PDA

View Full Version : ♔. ஆ! 10! ♔. - முதல் சுற்று

Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14

சக்திவேல்
27-09-2007, 01:24 PM
நன்றி கமலகன்னன் அவர்களே, அருமையாக பதில் அளித்து இருக்கின்றீர்கள். மென்பொருளாளர்களின் ஊதியம் நியாயமானதுதான் என்ற விளக்கமும் ஒத்துக்கொள்ளக்கூடியதே. சாட்டிங்கில் நீங்கள் செய்த குறும்பு நினைத்தாலே சிரிப்பு வருகிறது. சீதாரமன் நாராயனன் பற்றிய தகவ்லுக்கு நன்றி.

க.கமலக்கண்ணன்
27-09-2007, 01:29 PM

நன்றி சக்திவேல்...

நன்றி...

சக்திவேல்
27-09-2007, 01:33 PM
அக்கினி, ஷி-நிசி, அமரன், சிவா.ஜி, ராஜா, தளபதி, மற்றும் மலர் ஆகியோரின் வாழ்த்துக்களுக்கு நன்றி.

மலர் அவர்களின் தோழி செய்த குறும்பு எங்களையெல்லாம் சிரிப்பு கடலில் ஆழ்த்தி விட்டது. அந்த ஆண் நன்பரின் சின்சியரான பதில்களும் பீலாக்களும் நினைக்க நினைக்க சிரிப்புத்தான்.

ராஜா அவர்களின் மகன் சொல்லுவது வித்தியாசமான ஆனால் உன்மையான கருத்துதான், புலிக்கு பிறந்ததாச்சே.

அக்கினி அவர்களின் கருத்து மிக அருமை.
"உழைப்பால் உயர்பவர்கள் வயது குறைவாக இருந்தாலும், உழைக்கும் நேரம் அவர்களுக்கு அதிகமாகத் தேவைப்படுவதால்,
அவர்கள் பாதை பெரிது நேரியதாகவே இருக்கும்..."

மீன்டும் நன்றி நன்பர்களே அடுத்தவர்களின் பதில்களை எதிர்நோக்குவோம்.

சுகந்தப்ரீதன்
27-09-2007, 01:41 PM
நண்பரே...முதல் கேள்விய என்கிட்ட கேட்டு எல்லோருடைய பார்வையும் என்மேல படவச்சிட்டீங்களே...எனக்கு ஒரே கூச்சமா இருக்குது போங்க... ஆனாலும் இங்க என்கிட்ட முதன் முதல்ல கேள்விகேட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்... ஆட்டோகிராப் எல்லாத்தையும் ரெண்டுநாளு படிச்சிபாத்துட்டு அப்புறம் பதில் தாரேங்க..?!

lolluvathiyar
27-09-2007, 03:44 PM
அருமையான கேள்வி கேட்டு சிந்திக்க வைத்து விட்டீர்கள் சக்திவேல் அவர்களே, பொது கேள்வி கொசுரு கேள்வி போட்டு தாக்கீட்டீங்க. என்னையும் மாட்ட வச்சிட்டீங்க. விரைவில் பதில தருகிறேன்.

கமலக் உங்கள் பதில் அபாரம். அதிலும் சாட்டிங் ஒரு காலகட்டத்தில் அனைவரும் செய்த குரும்பு செயல்கள் மலரும் நினைவுகளை தூண்டி எடுத்துவிட்டீர்க்கக்ள்

பாரதி
27-09-2007, 05:52 PM
பாரதி, உங்கள் ஊரிலே எடுத்தபடம் கருத்தம்மா. அப்படி அழகான ஊரா உங்கள் ஊர்? பெண் குழந்தைகளை கொல்லும் வழக்கம் உங்கள் ஊர் கிராமங்களில் உள்ளனவே. பெண் குழந்தைகள் வளர்ந்து வாழ்க்கை என்னும் கஷ்டத்தில் அடிபட்டு அலறும் பரிதாபத்தை கண்கொண்டு காண சகியாமல் துடிப்பதைவிட பாசத்தை வளர்க்கும் முன்பே, வலிகளை உணரும் முன்பே, கொன்றுவிடலாம் என்று செய்கிறார்களா? இல்லை திருமணம் மற்றும் செய்முறைக்கு நிறைய செலவாகுமே என்ற சுயநலத்தில் அப்படி செய்கிறார்களா?
(கொசுறு கேள்வி: காலத்தை மீறி கனவுகண்டு தன் வாழ்க்கையை அழித்துக்கொண்டவர், மகா கவி பாரதி, எங்கள் பாரதியின் கனவுகள் என்னென்ன?)

