு பெண்ணுக்குமே ரத்தின கம்பளம் விரிச்சு தான் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்ப்போடு போனால் அங்கே சில சமயம் அவர்கள் எதிர்ப்பார்த்தது போல் வாழ்க்கை அமையாது போனால் மாமியார் நாத்தனார் ஓரகத்தி இப்படி எல்லோருமே கொடூரமாக கொடுமை படுத்துகிறார் என்றால் அந்த ஏமாற்றம் தாங்காமல் பெண்கள் சிலர் தற்கொலை முடிவுக்கும் ஒரு சிலர் டிவோர்ஸ் வரை சென்று கணவன் மனைவி பிரிந்து போவதும் இன்னும் சிலர் எதையும் வெளியே சொல்ல முடியாமல் தன் குழந்தைகளுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்துக்கொண்டு கண்ணீருடன் வாழ்க்கை நடத்தி கொண்டிருக்கின்றனர் இன்னமும்...

இப்படி ஏதும் இல்லாமல் கொஞ்சம் யோசிச்சு தான் பாருங்களேன்.. ஒரு குழந்தை யாராவது வீட்டுக்கு புதிதாக வரும்போது அவர்களை கவர அவர்கள் தன்னை திரும்பி பார்க்க வைக்க அந்த குழந்தை செய்யும் சேட்டைகள் பார்த்திருக்கிறீர்களா?? அழகாய் இருக்கும் பார்க்கவே ரொம்ப அழகாய் இருக்கும்.. ஒரு சின்ன குழந்தைக்கு யார் சொல்லி கொடுத்தார் இப்படி மற்றவரை கவர இப்படி சாகசம் செய்யனும்னு??? ஆனால் செய்கிறதே..... அதே போல் ஒரு ஸ்கூலில் படிக்கும் பிள்ளைகள் தன் ஆசிரியைகளை கவர ரொம்ப நல்ல பிள்ளையாக அவர்கள் முன் தன்னை காட்டிக்கொள்வர்.. ஹி ஹி நானும் அப்படி தான்.. ரொம்ப நல்ல பிள்ளை என்று எல்லா ஆசிரியைகளிடம் பேர் வாங்கி இருக்கேன்... காலேஜிலும் அப்படி தான்... ஆனால் நான் பயங்கர வால் என்பது யாருக்கும் தெரியாத உண்மை..:-) இப்படி உறவே இல்லாத இவர்களை கவர நல்ல பிள்ளைகளாக நாம் நடக்க முயற்சிக்கிறோமே... அதே முயற்சி புதிய வீட்டில் புதிய உறவாய் புதுவரவாய் நீங்கள் அடி எடுத்து வைக்கும்போது செய்யலாம் தானே??? மாமியாரிடம் நாத்தனாரிடம் ஓரகத்தியிடம் அன்பாய் சில வார்த்தைகள், தோழமையுடன் சிரிப்பும் இப்படி இருந்து முயற்சிக்கலாம் தானே??? கண்டிப்பா அம்மா நம்மை திட்டும்போது நாம எதிர்த்து பேச மாட்டோம் தானே?? அப்ப மாமியார் என்று நினைக்காமல் தன் அம்மாவாய் நினைத்து பார்த்து பழகும் போது அவர்கள் கோபப்பட்டாலும் திட்டினாலும் அமைதியாய் பொறுத்து போகும் குணமும் வரும் தானே?? எதிர்த்து பேசும்போது அவர்களுக்கும் எரிச்சல் வரும்.. ஏற்கனவே அவர்கள் மனதில் இப்படி இருக்கலாம்.. இத்தனை காலம் நாம் பெற்ற நம் மகன் இப்ப வந்த இவள் கொத்திக்கொண்டு போறாளே என்று.... அவர்கள் மனதின் வலியை நம் அன்பான வார்த்தைகளால் அமைதியான குணத்தால் துடைக்க முயலலாம் தானே??? நம் இடைவிடாத முயற்சி கண்டிப்பாய் அவர்கள் குணத்தை நல்லவிதமாய் மாற்றும் என்ற நம்பிக்கையோடு முயலுங்கள்... நல்ல பலன் கிடைக்கும்.. பெண்ணுக்கு பெண் எதிரி என்ற நினைப்பே வரக்கூடாது எப்பவும்.. பெண்கள் என்றாலே தெய்வ ஸ்வரூபம் அல்லவா?? சாந்த ஸ்வரூபம் அல்லவா?? வீட்டுக்கே மஹாலக்ஷ்மி அல்லவா?? எப்படி பெண்ணுக்கு பெண்ணே எதிரி ஆக முடியும்?? உறவாய் இருப்பவர் எத்தனை தீய குணங்களுடன் இருந்தாலும் நம் அன்பான பேச்சால் பொறுத்து போகும் குணத்தால் அவர்களை மாற்ற முடியும்..... மாமியார் என்றால் பயங்கர கண்ணோட்த்துடன் பார்ப்பதையே தவிர்க்க வேண்டும்.. இத்தனை பேசுகிறாயே மீரா உனக்கு கிடைச்ச மாமியார் நல்லவங்களாவே இருப்பாங்க போல இருக்கு அதனால் தான் பெண்கள் படும் கஷ்டங்கள் உனக்கு தெரிவதில்லைன்னு யாரோ முணுமுணுப்பதும் என் காதில் விழுகிறது... இல்லை நண்பர்களே அத்தனை அதிர்ஷ்டசாலி இல்லை நான்.. ஆனாலும் நேசிக்கிறேன் என் மாமியாரையும்... என் அன்பு குணமே இப்ப அவர்கள் திருந்தி என் மேல் அன்பாய் இருக்க ஆரம்பித்துவிட்டார் என்றால் நம்புவீர்களா??? நான் எப்பவும் எதையும் மேம்போக்காக சொல்லவில்லை... என் அனுபவங்களையே தான் சொல்கிறேன்... எனக்கு கிடைத்த வெற்றி உங்க எல்லாருக்கும் கிடைக்கணும். இனி பெண்களுக்கு பெண்களே எதிரி என்ற சொல் எந்த பெண்ணின் வாயில் இருந்தும் வராது என்றும் நினைக்கிறேன்...

நீங்க கேட்டதை விட கொஞ்சம் அதிகமாவே விளக்கம் கொடுத்துட்டேன்னு நினைக்கிறேன்... பெண்ணுரிமை கண்டிப்பாக கிடைத்திருக்கிறது என்பதை தான் சொல்லி இருக்கேன்.. கிடைத்த உரிமையை தவறாக பயன்படுத்தி தன் வாழ்க்கையை கெடுத்துக்க கூடாது என்பதே என்னுடைய கவலை....

எனக்கு அருமையான சந்தர்ப்பம் தந்தமைக்கு மிக்க நன்றி ஓவியா அவர்களே....யார் மனமாவது புண்படும்படி என் பதிவுகளில் ஏதாவது ஒரு வார்த்தை இருந்தாலும் தயை கூர்ந்து என்னை மன்னிப்பீர்களாக நண்பர்களே.... என் மனதில் தோன்றியதை எழுதினேன்... நன்றி வணக்கம்...

மதுரை மைந்தன்
23-07-2008, 03:04 PM
கேள்வி :
விஞ்ஞானம் அதிவேகத்தில் வளர, உலகில் அழிவும் அதிகமாகவே இருக்கின்றது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி உலகை மேம்படுத்தியுள்ள நிலையில், அவை உண்மையிலே எதிர்வரும் சந்ததியினரை காக்கின்றனவா இல்லை அழிவிற்க்கு இட்டுச் செல்கின்றனவா?

புதுமுகமா இப்பத்தான் ஒவ்வோரு பகுதியாக மன்றத்தை வலம் வந்து கொண்டிருக்கிறேன். என்னையும் ஒரு பொருட்டாக மதித்து தாதாவும் மற்ற சான்றோர்களும் இந்தக் கேள்விக்கு விடை தருமாறு கேட்டமைக்கு என் முதற்கண் நன்றி.

என்னை அடிக்கடி குத்திக் காட்டும் என் மனசாட்சி கூறுகிறது. " இதுக்குத் தான் விஞ்ஞானி அப்படி இப்படினு பீத்திக்காதேனு சொன்னேன். பாத்தியா மாட்டிக்கிட்ட".

கேள்விக்கு பதில் சொல்லாம தப்பிக்க வைகை புயல் வடிவேலு பாணியில் " இது என்ன சின்ன பிள்ளைத்தன மான கேள்வியா இருக்கு? ஹையோ ஹையோ" னு சொல்ல தோணிச்சு. விவேக் பாணியில் " ஆயிரம் அபதுல் கலாம் வந்தாலும் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது" என்று சொல்லத் தோன்றியது.

ஆனால் இந்த பாழாய்ப் போன மனசாட்சி " நீ கடவுள் பேரால கதையெல்லாம் வேற எழுதிட்ட. இந்த கேள்விக்கு பதில் சொல்லாட்டி ஓவியா அம்மன் உன் கண்ணைக் குத்திடும்" னு சொல்ல பதிலுக்காக மண்டையை உடைத்து முழி பிதுங்கி கையைப் பிசைந்து எனக்குத் தெரிந்த ஆன்மீகம் விஞ்ஞானம் இவற்றைக் கொண்டு குல தெய்வங்களை வேண்டிக் கொண்டு இதோ என் பதில்.

ஆன்மீகத்தை எடுத்துக் கொண்டால் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகியவை கடவுளின் செயல்களாக கருதப்படுகின்றன. இந்து மதத்தில் பிரம்மா விஷ்ணு சிவன் இவர்களுக்கு இச்செயல்கள் ஒப்படைக்கப் பட்டிருக்கின்றன. கடவுள் ஒரு கதவை மூடினால் மற்றொரு கதவைத் திறக்கிறார் என்று நம்புகின்றனர். அழித்தல் எனற ஒரு கதவை மூடி படைத்தல் மூலம் மற்றொரு கதவை திறக்கிறார் கடவுள். இதிகாசத்தில்
பஸ்மாசுரன் என்ற அசுரனுக்கு அவன் கையை பிறர் தலையில் வைத்து அவர்களை அழிக்கும் சக்தியை வரமாகக் கொடுத்தார் கடவுள். பிறகு அவன் தன் கையைத் தன் தலையிலேயே வைத்து அழிந்து போகுமாறும் செய்தவர் அவரே. விஞ்ஞான வளர்ச்சி மூலம் மேம் பட்ட உலகிற்கு இட்டுச் செல்லும் கடவுள் வருங்கால சந்ததியினரை அழிவிலிருந்து நிச்சயம் காப்பார் என நம்புகிறேன். ஏனெனில் வருங்கால சந்ததியினர் கடவுளின் குழந்தைகளே. ஆக்கும் சக்திகளை விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக்கள் மூலம் உருவாக்கும் கடவுள் அவைகளை தீய வழிகளில் பயன் படுத்தி அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும் தீயவர்களிடமிருந்து உலகை காப்பாற்றுகிறார் என்பதை தசாவதாரம் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விஞ்ஞானத்தை எடுத்துக் கொண்டால் ஆக்கல் அழித்தல் காத்தல் ஆகியவை இயற்கையின் நியதிகளாகின்றன. இன்று நமக்கு கிடைக்கும் சூரிய ஒளி சிறிது சிறிதாக சூரியனின் புவி ஈர்ப்பு சக்தி குறைவால் ஒரு நாள் சூரியனிலிருந்து வெளி வர முடியாமல் மறைந்து விடும் என்றும் சூரியன் தற்போது இருக்கும் இடத்தில் ஒரு கருப்பு வட்டமாக ஆகிவிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் பிரபஞ்சத்தின் மற்றொரு இடத்தில் புது சூரியன் தோன்றுவான் எனறும் கூறுகிறார்கள். விஞ்ஞான வளர்ச்சிகளின் மூலம் ஆக்க சக்திகள் உருவானால் அவற்றோடு அழிவுச் சக்திகளும் உருவாகின்றன என்பது இயற்கை நியதி. ஆக்க சக்திகளைப் பயன் படுத்தி உலக வாழ்வை மேம்படுத்தும் விஞ்ஞானிகளுக்கே அழிவு சக்திகளிலிருந்து காக்கும் பொறுப்பும் இருக்கிறது.

உதாரணமாக அணு சக்தியை எடுத்துக கொள்வோம். அணுவைப் பிளந்து வரும் சக்தியை பல ஆக்க பூர்வமான பணிகளில் பயன் படுத்துகிறோம். இவற்றில் சில:
-அணு சக்தியின் மூலம் சுற்றுப்புறத்தை மாசு படத்தாமல் பல வருடங்களுக்கு தடையின்றி மின்சார உற்பத்தி செய்யலாம்
-புற்று நோய் சிகிச்சையில் அணுக்கதிர் வீச்சு பெரிதும் பயன் படுகிறது.
-பெரிய தொழிற்சாலைகளில் உற்பத்தி பெருக பொருட்களின் அளவு அடர்த்தி எடை போன்றவற்றில் தர நிர்ணயத்திற்கு அணுக் கதிர் வீச்சு மானிகள் பெரிதும் பயன் படுகினறன.
- விவசாயத்தில் நிறைய மகசூலைத் தரக்கூடிய புதிய ரக விதைகளை உருவாக்குதில் அணுக் கதிர் விச்சின் பங்கு மகத்தானது.

ஆனால் இதே அணு சக்தியைப் பயன் படுத்தி உலகையே அழிக்க வல்ல அணுகுண்டுகளையும் விஞ்ஞானிகள் உருவாக்குகிறார்கள். இது அவர்கள் விரும்பிச் செய்வதில்லை. வருங்காலத்தில் நிச்சயம் ஒரு விஞ்ஞானி அணுகுண்டுகளுக்கான மாற்று சக்தியைக் கண்டு பிடித்து உலகைக் காப்பாற்றுவார் என்று நம்புகிறேன்.

இந்த கேள்வி வருங்காலத்தைப் பற்றியதாக இருப்பதால் எனது பதில் ஒரு யூகமாகவே இருக்கும். கடந்த காலத்தை துல்லியமாக கூற சோதிடர்கள் உள்ளனர். ஆனால் வருங் காலத்தை யார் அறிவார்?

அணு குண்டின் அபாயம் பற்றி: அணுகுண்டு கண்டு பிடிக்கப் பட்டும் ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் வீசப்பட்டும் 60 ஆண்டகளுக்கு மேலாகி விட்டன. இந்த இடைக் காலங்களில் பல முறை உலகப் போர் மூளும் அபாயம் இருந்தது. அவைகளில் அணு குண்டுகள் பயன் பட்டிருந்தால் உலகத்தில் இனறைய மனித வாழ்க்கை அற்றுப் போயிருக்கும்.

உலக நாடுகள் குறிப்பாக இந்தியாவை எடுத்துக் கொண்டால் அணுகுண்டை ஒரு பாதுகாப்பு கேடயமாகவே கருதுகிறார்கள். நமது முன்னாள் குடியரசுத் தலைவரும் தலை சிறந்த விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அவர்கள் கூற்றின் படி " வேறு நாட்டவர்கள் இந்தியா மீது படை எடுத்து வந்த போது நம்மிடம் அவர்களுக்குச சமமாக போரிட ஆயுதங்கள் இல்லாததாலேயே நாம் பல நூற்றாண்டுகளாக அடிமைகளாக வாழ நேரிட்டது. ஆகவே இன்றைய சூழ்நிலையில் இந்தியா தன்னை பாதுகாத்துக் கொள்ள அணு குண்டுகள் அவசியமாகின்றன." இந்தியா அணு குண்டுகளைத் தன் பாதுகாப்பிற்கு மட்டுமே பயன் படுத்தும் என்றும் அவற்றை முதன் முதலில் பயன் படுத்தாது என்று வாக்குறுதி தருவதாகவும் கூறியிருக்கிறது.

இன்றைய உலக சூழ்நிலையில் அணு குண்டுகள் தீவிர வாதிகளின் பிடியில் சிக்காத வரை அபாயம் ஏதும் இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.

நண்பர்களே,

ஒரு மிகக் கடினமான கேள்வி இது. என் சிற்றவிற்கு எட்டிய வரை பதிலளித்துள்ளேன். இதில் எவ்வளவு பிழைகள் இருக்கினறனவோ அதற்குத் தகுந்த மாதிரி கழித்துக் கொண்டு பாராட்டுக்களைத் தாருங்கள். :lachen001:

ராஜா
23-07-2008, 03:15 PM
பிரமி(ப்பூ)ட்(டுகிறார்) சாய் மீரா..!

சூரியன்
23-07-2008, 03:48 PM
சூரியன், உங்களுடைய ஆவல் எனக்கு புரிகிறது, ஆனாலும் எனக்கு உடல் சுகமில்லை என்று கூறியுள்ளேன். சற்றி புரிந்துக்கொள்ளுங்கள்.

உடல்நிலையை பார்த்துக்கொள்ளுங்கள் அக்கா.

ஓவியா
23-07-2008, 03:52 PM
உடல்நிலையை பார்த்துக்கொள்ளுங்கள் அக்கா.

அடேய் தம்பி, நான் திரியில் எங்கோ போய்விட்டேன் இப்ப வந்து நலம் விசாரிக்கிறாய்..... ம்ம்ம் சரி சரி உன் கனிவான பின்னூட்டத்திற்க்கு நன்றி.

ஆமா நீர் என்னாலே கலர் கலரா உலாவுகிறாய்?? முன்பு நீலம் இப்பொழுது ஊதா, வெகு விரைவில் சிகப்பாக ((நிர்வாகி) மாற எனது வாழ்த்துக்கள்.

ஓவியா
23-07-2008, 03:59 PM
நீண்ட நாள் கழித்து வந்த ஓவியா இந்த திரியில் தன் மனதில் ஆழமாக ஊன்றிய அழுத்தமான கேள்விகளை புதுமுகங்களை தேர்ந்தெடுத்து கேட்டு அசத்தி விட்டார். இந்த கேள்விகள் மூலம் புரட்சியே ஏற்படுத்தி விட்டார் (ரொம்ப பெரிய வார்த்தையோ). எப்படி புதுமுகங்களுக்கு நிரைய சிந்தித்து எழுத ஒரு வாய்பளித்து விட்டார். சபாஸ் ஓவியா பதில்கள் பொருமையாக படித்து கருத்து சொல்கிறேன், அதற்க்கு முன்பு ஆழமான கேள்விகளால் அற்புதமான சிந்தனையை தூண்டிய ஓவியாவை பாராட்டி 250 இபணம் பரசளிக்கிறேன்.

மிக்க நன்றியண்ணா, பாராட்டிற்க்கும் பணத்திற்க்கும் ஒரு சின்ன நன்றி.

ஆமாம் அண்ணா புதியவர்களை பேச வைத்தால்தான் மன்றத்து முத்துக்களின் கோர்வையை அதிகரிக்கலாம்.

அவர்களும் இன்னும் மன்றத்தின்மேல் பற்றுக்கொண்டு தமிழை காத்து, வளர்த்து, இணைப்பிரியாமல் இருப்பார்கள். :)

சிலரின் பதில்கள் என்னை பிரமிக்க வைக்கின்றது. :eek:

புதியவர்களை அறிய நல்ல வாய்ப்பு... கேள்வி கேட்ட ஓவியாவுக்கும்..பதில் சொல்லும் அனைவருக்கும் நன்றிகள்.

2000 பதிவை தாண்டி வீறுநடை போடும் இந்த பதிவின் காரணகர்த்தாவுக்கு நன்றி..

மிக்க நன்றி சார்.

உங்களின் தலைமைத்துவத்தில் ஏதோ எங்களால் முடிந்த வாரை அன்னைத் தமிழை வாழவைக்கிறோம்.

சூரியன்
23-07-2008, 04:03 PM
அடேய் தம்பி, நான் திரியில் எங்கோ போய்விட்டேன் இப்ப வந்து நலம் விசாரிக்கிறாய்..... ம்ம்ம் சரி சரி உன் கனிவான பின்னூட்டத்திற்க்கு நன்றி.

முன்ன போல அடிக்கடி வர முடியல அதனால தான் வரும் போது கேட்க வேண்டியதா இருக்கு.

ஆமா நீர் என்னாலே கலர் கலரா உலாவுகிறாய்?? முன்பு நீலம் இப்பொழுது ஊதா, வெகு விரைவில் சிகப்பாக ((நிர்வாகி) மாற எனது வாழ்த்துக்கள்.

முன்னாடி உதவியாளார்ரா இருந்தேன் நீல நிறத்தில் சுத்தினேன்.
இப்ப அந்த வேலைல இருந்து கொஞ்சம் ஓய்வு வாங்கிட்டு இதழ்குழுவில் இருக்கேன்,அதனால ஊதாவுலா சுத்தறேன்.

ஓவியா
23-07-2008, 04:20 PM
இதுவரை விடையளித்து வெற்றித்திலகம் சூடியவர்கள், நம் அன்பின் இனிய உறவுகள் இதோ:

1. அழகிய மணவாளன்
2. எஸ்.எம். சுனைத் ஹஸனீ
3. மதுரை வீரன்
5. அகத்தியன்
6. கீழை நாடான்
8. மீரா (தமிழ் மீரா)
9. சுஜா
10. நம்பிகோபாலன்

இன்னும் இரண்டு இனிய நண்பர்கள் இருக்கின்றனர். 1-2 நாட்கள் காத்திருப்போம். எதற்க்கும் நான் இவர்களை தனிமடலில் தொடர்பு கொண்டுப் பார்க்கிறேன்.

4. இனியவன்
7. மாதவர்

அமரன்
23-07-2008, 05:06 PM
இளசு அண்ணாவுக்குப் பக்கத்தில் மீண்டும் சாருக்குச் சேர் போட்டமைக்கு என் செல்லக்கண்டனங்கள்.;)

இன்னும் இரண்டு இனிய நண்பர்கள் இருக்கின்றனர். 1-2 நாட்கள் காத்திருப்போம். எதற்க்கும் நான் இவர்களை தனிமடலில் தொடர்பு கொண்டுப் பார்க்கிறேன்.

4. இனியவன்
7. மாதவர்

ஆகா.. உங்கள் உற்சாகமும் அர்ப்பணிப்பும் என்னையும் தொற்றிவிட்டது.. நீங்கள் கேள்வி கேட்ட பத்தில் ஒருவர் அடுத்த "கொத்துக்" கேள்விகளைத் தருவது நல்லது என நினைக்கிறேன்.

ராஜா அண்ணா என்ன சொல்லுறீங்க...
பத்துப்பேரும் என்ன சொல்லுறீங்க..
மத்தவங்க என்ன சொல்லுறீங்க..

ஓவியா
23-07-2008, 05:42 PM
ஆமா நான் இந்த பத்து பேரில் ஒருவருக்குதான் நான் சுடரை தரப்போகிறேன், அவர் யார் என்று அனைவரும் பதில் கொடுத்தப்பின் நான் அறிவிக்கிறேன்.

அதற்க்கு முன் மாதவர் மற்றும் இனியவன் இருவரின் விடைகளையும் காண வேண்டும், அப்படி நாளை அல்லது நாளை மறுநாட்களுக்குள் இவர்களின் விடை வரவில்லையென்றால் நானே மீண்டும் இருவரை தேர்ந்தெடுத்து கேள்விகளை கொடுக்கிறேன். (10 கேள்வியும் விடையும் அவசியம் வேண்டும் :D:D )

பின் பாராட்டு விழா :D கேள்வி கொடுக்கப்பட்ட மக்கள் எந்த சூழ்நிலையில் இருந்தார்களோ தெரியவில்லை ஆனாலும் இவ்வளாவு அற்புதமான பதில்களை தந்தவர்களின் விடைகளை நாம் படித்து பாராட்டுவோம்.

அதன் பின் சுடர் எப்பொழுதுபோல் தொடரும், நானில்லாமல் ;)

ராஜா
23-07-2008, 05:51 PM
ஆகா.. உங்கள் உற்சாகமும் அர்ப்பணிப்பும் என்னையும் தொற்றிவிட்டது.. நீங்கள் கேள்வி கேட்ட பத்தில் ஒருவர் அடுத்த "கொத்துக்" கேள்விகளைத் தருவது நல்லது என நினைக்கிறேன்.

ராஜா அண்ணா என்ன சொல்லுறீங்க...
..

அவ்வாறே ஆகுக..!

ஓவியா
24-07-2008, 08:10 AM
முற்றுப்புள்ளிக் காய்ச்சலாம் விஷ ஜுரப் புழுக்கத்தை
கேள்வியாய் ஊற்றெடுக்கும் தெள்ளமுத மருந்தாலே
போக்குவதை அறியாயோ ஓவிய ஞானப்பெண்ணே.??????????!
(?????????? இது எப்படி இருக்கு ஓவியா!)

ஆய்ய்க்கோ ஞானப்பெண்ணா.... :eek::eek:

பின்னூட்டத்திற்க்கு நன்றி.

இப்படி போக்கு காட்டிறியளே அம்மணி? சரி சரி, சுவரிருந்தாத்தானே ஓவிய(யா)ம் வரையலாம். உடம்ப பாத்துக்குங்க. அப்புறமா கேள்வியள போடலாம்.

:):) இன்றுதான் கண்டேன். கேள்வியை போட்டு பதில்களும் தொடங்கி விட்டன, நன்றி.

ஓவியா
24-07-2008, 10:47 AM
4. இனியவன்
வெகு காலங்கழித்துத் தங்களை இங்கு காண்பதில் சந்தோஷம். தங்களுடைய கிசுகிசு திரிகள் யாவும் கும்பகர்ணன் தோழர்கள் ஆகிவிட்டன. மீண்டும் தூசு தட்டுங்கள். மீள்வருகைக்கு வரவேற்புக்களும் வாழ்த்துகளும்.

7. மாதவர்
வணக்கம், முதலில் தங்களின் மேற்படிப்பிற்கு (பிஎச்டி) எனது வாழ்த்துகள். உங்களுடைய ”தை” கவிதை என்னை ரொம்பக் கவர்ந்தது. ரசித்தேன். இதழியலில் வேலை செய்பவர் என்று படித்தேன். நல்லது. மீண்டும் வாழ்த்துகள்.

ராஜா அண்ணா,
இனியவன் மற்றும் மாதவர் இன்னும் இப்பகுதிக்கு வராத காரணத்தினால், அவர்களை அடுத்த சுடரில் சேர்த்துக்கொள்வோம்.

***********************************************************************************************************************************************************************************************************

இந்த கேள்வியை மீண்டும் இரண்டு புதிய வரவுகளிடம் கேட்கிறேன்.

1. பூர்ணிமா
பாடலில் ஆர்வம், சுஜாதாவின் மேல் பற்று, நல்ல அழகிய தமிழ் வளம் இவை அனைத்தும் உங்களிடம் நல்ல 'சரக்கு' :lachen001: இருக்கும் என்பதை காட்டுகின்றன. வந்ததும் இளசு மனதில் இடம்பிடித்தாகிவிட்டது அதுவே உங்களுக்கு ஒரு அங்கிகாரம்தான். பி.எஸ்.ஸியை செவ்வென செய்து வெற்றித்திருமகளாக உயர எனது வாழ்த்துக்கள். உங்களின் படைப்புகள் மன்றமெங்கும் ஜொலிக்கட்டும்.

சுருக்கம்.
உலகிலேயே, தமிழை இவ்வளவு மோசமாகப் பயன்படுத்தும் நாடு, தமிழ்நாடு என்பது (தவறாயின் என்னை மன்னிக்க) என் சுயகருத்து.
(தமிழ் நாட்டில் நான் கண்ட பல விடயங்களில் ஒன்று, வியாபார நிலையங்களுக்குச் சூட்டப்பட்டுள்ள ஆங்கிலப் பெயர்களின், ஆங்கில உச்சரிப்பு, அப்படியே தமிழ் எழுத்துக்களிலும் தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பது… அடப்பாவமே.. இதை ஒரு பக்கம் விடுவோம்)

கேள்வி இதுதான் :
தமிழ் நாட்டில் ஒளி, ஒலி பரப்பாகும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகமாகவே ஆங்கில வார்த்தைகள் புகுத்தப்பட்டுள்ளன. இது மொழி அழிவிற்க்குப் பிள்ளையார் சுழி, இனி இவை மாற வாய்ப்பே இல்லை என்பது என் கருத்து. இந்த நிலை மாறுமா? மொழி அழிவைத் தடுக்க வாய்ப்புள்ளதா?
தமிழ்மொழியை எப்படிக் காக்கப் போகின்றோம்?
தமிழ் மொழிச்சிதைவைத் தடுக்கவும், தமிழ் மொழியைக் காக்கவும் தமிழ்நாடு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை?

7. மறத்தமிழன்

ஈழத்தமிழர்களுக்காக பாடுப்படும் ஒரு நேஞ்சம் நீங்கள். உங்களின் தமிழ்பற்று (தமிழனோ இல்லை தமிழோ) எங்களை மனம் நெகிழ செய்கின்றது. தமிழர்களின் வலியில் பங்கெடுக்கும் உங்களுக்கு என நன்றிகள். என்றும் எங்களுடன் இணந்திருங்கள்.

கேள்வி இதுதான்:
பணம் தேடுவதற்கே வாழ்க்கையின் சந்தோஷங்களைத் தொலைத்துவிட்டு வாழும் மக்கள், பணம்தான் வாழ்க்கை, பணமின்றி உலகில் ஒன்றுமில்லை, பணமின்றிப் படிப்பில்லை, பணமின்றித் தகுதியில்லை, பணமின்றித் தராதரமில்லை, பணமின்றிக் கௌரவமில்லை, பணமின்றி உற்றாரில்லை, பணமின்றி சுற்றமில்லை, பணமின்றி ஊருமில்லை, முக்கியமாகச் சந்தோஷமில்லை என்று எண்ணுகின்றார்கள். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். நன்கு விளக்கவும்.

ஓடி வந்து பதில் சொல்லுங்க கண்ணுங்களா. :)

அனைத்து பதில்களும் பதிந்தப்பின் என் விமர்சனத்தை தருகிறேன். பாராட்டு விழாவுடன். நன்றி.

poornima
24-07-2008, 01:59 PM
நன்றி என்னை அழைத்திருப்பதற்காக.. வழக்கமா மாணவ பருவத்தில் உள்ள நாங்கள்தான் கேட்கவேண்டும்.. :-)

தமிழ் நாட்டில் ஒளி, ஒலி பரப்பாகும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகமாகவே ஆங்கில வார்த்தைகள் புகுத்தப்பட்டுள்ளன. இது மொழி அழிவிற்க்குப் பிள்ளையார் சுழி, இனி இவை மாற வாய்ப்பே இல்லை என்பது என் கருத்து. இந்த நிலை மாறுமா? மொழி அழிவைத் தடுக்க வாய்ப்புள்ளதா?

இனி இதை தவிர்க்க இயலாதென்றே எண்ணுகிறேன்.தமிழில் திரைப்படத்திற்கு பெயர் வைத்தால் வரிச்சலுகை மானியம் என்பது போல் குதிரைக்குப் புல் காட்டி ஓட்டிச்செல்லும் தந்திரங்களை வணிகவியல் கடைகளுக்கு பெயர்பலகைக்கு சூட்டினால் தருவோம் என்று அரசு அறிவிக்குமாயின் இது ஓரளவு கட்டுப்படுத்தப்படலாம்.

நவீன காலத்தில் ரிமோட் வில்லேஜஸ் என்றழைக்கப்படும் சுத்தபட்ச கிராமங்களில் கூட ஆங்கில வார்த்தைகள் கலந்து வருவது தவிர்க்க இயலாததாயிருக்கிறது.

உ-ம் : டை ஆயிடுச்சி களை புடுங்க போவணும்.
பில் கட்டலைன்னா கரண்ட கட் பண்ணிடுவான்.
டிக்கெட் விலை அதிகமாயிடுச்சி
ரேஷன்ல இன்னிக்காவது ஆயில் போடுவானா..

நகரங்களில்..?

ஒன்று கொடுமையான தமிழ் அல்லது சுத்ததமிழ் இரண்டுமே கெடுதல்.

சென்னை அண்ணா சாலையில் மாயா குழம்பியகம் என்றொரு கடை பார்த்திருக்கலாம்.குழம்பியகம்..? காஃபி ஷாப்பாம்.. என்ன கொடுமை சார் இது என்றே தோன்றுகிறது.நல்லவேளை மாயா கொட்டை வடிநீர் மையம் என்று வைத்திருந்தால் இன்னும் கேலிக்கூத்தாயிர்ருக்குமோ என
தோன்றாமல் இல்லை.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒரு பெரிய கண்ணாடி கடை(Optical Shop) திறப்புக்கு சிறந்த வாசகம் எழுதித் தர ஒரு பெரிய கவிஞரை அணிகினாராம் உரிமையாளர். அந்த கவிஞர் எழுதித் தந்தாரம்
தமிழ்மொழி கண் போன்றது.பிறமொழி கண்ணாடி போன்றது என்று.. பின் கடைக்குச் சென்ற பி.ஹெச்.அப்துல் ஹமீது உரிமையாளரிடம் சொன்னாராம்.இப்படி எழுதி வைத்தால் தமிழனைத் தவிர வேறு யாரும் கண்ணாடி வாங்க வர மாட்டார்கள்.கொஞ்சம் மாற்றுங்கள் என்று..
பின் இவரே மாற்றித்தந்தாராம்.

தாய்மொழி கண்போன்றது.பிறமொழி கண்ணாடி போன்றது

இப்போது உங்கள் கேள்வியின் மையப்பகுதிக்கு வருவோம்.
மொழி அழிவதை தடுப்பது என்பது இயலாத காரியம்.ஏனெனில் தமிழ் மொழியை எல்லாம் அவ்வளவு எளிதாக அழித்துவிட முடியாது.கவிஞர் வைரமுத்து கூறிய ஒரு புள்ளிக்கணக்கு நினைவுக்கு வருகிறது.உலகின் தொன்று தொட்டு பேசிவந்த மொழிகளில் இன்று 200க்கு மேற்பட்டவை ஆனால் தமிழ்மொழி மட்டும் அப்படியே இருக்கிறது.. காரணம் அதன் செழுமை - அதன் வளமை - அதன் இனிமை.. நீங்கள் உங்கள் சந்ததி நான் என் சந்ததி இந்த மன்றம் இதைப்போல் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கானவை புற்றீசல் போல் பெருக பெருக அன்னைத்தமிழ் என்றும் கன்னித்தமிழாகவே இருப்பாள் என்பது என் உறுதியான தாழ்மையான அபிப்ராயம்...

தமிழ்நாடு மேற்கொள்ளும் வழிமுறைகள் பற்றிக் கேட்டுள்ளீர்கள்..அவர்கள் ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போதும்.. அவர்கள்..? தமிழ் தமிழ் என்று மேடைதோறும் முழங்கி விட்டு மைக் விட்டு நீங்கியதும் மறந்துபோகும் மறத்'தமிழ்க்குடிமக்கள்..

நன்றி. உங்கள் அடுத்த கேள்விக்குப் போகலாம்

poornima
24-07-2008, 02:01 PM
அவசர தட்டச்சில் விடுபட்ட வார்த்தைகளுக்கு மன்னிப்பு கோருகிறேன்.

டைம் ஆயிடுச்சி..களை புடுங்க போகணும்
200க்கும் மேற்பட்ட மொழிகள் இன்று இல்லை.

poornima
24-07-2008, 02:06 PM
தமிழ் மொழி வளர...

கட்டாயப் பாடத்திட்டம் தமிழ் என்று சட்டம் கொண்டுவந்திருக்கும் அரசை எண்ணி நகைக்க வேண்டியிருக்கிறது.தமிழ்நாட்டில் தாய்மொழியை பாடத்திட்டமாக கொண்டுவர ஒரு சட்டம் ஒரு மசோதா அதற்கு எதிர்ப்பு..

தாய்ப்பால் குடித்துக் கொண்டே தாயை முதுகில் குத்தி வேதனைப்படுத்தும்
நாடகம் நம் மண்ணில் மட்டும்..

அண்டை மாநிலத்தில் தாய்மொழி நீங்கலாய் இரண்டு மொழிகள் கட்டாயப் பாடம்.. மலையாள பறவைகள் உலகெங்கும் விரவி வெற்றிபெற்றுக் கொண்டிருப்பதற்கு இது ஒன்று மட்டுமே சாட்சி.

உலகின் மிகத் தொன்மையான மொழி இத்தனை பேரழிவிலும் பெரும் அவஸ்தையிலும் இருக்கிறது என்றால் அது சாபக்கேடே தவிர வேறில்லை.அதை இழந்தால்தான் ஒருவேளை அதன் அருமை தெரியுமோ என்னவோ..

உயர்ந்த விஷயங்கள் எல்லாமா உகந்த விஷயங்கள் ஆகிவிடுகின்றன...

சின்னவள் பேச்சில் சிதைவுகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்

poornima
24-07-2008, 02:32 PM
மறுபடியும் தவறுக்கு வருந்துகிறேன்..

உயர்ந்த விஷயங்கள் எல்லாம் உகந்த விஷயங்கள் அல்ல (எல்லோர்க்கும்)
- என வரவேண்டும். டங் ஸ்லிப் என்பது போல் ஃபிங்கர் ஸ்லிப் :-)

விகடன்
24-07-2008, 03:38 PM
நம்பிகோபாலின் உடனடியான பதிலிற்கு முதற்கண் பாராட்டுகிறேன்.
நீங்கள் உங்களுடைய பக்கத்திலாலான கருத்துக்களை முன்வைக்கும்போது ஓர் விடயத்தை கவனிக்க தவறிவிட்டீர்கள்.
சொல்லப்பட்ட விடயங்கள் எவ்வாறான ஆதிக்கஹ்தை செலுத்துகிறது என்பதை விளக்கமாக சொல்லவில்லை.
படிக்கையில் ஏதோ பரீட்சைக்கு புள்ளிகளை திரட்டும்பொருட்டு குறிப்புக்களை சொல்லிவைத்தாற்போல் இருக்கிறது.
விளக்கம் துப்பரவாக தரவில்லை என்று சொல்லவில்லை, இன்னும் தாராளமாக தந்திருக்கலாம் என்றுதான் சொல்கிறேன்.

இருந்தாலும் தங்களின் பதிலின் மூலம் என்னட்தை சொல்ல வருகிறீர்கள் என்பதை அறிய முடிந்தது. பாராட்டுக்கள்.

விகடன்
24-07-2008, 03:51 PM
அகத்தியனின் முன்னுரை பலத்த எதிர்பார்ப்பை தெளித்திருந்தது. அதை முடித்திருந்தநேரம் நானும் ஓர் வேலை காரணமாக கணினித்திரையை விட்டு அகலவேண்டிய தேவை ஏற்படுத்தியது. இருந்தாலும் அதே பக்கத்தில் அவரின் பொறுப்புணர்ச்சியை அடுத்தடுத்த பதிவாக கண்டதால் தொடர்ந்தே படிக்கலானேன்.

இனி,

பதில்களை படித்தேன். சற்றே திறந்த சிந்தனையுடன் கலாச்சார சீரைவு பற்றி சொல்லப்பட்டிருந்ததும் குறிப்பாக மேலை நாட்டவர் கலாச்சாரத்தின் மீதான மோகத்தின் காரணத்தால் உண்டான பிரதிபலிப்பும் சொல்லப்பட்டிருக்கும் விதம் நன்று.

அதேவேளை, மேலை நாடுகளில் பிரத்தியேகமாக தமது குழந்தைகளின் கல்வி, மற்றும் இதர தேவைகளுக்கும் உழைக்க வேண்டியுள்ளது. இதனான் அவர்கள் பணமீட்டுவதிலேயே (பெற்றார்கள்) குறியாக உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையிருப்பதால், தமிழ் கலாச்சாரம், பண்பாட்டை தம் குழந்தைகளுக்கும் ஊட்ட எண்ணம் கொண்ட பெற்றாராலும் அதை நிவர்த்திசெய்யமுடியாத நிலமையும் காணப்படுகிறது.

ஏதோ தங்களின் பதிவை படிக்கையில் என் மூளையில் தட்டுப்பட்ட ஒருவிடயம்.....

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் பற்றிய வினாவிற்கு சிரத்தையுடன் அளித்த பதில் அருமை.
பாராட்டுக்கள் அகத்தியன்.

தீபன்
25-07-2008, 01:09 AM
நன்றி தீபன்,

என் முதல் லிஸ்ட்டில் உங்கள் பெயரையும் தேர்ந்தெடுத்தேன். அதிஸ்டவசமாக நீங்கள் இங்கு 2005 ஆண்டு உருப்பினரராகியதால் விடுபட்டுவிட்டீர்கள். :) என்ன கேள்ள்விகேட்டிருந்தாலும் நீங்கள் விடையை பிரமாதமாக கொடுத்திருப்பீர்கள்.

ஆனாலும், என்றும் புதுமுகமாகத்தன் நா உங்கள் மனதில் பதிந்திருக்கிறேன்... நன்றி சகோதரி. ஒருவகையில் உங்கள்மீது எனக்கு சினப் பொறாமை,:lachen001:
ராஜா அண்ணன் கிடைத்த இடைவெளியில் என்னை கேள்விகேட்க அளைத்தபோது அதை தற்காலிகமாக ஒத்திபோட்ட நான் அப்படி கேட்பதாயின் எவ்வாறு அது அமைய வேண்டுமென சிந்தித்து நீங்கள் கையாண்ட வழிமுறைகளையே கண்டுபிடித்து வைத்திருந்தேன். ஆனால், பல திரிகளையும் படித்து அதிலிருந்து கேள்விகளை அமைக்கும் அவகாசம் எனக்கிருக்கவில்லை. நான் ஜோசித்து கொண்டே இருக்க நீங்கள் அமுல்படுத்திவிட்டீர்கள்... பாராட்டுக்கள் உங்கள் உழைப்பிற்கு. அப்புறம், கொஞ்சம் அதிகமாகவே புகழ்றிங்க... பள்ளிக்கூட காலத்திலிருந்து எந்த கேள்விக்கும் சரியா விடை சொல்லி எனக்கு பழக்கமெ இல்லை... கேள்விக்கு எதிர் கேள்வி கேட்டுத்தான் பழக்கம்... நல்லவேளை... தப்பிச்சன்!:sprachlos020:

ஓவியா
25-07-2008, 09:45 AM
ராஜா அண்ணா,

இன்னும் ஒரு கேள்வி பாக்கியிருக்கு.

அண்ணன் மறத்தமிழன் அவர்கள் இன்னும் பார்க்கவில்லையென்றால் (தனிமடலில் தெரிவிதுள்ளேன் ஆனால் பதிலில்லை) அப்படி இல்லை அவர் பனிபளு காரணமாக இணந்துக்கொள்ள முடியவில்லையென்றால்.

இனியவன் வந்துவிட்டார், அவரிடம் கேள்விகளை கொடுக்கலாம் என்று நினைக்கின்றேன்.

அண்ணா உங்கள் ஆலோசனை ப்லீஸ். நன்றி.

ராஜா
25-07-2008, 02:40 PM
கேளுங்க.. கேளுங்க...

கேட்டுகிட்டேயிருங்க..!

(Gate கிட்ட இருக்க நான் என்ன கூர்க்காவான்னு கேட்காதீங்க..!)

ஓவியா
25-07-2008, 09:42 PM
நன்றி ராஜா அண்ணா.

7. மறத்தமிழன்

ஈழத்தமிழர்களுக்காக பாடுப்படும் ஒரு நேஞ்சம் நீங்கள். உங்களின் தமிழ்பற்று (தமிழனோ இல்லை தமிழோ) எங்களை மனம் நெகிழ செய்கின்றது. தமிழர்களின் வலியில் பங்கெடுக்கும் உங்களுக்கு என நன்றிகள். என்றும் எங்களுடன் இணந்திருங்கள்.

