PDA

View Full Version : ♔. ஆ! 10! ♔. - முதல் சுற்று

Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14

அன்புரசிகன்
13-10-2007, 07:00 PM
ஆனால், துரோகம் என்ற ஒன்றை நாமாக செய்யாதவரை,
எமக்கு நிகழ்த்தப்படும் துரோகங்களைப் பற்றி நாம் எண்ணவோ,
அதையிட்டு கவலைப்பட்டு உருக்குலையவோ, வாடவோ தேவையில்லை.

ஏற்றுக்கொள்கிறேன் அக்னி. ஆனால் இது சாத்தியமா? என்னை ஒருவர் ஏமாற்றினால் அவரை வாழ்த்தி அனுப்பும் அல்லது அதை கண்டும் காணாதது போல் இருக்கும் பக்குவம் நிச்சயமாக எனக்கில்லை... தத்துவம் கூறவந்துவிடாதீர்கள். (சாத்தியமில்லை என்பது சாத்தியமில்லை என... - Impossible is impossible)

அக்னி
13-10-2007, 07:04 PM

அதற்காக நாம் உருக்குலைய வேண்டுமா?

அன்புரசிகன்
13-10-2007, 07:23 PM
அதற்காக நாம் உருக்குலைய வேண்டுமா?

நாம் உருக்குலையவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் உருக்குலைக்கும் கரை வரை இழுத்துச்சென்றவரை நிச்சயம் உருக்குலைலய வைப்பேன் என்று சொல்லவந்தேன். :D

lolluvathiyar
14-10-2007, 08:12 AM
2. வாத்தியார் :
எந்த பொருள் குறித்தும் விரிவாக, திறமையாக விவாதிப்பவர் நீங்கள்..
#) ராமர் பாலம் இருப்பது உண்மை..
#) ராமர் பாலம் என்பது கற்பனை..

மேலே கண்ட இரு தலைப்புகளிலும் நாங்கள் ஏற்கும் வகையில் கருத்து தெரிவியுங்கள் பார்ப்போம்.

ராமர் பாலம்

ஆபத்து கேள்வியில் என்னையும் சிக்க வைத்த ராஜாவுக்கு நன்றி. சரியான கேள்விதான் என்னிடம் கேட்கபட்டிருகிறது. அதுவும் சரியான நபரிடம் என்றே சொல்லுவேன். இந்த கேள்விக்கு பதிலளிக்கும் முன் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

நான் யாருடைய நம்பிக்கையையும் அவமதிக்கவில்லை. நான் சொல்வது முழுக்க முழுக்க சரியானதா என்று ஆதாரம் எல்லா கொடுக்க முடியாது. நான் முழுக்க வரலாறு அறிந்தவனும் அல்ல, ராமயனம் முழுக்க படித்தவனும் அல்ல. ஆனாலும் முயற்சிக்கிறேன். இந்த கேள்விக்கான பதிலை விவாத பகுதியில் விட்டால் இன்னும் தகவல் கிடைக்கலாம்.

ராமர் பாலம் அல்லது ராமர் கடவுள் என்பது நம்பிக்கை, நம்பிக்கைக்கு என்றுமே விஞ்ஞான ஆதாரம் தேவையற்றது. நம்பிக்கை என்பது முற்றிலும் மணம் சம்மந்தபட்டது. எப்படி ஒரு கனவன் தன் மனைவியிடமும் மனைவி தன் கனவனிடமும் நம்பிக்கை வைத்திருகிறார்களோ அது போல தான். இலங்கையில் புத்தரின் பல் என்று நம்பிக்கையுடன் ஒரு பல் வைத்திருகிறார்கள். காஸ்மீரில் ஹஸ்ரத்பால் மசூதியில் நபிகள் நாயகத்தின் தாடி முடி என்ற நம்பிக்கையில் முடி ஒன்று வைத்திருகிறார்கள். பெட்தலகாமில் ஏசுவை அறைந்த சிலுவை என்று நம்பி ஒர் சிலுவை வைத்திருகிறார்கள். இவை எல்லாம் உன்மையா பொய்யா என்று குட்டையை குழப்ப கூடாது.

அதே சமயம் இது போன்ற மதநம்பிக்கையை ஆராய்வதில் தவறில்லை. ஆனால் பொதுவாக 90 சதவீத ஆராய்சியாளர்கள் முடிவை முன்னமே தீர்மானித்து பிறகுதான் ஆராய்சி செய்கிறார்கள். இதனால் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கைக்கு யானவர்களா என்பது சந்தேகமே. ராமர் இருந்தார் இது ராமர் பாலம் தான் என்ற கன்னோட்டத்தில் ஆராய்சி செய்தால் அது ராமர் பாலமாக தான் தெரியும். ராமரே இல்லை இது மூட நம்பிக்கை என்று கன்னோட்டத்தில் ஆராய்ந்தால் அது மனல் திட்டாக தான் தெரியும்.

என்னை பொருத்தவரை ராமரை ஹிந்துகள் கடவுளாக வழிபடுலாம். ஆனால் ராமாயனம் மகாபாரதம் என்பது இந்தியாவின் பொக்கிசம். அவை ஹிந்து மதம் தோன்றுவதற்க்கு முன்பு இருந்து இருப்பவை. புத்தம் , சமனம், இஸ்லாமிய , கிருஸ்த்துவம் இந்த மதத்தில் உள்ளவர்கள் அனைவரும் இந்த மன்னின் மைந்தர்கள் தான். வெளியிலிருந்து வந்தவர்கள் கிடையாது. இதனால் ராமாயனம் மகாபாரதம் அனைத்து இந்தியர்களுக்கும் உரியது. அதை பற்றி சர்வதேச அழவில் ஆராய்வது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும்.

உங்கள் கேள்வி பதிலளிக்கையில் முன் நான்
1. மத கன்னோட்டத்தில் இருந்து பார்க்க கூடாது.
2. அரசியல் கன்னோட்டத்தில் இருந்து பார்க்க கூடாது.
3. சேது கால்வாய் கன்னோட்டத்தில் இருந்து பார்க்க கூடாது.

நான் வரலாறு மற்றும் தொல்பொருள் ஆராய்சிகளை பற்றி ஆர்வமாக படிப்பவன். அதனால் எனக்கு ராமர் பாலம் உன்மையா பொய்யா என்ற இரு கன்னோட்டங்களிலும் பதில் சொல்ல முடியும். மேலும் இது முழுக்க முழுக்க பல ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளில் சிறிது என்னுடைய கருத்துகளையும் சேர்ந்திருகிறேன்.

இது சம்மந்தமாக தயாரிக்க போய் ஒரு பெரிய படைப்பாகிவிட்டதால் தனி திரி ஆரம்பிக்க பட்டு அதை அங்கு பதித்து விட்டேன். பலர் விவாதிக்க பயனுள்ளதாக இருக்கும். இதோ அதன் லிங்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12791

(ராஜா என் மூலைக்கு நல்லவேலை கொடுத்து விட்டார் என்றே சொல்லலாம். இதை நான் டைப் அடிக்கும் நேரத்தில் லொள்ளபுரி வரலாற்றை இன்னும் 2 பாகங்கள் எழுதி இருக்கலாம். இருங்க உங்களை லொள்ளபுரி வரலாற்றில் இதே ராமர் பாலத்தில் வச்சு ஏதாவது ரவுசு ஏதாவது எழுதியே ஆகனும். சரி பரவாயில்லை, ஏதோ ராமர் அருள் கிடைத்தாலும் கிடைக்கலாம்)

ஆதவா
14-10-2007, 11:36 AM
ராஜா அவர்களே... மிக அருமையான கேள்வி.
லதா அம்மாவிடமிருந்து அழகான பதில். இது சம்பந்தமாக நான் பேசுவதாக இருந்தேன். அதற்குள் இங்கே கேள்வி எழுப்பிவிட்டீர்கள்
பெரும்பாலும் கவிஞர்களுக்கு தனது கவிதை எந்த லெவலில் இருக்கிறது என்பதே தெரிவதில்லை. அல்லது தெரிய முயற்சிப்பதில்லை. அதுதான் பிரச்சனையே! அடுத்ததாக சகிப்புத் தன்மையும் விமர்சனத்தை ஏற்கும் பக்குவமும் வேண்டும். நம் மன்றத்தைப் பொறுத்தவரையில் அதிகப்படியான பாராட்டுகள் இல்லை. அதேசமயம் சரியான விதத்தில் தனது கருத்துக்களையும் விமர்சனத்தையும் கொடுக்கிறார்கள் என்பதே எனது எண்ணம்.

ஆனால் நாம் இன்னொன்றும் யோசிக்கவேண்டும். கவிஞர்களாகட்டும் அல்லது விமர்சகர்களாகட்டும் இங்கே யாரும் சிறப்பான கவிதாஞானம் உடையவர்கள் என்று சொல்லுவதற்கில்லை. ஒருசிலர்களைத் தவிர.. இங்கே எல்லாருமே வளரும் சூழ்நிலையிலேயே உள்ளார்கள். இங்கே வரும் அத்தனை பேரும் கவிதாஞானம் உடையவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்றால் பல நல்ல கவிஞர்கள் கிடைத்திருக்கமாட்டார்கள்..... என்னுடைய உதாரணம், அமரன், ஆரென் போன்றோர்கள்.

காரணம் கவிதா விலாசம் பெற்றவர்கள் பலர் இருப்பதால் திறாய்வு திறம்படுகிறது இங்கு.

இது மன்ற கவிஞர்களுக்கு பாராட்டு மழை. அத்தனை பேரின் சார்பில் எனது நன்றி.

ஆதவா
14-10-2007, 11:39 AM
ஷீ-நிசியின் கவிதையும் பூ மகளின் பாடலும் மிக அருமம.

பூமகள் அக்கா, உடனே உங்கள் பாடலின் மெட்டு கண்டுபிடித்துவிட்டேன்,. காரனம் முன்பொருமுறை சினிமா மெட்டில் பாடல் எழுதும் போது நான் இந்த படப்பாடல்களைத்தான் எடுத்தேன்...

அருமை சகோக்களே1

அக்னி
14-10-2007, 11:41 AM
நாம் உருக்குலையவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் உருக்குலைக்கும் கரை வரை இழுத்துச்சென்றவரை நிச்சயம் உருக்குலைலய வைப்பேன் என்று சொல்லவந்தேன். :D
இந்த விடயத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எமக்கு துரோகம் நிகழுமிடத்து, துரோகம் செய்தவரை நாம் தண்டிப்பது என்பது, எதற்காக எம்மை ஏமாற்றினார்களோ அந்த விடயத்தை நாம் வென்று காட்டுவது என்பதாக இருந்தால் மட்டுமே, எம்மில் பாதிப்பில்லாத தண்டனையை அவர்களுக்கு வழங்கும். அதைவிடுத்து பழிவாங்குதல் என்ற நிலையை அடைய முற்பட்டால், எமது வாழ்வு முடங்கிப் போய்விடும்.
அன்புரசிகரே, உங்கள் கோபம் மன்றம் அறிந்ததே... குறைத்துக் கொள்ளுங்கள்...

மலர்
15-10-2007, 04:57 AM
ஷீ-நிசியின் கவிதையும்
பூ மகளின் பாடலும் சூப்பருங்கோ.....

எப்படி இப்படியெல்லாம் யோசிப்பீங்க...
வாழ்த்துக்கள்...

சிவா.ஜி
15-10-2007, 01:32 PM
4. சிவாஜி :

உங்கள் பின்னூட்டங்கள் கண்டு உங்கள் பால் பெருமதிப்பு கொண்டிருக்கிறேன்..

#) இனப்பாகுபாடு,[பிறர் என்னும் எதிர் மனநிலையால், திறமைகளை கண்டுகொள்ளாதிருத்தல்], இனவெறி [தமர் என்னும் பாச மனநிலையால் திறமையற்றவர்களை சிபாரிசு மூலம் உயர் நிலைக்கு கொண்டு செல்லுதல்] இரண்டும் இந்திய முன்னேற்றத்தை பாதிக்கின்றன.

இவற்றைக் களைய வழியுண்டா.. உண்டெனில் என்னென்ன..?

என்னையும் தன் கேள்வி வேள்வியில் இணைத்துக்கொண்ட ராஜா சாருக்கு நன்றி.அதே சமயம் தாமதமான பதிலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

ராஜா சாரின் கேள்வியில் உள்ளது இந்தியாவில் மட்டுமல்ல...பரவலாக எல்லா நாடுகளிலும் இருக்கிறது.குறிப்பாக வளைகுடா நாடுகளில் மிக அதிகம்.ஆனால் நமது நாட்டின் வளர்ச்சியைப்பாதிக்கும் விஷயம் என்பதால்...அதை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும்.அது அரசுத்துறையோ,தனியார் துறையோ...அங்கெல்லாம் சில சக்திவாய்ந்த அதிகாரிகள் இருப்பார்கள்.அவர்களின் மூலமாகத்தான் இந்த இரண்டு காரியங்களுமே நடக்கிறது.அதாவது...தன் இனத்துக்கு ஆதரவும்,பிற இனங்களுக்கு கைவிரிப்பும்.இப்படி ஒருவரின் ஆதிக்கத்தின் மூலமாக...அவரின் சிபாரிசில்,அவருடைய அடையாளைத்தைத் தாங்கி வேலைக்குச் சேரும் மிகப் பெரும்பான்மையோரில்..வெகு சிலரே...உண்மையாக வேலையை கற்று ஆத்மார்த்தமான ஊழியராக மாறுகிறார்கள். பலர் அவரது நிழலிலேயே குளிர் காய்வது மட்டுமல்லாமல்...மற்ற ஊழியர்களுக்கும் தொந்தரவாக இருக்கிறார்கள். எங்கள் நன்பர்களுக்குள்..இப்படிப்பட்டவர்களுக்கென்றே ஒரு பட்டப்பெயர் இருக்கிறது. IAS(Influentially
Appointed Stupids) அதிகாரிகள்.

சரி இதை தடுக்க முடியுமா...? சிரமம்தான்.ஏனெனில் எல்லா இடங்களிலும் அந்த சக்திவாய்ந்த அதிகாரியின் ஆதிக்கக் கரங்கள் நீண்டிருக்கும்.உண்மையில் அது முடியாத காரியமென்றாலும்,இப்படிச் செய்யலாம்...செய்தால் தடுக்க முடியலாம்..என்பதாக சில யோசனைகள் சொல்லலாம்.

முதலாவதாக,எந்த ஒரு நிறுவனத்துக்கும் பணியாளர்களை சேர்க்கும்போது அதற்கென ஒரு தனிக்குழு அமைக்கபடவேண்டும்.அவர்களின் பணி ஆட்களைத் தேர்ந்தெடுப்பதோடு முடிந்துவிடவேண்டும்.அந்தக்குழுவில் இருப்பவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும் நாளில்தான்,விண்ணப்பித்திருப்பவர்களின் விவரங்கள் தெரிவிக்கப்படவேண்டும்.அதற்கு முன்பான பரிசீலனைகளில் படிப்புத்தகுதி,அனுபவத்தகுதி,வேறு ஏதாவது சிறப்புத் தகுதியுள்ளவர்கள் அலசப்பட்டு முடிவான பட்டியல் தயாரிக்கும் வேலையை வேறொரு குழு செய்ய வேண்டும்.இவை எவற்றிலும் அந்த நிறுவனத்திலிருக்கும் எந்த உயர் அதிகாரியும் பங்கெடுத்துக்கொள்ளக்கூடாது.இந்த முறையால்...சிபாரிசு என்பது பெருமளவு தவிர்க்கப்படும்.மேலும் எந்த விண்ணப்பத்திலும் விண்ணப்பதாரரின் இனம் குறித்த தகவல் இருக்ககூடாது.இன்னும் சொல்லப்போனால்..பெயர்கள் கூட மறைக்கப்பட்டு..ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாள எண் கொடுக்கப்படவேண்டும்.இறுதித் தேர்வில் அவர்கள் எண்களால் அழைக்கப்படவேண்டும்.

மேற்சொன்ன முறை கடைபிடிக்க முடியாத சூழ்நிலையில்,சிபாரிசில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கடுமையாக கண்காணிக்கபட்டு,தகுதித் தேர்வு ஒவ்வொரு வருடமும் வைக்கப்படவேண்டும்.அதில் தேறாதவர்களை வேலையை விட்டு நீக்குவதோடு...இன்னாருடைய சிபாரிசில் சேர்ந்த இந்த நபர்...இங்கு பணிபுரிவதற்கான தகுதியை அடையாததால் பணிநீக்கம் செய்யப்படுகிறார் என்று அறிவிப்புப் பலகையில் அவரது பணிநீக்கக் கடிதத்தை ஒட்டவேண்டும்.
அப்படிச் செய்வதால் அந்த அதிகாரியும் வெளிச்சத்துக்கு வருவார்,மேற்கொண்டு சிபாரிசில் தகுதியற்றவர்களை பணியில் சேர்க்க தயங்குவார்.

திறமையை கண்டுகொள்ளாமல் விடுவது நிச்சயமாக அந்த நிறுவனத்துக்கு மட்டுமல்ல,நாட்டிற்கே நஷ்டம்தான்.அப்படிப்பட்ட சூழ்நிலையில் குடத்தினுள் விளக்காக இல்லாமல்,தானும் ஒரு குன்றிலிட்ட விளக்குதான் என எத்தனைக் கஷ்டப்பட்டாவது நிராகரிக்கப்பட்டவர் நிரூபிக்க வேண்டும். திறமை நிரூபிக்கப்பட்டால்..பிறகு அவரை மறைப்பது அந்த ஓரவஞ்சனை அதிகாரிகளுக்கு சிரமம்.

இதையெல்லாவற்றையும் விட ஜாதி,இனம்.மொழி..என்று எதுவுமே குறிப்பிடப்படாமல் விண்ணப்பங்கள் இருக்கவேண்டும். அதுவே சிறந்தது.நான் நிர்வாகத்துறை தெரிந்தவனல்ல...அதனால் என் அறிவுக்கு எட்டியதை சொல்லியிருக்கிறேன். தவறாயிருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்.

சிவா.ஜி
15-10-2007, 01:35 PM
ஷீ−நிசியின் கவிதை...அடடா...அசத்தல் ரகம்.ஒருவரைப் பார்த்துப் பழகி அவரது எல்லா குனாதிசியங்களும் தெரிந்தாலும்,அவரைப்பற்றிச் சொல்லச் சொன்னால் நிறையப் பேர் சொதப்பிவிடுவார்கள்.ஆனால் ஷீ....உண்மையிலேயே வெகு நிறைவான கவிதையைப் படைத்திருக்கிறார்.வாழ்த்துக்கள் ஷீ−நிசி.

சிவா.ஜி
15-10-2007, 01:37 PM
ஆஹா...பூமகள்...அசத்திட்டம்மா.ராஜா சாரின் கேள்வியைப் பார்த்ததும் நம் தங்கை எப்படி சமாளிக்கப்போகிறாரென்று பார்க்க மிகவும் ஆவலாயிருந்தேன். வெகு அழகாக பாடல் படைத்து பெருமிதம் கொள்ள வைத்துவிட்டாய்.மனசெல்லாம் சந்தோஷத்துடன்...மனதார வாழ்த்துகிறேன்.

சுகந்தப்ரீதன்
15-10-2007, 01:40 PM
4. சிவாஜி :

திறமையை கண்டுகொள்ளாமல் விடுவது நிச்சயமாக அந்த நிறுவனத்துக்கு மட்டுமல்ல,நாட்டிற்கே நஷ்டம்தான்.அப்படிப்பட்ட சூழ்நிலையில் குடத்தினுள் விளக்காக இல்லாமல்,தானும் ஒரு குன்றிலிட்ட விளக்குதான் என எத்தனைக் கஷ்டப்பட்டாவது நிராகரிக்கப்பட்டவர் நிரூபிக்க வேண்டும். திறமை நிரூபிக்கப்பட்டால்..பிறகு அவரை மறைப்பது அந்த ஓரவஞ்சனை அதிகாரிகளுக்கு சிரமம்.

.

சிவா அண்ணா.. அருமையான பதிலை தந்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்..!
IAS-தங்களின் விளக்கம் மிக யதார்த்தம் கலந்த உண்மை..! எல்லாம் கலந்த கலவையாக உற்சாகமூட்டுகிறது உங்களின் பதில் அனைத்தும்..!

ராஜா
15-10-2007, 01:41 PM
நன்றி சிவாஜி..!

முதலில் ஐ.ஏ.எஸ். என்ற பதத்துக்கு புதுவடிவம் ஒன்று இருக்கிறது என்று தெரிவித்தமைக்கு நன்றி. நான் பணிபுரியும் நிறுவனத்தில் இந்த அதிகாரிகளின் அட்டகாசம் அதிகம். இனி எங்கள் நிறுவனத்தில் ஐ.ஏ.எஸ் எனும் குறியீடு பிரபலமாகிவிடும்.

இந்தப் பிரச்னையைக் களைய நீங்கள் தெரிவித்திருக்கும் யோசனைகள் பலனளிக்கும் என்றே படுகிறது.. எனினும் இனப்பாசப் பூனைக்கு மணியை யார் கட்டி, எப்போது நம் நாடு உருப்படப்போகிறதோ..?

சிவா.ஜி
15-10-2007, 01:43 PM
நன்றி சுகந்தன்.நாம் பணிபுரியும் எல்லா இடங்களிலும் இப்படிப்பட்ட IAS
கள் நிறைய இருக்கிறார்கள்.என்ன செய்வது.நம்மை நாம்தான் நிரூபிக்கவேண்டியிருக்கிறது.

சிவா.ஜி
15-10-2007, 01:46 PM
இனப்பாச பூனைக்கு மணிகட்ட ஓரிரவில் முடியாது ராஜா சார்.இன்றைய இளைஞர்களால்தான் அது சாத்தியப்படும்.எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

ராஜா
15-10-2007, 01:56 PM
இனப்பாச பூனைக்கு மணிகட்ட ஓரிரவில் முடியாது ராஜா சார்.இன்றைய இளைஞர்களால்தான் அது சாத்தியப்படும்.எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

எங்கள் காலத்தில் ஆகாவிட்டாலும், உங்கள் காலத்தில் அப்படி ஒரு உன்னதநிலை ஏற்படட்டும் சிவா..!

இந்தியத் திருநாடு எதிர்கால இளைஞர்கள் கையில் நிச்சயம் மேன்மையுறும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் இரு[ற]ப்போம்.

அமரன்
15-10-2007, 01:59 PM
சிவாவைப் பெயர் சொல்லி அழைத்ததால் இளஞர் ஆகிவிட்டார். :rolleyes: இப்போதிலிருந்து சிவா அண்ணா என்றுதான் விளிப்பேன்.:D

சிவா.ஜி
15-10-2007, 02:03 PM
சிவாவைப் பெயர் சொல்லி அழைத்ததால் இளஞர் ஆகிவிட்டார். :rolleyes: இப்போதிலிருந்து சிவா அண்ணா என்றுதான் விளிப்பேன்.:D

கொஞ்ச நேரம் சந்தோஷப்பட விடமாட்டய்ங்கப்பா....நல்லாருங்க....பொடிப்பையன்களே...

மலர்
15-10-2007, 03:01 PM
சிவா அண்ணா உங்களின் பதில் படித்தேன்....
இனப்பாகுபாடு, இனவெறி இல்லாது மாற்ற முடியுமா....
அப்படி நடக்கும் என்று கனவு கூட அப்படி வரமாட்டேங்குது.........?? என்ன செய்ய....??

இதையெல்லாவற்றையும் விட ஜாதி,இனம்.மொழி..என்று எதுவுமே குறிப்பிடப்படாமல் விண்ணப்பங்கள் இருக்கவேண்டும்.

முதலில் இதை கொண்டு வந்தாலே பாதி இல்லை முக்கால்வாசி பிரச்சை ஒய்ந்த மாதிரி தான்......

அமரன்
15-10-2007, 03:10 PM
ஏம்மா மலரு.. உன் கேளிவிக்குரிய பதிலைத்தவிர வேறு பதிவுகளையே தந்திட்டு இருக்கியே.. இது நல்லா இல்லை.

மலர்
15-10-2007, 03:23 PM
6 & 7. இனி & மலர் :
இருவருமே கலாட்டா சுந்தரிகள்.. அதிலும் மலர்... [அவருக்கு ஒரு பெயர் கூட வைத்திருக்கிறேன்.. ஹி..ஹி]
#) உங்களில் ஒருவர் ஒரு சிறுகதையின் முன்பகுதியை எழுத, அடுத்தவர் முடிக்க வேண்டும்.
[யார் முதலில் ஆரம்பிப்பது என்பது மட்டுமே இவ்விடயத்தில் உங்கள் இருவரின் தனிமடல் தொடர்பாக இருக்கும் என்று நம்புகிறேன்].

ஹையா.. நான் தான் முதல்ல கதையை ஆரம்பிப்பேன்
இதுக்காக அடிச்சி புடிச்சி இனியாகிட்ட இருந்து சம்மதம் வாங்கியிருக்கேன்.
அன்பின் ராஜா அண்ணா முதலில் என்னை மன்னிச்சிக்கோங்க
இவ்வளவு லேட்டா பதில் தாரதுக்காக
அப்புறம்
இனியா என்னையே முதல்ல ஆரம்பிக்க சொல்லிட்டாங்கல்லோ
அதனால நான் சிறுகதை யோட முன் பகுதியான

சிறு

வை கொடுக்கிறேன் நம்ம இனியா கதையை போட்டு முடிச்சிருவாங்க சரியா..
ஓடியாங்கோ இனியா.
நம்ம மன்றத்து அண்ணாமார்கள் எல்லாரும் வெயிட்டிங்..

இதப்படிச்சிட்டு உடனே என்னை பாராட்டணும் அப்புறம் பரிசுப்பணம் கொடுக்கணும்னு தோணுதா ஹீதோணும் ஏன்னா நம்ம கதை அப்படி.
அதுக்கு முன்னாடி என்னோட சோகக்கதையை ஒரு கேட்டிட்டு அப்புறம் பாராட்டுங்க..

நானும் ஒரு கதையை எழுதி வச்சிக்கிட்டு கதை எப்படி இருக்கு என்று கருத்து கேக்குறதுக்காக ஓரு ரெண்டு பேர கூப்பிட்டேன் ஆனா நான் வாசிச்சி முடிக்கிற வரைக்கும் யாரும் எதுவும் பேசக்கூடாதுன்னு ஒரு கண்டிஷன் போட்டுட்டு வாசிக்க ஆரம்பிச்சேன்..
வாசிச்சி முடிச்சிட்டு திரும்பி பாக்கிறேன் ஒண்ணு அழுதுட்டு இருக்கு.. அது ஆனந்த கண்ணீரா இல்லை அழுகையான்னு இன்னும் தெரியலை
அப்புறம் இன்னோண்ணு என்னடான்னா உரங்குட்டான் குரங்கு மாதிரி உர்ன்னு முகத்தை வச்சிட்டு எந்திரிச்சி போயிட்டு..
எனக்கு என்னடான்னா நம்ம கதையை பத்தி ஒண்ணுமே சோல்லிலேன்னு என் கதை அப்படின்னு ஒரு வார்த்தைதான் கேட்டேன் ..
அடேங்கப்பா எரிமலையாய் குமுறிட்டா..
இதப்பாருடி காலையில இருந்து வாயைமூடாம பேசி கொன்னுருக்க இப்ப என்னடான்னா கவிதைய கேளு கதைய கேளுன்னு சாகடிக்கிற
இதுக்கு பேசாம எங்களை உன் கையால கொன்னுரலாம்.. விட்டுருடீன்னு கெஞ்சுரா.....
அதோட விட்டாளா இனிமே கதை கவிதைன்னு கீபோடுல கையை வச்சன்னு வையி கை இருக்காதுன்னு அப்படின்னு ஒரு மிரட்டல் வேற..... ச..எனக்கும் அவளை பாக்கவே பாவமா தான் இருந்திச்சி..
என்ன செய்ய..
மன்றத்து மக்களின் தலையெழுத்தை யாராலும் மாற்ற முடியாது போலும்.
இல்லன்னா என் கையால நான் எழுதி குடுக்கப்போற கதையய பாத்து படிச்சி அதுக்கு பின்னோட்டம் எல்லாம் குடுத்து.
எவ்வளவு நல்லவங்க நீங்க

ஹீ..ஹீ
அப்புறம் இது நம்ம ராஜா அண்ணாக்கு..
திட்டாதீங்கோ.
இது சும்மா சும்மா.தான்
நான் விளையாட்டுக்கு தந்தேன்..
ஆனால் மேலே நான் சோன்னதில் 90% அதிகமான உண்மையே உள்ளது.
சாரி அண்ணா நான் நாளைக்கு கதையை தந்துடுரேன் சரியா

ராஜா
15-10-2007, 03:25 PM
ஏம்மா மலரு.. உன் கேளிவிக்குரிய பதிலைத்தவிர வேறு பதிவுகளையே தந்திட்டு இருக்கியே.. இது நல்லா இல்லை.

அது...!

ராஜா
15-10-2007, 03:29 PM
அப்போ இது ட்ரெயிலர் தானா..?

மெயின் பிலிம் நாளைக்குத்தானா..?

சரி.. சரி.. நாளைக்குக் கண்டிப்பா வந்துடணும்..!

மலர்
15-10-2007, 03:32 PM
அப்போ இது ட்ரெயிலர் தானா..?

மெயின் பிலிம் நாளைக்குத்தானா..?

சரி.. சரி.. நாளைக்குக் கண்டிப்பா வந்துடணும்..!

சரி அண்ணா....
நாளைக்கு தந்துடுறேன்... ஓக்கேவா...

அமரன்
15-10-2007, 03:39 PM
அண்ணா நீங்கள் ரொம்ப துணிச்சலானவர்தான்.
நாளைக்கு நான் மன்றத்திற்கு லீவு போடும் ஐடியாவில் இருக்கேன்.
ட்ரெயிலர் கடியே ரொம்ப வலிக்குது.

ராஜா
15-10-2007, 04:00 PM
அண்ணா நீங்கள் ரொம்ப துணிச்சலானவர்தான்.
நாளைக்கு நான் மன்றத்திற்கு லீவு போடும் ஐடியாவில் இருக்கேன்.
ட்ரெயிலர் கடியே ரொம்ப வலிக்குது.

யாருப்பா என் தங்கச்சியைக் கிண்டல் ப்ண்ணுவது..?

இதெல்லாம் நல்லா இல்லே.. சொல்லிட்டேன்..

நீ நாளைக்கு வாம்மா மின்னல்..! இடைவேளை வரை பிலிம் காட்டு..!

ஷீ-நிசி
15-10-2007, 04:33 PM
மலர் ட்ரெய்லரே சும்மா அதிருதுல்ல....

ஆதவா
15-10-2007, 04:37 PM
யாருப்பா என் தங்கச்சியைக் கிண்டல் ப்ண்ணுவது..?

இதெல்லாம் நல்லா இல்லே.. சொல்லிட்டேன்..

நீ நாளைக்கு வாம்மா மின்னல்..! இடைவேளை வரை பிலிம் காட்டு..!

எதுக்கும் அறிஞர்கிட்ட பணம் ஏற்பாடு பண்ணி, (அறிஞர்தான் இதுக்கும் கிடைத்தாரா?) கீழ்பாக்கம் போகவேண்டியதுதான்.... மொத்தம் எத்தனை பேருங்க அட்மிசனுக்கு?

ஆதவா
15-10-2007, 04:37 PM
மலர் ட்ரெய்லரே சும்மா அதிருதுல்ல....
ஆமாங்க மண்டைக்குள்ள ஒரே அதிரல் தான்

மலர்
15-10-2007, 04:43 PM
எதுக்கும் அறிஞர்கிட்ட பணம் ஏற்பாடு பண்ணி, (அறிஞர்தான் இதுக்கும் கிடைத்தாரா?) கீழ்பாக்கம் போகவேண்டியதுதான்.... மொத்தம் எத்தனை பேருங்க அட்மிசனுக்கு?

ம்ம்... இப்போதைக்கு உங்களுக்கு மட்டும் தாங்க...

இனியவள்
15-10-2007, 04:48 PM
மலர் டீரெயிலர் பார்த்து என் கண்ணு
கலங்கிட்டு போங்க :D:D:D

அசத்துங்க அசத்துங்க :)

மலர்
15-10-2007, 06:13 PM
[COLOR="Navy"]யாருப்பா என் தங்கச்சியைக் கிண்டல் ப்ண்ணுவது..?
இதெல்லாம் நல்லா இல்லே.. சொல்லிட்டேன்..
நீ நாளைக்கு வாம்மா மின்னல்..! இடைவேளை வரை பிலிம் காட்டு..![COLOR]

ம்ம்... நல்லா சத்தமா கேளுங்க அண்ணா.....
எனக்காக யாருமே பேச இல்லங்கிற தைரியம்ம்ம்ம்.......
அதான் எங்க அண்ணன் கேக்கிறாருல்லை...
என்னாச்சி பதிலையே காணோம்...
ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்...

aren
15-10-2007, 06:15 PM
ம்ம்... நல்லா சத்தமா கேளுங்க அண்ணா.....
எனக்காக யாருமே பேச இல்லங்கிற தைரியம்ம்ம்ம்.......
அதான் எங்க அண்ணன் கேக்கிறாருல்லை...
என்னாச்சி பதிலையே காணோம்...
ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்...

அப்படின்னா அவர் சொல்வது சரிதான்கிறீங்களா? நல்ல பிலிம் காட்டுவீங்களா?

மலர்
15-10-2007, 06:20 PM
அப்படின்னா அவர் சொல்வது சரிதான்கிறீங்களா? நல்ல பிலிம் காட்டுவீங்களா?

:medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100:

ராஜா
16-10-2007, 03:56 AM
அப்படின்னா அவர் சொல்வது சரிதான்கிறீங்களா? நல்ல பிலிம் காட்டுவீங்களா?

ஊரு ஒண்ணு கூடிட்டாய்ங்கம்மா... மலரு..!

lolluvathiyar
16-10-2007, 09:07 AM
ஐ ஏ எஸ் பற்றிய சிவா ஜி யின் விளக்கம் அருமை. சாதியை அரசியல் கட்சிகளும் ஒழிக்க விடமாட்டார்கள். பாராட்டுகள்

எனன்னென்னமோ மலர் டிரெளர் மட்டும் தான் போடுவாங்கனு நினைகிறேன். படம் போடுமா சீக்கிரம்

ராஜா
16-10-2007, 01:27 PM
என்னா ஒரு வில்லத்தனம்..?

மாம்ஸையும் காணோம்.. மலரையும் காணோம்..?

மலர்
16-10-2007, 01:30 PM
என்னா ஒரு வில்லத்தனம்..?

மாம்ஸையும் காணோம்.. மலரையும் காணோம்..?

உங்க மாம்ஸ் எங்க போனாருன்னு தெரியாது....
(ஒருவேளை ஆவியா அலைஞ்சிட்டு இருக்கலாம்)
ஆனா உங்க தங்கச்சி மலரு ஓடி வந்துட்டேன்....

ராஜா
16-10-2007, 01:49 PM
வாம்மா மின்னல்..!

மலர்
16-10-2007, 01:59 PM
முதல்ல என்ன கதை எழுத...... எப்படி ஆரம்பிக்கன்னே ஒண்ணும் தெரியலை.....
ம்..லவ் ஸ்டோரி எழுதவா இல்லன்னா ஏதாவது திகிலா பேய்கதை எழுதலாமான்னு ஓரே குழப்பம்.. அப்புறம் நம்மளைபற்றி நாமே எழுதக்கூடாதுன்னு முடிவு பண்ணி பேய் கதை எழுதுற எண்ணத்தை கைவிட்டுட்டு ஒரு லவ் ஸ்டோரியை ஸ்டார்ட் பண்ணிட்டேன்
கார்த்திக் இவர் தான் நம்ம கதையோட ஹீரோ..
சுந்தரி இவங்க நம்ம ஹீரோயின்
இளங்கோ ஹீரோவோட பிரண்ட்

இடம் : கார்த்திக்கின் வீடு
கார்த்திக்கின் அம்மா : டேய் மணி என்ன ஆச்சி தெரியுமா எழும்புங்கடா என்ற அம்மாவின் குரல் கேட்டு இளங்கோ மெல்ல கண்விழித்து பக்கத்தில் தூங்கி கோண்டிருந்த நண்பன் கார்த்திக்கை பார்த்தான்..
ஏய் லேட் ஆயிடுச்சிடா அம்மா வேற கூப்பிடுறாங்க.. எழும்புடா.. சொல்லிக்கொண்டே மெதுவாய் தட்டி கார்த்திக்கை எழுப்பி பார்த்தான் ம்..ஹீம் கொஞ்சமும் அசைவதாய் தெரியலை..தன்னைமறந்த நிலையில் ஒரு ஆழ்ந்த நித்திரையில் இருந்தான் ம்..நைட்டெல்லாம் தூங்காம என் உயிரை வாங்கிட்டு இப்ப தூங்கு முணுமுணுத்து கோண்டே ஒரு பெருமூச்சை இழுத்து விட்டபடியே பெட்டை விட்டு எழுந்தான்.. இளங்கோ..

நம்ம ஹீரோ ஏன் இப்படி தூங்கிட்டு இருக்கார் காரணம் இல்லாமல் எல்லாம் நம்ம ஹீரோ தூங்கலை.. ஏன்னா நம்ம ஹீரோ கார்த்திக் காதல் கடலில் விழுந்துவிட்டான். பாவம் அவனுக்கு நீச்சல் கூடத் தெரியாது. சின்ன வயசில இருந்தே நீச்சல் கத்துக்கோன்னு அவங்க அப்பா சொன்னது கேட்காம போய்டது எத்தனை தப்பு பார்த்தீங்களா.. நைட் ஆனா ஒரே கவிதையா எழுதி தள்ளறான்... எடுத்து படிச்சா, எல்லா பேப்பர்லயும் ஒரே ஒரு கவிதைதான் எழுதியிருக்கான்.... என்னமோ ஆச்சு, காதல் ஃபீவர். நூறைத்தாண்டி தெர்மா மீட்டர் பாதரசத்தையை கதிகலங்க வைச்சுடுச்சு.

அப்படி என்னங்க காதல்ல இருக்கு?, அதான் எனக்கும் புரியலை கார்த்திக்குக்கு தூக்கமில்லை, துக்கமில்லை, சாப்பாடு இல்லை கூப்பாடு இல்லை. ஆனா ஒரே புலம்பலுங்க, சுந்தரி சுந்தரி னு புலம்பித் தள்ளறான்.... நைட் தூங்காம காலைல வரைக்கும் இப்படியே சொல்லிச் சொல்லி கூட படுத்துட்டு இருக்கற இளங்கோ, டென்ஷனாகி "ஏண்டா கார்த்திக்? எந்திரி எந்திரினு ஏன்டா புலம்பறே?"னு தலையில அடிக்கிறான்... காதலிச்சா அந்த பாதிப்பு,
காதலிக்கறவங்கலுக்கு மட்டும்தான். இங்கே பாவம் நம்ம இளங்கோ,,

ஒருவழியாய் ரெண்டு பேரும் சண்டைபோட்டு 10 மணிக்கு தான் டைனிங் டேபுளுக்கே வந்து சேர்ந்தாங்கள். தொண்டையை லெசா செருமிக்கொண்டே இளங்கோ மெதுவாய் ஆரம்பித்தான்...

"டேய், மச்சான் நைட்டெல்லாம் தான் தூங்காம புலம்பிட்டே இருக்கே! பேசாம சாப்பிட்டிட்டு தூங்குடா, நல்லா ரெஸ்ட் எடு, அப்பறமா உன்னோட மந்திரியை பார்க்கலாம்."

"ஏய், அவ பேரு சுந்தரி டா!"

" ஏதோ ஒண்ணூ."

"சரி சாப்பிட்டுட்டு நான் சீக்கிரமா கிளம்பனும். சுந்தரிகிட்ட என்னோட லவ்வ இன்னிக்கு ஓபன் பண்ணியே ஆகணும்."

" இதென்ன சினிமா தியேட்டரா? ஓபன் பண்றதுக்கு? முதல்ல பல்லு விளக்கு, அப்பறம் சாப்பிடுவியாம்."

" நோ நோ! டூத் பேஸ்ட் எனக்கு ஆகாது. அப்பறம் எனக்கு டூத் வேஸ்ட் ஆகிடும்,. "

" எப்படியோ வந்து சேரு "

கார்த்திக் தக்கி முக்கி, பல்லுவிளக்காம தன்னோட காதலைச் சொல்ல வண்டி எடுத்துட்டு கிளம்பினான். அவன் நேரம் பாருங்க, இளங்கோ அந்த வண்டியில பெட்ரோல் போட மறந்துட்டான், சரி அதை விடுங்க. அவன் எப்படியோ தள்ளீட்டு வந்திடுவான். (வண்டியைச் சொன்னேங்க.) யாரிந்த சுந்தரி? (சொப்பன சுந்தரி)

சுந்தரி கார்த்திக்கோட எதிர்த்த வீட்டு பொண்ணு. பார்க்கறதுக்கு போண்டா மாதிரி இருக்கும். ஆனா ரொம்ப கார போண்டா. அவ்வளவு சீக்கிரத்தில கடிக்க முடியாது............ அப்படிப்பட்ட பொண்ணை நம்ம கார்த்திக் சைட் அடிக்கிறான்னா அது அவனோட தைரியத்துக்கு எடுத்துக்காட்டு. சுந்தரியை நல்ல விவரிக்கனும்னா அதுக்கு ஒரு பக்கமே பத்தாது. அத்தனை விசயங்கள் இருக்கு. பொண்ணு கொஞ்சம் குண்டுதான். அதுக்காக கோலியெல்லாம் விளையாடமுடியாது. சுந்தரி இப்போத்தான் காலேஜ் முடிச்சு வீட்ல சும்மா இருக்கு. வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க. நம்ம மாப்பிள்ளை கார்த்திக்கோ சுந்தரிய பொண்ணூ பார்த்துட்டு இருக்கான்... எல்லாம் சுபமா முடிஞ்சா சரி.

அந்த வண்டிய தள்ளீட்டு போன சுபயோக சுபதினத்தில சுந்தரிக்கு தன்னோட லவ்வை சொல்ல கார்த்திக் ஓடோடி வந்தான். நம்ம சுந்தரி அவங்க அப்பா
புத்தகக் கடையில இருந்தாள்...

"ஹாய் சுந்தரி, அப்பா இல்லையா?" கேட்டுக்கோண்டே புத்தகக்கடைக்குள் நுழைந்தான்...

" வா கார்த்திக். என்ன இந்த பக்கம்? வண்டிய ஏன் தள்ளீட்டே வர?"

" அதுவா எல்லாம் அந்த இளங்கோ பண்ணிண வேலை
அவன் வண்டிக்கு பெட்ரோல் போடாம வச்சிருக்கான் இது தெரியாம நான் எடுத்துட்டு வந்துட்டேன் "

" ஓ,.. அவனுடைய பதிலுக்காய் மெதுவாய் சிரித்தாள் "

" சுந்தரி, நீ இந்த புத்தகக் கடையில எல்லா புத்தகத்தையும் படிச்சிருக்கியா? (மெதுவாய் ஆரம்பித்தார் நம்ம ஹீரோ) "

" ம்ம்... படிச்சிருக்கேனே! ஏன் கார்த்திக் அப்படி கேட்கிற?"

" சும்மாதான். உன்கிட்ட ஒரு விசயம் பேசணுமே! "

" என்ன?"

" நீ காதலைப் பத்தி என்ன நினைக்கிறே?"

" ம்ம்.. எனக்கு என்ன தெரியும். காதலுங்கறது சும்மா பேத்தல். எனக்கு அது பிடிக்கவே பிடிக்காது. பெத்தவங்களை ஏமாத்திற விசயம். நம்ம மேல நம்பிக்கை வெச்சிருக்கிற நம்ம அப்பா அம்மாக்களுக்கு துரோகம் செய்யறது. "

கார்த்திக்குக்கு முதல் பந்தே போல்டு. அடுத்து ஆடறதுக்கு பேட்ஸ்மேன் கூட இல்லை.