அன்பு ராஜாவிற்கும், சக்திவேலுவுக்கும் நன்றி கூறும் இதேவேளையில் இளசு அண்ணனின் வேண்டுகோளையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

நம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட படம்தான் கருத்தம்மா. நாம் அனைவரும் 'அவரவர் பிறந்த ஊரே சிறப்பு' என நினைப்பது போலவே, எனக்கும் பார்த்ததில் என் கிராமம்தான் மிக மிக அழகானது. ஊரின் இரண்டு பக்கமும் ஆறுகள், சற்றுத்தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலை, சாலையின் இருமருங்கிலும் குடை பிடிக்கும் மரங்கள், பெரும்பான்மையான வகை காய்கறிகளும், பழங்களும், தானியங்களும் விளையும் பச்சைப்பசேலென்ற தோட்டங்கள், வயல்கள், வெயில் காலம் தவிர்த்து மற்ற எல்லா காலங்களிலும் அருமையான சூழல் ... இப்படி எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் உங்கள் கேள்விக்கு அது அத்துணை முக்கியமில்லை.

நான் அறிந்த வரையில் எங்கள் கிராமத்தில் பெண் சிசுக்கொலை இன்று வரை இருந்ததில்லை! ஆனால் சுற்றுவட்டாரத்தில், குறிப்பாக உசிலம்பட்டி அருகே இருக்கும் கிராமங்களில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடையே மட்டும் இந்த வழக்கம் இருந்தது என்னவோ உண்மைதான். அந்த சமூகத்தினரின் வாழ்க்கையே உணர்ச்சிபூர்வமானதுதான்.

நான் சிறுவனாக இருந்த போது, அருகே ஒரு கிராமத்தில் உள்ள வீட்டில் மாமிசத்தை அதிகமாக உண்டதாகக் கூறி ஒரு பெண்ணை அவள் குடும்பத்தினரே விஷம் தந்து கொன்றதாக ஒரு வதந்தி வந்தது. இறக்கும் முன்பு அந்தப் பெண் "யெப்பே... என்ன விட்டிருப்பே... ஒரு ஆப்பக்கறிதான்ப்பே தின்னேன்.." என்று கதறியதாக, கேள்விப்பட்ட செய்தி, இருபத்திஐந்து ஆண்டுகள் கழிந்த பின்னரும் இன்னும் நெஞ்சில் வடுவாக இருக்கிறது.

கொலை செய்வதற்கு என்ன காரணம் என்று வினவி இருக்கிறீர்கள்; முறையாக அறியாமல், காரணம் என்னவாக இருக்கும் என்ற கணிப்பு தவறாகப் போய்விடக்கூடிய அபாயம் இருக்கிறது. ஆகவே அதற்கு என்னால் பதில் சொல்ல இயலாது. ஆனால் என்னதான் காரணம் சொன்னாலும், கொலையை செய்யக்கூடிய அளவு மனித மனங்கள் கொடியனவாக இருந்ததை / இருப்பதை நினைத்து மிகவும் வேதனை அடைகிறேன். அரசாங்கத்தின் தொட்டில் குழந்தைத் திட்டம் ஓரளவுக்கு பலன் தந்திருக்கிறது. சட்டபூர்வமாக இதை தடுக்க சட்டங்கள் கொண்டு வந்து திருத்துவதை விட, கருத்தம்மா போன்ற படங்கள் சொல்லும் செய்தி மூலமும், நேரடியாக மக்களை சந்தித்து, மனங்களை பண்படுத்துவதன் மூலமும் பெரும்பான்மையானவர்களை சரியான வழியில் நடத்த வாய்ப்பிருக்கிறது என்பதே என் கருத்து.

கருத்தம்மா - திரைப்படத்திற்கு கிடைத்த விருதை, தலைநகரில், பாரதிராஜாவின் தாயார் வாங்கியதே பெண்களை இழிவாக நினைப்போருக்கு நல்ல பாடமாக அமைந்திருக்கிறது. இப்போதைக்கு நகரங்களில் மக்கள் ஓரளவுக்கு விழிப்புணர்வு அடைந்து விட்டார்கள். குக்கிராமங்களில் இந்தப்பழக்கம் இன்னும் தொடர்கிறதோ என சந்தேகிக்கிறேன்.

கொசுறு கேள்விக்கு பதில்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' என்பார் பாரதி. சிறு வயதில் இருந்து கண்ட கனவுகள் அனைத்தும் நானே ஆச்சரியப்படும் வகையில் நிறைவேறி இருக்கின்றன! கடந்த பல வருடங்களாக எனக்குக் கனவே வருவதில்லை..! இப்போதைக்கு எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை. நோக்கம் என்று யோசித்தால், இயன்ற வரையில், இருக்கும் வரையில் மனிதனாக வாழ்வது, மனித நேயத்தை வளர்ப்பது ஆகியவையே.

