PDA

View Full Version : ♔. ஆ! 10! ♔. - முதல் சுற்று



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14

நேசம்
01-11-2007, 11:13 AM
அப்படியிருக்க புறக்கணிப்பு இன்னும் அவனை அந்த பழக்கத்திற்கு அடிமையாக்குமே தவிர மீளசெய்யாது... தவறு என்று உணரும் பட்சத்தில் தவறான பழக்கங்களை தவிர்க்க விடுவார்கள் எவரும்.. அப்படியும் தொடர்ந்தால் மட்டும் நீங்கள் சொல்வதுபோல் செய்வது நலம்... வாழ்த்துக்கள் விராடன் அண்ணா...!
அன்பால் பேசி திருத்தலாம்.உத்தரவாதம் யார் தருவார்கள்.என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் காதலை ஏற்று கொள்ள உறுதியாக இருப்பவர்கள் நிங்கள் சொல்வது போல அத்தகைய பழக்கமுடையவர்களை காதலிக்கலாம்

விகடன்
01-11-2007, 11:15 AM
அண்ணா இது ஏற்க முடியாத கூற்று.. மாறாக அன்பாக பேசி மாற்றலாம் என்பது எனது கருத்து.. அதுமட்டுமின்றி எந்த ஒரு மனிதனையும் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகள்லும்தான் ஒரு பழக்கத்திற்கு அடிமையாக்குகின்றன... அப்படியிருக்க புறக்கணிப்பு இன்னும் அவனை அந்த பழக்கத்திற்கு அடிமையாக்குமே தவிர மீளசெய்யாது... தவறு என்று உணரும் பட்சத்தில் தவறான பழக்கங்களை தவிர்க்க விடுவார்கள் எவரும்.. அப்படியும் தொடர்ந்தால் மட்டும் நீங்கள் சொல்வதுபோல் செய்வது நலம்... வாழ்த்துக்கள் விராடன் அண்ணா...!
குடிகாரன் மீதும் மனைவி அன்பு காட்டுவதால்த்தான் அவன் குடிக்கிறான். ஒருவருமே தன்னுடைய செயற்பாடுகளை அங்கீகரிக்கவில்லை என்றோ ஏரெடுத்துக்கூட பார்க்கவில்லை என்றோ கவனிக்குமிடத்தில் அவன் ஓர் நடைப் பிணமாகிறான். அதன் கருவிலேயே சொன்னேன்.

ஏது எப்படியோ.... திருத்தமுடிந்தால் திருத்திக்கொள்ளட்டும்..
----------
ஒரு கேள்வி மட்டும் சுகந்தப்ரீதன் கேட்கிறேன். வில்லங்கத்தில் வீழ்த்துவதாகக் கூட அமையலாம். பெரிதுபடுத்திக்கொள்ள வேண்டாம்.

இதுதான் கேள்வி,

மாறாக அன்பாக..... என்றால் பெண்கள் இதுவரை அன்பைக் காட்டவில்லை எங்கிறீர்களா?
அல்லது
அன்பை வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்கிறார்கள் எங்கிறீர்களா? :D

பூமகள்
01-11-2007, 11:17 AM
அண்ணா இது ஏற்க முடியாத கூற்று.. மாறாக அன்பாக பேசி மாற்றலாம் என்பது எனது கருத்து.. அதுமட்டுமின்றி எந்த ஒரு மனிதனையும் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகள்லும்தான் ஒரு பழக்கத்திற்கு அடிமையாக்குகின்றன... அப்படியிருக்க புறக்கணிப்பு இன்னும் அவனை அந்த பழக்கத்திற்கு அடிமையாக்குமே தவிர மீளசெய்யாது... தவறு என்று உணரும் பட்சத்தில் தவறான பழக்கங்களை தவிர்க்க விடுவார்கள் எவரும்.. அப்படியும் தொடர்ந்தால் மட்டும் நீங்கள் சொல்வதுபோல் செய்வது நலம்... வாழ்த்துக்கள் விராடன் அண்ணா...!
ப்ரீதன்...
தவறு என்று தெரிந்து தானே அப்பழக்கத்தில் இருக்கிறார்கள்??
அன்பாக பேசி மருத்துவம் செய்து குணப்படுத்தலாம்.

ஆனால், அப்பழக்கம் தவறு தான் என்பதை அவர்கள் ஏற்கனவே அறிந்திருக்கும் பட்சத்தில் தொடர்ந்து அப்படி செய்பவர்களை என்ன செய்வது??

இம்மாதிரியான புறக்கணிப்புகள் தான் அவர்களின் செயல் தவறென்று ஆழமாக உணர்த்த முடியும். இது ஒரு வகையான ஷாக் டிரீட்மெண்ட் என்றும் சொல்லலாம். இப்படி செய்வது அவர்களை திருத்தவே அன்றி, புண்படுத்த அல்ல.

சுகந்தப்ரீதன்
01-11-2007, 11:40 AM
இதுதான் கேள்வி,
என்றால் பெண்கள் இதுவரை அன்பைக் காட்டவில்லை எங்கிறீர்களா?
அல்லது
அன்பை வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்கிறார்கள் எங்கிறீர்களா? :D
இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்களில் சிலர் நீங்கள் மேற்கோள் காட்டிய காரணங்களை கூறுனதை நானும் கண்டிருக்கிறேன்.. பெண்ணின் அன்பை உணரமுடியாதது அந்த ஆனின் குற்றமா..? இல்லை அவனிடம் தன் அன்பை உணர்த்த முடியாதது அந்த பெண்ணின் குற்றமா என்று எனக்கு தெரியவில்லை... பெரியவர்கள் நீங்களே கூறுங்கள்..!

பூமகள்
01-11-2007, 11:45 AM
மிகச்சரியான கூற்று என்று சொல்வதற்கு என் மனம் ஒத்துக் கொள்ளவில்லை. இதுவும் கூட ஆணாதிக்கச் சிந்தனைக்கு பெண்களும் துணை போகிறார்களோ என்று எண்ணத் தூண்டுகிறது.

ஆடைக்குறைப்பு என்பது அந்தப் பெண்ணின் சுதந்திரம். அமெரிக்காவில் SUMMER காலங்களில் பெண்கள் குறைவான ஆடைகளை அணிந்து கொண்டு செல்லும் போது ரோட்டில் நின்று எவனும் ஜொள் விடமாட்டான். அதே இந்தியாவிலோ (அ) மத்திய கிழக்கு போன்ற நாடுகளிலோ ஒரு பெண் மேற்கண்ட ஆடைக்குறைப்பு செய்தால், அந்தப் பெண் ஒரு நாள் அல்லது மறுநாள் கற்பழிக்கப்படுவது நிச்சயம ். நாட்டுக்கு நாடு வித்தியாசமான ஆடை விசையத்தைப் பெண்கள் பின்பற்ற வேண்டும் என்று சொல்ல வருகிறாயா????

மிக நீண்ட விளக்கத்திற்கு நன்றிகள் S. ராஜா அண்ணா.

ஆமாம். கண்டிப்பாக அப்படித்தான் சொல்ல வருகிறேன்.
"ஊரோடு ஒத்து வாழ்" என்ற பழமொழி ஏற்கனவே உள்ளதே அண்ணா?

கலாச்சாத்திலும் பண்பாட்டிலும் நம் நாட்டை மற்ற நாட்டோடு ஒப்பிட முடியுமா??
அப்படி ஒப்பிட்டு பார்த்து நம்மை பெருமைப் படுத்தும் விசயங்கள், குடும்ப அமைப்பு, கலாச்சாரம், கட்டுக்கோப்பு, நெறி தவறாத உடைகள் மற்றும் நடத்தை என்பதும் காரணிகளாக அமைந்திருப்பதை மறுக்க முடியுமா??

ஆடைக்குறைப்பு தான் பெண்ணினத்திற்கு ஆண்களால் பின்பற்றப்படும் ஆணாதிக்கத்திற்கு காரணம் என்பது போல் இருக்கிறது உன் வாதம் (தங்கை என்ற உரிமையில் ஒருமையில் அழைக்கிறேன்).

ஆடைக்குறைப்பு என்பது வெளியில் நடமாடும் பெண்களை மட்டும் மனதில் வைத்துச் சொல்லவில்லை. பொதுவாக பத்திரிக்கை முதல் சின்னத்திரை பெரியதிரை வரை எங்கு நோக்கினும் ஆண் முழுதும் மூடிய உடை அணிந்து வரும்போது, கள்வெறி தூண்டுகின்ற விதத்தில் ஆபாசமான உடை கட்டாயப்படுத்தி அல்லது பணத்தால் தான் விலை போவதை அறிந்தே அணிவிக்கப்படுகிறாள்.. இது நிச்சயம் ஆண்கள் பெரும்பான்மையான துறையான திரைப்படத்துறையில் அதிகம் பார்க்கலாம்..
எதற்காக இத்தகைய அவசியமற்ற ஆடைக்குறைப்பு?? நவநாகரிகம் என்ற பெயரில் நம் பண்பாட்டை அழிக்க வரும் செயல் என்றே இதை கருதுகிறேன். யார் இப்படியாக இந்திய கலாச்சாரத்தை உடைக்க எண்ணுகிறார்கள் என்று வேறு கோணத்தில் பார்த்தால் புரியும் என்று நம்புகிறேன்.
சில வருடங்கள் முன் உலக அழகியாக இந்திய அழகி தேர்வு செய்யப் பட்டதன் மூலகாரணம் என்ன??
உற்று நோக்கின் உங்களுக்கு விளங்கும். உலகமயமாக்கலின் தாக்குதல் தான் அது என்று.
வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளை மேலும் சுரண்ட போடும் அடுத்த திட்டம் இது.
தன்னிடம் இருக்கும் காஸ்மெடிக் எனப்படும் அழகுசாதனப்பொருட்கள் விற்கும் சந்தையாக இந்தியாவை மாற்றவே உலக அழகியாக இந்திய பெண் தேர்வு செய்யப்பட்டதன் நோக்கம்.
மெல்ல மெல்ல அந்நிய கலாச்சாரத்தை உட்புகுத்தி இந்தியாவை மீண்டும் காலனியாதிக்கத்துக்கு உட்படுத்த அமெரிக்காவால் உண்டாக்கப்படும் சீரழி திட்டம் தான் இது.

ரோட்டில் அரைகுறை ஆடையணிந்து செல்லும் பெண்ணிடம் குசும்பு செய்வதற்குக் காரணம் அந்த ஆடவனின் கண். அதை பொசுக்கச் சொன்னாலும் பரவாயில்லை. அந்தக்கண் எதற்கு இந்தப்பெண்ணின் அழகைப் பார்த்து ரசிக்கிறது? அழகு ரசிப்பதற்கு மட்டுமே என்று மட்டும் புரிந்து கொண்டால் யாருடைய சுதந்திரமும் பாதிக்கப்படாது.

அப்படியெனில் பெண்கள் அரைகுறை ஆடையணிவது தவறில்லை என்று சொல்கிறீர்களா? அப்படி எப்படி நம் பண்பாடு உள்ள நாட்டில் சொல்ல முடியும்?
அரைகுறை ஆடை அணிந்து ஒரு பெண்ணும், நல்ல முறையில் உடையணிந்த ஒரு பெண்ணும் சாலையில் செல்வதாக வைத்துக் கொள்வோம்?? எந்த பெண்ணின் மேல் அதிக பார்வை விழும்??
நெஞ்சைத் தொட்டு சொன்னால், நிச்சயம், அரைகுறை ஆடையணிந்த பெண் மேல் தான்.
ஆதாவது, உங்கள் வாதத்தின் படி அவளை ரசிக்கிறவர்கள்.

எப்போதுமே நாம் உடுத்தும் உடை அடுத்தவரின் உணர்வுகளை தூண்டும் விதத்திலோ, துன்புறுத்தும் விதத்திலோ அமையக்கூடாது.

சமூக அமைதி குலையும் விதமாக உடையணிவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

அப்படியிருக்க, அரைகுறை ஆடை தேவையில்லாத உணர்வுகளை அடுத்த மனிதரிடம் தூண்ட காரணமாக இருப்பது எவ்விதத்தில் நியாயம்??
மனிதர்கள் எல்லாரும் கடவுள் இல்லையே..! அட்லீஸ்ட் தவறுகள் நடக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாது இருக்கச் செய்யலாம் இல்லையா??

கடவுள் தானே நம்மையெல்லாம் படைத்தார், பெண்கள் உண்மையாலுமே மறைக்கப்பட்டு வாழ வேண்டியவர்கள் என்று கடவுள் நினைத்திருந்தால், அனைவரையும் கவச குண்டலத்துடன் படைத்திருப்பான்.
அப்படியெனில், கடவுள் எதற்காக ஆடைகளை கண்டுபிடிக்க வைத்தார்??
ஏன் நாம் "ஆள் பாதி, ஆடை பாதி" என்று உடைகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்??

சுகந்தப்ரீதன்
01-11-2007, 11:46 AM
ப்ரீதன்...
தவறு என்று தெரிந்து தானே அப்பழக்கத்தில் இருக்கிறார்கள்??
.
இல்லை அதன் பின்விளைவுகளை அறியாமலே பெரும்பாலானோர் இருப்பதாகத்தான் எனக்கு தோன்றுகிறது... தவறுவது மனித இயல்பு.. தவறு என்று தெரிந்தும் தவறை தொடருவது ஏற்க முடியாத நிகழ்வு... தவறாமல் வாழ்வை நடத்துவது யாராலும் முடியாத ஒன்று... இதுதான் எனது நிலைபாடு...!

lolluvathiyar
01-11-2007, 02:59 PM
வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளை மேலும் சுரண்ட போடும் அடுத்த திட்டம் இது.
தன்னிடம் இருக்கும் காஸ்மெடிக் எனப்படும் அழகுசாதனப்பொருட்கள் விற்கும் சந்தையாக இந்தியாவை மாற்றவே உலக அழகியாக இந்திய பெண் தேர்வு செய்யப்பட்டதன் நோக்கம்.
மனிதர்கள் எல்லாரும் கடவுள் இல்லையே..! அட்லீஸ்ட் தவறுகள் நடக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாது இருக்கச் செய்யலாம் இல்லையா


பின்னீட்ட பூமகள் உன்மையில எனக்கு பெரிமையா இருக்கு. வார்த்தைக்கு வார்த்தை அற்புதமான வரிகள் அப்படியே உன்மையான வரிகள். சிறியவளாக இருந்தாலும் முதிர்ந்த சிந்தனைகள். பல முரை படித்தேன்.
இந்த பதிவுக்கு உன்னை பாராட்டி 500 இபணம் தருகிறேன்.

பூமகள்
01-11-2007, 03:14 PM
பின்னீட்ட பூமகள் உன்மையில எனக்கு பெரிமையா இருக்கு. வார்த்தைக்கு வார்த்தை அற்புதமான வரிகள் அப்படியே உன்மையான வரிகள். சிறியவளாக இருந்தாலும் முதிர்ந்த சிந்தனைகள். பல முரை படித்தேன்.
இந்த பதிவுக்கு உன்னை பாராட்டி 500 இபணம் தருகிறேன்.
உங்க பாராட்டு கிடைத்ததில் மட்டற்ற ஆனந்தம்.
எல்லாம் உங்களைப் போன்ற மன்றத்தில் இருக்கும் பெரியவர்களின் ஆசியால் தான் அண்ணா.
உங்க இ-பணம் கிடைத்தது. ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு.
உண்மையில் இதை நான் எதிர்பார்க்கவேயில்லை.
எனக்கு இப்படி பதிலளிக்க வாய்ப்பளித்த S.ராஜா அண்ணாவுக்கும் இ-பண பரிசளித்து என்னை ஊக்குவித்த வாத்தியார் அண்ணாவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் கூறிக் கொள்கிறேன்.

அறிஞர்
01-11-2007, 04:45 PM
பூமகளின்.. பதில் அருமை..

ஒரு... நல்ல பார்வை (கண்ணோட்டம்) தெரிகிறது... வாழ்த்துக்கள் பூ...

பூமகள்
01-11-2007, 04:48 PM
பூமகளின்.. பதில் அருமை..
ஒரு... நல்ல பார்வை (கண்ணோட்டம்) தெரிகிறது... வாழ்த்துக்கள் பூ...
நன்றிகள் அறிஞர் அண்ணா. எல்லாம் தங்களின் ஆசி..!!

நேசம்
01-11-2007, 08:33 PM
பூமகள் உண்மையில் நல்ல விளக்கம்.வாழ்த்துக்கல்

பூமகள்
02-11-2007, 06:56 AM
பூமகள் உண்மையில் நல்ல விளக்கம்.வாழ்த்துக்கள்
மிகுந்த நன்றிகள் நேசம் அண்ணா. :icon_rollout:

நுரையீரல்
02-11-2007, 09:35 AM
ஊருடன் ஒத்துவாழ் என்ற தத்துவத்திற்கேற்ப... என் பக்க நியாயத்தை அநியாயமாக திணிக்க விரும்பவிலை. பூமகளின் பதில் மிக அருமை. வாழ்த்துக்கள் தங்கையே...

பூமகள்
02-11-2007, 09:41 AM
பூமகளின் பதில் மிக அருமை. இதற்கு மேல் என் பக்க நியாயத்தை அநியாயமாக திணிக்க விரும்பவிலை. வாழ்த்துக்கள் தங்கையே...
நன்றிகள் ராஜா அண்ணா. :)
உங்களின் பதிவு தான் இப்படியான பதிலை எனக்கு சிந்திக்க வைத்தது. அதற்கு எனது நன்றிகள் அண்ணா.
சிந்திக்க தூண்டும் விதத்தில் உங்களின் பதிவு அசத்தலாக இருந்தது. அத்தகைய பதில் பதிக்க ஏன் தயக்கம் அண்ணா?

தாராளமாக பதியுங்கள் அண்ணா.

ராஜா
02-11-2007, 10:04 AM
அன்பின் அமர்..!

எல்லோரும் பதிலளித்துவிட்டார்களா..?

அடுத்து அக்னியாரை அழைப்போமா..?

ஓவியன்
02-11-2007, 11:04 AM
அன்பு உறவுகளே நான் இன்னும் பதிலளிக்கவில்லை ஆனாலும் நீங்கள் அக்னியை அழையுங்கள் அந்த இடைவெளிக்குள் எப்படியாவது பதிலளித்துவிடுகிறேன். :frown:

அக்னி
02-11-2007, 11:22 AM
எனக்கு அழைப்பா...???
சரி சரி சிலரை மாட்ட சந்தர்ப்பம் கிடைக்கிறது. பார்த்துக்கறேன்...
அப்புறம், நானும் பதிலளிக்கணும்... இன்றைக்குள் அளித்துவிடுகின்றேன்...

அமரன்
02-11-2007, 12:09 PM
அப்படியே செய்யலாம் அண்ணா..! அடுத்தவரை அழைப்போம்; கேப்பில் நாம் எமது பதிலைத்தருகின்றோம் என எனது கேள்விக்குப் பதில் அளிக்கவேண்டிய பொறுப்பில் உள்ளவர்களே சொல்லிவிட்டார்கள்.

ராஜா
02-11-2007, 01:10 PM
அப்படியே செய்யலாம் அண்ணா..! அடுத்தவரை அழைப்போம்; கேப்பில் நாம் எமது பதிலைத்தருகின்றோம் என எனது கேள்விக்குப் பதில் அளிக்கவேண்டிய பொறுப்பில் உள்ளவர்களே சொல்லிவிட்டார்கள்.

சரி அமர்..!

இன்று இரவுக்குள் அவர்கள் பதிலளிக்கட்டும்.. நாளைக் காலை " அடுத்த கேள்வியாளர் அக்னி" என்று அறிவிப்போம்..

திறனாய்வுப் புலியே..!

கேள்விகளுடன் தயாரா இருங்க..!

அமரன்
02-11-2007, 04:09 PM
அக்னி தயாராகுங்கள். அப்புறம் புலி பதுங்கித்தான் பாயும் என்றெல்லாம் சொல்லக்கூடாது.:D:D

விகடன்
03-11-2007, 03:27 AM
புலி பதுங்கித்தான் பாயும் என்றெல்லாம் சொல்லக்கூடாது.:D:D
பாய்வதென்றால் பதுங்கத்தானே வேண்டும். நீர் சொல்கிறீர் என்பதற்காக நியதியை மாற்றலாமா என்ன?

----------------------
சரி சரி அக்னியாரே!
நான் உமக்கு வக்காளத்து வாங்கவில்லை.
அடுத்த பதிவாக உமது கேள்விகளையே பதித்துவிடும். பதுங்குவதை மணித்துள்களில் முடித்துவிடும். :D

ராஜா
03-11-2007, 06:42 AM
பதிலளித்தோர் அனைவருக்கும் பணிவான நன்றிகள்..

அடுத்து ... உறவுகளின் உள்ளங்களை உரசிப் பார்க்க..

திறனாய்வுப் புலி அக்னியாரை அன்புடன் அழைக்கிறோம்..!

வாருங்கள் அக்னி..!

ராஜா
04-11-2007, 02:56 AM
அக்னி தயாராகுங்கள். அப்புறம் புலி பதுங்கித்தான் பாயும் என்றெல்லாம் சொல்லக்கூடாது.:D:D

புலி ஓவராப் பதுங்கிருச்சு போல..!

யவனிகா
04-11-2007, 03:01 AM
அடுத்த ஆபத்து கேள்வியாளர் அக்கினியே! வாழ்த்துக்கள். கேள்வியெனும் அம்பு தொடுங்கள்...பதில் கனிகளைச் சுவைக்கக் காத்திருக்கிறோம்.

அக்னி
04-11-2007, 12:48 PM
வந்துகொண்டே இருக்கின்றேன் நண்பர்களே...
கணைகளைத் தயாராக்கி எய்யவிட கணினி ஒத்துக்கொள்ளவில்லை.
மீண்டும் இயங்குதளம் நிறுவப்பட்டு, புதிதாக கணை தொடுக்கத் தயாராகிவிட்டது கணினி வில்.
விரைவில் வந்து மாலை போடும் கணைகள்.
காத்திருக்க வைத்தமைக்கு மன்னித்து, மேலும் சில மணித்துளிகள் காத்திருக்க வேண்டுகின்றேன்...

க.கமலக்கண்ணன்
04-11-2007, 02:46 PM
அக்னி அவர்களே வாருங்கள்...

அனல் பறக்கும் வார்த்தைகளை

அள்ளி தெளித்து தரப்போகும் உங்களின்

அருமையான கேள்விகளை படித்து பதில்களையும்

அப்படியே சுவைத்திட காத்திருக்கிறோம்

அக்னி
04-11-2007, 05:13 PM
மன்ற உறவுகளின் மனவுப் பகிர்வு...
ஒவ்வொருவரின் உளத்தையும் ஊடுருவிப் பார்க்கும் கதிர்கள்...
தொடுக்கப்படும் கணைகள் தருவன துளைகள் அல்ல.., முளைகள்...
முளைகளின் துளிர்ப்பில், மன்ற உறவுகளின் மனநிழலில் கூடிக் களிப்போம்.
திரியின் தோற்றுவாய் ராஜா அண்ணாவுக்கும், இயக்க வலு அமரன் அவர்களுக்கும், ஊற்றுக்களாய் சுரக்கும் மன்ற உறவுகளுக்கும்,
வணக்கம் கூறி, வாய்ப்புக்கு நன்றி கூறி, கேள்விகளைத் தொடுக்கின்றேன்...

iniya (http://www.tamilmantram.com/vb/member.php?u=2217) அவர்களுக்கு...தமிழ்மன்றத்தில் இணைந்து, கிட்டத்தட்ட ஒரு வருட காலத்திற்கு பின்னர், இப்போதுதான் உங்களது பங்களிப்புக்கள் வெளிப்படுகின்றன.
இந்தக் கால இடைவெளியில் தமிழ்மன்றத்தில் நீங்கள் காணும் வேறுபாடுகள் என்ன..?

அவை உங்கள் மனத்தில் தோற்றுவிக்கும் உணர்வுகள் யாவை..?

கஜினி (http://www.tamilmantram.com/vb/member.php?u=3758) அவர்களுக்கு...கஜினி முகம்மது 17 முறைகள் இந்தியா நோக்கிய படையெடுப்பைச் செய்ததாக வரலாறுகள் சொல்கின்றன.
அதேபோன்று, பலதடவைகள் நீங்கள் முயன்று வென்ற ஓர் இலக்கு பற்றி குறிப்பிடுங்களேன்...

அத்தோடு உபரியாக,
கஜினி திரைப்படத்தில் வருகின்ற ஞாபகமறதி போல, உங்களுக்கும் சாப்பிட்ட பதினைந்து நிமிடத்தில் ஜீரணமாகி பசியெடுக்கின்றது என்று வைத்துக் கொள்வோம்.
தீர்வாக என்ன வழியைக் கடைப்பிடிப்பீர்கள்..?

jpl (http://www.tamilmantram.com/vb/member.php?u=2364) அவர்களுக்கு...இலக்கியம் என்ற சுவை இல்லாத தமிழ் மொழி, எவ்வாறு இருந்திருக்கும்...?

அவ்வாறான ஒரு நிலையில், எடுகோல்கள், மேற்கோளிடல்கள் என்பன தமிழ்மொழிக்கு எங்கிருந்து கிடைக்கக்கூடும்..?

நேசம் (http://www.tamilmantram.com/vb/member.php?u=2878) அவர்களுக்கு...மன்றம் வருகையில் grponly என்று வந்து, இன்று நேசமாக அனைவருக்கும் நேசமானவராகிவிட்டீர்கள்.
முதற்பெயரின் அர்த்தம் என்ன..?

யவனிகா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் திரியை ஒரு மாதம் முன்னரே தொடக்கிவிட்டீர்கள்.
இதுபோன்று உங்கள் வாழ்வில், குறித்த தருணத்திற்கு முன்னர், நீங்களாகத் தொடக்கிவிடப்பட்ட நிகழ்வுகளும் நிச்சயமாக இருக்கும்.
அவற்றில் சுவாரசியமான ஒரு நிகழ்வைக் குறிப்பிடுங்களேன்...

யவனிகா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12679#) அவர்களுக்கு...உங்களது நூறாவது பதிவில்..,

கண்ணனைப் பிரிந்த மீராவின் பிரிவுத் துயருக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல...தமிழைப் பிரிந்த என் நிலை...என்ன கையில் தம்புரா மட்டும் தான் இல்லை...

எனக் குறிப்பிட்டிருந்தீர்கள்...
அந்த நிலையில், உங்கள் கையில் தம்புரா இருந்திருப்பின், பாடியிருக்கக்கூடிய பாடலை, சிறு கவிதையாகத் தருக...
அத்தோடு,

வீட்டுப் பின் பக்க மரத்தில் கூடு கட்டி குஞ்சு பொரித்திருந்த குயில் தான் என் ஒற்றைத் தோழி...
மன்றத்தில் உங்கள் வருகையால், தனிமைப்பட்டுவிட்ட அந்தக்குயிலின் இன்றைய நிலை...
குயில் சொல்வது போலிருப்பது சிறப்பு... உரைநடையில் அமைந்தால் மிக மகிழ்வு... வரையுங்களேன்...

kamalk023 (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=293074#) அவர்களுக்கு...உங்களுடைய "திருமண அழைப்பிதழ் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8421)" இல், நீங்கள் அழைப்பது போல், அகரவரிசைக்கவி அமைந்திருந்தது. இதனால், உங்கள் மனைவி வீட்டார், ஆட்சேபனை தெரிவிக்கவில்லையா..? தெரிவித்திருப்பின் எப்படி சமாளித்தீர்கள்..?

உங்களுக்கு முன்னரே, உங்கள் மனைவி வீட்டார் இப்படி ஒரு அழைப்பிதழை, ஈற்றில் மனைவியின் பெயரையிட்டு அச்சடித்திருப்பின், உங்கள் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும்..?

Hayah Roohi (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=293074#) அவர்களுக்கு...முதலில் அனைவரின் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்...
மன்றத்தில் முதன்முதலாக பிறந்த நாளைக் கொண்டாடும் உங்கள் மன உணர்வுகளை சிறிய கவிதையாக தாருங்களேன்...

உங்களது பிறந்தநாட்களில் நிகழ்ந்த ஏதேனும் மறக்கமுடியாத நிகழ்வு ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுக...

யாழ்_அகத்தியன் (http://www.tamilmantram.com/vb/member.php?u=3735) அவர்களுக்கு...புலம்பெயர் வாழ்வு, உங்கள் தாயகத்து உணர்வுகளைத் தட்டிக் கொடுக்கின்றதா.., கட்டிப் போடுகின்றதா..? சற்றே விளக்குக...

ஈழத்தமிழர் போராட்டம், புலம்பெயர் இளைய சமூகத்திடம் எவ்வளவு தூரத்திற்கு உணரப்பட்டுள்ளது..?

சாம்பவி (http://www.tamilmantram.com/vb/member.php?u=3551) அவர்களுக்கு...உங்கள் ஆழ்ந்த கவி ஆய்வுகள் கண்டு வியப்படைந்திருக்கின்றேன். உங்கள் கவியார்வத்தின் ஆரம்பப்புள்ளி பற்றிக் குறிப்பிடுங்களேன்...

தமிழ்மன்றத்தில் இனியவர் என்ற நிலையில், அனைத்து உறவுகளுக்கும் இனிமையானவராக இருக்கின்றீர்கள். ஆனால் இதுவரை உங்கள் அறிமுகத்தைக் கூடத் தரவில்லை. அதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணம் இருக்கின்றதா..?

mgandhi (http://www.tamilmantram.com/vb/search.php?do=finduser&u=1835) அவர்களுக்கு...அனைத்து வகை செய்திகளையும் மன்றத்தில் தொகுத்து தருகின்றீர்கள்.
செய்திகள் மீதான ஆர்வம் உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது..?

"கேட்கக்கூடாத கேள்விகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12369)" திரியில் நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளை நேரடியாக, உரியவர்கள் ஐவரிடம் கேட்க அனுமதித்தால், நீங்கள் தெரிவுசெய்வோர் யாராக இருப்பர்..? அவர்களிடம் கேட்கவிரும்பும் (ஒவ்வொருவருக்கும் தலா ஒரு கேள்வியாக) ஐந்து கேள்விகள் எவையாக இருக்கும்..?

எனது கேள்விகள் யார் மனதையேனும் வேதனைப்படுத்தும் வகையில் அமைந்திருப்பின் பொறுத்தருள வேண்டுகின்றேன்...

நன்றி!

ஓவியன்
04-11-2007, 05:39 PM
திறனாய்வு புலி மற்றவர்களின் திறனை வெளிப்படுத்த தேர்ந்தெடுத்த கேள்விக்கணைகளும் அந்த கணைகள் வீசப்பட்ட இலக்குகளும் அருமை...

ஆவலைத் தூண்டும் வினாக்களுக்கான விடைகளை
ஆவலுடன் எதிர் நோக்கிக் காத்திருக்கின்றேன்.....!! :)

யவனிகா
04-11-2007, 05:53 PM
கேள்விகளைக் கூட இத்தனை சுவையாகக் கேட்க முடியுமா? பள்ளி,கல்லூரி வினாத்தாளில் கேள்விகளைப் படிக்கும்போது பதட்டத்துடன் இருப்பது என் வழக்கம். உங்கள் கேள்விகளைப் பார்க்கும் போது பரவசத்துடன் கூடிய புன்சிரிப்பு புறப்படுகிறது இதயத்திலிருந்து...

அழகான கேள்விகள்...யோசித்து , ஆழமாக இலக்கை நோக்கி எறியப்பட்ட கற்கள்...வெறும் கற்கள் அல்ல ...மரகதக் கற்களை எறிந்திருக்கிறார் அக்னியார்..ந*ம் ம*ன*தை நோக்கி...
விரைவில் தருகிறேன் கனிந்து நிற்கும் என் பதிலை!

அக்னி
04-11-2007, 07:13 PM
7.அக்னி+அன்புரசிகன்:
மன்றத்தில் கிடைத்த உறவுகளுடனான எனது குரல் தொடர்பாடலில் முதலிரு இடங்களைப் பிடித்தவர்கள் நீங்கள். உங்களிடம் ஒரு வேண்டுகோள்.. என்னைப்பற்றிய உங்கள் இருவரினரும் பார்வையை கவிதையாக இல்லாவிட்டாலும் கவித்துவ நடையில் தாருங்கள்...(இதை வேறு யாருக்கும் மாற்ற ரசிகனுக்கு எனது அன்பான தடை. ஹி...ஹி...ஹி...:lachen001::lachen001::D:D :icon_rollout::icon_rollout:)

அமரன்...
நான் மன்றம் வந்த புதிதில்,
விரைவு பெற்றது இவர் பதிவுகள்...

அன்று எண்ணினேன்...
இவ்வளவு நாட்களில் இவர் பதிவுகளைவிட
பெயர் மாற்றிய விகிதம் அதிகம் என்று...
இன்று வியக்கின்றேன், இவர் வேகம் கண்டு...
தமிழார்வம் நிறைந்த தமிழாழம் கண்டு...

அமரன்...
தமிழுக்குச் செய்தது துரோகம்...
தீந்தமிழ் ஊற்றை அடைத்துவைத்த துரோகி...
இப்போது பிரயாச்சித்தம் செய்யும் நேரம்...
பிரவகிக்கின்றது தமிழ் வெள்ளம்...
மூடா ஊற்றாய் என்றும் சுரக்க வாழ்த்துகின்றேன்...

எழுத்துக்களில் அளவளாவினோம்...
காலம் குரல்களால் இணைந்து கொள்ளவும் அனுமதித்தது...

எழுத்துக்களின் கனபரிமாணம்,
அவரின் அவதார் தோற்றம்,
அமரனை, ஒரு முதிர் இளைஞனாய் உருவகப்படுத்தியிருக்க,
தொடர்புகொண்டது ஒரு ஆளுமை நிறைந்த இளமைக் குரல்...
தொலைந்துபோனது நமக்குள் இடைவெளி...

சிரித்த வண்ணம், எண்ணம் சிதையாத
உரையாடல் நேர்த்தி... அவ்வேளைகளில்,
சிணுங்கும் அடிக்கடி இவர் தொலைபேசி,
கலக்கலாய் உரையாடுவார், கணினி ஒலிவாங்கி பொத்தி...

விரைவில் காலம் நேரில் காணவைக்கும் என்று நம்புகின்றேன்.

ஒருவரியில்...
அமரன்... தமிழ் மரதன்...

ஓவியன்
05-11-2007, 01:28 AM
ஆஹா அக்னி..!!

மன்றம் தந்த உறவுகள்
நாம் காலத்தினால் பெற்ற
வரம்.....!!

அதில் அமரன்
ஒரு அட்சயபாத்திரம்...!!

இல்லை, இல்லை
அதிசயபாத்திரம்....!!

அதை தெள்ளத் தெளிவாக
விளக்கி நின்ற உங்கள்
வரிகள் பிரமாதம் அக்னி...!!

பாராட்டுகிறேன் - மனமகிழ்ந்து....!!

mgandhi
05-11-2007, 03:05 AM
mgandhi அவர்களுக்கு...
அனைத்து வகை செய்திகளையும் மன்றத்தில் தொகுத்து தருகின்றீர்கள்.
செய்திகள் மீதான ஆர்வம் உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது..?


நான் சிறு வயதாக இருக்கும்போதே எனது தந்தை என்னிடம் செய்தி தாள்களை தந்து படிக்க சொல்லி பின்பு அவற்றில் உள்ள நல்லசெய்திகள் எவை எவை என்று கேட்பது வழக்கம்.

இத்துடன் நான் பள்ளியில் படிக்கும் போது எனது பள்ளி ஆசிரியர் தினம் செய்திதாள்களை பார்த்து ஒருநோட்டில் ஒவ்வொறு மாணவனும் அன்றைய செய்திகளை சிறு குறிப்பாக எழுதி வந்து பள்ளி ஆரம்பிக்கும் முன் ஒவ்வொறுவராகப் படிக்க சொல்வார்.

ஏட்டு படிப்பை விட நாட்டை பற்றி படித்து அறிந்தால் மிக முக்கியம்.அது நமக்கு அனுபவக் கல்வியை தரும். இப்போது உள்ள மாணவர்களிடம் , செய்திகளை வாசிப்பது குறைந்து விட்டது வருந்த தக்க செய்தியே .
நன்றி மன்ற நண்பர்களே ! .

அமரன்
05-11-2007, 06:56 AM
அருமையான கேள்விகள் அக்னி. பொங்கிய உவகையுடன் பாராட்டுகின்றேன்.

கஜினி
05-11-2007, 07:17 AM
கஜினி முகம்மது 17 முறைகள் இந்தியா நோக்கிய படையெடுப்பைச் செய்ததாக வரலாறுகள் சொல்கின்றன.
அதேபோன்று, பலதடவைகள் நீங்கள் முயன்று வென்ற ஓர் இலக்கு பற்றி குறிப்பிடுங்களேன்...

அத்தோடு உபரியாக,
கஜினி திரைப்படத்தில் வருகின்ற ஞாபகமறதி போல, உங்களுக்கும் சாப்பிட்ட பதினைந்து நிமிடத்தில் ஜீரணமாகி பசியெடுக்கின்றது என்று வைத்துக் கொள்வோம்.
தீர்வாக என்ன வழியைக் கடைப்பிடிப்பீர்கள்..?

வணக்கம் உறவுகளே..!

நான் கஜினி. முயற்சி செய்! இறுதிவரை முயற்சி செய்! இதற்கு உதாரணம் கஜினி அவர்கள். பலமுறை போர் தொடுத்து தோற்றப்பின்னும் அவரது படையெடுப்பின் ஆவல் அடங்கவில்லை. அதுபோலத்தான் தோல்விகள் பல நம்முன் இருந்தாலும் அடுத்த வெற்றிவரை போராட வேண்டும் என்பதற்காகத்தான் நான் இந்த பெயரை எனக்கு சூட்டிக்கொண்டேன்.

பலமுறை போராடி இறுதியில் கண்ட வெற்றி. நான் அதிகம் போராடவில்லை. ஆனால் அதிக நேரம் போராடியிருக்கிறேன். அது என் காதல் விசயத்தில் மட்டும் பொருந்தும். நான் காதலித்தேன் ஒரு பெண்ணை ஆறு ஆண்டுகளாக. கடைசியில் அவளையே மணந்தேன். என் காதல் நிஜமெனில் நான் புரிந்தது தவம். என் ஆறாண்டுகால தவத்தில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். இந்த ஆண்டின் முற்பகுதியில்தான் எனக்கு திருமணம் நடைபெற்றது.

விருப்பம் இல்லாத பல உணவுகளை உண்ண முற்படுவேன். வேறு வழியில்லாமல் அந்த பழக்கம் விடுபடும்.

ராஜா
05-11-2007, 08:35 AM
அக்னியின் பார்வையில் அமரப் பரிமாணங்கள் சுவையாக இருக்கிறது..

நீடூழி வாழ்க நும் நட்பு..!

ராஜா
05-11-2007, 08:39 AM
அக்னியாரின் கேள்வித் திறவுகோல்களும், மன்ற உறவுகளின் மனக்கதவுத் திறப்பும் அதி உன்னதம்..

மற்றோர் பதில் காண ஆவல் மிகுகிறது..!

விகடன்
05-11-2007, 08:42 AM
அக்னியின் வரிகள் அமரனனை மட்டுமல்லாது அதை படிப்பவர்களையும் ஆனந்தமடைய வைக்கிறது.
அமரனின் பாதிப்பு அக்னியிலும்....

பாராட்டுக்கள் அக்னி,
வாழ்த்துக்கள்..... உமது நட்பிற்கு.

விகடன்
05-11-2007, 08:44 AM
கஜினியின் போராட்டம் ஆமைவேகமாக இருந்தாலும் குரிக்கோளை அடைந்திருப்பது பாராட்டத்தக்கது.
காதல் என்னும் துறையில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். ஆகையால் அத்தத்துறை இனியும் வேண்டாம். அதுதவிர்ந்த ஏனைய அனைத்து துறைகளிலும் வெற்றிபெற்று ஜொலிக்க வாழ்த்துக்கள்

kavitha
05-11-2007, 08:45 AM
புதுமையான கேள்விகளும், சுவாரசியமான பதில்களும் நன்றாக இருக்கின்றன. புதியவர்கள்(எனக்கு) நிறைய பேர் இருக்கிறீர்கள். ஒரு சமயத்தில் அடியெடுத்து வைப்பவர்களுக்கு முதல்வரவேற்பாக எனது பதிவு பூச்செண்டு நின்றிருந்தது! இப்போது உங்களது அறிமுகப்பக்கங்களைப்படிக்கக்கூட நேரமில்லை.... இருப்பினும் அக்னி, அமரன், அரசன், அரவிந்த், இனியவள், இலக்கியன், உதயசூரியன், யவனிகா, பூமகள், வெண்தாமரை, வசீகரன், விராடன், அரவிந்தன், அழகுராஜ்,பார்த்திபன், விஜய், பஷீரா, பிரவீன், ரமணன், ராம்தேவானந்த், ஸ். ராஜா, ராம்கி, சடகோபன், சண்முகி, வினோத், விருமாண்டி மற்றும் விடுபட்ட புதியவர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். (பழைய நண்பர்கள் பெயர் மாற்றியிருந்தால் தயவு செய்து தனிமடலில் தெரிவிக்கவும்). நன்றி

Hayah Roohi
05-11-2007, 08:53 AM
முதலில் அனைவரின் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்...
மன்றத்தில் முதன்முதலாக பிறந்த நாளைக் கொண்டாடும் உங்கள் மன உணர்வுகளை சிறிய கவிதையாக தாருங்களேன்...

உங்களது பிறந்தநாட்களில் நிகழ்ந்த ஏதேனும் மறக்கமுடியாத நிகழ்வு ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுக...



இனிய நன்றிகள் உங்கள் வாழ்த்துக்களுக்கு....
தற்செயலாகத்தான் ஆ பத்துக்கு நான் அழைக்கப்பட்டிருப்பதை அறிந்தேன்..
தமிழ் மன்றத்துக்கு நான் புதியவள் என்றாலும் என்னையும் இங்கு கூப்பிட்டதற்கு மீண்டும் நன்றிகள்!!!
வருகிறேன் பதிலோடு...

க.கமலக்கண்ணன்
06-11-2007, 01:17 PM
kamalk023 அவர்களுக்கு...உங்களுடைய "திருமண அழைப்பிதழ் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8421)" இல், நீங்கள் அழைப்பது போல், அகரவரிசைக்கவி அமைந்திருந்தது. இதனால், உங்கள் மனைவி வீட்டார், ஆட்சேபனை தெரிவிக்கவில்லையா..? தெரிவித்திருப்பின் எப்படி சமாளித்தீர்கள்..?

மிக்க நன்றி அக்னி அவர்களே மீண்டும் ஆ! பத்து திரிக்கு அழைத்ததற்கு...

இந்த எண்ணம் எனக்கு தோன்றியதே எனது முதலாளியின் முதல் மகன் திரு சிவக்குமார் அவர்கள் தூண்டுதல் மூலமாகத்தான்.
எனது கணனியில் அதனை வடிவமைத்து முதலில் காண்பித்தது அவரிடம்தான். அப்போது அவர் பார்த்துவிட்டு மிக அற்புதம் என்று பாராட்டியதோடு மட்டும் அல்லாமல் எங்கள் திருமணத்திற்கு வரமுடியாத காரணத்தால் தங்கமோதிரம் பரிசளித்தது மறக்க முடியாதது. இந்த நேரத்தில் அவருக்கு தமிழ்மன்றம் மூலம் நன்றியினை தெரிவித்துக் கொள்றேன்.

பிறகு எனது தாய்மாமாவிற்கு அனுப்பியதும் அவர்கள் எனது மனைவியின் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். எனது மனைவியின் தந்தை எனது மனைவியிடம் காண்பித்து "அந்த பிள்ளை எப்படி அழகாக கவிதை எழுதி இருக்கிறார் பார் " என்று சொல்லி எனது மனைவியிடம் காண்பித்தி இருக்கிறார். எனது மனைவியும் வாங்கி படித்துவிட்டு அவர்களுடைய தோழிகளிடத்தில் காண்பித்து பெருமிதப்பட்டிருக்கிறார்.

எனது துணைவியார் பெயர் விஜயலெஷ்மி அந்த வேளையில் நான் எழுதிய கவிதை

விந்தையாக உன்னால் நான்

ஜனனம் அடைவேனோ

யமுனை ஆற்றின் குளிர் தென்றலோ

லெஷ்மிகரமான முகமோ

ஷ்' ஆவல் தாங்க முடியவில்லையே

மின்னிடையாளே...

என்று எழுதியதை அவர்கள் தோழிகளிடம் காண்பித்து பெருமிபட்டுக் கொண்டது நன்றாக நினைவிருக்கிறது.

ஆனால் அந்த அழைப்பிதழை எனது நண்பர்களுக்கு என்று அச்சிட்டதை மிக நன்றாக இருக்கிறது என்று எனது மாமாவும் பாதிக்கு மேல் வாங்கி அவர்களுடைய அலுவலகத்தில் விநியோகித்தது தனி கதை...