அப்படியே சுந்தரி தொடர்ந்து சொன்னா, " கார்த்திக் எங்கவீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டாங்கப்பா, எனக்கு இந்த கலியாணமே பிடிக்கலை.
எப்படியாச்சும் பொண்ணு பார்க்கவர்றதுக்குள்ள தடுத்து நிறுத்தனும், என்ன செய்யலாம்.?"

"

மீதியை, இனியா தொடரவும்..................

முதல்ல கண்ணீரை துடைச்சிக்கோங்க......
இனி இதுபோல் நடக்காது பார்த்து கொள்கிறேன்...
அப்புறம் மக்களே எனக்கு உண்மையில் கதை எழுத தெரியாது.....
குற்றம் குறையை பொருத்தருள்க.......

அப்புறம் ராஜா அண்ணா....
எனக்கு என்ன பேரு வச்சிருக்கீங்க .....
தெரிஞ்சிக்கணும்னு ஆசையா இருக்கு

சுகந்தப்ரீதன்
16-10-2007, 02:15 PM
அப்புறம் ராஜா அண்ணா....
எனக்கு என்ன பேரு வச்சிருக்கீங்க .....
தெரிஞ்சிக்கணும்னு ஆசையா இருக்கு
இதுகூட தெரியாதா உனக்கு...! ஏற்கனவே எனக்கு சொல்லிட்டாரு.. நான் உனக்கு மட்டும் கேட்குற மாதிரி சொல்லுறேன்..!அது..அது..அது.. அது வந்து... அடிக்க மாட்டியே..? சொப்பன சுந்தரி-ன்னு சொன்னாரு..(அய்யா அப்பீட்டு..!)

ராஜா
16-10-2007, 02:20 PM
குழந்தையின் மழலைப் பேச்சுக்கு ஒரு அழகு உண்டு.. உன் கதையும் அப்படித்தானம்மா..!

சில குறைகள் இருந்தாலும்கூட அது அழகான குழந்தையின் கன்னத்தில் இருக்கும் திருஷ்டிப் பொட்டைப் போல தனிக் கவர்ச்சியைத்தான் கொடுக்கிறது..!

ராத்திரி பூரா காதலியை நினைத்து கனவுகண்டு புலம்பிய கார்த்திக், த காதலைச் சொல்ல காதலியின் அப்பா வைத்திருக்கும் புத்தகக் கடைக்குப் போகிறான்.. அங்கே ஒரு அதிர்ச்சியான செய்தி.. காதலியைப் பொண்ணு பார்க்க வராங்க.. அடுத்து ஒரு ஆறுதலான செய்தி.. காதலிக்கு தன்னை பொண்ணு பார்க்க வருவது பிடிக்கல..

இது சாராம்சம்..!

சில மூலக்கூறுகள் இந்தக் கதையில் இணைந்திருக்கின்றன.

1. இளங்கோ கதாபாத்திரம்..

இவன் கதையை ஓட்டிச்செல்ல உதவும் துணை கேரக்டரா..? ஹீரோவின் மனநிலையை நமக்கு வெளிப்படுத்துவதற்காக இக்கதையில் உள்ளானா.. அல்லது இவன் மூலம் ஒரு திருப்பம் வருமா என்று எதிர்பார்க்க வைக்கிறது.

எதிர் வீட்டுக் காதலி ஏன் சம்பவத்தன்று அப்பாவின் கடைக்குப் போகவேண்டும்..? அவளைப் பார்க்க ஹீரோ போகும் வண்டியில் ஏன் பெட்ரோல் தீரவேண்டும்..? இது இயல்பா..? சதியா..?

மலர் சரியான களம் அமைத்துத் தந்திருக்கிறார்..

இனி.. இனி நீங்கதான்.. வாங்க..!

மலர்
16-10-2007, 02:21 PM
இதுகூட தெரியாதா உனக்கு...! ஏற்கனவே எனக்கு சொல்லிட்டாரு.. நான் உனக்கு மட்டும் கேட்குற மாதிரி சொல்லுறேன்..!அது..அது..அது.. அது வந்து... அடிக்க மாட்டியே..? சொப்பன சுந்தரி-ன்னு சொன்னாரு..(அய்யா அப்பீட்டு..!)

அப்புறம்..... இப்படி சொல்லிட்டு அப்பீட்டான்னா விட்டுருவோமா...
மன்றத்துல எங்க போனாலும் இன்னைக்கு என் கையால அடி வாங்க தான் போற...

ராஜா அண்ணா இது தான் என் பேரா :traurig001::traurig001::traurig001:

ராஜா
16-10-2007, 02:26 PM
அப்புறம்..... இப்படி சொல்லிட்டு அப்பீட்டான்னா விட்டுருவோமா...
மன்றத்துல எங்க போனாலும் இன்னைக்கு என் கையால அடி வாங்க தான் போற...

ராஜா அண்ணா இது தான் என் பேரா :traurig001::traurig001::traurig001:

இல்லம்மா..!

தனி மடலில் உன்னை ஒரு பேர் சொல்லிக் கூப்பிடுவேனே அது..!

சுகந்தன் ரொம்ப லொள்ளு பண்றாரு... விடாதே..!

சுகந்தப்ரீதன்
16-10-2007, 02:26 PM
அப்புறம்..... இப்படி சொல்லிட்டு அப்பீட்டான்னா விட்டுருவோமா...
மன்றத்துல எங்க போனாலும் இன்னைக்கு என் கையால அடி வாங்க தான் போற...

ராஜா அண்ணா இது தான் என் பேரா :traurig001::traurig001::traurig001:
அப்படீன்னா என்னோட கிறுக்கு கேள்விக்கு நறுக்குன்னு பதில் சொல்லு பாக்கலாம்..?

மலர்
16-10-2007, 02:26 PM
குழந்தையின் மழலைப் பேச்சுக்கு ஒரு அழகு உண்டு.. உன் கதையும் அப்படித்தானம்மா..!

சில குறைகள் இருந்தாலும்கூட அது அழகான குழந்தையின் கன்னத்தில் இருக்கும் திருஷ்டிப் பொட்டைப் போல தனிக் கவர்ச்சியைத்தான் கொடுக்கிறது..!

நன்றி அண்ணா......
உண்மையில் இப்பத்தான் கொஞ்சம் மூச்சே வந்தது....
யாருக்குமே புரியாது போய்விடுமோ என்று நினைத்தேன்.....

ராஜா அண்ணா...
கதையை உடனே புரிந்து கொண்டீர்கள்
தெளிவான விமர்சனத்துக்கு நன்றி......:icon_08::icon_08::icon_08:

இனியவள்
16-10-2007, 02:31 PM
என் மீதிக் கதை இன்று இரவு இல்லாடி
நாளைக் காலையில் வந்திடும் :)

மலர் ஆரம்ப்பம் அசத்தல்

ராஜா
16-10-2007, 02:37 PM
என் மீதிக் கதை இன்று இரவு இல்லாடி
நாளைக் காலையில் வந்திடும் :)

மலர் ஆரம்பம் அசத்தல்

சரிம்மா இனி..!

பொறுமையா வாங்க..!

மலர்
16-10-2007, 02:40 PM
என் மீதிக் கதை இன்று இரவு இல்லாடி
நாளைக் காலையில் வந்திடும் :)
மலர் ஆரம்ப்பம் அசத்தல்

இனியா கதை புரிஞ்சதா....
புரியலை என்றால் என்னிடம் கேளுங்கள்...

முடிவு உங்கள் கையில் தான்...
சீக்கிரம் கொண்டு ஓடிவாங்கோ....

அமரன்
16-10-2007, 02:44 PM
மலரு கதை விட்டாச்சா...
இருங்க ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்ணிட்டு படிக்கிறேன்..
அண்ணா அடிக்கவாராப்ல இருக்கே அமரன் எஸ்கேப்

மலர்
16-10-2007, 02:48 PM
மலரு கதை விட்டாச்சா...
இருங்க ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்ணிட்டு படிக்கிறேன்..
அண்ணா அடிக்கவாராப்ல இருக்கே அமரன் எஸ்கேப்

:traurig001::traurig001::traurig001::traurig001: :traurig001::traurig001::traurig001::traurig001:
ராஜா அண்ணா பாருங்களேன்...
அமரு கூட என்னை கலாய்க்காரு

ராஜா
16-10-2007, 02:53 PM
பிரபலம் ஆயிட்டா இதெல்லாம் சகஜம்மா..!

அவரே ஆம்புலன்சுக்கு போன் பண்ணிட்டாரு.. நம்மை கிண்டல் பண்ணினா விளைவு என்னன்னு புரிஞ்சு வச்சிருக்கார்..!

மலர்
16-10-2007, 03:03 PM
அவரே ஆம்புலன்சுக்கு போன் பண்ணிட்டாரு.. நம்மை கிண்டல் பண்ணினா விளைவு என்னன்னு புரிஞ்சு வச்சிருக்கார்..!

ஹீ.....ஹீ.....எனக்கு இது தோணாம போயிடுச்சே....

இனியவள்
16-10-2007, 03:38 PM
சுந்தரியின் இந்த கலியாணம் பிடிக்க வில்லை நிறுத்த என்ன வழி என்று என்று கார்த்திக்கிடம் சொன்னதில் இருந்து அவன் ஓர் நந்தவனத்தில் தேவதைகளின் நடுவினிலே ஓர் நிலாவின் அழகை கண்கொண்டு பருகுவது போன்ற உற்சாகம்..ஆஹா கலியாணததை நிறுத்தும் சாட்டில் சுந்தரியோடு ஓரு நல்ல நண்பராய் இருந்து என் காதலை தெரிவிக்கலாம் அய்யா ஜாலி என்று உள்மனம் கூக்குரலிட்டது இட்டது அவனுக்கு மட்டுமே கேட்கும் படியாய்...அந்த சந்தோஷத்தை மனதினிலே புதைத்தவாறு வெகு சர்வசாதரணாமாய் சுந்தரியிடம் வினாவினான் கார்த்திக்..

ஏன் சுந்தரி உனக்கு இந்த கலியாணம் பிடிக்கேலை..மாப்பிளையை பிடிக்கேலையா இல்லாட்டி கலியாணமே பிடிக்கேலையா என்ற கேள்வியைக் கிரகித்தபடி கடைக்கு வந்த ஓரு வாடிக்கையாளர் கேட்ட புத்தகத்தை எடுத்துக் கொடுத்து பணத்தை பெற்றுக் கொண்டாள்..ஹீம் கார்த்திக் இது பற்றி நாங்கள் இண்டைக்கும் பின்னேரம் போல் கதைப்பம் இப்ப இன்னும் கொஞ்ச நேரத்திலை அப்பா வந்திடுவார் அப்பா வந்ததும் நான் பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோயில் போயிடுவன் அங்கை வந்தீங்கள் எண்டால் எல்ல விஷயத்தைப் பற்றியும் வடிவாய் கதைப்பம் என்று கூறிய படி அந்தப் பேச்சுக்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாள் சுந்தரி அந்த முற்றுப் புள்ளியே அவளின் ஆரம்ப புள்ளியாய் மாறப் போகின்றது என்பதனை அறியாமல்... அடச்சீ எங்கை போனலும் ஓர் வில்லன் வந்திடுவாங்கள் என்று மனதினிலே குமுறியவாறு சுந்தரியிடம் இருந்து உதட்டளவில் விடைபெற்றான் கார்த்திக் மனதினிலே அவளைச் சுமந்தவனாய்.....

மாலை நேரம் தென்றல் காற்று முடியை வருடிச் செல்ல அந்த சுகத்தை அனுபவித்தவாறு பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தான் கார்த்திக்.. பாடல்களின் மெல்லிய இசையும் அழகிய வரிகளும் அவன் காதினிலே ஒலிப்பதற்கு பதிலாய் சுந்தரியின் ஓவ்வொரு வார்த்தைகளும் காதினிலே
தேன் வார்த்துக் கொண்டிருந்தது..

சுந்தரியை பார்க்க போவதை நினைத்து நினைத்து அவன் உள்ளம் ஓரு நிலையில் இல்லாமல் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது..கோயிலில் சுந்தரியைக் கண்டு பூக்கள் ஆழகாய் விரிவது போல் அவன் உதடுகள் பிரிந்து புன்னக்கையை உதிர்த்தது தயங்கி தயங்கி மாறுபடியும் அதே கேள்விக் கனையைத் தொடுத்தான் கார்த்திக்.. ஏன் சுந்தரி உங்களுக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கேலை என்று மறுபடியும் அதே கேள்வியை நான் கேட்க எதோ யோசிக்கத் தொடங்கிய சுந்தரி தனது நீண்ட மெளனத்தை கலைக்கத் தொடங்கினாள்.. கார்த்திக் நான் உங்களிடம் ஓரு கேள்வி கேட்கலாமா.....என புதிர் போட ஆரம்பித்தாள் சுந்தரி...

என்ன நான் கேள்வி கேட்டாள் என்னிடமே திருப்பிக் கேள்விக் கேட்கப் போறாளோ என்று மனதினில் குழம்பியவாறு ம்ம் கேளுங்க என்ற சம்மதத்தோடு ஏன் கார்த்தி நீங்கள் காதலைப் பற்றி என்ன நினைக்கிறீங்கள் என்ற கேள்வியை விட அவள் தன்னை கார்த்தி என்று அழைத்த விதம் அவன் இதயத்தில் ஓர் பிரளயத்தையே ஏற்படுத்த காதல் ஓர் ஆழகிய கவிதை போன்றது சுந்தரி ஓர் தாய் முதன் முதலில் கருத்தரிப்பதைப் போன்ற அழகிய பிரசவம் காதல்..இரு உள்ளங்களின் அன்பில் ஓர் உலகை மறக்க வைப்பது காதல் இப்படி சொல்லிக் கொண்டே போகலம் சுந்தரி அது சரி ஏன் அதைப் பற்றி இப்ப கேட்கிறாய் ஹீம் அது வந்து கார்த்தி நான் நான் ம்ம் சொல்லு சுந்தரி நான் வந்து ஏன் தயக்கம் சுந்தரி உன் பிரச்சனை தான் என்ன சொல்லு நான் தீர்த்து வைக்கிறன் என்னாலை முடிஞ்ச வரைக்கும் என்ற அந்த ஓற்றைச் சொல்லில் தைரியம் கொண்டவளாய்

கார்த்தி அது வந்து நான் எண்டைக்கு உன்னை முதல் முதல் பார்த்தேனோ அன்று முதல் உன்னை காதலிக்கத் தொடங்கிட்டன் அதை உன்னிடம் எப்படி சொல்றது எண்டே தெரியேலை..காலையில் கூட உன் மனசை தெரிஞ்சு கொள்ளத் தான் நான் காதல் என்றால் பிடிக்காத மாதிரி கதைச்சன் ஆனால் உன் முகத்திலை ஓரு மாற்றமும் இல்லாததைக் கண்டு என் மனசு கஷ்டமாய் போயிற்று..எனக்கு கலியாணம் நிச்சயம் ஆகிட்டு என்று பொய் சொல்லி உன் மனசை அறியலாம் என்று பார்த்தன் அதுவும் தீபாவளிக்கு கொளுத்திப் போட்ட மத்தாப்பூ மாதிரி புஸ் என்று போயிற்று சரி என் காதலை உன்னிடம் இண்டைக்காவது சொல்லிட வேண்டும் என்று நினைச்சுத் தான் கோயிலுக்கு வரச் சொன்னன் என்று தன் மனதில் இருந்த காதலை வெளிப்படுத்தினாள் சுந்தரி...

பிறகு என்னங்க நம்ம நாயகன் என்ன தமிழ் சினிமாவிலை டூயட் பாடிற மாதிரி பாட போயிற்றார் கனவில்.:icon_rollout:

lolluvathiyar
16-10-2007, 04:24 PM
ஆகா சைக்கிள் கேப்பில மலர் இனியவன் இரண்டு பேரும் கதையை சொருகிட்டு எஸ்கேப் ஆயிட்டு போயிட்டாங்களே.
பலே கில்லாடிகப்ப நீங்க ரெண்டு பேரும்
ஒரு பையன் பென்னிடம் ஐ லவ் யு சொல்ல போரா. அதுகுள்ள அந்த பென்ன அவனிடம் ஐ லவ் யு சொல்லிடுச்சு.

இந்த சினிமா டிக்கெட் பின்னாடி எழுதர கதையை என்னாமா பில்டப் பன்னி அதுவும் ரென்டு பேரும் ரெண்டு பக்கத்த வளத்தீட்டீங்க. முதல்ல உங்களுக்கு கல்யானம் பன்னி வக்கனும்.

மலர் முதல் முயற்ச்சி அபாரம் எப்படியோ இழுத்து இழுத்து இனியவளை வம்பில் மாட்டி விடும் முயற்சி நன்றாக தெரிந்தது. அதுவும் கதையை கொண்டு போன விதம் நகைசுவையே உங்கள் நாக்கில் நடனமாடும் போல இருக்கும். இந்த முதல் கதைக்கு உங்களை நான் பாராட்ட மாட்டேன். காரன ஒரு படைபாளியை வெளி உலகத்துக்கு கொண்டு வந்த ராஜாவுக்கே இந்த பாராட்டு சேரும்.

இனியவள் மலர் ஏற்படுத்திய சிக்கல் தீர்க்கவே தனியா ரூம் போட்டு யோசிச்சுருக்கனும் ஏன்னா மலர் சொப்பன சுந்தரியின் குணத்தை நிற்னயிச்சுட்டு போயிட்டாங்க, அந்த குணத்தை கார்த்திக் காதலுக்கு ஏற்றபடி திருப்புவது கடினம் ஆனால் அதையும் வெகு விறைவில் மாற்றி காட்டி விட்டீர்கள். இதில் விசேசம் என்னவென்றால் இனியவள் ஒன்றை மனி நேரத்தில் கதையை முடித்திருகிறார். ஆணின் ஆழத்தை மலர் காட்ட பென்னின் ஆழத்தை இனியவள் காட்டி விட்டார்.

(இனியவள் கதை நன்றாக இருந்தாலும் படிக்கும் படி டெக்ஸ்ட் பார்மேட் செய்யுங்கள். அனைத்து உரையாடலும் கதையும் கலந்து ஒரே பாராவில் போட்டிருகிறீர்கள். ஆங்காக்கும் உரையாடலுக்கு கோட்டேசன் இல்லாமல் இருப்பது குழப்பத்தை தருகிறது. இப்பொழுதே சரி செய்து விடுங்கள்)
வாழ்த்துகள்

பூமகள்
16-10-2007, 04:53 PM
தலைப்பு வைக்காத காதல் கதை...!! காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள்... இங்கு பெயருமில்லை...!!
ஆரம்பத்தில் தடாலடியாய் ஆரம்பித்த மலரின் அருவா போன்ற கதை,
இனியால் இலங்கை தமிழில் கொஞ்சி விளையாடியது வர்ணனைகளில்...!!
மலர், இனி கதையோட்டம் ஓடவைக்காமல் படிக்க வைத்தது...!!
மொத்தத்தில்
"இனிமலர் கூட்டணி...
மன்றத்தின் பேரணி....!!"
கதை எழுதிய இருவருக்கும் வாழ்த்துகள்..!!

அக்னி
17-10-2007, 12:42 AM
8. அக்னி :

திறனாய்வுப் புலிக்கு ஒரு எளிய கேள்வி..

#) இலங்கைப்பிரச்னை குறித்து ஒரு தெளிவான, சுருக்கமான திறனாய்வு.
முடிந்தால் தீர்வுக்கான வழிகள்.

இன்று இலங்கையில் நிகழ்வது இனப்பிரச்சினை என்று சொல்வதைவிட,
சிறுபான்மையினைர வேரறுக்கும் இனவழிப்பு முயற்சி என்று சொல்வதே தகும்.

ஈழத்தமிழர்... இலங்கையின் ஒரு தேசிய இனம்...
தேசிய இனம் என்னும்போது,

தொடர்ச்சியான நிலப்பரப்பு
தனித்துவமான மொழி
பாரம்பரிய கலைப்பண்பாடு
நீண்ட வரலாறு
தனித்துவமான பொருளாதாரம்எனும் ஐந்து அம்சங்களும் அடங்கலாகும்...

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர், ஐ.நா. சபையால் வெளியிடப்பட்ட, மனித உரிமைப் பிரகடனத்தின்படி,
ஒரு தேசிய இனத்திற்கு, தன்னைத் தானே ஆளும், தீர்மானிக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு...

ஈழத்தமிழருக்கு இந்த ஐந்து அம்சங்களும் நிறைவாகவே உண்டு.
எனவே அவர்கள் தம்மைத் தாமே ஆளும் உரிமைக்கு உரித்துடையவர்கள்.

மேலைத்தேய ஆக்கிரமிப்புக்களுக்கு முன்னர், இலங்கையில் தமிழ் இராசதானிகள் கோலோச்சிய வரலாறுகள் உண்டு...

அதன் பின்னர் இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், பெரும்பான்மையின சிங்கள அதிகாரவர்க்கம்,

1956 இல் சிங்கள மொழியை ஆட்சி மொழியாக்கல்,
1971 இல் கல்வித்தரப்படுத்தலை, புள்ளிகளின் அடிப்படையிலல்லாமல், பிரதேசவாரியாக பல்கலைக்கழக அனுமதிகளைத் தீர்மானித்தமை (இதனால், தமிழ் மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி அதிகரிக்கப்பட்டு, சிங்கள மாணவர்களுக்கு வெட்டுப்புள்ளி குறைக்கப்பட்டது.),
தமிழரின் தொடர்ச்சியான, நிலப்பரப்புக்களை, ஊடறுத்துப் பிரிக்கும் நோக்கில், சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தியமை,போன்ற இன்னோரன்ன செயல்முறைகளால், தமிழரின் தேசிய இனம் என்ற அடையாளங்களைச் சிதைக்க ஆரம்பித்து, இன்றளவும் தொடர்ந்து சிதைத்துக்கொண்டிருக்கின்றது.

எனவே, அஹிம்சை வழியில், ஆரம்பிக்கப்பட்ட தமிழர் போராட்டம், ஆயுதமுனையில் நசுக்கப்பட்டதால், ஆயுதப்போராட்டமாக பரிணமித்தது.

விரிவடைந்த, தமிழரின் விடுதலைப் போராட்டம், இராணுவ, அரசியல் வலுச்சமநிலையில் உயரத் தொடங்கியது.

அதுவே, மேற்குலகின், பிராந்திய வல்லரசுகளின் கவனத்தை, இலங்கைப் பிரச்சினையில் தலையிட வைத்தது. அதனால், முன்னரே போர்நிறுத்தங்கள், சமாதானப் பேச்சு வார்த்தைகள் நிகழ்ந்திருந்த போதிலும், 2002 ம் ஆண்டில், அனைத்துலக கண்காணிப்பின் முன், தமிழர் தரப்பையும், இலங்கை அரசையும், இருதரப்பும் ஏற்றுக்கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட வைத்தது.

ஆனாலும், யுத்த நிறுத்த உடன்படிக்கையின் அடிப்படையான, தமிழரின் அடிப்படை வாழ்விற்கான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குக்கூட பேரினவாத இலங்கை அரசு தயாராக இல்லை. அதுவுமல்லாமல், பல பாதைகளையும் மூடி, இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு, குண்டுகளைத் தினமும் கொட்டி, பொதுமக்களைக் கைதுசெய்தும், கொன்று வீசியும், இனவழிப்பை உச்சகதியில் விரைவுபடுத்திவிட்டுள்ளது...

தன்முன்னிலையில் செய்யப்பட்ட சமாதான உடன்படிக்கை, குற்றுயிரும் குலையுயிருமாய் கொத்திக் குதறப்படுவதை, அனைத்துலக சமூகத்தால் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகின்றது. ஐ.நா.வின், மனித உரிமைக் கண்காணிப்பகம் நிறுவப்படக்கூட இலங்கை அரசு, அனுமதி மறுக்கின்றது.
தன் செயலில் தவறில்லாவிட்டால், ஏன் இந்த தயக்கம்?

ஆக, தீர்வாக இரு வழிகள்...
ஆனால் இரண்டும் சேரும் புள்ளி ஒன்றே...

ஒன்று,
அனைத்துலகானது, இலங்கை அரசு மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலம், சமாதானப் பேச்சு வார்த்தைகள் மூலமான தீர்வை காண்பது...
மற்றையது,
தமிழர் போராடிப் பிரிந்து செல்வது...

ஆனாலும், முடிவு "தனித்தமிழீழம்" என்றமைவதே, ஈழத்தமிழரின் எதிர்காலப் பாதுகாப்பிற்கான முழு உத்தரவாதம்...

அல்லாது போனால், நாளும் இலங்கை முழுவதும் மரணச்சடங்குகள் நிகழ்வது, தவிர்க்க முடியாத நிகழ்வுகளாகிவிடும்.

வாய்ப்புக்கு நன்றி... ராஜா அண்ணா...

ஓவியன்
17-10-2007, 02:42 AM
ஒவ்வொரு ஈழத்தமிழனின் உள்ளத்து உணர்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய அக்னிக்கு நன்றிகள் கோடி!

"ஈழத்தமிழர் போர் மீது ஆறாப் பற்றுக் கொண்ட வெறியர்கள் கிடையாது, ஒவ்வொரு ஈழத்தமிழனும் அமைதியாக, நிம்மதியாக தன் அரசியல் தலைவிதியை தானே நிர்ணயிக்கவே விரும்புகிறான்". ஆனால் தன் அரசியல் தலைவிதியை தானே நிர்ணயிக்க முடியாது என்பது மட்டும் எந்த வகையில் நியாயமாகும்...?. நியாயம் கேட்டு, நியாயம் கேட்டு எல்லா வகையிலும் போராடினோம். எல்லா வழிகளும் அடைக்கப்பட நமக்கு திறந்திருந்ததெல்லாம் ஒரே ஒரு வழி...

ஓரே வழியாயிருந்த கரடு முரடான, இரத்தக் களறி செறிந்த ஆயுதப் போராட்ட வழியிலே நாம் பயணப்படத் தொடங்கிய பின்னரே உலகம் கூட நம்மைத் திரும்பிப் பார்த்தது. ஈழத் தமிழருடன் பேச வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் கூட நாம் ஆயுதமேந்த தொடங்கி வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கிய பின்னரே மேலோங்கின. குட்டக் குட்டக் குனிந்து கொண்டிருந்தால் குட்டிக் கொண்டே இருப்பார்கள். சட்டென நிமிர்ந்து முறைத்தால்......???,
குட்டுவனும் அரட்டு விடுவானல்லவா...?, இது தான் ஈழத் தமிழரின் நிலமை.

இப்போதும் அமைதி வழியில் பிரச்சினைகளைத் தீர்க்க நாம் தயாரே, ஆனால் தீர்வு என்ற பெயரிலே தருவதை எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு வாங்கிக் கொண்டு பேசாமலிருக்க நாம் தயாரில்லை. நம் தேசியத்திற்கு மதிப்பளிக்கும் எந்த தீர்வு திட்டத்திற்கும் நாம் தயார் நிலையிலேயே உள்ளோம். ஈழத் தமிழரின் ஏகப் பிரதிநிதிகளும் அதனைத் தான் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றனர். அது கிடைக்க மாட்டாதென்ற போது வேறுவழி கிடையாது....

மீண்டும் கரடு முரடான பாதையில் விடிவு கிட்டும் வரை பயணம் தொடரும்.

ஓவியன்
17-10-2007, 02:57 AM
மலர் டீரெயிலர் பார்த்து என் கண்ணு
கலங்கிட்டு போங்க :D:D:D

அசத்துங்க அசத்துங்க :)

ஆமா, இங்கே என்ன நடக்குது...?
கொஞ்சம் இடைவேளை எடுத்து வந்து பார்த்தால் எல்லோரும் பிச்சு உதறி வைச்சிருக்கீங்களே....???

சபாஷ்டா மக்களே!!..:)

ஓவியன்
17-10-2007, 03:03 AM
நம்ம ஹீரோ ஏன் இப்படி தூங்கிட்டு இருக்கார் காரணம் இல்லாமல் எல்லாம் நம்ம ஹீரோ தூங்கலை.. ஏன்னா நம்ம ஹீரோ கார்த்திக் காதல் கடலில் விழுந்துவிட்டான். பாவம் அவனுக்கு நீச்சல் கூடத் தெரியாது. சின்ன வயசில இருந்தே நீச்சல் கத்துக்கோன்னு அவங்க அப்பா சொன்னது கேட்காம போய்டது எத்தனை தப்பு பார்த்தீங்களா.. நைட் ஆனா ஒரே கவிதையா எழுதி தள்ளறான்... எடுத்து படிச்சா, எல்லா பேப்பர்லயும் ஒரே ஒரு கவிதைதான் எழுதியிருக்கான்.... என்னமோ ஆச்சு, காதல் ஃபீவர். நூறைத்தாண்டி தெர்மா மீட்டர் பாதரசத்தையை கதிகலங்க வைச்சுடுச்சு.

அப்படி என்னங்க காதல்ல இருக்கு?, அதான் எனக்கும் புரியலை கார்த்திக்குக்கு தூக்கமில்லை, துக்கமில்லை, சாப்பாடு இல்லை கூப்பாடு இல்லை. ஆனா ஒரே புலம்பலுங்க, சுந்தரி சுந்தரி னு புலம்பித் தள்ளறான்.... நைட் தூங்காம காலைல வரைக்கும் இப்படியே சொல்லிச் சொல்லி கூட படுத்துட்டு இருக்கற இளங்கோ, டென்ஷனாகி "ஏண்டா கார்த்திக்? எந்திரி எந்திரினு ஏன்டா புலம்பறே?"னு தலையில அடிக்கிறான்... காதலிச்சா அந்த பாதிப்பு,
காதலிக்கறவங்கலுக்கு மட்டும்தான். இங்கே பாவம் நம்ம இளங்கோ,,

மலர் உங்கள் "சிறு" கதையைப் படித்தேன், அதிர்ந்தேன் ஆத்திரத்தை என்னால் அடக்கிக் கொள்ளவே முடியவில்லை....:sauer028:

இப்படி ஒரு திறமை, சம்பவங்களை நகைசுவையுடன் இலாவகமாக கொண்டு செல்லும் பாங்கு எல்லாம் அமையப் பெற்றும் கதை, கவிதை எழுதாமல் இருக்கிறீங்களே...?

அதனால் வந்த கோபம், ஆத்திரம் இது...!! :mad:

வெகுவிரைவில் முழு நீள கதை ஒன்றை எதிர்பார்கின்றேன், இல்லையென்றால் நடப்பதே வேறு..!!! :violent-smiley-010:

ராஜா
17-10-2007, 03:50 AM
இனி'யின் இனிமையான முடிவு கொண்ட கதை கவர்கிறது.

ஆரம்பத்தில் இடம்,பொருள் வர்ணனைகளோடு பயணிக்க ஆரம்பித்த கதை, பிறகு வேகமெடுத்து, கார்த்திக் எப்படி தன் காதலைச் சொல்லப்போகிறானோ என்று நாம் எதிர்பார்த்திருக்கும் வேளையில், கதாநாயகியே தன் விருப்பத்தைத் தெரிவித்துவிட...

கார்த்திக் போலவே நாமும் மகிழ்ச்சியால் திக்குமுக்காடிப் போகிறோம்..!

நல்ல முடிவு... மலர், இனி இருவருக்கும் ஒரு துவக்கமும் கூட..!

ராஜா
17-10-2007, 03:57 AM
நன்றி அக்னியாரே..

தமிழர் மீது எப்படியெல்லாம் சிங்களப் பேரினவாதம் தன் அடக்குமுறையை பிரயோகப்படுத்தி ஒடுக்குகிறது என்று மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். மேலும், உள்நாட்டுப்போர் எப்படி வலிந்து திணிக்கப்பட்டது என்றும் எங்களுக்கு உணர்த்தியுள்ளீர்கள்..

சர்வதேச அழுத்தத்தின் மூலமோ, அன்றி போராட்டம் மூலமோ கிடைக்கும் தீர்வு, தனி ஈழம் என்பதாகத்தான் இருக்கவேண்டும் என்றும் திட்டவட்டமாகச் சொல்லியிருப்பது ஈழமக்கள் எவ்வளவு தூரம் நசுக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை உணர வைக்கிறது.

விரைவில் நன்மை ஏற்படட்டும்.

மலர்
17-10-2007, 04:13 AM
இனியா கதையோட முடிவு சும்மா நச்.....
என் மனதில் நான் ஒரு கருவை கொண்டு ஸ்டார்ட் பண்ணியதை நீங்கள் எப்படி முடிப்பீர்கள்......என்று ஓரே கவலை...

ஆனால் அதைவிட அழகாக கொடுத்து விட்டீர்கள்....
நன்றி.....
அதைவிட இனியாக்கு
நிறைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்......

மலர்
17-10-2007, 04:24 AM
மலர் உங்கள் "சிறு" கதையைப் படித்தேன், அதிர்ந்தேன் ஆத்திரத்தை என்னால் அடக்கிக் கொள்ளவே முடியவில்லை....:sauer028:
.!!! :violent-smiley-010:

என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே....

சிவா.ஜி
17-10-2007, 05:09 AM
மலர்+இனியவள் கூட்டனிக் கதை...ஆஹா...அடடா...பிரமாதம். கலக்கலான ஜுகல்பந்தி. மிக ரசித்தேன்.ஓவியனின் கோபம் நியாயமானது.மலரின் இத்தனை திறமையும் இப்படி இத்தனைநாள் மறந்த்திருந்ததே..அது மண்ணிக்க முடியாதது. இனியவளின் கதை சொல்லும் பாங்கும் அருமை. திறமைகளை வெளிக்கொணர்ந்த ராஜா சாருக்கு நன்றி.

சிவா.ஜி
17-10-2007, 05:11 AM
அக்னியின் பதிவு மிகத் தெளிவான பார்வையைக் கொண்டிருக்கிறது. அமைதியை விரும்பும் ஒரு இனத்தை ஆயுதமேந்த வைத்த இனவாத சிங்களஅரசு இதற்கெல்லாம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.அற்புதமான பதில் அக்னி.வாழ்த்துகள்.

சுகந்தப்ரீதன்
17-10-2007, 06:26 AM
இந்த சினிமா டிக்கெட் பின்னாடி எழுதர கதையை என்னாமா பில்டப் பன்னி அதுவும் ரென்டு பேரும் ரெண்டு பக்கத்த வளத்தீட்டீங்க. முதல்ல உங்களுக்கு கல்யானம் பன்னி வக்கனும்.

(இனியவள் கதை நன்றாக இருந்தாலும் படிக்கும் படி டெக்ஸ்ட் பார்மேட் செய்யுங்கள். அனைத்து உரையாடலும் கதையும் கலந்து ஒரே பாராவில் போட்டிருகிறீர்கள். ஆங்காக்கும் உரையாடலுக்கு கோட்டேசன் இல்லாமல் இருப்பது குழப்பத்தை தருகிறது. இப்பொழுதே சரி செய்து விடுங்கள்)
வாழ்த்துகள்
எனக்கு தெரிஞ்சு இப்பதான் வாத்தியாரு உறுப்படியா யோசிக்க ஆரம்பிச்சுருக்காரு... (எந்த இளிச்சவாயன் மாட்ட போறானோ இதுங்க கிட்ட..?!)

அது ஒன்னுமில்ல வாத்தியாரே..கதையோட முடிவுலதான் அழகா சொல்லியிருக்காங்க இல்ல இனியா.. (ஹீரோக்கூட டூயட் பாட கால்சீட் கொடுத்திருப்பாங்களாட்டுக்கு நம்ப இனியா) அதான் அவசர அவசரமா ஒரே கக்கா கக்கிட்டு ஓடிட்டாங்க..!

அழகான காதல்காவியம் அளித்த இரட்டை எழுத்தாளினுகளுக்கும் அதை எழுத வைத்த எங்க ராஜா அண்ணாவுக்கும் எனது வாழ்த்துக்கள்..!

ராஜா
17-10-2007, 06:52 AM
அன்புச் சொந்தங்களுக்கான கேள்விகள்..

1. மணியா அண்ணா :

உங்கள் நகைச்சுவை உணர்வு அபரிமிதமானது.. அடுத்தவர்களின் பதில்களை வைத்தே வார்த்தைகளில் விளையாடி அசத்துகிறீர்கள்.. உங்கள் இரசிகன் நான்.. இனி கேள்வி..

#) உங்களுக்கு பிடித்த தமிழ் நகைச்சுவை நடிகர்கள் யார்.. யார்..?
#)அவர்களிடம் உங்களுக்குப் பிடித்த அம்சங்கள் என்னென்ன..?
#) அவர்கள் நடித்ததில் மிகவும் பிடித்த காட்சிகள் எவை..?
________________________________________________________________

2. வாத்தியார் :

எந்த பொருள் குறித்தும் விரிவாக, திறமையாக விவாதிப்பவர் நீங்கள்..

#) ராமர் பாலம் இருப்பது உண்மை..
#) ராமர் பாலம் என்பது கற்பனை..

மேலே கண்ட இரு தலைப்புகளிலும் நாங்கள் ஏற்கும் வகையில் கருத்து தெரிவியுங்கள் பார்ப்போம்.
________________________________________________________________

3. ஷீ நிசி :

என் இளமைப்பருவ மாதிரியாக உங்களை நான் நினைப்பதுண்டு..

#) என்னை நேரில் கண்டிருக்கிறீர்கள்.. ஹி..ஹி.. என்னைப்பற்றி ஒரு கவிதை வரையுங்களேன்..[உரிமையுடன் கேட்கிறேன்.. விருப்பமில்லாவிட்டாலும் கவிதை சொல்லித்தான் ஆகவேண்டும்..:) ]
_________________________________________________________________

4. சிவாஜி :

உங்கள் பின்னூட்டங்கள் கண்டு உங்கள் பால் பெருமதிப்பு கொண்டிருக்கிறேன்..

#) இனப்பாகுபாடு,[பிறர் என்னும் எதிர் மனநிலையால், திறமைகளை கண்டுகொள்ளாதிருத்தல்], இனவெறி [தமர் என்னும் பாச மனநிலையால் திறமையற்றவர்களை சிபாரிசு மூலம் உயர் நிலைக்கு கொண்டு செல்லுதல்] இரண்டும் இந்திய முன்னேற்றத்தை பாதிக்கின்றன.

இவற்றைக் களைய வழியுண்டா.. உண்டெனில் என்னென்ன..?
_________________________________________________________________

5. பூமகள் :

பின்னூட்டத்தில் பின்னி பெடலெடுக்கும் நீங்கள் கவியரசி என்றும் தெரியும்..

#) நம் இளைய தலைமுறை கலாச்சாரம், பண்பாடு இவற்றிலிருந்து் வழுவாமல் எப்படி வாழ வேண்டும்..?

இதைக் கவியாகத் தாருங்கள்..அதுவும் பிரபல தமிழ்ப் பாடல் மெட்டில் அமைந்திருக்க வேண்டும்.. [[பாடல் தேர்வு : உங்கள் விருப்பம்]].
_________________________________________________________________

6 & 7. இனி & மலர் :

இருவருமே கலாட்டா சுந்தரிகள்.. அதிலும் மலர்... [அவருக்கு ஒரு பெயர் கூட வைத்திருக்கிறேன்.. ஹி..ஹி]

#) உங்களில் ஒருவர் ஒரு சிறுகதையின் முன்பகுதியை எழுத, அடுத்தவர் முடிக்க வேண்டும்.

[யார் முதலில் ஆரம்பிப்பது என்பது மட்டுமே இவ்விடயத்தில் உங்கள் இருவரின் தனிமடல் தொடர்பாக இருக்கும் என்று நம்புகிறேன்].
_________________________________________________________________

8. அக்னி :

திறனாய்வுப் புலிக்கு ஒரு எளிய கேள்வி..

#) இலங்கைப்பிரச்னை குறித்து ஒரு தெளிவான, சுருக்கமான திறனாய்வு.
முடிந்தால் தீர்வுக்கான வழிகள்.
_________________________________________________________________

9. அன்பு மாம்ஸ்.:

உங்களிடம் மறைந்திருக்கும் நகைச்சுவை உணர்வு குறித்து அறிந்தவன் நான்..

#) உங்களிடம் சினிமாவுக்கு கதை கேட்டு கமலஹாசன் வருகிறார்.. ராமாயணக் கதையை, அவர் அறியாமல் உங்கள் கதை போல மாற்றிச் சொல்ல வேண்டும். அதிலும், கமலுக்கு அனுமார் கதாபாத்திரம் என்பதைச் சொல்லி ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும்..

கலக்குங்க பார்க்கலாம்..!
_________________________________________________________________

10. JPL :

உங்களை நான் ஓரளவுக்கு அறிவேன்.. நேரில் சந்தித்துமிருக்கிறோம்..

நம் தமிழ் மன்றத்தில் கவிதைகளுக்கு சரியான திறனாய்வு செய்யப்படுகிறது. ஆனால் சில தளங்களில், செவ்வாய்க்கு அடுத்தது புதன் என்று பிய்த்துப் போட்டு எழுதினால் கூட "ஆஹா.. ஓஹோ" என்று பாராட்டி பின்னூட்டமிடுகிறார்கள்.. இது நல்ல பண்பு என்றாலும்கூட, கவிஞர்களுக்கு செய்யும் துரோகமில்லையா..? கவிதையின் தகுதிக்கு மீறிய பாராட்டுகளால், அவரின் சிந்தனையையும், வளர்ச்சியையும் பெருகவிடாமல் அழுத்தியே வைக்க்கிறோம் என்ற கருத்து சரியா..?
_________________________________________________________________

[B]இன்னும் மணியா அண்ணாவும், மாம்ஸும் மட்டுமே பாக்கி..!

அமரன்
17-10-2007, 06:55 AM
மாம்ஸு....வாழ்க்கைத்ததுவம் தேடிக்கொண்டு இருக்காம வந்து தாங்கப்பு பதிலு.
உங்க பதிலை பார்த்து நாம அடிப்போம் பாரு விசிலு..

ராஜா
17-10-2007, 07:02 AM
மாம்ஸு....வாழ்க்கைத்ததுவம் தேடிக்கொண்டு இருக்காம வந்து தாங்கப்பு பதிலு.
உங்க பதிலை பார்த்து நாம அடிப்போம் பாரு விசிலு..

பஞ்ச் டயலாக் அருமை.. அமர்[க்களம்]...!

சுகந்தப்ரீதன்
17-10-2007, 07:52 AM
முதலில் அக்னியாருக்கும் ஓவியருக்கும் என் அன்பை வெளிபடுத்தி கொள்கிறேன்..! உண்மையை சொல்வதென்றால் இன்னும் ஈழதமிழரின் பிரச்சனையை இங்கேயே(தமிழ் நாட்டில்)யாரும் முழுதாக புரிந்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது..! நானும் இதுபற்றி நிறைய படித்திருந்தாலும் தெளிவான வரையரையை எங்கேயும் கண்டதில்லை..! உங்கள்இருவரின் பதிலும் ஆணிதரமாக விளக்கியுள்ளது ஈழதமிழரின் தேவையை அடிமுதல் நுனிவரை எனக்கு..!

