PDA

View Full Version : ♔. ஆ! 10! ♔. - முதல் சுற்று



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14

சிவா.ஜி
18-06-2008, 11:09 AM
பிரமாதம் பூம்மா.....!!!! கலக்கிட்டே. மிகத் தெளிவான பதில். தடைகளைத் தாண்டுவது என்பது அத்தனை சுலபமல்ல....அத்தனைக் கடினமுமல்ல. இலக்கை நோக்கிய தெளிவான முனைப்புடன் கூடிய, கடின உழைப்பைக் கொண்டு, தன்னம்பிக்கையையும், தன் கையையும் துணை கொண்டு தடையை வெல்லலாமென்ற உன்னுடைய ஆழ்ந்த பதில் அருமை.

பாராட்டுக்கள் தங்கையே.:icon_b:

kavitha
18-06-2008, 11:11 AM
என்ன தான் கடுமையாக உழைத்தாலும்.. அறிவான வழியில் உழைக்காத பட்சத்தில்.. புல்லுக்கு இறைத்த நீராக வீணாகிவிடும் அபாயமும் உள்ளது.. ஆக.. தடைகள் ஆயிரம் வந்தாலும்.. அதை சாமர்த்தியமாக நொறுக்கத் தெரிந்த அறிவு.. அந்த அறிவுடன் கூடிய கடும் உழைப்பு.. இவை… இருந்தால் வெற்றி நம்ம கையில் வராம போயிடுமா என்ன??
தடைகற்களை தூளாக்க .. இந்த குட்டிப் பூவின் மூளையில் உதித்த உளிகள் இவை..
ஏதேனும் விட்டுவிட்டேனா தெரியவில்லை.. மன்றப் பெருந்தகைகள் பொறுத்தருள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த குட்டி பூவின் மேல் இத்தனை பெரிய மலையை கேள்வியாக அடுக்கிய கவி அக்காவுக்கு செல்லமான கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பு பூமகள்,
உன் மேல் வைத்த கேள்வி பெரிய்ய... கேள்வி என்றாலும் பல தடைகளையும் உடைத்து நீ கவிதை எழுதும் செயலே எனக்கு இக்கேள்விக்கு தகுந்த ஆள் என்று பட்டது. எதிர்பார்த்த பதிலில் குறை ஒன்றும் வைக்கவில்லையடா... வாழ்த்துகள்.

(அதுக்காக நான் சொன்ன கதையை எனக்கு பதிலா சொன்ன பாரு.... ரிவீட்டு....:D)

அதுக்காக ஒரு குட்டி கதை,
முதன்முதலாக பேட்டா செருப்புக்கம்பெனியை கிராமத்தில் ஆரம்பிக்க நினைத்த ஒருவர் தனது எக்ஸ்கியூட்டிவை அழைத்து அக்கிராமத்தில் வசிப்பவர்களைப் பற்றி ஆய்வறிக்கை தயாரித்து வரச்சொன்னார்.
சென்று வந்தவர் சொன்ன செய்திகள்:
1. அங்கே யாரும் செருப்பின் சாயல் என்னவென்றே அறிந்திருக்கவில்லை
2. அங்கே குறைவான மக்களே வசிக்கின்றனர்
3. ஊரைச் சுற்றி எந்த போக்குவரத்துமில்லை
ஆதலால், அங்கே நாம் கடையமைப்பது அத்தனை உசிதமல்ல. இனி என்னை எங்கே அனுப்பாதீர்கள் என்றும் சொல்லிச் சென்றார்.

அதே கிராமத்திற்கு இன்னொரு எக்ஸிகியூட்டிவ் அனுப்பப்பட்டார்

அவர் சேகரித்த செய்திகள்:
1. அங்கே யாரும் செருப்பின் சாயல் என்னவென்றே அறிந்திருக்கவில்லை
2. அங்கே குறைவான மக்களே வசிக்கின்றனர்
3. ஊரைச் சுற்றி எந்த போக்குவரத்துமில்லை
ஆதலால் நாம் அங்கே கடையமைப்பது மிகவும் அவசியம். உடனே போக்குவரத்திற்கு ஒரு வாகனத்தை அமைத்து சென்று கடையமைப்போம். கிராமத்திலிருந்து நகரத்திற்கு நடந்து வரும் மக்களுக்கு பாதுகைகள் (செருப்பு) அவசியம். குறைவான மக்களே இருப்பதால் வேறு யாரும் போட்டியாக இதுவரை அங்கே கடை அமைக்கவில்லை. புதிய பொருளின் உபயோகத்தை அறியச் செய்தால் அனைவரும் வாங்கும் வாய்ப்பு நிறைய உள்ளது என்றார்.

அப்படி பரவியது தான் இன்றைய பேட்டா கடைகள்.

நீ எடுத்தியம்பிய கதை, இதை ஞாபகப்படுத்திவிட்டது தங்கை. நன்றி.

ஆதவா
18-06-2008, 11:23 AM
( நீங்கள் எங்களுடன் இருப்பதற்கு கூட அந்த உங்கள் அழகான கையெழுத்து ஏன் காரணமாக இருக்காது? )
-அன்புடன் அண்ணா.

நீங்கள் கேட்பது எனக்குப் புரியவில்லல அண்ணா!!

பூமகள்
18-06-2008, 11:24 AM
நன்றிகள் சிவா அண்ணா..! எல்லாம் உங்களின் ஆசி தான். :)
-------------------------------------------------------------

(அதுக்காக நான் சொன்ன கதையை எனக்கு பதிலா சொன்ன பாரு.... ரிவீட்டு....:D)அச்சச்சோ..:sprachlos020::sprachlos020: அக்கா.. அது நான் நிஜமாவே என் தோழிக்கு சொன்னதுக்கா...:icon_ush::icon_ush: அந்த வரலாற்று சம்பவம் பற்றி ரொம்ப காலம் முன்பே... எங்கோ படித்த நினைவுக்கா...:rolleyes::icon_rollout::icon_rollout:

ஹீ ஹீ..:D:D பேட்டா கதையும் எனக்கு நீங்க சொன்ன பிறகு தான் நினைவுக்கு வருது... :cool::p:rolleyes:

ஒருவரோட பாசிடிவ் அப்ரோச்சும் வெற்றியடைய முக்கியமான காரணி தான்னு கரக்டா சொல்லிட்டீங்க.. :icon_b::icon_b:

நன்றி அக்கா. :)

ஆதவா
18-06-2008, 11:32 AM
என்னுடைய ரசிகைன்னு சொன்னது உங்க பெருந்தன்மையைக் காட்டுது. நன்றி தோழியே..



யவனிகாவின் பதில்கள் மிக அருமை.

பெண்கள் அரசியலுக்கு வருவது நல்லதுதான்.. ஆனால் ஒதுங்கவேண்டிய காரணத்தை இன்றைய அரசியலே செய்கிறது.. உங்கள் போலீஸ் குறும்பு ரசிக்கவைக்கிறது யவனிகா.


கிச்சன்ல என்ன கிளாஸ் வெச்சிருக்கீங்க? :smilie_abcfra:

அறிஞர்
18-06-2008, 02:49 PM
பூவின் பதில் சூப்பர்....

வளர்ச்சியின் பரிமாணம் அழகாக தெரிகிறது..

வாழ்த்துக்கள்.

Narathar
18-06-2008, 03:34 PM
கவிதாவின் அருமையான கேள்விகளுக்கு
மன்ற சொந்தங்களின் பதில்கள் அருமை....
தொடரட்டும்

ஷீ-நிசி
18-06-2008, 04:06 PM
பூ பேச்சு.. ரொம்ப தூள்மா!

kavitha
19-06-2008, 04:24 AM
அச்சச்சோ.. அக்கா.. அது நான் நிஜமாவே என் தோழிக்கு சொன்னதுக்கா... அந்த வரலாற்று சம்பவம் பற்றி ரொம்ப காலம் முன்பே... எங்கோ படித்த நினைவுக்கா.. ஆமாம்டா.... நானும் எங்கோ படித்ததுதான். அழகிய பதிலுக்கு நன்றிம்மா.

ராஜா
19-06-2008, 05:43 AM
கவியின் கைகளில் "ஆ ! பத்து..!" வந்ததும் ஜெட் வேகத்தில் பறக்கிறது. ஒவ்வொருவரின் பதிலுக்கும் கவி உடனுக்குடன் பதிவிட்டு பாராட்டுவதும் போற்றுதலுக்குரியது.

நன்றி கவி..!

ராஜா
19-06-2008, 05:48 AM
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

ர்ன்ற குறளுக்கேற்ப தக்கதொரு உறவைப் பரிந்துரை செய்து, திரியை ஒளிரச் செய்த திறனாய்வுப் புலியாருக்கும் வந்தனங்கள்.

தீபன்
19-06-2008, 06:27 AM
ஸ்ஸ்ஸ்.. அப்பப்பா... இப்பவே கண்ணக்கட்டுதே..
நேத்துதான் இந்த திரி என் கண்ணில் பட்டுது... அப்பிடி என்னதான் இங்க நடக்குதுன்னு பார்க்கலாம்னு வந்தா விட்டிட்டு போகவே மனம் வரல... முளு மன்றத்தையுமே ஒரே திரியில படிக்கும் வாய்ப்பாக பட்டுது... இப்பத்கான் 67 பக்கத்தையும் வாசிச்சு முடிச்சன்...

ஒவ்வொருத்தரோட கருத்துக்களிற்கும் என் அபிப்பிராயங்கள சொல்லனும்னு தோனுது... ஆனா, வாசிச்சு முடிக்கவே 2நளாகுதுன்னா... எப்டி...?

அருமையான திரி...? ஆனா, ஆரம்பத்திலிருந்த விறுவிறுப்பு கடைசியில குறஞ்சுகிட்டே வருது... இத தடுக்க எனது சில ஜோசனைகல் ராஜா அண்ணனுக்கு...

இனி கேள்விகளின் எண்ணிக்கையை 5ஆக குறைக்கலாம். அதனால் ஆ10க்காக பதில்களிற்கு காத்திருக்கும் நேரம் குறைவடையும். இதனால் காத்திருக்கும் நேரக்தால் ஏற்படும் தொய்வு தவிர்க்கப்படும்.

கேள்விகள் குறிப்பிட்ட சிலரையே இலக்குவைக்கப்படாமல் புதியவர்களை இனக்கண்டும் வீசப்படவேண்டும்... (10பேரிடம் கேட்க வேண்டி இருப்பதும் இந் நிலைகு காரணம். மேலும், இத்திரியிலேயே பல பின்னூட்டங்களை இட்டிருக்கு மன்ற மூத்த உறுப்பினர் கவி அக்காட்ட யாருமே இன்னும் எதுவும் கேக்கல...)

கேள்விகள் ஆராய்ச்சி நோக்கோடு மட்டுமில்லாமல் ஜனரஞ்சகமாகவும் அமைதல் நலம். பதிலளிக்க பலர் தயங்குவதே நிறைய எழுதவேண்டுமென்ற கேள்விகளின் நிர்ப்பந்தம் என்பது என் அபிப்பிராயம்.

ஆனாலும் மிக நல்லதொரு திரி. வாழ்த்துக்கள்.


இளவல் அமர், கோடைகாலத் திருவிழாவிற்குச் சென்றுவிட்டார்...
அடுத்தது யாரை அழைப்பது...
மன்றத்தின் நீண்டகால அன்பு உறவு, அண்மைக்காலத்தில் மீண்டும் மன்றத்தில் அடிக்கடி மலரும், கவி என ஒளிரும் கவிதா அவர்களை இயலுமானால் அன்புடன் அழைக்கப் பரிந்துரைக்கின்றேன்...



திறனாய்வுப் புலியாரின் பரிந்துரை பணிவுடன் ஏற்கப்படுகிறது..!

சகோதரி கவிதா அவர்களை ஆபத்து கேள்வி தா(ருங்கள்) என்று அன்புடன் வேண்டுகிறேன்..!


புலியாரே..!

சகோதரியைக் காணோமே.. வேறு ஒரு உறவை பரிந்துரையுங்களேன்..!


மன்னிக்கவும். இப்பதிவினை திரு.தீபன் மூலமாக இனியா அவர்களின் 'கூழ்' பதிவின் மூலம் இப்பொழுதுதான் அறிந்தேன். இன்றைக்குள் கேள்விகளை எழுத முயற்சிக்கிறேன்.


இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

ர்ன்ற குறளுக்கேற்ப தக்கதொரு உறவைப் பரிந்துரை செய்து, திரியை ஒளிரச் செய்த திறனாய்வுப் புலியாருக்கும் வந்தனங்கள்.


என்ன மாம்ஸ்... என்ன கண்டுக்கவே இல்ல... திறனாய்வு புலியாருக்கு முன்னமே பரிந்துரைத்தது நாந்தேன்... அப்புறம் அவரை அழைத்த பிற்பாடும் அவர் வரமாட்டாரென்ற முடிவுக்கு நீங்க வந்தவேளை அவரை இங்க இட்டாந்ததும் நாந்தேன்...
பாராட்டு முழுக்க புலிக்கா... (சரி சரி.. புலின்னதால அனுசரிச்சு போறிங்களாக்கும்...!)

ராஜா
19-06-2008, 06:36 AM
பொறுத்தருளுங்கள் தீபன்..

இப்போது உண்மை உணர்ந்தேன்.. உங்களுக்குதான் முதலில் நன்றி சொல்லியிருக்க வேண்டும்.. தங்கள் தேர்வு மிகச் சிறப்பானதொன்று..!

ஆமாம்.. நீங்க எப்போ கேள்வி தொகுப்பு தரப்போறீங்க..?

திறனாய்வுப் புலியார் என்னும் அடைமொழி உங்களுக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது.ஒரு நல்ல திறனை ஆய்வு செய்து பரிந்துரைத்திருக்கிறீர்களே..!

தீபன்
19-06-2008, 06:56 AM
பொறுத்தருளுங்கள் தீபன்..

இப்போது உண்மை உணர்ந்தேன்.. உங்களுக்குதான் முதலில் நன்றி சொல்லியிருக்க வேண்டும்.. தங்கள் தேர்வு மிகச் சிறப்பானதொன்று..!

ஆமாம்.. நீங்க எப்போ கேள்வி தொகுப்பு தரப்போறீங்க..?

திறனாய்வுப் புலியார் என்னும் அடைமொழி உங்களுக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது.ஒரு நல்ல திறனை ஆய்வு செய்து பரிந்துரைத்திருக்கிறீர்களே..!


அடடா... என்ன மாம்ஸ், பொறுத்தருள்கன்னு பெரிய வார்த்தயெல்லாம் சொல்லிகிட்டு... திரிய தூண்டிவிடுவமேன்னு சும்மா அடிச்சன் நான்...

ஐயா... ஆள விடுங்க... இப்போதைக்கு அதிக நேரத்தை கணினியுடன் செலவளிக்கும் நிலையில் நானில்லை. சற்று தாமதமாக நானெ கேள்விக்ளுடன் உங்களை தொடர்பு கொள்கிறேன்.

அடடா... என்னை பளிவாங்க முடிவு செய்துவிட்டீர்களா...? புலியென்று மாட்டிவிடுகிறீர்களே... நா எப்பிடியாம் வெளியால தலை காட்டுறது...!?

ஆமா, என்னுடைய ஜோசனைகளை படித்து பார்த்தீர்களா...?

kavitha
19-06-2008, 07:25 AM
இனி கேள்விகளின் எண்ணிக்கையை 5ஆக குறைக்கலாம். அதனால் ஆ10க்காக பதில்களிற்கு காத்திருக்கும் நேரம் குறைவடையும். இதனால் காத்திருக்கும் நேரக்தால் ஏற்படும் தொய்வு தவிர்க்கப்படும்.

தொய்வு தவிர்க்கப்படும் என்பது உண்மைதான் தீபன். எனக்கு ஆனால் 10 கேள்விகள் போதவில்லை. இன்னும் நிறையபேர் நிலுவையில் இருக்கிறார்கள்.



கேள்விகள் குறிப்பிட்ட சிலரையே இலக்குவைக்கப்படாமல் புதியவர்களை இனக்கண்டும் வீசப்படவேண்டும்... (10பேரிடம் கேட்க வேண்டி இருப்பதும் இந் நிலைகு காரணம். மேலும், இத்திரியிலேயே பல பின்னூட்டங்களை இட்டிருக்கு மன்ற மூத்த உறுப்பினர் கவி அக்காட்ட யாருமே இன்னும் எதுவும் கேக்கல...)
அட தீபன்... என் பெயரை திரியில் ஏத்திவச்ச புண்ணியவான் நீங்கள் தானா? அப்படி கவிதை பக்கம் வருவீங்கள்ல..... கவனிச்சுக்கறேன்.
(சும்மா சொன்னேங்க...உண்மையை சொல்லணும்னா நெடுநாள்பார்க்காத உறவுகளை மீண்டும் காண நீங்களும் ஒரு காரணம். அதற்காக நன்றிகள் பல)

இக்பால்
19-06-2008, 08:49 AM
நீங்கள் கேட்பது எனக்குப் புரியவில்லல அண்ணா!!

கையெழுத்து அழகாக இருந்தும் தலையெழுத்து நல்லதாக அமையவில்லை என்று நீங்கள் ஆதங்கப் பட்டதால், அப்படி எழுதினேன்.

மகிழ்ச்சியான தருணங்கள் வாழ்க்கையில் அமையாவிடில் தலையெழுத்து என நினைப்போம். நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள். மகிழ்ச்சியான தருணங்கள்தானே உங்கள் வாழ்க்கையில்? தலையெழுத்து நல்லதாகத்தானே இருக்கிறது?

அதற்கு காரணம் உங்கள் கையெழுத்து என்பேன்.

-அன்புடன் அண்ணா.

ஆதவா
19-06-2008, 09:33 AM
கையெழுத்து அழகாக இருந்தும் தலையெழுத்து நல்லதாக அமையவில்லை என்று நீங்கள் ஆதங்கப் பட்டதால், அப்படி எழுதினேன்.

மகிழ்ச்சியான தருணங்கள் வாழ்க்கையில் அமையாவிடில் தலையெழுத்து என நினைப்போம். நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள். மகிழ்ச்சியான தருணங்கள்தானே உங்கள் வாழ்க்கையில்? தலையெழுத்து நல்லதாகத்தானே இருக்கிறது?

அதற்கு காரணம் உங்கள் கையெழுத்து என்பேன்.

-அன்புடன் அண்ணா.

இங்குள்ளவர்ர்களைப் பார்க்கும்போது அப்படி ஒன்றும் அடிபட்டுவிடவில்லை அண்ணாஅ. என்றாலும் நீங்கள் சொல்வது சரிதான். மன்றத்தில் இருப்பதால் மகிழ்ச்சியே பெருகுகிறது...

தீபன்
20-06-2008, 02:41 AM
தொய்வு தவிர்க்கப்படும் என்பது உண்மைதான் தீபன். எனக்கு ஆனால் 10 கேள்விகள் போதவில்லை. இன்னும் நிறையபேர் நிலுவையில் இருக்கிறார்கள்.

தொய்வு இல்லாட்டா அடுத்த சுற்று விரவிலேயே வந்திடும்... அப்ப பத்துக்கலாம்தானே...



அட தீபன்... என் பெயரை திரியில் ஏத்திவச்ச புண்ணியவான் நீங்கள் தானா? அப்படி கவிதை பக்கம் வருவீங்கள்ல..... கவனிச்சுக்கறேன்.
(சும்மா சொன்னேங்க...உண்மையை சொல்லணும்னா நெடுநாள்பார்க்காத உறவுகளை மீண்டும் காண நீங்களும் ஒரு காரணம். அதற்காக நன்றிகள் பல)

நன்றிக்கு நன்றிக்கா... அதுக்காக சின்னப்புள்ளய இப்பிடியெல்லாம் வெருட்டக்கூடாது...!

kavitha
20-06-2008, 04:15 AM
அதெல்லாம் சும்மா... லுலுவாயி -க்கு தீபன்.

இக்பால்
20-06-2008, 05:30 PM
அண்ணா, காசோலைகள் பத்திரம். :lachen001::lachen001::lachen001:

கண்மணி தங்கை...நீங்கள் சொன்னது சரிதான்.

கொஞ்சம்தான் இருந்தது. அதையும் யாரோ சுட்டுட்டாங்க.

எப்படி பாதுகாப்பது என்பதை விட எப்படி சுட்டாங்க என்பதை அறிந்து கொள்ள ஆவல். (தங்கையே ஒருவேளை சுட்டிருப்பாரோ!!!)

மன்றம் ரொம்பத்தான் கெட்டுக் கிடக்கு. சொல்லி செய்யராங்கையா!!!

-அன்புடன் அண்ணா.

இக்பால்
20-06-2008, 05:32 PM
அதெல்லாம் சும்மா... லுலுவாயி -க்கு தீபன்.

அதென்னங்க தங்கை...லுலுவாயி...(முத்து படப்பாடல் மாதிரி)

ராஜா
20-06-2008, 06:07 PM
தொய்வு இல்லாட்டா அடுத்த சுற்று விரவிலேயே வந்திடும்... அப்ப பத்துக்கலாம்தானே...


ஆ ! 10..! .. என்ற பெயரே 10 உறுப்பினர்களுக்கு கேள்விகள் விடுப்பதை முன்னிட்டுதான் வைக்கப்பட்டது தீபன். அதை ஆ! ஐந்து மாற்றினால் அவ்வளவு நன்றாக இருக்காதுதானே..?

தீபன்
20-06-2008, 11:40 PM
ஆ ! 10..! .. என்ற பெயரே 10 உறுப்பினர்களுக்கு கேள்விகள் விடுப்பதை முன்னிட்டுதான் வைக்கப்பட்டது தீபன். அதை ஆ! ஐந்து மாற்றினால் அவ்வளவு நன்றாக இருக்காதுதானே..?

5நாள் டெஸ்ட் மாச் நன்றாகத்தான் இர்ந்தது... காலப்போக்கில் வேகமான உலக நகர்வில் அது தோதுப்படாமல் 60 ஓவர் ஒருநாள் போட்டிகள் பிரபலமாகின. அது படிப்படியாக 50, 20 என குறைந்துகொண்டே வருகிறது. இது காலத்தின் டேவை.
தலைப்பிற்காக திரியென்ற நோக்கில் பார்த்தால் நீங்கள் சொல்வது சரிதான் மாம்ஸ். ஆரம்பத்தில் 10 கேள்விஅள் போதாமல்தான் இருந்தன... இப்போ அதற்கான விடைகள் வருவதில்தான் தாமதமாகின்றது.

மேலும், இப்போ மன்றத்தின் அடுத்தகட்ட நண்பர்களிடையே கெள்வி கேட்பதற்கு அழைக்கப்படும்போது அவர்களுக்கு 10பேரை இனங்கண்டு கேட்க முடியுமா...? அப்படியே கேட்டாலும் அது பொருத்தமாக இருக்குமா...?

நான் சொன்ன யோசனைக்கான காரணத்தைதான் சொன்னேன். மற்றபடி அதிக கேள்விகளையும் அதிக விடைகளையும் படிப்பதில் எனக்கும் ஆர்வம்தான் மாம்ஸ்.

தீபன்
20-06-2008, 11:43 PM
அதென்னங்க தங்கை...லுலுவாயி...(முத்து படப்பாடல் மாதிரி)

ம்ம்ம்... வந்திட்டாரையா பார்த்தீபன்ர மச்சானு... இப்ப எங்க கவியக்கா வடிவேலு கணக்கா என்ன பாடுபட்டு சமாளிக்க போறாங்களோ....:sprachlos020:

ராஜா
21-06-2008, 02:40 PM
5நாள் டெஸ்ட் மாச் நன்றாகத்தான் இர்ந்தது... காலப்போக்கில் வேகமான உலக நகர்வில் அது தோதுப்படாமல் 60 ஓவர் ஒருநாள் போட்டிகள் பிரபலமாகின.

அய்யய்யோ.. மறுபடியும் கிரிக்கெட் விவாதமா..?

நான் வரலப்பா இந்த "ஆட்டத்துக்கு"..!

ராஜா
23-06-2008, 05:45 AM
எல்லோரும் பதிலளித்தாகிவிட்டதா..?

அடுத்து ஒருவரை அழைப்போமா..?

என்னுடைய தேர்வு திரு. கலை வேந்தர்..

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் உறவுகளே..?

அழைப்போமா..?

அனுராகவன்
23-06-2008, 05:50 AM
நானும் வரவேற்கிறேன் கவியின் குற்றை..
5 நபர்கள் என்றால் நல்லா இருக்கும்..
காலம் மிச்சம்..
பலரை அறிய உதவும்..

ஆதவா
23-06-2008, 07:34 AM
இன்னும் மூவர் வரவில்லை அண்ணா!!

கலைவேந்தன் நல்ல தேர்வு.....

மன்மதன்
23-06-2008, 02:28 PM
மன்மதன் விடுப்பில் இருக்கிறாரா? வேலையில் இருந்தாலும் தூங்குவார்ப்பா..எழுப்பி விடுங்கள்.
.

விடுப்பில்தான் இருந்தேன்.. இதோ பதில் எழுதுறேன் மேடம்...

ராஜா
23-06-2008, 02:47 PM
கேள்விகளை ஐந்தாக ஆக்கினால் விரைவில் திரி நகரும்.. சரி.

ஆனால் அடுத்து அடுத்து கேள்வியாளர் தேடவேண்டியிருக்குமே.. அதைப்பற்றி யாரும் சிந்திக்கவில்லையே.. ! கேள்வியாளரை தேடும் பணி எவ்வளவு சிக்கலென்று எனக்கும் அமருக்கும், அக்கினியாருக்கும் தான் தெரியும். ( 5 பேரிடம் மட்டும் கேட்கலாமே என்று "ஜோ"சனை தெரிவித்த தீபன் கூட "கேள்வித் தொகுப்பு தாருங்கள்" என்று கேட்டால் நழுவுகிறாரே..!)

அடிக்கடி மன்றம் வருவோரிடம் கேள்விகள் தொடுக்கப்பட்டால் திரி விரைவில் நகரும். ஆனால் கேள்வியாளர் ஒரு குறிப்பிட்ட* உறுப்பினரிடம் கேள்வி கேட்க நினைக்கும்போது, மன்றம் அடிக்கடி வருவோரிடம் மட்டும் கேளுங்கள் என்று கேட்பது முறையாகாது.

ஒன்று வேண்டுமானால் செய்யலாம்..

குறைந்த பட்சம் 5 உறுப்பினர்கள் .. அதிக பட்சம் 10 உறுப்பினர்கள் என்று விதிமுறையைத் தளர்த்தலாம்..

எதற்கும் அமர் வரட்டும்.. கேட்டு செய்வோம்.

மன்மதன்
23-06-2008, 02:54 PM
------------------------------------------------------

4. நான்காம் கேள்வி: மன்மதன் அவர்களுக்கு,

நேரமில்லை என்று கூறி எஸ்கேப்பிடும் மன்மதன், ஒரு காலத்தில் அடிக்கடி பதிவிடுபவராக இருந்தார். உங்களது படக்கவிதைகள் பிரசித்தம்.
மீண்டும் அதுபோல் எப்போது பதிவிடப்போகிறீர்கள்? கவிதைகள் குறித்த உங்களது பார்வை: பொழுதுபோக்கா / ஆதார இலக்கியமா?


--------------------------------------------------------------------------------------


கண்டிப்பாக எழுதுவேன் கவி.. நிறைய எழுதணும்னு ஆசைதான்..

அப்பவெல்லாம் நிறைய படித்தேன்.. படிக்க படிக்க அதன் இன்ஸ்பிரேஷன்ல நிறைய எழுத வந்தது.. கவிதை மட்டுமல்ல, எதையும் எழுதுவதற்கு முன் நிறைய படிக்க வேண்டும்..

அதனால்தான் இப்பவெல்லாம் கிடைக்கும் நேரங்களில் படிப்பதில் செலவழிக்கிறேன்..

இப்பொழுது ப்ராஜெக்ட் ஜெட் வேகத்தில் போய்க்கொண்டிருப்பதால் மன்றம் வரும் நேரம் குறைந்து விட்டது. இனி நிறைய எழுத வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.. பார்க்கலாம்..

ஆமாம்..இதே கேள்வியை நானும் உங்களிடம் திருப்பி கேட்கலாம்தானே..;)

அப்புறம் .. கவிதைகள் குறித்த உங்களது பார்வை: பொழுதுபோக்கா / ஆதார இலக்கியமா?

சிலருக்கு பொழுது போக்கு / பலருக்கு இலக்கியம்....!!

ராஜா
23-06-2008, 02:59 PM
மன்மதனின் பதிலில் அவரது நேரப்பற்றாக்குறையை உணரமுடிகிறது..!

ப்ராஜெக்டை நல்லபடியா முடிச்சுட்டு வாங்க மன்மதன்..!

ஆதவா
23-06-2008, 03:19 PM
கண்டிப்பாக எழுதுவேன் கவி.. நிறைய எழுதணும்னு ஆசைதான்..

அப்பவெல்லாம் நிறைய படித்தேன்.. படிக்க படிக்க அதன் இன்ஸ்பிரேஷன்ல நிறைய எழுத வந்தது.. கவிதை மட்டுமல்ல, எதையும் எழுதுவதற்கு முன் நிறைய படிக்க வேண்டும்..

அதனால்தான் இப்பவெல்லாம் கிடைக்கும் நேரங்களில் படிப்பதில் செலவழிக்கிறேன்..

இப்பொழுது ப்ராஜெக்ட் ஜெட் வேகத்தில் போய்க்கொண்டிருப்பதால் மன்றம் வரும் நேரம் குறைந்து விட்டது. இனி நிறைய எழுத வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.. பார்க்கலாம்..

ஆமாம்..இதே கேள்வியை நானும் உங்களிடம் திருப்பி கேட்கலாம்தானே..;)

அப்புறம் .. கவிதைகள் குறித்த உங்களது பார்வை: பொழுதுபோக்கா / ஆதார இலக்கியமா?

சிலருக்கு பொழுது போக்கு / பலருக்கு இலக்கியம்....!!

உங்களது பொன்னான நேரத்தை இங்கே செலவிட்டமைக்கு நன்றி... (ஓவரா புகழ்றேனோ?)

நிறைய எழுதுங்க, உங்க ப்ழைய பதிவுகள் பல கிளறிட்டு இருக்கோம்... நல்லா இருக்கு....

ப்ரோஜெக்ட் சீக்கிரம் முடிய வாழ்த்துகள். முடிஞ்சதும் நிறைய்ய்ய்ய்ய்ய எழுதணும்...


சிலருக்கு பொழுது போக்கு / பலருக்கு இலக்கியம்..

இப்படி தப்பிப்பீங்கன்னு எதிர்பார்க்கலை.....

தீபன்
23-06-2008, 03:40 PM
5 பேரிடம் மட்டும் கேட்கலாமே என்று "ஜோ"சனை தெரிவித்த தீபன் கூட "கேள்வித் தொகுப்பு தாருங்கள்" என்று கேட்டால் நழுவுகிறாரே..!



என்ன மாம்ஸ்... இப்டி வார்ரிங்க... 10 கேள்வின்னுதானே நானும் நழுவினேன்... 5ன்னு மாத்தினப்புறமும் நா நழுவினாத்தானெ நீங்க இப்டி சொல்லலாம்...! (அப்பாடா...இப்போதைக்கு தப்பியாச்சு...!)

ராஜா
23-06-2008, 04:01 PM
(அப்பாடா...இப்போதைக்கு தப்பியாச்சு...!)


சான்சே இல்ல..!

kavitha
27-06-2008, 05:10 AM
அதென்னங்க தங்கை...லுலுவாயி...(முத்து படப்பாடல் மாதிரி)
:) அது ஒன்னுமில்லங்கண்ணா.... குழந்தைக்கு கிலுகிலுப்பையில் விளையாட்டு காட்டுவோமில்லையா? அதுபோலத்தான். இதுவும் விளையாட்டுக்கு சொன்னது னு அர்த்தம்.
(டிக்ஸனரில இதெல்லாம் போடலையே தங்கை... னு திருப்பியும் நீங்க டவுட் கேட்கக்கூடாது...அப்புறம் நான் அழுதுடுவேன்... நீங்க எனக்கு லுலுவாயி சொல்லவேண்டி இருக்கும்)

-----------------------------------------------------------


இப்ப எங்க கவியக்கா வடிவேலு கணக்கா என்ன பாடுபட்டு சமாளிக்க போறாங்களோ.... ஆமாம் தீபன்... :) நீங்க எப்போ கேள்விகள் கேட்டு மற்றவர்களை சமாளிக்க வைக்க போகிறீர்கள்? அடுத்த சுற்றிலா?
(ராஜா அண்ணா... கவனிங்க... கலை அண்ணாவிற்கு பிறகு தீபன்.)
------------------------------------------------------------



எல்லோரும் பதிலளித்தாகிவிட்டதா..?

அடுத்து ஒருவரை அழைப்போமா..?

என்னுடைய தேர்வு திரு. கலை வேந்தர்..

இன்னும் இருவர் பதில் அளிக்க வேண்டும். (திரு. இராசகுமாரன், செல்வி. மலர்)
அவர்கள் வரும்போது வந்து பதில் அளிக்கட்டும்; கலை அண்ணா இப்போது தொடரட்டும். பதிவு தொய்வு நிலை அடையவேண்டாமே!

-----------------------------------------------------------


கண்டிப்பாக எழுதுவேன் கவி.. நிறைய எழுதணும்னு ஆசைதான்..

அப்பவெல்லாம் நிறைய படித்தேன்.. படிக்க படிக்க அதன் இன்ஸ்பிரேஷன்ல நிறைய எழுத வந்தது.. கவிதை மட்டுமல்ல, எதையும் எழுதுவதற்கு முன் நிறைய படிக்க வேண்டும்..

அதனால்தான் இப்பவெல்லாம் கிடைக்கும் நேரங்களில் படிப்பதில் செலவழிக்கிறேன்..

இப்பொழுது ப்ராஜெக்ட் ஜெட் வேகத்தில் போய்க்கொண்டிருப்பதால் மன்றம் வரும் நேரம் குறைந்து விட்டது. இனி நிறைய எழுத வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.. பார்க்கலாம்..

ஆமாம்..இதே கேள்வியை நானும் உங்களிடம் திருப்பி கேட்கலாம்தானே..

அப்புறம் .. கவிதைகள் குறித்த உங்களது பார்வை: பொழுதுபோக்கா / ஆதார இலக்கியமா?

சிலருக்கு பொழுது போக்கு / பலருக்கு இலக்கியம்....!!

நன்றி மன்மதன். உங்கள் பதிலைக்கண்டதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் சொல்வது சரிதான். கவிதை எழுத அதற்கென்று நெருக்கடியற்ற மனநிலை வேண்டும். நாமாக அழைத்தால் அது வராது. பறவை தானே கிளையில் வந்து அமருவது போல கவிதை தானே வந்து மனதில் அமர்ந்து கொண்டு எப்போது எனக்கு தீனி அளிப்பாய் என்பதாக விடாமல் மனதில் கூவிக்கூப்பாடிடும்.எழுதி முடிக்கும்வரை விடாது. அதற்கு தொடர்ந்து வாசிப்பதும் அவசியம்.
உங்கள் பணிகள் முடிந்து விரைவில் மீண்டும் எழுத வாருங்கள். முன்பு 'தினம் ஒரு கவிதை' எழுதலாம் என்று நீங்கள் யோசனை சொன்ன அந்த காலம் எல்லாம் நினைவுக்கு வந்து போகிறது.
அப்புறம்.... நான் எழுதுவது....
மீண்டும் இந்த சிறிய இடைவெளியில் தொடர்ந்திருக்கிறது. (சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டிய ஒரு திருப்தியை திண்ணையில் வெளிவந்த ஆலமரமும் வெங்காயத்தாமரையும் கவிதை தந்திருக்கிறது). மீண்டும் எழுத, பறவை தானே வந்து கிளையில் அமர வேண்டும்; அந்த நாளுக்காக காத்திருக்கிறேன். அதுவரை எனது வாசிப்புகளும் தொடரும்.

சிலருக்கு பொழுதுபோக்கு/பலருக்கு இலக்கியம்
எனில் நீங்கள் அந்த பலரில் ஒருவரா?

ராஜா
27-06-2008, 12:29 PM
நன்றி கவி..!

தொய்வடைந்திருந்த இந்தத் திரி உங்களால் உற்சாகம் அடைந்திருக்கிறது. கேள்வி கேட்டோம் போனோம் என்று பாராமுகமாக இல்லாமல், ஒவ்வொரு பதிலுக்கும் , பாராட்டி நன்றி தெரிவித்த பண்பு ஒரு நல்ல முன்னுதாரணம்.

மீண்டும் நன்றி.

ராஜா
27-06-2008, 12:34 PM
அடுத்து...

அன்புத் தோழர் திரு. கலை வேந்தர் அவர்களை நம் உறவுகளுக்கு கேள்விகள் கேட்க பணிவுடன் அழைக்கிறோம்..!

lolluvathiyar
27-06-2008, 01:47 PM
குறைந்த பட்சம் 5 உறுப்பினர்கள் .. அதிக பட்சம் 10 உறுப்பினர்கள் என்று விதிமுறையைத் தளர்த்தலாம்..

நல்ல யோசனை கலைவேந்தரே வாருங்கள் உங்கள் கேள்விகனையை தொடுங்கள் என்று அன்புடன் வரவேற்கிறோம்

மன்மதன்
27-06-2008, 02:51 PM
மன்மதனின் பதிலில் அவரது நேரப்பற்றாக்குறையை உணரமுடிகிறது..!

புரிதலுக்கு நன்றி ராஜா..:)

மன்மதன்
27-06-2008, 02:58 PM
உங்களது பொன்னான நேரத்தை இங்கே செலவிட்டமைக்கு நன்றி... (ஓவரா புகழ்றேனோ?)
....

ரொம்ப ஓவர் ஓய்...:D

மன்மதன்
27-06-2008, 03:00 PM
:)
நன்றி மன்மதன். உங்கள் பதிலைக்கண்டதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் சொல்வது சரிதான். கவிதை எழுத அதற்கென்று நெருக்கடியற்ற மனநிலை வேண்டும். நாமாக அழைத்தால் அது வராது. பறவை தானே கிளையில் வந்து அமருவது போல கவிதை தானே வந்து மனதில் அமர்ந்து கொண்டு எப்போது எனக்கு தீனி அளிப்பாய் என்பதாக விடாமல் மனதில் கூவிக்கூப்பாடிடும்.எழுதி முடிக்கும்வரை விடாது.

பதிலே ஒரு கவிதை மாதிரி இருக்கு..
சூப்பரா சொல்லி இருக்கீங்க..