ஆட்சேபனை இல்லை வரவேற்பு இருந்தாதால் நான் வேறு எதுவும் செய்யவில்லை.



உங்களுக்கு முன்னரே, உங்கள் மனைவி வீட்டார் இப்படி ஒரு அழைப்பிதழை, ஈற்றில் மனைவியின் பெயரையிட்டு அச்சடித்திருப்பின், உங்கள் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும்..?

ஆகா நமக்கு இப்படி ஒரு எண்ணம் வரவில்லையே என்று எண்ணி வருத்தப்பட்டிருப்பேன். ஆனால் மறுபக்கம் மிகவும் மகிழ்ந்திருப்பேன். என்னென்றால் மிகவும் அற்புதமாக செய்திருக்கிறார்கள் என்று. ஆனாலும் தற்போது அதை எல்லாம்விட மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
ஏன்னென்றால் எனக்கு தாய்தந்தை இல்லை அதை நினைத்து பல நாட்கள் ஏங்கியது உண்டு. அதை தீர்க்கும் வகையில் என்க்கு அத்தை மாமா மட்டும் அல்ல அன்னையும் பிதாவுமாக இருந்து என்னுடைய ஒவ்வொரு செய்கையிலும் வழிகாட்டி வருகிறார்கள். என் மனைவி அவர்களை அப்பா அம்மாவாக அடைந்த பாக்கியத்தை விட பலமடங்கு நான் பாக்கியம் செய்திருக்கிறேன். நல்ல மைத்துனர்கள், நல்ல மைத்துனிகள் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இந்த பந்தத்தை கடவுள்தான் கடைசிவரை காப்பற்ற வேண்டும்....

எனது களிப்பை உங்களுடன் பகர்ந்து கொள்ள வாயப்பளித்த அக்னிக்கு மிக்க நன்றி...

அமரன்
06-11-2007, 04:33 PM
ஆபத்தில் எனது கேள்வியை பார்த்த அன்புரசிகன் இப்படித்தான் பாடுகின்றாராம்..

என்னக்கவி எழுதசொன்னால் என்ன கவி எழுதுறது
சொந்தக்கதை சோகக் கதை யாருகிட்ட கேட்கிறது..

ஆதவா
06-11-2007, 05:14 PM
நான் கஜினி. முயற்சி செய்! இறுதிவரை முயற்சி செய்! இதற்கு உதாரணம் கஜினி அவர்கள். பலமுறை போர் தொடுத்து தோற்றப்பின்னும் அவரது படையெடுப்பின் ஆவல் அடங்கவில்லை. அதுபோலத்தான் தோல்விகள் பல நம்முன் இருந்தாலும் அடுத்த வெற்றிவரை போராட வேண்டும் என்பதற்காகத்தான் நான் இந்த பெயரை எனக்கு சூட்டிக்கொண்டேன்.

பலமுறை போராடி இறுதியில் கண்ட வெற்றி. நான் அதிகம் போராடவில்லை. .

நண்பரே! கஜினி என்றும் தோல்வியடையவில்லை. சரித்திரம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. முகமது கஜினியின் அனைத்து படையெடுப்புகளும் வெற்றியே ஆனால் அவர் செய்த தவறு தன் சாம்ராஜ்யத்தை அவர் விரிவு படுத்தாததே.... பொன்னும் பொருளும் அள்ளிச் சென்றது எராளம்... இறுதி படையெடுப்பு பிரசித்திபெற்ற சோம்நாத் படையெடுப்பு..... மேலதிக தகவல் வேண்டுமெனில் பிறிதொரு நாள் தருகிறேன்...

jpl
07-11-2007, 01:09 PM
நன்றி அக்னி.......

இலக்கியம் என்ற சுவை இல்லாத தமிழ் மொழி, எவ்வாறு இருந்திருக்கும்...?

அவ்வாறான ஒரு நிலையில், எடுகோல்கள், மேற்கோளிடல்கள் என்பன தமிழ்மொழிக்கு எங்கிருந்து கிடைக்கக்கூடும்..?

முதற்கண் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் மன்ற அங்கத்தினர்களிடம்.
மிக்க பணிச்சுமையால் இணையம் வருவதே அரிதாகி விட்டது.
நானறிந்த மொழிகளில் இலக்கியம் என்ற சுவை இல்லாத மொழி என்றில்லை.
பூச்சரம் தொடுக்கின்றோம் எளிமையாக.அதனையே கற்பனைத் திறத்தோடு,
விதவிதமாக கட்டி வண்ண வண்ண மாலையாகத் தொடுக்கின்றோம்.
அவ்வண்ணமானதே இலக்கியமும்.மனிதனின் மேம்பட்ட கற்பனைச் செறிவே இலக்கியம்.
பூங்கோதைக் கட்டும் மாலை நன்றாக இருக்கும்.
அழகுக்கு அழகு சேர்க்கும் மாலை தொடுப்பாள் பூங்கோதை.(அழகாக இருக்கும் யாருக்கோ பூங்கோதையின் மாலை இன்னும் அழகைச் சேர்க்கின்றது.அது இறைவனாகக் கூட இருக்கலாம்.)
2 ம் வரி இலக்கிய நடையை எட்டிப் பார்த்து விடுகின்றது.
எனவே மனிதனின் கற்பனை வளம் குறையாத வரை இலக்கியம் இல்லாமற் போக வழியில்லை.


அவ்வாறான ஒரு நிலையில், எடுகோல்கள், மேற்கோளிடல்கள் என்பன தமிழ்மொழிக்கு எங்கிருந்து கிடைக்கக்கூடும்..?
வேறெங்கிருந்து இயற்கை அன்னையிடமிருந்து தான்.
அவள் தான் அள்ள அள்ள அமுதசுரபி அல்லவா?...........

jpl
07-11-2007, 01:11 PM
விரிவான பதிலியம்ப இயலா வண்ணம் பணிச்சுமை.
மன்னிக்கவும்.

iniya
07-11-2007, 06:07 PM
[B]iniya (http://www.tamilmantram.com/vb/member.php?u=2217) அவர்களுக்கு...[/LIST]தமிழ்மன்றத்தில் இணைந்து, கிட்டத்தட்ட ஒரு வருட காலத்திற்கு பின்னர், இப்போதுதான் உங்களது பங்களிப்புக்கள் வெளிப்படுகின்றன.
இந்தக் கால இடைவெளியில் தமிழ்மன்றத்தில் நீங்கள் காணும் வேறுபாடுகள் என்ன..?

அவை உங்கள் மனத்தில் தோற்றுவிக்கும் உணர்வுகள் யாவை..?

நன்றி!

தமிழ் மன்றத்தின் மாற்றம் என்னை சற்று நிலைகுலைய வைத்து விட்டது. வந்ததும் இது நமது தமிழ் மன்றமா இல்லை தள முகவரி தவறுதலாக அடித்ததால் அறிமுகமாகும் புதியதொரு தளமா என்ற பெரும் குழப்பத்தின் மத்தியில் மீள ஒருதடவை தள முகவரியை சரிசெய்து கொண்டே எனது அங்கத்துவ பெயரை பொறித்து உள்ளே வந்தேன்.

புதிய களத்தில் நிறைய புதிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, தமிழில் நிறைய தட்டச்சு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன அது மட்டும் அல்லாமல் புதிதாக தற்காலிக சேமிப்பு வசதி மற்றும் எடிட்டர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மற்ரும் அகேஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒருவருக்கு ஒருவர் சன்மானமாக ஐகேஸ் முறைப்படி நன்கொடை கொடுக்கும் முறை அரிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இது கள உறவுகளுக்கு நல்ல ஆக்கங்களை எழுதுவதற்கு ஊக்கம் கொடுக்கிறது,

முகப்பில் அமைக்கப்பட்டிருக்கும் சிறு படங்கள் மற்றும் புதிதாக பதில் போடப்பட்ட 10 தலைப்புக்கள் தெரிவதும் சிறப்பாக உள்ளது. இவ்வாறு நிறைய மாற்றஙள், புதிய வசதிகள் என்டு கூறிக்கொண்டே போகலாம். இவ்வாறு நிறைய வசதிகள் செய்து கொடுத்தமை களத்துடன் 24 மணி நேரமும் இணைந்திருக்க வேண்டும் போல இருக்கிறது ஆனால் என்ன செய்ய நேரம் இடம் கொடுக்குதில்லை. முடிந்தளவு இணைந்திருக்கிறேன்.

நேசம்
07-11-2007, 07:22 PM
அமரன் கேட்ட அழகான கேள்விகளுக்கு மக்கள் எப்படி பதில் தருகிறார்கள் என்று பார்ப்பதற்கு அடிக்கடி இந்த பகுதிக்கு வரும்போது அமரன் மறைமுகமாக எச்சரித்தார்.நானும் என் அன்பு தங்கை இருக்க(?) எதையும் எதிர்கொள்வோம் என்று பில்டப் எல்லாம் விட்டேன்.ஆனால் எனக்கே இவ்வளவு சீக்கிரத்தில் வரும் என்று எதிர்பார்க்கவில்லை.எனக்கு யவனிகா மாதிரி சரளமான நடையோ அல்லது புள்ளி ராஜா மாதிரி குசும்பாக எழுத தெரியாது.அதனால் சுவராஸ்யமாக இருக்காது.அதனால் படிச்சுட்டு(படிச்சா)மனசுக்குள்ளே தி.

நேசம் அவர்களுக்கு...மன்றம் வருகையில் grponly என்று வந்து, இன்று நேசமாக அனைவருக்கும் நேசமானவராகிவிட்டீர்கள்.
முதற்பெயரின் அர்த்தம் என்ன..?

Grponly என்பதற்கு grouponly என்று அர்த்தம்.எங்கள் ஊர் நிர்வாகத்தில்(நாட்டாமைதான்) நிர்வாகத்தில் பல கோஷ்டி உண்டு.அதனால் அவர்கள் அடிக்கும் கூத்துக்களை எங்கள் ஊர் வலைத்தளத்தில் பதிக்க என்னை மாதிரி நல்ல பிள்ளையாக(?) இருக்கும் நண்பர்கள் சேர்ந்து வைத்து கொண்ட பெயர்.எங்கள் உற்வினர்கள் எப்படியாவது ஒவ்வொரு கோஷ்டி இருப்பார்கள்.அதனால் எங்களை காட்டி கொள்ள்மால் இருக்க இந்த பெயர் வைத்து கொண்டாம்.நம்ம கூத்தடிக்க மட்டுமில்லை,நமக்கும் ஊர் மீது அக்கரை இருக்குன்னு நிருப்பிக்கணும் னு பீர் குடித்து கொண்டே நிதனமாக முடிவெடுத்தோம்.ஆனால் இந்த திட்டம் மற்றொரு தடவை நிதானம் தவறி அது கைவிடப்பட்டது.(அக்னி எண்டா கேட்டோம் என்று வருத்த பட கூடாது! சரியா..!!)பிறகு இந்த பெயரை முழுமையாக நானே எடுத்து கொண்டெண்(அதுக்கு வேற பார்ட்டி கொடுக்க வேண்டி இருந்தது.. பார்த்திங்களா இவ்வளவு அப்பாவியா இருக்கிறென் என்று!)
ஆனால் தமிழ் மன்றத்துக்கு இந்த பெயர் நெருடலாக இருந்த்தால் எல்லொருக்கும் நேசமாக இருக்கணும்னு நேசம் என்று மாற்றி கொண்டேன்.



யவனிகா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் திரியை ஒரு மாதம் முன்னரே தொடக்கிவிட்டீர்கள்.
இதுபோன்று உங்கள் வாழ்வில், குறித்த தருணத்திற்கு முன்னர், நீங்களாகத் தொடக்கிவிடப்பட்ட நிகழ்வுகளும் நிச்சயமாக இருக்கும்.
அவற்றில் சுவாரசியமான ஒரு நிகழ்வைக் குறிப்பிடுங்களேன்...

இந்த சம்பவம் அப்படிதான் இருக்கும் என்று நினைக்கிறென்.இது பள்ளிக்கூடத்தில் நடந்தது.
ஒரு தடவை தகவல் பலகையில் 2 மாதத்துக்கு பிறகு மாவட்ட அளவில் நடைபெறும் வினாடி வினா போட்டிக்கு செல்ல என்னையும் எதிர் சொம்பு கோஷ்டில் இருந்த ஒரு பெண்ணையும் தேர்ந்து எடுத்து இருப்பதாக எழுதி இருந்தது..எண்டா hm க்கு மூளை எதும் குழம்ப்பி போய் விட்டதா ன்னு நன்பர்கள் கவலையாக பேசி கொண்டார்கள்.அந்த பெண்ணூம் வகுப்பாசிரியாரிடம் தான் கலந்து கொள்ள விருப்பமில்லைன்னு சொல்ல, அவரும் சமாதானம் செய்து அவளை ஒத்து கொள்ள வைத்து விட்டார்..கோபம் தலைக்கு ஏற, இந்த போட்டியில் இவளை விட நல்ல பெயர் வாங்கணும் வைக்கிராயம் பிறக்க, அதிலிருந்து புத்தக புழு வாக ஆனேன்.கண்(ணில்)ட கண்ட புக் எல்லாம்(gk புக்தான்)வாங்கி படித்தேன்.இதையெல்லாம் பார்த்த நன்பர்களுக்கு தான் ஆச்சர்யம் என்றால் , அந்த பெண்ணூம் என் ஆர்வத்தை பார்த்து நட்புடன் பழக ஆரம்பித்தாள். போட்டி சில நாட்களுக்கு முன்பு அந்த தவறு தெரிய வந்தது. என் பெயரில் இருக்கும் ஒருத்தருக்கு பதிலாக என் இன்ஷியல் போட்டு விட்டார்கள்.ஆனாலும் என்னுடைய உழைப்பை(?) பார்த்து என்னையே போக சொல்லிவிட்டார்கள். இதுவே எனக்கு பெரிய வெற்றியாக தெரிந்தது.அந்த போட்டி அன்று
முதல் சுற்றில் அவளே எல்லாம் பதில் சொன்னாள்.அவள் ஏதும் தப்பாக சொன்னால் கடிந்து கொண்டேன்.சத்தியமாக என்க்கும் தெரியவில்லை என்பது வேற விஷயம். ஏறத்தாழ மத்த குருப்புக்கு எத்த மாதிரி மார்க் வாங்கி இருந்(தாள்)தோம். அடுத்த சுற்றில் ஒவ்வொரு குருப்பிலும் தனித்தனியாக சில கேள்விகள் கேட்கப்படும் என்று சொன்ன போது தலையில் எதோ இறங்கின மாதிரி இருந்தது.அப்போ அவள் ஒழுங்கா யோசித்து பதில் சொல்.தப்பா சொன்ன மைனஸ் மார்க் உண்டு என்று பயமுறுத்தினாள்.அவளிடம் கேள்வி கேட்ட போது சரியும் தப்புமா பதில் சொல்லி ஒரளவுக்கு மார்க் வாங்கி விட்டாள்.ஆனால் என்னிடம் கேட்ட போது ஒரு கேள்விக்கும் தப்பா பதில் சொல்லவில்லை.இருந்தும் என்ன புண்ணியம் வெற்றிப் பெற முடியவில்லை.அவள் கோபமாக என்னிடம் பேசமால் சென்று விட்டாள்.வாத்தியார்களும் எதுக்கு என்னையே கடிந்து கொண்டார்கள் எனக்கு புரியவில்லை.. தப்பா பதில் சொல்லமால் இருந்தற்கு இவ்வளவு அர்ச்சனையானு பார்க்காதிங்க.என்னா நான் இரண்டாவது சுற்றில் அனைத்து கேள்விக்கும் சொன்ன பதில் passஏன் எம்மேல கோபமாக இருந்தார்கள் என்று இன்னைக்கு வரை தெரியவில்லை.
இதற்கு பிறகு எல்லோரும் அக்னி மீது கோபமாக இருப்பதாக தகவல்

யவனிகா
08-11-2007, 07:36 PM
இறுதி படையெடுப்பு பிரசித்திபெற்ற சோம்நாத் படையெடுப்பு..... மேலதிக தகவல் வேண்டுமெனில் பிறிதொரு நாள் தருகிறேன்...

உண்மைதான் நண்பரே! சோம்நாத் கோயில் கொள்ளைச் சம்பவத்தை மதன் எழுதிய வந்தார்கள்...வென்றார்கள்...புத்தகத்தில் படித்து அதிர்ந்தேன். அதுவும் அந்த அற்புதமான சிலை உடைப்புச் சம்பவம் விவரிக்கப் பட்டிருந்தமை அதிர்ச்சி அளித்தது.கோயிலுக்காக உயிரை கொடுத்த ஊழியர்களின் தியாகம் என்று ஒவ்வொன்றையும் விவரித்திருந்தார் மதன். கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம்.
சகோதரர் கஜினி, நேரம் கிடைத்தால் படியுங்கள்.

யவனிகா
08-11-2007, 07:39 PM
சுற்றில் அனைத்து கேள்விக்கும் சொன்ன பதில் passஏன் எம்மேல கோபமாக இருந்தார்கள் என்று இன்னைக்கு வரை தெரியவில்லை.
இதற்கு பிறகு எல்லோரும் அக்னி மீது கோபமாக இருப்பதாக தகவல்

இந்த மாதிரி அற்புதமான, தெளிவான, அருமையான பதிலைச் சொன்னதுக்கு எதுக்கு எல்லாரும் உங்களைத் திட்டினார்கள். எல்லாம் பொறாமை தான். அவங்களையெல்லாம் விட நீங்க அறிவாளியாய் இருக்கறதை அவங்களால ஜீரணிக்கமுடியல போல.

யவனிகா
09-11-2007, 09:52 AM
யவனிகா அவர்களுக்கு...உங்களது நூறாவது பதிவில்..,

எனக் குறிப்பிட்டிருந்தீர்கள்...
அந்த நிலையில், உங்கள் கையில் தம்புரா இருந்திருப்பின், பாடியிருக்கக்கூடிய பாடலை, சிறு கவிதையாகத் தருக...

பதிலைத் தர காலதாமதமாகி விட்டது மன்னிக்கவும். இதோ தம்புராவும் கையுமாக கண்ணனாய், தமிழை நினைத்து நான் பாடும் பாடல்...பிடித்த ராகத்தில் இசை போட்டுக் கொல்ல*(ள்ள*)வும்!

தமிழே! தலைவா!
தனிமைப் பசலையில்
தவிக்கின்றேன் நான்!
தடுத்தாட் கொண்டு
தரிசனம் தருவாயா?

இடை மெலிந்து
வளை கழன்று
உயிர்த் துளிகள்
மெழுகென உருக*
காத்திருக்கிறேன் உனக்காக!

சூடிக்கொடுத்த*
சுடர்க்கொடி நான்
உயிர் வாடிப்போகுமுன்
வந்துவிடு தமிழே!

உனக்கான இசை
உருவானது,
தம்புராவில் இருந்தல்ல!
தணியாத என் காதலிலிருந்து
என்பதை அறிவாயா?

கண்ணமூச்சி ஆட்டத்தில்
தொலைந்த உன்னை
தேடும் போதுதான்
கண்டெடுத்தேன்
என் கவிதைகளை!

சுருதி சேர்க்க மூடிய விழிகளில்
உன் சுந்தர முகம் தான் தெரிகிறது!
என் வாழ்க்கை, ஸ்வர பேதமாகுமுன்
வருவாயா தமிழே! தலைவா?

ஆரோகணத்தில் பாடி
அழைக்கின்றேன் உன்னை!
என் அஸ்தமனத்திற்குள்ளாவது
வந்து விடு!தமிழே!

அழைப்பில் மனம்கசிந்து
ஆடாது அசங்காது
வந்தான் எனதுயிர்க்கண்ணன்,
தந்து சென்றான்
"தமிழ் மன்றம்" தன்னை!

அக்னி
11-11-2007, 01:34 PM
பெண்களை தெய்வமாக கும்பிடச் சொல்லவில்லை, ஒரு சக மனிதமாக காண வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
ஒரு பெண்ணிடமிருந்து, இத்தகைய ஒரு வேண்டுகோள், வேதனையைத் தருகின்றது.
வேண்டுகோள் விடுத்து வாழ வேண்டாம் தாய்க்குலமே...
வேதனைப்படுத்துவோரை வேரறுக்க புயலாகுங்கள்...


4. ஆண்களுக்கு பயன்படும் முகச்சவர பிளேடின் விளம்பரம் முதல் ஆண்கள் உபயோகிக்கும் வாசனை திரவியம் வரை பெண்களை அரைகுறை ஆடையுடன் உலவ விட்டு விளம்பரப்படுத்துவது எவ்வளவு தான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் இம்மாதிரியான கலாச்சார சீர்கேடுகளால் மெல்ல பண்பாடு பாழ்படுவது வேதனையிலும் வேதனை.
மிகவும் வேதனைப்பட வேண்டிய விடயமே...
ஆண்களுக்கான என்றில்லை, எதை எடுத்தாலும் விளம்பரம் செய்ய பெண்களை துகிலுரிப்பது,
எத்தனை பாஞ்சாலி சபதங்களை இதுவரை தோற்றுவித்திருக்க வேண்டும்?
இது ஆண்களின் பிழை மட்டுமல்ல... அனுசரித்துப் போகும் பெண்களின் பிழையுமே...
Quote:


Originally Posted by பூமகள் http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=291116#post291116)
1 .பெண்களிடம் சுதந்திரம் என்ற பெயரில் ஆடைக்குறைப்பு அதிகரித்துவருகிறது. என்ன தான் தன் விருப்பத்திற்கு உடையணிந்தாலும் தான் இருக்கும் சமூகத்தின் கலாச்சாரத்தையும் பண்பையும் பேணி பாதுகாக்கவேண்டிய பொறுப்பு எல்லாரிடமும் உள்ளது என்பதை மறுக்க இயலாது.

பெண்கள் தாமே துகில் குறைப்பது திகிலுக்குரிய விடயமே...
ஆண்களுக்கும் பெண்களுக்கும், மனதில் படவேண்டும், உடலழகின் நிரந்தரமின்மை...

மிகவும் ஆழமாக ஊடுருவியிருக்கின்றீர்கள்...
பாராட்டுக்கள் பூமகள்...

தொடர்ந்த பின்னூட்டங்கள், மிக விளக்கமான விவரிப்புக்கள்...
அனைவருக்கும் பாராட்டுக்கள்...

சிவா.ஜி
11-11-2007, 01:43 PM
வாவ்....வெகு அசத்தலான கவிதை யவனிகா.மனமார்ந்த பாராட்டுக்கள்.
நீங்கள் அஸ்தமனம் வரைக் காத்திருக்கத்தேவையில்லை தங்கையே...என்றோ அந்த தலைவன் உங்களைச் சேர்ந்துவிட்டான்.தமிழ் விளையாடுகிறது உங்கள் வரிகளில்.வாழ்த்துக்கள்.

அக்னி
11-11-2007, 02:08 PM
அதில் அமரன்
ஒரு அட்சயபாத்திரம்...!!

இல்லை, இல்லை
அதிசயபாத்திரம்....!!

உண்மைதான் ஓவியரே...
அமரன்..,
அதிசய அட்சய தமிழ்பாத்திரம்...

அக்னியின் பார்வையில் அமரப் பரிமாணங்கள் சுவையாக இருக்கிறது..

நீடூழி வாழ்க நும் நட்பு..!
மிக்க நன்றி ராஜா அண்ணா...
பெற்றுத் தந்தது மன்றமல்லவா... இப்போதுதானே தொடக்கம்... போகப்போக இன்னும் வரும் விளக்கம்...


அக்னியின் வரிகள் அமரனனை மட்டுமல்லாது அதை படிப்பவர்களையும் ஆனந்தமடைய வைக்கிறது.
அமரனின் பாதிப்பு அக்னியிலும்....

பாராட்டுக்கள் அக்னி,
வாழ்த்துக்கள்..... உமது நட்பிற்கு.
மிக்க நன்றி விராடன்...
காலம் நம்மையும், குரலால் இணையவும், நேரில் சந்திக்கவும் வைக்கும் என்று நம்புகின்றேன்...


புதுமையான கேள்விகளும், சுவாரசியமான பதில்களும் நன்றாக இருக்கின்றன. புதியவர்கள்(எனக்கு) நிறைய பேர் இருக்கிறீர்கள். ஒரு சமயத்தில் அடியெடுத்து வைப்பவர்களுக்கு முதல்வரவேற்பாக எனது பதிவு பூச்செண்டு நின்றிருந்தது! இப்போது உங்களது அறிமுகப்பக்கங்களைப்படிக்கக்கூட நேரமில்லை.... இருப்பினும் அக்னி, அமரன், அரசன், அரவிந்த், இனியவள், இலக்கியன், உதயசூரியன், யவனிகா, பூமகள், வெண்தாமரை, வசீகரன், விராடன், அரவிந்தன், அழகுராஜ்,பார்த்திபன், விஜய், பஷீரா, பிரவீன், ரமணன், ராம்தேவானந்த், ஸ். ராஜா, ராம்கி, சடகோபன், சண்முகி, வினோத், விருமாண்டி மற்றும் விடுபட்ட புதியவர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். (பழைய நண்பர்கள் பெயர் மாற்றியிருந்தால் தயவு செய்து தனிமடலில் தெரிவிக்கவும்). நன்றி
மீண்டும் உங்கள் பூச்செண்டு வரவேற்பு அனைவருக்கும் கிடைக்கும் காலம் வரும்...
அந்த நாட்கள் எதிர்பார்த்து, உங்களுடன் நாமும் காத்திருப்போம்...

ஆபத்தில் எனது கேள்வியை பார்த்த அன்புரசிகன் இப்படித்தான் பாடுகின்றாராம்..

என்னக்கவி எழுதசொன்னால் என்ன கவி எழுதுறது
சொந்தக்கதை சோகக் கதை யாருகிட்ட கேட்கிறது..
பாட்டெல்லாம் நல்லாத்தான் இருக்குது...
முதல்ல, என்பாட்டுக்கு பிற்பாட்டு எங்கே...

ராஜா
16-11-2007, 03:33 AM
எல்லோரும் பதில் சொல்லிட்டீங்களாப்பு..?

அமரன்
16-11-2007, 07:18 AM
ஆளாலுக்கு பிசியா இருக்காங்க..இன்னும் இல்லை..எப்படியாவது இங்கே கொண்டு வந்து விடுகின்றேன்..

க.கமலக்கண்ணன்
19-11-2007, 11:15 AM
அழைப்பில் மனம்கசிந்து
ஆடாது அசங்காது
வந்தான் எனதுயிர்க்கண்ணன்,
தந்து சென்றான்
"தமிழ் மன்றம்" தன்னை!

மிளிர்கின்ற உங்களின் கவிதை மழையில் நனைந்து

மிரட்டுகின்ற ஜலதோசம் பிடித்துவிட்டது

மிகவும் அற்புதமான கவிதை யவனிக்கா தொடங்கள் உங்களின் படைப்புகளை...

சிவா.ஜி
19-11-2007, 01:43 PM
கமலலக்கண்ணன் நலமா...? கொஞ்ச நாளா காணோமே...

க.கமலக்கண்ணன்
19-11-2007, 01:57 PM
நலமே சிவா, தற்போது நான் தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு இடம் மாற்றம் ஆகிஇருக்கிறேன், அதனால் உள்ள வேலை சுமையில் கொஞ்சநாள் வர இயலவில்லை. நீங்கள் நலமா?

ராஜா
20-11-2007, 03:04 PM
பதிலளிக்காதோர் அனைவரும் விரைவில் பதிலளிக்க வேண்டுகிறேன்..!

lolluvathiyar
20-11-2007, 03:08 PM
நீண்ட நாள் ஆகிவிட்டது. அடுத்த கேள்வியாளரை அழைக்கலாமே

பூமகள்
19-12-2007, 08:47 AM
ஒரு மாதம் ஆகிவிட்டதே..! :frown:
இந்த திரியை யாருமே கண்டுக்கலையா?? :mad::mad:
அடுத்த கேள்வியாளர் யாரு பா??!!:icon_ush::icon_ush:

சீக்கிரம் வாங்க...!! :)

ராஜா
17-02-2008, 04:13 AM
அன்பின் அமர்..!

வேறொரு உறவை அழைத்து இத்திரிக்கு புத்துயிர் ஊட்டுவோமா?

aren
17-02-2008, 04:44 AM
நான் அமரன் அவர்களையே அழைக்க முன்மொழிகிறேன்

அனுராகவன்
17-02-2008, 04:55 AM
நானும்தான் அமரனை அழைக்கிறேன்..
அவர்தான் அந்த பொறுப்புக்கு ஏற்றவர்..
நானும் அமரனை முன்மொழிகிறேன்!!!

இளசு
17-02-2008, 05:57 AM
மன்றத்தின் மிகச்சிறப்பான இத்திரி ராஜாவின் பார்வை பட்டு மீண்டும் வளர்வதில் மிக மகிழ்கிறேன்..

சுடரை அமரனே ஏந்தித் தொடங்க நானும் வழிமொழிகிறேன்..

வினாக்கள் தொடுப்பவர் யார்?

பூமகள்
17-02-2008, 06:06 AM
அன்பின் அமர்..!
வேறோரு உறவை அழைத்து இத்திரிக்கு புத்துயிர் ஊட்டுவோமா?
ஹை... ஹை...!!:huepfen024::huepfen024:
ராஜா அண்ணா வந்துட்டார்..!! :icon_03::aktion033::grin:
இனி மன்றத்தில் நகைப்புக்கும் சிந்தையில் அறிவின் புதைப்புக்கும் பஞ்சமிருக்காது. :rolleyes::icon_rollout:
வாருங்கள் ராஜா அண்ணா. :icon_good:
அமரன் அண்ணா ஆபத்தை ஏற்க அன்புடன் அழைக்கிறோம். :icon_clap:

lolluvathiyar
17-02-2008, 09:04 AM
அமரன் அவர்கள் முன்னமே கேள்விகள் கேட்டிருகிறார். அதனால் வேறு யாராவது ஒருவரை அழைப்போம் இன்னும் நுரையீரல் அவர்கள் கேள்வி கேட்க அழைக்கவில்லை என்று நினைகிறேன். அவரை அழைத்தால் என்ன?

அமரன்
17-02-2008, 07:32 PM
அன்பின் அமர்..!

வேறொரு உறவை அழைத்து இத்திரிக்கு புத்துயிர் ஊட்டுவோமா?

புதிய உத்வேகத்துடன் செய்துவிடலாம் அண்ணா. முன்னரிலும் பார்க்க அதிகமாகப் பிரகாசிக்கும் வகையில் முயன்று செயல்பட முனைகிறேன் அடுத்த வாரம் முதலாக.

நேசம்
18-02-2008, 05:13 AM
இன்னும் நுரையீரல் அவர்கள் கேள்வி கேட்க அழைக்கவில்லை என்று நினைகிறேன். அவரை அழைத்தால் என்ன?

திரியின் நாயகர் ராஜாண்ணா வந்து திரி அசத்தலாக போகுமுண்ணு பார்த்த..... ஏன் இந்த கடுப்பு வாத்தியாரண்ணா

அமரன்
07-03-2008, 03:52 PM
தாமதத்துக்கு மன்னிக்கவும் ராஜா அண்ணா!!!
அடுத்த கேள்வியாளராக மலரை அழைக்கலாம்னு நினைக்கின்றேன்.. உங்களுக்கும் சம்மதம் என்றால் மலருக்கு அழைப்பு விடுங்கள். வருவாரு.. ஆபத்து தருவாரு.

ராஜா
07-03-2008, 03:55 PM
மலர்... வாம்மா மின்னல்...

மலரட்டும் கேள்விகள்.. அலறட்டும் நம் உறவுகள்..

மதி
07-03-2008, 04:10 PM
மலர் அவர்களே...வருக...
மலர்னால ஆபத்து தானோ?

யவனிகா
07-03-2008, 05:57 PM
வருக வருக மலரு...
கேள்விகளைத் தருக...தருக...

மலர்
07-03-2008, 06:39 PM
தந்திட்டா போச்சி....... :D :D

காலையிலே பிரஷ்ஷா தந்துடுறேன்.......:icon_rollout: :icon_rollout:

அன்புரசிகன்
07-03-2008, 06:42 PM
தந்திட்டா போச்சி....... :D :D

காலையிலே பிரஷ்ஷா தந்துடுறேன்.......:icon_rollout: :icon_rollout:

பிரஷ் ஆக மட்டுமல்ல. பேஷாகவுசும் இருக்கவேண்டும். அதுக்காக ஃப்ரஷ் பண்ணாம பதில் போடப்படாது.

மலர்
07-03-2008, 08:12 PM
ஃப்ரஷ் பண்ணாம பதில் போடப்படாது. http://smileys.smileycentral.com/cat/23/23_11_56.gif (http://www.smileycentral.com/?partner=ZSzeb001_ZNxmk789YYIN)
பிரெஷ்...பேஸ்ட்..........இதெல்லாம் தமிழ் இல்லை.... ஆங்கிலத்தில் பிடிக்காத வார்த்தை...................:D :D :D

அறிஞர்
07-03-2008, 09:05 PM
மீண்டும் இப்பதிவு.. ராஜா கண்ணில் பட்டதற்கு.... நன்றி..

மலரின் பதிவை ஆவலுடன் நோக்கியிருக்கிறேன்.

க.கமலக்கண்ணன்
08-03-2008, 01:56 AM
வாம்மா மின்னல்

நம்ம அக்னி அண்ண வந்திருக்காக

நம்ம அறிஞர் அண்ண வந்திருக்காக

நம்ம அன்பு அண்ண வந்திருக்காக

நம்ம மதி அண்ண வந்திருக்காக

நம்ம யவனிகா அக்கா வந்திருக்காக

சீக்கிரம் வந்திடுமா மின்னல் போன்ற மலர்...

lolluvathiyar
08-03-2008, 01:27 PM
ஆபத்து கேள்விகளோடு சீக்கிரம் வாம்மா மலரு, நிரைய பேரு இங்க இன்னும் சிக்காம இருக்காங்க பிடிச்சு கேள்வி கேட்டு ஒரு வழி பன்னிரு (அத உனக்கு சொல்லி தர வேன்டியதில்லை)

ராஜா
08-03-2008, 01:39 PM
வாலு இன்னிக்கு காலையிலேயே கேள்விகளைப் போட்டுடறதா சொன்னிச்சு.. அதுக்குள்ள மாம்ஸ் ஒரு நிபந்தனை விதிச்சுட்டாரு..!

அதன் காரணமாகவோ என்னவோ இன்னும் கேள்விகளைப் போடாம வாலுக்குட்டிம்மா தாமதப்........"படுத்துது..!"

வாம்மா... ரொம்ப பேர் ஆவலாக் காத்திருக்காங்கதானே..?

அமரன்
08-03-2008, 02:02 PM
இல்லாத மூளைக்கு வேலை கொடுக்குதாம் மலரு.. அதெல்லாம் தேவலை நீ பேசுவதே புத்திசாலியாட்டம்தான் இருக்குன்னு "ஏசி"ப்போட்டேன்.. சீக்கிரம் வந்துடுறென்னுச்சு.:lachen001:

மலர்
09-03-2008, 11:22 AM
ஆ! பத்து.! மலரே... மௌனமா..?
மலரு என்னிக்கு மவுனமா இருந்திச்சி.... :icon_rollout: :icon_rollout:
எல்லாத்துக்கும் காரணம் நம்ம அன்பு தான்..ன்னா :traurig001: :traurig001:

அதுக்காக ஃப்ரஷ் பண்ணாம பதில் போடப்படாது.
இப்பிடி சொல்லி என்னைய பதில் போட முடியாம தடுத்திட்டாரு... :sprachlos020: :sprachlos020:
ஹீ..ஹீ...இப்போ போட்டிருதேன்...ஓக்கேவா .... :icon_b: :icon_b:

ராஜா
09-03-2008, 11:37 AM
O.K..!

க.கமலக்கண்ணன்
09-03-2008, 11:46 AM
மலரு வந்துரும்மா சீக்கிரம்...

மலர்
09-03-2008, 11:47 AM
ஆ10ல கேள்வியை கேக்க வச்சி என்னைய ஆபத்துல மாட்டி விட்ட அமருக்கும்.... திரியை ஆரம்பித்த திரியின் நாயகன் ராஜா அண்ணாவுக்க்கும் என்னுடைய நன்றிகள்.....:frown: :frown: :frown:


கேள்வியை நம்ம தலையிடம் இருந்து ஆரம்பிச்சிடலாமின்னு
இருக்கிறேன்...
ஹீ..ஹீ..... தலை ரெடியா...

1) மணியா & மன்மதன் :
தலைமுறை இடைவெளியிலும் ஒரு தோழமையான அன்பினை உங்கள் இருவருக்கும் இடையே பார்கிறேன்.. குறும்பு கிண்டல் நக்கல் விளையாட்டுன்னு உங்களுடைய பழைய பதிவுகள் இன்றும் இனிக்கிறது.. இருவரிடமும் ஒரே கேள்வி.. ஆனால் தனித்தனியா பதிலை எதிர்பார்க்கிறேன்...
நட்புக்கு வயது இடைவெளி தேவையா இல்லையா.. ???
தேவை என்றால் அதற்கு காரணம்.....??
இல்லையென்றாலும் அதற்கும் காரணம்..........??

2) தாமரை :

பெயரை டைப் பண்ணும்

போதே ....

போதே.....

கொஞ்சம்....

திக்

திக்கு

திக்குன்னு

இல்லை ஹீ..ஹீ... சந்தோஷமா இருக்குன்னு சொல்ல வந்தேன்..
முதலில் தாமரைன்னாலே பெரிய தலை அப்படிங்கிர லிஸ்டில் வைத்து பயந்து ஒதுங்கி இருந்த எங்களின் தயக்கத்தை எடுத்து எங்களோடு உறவாடும் அன்பான அண்ணன்..
உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்த கேள்வி வேறு... ஆனால் இப்போ அதை மாற்றிவிட்டேன்.. இப்போ உங்ககிட்ட வேற ரெண்டு கேள்வி..
a) வீட்டில் நல்ல குடும்பதலைவராக.. அனிருத் ஸ்வேதாக்கு நல்ல அப்பாவாக உங்கள் பெற்றோருக்கு நல்ல மகனாக, மருமகனாக எங்களை போன்ற தங்கைகளுக்கு அண்ணனாக மன்றத்தில் ஆலோசகராக என்று எவ்வளவோ பொறுப்புக்கள்.... அதையும் தாண்டி இன்னும் எவ்வளவோ பணிச்சுமைகளுக்கு மத்தியிலும்
எப்படி உங்களுக்கு மட்டும் எப்பிடி டென்ஷனே வரமாட்டேங்குது......???
டைம் இல்லை... மறந்துட்டேன் இது போன்ற பதில்களை இதுவரை நான் உங்களிடம் கேட்டதே இல்லை.....???
எப்படின்னா எல்லாத்தையும் நினைவில வச்சிருகீங்க......??

b) ஒவ்வொருத்தரை பற்றிய உங்களின் கணீப்பீடும் என்னைய ஆச்சரியப்படுத்தியிருக்கு...
நீங்கள் ஒருத்தரை எப்பிடி எதன் அடிப்படையில் மதிப்பீடு செய்வீர்கள்....??


3)பாரதி & ஆரென் :
பாரதி அண்ணாவின் தேதியில்லாகுறிப்புகளும், ஆரென் அண்ணாவின் நினைவலைகளும் என்னுள் ஒரே விதமான தாக்கத்தையே கொடுதத்து.. நம் வாழ்வின் எதார்த்தமான நிகழ்வுகளை அழகாய் படம் பிடித்து எழுதும் இந்த கலையை நீங்கள் கற்று கொண்டது எப்படி...???

4)S.ராஜா & யவனிகா :
நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்து திருமணம் செய்த நல்ல புரிதலுள்ள அருமையான ஜோடி.. நான் விரைவில் சந்திக்கபோகிற உறவு..
முதல் கேள்வி அக்காவிடம் :- உங்களுக்கு பள்ளி பருவத்திலோ இல்லை கல்லூரி பருவத்திலோ எதிர்காலத்தை பற்றிய ஒரு லட்சியம் நிச்சயம் இருந்திருக்கவேண்டும்..
உங்களுடைய அந்த லட்சியம் என்ன..??
இப்போது அது நிறைவேறிவிட்டதா.. இல்லையெனில் இன்னும்
அதற்காக முயற்சிசெய்து கொண்டு இருக்குறீர்களா.....??

அடுத்த கேள்வி ராஜா அண்ணாவிடம்:- திருமணத்திற்க்கு முன் காதலியாக நீங்கள் கண்ட அண்ணிக்கும் இப்போது
நீங்கள் காணும் அண்ணிக்கும் உள்ள மாற்றங்கள்...??
இனிமேல் திருமணமாகப்போகிற தம்பி தங்கைகளுக்கு உங்க அட்வைஸ்.... ??(நிறைய பேருக்கு யூஸ் ஆகும்)

5)சுகு :
நான் மன்றம் வந்த ஆரம்ப நாளில் இருந்து இன்று வரை என்னோடு மன்றதில் நிலைத்த உறவு.. சரி ஏதாச்சும் வம்பா கேட்டு மாட்டிஉடலாமேன்னு நினைச்சேன் அப்புறம் பாவம்புள்ளைன்னு நினைச்சி ஈசியா கேட்டுட்டு உடுறேன்..
உங்களின் திருமணத்திற்கு பிறகு உங்கள் மனைவியை அவர்களின் நண்பர்களோடு பேச அனுமதிப்பீர்களா...??
இல்லை. பழைய நட்பெல்லாம் கூடாது என்று தடுத்து விடுவீர்களா..??

6)மதி :
மதி...மதி...மதி.... மொக்க மதி....
(எபெக்ட் கரீட்டா)
போடுறது அத்தனையும் மொக்க....
அருவியில தண்ணிகொட்டுற மாதிரி தான் பேச்சு....
(ஆ10ல கேள்விகேக்ககூடாதுன்னு கெஞ்சினாலும் மிரட்டினாலும் நாங்க
கேப்போமில்ல...... அதுக்காக இதுல பழி வாங்கப்படாது.... எதுனாலும் பேசிதீத்துக்கலாம் சரியா)
ஹீ..ஹீ....ஓக்கே..
இப்போதைக்கு அடுத்த கல்யாண சாப்பாடை நம்ம எல்லாருக்கும் போடபோகிற உங்கிட்ட
அதை பத்தியே ஒரு கேள்வி..
நீங்கள் திருமணம் செய்ய போகிற பெண்ணு எப்பிடி எல்லாம் இருக்கணுமின்னு நினைக்கிறீங்க.??

7)லொள்ளுவாத்தியார் :
வாத்தி..............மை..நேம் இஸ் லொள்ளுவாத்தி...
உங்களின் நகைச்சுவை தொடருக்கு என்றும் ரசிகை நான்...
அரசியல் விளையாட்டில் என்னை கவர்ந்த தலைவர்.. கடைசி நிமிடம் வரை உங்களின் பிரச்சாரத்தை பார்த்து அசந்து போய் விட்டேன்.. அதேமாதிரி உங்களின் சீரியஸான தமிழர்களின் வரலாறையும் படித்திருக்கிறேன்... சரி இப்போ உங்களுக்கான கேள்வி.
ஒரு சினிமா படத்தில் நடிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்குது..... எந்த ஒரு கேரக்டரையும் நீங்க தேர்ந்தெடுத்து கொள்ளலாம்ன்னு சொல்லிட்டாங்க...
இப்போ நீங்கள் எந்த கேரக்டரை தேர்ந்தெடுப்பீங்க... ??
எதற்காக அதை தேர்ந்தெடுத்தீங்க என்பதையும் இங்க சொல்லணும்....??

8)பிரவீண் :
கணிணி துறை சம்பந்தமாக உங்களின் ஆர்வத்தை கண்டு நான் ஆச்சரியப்படுவதுண்டு...?? உங்களின் இந்த ஆர்வத்துக்கு காரணம்.....??
(நான் 11ம் வகுப்பிலிருந்து கம்யூட்டர்சயின்ஸ் தான்... ஆனால் எனக்கு இன்னும் என்னுடைய படிப்பு,வேலைக்கு தேவையானதை தவிர மற்றதை(இதே துறையில்)தெரிந்து கொள்ளும் ஆர்வம் குறைவு)

9)சிவா.ஜி :
இன்றைய சூழ்நிலையில் தமிழக+இந்திய அரசியலில் நீங்கள் எதிர்பாக்கும் மாற்றம் என்ன...??
இப்போதைய அரசியல் முறை சரியானதா....??
தற்போது படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை விட ஒரு நல்ல வேலைக்கு சென்று வாழ்க்கையில் செட்டில் ஆகுவதை தான் விரும்புறாங்க.. இது பற்றிய உங்கள் கருத்து... ??