அஹிம்சை வழியில், ஆரம்பிக்கப்பட்ட தமிழர் போராட்டம், ஆயுதமுனையில் நசுக்கப்பட்டதால், ஆயுதப்போராட்டமாக பரிணமித்தது.. உண்மைதான் நண்பரே.. இதில் இந்தியாவுக்கும் பங்கு உண்டு என்பதை யாராலும் மறுக்கவோ
மறைக்கவோ முடியாது..! இன்றைக்கல்ல என்றைக்கோ இந்தியாவால் ஈழத்தமிழரின் பிரச்சனையை அமைதியான வழியில் தீர்த்திருக்க முடியும் ஆனால் அதை செய்யாமல் ஒருதலை பட்சமாக பேரினவாதத்துக்கு துணைபோனதன் பிண்ணனி என்ன..? அதையும் தெளிவாக கூறிவிட்டார் முன்னாள் இந்திய வெளியுறவுதுறை மந்திரி பிரிட்டனில் ஒரு நிகழ்ச்சியில் "இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு உருவானால் இந்தியாவின் தென்கோடியிலும் தனிதமிழ்நாடு கோரிக்கை எழும் என்று"!. தங்கள் தவறை மறைக்க அநியாயமாக தமிழக தமிழரின்மீது பழிபோடும் இவர்களை எல்லாம் என்ன செய்வது..? தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக ஈழத்தமிழருக்கு மனிதாபிமான அடிப்படையில் குரல் கொடுப்பவர்களை கூட குண்டர் சட்டத்தில்கைது செய்கிறார்கள் இங்கே...! இப்படி இலங்கையில் நடக்கும் மனிதஉரிமை மீறலை கண்டுகொள்ளாமலும் அதை எதிர்த்து குரல் கொடுப்பவர்களை கைது செய்வதும் தொடர்ந்தால் நாளை இங்கேயும் உரிமை பறிபோவதாய் கூறி தனிதமிழ்நாடு கேட்டு போராட வேண்டிய சூழல் வரலாம் என்பதே என்கருத்து..!

முடிவு தனித்தமிழீழம் என்றமைவதே, ஈழத்தமிழரின் எதிர்காலப் பாதுகாப்பிற்கான முழு உத்தரவாதம்... நீங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மை நண்பரே..! எனதுவிருப்பமும் அதுதான்..!

ஓவியன்
17-10-2007, 08:04 AM
முடிவு தனித்தமிழீழம் என்றமைவதே, ஈழத்தமிழரின் எதிர்காலப் பாதுகாப்பிற்கான முழு உத்தரவாதம்... நீங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மை நண்பரே..! எனதுவிருப்பமும் அதுதான்..!

தெளிவான புரிந்துணர்வுக்கு மிக்க நன்றிகள் சுகந்தா!
நம் எல்லோரதும் எண்ணங்களும் விரைவில் ஈடேறும் என்ற எதிர்பார்பிலே பயணிப்போமாக....

ராஜா
17-10-2007, 08:06 AM
சுகந்தனின் பின்னூட்டத்தில் இளமை வேகம் கடுமையாக இருந்தாலும் அதில் உள்ள நியாயமான நிதர்சனங்களை ஒதுக்கித் தள்ளமுடியாது.

lolluvathiyar
17-10-2007, 08:40 AM
இன்று இலங்கையில் நிகழ்வது இனப்பிரச்சினை என்று சொல்வதைவிட,
சிறுபான்மையினைர வேரறுக்கும் இனவழிப்பு முயற்சி என்று சொல்வதே தகும்.

உன்மை நிலையை மிக தெளிவாக கூறி விட்டீர்கள் அக்ன் அவர்களே, ஓவியரின் பின்னூட்டமும் உங்கள் மன நிலையை விளக்கி விட்டது.

இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு உருவானால் இந்தியாவின் தென்கோடியிலும் தனிதமிழ்நாடு கோரிக்கை எழும் என்று"!. தங்கள் தவறை மறைக்க அநியாயமாக தமிழக தமிழரின்மீது பழிபோடும்

அநியாமாக பழி போடவில்லை. அந்த காலத்தில் அப்படி தமிழக மக்களை தூண்டிகொண்டு சில இயக்கங்கள் செயல்பட்டன. இன்னொரு காஸ்மீர் ஆக்க இங்கு சில இயங்கள் வேலை செய்தன. நிரைய பொய்களை மட்டுமே அடுக்கி கொண்டு மக்களை மூலை சலவை செய்தனர் என்பதை மறுக்க வேண்டாம்.

தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக ஈழத்தமிழருக்கு மனிதாபிமான அடிப்படையில் குரல் கொடுப்பவர்களை கூட குண்டர் சட்டத்தில் கைது செய்கிறார்கள் இங்கே...!

ஈழ தமிழருக்கு குரல் கொடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க வில்லை. ஈழ தமிழருக்கு குரல் தருவதாகா மக்களை ஏமாற்றி இங்கு விசம செயல்களில் ஈடுபட்டவர்கள் இருந்தார்கள். அது போக அரசியல் காரனங்களுக்காக சிலர் கைது செய்ய பட்டிருக்கலாம். அதுவும் தமிழ் நாட்டு அரசியல் தான் மத்திய அரசி அரசியல் அல்ல

நாளை இங்கேயும் உரிமை பறிபோவதாய் கூறி தனிதமிழ்நாடு கேட்டு போராட வேண்டிய சூழல் வரலாம் என்பதே என்கருத்து..!

அப்படி ஒரு சூலல் புதிதாக வரவேண்டியதில்லை. இந்திய அரசுக்கு அது முன்னமே பார்த்த ஒன்றுதான்.
இங்கு ஈழ தமிழருக்கு குரல் தருவதாக சொல்லி கொண்டவர்களில் 90 சதவீதம் நம்பக தகுந்தவர்கள் அல்ல என்பதை நினைவு படுத்துகிறேன். எல்லாம் உள்ளூர் அரசிய ஸ்டன்ட் அவர்கள் மரைமுகமாக ஈழ தமிழர்களுக்கு கெடுதல் செய்பவர்களே.

ராஜா
17-10-2007, 10:43 AM
எங்கப்பா மாம்ஸ்..?

அமர்.. பிடிச்சு கொண்டுவாங்க..!

ஓவியன்
17-10-2007, 10:53 AM
எங்கப்பா மாம்ஸ்..?

அமர்.. பிடிச்சு கொண்டுவாங்க..!

ஒரு கயிறு தாங்க ராஜா அண்ணே!
பிடிச்சுக் கட்டிட்டே வாறன்....!:D:D:D

அக்னி
17-10-2007, 10:59 AM
எங்கப்பா மாம்ஸ்..?

அமர்.. பிடிச்சு கொண்டுவாங்க..!
மாம்ஸ் ஐ, அலுவலகத்தில் நித்திரை கொள்ள விடாமல், வேலை வாங்குகின்றார்களாம்...
உளவுத்தகவல்கள் தெரிவிக்கின்றன...

சுகந்தப்ரீதன்
17-10-2007, 11:21 AM
உன்மை நிலையை மிக தெளிவாக கூறி விட்டீர்கள் அக்ன் அவர்களே, ஓவியரின் பின்னூட்டமும் உங்கள் மன நிலையை விளக்கி விட்டது.

அநியாமாக பழி போடவில்லை. அந்த காலத்தில் அப்படி தமிழக மக்களை தூண்டிகொண்டு சில இயக்கங்கள் செயல்பட்டன. இன்னொரு காஸ்மீர் ஆக்க இங்கு சில இயங்கள் வேலை செய்தன. நிரைய பொய்களை மட்டுமே அடுக்கி கொண்டு மக்களை மூலை சலவை செய்தனர் என்பதை மறுக்க வேண்டாம்.

ஈழ தமிழருக்கு குரல் கொடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க வில்லை. ஈழ தமிழருக்கு குரல் தருவதாகா மக்களை ஏமாற்றி இங்கு விசம செயல்களில் ஈடுபட்டவர்கள் இருந்தார்கள். அது போக அரசியல் காரனங்களுக்காக சிலர் கைது செய்ய பட்டிருக்கலாம். அதுவும் தமிழ் நாட்டு அரசியல் தான் மத்திய அரசி அரசியல் அல்ல

அப்படி ஒரு சூலல் புதிதாக வரவேண்டியதில்லை. இந்திய அரசுக்கு அது முன்னமே பார்த்த ஒன்றுதான்.
இங்கு ஈழ தமிழருக்கு குரல் தருவதாக சொல்லி கொண்டவர்களில் 90 சதவீதம் நம்பக தகுந்தவர்கள் அல்ல என்பதை நினைவு படுத்துகிறேன். எல்லாம் உள்ளூர் அரசிய ஸ்டன்ட் அவர்கள் மரைமுகமாக ஈழ தமிழர்களுக்கு கெடுதல் செய்பவர்களே.

மதிப்பிற்குறிய வாத்தியாருக்கு நான் தங்களின் கருத்தை ஏற்றுகொள்ளும் அதே வேளையில் தங்களிடம் நான் கேட்கும் கேள்வி: சில இடங்களை மட்டும் கோட் செய்து பதிலளித்த தாங்கள் பல விசயங்களுக்கு பதில் சொல்லாதது ஏன்? அப்படியென்றால் அவற்றை தாங்களும் ஒப்புகொள்கிறீர்கள் என்று நான் எடுத்து கொள்ளலாமா..?

உங்கள் அளவுக்கு எனக்கு பலவிசயங்கள் தெரியாது என்பதால் ஒரு மாணவனாக இருந்து உங்களிடம் நான் கேட்கும் கேள்வி இதுதான்: இதுவரை நமது இந்திய அரசு ஈழதமிழர் நலனில் காட்டிய போக்கு மற்றும் இப்போது காட்டிகொண்டிருக்கும் போக்கு ஆகியவற்றை சரி என்று கூறுகிறீர்களா? அப்படியானால் அதற்கான காரணங்களை எனக்கு ஒரு ஆசிரியனாக இருந்து தெளிவாக விளக்குங்கள்! என்னை பற்றி கீழே உள்ள பத்தியை தாங்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்!

[நான் எந்தவொரு நாட்டிற்க்கும் இனத்திற்க்கும் மொழிக்கும் எதிரானவன் அல்ல! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றுரைத்த மனிதனை மனிதனாய் மதிக்க கற்று தந்த வந்தாரை வாழ வைக்கும் தமிழ் மரபையும் அதன் மக்களையும் தீவிரமாக நேசிப்பவன் அவ்வளவே!]

அமரன்
17-10-2007, 11:26 AM
மாம்ஸ் ஐ, அலுவலகத்தில் நித்திரை கொள்ள விடாமல், வேலை வாங்குகின்றார்களாம்...
உளவுத்தகவல்கள் தெரிவிக்கின்றன...
வேலைத்தளத்தில் தூக்கம் இல்லை, அதனால் தங்ககத்தில் அதிகம் தூங்கிறார் போலும்.. தட்டி எழுப்பியிருக்கிறேன். பார்ப்போம்.

அக்னி
17-10-2007, 12:17 PM
நம்பிக்கைக்கு என்றுமே விஞ்ஞான ஆதாரம் தேவையற்றது. நம்பிக்கை என்பது முற்றிலும் மணம் சம்மந்தபட்டது. எப்படி ஒரு கனவன் தன் மனைவியிடமும் மனைவி தன் கனவனிடமும் நம்பிக்கை வைத்திருகிறார்களோ அது போல தான்.
உண்மதான் வாத்தியாரே...
நம்பிக்கை மனம் தொடர்பானதே. நம்பிக்கை இல்லாவிட்டால் வாழ்க்கை, தளம்பிக்கொண்டேதான் இருக்கும்.

எமது உடலின் தோற்றம், உயிரின் பிரிவு இவற்றின் ஆரம்பம், முடிவு எதுவென்றோ, அல்லது இவற்றின் இயங்குமுறை பற்றியோ இதுவரை 100% ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரூபணம் உண்டா, என்றால் இல்லை என்றேதான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில், நம்பிக்கைகளையும் நம்பித்தான் ஆகவேண்டும்.
நம்பாவிடினும் நம்புவோரை தூற்றாமல் அல்லது எள்ளிநகையாடாமல் வாழவேனும் பழகிக்கொள்ள வேண்டும்.

அக்னி
17-10-2007, 12:29 PM
திறமையை கண்டுகொள்ளாமல் விடுவது நிச்சயமாக அந்த நிறுவனத்துக்கு மட்டுமல்ல,நாட்டிற்கே நஷ்டம்தான்.அப்படிப்பட்ட சூழ்நிலையில் குடத்தினுள் விளக்காக இல்லாமல்,தானும் ஒரு குன்றிலிட்ட விளக்குதான் என எத்தனைக் கஷ்டப்பட்டாவது நிராகரிக்கப்பட்டவர் நிரூபிக்க வேண்டும். திறமை நிரூபிக்கப்பட்டால்..பிறகு அவரை மறைப்பது அந்த ஓரவஞ்சனை அதிகாரிகளுக்கு சிரமம்.

நன்றாகவே அலசியுள்ளீர்கள்...
ஆனால், எவ்வளவிற்கு இவற்றை நடைமுறைப்படுத்துவது சாத்தியமாகும்?
ஒப்பீட்டளவில் பெரும்பாலும், எல்லாவற்றிற்கும் முதலில் மூக்கை நீட்டுவது, அரசியலே...
முதலில், அரசியலை தூய்மையாக்கினால், மற்றவை தானாகவே தூய்மைப்படுத்தப்பட்டுவிடும்.

குடத்திலிடப்பட்ட விளக்கு ஒளிர வேண்டும் என்றா இடுகின்றார்கள்?
அணைய வேண்டும் என்பது நோக்கமாக இருக்கும்போது,
குன்றிலிட்ட விளக்காக மாற, கடுமையான பிரயாத்தனம் செய்யவேண்டியே இருக்கும்...
தளராத மனமும், முயற்சியும் வெற்றியை நிச்சயம் எட்ட வைக்கும்.
ஆனால், வெற்றி கொண்டபின், தன்னைப்போல் முடக்கப்பட்டவர்களுக்கு கைகொடுக்காவிட்டால், தலைமுறைகள் தாண்டியும், இப்பிரச்சினை வாழும்.

அக்னி
17-10-2007, 12:48 PM
முதல்ல என்ன கதை எழுத...... எப்படி ஆரம்பிக்கன்னே ஒண்ணும் தெரியலை.....
ம்..லவ் ஸ்டோரி எழுதவா இல்லன்னா ஏதாவது திகிலா பேய்கதை எழுதலாமான்னு ஓரே குழப்பம்.. அப்புறம் நம்மளைபற்றி நாமே எழுதக்கூடாதுன்னு முடிவு பண்ணி பேய் கதை எழுதுற எண்ணத்தை கைவிட்டுட்டு ஒரு லவ் ஸ்டோரியை ஸ்டார்ட் பண்ணிட்டேன்

கதையின் ஆரம்பத்திலேயே நல்ல முடிவெடுத்த மலருக்கு நன்றி...

தனக்குள் இருக்கும் தேனை மறைத்துவைத்துக்கொண்டு, நறுமணத்தை மட்டுமே மலர் வெளிவிடுகின்றது.
அதே போலவே, மலரும் தனக்குள் இருக்கும் எழுத்தாற்றலை, நகைச்சுவை சிறப்பை, படைப்புக்களாக்காமல், முடக்கிவிடுகின்றார்.
இதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

ரசிக்க வைக்கும் விதத்தில், சீராக, சுவையாக, செல்லும் கதை, முதற்கதை முயற்சி என்பதற்கு வாழ்த்துச்சொல்வதற்குப் பதிலாக, இதுவரை முயற்சிக்காமைக்கு கோப உணர்வையே ஏற்படுத்துகின்றது.

மலர்... நீங்கள் உங்கள் தயக்கத்தைக் களைந்து, சிறந்த எழுத்தாளராக வரவேண்டும்.
எதிர்பார்ப்புடன் வாழ்த்துகின்றேன்...

பிறகு என்னங்க நம்ம நாயகன் என்ன தமிழ் சினிமாவிலை டூயட் பாடிற மாதிரி பாட போயிற்றார் கனவில்.:icon_rollout:
திட்டமிட்டு எழுதினாலும், சுவாரசியமான திருப்பம்... முடிவில்...
நாயகன் எப்படி காதலைச் சொல்லப்போகின்றானோ, நாயகியின் மனதை மாற்றப்போகின்றானோ என்ற எதிர்பார்ப்பில் கதையைத் தொடர்ந்தால், நாயகியே, தனது உள்ளக்காதலை தெரிவிப்பது வித்தியாசமான திருப்பம்.

சங்கமித்து மகிழ்வூட்டிய இரு சகோதரிகளுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...

lolluvathiyar
17-10-2007, 01:02 PM
மதிப்பிற்குறிய வாத்தியாருக்கு
சில இடங்களை மட்டும் கோட் செய்து பதிலளித்த தாங்கள் பல விசயங்களுக்கு பதில் சொல்லாதது ஏன்? அப்படியென்றால் அவற்றை தாங்களும் ஒப்புகொள்கிறீர்கள் என்று நான் எடுத்து கொள்ளலாமா..?

இதிலென்ன சந்தேகம், அனைத்தையும் கோட் பன்ன முடியாது. ஒரே அர்த்தம் வருவதை சிலதை விட்டு விடுவோம்.
மேலும் ஏற்று கொண்டதையும் விட்டு விடுவேன். கருத்து மாறுபடும் இடங்களை மட்டுமே கோட் பன்னினேன்.

இதுவரை நமது இந்திய அரசு ஈழதமிழர் நலனில் காட்டிய போக்கு மற்றும் இப்போது காட்டிகொண்டிருக்கும் போக்கு ஆகியவற்றை சரி என்று கூறுகிறீர்களா?

இது போன்ற கருத்து பரிமாற்றத்துக்கு நான் என்றுமே தயார் ஆனால் அதற்க்கு விவாத பகுதியில் நடத்தலாம். இந்த திரி வேண்டாம். அதனால் தான் ராமர் பாலம் உன்மையா பொய்யா என்ற நீண்ட விளக்கத்தை கூட தனி திரியாக பன்னி இங்கு லிங் மட்டுமே தந்தேன்

அக்னி
17-10-2007, 01:17 PM
உளவுத் தகவல்களிலிருந்து,
அன்புரசிகர், இராமர் பாலத்திற்கு நெருக்கமாக, மிகப்பெரிய உல்லாச கட்டுமரத்திலிருந்தபடி, ராஜா அண்ணாவின் கேள்விக்கணைக்கேற்ப,
புதிய இராமாயணம் எழுதிக்கொண்டிருக்கின்றாராம்...

சுகந்தப்ரீதன்
17-10-2007, 01:25 PM
இதிலென்ன சந்தேகம், அனைத்தையும் கோட் பன்ன முடியாது. ஒரே அர்த்தம் வருவதை சிலதை விட்டு விடுவோம்.
மேலும் ஏற்று கொண்டதையும் விட்டு விடுவேன். கருத்து மாறுபடும் இடங்களை மட்டுமே கோட் பன்னினேன்.

இது போன்ற கருத்து பரிமாற்றத்துக்கு நான் என்றுமே தயார் ஆனால் அதற்க்கு விவாத பகுதியில் நடத்தலாம். இந்த திரி வேண்டாம். அதனால் தான் ராமர் பாலம் உன்மையா பொய்யா என்ற நீண்ட விளக்கத்தை கூட தனி திரியாக பன்னி இங்கு லிங் மட்டுமே தந்தேன்

ரொம்ப நன்றி வாத்தியாரே..! தங்களின் பதிலை விவாத பகுதியில் தந்தாலே போதும்.. நான் இதுவரை அங்கு வந்தது கிடையாது.. என்னை அங்கு அழைத்த த்ங்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.. மீண்டும் சந்திப்போம் விவாத மேடையில்..!

மலர்
18-10-2007, 04:22 AM
உளவுத் தகவல்களிலிருந்து,
அன்புரசிகர், இராமர் பாலத்திற்கு நெருக்கமாக, மிகப்பெரிய உல்லாச கட்டுமரத்திலிருந்தபடி, ராஜா அண்ணாவின் கேள்விக்கணைக்கேற்ப,
புதிய இராமாயணம் எழுதிக்கொண்டிருக்கின்றாராம்...

எழுதட்டும் எழுதட்டும் நல்லா எழுதட்டும்
ஆனால் எப்போது முடிப்பாராம்...
அந்த தகவல் உளவுபடையில் இருந்து வரலியோ............???

அன்புரசிகன்
19-10-2007, 09:04 AM
9. அன்பு மாம்ஸ்.:

உங்களிடம் மறைந்திருக்கும் நகைச்சுவை உணர்வு குறித்து அறிந்தவன் நான்..

#) உங்களிடம் சினிமாவுக்கு கதை கேட்டு கமலஹாசன் வருகிறார்.. ராமாயணக் கதையை, அவர் அறியாமல் உங்கள் கதை போல மாற்றிச் சொல்ல வேண்டும். அதிலும், கமலுக்கு அனுமார் கதாபாத்திரம் என்பதைச் சொல்லி ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும்..

கலக்குங்க பார்க்கலாம்..!

முதலில் இவ்வளவு காலமும் பின்னடித்ததற்கு மன்னிக்க....
காரணம் 1 நேரம் காரணம் 2 எனக்கு இந்த கேள்விக்கு பதிலளிக்கும் தன்மை அவ்வளவு இல்லை. மாப்பு வைத்த நம்பிக்கைக்கு ஆப்பு வைத்துவிடுவேனோ என்ற பயம் இன்னும் உண்டு... என்மேல் வைத்த நம்பிக்கைக்கு நன்றிகள்.

உங்கள் கேள்வியில் ஒரு சிறிய மாற்றம் செய்து பதில் தருகிறேனே... அதாவது கமல் கதைக கேட்க்க வரவில்லை. நான் கதை வைத்துக்கொண்டு அவரிடம் கதை சொல்லி அவரை சம்மதிக்கிற மாதிரி... கோவிக்க மாட்டீங்களே...

சரி.. விடையத்திற்கு வருவோம்...

நான் உலக நாயகனை பார்க்க அவரின் இடத்திற்கு சென்றுவிட்டேன்... அனுமதியும் பெற்றாகிவிட்டது.... யோவ்... கதைய சொல்லுயா என்று ஒரு முணுமுணுப்பு கேட்க்கிறது... அதனை சம்பாஷணையாக இங்கு தர முயல்கிறேன்...

சார்... இதுதான் கதை ... என்று சொல்ல ஆரம்பிக்கும்முன் "மொதல்ல எ கரெக்டர் எப்படி? அதச்சொல்லு மொதல்ல " என்று சீறிப்பாய்ந்தார் அந்த உலகன். ஹையோ.... இப்படி கேட்டு தொலைக்கிறானே... சரி.. முடிஞ்சளவு சமாளிப்போம்...

''சார் நீங்க இல்லீன்னா அந்தப்படமே நடக்காது... உங்களுக்கு என்று செப்பறேட்டா அமெரிக்காவிலிருந்து மேக்கப்மான் கொண்டுவரப்போறோம். பெஷல் காஷ்டியும்ஸ்.... இப்படி ... உங்களுக்கு அக்ஷன் சீனும் உண்டு. சவுடால் சீனும் உண்டு... சென்டிமன்ட் சீன் இடையிடையே பாட்டு சீன்கள் எல்லாம் கலந்த கொமர்ஷியல் படம் சார்" என்று சொல்லி முடிப்பதற்குள் "ஆமா யாரு நம்ம கூட டூயட் பாடப்போறாங்க.." அடப்பாவி...... அதிலயே குறியா இருக்கிறானே.... இவ இல்லீன்னா அவ காசு தரமாட்டான்.... அப்புறமா நான் எப்போ படம் எடுக்கிறது.... ''அவளுக்கு வாய் நீளமா இருக்குமா அல்லது சிறிசா அளவா இருக்குமா?".. கேள்விக்கு மேல கேள்வி கேக்கிறானே.... இன்னொருத்திய இன்டஸ்ரிய விட்டு அனுப்ப திட்டம் போட்டுட்டான்.... இப்போ இதுக்கு என்ன பதில் சொல்ல... அதுலயே குறியா நிக்கிறானே.... இவனுக்கு போடப்போற வாய் மேக்கப்புல அது வேற செய்து தொலைச்சா.... "சார்... உங்ககூட ஸ்பெஸிபையா இவுங்க தான் ஆடுவாங்க என்று சொல்ல முடியாது... பல பெண்ணுங்க ஆடவாங்க... எல்லாம் வெளியில இருந்து தான் இம்போர்ட்" என்று சொல்லிவிடடு "சார் குடிக்க தண்ணி கிடைக்குமா" வந்தது தண்ணி.... இனி ஆளுக்கு தண்ணி காட்டுறது என்று முடிவாயிடிச்சு....

"சார் இதுல ராமராஜன் சீதா இரண்டுபேரும் நடிக்கிறாங்க. ஷாஜகான்ல கடைசில வாற விஜய் மாதிரி அவுங்கள ஒன்று சேர்க்கிறதுக்காக வாறீங்க.... நீங்க படத்துல பறந்து பறந்து அடிப்பீங்க.... உங்களுக்கு பெரிய வாலு எல்லாம் இருக்கு" என்று சொல்லி முடிக்குமுன் "வாலா.. அது எதுக்கு" என்று அவர் கேட்க்க அவரது உதவியாளர் அவரது காதுக்குள் சொன்னார் " அது வேறு ஒன்றுமில்ல... நீங்க பொண்ணுங்க கூட காட்டப்போறத ஜாடைமாடையாக சொல்லுறார்" ஆஹா... யோவ் நீ கடவுளய்யா.... என்மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்....

"படத்துல நம்ம ராமராஜனுக்கு மகிந்த ராஜபக்ஷவால் பிரச்சனை.... அவர் சீதாவை கடத்திவைச்சுக்கிட்டு கட்டளைகள் போடுறார்.... அதுக்கு காரணம் ராமராஜனின் தம்பியாக நடிக்கும் கவுண்டருக்கு அவரது தங்கை ரூட்டு விட அதைகவுண்டர் தட்டிக்களிக்க வினைவந்து கவுண்டர் அந்த பொண்ணோட மூக்லில அடிக்க அந்த பொண்ணு தும்ம என்று தொடங்கிய வினை...." "யோவ் நிறுத்துயா... எனக்கு இப்பவே மூச்சு முட்டுது... அந்த ராஜ பக்ஷவுக்கு என்ன மாதிரி சீன்....?"

"அதுவா... அவருக்கு நெத்தியில் பெரிய பட்டை கழுத்தில ஒரு சிவப்புத்துண்டு... எப்பவும் மிஹின் லங்காவில் தான் பறப்பார். பெரிய சிவ பக்தன்.... ஆனா சிங்கனுக்கு தலைக்கனம். ஒருமுறை அவர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் போது சிவன் ட்ரிங்கோவில் (திருகோணமலை) வைச்சு ஆப்பு வைக்க நினைச்சார் . ஒரு விசயம். மகிந்தவுக்கு எப்பவும் பத்து பேர் சுத்தி நிப்பாங்க... அவுங்களும் அவர மாதிரித்தான் இருப்பார்கள். (மரண பயத்துக்காக அவரது செட்டப்) அதுக்காக உங்க தசாவதாரம் படத்துக்கு ஆப்பு வைக்கமாட்டேன்.... சிவன் ட்ரிங்கோவில் வைச்சு ஆப்பு வைக்க தொடங்கமுன் மஹிந்த அவருக்கு ஒரு சூப்பர் ஹிட் கானாப்பாடல் பாடுற மாதிரி 10 லட்சம் செலவில் செட் போட்டு வைக்கிறோம்.... அப்படிப்பட்ட ஒரு மஹாவீரன் கதாபாத்திரத்தை எதிர்க்கும் சீன் உங்களுக்கும் ராமராஜனுக்கும்.... இப்படிப்பல ஐட்டங்கள்....

"ஒருகட்டத்தில நீங்களும் ராமராஜனும் சேர்ந்து இலங்கைக்கு பாலம் கட்டுவது தொடர்பில் பிரச்சனை.... ராமராஜன் சொல்லுறாரு... ஏம்பா... இப்ப தானே எத்தனையோ பிளைட் போகுது... இன்டியன் எயர்லைன்ஸ் , எயர் இன்டியா எக்ஸ்பிரஸ் , ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் என்று பல ஓடித்தள்ளுதே... அதில போக வேண்டியது தானே... என்று அவர் சொல்ல நீங்கள் தமிழக மற்றும் ஈழத்தமிழரை மனதில் வைத்து டயலொக் விடுறீங்க... அதாவது ராமா... பிளைட்டில போறதால பெட்ரோல் காரனுக்கும் பிளைட் வைத்து ஓடுற கொம்பனிக்கும் தான் லாபம்... ஆனால் பாலம் கட்டினா அதுல ரெண்டிரிங் கொன்ஸ்டக்ஷன் என்று பல விடையங்கள் வரும். அதால தமிழக மற்றும் ஈழத்து மக்களுக்கு வேலைவாய்ப்பு வரும்... அதோட ஈழத்தில நீங்கள் வடக்குப்பகுதிக்குத்தான் போக வேணும். அது அவ்வளவு ஈஸி இல்ல... நான் பார்த்த கொடுமைய சொன்னா உங்களுக்கு கிளிசரீன் தேவைப்படாது... என்று நீங்கள் ஒரு சில கண்ணீர் துளிகளை எல்லாம் மல்கி உங்க ஸ்டைலில சொல்லுறேள்..... " (அதுக்காக ராமர் பாலம் கட்டியது உலக நாயகனா அல்லது ராமராஜனா என்று விவாதம் ஆரம்பித்துவிடாதீங்க :D)

இதைக்கேட்டு கமல் ரொம்ப பீல் பண்ணி அங்கேய " ஆ... ஆ..." என்று அழத்தொடங்குகிறார். சில மணிநேரங்களில் அவரது அழுகை சற்றே ஓய்வுக்கு வர அப்புறமா அவர் சொல்லுறார்... "சார் உங்க படத்துல நான் நடிக்கிறதுக்கு ரெடி... ஆனாலும் ஆக்ஷன் சீன் பத்தி நீங்க சொல்லவே இல்லியே..." இவ்வளவு நேரமும் யோவ் என்று எரிந்து விழுந்த நாயகன் இப்போ எனக்கு சேர் பட்டம் கொடுத்துவிட்டாரே என்று நான் பீல்பண்ணி அவரது ஆக்ஷன் சீனை சொன்னேன்... " இலங்கையில நீங்க இறங்கும் இடம் கஸூரினா (காரை நகர்) பீச்சில் இருந்தே பைட் ஸ்ராட்ட் ஆகுது... அப்படியே கொன்டினியூ ஆகுது.... இடையில நம்ம ராமராஜன் கோமா ஸ்ரேஜூக்கு போறாரு.... நீங்க இந்த கரையிலிருந்து ஒரு ஜம். அப்படியே தனுஷ்கோடிக்கு போய் விழூறீங்க... அங்க ஒரு பெஸ்ட்எய்ட் பொக்ஸ் எடுத்துகிட்டு மறுபடியும் ஒரு ஜம்ப். இந்த கரைக்கு வாறீங்க...." என்று சொன்னவுடன் கமலுக்கு ஒரே குஷி...

"நான் உங்க படத்துல ரெடி.... கிட்டத்தட்ட மருதநாயகம் படத்தை ரெடிபண்ண இதுலயும் இருந்து கொஞ்சம் எடுத்திடலாம். மற்ற போர்மாலிடீஸ என்னோட அஸிஸ்டன் கிட்ட பேசிடுங்க" என்று சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து நகர்ந்தார்....

ஆனாலும் நான் ஒரு விடையத்தை அவருக்கு சொல்லல... வாலில நெருப்புக்கட்டி செட்டை எரிக்கிற சீன்... அப்புறமா யாருக்கு நான் பதில் சொல்லுறது.... பாப்போம் ... முருகா... என்னக்காப்பாத்து என்று எனக்குள் கும்பிட்டுவிட்டு கமலின் அஸிஸ்டன்டுடன் கதைக்க தயாரானேன்...

<<<<>>>>

யாரும் அடிக்க வந்திராதீங்க.... கமல் ரசிகர்களே தயவு செய்து பொறுத்தருளுங்கள். இது சும்மா நகைச்சுவைக்காக நான் தயார் செய்தது....

பூமகள்
19-10-2007, 10:14 AM
அன்பு அண்ணா,
என்னமா ரீலு சுத்தி கமலை கவுக்க முடிவு பண்ணிட்டீங்க...!!
ஆனாலும் உலக நாயகரை இந்தளவு ஓட்டியதை அவரது ரசிகர் சார்பின் மென்மையாக செல்லமாக கண்டிக்கிறேன்...!!
ரொம்பவே நகைச்சுவையோடு கொடுத்திருக்கிறீர்கள்..!!
ராமர் பாலப்பிரச்சனையையும் சொல்லி... ஆஹா... அற்புதம்...!!
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து கலாய்ச்சி கிளப்பிட்டீங்களே...!!
சூப்பரப்பு....!!!

ராஜா
19-10-2007, 11:03 AM
சிம்ப்ளி சூபர்ப் மாம்ஸ்..!

முதலில் உங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய பதிலுக்கு தலைவணங்குகிறேன்..!

வரிக்கு வரி நகைச்சுவை தெறிக்கும் உங்கள் பதிவு கண்டு அயர்ந்து போய் நிற்கிறேன் மாம்ஸ்..!

இடைக்கிடையே உங்க கமெண்ட்டும் கலக்கல்..

அதிலும், "இந்த வாயை வச்சுகிட்டு... அதைவேற செய்தா...ன்னு விட்டீங்களே கொலை ரேட்..!

ரொம்ப நன்றி மாம்ஸ்.. உங்க உழைப்புக்கு.. உங்க நகைச்சுவைக்கு.. உங்க பர்ஃபெக்ஷனுக்கு.. சுருக்கமா உங்க பதிலுக்கு..!

அன்புரசிகன்
19-10-2007, 01:24 PM
அன்பு அண்ணா,
என்னமா ரீலு சுத்தி கமலை கவுக்க முடிவு பண்ணிட்டீங்க...!!
ஆனாலும் உலக நாயகரை இந்தளவு ஓட்டியதை அவரது ரசிகர் சார்பின் மென்மையாக செல்லமாக கண்டிக்கிறேன்...!!
ரொம்பவே நகைச்சுவையோடு கொடுத்திருக்கிறீர்கள்..!!
ராமர் பாலப்பிரச்சனையையும் சொல்லி... ஆஹா... அற்புதம்...!!
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து கலாய்ச்சி கிளப்பிட்டீங்களே...!!
சூப்பரப்பு....!!!

நன்றி மகள்.... ஏதோ என்னால முடிஞ்சது... அதுதான் கமல் ரசிகர் மன்றத்தின் காலில் விழாத குறையா மன்னிப்பு கேட்டேனே...

சிம்ப்ளி சூபர்ப் மாம்ஸ்..!
முதலில் உங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய பதிலுக்கு தலைவணங்குகிறேன்..!
வரிக்கு வரி நகைச்சுவை தெறிக்கும் உங்கள் பதிவு கண்டு அயர்ந்து போய் நிற்கிறேன் மாம்ஸ்..!
இடைக்கிடையே உங்க கமெண்ட்டும் கலக்கல்..
அதிலும், "இந்த வாயை வச்சுகிட்டு... அதைவேற செய்தா...ன்னு விட்டீங்களே கொலை ரேட்..!
ரொம்ப நன்றி மாம்ஸ்.. உங்க உழைப்புக்கு.. உங்க நகைச்சுவைக்கு.. உங்க பர்ஃபெக்ஷனுக்கு.. சுருக்கமா உங்க பதிலுக்கு..!

உங்களிடம் இருந்து வந்த இந்த பாராட்டு பத்மஸ்ரீ பதக்கம் கிடைத்தது போல் உள்ளது. காலம் தாமதித்ததற்கு மன்னிக்க மாப்பு... நன்றிகள்...

மலர்
19-10-2007, 02:02 PM
ராஜா அண்ணா அன்புவிடம் கேட்ட கேள்வியை பார்த்து நான் ஒரு நிமிடம் திகைத்தது உண்மை.... இது முடியுமா என்று கூட நினைத்தேன்.... ஒரு பெரிய கதையையே நகைச்சுவையாக மாற்றவேண்டும் என்றால் சும்மாவா.....
ஆனால் அன்பு அதை கூட தன் பதிலால் மாற்றி விட்டார்...
உண்மையில் அன்புவுக்கு என்னுடைய பாராட்டுக்கள்....

இன்னொருத்திய இன்டஸ்ரிய விட்டு அனுப்ப திட்டம் போட்டுட்டான்.... இவனுக்கு போடப்போற வாய் மேக்கப்புல அது வேற செய்து தொலைச்சா....

பாலம் கட்டினா அதுல ரெண்டிரிங் கொன்ஸ்டக்ஷன் என்று பல விடையங்கள் வரும். அதால தமிழக மற்றும் ஈழத்து மக்களுக்கு வேலைவாய்ப்பு வரும்...

(ஹீ...வித்தியாசமான சிந்தனை.........)

இடையில நம்ம ராமராஜன் கோமா ஸ்ரேஜூக்கு போறாரு.... நீங்க இந்த கரையிலிருந்து ஒரு ஜம். அப்படியே தனுஷ்கோடிக்கு போய் விழூறீங்க... அங்க ஒரு பெஸ்ட்எய்ட் பொக்ஸ் எடுத்துகிட்டு மறுபடியும் ஒரு ஜம்ப். இந்த கரைக்கு வாறீங்க...."

(முதல்ல வாசிக்கும் போது ஓவியனோட கலர் பொக்ஸ்ன்னு நினச்சேன்)

சும்மா நச்சின்னு இருக்கு அன்பு..........

மதி
19-10-2007, 03:37 PM
அன்பு ...
உண்மையிலேயே அசத்தல் திரைக்கதை... யாராயிருந்தாலும் நம்ப வச்சிருப்பீங்க...போலருக்கே..
வாழ்த்துக்கள்...ராமாயணத்தை இவ்ளோ நகைச்சுவையா தந்ததுக்கு நன்றி..

அன்புரசிகன்
20-10-2007, 06:06 PM
ராஜா அண்ணா அன்புவிடம் கேட்ட கேள்வியை பார்த்து நான் ஒரு நிமிடம் திகைத்தது உண்மை.... இது முடியுமா என்று கூட நினைத்தேன்.... ஒரு பெரிய கதையையே நகைச்சுவையாக மாற்றவேண்டும் என்றால் சும்மாவா.....
ஆனால் அன்பு அதை கூட தன் பதிலால் மாற்றி விட்டார்...
உண்மையில் அன்புவுக்கு என்னுடைய பாராட்டுக்கள்....
(ஹீ...வித்தியாசமான சிந்தனை.........)
(முதல்ல வாசிக்கும் போது ஓவியனோட கலர் பொக்ஸ்ன்னு நினச்சேன்)
சும்மா நச்சின்னு இருக்கு அன்பு..........

மிக்க நன்றியம்மா..... வாழ்க்கையில் முடியாதது என்று எதுவும் இல்லை.... உண்மையில் சில நாட்க்கள் பிரத்தியேகமாக நான் இந்தக்கேள்விக்காக யோசித்ததுண்டு. ஆனால் ஒரு மதிய உணவு வேளையின் போது திடீர் என்று உதித்த யோசனைகளை ஒரு drawing ன் பின்பக்கத்தில் குறித்துவைத்துக்கொண்டு :D எழுத ஆரம்பித்தது. நேரபிரச்சனையால் பதிய பிந்திவிட்டது...

அன்பு ...
உண்மையிலேயே அசத்தல் திரைக்கதை... யாராயிருந்தாலும் நம்ப வச்சிருப்பீங்க...போலருக்கே..
வாழ்த்துக்கள்...ராமாயணத்தை இவ்ளோ நகைச்சுவையா தந்ததுக்கு நன்றி..

நன்றி மதி... ஏதோ... நம்மளால முடிஞ்சது...:icon_rollout:

ராஜா
21-10-2007, 06:09 AM
என்னுடைய சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கு...
சீரிய பதில்களைத் தந்து சிறப்பித்த சொந்தங்களுக்கு..
சிரம் தாழ்ந்த நன்றிகள்...!

ஓவியன்
21-10-2007, 06:29 AM
ஹா, ஹா!

அசத்திட்டீங்க அன்பு, சூப்பரோ சூப்பர்.
அதிலும் கஷூரினா பீச்சிலே பைட் தொடங்கிறது, எல ஐடியா..!! :)

கஷூரினா பீச்சில நாம பண்ணுறதெல்லாம் கமல் பண்ணுவாரா...??? :D:D

மலர்
21-10-2007, 06:30 AM
ஹா, ஹா!
கஷூரினா பீச்சில நமா பண்ணுறதெல்லாம் கமல் பண்ணுவாரா...??? :D:D

கஷூரினா பீச்சில நீங்க என்ன பண்ணுவீங்க,,,,,???

ஓவியன்
21-10-2007, 06:34 AM
கஷூரினா பீச்சில நீங்க என்ன பண்ணுவீங்க,,,,,???ஹீ,ஹீ!

எனக்கு கஷூரினா பீச்சை ஃபோட்டோவிலே மட்டும் தான் பார்த்த ஞாபகம்....!:D

அன்புரசிகன்
21-10-2007, 06:36 AM
கஷூரினா பீச்சில நமா பண்ணுறதெல்லாம் கமல் பண்ணுவாரா...??? :D:D

நன்றிப்பா... ஆமா... எனக்கெப்படித்தெரியும்,,,???

அமரன்
21-10-2007, 07:05 AM
நன்றிப்பா... ஆமா... எனக்கெப்படித்தெரியும்,,,???
"ஆளரவம்" இல்லாத போது பண்ணுவார் ஓவியன்

ஓவியன்
21-10-2007, 07:15 AM
"ஆளரவம்" இல்லாத போது பண்ணுவார் ஓவியன்அப்போ நீங்க ஆளரவம் உள்ள போது பண்ணுவீங்கள்ளோ...??? :D

அமரன்
21-10-2007, 07:18 AM
அப்போ நீங்க ஆளரவம் உள்ள போது பண்ணுவீங்கள்ளோ...??? :D
ஆமால்ல.. மற்றவங்களை சங்கடப்படுத்தாத எதையும் நான் மறைப்பத்தில்லை

ஓவியன்
21-10-2007, 07:27 AM
அப்போ நீங்க ஆளரவம் உள்ள போது பண்ணுவீங்கள்ளோ...??? :D
ஆமால்ல.. மற்றவங்களை சங்கடப்படுத்தாத எதையும் நான் மறைப்பத்தில்லை ஹீ,ஹீ மலர்!

கஹூரினா பீச் இதுக்கு தான் பெயர் போனது, அமரனோ ஹைலைட் பண்ணிக் காட்டிட்டார்.! :)

சுகந்தப்ரீதன்
21-10-2007, 07:51 AM
அன்பு அண்ணா.. அசத்திட்டீங்க போங்க... டூயட் இல்லாம ஜோடி இல்லாம அனுமானா உலக நாயன நடிக்க வச்ச நீங்க நிஜமாலுமே நாயகன் தானுங்கோ...! (நாலாயிரம் போட்ட நாயகன்னு சொன்னதுல தப்பெ இல்ல போலிருக்கு..) அருமையான கற்பனை திறனுடைய நீங்க அடிக்கடி வந்து எங்க வயித்த கலக்கிட்டு போங்க அண்ணா.. வாழ்த்துக்கள்..!

lolluvathiyar
22-10-2007, 01:58 PM
அன்புரசிகனின் கதை நன்றாக ரசித்தேன். இவ்வளவு நகைசுவையான மூலை வச்சுகிட்டு எங்கியா ஒழிஞ்சுகிட்டு இருந்தீங்க.
ராமராஜன் சீதா ஆகா என்ன பேரு பொருத்தம். அதுவும் ராமர் பாலத்தையும் இழுத்து தமிழீழ பிரச்சனையும் இழுத்து. எப்படியோ ராஜபாக்சேவ ராவனனாக்கீட்டீங்க. பாராட்டுகள்

அப்புரம் அன்பு உங்க கதையெ பெரிசா தான் இருக்கு அதுக்கு போய் ஏன் பாண்ட் சைசை பெரிசு பன்னி பில்டப் பன்னினா நாங்க சும்மா விட்டுருவமா

அன்புரசிகன்
22-10-2007, 02:05 PM
எனக்கு இன்னமும் சிறிசாத்தான் தோணுது. Arial Unicode MS என்ற எழுத்துரு இல்லாவிட்டால் பெரிதாகத்தான் தோன்றும் என்று நினைக்கிறேன்...