சிலருக்கு பொழுதுபோக்கு/பலருக்கு இலக்கியம்
எனில் நீங்கள் அந்த பலரில் ஒருவரா?


பலரில் சிலரில் ஒருவன்..:rolleyes:

கலைவேந்தன்
27-06-2008, 05:58 PM
அழைப்பிற்கு நன்றி ராஜா நண்பரே!

இதோ ஆபத்துக்கேள்விகளுடன் வருகிறேன்!

கலைவேந்தன்
27-06-2008, 06:03 PM
நண்பர்களே!

நான் இம்மன்றத்திற்கு அவ்வளவு அறிமுகம் இல்லாத காரணத்தால் எனக்கு நன்றறிந்த 10 பேரிடம் கேள்விகள் எழுப்பியுள்ளேன்!

மற்றையர் அனைவரும் என்னை மன்னிப்பாராக!

இதோ எனது ஆ! பத்து கேள்விகள்!

1.அனு

நீங்க ஒருநாள் முதல்வி ஆனா பெண்களுக்கு மட்டும் என்ன என்ன சலுகைகள் வழங்குவிங்க?

2.ஆதி

ஒரு நல்ல கவிஞனுக்கு இருக்க வேண்டிய லட்சணங்கள் என்ன? அவலட்சணங்கள் என்ன?

3.ஆதவா

ஒரு ஓவியன் ஒரு பெண்ணை நிர்வாணமாய் வரைய நினைக்கும்போது எதிரே நிற்கும் மாடலை 100% கலைக்கண்ணோட்டத்தோடு பார்ப்பது என்பது சாத்தியமா? (கேள்வியிலிருந்து நழுவிக்கொள்ள உரிமை உண்டு உங்களுக்கு? ஆனா அடிக்க வாராதீர்கள்!)

4.இளசு

தாய்மைப்பண்பு என்பது பெண்களுக்கு மட்டுமே உரிய ஒரு பண்பென்று நினைக்க்கிறீர்களா? இல்லை ஆண்களுக்கும் உண்டா? உ=ம் தரவும்.

5.கவிதா

மன்றத்தின் மிகப்பழம்பெரும் உறுப்பினர் நீங்கள்! எங்களைப்போல் புதியவர்களுக்கு வழங்கும் எச்சரிக்கை ஆலோசனை இவை என்ன?

6.இதயம்

நகைச்சுவை அறிஞர்கள் லாரல் ஹார்டியுடன் ஒருவாரம் இருக்க வாய்ப்பு கிடைத்தால் எப்படி உங்கள் அனுபவம் இருக்கும் என்று 10 வரிகளுக்கு மிகாமல் எழுதுக.

7. அறிஞர்

உங்களை ஒரே ஒரு பெண்ணுடன் ஒரு மாதம் தனித்தீவில் இருக்கச்சொல்லி இறைவன் வரம் அளித்தால் - யார் உங்கள் தேர்வாய் இருக்கும்?

8. லொள்ளுவாத்தியார்

ஒரு வார காலத்துக்கு உங்கள் பால்மாற்றம் நடந்து நீங்கள் ஜெனிபர் லோபஸ் ஆக மாறிவிட்டீர்கள்! ( ஹைய்யா என்ன ஜாலி! )உங்கள் மனநிலையை விவரியுங்கள்!

9.சிவா.ஜி

உங்களை வைத்து சினிமாப்படம் எடுக்க ஒருவர் துணிந்துவிட்டார் என்றுவையுங்கள். (பாவம் அவர்!) எந்த நடிகரை நீங்கள் பிரதிபலிக்க ஆசைப்படுகிறீர்கள்?

10.ராஜா

'' இவ்வுலகத்தில் எல்லோருமே நல்லவர்கள்தான் - அவரவர் கண்ணோட்டத்தில் நோக்கும்போது! '' என்ற பேரரறிஞர் ஒருவரின் (கலைவேந்தன் தாங்க அவரு!) கருத்தைக்குறித்து என்ன நினைக்கிறிங்க! தகுந்த உதாரணங்களுடன் விரிவான விளக்கம் தேவை!

அறிஞர்
27-06-2008, 07:18 PM
7. அறிஞர்

உங்களை ஒரே ஒரு பெண்ணுடன் ஒரு மாதம் தனித்தீவில் இருக்கச்சொல்லி இறைவன் வரம் அளித்தால் - யார் உங்கள் தேர்வாய் இருக்கும்?

கேள்வி கேட்டதற்கு நன்றி கலைவேந்தன்...

ஆனால் இப்படி வில்லங்கமா கேட்டுவிட்டீர்கள்....

மனைவியுடன் ஒரு மாதத்தை செலவழிக்கலாம். ஆனால் வாழ்க்கை முழுவதும் கூடவே இருக்கப்போகிறவர். அதனால் அவரை தேர்ந்தெடுக்க விரும்பவில்லை...

எனக்கு பிடித்தமான தோழி ஒருவர் இருக்கிறார்.... உண்மையான நட்புக்கு இலக்கணமாக கள்ளம் கபடமற்று பழகுகிறோம். நாங்கள் பேசினால் மணி கணக்கில் பேசுவோம். கடிதம் எழுதினால் குறைந்தது ஒரு 16-20 பக்கங்கள் (A4) இருக்கும்...

அவருடன் ஒரு மாதம் செலவழிக்க விருப்பம்.

தீபன்
28-06-2008, 01:05 AM
கேள்வி கேட்டதற்கு நன்றி கலைவேந்தன்...

ஆனால் இப்படி வில்லங்கமா கேட்டுவிட்டீர்கள்....

மனைவியுடன் ஒரு மாதத்தை செலவழிக்கலாம். ஆனால் வாழ்க்கை முழுவதும் கூடவே இருக்கப்போகிறவர். அதனால் அவரை தேர்ந்தெடுக்க விரும்பவில்லை...

எனக்கு பிடித்தமான தோழி ஒருவர் இருக்கிறார்.... உண்மையான நட்புக்கு இலக்கணமாக கள்ளம் கபடமற்று பழகுகிறோம். நாங்கள் பேசினால் மணி கணக்கில் பேசுவோம். கடிதம் எழுதினால் குறைந்தது ஒரு 16-20 பக்கங்கள் (A4) இருக்கும்...

அவருடன் ஒரு மாதம் செலவழிக்க விருப்பம்.

அப்படின்னா... மனைவியிடமிருந்து ஒருமாதமாவது விடுதலை பெற விருப்பம்னு சொல்ல வறிங்களோ...!:sprachlos020::sprachlos020::sprachlos020:

அறிஞர்
28-06-2008, 05:06 AM
அப்படின்னா... மனைவியிடமிருந்து ஒருமாதமாவது விடுதலை பெற விருப்பம்னு சொல்ல வறிங்களோ...!:sprachlos020::sprachlos020::sprachlos020: விடுதலை வேண்டுமென்றால்... அவர் கூட பிறந்தவர்கள், பெற்றோர் வீட்டிற்கு அனுப்பிவிடுவேன்....

ராஜா
28-06-2008, 06:23 AM
கேள்வி கேட்டதற்கு நன்றி கலைவேந்தன்...

எனக்கு பிடித்தமான தோழி ஒருவர் இருக்கிறார்.... . நாங்கள் பேசினால் மணி கணக்கில் பேசுவோம். கடிதம் எழுதினால் குறைந்தது ஒரு 16-20 பக்கங்கள் (A4) இருக்கும்...

அவருடன் ஒரு மாதம் செலவழிக்க விருப்பம்.

என்னதான் பிரியமான தோழி என்றாலும் 20 பக்கம் கடிதம் எழுதும் அளவுக்கு அப்படி என்ன விஷயம் இருக்குமோ..!
:)

அனுராகவன்
28-06-2008, 06:39 AM
1.அனு

நீங்க ஒருநாள் முதல்வி ஆனா பெண்களுக்கு மட்டும் என்ன என்ன சலுகைகள் வழங்குவிங்க?


கலைவேந்தரே!! முதலில் என் இனிய வனக்கம்..இப்படி கஸ்டமாக கெள்வியா..
முதல் கேள்வியே எனகா..அட பாவிகளா...சரி இதோ என் பதில் கொஞம் கஸ்டம்தான் முடிந்தளவு தருகிறேன்....
உங்கள் கேள்வி கொஞ்சம் கொஸ்டமான ஒன்றுதான்...முதல்வராவது மிக் பெரியா காறியம்
முதல்வா வந்தால் என் முதல் வேலை cஎன்னை சாகடையே ஒழிகனும்..அப்பரம் மக்களுக்கு நல்ல கடிநீர் அதாவது இலவச குடிநீர்தான் தருவேன்..அடுத்து நல்ல தாரமான உணவுகள் ஏழைகளுக்கு தர உத்தரவு போடுவென்..

எல்லா மக்களும் வேலைகு போகனும். அதற்க்கு அனைவருக்கும் வேலை என்ற திட்டம் போடுவேன்..பெண்கலுக்கு சமளவு அனைத்திலிம் கொடுக்க சொலுவேன்..
நதிகள் அனைத்தும் அரசு ஏறு மக்களுகு பயன்பட செய்வேன்..

இன்னும் இருக்கு பிறகு தருகிறேன்...
நேரம் கருதி அப்பிட்டு..

சிவா.ஜி
28-06-2008, 06:46 AM
9.சிவா.ஜி

உங்களை வைத்து சினிமாப்படம் எடுக்க ஒருவர் துணிந்துவிட்டார் என்றுவையுங்கள். (பாவம் அவர்!) எந்த நடிகரை நீங்கள் பிரதிபலிக்க ஆசைப்படுகிறீர்கள்?

உங்கள் கேள்வியாகத்தில் என்னயும் இணைத்துக்கொண்டதற்கு நன்றி கலை.

அப்படி ஒரு அய்யோ பாவ தயாரிப்பாளர் என்ன நடிகனாக்கி திரைப்படம் எடுத்தத் துணிந்தால்....சிவாஜியைத்தான் பிரதிபலிக்க விருப்பம். அதாவது சிவா.ஜியைத்தான். நகலாய் இருக்க விருப்பமில்லை...அசலாக இருக்கத்தான் ஆசை.

அறிஞர்
28-06-2008, 06:59 AM
என்னதான் பிரியமான தோழி என்றாலும் 20 பக்கம் கடிதம் எழுதும் அளவுக்கு அப்படி என்ன விஷயம் இருக்குமோ..! :)

நட்புதான் காரணம்..
என்னுடைய எண்ணங்களை பகிர்ந்துக்கொள்ள ஒரு தோழி...

அப்பொழுது போன் வசதி குறைவு...
அதனால் கடிதம் தான்...

சமீபத்திய வாழ்க்கை நடைமுறை.. ...
வேலைத்தளத்தில் நடைபெறும் சம்பவங்கள்..
ஏதாவது நமக்கு நடந்த சுவாரய்சயமான சம்பவங்கள்.. (உதாரணத்துக்கு முதலில் விமானத்தில் பறந்தபொழுது.. ஏற்பட்ட சிறு சிறு அனுபவங்கள்)

ராஜா
28-06-2008, 07:02 AM
இன்னும் இருக்கு பிறகு தருகிறேன்...
நேரம் கருதி அப்பிட்டு..

"பெண்களுக்கு" என்னென்ன நன்மைகள் செய்வீங்கன்னு கலை கேட்டுருக்கார். அதற்கேற்றாற்போல் உங்கள் பதிலின் பிற்பகுதி அமையுமென்று நம்புகிறோம்.

என்ன அனு...? உங்க பதிவில் வழக்கத்துக்கு மாறாக அதிகமான எழுத்துப்பிழைகள் தென்படுகின்றனவே.. கவனியுங்கள்.

நன்றி.

அனுராகவன்
28-06-2008, 07:06 AM
"பெண்களுக்கு" என்னென்ன நன்மைகள் செய்வீங்கன்னு கலை கேட்டுருக்கார். அதற்கேற்றாற்போல் உங்கள் பதிலின் பிற்பகுதி அமையுமென்று நம்புகிறோம்.

என்ன அனு...? உங்க பதிவில் வழக்கத்துக்கு மாறாக அதிகமான எழுத்துப்பிழைகள் தென்படுகின்றனவே.. கவனியுங்கள்.

நன்றி.
ராஜ அவர்களே !! இப்போது சிவி பிரவொசிங் சென்டரில் இருந்து வருகிறேன்..அதனால் தமிழை படிக்க கூட முடியல..
அதனால் தமிழில் டைப் அடிக்க முடியல.
.
மன்னிக்கவும்..நண்பர்களே!!
விரைவில் மன்றத்தில் பிழையின்றி எழுதிகிறேன்..
இப்போது வெளி கப்பியூட்டரில் முடியல..
பொருத்தருள்க..

சிவா.ஜி
28-06-2008, 07:20 AM
நட்புதான் காரணம்..
என்னுடைய எண்ணங்களை பகிர்ந்துக்கொள்ள ஒரு தோழி...

அப்பொழுது போன் வசதி குறைவு...
அதனால் கடிதம் தான்...

சமீபத்திய வாழ்க்கை நடைமுறை.. ...
வேலைத்தளத்தில் நடைபெறும் சம்பவங்கள்..
ஏதாவது நமக்கு நடந்த சுவாரய்சயமான சம்பவங்கள்.. (உதாரணத்துக்கு முதலில் விமானத்தில் பறந்தபொழுது.. ஏற்பட்ட சிறு சிறு அனுபவங்கள்)
உண்மைதான் அறிஞர். அந்த நாட்களில் கடிதம் ஒன்றுதான் எண்ணங்களுக்கு வடிகால். ஒரே அலைவரிசையில் இருக்கும் தோழமையிடம் பகிர்ந்துகொள்ள எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது. 20 பக்கமெல்லாம் சாதாரணம். நல்ல நட்பு உங்களுக்கு அமைந்திருக்கிறது. வாழ்த்துகள்.

அறிஞர்
28-06-2008, 07:25 AM
20 பக்கமெல்லாம் சாதாரணம். என்ன ப்ளேட் அப்படியே திரும்பிடுச்சு..

இதயம்
28-06-2008, 07:43 AM
6.இதயம்

நகைச்சுவை அறிஞர்கள் லாரல் ஹார்டியுடன் ஒருவாரம் இருக்க வாய்ப்பு கிடைத்தால் எப்படி உங்கள் அனுபவம் இருக்கும் என்று 10 வரிகளுக்கு மிகாமல் எழுதுக.

தன் கேள்விகளுக்காக என்னையும் இணைத்த கலைவேந்தன் அவர்களுக்கு என் நன்றிகள்.

நகைச்சுவை நடிகர்களான லாரல்-ஹார்டி இரட்டையர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் சேஷ்டைகள் நம்மை உடல்குலுங்க சிரிக்க வைப்பவை. தமிழ் சினிமாவில் கொடிகட்டிப்பறந்த கவுண்டமணி செந்தில் ஜோடியின் நகைச்சுவைக்கு முன்னோடிகள் லாரல் ஹார்டி எனலாம்..!

அவர்களுடன் 1 வாரம் இருக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் என்னை மகிழ்விக்கும் வகையில் நகைச்சுவையாக செய்யும்படி அவர்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டேன்.

ஒவ்வொரு நகைச்சுவையாளனின் உள் மனதிலும் யாருக்கும் தெரியா சொல்லொணா சோகம் உறைந்து கிடக்கும் என்பார்கள். மற்றவர்களை தன்னுடைய நகைச்சுவை உணர்வால் மகிழ்வித்த அந்த இரு நகைச்சுவை அறிஞர்களின் உள் மன சோகங்களை என்னுடன் பகிரச்செய்து, அவற்றுக்கு என்னால் முடிந்த ஆறுதல் மருந்தை வார்த்தைகளால் அளிப்பேன்.

ராஜா
28-06-2008, 07:52 AM
இதயம்ன்னா இதயம்தான்..

என்னவொரு மாறுபாடான சிந்தனை..!

ஹாட்ஸ் ஆஃப் மிஸ்டர் ஹார்ட்(டி)..!

கலைவேந்தன்
28-06-2008, 10:07 AM
அருமையான பதிலளித்த அறிஞர் அவர்களின் நட்புக்கு சலாம்!

கலைவேந்தன்
28-06-2008, 10:11 AM
அனு அவர்களின் அரைபதில் அருமை! மீதி காண அவா!

கலைவேந்தன்
28-06-2008, 10:15 AM
சிவாஜியின் சிவாஜி பக்தி கண்டு மெச்சினோம் பக்தனே! வரம் தந்தோம் வாழ்க!

கலைவேந்தன்
28-06-2008, 10:18 AM
இதயம் வழங்கிய பதிலில் இதயம் நிறைந்து வழிந்தது அன்பு!

lolluvathiyar
28-06-2008, 02:02 PM
மன்றத்தில் எந்த இடத்திலும் எந்த மாதிரி கேள்வி கேட்டலும், எப்படி கேட்டாலும் சுத்தி சுத்தி எத்தனை அடிவாங்கினாலும் சலிக்காமல் அசராமல் (தற்பெருமை) பதில் சொல்பவன் நான் என்று மன்றத்தினர் அனைவரும் அறிந்ததே.
ஆனால் என்னை இப்படி தனது கேள்வியால் கதிகலங்க செய்து விட்டார் நம்ம கலைவேந்தன். (எத்தனை நாள் திட்டம் போட்டிருந்தாரோ தெரியவில்லை). அதுவும் பாருங்க இப்படியா கேள்வி கேட்பது.



8. லொள்ளுவாத்தியார்

ஒரு வார காலத்துக்கு உங்கள் பால்மாற்றம் நடந்து நீங்கள் ஜெனிபர் லோபஸ் ஆக மாறிவிட்டீர்கள்! ( ஹைய்யா என்ன ஜாலி! )உங்கள் மனநிலையை விவரியுங்கள்!


கொஞ்சம் நாளைக்கு முன்பு தான் பால்மாறாட்ட நிழல் உருவ பிரச்சனை எழுந்து அடங்கியது.
சரி நான் ஜெனிபர் லோபஸாக மாறி விட்டால் சத்தியமா எனக்கு அவர் அளவுக்கு பாடல் எல்லாம் வராது ஒரு வாரம் பாடுவதை முதலில் நிறுத்தி விடுவேன் (பாவம் ஏன் அவர் பிழைப்பில் மன்னை அள்ளி போடனும்)

ஜெனிபர் லோபஸாக மாறி விட்டால் நேராக பனக்கார நாடுகளுக்கு செல்வேன், அங்கு சும்மா பனக்கார நிறுவங்களுக்கு ரிப்பன் வேட்டும் நிகழ்ச்சி , அவர்களுடன் பார்ட்டியில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்பேன். இதனால் பனம் குவியும், மேலும் சேவை இயங்கள தொடங்கி டொனேசன் வழங்க சொல்லி விளம்பரம் தருவேன் அப்படி விளம்பரமோ அல்லது பிரச்சாரம் செய்யும் போது கன்டிப்பாக ஆடையில் கஞ்சதனம் காட்டுவேன் அப்பதான் நிதி குவியும். ஜெனிபர் லோபஸ் அவதார் தானே அதனால் கலாசாரம் கட்டுபாடு என்றெல்லாம் பார்த்து கொன்டு இருக்க மாட்டேன். எவ்வளவு பனம் சம்பாரிக்க முடியுமோ அந்த அளவுக்கு சம்பாரிப்பேன். இப்படி செய்யும் போது நிச்சயம் ஜெனிபர் லோபஸ் பெயருக்கு எந்த கலங்கம் வராமல் பார்த்து கொள்வேன், அதே சமயம் அவர் பெயரில் எந்த கடனும் வாங்க மாட்டேன், அவர் பாடி சம்பாரித்த உடமைகளை அபகரிக்க மாட்டேன்.

மீண்டும் உருமாறியவுடன் எல்லா பனத்தையும் இந்தியாவுக்கு எடுத்துட்டு வருவேன். நிச்சயம் அதை சமூக சேவை இயக்கங்களுக்கு தரமாட்டேன். என் பாலிசி மீனை தானமாக தருவதை விட மீன் பிடிக்க கற்று கொடுப்பது தான் சிறந்த தானம்.
அதனால் ஏதாவது லாபகராமான தொழில் தொடங்கி அதுவும் விவசாயிகளிடம் விளையும் பொருட்களை கொள்முதல் செய்யும் தொழிலாக இருக்க வேன்டும், உற்பத்தி செய்யபடும் பொருட்கள் ஏழைகளுக்கு அத்யாவிசியமான தொழிலாக இருக்கவேன்டும், அபாயகராமன கழிவுபொருட்களை வெளியேற்றாத தொழிலாக தான் இருக்க வேன்டும்.
அதில் விதவைகளுக்கும் கைவிடபட்ட பென்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் (ஆன்கள் உட்பட) மட்டும் வேலை வாய்பு தருவேன். சம்பளத்தை வாரி வழங்க மாட்டேன். உற்பத்தியாகும் பொருளை இலவசமாக வீச மாட்டேன் ஓரளவுக்கு லாபம் வைத்து விற்கும் வகையில் அமைத்து. காரனம் அந்த தொழிலின் லாபம் மூலம் மேலும் தொழிலை பெருக்கி இன்னும் பலருக்கு பயனுள்ள வகையில் இருக்கபடி பார்த்து கொள்வேன். நான் நிர்வகிப்பதால் வெளிபடையாக என் செலவுகளுக்கு அதிலிருந்து ஒரு சிறு வருமான வெளிபடையாக எடுத்து கொள்வேன்.

(இடையில் ஜெனிபர் லோபஸ் பெயரில் தமிழ்மன்றம் வந்து கலாய்த்து அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்து தனி மடல் மூலம் இதயத்திடம் வம்பு பன்னி மீன்டும் அவரை புலம்ப வைப்பேன் என்றும் உறுதி அளிக்கிறேன்* போதுமா .. இப்ப திருப்திதான கலைவேந்தரே)

சுகந்தப்ரீதன்
29-06-2008, 04:11 AM
கலைவேந்தருக்கு திருப்தியோ இல்லையோ..!!

வாத்தியாரோட பதிலை கண்டு இந்த மாணவனுக்கு ரொம்பவே திருப்தி..!! (இது மட்டும் நடந்துச்சின்னா எவ்வளவு நல்லாயிருக்கும்..????)

கலைவேந்தன்
29-06-2008, 04:50 AM
இந்த டெல்லிவாத்தியாருக்கு அந்த லொள்ளுவாத்தியாரின் பதில்கள் திருப்தியே!

ஆதவா
29-06-2008, 06:18 AM
கேள்விகளை அழகாக வழங்கிய க.வேந்தருக்கு பாராட்டுகள்....

அறிஞர் அழகாக பதில் கொடுத்திருக்கிறார்... (அறிஞர் வீட்டுக்கு இதை யாராச்சும் சொல்லுங்கப்பா!!)

அனு.... பெண்களுக்கு என்பதைக் காட்டிலும் மொத்தமாக எல்லாருக்குமாக பதில் சொல்லியிருக்கிறார்... பாராட்டுகள்..

சிவா. அண்ணே!! இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.. ஒத்தை வரியில பட்டுனு முடிச்சிட்டாரு...

இதயத்தின் பதில் இதயம்போல இருக்கிறது.... பாராட்டுகள்

வாத்தி!!! வாத்தியாருக்கு ஏற்றமாதிரியே கேள்வியும் இருக்கு... (அதெப்படிங்க ஒரு நடிகையாயிட்டாலே டொனேசன் ஹெல்ப் அப்படி இப்படீன்னு சொல்ல ஆரம்பிச்சடறாங்க??)

ஜெலோ வை கவிழ்க்க இன்னொரு ஜெலோ வருகிறாள்... யாருன்னு சொல்லுங்க அந்த முக்கியமான நபர்???

ஆதவா
29-06-2008, 06:51 AM
3.ஆதவா

ஒரு ஓவியன் ஒரு பெண்ணை நிர்வாணமாய் வரைய நினைக்கும்போது எதிரே நிற்கும் மாடலை 100% கலைக்கண்ணோட்டத்தோடு பார்ப்பது என்பது சாத்தியமா? (கேள்வியிலிருந்து நழுவிக்கொள்ள உரிமை உண்டு உங்களுக்கு? ஆனா அடிக்க வாராதீர்கள்!)


எந்த ஒரு கேள்வியிலிருந்து நழுவிக்கொள்ள எனக்கு விருப்பமில்லை வேந்தரே! சரி இப்போ பதில்

ஒரு அசல் ஓவியனுக்கு, ஒரு கலையார்வம் கொண்ட படைப்பாளிக்கு எதிரே நிற்பது ஒரு சப்ஜெக்டாக தெரியுமே தவிர, அது இன்ன பால், இன்ன நிறம், இன்ன அழகு போன்றவை தெரியாது..

எனக்கு பதினொன்பது வயது இருக்கும்போது நானும் அப்பாவும் சேர்ந்து வீட்டில் கணிணி அமைத்து தொழில் செய்துகொண்டிருக்கும் போது எனக்கு ஒரு டிசைன் வந்தது. அது முற்றிலும் நிர்வாணமான ஒரு பெண் ஒய்யாரமாக கார் மேல் படுத்துக் கொண்டு ஒயின் சாப்பிடுவது போல... அது ஒரு போட்டோ ப்ரிண்ட் என்பது குறிப்பிடத் தக்கது.. என் அப்பாவோ அல்லது நானோ அதைக் கண்டு முகம் சுளிக்கவில்லை. ஏனெனில் இருவருக்குமே தெரியும் அந்த காட்சியில் உள்ள அழகு எத்தனை என்று.. (இன்னும் மோசமான டிசைன்களை பாண்டீஸில் அடிக்கிறார்கள் அது ஸ்டிகர் ப்ரிண்ட்.. X ரகமானவை..) என்னிடம் உள்ள ஆர்ட் கலெக்சன்களில் பெரும்பாலானவை நிர்வாண ஓவியங்களே!

நீங்கள் ஆதாமுக்குக் கைகொடுக்கும் கடவுள் ஓவியத்தைக் கண்டிருப்பீர்கள்.. அதில் ஆதாம் நிர்வாணமாக இருப்பான்... அதை ஏஞ்சலோ வரைந்த ஓவியம்.. அந்த ஓவியத்தில் பாருங்கள் அவர் கொடுக்கும் கற்பனையும் அந்த ஓவியத்தில் எது எப்படி இருக்கவேண்டுமோ அது அப்படியே இருக்கும்படியான ஓவியத்திறனும் கொண்டு மைக்கேல் ஏஞ்சலோ வரைந்திருப்பார்... அந்த அழகு நிச்சயம் எதிலும் வராது... அவர் செதுக்கிய டேவிட் சிலையும் நிர்வாணப் படைப்புகளில் புகழ்பெற்றது..

அப்படி நூறு சதத்தில் ஒரு சதம் குறைந்து பார்க்கும் ஓவியனுக்குக் கலைஞன் என்று பெயரல்ல... அதற்கு வேறு பெயருண்டு..

அதுசரி, அப்படி அமர்ந்து ஒரு போஸ் கொடுக்கும் அந்தப் பெண், ஆண் பற்றிய மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்... அப்பப்பா!!!

கலைவேந்தன்
29-06-2008, 07:16 AM
இதை....இதை....இதைத்தான் எதிர்பார்த்தேன் ஆதவா! ஹாட்ஸ் ஆஃப்!

சூரியன்
29-06-2008, 07:22 AM
அனைவரின் பதிலும் அழகு.
அதிலும் வாத்தியாரின் பதில் அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் உள்ளது.

இளசு
29-06-2008, 09:54 AM
நல்ல கேள்விகள் கலைவேந்தன் அவர்களே..

அறிஞர், சிவாவின் நேர்மையான பதில்கள்.. நச்!
அனுவின் பதிலில் அடுத்த பாகம் வரவேண்டும்..
இதயம், வாத்தியாரின் பதில்கள் சுவை..
ஆதவனின் பதில் ஆழமான உண்மை..

பாராட்டுகள் அனைவருக்கும்..

ஆதவா, ஜெயகாந்தனின் ''இருளைத் தேடி'' எனும் சிறுகதையில்
உன் இறுதிக்கேள்விக்கு விடை இருக்கலாம்..


--------------------------------------------

இனி எனக்கான கேள்வி.

மன்றத்தில் பல இடங்களில் நான் எழுதியிருக்கிறேன் -
எந்த ஆணுக்குள்ளும் கொஞ்சம் பெண்மையுண்டு
எந்த பெண்ணுக்குள்ளும் கொஞ்சம் ஆண்மையுண்டு..

எந்தெந்த நேரத்தில் அக்குணம் தேவையான அளவுக்கு வெளிப்படுகிறதோ
அந்தந்த அளவுக்கு அதனால் நன்மை உண்டு..

பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள்தானடா....

எனக் கண்ணதாசன் சொன்னதுபோல்..

பசிக்கு உணவிடும்
கண்ணீருக்கு விரல் தரும்
தோல்விக்குத் தோள்தரும்
எந்த உயிரும் தாய்மையின் அம்சமே..

தாயுமான இறைவன் உண்டு நம் தேசத்தில்..
இயேசு பெருமானிடம் இருந்தது தாய்மை..


செவிலிப் பணியில் சிறந்த ஆண்களுடன் இணைந்து பணிசெய்கிறேனே - அவர்களிடமும் காண்கிறேன்..தாய்மையை..

கர்ப்பமான மனைவி, உடல் நலிந்த குழந்தை -
இந்நிலைகளில் கனிவின் உருவாய் கண்டிருக்கிறேன் ஆண்களை..

உணவோ, மருந்தோ, உணர்வோ -
சாலப்பரிந்து இன்னோர் உயிருக்கு
ஊட்டும் பொழுதெல்லாம் பாலினம் தாண்டி
ஊற்றெடுப்பது தாய்மை உணர்வு!

கனிந்த மார்பில்லை என்றால் என்ன?
கனிந்த மனம் போதும் ஆண்களும் தாயாக!

சுகந்தப்ரீதன்
29-06-2008, 10:16 AM
கனிந்த மார்பில்லை என்றால் என்ன?
கனிந்த மனம் போதும் ஆண்களும் தாயாக!
கடைசி இருவரியில் மொத்த கருவையும் உருவாக்கி உரைத்துவிட்டீர்கள்..!!:icon_b:

வாழ்த்தவில்லை அண்ணா..வணங்குகிறேன் தங்களை..!!

பூமகள்
29-06-2008, 10:23 AM
உணவோ, மருந்தோ, உணர்வோ -
சாலப்பரிந்து இன்னோர் உயிருக்கு
ஊட்டும் பொழுதெல்லாம் பாலினம் தாண்டி
ஊற்றெடுப்பது தாய்மை உணர்வு!

கனிந்த மார்பில்லை என்றால் என்ன?
கனிந்த மனம் போதும் ஆண்களும் தாயாக!
ஹேட்ஸ் ஆஃப் டூ யூ அண்ணலே...!! :aktion033::icon_clap::innocent0002:

பெரியண்ணாவை நினைத்து மெச்சுகிறேன்... :4_1_8::smartass:
பெருமிதம் கொள்கிறேன்...:thumbsup:
நான் அருகிருந்தால் எட்டிக் குதித்து கை பிடித்து குலுக்கியிருப்பேன்...!! :icon_dance::music-smiley-009::music-smiley-008:

சிவா.ஜி
29-06-2008, 10:38 AM
பசிக்கு உணவிடும்
கண்ணீருக்கு விரல் தரும்
தோல்விக்குத் தோள்தரும்
எந்த உயிரும் தாய்மையின் அம்சமே..

தாயுமான இறைவன் உண்டு நம் தேசத்தில்..
இயேசு பெருமானிடம் இருந்தது தாய்மை..

செவிலிப் பணியில் சிறந்த ஆண்களுடன் இணைந்து பணிசெய்கிறேனே - அவர்களிடமும் காண்கிறேன்..தாய்மையை..

கர்ப்பமான மனைவி, உடல் நலிந்த குழந்தை -
இந்நிலைகளில் கனிவின் உருவாய் கண்டிருக்கிறேன் ஆண்களை..

உணவோ, மருந்தோ, உணர்வோ -
சாலப்பரிந்து இன்னோர் உயிருக்கு
ஊட்டும் பொழுதெல்லாம் பாலினம் தாண்டி
ஊற்றெடுப்பது தாய்மை உணர்வு!

கனிந்த மார்பில்லை என்றால் என்ன?
கனிந்த மனம் போதும் ஆண்களும் தாயாக!

சான்றோர்கள் நிறைந்த சபைகளில் வாசித்துப் பெருமையடைய இதோ...இங்கே கொட்டிக்கிடக்கும் பொக்கிஷ வரிகள்.

இளசுவின் பதிலில் ஈரத்தைக் காண்கிறேன். தாயுமாக....கனிந்த மனம் போதுமென்ற வரியில் ஆழமான அர்த்தத்தைக் காண்கிறேன். கிரேட் இளசு.

கலைவேந்தன்
29-06-2008, 02:31 PM
இளசு அவர்களை கொஞ்சமே கவனித்தாலும் அவர் மனத்துள் நிறைந்துகிடக்கும் தாய்மையை உணர்ந்துகொண்டேன்!

அதன் விளைவே என் அந்த கேள்வி!

தலைவணங்குகிறேன் இளசு உங்கள் தாய்மை உணர்வின் முன்!

சூரியன்
29-06-2008, 02:36 PM
இளசு அண்ணா போன்ற பெரியோர் உள்ள இடத்தில் நானும் இருப்பது கண்டு பெருமை கொள்கிறேன்.

கலைவேந்தன்
29-06-2008, 02:41 PM
நண்பர்களே!

நான் இம்மன்றத்திற்கு அவ்வளவு அறிமுகம் இல்லாத காரணத்தால் எனக்கு நன்றறிந்த 10 பேரிடம் கேள்விகள் எழுப்பியுள்ளேன்!

மற்றையர் அனைவரும் என்னை மன்னிப்பாராக!

இதோ எனது ஆ! பத்து கேள்விகள்!

1.அனு

நீங்க ஒருநாள் முதல்வி ஆனா பெண்களுக்கு மட்டும் என்ன என்ன சலுகைகள் வழங்குவிங்க?

2.ஆதி

ஒரு நல்ல கவிஞனுக்கு இருக்க வேண்டிய லட்சணங்கள் என்ன? அவலட்சணங்கள் என்ன?

3.ஆதவா

ஒரு ஓவியன் ஒரு பெண்ணை நிர்வாணமாய் வரைய நினைக்கும்போது எதிரே நிற்கும் மாடலை 100% கலைக்கண்ணோட்டத்தோடு பார்ப்பது என்பது சாத்தியமா? (கேள்வியிலிருந்து நழுவிக்கொள்ள உரிமை உண்டு உங்களுக்கு? ஆனா அடிக்க வாராதீர்கள்!)

4.இளசு

தாய்மைப்பண்பு என்பது பெண்களுக்கு மட்டுமே உரிய ஒரு பண்பென்று நினைக்க்கிறீர்களா? இல்லை ஆண்களுக்கும் உண்டா? உ=ம் தரவும்.

5.கவிதா

மன்றத்தின் மிகப்பழம்பெரும் உறுப்பினர் நீங்கள்! எங்களைப்போல் புதியவர்களுக்கு வழங்கும் எச்சரிக்கை ஆலோசனை இவை என்ன?

6.இதயம்

நகைச்சுவை அறிஞர்கள் லாரல் ஹார்டியுடன் ஒருவாரம் இருக்க வாய்ப்பு கிடைத்தால் எப்படி உங்கள் அனுபவம் இருக்கும் என்று 10 வரிகளுக்கு மிகாமல் எழுதுக.

7. அறிஞர்

உங்களை ஒரே ஒரு பெண்ணுடன் ஒரு மாதம் தனித்தீவில் இருக்கச்சொல்லி இறைவன் வரம் அளித்தால் - யார் உங்கள் தேர்வாய் இருக்கும்?

8. லொள்ளுவாத்தியார்

ஒரு வார காலத்துக்கு உங்கள் பால்மாற்றம் நடந்து நீங்கள் ஜெனிபர் லோபஸ் ஆக மாறிவிட்டீர்கள்! ( ஹைய்யா என்ன ஜாலி! )உங்கள் மனநிலையை விவரியுங்கள்!

9.சிவா.ஜி

உங்களை வைத்து சினிமாப்படம் எடுக்க ஒருவர் துணிந்துவிட்டார் என்றுவையுங்கள். (பாவம் அவர்!) எந்த நடிகரை நீங்கள் பிரதிபலிக்க ஆசைப்படுகிறீர்கள்?

10.ராஜா

'' இவ்வுலகத்தில் எல்லோருமே நல்லவர்கள்தான் - அவரவர் கண்ணோட்டத்தில் நோக்கும்போது! '' என்ற பேரரறிஞர் ஒருவரின் (கலைவேந்தன் தாங்க அவரு!) கருத்தைக்குறித்து என்ன நினைக்கிறிங்க! தகுந்த உதாரணங்களுடன் விரிவான விளக்கம் தேவை!

ராஜா
29-06-2008, 03:37 PM
மன்னியுங்கள் கலை..!

என் இணையத் தொடர்பில் ஏதோ சிக்கல்.. நம் மன்றத்தின் பக்கம் திறக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. பதிவிடும் முயற்சியோ பல நேரங்களில் தோல்வியுற்றுவிடுகிறது.

விரைவில் பதிலளிக்க முயல்கிறேன். நன்றி.

ராஜா
30-06-2008, 03:14 AM
10.ராஜா

'' இவ்வுலகத்தில் எல்லோருமே நல்லவர்கள்தான் - அவரவர் கண்ணோட்டத்தில் நோக்கும்போது! '' என்ற பேரரறிஞர் ஒருவரின் (கலைவேந்தன் தாங்க அவரு!) கருத்தைக்குறித்து என்ன நினைக்கிறிங்க! தகுந்த உதாரணங்களுடன் விரிவான விளக்கம் தேவை!


பேரறிஞர்கள் சொன்ன கருத்துகளுக்கெல்லாம் வியாக்கியானம் சொல்லும் அளவுக்கு நான் அறிவு முதிர்ச்சி பெற்றவன் இல்லை. மன்னியுங்கள் தோழரே..! :)

சில நேரங்களில் சில நல்லவர்கள் செய்யும் வேலைகளுக்கு காரணம் பிடிபடாமல் போகும்போது, உண்மையிலேயே அவர்கள் நல்லவர்கள்தானா என்ற ஐயமும், அவர்களுக்கு நம் இதயத்தில் கொடுத்திருக்கும் மிக உயர்ந்த இடத்துக்கு அவர்கள் பொருத்தமானவர்கள்தானா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. அவர்களின் செய்கைகளுக்கு விளக்கம் கேட்கமுடியாத நிலையில் நாம் இருக்கும்போது, அவர்களுக்கும் நமக்கும் ஒரு இடைவெளி விழுந்துவிடுகிறது.