கேள்வி இதுதான்:
பணம் தேடுவதற்கே வாழ்க்கையின் சந்தோஷங்களைத் தொலைத்துவிட்டு வாழும் மக்கள், பணம்தான் வாழ்க்கை, பணமின்றி உலகில் ஒன்றுமில்லை, பணமின்றிப் படிப்பில்லை, பணமின்றித் தகுதியில்லை, பணமின்றித் தராதரமில்லை, பணமின்றிக் கௌரவமில்லை, பணமின்றி உற்றாரில்லை, பணமின்றி சுற்றமில்லை, பணமின்றி ஊருமில்லை, முக்கியமாகச் சந்தோஷமில்லை என்று எண்ணுகின்றார்கள். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். நன்கு விளக்கவும்

நண்பர் மறத்தமிழன் அவர்களின் வாசம் இந்தப்பக்கம் வீசாததால், அவர் பனிப்பளுவில் சிக்கியிருக்ககூடும் என்று யூகித்து, கேள்வியை அப்படியே வைத்துக்கொண்டு இந்தத்திரியை 'பெண்டீங்கி' கட்டிப்போட விரும்பவில்லை.

அதனால் அந்தக் கேள்விக்கு நண்பர் இனியனை விடைக்கூறுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

4. இனியவன்
வெகு காலங்கழித்துத் தங்களை இங்கு காண்பதில் சந்தோஷம். தங்களுடைய கிசுகிசு திரிகள் யாவும் கும்பகர்ணன் தோழர்கள் ஆகிவிட்டன. மீண்டும் தூசு தட்டுங்கள். மீள்வருகைக்கு வரவேற்புக்களும் வாழ்த்துகளும்.

கேள்வி இதுதான்:
பணம் தேடுவதற்கே வாழ்க்கையின் சந்தோஷங்களைத் தொலைத்துவிட்டு வாழும் மக்கள், பணம்தான் வாழ்க்கை, பணமின்றி உலகில் ஒன்றுமில்லை, பணமின்றிப் படிப்பில்லை, பணமின்றித் தகுதியில்லை, பணமின்றித் தராதரமில்லை, பணமின்றிக் கௌரவமில்லை, பணமின்றி உற்றாரில்லை, பணமின்றி சுற்றமில்லை, பணமின்றி ஊருமில்லை, முக்கியமாகச் சந்தோஷமில்லை என்று எண்ணுகின்றார்கள். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். நன்கு விளக்கவும்.

இளசு
26-07-2008, 06:17 AM
பூர்ணிமா

உங்கள் பதிலை ஆழ்ந்து படித்தேன்.
சிந்தனை வீச்சும் அதைச் சுவையாக, தெளிவாக சொல்லும் பாங்கும் கண்டேன்.. பாராட்டுகள்.

( உங்கள் பதிவை எடிட் பட்டனை அழுத்தி நீங்களே செப்பனிடலாம்..)

மன்ற மக்களே,

டச்சு மொழி பற்றி ஆங்கிலத்தில் நான் படித்தது -
Dutch may not be threatened with extinction in the short or medium term, but it is in danger of losing domains.It could eventually become just a colloquial language , a language you use at home to speak with your family-the language you can best express your emotions in- but not the one you use for the serious things in life-work,money,science,technology ..

இதைத் தமிழுக்குப் பொருத்திப் பாருங்கள்...! பொருந்துமா இல்லையா?

பூமகள்
26-07-2008, 06:31 AM
சகோதரி பூர்ணிமா...

பதிலில் தெரிந்த சிந்தனைத் தெறிப்பு கண்டு பூரித்தேன்...

வந்ததும் உங்களின் சில பதிவுகளிலேயே சிந்தனை ஆற்றல் பளிச்சிடுகிறது.. அதனை மிகப் பெரும் மன்ற சான்றோர் ஒருவர் பாராட்டியிருப்பது உங்கள் திறனுக்கான கட்டியம் கூறுகிறது..!

மேலும் மேலும் பல பதிவுகள் கொடுத்து மன்ற குடும்பத்தில் ஒன்றாகி எங்களை இவ்வண்ணம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவீர்களென நம்புகிறேன்.

வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் சகோதரி பூர்ணிமா. :)

இனியவன்
26-07-2008, 03:10 PM
பணம் தேடுவதற்கே வாழ்க்கையின் சந்தோஷங்களைத் தொலைத்துவிட்டு வாழும் மக்கள், பணம்தான் வாழ்க்கை, பணமின்றி உலகில் ஒன்றுமில்லை, பணமின்றிப் படிப்பில்லை, பணமின்றித் தகுதியில்லை, பணமின்றித் தராதரமில்லை, பணமின்றிக் கௌரவமில்லை, பணமின்றி உற்றாரில்லை, பணமின்றி சுற்றமில்லை, பணமின்றி ஊருமில்லை, முக்கியமாகச் சந்தோஷமில்லை என்று எண்ணுகின்றார்கள். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். நன்கு விளக்கவும்.

மிக நீண்ட இடைவெளி என்பதல்ல.
அவ்வப்போது வருவேன்.
ஆக்கங்களைப் படிப்பேன்.
பிடித்திருந்தால் பின்னூட்டமுண்டு எப்போதும்.

அதிக வேலைப்பளு சில திரிகளைத்
தொட(ர) முடியாமல் செய்கிறது.

ஆபத்தில் கேட்டாலும் கேட்டீங்க
இப்ப நானிருப்பது ஆபத்தில்...

என்ன செய்ய இனிமே தப்பிக்க முடியாது...
ஏதாச்சும் சொல்லித்தான் ஆகணும்.

என்ன சொன்னாலும் ஏத்துக்குவீங்க தானே மக்கா... 

பணம் மட்டுமே வாழ்க்கையின்
மகிழ்ச்சியை எப்போதும் தராது.
சில வேளைகளில் தரலாம்.
அதுவே வாடிக்கையாகி விடாது.
அப்படி ஆக வேண்டும் என்று
நினைப்பது கடமையை மறந்த மடமை.

பணம் வரும் போது
கூடவே நம்மைச் சுற்றிலும்
கூட்டமும் கூடும்.
மழை நேரத்தில் படையெடுக்கும்
ஈசல்களைப் போல....

ஆனால் அவர்கள்
நம்மோடு சேர்ந்திருக்கும் நாட்கள்
அந்த ஈசல்களின் வாழ்வைப் போல அற்பமானது.

விளக்கைக் கண்டு மோட்சம் அது தான் என்று
முட்டி மோதி உயிர் விடும் ஈசல்கள்.
பணத்துக்காக நம்மோடு சேர்பவர்களும் அப்படித்தான்.
அது நம்மோடு ஒட்டியிருக்கும் வரை
அவர்களும் ஒட்டியிருப்பார்கள்.

அது நம்மை விட்டுச் சென்ற பிறகு அவர்களும்
நம்மை வெட்டி விடுவார்கள்.

வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் வரலாம்.
ஏற உதவிய ஏணியை எட்டி உதைத்தவன்
மீண்டும் கீழிறங்கும் போது
காலுடைந்து போவது தான் வாடிக்கை.

இல்லை, அவர் பஞ்சுப் பொதியில் குதிப்பார்
என்று சொல்வது வேடிக்கைக்குச் சரி.
வாழ்க்கைக்கு உதவா.

கண்ணதாசனின் வரிகளை
துணைக்கழைப்பது உசிதம்.

நமக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.

பணம் உள்ளவனும் இல்லாதவனும்
இந்த வரிகளை எண்ணினால்
வாழ்வில் இன்பம் சேரும்...
மாறாக பணத்தை மட்டுமே
எண்ணினால் துன்பம் தான் சேரும்...

நன்றி ஓவியா.

ராஜா
26-07-2008, 03:17 PM
பணம் மட்டுமே வாழ்க்கையல்ல என்று தொட்டுக் காட்டியிருக்கிறீர்கள் இனியவன்.

வந்தமைக்கும், பதில் தந்தமைக்கும் நன்றி..!

மறத்தமிழன்
26-07-2008, 07:32 PM
தாமதத்திற்கு வருத்தம்.

பணத்தைக்கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
பணமில்லாதவன் பிணம்:
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே;
பணம் பத்தும் செய்யும்;
பணம் பாதாளம் வரை பாயும்;
பொருளில்லாருக்கு இவ்வுலகமில்லை;
இல்லாளை இல்லாளும் , ஈன்ற பெற்றாளும் வேண்டாள்;
காசேதான் கடவுளடா.கடவுளுக்கும் அது தெரியுமடா.

இவை எல்லாம் உதாரணங்கள். நீங்கள் கேட்ட கேள்வியில் உள்ள அத்தனையும் பணம் இருந்தால்தானே செய்ய முடிகிறது. காசு இன்றைக்கு வரும் நாளைக்கு போகும் என்பர் சிலர். ஆனால் காசு காசுதானே. பணம் முக்கியம் இல்லை. குணமும் மனிதரும்தான் முக்கியம் என்பது வாதத்திற்கு வேண்டும் என்றால் சரியாக இருக்கலாம். ஆனால் நடைமுறை என்று வரும் போது உதவாது. நாம் இப்பொழுது உழைக்கின்ற பணத்துடன் எத்தனை பேர் திருப்திப்பட்டுக்கொள்கிறோம். இல்லைதானே.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கேற்ப நாம், சொர்க்கமாக இருக்கின்ற எமது ஊர், சொந்த பந்தங்கள் எல்லாம் இழந்து அந்நிய தேசத்தில் மாடாக உழைத்து ஓடாக தேயவில்லையா? என்ன காரணம் பணம்தானே.

வெளிநாடு சென்று உழைப்பதற்கு ஒவ்வொருவர் ஒவ்வொரு காரணம் சொல்வர். இருந்தாலும் பணம்தானே குறிக்கோள். அது இருந்தால் அந்நிய தேசம் செல்வோமா?

எத்தனை பேர் இவர் பணம் இல்லாதவர். எனவே அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று நினைக்கிறோம். பணம் உள்ளவருக்குத்தான் மாலைகளும் மரியாதைகளும்.

பணம் முக்கியமானது. வாழ்வின் தேவைகள் குறைந்தால் பணத்தின் தேவை குறையும் ஆனால் வாழ்வின் தேவை எப்பொழுதும் அதிகரிக்குமே தவிர குறையாது. எனவே பணத்தின் தேவையும் குறையாது.

ஆனால் அன்பர்களே! பணம் உள்ளவர்கள் இல்லாதவர்களுக்கு சிறிதேனும் கொடுத்து அந்த முகத்தில் மலரும் மகிழ்ச்சியில் நீங்களும் திழைத்து பேரின்ப பெருவாழ்வு அடையுங்கள்.

"வலியதே வையகத்தில் வாழும்"

Keelai Naadaan
27-07-2008, 05:24 AM
வெற்றியாளர் யார் என எஸ்.எம். சுனைத் ஹஸனீ விளக்கம்
காதலுக்கு சுஜா தந்த விளக்கம்
பெண்ணுரிமை பற்றிய மீராவின் விளக்கம்
தமிழ்மொழியின் நிலை பற்றிய பூர்ணிமாவின் விளக்கம்
பணம் பற்றி இருவேறு விளக்கம் தந்த இனியவன் மறத்தமிழன்
எல்லோருடைய கருத்துகளும் சிறப்பானவை.

ஒவ்வொரு கேள்வியையும் இருவரிடம் கேட்டிருந்தால் வெவ்வேறு விதமான பதில் கிடைக்குமோ என்னவோ.

சிறப்பான பின்னூட்டம் தந்து ஊக்கப்படுத்தும் ராஜா இளசு சிவா.ஜி பூமகள் விராடன் கண்மணி அமரன் மற்றும் பலரும் நன்றிகளுக்கும் பாராட்டுக்குரியவர்கள்

அகத்தியன்
27-07-2008, 08:36 AM
அகத்தியனின் முன்னுரை பலத்த எதிர்பார்ப்பை தெளித்திருந்தது. அதை முடித்திருந்தநேரம் நானும் ஓர் வேலை காரணமாக கணினித்திரையை விட்டு அகலவேண்டிய தேவை ஏற்படுத்தியது. இருந்தாலும் அதே பக்கத்தில் அவரின் பொறுப்புணர்ச்சியை அடுத்தடுத்த பதிவாக கண்டதால் தொடர்ந்தே படிக்கலானேன்.

இனி,

பதில்களை படித்தேன். சற்றே திறந்த சிந்தனையுடன் கலாச்சார சீரைவு பற்றி சொல்லப்பட்டிருந்ததும் குறிப்பாக மேலை நாட்டவர் கலாச்சாரத்தின் மீதான மோகத்தின் காரணத்தால் உண்டான பிரதிபலிப்பும் சொல்லப்பட்டிருக்கும் விதம் நன்று.

அதேவேளை, மேலை நாடுகளில் பிரத்தியேகமாக தமது குழந்தைகளின் கல்வி, மற்றும் இதர தேவைகளுக்கும் உழைக்க வேண்டியுள்ளது. இதனான் அவர்கள் பணமீட்டுவதிலேயே (பெற்றார்கள்) குறியாக உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையிருப்பதால், தமிழ் கலாச்சாரம், பண்பாட்டை தம் குழந்தைகளுக்கும் ஊட்ட எண்ணம் கொண்ட பெற்றாராலும் அதை நிவர்த்திசெய்யமுடியாத நிலமையும் காணப்படுகிறது.

ஏதோ தங்களின் பதிவை படிக்கையில் என் மூளையில் தட்டுப்பட்ட ஒருவிடயம்.....

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் பற்றிய வினாவிற்கு சிரத்தையுடன் அளித்த பதில் அருமை.
பாராட்டுக்கள் அகத்தியன்.

நன்றிகள் விராடரே உங்கள் விமர்சனத்திற்கு.

நீங்கள் சொல்லும் காரணம் எல்லாவிடத்திற்கும் பொருந்துமே. பாருங்கள், எல்லோரும்தான் பணமீட்ட குறியாய் இருக்கிறார்கள். அது அவர்காளின் பிள்ளைகளின் ப்கல்வி மற்றும் இதர செலவுகளுக்காக.

இது புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் கலாச்சார இடைவெளியில் மிகுந்த செல்வாக்கினை செலுத்துவதில்லை. ஆனால் செல்வாக்கு செலுத்துகின்றது.

இதற்கெல்லாம் காரணம் எமது மன நிலை. என்றே மீண்டும் நான் கூறுவேன். எமது கலாச்சாரத்தினை பாதுகாக்க வேண்டும் என்ற சிரத்தை எம்மிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கின்றது.

நாம் எமது கலாச்சாரத்தினை பேணுவதுவில் நெகிழ்ச்சி உள்ளவர்களாக இருக்கின்றோம். எம்மால் பிற கலாச்சாரங்களினை எமக்குள் அனுமதிக்க இயலுமாக இருக்கின்றது.
இதுவே மூல காரணம் என நான் கருதுகின்றேன்.

நன்றி

அமரன்
27-07-2008, 10:14 AM
ஒவ்வொரு கேள்வியையும் இருவரிடம் கேட்டிருந்தால் வெவ்வேறு விதமான பதில் கிடைக்குமோ என்னவோ.
நல்லாத்தான் இருக்கு உங்களது ஆலோசனை.. ஐந்து கேள்விகள்.. பத்துப் பதில்சொல்லிகள்.. ஆ!பத்து நாயகன் ராஜா அண்ணன் வரட்டும். பரிசீலினை செய்வோம்..

நன்றி கீழைநாடான்.

ஓவியா
27-07-2008, 10:58 AM
வணக்கம்.

என் விமர்சனம் இன்று மாலை (லண்லன் நேரம்) வரும். (யாரும் நம்ப மாட்டேங்களே, அட நம்புங்க மக்கா கண்டிப்பாக வரும் வரும் வரும்)

அதன்பின் இந்த மன்ற மகர ஜோதியை நான் யாரிடம் ஒப்படைக்கிறேன் என்று இன்று மாலை சொல்லுகிறேன்.

ஆனால் ஜோதி என் கேள்விக்கு விடையளித்த 11 மன்ற செல்வங்களில் ஒருவருக்குதான் கொடுக்கப்படும்.... சோ, கெட் ரேடி காய்ஸ்..

நன்றி..

காத்திருங்க..

(ராஜா அண்ணா: தாதா பில்லாட்டபேல்லாம் பலமாதான் கொடுக்கறா, பார்ப்போம் :p:p)

ராஜா
27-07-2008, 01:10 PM
ஆமாம்.. ஆமாம்.. !

பாசமலரின் பில்டப் பலமாத்தான் இருக்கு..!

அன்புத் தங்கை ஓவியாவுக்கு..

உன்னிடம் கையளிக்கப்பட்ட இந்த ஆ! 10..!, மிகச் சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது. நன்றிகளும், பாராட்டுகளும் உனக்கு..!

புதுமுகங்களிடம் வினாக்கணை தொடுத்து சிறப்பித்தது,.

ஒரு சிலர் பதில் சொல்ல இயலாதபோது, வேறு உறவுகளுக்கு கேள்வி விடுத்தது..

பதில் சொன்னவர்களில் ஒருவரையே ஆ! 10..! படைக்க அழைக்கும் முறையை அறிமுகப்படுத்தியது...

என்று புதுப் புது பரிமாணங்களை இந்தத் திரிக்கு அளித்திருக்கிறாய்..

மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது..!

ஆனால்...

ஆனால்...

ஆனால்..

ஆ! 10..! -ஐ இன்னொருவரிடம் கையளித்தபிறகு, உன் பங்களிப்பு இல்லாமலே இந்தத் திரி நடை போடும் என்று நீ சொல்லியிருப்பது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

உன் முடிவை மறு பரிசீலணை செய்வாயா தங்கையே..?

Keelai Naadaan
27-07-2008, 05:19 PM
நல்லாத்தான் இருக்கு உங்களது ஆலோசனை.. ஐந்து கேள்விகள்.. பத்துப் பதில்சொல்லிகள்.. ஆ!பத்து நாயகன் ராஜா அண்ணன் வரட்டும். பரிசீலினை செய்வோம்..

நன்றி கீழைநாடான்.
நன்றிகள் அமரன்.
அன்புள்ள உறவுகளே, இந்த திரியை அடுத்து யார் ஏந்தி சென்றாலும் கேள்வி என்னும் இந்த அன்பு வட்டத்தில் சகோதரி ஓவியா அவர்களிடம் கஷ்டமான கேள்வியை கேட்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஓவியா
27-07-2008, 09:12 PM
நன்றிகள் அமரன்.
அன்புள்ள உறவுகளே, இந்த திரியை அடுத்து யார் ஏந்தி சென்றாலும் கேள்வி என்னும் இந்த அன்பு வட்டத்தில் சகோதரி ஓவியா அவர்களிடம் கஷ்டமான கேள்வியை கேட்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ம்ம் யரும் என்னிடம் கேள்விகள் கேட்க்கப்படாது, காரணம் எனக்கு விடை எதுவும் தெரியாது, எனக்கு கேட்கத்தான் தெரியும். :D

ஓவியா
27-07-2008, 10:08 PM
அழகிய மணவாளன் அண்ணாவிற்கு,

முதலில் எனது நன்றிகள்.

ஆறறிவு மானிடர்களுக்கு ஐந்தறிவு மானின் விட்டுக்கொடுக்கும் செயல் ஒரு கருத்தாக அமையுமென்றால் அந்த கடவுளின் படைப்பில் எவ்வளவு விந்தை இருக்கின்றது!! ஏலே அண்ணா கதையை கேட்டு புல்லரிச்சு போச்சுலே! :D

//விட்டுக்கொடுத்தல் இருந்தால் அங்கு மனதிருப்தி கிடைக்கும், மனதிருப்தி கிடைப்பதால் அன்பு பெருகும், அன்பு பெருகுவதால் இல்லறம் சிறக்கும்// இந்த கருத்தை நான் முழுதும் ஆ தரிக்கிறேன்.

அம்மா பிள்ளைகளுக்கு விட்டுக்கொடுப்பது, கணவன் மனைவி பெற்றோருக்காக தாம்பத்தியத்தில் செய்யும் தியாகம், கணவன் மனைவிக்காக செய்யும் தியாகம், மனைவி கணவனுக்காக செய்யும் தியாகம்… விட்டுக்கொடுப்பதில் தான் அன்பு பெருகும் சந்தோசம் உயரும் என மிகச்சிறந்த பதிலை தந்து என் கண்ணில் நீரை வார்த்தீர்கள்.

மிகவும் சிறப்பான பதிலை தந்து எங்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தீர்கள். என் நன்றிகள்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ அண்ணாவிற்கு,

உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

வெற்றியென்பது இதுதான் என்று ஒரு விசயத்தை மட்டும் காட்ட முடியாது என்று ஆரம்பதிலே சுட்டிக்காட்டி, அது பலவகைப்படும் என்று என் அனைத்து கேள்விகளிலும் வெற்றி ஒழிந்துள்ளது ஒன்றைத்தவிர என்று அருமையாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள். சபாஸ்.

அப்படியே சரியென்றால் நீங்களே வெற்றியாளன் பிழையென்றால் மட்டும் என்னைச்சாருமென்பது உங்களிடம் குடிகொண்ட ஆன்மீக பக்தியினை பறைசாற்றுகிறது. அனைத்தும் சிறப்பான விளக்கம். சபாஸ்.

// எவனொருவன் இன ஜாதி பேதம் பார்க்காமல் முடிந்தவரை பிறர்களுக்கு வலிய சென்று உதவும் வரை அல்லது அவனால் உதவ முடியாவிடினும் குறைந்த பட்சம் தன்னால் எவனும் துன்பமடைந்து விடக்கூடாது என்று நினைக்கும் வரை அவன் இவ்வுலகத்தாரின் பார்வையிலும் இறைவன் பார்வையிலும் வெற்றியாளனாகவே வலம் வருவான் என்பது இந்த எளியோனின் கருத்து. // நல்ல விளக்கம்.

விஞ்ஞானி மதுரை அண்ணா,

என் பணிவான நன்றிகள்.

பொதுவாக சைன்ஸ் படித்தவர்கள், சிரிப்பை நன்கு ரசிப்பார்களாம் நீங்களும் அப்படியே வடிவேலு, விவேக்னு அழகாகவே ஆரம்பித்துள்ளீர்கள். ரொம்பவே ரசித்தேன் மக்கா!!:D

// விஞ்ஞானத்தை எடுத்துக் கொண்டால் ஆக்கல் அழித்தல் காத்தல் ஆகியவை இயற்கையின் நியதிகளாகின்றன./ / ஆமாம் இன்று நடக்கும் ஒவ்வொரு விசயத்திலும் கண்களுக்கு புலப்பட்டத பல விசயங்கள் அடங்கியுள்ளன என்பது யாரும் மறுக்க முடியாத ஒன்று.//ஆக்க சக்திகளைப் பயன் படுத்தி உலக வாழ்வை மேம்படுத்தும் விஞ்ஞானிகளுக்கே அழிவு சக்திகளிலிருந்து காக்கும் பொறுப்பும் இருக்கிறது./ உங்கள் அணுசக்தியின் விமர்சனம் அபாரம்.

அதுவும் இந்தியா எப்படி தன்னை அன்னியனிடம் இழந்தது என்பது உண்மையிலே நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டிய விசயத்தில் ஒன்று. பல உண்மை விசயங்களை அளித்து முழு பாராட்டையும் பெருகின்றீர்கள். நன்றிகள்.

இனியனுக்கு வணக்கம்.

பணம் மட்டும் வாழ்க்கை என்பது கடமை மறந்த மடமை. சூப்பர் வசனம் நண்பா.

பணமிருந்தால்தான் சுற்றம், ஆனால் குணமே நிரந்தரம். உண்மைதான். கண்ணதாசனின் வரிகளையும், ஈசல்களையும் கொண்டு விடையை மிக கச்சிதமாக விளக்கியுள்ளீர்கள்.

பணம் அவசியம் ஆனால் அது வாழ்கையை வழிநடத்த மட்டும் என்பதை நன்கு சொல்லியுள்ளீர்கள். புரிந்தது. மிக்க நன்றி.

மறத்தமிழனுக்கு வணக்கத்துடன் நன்றிகள்,
காரணம் தாமதமாக வந்தாழும், சிரமம் பாராது விடையளித்தமைக்கு மனம் மகிழ்ந்தேன்.

குணம் நடைமுறைக்கு உதவாது, பணம்தான் உலகின் தேவை என்று பல உதாரணங்களை காட்டி அருமையாக ஆரம்பித்துள்ளீர்கள். பணத்திற்க்காக எந்தனை தியாகம் செய்கிறோம் என்று சுட்டியும் காட்டிள்ளீர்கள். சபாஸ்.

பணத்திற்குதான் மாலையும் மரியாதையும், வாழ்வின் தேவைக்கு பணம் வேண்டும், ஆனால் கொஞ்சம் தானம் கொடுங்கள் அதிலும் மகிழ்ச்சியை காணலாம் என்று நல்ல வாதத்தோடு முடித்துள்ளீர்கள். நன்று .

அகத்தியா வணக்கம்.
இந்தக்கேள்வி அம்பை உங்களுக்கு பாய்ச்சியது, உங்களிடம் நான் எப்பொழுதும் கானும் தமிழ்ப்பற்று மற்றும் தமிழன் பற்று.

புலமபெயர்தலின் நன்மை தீமையை சுட்டி வாதத்தை ஆரம்பித்தது அருமையாக இருக்கு, // 1.கலாச்சார இடைவெளி 2.தலைமுறை இடைவெளி// ஆஹா எனக்குள் தோன்றிய அதே விடை உன்னிடமும். மூத்தோர்களின் பங்கில் இன்னமும் கோவில் கும்பாவிஷயங்கள் இன்னும் அப்படியேதான் அக்கறையில், ஆனாலும் புதியதலைமுறையினர்களுக்கு தங்களின் அடையாளங்கள் சொந்த மண்ணினை விட்டு தூரமாகிப்போய்விட்டது என்பதும் இதற்க்கு ஒரு காரணம்.

// தமது ஆத்ம திருப்தியினை மட்டும் கவனித்த மூத்தவர்கள் இளைய தலை முறை தொடர்பான கவனத்தினை குறைவாகவே கொண்டிருந்தனர் என்பது என் எண்ணம்.// இது அருமையான விடை.

உன் ஆழ்ந்த பதிலில் நான் பல அரிய விசயங்களை புரிந்துக்கொண்டேன். மிக்க நன்றி தம்பி.

கீழை நாடான் அண்ணாவிற்கு என் வணக்கம்.

// கேள்விகளை கொண்டே கேட்பவரை புரிந்து கொள்ள முடிகிறது.// ஐஸ் ஐஸ் ஐஸ் :lachen001:

// மனதில் படுவதை அப்படியே சொல்கிறேன். இந்த கேள்வியை சில வருடங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் தற்கொலை செய்து கொள்வேன் ஆ...ஊ.. என வசனம் பேசியிருப்பேன். இப்போது நான் அந்த நிலையில் இல்லை.//
அண்ணா காதல் என்றால் பரவாயில்லை, அதுவும் நல்ல நட்பிற்க்காக தற்கொலையா!!! அடப்பாவமே!! (ஒருவேலை என் கேள்வி உங்களுக்கு புரியவில்லையோ!!)

கேள்வியை விட இரத்தினச்சுருக்கமான விடையை அளித்து என்னை சங்கடமாக்கி விட்டீர்கள். ஆனாலும் நான் இப்படியொரு ஒரு வரி பதிலை எதிர்பார்க்கவேயில்லை.:eek:

இருப்பினும் பாதிக்கப்பட்டவர் தன் கவனத்தை வெறொரு விசயத்தில் கவனத்தை திசை திருப்பி மீள்வதுதான் சால சிறந்தது என்பது ஒரு நல்ல பதிலாகவே புரிகிறது. :icon_b:

எப்படியிருப்பினும். நல்லதொரு (ஒரு) பதில். கலந்து சிறப்பித்தமைக்கு நன்றி அண்ணா.

வணக்கம் பூர்ணிமா.

எங்கள் நாட்டில் மாணவர்கள் தான் விடை கூறுவார்கள் ;)

ஆஹா முதலில் மொழியழிவை தவிற்க முடியாது என்று ஆணியடித்து என் கட்சி சேர்ந்து விட்டீர்கள். (எதிர்கட்ச்சி மக்கள் அடிக்க வறாங்கோய்ய்ய்ய்ய்) பின் அது அழியாது அழியவும் முடியாது என்று அருமையாய் வாதாடியுள்ளீர்கள். சூப்பர்மா சூப்பர்.

சினிமா தமிழை அழிக்கிறது என்று மானியம் கொடுத்து அங்கு
வாழ வைக்கும் அதே அரசு, எங்கும் மொழியழிவை தடுக்க அவசியம் தலையிடவேண்டும் என்பது மிகவும் நல்ல கருத்தாகதான் தெரிகிறது.

பல நல்ல உதாரணங்களை முக்கியமாக அந்த டை, பில், மாயா கொட்டை வடிநீர், காட்டி ஆழமாக எழுதியுள்ளீர்கள்.
ஆனாலும், என்னை இப்படி கேட்க வைத்ததே, அன்மையில் நான் தமிழ்நாட்டில் கழித்த என் 3வார விடுமுறைதான். அருமையான பதிலுக்கு மிக்க நன்றிகள்.

நம்பியண்ணாவிற்கு வணக்கம். அத்துடன் என் நன்றிகளும் .

முதலில் சிறார் குற்றத்திக்கு பெற்றோரே காரணம் என்பது நான் ஏற்றுக்கொள்ளும் உண்மை அதை உங்களின் பதிலில் காண்பது எனக்கு சந்தோஷமே.

சுயநலமான சமுதாயத்தினாலும், நிலையற்ற அரசாங்கத்தினாலும் சேர வேண்டிய நன்மைகள் மக்களுக்கு சேராமல் போகின்றது, கேள்விகேட்கும் இடத்தில் கேள்வியை மறந்த சமுதாயம், பணக்கார குழந்தகளுக்கும் பிரச்சனை, என கனக்கச்சிதமாக விடையை வழங்கியுள்ளீர்கள்.

//கடைசியாக சேவை செய்யும் அமைப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்தாலே போதும் புறக்கணிக்க படுபவர்கள் இல்லாமல் போவார்கள் , சமுதாயமும் அழகாகவே காட்சியளிக்கும்.// இவையனைத்தும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள வேண்டியவைகளே.எப்படியோ தாதாவின் கேள்விக்கு விடையளித்து நற்பெயர் பெற்று விட்டீர்கள்.
மிக்க நன்றி. மன்றத்துடன் என்றும் இணைந்திருங்கள்.

அன்பு சுஜாவிற்க்கு வணக்கம்,

ஆரம்பமே அக்கா அக்கானு ஐஸா இருக்கு போல,:D:D

காதல் வந்தால் காதலி என்று முதலடியிலே நெத்தியடி பதிலில் அசத்துறீங்க தம்பி, :icon_b:

// காதல் எதையும் எதிர்பார்க்காமல் செய்வது மற்றும் பெறுவது என்று சொலிக்கொண்டு இலைமறை காய்மறை போன்ற ரகசிய திருட்டு// இது உண்மையா மக்களே, இருந்தாலும் ஏன் தம்பி இப்படி அப்பட்டமா உண்மையை பேசுகிறீர்கள்.

காதல் என்பது காதல்தான் அதில் கலவைகள் இல்லை, சக்தி=மருந்து என்று ஒரு வசனம், // காதலித்தவன் கேட்பதில்லை ;அப்படி கேட்டிருந்தாலோ -பிறர் கேட்கும் பொழுது வபோத்திகொண்டு நின்றாலோ காதலியின் தேர்ந்தெடுப்பில் தவறு இருக்கிறது// காதல் நிறம், பணம், அந்தஸ்து எதையுமே பார்க்காது என்பது ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் வரதட்சனை கேட்டால் காதலி சரியான காதலை/காதலனை தேர்ந்தெடுக்க வில்லை என்பதை முடிவாக ‘நச்சுனு’ சுட்டிக்காட்டி வெற்றிப்பெற்றுவிட்டாய். என் பாராட்டுக்கள்.

வணக்கம் மீரா.
(நீங்கள் புதியவர், அதுவும் பெண் அதான் தயங்காமல் தனிமடலில் 2 கேள்விகள் கேட்டேன், போட்டு குடுத்துட்ட்டிங்களே மக்கா!!):D:D சரி சரி.

பாடுபட்டு அன்று பெற்ற சுதந்திரம் இன்று எங்குள்ளது என்று யாருக்கு தெரியுமோ!!! பெண்களுக்கு சுதந்திரமில்லையா அல்லது சரியான விதத்தில் பயன்படுத்தினோமா என்பது பார்த்தால் எனக்கும் கேள்விதான் மிஞ்சும், நீங்கள் இல்லையென்று கூறியுள்ளீர்கள்.

//ஆனால் இப்போது ஆணுக்கு சரி நிகராக பெண்களும் எல்லா துறையிலும் முன்னேறிக்கிட்டு தான் இருக்காங்க// என்பதை கண்டு மகிழ்ந்தேன். அதே நேரம் அளவுக்கு அதிகமான சுதந்திரம் தவறான வழிக்கு இட்டுச்செல்வது மறுக்க முடியாத ஒன்று.

சில சமயம் நீங்கள் கூறுவதுபோல் பெண்களின் பல சாதனை நம்பை பிரமிக்கத்தான் வைக்கின்றது. ஒரு பெண்ணுக்கு நல்ல துணை கிடைத்தால் அவளுக்கு வெற்றியே!! :icon_b:

பெண்களுக்கு பெண்களே எதிரிகள் என்பதை முதலில் ஒரு பெண்ணாக யாரும் செய்யக்கூடாது என்பதனை தெள்ளத்தெலிவாக வாதாடியுள்ளீர்கள். உங்கள் வாததத்திறன் அபாரம். மனமகிழ்ந்தேன் வாய்ப்பினை நன்கு பயன்படுத்தி உங்கள் திறமையை காட்டியுள்ளீர்கள். மிக்க நன்றி.

ஓவியா
27-07-2008, 10:14 PM
ஆமாம்.. ஆமாம்.. !

பாசமலரின் பில்டப் பலமாத்தான் இருக்கு..!

அன்புத் தங்கை ஓவியாவுக்கு..

உன்னிடம் கையளிக்கப்பட்ட இந்த ஆ! 10..!, மிகச் சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது. நன்றிகளும், பாராட்டுகளும் உனக்கு..!

புதுமுகங்களிடம் வினாக்கணை தொடுத்து சிறப்பித்தது,.

ஒரு சிலர் பதில் சொல்ல இயலாதபோது, வேறு உறவுகளுக்கு கேள்வி விடுத்தது..

பதில் சொன்னவர்களில் ஒருவரையே ஆ! 10..! படைக்க அழைக்கும் முறையை அறிமுகப்படுத்தியது...

என்று புதுப் புது பரிமாணங்களை இந்தத் திரிக்கு அளித்திருக்கிறாய்..

மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது..!

ஆனால்...

ஆனால்...

ஆனால்..

ஆ! 10..! -ஐ இன்னொருவரிடம் கையளித்தபிறகு, உன் பங்களிப்பு இல்லாமலே இந்தத் திரி நடை போடும் என்று நீ சொல்லியிருப்பது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

உன் முடிவை மறு பரிசீலணை செய்வாயா தங்கையே..?

மிக்க நன்றியண்ணா,

நான் என்றும் மன்ற மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி.

அண்ணா, சிலர் மாறாமல் அப்படியே இருப்பார்கள், காரணம் அவர்களுக்கு 1000 சொந்தம் பந்தம் சுற்றியிருக்கும் அதனால் சிலரின் அன்பு புரியாது, ஆனால் எனக்கு மன்றம்தான் சொந்தம். உங்கள் அன்பு என்னை மாற்றிவிட்டது, இனி அவ்வப்பொது வருவேன்.

எட்டாப்பழம் எனக்கும் ஒருநாள் புளிக்கும் என்பது எழுதாதகதை. :D:D அப்பொழுது முழுமையாக வருவேன்.

உங்கள் பாசத்திற்க்கு என்றும் அடிமையாகும் தங்கை
- ஓவியா.

........................................................................................................

ஓவியா
27-07-2008, 10:18 PM
http://www.istockphoto.com/file_thumbview_approve/2316785/2/istockphoto_2316785_holding_roses.jpg

நன்றி மக்களே, வாய்ப்பளித்த அமரன், அக்னி, ராஜா அண்ணாவிற்க்கு மற்றும் கலந்து சிறப்பித்த அந்த 11 மணிகளுக்கும், பின்னூட்டமிட்ட சான்றோர்களுக்கும், பின்னூட்டமிடாமல் படித்து சென்ற நெஞ்சங்களுக்கு, படிக்கும் உங்களுக்கும், எழுதும் எனக்கும், எனது அன்பு வணக்கங்கள்.

அடுத்தச்சுடரை அணையாமல் கைகளில் ஏந்தி ஊர்வலம் வரப்போகிறவர் நம்ப.................................
பில்லா என் கோவின் அதிபதி தெ கிரேட் அழகிய மணவாளன்.

ராஜா
28-07-2008, 03:13 AM
அட்ரா சக்கை..!

தப்"பில்லா" தேர்வு..!

ஓவியா
28-07-2008, 03:34 AM
ஆனால் ராஜா அண்ணா, நம்ப (ரெஸ்பெக்டெட்) அழகிய மனவாளன் அவருடைய அழகிய மனைவியுடன் சுற்றுலா செல்ல ஏற்ப்பாடாகிவிட்டதாம், ஆளு எஸ்கேப்..... சரி இந்தமுறை ஆளை கொஞ்சம் விட்டுப் பிடிப்போம். ஜாலியா பொழுதை கழித்துவிட்டு வரட்டும். :D

அடுத்து லிஸ்ட்டில் 9 பேரர் முந்தி நிற்ப்பவர் எஸ்.எம். சுனைத் ஹஸனீ அவர்கள்....:D

அதனால் (வி இன்வைட் தெ ஹோனரபல் :D) எஸ்.எம். சுனைத் ஹஸனீ அவர்களிடம் சுடர் கைமாறப்படுகிறது.

வாழ்த்துக்கள் எஸ்.எம். சுனைத் ஹஸனீ.

ராஜா
28-07-2008, 03:39 AM
அப்படியா..?

வாழ்த்துகள்..!!

அறிவாளர் ஹசனியின் ஒப்புதல் கிடைத்துவிட்டதா..?

ஓவியா
28-07-2008, 03:42 AM
அப்படியா..?

வாழ்த்துகள்..!!

அறிவாளர் ஹசனியின் ஒப்புதல் கிடைத்துவிட்டதா..?

அடடா ஒப்புதல் கிடைக்குமானு கேட்ககூடாது, இந்தா நைனா இதப்புடினு உரிமையா கொடுக்கனும். அதான் சுடரின் விதி. :)

அனேகமா அறிவாளர் ஹசன் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார் என்று நம்புவோம். இல்லைனா அடுத்த ஆள புடிப்போம். கொடுப்போம்.

பாலகன்
28-07-2008, 04:08 AM
புரிந்தமைக்கு நன்றி சொந்தங்களே

அன்பு வேன்டுகோளை தட்டிக்கழிச்சிட்டதா மட்டும் தப்பா நெனச்சிடாதீங்க....

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ராசா அண்ணே

அன்புடன்

poornima
28-07-2008, 06:09 AM
சுடர் மாற்றித் தந்தது இருக்கட்டும்.. நீங்களும் இந்த தொடரோட்டத்தில்
பங்கேற்பீர்கள் தானே..?

சுடர் வாங்கிக் கொண்டவர் கேள்விகளை இதற்கு முன் சுடர் தாங்கியவர்களிடமிருந்து தொடங்கினால் என்ன..?;-)

பத்த வச்சிட்டியே பரட்டை..

ராஜா
28-07-2008, 07:38 AM

அட..! சூப்பர்..!!!

நல்ல ஐடியா பூர்ணிமா..!!!

அடுத்த ஆபத்தாளரே.. ! பூர்ணிமா சொன்னதை பூரணமா கடைப்பிடிங்க..!

அமரன்
28-07-2008, 12:05 PM
கலகலக்குது... கலகலக்குது...
ஓவிய ஆ! பத்து.. அழகிய ஆ!பத்து.. கவியாபத்து...
சூப்பரா இருக்குங்கோ..

யக்கோவ்...
புது வேகம்.. புதுக் கோணம்.. புதுப் பரிணாமம்... கொடுத்துக்கலக்கிய உங்களுக்கு நாமல்லவா சொல்லவேண்டும் நன்றி..

ராஜா
28-07-2008, 01:05 PM
என்ன சுனைத் ஹசனீ..?

எப்போ கேள்வித் தொகுப்பு தரப்போறீங்க..?

திரி தலைப்பைத் திருத்தணுமே.. ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுங்க..!

அமரன்
28-07-2008, 01:28 PM
ஓவியாக்கா நிச்சயம் தனிமடலில் அழைத்திருப்பா.. இருந்தாலும் நானும் கவனயீர்ப்புச் செய்திருக்கிறேன் அண்ணா.. விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என்று நம்புவோம்..

ஓவியா
28-07-2008, 01:32 PM
கலகலக்குது... கலகலக்குது...
ஓவிய ஆ! பத்து.. அழகிய ஆ!பத்து.. கவியாபத்து...
சூப்பரா இருக்குங்கோ..

யக்கோவ்...
புது வேகம்.. புதுக் கோணம்.. புதுப் பரிணாமம்... கொடுத்துக்கலக்கிய உங்களுக்கு நாமல்லவா சொல்லவேண்டும் நன்றி..

நன்றி அமரன். மனம் மகிழ்ந்தேன்.

ஆமாம் ராஜா அண்ணா, ஹசானுக்கு நான் தனிமடலில் சொல்லிவிட்டேன். :) இன்னும் பதிலிடவில்லை.

ஒருவேளை என் 'கேள்வி பதிகளை' கண்டு இது ரொம்ப பெரிய ப்ரோஜெக்ட்னு நினைத்தாகிவிட்டதோ!!!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
28-07-2008, 06:06 PM
அன்பு நெஞ்சங்களே. தாமதமான தகவலுக்கு எல்லோரும் என்னை மன்னியுங்கள். ஒரு பெரும் அலுவலகச் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவித்துக்கொண்டிருக்கிறேன். இந்த சூழலில் தங்களின் திரியை என்னால் சிறப்பாக தொடர முடியமாவென்பது சந்தேகமே. ஆதலால் என்னை விட அறிவாளி ஒருவரை தேர்ந்தெடுத்து அவரிடம் கொடுத்து சிறப்பாக தொடரச் செய்யுங்கள். ஓரிரு திரிகளுக்குப்பின் நான் தொடர்ந்து கொள்கிறேன். ஓவியா ராஜா அமரன் நீங்கள் மூவரும் கண்டிப்பாய் என்னை மன்னிக்க வேண்டும். மேலும் இந்த திரி சிறப்பாக தொடர என்னால் முடிந்த அளவு தங்களுடன் சேர்த்து பங்காற்றுவேன்.

ராஜா
28-07-2008, 06:12 PM
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சரி..!

ஓவியா
28-07-2008, 09:47 PM
அலுவலக வேலைத்தான் முக்கியம் ஹசனீ, நீங்க தாராளமாக அதில் கவனம் கொள்ளுங்கள்.

இனி மதுரை வீரன் அண்ணாவை அன்புடன் அழைக்கிறேன்.

வாருங்கள் இனி சுடர் உங்களிடம் கொடுக்கப்படுகிறது.