நகைச்சுவையெல்லாம் உங்க அளவுக்கு வராது வாத்தியாரே....

பாராட்டிய உள்ளத்திற்கு நன்றிகள்.

அன்புரசிகன்
22-10-2007, 02:09 PM
அன்பு அண்ணா.. அசத்திட்டீங்க போங்க... டூயட் இல்லாம ஜோடி இல்லாம அனுமானா உலக நாயன நடிக்க வச்ச நீங்க நிஜமாலுமே நாயகன் தானுங்கோ...! (நாலாயிரம் போட்ட நாயகன்னு சொன்னதுல தப்பெ இல்ல போலிருக்கு..) அருமையான கற்பனை திறனுடைய நீங்க அடிக்கடி வந்து எங்க வயித்த கலக்கிட்டு போங்க அண்ணா.. வாழ்த்துக்கள்..!

என்டி செல்லோம்.. என்ன ஆச்சு.... எதுவாக இருந்தாலும், அதுக்காக இப்படியா???

நன்றி...

ராஜா
23-10-2007, 04:15 AM
இத்திரியை..

பத்தாயிரமாவது பார்வைக்கு இட்டுச் செல்ல..

பத்தரை மாற்றுத் தங்கம்..

அமரை அழைக்கிறேன்..

வாருங்கள் அமர்.. உங்கள் கேள்விப்பட்டியலோடு..!

அமரன்
23-10-2007, 07:26 AM
ஆஹா...மிக்க நன்றி அண்ணா... இன்னும் சற்று நேரத்தில் தந்து விடுகிறேன்.

அமரன்
23-10-2007, 10:29 AM
மன்றம் தந்த சொந்தங்களை மனதிறக்கவைக்கும் முயற்சியில் என்னையும் இணைந்த எனதன்பு அண்ணாவுக்கு நன்றி. இதோ என்னால் இயன்ற அளவுக்கு முயன்று தொகுத்த கேள்விகளை கணையாகத் தொடுக்கிறேன். வீரியம் குறைவாக இருந்தால் மன்னித்து எதிர் தாக்குதலை பலமாக நிகழ்த்துமாறு என் பிரியமுள்ள எதிரிகளைக் கேட்டுக்கொள்கின்றேன்.

1. எஸ்.ராஜா.
நகைச்சுவை உணர்வும் எழுத்து வளமும் எழுத்து வன்மையும் விவாததிறனும் கொப்புளிக்கும், நான் படித்த உங்கள் பதிவுகள்மூலம் உங்களை ஓரளவு நிழல்படுத்தி இருக்கிறேன். அதன் அடிப்படையில் ஒரு கேள்வி..
நடுநிலையான கருத்துகளை கூற உங்களால் எப்படி முடிகிறது?

2.யெஜாஸ்தா.
சிந்தனையைத் தூண்டும் கவிதைகள், தப்பான கருத்துகளுக்கு எதிரான பண்பட்ட கருத்துகளை யாரும் மனங்கோணா வண்ணம் வெளிப்படுத்தும் பாங்கு போன்றன நீங்கள் தந்த பதிவுமாலையை தாங்கும் இழைகளாக எனக்குப் படுகிறது..இவ்விரு வளங்கள் ஒவ்வோருவருக்கும் இருக்கவேண்டியது அவசியம்.
பலரிடம் இவற்றைக் காண்பது அரிதாக இருப்பது ஏன்?

3.மதி..
பெயருகேற்றார்போல குளிர்மையானவர். ஆர்ப்பட்டமில்லாது வந்து கதைகளைப்படித்து ஊக்கப்படுத்தும் தங்கமனசுக்காரர். நீதிக்கதைகள், கவிதைகள் என ரசவிருந்து படைத்த உங்கள் படைப்புகளை இப்போதெல்லாம் காணமுடிவதில்லை.
இதற்கு நேரமின்மை இல்லாத ஏதாவது காரணம் உள்ளதா? ஆமெனில் விளக்குக்குங்களேன்? இல்லை எனில் இக்கால சிறுகதைகளில் வெறும் வார்த்தை ஜாலம் மட்டுமே இருக்கு என்று என்னைச் சேர்ந்த சிலர் குறைபடுகின்றனர். இதனை ஆய்வுசெய்யுங்களேன்.

4.யவனிகா
சரளமான, செந்தமிழ் தமிழச்சி என எனக்குள் உங்களைப் பற்றிய ஒரு புறத்தோற்றம் உள்ளது. அதன் அகத்தன்மையையும், காரணத்தையும் சொல்லுங்களேன்.

5.வாத்தியார்...:
படைப்புகளானாலும் கருத்துகளானாலும் எல்லோருக்கும் பொதுவான பார்வை ஒன்று இருக்கும். உங்கள் பார்வைக்கோணம் பல இடங்களில் வேறுபட்டிருப்பதைக் கண்டிருக்கின்றேன். அது உங்களிடம் எப்படி குடிவந்தது? அதனை எப்படி கட்டிக்காத்து வளர்த்து வருகிறீர்கள்.?

6.ஓவியன்..:
நானும் நீங்களும் பல இடங்களில் ஒரே வரிசையிலும் மிகச்சில இடங்களில் எதிரும் புதிருமான வரிசையிலும் இருந்திருக்கிறோம். இதுவரை நேரில் சந்திக்காத நாங்கள் இருவரும், திரைப்படம் ஒன்றின் வசனங்களை அமைக்கும் நிமித்தம் சந்திக்கிறோம். ஒரு நகைச்சுவை, சீரியஸ் கலவைக்காட்சிக்கு வசனம் எழுத ஐடியாக்களை பரிமாறுகின்றோம். அந்தப் பரிமாற்றம் எப்படி இருக்கும் என்பதை என்,உன் பாணி கலந்து சொல்லுங்கள்..

7.அக்னி+அன்புரசிகன்:
மன்றத்தில் கிடைத்த உறவுகளுடனான எனது குரல் தொடர்பாடலில் முதலிரு இடங்களைப் பிடித்தவர்கள் நீங்கள். உங்களிடம் ஒரு வேண்டுகோள்.. என்னைப்பற்றிய உங்கள் இருவரினரும் பார்வையை கவிதையாக இல்லாவிட்டாலும் கவித்துவ நடையில் தாருங்கள்...(இதை வேறு யாருக்கும் மாற்ற ரசிகனுக்கு எனது அன்பான தடை. ஹி...ஹி...ஹி...:lachen001::lachen001::D:D :icon_rollout::icon_rollout:)

8.விராடன்..:
உங்கள் பதிவுகளில் சுகந்தமும் காரமும் கலந்து இருக்கும். இரண்டுமே எனக்குப் பிடித்தமானவை. அவற்றை இப்பவேல்லாம் காணாது தவிக்கின்றேன். இப்போ பிரச்சினை அதுவல்ல. உங்கள் பதிவுக் காரத்துக்கு ஏதோ ஒரு கோபம்தான் காரணமாக இருக்கும். அது என்ன? அதன் அவசியம் என்ன? அது உங்களுக்கு ஏற்படுத்திய அனுகூலங்களும் பிரதிகூலங்களும் என்ன..?

9. இனியவள்,பூ,மலர்,...:
கவிதை, கதை, நசைச்சுவை என முன்னிருவரும் கலாய்ப்பு கலகலப்பு என்று பின்னொருவரும் செய்யும் அட்டகாசம் மன்றம் அறியும். உங்களிடம் ஏதாச்சும் கேட்கனும்னு மனசு சொல்லிச்சு. ஏன் வம்பை வெற்றிலை வைச்சு வரிஞ்சு கட்டிக் கூப்பிடுகின்றாய் என்று மூளை சொல்லிச்சு. இந்த இழுபறிப்பந்தயத்தில் மனசு கோப்பையை தட்டிப்பெற்று விட்டது.
இக்காலப் பெண்களின் நிலை பற்றி உங்கள் மூவர் கருத்துகளையும் கலப்படமில்லாது தாங்க..

10. அலங்காரமில்லாத எழுத்தால் அலங்கரிக்கும் பதிவுகள் தரும் அன்பு அண்ணா ராஜாவுக்கு ஒரு கணை.. என்னுடன் யாராவது கருத்து முரண்பட நேர்ந்தால் மேற்கொண்டு முரண் வளர்ந்து முள்ளாக முன்னர் நானே விலகி வேடிக்கை பார்ப்பேன். நீங்கள் எப்படி என்பதை சுருக்கமாகச் சொல்லிவிட்டு அது தொடர்பான உங்கள் வாழ்வில் நிகழ்ந்த நகைச்சுவைச் சம்பவம் ஏதாவது சொல்லுங்கள்.

சூரியன்
23-10-2007, 10:33 AM
நல்ல கேள்விகள் அம*ரன் அண்ணா..
அனைவரின் பதிலையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

அன்புரசிகன்
23-10-2007, 10:44 AM
7.அக்னி+அன்புரசிகன்:
மன்றத்தில் கிடைத்த உறவுகளுடனான எனது குரல் தொடர்பாடலில் முதலிரு இடங்களைப் பிடித்தவர்கள் நீங்கள். உங்களிடம் ஒரு வேண்டுகோள்.. என்னைப்பற்றிய உங்கள் இருவரினரும் பார்வையை கவிதையாக இல்லாவிட்டாலும் கவித்துவ நடையில் தாருங்கள்...(இதை வேறு யாருக்கும் மாற்ற ரசிகனுக்கு எனது அன்பான தடை. ஹி...ஹி...ஹி...:lachen001::lachen001::D:D :icon_rollout::icon_rollout:)

உங்களை பார்க்கவே இல்லை என்கிறேன். பிறகு எப்படி உங்களைப்பற்றிய பார்வையை கவிதையாக தருவது.. நான் பொய்சொல்ல மாட்டேனாக்கும்... :rolleyes:

அமரன்
23-10-2007, 10:48 AM
ஹி...ஹி...அதெல்லாம் முடியாது. எப்படியாச்சும் எழுதியே ஆக வேண்டும்.

ராஜா
23-10-2007, 11:00 AM
[அடப்பாவி.. அமரா..நான் பாட்டுக்குத் தானே போய்க்கிட்டு இருந்தேன்..? நான் கேள்வி கேட்கும்போது கூட உன்னை ஒன்னுமே கேட்கலியேப்பா.. நீயும் அப்படித்தான் இருப்பேன்னு நம்ம்ம்ம்ம்ம்ம்பி.. இங்கே வந்து பார்த்தா...ம்ம்ம்
செய்யுங்கப்பா... செய்யுங்க.. ஆனா ஒண்ணு.. நீ யாராவது பெரிய ஆள்கிட்ட கேட்டுருந்தா, நானே தலைமை தாங்கி உன்னை பாராட்டியிருப்பேன்.. ஆனா நீ கேள்வி கேட்டது ஒரு புள்ளப்பூச்சிய..

என்னா ஒரு வில்லத்தனம்..?]

நன்றி அமர்..!

10 கேள்விகளில் 13 பேரைச் சேர்த்ததில் உங்கள் மதிநுட்பமும்,
இதுவரை இத்திரியில் பங்குபெறாதோரைக் கோர்த்ததில் உங்கள்
மேலாண்மைத் திறனும் வெளிப்படுகிறது..

விரைவில் பதிலோடு வருகிறேன்..!

பூமகள்
23-10-2007, 11:07 AM
அமர் அண்ணா...
கேள்வி கேட்டு மாட்டி விட்டீங்க சரி... அதென்ன கருத்துக்களை கலப்படமில்லாது தாங்கன்னு சொல்லியிருக்கீங்க???
அப்போ... இத்தனை நாள் நாங்க பதிலை கலப்படம் செய்தா கொடுத்தோம்????

ஷீ-நிசி
23-10-2007, 11:58 AM
அன்பு நல்லாருந்துச்சுபா உலக நாயகனுடனான உம்மோட கூத்து....

உலகநாயகன் அனுமார் ஆக்கிபுட்டியேப்பு....

வாழ்த்துக்கள்!

நேசம்
23-10-2007, 12:13 PM
அழகான கேள்விகள் அருமையானவர்களுக்கு. உண்மையில் இவர்களின் பதில் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ஆவலாய் இருக்கிறது.வாழ்த்துக்கள் அமரன் ஜி

அன்புரசிகன்
23-10-2007, 12:48 PM
அன்பு நல்லாருந்துச்சுபா உலக நாயகனுடனான உம்மோட கூத்து....

உலகநாயகன் அனுமார் ஆக்கிபுட்டியேப்பு....

வாழ்த்துக்கள்!

நான் கூத்து ஆடவில்லை. ஆடியது மகிந்த.. மாஸ்டர்-சுந்தரம்.... நடுவர்- சிம்பு... :D

நன்றி

அமரன்
23-10-2007, 01:33 PM
[அடப்பாவி.. அமரா..நான் பாட்டுக்குத் தானே போய்க்கிட்டு இருந்தேன்..? நான் கேள்வி கேட்கும்போது கூட உன்னை ஒன்னுமே கேட்கலியேப்பா.. நீயும் அப்படித்தான் இருப்பேன்னு நம்ம்ம்ம்ம்ம்ம்பி.. இங்கே வந்து பார்த்தா...ம்ம்ம்
செய்யுங்கப்பா... செய்யுங்க.. ஆனா ஒண்ணு.. நீ யாராவது பெரிய ஆள்கிட்ட கேட்டுருந்தா, நானே தலைமை தாங்கி உன்னை பாராட்டியிருப்பேன்.. ஆனா நீ கேள்வி கேட்டது ஒரு புள்ளப்பூச்சிய..
என்னா ஒரு வில்லத்தனம்..?]

நன்றி அமர்..!

10 கேள்விகளில் 13 பேரைச் சேர்த்ததில் உங்கள் மதிநுட்பமும்,
இதுவரை இத்திரியில் பங்குபெறாதோரைக் கோர்த்ததில் உங்கள்
மேலாண்மைத் திறனும் வெளிப்படுகிறது..

விரைவில் பதிலோடு வருகிறேன்..!

ஹி..ஹி... என்னப் பண்ணுவது அண்ணா. நெருங்கியயவ்ர்களிடம் வில்லத்தனம் செஞ்சாச்சதான் மேனி தப்புகிறது. காத்திருக்கேன் உங்கள் மேலான பதிலுக்காக..

அமரன்
23-10-2007, 01:35 PM
அமர் அண்ணா...
கேள்வி கேட்டு மாட்டி விட்டீங்க சரி... அதென்ன கருத்துக்களை கலப்படமில்லாது தாங்கன்னு சொல்லியிருக்கீங்க???
அப்போ... இத்தனை நாள் நாங்க பதிலை கலப்படம் செய்தா கொடுத்தோம்????
கலப்படமில்லைன்னா உங்களுக்கு தோன்றுவதை அப்படியே தாங்கள் என்கின்றேன். இணையத்தூதுவர்கள் மூலம் உங்களுக்குள் தகவல் பரிமாற்றம் வேண்டாம் என்கின்றேன்.முந்தின பதில்களில் கலப்படம்னு நான் சொல்லவே இல்லையே..

ஓவியன்
23-10-2007, 01:54 PM
முதலிலே பத்துக்கல்லிலே பதின்மூன்று மாங்காய் அடித்த அமருக்கு வாழ்த்துக்கள்...!

என்னப்பா இப்படி மாட்டி விட்டுட்டீர்...
சரி, சரி விடையுடன் வருகிறேன், ஆனால் எனக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை...!!! :)

அமரன்
23-10-2007, 02:00 PM
முதலிலே பத்துக்கல்லிலே பதின்மூன்று மாங்காய் அடித்த அமருக்கு வாழ்த்துக்கள்...!
என்னப்பா இப்படி மாட்டி விட்டுட்டீர்...
சரி, சரி விடையுடன் வருகிறேன், ஆனால் எனக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை...!!! :)
கம்மியான எண்ணிக்கையோ...ரொம்பக் காக்க வைக்காதீங்கப்பூ.

யவனிகா
23-10-2007, 02:05 PM
இப்படி ஒரு கேள்வி கேட்டு முதன் முறையாக எனக்குள், தமிழ் எங்கே ஒளிந்திருக்கிறது, என்று தேட வைத்த அமருக்கு நன்றி.தேட சிறிது கால அவகாசம் தருவீர்கள் தானே?

அமரன்
23-10-2007, 02:07 PM
இப்படி ஒரு கேள்வி கேட்டு முதன் முறையாக எனக்குள், தமிழ் எங்கே ஒளிந்திருக்கிறது, என்று தேட வைத்த அமருக்கு நன்றி.தேட சிறிது கால அவகாசம் தருவீர்கள் தானே?
நெடுநேரத் தேடலில் மதிப்புமிக்க முத்து கிடைக்கும் என்ற மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றேன்

நுரையீரல்
23-10-2007, 02:38 PM
1. எஸ்.ராஜா.
நகைச்சுவை உணர்வும் எழுத்து வளமும் எழுத்து வன்மையும் விவாததிறனும் கொப்புளிக்கும், நான் படித்த உங்கள் பதிவுகள்மூலம் உங்களை ஓரளவு நிழல்படுத்தி இருக்கிறேன். அதன் அடிப்படையில் ஒரு கேள்வி..
நடுநிலையான கருத்துகளை கூற உங்களால் எப்படி முடிகிறது?
சில கேள்விகள் கசக்கும், சில கேள்விகள் உள்ளத்தை ஆனந்தமடையச் செய்யும். தங்களது கேள்வி இரண்டாவது வகை, அதில் எனக்கு சந்தோஷமே.

நகைச்சுவை உணர்வைப் பற்றி சொல்லவேண்டுமாயின் எனது கோவை நண்பர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். எல்லோருக்கும் போல எங்களுக்கும் ஒரு மதில் சுவர் இருக்கிறது. இந்த மதில் சுவறில் அமர்ந்து வருவோரையும், போவோரையும் கூப்பிட்டு வம்பிக்கிழுத்து கலாய்ப்பதே எங்களின் தலையாய பணி. இதில் எங்களுக்குள்ளேயும் கலாய்த்துக் கொண்டிருப்போம், ஒருவேளை அது இந்த உணர்வைத் தந்திருக்கலாம்.

எனக்கு ஓரளவுக்கு நன்றாகத் தெரிந்த மொழியே தமிழ் தான். இப்போதும் கூட "ழ", "ல" மற்றும் "ள" ஒழுங்காக உச்சரிக்கத் தெரியாது. இந்த தாழ்வுமனப்பான்மையே கூட என்னுடைய எழுதும் திறனை அதாவது எழுதும் போது கூடியமட்டும் எழுத்துப்பிழையில்லாமல் எழுத ஊக்குவிக்கிறது. இதைத்தான் எழுத்து வளம் என்று நான் எடுத்துக் கொண்டேன். நீங்கள் வேறு அர்த்தத்தில் கூறியிருந்தால், பதில் நான் இன்னும் கத்துக்குட்டியே.

என்னுடைய அறிமுகத்திரியில் என்னைப்பற்றி கூறியிருந்தது போல, நான் எப்போது மூன்றாம் கண்ணோட்டத்தில் இருந்து தான் பிரச்சினையை அணுகுவேன். அது ஒருவேளை நடுநிலையாக தங்களுக்கு பட்டிருக்கலாம்.

எனது நடு நிலைமைக்கு மிக முக்கியமான காரணம் வேறு யாருமில்லை. என்னில் பாதியான என் மனைவி தான்.

எனது தோழி அவளே எனது எதிரியும் கூட
எனது இன்பம் அவளே எனது துன்பமும் கூட

இதுக்கு மேல எழுதுனா நான் பிட்டடிச்ச பாட்டு உங்களுக்கு தெரிந்துவிடும்.

ராஜா
23-10-2007, 02:55 PM
பட்டியலில் முதல்வராக இருப்பவரே, பதிலிலும் முதல்வராகிவிட்டார்..

முதல் தரமான பதில்.. நன்றி ராஜா அவர்களே..!

அமரன்
23-10-2007, 03:06 PM
எனது நடு நிலைமைக்கு மிக முக்கியமான காரணம் வேறு யாருமில்லை. என்னில் பாதியான என் மனைவி தான்.
எனது தோழி அவளே எனது எதிரியும் கூட
எனது இன்பம் அவளே எனது துன்பமும் கூட
இதுக்கு மேல எழுதுனா நான் பிட்டடிச்ச பாட்டு உங்களுக்கு தெரிந்துவிடும்.

எப்போதும் பிரச்சினைகளில் மூழ்கி இருப்பதை விடுத்து வெளியே வந்து மூன்றாவது கண்ணால் பார்க்கும் போது அதன் தாற்பரியமும் பாரமும் புரியும். புரிந்தால் நடுவு நிலைமையான தீர்வு கிடைக்கும். அத்தகைய குணம் உங்களுக்கு வரும் வரம் தந்த தேவதை உங்கள் பாரியார் என்னும்போது உங்களை நினைத்து மகிழ்கின்றேன். உங்கள் துணையை நினைத்து பெருமிதம்கொள்கின்றேன். நன்றி.

ராஜா
23-10-2007, 03:40 PM
ஆ! பத்து.. கேள்வியாளர் : அமரன்.
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

1. எஸ்.ராஜா.
நகைச்சுவை உணர்வும் எழுத்து வளமும் எழுத்து வன்மையும் விவாததிறனும் கொப்புளிக்கும், நான் படித்த உங்கள் பதிவுகள்மூலம் உங்களை ஓரளவு நிழல்படுத்தி இருக்கிறேன். அதன் அடிப்படையில் ஒரு கேள்வி..
நடுநிலையான கருத்துகளை கூற உங்களால் எப்படி முடிகிறது?

2.யெஜாஸ்தா.
சிந்தனையைத் தூண்டும் கவிதைகள், தப்பான கருத்துகளுக்கு எதிரான பண்பட்ட கருத்துகளை யாரும் மனங்கோணா வண்ணம் வெளிப்படுத்தும் பாங்கு போன்றன நீங்கள் தந்த பதிவுமாலையை தாங்கும் இழைகளாக எனக்குப் படுகிறது..இவ்விரு வளங்கள் ஒவ்வோருவருக்கும் இருக்கவேண்டியது அவசியம்.
பலரிடம் இவற்றைக் காண்பது அரிதாக இருப்பது ஏன்?

3.மதி..
பெயருகேற்றார்போல குளிர்மையானவர். ஆர்ப்பட்டமில்லாது வந்து கதைகளைப்படித்து ஊக்கப்படுத்தும் தங்கமனசுக்காரர். நீதிக்கதைகள், கவிதைகள் என ரசவிருந்து படைத்த உங்கள் படைப்புகளை இப்போதெல்லாம் காணமுடிவதில்லை.
இதற்கு நேரமின்மை இல்லாத ஏதாவது காரணம் உள்ளதா? ஆமெனில் விளக்குக்குங்களேன்? இல்லை எனில் இக்கால சிறுகதைகளில் வெறும் வார்த்தை ஜாலம் மட்டுமே இருக்கு என்று என்னைச் சேர்ந்த சிலர் குறைபடுகின்றனர். இதனை ஆய்வுசெய்யுங்களேன்.

4.யவனிகா
சரளமான, செந்தமிழ் தமிழச்சி என எனக்குள் உங்களைப் பற்றிய ஒரு புறத்தோற்றம் உள்ளது. அதன் அகத்தன்மையையும், காரணத்தையும் சொல்லுங்களேன்.

5.வாத்தியார்...:
படைப்புகளானாலும் கருத்துகளானாலும் எல்லோருக்கும் பொதுவான பார்வை ஒன்று இருக்கும். உங்கள் பார்வைக்கோணம் பல இடங்களில் வேறுபட்டிருப்பதைக் கண்டிருக்கின்றேன். அது உங்களிடம் எப்படி குடிவந்தது? அதனை எப்படி கட்டிக்காத்து வளர்த்து வருகிறீர்கள்.?

6.ஓவியன்..:
நானும் நீங்களும் பல இடங்களில் ஒரே வரிசையிலும் மிகச்சில இடங்களில் எதிரும் புதிருமான வரிசையிலும் இருந்திருக்கிறோம். இதுவரை நேரில் சந்திக்காத நாங்கள் இருவரும், திரைப்படம் ஒன்றின் வசனங்களை அமைக்கும் நிமித்தம் சந்திக்கிறோம். ஒரு நகைச்சுவை, சீரியஸ் கலவைக்காட்சிக்கு வசனம் எழுத ஐடியாக்களை பரிமாறுகின்றோம். அந்தப் பரிமாற்றம் எப்படி இருக்கும் என்பதை என்,உன் பாணி கலந்து சொல்லுங்கள்..

7.அக்னி+அன்புரசிகன்:
மன்றத்தில் கிடைத்த உறவுகளுடனான எனது குரல் தொடர்பாடலில் முதலிரு இடங்களைப் பிடித்தவர்கள் நீங்கள். உங்களிடம் ஒரு வேண்டுகோள்.. என்னைப்பற்றிய உங்கள் இருவரினரும் பார்வையை கவிதையாக இல்லாவிட்டாலும் கவித்துவ நடையில் தாருங்கள்...(இதை வேறு யாருக்கும் மாற்ற ரசிகனுக்கு எனது அன்பான தடை. ஹி...ஹி...ஹி...:lachen001::lachen001::D:D :icon_rollout::icon_rollout:)

8.விராடன்..:
உங்கள் பதிவுகளில் சுகந்தமும் காரமும் கலந்து இருக்கும். இரண்டுமே எனக்குப் பிடித்தமானவை. அவற்றை இப்பவேல்லாம் காணாது தவிக்கின்றேன். இப்போ பிரச்சினை அதுவல்ல. உங்கள் பதிவுக் காரத்துக்கு ஏதோ ஒரு கோபம்தான் காரணமாக இருக்கும். அது என்ன? அதன் அவசியம் என்ன? அது உங்களுக்கு ஏற்படுத்திய அனுகூலங்களும் பிரதிகூலங்களும் என்ன..?

9. இனியவள்,பூ,மலர்,...:
கவிதை, கதை, நசைச்சுவை என முன்னிருவரும் கலாய்ப்பு கலகலப்பு என்று பின்னொருவரும் செய்யும் அட்டகாசம் மன்றம் அறியும். உங்களிடம் ஏதாச்சும் கேட்கனும்னு மனசு சொல்லிச்சு. ஏன் வம்பை வெற்றிலை வைச்சு வரிஞ்சு கட்டிக் கூப்பிடுகின்றாய் என்று மூளை சொல்லிச்சு. இந்த இழுபறிப்பந்தயத்தில் மனசு கோப்பையை தட்டிப்பெற்று விட்டது.
இக்காலப் பெண்களின் நிலை பற்றி உங்கள் மூவர் கருத்துகளையும் கலப்படமில்லாது தாங்க..

10. அலங்காரமில்லாத எழுத்தால் அலங்கரிக்கும் பதிவுகள் தரும் அன்பு அண்ணா ராஜாவுக்கு ஒரு கணை.. என்னுடன் யாராவது கருத்து முரண்பட நேர்ந்தால் மேற்கொண்டு முரண் வளர்ந்து முள்ளாக முன்னர் நானே விலகி வேடிக்கை பார்ப்பேன். நீங்கள் எப்படி என்பதை சுருக்கமாகச் சொல்லிவிட்டு அது தொடர்பான உங்கள் வாழ்வில் நிகழ்ந்த நகைச்சுவைச் சம்பவம் ஏதாவது சொல்லுங்கள்.

மதி
23-10-2007, 04:18 PM
அன்பு அமர்..
அமைதியாய்...இருந்தவனை இப்படி மாட்டி விட்டு விட்டீரே..!
இப்போது தான் பார்த்தேன். வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருப்பதால் அவசியம் நாளை பதிலளிக்கிறேன்..

அமரன்
23-10-2007, 06:35 PM
அன்பு அமர்..
அமைதியாய்...இருந்தவனை இப்படி மாட்டி விட்டு விட்டீரே..!
இப்போது தான் பார்த்தேன். வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருப்பதால் அவசியம் நாளை பதிலளிக்கிறேன்..
நாளை பதில் அவசியம்.
பாலை அதில் அநாவசியம்..
அமைதி கலைத்துடுங்க
பசுமை கலந்திடுங்க..

விகடன்
24-10-2007, 05:03 AM
8.விராடன்..:
உங்கள் பதிவுகளில் சுகந்தமும் காரமும் கலந்து இருக்கும். இரண்டுமே எனக்குப் பிடித்தமானவை. அவற்றை இப்பவேல்லாம் காணாது தவிக்கின்றேன். இப்போ பிரச்சினை அதுவல்ல. உங்கள் பதிவுக் காரத்துக்கு ஏதோ ஒரு கோபம்தான் காரணமாக இருக்கும். அது என்ன? அதன் அவசியம் என்ன? அது உங்களுக்கு ஏற்படுத்திய அனுகூலங்களும் பிரதிகூலங்களும் என்ன..?

மன்றத்தில் வந்து இவ்வளவுகாலமாகிவிட்டது. இப்போதாவது இந்த சந்தேகத்தை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் வந்ததை இட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

உங்களிற்குரிய சந்தேகத்திற்கான விளக்கம் என்னை விட மன்றத்தில் வேறிருவரால் பல தருணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது...(மறைமுகமாகவே)

இருந்தாலும் இப்போது நான் தெளிவுபடுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
என்னுடன் இந்த மன்றத்தில் உலாவும் இரண்டுபேர் (மொத்தமாக நால்வர் இருந்தோம்) கொழும்பிற்கு அருகாமையில் உள்ள இரத்மலானை என்னுமிடத்தில் ஒரே வீட்டில் இருந்திருக்கிறோம். அப்போதெல்லாம் காலையில் எழுந்து காலை கடங்களை முடித்து பல்கலைக்கழகம் போகும் வரை யாராவது ஒருவரை வம்பிற்கு இழுத்து வார்ந்து கொட்டுவோம். என்ன தலைப்பு என்று தெரிந்திருக்காவிட்டாலும் சேர்ந்திடும் கூட்டணி அது.வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு "இந்தா அடுத்த பதில் கையால்த்தான்" என்ற மாதிரியாக இருக்கும். உண்மையாகவே சண்டை பிடிப்பது போலத்தான் தோன்றும். இதெல்லாம் எங்களுக்கும் நடக்கப்படும் கலகலப்பான வாதங்கள். இப்படியாக இனிமையுடன் வாழ்ந்து வந்த எங்கள் தேங்கூட்டில் கல்லெறிந்தாற்போல் நடந்தது ஒரு நிகழ்வு. அதுதான் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா. அதன் பின்னர் நங்கள் தினமும் சந்திப்பது என்பது கேள்விக்குரிய விடயமாகியது. காரணம் வெளிநாட்டு வேலைவாய்ப்பும் வேறுபட்ட கம்பனிகளும்.

இருந்தாலும் கால ஓட்டத்தில் நாங்கள் மீண்டும் இந்த மன்றத்தில் சந்தித்தோம். எமது மறுப்பு பேச்சுக்களால் மன்ற நண்பர்களின் நட்பை குலைத்துக்கொள்ள நான் ஆசைப்படவில்லை. ஆதலால் மீண்டும் அதே வாதங்கள் அதே நண்பர்களுடன் ஆரம்பித்தோம் அதுவும் மன்ற விதிமுறைகளிற்கு உட்பட்டு. அதை சில மன்ற நண்பர்களும் விளங்கிக் கொண்டனர். இப்போது அதெல்லாம் கைவிட்டுவிட்டேன். ஆதலால் இதுபற்றி மேற்கொண்டு கவலைப்படத் தேவை இல்லை.

இதுவரை நான் சிலரை குறிவைத்து வம்பிற்கிழுத்த காரணத்தை தந்துவிட்டேன். ஆனால் இதுவல்ல உங்களின் சந்தேகம். எனது சில காரசாரமான பதிவுகளிற்கு உண்டான அடிப்படைகோபம் என்ன என்பதுதானே???
------------------------------------------------
மேற்கொண்டு உள்ளதை படியுங்கள். விளக்கம் தரவில்லை. கருவை மட்டுமே தந்துள்ளேன். விளக்கம் தேவைப்பட்டால் கேட்டுக்கொள்ளுங்கள்.
------------------------------------------------

உலகத்தில் என்னைப்பொறுத்தவரை மூன்றுவிதமான நபர்கள் உள்ளனர்.

முதலாமவர்
ஒரு தவறு செய்துவிட்டால் அதை அவரே உணர்ந்து அடுத்த தடவை அப்படி நிகழாது பார்த்துக்கொள்வார்

இரண்டாமவர்,
அந்த தவறை சுட்டிக்காட்டினவுடன் புரிந்து அடுத்தமுறை அப்படி நிகழாது பார்த்துக்கொள்வார்

மூன்றாவவர்,
என்னதான் சொன்னாலும் தான் நினைத்ததையே செயற்படுத்துபவர். தன்னலத்தை மட்டுமே கருமேற் கொண்ட விசமி.

இதில் மூன்றாமவரை திருத்த சொல்லி முற்பட்டால்,முயற்சிப்பவர் கெட்டவனாகிவிடுவார். அதற்கு ஒரே வழி, அவர் செய்ததை அவரிற்கே செய்து அநுபவிக்க வைத்தல்.

நான் மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.(உங்கள் பாஷையில் கோபம்தான் )

நீ மற்றவர்களிற்கு செய்வதையே உனக்கு மற்றவர்கள் செய்தால் ஏற்றுக்கொள்வாயா?
இல்லையென்றால்,
மற்றவர்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறாயோ அதையாவது குறைந்த பட்ஷம் மற்றவர்களிற்கு செய்.
-----------------------
இதனாலான அனுகூலங்களும் பிரதிகூலங்களும் எனக்கு ஒன்றுமில்லை. என்னை சுற்றி கயவர்களும் ஏமாற்ருப்பேர்வழிகளும் இருக்கமாட்டார்கள். எப்படியும் சற்ரு தொலைவிலேயே இருப்பர்.

நுரையீரல்
24-10-2007, 05:37 AM
எளிமையான பதிலில் சில பாடங்களையும் தந்திருக்கிறீர்கள் விராடன். வாழ்த்துக்கள்.

ராஜா
24-10-2007, 05:49 AM
நன்றி விராடன்..!

உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிகிறது..

எங்கள் வேண்டுகோள் எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.. உங்கள் நுட்பமான பதிவுகளும் படைப்புகளும் எங்களுக்கு அவசியம் வேண்டும்..!

விகடன்
24-10-2007, 06:00 AM
வாழ்த்துக்கள். மிக்க நன்றி

பாடங்களையும் தந்திருக்கிறீர்கள் விராடன்.அந்தளவிற்கு இன்னும் நான் வளரவில்லை. மனதில் இருக்குமாதங்கத்தில் சிலதை உதிர்த்துவிட்டேன் அவ்வளவுதான்.

நன்றி விராடன்..!

உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிகிறது..

சந்தோஷம்.

மிக்க நன்றி

எங்கள் வேண்டுகோள் எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.. உங்கள் நுட்பமான பதிவுகளும் படைப்புகளும் எங்களுக்கு அவசியம் வேண்டும்..!
வேண்டுகோள் எல்லாம் என்னத்திற்கு. வேண்டுகோள், மன்னிப்பு மற்ரும் பணிவு என்பவை எல்லாம் பெரிய வார்த்தைகள். மிகவும் அரிதாக பயன்படுத்தப்பட வேண்டியவை. சும்ம சொல்ல்லிவிடுங்க. அப்பப்ப ஏதாவது தர முயற்சிக்கிறேன்.

அமரன்
24-10-2007, 06:01 AM
தக்க சமயத்தில் வெளிப்படாத கோபமும் கோழைத்தனம்தான். சினேகிதர்களுக்கிடையே வருவது ஊடலை விஞ்சிய ஒன்று. அதன் பின்னான விளைவு மகத்தானது. வலிமையான பசையைப் போல நட்புகளை இறுக்கிப்பிணைக்கும். அதை நீங்கள் அனுபவித்து இருக்கின்றீர்கள்.

சொல்லாமல் திருந்துவோர், சொல்லித்திருதுவோர் வரிசையில் சொல்லியும் திருந்தாதோர் என்னும் வையறாக்கள் அவர்களுக்கே மிகவும் ஆபத்தானவர்கள் என்பதை அழுத்தமாக சொல்லி உள்ளீர்கள். விரைவான மனம்திறப்புக்கு நன்றி விராடன்.

விகடன்
24-10-2007, 06:15 AM
விரைவான மனம்திறப்புக்கு நன்றி விராடன்.

சும்மா இருந்த என்னை கிளறிப்பார்த்துவிட்டு பாராட்டுகிறீர்களா அமரன்.
ஆகட்டும் ஆகட்டும்.
அமரனையும் கிளரிவிட ஒருத்தன் இல்லாமலா போகப்போகிறான். :lachen001:

நுரையீரல்
24-10-2007, 06:43 AM
சும்மா இருந்த என்னை கிளறிப்பார்த்துவிட்டு பாராட்டுகிறீர்களா அமரன்.
ஆகட்டும் ஆகட்டும்.
அமரனையும் கிளரிவிட ஒருத்தன் இல்லாமலா போகப்போகிறான். :lachen001:
ஏன் அந்த ஒருத்தனாக நீங்களே இருங்களே. ஐயா... அடுத்த போட்டி ஆர்மபமாகப் போகுது.

அமரன்
24-10-2007, 06:52 AM
ஏன் அந்த ஒருத்தனாக நீங்களே இருங்களே. ஐயா... அடுத்த போட்டி ஆர்மபமாகப் போகுது.
அட நாரதரும் நடுநிலையானவர்தானே...

நுரையீரல்
24-10-2007, 06:54 AM
அட நாரதரும் நடுநிலையானவர்தானே...
என்னையே எனக்கு அடையாளம் காட்டியதற்கு நன்றி அமரன் அண்ணா.......

பூமகள்
24-10-2007, 06:58 AM
எதார்த்தமான பதிலால் அசத்திட்டீங்க விராடன் அண்ணா.
ஆனாலும் தங்களின் பதில் சிந்திக்க வைக்கிறது.
மூன்று வகையான நபர்களில் நாம் யாரென்று பகுத்துப் பார்த்து யோசிக்க வைச்சிட்டீங்க..!!
நல்ல கருத்து..! உங்களின் அசத்தல் விவாதங்களை பார்க்க கொடுத்து வைக்காததால் அது இனி மேல் தாங்கள் தொடரனும் என்று ஆசை.
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் விராடன் அண்ணா.

அன்புரசிகன்
24-10-2007, 07:04 AM
அப்போதெல்லாம் காலையில் எழுந்து காலை கடங்களை முடித்து பல்கலைக்கழகம் போகும் வரை யாராவது ஒருவரை வம்பிற்கு இழுத்து வார்ந்து கொட்டுவோம். என்ன தலைப்பு என்று தெரிந்திருக்காவிட்டாலும் சேர்ந்திடும் கூட்டணி அது.வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு "இந்தா அடுத்த பதில் கையால்த்தான்" என்ற மாதிரியாக இருக்கும். உண்மையாகவே சண்டை பிடிப்பது போலத்தான் தோன்றும். இதெல்லாம் எங்களுக்கும் நடக்கப்படும் கலகலப்பான வாதங்கள்.
அந்த பம்பலுக்கு ஈடு இணை ஏதுப்பா.....(அந்த 2 ல் 1 நான் என்பதால் :D ) அப்படிப்பண்ணாவிட்டால் அன்று இரவு நித்திரை வருமா......

மூன்றாவவர்,
என்னதான் சொன்னாலும் தான் நினைத்ததையே செயற்படுத்துபவர். தன்னலத்தை மட்டுமே கருமேற் கொண்ட விசமி.

:D :D :D
உதாரணம் பிளீஸ்.... :lachen001: :D :D :D

விகடன்
24-10-2007, 07:10 AM
அந்த பம்பலுக்கு ஈடு இணை ஏதுப்பா.....(அந்த 2 ல் 1 நான் என்பதால் :D ) அப்படிப்பண்ணாவிட்டால் அன்று இரவு நித்திரை வருமா......
:D :D :D

அதெப்படி நித்திரை வருவது. அப்படி செய்யாவிட்டால் அன்றையதினமே விடியாதே நமக்கு.

உதாரணம் பிளீஸ்.... :lachen001: :D :D :D

மன்றத்தில் ஒருவனாக சொல்லவா
அல்லது
பழக்கமானவனாக சொல்லவா?

ஹி...ஹி....ஹி....

விகடன்
24-10-2007, 07:17 AM
உங்களின் அசத்தல் விவாதங்களை பார்க்க கொடுத்து வைக்காததால் அது இனி மேல் தாங்கள் தொடரனும் என்று ஆசை.
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் விராடன் அண்ணா.

பூனைக்கு கொண்டாட்டம் எலிக்கு திண்டாட்டம் என்ற கதையாக அல்லவா இருக்கிறது.

கடைசியில் வைக்கிறீர்கள் ஓவியனிற்கு ஆப்பு.

ஓவியன் இதை பற்றி இன்னும் மூச்சே விடவில்லை!

விகடன்
24-10-2007, 07:20 AM
அட நாரதரும் நடுநிலையானவர்தானே...

ஆமாம் ஆமாம்.
நாரதர் ஆப்படித்துக்கொண்டிருப்பதால் அனைவரது கவனமும் " அடுத்ததாக யாரிற்கு அடி விழப்போகிறது?" என்பதில் இருக்கிறதே ஒழிய நாரதரிற்கு ஆப்படித்துவிட யாரும் முன்வருவதில்லை. அது என்று நடக்கிறதோ அன்றுதான் உலகிற்கே விடிவு.

பி.கு: நாரதரின் வேலையை சமூகத்தில் ஒருவர் செய்தால் அவரை நாரதரிற்கு கொடுக்கும் மரியாதையுடன் அனுகுவீர்களா? :icon_b:

அன்புரசிகன்
24-10-2007, 07:26 AM
யார் யார் வீட்டு எலி எல்லாம் திண்டாடப்போகுதோ...?

V) நண்பர்கள் வீட்டுப் பூனைகள்.

மதி
24-10-2007, 07:41 AM
கேள்வி கேட்டு என்னை சிக்கலில் மாட்ட வைத்த அமருக்கு என் நன்றி பல.

ஓரிரு வார்த்தைகளிலோ, ஓரிரு வரிகளிலோ பதிலளிக்கும் படி கேள்விகளும் இல்லை. பதில்களும் இல்லை. இந்த வழக்கப்படி நானும்.

இரண்டு மாதங்களாக அதிகம் மன்றம் வராமைக்கு நேரமின்மையை மட்டும் காரணம் சொல்ல மாட்டேன். என்ன தான் அடிச்சாலும் வலிக்கலியேன்னு வடிவேலு மாதிரி சொல்லிட்டு திரியறவங்க நாங்க.
காரணம் ஒன்று, என் கண்களில் கொஞ்ச வாரங்களுக்கு முன்பு செய்து கொண்ட லேசர் அறுவை சிகிச்சை. சில காலம் கணினித் திரையை அதிகம் பார்க்க வேண்டாமென்று மருத்துவர் ஆலோசனை.
காரணம் இரண்டு, அலுவகத்திலும் ஒரு இடத்தில் உட்காராமல் சுற்றிக் கொண்டிருப்பது. தற்சமயம் வேலை அப்படி.
மூன்று: விடுமுறை நிமித்தமாக ஒன்றரை வாரங்கள் சென்றிருந்த சுற்றுலா.

அதிகம் எழுத முற்படாமைக்கு காரணங்கள் சில. அதில் முக்கியமானது: தனிமை எனக்குக் கிடைப்பதில்லை. முன்பு வீட்டிற்கு வந்தால் ஏதேதோ யோசிக்கத் தோன்றும். அதில் அசை போட்ட பல சம்பவங்களைத் தான் எழுதினேன். தற்சமயம், வீட்டில் ஐந்து நண்பர்கள் இருக்கிறோம். அனைவரும் கல்லூரிகால நண்பர்கள். அதனால் எவ்வளவு நேரங்கழித்து வீட்டிற்கு சென்றாலும் எப்படியும் அரைமணிநேரமாவது கதை பேசிவிட்டு தான் தூங்குவோம். தற்சமயம் வாழ்வில் தனிமையும் வெறுமையும் இல்லாததால் எதுவும் எழுதத் தோன்றவில்லை. மன்னிக்க. தனிமை மட்டுமே என்னை எழுதத் தூண்டியுள்ளது. கொஞ்சம் முன்னேறி எல்லா சூழ்நிலைகளிலும் எழுத முற்படுகிறேன்.