நான் மேலே குறிப்பிட்டது போன்ற சில "நல்லவர்களை" இணையத்தில் சந்திக்க நேரிட்டதுண்டு. இதற்குமேல் எதுவும் சொல்லமுடியாதநிலையில் நான் இருக்கிறேன்.

பொறுத்தருளுங்கள் தோழரே..!

கலைவேந்தன்
30-06-2008, 06:14 AM
எதிர்பார்த்த அளவுக்கு விரிவா இல்லைன்னாலும் எதிர்பார்த்ததைவிட ஷார்ப்பா ( கூர்மையான்னு தமிழ்ல சொல்லலாமா?)இருந்தது உங்க பதில் ராஜாதோழரே!

kavitha
30-06-2008, 06:57 AM
5.கவிதா

மன்றத்தின் மிகப்பழம்பெரும் உறுப்பினர் நீங்கள்! எங்களைப்போல் புதியவர்களுக்கு வழங்கும் எச்சரிக்கை ஆலோசனை இவை என்ன?

விடுமுறைக்குப்பிறகு இப்போது தான் இப்பதிவைப்பார்க்க முடிந்தது. அதனால் தான் இந்தத்தாமதப்பதிவு.

இந்தக்கேள்விக்கு பதிலளிக்கும் முன்....

மன்றத்தில் என்னை விட மூத்தவர்கள் இருக்க என்னை (மாட்டிவிட) இந்தக்கேள்வி கேட்டது ஏன் சகோதரரே....? ஏதேனும் கோபம் இருந்தால் பேசித்தீர்த்துக்கொள்வோமே! இப்படி வம்பில் மாட்டி விடுகிறீர்களே! அதுவும் மிகப்பழம்பெரும்.... (என்னை ஏதோ ஒரு கிழவி ரேஞ்சுக்கு.... சொக்கா... இது உனக்கே அடுக்குமா???)

இனி கேள்விக்கான பதில்:

உங்களை என்னால் புதியவராக நினைக்கமுடியவில்லை. மன்றமும், பழையவர், புதியவர் என்ற பாகுபாடை பார்க்கவில்லை. பழகியவர்கள்/பழகாதவர்கள் இரண்டு வகையினர் வேண்டுமானால் இருக்கலாம். ஆகையால், மற்றவர்களைப்புரிந்து மனம் நோகாமல் நடந்துகொள்வது எக்காலத்திற்கும் யார்க்கும் பொருந்தும்; எனக்குமே!

எச்சரிக்கை, ஆலோசனை சொல்லுமளவிற்கு எனக்குத்தெரிந்து தமிழ்மன்றத்தில் எந்த சூசகமும் இல்லை. அதனால் என்னிடமும் எந்த வாசகமும் இல்லை.
(இந்த கேள்வியை ராஜா அண்ணாவிடம் நீங்கள் கேட்டிருக்கலாமோ?)

தொடர்ந்து உங்கள் பங்களிப்பு இனிதாய் நடைபெறட்டும். அனைவரின் அன்போடு தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி. :)

ராஜா
30-06-2008, 07:27 AM
(இந்த கேள்வியை ராஜா அண்ணாவிடம் நீங்கள் கேட்டிருக்கலாமோ?)
. :)


யக்கோவ்... நல்லா பதில் சொல்லிப்போட்டியள்..

அப்புறம் என்னை ஏனக்கா மாட்டிவிடப் பார்க்கினம்..?



:)

அமரன்
30-06-2008, 07:37 AM
படிக்கப் படிக்க இனிக்குது... மனமோ இங்கேயே இருக்கத் துடிக்குது.. பத்தை சுடரச்செய்த அனைத்து அன்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி

ராஜா
30-06-2008, 07:47 AM
திரு. கலை வேந்தனின் கேள்விக்கணைகளுக்கான பதில்கள் நம் உறவுகளிடமிருந்து வந்துவிட்டன. அனைவருக்கும் நன்றி.

அடுத்து ஒரு உறவை அழைக்கும் முன், சில விடயங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

கேள்விகள் கேட்கப்படும்போது..

1) இது ஒரு மேன்மை மிக்க மன்றம்.. இதன் உறுப்பினர்கள் அனைவரும் கண்ணியத்துக்குரியவர்கள்.. வெளியில் இருந்து வரும் விருந்தினர்களுக்கும் நம் பதிவுகள், ஒரு உயரிய மரியாதையை நம் மன்றத்தின்பால் தோற்றுவிக்கவேண்டும் என்பதை தயவுசெய்து மனதில் இருத்தி கேள்வித்தொகுப்பை தயார் செய்யுங்கள்.

2) நாம் பலதரப்பட்ட மனநிலையையும், வாழ்க்கைமுறைகளையும் கொண்டவர்கள். ஆண் உறுப்பினர்களும், பெண் உறுப்பினர்களும் ஒரு சகோதர உறவுமுறையைக் கடைப்பிடித்து மகிழும் மாண்புக்குரிய நம் மன்றத்தில், ஒரு உறுப்பினரிடம் தனிப்பட்ட முறையில் கேட்கும் கேள்வி எது.. பலர் அறிய அவை நடுவே கேட்கும் கேள்வி எது என்று வேறுபாடு அறிந்து கேள்விகள் தொடுக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

3) நம் மன்றப் பதிவுகள் பல்வேறு தேடுபொறிகளில் வகைப்படுத்தப் படுகின்றன என்பதையும் மனதில் கொண்டு உங்கள் பதிவுகள் அமையுமேயாயின் களம் மேலும் மேன்மையுறும்.

நன்றி. வணக்கம்.

ராஜா.

திரி ஆசிரியர்.

கலைவேந்தன்
30-06-2008, 10:27 AM
கவிதா அக்கா! உங்கள் பதில்கள் ரொம்ப அருமையா கவிதான் அக்கா!

கலைவேந்தன்
30-06-2008, 10:29 AM
என் ஆ பத்துக்கேள்விகளுக்கும் மிக அருமையாக பதில் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது வந்தனங்கள்!

என்னை அழைத்து கவுரவித்த ராஜா தோழருக்கும் மிக்க நன்றி!

ஆதவா
30-06-2008, 10:38 AM
இதை....இதை....இதைத்தான் எதிர்பார்த்தேன் ஆதவா! ஹாட்ஸ் ஆஃப்!

மிக்க நன்றி க.வேந்தன்.


நல்ல கேள்விகள் கலைவேந்தன் அவர்களே..


ஆதவனின் பதில் ஆழமான உண்மை..

பாராட்டுகள் அனைவருக்கும்..

ஆதவா, ஜெயகாந்தனின் ''இருளைத் தேடி'' எனும் சிறுகதையில்
உன் இறுதிக்கேள்விக்கு விடை இருக்கலாம்..


கனிந்த மார்பில்லை என்றால் என்ன?
கனிந்த மனம் போதும் ஆண்களும் தாயாக!

மிக்க நன்றி இளசு அண்னா.. உங்கள் பதில்கள் மட்டுமல்ல. பதிவுகள் அனைத்தும் வியக்கவைக்கிறது... அப்படி ஒரு வியத்தகு பதில் தருவித்த க.வேந்தருக்கும் எனது நன்றி..

ஜெயகாந்தனின் எந்த நாவலும் நான் இதுவரை படித்ததில்லை.. இனி நிச்சயம் இந்த நாவலை முயற்சிப்பேன்.

ஆதவா
30-06-2008, 10:42 AM
கவி அக்காவின் எஸ்கேப்பித்தனம்... நன்றாகத் தெரியுதுங்கோ!!

ராஜாண்ணே இன்னும் கொடுத்திருக்கலாம்..

ராஜா
30-06-2008, 10:55 AM
ராஜாண்ணே இன்னும் கொடுத்திருக்கலாம்..


பொழைச்சுப் போகட்டும் விடுங்க..!

:)

சிவா.ஜி
30-06-2008, 11:28 AM
கவிதா அக்கா! உங்கள் பதில்கள் ரொம்ப அருமையா கவிதான் அக்கா!

கவிதா அக்கா இல்லை கலை.....நமக்கு அன்புத்தங்கை......அருமையான கவிதாயினி பிற்காலமறிந்து பெற்றோர் இட்ட பொருத்தமான பெயர்.

ராஜா
30-06-2008, 01:02 PM
என் ஆ பத்துக்கேள்விகளுக்கும் மிக அருமையாக பதில் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது வந்தனங்கள்!

என்னை அழைத்து கவுரவித்த ராஜா தோழருக்கும் மிக்க நன்றி!

கௌரவிக்கப்பட்டது நாங்கள்.. நன்றி தெரிவிக்கவேண்டியவர்களும் நாங்களே..!

அமரன்
01-07-2008, 10:07 PM
தாமரை அண்ணன் தொடுக்கலையே(யோ) ஆ!பத்துக் கணைகள்.. கூப்பிடுவோமா அண்ணனின் அனுமதியுடன்..

தாமரை
02-07-2008, 01:17 AM
எனக்குக் கேள்வி கேட்கவே தெரியாதே அமரா!! பதில் சொல்லித்தான் பழக்கம்.

என்னை இரண்டு ரவுண்டு விட்டு அழைக்கலாம். இந்த ரவுண்டுக்கு வேணாம்.

அமரன்
02-07-2008, 07:27 AM
இப்ப நானிருக்கிற நிலமையில இரண்டு ரவுண்டு விட்டு அழைப்பது எனக்கு ஆபத்து அண்ணா..:)

யார் யார் கேள்விகள் கேட்டிருக்கிறார்கள் என்பதை ஒரு சுற்று பார்த்துவிட்டு விரைவில் இனொருவரை அழைக்கலாமோ..

ஆதவா ஆ!பத்து தராத நினைவு.. என்னப்பா ஆதவா.. ஆ!பத்தில் ஆட வர்றியா?

ஆதவா
02-07-2008, 09:23 AM
இப்ப நானிருக்கிற நிலமையில இரண்டு ரவுண்டு விட்டு அழைப்பது எனக்கு ஆபத்து அண்ணா..:)

யார் யார் கேள்விகள் கேட்டிருக்கிறார்கள் என்பதை ஒரு சுற்று பார்த்துவிட்டு விரைவில் இனொருவரை அழைக்கலாமோ..

ஆதவா ஆ!பத்து தராத நினைவு.. என்னப்பா ஆதவா.. ஆ!பத்தில் ஆட வர்றியா?

எஸ்கேப்..... (தாமரை அண்ணாவின் பதிலே எனக்கும்...)

meera
02-07-2008, 09:39 AM
எனக்குக் கேள்வி கேட்கவே தெரியாதே அமரா!! பதில் சொல்லித்தான் பழக்கம்.

என்னை இரண்டு ரவுண்டு விட்டு அழைக்கலாம். இந்த ரவுண்டுக்கு வேணாம்.

அண்ணா, உங்களுக்கு இன்னும் ட்ரைனிங் பத்தலை பொய் சொல்ல. நல்ல வாத்தியாராய் தேடி சொல்லட்டுமா அண்ணா?????????????:fragend005::rolleyes:

அமரன் அண்ணா நம்பீட்டீங்க தானே?:sprachlos020:

meera
02-07-2008, 09:44 AM
எஸ்கேப்..... (தாமரை அண்ணாவின் பதிலே எனக்கும்...)
ஆதவா, உனக்கும் மேலே உள்ள பதில் தான். இதெல்லாம் கொஞ்சம் ஓவரூ மக்கா.

ஆதவா
02-07-2008, 10:03 AM
ஆதவா, உனக்கும் மேலே உள்ள பதில் தான். இதெல்லாம் கொஞ்சம் ஓவரூ மக்கா.

:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

ராஜா
02-07-2008, 10:45 AM
கதை இப்படிப் போகுது..!

இதில மாப்பு தீ(ர்ப்)பு சொல்லுது.. 5 கேள்வின்னா அதிவேகமா திரி போகுமுன்னு..!

அது என்னாது.. எல்லோருமே ரெண்டு ரவுண்டு (?) கழிச்சு வ*ரேன்னு சொல்றீங்க..?

புரியலியே..!

சிவா.ஜி
02-07-2008, 11:39 AM
தீபனை அழைக்கலாமே ராஜா சார்?

தாமரை
02-07-2008, 11:46 AM
நானே கொடுத்து விடுகிறேன். கவலை வேண்டாம்.. இன்னும் அரை மணி நேரம் பொறுங்கள்.

தாமரை
02-07-2008, 12:07 PM
1. சுகந்தப் பிரீதன்

பல சமயங்களில், கேள்விக்குப் பதிலாய்க் கேள்வி கேட்டு, விட்டு விடுவதன் அடிப்படைக் காரணம், சிக்கலான விஷயங்களில் தப்பிக்கவா ? அல்லது வேறு எதாவது காரணமா?

2. லொள்ளு வாத்தியார்

தொலைநோக்கும், நடைமுறைவாழ்வு நோக்கும், காரிய நோக்கும் ஒருங்கே அமையப்பெறுதல் மிக அரிது, இம்மூன்றையும் ஒருங்கே அமையப் பெற்ற உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்புக் கிடைக்கிறது. தமிழ் மன்றத்தில் அனைவரும் பெரும் பயன் பெறவும் மன்றத்தின் தரம் உயரவும் 10 கட்டளைகள் தேவை. அவை என்னென்ன என்ற உங்கள் பார்வையைத் தாருங்களேன்.!

3. செல்வா

புது முயற்சி = செல்வா, செல்வாவிற்குப் புதுமுயற்சி என்றால் வெல்லக்கட்டி. ஆனால் அடுத்தடுத்தப் புது முயற்சிகளில் சில பழையவை மறக்கப்படுகின்றன. அப்படிக் கைவிட்ட பழையப் புதுமுயற்சிகளில் ஒன்று உங்களிடம் வந்து என்னை ஏன் பாதி வழியில் தொலைத்தாய் என்று கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்?

4. லியோமோகன்

அட, இவருக்கு மட்டும் நேரம் எங்கிருந்து கிடைக்கிறது எனப் பலரும் ஆச்சரியப்படும் நபர். அறிவுத் தேடலிலும், தேடியதைப் பகிர்வதிலும் இணையில்லாதவர். காலமேலாண்மையினைக் கைகொள்ள 10 கட்டளைகளைச் சொல்லுங்களேன்!

5. மீரா

சின்னச் சின்னக் கற்கண்டுத் துகள்களாய் (ஹை)ஹக்கூ படைக்கும் மீராவிற்கு, மன்ற உறவுகள் எல்லாம் உங்கள் வீட்டில் கொட்டமடிக்க, சின்னக் கைப்பேசியில் அந்தப் பக்க உணர்வுகள்..
சின்னச் சின்ன நிகழ்வுகளைக் கூட கவிதையாய்ச் சிந்தும்(மூக்கையல்ல) உங்கள் எழுதுகோலில் இந்த உணர்வுகளை வடிக்க முடியுமா?

6. கலைவேந்தன்

உணர்வுகள் அழகுகள் அறிவு ஆகியவற்றின் சங்கமம் கவிதைகள். இந்தச் சங்கமத்தில் ஆளுக்கொரு வரிக் கவிதை என இன்னொரு சங்கமத்தையும் இணைத்தீர்கள். இக்கவிதைகளை இப்பொழுது திரும்பப் பார்க்கும் பொழுது உங்கள் மனதில் தோன்றும் முதல் மூன்று எண்ணங்கள் என்ன?

7. தங்கவேல்

சமுதாயம் பற்றிய அதீத சிந்தனை, யதார்த்தம் இவற்றின் இருப்பிடமே! இலக்கியவாதிகளின் தோளுரசும் உங்களின் "சொல்லனும்னு தோணுச்சு சொல்லிவிட்டேன்" என்பதற்கு அடுத்தப் படி என்ன?

8. நாகரா

சிக்கலானச் சிந்தனைகளை சின்ன வார்த்தைகளில் அடைத்துச் சொற்களில் பூக்க வைக்கும் வித்தகரே,

எழுத்தின் பயன் என்ன?

9. நுரையீரல்

உண்மை, பொறுமை, நேர்மை, எளிமை, மேன்மை (பொறுங்க பொறுங்க உங்களைப் பாராட்டல, இது கேள்வியின் பகுதி) என அனைத்துத் தன்"மை"களிலும் மை இருக்கிறதே ஏன்?


10. மன்மதன்

மன்றம் இதுவரை 4 தலைமுறைகளைக் கண்டுவிட்டது என எண்ணுகிறேன். நான்கு தலைமுறைகளையும் கண்ட பிதாமகர்களில் ஒருவர் நீங்கள். மன்றத்தின் பரிணாம வளர்ச்சி உங்கள் பார்வையில் வேண்டும். ஒவ்வொரு தலைமுறைக்கும் உரிய தனிச்சிறப்புகளுடன்!.

தங்கவேல்
02-07-2008, 01:01 PM
சமுதாயம் பற்றிய அதீத சிந்தனை, யதார்த்தம் இவற்றின் இருப்பிடமே! இலக்கியவாதிகளின் தோளுரசும் உங்களின் "சொல்லனும்னு தோணுச்சு சொல்லிவிட்டேன்" என்பதற்கு அடுத்தப் படி என்ன?

தாமரை, உண்மையில் சொல்கிறேன். உங்களின் நினைவின் சக்தி அதீதம். பாராட்டுக்கள்.

”சொல்லனும்னு தோனுச்சு சொல்லிவிட்டேன்“. எனது கையாலாகாத நிலையின் விளைவு இந்த வார்த்தைகள்.

அடுத்தபடி.. என்னால ஒன்னும் செய்ய இயலாது என்பது தான். ஏனெனில் எனக்கு என்னை நம்பி இருக்கும் குடும்பம் முக்கியம். வேறென்ன சொல்ல இயலும். இதுவும் எனது கையாலாகாத நிலையின் உணர்வுதான்.

எதுவுமே உன்னாலே முடியாதுன்னா, வேறெதுக்கு இப்படி எழுதுகிறாய் என்று நினைக்கத் தோன்றுகிறதா?

இதுதான் என்னால் இயலும்.

கொக்கியிலிருந்து தப்பித்தேனா தாமரை....

தாமரை
02-07-2008, 02:56 PM
மனதில் தோன்றுவதைச் சட்டெனச் சொல்லிவிடுவதுதானே உங்கள் பலம். கையால் ஆகாததைச் தலையால் செய்யலாம் என்பது சாணக்கியன் சொல். அதுமட்டுமல்ல வாழ்க்கை.

எனக்கென்னவோ உங்கள் பதில் அந்தச் சின்னக் கோட்டுக்கு மேலே இருப்பதா கீழே இருப்பதா எனச் சின்னக் குழப்பம். :D

நாகரா
02-07-2008, 03:31 PM
8. நாகரா

சிக்கலானச் சிந்தனைகளை சின்ன வார்த்தைகளில் அடைத்துச் சொற்களில் பூக்க வைக்கும் வித்தகரே,

எழுத்தின் பயன் என்ன?



தமிழ் மன்றத்தில் எப்போதும் வாடாது பூத்திருக்கும் தாமரையாரே! சொல்லின் செல்வரே! உம் கேள்விக்கு நன்றி. என்னால் இயன்ற வரை விடையிறுக்க முயல்கிறேன்.

"ஆதியில் எல்லாம் வார்த்தையாகவே இருந்தது" என்ற புனித யோவான் வேதாகம வாக்கும், "அகர முதல எழுத்து" என்று தொடங்கும் உலகப் பொது மறை திருக்குறளும் தான் என் நினைவில் எழுகிறது உம் கேள்வியைக் கேட்டதுமே!

நாம் ஒவ்வொருவரும் ஆதி வார்த்தையிலிருந்து அவதரித்த உயிர்ப்புள்ள மெய்யெழுதுக்கள் தாமே! நம் பயன் என்ன?

எழுத்து என்றால் முதலில் ஒலி வடிவம், நாதம்
அடுத்து அவ்வொலிக்கேற்ற வரி வடிவம், ஓளி, விந்து

அகர முதல எழுத்து - ஓங்கார நாத பரப்பிரம்மத்தை, பரமபிதாவை, அல்லாவை, புத்தரை, அருட்தந்தையைக் குறிக்கிறது.

எல் ஆம் ஆதி(எல்லாம் ஆதி) - (எல்-ஓளி) அடுத்து விந்து ஓளி ஆகும் ஆதிசக்தியை, பரிசுத்த ஆவியை, புனித 'ரு'வை, க்வான் யின்னை, அருட்தாயைக் குறிக்கிறது

பகவன் முதற்றே உலகு - பகவன் அம்மையப்பனின் புணர்தலில் உருவாகும் இறைமகவாம் சத்குருவை, கிறிஸ்துவை, ரசூலாம் நபிகளை, போதிசத்துவரை, உட்போதகரைக் குறிக்கிறது. இறைமகவே உலகின் மூல காரணம் என்று ஏகார உறுதியோடு வள்ளுவப் பெருந்தகை முடிக்கிறார்.

தந்தை ஒலியானத் தாய் ஒளியான எழுத்தின் பயன் தந்தை தாயின் தலைமகனாம் தலைமகளாம் இறைமகவே. அந்த இறைமகவின் பயனாகவே இவ்வுலகு எழுகிறது. யார் அந்த இறைமகவு? நாம் ஒவ்வொருவரும் தான் அந்த இறைமகவு!

"நீவிர் கடவுளரென்ற வேதாகம(பழைய ஏற்பாடு) வாக்கை அறியீரோ!"என்று குரு நாதர் இயேசு கிறிஸ்து தன்னை இறைமகவென்று அறிமுகப்படுத்திக் கொண்டதற்காக யூத குருமார்கள் அவரைத் தூஷித்த போது கூறினார்.

எழுத்தின் பயன் உணர்ந்து இறைமகவாய் எழுவோம்! எழுத்திலுள்ள 'எழு' என்ற இறை கட்டளையை அறிவோம்!
சாதி மத இன நிற பேதங்கள் யாவையும் தாண்டி நாம் ஒவ்வொருவரும் இறைமகவென்ற ஒருமையுணர்வில் ஒன்றுபடுவோம்! எழுத்தின் பயனாக ஞான யுகத்துக்கு வழி கோலுவோம்!

என்னால் இயன்ற வரை எழுத்தின் பயனுக்கு விடையிறுத்தேன். பிழையேதுமிறுப்பின் பொறுப்பீர்! நன்றி.

ராஜா
02-07-2008, 04:44 PM
தங்கம் மற்றும் நாகரா ஆகியோரின் அறிவார்ந்த* பதில்களுக்கு நன்றி.

தங்கம் பதில்கள் வாழையைப் போன்று எளிமைக்கு இலக்கணம் என்றால் நாகரா பதில்கள் பலாவின் தேன் சுவையை அனுபவிப்பது போல.இரண்டும் இருவேறு துருவங்கள்.. எனினும் இனிமையே..!

இளசு
02-07-2008, 06:22 PM
மிக மிக நறுவிசான கேள்விகள் தாமரை.. அசத்திட்டீங்க!

இதுவரை வந்த தங்கவேல், நாகரா - இருவர் பதிகளும் அருமை..

இன்னும் வரும் பதில்களுக்கு ஆவலாய் காத்திருக்கிறேன் -
குறிப்பாய் மன்றம் பற்றி மன்மதன் & வாத்தியார் பதில்களுக்கு..

தாமரை
03-07-2008, 01:07 AM
நன்றி நாகரா..

தமிழில் பொருத்தமாய் எழுத்துக்களுக்குப் பெயரிட்டு இருப்பர். உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் உயிர் மெய்யெழுத்துக்கள் என்று..

உயிரெழுத்துகள் மட்டுமே கொண்டு சொல்ல முடிந்த வார்த்தைகள் ஆ, ஈ, ஓ என்பது பலருக்குத் தெரியும். ஆனால் உ என்பதும் ஐ என்பதும் பொருள் தருபவை தான்.

ஆனால் மெய்யில் உயிரேறும் பொழுதுதான் ஜாலங்கள் தொடங்குகின்றன..

ஆனால்

எண்ணமெனும் உயிரூதி
எழுப்பி விட்ட எழுத்துக்கள்
என்னைப் பிரம்மானாக்கி

சின்னக் காகிதத்தில் இருந்து
செவ்வாயில் சனி நீக்கி
திங்களில் ஞாயிறு படைத்து
தானும் பிரம்மமாகும்

எழுத்தறிவித்தவன் இறைவனாம்
நானும் இறைவனாக
எழுத்தும் இறைவனாக

அழகான பதில் நாகரா!!!!

எண்ணிப் பார்க்கிறேன் அன்றொரு நாள் ஓதியதை

உயிர்
மெய் --- உண்மை உயிராகும்
உயிர்மெய் --- உண்மை எனப்படும் உயிர்சக்தியே
ஆய்தம் --- ஆயுதமாகும்
ஆகாரக் குறுக்கம் --- அளவோடு உண்பது
ஐகாரக் குறுக்கம் --- ஐம்புலனடக்கம்
ஔகாரக்குறுக்கம் --- ஔடதம் (மருந்துகள்) உண்ணலைக் குறைப்பது
ஆய்தக் குறுக்கம் ---- ஆயுதக்குறைப்பு
மகரக்குறுக்கம் ---- மனக்கட்டுப்பாடு ஆகியவை
உயிரெளபெடை ---- உயிர் நீளும் வழி.. நீண்ட நாள் வாழும் வழி,
குற்றியலுகரம் ---- இவற்றில் உறுதி குறைவது
குற்றியலிகரம் ---- பலநாள் காத்து இறுதியில் கைவிடுவது
ஒற்றெளபெடை --- என்ற ஒன்றே(ஒற்று) இன்று வரை அடுக்காய், அடுத்தடுத்து நீண்டு வந்து கொண்டிருக்கிறது


சித்துவிளையாடிச் சித்தமேறிச்
செத்துப்போகாத எழுத்துக்கள்

நன்றி நாகரா!

தாமரை
03-07-2008, 01:08 AM
தங்கம் மற்றும் நாகரா ஆகியோரின் அறிவார்ந்த* பதில்களுக்கு நன்றி.

தங்கம் பதில்கள் வாழையைப் போன்று எளிமைக்கு இலக்கணம் என்றால் நாகரா பதில்கள் பலாவின் தேன் சுவையை அனுபவிப்பது போல.இரண்டும் இருவேறு துருவங்கள்.. எனினும் இனிமையே..!



மா(ங்கா) கேள்விக்கு பலாவும் வாழையும் பதிலாய் வருவதில் முக்கனியின் சுவைதானே ராஜா!!!

ஷீ-நிசி
03-07-2008, 01:34 AM
கனிந்த மார்பில்லை என்றால் என்ன?
கனிந்த மனம் போதும் ஆண்களும் தாயாக!

:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:

ராஜா
03-07-2008, 03:30 AM
மா(ங்கா) கேள்விக்கு பலாவும் வாழையும் பதிலாய் வருவதில் முக்கனியின் சுவைதானே ராஜா!!!
:aetsch013::icon_b::aetsch013::icon_b::aetsch013::icon_b:

ராஜா
03-07-2008, 06:43 AM
மற்றுமுள்ளோர் பதில் காண ஆவலாக இருக்கிறோம்..!

செல்வா
03-07-2008, 09:03 AM
3. செல்வா

புது முயற்சி = செல்வா, செல்வாவிற்குப் புதுமுயற்சி என்றால் வெல்லக்கட்டி. ஆனால் அடுத்தடுத்தப் புது முயற்சிகளில் சில பழையவை மறக்கப்படுகின்றன. அப்படிக் கைவிட்ட பழையப் புதுமுயற்சிகளில் ஒன்று உங்களிடம் வந்து என்னை ஏன் பாதி வழியில் தொலைத்தாய் என்று கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்?

தனது ஆ… பத்து கேள்விகளில் ஒன்றை எனக்கு ஒதுக்கி என்னையும் ஆபத்தில்:eek: சிக்க வைத்த தாமரையண்ணாவுக்கு நன்றி :D:D.
(கேள்வில வஞ்சப்புகழ்ச்சி இருக்குதோ???:sprachlos020::sprachlos020:)

பழையவை மறக்கப் படுகின்றன என்பது இல்லை அண்ணா. எந்த முயற்சியுமே வெற்றியடைந்தாலும் தோல்வியடைந்தலும் மறக்க இயலாத ஒன்று. ஏனென்றால் ஒரு புதிய முயற்சி எடுக்கும் போது அதற்காக சிறிதாவது உழைக்க வேண்டியிருக்கிறது.
உதாரணமாக வெண்பா எழுதுதல். வெண்பாவின் இலக்கணம் பள்ளியில் பயின்றாலும் மறந்து போய்விட்ட ஒன்று. எழுத வேண்டும் எனும் போது அதைப்பற்றி படிப்பதற்காக தேடினேன். மன்றத்திலேயே பல திரிகள். மரபுக்கவிதை எழுதுவது எப்படி, மற்றும் இலக்கணங்கள் பற்றி அவற்றை நகலெடுத்து வாசித்தேன். முதல் முயற்சியில் ஒரு வரிகூட தளைதட்டாமல் எழுத இயலவில்லை. மீண்டும் வெண்பாக்கள் வாசித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக மனதில் அதைப்பற்றி சிந்தித்து ஒரு கட்டத்தில் எழுதாலாம் என்று அமரும்போது வார்த்தைகள் தானாக விழுந்தன. முழுமை பெறவில்லை என்றாலும் அதிக கடினமில்லாமல் எழுத முடிந்தது. அதிலும் சிலகுறைகள் என்றாலும் சிறிது முயற்சி செய்தால் சரிசெய்து விடலாம்.

இதே போன்று தான் ஒப்புமை எழுதும் போது. காளமேகப் புலவரின் பாடல்கள் வாசிக்கும் போது இதைப்போன்று எழுதவேண்டும் என்ற ஆவலில் எழுதியது. ஆனால் சிலேடை என நினைத்து நான் எழுதியது ஒப்புமை எனத் தெளிவாகியது. அந்த திரியில் தான் சிலேடை என்றால் என்ன என்பதையும் ஒப்புமை என்ற ஒரு அணியைப் பற்றியும் தெரிந்து கொண்டேன்.

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் ஒவ்வொரு முயற்சியின் போதும் நான் பலவற்றைக் கற்றுக் கொள்கிறேன். அந்த பாடங்களை நான் மறப்பதில்லை. ஆக எந்தப் புதிய முயற்சியையோ அதனால் பெற்ற அனுபவத்தையோ நான் மறப்பதில்லை.

ஆனால் ஏன் என்னைத் தொடரவில்லை அரைகுறையாக விட்டு விட்டாய் எனக் கேட்டால்.
:D:D:D
சோம்பல்.... சோம்பல்... சோம்பலைத்தவிர வேறில்லை :frown::frown:
ஆனால் கண்டிப்பா தொடருவேன்... தொடர்ந்து முடிச்சிடுவேன். எப்போண்ணு மட்டும் கேக்க கூடாது…:icon_ush: அப்டிங்கறது தான் என்னோட பதிலா இருக்கும்.:D

அப்பாடா .... எஸ்கேப்... :icon_rollout::icon_rollout:

ஆதவா
03-07-2008, 10:25 AM
மூவரின் பதில்களும் மிக அருமை...

lolluvathiyar
03-07-2008, 11:17 AM
தாமரையிடம் ஆபத்தில் சிக்கி விட்டேன். அதுவும் வசமாக. சும்மாவே தற்பெருமைகாரனான என்னை ஓவராகவே புகழ்ந்து விட்டார் இனி நமக்கு கூடுதல் வால் அல்லவா முளைச்சுக்கும். சரி அவர் கேளிவிக்கு வருகிறேன்.



2. லொள்ளு வாத்தியார்
தமிழ் மன்றத்தில் அனைவரும் பெரும் பயன் பெறவும் மன்றத்தின் தரம் உயரவும் 10 கட்டளைகள் தேவை.

மன்றத்தில் இனையும் உருப்பினர்களுக்கு தான் கட்டளைகள் இருக்கு. இவர் மன்றத்துக்கே கட்டளை தர சொல்லராறே. அதுவும் என்ன ஒன்னா ரென்டா 10. ம் சரி அதுக்கும் என்னால் முடிந்த ஆலோசனை தருகிறேன்.

மன்றத்தில் அடிபடை நோக்கம் நிரைய உருப்பினர்கள் வரவேன்டும். இங்கு உள்ள பயனுள்ள விசயங்களை அறிய வேன்டும். கொஞ்சம் பொழுது போகவேன்டும். பயனுள்ள விசயங்களை வழங்க வேன்டும். விசயங்கள் வழங்குபவர்களை ஊக்குவித்து பின்னூட்டம் இடம் வேன்டும்.

கடந்த சில மாதங்களாக உருப்பினர்கள் என்னிக்கை கூடி கொன்டே போவது ஒரு ஆரோக்கியமான விசயம். நிரைய பயனுள்ள தகவல்கள் வருவதும் நல்ல விசயம். ஆனால் மன்றத்தின் முக்கிய நோக்கம் உருப்பினர்கள் பங்களிக்க வேன்டும் என்பதே. அப்பொழுதுதான் அவர்கள் தமிழ் வளரும், எழுத்து ஆற்றல் வளரும், பொதுவான அறிவும் வளரும்.

இங்கு பதியபடும் சில பதிவுகள் மற்ற தளங்களிலிருந்து எடுத்து பதிய படுவது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. பயனுள்ள தகவல்கள் எங்கிருந்து வந்தாலும் தவறில்லை. நான் அந்த தகவல்களை வேன்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் மன்றத்தின் மைய நோக்கம் பங்களிக்க வைக்க வேன்டும் என்பது தான். நேரம் ஒதுக்கி ஒருவர் உழைத்து ஒரு சில பக்கங்கள் டைப் அடித்து படைப்பு படைக்கிறார்கள், அதே பகுதியில் பிற தளத்திலிருந்து எடுக்கபட்ட படைப்புகளும் நிரைய இருந்தால் சில பிரச்சனைகள் இருக்கு. அதாவது புதியவர்கள் அந்த பகுதிக்குள் எட்டி பார்க்கும் போது சில பதிவுகள் காப்பி பேஸ்ட் செய்யபட்டது என்று அறிந்தால் அந்த பகுதியில் உள்ள மற்ற படைப்புகளும் அவ்வாராக இருக்கும் என்று நினைத்து விடுவார்கள். இதனால் உழைத்து பதித்த படைப்பாளியை உற்சாக படுத்தாமல் சென்று விடுவார்கள். இந்த பிரச்சனையை சரி செய்ய

கட்டளை 1:
பிறதளத்திலிருந்து எடுக்கபட்ட தகவல்கள் என்று ஒரு தனி பகுதி ஆரம்பித்து அங்கு மட்டுமே பிறதள தகவல்கள் பதிய வேன்டும். கன்டிப்பாக மற்ற இடங்களில் பதிய கூடாது என்று விதிமுரை வகுக்க வேன்டும். அவ்வாறு பதியபடும் தகவல்களை மாற்றி பதித்தவர்களுக்கு எச்சரிக்கையும் தரவேன்டும். அந்த பகுதியும் கீழே தான் இருக்க வேன்டும்.

கட்டளை 2:
கலாய்பு செய்வது நம் மன்றத்தில் மிகவும் இனிமையான பகுதி. ஆனால் அனைத்து பகுதிகளிலும் கலாய்பு இருக்க கூடாது என்று கருதுகிறேன். கலாய்பு மன்றம் என்று ஒரு தனி பகுதி ஆரம்பித்து அதில் கலாய்பு செய்ய உட்பகுதிகள் பிரித்து அங்கு மட்டுமே தொடர் கலாய்பு செய்ய வேன்டும் மற்ற இடங்களில் அதிகமா (சுத்தமாக அல்ல) கலாய்பு செய்ய கூடாது என்று சின்ன விதிமுரை இருப்பது நல்லது. சிரிப்பு பகுதியை இங்கு வைத்து விடவேன்டும்.

கட்டளை 3:
காதலுகென்றே ஒரு தனி பகுதி (மன்றம்) வேன்டும். எப்பவுமே காதலுக்கு இருக்கும் பாப்புலாரிட்டி வேற எதுக்கும் இருக்காது. அங்கு காதல் கவிதைகள், காதல் கடிதங்கள், காதல் அனுபவங்கள், காதலை பற்றிய கட்டுரைகள் காதல் பற்றிய விவாதங்கள் இப்படி சில உட்பிரிவுகள் வைத்து விடலாம். (இந்த இடத்தில தான் எப்பவுமே கூட்டம் அலைமோதுமே)

கட்டளை 4:
திரியை ஆரம்பித்தவரா அவர் திரியை தற்காலியமாக முடக்கும் வசதி ஏற்படுத்த வேன்டும். பிறகு அதில் உள்ள மற்றவர்கள் பதித்த தவறான பின்னூட்டங்களையும் மரைக்கும் (Hide) வசதி வேன்டும். அந்த திரியையே குப்பைக்கு அனுப்பும் வசதியும் வேன்டும். ஆனால் நிர்வாகத்தினரின் சரி என கருதினால் மீன்டும் அந்த திரியை பழைய இடத்துக்கு கொன்டு வந்து உயிர்பிக்கலாம்.
எதற்க்கு இந்த கட்டளை : ஏதாவது ஒரு திரியில் திசை மாறி தேவையற்ற தனிமனித தாக்குதல் மதம் சார்ந்த சர்சைகள் கிளம்பினால் அல்லது திரிக்கும் சுத்தமாக சம்மந்தமில்லாத பதிப்புகள் கூடினால் திரியை ஆரம்பித்தவரே அதை தற்காலியமாக முடக்கி சர்சையை நிறுத்தி விடுவார்.

கட்டளை 5:
நமது பின்னூட்டங்களை திருத்தும் வசதி இருக்கிறது. ஆனால் அதை நீக்கும் வசதியும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். தவறான பதிவு பதித்தவர்கள் அதை நீக்கி விட்டு போய் விடுவார்கள். இதனால் பதித்தவர்களே பழைய குப்பைகளை நீக்கி விடுவதால் நிர்வாகத்துக்கு வேலை பலு குரையும். குப்பைகள் சேராது.

கட்டளை 6:
ரேட்டிங் சிஸ்டம் இருப்பதை பலர் கவனிப்பதில்லை ( நானும் தான்) அது ஒரு நல்ல சிஸ்டம். ரேட்டிங்க் செய்ய ஊக்குவிப்பதற்க்கு அதற்க்கும் 1 இபணம் தானாக க்ரெடிக் ஆகும் படி செய்யலாம். மேலும் பின்னூட்டங்களுக்கு ரேட்டிங் சிஸ்டம் இருந்தால் சிறப்பாக இருக்கும். அங்கு பதியபடும் ரேட்டிங் பதிப்பாளருக்கு பாயின்டாக ஏறும்.