இனியவள்
27-09-2007, 06:22 PM
கமல்க் உங்கள் பதிலை ரசித்தேன்
வாழ்த்துக்கள் தோழரே

ஹீம் எனக்கும் நேர்ந்து இருக்கிறது பல முறை
சேவ்(save) பண்ணாமல் வேலை செய்துகொண்டிருக்கும் போது
மின்சாரம் தடைப்பட்டு முதலில் இருந்து அந்த வேலையை
செய்த அனுபவம்

கொசுறு பதில் சிரிக்க வைத்தது

வாழ்த்துக்கள் தோழரே

ராஜா
28-09-2007, 04:17 AM
பாரதியின் பதில் உள்ளத்தை உலுக்கிவிட்டது..

"என்னை விட்டுருப்பே" என்றழுத பெண்ணின் வாழ்வு ஆசையை எண்ணி வருந்துவதா, இப்படி இதயம் கல்லாகும்படி வாழ்க்கை முறை அமைந்த அந்த பெற்றோரின் அறிவின்மையைச் சாடுவதா..?

பெண் சிசுக் கொலை புரியும் பெற்றோர் மட்டுமல்ல.. அவர்கள் விரும்பியோ, அல்லாமலோ அச்செயலை செய்ய வைக்கும் சமூகமும் குற்றவாளியே..

கல்வி அறிவும், சமதர்மச் சமுதாயமுமே இந்த அவலங்களைப் போக்க வல்லவை எனும் கருத்தமைந்த பண்பாளர் பாரதியின் பதில் வெகு சிறப்பு.

மலர்
28-09-2007, 04:33 AM
அன்பு பாரதி அண்ணா...

உங்களின் பதிலை படிக்கும் போது ராஜா அண்ணா சொல்வது போல உள்ளத்தை உலுக்கிவிட்டது..

யெப்பே... என்ன விட்டிருப்பே... ஒரு ஆப்பக்கறிதான்ப்பே தின்னேன்.." என்று கதறியதாக, கேள்விப்பட்ட செய்தி,

உண்மையில் மக்களின் அறியாமையும் படிப்பறிவின்னையும் ஒரு காரணம் என்றால் ஆண் பிள்ளையின் மீது உள்ள மோகம் இன்னொரு காரணம்....

குக்கிராமங்களில் இந்தப்பழக்கம் இன்னும் தொடர்கிறதோ என சந்தேகிக்கிறேன்.

குக்கிராமங்களில் தெரியலை ஆனால் கிராமங்களில் கொஞ்சம் மாறிட்டு... எப்படின்னா ஸ்கேன் செய்து பார்த்து விட்டு அவங்க விருப்பப்படி மாற்றி கொள்வார்கள்......

க.கமலக்கண்ணன்
28-09-2007, 05:12 AM
கமல்க் உங்கள் பதிலை ரசித்தேன்
வாழ்த்துக்கள் தோழரே

கொசுறு பதில் சிரிக்க வைத்தது

வாழ்த்துக்கள் தோழரே

நன்றி தோழியே மிக்க நன்றி...

க.கமலக்கண்ணன்
28-09-2007, 05:13 AM
பெண் "யெப்பே... என்ன விட்டிருப்பே... ஒரு ஆப்பக்கறிதான்ப்பே தின்னேன்.." என்று கதறியதாக,

மிக ஆழ்ந்த கருத்துள்ள செய்தி

மிகவும் மனதை கணக்க செய்து விட்டது பாரதி...

சிவா.ஜி
28-09-2007, 06:04 AM
கமலக்கண்ணனின் பதில் அருமை.பெரும்பாலாலோரால் இந்த கூடுதல் சம்பள சங்கதி நியாயப்படுத்தப்பட்டாலும் தனிப்பட்ட முறையில் எனக்கு அதில் உடன்பாடில்லை.அதற்குக் காரணம் அவர்களின் போக்கு.அவர்களைத் தவிர மற்ர வேலையில் இருப்பவர்களையெல்லாம் அற்பமாகப் பார்ப்பார்கள்.software ஜாதி என்ற ஒரு புது ஜாதியையே உருவாக்கிக்கொண்டார்கள்.அதீதமான பணம் மற்றவரை மதிக்கச்செய்யாமல் ஆக்கிவிட்டது.நான் பார்த்தவரையில் அவர்களைப் பற்றின என் சொந்த அபிப்பிராயம் இது.ஆனால் எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் உண்டு.இதில் சதவீதம் வெகு குறைவே.
கொசுறு பதிலில் சிரிப்பை வரவழைத்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள் கமல்.

சிவா.ஜி
28-09-2007, 06:07 AM
பாரதி அவர்களின் பதிலைப் படித்து அந்த ஒற்றை வரி உலுக்கிவிட்டது. நெஞ்சு திக்கென்றாகிவிட்டது.எத்தனை கொடுமையான விஷயம்.ஒரு ஆப்பைக் கறிக்கு உயிர் விலையா...நல்லவேளை இப்போதெல்லாம் அந்த கொடுமைகள் வெகுவாக குறைந்து வருகிறது.
அவருடைய கிராமத்தின் அழகை விவரித்திருந்தது அருமையோ அருமை.
பாராட்டுக்கள் பாரதி.