(நீங்களாவது என் பேர காப்பாத்துங்க அண்ணா :traurig001:)

மதுரை மைந்தன்
28-07-2008, 11:53 PM
அலுவலக வேலைத்தான் முக்கியம் ஹசனீ, நீங்க தாராளமாக அதில் கவனம் கொள்ளுங்கள்.

இனி மதுரை வீரன் அண்ணாவை அன்புடன் அழைக்கிறேன்.

வாருங்கள் இனி சுடர் உங்களிடம் கொடுக்கப்படுகிறது.

(நீங்களாவது என் பேர காப்பாத்துங்க அண்ணா :traurig001:)

அன்பு ஓவியா

உங்களது விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் நான் இருப்பதை வருத்தத்துடன் கூறிக்கொள்கிறேன்.

முதலாவதாக நான் இன்னும் சில வாரங்களில் புலம் பெயர்கிறேன். ஆஸ்திரேலியாவில் நிரந்தர வேலை ஒன்று கிட்டி உள்ளது. அதன் நிமித்தம் இங்கு ஏற்றுக் கொண்ட பணிகளை விரைவில் முடிக்ககும் நிர்பந்தத்தில் உள்ளேன்.

இரண்டாவதாக விஞ்ஞானி தொடர் கதையை ஆரம்பித்துள்ளது நீங்கள் அறிந்ததே. அதை புலம் பெயர்வதற்கு முன் முடிக்க திட்டமிட்டுள்ளேன்.

ஏனைய நண்பர்கள் யாரிடமாவது இச்சுடரை மாற்றித் தருமாறு விண்ணப்பிக்கிறேன்.

அனபுடன்

மதுரை வீரன்

ராஜா
29-07-2008, 04:34 AM
அன்பு பாசமலரே..!

மூன்றாவது பட்சியும் பறந்துடிச்சா..?

நம்ம திரிக்கு ஆள் அழைத்தே மன்ற ஜனத்தொகையை குறைச்சுடுவே போலிருக்கே..!

இன்னும் ஏழு பேர் இருக்காங்க.. விடாதே.. விரட்டிப் பிடி..!

(புதியவர்கள் 10 வெவ்வேறு உறவுகளிடம் கேள்வி கேட்பதில் உள்ள சிரமத்தையும் என்னால் உணரமுடிகிறது..!)

ஓவியா
29-07-2008, 10:17 AM
நீங்களும் காற்றில் பறக்க விட்டுடீங்களே!!!! :p:p

சரி மதுரையண்ணா, புது வேலைக்கு எனது வாழ்த்துக்கள்.

அடுத்து இனியவன் அவரும் வேலைப்பளுவில், :)

மறத்தமிழன் இவருக்கும் வேலைப்பளுவாக இருக்கலாம், அல்லது நெட் வசது குறைவாக இருக்கலாம் காரணம் விடையே சில தினங்கள் கழித்துதான் தந்தார்.

ஐந்து ஆண்களின் நிலமை இப்படியுள்ளதால், :rolleyes:

இனி ஒரு பெண்னை அழைக்கிறேன்.

தோழி மீரா(தமிழ்) அவர்களை பெருமையுடன் அழக்கிறேன்.

வாருங்கள் மீரா.

ராஜா
29-07-2008, 12:40 PM
அடுத்த வலைவீச்சாவது பலனளிக்குமா..?

சாய் மீராவுக்கும், கலைவேந்தருக்கும் மடல் அனுப்புங்க..

ஓவியா
30-07-2008, 09:35 AM
நான் நேற்று 11.17காலை மீராவை அழைத்துள்ளேன், பின் தனி மடலிலும் கூறிவிட்டேன், அவர் 1.24மதியம் வந்து திரியை கண்டுள்ளார், அதன் பின் எனக்கு தனிமடலும் முடியும் முடியாது என்று எதுவுமே போடவில்லை, இங்கும் ஒன்றும் கூறவில்லை. ஏனோ தெரியவில்லை.
ஓருவேலை இவரும் பளிப்பளுவில் இருக்காறா என்று தெரியவில்லை.

இனி பூர்ணிமாவை அழைக்கிறேன், பூர்ணிமா சுடர் உங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

நீங்களாவது என்னை காப்பாற்றுங்கள். ப்லீஸ். :traurig001:

சுடர் இவ்வளோ மோசமா போச்சே :cool::cool:

..........................................................................................

ராஜா அண்ணா, கலை அண்ணா இதை ஏற்றுக்கொள்ள உங்களிடம் சமத்தித்து விட்டாரா?

poornima
30-07-2008, 10:25 AM
சுடரின் ஜோதியில் மட்டுமே நிழல் நனைக்க இப்போதைக்கு விரும்புகிறேன்..

மன்ற மக்களைப் புரிந்துகொள்ள விடுப்பில் இருப்பவர்களை விட்டுவிட்டு
ஏனையோர்களை அழைப்பதில் அவர்களைப் பற்றி அறிய வேண்டுமாயின்
அவர்களின் ஏதேனும் ஒரு பதிவையாவது படிக்க வேண்டும்..

இப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்து வருகிறேன்.. இன்னும் ஒரு தனிப்பட்ட உறுப்பின நண்பர்களின் தனித்தன்மையை அறிய
இயலவில்லை.. பின் எப்படி நான் கேள்வி கேட்க இயலும்..

ஓவியா அக்கா புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.. வேண்டுமானால் ஒன்று செய்யலாம்.. கேள்விகளை உங்களிடமிருந்து
வேண்டுமானால் துவங்குகிறேன்..

நீங்கள் தயாரா..?

அமரன்
30-07-2008, 10:28 AM
அறிக்கைக்கு நன்றி பூர்ணிமா அவர்களே!
பொதுவான கேள்விகேட்டு தனித்தன்மையை அறியவும் சுடர் வழிகாட்டும்..
முயன்று பாருங்களேன்..

ராஜா
30-07-2008, 10:33 AM
கேள்வி கேட்பதற்கு ஆட்கள் முன் வராமைக்கு பல காரணங்கள் இருக்கலாம்.

தன்னம்பிக்கையும், தனித்திறமையும், நேரமும் உள்ளவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அவர்களை நாம் இன்னும் அணுகவில்லை என்று நினைக்கிறேன்.

புதியவர்களை மட்டுமே அழைப்பது என்ற கட்டுப்பாட்டு வளையத்தில் இருந்து வெளியே வா பாசமலரே..!
______________________________________________
கலைவேந்தர் முன்பே கேள்விகள் கேட்டுவிட்டார்.

ஓவியா
30-07-2008, 10:34 AM
சுடரின் ஜோதியில் மட்டுமே நிழல் நனைக்க இப்போதைக்கு விரும்புகிறேன்..

மன்ற மக்களைப் புரிந்துகொள்ள விடுப்பில் இருப்பவர்களை விட்டுவிட்டு
ஏனையோர்களை அழைப்பதில் அவர்களைப் பற்றி அறிய வேண்டுமாயின்
அவர்களின் ஏதேனும் ஒரு பதிவையாவது படிக்க வேண்டும்..

இப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்து வருகிறேன்.. இன்னும் ஒரு தனிப்பட்ட உறுப்பின நண்பர்களின் தனித்தன்மையை அறிய
இயலவில்லை.. பின் எப்படி நான் கேள்வி கேட்க இயலும்..

ஓவியா அக்கா புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.. வேண்டுமானால் ஒன்று செய்யலாம்.. கேள்விகளை உங்களிடமிருந்து
வேண்டுமானால் துவங்குகிறேன்..

நீங்கள் தயாரா..?

மிக்க நன்றி பூர்ணிமா. மனம் மகிழ்ந்தேன். :)

சரி என்னிடமே முதல் கேள்வி அம்பை எய்தலாம்.

நான் இன்னும் இரண்டு நாட்களில் மன்றதிலிருந்து பல மாதங்கள் விடுப்பில் செல்கிறேன், அதனால் கேள்வியை நீங்கள் விரைவில் கொடுத்தீர்கள் என்றால் விடையளிக்க வசதியாக இருக்கும். :)

மீண்டும் நன்றிகள்.

ஓவியா
30-07-2008, 10:39 AM
கேள்வி கேட்பதற்கு ஆட்கள் முன் வராமைக்கு பல காரணங்கள் இருக்கலாம்.

தன்னம்பிக்கையும், தனித்திறமையும், நேரமும் உள்ளவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அவர்களை நாம் இன்னும் அணுகவில்லை என்று நினைக்கிறேன்.

புதியவர்களை மட்டுமே அழைப்பது என்ற கட்டுப்பாட்டு வளையத்தில் இருந்து வெளியே வா பாசமலரே..!
______________________________________________
கலைவேந்தர் முன்பே கேள்விகள் கேட்டுவிட்டார்.

நான் போகும் பொழுது வா பாசமலரே என்று அன்பாய் அழைக்கும் என் தங்கமே நீர் வாழ்க, உன் சேவை வாழ்க....:)

புதியவர் பூர்ணிமா சுடரை தொடர்வார். :)

poornima
30-07-2008, 10:40 AM
இந்த கேள்வி சுடர் தந்த சுடர்க்கொடி ஓவியாவுக்கு

தமிழ்நாட்டில் 3 வார விடுப்பைக் கழித்த உங்களுக்கு மனதை பாதிக்கச்
செய்த சம்பவம், நெகிழ்த்திய சம்பவம் ஏதும் உண்டா ?( ஒரு பதிவில்
குறிப்பிட்டிருந்தீர்கள் அதனால்தான் கேட்டேன் )

பெரியவர் இளசுவுக்கு ஒரு கேள்வி.

அடிப்படையில் நீங்கள் ஒரு மருத்துவர்.. ஆனால் எல்லாத் துறைகள்
தொடர்பாகவும் பதிலளிக்கிறீர்கள்..பின்னூட்டமிடுகிறீர்கள்.. இது அனுபவ
அறிவா..? கற்றுணர்ந்ததா..?

பொதுவாய் ஒரு கேள்வி..

மிகச்சிறந்த கவிதைகள் எல்லாம் முன்பே எழுதப்பட்டு விட்டன என்று
சுஜாதா ஒருமுறை சொல்லியிருந்தார்.இந்தக் கருத்தை ஏற்கிறீர்களா? மறுதலிக்கிறீர்களா?

ராஜா
30-07-2008, 10:51 AM
ஆ!..10 ! க்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை நினைத்து மனம் வலிக்கிறது..!

ஓவியா
30-07-2008, 11:26 AM
ஆ!..10 ! க்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை நினைத்து மனம் வலிக்கிறது..!

காஞ்சிபோன பூமி எல்லாம்
வற்றாத நதியை பார்த்து ஆறுதல் அடையும்.

அந்த நதியே காஞ்சி போயிட்டா?
துன்ப படரவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.

ஆனா

ஆனா

ஆனா

ஆனா

ஆனா அந்த தெய்வமே கலங்கி நின்னா,
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?

ஓவியா: :traurig001::traurig001::traurig001:

ஆ-பத்தை பாட்டுக்கு பாட்டா மாத்திட்டீங்களே எசமான். :lachen001::lachen001:

poornima
30-07-2008, 01:47 PM
ஆனா அந்த தெய்வமே கலங்கி நின்னா,
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?

ஓவியா: :traurig001::traurig001::traurig001:

ஆ-பத்தை பாட்டுக்கு பாட்டா மாத்திட்டீங்களே எசமான். :lachen001::lachen001:

அப்படி சொல்லிட்டு அப்படியே போனா எப்படி..? :-)

என் கேள்விக்கென்ன பதில் ?
என் கேள்விக்கெங்கே பதில் ?

ஓவியா
30-07-2008, 01:51 PM
வரும் வரும் இன்று இரவு வரும்.

நன்றி பூர்ணிமா.

ஓவியா
31-07-2008, 10:11 AM
இந்த கேள்வி சுடர் தந்த சுடர்க்கொடி ஓவியாவுக்கு

தமிழ்நாட்டில் 3 வார விடுப்பைக் கழித்த உங்களுக்கு மனதை பாதிக்கச்
செய்த சம்பவம், நெகிழ்த்திய சம்பவம் ஏதும் உண்டா ?( ஒரு பதிவில்
குறிப்பிட்டிருந்தீர்கள் அதனால்தான் கேட்டேன் )

முதல் கேள்விக்கணையை என்னிடமே தொடுத்து விட்டீர்கள், வந்ததும் ரொம்ப சமத்தாதான் இருக்கறீங்க பூர்ணிமா.

poornima
31-07-2008, 10:20 AM
எல்லாம் உங்கக்கிட்டே இருக்கிறதனாலதான் அக்கா :-)

தாமரை
31-07-2008, 11:30 AM
பொதுவாய் ஒரு கேள்வி..

மிகச்சிறந்த கவிதைகள் எல்லாம் முன்பே எழுதப்பட்டு விட்டன என்று
சுஜாதா ஒருமுறை சொல்லியிருந்தார்.இந்தக் கருத்தை ஏற்கிறீர்களா? மறுதலிக்கிறீர்களா?

பொதுவானக் கேள்விதானே! அப்போ நானும் பதிலளிக்கலாமே!

இந்தக் கருத்தை நான் மறுக்கிறேன்...

இந்த நொடியில் உலகின் எந்த மூலையில் எந்தக் கவிஞன் என்ன எழுதிக் கொண்டிருக்கிறான் என்பது யாராலும் சொல்ல முடியாது..
நாளை யார் என்ன எழுதப்போகிறார்கள் என்று தெரியாது.. சமுதாயங்களைப் புரட்டிப் போடும் வல்லமையுள்ள எழுத்தாளர்கள் பிறந்து கொண்டேதான் இருக்கிறார்கள்..

இதே கருத்தை நான் ஒத்துக் கொள்கிறேன்.

முன்பே எழுதப்பட்டு விட்டன என்பதை வேறுவிதமாகவும் பார்க்கலாம்.. அதாவது ஒரு கருத்து மனதில் ஊறி முளைவிட்டு கிளைவிட்டு மனதிற்கு அடங்காமல் வெடித்து வெளிவரும் பொழுதுதான் உலகிற்குத் தெரிகிறது.. ஆனால் அந்தக் கவிதை அந்தக் கவிஞனைப் பொறுத்தமுறை முன்பே அவன் மனதில் ஆயிரம் முறை எழுதி அழித்து எழுதி அழித்து என முன்பே எழுதப் பட்டதுதானே!

இல்லை இல்லை இந்தக் கருத்தை நான் மறுக்கிறேன்.

காளமேகம் என்ற ஒரு புலவர் இருந்தார்.. நினைத்த மாத்திரத்தில் கவிமழை பொழியக் கூடியவர். எண்ணம் எழும் வேகத்தில் கவி எழுதக் கூடியவர்.. நம் மன்றத்தில் கூட பல நல்ல கவிச்சமர் கவிதைகள் வினாடிகளில் உதித்து உதிர்க்கப்பட்டவைகள் தானே.. அப்படி இருக்க அவை எப்படி முன்பே எழுதப்பட்டவை ஆகும்...

இல்லை இல்லை அந்தக் கருத்தை நான் ஏற்கிறேன்.......:D:D:D

சிந்திக்காமல் எழுதி இருக்க முடியாது.. ஒரு கருத்தை இப்படி திருத்தி திருத்தியும் எழுதலாம். மனதில் தோன்றியதைப் தோன்றிய கணத்திலேயும் வெளியிடலாம். எழும் எண்ணங்கள் அவரின் அறிவு.. விழும் வார்த்தைகள் அவரின் திறமை. என்ன எழுதுகிறோம் என்றே தெரியாமல் எழுதிவிட்டு அப்புறம் அது ஒரு நல்ல கவிதை என்று கண்டார்களா என்ன?

இல்லை இல்லை அந்தக் கருத்தை நான் மறுக்கிறேன்.......:D:D:D

ஏனென்றால் இப்பொழுது நான் செய்து கொண்டிருப்பது வேறென்னவாம்? என்ன எழுதுகிறோம் என்றே தெரியாமலேயேதானே எழுதிக் கொண்டிருக்கிறேன்,,,

இல்லை இல்லை அந்தக் கருத்தை நான் ஏற்கிறேன்.......:D:D:D

முடியலை.............

அட யாருப்பா அங்க இப்படிச் சொல்றது? ஓவியனா?

ஓவியா
31-07-2008, 11:47 AM
முதலில் நான் தமிழ் நாட்டை என் சிந்தனையில் உருவாக்கியிருந்த கற்பனையே வேறு, ஆனால் சென்னை அகிலவுலக விமான நிலையத்தை அடைந்து வெளிநடப்பு செய்ததுமே எனக்கு காத்திருந்த அதிர்ச்சி, விமான நிலையத்தின் வாசலில் அவ்வளவு கூச்சலிலும் தன்னை மறந்து உறங்கிக்கொண்டிருந்த மனிதர்கள்.

இரண்டாவது விசயம் விடியற்காலை 3மணிக்கே நீராவி குளியல் போல் வேர்த்துகொட்டி, என்னை பிசுபிசுக்கிய அந்த உஷ்ண சீதோஷண நிலை. இப்படியே தான் என் பூர்வீக நாட்டில் 'மைய்ல் ஹார்ட் அட்டாக்'கில் என் இனிய பயணம் ஆரம்பித்தது......

என் சென்னை பயணத்தின் அரிய விசயங்களை சொல்லி எழுதினால் ஒரு புத்தகமே போடலாம். சரி இப்பொழுது உங்கள் கேள்விக்கு வருகிறேன்.

மனதை பாதிக்க செய்த விசயம் பல உண்டு அதில் ஒன்றை கூறுகிறேன், :traurig001:

முதலில் என் 2 நாள் காசி யாத்திரை (வாரணாசி) நாங்கள் பெரிய குரூப்பாக போய்வரவிருந்த யாத்திரை கடைசி நிமிட மாறுதலால் ரொம்ப சிறிய குரூப்பாக மாறியிருந்தது, அதுவும் சென்னையிலிருந்து டெல்லி விமானம், பின் டெல்லியிலிருந்து வாரணாசிக்கு இரவு ரயில் பயணம்.

முதல் அடி ஏர்போர்ட்டில் என்னிடமிருந்த என் சிறிய கைப்பைக்கு முத்திரை குத்தாமல் விட்டு விட்டார்கள். பாதுகாவலர் என்னை அனைவரின் முன்னும் தடுத்து கேள்விக்கணைகளைத் தொடுத்தது எனக்கு சரியான அவமானப்பிரச்சனையாகிவிட்டது, கடைசிநேரத்தில் மீண்டும் கீழே சென்று முத்திரை பதித்து மேலே வர போதும் போதுமென்றாகிவிட்டது, பின் டெல்லி சென்று மொழிதெரியாமல் தடுமாறியது.

பிரச்சனையே இங்குதான் கடைசி நேரம் ரயிலில் எலக்ட்ரானிக் டிக்கெட் வாங்கியதால், அதை நாங்கள் பிரிண்ட் எடுக்கமுடியாமல் போய் விட்டது, அங்கே சென்று டெல்லி விமான நிலையத்தில் எங்காவது பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம் என்று ஒருவர் சொல்ல :) மற்றொருவர் 50 ரூபாய் அபராதம் செலுத்தி அங்கே ரயிலில் பெற்றுக்கொள் என்று ஆலோசனை சொல்ல, :D:D, மனம் சரியென்று பச்சைக்கொடி காட்டியது. அங்கேதான் அதிர்ச்சித்தரும் விசயம் காத்திருந்தது, விமானநிலையத்தில் வியாபார பகுதியே இல்லை, நெட் செண்டருமில்லை. சரி ஃகிலமக்ஸை அங்கே வைத்துக்கொள்வோம் என்று ஒருவழியா விமானநிலத்திலிருந்து ரயில் நிலைத்திற்க்கு சென்றாகி விட்டது. அப்பொழுது மாலை மணி 4:30.

அதன் பின் ரயில் நிலையத்தில் எங்கு சென்றாலும் ஒரு நீண்ட வருசையில் மக்கள், ஏன்? எதற்கு? என்றே தெரியவில்லை, யாருக்குமே ஆங்கிலம் தெரியவில்லை, அதிகாரிகள் கூட அவரவர் தாய்மொழியிலே பேசுகின்றனர், மற்றும் அனைத்து வாசிப்பு பலகைகளும் இந்தியில், (ஆங்கிலமேயில்லை ஏன் என்றும் தெரியவில்லை, ஆங்கிலர்கள் மேல் அவ்வளவு கோபமா??) மொழிதெரியாமல் எந்தவரிசையில் நிற்பது என்று தடுமாற அங்கிருந்தவர்களுக்கு நாங்கள் வெளிநாட்டவர்கள் என்று பளி-பளிச்சுனு தெரிய ஆண்களோ என்னை மட்டும் சுத்தாமல் எங்களுடன் இருப்பவர்களையும் சுற்றி சுற்றி பார்க்க. எனக்கோ ஒரே பயம், கொடுமை எந்த ரூபத்தில் வருமோ என்று.... அய்யோ கிருஷ்ணா காபாத்துலே என்று கிருஷ்ணரை நிமிடத்திற்க்கு ஒருமுறை வேண்டிக்கிட்டேன்.

சரி ஒருவழியா நம்ப 'அண்ணா என் இதயம் :D நான் கண்ட உலகம்' கொடுத்த ஐடியாவை யோசித்து அதன் பிரகாரம், அந்த கங்கா எக்ஸ்ப்ரஸ் வரும் ப்ளாட்போர்ம் சென்று ஆபிசரை அணுகலாம் என்று சென்றால், மொழி பிரச்சனை எங்கும் தலை நீட்டி சுயமா காதில் பூ வைத்துக்கொண்டது, எப்படியோ ஒரு அதிகாரி ஆங்கிலத்தில் கீழே உள்ள சுப்ரிடெண்டன் ஆபிஸ் சென்று புகார் கொடுத்து டிக்கட் வாங்கு என்று லஞ்சம் வாங்கி விட்டார்.

அங்கும் இங்கும் அலைந்து இப்பொழுது மணி 6.00. சுப்ரிடெண்டன் ஆபிசில் இல்லை காப்பி கலக்க சென்றுள்ளாராம், காத்திருந்து காத்திருந்து முகம் சிவக்க, ஒரு பெண் செயலாலினி போட்டார் ஒரு குண்டு, அப்படியெல்லாமில்லை நீங்கள் அவசியம் பிரிண்ட் வைத்திருக்க வேண்டும் இல்லையென்றால் இறக்கி விட்டு விடுவார்கள் என்று. மறுபடியும் ஓடோ ஒடென்று ரயில் நிலையத்தின் வெளியில் வந்தால் ஒருவர் நெட் செண்டரா தேடுகிறாய் அந்த மூலையில் உள்ளது என்று சொல்லி அவரும் டிப்ஸ் வாங்கிவிட்டார், ஆனால் நான் அவரிடம் ஒன்றுமே கேட்கவில்லை.

எதிர் முனையில் உள்ள கடை வரிசைகளின் வழியே செல்ல செல்ல.... எங்களை காணும் கண்களின் மேல் எனக்கு ஒரே பயம். என்ன நடக்குமோ யார் ஏமாற்றுவார்களோ!! இன்னும் 20 நிமிடம் தான் இருக்கு இரயில் கிளம்ப, எப்படியோ ஒரு சந்தினுள் ஒரு நெட்செண்டரை கண்டு பிரிண்ட் எடுத்து, அங்கும் ஒரே ஆண்கள் பயம் எங்களுக்கு தலைக்கேறியது. படபடவென்று வெளியில் வர. 10 நிமிடம் தான் பாக்கி, ஓடு ஓடு என்று ஓடி பழங்களை மட்டும் வாங்கிக்கொண்டு ஓடி ஓடி ஓடி மூச்சிறைக்க ரயிலேறினோம்.

இன்னுமொன்று காசி, ராமேஸ்வரம் இரண்டு இடத்திலும் ஐய்யர்மார்கள் எங்களை நன்கு ஏமாற்றி பணம் பறித்தது. :traurig001:

கடைசியாக அன்று லண்டனுக்கு விமானம், அப்பாடா எப்படா ஊர் சென்று சுத்தமான காற்றை சுவாசிப்பேன் என்று விமான நிலையம் வர, அங்கே என் கைப்பை பெரிதாக இருக்கிறதென்று, அதை அளவெடுக்கும் கோப்பையில் போட அது அப்படியே உள்ளே சென்று அதன் சக்கரம் மட்டும் வெளியில் தெரிய உங்கள் உள்ளூர் அம்மணி இது முடியாது என்று என்னை கடுப்பேத்த, அவளிடம் இதே கைப்பையைதான் நான் 15 நாடுகளுக்கு எடுத்து சென்றேன் எந்த விமான நிலையமும் என்னை இப்படி செய்ததில்லை என்று வாதாடி ஏன் இங்கு மட்டும் இப்படி என்று கேள்விகணைகளைத் தொடுத்து அவளின் பாஸை கூப்பிட்டு முறையிட்டு, பின் அந்த அதிகாரி இது முடியும் அவர்களை விடு என்று....... மன்னிப்பு கேட்டு வழியணுப்பி வைத்தார்.

இதுபோல் பல கசப்பான சம்பவங்கள், முக்கியமாக எங்களை ஏமாற்றி பணம் பறித்தவர்களே அதிகம். நினைக்கவே கசப்பாய் இருக்கிறது.

என்னை நெகிழ செய்த சம்பவம் பல உண்டு. எனக்கு நடந்த நல்ல விசயம், கோயில் குலங்களுக்கு சென்றது வந்தது, நிறைய சேலை வாங்கியது...... :D

மூன்றாவது முக்கியமான ஒன்று.
அது வேறு ஒன்றுமில்லை, நம் தமிழ் மன்ற சொந்தங்களை கண்டு களித்தது, அவர்களுக்கு பரிசளித்து அவர்களிடம் பரிசு பெற்று, கடற்கரையில் காற்று வாங்கி, சிரிசிலிருந்து பெரிசுவரை ஐஸ்கிரீம் உண்டு.... பின் அனைவரும் 5 நட்சத்திர விடுதியில் இரவு உணவு உண்டு மகிழ்ந்து, முக்கியமாக பலர் வெளி மாகாணத்திலிருந்த்து வந்து எங்களை ஆழ்ந்த இன்பத்தில் ஆழ்த்தியது, சிலர் எங்களுடன் 2 நாட்கள் தங்கி லூட்டியடித்து சென்றது.

நினைக்க நினைக்க தேனாய் இனிக்கின்றது

மனம் வருந்திய இன்னும் ஒரு முக்கியமான விசயம், மணியா அங்கிள், பாரதியண்ணா, ராஜா அண்ணா, மன்மி, பூமகள் மற்றும் இன்னும் சிலரை காணாமல் போய்விட்டதே என்ற எக்கம்தான். :traurig001:

நன்றி பூர்ணிமா. :)

ஓவியா
31-07-2008, 11:58 AM
தாமரையண்ணா, அசத்தலான பதில்.

அந்த கடைசி வரியை தவிற.

தாமரை
31-07-2008, 01:24 PM
அதெல்லாம் இருக்கட்டும். கடைசியில் பிரிண்ட் எடுத்த பயணச் சீட்டையே ஒரு முறையாவது முழுசா படிச்சீங்களா ஓவியா?

படிச்சிருந்தா அதே நாடகம் மறுபடி மறுபடி அரங்கேறி இருக்குமா? :lachen001::lachen001::lachen001:

poornima
31-07-2008, 01:40 PM
இ-பணம் வாரித்தந்த வள்ளல் அக்காவே.. ஏன் இந்தக் கொடை(லை) வெறி? உங்கள் அன்பு போதுமே... தனக்கென கொஞ்சம் கூட வைத்துக் கொள்ளாமல் இப்படி செய்தது கொஞ்சம் கூட சரியில்லை..

வெறுமனே சம்பாதித்தவையா அது..? எவ்வளவு பதிவுகள் காலம் நேரம் பாராது தட்டச்சி பெற்றவை அல்லவா..? மனது கனத்து விட்டது போங்கள்..ஏற்றுக் கொண்டதில் நெல்முனையளவும் சம்மதமில்லை எனக்கு..
திருப்பி எடுத்துக் கொண்டால் இன்னமும் மகிழ்வேன்

poornima
31-07-2008, 01:49 PM
அடுத்து உங்களை பாதித்தவை பற்றி..

இந்திய தேசம் வெளிநாட்டிலிருந்து வரும் நம் மக்களை இன்னமும் அப்படித்தான் நடத்திக் கொண்டிருக்கிறது என்பது மற்றுமொருமுறை உங்கள் பதிவிலிருந்து புலனாகிறது. விருந்தினரை போற்றுதும் விருந்தினரைப் போற்றுதும் என்று ஒருபக்கம் சொல்லிக் கொண்டே வந்த விருந்தினர்களை மறுமுறை வரவிடாது வைக்கும் வெறுப்பேற்றும் சம்பவங்கள் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன.

எலா இடங்களிலும் அலட்சியம். உனக்கென போ என்ற ஒழிசைத்தனம். என்னை உன்னால் எதுவும் செய்ய முடியாது என்று வழிப்போக்கரிடம் வீரம் காட்டும் பேடித்தனம். அழகான தேசம் இவர்களைப் போன்றவர்களாலேயே சர்வதேச நோக்கில் அவமானப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொய்,ஏமாற்றுத்தனம்,வஞ்சம் உள்ளவர்களாலேயே இப்படி எல்லாம் நடந்து கொள்ள இயலும். நாலு நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஆனால் இவர்களைப் போன்றவர்களால் அவர்களும் தங்கள் தனித்தன்மையை காட்டி நல்லவர்கள்போல் நடக்க இயலவில்லை.

இந்தியாவில் மட்டும்தான் ஏழ்மை எளிமை என்ற பொருளிலேயே அடையாளம் காணப்படுகிறது.அதனாலேயே வேதம் படித்தவர்கள் கூட உங்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.அப்படித்தான் வயிறு வளர்க்க வேண்டி எந்த வேதம் எந்த உபநிஷத்துகள் சொன்னது என்று பார்க்கப் போக இது போன்ற ஆட்களாலேயே புனிதத் தன்மைகள் பலவும் இன்று கேலிக்குரியதாய் போய்விட்டது.கைக்கூப்பலைக் கூட கர்வமாகத்தான் செய்ய கற்றுக் கொண்டிருக்கிறோம்.

போகட்டும் ஓவியா அக்கா.. ஆயிரம் அயோக்கியர்கள் இருப்பினும் என் பாரதம் மேன்மைமிக்கது.எல்லாம் நன்மைக்கே.அடுத்த முறை உங்கள் இந்தியப் பயணம் சீரும் சிறப்புமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.அனுபவங்கள் நமக்கு வழிகாட்டும்

நன்றி நீண்ட நெடிய பதிலளித்தமைக்கு..

poornima
31-07-2008, 01:54 PM
பொதுவானக் கேள்விதானே! அப்போ நானும் பதிலளிக்கலாமே!

இந்தக் கருத்தை நான் மறுக்கிறேன்...

இந்த நொடியில் உலகின் எந்த மூலையில் எந்தக் கவிஞன் என்ன எழுதிக் கொண்டிருக்கிறான் என்பது யாராலும் சொல்ல முடியாது..
நாளை யார் என்ன எழுதப்போகிறார்கள் என்று தெரியாது.. சமுதாயங்களைப் புரட்டிப் போடும் வல்லமையுள்ள எழுத்தாளர்கள் பிறந்து கொண்டேதான் இருக்கிறார்கள்..

இதே கருத்தை நான் ஒத்துக் கொள்கிறேன்.

முன்பே எழுதப்பட்டு விட்டன என்பதை வேறுவிதமாகவும் பார்க்கலாம்.. அதாவது ஒரு கருத்து மனதில் ஊறி முளைவிட்டு கிளைவிட்டு மனதிற்கு அடங்காமல் வெடித்து வெளிவரும் பொழுதுதான் உலகிற்குத் தெரிகிறது.. ஆனால் அந்தக் கவிதை அந்தக் கவிஞனைப் பொறுத்தமுறை முன்பே அவன் மனதில் ஆயிரம் முறை எழுதி அழித்து எழுதி அழித்து என முன்பே எழுதப் பட்டதுதானே!

இருமுக ஆளுமைத்தன்மை(Dual Personality)யுடன் இந்த கேள்வியை எதிர்கொண்டமைக்கு நன்றி தாமரை அவர்களே.. உங்கள் பதில்கள் வெகு யதார்த்தம். பார்ப்போம் மற்ற நண்பர்களும் என்ன சொல்கிறார்கள் என்று..

இளசு
01-08-2008, 05:00 PM
[COLOR="red"][B] இளசுவுக்கு ஒரு கேள்வி.

அடிப்படையில் நீங்கள் ஒரு மருத்துவர்.. ஆனால் எல்லாத் துறைகள்
தொடர்பாகவும் பதிலளிக்கிறீர்கள்..பின்னூட்டமிடுகிறீர்கள்.. இது அனுபவ
அறிவா..? கற்றுணர்ந்ததா..?

அன்புள்ள பூர்ணிமாவுக்கு,

முதலில் என் மன்னிப்பைக் கோருகிறேன்.

இடைவிடாத பணிப் பொறுப்பாலும், அருமை நண்பர் வரவாலும்
என் பதில் வரத் தாமதம் ஆனது.

உங்கள் கேள்விக்கு என் நன்றி. ( வழமையாய் பத்து பேரிடம் கேட்டிருக்கலாம் என்று என் மனம் ஆசைப்படுகிறது...)

திரி நாயகர் ராஜா, அவருக்குத் துணை நிற்கும் அமரன், அக்னி, அன்பு ரசிகன், ஓவியன் - இவர்களின் வெற்றிப்பணியைக் கொண்டாடும் முகமாக
என் 14000வது பதிவான இதை இத்திரிக்கு அர்ப்பணிக்கிறேன்.

------------------------------------

என் பதில்:

17 வயது வரை நான் பள்ளி மாணவன். பச்சைக் களிமண். எப்பாண்டமாகவும் என்னை உருட்டிச் சுட்டிருக்கலாம். அதனால் அதுவரை பட்டாணி சுற்றிய காகிதம் முதல், தெருவில் பறக்கும் காகிதம் வரை - எதையும் வாசித்தவன் நான்.

அதன்பிறகு பாடம், கல்லூரிப் படிப்பின், பின் பணியின் இழுப்பில் பொது வாசிப்பு அருகியது - மன்றம் வரும் வரை!

மன்றம் வரும்வரை நான் கற்றவை மிகச் சொற்பமே..
அதன் பின் கற்ற கொஞ்சநஞ்சமும் - முழுதும் மன்றத்தால் மட்டுமே!

''நல்லா இருக்கு'' என வாய்விட்டு ரசித்துச் சொல்லும் குணம் - என் அப்பா வழங்கியது.கொஞ்சம் வேகமாய் வாசித்தறிய இயலும் என்பதும் அப்பா வழி வந்த பண்பு..

நல்லதைக் கண்டு ரசித்துவிட்டு ஒன்றுமே சொல்லாமல் கடந்துபோவது பாவம் - உபநிடத பாடம் - மன்ற உறவு கற்றுத்தந்தது..

மருத்துவன் என்பதாலேயே - மற்ற துறைகளின் பரிச்சயம் எனக்கு மிகக்குறைவு
(இதுவரை அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பவும் அறியாதவன் நான்..)

ஆனாலும் எல்லா இடங்களிலும் பதில் ஏதாவது அளிப்பதன் நோக்கம் -
எனக்குத் தெரியும் என்பதால் அன்று.
எழுதியதை நான் வாசித்தேன்.. அதற்கான என் அங்கீகாரத்தைப் பதிவு செய்கிறேன் - என்பதற்காக மட்டுமே!

மன்றத்தால்,இனிமையாய், இலகுவாய் பல கற்றுவருவது - சுகமாக பக்கவிளைவு.

சுருக்கமாய் பதிலளிப்பதன் நோக்கம் - பல திரிகளுக்குப் பதிலிடலாம் என்பதால்.

கற்றல் என்பது வாழ்நெடும் பயணம். என் அப்பா இப்போதும் நிறைய வாசிக்கிறார். குறிப்பெடுக்கிறார்.

அவர் வழியில் கொஞ்சமாவது நான் என்பதில் எனக்கு ஆத்ம திருப்தி!

அமரன்
01-08-2008, 05:05 PM
பதின்னான்காயிரமாவது முத்தை இங்கே பதித்த அண்ணாவுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.. குறள் போல் பதிவிடுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே.. அதே போல் இதுவும்..

பூமகள்
01-08-2008, 05:12 PM
பதினாகாயிரம் பதிவை... முக்கிய கேள்விக்கு விடையாக்கி..
மனம் திறந்தது கண்டு கண் மலர்கிறேன்..!!

உங்களின் தீவிர ரசிகையான தங்கையாகினும்... இன்னும் குடும்பத்தில் நெருங்கிய தன்மையை இப்போது உணர்கிறேன்...!

அமரன் அண்ணா சொன்னபடி.. வள்ளுவர் வழி வந்த பதில்களால் இவர் எமக்கு மாட்சிமை பொருந்திய வள்ளுவராகவே தெரிகிறார்..

வணங்குகிறேன் பெரியண்ணா..!!

பதிவிட்டு மனம்,குணம்,ஞானம் விவரித்தமைக்கு நன்றிகள் கோடி சொல்லி மகிழ்கிறேன்..!

poornima
02-08-2008, 08:28 AM
அன்புள்ள பூர்ணிமாவுக்கு,

முதலில் என் மன்னிப்பைக் கோருகிறேன்.

எவ்வளவு பெரியவர் நீங்கள்.. மன்னிப்பெல்லாம் கேட்டு

இடைவிடாத பணிப் பொறுப்பாலும், அருமை நண்பர் வரவாலும்
என் பதில் வரத் தாமதம் ஆனது.

நன்றி. ஆனாலும் உங்கள் சிரத்தைப் பண்பு என்னை வியக்கவே செய்கிறது

உங்கள் கேள்விக்கு என் நன்றி. ( வழமையாய் பத்து பேரிடம் கேட்டிருக்கலாம் என்று என் மனம் ஆசைப்படுகிறது...)

விரைவில் அடுத்தடுத்த கேள்விகளில் இதை செய்கிறேன்------------------------------------

எளிய சுருக்கமான நறுக் பதில்கள்.. நன்றி இளசு அவர்களே..

யவனிகா
02-08-2008, 09:58 AM
இளசு அண்ணாவின் பதில் அவரது எளிமையைக் காட்டுகிறது...சுற்றிலும் மணம் பரப்பிவிட்டு, இலை போலவே தன்னை ஒளித்து நிற்கும் மனோரஞ்சிதம் போல...

மனோரஞ்சிதத்தின் வாசனையும் அப்படித்தான்...மனதில் எதை நினைக்கிறோமோ அதே வாசனையைத் தருமாம்...அதுபோலவே இளசு அண்ணா...அழகான படைப்பாளியாக...நல்ல விமர்சகராக....அருமையான தோழமையுடன்...நமது சோகத்தை உள்வாங்கிக்கொள்ளும் இனியதொரு உறவாக...எப்படி நினைத்தாலும் அண்ணா அப்படியே அந்தப் பாத்திரத்தை நிறைவு செய்வார்......மன்றத்தின் மனோரஞ்சிதம் இளசு அண்ணா....!!!

அமரன்
02-08-2008, 12:48 PM
இன்னும் ஒருவர் மீதமிருக்கும் நேரத்தில் அடுத்த உறவாக நண்பன் அகத்தியனை அழைப்போமா அண்ணா.

மாதவர்
03-08-2008, 07:47 AM
கேள்வி இதுதான்:
பணம் தேடுவதற்கே வாழ்க்கையின் சந்தோஷங்களைத் தொலைத்துவிட்டு வாழும் மக்கள், பணம்தான் வாழ்க்கை, பணமின்றி உலகில் ஒன்றுமில்லை, பணமின்றிப் படிப்பில்லை, பணமின்றித் தகுதியில்லை, பணமின்றித் தராதரமில்லை, பணமின்றிக் கௌரவமில்லை, பணமின்றி உற்றாரில்லை, பணமின்றி சுற்றமில்லை, பணமின்றி ஊருமில்லை, முக்கியமாகச் சந்தோஷமில்லை என்று எண்ணுகின்றார்கள். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். நன்கு விளக்கவும்.

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது ஏற்ப்புடையது இல்லை!
பணம் தவிர வாழ்க்கையில் நிறைய இருக்கின்றது!!
பணத்தால் இழந்த நேரத்தை வாங்க முடியும் என்றால்
பணம் பெரியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்!

தாமதத்திற்க்கு மன்னிக்கவும்!

ஓவியா
03-08-2008, 10:05 AM
அதெல்லாம் இருக்கட்டும். கடைசியில் பிரிண்ட் எடுத்த பயணச் சீட்டையே ஒரு முறையாவது முழுசா படிச்சீங்களா ஓவியா?

படிச்சிருந்தா அதே நாடகம் மறுபடி மறுபடி அரங்கேறி இருக்குமா? :lachen001::lachen001::lachen001:

:)

இ-பணம் வாரித்தந்த வள்ளல் அக்காவே.. ஏன் இந்தக் கொடை(லை) வெறி? உங்கள் அன்பு போதுமே... தனக்கென கொஞ்சம் கூட வைத்துக் கொள்ளாமல் இப்படி செய்தது கொஞ்சம் கூட சரியில்லை..

வெறுமனே சம்பாதித்தவையா அது..? எவ்வளவு பதிவுகள் காலம் நேரம் பாராது தட்டச்சி பெற்றவை அல்லவா..? மனது கனத்து விட்டது போங்கள்..ஏற்றுக் கொண்டதில் நெல்முனையளவும் சம்மதமில்லை எனக்கு..
திருப்பி எடுத்துக் கொண்டால் இன்னமும் மகிழ்வேன்

பூர்ணிமா கடனைதான் திருப்பி கொடுக்கவேன்டும். நான் உங்களுக்கு பரிசுதான் தந்தேன், இனிதே வைத்து சந்தோஷப்படுங்கள்.

அடுத்து உங்களை பாதித்தவை பற்றி..

இந்திய தேசம் வெளிநாட்டிலிருந்து வரும் நம் மக்களை இன்னமும் அப்படித்தான் நடத்திக் கொண்டிருக்கிறது என்பது மற்றுமொருமுறை உங்கள் பதிவிலிருந்து புலனாகிறது. விருந்தினரை போற்றுதும் விருந்தினரைப் போற்றுதும் என்று ஒருபக்கம் சொல்லிக் கொண்டே வந்த விருந்தினர்களை மறுமுறை வரவிடாது வைக்கும் வெறுப்பேற்றும் சம்பவங்கள் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன.

எலா இடங்களிலும் அலட்சியம். உனக்கென போ என்ற ஒழிசைத்தனம். என்னை உன்னால் எதுவும் செய்ய முடியாது என்று வழிப்போக்கரிடம் வீரம் காட்டும் பேடித்தனம். அழகான தேசம் இவர்களைப் போன்றவர்களாலேயே சர்வதேச நோக்கில் அவமானப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொய்,ஏமாற்றுத்தனம்,வஞ்சம் உள்ளவர்களாலேயே இப்படி எல்லாம் நடந்து கொள்ள இயலும். நாலு நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஆனால் இவர்களைப் போன்றவர்களால் அவர்களும் தங்கள் தனித்தன்மையை காட்டி நல்லவர்கள்போல் நடக்க இயலவில்லை.

இந்தியாவில் மட்டும்தான் ஏழ்மை எளிமை என்ற பொருளிலேயே அடையாளம் காணப்படுகிறது.அதனாலேயே வேதம் படித்தவர்கள் கூட உங்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.அப்படித்தான் வயிறு வளர்க்க வேண்டி எந்த வேதம் எந்த உபநிஷத்துகள் சொன்னது என்று பார்க்கப் போக இது போன்ற ஆட்களாலேயே புனிதத் தன்மைகள் பலவும் இன்று கேலிக்குரியதாய் போய்விட்டது.கைக்கூப்பலைக் கூட கர்வமாகத்தான் செய்ய கற்றுக் கொண்டிருக்கிறோம்.