10)பூமகள் :
ஹாஹ்ஹா.... அக்காக்கு ரெண்டு கேள்வி...
a) நாம எல்லாரும் பள்ளி படிக்கும் காலத்திலிருந்தே வரதட்சணை பற்றியும் அதன் கொடுமை பற்றியும் படிக்கிறோம்.... ஒரு சில திருமணத்தை தவிர மற்ற எல்லா திருமணங்களும் வரதட்சனையோடு தான் நடக்கிறது...
அப்படி வரதட்சனை கேட்காத மாப்பிள்ளைக்கு தான் கழுத்தை
நீட்டவேண்டும் என்று நினைத்தது உண்டா....??
b) வேலைக்கு செல்லும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு
தன்னுடைய சம்பளத்தின் ஒரு சிறுபகுதியை பெற்றோருக்கு
கொடுக்கலாமா.....??

ராஜா
09-03-2008, 11:57 AM
ஆகா...நான் எஸ்கேப்..!

கேள்விகளின் மலர்"வால்" பதில் சுகந்தம் வீசப்போவது உறுதி

நன்றி மலர்..!

மன்மதன்
09-03-2008, 12:06 PM
:frown:

1) மணியா & மன்மதன் :
தலைமுறை இடைவெளியிலும் ஒரு தோழமையான அன்பினை உங்கள் இருவருக்கும் இடையே பார்கிறேன்.. குறும்பு கிண்டல் நக்கல் விளையாட்டுன்னு உங்களுடைய பழைய பதிவுகள் இன்றும் இனிக்கிறது.. இருவரிடமும் ஒரே கேள்வி.. ஆனால் தனித்தனியா பதிலை எதிர்பார்க்கிறேன்...
நட்புக்கு வயது இடைவெளி தேவையா இல்லையா.. ???
தேவை என்றால் அதற்கு காரணம்.....??
இல்லையென்றாலும் அதற்கும் காரணம்..........??



நட்புக்கு வயது இடைவெளி தேவையா இல்லையா.. ???
தேவையில்லை.. அப்பாவும் மகனும் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்று நிறைய பேர் சொல்லக்கேட்டிருக்கிறோம். அப்பாவுக்கும் மகனுக்கும் ஒரே வயது இருக்க சாத்தியமா..? நட்புக்கு வயது இடைவெளி சாத்தியமே இல்லை. எனக்கு என் சக வயதில் நண்பர்களே இல்லை என்று கூட சொல்லலாம். பள்ளி, கல்லூரி காலத்தில் மட்டுமே சக வயது சாத்தியம்.. மற்றபடி வயதை பார்த்து காதலும் நட்பும் வராது.

ஒரே அலைவரிசை இருந்தாலே போதும். எப்பவும் தொடர்பில் இருந்தாலே போதும். நட்பு அங்கே இருக்கும்...

தலை என் தலை சிறந்த நண்பர்.. என் மேல் அக்கறை கொண்டவர். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். வேற திரிதான் ஆரம்பிக்கணும்..

ராஜா
09-03-2008, 12:44 PM
நட்புக்கு வயது இடைவெளி தேவையா இல்லையா.. ???

தேவையில்லை.. அப்பாவும் மகனும் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்று நிறைய பேர் சொல்லக்கேட்டிருக்கிறோம். அப்பாவுக்கும் மகனுக்கும் ஒரே வயது இருக்க சாத்தியமா..? நட்புக்கு வயது இடைவெளி சாத்தியமே இல்லை.

ஒரே அலைவரிசை இருந்தாலே போதும். நட்பு அங்கே இருக்கும்...



மன்மதனின் எளிமையான ஆனால் வலிமையான வரிகளை அப்படியே ஏற்கிறேன்..!

அனுபவித்து உணர்ந்தவர்களுக்கு அந்த நட்பின் சுவை நன்கு புரியும்..

நீடூழி வாழ்க உங்கள் நட்பு..!

மலர்
09-03-2008, 01:09 PM
தேவையில்லை.. அப்பாவும் மகனும் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்று நிறைய பேர் சொல்லக்கேட்டிருக்கிறோம். அப்பாவுக்கும் மகனுக்கும் ஒரே வயது இருக்க சாத்தியமா..? நட்புக்கு வயது இடைவெளி சாத்தியமே இல்லை.
தலை என் தலை சிறந்த நண்பர்.. என் மேல் அக்கறை கொண்டவர். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். வேற திரிதான் ஆரம்பிக்கணும்..
:icon_shout:மம்ஸ்....:icon_shout:
இன்னும் கொஞ்சம்:icon_shades: தலையை பற்றி சொல்லியிருக்கலாம்.... :D :D
சில பல விஷயங்களை மறைச்சீட்டீங்க...:rolleyes: :rolleyes: இருந்தாலும் ஓக்கே :icon_cool1:
கேள்விக்கான விடையை....
ஷாட் அண்டு ஸ்வீட்டா பதில் கொடுத்ததுக்கு நன்றிகள்.. :aktion033::aktion033:
தலைக்கும் உங்களுக்கும் இடையேயான நட்புக்கு :icon_03:

மன்மதன்
09-03-2008, 01:30 PM
மன்மதனின் எளிமையான ஆனால் வலிமையான வரிகளை அப்படியே ஏற்கிறேன்..!

அனுபவித்து உணர்ந்தவர்களுக்கு அந்த நட்பின் சுவை நன்கு புரியும்..

நீடூழி வாழ்க உங்கள் நட்பு..!

நன்றி ராஜாண்ணே..

மன்மதன்
09-03-2008, 01:40 PM
:icon_shout:மம்ஸ்....:icon_shout:
இன்னும் கொஞ்சம்:icon_shades: தலையை பற்றி சொல்லியிருக்கலாம்.... :D :D


பெர்முடாஸ் மற்றும் டிசர்ட் சகிதமாக ..

மெரினாவில் மண் குவித்து நான் வீடு கட்ட, தலை வந்து அதை எட்டி உதைக்க .. பேக் ரவுண்டில் :music-smiley-008: 'முஸ்தஃபா முஸ்தஃபா' பாடல் ஒலிக்க :whistling:..

அதெல்லாம் ஒரு காலம்...:rolleyes::D

இன்னும் சொல்லவா...:D

மலர்
09-03-2008, 02:12 PM
பெர்முடாஸ் மற்றும் டிசர்ட் சகிதமாக ..

மெரினாவில் மண் குவித்து நான் வீடு கட்ட, தலை வந்து அதை எட்டி உதைக்க .. பேக் ரவுண்டில் :music-smiley-008: 'முஸ்தஃபா முஸ்தஃபா' பாடல் ஒலிக்க :whistling:..

அதெல்லாம் ஒரு காலம்...:rolleyes::D

இன்னும் சொல்லவா...:D

அப்போ அது
ஜோடியாய் சுற்றிதிரிந்த :icon_drunk: ஒரு அழகிய நிலாக்காலமுன்னு சொல்லுங்க.... :D :D

க.கமலக்கண்ணன்
09-03-2008, 02:21 PM
நட்புக்கு வயது இடைவெளி தேவையா இல்லையா.. ???
தேவையில்லை.. அப்பாவும் மகனும் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்று நிறைய பேர் சொல்லக்கேட்டிருக்கிறோம். அப்பாவுக்கும் மகனுக்கும் ஒரே வயது இருக்க சாத்தியமா..? நட்புக்கு வயது இடைவெளி சாத்தியமே இல்லை. எனக்கு என் சக வயதில் நண்பர்களே இல்லை என்று கூட சொல்லலாம். பள்ளி, கல்லூரி காலத்தில் மட்டுமே சக வயது சாத்தியம்.. மற்றபடி வயதை பார்த்து காதலும் நட்பும் வராது.

ஒரே அலைவரிசை இருந்தாலே போதும். எப்பவும் தொடர்பில் இருந்தாலே போதும். நட்பு அங்கே இருக்கும்...

தலை என் தலை சிறந்த நண்பர்.. என் மேல் அக்கறை கொண்டவர். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். வேற திரிதான் ஆரம்பிக்கணும்..


இனிப்பில் எந்த இனிப்பு சுவையானது என்று கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்.

இனிய நட்பில் எந்த நட்பு சிறந்தது என்று என்ன பதில் சொல்ல முடியும். நட்புக்கு வயது வித்தியாசம் கிடையாது. மதன் உங்களின் அசத்தலான பதில் அருமை...

க.கமலக்கண்ணன்
09-03-2008, 02:26 PM
மலரு ரொம்ப நன்றி மலரு எங்க என்னையும் மாட்டிவிடுவாயோ என்று நினைத்தேன். அப்பாடி கிரேட் எஸ்கேப்.....

மலருக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ போடுங்க

பூமகள்
09-03-2008, 02:36 PM
அடிப்பாவி மலரு...!!
என் தங்கச்சி தங்காச்சி என் கட்சி விட்டு மாறிட்டியே தங்காச்சி...!!

தனியா எத்தனை கெஞ்சியும் கேட்காம.. இப்படி மாட்டிவிட்டுடியே தங்காச்சி... இரு இரு.. என்னை பார்ப்பல.. இருக்கு உனக்கு...!!

விரைவில் பதிலோடு வருகிறேன் தங்காச்சி.............!!

அழுவாச்சி காவியம் எழுதி மறுபடி என் தங்காச்சியை அழ வைக்கல..நற நற நற...!!

சுகந்தப்ரீதன்
09-03-2008, 02:42 PM
நான் மன்றம் வந்த ஆரம்ப நாளில் இருந்து இன்று வரை என்னோடு மன்றதில் நிலைத்த உறவு.. சரி ஏதாச்சும் வம்பா கேட்டு மாட்டிஉடலாமேன்னு நினைச்சேன் அப்புறம் பாவம்புள்ளைன்னு நினைச்சி ஈசியா கேட்டுட்டு உடுறேன்..

ஆத்தா... ஆனாலும் உன்புள்ளையை இந்தமாதிரி சோதிக்க கூடாதும்மா...:traurig001:

ஏம்மா... மல்ரு... தென்காசியில இந்த கேள்விக்கு பேரு ஈசின்னா.. அப்ப ஈசிக்கு பேரு என்னம்மா...??:aetsch013:

சரி..சரி...எனக்கு இப்ப நேரமில்ல..நான் கிளம்பனும்... நாளைக்கு வந்து பதிலை கொடுக்குறேன்...:cool::rolleyes:

aren
09-03-2008, 03:17 PM
மலரு இப்படி வச்சிட்டியே ஆப்பு!!!

வருகிறேன், பதிலுடன் வருகிறேன்

இளசு
09-03-2008, 03:34 PM
ஆ'பத்தில்' மூணு கூடுதல் சீட்டு கொடுத்த மலரின் திறமைக்கும்
ஆழமான கேள்விகளுக்கும் சபாஷ்!

மன்மியின் முதல் பேட்டிங்... நாட் பேட்!
(காதலுக்கும் வயது தேவையில்லைன்னு ஒரு பொதுவிவாதத் தலைப்பை இடைச்செருகலாய் தந்தது ஏன் மன்மி?)

இன்னிங்ஸ் தொடரட்டும்... அவ்வப்போது 'ரன்'னிங் கமெண்ட்ரி கொடுக்க வருவேன்!

திரிநாயகர் ராஜா, தளபதி அமரனுக்கு பாராட்டுகள்!

அமரன்
09-03-2008, 06:51 PM
எழுத்துகளை விஞ்சி கண்ணாமூச்சி காட்டும் உள்ளானை வெளிக்கொணரும் ரகத்தில் கேள்விகள். பாராட்டுகள் மலர்..
நட்புக்கும் நட்பு பாராட்ட வயதுக்கும் எல்லை இல்லை என்பதை புரியும்படி சொன்ன மன்மிஜிக்கு ஜே! (இப்பவே போட்டு வெச்சுக்குவோம்.. எதிர்காலத்துல உதவும்:))

மதி
10-03-2008, 12:49 AM
6)மதி :
மதி...மதி...மதி.... மொக்க மதி....
(எபெக்ட் கரீட்டா)
போடுறது அத்தனையும் மொக்க....
அருவியில தண்ணிகொட்டுற மாதிரி தான் பேச்சு....
(ஆ10ல கேள்விகேக்ககூடாதுன்னு கெஞ்சினாலும் மிரட்டினாலும் நாங்க
கேப்போமில்ல...... அதுக்காக இதுல பழி வாங்கப்படாது.... எதுனாலும் பேசிதீத்துக்கலாம் சரியா)
ஹீ..ஹீ....ஓக்கே..
இப்போதைக்கு அடுத்த கல்யாண சாப்பாடை நம்ம எல்லாருக்கும் போடபோகிற உங்கிட்ட
அதை பத்தியே ஒரு கேள்வி..
நீங்கள் திருமணம் செய்ய போகிற பெண்ணு எப்பிடி எல்லாம் இருக்கணுமின்னு நினைக்கிறீங்க.??

முதலில்...
ஏன்...ஏன்...ஏன்..?:traurig001::traurig001::traurig001:
இப்போல்லாம் கல்யாணம் இல்லீங்க.. :eek::eek::eek::eek:

அப்புறம் இது ஒரு நல்ல கேள்வி...:D:D:D:D:D
இப்படி தான் இருக்கணும்னு இல்லை. இப்படியும் இருந்தா நல்லா இருக்கும்னு தான் சில ஆசைகள். ஆனாலும் நான் இப்போ ஏதோ சொல்லப் போக அப்புறம் நான் சொன்னதெல்லாம் இருக்கான்னு நீங்க வந்து செக் பண்ண.. கல்யாணத்துக்கு முன்னாடியே குடும்பத்துல குழப்பம் வரவா...??? :rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

ஸோ.. நெக்ஸ்ட் கொஸ்டின் ப்ளீஸ்...:icon_b: :icon_rollout::icon_rollout::icon_rollout:

(ஆமா மல்ரு... ஏற்கனவே நீ ஏதோ கதை எழுதணும்னு சொன்னதுக்கு பயந்துகிட்டு தானே இந்த திரிய குழிதோண்டி புதைச்சிருந்த... கதை எழுதியாச்சா.... :cool::cool::cool::cool:)

செல்வா
10-03-2008, 01:31 AM
அடடா... என்ன ஒரு அருமையான திரி என் கண்ணுல இன்னிக்கிதான் பட்டுருக்கு ஆனா என்ன பண்றது... முழுசா படிக்கிறதுக்குள்ள மூச்சு முட்டுதே....
எப்படியோ ஒரு வழியா .... பத்து பக்கம் படிச்சி முடிச்சுட்டன்.
இராஜா அண்ணாக்கு தான் நன்றி சொல்லணும்...
அதோடு ஆளாளுக்கு போட்டுத் தாக்கும் மன்ற உறவுகளுக்கும்...
கலக்குங்க மக்கா....... வரேன்... சீக்கிரமே வந்து வாசிக்கிறேன்.

பாரதி
10-03-2008, 02:03 AM
பாரதி அண்ணாவின் தேதியில்லாக்குறிப்புகளும், ஆரென் அண்ணாவின் நினைவலைகளும் என்னுள் ஒரே விதமான தாக்கத்தையே கொடுத்தது. நம் வாழ்வின் எதார்த்தமான நிகழ்வுகளை அழகாய் படம் பிடித்து எழுதும் இந்த கலையை நீங்கள் கற்று கொண்டது எப்படி...???

நம்மை சுற்றி இருப்பதை சற்று கவனித்தாலே எழுதுவதற்கான எல்லாமும் கிடைத்துவிடும். எழுதுவது கம்பசூத்திரம் இல்லை. எல்லோராலும் எழுத இயலும் - முயற்சி மட்டுமே முக்கிய தேவை. விடா முயற்சியும், உண்மையும் எந்தப்படைப்பையும் அழகாக்கும். உண்மையை எழுதுவது எளிதானது மட்டுமல்ல; எப்போதும் அழகாகவே இருக்கும். கற்பனை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என்பது வேலையை மிகவும் குறைத்து விடுகிறது.

துணி காயப்போடும் கம்பியில் அமர்ந்திருக்கும் சிட்டுக்குருவி எழுப்பும் சத்தத்தில் கூட சங்கீதம் இருக்கிறது என்பதை கவனித்தால் புரிந்து விடும். ஆர அமர யோசிக்கவோ, ரசிக்கவோ நமக்குத்தான் நேரமிருப்பதில்லை. உன்னை சுற்றித்தான் உலகம்...!

வாசிப்பதில் இருந்துதான் எழுதுவதற்கான ஆர்வம் பிறக்கிறதோ?. மனதை பாதிக்கும் வகையில் எழுதும் மிகச்சிறந்த எழுத்தாளர்களின் கதைகளைப் படித்த பின்னர், எழுதினால் இப்படித்தான் எழுத வேண்டும் என்ற எண்ணம் சில வேளைகளில் பிறக்கும். ஆனால் நம்மால் எழுத இயலுமா.. இல்லையா... என்ற ஆராய்ச்சியில் எல்லாம் இறங்கவில்லை. மன்றத்திற்கு வந்த பின்னர் - சில உறவுகளின் விடாத அன்பு வேண்டுகோளும், மன்றத்தில்தான் எழுத வேண்டும் என்ற என் அண்ணனின் ஆவலும் எதையாவது எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்த்தன.

கி.ரா அவர்களின் படைப்புகள் வட்டார வழக்கில் எழுதுவதற்கான ஆவலை மனதில் வளர்த்தன. சிறிய விடயங்களையும் அலசி அதில் இருக்கும் நுண்ணிய மனவோட்டத்தை அறிந்து கொள்ள பல பிரபல தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளும் காரணமாக இருந்திருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் என் நன்றி.

எந்தப்பதிவிற்கும் எந்த நடையில் எழுதுவது என்பதற்கு கட்டுப்பாடுகள் எதையும் விதித்துக்கொள்வதில்லை. சொல்ல நினைத்ததை எழுதுவதற்கு எது இலகுவான நடையோ அதை பிடித்துக்கொள்வேன். சில வேளைகளில் அது பலருக்கும் பிடிக்கும் வண்ணம் அமைந்து விடுகிறது. "காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு" என்பதைப் போல எதை எழுதினாலும் இடைவிடாமல் பாராட்டும் மன்ற உறவுகளின் அன்பே எழுத வைக்கும் தூண்டுகோல். கூடவே உறவுகளின் பின்னூட்டம் சாதாரணமான படைப்பைக் கூட சரித்திரம் படைத்ததைப் போன்ற எண்ணத்தை வரவழைக்கும்.

தேதியில்லாக்குறிப்புகள் உங்களிடையேயும் தாக்கத்தை கொடுத்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி. உங்களின் படைப்பைக் காண மன்றம் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் மறந்து விட வேண்டாம்.

எல்லாம் சரி.... மிகக்குறைவாக எழுதியிருக்கும் என்னைக் கேள்வி கேட்டுவிட்டு, மிகச்சிறந்த படைப்பாளிகளிடம் கேள்வி கேட்க மறந்ததெப்படி மலர்..??

தாமரை
10-03-2008, 02:37 AM
a) வீட்டில் நல்ல குடும்பதலைவராக.. அனிருத் ஸ்வேதாக்கு நல்ல அப்பாவாக உங்கள் பெற்றோருக்கு நல்ல மகனாக, மருமகனாக எங்களை போன்ற தங்கைகளுக்கு அண்ணனாக மன்றத்தில் ஆலோசகராக என்று எவ்வளவோ பொறுப்புக்கள்.... அதையும் தாண்டி இன்னும் எவ்வளவோ பணிச்சுமைகளுக்கு மத்தியிலும்
எப்படி உங்களுக்கு மட்டும் எப்பிடி டென்ஷனே வரமாட்டேங்குது......???
டைம் இல்லை... மறந்துட்டேன் இது போன்ற பதில்களை இதுவரை நான் உங்களிடம் கேட்டதே இல்லை.....???
எப்படின்னா எல்லாத்தையும் நினைவில வச்சிருகீங்க......??

ஒரு சன் பிறந்த உடனே குடும்பக் கட்டுப்பாடு செய்தாச்சு அப்புறம் எப்படி டென்சன் வரும்?

என்னவோ பெரிய தலைவர் ரேஞ்ஜூக்கு கேள்வி கேட்டிருக்கீங்க. சிம்பிளா பதில் சொல்லவா!

மொதல்ல ஒரு முறை வாத்தியார் பிரதமரானால் திரியில் சொல்லி இருப்பேன்...

ஒரு முடிவை எடுத்தால் 50 சதவிகிதம் தவறாகப் போவதற்கு வாய்ப்புண்டு.. ஆனால் முடிவெடுக்காமலேயே இருந்தால் 100 சதவிகிதம் அது தவறாய்த்தான் போய் முடியும்..

ஒரு வேலை வரும்பொழுதே அதற்கான முக்கியத்துவமும் குறிக்கப் பட்டு விடுகிறது.. நம்மில் பல பேர் என்று முடிக்க வேண்டும் என்று பார்க்கிறோம். நான் என்று ஆரம்பிக்க வேண்டும் என்று பார்க்கிறேன்.

உதாரணமா ரீஸண்டா பழனிக்கு போனோம். முக்கியமாய் செய்ய வேண்டிய விஷயம் 3.
1. ஸ்வேதாவிற்கு மொட்டை..
2. உச்சி கால மூலவர் அபிஷேகம்,
3. தங்கத் தேர் இழுத்தல்.

இதில் டைம் பௌண்டட் அப்படின்னு பார்த்தா உச்சி கால முலவர் அபிஷேகம். அதை மிஸ் பண்ணாட்டி வேற எதையும் மிஸ் பண்ண மாட்டோம்.. ஆக
பழனியில் மலை மேல் இருக்க வேண்டிய நேரம் 11:30.
மலை ஏற 45 நிமிடம்.
சாப்பிட ஒரு 45 நிமிடம்
மொட்டை அடித்து குளிக்க 1:00 மணி நேரம்

ஆக 9:00 மணிக்கு பழனி எல்லையில் இருக்க வேண்டும்.
9 மணிக்கு பழனியில் இருக்கணும் என்றால்
ஈரோட்டில் 7:00 மணிக்கு கிளம்பணும்.
மொத்தம் 6 பேர் கிளம்ப, இரண்டு பேர் ஒரே சமயத்தில் தயார் ஆகின்றனர் என்றால் 1:30 மணி நேரம் - 5:30.
ஒரு அரை மணி நேரம் முன்னெச்சரிக்கையாகச் சேர்க்க 5:00

5:00 மணிக்கு எழுந்தால் எல்லாம் எளிதாக முடியும். இப்போ பாருங்கள் என் கையில் இருப்பது தெளிவான ஷெட்யூல்.. உச்சிகாலப் பூஜைக்கும்
தங்கத் தேர் இழுப்பிற்கும் மத்தியில் உள்ள காலத்தில் ஓன்றும் செய்ய முடியாது என்பது தெரிந்தது தான். அந்த சமயத்தை மலையைச் சுற்றிப் பார்த்தல் நீண்ட நாளாக பேசாத நண்பர்கலுடன் பேசுதல் என் அப்போதைக்கு உப்பயோகமாய் செலவு செய்யலாம். இன்னும் எதாவது செய்ய வேண்டுமென்றால் அதற்குப் பிளான் செய்யலாம்..

பெரிய காரியங்களுக்கு இடையில் இப்படிச் சிறிய காரியங்களை நுழைக்கத் தெரிந்தால்.. மிக அதிகமாகச் சாதிக்கலாம்

ஏனென்றால் எந்த ஒரு காரியமும் நம் தனி ஒருவரால் செய்யப்படுவது இல்லை.எல்லா வேலைகளையும் நாமே செய்யப் போவது இல்லை.

எந்த காரியம் நடக்கிறதோ அதன் மீது உழைப்பவர் கவனம் பதிகிறது. எந்தக் காரியம் நடக்கவில்லையோ அதன் மீது சோம்பேறிகள், முதலாளிகள் கவனம் பதிகிறது..

ஒவ்வொரு வேலைக்கும், முக்கியத்துவம்(இம்பார்டன்ஸ்) அவசரம்(எமர்ஜென்ஸி) என்று இரு அளவுகோள்கள் உண்டு..

முக்கியமான வேலைகளை நிதானமாகவும், முக்கியமில்லாத வேலைகளை அவசரமாகவும் செய்தால் போதும். சில வேலைகளை செய்தாலும் செய்யாவிட்டாலும் பிரச்சனை இல்லை..

ஒவ்வொரு நாள் விழித்த உடனும் அன்று முக்கியமாய் என்ன செய்தல் வேண்டும் என நினைவு படுத்த்க் கொண்டாலே போதும்.. அது நடை பெறுதலின் பொருட்டு மற்ற வேலைகளைச் சுருக்கியோ இல்லை மாற்றியோ செய்வதால் செய்ய வேண்டியதை நிம்மதியாய் செய்யலாம்..

இரண்டாவது எடுக்கும் முடிவில் அடமாய் நிற்கக் கூடாது. ஒரு முடிவு எடுத்து காரியம் நடந்து கொண்டிருக்கும் போது வரும் பிரச்சனைகளை, காரியம் கெட்டு விடும் என்று தள்ளி வைத்துவிடக் கூடாது.. சற்று அடிப்படையில் சென்று ஆராய வேண்டும். தேவைப்பட்டால் முடிவை மாற்ற நேரிடலாம்.. கவலைப் பட்டுக் கொண்டே இருந்து காலத்தை வீணடிப்பவர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன்..

இப்போது இன்னும் கொஞ்சம் பார்ப்போம்....

சில திறமைகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியதாகவும் இருக்கும். பல காரியங்களை ஒரேசமயத்தில் செய்தல்.. மூளையைக் கவலை வலையில் சிக்காமல் தெளிவாகச் சிந்திக்க வைத்தல் இப்படி...

சில சின்ன தோல்விகள் பலரைத் துவண்டு போக வைத்து விடுகிறது. எதோ அவர்களுக்கு திறமை இல்லாததால் தான் தோற்றுவிட்டதாக எண்ணிக் கலங்கி மனம் உடைந்து வருந்தி தங்களை தாங்களே திட்டிக் கொள்கிறார்கள்..

தோல்வி என்பது மிக்ச் சகஜமான ஒன்று.. வெற்றி என்பதும் அது போலத்தான். அதெல்லாம் வரும் போகும்.. இதில் ஜெயித்தால் இது .. இதில் ஜெயித்தால் இது என மனகோட்டை கட்டுவது போல இதில் தோற்றால் இது.. இதில் தோற்றால் இது என இன்னொரு ரூட்டும் மனதில் இருன்ந்துகிட்டே இருக்கணும். ஸ்டாப் லாஸ் என்பது பங்கு வர்த்தகத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய ஒரு கொள்கை..

நம்மில் பலபேருக்கு கான்ஸண்ட்ரேஷன் முக்கியம்.. அதனால் ஒரு நேரத்தில் ஒரு வேலைக்கு மேல் அதிகம் செய்வதில்லை. ஆனால் நம்மால் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய முடியும். முதலில் முக்கியமில்லா சில வேலைகளைச் சேர்த்து செய்யப் பழக வேண்டும். ஒரு வேலை செய்யும் பொழுது ஒரு 10 நிமிடம் சிந்தித்தால் அது சம்பந்தமான இன்னும் 4 வேலைகளை முடித்து விடலாம்.. இப்ப பாருங்களேன்,, மார்ச் 15 க்குள் படைப்புகளை பரிந்துரை செய்ய வேண்டும்.. இன்னிக்கு 10 ஆம் தேதி.. பட படன்னு வேலையைப் பார்க்கலைன்னா எப்படின்னு ஒரு கொட்டு வச்சம்னா ஆஹா தாமரை எதையும் மறக்கவே மாட்டார்னு வேலையைச் சட்டுன்னு ஆரம்பிச்சிடுவாங்க.

.

அப்புறம் இன்னொன்று நான் கடைபிடிப்பது.. மற்றவரை நம்புவது. அதே சமயம் கண்மூடித்தனமாய் நம்பாமல் இருப்பது,

ஒரு விருந்துக்கு 100 பேரை அழைத்திருப்போம்.. இருவர் வரவில்லை என்றதும் அவர்களைப் பற்றிப் பேசி 98 பேரின் நேரத்தை வேஸ்ட் செய்வோம். நம் நேரத்தைப் போலவே மத்தவங்க நேரமும் பொன்னானது இல்லிங்களா? அதனால அந்த 2 பேரை அப்புறமா விசாரிச்சுக்கலாம்.. 98 பேரை சந்தோஷப் படுத்தலாம்..

குடும்பம்.. வேலை.. மன்றம்.. நட்புகள்.. எப்படி பேலன்ஸ் செய்வது? எதுக்கு பேலன்ஸ் பண்ணனும்.. மலர் வேலை இருக்கு அப்புறம் பேசலாம்னா நீங்க என்ன விழுந்து புரண்டு அழப் போறீங்களா என்ன? அதே மாதிரிதான்.. எல்லோரும் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார்கள்.. போன மின்னிதழ் வேலை நடந்த பொழுது ஸ்வேதாவும் அனிருத்துமே அட்ஜஸ்ட் பண்ணிக்கலையா? அப்பா நம்மலை அவாய்ட் பண்ணலை. அப்பாவுக்கு முக்கியமான வேலை.. அப்படிங்கற நம்பிக்கை தானே காரணம். அந்த நம்பிக்கை எப்ப வரும்.. அவங்களை நாம் வேணும்னே அவாய்ட் பண்ணாம இவ்வளவு நாள் இருக்கறதினால..

ஆக..

இது ஒரு சின்ன வாழ்க்கை முறை. ஒரு நாள் மட்டும் கடை பிடிச்சிட்டு விட்டுட முடியாது.. எல்லாம் மனசுக்குள் இருக்கு, வெளிய காட்டினா போதும்..

10 நிமிஷம் ஃபிரீயா இருந்தா நீங்க படம் கலெக்ட் பண்ணி ஒரு பதிவு போடுற மாதிரி..

5 நிமிஷம் ஃபிரீ டைம் கிடைச்சா அதை ஒருத்தர் ஸ்பெல்லிங் மிஸ்டேக் சரி பார்த்து தர்ர மாதிரி.

கேப்ல காரியம் சாதிச்சிக்கிறது நல்லது தானே!

மலர்
10-03-2008, 04:23 AM
அழுவாச்சி காவியம் எழுதி மறுபடி என் தங்காச்சியை அழ வைக்கல..நற நற நற...!!

சரி..சரி...எனக்கு இப்ப நேரமில்ல..நான் கிளம்பனும்... நாளைக்கு வந்து பதிலை கொடுக்குறேன்...:cool::rolleyes:

மலரு இப்படி வச்சிட்டியே ஆப்பு!!!
வருகிறேன், பதிலுடன் வருகிறேன்
வாங்க...வாங்க.... சீக்கிரம் பதிலோட வாங்க... :icon_b: :icon_b:
அக்காவ்
நான் போடுற பதிலைலே தாங்குறாங்க,..... அதுல இருந்தே தெரிஞ்சிக்க வேணாமா நம்ம மக்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களுன்னு....:D :D

praveen
10-03-2008, 05:41 AM
8)பிரவீண் :
கணிணி துறை சம்பந்தமாக உங்களின் ஆர்வத்தை கண்டு நான் ஆச்சரியப்படுவதுண்டு...?? உங்களின் இந்த ஆர்வத்துக்கு காரணம்.....??
(நான் 11ம் வகுப்பிலிருந்து கம்யூட்டர்சயின்ஸ் தான்... ஆனால் எனக்கு இன்னும் என்னுடைய படிப்பு,வேலைக்கு தேவையானதை தவிர மற்றதை(இதே துறையில்)தெரிந்து கொள்ளும் ஆர்வம் குறைவு)

என்னை இங்கே குறிப்பிட்டு கேள்வி கேட்டதற்கு நன்றி. பதில் பெரியதா இருக்கும், பராவாயில்லையா?.

நான் சிறுவயது முதலே ஏதாவது விஞ்ஞான கண்டுபிடிப்பாளராக ஆக வேண்டும் என்று விருப்பம் உடையவானாக இருந்தேன்.

பள்ளிக்கூட பருவத்தில் எனது நண்பருடன்(மூர்த்தி) சேர்ந்து சோப் தயாரிப்பது எப்படி என்ற புத்தகத்தை படித்து செய்து பார்த்திருக்கிறோம். இன்றும் எங்காவது அவரை பார்த்தால், பிறரிடம் அதை நினைவு கூறுவார்.

பின்னர் இளைஞனான பின் எலக்ட்ரிகல் பக்கம் கவணம் சென்று அது ரேடியோ பக்கம் திரும்பி, அதில் அதிகப்படியான நேரம் செலவழித்து ஒரு ரேடியோ நிலையம் தொடங்க கூட முயற்சித்திருக்கிறேன். அதற்காக நிறைய கிராமபோன் ரெக்கார்ட்ஸ் எல்லாம் சேகரித்து வைத்திருந்தேன். ஆனால் அந்த ஒலிபரப்பு எல்லை, என் தெருவை கூட தாண்டவில்லை.

பின்னர் FM ரேடியோ ஒளிபரப்பு ஆரம்பித்து (எல்லாம் சட்டவிரோதமாகத்தான்) என் ஊர் முழுவதும் பிரபலமானேன். இந்த ஒளிபரப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என்று அப்போது தான் பிரபலமான ஆடியோ CD பிளேயர், அந்த டிஸ்க் இவைகளை வாங்கினேன். இதில் கம்ப்யூட்டர் எங்கே வந்து என்கீறீர்களா? இதோ வந்து விட்டது.

பலர் என் அண்ணனிடம் வந்து, நான் அலுவலகம்(அக்கவுண்டண்ட்டாக பணியாற்றினேன்) சென்றபின், FMல் பாட்டு பிரமாதம், எம்.ஜி.ஆர் பாட்டு போடச் சொல்லுங்கள், இந்தி பாட்டு போடச்சொல்லுங்கள் என்று அவரை பயமுறுத்தினர். அவர் இம்மாதிரி ஒளிபரப்பினால், சட்ட பிரச்சினை வருமோ என்று எண்ணி நான் மாடியில் வைத்து இயக்கின அந்த அறையில் இருந்த அனைத்தையும் (ஆண்டெனாவை முறித்து - ஒளிபரப்பு கோபுரம் ?) எடுத்து பழைய பொருட்கள் வைக்கும் அறையில் வைத்து பூட்டி விட்டார்.

நான் வீட்டில் இருந்த அனைவரிடமும் நீதி கேட்டேன். ஒழுங்காக வேறு ஏதாவது செய்து முன்னேறுகிற வழியை பார் என்று சொல்லி யாரும் சப்போர்ட் செய்யாததால். நான் அடுத்த கட்டமாக அக்கவுண்டண்ட் வேலைக்கு உதவும் என்று டேலி சாப்ட்வேர் படிக்க ஆப்டெக் சென்றேன்.

அங்கே அவர்கள் செய்த குளறுபடியால் ஹார்ட்வேர் கோர்ஸ் சேர்ந்தேன்(அப்போது பீஸ் அதிகம், கட்டின பணத்தை காப்பற்ற படித்தேன்). அங்கு முதல் வருடம் முடித்த ஆள் அடுத்த வருடம் கோச் செய்வாராம் என்ன காமடி. எனது அக்கா பையனின் நண்பன் எனக்கு கோச். வெறுத்து விட்டேன். நானே நிறைய புத்தகங்கள் (குறிப்பாக தமிழில் தான் கவனம் என்பதால் தமிழ்கம்ப்யூட்டர், அதன் பழைய இதழ்கள் பிளாட்பாரத்தில் கண்டாலும்)வாங்கி படித்து அறிவை வளர்த்து, அந்த கோச், லேப் பயிற்சியின் போது அசந்த நேரம் சில கமண்ட் மாற்றி கொடுத்து, அதற்கு காரணம் தெரியாமல் அந்த கோச்-ஐ அப்போதே அலற விட்டேன். இதற்கு தனிப்பட்ட காரணம் உண்டு, அந்த கோச் எனது மாப்பிளையின் நண்பன் என்பதால் என்னிடம் வெளியே, பவ்யம் காட்டுவான், உள்ளே ஓவரா சவுண்டு கொடுப்பான், கேட்டால் நான் தான் கோச் நீங்கள் இங்கே மாணவன் என்பான், ஒரு சந்தேகம் கேட்டால் அது புத்தகத்தில் இருந்தால் அதை படித்து காண்பான், வேறு கேட்டால் சிலபஸ்-ல் இல்லை என்று தப்பிப்பான், இது தவிர ஆப்டெக்கில் கேட்ட கட்டணத்தை சல்லி காசு குறையாமல் கட்டி சேர்ந்தேன். எனக்கு பின் சேர்ந்தவர் (ஆள் கிடைக்காததால்) பாதி கட்டனத்தில் எல்லாம் ஆள் சேர்த்தார்கள், கேட்டால் ஸ்காலர்சிப் என்று சப்பை கட்டு கட்டினார்கள்.

ஆப்டெக்கில் படித்த காலத்தில் தியரியாக நடத்தி கொல்வார்கள், மறந்தும் நல்ல நிலையில் உள்ள ஒரு பிசியை கையாள கொடுக்க மாட்டார்கள். அப்போது விண்டோஸ் 95 வந்து விட்டது, இருந்தாலும் விடாப்படியாக டாஸ் 6.22 தான் சொல்லி கொடுப்பார்கள், ரொம்ப பெருமையாக விண்டோஸ் 3.1 சொல்லி கொடுத்தார்கள். நான் அதற்கு முன்னே விண்டோஸ் 95 பதிவது அதில் உள்ள குறைகள் இவற்றை சொந்தமாக ஒரு பழைய கணினி வாங்கி என் வீட்டிலேயே வைத்து பயின்று விட்டேன், என் ஊரில் உள்ள அனைவருக்கும்(மொத்தம் 5 பேர் தான்) இலவச கணினி சேவை அவர்கள் வீடு தேடி சென்று செய்து கொடுப்பேன், காசு என்றால் யாரும் வரமாட்டார்கள் என்பதால்)

பின்னர், அப்பரண்டீசாக நான் இருந்த ஊரிலே, நான் முன்னர் வேலைபார்த்த அக்கவுண்டண்ட் வாங்கிய சம்பளத்தை விட குறைவாக பெற்றேன். பின்னர் சென்னை விஜயம் செய்து குறிப்பிட்டு சொல்லும் படியான ஒரு நிறுவனத்தில் 100 பேரில் ஒருவராக இண்டர்வீயுவில் வெற்றி பெற்று, அந்த அலுவலகத்தில் உள்ள பிரச்சினை, அங்குள்ளவர் சேட்டைகள் இவற்றில் பாடம் படித்து, மணமான பின் திரும்ப சொந்த ஊருக்கே திரும்பி வந்து விட்டேன்.

இதில் நான் எனக்கு தெரிந்தவரை சிறப்பாக கற்றுக்கொண்டதற்கு ஆர்வம், தேவை, சூழ்நிலை எல்லாம் ஒத்து அமைந்தது. எனது அம்மா நான் நல்ல நிலையில் வரவேண்டும் என்று நான் ஹார்டுவேர் படிக்கும் காலத்தில் ஒரு கம்ப்யூட்டர் (என் அண்ணன், நான் கணினி கேட்ட போது சாப்ட்வேர் படிப்பவரே, கம்ப்யூட்டர் வைத்து கொள்வதில்லை, உனக்கெதற்கு கம்ப்யூட்டர் என்று மறுத்து விட்டார்) கேட்டவுடன், பணம் கொடுத்தார். (அப்போது புது கம்ப்யூட்டர் 80,000 ரூபாய், பழைய கம்யூட்டர் 25,000 ரூபாய்). நடுத்தர குடும்பத்தில் இதெல்லாம் ரொம்ப பெரிய விசயம்.

யவனிகா
10-03-2008, 06:00 AM
மலருக்குள்ள இவ்வளவு திறமை ஒளிஞ்சிட்டிருக்கா? நம்ப முடியவில்லை...நம்ப முடியவில்லை...நம்ப முடியவில்லை!!1

போற போக்கில கேள்விகளை இந்தா புடிச்சுக்கங்கங்க அப்படீங்கற மாதிரி தூக்கி வீசிட்டு போயிடுச்சு.வர்ற பதிலெல்லாம் பாத்தா மலைப்பா இருக்கு...அத்தனை பொருள் பொதிந்த கட்டுரைகள் ஒவ்வொன்ணும்....

மன்மதனும் மணியா அண்ணாவும் அப்பாஸ் வினீத் ரேஞ்சுக்கு பிரண்ஸா?


மதி கிரேட் எஸ்கேப்பு...பொண்ணப் பத்தி கடைசிக்கு ஒரு மொக்கைக் கவிதையாவது எதிர் பார்த்தேன். ஏமாத்திட்டீங்க மதி.

பாரதி அண்ணாவின் பாணிதான் எனக்கும். மனதில் வர்றதை கைக்கு வர்றது மாதிரி எழுதறது...பாரதி அண்ணா எவ்வளவு அதிகமா எழுதறோம்கிறது முக்கியமில்ல...படிக்கறவங்க எத்தனை நாள் நினைவில் வச்சுக்கிறாங்க அப்படிங்கறது தான் முக்கியம்...அப்படிப்பாத்தா...நீங்க தான் மிகத் தகுதியானவர் கேள்விக்கு.

தாமரை அண்ணா...பழனி மலைக்குப் போனீங்களே...அங்க பழனி ஆண்டவர் எத்தனை கெஞ்சிக் கேட்டார்...[B]டைம் மேனேஜ்மெண்ட் சொல்லிக்குடுப்பா தாமரை..அறுபடை வீட்டையும் மேனேஜ் பண்ண முடியலை...இத்தனைக்கும் மயிலு இருக்கு பறந்தே போனாலும் பத்த மாட்டீங்குது 24 மணி நேரம்...நான் படைத்த மனிதா...நீ எப்படி நொடி நேரத்தில இத்தனை கடிகளை எழுதுகிறாய்... அப்படின்னு பழனி ஆண்டவர் கேட்டாரே...சொல்லிக் குடுத்தீங்களா தாமரை அண்ணா....

சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்....கடிக்க வராதீங்க...உங்க டிப்ஸ்ஸ் ஜூப்பர்...

பிரவீண் பெரிய ஆளுங்க நீங்க...இன்னும் நீங்க மென்மேலும் வளரணும்...வாழ்த்துக்கள்...

யவனிகா
10-03-2008, 06:06 AM
[B][COLOR="DarkOrchid"]10 நிமிஷம் ஃபிரீயா இருந்தா நீங்க படம் கலெக்ட் பண்ணி ஒரு பதிவு போடுற மாதிரி..

5 நிமிஷம் ஃபிரீ டைம் கிடைச்சா அதை ஒருத்தர் ஸ்பெல்லிங் மிஸ்டேக் சரி பார்த்து தர்ர மாதிரி.

கேப்ல காரியம் சாதிச்சிக்கிறது நல்லது தானே!

இது தான் மலரு கேப்ல வாரறது... இதக் கத்துக்கோ முதல்ல...:lachen001::lachen001::lachen001:
இனி ஸ்பெல்லிங் மிஸ்டேக் சரி செய்ய யார்கிட்டயாவது போவியா...போவியா...போவியா:sprachlos020::sprachlos020::sprachlos020:

இளசு
10-03-2008, 06:09 AM
இந்தத் திரியின் முக்கிய பலனை கண்கூடாய் மீண்டும் காணும் வாய்ப்பு.
மலர், ராஜா, அமர் கூட்டணிக்கு நன்றி.

பாரதி பற்றி யவனியின் கடைசி வரி - அப்படியே என் கருத்தும் கூட.
(யவனி - பாரதியின் பட்டப்பெயர் - பேரிதயக்காரன்.)

தாமரையிடம் கற்க எத்தனை எத்தனை! வியக்கிறேன் தாமரை..

ப்ரவீணின் உண்மை விளக்கம் படிக்க - மதிப்பும் வியப்பும்!

தொடரட்டும் பதில் உரைகள்.
(இனி வெள்ளிக்கிழமை வந்து - விட்டதைப் ப(பி)டிப்பேன்.)

mania
10-03-2008, 06:12 AM
கேள்வியை நம்ம தலையிடம் இருந்து ஆரம்பிச்சிடலாமின்னு
இருக்கிறேன்...
ஹீ..ஹீ..... தலை ரெடியா...

[COLOR=black]1) மணியா & மன்மதன் :
தலைமுறை இடைவெளியிலும் ஒரு தோழமையான அன்பினை உங்கள் இருவருக்கும் இடையே பார்கிறேன்.. குறும்பு கிண்டல் நக்கல் விளையாட்டுன்னு உங்களுடைய பழைய பதிவுகள் இன்றும் இனிக்கிறது.. இருவரிடமும் ஒரே கேள்வி.. ஆனால் தனித்தனியா பதிலை எதிர்பார்க்கிறேன்...
நட்புக்கு வயது இடைவெளி தேவையா இல்லையா.. ???
தேவை என்றால் அதற்கு காரணம்.....??
இல்லையென்றாலும் அதற்கும் காரணம்..........??