க.கமலக்கண்ணன்
28-09-2007, 07:54 AM
கமலக்கண்ணனின் பதில் அருமை.பெரும்பாலாலோரால் இந்த கூடுதல் சம்பள சங்கதி நியாயப்படுத்தப்பட்டாலும் தனிப்பட்ட முறையில் எனக்கு அதில் உடன்பாடில்லை.அதற்குக் காரணம் அவர்களின் போக்கு.அவர்களைத் தவிர மற்ர வேலையில் இருப்பவர்களையெல்லாம் அற்பமாகப் பார்ப்பார்கள்.software ஜாதி என்ற ஒரு புது ஜாதியையே உருவாக்கிக்கொண்டார்கள்.அதீதமான பணம் மற்றவரை மதிக்கச்செய்யாமல் ஆக்கிவிட்டது.நான் பார்த்தவரையில் அவர்களைப் பற்றின என் சொந்த அபிப்பிராயம் இது.ஆனால் எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் உண்டு.இதில் சதவீதம் வெகு குறைவே.
கொசுறு பதிலில் சிரிப்பை வரவழைத்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள் கமல்.

சிவா நன்றி உங்களுக்கு...

சிலவிசயங்கள் சற்று யோசித்துப் பார்த்தால் புரியும். மனிதனை படைக்க ஒரு கடவுள் காக்க ஒரு கடவுள், அழிக்க ஒரு கடவுள் என்று 3 கடவுள்கள் இருக்கிறார்கள். ஆனால் மென்பொருள் உருவாக்கபவர்கள் அந்த 3 வேலையை சேர்த்து செய்ய வேண்டும். முன் கூட்டியே திட்டமிட்டு அதை படைத்து தேவையான அளவில் அதை காத்தது மற்றவர்கள் தகவல்களை திருடிவிடாமல் பாதுகாத்து தேவையான நேரங்களில் தேவையில்லாதவற்றை அழித்து யப்பபா என்னனென்ன வேலைகளை முன்கூட்டியே யோசித்து இவற்றை படைத்து அதை காக்க இப்படி பல வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் ஒன்றை யோசிக்க வேண்டும். 23 வயது இளைஞன் கிட்டதட்ட 5 வருடம் இத்துறையில் இருந்தால் 45 வயதுடையவரின் அனுபவம் கண்டிப்பாக இருக்கும். இது வளர்ச்சியே அன்றி ஆபத்து அல்ல நண்பா...

சிவா.ஜி
28-09-2007, 08:10 AM
வேலையின் முக்கியத்துவத்தைப் பற்றியோ அதற்கான அவர்களின் திறமையைப் பற்றியோ எனக்கு எந்த விதமான கருத்துவேறுபாடுகளும் இல்லை கமல்.ஒவ்வொருவரும் இந்த துறையில் அசத்துகிறார்கள்.அதற்காக அவர்கள் கொடுக்கும் உழைப்பும் மிக அதிகம்தான்.
ஆனால் ஒரு விஷயம் யோசித்துப் பாருங்கள் கமல், நீங்கள் சொன்ன அந்த மூன்று வேலைகளையும் விஞ்ஞானிகளும் செய்கிறார்கள்.இரவுபகல் பாராது,குடும்பம்,வீடு எல்லாம் மறந்து வேலை செய்கிறார்கள்.ஆனால் அவர்களுக்கு இந்த சம்பளம் கிடைக்கிறதா? அதுமட்டுமல்ல சம்பளம் எவ்வளவு கிடைத்தாலும் அது அவரவர் திறமைக்கு கிடைக்கிறது.ஆனால் அப்படிக்கிடைப்பதால் அவர்களின் போக்கில் ஏற்படும் மாற்றங்கள்தான் முகம் சுழிக்கவைக்கிறது.இவ்வையெல்லாம் நான் நேரிடையாக பார்த்து அனுபவித்தது கமலக்கண்ணன்.
நம் மன்றத்திலேயே உங்களைப்போன்றோர் எத்தனையோபேர் இந்த துறையில் இருக்கிறார்கள்.இவர்களைப்போல தளும்பாமல் இருக்க அந்த குறைகுடங்களுக்குத் தெரியவில்லையே. அதுதான் குறை.

க.கமலக்கண்ணன்
28-09-2007, 08:22 AM
நீங்கள் சொல்வமு சரி சிவா. ஆனால் விஞ்ஞானிகளுக்கு வரலாற்றில் நீங்கா இடம் கிடைத்துவிடும். ஆனால் மென்பொருள் துறையில் அப்படி ஒன்றும் பெயர் கிடைப்பதில்லை ஒரு சிலரை தவிர. ஆனால் விஞ்ஞானிகளுக்கு...