போகட்டும் ஓவியா அக்கா.. ஆயிரம் அயோக்கியர்கள் இருப்பினும் என் பாரதம் மேன்மைமிக்கது.எல்லாம் நன்மைக்கே.அடுத்த முறை உங்கள் இந்தியப் பயணம் சீரும் சிறப்புமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.அனுபவங்கள் நமக்கு வழிகாட்டும்

நன்றி நீண்ட நெடிய பதிலளித்தமைக்கு..

நன்றி பூர்ணிமா,

என் இடைநிலை பள்ளி ஆசிரியர் போதித்த பாடம், தெரியவில்லையென்றாலும் ஏதாவது எழுது என்று, :p உன் ஆசிரியர்களுக்கு தெரியும் நீ முயற்சிக்கிறாய் எனறு'னு சொல்லியே என்னை இந்த நிலமைக்கு கொண்டு வந்துவிட்டுவிடார். பின் பல்கலைகலக பரிச்சைக்கு எழுதி எழுதியே இப்பொழுதெல்லாம் எனக்கு இப்படி நீண்ட பதில்களாகவே வருகின்றது. :redface:

கேள்வி இதுதான்:
பணம் தேடுவதற்கே வாழ்க்கையின் சந்தோஷங்களைத் தொலைத்துவிட்டு வாழும் மக்கள், பணம்தான் வாழ்க்கை, பணமின்றி உலகில் ஒன்றுமில்லை, பணமின்றிப் படிப்பில்லை, பணமின்றித் தகுதியில்லை, பணமின்றித் தராதரமில்லை, பணமின்றிக் கௌரவமில்லை, பணமின்றி உற்றாரில்லை, பணமின்றி சுற்றமில்லை, பணமின்றி ஊருமில்லை, முக்கியமாகச் சந்தோஷமில்லை என்று எண்ணுகின்றார்கள். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். நன்கு விளக்கவும்.

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது ஏற்ப்புடையது இல்லை!
பணம் தவிர வாழ்க்கையில் நிறைய இருக்கின்றது!!
பணத்தால் இழந்த நேரத்தை வாங்க முடியும் என்றால்
பணம் பெரியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்!

தாமதத்திற்க்கு மன்னிக்கவும்!

வணக்கம் மாதவர்

காலம் தாழ்ந்து செய்தாலும் கடமையை செவ்வன செய்வதுதான் முக்கியம். நீங்களும் அப்படியே, இருவர் விடையளித்திருந்தாலும் மூன்றாவதாக உங்கள் கருத்தினை தந்து பட்டியலில் இடம்பெற்று விட்டீர்கள்.

ஒரே கேள்விக்கு 3 நபர்கள் விடையளித்திருப்பது இதுவே இங்கு முதல் முறை.உங்களின் பதில்கள் கச்சிதமாக சிறப்பாக உள்ளன.

கலந்து சிறப்பித்ததற்க்கு நன்றிகள் பல.

ஆனால் அன்பளிப்பு வழங்க என்னிடம் ஐகேஸ் இல்லை. :traurig001::traurig001: மன்னிக்க வேண்டுகிறேன்

நன்றி

ராஜா
03-08-2008, 12:48 PM
இன்னும் ஒருவர் மீதமிருக்கும் நேரத்தில் அடுத்த உறவாக நண்பன் அகத்தியனை அழைப்போமா அண்ணா.

கூர்மையான கேள்விகளை வீச..

அ"கத்தி"யனை அழைக்கலாம் அமர்..!

அமரன்
03-08-2008, 01:00 PM
அண்ணனின் அனுமதி கிடைத்தாச்சு...
அகத்தியனின் இசைவு கிடைச்சாச்சு...
சுடரட்டும் தீபம் தொடர்ந்து..
வாங்க அகத்தியன்.. தாங்க அகத்தியன்..

அகத்தியன்
03-08-2008, 01:26 PM
முதலில் அமரனுக்கும். ராஜா அவர்களுக்கும் என் நன்றிகள்.

சான்றோர்கள் மேலோர்கள் நிறைந்திருக்கும் இம்மன்றத்தில் என்னையும் பொருட்டாக மதித்தமைக்காக..

கேள்விகள் சுமாராக இருந்தாலும் பதில் தருபவர்களால் எனது கேள்விகள் சிறப்புறும் என்ற நம்பிக்கையில்,கீழ் உள்ளவர்களை எனது கேள்விகளுக்காக தெரிந்துள்ளேன்.

1.அன்புரசிகன்
2.விராடன்
3.ஷிப்லி
4.இளசு
5.பூமகள்
6.ஓவியா
7.தீபன்
8.அமரன்
9.சூரியன்
10.சிவா.ஜி

மேலுள்ள அனைவருக்குமான கேள்விகளோடு நாளை சந்திப்போம்.

சொல்ல மறந்துவிட்டது. எனது கேள்வியின் நாயகர்கள் பத்துப் பேரும் தலா 200 ஐ கேஷ் எனக்கு அன்பளிப்பு தர வேண்டும்.
அதில் பாதி சிறந்த பதிலாளிக்கு என்னால் வழங்கப்படும்.(கேள்வி கேக்க்குற எங்களுக்கு ஏதும் வேணாம்?? அதுதான் பாதி:D:D :D )

(இது எப்படி............... தொழில் புத்தி மக்களே ஒன்றும் தப்பா எடுக்காதீங்க:D :D :D :D.)

சிவா.ஜி
03-08-2008, 01:31 PM
சொல்ல மறந்துவிட்டது. எனது கேள்வியின் நாயகர்கள் பத்துப் பேரும் தலா 200 ஐ கேஷ் எனக்கு அன்பளிப்பு தர வேண்டும்.
அதில் பாதி சிறந்த பதிலாளிக்கு என்னால் வழங்கப்படும்.(கேள்வி கேக்க்குற எங்களுக்கு ஏதும் வேணாம்?? அதுதான் பாதி

அது சரி.................................!!! நாராயணா.......!!!

பூமகள்
03-08-2008, 05:21 PM
என்னையும் ஆபத்தில் மாட்டிவிட்டாச்சா??!! :eek::eek:

எல்லா மன்ற சொந்தங்களுக்கும் பாசம் அதிகம்னு இப்படித் தான் காட்டுறதா??!! :p:cool::icon_ush:
மிஸ்டர் பீன் மாதிரி அழுதுட்டே பதில் எழுதறேன்..!! :rolleyes::icon_rollout::wuerg019: :D:Dஆவூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ.....!!:traurig001:

(அகத்தியன் அண்ணா காதைக் கொடுங்க.. எனக்கு மட்டும் எளிதான கேள்வியா கேளுங்க ;))

மாதவர்
03-08-2008, 05:38 PM
:)

பூர்ணிமா கடனைதான் திருப்பி கொடுக்கவேன்டும். நான் உங்களுக்கு பரிசுதான் தந்தேன், இனிதே வைத்து சந்தோஷப்படுங்கள்.

நன்றி பூர்ணிமா,

என் இடைநிலை பள்ளி ஆசிரியர் போதித்த பாடம், தெரியவில்லையென்றாலும் ஏதாவது எழுது என்று, :p உன் ஆசிரியர்களுக்கு தெரியும் நீ முயற்சிக்கிறாய் எனறு'னு சொல்லியே என்னை இந்த நிலமைக்கு கொண்டு வந்துவிட்டுவிடார். பின் பல்கலைகலக பரிச்சைக்கு எழுதி எழுதியே இப்பொழுதெல்லாம் எனக்கு இப்படி நீண்ட பதில்களாகவே வருகின்றது. :redface:

வணக்கம் மாதவர்

காலம் தாழ்ந்து செய்தாலும் கடமையை செவ்வன செய்வதுதான் முக்கியம். நீங்களும் அப்படியே, இருவர் விடையளித்திருந்தாலும் மூன்றாவதாக உங்கள் கருத்தினை தந்து பட்டியலில் இடம்பெற்று விட்டீர்கள்.

ஒரே கேள்விக்கு 3 நபர்கள் விடையளித்திருப்பது இதுவே இங்கு முதல் முறை.உங்களின் பதில்கள் கச்சிதமாக சிறப்பாக உள்ளன.

கலந்து சிறப்பித்ததற்க்கு நன்றிகள் பல.

ஆனால் அன்பளிப்பு வழங்க என்னிடம் ஐகேஸ் இல்லை. :traurig001::traurig001: மன்னிக்க வேண்டுகிறேன்

நன்றி
ஐகேஸ் நீங்கள் கொடுத்திருந்தாலும் கூட
உங்கள் பாராட்டின் மதிப்பிற்கு அது ஈடாகுமா?
நன்றி!!!!

ஓவியா
03-08-2008, 09:11 PM
முதலில் அமரனுக்கும். ராஜா அவர்களுக்கும் என் நன்றிகள்.

சான்றோர்கள் மேலோர்கள் நிறைந்திருக்கும் இம்மன்றத்தில் என்னையும் பொருட்டாக மதித்தமைக்காக..

கேள்விகள் சுமாராக இருந்தாலும் பதில் தருபவர்களால் எனது கேள்விகள் சிறப்புறும் என்ற நம்பிக்கையில்,கீழ் உள்ளவர்களை எனது கேள்விகளுக்காக தெரிந்துள்ளேன்.

1.அன்புரசிகன்
2.விராடன்
3.ஷிப்லி
4.இளசு
5.பூமகள்
6.ஓவியா
7.தீபன்
8.அமரன்
9.சூரியன்
10.சிவா.ஜி

மேலுள்ள அனைவருக்குமான கேள்விகளோடு நாளை சந்திப்போம்.

சொல்ல மறந்துவிட்டது. எனது கேள்வியின் நாயகர்கள் பத்துப் பேரும் தலா 200 ஐ கேஷ் எனக்கு அன்பளிப்பு தர வேண்டும்.
அதில் பாதி சிறந்த பதிலாளிக்கு என்னால் வழங்கப்படும்.(கேள்வி கேக்க்குற எங்களுக்கு ஏதும் வேணாம்?? அதுதான் பாதி:D:D :D )

(இது எப்படி............... தொழில் புத்தி மக்களே ஒன்றும் தப்பா எடுக்காதீங்க:D :D :D :D.)

நன்றி அகத்தியன், என்னிடம் 200 ஐகேஸ் இல்லாத பட்சத்தில் முதலடியிலே நான் உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்கும் தகுதியினை இழக்கிறேன் (ஃடிஸ் குவலிஃபைடு).

கடன் பட்டார் நெஞ்சம் எப்படி கலங்கும் என்பது சொல்லமுடியாத விசயம். (ஒருமுறை நெஞ்சம் கலங்கியதே போதும்:traurig001:) ஐய்கேஸுக்குனு ஒரு சிறப்பு தகுதியிருக்கு அதனால் எனக்கு யாரிடமும் கடன் வாங்க விருப்பமில்லையே!!!

நீங்கள் ஐகேஸ் கொடுக்காமல் விடையளிக்க வாருங்கள் என்று சொல்லி சிறப்பு சலுகை தந்தாலும், சிறப்பு சலுகைக்காக ஐகேஸ் கொடுக்காமல் பங்குபெற எனக்கு விருப்பமில்லை. :traurig001::traurig001:

மன்னிக்கவும் தம்பி. :traurig001::traurig001:

ஐகேஸ் நீங்கள் கொடுத்திருந்தாலும் கூட
உங்கள் பாராட்டின் மதிப்பிற்கு அது ஈடாகுமா?
நன்றி!!!!

அடடா, ரொம்ப பெரிய வார்த்தையெல்லாம் சொல்லறீங்களே!!!
மிக்க நன்றி. :)

அகத்தியன்
04-08-2008, 04:08 AM
நன்றி அகத்தியன், என்னிடம் 200 ஐகேஸ் இல்லாத பட்சத்தில் முதலடியிலே நான் உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்கும் தகுதியினை இழக்கிறேன் (ஃடிஸ் குவலிஃபைடு).

கடன் பட்டார் நெஞ்சம் எப்படி கலங்கும் என்பது சொல்லமுடியாத விசயம். (ஒருமுறை நெஞ்சம் கலங்கியதே போதும்:traurig001:) ஐய்கேஸுக்குனு ஒரு சிறப்பு தகுதியிருக்கு அதனால் எனக்கு யாரிடமும் கடன் வாங்க விருப்பமில்லையே!!!

நீங்கள் ஐகேஸ் கொடுக்காமல் விடையளிக்க வாருங்கள் என்று சொல்லி சிறப்பு சலுகை தந்தாலும், சிறப்பு சலுகைக்காக ஐகேஸ் கொடுக்காமல் பங்குபெற எனக்கு விருப்பமில்லை. :traurig001::traurig001:

மன்னிக்கவும் தம்பி. :traurig001::traurig001:

அடடா, ரொம்ப பெரிய வார்த்தையெல்லாம் சொல்லறீங்களே!!!
மிக்க நன்றி. :)

200 ஐ கேஷ் தானே அக்கா விற்கு இல்லாததா? இதோ.........

இப்ப என்ன பண்ணுவீங்க? இப்ப என்ன பண்ணுவீங்க?:p:p:p

யாரும் தப்பிக்க முடியாது......... :sport-smiley-018::icon_nono::icon_nono::icon_nono::icon_nono:

பாலகன்
04-08-2008, 04:59 AM
சொந்தங்களே இதோ வந்துவிட்டேன்.........

அடுத்து ஆபத்து கேள்வி சுடரை நான் வழிநடத்துகிறேன்...

கேள்விகள் தயார்,,,, பத்து நண்பர்களும் தயார்,,,, (ஒரு சில நண்பர்களின் ஒப்புதல் இன்று கிடைத்துவிடும்) சிலர் ஏற்கெனவே ஒப்புதல் தந்துவிட்டனர்,,,

நண்பர் அகத்தியன் அவர்கள் கேள்வி பதில்களை முடித்தவுடன் நான் ஆரம்பிக்கிறேன்....

அன்புடன்

உதயசூரியன்
04-08-2008, 06:03 AM
கேள்வி கேட்பதற்கு ஆட்கள் முன் வராமைக்கு பல காரணங்கள் இருக்கலாம்.

தன்னம்பிக்கையும், தனித்திறமையும், நேரமும் உள்ளவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அவர்களை நாம் இன்னும் அணுகவில்லை என்று நினைக்கிறேன்.

புதியவர்களை மட்டுமே அழைப்பது என்ற கட்டுப்பாட்டு வளையத்தில் இருந்து வெளியே வா பாசமலரே..!
______________________________________________
கலைவேந்தர் முன்பே கேள்விகள் கேட்டுவிட்டார்.

என்னால் தொடர் பங்களிப்பு சில நேரங்களில் செய்ய இயலாது என்பது நன்றாக தெரியும் அதனால் தான்.. தொடர்ந்து கட்டாயம் வந்து பார்க்கும் திரி தொடங்குவதில்லை.. அதில் அதிகம் பங்கெடுக்கவும் இல்லை..
சூல்னிலை தான் காரணம்..
அதனால் தான் ஒதுங்கி விடுகிறேன்..
மன்னிக்கவும்..
மற்றவர்களின் வழினடத்துதலை வாழ்த்துகிறேன்..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

ராஜா
04-08-2008, 06:16 AM
உங்கள் நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது உதயா..!

முடியும்போதெல்லாம், ஆபத்து திரிக்கும் வந்து செல்லும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி.

அமரன்
04-08-2008, 11:22 AM
ஆஹா...
அகத்தியனுக்குப் பிறகு அழகிய மணவாளனா... சூப்பர் போங்கோ

அகத்தியன்
04-08-2008, 11:29 AM
அன்பு! வெளிநாடுகளில் வேலை செய்யும் எம்மவர்களின் பிரதிநிதியாக உங்களினை வைத்து, உங்களுக்கு ஒரு கேள்வி,
ஆரம்பம் முதல்- பல்கலைக்கழகம் வரை இலவசமாக கல்வி தந்தது எம் நாடு, அவற்றை எல்லாம் அனுபவித்துவிட்டு நாம் இன்று எமது உழைப்பினை வேறோரு நாட்டில் மாற்றானுக்கு கொடுக்கின்றோம். இது நன்றி கெட்ட செயலா? இதனை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?

ஷிப்லி! உங்களினைப்பற்றி எனக்கு மேலதிக விளக்கங்கள் எதுவும் தேவை இல்லை. உங்களோடு ஒன்றா இருந்தவன் உங்களது நண்பன் என்ற வகையில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். பல்லின கலாச்சாரம் நிறைந்த ஒரு சூழலில் உங்களது எழுத்துப்பணி சென்று கொண்டிக்கின்றது. இதில் நீங்கள் பெரும்பான்மை இனத்தினால் நசுக்கப்படும் ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதி என்றவகையில் உங்களது சமூகத்திற்காக உங்களது எழுதுகோல் அவர்களுக்காக என்ன செய்துள்ளது? என்ன செய்ய இருக்கின்றது? உங்களின் நிலைப்பாடு என்ன?

வணக்கம் இளசு அவர்களே, உங்களை பற்றிய என் பிம்பம் உங்களது 'இளசு' என்ற பெயரோடு ஒட்டியே எனக்கு காட்சியளிக்கும். ஒவ்வொருவரும் தங்களுக்கு புனைப்பெயர் வைக்கும் போது ஏதாவது ஒரு காரணத்தினை பின்னணியாக கொண்டே வைப்பர். அதன்படி, உங்களது இளசு வந்த வரலாற்றினை எனக்காக நீளமாக தருவீர்களா?

பூமகளே நலமா? பெண் கவிஞ்சர்கள் தமிழில் பஞ்சமாகவே இருக்கின்றது ஆனால் இப்போது அந்நிலமை கொஞ்சம் முன்னேறி உள்ளது மிக்க மகிழ்ச்சி. ஆனாலும் தமிழ் பெண்கவிஞ்சர்கள் தன்கள் பாடு பொருளினை ஒரு வரையறைக்குள் வைத்தே கொண்டுசெல்கின்றனர். அதாவது ஆண் கவிஞ்சர்கள் தொடும் அனைத்து விடயங்களினையும் பெண்கவிஞ்சர்கள் தொடுவதில்லை அவற்றினை தொட தயங்குகின்றனர் என்பது என் வாதம் நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?

அன்புள்ள அக்கா ஓவியாவிற்கு இப்ப உங்க கையில் 200 ஐ கேஷ் இருப்பதால் இந்த கேள்வி, மேலை நாடுகளில் வாழும் ஒரு தமிழ் பெண் என்றவகையில், நீங்கள் உங்கள் கலாச்சாரத்தினை பாதுகாப்பதில் எவ்வளவிற்கு சிரத்தை எடுக்கின்றீர்கள்? அதில் உங்களுக்கு ஏற்படும் தர்ம சங்கடங்கள் பற்றி சொல்லுங்கள்.

அன்பு தீபன் நலமா?, தமிழ் மண்ணின் விடுதலையினை ஆவலோடு எதிர்பார்க்கும் பல ஆத்த்மாக்களில் நீங்களும் ஒருவர். தமிழர்களுக்கு ஒரு தாயக பூமி அவசியம் என்பதில் மறுப்பேதும் இல்லை. எனது கேள்வி, இன்னொரு சிறுபான்மையான முஸ்லிம்களின் நிலை பற்றி, அவர்களின் அரசியல் மற்றும் சுய நிர்ணயம் பற்றி உங்களின் கருத்து என்னவாக உள்ளது? (இலங்கையின் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களினதும் பூர்விக பூமியே, வடக்கிலிருந்து துரத்தப்பட்ட ப்ல்லாயிரம் முஸ்லிம்கள் இன்னும் அகதிகளாகவே உள்ளனர் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்)

வணக்கம் திரியின் நாயகர் ராஜா அவர்களே, உங்களது நகைச்சுவைகளின் ரசிகன் நான், ராஜா சார், இல்லறத்தில் நகைச்சுவை இன்னும் வீட்டில் மகிழ்ச்சியினை கூட்டும் என்பர். நீங்கள் குடும்ப தலைவர் என்றவகையில், உங்கள் குடும்பத்தில் நகைச்சுவைக்கு எந்தளவு இடமுண்டு? சம்பவங்களோடு சொன்னால் இன்னும் சுவையாக இருக்கும்.

அமரா நலமா, நேரடியாக கேள்விக்கு வருகின்றேன். ஒரு விடயத்தினை உணர்வு பூர்வமாக அணுகுவதற்கும், அறிவு பூர்வமாக அணுகுவதற்கும் இடையில் நீர் உணரும் வேறுபாடு என்ன? இது தொடர்பில் உனது அனுபவம் ஒன்றினை எதிர்பார்க்கின்றேன்.

சூரியன் உம்மிடம் இதனை கேட்க வேண்டும் என ஏன் எனக்கு தொன்றியது என எனக்கே தெரியாது.... இருட்ன்கும் கேட்கின்றேன்.
இன்றைய நவீன தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி எமது சிறுவர்களினை ஒரு மூலைக்குள் கட்டிப்போட்டுவிட்டது. அன்று நாங்கள் தெருக்களில் ஆடிய எத்தனையோ விளையாட்டுக்கள் இன்று இல்லை. தெருக்கள் ஏங்கிப்போய் கிடக்கின்றன. இது ஆரோக்கியமான நிலையா?

விராடா வணக்கம், எல்லோர் வாழ்விலும் பிரிவுகள் மிக்க வலி கொண்டவை அதிலும் ஆழமான உறவுகள் பிரியும் போது ஏற்படும் வலி உயிரினை கீறிவிட்டு செல்லும். உம் நினைவு தெரிந்த நாளிலிருந்து இதுவரை உம்மை பாதித்த பிரிவு யாருடையது? ஏன்?

அவ்வளவுதான் மக்களே, அனைவரும் ஓடிவாருங்கள் விடைகளினை தாருங்கள், (கண்டிஷன் நினைவிருக்குத்தானே! அனைவரும் ஆளுக்கு 200 ஐ கேஷ் வேட்டணும் அதுவரைக்கும் யார் சிறந்த பதிலாள் என்பது தெரிய வராது. சொல்லிப்புட்டேன்..)

ராஜா
04-08-2008, 01:44 PM
ஆஹாஹாஹாஹா..!

ரொம்ப நாளா யார்கிட்டயும் அகப்படாம இந்தத் திரியில் சுத்திகிட்டு இருந்தேன்..

அகத்தியர் பொறி வச்சு பிடிச்சுட்டாரே..!

ம்ம்ம்ம்ம் வாரேன்... ஒரு பதிலோடு..

சூப்பர் கேள்வித்தொகுப்பு அகத்தியன்..! சபாஷ்..!

விகடன்
04-08-2008, 02:10 PM
விராடா வணக்கம், எல்லோர் வாழ்விலும் பிரிவுகள் மிக்க வலி கொண்டவை அதிலும் ஆழமான உறவுகள் பிரியும் போது ஏற்படும் வலி உயிரினை கீறிவிட்டு செல்லும். உம் நினைவு தெரிந்த நாளிலிருந்து இதுவரை உம்மை பாதித்த பிரிவு யாருடையது? ஏன்?

என்னுடைய நண்பர்கள் சாம்பிராஷ்யம் கலைக்கப்பட்டமை. இது என்னுடைய வாழ்க்கையில் இரண்டு தடவை பாரிய எடுப்பில் நிகழ்ந்துவிட்டது. இதற்கு முன்னரெல்லாம் பிரிவினை சந்தித்தேன். ஆனால் அது ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட பிரிவாக அந்தச் சந்தர்ப்பங்களிலிருந்தது. அல்லது, அந்தப்பிரிவு சிறுவயதிலிருந்து பரீட்சயப்படுத்திக் கொண்டதாக அமைந்திருந்தது.
ஆனால் நண்பர்களை பிரிவது என்பது ஒரே நேரத்தில் பலரை பிரிவது. அதன் தாக்கம் என்றுமே கலையாது. இனிமேல் அந்த சாம்ராஷ்ஷியம் மீண்டும் உருவாக்கப்படவும் முடியாதது. நட்பு கலைக்கப்படவில்லை. ஆனால் நண்பர்கள் நாங்கள் சேர்ந்து இருக்கும் அந்த குருவிக்கூட்டு வாழ்க்கை கலைந்து போய்விட்டது.

நண்பர்கள்தானே.. எப்போது வேண்டுமானாலும் சேர்ந்துகொள்ளலாம் என்று சொல்லலாம். என்னதான் கடினப்பட்டாலும் அவர்களில் குறைந்தது ஒருவரேனும் தவறவிடப்படுவர் என்பதற்குரிய சாத்தியக் கூறுகளே அதிகமாக காணப்படும். ஒருவரியில் விளங்கச் சொன்னால் “நிகழ்தகவு என்பது மிக நலிவுற்றேயிருக்கும்”. (இருந்தாலும் ஒரு சிறு சந்தோஷம், மன்றத்தினூடும் என்னுடன் மூவர் இணைந்திருக்கின்றனர். ஆயினும், அந்தக்காலத்தில் இருந்ததைப்போல வருமா?)

“ஏன்?” என்றொரு கேள்வி கேட்டிருக்கிறீர்கள். இதற்கு எப்படி பதிலுரைப்பது என்றே எனக்கு தெரியவில்லை. வேணுமென்றால் எனது கணிப்பை தெரிவிக்கலாம்...

சிறுவயதிலிருந்தே விழித்திருக்கும் வேளையில் அதிகமாக நண்பர்களுடனேயே நேரத்தை செலவிடுகின்றோம்.

உணவிற்கும், உறக்கத்திற்குமே வீட்டிற்கு வருகிறோம். மிகுதியாய் இருக்கும் சகல செயல்களிலும் நண்பனின்/நண்பர்களின் ஆதிக்கம் கட்டாயம் இருக்கும். என்ன பிரச்சினை என்றாலும் வீட்டில் சொல்கிறோமோ இல்லையோ நண்பர்களுக்கு சொல்லிவிடுவோம். அப்படி வாழ்க்கையில் பாதிக்காலத்தை செலவழித்துவிட்டு திடீரென்று பிரிவது என்றால் இனிக்குமா என்ன?

என்னப்பா அகத்தியன்? பதில் திருப்தியா? அல்லது வசனக் குறைப்பு, தகவல் குறைப்பு வேண்டுமா? :D
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அகத்தியன்... உம்மிடம் ஒரு கேள்வி.....
இந்தக் கேள்வியை என்னிடம் கேட்க வேண்டும் என்று உமக்கு தோன்ற ஏதுவாக இருந்த அந்த காரணி என்ன? அதை மட்டும் சொல்லிவிடுங்கள்? :)

சூரியன்
04-08-2008, 02:29 PM
சூரியன் உம்மிடம் இதனை கேட்க வேண்டும் என ஏன் எனக்கு தொன்றியது என எனக்கே தெரியாது.... இருட்ன்கும் கேட்கின்றேன்.
இன்றைய நவீன தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி எமது சிறுவர்களினை ஒரு மூலைக்குள் கட்டிப்போட்டுவிட்டது. அன்று நாங்கள் தெருக்களில் ஆடிய எத்தனையோ விளையாட்டுக்கள் இன்று இல்லை. தெருக்கள் ஏங்கிப்போய் கிடக்கின்றன. இது ஆரோக்கியமான நிலையா?

என்னிடம் வினா தொடுத்தமைக்கு முதலில் நன்றி.

உங்களுடைய கேள்விக்கு என்னுடைய பதில்:

நவீன தொழில்நுடட்ப வளர்ச்சி இன்றைய சிறுவர்களை வேகுவாக மாற்றிவிட்டது உண்மைதான்.
சில இடங்களில் நீங்கள் சொல்வது போல் இருக்கலாம்
இருப்பினும் பல இடங்களில் தங்களின் பழைய நடைமுறையை இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
தொழில்நுட்ப வளார்ச்சியை அளவாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர அவற்றிக்கு அடிமையாகி விடக்கூடாது.

எனக்கு தெரிந்த வகையில் பதிலளித்துள்ளேன் ஏதேனும் தவறிருந்தால் பொறுத்தருளுக.

பூமகள்
04-08-2008, 02:45 PM
மிக அற்புதமான கேள்விகள் அகத்தியன் அவர்களே..!
மனமார்ந்த பாராட்டுகள்..!! :)

எனக்கு கொஞ்சம் கடினமான கேள்வி கேட்டுட்டீங்களே..... சின்னஞ்சிறிய பூவு மேல தான் உங்களுக்கு எவ்வளோ நம்பிக்கை..

என்னோட பதிலோடு கொஞ்சம் காலம் தாழ்த்தியே வருகிறேன்... கொஞ்சம் மூளையைக் கசக்கி.. எழுதனுமே...!!

ராஜா
04-08-2008, 02:47 PM
வணக்கம் திரியின் நாயகர் ராஜா அவர்களே, உங்களது நகைச்சுவைகளின் ரசிகன் நான், ராஜா சார், இல்லறத்தில் நகைச்சுவை இன்னும் வீட்டில் மகிழ்ச்சியினை கூட்டும் என்பர். நீங்கள் குடும்ப தலைவர் என்றவகையில், உங்கள் குடும்பத்தில் நகைச்சுவைக்கு எந்தளவு இடமுண்டு? சம்பவங்களோடு சொன்னால் இன்னும் சுவையாக இருக்கும்.

எங்க வீட்டுல நானும் என் சின்னப்பையனும் கலாட்டா பார்ட்டிகள். என் வீட்டம்மாவும், பெரியவரும் கொஞ்சம் அமைதியான ஆட்கள். என்றாலும் நாங்கள் அடிக்கும் கூத்துக்கு ஆயுள் சந்தா ரசிகர்கள். எங்கள் நண்பர்களும், அக்கம்பக்கத்தினரும் எங்களின் சோதனை எலிகள். பெரியவங்க, சின்னவங்க என்ற பாகுபாடே பார்க்க மாட்டோமுல்ல..! எங்கள் இருவரிடமும் மாட்டிக்கொள்ளக்கூடாது என்ற அதீத எச்சரிக்கை உணர்வில் மற்ற*வர்கள் ஏடாகூடமாக ஏதாவது செய்துவிட்டு பின்னர் முழிக்கும் முழி இருக்கிறதே..

1. என்னிடம் ஒரு நோக்கியா 3230 அலைபேசி இருந்தது. அதன் ஜாய் ஸ்டிக் என்னும் பகுதி உடைந்து விடவே, வந்த விலைக்கு விற்கத் தீர்மானித்தேன். அதை வாங்க வந்த ஒருவர், நான் சொன்ன விலையைவிட "இன்னும் கொஞ்சம் குறைக்கக் கூடாதா..?" என்று சீரியசாகக் கேட்க, நானும் அதே சீரியஸ் தன்மையோடு அந்த போனை வாங்கி திருப்பி திருப்பிப் பார்த்துவிட்டு, "ஏற்கனவே ஜாய்ஸ்டிக்கை போனில் இருந்து குறைச்சுட்டேன்.. வேற என்ன குறைக்கலாம்..?" என்று எனக்கு நானே பேசிக்கொள்வதுபோல சொல்ல, அவர் அடைந்த அதிர்ச்சி இருக்கிறதே.. !

2. நாங்கள் ஆண்டுக்கொருமுறை, டிசம்பர் 6*ல் திருப்பதிக்கு போவோம்.(அன்றுதான் சின்னவர் பிறந்தநாள்.) ஒருமுறை எங்களுடன் நிறைய நண்பர்கள் வந்ததால் தொடர்வண்டியில் சென்றோம். என் இல்லத்தரசியார், அனைவருக்கும் இட்லியும் புளியோதரையும் செய்து எடுத்து வந்திருந்தார்கள். விழுப்புரத்தில் வண்டி நின்றிருந்தது. தன் நண்பர்களோடு நடைமேடையில் உலாத்திக்கொண்டிருந்த சின்னவர், அவசரமாக ஓடிவந்து,
"அம்மா.. இட்லியை எல்லாம் ஒளிச்சு வை.. பாபர் மசூதி இடிப்பு நாள் என்பதால், வெடிகுண்டு இருக்கான்னு போலீஸ் சோதனை போடறாங்க..!" என்றார். எங்களுடன் வந்திருந்த அனைவரும் ஒரு விநாடி அதிர்ந்து, பின் சத்தமாகச் சிரிக்க வண்டிப் பெட்டியில் அடுத்த பகுதியில் இருந்தவர்களெல்லாம் என்னவோ ஏதோ என்று ஓடி வந்துவிட்டனர்..!

3. சில சமயங்களில் சங்கடங்களும் வரும்..!
மாதத்தில் ஒருநாள் பராமரிப்புக் காரணங்களுக்காக எங்கள் ஊரில் மின்சாரம் இருக்காது. அப்போதெல்லாம் குளிப்பதற்கு எங்கள் வீட்டின் எதிரில் உள்ள குளத்துக்குத்தான் போவோம். என் பக்கத்து வீட்டுக்காரருக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். வழுக்கைத் தலையரான அவரும் குளிக்க வந்திருப்பதைக் கவனியாமல், நான் என் மகனிடம்," படியில் பார்த்து இறங்குப்பா.. 'வழுக்க'ப் போவுது.." என்று சொல்ல, அ.வீ.கா. என்மேல் பாயாத குறைதான்..!

4. போனில் ராங் கால் போட்டு மாட்டும் ஆட்களைக் கலாய்ப்பதில் எனக்கு விருப்பம் அதிகம். ஒருமுறை யாரோ ஒருவர் தவறுதலாக என்னை அலைபேசியில் அழைத்தார். அவருக்கு சிக்னல் குறைவாக இருந்ததோ என்னவோ, சார்.. நாந்தான் பேசறேன் சார்.. சார் கண்ணன் பேசறேன் சார்.. சார்.. சார் நான் பேசறது கேட்குதா ..? சார்.. நான் கண்ணன் பேசறேன் சார்.. " என்று சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ல, நான் நிதானமாக பதில் சொன்னேன்..

"பாருங்க கண்ணன்.. இன்னிக்குதான் உங்களுக்கு பேச்சு வந்துச்சா..? ஒரே புளகாங்கிதமா பேசறேன்.. பேசறேன்னு சொல்றீங்களே.. சந்தோஷம்.. ஆனா எனக்கொரு சந்தேகம்.. உங்களுக்கு இன்னிக்கு பேச்சு வந்திருப்பதை எல்லோருக்கும் போன் போட்டு சொல்றது அவ்வளவு நல்ல ஐடியாவா தெரியலையே.. ரொம்ப செலவாகுமே உங்களுக்கு..!"

மறுமுனையில் போனை உடைப்பது கேட்டது.

இப்படி கடந்த ஆண்டு வரை வேடிக்கையும், விளையாட்டுமாக சென்றுகொண்டிருந்த என் வாழ்க்கை, ஒரு தேவதையின் உடல்நிலைக் குறைவு காரணமாக தலைகீழாக மாறிவிட்டது. நான் கொஞ்சமாவது கவலையை மறக்கிறேன் என்றால் இங்கு மன்றத்தில் உங்களோடு இணைந்திருக்கும் நேரங்களில்தான்.. இங்கும் சிலர் தரம் தாழ்ந்த விவாதங்களாலும், விமர்சனங்களாலும் காயப்படுத்தும்போது, மிகவும் அடிபட்டுப் போகிறேன்.

பென்ஸ்
04-08-2008, 07:30 PM
எங்க வீட்டுல ...........
................
மறுமுனையில் போனை உடைப்பது கேட்டது.

ஹஹ ஹ... என்று வாய்விட்டு சிரித்து கொண்டிருந்த என்னை,
என் அறையை தாண்டி சென்ற உடன்பணிபுரியும் நண்பர் எனக்கு எதோ ஆகிவிட்டதாக நினைக்கபோகிறார்....

ஒரு தேவதையின் உடல்நிலைக் குறைவு காரணமாக தலைகீழாக மாறிவிட்டது. நான் கொஞ்சமாவது கவலையை மறக்கிறேன் என்றால் இங்கு மன்றத்தில் உங்களோடு இணைந்திருக்கும் நேரங்களில்தான்.. இங்கும் சிலர் தரம் தாழ்ந்த விவாதங்களாலும், விமர்சனங்களாலும் காயப்படுத்தும்போது, மிகவும் அடிபட்டுப் போகிறேன்.

இந்த கடைசி வரிகளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை ஐயா...

அறிஞர்
04-08-2008, 08:08 PM
நகைச்சுவையும் ராஜாவும்.. ஒன்றி போவது.. சிறப்பாக உள்ளது.....

கேள்வி அனைத்தும் அருமை... அகத்தியன்..

இளசு
04-08-2008, 09:09 PM
அன்பு அகத்தியன்

என்னை அழைத்தமைக்கு நன்றி..

இந்தப் புனைபெயரின் பின்னால் நீண்ட கதை இல்லை. எனவே சுருக்கமாகவே இப்பதில் முடியும்.

கரிகாலன் எனப் பெயர் தேர்ந்தபின், அதை ஆங்கிலத்தில் பயனாளாராகக் கொண்ட என் அன்புக்குரிய அண்ணல் இருந்தமையால் -

அவருக்கு மரியாதை அளிக்கும் இளவலாக - .

தட்டச்ச எளிதாய் இளசு எனச் சுருக்கமானது.

பெயரில் குணம் வளர்க்கும் சூட்சுமம் உண்டென்றால் -
இப்புனைபெயர் மேல் எனக்குப் பாசமும் இருக்கும்..

என்றும் மனதளவிலாவது இளமையை விரும்பாதவர் யார்?

( என் சார்பாக 1000 -இ பணம் அளித்துவிட்டேன் அகத்தியன்..
ஒரு சிலர் கொடுக்க மறந்தாலும் இதை வைத்துக் கணக்கை நேர் செய்துகொள்ளவும்.:).)

பாலகன்
05-08-2008, 03:42 AM
[COLOR="Navy"]இங்கும் சிலர் தரம் தாழ்ந்த விவாதங்களாலும், விமர்சனங்களாலும் காயப்படுத்தும்போது, மிகவும் அடிபட்டுப் போகிறேன்.

ராசா அண்ணே கவலைபடாதீங்க,

நீங்க பசு மாதிரி உங்களுக்கு பால் மட்டுமே கொடுக்க தெரியும், மற்றவர்கள் நம்மை காயப்படுத்தினால் அதை நம் மனதை விட்டு விலக்கி வைப்போம்,,,,

இனிய உளவாக இன்னாது கூறல்.......... நீங்கள் இனியவர் அதனால் நீங்கள் மனம் கலங்க கூடாது........ மற்றவர்களை மகிழ்விக்கும் நமக்கோ சோகம்........ (இது எனக்கும் இருந்தது) இதிலிருந்து விடுபட நல்ல நண்பர் உலாவும் இடமா பார்த்து புலம்பெயர்வது மனதுக்கு மருந்து............

உண்மையிலேயே உங்க சுட்டி சின்னவருக்கு குசும்பு ரொம்பவே அதிகம்........ அம்மா சுட்ட இட்லியை போய் வெடிகுண்டுன்னு அடிச்சாரே ஒரு சிக்சர்..................

அருமையான பதில் பதித்தமைக்கு மிக்க நன்றி

அன்புடன்

மதி
05-08-2008, 04:01 AM
ஹாஹா..
ராஜாண்ணா.. உங்கள் வாழ்வில் நகைச்சுவை இரண்டற கலந்துவிட்டது. அதிலும் வழுக்கப் போவது.. சூப்பர்.

பூமகள்
05-08-2008, 04:09 AM
உங்கள் வாழ்க்கையின் உதாரணங்களிலிருந்தே நகைச்சுவையை விளக்கிய விதம் அருமை ராஜா அண்ணா..

எப்படி இத்தனை அழகாய் டைம்மிங்-ல் காமெடி பண்றீங்க??!! அது தான் உங்களின் மிகப் பெரும் திறமையாயிற்றே... அசந்தேன் போங்க..!!

உங்கள் மனம் மகிழ்வோடு இருக்க என்றும் நாங்கள் அனைவரும் உடன் இருப்போம் ராஜா அண்ணா..

உங்களின் அருமையான பதிலுக்கு எனது பாராட்டுகள்..!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பெயர் காரணம் - இளசு வந்த கதை சுருங்கச் சொன்னாலும்..

இளவலுக்கே உரித்தான பாணியில்.. நிறைந்த பதில்..!!
பாராட்டுகள் பெரியண்ணா..! :)

கரிகாலன் அண்ணலோடு உலவும் காலம் எங்களுக்கு எப்போது வாய்க்கும் என்று தெரியவில்லையே..!

விகடன்
05-08-2008, 04:56 AM
ராஜாவின் நகைச்சுவையான சம்பாஷனைகளை படித்து சிரித்துக்கொண்டிருந்தேன்.
ஆனால், அந்த இறுதி இரண்டு வரிகளாலும் மௌனித்தேவிட்டேன்.

பூமகள்
05-08-2008, 07:03 AM
பூமகளே நலமா? பெண் கவிஞ்சர்கள் தமிழில் பஞ்சமாகவே இருக்கின்றது ஆனால் இப்போது அந்நிலமை கொஞ்சம் முன்னேறி உள்ளது மிக்க மகிழ்ச்சி. ஆனாலும் தமிழ் பெண்கவிஞர்கள் தங்கள் பாடு பொருளினை ஒரு வரையறைக்குள் வைத்தே கொண்டுசெல்கின்றனர். அதாவது ஆண் கவிஞர்கள் தொடும் அனைத்து விடயங்களினையும் பெண்கவிஞர்கள் தொடுவதில்லை அவற்றினை தொட தயங்குகின்றனர் என்பது என் வாதம் நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?
முதலில் என்னை கேள்விகளில் இணைத்து... ஒரு அதி முக்கியமான கேள்வியை தந்தமைக்கு எனது நன்றிகள்..!

படைப்பாளிகளில்.. இதுவரை ஆண்-பெண் பேதம் நான் பிரித்துப் பார்த்து சிந்தித்ததே இல்லை.. ஆகவே உங்களின் கேள்வி.. அதை நோக்கிய என் ஆராய்ச்சியைப் புதிதாய் விதைத்திருக்கிறது..

ஒரு படைப்பாளியின் எண்ணவோட்டம், அறிவின் நீட்சிமை, சொல்ல வந்ததை சொல்லும் விதம், கருத்தாழம், பாடப்படும் பொருளின் தன்மை இவற்றை விடுத்து 'பால்' வேறுபாடு புகுத்த எனக்கு ஏனோ மனம் வரவே இல்லை..

"குல தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்." - என்பது போல.. மனித இனத்திலும் ஆண்-பெண் தாழ்த்தி உயர்த்தி பேசுதலையும் நான் சொல்வேன்..

இருபாலரும்.. அவரவருக்கே உரித்தான பாணியில் பலப்பல படைப்புகள் படைத்த வண்ணம் தான் உள்ளனர்.. அவர்களின் கருத்தாழுமை.. எண்ணச் செறிவு.. எழுதும் திறன்.. சமூகம் மீதான ஆர்வம்.. இவை பொறுத்தே வரவேற்பும்..கிட்டுகிறது..

ஒரு சிறந்த படைப்பாளி.. இவ்வகை 'பால்' தன்மைகளை மறந்து தனது படைப்புக்குள் புகுந்து எழுதுவான்.. அது யாராயினும் சரி..

எனக்கு அதிக பெண் கவிஞர்களின் அறிமுகம் இல்லையெனினும்.. ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்..