கட்டளை 7:
மன்றதலைப்புக்கு அடியில் கடைசி போஸ்ட் திரியை காட்டுவதை விட மிக சிறந்த திரி என்று நிர்வாக கருதும் திரிகளை தான் மேலே நிர்வாகம் ஹைலைட் செய்து காட்ட வேன்டும். இதனால் பழைய திரியாக இருந்தாலும் நல்ல திரிகள் அவ்வபோது முன்னனிக்கு வந்து செல்ல வாய்பு இருக்கிறது. அதை கான உருப்பினர்களுக்கும் வாய்பு கிடைக்கிறது.

கட்டளை 8:
பேசிக் எடிட்டர் மோடில் போட் கலர் பார்மாட்டிங் வசதி வேன்டும். இடைபட்ட காலத்தில் இந்த வசதி தமிழ் மன்றத்தில் இருந்தது சில தொழில் நுட்ப பிரச்சனை காரனமாக அது நீக்கபட்டு விட்டது. (அரசியல் கட்சி ஆரம்பிக்கும் திரி பரபரப்பாக இருந்த போது இந்த வசதி இருந்தது) தற்பொழுது டைப் அடிக்கலாம் பார்மாட்டிங் செய்ய முடியாது. அல்லது இகலப்பையில் டைப் அடித்து வந்து பேஸ்ட் பன்னி பார்மாட்டிங்க் செய்யலாம் இரன்டில் ஏதாவது ஒன்றை தான் செய்ய முடிகிறது.

கட்டளை 9:
பயனாளர் பெயரை மரைக்கும் வசதி, தமிழ் மன்றத்தில் லாகின் ஆனவுடன் மேலே ரைட் சைடில் வெல்கம் பயனாளர் பெயர் மற்றும் சில இடங்களில் லாக்ட் இன் ஏச் பயனாளர் பெயர் தெரிகிறது. இதை தெரியாமல் இருக்க செய்ய வேன்டும். காரனம் இருக்கிறது. நமது நன்பர் யாருக்காவது தமிழ் மன்றத்தை காட்ட ஆசை படுகிறோம் ஆனால் நமது பயனாளர் பெயர் அவருக்கு தெரியகூடாது என்று நினைகிறோம். அப்ப இது மிகவும் பயன்படும்

கட்டளை 10:
ஒவ்வொரு உருப்பினருக்கும் டிஸ்ப்ளே பெயர் என்று தனியாக ஒரு பீல்ட வைத்துவிட்டால் வசதியாக இருக்கும். அதாவது அவர் ஆங்கில பெயரில் லாகின் ஆகி உள்ளே நுழைந்து விடுவார் (அது லாகினுக்கு மட்டும் பயன்படும்). அவர் விரும்பும் பெயர் பதிப்புகளில் தெரியும் படி அவரே அமைத்து கொள்ளும் வசதி. இப்பொழுது லாகின் ஆகிற பெயர் தான் தெரிகிறது. பிரௌசிங் சென்டரில் தமிழில் லாகின் ஆக முடியாது.

மன்றங்களை மாற்றி அமைப்பது பற்றி.

போட்டி மன்றம் என்று ஒரு தனி பகுதி ஆரம்பித்து அதில் கவிதை, கதை, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தலாம்.
செவ்வந்தி மன்றத்தில் இருப்பவற்றை மல்லி மன்றத்தில் இனைத்து விடலாம் அதாவது கவிதை, கதை எல்லாம் ஒரே பகுதியில் இருந்தால் நல்லது.

புதிய அமைப்பு முரை
முல்லை மன்றம்
நிர்வாக அறிவிப்புகள்
உங்களை அறிமுகம் செய்து கொள்க
கவிஞர்கள் அறிமுகம்
மன்றம் குறித்து சந்தேகம், ஆலோசனை

கலாய்பு மன்றம்
நகைசுவை பகுதி
கலாய்பு கவிதைகள்
கலாய்பு கதைகள் (மன்றத்தினர் எழுதும் கலாய்பு தொடர்கதைகள்)
மன்றத்து உறவுகளை கலாய்பு பகுதி
சமையல் கலை அழகு குறிப்புகள் (இங்கு கலாய்பு இருந்தால் நன்றக இருக்கும்)
சிறுவர் மன்றம்

மல்லி மன்றத்தின் அமைப்பு
சிறுகதைகள், தொடர்கதைகள், நீதிகதைகள்
சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்
கவிதை பட்டறை
கவிதை பாடல்கள்
இலங்கியங்கள் + படித்ததில் பிடித்தது (இனைத்துவிடலாம்)

காதல் மன்றம்
காதல் கவிதைகள்
காதல் கட்டுரைகள்
காதல் கடிதங்கள்
காதல் விவாதங்கள்

ரோஜா மன்றம் சாமந்தி மன்றம் இரன்டையும் இனைத்து விடலாம். இரன்டும் கல்வி சம்மந்தபட்டதுதான் அங்கு
கனினி இனையதள சந்தேகங்கள் கட்டுரைகள்
தமிழ் எழுத்துறு கட்டுரைகள் / சந்தேகங்கள்
மருத்துவம்
கல்வி (அனைத்து விசயங்க்ளும்)
ஆன்மீகம் / மதம் சார்த்த கட்டுரைகள் (விவாதம் அல்ல)
பயனுள்ள தகவல்கள்

தாமரை மன்றம்
செய்திகள்
அரசியல் செய்திகள்
பொது விவாதம்
வாழ்த்துகள்

மற்றவைகளில் மாற்றம் இல்லை

ஓவரா அடிச்சு தள்ளீட்டனோ

தாமரை
03-07-2008, 11:19 AM
மனந்திறந்த பதிலுக்கு நன்றி செல்வா!

சலிப்பிற்கும் வெற்றிக்கும் இருக்கும் இடைவெளி மிகச் சிறியதுதான். இல்லையா செல்வா!!!

மன்றப் படைப்புகளைப் பாதியில் விடுவதை நான் சொல்லவில்லை,

என் கேள்விக்கான விளக்கத்தையும் தந்து விடுகிறேன்.
ஒரு கைவிடப்பட்ட முயற்சி மறுபடி வந்து என்னை ஏன் தொலைத்தாய் என்று கேட்கிறது.

இதைக் கற்பனையில் ஒரு நிகழ்காட்சியாகப் பார்ப்போம்.

ஒரு முயற்சி.. நீண்ட காலத்திற்கு முன் செய்தது.. மிக எளிதான எடுத்துக்காட்டு -- நீச்சல் கற்றுக் கொள்ள நினைத்தது... முயற்சி செய்தது.. முழுதாகக் கற்றுக் கொள்ளாமல் பாதியில் விட்டது இது மாதிரி..

அது மீண்டும் எதிரில் வருகிறது என்றால், அதற்கானத் தேவை இப்பொழுது வந்து விட்டது என்று அர்த்தம்.. சுற்றிலும் நீர். நீந்தியாக வேண்டும்,,,

அப்பொழுது மனதில் ஒரு எண்ணம் எழும், நீச்சல் உங்களையே கேட்பதைப் போல.. என்னை ஏன் கைவிட்டாய் என...

வேறு வகையில் நாம் கைவிட்ட முயற்சிகள் நம்மைக் கேள்வி கேட்க முடியாதுதானே!.. அவற்றின் தேவைகள் எதிரில் வரும்பொழுது
அது நம்மைக் கேள்வி கேட்பது போலத் தோன்றும் இல்லையா?

சிவா.ஜி
03-07-2008, 11:21 AM
தங்கவேலு- உண்மையைச் சுருக்கமாக சொல்லி அசத்தினார்,

நாகரா- எப்போதும் போல எனக்கு அதிகம் புரியாத மிகப் பெரிய விஷயங்களை அழகாக சொல்லி அசத்தினார்,

செல்வா- புது மூயற்சிகள் தொடரப்படவில்லையானாலும்...அதனால் பெற்றது அதிகம் என்று அருமையாக சொல்லி அச்சத்தியிருக்கிறார்.

ஆக ஆ பத்துக் கேள்விகளுக்கு ஆ அசத்து என அனைவரும் அசத்துகிறார்கள்..

வாழ்த்துகள் கேள்வி நாயகருக்கும், பதிலளித்தோருக்கும்.

ஆதவா
03-07-2008, 11:34 AM
அருமை வாத்தியார்... காதல் மன்றம் பற்றிய யோசனை இருந்து வருகிறது.. தன் திரியைத் தானே முடக்கும் வசதி எல்லாருக்கும் சரிபட்டு வராது./. பல விசயங்கள் யோசிக்கத் தகுந்தவை...

leomohan
03-07-2008, 12:06 PM
[
4. லியோமோகன்

அட, இவருக்கு மட்டும் நேரம் எங்கிருந்து கிடைக்கிறது எனப் பலரும் ஆச்சரியப்படும் நபர். அறிவுத் தேடலிலும், தேடியதைப் பகிர்வதிலும் இணையில்லாதவர். காலமேலாண்மையினைக் கைகொள்ள 10 கட்டளைகளைச் சொல்லுங்களேன்!



நினைவில் கொண்டதற்கு நன்றி செல்வன் அண்ணா.

இதோ இன்றுக்குள் என் பதில்கள்.

தாமரை
03-07-2008, 12:16 PM
அசத்திட்டீங்க வாத்யாரே!.. பல நல்ல பயனுள்ள யோசனைகள்..

நிர்வாகிகளின் தலையை உருட்ட நிறைய விஷயங்களைத் தந்திருக்கீங்க..
நல்ல விஷயங்கள் அதிகமா இருந்தா மாறித்தானே ஆகணும்..

leomohan
03-07-2008, 01:17 PM
காதல் மன்றத்திற்கு என்னுடைய ஓட்டும். வாத்தியாரே தூள் கிளப்பிட்டீங்க போங்க.

நாகராவின் பதில்கள் அருமை.

ராஜா
03-07-2008, 01:36 PM
வாத்தியாரின் 100 % சீரியஸ் பதில்கள் சூப்பர்..

அப்படியே எந்தப் பிரிவிலிருந்தும், எந்தப்பிரிவுக்கும் நேரடியாகத் தாவும் வசதியையும் கேட்டிருக்கலாம்..!

leomohan
04-07-2008, 08:17 AM
4. லியோமோகன்

அட, இவருக்கு மட்டும் நேரம் எங்கிருந்து கிடைக்கிறது எனப் பலரும் ஆச்சரியப்படும் நபர். அறிவுத் தேடலிலும், தேடியதைப் பகிர்வதிலும் இணையில்லாதவர். காலமேலாண்மையினைக் கைகொள்ள 10 கட்டளைகளைச் சொல்லுங்களேன்!

நினைவு கூர்ந்தமைக்கு நன்றி செல்வன் அண்ணா.

தூங்கி கழிப்பதால் ஒன்றும் செய்யாமலேயே வயதாகிவிடும் என்று சொல்வார்கள். ஆனால் நான் தூங்கும் போதும் வஞ்சனையில்லாமல் தூங்குவேன். வேலை செய்யும் போதும் அவ்வாறே.

இந்த நேரத்தில் தான் தூங்குவேன், இந்த நேரத்தில் தான் சாப்பிடுவேன் என்று உடல் ஒரு பாதைக்குள் வராமல் இலுகுவாக இருக்க பழகிக்க கொண்டேன். (flexibility). இது ஆரம்ப காலத்தில் முன்னேற தேவைப்படும். ஆனால் கட்டுகோப்பாக (systematic) இருப்பதே நல்லது என்று இப்போதெல்லாம் நேரத்திற்கு உறங்கி, உடற் பயிற்சி செய்து, நேரத்திற்கு உண்டும் வருகிறேன்.

நான் அதிக நேரம் திட்டமிடுதலில் செலவிடுவேன் - planning 80%
பிறகு அதை செயல்படுத்தவதில் குறைந்த நேரம் தான் - execution 20%
ஒரு காரியத்தில் இறங்கும் முன் அதனுடைய எல்லா சாத்தியக் கூறுகளையும் கற்பனை செய்துக் கொள்வேன். அதாவது possibilities. அதில் கற்பனை என்று சொன்னது anticipation. இப்படி நடக்கலாம், இப்படியும் நடக்கலாம், இப்படி நடந்தால் என்று பலவாறாக கற்ப்பனை செய்துக் கொண்டு அப்படி நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் யோசித்து வைத்துக் கொள்வேன். அதனால் நாம் எதிர்பார்த்த மாதிரி நடக்காவிட்டால் அடுத்த வழி தயார். If Plan A fails, Plan B, Plan C, Plan D are ready :-).

அடுத்த முக்கியமான விஷயம் நான் எந்த பணியை மேற்கொண்டாலும் அதை விரும்பி ரசித்து செய்வேன். வேலையை செய்யும் போது சிரித்து மகிழ்வதும், வாயால் விசில் ஊதிக் கொள்வதும், பழைய இளையராஜா பாடல்களை பாடிக் கொள்வதுமாக வேலையை காதலித்து செய்வேன். நான் ரதித்து செய்யாத விருப்பமில்லாமல் செய்யும் வேலைகளின் தரம் குறைந்திருக்கும். அதனால் சில நேரத்தில் பிடிக்காத விரும்பாத வேலைகளையும் ரசிக்க முயற்சி செய்வேன்.

தனியாகவே இருப்பதால் சில நன்மைகள். ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை செய்ய முடிகிறது. அதில் துணி துவைப்பது, இஸ்திரி போடுவது, வீ்ட்டை சுத்தம் செய்வது, அடுப்பறை சுத்தம் செய்வது, உடற் பயிற்ச செய்வது, சமைப்பது என்று நேரடியாக பணிக்கு careerக்கு உதவாத செயல்களும் உண்டு.

கதை, கட்டுரை, கவிதை எழுதுவது மிகவும் பிடிக்கும். அதற்கும் முழு கதையும் மனதில் ஓட்டிய பிறகே எழுத துவங்குவதால், எழுதம் போது நேரம் செலவாகாமல் தடையில்லாமல் ஓடும்.

ஆங்கில தட்டச்சு சுமார் 90 வார்த்தைகள் ஒரு நிமிடத்திற்கு தட்டச்சு செய்து பழகியதால (computer operator ஆக துவங்கியதன் பலன்) பலர் 8 மணி நேரம் கொண்டு செய்யும் வேலைகளை ஒரு மணி நேரத்தில் செய்து முடித்துவிடுவேன். உதாரணமாக request for proposal, bid response, bid management, report writing போன்ற வேலைகள்.

அடுத்த முக்கியமான விஷயம் ஒரு பெரிய பணியை சிறிய பணிகளாக உடைத்துக் கொள்வேன். உதாரணமாக 10 மாடி கட்டிடத்தில் ஏற வேண்டும் என்றால் 2 மாடிகளாக பிரித்துக் கொள்வேன். முதலில் 10 மாடி ஏற வேண்டுமா என்று மலைக்காமல் இரண்டு மாடி தான் என்று நினைத்துக் கொண்டு அதை முதலில் எட்ட முயல்வேன். பிறகு அடுத்தடுத்த அடுக்குகள்.

கடைசியாக never celebrate success before you succeed என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன். வெற்றியடையமால் வெற்றி அடைந்துவிட்டதாக நினைப்பது வெற்றிக்கு பெரிய பாதமாக அமையும். ஆனால் வெற்றியடைந்தால் அதை விருப்பமானவர்களிடம் எப்படி பகிர்ந்துக் கொள்வேன், எப்படி அதை மின்னஞ்சலில் தெரிவிப்பேன், என்ன எழுதுவேன் என்று கற்பனை செய்துக் கொள்வேன். இது வெற்றியை அடைய ஒரு எரிபொருள் போல. ஆனால் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அந்த வெற்றி இலக்கை அடைந்த பிறகு அதை பெரிய விஷயமாக கொண்டாடாமல் அடுத்த இலக்கை நோக்கி பயணம் செய்ய துவங்குவேன். அதாவது ஒன்றை எட்டி விட்டால் அது ஒரு பெரிய சாதனையே இல்லை. செய்ய முடிகிற காரியம் தான் என்று சொல்லிக் கொள்வேன்.

Summarize செய்ய வேண்டுமென்றால் விரும்பி செய்யும் வேலைக்கு நேரம் எப்படி வேண்டுமானால் கிடைக்கும். அதிக திட்டமிடுதல் குறைந்த நேரத்தில் செயல்படுத்துதல். பெரிய இலக்கை சிறிய பகுதிகளாக பிரித்துக் கொள்ளுதல். வெற்றியை கற்பனை செய்துக் கொண்டு visualize அதன் மூலம் உந்தும் சக்தி பெருதல் - இவையே எனக்கு பல விதமான disparate பணிகளை செய்ய சக்தியும் நேரமும் தருகிறது.

நன்றி.

meera
04-07-2008, 09:25 AM
5. மீரா

சின்னச் சின்னக் கற்கண்டுத் துகள்களாய் (ஹை)ஹக்கூ படைக்கும் மீராவிற்கு, மன்ற உறவுகள் எல்லாம் உங்கள் வீட்டில் கொட்டமடிக்க, சின்னக் கைப்பேசியில் அந்தப் பக்க உணர்வுகள்..
சின்னச் சின்ன நிகழ்வுகளைக் கூட கவிதையாய்ச் சிந்தும்(மூக்கையல்ல) உங்கள் எழுதுகோலில் இந்த உணர்வுகளை வடிக்க முடியுமா?



அண்ணா, உங்களுக்கு இந்த தங்கை மேல் பாசம் அதிகம் என்று தெரியும் அதற்க்காக இப்படியா மாட்டிவிடுவது.

குருவிக்கூட்டில் கூடிய
மன்றப்பறவைகளை காண
அம்பைத்துறந்த வில்லாய்
மனம் சீறிபாய
கடிவாளமிட்டு
கட்டி இழுத்த போதும்
தானும் ஒன்றாய்
கலந்துவிட துடிக்கும்
என் இதயத்திற்கு
நினைவூட்டியவள்
இல்லை இல்லை
உயிரூட்டியவள்
என் உயிர்த் தோழி
அழைத்துவி என்று
உள்ளம் இரைஞ்ச
விட்டுவிடுவேனா?
தட்டிவிட்டென் என்களை
அழையோசியின் மணியை
அன்று தான் மனம்
சங்கீதமென........
சத்தமின்றி இயங்கும்
இதயம்
அந்த சில நிமிடம்
அதிகமாய் சத்தமிட்டு
தாள்மிட - இதோ
எதிர்முனையில் நம்
பறவைகளின் பாசக்குரல் கெட்டு
மனம் பொங்கிய
மகிழ்ச்சி...
சிறிது ஏக்கம்...
புகை வண்டியிடம்
போட்டியிட்ட
காதின் புகை........
இன்னும் இன்னும்
அத்தனையும்
சொல்லிவிட வார்த்தைகளை
தேடிக்கொண்டு
என்
பயணம் முடிவுறாமல்....



அண்ணா இதை சின்ன வரிகளில் தர முயற்சித்ததின்
விளைவு

குருவிக்கூட்டில்
மன்றப்பறவைகளின்
மாநாடு
மரக்கிளையில் தான் இருக்கிறேன்
மனம் நிறைய
ஏக்கத்தோடு......:traurig001::traurig001:

தாமரை
04-07-2008, 10:08 AM
சில காலங்களுக்கு முன் என்னிடம் வீசப்பட்ட இதே கேள்வியை, அதற்கான என் பதிலைத் திரும்பப் பார்க்கிறேன் லியோ இப்பொழுது!

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=333888&postcount=1353

பார்க்கின்ற கோணம் வேறு என்றாலும் என்ன பார்த்தோம் என்பது ஏறக்குறைய ஒன்றுதான்.

நன்றி லியோ!!!

தாமரை
04-07-2008, 10:23 AM
அன்புத் தங்கை மீரா

எழுதவும் முடியாமல் முட்டுகின்ற உணர்வுகளைக் கட்டில் கொண்டு வருவது ...

அழகான உவமை ஒன்று.. பலருக்குப் புரியாது..

அம்பைத்துறந்த வில்லாய்
மனம் சீறிபாய


சிறுவயதில் வில்-அம்பு விளையாட ஆரம்பித்த பொழுது, அம்பை எப்படி நாணில் பொருத்துவது என்று தெரியாது. கட்டை விரலாலும், ஆள்காட்டி விரலாலும் நாணின் அருகில் அம்பின் பின்முனையை பொருத்தி வில்லை வளைத்து, விரல்களின் பிடியைத் தளரவிட

அம்பு காலடியிலே விழும். அதிகம் இழுத்ததின் காரணமாய் வில் அதிரும்..

ஆசைகள் எண்ணங்கள் எல்லாம் காலடியிலேயே விழுந்து விட அதிரும் உணர்வு இதயத்திற்கு....

அழகான உவமை!!!

மணியடிக்கும் வேளையில் தான் மனதில் எத்தனை எண்ணங்கள் நான் நீ யெனப் போட்டி போட்டுக் கொண்டு...

மூச்சு முட்ட வைக்கும் உணர்வுகளை, அழகு கவிதையில் காட்டி இருக்கிறாய்.

நன்றி!

leomohan
04-07-2008, 11:28 AM
சில காலங்களுக்கு முன் என்னிடம் வீசப்பட்ட இதே கேள்வியை, அதற்கான என் பதிலைத் திரும்பப் பார்க்கிறேன் லியோ இப்பொழுது!

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=333888&postcount=1353

பார்க்கின்ற கோணம் வேறு என்றாலும் என்ன பார்த்தோம் என்பது ஏறக்குறைய ஒன்றுதான்.

நன்றி லியோ!!!


a) வீட்டில் நல்ல குடும்பதலைவராக.. அனிருத் ஸ்வேதாக்கு நல்ல அப்பாவாக உங்கள் பெற்றோருக்கு நல்ல மகனாக, மருமகனாக எங்களை போன்ற தங்கைகளுக்கு அண்ணனாக மன்றத்தில் ஆலோசகராக என்று எவ்வளவோ பொறுப்புக்கள்.... அதையும் தாண்டி இன்னும் எவ்வளவோ பணிச்சுமைகளுக்கு மத்தியிலும்
எப்படி உங்களுக்கு மட்டும் எப்பிடி டென்ஷனே வரமாட்டேங்குது......???
டைம் இல்லை... மறந்துட்டேன் இது போன்ற பதில்களை இதுவரை நான் உங்களிடம் கேட்டதே இல்லை.....???
எப்படின்னா எல்லாத்தையும் நினைவில வச்சிருகீங்க......??

இந்த கேள்விக்கு தங்கள் பதில் அருமை அண்ணா. இந்த முறை தாயகம் திரும்பும்போது கட்டாயம் சந்திப்போம்.

mukilan
05-07-2008, 02:59 AM
அனைவரின் பதில்களும் ஆச்சரியப் பட வைக்கின்றன. செல்வரின் கேள்விகளும் அவற்றைக் கேட்கத் தேர்ந்தெடுத்த நபர்களும் அடடா! இதனை இவன்கண் என வள்ளுவப் பெருந்தகை சொன்னதை அற்புதமாக செய்திருக்கிறீர்கள் செல்வன். எல்லாவற்றிற்கும் மேலாக இப்படி ஒரு திரியினை நடத்திவரும் திரியின் ராஜாவிற்கு என் நன்றி!
ஒரு சின்ன உள்குத்து(வெளிக்குத்தாக்கூட முடியலாம் :D)


a) எங்களை போன்ற தங்கைகளுக்கு அண்ணனாக மன்றத்தில் ஆலோசகராக
என்ன இது! என்ன இது!! விளக்கம் பிளீஸ்:rolleyes:

சுகந்தப்ரீதன்
05-07-2008, 03:08 AM
1. சுகந்தப் பிரீதன்

பல சமயங்களில், கேள்விக்குப் பதிலாய்க் கேள்வி கேட்டு, விட்டு விடுவதன் அடிப்படைக் காரணம், சிக்கலான விஷயங்களில் தப்பிக்கவா ? அல்லது வேறு எதாவது காரணமா?!.
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே எனக்கு...??:icon_p: (எதுக்கு இந்த பாட்டுன்னு உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்..)

என்னவோ பத்தாம்வகுப்பு வினாத்தாளை கையில கொடுத்த மாதிரி இருக்கு எனக்கு.. எனக்கான உங்களோட கேள்வியை பார்த்ததும்..!! ஆமாம் இந்த கேள்விக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்..?? யோசிச்சி பார்த்த ஒன்னுமே தோணலை.. ஆனா ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது.. என்ன வச்சி நீங்க அரசியல் பண்ணுறீங்களோன்னு..??!:sauer028:

சமீபத்துல தேனி பக்கத்துல திருவிழாவுக்கு பேர்போன ஊர்பேரை உடன் வச்சிருக்குற கார்த்திகேயேரை நோக்கி தோட்டத்துல தைலம் தயாரிக்கிற வைத்தியரோட வாடிக்கையாளர் ரெண்டுபேர் சில குற்றச்சாட்டுகளை வச்சி ஒரு கேள்வி எழுப்பி இருந்தாங்க..?! சரி.. அந்த கேள்விக்கு பதிலா கார்த்திகேயர் என்ன பண்ணுனார்.. வைத்தியரை நோக்கி அவர் ஒரு கேள்வி கேட்டிருக்காரு..? அதுக்கு பதிலா வைத்தியரு அடுத்து என்ன கேள்வி கேட்க போறாருன்னு தெரியலை..??!

சரி..இப்ப விசயத்துக்கு வருவோம்.. ஏன் இவங்க இப்படி செய்யுறாங்க..?? அதாவது ரெண்டு தரப்புல இருந்த கேள்வியிலயும் உண்மை இருக்குது.. இன்னும் விளக்கமா சொல்லனும்ன்னா சிக்கல் இருக்குது..!! ஆக அதிலிருந்து எப்படியாவது தப்பிக்கனும்.. அப்ப மக்களோட பார்வையை திசை திருப்பி எதிராளியை நோக்கி ஒரு கேள்வியை கேட்டு அவர்களை முட்டாளாக்கனும்.. அவ்வளவுதான்..!! மக்களும் வழக்கம்போல அதையெல்லாம் கண்டும் காணம அவர்கள் வேலையை பார்க்க கிளம்பிடுவாங்க..!! உங்களை மாதிரி புத்திசாலிங்க வேணும்ன்னா அதையெல்லாம் உத்துப்பார்த்துக்கிட்டு கேள்விக் கேட்டுக்கிட்டு உட்காந்திருக்கலாம்..!!:wuerg019:

ஆக கேள்விக்கு பதிலா கேள்விகேட்டு, விட்டு விடுவதன் அடிப்படைக் காரணம்.. தங்களோட தவறுகளை மற்றவர்கள் பார்வையிலருந்து மறைச்சி சிக்கல்ல இருந்து தப்பிக்கறதுதான்..!!

இதை நம்ம ஆத்தாவோட கேள்விக்கு நம்ப தாத்தோவோட பதிலையும், தாத்தாவோட கேள்விக்கு ஆத்தாவோட பதிலையும் அன்றாடம் பார்த்தாவே தெரியும்.. அடிமுட்டாளுக்கும் அதுக்கான அடிப்படை காரணம்.. அப்படியிருக்க அடியேன் உங்களுக்கா தெரியாம இருக்கும்..? தெரிஞ்சும் தெரியாத மாதிரி கேள்விகேட்டு என்னை பதில்சொல்ல வச்சி காமடி பண்ண பாக்குறீங்க அப்படித்தானே அண்ணாச்சி..?!:fragend005:

உண்மையை சொல்லனும்ன்னா எனக்கு இன்னமும் இந்த கேள்வி எந்த தளத்துல என்கிட்ட கேட்கபட்டிருக்குன்னு பிடிபடலை..!! இது என்னை மையமா வச்சி நீங்க பின்னுன வலையின்னா அதுக்கு என்னோட பதில் இதுதான்..!!

பல சமயங்களில்,எந்த சமயன்ன்னு நீங்க தெளிவா சொல்லியிருக்கலாமே..??:lachen001:

பதிலாய்க் கேள்வி கேட்டு, விட்டு விடுவதன் அடிப்படைக் காரணம்,பதிலுக்கு பதில் நீங்க கேள்விப் பட்டதில்லையா அண்ணா..??:aetsch013:

சிக்கலான விசயங்களில் தப்பிக்கவா ?சிக்கலான விசயம்ன்னு தெரிஞ்சும் மாட்டிக்க நானென்ன மலரா..??:sprachlos020:

அல்லது வேற ஏதாவது காரணமா ?மேலே சொன்ன விளக்கம் போதாதா உங்களுக்கு..??:icon_ush:

சரி..சரி..கொஞ்சம் தெளிவாவே இதுக்கு பதில் சொல்லிடுறேன்..!! பொதுவா ஒரு கேள்விக்கு பதில்கேள்வி கேட்கறதுக்கு முக்கிய காரணம்.. அந்த கேள்வி எந்த கோணத்துல கேட்கப்பட்டிருக்குங்கறதை அறிந்துக் கொள்ளும் ஆர்வம்தான் அண்ணா..!! அதன் பிறகு அதை அப்படியே விட்டு விடுவதற்கான காரணம் இரண்டு இருக்கிறது அண்ணா..!!

1.அந்த கோணத்தில் மேற்கொண்டு விவாதிக்க விருப்பம் இல்லாமல் அமைதியாகிவிடுவது, 2.விருப்பம் இருந்தும் பிரச்சனைகளை தோற்றுவிக்கும் என்று தோன்றினால் அதை அப்படியே கைவிட்டு அமைதியாகிவிடுவது. இந்த இரண்டாவது காரணம்தான் முக்கியமாக அமைந்துவிடுகிறது பெரும்பாலும் எனக்கு..!! அதற்கு காரணம் கருத்துக்கூறி காயப்பட்ட அனுபங்கள் தவிர வேறென்ன இருக்க முடியும் அண்ணா..????!:smilie_abcfra:

ராஜா
05-07-2008, 04:09 AM
சுகந்தனின் பதிலில் பல சந்தேகங்கள் விடுபட்டிருக்கின்றன. அதற்கான மூலமும் தென்பட்டிருக்கிறது.


நன்றி சுகந்தா..!

தாமரை
05-07-2008, 05:22 AM
முதலில் தெளிவான பதிலைச் சுவையாகக் கொடுத்த சுகந்தனுக்கு நன்றிகள்.

பொதுவாகவே ஒரு கேள்வி வீசப்படும் பொழுது என்னை மட்டும் ஏன் என்ற கேள்வி எழுவது இயல்புதான். இங்க கேள்வியை யாரையாவது நோக்கி வீசித்தானே ஆகணும்.. பென்ஸைக் கேட்கலாம், அறிஞரைக் கேட்கலாம்.. இளசைக் கேட்கலாம்,, தலையைக் கேட்கலாம் இப்படி யார் கிட்ட வேணும்னாலும் கேட்கலாம்.. ஆனால் நான் தேடித்தான் உன்னை தேர்ந்தெடுத்தேன். ஏனென்றால் சிக்கல் ஏற்படாமலும் ஏற்பட்டாலும் முடிச்சு இல்லாமல் அவிழ்ப்பதிலும் பதிவது உன்னுடைய ஒரு கலை.. இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கத் தகுதியான நபர்கள் எனக்குத் தெரிஞ்சு ரெண்டு பேர்தான்..

1. பிரதீப்
2. சுகந்தப் பிரீதன்



சரியான கேள்விக்குச் சரியான ஆளைத்தான் தெர்ந்தெடுத்திருக்கிறேன் என்றச் சந்தோஷம் இப்போது,...

நிஜமாகவே கேள்விக்கு பதிலாய் கேள்வி வரும்பொழுது சிந்திக்க வேண்டிய விஷயங்களைக் கச்சிதமாய் சொன்னதுக்கு பரிசும் உண்டு..


உண்மையிலேயே நீ சொன்ன விஷயங்களை மன்ற விவாதத் திரிகளில் மனதில் கொண்டால் விவாத ஆரோக்கியம் உயரும். பலன் அதிகரிக்கும்..


250 ஐ-கேஷ்!

சுகந்தப்ரீதன்
05-07-2008, 06:07 AM
உண்மையிலேயே நீ சொன்ன விஷயங்களை மன்ற விவாதத் திரிகளில் மனதில் கொண்டால் விவாத ஆரோக்கியம் உயரும். பலன் அதிகரிக்கும்..
அந்த பலனைத்தான் அண்ணா நானும் எதிர்பார்க்கிறேன் நம்மவர்களிடம்..!!

250 ஐ-கேஷ்!
மிக்க நன்றியண்ணா..!! (ஆனாலும் ரொம்ப கம்மி..பாவம் ஸ்வேதாவும் அனிருத்தும்..:icon_rollout:)

நுரையீரல்
05-07-2008, 09:42 AM
9. நுரையீரல்

உண்மை, பொறுமை, நேர்மை, எளிமை, மேன்மை (பொறுங்க பொறுங்க உங்களைப் பாராட்டல, இது கேள்வியின் பகுதி) என அனைத்துத் தன்"மை"களிலும் மை இருக்கிறதே ஏன்?
"மை" இருந்தால் தான் பேனாவுக்கு மகி"மை". இங்கே மனிதனை பேனாவாகவும், உண்மை, பொறுமை, நேர்மை, எளிமை, மேன்மை போன்றவற்றை, பேனாவில் ஊற்றி எழுதப்படும் "மை" ஆக கருதினால், னால், னால்... மேற்கண்ட "மை" கள் இல்லாவிட்டால், பேனாவான மனிதனுக்கு மகி"மை" இல்லை.

"மை" களை பட்டியலிட்ட தாமரைக்கு ஒரு கேள்வி, இந்த "மை" பட்டியலில் கடமையை ஏன் சேர்க்கவில்லை. எருமையையும் சேர்த்திருக்கலாமே.

சுகந்தப்ரீதன்
05-07-2008, 09:48 AM
""மை" களை பட்டியலிட்ட தாமரைக்கு ஒரு கேள்வி, இந்த "மை" பட்டியலில் கடமையை ஏன் சேர்க்கவில்லை. எருமையையும் சேர்த்திருக்கலாமே.
வாங்கோ மாம்ஸ்..!!:icon_b:

எங்கடா ரொம்ப நாளா மாம்ஸோட குசும்பை காணுமேன்னு பார்த்தேன்..!! உண்மையிலியே உங்கக்கூட வாழ எங்க அக்காவுக்கு ரொம்பவே பொறுமை வேணும் போலிருக்கு..:icon_rollout:

தாமரை
05-07-2008, 09:57 AM
நுரையீரலிடம் பெரிய பதிலை எதிர்பார்த்தேன். ரொம்பச் சுருக்கமாய்ச் சொல்லி என்னையும் ஒரு கேள்வி கேட்டு விட்டார். பரவாயில்லை..

தமிழில் இலக்கணத்தின் ஆழத்தையும் சொற்களின் ஆழத்தையும் நோக்கினால் தமிழ் எத்தனைப் பரிணாமங்களைத் தாண்டி வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே பண்புப் பெயர்கள் என்று சொற்களுக்கு பெயர் சூட்டியது மட்டுமல்லாமல் பண்புப் பெயர்களாகிய வெண்மை, பசுமை, இளமை, குளுமை, வெம்மை என்று மை யிட்டு அவற்றை அழகு பார்த்திருக்கின்றனர்.

பேனா மை மட்டுமல்ல..

மை என்பது பல வண்ணங்கள். ஒரு காட்சியிலோ அல்லது ஓவியத்திலோ உயிரோட்டம் தருபவை. அது போல மனிதனுக்கு உயிர் கொடுப்பவை பண்புகள், பண்புகள் இல்லா மனிதன் வண்ணமில்லாச் சித்திரம்.. கோட்டோவியத்துக்குக் கூட குறைந்த பட்சம் இரு வண்ணங்கள் தேவை.. இல்லையா?

கடமை மற்றும் எருமை போன்றவை பெயர்ச் சொல்கள், பண்புப் பெயர்கள் அல்ல... அதனால் பட்டியலில் இணைக்க வில்லை,

அனைத்துப் பண்புப் பெயர்களையும் பட்டியலிட முடியுமா என்ன? அதனால்தான் உங்களுக்குப் பொருந்தும் பண்புகளில் சிலவற்றை மட்டும் சொன்னேன்.

இளசு
05-07-2008, 10:39 AM
வாத்தியாரின் பல '' கட்டளைகள்'' உருப்படியானவை.. ஆலோசிக்கத் தக்கவை..

மோகனின் பணிப்பண்பாடு - எனக்கும் அமைந்தால்? ம்ஹ்ஹ்ஹு!
பகிர்தலுக்கு நன்றி மோகன்..

சுகந்தனின் பதில்கேள்விகள் சுவை!

நுரையின் தனித்தன்'மை' பதில் அரு'மை'!

மன்மதன் பதில் எங்கே?


''

நாகரா
05-07-2008, 11:18 AM
நுரையீரலாரின் குறும்பதில் அருமை, தாமரையாரின் இலக்கணப் புலமை தமிழ் மன்றத்துக்குப் பெருமை.

உண்மை = உள் மெய் = உள்ள மெய்ம்மை = உள்ளிருக்கும் மெய்ம்மை = உள்ளுடம்பாம் சுத்த தேகம்(இது உம் பிறப்புரிமை, மரணமிலாப் பெருவாழ்வை நிரூபிக்கும் மகிமை)
பொறுமை = பொறு மெய் = பொறையுணர்வுள்ள(பொய்யையும் பொறுக்கும் பெருந்தயவுள்ள) மெய்ம்மை
நேர்மை = நேரான மெய் = உயர்நெறியான மெய்ம்மை
எளிமை = எளி மெய் = கடைப்பிடிக்க எளிய(எப்போதும் அலட்டிக் கொள்ளாத) மெய்ம்மை
மேன்மை = மேல் மெய் = மேலான மெய்ம்மை(மேல் கீழ் என்று பாரபட்சம் பாராத)
மெய்ம்மை = மெய் மெய் = மெய்யை வலியுறுத்தும் ஒரு பொருட் பன்மை
கடமை = கடம் ஐ = கட மெய் = கடமாகிய உடம்பின் மெய்ம்மை(அதைப் பணிவுடன் ஒப்பி, கடத்துள் ஒளிரும் 'ஐ'யாம்(I AM) தலைமைக்கு தலை வணங்கல் நம் தலையாய கடமை)
எருமை = எரு மெய் = எருவாம் சேற்றில் பூத்த மெய்த் தாமரையாம் எருமை(தமிழ் மன்றத் தாமரையாரும் ஆன்ம நேய ஒருமையில் எருமையாரே, சும்மா தமாஷுக்கு சொன்னேன்)

மை = ம்+ஐ = ஐம்(ஐம் என்பது தந்திர யோகத்தில் கலைமகளாம் சரஸ்வதி பீஜ மந்திரம்)

சொல்லைப் பிரித்து மெய்ப்பொருள் காணல்
நற்றமிழ் எழுத்தின் பயன்

சொல்லைப் பிளந்து சொல்லுட் புகுந்து
வெல்லுக எழுத்தின் பயன்

எல்லாச் சொல்லும் பொருள்குறித்தே நிற்கும்
உண்மை எழுத்தின் பயன்

இது நாகரா அரவத்தின் கடிகள்(விஷமில்லை, விஷமமே), தாமரையார் மன்னிக்க!