உதாரணம் திரு. அப்துல்கலாம்... சரியா...

lolluvathiyar
28-09-2007, 08:23 AM
சொந்த அடையாளங்களுடன் இனையத்தில் உலாவந்து பதிவுகளை மேற்கொண்டதால் மன்ற மறவர்களின் சந்திப்பில் கலந்து கொள்ள இயலாது என்று சொல்லியிருந்தீர்கள். அதில் என்ன பிரச்சினை, நீங்கள் சந்தித்த பிரச்சினைகளை பகிருங்களேன்,

பொருத்தமான கேள்வி,
என் சொந்த அடையாளங்களுடன் நாம் சமுகத்தில் நிரைய நன்பர்களுடன் பழகி வருகிறேன். அவை வெளி மன தோற்றம்.
விவசாய குடும்பத்தில் பிறந்தவன். இதுவரை சந்தோசமான வாழ்கை மட்டுமே நடத்தியவன். நேர்மையாக வாழ்ந்ததால். பள்ளி கல்லூரியில் படிப்பில் நான் படுமோசம். ஓவியம், கவிதை போண்ற வேறு எந்த திறமைகளும் கிடையாது. விளையாட்டில் கூட எனக்கு திறமைகள் கிடையாது. சாப்பாட்டு போட்டியில் கூட வெற்றி பெற்றதில்லை. எதுக்கும் லாயிகில்லை என்று எல்லாராலும் போற்ற பட்டவன்.

ஆனால் பள்ளி கல்லூரி மற்றும் உறவினர்களிடம் நான் பிரபலமானவன். காரனம் நான் ஒரு நகைசுவை பேர்வழி, மேடையிலும் நான் அப்படிதான். அதே சமயம் பள்ளி பருவத்திலேயே பட்டி மன்றங்களில் கலந்து கொண்டு அசத்தியவன்.

வாழ்கையில் ஓரளவுக்கு செட்டி ஆகி இருந்தாலும், நன்பர்களுடன் சேர் ந்து பல முரை தொழில் தொடங்கி தோல்வியும் அல்லது ஏமாற்றம் அடைந்து, நிரை நஸ்டமும் கூட அடைந்து விட்டேன். ஆனால் என் இயல்பு குணம் மட்டும் மாறவில்லை. அது என் நகைசுவை குணம், நான் எப்பொழுது சந்தோசமாகவே இருக்க தெரிந்து கொண்டவன்.

சரி இனி விசயத்துக்கு வருகிறேன்.
இந்த மன்றத்தில் என்னை மேலோட்டமாக பார்த்தவர்களுக்குன் நான் ஒரு ஹிந்து வெறியனாக தான் தெரியும். தொழில் வளர்ச்சி எதிரானவனாக தெரியும்.
நான் பிறந்த ஹிந்து மதத்தின் மீது எனக்கு அதிக பற்று இருப்பது உன்மைதான். ஆனால் அது வெறியாக மாறவில்லை. ஹிந்து மதத்தை பற்றி ஹிந்துளுக்கே 90 சதவீதம் தெரியாது. அதை தவறாக புரிந்து கொண்டு ஒன்னா மதம் மாருகிறான் அல்லது மதவெறியனாகிறான்.

நான் பிறந்த குடும்பமே திராவிட கட்சி விசுவாசிகள். எந்த பதவியிலும் இல்லாதவர்கள் ஆதனால் நல்லவர்கள். என்னையும் அப்படிதான் வளர்த்தார்கள்.
ஆனால் தனி மனிதன் லொள்ளுவாத்தியாரில் உள்மணம் வேறு மாதிரி சிந்திக்க கூடியது. சரித்திர நாவல் ஹிந்து பேப்பர் படிக்கும் குணம் அதிகம். எப்படியோ வரலாறுகள் சம்மந்தமாக அதிகமாக படித்து விட்டேன்.
முக்கியமாக ஆங்கிலேயர்களால் மறைக்கபட்ட / மற்றும் மாற்றி தினிக்க பட்ட வரலாறுகளை தேடி படித்திருகிறேன். ஆங்கிலேயர்களால் மரைக்கப்ட்ட என்பதற்க்கு அழிக்கபட்ட என்று அர்த்தம் இல்லை.

நான் என் மனதில் நம்பும் விசயங்கள்

1. ஆரியர் திராவிடர் என்று பிரிவினை முழுக்க முழுக்க பொய் வரலாறு. பிரிவினையை வளர்க்கவே ஆங்கிலேயர்களா பரப்பபட்டது. சாதிகள் இருக்க கூடாது என்று விரும்புவன்.

2. நம் நாட்டில் நீண்ட காலமாகவே சாதிகள் இருந்தன ஆனால் அதை தீண்டாமையாக மாற்றியது அனைத்தும் ஆங்கிலேயர்களின் செயல்.

3. தமிழ் மொழி மீது பற்று வேண்டும். ஆனால் மொழிக்கு மத இன சாயம் பூச கூடாது, மாற்று மொழி வெறுப்பு கூடாது. கட்டாயம் அரசில் கூடாது. தமிழ் அழியாது, அதை காப்பாற்றுகிறேன் என்று சொல்லும் அனைவரும் நம்பகதகுந்தவர்கள் அல்ல.