அடுப்பூதி கிடந்த பெண்கள்.. இப்போது தான்..
கல்வி கற்று.. வெளியுலகம் காண புறப்பட்டிருக்கிறார்கள்... அவர்களின் வளர்ச்சி காலம் தாழ்த்தியே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறதாக நான் உணர்கிறேன்..

சமூகம் சார்ந்த இந்த கட்டுப்பாடுகளால் தான்
தாங்கள் வருந்திய பெண் எழுத்தாளர்களின் இந்தத் தட்டுப்பாடுக்கு காரணம்...

ஆகவே.. ஒரு குறிப்பிட்ட புள்ளிகளை அவர்கள் அடைய.. நிறைய எழுத, அறிய வேண்டியிருக்கிறது.. ஆனால், நிச்சயம் அவ்வகை படைப்புகளும் அவர்களால் படைக்க முடியும்..

யாரையும் உதாரணப்படுத்த எனக்கு தெரிந்திராவிட்டாலும்.. ஒரு படைப்பாளி என்ற முறையில் எனது படைப்பின் கருவை நான் பொதுவாக நின்றே எழுதுகிறேன்..

ஆனால்.. சிலப்பல தயக்கங்கள் மற்ற பெண் எழுத்தாளர்களுக்கு இருக்கலாம்.. ஆனால்.. அதற்கும் காரணம்.. சூழல்.. சமூக கட்டுப்பாடுகள்.. படைப்புகளால் அவர்கள் மேல் உண்டாக்கட்டும் கல் வீச்சு.. இப்படியான அடிப்படை காரணங்கள் மறைந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்..

ஆகவே,

படைப்புகள் யாரால் படைக்கப்படுகிறது என்பதை பார்ப்பதை விடுத்து.. படைப்புகளின் தன்மையை ஆராய்ந்து பார்ப்பதே சிறப்பெனக் கருதுகிறேன்..

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மிக முக்கியமான கேள்வி....
இந்த மழலைப் பூவுக்கு தெரிந்த வகையில் பதிலிட்டிருக்கிறேன்..!:icon_ush:
நன்றிகள் அகத்தியன் அவர்களே..!!:)

(நான் மூளையைக் கசக்கி பிழிந்து பதிலிட்டதால் நீங்கள் தான் எனக்கு ஐகேஷ் தர வேண்டும்..!!:wuerg019::icon_ush::icon_rollout:)

செல்வா
05-08-2008, 07:15 AM
சிறப்பானக் கேள்விகள்... மிகச் சிறப்பான பதில்கள்.
வாழ்த்துக்கள் கேள்வி கேட்ட அகத்தியன் மற்றும் பதிலளித்த அனைவருக்கும்.

ராஜா
05-08-2008, 08:20 AM
அவ்வையின் வழித்தோன்றலாம் அன்புத்தங்கை பூமகளின் பதிலை முழுதும் ஏற்கிறேன்..!

சபாஷ் பூ..!

பூமகள்
05-08-2008, 08:41 AM
விராடன் அண்ணாவின் பதிலில் நட்பின் பிரிவுக்கான வலிகளை நானும் உணர்ந்தேன்..!!

ஒன்றாக இருந்த அந்த இனிய நிமிடங்கள் இனி எப்படி தேடினும் கிட்டிடாத ஒன்றே...!!

சிறந்த நட்புகளோடான அந்த ஒரு சில நிமிட உரையாடல்களை அடுத்த சந்திப்பு வரை.. நினைவில் வைத்து பூரிக்கும் மனம்..

பூவின் மனம் தொட்ட பதில்..
இன்னும் பதிலை விரிவாக்கியிருக்கலாம்..

தம்பி சூரியன் பதிலில் நிதர்சனம் தெரிந்தது.. விகித மாறிலிகள் சரியாக சொல்லப்படவில்லையெனினும்.. கிராமத்து சூழலில் இப்போதெல்லாம் கில்லி தாண்டாவுக்கு பதில்.. கிரிக்கெட் புகுந்திருப்பதை மறுப்பதற்கில்லை..

ஆயினும்.. வெளியரங்கு விளையாட்டு இன்னும் மறையவில்லை என்பது ஆறுதல்..

வாழ்த்துகள் சூரியன்.. அடுத்த முறை இன்னும் அதிகம் எழுத வேண்டும் சரியா??
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றிகள் செல்வா மற்றும் ராஜா அண்ணா..

"அவ்வை வழி" இல்லைங்க ராஜா அண்ணா..
"அண்ணன் வழி" என்று வேண்டுமானால் சொல்லலாம்..!! ;)

பாலகன்
05-08-2008, 08:42 AM
படைப்புகள் யாரால் படைக்கப்படுகிறது என்பதை பார்ப்பதை விடுத்து.. படைப்புகளின் தன்மையை ஆராய்ந்து பார்ப்பதே சிறப்பெனக் கருதுகிறேன்..

ஒரு வாசகமா இருந்தாலும் திருவாசகமா இருக்கே, வாழ்த்துக்கள் பூமகளே

அன்புடன்

கண்மணி
05-08-2008, 08:54 AM
படைப்புகள் யாரால் படைக்கப்படுகிறது என்பதை பார்ப்பதை விடுத்து.. படைப்புகளின் தன்மையை ஆராய்ந்து பார்ப்பதே சிறப்பெனக் கருதுகிறேன்..

எழுதுபவர்களைப் பற்றி நான் கருத்துகளை வளர்த்துக் கொள்வதில்லை, எழுத்துக்களை மட்டுமேப் பார்க்கிறேன்.. கருத்துக்களை மட்டுமேப் பார்க்கிறேன், அதுவும் இவர் இன்னக் கோணத்தில்தான் சொல்லி இருப்பார் என என் பார்வையைக் குறுக்கிக் கொள்ளாமல் படித்து அர்த்தப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறேன்,,

என்னுடன் நெருங்கிப் பழகியவர்களுக்குப் பழகிப் போன விஷயம் இது..

..

எங்கேயோ கேட்ட குரலா இருக்குங்களே அம்மிணி.. உங்க அண்ணனை நினைச்சுகிட்டே பதில் எழுதினீங்களாக்கும்..

அமரன்
05-08-2008, 09:13 AM
அமரா நலமா, நேரடியாக கேள்விக்கு வருகின்றேன். ஒரு விடயத்தினை உணர்வு பூர்வமாக அணுகுவதற்கும், அறிவு பூர்வமாக அணுகுவதற்கும் இடையில் நீர் உணரும் வேறுபாடு என்ன? இது தொடர்பில் உனது அனுபவம் ஒன்றினை எதிர்பார்க்கின்றேன்.

மீண்டும் என்னை இணைத்த அகத்தியனுக்கு மனமார்ந்த நன்றி. யாரை நோக்கியாவது ஏவவேண்டும் என்று நினைத்த கேள்விகணை என்னையே எதிர்கொள்ளும்போது இனம் புரியாத உணர்வு. அந்த உணர்வுடன் பதில் சொல்லி இருந்தால் பலருக்கு பாதிப்பு வந்திருக்கலாம். சற்று நேரம் எடுத்து அறிவுக்கு ஓரளவு வேலை கொடுத்து பதிலிடுவதால் பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து விட்டது.

எனது சித்தி பையனுக்கு ஏழு வயசு. எதிலுமே தோற்கக்கூடாது என்று நினைப்பவன். விளையாட்டில் தோற்றால்கூட முகத்தை சுருக்கி மனதுக்குள் மருகி காண்போரைக் கலங்கடித்து விடுவான். என்னுடன் விளையாடும் போது தோற்று வெல்வேன் நான்.. அப்பப்போ வென்றும் வெல்வேன்.. எப்படித் தெரியுமா..

எனக்கு ஓரளவுக்கு சதுரங்கம் விளையாடத்தெரியும். ஆனால் நன்றாக விளையாடுவேன் என்று சித்தி சொல்லி வைத்திருந்தார். சித்தி பையனுக்கும் சதுரங்கத்தில் ஈடுபாடு உண்டு. இருவரும் விளையாடினோம்.. முதன் முறை தோற்றான்.. அப்போது அவனைப் பார்த்த எனக்கு என்னமோ போல் இருந்தது. உணர்ச்சி வேகத்தில் அடுத்தடுத்த போட்டிகளில் தோற்றுக்கொண்டே போனேன். ஒரு கட்டத்தில் அவன் கேட்டான்.. எனக்கு விட்டுத் தாரீங்கள் என்ன.. அப்போதுதான் நான் நிஜமாகத் தோற்றேன்.

இங்கே இரண்டு விடயத்தை கவனியுங்கள். அவன் பெறும் வெற்றிகள் களங்கமில்லாதவை என்பதை காட்ட முயலவில்லை.. அவனுக்கு தோல்வியைக் கொடுத்து அவனுடைய எதிர்கால வாழ்க்கைக்கு அவனைப் பதப்படுத்தவில்லை.. சற்று நேரம் அறிவுபூர்வமாக சிந்தித்திருந்தால் இரண்டையும் செய்திருப்பேன்..

இன்னொன்று... துயர்பகிரப் போகுமிடத்தில் இளம்பெண்ணொருத்தி தோளிற்சாய்ந்து விம்மும்போது ஊரார் தப்பாகப் பேசுவார்கள் என்று அறிவுக்கு வேலை கொடுத்து அவள் தோளில் ஆழமாக கைபதித்த்து ஆறுதல்படுத்தாமல் இருந்தோம்னா அதுவும் தப்புத்தானே.

ஆக, ஒரு விடயத்தை உணர்வு பூர்வமாக அணுகுவதுக்கும் அறிவுபூர்வமாக அணுகுவதுக்கும் இடையான வேறுபாடு ஒரு விடயத்தை குழந்தைப்பிள்ளைகள் அணுகுவதுக்கும் பெரியவர்கள் அணுகுவதுக்கும் இடையான வித்தியாசம்தான். பெரியவர்களுக்குள் குழந்தைத்னம் இருக்கவேண்டும். அதை சந்தர்ப்பத்துக்கேற்ப பயன்படுத்த வேண்டும்.

(இந்தக் கேள்விக்கு என் அண்ணன்களில் ஒருவர் பதிலளித்தால் பலருக்கு பயனாக இருக்கும்)

ராஜா
05-08-2008, 09:19 AM
நட்பின் பிரிதலை வலியோடு உணர்த்தும் விராடரின் பதிலை இப்போதுதான் பார்த்தேன்.. சரியான கேள்விக்கு சரியான நபரிடமிருந்து கிடைத்த சரியான பதில்..!

சூரியனின் இரத்தினச் சுருக்கமான பதில், இன்னும் விளக்கமாக தரக்கூடிய தகுதி படைத்த ஒருவரிடமிருந்து வந்ததா என்று வியக்க வைக்கிறது..!

நன்றி நண்பர்களே..!

ராஜா
05-08-2008, 09:27 AM
ஆழமாக சிந்திக்க வைக்கும் வண்ணம் பதிலளிப்பது அன்பு அமருக்கு புதிதல்ல..

கேள்வியை நன்கு உள்வாங்கி, மனதுக்குள் பல பதில்களை யோசித்து, சிறந்த ஒன்றைத் தேர்வு செய்து, அதையும் பன்முறை திருத்தி, மெருகேற்றி தந்திருக்கும் அமரின் உழைப்பை நன்கு உணர முடிகிறது.

பாராட்டுகள் அமர்..!

விகடன்
05-08-2008, 09:31 AM
பூவின் மனம் தொட்ட பதில்..
இன்னும் பதிலை விரிவாக்கியிருக்கலாம்..

பிரிவுகள் என்று வெறுமனே கேட்டிருந்தால் இன்னும் சிலவற்றை சொல்லியிருப்பேன். ஆனால் அகத்தியன் கேட்டது ஒன்றைத்தானே.

பிரிவிலும் அதீதமாக தாக்கியதை கேட்டிருந்தார். அகத்தியன் அப்படி விடைக்கு கட்டுப்பாட்டை விதித்திருக்கையில் நான் அளவிற்கு அதிகமாக சொல்லிவிட்டால் அது அதிகப் பிரசங்கித்தனமாகி விடாது???

அதனால்த்தான் முதனிலையிலிருக்கும் பிரிவுடன் நிறுத்திவிட்டேன்.

விகடன்
05-08-2008, 09:39 AM
நட்பின் பிரிதலை வலியோடு உணர்த்தும் விராடரின் பதிலை இப்போதுதான் பார்த்தேன்.. சரியான கேள்விக்கு சரியான நபரிடமிருந்து கிடைத்த சரியான பதில்..!

என்னைவிட நட்பின் பிரிவால் துயரின் சிகரத்தை அடைந்தோர் பலரிருப்பர். ஏதோ என் மட்டத்திற்கு சொன்னேன். அவ்வளவுதாங்க.

பூமகள்
05-08-2008, 10:09 AM
எங்கேயோ கேட்ட குரலா இருக்குங்களே அம்மிணி.. உங்க அண்ணனை நினைச்சுகிட்டே பதில் எழுதினீங்களாக்கும்..
ஹா ஹா...!!
ஏன் அண்ணன்களுக்கு மட்டும் தான் அவ்விதம் தோன்ற வேண்டுமென்று கட்டாயமில்லை அல்லவா??!!

இங்கே... பெண் படைப்பாளி.. ஆண் படைப்பாளி.. இவர்களின் படைப்புகளின் தர, பாடுபொருளின் நீட்சிமை இவை பற்றிய ஆழமான கேள்வி என்பதால்.. எனக்கு தோன்றிய கருத்தையே எழுதினேன்...

எழுதும் போது முழுக்க முழுக்க என் எண்ணவோட்டத்தைத் தான் பதிவாக்கினேன்.. சில நேரங்களில் ஒத்த அலைவரிசையில் இப்படியான பதில்கள் வந்தமைந்துவிடுகிறது..

அண்ணனின் பதிவோடும் ஒத்துப் போவது கண்டு மகிழ்ச்சியே..!!

சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள் கண்மணி அக்கா..!! :icon_rollout:

பூமகள்
05-08-2008, 10:17 AM
அமரச் சிகரத்தின் பதிலில் உள்ள உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்ந்தேன்..!!

கடினமான கேள்வியை எளிதாக்கி தனக்கே உரித்தான செந்தமிழில் உரைத்த பாங்கு அருமை..!!

உணர்வுக்கும் அறிவிற்குமான உபயோகம்.. பிரயோகம்.. பிரயோஜனம்.. எல்லாம் புரிந்தது..

வழக்கம் போல் நெஞ்சில் நிற்கும் பதிவு தந்தமைக்கு பாராட்டுகள் சொல்வதில் மகிழ்கிறேன்..! :)

அறிஞர்
05-08-2008, 05:06 PM
இளசு.. பூமகள் பதில் அருமை..
--
படைப்புகளில் பாலிணம் பார்ப்பது தவறே..

இன்னும் பல பெண் கவிஞர்கள் உருவாகட்டும்.

அன்புரசிகன்
05-08-2008, 06:00 PM
அன்பு! வெளிநாடுகளில் வேலை செய்யும் எம்மவர்களின் பிரதிநிதியாக உங்களினை வைத்து, உங்களுக்கு ஒரு கேள்வி,
ஆரம்பம் முதல்- பல்கலைக்கழகம் வரை இலவசமாக கல்வி தந்தது எம் நாடு, அவற்றை எல்லாம் அனுபவித்துவிட்டு நாம் இன்று எமது உழைப்பினை வேறோரு நாட்டில் மாற்றானுக்கு கொடுக்கின்றோம். இது நன்றி கெட்ட செயலா? இதனை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?

உங்கள் கேள்வியில் நியாயம் தோன்றுகிறது. இன்றும் பலர் நான் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசும் போது நீ படித்தது அரச செலவில். ஆதரிப்பது அரசின் எதிரியையா என்பர்... இதற்கு நான் பட்ட அனுபவங்களை தந்தாலே போதும் என நினைக்கிறேன்...

பொறியியல் எந்திரவியல் பாடவிதானங்கள் பற்றிய அறிவு உங்களுக்கு சற்றேனும் இருக்கும். நாங்கள் 2ம் வருட படிப்பு முடித்தவுடன் எம்மை பயிற்சி பாசறைக்கு அனுப்புவர்... அது இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கும். ஒன்று ஒப்பந்தக்காரர் பகுதி (Contractor phase). மற்றது ஆலோனை பகுதி. (Consultant phase)

நான் பயிற்சிக்குச்சென்ற ஒப்பந்தக்காரர்கள் பகுதி இலங்கையிலேயே மிகப்பெரிய ஒப்பந்தக்காரர்களான மாகா (MAGA Engineering Pte Ltd)... அங்கு Tendering and Estimating பகுதியில் இருந்தேன்... கிடைக்கும் தருணங்களையெல்லாம் படிப்பினையாக மாற்றிக்கொண்டிருந்தேன். பின்பு கட்டுநாயக்க விமானநிலைய புனர்நிர்மாணப்பணிக்கான tender வந்தபோது நானும் அதில் உள்வாங்கப்பட்டிருந்தேன். மிகவும் பிடித்ததாக இருந்தது... அந்த tender பின்பு மாகா நிறுவனத்திற்கும் கிடைத்திருந்தது... அந்த நேரத்தில் நான் மீண்டும் 3ம் வருடப்படிப்பிற்காக பல்கலைக்கழகம் திரும்பிவிட்டேன். நான் பல்கலை படித்தகாலம் இலங்கை வரலாற்றில் ஒரு பொற்காலம் எனலாம். காரணம் அந்த காலத்தில் சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்தேறிய காலம். நினைத்த நேரம் நினைத்த இடம் சென்றுவரக்கூடியவாறு இருந்தது...

பல்கலை முடித்து வேலை தேடும் போது நான் முதலாவதாக அழைத்த அழைப்பு அந்த மாகா நிறுவனம் தான். அவர்களிடம் எனது ஆசையை எடுத்துக்கூறினேன். அந்த கட்டுமாணப்பணியில் என்னை இணைத்துவிடுவீர்களா என்று தான். அதற்கு அவர்கள் கூறியபதில்... தமிழர்கள் அங்கு வேலைக்கு அமர்த்தப்படமாட்டார்கள் என.... பாரிய ஏமாற்றம் தான் மிஞ்சியது...

இலங்கையில் மிக உயர்ந்த கட்டடம் கட்டப்படுவது உங்களுக்கு தெரிந்திருக்கும். (செபஸ்டியன் டவர்) அந்த கட்டடத்தில் வேலைபார்த்த அனைத்து தமிழர்களும் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்...

அதற்காக நீங்கள் கேட்க்கலாம். வேறு வேலைகளுக்கு முயற்சிக்கவில்லையா என... நிச்சயமாக நான் வேறு வேலை தேடவில்லை. இலங்கையில் தரும் சம்பளத்தின் ஏறத்தாள 7 மடங்கு அதிக சம்பளம் தர வெளிநாடு ஒன்று தயாராக இருக்கும் போது நான் எதை நாடுவேன். இலங்கையில் விலைவாசி உங்களுக்கு தெரிந்திருக்கும். எனது பெற்றோரை வசதியானவர்களாக வைத்திருக்கவேண்டும் என்ற எனது எண்ணத்தில் தவறு உண்டா? அதற்காக நான் வெளிநாடு சென்றது தவறா?

படித்த படிப்பைக்கொண்டு தகுந்த அனுபவத்தினை பெறவேண்டும் என நினைப்பதில் என்ன தவறு? இலங்கையில் கிடைக்கும் அனுபவத்தை சர்வதேசம் அங்கீகரிப்பது மிக மிக குறைவு... விஷேடமாக மத்தியகிழக்கில் இலங்கையின் சமாச்சாரங்களை பொருட்படுத்துவதே இல்லை. இலங்கை என்பதிலும் இங்கு தெற்காசியா என்பதும் சாலப்பொருந்தும்...

தவிர பொருளாதார ரீதியில் எடுத்து நோக்கினாலும் நான் வெளிநாட்டில் இருப்பதால் இலங்கை பொருளாதார வளர்ச்சிக்கு இராமருக்கு உதவிய அணில் போல இருக்கிறேன். நான் உழைத்து இங்கேயே முதலிடவில்லை. அனைத்தும் இலங்கை தான் செல்கிறது. ஆகவே அன்னியச்செலாவணியை உற்று நோக்கினால் என்னால் ஒரு விருத்தி கிடைக்கிறது என்ற பெருமை எனக்குண்டு. இலங்கையில் இன்று கணிய அளவியலாளன் என்ற ஒரு பதவி பாராளுமன்றத்தின் அனுமதியுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது முன்னர் இருக்கவில்லை. கத்தார் துபாய் பகுதிகளுக்கு வந்து சென்ற இலங்கை அமைச்சர் பீரிஸ் அங்கு நடந்தவற்றை கண்டுதான் அவற்றை அமுல்படுத்தினார் என்பது இலைமறைகாயாக உள்ள உண்மை...

இறுதியாக எனது உயிருக்கான பாதுகாப்பு... எங்கிருந்தாலும் எதுவும் தலைவிதிப்படி நடக்கும் என்பது நம் முன்னோரின் வாதம். மறுக்கவில்லை. இலங்கையில் நம் உயிருக்கு எந்தவிதத்திலும் உத்தரவாதம் இல்லை. நம்மை நினைத்து நினைத்து நம் பெற்றோர் தினம் தினம் செத்து பிழைப்பதிலும் இங்கிருக்கும் போது அவர்களுக்கு கிடைக்கும் திருப்தி நமக்கு போதும்.

தவிர தமிழீழ தேசியத்தலைவர் ஒருமுறை போருக்கு செல்லவிருக்கும் போராளிகளுக்கு அறிவுரை வழங்கிக்கொண்டிருந்தார்.(ஒளிநாடாவில்) அதில் அவர் கூறியது... உயிரை துச்சமென மதி. அதற்காக உயிர் அவ்வளவு இலாபகரமான விடையமல்ல... நான் சாகப்போகிறேன் என முன்சென்று நிற்பவன் முட்டாள். அந்த வாக்கியம் நூற்றுக்கு நூறுவீதம் உண்மை என்பது எனது எண்ணம்.

நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் வந்ததா தெரியவில்லை. ஆனால் உங்கள் கேள்வியிலிருந்து எனது மனக்கண்ணிற்கு தோன்றிய விடையங்களை இங்கு பகிர்ந்திருக்கிறேன்.... புரியாவிடின் கூறுங்கள்... இன்னொரு விதத்தில் தருகிறேன்.

பாலகன்
05-08-2008, 06:09 PM

நீங்கள் சொல்லவந்தது அருமையாக விளங்கிற்று நண்பரே, மிகவும் தெளிவான விளக்கம்,

நிறைய நண்பர்கள் வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் ஏதோ நாட்டிற்கு துரோகம் இழைப்பதாக ஒரு தவறான கண்ணோட்டத்தில் இருக்கும் வேளையில் அறிவார்ந்த பதிலை தந்து தன்னிலை விளக்கமளித்த உம் பண்பு வியப்புக்குரியது

அன்புடன்

arun
05-08-2008, 08:39 PM
கேள்விகளும் பதில்களும் அருமை

அருமையான கேள்விகளை கேட்ட அகத்தியன் அவர்களுக்கு பாராட்டுக்கள்
ஆ பத்தை ஆபத்து இல்லாமல் தொடர வாழ்த்துக்கள்

விகடன்
06-08-2008, 04:54 AM
அழகான பதில்கள் அன்பு,

பாராட்டுக்கள்.

அகத்தியன்
06-08-2008, 05:11 AM
அருமையான பதில்கள்

பதிலிட்ட அனைவருக்கும் நன்றிகள்

இன்னும் பதிலிடாதோர்.

ஓவியா அக்கா
ஷிப்லி
தீபன்.

இவர்களுக்கு நாளைவரை அவகாசம் அளிக்கப்படுகின்றது.

அகத்தியன்
06-08-2008, 05:16 AM
அன்புரசிகா உண்மையில் இப்பதில் பலரிற்கு பதிலாகவும், பலரது வினாக்களுக்கு விடையாகவும் அமைந்திருக்கின்றது.

எனது கேள்விக்கு நேரடி பதிலினை தராமல் உமது பாணியில் தந்துள்ள விதம் அருமை நண்பா.

பாராட்டுக்கள்

shibly591
06-08-2008, 05:38 AM
நன்றி அகத்தியன்...

பதிலளிக்க தாமதமானமைக்கு மன்னிக்கவும்...
நேரடியாகவே உங்கள் வினாவை அணுகுகிறேன்...

சிறுபான்மை சமூகங்களை அடக்கியாளும் பேரினவாதச்சக்திகள் மலிந்து கிடக்கும் ஒரு சூழலில் வன்முறைக்கெதிரான படைப்புக்கள் அதிகதிரிக்கும் என்பது இயல்பானதுதான்.ஆனால் அத்தகைய படைப்புக்கள் சகலரையும் சென்றடைவதில்லை...தணிக்கைகள் அச்சுறுத்தல்கள் சக படைப்பாளிகள் சிலரின் ஆதிக்கப்பொறாமைகள் போன்றவற்றால் எவ்வளவுதான் நாம் எழுதினாலும் அவைகளை நம்மால் நிறைய வாசகர்களுக்கு சென்று சேர்க்க முடிவதில்லை.இவ்வாறான ஒரு கோடு கிழிக்கப்பட்ட நிலையிலேயே எனது எழுத்துப்பணி நகர்கிறது...

எனது சமூகம் பற்றி அதன் வலிகள் பற்றி என்னால் அதிகம் பேசப்படவில்லை...அது ஒரு குறையாக எனக்குத்தென்பட்டாலும் எங்கோ ஒரு மூலையில் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும் எவனோ அல்லது எவர்களோ பற்றி எனது கவிதைகள் பேச முற்படுவதை யாரும் தவறென்று விவாதிக்க முடியாது..எனது சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி நான் அக்கறையாகவே இருக்கிறேன்...இதைப்பற்றி நிறைய எழுத்தாளர்கள் பேசிக்கொண்டேயிருப்பதை நான் வழிமொழிந்து கொண்டிருக்கிறேன்....நான்தான் அல்லது நானும்தான் இதுபற்றி பேச வேண்டும் என்ற தேவையில் எனது சமூகம் இல்லை..படுபயங்கரமாக இவைகளை பேசும் பலருக்கு என்னாலான ஆதரவுகளை வழங்குகிறேன்...சிலர் எனது சமூக சிக்கல்களை வியாபாரமாக்கிக்கொண்டிருப்பதை வன்மையாக எதிர்க்கிறேன்..கவிதைக்கு கரு கிடக்கவில்லை என்பதற்காக இன்னும் சிலர் இப்பிரச்சினையை கண்மண் தெரியாமல் எழுதிக்கிழிப்பதைக்கூட ஏற்க முடியாது...

என்னைவிட பலருக்கு இதுபற்றி பேசும் தகுதியும் திறமையும் அதிகம் என்பதால் நான் மௌனமாக இருப்பதோ அல்லது வேறொரு சமூகத்துக்கு சற்று சார்பாக இயங்குவது எந்த வகையில் நியாயம் என்று கேட்க வேண்டாம்...

மனிதர்கள் பற்றி மனிதர்களுக்கு மனிதர்கள் இழைக்கும் கொடுமைகள் பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டேயிருப்பேன்...

எனது பார்வையில் துன்புறுத்தப்படுபவன் சிறுபான்மையோ பெரும்பான்மையோ...தவறு தவறுதான்...

எல்லோருமே முதலில் மனிதர்கள்...

நிறைந்த போராட்டத்துக்கு மத்தியில்தான் எனது சமூகம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறது..இதற்கு காரணமானவர்களை மன்னிக்க முடியாது..அவர்களுக்கெதிரான படைப்புக்கள் இன்று வரை காத்திரமாக வெளிவந்தவண்ணமுள்ளது...எனவே எனது பங்கு குறைவாயினும் படைப்பாளிகளில் குறைவில்லை..அவர்கள் தொடர்வார்கள் ..அவர்களுக்கான எனது பங்களிப்பும் தொடரும்...

அகத்தியன்
06-08-2008, 05:48 AM

நன்றி உங்கள் பதிலிற்கு ஷிப்லி.
ஆனால் நான் மேற்குறிப்பிட்ட உங்கள் வரிகளுடன் ஒத்துப்போக எனக்கு ஒப்பவில்லை. உங்களது சமூகம் அழுகின்ற போது ஏன் நீங்கள் எங்கோ எவர்களுக்காகவோ அழவேண்டும்?
எனது வீட்டில் நடைபெறும் பிரச்சினைகளினை நாம் கழைவதில் அக்கறை கொண்ட பிந்தான் அடுத்த்ட வீட்டுக்காரனின் பிரச்சினை பற்றி விவாதிக்க வேண்டும்.

மனித அவலங்களுக்காக கண்ணீர் விடுவது ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டிய ஒன்றுதான் அதிலும் ஒரு இலக்கியவாதிக்கு அது தார்மீக பொறுப்பாக உள்ளது. அதனை நான் பாராட்டுகின்றேன்.

கவிதைகளின் பாடு பொருட்கள் அவரவர் சூழலில் இருந்துதான் வருகின்றன. ஒரு யுத்த சூழலில் உள்ளவனுக்கு. காதல் ரசம் சொட்ட சொட்ட கவிதை வரும் என்றால் அது இயலாத விடயம்தானே.

பாராட்டுக்கள் ஷிப்லி

அன்புரசிகன்
06-08-2008, 05:51 AM
எனது கேள்விக்கு நேரடி பதிலினை தராமல் உமது பாணியில் தந்துள்ள விதம் அருமை நண்பா.

பாராட்டுக்கள்

உங்களுக்கு விடைகிட்டியது என்பதால் மகிழ்ச்சி.... பாராட்டுக்களுக்கு நன்றிகள்...

shibly591
06-08-2008, 06:01 AM
நன்றி உங்கள் பதிலிற்கு ஷிப்லி.
ஆனால் நான் மேற்குறிப்பிட்ட உங்கள் வரிகளுடன் ஒத்துப்போக எனக்கு ஒப்பவில்லை. உங்களது சமூகம் அழுகின்ற போது ஏன் நீங்கள் எங்கோ எவர்களுக்காகவோ அழவேண்டும்?
எனது வீட்டில் நடைபெறும் பிரச்சினைகளினை நாம் கழைவதில் அக்கறை கொண்ட பிந்தான் அடுத்த்ட வீட்டுக்காரனின் பிரச்சினை பற்றி விவாதிக்க வேண்டும்.

மனித அவலங்களுக்காக கண்ணீர் விடுவது ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டிய ஒன்றுதான் அதிலும் ஒரு இலக்கியவாதிக்கு அது தார்மீக பொறுப்பாக உள்ளது. அதனை நான் பாராட்டுகின்றேன்.

கவிதைகளின் பாடு பொருட்கள் அவரவர் சூழலில் இருந்துதான் வருகின்றன. ஒரு யுத்த சூழலில் உள்ளவனுக்கு. காதல் ரசம் சொட்ட சொட்ட கவிதை வரும் என்றால் அது இயலாத விடயம்தானே.

பாராட்டுக்கள் ஷிப்லி

என் வீட்டுப்பிரச்சினையை பேச என்னை விட அதிகம் பேருக்கு திறமையும் தகுதியும் இருக்கும்போது மௌனமாக அவர்களுக்கு ஆதரவு வழங்குவதில் தப்பில்லைதானே....

"பக்கத்து வீட்டுப்பிள்ளையை ஊட்டி வளரத்தால் தன் பிள்ளை தானாய் வளரும்"

அகத்தியன்
06-08-2008, 06:08 AM
ஐ நழுவுறீங்களே...

விடுங்க இத ஒருநாளைக்கு- நாட்டுக்கு வந்தப்புறம்,

உங்க ஊர் கடற்கரையிலோ அல்லது எங்க ஊர் கடற்கரையிலோ காரமா ஏதாவது சாப்பிட்டுக்கு(?????????????????) விவாதிக்கலாம்.

இப்ப விடு ஜூட்

shibly591
06-08-2008, 06:13 AM
ஐ நழுவுறீங்களே...

விடுங்க இத ஒருநாளைக்கு- நாட்டுக்கு வந்தப்புறம்,

உங்க ஊர் கடற்கரையிலோ அல்லது எங்க ஊர் கடற்கரையிலோ காரமா ஏதாவது சாப்பிட்டுக்கு(?????????????????) விவாதிக்கலாம்.

இப்ப விடு ஜூட்

இனப்பிரச்சினை குறித்த விவாதங்கள் வேண்டாம் நண்பரே....

அகத்தியன்
06-08-2008, 06:14 AM
இனப்பிரச்சினை குறித்த விவாதங்கள் வேண்டாம் நண்பரே....

அதைத்தான் நானும் சொல்கின்றேன். :icon_b: :icon_b: :icon_b: :icon_b:

ராஜா
06-08-2008, 10:49 AM
அன்பு ரசிகனின் உள்நாட்டு வேலைக்கான முதல் முயற்சி, தமிழன் என்ற காரணத்துக்காக அம்முயற்சி மறுதலிக்கப்பட்டது அறிந்தும், ,இலங்கையில் தமிழ் மக்கள் இரண்டாம்தரக் குடிகளாகக் கூட இல்லாத நிலை அறிந்தும் மனம் வருந்துகிறது.

அடுத்து அன்பு அடுக்கிய காரணங்களும் நியாயமானவையே..!

ஷிப்லியின் தெளிவான பதிலில் உண்மை ஒளிர்கிறது. ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாக தன்னால் இயன்றதை ஷிப்லி தொடர்ந்து செய்வார் என்ற நம்பிக்கையை நம்முள் விதைத்திருக்கிறார்.

நன்றி நண்பர்களே..!

அமரன்
06-08-2008, 11:59 AM
இரு பதில்கள் வரவேண்டிய நிலையில் இன்று வராத பட்சத்தில் காத்திருக்கும் ஆபத்தை, அழகியமணவாளனை அழைக்கலாமோ.

அனைவரது பதில்களையும் படிக்கத்தான் முடிகிறது.. பதிலுக்குப் பதில் பேச முடிவதில்லை.. பொன்னுக்கு தட்டுப்பாடுப்பா.. பாராட்டுகளும் நன்றியும் அனைவருக்கும்.

மதி
06-08-2008, 12:17 PM
ஆழமான பதிலுக்கு நன்றி அமரன்...

பெரியவர்களுள் குழந்தைத்தனம் இருத்தல் வேண்டும்... சமயத்திற்கேற்ப பயன்படுத்த வேண்டும்...ஆழமாய் யோசித்து சொல்லியிருக்கிறீர்கள்... முழுவதுமாய் ஒத்துப் போகிறேன்.

ராஜா
06-08-2008, 12:27 PM
இன்று முழுதும் காத்திருப்போம் அமர்..!

சம்பந்தப்பட்டவர்களுக்கு தனிமடல் போயுள்ளது அல்லவா..?

நாளை காலை பில்லாவின் கேள்வித்தொகுப்பு வெளியிடப்படும்.

ஓவியா
06-08-2008, 12:41 PM
தாமதத்திற்க்கு மன்னிக்கவும். என் பதில் இன்று வரும்.

நன்றி.

பூமகள்
06-08-2008, 01:09 PM
பாராட்டி வாழ்த்திய அழகிய மணவாளரான பில்லா அண்ணா,
அறிஞர் அண்ணா மற்றும் அனைவருக்கும் எனது அன்பான நன்றிப் பூக்கள் தூவிச் செல்கிறேன்..!! :)

shibly591
06-08-2008, 01:13 PM
ஷிப்லியின் தெளிவான பதிலில் உண்மை ஒளிர்கிறது. ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாக தன்னால் இயன்றதை ஷிப்லி தொடர்ந்து செய்வார் என்ற நம்பிக்கையை நம்முள் விதைத்திருக்கிறார்.

நன்றி நண்பர்களே..!

நன்றி ராஜா அண்ணா...

அமரன்
06-08-2008, 05:01 PM
இன்று முழுதும் காத்திருப்போம் அமர்..!

சம்பந்தப்பட்டவர்களுக்கு தனிமடல் போயுள்ளது அல்லவா..?

நாளை காலை பில்லாவின் கேள்வித்தொகுப்பு வெளியிடப்படும்.

தாமதத்திற்க்கு மன்னிக்கவும். என் பதில் இன்று வரும்.

நன்றி.

தீபன் தான் பாக்கி.. தீபன் மன்றம் வரும்போது பதிலும் வரும் அண்ணா..

ராஜா
06-08-2008, 05:06 PM
அவ்வாறே ஆகட்டும்..!

பாசமலர் 2007 பதில் காணக் காத்திருக்கிறேன்..!

ஓவியா
06-08-2008, 11:29 PM
தம்பி அகத்தியா,
நான் இலவச அய்கேஸ் வேண்டாம் என்றதினால் 5 நிமிடத்தில் என் கட்டுரையை பாராட்டி அய்கேஸை அளித்து விட்டாய். :redface::redface: நன்றி. இங்கு விடைக்கூற வாய்ப்பளித்தமைக்கும் நன்றிகள்.

தற்பொழுது என்னிடமிருக்கும் 270 ஐய்கேஸையும் ஆ-10தில் நீங்கள் அடித்த பந்திற்க்காக .... :icon_b: பாராட்டி தருகிறேன்.

************************************************************************************************************************************************************************************************************

அன்புள்ள அக்கா ஓவியாவிற்கு இப்ப உங்க கையில் 200 ஐ கேஷ் இருப்பதால் இந்த கேள்வி, மேலை நாடுகளில் வாழும் ஒரு தமிழ் பெண் என்றவகையில், நீங்கள் உங்கள் கலாச்சாரத்தினை பாதுகாப்பதில் எவ்வளவிற்கு சிரத்தை எடுக்கின்றீர்கள்? அதில் உங்களுக்கு ஏற்படும் தர்ம சங்கடங்கள் பற்றி சொல்லுங்கள்

அனைவருக்கும் வணக்கம்.

இன்று நான் வெகு சிக்கனமாகவும்,கொஞ்சம் குழப்பமாகவே பதிலளிக்கும் சூழ்நிலையில் இருக்கின்றேன். மன்னிக்கவும்.

கலாச்சாரம் என்பது அவரவர் பிறந்த இடம், மதம், மொழி, பண்பாடு என பலவகையில் வேறுபட்டிருக்கின்றது. மிகவும் பணக்கார கலாச்சாரம் நம்முடையது, ஒழுக்கமே அதன் தாய்மொழி.

மேலை நாடுகளில் வாழும் ஒரு தமிழ் பெண் என்றவகையில், நான் கலாச்சாரத்தினை பாதுகாப்பதில் எந்தளவிற்குச் சிரத்தை எடுக்கின்றேன் என்று கேட்டால்?..... என் பதில் நான் ஏன் கலாச்சாரத்தினை பாதுகாக்க வேண்டும்? என்ற கேள்வியே கேள்விக்கு பதிலாய் வரும். இருக்கும் கலாச்சாரத்தினை கெடுக்காமல் இருப்பதே சிறப்பு.

நான் மலேசியாவில் சிட்டியிலே பிறந்து படித்து வளர்ந்ததால் எனக்கு ஆரம்பதிலிருந்தே நான் ஒரு மலேசியன் என்ற உணர்வே தவிர, தமிழன் என்றோ இந்தியன் என்ற எண்ணமோ கிடையாது. எனக்கு மேல் நாட்டு கலாச்சாரம் ஓரளவு அத்துப்படி. :):) ஆனால் அது எனக்கு பிடிக்காது.

என் மூதாதையர்கள் மிகவும் இந்திய கலாச்சாரத்துடனும், தமிழ் மொழிப்பற்றுடனும் என் தந்தையை வளர்த்ததார்கள், அதன்படி நானும் ஓரளவு தமிழ் கலாச்சாரம், தமிழர் பண்பாடு, மொழிப்பற்று என இவைகளுடன் இணத்தே வளர்க்கப்பட்டேன்.

முக்கியமாக கலைகள், ஆன்மீக பக்தி, நாட்டுப்பற்று, வீட்டுப்பற்று, என பல விசயத்தில் எங்களை ஈடுப்படுத்தினர். என் நாட்டிய கலை ஈடுபாடும் ஆன்மீகமும் என்னை ஒழுங்குடன் வாழ உதவியது. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது போல் இவைகள் இன்னமும் என்னை நல்வழியில் இட்டுச்செல்கிறது. இது போல் வளரும் தலமுறையினரும் பின் பற்றினால் நம் கலாச்சாரம் எபொழுதுமே நன்கு காக்கப்படும்.

தமிழ் காலாச்சாரம் எப்பொழுதுமே என்னுடன் ஒட்டி உறவாடி இருந்ததால் அது எனக்கு பிடித்து பழகி போன ஒரு விசயம், அதுவும் நன்கு தெரிந்த விசயம், அது என்னை நற்வழிக்காட்டி செம்மையாக்கிய விசயம் என்பதால் அதை அப்படியே பின் பற்றுவது சுலபம். நிற்க,

என் கலாச்சாரத்தினால் எனக்கு ஏற்படும் தர்மசங்கடம் என்றால் பல உண்டு, ஒன்று அதிகமாக 2 மணிநேரத்திற்க்கு மேல் என்னால் வெஸ்டர்ன் பார்ட்டிகளில் கலந்துக்கொள்ள முடியாது. (நம் தமிழ் உள்ளூர் மக்களே இப்பொழுதெல்லாம் வெஸ்டர்ன் வழி விருந்துகள் வைக்கின்றனர்) அவர்களின் அன்பான வேண்டுதல்களை தட்டிக்கழித்து முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு மூட் அவுட் ஆவது.

இரண்டாவது இங்கு வாழும், முக்கியமாக, நம் தமிழ் மக்கள் மேற்க்கத்திய காலாச்சாரத்தை அப்படியே பின் பற்றி ஆண்கள் இளவயதிலே மது, மாது, சமயத்தில் பெண்கள் உள்ளாடை அளவு ஆடை அணிவதையும், இவர்கள் பொது இடங்களில் அசைவ சேட்டைகள் புரிவதையும், பள்ளிப்பிள்ளைகள் நடு ரோட்டில் முத்தமிடுவதும், பஸ்ஸில் காம சேட்டைகளை புரிவதும், எடுத்த விசயத்திற்கெல்லாம் கொச்சை வார்த்தகளை கண்மூடிதனமாக பயன் படுத்துவதும்.... காண காண நெஞ்சு வலிக்கும்.

மூன்றாவது மிகவும் முக்கியமானது அதுவும் இங்கு லண்டனில் புதிய வேலைகளுக்கு நேர்முக தேர்வுகளுக்கு சென்றால் ஆசியன் இந்தியன் கலாச்சாரம் என்றும், இவர்கள் அப்படி-இப்படி இருக்க மாட்டார்கள் என்று வேய்ட்டிங் லிஸ்ட்டில் வைப்பது.

கலாச்சாரத்தினை பாதுகாப்பதில் எவ்வளவிற்கு சிரத்தை எடுக்கின்றீர்கள்?

ஒரு சிரமுமில்லை நான் நானாக இருக்கிறேன் எப்படியென்றால் இடம், பொருள், ஏவல் என்பதை அப்படியே கடைப்பிடித்து, எந்த இடத்திலும் கண்மூடித்தனமான கலாச்சார சீரழிவினை கொண்டு வருபவர்கள் போல் நடந்துக்கொள்ள மாட்டேன், அதாவது எந்த நிகழ்ச்சிக்கு போகிறேனோ அப்படியே இருப்பேன். ஐகிலாஸ் என்றால் ஐகிலாஸ், லோகிலாஸ் என்றால் லோகிலாஸ்.... எப்பொழுதுமே நான் ஓரளவு கவர்ச்சியான உயர்தர உடைகளை உடுத்துவதால் என்னை டிப்பிகல் என்ற லிஸ்ட்டில் வைக்கவும் மாட்டார்கள். அதே சமயத்தில் என் கலாச்சாரத்தை மீரியும் நான் நடந்துக்கொள்ள மாட்டேன்.