நன்றி.

தங்கவேல்
05-07-2008, 01:44 PM
மக்கள் பட்டைய கிளப்புறாங்க.... தூள்.....................

செல்வா
05-07-2008, 03:12 PM
வேறு வகையில் நாம் கைவிட்ட முயற்சிகள் நம்மைக் கேள்வி கேட்க முடியாதுதானே!.. அவற்றின் தேவைகள் எதிரில் வரும்பொழுது
அது நம்மைக் கேள்வி கேட்பது போலத் தோன்றும் இல்லையா?

சூழலைப் பொறுத்துத்தான் எனது முடிவு இருக்கும். அந்தச் செயலை முடிக்கக் கூடிய அளவுக்குக் கற்க எனக்கு நேரமிருக்குமென்றால் அதைக் கற்று விட்டே வேலையை முடித்துவிடலாம்.
பாதிதெரிந்த வித்தையைக் கொண்டு எந்தளவிற்கு அந்த வேலையை என்னால் முடிக்க இயலும் என்பதையும் பார்க்க வேண்டும். அந்த வேலை எனக்கு எந்த அளவிற்கு முக்கியம் என்பதையும் பொறுத்து எனது முடிவு அமையும்.
நான் கற்ற பாதி வித்தையைப் பயன்படுத்தாமல் அதைச் சிறப்பாக வேறுவழிகளில் முடிக்க இயலுமென்றால் அவ்வழியில் முடிப்பேன். இல்லை நானே தான் செய்தாக வேண்டும் வேறு எந்த வழியும் இல்லை என்றால் துணிந்து இறங்கி விடவேண்டியது தான். அனுபவத்தின் வாயிலாகவே கற்றுக் கொண்டு வெற்றியடையலாம் ஆனால் இறுதிவரை எனது முயற்சி இருக்கும்.
**************************************************************************************
என்னை நிறையவே சிந்திக்க வைத்த கேள்வி இது. பலமுறை என்னை நானே கேள்வி கேட்க, மறுபரிசீலனை செய்ய வைத்த கேள்வி இது. எனது சிந்தனையோட்டத்தை அப்படியே இங்கேத் தருகிறேன்.
ஒரு புதியது கற்றுக்கொள்ளும் போது .

இதை எதற்காக நான் கற்றுக் கொள்கிறேன்? எனது தொழிலுக்கா? சமுதாய வாழ்க்கைக்கா? எனது ஆத்ம திருப்திக்கா?

கற்க ஆரம்பிக்கும் போதே குறைந்த பட்சம் இதை நான் எந்தளவிற்கு வாழ்க்கையில் பயன் படுத்தப்போகிறேன்? இதனால் எனக்கு என்ன பயன்? என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு என்ன பயன்? இந்த உலகிற்கு இதைவைத்து என்னால் ஏதும் செய்ய இயலுமா?

இந்தத் தேவைகளைப் பொறுத்து நான் எந்தளவிற்கு இதைக் கற்க வேண்டும் என்ற அளவுகோலும் கொள்ளவேண்டும். அதை எட்டும் வரை கைவிடாது இருத்தலும் வேண்டும்.

தேவை மற்றும் பயன்களைப் பொறுத்து வகையறிந்து கற்க ஆரம்பித்தால் கண்டதையும் கற்க ஆரம்பித்து பாதியில் விடாமல் கற்பவற்றை முழுமையாகக் கற்கும் முனைப்பும் ஆர்வமும் தெளிவும் கிடைக்கும்.

இது இதன் ஒரு பக்கம்…. இன்னொரு பக்கம்…

முழுமையாகக் கற்கவேண்டும் என்பதே கேள்விக்குறியாகி விட்டதே அண்ணா?
ஒன்றாம் வகுப்புப் குழந்தையே ஒன்பது பாடங்கள் படிக்கும் காலமாகிவிட்டது.
இதில் எதை முழுமையாகக் கற்பது? எந்த ஒரு துறையை எடுத்தாலும் அதன் பிரிவுகள் உட்பிரிவுகள் என்று சென்று கொண்டே இருக்குமே.. அந்தம் தெரியாத ஆகாயம் போன்று.
ஆவல் இருக்கும் வரைத் தேவையிருக்கும் தேவை இருக்கும் வரைத் தேடலும் இருக்கும்.
இந்த ஆவலும் தேவையும் தான் முடிவு செய்கின்றன எதைக் கற்க வேண்டும், எது வரை கற்கவேண்டும் என்பதை.

நீச்சல் தெரியதவனையும் தூக்கி தண்ணீருக்குள் போட்டால் கைகளையும் கால்களையும் அடித்து முயற்சி செய்து கண்டிப்பாகப் பிழைக்க வேண்டும் என்ற வெறி இருந்தால் நீச்சல் தெரியாமலே நீச்சலடித்து கற்றுப் பிழைக்கவும் செய்வான். அதே நேரத்தில் ஐயையோ எனக்கு நீச்சல் தெரியாதே என்ன செய்வேன் என்று தத்தளித்தால் தண்ணீருக்குள் மூழ்கியும் தான் போவான்.

ஆக… கற்பதை இயன்றவரை முழுமையாகக் கற்க வேண்டும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும்… தேவை ஏற்படும் போது முயலாதிருப்பதே பெரும்பிழை.
நம்பிக்கையோடு நல்லுழைப்பும் சேர்ந்தால் கற்க முடியாதென்பதோ சாதிக்க முடியாதென்பதோ ஏதும் உண்டோ?

(ரொம்ப யோசிக்க வச்சிட்டீங்க அண்ணா… மனதில் தோன்றியதை எல்லாம் சொல்லிவிட்டேன். ஆனால் இன்னும் பதில் தேடிக்கொண்டே தான் இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இதுவும் ஒரு புது முயற்சிதான்.)

நுரையீரல்
05-07-2008, 07:11 PM
நுரையீரலிடம் பெரிய பதிலை எதிர்பார்த்தேன். ரொம்பச் சுருக்கமாய்ச் சொல்லி என்னையும் ஒரு கேள்வி கேட்டு விட்டார். பரவாயில்லை..
எல்லாருக்கும் அருமையான கேள்வியைக் கேட்ட நீங்க, எனக்கும் அதேபோல அருமையான கேள்வியைக் கேட்டா... நான் எப்படி பதில் சொல்றதாம்.

சட்டியிலிருந்தா தானே ஆப்பையிலே வரும். இந்த அருமையான கேள்வியை சிவாண்ணன்கிட்ட கேட்டிருந்தா பொறுமையா பதில் சொல்லியிருப்பார், அது பெருமையா இருந்திருக்கும்.

இதில மருமகப்புள்ள வேற, என்னை சிறுமைப் படுத்துறதிலயே குறியா இருக்கார்.

கண்மணி
06-07-2008, 03:22 AM
ஆழமாக யோசிக்க வைக்கும் சிந்தனைகள்.

தாமரை
06-07-2008, 03:24 AM
நீச்சல் தெரியதவனையும் தூக்கி தண்ணீருக்குள் போட்டால் கைகளையும் கால்களையும் அடித்து முயற்சி செய்து கண்டிப்பாகப் பிழைக்க வேண்டும் என்ற வெறி இருந்தால் நீச்சல் தெரியாமலே நீச்சலடித்து கற்றுப் பிழைக்கவும் செய்வான். அதே நேரத்தில் ஐயையோ எனக்கு நீச்சல் தெரியாதே என்ன செய்வேன் என்று தத்தளித்தால் தண்ணீருக்குள் மூழ்கியும் தான் போவான்.

ஆக "கற்பதை இயன்றவரை முழுமையாகக் கற்க வேண்டும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும்" தேவை ஏற்படும் போது முயலாதிருப்பதே பெரும்பிழை.



சாக்கு சொல்லுதல், பழி போடுதல் இவற்றைத் தள்ளி வைத்து விட்டு திரும்ப வரும் அந்த ஒரு காரியத்துக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று உடனே ஆராய்ந்து செயலில் இறங்குதல்...

அன்றைய நிலையில் அது சரி, இன்றைய நிலையில் இது சரி... ஆக காரணங்களைப் பற்றி யோசிக்காமல், பழியை வேறு எதாவது ஒன்றின் மேல் தள்ளி விட முயற்சிக்காமல் உடனே தேவையான முயற்சிகளில் இறங்குதல்..

ஒன்றுமே தெரியாமல் இருப்பதை விட பாதி கற்றதைக் கொண்டு கொஞ்சம் நல்லாவே சமாளிக்கலாம், பொழுது உபயோகமாய்க் கழிந்ததா என்பதே மிக முக்கியம்.

இதைத்தானே செல்வா சொல்வதற்காக வார்த்தைகள் தேடுகிறீர்கள்?:icon_b:

தாமரை
06-07-2008, 03:30 AM
எருவாம் சேற்றில் பூத்த தாமரை

சேறு ஈரப்பதம் மிக்கது. மன்றம் அன்பு மிக்கது. இதில் பூப்பதற்கு மயக்கமில்லை..

உங்கள் மை என் எழுத்துகளுக்கு எருவானால் அதுவும் எருமை தானே!!!

ஓசைகள் எழுத்தாய் வடிக்கப்படுகையில் உளிகள் செதுக்கிய சிற்பமாய் அழகு தெரிகிறது.

ஓவியன்
06-07-2008, 03:37 AM
சித்துவிளையாடிச் சித்தமேறிச்
செத்துப்போகாத எழுத்துக்கள்

நாகரா அண்ணாவின் பதிலும், அதற்குச் செல்வன் அண்ணாவின் விளக்கத்திற்கும் நான் மேற்கோளிட்ட வரிகள் கன கச்சிதப் பொருத்தம்..

இதற்கு மேல் நான் என்ன சொல்ல....!!

கற்றேன், இன்னும் பல கற்கவேண்டும்...
மேதைகள் இருவரிடமிருந்தும்.

இளசு
06-07-2008, 07:04 AM
...

அன்றைய நிலையில் அது சரி, இன்றைய நிலையில் இது சரி... ஆக காரணங்களைப் பற்றி யோசிக்காமல், பழியை வேறு எதாவது ஒன்றின் மேல் தள்ளி விட முயற்சிக்காமல் உடனே தேவையான முயற்சிகளில் இறங்குதல்..



அசத்திட்டீங்க தாமரை!

செல்வா இரு தவணைகளில் சொன்னதைப் படித்தேன்.
நான் பாதியில் விட்ட பலவும் ( பொதுவாய் தமிழ், குறிப்பாய் இலக்கியம்/இலக்கணம், அறிவியல், நீச்சல், ஹிந்தி,கேரம், கபடி, இசைக்கருவி, நாடகம்............ )
ஒரு குழுவாய் கோரத்தாண்டவம் ஆட , விழித்தேன்.

இதுவரை - முயற்சி என்றால்
இதை எல்லாம் என் பிள்ளைகள் தலையில் திணிப்பது என எண்ணியிருந்தேன்..

செல்வா, உங்கள் பதில்களால் கொஞ்சம் தெளிவடைந்தேன்.

தாமரை
06-07-2008, 08:44 AM
கலைவேந்தன்,மன்மதன் (வரிசை மாறினால் அர்த்தம் மாறிவிடுமே:lachen001:)

இருவரையும் விரைந்து வந்துப் பதிலளிக்க அன்புடன் அழைக்கிறேன்..



6. கலைவேந்தன்

உணர்வுகள் அழகுகள் அறிவு ஆகியவற்றின் சங்கமம் கவிதைகள். இந்தச் சங்கமத்தில் ஆளுக்கொரு வரிக் கவிதை என இன்னொரு சங்கமத்தையும் இணைத்தீர்கள். இக்கவிதைகளை இப்பொழுது திரும்பப் பார்க்கும் பொழுது உங்கள் மனதில் தோன்றும் முதல் மூன்று எண்ணங்கள் என்ன?


10. மன்மதன்

மன்றம் இதுவரை 4 தலைமுறைகளைக் கண்டுவிட்டது என எண்ணுகிறேன். நான்கு தலைமுறைகளையும் கண்ட பிதாமகர்களில் ஒருவர் நீங்கள். மன்றத்தின் பரிணாம வளர்ச்சி உங்கள் பார்வையில் வேண்டும். ஒவ்வொரு தலைமுறைக்கும் உரிய தனிச்சிறப்புகளுடன்!.

மன்மதன்
06-07-2008, 11:04 AM
10. மன்மதன்

மன்றம் இதுவரை 4 தலைமுறைகளைக் கண்டுவிட்டது என எண்ணுகிறேன். நான்கு தலைமுறைகளையும் கண்ட பிதாமகர்களில் ஒருவர் நீங்கள். மன்றத்தின் பரிணாம வளர்ச்சி உங்கள் பார்வையில் வேண்டும். ஒவ்வொரு தலைமுறைக்கும் உரிய தனிச்சிறப்புகளுடன்!.


இன்னும் வரும் பதில்களுக்கு ஆவலாய் காத்திருக்கிறேன் -
குறிப்பாய் மன்றம் பற்றி மன்மதன் & வாத்தியார் பதில்களுக்கு..

4 தலைமுறைகள் என்று சொல்வதை விட 2003 ல் மன்றம்
துவங்கியதிலிருந்து இன்று வரை 2 கால கட்டமாக பிரிக்கலாம்.

ஒன்று திஸ்கி காலம்.
இப்பொழுது யுனிகோடு காலம்.

2003 ஏப்ரலில் மன்றம் துவங்கியதில் இருந்து
இன்று வரை மன்றம் தன் களையை இழந்ததில்லை..

அன்றிலிருந்து இன்று வரை மன்றத்தின்
வளர்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
பல்வேறு தடைகளை மன்றம் கண்டாலும் அதையெல்லாம் தகர்த்தெறிந்து இன்றும் தமிழ் இணைய உலகத்தில் முதல்
இடத்தில் இருப்பதில் மூத்த உறுப்பினர் என்ற முறையில்
பெருமைதான் எனக்கு.

மன்றத்தின் வளர்ச்சிக்கு காரணம் இவர்கள்தான்
என்று பெயர் குறிப்பிட்டு சொல்ல இயலவில்லை..
மன்றத்து உறுப்பினர் அனைவரும் மன்ற வளர்ச்சிக்கு
காரணமாக அமைந்தவர்கள்.

அன்றும் இன்றும் மன்றத்தில் மேற்பார்வையாளர்கள்
வெகு சிறப்பாக கவனித்துக்கொள்கிறார்கள்..
எந்தவொரு சிக்கலான திரியையும் யாருக்கும் மனசு நோகாமல் கையாள்வது என்பது சுலபமான காரியம் அல்ல.
சாதித்துக்கொண்டிருக்கிறார்கள்...

இன்றைக்கு மன்றம் பல புதிய பகுதிகளை
இணைத்துள்ளது.. இன்னும் பல புதிய வசதிகள்
காலத்திற்கேற்ப மன்றம் அப்டேட் செய்து கொள்ளும்.


விகடன் பத்திரிக்கை தொடங்கி 75 வருடம் நிறைவுற்றும்
இன்னும் அது இளமையாக இருப்பது மாதிரி, மன்றமும்
எந்த வருடத்திலும் இளமை, புதுமையாக இருக்கும்
என்று உறுதியாய் சொல்வேன்.

அன்றிலிருந்து இன்று வரை மன்றம் பல கவிஞர்களை
உருவாக்கியிருக்கிறது. இன்று இணையத்திலும் வெளியிலும்
கவிஞர்களாக புகழ்பெற்றிருக்கும் உறவுகள் முதலில் தமிழ்மன்றத்தில்
தனது கவிதைகளை பதித்து மகிழ்ந்திருக்கிறார்கள்..

ஒரு பத்திரிக்கை நடத்துவது என்பது எவ்வளவு கஷ்டமோ
அந்தளவு ஒரு பெரிய இணையதளத்தை நடத்துவதும்.
இராசகுமாரன் இதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
இளசு / அறிஞர் தலைமையில் மன்றம் இன்னும் பல
சாதனைகள் புரிய வேண்டும். மன்றத்தில் இந்த வசதிகள்
தேவைப்படுகிறது என்று ஒரு வார்த்தை தெரிவித்தால் போதும்
உடனே அது நிறைவேற்றப்படும்.. நமக்காக உழைக்கும் நல்ல உள்ளங்கள்..

நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்..
இந்த கேள்வியை தனி திரியாக்கி
அதில் இளசு அண்ணா / அறிஞர் / பிஜிகே / மனோஜி அண்ணா / நாரதர் / ஆரென்ஜி/ பாரதி / தலை மணியா / கவிதா
இவர்கள் அனைவரும் அதில் பதிவுகளை கொடுத்தால் என்னவொரு சுகமாக இருக்கும்..

ராஜா
06-07-2008, 12:13 PM
இயல்பான, எளிமையான பதில் மன்மி..!

இம்மாமன்றத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் என்பதில் நீங்கள் கொண்டிருக்கும் பெருமிதம் மிகச் சரியானதே..!

நன்றி..!

நாகரா
06-07-2008, 12:23 PM
தாமரையார் கேட்ட எழுத்தின் பயன்மணக்கத்
தாமரையாய்ப் பூத்த திரி.

அமரன்
06-07-2008, 12:57 PM
அகழ்ந்தெடுக்கும் கேள்விகள்.
அடுக்குகளை கிளறி அடுக்கிய பதில்கள்.
அத்தனையும் முத்துக்கள்.


மன்மியின் பதிலை இன்னும் விரிவாய் எதிர்பார்த்தேன்
மன்றத்தின் மாண்பை அறியும் ஆவலில்!
கிடைத்தவரை கிடைத்தது ஆனந்த வரை!

மிச்சமாக இருக்கும் பதிலை எதிர்பார்த்தபடி.
அடுத்த வினாவாளரை அழைக்க முயல்கிறேன்

அனைவருக்கும் நன்றி!

நாகரா
06-07-2008, 04:01 PM
1. சாலை ஜெயராமன்

தன் இயல்பாம் அன்பை மறந்து, வன்பின் பாலையாய் மனிதம் வரண்டிருப்பதற்கு, தற்கால ஆன்மீக மடங்கள் எவ்வகையில் பொறுப்பு?

2. ஆதி

ஏழ்மையின் அவலத்தைப் பாடும் நா வன்மையும், அந்த அவலத்தை உடனே தீர்க்கும் செல்வ வளமையும், உமக்கு ஒருங்கே வாய்க்கப் பெற்றிருந்தால்(இரண்டையும் செய்ய உங்களால் முடியும் என்பதே பொருள்), நீவிர் முதலில் எதைச் செய்வீர்.

3. ஆதவா

ஓரு கவிதை சரியாகப் புரிந்து கொள்ளப் படாததற்கு, அதை இயற்றிய கவிஞன் தான் முழுப் பொறுப்பேற்க வேண்டுமா?

4. அனு

ஆன்மீக எழுச்சியில் நவ யுகப் பெண்டிரின்(பாரதி சொன்ன புதுமைப் பெண்) பங்கீடு என்ன?

5. பூமகள்

ஒரு படைப்பாளி தன் படைப்பை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ளப் பின்னூட்டங்கள்(விமர்சனங்கள்) உதவுமா?

6. ப்ரவீண்

தமிழைப் பிழையின்றி எழுதுவது அவசியமென்றால், அதை நம் மன்றத்தில் அமல் படுத்த குறைந்த பட்சம் முதல் கட்ட நடவடிக்கையாக நாம் என்ன செய்ய வேண்டும்?

7. தாமரை

புதியதோர் உலகம் செய்ய விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமா?

8. இதயம்

இதயம் என்பது வெறும் இரத்த இயந்திரமா அல்லது அன்பை இறைக்கும் கடவுளின் உறைவிடமா?

9. இளசு

கவிஞன் காலியாயிருக்கக் கவிதை அவன் வழியே விழுகிறதா? அல்லது கவிஞன் நிரம்பியிருக்கக் கவிதை அவன் வழியே எழுகிறதா?

10. சிவா.ஜி.

நம் தமிழ் மன்றம் உலகத் தமிழரிடையே இன்னும் பரவலாக இடம் பிடிக்க சில உத்திகளைச் சொல்வீரா?

(பி.கு.: அமரன் அழைப்புக்கு இணங்கி பத்துப் பேரைக் கேள்விகளால் தீண்டுகிறேன். இவ்வாறு மன்றத்தில் கேள்விகள் கேட்பது என் முதல் அனுபவம், எனவே பிழைகளைப் பொறுப்பீர், மன்னிப்பீர், உம்மைத் தீண்டும் வாய்ப்புக்கு நன்றி - இப்படிக்கு ஒரு நல்ல பாம்பு)

நாகரா
06-07-2008, 04:04 PM
மிச்சமிருக்கும் ஒரு பதிலுக்குக் காத்திராமல்(கலைவேந்தரின்), அவசரக்குடுக்கையாய் முந்திக்கொண்டேன், அமரரே, மன்னிக்கவும்.

நன்றி

தாமரை
06-07-2008, 04:37 PM
7. தாமரை

புதியதோர் உலகம் செய்ய விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமா?

அவசியமா என்ற கேள்வியே தவறுன்னு நினைக்கிறேன். விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைந்துதான் இருக்கின்றன, இரண்டும் ஒரே இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

விஞ்ஞானத்தினால் கண்டுபிடிக்க முடிந்ததை மெய்ஞானத்தினால்தான் பக்குவமாகச் சமுதாயத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்க முடியும்.

எந்த ஒரு கண்டுபிடிப்பையும் சரியாகப் பயன்படுத்த பக்குவப்பட்ட மனம் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட மனதைத் தரவல்லது மெய்ஞானமே!!!

விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் பிரித்துப் பார்ப்பதற்குக் காரணம், மக்களுக்கு ஆரம்பமும் புரியவில்லை, முடிவும் தெரியவில்லை.. பூமி தட்டையானது என்று சொல்கிறோமே. அதைப் போன்ற ஒரு தோற்றப் பிறழ்வு..

எப்படி விஞ்ஞானத்தில் குறுகியகால நோக்குடைய ஆராய்ட்சிகள், நீண்டகால நோக்குடைய ஆராய்ட்சிகள் உண்டோ, மெய்ஞானத்திலும் அது உண்டு அல்லவா?

இதற்கு முன்பே ஒரு திரியில் எழுதி இருக்கிறேன் (ஆத்திகம் நாத்திகம் ஒரு தெளிவு!) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9946)ஆன்மீகமும் விஞ்ஞானமும் ஒரு காலத்தில் கை கோர்த்துக் கொண்டிருந்தன என்று, இன்றைய நிலைக்கு முக்கியக் காரணம் தொலைநோக்கு இல்லா மனித மனம்தான்.

மனங்கள் குறுகிப் போய்விட்டன. மதங்கள் மூடியக் கதவுகளுக்குப் பின் மூச்சு முட்டிக் கிடக்கின்றன, விஞ்ஞானம் பித்துப் பிடித்து தெருக்களில் தலைவிரி கோலமாக அலைந்து கொண்டிருக்கின்றது,

இப்படி 99.99 மனிதர்கள் இருந்தாலும், மிச்சமிருக்கும் சில விஞ்ஞானிகளும் மெய்ஞ்ஞானிகளும் இலக்கை நோக்கிப் பயணித்தபடியே இருக்கிறார்கள்..

புதியதோர் உலகம் செய்ய


விஞ்ஞானமும் மெய்ஞானமும் இப்பொழுதும் கைகோர்த்துக் கொண்டுதான் இருக்கிறது,..

விஞ்ஞானிகள் மெய்ஞானிகள் என்று தங்களைப் பிரித்துக் கொண்டு வரித்துக் கொண்டு வறுத்திக் கொள்பவர்கள் கொஞ்சம் உண்மையை உணர்ந்து தங்களை மாற்றிக் கொண்டால் போதும்.

நாகரா
06-07-2008, 07:00 PM
விஞ்ஞானத்தினால் கண்டுபிடிக்க முடிந்ததை மெய்ஞானத்தினால்தான் பக்குவமாகச் சமுதாயத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்க முடியும்.

எந்த ஒரு கண்டுபிடிப்பையும் சரியாகப் பயன்படுத்த பக்குவப்பட்ட மனம் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட மனதைத் தரவல்லது மெய்ஞானமே!!!

விஞ்ஞானிகள் மெய்ஞானிகள் என்று தங்களைப் பிரித்துக் கொண்டு வரித்துக் கொண்டு வறுத்திக் கொள்பவர்கள் கொஞ்சம் உண்மையை உணர்ந்து தங்களை மாற்றிக் கொண்டால் போதும்.

விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் இணைக்கும் அருட்பாலமாகப் பணியாற்றும் பக்குவத்தை உமது பதிலில் காண்கிறேன், வியப்படைய வைக்கிறது உம் தெள்ளத் தெளிவான விளக்கம், கேள்வியே தவறானது என்பதை ஒப்புகிறேன், சரியானதை இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள, தவறான கேள்வியும் உதவும் என்பதற்கு உமது தெளிவான பதிலே உரத்த உதாரணம். என் தவறான கேள்வியை நியாயப்படுத்த இதை நான் கூறவில்லை. ஒவ்வொரு கேள்வியின் வீரியமும், அதை எவர் கேட்டாலும், அது சரி, தவறு என்ற துருவங்களுக்கு அப்பாற்பட்டு விளங்குவதை நான் உணர்கிறேன். நன்றி பல உமக்கே, தாமரையாரே!

praveen
07-07-2008, 04:17 AM
6. ப்ரவீண்

தமிழைப் பிழையின்றி எழுதுவது அவசியமென்றால், அதை நம் மன்றத்தில் அமல் படுத்த குறைந்த பட்சம் முதல் கட்ட நடவடிக்கையாக நாம் என்ன செய்ய வேண்டும்?


1)தினமும் பங்கேற்கும் நண்பர்கள், தாம் பதிந்த பதிவினை பதிந்த பின் ஒரு முறை படித்து பார்த்து தேவையிருப்பின் பிழை திருத்த வேண்டும்.

2)ஏதாவது வார்த்தையில் மயக்கம் இருந்தால் அந்த வார்த்தையை கூகிள் தேடுதலில் இட்டும், அதே போல உள்ள மற்றொரு வார்த்தையை இன்னொரு பக்கத்தில் இட்டு தேடினால் அந்த வார்த்தைக்கான சரியான பிரயோகம் தெரிந்து விடும். உ.தா. மன்னர் என்பது சரியா அல்லது மண்ணர் என்பது சரியா என்று சந்தேகம் வந்தால் இரண்டையும் அடுத்தடுத்த பக்கத்தில் இட்டு தேடினால் நமக்கு வரும் விடைகளை வைத்தே எது சரியானது என்று தெரிந்து போகும்.

3)ஒரு மின் தமிழ் அகராதி நம் கணினியிலே வைத்து கொண்டு சந்தேகம் வரும் போது பார்த்து கொள்ளலாம். நண்பர்களிடம் இல்லாவிட்டால் கேளுங்கள் நான் தருகிறேன்.

4)நமது தளத்திலே ஒரு தமிழ் சொல்லகராதி உள்ளடக்கி நிறுவி அதன் மூலம் பிழை திருத்த முயற்சி செய்யலாம். (இது சற்று சிரமமான வேலை, இருந்தாலும் இந்த கேள்விக்கு எனது பதில்).

5)தினமும் 1000 வரிகளாவது நமது மன்றத்தில் வெவ்வேறு திரிகளில் பதிந்து பழகலாம். :)

நாகரா
07-07-2008, 04:27 AM
தமிழைப் பிழையின்றி எழுத அருமையான ஐந்து அம்ச திட்டம் தந்த அன்பர் ப்ரவீணுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

4)நமது தளத்திலே ஒரு தமிழ் சொல்லகராதி உள்ளடக்கி நிறுவி அதன் மூலம் பிழை திருத்த முயற்சி செய்யலாம். (இது சற்று சிரமமான வேலை, இருந்தாலும் இந்த கேள்விக்கு எனது பதில்).

மன்றப் பொறுப்பாளர்கள் மேற்சொன்ன சிரமமான வேலையை அமல் படுத்த உதவ முடியுமா? நன்றி.

சிவா.ஜி
07-07-2008, 04:27 AM
10. சிவா.ஜி.

நம் தமிழ் மன்றம் உலகத் தமிழரிடையே இன்னும் பரவலாக இடம் பிடிக்க சில உத்திகளைச் சொல்வீரா?

தங்கள் கேள்விகளில் என்னையும் இணைத்துக்கொண்டதற்கு நன்றி நாகரா அவர்களே.

தமிழ்மன்றம் ஒரு நந்தவனம். அதனை நாடித்தான் தேனீக்கள் வரவேண்டுமேத் தவிர...தேனீக்களை நாடி நந்தவனம் போகாது.

தேனீக்களுக்குத் தெரியும் எந்த மலரில் தேனிருக்கிறதென்று. அப்படி உண்ட ஈக்களே தன் சக ஈக்களிடம் சொல்லும் இந்த மலரில் அள்ள அள்ள குறையாத தேனிருக்கிறதென்று. அதனால் உலகத்தமிழரிடையே மன்றத்தைக் கொண்டு செல்ல எந்த உத்தியும் தேவையில்லை என்பதே என் தாழ்மையான கருத்து.

இணையம் அறிந்த உலகத்தமிழரில், தமிழைச் சுவைக்கும் எந்தத் தமிழரும் இன்றில்லாவிட்டாலும் என்றாவது இங்கே வந்தே ஆகவேண்டும். வந்தவர்கள் தங்கியே ஆகவேண்டும். அத்தகைய பல்கலைக் கழகம் நம் மன்றம்.

பிட் நோட்டீஸ்களோ, பாப்-அப் விள்ளம்பரங்களோ தேவைப்படாத பூக்கடை இது. வாசமுணருபவர்கள் வாசல் வருவார்கள்.

நன்றி நாகரா அவர்களே.

நாகரா
07-07-2008, 04:36 AM
உலகத்தமிழரிடையே மன்றத்தைக் கொண்டு செல்ல எந்த உத்தியும் தேவையில்லை என்பதே என் தாழ்மையான கருத்து.

உத்தியேதும் வேண்டாம் என்ற உம் நெத்தியடி பதிலுக்கு நன்றி சிவா.ஜி. நாம் அனுப்பும் மின்மடல்களில் கையொப்ப சுட்டியாக தமிழ் மன்ற இணைய தள முகவரியை வைக்கலாமே, இது எல்லோராலும் எளிதாக அமல் செய்ய முடியுமென்பது என் தாழ்மையான கருத்து.

இதயம்
07-07-2008, 05:06 AM
8. இதயம்

இதயம் என்பது வெறும் இரத்த இயந்திரமா அல்லது அன்பை இறைக்கும் கடவுளின் உறைவிடமா?


தனது அற்புதமான கேள்விக்கணைகளில் ஒன்றை என்னை நோக்கியும் தொடுத்த உங்களுக்கு என் நன்றிகள். உங்களின் கேள்வி எனக்கு மிகவும் பிடித்த, பொருத்தமான கேள்வி என்பதால் இதற்கு பதிலளிப்பதில் கூடுதல் மகிழ்ச்சி..!!

நம்பிக்கையும், பகுத்தறிவும் சரிவரக் கலந்தது தான் உலக வாழ்க்கை. "இவர் தான் தன் தந்தையா..?" என்று யாரும் நிரூபணம் செய்ய விரும்புவதில்லை. நாம் அறிந்ததை நம்பிவிடுகிறோம். "இது என்ன நோய்..?" என்று அறியாது அதற்கான மருந்தை நாம் உட்கொள்வதில்லை. அதனை அறிந்த பிறகு தான் அதை தீர்க்கும் நடவடிக்கையில் இறங்குகிறோம். ஆக, நம்பிக்கை, பகுத்தறிவு ஆகிய இரண்டும் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாமல் பின்னிப்பிணைந்து கிடக்கிறது. ஆனால், விசித்திரம் என்னவென்றால் இந்த இரண்டும் இருவேறு துருவங்கள்.! நம்பிக்கை இருக்கும் இடத்தில் பகுத்தறிவு தோற்கும், பகுத்தறிவு இருக்கும் இடத்தில் நம்பிக்கை தோற்கும். அதே போல் தான் இதயமும்.!! விஞ்ஞானம் என்ற பகுத்தறிவு கொண்டு பார்த்தால் இதயம் என்பது இரத்தத்தை சுத்திகரிக்கும் ஓர் இயந்திரம். நம் நம்பிக்கைகளின் அடிப்படையில் பார்த்தால் அன்பை இறைக்கும் கடவுளின் உறைவிடம். ஆனால், ஆழ்ந்து சிந்தித்தால் இரண்டுமே உண்மை தான். காரணம் நான் ஏற்கனவே சொன்னது போல் நம்பிக்கை, பகுத்தறிவு இரண்டும் கலந்தது தானே வாழ்க்கை..?

இதயம் ஒரு விசித்திர உறுப்பு.! சிந்தனை, செயல் உள்ளிட்ட அனைத்திற்கும் முழு முதற்பொறுப்பான மூளைக்கு கிடைக்க வேண்டிய பெயரை அதற்கு சம்பந்தமேயில்லாமல் இதயம் பெற்றிருக்கிறது. இது எப்படி ஏற்பட்டிருக்கும் என நான் சிந்தித்த வேளையில் எனக்கு கிடைத்த சில பதில்கள். மனிதர்களின் மேன்மையான குணம் அன்பு செலுத்துதல். அதை செய்வதில் தொடர்புடைய உறுப்பு மூளை. அந்த மூளை இருப்பதோ உச்சியில். எல்லாவற்றுக்கும் "நான் தான் காரணம் என்பதால் தான் நான் அனைத்தையும் விட உயரமான இடத்தில் இருக்கிறேன்" என்ற கர்வம் மூளைக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கவலையால் மனித சமூகம் அன்பின் அடையாளமாய் மூளையை சொல்லாமல் புறக்கணித்திருக்கலாம். காரணம், அன்பிருக்கும் இடத்தில் கர்வத்திற்கு வேலையில்லை..!!

சரி.. அப்படியென்றால்.. அன்பை சொல்ல இதயத்தை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்..? உடம்பில் வேறு பல உறுப்புக்கள் இருக்கின்றனவே..? அதற்கும் காரணம் இருக்கிறது. இதயம் இருக்கும் இடம் உடம்பின் மையப்பகுதி. அன்பைக்கொண்டு நடுநிலையுடன் நடந்து கொள்ளவேண்டும் என்பதை குறிப்பிடுகிறது. அது மட்டுமல்லாமல், அன்பு எத்தனை பெரிய தீயவனையும் நல்லவனாய் மாற்றும் சக்தியுடையது. அதே போல் தான் இதயமும் கெட்ட இரத்தத்தை சுத்திகரித்து, நல்ல இரத்தமாக மாற்றுகிறது.!! அதுவும் சரி தான்..அப்படியென்றால் இதயம் உடம்பின் மையத்தில் இல்லாமல் ஏன் இடது புறம் இருக்கிறது.? பொதுவாகவே நம் உடலில் வலது பக்க உறுப்புக்களுக்கு பெரும் முக்கியத்துவம் இருக்கிறது. கை குலுக்குவது, சாப்பிடுவது தொடங்கி காலை எடுத்து வைத்து உள் நுழைவது வரை வலது பக்க உறுப்புகளுக்கு பெரும் முக்கியத்துவம். ஆனால், அன்பிற்கு முன்னால் எதுவும் முக்கியமல்ல.. அதனால் தான் யாரும் சீந்த நினைக்காத இடது புறத்தில் அன்பை உற்பத்தி செய்யும் இதயம் அமைந்துள்ளது.!!

பொதுவாக உண்மையை சொல்ல வைக்க தலையில் கை வைத்து சொன்னால் அது சத்தியம். ஆனால், இதயத்தின் மேல் கை வைத்து சொன்னால் அது மனசாட்சி..! சத்தியத்தை நிறைய மீறுகிறார்கள். ஆனால், மனசாட்சியை மீற நிறைய பேருக்கு துணிவிருக்காது. அப்படி மீறுபவர்கள் குற்றவுணர்ச்சியால் பெரும் சித்ரவதைக்குள்ளாவர்கள். மனசாட்சிக்கு பயந்து திருந்துபவர்கள் மகான் ஆகும் வாய்ப்பு கூட உண்டு. இன்றைய காலகட்டத்தில் உலக வாழ்க்கையில் நிறைந்து கிடக்கும் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை களைந்து உலகத்தை அமைதிப்பூங்காவாக்கும் அருமருந்து அன்பு மட்டும் தான்.!

கடவுள் அன்பின் வடிவம் என்பார்கள். அந்த அன்பை உற்பத்தி செய்யுமிடம் இதயம். ஆக, என்னை பொருத்தவரை இதயம் ஒரு கோவில்..!!

ஆதவா
07-07-2008, 05:16 AM
ஓரு கவிதை சரியாகப் புரிந்து கொள்ளப் படாததற்கு, அதை இயற்றிய கவிஞன் தான் முழுப் பொறுப்பேற்க வேண்டுமா?

நன்றி நாகரா...

ஆதி காலம் முதல் இன்று வரையிலும் இலக்கணக் கட்டுக்குள் அமைந்த பாடல்களை பாமர மக்களின் மனத்திற்குக் கொண்டு செல்ல முடியாமல் இருந்தார்கள். கம்பன் பாடல்கள் அன்றைய காலகட்டத்தில் சுவையாக இருந்தாலும் அந்தப் பாடல்களைப் படிக்கக் கூடியவர்கள் மட்டும் அல்லது ஓரளவு தெரிந்த கனவான்கள் மட்டுமே பாட முடிந்தது. சங்க காலங்களில் நாட்டுப் புறப்பாடல்கள் எத்தனை எளிமையாக இருந்தனவோ அத்தனை எளிமையை உடைத்துத்தான் பாக்கள் கட்டப்பட்டன. நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடல்களை சற்று எளிமைப் படுத்தி பாட ஆரம்பித்தார்கள். அன்றைக்கு சிலருக்கு அர்த்தம் பிடிபடாமல் போயிருந்தாலும் அதன் சுவை அர்த்தத்தை மறைத்து பாடவைத்தது. பின் சித்தர்கள் வந்தார்கள். பாமரனும் புரியும்படி பாடினார்கள்... ஆனால் அர்த்தம் மாறியது தெரியாமல் பாமரன் பாடினான்.. பாரதியின் காலத்தில் இன்னும் தெளிவானது..