4.நம் நாட்டை ஆண்ட முஸ்லீம் மன்னர்கள் நிரைய ஆட்டுழியங்கள் செய்தார்கள் (கோவில்களை இடித்தது, கட்டாய மத மாற்றம், கொலைகள்) ஆனால் 500 வருடங்களுக்கு முன் நடந்த அந்த சம்பவங்களுக்கு பழி வங்கும் நடவடிக்கையும் கீழ்தரமானது (மசூதி இடித்தல், இன்றைய முஸ்லீம்களை வெறுத்தல்) அதே சமயம் மத நல்லினக்கம் என்ற பெயரில் அதை மரைக்க நினைப்பதுதான் உன்மையில் ஆபத்தான விசயமாகும். என் கருத்து என்னவென்றால் கோவில்களை இடித்து கட்ட பட்ட மசூதிகளை திறும்ப இடிக்க கூடாது. அதே சமயம் அங்கு கோவில் இல்லை என்று பொய் பேசவும் கூடாது.

5. இடஒதுக்கீடு இருக்க கூடாது. இலவசம் மானியங்கள் என்பது ஒரு ஏமாற்று வேலை.

6. தொழில் வளர்ச்சி என்பது நிரைய பணம் தரும். வேலை வாய்பு தரும் என்பது ஒரு மாயை. நகரங்கள் மேல் நோக்கி வளரலாம், ஆனால் பரவ கூடாது. ஒரு நகர வளச்சிக்காக அரசாங்கம் விவசாயத்தை அழிக்க கூடாது. ஏ.கா நகரங்களை இனைக்க சாலை போடும் போது விவசாய நிலங்களை ஆக்கிரிமித்தல். சிறப்பு பொருளாதர மன்டலம், நகர குப்பைகளை பக்கத்து விவசாய நிலங்களில் கொட்டுவது, மாசு, நகரத்துக்கு தன்னீர் பற்றாகுரையை குரைக்க விவசாய கிராமங்களிலிருந்து தன்னீர் பிடுங்கி தருவது.
தொழில் வளர்ச்சி மேலும் விவசாய கூலி ஆட்கள் பற்றாகுரையை ஏற்படுத்துகிறது. ஆனால் விவசாய பொருட்களுக்கு விலை மட்டும் கிடைப்பதுஇல்லை. விளைவு விவசாய நிலங்கள் சைட் போட்டு விற்கபடுகின்றன. இப்படி தொடர்ந்தால் நமது வருங்கால சந்ததியினரை கடுமையாக பாதிக்கும்.

7. சாராயம், விபச்சாரம் ஒழுங்கீன செயல்கள், ஆனால் அடுத்தவன் உரிமையை பாதிக்கா செயல்கள் குற்றமாக்க கூடாது என்பது என் வாதம். சாராயம் நமக்கு தேவை இல்லாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் அது ஒரு சிலருக்கு தேவை. விபச்சாரம் நமக்கு அருவருப்பாக இருக்கலாம், ஆனால் அது வக்கிர என்னம் கொண்டவர்கள் வடிகால், இதனால் உன்மையில் குடும்ப பென்கள் பாதுகாப்பாக இருகிறார்கள்.

இப்பொழுது பார்த்தீர்களா, எனக்கு எந்த கட்சியும் ஒத்து வராது. சுருங்க சொன்னால் எனக்கு அரசியல் சாயம் பிடிக்காது.

ஆனால் இந்த மாதிரி என் என்னங்கள் என் பதிவுகளில் அடிகடி வந்து விடுகிறது. அதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

இது என் மனதில் உள்ளவைகள் எப்படி சொந்த அடையாளங்களுடன் எந்த அரசியல் கட்சி சாதி இயக்கங்களில் சாராத சாதர்ன பொதுமக்கள் வன்து சொல்ல முடியும்.

ஹிந்து மத பற்று சம்மந்தமாக ஒரு சாதர்ன குடிமகன் பேசுவது என்பது தமிழகத்திலும் தலிபன் காலத்து ஆப்கானித்தானிலும் ஆபத்தானவை என்று அனைவரும் அறிந்த விசயம் தானே.
தொழில் வளர்ச்சிக்கு எதிராக பேசினால் கோவைகாரர்கள் மத்தியில் அவமான பட நேரிடும். சிலர் தமிழின துரோகி என்று கூட சொல்லுவார்கள். ஹிந்தி நல்லது என்றால் வட நாட்டு முத்திரை குத்துவார்கள். சமஸ்கிருதம் நல்ல மொழி என்றால் மதவெறியன் என்று குற்றம் சாட்டபடும். சாராயத்தை பற்றி நான் என் கருத்தை மேடை ஏறி சொன்னால் என்னை கல்லால் அடித்து அப்புரம் விஸ்கி குடிக்க செல்வார்கள். விபச்சாரம் பற்றி வெளிபடையாக என் கருத்தை சொன்னால் என் (இல்லாத) பண்பாடு கலாசாரத்துக்கு எதிரானவன் என்ற பட்டம் கிடைக்கும்.