நட்புக்கு வயது இடைவெளி தேவையில்லை.....நான் நல்ல நண்பர்களாக பழகி வரும் பலரது வயதே எனக்கு இன்னும் தெரியாது...!!!!அதேபோல என்னுடன் நட்பாக இருக்கும் பலருக்கு என்னை நேரில் பார்க்கும் வரை( பல நேரத்தில் நேரில் பார்த்த பிறகும்)என்னுடைய வயதை நம்ப முடியாமல் இருந்திருக்கிறார்கள்..!!!!
அநேகமாக எல்லா நண்பர்களையும் ஓரளவுக்கு எழுத்து மூலமாக பழகிய பிறகே சந்தித்திருக்கிறேன். என்னை பொறுத்தவரை மன்மதன் சொன்ன மாதிரி அலைவரிசை ஒன்றாக இருந்தால் மட்டுமே போறும்.
ஒருநாள் கூட நீ கேட்டிருக்கிற மாதிரி வயது பற்றியே நான் யோசித்தது இல்லை.....(எனக்கு வயசாயிட்டதா என்ன.....:fragend005:)
இன்னும் சொல்லப்போனால் எனக்கு இளவயது நண்பர்களே(நண்பிகளும்தான்) அதிகம்.
எனக்கு தெரிந்து நட்பு என்பது வயது பாத்து வருவதில்லை.....(கோப்பெருந்தேவருக்கு பிசிராந்தையர் வயது தெரியுமா என்ன...???)
வயது பார்த்து வரும் நட்புக்கு வேறு பெயர்.....வேறு காரணங்களும்தான்...!!!!:rolleyes:
என்னுடைய அல்லது என்னக்காட்டிலும் வயதானவர்களுடந்தான் நட்பு என்றால்....!!!!!எனக்கு இந்த மன்றத்திலோ அல்லது மற்ற இடங்களிலோ
நட்பு மட்டுமல்ல பேசுவதற்கே ஆட்கள் இருக்க மாட்டார்கள்.:D:D
நான் என்றுமே மனதால் மிகவும் இளமையானவன்....:rolleyes:...அதனாலேதான் அதே அளவுக்கு இளமையான மனதுடையவர்கள் எல்லோருமே என்னுடன் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.....இருப்பார்கள்... அநாவசியமாக என்னுடைய வயதை மிகைப்படுத்தி என் நண்பர்களை என்னிடமிருந்து பிரித்துவிடாதே மலர்....:rolleyes::D:D
அன்புடன்
மணியா..:D

இளசு
10-03-2008, 06:18 AM
என்றும் பதினாறு
வயது பதினாறு
மனதும் பதினாறு
மன்றத்தில் நாளும் விளையாடு!

தலக்கு என் காணிக்கைப் பாட்டு!

வயசைப்பாத்து விலகும் நட்பல்ல தலயின் நட்புகள்.. அவரின்
பிள்ளை -வெள்ளை மனசைப் பார்த்து மயங்கிய நட்புகள்!

வாழ்க தலை!
வளர்க அவர் நட்பு ராச்சியம்!

மதி
10-03-2008, 06:25 AM
மதி கிரேட் எஸ்கேப்பு...பொண்ணப் பத்தி கடைசிக்கு ஒரு மொக்கைக் கவிதையாவது எதிர் பார்த்தேன். ஏமாத்திட்டீங்க மதி.

அட...
பக்கம் பக்கமா எழுதலாம்னு இருந்தேன்... திடீர்னு இதுல வில்லங்கம் நிறைய இருக்கு.. எதுக்கு வாழ்க்கையில ரிஸ்க் எடுப்பானேன்னு எஸ்கேப். :icon_b:

சிவா.ஜி
10-03-2008, 08:08 AM
மலரு வாலுன்னுதான் நினைச்சேன்...ஆனா பயங்கர சாலு(ஹிந்தியில விவரமானவர்ன்னு அர்த்தம்).என்னமா கேள்வி கேட்டிருக்கு....அசத்தல் மல்ரு.
மன்மியின் சுருக்க பதிலில் அழகான நட்பின் இலக்கணம் தெரிகிறது.ஒரே உதாரணத்தில்...வயது இடைவெளியில்லாத நட்பை நச்சுன்னு சொல்லிட்டார்.
பாரதியின் பதில்...ஆஹா..அற்புதம்..அந்த இயல்பான எழுத்துதானே பாரதி உங்களின் சிறப்பம்சமே....எந்த ஒரு எழுத்து படித்தபிறகு தன் பாதிப்பை விட்டுச் செல்கிறதோ அது சிறந்த எழுத்து.உங்களுடையது அந்த ரகம்...எப்போதும் காட்டும் அகம்.

தாமரையின் டைம் மேனேஜ்மெண்ட் பற்றிய இந்த பதில் எந்த பிரபல மேனேஜ்மெண்ட் புத்தகங்களில் வரும் கட்டுரைகளுக்கும் சளைத்ததல்ல...அச்சிட்டு வைத்துக்கொள்ளத்தக்க வகையில் இருக்கும் அற்புதமான பதில்.இதை அப்படியே கடைபிடித்தால்....வாழ்க்கையில் டென்ஷன் என்பதே இருக்காது.மிக்க நன்றி தாமரை.

பிரவீனின்...முயற்சிகளும்,கடின உழைப்பும்..அடடா...வியக்கவைக்கிறது.அனைவருக்கும் பாடம் சொல்லும் ஒரு பதில்.
மதி...மாட்டிக்காம நழுவுற மீனாயிட்டார்...இருந்தாலும் சொன்னதில் நல்ல கருத்து...இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பது என்பதில் தவறில்லை எனத் தெரிய வைக்கிறது.

என்னோட பதிலோடு சீக்கிரம் வருகிறேன் மலர்.

மலர்
10-03-2008, 08:13 AM
அப்புறம் இது ஒரு நல்ல கேள்வி...:D:D:D:D:D
இப்படி தான் இருக்கணும்னு இல்லை. இப்படியும் இருந்தா நல்லா இருக்கும்னு தான் சில ஆசைகள். ஆனாலும் நான் இப்போ ஏதோ சொல்லப் போக அப்புறம் நான் சொன்னதெல்லாம் இருக்கான்னு நீங்க வந்து செக் பண்ண.. கல்யாணத்துக்கு முன்னாடியே குடும்பத்துல குழப்பம் வரவா...??? :rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes: ஸோ.. நெக்ஸ்ட் கொஸ்டின் ப்ளீஸ்...:icon_b: கடைசியில நல்லா குட்டிகரணம் அடிச்சி தப்பிச்சிட்டீங்க.... :D :Dஎப்படியோ பதில் குடுக்குற மாதிரி குடுக்கலை...:rolleyes: எப்படினாலும் சீக்கிரம் கண்ணாலம் ஆக வாழ்த்துக்கள் மதி:icon_b:
அப்புறம் நெக்ஸ்ட் கொஸ்டின் எல்லாம் இல்லை..:sprachlos020: :sprachlos020: நான் கஷ்டப்பட்டு மூளையை கசக்கி பிழிஞ்சி கொடுத்தாலும் சிம்பிளா சிதறிட்டு போயிருவீங்க... ஸோ..... வவ்வ..வவ்வ... கிடையாது... :cool: :cool: :cool:

மதி
10-03-2008, 09:24 AM
கடைசியில நல்லா குட்டிகரணம் அடிச்சி தப்பிச்சிட்டீங்க.... :D :Dஎப்படியோ பதில் குடுக்குற மாதிரி குடுக்கலை...:rolleyes: எப்படினாலும் சீக்கிரம் கண்ணாலம் ஆக வாழ்த்துக்கள் மதி:icon_b:
அப்புறம் நெக்ஸ்ட் கொஸ்டின் எல்லாம் இல்லை..:sprachlos020: :sprachlos020: நான் கஷ்டப்பட்டு மூளையை கசக்கி பிழிஞ்சி கொடுத்தாலும் சிம்பிளா சிதறிட்டு போயிருவீங்க... ஸோ..... வவ்வ..வவ்வ... கிடையாது... :cool: :cool: :cool:

அதான் சொன்னேனே.. இந்த கேள்விக்கு முன்னுரை..விளக்கவுரை.. முடிவுரை எல்லாம் குடுத்து மாட்டிக்க முடியாதுன்னு.. :icon_b:

பூமகள்
10-03-2008, 10:21 AM
10)பூமகள் :
ஹாஹ்ஹா.... அக்காக்கு ரெண்டு கேள்வி...
மிரட்டல் மலரு... இதெல்லாம் ஓவரு...ஆமா.. எல்லாருக்கும் ஒத்த கேள்வி கேட்டு அழ வைச்சா எனக்கு எல்லாம் டபுளா??

ஹூம் ஹூம்... சரி அடுத்து என்னிடம் மாட்டாமையா போவே..(மாட்டு+ஆமை= ஆமையா போவே அப்படின்னு யாரும் இங்கே பிரிச்சி பொருள் சொல்லக் கூடாது ஆமா..!:p:cool::aetsch013:) அப்போ இருக்குங்க மலரு...!! :lachen001:

a) நாம எல்லாரும் பள்ளி படிக்கும் காலத்திலிருந்தே வரதட்சணை பற்றியும் அதன் கொடுமை பற்றியும் படிக்கிறோம்.... ஒரு சில திருமணத்தை தவிர மற்ற எல்லா திருமணங்களும் வரதட்சனையோடு தான் நடக்கிறது...
அப்படி வரதட்சனை கேட்காத மாப்பிள்ளைக்கு தான் கழுத்தை
நீட்டவேண்டும் என்று நினைத்தது உண்டா....??ஹா ஹா.. மதி மதி மதி மொக்க மதிக்கு கேட்ட கேள்வி மாதிரியே இப்படி ஒரு குண்டு தூக்கி போட்டிருக்கே.. ஆனாலும்.. கேள்வியில் உள்ள சமூக நலன் புரிகிறது.
அதனால பதில் சொல்றேன். :aetsch013:

---------------

வாழ்க்கையில் சில கொள்கைகள் நமக்கு படிக்கும் காலத்துலேயே உருவாகி இருக்கும். அதன் வழி தான் நம் மனசு செயல்படும். உதாரணமா சொல்லனும்னா.. பரிச்சைல காப்பி அடிப்பது குற்றம். அப்படி செய்ய கூடாதுன்னு மனசில கொள்கையா வளர்ந்திட்டிருந்தோம்னா.. நிச்சயமா நாம எத்தனை வயசு ஏறினாலும் அந்த தப்பை செய்ய மாட்டோம். அதுவுமில்லாம சின்ன வயசுல படிச்ச வரதட்சணை, தீண்டாமை பற்றிய நல்ல விசயங்கள் ஆழமா என் மனதில் விதைஞ்சதனால் அந்த தவறை நிச்சயம் செய்ய கூடாதுங்கறதுல நான் ரொம்ப தெளிவா இருக்கேன்.

அட.. ஏதேதோ பேசி கேட்ட கேள்வியே மறந்துட்டது.. இரு மலரு.. திரும்ப படிச்சிட்டு வந்து பதில் தருகிறேன்.

சமீப காலங்களில் படித்தவர் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. படித்தவர்கள் நிச்சயம் எதார்த்தவாதிகளாக இருக்கிறார்கள். பணப் பற்று இல்லாத நல்ல மனிதர்கள் புரிதலுடன்... எதையுமே எதிர்பார்க்காமல் நல்ல குணமுள்ள படித்த வரன் அமைந்தால் போதும் என்று விரும்புவது அதிகரித்துள்ளது.

இன்னொருபுறம்.. அந்தஸ்து.. கௌவுரவம்.. பணத்தாசை கொண்டு நிறைய சவரன் நகையும்.. காரும் கேட்டு தொல்லைப் படுத்தி கொடுமை படுத்தும் செயல்களும் நடந்து வருகின்றன.

அது மட்டுமில்லாமல்.. வேலைக்கு போகும் அழகான படித்த பெண் தேவை என்று விருப்பத்தை தெரிவித்தும் இருக்கிறார்கள்.

இன்றைய சூழலில் ஓரளவு நல்ல முறையில் குடும்பம் நடந்த.. ஒரு நடத்தர வர்க்கத்தில் திருமணம் ஆகிப் போகும் பெண் நிச்சயம் வேலைக்குச் செல்பவளாக இருக்க வேண்டுமென்று எதிர்ப்பார்ப்பது கூடிவருகிறது. இந்த சூழலில் அங்கே வரதட்சணை அவசியமற்றதாகிவிடுகிறது.

என்னைப் பொறுத்தவரை.. நல்ல மனிதம் உள்ளவர்களுக்கு தான் கழுத்தை நீட்ட வேண்டுமென்று விருப்பம். பூவுக்கு கணவராகப் போகிறவர் நிச்சயம் வரதட்சணை பற்றி யோசிக்காத நல்லவராகத்தான் இருப்பார் என்று நம்புகிறேன். :rolleyes:

அப்படி வரதட்சணை கேட்கும் வரனுக்கு கழுத்தை நீட்டுவது பற்றி யோசித்தாலும்.. என் சந்தோஷத்தின் ஆணி வேறே ஆரம்பத்திலேயே அறுபட்ட நிலையாவதால் அப்படி ஒரு முடிவை எடுக்க மாட்டேன்.:icon_ush:

வீட்டின் பொருளாதார சூழல் அடிப்படையில் என் பெற்றோரின் பாசத்துக்கு அவர்கள் விரும்பியதைச் செய்வார்கள். ஆனால்.. அதனை அளவிட்டு கேட்டால்.. நிச்சயம் அப்படியான வரன் பற்றி யோசித்துக் கூட பார்க்க மாட்டேன்.:icon_ush:

ஆனா ஒன்னு மலரு....

நல்ல விசயம் நிறைய இருந்தா மாறித் தானே ஆகனும்????!!! :D:D
(அப்பாடா.. பின்னாடி வந்து கேள்வி கேட்க விடமாட்டேனே..!!:aetsch013:)

(மலரு.. :rolleyes:நல்லாவே போட்டு வாங்குற...:icon_ush::icon_ush:)


b) வேலைக்கு செல்லும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு
தன்னுடைய சம்பளத்தின் ஒரு சிறுபகுதியை பெற்றோருக்கு
கொடுக்கலாமா.....??
தனக்கென்று ஒரு குடும்பம் உருவாகிவிட்ட சூழலில்... தன் குடும்பத்தின் தேவைக்கு மீறி பணம் அதிகமிருந்தால் தனது துணையின் அன்பான புரிதலும் அமைந்து விட்டால்.. தாய் வீட்டின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க நிச்சயம் உதவலாம்.

இதில் என்ன கொடுக்கலாமா என்று கேள்வி???

கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் அவரவர் குடும்பத்தின் நிலை, புரிதல் பொறுத்தது மட்டுமே..!!

அவ்வாறு கொடுப்போரை நான் இன்னும் பார்த்ததில்லை. ஆயினும்.. அப்படி கொடுப்பதை ஒப்புக் கொள்ளும் நல்ல கணவர் கிடைத்தால் செய்வதில் ஏதும் பிழையில்லையே...!! :)

பெத்தவங்களுக்கு கொடுத்து பார்க்கிற சந்தோசத்துக்கு சாக்கு தேவையா என்ன??!! :icon_b:

-----------
மலரு.. சுத்தி சுத்தி பதில் சொல்லிட்டேனா?? :rolleyes::aetsch013:
எப்படி எப்படி எல்லாம் மாட்டி விடுறாங்கப்பா...!! :traurig001::traurig001: :D:D

kavitha
10-03-2008, 11:01 AM
மன்மியின் முதல் பேட்டிங்... நாட் பேட்!
(காதலுக்கும் வயது தேவையில்லைன்னு ஒரு பொதுவிவாதத் தலைப்பை இடைச்செருகலாய் தந்தது ஏன் மன்மி?)
மனைவி இவரை விடவும் மூத்தவராம் அண்ணா... (எங்கேயோ காத்துவாக்கில வந்தது...)


மலர் அசத்திட்டே போ! சுத்திப்போட்டு திருஷ்டி முறிச்சிட்டேன்.

kavitha
10-03-2008, 11:03 AM
பூமகள்...


ஆனா ஒன்னு மலரு....

நல்ல விசயம் நிறைய இருந்தா மாறித் தானே ஆகனும்?
கேள்விக்கு கேள்வியே பதிலா?ம்..!
உன் கொள்கைகள் ஈடேற வாழ்த்துகள்.

பூமகள்
10-03-2008, 11:08 AM
கவீ அக்கா..!!

கலர் கலரா பதில் எழுதியிருக்கேன்.. கேள்வி கேட்டதை மட்டும் பாராட்டிட்டு போயிட்டீங்களே..!! (ஹீ ஹீ...சும்மா சொன்னேன் அக்கா..)

உங்க வாழ்த்துக்கு நன்றிகள் பலப்பல அக்கா. :)

நுரையீரல்
10-03-2008, 11:10 AM
மிக அருமையான பதில்களைக் கொடுத்த மன்மதன், மணியா அண்ணா, பூவு, மதி, தாம்+அரை (half) போன்றோருக்கு வாழ்த்துக்களும், கேள்வியைக் கேட்டு மிக அருமையான பதிலைக் கொண்டு வந்த மலருக்கு நன்றிகளும்.

எனக்கான கேள்வியில் அட்வைஸ் பண்ற சோலி இருப்பதால் கொஞ்சம் நன்றாக யோசித்து எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் பதிக்கிறேன்.

என் மனசில பட்டத சொல்ற மாதிரி தான் அட்வைஸ் இருக்கும் யாரும் சண்டைக்கு வந்துடாதீங்க....

பூமகள்
10-03-2008, 11:27 AM
மதன் அண்ணா தலை அவர்களின் நட்பு...

தென்றலுக்கும் பூவுக்குமான தொடர்பு போல என்றும் மணக்கும்.. இன்று மன்றத்தில் மணம் வீசச் செய்த மலருக்கு பூ வாழ்த்து கூறுகிறது.

மதிக்கு கேட்ட கேள்விக்கு மதி கொண்டு பதிலளித்தது கண்டு மதியின் மதியைப் போற்றி வியக்கிறேன்..!!

பேரிதயக்காரரின் எழுத்துகள் பற்றிய சூட்சுமத்தை உலகறியச் செய்த மலரினை மெச்சி உச்சி முகர விரும்புகிறேன்..!!
எழுத்துகளில் விளையாடி.. மனதினை தன் வயப்படுத்தும் மாயக்காரர் பாரதி அண்ணாவின் தன்னடக்கம் அதை விட பலமடங்கு அவரை நம் மனங்களில் உயரத்தில் ஏற்றிவிட்டிருக்கிறது.

தாமரை அண்ணாவின் பதிலைப் பற்றி சொல்ல என் விரலும் பணிந்து நிற்கிறது. இவரின் வாழ்வே நம்மை வழி காட்டிடும் சிறந்த வழிகாட்டி. இங்கே எழுத்துகள் மூலமும் இன்னும் ஆழமாய் அவர் மனம் அகழ்ந்து பார்க்க முடிந்திருக்கிறது. என்னுடைய ஒரு விருப்பம்.. இவுங்க எல்லாருக்கும் வயதே அகக் கூடாது.. மார்கெண்டேயனாய் இவர் இன்னும் இன்னும் பலருக்கு நல்வழிகாட்டியாக விளங்கி எல்லார் உள்ளங்களிலும் அன்பினால் வென்று வீற்றிருக்க வேண்டுமென்பதே..!!
(ஏங்க தாமரை அண்ணா.. ஓவரா செண்டிமெண்டா பேசிட்டேனா...அண்ணா??!! உடனே ஓவர் செண்டிமெண்ட் உடம்புக்கு ஆகாதுன்னு சொல்லி பதிவு போடாதீங்க...!!:D:D)

ப்ரவீண் அண்ணாவின் பதில் பார்த்து வியப்பில் புருவம் உயர்ந்து நிற்கிறது... அசத்தல் ப்ரவீண் அண்ணா.. உங்க விடா முயற்சிக்கும் ஆர்வத்துக்கும் திறமைக்கும் இன்னும் இன்னும் நிறைய சாதிப்பீங்க..!!

அண்ணா.... FM ஒலிபரப்புனீங்களா??? என் வாய்ஸ் நல்லா இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க.. எனக்கு உங்க எப்.எம்மில் "ரேடியோ ஜாக்கி" ஆக வாய்ப்பு தருவீங்களா?? :D:D

தல அவர்களின் பதில்.. சூப்பரோ சூப்பர்..

தலைமுறை என்பது மனங்களுக்கு ஏது??? நட்பு பாராட்ட இரு மனங்கள் ஒரே அலைவரிசையில் இருந்தால் போதுமே..!! :)

பதிலிட்ட.. பதிலிடப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்..!!

praveen
10-03-2008, 11:50 AM
ப்ரவீண் அண்ணாவின் பதில் பார்த்து வியப்பில் புருவம் உயர்ந்து நிற்கிறது... அசத்தல் ப்ரவீண் அண்ணா.. உங்க விடா முயற்சிக்கும் ஆர்வத்துக்கும் திறமைக்கும் இன்னும் இன்னும் நிறைய சாதிப்பீங்க..!!

அண்ணா.... FM ஒலிபரப்புனீங்களா??? என் வாய்ஸ் நல்லா இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க.. எனக்கு உங்க எப்.எம்மில் "ரேடியோ ஜாக்கி" ஆக வாய்ப்பு தருவீங்களா?? :D:D

தனிப்பட்ட குரல் ஒலிபரப்பு, அறிவிப்பு, விளம்பரம் எதுவும் இருக்காது, காலை 3 மணி நேரம், இரவு 5 மணி நேரம். எங்கள் பகுதியில் மின்சாரம் தடைபட்டால் அதுவும் கிடையாது. சோதனை ஒளிபரப்பு போன்று. அந்த கால கட்டத்தில் எங்கள் ஊரில்(ஏன் தென் தமிழ்நாட்டில் எங்கும்) ஒரு FM ஒளிபரப்பும் இருந்ததில்லை.

இப்போது தான் நிறைய தனியார் பண்பலை ஒளிபரப்பு வந்து விட்டடதே, ஹலோ FMல் நண்பர்கள் இருக்கிறார்கள். சொன்னால் வாய்ப்பு தரக்கூடும். ஆனால் அவர்கள் ஒளிபரப்பு உங்கள் ஊரில் இல்லையே :(.

சிவா.ஜி
10-03-2008, 12:07 PM
1982-ல் நாங்களும் கோவையில் எங்கள் வகுப்பறையிலிருந்தே F.M ஒலி பரப்பினோம் ப்ரவீன்.அப்போது...நாங்கள் எலக்டிவ் பாடமாக டெலிவிஷன் மெக்கானிஸம் படித்தோம்.அதனால் சோதனை முயற்சியாக ஒலிபரப்பிப் பார்த்தோம்...கொஞ்ச நாள்தான் எங்கள் முதல்வரின் பார்வையில்(காதில்) பட்டு சட்ட சிக்கல்கள் வருமென்று நிறுத்தப்பட்டது.

போனியெம்மின் அழகான பாடல்களை ஒலிபரப்பினோம்...ம்...அதெல்லாம் ஒரு பொற்காலம்...

சுகந்தப்ரீதன்
10-03-2008, 01:01 PM
5)சுகு :
உங்களின் திருமணத்திற்கு பிறகு உங்கள் மனைவியை அவர்களின் நண்பர்களோடு பேச அனுமதிப்பீர்களா...??
இல்லை. பழைய நட்பெல்லாம் கூடாது என்று தடுத்து விடுவீர்களா..??
மலரு உனக்கு இன்னும் விவரமே பத்தலை...!! முதல்ல திருமணத்துக்கு வர நண்பர்கள் திருமணம் முடிஞ்ச பிறகுதான் அவர்களோட வாழ்த்தை தெரிவித்து பரிசு பொருட்களை கொண்டுவந்து கொடுப்பாங்க.. அப்ப கண்டிப்பா பேசித்தான ஆகனும்.. அது நானா இருந்தாலும் என் பொண்டாட்டியா இருந்தாலும்..!!

இல்லண்ணா மொய் வைக்காம வந்த வழியை பாத்துகிட்டு திரும்பி போயிடுவாங்க...அப்புறம் நஸ்டம் எனக்கும் என் பொண்டாட்டிக்கும்தான்...!! அதனால திருமணத்துக்கு பிறகு என் மனைவியை அவர்களின் நண்பர்களோடு கண்டிப்பா பேச அனுமதிப்பேன்...!!

அதுமட்டுமில்லாம அதுல எது பழைய நட்பு எது புதிய நட்புன்னு கண்டுபுடிக்க நான் கடவுள் இல்லைங்கறதால என் மனைவியோட நண்பர்கள்ன்னு சொல்லி யாரு திருமணத்துக்கு முன்னாடி வந்தாலும் சரி..பின்னாடி வந்தாலும் சரி என் மனைவியை பேச அனுமதிப்பேன்...தடுக்க மாட்டேன்...!!

மல்ரு உன்னோட கேள்விக்கு இப்ப நான் சொன்ன பதில்லியே நீ திருப்தியடைஞ்சிருப்பன்னு எனக்கு தெரியும்...ஆனா பாரு ஏற்கனவே உன்னோட கேள்விக்கு மதி போட்ட மொக்கையில எனக்கு தெரிஞ்சு பூவு காதுல புகையும் யவனியக்கா காதுல நுரையும் வர ஆரம்பிச்சுடுச்சு.. இன்னும் யார்யார்க்கு என்னென்ன ஆச்சோ யாருக்கு தெரியும்...?? அதனால மன்றத்து மக்களோட நலம்கருதி மேற்கொண்டு என்னோட பதிலை தரேன் சரியா...?!

முதல்ல.. திருமணத்திக்கு பிறகு யாரும் தன்னோட மனைவியை அவளோட தோழிகள்கிட்ட பேசக்கூடாதுன்னு சொல்ல மாட்டாங்க..!! அதே மாதிரிதான் நானும் திருமணத்திற்கு பிறகு நான் என் நண்பர்களுடன் பழகுவதைப் போலவே என் மனைவியையும் அவளோட தோழிகளுடன் பழக அனுமதிப்பேன்..!!ஆனா நீங்க இங்க நண்பர்கள் என்று அழுத்தி உச்சரிப்பது என் மனைவியின் ஆண் நண்பர்களை என்றே நினைக்கிறேன்..!!

இதற்கு ஒருவரியில பதில் சொல்லனும்ன்னா இதுக்கும் எனக்கும் சம்மந்தமில்லன்னு சொல்லிடுவேன்..!! ஏன்னா..திருமணத்திற்கு பிறகு என் தோழிகளிடம் பேச எனக்கு இந்த சமூகம் கொடுத்திருக்குற சுதந்திரத்தை அப்படியே என் மனைவிக்கும் கொடுக்குமாங்கிறது என்னை பொருத்தவரை கேள்விக்குறிதான்..?! அதனால இந்த பிரச்சனையில முடிவெடுக்க வேண்டியது நான் இல்லை..என்னோட மனைவிதான்..!! சரி சமூகம் எப்படியாவது இருந்துட்டு போகட்டும் நீ அனுமதிப்பியான்னு கேட்டா... கண்டிப்பா நான் அனுமதிப்பேன்..ஆனா முடிவை அவள்தான் எடுக்கனும்..!!

அதுமட்டுமில்லாம இங்க என்னதான் காதலிச்சி கல்யாணம் பன்னுனாலும் இல்ல அப்பா அம்மா பாத்து கட்டி வச்சாலும் ஒரு பெண்ணால உடனடியா தன் கணவனோட நட்பு பாராட்ட முடியுமாங்கறது என்னை பொருத்தவரை சற்றுக் கேள்விக்குறியான விசயம்தான்..!! அதனால அந்த சமயங்களில் அவளுக்கு அவளோட பழைய நட்பு கண்டிப்பா தேவைப்படும்.. அதை தடுக்க வேண்டிய அவசியம் கண்டிப்பா எனக்கு இல்லை..!! ஏன்னா கணவன் மனைவிக்குள் நட்புங்கறது பரஸ்பரம் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு விட்டுக்கொடுக்கும் போதுதான் நிகழும்.... அதற்கு எப்படியும் குறைந்தபட்ட கால அவகாசமாவது வேண்டும்..!! அதுவரைக்கும் எனக்கும் சரி..என் மனைவிக்கும் சரி.. எங்களோட பழைய நட்பு கண்டிப்பா தேவைப்படும்..!!

சரி அப்ப அதன்பிறகு பழைய நட்புக்கூடாதான்னு என்னை கேட்டா.. என்னோட பதில் அதற்கான அவசியம் இருவருக்குமே இருக்காது என்பதுதான்...!! ஏன்னா அப்ப நானும் என் மனைவியுமே நல்ல நண்பர்களா மாறியிருப்போம்... அதனால பழைய நட்பை தேடிப்போக வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்காது...!! இதுதான் பெரும்பாலும் திருமணத்திற்க்கு பிறகு பழைய நட்பில் இடைவெளி விழுவதற்க்கான காரணம்... இந்த இடைவெளி எதிர்காலத்துல வரும்மென்று தெரிந்துதான் சில நண்பர்கள் காதலர்களா மாறி கல்யாணம் செஞ்சுக்குறாங்க...!!

அப்புறம் இன்னொரு விசயம் என்னன்னா... பெரும்பாலும் பெண்களைவிட ஆண்கள் சற்று "பொஸாசிவ்னஸ்"(possessive) அதிகம் உடையவர்கள்.. நான் உள்பட..!! அதுவும் மனைவியிடம் இது இன்னும் சற்று அதிகமாகவே வெளிப்படும்... அதற்கு காரணம் தன் மனைவிமீது கொண்ட ஆழமான அன்புதான்..!! அந்த சமயங்களில் அவர்களுடைய மூளை நான் மேலே சொன்னதுபோல் ஆழமாக சிந்திக்காமல் அவசியமென்று நினைத்து அவசரமாக அநாவசியமான சில தடைகளை விதிக்கக்கூடும்...!! அதை பெண்கள் சரியாக புரிந்து கொண்டால் பிரச்சனையில்லை.. மாறாக அந்த இடத்தில் தன் கணவனால் தான் நேசிக்கப்படுவதை மறந்து தன் சுதந்திரம் பறிபோவதாக எண்ணினால் பரிதாபமாக இருவரும் ஒரு நல்ல வாழ்க்கையை பறிகொடுத்துவிட்டு நீதிமன்றங்களில் நிற்க வேண்டியதுதான்..!!

இதையெல்லாம் கணக்குப்போட்டு பார்த்துவிட்டுதான் அந்த காலத்திலேயே "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்" என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்...!! நானும் இறைவன் எப்ப எனக்கு வரம் கொடுப்பான்னுதான் காத்துக்கிட்டு இருக்கேன்..!! நம்பமன்றத்துல இறைவனோட உறவுக்காரங்க யாராவது இருந்தா எனக்காக அவருகிட்ட கொஞ்சம் "ரெக்கமெண்ட்" பண்ணுங்கப்ப... மத்தவங்கெல்லாம் எனக்காக பிரார்த்தனை பண்ணுங்கப்ப...!!

சிவா.ஜி
10-03-2008, 01:11 PM
இன்றைய சூழ்நிலையில் தமிழக+இந்திய அரசியலில் நீங்கள் எதிர்பாக்கும் மாற்றம் என்ன...??
இப்போதைய அரசியல் முறை சரியானதா....??

தற்போது படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை விட ஒரு நல்ல வேலைக்கு சென்று வாழ்க்கையில் செட்டில் ஆகுவதை தான் விரும்புறாங்க.. இது பற்றிய உங்கள் கருத்து... ??

மலருடைய இரண்டாவது கேள்விதான் முதல் கேள்விக்கான பதில்...சாக்கடை நாறுகிறதே என்று மூக்கைப் பிடித்துக்கொண்டு செல்வதை விட...அதில் இறங்கி சுத்தம் செய்வது நல்லது.

இப்போதைய அரசியல் என்பது..பொதுநலத்தைவிட சுயநலத்துக்கே முக்கியத்துவம் கொடுப்பதாய் இருக்கிறது.அதை அன்றாடம் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்...ஆனால்...அங்கலாய்க்கிறோமே தவிர...அதன் அங்கமாக மறுக்கிறோம்.நல்ல சிந்தனையுள்ள படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வந்து...முழுதும் நச்சாகிவிட்டதை...கொஞ்சம் கொஞ்சமாக சுத்தம் செய்ய வேண்டும்.
ஆரம்பத்தில் சோதனை அதிகமாகத்தானிருக்கும்...எதில்தான் இல்லை...?அத்தனையையும் தாங்கிக்கொண்டு...தொடர்ந்து முயன்றால்..சுத்தமாக்க முடியும்....அது அல்லாது...வேறு எந்த மாற்றத்தையும் தற்சமயம் கொண்டுவர முடியாது...விடமாட்டார்கள்.

சாமான்யனிலிருந்து..வேறுபட்டு தனித்து சிந்திக்கும் போது அந்த சிந்தனை சரித்திரமாகிறது...அப்படிப்பட்ட சரித்திரம் படைக்க இளைஞர்கள் முன் வரும்போது...அரசியல் சந்தனமாகும்...அதுவரை சாக்கடைதான்.

மதி
10-03-2008, 01:21 PM
அட...
சுகந்தரே... கவலை வேண்டாம்... வரம் சீக்கிரமே கிடைக்கும்..!

நீங்களும் ஏதாவது மொக்கையா எழுதுவீங்கன்னு பாத்தேன்.. நல்லவேளை சீரியஸாவே பதில் எழுதிட்டீங்க...!

யவனிகா
10-03-2008, 01:30 PM
இல்லண்ணா மொய் வைக்காம வந்த வழியை பாத்துகிட்டு திரும்பி போயிடுவாங்க...அப்புறம் நஸ்டம் எனக்கும் என் பொண்டாட்டிக்கும்தான்...!! அதனால திருமணத்துக்கு பிறகு என் மனைவியை அவர்களின் நண்பர்களோடு கண்டிப்பா பேச அனுமதிப்பேன்...!!
!!

மொய் வெக்காமப் போனா விட்டுடுவமா...மருமவப் புள்ளைக்கு ஒரு நஷ்டம்னா சும்மா விட்டுடுவனா?


பெரிய்ய்ய்ய்ய மனசு உனக்கு சுகந்தா...எம்பொண்ணு அதிர்ஷ்டசாலிதான்...

சிவா.ஜி
10-03-2008, 01:38 PM
சுகந்தின் தெளிவான சிந்தனை...அசத்துகிறது.நானெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டேம்ப்பா...என் மனைவியை அவருடைய பழைய நன்பர்களுடன் பேச அனுமதிப்பேன்..அப்படி இப்படின்னு பந்தா காமிக்காம....எதார்த்தத்தை பளிச்சுன்னு சொல்லியிருக்கிற பாங்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
சுபி சொன்னது ரொம்ப சரி, நாம அனுமதி கொடுத்தாலும் முடிவு பண்ண வேண்டியது அவங்கதானே...அதே மாதிரிதான்...இல்லறத்தின் ஆரம்பத்தில் புரிதல் அதிகம் வலுவடையாத நிலையில்...பரிமாறிக்கொள்ளப்படும்..சில வாக்குவாதங்களை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று சொல்லியிருப்பதும் அருமை.
அந்த சமயத்தில் தனக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமென்று விரும்புவது சுபி சொன்னதைப் போல ஒவ்வொரு ஆணுக்கும் இருக்கும் இயல்பான எதிர்பார்ப்பு...அதை புரிந்து கொண்டால்...எல்லாம் சுகமே...

சூப்பர் சுகந்த்...வாழ்த்துகள்.

சுகந்தப்ரீதன்
10-03-2008, 01:42 PM
நீங்களும் ஏதாவது மொக்கையா எழுதுவீங்கன்னு பாத்தேன்.. நல்லவேளை சீரியஸாவே பதில் எழுதிட்டீங்க...!

உங்களுக்கு முன்னாடி நான் பதில் எழுதியிருந்தா அந்த மூனுபத்தியோட முடிச்சிருப்பேன்... சீரியஸா என்னை தொடந்து எழுத வச்சது நீங்கதான் மதி..அதுக்கு உனக்கு டேங்ஸ்ப்பா..:icon_b:


மொய் வெக்காமப் போனா விட்டுடுவமா...மருமவப் புள்ளைக்கு ஒரு நஷ்டம்னா சும்மா விட்டுடுவனா?.
அதெப்படி விடுவீங்க..பாதிப்பு உங்களுக்கும்தான...??:wuerg019:


பெரிய்ய்ய்ய்ய மனசு உனக்கு சுகந்தா...எம்பொண்ணு அதிர்ஷ்டசாலிதான்..

அப்ப நான் இல்லியா....??:fragend005::confused:

மனோஜ்
10-03-2008, 01:44 PM
மன்மதன் மணியா அண்ணா நட்பும்
பாரதி அண்ணாவின் எழுத்துகளும்
தாமரை அண்ணாவின் பட்டியலும்
பிரவினின் முயற்சிகளும்
பூவின் புன்னகையும்
சுகந்தனின் சிந்தனையும்
சிவாவின் அரசியலும்
மலரின் கேள்விகளைகலில்
அமரன் ராஜா அண்ணாவின் பார்வையில் அழகாய் மலர்ந்துள்ளது

சுகந்தப்ரீதன்
10-03-2008, 01:46 PM
அந்த சமயத்தில் தனக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமென்று விரும்புவது சுபி சொன்னதைப் போல ஒவ்வொரு ஆணுக்கும் இருக்கும் இயல்பான எதிர்பார்ப்பு...அதை புரிந்து கொண்டால்...எல்லாம் சுகமே...

சூப்பர் சுகந்த்...வாழ்த்துகள்.

மிக்க நன்றி அண்ணா...:icon_b: எல்லாம் உங்களை மாதிரி அண்ணனுங்களோட வாழ்க்கையை பார்த்து தெரிஞ்சுக்கிட்டதுதான்....!:icon_rollout:!

மலர்
10-03-2008, 03:12 PM
விடா முயற்சியும், உண்மையும் எந்தப்படைப்பையும் அழகாக்கும். உண்மையை எழுதுவது எளிதானது மட்டுமல்ல; எப்போதும் அழகாகவே இருக்கும்
உண்மை தாண்ணா...
உங்கள் கருத்துக்கு நான் தலைவணங்குகிறேன்..

"காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு" என்பதைப் போல எதை எழுதினாலும் இடைவிடாமல் பாராட்டும் மன்ற உறவுகளின் அன்பே எழுத வைக்கும் தூண்டுகோல். கூடவே உறவுகளின் பின்னூட்டம் சாதாரணமான படைப்பைக் கூட சரித்திரம் படைத்ததைப் போன்ற எண்ணத்தை வரவழைக்கும்.
தேதியில்லாக்குறிப்புகள் உங்களிடையேயும் தாக்கத்தை கொடுத்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி. உங்களின் படைப்பைக் காண மன்றம் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் மறந்து விட வேண்டாம்.
சிலையை செதுக்கும் உளிக்கு சமம்ன்னா நம் மன்ற மக்களின் உற்சாகமும் பாராட்டும்....
எத்தனையோ கவிஞர்களை கவிதாயினிகளை... கதை ஆசிரியர்களைன்னு எல்லாருடைய திறமையையும் வெளிய இழுத்து கொண்டு வந்திருக்கு..... மன்றத்துக்கு ஒரு சலாம் போட்டிரலாம்,....
ம்ம்ம் என்னுடைய படைப்............பா....ன்னா
ஹீ..ஹீ.... அப்பிடி ஒண்னு கொடுக்கலாமின்னு நானும் கிட்டதட்ட மன்றத்துல ஜாயின் பண்ணுன நாளையில இருந்து யோசிக்கிறேன்......
முடி..........லை....ஹீ...ஹீ...... சீக்கிரம் போடணும்...

எல்லாம் சரி.... மிகக்குறைவாக எழுதியிருக்கும் என்னைக் கேள்வி கேட்டுவிட்டு, மிகச்சிறந்த படைப்பாளிகளிடம் கேள்வி கேட்க மறந்ததெப்படி மலர்..?? யாரையுமே மறக்கவில்லை அண்ணா..!!
அதுசரி...மிகச்சிறந்த படைப்பாளின்னு யாரை சொல்லுறீங்க... உங்களுக்கு தன்னடக்கம் இருக்குங்கறதுக்காக இப்பிடியெல்லாம் பொய் சொல்லக்கூடாது அண்ணா..!!
உங்களோட தேதியில்லா குறிப்புகள் என்னை ரொம்ப கவந்தது... எல்லாமே யதார்த்தமான கிராமத்து நிகழ்வுகளை பெரும்பாலும் உள்ளடக்கியிருக்கீங்க அதுல...!! நான் ஒரு கிராமத்து பெண்ங்கிறதாலயோ என்னவோ அது ரொம்ப கவர்ந்துடுச்சி என்னை..!!

ஷீ-நிசி
10-03-2008, 03:57 PM
ஆகா...நான் எஸ்கேப்..!

கேள்விகளின் மலர்"வால்" பதில் சுகந்தம் வீசப்போவது உறுதி

நன்றி மலர்..!

வாங்க வாங்க ராஜா சார்....

மீண்டும் காண்பதிலே மிக மகிழ்ச்சி :)

மலர்
10-03-2008, 04:24 PM
ஒரு சன் பிறந்த உடனே குடும்பக் கட்டுப்பாடு செய்தாச்சு அப்புறம் எப்படி டென்சன் வரும்? ஹீ..ஹீ...
நற....நற......
ஆரம்பமே மலருக்கு....... கடியா...... :medium-smiley-100::medium-smiley-100:

பெரிய காரியங்களுக்கு இடையில் இப்படிச் சிறிய காரியங்களை நுழைக்கத் தெரிந்தால்.. மிக அதிகமாகச் சாதிக்கலாம்
ஏனென்றால் எந்த ஒரு காரியமும் நம் தனி ஒருவரால் செய்யப்படுவது இல்லை.எல்லா வேலைகளையும் நாமே செய்யப் போவது இல்லை.
எந்த காரியம் நடக்கிறதோ அதன் மீது உழைப்பவர் கவனம் பதிகிறது. எந்தக் காரியம் நடக்கவில்லையோ அதன் மீது சோம்பேறிகள், முதலாளிகள் கவனம் பதிகிறது..
அஎல்லாமே நச்....ன்னா :smartass:
இதுல நான் எல்லாம் 40% தான்..... இந்த அளவுக்கு வர இன்னும் நிறைய டிரை பண்ணனும்..... :shutup::shutup:


முக்கியமான வேலைகளை நிதானமாகவும், முக்கியமில்லாத வேலைகளை அவசரமாகவும் செய்தால் போதும். சில வேலைகளை செய்தாலும் செய்யாவிட்டாலும் பிரச்சனை இல்லை. நான் மாத்த வேண்டிய இன்னொரு குணம்... :icon_hmm: முக்கியமான வேலையை ரொம்ப வேகமா செய்வேன்...
அதனாலயோ என்னம்போ பதட்டம் தானா கூடவே சேந்து ஒட்டிக்கும்...


சில திறமைகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியதாகவும் இருக்கும். பல காரியங்களை ஒரேசமயத்தில் செய்தல்.. மூளையைக் கவலை வலையில் சிக்காமல் தெளிவாகச் சிந்திக்க வைத்தல் இப்படி...
உங்க பதிலில் இருந்து நிறைய கத்துக்கணும்...
நிறைய நல்ல கருத்துக்களை உள்வாங்கணும்... அருமையான பதில்களை
அடுக்கடுக்கா கொடுத்த அண்ணனை ஓடிவந்து பாராட்டணும் போல இருக்கு.. :aktion033::aktion033:

குடும்பம்.. வேலை.. மன்றம்.. நட்புகள்.. எப்படி பேலன்ஸ் செய்வது? எதுக்கு பேலன்ஸ் பண்ணனும்.. அப்படிங்கற நம்பிக்கை தானே காரணம். அந்த நம்பிக்கை எப்ப வரும்.. அவங்களை நாம் வேணும்னே அவாய்ட் பண்ணாம இவ்வளவு நாள் இருக்கறதினால.. ம்ம்ம் பேலன்ஸ் பண்ணாமலே நீங்க சமாலிப்பீங்க......:icon_tongue::icon_tongue: ம்ம் ஆனா எல்லாராலையும் முடியுமா....ம்ம்
ஏன் முடியாது... அதெல்லாம் முடியுமின்னு உடனே நங்குண்னு தலையில கொட்டுற மாதிரி பதில் வரும்.... :sport-smiley-019: :sport-smiley-019: ம்ம் வேணாம் வலிக்கும்... :icon_cool1: :icon_cool1: ஸோ..... இந்த கருத்தும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது....:thumbsup:


10 நிமிஷம் ஃபிரீயா இருந்தா நீங்க படம் கலெக்ட் பண்ணி ஒரு பதிவு போடுற மாதிரி..
5 நிமிஷம் ஃபிரீ டைம் கிடைச்சா அதை ஒருத்தர் ஸ்பெல்லிங் மிஸ்டேக் சரி பார்த்து தர்ர மாதிரி.
ஹீ....ஹீ...... லாஜிக் எங்கேயோ இடிக்குதே.......:icon_shades::icon_shades:
நற..... நற..... :icon_shout: :icon_shout:நாங்க எல்லாம் அப்பியே போட்டா நீங்க எல்லாம் பயந்துருவீங்கன்னா..... :icon_03:எல்லாம் உங்க நல்லதுக்காக தான்... :sport-smiley-018::sport-smiley-018: ஹீ..ஹீ......நன்றி அண்ணா :icon_08: :icon_35:

தாமரை
10-03-2008, 04:54 PM
b) ஒவ்வொருத்தரை பற்றிய உங்களின் கணீப்பீடும் என்னைய ஆச்சரியப்படுத்தியிருக்கு... நீங்கள் ஒருத்தரை எப்பிடி எதன் அடிப்படையில் மதிப்பீடு செய்வீர்கள்....??