என்றாலும் கவிதை என்ற புத்தகத்தை அசாதாரணமானவன் மட்டுமே எளிமையாகப் பிரிக்க முடிந்தது... அந்த கட்டுக்கோப்பு சாதாரண மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை அல்லது அவர்கள் தெரிந்துகொள்ள விருப்பமில்லாமல் போனது. இன்று வரையிலும் இசங்களும் குறியீட்டுக் கவிதைகளும் அதைச் செவ்வனே செய்துவருகின்றன.

இதில் இன்னொன்று.... ஒரு கவிதையை ஆழ்ந்து படிப்பவர்கள் மிகவும் குறைவு. ஒரு கவிதை சொல்லும் வார்த்தையைச் சுற்றி எத்தனை அர்த்தங்கள் இருக்கின்றன என்று பார்ப்பவர்கள் மிகவும் குறைந்தவர்களாக இருக்கின்றனர்... ஏன் பார்க்கவேண்டும்? அந்தக் குறியீடுகளை நாம் வேறு ஒரு சொல்லுக்கு உபயோகப் படுத்தலாம். அந்தப் பதம் நமக்குள் ஒரு தாக்கத்தை உருவாக்கலாம்.... ஆழப்புரிதலில் இருக்கிறது எந்த ஒரு விசயமும்.

அடுத்து, ஒரு கவிதையின் சூழ்நிலையை மனத்தில் இருத்துகிறோமா? என்றால் இல்லை. கவிஞன் எந்தப் பாதையில் நடந்திருப்பான், அதன் வழிப்பயணம் எப்படி இருக்கும் என்று சிந்திப்பதில்லை.

உதாரணத்திற்கு முகமறியா ஒரு கவிஞர் எழுதிய வரிகளை இங்கே சொல்கிறேனே! (நன்றி யாருக்கொ!!)

.....................
தலைமுதல் கால் வரை
எரிவதை கண்மூடி ரசிக்கிறோம்.

இந்தக் கவிதையின் மேல் வரிகள் எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கவனிக்கத்தக்கது.. ஒரு செயலை ரசிக்க வேண்டுமானால் கண்கள் தேவை. என்றால், கண்மூடி ரசிக்கிறோம் என்றால்? அந்தச்சூழ்நிலையில் கவிஞன் மெளனிக்கிறான்.. ரசிக்கும் காட்சியை மனத்தில் அசைபோட்டபடி கண்களை மூடி ரசிக்கிறான்... அந்தச் சூழ்நிலையை நம் மனத்தில் இருத்துகிறோமா என்றால் பலரின் பதில் இல்லை என்பதே!

சின்னச்சின்ன விசயங்களைக் கவிதையில் நன்றாகப் பொதித்து எழுத முடியும். இன்னொரு உதாரணம்..

மிகச்சாதாரணமாக
அழித்துவிடுகிறோம்
சிலந்தி கட்டிய வலையை

இதன் பிண்ணனி என்ன என்பதை படிப்பவர்கள் ஆராய வேண்டும். 'மிகச்சாதாரணமாக' என்ற வரிகள் மிகக் கடினமாக என்ற அர்த்தத்தை மறைந்திருந்து தருகிறது. 'அழித்துவிடுகிறோம்' என்பது கட்டுகிறோம் அல்லது பின்னுகிறோம் என்ற அர்த்தத்தை மறைந்து நின்று தருகிறது.. என்றால்.... மிகக்கடினமாகப் பின்னப்படும் சிலந்தி வலையை மிகச்சாதாரணமாக அழிக்கிறோம்... என்பது முழு அர்த்தம்.. இதை அப்படியே உங்கள் கருத்துக்கு, உங்கள் எண்ணத்துக்குப் பொருந்தவும் செய்யவேண்டும்.

அடுத்து, ஒரு கவிதையின் அர்த்தத்தை பலவாறாக பிரித்து அர்த்தம் புரியவேண்டும்.. இதற்கு ஒரு திரியே சாட்சியாக இருக்கிறது.. 'கவிதையை பிரித்து - முற்றிடுமா? என்ற திரியில் நீங்கள் கண்கூடாகக் கவனிக்கலாம். ஒரு வார்த்தைக்குப் பல அர்த்தங்களை எடுத்துக் கொடுக்கும் தமிழை நாம் புரிந்துவைத்திருக்கவேண்டும்........

சரி இனி உங்கள் கேள்விக்கு வருகிறேன்.

கவிஞனின் கோணம் என்பது வேறு, பார்வையாளன் கோணம் என்பது வேறு.. பாமரன் புரியும்படி எழுதும் கவிஞர்களே, குறியீட்டை விரும்பும் பார்வையாளர்களுக்கும் எழுதுகிறார்கள்... இந்த இருவழிப்பாதையில் இரண்டிலும் பயணம் செய்யமுடியாத பார்வையாளர்கள் மேற்சொன்ன ஆழப்புரிதல் இல்லாமல் மேம்போக்காக படித்தவர்களாக இருப்பார்கள். அல்லது அக்கவிஞனின் எழுத்துக்கள் அவனைத் தவிர வேறு ஒருவருக்கும் புரியாதபடியான எழுத்துக்களாக இருக்கும்... இதில் இரண்டாம் காரணமே பெரும்பாலும் பொருந்தும்.

ஒரு கவிதையின் விமர்சனம் முழுக்க அதை எழுதிய கவிஞனுக்கே... புரிந்துகொள்ள முடியாமல் போனால் அதுவும் கவிஞனின் பொறுப்பே!! ஆனால் முழு பொறுப்பும் என்று சொல்ல முடியாது.........

நன்றி நாகரா

நாகரா
07-07-2008, 05:22 AM
ஆழ அலசி விசாலமான(மூளை, இதயம் இரண்டையும் விசாலப் படுத்தும்) அரும்பதில் தந்த உமக்கு நன்றி பல இதயம்.

கடவுள் அன்பின் வடிவம் என்பார்கள். அந்த அன்பை உற்பத்தி செய்யுமிடம் இதயம். ஆக, என்னை பொருத்தவரை இதயம் ஒரு கோவில்..!!
என்று முத்தாய்ப்பாய் முடித்திருக்கிறீர்கள். பன்முகப் பார்வையுடன் நீவிர் அளித்திருக்கும் பதில் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்

இ(ரு)தயத்தில் கோயில் கொண்ட இறைவனே
இதயத்தின் இரத்தச் சிவப்பு

இ(ரு)தயத்தில் வாழுந் தயாபரக் கடவுளே
இதயத்தின் உயிர்ப்பாந் துடிப்பு

இ(ரு)தயத்தில் ஒளிரும் அருட்ஜோதிப் பிழம்பே
இதயத்துள் ஒளிந்த பழமை

இ(ரு)தயவாய் திறந்து பெருந்தயவு வழிந்தோட
இதயத்துள் இன்பக் களிப்பு

இ(ரு)தயவாய் திறந்தே இருநீ தயவாய்
இதயத்துக் கதுவே உயிர்ப்பு

மீண்டும் நன்றி பல.

ராஜா
07-07-2008, 05:31 AM
கேள்விகளும், அவற்றிற்கான பதில்களும் ....

தரத்திலும், பொருளடக்கத்திலும் ஒன்றையொன்று விஞ்சும்படியாக இருக்கின்றன.

நன்றி நாகரா..!

நாகரா
07-07-2008, 05:32 AM
கவிதையின் புரிதல் பற்றித் தெள்ளிய நீரோட்டம் போன்று உம் அறிவுக் கதிர் தெரித்த ஆதவரே! நன்றி

ஒரு கவிதையின் விமர்சனம் முழுக்க அதை எழுதிய கவிஞனுக்கே... புரிந்துகொள்ள முடியாமல் போனால் அதுவும் கவிஞனின் பொறுப்பே!! ஆனால் முழு பொறுப்பும் என்று சொல்ல முடியாது.........

அழகாய் முடித்திருக்கிறீர்கள். இரு குறுங்கவிகளின் உதாரணத்தோடு புரிதலின் பின்புலத்தைப் புரிய வைத்திருக்கிறீர்கள், வாழ்த்துக்கள் கவிஞரே!

நாகரா
07-07-2008, 05:40 AM
உம்மைப் போன்ற மன்றத்துப் பெரியோரின் வழி நடத்துதலும், ஊக்க வரிகளுமே, என்னைப் போன்ற பொடியனையும் கேள்வி கேட்கும் பாங்கைக் கற்க வைத்து கேட்கவும் வைத்திருக்கிறது. உம் உற்சாக வரிகளுக்கு நன்றி ராஜா.

பூமகள்
07-07-2008, 05:47 AM
5. பூமகள்
ஒரு படைப்பாளி தன் படைப்பை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ளப் பின்னூட்டங்கள்(விமர்சனங்கள்) உதவுமா?
மிக நல்ல கேள்வி... நீங்கள் தேர்வு செய்த பத்தில் ஒருவராக இருப்பதில் மகிழ்ச்சி...!

கேள்விக்கூட்டில் இணைத்தமைக்கு மிகுந்த நன்றிகள்.
----------------------------------------------------------
பொதுவாக ஒரு கவிஞரோ.. எழுத்தாளரோ.. ஏன் படைப்பைப் படைக்க வேண்டும்??

சில காரணங்கள் என்னில் தோன்றுகிறது..

1. தன் மன ஆறுதலுக்காக..
2. சமூகத்தில் புதிதாக ஏதேனும் சொல்ல விரும்பி...
3. தன் மொழித் திறம் மேம்பட/மொழி வளர்ச்சியினை மேம்படுத்த..

இம்மூன்று காரணங்களில்.. முதலாமது.. முழுக்க முழுக்க தன் சொந்த விருப்பத்துக்காக.. அதாவது.. தான் பார்த்த... அல்லது தன்னை பாதித்த நிகழ்வுகளை அழகான படைப்புகளாக சமூகத்துக்குச் சொல்வதன் மூலம் அமைதியான நிலையை அடைவது..

இரண்டாவது வகைக் காரணம்.. முழுக்க முழுக்க சமூகம் சார்ந்து பிறர் நலனுக்காக... இங்கே.. பல நல்ல கருத்துகள் விழிப்புணர்வூட்டும் கருத்துகள் சொல்வது..

மூன்றாவது வகை.. தன் மொழி ஆளுமை வளர்ச்சிக்காகவும்... மொழிக்காக தன் அறும்பணிக்காகவும்..

எந்தப் படைப்பும்.. இம்மூன்று வகைகளில் ஒன்றின் கீழ் நிச்சயம் வரும்..
அவ்வகை படைப்புகள் படைக்கும் படைப்பாளிக்கு எங்ஙனம் தான் சொல்லிய கருத்து சரியான கோணத்தில் புரிந்துணரப்பட்டுள்ளதென்று தெரிய முடியும்??

படிப்பவர்களின் விமர்சனம்.. அல்லது பின்னூட்டம் மூலமே தானே??!!

சரியாக கருத்துகள் போய் சேராத பட்சத்தில்.. விளக்கமும்.. தெளிவிப்பதும்.. படைப்பாளியின் கடமை மட்டுமல்ல.. உரிமையும் கூட..

அவ்வகையில்.. ஒருவரின் படைப்பு... பின்னூட்டங்கள் அல்லது விமர்சனங்களே.. தனது படைப்பின் ஆணி வேர் வரை.. புரிந்து கொள்ள உதவும்..

பல சமயம்.. எழுதும் போது சாதாரணமாகத் தோன்றும் பல படைப்புகள்... எழுதி விமர்சனங்கள் பல பார்த்த பின்பு... பல்வண்ண கோணங்களில் ஜொலிப்பதைக் காணலாம்..

நான் பெரும்பாலும் எல்லாப் படைப்புகளையும் நிச்சயம் தட்டிக் கொடுத்து ஊக்கம் தரத் தவறுவதில்லை.. ஏனெனில்.. என் மழலைப் பதிவுகளுக்கும் மன்றம் அவ்விதம் தட்டிக் கொடுத்ததால் தான் நான் இன்று இந்த நிலையிலேனும் இத்தனை பெரிய பதில் அடித்துக் கொண்டிருக்க முடிகிறது.. ஆனால்.. நம் மன்றத்தில் உள்ள அனைத்து படைப்பாளிகளுமே அபார திறமையைத் தனக்குள் ஒளித்து வைத்திருப்பவர்கள் தான்.. அவர்களுக்கு சரியான குருகுலமாக நம் மன்றம் விளங்குவது எனக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே பெருமை தான்.

நல்ல விமர்சனங்களும் பின்னூட்டங்களும் நிச்சயம் ஒரு படைப்பாளிக்கு பெரிய விருது கிட்டியது போலத் தான்...

அவ்வகையில்.. நிச்சயமாக.. விமர்சனங்களும்.. பின்னூட்டங்களும் ஒரு படைப்பாளிக்குத் தன் படைப்பின் ஆணி வேர் ஆழம் அறியச் செய்யவும்... பல படிம நிலைகளை உணரச் செய்யவும்... தன் அடுத்த படைப்புக்கு கிரியா ஊக்கியாகவும்.. விளங்கும் என்பதில் எனக்கு சிறிதளவும் ஐயமில்லை..!!:)

இளசு
07-07-2008, 06:46 AM
தாமரை தொடுத்த கேள்விக்கு மன்மதன் அளித்த பதில் படித்தேன்.

சுருக்கமாய் இருந்தாலும் மனதின் - மன்றத்தின் நிழற்படம் போன்ற பதில்..

பாராட்டுகள் மன்மதா!

ஆமாம், கலை எங்கேப்பா?
(தினம் ஒரு திருக்குறளும் தேங்கி நிற்கிறதே கலை.. விரைந்து வாங்க!)

------------------------

அடுத்து நாகரா அவர்களின் அருமையான கேள்விகள்..

தாமரையின் இணைப்புப்பதில்
இதயத்தின் இதயச்சுத்தி பதில்
ஆதவனின் கவிதாவிலாச பதில்
பூமகளின் ஊட்டமான பதில்..

எல்லாமே நம் நண்பர்கள் எத்தனை ஆழ்ந்த சிந்தனையாளர்கள் -
தெளிவாய் அதைப் பகிர வல்லவர்கள் என உணரவைக்கின்றன..

அமரன்
07-07-2008, 06:48 AM
மிச்சமிருக்கும் ஒரு பதிலுக்குக் காத்திராமல்(கலைவேந்தரின்), அவசரக்குடுக்கையாய் முந்திக்கொண்டேன், அமரரே, மன்னிக்கவும்.

நன்றி

ஆஹா.. ஆஹா... கேட்டத்தும் கொடுப்பவனே என்னும் சொற்றொடர் உங்களுங்கும் பொருந்தும். அவசரத்துக்கு கைகொடுக்கும் வகையில் நீங்கள் ஒரு அவசரக்குடுக்கைதான் நாகரா அவர்களே. வீரியமான கேள்விகள். தகுதியான நபர்கள்.. தரமான பதில்கள்.. எல்லாமும் சேர்ந்து நான் எதிர்பார்க்காத அளவில் திரியை பிரகாசிக்க செய்துவிட்டன. என்னையும் சுறு சுறுப்பாக்கி விட்டன. அத்துனை பேருக்கும் மனமார்ந்த நன்றி.

இளசு
07-07-2008, 06:55 AM
இளசு -

கவிஞன் காலியாயிருக்கக் கவிதை அவன் வழியே விழுகிறதா? அல்லது கவிஞன் நிரம்பியிருக்கக் கவிதை அவன் வழியே எழுகிறதா?



உங்கள் கேள்விக்கு முதலில் நன்றி நாகரா அவர்களே!

இதற்குப் பதில் சொல்லும் அருகதை எனக்குண்டா என்பது
என் முதல் மன உணர்வு..

ஆனாலும், இயன்றதைச் சொல்லலாம் எனத் துணிவது அடுத்த நிலை!

எனவே பதில் ஊனமாய் இருந்தால், படிப்பவர் பொறுத்து, மன்னிக்கவும்..

----------------------------------------------

பிற, பிறர் சார்ந்த அனுபவங்களைக் கடத்தியாய்
வாசகனுக்கு வழங்கும்போது கவிஞன் -முதல் நிலை!

ஃப்யூஜித் தீவில் கரும்பு வெட்டப் போன
தமிழனின் துயரம் கேட்டு பாரதி துடித்த நிலை!

ஆனாலும் அந்நிகழ்வின் முடிவில் கவியின்
இருதயப்பாத்திரம் காலியாய் இருக்க இயலாது..

கடத்திய நிகழ்வின் /உணர்வின் ஈரம் ஒட்டுவதை
கவியுள்ளம் தவிர்க்க இயலாது!

------------------------------------------

தன் உணர்வை, பட்டறிவை, உள்ஞானத்தை, கனவை
சொல்லும் போது அவன் வழியும் பாத்திரம்!

கண்ணம்மா..
காட்சிப்பிழை
நல்லதோர் வீணை...

வழிந்தும் குறையா அட்சயப் பாத்திரம் என்பதே இரண்டாம் நிலை!

நாகரா
07-07-2008, 07:07 AM
பின்னூட்ட நாயகியே! பின்னூட்டத்தைப் பற்றி ஒரு தரமான கட்டுரையை எமக்களித்து, ஆணித்தரமாக இவ்வாறு முடித்திருக்கிறாய்.

அவ்வகையில்.. நிச்சயமாக.. விமர்சனங்களும்.. பின்னூட்டங்களும் ஒரு படைப்பாளிக்குத் தன் படைப்பின் ஆணி வேர் ஆழம் அறியச் செய்யவும்... பல படிம நிலைகளை உணரச் செய்யவும்... தன் அடுத்த படைப்புக்கு கிரியா ஊக்கியாகவும்.. விளங்கும் என்பதில் எனக்கு சிறிதளவும் ஐயமில்லை..!!:)
வண்ணக் கோலங்களாய்க் காட்சி தரும் உன் வீரிய எழுத்துக்களைப் படிப்பதே ஒரு ஞான போதை தான் மன்றத்தில் எமக்கெல்லாம். நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பாமகளாம் பூமகளே!

நாகரா
07-07-2008, 07:14 AM
பிற, பிறர் சார்ந்த அனுபவங்களைக் கடத்தியாய்
வாசகனுக்கு வழங்கும்போது கவிஞன் -முதல் நிலை!

ஃப்யூஜித் தீவில் கரும்பு வெட்டப் போன
தமிழனின் துயரம் கேட்டு பாரதி துடித்த நிலை!

ஆனாலும் அந்நிகழ்வின் முடிவில் கவியின்
இருதயப்பாத்திரம் காலியாய் இருக்க இயலாது..

கடத்திய நிகழ்வின் /உணர்வின் ஈரம் ஒட்டுவதை
கவியுள்ளம் தவிர்க்க இயலாது!

------------------------------------------

தன் உணர்வை, பட்டறிவை, உள்ஞானத்தை, கனவை
சொல்லும் போது அவன் வழியும் பாத்திரம்!

கண்ணம்மா..
காட்சிப்பிழை
நல்லதோர் வீணை...

வழிந்தும் குறையா அட்சயப் பாத்திரம் என்பதே இரண்டாம் நிலை!
உதாரணங்களோடு கன கச்சிதமான பதில் இளைய பெரியவரே! நன்றியும் வாழ்த்துக்களும்.

மன்மதன்
07-07-2008, 02:34 PM
தாமரை தொடுத்த கேள்விக்கு மன்மதன் அளித்த பதில் படித்தேன்.
சுருக்கமாய் இருந்தாலும் மனதின் - மன்றத்தின் நிழற்படம் போன்ற பதில்..
பாராட்டுகள் மன்மதா!


நன்றி அண்ணா..



மன்மியின் பதிலை இன்னும் விரிவாய் எதிர்பார்த்தேன்
மன்றத்தின் மாண்பை அறியும் ஆவலில்!

விரிவாக இன்னும் எழுதணும்னு ஆசைதான்..தனி பதிவாக விரைவில் பதிக்கிறேன்..


இயல்பான, எளிமையான பதில் மன்மி..!
இம்மாமன்றத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் என்பதில் நீங்கள் கொண்டிருக்கும் பெருமிதம் மிகச் சரியானதே..!
நன்றி..!

நன்றி ராஜாண்ணே..

சாலைஜெயராமன்
08-07-2008, 02:54 AM
1. சாலை ஜெயராமன்

தன் இயல்பாம் அன்பை மறந்து, வன்பின் பாலையாய் மனிதம் வரண்டிருப்பதற்கு, தற்கால ஆன்மீக மடங்கள் எவ்வகையில் பொறுப்பு?

ஆ பத்து பகுதியில் எனக்கும் பதிலிளிக்க வாய்ப்புத் தந்தமைக்கு நன்றி திருமிகு நாகரா.
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
ஆன்மீகம் என்ற போர்வையில் சாதி, மத, இன, மொழியை முன்னிறுத்தி நடத்தப்படும் அனைத்து மடங்களும் மடத்தனங்களின் கூடாரம் என்பது என் கருத்து.

அன்பின் வழியது உயிர்நிலை அறிவிலார்
என்பு தோல் போர்த்திய உடம்பு

உலகில் இன்று நிலவும் கோரப்பிண்ணனிக்கு காரணம் எது என அறிய முயற்சித்தால் ஒவ்வொருக்குள்ளும் உள்ள ஒப்பற்ற தன் உயிர் நிலையை நேசித்து ஆராதிக்கும் பண்பைப் பெறாதாதுதான் என்பது என் கருத்து. சரீர சிந்தனையின் உந்துதலால் அதன் சுகத்திற்கான பாட்டில் உயிர் நிலையை உணராமல் அதை அழித்துக் கொள்ளும் வாழ்வியல் சிந்தாந்தங்களை அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ ஏற்றுக் கொண்டு விட்டோம். அனைவரும் சரீர சிந்தனையின் வசப்பட்டதால் உலகமே சுயநலக் கூட்டத்தின் கூடாரமாகி விட்டது. சரீர சிந்தனை ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலத்தால் கட்டப்பட்டது. வினையறுத்தல் என்ற பொதுவான கருத்தை முன்னிறுத்திதான் அனைத்து மதப் பெரியோர்களும் தங்கள் கால தேச சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தங்கள் அறிவுரையை வழங்கி வந்துள்ளனர். ஆனால் இன்றைய மடங்கள் , அமைப்புக்கள், இயக்கங்கள் அறியாமையினால் பெரியோர்கள் வகுத்துவைத்த பாதைக்கு தங்களின் கீழான சுய நல அறிவு கொண்டு தவறான செயல்பாட்டு வினையால் இப்பூமியை இரத்தக் களறியாக்கி விட்டிருக்கின்றனர்.

முதலில் தன் தேகத்தை நேசிக்கும் அறிவை விடுத்து அதனுள் ஒளிரும் தன் உயிரை நேசிக்கும் அறிவைப் பெறும் பொழுது அன்பின் மற்றொரு நிலையாகிய அனைத்துயிரும் ஒன்றே என்ற சிந்தனை பூத்துக் குலுங்கும். இன்றைய மனித குலம் தன்னலத்தின் பாதையில் தன் உயிரையும் பிற உயிரையும் நேசிப்பதை வி்டுத்து தன் தேகத்தை மட்டும் நேசிக்கும் வழியினைப் பற்றியிருப்பதால்தான் உலகம் இன்று வன்மத்தின் பாதையை உகந்து கொண்டுள்ளது. தேக சித்தாந்தம் மாயை. உயிரின் வழி உணரும்போது ஞானம் கைகூடுகிறது. தேகம் என்பது ஒரு குறுகிய வட்டம். ஆனால் தேகத்தில் பூத்துக் குலுங்கும் உயிர் நிலை பிரபஞ்ச சக்தியின் இதை மற்றொரு பரிணாம ரூபம்.

வினையறுத்தல் என்பது ஞானத்தின் முதற்படி. தேக சிந்தனை வசப்பட்டுச் செய்யும் எச்செயலும் வினைபுரிதலுக்கு வழிவகுக்குகிறது. உலக வினைகளின் பலன் பாவம் அல்லது மரணம். உயிர்வினை ஞானத்தின் திறவுகோல். அழியாநிலை. உயிர்வினை ஆற்றும் உபாயத்தைப் போதிக்க வந்தவர்கள்தான் மத கர்த்தர்கள். ஆனால் அவர்கள் அமைத்து வைத்த மத சிந்தனைகள் குரூர மனம் கொண்ட தேக சிந்தனையில் உள்ள அறியா மக்களால் இன்று கூறு போடப்பட்டிருப்பது வேதனையைத் தரும் ஒரு விஷயம்.

தேக சிந்தனை ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலக் குறும்பால் பேதப்பட்டு வினைபுரியும். இதனை மாற்றும் உபாயம் அனைத்தும் அனைத்து வேதங்களிலும் பொதுவாக ஒத்து இருப்பது ஒரு ஆச்சரியமான ஒன்று. தன் உயிர்நிலை அறிந்தவர்கள்தான் அவதார மகிமையுடையவர்கள். அவர்கள் வினை இப்பூமியில் மக்களிடம் புதைந்துள்ள அறிவின் மகிமையையும், அதன் நீண்ட பரிமாணத்தையும் உணரவைப்பது என்ற ஒன்றைத்தவிர வேறெதையும் செய்யவில்லை.

புனிதர் இயேசு தங்கள் குறுகிய கால வாழ்வினுக்குள் அனைத்து மக்களிடமும் அன்பைப் போதித்த அற்புதங்களை நிகழ்த்தினார். முகம்மது ஸல் அவ்ர்கள் 40 ஆண்டுகாலம் அறியாமை நிறைந்த முரட்டு சுபாவம் உள்ள மக்களை குறிவைத்து வாழ்ந்த தியாக வாழ்வு அறிவின் உயர்நிலைக்கு எடுத்துக் காட்டு. அதர்மத்தைக் களைய பகவான் கிருஷ்ணனின் அறிவு ஆச்சரியக் களஞ்சியம். இவ்வாறாக அறியாமையைக் களைவதையே தங்கள் வினைபுரிதலாகக் கொண்ட பெரியோர்கள் அவர்கள் எடுத்துக் கொண்ட பெருமுயற்சிகள் தியாக வரலாற்றின் அன்பின் அடையாளங்கள்.

இருப்பினும் இந்த வழிகளைப் புறக்கணித்து அறியாமையை வளர்த்ததில் பெரும் பங்கு மதம் சார்ந்த மடங்களுக்கும், அமைப்புகளுக்கும் இயக்கங்களுக்கும் பொருந்தும்.

உதாரணமாக கடவுள் என்ற தத்துவப் பொருள் இருக்கும் இடம், அனைத்து மத வேதங்களிலும் ஒரே மாதிரியாகக் கூறப்பட்டிருந்தாலும் மதப் பிண்ணணி கொண்ட மடங்கள் இதற்கு மாற்றுக் கருத்தைத்தான் இன்று நடைமுறைப்படுத்தி வருகிறது.

சைவமதம் ஈசன் இருப்பிடம் இருதயம் என்றும்

வைணவம் இருதய கமலவாசன் என்றும்

கிருத்துவம் புனித இருதயம் என்றும்

இஸ்லாம் கல்பென்ற இருதயத்தில் அல்லா உள்ளான் என்றும்

ஒத்த கருத்துக் கொண்டிருந்தாலும் வேதத்தில் பயிற்சியும் பாண்டித்யமும் பெற்ற இன்றைய ஆன்மீக சிந்தனாவாதிகள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அவர்கள் நடத்தையாகிய பிற மத சகிப்புத்தன்மை இல்லாத ஒன்றினால் வெளிப்படுகிறது.

காரணம் இங்கே இருதயம் என்ற ஒரு சொல்லுக்கு பொருள் அறியா காரணத்தால் அறிவில் பேதமாகி அது தேகத்தில்முடிவடைகிறது. உயிர்நிலை என்ற உயர்ந்த ஞானம் வேதத்தை வார்த்தையாகக் கற்றுணர்ந்தவர்களுக்கு புரியாத அறியாமையால் இது நிகழ்கிறது. இருதய இடத்தை அறியும் வினையே மனிதகுலம் ஆற்றவேண்டிய பணியாகும். கடவுள் நிலையாகிய உயிர்நிலையை கல்லிலும் மண்ணிலும் தேடியதன் விளைவு மனித இனம் இன்று மிருக நிலையிலிருந்து சிறிதும் மாறாதிருக்கிறது. ஆனால் கீழ்நிலை மிருகங்கள் மனிதனைவிட தன் சுற்றம் சார்ந்து ஆனந்தமான வாழ்வு வாழ்கிறது. ஆறாம் அறிவின் பயனை அறியாமல் தேகத்தைவிட்டு உயிர்நிலை வேறொரு அறிவு தேகத்தை நாடி தூல உடலைத் துறக்கிறது. இது வினையின் பயன்

நம் வினைக்குள் மாட்டும் பாவச்செயலை போக்கவந்தவர்கள்தான் அவதார புருஷர்கள். அவர்கள் தங்களுக்கென்று எந்த மட அமைப்பையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

உதாரணமாக திருவள்ளுவ நாயனார் அவர்கள் கூறும் ஒரு செய்யுளைப் பாருங்கள்

உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
வரம் என்னும் வைப்பிற்கு ஓர் வி்த்து

நம்முடைய ஐந்து புலன்களால் ஆற்றும் வினைகளால் ஏற்படும் விளைவுகளைக் கண்காணிக்க ஒரு ஆசான் துணை வேண்டும். அந்த ஆசான் அறிவுசால் பெரியோராக இருக்க வேண்டும். அவர் வழி செல்லும்போது தேக சிந்தனையில் இருக்கும் மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் புலன்கள் கர்மேந்தியங்கள் என்ற நிலை மாறி ஞானேந்திரியங்கள் என்ற பொறிகளாக மாறுகிறது. இதற்கு மங்காத வாய்மையென்னும் தவச் செல்லம் வேண்டும் என்று ஒவ்வொரு குறளிலும் தன் தெய்வக் கொரலை வைத்து திருவள்ளுவ நாயனார் வழியிட்டுச் சென்றுள்ளார்.

புலன்வழிப் பற்றியோடிப் போக்கியயென் வயதையெல்லாம்
நலன்தர மீட்டித் தந்தென் நாளினை அடியேன் மீண்டும்
புலன்வழி யழித்திடாது புண்ணியம் தனக்கே யீட்டென்
றலர்ந்த வாய்த் திகிரி வேந்தே அதிசியம் ஆஈ தென்னே

புலன்வழிப் பற்றியோடி அழித்துக் கொண்ட வயதை நமக்கு மீட்டுத் தரும் வினைத் தொழிலைச் செய்யவந்தவர்களே மேலோர். அன்பின் பாதையை அனைவரும் அறிய வேண்டுமெனில் அனைவரும் தன் தேக சிந்தனைப் பாடுகளைத் தூக்கியெறிந்து உலகெங்கும் விளங்கும் உயிர்நிலையை தன்னுள்ளில் தேடும் வினைபுரியவேண்டும். செய்யும் தொழிலே தெய்வம் என்பது இதைத்தான். இதற்கான பாட்டிற்கு நாம் பெறும் கூலி உலக அன்பு, பிரபஞ்ச ஆனந்தம், நேசக் கட்டுடலால் இணைக்கப்பட்ட உறவு அமைப்புகள். இதுவே ராம ராஜ்யம். தேஜோமயம். பிரம்மானந்தம் போன்ற அனைத்தும் என்பது இவ்வெளியோனின் கருத்து

நம் மன்ற மக்களுக்கு ஒரு செய்தி

இது நாள் வரை நீங்கள் திருக்குரலை பல பரிமாணங்களில் கண்டும் கேட்டும் படித்தும் இன்புற்றிருப்பீர்கள். நமது கலைவேந்தன் தினமும் ஒரு திருக்குறள் என்ற ஒரு தனித்திரியே கண்டுள்ளார். இன்றிலிருந்து ஒவ்வொரு குரளையும் அதன் செய்தியை உலக விஷயங்களுக்கோ அல்லது வாழ்வியலுக்கோ கூறுவதாகப் பொருள் கொள்ளாமல் அதாவது நமது தேகத்தைச் சார்ந்த செய்தியாகக் கருதாமல் நுண்ணிய அறிவோடு படித்துப் பாருங்கள். பெரிய பெரிய ஆன்மீகப் பொக்கிஷங்களை உள்ளடிக்கியிருப்பதை அறியமுடியும்.

இந்தக் குறளைப் பாருங்கள்

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப்படும்

இங்கே நல்வினை என்பதை உலக மக்களுக்கு செய்யும் உதவிகள் அல்லது ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் உதவிக்கான காரியங்கள் என்ற சிந்தனைவிடுத்து அவர் கூறும் மேற்சென்று செய்யப்படும் என்ற வினை எதைக் குறிக்கிறது என்று ஆராய்ந்து பாருங்கள். அதாவது ஒரு மூச்சு உள்ளே இழுக்கும்போது நாம் செல்வம் படைத்தவனாகின்றோம். அதே ஒரு மூச்சினை வெளியே விடும்போது ஏழையாகிறோம் என்ற ஒரு தகவலை முன்னிறுத்திப் பாருங்கள். கல்வியின் பயன் என்ன வென்று அறியலாம்

ஈதல் இசைபட வாழ்தல் அஃது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு

என்பதில் நாம் சம்பாதிக்க வேண்டிய ஊதியம் என்ன வென்று அறியலாம்

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான்
வையத்து அலகையா வைக்கப்படும்

இங்கே அலகை என்ற சொல் ஊதியம் என்ற பயனுக்கு எதிரான பலன் என்பது அறியலாம்

ஜலத்தினில் அக்கினி உருவாய் இருப்பது உயிர் அது ஜடத்தினுக்கு இறங்கும்போது தேகமாகிறது. தேகத்தை துறக்கும்போது ஆசாபாசங்கள் ஓய்கிறது. அனைத்துயிரும் ஒன்றென அறியும் பேரறிவு உதயமாகிறது. தேக அறிவில் இறங்கும் போது வியாதிகள் பீடிக்கிறது. தேவஅறிவு உயிரை வாழவைக்கிறது. இந்த ஒப்பற்ற உண்மைகளை மடங்கள் அறியவில்லை. அறிந்து கொள்ள முயலவும் இல்லை. தீவிரவாதமும், கேடும் பிடியாய்க் கொண்டு தன் மதத்திற்கே விரோதமான காரியங்களைத்தான் எல்லா மடங்களும் இன்று பற்றிக் கொண்டு உள்ளது.

உயிர்நிலையை அறிய மறுக்கும் அறியாமையைக் களைந்து ஆற்ற வேண்டிய வினை எது என்பதை உணர்த்தும் ஒரு பாடலை மன்ற மக்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

உள்ளது நூறே யாண்டி லிளமையி லீராறு போகும்
மெள்ளவே முதுமை தன்னில் மூன்றுபத்தாகும் மைந்தா
கள்ளமா முறக்கந் தன்னில் கணக்கிருபத்தாறு போக
விள்ளுவா யிருபத்தாறே மீந்ததிலுரைக்கக் கேண்மோ

மீந்ததோர் வயதிருபத் தாறுக்கும் பங்குக்காரர்
காய்ந்திடும் வறுமை நோயும் கல்வியு மின்ப மின்னோர்க்
கீந்திடில் மீதமெங்கே இவர்கட்கே போதா தாகும்
மீந்துனக் கெவரீ வார்காண் மோட்சமுன் பேச்சே வீணாம்

வீணதுவாகிடாமல் மேலவ ரிடத்தில் சார்ந்தா
லூண்சுவை யிருதயத்துள் ளுறைந்த நன்னிலமும் காட்டிப்
போனனாள் மீண்டங்கேறும் பேரின்ப வடிவம் பெற்று
ஊனங்க ளனைத்தும் தேய்ந்து உன்புகழ் வானம் பாயும்

இந்த வினையை எந்த மடங்கள் முன்னிறுத்துகிறதோ அன்றே அன்பிற்கான பாதை செம்மைப்படுத்தவிட்டது என்று பொருள்

அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி
அரும்பணி யெவர்க்கும் ஆற்றி
மனத்துள்ளே பேதா பேதம்
வஞ்சம் பொய் களவு சூது
சினத்தையும் தவிர்ப்பாயாகில்
செய்தவம் வேறென்றுண்டோ
உனக்கிது உறுதியான
உபதேசம் ஆகும்தானே

பஞ்சமா பாதங்கள் அல்லது அதன் வினைப்பயனை மட்டும் செய்யும் நம் உடலில் உள்ள கர்மேந்திரியங்களை பஞ்சாட்சரப் பொருளை அறியும் ஞானேந்திரியமாகக் கொள்ளும் போதுதான் உலகம் அன்பின் பூங்காவாகும். அந்த நாளை பூமிக்கு இறக்க இன்னொரு இயேசுவோ அல்லது கிருஷ்ணரோ வர அனைவரும் இறைவனை இறைஞ்சுவோம்.

கருத்துக்களே கடவுள் என்பது என் உறுதியான கொள்கை. ஏதேனும் கருத்துப்பிழை இருந்தால் மன்ற மக்கள் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்.

நாகரா
08-07-2008, 04:11 AM
என் கேள்விக்கு பதிலாக மெய்ஞ்ஞான விருந்தையே மன்றத்தில் பரிமாறியிருக்கிறார் சாலை ஜெயராமன் ஐயா அவர்கள். என் நெஞ்சார்ந்த நன்றிகள் உமக்கு ஐயா. மன்ற அன்பர்கள் ஆழ ஊன்றிப் படித்துப் பயன் பெறுவீர். நன்றி

இளசு
08-07-2008, 04:22 AM
சாலை ஜெயராமன் அவர்கள் இருக்கும் மன்றத்தில் நானும் இருப்பதில்
பெருமை கொள்கிறேன்.

எண்ணத்தில் பெரியோரான உங்களைப் போன்றவர்களின் சக -இணைய -வாசம் நாங்கள் பெற்ற பேறு!

நன்றி சாலை அவர்களுக்கு!

தாமரை
08-07-2008, 04:41 AM
சாலை ஜெயராமன் அவர்கள் இருக்கும் மன்றத்தில் நானும் இருப்பதில்
பெருமை கொள்கிறேன்.

எண்ணத்தில் பெரியோரான உங்களைப் போன்றவர்களின் சக -இணைய -வாசம் நாங்கள் பெற்ற பேறு!

நன்றி சாலை அவர்களுக்கு!