நன்கு படித்துள்ளேன், அதனால் மேற்கத்திய மோகத்தில் வாழ்பவர்களைப்போல் வெஸ்ட்டன் கல்சர்தான் என்னை சமுதாயத்தில் மதிப்புடன் உயர்ந்த நிலைக்கு அழைத்துச்செல்லும் என்ற மாயை எப்பொழுதுமே எனக்கு தோன்றியதில்லை. லண்டனில் படித்தவள், என் நாட்டிற்க்கு இளையதூதராய் இருந்தவள், இளய வயதிலே நன்கு சாதித்தவள் என்ற கர்வம் மட்டுமே கொஞ்சம் எனக்குண்டு. :)

பல்கலைக்கழக மாணவியாக இருப்பதினால் ரொம்ப கவர்ச்சியான உடை, மது, சிகரெட், லூட்டி, பாப், டிஸ்கோ, அந்த டான்ஸ், இந்த டான்ஸ்.....xYZ.... என இவைகளை முடிந்தளவு தவிர்த்து விடுவேன். எனக்கில்லாத பழக்க வழக்கம் என் சந்ததியினருக்கு வருவது குறைவே!!இதுவே நான் கலாச்சாரத்தை பாதுகாக்கும் வழி.

சின்ன வயதில் அடுத்தவர்களுக்கு அட்வைஸ் செய்ய முடியாது அதனால் இந்த கலாச்சாரம், பண்பாடு என்ற விசயத்தில் பொதுநலம் காக்கவும் முடியவில்லை, முடியாது. சுயநலமாக நீங்களே அதை வழி தவறாமல் காத்துக்கொண்டால்....நன்று. ஒவ்வொருவரின் வெற்றியே ஒரு சமுதாயத்தின் வெற்றி.

அதுவுமன்றி தமிழ் கலாச்சாரத்தில் 'ஒழுக்கம்' என்ற ஒரு விசயம் மிகவும் அற்ப்புதமான் ஒன்றாக விளங்குகிறது. ஒழுக்கம் என்ற ஒரு வார்த்தையே நம்மை நேர்மையாக வாழ வழிசெய்யும். அத்தகைய தமிழ்க்கலாச்சாரம் என்னுடனேயே இருப்பதினால் நான் இதை என் குழந்தைகளுக்கு நன்கு கற்றுக்கொடுத்து வளர்ப்பதே நான் நம் கலாச்சாரம் சீரழியாமல் இருக்க செய்யும் ஒரு தொண்டு.

நன்றி.

வணக்கம்.

ராஜா
07-08-2008, 03:23 AM
அன்பு பாசமலரின் வெளிப்படையான, எவ்வித முகமூடிகளும் இல்லாத பதிலுக்கு ஒரு சலாம்..!

கவாஸ்கர் போல துவக்கத்தில் கொஞ்சம் சொதப்பினாலும், பின் சமாளித்து ஆடி சதம் அடித்திருக்கிறார்..!

ஒரு தமிழ்ப்பெண்ணாக இருப்பதால், மேலை நாட்டு வாழ்க்கை முறையில் எவ்வளவு இன்னல்கள் நேருகிறதென்றும், அதையும் மீறி இயன்றவரை நமது கலாச்சாரத்தைக் காப்பாற்றி வருவதையும் தெளிவாக எடுத்துரைத்திருக்கும் "விசாலமான" பதிலுக்கு பாராட்டுகள் பாசமலரே..!

அகத்தியன்
07-08-2008, 04:09 AM
நன்றி அக்கா,

தீபனின் வினா மட்டுமே எஞ்சி உள்ளது. நண்பரை மன்றத்தில் இன்னும் காணவில்லை. அதனால் அக்கேள்வியினை முக்கியமான ஒருவருக்கு அளிக்க அவரின் ஒப்புதல் கேட்டுள்ளேன். கிடைக்கும் எனவும் நம்புகின்றேன்.

எப்படியும் இன்றைக்குள் எனது ஆ 10 நிறைவுறும் எனலாம்.

நன்றி

(அமரனிற்கு ஏன் இந்த அவசரம்?????????)

அகத்தியன்
07-08-2008, 04:14 AM

நிதர்சனமான வார்த்தைகள்.

தெளிவான உங்கள் பதிலுக்கு என் பாராட்டுக்கள்

எனது கேள்விக்கு நான் சரியான நபர்களைத்தான் தேர்ந்தெடுத்துள்ளேன் என்பதை நினைக்கும் போது எனக்கு பெருமையாக உள்ளது.

ராஜா
07-08-2008, 05:43 AM
தங்களின் பெருமை நியாயமானதே அகத்தி(னி)யரே..!

ராஜா
07-08-2008, 05:27 PM
அன்புத் தம்பி, ஆட்டோ ஓட்டும் மாணிக்கம், அழகிய மணவாளன் என்று சுருக்கமாக அழைக்கப்படும் பில்லா அவர்களின் கேள்வித் தொகுப்பு இது.

[பில்லா வேளாங்கண்ணிக்கு புனிதப்பயணம் சென்றிருப்பதால், திரியின் போக்கு தடைபடாமல் இருக்க தொகுப்பு தரும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துச் சென்றிருக்கிறார்.]

1. மொக்கைச்சாமி
மொக்கைன்னு பெயரை வச்சிக்கிட்டு திறமையா பின்னுட்டமிடும் உங்களிடம் ஒரு கேள்வி, மொக்கை மொக்கைன்னு சொல்லுறோமே? பிறகு ஏன் மொக்கை போட்டா எல்லாரும் சிரிக்கிறாங்க? விவரமா சொன்னா நல்லாயிருக்கும்?

2. லொள்ளு வாத்தியார்
மன்றத்தில் உள்ள அனைவரின் மனதில் இடம் பெற்றவராகிய உள்ளதை உள்ளபடி பேசும் லொள்ளு வாத்தியாரே உங்களிடம் ஒரு கேள்வி, மனசாட்சியை தொட்டு சொல்லுங்க,, சின்ன வயசில நீங்க பன்ன சுட்டித்தனத்தால ஏதாவது வம்புல மாட்டி பிறகு தப்பித்துவந்த ஒரு நிகழ்வை பற்றி?

3. பிரவிண்
கணினி துறையில் தாங்கள் வல்லவர் என்பது எல்லாருக்கும் தெரியும். அதனால அது சம்பந்தமா உங்க கிட்ட இந்த கேள்வி, மொபைலில் வலைதள பக்கங்களை உலாவும் போது தமிழில் பார்க்க இயலுமா? யுனிக்கோடு எழுத்துருவை பார்க்க நாம் என்ன செய்யவேன்டும்?

4. உதய சூரியன்
தமிழை உயிராக கொன்டுள்ள தங்களிடம் ஒரு கேள்வி, முற்காலத்தில் சோழர்கள் கடல்கடந்து சென்று தமது அரசை நிறுவினார்கள்,,, (உதாரணம் கடாரம் கொண்டான்) அன்று அது வெற்றியாக கருதப்பட்டாலும், இன்று மற்ற கீழ் திசை நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு அது பெரும் பிரச்சனையாக இருக்கிறதே, இதற்கு உங்கள் பதில் என்ன?

5. மோகன் காந்தி
தகவல்களை தொகுத்து தருவதில் வல்லவரான தங்களிடம் ஒரு கேள்வி, இன்றைய செய்திதாள்களில் பார்க்கையில் கொலை கொள்ளை கற்பழிப்பு ஏமாற்றுவேலை என அணைத்து கெட்ட செய்திகளையும் மக்கள் அறியும் வகையில் இன்றைய செய்திதாள்கள் இருக்கின்றதே, இதனால் மக்கள் விழிப்புணர்வு அடைகின்றார்களா? இல்லை எரிச்சல் அடைகிறார்களா? அல்லது இதையெல்லாம் பார்த்து ஏமாற்றும் கலையை மற்றவர்களும் கற்றுக்கொள்கிறார்களா?

6. இறைநேசன்
பெயருக்கேற்றார் போல் இறை நேசத்திலும் பக்தியிலும் சிறந்தவரான தங்களிடம் ஒரு கேள்வி, இன்று நிறைய போலி தீர்க்கதரிசிகள் மக்களை ஏமாற்றுகிறார்களே, அவர்களை இறைவன் ஒன்றும் செய்யமாட்டாரா? உண்மையான இறைமக்களை கானும் வழிதான் என்ன?

7. தமிழ் குமார்
தமிழ்குமார்னு பெயரை வைத்துகொன்டு தமிழ் மன்றம் பக்கமா அடிக்கடி வராததால் உங்களுக்கு இந்த (தண்டனை) கேள்வி, நீங்க ஒரு போட்டியை நடத்துவதாக வைத்துகொள்வோம், அதில் நிறைய போட்டியாளர்கள் பங்கேற்ற வேன்டுமென்றால் ஆக்கபூர்வமாக நீங்கள் என்ன செய்யவேன்டும்,, ( குறுக்கு வழியில் அல்ல)

8. கீழை நாடான்
குறுங்கவிதை மற்றும் கிராமிய மணம்வீசும் கதைகள் எழுதுவதில் வல்லவரான தங்களிடம் ஒரு கேள்வி, இன்றைய உலகில் சிறந்தது தொழில்நுட்ப வசதிகள் குறைந்த கிராம வாழ்க்கையா? அல்லது அணைத்து வசதிகளும் கொன்ட நகர வாழ்க்கையா? எதனால் அது சிறந்தது?

9. ரவுசு ராஜா அண்ணன்
மன்றத்தில் உள்ள அணைவரையும் கலகலப்பாக வைத்திருக்க கங்கணம் கட்டிக்கொன்டிருக்கும் தங்களிடம் ஒரு கேள்வி, ஒருவரை நாம் சிரிக்க வைப்பதால் அவர் மனமகிழ்ச்சி அடைகிறார், ஆனால் அவரை சிரிக்க வைத்தவரோ கோமாளியாகிவிடுகிறார்.... இது எதனால்? சிரிக்க வைப்பவர்களை காமெடியன்கள் என்று இரண்டாம் அல்லது 3 ஆம் தரமாக அல்லவா சினிமாவில் காட்டுகிறார்கள், இது பற்றி உங்கள் கருத்து என்ன?

10.அதிரடி அரசன்
[B]குசும்பு, லொள்ளு இவற்றை மொத்தமா குத்தகை எடுத்து நடத்திவரும் அதிரடி அரசனே உம்மிடம் ஒரு கேள்வி, ஒருவருடைய கையெழுத்தையோ அல்லது பின்னுட்டத்தையோ வைத்து ஒருவருடைய குணாதிசயங்களை கண்டுபிடிக்க இயலுமா? முடியும் என்றால், அது எப்படி என்று விளக்கமுடியுமா?

mgandhi
07-08-2008, 05:56 PM

செய்திகள் படிப்பதே நாட்டையும், நாட்டு மக்களைப்பற்றி அறிந்து கொள்ள உதவும் ஓரு பூத கண்ணாடி. அது நடு நிலையுடன் இருக்க வேண்டும். ஆனால் இன்று மதம், ஜாதி, அரசியல் இவற்றில் தனக்கு வேண்டியவரை பற்றி உயர்வாகவும், மற்றவர்களை பற்றி தாழ்வாகவும் எழுதும் ஒரு களமாக விளங்குகிறது.

நமது பத்திரிக்கைகள் நாட்டில் நடக்கும் எவ்வளவோ நல்ல விஷயங்களை விட்டு விட்டு வழிபறி, கொள்ளை,கொலை,கற்பழிப்பு, கள்ள காதல் இவற்றை முதன்மை படுத்தி செய்திகள் தருகிறார்கள். மக்களும் இவற்றை தான் ஆர்வமுடன் படிக்கிறார்கள்.

செய்திதாள்களை படிக்கும் போது மனதில் குழப்பம்தான் வருகிறது. நாடு மோசமாக உள்ளது போல் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறது. செய்திகளை படித்து நாம் தான் இப்படி இப்படி நடந்தால் இப்படி இப்படி பட்ட துன்பங்கள் வரும், செய்தியில் வரும் மற்றவர்களுக்கு ஏற்படும் அனுபவப்பாடங்களை கொண்டு. நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும்.

ஓரு ரவுடியை பற்றியோ, ஆல்லது கிழ்தரமான ஓரு அரசியல் வாதியை பற்றியோ உயர்வாக பத்திரிக்கைகள் எழுதினால் நாமும் அவனை போல் நடந்து கொன்டால் நமக்கும் புகழும்,செல்வாக்கும் கூடும் என்று எண்ண கூடாது பல இளைஞர்கள் இப்படிதான் நினைக்கிறார்கள். அந்த புகழ் ஒரு சில நாள் செய்தியுடன் மறைந்து விடும்.

செய்திதாள்கள் வியாபார நோக்குடன் தான் செயல் படுகிறது. மக்கள் தெளிவாக '' அண்ணப் பறவை போல'' அதில் உள்ள நல்லவற்றை எடுத்து கொண்டு கெட்டதை விட்டு விட வேண்டும்.அப்படித்தான் பலரும் இன்றும் உள்ளனர்.

மிக்க நன்றி அழகிய மணவாளன் (பில்லா)

அமரன்
08-08-2008, 12:05 PM
காந்தி அண்ணன் கணக்குடன் நின்றுவிட்டனவே பதில்கள்.

தீபன்
08-08-2008, 12:49 PM
உள்ளேன் ஐயா....
தாமதத்திற்கு மனிக்கவும். அகத்தியரின் வினாவுக்கு விடை தரும் சந்தர்ப்பம் இன்னமும் எனக்கிருக்கிறதா...? (2வாரங்களாக மன்றம்வர முடியவில்லை. மன்னிக்க.) உங்கள் அனுமதியின்பின் நாளை விடையோடு வருகிறேன்.

அமரன்
08-08-2008, 12:52 PM
உள்ளேன் ஐயா....
தாமதத்திற்கு மனிக்கவும். அகத்தியரின் வினாவுக்கு விடை தரும் சந்தர்ப்பம் இன்னமும் எனக்கிருக்கிறதா...? (2வாரங்களாக மன்றம்வர முடியவில்லை. மன்னிக்க.) உங்கள் அனுமதியின்பின் நாளை விடையோடு வருகிறேன்.

காத்திருக்கிறோம் தீபன்..

தீபன்
08-08-2008, 01:08 PM
நன்றி அமரன். அகத்தியனின் கேள்வி சற்று சிக்கலான, ஆழமான கேள்வி. விரிவாக பதிலளிக்காவிடில் சர்ச்சைக்குரியதாகி விடலாம். அதனால் தட்டச்சு செய்ய சற்று கால அவகாசம் தேவை. கூடியவரையில் நாளைக்குள் தர முயல்கிறேன். இதற்காகாக காத்திராமல் ஆ பத்து தொடரட்டும்.

ராஜா
08-08-2008, 01:40 PM
ரவுசு ராஜா அண்ணன்

மன்றத்தில் உள்ள அணைவரையும் கலகலப்பாக வைத்திருக்க கங்கணம் கட்டிக்கொன்டிருக்கும் தங்களிடம் ஒரு கேள்வி, 1. ஒருவரை நாம் சிரிக்க வைப்பதால் அவர் மனமகிழ்ச்சி அடைகிறார், ஆனால் அவரை சிரிக்க வைத்தவரோ கோமாளியாகிவிடுகிறார்.... இது எதனால்?

2. சிரிக்க வைப்பவர்களை காமெடியன்கள் என்று இரண்டாம் அல்லது 3 ஆம் தரமாக அல்லவா சினிமாவில் காட்டுகிறார்கள், இது பற்றி உங்கள் கருத்து என்ன?

தங்கள் கேள்வியை இரு பகுதிகளாக பிரித்து விடையளிக்க முயல்கிறேன்..

சிரிக்க வைப்பவர்களை கோமாளிகளாக நினைக்க காரணம் என்னவாக இருக்கும் என்று சிந்தித்தால்..

முன்காலத்தில் மக்களுக்கு கேளிக்கை நிகழ்ச்சியாக இருந்தது தெருக்கூத்து. அரிச்சந்திரா மயான காண்டம் போன்ற நாடகங்கள் பார்க்கும்போது கனத்திருக்கும் ரசிகர்கள் மனதை இலேசாக்கும் நடவடிக்கைகளை ஏற்று செயல்ப*டுத்தும் பொறுப்பு சிரிப்பு நடிகர்களுக்கே இருந்தது. அவர்களை 'பபூன்' என்றுதான் மக்கள் குறிப்பிடுவது வழக்கம். நாடகம் துவங்கியதும், "வந்தனமய்யா.. வந்தனம்.. வந்த சனமெல்லாம் குந்தணும்.." என்று வண்ண வண்ண உடையோடு, கும்மாளம் அடித்து ரசிகர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து, அவர்களின் கவனத்தை நாடகத்தின்பால் ஈர்ப்பவர்கள் இவர்களே..

மைக் வசதிகள் இல்லாத காலத்தில், கடைசி வரிசை மக்களை சிரிக்கவைக்க அவர்களுக்கு சில சேட்டைகள் செய்வது அவசியமாக இருந்தது. அதனால்கூட அவர்கள் கோமாளிகளாக சித்தரிக்கப் பட்டிருக்கலாம்.

மிகுந்த அறிவாளியும், நகைச்சுவையாளருமான தெனாலி ராமன், தன்னுடைய கோமாளித்தனமான செயல்கள் மூலமே மக்களால் நன்கு அறியப்பட்டார்.. இதனால்கூட, நகைச்சுவைக்கும் கோமாளித்தனத்துக்கும் முடிச்சுப் போடப்பட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

காமெடியன்கள் இரண்டாம் தரமானவர்கள் என்னும் கருத்துக்கு என்னில் உடன்பாடு இல்லை.

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களுக்கு பிலிம் ரிப்பேரர் என்ற பட்டமே உண்டு. அவருக்கு கதாநாயகனுக்கு இணையான புகழ் இருந்தது. பின்னர் சந்திரபாபு, நாகேஷ் போன்றோர் மிகச் சிறப்பாகவே மதிக்கப்பட்டனர். முதன்முதலில் எனக்குத் தெரிந்து, டைட்டிலில் பெயர் வரும்போது கைதட்டல் விழுந்தது சுருளி ராஜனுக்குதான்.

இன்னும் பாலையா, தங்கவேலு, எம்.ஆர்.ராதா, வி.கே.ராமசாமி என்று நல்ல பெயரோடும் புகழோடும் நிறைய பேர் இருந்திருக்கின்றனர். அவர்களுக்கு படவுலகில் நல்ல மரியாதையும் கிட்டியிருக்கிறது. நம் ஆச்சிக்கு கிடைக்காத மரியாதையா..?

அண்மைக்காலத்தில், கவுண்டமணி ஹீரோவுக்கு இணையாக உடை அமைப்பு, தனிப்பாடல், கனவுக்காட்சி என்று கலக்கினாரே.. மறக்க முடியுமா..? மேட்டுக்குடி படத்தில் ஹீரோயின் நக்மாவுடனேயே டான்ஸ் ஆடினாரே..!

தற்காலத்தில் வைகைப்புயல் வடிவேலு கால்ஷீட்டுக்காகவே படங்கள் காத்துக்கிடக்கின்றன. அவர் பேசும் வசனங்களை நடைமுறை வாழ்வில் நாம் பயன்படுத்துகிறோமே.. ஹீரோக்கள் பேசும் பஞ்ச் வசனங்கள் கூட அவ்வளவு புகழ் பெறுவதில்லையே..

காட்சி அமைப்புப்படி உதையோ, திட்டோ வாங்குவதால் அவர்களுக்கு மரியாதை குறைவு என்று எண்ணலாகாது. தனியொருவராக சிரிக்கவைக்கத் தெரியாத செந்திலுக்குக் கூட நல்ல மரியாதை இருந்துதான் இருக்கிறது.

என்னையும் பதிலளிக்கத் தேர்வு செய்தமைக்கு நன்றி பில்லா.என் பதில் உங்கள் கேள்வியை ஒட்டி இல்லையெனில், என் புரிதலில் கோளாறெனக் கொள்க.

வணக்கம்.

ராஜா
09-08-2008, 04:51 AM
மற்ற நண்பர்களையும் பதிலளிக்க வருமாறு வேண்டுகிறேன்..!

இறைநேசன்
09-08-2008, 08:21 AM
அழகிய மணவாளன் அவர்கள் எழுதியது

பெயருக்கேற்றார் போல் இறை நேசத்திலும் பக்தியிலும் சிறந்தவரான தங்களிடம் ஒரு கேள்வி,

அனபு நண்பர் அவர்களே!

உங்கள் பாராட்டுக்கு நான் தகுத்தியானவன் அல்ல என்று கருதுகிறேன் எனினும் பாராட்டுக்கும் உங்கள் கேள்விக்கும் மிக்க நன்றி!

ஆன்மிகம் பற்றிய எண்ணங்கள் குறைந்து போன இந்த கால கட்டங்களின் என்னை தேர்ந்தெடுத்து நல்ல கேள்வி ஒற்றை வினவியதற்கு மிக்க நன்றி!

1.இன்று நிறைய போலி தீர்க்கதரிசிகள் மக்களை ஏமாற்றுகிறார்களே, அவர்களை இறைவன் ஒன்றும் செய்யமாட்டாரா?

இடறல் உண்டாவது சகஜம், ஆனால் யாரால் இடறல் உண்டாகிறதோ அவர்களுக்கு ஐயோ!

இறைவனை அறிந்து கொள்ள வேண்டும் என்ற வாஞ்சையில் இருக்கும் மனிதர்களை எப்படியாவது ஏமாற்றி வழி தவற பண்ணுவதற்கு என்றே போராடும் தீயசக்திகள்தான் இந்த போலி தீர்க்கதரிசிகள். அதாவது பசுவின் தோல் போர்த்திய புலிகள், ஆட்டு தோல் போர்த்திய ஓநாய்கள். ஒன்றுமறியாத பசுக்களும், கள்ளமில்லா ஆடுகளையும்போல உள்ள நல்ல ஆத்துமாகளை வேட்டையாடி, இறைவனை அறியவிடமால் ஜீவ வழியை கண்டுகொள்ள விடாமல் இவர்கள் தடுக்கின்றனர். ஒரு போலி சாமியால் அநேகர் இடறி இறைவனையே தேடாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இவர்களுக்கு ஐயோ!

சாதரண மனிதர்களுக்கு கிடைக்கும் தண்டனையைவிட இரட்டத்தனயாக தண்டனை கிடைப்பதோடு, இவர்கள் அக்கினியும் கந்தகமும் எரியும் கடலில் தள்ளப்பட்டு சதா காலமும் வாதிக்கப்படுவார்கள் என்று இவர்களை பற்றி தேவன் வெளிப்படுத்தியுள்ளார்[/B]

2.உண்மையான இறைமக்களை கானும் வழிதான் என்ன?

நல்ல இறை மனிதர்களை அறிய மிக பெரிய புத்தி அவசியம் இல்லை, அவர்களை எங்கும் தேடி அலையை வேண்டியதும் இல்லை.

நீங்கள் நல்லவராக இருந்தால் நல்ல இறை மனிதரிடம் தானாக அழைத்து செல்லப்படுவீர்கள் அல்லது இறை மனிதர்கள் உங்களை தேடி வருவார்!

மரம் எப்படிபட்டது என்று அதன் கனியினாலே அறியப்படும்.

அதுபோல்

மிகுந்த அன்பு, எல்லோரிடமும் கருணை, யார் மனதையும் புண் படுத்தாமல் பேசும் சுபாவம், பிறர் நலனுக்காக தன் நலத்தை விட்டு கொடுத்தல், உலக இன்பம் மற்றும் பணத்தின்மேல் பற்று இல்லைமை, பிறருக்காகவும், பிற உயிர்களுக்காகவும் பரிதபித்து கண்ணீர் விடும் இதயம் போன்ற நல்ல கனிகளை கொடுப்பவர் யாராக இருந்தாலும், இறைமனிதன் என்ன இறைவனே தானாக உங்களை தேடி வருவார் என்பதி சிறிதும் ஐயமில்லை.

ராஜா
09-08-2008, 08:33 AM
அடுத்த உயிரை நேசிப்போர் வீட்டு அடிவாசல் தேடி ஆண்டவன் வருவான் என்றுரைத்த இறை நேசருக்கும், இந்த அரிய பதிலுக்கான காரண'கர்த்தருக்கும்' நன்றி..!

தீபன்
09-08-2008, 01:09 PM
அன்பு தீபன் தமிழர்களுக்கு ஒரு தாயக பூமி அவசியம் என்பதில் மறுப்பேதும் இல்லை. எனது கேள்வி, இன்னொரு சிறுபான்மையான முஸ்லிம்களின் நிலை பற்றி, அவர்களின் அரசியல் மற்றும் சுய நிர்ணயம் பற்றி உங்களின் கருத்து என்னவாக உள்ளது? (இலங்கையின் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களினதும் பூர்விக பூமியே, வடக்கிலிருந்து துரத்தப்பட்ட ப்ல்லாயிரம் முஸ்லிம்கள் இன்னும் அகதிகளாகவே உள்ளனர் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்)

உங்கள் வினாவுக்கு வருமுன் அந்த வினா எழுந்த அடிப்படையில் எனக்கு சில சந்தேகங்கள். அதுபற்றி என் பார்வையை முதலில் சொல்லிவிட்டு உங்கள் வினாவுக்கு வருகிறேன்.

இலங்கையில் இருப்பது இருஇனங்களே. தமிழர். சிங்களவர். இதைவிட மிக அரிதாக பழங்குடி மக்கள் உள்ளனர். இருக்கும் மொழி தமிழ், சிங்களம். இருக்கும் மதங்கள் புத்தம், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம்.

இனம் என்றால் என்ன? இடத்தின் அடிப்படையிலா மதத்தின் அடிப்படையிலா மொழியின் அடிப்படையிலா உருவாகிறது...? முஸ்லீம் என்பது இனமா? மதமா? மொழியா?

இங்கிருக்கும் முஸ்லீம் மக்கள் எவ்வாறு உருவானார்கள்? இவர்களின் பூர்வீகம் என்ன? இதனடிப்படையில் இவர்கள் தனியான இனமாக வகைப்படுத்த படலாமா? அப்படியானால் கிறிஸ்தவ மக்களை கிறிஸ்தவ இனமெனலாமா...?

மொழி, இடத்தின் அடிப்படையிலேயே பிரதானமாக இனங்கள் உருவாகின்றன. ஆனால் இந்த இரண்டுமே இலங்கை முஸ்லீம்களுக்கும் தமிழருக்கும் ஒன்றே. பிறகென்ன பாகுபாடு?

என் பார்வையில் இங்குள்ள தமிழ் மக்களே வர்த்தக நோக்கில் வந்த அரபு தேசத்தவர்களுடன் தொடர்புகொண்டு சிறுபகுதி மக்கள் அவர்களின் மார்க்க நெறிகளை கடைப்பிடிக்க தொடங்கினர். (கிறிஸ்தவ மக்களை போல.) இதனடிப்படையில் இஸ்லாம் மார்க்கமும் எம் நாட்டுக்குள் நுழைந்தது. ஆனால் புதிதாக ஒரு இனம் நுழையவில்லை.
அவர்களின் மார்க்கத்தின் தனித்துவம் காரணமாக தனியான ஒரு இனமாக இஸ்லாமியர் தோன்றினாலும் அவர்களும் தமிழர்களே. தமிழினத்தின் மும் மத்தத்தவர்களுள் ஒரு மதத்தினராகவே இஸ்லாமியரும் நோக்கப்படல் வேண்டும்.

தமிழர்கள் போராட்டம் நியாயமானால் தமிழினத்தை சேர்ந்தவர்களென்ற முறையில் இஸ்லாமியரும் சேர்ந்து போராட வேண்டும். ஆனால் ஆரம்ப காலங்களில் சேர்ந்து போராடிய இஸ்லாமிய மக்கள் போரின் தாக்கம் அதிகமானபோது தம்மை தனியான இனமாக சிங்கள இனத்துக்கு காட்டிக்கொள்ள தலைப்பட்டது. முஸ்லீம் சிறுபான்மையினம் என தனியாக தன்னை பிரித்து ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக செயற்பட்டு சுயநல அரசியல் நடத்த முற்பட்டது. சில இஸ்லாமிய தலைவர்களின் தவறான வளி நடத்தலில் தமிழர் போராட்டத்தின் பக்கம் இஸ்லாமியர் தலைவைத்துக்கூட படுப்பதில்லை.

ஆனால், பெரும் விலைகொடுத்து சந்தர்ப்பங்களை உருவாக்கி பேரம்பேசும் வலிமையுடன் தமிழ் தலைமைகள் பேச்சுவார்த்தை நடத்தும் சந்தர்ப்பங்களிலெல்லாம் தமக்கும் உரிமைகள் வேண்டுமென அரசை நிர்ப்பந்திப்பதில் முன்னிற்கும் இக்கட்சிகள். தமது உரிமைக்காக எந்த சிறு முயற்சியும் செய்யாத இக்கட்சிகள் இன்னொருபகுதி மக்களின் தியாகத்தில் உருவான பலனை அறுவடை செய்வதில் மட்டும் முனைப்பாக நிற்கும்.

இத்தகைய போக்கே தமிழ் போராட்ட சக்திகளுக்கும் இஸ்லாமிய மக்களுக்குமிடையே மனக்கசப்புக்கள் உருவாக காரணமாயமைந்தன. இதன் வெளிப்பாடாக பல இஸ்லாமிய மக்களும் அநீதியான முறையில் பாதிக்கப்பட்டனர். தமிழர்களின் எதிரிகளாக நோக்கப்பட்டனர். வரலாற்றின் கறைபடிந்த பக்கங்கள் தவிர்க்கமுடியாத வகையில் உருவாகிப்போயின.

முஸ்லீம்கள் தனியினமென நினைப்பதை விட்டுவிட்டு தமிழரென்ற ஒற்றுமையுடன் சேர்ந்து போராடின் போராட்டமும் வலுப்பெற்றிருக்கும். தேவயில்லா உள்வீட்டு பிரச்சினைகளும் வந்திருக்காது. (தமிழர்களை பாதிக்கும் பல சட்டங்களை நிறைவேற்ற இன்றும் அரசுக்கு ஆதரவு கொடுக்கும் பலமான சக்திகள் இஸ்லாமிய அரசியல் தலைமைகளே.)

சரி, உங்கள் வினாவுக்கு வருவோம்.
நடந்தவை நடந்தவையாகவே போகட்டும். முஸ்லீம்கள் ஒருசிறுபான்மை இனமாகவே இருக்கட்டும். தமிழீழம் அமைத்தபின் அங்கு இவர்களின் நிலை என்ன என்பதுதான் உங்கள் கேள்வி. இதில் கேள்விக்கே இடமில்லை. அடக்குமுறைக்கு எதிராக பலத்த விலைகொடுத்து போராடும் பகுதிக்கு அதன் வலி தெரியும். அதனால் அந்த அந்த பகுதி மக்களின் விருப்பிற்கேற்ப சுயாட்சி அலகுகள் வகுக்கப்பட்டு அதிகாரங்கள் பரவலாக்கப்படும். இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் விருப்புக்கேற்ப சொந்த இடங்களிற்கு திரும்பக்கூடிய நிலை உருவாகும். அனைவரும் தமிழ் பேசும் மக்களென்பதால் நிர்வாக சிக்கல்களின்றி அரசு நடைபெறும்.

தமிழ் மகளால் முஸ்லீம் மக்கள் பாதிக்கப்படவே இல்லையென நான் சொல்லப்போவதில்லை. அதேபோல் முஸ்லீம்களாலும் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் அதெல்லாம் உள்வீட்டு பிரச்சினைகள். பொது எதிரியை எதிர்ப்பதில் எல்லோரும் சேர்ந்து போராட வேண்டும். அதன்பின் அந்த பங்களிப்பின் உரிமையுடன் தமக்கு தேவையானவற்றை அவரவர் எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே.

(இலங்கையின் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களினதும் பூர்விக பூமியே, வடக்கிலிருந்து துரத்தப்பட்ட ப்ல்லாயிரம் முஸ்லிம்கள் இன்னும் அகதிகளாகவே உள்ளனர் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்)

வடபகுதி இஸ்லாமியர் மட்டுமல்ல நாங்களும்தான் 18 ஆண்டுகளுக்கும்மேலாக இடம்பெயர்ந்தே வாழ்கிறோம். இவ்வளவுக்கும் வடபகுதியில் இஸ்லாமிய மக்கள் வாழ்ந்த யாழ்ப்பாணம் கடந்த 12 ஆண்டுகளாக அரசாங்கத்தின் பூரண கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அந்தவகையில் அம்மக்களின் இன்றைய அவலத்துக்கு காரணமும் சிங்கள அரசுதான். அதுவுமல்லாமல் இன்றைய நிலையில் யாழ்ப்பாணம் என்பது ஏனைய நாட்டின் பகுதிகளோடு தொடர்புகளற்று மக்கள் வாழவே முடியாத கடின பிரதேசமாக இருப்பதுதான் இஸ்லாமிய மக்களும் மீழ குடியேற ஆர்வம் காட்டாமைக்கு முக்கிய காரணம்.

சுருக்கமாக சொல்வதானால், தமிழீழத்தில் பிரதேசவாரியாக அதிகாரங்கள் பகிரப்பட்டு எல்லா மக்களும் எங்கும் வாழக்கூடிய ஏது நிலை உருவாக்கப்பட வேண்டும். உருவாக்கப்படும். ஆனால், போராட்டம் முடியுமுன் அது சாத்தியமில்லை. அதற்கிடையில் உருவான, உருவாகுகின்ற, உருவாகப்போகும் முரண்பாடுகளை, கசப்புகளை தவிர்ப்பதுவும் சாத்தியமில்லை.

இது என் பார்வையே தவிர தமிழ் சமூகத்தின்பார்வையல்ல. தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்கள். விளக்கமாக எழுத அவகாசமில்லாமையால் சுருக்கமாகவே விடையை தந்துவிட்டேன். அதனால் சில விளக்க குறைபாடுகளும் ஏற்படலாம். அதை குறிப்பிடின் அதை விளக்க முற்படுவேன். நன்றி.

ஓவியா
09-08-2008, 03:51 PM
அன்பு பாசமலரின் வெளிப்படையான, எவ்வித முகமூடிகளும் இல்லாத பதிலுக்கு ஒரு சலாம்..!

கவாஸ்கர் போல துவக்கத்தில் கொஞ்சம் சொதப்பினாலும், பின் சமாளித்து ஆடி சதம் அடித்திருக்கிறார்..!

ஒரு தமிழ்ப்பெண்ணாக இருப்பதால், மேலை நாட்டு வாழ்க்கை முறையில் எவ்வளவு இன்னல்கள் நேருகிறதென்றும், அதையும் மீறி இயன்றவரை நமது கலாச்சாரத்தைக் காப்பாற்றி வருவதையும் தெளிவாக எடுத்துரைத்திருக்கும் "விசாலமான" பதிலுக்கு பாராட்டுகள் பாசமலரே..!

ஆம் அண்ணா நான் கொஞ்சம் வெளிப்படையாக பேசுபவள்தான். உண்மையில் இந்த கேள்விக்கு நான் சரியாகவே பதிலளிக்க வில்லை என்பதே என் எண்ணம். இருப்பினும் உங்கள் பாராட்டிற்க்கு நன்றிகள்.

நிதர்சனமான வார்த்தைகள்.

தெளிவான உங்கள் பதிலுக்கு என் பாராட்டுக்கள்

எனது கேள்விக்கு நான் சரியான நபர்களைத்தான் தேர்ந்தெடுத்துள்ளேன் என்பதை நினைக்கும் போது எனக்கு பெருமையாக உள்ளது.

நன்றி அகத்தியன்.:)

சூரியன்
09-08-2008, 04:07 PM
[QUOTE=பூமகள்;372265]
தம்பி சூரியன் பதிலில் நிதர்சனம் தெரிந்தது.. விகித மாறிலிகள் சரியாக சொல்லப்படவில்லையெனினும்.. கிராமத்து சூழலில் இப்போதெல்லாம் கில்லி தாண்டாவுக்கு பதில்.. கிரிக்கெட் புகுந்திருப்பதை மறுப்பதற்கில்லை..

ஆயினும்.. வெளியரங்கு விளையாட்டு இன்னும் மறையவில்லை என்பது ஆறுதல்..

வாழ்த்துகள் சூரியன்.. அடுத்த முறை இன்னும் அதிகம் எழுத வேண்டும் சரியா??
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
[QUOTE]

நிச்சயம் அடுத்த முறை சற்று விரிவாக எழுதுகின்றேன் அக்கா.

தீபன்
09-08-2008, 04:44 PM
[B]நன்றி தீபன்.:)
தீபன் அகத்தியனல்ல ஓவியா...!:sprachlos020:

ஓவியா
09-08-2008, 04:47 PM
தீபன் அகத்தியனல்ல ஓவியா...!:sprachlos020:

:eek::eek::eek:

:D:D:D
மன்னிக்கவும், தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

Keelai Naadaan
09-08-2008, 06:50 PM
அகத்தியனின் கேள்விகளையும் அதற்கு பதில் அளித்த இளசு, ராஜா, அமரன், பூமகள், ஓவியா, அன்பு ரசிகன், விராடன், ஷிப்லி, தீபன்,
சூரியன் இவர்களின் பதில்களை படித்து அவர்களைப்பற்றி வியந்து கொண்டிருக்கும் வேளையில்... (அமரனின் பதில் அதி அற்புதம்) எனக்கும் மீண்டும் வாய்ப்பு அளித்து கேள்வி கேட்டமைக்கு மிக்க நன்றி பில்லா.
முன்பு சொன்னது போல், இப்போதும் சான்றோர்கள் நிறைந்த அவையில் நிற்பது போல் ஒரு உணர்வு.

உங்கள் கேள்விக்கு வருகிறேன்
இன்றைய உலகில் சிறந்தது தொழில்நுட்ப வசதிகள் குறைந்த கிராம வாழ்க்கையா? அல்லது அனைத்து வசதிகளும் கொண்ட நகர வாழ்க்கையா?
எதனால் எது சிறந்தது?

குடிசையானாலும் காற்றோட்டமான வாழ்விடம், கலாச்சாரம் மாறாத மனிதர்கள், பச்சை மரம் செடி கொடி, பம்ப் செட் கிணறு, பறவைகள், ஆடுமாடுகள், மழைக்காலத்தில் நீர்பெருகும் ஆறு, வழிபாட்டுதலங்கள், திருவிழாக்கள், பண்டிகைகள், கூட்டுகுடும்பங்கள், தாலாட்டு பாடல்கள் - கிராமங்களைப்பற்றி நினைக்கும்போது இவையெல்லாம் நினைவுக்கு வருகிறது.
கூடவே பீனிக்ஸ் பறவை (சாதி), பொருளாதாரம் நலிந்த மக்கள், கல்வி பெறாத பெரியவர்கள், ஸ்பீடு பிரேக்கர் தேவையில்லாத குண்டும் குழியுமான சாலைகள் இவைகளும் நினைவுக்கு வருகிறது.
வசதிகள் கொண்ட நகர வாழ்க்கை என்பது ஒரு மாயை. கிராமங்களை விட போக்குவரத்து வசதி, கல்வி நிலையங்கள், உயர்ந்த கட்டிடங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் இது போல சில வசதிகள் இருப்பது உண்மைதான். இருந்தாலும் பின்வருவனவற்றை படியுங்கள்.

"நகரம் என்ற சொல்லுக்கும் நரகம் என்ற சொல்லுக்கும் அதிக வேற்றுமையில்லை. இன்று இச்சொல்லின் பொருளை பொறுத்தவரையில் அவ்வளவு வேற்றுமை இல்லை என்றுதான் கூறவேண்டும்.நகரம் நரகமாக ஆகி வருகிறது இன்று.!
பேசுகிற மொழியிலிருந்து, உடுத்துகிற உடைவரையில் பண்பாட்டையே காண முடிவதில்லை. இன்று பாரத நாட்டின் புகழை கெடுக்கும் ஊர்களே பம்பாய் டில்லி கல்கத்தா சென்னை என்றுதான் சொல்லுவேன். மனிதர்கள் அதிசயமானதொரு மிருகங்களாகி விட்டார்கள். நடமாடும் யந்திரமாகிவிட்டார்கள். ஒரு மனிதன் வீதியில் செத்து கிடந்தால் கூட அவன் மீது அன்பு கொண்டு பார்க்கும் மனிதன் இன்று நாட்டிலே இல்லை. ஒரு காகம் செத்தால் மற்ற காகங்கள் யாவும் கூடிவந்திருந்து கரையும். இந்த காகத்தின் பாசங்கூட நகரத்து மனிதர்களிடம் இல்லையே.
பொய் களவு வஞ்சகம் சூது கொலை இவையாவும் பட்டணத்தில் வீதிக்கு வீதி இன்று நிகழும் அன்றாட நிகழ்ச்சிகளாகி வருகின்றன! இந்த அபாயங்கள் மட்டுமல்ல, பயங்கரமான அரசியல் தலைவர்கள் வாழ்வதும் கூட பட்டணங்களில் தான்! இவர்கள் எல்லோரும் கிராமத்தில் வாழும் ஏழைகளைப் பற்றி மிகவும் இரக்கப்படுபவர்களாக அபிநயித்துக்கொண்டு பட்டணத்து மனிதர்களாக வாழ்ந்து வருகிறார்கள். இன்னொரு அபாயமும்கூட நகரத்தில்தான். அதாவது சினிமா சினிமா என்று சமூகத்தை செல்லரித்துவரும் கலையின் தவப்புதல்வர்களுங்கூடச் சென்னையில்தான் புழுவாக நெளிந்து கொண்டிருக்கிறார்கள்."-
நம்மால் முடியாதது எது என்ற கட்டுரைகள் புத்தகத்தில் அமரர் திரு.தமிழ்வாணன்.

இதில் எந்த வரி மிகைப்படுத்தப்பட்டுள்ளது என சொல்ல முடியவில்லை. நகரத்து மாந்தர்களை முழுமையாக குறைசொல்லவும் கூடாது. நகரத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் கிராமங்களில் இருந்து வந்தவர்கள் தான். நகரங்கள் பலருக்கு வாழ்வளிக்கிறது. இங்கே குறைந்த வருமானம் பெறுபவரும் அதிக வருமானம் பெறுபவரும் அருகருகே வாழ்கிறார்கள். அதனால் யாரை பார்த்து யார் வாழ்வது என்பது பெரிய கேள்வி. பீனிக்ஸ் பறவை (சாதி) இங்கே அதிகம் பார்ப்பதில்லை. பெரியபடிப்புகள் படிக்காதவர்கள் ஆனாலும் கூட உழைப்பினால் உயர்கிறார்கள்.

கிராமத்து வாழ்க்கையை ரசித்து அனுபவித்த ஒருவர் சொன்னார்,
"வேலைக்கு போயிட்டு வந்துட்டு அண்ணி கொண்டாந்து தர்ற ஒரு சொம்பு தண்ணிய மடக்மடக்குன்னு குடிச்சிட்டு வீட்டில வளக்கிற கோழி, புறா, ஆடு, மாடு இதுகளுக்கு இரை போட்டுட்டு, சின்னவன கையில புடிச்சுகிட்டு போயி ஆத்தில களாம்பரமா நீந்தி ஒரு குளியல் போட்டுட்டு வீட்டுக்கு வரனும். அப்ப பசி எப்புடியிருக்குங்கிற..வயிறு கொண்டா கொண்டாண்ணு கேக்கும். அந்த சமயத்தில சும்மா. காஞ்சமொளகா கிள்ளி போட்டு, பூண்டு தட்டி போட்டு பருப்பு கொழம்பும், மசால் போட்டு வறுத்த உருளக்கிழங்கு வருவலும் வச்சு கை நெறய அள்ளி சாப்ட்டா எப்புடி இருக்குங்கிற.. ஆஹா... சிலுசிலுன்னு வீசுற காத்தில, அப்படியே முத்தத்தில கயித்துக்கட்டில போட்டு படுத்தா எப்புடி இருக்கும். ஆஹா.. சொர்க்க லோகமில்ல".