கதையையோ கவிதையையோ திறனாய்வு செய்யும் அளவுக்கு நான் ஒன்றும் பெரியவனில்லை. ஆயினும் இத்தனை வருடங்களாக கதை வாசிக்கும் வழக்கம் உள்ளவனாக சிலவற்றை சொல்ல முற்படுகிறேன்.

கதை, அதிலும் சிறுகதைகள் எழுத தனித் திறமை வேண்டும். கதைக்கு முக்கிய பலமே படிப்பவரை நிமிர்ந்து உட்கார வைக்கும் முடிவு தான். கதை ஆரம்பம் முதல் முடிவு சொல்லும் வரை படிப்பவரை குழப்பாமல் அதே சமயம், முடிவினை படிப்பவர் யூகிக்காத வண்ணம் கொண்டு செல்வதே தனி கலை. நான் சில சமயம் முயன்று தோற்றிருக்கிறேன். ஆரம்பம் அசத்தலாய் இருக்கும் முடிக்கத் தெரியாமல் முடிவு சொதப்பி விடும். இம்மன்றத்தில் என் மனதில் பதிந்த கதாசிரியர்கள் மயூவும், ராகவனும். மற்றவரையெல்லாம் குறை சொல்லவில்லை. சில கதைகள் மனதில் பதிந்துவிடும்.

மயூரேசனின் கதைகளின் களங்கள் புதியதாய் இருக்கும். வரும் கதா பாத்திரங்களும், அவர்களின் தமிழும் எனக்கு புதியதாய் இருக்கும். ஆனால் அவரின் கதைகளின் முடிவுகள் மனதின் ஓரமாய் இருக்கும். அவர் தன் சிறுகதைகளில் உணர்வுகளை படம் பிடிக்கும் முறை என்னை மிகவும் கவர்ந்துள்ளது. படிக்கும் போதே நானும் பல சமயங்களில் அதே உணர்வுகளை பெற்றிருக்கிறேன். கொஞ்ச நாள் முன்பு அவர் எழுதிய சிறுகதையும் அதே வகை தான். தன் மகன் செய்த மாடலை பள்ளியில் வைப்பதற்காக, பேருந்து வராத நிலையில் சைக்கிள் கடன் வாங்கி போய்விட முயற்சிக்கும் தகப்பன் உணர்வுகள் அசத்தலாய் விவரிக்கப் பட்டுள்ளது.

அதே மாதிரி தான் ராகவனும். கதா பாத்திர அறிமுகமே ஆவலை ஏற்படுத்தும். அவரின் நடையும் விவரணைகளும் இன்னும் சுவாரஸ்யமாக்கும். எழுதும் போது அவரின் யுக்திகளும் அதிசயிக்க வைக்கும். ஒரு போட்டியில் வென்ற அவர் கதை: கதை ஒரு திருநங்கையைப் பற்றியது. தன்னிலை உணர்வதற்கு முன்னும் , உணர்ந்த பின்னும் அவருக்கு இருவேறு பெயர்கள். அதனால் படிப்பவர்க்கு எந்த சந்தேகமும் வராத வண்ணம் கதையை கொண்டு சென்றிருப்பார். இறுதியில் தான் இருவரும் ஒருவர் என்று தெரிய வரும். அதற்காக அவர் கையாண்ட யுக்தி மெச்சத்தக்கது. எந்த ஒரு வரியுமே பாலை தெரியும் படி முடியாது. உ.தா, பார்த்துக் கொண்டிருந்தான். இதை அவர் கதையில் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தது. இம்மாதிரியான பிரயோகங்களும் படிப்பவர்க்கு உறுத்தாத வண்ணம் எழுதிய திறமை அவருக்கேயுரியது.
மன்னிக்கவும் அமர். நீண்ட நாள் கழித்து எழுதுவதால் அதிகமாய் எழுதிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எதிர்பார்த்தது தான் எழுதுகிறேனா என்று தெரியவில்லை. இன்னும் ஒருவரைப் பற்றி மட்டும்.

அவன் என் நண்பன். என் கூட தான் தங்கியிருக்கிறான். இருவரும் சேர்ந்து அடிக்காத கூத்துகள் இல்லை. என்னமோ தெரியவில்லை. என்னைப் பார்த்து கதை எழுதத் தோன்றியது என்றான். சரி, கதை எழுதுடா என்றேன். உண்மையை சொல்வதாயின் அது அவன் முதல் கதை போன்றே தோன்றவில்லை. அவனுக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தை விவரித்திருந்தான். அவன் வர்ணனைகளும் வசனங்களும் கதையின் ஆரம்பத்தில் அவன் சொல்லியிருந்த ஒரு விஷயத்தை மறக்கச் செய்திருந்தது. முடிவில் அவன் சொல்லி தான் ஞாபகமே வரும். படிப்பவர் கவனத்தை திருப்பி இறுதியில்,அடடா.. இந்த நிலையில் எப்படி இவன்..என்று யோசிக்காம விட்டுட்டோமே என்று தோன்றும். மறுபடியும் மன்னிக்கவும். அவன் சரியென்றால் அந்த கதையை மன்றத்தில் பதிக்கிறேன்.

ஆக கதை பற்றி எழுத சொன்னால் கதாசிரியரை பற்றி எழுதியிருக்கிறேன். இனிமேகேள்வி கேப்பீங்க. :eek::eek:

சுகந்தப்ரீதன்
24-10-2007, 07:52 AM
கோபக்கார அண்ணா..ஆனாலும் ரொம்ப பாசக்கார அண்ணா.. விராடன்..!

நான் மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.(உங்கள் பாஷையில் கோபம்தான் )

நீ மற்றவர்களிற்கு செய்வதையே உனக்கு மற்றவர்கள் செய்தால் ஏற்றுக்கொள்வாயா?
இல்லையென்றால்,
மற்றவர்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறாயோ அதையாவது குறைந்த பட்ஷம் மற்றவர்களிற்கு செய்.

தங்களின் கருத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது... உங்களின் கோபமும் இப்போது எனக்கு விளங்குகிறது... வாழ்த்துக்கள் அண்ணா..!

ராஜா
24-10-2007, 08:26 AM
சும்மா இருந்த என்னை கிளறிப்பார்த்துவிட்டு பாராட்டுகிறீர்களா அமரன்.
ஆகட்டும் ஆகட்டும்.
அமரனையும் கிளரிவிட ஒருத்தன் இல்லாமலா போகப்போகிறான். :lachen001:

அது நீங்களாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது விராடன்..!

விகடன்
24-10-2007, 08:35 AM
ஏன் அந்த ஒருத்தனாக நீங்களே இருங்களே.

அது நீங்களாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது விராடன்..!

ராஜாமார் இருவரும் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? அல்லது பயந்துபோயிருக்கிறீர்களா?
இருவரும் என்னை அனுப்பிவைக்கு முனைகிறீர்களே.

நீங்கள் என்னதான் சொன்னாலும் எந்தலையை சிங்கத்தின் வாய்க்குள் விட்டு சாகசம் காட்டும் நிலையில் நான் இல்லை. ஆகையால் என்னை மன்னித்து இங்கிருக்கும் சிறந்த பலரில் ஒருவரையோ அல்லது அணியினையோ அனுப்பிக்க முயற்சியுங்கள்.

விஜய் பவ.

ராஜா
24-10-2007, 08:35 AM
நன்றி மதி..!

நல்ல கதை எழுதுவதற்கு மட்டுமல்ல.. படிக்கும்போது அது நல்ல கதைதான் என்று இனம்காணவும் ஒரு பிரத்யேகத் திறன் வேண்டும். அது உங்களிடம் உள்ளது.

விரைவில் நண்பர் அனுமதி பெற்று அவர் கதையையும் மன்றத்தில் இடுங்கள்.

விகடன்
24-10-2007, 08:43 AM
மதி நுட்பமாக கதாசிரியர்களைப்பற்றி எழுதி முடித்துவிட்டார்.

பாராட்டுக்கள்.

மதி
24-10-2007, 08:49 AM
நன்றி மதி..!

நல்ல கதை எழுதுவதற்கு மட்டுமல்ல.. படிக்கும்போது அது நல்ல கதைதான் என்று இனம்காணவும் ஒரு பிரத்யேகத் திறன் வேண்டும். அது உங்களிடம் உள்ளது.

விரைவில் நண்பர் அனுமதி பெற்று அவர் கதையையும் மன்றத்தில் இடுங்கள்.

நன்றி..ராஜாண்ணா.
அவனிடம் கேட்டுப் பார்க்கிறேன்.:):)

பூமகள்
24-10-2007, 10:24 AM
எனது நடு நிலைமைக்கு மிக முக்கியமான காரணம் வேறு யாருமில்லை. என்னில் பாதியான என் மனைவி தான்.
எனது தோழி அவளே எனது எதிரியும் கூட
எனது இன்பம் அவளே எனது துன்பமும் கூட

அன்பு S.ராஜா அண்ணா...
மிக அழகான பதில். (நீங்க அமர் அண்ணாவிடமிருந்து தப்பிச்சிட்டீங்க!! நான் இன்னும் தப்பிக்கலையே..!!:traurig001:)
பாராட்டுகள் அண்ணா.
இன்னிக்கி கண்டிப்பா வீட்டில் வடை பாயசத்துடன் அருசுவை உணவு அண்ணி கையால சாப்பிடுவீங்க...!!:icon_b: :D
இவ்வளவு ஐஸ் ஒட்டுமொத்தமா அண்ணி மேல வச்சிருக்கீங்களே???!!!:icon_rollout:
வாழ்த்துகள் அண்ணாவ்..!!

அமரன்
24-10-2007, 10:56 AM
கதையைப்படித்தோமா போனோமா என்று இல்லாமது அதை நன்றாக உள்வாங்கி, ஆசிரியரின் எழுத்து யுக்திகளை ஆராய்ந்து அறிந்து, கதைகளின் வடிவத்தில் கவர்ச்சியை எப்படி புகுத்துவது என்பதை அருமையாக புகட்டி உள்ளீர்கள் மதி. நுட்பம் நிரம்பிய உங்கள் உள்வாங்கும் திறனும் எடை போடும் வன்மையும் அதை செவ்வெனே எழுத்தில்வெளிப்படுத்தும் இலாவகமும் நுகரும் நோக்கும் கலந்தே கேள்வியைக் கேட்டேன். அது கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. உங்கள் வரவுகுறைவின் காரணம் அறிந்தேன். இதுவரை அதை பகிராத உங்கள்மேல் அல்லது பகிர்ந்ததை அறியாத என்மேல் கோபம் ஏற்படுகிறது. இப்போ நலம் என நினைகின்றேன். நன்றியும் பாராட்டும். இனிதே நலம்பெற வாழ்த்தும். உங்கள் நண்பனின் கதையை ஆவலுடன் எதிர்பார்க்கும் அதே வேளை உங்கள் நச் நீதிக்கதைகளையும் எதிர்பார்க்கின்றேன்.

நேசம்
24-10-2007, 11:05 AM
அமரன் அவர்களின் கேள்விகளுக்கு எதிர்பார்த்தது போல் சம்பந்தப்பட்டவர்கள் அருமையான பதிலை தந்துள்ளார்கள். வாழ்த்துக்கள்

யவனிகா
24-10-2007, 06:56 PM
சரளமான, செந்தமிழ் தமிழச்சி என எனக்குள் உங்களைப் பற்றிய ஒரு புறத்தோற்றம் உள்ளது. அதன் அகத்தன்மையையும், காரணத்தையும் சொல்லுங்களேன்

நான் கம்பனுக்குப் பக்கத்து வீடோ, பாரதிக்கு எதிர் வீடோ இல்லை...இருந்தாலும் தமிழ் எனக்குத் தாய் வீட்டுச் சீதனம். தாய்ப் பால் குடித்த நாட்கள் நினைவில் இல்லை...மூச்சு முட்ட தமிழ்ப்பால் குடித்த நாட்களை மறப்பதற்கில்லை.

தாய், தந்தை, ஒரே தங்கை அனைவரும் தமிழ்ப் பண்டிதர்கள்,தமிழாசிரியர்கள். தொல்காப்பியத்தை கடமடிக்க நேர்ந்தால், தமிழை வெறுக்க வேண்டி வருமோ என்று கல்லூரியில் அறிவியல் துறையைப் படித்தேன்.

தந்தை பணியாற்றிய அதே பள்ளியில் தான் நானும் ஆரம்பப் படிப்பு படித்தேன்.ஆறு வயதில் மேடையேறி "நெஞ்சு பொறுக்குதிலையே...இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்..."என்று தந்தை எழுதித் தந்ததை மனனம் செய்து, சின்னக்கைகளை காற்றில் ஆட்டி ஆட்டிப் பேசிய
போது, பெருமிதத்தில் மலர்ந்த என் தந்தையை, கடைசியாகப் நான் பார்த்தது அன்றுதான்.

தந்தையை இழந்த எனக்கும், என் தங்கைக்கும், தமிழ்தான் சோறு போட்டது...ஆம் எங்கள் தாய் தமிழாசிரியை, அவள் வகுப்பில், தொண்டை வரள, கால்கள் துவளப் பாடமாக எடுத்த தமிழைத் தான் நாங்கள் உண்டோம், உடுத்தினோம். தமிழ் மட்டுமே நிராதரவாக நின்ற மூன்று ஜீவன்களின் உயிரைக்காத்தது.

அம்மா வயிற்றில் நான் பாப்பாவாக இருந்தபோதே தமிழுக்கும் எனக்குமான பந்தம் தொடங்கி விட்டது என்றே நினைக்கிறேன். அம்மா தமிழ் வகுப்பில் பாடம் எடுக்கும்போதே வயிற்றிக்குள் இருந்தபடியே நான் பாடம் கேட்பேனாம்.(என்னடா ஒப்புக்கு ஒரு கேள்வி கேட்டா, இதுதான் சாக்குன்னு அபிமன்யு ரேஞ்சுக்குப் பேசறாளேன்னு தான்னு நினைக்கிறீங்க) ஆனா அது உண்மைதான்...,பாரதி பத்தி பாடம் எடுத்தா, வயிற்றுக்குள் பிள்ளை தன்னால ஆட ஆரம்பிச்சிடும்ன்னு அம்மா சொல்வா. பாரதியை பத்தி கவிதையை, பத்தாம் வகுப்பிற்கு எடுத்துக்கொண்டிருக்கும் போதுதான் வலியெடுத்து நான் பிறந்தேனாம்.என்ன ஒரு கல்வெட்டில் பதிக்க வேண்டிய பிறப்பு?

ஐந்து ஆறு வயதில் நான் இருக்கையில், அப்பா நண்பர்களிடம் பேசும், கம்யூனிசமும், மார்க்ஸிஸமும்,பாரதியும், பைரனும், கீட்ஸ்ஸும் எனக்கு புரியாதுதான். ஆனாலும் வாய் பிளந்து கேட்பேன். அப்போது எனக்குப் புரிந்தது ஒன்றுதான், புத்தகங்கள் தான் போற்றப்பட வேண்டிய பொக்கிஷங்கள் என்று...

மூன்றே அறைகளுள்ள அந்த வீட்டில் நற்றிணையும்,குருந்தொகையும், நடுனெல் வாடையும் இன்னும் எத்தனை தமிழ் இலக்கியங்கள் உண்டோ அத்தனையும் எங்களுக்கு மேலாக இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும்.ஒவ்வொரு சரஸ்வதி பூஜைக்கும் புத்தகங்களுக்கு பொட்டிட்டே கை சடையும் எனக்கும் என் தங்கைக்கும்..
படித்தவை வெகுசிலவே...தூசி துடைத்து பத்திரப்படுதியவை தான் அதிகம்...போனவருடம் தான் விடுமுறைக்குப் போன போது எல்லா புத்தகங்களையும் அப்பாவின் நினைவாக அவரின் கம்யூனிஸ்ட் மன்றத்திற்கே கொடுத்து விட்டோம்...

என்னுடைய சமூகத்தில் ஆண்கள் பேசுவதற்காகவும், பெண்கள் கேட்பதற்காக மட்டுமே
படைக்கப் பட்டவர்கள். பெண்கள் முக்காடிட்டு, முகத்தை மூடி, அடுக்களையிலே அமர்ந்திருப்பதிலேயே திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். இதில் நான் தேடாது கிடைத்த மாமணியாய் எனக்குக் கிடைத்த கணவர் வித்தியாசமானவர். முற்போக்குச் சிந்தனை உள்ளவர்.என் தமிழார்வம் தொடர அவரும் ஒரு காரணம் தான்,

இதில் ஒரு சுவாரசியமான விசயம் என்ன என்றால், என் கணவரும் என் அம்மாவிடம் தான் பள்ளி இறுதி வரை தமிழ் பயின்றார். வகுப்பை கட் அடிச்சிட்டு போய் பிரம்பால் எல்லாம் ஜோராக அடி வாங்கியிருக்கிறார்.அந்த பழியைத் தீர்க்கத்தான், தமிழ் டீச்சர் பொண்ணு பின்னால அலைஞ்சு திரிஞ்சு உன்னைக் கணக்கு பண்ணினேன் என்பார் நம்பியார் ரேஞ்ஜுக்கு. அன்னைக்கு எருமைமாடேன்னு திட்டின வாயி இன்னிக்கு மருமகனேன்னு கூப்பிடுது இது தாண்டி எனக்கு பெரிய வெற்றி என்பார்.எழுதும் போது அல்லது பேசும் போது ஏங்க இப்படி தமிழை கடிச்சி துப்பரீங்ன்னு கேட்டால், உங்க அம்மாகிட்ட படிச்சவனெல்லாம் இப்படித்தான் தமிழ் பேசுவான்னு நக்கல் வேற. எங்களுடையது, ஒரு விறு விறுப்பான, திருப்பங்கள் நிறைந்த ஒரு காதல் கதை. இன்னுமொரு சந்தர்பத்தில் சொல்கிறேன்.

ஒன்பது மாத பிள்ளைத்தாய்ச்சிப் பெண் என்ன செய்வாள்? மூச்சு வாங்க அயர்சியாக வீட்டில் ஓய்வெடுக்கத்தான் நினைப்பாள்.பிரசவத்திற்கு இன்னும் மூன்றே நாட்கள் இருக்கையில், மைக்கைப் பிடித்துக் கொண்டு பாரதியும் பெண்ணியமும் பேசுவாளா?எனக்குக் கிடைத்தது அந்த வாய்ப்பு. இரண்டாம் ஆண்டு கல்லூரியில் படிக்கும் போதே திருமணம். திருமணத்தின் பின்பும் படிப்பைத் தொடர்ந்தேன், கல்லூரி இறுதி ஆண்டில் சூல் கொண்டேன். படிப்பை விட மாட்டேன் என்று வைராக்கியமாக கல்லூரி சென்றேன். டீன்களிடம் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்கிப் படித்தேன்.

வருடா வருடம் நான் மைக் பிடித்தால் தான் பாரதி விழா களைகட்டும் கல்லூரியில், அந்தவருடம், வில்லனாய் வயிற்றுக்குள் என் மகன்...அம்மா ரெடியா இரு, எப்ப வேணா வெளியே வருவேன் என்று குதியாட்டம் போட்டுக் கொண்டு. இந்த நேரம் உணர்ச்சிகரமாக பாரதி பற்றி நான் பேசினால் எப்படி இருக்கும்? பார்த்துக் கொண்டிருந்த விரிவுரையாளர்கள் எல்லாம் ஆச்சர்யத்தின் உச்சிக்குப் போய் அங்கிருந்து தொபுக்கடீர் என்று குதித்து அடிபடாமல் தப்பித்தது பெரிய விசயம் தான்.அன்று விழாவிற்கு தலைமை தாங்கியவர் சொன்னார் "பாரதியின் புதுமைப் பெண்ணைப் பற்றிப் படித்திருக்கிறேன்...ஆனால் இன்றுதான் பார்த்தேன்" என்று. (கால் தரையில் பாவவில்லை எனக்கு, ஓரடி தரையிலிருந்து எழும்பி நடந்தேனாம், என்ன ஒரு பந்தா!)

ஆறாம் வகுப்பு படிக்கும் போது ராஜேஷ் குமாரில் ஆரம்பித்து அப்படியே மெல்ல,மெல்ல ஜெயகாந்தன், மேத்தா,சுஜாதா,பாலகுமாரன் என்றெல்லாம் படிக்க ஆரம்பித்தேன். சுண்டல் மடித்து வரும் பேப்பர் உட்பட தமிழில் என்ன எழுதியிருந்தாலும் படிப்பேன். என் வீட்டருகே லெண்டிங் லைப்ரரி வைத்தால் ஒஹோ என்று பிஸினஸ் பிக் அப் ஆகும் வைத்தவருக்கு.

இப்படியெல்லாம் படித்துக் கொண்டிருந்த எனக்கு, சவூதி வந்தவுடன் கண்ணைக்கட்டி காட்டில் விட்ட கதைதான்.கிடைக்கும் ஒரு ஆனந்தவிகடனை ஒவ்வொரு பக்கமாக முகர்ந்து, ஒருவாரம் வைத்து படிப்பேன், மொத்தமாக படித்தால் ஒருமணி நேரத்தில் புத்தகம் தீர்ந்து விடுமே!என்ன கொடுமை யவனி இதுன்னு அமரு கண்ணில் தண்ணி வர்றது தெரியுது!

இப்படியே ஐந்து ஆண்டுகள் கழிந்த நிலையில் தாமதமாகத்தான் தமிழ் மன்றம் பற்றித் தெரிந்து, இணைந்து கிறுக்கிக் கொண்டிருக்கிறேன். திடீரென நிகழும் அற்புதங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் என் வாழ்வில் திடீரென நிகழ்ந்த அற்புதம் தான் இந்த தமிழ் மன்றம். அற்புதங்கள் கூட நேரம், காலத்திற்காகக் காத்திருக்குமோ? இல்லை என்றால் ஏன் தமிழ் மன்றம் முன்பே என் வாழ்வில் வரவில்லை? எது எப்படியோ இன்று நான் நிறைவாய் இருக்கிறேன்.

தமிழுக்கு நான் கடன் பட்டிருக்கிறேன்...எத்தனை கிறுக்கினாலும் இன்னும் வட்டி கூடக்,கட்டி முடித்த பாடில்லை.என்னைக் கட்டையில் வைத்து எரிக்கும் போதுதான் அது தீருமோ.எரிந்த பின் மிஞ்சும் என் சாம்பலிலும் தமிழே மணக்கவேண்டும்.

பின் குறிப்பு: அமரன் ஒத்த வரியில கேட்ட கேள்விக்கு வாழ்க்கை வரலாறே எழுதிட்டனோ? இனி யாரும் யவனிகாட்ட கேள்வின்னு கேட்டு வரமாட்டாங்களே!இருந்தாலும் நன்றி அமரன், உங்கள் கேள்விக்கான பதிலைக் கூறியதில் என்னை நானே புதுப்பித்துக் கொண்ட உணர்வு. இன்று புதிதாய்ப் பிறந்தவள் நான், தினமுமே தமிழ்ப்பால் குடிப்பதனால்.

பூமகள்
24-10-2007, 07:13 PM
அப்பாப்பா..............யவனி அக்கா தமிழால் கருவாகி, தமிழோடு உருவாகி, தமிழாக பிறந்து தமிழ்பால் குடித்து வளர்ந்து தமிழை சுவாசித்து வாழும் பேறு பெற்றவரா????
நினைக்க நினைக்க பூரிப்பும் மகிழ்ச்சியும் அக்காவினை பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் என் முன் காட்டுகிறது. வாழ்த்துகள் யவனி அக்கா.
அத்தகைய புதுமைப் பெண்ணாய் எப்போதும் திகழ உதவும் அண்ணாவையும் வாழ்த்துகிறேன்.
இத்தகைய பேறு பெற்ற அக்காவின் தங்கையானது எனக்குத் தான் பெருமை. நிறைய படையுங்கள் அக்கா. இந்த கத்துக்குட்டியை வளமாக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. மறந்துவிடாதீர்கள் சரியா??:icon_rollout:
அழகான பதிவு..!!
(உங்களின் காதல் திருமண கதையை சுவையான சம்பவங்கள் பகுதியில் பகிருங்கள் அக்கா....ஆவலுடன் காத்திருக்கிறேன்... பூ..!!)

நேசம்
24-10-2007, 07:24 PM
யவனிக்காவின் தமிழுக்கு அவரது குடும்பம் பிண்ணனியாக இருந்து இருக்கிறது.அதிலும் அவரது அப்பா ஒரு கம்யூனிஸ்ட் ஆதரவாளர்.அந்த சூழ்நிலையில் வளர்ந்த யவனிக்கா எழுத்தில் அது தெரிகிறது.

இவருக்கு தளம் அமைத்து கொடுத்த தமிழ் மன்றத்தை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.

மதி
25-10-2007, 03:59 AM
கதையைப்படித்தோமா போனோமா என்று இல்லாமது அதை நன்றாக உள்வாங்கி, ஆசிரியரின் எழுத்து யுக்திகளை ஆராய்ந்து அறிந்து, கதைகளின் வடிவத்தில் கவர்ச்சியை எப்படி புகுத்துவது என்பதை அருமையாக புகட்டி உள்ளீர்கள் மதி. நுட்பம் நிரம்பிய உங்கள் உள்வாங்கும் திறனும் எடை போடும் வன்மையும் அதை செவ்வெனே எழுத்தில்வெளிப்படுத்தும் இலாவகமும் நுகரும் நோக்கும் கலந்தே கேள்வியைக் கேட்டேன். அது கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. உங்கள் வரவுகுறைவின் காரணம் அறிந்தேன். இதுவரை அதை பகிராத உங்கள்மேல் அல்லது பகிர்ந்ததை அறியாத என்மேல் கோபம் ஏற்படுகிறது. இப்போ நலம் என நினைகின்றேன். நன்றியும் பாராட்டும். இனிதே நலம்பெற வாழ்த்தும். உங்கள் நண்பனின் கதையை ஆவலுடன் எதிர்பார்க்கும் அதே வேளை உங்கள் நச் நீதிக்கதைகளையும் எதிர்பார்க்கின்றேன்.
உண்மை தான்.. சில விஷயங்கள் நினைத்தே பார்த்திராத வேகத்தில் நடந்தன... அதனால் தான் யாரிடமும் தெரிவிக்க முடியவில்லை. கோவம் கொள்ளாதீர்.

சுகந்தப்ரீதன்
25-10-2007, 04:23 AM
தமிழுக்கு நான் கடன் பட்டிருக்கிறேன்...எத்தனை கிறுக்கினாலும் இன்னும் வட்டி கூடக்,கட்டி முடித்த பாடில்லை.என்னைக் கட்டையில் வைத்து எரிக்கும் போதுதான் அது தீருமோ.எரிந்த பின் மிஞ்சும் என் சாம்பலிலும் தமிழே மணக்கவேண்டும்.
.
யவனி அக்கா... இதை கிறுக்கல் என்று எதற்காக கிறுக்குதனாமாய் சொல்கிறீர்கள்... உணர்வு கலந்த படைப்பிது... அமர் அண்ணா சொன்னது போல் நான் கண்ட (?) செந்தமிழச்சி நீங்கள்தான்...ஒற்றைவரி கேள்விக்கு ஒரு வாழ்க்கை வரலாறு தந்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...!

ராஜா
25-10-2007, 04:47 AM
யவனியின் பதில் "சோ" வென்று மழை கொட்டித் தீர்த்தது போலிருந்தது..

மழை பெய்து முடித்ததும் அருகில் இருக்கும் பயிர் பச்சையெல்லாம் அழகாகத் தோன்றுவது போல் அவர் விவரித்த சம்பவங்களும் வெகு அழகு..!

நெடுநல் வாடை பற்றி இக்காலத் தலைமுறை பேசுவது இனிமையாய் இருக்கிறது.

யவனி.. வெறும் விளையாட்டுப்பெண் என்று நினைத்த உங்களிடம் இவ்வளவு சிறப்புக்கள் இருப்பது கண்டு உங்கள் பால் மதிப்பு கூடுகிறது..

விகடன்
25-10-2007, 05:43 AM
யவனிகாவின் சுயசரிதைப் புத்தகத்திலிருந்து கிடைக்கப்பட்ட ஒரு தாளை படித்த உணர்வு. இதற்கு முன்னும் பின்னும் என்ன என்ன நடந்திருந்தது நடக்கப்போகிறது என்பதை அறிய ஆவல்தான். அதை அமரின் புண்ணியத்தால் இனிவரும் கேள்விக்கணைகளின் உதவிகொண்டு அறிந்திடலாம் என்று நினைக்கிறேன்.

வரிக்கேள்விக்கு வகைவகையாய் பதில் தந்த யவனிகாவிற்கு பாராட்டுக்கள்

யவனிகா
25-10-2007, 06:32 AM
ஒற்றைவரி கேள்விக்கு ஒரு வாழ்க்கை வரலாறு தந்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...!
நன்றி சுகந்தன். அதிகமாக எழுதியதால், படிப்பவருக்கு அலுப்புத் தட்டுமே, என்று யோசித்தப*டியே தான் எழுதினேன். இருப்பினும் முழுவதுமாகப் படித்து பின்னூட்டமிட்டமைக்கு நன்றி.

நெடுநல் வாடை பற்றி இக்காலத் தலைமுறை பேசுவது இனிமையாய் இருக்கிறது.

யவனி.. வெறும் விளையாட்டுப்பெண் என்று நினைத்த உங்களிடம் இவ்வளவு சிறப்புக்கள் இருப்பது கண்டு உங்கள் பால் மதிப்பு கூடுகிறது..

எத்தனை தலைமுறை போனாலும் அகநானூறு போன்றவை அலுக்கவே அலுக்காது அண்ணா,எனக்குக் கொஞ்சம் அலர்ஜி தொல்காப்பியம் மட்டுமே...அதுவும் என் தங்கை கடம் போடுவாள் பாருங்கள், பக்கத்தில் இருந்து பார்ப்பவர்க்கு வெறுத்துப் போய்விடும்.நான் இன்னும் விளையாட்டுச் சிறுபெண் தான் அண்ணா,மதிப்பு, மரியாதை எல்லாம் கூடினால் தன்னாலே தள்ளி நிற்கச் சொல்லும்,நீங்கள் என்னிடமிருந்து தள்ளி நிற்பதை நான் விரும்பவில்லை...

ஆ!பத்தில் நீங்கள், உங்கள் மகனுடனான உறவை கவிதை போல விவரித்திருந்தீர்கள்.அதைப் படித்த போது,பலவருடங்களுக்கு முன் நான் இழந்த என் தந்தையை நினைத்தேன்...பொதுவாகவே பெண்பிள்ளைகள் தந்தை மீது பாசம் வைப்பதும், அப்பாவும் மகன்களை விடவும், மகள்களை சற்று அதிகமாகவே நேசிப்பதும் இயல்பே.அந்தப் பேறு எனக்குக் கிட்டியதில்லை.அதற்காக நான் மிகச் சமீபத்தில் மிகவும் வருந்தியது உங்களது பதிப்பைப் படித்த போதுதான்.நெகிழ்த்திவிட்டீர்கள் அண்ணா! அதனால் இந்த மதிப்பெல்லாம் என்மீது வைக்காமல் உரிமையுடன் நீங்கள் பழகுவதையே நான் எதிர்பார்க்கிறேன்.

வரிக்கேள்விக்கு வகைவகையாய் பதில் தந்த யவனிகாவிற்கு பாராட்டுக்கள்

நன்றி விராடன் அவர்களே!ஆ!பத்து!ல் உங்களை படித்ததில் நீங்கள் கொஞ்சம் கோவக்காரரோ என்று பயந்தேன்.இரண்டு முறை அதற்குப் பின்னூட்டம் பதிக்க பாதி அடித்தும்,மனதிற்கு சரி வரவில்லை என்று பதியாமலேயே விட்டுவிட்டேன்.மெதுவாக யோசித்துப் பதியலாம் என்று இருந்தேன்.நீங்கள் உண்மையிலேயே கோபக்காரரா?அப்படி இல்லைதானே!ஆனால் கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமும் இருக்கும்.சரியா நான் சொல்வது?

விகடன்
25-10-2007, 06:46 AM
நீங்கள் உண்மையிலேயே கோபக்காரரா?அப்படி இல்லைதானே! இதை தெளிவுபடுத்த வேண்டுமாயின் ஓவியனோ, அன்புரசிகனோ, கம்பனோதான் வரவேண்டும்.

ஆனால் கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமும் இருக்கும்.சரியா நான் சொல்வது?

அப்படியா செய்தி!!!
இப்படி ஒரு எழுதப்படாத ஜோதிடம் இருக்குமாகில், நான் மிகவும் சாந்தமானவன். :lachen001::lachen001::lachen001:

அன்புரசிகன்
25-10-2007, 07:14 AM
யவனிகா வின் பதிலை படிக்கும் போது தமிழைப்பொறுத்த வரையில் நான் எவ்வளவு கீழ்மட்டத்தில் இருக்கிறேன் என்று தெரியவந்துள்ளது.....
பாராட்டுக்கள் அக்கா...

யவனிகா
25-10-2007, 07:34 AM
யவனிகா வின் பதிலை படிக்கும் போது தமிழைப்பொறுத்த வரையில் நான் எவ்வளவு கீழ்மட்டத்தில் இருக்கிறேன் என்று தெரியவந்துள்ளது.....
பாராட்டுக்கள் அக்கா...

நான் ரொம்ம மேல் மட்டம்ன்னு காட்டுமாறு பதில் அளித்துவிட்டேனா, தமிழைப் பொறுத்தவரை வட்டம், கட்டம், சதுரம் எல்லாம் கிடையாது.அதுசரி,என்னை அக்கா என்று அழைக்கும் கூட்ட*ணியில் நீங்க*ள் எப்ப* சேர்ந்தீர்க*ள்?

பூமகள்
25-10-2007, 07:41 AM
அப்பாப்பா..............யவனி அக்கா தமிழால் கருவாகி, தமிழோடு உருவாகி, தமிழாக பிறந்து தமிழ்பால் குடித்து வளர்ந்து தமிழை சுவாசித்து வாழும் பேறு பெற்றவரா????
நினைக்க நினைக்க பூரிப்பும் மகிழ்ச்சியும் அக்காவினை பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் என் முன் காட்டுகிறது. வாழ்த்துகள் யவனி அக்கா.
அத்தகைய புதுமைப் பெண்ணாய் எப்போதும் திகழ உதவும் அண்ணாவையும் வாழ்த்துகிறேன்.
இத்தகைய பேறு பெற்ற அக்காவின் தங்கையானது எனக்குத் தான் பெருமை. நிறைய படையுங்கள் அக்கா. இந்த கத்துக்குட்டியை வளமாக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. மறந்துவிடாதீர்கள் சரியா??:icon_rollout:
அழகான பதிவு..!!
(உங்களின் காதல் திருமண கதையை சுவையான சம்பவங்கள் பகுதியில் பகிருங்கள் அக்கா....ஆவலுடன் காத்திருக்கிறேன்... பூ..!!)

யவனி அக்கா..... உங்க பதிவுக்கு முதலாவதாய் வந்து போட்ட என் பின்னூட்டத்தை பார்க்கலையா??? ஏன் பதிலே காணோம்???? :traurig001:

அமரன்
25-10-2007, 07:47 AM
படிக்கிறேன் படிக்கிறேன் படிப்பு வரல்லை என்று சினிமாப்பாடல் ஒன்றை உல்டாபண்ணி அம்மாவிடம் சொன்னபோது முதுகில் சுளீர் என்றது. கன்னத்தில் பளார் என்றது. அப்போது பார்த்து வந்த என்காவலர்கூட்டம் (மூன்று சித்தி+இரு மாமா+தாத்தா+பாட்டி) அம்மாவைத் தடுத்தாங்க. அப்பாடா தப்பிச்சேன் என்று நினைக்க ஒட்டிமொத்தமாக பிரம்பை எடுத்து "அடி..ஆனால் முட்டிக்கு கீழே அடின்னு" லா அன் ஆர்டர் போட்டுவிட்டு ஓரமாக ஒதுங்கிநின்று வேடிக்கை பார்த்தாங்க. அப்போது புரிந்த படிப்பின் அருமை மீண்டும் இப்போது.. நன்றி யவனிகா.

உங்கள் பதிவுகளின் வாசனைக்குக் காரணம் கருவில் நீங்கள் தரித்தது முதல் சுவாசமான தமிழும் வசிக்கும் ஒவ்வொரு நொடியும் வாசித்து கிரகிக்கும் தன்மையும் என்பதை அறிந்து ஆனந்தம் மேலோங்க அதற்குக் கீழே ஆதங்கமும்.

வாழ்வின் 90 சதவீத காலத்தில் வாசிப்பு எனக்கு பாகற்காய் சாறுமாதிரி. புத்தகங்கள் இருந்தபோது நான்நாடவில்லை.. நாட்டம் ஏற்பட்டபோது புத்தகங்களைக் காண்பது அரிதாகிறது. எவ்வளவு நட்டம். உங்களைப்போன்றவர்களின் பதிவுகளைப் வாசித்து, உள்வாங்கி, கிரகித்து விட்டதை எல்லாம் பிடிக்க வழி அமைத்த மன்றுக்கு உங்களுடன் சேர்ந்து நானும் நன்றி நவில்கிறேன்.

பாராட்டுதலுடன் கூடிய நன்றி யவனிகா.

அமரன்
25-10-2007, 07:54 AM
யவனிகா வின் பதிலை படிக்கும் போது தமிழைப்பொறுத்த வரையில் நான் எவ்வளவு கீழ்மட்டத்தில் இருக்கிறேன் என்று தெரியவந்துள்ளது.....
பாராட்டுக்கள் அக்கா...
அண்ணே...! யவனிகா உங்களுக்கே அக்கா என்றால் எனக்கு???
தமிழில் ஏதுங்க கீழ்மட்டம் உயர்மட்டம்.
வேணும்னால் கீழ்மாடம் மேல்மாடம்னு சொல்லுங்கள்..
இரண்டிலும் வெளிச்சம் கிடைக்கும்ல..
ஆனாலும் உங்கள் திறமை உங்களுக்கே தெரியலைண்ணா.

யவனிகா
25-10-2007, 08:05 AM
நீ கேப்பன்னு நெனைச்சேன், அரிசின்னு, கேட்டு நிரூபிச்சிட்ட.பூவு.உனக்குத்தான் முதலில் பின்னூட்டத்துக்கு நன்றுயூட்டம் குடுக்க தட்டச்சில் பதிந்து கொண்டிருந்தேன்,வேலை குறுக்கிட்டதால்,எழுந்து சென்று விட்டேன்,பதிந்த நினைவில் அப்படியே விட்டு விட்டேன்.மன்னிக்கவும்.
அதுசரி, யாரு கத்துக்குட்டி, நீயா?உன்னிடம் நான் கத்துக்கொள்ளவே ஏராளம் இருக்கிறது பூ..பண்பான, கனிவான, குறும்பான பெண் நீ.உன் பெற்றோரும், மனைவியாக உன்னை அடையப்போகிறவரும்,நீ பெறப்போகும் பிள்ளைகளும் பாக்கியசாலிகள்.எனக்குத் தெரிந்தவரை நல்ல குணங்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்த பெண் நீ, தெரியாமல் இருப்பது எத்தனையோ?(ஒரு நாள் முழுதும் குளிக்காமல் இருப்பது போல) சும்மா விளையாட்டுக்கு..
நீ சொல்வது போல நான் ஒண்ணும் புதுமைப் பெண் இல்லை. விழாத்தலைவர் சொன்னதைத்தான் நான் எழுதி இருந்தேன். அன்னைக்கு புதுத்துணி போட்டிருந்தேனாம், அதனால் தான் அவர் என்னை புதுமைப் பெண்ணின்னு சொன்னார்னு தோழிகள் அன்னைக்கே வாரிவிட்டார்கள்.
நானும் சாதாரணத்திலும் சாதாரணமானவள்.முணுக்கென்றால் கண்ணில் தண்ணீர் தான் முதலில் நிற்கும்,சுடு சொல் தாங்காதவள்,சண்டை போட்டா வீடே சும்மா அதிருமில்ல!இப்படியாக எல்லா சாதாரண பெண்ணிற்கும் உள்ள குணங்கள் தான் எனக்கும் உள்ளன,உனது பின்னூட்டத்தில் குறிப்பிட்ட படி புதுமைப் பெண், புரட்சிப்பெண்ணு புகழ்ந்து தள்ளி எல்லாரும் பயந்துகிட்டு பத்தடி தள்ளி நின்று பேசப்போறாங்க பாரு!
எனவே தீர்ப்ப மாத்திச் சொல்லுங்க நாட்டாமை!

அன்புரசிகன்
25-10-2007, 08:21 AM
நான் ரொம்ம மேல் மட்டம்ன்னு காட்டுமாறு பதில் அளித்துவிட்டேனா, தமிழைப் பொறுத்தவரை வட்டம், கட்டம், சதுரம் எல்லாம் கிடையாது.அதுசரி,என்னை அக்கா என்று அழைக்கும் கூட்ட*ணியில் நீங்க*ள் எப்ப* சேர்ந்தீர்க*ள்?

நீங்கள் தவறாக புரிந்துகொண்டீர்கள் என்று நினைக்கிறேன்... நான் கூறவந்தது... இதுவரை சில தமிழ் புத்தகங்கள் தான் வாசித்திருக்கிறேன்.... (அம்புலிமாமா கோகுலம் ராணிக்கமிக்ஸ் லயன் கமிக்ஸ் கழகக்கதைக்கோவை.... அடிக்க வந்திடாதீங்க.. இப்படியானவை தான் வாசித்திருக்கிறேன்.)

உங்களைப்போல் பெரிய புத்தகங்கள் வாசிக்க ஆசை. ஆனால் பொறுமை தான் ரொம்ப குறைவு...

அக்கா என்று கூப்பிடுவதில் என்ன பிரச்சனை... அதனால் எனது வயதைக்குறைக்கும் எண்ணம் இல்லை.... கூப்பிடனும் போல தோணியது.. அவ்வளவே...

அண்ணே...! யவனிகா உங்களுக்கே அக்கா என்றால் எனக்கு???
தமிழில் ஏதுங்க கீழ்மட்டம் உயர்மட்டம்.
வேணும்னால் கீழ்மாடம் மேல்மாடம்னு சொல்லுங்கள்..
இரண்டிலும் வெளிச்சம் கிடைக்கும்ல..
ஆனாலும் உங்கள் திறமை உங்களுக்கே தெரியலைண்ணா.

உங்களின் ஒரு கேள்விக்கு பதில் கொடுத்தாச்சு....

நீங்களும் வேணும் என்றால் அக்கா என்று கூப்பிடுங்கள்...
உங்க வயதை குறைக்க நினைப்பது தவறு.... :D

அன்புரசிகன்
25-10-2007, 08:24 AM
நீ கேப்பன்னு நெனைச்சேன், அரிசின்னு, கேட்டு நிரூபிச்சிட்ட.பூவு.உனக்குத்தான் முதலில் பின்னூட்டத்துக்கு நன்றுயூட்டம் குடுக்க தட்டச்சில் பதிந்து கொண்டிருந்தேன்,வேலை குறுக்கிட்டதால்,எழுந்து சென்று விட்டேன்,பதிந்த நினைவில் அப்படியே விட்டு விட்டேன்.மன்னிக்கவும்.

இப்பவெல்லாம் பூமகளுக்கு பின்னூட்டம் போடாமல் விட்டுவிட்டு சாக்குப்போக்கு சொல்லியே தப்பிக்கிறாய்ங்க.... :lachen001: :D

எனக்கு தெரிந்து இது 2வது...