உள்ளது நூறே யாண்டி லிளமையி லீராறு போகும்
மெள்ளவே முதுமை தன்னில் மூன்றுபத்தாகும் மைந்தா
கள்ளமா முறக்கந் தன்னில் கணக்கிருபத்தாறு போக
விள்ளுவா யிருபத்தாறே மீந்ததிலுரைக்கக் கேண்மோ

மீந்ததோர் வயதிருபத் தாறுக்கும் பங்குக்காரர்
காய்ந்திடும் வறுமை நோயும் கல்வியு மின்ப மின்னோர்க்
கீந்திடில் மீதமெங்கே இவர்கட்கே போதா தாகும்
மீந்துனக் கெவரீ வார்காண் மோட்சமுன் பேச்சே வீணாம்

வீணதுவாகிடாமல் மேலவ ரிடத்தில் சார்ந்தா
லூண்சுவை யிருதயத்துள் ளுறைந்த நன்னிலமும் காட்டிப்
போனனாள் மீண்டங்கேறும் பேரின்ப வடிவம் பெற்று
ஊனங்க ளனைத்தும் தேய்ந்து உன்புகழ் வானம் பாயும்


மொத்தம் 100 ஆண்டுகளில் இருபத்தாறு ஆண்டுகள் மட்டுமே மனிதனுக்கு

30 ஆண்டுகள் முதுமையில் கழிய, பனிரெண்டு ஆண்டுகள் இளமையிற் கழிய

26 ஆண்டுகள் உறக்கத்தில் போக எஞ்சி இருப்பது 26 ஆண்டுகளாம்..

இந்த இருபத்தை ஆறு ஆண்டுகளைக் கல்வி, வறுமை, நோய், இன்ப நுகர்ச்சி என அனைத்திற்கும் பகிர்ந்து கொடுத்தாலும் இவைகளுக்கே போதாதாகி விடுகிறது. இப்படி உழல்வோர்க்கு மோட்சம் என்னும் பேச்சே வீணாகி விடுகிறது..


இப்படி வீணாகும் நாட்களை எப்படித் திரும்பப் பெறுவது?

நல்லோரின் பெரியோரின் சகவாசமே அதற்குத் தேவைப் படுகிறது. அப்படி நல்லோரின் பெரியோரின் துணைக்கோடல் சுவையின்பத்தில் லயித்த இதயத்தை நல்லவைகளினால் நிரப்பி, இந்த இருபத்தி ஆறாண்டுகாலம் என்ன இழக்கும் அத்தனைக் காலத்தையும் மீட்டு, மனிதருக்கேயான அனைத்து ஊனங்களும் மறையப் பெற்று வானளவு உயர்ந்து பேரின்ப வடிவம் பெறலாம்..


புரிந்து பதிந்த பின்னூட்டமோ, புரியாமல் உள்ளத்தில் எழுந்துப் பதிந்த பின்னூட்டமோ!

சாரத்தைச் சிக்கென்று பற்றினீரே!!! :icon_b::icon_b::icon_b:

இளசு
08-07-2008, 04:58 AM
அதிசயம் தாமரை!

பெரியாரைத் துணைக்கோடல் - மனதில் மின்னிய அந்த வரியே என் பின்னூட்டமாய் தந்தேன்!

(உங்கள் அளவுக்கு ஆழமாய் சிந்தித்து அன்று - மனதில் சட்டென எழுந்த உணர்வே..)

என் பின்னூட்டத்தின் நாயகர்களில் ஒருவராய் நீங்களும் உண்டு...

இதை நான் சொல்லத்தேவையில்லை..

உங்களின் இந்தப் பதிவொன்றே சொல்லப் போதும்!

------------------------------

சாலை, நாகரா, தாமரை - ஆகியோருக்கு என் வேண்டுகோள்!

இக்கேள்வி பதிலை மட்டும் தனித்திரியாக - இன்னும் விரிவாக
கருத்தாடுங்கள்..

நான் இன்னும் வாசித்து பயன் பெற வசதியாக..

நன்றி!

சுகந்தப்ரீதன்
08-07-2008, 05:04 AM
சாலையண்ணாவின் மெய்யை பற்றிய மெய்யான பார்வையினை மெய்யாலுமே மேலும் பலமுறை வாசிக்கத் தோன்றுகிறது..!!

இன்றை மடங்கள் அன்பையும் அறத்தையும் போதிப்பதை விட்டு வம்பை போதிக்கும் நிலையில்தான் உள்ளன..!! வெளிநோக்கி வேதனையுறுவதை விட உண்மையை உள்நோக்கி உற்சாகம் கொள்ள சொல்கிறது சாலையண்ணாவின் பதிவு..!!

அண்ணாரின் பதிவை அடுத்து அண்ணல்களின் பின்னூட்டங்களை கண்டு உண்மையிலேயே உள்ளம் உவகை கொள்கிறது..!! இந்த மன்றத்தில் நானும் ஓர் அங்கமாய் இருப்பதை நினைத்து பெருமை கொள்கிறது எனது உள்ளம்..!! வருங்கால தலைமுறையை வழிநடத்தட்டும் உங்கள் அனைவரின் அறிவும் அனுபவமும்..!!

அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..!!

நாகரா
08-07-2008, 06:42 AM
நம் மன்ற மக்களுக்கு ஒரு செய்தி

இது நாள் வரை நீங்கள் திருக்குரலை பல பரிமாணங்களில் கண்டும் கேட்டும் படித்தும் இன்புற்றிருப்பீர்கள். நமது கலைவேந்தன் தினமும் ஒரு திருக்குறள் என்ற ஒரு தனித்திரியே கண்டுள்ளார். இன்றிலிருந்து ஒவ்வொரு குரளையும் அதன் செய்தியை உலக விஷயங்களுக்கோ அல்லது வாழ்வியலுக்கோ கூறுவதாகப் பொருள் கொள்ளாமல் அதாவது நமது தேகத்தைச் சார்ந்த செய்தியாகக் கருதாமல் நுண்ணிய அறிவோடு படித்துப் பாருங்கள். பெரிய பெரிய ஆன்மீகப் பொக்கிஷங்களை உள்ளடிக்கியிருப்பதை அறியமுடியும்.


அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

1. அன்பின் வழியது உயிர்

உயிர் என்று சொல்லப் படுவது அன்பு என்று சொல்லப்படும் அருளொளி(அருட்பெருஞ்ஜோதி-Spiritual Light) தங்கு தடையின்றி ஓடும் வழி

2. நில் 'ஐ' அஃது.

அன்பென்று சொல்லப்படும் அருளொளியே, நித்தியப் பெருவாழ்வில் நிலைத்து நிற்கும் 'ஐ' யாம்(I AM) தனித் தலைமைப் பெரும்பொருள்(தனிப்பெருங்கருணை-Supreme Grace or Compassion)

3. இல் ஆர்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.

என்புதோல் போர்த்திக் கட்டப்பட்டிருக்கும் மெய்யுடம்பாகிய திடமான இல்லம் யார்க்கு?
அன்பென்று சொல்லப்படும் அருளொளியாம் அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணைக்கு அன்றி வேறு யாருக்கோ?

மனிதன் - குழாய்
மெய் - குழாயின் திட பாகம்
உயிர் - குழாயின் காலி பாகம் - அன்பெனும் திரவம்(அருளொளி) தங்கு தடையின்றிப் பாயும் வழி
உயிர்மெய் ஒருமை - குழாய்க்குள் அன்பெனும் திரவம் தங்கு தடையின்றிப் பாயும் நிலைமை.

ஆக, மனிதனாகிய உனக்கு
1. உயிர் இருப்பதன் நோக்கம் அன்புக்கு வழியாக, அதாவது காலியாக (ஆணவம், கன்மம், மாயை என்பவை குழாயில் உருவாகும் அடைப்பு) அது இருக்கவே.
2. மெய்யாகிய உடல் இருப்பது அன்பின் வழியாம் உயிரெனும் காலி பாகத்தைச் சுற்றி திடமான இல்லமாக இருக்கவே.
3. இது உன் உணர்வில் ஊற ஊற, உடம்பு தன்னுள்ளே பாயும் அருளொளியில் கரைந்து போக, உயிராம் காலி பாகம் வெட்டவெளியில் சேரும்(மறுபடி உடம்பெடுக்க வேண்டிய அவசியமின்றி). இதுவே மரணமிலாப் பெருவாழ்வு, அன்பெனும் தயவை உணர்ந்து, அதன் வழி நடந்தாலன்றி, வேறெவ்வாறும் இது சாத்தியமில்லை.

எனவே பொய்ம்மடங்களையெல்லாம் விட்டொழிந்து, உன் மெய்ம்மடமாம் உடம்பைச் சார்ந்து, அவ்வுடம்புள் அன்புக்கு வழியாம் உயிரை உணர்ந்து, உடம்புள் பாயும் அன்பாம் அருளொளியில் உடம்பைக் கரைத்து, உயிரை வெட்டவெளியில் சேர்த்து, வெட்டவெளியில் அருளொளியாய் நித்தியப் பெருவாழ்வில் நீ நிலைபெறு.

இது உன்னால் முடியும், வள்ளலின் வாய்மை மீது சத்தியம். தெய்வப் புலவன் திருவள்ளுவனின் மெய்ஞ்ஞான சூத்திரம்.

நாகரா
08-07-2008, 07:12 AM
பராபர அருளொளி பங்கமின்றிப் பாய
பராபரந் தருவழி உயிர்

பராபரந் தருவழி உயிரைத் திடமாய்த்
தராதலம் நிறுத்தும் மெய்

உள்ளே ஓடும் அன்பில் ஊறிஊறி
மெய்யைக் கரைத்தல் இன்பம்

அன்பில் மெய்யைக் கரைக்க ஆருயிர்த்
தன்மை புக்கும் வெளி

வெளியில் அருளாய் இருக்கும் பேறே
களிக்கும் நித்திய வாழ்வு

தந்திர வெளியில் தயவாய் இருப்பதே
மந்திர எழுத்தின் பயன்

நாகரா
08-07-2008, 10:17 AM
2. ஆதி

ஏழ்மையின் அவலத்தைப் பாடும் நா வன்மையும், அந்த அவலத்தை உடனே தீர்க்கும் செல்வ வளமையும், உமக்கு ஒருங்கே வாய்க்கப் பெற்றிருந்தால்(இரண்டையும் செய்ய உங்களால் முடியும் என்பதே பொருள்), நீவிர் முதலில் எதைச் செய்வீர்.

4. அனு

ஆன்மீக எழுச்சியில் நவ யுகப் பெண்டிரின்(பாரதி சொன்ன புதுமைப் பெண்) பங்கீடு என்ன?

ஆதியும் அனுவும் விரைவீர், உம் விடைகளால் எம்மை விளக்குவீர். விடை தந்து எம்மை விளக்கிய எண்மருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஆதி
08-07-2008, 10:19 AM
இன்றிற்குள் பதிலளித்துவிடுகிறேன் ஐயா.. தாமதத்திற்கு மன்னிக்கவும்..

ஆதி
08-07-2008, 12:26 PM
2. ஆதி

ஏழ்மையின் அவலத்தைப் பாடும் நா வன்மையும், அந்த அவலத்தை உடனே தீர்க்கும் செல்வ வளமையும், உமக்கு ஒருங்கே வாய்க்கப் பெற்றிருந்தால்(இரண்டையும் செய்ய உங்களால் முடியும் என்பதே பொருள்), நீவிர் முதலில் எதைச் செய்வீர்.



பாடுவதும் பேசுவதும் எவராலும் இயலும்.. தீர்த்தல்தான் இயலாத ஒன்று அந்த செல்வ வரம் வாய்க்க பெறும் போது பாடுவதால் என்ன பயன் கிடைக்க போகிறது ஐயா.. மீன் கொடுப்பதைவிட மீன்பிடிக்க கற்று கொடுத்தல் நலம் என்பார்களே.. அதைதான் செய்வேன்.. கற்று கொண்டவரிடதே இணைந்து கொள்ளுங்கள் மற்றவர்க்கும் மீன்பிடிக்க கற்றுக் கொடுப்போம் என்று தான் வேண்டிகோள் வைப்பேன்.. நம்மால் மற்றர்களின் வறுமையை போக்க இயலாத ஆனால் வறுமையை அவர்கள் போக்கி கொள்ள வழி செய்ய இயலும் அதைதான் செய்ய விரும்புவேன்..
வறுமையை போக்க பாடியவர்கள் எல்லாம் தங்கள் வறுமையை போக்கி கொண்டு வளமையை பெருக்கி இருக்கிறார்கள் மற்றவர்கள் வறுமையை போக்கியதாக நான் அறியவில்லை.. அவ்வழி செல்ல எஞ்ஞான்று எனக்கு எண்ணமில்லை..

ராஜா
08-07-2008, 12:27 PM
1

இது நாள் வரை நீங்கள் திருக்குரலை பல பரிமாணங்களில் கண்டும் கேட்டும் படித்தும் இன்புற்றிருப்பீர்கள். இன்றிலிருந்து ஒவ்வொரு குரளையும் அதன் செய்தியை உலக விஷயங்களுக்கோ அல்லது வாழ்வியலுக்கோ கூறுவதாகப் பொருள் கொள்ளாமல் அதாவது நமது தேகத்தைச் சார்ந்த செய்தியாகக் கருதாமல் நுண்ணிய அறிவோடு படித்துப் பாருங்கள்.


கருத்துக்களே கடவுள் என்பது என் உறுதியான கொள்கை. ஏதேனும் கருத்துப்பிழை இருந்தால் மன்ற மக்கள் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்.

நானறிந்த வகையில் கருத்துப்பிழை எள்ளளவும் இல்லை.

பதிலின் முதல் வரியிலிருந்தே உள்ளத்தை தொடும் வகையில் துவக்கி, அற்புதமான கருத்துகளை தந்திருக்கிறீர்கள்.

ஆனால் எழுத்துப் பிழைகள் மலிந்திருப்பது, இனிய சர்க்கரைப் பொங்கலைச் சுவைக்கும்போது பற்களில் கற்கள் கடிபடுவதைப் போன்று இடர் தருகிறது.

உதாரணமாக திருக்குறளைப் ப*ற்றி உயர்வாகச் சொல்லும் நீங்கள் உலகப் பொதுமறையின் பெயரை சில இடங்களில் சற்றே கவனக்குறைவாகப் பதிந்திருப்பது நெருடலைத் தருகிறது.

இதை குறை கூறுவதாக எண்ண வேண்டாம் சாலையாரே..

எழுத்துப்பிழைகளினால் மிக உயர்வான விடயங்கள் அதற்குரிய* தாக்கத்தை ஏற்படுத்தாமல் போய்விடும் வாய்ப்பிருக்கிறதே என்ற ஆதங்கத்தால் மட்டுமே இதைக் குறிப்பிடுகிறேன்.

தவறாயின் பொறுத்தருள்க. நன்றி.

சாலைஜெயராமன்
08-07-2008, 02:18 PM
நன்றி திரு ராஜா.

குரல் என்பது எழுத்துப்பிழை அல்ல. நாதத் தொனியாய் வள்ளுவப் பெருந்தகை தங்கள் தெய்வீகக் குரலால் நம்மோடு உரையாடிக் கொண்டிருக்கும் குரலாகப் பாவித்து எழுதியது குரல் என்பது.

அடுத்து குட்டை அல்லது குறுகிய என்பதின் தமிழ்ச் சொல்லாக குறள் எனக் கூறியிருப்பதை மெல்லினமாகக் கூறியிருக்கிறேன்.

நெடிய மலைபோல் கருத்துக்களைக் கொண்ட ஒரு மகா வாக்கியத்தைக் குட்டை என்று பொருள் படும் சொல்லைத் தவிர்க்கவே வேண்டுமென்று பிரயோகித்த பதம் அது.

சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள் பல.

நாகரா
08-07-2008, 02:29 PM
பஞ்சமா பாதங்கள் அல்லது அதன் வினைப்பயனை மட்டும் செய்யும் நம் உடலில் உள்ள கர்மேந்திரியங்களை பஞ்சாட்சரப் பொருளை அறியும் ஞானேந்திரியமாகக் கொள்ளும் போதுதான் உலகம் அன்பின் பூங்காவாகும்.
அந்த நாளை பூமிக்கு இறக்க இன்னொரு இயேசுவோ அல்லது கிருஷ்ணரோ வர அனைவரும் இறைவனை இறைஞ்சுவோம்.


அந்த நாளை பூமியில் உருவாக்க நாம் ஒவ்வொருவரும் நடமாடும் ஜீவனுள்ள கிறிஸ்துவாக, குருவாக, நபிகளாக, புத்தராக, மசியாவாக இன்றே எழுவோம்! அப்படியெழ அருட்பெருங்கடவுள் நம் ஒவ்வொருவரையும் வழிநடத்தட்டும், சாலை ஐயா போன்ற பெரியோர்கள் அத்தகைய பேரெழுச்சிக்கு நமக்கு நற்றுணையாக இருக்கட்டும். இதுவே என் வேணவா!

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று

சுதந்திர பாரதம் தான் காணுமுன்னேயே மகாகவி பாரதி பாடிய வகையில் என் பாட்டு. பிழைகளும் குறைகளும் இருப்பின் பொறுப்பீர், சுட்டுவீர், நன்றி

சஹஸ்ரார முடிவாம் உச்சித்தாமரை திறந்தது
மூலாதார முதலாம் குண்டலிநாகம் எழுந்தது
நிராதார மேனிலை ஆறாதாரம் புகுந்தது
பராபர அருணிலை மெய்வழிப் பாய்ந்தது
ஜெயராம இராஜ்ஜியம் பூமியில் மலர்ந்தது
பாரபட்சம் பாராப் பேரன்பே ஆண்டது

மன்றத்தில் விழித்தது பொன்றாத நெருப்பூ
குன்றின்மேல் வைத்தது போன்றதாம் சுடர்ப்பூ
கண்டத்துள் விழுந்தது தெள்ளமுதக் களிப்பூ
பண்டத்துள் எழுந்தது மெய்யென்னுஞ் சிலிர்ப்பூ
மாயத்திரை கிழிந்தது நெஞ்சின்மேல் ஒளிப்பூ
பேயாட்ட மனமடங்கி இருதயத்தில் இருப்பூ

இருதயவாய் திறந்தது நெஞ்சின்கீழ் கதிர்ப்பூ
திருக்கமலம் மலர்ந்தது நாபிக்குள் பூரிப்பூ
பெருந்தயவாய் விழுந்தது அருட்ஜோதி இறைப்பூ
அருட்கடவுள் எழுந்தது முதுகடியில் உயிர்ப்பூ
அருளாட்சி வென்றது நவயுகத்தின் படைப்பூ
ஒருமைக்குள் வந்தது பல்லுயிர்த்திரட் தொகுப்பூ

இதயம்
08-07-2008, 02:30 PM
நன்றி திரு ராஜா.

குரல் என்பது எழுத்துப்பிழை அல்ல. நாதத் தொனியாய் வள்ளுவப் பெருந்தகை தங்கள் தெய்வீகக் குரலால் நம்மோடு உரையாடிக் கொண்டிருக்கும் குரலாகப் பாவித்து எழுதியது குரல் என்பது.


நான் சாலை அவர்களின் பதிவை படிக்க ஆரம்பித்த பொழுதே உறுத்திய விஷயம் ராஜா அண்ணா குறிப்பிட்ட அந்த எழுத்து(தோற்ற)ப்பிழை..! ஆனால், அவரின் பதிவை படிக்க ஆரம்பித்த பின் அவரின் கருத்து வலைக்குள் நான் கடுமையாக சிக்கிக்கொண்டதில் நான் ஒன்றுமறியா மானானேன். அவர் தகுதி வாய்ந்த வேடனானார். அப்படிப்பட்டவர் இத்தனை எளிய பிழையை செய்திருக்க வாய்ப்பே இல்லை என்பதை உணர்ந்து அமைதி காத்தேன். ஆனால் அதை ஒரு பிழையாய் கருதும் நண்பர்கள் எவரும் அது தொடர்பில் கேட்கும் போது சாலை அவர்கள் கொடுக்கப்போகும் பதிலுக்காய் காத்திருந்தேன். அதே போல் அண்ணன் கேட்டார், சாலை அவர்கள் பதிலும் அளித்தார். இத்தகைய சான்றோர்கள் இருக்கும் மன்ற அவையில் நானும் ஒரு உறுப்பினன் என்பதில் மனம் கொள்ளா பெருமை எனக்கு..!

நன்றி பதிலளித்த சாலை அவர்களுக்கும், பதிலுக்கு காரணமான ராஜா அண்ணனுக்கும்..!!

சாலைஜெயராமன்
08-07-2008, 02:32 PM
நன்றி திரு தாமரை

சொல்ல வந்த செய்தியை சட்டென்று மன்றத்தில் விளக்கியுள்ளீர். தமிழ்பற்றின் தாக்கத்தால் செய்யுளின் மையத்தை சிக்கெனப் பற்றியதில் திரு இளசுவும், தாங்களும் பெரும் பங்கு வகிக்கிறீர்.

பெரியாரைத் துணை கோடல் என்ற வள்ளுவப் பெருந்தகையின் மையக் கருத்தும் இதைச் சுற்றித்தான் வருகிறது என்று நினைக்கிறேன்.

பயன் தரும் பின்னூட்டத்தை வழங்கியதற்கு மீண்டும் நன்றிகள்.

மறை உலக்கப் பாடல்கள் பல இன்னும் கைவசம் உள்ளன. தாங்கள் விரும்பினால் பகிர்ந்து கொள்கிறேன்.

தொடர்ந்து தங்கள் கருத்துப் பரிமாற்றங்களை விழைகிறேன்.

நன்றியுடன்

ராஜா
08-07-2008, 02:41 PM
நன்றி திரு சாலையாரே..!

உங்கள் பதிவுகளை படிக்கும் பேராவல் மிகுகிறது.. எவ்வளவு அருமையான பொருள் பொதிந்த சொற்கள்.. தமிழின் இனிமைதான் என்னே..!!.

நன்றி .. வணக்கம்.

சாலைஜெயராமன்
08-07-2008, 02:59 PM
பண்பில் பூத்த பல வகை வாசமுள்ள மலர்களால் ஜொலிக்கிறது நம் மாமன்றம்.

நன்றி திரு இதயம். கருத்துக்களை வாங்கி அலசி ஆய்வதில் தங்களுக்கு இருக்கும் ஈடுபாட்டை நான் நன்கறிவேன்.

ஏதோ சொன்னோமா சென்றோமா என்று இருக்கக் கூடாது என்பதால் மிகப் பிரயத்தனப்பட்டு எடுத்துக் கொண்ட கருத்துக்களில் எங்கும் எதிலும் கர்வத்தின் சாயல் தென்படாமலும் பிறர் அறியாமையை எள்ளி நகையாடா நற்பண்பால் தொட வேண்டும் என்று சற்று காலதாமதமாகத்தான் வெளியிட்டேன். தங்களைப் போன்றோரின் இதயத்தை சற்று தொட்டிருந்தாலும் அன்பின் பலன் அதுவே என்று மகிழ்வேன். இளைஞர்களின் தாக்கம்தான் தற்போதைய நவ இந்தியாவிற்குத் தேவை. தங்களைப் போன்றோரிடம் கருத்துக்கள் சென்றடைந்தது நான் பெற்ற பேறாகக் கருதுகிறேன்.

தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும்

என்ற பொய்யா மொழியின் வாக்கிற்கு சாட்சியாக நிற்கும் திரு ராஜா தங்கள் புரிதலுக்கு நன்றி. காலத்தே தவறுகளைச் சுட்டிக் காட்டி இடித்துரைக்கும் நல்ல நட்பே பெரியாரைத் துணை கோடல் என்பது. தங்கள் பணியை செவ்வனே செய்திருப்பது பாராட்டுக்குரியது.

நன்றிகள் பல

அன்பு சுகந்தன் ஆழமான பின்னூட்டம் தந்தமைக்கு நன்றிகள். தங்களைப் போன்ற இளைஞர்கள் தான் என் குறி. கர்மம் தொலைப்பது என்பது வேள்விக்கு ஒப்பானது. தங்கள் போன்றோருடன் அளவளாவுவது அன்பிற்கு வழங்கும் அருட்கொடை எனக் கருதுகிறேன்.

ஆதியிடமிருந்தும், பூமகளிடம் இருந்தும் நல்ல சிந்தனைக் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

திருமிகு நாகராவிற்கு சிறப்பான பணிவான வணக்கங்கள். அவருள் விளங்கும் மெய் நிலையின் தாக்கமே ஒரு சிறப்பான கேள்விக்கு வித்திட்டது. தொடர்ந்து தரும் பின்னூட்டம் சர்க்கரைப் பந்தலில் தேன் மழை போல் உள்ளது.

தொடரட்டும் தங்கள் பணி திருமிகு நாகரா.

சிவா.ஜி
08-07-2008, 03:52 PM
சாலை ஜெயராமன் அவர்களின் தெளிவான சிந்தனை விழிவிரிய வைக்கிறது. மடங்கள் மதம் வளர்ப்பதற்கு பதிலாக மடமை வளர்க்கத்தான் அதிகம் முனைகின்றன என்பது உண்மையிலும் உண்மை.

தெளிந்தறிய வேண்டியவை தெய்வப்புலவனின் வாக்குகளில் கொட்டிக்கிடப்பதை சுட்டிக்காட்டி தெளிவாக்கியமைக்கு மனம் நிறைந்த நன்றி. சான்றோர் உடனிருப்பும், அவர் வாக்குகளை பின்பற்றுவதும்தான் நம்மை வழி நடத்தும் என்பது எத்தனை சத்தியம்?.

மனமார்ந்த பாராட்டுக்ள் அய்யா.

நாகரா
09-07-2008, 02:36 AM
4. அனு

ஆன்மீக எழுச்சியில் நவ யுகப் பெண்டிரின்(பாரதி சொன்ன புதுமைப் பெண்) பங்கீடு என்ன?

உம் பதிலுக்குக் காத்திருக்கிறோம், எம்மை விளக்கும் விடை தர வாரீரோ, நன்றி.

சாலைஜெயராமன்
09-07-2008, 03:48 AM
அன்பின் வழியது உயிர்நிலை அறிவிலார்
என்பு தோல் போர்த்திய உடம்பு

திரு ராஜா பெரிய தவறு நடந்துள்ளது. குறளின் வரிகளில் தப்புள்ளது.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்பு தோல் போர்த்திய உடம்பு

தவறைத் திருத்திக் கொண்டேன்

நாகரா
09-07-2008, 04:01 AM
ஆத்மார்த்தமாக பதில் சொன்ன ஆதிக்கு என் நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்.

சாலைஜெயராமன்
09-07-2008, 04:13 AM
இதயத்தின் சில விரிவான பதிலில் சில கேள்விக்கணைகளும் இருந்தன. நான் திரு நாகராவிற்கு பதில் தரவேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் உடன் பதிலளிக்கவில்லை.

இதயமும் மூளையும் மனித அங்கத்தில் முக்கியமான ஒன்று. மூளை உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும், உணர்ச்சிகளைக் கொட்டவுமான வேலைகளைக் கண்காணிக்கும் பொறுப்பாளர். ஆனால் வெறும் இரத்தப் பகிர்மானத்தை உடலெங்கும் பரப்பும் இதயத்தை ஏன் உணர்ச்சிகளுக்குப் பொறுப்பாக்குகின்றனர்? இதயத்தின் இந்த ஆழாமான கேள்வி சிந்தனைக்குரியது.

மன்ற மக்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு கேள்வியைத் தொடுத்திருக்கும் திரு இதயத்தின் கேள்விகளுக்கு நம் மன்றப் பெரியோர்கள் விடையளிக்க முயலலாமே,

நாம் நினைத்துக் கொண்டிருக்கும் இந்த இதயத்திற்கும் காதல் கோட்டைக்கும் எந்த ஒரு சம்மந்தமுமில்லை. இது ஒரு உணர்ச்சியற்ற ஒரு உந்து சக்தி வேலையைச் செய்யும் ஒரு கருவிதான். இதை உலக விஞ்ஞான அறிவால் உணரமுடியாது. நிஜமான இதயம் இதுவல்ல.

ஆனால் இறைவனின் கோவிலும், உணர்ச்சிகளின் சங்கமும் நிகழும் மெய்யான இதயம் மனிதனின் கற்பனைக் கெட்டாத உயரத்தில் இருக்கிறது.

இதை ஒரு மெய்க்குருபிரானின் அருளால்தான் அறிந்து கொள்ள இயலும். மனித அறிவின் அறியாமைக்கு முதல் எடுத்துக் காட்டு இந்த இதய சப்ஜெட் என்றால் மிகையில்லை.

ஒரு பாடலைப் பாருங்கள்.

நாறுமோர் மாமிசத் துண்டாய்
எனக்குள் இருந்த இருதயத்தை
கூறவொண்ணாச் சம்பத்தெல்லாம்
விளை உத்தியோவனமாக்க கண்டாய்

பாரிலுள்ளோர் கூறும் என் இருதயத்தை
என் குரு பாரென்று சொன்னவுடன்
பார்க்கப் பார்க்க ஆயிரத்தெட்டண்டங்களும்
பட்டப் பகல் போல் இலங்கக் கண்டேன்.

இது ஒரு சாட்சி. அன்று பரந்தாமன் காட்டியது இதே இதயத்தைத்தான். விஸ்வ ரூபம் என்பது வானுக்கும் பூமிக்குமான ஒரு மாமாயைத் தோற்றமல்ல. நம்மில் உள்ள ஒரு பொருளை நாம் அறியாமலேயே மறைந்து மடிந்துவிடுவது கொடுமைதானே. இந்த அறிவைவூட்டத்தான் இத்தனை சடங்குகள். சம்பிரதாயங்கள், சமயங்கள்

உலகில் உள்ள அனைத்து சத்திய மெய்ஞானப் பொருளும் இந்த ஒன்றை அறிந்து கொள்வதற்காகத்தான். அதில் நம் தமிழ்ப் பெரியோர்களான சித்தர்களின் பங்களிப்பு மிகக் கணிசமானது.

மேலும் இது பற்றி விவாதிப்போம்.

திரு இதயத்திற்கு தனிப்பட்ட முறையில் என் பாராட்டுக்கள். அதிகமான சிந்தனைகளைத் தூண்டிவிட்ட கருத்தாய்வு அவரது பதில்கள். பொய்யான தகவல்கள் அவரை அணுகமுடியாது என்பதற்கு அவரின் இந்த அகத்தாய்வு ஒன்றே சாட்சியாகும்.

திரு இதயம் அவர்களின் பின்னூட்டத்தின் ஒவ்வொரு பகுதியையும் விவாதிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் அனைவரும் பங்கு கொள்வோம்.

ஆ பத்து திரியின் அடுத்த கேள்விக் கணைகளை தொடுக்க அழைக்கும் அழைப்பை சற்று தள்ளிப் போடலாமா?

மன்ற நிர்வாகிகள் கவனத்திற்கு.

நாகரா
09-07-2008, 04:27 AM
சாலை ஐயா

என்னைப் பொருத்த வரையில்
இதயம் என்பது இருதயம் என்னும்
அதி சூக்கும தயவின் இருப்பின்
திடமான தூல வெளிப்பாடு

இருதயம் இல்லையென்றால்
இதயம் மாமிசப் பிண்டமாயும்
இயங்க முடியாது

இதயத்தில் இடையில் இருக்கும்
'ரு' (Ruh) (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=361299&postcount=10) அரபி மொழியில்
பரிசத்த ஆவியாம்
ஆதி சக்தியின் அருள் இருப்பைக்
குறிக்கிறது.

அருள் மற்றும் இருப்பிலும்
'ரு' (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=361299&postcount=10) இருக்கிறது
ஆழ நாம் யோசிக்க வேண்டியது.

யோசிக்க வைத்த அன்பர் இதயத்துக்கும்
இருதயத்தைப் பற்றி
வாசிக்க வைத்த சாலை ஐயாவுக்கும்
நன்றி பல.

நாகரா
09-07-2008, 04:46 AM
விஞ்ஞானம் என்ற பகுத்தறிவு கொண்டு பார்த்தால் இதயம் என்பது இரத்தத்தை சுத்திகரிக்கும் ஓர் இயந்திரம். நம் நம்பிக்கைகளின்(மெய்ஞ்ஞானத்தின்) அடிப்படையில் பார்த்தால் அன்பை இறைக்கும் கடவுளின் உறைவிடம். ஆனால், ஆழ்ந்து சிந்தித்தால் இரண்டுமே உண்மை தான். காரணம் நான் ஏற்கனவே சொன்னது போல் நம்பிக்கை(மெய்ஞ்ஞானம்), பகுத்தறிவு(விஞ்ஞானம்) இரண்டும் கலந்தது தானே வாழ்க்கை..?


அடைப்புக் குறிகளுக்குள் உள்ளவை நான் எழுதியவை, தாமரையாரின் பதிலோடு ஒப்பிட்டுக் காட்ட


7. தாமரை

புதியதோர் உலகம் செய்ய விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமா?

அவசியமா என்ற கேள்வியே தவறுன்னு நினைக்கிறேன். விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைந்துதான் இருக்கின்றன, இரண்டும் ஒரே இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

விஞ்ஞானத்தினால் கண்டுபிடிக்க முடிந்ததை மெய்ஞானத்தினால்தான் பக்குவமாகச் சமுதாயத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்க முடியும்.

புதியதோர் உலகம் செய்ய

விஞ்ஞானமும் மெய்ஞானமும் இப்பொழுதும் கைகோர்த்துக் கொண்டுதான் இருக்கிறது,..

விஞ்ஞானிகள் மெய்ஞானிகள் என்று தங்களைப் பிரித்துக் கொண்டு வரித்துக் கொண்டு வறுத்திக் கொள்பவர்கள் கொஞ்சம் உண்மையை உணர்ந்து தங்களை மாற்றிக் கொண்டால் போதும்.

இப்போது இதயத்தாரின் பதிலையும் தாமரையாரின் பதிலையும் கூர்ந்து படியுங்கள்.

விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் இணைக்கும் அருட்பாலங்களாகப் பெருந்தயவின் இருப்புகளாக இருக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் முழுப் பொறுப்பு. வன்பின் ஆர்ப்பாட்டத்தில் அன்னை பூமி அழியாமலிருக்க இது மிகவும் அத்தியாவசியமாய் இருக்கிறது. உணர்த்திய தாமரையாருக்கும் இ(ரு)தயத்தாருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். உண்மையில் நம் ஒவ்வொருவருக்கும் வேண்டுவது பெருந்தயவின் இருப்பாய் மலர்ந்த தாமரை இ(ரு)தயமே! (இது எப்படி இருக்கு?)

மன்றத்து அன்பர்கள் ஆழ சிந்திக்கவும், தத்தம் தாமரை இ(ரு)தய முத்துக்களை இங்கே உதிர்க்கவும். நன்றி

நாகரா
09-07-2008, 04:57 AM
நாறுமோர் மாமிசத் துண்டாய்
எனக்குள் இருந்த இருதயத்தை
கூறவொண்ணாச் சம்பத்தெல்லாம்
விளை உத்தியோவனமாக்க கண்டாய்

பாரிலுள்ளோர் கூறும் என் இருதயத்தை
என் குரு பாரென்று சொன்னவுடன்
பார்க்கப் பார்க்க ஆயிரத்தெட்டண்டங்களும்
பட்டப் பகல் போல் இலங்கக் கண்டேன்.


மாமிச இதயமும்
மாவெளி இருதயம்
என்றே மாற்றும்
சற்குரு சரணம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14577)

அருவ இருதயத்தின்
பரிபூரண வெளிப்பாடாய்
உருவான சுத்த இதயம்
நாறுமோர் மாமிசப் பிண்டமாய்த்
திரிந்தது எதனால்!?
அவ்வாறு திரித்த மனத்தால்
அதைத் திருத்த இயலாது
வருந்தி மனந்திரும்பி
இருதயத்தில் மனமடங்க
மாமிசப் பிண்டம்
சுத்த இதயமாய் மாறும்!

மெய்யுடம்பாலயமாம் சுத்த தேகம்
பொய்க்கிடங்காய்த் திரிந்ததேனோ!?
பரமன் தந்த தங்க மெய்யைப்
பாவி மனம் பங்கப் படுத்தித் திரித்ததாலே!
திரித்த மனம் முழுப்பொறுப்பேற்று
வருந்தி மனந்திரும்பிப்
பணிவுடன் மன்னிப்பைக் கோரப்
பரமன் சட்டென வருவான்
திரிந்ததைத் திருத்தி
மெய்யெனும் தங்கமாய் மாற்ற!
ஏனென்றால்
அவன் பெருந்தயாபரன்.
மனிதா
திரிக்க மட்டுமே
உன்னால் முடியும்.
உன்னால் திரிந்ததைச்
சரி செய்யப்
பரமனால் மட்டுமே முடியும்.
திரித்ததற்கான முழுப் பொறுப்பேற்கும்
பணிவும் வீரமும் நேர்மையும்
வருத்தமும் மனத்திருப்பமும்
மன்னிப்பைக் கோரும் அடக்கமும்
உனக்குத் தேவையான
உன் கடமை.
நீ
உன் கடமை செய்யப்
பரமன் கொடுப்பான்
உன் ஜீவ உரிமையாம்
சுத்த தேகத்தை.
ஏனென்றால்
அவன் பேரருளாளன்.

இன்று முதல் எளியனாகி
இந்த எளிய பிரார்த்தனையை
நீ செய்வாய்
"நான் வருந்துகிறேன், மனந்திரும்புகிறேன்.
என்னை மன்னித்தருள்வீர்.
நன்றி ஆண்டவரே!
நான் உம்மை நேசிக்கிறேன்."

திரிந்து தெரியும் தோற்றப் பிழைகள்
திருத்த வருவான் பரமன்.

(பி.கு: மேலே தடித்த எழுத்துக்களில் இருக்கும் எளிய பிரார்த்தனை
"I'm sorry. Please forgive me. Thank you. I love you." என்ற "Ho'opononpono Prayer"ன் தமிழாக்கம். மேலும் அறிய இச்சுட்டியைச் சொடுக்கவும் (http://www.hooponoponotheamericas.org/index.htm))

அரும்பாடலால் என்னை நெருடி, என்னை எழுதத் தூண்டிய சாலை ஐயாவுக்கும், இதயத்தைப் பற்றி அரும்பெருங் கருத்துகள் தந்து, இந்த உரையாடலுக்கு வித்திட்ட அன்பர் இ(ரு)தயத்துக்கும், "Ho'opononpono Prayer"ன் உருவாக்குனர் Dr. Hew Len அவர்களுக்கும், எழுதும் மனத்தெளிவை அளித்த நம் அம்மையப்பனாம் பரமனுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ராஜா
09-07-2008, 10:19 AM
திரு இதயம் அவர்களின் பின்னூட்டத்தின் ஒவ்வொரு பகுதியையும் விவாதிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் அனைவரும் பங்கு கொள்வோம்.