கிராம வாழ்க்கை சிலருக்கு திருப்தியாய் இருக்கலாம். அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஆனால், தொழில்நுட்ப வசதிகளால் உலகமே ஒரு கிராமம் போல் அனைத்து செய்திகளும் வினாடிகளில் கிடைக்க பெறுகிறோம். எல்லாத்துறையிலும் உலகம் எங்கோ போய்க்கொண்டிருக்கும் போது, வளரும் நாடுகளில் உள்ள நாம் தொழில்நுட்ப வசதிகளை வேண்டாமென விட முடியுமா?

கிராமங்களிலும் நகரத்து வசதிகள் கிடைக்க வேண்டும். நகரங்களிலும் கிராமத்து அமைதி வேண்டும். அதுவே சிறந்தது.

உங்கள் கேள்விக்கேற்ற பதிலா என தெரியவில்லை. எனக்கு மனதில் தோன்றியதை எழுதினேன். அதிகமாக எழுதிவிட்டேனோ என தோன்றுகிறது. ஏதேனும் தவறிருந்தால் பொறுத்தருளவும். தயவுசெய்து தெரிவிக்கவும்.

இந்த திரியின் நாயகர் ராஜா அவர்களுக்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

Keelai Naadaan
10-08-2008, 08:28 AM
நல்ல இறை மனிதர்களை அறிய மிக பெரிய புத்தி அவசியம் இல்லை, அவர்களை எங்கும் தேடி அலையை வேண்டியதும் இல்லை.
நீங்கள் நல்லவராக இருந்தால் நல்ல இறை மனிதரிடம் தானாக அழைத்து செல்லப்படுவீர்கள் அல்லது இறை மனிதர்கள் உங்களை தேடி வருவார்!
மனதில் பதிக்க வேண்டிய வரிகள். நன்றிகள் இறைநேசன்.

ராஜா
10-08-2008, 10:52 AM
கிராம வாழ்க்கை சிலருக்கு திருப்தியாய் இருக்கலாம். அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஆனால், தொழில்நுட்ப வசதிகளால் உலகமே ஒரு கிராமம் போல் அனைத்து செய்திகளும் வினாடிகளில் கிடைக்க பெறுகிறோம். எல்லாத்துறையிலும் உலகம் எங்கோ போய்க்கொண்டிருக்கும் போது, வளரும் நாடுகளில் உள்ள நாம் தொழில்நுட்ப வசதிகளை வேண்டாமென விட முடியுமா?

கிராமங்களிலும் நகரத்து வசதிகள் கிடைக்க வேண்டும். நகரங்களிலும் கிராமத்து அமைதி வேண்டும். அதுவே சிறந்தது.

இனி கீழை நாடான் பதில்கள் (இளசு போன்ற) பெரும் எதிர்பார்ப்பை தூண்டும் பதில்களாகவே விளங்கும் என்று தோன்றுகிறது.

கிராமத்து அமைதி நகரத்திலும், நகரத்து வசதி கிராமத்திலும் வேண்டும் என்று முத்தாய்ப்பாக சொல்லியிருக்கிறார்.. அப்படியொரு நிலைக்காக மனம் ஏங்க ஆரம்பித்துவிட்டது.

சபாஷ் கீழை நாடான்..!

Keelai Naadaan
10-08-2008, 11:36 AM
இனி கீழை நாடான் பதில்கள் (இளசு போன்ற) பெரும் எதிர்பார்ப்பை தூண்டும் பதில்களாகவே விளங்கும் என்று தோன்றுகிறது.
மிக்க நன்றி உங்கள் பின்னூட்டம் மிகுந்த உற்சாகத்தை தருகிறது.
இளசு அவர்களோடு ஒப்பிடுவது மிகமிக அதிகம் என உணர்கிறேன். நன்றிகள்.:)

ராஜா
10-08-2008, 05:11 PM
அன்புத் தம்பி, ஆட்டோ ஓட்டும் மாணிக்கம், அழகிய மணவாளன் என்று சுருக்கமாக அழைக்கப்படும் பில்லா அவர்களின் கேள்வித் தொகுப்பு இது.

[பில்லா வேளாங்கண்ணிக்கு புனிதப்பயணம் சென்றிருப்பதால், திரியின் போக்கு தடைபடாமல் இருக்க தொகுப்பு தரும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துச் சென்றிருக்கிறார்.]

1. மொக்கைச்சாமி
மொக்கைன்னு பெயரை வச்சிக்கிட்டு திறமையா பின்னுட்டமிடும் உங்களிடம் ஒரு கேள்வி, மொக்கை மொக்கைன்னு சொல்லுறோமே? பிறகு ஏன் மொக்கை போட்டா எல்லாரும் சிரிக்கிறாங்க? விவரமா சொன்னா நல்லாயிருக்கும்?

2. லொள்ளு வாத்தியார்
மன்றத்தில் உள்ள அனைவரின் மனதில் இடம் பெற்றவராகிய உள்ளதை உள்ளபடி பேசும் லொள்ளு வாத்தியாரே உங்களிடம் ஒரு கேள்வி, மனசாட்சியை தொட்டு சொல்லுங்க,, சின்ன வயசில நீங்க பன்ன சுட்டித்தனத்தால ஏதாவது வம்புல மாட்டி பிறகு தப்பித்துவந்த ஒரு நிகழ்வை பற்றி?

3. பிரவிண்
கணினி துறையில் தாங்கள் வல்லவர் என்பது எல்லாருக்கும் தெரியும். அதனால அது சம்பந்தமா உங்க கிட்ட இந்த கேள்வி, மொபைலில் வலைதள பக்கங்களை உலாவும் போது தமிழில் பார்க்க இயலுமா? யுனிக்கோடு எழுத்துருவை பார்க்க நாம் என்ன செய்யவேன்டும்?

4. உதய சூரியன்
தமிழை உயிராக கொன்டுள்ள தங்களிடம் ஒரு கேள்வி, முற்காலத்தில் சோழர்கள் கடல்கடந்து சென்று தமது அரசை நிறுவினார்கள்,,, (உதாரணம் கடாரம் கொண்டான்) அன்று அது வெற்றியாக கருதப்பட்டாலும், இன்று மற்ற கீழ் திசை நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு அது பெரும் பிரச்சனையாக இருக்கிறதே, இதற்கு உங்கள் பதில் என்ன?

5. மோகன் காந்தி
தகவல்களை தொகுத்து தருவதில் வல்லவரான தங்களிடம் ஒரு கேள்வி, இன்றைய செய்திதாள்களில் பார்க்கையில் கொலை கொள்ளை கற்பழிப்பு ஏமாற்றுவேலை என அணைத்து கெட்ட செய்திகளையும் மக்கள் அறியும் வகையில் இன்றைய செய்திதாள்கள் இருக்கின்றதே, இதனால் மக்கள் விழிப்புணர்வு அடைகின்றார்களா? இல்லை எரிச்சல் அடைகிறார்களா? அல்லது இதையெல்லாம் பார்த்து ஏமாற்றும் கலையை மற்றவர்களும் கற்றுக்கொள்கிறார்களா?

6. இறைநேசன்
பெயருக்கேற்றார் போல் இறை நேசத்திலும் பக்தியிலும் சிறந்தவரான தங்களிடம் ஒரு கேள்வி, இன்று நிறைய போலி தீர்க்கதரிசிகள் மக்களை ஏமாற்றுகிறார்களே, அவர்களை இறைவன் ஒன்றும் செய்யமாட்டாரா? உண்மையான இறைமக்களை கானும் வழிதான் என்ன?

7. தமிழ் குமார்
தமிழ்குமார்னு பெயரை வைத்துகொன்டு தமிழ் மன்றம் பக்கமா அடிக்கடி வராததால் உங்களுக்கு இந்த (தண்டனை) கேள்வி, நீங்க ஒரு போட்டியை நடத்துவதாக வைத்துகொள்வோம், அதில் நிறைய போட்டியாளர்கள் பங்கேற்ற வேன்டுமென்றால் ஆக்கபூர்வமாக நீங்கள் என்ன செய்யவேன்டும்,, ( குறுக்கு வழியில் அல்ல)

8. கீழை நாடான்
குறுங்கவிதை மற்றும் கிராமிய மணம்வீசும் கதைகள் எழுதுவதில் வல்லவரான தங்களிடம் ஒரு கேள்வி, இன்றைய உலகில் சிறந்தது தொழில்நுட்ப வசதிகள் குறைந்த கிராம வாழ்க்கையா? அல்லது அணைத்து வசதிகளும் கொன்ட நகர வாழ்க்கையா? எதனால் அது சிறந்தது?

9. ரவுசு ராஜா அண்ணன்
மன்றத்தில் உள்ள அணைவரையும் கலகலப்பாக வைத்திருக்க கங்கணம் கட்டிக்கொன்டிருக்கும் தங்களிடம் ஒரு கேள்வி, ஒருவரை நாம் சிரிக்க வைப்பதால் அவர் மனமகிழ்ச்சி அடைகிறார், ஆனால் அவரை சிரிக்க வைத்தவரோ கோமாளியாகிவிடுகிறார்.... இது எதனால்? சிரிக்க வைப்பவர்களை காமெடியன்கள் என்று இரண்டாம் அல்லது 3 ஆம் தரமாக அல்லவா சினிமாவில் காட்டுகிறார்கள், இது பற்றி உங்கள் கருத்து என்ன?

10.அதிரடி அரசன்
[B]குசும்பு, லொள்ளு இவற்றை மொத்தமா குத்தகை எடுத்து நடத்திவரும் அதிரடி அரசனே உம்மிடம் ஒரு கேள்வி, ஒருவருடைய கையெழுத்தையோ அல்லது பின்னுட்டத்தையோ வைத்து ஒருவருடைய குணாதிசயங்களை கண்டுபிடிக்க இயலுமா? முடியும் என்றால், அது எப்படி என்று விளக்கமுடியுமா?

Keelai Naadaan
10-08-2008, 05:43 PM
மிகுந்த அறிவாளியும், நகைச்சுவையாளருமான தெனாலி ராமன், தன்னுடைய கோமாளித்தனமான செயல்கள் மூலமே மக்களால் நன்கு அறியப்பட்டார்.. இதனால்கூட, நகைச்சுவைக்கும் கோமாளித்தனத்துக்கும் முடிச்சுப் போடப்பட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

காமெடியன்கள் இரண்டாம் தரமானவர்கள் என்னும் கருத்துக்கு என்னில் உடன்பாடு இல்லை.

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.
மக்களை நகைச்சுவை நடிகர்கள் அதிகம் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
பிரபல அரசியல் பத்திரிக்கை ஆசிரியர் திரு சோ அவர்களும் முன்னாள் நகைச்சுவை நடிகரே.
உலகப்புகழ் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் ஒரு படத்தில் ஹிட்லரை படுகேலியாக விமர்சனம் செய்து இருப்பதாக படித்ததுண்டு.

இளசு
10-08-2008, 07:30 PM
பொருத்தமான மேற்கோள்களும் அழகிய இருபக்கப் பார்வைகளும்..
நல்லவை மிகும் நல்ல முடிவும்..

கீழைநாடனின் பதில் கண்டு - சொக்கினேன்..

அன்பு ராஜா அவர்களே..

பாட்டுக்குப் பாட்டில் கீழைநாடன் தெரிவுகளும்..
மற்ற அவர் பதிவுகளும் கண்டபின் நான் சொல்வது -

கீழைநாடன் இன்னொரு இளசு அல்லர்..
அவர் இளசுவுக்கு மேல்..
நல்லதொரு தனித்தன்மை, நுண்ரசனை, எழுத்துவளம், நல்ல மனம் கொண்ட மன்ற முத்து அவர்..
நானும் அவர் ரசிகன்தான்..

வாழ்த்துகள் கீழைநாடன்..

Keelai Naadaan
11-08-2008, 01:25 AM
பொருத்தமான மேற்கோள்களும் அழகிய இருபக்கப் பார்வைகளும்..
நல்லவை மிகும் நல்ல முடிவும்..

கீழைநாடனின் பதில் கண்டு - சொக்கினேன்..
உங்கள் நிறைகுட வாழ்த்துக்களில் நான் சொக்கி நிற்கிறேன், எனக்கு சொல்ல வார்த்தை வரவில்லை.
என்னைப் பற்றி எனக்கு கொஞ்சம் தெரியும். அதனால் உங்களை எண்ணி பிரமிக்கிறேன். மிக்க நன்றிகள்.

பாலகன்
11-08-2008, 02:38 AM
கிராம வாழ்க்கை சிலருக்கு திருப்தியாய் இருக்கலாம். அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஆனால், தொழில்நுட்ப வசதிகளால் உலகமே ஒரு கிராமம் போல் அனைத்து செய்திகளும் வினாடிகளில் கிடைக்க பெறுகிறோம். எல்லாத்துறையிலும் உலகம் எங்கோ போய்க்கொண்டிருக்கும் போது, வளரும் நாடுகளில் உள்ள நாம் தொழில்நுட்ப வசதிகளை வேண்டாமென விட முடியுமா?

கிராமங்களிலும் நகரத்து வசதிகள் கிடைக்க வேண்டும். நகரங்களிலும் கிராமத்து அமைதி வேண்டும். அதுவே சிறந்தது.

நண்பரே கீழை இதை தான் தங்களிடமிருந்து எதிர்பார்த்தேன், மிக கணகச்சிதமாக பதிலளித்த தங்களின் பாங்கு அருமை, கிராமங்களிலும் அணைத்துவசதிகளும் செய்து தரப்படவேன்டும் என்பதே எனது விருப்பமும்

தங்களால் வர்ணிக்கப்பட்ட அந்த கிராம வாழ்க்கை அண்ணி கையால ஒரு சொம்பு தண்ணீர் இதெல்லாம் படிக்கும்போது எங்களுக்கெல்லாம் அந்த கொடுப்பனை இல்லையே என்ற ஏமாற்றம் மனதில் ஏற்படுகின்றது......

உங்கள் பதிலால் நான் முழுதிருப்தி அடைந்தேன்

பெயருக்கேற்றார் போல் இறை நேசத்திலும் பக்தியிலும் சிறந்தவரான தங்களிடம் ஒரு கேள்வி,

1.இன்று நிறைய போலி தீர்க்கதரிசிகள் மக்களை ஏமாற்றுகிறார்களே, அவர்களை இறைவன் ஒன்றும் செய்யமாட்டாரா?

சாதரண மனிதர்களுக்கு கிடைக்கும் தண்டனையைவிட இரட்டத்தனயாக தண்டனை கிடைப்பதோடு, இவர்கள் அக்கினியும் கந்தகமும் எரியும் கடலில் தள்ளப்பட்டு சதா காலமும் வாதிக்கப்படுவார்கள் என்று இவர்களை பற்றி தேவன் வெளிப்படுத்தியுள்ளார்

2.உண்மையான இறைமக்களை கானும் வழிதான் என்ன?
நீங்கள் நல்லவராக இருந்தால் நல்ல இறை மனிதரிடம் தானாக அழைத்து செல்லப்படுவீர்கள் அல்லது இறை மனிதர்கள் உங்களை தேடி வருவார்!

மரம் எப்படிபட்டது என்று அதன் கனியினாலே அறியப்படும்.

[/B]

ஆகா பிரமாதம் நான் என்ன எதிர்பார்த்தேனோ அதையே கொஞ்சமும் மாறாமல் பதிலாக அளித்த இறைநேசருக்கு என் நன்றி...

ஒரு உண்மையை சொல்லவேன்டுமென்றால் மரம் எப்படிபட்டது என்று அதன் கனியினாலே அறியப்படும் இதை நான் கேள்வியை தொடுக்கும் போதே நினைத்தேன், நீங்கள் இப்படி பதிலை தருவீர்கள் என்று

அருமையான பதிலை தந்த நம் நேசருக்கு வாழ்த்துக்கள்

ரவுசு ராஜா அண்ணன்

மன்றத்தில் உள்ள அணைவரையும் கலகலப்பாக வைத்திருக்க கங்கணம் கட்டிக்கொன்டிருக்கும் தங்களிடம் ஒரு கேள்வி, 1. ஒருவரை நாம் சிரிக்க வைப்பதால் அவர் மனமகிழ்ச்சி அடைகிறார், ஆனால் அவரை சிரிக்க வைத்தவரோ கோமாளியாகிவிடுகிறார்.... இது எதனால்?

2. சிரிக்க வைப்பவர்களை காமெடியன்கள் என்று இரண்டாம் அல்லது 3 ஆம் தரமாக அல்லவா சினிமாவில் காட்டுகிறார்கள், இது பற்றி உங்கள் கருத்து என்ன?

1. மைக் வசதிகள் இல்லாத காலத்தில், கடைசி வரிசை மக்களை சிரிக்கவைக்க அவர்களுக்கு சில சேட்டைகள் செய்வது அவசியமாக இருந்தது. அதனால்கூட அவர்கள் கோமாளிகளாக சித்தரிக்கப் பட்டிருக்கலாம்.

2.மிகுந்த அறிவாளியும், நகைச்சுவையாளருமான தெனாலி ராமன், தன்னுடைய கோமாளித்தனமான செயல்கள் மூலமே மக்களால் நன்கு அறியப்பட்டார்.. இதனால்கூட, நகைச்சுவைக்கும் கோமாளித்தனத்துக்கும் முடிச்சுப் போடப்பட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

மிக மிக சிக்கலான கேள்விக்கு அறிவார்ந்த முறையில் பதிலளித்த ராசா அண்ணே உங்களுக்கு இந்த பில்லாவின் அன்பு பாராட்டுக்கள்,, மேலும் எனது விடுப்பிலும் திரி தோய்வின்றி செல்ல உதவிய உங்களுக்கு என் நன்றி,,

மேலே கோடிட்ட இரண்டுமே என்கேள்விக்கான பதில்களாக நான் கருதுகிறேன்,, சிரிக்க வைப்பதற்கு மிகுந்த அறிவாற்றல் அவசியம் என்பதை உணர்த்தும் பதில் . வாழ்த்துக்கள்

[B]இன்றைய செய்திதாள்களில் பார்க்கையில் கொலை கொள்ளை கற்பழிப்பு ஏமாற்றுவேலை என அணைத்து கெட்ட செய்திகளையும் மக்கள் அறியும் வகையில் இன்றைய செய்திதாள்கள் இருக்கின்றதே, இதனால் மக்கள் விழிப்புணர்வு அடைகின்றார்களா? இல்லை எரிச்சல் அடைகிறார்களா? அல்லது இதையெல்லாம் பார்த்து ஏமாற்றும் கலையை மற்றவர்களும் கற்றுக்கொள்கிறார்களா?

ஓரு ரவுடியை பற்றியோ, ஆல்லது கிழ்தரமான ஓரு அரசியல் வாதியை பற்றியோ உயர்வாக பத்திரிக்கைகள் எழுதினால் நாமும் அவனை போல் நடந்து கொன்டால் நமக்கும் புகழும்,செல்வாக்கும் கூடும் என்று எண்ண கூடாது பல இளைஞர்கள் இப்படிதான் நினைக்கிறார்கள். அந்த புகழ் ஒரு சில நாள் செய்தியுடன் மறைந்து விடும்.

செய்திதாள்கள் வியாபார நோக்குடன் தான் செயல் படுகிறது. மக்கள் தெளிவாக '' அண்ணப் பறவை போல'' அதில் உள்ள நல்லவற்றை எடுத்து கொண்டு கெட்டதை விட்டு விட வேண்டும்.அப்படித்தான் பலரும் இன்றும் உள்ளனர்.

அன்பிற்கினிய மோகன் காந்தியாரே, உங்கள் பதிலின் சாராம்சம் இதோ மேலே நான் கோட் செய்துள்ளேன்,,, இதை இன்றைய இளைஞர்களும் ரசிகர்களும் கவனித்து செயல்படவேன்டும் என்பது என் விருப்பமும்

அருமையாக ரத்தின சுருக்கமான ஒரு பதிலை தந்து இந்த புகழ்பெற்ற திரியை சிறப்பித்தமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

இதோ மற்றவர்களும் இன்றே பதிலளிக்கும் படிக்கு அவர்களுக்கு மீன்டும் ஒரு முறை நினைவூட்டுகிறேன்

praveen
11-08-2008, 07:09 AM
3. பிரவிண் கணினி துறையில் தாங்கள் வல்லவர் என்பது எல்லாருக்கும் தெரியும். அதனால அது சம்பந்தமா உங்க கிட்ட இந்த கேள்வி, மொபைலில் வலைதள பக்கங்களை உலாவும் போது தமிழில் பார்க்க இயலுமா? யுனிக்கோடு எழுத்துருவை பார்க்க நாம் என்ன செய்யவேன்டும்?

என்னிடம் இந்த கேள்வி கேட்டதற்கு நன்றி, வேறு விசயத்தில் கேட்டிருந்தால் ேங என்று முழித்திருப்பேன்.

மொபைல் போன் என்பதை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அது எந்த இயங்கு தளத்தில் இயங்குகிறது என்பதை வைத்து தான் பதில் தரமுடியும்.

அநேக ஜி.எஸ்.எம் மொபைல் போன்கள் சிம்பியன் ஓ.ஏஸ்-ல் தான் இயங்குகின்றன. அதே போல ஜாவா, லினக்ஸ், விண்டோஸ் மொபைல் மற்றும் இன்னும் சில தனிப்பட்ட ஒ.எஸ்களும் (பிளாக்பெர்ரிக்கென பிரத்தேயகமாக அவர்களே தயாரித்த ஓ.எஸ்-ம்) உண்டு.

இதில் சிம்பியன் வகை அலைபேசிகளுக்கு பலர் முயன்றுள்ளனர், சிலர் முயற்சி வெற்றியும் பெற்றிருக்கிறது. இதில் இரண்டு முக்கிய விசயங்கள் பாண்ட் மற்றும் பிரவுசர் வகை பெரும்பங்கு வகிக்கின்றது. நமது தமிழ் மாதிரியான எழுத்துக்கள் சாதரணமான மற்ற எழுத்து வகை போல இருக்காது. உதாரணத்திற்கு ஆங்கில எழுத்துக்களை தனித்தனியாக அச்சிட்டு(காட்சியளிக்க முடியும்) apple என்பதில் a p p l e என்பதற்கு தனித்தனி எழுத்து உண்டு. அதே தமிழில் என்றால் ஆப்பிள் ஆ என்பது ஒன்று ப் என்பது ஒன்று (இதில் ப என்பதும் . ஒன்றும் சேர்ந்ததது தான் ப்) அதே போல பி என்பதில் ப மற்றும் அந்த கொம்பு சேர்ந்தது ஒரு எழுத்து. இந்த எழுத்துகளை தகுந்த பாண்ட் இருந்தாலும் காட்சியளிக்க செய்யும் போது ஒருங்கினைத்து காட்ட வேண்டும் இல்லாவிட்டால் எழுத்துக்கள் உடைந்து ஆப.ப(இங்கே ஒரு கொம்பு) ள் என்று தான் தெரியும். இதற்கு அந்த இயங்கு தளமும் ஒத்துழைக்க வேண்டும். அது போக பிரவுசர். அநேக வெப்தளங்கள் தங்களை அனுகும் பிரவுசர்கள் என்ன என்பதை அறிந்தே பைல்களை அனுப்புகின்றன. அதே போல இண்டர்நெட் எக்ஸ்புளோரர்களை குறிவைத்தே பல வெப்சைட்டுகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றை நாம் மற்ற பிரவுசர்களில் சென்றால் சரியாக காட்சியளிக்காமல் போகலாம். எனவே பல வேறுபட்ட காரணிகள் இதனை நிர்மானிக்கின்றன.

விண்டோஸ் ஓ.எஸ்.ல் இயங்கும் மொபைல் போன்களில் (இன்னும் யுனிகோடு சப்போர்ட் தரப்படவில்லை) அந்த லாங்குவேஜ்-ற்கான பாண்ட் மட்டும் பாண்ட்ஸ் போல்டரில் பதிந்தாலே போதும். உ.தா. தமிழ்மன்றம் பார்க்க லதா எழுத்துருவை பதிந்தால் போதும். ஆனால் எழுத்து உடைந்திருப்பது போலவே தெரியும் என்பது குறைபாடு.

லினக்ஸ் மற்றும் ஜாவா வகை போன்கள் பற்றி நான் அறிந்ததில்லை எனவே பதில் இல்லை. நேரம் கிடைத்தால் இனையத்தில் தேடி தருகிறேன். மேலே சொன்ன எனது கருத்தில் சில கருத்து பிழைகள் இருந்தாலும் இருக்கும். ஏனென்றால் இந்த முறையில் இனையம் அனுக நான் அதிகம் முயற்சித்ததில்லை. அதற்கு பெரிய தொந்தரவு + காரணம் இனைய தொடர்பு கொடுப்பவரின் கட்டணம் + சேவைக்குறைபாடு தான்.

பின்குறிப்பு
தமிழ் யுனிகோடிலே சில எழுத்து தட்டச்சு செய்ய முடியவில்லை இந்த கட்டூரை ஆரம்பத்தில் "ேங" என்ற எழுத்தை டைப் செய்ய ரெம்ப மெனக்கெட்டேன். :)

பாலகன்
11-08-2008, 07:28 AM
விண்டோஸ் ஓ.எஸ்.ல் இயங்கும் மொபைல் போன்களில் (இன்னும் யுனிகோடு சப்போர்ட் தரப்படவில்லை) அந்த லாங்குவேஜ்-ற்கான பாண்ட் மட்டும் பாண்ட்ஸ் போல்டரில் பதிந்தாலே போதும். உ.தா. தமிழ்மன்றம் பார்க்க லதா எழுத்துருவை பதிந்தால் போதும். ஆனால் எழுத்து உடைந்திருப்பது போலவே தெரியும் என்பது குறைபாடு.

உங்கள் விளக்கமான பதிலை கண்டு நான் வியக்கிறேன் பிரவீண். தவறாமல் வந்து எனது கேள்விக்கு பதில் தந்தமைக்கு நன்றிகள் பல

மேலும் ஒரு சந்தேகம்,,, பாக்கெட் டேட்டா சேவையை பயன்படுத்தி ஓப்ரா மினி பிரவுசரில் நாம் நமது தளத்தை பார்க்க முடியுமா? லதா எழுத்துரு நிறுவினால் போதுமா? எந்த ஒரு ஓ எஸ் சும் இல்லாமல் அவர்களாகவே தயாரித்த அமைப்பில் இது சாத்தியமாகுமா?

தேனியூனி என்ற ஒரு எழுத்துரு இருக்கிறதே அது தேவையில்லையா? அன்பு தொல்லைக்கு மன்னிக்கவும், ஆர்வம் அதிகரித்தமையால் உங்களுக்கு மேலும் சிரமம் கொடுக்கிறேன்

அதிரடி அரசன்
11-08-2008, 09:22 AM
10.அதிரடி அரசன்
[b]குசும்பு, லொள்ளு இவற்றை மொத்தமா குத்தகை எடுத்து நடத்திவரும் அதிரடி அரசனே உம்மிடம் ஒரு கேள்வி, ஒருவருடைய கையெழுத்தையோ அல்லது பின்னுட்டத்தையோ வைத்து ஒருவருடைய குணாதிசயங்களை கண்டுபிடிக்க இயலுமா? முடியும் என்றால், அது எப்படி என்று விளக்கமுடியுமா?

கன்டிப்பாக சொல்ல முடியும் நண்பரே...

அதனால்தான் பெரியோர்கள் கையெழுத்தை கொண்டே தலை எழுத்தை சொல்லுவார்கள்... படிக்காதவர்களுக்கு இது விதி விளக்கு, ஆனால் நான் இதில் வித்த*க*ன் இல்லை...தெரிந்ததை சொல்கிறேன்.

படிக்கும் பருவத்தில் வகுப்பில் முதல் மாணவனாக வரும் (என்னையும் சேர்த்துதான் ஹி ஹி) அனைவரின் கையெழுத்தையும் பார்த்துள்ளேன். நன்றாக படிக்கக்கூடியவர்களின் கையெத்து எல்லாமே நன்றாகத்தான் இருக்கும்... படிப்பை நல்ல படியாக முடித்துவிட்டால் தலையெழுத்தும் நல்லபடியாகத்தானே அமையும். அதற்காக படித்துவிட்டு சும்மா வீட்டிலே உக்காந்து இருந்தால்...ஒன்|றும் நடக்காது.. முயற்சி வேண்டும்.. முயற்சி திருவினையாக்கும்.

அதேபோல் கயெழுத்தை போடும் போதும் மிக கவனமாக போட வேண்டும்.. உங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய உங்களின் கையெழுத்திலும் முன்னேற்றம் இருக்க வேண்டும்...

எப்போதுமே கீழே இருந்து ஆரம்பித்து மேலே சென்று முடிக்க வேண்டும். அப்படி கையெழுத்தை போட்டுவிட்டு கடைசியில் முற்றுப்புள்ளி வைக்கக்கூடாது என்பது என் க*ருத்து.

இதைப்ப*ற்றி இணைய*த்தில் நான் க*ண்ட* ஒரு விள*க்க*ம்.

கையெழுத்தை மாற்றுவதால் நம் வாழ்க்கைநிலையை மாற்றமுடியும் என்ற கருத்தை அநேகமாக அனைத்து கையெழுத்தியலாளர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

கைஎழுத்தினை வாழ்க்கைக்குக் சாதகமான வகையில் மாற்றும் பயிற்சி மனநல சிகிச்சைக்கு (psychotherapy) சமமாகக் கருதப்படுகிறது. கைஎழுத்துப்பயிற்சி ஆழ்மன எண்ண ஓட்டங்களை மாற்றி விரும்பத்தக்க விளைவுகள ஏற்படுத்துகிறது.

உதாரணமாக, ஒரு மனிதரின் குழப்பம் அவரின் ஆழ்மனதிலிருந்தும் மூளையிலிருந்தும் வருகிற கட்டளைகளின் விளைவு என அனைவரும் அறிந்ததே. இந்தக் குழப்பத்தைக் கைஎழுத்து பிரதிபலிக்கிறது. அதாவது கைஎழுத்து ஆழ்மனதின் பிம்பமாக அமைகிறது. கைஎழுத்துப் பயிற்சியின் வழியாக இந்தக் குழப்பத்துக்கான தடயங்களை கைஎழுத்திலிருந்து நீக்குவது மூலம், குழப்பத்துக்கான மூல காரணங்கள் ஆழ்மனதிலிருந்து நீக்கப்படுகின்றன. இந்த முறை ஆங்கிலத்தில் graphotherapy என அழைக்கப்படுகிறது.

விமலா ரோட்ƒர்Ū என்ற அமெரிக்கப் பெண்மணி கைஎழுத்தில் நல்ல பண்புகளைப் பிரதிபலிக்கும் அம்சங்களை ஒன்று திரட்டி ஆங்கில எழுதுக்களின் வடிவில் சில மாறுதல்களைச் செய்திருக்கிறார். இவற்றின் அடிப்படையில் குழந்தைகளுக்குக் கைஎழுத்துப் பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களை நல்ல பண்புகளைக் கொண்ட முழுமையான மனிதர்களாக உருவாக்கலாம் என்று உறுதியாய்ச் சொல்கிறார்.

பெரியவர்களிடமும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் விதமாக பல பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார். இந்த பயிற்சி பலருடைய வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கிறது. இதில் ஆர்வமுள்ளவர்கள், அவருடைய 'Your Handwriting Can Change Your Life!' என்ற புத்தகத்தைப் படிக்கலாம்.

கையொப்பம் சொல்வதென்ன?

ஒருவரின் கையொப்பம் அவர் தன்னைப்ப்ற்றி என்ன நினைக்கிறார், எப்படி இருக்கவிரும்புகிறார், மற்றவரிடம் தம்மை எப்படி காட்டிக்கொள்ள விரும்புகிறார் என்பவற்றைப் பொறுத்தே அமைகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள கையொப்பம் முன்னாள் பிரிட்டி‰ பிரதமர் தாட்சருடையது:

http://imageupload.in/files/awdfg66n7zn2jtuesmqh.gif

பெரியதாகக் கையொப்பமிடுவதிலிருந்து அவர் பெயரையும் புகழையும் விரும்புகிறவர் என்பது தெரிகிறது.கையெழுத்துக்குக் கீழே உள்ள கோடு அவருக்குத் தன்னை முக்கியமானவராகக் காட்டிக்கொள்வதிலுள்ள ஈடுபாட்டைக் காட்டுகிறது. அவருடைய பெயரான மார்கரெட் என்பதிலுள்ள 'M' அவர் கணவரின் குடும்பப் பெயரான தாட்சரிலுள்ள 'T' -யை விடப் பெரியதாக இருப்பதைக் காணுங்கள். தன்னை முன்னிலைப்படுத்துவதிலுள்ள அவரின் ஆர்வம் தெரியும்.

பின்னூட்டம்......
அவரின் பேச்சு நடைதானே எழுத்து நடை... ஈசியாக கன்டுபிடித்துவிடலாமே.. ஆனால்... பேச்சில் ஒரு மாதிரியும் எழுத்தில் ஒரு மாதிரியும் உள்ளவர்கள் இதற்கு விதிவிலக்கு..

அன்புடன்
அதிரடி அரசன்

ராஜா
11-08-2008, 09:41 AM
அதிரடி அரசரின் கையெழுத்து "வாஸ்து" கலக்கல்..!

மறத்தமிழன்
11-08-2008, 10:24 AM
உங்கள் வினாவுக்கு வருமுன் அந்த வினா எழுந்த அடிப்படையில் எனக்கு சில சந்தேகங்கள். அதுபற்றி என் பார்வையை முதலில் சொல்லிவிட்டு உங்கள் வினாவுக்கு வருகிறேன்.

இலங்கையில் இருப்பது இருஇனங்களே. தமிழர். சிங்களவர். இதைவிட மிக அரிதாக பழங்குடி மக்கள் உள்ளனர். இருக்கும் மொழி தமிழ், சிங்களம். இருக்கும் மதங்கள் புத்தம், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம்.

இனம் என்றால் என்ன? இடத்தின் அடிப்படையிலா மதத்தின் அடிப்படையிலா மொழியின் அடிப்படையிலா உருவாகிறது...? முஸ்லீம் என்பது இனமா? மதமா? மொழியா?

இங்கிருக்கும் முஸ்லீம் மக்கள் எவ்வாறு உருவானார்கள்? இவர்களின் பூர்வீகம் என்ன? இதனடிப்படையில் இவர்கள் தனியான இனமாக வகைப்படுத்த படலாமா? அப்படியானால் கிறிஸ்தவ மக்களை கிறிஸ்தவ இனமெனலாமா...?

மொழி, இடத்தின் அடிப்படையிலேயே பிரதானமாக இனங்கள் உருவாகின்றன. ஆனால் இந்த இரண்டுமே இலங்கை முஸ்லீம்களுக்கும் தமிழருக்கும் ஒன்றே. பிறகென்ன பாகுபாடு?

என் பார்வையில் இங்குள்ள தமிழ் மக்களே வர்த்தக நோக்கில் வந்த அரபு தேசத்தவர்களுடன் தொடர்புகொண்டு சிறுபகுதி மக்கள் அவர்களின் மார்க்க நெறிகளை கடைப்பிடிக்க தொடங்கினர். (கிறிஸ்தவ மக்களை போல.) இதனடிப்படையில் இஸ்லாம் மார்க்கமும் எம் நாட்டுக்குள் நுழைந்தது. ஆனால் புதிதாக ஒரு இனம் நுழையவில்லை.
அவர்களின் மார்க்கத்தின் தனித்துவம் காரணமாக தனியான ஒரு இனமாக இஸ்லாமியர் தோன்றினாலும் அவர்களும் தமிழர்களே. தமிழினத்தின் மும் மத்தத்தவர்களுள் ஒரு மதத்தினராகவே இஸ்லாமியரும் நோக்கப்படல் வேண்டும்.

தமிழர்கள் போராட்டம் நியாயமானால் தமிழினத்தை சேர்ந்தவர்களென்ற முறையில் இஸ்லாமியரும் சேர்ந்து போராட வேண்டும். ஆனால் ஆரம்ப காலங்களில் சேர்ந்து போராடிய இஸ்லாமிய மக்கள் போரின் தாக்கம் அதிகமானபோது தம்மை தனியான இனமாக சிங்கள இனத்துக்கு காட்டிக்கொள்ள தலைப்பட்டது. முஸ்லீம் சிறுபான்மையினம் என தனியாக தன்னை பிரித்து ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக செயற்பட்டு சுயநல அரசியல் நடத்த முற்பட்டது. சில இஸ்லாமிய தலைவர்களின் தவறான வளி நடத்தலில் தமிழர் போராட்டத்தின் பக்கம் இஸ்லாமியர் தலைவைத்துக்கூட படுப்பதில்லை.

ஆனால், பெரும் விலைகொடுத்து சந்தர்ப்பங்களை உருவாக்கி பேரம்பேசும் வலிமையுடன் தமிழ் தலைமைகள் பேச்சுவார்த்தை நடத்தும் சந்தர்ப்பங்களிலெல்லாம் தமக்கும் உரிமைகள் வேண்டுமென அரசை நிர்ப்பந்திப்பதில் முன்னிற்கும் இக்கட்சிகள். தமது உரிமைக்காக எந்த சிறு முயற்சியும் செய்யாத இக்கட்சிகள் இன்னொருபகுதி மக்களின் தியாகத்தில் உருவான பலனை அறுவடை செய்வதில் மட்டும் முனைப்பாக நிற்கும்.

இத்தகைய போக்கே தமிழ் போராட்ட சக்திகளுக்கும் இஸ்லாமிய மக்களுக்குமிடையே மனக்கசப்புக்கள் உருவாக காரணமாயமைந்தன. இதன் வெளிப்பாடாக பல இஸ்லாமிய மக்களும் அநீதியான முறையில் பாதிக்கப்பட்டனர். தமிழர்களின் எதிரிகளாக நோக்கப்பட்டனர். வரலாற்றின் கறைபடிந்த பக்கங்கள் தவிர்க்கமுடியாத வகையில் உருவாகிப்போயின.

முஸ்லீம்கள் தனியினமென நினைப்பதை விட்டுவிட்டு தமிழரென்ற ஒற்றுமையுடன் சேர்ந்து போராடின் போராட்டமும் வலுப்பெற்றிருக்கும். தேவயில்லா உள்வீட்டு பிரச்சினைகளும் வந்திருக்காது. (தமிழர்களை பாதிக்கும் பல சட்டங்களை நிறைவேற்ற இன்றும் அரசுக்கு ஆதரவு கொடுக்கும் பலமான சக்திகள் இஸ்லாமிய அரசியல் தலைமைகளே.)

சரி, உங்கள் வினாவுக்கு வருவோம்.
நடந்தவை நடந்தவையாகவே போகட்டும். முஸ்லீம்கள் ஒருசிறுபான்மை இனமாகவே இருக்கட்டும். தமிழீழம் அமைத்தபின் அங்கு இவர்களின் நிலை என்ன என்பதுதான் உங்கள் கேள்வி. இதில் கேள்விக்கே இடமில்லை. அடக்குமுறைக்கு எதிராக பலத்த விலைகொடுத்து போராடும் பகுதிக்கு அதன் வலி தெரியும். அதனால் அந்த அந்த பகுதி மக்களின் விருப்பிற்கேற்ப சுயாட்சி அலகுகள் வகுக்கப்பட்டு அதிகாரங்கள் பரவலாக்கப்படும். இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் விருப்புக்கேற்ப சொந்த இடங்களிற்கு திரும்பக்கூடிய நிலை உருவாகும். அனைவரும் தமிழ் பேசும் மக்களென்பதால் நிர்வாக சிக்கல்களின்றி அரசு நடைபெறும்.

தமிழ் மகளால் முஸ்லீம் மக்கள் பாதிக்கப்படவே இல்லையென நான் சொல்லப்போவதில்லை. அதேபோல் முஸ்லீம்களாலும் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் அதெல்லாம் உள்வீட்டு பிரச்சினைகள். பொது எதிரியை எதிர்ப்பதில் எல்லோரும் சேர்ந்து போராட வேண்டும். அதன்பின் அந்த பங்களிப்பின் உரிமையுடன் தமக்கு தேவையானவற்றை அவரவர் எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே.

வடபகுதி இஸ்லாமியர் மட்டுமல்ல நாங்களும்தான் 18 ஆண்டுகளுக்கும்மேலாக இடம்பெயர்ந்தே வாழ்கிறோம். இவ்வளவுக்கும் வடபகுதியில் இஸ்லாமிய மக்கள் வாழ்ந்த யாழ்ப்பாணம் கடந்த 12 ஆண்டுகளாக அரசாங்கத்தின் பூரண கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அந்தவகையில் அம்மக்களின் இன்றைய அவலத்துக்கு காரணமும் சிங்கள அரசுதான். அதுவுமல்லாமல் இன்றைய நிலையில் யாழ்ப்பாணம் என்பது ஏனைய நாட்டின் பகுதிகளோடு தொடர்புகளற்று மக்கள் வாழவே முடியாத கடின பிரதேசமாக இருப்பதுதான் இஸ்லாமிய மக்களும் மீழ குடியேற ஆர்வம் காட்டாமைக்கு முக்கிய காரணம்.

சுருக்கமாக சொல்வதானால், தமிழீழத்தில் பிரதேசவாரியாக அதிகாரங்கள் பகிரப்பட்டு எல்லா மக்களும் எங்கும் வாழக்கூடிய ஏது நிலை உருவாக்கப்பட வேண்டும். உருவாக்கப்படும். ஆனால், போராட்டம் முடியுமுன் அது சாத்தியமில்லை. அதற்கிடையில் உருவான, உருவாகுகின்ற, உருவாகப்போகும் முரண்பாடுகளை, கசப்புகளை தவிர்ப்பதுவும் சாத்தியமில்லை.

இது என் பார்வையே தவிர தமிழ் சமூகத்தின்பார்வையல்ல. தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்கள். விளக்கமாக எழுத அவகாசமில்லாமையால் சுருக்கமாகவே விடையை தந்துவிட்டேன். அதனால் சில விளக்க குறைபாடுகளும் ஏற்படலாம். அதை குறிப்பிடின் அதை விளக்க முற்படுவேன். நன்றி.

என் கருத்தை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள். என்னும் விளக்கமாக சொல்லியிருக்கலாம். உங்கள் கருத்தை நானும் வழிமொழிகிறேன்.

சிவா.ஜி
11-08-2008, 10:39 AM
நாம் நமது தளத்தை பார்க்க முடியுமா?

இதற்கு ஷீ-நிசி அவர்கள் ஒரு கட்டுரை எழுதி, நமது மின்னிதழிலேயே வெளிவந்திருக்கிறது. ஆனால், மன்றத்தில் எங்கிருக்கின்றது எனத் தெரியவில்லை.