பூமகள்
25-10-2007, 08:33 AM
இப்பவெல்லாம் பூமகளுக்கு பின்னூட்டம் போடாமல் விட்டுவிட்டு சாக்குப்போக்கு சொல்லியே தப்பிக்கிறாய்ங்க.... :lachen001: :D
எனக்கு தெரிந்து இது 2வது...
வந்துட்டார்யா...:rolleyes: கணக்கு எடுக்க....!! :p :aetsch013:
ஆமா...தெரியாமதான் கேக்குறேன் ரசிகன் அண்ணா????:sport-smiley-018: கணக்கு எடுத்து விஜயகாந்த் ஸ்டைலில் ஏதும் அறிக்கை விடப்போறீங்களா???:music-smiley-012:
மன்றத்து மக்களே ஜாக்கிரதையா இருங்க அப்பூ...!!:icon_clap:
புள்ளிவிவர பெருமாளா ஒருத்தர் ஆயிட்டிருக்கார்...!!:082502now_prv: கவனம்..!!:icon_hmm::icon_tongue:

அன்புரசிகன்
25-10-2007, 08:43 AM
வந்துட்டார்யா...:rolleyes: கணக்கு எடுக்க....!! :p :aetsch013:
ஆமா...தெரியாமதான் கேக்குறேன் ரசிகன் அண்ணா????:sport-smiley-018: கணக்கு எடுத்து விஜயகாந்த் ஸ்டைலில் ஏதும் அறிக்கை விடப்போறீங்களா???:music-smiley-012:

நல்லதுக்கு காலம் இல்லை... ஆதரவா பேசினாக்கூட குற்றம் பிடிக்கிறாங்க.... கால வாரிவிடுறவங்களத்தான் பிடிக்குமாம்... என்ன செய்ய.... நீங்கள் விராடனின் 3வது ரகம்... :D :D :D

யவனிகா
25-10-2007, 08:47 AM
அண்ணே...! யவனிகா உங்களுக்கே அக்கா என்றால் எனக்கு???
.

இப்படியெல்லாம் வேற கிளம்பியிருக்கீங்களா?அம்மா பாட்டின்னு கூப்பிட யாரையாவது தயார் செய்ய வேண்டியது தான? உங்கள் பின்னூட்டம் படித்தேன்,பாராட்டுகளுக்கு நன்றி,என்ன தான் படித்தாலும் கற்றது கை மண் அளவுதான். உங்கள் பாராட்டுகளைப் பார்க்கும் போது எனக்கு பயம் தான் ஏற்படுகிறது,அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டேனோ என்று!

பூமகள்
25-10-2007, 08:47 AM
நீ கேப்பன்னு நெனைச்சேன், அரிசின்னு, கேட்டு நிரூபிச்சிட்ட.பூவு.உனக்குத்தான் முதலில் பின்னூட்டத்துக்கு நன்றுயூட்டம் குடுக்க தட்டச்சில் பதிந்து கொண்டிருந்தேன்,வேலை குறுக்கிட்டதால்,எழுந்து சென்று விட்டேன்,பதிந்த நினைவில் அப்படியே விட்டு விட்டேன்.மன்னிக்கவும்.
அதுசரி, யாரு கத்துக்குட்டி, நீயா?உன்னிடம் நான் கத்துக்கொள்ளவே ஏராளம் இருக்கிறது பூ..பண்பான, கனிவான, குறும்பான பெண் நீ.உன் பெற்றோரும், மனைவியாக உன்னை அடையப்போகிறவரும்,நீ பெறப்போகும் பிள்ளைகளும் பாக்கியசாலிகள்.எனக்குத் தெரிந்தவரை நல்ல குணங்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்த பெண் நீ, தெரியாமல் இருப்பது எத்தனையோ?(ஒரு நாள் முழுதும் குளிக்காமல் இருப்பது போல) சும்மா விளையாட்டுக்கு..
அதானே... பார்த்தேன்... என் அக்காவாவது எனக்கு பதிலிடாமல் விடுவதாவது...!!
வேலை பளுவில் கண்ணில் படவில்லையோ என்று நினைத்தேன்..!!
அதற்காக இப்படி ஒரு ஐஸ் மழையை பொழிகிறீரே நியாயமா அக்கா??
ஏற்கனவே இங்கு மழை வந்து ஜலதோசம் வந்துவிட்டது.

நீ சொல்வது போல நான் ஒண்ணும் புதுமைப் பெண் இல்லை. உனது பின்னூட்டத்தில் குறிப்பிட்ட படி புதுமைப் பெண், புரட்சிப்பெண்ணு புகழ்ந்து தள்ளி எல்லாரும் பயந்துகிட்டு பத்தடி தள்ளி நின்று பேசப்போறாங்க பாரு!
எனவே தீர்ப்ப மாத்திச் சொல்லுங்க நாட்டாமை!
இந்த பூவின் பஞ்சாயத்தில் அதெல்லாம் தீர்ப்பு ஒரு தடவை சொன்னா சொன்னது தான்... மாத்தவே முடியாது அக்கா ஹீஹீ..!! :D:D
உங்களைப் போலவே எனக்கும் பல அறிய தமிழ் இலக்கிய இலக்கணங்களை கரைத்துக் குடிக்க ஆசை. ஒரு தமிழாசிரிய குடும்பத்தில் பிறந்ததால் அந்த வரம் உங்களுக்கு பிறப்பிலேயே அமைந்துவிட்டது. எனக்கு தெரியும் என்ற மிகச்சில விசயங்கள் கூட உண்மையில் எனக்கு தெரியாது என்று உங்கள் பதிவு பார்த்த பின் தான் உணர்ந்து வெட்கினேன்.
யவனி அக்காவை மன்றத்தின் மூலம் கிடைக்க பெற்றதற்கு தமிழ் மன்றத்துக்கு நன்றிகள் சொல்ல கடமைப்பட்டிருக்கேன்.

அமரன்
25-10-2007, 08:53 AM
இப்பவெல்லாம் பூமகளுக்கு பின்னூட்டம் போடாமல் விட்டுவிட்டு சாக்குப்போக்கு சொல்லியே தப்பிக்கிறாய்ங்க.... :lachen001: :D
எனக்கு தெரிந்து இது 2வது...
நம்ம பூதானே.. எப்பவும் பதில் போடலாம் என்பதுதான் காரணம். நீங்கள் ஏன் அதைக் காரம் ஆக்குகின்றீர்கள். வரட்டா ரசிகரே..!:D:D:D

யவனிகா
25-10-2007, 08:53 AM
அக்கா என்று கூப்பிடுவதில் என்ன பிரச்சனை... அதனால் எனது வயதைக்குறைக்கும் எண்ணம் இல்லை.... கூப்பிடனும் போல தோணியது.. அவ்வளவே...:D
அப்படியா,அன்பு ரசிகனின் ஆசையை நிறைவேற்றாவிட்டால் எப்படி?நல்லா சத்தம் போட்டு அக்கான்னு கூப்பிடுங்கப்பா...நானும் காது குளிரக் கேக்கறேன்.

விகடன்
25-10-2007, 08:57 AM
தெரியாமல் இருப்பது எத்தனையோ?(ஒரு நாள் முழுதும் குளிக்காமல் இருப்பது போல) சும்மா விளையாட்டுக்கு..

என்னது!!!
விளையாட்டுக்காக ஒருநாள் முழுவதும் குளிக்காமல் இருப்பது பூமகளின் பழக்கமா!!!.....?

இதென்னது?
புதுவிதமான விளையாட்டாக அல்லவா இருக்கிறது...

ம்ம்ம்ம்

ஆகட்டும் ஆகட்டும்.

இப்போது பூமகளின் முறை.:-

ஏதாச்சும் யவனிகாவின் விளையாட்டுக்களை எடுத்து விடுங்க பூமகள்...

நாராயணா...
நாராயணா...
நாராயணா...

விகடன்
25-10-2007, 09:00 AM
அப்படியா,அன்பு ரசிகனின் ஆசையை நிறைவேற்றாவிட்டால் எப்படி?நல்லா சத்தம் போட்டு அக்கான்னு கூப்பிடுங்கப்பா...நானும் காது குளிரக் கேக்கறேன்.

அதெப்படி??
அன்பு ஆசை தீர சத்தம் போட்டு கூப்பிட்டால் காது குளிர கேற்பீர்களோ??:confused:

அதுதான் நீங்கள் கேற்கும் கடைசி சொல்லாக இருக்கும்..... இந்த ஜென்மத்தில் :lachen001::lachen001::lachen001:

பூமகள்
25-10-2007, 09:00 AM
ஒரு நாரதரின் தொல்லையே மன்றத்தில் தாங்கலை..! (நாரதரே... மன்னிக்கவும்.... சும்மா சொன்னேன்..நாராயணா...!!)
இங்கு பல நாரதர்கள் ஒவ்வொரு ரூபத்தில் வந்து கலகம் ஏற்படுத்தப் பார்க்கிறார்களே????!

ஆனாலும் யவனி அக்காவை பூ என்னிக்கும் விட்டுத்தரவே மாட்டா...!!
ஹீ ஹீ..! விராடன் அண்ணா வாயில் பன்னு கொடுத்திட்டோம்ல...!! :D:D:D

அன்புரசிகன்
25-10-2007, 09:02 AM
ஆனாலும் யவனி அக்காவை பூ என்னிக்கும் விட்டுத்தரவே மாட்டா...!!
ஹீ ஹீ..! விராடன் அண்ணா வாயில் பன்னு கொடுத்திட்டோம்ல...!! :D:D:D

ஓ... இதுதான் வாயில் பன்னு கொடுக்கிறது என்பதா???

விகடன்
25-10-2007, 09:05 AM
ஆனாலும் யவனி அக்காவை பூ என்னிக்கும் விட்டுத்தரவே மாட்டா...!!
ஹீ ஹீ..! விராடன் அண்ணா வாயில் பன்னு கொடுத்திட்டோம்ல...!! :D:D:D
:eek::eek::eek:

ஓ... இதுதான் வாயில் பன்னு கொடுக்கிறது என்பதா???

:lachen001::lachen001::lachen001::lachen001:

lolluvathiyar
25-10-2007, 09:18 AM
5.வாத்தியார்...:
படைப்புகளானாலும் கருத்துகளானாலும் எல்லோருக்கும் பொதுவான பார்வை ஒன்று இருக்கும். உங்கள் பார்வைக்கோணம் பல இடங்களில் வேறுபட்டிருப்பதைக் கண்டிருக்கின்றேன். அது உங்களிடம் எப்படி குடிவந்தது? அதனை எப்படி கட்டிக்காத்து வளர்த்து வருகிறீர்கள்.?

ஆபத்து கேள்வியின் என்னை சிக்க வைத்த அமரனுக்கு நன்றி. என்னுடைய பல பதிப்புகளை கவனித்து தான் இவ்வாரு கேள்வி தொடுத்திருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். உங்கள் கேள்விகளை மூண்று பகுதிகளாக பிரிக்கிறேன்

படைப்புகளானாலும் கருத்துகளானாலும் எல்லோருக்கும் பொதுவான பார்வை ஒன்று இருக்கும்.

கருத்துகள் எல்லாருக்கும் பொதுவான பார்வை ஒன்று இருக்கும் என்பதே சற்று ஏற்று கொள்ள முடியாதது. அனைத்து மனிதர்களும் பல குணம் கொண்டவர்கள். அதை ஆங்கிலத்தில் ஸ்பிலிட் பர்சனாலிட்டி (Split Personality) என்று சொல்வார்கள். அதாவது ஒரு மனிதன் ஒரே சிந்தனையில் இருக்க முடியாது, எந்த குணம் சமூகத்தில் அதிகமாக கான்பிகிறானோ அவனுக்கு அந்த குணம் இருப்பதாக முத்திரை குத்தி விடுவார்கள். ஏ.கா அலுவலகத்தில் அமைதியான குணம் கொண்டவன் வீட்டில் கோபகாரனாக இருப்பான். சில மனிதர்களுக்கு அவை நிமிடத்துக்கு நிமிடம் கூட மாறுபடலாம்.
ஒரு விவசாயி உழவு ஓட்டும் முன் மழை வருமா என்று வானம் பார்ப்பான், மழைக்காக ஏங்குவான். அதே அவன் அறுவடை செய்யும் போது மழை வந்தால் ஏண்டா மழை வந்தது என்று எரிச்சல் படுவான். இந்த மாதிரி ஒரே வெளி செயல்கள் (External Factors) தேவைகளுக்கு தகுந்த மாதிரி மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால் பொதுவான பார்வை என்று ஒன்று மனிதர்களுக்கு இருக்க முடியாது அல்லவா.

உங்கள் பார்வைக்கோணம் பல இடங்களில் வேறுபட்டிருப்பதைக் கண்டிருக்கின்றேன்.

நாய் வேசம் போட்டால் குரைத்து தான் ஆகவேண்டும் என்று ஒரு பழமொழி உண்டு. மன்றத்தில் ஒரு குறிபிட்ட கொள்கையோடு அறிமுகமானவர்கள், அந்த குணத்தை கடைசிவரை கடைபிடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. அதன் விளைவுகளே பார்வைகள், கருத்துகள், படைப்புகள் அமைகிறது. இந்த இடத்தில் நான் சற்று மாறுபடுகிறேன், நான் அதிகம் படைப்பதில்ல, பின்னூட்டம் தான் விடுகிறேன் அப்படி செய்யும் போது முதலில் படைத்தவர்களின் பின்னனியையும் அவர்களுடைய பழைய பதிவுகளையும் மனதில் அதிகமாக ஒப்பிடுவதில்லை. அந்த இடத்தில் அவர் சொன்ன கருத்தை மட்டுமே கவனித்து அதற்க்கு தகுந்தார் போல் கருத்து தருவதால், இடத்துக்கு இடம் என் கருத்துகள் மாறுபடுகிறது. பிறகு எப்படி பொதுவான பார்வை செலுத்த முடியும். சில கருத்துகள் முரன்படும், முரன்பாடும் ஒரு இயற்கையே.

ஒரு சில பதிவுகளை பார்த்தால் நான் ஹிந்து மத வெறியனாக தெரியும்.
ஒரு சில பதிவுகளை பார்த்தால் நான் நடு நிலைவாதியாக தெரியும்.
ஒரு சில பதிவுகளை பார்த்தால் நான் தழிழனாக தெரியும்.
ஒரு சில பதிவுகளை பார்த்தால் நான் தழிழனின் விரோதியாக தெரியும்.
ஒரு சில பதிவுகளை பார்த்தால் நான் நெகட்டிவ் சைக்காலாஜியாக தெரியும்.

அது நான் கருத்து பதிக்கும் இடங்களை பொருத்து அமைவதே தவிர எனக்கு அந்த குணம் என்று குறிப்பாக சொல்ல முடியாது. என் பதிப்புகளை முழவதும் கவனிப்பவர்களுக்கு தெரியும் நான் எந்த குணத்தையும் சாராதவன். மேலும் எனக்கு என்ன தோன்றுகிறது, தெரிகிறது என்று அனைத்தையும் இங்கு பதிக்கவில்லை. நேரம் ஒத்துவராதே.

அது உங்களிடம் எப்படி குடிவந்தது? அதனை எப்படி கட்டிக்காத்து வளர்த்து வருகிறீர்கள்.?

நிரைகுடம் ததும்பாது, குரைகுடம் ததும்பும் என்று சொல்வார்கள், நான் குரை குடம் அரைகுரையாக தெரிந்ததெல்லாம் வைத்து ததும்புகிறேன் அவ்வளவுதான். தெரிந்தவர்கள் கம்முனு இருகிறார்கள்.

பள்ளிபருவத்தில் நான் என் வகுப்பிலேயே மக்கு, படிப்பு வராது, எழுத்து பிழைக்கு நோபல் பரிசு தரலாம் என்பார்கள். விளையாடும் வராது. ஓவியம், பாடல் கவிதை எதுவுமே வராது. என் பள்ளியில் எனக்கு இருக்கும் ஒரே திறமை ஒரேட்டிங்(Orating). குறிப்பாக பட்டி மன்றங்களில் பங்கெடுத்து பேசுவது. ஆனால் அது பள்ளி காலத்து அறிவு தான். கல்லூரியில் ஓரளவுக்கு தான் பங்கெடுப்பேன். சுருக்கமாக சொல்ல போனால் நான் பாடசலைகளில் சைனிங்க் மானவன் இல்லை.

பாடபுக் படிப்பது தான் எனக்கு ஒத்து வராது ஆனால் ஓரளவுக்கு மற்ற புக் படிப்பேன். அப்படியும் நான் அதிகமாக படித்தவனல்ல, ஆனால் விதவிதமாய் படித்தவன் என்று சொல்லலாம். கல்கி, சாண்டில்யன், வைரமுத்து, பாலகுமாரன், Shedney Shelton, Irving Wallace, Shakesphere, Charles Dickens, Osho இப்படி பல எழுத்தாளர்களின் ஒரு சில வற்றை மட்டும் படித்தவன். ஒரு எழுத்தாளரின் அனைத்து புத்தகங்களையும் படித்தேன் என்று சொல்ல முடியாது. 20 வருடங்களாக தி ஹிந்து பேப்பர் படித்து கொண்டிருப்பவன்.

முக்கியமாக அமரர் கல்கி, Irving Wallace இந்த இரண்டு எழுத்தாளர்களும் எனக்கு மிகவும் பிடிக்கும் காரனம் இவர்கள் ஏராளமான கதாபாத்திரங்களை கையாளுவார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும் (அதற்க்கு காரனமும் இருக்கும்) கதாபாத்திரங்களின் குணங்களை கடைசிவரை மாற்றாமல் கொண்டு செல்பவர்கள். பல விசயங்கள் மட்டுமல்லாமல் இவர்கள் கதாபாத்திரங்கள் மூலம் மனோதத்துவங்களை விளக்கியவர்கள். இவர்கள் தான் எனக்கு இஸ்பிரேசன். அதன் விளைவு தான் பல மாதிரி சிந்திக்க முடிகிறது.

இதையெல்லாம் வைத்து அதிகமாக சிந்திப்பேன். கற்பனை செய்வேன். என் சின்ன வயசிலிருந்து இதே குணம், விளைவு இப்படி மாறி மாறி சிந்திப்பது Split Personality ஐ ஆராய்வது. இப்படிதான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம், சிலருக்கு விளையாட்டு, சிலருக்கு சினிமா. இந்த இரண்டுமே எனக்கு ஒத்துவராது நான் விரும்பி படிப்பது உலக அரசியல், தொல்பொருள், வரலாறு. கொஞ்ச எனக்குள் மனோதத்துவ ஆராய்ச்சிகளை செய்து வருவேன்.

மேலும் நீங்கள் சொல்வது என்னிடம் மட்டுமே இருக்கும் ஆற்றல் அல்ல. வக்கீல் தொழிலில் இருப்பவர்கள் கட்சிகாரனுக்காக தான் வேலை செய்ய வேண்டும். நல்லது கெட்டது பார்க்க/ தீர்மானிக்க கூடாது. ஒரே மாதிரி இரு வழக்குகளில் அவன் வேறு வேறு இடங்களிலிருந்து வாதாடுவான். அவன் வாதம் மட்டுமே மன்றத்துக்கு தேவை, அவன் தனிபட்ட குணங்கள் அல்ல.

என்னை போன்ற பல நபர்கள் மன்றத்தில் இருகிறார்கள் என்று நினைகிறேன்.

நேசம்
25-10-2007, 09:34 AM
ஒரு சில பதிவுகளை பார்த்தால் நான் ஹிந்து மத வெறியனாக தெரியும்.
ஒரு சில பதிவுகளை பார்த்தால் நான் நடு நிலைவாதியாக தெரியும்.
ஒரு சில பதிவுகளை பார்த்தால் நான் தழிழனாக தெரியும்.
ஒரு சில பதிவுகளை பார்த்தால் நான் தழிழனின் விரோதியாக தெரியும்.
ஒரு சில பதிவுகளை பார்த்தால் நான் நெகட்டிவ் சைக்காலாஜியாக தெரியும்.

அது நான் கருத்து பதிக்கும் இடங்களை பொருத்து அமைவதே தவிர எனக்கு அந்த குணம் என்று குறிப்பாக சொல்ல முடியாது.

வாத்தியாரின் ப*ல* பின்னூட்ட*ங்க*ளூக்கு நான் முர*ன்ப*டாக* இருந்த*துண்டு.அவ*ருடைய* ப*திவில் ப*ல* விச*ய*ங்க*ள் க*ச*ப்பாக* இருந்தாலும் ம*ன*ம் உண்மை என்று கூறும்.வாத்தியாரின் ப*திலில் அவ*ருடைய* பார்வைகோண*ம் ஏன் ப*ல*வேறு இட*ங்க*ளில் மாறுகிற*து என்ப*தை அறியும்போது,அவ*ர் மிதான* ம*திப்பு என்னிட*த்தில் உய*ர்கிற*து

அமரன்
25-10-2007, 10:08 AM
வாத்தியாரே..! மன்றத்தில் பதியும் சகல பதிவுகளையும் படிப்பது எனது வழக்கம். என்னால் பின்னூட்டமிட முடியும் என்று தோன்றும்போது அங்கே பதிலிடுவேன். இல்லை என்றால் பார்வையிடல் பதிவேட்டில் அடையாளப்படுத்துவதோடு சரி. பதிவுகளின் அடிப்படையில் ஒவ்வொருவரையும் வரையறை செய்துள்ளேன். அதன் அடிப்படையில் அமைந்தவையே இவ்வினாக்கள். சில சிலருக்காக போட்ட கோக்கிகள்.

உழவர்கள் அனைவரும் விதைப்புக்காலத்தில் மழைவேண்டி வேண்டுகிறனர். அறுவடைக்காலத்தில் மழைவேண்டாமென வேண்டுகின்றனர். உழவர்களுக்கான பொதுப்பார்வை இதுவன்றோ. நான் குறிப்பிட்டதும் இதுதான். நீங்கள் சொல்வது இடத்துக்கிடம் வேறுபட்ட வர்ணங்களை காட்டுவது அநேக மாந்தர் இயல்பு. வெளிக்காட்டப்படும் வண்ணத்தை குணமாக்கும் சுற்றியுள்ளோரின் இயல்பு. ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்..

அனைத்து மக்களும் ஒரு விதத்தில் வேடதாரிகளே. அவர்கள் போடும் வேடம் பிறரால் கலைக்கப்படும்போது அவர்கள் நகைப்புக்கிடமாகின்றார்கள். அவர்களாகவே கலைக்கும்போது போற்றப்படுகின்றனர். எதிர்மாறான நிகழ்வுகள் இல்லாமல் இல்லை. அதற்கான நிகழ்தகவு குறைவு. வேடமிடல் ஏற்றுக்கொள்ளலாம் குறிப்பிட்ட நோக்கம் நேரானதாக இருந்தால்.

நீங்கள் நீங்களாக இல்லாமல் வேறு உருவத்தில் கூடு பாய்ந்து பதிலிடுவதை பல இடங்களில் ரசித்திருக்கின்றேன். கூடு விட்டுக் கூடுபாயும் வித்தையை கற்றுக்கொண்ட விதம் அறிந்து பூரிப்புடன் பெருமிதம் அடைகின்றேன். தொடர்ந்து வளர வாழ்த்துகிறேன். தரமான பதிலுக்கு நன்றி நவில்கின்றேன்.

ராஜா
25-10-2007, 10:46 AM
நல்ல பதில்.. நன்றி வாத்தியாரே..!

தாங்கள் பதியும் ஆங்கிலச் சொற்களில் எவ்விதப் பிழையும் இருப்பதில்லை.. ஆனால் தமிழ்ச் சொற்களில் பிழைகள் மலிந்திருக்கும்... அதுவும் ஒரு பதிவில் சரியாக இருக்கும் சொற்கள் இன்னொரு பதிவில் எழுத்துப்பிழைகளோடு இருப்பது கண்டு, பிழைகள் வேண்டுமென்றே நிகழ்த்தப்படுகிறதோ... ஒரு அடையாளத்துக்காக... என்று விளையாட்டாகக் கூட நான் நினைப்பதுண்டு.

நன்றி வாத்தியாரே..!

நுரையீரல்
25-10-2007, 11:30 AM
வாத்தியாரின் கையெழுத்தில் லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார் என்று இருக்கும். அது அவரே எழுதியிருந்தாலும், எனக்கென்னவோ வாத்தியார் மனதில் வந்தால், அவர் ஒரு நல்லவர் என்றே எண்ணத் தோன்றும்.

பூமகள்
25-10-2007, 11:48 AM
வாத்தியாரின் பதில் அவரின் ஆழ்ந்த உள்ளத்திலிருந்து வந்தது போலும். மிக அழகாய் சுயபரிசோதனை நிகழ்த்தி தெளிவாகச் சொல்லியிருந்தார்.
வாத்தியார் நிஜமாவே நல்ல வாத்தியார் தான் என்றும்.

விகடன்
25-10-2007, 11:57 AM
வாத்தியாரின் அவதாரங்களை பார்த்திருக்கிறேன். அது அது அவர்களின் திறமைகள்.
சிலவேளைகளில் நண்பர்களை ஷீண்டி அவர்கள் எண்ணங்களை பதியத் தூண்டும் நோக்கில் முயற்சிப்பதாகவும் தென்பட்டதுண்டு. அமரனின் கேள்விக்கு தகுந்த நேரமெடுத்து விளக்கும் முகமாக தாரளமனதுடன் எழுதியிருக்கிறார். அதற்கு முதற்கண் பாராட்டுக்கள்.

அதனைத் தொடர்ந்து அமரின் கேள்விக்கான விளக்கமும் மன்றத்தில் ஒவ்வொருவரது மேலும் காட்டும் தனிப்பட்ட அக்கறையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

எனக்கு வழங்கப்பட்ட கேள்வியை பார்த்ததுமே அமரின் உள்நோக்கமும் அவரது சந்தேகமும் அறிந்து கொண்டேன்.

தொடர்ந்து ராஜா அண்ணனின் நாசூக்கான வழு சுட்டிக்காட்டல் பாராட்டலிற்குரியது.

சுகந்தப்ரீதன்
25-10-2007, 12:49 PM
வாத்தியாரே... என்ன இதெல்லாம்... சும்மா சொல்லகூடாது.. முதல்ல உங்களை வாழ்த்திடுறேன்.. உண்மைய பேசறதுக்கும் ஒரு ஆள் இருக்காருன்னா அது வாத்தியாருதான்னு நான் சொல்ல மாட்டேன்.. ஏன்னா நீங்களும் அப்ப அப்ப வேசம் போடுறீங்க நீங்க இப்படிபட்டவர்ன்னு உங்களை நீங்களே நிலை நிறுத்திக்க.. ஆனாலும் எந்த ஒரு விசயத்திலும் குறைந்த பட்சம் இரண்டு கோணமாவது இருக்கும்கிறத யாராலும் மறுக்க முடியாது.. எல்லோரும் ஒரே கோணத்துல நோக்கினா நீங்க மாற்று கோணமும் இருக்கும்ன்னு உறுதியா வேற கோணத்துல எல்லா விசயங்களையும் நோக்குறீங்க... அந்த உறுதி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அதனாலதான் நான் உங்கள என்னோட வாத்தியாரா நினைக்கிறேன் சில இடங்களில் உங்க கோணத்த என்னால ஏற்க முடியாவிட்டாலும்... அப்புறம் ராஜா அண்ணா சொன்ன மாதிரி தமிழில் நீங்கள் வேண்டுமென்றே தவறாக எழுதுகிறீர்களோ என்ற எண்ணம் எனக்கும் உண்டு.. அது உண்மையா..?

ஓவியன்
25-10-2007, 01:30 PM
அப்போதெல்லாம் காலையில் எழுந்து காலை கடங்களை முடித்து பல்கலைக்கழகம் போகும் வரை யாராவது ஒருவரை வம்பிற்கு இழுத்து வார்ந்து கொட்டுவோம். என்ன தலைப்பு என்று தெரிந்திருக்காவிட்டாலும் சேர்ந்திடும் கூட்டணி அது.வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு "இந்தா அடுத்த பதில் கையால்த்தான்" என்ற மாதிரியாக இருக்கும். உண்மையாகவே சண்டை பிடிப்பது போலத்தான் தோன்றும். இதெல்லாம் எங்களுக்கும் நடக்கப்படும் கலகலப்பான வாதங்கள்.

அந்த இரண்டு பேரிலே மற்றையவர் நான் தாங்க....!!! :D
இங்கே விராடன் கொடுத்த விளக்கங்களில் மேலதிகமாக ஒன்று நாம் நான்கு பேரும் நமக்குள்ளே எப்போதுமே முட்டி மோதிக் கொண்டே இருப்போம், பெரும்பாலும் மூன்று பேர் சேர்ந்து யாராவது ஒருவரின் காலை வாரிக்கொண்டு இருப்போம், அந்த ஒருவர் அடிக்கடி மாறிக் கொண்டே இருப்பார். அண்மையிலே நடந்த சம்பவங்கள் மூலம் அந்த ஒருவர் தீர்மானிக்கப்படுவார். :) ஆனால் இங்கே முக்கியமான விடயம் ஒன்று உள்ளது, நாம் நமக்குள்ளே மோதிக் கொண்டாலும் அந்த மோதல்களை மனதினுள் வைத்திருப்பதில்லை. "சும்மா" ஒரு விளையாட்டுப் போன்றது தான், அதே நேரத்தில் யாராவது ஒருவர் வந்து நம் நான்கு பேரில் ஒருவருடன் வம்பு வளர்த்தால் அவ்வளவு தான் நான்கு பேரும் ஒன்றாக இணைந்து அந்த வம்பு வளர்த்தவரை உண்டு இல்லை என்று பண்ணிவிடுவோம். நம்மை பிரிக்க முயன்று முடிவில் மனம் நொந்து போனவர்கள் தான் அதிகம். :)

ம்ஹூம்...
அதெல்லாம் ஒரு காலம், மீள ஞாபமூட்டிய விராடனுக்கு நன்றிகள் பல...

தெளிவான பதில், யதார்த்தமான பதில் பாராட்டுக்கள் நண்பா...!! :)

விகடன்
25-10-2007, 01:37 PM
அப்படி மாட்டிய ஒரு அன்பர் மன்றத்திலும் இருக்கவே இருக்கிறார், அவர்தான் அன்பு நண்பர் மயுரேசன்.

ம்ம்ம்ம்

இப்போதெல்லாம் காணக்கிடைப்பதே இல்லை ( நான் வருவதும் குறைவுதான்.)

ஓவியன்
25-10-2007, 02:10 PM
ம்ம்ம்ம்

இப்போதெல்லாம் காணக்கிடைப்பதே இல்லை ( நான் வருவதும் குறைவுதான்.)

மயூ முன்பு போல அடிக்கடி வருவதில்லை தான் விராடா, படிப்பில் கொஞ்சம் மூழ்கிவிட்டதாகக் கூறினார். எல்லாம் நலமே முடித்து மீள வருவார் புதுப் பொலிவுடன். அப்போது இன்னும் நல்லா வாரலாம்...!!! :icon_rollout:

ராஜா
25-10-2007, 04:29 PM
ஆ! பத்து.. கேள்வியாளர் : அமரன்.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""" """"

1. எஸ்.ராஜா.
நகைச்சுவை உணர்வும் எழுத்து வளமும் எழுத்து வன்மையும் விவாததிறனும் கொப்புளிக்கும், நான் படித்த உங்கள் பதிவுகள்மூலம் உங்களை ஓரளவு நிழல்படுத்தி இருக்கிறேன். அதன் அடிப்படையில் ஒரு கேள்வி..
நடுநிலையான கருத்துகளை கூற உங்களால் எப்படி முடிகிறது?

2.யெஜாஸ்தா.
சிந்தனையைத் தூண்டும் கவிதைகள், தப்பான கருத்துகளுக்கு எதிரான பண்பட்ட கருத்துகளை யாரும் மனங்கோணா வண்ணம் வெளிப்படுத்தும் பாங்கு போன்றன நீங்கள் தந்த பதிவுமாலையை தாங்கும் இழைகளாக எனக்குப் படுகிறது..இவ்விரு வளங்கள் ஒவ்வோருவருக்கும் இருக்கவேண்டியது அவசியம்.
பலரிடம் இவற்றைக் காண்பது அரிதாக இருப்பது ஏன்?

3.மதி..
பெயருகேற்றார்போல குளிர்மையானவர். ஆர்ப்பட்டமில்லாது வந்து கதைகளைப்படித்து ஊக்கப்படுத்தும் தங்கமனசுக்காரர். நீதிக்கதைகள், கவிதைகள் என ரசவிருந்து படைத்த உங்கள் படைப்புகளை இப்போதெல்லாம் காணமுடிவதில்லை.
இதற்கு நேரமின்மை இல்லாத ஏதாவது காரணம் உள்ளதா? ஆமெனில் விளக்குக்குங்களேன்? இல்லை எனில் இக்கால சிறுகதைகளில் வெறும் வார்த்தை ஜாலம் மட்டுமே இருக்கு என்று என்னைச் சேர்ந்த சிலர் குறைபடுகின்றனர். இதனை ஆய்வுசெய்யுங்களேன்.

4.யவனிகா
சரளமான, செந்தமிழ் தமிழச்சி என எனக்குள் உங்களைப் பற்றிய ஒரு புறத்தோற்றம் உள்ளது. அதன் அகத்தன்மையையும், காரணத்தையும் சொல்லுங்களேன்.

5.வாத்தியார்...:
படைப்புகளானாலும் கருத்துகளானாலும் எல்லோருக்கும் பொதுவான பார்வை ஒன்று இருக்கும். உங்கள் பார்வைக்கோணம் பல இடங்களில் வேறுபட்டிருப்பதைக் கண்டிருக்கின்றேன். அது உங்களிடம் எப்படி குடிவந்தது? அதனை எப்படி கட்டிக்காத்து வளர்த்து வருகிறீர்கள்.?

6.ஓவியன்..:
நானும் நீங்களும் பல இடங்களில் ஒரே வரிசையிலும் மிகச்சில இடங்களில் எதிரும் புதிருமான வரிசையிலும் இருந்திருக்கிறோம். இதுவரை நேரில் சந்திக்காத நாங்கள் இருவரும், திரைப்படம் ஒன்றின் வசனங்களை அமைக்கும் நிமித்தம் சந்திக்கிறோம். ஒரு நகைச்சுவை, சீரியஸ் கலவைக்காட்சிக்கு வசனம் எழுத ஐடியாக்களை பரிமாறுகின்றோம். அந்தப் பரிமாற்றம் எப்படி இருக்கும் என்பதை என்,உன் பாணி கலந்து சொல்லுங்கள்..

7.அக்னி+அன்புரசிகன்:
மன்றத்தில் கிடைத்த உறவுகளுடனான எனது குரல் தொடர்பாடலில் முதலிரு இடங்களைப் பிடித்தவர்கள் நீங்கள். உங்களிடம் ஒரு வேண்டுகோள்.. என்னைப்பற்றிய உங்கள் இருவரினரும் பார்வையை கவிதையாக இல்லாவிட்டாலும் கவித்துவ நடையில் தாருங்கள்...(இதை வேறு யாருக்கும் மாற்ற ரசிகனுக்கு எனது அன்பான தடை. ஹி...ஹி...ஹி... )

8.விராடன்..:
உங்கள் பதிவுகளில் சுகந்தமும் காரமும் கலந்து இருக்கும். இரண்டுமே எனக்குப் பிடித்தமானவை. அவற்றை இப்பவேல்லாம் காணாது தவிக்கின்றேன். இப்போ பிரச்சினை அதுவல்ல. உங்கள் பதிவுக் காரத்துக்கு ஏதோ ஒரு கோபம்தான் காரணமாக இருக்கும். அது என்ன? அதன் அவசியம் என்ன? அது உங்களுக்கு ஏற்படுத்திய அனுகூலங்களும் பிரதிகூலங்களும் என்ன..?

9. இனியவள்,பூ,மலர்,...:
கவிதை, கதை, நசைச்சுவை என முன்னிருவரும் கலாய்ப்பு கலகலப்பு என்று பின்னொருவரும் செய்யும் அட்டகாசம் மன்றம் அறியும். உங்களிடம் ஏதாச்சும் கேட்கனும்னு மனசு சொல்லிச்சு. ஏன் வம்பை வெற்றிலை வைச்சு வரிஞ்சு கட்டிக் கூப்பிடுகின்றாய் என்று மூளை சொல்லிச்சு. இந்த இழுபறிப்பந்தயத்தில் மனசு கோப்பையை தட்டிப்பெற்று விட்டது.
இக்காலப் பெண்களின் நிலை பற்றி உங்கள் மூவர் கருத்துகளையும் கலப்படமில்லாது தாங்க..

10. அலங்காரமில்லாத எழுத்தால் அலங்கரிக்கும் பதிவுகள் தரும் அன்பு அண்ணா ராஜாவுக்கு ஒரு கணை.. என்னுடன் யாராவது கருத்து முரண்பட நேர்ந்தால் மேற்கொண்டு முரண் வளர்ந்து முள்ளாக முன்னர் நானே விலகி வேடிக்கை பார்ப்பேன். நீங்கள் எப்படி என்பதை சுருக்கமாகச் சொல்லிவிட்டு அது தொடர்பான உங்கள் வாழ்வில் நிகழ்ந்த நகைச்சுவைச் சம்பவம் ஏதாவது சொல்லுங்கள்.
__________________

அமரன்
25-10-2007, 04:53 PM
மக்களே ஏனிந்த தயக்கம்..!
எதிர்பார்ப்பை தூண்டுகிறது உங்கள் சுணக்கம்..!
பூர்த்தி செய்து பூரிப்பை தர விரைந்து வாருங்கள்..!

யவனிகா
25-10-2007, 06:32 PM
5.வாத்தியார்...:
[B][COLOR=black], பாலகுமாரன், Shedney Shelton, Irving Wallace, Shakesphere, Charles Dickens, Osho இப்படி பல எழுத்தாளர்களின் ஒரு சில வற்றை மட்டும் படித்தவன். ஒரு எழுத்தாளரின் அனைத்து புத்தகங்களையும் படித்தேன் என்று சொல்ல முடியாது. 20 வருடங்களாக தி ஹிந்து பேப்பர் படித்து கொண்டிருப்பவன்.
விளைவு இப்படி மாறி மாறி சிந்திப்பது Split Personality ஐ ஆராய்வது. இப்படிதான். நான் விரும்பி படிப்பது உலக அரசியல், தொல்பொருள், வரலாறு. கொஞ்ச எனக்குள் மனோதத்துவ ஆராய்ச்சிகளை செய்து வருவேன்.

.
வாத்தியாரண்ணா, உங்கள் பதில் என்னை, மூக்கின் மேல் விரல் வைக்க வைத்து விட்டது, சிறுபிள்ளைத்தனமா உங்களிடம் கலாய்த்து விளையாடி இருக்கிறேன், நீங்களும் சுணங்காமல் பதிலளித்துள்ளீர்கள்.உங்களின் சில ரசனைகள் என்னுடன் ஒத்துப்போவதாகவே எண்ணுகிறேன். எனக்கும் தொல்பொருள் பற்றியும், கல்வெட்டுகள் பற்றியும் படிக்கப் பிடிக்கும். பாலகுமாரன் படித்ததால் வந்த விளைவு என்றே நினைக்கிறேன்.(அதுவும் தஞ்சாவூர் கோயில், சிற்பங்கள்,கல்வெட்டுகள்) நீங்கள் ஸ்பிலிட் பர்*னாலிடியா? அய்யய்யோ...கோவை வந்தால் குடும்பத்துடன் உங்களைப் பார்க்க வருவதாக நினைத்திருந்தேன், பய*மா இருக்கே?(சும்மா சொன்னேன் அண்ணா!)

எந்த வித*மான மனோதத்துவ ஆராய்சிகளில் ஈடுபடுகிறீர்கள்? தியானம் அறிந்தவராக இருப்பீர்கள் என்பது என் யூகம்.ஒரு பாலகுமாரன் கதையில் ஹீரோவிற்கு,சீனிவாசன் என்று நினைக்கிறேன்,முற்பிறவி நினைவு வருமே,அது போல அனுபவம் ஏற்பட்டுள்ளதா?

வித்தியாசமான பின்னூட்டங்களை கொடுப்பதை விட நடுனிலமையே முக்கியம், வித்தியாசம் என்று கொடுக்க ஆரம்பித்தால், பார்த்திபன் கதைதான்,ஒருமுறை நாம் அளித்த வித்தியாசத்தை விட அடுத்தமுறை இன்னும் வித்தியாசமாகக் கொடுக்க யோசித்தே முடியைப் பிய்த்துக்கொள்ள வேண்டியதுதான்,உங்கள் பின்னூட்டங்களில் நடுனிலைமையைத்தான் நான் விரும்புகிறேன்.

ஆ!பத்து! மிகவும் அருமையான பத்துதான், நாம் சிரித்து, கிண்டல் செய்து, விசயங்களைப் பரிமாறி, ஒருவரை பற்றிய கற்பனை உருவத்தை மனதில் வரைந்து வைத்திருப்போம், அதை அப்படியே அடித்து நொறுக்கி அப்பளம் செய்து, புது பரிமாணத்தை ஏற்படுத்தி விடுகிறதே! நான் வாத்தியாரண்ணாவை லொல்ள புரி மன்னராக மனதில் நினைத்திருந்தேன், அவர் எழுதியதைப் படித்த பின் கல்கி வந்தியத்தேவன் உருவம் வருகிறதே(வந்தியத்தேவன் விசிறிகள் கோவிக்க வேண்டாம்).இதை ஆரம்பித்த ராஜா அண்ணனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

யவனிகா
25-10-2007, 06:41 PM
அதெப்படி??
அன்பு ஆசை தீர சத்தம் போட்டு கூப்பிட்டால் காது குளிர கேற்பீர்களோ??:confused:

அதுதான் நீங்கள் கேற்கும் கடைசி சொல்லாக இருக்கும்..... இந்த ஜென்மத்தில் :lachen001::lachen001::lachen001:

உங்களை கோபக்காரர் என்று நினைத்ததை இப்போது மாற்றி குசும்புக்காரர் என்று திருத்திக்கொள்கிறேன்.அப்படி என்ன கொலைவெறி என் மேல் உங்களுக்கு?பூவிடம் வேறு போட்டுக் கொடுக்கிறீர்கள். உங்களையும் ஒரு கை பார்க்க வேண்டியதுதான். சரியா பூவு!

ராஜா
26-10-2007, 09:24 AM
அமரன் : என்னுடன் யாராவது கருத்து முரண்பட நேர்ந்தால் மேற்கொண்டு முரண் வளர்ந்து முள்ளாக முன்னர் நானே விலகி வேடிக்கை பார்ப்பேன். நீங்கள் எப்படி என்பதை சுருக்கமாகச் சொல்லிவிட்டு அது தொடர்பான உங்கள் வாழ்வில் நிகழ்ந்த நகைச்சுவைச் சம்பவம் ஏதாவது சொல்லுங்கள்.

நன்றி அமர்..!

முன்பே ஒருமுறை சொன்னது போன்று நான் சரியான சண்டைக்காரன்.. வலுச் சண்டைக்குப் போவது இல்லை.. வரும் சண்டையை விடுவது இல்லை. ஆனால் கருத்துக்களங்களில் இது சாத்தியம் இல்லை என்பது ஏகப்பட்ட எதிர்ப்பை சம்பாதித்த பின்பே நான் அறிந்து கொண்டேன். ஆனால் அதற்குள் ஒரு மன்றத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் பெற்றுவிட்டேன். அதற்காக கவலைப்படவில்லை.. இது நிற்க.

நீங்கள் கேட்ட கேள்விக்கு பொருத்தமான ஒரு வேடிக்கை சம்பவம் இருக்கிறது....

நான் என் குடும்பத்தினருடன் வழக்கமாக ஆண்டுக்கொரு முறை திருப்பதி சென்று வருவேன்.அதுபோல கடந்த டிசம்பர் மாதம் சென்றபோது ஒரு நிகழ்வு.