இதெல்லாம் எனக்கு தேவையா. இதனால் தான் நான் அடையாளங்களுடன் வர விரும்புவதில்லை.

நீங்கள் விரும்புவது என் அடையாளங்களை அல்ல, லொள்ளுவாத்தியாரின் கருத்துகளை. இதையும் நான் அறிவேன்.
என் அடையாளங்கள் தெரிந்தால் ஏமாற்றம் அடைவீர்கள்.

அடையாளம் (Identity) என்று ஒன்று வரும் போது கருத்துகள் மணம் திறந்து சொல்ல முடியாது. கருத்தும் அடையாளமும் என்று பொருந்தாது.

லொள்ளு வாத்தியார்
(கொசுறு கேள்வி, இங்கே லொள்ளு பன்னும் வாத்தியார் கல்லூரி மற்றும் வீட்டில் எப்படி?)[/COLOR][/B]

இங்கு அப்படி என்ன நான் லொள்ளு பன்னுகிறேன். வீட்டிலும் லொள்ளு பிடிச்சவன் தான் ஆனா எல்லாத்துக்கும் வட்டிக்கு முதலா திருப்பி தந்து விடுவார்கள். ஆனாலும் நான் திருந்தியபாடு இல்லை.

க.கமலக்கண்ணன்
28-09-2007, 08:30 AM
சுவையாகவும் மிகையில்லாமலும் பலா

சுளையாக பதில் தந்திருக்கிறீர்கள்... அருமை லொல்லுவாத்தியார்...

பூமகள்
28-09-2007, 09:03 AM
அன்பு உறவுகளே...

இந்த திரி ஆ! பத்து! கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டது என்பதை இங்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

(அமரன் அண்ணா நீங்கள் கூறியது போலவே சொல்லிவிட்டேன்.. சரியா இருக்கான்னு பாருங்க அண்ணா...!!:D)

சிவா.ஜி
28-09-2007, 09:07 AM
கமலக்கண்ணன் சரியாச் சொல்லிட்டீங்க...இப்ப ராஜா சார் வருவார் கையில பிரம்போட...

க.கமலக்கண்ணன்
28-09-2007, 09:11 AM
அன்பு உறவுகளே...

இந்த திரி ஆ! பத்து! கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டது என்பதை இங்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

(அமரன் அண்ணா நீங்கள் கூறியது போலவே சொல்லிவிட்டேன்.. சரியா இருக்கான்னு பாருங்க அண்ணா...!!:D)

எல்லோரையும் கலாய்கறது நீங்க

எதுவுமே தெரியாதது மாதிரி நீங்களே அறிவிப்பு கொடுக்குறீங்க... நல்ல காமெடி... யாரங்கே ராஜா ஐயாவை கூப்பிடு

பூமகள்
28-09-2007, 09:15 AM
என்ன இருந்தாலும் கமல் அண்ணா, சிவா அண்ணா...
இந்த அன்புத் தங்கையை அடிவாங்க வைப்பீங்களா என்ன??:traurig001:
என்னது ராஜா அண்ணா வந்திட்டிருக்காரா...:eek::sprachlos020:
பூமகள் எஸ்கேப்...................................!! :auto003::D

ராஜா
28-09-2007, 09:55 AM
கலகலப்பு தேவைதான்.. முழுக்க முழுக்க சீரியசாக ஒரு திரி விளங்கினால் நன்றாக இருக்காது..

ஆனால்..

அக்னி போன்ற திறனாய்வாளர்கள் மற்றவர்களின் பதில்களைப் படித்து பின்னூட்டம் போட முயலும்போது, தங்கள் பதிவுகள் இடைஞ்சலாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..!

நன்றி.

க.கமலக்கண்ணன்
28-09-2007, 09:58 AM
கவுத்துபுட்டியலே ராஜா

கவுத்துபுட்டியலே

கலகலப்பு வேணுமுன்னு

கவுத்துபுட்டியலே

ராஜா
28-09-2007, 10:02 AM
ஆ! பத்து.. கேள்வியாளர் : கூர்மையும் வலுவும் கொண்ட சக்தி வேல்..!
----------------------------------------------------------------------------------

சுகந்தப்ரீதன்
சுகந்தப்ரீதன் அவர்களே, பெண் மனதின் ஆழத்தை அளவிடவே முடியாது என்று சொல்லுகிறார்களே, அப்படியா? அப்படியென்றால், அது இயற்கையாகவே யாராலும் அளவிடமுடியாததா இல்லை பெண்தான் வலிந்து மறைக்கின்றாளா?. அப்படியென்றால் அதன் காரணம் என்ன?
(கொசுறு கேள்வி: நீங்கள் ஒரு பெண்ணின் மனதை அளவிட்டதை அறிவேன்? அளக்க முடிந்ததா?)