பாலகன்
11-08-2008, 12:26 PM
[B]

http://imageupload.in/files/awdfg66n7zn2jtuesmqh.gif

பெரியதாகக் கையொப்பமிடுவதிலிருந்து அவர் பெயரையும் புகழையும் விரும்புகிறவர் என்பது தெரிகிறது.கையெழுத்துக்குக் கீழே உள்ள கோடு அவருக்குத் தன்னை முக்கியமானவராகக் காட்டிக்கொள்வதிலுள்ள ஈடுபாட்டைக் காட்டுகிறது. அவருடைய பெயரான மார்கரெட் என்பதிலுள்ள 'M' அவர் கணவரின் குடும்பப் பெயரான தாட்சரிலுள்ள 'T' -யை விடப் பெரியதாக இருப்பதைக் காணுங்கள். தன்னை முன்னிலைப்படுத்துவதிலுள்ள அவரின் ஆர்வம் தெரியும்.

கையெழுத்து பற்றி சும்மா புட்டு புட்டு வச்ச லொள்ளர் அதிரடியாருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்,

வெற்றி
11-08-2008, 12:56 PM
1. மொக்கைச்சாமி
மொக்கைன்னு பெயரை வச்சிக்கிட்டு திறமையா பின்னுட்டமிடும் உங்களிடம் ஒரு கேள்வி, மொக்கை மொக்கைன்னு சொல்லுறோமே? பிறகு ஏன் மொக்கை போட்டா எல்லாரும் சிரிக்கிறாங்க? விவரமா சொன்னா நல்லாயிருக்கும்?

அதாவதுங்க........ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பொதுவாவே ஏத்தாச்சும் அதிரடியா செஞ்சாத்தான் இந்த உலகம் நம்மை உடனே உத்து பார்க்கும்..
ஒரு நியதி இருக்கு அதில் ஒரு உண்மையும் இருக்கு
அந்த நியதி என்னான்னா !!
குழந்தை..அறிவாளி,,பைத்தியக்காரன்
இவர்கள் மூவரை சுற்றியும் எப்போதும் பத்து பேர் இருந்து கொண்டே இருப்பார்கள்..
நான் குழந்தையாகவே முடியாது....(ஏன்ன எருமை வயசாச்சு)
ரெண்டாவது ஐய்யோ சாமி இந்த விளையாட்டுக்கு நான் வரலை.......
மூன்றாவது கொஞ்சம் கவர்ச்சியாக எனக்கு பட்டது..
இது ஒரு நாகரிக கோமாளி வேசம்...
என்னை சுற்றி ஒரு பத்து பேர் இருக்க நான் தேர்வு செய்தது தான் மொக்கை பட்டம்
உங்கள் கேள்விக்கான பதில் :-
எனக்கு எல்லாம் தெரியும் என்ற மனிதன் தன்னை மேம்படுத்திக்கொள்ள முடியாமல் போகிறான்
ஏதும் தெரியாது என நினைக்கும் மனிதன் ஜடமாகிப்போகிறான்
தெரிந்து கொண்டே இருக்க வேண்டும் என என்னும் மனிதன் தான் தெளிவு பெறுகிறான்...
தெளிவு என்பது தவறு செய்ய செய்ய வரும் ஒரு வகை பக்கவிளைவு
ஆக மொக்கை என்ற சொல்.. தவறு செய்யும் மனிதனை...தெளிவு பெற்ற மனிதன் சுட்டிக்காட்டும் ஒரு நிகழ்வே..
இன்னும் உங்களுக்கு புரியும் படி விளக்க வேண்டும் எனில்
என்னையும் மதிச்சி மெத மருவாதி கணக்கா என்கிட்ட முதல் கேள்வி கேட்டிங்க,,,
ஆனால் ஆடி அசஞ்ஜி வந்து அலட்டிக்காம வந்து
இப்படி மொக்கை போட்டா சிரிக்காமல் என்ன செய்வாங்க??

பின் குறிப்பு :-
மொக்கைன்னு பெயரை வச்சிக்கிட்டு திறமையா பின்னுட்டமிடும் உங்களிடம் ஒரு கேள்வி, ஹைய்யோ ..ஹைய்யோ (வடிவெலு பாணியில்)
நிசமாத்தான் சொல்லுறீங்களா?? இல்லை சும்மாத்தான் கேட்டேன்.....
ஹிஹிஹிஹி

உதயசூரியன்
11-08-2008, 12:59 PM
4. உதய சூரியன்
தமிழை உயிராக கொன்டுள்ள தங்களிடம் ஒரு கேள்வி, முற்காலத்தில் சோழர்கள் கடல்கடந்து சென்று தமது அரசை நிறுவினார்கள்,,, (உதாரணம் கடாரம் கொண்டான்) அன்று அது வெற்றியாக கருதப்பட்டாலும், இன்று மற்ற கீழ் திசை நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு அது பெரும் பிரச்சனையாக இருக்கிறதே, இதற்கு உங்கள் பதில் என்ன?

அன்புடன்
பில்லா

என்னங்க..
என்னை தமிழுக்காகவே வாழ்பவர் என்று உயர்த்தி சொல்வது.. உங்களின் பெருந்தன்மை..
ஆனால் அப்படி சொல்லும் அளவுக்கு உயர்ந்த இடத்தில் நானில்லை..
பில்லா மற்றும் இத்தள நண்பர்களின் தமிழுக்கு முன்னால் இந்த உதய சூரியன்.. 1% கூட தேற மாட்டான்..

இத்தள நண்பர்களுக்கு இதற்கு முன்னரும் சில நண்பர்களுக்கு தனி மடலிலும்.. என்னுடைய தமிழ் ஆர்வம் எதனால் ஏற்பட்டது என்பது தெரிந்திருக்கும்..
அந்த தமிழ் ஆர்வமும்..
அது கூட இம்மன்றத்திலிருக்கும் நண்பர்கள் அனைவரும் மேடையில் இருக்க நான் பார்வையாளனாக.. அந்த அளவில் உள்ளது..
ஆனாலும் முழு மன நிறைவு..

வெளியில் இருப்பவரையும்.. அதனை பார்வையாளானாக கூட இருக்க விருப்ப மில்லாதவர்களையும்.. உணர்வினை வெளி கொண்டு வந்தால்.. அது போதும்..
அதற்கப்புறம்.. அவர்கள் மேடையிலும் ஏறுவர்..கோட்டையிலும் ஏறுவர்..அப்பணியை பல எதிர்ப்புக்களில் செய்து கொண்டிருக்கிறேன்.. முழு திருப்தியுடன்..(எனக்கு மட்டும்)

பல நண்பரகள்.. தமிழ் ஆர்வம், தமிழ் புலமை, அதன் வரலாறு, அதன் தனி தன்மை, இலக்கிய நயம், எதுகை மோனை, உலகத்துக்கே கற்று கொடுக்கும் உவமை..
இதனை அறிந்தும்.. பலரின் முன்னால்.. தனியாக நின்று வாதிட்டு அவர்களுக்கும் தமிழின், தமிழரின் அத்தியாவசியத்தை புரியவைக்க தவறுகின்றனர்..
இத்தனைக்கும் அவர்களுக்கு 100சதம் தமிழின் சுவை, தமிழர்களின் நலன் தெரிந்திருக்கும்...

1 சதம் மட்டுமே தெரிந்த என் போன்றோர்களின் முயற்சிகளை போல் அனைவரும் திறம் பட ஒற்றுமையுடன் இருந்திருப்பார்களெனில்.. நிச்சயம்.. பழைய கடாரம் மட்டுமல்ல...
இந்தியாவும். இலங்கையும்,சிங்கப்பூரும், மலேசியாவும், பர்மாவும் இன்னும் பல நாடுகளூம் தன் வசமாயிருக்கும்..(எப்படி..?? கேள்வி கேட்ட இடத்தை தொட்டு விட்டேனா..?)

இதில் இந்தியாவை தவிர மற்ற நாட்டிலாவது.. தமிழுக்கும் தமிழர்களுக்கும் உரிமைகள் உள்ளது.. அதுவும் நம் முன்னோர்களின் தயவு தான்...

பில்லா அவர்களே..
உங்கள் கூற்று சரியாக தான் இருக்கிறது..
பண்டைய காலத்தில்.. காவியம் படைத்த சங்க காலத்தில் இருந்து..
நாகரிகம் அமைத்து திரம்பட ஆட்சி செய்த போதும்..ஏனைய மற்ற ஆட்ச்சியாளர்கள் போல் அல்லாமல்..தமிழ்ர் பண்பாடுகளை உலகம் உணர செய்தனர்..
அப்பொழுது மதம் தன்னுள் புகுந்த போது மனிதம் தோற்க தொடங்கியது..

ஒரு நாட்டை கைப்பற்றுவது.. ஒரு தலைவனின் தனி பட்ட வெற்றியல்ல..
அவன் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு செய்த மக்களும்..
அதே நேரத்தில் தன்னை சார்ந்த மக்களின் நலனில் மட்டும் முக்கிய அக்கறையும், அவன் கொண்ட இன பற்றும் தான்..

முன்பு கிடைத்த வெற்றிகள் அனைத்தும்.. ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி..
சுயனலமில்லா வெற்றி..
தமிழ் மணம் வீசிய வெற்றி..

தற்போது அதன் பாதிப்பு, அந்த ஒற்றுமை.., இந்தியாவிலும்.. சில நாடுகளிலும்.. குறைந்திருப்பது உண்மைதான்... அதற்கு.. முக்கிய காரணம்..
முக்கிய குற்றவாளிகள் மக்கள்
மக்கள்
தமிழ் மக்கள்..

மூத்த குடி நம் குடி
மூத்த மொழி நம் மொழி
மூத்த பண்பாடு நம் பண்பாடு
நாடுகள் பல ஆண்ட இனம் தமிழ் இனம்..

இவைகளை.. சொல்லுவதால்.. இவைகளை பின்பற்றுவதால்.. எங்களுக்கு எத்தனை டாலர்கள் கிடைக்கும் என்று கூப்பாடு போடும் இன்றைய கேவலமான.. பனந்தின்னிகளாகவும்.. பெண் சுகவாதிகளாகவும் மாறி போன தமிழ் இளைஞர்களும் தான் காரணம்..

காலத்திற்கேற்ப்ப தமிழர்களின் அடையாளங்களை தெரிய வைக்க தவறியிருக்கிறோம்..

பல நாடுகளை நிர்மானிக்கும் போது இருந்த போது படிக்காத தமிழ்ர்கள் வாங்கி தந்த உரிமையை கூட படித்த நம் இளைஞர்கள் பெற்று தர வில்லை..
அதனால்.. நாடாண்ட நம் தமிழர்கள் ஒரு நாடில்லா அனாதைகளாகி போணோம் என்பதே உண்மை..

தலைவனை குற்றம் சாட்டியே பழக்க பட்ட நாம் நமது குற்றங்களை.. பார்க்க தவறுகிறோம்..

ம்ம்ம்
இத்தருணத்தில்.. இது போன்ற அவனம்பிக்கையான விஷயங்களை சொல்லியிருக்க கூடாது..
சொல்லி விட்டேண்.. மன்னிக்கவும்...
இன்னும் பல ஆதங்கங்களை சொல்லியிருப்பேண்..
ஆனால்.. தற்போதும் உழைத்து கொண்டிருக்கும் பலரது உழைப்பிற்க்கு தலை வணங்கி வழி விடுகிறேன்...

நாம ஒற்றுமையுடன்.. இருந்திருந்தால் தென்னிந்தியாவையும் இலங்கையின் ஒரு பகுதியையும் இன்றும் நாம் ஆண்டிருக்கலாம்..(தனியாக)
தமிழனுக்கு தமிழனே எதிரி..
என்பதை மட்டும் காலம் காலமாக மிக சரியாக செய்து வருகிறோம்..

ஆனாலும் ஒரு சின்ன சந்தோஷம்.. உரிமைக்காக இன்றும் தொடர்ந்து போராடும்.. இலங்கை தமிழர்களுக்கு.. வணக்கங்கள்..
வாழ்த்துக்கள்

தமிழகம் தமிழர்களின் பூர்வீகம் என்று சொல்லுவார்கள்..
ஆனால்.. ஈழம் தான் தற்போது தமிழர்களின் உலக தமிழர்களின் மானம் காகும் பகுதி.. இந்த நவீன உலகத்தில்.. தமிழன் என்றால் அனைவருக்கும் தெரிய வைத்தது தமிழர்களின் திறமையை வியந்து அறிய பெற்றது..
ஈழ மக்களிடமிருந்து தான்..

முன்னோர்கள் பிழைக்க சென்ற இடத்திலும் தமிழருக்கென்ற அடையாளத்தை உருவாக்கினர்..

ஆனால் இன்றைய இலைஞர்கள்..

கிடைத்த மரியாதைகளையும்.. உரிமைகளையும்.. இழப்பதை தடுக்க கூட முடிய வில்லை.. தெம்பில்லை இன்றைய இளைஞர்களிடம்...
சுய நலம் மட்டுமே குறிகோளாக இருப்பதன் விளைவு இது..
மென் பொருளில் முதன்மையானவர்கள்.. ஆனால்.. மாடி விட்டு ஏழைகள்.. என்பதை மறந்து போனர்..

இது ஒரு காலத்தின் தேக்கம் தான்..
தேக்கத்தினை நிவர்த்தி செய்யும் பங்கு நம் அனைவரிடத்திலும் உண்டு..

கடாரம் வென்ற.. சாதனைக்கும் காரணம் நாமே
நாடில்லாமல் தவிப்பதற்க்கும் காரணம் நாமே..
நாமே..
தமிழ் மக்கள் நாமே..

நாளை விடியும் விடியலுக்கும் காரணமும் நாமே..
தமிழ் மக்கள் நாமே...
அனைத்திற்க்கும் காரணம் நாமே.. தமிழ் மக்கள் நாமே.. தமிழ் இளைஞர்கள் நாமே..

தேவை ஒற்றுமை
ஒற்றுமை
ஒற்றுமை..
தமிழர்கள் ஒற்றுமை..

இந்த விஷயத்தில்.. சம்பந்தமேயில்லாமல் மதம் புகுவதை ஏற்று கொள்ளாதீர்..
தீபன் சொன்னது போல்...மதத்துக்காக வாழ்வதை விட.. மண்ணுக்காகவும்.. மனிதனுக்காக தியாகம் செய்வதும் சிறந்தது...

இந்து, கிருத்துவம், இஸ்லாம்.. அனைத்து மதம் தோன்றுவதற்கு முன் அறிந்த சமூகம் தமிழ் சமூகம்..
பகுத்தறிவை உலகிற்கு ஆணித்தரமாக பகிரங்கமாக சொல்லி யோசிக்க வைத்ததும் தமிழ் சமூகம்..
அப்படி தந்த பகுத்தறிந்து மதத்தை ஒரு பொருட்டாக எடுக்காமல்.. விடுதலைக்கு இனைந்து போராடுங்கள்..

கடைசி தமிழன் உள்ள வரை போராடுவான் என்பது உறுதி

தமிழர்களே.. தமிழ் தலைவர்களை உருவாக்கி வையுங்கள்.. தமிழ் வரலாறு தெரிந்தவர்களை.. உருவாக்கி வையுங்கள்..

அடித்தாலும் புடித்தாலும்.. உணர்வினில் அவர்கள் விட்டு கொடுக்க மாட்டார்கள்..
இல்லெய்னில்.. தமிழ் சமுதாயம் ஒன்று இந்தியாவில் இருந்ததில்லை என்று கைபர் கனவாயில் இருந்து வந்தவர்கள்.. சொல்லி விடுவார்கள்..

தமிழ் உணர்வினை வெளி படுத்த ஆதரவு தெரிவிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை..
இத்தருணத்தில் ஒன்று சொல்லி கொள்ள ஆசை படுகிறேன்..
பழங்காலத்தில்.. கடாரம் வென்றது ஒரு சாதனை தான்..
இக்காலகட்டத்தில்.. ஒரு பலம் பொருந்திய அரசிடமிருந்து.. தனியாக ஈழ பகுதிகளை ஆண்டு கொண்டிருக்கும்.. தமிழர்களின் திறமையும் அதைவிட சாதனை தான்..

ஈழம் கிடைக்க பெற்றால்... கடாரம் சாதனை முறிந்து போகும்..
இந்திய தமிழர்கள் என்று என்னை நான் சொல்லிகொள்வதை விட.. ஈழத்திற்கு புலம் பெயர்ந்து விடுவேண்...
இது எனது கனவு, ஆசை..

இது என் தனி பட்ட கருத்து தான்..இதில் யாருக்கேனும் வருத்தமென்றால்.. இப்பதிவை நீக்கி விடுங்கள்..
நிச்சயம் நானறிவேண்.. இம்மன்றத்திலுள்ள மற்ற நண்பர்களை விட நான் ஒன்றும் அதி புத்தி சாலியல்ல..
மீண்டும் ஒரு முறை மன்னிக்கவும்..

திரியின் நாயகருக்கும்..
கேள்வியின் நாயகருக்கும்
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

பாலகன்
11-08-2008, 01:23 PM
என்னங்க..
என்னை தமிழுக்காகவே வாழ்பவர் என்று உயர்த்தி சொல்வது.. உங்களின் பெருந்தன்மை..
ஆனால் அப்படி சொல்லும் அளவுக்கு உயர்ந்த இடத்தில் நானில்லை..
பில்லா மற்றும் இத்தள நண்பர்களின் தமிழுக்கு முன்னால் இந்த உதய சூரியன்.. 1% கூட தேற மாட்டான்..

என்னங்க சூரியரே, ஒன்னுமே தெரியலைன்னு சொல்லிக்கிட்டு இப்படி போட்டு தாக்குறீங்களே, நீங்கள் ஒவ்வொரு தமிழனின் மனதில் உள்ளதை தானே சொல்லுறீங்க, எங்களால சொல்ல முடியாததை சொல்லும் நீங்கள் உண்மையிலேயே ஒரு போர்வீரன் தான்,

என் மனதுக்கு ஏற்ற பதிலை தந்தமைக்கு வாழ்த்துக்கள்

அகத்தியன்
11-08-2008, 01:39 PM
உங்கள் பதிலுக்கு என் நன்றிகள் தீபன்.

ஆனாலும் உங்கள் கருத்தோடு ஒத்துப்போவதில் எனக்கு சம்மதமில்லை. முஸ்லிம்கள் வந்தேறு குடிகள் என எதை வைத்துச்சொல்கிறீர்கள்? வரலாறு என்று நீங்கள் கூறினால் அதை ஏற்க நான் தயாராக இல்லை.வரலாறு என்பது, அவரவர் சாதகத்தன்மைக்கு ஏற்ற மாதிரி இன்று திரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களும் இலங்கையின் பூர்வீக குடிகள்தான் என்பதற்கான ஆதாரங்களினை இன்று முஸ்லிம் சமூகத்தினுள்ளும் சேகரிக்க ஆரம்பித்துள்ளனர். அதற்கான ஒரு ஆரோக்க்கியமான முன்னெடுப்பும் மேற்கொள்ளப்படுகின்றது.

இலங்கையில் இரு இனம் தமிழ் சிங்களம் என நீங்கள் சொல்வது போல் வைப்போம். அப்படியானால், வடக்கிலிருந்து முஸ்லிம்களை மாற்றுத்துணி எடுக்க கூட அவகாசம் தராமல் விரட்டியது நிச்சயமாக சிங்களவர்கள் இல்லை.
தமிழர்கள் அகதியாக இருக்கின்ரனர் என்பது உண்மைதான் அதை ஒரு போதும் மறுப்பதற்கில்லை. ஆனால் முஸ்லிம் சமூகத்தின் அகதி வாழ்வு என்பது வேறு ஒரு பரிமாணத்தினை கொண்டது என்பதனை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இன்னும் தொழுது கொண்டிருக்கும் போது பள்ளிவாசல்களுக்குள் கொல்லப்பட்ட பலநூற்றுக்கணக்கான முஸ்லிம்களிற்கு ஏதாவது பரிகாரம் உண்டா? யார் எம்மை கொல்கிறார்கள்? எதற்காக நாம் கொல்லப்ப்டுகின்றோம்? என்பது அறியாமல் இறந்த அவர்களை கொன்றது சிங்களவர்கள் அல்ல. இன்ரும் விவசாயத்தினை நம்பி வாழும் முஸ்லிம் மக்களின் நிலங்களிற்கு போக முடியாமல் முடங்கிக்கிடக்கின்ற முஸ்லிம் விவசாயிகளை வீட்டில் முடங்க வைத்திருப்பது- சிங்களவர்கள் அல்ல. சோறு போடும் முஸ்லிம்களின் விவசாயக்காணிகளினை இன்ரும் அது எங்களுக்கான மேய்ச்சல் நிலம். அதனை யாரும் உரிமை கொண்டாட முடியாது என பிரகடனப்படுத்தியதும் அவர்கள் அல்ல. தனது சொந்த காணிக்குள் இன்னும் ஒரு குத்தகைகாரன் போல சென்று வருகின்ற முஸ்லிம் விவசாயிகளினை அழவைப்பது நிச்சயமாக ஒரு சிங்கள சமூகம் அல்ல.

இது போல இன்னும் பல........................
இதற்கெல்லாம் காரணம் யார் சொல்லுங்கள் நண்பரே!
நீங்கள் சொல்வது போல இரு இனம்தான் என்றால் மேற்சொன்னவற்றினை செய்தது சொந்த இனமா? ஒரே இனத்துக்குள் இவை நடைபெற என்ன காரணம்?

உணமிதான் முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசுக்கு பல்லக்கு தூக்குகின்றனர். அதை யாரும் மறுக்கவில்லை. அதன் ஆரம்பம் எங்கிருந்து தோன்றியது? முஸ்லிம்கள் அனாதைகள் போல இரு பக்கங்களால் அடிபட்ட போது ஆதரவிற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த வழி- அரசியல். அவர்கள் ஆயுதத்தினை பற்றி பிறகு சிந்திக்கவில்லை. (ஏனெனில் அவர்கள் சேர்ந்து போராடிய போராட்டங்கள் அவர்களுக்கெதிராக திருப்பப்பட்டதால்.)
இன்றைய முஸ்லிம் அரசியல் இலங்கையில் சொல்லிக்கொள்ளும் படி இல்ல. என்பதையும் நான் சுட்டிக்காட்டுகின்றேன்.

முஸ்லிமகளும் சேர்ந்து போராடக்கூடிய சந்தர்ப்பங்களினை தமிழர்கள் தருவதில் தவறிவிட்டனர் நண்பரே!

நீங்கள் சொல்லும் நியாயமான பங்கீடு முஸ்லிம்களுக்கு கிடைக்குமா என்பதில் ஒவ்வொரு கிழக்கு முஸ்லிமும் சந்தேகத்தோடுதான் இருக்கின்றான். இலங்கையின் போர்நிருத்த ஒப்பந்த காலத்தில் எத்தனை குழப்பங்கள்?? எத்தனை யுயிர்பலிகள்?? இவை எல்லாம் ஆறா வடுக்களாக இருக்கின்றன..

நன்றி

உதயசூரியன்
11-08-2008, 01:51 PM
முதலில் குடும்பத்திற்கு ஒரு வீடு.. அப்புறம் பார்க்கலாம் யார் யார் எங்கு படுத்து கொள்வது என்பது..
அப்புறம்.. போராடாமலே வசதிகள் கிடைக்கும் தந்திரம் தவறானதும் கூட..

இன்னும் ஒன்று..
தமிழன் அடையாளம் தான் முக்கியம் .. முதலும் கூட.. அகத்தியன்..!!!
மதம் என்பது அவர்கள் போட்டிருக்கும் சட்டை..
சட்டையை எல்லோரும் கழட்டினாலே..போதும்..
அனைவருக்கும் போராடும் எண்ணம் தானாக..
தமிழன் என்ற எண்ணம் வரும்..அகத்தியன்..!!!
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

தீபன்
11-08-2008, 02:11 PM
அகத்தியரே... முஸ்லீம்கள் வந்தேறு குடிகளென நான் ஒருபோதும் சொல்லவில்லை. அவர்களுக்கு தமிழ் சமூகத்தால் இன்னல்கள் ஏற்படவில்லயெனவும் நான் சொல்லவில்லை. என் பதிவை சற்று ஆழமாக படித்து புரின்க்து கொள்ளுங்கள். நண்பர் உதய சூரியன் அளித்த பதிவு எனக்குபதிலாக அளிக்கப்பட்டதாக கொள்ளுங்கள். போராட சந்தர்ப்பம் தரப்படவில்லையென்பது சிறுபிள்ளைத்தனமானது. தாங்களாக முன்வந்து சேர்ந்தோ தனித்தோ செய்யவேண்டியது அது.

அகத்தியன்
11-08-2008, 02:32 PM
முதலில் குடும்பத்திற்கு ஒரு வீடு.. அப்புறம் பார்க்கலாம் யார் யார் எங்கு படுத்து கொள்வது என்பது..
அப்புறம்.. போராடாமலே வசதிகள் கிடைக்கும் தந்திரம் தவறானதும் கூட..
இன்னும் ஒன்று..
தமிழன் அடையாளம் தான் முக்கியம் .. முதலும் கூட.. அகத்தியன்..!!!
மதம் என்பது அவர்கள் போட்டிருக்கும் சட்டை..
சட்டையை எல்லோரும் கழட்டினாலே..போதும்..
அனைவருக்கும் போராடும் எண்ணம் தானாக..
தமிழன் என்ற எண்ணம் வரும்..அகத்தியன்..!!!
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

போராடாமல் இருந்து பெறுவது என்பது தவறான கருத்து. யார் போராடாமல் இருந்தார்கள்? தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பங்களில் எத்தனை முஸ்லிம் போராளிகள் இருந்தனர்? இறந்தனர் என்பது உங்களுக்கு தெரியாதா நண்பரே? அவர்களினை தொடர்ந்து இணையாமல் பார்த்துக்கொண்டது யார்? அதே விடுதலை போராட்டக்குழுக்களே.
இந்தப்பிரிவினை, மக்கள் மத்தியில் உள்ள அவ நம்பிக்கை எல்லாம் யாரால் ஏற்பட்டது?

இன்றும் சொல்வார்கள், " பிட்டும் தேங்காய் பூவும் போல ஒன்றாய் ஈருந்த தமிழ் முஸ்லிம் உறவு" என, இப்போது எங்கே அது??
இனச்சுத்திகரிப்ப்பு என்பதை செய்து காட்டியது யார்??

இப்போது அனைவரும் சொல்லலாம் முஸ்லிம்களும் தமிழ் இனம்தான் என, ஏனெனில் இன விடுதலை போராட்டம் இன்றெடுத்துள்ள பரிமாணம் வேறு. முஸ்லிம்களினையும் ஒன்று எனக்கூறி இன்னோரு பிரச்சினை எழுவதை எந்தவொரு தமிழ் தலைமைகளும் விரும்புவதில்லை.

இதை ஏன் நீங்கள் அன்று செய்திருக்க கூடாது?? பள்ளிகளில் கொல்லும் போதும், வடக்கிலிருந்து அவர்களினை துரத்தும் போதும், கர்ப்பிணிகளின் வயிற்றினை கிழித்துக்கொல்லும் போதும், ஏன் நாம் எல்லாம் ஒரு இனம் என்ற உண்ரவு உங்களுக்கு தோன்றவில்லை நண்பர்களே?
ஏனெனில் அப்போது தோன்ற ஏதுவாக எதுவும் இல்லை. இப்போது எக்டையாவது பெறும் சாத்தியம் தூரத்திலாவது தெரிகின்றது. அது முழுதாக கிடைக்க வேண்டும். இன்னொரு பிரச்சினையினால் அதுவும் கை நழுவிப்போக கூடாது என்ற அவசரம் இப்போது முஸ்லிம்களினை ஒரே இனமாக பார்க்க வைக்கின்ரது.

வீடு எனக்கு மட்டும்தான் சொந்தம் உனக்க்கில்லை என அடித்து துரத்திய பின் இன்னோரு வீடு பற்றித்தான் யாரும் சிந்திப்பார்கள். உடைந்த கண்ணாடியினை ஒட்டினாலும் தடம் இருக்கும் என்பது நீங்கள் அறியாததா??

இக்கருத்துக்களினை நான் எனது கருத்தாக சொல்லவில்லை நண்பர்களே, கிழக்கின் ஒவ்வொரு முஸ்லிமின் குடிமகனாக இருந்து சொல்கின்றேன்.

சிவா.ஜி
11-08-2008, 02:38 PM
இங்கிருக்கும்(சவுதியில்) இலங்கை முஸ்லீம் நன்பர்கள் தமிழ் பேசுகிறார்கள். நீங்கள் தமிழரா என்றால்...நிச்சயம் இல்லையென்று மறுக்கிறார்கள். முரணாக இருக்கிறதே?

அறிஞர்
11-08-2008, 07:11 PM
அகத்தியன் - தீபன்... கேள்வி பதிலாக எண்ணி.... விவாதங்களை இத்தோடு நிறுத்திக்கொள்வோம்.

இன, மத சம்மந்தப்பட்ட தாக்குதல்களை மன்றம் அனுமதிப்பதில்லை என கருத்தில் கொள்வோம்..

aren
12-08-2008, 05:15 AM
அறிஞர் அவர்கள் இந்த விவாதத்தை தொடரவேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். ஆகையால் இதை இத்துடன் நிறுத்துங்கள்.

பல விவாதங்கள் யாரும் கவனிக்காமல் இருக்கிறது. அதை நாம் கவனிப்போம். இங்கே விவாதம் எதுவும் இனி தேவையில்லை.

இதயம்
12-08-2008, 05:26 AM
ஆரோக்கியமான விவாதங்களுக்கு மன்றத்தில் தடை இல்லை. இந்த விவாதம் வேண்டாத விளைவுகளுக்கு வழி வகுக்கும். எனவே ஆரெனின் கருத்தை நானும் வழி மொழிகிறேன்.

ராஜா
12-08-2008, 06:14 AM
நண்பர்களுக்கு ஒரு அன்பான அறிவிப்பு.

இது சிலரிடம் கேள்விகள் கேட்டு, அவர்களது நோக்கில் பதில்களைப் பெறும் முயற்சிக்கான திரி. கேட்கப்பட்டவர்களும் சிரமம் பாராது வந்து தாங்கள் சரியென நம்பும் பதில்களைப் பதிவு செய்கிறார்கள்.

இவ்வாறிருக்கும்போது, "உன் கருத்து தவறு... இந்தக் கருத்து இப்படி இருக்கவேண்டும்..." என்று அறிவுரை கூற ஏதுமில்லை.

அவரவர் கோணத்தில் பதில்களை படியுங்கள்.. நல்லவைகளை போற்றுங்கள்.. அல்லவைகளை மெல்லத் தவிர்த்து மேற்செல்லுங்கள்.

அனைவரின் கருத்தும், விருப்பமும் ஒன்றாகவே இருந்தால் துணிக்கடைகளில் ஏன் இவ்வளவு டிசைன்கள் வைத்திருக்கப் போகிறார்கள்..?!!!

புரிதலுக்கு நன்றி.

அகத்தியன்
12-08-2008, 06:16 AM
நண்பர்களுக்கு ஒரு அன்பான அறிவிப்பு.

இது சிலரிடம் கேள்விகள் கேட்டு, அவர்களது நோக்கில் பதில்களைப் பெறும் முயற்சிக்கான திரி. கேட்கப்பட்டவர்களும் சிரமம் பாராது வந்து தங்கள் சரியென நம்பும் பதில்களைப் பதிவு செய்கிறார்கள்.

இவ்வாறிருக்கும்போது, "உன் கருத்து தவறு... இந்தக் கருத்து இப்படி இருக்கவேண்டும்..." என்று அறிவுரை கூற ஏதுமில்லை.

அவ்வரவர் கோணத்தில் பதில்களை படியுங்கள்.. நல்லவைகளை போற்றுங்கள்.. அல்லவைகளை மெல்லத் தவிர்த்து மேற்செல்லுங்கள்.

அனைவரின் கருத்தும், விருப்பமும் ஒன்றாகவே இருந்தால் துணிக்கடைகளில் ஏன் இவ்வளவு டிசைன்கள் வைத்திருக்கப் போகிறார்கள்..?!!!
புரிதலுக்கு நன்றி.

ரசித்தேன்.:) :) :) :) :) :)

நன்றி ராஜா சார்.

பாலகன்
12-08-2008, 06:19 AM
ஆ10 பில்லாவின் வசம்னு நெனச்சேன்.. அடிக்கடி வந்தம் பார்த்தேன் ஆனா, போன பத்து இன்னும் முடியலைன்னு நெனைக்கிறேன்,,,,

அகத்தியன்
12-08-2008, 06:25 AM
பில்லா!
நீர் இல்லா ஆபத்தா?
இனி இடையூறில்லா
நீ நடத்து
மிக நல்லா

ராஜா
12-08-2008, 06:32 AM
ஆ10 - இப்போ பில்லாவின் வசம்!!!
இன்னும் பதில் அளிக்க வேன்டியவர்கள்
1. மொக்கைச்சாமி / 2. லொள்ளு வாத்தியார் / 4. உதய சூரியன் / 7. தமிழ் குமார்
ஒப்புதல் பெற்றாகிவிட்டது, அடுத்து சுடர் ஏந்துபவரும் தயார் / திரு,மொக்கைச்சாமி

பில்லா...

கையெழுத்தை மாற்றணும் போலிருக்கே..!

அன்புரசிகன்
12-08-2008, 07:10 AM
ஆ பத்திற்கு பங்கம் விளைவிக்கக்கூடிய பதிவுகள் அகற்றப்பட்டன... திரி சுமூகமாக பயணிக்க அனைவரும் ஒத்துழையுங்கள்...

lolluvathiyar
12-08-2008, 11:32 AM
2. லொள்ளு வாத்தியார்
சின்ன வயசில நீங்க பன்ன சுட்டித்தனத்தால ஏதாவது வம்புல மாட்டி பிறகு தப்பித்துவந்த ஒரு நிகழ்வை பற்றி?

ஆபாத்தில் சிக்கவைத்தாலும் வச்சாரு பெரிய ஆபத்துல சிக்க வச்சுட்டாரு. வம்பு பன்னி மாட்டிய ஏதாவது ஒரு நிகழ்வை பற்றி கேட்கிறார். ம் என்ன சொல்ல எத்தனை சொல்ல சின்ன வயசுல என் வாழ்கையே வம்புல தான் நிறைந்திருந்தது, அதுவும் குறிப்பா எல்லா வமபும் மாட்டாமல் போனதில்லை.

என்னுடைய அனுபவத்துல சொல்லறேன், இந்த உலகில் யார் உத்தமன் நல்லவன் யோக்கியன் தீயவன், அயோக்கியன் என்று தெரியாது ஏதாவது செய்து மாட்டாமல் இருக்கும் வரை அவன் உத்தமன், மாட்டியவ அயோக்கியன். அவன தான் வம்புல மாட்டிட்டானு சொல்லறோம். ஒருவருக்கும் தெரியாது என்று நினைத்து நாம் எந்த காரியமும் செய்ய முடியாது. ஏன்னா நாம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் எங்காவது சில சாட்சிக கன்டிப்பா பதிவாகி இருக்கும். அது எந்த சமயத்துல வெளிபடும் என்று ஆண்டவனுக்கு தான் தெரியும்.

சரி என்னுடைய அனுபவம் ஒன்றை சொல்லிவிடுகிறேன்.

நான் எட்டாங்கிளாஸ் படிக்கும் போது முதல் முதலாக உடன் படித்த ஒரு தோழிக்கு காதல் கடிதம் எழுதி கொடுத்தேன் இப்பவே எனக்கு ஒழுங்கா கவிதை எழுத வராது அப்ப சொல்லவெ வேன்டாம். இதோ நான் எழுதிய கடிதம் (ஆங்கிலத்தில் எழுதினேன், இப்ப தமிழில் தருகிறேன்)

"அன்பே நான் உன்னை காதலிக்கிறேன் அதனால் நீயும் என்னை காதலி." இவ்வளவுதான் கடித்தத்தில் இருந்தது. இன்னொரு தாளில் பின்குறிப்பும் ஒன்று இனைத்திருந்தேன். "அன்பே ஒருவேலை நீ வேறு யாராவதை காதலித்தால் இந்த கடித்தத்தை கிழித்து போட வேன்டாம் உனக்கு பதிலாக நூர்ஜகானிடம் இதை தந்து விடு"

இப்படி எழுதி அவளிடம் தர அவளும் " நானும் உன்னை காதலிகிறேன்" என்று பதில் கடிதம் தர சில புன்னியவானகள் மூலம் இந்த இரு கடிதமும் டீச்சரிம் சிக்க வம்பில் மாட்டியாச்சு டீச்சர் முதல் கட்டமாக அடித்து விலாச, பிறகு மேட்டர் பிரின்சிபாலிடம் போக அவர் பங்குக்கு நாலு சாத்து சாத்தி அப்பா அம்மாவை வர சொல்ல அவர்களிடமும் அடி வாங்கி பெரும் கூத்தே நடந்து விட்டது.

தப்பிச்சது எதுனு கேக்கறீங்களா : இதுபோன்ற மேட்டர்களில் இன்னும் பாதி என் சம்சாரத்துக்கு தெரியாதுங்கோ.

வெற்றி
12-08-2008, 11:37 AM
பார்த்தீங்களா..?..பார்த்தீங்களா...!
என்னுடைய அரு(வை)மையான பதிலைப்பற்றி யாரும் ஏதும் சொல்லவே இல்லை... ஏன்....மொக்கை பத்தலையா??
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=373903&postcount=2222
பின்னூட்டம் இட்டால் கேள்வி கேட்க மாட்டேன்....இல்லை எனில் ..................................... என் ஆ....பத்து மிக ஆபத்தாக இருக்கும் என அடக்கத்துடன் சொல்லிக்கொள்கிறேன்

அகத்தியன்
12-08-2008, 11:39 AM
நீர் லொள்ளு வாத்தியார் இல்ல

சரியான ஜொள்ளு வாத்தியார்..

ராஜா
12-08-2008, 11:43 AM
வாத்ஸ்..

டீச்சர் எல்லாம் எதுக்கு அடிச்சாங்க..?

மாணவனின் கருத்துப் பிழைக்காகவா... எழுத்துப் பிழைக்காகவா..?

அகத்தியன்
12-08-2008, 11:47 AM
வாத்ஸ்..

டீச்சர் எல்லாம் எதுக்கு அடிச்சாங்க..?

மாணவனின் கருத்துப் பிழைக்காகவா... எழுத்துப் பிழைக்காகவா..?

:lachen001::lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001:

இதயம்
12-08-2008, 11:50 AM
கண்டிப்பா கருத்துப்பிழைக்காகத்தான் இருக்கும். எழுத்துப்பிழைன்னா வாத்தி வாழ்நாள் பூராவுமில்ல அடி வாங்க வேண்டியிருக்கும்..?!!!

ராஜா
12-08-2008, 11:53 AM
பார்த்தீங்களா..?..பார்த்தீங்களா...!
என்னுடைய அரு(வை)மையான பதிலைப்பற்றி யாரும் ஏதும் சொல்லவே இல்லை... ஏன்....மொக்கை பத்தலையா??
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=373903&postcount=2222
பின்னூட்டம் இட்டால் கேள்வி கேட்க மாட்டேன்....இல்லை எனில் ..................................... என் ஆ....பத்து மிக ஆபத்தாக இருக்கும் என அடக்கத்துடன் சொல்லிக்கொள்கிறேன்

(எதுக்கு வம்பு..?)

சூப்பர் பதில் மொக்கச்சா..!

நீங்க நல்லவரு.. வல்லவரு... !!

(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் எப்புடியெப்புடியெல்லாம் பீதியக் கெளப்புறாங்கய்யா..!)

வெற்றி
12-08-2008, 11:59 AM
(எதுக்கு வம்பு..?)
சூப்பர் பதில் மொக்கச்சா..!
நீங்க நல்லவரு.. வல்லவரு... !!
(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் எப்புடியெப்புடியெல்லாம் பீதியக் கெளப்புறாங்கய்யா..!)
ஓத்துக்கிடறேன்..நீங்க நல்லவருன்னு ஒத்துக்கிடறேன்..
நெக்ஸ்ட்..... நெக்ஸ்ட்...

இதயம்
12-08-2008, 12:00 PM
நீங்க நல்லவரு.. வல்லவரு... !!

சரியா சொல்லுங்க... நல்லவரு... வல்லவரு..நானா..? மொக்கையா..? உண்மையை சொல்ல உங்களுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்னேன்..?!! (பதில் தவறா இருந்தா ஆளை தேடி ஆட்டோ வரும்கிறதை நினைவில் வச்சிக்கிட்டு பதில் சொல்லணும்..!!)

வெற்றி
12-08-2008, 12:12 PM
:medium-smiley-045:என்னையை நல்லவனுன்னு ஒருத்தர் சொல்லி நான் ஆனந்த கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கும் போது

சரியா சொல்லுங்க... நல்லவரு... வல்லவரு..நானா..? மொக்கையா..? உண்மையை சொல்ல உங்களுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்னேன்..?!! (பதில் தவறா இருந்தா ஆளை தேடி ஆட்டோ வரும்கிறதை நினைவில் வச்சிக்கிட்டு பதில் சொல்லணும்..!!)
உங்களைத்தேடி என் கேள்வி வரும்!!!! (நற..நற) :teufel021::teufel021:

ராஜா
12-08-2008, 12:18 PM
சரியா சொல்லுங்க... நல்லவரு... வல்லவரு..நானா..? மொக்கையா..? உண்மையை சொல்ல உங்களுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்னேன்..?!! (பதில் தவறா இருந்தா ஆளை தேடி ஆட்டோ வரும்கிறதை நினைவில் வச்சிக்கிட்டு பதில் சொல்லணும்..!!)

நீங்க நல்லவரு.. வல்லவரு.. வில்ல(வ)ரு..!

( எந்த பால் போட்டாலும் கோல் போட்டுடறாய்ங்களே... என்னமா ட்ரெய்னிங் எடுத்துருக்காய்ங்கப்பாஆஆஆஆஆஆஆ)

பாலகன்
12-08-2008, 12:38 PM
1. மொக்கைச்சாமி
மொக்கைன்னு பெயரை வச்சிக்கிட்டு திறமையா பின்னுட்டமிடும் உங்களிடம் ஒரு கேள்வி, மொக்கை மொக்கைன்னு சொல்லுறோமே? பிறகு ஏன் மொக்கை போட்டா எல்லாரும் சிரிக்கிறாங்க? விவரமா சொன்னா நல்லாயிருக்கும்?

[COLOR="DarkRed"]குழந்தை..அறிவாளி,,பைத்தியக்காரன்

இவர்கள் மூவரை சுற்றியும் எப்போதும் பத்து பேர் இருந்து கொண்டே இருப்பார்கள்..

நான் குழந்தையாகவே முடியாது....(ஏன்ன எருமை வயசாச்சு)

ரெண்டாவது ஐய்யோ சாமி இந்த விளையாட்டுக்கு நான் வரலை.......

[B]மூன்றாவது கொஞ்சம் கவர்ச்சியாக எனக்கு பட்டது..
இது ஒரு நாகரிக கோமாளி வேசம்...
என்னை சுற்றி ஒரு பத்து பேர் இருக்க நான் தேர்வு செய்தது தான் மொக்கை பட்டம்

அப்படி போடு அருவாள, என்னாடா பேரு மொக்கையா இருக்கேன்னு பார்த்தேன், ஆனா ஆளு படு சுட்டிதான் போங்க, உசாராதான் அந்த 3 வது வேசம் எடுத்திருக்கீ்ங்கன்னு நெனைக்கிறேன்.

உங்க பதில் உண்மையிலேயே அருமை திரு. மொக்கை சார்...
(ராசா அண்ணன் மொக்கை மொக்கைன்னு சிரிப்புகள் போடுறாறே அந்த மொக்கை ஒருவேளை நீங்க தானா?)

ஆகா ஊரு ஒன்னு கூடிட்டாங்கப்பா, திரி மறுபடியும் களைகட்டிருச்சின்னு நினைக்கிறேன்