திருமலையில் நாங்கள் தங்குவதற்காக எப்போதும் ஒரு மாதம் முன்பே பணம் அனுப்பி தங்கும் அறைகளை முன் பதிவு செய்வோம்.அப்படி ஒதுக்கப்பட்ட அறைக்கு முன் எங்கள் டாட்டா சியர்ராவை நிறுத்திவிட்டு திருச்சியில் இருந்து [450 கிமி] வந்த களைப்புத் தீர சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது கீழே இடைவிடாத ஹாரன் சப்தம்.. என்னவென்று மாடியில் இருந்து எட்டிப் பார்த்தால் எங்கள் வாகனத்துக்குப் பின் ஒரு சுமோ.. அதில் இருந்தவர்கள்.. எங்கள் வண்டியை எடுத்து அப்பால் நிறுத்தும்படி சைகை செய்தனர்.. எங்களுக்கு இருந்த களைப்பிலும், அவர்கள் வண்டியை நிறுத்த நாம் வண்டியை எடுத்து அப்பால் போவதா என்ற எரிச்சலிலும் முடியாது என்று சைகை காட்டினோம்.அவர்கள் இடைவிடாது மீண்டும் ஹாரன் அடிக்க, அங்கே பாதுகாப்புக்காக நின்றிருந்த காவலர் அவர்களை ஏசி விரட்டிவிட்டார். சில உரசல்கள் மீண்டும் மீண்டும் தொடர்வது இயல்புதானே..? அதைப்போல அதே நபர்களிடம் மீண்டும் அக்னி நட்சத்திரம் பிரபு-கார்த்திக் போல உரசிக்கொள்ளும் அவசியமும் வந்தது.

திருமலை நிர்வாக உணவகத்தில் சுய சேவைதான்.. இது எங்களுக்குத் தெரியும்.. ஆனால் "சுமோ" குடும்பத்தினருக்கு தெரியாது போலும்.. இரண்டு கைகளிலும், எங்கள் அனைவருக்காகவும் சிற்று்ண்டித் தட்டுகளைச் சுமந்து வந்துகொண்டிருந்த என் இளைய மகனை 'வழங்குநர்' என்று நினைத்துவிட்டார்கள்.. அவர்களில் இளம்பெண்ணொருத்தி, ஸ்ஸ்ஸ் என்று ஒலியும் சிட்டிகை ஓசையும் எழுப்பி என் மகனை அழைக்க, அவரோ.. இதெல்லாம் 'சுயசேவை'ப்பிரிவில் சாதாரணமப்பா என்ற எண்ணத்தில் கண்டுகொள்ளாமல் வந்துவிட்டார்.

அடுத்த சுற்று சிற்றுண்டிக்காக, மீண்டும் சின்னவர் போகையில், சாம்பார் கிண்ணத்தை அவரிடம் நீட்டி, சாம்பார் வேண்டும் என்று அந்தப் பெண் கேட்க, நக்கலுக்குப் பேர்போன என் இளைய மகன், அந்தப் பெண்ணின் தந்தையைக் காட்டி, " அதோ இருக்கு பார்..!" என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்.

சற்று நேரம் கழித்து அவர்களுக்கு பொருள் விளங்க படை திரண்டு, எங்கள் மேசைக்கு வந்துவிட்டார்கள்.. அவர்கள் சுமார் 10 பேர்.. ஆண் பெண் சிறுவர்கள் உட்பட.. நாங்களோ 4 பேர்.. அதிலும் என் துணைவியாரும், பெரிய மகனும் மிகவும் சாதுவான சுபாவம் கொண்டவர்கள்.. என் இளைய மகனும் நானும் எதற்கும் தயார் என்ற மனநிலை கொண்டவர்கள்..

அவர்கள் அனைவரும் காச் மூச்சென்று கத்த, என் இளைய மகன் மிகவும் நடுங்கியவர் போல எழுந்து, ஒரு கப் சாம்பாரை எடுத்து அந்தப் பெரியவரின் கையில் திணித்தார்..! கொடுத்துவிட்டு...

"அவரை மட்டும் வரச் சொன்னால் போதாதா..? ஒரு கிண்ணம் சாம்பாருக்கு இத்தனை பேர் ஏன் திரண்டு வந்தீர்கள்..?" என்று மிகவும் அப்பாவியாகக் கேட்டார்.. இத்தனைக்கும் அவர்கள் எங்களைத் திட்டியதை சின்னவர் உணர்ந்ததாகக் காட்டிக்கொள்ளவே இல்லை..!

பின் என்ன..?

சண்டை பிடிக்க வந்தவர்கள் சாம்பார் கோப்பையை வென்ற சம்பவத்தை நாங்கள் சொல்லிச் சிரிக்காத நாட்களும் இல்லை.. ஆட்களும் இல்லை..!

lolluvathiyar
26-10-2007, 09:36 AM
நான் எப்போது மூன்றாம் கண்ணோட்டத்தில் இருந்து தான் பிரச்சினையை அணுகுவேன். அது ஒருவேளை நடுநிலையாக தங்களுக்கு பட்டிருக்கலாம்.
எனது நடு நிலைமைக்கு மிக முக்கியமான காரணம் வேறு யாருமில்லை. என்னில் பாதியான என் மனைவி தான்.

நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்று கொள்கிறேன். நீங்கள் ஒரு கருத்தை அலசும் போது அதன் பல கன்னோட்டத்தில் பார்கிறீர்கள். முக்கியமாக வந்த வுடனே நீங்கள் பல சிந்தனை உள்ளவர் என்று நிருபித்து விட்டீர்கள்.
உங்கள் தகுதிக்கு உன்டான பெருமையை உங்கள் மனைவிக்கு அளித்து ஒரு சிறன்த கனவனாக காட்டி விட்டீட்கள்.

இதில் மூன்றாமவரை திருத்த சொல்லி முற்பட்டால்,முயற்சிப்பவர் கெட்டவனாகிவிடுவார். அதற்கு ஒரே வழி, அவர் செய்ததை அவரிற்கே செய்து அநுபவிக்க வைத்தல்.

உங்கள் மொத்த பதிலும் அருமை என்று சொல்ல மாட்டேன். மீன்டும் அதே காரத்துடன் பதில் தருகிறீர்கள். திருகுறள் படி நீங்கள் மூன்றாமவரிடம் இருன்து விலகி விடுங்கள் அல்லது அவருக்கு நன்னயம் செய்துவிடுங்கள்.
மிச்சத்தை ஆண்டவன் பார்த்து கொள்வான்

தற்சமயம் வாழ்வில் தனிமையும் வெறுமையும் இல்லாததால் எதுவும் எழுதத் தோன்றவில்லை. மன்னிக்க. தனிமை மட்டுமே என்னை எழுதத் தூண்டியுள்ளது.

இது என்னங்க புது கூத்தா இருக்கும். நானும் தனிமையிலிருக்கும் போது தான் எழுதுவேன். ஆனால் அதற்க்கான கரு நான் பலரிடம் இருக்கும் போது தான் கிடைக்கும்.
சபாஸ் உன்மையாக சொல்லி விட்டீட்கள்

நான் கம்பனுக்குப் பக்கத்து வீடோ, பாரதிக்கு எதிர் வீடோ இல்லை...இருந்தாலும் தமிழ் எனக்குத் தாய் வீட்டுச் சீதனம்.
என்னைக் கட்டையில் வைத்து எரிக்கும் போதுதான் அது தீருமோ.எரிந்த பின் மிஞ்சும் என் சாம்பலிலும் தமிழே மணக்கவேண்டும்.

தமிழ் ஒரு மனிதனுள் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துமா. தாய் வீட்டு சீதனம் மிக அருமை, நான் இந்த விசயத்தில் மிகவும் மாறுபட்டு வாழ்ந்தவன். என் பள்ளி படிப்பில் தமிழை கொலை செய்வதில் என்னை விட சிறந்தவர் யாரும் இல்லை என்று எனக்கு என் பெயர். (ஆங்கில மட்டும் என்ன வாழுதா, மொத்தத்தில் மொழி கொலைகாரன்)
தமிழ் மன்றம் வந்த பின் தான் ஏதோ தமிழ் புலங்குகிறேன். வெளி வாழ்கையில் பேசுவதோடு சரி.

இந்த வயசிலியே கட்டையில போரத பற்றி பேசுவது. இன்னும் பல கடமைகள் இன்ப துன்பங்கள் இருக்கு. நான் என் நன்பகளிடம் அடிகடி " தம் அடிச்சுகிட்டே இருந்தாலும் 120 வயசு வரைக்கும் வாழ்வேன்" என்று தான் நன்பர்களிடம் அடிகடி சொல்வேன்.

யவனிகா
26-10-2007, 02:27 PM
[B][COLOR="Red"]
முன்பே ஒருமுறை சொன்னது போன்று நான் சரியான சண்டைக்காரன்.. வலுச் சண்டைக்குப் போவது இல்லை.. வரும் சண்டையை விடுவது இல்லை. ஆனால் கருத்துக்களங்களில் இது சாத்தியம் இல்லை என்பது ஏகப்பட்ட எதிர்ப்பை சம்பாதித்த பின்பே நான் அறிந்து கொண்டேன். ..!

அண்ணா! நீங்க ரொம்ப அமைதியானவர், ஒரு கன்னத்தில் அடித்தால் மறுக*ன்னத்தை மட்டும*ல்லாமல் கை, கால் எல்லாத்தையும் காட்டக் கூடியவர் என்று நினைத்திருந்தேன், நீங்களும் நம்மள மாதிரி, சுடு தண்ணி பார்ட்டியா? ரொம்ப சந்தோசம்னா! கூடவே தம்பி வேற கூட்டா? எதித்து வந்தவங்களை ஏற இறங்கப் பார்த்தே ஏறக்கட்டிற ஆளுங்களா நீங்க? சொல்லவே இல்லை!

அமரன்
26-10-2007, 03:01 PM
வலுச்சண்டைக்குப் போவதில்லை வந்த சண்டையை விடுவதில்லை.. நல்ல மனப்பாங்கு.. இடத்துக்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொண்ட குணம் உங்கள் கவர்ச்சியை அதிகரிக்கிறது. இது ஒரு விதமான முகமூடிதான். எனக்கு மிகவும் வேண்டிய ஒருவர் சொல்வார் "நீ அணியும் முகமூடி மற்றவர்களுக்கு கேடயமாக இருக்குமானால் தாராளமாக அணிந்துகொள்". அதன் படி பல இடங்களில் ஒழுகி அது எனக்கும் மற்றவர்களுக்கும் கேடயமாக அமைந்ததை உணர்ந்திருக்கின்றேன்..

இயல்பாகவே நகைச்சுவை உணர்வு இருக்கும் ஒருவராக உங்கள் இளைய மகன் தெரிகிறார். அவரது இந்த வகை அணுகுமுறை/சமயோசிதம் பல இடங்களுக்கு தேவையானது. நன்றி அண்ணா.

விகடன்
27-10-2007, 05:40 AM
உங்களை கோபக்காரர் என்று நினைத்ததை இப்போது மாற்றி குசும்புக்காரர் என்று திருத்திக்கொள்கிறேன்.

கோபக்காரன் என்பதிலிருந்து குசும்புக்காரன் ஆக்கியதில் ஆட்சேபனை ஒன்றுமே கிடையாது. ஏனெனில் அது உங்கள் கற்பனைச் சுகந்திரம்.

உங்களையும் ஒரு கை பார்க்க வேண்டியதுதான். சரியா பூவு!
ஆனால் போற போக்கைப் பார்த்தால் கொலைகாரி என்ற பெயர் வாங்காமல் விடமாட்டீர்கள் போலத்தான் இருக்கிறது...:traurig001:

நுரையீரல்
27-10-2007, 06:49 AM
ராஜா அண்ணனின் பதிலிலிருந்து, அவர் ஜீன் தப்பாமல் அண்ணனின் சிறிய மகனுக்கு வந்திருக்கிறது என்றே எண்ணத் தூண்டுகிறது.

எதிரணியிலுள்ள இளம்பெண்ணைப் பார்த்து, அவள் அப்பாவைக் காட்டி சாம்பர் என்று சொல்வதும், அவர்கள் சண்டைக்கு வந்தபோது "அவரை (பெண்ணின் அப்பாவை) மட்டும் வரச் சொன்னால் போதாதா..? ஒரு கிண்ணம் சாம்பாருக்கு இத்தனை பேர் ஏன் திரண்டு வந்தீர்கள்..?" என்று கேட்பதும் சுவையான சம்பவங்கள்.

lolluvathiyar
27-10-2007, 08:21 AM
வலுச் சண்டைக்குப் போவது இல்லை.. வரும் சண்டையை விடுவது இல்லை.
சண்டை பிடிக்க வந்தவர்கள் சாம்பார் கோப்பையை வென்ற சம்பவத்தை நாங்கள் சொல்லிச் சிரிக்காத நாட்களும் இல்லை.. ஆட்களும் இல்லை..!

அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கானு சொல்லுவாங்க. அது போல தான் உங்கள் இளைய மகன்.
நிறைய சமயத்தில் வந்த சன்டையை கூட சாதுர்யமா தவிர்த்து விடலாம்.

அக்னி
27-10-2007, 09:15 PM
நான் உலக நாயகனை பார்க்க அவரின் இடத்திற்கு சென்றுவிட்டேன்... அனுமதியும் பெற்றாகிவிட்டது.... யோவ்... கதைய சொல்லுயா என்று ஒரு முணுமுணுப்பு கேட்க்கிறது... அதனை சம்பாஷணையாக இங்கு தர முயல்கிறேன்...

ரசிகரின் நவீன இராமாயணப் படக்கதை சூப்பர். பாவம் கமல். அதைவிட பாவம் செய்தவர்கள் பார்க்கப்போகும் ரசிகர்கள்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.
இந்தப் படம் தியேட்டருக்கு வரும்போது, பார்க்க வரும் ரசிகர்கள், மிகத் தெளிவாகப் பார்க்கலாம்.
ஏனென்றால், ஆட்கள் குறைவாக இருப்பார்கள் என்பது உறுதி. எனவே பார்ப்போருக்கு இடையூறு இருக்காதல்லவா...

ரசிகரின் நகைச்சுவை எழுத்தாற்றலுக்கு பாராட்டுக்கள். வியக்க, ரசிக்க, சிரிக்க வைத்துவிட்டீர்கள்.
இராமாயணத்தின் கருவை வைத்துக்கொண்டு, அதனை, இன்றைய காலத்திற்கேற்ப நகைச்சுவையாக மாற்றி, பொருத்தமான கதாபாத்திரங்களைப் புகுத்தி, அசத்திவிட்டீர்கள்.

கதாநாயகி யார் என்பதை எனக்கு மட்டும் தனிமடலில் சொல்லுங்கள்.

ஒரு அன்பு வேண்டுகோள்...
உங்களது எழுத்தாற்றலை சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது வெளிப்படுத்த வேண்டும்.

வந்த கதைக்குப் பாராட்டுக்கள், வரப்போகும் கதைகளுக்கு வாழ்த்துக்கள்...

அக்னி
27-10-2007, 09:37 PM
எல்லோருக்கும் போல எங்களுக்கும் ஒரு மதில் சுவர் இருக்கிறது. இந்த மதில் சுவறில் அமர்ந்து வருவோரையும், போவோரையும் கூப்பிட்டு வம்பிக்கிழுத்து கலாய்ப்பதே எங்களின் தலையாய பணி. இதில் எங்களுக்குள்ளேயும் கலாய்த்துக் கொண்டிருப்போம்,
குட்டிச்சுவரில் கலாய்த்துத் திரிந்ததை எவ்வளவு பவ்வியமாய் திவ்வியமாக்கியிருக்கின்றார் ராஜா...

ஒரு மனிதனை இலகுவில் அழவைத்துவிடலாம். ஆனால், சிரிக்க வைப்பதானால், மிகக் கடினமே.
உங்கள் நகைச்சுவை உணர்வு வாழ்க...

எனது நடு நிலைமைக்கு மிக முக்கியமான காரணம் வேறு யாருமில்லை. என்னில் பாதியான என் மனைவி தான்.

எனது தோழி அவளே எனது எதிரியும் கூட
எனது இன்பம் அவளே எனது துன்பமும் கூட

இதுக்கு மேல எழுதுனா நான் பிட்டடிச்ச பாட்டு உங்களுக்கு தெரிந்துவிடும்.
அப்போ அதுக்கு கீழே எழுதி இருக்கலாம்தானே. சரி போகட்டும்.
உங்கள் நடுநிலைமைத் தன்மைக்கு காரணம் உங்கள் மனைவி என்றீர்கள்.
இவ்வரி, உங்கள் நடுநிலைமையைச் சொல்லுதோ இல்லையோ, உங்கள் மனைவியின் மேல் கொண்ட பாசததை, அவருக்குத் தரும் மரியாதையை, சமவுரிமையைத் தெளிவாக்குகின்றது.
என்றும் புன்னகைக் குடும்பமாக வாழ, (சிறியவனான) என்னுடைய வாழ்த்துக்களும் சேரட்டும்.

மூன்றாம் கண்ணோட்டம், நடுநிலைமையின் அத்திவாரம். ஆனால் இன்று உலகில் அருகி வருவது வேதனைக்குரியதே...

அக்னி
27-10-2007, 09:59 PM
நீ மற்றவர்களிற்கு செய்வதையே உனக்கு மற்றவர்கள் செய்தால் ஏற்றுக்கொள்வாயா?
இல்லையென்றால்,
மற்றவர்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறாயோ அதையாவது குறைந்த பட்ஷம் மற்றவர்களிற்கு செய்.
-----------------------
இதனாலான அனுகூலங்களும் பிரதிகூலங்களும் எனக்கு ஒன்றுமில்லை. என்னை சுற்றி கயவர்களும் ஏமாற்ருப்பேர்வழிகளும் இருக்கமாட்டார்கள். எப்படியும் சற்ரு தொலைவிலேயே இருப்பர்.
இளம்பராயத்தின் இனிய நிகழ்வுகளை எனக்குள்ளும் கிளறிவிட்ட பதில்.
இன்பமான நினைவுகள் நிசப்தமாக மனதினுள் அடக்கப்பட்டுவிட்டது.
மீண்டும் சலசலக்குமா நிஜத்தில் என்று எதிர்பார்த்தே, காலச்சுழற்சியில் நாமும் சுழல்கின்றோம்.

காலம் பிரித்து வைத்த தமிழ் உணர்வையும், உறவுகளையும் எனக்கும் மீளத்தந்தது தமிழ்மன்றமே... என்றும் வாழிய....

மேலே மேற்கோள் காட்டிய வரிகள், சத்தியமான வார்த்தைகள்.
நாம் செய்யும் செயல்களை, எமக்கு நிகழும் நிகழ்வுகளாக்கி ஒப்பீடு செய்தால், எம்மால் யாருக்குமே தீங்கு நிகழமாட்டா...
அருமையாக சொல்லியிருந்தீர்கள்.

அத்தோடு, கூறியிருந்தீர்கள் தீயவர்கள் எட்டியே இருப்பார்கள் என்று...
ஆனால், புரிதல் உள்ள நல்லவர்கள் கூடவே இருப்பர் என்பதற்கு, உங்கள் நண்பர்களே சாட்சி...

உங்கள் பதிவுகள் வ(ப)ழமைபோலவே தொடரவேண்டும் என்று ராஜா அண்ணா போலவே நானும் எதிர்பார்க்கின்றேன்...

அழகிய பதிலுக்குப் பாராட்டுக்கள்... விராடன்...

அக்னி
27-10-2007, 10:24 PM
என்ன தான் அடிச்சாலும் வலிக்கலியேன்னு வடிவேலு மாதிரி சொல்லிட்டு திரியறவங்க நாங்க.
காரணம் ஒன்று, என் கண்களில் கொஞ்ச வாரங்களுக்கு முன்பு செய்து கொண்ட லேசர் அறுவை சிகிச்சை.
அடடே நானும் உங்க கேசுதான்...
தமிழ்மன்றத்தின் பாசப்பிணைப்பில் அல்லவா ஒன்று சேர்ந்தோம்.
என்றும் சேர்ந்தே மகிழ்வோம்.
இப்போ உடல்நலம் எப்படி இருக்கின்றது? விரைவாக தேறி, புத்துணர்ச்சியோடு கலக்க வாருங்கள்...

தற்சமயம் வாழ்வில் தனிமையும் வெறுமையும் இல்லாததால் எதுவும் எழுதத் தோன்றவில்லை. மன்னிக்க. தனிமை மட்டுமே என்னை எழுதத் தூண்டியுள்ளது. கொஞ்சம் முன்னேறி எல்லா சூழ்நிலைகளிலும் எழுத முற்படுகிறேன்.
மீண்டும் உங்கள் படைப்புக்கள் மன்றத்தை அலங்கரிக்க வேண்டும். எங்களை மகிழ்விக்க வேண்டும்.
அதற்காக, தனிமை மீண்டும் வரவேண்டும் என்று சொல்லவில்லை.
தாங்கள் கூறியது போலவே, எல்லாச் சூழ்நிலைகளிலும் நீங்கள் எழுத வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

கதை, அதிலும் சிறுகதைகள் எழுத தனித் திறமை வேண்டும். கதைக்கு முக்கிய பலமே படிப்பவரை நிமிர்ந்து உட்கார வைக்கும் முடிவு தான். கதை ஆரம்பம் முதல் முடிவு சொல்லும் வரை படிப்பவரை குழப்பாமல் அதே சமயம், முடிவினை படிப்பவர் யூகிக்காத வண்ணம் கொண்டு செல்வதே தனி கலை. நான் சில சமயம் முயன்று தோற்றிருக்கிறேன். ஆரம்பம் அசத்தலாய் இருக்கும் முடிக்கத் தெரியாமல் முடிவு சொதப்பி விடும். இம்மன்றத்தில் என் மனதில் பதிந்த கதாசிரியர்கள் மயூவும், ராகவனும். மற்றவரையெல்லாம் குறை சொல்லவில்லை. சில கதைகள் மனதில் பதிந்துவிடும்.
சிறிதாகக் குறிப்பிட்டிருந்தாலும், அழுத்தமாகக் கூறியிருக்கின்றீர்கள்.
இது புதிய எழுத்தாளர்களுக்கும், எழுத முயற்சிப்போருக்கும் மிகவும் உதவியாக இருக்கும். திடீர் திருப்பக் கதைகளை வாசிக்கையில், அந்த வினாடிகளின் பதறல் எமக்குள் ஒரு வித உவகை தரும். மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும்.
அத்தோடு, மன்ற கதாசிரியர்களைப் பற்றியும் எடுத்தியம்பியிருந்தீர்கள்.
அது, அவர்களைப் பெருமைப்படுத்தும் விடயம் என்பதோடு, புதியவர்களையும் ஊக்கம் கொள்ளச் செய்யும் என்பது நிச்சயம்.

உங்கள் நண்பரையும் மன்றத்திற்கு அழைத்து வாருங்கள்.

அழகிய பதில்... பாராட்டுக்கள்... பாரதி அவர்களே...

அக்னி
27-10-2007, 10:55 PM
நான் கம்பனுக்குப் பக்கத்து வீடோ, பாரதிக்கு எதிர் வீடோ இல்லை...இருந்தாலும் தமிழ் எனக்குத் தாய் வீட்டுச் சீதனம். தாய்ப் பால் குடித்த நாட்கள் நினைவில் இல்லை...மூச்சு முட்ட தமிழ்ப்பால் குடித்த நாட்களை மறப்பதற்கில்லை.
கவர்ந்திழுக்கும் எழுத்து வன்மை, மிளிர்கின்றது உங்கள் பதிலில்.
தமிழ் மேல் கொண்ட காதலை அழகுற வெளிப்படுத்துகின்றீர்கள்...

தந்தை பணியாற்றிய அதே பள்ளியில் தான் நானும் ஆரம்பப் படிப்பு படித்தேன்.ஆறு வயதில் மேடையேறி "நெஞ்சு பொறுக்குதிலையே...இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்..."என்று தந்தை எழுதித் தந்ததை மனனம் செய்து, சின்னக்கைகளை காற்றில் ஆட்டி ஆட்டிப் பேசிய
போது, பெருமிதத்தில் மலர்ந்த என் தந்தையை, கடைசியாகப் நான் பார்த்தது அன்றுதான்..
பாரதி கண்ட புதுமைப் பெண்ணை, மேடையில் கண்ட அதீத சந்தோசத்துடன் மறைந்த தந்தை...

தந்தையை இழந்த எனக்கும், என் தங்கைக்கும், தமிழ்தான் சோறு போட்டது...ஆம் எங்கள் தாய் தமிழாசிரியை, அவள் வகுப்பில், தொண்டை வரள, கால்கள் துவளப் பாடமாக எடுத்த தமிழைத் தான் நாங்கள் உண்டோம், உடுத்தினோம். தமிழ் மட்டுமே நிராதரவாக நின்ற மூன்று ஜீவன்களின் உயிரைக்காத்தது..
தமிழ்மொழியினை மற்றையோருக்கு ஊட்டி, உங்களுக்கு உணவூட்டி வளர்த்த தாய்...

இருவரும் போற்றுதலுக்குரிய மனித தெய்வங்கள்.

படிக்கும் போது நெகிழும் மனம், பெருமை கொள்கின்றது, தமிழ் மேல்...

வாழ்க்கை வரலாறு எழுதிவிட்டதாகக் கூறினீர்கள்.
ஆனால், என்னைப் பொறுத்வரை, வரலாறாக அனைவருக்கும் தெரியவேண்டிய வாழ்க்கை இது...
இலைமறைகாயாக இன்னும் பல வாழ்க்கைகள் தமிழரிடம் இருக்கும்...
அவையும் எதிர்காலத்தில் வரலாறாகப் பதியப்படவேண்டும்.., எங்கள் தமிழ்மன்றத்தில்...

பாராட்டுக்கள் யவனிகா அவர்களே...

உங்கள் கணவர், தனக்கு மருமகனாக வரப்போகின்றார் என்று தெரிந்துதான், உங்க அம்மா முன்னரே தட்டி வைத்தாரோ... :smilie_abcfra: :icon_hmm:

அக்னி
27-10-2007, 11:30 PM
இதையெல்லாம் வைத்து அதிகமாக சிந்திப்பேன். கற்பனை செய்வேன். என் சின்ன வயசிலிருந்து இதே குணம், விளைவு இப்படி மாறி மாறி சிந்திப்பது Split Personality ஐ ஆராய்வது.
கேள்வியை நன்றாக உள்வாங்கி, பாகுபடுத்தி, (வழமைபோன்றே) மிக நன்றாக பதிலளித்திருக்கின்றீர்கள்.
ஒவ்வொரு மனிதனது வெளிப்பாடுகளும், சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டே வெளிப்படுவதும், அதற்கேற்ப உருவகமாவதும், தீய வழிகளில் செல்லாதவரை பாதிப்பாகா...
ஒருவகையில் மனிதனும் பச்சோந்தியே...

இள வயதில் படிப்பைக் குழப்பியவர்கள், பலர் மேதைகளாக இருந்த வரலாறுகள் பல உண்டு. அதற்குக் காரணம் அவர்களின் சிந்தனை. அதை வாத்தியார் மிகத் தெளிவாக கூறியுள்ளார்...

மூடிவைத்த நிறைகுடத்திலும் பார்க்க, தாகம் தணிக்கும் குறைகுடம் மேலானது.
ஆனால் வெறும் குடமாக இருந்தால்தான் பிரச்சினையே...
கல்வி, செல்வம், வீரம் என்று எல்லாவற்றிற்குமே இது பொருத்தமாகும் அன்றோ...

எல்லாவற்றிற்கும் மேலாக, வாத்தியார் என்றதும் எனக்குத் தெரிவது, அவரின் முயற்சி...
அதனை அவர் குறிப்பிடாவிட்டாலும்கூட, தனது எழுத்துப் பிழைகளைப் பொருட்படுத்தாது, முயற்சிக்கும் அவரது குணமே, மன்றத்தில் அவருக்கென ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவைத்துள்ளதோடு, சிறப்பிடத்தையும் வழங்கியுள்ளது.

பாராட்டுக்கள் வாத்தியார் அவர்களே...

சீரிய சிந்தனைகளும், தளரா முயற்சிகளும் என்றும் வாழ்வைச் சிறப்பிக்கும்...

அக்னி
27-10-2007, 11:54 PM
முன்பே ஒருமுறை சொன்னது போன்று நான் சரியான சண்டைக்காரன்.. வலுச் சண்டைக்குப் போவது இல்லை.. வரும் சண்டையை விடுவது இல்லை. ஆனால் கருத்துக்களங்களில் இது சாத்தியம் இல்லை என்பது ஏகப்பட்ட எதிர்ப்பை சம்பாதித்த பின்பே நான் அறிந்து கொண்டேன். ஆனால் அதற்குள் ஒரு மன்றத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் பெற்றுவிட்டேன். அதற்காக கவலைப்படவில்லை..

என்னைப் பொறுத்தவரையிலும்,
வலிந்தே எம்மைச் சீண்டுவோரை விட்டுவிடக்கூடாது.
எவ்வகையிலேனும் அவர்கள் உணரும் வகையில் செய்வதில் தப்பில்லை என்றே நினைக்கின்றேன்.

கருத்துமோதல்கள் ஏற்படவேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு விடயத்திலும் பல பக்க பார்வைகள் குவிமையப்படுத்தப்பட்டு, தெளிவை ஏற்படுத்தும்.
ஆனால், கருத்துக்கள்,
மோதலை, கலகத்தை ஏற்படுத்தாத வகையில், இருக்கும் வரையில், கருத்துமோதல்கள் ஆரோக்கியமானதே...

சாம்பார் கோப்பையைக் கொடுத்தபோது, அதுவும் அப்பாவித்தனமாக முகத்தை வைத்தபடியே கொடுத்தபோது, சண்டைபோட வந்தவர்கள் முகம் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்தால்..., தாங்க முடியவில்லை ராஜா அண்ணா...
சிரிப்பைத்தான்...:lachen001:

பூமகள்
29-10-2007, 08:12 AM
9. இனியவள்,பூ,மலர்,...:
கவிதை, கதை, நசைச்சுவை என முன்னிருவரும் கலாய்ப்பு கலகலப்பு என்று பின்னொருவரும் செய்யும் அட்டகாசம் மன்றம் அறியும். உங்களிடம் ஏதாச்சும் கேட்கனும்னு மனசு சொல்லிச்சு. ஏன் வம்பை வெற்றிலை வைச்சு வரிஞ்சு கட்டிக் கூப்பிடுகின்றாய் என்று மூளை சொல்லிச்சு. இந்த இழுபறிப்பந்தயத்தில் மனசு கோப்பையை தட்டிப்பெற்று விட்டது.
இக்காலப் பெண்களின் நிலை பற்றி உங்கள் மூவர் கருத்துகளையும் கலப்படமில்லாது தாங்க..

எனது தாமதமான பதிலுக்கு முதற்கண் மன்னிப்புகளை மன்றத்துக்குக் கூறிக் கொள்கிறேன்.

என்னை மீண்டும் ஆபத்தில் சிக்கவைத்தமைக்கு நன்றிகள் கோடி அமரன் அண்ணா. (இருங்க இருங்க.. என்னை மாட்டிவிட்டுட்டீங்கல்லா... உங்களுக்கு ஆப்பு ரெடி பண்ணுறேன் வேறு ஒரு திரியில்...!! ஹீ ஹீ...!!:D:D)

என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்காக இவ்வளவு நாள் யோசித்து யோசித்துப் பார்த்தது என் சிற்றறிவு. ஆனாலும் என் மூளைக்கு எட்டியவற்றை இங்கு தருகிறேன்.

கேள்வி : இக்காலப் பெண்களின் நிலை

இந்த கேள்விக்கான பதிலை சொல்லும் முன் கேள்வியை மேலும் கொஞ்சம் ஆய்ந்து ஆராயத்துவங்கினேன்.
கேள்வி உலகம் முழுதும் இருக்கும் பெண்களைப் பற்றி ஒட்டுமொத்தமாகக் கேட்கப்பட்டதா? இல்லை, இந்திய பெண்களை அல்லது தமிழ் பேசும் பெண்களை மட்டும் கருத்தில் கொண்டு
கேட்கப்பட்டதா?

நான் பொதுவாக எடுத்துக் கொண்டு பெண்களின் நிலை பற்றி சொல்ல விழைகிறேன்.

இந்த காலப் பெண்கள் பற்றி சுருங்கக் கூறின்...

தெளிந்த சிந்தனை...
திடமான மனம்...
எதிலும் சாதிக்கத்துடிக்கும் ஆற்றல்...
வேகம்.. ஆண்களுக்கு எல்லா துறையிலும் போட்டி போடும் திறன்..

இப்படி எல்லா திசைகளிலும் வெற்றிவாகைச் சூடி வருவது நாம் யாவரும் அறிந்ததே..!!

அடுப்பு ஊதி ஊதி நான்கு சுவருக்குள்ளும் சோற்றுக்குள்ளும் வாழ்க்கையை கழித்த பெண்களின் கால நிலை கல்வி என்னும் ஒரு புரட்சியால் மெல்ல நான்கு சுவர் கடந்து நான்கு திசைகளிலும்
திறமை பளிச்சிட செய்தது வரலாற்றின் மற்றுமொரு மைல்கல்.

ஆனால்... இக்கால பெண்களின் நிலை அக்காலத்தை விட உயர்ந்தது ஆயினும் சில விடயங்களில் அவர்களின் பல்முகங்கள் வலியோடு பளிச்சிடுவதும் கண்கூடு.

வேலைக்குப் போகும் பெண், வீட்டையும் நிர்வகித்து, வேலையிலும் தனது திறனைக் காட்டி ஒரு மிகப்பெரும் சாதனையாளினியாக மிளிர்கிறாள் என்றால் அது மிகையில்லை.

இன்று ஆட்டோ ஓட்டுனர், போக்குவரத்துக் காவலர் முதல் விண்களத்தில் விண்வெளி எய்தி அங்கும் வெற்றிக் கொடி நாட்டி வந்த கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் வரை பெண்களின் திறமையும் சமுதாய மதிப்பும் கூடிக் கொண்டு போவதும் யாவரும் அறிந்ததே..!

இப்படி எல்லா திசைகளிலும் பெண்கள் மதிப்பு உயர்ந்திருந்தாலும் சில நெருடலான விசயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

அவை...

1 .பெண்களிடம் சுதந்திரம் என்ற பெயரில் ஆடைக்குறைப்பு அதிகரித்துவருகிறது. என்ன தான் தன் விருப்பத்திற்கு உடையணிந்தாலும் தான் இருக்கும் சமூகத்தின் கலாச்சாரத்தையும் பண்பையும் பேணி பாதுகாக்கவேண்டிய பொறுப்பு எல்லாரிடமும் உள்ளது என்பதை மறுக்க இயலாது.

2. ஆணுக்குச் சமம் என்ற பெயரில் பெண்களும் புகைப்பிடிக்கும் பழக்கம் முதல் போதை, மது என்று எல்லா வகையிலும் சீரழிவை நோக்கி போய்க்கொண்டு இருப்பது வேதனையளிக்கின்ற விசயம்.

3. என்னா தான் செவ்வாய் கிரகம் கூட போயி ஆய்வு செய்தாலும், இன்னமும் கிராமங்களின் ஒரு சில பகுதிகளில் வீட்டின் மொத்த அம்மிக்கல்களின் எண்ணிக்கை சொல்லும் அதனடியில் கள்ளிப்பாலால் இறந்து உறங்கிக் கொண்டிருக்கும் பெண் சிசுக்களின் நிலையை..!! இங்கு பெண்ணுக்கு ஆண் மட்டுமல்ல பெண்ணும் எதிரியாக்கப்படுவது வேதனையான ஒன்று.

4. ஆண்களுக்கு பயன்படும் முகச்சவர பிளேடின் விளம்பரம் முதல் ஆண்கள் உபயோகிக்கும் வாசனை திரவியம் வரை பெண்களை அரைகுறை ஆடையுடன் உலவ விட்டு விளம்பரப்படுத்துவது எவ்வளவு தான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் இம்மாதிரியான கலாச்சார சீர்கேடுகளால் மெல்ல பண்பாடு பாழ்படுவது வேதனையிலும் வேதனை.

பெண்களை பராசக்தியாக கும்பிடும் தேசத்தில் இப்படியான அவலங்கள் இன்னமும் தொடரக்கூடாது என்பதே எனது கனவு.

பெண்களை தெய்வமாக கும்பிடச் சொல்லவில்லை, ஒரு சக மனிதமாக காண வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

சுகந்தப்ரீதன்
29-10-2007, 08:26 AM
பூ கலக்கிட்ட போ... உன் சிறுமூளையே இவ்வளவு தெளிவா சிந்திக்கும் போது உன் பெரும்மூளை இன்னும் பெரிதாக சாதிக்க வாய்ப்புண்டு.. அதற்கு எனது வாழ்த்துகளும் உண்டு..! நீ சுருங்க கூறினாலும் அதில் உள்ள அத்தனையும் அப்படியே ஏற்க கூடியவையே.. ஒரு பக்கமாக பாராமல் இரு பக்கங்களையும் பார்த்து பெண்களின் சுதந்திரத்தை தாங்கள் அலசியிருப்பதிலேயே தெரிகிறது இன்றைய பெண்களின் தெளிவான சிந்தனை... இது மென்மேலும் ஓங்க எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்..பூவுக்கும் பெண்களுக்கும்..!

பெண்களை தெய்வமாக கும்பிடச் சொல்லவில்லை, ஒரு சக மனிதமாக காண வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
இது உன்னுடைய வேண்டுகோள் மட்டுமல்ல.. ஒட்டு மொத்த பெண்ணினத்தின் வேண்டுகோளும் இதுவாகத்தான் இருக்கும்... சிந்திக்கலாமே என் அருமை நண்பர்களே..!

நேசம்
29-10-2007, 10:00 AM
1 .பெண்களிடம் சுதந்திரம் என்ற பெயரில் ஆடைக்குறைப்பு அதிகரித்துவருகிறது. என்ன தான் தன் விருப்பத்திற்கு உடையணிந்தாலும் தான் இருக்கும் சமூகத்தின் கலாச்சாரத்தையும் பண்பையும் பேணி பாதுகாக்கவேண்டிய பொறுப்பு எல்லாரிடமும் உள்ளது என்பதை மறுக்க இயலாது.

2. ஆணுக்குச் சமம் என்ற பெயரில் பெண்களும் புகைப்பிடிக்கும் பழக்கம் முதல் போதை, மது என்று எல்லா வகையிலும் சீரழிவை நோக்கி போய்க்கொண்டு இருப்பது வேதனையளிக்கின்ற விசயம்.

பெண்ணுரிமை தவறாக புரிந்து கொண்டு இத்தகைய நிலைக்கு தள்ளப்படும் பெண்கள் ஏற்படும் சிரமங்களுக்கு அவர்களே பொறுப்பு

பெண்களை தெய்வமாக கும்பிடச் சொல்லவில்லை, ஒரு சக மனிதமாக காண வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்

பெண்ணை பெண்ணாக நினைத்து அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்தால் பெண்ணுரிமைக்கு நாம் ஆதரவாக இருக்கிறோம் என்று அர்த்தம்.

சில வரிகளிலெ இக்கால பெண்களின் நிலையை அழகாக விவரித்த பூமகளூக்கு பாரட்டுக்கள் - வாழ்த்துக்கள்

அமரன்
29-10-2007, 10:02 AM
ஆபத்து அரங்கில் நேசங்கொண்ட நேசத்தின் சமீபகால வருகை அதிகரிப்பும், அரங்கின் பங்களிப்பும் ஆனந்தம் தருகிறது..

கோழிக்குஞ்சு ஒன்று விருந்துக்கு தயாராக ஆபத்து களத்தை சுற்றி சுற்றி வருகின்றது. அடுத்த பருந்து' யாராகிலும் கவனத்தில் கொள்க...

பூமகள்
29-10-2007, 10:03 AM
பூ கலக்கிட்ட போ... நீ சுருங்க கூறினாலும் அதில் உள்ள அத்தனையும் அப்படியே ஏற்க கூடியவையே.. ஒரு பக்கமாக பாராமல் இரு பக்கங்களையும் பார்த்து பெண்களின் சுதந்திரத்தை தாங்கள் அலசியிருப்பதிலேயே தெரிகிறது இன்றைய பெண்களின் தெளிவான சிந்தனை... இது மென்மேலும் ஓங்க எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்..பூவுக்கும் பெண்களுக்கும்..!

இது உன்னுடைய வேண்டுகோள் மட்டுமல்ல.. ஒட்டு மொத்த பெண்ணினத்தின் வேண்டுகோளும் இதுவாகத்தான் இருக்கும்... சிந்திக்கலாமே என் அருமை நண்பர்களே..!
உங்களின் ஊக்கத்திற்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றிகள் சகோதரர் ப்ரீதன்.

பூமகள்
29-10-2007, 10:07 AM
சில வரிகளிலெ இக்கால பெண்களின் நிலையை அழகாக விவரித்த பூமகளூக்கு பாரட்டுக்கள் - வாழ்த்துக்கள்
நன்றிகள் நேசம் அண்ணா.
உங்களின் வாழ்த்து கண்டு மகிழ்ச்சி. :icon_rollout:

அமரன் அண்ணா சொன்னது போல் அடுத்த விருந்துக்கு கோழிக்குஞ்சு தயாராகிவிட்டது போலும்?? :icon_ush::icon_ush:
விதி யாரை விட்டது??:lachen001::lachen001::lachen001:

நேசம்
29-10-2007, 10:22 AM
அமரன் அண்ணா சொன்னது போல் அடுத்த விருந்துக்கு கோழிக்குஞ்சு தயாராகிவிட்டது போலும்?? :icon_ush::icon_ush:
விதி யாரை விட்டது??:lachen001::lachen001::lachen001:

அன்பு தங்கை இருக்க(?) எதையும் எதிர்கொல்வோம்

அன்புரசிகன்
29-10-2007, 11:00 AM
அன்பு தங்கை இருக்க(?) எதையும் எதிர்கொல்வோம்

கொன்னுட்டீங்க போங்க....

உங்க தங்கைப்பாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது நேசம்...

பூமகள்
29-10-2007, 11:05 AM
அன்பு தங்கை இருக்க(?) எதையும் எதிர்கொல்வோம்
என் அண்ணா என்பதை நிரூபிப்பீர்கள் என்று நம்புகிறேன்!! ஹி ஹி..!! :D:D

கொன்னுட்டீங்க போங்க....
உங்க தங்கைப்பாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது நேசம்...
அன்புரசிகன் அண்ணாவுக்கு பொறாமை பாருங்க நேசம் அண்ணா...! :icon_b:
பெயரில் மட்டுமே அன்பை ரசிப்பவரா இருக்காரு... ஆனால் நிஜத்தில் அன்பு கண்டு பொறாமைப்படுகிறாரே....!! :icon_p: :D:D:D

அமரன்
29-10-2007, 11:07 AM
கொன்னுட்டீங்க போங்க....
உங்க தங்கைப்பாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது நேசம்...
உங்கள் பதில் இன்னும் வரவில்லை ரசிகரே...!. நேசத்தை உங்கள் இருப்பிடத்துக்கு அனுப்ப வேண்டியதுதான்..

அன்புரசிகன்
29-10-2007, 11:13 AM
1 .பெண்களிடம் சுதந்திரம் என்ற பெயரில் ஆடைக்குறைப்பு அதிகரித்துவருகிறது. என்ன தான் தன் விருப்பத்திற்கு உடையணிந்தாலும் தான் இருக்கும் சமூகத்தின் கலாச்சாரத்தையும் பண்பையும் பேணி பாதுகாக்கவேண்டிய பொறுப்பு எல்லாரிடமும் உள்ளது என்பதை மறுக்க இயலாது.