விவரமான கேள்விதான்.. விவகாரமானதும் கூட.. சரி கொஞ்சம் பழசை யோசிப்போம்!

நானா எத்தனை பேர்கிட்ட பேச ஆரம்பிச்சு இருக்கேன் யோசிச்சுப் பார்த்தால் மிகக் குறைவுதான்.

நான் எவ்வளவு தான் மிகப் பாசமாக, அன்பாக பேசினாலும் உங்களிடம் உங்க உண்மை பேர் என்ன? என்ன செய்யறீங்க? சொந்த ஊர் என்ன? என்ன படிச்சிருக்கீங்க இப்படி ஆழமா போய் உங்கள் தனிப்பட்ட விஷயங்களைக் கேட்பதில்லை..

சொல்லப் போனா யாரையும் அந்த அளவுக்கு துல்லியமா தெரிஞ்சிக்கணும்னு எனக்கு ஆவல் இருந்ததில்லை.. அப்படியும் தெரிந்து கொள்வதும் இல்லை. அவசியம் ஏற்பட்டால் மட்டுமே யாரையும் எடை போடுகிறேன்.

எல்லாமே என் மேல் நம்பிக்கை, மதிப்பு போல சில விஷயங்கள் ஏற்பட்ட பிறகு நீங்களாகச் சொல்பவை. நானும் பல விஷயங்களை சும்மா போட்டு வைத்திருக்கிறேனே தவிர எதையும் ஆழமாய் பதிந்து வைத்துக் கொண்டு யோசிப்பதில்லை.

உங்களின் எழுத்துக்களில் தொடர்ச்சியாகப் படிக்கும் போது அதில் உள்ளோட்டமாய் பதிந்திருக்கும் சில உணர்வுகளைப் படிக்கிறேன். என்னதான் கற்பனை செய்து எழுதினாலும் ஒவ்வொரு பதிப்பிற்கும் இடையே உள்ள ஒப்புமைகளை கூர்ந்து கவனித்தால் இவருக்கு என்ன வகை எண்ணவோட்டம் இருக்கிறது? இவரின் சிந்தனையில் மேலே இருக்கும் என்ன, அடிமனதில் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணம் என்ன? என்ன வார்த்தையை போட்டுவிட்டு மறுபடியும் மாற்றி எழுதி இருக்கிறார்? இப்படி பல விஷயங்கள் தெரிய வரும்.. தங்கள் குணாதிசயங்களை அடிக்கடி மாற்றிக் காட்டுபவரிடம் நான் எச்சரிக்கையாகவே இருக்கிறேன்..

புதிதாய் வருபவர்களுக்கு நான் வரவேற்பு சொல்வதில்லை என்பது பலரின் ஆழ்மனதில் உள்ள குறைபாடு. என்ன செய்வது. நான் கண்காணிப்பு மனநிலையில் இருந்து அடுத்த மனநிலைக்கு வர பலரின் எழுத்துக்கள் விடுவதில்லை.

எல்லோரும் என் மனதில் 0 என்ற நிலையிலேயே உள்ளே வருகிறார்கள். அவர்களின் எழுத்துக்கள் செயல்கள் அவர்களை மேலேயும் கீழேயும் கொண்டு செல்கின்றன. சில சைக்கோக்களைத் தவிர யாவரும் தாம் செய்வது சரி என்பதற்கு ஒரு அடிப்படைக் காரணம் இருப்பதாலேயே செய்கின்றனர் எனத் தீவிரமாக நம்புபவன் நான். ஒருவர் ஒரு விஷயம் சரி என்று வாதிட்டும் பொழுது அது எந்தக் கோணத்தில் சரி என சரிபார்த்துக் கொள்கிறேன். தொடர்ச்சியாக ஒரு கோணத்தில் இருந்து அவர் பேசும் பொழுது அவரின் எக்ஸ்போஸர் என்ன? அவருக்கு எப்படி அந்த எண்ணங்கள் வந்திருக்கும் எனப் புரிய ஆரம்பித்துவிடுகிறது..

எல்லோருக்கும் நான் என் மனதில் புரொஃபைல் வைத்துக் கொள்வதில்லை. இதற்கு நான் நம்பி இருப்பது என் நினைவுத் திறனை, யாராவது திடீரென அவரைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம் என்றால் சும்மா மெமெரியில் ஒரு சர்ச் அடித்து எப்போதோ அவர் எழுதியதை வைத்து ஏற்பட்ட எண்ணத்தைச் சொல்லிவிடுகிறேன்.

மற்றபடி ஒருவரைப் பற்றி துல்லியமாகத் தெரிந்து கொள்ளும் ஆசையை விட எனக்கு பொதுவாக மனித இயல்புகளைப் பற்றியும் அதை உந்தும் காரணிகளைப் பற்றியும் அறிய ஆவல் அதிகம். கிடைக்கும் பல புள்ளிகளை இணைத்துக் கோலம் போடுகிறேன். அது பலசமயம் யாருக்குமே புரியாமல் வளையம் வளையமாக மக்களை குழப்பி விடுகிறது.

சரி எந்த அடிப்படையில் எடை போடுகிறேன்

1. எந்த அளவு தன் மனதை திறந்து வைத்திருக்கிறார்?
2. எந்த விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார்?
3. எந்த விஷயத்தின் பக்கம் தலையே வைத்துப் படுப்பதில்லை?
4. பொதுவாகவே வலியுறுத்தும் கருத்துகள் என்ன?
5. எந்த டாபிக்கை எடுத்தால் மருண்டு ஓடிவிடுகிறார்?
6. எந்த மாதிரி கருத்துகள் எதிர்க்கப் படுகின்றன?
7. அடிக்கடி படிப்பது ஆனால் பதிலே போடாத திரிகள் என்னென்ன?
8. ஒருவரின் பதிவுகளில் இழையோடி வரும் நோக்கம்.

இப்படிப் பல விஷயங்கள் உண்டு. ஆனால் எல்லாவற்றிற்கும் முதலாக எனக்குள் ஒரு உணர்வு எழவேண்டும்.. இந்த நபரை கண்காணிக்க வேண்டும் அல்லது இந்த நபருக்கு என் துணை தேவைப்படும் அல்லது இந்த நபர் ஒரு நல்ல வழித்துணை என்று..

மற்றவர்கள்?

என் மனிதவியல் ஆராய்ட்சியின் ஸ்பெசிமன்கள்.:D:D:D

ஆனாலும் ஒன்று.. என்னுடைய கணிப்பு தவறாக இருக்க அதே அளவு வாய்ப்பும் இருக்கிறது. யாரைப் பற்றிய கணிப்பு என்றாலும் என்னுள்ளேயே வைத்துக் கொள்வதாலும், அடிக்கடி ஃபைன் டியூன் செய்து கொள்வதாலும், பலர் தங்களைப் பற்றிய கணிப்புகளை தெரிந்து கொள்ளவே பயப்படுவதாலும் நான் தப்பித்துக் கொண்டு வருகிறேன்..

மதி
10-03-2008, 04:59 PM
சூப்பர் பதில் தாமரை...

தாமரை
10-03-2008, 05:01 PM
ஆமாம் மலரின் மதியூகம்னா?

மலரின் மதி ஒரு யூகம் தானா? உண்மை இல்லியா?

அமரன்
10-03-2008, 05:04 PM
ஆமாம் மலரின் மதியூகம்னா?
மலரின் மதி ஒரு யூகம் தானா? உண்மை இல்லியா?
மலருக்கு மதியே இல்லை என்கிறார்கள் ஒரு சாரார்..
இப்படி வேறு கிளம்பிவிட்டீங்களா..

மதி
10-03-2008, 05:05 PM
ஆமாம் மலரின் மதியூகம்னா?

மலரின் மதி ஒரு யூகம் தானா? உண்மை இல்லியா?

இது சூப்பரு.... :aetsch013::aetsch013::aetsch013:

மலர்
10-03-2008, 06:00 PM
நான் சிறுவயது முதலே ஏதாவது விஞ்ஞான கண்டுபிடிப்பாளராக ஆக வேண்டும் என்று விருப்பம் உடையவானாக இருந்தேன். நன்றி பிரவீண் அண்ணா.... :icon_b:
எங்களுக்காய் நேரம் ஒதுக்கி பதில் கொடுத்ததற்கு ஸ்பெஷல் தங்ஸ்.... :frown:
ஆஹா.... எல்லாரும் ஒரு FM முதல்ல தயாரிச்சிட்டு தான்
அப்புறம் விடுறாங்க.... :cool:

இதில் நான் எனக்கு தெரிந்தவரை சிறப்பாக கற்றுக்கொண்டதற்கு ஆர்வம், தேவை, சூழ்நிலை எல்லாம் ஒத்து அமைந்தது. எனது அம்மா நான் நல்ல நிலையில் வரவேண்டும் என்று நான் ஹார்டுவேர் படிக்கும் காலத்தில் ஒரு கம்ப்யூட்டர் (என் அண்ணன், நான் கணினி கேட்ட போது சாப்ட்வேர் படிப்பவரே, கம்ப்யூட்டர் வைத்து கொள்வதில்லை, உனக்கெதற்கு கம்ப்யூட்டர் என்று மறுத்து விட்டார்) கேட்டவுடன், பணம் கொடுத்தார். (அப்போது புது கம்ப்யூட்டர் 80,000 ரூபாய், பழைய கம்யூட்டர் 25,000 ரூபாய்). நடுத்தர குடும்பத்தில் இதெல்லாம் ரொம்ப பெரிய விசயம்.
உங்களின் முயற்சியும் ஆர்வமும் கண்டு ஆச்சரியாமவே இருக்குன்னா.....
அதைவிட அப்போதே உங்களை முயற்சிக்கு ஆதரவு கொடுத்த உங்க
அம்மாவை நினைக்கும் போது.... பெருமையா இருக்கு.... :icon_b: :icon_b:

மலர்
10-03-2008, 06:04 PM
இது தான் மலரு கேப்ல வாரறது... இதக் கத்துக்கோ முதல்ல...:lachen001::lachen001::lachen001:
இனி ஸ்பெல்லிங் மிஸ்டேக் சரி செய்ய யார்கிட்டயாவது போவியா...போவியா...போவியா:sprachlos020::sprachlos020::sprachlos020:
ம்ம்ம் போவேனே..போவேனே...போவேனே....
ஹீ..ஹீ.....
அப்பிடி எல்லாம் உடனே திருந்திட முடியாதுக்கா....
அப்புறம் ஊருல ஒரு பய நம்மளை மதிக்க மாட்டான்....
(நன்றி:நந்தா)

யவனிகா
10-03-2008, 06:16 PM
முதல் கேள்வி அக்காவிடம் :- [B]உங்களுக்கு பள்ளி பருவத்திலோ இல்லை கல்லூரி பருவத்திலோ எதிர்காலத்தை பற்றிய ஒரு லட்சியம் நிச்சயம் இருந்திருக்கவேண்டும்..
உங்களுடைய அந்த லட்சியம் என்ன..??
இப்போது அது நிறைவேறிவிட்டதா.. இல்லையெனில் இன்னும்
அதற்காக முயற்சிசெய்து கொண்டு இருக்குறீர்களா.....??

மலர் இந்தக் கேள்வி கேட்ட இரண்டு நாட்களில் என்னையே நான் கேட்டுக் கொண்டிருந்தேன்...ஏதாவது இலட்சியம் இருந்ததா என்ன என்று....அது தான் பதில் பதியத் தாமதம்.

முதலில் நினைவு வந்தது...ஒரு கவிதை...

அம்மா சொன்னாள்
இந்தத் துறை...
படித்தேன்...

அம்மா சொன்னாள்
சுடிதார் பொருத்தமான உடை
உடுத்தினேன்

அம்மா சொன்னாள்
இது திருமண வயது
மணம் புரிந்தேன்

அடுத்து
என் முறைக்காகக்
காத்திருக்கிறேன்...

பெரிய இலட்சியம் எதுவும் இருந்தில்லை...சின்னச் சின்னச் ஆசைகள்...அப்போதைக்கப்போதைய
குட்டிக் குறிக்கோள்கள்...

என்னைப் பொருத்தவரை நான் என் குடும்பத்தின் கண்ணாடி போல...அவர்களுடைய இலட்சியங்களை என்னுடையதாக உணர்ந்திருக்கிறேன்...பிரதிபலித்திருக்கிறேன். அது எனக்கு மகிழ்ச்சியையே தந்திருக்கிறது...தரும்.

நிறைவேறாத ஆசை என்றால் ஒன்றே ஒன்று நினைவில் இருக்கிறது.
எனக்கு பரதநாட்டியம் பிடிக்கும்...கற்றுக் கொண்டிருந்தேன் சின்ன வயதில்...சலங்கை கட்டி ஆடும் போது என்னையே பெருமிதமாய் உணர்வேன். தொடர முடியாமல் போய் விட்டது. ஆசை மட்டும் இருக்கிறது உள்ளே...நீறு பூத்த நெருப்பாய்...!!!

மற்றபடி ஓரளவுக்கு நிறைவேறுமா என்று கணித்தே ஆசைப்பட்டதால்
பெரிதாய் நிறைவேறாமல் போன ஆசைகள் எதுவும் இல்லை.

மலர்
10-03-2008, 06:19 PM
எனக்கு தெரிந்து நட்பு என்பது வயது பாத்து வருவதில்லை.....(கோப்பெருந்தேவருக்கு பிசிராந்தையர் வயது தெரியுமா என்ன...???)
வயது பார்த்து வரும் நட்புக்கு வேறு பெயர்.....வேறு காரணங்களும்தான்...!!!!:rolleyes:
நான் என்றுமே மனதால் மிகவும் இளமையானவன்....:rolleyes:...அதனாலேதான் அதே அளவுக்கு இளமையான மனதுடையவர்கள் எல்லோருமே என்னுடன் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.....இருப்பார்கள்...
அன்புடன்
மணியா..:D
மணியாண்னாவின் மணியான பதில்களை பார்த்து நான் பூரித்து போய்
விட்டேன்....... :icon_good: நிச்சயம் பிசிராந்தையாரின் வயது தெரியாது தான்....!!:icon_tongue: நீங்களும் மம்ஸூம்... முஸ்தபா முஸ்தபா டோண்ட் வொரி முஸ்தபான்னு :icon_drunk: மெரீனா பீச்சுல பாடி டான்ஸ் ஆடினதை பாத்த பிறகும் :icon_shades: கூட நான் கேட்டிருக்க கூடாது தான்.....
:icon_cool1: :shutup:
மன்னிக்க தலையே...... :icon_shout: :icon_shout:

மன்மதன்
10-03-2008, 06:32 PM
மெரீனா பீச்சுல பாடி டான்ஸ் ஆடினதை பாத்த பிறகும் :icon_shades: கூட நான் கேட்டிருக்க கூடாது தான்.....

மன்னிக்க தலையே...... :icon_shout: :icon_shout:

நான் அப்பயே தலை கிட்டே சொன்னேன்.. ஜாக்கிங் போற குண்டு பொண்ணு :rolleyes::rolleyes: அப்படியே நம்ம மலரு மாதிரியே இருக்குன்னு.. அவர்தான் நம்பல..:D:D

நுரையீரல்
10-03-2008, 08:11 PM
திருமணத்திற்க்கு முன் காதலியாக நீங்கள் கண்ட அண்ணிக்கும் இப்போது நீங்கள் காணும் அண்ணிக்கும் உள்ள மாற்றங்கள்...??
உண்மையைச் சொல்லணும்னா அவங்க என் மேல வச்சிருக்கற காதலில இன்னிக்கு வரைக்கும் எந்த மாற்றத்தையும் காணவில்லை.

காதலியாய் இருந்தவள், மனைவியாய் மாறி தாயாகியிருக்கிறாள். மற்றபடி சொல்லுமளவுக்கு மாற்றங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.


இனிமேல் திருமணமாகப்போகிற தம்பி தங்கைகளுக்கு உங்க அட்வைஸ்.... ??(நிறைய பேருக்கு யூஸ் ஆகும்)
எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் -----> அட்வைஸ் பண்றது <----- அநேகமா எல்லாருக்குமே பிடிக்கும்.

இப்பல்லாம் உலகத்துல ஒன்ன கொடுத்து தான் இன்னொன்ன வாங்க வேண்டியிருக்கு. அன்பும் அப்படித்தான் ஆனா அதோட பலன் மட்டும் இரட்டிப்பாய் நமக்கே திரும்பிவரும். So என்னோட அட்வைஸ் முழுக்க, முழுக்க உங்க பார்ட்னர் மீது அளவுக்கதிகமா அன்பு செலுத்துங்க என்பது தான். உண்மையான அன்பு செலுத்தும் தம்பதியினர் நெடுங்காலம் வாழ்வதாக மெடிக்கல் சயின்ஸே சொல்லுது.

நிறைய தம்பதியினர்களுக்குள் கல்யாணம் ஆனவுடனே கருத்து வேறுபாடு சண்டை, சமாதானம்னு ஏகப்பட்ட பிரச்சினைகள் தான் இப்பல்லாம் அங்குமிங்குமாய் பார்க்கிறோம். இதுக்கு மெயின் காரணம் கணவன் (அ) மனைவி உறவுக்கு கொடுக்கப்படவேண்டிய முக்கியத்துவம் என்னானு தெரியாம இருக்கறது தான்.

அதுலயும் குறிப்பா நிறைய தமிழ் சினிமா பார்த்துட்டும், இளையராஜா பாட்டைக் கேட்டுட்டும் திரியற இளைஞர்கள் கல்யாணம் பண்ணிட்டு பண்ற பாச சேட்டைகளால் கஷ்டப்படுவது என்னமோ இளம் மனைவிமார் தான். "அம்மா என்றழைக்காத உயிரில்லையே..." ல ஆரம்பிச்சு "என் தாயெனும் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே" வரைக்குமுள்ள பாடல்களைக் கொண்டுவந்து தாம்பத்திய உறவுக்குள் நுழைக்கும் இளைஞர்களை நினைத்தால் தான் மிகச் சங்கடமா இருக்கு.

கல்யாணம் நடப்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தானே தவிர. ஒரு மாமியாருக்கும் மருமகளுக்கும் அல்ல. ஒரு தாய்க்கு மகன் தான் கடமை செய்ய வேண்டுமே தவிர, மருமகள் செய்ய வேண்டிய கட்டாயமில்லை. அதே மாதிரி தாயா? தாரமா? என்று உங்களுக்குள்ளே கேள்வி கேட்டு இரண்டையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். தாயும் வேண்டும், தாரமும் வேண்டும்.

பிக்கல் பிடுங்கல் இல்லாத தனிக்குடித்தன வாழ்க்கை வாழ வேண்டும் என்று தான் நிறைய இளம் மனைவிகள் நினைக்கின்றனர். ஆனால் பிரச்சினைகளே தனிக்குடித்தனத்தில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. இதற்கு பல உதாரணங்கள் உண்டு. எனக்குத் தெரிந்து முதல் ஒரு வருடமாவது கணவனின் பெற்றோருடன் மனைவி வசிப்பது தான் சிறந்தது. ஒரே வீட்டில எத்தனை நாளைக்கு தான் ரெண்டு பேரும் ஒருத்தரோட முகத்தை இன்னொருத்தர் பார்த்திட்டு இருப்பது. சீக்கிரம் போர் அடிச்சு போயிடும். போருக்கு அப்புறம் சண்டை தான் வரும். ஆனா சண்டைய போடுறதுக்கு மாற்று ஆள் (மாமியார், நாத்தணார்) இருந்தால் கணவன், மனைவிக்குள் சண்டை ஏற்படாது.

மாமியார், மருமகள் சண்டை வந்துச்சுனா அத டீல் பண்றது கொஞ்சம் கஷ்டம் தான். இந்த இடத்துல முழுக்க முழுக்க சுய நலம் பார்த்துக்கறது தான் நல்லது. இங்கயும், அங்கயும் நடிச்சிட்டு தான் காலத்த ஓட்டணும். அம்மாவப் பத்தி மனைவி கம்ப்ளெயிண்ட் பண்ணினா -> அப்படியா சொல்லுச்சு எங்கம்மானு நல்ல கணவன் போல நடிங்க.

மனைவியைப் பத்தி அம்மா கம்ப்ளெயிண்ட் பண்ணினா -> அப்படியா சொன்னா அவ, அவள இப்பவே அவங்கம்மா வீட்டுக்கு அனுப்புறேன் பாருனு, மனைவியைக் கூட்டிட்டு போய் அவங்கம்மா வீட்டுல விட்டுட்டு அங்கயே ரெண்டு மூணு நாளைக்கு இருந்து மாப்பிளை விருந்தெல்லாம் சாப்பிடறதோட இல்லாம, அப்படியே மெல்லமா மனைவிக்கு அட்வைஸ் பண்ணனும்.

நிறைய மனைவிகளுக்கு அவங்கம்மா வீட்டுல இருந்தா தான் காதே கேட்குது. அதனால அட்வைஸ் எல்லாம் அவங்கம்மா வீட்டுல வச்சு சொன்னா கொஞ்சமாவது கேப்பாங்க.

அப்புறம் கல்யாண வாழ்க்கைக்கு ஆதாரமே குழந்தை தான். அதனால் குழந்தைப் பேறை தள்ளிப்போடாதீர்கள். கல்யாணம் ஆகி ஒரு வருடத்தில் குழந்தை பெற்றுக் கொள்வது கூட ஆரோக்கியமான தாம்பத்தியத்திற்கு உதவும்.

தாம்பத்ய வாழ்க்கைக்கு மிக மிக முக்கியம் ரொமான்ஸ். ரொமான்ஸ்க்கும் காமத்துக்கும் இடைவெளி மிக அதிகம். அதனால் இரண்டையும் போட்டு குழம்பிக் கொள்ள வேண்டாம்.

அடிக்கடி பரிசுப் பொருட்கள் கொடுத்து அசத்துங்கள். உங்கள் பார்ட்னருக்கு மிகவும் பிடித்த விஷயம் எது என்று அவருக்குத் தெரியாமலேயே தெரிந்து வைத்துக் கொண்டு, அதை தக்க சமயத்தில் பரிசளியுங்கள். அடிக்கடி ஹேண்ட்சம் / ஸ்வீட்டி / பேரழகி போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களை அழையுங்கள். உங்கள் பார்ட்னரைப் பற்றியே நீங்கள் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பது போன்றதொரு மாயையை உருவாக்குங்கள்.

இன்னும் நிறைய எழுத ஆசை தான்.

சுகந்தப்ரீதன்
11-03-2008, 04:11 AM
ஆமாம் மலரின் மதியூகம்னா?

மலரின் மதி ஒரு யூகம் தானா? உண்மை இல்லியா?

நல்லா கவனிச்சி பாருங்க அண்ணா...!!:confused:

இது மலரின் மதி யூகம் இல்லை... மலரின் மதி வியூகம்...:mini023::sprachlos020:

க.கமலக்கண்ணன்
11-03-2008, 07:50 AM
என்னைப் பொருத்தவரை நான் என் குடும்பத்தின் கண்ணாடி போல...அவர்களுடைய இலட்சியங்களை என்னுடையதாக உணர்ந்திருக்கிறேன்...பிரதிபலித்திருக்கிறேன். அது எனக்கு மகிழ்ச்சியையே தந்திருக்கிறது...தரும்.

அருமையான பதில் யவனிகா

அம்மா என்றால் அன்பு யவனிகா என்றால் கண்ணடி

அன்பை இரண்டு மடங்காக பிரதிபலிக்கும் நீங்கள்

அற்புதமானவர்தான்.... கொடுத்து வைத்தவர் தங்களின் கணவர்...

க.கமலக்கண்ணன்
11-03-2008, 08:04 AM
காதலியாய் இருந்தவள், மனைவியாய் மாறி தாயாகியிருக்கிறாள். மற்றபடி சொல்லுமளவுக்கு மாற்றங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

மலைக்க வைத்துவிட்டது உங்களின் இந்த வரிகள்...

மனைவி என்பவள் அன்னை போன்ற அன்பையும் அன்னைக்கு

மருமகள் அதாவது மறு மகளாக அன்பை செலுத்துபவளே

மனைவி... மிக அருமையாக பதில் அளித்து அனைவரையும் கவுத்துவிட்டீர்கள்... (உங்கள் மனைவி இதை படித்தாரா?)

அமரன்
11-03-2008, 08:34 AM
அப்புறம் இது ஒரு நல்ல கேள்வி...:D:D:D:D:D
இப்படி தான் இருக்கணும்னு இல்லை. ஸோ.. நெக்ஸ்ட் கொஸ்டின் ப்ளீஸ்...:icon_b: :icon_rollout::icon_rollout::icon_rollout:
சாதுரியமான பதில். இரட்டை வேடமிட்ட பதில்.. சிவப்புச் சாயம் பூசியதை மட்டும் வாசித்துப்பாருங்கள்.. இப்பிடி ஒரு புத்திசாலியா என்று பொறமை( மலரு அடிக்கடி சொல்லும் பஞ்ச் டயலாக்!!!!)

நன்றி மதி.. இது பல்வேறு பணிப்பளுவுக்கு நடுவில் பதில் தந்தமைக்காக..:)

மதி
11-03-2008, 08:57 AM
சாதுரியமான பதில். இரட்டை வேடமிட்ட பதில்.. சிவப்புச் சாயம் பூசியதை மட்டும் வாசித்துப்பாருங்கள்.. இப்பிடி ஒரு புத்திசாலியா என்று பொறமை( மலரு அடிக்கடி சொல்லும் பஞ்ச் டயலாக்!!!!)

நன்றி மதி.. இது பல்வேறு பணிப்பளுவுக்கு நடுவில் பதில் தந்தமைக்காக..:)

நான் இரட்டை வேடம் போடுறேனா...??:traurig001::traurig001::traurig001:
:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

அப்புறம் என்ன பணிப்பளுன்னு எல்லாம் பெரிய வார்த்தை சொல்லிட்டீங்க...???

சிவப்பு சாயங்களில் என்னன்னு எனக்கு சத்தியமா புரியல.. பதில் சொல்ல முடியாத.. தெரியாத கேள்விகளுக்கு.. "இது ஒரு நல்ல கேள்வி"ன்னு சொல்லிட்டு ஆரம்பிப்பது தானே வழக்கம்...

என்னப் போயி......:traurig001::traurig001::traurig001:

lolluvathiyar
11-03-2008, 09:30 AM
ஆகா மலர் கேள்வியை தொடுத்து விட்டார், அதற்க்கு இதுவரை வன்த அனைத்து பதில்களையும் படித்து உன்மையில் மெய் சிலிர்த்து போனேன்.
தாமதமாக கவனித்ததால் மூன்று பக்கம் தான்டி விட்டது. படித்து முடிக்க நேரம் எடுத்து விட்டது.
பதிலளித்தன் அனைவருக்கும் பாராட்டுகள்.


சரி எந்த அடிப்படையில் எடை போடுகிறேன்
4. பொதுவாகவே வலியுறுத்தும் கருத்துகள் என்ன?
5. எந்த டாபிக்கை எடுத்தால் மருண்டு ஓடிவிடுகிறார்?
6. எந்த மாதிரி கருத்துகள் எதிர்க்கப் படுகின்றன?

உங்கள் இந்த பதிவு முழுவது பொருமையாக படித்து பார்த்தேன் தாமரை அன்னா, எந்த அழவுக்கு ஆழமாக நீங்கள் கனிக்கிறீர்கள் என்பதை விட எங்களுக்கு விளக்கிய விதம் மிக அருமையாக இருந்தது.



ஓரளவுக்கு நிறைவேறுமா என்று கணித்தே ஆசைப்பட்டதால்
பெரிதாய் நிறைவேறாமல் போன ஆசைகள் எதுவும் இல்லை.

அருமையான பாலிசி நிரைவேறுவதை தான் ஆசை பட வேன்டும் அதை விட்டு பயன்படாது வெட்டி ஆசை எல்லாம் பட்டால் நமக்கு கஸ்டம் அடுத்தவர்களுக்கும் கஸ்டம்.

நுரையீரல் பதிவு எங்கு இருந்தாலும் அதை தேடி தேடி படிக்க வேன்டும். அந்த அளவுக்கு அதில் பல நக்கலுக்கு மத்தியில் ஏதாவது ஸ்டன்னிங் கருத்து இருக்கும்.


இப்பல்லாம் உலகத்துல ஒன்ன கொடுத்து தான் இன்னொன்ன வாங்க வேண்டியிருக்கு. அன்பும் அப்படித்தான் ஆனா அதோட பலன் மட்டும் இரட்டிப்பாய் நமக்கே திரும்பிவரும்.

ஆகா எத்தனை அற்புதமான வரிகள், இதன் இன்னொரு பகுதியை நுரையீரல் விட்டுவிட்டதால் அதை சொல்ல நான் கடமை படுகிறேன்.
அன்பை போலதான் வெறுப்பும் நீங்க மனைவிகிட்ட எந்த அளவுக்கு வெறுப்பு கொடுக்கிறீர்களோ, அதுவும் இரட்டிப்பாயய் நமக்கே திரும்பி வரும்.

போற வழியில என்னையும் சிக்க வச்சுட்டு போயிடுச்சு இந்த மலர். இருங்க விரைவில் பதில் தந்து விடுகிறேன்.

அமரன்
11-03-2008, 10:04 AM
தேதியில்லாக்குறிப்புகள் உங்களிடையேயும் தாக்கத்தை கொடுத்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி. உங்களின் படைப்பைக் காண மன்றம் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் மறந்து விட வேண்டாம்.

எல்லாம் சரி.... மிகக்குறைவாக எழுதியிருக்கும் என்னைக் கேள்வி கேட்டுவிட்டு, மிகச்சிறந்த படைப்பாளிகளிடம் கேள்வி கேட்க மறந்ததெப்படி மலர்..??

எத்தனை பூக்கள் பூத்தாலும் அபூர்வமான பூக்களுக்கு இருக்கும் வரவேற்பும் எதிர்பார்ப்பும் தனிதானே. அந்த வகையில் உங்கள் எழுத்துகளும் அடங்கும் அண்ணா. மிகையாகத் தெரிந்தாலும் நான் சொல்வது உண்மை. உங்கள் சின்னப்பதிவுகளைக் கூடப் படிக்கும்போது ஏதோ ஒரு வசீகரம். இப்படி எழுதவேண்டும், இதேபோல வார்த்தைகளை தேர்வு செய்யவேண்டும் என்ற ஆசை/பேராசை என்னுள் ஏற்படுவது வழக்கம். வசனம் அமைப்பதில் எனக்கிருக்கும் சந்தேக நிவர்த்திக்கு/ஆற்றலை மேம்படுத்த உபயோகமாக இருக்கும் பதிவுகளில் உங்கள் பதிவுகளும் அடக்கம்..

உங்களைப் போலவே மலரின் இதர எழுத்து முகங்களைக் காணும் ஆவல் எனக்கும் உள்ளது. திறமை இருந்தும் சபைக்கூச்சம் காரணாமாக எழுத மறுக்கும் மலர்மேல் கோபமும் உண்டு. இனியாவது எழுதுகிறாரோ பார்ப்போம்.
நன்றி அண்ணா..

சுகந்தப்ரீதன்
11-03-2008, 10:14 AM
உங்களைப் போலவே மலரின் இதர எழுத்து முகங்களைக் காணும் ஆவல் எனக்கும் உள்ளது. திறமை இருந்தும் சபைக்கூச்சம் காரணாமாக எழுத மறுக்கும் மலர்மேல் கோபமும் உண்டு..

மலருக்கா..ஹா...ஹா...!!:lachen001::lachen001:
சத்தியமா இதை யாருமே நம்பமாட்டாங்க...அண்ணாச்சி...QQQ:cool::cool:

அமரன்
11-03-2008, 10:19 AM
உங்களின் எழுத்துக்களில் தொடர்ச்சியாகப் படிக்கும் போது அதில் உள்ளோட்டமாய் பதிந்திருக்கும் சில உணர்வுகளைப் படிக்கிறேன். என்னதான் கற்பனை செய்து எழுதினாலும் ஒவ்வொரு பதிப்பிற்கும் இடையே உள்ள ஒப்புமைகளை கூர்ந்து கவனித்தால் இவருக்கு என்ன வகை எண்ணவோட்டம் இருக்கிறது? இவரின் சிந்தனையில் மேலே இருக்கும் என்ன, அடிமனதில் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணம் என்ன? என்ன வார்த்தையை போட்டுவிட்டு மறுபடியும் மாற்றி எழுதி இருக்கிறார்? இப்படி பல விஷயங்கள் தெரிய வரும்.. தங்கள் குணாதிசயங்களை அடிக்கடி மாற்றிக் காட்டுபவரிடம் நான் எச்சரிக்கையாகவே இருக்கிறேன்....
அடுத்தவரைக் கணிப்பது எப்படி என்று சொல்லி உங்களைப் பற்றிச் சொல்லிவிட்டீர்களே.. ஒரு சொல்லில் பல மணமடிக்க செய்யும் கலை உங்களுக்கு தமிழ்தந்த தந்த வரமோ.. உங்கள் கூர்ந்து நோக்கல் தந்த வரமோ தெரியவில்லை.. ஆனால் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.. எழுதுவதை படித்து விட்டுப் போகக்கூடாது என்ற நினைப்பில் உங்கள் சூட்சும வெற்றி தங்கிஉள்ளதோ என்றும் என்னுள் எண்ணுவதுண்டு..

இப்போது ஒரு சந்தேகம்...

ஒரு விடயம் தொடர்பாக என்பக்கச்சாய்தல் ஒன்றாக இருக்கும். ஆனால் அந்த விடயத்தின் மற்ற முகங்கள் அடுத்தவரைக் காயப்படுத்தும்போது/நல்லது ஏதாவது செய்யும்போது, பார்வை படும் அந்தத்திசையில் என்னை நிறுத்தி சிலசமயங்களில் எழுதுவேன்.. அது தப்பா சரியா என்று இதுவரை யோசித்தது இல்லை. அப்படியான சந்தர்ப்பத்தில் ஒருவரை எப்படி எடைபோடுவது?

(உங்கள் இரு பதில்களும் அச்சுப்பிரதி எடுத்து வைக்கவேண்டியவை பட்டியலில் இணைந்துவிட்டன)

தாமரை
11-03-2008, 03:38 PM
இப்போது ஒரு சந்தேகம்...

ஒரு விடயம் தொடர்பாக என்பக்கச்சாய்தல் ஒன்றாக இருக்கும். ஆனால் அந்த விடயத்தின் மற்ற முகங்கள் அடுத்தவரைக் காயப்படுத்தும்போது/நல்லது ஏதாவது செய்யும்போது, பார்வை படும் அந்தத்திசையில் என்னை நிறுத்தி சிலசமயங்களில் எழுதுவேன்.. அது தப்பா சரியா என்று இதுவரை யோசித்தது இல்லை. அப்படியான சந்தர்ப்பத்தில் ஒருவரை எப்படி எடைபோடுவது?



http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7679

இந்தத் திரியில் தான் நான் ஆதவனை எடை போட்டேன். ஏறத்தாழ நீங்கள் சொன்ன சிச்சுவேஷன் தான்.. நான் கேள்வி கேட்பவானாக இல்லாமல் பதில் சொல்பவனாக இருப்பேன்.. கேள்விகளை ஆதவன் தொடுக்க நான் பதில் சொல்லும் வண்ணம் இருக்கும். ஆதவனின் ஆரம்பக் கேள்விகளில் அவனின் உண்மைத்தனம் இருக்காது.. ஆனால் மெல்ல மெல்ல உண்மை சொரூபம் வருவதைக் காணலாம்..

இரண்டாவதாக; மற்றவர் மனம் கஷ்டப்படும் என்பதற்காக நிலையை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுதல் சரியல்ல. எதையும் சொல்லவேண்டிய விதத்தில் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள்.(அரசியல்வாதிகள் இதில் கைதேர்ந்தவர்கள். ;) ) நீங்கள் உங்கள் இயல்பு நிலையை விட்டு வேறு நிலையை எடுக்கும் பொழுது நெருக்கடி ஏற்பட்டால் சட்டென்று உங்களது இயல்பு நிலை தலைகாட்டும்.

நீங்கள் எனக்கு முன்னரே அறிமுகமானவரா இல்லைப் புதியவரா என்று இரு பகுதிகள் இருக்கின்றன். அறிமுகமானவர் என்றால் விஷயம் சீரியஸாக இல்லாத வரை அதை நான் கண்டுகொள்வதில்லை. சற்றேனும் விபரீதமாகப் படும் பொழுது மட்டுமே சற்று விவாதத்திற்கு இழுத்து விடுகிறேன். புதியவராக இருக்கும் பட்சத்தில் அமைதியாக அவற்றைக் கவனிக்கிறேன். பாதை மாற்றமா இல்லை வழியில் உள்ள குழியை தவிர்க்கிறாரா என்பது இரண்டு மூன்று பதிவுகளில் தெரிந்து விடப் போகிறது..

தங்கள் சுய ரூபத்தை எப்போதாவது காட்டும் சிலரைக் கண்டு வியந்தும் இருக்கிறேன். எவ்வளவு கச்சிதமான வேடப் பொருத்தம் என்றும். ;)

இதற்காக எதற்கெடுத்தாலும் நான் ஆராய்ட்சி செய்கிறேன் என எண்ணி விடாதீர்கள். இது எப்போதாவது பொழுது போக்காக நான் செய்வது..

என்னைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அவரைப் பற்றிய உங்கள் கருத்து என்ன என்ற கேள்விகள் இதோடே BAN செய்யப் படுகின்றன. :D:D:D

பூமகள்
11-03-2008, 04:23 PM
யவனி அக்காவின் குட்டி குட்டி ஆசைகளும் அந்த பரதநாட்டிய சலங்கை ஒலியும் நிறைவேறிக் கொண்டே இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்...!! வாழ்த்துகள் அக்கா. :icon_b:
நுரை அண்ணா..

உங்கள் பாணியில் அசத்திட்டீங்க.. அட்வைஸ் சொல்லி எங்கே மத்தவங்க போல ரம்பம் போடுவீங்களோன்னு பயந்துட்டு படிச்சேன்.. ஆனா ஆனா.. நிஜமாவே ரொம்ப சூப்பரா சொன்னீங்க அண்ணா. :icon_b::icon_b:
ரொம்ப ரொம்ப நன்றி. :)

எதிர்காலத்துக்கு பயன்படுத்திக்கிறேன்..!! ஹீ ஹீ..!! :lachen001::lachen001:


மலரு... பக்கத்து இலைக்கு இல்ல இல்ல ஊர்க்காரங்க இலைக்கு எல்லாத்துக்கும் பாயாசம் கேட்டு.. நைசா உனக்கும் பாயாசம் வாங்கிட்டே.. கிரேட் மலரு..!! :D:D

மலர்
12-03-2008, 02:07 AM
என்னைப் பொறுத்தவரை.. நல்ல மனிதம் உள்ளவர்களுக்கு தான் கழுத்தை நீட்ட வேண்டுமென்று விருப்பம். பூவுக்கு கணவராகப் போகிறவர் நிச்சயம் வரதட்சணை பற்றி யோசிக்காத நல்லவராகத்தான் இருப்பார் என்று நம்புகிறேன். :rolleyes:
ஆனா ஒன்னு மலரு....

நல்ல விசயம் நிறைய இருந்தா மாறித் தானே ஆகனும்????!!! :D:D(அப்பாடா.. பின்னாடி வந்து கேள்வி கேட்க விடமாட்டேனே..!!:aetsch013:)
(மலரு.. :rolleyes:நல்லாவே போட்டு வாங்குற...:icon_ush::icon_ush:) பூவு உன்னோட மனம் போல மாங்கல்யம் அமைய என்னுடைய வாழ்த்துக்கள்..... ஹீ..ஹீ.... ரொம்ப நல்லாவே யோசிச்சி பதில் தாரங்கைய்யா...... :D :D
தனக்கென்று ஒரு குடும்பம் உருவாகிவிட்ட சூழலில்... தன் குடும்பத்தின் தேவைக்கு மீறி பணம் அதிகமிருந்தால் தனது துணையின் அன்பான புரிதலும் அமைந்து விட்டால்.. தாய் வீட்டின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க நிச்சயம் உதவலாம்.
எதார்த்தமான பதில்...
கலக்கிட்டபூவு.... அழுகாச்சி காவியம் தரப்போறேன்னு எல்லாரையும் மிரட்டிட்டு இப்பிடி ஒரு அழகான காவியம் குடுத்துருக்க......
வாழ்த்துக்கள் பூவு.....

பூவு... இப்போ கொஞ்சநேரம்..டைம் கிடைச்சது
சரி அதுக்குள்ல எல்லா பதிலுக்கும் நாம பதில் போடணுமின்னு முதல்ல உனக்கு உக்காந்து டைப் பண்ணிட்டு சப்மிட் போடுறேன்.... நெட் கட்டாகி போயி..... :traurig001: :traurig001: ம்ம்ம்ம் காலையிலே முடிலை.... :sauer028: :sauer028:

மலர்
12-03-2008, 02:12 AM
ஏன்னா கணவன் மனைவிக்குள் நட்புங்கறது பரஸ்பரம் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு விட்டுக்கொடுக்கும் போதுதான் நிகழும்.... அதற்கு எப்படியும் குறைந்தபட்ட கால அவகாசமாவது வேண்டும்..!! அதுவரைக்கும் எனக்கும் சரி..என் மனைவிக்கும் சரி.. எங்களோட பழைய நட்பு கண்டிப்பா தேவைப்படும்..!!
நம்ம மன்றத்துல ஒரு கேள்வியை...
அது எவ்ளோ கஷ்டமா இருந்தாலும் சரி...
கேட்டா போதும்... அருமையான பதில் கண்டிப்பா உண்டு.....
சுகு உண்மையிலே நல்லா குடுத்துருக்க... :cool: :cool:
எப்பிடி இப்பிடி எல்லாம் யோசிக்கிறீங்களோ..... கலக்குங்க மக்கா.... :icon_b:

க.கமலக்கண்ணன்
12-03-2008, 06:39 AM
ஆஹா உங்களுடைய கேள்விகளையும் பதில்களையும் படித்தால் வடிவேலு பாணியில் சொல்வதென்றால் கிளம்பிட்டாங்கையா! கிளம்பிட்டாங்கையா! அனைத்தும் அற்புதம்...

சுகந்தப்ரீதன்
12-03-2008, 07:01 AM
5)சுகு :
நான் மன்றம் வந்த ஆரம்ப நாளில் இருந்து இன்று வரை என்னோடு மன்றதில் நிலைத்த உறவு.. சரி ஏதாச்சும் வம்பா கேட்டு மாட்டிஉடலாமேன்னு நினைச்சேன் அப்புறம் பாவம்புள்ளைன்னு நினைச்சி ஈசியா கேட்டுட்டு உடுறேன்..


[/color]
நம்ம மன்றத்துல ஒரு கேள்வியை...
அது எவ்ளோ கஷ்டமா இருந்தாலும் சரி...
கேட்டா போதும்... அருமையான பதில் கண்டிப்பா உண்டு.....
சுகு உண்மையிலே நல்லா குடுத்துருக்க... :cool: :cool:
:icon_b:

உண்மைதான் கமல் அண்ணா...!!:mini023:
பாத்திங்களா... எப்படி கிளம்பியிருக்காங்கன்னு..:fragend005::confused:

lolluvathiyar
12-03-2008, 02:23 PM
7)லொள்ளுவாத்தியார் :
வாத்தி..............மை..நேம் இஸ் லொள்ளுவாத்தி.
உங்களின் நகைச்சுவை தொடருக்கு என்றும் ரசிகை நான்...
அரசியல் விளையாட்டில் என்னை கவர்ந்த தலைவர்.. கடைசி நிமிடம் வரை உங்களின் பிரச்சாரத்தை பார்த்து அசந்து போய் விட்டேன்.. அதேமாதிரி உங்களின் சீரியஸான தமிழர்களின் வரலாறையும் படித்திருக்கிறேன்...

வாம்மா மலர் கேள்வி கேட்க வந்துவிட்டு அதுல கூட உன்னுடையை வாலுதன்மையை விடலியா? எல்லாரையும் நல்ல கேள்வி தான் கேட்டிருக்கே ஆனால் சந்தடி கேப்புல அனைவரையும் நக்கல் பன்னாம விட்டதில்ல. என் பதிவுகளை நனறாக கவனித்து வைத்திருகிறாய்.



சரி இப்போ உங்களுக்கான கேள்வி
ஒரு சினிமா படத்தில் நடிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்குது..... எந்த ஒரு கேரக்டரையும் நீங்க தேர்ந்தெடுத்து கொள்ளலாம்ன்னு சொல்லிட்டாங்க...
இப்போ நீங்கள் எந்த கேரக்டரை தேர்ந்தெடுப்பீங்க... ??
எதற்காக அதை தேர்ந்தெடுத்தீங்க என்பதையும் இங்க சொல்லணும்....??