ஆ பத்து திரியின் அடுத்த கேள்விக் கணைகளை தொடுக்க அழைக்கும் அழைப்பை சற்று தள்ளிப் போடலாமா?

மன்ற நிர்வாகிகள் கவனத்திற்கு.

தம்பி இதயத்தின் கருத்து பற்றி விவாதிக்க தனித்திரி துவக்கலாம்..

ஆ! பத்து ! என்னும் நதி தன் பயணத்தைத் தொடரட்டும்..!

அமரன்
09-07-2008, 07:29 PM
கருத்தாடினால் ஆ!பத்து பந்தாடப்படும் ஆபத்து இருப்பதால். கருத்தாடுவதுக்கு வேறு களம் அமைத்து ஆடும் அண்ணனின் ஆலோசனைக்கு இணங்க அடுத்த சாவிக்கொத்துக்கு முயல்கிறேன்..

ராஜா
10-07-2008, 04:07 AM
அழைத்து வாருங்கள் அமர்..!

சிவா.ஜி
10-07-2008, 04:24 AM
மூளையைப் பற்றி எதுவுமே தெரியாத காலத்தில், உடலுக்குள் இருக்கும் உறுப்புகளில் இயக்கத்தை தெரியப்படுத்தியது இதயம் மட்டும்தான். அதன் அசைவையும் உணர வைத்து, சப்தத்தையும் வெளிப்படுத்தியதால் அதனுள்தான் உயிர் இருக்கிறதென்றும், அதுவே நம் எண்ணங்களின் சேமிப்புப் பெட்டகம் என்றும் எல்லோரும் நம்பிய காலத்தில் ஏற்பட்ட மூட நம்பிக்கை வழி வழியாய் தொடர்ந்தது. அவ்வளவுதானே ஒழிய இதயத்துக்கு பெரிய முக்கியத்துவம் எதுவுமில்லை. அதற்கு ஆன்மீக சக்தியோ, காதல் சக்தியோ இல்லவேயில்லை.

எல்லாமே உருவகங்கள். இன்று பிப்ரவரி 14க்கு வியாபாரிகள் பணம் சம்பாதிக்கப் பயண்படுகிறது அவ்வளவே.

சாலைஜெயராமன்
10-07-2008, 05:46 PM
சரியாகச் சொன்னீர் திரு சிவா.

காதலர் தினத்திற்கு மட்டும் ஞாபகம் வரும் இந்த உறுப்பு உடலுறுப்புகளில் முக்கியமானது என்ற ஒன்றைத் தவிர வேறு சிறப்பு ஒன்றும் இல்லை.

ஆனால் நிஜமான இதயம் என்ற ஒன்று சகலத்திற்கும் மூலமான ஒன்று நம் உடம்பாலயத்தில் உள்ளது என்பது ஆராய்ந்து அறிய வேண்டிய ஒன்று.

பூமகள்
12-07-2008, 04:08 PM
அறிவில் பெரியோர் சாலைஜெயராமன் அண்ணா போன்ற சான்றோர் புழங்கும் மன்றத்தில் இப்பூவு இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்..!!:icon_rollout:

மிக மிக தெளிவான ஆழமான பதில்..!!

இந்தக் குட்டிப் பூவின் அறிவின் எல்லைகளைக் கடந்திருந்தது உங்கள் பதிலில் நீட்சிமை..!

அசந்தேன்.. அகம் மகிழ்ந்தேன்..!!

ஜெயராமன் அண்ணா... மன்றத்தில் மற்றொரு அறிவுச் சுரங்கம்..!!:icon_b:

மன்றத்தோடே என்றும் எங்கள் வழிகாட்டியாக விளங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் ஜெயராமன் அண்ணா. :)

ராஜா
16-07-2008, 01:24 PM
அமர்..

அக்னி...

ஓவியன்...

உங்கள் மூவருக்கும் ஒரு வேண்டுகோள்..

யாரையாவது ஒருத்தரை ஆபத்துல இழுத்து விடுங்கப்பா..!

அமரன்
16-07-2008, 01:55 PM
விரைவில் ஒருவரை ஆபத்து தர அழைத்து வருகிறோம் அண்ணா.

அமரன்
19-07-2008, 02:14 PM
மன்றமக்களின் மனக்களை திறக்க
அடுத்த கொத்து கேள்விச்சாவிகளை தர
எவக்கிறீன் பாசமலர்
ஓவியாக்காவை அழைப்போமா அண்ணா.

சிவா.ஜி
19-07-2008, 03:29 PM
ஆவலோடு காத்திருக்கிறோம் அமரன். வரச் சொல்லுங்க....வந்து சிறப்பானக் கேள்விகளைத் தரச் சொல்லுங்க!

ஓவியா
19-07-2008, 10:25 PM
நன்றி அமரன், நன்றி சிவாஜியண்ணா.

இன்று கொஞ்சம் கடினம், அதனால் நாளை மதியம் (லண்டன் நேரம்) கேள்விகளை கொடுக்கிறேன். அதுவரை மன்னித்தருள்வீராக.

அமரன்
20-07-2008, 10:06 AM
பரவாயில்லை அக்கா.. அதற்காக மன்னிப்பெல்லாம் வேண்டாமே

அன்புரசிகன்
20-07-2008, 01:36 PM
இங்கிலாந்தில் இன்னும் விடியவே இல்லையா,,,???

ஓவியா
20-07-2008, 01:45 PM
நன்றி அமரன்.

அன்பு,
இங்கிலாந்தில் இன்னும் பொழுது சாயவில்லை, கொஞ்சம் வேலையில் இருக்கிறேன், இன்று அவசியம் கொடுப்பேன்...

அன்புரசிகன்
20-07-2008, 01:49 PM
நன்றி அமரன், நன்றி சிவாஜியண்ணா.

இன்று கொஞ்சம் கடினம், அதனால் நாளை மதியம் (லண்டன் நேரம்) கேள்விகளை கொடுக்கிறேன். அதுவரை மன்னித்தருள்வீராக.


நன்றி அமரன்.

அன்பு,
இங்கிலாந்தில் இன்னும் பொழுது சாயவில்லை, கொஞ்சம் வேலையில் இருக்கிறேன், இன்று அவசியம் கொடுப்பேன்...

எப்புடி??? :rolleyes:லொஜிக் எங்கேயோ இடிக்குதே.....:lachen001::D

ஓவியா
20-07-2008, 01:50 PM
எப்புடி??? :rolleyes:லொஜிக் எங்கேயோ இடிக்குதே.....:lachen001::D

அய்ய்ய்கோ மதியம் இன்னும் முடியவில்லை. :D

சூரியன்
20-07-2008, 02:06 PM
தங்களின் கேள்விகளை காண ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

ஓவியன்
20-07-2008, 03:30 PM
இங்கிலாந்தில் இன்னும் பொழுது சாயவில்லை...

ஏன் பொழுது சாயவில்லை...?? :D

இங்கிலாந்தில் பொழுது சாய ஒரு சுவர் கூட கிடைக்கவில்லையா...?? :rolleyes:

என்ன கொடுமைடா இது...!!! :frown:

ஓவியன்
20-07-2008, 03:32 PM
அய்ய்ய்கோ மதியம் இன்னும் முடியவில்லை. :D

மதியம் எப்படி முடியும்...??? :rolleyes:

அது என்ன பாட்டில் தண்ணீரா, முடிந்து போவதற்கு...??? :aetsch013:

ஓவியா
20-07-2008, 04:08 PM
ஓவியன் உமக்கு ரொம்பதான் நக்கலு :D:D:D
..................................................................................

மக்களே, கொஞ்சம் காய்ச்சல் அதான்.... 1/2 டேய் அவாகாசம் எடுத்துக்கொள்கிறேன். :D:D

10 நபரை தேர்ந்தெடுத்து விட்டேன், சில கேள்விகள் தயார்.

அனேகமாக இரவுதான் கேள்வியை இங்கு பதிப்பேன், கொடுத்த வார்த்தையை காப்பாற்றமுடியாமைக்கு வருந்துகிறேன்.

அமரன்
20-07-2008, 04:22 PM
ஏன் பொழுது சாயவில்லை...?? :D

இங்கிலாந்தில் பொழுது சாய ஒரு சுவர் கூட கிடைக்கவில்லையா...?? :rolleyes:

என்ன கொடுமைடா இது...!!! :frown:



பொழுது என்ன கழுதையா?

அக்கா!
உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள். ஆறுதலாகத் வந்தாலும் சுவையாககவும் சுவாரசியமாகவும் உங்கள் கேள்விகள் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

ராஜா
20-07-2008, 05:28 PM
ஆஹா.. பாசமலர் 2007*ன் கேள்விகளா..? சூப்பர்..!

சூடாகவும், சுவையாகவும், கலக்கலாகவும் இருக்குமென்று நம்பலாம்..!

வாம்மா மின்னல்..! கேள்விகளை அள்ளி வீசு..!

ஓவியா
20-07-2008, 05:32 PM
மன்னார்குடி அண்ணா,
எல்லாரும் போய் தூங்கிட்டு காலையில் வாங்க. கேள்விகள் ரெடியா இருக்கும். :D

பின் நான் தூங்கிட்டு வரேன் பதில்கள் ரெடியா இருக்கனும்.:D

ஓவியா
20-07-2008, 09:58 PM
அன்புள்ளங்களே,
காய்ச்சல் கொஞ்சம் அதிகமாகவே இருக்கு...... அதனால் மீண்டும் எல்லோருக்கும் 'கோவிந்தா கோவிந்தா' தான்.

நாளை வரேன். மன்னிக்கவும்.

(அதேதான் அட அதேதான் அதான் லண்டன் நேரம்..:D:D.. மத்தியம் வரேன்)

மறத்தமிழன்
21-07-2008, 05:55 AM
இப்படி போக்கு காட்டிறியளே அம்மணி? சரி சரி, சுவரிருந்தாத்தானே ஓவிய(யா)ம் வரையலாம். உடம்ப பாத்துக்குங்க. அப்புறமா கேள்வியள போடலாம்.

ராஜா
21-07-2008, 06:26 AM
பரீட்சை காய்ச்சலா பாசமலரே..?

நாகரா
21-07-2008, 06:58 AM
முற்றுப்புள்ளிக் காய்ச்சலாம் விஷ ஜுரப் புழுக்கத்தை
கேள்வியாய் ஊற்றெடுக்கும் தெள்ளமுத மருந்தாலே
போக்குவதை அறியாயோ ஓவிய ஞானப்பெண்ணே.??????????!
(?????????? இது எப்படி இருக்கு ஓவியா!)

aren
21-07-2008, 07:12 AM
ஏன் பொழுது சாயவில்லை...?? :D

இங்கிலாந்தில் பொழுது சாய ஒரு சுவர் கூட கிடைக்கவில்லையா...?? :rolleyes:

என்ன கொடுமைடா இது...!!! :frown:

பொழுது நிமிர்ந்து நிக்குதோ என்னவோ?

aren
21-07-2008, 07:13 AM
இப்படி போக்கு காட்டிறியளே அம்மணி? சரி சரி, சுவரிருந்தாத்தானே ஓவிய(யா)ம் வரையலாம். உடம்ப பாத்துக்குங்க. அப்புறமா கேள்வியள போடலாம்.

சுவரிருந்தால் சாயவும் செய்யலாம்!!!!

aren
21-07-2008, 07:14 AM
பரீட்சை காய்ச்சலா பாசமலரே..?

கேள்விமட்டும்தானே அவர்ங்க கேட்கப்போறாங்க. பதிலும் அவங்களா எழுதப்போறாங்க. பின் ஏன் பரிட்சை காய்ச்சல் அவங்களுக்கு.

ராஜா
21-07-2008, 08:52 AM
கேள்விமட்டும்தானே அவர்ங்க கேட்கப்போறாங்க. பதிலும் அவங்களா எழுதப்போறாங்க. பின் ஏன் பரிட்சை காய்ச்சல் அவங்களுக்கு.

பதில் சொல்வதைவிட கேள்விகள் கேட்பது கடினம் என்று..

மாட்டிக்காமல் மாட்டிவிடும் மாட்டிரிக்ஸுக்கு தெரிய நியாயமில்லைதான்..!

கண்மணி
21-07-2008, 09:04 AM
ஆமாம் ஆமாம் ஒரு கிறுக்குக் கேள்வி கேட்க ராஜாண்ணணுக்கே மூணு நாள் பத்தலையே!!!!

ராஜா
21-07-2008, 09:15 AM
ஆமாம் ஆமாம் ஒரு கிறுக்குக் கேள்வி கேட்க ராஜாண்ணணுக்கே மூணு நாள் பத்தலையே!!!!

நியாயமான கேள்வி..!

ஆனால், ஒரே நாளில் சிறந்த பதிலை தேர்வு செய்த ஒருவர் கேட்டிருக்க வேண்டிய கேள்வி ..!

கண்மணி
21-07-2008, 09:16 AM
பார்ப்போமே!!! :D :D

ராஜா
21-07-2008, 04:36 PM
அநியாய அன்பு தாதா..!

பாசமலர் 2007..

ஓவிக்குட்டி...

ஓவியாக்கா..

என்றெல்லாம் நம் மன்ற உறவுகளால் அன்புடன் அழைக்கப்படும் தங்கை ஓவியா இப்போது,

கேள்வி கேட்கப் போறாங்கங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கோ...!

சூரியன்
21-07-2008, 04:39 PM
இதோ எல்லாரும் வந்துட்டோம்.
கேள்வியை ஆர்வமுடன் பாக்க.

அன்புரசிகன்
21-07-2008, 04:40 PM
கேள்வி கேட்கப் போறாங்கங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கோ...!



அரசியல் வாதி மாதிரி அறிக்கை வுடுறீங்களே மாப்பு.... கேள்வி வந்தப்புறம் தான் எல்லாம் உண்மை.... :D

ஓவியா
21-07-2008, 04:43 PM
யப்பா கண்ணுங்களா இப்பதான் வந்தேன், கேள்விகளை தயாரிக்க கொஞ்சம் அவகாசம் தாங்களேன்.

ரொம்ப சுவாரஸ்யமா இருக்காது. சாதரண கேள்வியாதான் இருக்கும்.

சூரியன்
21-07-2008, 04:44 PM
கண்டிப்பா கேள்வி வரும் வெயிட் பண்ணுங்க.

சூரியன்
21-07-2008, 04:46 PM
யப்பா கண்ணுங்களா இப்பதான் வந்தேன், கேள்விகளை தயாரிக்க கொஞ்சம் அவகாசம் தாங்களேன்.

ரொம்ப சுவாரஸ்யமா இருக்காது. சாதரண கேள்வியாதான் இருக்கும்.

இன்னும் எத்தனை நாள் ஆகும் அக்கா,
எல்லாரும் எதிர்பார்ப்புடன் இருக்காங்க.

ஓவியா
21-07-2008, 04:50 PM
இன்னும் எத்தனை நாள் ஆகும் அக்கா,
எல்லாரும் எதிர்பார்ப்புடன் இருக்காங்க.

சூரியன், உங்களுடைய ஆவல் எனக்கு புரிகிறது, ஆனாலும் எனக்கு உடல் சுகமில்லை என்று கூறியுள்ளேன். சற்றி புரிந்துக்கொள்ளுங்கள்.

இன்று கொடுப்பேன்.

அமரன்
21-07-2008, 05:01 PM
கண்டிப்பா கேள்வி வரும் வெயிட் பண்ணுங்க.

வெயிட்டா கிடைக்க வெயிட்பண்ணுவதில் தப்பில்லையே சூரியன்..

அக்னி
21-07-2008, 05:03 PM
ஆனாலும் எனக்கு உடல் சுகமில்லை என்று கூறியுள்ளேன். சற்றி புரிந்துக்கொள்ளுங்கள்.

இன்று கொடுப்பேன்.
அக்கா... உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
போதிய அவகாசமெடுத்து, ஆறுதலாகக் கேள்விகளை இடுங்கள்.
சிலவற்றுக்காகக் காத்திருப்பது, சிறப்பானவற்றையே எம்வசம் சேர்க்கும்.
ஆவலுடன் காத்திருப்போம்.

சிவா.ஜி
21-07-2008, 05:18 PM
ஆமாம் ஓவியா. உடல்நலம் முக்கியம். சரியானதும் வாங்க. ஆ'பத்து உங்களுக்காக காத்திருக்கிறது

ராஜா
21-07-2008, 06:38 PM
ஆமாம் ஓவியா. உடல்நலம் முக்கியம். சரியானதும் வாங்க. ஆ'பத்து உங்களுக்காக காத்திருக்கிறது


அதே... அதே..!

வேணும்ன்னா, காய்ச்சலின் பிடியில் ஓவியான்னு தலைப்பை மாற்றிவிடட்டுமா..?

ஓவியா
22-07-2008, 12:35 AM
அனைவருக்கும் எனது முத்தமிழ் வணக்கம்.

திரியின் அதிபதி ராஜா அண்ணாவிற்கும், சுடரை ஏந்தி ஊர்வலம் வரக் காரணமாகிய நல்லுள்ளங்கள் அமரன், அக்னி மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இங்கு பலர் மன்றத்தை வளைத்து வளைத்துக் கேள்விகளைத் தொடுத்துள்ளனர், அதனால் நான் மன்றத்தைக் கேள்விகளிற் புகுத்தவேயில்லை. :lachen001::lachen001:


இந்த திரியில் முதலில் என் அனுபவத்தை கூறி ஆரம்பிக்கின்றேன்.

இந்த திரி ஆரம்பித்த பொழுது எனக்கு மிகவும் விருப்பமான ஒருவர் அவரின் 10 கேள்வியில் என்னை புகுத்தி என்னிடம் கேள்வி கேட்கவேயில்லை அதனால் அவருக்கு என் மேல் அன்பில்லை என்று அன்றிலிருந்து இந்தத் திரிமேல் எனக்கிருந்த பாசம் போய்விட்டது. பின் என் கடமைக்கு என்னிடம் சுடரை கொடுத்தப்பின் நானும் என் பங்கை வஞ்சனையில்லாமல் செவ்வென செய்தேன். அவ்வளவுதான்.

அதன் பின்னும் இந்த அருமையான திரியின்மேல் என்க்கு துளியளவும் காதலே இல்லை, பல பக்கங்களைத் தாண்டியும் எனக்குப் பிடிக்கவேயில்லை. பல நூறு அரிய விடயங்கள் பொதிந்து கிடந்தும் என் மனதை அது மீண்டும் கொள்ளை கொள்ளவேயில்லை. அனேகமாக இன்றுவரை அதுவே உண்மை.....:traurig001: ஆனால் அந்த சம்பவம் மட்டும் எப்பொழுதும் என் மனதை விட்டு என்றுமே அகலாது, என் நெஞ்சைக் கோணி ஊசியால் தைத்த சம்பவம். அன்பின் வலிமை அப்படி.

நானும் இந்தத் திரியைப் பலமுறை முதற் பக்கத்தில் கண்டும், காணாமல் நகர்ந்து விடுவேன். பின் வந்த நாட்களில் மறந்தும் போனேன். இங்கு கேள்வி கேட்பவர்களும் என்னை மறந்து போனார்கள்…..…..

காலத்தில் சுழற்சியில் இன்று மீண்டும் திரியின் ஜோதி என்னிடம்... மனதில் அனுபவத்தை சுவைத்துக்கொண்டே, பக்கங்களை ரசித்துக்கொண்டே, எண்ணத்தில் சிரித்துக்கொண்டே கேள்விகளை புது முகங்களைத் தேடித் தொடுத்துள்ளேன்.

ஆனாலும் என்னை கேள்விகேட்காமல் விட்ட அந்த நபருக்கு என் ‘கா’ எப்பொழுதும் இருக்கும். இத்தருணத்தில் அந்த நல்லவர் வாழ்வாங்கு வாழ்ந்து, ரொம்ப ரொம்ப நல்லாயிருக்க வேண்டுமென்று சாபமிடுகிறேன்.

இன்று லண்டம் நேரம் காலை 10.00 மணிக்கு அனைவருக்கும் என் அன்பை காற்றில் பரிசாக அனுப்புகிறேன்.

நன்றி

நான் நானாக
- ஓவியா.
(பாரதி காணா புதுமைப்பெண்)



***********************************************************************************************************

அந்த பத்து கேள்விகளுக்கு விடையளிக்கப் போகும் அறிவு புலிகள் இதோ


1. அழகிய மணவாளன்
2. எஸ்.எம். சுனைத் ஹஸனீ
3. மதுரை வீரன்
4. இனியவன்
5. அகத்தியன்
6. கீழை நாடான்
7. மாதவர்
8. மீரா (தமிழ் மீரா)
9. சுஜா
10. நம்பிகோபாலன்

அனைத்தும் புதுமுகங்கள். இனி இவர்களின் மூலம் 100 கேள்விகள் எழும்....... :auto003:

ஓவியா
22-07-2008, 12:37 AM
1. அழகிய மணவாளன்
அண்ணா, தாங்கள் ஒரு நேர்மையான அதிகாரியாகப் பொறுப்பேற்றுப், பல கெட்ட சம்பவங்களின் மத்தியில் போராடி, அதற்கான நல்ல பலனைக் கடவுளிடமிருந்து அடைந்துள்ளீர்கள். வாழ்த்துகள்.


இதோ கேள்வி :
கணவன் - மனைவி, இருவரும் விட்டுக்கொடுத்து வாழ, பழக வேண்டுமென்று பலர் கூறுகின்றனர். ஆனால் விட்டுக்கொடுப்பது என்பது அவ்வளவு சாதாரண விசயமல்ல. விட்டுகொடுப்பதனால் நாம் சில சந்தோஷங்களைத் தியாகம் செய்ய வேண்டிவரும். அப்படியிருப்பின், தியாகம் செய்து வாழ்வதனால், சந்தோசம் எப்படி வரும்?





2. எஸ்.எம். சுனைத் ஹஸனீ
உங்களின் ”பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க, இறைவனுக்குப் படைக்கப்படும் உணவுகளை, இறைவன் ஏற்பதில்லை” என்ற கையொப்ப வாசகம் மிகவும் அருமை. அழகிய வரிகள் என்பதை விட ஆழமான வரிகள், அர்த்தம் பொதிந்தவை என்று சொல்லலாம். இது மானிட வாழ்வில் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. நன்றிகள்.


இதோ கேள்வி :
உங்களுடைய கணிப்பின்படி வெற்றியாளர், என்பவர் யார்?
பின்னுள்ளவர்களில் யாரேனும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து விளக்குவதோடு, மற்றவர்கள் உங்கள் பார்வையில் தெரிவாகாமைக்கான சிறு குறிப்பையும் தரவும்.
1. வாய்ப்பினைப் பயன்படுத்தி, அதிகமாகப் படித்த மேதை.
2. கடின உழைப்பில் கோடீஸ்வரராகி, சிறந்த வாழ்வைச் சுவைப்பவர்.
3. மக்களுக்கு நல்லதைச் செய்து, கடைசிவரை ஏழ்மையிலேயே வாழ்வை முடிப்பவர்.
4. கடவுளுக்குத் தொண்டு செய்து, ஞானியாக மறைபவர்.





3. மதுரை வீரன்
கடவுளுடன் மக்களை இணைத்துப் பல கருத்துள்ள கதைகளைப் படைத்து வெகு விரைவிலே மன்றத்தின் முத்துக் கோர்வையில் சேர்ந்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.

(விஞ்ஞானியண்ணா, இங்கு எல்லோரும் எனக்கு ஆட்டோ அனுப்ப.....
நீங்கள் ஒருவர் மட்டும்தான் எனக்கு அணுகுண்டு அனுப்ப முடியும்... அதுவும் அண்ணாச்சிக்கு 'தில்'லிருந்தா :D:D )


இதோ கேள்வி :
விஞ்ஞானம் அதிவேகத்தில் வளர, உலகில் அழிவும் அதிகமாகவே இருக்கின்றது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி உலகை மேம்படுத்தியுள்ள நிலையில், அவை உண்மையிலே எதிர்வரும் சந்ததியினரை காக்கின்றனவா இல்லை அழிவிற்க்கு இட்டுச் செல்கின்றனவா?





4. இனியவன்
வெகு காலங்கழித்துத் தங்களை இங்கு காண்பதில் சந்தோஷம். தங்களுடைய கிசுகிசு திரிகள் யாவும் கும்பகர்ணன் தோழர்கள் ஆகிவிட்டன. மீண்டும் தூசு தட்டுங்கள். மீள்வருகைக்கு வரவேற்புக்களும் வாழ்த்துகளும்.

உலகிலேயே, தமிழை இவ்வளவு மோசமாகப் பயன்படுத்தும் நாடு, தமிழ்நாடு என்பது (தவறாயின் என்னை மன்னிக்க) என் சுயகருத்து.
(தமிழ் நாட்டில் நான் கண்ட பல விடயங்களில் ஒன்று, வியாபார நிலையங்களுக்குச் சூட்டப்பட்டுள்ள ஆங்கிலப் பெயர்களின், ஆங்கில உச்சரிப்பு, அப்படியே தமிழ் எழுத்துக்களிலும் தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பது… அடப்பாவமே.. இதை ஒரு பக்கம் விடுவோம்)


கேள்வி இதுதான் :
தமிழ் நாட்டில் ஒளி, ஒலி பரப்பாகும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகமாகவே ஆங்கில வார்த்தைகள் புகுத்தப்பட்டுள்ளன. இது மொழி அழிவிற்க்குப் பிள்ளையார் சுழி, இனி இவை மாற வாய்ப்பே இல்லை என்பது என் கருத்து. இந்த நிலை மாறுமா? மொழி அழிவைத் தடுக்க வாய்ப்புள்ளதா?
தமிழ்மொழியை எப்படிக் காக்கப் போகின்றோம்?
தமிழ் மொழிச்சிதைவைத் தடுக்கவும், தமிழ் மொழியைக் காக்கவும் தமிழ்நாடு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை?





5. அகத்தியன்
வணக்கம்... அம்மா, அப்பா, அவள் எனப் பல கவிதைகளைப் படைத்து, மன்றத்து கவிஞர் பட்டியலில் இடம் பெற்று விட்டீர்கள். தாங்கள் இன்னும் அதிகம் எழுத வேண்டும் என்பதே எங்கள் அவா. வாழ்த்துக்கள்.


கேள்வி இதுதான்:
ஈழத் தமிழ் மக்கள், போர் என்னும் காரணத்தால், உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழ்கின்றனர். அங்கு, எதற்காகப் புலம்பெயர்ந்தோம் என்பதை மறந்து, மேல் நாட்டுக் கலாச்சாரங்களைப் பின்பற்றி, பணம், பொருள் சேர்ப்பதிலேயே அதிக நாட்டம் காட்டுகின்றனர், அவர்களின் குழந்தைகளும் மொழி, கலை, கலாச்சாரங்களை மறந்து வாழப் பழக்கப்படுகின்றனர் அல்லது பழகுகின்றனர். இனி இ(அ)வர்கள் மாறப்போவதில்லை என்பது சரியான கருத்தா?





6. கீழை நாடான்”தேடல்” என்று ஒரு அருமையான சிறுகதையை எழுதி, எனக்கும் நன்கு எழுதத் தெரியும் என்பதைக் காட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள். ஆனாலும் நல்ல எழுத்துத்திறமை மிக்க நீங்கள், உங்களின் திறமைகளை இன்னும் வளர்க்க, அதிகம் சுய படைப்புகளைத் தர வேண்டும் என்பது என அவா. வாழ்த்துகள்.


கேள்வி இதுதான்:
நீங்கள் ஒருவரை அதிகமாக நேசிக்கின்றீர்கள். ஆனால், அது காதல் இல்லை. ஏதோ ஒரு தெய்வீகப் பாசம் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஏதோ ஒரு காரணத்தினால் மற்றவரின் சொற் கேட்டு, உங்களிடம் எதுவுமே கேட்காமல் உங்களின் மேற் கோபம் கொண்டு, உங்களை ஒதுக்கி விடுகின்றார். எதற்க்குக் கோபம், ஏன் ஒதுக்கினார் என்று உங்களுக்கு இன்றுவரை தெரியாது. கேட்க முனையும்பொதெல்லாம் அவர் ஒன்றுமே பேசாமல் விலகிவிலகியே போகின்றார். உங்கள் மனம் அனலிலிட்ட புழுவாய்த் துடிக்கின்றது. இதிலிருந்து விடுபட எவ்வளவோ முயற்சித்தும் உங்களால் முடியவில்லை. இதனால் உங்களால் முன்பு போல் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையிருந்து விடுபடவும், சகஜ நிலைக்கு மாறவும் என்ன செய்வீர்கள்?





7. மாதவர்
வணக்கம், முதலில் தங்களின் மேற்படிப்பிற்கு (பிஎச்டி) எனது வாழ்த்துகள். உங்களுடைய ”தை” கவிதை என்னை ரொம்பக் கவர்ந்தது. ரசித்தேன். இதழியலில் வேலை செய்பவர் என்று படித்தேன். நல்லது. மீண்டும் வாழ்த்துகள்.


கேள்வி இதுதான்:
பணம் தேடுவதற்கே வாழ்க்கையின் சந்தோஷங்களைத் தொலைத்துவிட்டு வாழும் மக்கள், பணம்தான் வாழ்க்கை, பணமின்றி உலகில் ஒன்றுமில்லை, பணமின்றிப் படிப்பில்லை, பணமின்றித் தகுதியில்லை, பணமின்றித் தராதரமில்லை, பணமின்றிக் கௌரவமில்லை, பணமின்றி உற்றாரில்லை, பணமின்றி சுற்றமில்லை, பணமின்றி ஊருமில்லை, முக்கியமாகச் சந்தோஷமில்லை என்று எண்ணுகின்றார்கள். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். நன்கு விளக்கவும்.






8. மீரா (தமிழ் மீரா)வணக்கம் மீரா... மன்றத்தின் புது வரவு நீங்கள். சிக்கனமான எழுத்துக்களுடன் கவிதை விளையாட்டிலும், விரிவான விளக்கங்களுடன் தினம் ஒரு திருக்குறளிலிலும் உங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தி வருகின்றீர்கள். வாழ்த்துகள். என்றும் மன்றத்துடன் இணைந்திருங்கள்.


கேள்வி இதுதான்:
பெண் சுதந்திரம் வரவேற்கப்படவேண்டிய விடயமா?
பெண்னுரிமை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? அதனைப் பாட்டாய்ப் பாடும் சில ஆண்கள்கூட, அதைத் தம் குடும்பப்பெண்களிடம் காட்டுவதே மிகக் குறைவு என்கின்றன பல மாதர் சங்கங்கள். அதே வேளையில் இந்த விடயத்தில் பெண்களுக்கு எதிரி பெண்களே என்கின்றனர் பலர். இதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? இன்றைய காலத்தில் பெண்களுக்குப் பெண்னுரிமை உண்மையிலே கிடைத்திருக்கின்றதா? விளக்கமாக விடையளிங்கள்.






9. சுஜா
உங்களுடுடைய ”சர்வதிகாரினி” கவிதை மிகவும் அருமை. புத்தகம் சுமக்கும் குழந்தையா நீங்கள்... எப்படியாயினும் எதிர்காலத்தில் சிறந்த பொறியியல் அதிகாரியாக வர எனது வாழ்த்துகள்.


இதோ கேள்வி:
படிக்கும் பருவத்தில் காதல் வயப்படலாமா? அன்பிற்க்கும் காதலுக்கும் என்ன வேற்றுமை? காதல் என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும்? காதலை வெல்லும் சக்தி வேறு எதற்க்கு உண்டு? (அன்னையின் பாசம் என்று சொல்லக்கூடாது) காதலித்துத் திருமணம் செய்பவர்கள் கூட வரதட்சணை கேட்கின்றார்களே. ஏன் இப்படி? இது சரியா? (முடிந்தால் ஐந்துப் பேர்களிடம் நேர்முகத் தேர்வு வைத்து விடையளிக்கவும்.)





10. நம்பிகோபாலன்
உங்களின் பதிப்பில் அதிகமாகக் காதற் கவிதைகளைக் கண்டேன். சில கவிதைகள் ரொம்பவே நடைமுறைக்குத் தகுந்தாற்போல் அருமையாக உள்ளன. காதலை நன்கு காதலிக்கவும். என் பாராட்டுக்கள்.

கேள்வி இதுதான்:
தற்பொழுது உலகில் அனைத்து நாடுகளிலும் சிறார் குற்றம் பெருகி வருகின்றது, பெற்றொர்களாலே அனாதையாக்கப்படுவதும், குடும்ப வறுமையும், முறையான கல்வியறிவு இல்லாமையும், முக்கியமாக இளவயதிலே வேலைக்குச் செல்வதும் இதற்க்கு முக்கிய காரணிகளாகின்றன. (பணக்காரக் குழந்தைகள் பொழுது போக்கிற்காகச் செய்யும் சேட்டைகளை, இங்கு சேர்த்துக்கொள்ள வேண்டாம்.) தனக்கு எதிர்காலமே இல்லை என்ற உணர்வை எற்றுக்கொண்டு வாழும் குழந்தைகள்தான் இவர்களில் அதிகம். இவர்களை எப்படிக் கரைசேர்ப்பது? இவர்களின் எதிர்காலம் தான் என்ன?


மக்களே கேள்விக்கு உடனே பதிலளிக்க வேண்டுமென்று அவசரமில்லை, நன்கு யோசித்து, விசயங்களை ஒன்றுதிரட்டி ஆருதலாக பதிவினை கொடுக்கவும். உங்களுக்கு 24 மணி நேரமிருக்கிறது.




*************************************************************************** :icon_b::icon_b: என் வாழ்த்துக்கள் :icon_b::icon_b: *************************************************************

அக்னி
22-07-2008, 12:40 AM
ஆ பத்தின் மூலம் நூறு கேள்விச் சுடர்கள் நூராது பற்றி எரியட்டும்.
புதுமுகங்கள் தத்தமது முகங்களை வெளிப்படுத்தட்டும்.
அனைவருக்கும் வாழ்த்துகள்.

வலுவான கேள்விக் கணைகளைத், தகுந்த குறிகளை நோக்கி எய்த,
ஓவியா அக்காவிற்கு நன்றிகளும் பாராட்டுக்களும்...

கேள்விகள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்புடன் தொடுக்கப்பட்டுள்ளன.
மீண்டும் விசேட பாராட்டுக்கள்...

தீபன்
22-07-2008, 01:08 AM
அடடா ஆ பத்து பத்தி எரிகிறது... ஓவியாவின் பல நாள் ஆதங்கங்களுடன்.... இந்தத் தீயில் புடம்போடப்பட்டு வெளிப்படப்போவது கேள்வியாளரா விடையிறுப்பவர்களா..? காணக் காத்திருக்கிறேன்.

தாமரை
22-07-2008, 01:49 AM
கேள்விகள் ம்ம்ம் பார்த்தாலே சிலரை ஐயோ பாவம்னு சொல்ல வைக்குதே!

meera
22-07-2008, 03:28 AM
ஓவியாக்கா, கேள்வி + தேர்ந்தெடுத்த நபர்கள் அருமை.

வாங்க மக்களே பதில் போடுங்க படிக்க ஆவலா இருக்கோமில்ல.

meera
22-07-2008, 03:29 AM
கேள்விகள் ம்ம்ம் பார்த்தாலே சிலரை ஐயோ பாவம்னு சொல்ல வைக்குதே!
என்ன அண்ணா பன்றது உங்க தங்கை இல்லையா? அப்போ அப்படி தான் இருக்கும்.

ராஜா
22-07-2008, 03:31 AM
பாராட்டுகள் பாசமலரே..!

அருமையான, அறிவுப்பூர்வமான, அசத்தல் கேள்விகள்..

உன்னுடைய அடையாளமான, மழலைப்பிழைகள் இல்லாமல் கேள்விகள் இருப்பது, இது ஒரு வித்தியாசமான ஓவியா என்று எண்ண வைக்கிறது. "அதற்கும்" வாழ்த்துகள்..!

உனக்கு விருப்பமானதொரு உறவு உன்னிடம் கேள்வி எழுப்பவில்லை என்ற காரணத்துக்காக, இந்த அண்ணனின் திரியைப் புறக்கணித்தேன் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறாய்.. உன் மேல் எனக்கு வருத்தமில்லை.. ஆனால் இந்த அளவுக்கு, நீ அன்பு வைத்திருக்கும் "அவர்" மேல் எனக்கு பொறாமையாக இருக்கிறது..!

நன்றி பாசமலரே..!

பூமகள்
22-07-2008, 06:02 AM
ஓவியாக்கா....

வியந்தேன்.... எப்படி அக்காவால் மட்டும் அத்தனை புது முகங்களையும் சரியாக இனம் காண முடிகிறது??

அத்தனை கேள்விகளிலும் அக்காவின் முத்திரை... கலக்கல் அக்கா...

பின்னாடி உளவுத் துறை ஏதும் வைச்சிருக்கீங்களோ??!! :D:D

மனம் பிரம்மித்தது... ஆபத்தில் மாட்டிய அத்தனை புது முக ஆட்களுக்கும் இது நல்ல வாய்ப்பு...

சிறப்பான பதில்கள் சொல்லி ஓவியாக்கா மனதில் மட்டுமல்ல.. எங்கள் எல்லா மனதிலும் நிலைக்க வாழ்த்துகள்..

இளசு
22-07-2008, 06:15 AM
நல்ல கேள்விகள்.. நல்ல நபர்களிடம்..

ஒவ்வொருவருக்கும் சிறுகுறிப்பு - ஓவிய முத்திரை!

பாராட்டுகள் ஓவியாவுக்கு

நன்றி பிழை திருத்தியவருக்கு :icon_b:( ஓரிடத்தில் ற்-வல்லின ஒற்றுப்பிழை தப்பிவிட்டது...:cool:)

வாழ்த்துகள் அந்த ஆ-பத்து பேருக்கும்!

அடுத்த பதிவு எண் : 2000!

அட்டகாச வாழ்த்துகள்: ராஜா, அமரன் ,அக்னி, அன்புரசிகன், ஓவியன் கூட்டணிக்கு!

-------------------------------------

ஆங்கிலக் கலப்பால் கவலை கொண்டு கேள்வி கேட்ட ஓவியாவின் திரிக்குத் தலைப்பு -
ஹிட் லிஸ்ட்!
இதையும் முரண்தொடரில் போடுங்கப்பா!:)