2. ஆணுக்குச் சமம் என்ற பெயரில் பெண்களும் புகைப்பிடிக்கும் பழக்கம் முதல் போதை, மது என்று எல்லா வகையிலும் சீரழிவை நோக்கி போய்க்கொண்டு இருப்பது வேதனையளிக்கின்ற விசயம்.

3. என்னா தான் செவ்வாய் கிரகம் கூட போயி ஆய்வு செய்தாலும், இன்னமும் கிராமங்களின் ஒரு சில பகுதிகளில் வீட்டின் மொத்த அம்மிக்கல்களின் எண்ணிக்கை சொல்லும் அதனடியில் கள்ளிப்பாலால் இறந்து உறங்கிக் கொண்டிருக்கும் பெண் சிசுக்களின் நிலையை..!! இங்கு பெண்ணுக்கு ஆண் மட்டுமல்ல பெண்ணும் எதிரியாக்கப்படுவது வேதனையான ஒன்று.

4. ஆண்களுக்கு பயன்படும் முகச்சவர பிளேடின் விளம்பரம் முதல் ஆண்கள் உபயோகிக்கும் வாசனை திரவியம் வரை பெண்களை அரைகுறை ஆடையுடன் உலவ விட்டு விளம்பரப்படுத்துவது எவ்வளவு தான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் இம்மாதிரியான கலாச்சார சீர்கேடுகளால் மெல்ல பண்பாடு பாழ்படுவது வேதனையிலும் வேதனை.

**பெண்களை பராசக்தியாக கும்பிடும் தேசத்தில் இப்படியான அவலங்கள் இன்னமும் தொடரக்கூடாது என்பதே எனது கனவு.

1. இதற்கு முதலில் பெண்கள் தான் தயார் நிலைக்கு வரவேண்டும்... 1 அண்டா பாலுக்கு 1 துளி விஷம் போதும்... அது போல தான். 1 பெண் ஆடை குறைத்தாலும் அது பெண்சமுதாயத்திற்கு பிரச்சனை தான்....

2. சொல்லவே தேவையில்லை... இது இன்று பல நவநாகரீக பெண்களிடம் காணும் பழக்கம்....

3. கள்ளிப்பால் விடையத்திற்கு பல பெண்களும் காரணமாகியிருக்கார்கள். அதேநேரத்தில் ஊர்க்கட்டுப்பாடு என்ற பெயரில் ஆண்களும் அதில் பங்கெடுக்கிறார்கள். தவிர அம்மிக்கல்லை தொடுவதை பெருமையாக எண்ணும் பெண்களும் பலர் உள்ளனர்... அம்மிக்கல்லா... அது எப்படி இருக்கும் என்று கேட்ப்பவர்களும் உள்ளனர்.

4. இதற்கு ஆண்கள் காரணமாக இருந்தாலும் இந்த விளம்பரத்தை நம்பி எத்தனையோ அழகிகள் வாழ்க்கையை நடாத்துகின்றனர். அவர் ஒன்றும் படிக்காத முட்டாள்கள் அல்ல.. படித்து முட்டாள்கள் போல் நடிக்கும் நபர்கள்...

** முன்பும் நான் எங்கோ கூறியிருக்கிறேன். பெண்கள் தங்களின் உரிமையை தங்கள் வீட்டில் முதலில் பெறவேண்டும். குறைந்த பட்ச்சம் தன் தாயிடம் இருந்தாவது.... தாயும் பெண்தானே....

அழகாக ஆராய்ந்திருக்கிறீர்கள் பூமகள். பாராட்டுக்கள்...

பூமகள்
29-10-2007, 11:19 AM
3. கள்ளிப்பால் விடையத்திற்கு பல பெண்களும் காரணமாகியிருக்கார்கள். அதேநேரத்தில் ஊர்க்கட்டுப்பாடு என்ற பெயரில் ஆண்களும் அதில் பங்கெடுக்கிறார்கள். தவிர அம்மிக்கல்லை தொடுவதை பெருமையாக எண்ணும் பெண்களும் பலர் உள்ளனர்... அம்மிக்கல்லா... அது எப்படி இருக்கும் என்று கேட்ப்பவர்களும் உள்ளனர்.

அழகாக ஆராய்ந்திருக்கிறீர்கள் பூமகள். பாராட்டுக்கள்...
பாராட்டுக்கு நன்றிகள் அன்பு அண்ணா.
தமிழகத்தின் எங்கோ சில கிராமங்களில் இன்று கூட பெண் குழந்தை பிறந்தால் உடனே கள்ளிப் பால் கொடுத்துக் கொன்று கொல்லைப்புறத்திலேயே புதைத்து அதற்கு மேல் ஒரு அம்மிக்கல்லை வைத்துவிடுவார்கள். இந்த கொடூரச் சம்பவம் என்னை வெகுவாக பாதித்தது. அதைத் தான் சொல்ல வந்தேன் அன்பு அண்ணா.

அன்புரசிகன்
29-10-2007, 11:25 AM

ஓ... மன்னிக்க.. நினைக்கும் போதே தலை விறைக்கிறது...

அந்த கழுதை மட்டும் என் கையில கிடைச்சால்....அவன்/ள் தலையில் நான் தான் தையல் போடுவேன்.... (வேலி அடைக்கும் குத்தூசி + இரட்டைப்பட்டு தென்னம் தும்பு கயிறு)

அந்த ஒப்பரேசனுக்கு பயன்படுத்தும் ஆயுதம் அலவாங்கு + பிக்கான்...

பூமகள்
29-10-2007, 11:29 AM

அமர் அண்ணா,
கொஞ்சம் இதற்கு விளக்கம் தர இயலுமா???!! :icon_ush:
புரிகிற மாதிரி சொல்லனும் சரியா அண்ணா... அப்புறம்..விளக்கத்துக்கு விளக்கம் கேட்க யாரை நான் பிடிப்பது..??!! :rolleyes:

யவனிகா
29-10-2007, 11:33 AM
அழகாய்,ஆழமாய்,வித்தியாசமாய் பதிலளித்திருக்கிறாய் பூ..பாராட்டுகள்.
இந்தக் கேள்வி சற்றுக் கடினமனது, கவனமாகக் கையாளவேண்டிய கண்ணாடிப் பாத்திரம்பொன்றது...பொறுமையாக யோசித்து தீர்க்கமான பதிலை அளித்த பூமகளுக்கு வாழ்த்துக்கள்...
ஆனால் உண்மையில் பெண்களின் நிலை என்ன என்ற கேள்விக்கு பூமள் பதில*ளிக்க வேண்டிய காலம் இன்னும் பத்து வருடங்கள் கழிந்து...இப்போது பூ இன்னும் பெற்றவர்களுக்கு குழந்தை தான், பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்து போக வரும் பெண்களின் நிலை பற்றிப் பார்த்ததிலிருந்தே, பூ இவ்வளவு தெளிவாகப் பேசுகிறதே.பத்து வருடங்கள் கழித்துத் தான் உண்மையான பெண்கள் நிலை பூவுக்குத் தெரிய வரும்.அப்போதும் பூவின் பதிலை எதிர்பார்த்து இருப்பேன் மன்றத்தில்.
நீ உன் பெருமூளையை இன்னும் உபயோகிக்கவேயில்லையின்னு சுகந்தன் சொன்னதைக் கேட்டும் சும்மாவா விட்டே பூ?

அன்புரசிகன்
29-10-2007, 11:39 AM
ஆனால் உண்மையில் பெண்களின் நிலை என்ன என்ற கேள்விக்கு பூமள் பதிலளிக்க வேண்டிய காலம் இன்னும் பத்து வருடங்கள் கழிந்து...இப்போது பூ இன்னும் பெற்றவர்களுக்கு குழந்தை தான், பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்து போக வரும் பெண்களின் நிலை பற்றிப் பார்த்ததிலிருந்தே, பூ இவ்வளவு தெளிவாகப் பேசுகிறதே.பத்து வருடங்கள் கழித்துத் தான் உண்மையான பெண்கள் நிலை பூவுக்குத் தெரிய வரும்.அப்போதும் பூவின் பதிலை எதிர்பார்த்து இருப்பேன் மன்றத்தில்.

இதுதான் அனுபவம் என்று சொல்வது... என்ன பூ... பத்துவருடம் கழித்து இதே பூவாக இருப்பீங்களா.. அல்லது இன்னொரு பூவாக..???? (கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்று வேதாந்தம் பேசமாட்டீங்களே...)

சரி பத்து வருடம் வேண்டாம்.. 5வருடம்.... உங்களுக்காக ஐப்பசித்தள்ளுபடி.... :lachen001: :D

சுகந்தப்ரீதன்
29-10-2007, 11:42 AM
நீ உன் பெருமூளையை இன்னும் உபயோகிக்கவேயில்லையின்னு சுகந்தன் சொன்னதைக் கேட்டும் சும்மாவா விட்டே பூ?
யக்கா.. ஏன் அக்கா இப்படி.. போற போக்குல பத்தவச்சிட்டு போறீங்க... சாமி சும்மா இருந்தாலும் பூசாரி சும்மா இருக்க மாட்டாங்கறது சரியாதான் இருக்கும் போலிருக்கு..:icon_rollout:

பூமகள்
29-10-2007, 11:44 AM
அழகாய்,ஆழமாய்,வித்தியாசமாய் பதிலளித்திருக்கிறாய் பூ..பாராட்டுகள்.
அன்பு யவனி அக்கா...!
ரொம்பவே நன்றிகள் அக்கா..!! கொஞ்சம் ஆழ யோசித்து பார்த்து தான் பதிலளித்தேன்.. ஆனாலும் நான் பால்மணம் மாறாமல் தான் பதிலளித்து இருக்கிறேன் என்று தாங்கள் கூறியது புரிகிறது. ஆஹா... அப்போ நான் சொன்னது உண்மையில்லையா??? :confused: :icon_ush:

நீ உன் பெருமூளையை இன்னும் உபயோகிக்கவேயில்லையின்னு சுகந்தன் சொன்னதைக் கேட்டும் சும்மாவா விட்டே பூ?
அதானே.... அக்கா... ப்ரீதன் அப்படியா சொன்னாரு??? இருக்கு அவருக்கு ஆப்பு...!! சீக்கிரத்திலேயே ரெடி பண்ணி வேறு பதிவில் போடுறேன் பாருங்க அக்கா...!
பூ பொறுமையா இருக்குன்னா... ஒரு சுனாமி வந்து அவங்கள தாக்கப்போகுதுன்னு அர்த்தம்...!! (ப்ரீதனுக்கு இது தேவையா???!!!:lachen001::lachen001:)

சுகந்தப்ரீதன்
29-10-2007, 11:48 AM
பூ பொறுமையா இருக்குன்னா... ஒரு சுனாமி வந்து அவங்கள தாக்கப்போகுதுன்னு அர்த்தம்...!! (ப்ரீதனுக்கு இது தேவையா???!!!:lachen001::lachen001:)
பாத்திங்களா யவனியக்கா.. சொல்லி வாய்மூடுல சுனாமி வந்து தாக்குறத..!:traurig001:

lolluvathiyar
29-10-2007, 11:49 AM
பூமகளின் பதிவு அருமை, மிக அருமை. கொங்கு நாட்டின் குலமகளே உன்னை நினைத்து பெருமை படுகிறேன். அப்படியே உன்மையை சொல்லிவிட்டீர்கள். மறுத்து பேச என்ன இருகிறது

சமூகத்தின் கலாச்சாரத்தையும் பண்பையும் பேணி பாதுகாக்கவேண்டிய பொறுப்பு எல்லாரிடமும் உள்ளது

காலமாற்றம் முன்னேற்ற என்ற மாயை நோக்கி ஓடும் போது இதை தவிர்க்க முடியாது. சமுகத்திலிருன்து விலகியவர்கல் செய்யும் செயல். அதனால் காக்க முடியாது.

[COLOR=Navy]
ஆண்கள் உபயோகிக்கும் வாசனை திரவியம் வரை பெண்களை அரைகுறை ஆடையுடன் உலவ விட்டு விளம்பரப்படுத்துவது

இது வியாபார தந்திரம். இதில் பெரிய தவறில்லை.

[COLOR=Blue]தமிழகத்தின் எங்கோ சில கிராமங்களில் இன்று கூட பெண் குழந்தை பிறந்தால் உடனே கள்ளிப் பால் கொடுத்துக் கொன்று

நீங்களே சொல்லி விட்டீர்களே எங்கோ சில இடத்தில்தானே நடகிறது. 100 கோடி மக்கள் தொகையுள்ள நாட்டில் இப்படியிம் சிலர் இருக்கதான் செய்வர்.

அந்த கழுதை மட்டும் என் கையில கிடைச்சால்....அவன்/ள் தலையில் நான் தான் தையல் போடுவேன்..

வேண்டாம், அவர்கள் பல பிள்ளைகளுக்கு பெற்றோர்கள்.

பூமகள்
29-10-2007, 11:52 AM
இதுதான் அனுபவம் என்று சொல்வது... என்ன பூ... பத்துவருடம் கழித்து இதே பூவாக இருப்பீங்களா.. அல்லது இன்னொரு பூவாக..???? (கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்று வேதாந்தம் பேசமாட்டீங்களே...)

சரி பத்து வருடம் வேண்டாம்.. 5வருடம்.... உங்களுக்காக ஐப்பசித்தள்ளுபடி.... :lachen001: :D
கண்டிப்பா இதே பூவாக இருப்பேனான்னு தெரியாது... ஆனா கண்டிப்பா இன்னொரு பூவாக மாறியிருக்க மாட்டேன். வேணும்னா...பூவில்... இன்னொரு இதழ் கூடியிருக்கலாம்!! :icon_rollout:
மாற்றம் ஒன்று தானே மாறாதது..!!
பூவின் எதிர்காலம் பற்றிய ஆய்வு ஆரம்பித்துவிட்டீர்களா??? பூவை விட வேகமாய் நீங்க தான் இருப்பீங்க போல இருக்கு....!! :icon_wink1::icon_shout:

அன்புரசிகன்
29-10-2007, 11:57 AM
வேண்டாம், அவர்கள் பல பிள்ளைகளுக்கு பெற்றோர்கள்.

சரி சரி... உங்களுக்காக விட்டுவைக்கிறேன்...

ஆனாலும் பிஞ்சுகளை பறிப்பது எந்த விதத்தில் நியாயம்... முள்ளுக்குப்பதில் முள்ளுத்தான்....

பூமகள்
29-10-2007, 12:11 PM
பூமகளின் பதிவு அருமை, மிக அருமை. கொங்கு நாட்டின் குலமகளே உன்னை நினைத்து பெருமை படுகிறேன். அப்படியே உன்மையை சொல்லிவிட்டீர்கள். மறுத்து பேச என்ன இருகிறது
மிகுந்த நன்றிகள் வாத்தியார் அண்ணா. எங்கே என் பதிலுக்கு எதிர்ப்பு வருமோ என்று நினைத்திருந்தேன்.

நீங்களே சொல்லி விட்டீர்களே எங்கோ சில இடத்தில்தானே நடகிறது. 100 கோடி மக்கள் தொகையுள்ள நாட்டில் இப்படியிம் சிலர் இருக்கதான் செய்வர்.
இப்படி சொன்னால் எப்படி வாத்தியார் அண்ணா. எங்கோ ஒரு பெண் குழந்தை கொன்றால் அது குற்றமில்லையா?? என்ன கொடுமை சார் இது?? அந்த கொலையான சிசுவுக்காக பேசக்கூடாதா??
நாளைய சமூகத்தின் ஆண் - பெண் விகிதாச்சாரம் காக்கப்பட வேண்டாமா?
இப்படித்தான் சில நாட்கள் முன்பு ஒரு குழந்தையை தாயின் தொப்புல்கொடி கூட முழுதும் நீக்கப்படாத நிலையில் சாக்கடையிலிருந்து எடுத்தார்கள். இம்மாதிரியான விசயங்களைப் பார்த்து தாங்கள் சொல்வது போல் இப்படியும் இருபபார்கள் என்று விட்டுவிடமுடியுமா??

வேண்டாம், அவர்கள் பல பிள்ளைகளுக்கு பெற்றோர்கள்.
அப்போ...எதற்காக அவர்கள் குழந்தை பெற ஆசைப்பட வேண்டும்??
பெண் குழந்தையை வளர்க்க திறன் இல்லையென்றால் கொல்வது முறையா??

ஷீ-நிசி
29-10-2007, 04:50 PM
[B]அமரன் : [COLOR="Blue"]

அவர்கள் அனைவரும் காச் மூச்சென்று கத்த, என் இளைய மகன் மிகவும் நடுங்கியவர் போல எழுந்து, ஒரு கப் சாம்பாரை எடுத்து அந்தப் பெரியவரின் கையில் திணித்தார்..! கொடுத்துவிட்டு...

"அவரை மட்டும் வரச் சொன்னால் போதாதா..? ஒரு கிண்ணம் சாம்பாருக்கு இத்தனை பேர் ஏன் திரண்டு வந்தீர்கள்..?" என்று மிகவும் அப்பாவியாகக் கேட்டார்.. இத்தனைக்கும் அவர்கள் எங்களைத் திட்டியதை சின்னவர் உணர்ந்ததாகக் காட்டிக்கொள்ளவே இல்லை..!

பின் என்ன..?

சண்டை பிடிக்க வந்தவர்கள் சாம்பார் கோப்பையை வென்ற சம்பவத்தை நாங்கள் சொல்லிச் சிரிக்காத நாட்களும் இல்லை.. ஆட்களும் இல்லை..!

ஹா! ஹா! ஹா! ஹா!

ராஜா சார்.. சத்தியமா ரொம்ப நாளைக்கு அப்புறம் ரொம்ப சிரிச்சிட்டேன்...

அதானே, புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

கலக்கிட்டீங்க போங்க... என்னோட ஸ்பெஷல் வாழ்த்துக்கள் உங்களின் இளைய மகனுக்கு.....:icon_b:

நுரையீரல்
31-10-2007, 09:32 AM
ஒவ்வொருவரின் பதிலுக்கும், அழகான பின்னூட்டம் எழுதியிருக்கும் அக்னி அவர்களுக்கு பாராட்டுக்கள். தங்களின் பின்னூட்டம் பதிலைவிட அழகாக மின்னுகிறது வாழ்த்துக்கள்.

நுரையீரல்
31-10-2007, 09:32 AM
1 .பெண்களிடம் சுதந்திரம் என்ற பெயரில் ஆடைக்குறைப்பு அதிகரித்துவருகிறது. என்ன தான் தன் விருப்பத்திற்கு உடையணிந்தாலும் தான் இருக்கும் சமூகத்தின் கலாச்சாரத்தையும் பண்பையும் பேணி பாதுகாக்கவேண்டிய பொறுப்பு எல்லாரிடமும் உள்ளது என்பதை மறுக்க இயலாது.
மிகச்சரியான கூற்று என்று சொல்வதற்கு என் மனம் ஒத்துக் கொள்ளவில்லை. இதுவும் கூட ஆணாதிக்கச் சிந்தனைக்கு பெண்களும் துணை போகிறார்களோ என்று எண்ணத் தூண்டுகிறது.

ஆடைக்குறைப்பு என்பது அந்தப் பெண்ணின் சுதந்திரம். அமெரிக்காவில் SUMMER காலங்களில் பெண்கள் குறைவான ஆடைகளை அணிந்து கொண்டு செல்லும் போது ரோட்டில் நின்று எவனும் ஜொள் விடமாட்டான். அதே இந்தியாவிலோ (அ) மத்திய கிழக்கு போன்ற நாடுகளிலோ ஒரு பெண் மேற்கண்ட ஆடைக்குறைப்பு செய்தால், அந்தப் பெண் ஒரு நாள் அல்லது மறுநாள் கற்பழிக்கப்படுவது நிச்சயம். நாட்டுக்கு நாடு வித்தியாசமான ஆடை விசையத்தைப் பெண்கள் பின்பற்ற வேண்டும் என்று சொல்ல வருகிறாயா????

நம்நாட்டில் பெண் அணியும் சராசரி ஆடையை அணிந்து கொண்டு சவுதியில் செல்ல முடியாது!!! மீறிச்சென்றால் என்ன நடக்கும் என்று உங்க அண்ணன் இதயம்கிட்ட (இதயத்தை கட்டாயமாக வம்புக்கிழுப்பது) கேட்டுப் பாரு தெரியும்.

அப்போ இந்தியப் பெண்கள் ஆடை விஷயத்தில் தாராளம் என்று அர்த்தமா? இல்லை எல்லாப் பெண்களும் அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு தான் நடக்க வேண்டும் என்று நான் சொல்கிறேனா.

ஒரு பெண் அவளுடைய ஆசைக்காக தன் விருப்பப்படி ஆடை அணிந்து கொண்டு செல்கிறாளே அது அவள் சுதந்திரம். ஆண்கள் கூட தன் தொடை மற்றும் கால் முடிகளை காட்டிக் கொண்டு SHORTS அணிந்து கொண்டு செல்கிறார்கள். எந்தப் பெண்ணாவது போய் அந்தப்பையனை கையைப்பிடித்து இழுக்கிறாளா????? காரணம் என்ன? ஒரு பெண், தான் இந்த சமூகத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே செய்கிறாள்.

அதைவிட்டு விட்டு ஆடைக்குறைப்பு தான் பெண்ணினத்திற்கு ஆண்களால் பின்பற்றப்படும் ஆணாதிக்கத்திற்கு காரணம் என்பது போல் இருக்கிறது உன் வாதம் (தங்கை என்ற உரிமையில் ஒருமையில் அழைக்கிறேன்).

ரோட்டில் அரைகுறை ஆடையணிந்து செல்லும் பெண்ணிடம் குசும்பு செய்வதற்குக் காரணம் அந்த ஆடவனின் கண். அதை பொசுக்கச் சொன்னாலும் பரவாயில்லை. அந்தக்கண் எதற்கு இந்தப்பெண்ணின் அழகைப் பார்த்து ரசிக்கிறது? அழகு ரசிப்பதற்கு மட்டுமே என்று மட்டும் புரிந்து கொண்டால் யாருடைய சுதந்திரமும் பாதிக்கப்படாது.

ஆனால் ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அதற்கு மேல் குசும்பு செய்யவும் தூண்டுவது ஒருவனுடைய மூளை. அதை செருப்பெடுத்து நாலு சாத்து சாத்தினால் எல்லாம் சரியாகிவிடும்.

அதாவது நீ சொல்ல வந்த விஷயத்தின் சாராம்சமே, பெண்கள் அரைகுறை ஆடைகள் அணிவதால் தான் நாட்டில் கற்பழிப்புகள் நடைபெறுகிறது என்பது போல் இருக்கிறது. சின்னஞ்சிறு பெண்களை கற்பழிக்கிறான்களே கலவானிப்பசங்க... அந்தச் சின்னப் பெண் என்ன அரைகுறை ஆடை போட்டு வந்ததாலா அப்படிச் செய்தானுக. இல்லை வெறி. அந்த வெறியே ஆணாதிக்கத்தின் உச்சகட்டம் தான்.

சில வருடங்களுக்கு முன்னர், சென்னையில் ஒரு கல்லூரிப் பெண் பரிதாபமாக இறந்தாலே.... அந்தப் பெண் அப்போது அணிந்திருந்தது சுடிதாரும், அதை நன்றாக மூடிமறைக்க இருந்து துப்பட்டாவும். ஆட்டோவில் வந்த ரௌடிப்பசங்க துப்பட்டாவைப் பிடித்து இழுத்ததினால் தானே அவள் துரதிர்ஷ்டவசமாக இறந்தாள்.

பெண்ணின் அழகை மூடிக்கொண்டு தான் செல்ல வேண்டும். அதனால் சமூகத்தில் குற்றம் குறையும் என்று சொல்வதெல்லாம் முட்டாள் தனம் (அ) ஆணாதிக்கத்தை புத்திசாலித்தனமாக மறைக்கும் கயமைத்தனம் என்று சொல்லலாம். எந்த நாட்டிலெல்லாம் பெண்களின் அழகு மூடி மறைக்கப்பட்டு இருக்கிறதோ அந்த நாட்டில் ஆண்கள் செய்யும் அட்டூழியங்கள், திருட்டுத்தனங்களை பட்டியலிட்டுப் பேச என்னிடம் ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அது இந்த மன்றத்தில் விவாதிக்கும் விஷயங்களுமல்ல.

கடவுள் தானே நம்மையெல்லாம் படைத்தார், பெண்கள் உண்மையாலுமே மறைக்கப்பட்டு வாழ வேண்டியவர்கள் என்று கடவுள் நினைத்திருந்தால், அனைவரையும் கவச குண்டலத்துடன் படைத்திருப்பான்.

விகடன்
01-11-2007, 06:43 AM
[B] ஒரு கப் சாம்பாரை எடுத்து அந்தப் பெரியவரின் கையில் திணித்தார்..! கொடுத்துவிட்டு...

"அவரை மட்டும் வரச் சொன்னால் போதாதா..? ஒரு கிண்ணம் சாம்பாருக்கு இத்தனை பேர் ஏன் திரண்டு வந்தீர்கள்..?" என்று மிகவும் அப்பாவியாகக் கேட்டார்..
கதையை கேற்கும்போது உங்களது இளைய மகனை பாராட்டவேண்டும் போல் உள்ளது.
அதேவேளை
உங்கள் இளைய மகன் இந்தளாவும் செய்து முடித்தவுடன் அதனால் வரும் விளைவை எண்ணி உங்கள் எல்லோரிற்கும் அப்போது
இருந்திருக்கும் பீதி எப்படி இருந்திருக்கும் என்று எண்ணுகையில் இன்னும் நகைச்சுவையாகவே இருக்கிறது.

அன்றைய தினம் திண்டாடியிருப்பீர்கள்.
இப்போது அதைச் சொல்லி கொண்டாடுகிறீர்கள்.

ம்ம்ம்ம்
நடக்கட்டும் நடக்கட்டும்....

விகடன்
01-11-2007, 07:03 AM
உங்களின் கருத்துக்களில் பெண்களின் சாதனை, அவர்களின் சாமர்த்தியம் போன்றவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். வீட்டு எஜமானி என்று குறுவட்டிலில்லாமல் உலகத்தையே ஆழும் தகமை உடையவளாக வளரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

இருந்தாலும், தாங்கள் மேற்கோல் காட்டிய காரணிகளில் சிலவற்றில் பூரண உடன்பாடில்லாவிட்டாலும் ஒன்றில் பூரண அதிருப்தியடைந்துள்ளேன். அதாவது,

2. ஆணுக்குச் சமம் என்ற பெயரில் பெண்களும் புகைப்பிடிக்கும் பழக்கம் முதல் போதை, மது என்று எல்லா வகையிலும் சீரழிவை நோக்கி போய்க்கொண்டு இருப்பது வேதனையளிக்கின்ற விசயம்.

ஆணிற்கு பெண் சமம் என்ற போக்கில் இப்படியான பழக்கங்களில் உட்புத்திக் கொள்வதில் இருந்து என்ன சொல்ல வருகிறீர்கள்?
ஆண்கள் என்றால் புகைப்பிடித்து மதுவும் அருந்தவேண்டுமா? அல்லது
அப்படி செய்பவர்களை மட்டுந்தான் ஆண்களாக கணிக்கப்படுகிறார்களா?

பெண்கள் செய்வது கூடாது என்று முழக்கம் போடுகிறீர்களே. அதை வரவேற்கிறேன். அதே போல் இதை ஆண்களுந்தான் செய்யக்கூடாது. அதையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

விகடன்
01-11-2007, 07:11 AM
இதுதான் அனுபவம் என்று சொல்வது... என்ன பூ... பத்துவருடம் கழித்து இதே பூவாக இருப்பீங்களா.. அல்லது இன்னொரு பூவாக..???? (கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்று வேதாந்தம் பேசமாட்டீங்களே...)

சரி பத்து வருடம் வேண்டாம்.. 5வருடம்.... உங்களுக்காக ஐப்பசித்தள்ளுபடி.... :lachen001: :D

பத்துவருடம் கழித்து பூவாக இல்லை அன்பு!
பூந்தோட்டமாக இருப்பார்!!!
இவர்களுடன்...
:icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout:
:icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout:

ராஜா
01-11-2007, 08:28 AM
அண்ணா! நீங்க ரொம்ப அமைதியானவர், ஒரு கன்னத்தில் அடித்தால் மறுக*ன்னத்தை மட்டும*ல்லாமல் கை, கால் எல்லாத்தையும் காட்டக் கூடியவர் என்று நினைத்திருந்தேன், நீங்களும் நம்மள மாதிரி, சுடு தண்ணி பார்ட்டியா? ரொம்ப சந்தோசம்னா! கூடவே தம்பி வேற கூட்டா? எதித்து வந்தவங்களை ஏற இறங்கப் பார்த்தே ஏறக்கட்டிற ஆளுங்களா நீங்க? சொல்லவே இல்லை!

அப்படின்னு தந்தியா கொடுத்தாங்க.. நாங்கள்லாம் பக்கா டென்ஷன் பார்ட்டிங்கோ..!

நன்றி யவனி..!

வலுச்சண்டைக்குப் போவதில்லை வந்த சண்டையை விடுவதில்லை.. நல்ல மனப்பாங்கு.. இடத்துக்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொண்ட குணம் உங்கள் கவர்ச்சியை அதிகரிக்கிறது. இது ஒரு விதமான முகமூடிதான். எனக்கு மிகவும் வேண்டிய ஒருவர் சொல்வார் "நீ அணியும் முகமூடி மற்றவர்களுக்கு கேடயமாக இருக்குமானால் தாராளமாக அணிந்துகொள்". அதன் படி பல இடங்களில் ஒழுகி அது எனக்கும் மற்றவர்களுக்கும் கேடயமாக அமைந்ததை உணர்ந்திருக்கின்றேன்..

இயல்பாகவே நகைச்சுவை உணர்வு இருக்கும் ஒருவராக உங்கள் இளைய மகன் தெரிகிறார். அவரது இந்த வகை அணுகுமுறை/சமயோசிதம் பல இடங்களுக்கு தேவையானது. நன்றி அண்ணா.

நன்றி அன்பின் அமர்..!

ராஜா அண்ணனின் பதிலிலிருந்து, அவர் ஜீன் தப்பாமல் அண்ணனின் சிறிய மகனுக்கு வந்திருக்கிறது என்றே எண்ணத் தூண்டுகிறது.

எதிரணியிலுள்ள இளம்பெண்ணைப் பார்த்து, அவள் அப்பாவைக் காட்டி சாம்பர் என்று சொல்வதும், அவர்கள் சண்டைக்கு வந்தபோது "அவரை (பெண்ணின் அப்பாவை) மட்டும் வரச் சொன்னால் போதாதா..? ஒரு கிண்ணம் சாம்பாருக்கு இத்தனை பேர் ஏன் திரண்டு வந்தீர்கள்..?" என்று கேட்பதும் சுவையான சம்பவங்கள்.

நன்றி எஸ்ஸார்..!

அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கானு சொல்லுவாங்க. அது போல தான் உங்கள் இளைய மகன்.
நிறைய சமயத்தில் வந்த சன்டையை கூட சாதுர்யமா தவிர்த்து விடலாம்.

நன்றி வாத்தியாரே..!

என்னைப் பொறுத்தவரையிலும்,
வலிந்தே எம்மைச் சீண்டுவோரை விட்டுவிடக்கூடாது.
எவ்வகையிலேனும் அவர்கள் உணரும் வகையில் செய்வதில் தப்பில்லை என்றே நினைக்கின்றேன்.

கருத்துமோதல்கள் ஏற்படவேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு விடயத்திலும் பல பக்க பார்வைகள் குவிமையப்படுத்தப்பட்டு, தெளிவை ஏற்படுத்தும்.
ஆனால், கருத்துக்கள்,
மோதலை, கலகத்தை ஏற்படுத்தாத வகையில், இருக்கும் வரையில், கருத்துமோதல்கள் ஆரோக்கியமானதே...

சாம்பார் கோப்பையைக் கொடுத்தபோது, அதுவும் அப்பாவித்தனமாக முகத்தை வைத்தபடியே கொடுத்தபோது, சண்டைபோட வந்தவர்கள் முகம் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்தால்..., தாங்க முடியவில்லை ராஜா அண்ணா...
சிரிப்பைத்தான்...:lachen001:

நன்றி அக்னியாரே..!

ஹா! ஹா! ஹா! ஹா!

ராஜா சார்.. சத்தியமா ரொம்ப நாளைக்கு அப்புறம் ரொம்ப சிரிச்சிட்டேன்...

அதானே, புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

கலக்கிட்டீங்க போங்க... என்னோட ஸ்பெஷல் வாழ்த்துக்கள் உங்களின் இளைய மகனுக்கு.....:icon_b:

நன்றி ஷீ..!

கதையை கேற்கும்போது உங்களது இளைய மகனை பாராட்டவேண்டும் போல் உள்ளது.
அதேவேளை
உங்கள் இளைய மகன் இந்தளாவும் செய்து முடித்தவுடன் அதனால் வரும் விளைவை எண்ணி உங்கள் எல்லோரிற்கும் அப்போது
இருந்திருக்கும் பீதி எப்படி இருந்திருக்கும் என்று எண்ணுகையில் இன்னும் நகைச்சுவையாகவே இருக்கிறது.

அன்றைய தினம் திண்டாடியிருப்பீர்கள்.
இப்போது அதைச் சொல்லி கொண்டாடுகிறீர்கள்.

ம்ம்ம்ம்
நடக்கட்டும் நடக்கட்டும்....

ஹி..ஹி.. டரியல் ஆனதென்னவோ உன்மைதான்.. இருந்தாலும் கெத்து குறைச்சுக்கவே இல்லை நாங்கோ..!

பூமகள்
01-11-2007, 10:18 AM
ஆணிற்கு பெண் சமம் என்ற போக்கில் இப்படியான பழக்கங்களில் உட்புகுத்திக் கொள்வதில் இருந்து என்ன சொல்ல வருகிறீர்கள்?

தீய பழக்கங்கள் மனிதனாகப் பிறந்த யார் செய்தாலும் தவறு தானே விராடன் அண்ணா. அதைத்தான் சொல்ல வந்தேன். உள் அர்த்தத்தை விளங்கிக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் அதிகம் விளக்கவில்லை.

ஆண்கள் என்றால் புகைப்பிடித்து மதுவும் அருந்தவேண்டுமா? அல்லது
அப்படி செய்பவர்களை மட்டுந்தான் ஆண்களாக கணிக்கப்படுகிறார்களா?

ஆண்கள் என்பதன் வரையரையில் புகை, மதுவும் உண்டு என்று நான் சொல்லவே இல்லையே விராடன் அண்ணா. இந்த பழக்கம் ஆண்களிடம் தானே முதலில் ஏற்பட்டது. பெரும்பான்மையான ஆண்கள் எதற்காக புகைபிடிக்கிறார்கள்? எப்படி பிடிக்க ஆரம்பித்தார்கள் என்று கேட்டுப்பாருங்கள். அவர்கள் சொல்லும் பதில் உங்களை அதிர வைக்கும். அதாவது, அவருக்கு பிடித்த திரைப்பட நாயகரின் படங்களைப் பார்த்தோ, அல்லது தான் மிகவும் மதிக்கும் பெரிய மனிதர் ஒருவரின் செயல்களைக் கண்டோ(பல தடவை அது அவர்களின் தந்தை), அல்லது நண்பர்களின் மூலமாகவோ தான் ஆரம்பித்திருப்பர். அப்படி செய்தால் தான் தன்னை ஆண் சிங்கம் என்று உலகம் நம்பும் என்ற ஒரு கெத்து காட்டவும், ஸ்டைல் காட்டவுமே அப்படி ஆண்கள் செய்கிறார்கள்.
இவையெல்லாம் புகை பழக்கமுள்ளவர்கள் கொண்ட தவறான புரிதல் மற்றும் கணிப்பு தான்.

ஆண்களுக்கு தான் புகை, மது பழக்கம் சொந்தம் என்றோ, அப்படி செய்தால் தான் ஆண்கள் என்றோ நான் சொல்லவேயில்லை. சொன்னால் உண்மையில் அதைவிட நகைச்சுவை வேறு ஒன்றுமில்லை.

தீய பழக்கத்தை தனதாக்கிக் கொண்டு வீரத்தின் அடையாளமாய் தவறான கணிப்பை ஆக்கிவிட்டது ஆண்கள் என்று தான் கூற வருகிறேன்.

பெண்கள் செய்வது கூடாது என்று முழக்கம் போடுகிறீர்களே. அதை வரவேற்கிறேன். அதே போல் இதை ஆண்களுந்தான் செய்யக்கூடாது. அதையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
நான் புகை, மது இதற்கு மிகுந்த எதிராளர்.

உடலை துன்புறுத்தி, உடன் இருக்கும் மனிதரையும் பாழ்படுத்தி, சமூகத்தையே சீரழிக்கும் இந்த பழக்கம் ஒருவரும் செய்யக்கூடாது என்பதே எனக்கு மிகப்பெரிய லட்சிய எண்ணம்.

சுகந்தப்ரீதன்
01-11-2007, 10:24 AM
[COLOR=darkorchid]நான் புகை, மது இதற்கு மிகுந்த எதிராளர்.

உடலை துன்புறுத்தி, உடன் இருக்கும் மனிதரையும் பாழ்படுத்தி, சமூகத்தையே சீரழிக்கும் இந்த பழக்கம் ஒருவரும் செய்யக்கூடாது என்பதே எனக்கு மிகப்பெரிய லட்சிய எண்ணம்.
ராமதாஸூம் அன்புமணியும் கவனிக்க வேண்டிய ஆள் இந்த பூமகள்.. அநேகமா கொங்குநாட்டுல இதப்பத்தி பிரச்சாரம் பண்ண கூடிய விரைவில உங்களை சந்திப்பாங்கன்னு எதிர்பார்க்கலாம்.. வாழ்த்துக்கள்:icon_rollout:

பூமகள்
01-11-2007, 10:26 AM
பத்துவருடம் கழித்து பூவாக இல்லை அன்பு!
பூந்தோட்டமாக இருப்பார்!!!
இவர்களுடன்...
:icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout:
:icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout:

:icon_shok::icon_shok::icon_shok::icon_shok:

நேசம்
01-11-2007, 10:49 AM
ராமதாஸூம் அன்புமணியும் கவனிக்க வேண்டிய ஆள் இந்த பூமகள்.. அநேகமா கொங்குநாட்டுல இதப்பத்தி பிரச்சாரம் பண்ண கூடிய விரைவில உங்களை சந்திப்பாங்கன்னு எதிர்பார்க்கலாம்.. வாழ்த்துக்கள்:icon_rollout:
அவங்களுக்காவது சமுக அக்கறை இருக்கு ன்னு சந்தோஷ பட வேண்டும்

சுகந்தப்ரீதன்
01-11-2007, 10:52 AM
அவங்களுக்காவது சமுக அக்கறை இருக்கு ன்னு சந்தோஷ பட வேண்டும்
அண்ணா அவங்களுக்கு உண்மையில அக்கறை இருக்கா இல்லியாங்கறது நமக்கு வேணாம்.. முதல்ல உங்களுக்கும் பூமகளுக்கும் அக்கறை இருக்கறதே ரொம்ப சந்தோசம் எனக்கு..! வாழ்த்துக்கள்..!

விகடன்
01-11-2007, 11:00 AM
[COLOR=DarkGreen]தீய பழக்கத்தை தனதாக்கிக் கொண்டு வீரத்தின் அடையாளமாய் தவறான கணிப்பை ஆக்கிவிட்டது ஆண்கள் என்று தான் கூற வருகிறேன்.
இது சரியான வாதம்.
பாராட்டுக்கள்.

பெண்களாகிய அனைவரிற்கும் ஒரு வேண்டுகோல்,
இப்படிப்பட்ட தீய பழக்கம் இல்லாதவர்களுடன் மட்டுமே கதையோ காதலையோ வையுங்கள். பழக்கத்திற்கு அடிமைப் பட்டோரை ஒதுக்குங்கள். கண்டால் முகத்தை சுழித்துக் காட்டுங்கள்

கட்டாயம் மாற்றம் ஒன்று இருக்கத்தேன் செய்யும்.
மறையாவிட்டாலும் குறையும். :D

பூமகள்
01-11-2007, 11:01 AM
அண்ணா அவங்களுக்கு உண்மையில அக்கறை இருக்கா இல்லியாங்கறது நமக்கு வேணாம்.. முதல்ல உங்களுக்கும் பூமகளுக்கும் அக்கறை இருக்கறதே ரொம்ப சந்தோசம் எனக்கு..! வாழ்த்துக்கள்..!
அன்புச் சகோதரர் ப்ரீதன்.. என்னை என் மனதை புரிந்து கொண்டு வாழ்த்தியமைக்கு ரொம்ப நன்றிகள்..!!

சுகந்தப்ரீதன்
01-11-2007, 11:09 AM
பெண்களாகிய அனைவரிற்கும் ஒரு வேண்டுகோல்,
இப்படிப்பட்ட தீய பழக்கம் இல்லாதவர்களுடன் மட்டுமே கதையோ காதலையோ வையுங்கள். பழக்கத்திற்கு அடிமைப் பட்டோரை ஒதுக்குங்கள். கண்டால் முகத்தை சுழித்துக் காட்டுங்கள்
:D
அண்ணா இது ஏற்க முடியாத கூற்று.. மாறாக அன்பாக பேசி மாற்றலாம் என்பது எனது கருத்து.. அதுமட்டுமின்றி எந்த ஒரு மனிதனையும் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகள்லும்தான் ஒரு பழக்கத்திற்கு அடிமையாக்குகின்றன... அப்படியிருக்க புறக்கணிப்பு இன்னும் அவனை அந்த பழக்கத்திற்கு அடிமையாக்குமே தவிர மீளசெய்யாது... தவறு என்று உணரும் பட்சத்தில் தவறான பழக்கங்களை தவிர்க்க விடுவார்கள் எவரும்.. அப்படியும் தொடர்ந்தால் மட்டும் நீங்கள் சொல்வதுபோல் செய்வது நலம்... வாழ்த்துக்கள் விராடன் அண்ணா...!

பூமகள்
01-11-2007, 11:13 AM
இது சரியான வாதம்.
பாராட்டுக்கள்.

மிகுந்த நன்றிகள் விராடன் அண்ணா.:)

பெண்களாகிய அனைவற்கும் ஒரு வேண்டுகோல்,
இப்படிப்பட்ட தீய பழக்கம் இல்லாதவர்களுடன் மட்டுமே கதையோ காதலையோ வையுங்கள். பழக்கத்திற்கு அடிமைப் பட்டோரை ஒதுக்குங்கள். கண்டால் முகத்தை சுழித்துக் காட்டுங்கள்

அப்படித்தான் நானும் செயல்படுகிறேன். ஆனாலும் சில தவிர்க்க முடியா சூழலில் முகத்தை முற்றிலும் திருப்ப முடியாதே...!! அலுவலகத்திலாகட்டும், வெளியிடத்தில் ஆகட்டும் பேசியே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கத்தானே செய்கிறது. ஆனாலும், நட்பு நிச்சயமாக வைத்துக் கொள்ளவே முடியாது. ஏனெனில் அப்பழக்கதை வெறுப்பவர், எப்படி அப்பழக்கத்துக்கு அடிமையானவரோடு நட்பு பாராட்ட இயலும்??

தாங்கள் சொல்லிய அறிவுரை ஏற்கத்தகுந்ததே விராடன் அண்ணா.
நன்றிகள்.

கட்டாயம் மாற்றம் ஒன்று இருக்கத்தேன் செய்யும்.
மறையாவிட்டாலும் குறையும். :D
நிச்சயம் மாறும். அதற்கு முதலில் புகை, மது பழக்கமில்லாத ஆண்களைத்தான் மணம் முடிப்பேன் என்று பெண்கள் உறுதியெடுக்க வேண்டும்..!! (பூவு இது ஓவருன்னு சிலர் நினைக்கலாம்..:rolleyes: ஆனாலும் இப்படி செய்தால் தான் இப்பழக்கம் சமூகத்தில் குறையும் என்பது என் நம்பிக்கை.)