எனக்கு என்ன ஆச்சரியம் என்றா இந்த அழவுக்கு என்னை கவனித்த நீ என்னிடம் எப்படி இப்படி ஒரு கேள்வி கேட்டிருகிறாய் என்பது தான்.
காரனம் நீ கேட்ட கேள்வி சினிமா துரையிலிருந்து, இது எனக்கு அவ்வளவாக பொருந்தாத ஏரியா, இந்த சினிமா (ஸ்போர்ட்ஸ்) விசயத்தில் உன்மையில் எனக்கு ரசிப்பு தன்மை மிக குரைவு அதனால் அதை பற்றிய அறிவும் மிக குரைவு. வருடத்துக்கு நான் 2 தமிழ் படம் பாக்கரதே பெரிசு. (ஆனா ஆங்கில படம் ஓரளவுக்கு பாப்பேன்). என் மனைவிக்கும் சினிமா இண்ட்ரஸ்ட் இல்லாததால் நாங்கள் அவ்வளவாக சினிமாவுக்கு போவதில்லை. டீவில கூட சினிமா பாக்கர அளவுக்கு எனக்கு பொருமை இல்லை.

சரி உன் கேள்விக்கு வருகிறேன், எந்த விசயத்தை பற்றி கேட்டாலும் சொல்லி விடுவேன் என்ற நம்பிக்கையில் நீ கேட்டிருக்கலாம். எனக்கு சினிமா வாய்ப்பு வருகிறது எந்த கேரக்டரை நான் தேர்ந்தெடுப்பேன்?

சினிமாவுல நல்ல கருத்தும் இருக்கு தீய கருத்தும் இருக்கு கருத்தே இல்லாமல் சும்ம பொழுது போக்கு அம்சங்களும் இருக்கு. எப்படி இருந்தாலும் ஒன்னு மட்டும் நிச்சயம் நல்ல கருத்து மக்களிடம் நிச்சயம் எடுபடாது. அதுக்கு மக்கள சொல்லி குற்றமில்லை. அது தான் மக்கள் அவர்கள் அப்படி தான் இருப்பார்கள். ஆனால் சினிமாவில் வரும் தீய கருத்துகள் மக்களுக்கு சென்று அடைந்து விடும் சக்தி இருக்கு.

அதனால் தீய கருத்துகள் கொண்ட கதாபாத்திரங்களை எடுப்பதை நான் நிச்சயம் தவிர்ப்பேன்.சினிமாவில் மதவெறியன், சாதிவெறியன், பென்களை கற்பழிப்பவன், கொலைகாரன், வன்முரையாளன், மாபியா, அரசியல்வாதி, போலீஸ் இந்த மாதிரி மோசமான கேரக்டரில் நடிக்க நான் கட்டாயம் ஒத்து கொள்ள மாட்டேன். எனக்கு ஒரு இமேஜ் வேனுமுல்ல. ஏன் இப்படி பட்ட ஐயோக்கினாக இருந்து பிறகு திருந்தி உயர்ந்தவனாக மாறியவனாக கூட கதை இருந்தாலும் இந்த ரோல்களை நான் எடுக்க மாட்டேன். ஏன்னா நம்ம மக்கள் வன்முரையாளன் திருந்திய ரோல்களை ரோல் மாடலாக எடுக்க மாட்டார்கள், மாறாக முதல் பாகத்தில் இருந்த வன்முரையாளனை தான் ரோல் மாடலாக எடுப்பார்கள்.

இப்படி சொல்லிவிட்டேன் அதுக்காக ஆன்மீகவாதியாகவோ, சமூக சேவகனாகவோ, நல்ல தலைவனாகவோ, நலிந்தவர்கள் பென்கள் முன்னேற்றத்துக்காக பாடுபடுபவனாகவோ இருக்கும் கேரக்டர்களை எடுக்க மாட்டேன். ஏன் இதெல்லாம் வேஸ்ட், நிச்சயம் இதனால் எந்த பயனும் இல்லை. மக்கள் மத்தியில் ஒரு மதிப்பு இருக்காது. இன்றைய மக்களுக்கு வேண்டும் என்பது ஜாலி ஜாலி மட்டும் தான். நான் ஏன் சும்ம மக்கள் மத்தியில் எடுபடாத ரோல்களை எடுத்து நடிக்க வேண்டும்.

அப்புரம் என்னதான் ரோல் வேனும் கொஞ்சம் சொல்லி தொலையா என்று யாரோ உருமியதால் இதோ சொல்கிறேன்.

எனக்கு என்னதான் வயசானாலும் நிச்சயம் நான் வயசான கேரக்டர் ரோல் எல்லாம் எடுத்து நடிக்க ஆசைபட மாட்டேன். எப்படியாவது யவனிகாவிடம் டிரெயினிங் எடுத்து ஒரு வாரத்துல தொந்தியை குரைத்து கொஞ்சம் இளைஞனாக தான் நடிக்க ஆசைபடுகிறேன். (தேவையா இது உனக்கு தேவையா). ஹி ஹி என்னங்க பன்னறது ஆசைங்கரது உன்மைல்ல. அப்புரம் இந்த துனை கதா நாயகன், காமடியன், இந்த ரோல் எல்லாம் வேண்டாம்.
எனக்கு கதாநாயகன் ரோல் மட்டும் தானுங்க வேண்டும். ஆசைய பாருடா னு சிவா ஜி என்னை அடிக்க வரார்ங்கோ, சிவா ஜி அன்னே பொருங்க மிச்சத்தையும் சொல்லிடரேன். கதா நாயகன் ரோல் தந்து பள்ளிகூட பையன் அளவுக்கு சின்ன வயசா வேண்டாம், நான் ரொம்ப பெருந்தன்மையானவன், கலேஜ் பசங்க அல்லது வேலைக்கு போற பையனா ( நல்லா கவனியுங்க பையனா) ரோல் கிடைச்ச எடுத்துக்குவேன்.
எனக்கு ஒரு 4 காமடி சீன்,
ஒரு 4 ஸ்டன்ட் சீன்
, அப்பா அம்மா மேல அன்பு காட்டர ஒரு 2 சீன்,
அப்புறம் காதல் வசனம் பேசுவது, கொஞ்சுவது இப்படி ஒரு 20 சீன்,
ஒரு 10 டூயட் போதும் (2 டப்பாங்குத்து பாட்டு இருந்தால் இன்னும் நல்லா இருக்கும்).
இருங்க கையை ஓங்காதீங்க இன்னும் ஒரே ஆசை மட்டும் இருக்கு அதையும் சொல்லிடரேன்.

இப்ப எல்லாம் நம்ம கதா நாயகர்களுக்கு 2 கதா நாயகிகளை தராங்களாம். சின்ன பசங்களுக்கே 2 கதா நாயகிகனா எனக்கு ஒரு 4 கதாநாயகிகளாவது வேண்டாமா? இரெண்டு தமிழச்சிக, ஒரு மலையால கதா நாயகி, ஒரு வட இந்திய இறக்குமதி கதா நாயகி. இந்த காம்பினேசன் எனக்கு பொருத்தமா இருக்கும்னு நினைக்கறேன். அப்புரம் நான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவனுங்க. அதிகமா ஆசை எல்லாம் பட மாட்டேனுங்க. எனக்கு கதா நாயகிகளா உலக அழகி ஐயஸ்வர்யா ராய கேட்கும் அழவுக்கு எல்லாம் எனக்கு ஆசை கிடையாதுங்க. ஏதோ நம்ம ரேங்சுக்கு அசின், சிம்ரன், ஜோதிகா, திரிசா இப்படி இருந்தா போதுங்க.

ஓடரா ஓடரா ஐயோ கத்தி கபடாவோட தமிழ் மன்ற ஆளுக எல்லாம் அடிக்க வராங்களே, இதுக்கு மேல் பேசிகிட்டே போன்ன்னா காதல் மன்னன் இதயம் அவர்கள் வெடி குண்டோட வந்துருவாரு. நான் எஸ்கேப்

யவனிகா
12-03-2008, 02:40 PM
எனக்கு என்னதான் வயசானாலும் நிச்சயம் நான் வயசான கேரக்டர் ரோல் எல்லாம் எடுத்து நடிக்க ஆசைபட மாட்டேன். எப்படியாவது யவனிகாவிடம் டிரெயினிங் எடுத்து ஒரு வாரத்துல தொந்தியை குரைத்து கொஞ்சம் இளைஞனாக தான் நடிக்க ஆசைபடுகிறேன். (தேவையா இது உனக்கு தேவையா).

தேவையா இது எனக்குத் தேவையா...
அண்ணா...உங்கள நடிக்க வெக்க மலரு ஆசைப்பட்டவுடனே ஒரு கேரக்டர் நினைவு வந்திச்சின்னா...
சீனி கம் படத்தில அமிதாப் கேரக்டர்...(தபு கேரக்டர் யாரும் ஒத்துக்க மாட்டேங்கிறாங்க)என்ன படம்ன்னு தெரில...பிரகாஸ்ராஜும் பேபி நீனாவும் நடிச்ச படம்....
அண்ணி உருளக் கட்டய தூக்கிட்டு ஓடி வர்றதும் கூடவே ஒரு ஷாட் வருது...டூயட்ல வேற நீங்க பெத்த முத்துகள தலையக் காட்றாங்க...
அத எப்படின்னா எடிட் பண்ண...

படம் எடுத்தவுடன் சி.டி. அனுப்புங்கண்ணா...எம் பையனுக்கு பூச்சாண்டி படம் காட்டறேன்னு ரொம்ப நாளா சொல்லிட்டிருக்கேன்...!!!

மலர்
12-03-2008, 03:57 PM
சாக்கடை நாறுகிறதே என்று மூக்கைப் பிடித்துக்கொண்டு செல்வதை விட...அதில் இறங்கி சுத்தம் செய்வது நல்லது.
சாமான்யனிலிருந்து..வேறுபட்டு தனித்து சிந்திக்கும் போது அந்த சிந்தனை சரித்திரமாகிறது...அப்படிப்பட்ட சரித்திரம் படைக்க இளைஞர்கள் முன் வரும்போது...அரசியல் சந்தனமாகும்...அதுவரை சாக்கடைதான்.
உண்மை தான்... அண்ணா..
இந்திய அரசியலுக்கு துடிப்புள்ள இளைஞர்கள் தேவை..
அப்போது தான் நாம் எதிர்பாக்கும் மாற்றங்கள் வரும்....
---------
அருமையான கருத்துக்கள் நன்றி அண்ணா....

மலர்
13-03-2008, 09:14 PM
என்னைப் பொருத்தவரை நான் என் குடும்பத்தின் கண்ணாடி போல...அவர்களுடைய இலட்சியங்களை என்னுடையதாக உணர்ந்திருக்கிறேன்...பிரதிபலித்திருக்கிறேன். அது எனக்கு மகிழ்ச்சியையே தந்திருக்கிறது...தரும்.
வாவ்....... அக்கா..
நான் நினைத்த எதிர்பார்த்த பதில்..
நம் குடும்பத்தின் ஆசையை லட்சியத்தை பிரதிபலிப்பதும்...
ஒரு தனிசுகமே..........:cool:
நிறைவேறாத ஆசை என்றால் ஒன்றே ஒன்று நினைவில் இருக்கிறது.
எனக்கு பரதநாட்டியம் பிடிக்கும்...கற்றுக் கொண்டிருந்தேன் சின்ன வயதில்...சலங்கை கட்டி ஆடும் போது என்னையே பெருமிதமாய் உணர்வேன். தொடர முடியாமல் போய் விட்டது. ஆசை மட்டும் இருக்கிறது உள்ளே...நீறு பூத்த நெருப்பாய்...!!!
அக்கா இப்பவும் ஒண்ணும் முடிந்து போகவில்லை...
மறுபடியும் பரதநாட்டிய கிளாஸிலே ஜாயின் பன்ணிடுங்கோ..... :D :D

மலர்
13-03-2008, 09:28 PM
காதலியாய் இருந்தவள், மனைவியாய் மாறி தாயாகியிருக்கிறாள். மற்றபடி சொல்லுமளவுக்கு மாற்றங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அண்ணன் கலக்கீட்டீங்க போங்க....
உடனே காபியை தானே...
அப்பிடின்னு பதிலுக்கு கோட் பண்ணி கடிக்க கூடாது....
நாங்க எல்லாம் எப்பவும் கேர்புல்லா தான் இருப்போமாக்கும் ..... :D :D

So என்னோட அட்வைஸ் முழுக்க, முழுக்க உங்க பார்ட்னர் மீது அளவுக்கதிகமா அன்பு செலுத்துங்க என்பது தான். உண்மையான அன்பு செலுத்தும் தம்பதியினர் நெடுங்காலம் வாழ்வதாக மெடிக்கல் சயின்ஸே சொல்லுது.
அண்ணன் ரிஸ்க் எடுக்குறதை ரஸ்க் சாப்பிடுற மாதிரி நினைச்சி அழகா அனுபவித்து கொடுத்த பதில்கள் அருமை.....

உங்களோட பதிலை படிக்கிறப்போ
எனக்கு தோணினது ஒண்னே ஒண்ணுதான்.....
நீங்க சொன்ன எல்லாமே நடைமுறை வாழ்க்ககயில உள்ளது...
பிராக்டிகலா இருக்குன்னா.....

பூவு, மதி, அக்னி, அமரு எல்லாரும் வரிசையா நல்லா
எல்லாபாயிண்டையும் மக்கப் பண்ணி வச்சிக்கோங்க...
நிறைய மனைவிகளுக்கு அவங்கம்மா வீட்டுல இருந்தா தான் காதே கேட்குது. அதனால அட்வைஸ் எல்லாம் அவங்கம்மா வீட்டுல வச்சு சொன்னா கொஞ்சமாவது கேப்பாங்க. இதை எங்க அ.இ.ம.சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்..... இப்பிடி மெடிக்கல் ரீதியா நடக்க வாய்ப்பே இல்லீங்கோ...... அதாவது அம்மாவீட்டில் இருக்கும் போது மட்டும் காது கேட்டு வெளிய வந்தவுடனே காது கேக்காம போறது.....

இன்னும் நிறைய எழுத ஆசை தான்.
எழுதலாம்....
ஆனா வேணாம் அண்ணா...
ஏன்னா இனிமே இது பத்தி யாருக்காச்சும் டவுட் வந்தா...
இங்கே கவுன்சிலிங் தரப்படுமின்னு ஒரு போடு போட்டு
புது பிஸினஸ ஸ்டார்ட் பண்ணிடலாம்.............. எப்பிடி ஐடியா.... :D :D

மலர்
13-03-2008, 10:24 PM
வாம்மா மலர் கேள்வி கேட்க வந்துவிட்டு அதுல கூட உன்னுடையை வாலுதன்மையை விடலியா?
ஹீ...ஹீ..... அது பிறக்கும் போதே ஒட்டிட்டு வந்ததுண்ணா.... :D :D
ஆனா அப்பப்போ யாராச்சும் கட் பண்ணி விட்டுடுதாங்கண்ணா... :traurig001: :traurig001: ம்ம் ஆனா மலரு சமத்து பொண்ணு ஸோ.. மோஸ்லி டைம் சுருட்டி வச்சிக்கும்...... :icon_rollout: :icon_rollout:
எனக்கு என்ன ஆச்சரியம் என்றா இந்த அழவுக்கு என்னை கவனித்த நீ என்னிடம் எப்படி இப்படி ஒரு கேள்வி கேட்டிருகிறாய் என்பது தான்.
ஹீ....ஹீ............கவனிச்சதால தான்... :cool:
கொஞ்சம் வித்தியாசமா கேக்கோணும் எண்டு கஷ்டப்பட்டு என் மூளையை கசக்கி பிளிஞ்சி சாறு எடுத்து கேள்வி கேட்டேனாக்கும்..... :icon_rollout: :icon_rollout:
அதனால் தீய கருத்துகள் கொண்ட கதாபாத்திரங்களை எடுப்பதை நான் நிச்சயம் தவிர்ப்பேன்.சினிமாவில் மதவெறியன், சாதிவெறியன், பென்களை கற்பழிப்பவன், கொலைகாரன், வன்முரையாளன், மாபியா, அரசியல்வாதி, போலீஸ் இந்த மாதிரி மோசமான கேரக்டரில் நடிக்க நான் கட்டாயம் ஒத்து கொள்ள மாட்டேன். எனக்கு ஒரு இமேஜ் வேனுமுல்ல.
அதானே கண்டிப்பா ஒரு இமேஜ் வேணுமில்லே.....
நீங்க ஒதுக்கினது எல்லாமே ஓக்கே....
இப்படி சொல்லிவிட்டேன் அதுக்காக ஆன்மீகவாதியாகவோ, சமூக சேவகனாகவோ, நல்ல தலைவனாகவோ, நலிந்தவர்கள் பென்கள் முன்னேற்றத்துக்காக பாடுபடுபவனாகவோ இருக்கும் கேரக்டர்களை எடுக்க மாட்டேன்.
ஆனா இந்த ரோல் ஏன் எடுக்க மாட்டீங்கன்னு தான்
புரிலை
இன்றைய மக்களுக்கு வேண்டும் என்பது ஜாலி ஜாலி மட்டும் தான். நான் ஏன் சும்ம மக்கள் மத்தியில் எடுபடாத ரோல்களை எடுத்து நடிக்க வேண்டும். அந்த கேள்விக்கு இந்த பதில் ஓக்கே...... ஆனால் ஜாலி ஜாலியை தாண்டியும்... சில நல்ல ரோலகள் மக்கள் மனதில் ஆழமா பதிவும் செய்யும்.....
எப்படியாவது யவனிகாவிடம் டிரெயினிங் எடுத்து ஒரு வாரத்துல தொந்தியை குரைத்து கொஞ்சம் இளைஞனாக தான் நடிக்க ஆசைபடுகிறேன். யவனியக்கா உங்க பெருமையை மக்கள் உலகம் பூரா பரப்பாமல் விடமாட்டாங்க போல இருக்கே.....
எனக்கு கதாநாயகன் ரோல் மட்டும் தானுங்க வேண்டும். கலேஜ் பசங்க அல்லது வேலைக்கு போற பையனா ( நல்லா கவனியுங்க பையனா) ரோல் கிடைச்ச எடுத்துக்குவேன். ஒரு 10 டூயட் போதும் இப்ப எல்லாம் நம்ம கதா நாயகர்களுக்கு 2 கதா நாயகிகளை தராங்களாம். சின்ன பசங்களுக்கே 2 கதா நாயகிகனா எனக்கு ஒரு 4 கதாநாயகிகளாவது வேண்டாமா? இரெண்டு தமிழச்சிக, ஒரு மலையால கதா நாயகி, ஒரு வட இந்திய இறக்குமதி கதா நாயகி. இந்த காம்பினேசன் எனக்கு பொருத்தமா இருக்கும்னு நினைக்கறேன்.எனக்கு கதா நாயகிகளா உலக அழகி ஐயஸ்வர்யா ராய கேட்கும் அழவுக்கு எல்லாம் எனக்கு ஆசை கிடையாதுங்க. ஏதோ நம்ம ரேங்சுக்கு அசின், சிம்ரன், ஜோதிகா, திரிசா இப்படி இருந்தா போதுங்க. ஆஹா... அண்ணன்.... உங்களுக்கு தைரியம் அதிகம்ன்னா...
நிஜமாவே ரசிச்சி படிச்சேன்..... உங்கலோடது எல்லாமே சின்ன சின்ன ஆசைதான்............ அப்புறம் நாலு பேரு மட்டும் போதுமா....???
இல்லை இன்னும் மணிப்பூரி ஆந்திரான்னு போடலாமா.... :sauer028: :sauer028:
இருங்க அண்ணிக்கிட்ட உங்களை சொல்லி தாரேன்..... :icon_rollout: :icon_rollout:

ஓடரா ஓடரா ஐயோ கத்தி கபடாவோட தமிழ் மன்ற ஆளுக எல்லாம் அடிக்க வராங்களே, இதுக்கு மேல் பேசிகிட்டே போன்ன்னா காதல் மன்னன் இதயம் அவர்கள் வெடி குண்டோட வந்துருவாரு. நான் எஸ்கேப் :D :D :D :D :D
அப்போ இத்யம் பின்லேடனுக்கு இன்னும் நம்ம 007லில் இன்னும் பெரிய ஆப்பா வைக்கலாம்....

kavitha
18-03-2008, 10:53 AM
கவீ அக்கா..!!

கலர் கலரா பதில் எழுதியிருக்கேன்.. கேள்வி கேட்டதை மட்டும் பாராட்டிட்டு போயிட்டீங்களே..!! (ஹீ ஹீ...சும்மா சொன்னேன் அக்கா..)
கேள்வியே அசத்தல், அதைக்கேட்கப்பட்டவரிடம் கேட்டதும் எதிர்பார்ப்பும் கூடிவிட்டது. கலர் கலரா எழுதினாலும் கேள்வியால் சுற்றி சுற்றி வட்டம் போட்டுட்டியேம்மா பூமா... :confused:
கழுவுற மீனுல நழுவுற மீனுங்கறது இது தானோ!:lachen001:

அமரன்
18-03-2008, 10:54 AM
ஆபத்து தந்த மலருக்கு பாராட்டும் நன்றியும்.
பதிலளித்த உறவுகளுக்கு நன்றி.
பதிலளிக்காத சொந்தங்களுக்கு பதிலளிக்க அன்பான அழைப்பு.
அடுத்த ஆபத்தினை கொடுக்க முன்வர எல்லாருக்கும் என் பிரியமான கோரல்.

kavitha
18-03-2008, 10:55 AM
லொள்ளுவாத்தியார் - நடிகர் சத்யராஜ் -ஐ மிஞ்சிவிடுவார் போல்..


ஏதோ நம்ம ரேங்சுக்கு அசின், சிம்ரன், ஜோதிகா, திரிசா இப்படி இருந்தா போதுங்க.
இவங்கல்ல்லாம் அவுட் ஆஃப் ஃபேசனுங்க... புதுசா ஏதும் கண்டுபிடிங்க :D

மலர்
18-03-2008, 03:54 PM
பதிலளிக்காத சொந்தங்களுக்கு பதிலளிக்க அன்பான அழைப்பு.
:frown: :frown: :frown: :frown: :frown:

கண்மணி
18-03-2008, 05:25 PM
:frown: :frown: :frown: :frown: :frown:

:D:lachen001::sprachlos020::eek::icon_ush::mini023::cool::fragend005::icon_p::aetsch013::eek::icon_b::icon_rollout:

இன்னும் ஆராரு பதில் சொல்லோணும்.. என்னா என்னா கொஸ்டீனூன்னு போடுங்கக்கா.. அப்றம் அல்லாருக்கும் கடுதாசி போட்டு தாக்கல் அனுப்புங்கக்கா!,, :D:D:D

ராஜா
21-03-2008, 04:50 PM
பதிலளித்த அனைவருக்கும் பணிவான நன்றிகள்......!

மலர்
25-03-2008, 05:11 PM
இன்னும் ஆராரு பதில் சொல்லோணும்.. என்னா என்னா கொஸ்டீனூன்னு போடுங்கக்கா.. அப்றம் அல்லாருக்கும் கடுதாசி போட்டு தாக்கல் அனுப்புங்கக்கா!,, :D:D:D
ஹீ...ஹீ...... அதெல்லாம் எதுக்குக்க்கா....
பதில் போட்ட அனைவருக்கும் என்னுடைய அன்பான நன்றிகல்.....

அருமையான இந்த திரி மறுபடியும் டல்லடிக்க வச்சிட்டேனா அதான் கஷ்டமா இருக்கு...... அடுத்து ஆ10க்கு நம்ம மக்களை கேள்வியால் மடக்கப்போகும் ஒருவரை அன்பாக அழைக்கிறேன்....

அமரன்
25-03-2008, 05:32 PM
ஆ!பத்து தீபத்தை தூண்டி விட, அடுத்ததாக ஆதியை அழைக்கின்றேன்.
வாங்க ஆதி. சுவையான பதில்களைத் தரவல்ல கணைகளை தொடுங்க..
நன்றி!

மலர்
25-03-2008, 05:35 PM
ஆ!பத்து தீபத்தை தூண்டி விட, அடுத்ததாக ஆதியை அழைக்கின்றேன்.
வாங்க ஆதி. சுவையான பதில்களைத் தரவல்ல கணைகளை தொடுங்க..
நன்றி!
ஆஹா.....
ஆ..................தீ............சும்மா தீப்பொறி மாதிரி கேள்விகலோட வாங்கோ....... வாழ்த்துக்கள்.......:icon_b: :icon_b: :icon_b:

ஆதி
25-03-2008, 05:47 PM
ஆஹா.....
ஆ..................தீ............சும்மா தீப்பொறி மாதிரி கேள்விகலோட வாங்கோ....... வாழ்த்துக்கள்.......:icon_b: :icon_b: :icon_b:

தங்கசி உங்க அளவுக்குலாம் மதியூக கேள்வி கேட்க எனக்கு வராது... அவ்வளவு ஆழ்ந்த அறிவும் கிடையாது.. ஆனால் யோசிக்கிறேன் முயற்சிப் பண்றேன் நல்ல கேள்விகள் கேட்க..

அன்புடன் ஆதி

என்னவன் விஜய்
27-03-2008, 07:14 PM
மலர்
நான் உங்களுடைய பதிவுகளை படித்திருக்கின்றேன்.அதில் உங்கள் நகைச்சுவையை/வெகுளித்தனம்(உங்கள் பாசையில் சொன்னால் சின்னப்புள்ளத்தனம்) பார்த்து இரசித்திருக்கிறேன்.ஆனால் உங்களிடம் இருந்து இப்படியான கேள்விகளை எதிர் பார்க்கவில்லை. நீங்கள் தொடுத்த கேள்விகளும் அந்த கேள்விகளுக்கு நீங்கள் தேர்ந்தெடுத்த நபர்களும் அதற்கு அவர்கள் அளித்தபதில்களும் மிகவும்சுவையாக இருந்தது. அதற்கு பூரிப்புடன் கூடிய எனது நன்றி.மேலும் தொடர வாழ்த்துக்கள். இத்திரியின் பெயர் இப்பொழுதுதான் பொருந்திஉள்ளது.

அனுராகவன்
28-03-2008, 12:14 AM
நானும் இப்பதான் இத்திரியே கண்டேன்..
நல்ல பகுதிதான்..
நானும் வருகிறேன்.

மதி
28-03-2008, 06:07 AM
ஆதிண்ணே..சீக்கிரமா கேள்விகளைப் போடுங்கண்ணே..

சிவா.ஜி
28-03-2008, 06:09 AM
வாப்பா ஆதி....சரவெடியை கொளுத்திப்போடு....விதவிதமா வெடிக்கட்டும்...

ராஜா
29-03-2008, 03:14 PM
ஆதி...

சோதி..!

அமரன்
29-03-2008, 07:09 PM
இன்னுமேன் தாமதம் ஆதி.

ஆதி
30-03-2008, 03:06 PM
ஆதிண்ணே..சீக்கிரமா கேள்விகளைப் போடுங்கண்ணே..


வாப்பா ஆதி....சரவெடியை கொளுத்திப்போடு....விதவிதமா வெடிக்கட்டும்...


ஆதி...

சோதி..!


இன்னுமேன் தாமதம் ஆதி.

தயவு கூர்ந்து அனைவரும் என்னைப் மன்னிக்கும் படி வேண்டுகிறேன்.

சஞ்சலம் மனதில் வெஞ்ஜலமாய் ஓடுவதால் கேள்விகளைத் தொகுக்கவோ தொடுக்கவோ முடியவில்லை..

அமரிடம் நேரம் கேட்கத் தெரிந்த எனக்கு கேள்விக்கேட்க தெரியவில்லை..

நிச்சயம் கேள்விகளுடன் நாளை வருகிறேன்.. தாமதப் பதிகலுக்கும் பதிவிற்கும் அனைவரிடமும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன்.

அன்புடன் ஆதி

மலர்
01-04-2008, 04:40 PM
தயவு கூர்ந்து அனைவரும் என்னைப் மன்னிக்கும் படி வேண்டுகிறேன். அதெல்லாம் முடியாது...
முடியாது.............
முடியவே முடியாது.......
தமிலுல மட்டுமில்ல தெலுங்கு கன்னடம் ஒரியா துளுன்னு எந்தமொழியிலையும் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு..... :sprachlos020: :sprachlos020: (சே...சே.....சும்மா தான் ஆதி.. )

சஞ்சலம் மனதில் வெஞ்ஜலமாய் ஓடுவதால் கேள்விகளைத் தொகுக்கவோ தொடுக்கவோ முடியவில்லை.. என்ன கொடுமை இது....?? இவிங்க பதிலையே கவிதையா தான் கொடுக்க்குறாங்கப்பா.... :cool: :cool: ம்ம் மல்ரு நல்லா பாத்துக்கோ.... நீயும் இனிமே இப்பிடி தான் எழுதோணும்....
நிச்சயம் கேள்விகளுடன் நாளை வருகிறேன்.. தாமதப் பதிகலுக்கும் பதிவிற்கும் அனைவரிடமும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன். அடடா அதுக்குள்ள மறுபடியும் மன்னிப்பா..... :sauer028: :sauer028:
மெதுவாவே வாங்க...
ஆனா....சும்மா அதிரடியான கேள்விகளோட வாங்க.... :icon_b: :icon_b:

செல்வா
02-04-2008, 03:57 PM
நிச்சயம் கேள்விகளுடன் நாளை வருகிறேன்..
என்ன புலவரே... சனிக்கு பதில் குடுத்த கரிமுகத்தான் கதையால்ல இருக்கு :D:D

ஓவியன்
03-04-2008, 02:56 PM
என்ன புலவரே... சனிக்கு பதில் குடுத்த கரிமுகத்தான் கதையால்ல இருக்கு :D:D

அப்போ கேள்வியே வராதுங்களா.........???

- குழம்பிப் போய் ஓவியன்..!! :confused:

செல்வா
03-04-2008, 10:03 PM
அப்போ கேள்வியே வராதுங்களா.........???

- குழம்பிப் போய் ஓவியன்..!! :confused:

வராமலிருந்தா விட்டுடுவோமாக்கும்

செல்வா
05-04-2008, 02:40 PM
எலேய்.... எவம்லே அங்க .... அந்த கசேரிய எடுத்து போடுவுலே நாட்டாம தீர்ப்பு சொல்ல போறாரரக்கும்...........
எலேய் நல்லா கேட்டுக்குங்கல... இந்த ஆதி.... இதுவர சோதிக்காததால .. ஆதிக்கே இப்ப நாம சோதன வக்க போறோம்லே....
இந்த திரிக்கி வாரவுக எல்லாரும் ஆளுக்கு பத்து கேள்வி ஆதியபாத்து கேக்கணும்லே.
இதுக்கு ஒழுங்கா பத்து கேள்வி மட்டும் கேட்டுருக்கலாம்னு தலதெரிக்க ஓடிவரணும்ல... ?
என்ன மக்கா சொல்லுதீய......
ஆரம்பிங்கல மக்கா........ ஆதிய சோதிங்கல....

ஓவியன்
05-04-2008, 02:42 PM
வராமலிருந்தா விட்டுடுவோமாக்கும்

அதுதானே,

தளபதி(செல்வா உம்மைத் தானோய்...!!) உடனே நம் ரத, கஜ, துரக பதாதிகளுடன் சென்று நம் ஆஸ்தான புலவரை இழுத்து, மன்னிக்கவும் அழைத்து வாரும்......!! :)

செல்வா
05-04-2008, 02:44 PM
அதுதானே,

தளபதி(செல்வா உம்மைத் தானோய்...!!) உடனே நம் ரத, கஜ, துரக பதாதிகளுடன் சென்று நம் ஆஸ்தான புலவரை இழுத்து, மன்னிக்கவும் அழைத்து வாரும்......!! :)
நாட்டாம தீர்ப்பு வந்துடுச்சுவோய்... இனிமே ஒண்ணியும் பண்ண முடியாது ரிவீட்டு தேன்...

ஓவியன்
05-04-2008, 02:48 PM
நாட்டாம தீர்ப்பு வந்துடுச்சுவோய்... இனிமே ஒண்ணியும் பண்ண முடியாது ரிவீட்டு தேன்...

நம்ம வேலை முடிஞ்சிட்டுது, எஸ்கேப்......!!! :auto003:

ஓவியன்
05-04-2008, 02:53 PM
ஆரம்பிங்கல மக்கா........ ஆதிய சோதிங்கல....

அட இது ரொம்ப நல்லா இருக்கே, என்பங்குக்கு நானும் பத்துக் கேள்வியுடன் சித்தே நாளியில் வருகிறேன் ஐயா...!! :D:D:D

மலர்
05-04-2008, 03:28 PM
எலேய்.... எவம்லே அங்க .... அந்த கசேரிய எடுத்து போடுவுலே நாட்டாம தீர்ப்பு சொல்ல போறாரரக்கும்...........
எலேய் நல்லா கேட்டுக்குங்கல... ஆரம்பிங்கல மக்கா........ ஆதிய சோதிங்கல.... என்ன மக்கா சொல்லுதீய......
செல்வா சூப்பருன்ன்னு சொல்றோமில்ல..:aktion033::aktion033:

அட....அட... நம்மூரு பாஷையை கேட்டு
அப்பிடியே புல்லரிச்சி போய் நின்னுட்டேன்..... :D :D :D

அன்புரசிகன்
05-04-2008, 05:23 PM
ஆதி...

உங்கள் கேள்விகளுக்கு ஏன் இந்த தாமதம்???

ராஜா
06-04-2008, 07:07 AM
அன்பின் அமர்..

வேறொரு உறவை அழைப்போமா.. ??

அமரன்
06-04-2008, 02:33 PM
இன்னொருத்தருக்கும் கண்ணி வைத்துள்ளேன். சிக்குவார்.. செல்லத்தை அலேக்கா கொண்டுவந்து விடுகின்றேன்; ஆதியையும் கூட்டி வருகிறேன்.. அண்ணா..

அமரன்
07-04-2008, 10:45 AM
பெயரிலேயே முரணை வைத்திருக்கும் இனிய நண்பர் செல்வாவை அழைப்போமா அண்ணா....

ராஜா
07-04-2008, 11:02 AM
பெயரிலேயே முரணை வைத்திருக்கும் இனிய நண்பர் செல்வாவை அழைப்போமா அண்ணா....

கரும்பு தின்னக் கூலியா..?

உடனே செல்வா ஆ ! 10 "வாசல்" வரட்டும்..

கேள்விக் "குழல்" இசை முழங்கட்டும்..!

ஷீ-நிசி
07-04-2008, 11:05 AM
அடடா. சீக்கிரம் ஆரம்பியுங்கப்பா. எம்புட்டு நாளாச்சு!

செல்வா
07-04-2008, 11:27 AM
1சாலையண்ணா….
ஒரு வங்கிப்பணியில் இருக்கும் உஙகளுக்கு இந்த கேள்வி…
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் 2020ல் இந்தியா வல்லரசாகிவிடும். என்று சொல்கிறார். எழுத்தாளர் சாரு நிவேதிதா ஒரு கட்டுரையில் சொல்லியிருப்பார் "என்று டாலருக்கு யூரோவுக்கு நிகராக இந்திய பணமதிப்பு உயருகிறதோ அன்றே இந்தியா வல்லரசாகும்" என.
ஒரு வங்கி அதிகாரியான உங்கள் பார்வையில் வல்லரசு என்பது என்ன?
உண்மையில் இந்தியா எப்போது வல்லரசாகும்?
இப்போதைய இந்தியாவின் பொருளாதார நிலையை எப்படிச் சொல்வீர்கள்?

2தங்கவேல் அண்ணாவுக்கு
நீங்கள் தமிழ் இலக்கிய உலகில் ஓரளவுக்கு நான்றாகவே பழக்கமிருப்பதாக ஒரு பதிவில் சொல்லியிருந்தீர்கள். அதோடு நமது மின்னிதழும் பத்தோடு பதினொன்று என்ற ஆதங்கம் உங்களுக்கு இருக்கிறது. இதனடிப்படையில் உங்களிடம் சில கேள்விகள்
தற்போதைய தமிழ் இலக்கிய உலகைப் பற்றிய தங்கள் கருத்து?
தங்களைக் கவர்ந்த தற்கால எழுத்தாளர்கள் யார் யார்?
தமிழ்மன்றத்தின் இலக்கியப் பணியாக தாங்கள் கருதுவது ? இன்னும் செய்ய வேண்டியது?

3அடுத்த கேள்வி நுரையீரல் – யவனியக்கா… இருவருக்கும்
நான் தங்களிருவரையும் சந்தித்ததில்லை என்றாலும் தங்கள் அன்பிலும் பாசத்திலும் திளைத்தவன்.
தம்பதிகளாக மன்ற இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
(இரண்டுபேருடைய பங்களிப்புடன் பதில் தேவை…)
ஒரு சிறப்பு கேள்வி நுரை மாமாவுக்கு
காதலித்தே கல்யாணம் செய்திருந்தாலும்.. காதலிக்கும் போது காதலியின் அறிவை புகழ்ந்து பேசும் பலர் கல்யாணத்திற்கு பின் அவ்வாறிருப்பதில்லை? அங்ஙனமிருக்க நீங்களோ நல்ஊக்கம் கொடுத்து அக்காவின் திறமைகள் மெருகேறவும் அரங்கேறவும் உதவுகிறீர்கள். இத்தகைய மனம் தங்களுக்கு வர ஏதேனும் அடிப்படை காரணம்? இந்த கருத்தைப் பற்றிய தங்கள் விமர்சனம் என்ன?

4ஆரென் அண்ணா சொந்தமாகத் தொழில் துவங்கி நடத்திவரும் நீங்கள். சுயதொழில் செய்யும் முனைப்புடனிருக்கும் நம் இளைஞர்களுக்கு சொல்ல நினைப்பது என்ன?
இத்தனைப் பணியிலும் தொடர்ந்து மன்றம் வந்து பல படைப்புகள் தருகிறீர்கள் மன்றத்தைப் பற்றிய தங்கள் பார்வை என்ன?

5பென்ஸ் அண்ணா
ஆக்கங்களை பார்ப்பதிலும், உங்கள் பதிவுகள் பலவற்றிலும், விவாதங்களை நெறிப்படுத்தும்போதும் மனவியல் சார்பை காண்கிறேன். இதில் உங்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது? ஏதோ ஒரு பதிவில் பலருக்கு உளவியல் அறிவுரை கொடுப்பதாக சொல்லி இருந்தீர்கள்.. ஏதேனும் உளவியல் தொடர்பான ஆலோசனைக்கு மன்ற உறவுகள் அல்லது உறவுகளின் உறவுகள் என்ன செய்யவேண்டும் ? உங்களை எப்படித் தொடர்பு கொள்வது ? அல்லது யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?

6அடுத்து நமது மன்றத்தின் ஓவியரைக் கைபிடித்த ரதிக்கு…
எம் ஓவியரின் இரதியாகவும் அவரின் பாதியாகவும் வந்த அன்புத் தங்கையே தங்களை இந்த மன்றம் சார்பாக வாழ்த்தி வரவேற்கிறேன்.
இப்படி ஒரு மன்றம் இருக்கிறது என்றும், இத்தகைய மன்றத்தில் பொறுப்பாளராக உங்களவர் இருக்கிறார் என்று கூறிய போதிருந்த உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
பல உறவுகளை உங்களவர் வாயிலாக இந்த மன்றம் பெற்றுத் தந்திருக்கிறது இந்த மன்றத்தைப் பற்றிய தங்கள் கருத்து என்ன?

7மன்றத்தின் விமர்சகர்களாகவும் தவறு கண்டவிடத்து திருத்தும் உன்னதப் பணியை சளைக்காது செய்யும் தமிழன்னையின் செல்வப் புத்திரிகள் அல்லி ராணி, சாம்பவி, செந்தமிழரசி மூவருக்கும் இந்த கேள்வி.
மன்றத்தில் குவியும் படைப்புக்களைப் பற்றிய தங்கள் பொதுவான கருத்துக்கள் என்ன?
மரபு சார்ந்த படைப்புக்கள் மன்றத்தில் குறைவு என தங்களுக்குத் தோன்றுகிறதா? அவ்வாறெனின் அத்தகைய படைப்புக்களை கொணர நீங்கள் தரும் ஆலோசனைகள் என்ன?
இதே கேளள்விகளை மற்றொரு மனங்கவர் பின்னூட்டங்களுக்கு சொந்தக்காரர் வல்லரசு பற்றிய கேள்விக்கு சிறப்பான பதிலைகொணர்ந்த அன்பு சாலைஜெயராமன் அண்ணாவுக்கும் அனுப்புகிறேன். அண்ணாவின் விரிவான விளக்கமான வித்தியாசமான விடைகளை எதிர்நோக்கி :)
(எலேய் கேள்வி கேக்கும் போதே சிறப்பு கேள்விணு மூணு போட்டு உயிர வாங்குற அதுவும் பத்தாதுணு மறுபடி எடிட் பண்ணி வேற கேள்வி கேக்குறியா? இருடி உனக்கு கண்டிப்பா அடுத்த ஆபத்துல இருக்கு ஆப்பு.. ஆ....ஆ...... எஸ்கேப்.......:sprachlos020::sprachlos020::eek::eek:)

8அன்பு சிவா அண்ணாவுக்கு
மன்றத்தில் நான் பழகி மிகுந்த பாசத்தோடு அண்ணா என்று தினமழைக்கும் இருவரில் நீங்கள் ஒருவர். சகலகலா வல்லவராகவும் நிறைந்த அறிவும் திறமையும் கொண்ட நீங்கள் என்னைப் பார்க்க வந்து என்னோடு பேசும் போது என் சக தோழனாகவே உணர்ந்தேன் அதுமட்டுமல்லாமல் அப்போது தான் சந்தித்த என் நண்பரோடு அவருக்கு சமானமாக அவரது அலைவரிசையில் நீங்கள் உரையாடியது எனக்கு மிகுந்த வியப்பைத் தந்தது… அதைவைத்து தான் உங்களால் குழந்தையோடு குழந்தையாக விளையாடவும் முடிகிறது தத்துவ ஞானிகளோடு சரி சமதையாக விவாதமும் செய்ய முடிகிறது…. இதன் இரகசியம் என்ன ? எந்த கர்வமும் பெருமையும் இல்லாமல் எப்படி உங்களால் சிறியவர்களான எங்களோடு சமதையாக உரையாடவும் புகழவும் (கொஞ்சம் ஓவராத்தான் புகழுறீங்க..) முடிகிறது?

9 பாரதியண்ணாவுக்கு
மன்றத்தில் நான் பழகி மிகுந்த பாசத்தோடு அண்ணா என்று தினமழைக்கும் இருவரில் நீங்கள் ஒருவர். உங்கள் படைப்புக்களின் எளிமையில் என் மனம் கொள்ளை போனது. தேடி தேடி உங்கள் படைப்புக்களை வாசிப்பவர்களில் நானும் ஒருவன். உங்கள் படைப்புக்களிலிருந்து நீங்கள் தொழிற்சங்கங்களில் செயல் பட்டிருக்கிறீர்கள் அதோடு நிறைய பொதுவுடைமை தொடர்பான புத்தகங்களையும் வாசித்திருக்கிறீர்கள் அதிலிருந்து உங்களிடம் இரு கேள்விகள் அண்ணா.
பொதுவுடைமை பற்றிய உங்கள் கருத்து என்ன? உலகமயமாக்கல் வளர்ந்து வரும் இந்த காலத்தில் பொதுவுடைமைக் கொள்கையால் பயனிருக்கிறதா? இருந்தால் அது ஏன் வெற்றி பெறவில்லை?

10ஆதி
மன்றத்தில் நான் வந்த நாளிலிருந்தே என்னைக் கவனித்து வந்திருக்கிறாய். அவ்வப்போது தலையில் குட்டி அடேய் அடங்குடா என்று சொல்லும் உன்னை பார்க்கும் போது இமயத்தின் முன்னால் இருக்கும் சிறு கல்லாய் நான். உன்னோடு உரையாடும் போது தொடர்பை துண்டிக்கும் நினைவிருப்பதில்லை… அத்தகைய இலக்கியக் களஞ்சியமாக இருக்கிறாய். குறுகிய காலத்தில் என் இதயத்தில் இடம்பிடித்து மிக மிக நெருக்கமாகிவிட்டாய். உனது பரந்த இலக்கிய அறிவும் சிந்தனையும் சோதனை வரினும் கலங்காது சாதனையாக்கும் திறனும் என்னை மலைக்கச் செய்கிறது. சிறியவன் எனச் சொல்லிக் கொண்டே அரிய பெரிய படைப்புக்களைத் தரும் நீ மன்றத்தைப் பற்றிய உனது கருத்தை கவிதையாகக் கொடுப்பாயா? மரபுக்கவியும் எழுதும் ஆற்றல் பெற்ற நீ உன் மனதைக் கவர்ந்த சில சங்ககால கவிகளையும் தற்கால கவிஞர்களையும் ஒப்புமைப்படுத்தேன்..

சிறப்பு கேள்வி 1 இந்த கேள்வி எனக்காக. நம்ம பச்ச சட்டக் காரங்க பாச உறவுகள் மன்றத்துல அடிக்கடி நான் குரல்வழியாக சந்திக்கும் அன்பு உறவுகள் அக்னி, அமரன் மற்றும் ஓவியன். முகங் காணா தேசத்திலிருந்தாலும் நம்மூவரையும் மன்றம் ஒன்றிணைத்துள்ளது. ஒத்த வயதினர் என்பதால் இன்னும் விரைவாக நட்பானோம் தனியானாய் வாழும் எனக்கு நமது உரையாடல்களும் கலாய்ப்புக்களும் மிகுந்த உற்சாகத்தைக் கொணரும். மன்றத்து போர்வீரர்கள் காவலர்கள் நீங்கள். எத்தனையோ எத்தர்களைப் பார்த்திருப்பீர்கள் என்னைப் பற்றிய தங்கள் கருத்து என்ன ? எனக்கு நீங்கள் தரும் அறிவுரை என்ன?
ஒரு பொறுப்பாளராக மன்ற செயல்பாடுகளில் உங்கள் மனநிலை என்ன? பொறுப்பாளராக இருப்பதால் நீங்கள் இழந்ததாக மற்றும் பெற்றதாக நினைப்பது என்ன ?

சிறப்பு கேள்வி 2. மன்ற இளைய சுட்டிகள் பூமகள் மற்றும் மலர். இணைய உறவுகள் நிரந்தரமல்ல என்ற வாக்கியத்தை பொய்யாக்குமுகமாக ஒரு குடும்பமாக பழகி வருகிறீர்கள். இணைய உறவுகளைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? இது நம்பகமான உறவாகுமா? நிரந்தரமானதா?

சிறப்பு கேள்வி 3. மன்றத்தில் புதியவராக வந்து சிறப்பான கருத்துக்களால் என் மனதைக் கொள்ளை கொண்ட நம்பி அவர்களுக்கு. தங்கள் வயதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை இளையவராக இருப்பீர் என எண்ணுகிறேன் என்றாலும் தங்கள் கவிதைகளின் கருத்துக்கள் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது. இத்தகைய சிந்தனைகளின் பிறப்பிடம் என்ன ? உங்கள் பின்புலம் என்ன ?

அமரன்
07-04-2008, 11:31 AM
விசாலமாக சஞ்சரித்து பதில்களை கொய்து வரும் கணைகள். பாராட்டுகள் செல்வா...
வாருங்கள் மக்களே... தெள்ளெனப் பதில்களை தாருங்கள்..

ராஜா
07-04-2008, 11:58 AM
மிகச் சரியான உறவிடம் பொறுப்பைக் கொடுத்த அன்பு அமருக்கு முதல் நன்றி..!

கேட்டுக்கொண்டவுடன் "பிகு" செய்யாமல் உடனடியாக கேள்வித்தொகுப்பை வெளியிட்ட செல்வாவுக்கு ஆயிரம் நன்றிகள்..!
( தொகுப்பு உடனடியாக வந்தாலும், அவசர கதியில் அள்ளித் தெளித்ததாக அல்லாமல் எதிர்பார்ப்பினைத் தூண்டும் விதத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.. அதற்கு பிரத்யேக வாழ்த்துகள்..!)

பதிலளிக்கப்போகும் பாசக்கார புள்ளைகளுக்கு பணிவான வரவேற்புகள்..!

செல்வா
07-04-2008, 12:40 PM
( தொகுப்பு உடனடியாக வந்தாலும், அவசர கதியில் அள்ளித் தெளித்ததாக அல்லாமல் எதிர்பார்ப்பினைத் தூண்டும் விதத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.. அதற்கு பிரத்யேக வாழ்த்துகள்..!)

நன்றி அண்ணா... ஏதோ என்னாலயும் கேள்விகள் கேக்க முடியுதுனா நீங்க எல்லாரும் கொடுத்த உற்சாகமும் உங்களனைவரையும் பார்த்துக் கற்றுக் கொண்டதும் தான் காரணம். வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா.

மதி
07-04-2008, 01:08 PM
அட்டகாசமான கேள்விகள் செல்வா..
அருமையான பதில்களை எதிர்பார்ப்போம்..

ஆதி
07-04-2008, 01:26 PM
அசத்தீட்ட மாப்பு அசத்தீட்ட.. சும்ம நச்சு னு இருக்கு கேள்விகள் எல்லாம்.

ரதி
07-04-2008, 01:58 PM
புதிதாக மன்றத்தில் இணைந்துள்ள என்னையும் ஆ பத்து திரியில் ஒருவராக இணைத்துக் கொண்டமைக்கு மிக்க நன்றிகள் செல்வா அண்ணா....
விரைவில் பதிலுடன் சந்திக்கின்றேன்..

க.கமலக்கண்ணன்
07-04-2008, 02:24 PM
நந்தவனமாய் கேள்விகளை அடுக்கியிருக்கும் செல்வா

நட்பாய் அனைவரையும் அன்பாய் கேள்விகளை மிக

நளினமாக கேட்டு அசத்திட்டீர்கள்... பதில்களை பார்ப்போம் நம்ம பாசகார மக்கள் எப்படி

நச்சுன்னு பதில் தராங்கன்னு...

யவனிகா
07-04-2008, 02:29 PM
அருமையான கேள்விகள்...பாராட்டுகள் செல்வா...
அனைவரின் பதிலைக் எதிர்பார்த்து ஆவலுடன்...!

யவனிகா
07-04-2008, 02:31 PM
புதிதாக மன்றத்தில் இணைனந்துள்ள எனக்கும் ஆ பத்து திரியில் ஒருவராக இணைத்துக் கொண்டமைக்கு மிக்க நன்றிகள் செல்வா அண்ணா....
விரைவில் பதிலுடன் சந்திக்கின்றேன்..

புதிசா வந்தாலும் நீங்க ரொம்ப முக்கியமான ஆளு....தங்கச்சி!!!:lachen001::lachen001:

ஷீ-நிசி
07-04-2008, 02:33 PM
மிக சிறப்பான கேள்விகள்...

சுகந்தப்ரீதன்
07-04-2008, 02:33 PM
செல்வா அண்ணா...(அதான் பெரியவான்னு தெரிஞ்சுடுச்சே அப்புறமென்னவாம்..?) நீயா இப்பிடியெல்லாம் கேள்வி கேட்டுருக்க...நம்பவே முடியலை.. நாலுவார்த்தை எழுதவே நாலுவிதமா யோசிச்சிட்டு எதையுமே எழுதமா போற ஆளுங்களாச்சே நீங்களெல்லாம்.. இப்ப எப்படி இப்படி பத்திபத்தியா கேள்விகேட்க முடிஞ்சுதாம்...?? (எல்லாத்தையும் கேள்வி கேட்டீங்கள்ல.. அதான் உங்களை நான் கேட்குறேன்..?)

அமரன்
07-04-2008, 02:37 PM
பங்காளி...
நேற்று இரவிரவா என்னை திட்டினியே... நீ திட்டின நேரத்தில இங்க ஸ்னோ கொட்டி ரம்மியமாக இருந்துச்சு..அதைவிட சந்தோசமான தருணம், இந்தப் பெருஞ்சாளி கைங்கரியத்தால் கிடைத்த முத்துகள் பட்டொளி வீசும்போது.. மீண்டும் ஒருதடவை பாராட்டுகள் பங்காளி..
(இங்கே எனது அடுத்த பதிவு பதிலாகத்தான் இருக்கும்)

சிவா.ஜி
07-04-2008, 02:39 PM
8அன்பு சிவா அண்ணாவுக்கு
மன்றத்தில் நான் பழகி மிகுந்த பாசத்தோடு அண்ணா என்று தினமழைக்கும் இருவரில் நீங்கள் ஒருவர். சகலகலா வல்லவராகவும் நிறைந்த அறிவும் திறமையும் கொண்ட நீங்கள் என்னைப் பார்க்க வந்து என்னோடு பேசும் போது என் சக தோழனாகவே உணர்ந்தேன் அதுமட்டுமல்லாமல் அப்போது தான் சந்தித்த என் நண்பரோடு அவருக்கு சமானமாக அவரது அலைவரிசையில் நீங்கள் உரையாடியது எனக்கு மிகுந்த வியப்பைத் தந்தது… அதைவைத்து தான் உங்களால் குழந்தையோடு குழந்தையாக விளையாடவும் முடிகிறது தத்துவ ஞானிகளோடு சரி சமதையாக விவாதமும் செய்ய முடிகிறது…. இதன் இரகசியம் என்ன ? எந்த கர்வமும் பெருமையும் இல்லாமல் எப்படி உங்களால் சிறியவர்களான எங்களோடு சமதையாக உரையாடவும் புகழவும் (கொஞ்சம் ஓவராத்தான் புகழுறீங்க..) முடிகிறது?

செல்வாவின் என்னைப் பற்றிய பார்வைக்கு உரித்தவனா நானென்பதில் சந்தேகமே. அனைவரோடும் அவர்களின் அலைவரிசையில் பழகுவது என் இயல்பு. அதற்குக் காரணம் நான் பெரும்பாலும் என்னிடம் பேசுபவர்களின் பேச்சை முழுவதுமாய் ஈடுபாட்டுடன் கேட்பவன். அது புலம்பலாக இருந்தாலும் சரி, அவருடைய கருத்துக்களாக இருந்தாலும் சரி, அலட்சியப் படுத்தாமல் அனைத்தையும் கேட்பேன். மேலும் நம் மன்ற உறவுகளுக்கு ஏற்கனவே சொன்னதைப் போல என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நட்புறவுகளின் நல்ல ஆதரவைப் பெற்றுதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். அதில் இளையவரும், மூத்தவரும் அனைவரும் அடங்குவர்.

பொதுவாகவே எனக்கிருக்கும் ஆர்வம்...அடிக்கடி என்னை புதுப்பித்துக்கொண்டே இருப்பதுதான். தொழில் சார்ந்ததாக இருந்தாலும், வாழ்க்கைமுறையாக இருந்தாலும் அப்போதைய நிலைக்கு என்னை மாற்றிக்கொள்வேன். விடுமுறையில் வீட்டுக்குப் போனால் என் மகளின் தோழிகள் எல்லாம் பொடுசுகள்....அனைவரும் என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்துவிடுவார்கள். அவர்களிடம் நேரம் போவது தெரியாமல் உரையாடுவேன். நிறைய விஷயங்களை அப்போதைய ட்ரெண்ட் என்ன என்பதை அவர்கள் மூலமாகத்தான் தெரிந்து கொள்வேன். என் மகனின் நன்பர்களும் ஆவலோடு என்னைச் சந்திக்க வருவார்கள். அவர்களிடம் பெரும்பாலும் படிப்பு தவிர்த்து மற்ற விஷயங்களைத்தான் அதிகம் பேசுவேன்.

முடிந்தவரை அவர்களின் வயதுக்குள் நான் என்னைப் பொருத்திக்கொள்வதால் இயல்பாய் அவர்களோடு கலக்க முடியும். சிறு வயதிலிருந்தே புத்தகம் வாசிப்பது எனக்குள் ஊறிப்போன ஒன்று. நிறைய வாசிப்பேன். என் மனைவி என்னிடம் எப்போதும் சொல்வதைப் போல படித்ததை நினைவில் வைத்திருந்து தேவைப்பட்ட இடத்தில் பயன்படுத்துவதால் ஏதோ எனக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கிறது என்ற தோற்றம் உருவாகிவிடுகிறது. ஆனால் உண்மையிலேயே அப்படி கிடையாது. நீங்கள் சொல்லியிருக்கும் ஆதியுடனான இலக்கிய உரையாடல்களைப் போல உரையாட என்னால் முடியாது.

இன்றுவரை எனக்கு வயது ஏறிக்கொண்டிருக்கிறது என்ற எண்னமே என் மனதில் தோன்றியதில்லை. என்னுடைய 20 களில் உறைந்துவிட்டது என் மனது. அதனால்தான் சோகத்தை நான் விரும்புவதில்லை.

புகழ்வதில் கஞ்சத்தனம் கூடாது செல்வா. ஒரு ஆக்கத்தைப் படித்ததும் மனதுக்குப் பிடித்திருந்தால் அந்த நேரத்தில் எவ்வளவு சந்தோஷத்தை நாம் உணருகிறோமோ...அதை வார்த்தைகளில் வெளிப்படுத்துவதில் குறைவெதற்கு? படைத்தவர் இளையவரா, முதியவரா என்று பார்க்காமல் படைப்பைப் பார்த்து வரும் புகழுரைகள் அவை. உதாரணத்திற்கு ஆதியின் மாங்கனி. வாசிக்க வாசிக்க மனம் உற்சாகத்தில் பறக்கிறது. அந்த உற்சாகத்தில் எழுதும் பின்னூட்டத்தில் சில நேரங்களில் புகழ்ந்துரைக்க வார்த்தைகள் கிடைப்பதில்லை.

உங்கள் கேள்விகளில் என்னையும் இணைத்துக்கொண்டதற்கு நன்றி செல்வா.

பூமகள்
07-04-2008, 02:53 PM
முதல் முத்து வந்துட்டது செல்வா அண்ணா..!!

அசத்தல் பதில் சிவா அண்ணா..!!
எல்லார் மனத்தோடும் பொருந்தும் அலைவரிசை தான் பழகுவதற்கான சரியான முறையாக நான் கருதினேன். அவ்வெண்ணத்தை அப்படியே பிரதிபலித்தன உங்களின் பதில்கள்.

எனக்கும் தட்டிக் கொடுப்பதிலும் நல்ல விசயம் யார் செய்தாலும் நேரே சென்று நபரைப் பார்க்காமல்.. நல் படைப்பைப் பார்த்து பாராட்டுவதும் மிகவும் பிடிக்கும்.. என் போலவே பல இடங்களில் ஒத்துப் போகின்றன அண்ணா உங்களின் மனப் பூக்களும்..!!
பாராட்டுகள் சிவா அண்ணா. இந்த அருமையான கேள்வி கேட்ட செல்வா அண்ணாவுக்கு நன்றிகள்..!!

------------------------------------
ஹூம்.. அடுத்து நானும் எழுதனுமே...!!! :icon_hmm::huh:
எஸ்கேப் ஆக ஒரு வழி கண்டுபிடிச்சிட்டேனே..!! :icon_wink1::icon_shout:
ஆங்...!!:sprachlos020::icon_shok: பூவோட ஸ்லேட் பென்சிலை மலரு எடுத்துட்டு போயிட்டது..!!:traurig001::traurig001:

யாராச்சும் பென்சில் வாங்கிக் கொடுத்தாத்தான் பூவு எழுதும்..!!:sport-smiley-018::icon_tongue:

(பூவு 3 வயது குழந்தையா கீழே புரண்டு அழுதுட்டு அடமா இருக்கு..!!:medium-smiley-100::icon_rollout: கவனியுங்க பாசத் தமையன்களே..!!:icon_35:)

ஆதி
07-04-2008, 02:59 PM
டேய் சங்ககாலப் புலவர்களையும், சமகாலப் புலவர்களையும் இலக்கியங்களையும் ஒப்புமை செய்ய சொல்லிருக்கியே, அதையும் கவிதையா ஒப்புமைப் படுத்தனுமா இல்லை ஒரு கட்டுரை மாதிரி எழுதலாமா ?

செல்வா
07-04-2008, 03:04 PM
[B] என்னிடம் பேசுபவர்களின் பேச்சை முழுவதுமாய் ஈடுபாட்டுடன் கேட்பவன். அது புலம்பலாக இருந்தாலும் சரி, அவருடைய கருத்துக்களாக இருந்தாலும் சரி, அலட்சியப் படுத்தாமல் அனைத்தையும் கேட்பேன்.
பொதுவாகவே எனக்கிருக்கும் ஆர்வம்...அடிக்கடி என்னை புதுப்பித்துக்கொண்டே இருப்பதுதான். தொழில் சார்ந்ததாக இருந்தாலும், வாழ்க்கைமுறையாக இருந்தாலும் அப்போதைய நிலைக்கு என்னை மாற்றிக்கொள்வேன். விடுமுறையில் வீட்டுக்குப் போனால் என் மகளின் தோழிகள் எல்லாம் பொடுசுகள்....அனைவரும் என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்துவிடுவார்கள். அவர்களிடம் நேரம் போவது தெரியாமல் உரையாடுவேன். நிறைய விஷயங்களை அப்போதைய ட்ரெண்ட் என்ன என்பதை அவர்கள் மூலமாகத்தான் தெரிந்து கொள்வேன். என் மகனின் நன்பர்களும் ஆவலோடு என்னைச் சந்திக்க வருவார்கள். அவர்களிடம் பெரும்பாலும் படிப்பு தவிர்த்து மற்ற விஷயங்களைத்தான் அதிகம் பேசுவேன்.

முடிந்தவரை அவர்களின் வயதுக்குள் நான் என்னைப் பொருத்திக்கொள்வதால் இயல்பாய் அவர்களோடு கலக்க முடியும். சிறு வயதிலிருந்தே புத்தகம் வாசிப்பது எனக்குள் ஊறிப்போன ஒன்று. நிறைய வாசிப்பேன். படித்ததை நினைவில் வைத்திருந்து தேவைப்பட்ட இடத்தில் பயன்படுத்துவதால்
புகழ்வதில் கஞ்சத்தனம் கூடாது செல்வா. ஒரு ஆக்கத்தைப் படித்ததும் மனதுக்குப் பிடித்திருந்தால் அந்த நேரத்தில் எவ்வளவு சந்தோஷத்தை நாம் உணருகிறோமோ...அதை வார்த்தைகளில் வெளிப்படுத்துவதில் குறைவெதற்கு? படைத்தவர் இளையவரா, முதியவரா என்று பார்க்காமல் படைப்பைப் பார்த்து வரும் புகழுரைகள் அவை. உதாரணத்திற்கு ஆதியின் மாங்கனி. வாசிக்க வாசிக்க மனம் உற்சாகத்தில் பறக்கிறது. அந்த உற்சாகத்தில் எழுதும் பின்னூட்டத்தில் சில நேரங்களில் புகழ்ந்துரைக்க வார்த்தைகள் கிடைப்பதில்லை.


இத இத இதத்தான் எதிர்பார்த்தேன் அண்ணா தங்களிடம். இந்த நேரடியான விளக்கம் எங்களுக்கு வந்து சேரணும் என்பது தான் என்னோட ஆவல்... அந்த ஆவலை அநாயாசமாக தீத்த அண்ணாவுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

செல்வா
07-04-2008, 03:06 PM
டேய் சங்ககாலப் புலவர்களையும், சமகாலப் புலவர்களையும் இலக்கியங்களையும் ஒப்புமை செய்ய சொல்லிருக்கியே, அதையும் கவிதையா ஒப்புமைப் படுத்தனுமா இல்லை ஒரு கட்டுரை மாதிரி எழுதலாமா ?
கவியுரைத்தால் கட்டுரையும் கவியே அன்றோ.... :D:D

செல்வா
07-04-2008, 03:10 PM
பங்காளி...
நேற்று இரவிரவா என்னை திட்டினியே... நீ திட்டின நேரத்தில இங்க ஸ்னோ கொட்டி ரம்மியமாக இருந்துச்சு

என்னடா பண்றது மனசு சுத்த வெள்ள அதான் திட்டுறதெல்லாம் பனியா விழுந்திருக்கு..... ஆனாலும் ஒரு விதத்துல உனக்கு நன்றி சொல்லித்தான் ஆகணும் ரொம்ப காலமா வேலை செய்யாத என்னோட மூளைக்கு வேலை குடுத்ததுக்கு....

அமரன்
07-04-2008, 03:13 PM
மன்றத்து போர்வீரர்கள் காவலர்கள் நீங்கள். எத்தனையோ எத்தர்களைப் பார்த்திருப்பீர்கள் என்னைப் பற்றிய தங்கள் கருத்து என்ன ?
பொழுது போகாத நேரத்தில், நானும் அக்கினியும் சேர்ந்து, உன்னை கூப்பிட்டு வம்பிழுக்கின்றோம் என்பதற்காக, எங்களை சண்டைக்காரர்கள் என்று சொல்லப்படாது.:)

நான் அடிக்கடி வலியுறுத்தும் கருத்து என்னவெனில், "மன்றத்துக் காவலர்கள் என்று தனியான பிரிவு இல்லை. அனைத்து அங்கத்தவர்களும் காவலர்களே. நீங்கள் கட்டளையிடுவதை, விரும்புவதை செய்து முடிக்கும் கர சேவகர்கள் என்று வேண்டுமானால் எம்மைச் சொல்லலாம்." உன்னுடன் பலதடவை பேசியும், ஒருதடவைகூட இதைச் சொல்லவில்லை எனும்போது, என்மேலே எனக்கு கோபம் மிகுகிறது.:eek: எனது பேச்சுகளிலிருந்து புரிந்துகொள்ளாத உன்மீதும்தான்..:rolleyes:

யாரானாலும் சற்று விலகியே இருப்பது எனது குணம். புதியவர்களை வரவேற்று உபசரித்து, நிலையாக எழுத்தூன்றியதும், தூர நின்று ரசிப்பதுடன் நின்று விடுவேன். உன்னுடன் (மட்டுமல்ல) சற்று வித்தியாசம். உனது ஆரம்பகால ஆக்கங்களை படிக்கவே இல்லை. ஆனால் நெருக்கமாக, நான் அழைத்து பேசுமளவுக்கு மிகவும் நெருக்கமாக (மரியாதை கருதி/வாழிட நேர வித்தியாச நிமித்தம் பலரை அழைப்பதில்லை என்பது வேறுவிடயம்) உள்ளேன்..

உனது இலக்கிய புலமை; தமிழ்ப்பற்று, மன்றத்தின்மீதான அளவுகடந்த அன்பு; இசை ஆர்வம்; சொல்லிக்கொண்டு போகப் பல..

யாரைப் பற்றியும் அபிப்பிராயம் சொல்லும் அளவுக்கு நான் தேர்ந்தவனல்ல. கணிப்பை சொல்வதில் எனக்கு நாட்டமில்லை.. பிடிக்காதவற்றை மட்டும் சொல்வேன். (ஜி டாக்கில் யாரோ கேட்டதுக்கும் இதையே பதிலாக தந்தேன்)

உனது திறமைகளை வெளிப்படுத்துவதில்லை. மரியாதை என்ற பெயரிட்டு நீ வைத்திருக்கும் தயக்கத்தை, கருத்துரைக்கும் சுதந்திர முடக்கத்தை உதறித்தள்ளாதிருக்கிறாய்.. படிப்பதில் இருக்கும் ஆர்வத்தை விட, படித்ததை அலசுவதில் ஆர்வம் குறைவா கொண்டிருக்கிறாய். கேட்டால் நேரமின்மை என்கிறாய். ஒத்துக்கொள்கிறேன்.. கிடைக்கும் நேரத்தில் எழுத மறுக்கிறாய்..

இப்போதைக்கு இவ்வளவுதான்.... பதிவுகளைப் போடு.. உன் மனநாடி பிடித்து மீதி சொல்கிறேன்..

செல்வா
07-04-2008, 03:15 PM
செல்வா அண்ணா...(அதான் பெரியவான்னு தெரிஞ்சுடுச்சே அப்புறமென்னவாம்..?)

இது எண்ணிலருந்து நல்லாத்தானே போய்க்கிட்டுருந்துச்சு......:eek::eek:


நீயா இப்பிடியெல்லாம் கேள்வி கேட்டுருக்க...நம்பவே முடியலை.. நாலுவார்த்தை எழுதவே நாலுவிதமா யோசிச்சிட்டு எதையுமே எழுதமா போற ஆளுங்களாச்சே நீங்களெல்லாம்.. இப்ப எப்படி இப்படி பத்திபத்தியா கேள்விகேட்க முடிஞ்சுதாம்...??
நானெங்க கேட்டேன்..... கேக்க வச்சுட்டான் ஒருத்தன் .... சவுதி தலைக்கு மேல ஃப்ரான்ஸ்ல இருக்கானே... அவன் :sauer028::sauer028::sauer028:. எல்லாப் புகழும் அவன் ஒருத்தனுக்கே... :):)

யவனிகா
07-04-2008, 03:16 PM
சிவா அண்ணாவின் பதில் அருமை!!!

சிவா அண்ணாவுக்கு மனம் "20"திலேயே என்றும் இருக்க வாழ்த்துக்கள்...

சிவா அண்ணாவுடன் லொடலொடவென்று பேசும் ஆட்களில் நானும் ஒருத்தி...எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன்...

சிவாண்ணாவிடம் பிடித்த விசயம் என்னன்னா...அவர் பேசிட்டு இருக்கும் போது நாம் குறுக்கிட்டால்...அந்த நொடி அவர் பேச்சை நிறுத்திவிட்டு "சொல்லும்மா?" என்பார்...எனக்கு வருத்தமாய் போகும் அடடா...அவசர குடுக்கை போல குறுக்கிட்டோமே என்று...

எனக்கு இங்கே ஒரு தோழி உண்டு...சைக்காலஜி படித்தவர்...எங்கள் சந்திப்பின் போது, அவர் சிவா அண்ணாவிடம் உரையாடி முடித்தவுடன் அவர் சொன்னது இதுதான், "சிவா அண்ணா பேச்சாளர் மட்டுமல்ல..,ஒரு நல்ல லிசினர்" என்பது தான்...

சிவா அண்ணாவுடன் செல்வா நேரில் பேசியிருப்பீர்கள். பேசும் போது...நிதானமும், சொல்வதில் உறுதியும், வெகு நேர்த்தியான ஏற்ற இறக்கமும், நல்ல குரல் வளமும் உடையவர்.படபடப்பு சுத்தமாக இருக்காது. நல்ல பேச்சாளி மட்டும் அல்ல...அழகாக நாம் பேசுவதை உள்வாங்கி பதிலளிக்கும் திறமையும் உள்ளவர்.

"அக்கா எப்படி இவ்வளவு வேகமா பேசறீங்க?"அப்படின்னு எப்பவும் செல்வா கேக்கிற கேள்வியால நொந்து நூடுல்சா போன எனக்கு...அன்பு பேசுவது மட்டும் கொஞ்சம் ஆறுதல்..ஏனா அது என்ன விட ஸ்பீடு...!!!

அழகாக, ஆழமாக அனைவரும் ரசிக்கும் படி பேசும் திறமை சிவா அண்ணாக்குக் கிடைத்த வரம்...!!!

செல்வா
07-04-2008, 03:20 PM
மிக சிறப்பான கேள்விகள்...
நன்றி அண்ணா...

ராஜா
07-04-2008, 03:21 PM
நேர்த்தியான பதில் சிவா..!

கேள்விக்கு வெகு பொருத்தமாக.... ஒற்றை அட்சரம் கூட கூடுதல் குறைவு இல்லாமல் அழகாக வந்திருக்கின்றன வார்த்தைகள்... மனதின் அடிப்பகுதியிலிருந்து..!

என் ஆசான் சொல்லுவார்.. "எதிராளியைப் பேசவிடு.. அவனின் பலமும் பலவீனமும் நீ அறிந்துகொள்ள இதைவிட எளிய வழி எதுவுமே இல்லை " என்று..!

அறிவார்ந்த கேள்வித்திரட்டில் முதல் பதிலிலேயே மனம் கொள்ளை போய்விட்டது..! [ செல்வாவுக்கு நன்றி சொல்லி மாளாது போலிருக்கே..!]

செல்வா
07-04-2008, 03:28 PM
அட்டகாசமான கேள்விகள் செல்வா..
அருமையான பதில்களை எதிர்பார்ப்போம்..
நன்றி மதி....


அசத்தீட்ட மாப்பு அசத்தீட்ட.. சும்ம நச்சு னு இருக்கு கேள்விகள் எல்லாம்.
இருடி எல்லாம் உனக்கு நாட்டாமையானதால வந்த வினை.. விவிலியத்துல ஒரு வாசகம் தான் ஞாபகம் வருது யாருக்கும் தீர்ப்பிடாதே...னு


நந்தவனமாய் கேள்விகளை அடுக்கியிருக்கும் செல்வா
நட்பாய் அனைவரையும் அன்பாய் கேள்விகளை மிக
நளினமாக கேட்டு அசத்திட்டீர்கள்...
நன்றி கமல்


அருமையான கேள்விகள்...பாராட்டுகள் செல்வா...

நன்றி அக்கா எல்லாம் உங்ககிட்டருந்து கத்துகிட்டது தான்.


அனைவரின் பதிலைக் எதிர்பார்த்து ஆவலுடன்...!
அலோ.... அனைவரின் பதில எதிர்பார்த்தா?:eek::eek: ஊருக்கு போறதுக்குள்ள பதில் வரணும். இல்லண்ணா.. ஊருக்கு போக விடைகிடையாது.. சொல்லிட்டன் :)




புதிதாக மன்றத்தில் இணைந்துள்ள என்னையும் ஆ பத்து திரியில் ஒருவராக இணைத்துக் கொண்டமைக்கு மிக்க நன்றிகள் செல்வா அண்ணா....
விரைவில் பதிலுடன் சந்திக்கின்றேன்..
புதிசா வந்தாலும் நீங்க ரொம்ப முக்கியமான ஆளு....தங்கச்சி!!!:lachen001::lachen001:

அதானே....:D:D

செல்வா
07-04-2008, 03:33 PM
செல்வாவுக்கு நன்றி சொல்லி மாளாது போலிருக்கே..!
:eek::eek: அண்ணா... அப்படில்லாம் சொல்லி பெரியாளாக்கிடாதீங்க... என்னிக்கும் உங்க எல்லாருக்கும் தம்பியா இருக்குறதிலேயே சந்தோசம் எனக்கு

மலர்
07-04-2008, 04:01 PM
இலக்கியம்மா... :rolleyes: அது என்னன்னே தெரியாது...:icon_hmm::icon_hmm:
ஆ :fragend005: 10ல கேள்வியா :confused: ஓ...:icon_tongue: ஐ டோண்ட் நோ டமில்..:icon_shades:ன்னு
வாயை திறந்தா அத்தனையும் பொய்யி....:icon_cool1:

:sauer028: நற....நற.... :waffen093::violent-smiley-010:

இவ்ளோ அழகான கேள்வியை :icon_b: கேட்டுட்டு...
ஏன் தான் கேள்வியே கேக்க தெரியாதுன்னு :shutup:
புள்ளையை :icon_rollout:
ஏமாத்துறாங்களோ... :traurig001: தெரிலைப்பா..... :icon_shout:
--------
:sport-smiley-019: செல்வா..... கேள்வி அனைத்தும் அருமை.... :icon_good::icon_clap:
பாராட்டுக்கள்.... :D :D

க.கமலக்கண்ணன்
07-04-2008, 04:11 PM
"மன்றத்துக் காவலர்கள் என்று தனியான பிரிவு இல்லை. அனைத்து அங்கத்தவர்களும் காவலர்களே. நீங்கள் கட்டளையிடுவதை, விரும்புவதை செய்து முடிக்கும் கர சேவகர்கள் என்று வேண்டுமானால் எம்மைச் சொல்லலாம்."

பச்சை சட்டைகார்கள் என்று அனைவரும்

பலமாய் பாசத்துடன் அழைத்தாலும் உங்களின்

படைவீரர்கள் நாங்கள் உங்களின் கட்டளையின் சேவகன் என்று

பவித்தரமாய் சொல்லி செல்வாவின் அழகான கேள்விக்கு அட்டகாசமான

பதிலை அளித்து அமரன் உங்களின் பதில் அமர்களம்...

அமரன்
07-04-2008, 04:11 PM
ஒரு பொறுப்பாளராக மன்ற செயல்பாடுகளில் உங்கள் மனநிலை என்ன? பொறுப்பாளராக இருப்பதால் நீங்கள் இழந்ததாக மற்றும் பெற்றதாக நினைப்பது என்ன ?


மூன்று பேர் பேரையும் குறிப்பிட்டு, ஒரு பொறுப்பாளராக உங்க மனநிலை என்னன்னு கேட்டிருக்கியே... நான் பதில்சொன்னாப்புறவு, மத்தவங்க மாட்டேன்னு அடம் பிடிச்சா என்ன பண்ணுவே?

எதை மனசுல வெச்சு, இக்கணையை வக்கணையா ஏவினேன்னு தெரியல.. ஏதோ தெரிந்தவரையில சொல்றேன்..

முதலில் இங்கெ சென்று இரண்டாவது பதிலைப்படி (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=269491&postcount=18)செல்வா..

சாதாரண உறுப்பினனாக வந்து, ஒருங்குறிக்கு மாற்றும் உதவியாளனாகி பொறுப்பாளனாகியவன் நான். மிக நீண்ட பெற்றவை பட்டியலில் சிலவற்றை சொல்றேன்..

மன்றத்தின் கட்டுக்கோப்புகளால் கவரப்பட்டு, அதன் படி நடந்து, பொறுபாளனாகியது போல, நேரிடை வாழ்விலும் பண்பட்டிருக்கிறேன். பணியை திறம்பட்டிருக்கிறேன்..

ஒரு விடயத்தை பலகோணங்களில் பார்க்கப் பழகியுள்ளேன். பிரச்சினைகளை ஓரளவுக்கு சிறப்பாகக் கையாளக் கற்றுள்ளேன். பிரச்சினைகளிலிருந்து பாடம் பயிலும் பாங்கினைப் பெற்றிருக்கிறேன்.

உலக விடயங்கள் பலவற்றை அறிந்துள்ளேன். வாழ்வியல் சூட்சுமங்களை அறிந்துள்ளேன். குணவியல்புக்கு ஏற்ப ஒருத்தரை அணுகும் விதம் அறிந்துள்ளேன்.

அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு எப்படி சொல்வதில் தெளிவு பெற்றுள்ளேன்.. ஒவ்வொரு திரியையும் கூர்ந்து வாசிக்க வேண்டியது அதி முக்கியம் என்ற மனநிலையால், ஆழ்ந்து படித்து, அலசும் திறனை விருத்தி செய்த்ததும் பொறுப்பாளன் நிறம்தான்..

முக்கியமாக, நீ சின்னவன்... பொறுப்புடன் செயல்படும் தகைமை இல்லாதவன்.. நாங்கள் எல்லாம் பார்த்துப்போம்.. நு அன்பால கட்டிப்போட்டவர்களை பார்த்த என்னை நம்பி பொறுப்பு தந்து என்னையெ எனக்கு அடையாளம் காட்டியது மன்றம்.....

பழந்தமிழ் இலக்கியங்களை பேணுவதில், தமிழை மென்மேலும் தழைக்கவைப்பதில், ஓலைச்சுவடி, அச்சுப்பிரதி வரிசையில் இணையம்.. அவ்விணையத்தில் தனித்துவமாக இருக்கும் நம்மன்றத்தின் அங்கத்தினனாக அணைத்து, பொறுப்பாளனாக்கி பெருமிதத்தை எனக்குள் பிரவாகிக்க வைத்தது.

இந்த மனநிலையால், எழுதும் நேரம் குறுகியது என்ற அனுவளவு இழப்பினால் பெரிதான தாக்கம் ஏற்படுத்தவில்லை..

மன்றம் வைத்த நம்பிக்கையை கட்டிக்காக்க வேண்டும் என்ற உத்வேகம் எழுந்து, பெருமை மமதையாக மாறிவிடக்கூடாது என்பதிலும், மற்றவர்களுக்கு அப்படி தோன்றிவிடக்கூடாது என்பதிலும் அதிக கவனம்கொள்ளவைக்கும்

தியானத்துக்கு முதல் எண்ணங்களை கட்டறுத்து விடுவது போல, மன்றத்தில் நுழையும் ஒவ்வொரு தடவையும் மனக்குப்பைகளை வெளியேற்றி விடுவேன். நிர்ச்சலனமான, வெறுமையான மனதுடன் மன்றத்தை சுற்றிப் பார்ப்பேன்.. பிரச்சினைகள் கிளம்பும் ஒவ்விரு சமயமும் இப்படித்தான்.. அதனால் இன்றுவரை கவனம் சிதறவில்லை என்று நம்புகிறேன்.

மலர்
07-04-2008, 04:31 PM
அனைவரோடும் அவர்களின் அலைவரிசையில் பழகுவது என் இயல்பு. அதற்குக் காரணம் நான் பெரும்பாலும் என்னிடம் பேசுபவர்களின் பேச்சை முழுவதுமாய் ஈடுபாட்டுடன் கேட்பவன். இன்றுவரை எனக்கு வயது ஏறிக்கொண்டிருக்கிறது என்ற எண்னமே என் மனதில் தோன்றியதில்லை. என்னுடைய 20 களில் உறைந்துவிட்டது என் மனது. அதனால்தான் சோகத்தை நான் விரும்புவதில்லை.
முதல் பதிலையே முத்தாய் கொடுத்த
சிவா அண்ணாக்கு ஸ்பெஷல் பாராடுக்கள்....
எல்லாரோடும் அவர்களின் அலைவரிசையில் பழகும் போது
இடைவெளி உண்ர்வே தெரியாது... நல்ல குணமும் கூட....
சிவா அண்ணா என்றும் 16 ஹீ..ஹீ.... இல்லை இல்லை என்றும் 20ஆக இருக்க வாழ்த்துக்கள்....
சிவா அண்ணாவின் பதில் அருமை!!!
சிவாண்ணாவிடம் பிடித்த விசயம் என்னன்னா...அவர் பேசிட்டு இருக்கும் போது நாம் குறுக்கிட்டால்...அந்த நொடி அவர் பேச்சை நிறுத்திவிட்டு "சொல்லும்மா?" என்பார்...எனக்கு வருத்தமாய் போகும் அடடா...அவசர குடுக்கை போல குறுக்கிட்டோமே என்று... ! சேம் பின்ச்.... கிவ் மீ மன்ச்...

செல்வா
07-04-2008, 04:39 PM
மூன்று பேர் பேரையும் குறிப்பிட்டு, ஒரு பொறுப்பாளராக உங்க மனநிலை என்னன்னு கேட்டிருக்கியே... நான் பதில்சொன்னாப்புறவு, மத்தவங்க மாட்டேன்னு அடம் பிடிச்சா என்ன பண்ணுவே?

முன்று பேர் பதிலையும் தனிமடலில் வாங்கி நானே பதியலாமென்பது தான் இதற்கு பதில். ஆனால் உண்மையில் அக்னியும் ஓவியனும் அப்படி அல்ல. தங்கள் கருத்துக்களை தங்கள் பாணியில் தவறாது எடுத்துவைப்பர். பாத்துக்கிட்டே இருடா பங்காளி....

நன்று நன்று ... அரிய விரிந்த பதிலுக்கு... நன்றி குருவே.... உங்கள் வளர்ச்சியின் வியப்பில் விழிகள் விரிகின்றன....

மலர்
07-04-2008, 04:41 PM
எதை மனசுல வெச்சு, இக்கணையை வக்கணையா ஏவினேன்னு தெரியல..
:D :D :D :D :D
நோ.... கமெண்ட்ஸ்...... :icon_rollout: :icon_rollout: :icon_rollout:

மன்றத்தில் நுழையும் ஒவ்வொரு தடவையும் மனக்குப்பைகளை வெளியேற்றி விடுவேன். நிர்ச்சலனமான, வெறுமையான மனதுடன் மன்றத்தை சுற்றிப் பார்ப்பேன்.. பிரச்சினைகள் கிளம்பும் ஒவ்விரு சமயமும் இப்படித்தான்.. அதனால் இன்றுவரை கவனம் சிதறவில்லை என்று நம்புகிறேன்.
அமரன் அண்ணா...
உங்களிடம் எனக்கு பிடித்தகுணமும் இதுவே தான்... :icon_b: :icon_b:
நம்புகிறேன்.... என்ன நம்புகிறேன்.....என்று இழுவை...
சிதறியதே இல்லீங்கோ..... :cool: :cool:

சிவா.ஜி
08-04-2008, 04:58 AM
அமரனின் பதிலில் காணும் தெளிவு மலைக்க வைக்கிறது. மன்றத்தால் என்னவெல்லாம் அவர் பெற்றார் என்ற அவரின் பட்டியலைப் பார்த்து,
அவற்றை அவர் பெற்றதுகூட பெரிதல்ல...அதை உணர்ந்து கொண்டதுதான் சிறப்பு. பொறுப்பாளரின் பொறுப்பு என்றால் வெறும் கம்பைக் கையில் பிடித்திருக்கும் கண்காணிப்பாளர் என்றில்லாமல், இந்த மன்றத்தின் அனைத்து பொறுப்பாளர்களும் மிக அன்பானாவர்களாக...அனைத்து பதிவுகளையும் பார்ப்பதால்...தவறு இருப்பின் வலிக்காமல் குட்ட முடிகிறது.

மன்றம் வைத்த நம்பிக்கையை கட்டிக்காக்க வேண்டும் என்ற உத்வேகம் எழுந்து, பெருமை மமதையாக மாறிவிடக்கூடாது என்பதிலும், மற்றவர்களுக்கு அப்படி தோன்றிவிடக்கூடாது என்பதிலும் அதிக கவனம்கொள்ளவைக்கும்


இந்த எண்ணம் உங்களை இன்னும் உயரவைக்கும் அமரன். மிகத் தெளிவான, நல்லதொரு பதில். வாழ்த்துகள் அமரன்.

ராஜா
08-04-2008, 06:06 AM
இம்மன்றத்தில் நான் அண்ணாந்து நோக்கும் மிகச் சில உயர்ந்தவர்களில் என் அமரும் ஒருவர்..!

அவரது முன்னேற்றம் ஒவ்வொன்றையும் ஒரு தாயின் மகிழ்வோடும் கர்வத்தோடும் அவதானித்து வருகிறேன்.

பதவி வரும்போது பணிவு வரவேண்டும்.. துணிவும் வரவேண்டும் தோழா என்ற வரிகளுக்கு வாழும் உதாரணம் அமர்..!

{ 'கரசேவகர்' என்றால் எங்களுக்கு கொஞ்சம் பயம் உண்டு அமர்.. :) }

பசுமரத்தாணி போல எளிதாய் நம் மனதில் தன் கருத்துக்களை பதியவைப்பது அமரின் திறன்களில் ஒன்று...!

நுரையீரல்
08-04-2008, 06:33 AM
செல்வாவின் கேள்விகளுக்கு மிக அருமையான பதிலை தந்த சிவாண்ணன் மற்றும் அமரனுக்கு எனது நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
இளைஞர்களுக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு நான் ஒன்றும் பக்குவப்பட்டவனோ (அ) முதியவனோ அல்ல (அட மெய்யாலுமே தானுங்க). இருந்தாலும் எதாவது சொல்லணுமே என்று யோசிச்சப்போ, நான் செய்யும் தவறுகள் என்னென்னவோ அதையெல்லாம் சொல்லி, அதை செய்யாதீர்கள் என்று சொல்ல நினைக்கிறேன்.

1. என் மனசில என்ன தோணுதோ, அத அப்பவே சொல்லிடுவேன். நான் சொல்றது சரியா / தவறா என்று கூட யோசிக்கமாட்டேன். அப்படி சொல்றதால எத்தனை பேர், எந்தளவுக்கு பாதிப்பாங்கனு கூட யோசிக்காம சொல்லிருக்கேன். அதனால,
யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
என்ற குறலுக்கேற்ப, இனிமேலாவது அடிக்கடி வாயைத் திறக்காம கம்முனு இருக்கலாம்னு இருக்கறேன். அதையே இளைஞர்களும் பின்பற்றலாமே. என்ன அடிக்கடி பேசலேனா, நம்மளப்பத்தி மத்தவங்க பேசுவாங்க.

2. ஊர் உலகத்துல எல்லாரும் கெட்டவங்களா இருக்காங்க, நம்ம மட்டும் எதுக்கு நல்லவனா இருக்கணும், நம்மளும் ஒன்னு, ரெண்டு தப்பு செஞ்சு காலத்த ஓட்டலாம்னு நினச்சுதான், நானும் அப்பப்ப சின்ன, சின்ன தப்புகளை தெரிஞ்சே செஞ்சு காலத்தை ஓட்டிட்டு இருக்கேன்.

உலகத்துல யாரு வேணும்னா தப்பு செய்யலாம், ஆனா கடவுள் மட்டும் செய்யக்கூடாதுனு நினைக்கறவன் நான். என்னைப் பொறுத்தவரை, எனக்கு நானே கடவுள். என் கடவுள் என்னுள்ளே தான் (மனசும், உடலும்) இருக்கிறார். என்னிக்கு என் கடவுள் அப்பழுக்கற்றவராய் மாறுகிறாரோ, அன்னிக்கு என்னால் கடவுளைக் காணமுடியும் என்று நினைக்கிறேன். தற்போதைக்கு கடவுளைக் காணும் எண்ணமில்லாததாலும் மற்றும் அறுபது வயசு வரைக்கும் உயிர்வாழ்ந்ததற்கு அப்புறம் கடவுளைப் பார்க்கலாம் என்று நினைப்பதாலும் என் கடவுளை சுத்தம் செய்யாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஒருவேளை 60 க்கு முன்னாடியே மர்கையா ஆனா, அதப்பத்தி இப்போதைக்கு கவலையில்லை.

என்னடா அட்வைஸ் பண்ற இடத்துல, மர்கையாவ பத்தி பேசுறானேனு யோசிக்க வேண்டாம். எதுக்குமே பயப்படாதவங்க கூட சில நேரத்துல சாவைப் பார்த்து பயப்படுவாங்க.

வாழ்க்கையில யாரும், எதுக்காகவும் சாவைத் தேடி போகாதீர்கள், அரிது, அரிது இவ்வுலகில் மானிடனாய்ப் பிறப்பது அரிது. சப்போஸ் சாவு வந்தாலும் அதைப் பார்த்து பயப்படாம நெஞ்சுறுதியுடனும் வாழுங்கள் என்பதைத் தான் இவ்வளவு ஜவ்வு இழு, இழுத்து சொல்கிறேன்.

3. யாருக்கும் அட்வைஸ் பண்ணாதீர்கள். அப்படியே அட்வைஸ் சொல்ல சொல்லி கேட்டாலும் கழுவுற மீனுல நழுவுற மீனா எஸ்கேப் ஆயிடுங்க. கஷ்டப்பட்டு அட்வைஸ் பண்ணியதுக்கப்புறம் பெரிசா சொல்ல வந்துட்டான் கஷ்மாலம் நு சொல்வாங்க (ஹி ஹி உள்குத்து வர்றதுக்கு முன்னாடியே ஷீல்டு போட்டு தடுக்கறது தான் இந்த புது டெக்னாலஜி).


ஒரு சிறப்பு கேள்வி நுரை மாமாவுக்கு
காதலித்தே கல்யாணம் செய்திருந்தாலும்.. காதலிக்கும் போது காதலியின் அறிவை புகழ்ந்து பேசும் பலர் கல்யாணத்திற்கு பின் அவ்வாறிருப்பதில்லை? அங்ஙனமிருக்க நீங்களோ நல்ஊக்கம் கொடுத்து அக்காவின் திறமைகள் மெருகேறவும் அரங்கேறவும் உதவுகிறீர்கள். இத்தகைய மனம் தங்களுக்கு வர ஏதேனும் அடிப்படை காரணம்? இந்த கருத்தைப் பற்றிய தங்கள் விமர்சனம் என்ன?
காதலிக்கும் காலங்களில் சும்மா லுலு வாயிக்கு காதலியை உசுப்பேத்திவிட்டு, அவள் மனதில் இடம்பெற வேண்டும் என்பதற்காக போற்றி பாடுபவர்கள். கல்யாணத்துக்கு அப்புறம் போற்றி பாடுவது இல்லை, மாறாக உண்மையைப் போட்டு உடைப்பார்கள். காரணம் -> கல்யாணத்துக்கு அப்புறம், மனைவி என்பவள் நம் சொத்தாகிவிடுகிறாள். அதுலயும் நிறையபேர் மனைவியை அசையாச் சொத்தாய் தான் பாவிக்கிறார்கள்.

ஆனால் நான் காதலிக்கும் காலத்திலும் சரி, இப்பவும் சரி என்னவளை அதிகப்படியாக பொய்யாக புகழ்ந்து பேசியது கிடையாது. உண்மையாக புகழ வேண்டியதை, சரியான நேரத்தில் புகழ்ந்துமிருக்கிறேன். போலிகள் இன்று இல்லாட்டியும் என்றாவது ஒருநாள் வெளியே வந்துவிடும். ஆனால் உண்மை என்றுமே நிலைத்து நிற்கும்.

அவரிடம் உண்மையான திறமை மற்றும் அறிவு இருக்கிறது. அதை நான் சொல்லி ஊக்கப்படுத்தாவிட்டாலும் வெளியே வந்துவிடும். மற்றபடி நானெல்லாம் ஊக்கப்படுத்தி அவர் கதையோ, கவிதையோ எழுதவில்லை. நான் செய்யும் ஒரே காரியம் அவருடைய தனித்தன்மையில் தலையிடுவதில்லை அவ்வளவு தான், காரணம் -> அவர் என்னுடைய தனித்தன்மையில் தலையிடக்கூடாது என்ற சுயநலம்.

ஆதி
08-04-2008, 06:43 AM
ராஜா அண்ணா உங்க பாணியில் மீண்டு அசத்தீடிங்க.. நீங்க உங்களைப் பற்றிச் சொன்ன சில விடயங்களில் உங்களுடன் உரையாடும் போது கவனித்திருக்கிறேன்.. எனக்கு உங்களிடம் அதிகமாய் பிடித்த குணமே நீங்க நீங்களா இருக்கிறதுதான்..

பூமகள்
08-04-2008, 10:52 AM
கவியரசர்.. அமரன் அவர்களின் பதில் வைரத்தின் ஜொலிப்பு போல..!!
சொல்லவே தேவையில்லை..!! அத்தனை பொருத்தமாக அமைந்துவிட்டது.
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் அமரன் அண்ணா.
---------------------------------------------
நுரை அண்ணாவின் சுய தேடலின் விளைவுகளும் அதனை எப்படி தவிர்க்கலாம் என்ற வழிமுறைகளும் அசத்தலோ அசத்தல்.

தனித்தன்மையை ஒருவருமே எக்கால கட்டத்திலும் இழக்கக் கூடாது. அவ்வகையில் இருக்கும் நீங்கள் இருவருமே.. மேட் ஃபார் ஈச் அதர் தான்..!! பாராட்டுகள் நுரை அண்ணா. :)

(பூவோட மனசாட்சி: பூவு எல்லாரும் பதில் சொல்லி அசத்தறாங்க.. நீ என்ன செய்ய போறே?? :icon_ush:
பூ:இப்போதைக்கு அப்பீட்டு...!! :D:D
பூவோட மனசாட்சி: :eek::eek:)

சிவா.ஜி
08-04-2008, 11:22 AM
இனிமேலாவது அடிக்கடி வாயைத் திறக்காம கம்முனு இருக்கலாம்னு இருக்கறேன். அதையே இளைஞர்களும் பின்பற்றலாமே. என்ன அடிக்கடி பேசலேனா, நம்மளப்பத்தி மத்தவங்க பேசுவாங்க.

கல்யாணத்துக்கு அப்புறம், மனைவி என்பவள் நம் சொத்தாகிவிடுகிறாள். அதுலயும் நிறையபேர் மனைவியை அசையாச் சொத்தாய் தான் பாவிக்கிறார்கள்.

அவரிடம் உண்மையான திறமை மற்றும் அறிவு இருக்கிறது. அதை நான் சொல்லி ஊக்கப்படுத்தாவிட்டாலும் வெளியே வந்துவிடும். மற்றபடி நானெல்லாம் ஊக்கப்படுத்தி அவர் கதையோ, கவிதையோ எழுதவில்லை. நான் செய்யும் ஒரே காரியம் அவருடைய தனித்தன்மையில் தலையிடுவதில்லை அவ்வளவு தான், காரணம் -> அவர் என்னுடைய தனித்தன்மையில் தலையிடக்கூடாது என்ற சுயநலம்.

அசத்திட்டீங்க நுரை.எவ்ளோ பெரிய விஷயத்தை சிம்பிளா சொல்லிட்டீங்க. நாம அதிகம் பேசாம நம்மைபத்தி மத்தவங்க பேசற அளவுல இருக்கனுங்கறது உண்மையிலேயே பெரிய விஷயம்.

அதே மாதிரி நச்சுன்னு மண்டையில அடிக்கறமாதிரி இருக்கு நீங்க சொன்ன அசையா சொத்து மேட்டர். கண்டிப்பா நிறையபேர் அப்படித்தான் நினைச்சிக்கிட்டு இருக்காங்க. அதனாலேயே பல காதல்கள் கல்யாணத்துக்கு அப்புறம் டப்பா டேன்ஸாட ஆரம்பிச்சுடுது.

கடைசி பத்தியில நீங்க சொல்லியிருக்கற விஷயம் நூற்றுக்கு நூறு அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒரு நல்ல பாலிஸி.

சும்மா சொல்லக்கூடாது நுரை சார்..பின்னிட்டீங்க.

மனோஜ்
08-04-2008, 11:34 AM
செல்வா கலக்கல் கேள்விகள்

சிவா அவர்களிலன் பதிலும்

அமரனின் பதிலும் மனதை அசைத்தன நன்றி

சாலைஜெயராமன்
08-04-2008, 05:09 PM
அன்பு செல்வா,

அசத்தலான அருமையாக தொகுக்கப் பட்ட கேள்விகள். வித்தியாசமாகச் செய்யவேண்டும் என்று அள்ளித் தெளித்து அலங்கோலமாக்காமல் சிந்தனையைத் தூண்டும் விதமாகவும், மன்றத்து உறவுகளை இன்னும் நெருக்கமாக ஒருங்கிணைக்கவும் உதவும் உயர்தரத்து சிந்தனை மிகுந்த கேள்விக்கணைகள்.

இது ஏதோ மிக நெருங்கிய நட்புகளுக்குள் கேட்கப்பட்டு ஒருவருக் கொருவர் மிக்க பரிச்சியமானவர்கள் வந்துபோகும் திரி என்று மேலோட்டமாகச் சென்று இதுநாள் வரை பங்களிக்காமல் விட்டு விட்டேன்.


என் நம்பகத் தன்மையை மற்றவர்கள் உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாக்கித் தருவோம் என்ற எண்ணத்தோடுதான் மன்றம் வந்த நாளிலிருந்து என்னைப் பற்றி மன்றத்திற்கு என்னுடைய முழுத்
தகவல்களையும் சுமந்த அறிமுகத்தோடுதான் வலம் வந்தேன்.

ஆனாலும் மன்றத்து நட்பு வட்டம் ஒரு சிலரோடு மட்டும் நின்றுவிட்டது. எனவே மன்றத்து நிகழ்வுகளைப் படித்துமட்டும் இன்புறுவதை வாடிக்கையாக்கிக் கொண்டேன்.

என்னுடைய தலைமுறை இடைவெளிச் சிந்தனைகளுக்கு வயது ஒரு தடையாயிருக்குமோ என்ற எண்ணத்தில் தனித் திரி தொடங்கி எண்ணங்களை வெளியிடுவதை தவிர்த்து ஆக்கமான பின்னூட்டங்களினால் மக்களுடன் நெருக்கமாகிக் கொண்டேன்.

சில அன்பர்களுடன் தனி மடலில் தொடர்பு கொண்டபோது திரு சிவா. அவர்கள்தான் என்னிடம் நேசக்கரம் நீட்டி அன்பான பதில்களால் மிக நெருக்கமாகிவிட்டார். பின் அமரன், சுகந்தன், ஆதி, திரு இதயம் திரு அறிஞர் போன்றோருடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.

இருப்பினும் எல்லோருடனும் இன்னும் அறிமுகப் பரிவர்த்தனை கூட ஏற்படுத்திக் கொள்ள முடியாதது சற்றே வருத்தமாக இருந்தாலும் இத்திரியில் பங்கெடுப்பது மற்ற மக்களின் நெருக்கத்திற்கு இன்னும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

திரு அமரன் இன்றுதான் தனிமடலில் தொடர்புகொண்டு என்னையும் பங்கெடுத்துக் கொள்ள உதவியாக தாங்கள் தெரிவித்திருந்த எனக்கான கேள்வியினை நினைவுபடுத்தியிருந்தார்.

எனவேதான் தாமதமான என்னுடைய பங்களிப்பு. மன்னிக்கவும். என் பதில்களோடு மீண்டும் தொடர்புகொள்கிறேன்,

சாலைஜெயராமன்
08-04-2008, 06:04 PM
1சாலையண்ணா….
ஒரு வங்கிப்பணியில் இருக்கும் உஙகளுக்கு இந்த கேள்வி…
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் 2020ல் இந்தியா வல்லரசாகிவிடும். என்று சொல்கிறார். எழுத்தாளர் சாரு நிவேதிதா ஒரு கட்டுரையில் சொல்லியிருப்பார் "என்று டாலருக்கு யூரோவுக்கு நிகராக இந்திய பணமதிப்பு உயருகிறதோ அன்றே இந்தியா வல்லரசாகும்" என.
ஒரு வங்கி அதிகாரியான உங்கள் பார்வையில் வல்லரசு என்பது என்ன?
உண்மையில் இந்தியா எப்போது வல்லரசாகும்?
இப்போதைய இந்தியாவின் பொருளாதார நிலையை எப்படிச் சொல்வீர்கள்?

வல்லரசு என்ற வார்த்தைப் பதத்திற்கு தாங்கள் என்ன பொருள் கொண்டுள்ளீர்கள் என்று அறியவில்லை திரு செல்வா.

வல்லரசு என்ற தனித்தன்மைக்குத் தகுதியான நாடான நமது இந்தியத் திருநாடைத் தவிர வேறு எந்த நாடும் இதுவரை அந்தத் தகுதியைப் பெறவில்லை என்றே நான் கருதுகிறேன்.

ஏனெனில் பொருளாதாரத் தன்னிறைவு மற்றும் பிற நாட்டினை ஆயுதபலத்தால் ஆக்ரமிப்பு போன்ற பயமுறுத்தலால் அடக்கி ஆள்வது போன்ற வல்லரசுக்கான தோற்றமாக சில பல நாடுகள் காட்டியிருக்கின்றன. கம்யூனிச நாடான சோவியத் ரஷ்யா இன்று சிதறுண்டு உணவுக்கு வழியில்லாமல் அழிவுக்குத் தேடிய கோடானு கோடி ஆயுதங்களை வைத்துக் கொண்டு அழிக்கவும் வகையறியாமல் தட்டுண்டுண்டு தடுமாறி வீழ்ந்ததை நாம் அனைவரும் அறிவோம்.

உலகத்திற்கு பெரியண்ணனாக தன்னைக் காட்டிக் கொண்ட அமெரிக்கக் கலாச்சாரம் கற்றுக் கொடுத்தது கிரடிட் கார்டு சித்தாந்தம்தான். கடனாளியாக்கப்பட்ட பெருவாரியான ஜனங்களைக் கொண்ட ஒரு மாய வலை பின்னப்பட்ட கேடுகெட்ட கலாச்சாரப் பிண்ணனி கொண்ட அந்த நாட்டை நான் என்றுமே வல்லராசக நினைக்கவில்லை. பிற நாடுகளை அடக்கி ஆளும் தனித்தன்மையைத் தக்க வைத்துக் கொள்ள ஆயுத விநியோகத்தை பரவ விட்டு செல்வம் கொழிக்கும் நாடாக ஒரு மாயத் தோற்றத்தை உலகிற்கு காட்டிக் கொண்டு வந்த அமெரிக்காவும் குவிந்து கிடக்கும் ஆயுதத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் சிக்குண்டு கிடக்கிறது. விளைவு 5 வயது பள்ளிச் சிறுவன் கூட 50 பேரை துப்பாக்கிக் குண்டுக்கு இரையாக்கும் அக்கிரமக் கூட்டம் பெருகியதுதான் அந்த வல்லரசு நாட்டின் சாதனை.

வல்லரசாகத் துடிக்கும் அண்டை நாடான பாகிஸ்தானைப் பாருங்கள். உலக நாடுகளோடு போட்டியிட்டு வல்லரசாகும் நோக்கம் எதுவும் அதனிடம் இல்லை. இந்தியா என்ற ஒரு நாடு அழிக்கப்படவேண்டும். துண்டாடப்படவேண்டும், இதுஒன்றுதான் அதன் நோக்கம். விளைவு. தன் நாட்டையே நாதியற்று அந்நியனுக்கு அடிமை பேசும் அநியாயத்தைச் செய்துவருகிறது சர்வாதிகாரத் தலைமைக் கூட்டம்.

இப்படி எத்தனையோ தோல்வியடைந்த வல்லரசுச் சித்தாந்தங்களைப் பட்டியலிட்டுக் கொண்டு செல்லலாம்.

நிலையற்ற அரசாங்கங்கள் வந்தாலும். ஏழை பணக்காரன் என்ற பேதம் இருந்தாலும் நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்காமல் ஒற்றுமை காக்கிறோமே, இப்படிப்பட்ட மக்களைக் கொண்ட நம்நாடுதான் உலகிலேயே தலை சிறந்த வல்லரசு நாடாகும். இதை 2020ல் தான் அடையப் போகிறோம் என்ற நினைப்பையே நான் மறுக்கிறேன். ஏறத்தாழ 20 நூற்றாண்டுத் தலைமுறைகளாக நாகரீகத்திற்கு முன்னோடியான நம் நாடு ஏற்கனவே வல்லரசின் நிலையில்தான் உள்ளது.

ஒரு நாடு வல்லரசாவதற்கு பொருளாதார ஏற்றங்கள் மட்டும் துணை செய்யாது. அப் பொருளாதாரத்தினால் அடையப் போகும் வாழ்வாதாரங்கள் தான் உண்மையில் ஒரு நாட்டினை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் அதி முக்கிய காரணிகள். போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்ற உயர்ந்த தன்னிறைவுப் பண்பு அதிகமாகக் கொண்ட பக்குவப்ப்பட்ட குடி மக்களைக் கொண்ட நம் நாடு இன்னும் அதிவிரைவில் தனிமனித ஏற்றதாழ்வுகளைக் களைந்து நாகரீகத்திற்கு நாட்டாமை நாங்கள் தான் என்று உலகிற்கு பரை சாற்றக் கூடிய காலம் வெகு விரைவில் உள்ளது.


இளைஞர்கள்தான் நம் நாட்டின் காவலர்கள். நல்ல சிந்தனைகளின் ஊற்றாக ஒரு தனித்தன்மை கொண்ட உன்னதமான தலைவர்கள் இல்லாத ஒரு குறையே இன்று நம்நாட்டிற்கு சற்றே மிகைப்படுத்தி ஏற்பட்டுள்ள சருக்கல்கள். நல்ல சிந்தனையாளர்கள் நம்மிடையே என்றும் குறைவில்லாமல்தான் தோன்றியிருக்கிறார்கள். ஜனநாயகப் பண்பில் ஊறி மகிழ்ந்த ஒரு தன்னலமற்ற, தாய்நாட்டுப் பற்றுள்ள ஒரு நிஜமான ஒரு நல்ல தலைவன்தான் நம்நாட்டின் தற்போதைய தேவை. நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல இன்று தடையாயுள்ளது அதிகாரவர்க்கத்தில் ஊறி ஊடுறுவியுள்ள சில சுயநலக் கூட்டங்களின் நடவடிக்கைகளால்தான். இரும்புக் கரம் கொண்டு பெருகிப் பரவி ஓடும் ஊழலை ஒடுக்க நல்ல தலைமையை ஏற்கத் தயாராக மக்கள் கூட்டம் மாறிவருமே ஆனால் அன்றே நாம் வல்லரசின் தடைகளைக் களைத்து மெய்யான நல்லரசாக உலகிற்கு எடுத்துக் காட்டாக நிற்போம்.


பங்குச் சந்தை, உலக மயமாக்கல் போன்ற சுயநலம் சார்ந்த அறிவு ஜீவிகளின் சந்தை வர்த்தகத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து மறைந்து கிடக்கும் நமது கிராமப் புற வளமையை முன்னிறுத்துவோமேயானால் கலாச் சாரச் சீர்கேடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.

கலாச்சாரச் சீர்கேடுகளுக்கு முக்கியப் பிண்ணனியே தனிமனித பொருளாதாரப் பெருக்கம்தான். எளிமையில் இனிமை காணும் உயர்ந்த பண்புகளை வளர்த்து புராதனமான நமது கிராமப்புற வளமையை முன்னிறுத்தி விவசாயப் புரட்சியாகிய பசுமைப் புரட்சியை மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்ட உணர்வுகளோடு கொண்டுவருவோமேயானால் நம் நாடு வெகுவிரைவில் உயர்நிலையை அடையும்.

கூட்டுக் குடும்பத் தத்துவங்கள் இன்று பொய்யாகிப் போனது சற்று வருத்தம்தான். தனிமனித தியாகங்கள் நிச்சயம் மக்களின் ஏழ்மையைப் போக்கும் இதற்கு என் குடும்பப் பிண்ணணியே சாட்சி.

திருமதி அனு அவர்களுக்கு எழுதிய பின்னூட்டத்தினை இத்திரியில் பங்கெடுக்கும் அனைத்து அன்பர்களின் பார்வைக்கும் வைக்கிறேன். ஒரு பெண்ணான என் சகோதரியால் இது முடியுமானால் இளஞ்சிங்கங்களான நமது இளைய தலைமுறையால் நமது நாட்டை நிச்சயம் வல்லரசு என்ற பட்டத்தை எந்நாளும் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

எல்லோரும் என்னுடைய இந்தப் பின்னூட்டத்தில் கூறப்பட்ட என் சகோதரியின் தியாக வாழ்வைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த கூட்டுக் குடும்பப் பிண்ணனிதான் நம் நாட்டின் ஆணி வேர். இது என்றும் கட்டிக் காக்கப்பட வேண்டும் என்பதே என் அவா.

இது அனைவரின் பார்வைக்குப் பட வேண்டும் என்றே இத்திரியில் தொடர்பு கொடுத்துள்ளேன். (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=340040&postcount=17)


மன்றத்து மக்கள் கருத்துக்குப்பின் மீண்டும் சில கருத்துக்களை முன்வைக்கிறேன்.

நன்றியுடன்

ஆதி
08-04-2008, 07:18 PM
ஐயா, வல்லரசு பற்றியப் உங்கள் பார்வை என்னில் வியப்பை உதறிவிட்டுப் போகிறது.. உண்மையிலேயே மிக வித்யாசமானப் பார்வை ஐயா, அதுமட்டுமின்றி சிந்திக்க வேண்டியதும் கூட..

ஏறக்குறைய 7 வருடத்திற்கு முன்பு ஒருப் புத்தகம் படித்தேன், "கறுப்புத் தமிழனே கலங்காதே" வருடத்தை ஏன் குறிப்பிட்டேன் என்றால் ஆசிரியர் பெயர் ஞாபகமில்லை :), நூலாசிரியர் பச்சயப்பன் கல்லூரிப் பேராசிரியர் என்பதும், அவர் தமிழ் துறையை சேர்ந்தவரில்லை என்பதும், அந்த நூலுக்கு கலைஞர் முன்னுரையும், கவிபேரரசு அணிந்துரையும் வழங்கி இருந்தனர் என்பதும் ஞாபகத்தில் உள்ளது.

அந்த நூலில் ஒரு வியப்பான புள்ளி விவரம் இருக்கிறது, அதாவது உலகத்தில் உள்ள மொத்த தங்கத்திலும் முன்றில் ஒருப் பங்கு இந்தியாவில்தான் உள்ளதாம், ஆனால் அது அரசிடம் இல்லை என்பதுதான் வருத்தமான விடயம், நற்சொத்தாய் கணக்கில் வராத சொத்தாய் இப்படி அங்கிங்கு சிதறிக்கிடக்கிறதாம்.. அந்த தங்கம் மட்டும் நம் அரசிடம் இருந்திருந்தால் நாம் தான் வல்லரசாம்..

முந்தையக் காலத்தில் உலகில் இருந்த 7 வல்லரசு நாடுகளில் தமிழ் நாடும் ஒன்று, மற்றவை ரோமாபுரி, சீனா, கிரேகம், இன்னப் பிற

ரோமாபுரியில் அந்தக் காலத்தில் ஒரு சட்டமே போட்டார்களாம், தமிழ் நாட்டில் இருந்து வெண்முத்தும், கருமுத்தும்(மளகும்) வாங்க கூடாது என்று, அந்த அளவுக்கு அவர்கள் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாம்..

ஐயா நீங்கள் கூறியது போல விவசாயத்தில் ஒரு புரட்சி ஏற்படுதல் அவசியம் அதனால் பெரிய மாற்றமும் முன்னேற்றமும் நிகழும் என்பது சரியானக் கருத்தே.

ஐயா, உங்கள் குடும்பத்திற்காக உங்கள் தமக்கை ஏற்ற கடினம் புரிந்த உழைப்பு செய்த தியாகம் என் விழிகளில் நீரை வாரி தெளித்துவிட்டுப் போனது ஐயா.. நீங்கள் சொன்ன மாதிரி அவரே வழி படவேண்டிய தெய்வம்.. முன்பு ஒரு கவிதைத் தொகுப்பில் படித்த பின்னவீத்துவக் கவிதைத்தான் இந்த சந்தர்பத்தில் ஞாபகத்துக்கு வருகிறது..

நள்ளிரவில் இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார்


வெளியூரிலிருந்து ஏதோ காரணம்
வந்த பேருந்து வழியில் பழுதடைந்திருக்கலாம்
அல்லது தன் மகனை அவ்வளவு லேசில்
பிரிய மனமில்லாமல்
தூங்கியபின் கிளம்பியிருக்கலாம்
அல்லது கணவனுடன் சண்டையிட்டு
வைராக்கியத்தில் நேரம் பாராமல்
புறப்பட்டிருக்கலாம்
ஆட்கள் அடங்கிய நடமாட்டமில்லாத
நிலைய நள்ளிரவில்
பேருந்தைவிட்டு இறங்குகிறாள்.

நகரத்திலிருந்து
கிராமத்துக்குச் செல்பவளாக
அதன் பாதையில்
பயந்தும் துணிந்தும் நடந்தவள்
தன்னைத் திரும்பிப் பார்த்தவாறு கடக்கும்
சைக்கிள்காரனிடம்
தன்னை அமர்த்திச் செல்லுமாறு
மன்றாடுகிறாள்.
ஏற்றிக் கொண்டவுடன் பெருமூச்சு விட்டு
'இயேசு போல வந்தீர்கள்' என்கிறாள்.

நீங்கள் கூடப் பார்த்திருக்கலாம்
நள்ளிரவில்
கிராமத்துச் சாலையில்
தன் சைக்கிளின் பின்புறத்தில்
இயேசு
ஒரு இளம்பெண்ணை
அமர்த்திச் செல்வதை.

செல்வா
09-04-2008, 07:25 AM
என்ன அடிக்கடி பேசலேனா, நம்மளப்பத்தி மத்தவங்க பேசுவாங்க.
வாழ்க்கையில யாரும், எதுக்காகவும் சாவைத் தேடி போகாதீர்கள், அரிது, அரிது இவ்வுலகில் மானிடனாய்ப் பிறப்பது அரிது. சப்போஸ் சாவு வந்தாலும் அதைப் பார்த்து பயப்படாம நெஞ்சுறுதியுடனும் வாழுங்கள் என்பதைத் தான் இவ்வளவு ஜவ்வு இழு, இழுத்து சொல்கிறேன்.

கலக்கிட்டீங்க மாமா...... ஊருக்கு போகும் அவசரத்திலும் மறக்காம பதில் தந்ததுக்கு மிக்க நன்றி.

செல்வா
09-04-2008, 07:31 AM
நிலையற்ற அரசாங்கங்கள் வந்தாலும். ஏழை பணக்காரன் என்ற பேதம் இருந்தாலும் நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்காமல் ஒற்றுமை காக்கிறோமே, இப்படிப்பட்ட மக்களைக் கொண்ட நம்நாடுதான் உலகிலேயே தலை சிறந்த வல்லரசு நாடாகும். இதை 2020ல் தான் அடையப் போகிறோம் என்ற நினைப்பையே நான் மறுக்கிறேன். ஏறத்தாழ 20 நூற்றாண்டுத் தலைமுறைகளாக நாகரீகத்திற்கு முன்னோடியான நம் நாடு ஏற்கனவே வல்லரசின் நிலையில்தான் உள்ளது.

ஒரு நாடு வல்லரசாவதற்கு பொருளாதார ஏற்றங்கள் மட்டும் துணை செய்யாது. அப் பொருளாதாரத்தினால் அடையப் போகும் வாழ்வாதாரங்கள் தான் உண்மையில் ஒரு நாட்டினை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் அதி முக்கிய காரணிகள். போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்ற உயர்ந்த தன்னிறைவுப் பண்பு அதிகமாகக் கொண்ட பக்குவப்ப்பட்ட குடி மக்களைக் கொண்ட நம் நாடு இன்னும் அதிவிரைவில் தனிமனித ஏற்றதாழ்வுகளைக் களைந்து நாகரீகத்திற்கு நாட்டாமை நாங்கள் தான் என்று உலகிற்கு பரை சாற்றக் கூடிய காலம் வெகு விரைவில் உள்ளது.

பங்குச் சந்தை, உலக மயமாக்கல் போன்ற சுயநலம் சார்ந்த அறிவு ஜீவிகளின் சந்தை வர்த்தகத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து மறைந்து கிடக்கும் நமது கிராமப் புற வளமையை முன்னிறுத்துவோமேயானால் கலாச் சாரச் சீர்கேடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.

கலாச்சாரச் சீர்கேடுகளுக்கு முக்கியப் பிண்ணனியே தனிமனித பொருளாதாரப் பெருக்கம்தான். எளிமையில் இனிமை காணும் உயர்ந்த பண்புகளை வளர்த்து புராதனமான நமது கிராமப்புற வளமையை முன்னிறுத்தி விவசாயப் புரட்சியாகிய பசுமைப் புரட்சியை மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்ட உணர்வுகளோடு கொண்டுவருவோமேயானால் நம் நாடு வெகுவிரைவில் உயர்நிலையை அடையும்.


மிக்க நன்றி அண்ணா அத்தனையும் முத்துக்கள். அத்தனை முத்துக்களும் எங்கள் சொத்துக்கள் என்பதில் எனக்கு மிகுந்த பெருமை. எதிர்பார்த்ததை விட அதிகமாகவே விளக்கமாக கூறியிருக்கிறீர்கள். ஆதி கூறியது போன்று தங்கள் கோணம் நான் இதுவரை சிந்தித்தறியாதது. மிக்க நன்றி அண்ணா.

சுகந்தப்ரீதன்
09-04-2008, 08:31 AM
சிவா அண்ணாவின் எளிமையான அனுகுமுறையும் அமர் அண்ணாவின் திறம்பட்ட மேலாண்மையும் நுரை மாமாவின் வாழ்வில் அறிவுரைகளும் ஜெயராமன் அண்ணாவின் ஆழமான கருத்துக்குகளும் அத்தனையும் அருமையாக இருக்கிறது...!! இத்தனை தெளிவான உயர்ந்த மனிதர்களுடன் பழகும் வாய்ப்பை வழங்கிய மன்றத்திற்க்கு நான் நன்றியை சொல்லிக்கொள்ள கடமைபட்டுள்ளேன்..!!


உலகத்தில் உள்ள மொத்த தங்கத்திலும் முன்றில் ஒருப் பங்கு இந்தியாவில்தான் உள்ளதாம், ஆனால் அது அரசிடம் இல்லை என்பதுதான் வருத்தமான விடயம், நற்சொத்தாய் கணக்கில் வராத சொத்தாய் இப்படி அங்கிங்கு சிதறிக்கிடக்கிறதாம்.. அந்த தங்கம் மட்டும் நம் அரசிடம் இருந்திருந்தால் நாம் தான் வல்லரசாம்...

உண்மைதான் நண்பா..!! இங்கே ஒருமுறை நம் நிதியமைச்சர் சிதம்பரம் அவர்கள் ஒருமேடையில் கூறியதையும் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.. அவர் கூறியது "இந்தியா ஏழைநாடு அல்ல; ஏழைகளும் வாழும் நாடு" என்பதுதான்..!!

பூமகள்
09-04-2008, 01:00 PM
சிறப்பு கேள்வி 2. மன்ற இளைய சுட்டிகள் பூமகள் மற்றும் மலர். இணைய உறவுகள் நிரந்தரமல்ல என்ற வாக்கியத்தை பொய்யாக்குமுகமாக ஒரு குடும்பமாக பழகி வருகிறீர்கள். இணைய உறவுகளைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? இது நம்பகமான உறவாகுமா? நிரந்தரமானதா?
ஒரு மிக முக்கியமான கேள்வி கேட்டு.. பூவின் ஒவ்வொரு இதழையும் பிச்சிக் கொள்ள வைச்ச... செல்வா அண்ணாவுக்கு (பல்லு நறநறன்னு சொல்லிட்டே..!!:D:D) ஒரு பெரிய நன்றியைச் சொல்லிக்கிறேன்..!! :icon_rollout::)

மலரு பதில் போடும்.. அப்புறமா போடலாம்னு பார்த்தா...! மலரு இப்படி ஏமாத்திட்டியே..!! :rolleyes: :eek::eek:

இணையம் என்பது ஒரு "வலை" என்று எல்லோரும் சொல்வார்கள். என்னைப் பொருத்தவரை.. இணையம் நாம் கடந்து செல்லும் பாதை. அந்த பாதையில் பயணிக்காமல் இன்று ஒருவர் கூட தனது சொந்த வாழ்வை நடத்த இயலாது. வேலை, தொலைத் தொடர்பு, தகவல் களஞ்சியம் இப்படி பல்வேறு வகைகளில் ஒரு மனிதன் இந்த இணையத்தை சார்ந்தே இருக்க வேண்டிய கட்டாய்த்துக்கு ஆளாகிவிட்டோம்.

சாலையில் பயணிக்கையில் எப்படி எல்லா வகையான மனிதர்களையும் எதிர்கொள்கிறோமோ... அப்படித்தான் இணையமும். அவரவருக்கு பிடித்தமான பாதையை நாமே தேர்வு செய்யலாம். ஆனால், செல்பவரைப் பொறுத்தே சாலைகள் தீர்மானிக்கப்படுகின்றன.
நமது "எண்ணம் போல் வாழ்வு" என்று சொல்வார்களே..அது போலவே.. நம் எண்ணம் போலவே.. இணையச் சாலையில் பயணிக்கிறோம்.

இணைய ஆழிப் பெருங்கடலில், நீந்தத் தெரிந்தவர் எதையும் எதிர்கொள்ளத் தெரிந்தவர் மட்டுமே மகிழ்வுடன் இருக்க இயலும். ஏனெனில், இங்கே நல் முத்துகள் சிப்புகளுக்குள் மூடி இருக்க, முதலைகளும் சுறாமீன்களும் காவு வாங்க சுற்றி வரும். முத்துகள் சேகரித்து, சுறாமீன்களுக்கு இரையாகாமல் தப்பிப்பது தான் இங்கே இருக்கும் மிகப்பெரிய உலகப் போர். அதை வெல்ல உண்மையின் ஆத்ம பலம் ஒவ்வொருவருள்ளும் அவசியம் தேவை.

பொதுவாக உலகில் இருக்கும் எல்லாவற்றிற்குமே இரு பக்கங்கள் உண்டு. இரவு - பகல், நன்மை - தீமை இப்படி இரு முகங்களையும் தாண்டித் தான் நாம் நம் வாழ்வைக் கடந்தாக வேண்டிய சந்தர்ப்பத்தில் இருக்கிறோம்.

நல்லவை எடுத்து
அல்லவை நீக்கி
நலம் பெறவே..
இவ்விணையம் - என்பது என் கொள்கை.

இணையம் என்ற பொதுவான தொடர்புகளுக்கும் தமிழ் மன்ற குடும்பத் தொடர்புக்கும் வித்தியாசங்கள் அதிகம்.

நான் இருப்பது தமிழ் மன்ற குடும்பத்தில். அங்கே தான் உறவுகளோடு, அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, தோழி என்ற அன்பான உறவுகளால் எழுத்துகள் மூலம் அளவலாவ முடிகிறது.

ஒருவரது ஆக்கங்களும் அவர்களின் எண்ணவோட்டமும் நம் நெஞ்சத்தை கொள்ளை கொள்ளுமளவு உயர்ந்தவையாகவே இருப்பதால் அவர்களின் அன்பு மிக்க சகோதரிகளாக அன்பு முகிழ்கிறது. இவ்வகை சொந்தமும் உண்மையான அன்பும் எங்குமே இணையத்தில் காணக் கிடைப்பதில்லை.

ஆனால்,
எல்லாவற்றிற்குமே ஒரு எல்லை உண்டு. அந்த எல்லையை எவரும் மீறாதவரை குடும்பத்தின் அன்பும் என்றுமே குறையாது. பொதுவான நல்ல அன்புக்கு இங்கு பஞ்சமில்லை. அன்பு பொதுவானாலும் அதைக் கொடுப்பவரும் எடுப்பவரும் நல்லவராக இருப்பது அவசியம்.

சுகந்தப்ரீதன்
09-04-2008, 01:47 PM
இணைய ஆழிப் பெருங்கடலில், நீந்தத் தெரிந்தவர் எதையும் எதிர்கொள்ளத் தெரிந்தவர் மட்டுமே மகிழ்வுடன் இருக்க இயலும். ஏனெனில், இங்கே நல் முத்துகள் சிப்புகளுக்குள் மூடி இருக்க, முதலைகளும் சுறாமீன்களும் காவு வாங்க சுற்றி வரும். முத்துகள் சேகரித்து, சுறாமீன்களுக்கு இரையாகாமல் தப்பிப்பது தான் இங்கே இருக்கும் மிகப்பெரிய உலகப் போர். அதை வெல்ல உண்மையின் ஆத்ம பலம் ஒவ்வொருவருள்ளும் அவசியம் தேவை..

மிகத்தெள்ள தெளிவாக கூறிவிட்டாய்..பூ..!! இதை அனுபவத்தில் அறிந்திருக்கிறேன் நானும்.. இணையக்கடலில் எல்லோராலும் எளிதாக நீந்தமுடியாது...!! எந்த இடத்திலும் நல்லவையும் கெட்டவையும் கலந்தே கிடக்கும்.. நாம்தான் நல்லவை நாடி அல்லவையை அகற்றி அதில் நீந்த கற்றுக்கொள்ள வேண்டும்..!! மன்ற உறவுகளுக்கு எனது வேண்டுகோள் உங்கள் வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு இணையத்தை அறிமுகப்படுத்தும் போது சற்று எச்சரிக்கையுடன் கவனத்துடனும் இருங்கள்.. ஏனென்றால் பெரும்பாலும் ஆரம்பக்கட்ட இணைய உபயோகிப்பாளர்கள்தான் இணையத்தில் உலவும் முதலைகளுக்கும் சுறாக்களுக்கும் எளிதில் உணவாகி விடுகின்றனர்..!! ஆகையால் கவனத்துடன் இருப்பது மிகவும் நல்லது..!!

பூமகள்
09-04-2008, 02:34 PM
நான் கொடுக்கத் தவறிய எச்சரிக்கையையும் கொடுத்து மானத்தை காப்பாத்திட்ட சுகந்தா...!!
நிச்சயமா இணையத்தில் பயணிப்பது நெரிசல் மிகுந்த சாலையில் பயணிப்பது போலத் தான். எந்த நேரத்திலும் எந்த சாக்கடையையும் திறந்திருக்கலாம்.. பூக்களின் தோட்டமும் கடக்கலாம்.

நமது சிந்தையின் தெளிவே எல்லாவற்றிற்கும் ஆணி வேர். தெளிவான சிந்தையும், தகுந்த பாதுகாப்பு முன்னெச்செரிக்கை விசயங்களும் அறிந்திருந்தால் பயணம் இனிதாகவே அமையும் என்றுமே..!!

பாராட்டுதலுக்கு மிக்க நன்றிகள் சுகந்தப்ரீதன்..!!

ஷீ-நிசி
09-04-2008, 02:37 PM
சிவாவின் பேசு பேசவிடு
அமரனின், மன்றத்துடனான நினைவு கூறல்
நுரையீரல் அவர்களின் அசால்ட்டான அறிவுரை
(ஆதி அவர்களின் அசத்தலான பின்னூட்டக் கவிதை ரசித்தேன்)
சாலை ஜெயராமன் அவர்களின் வல்லரசு பார்வை
பூமகளின் இணையத்தின் மீதான விலாசமான எண்ணங்கள்

அத்தனையும் முத்தான பதில்கள்... வாழ்த்துக்கள் உறவுகளே!

சாலைஜெயராமன்
09-04-2008, 03:10 PM
கருத்துக்களைத் எடுத்து வைப்பதில் பூமகளுக்கு இணை பூதான். தெள்ளத் தெளிவான சிந்தனை. எதுவேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளலாம். இது இணையத்துக்கு மட்டுமல்ல வாழ்வுக்கும்தான். பூ தெள்ளத் தெளிவாகத் தெரிவித்து விட்டார்.

பகுத்தறிவு சித்தாந்தங்களும் மனிதனுக்கு விதிக்கப்பட்ட விதியும் இதுதானே. நன்மை தீமை அனுமானிக்கும் அறிவு வரமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அனுபவங்களைப் பெறும் வரை தீமை என்று தெரிந்தாலும் அறிந்தே செயல்படுவது. பகுத்தறிவின் தன்மை இன்னதென தெரியாத அறியாமையில் மூடப் பழக்க வழக்கங்களை மூச்சடங்கும் வரை உயிர்ப் பிடியாகப் பற்றிக் கொள்வது. முக்கியமாக ஈகோ. மனித வர்க்கத்தின் மனதின் இருட் பகுதி இவைகள். இதை செம்மைபடுத்திக் கொண்டு முழுமையடையும் வரம் மனித இனத்துக்கு மட்டும்தானே இலவசமாக தரப்பட்டிருக்கிறது. வாழும் வரை இந்த ஒப்பற்ற உண்மைகள் நாம் உணர்வதே இல்லை.

சொர்க்கமாக்கப்பட வேண்டிய இப்பூமி போர்க்களத்தால் சீரழந்தது அறியாமையென்னும் அவலத்தினாலே.

நன்கு சிந்திக்கத் தெரிந்த இளைய தலைமுறை. ஒட்டுமொத்த இளைய சமுதாயத்தின் உதாரண புருஷியாக பூவினைக் காண்கிறேன்.

இந்த ஆழி சூழ் உலகின் அளவைக் காட்டிலும் மும்மடங்கு அளவில் பெரியதான கடலின் உவமானம் பூ என்னும் கவிதாயினின் சிறப்பான சிந்தனை செல்வம்.

வாழ்த்துக்கள் பூ

சாலைஜெயராமன்
09-04-2008, 03:44 PM
அடிக்கடி வரும் பெயர்க் குழப்பங்களில் ஒன்று ராஜா - நுரையீரல். இருவரும் ஒருவர்தானா ?

அது சரி நம்ம நுரையண்ணாதான் யவனியக்காவின் கைத்தடியா ? இன்னிக்குத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். கொஞ்சம் பயமாத்தான் ஆவர்த்தனம் பண்ராறு நுரை. அக்காவிடம் ரொம்ப பயம்தானே.

வழக்கம்போல ராஜேஷ்குமார் பாணியில் "ஙே" என்று அடிக்கடி விழிக்கும் நிலைதான் எனக்கு ஏற்பட்டது.

ஒவ்வொரு அங்கத்தினரையும் இனி தனித்தனியாக அறிமுகப்படுத்திக்க வேண்டும் போல இருக்கே?

அமரன், திரு சிவா. திரு நுரை உங்கள் பதில்களால் அனைவரையும் அன்பால் கட்டி விட்டீர்கள்.

சிவாவை ஊடுறுவிப் பார்க்கும் அளவிற்கு அவர் எழுத்துக்கள் எப்பொழுதும் அவரை வெளிச்சமிட்டுக் காட்டிவிட்டதால், அவருடைய பதில் ஏற்கனவே உள்ள மகுடத்திற்கு மேலும் மகுடம் சேர்த்திருக்கிறது.

ஆனால் அமரன் மற்றும் நுரை - அடேயப்பா ! ஒன்று அமைதியான ஆழ்கடல். மற்றொன்று நுரைத்துத் தள்ளும் ஆர்ப்பரிக்கும் அலைகள் மோதும் கடலின் கரை. இரண்டிலும் கடலின் அனைத்துச் செல்வங்களின் தாக்கத்தைக் கண்டேன்.

நன் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட சரம்தான் நம் மன்றம்.

செல்வாவிற்குத் தான் மிகுந்த நன்றிக் கடன் பட்டுள்ளோம். ஒவ்வொருவரையும் அறிந்து கொள்ள ஏதுவான கேள்விகளை முன்வைத்ததற்கு அவருக்கு தனிப்பட்ட முறையில் என் பாராட்டுக்கள்.

தாமரை
09-04-2008, 03:51 PM
சாலை உதாரணம் மிகவும் சரியாய் தோன்றுகிறது பூ! சரியான வழியில் பயணித்தாலும் சில சமயங்களில் அங்கிருந்தோ வந்த லாரி மோதியதைப் போல் விபத்துகளுக்கும் பஞ்சமில்லை இணையத்தில்...

பல சமயத்தில் கிடைக்கும் விவரங்களின் நம்பகத் தன்மையும் கேள்விக் குறியே! யார் வேண்டுமானால்லும் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலையில் எது சரி எது தவறு என்பது நம் அறிவு நிலையையே சார்ந்துள்ளது..

நம்மால் முடிந்த அளவு மரம் நட்டு சாலையை அலங்கரிப்போம்.. யாராவது ஒருவருக்காவது அது உபயோகப்படட்டும்.. சில திறந்திருக்கும் சாக்கடைகளையும் அடையாளப்படுத்தி வைப்போம்.. மூட முடியாவிட்டாலும்..