தாமரை
தன்நலம் கருதாமல் பிறருக்காக நிறைய செய்தவர்கள் எல்லோருமே பெரும்பாலும் வாழ்வில் கஷ்ட்டப்பட்டுதான் இருந்திருக்கின்றார்கள். ஏன் அப்படி? ஒருவேளை அவர்களை பொறுத்தவரையில் சந்தோஷமாகத்தான் இருந்திருப்பார்களோ? நல்லது செய்வது அவர்களுக்கு கேடா?
(கொசுறு கேள்வி: தாமரை என்றாலே குளிர்ச்சிதான், புகைப்படத்தில் எங்கள் தாமரையின் தோரனை, அரசியல்வாதியா இல்லை கல்யான மாப்பிள்ளையா? ஏன் இப்படி)

தளபதி
மகிழ்சியுடன் வாழும் வழிகள் சொன்ன தளபதியாரே, கோப உணர்ச்சி மனிதனுக்கு தேவையா?. உங்கள் பதிலுக்கு காரணம் விளக்கமாக சொல்லுங்கள்?
(கொசுறு கேள்வி: உங்களை கோபப்பட வைத்த சம்பவம் மற்றும் உங்களின் அந்த கோபத்தின் விளைவை பகிருங்கள்)

பென்ஸ்
எந்த ஒரு விஷயமும் இரண்டு நிலைகளைக்கொண்டது என்பது உலகறிந்த உண்மை. (இரவு-பகல், நேர்மை-கயமை, அறிவாளி முட்டாள்) இரண்டில் ஒன்று ஆரம்பத்தில் அதிகமாக இருக்கும், கால ஓட்டத்தில், நிலைத்து நிற்கவேண்டிய தேவையில் குறைவான பகுதி மெல்ல மேலேறும் ஒரு நிலையில் சமமாகும் பிறகு அதிகமாகும், இதுவும் உலகறிந்த உண்மை. அது போல மனித வாழ்வானது நிறைய இரு நிலைகளை கொண்டிருக்கின்றது, அறிவு, செல்வம், வீரம் இவையெல்லாம் மக்களிடையே சமநிலைக்கு வருமா? இயற்கையின் நியதியானது சமநிலைக்கு வருதல்தான், அது மனிதனிடம் நடக்குமா? ஏன்?
(கொசுறு கேள்வி: கார்களில் மதிப்பானது பென்ஸ்-கார், எங்கள் மன்றத்தின் பென்ஸிடம் உள்ள மதிப்பான விசயங்கள் என்ன?

பாரதி
உங்கள் ஊரிலே எடுத்தபடம் கருத்தம்மா. அப்படி அழகான ஊரா உங்கள் ஊர்?. பென் குழந்தைகளை கொல்லும் வழக்கம் உங்கள் ஊர் கிராமங்களில் உள்ளனவே. பென் குழந்தைகள் வளர்ந்து வாழ்க்கை என்னும் கஷ்டத்தில் அடிபட்டு அலறும் பரிதாபத்தை கன்கொண்டு கான சகியாமல் துடிப்பதைவிட பாசத்தை வளர்க்கும் முன்பே, வலிகளை உணரும் முன்பே, கொன்றுவிடலாம் என்று செய்கிறார்களா? இல்லை திருமனம் மற்றும் செய்முறைக்கு நிறைய செலவாகுமே என்ற சுயநலத்தில் அப்படி செய்கிறார்களா?
(கொசுறு கேள்வி: காலத்தை மீறி கனவுகண்டு தன் வாழ்க்கையை அழித்துக்கொண்டவர், மகா கவி பாரதி, எங்கள் பாரதியின் கனவுகள் என்னென்ன? )

ராஜா
சுடர், விளையாட்டு என்று மன்ற மக்களை கவர்ந்து கலக்கும் ராஜா அவர்களே எப்படி இப்படியெல்லாம் புதிது புதிதாக கண்டுபிடிக்கின்றீர்கள், உங்கள் வாழ்க்கையிலும், தொழிலிலும் இதே மாதிரித்தான் அனைவரையும் கவர்ந்து கலக்குகிறீர்களா? அடுத்த திட்டம் என்ன?
(கொசுறு கேள்வி: டில்லிக்கு ராஜான்னாலும் பள்ளிக்கு பிள்ளைதான் எங்கள் ராஜா தன் குடும்ப உறுப்பிணர்களிடம் எப்படி?)

kamalk
கம்ப்யூட்டர் மென்பொருள் பணிக்கு இவ்வளவு சம்பளம் தருகின்றார்களே சரிதானா? இந்த இள வயதில் இவ்வளவு பணத்தை வைத்துக்கொண்டு கெட்டுதானே போவார்கள்? இல்லையா?
(கொசுறு கேள்வி: கமல் என்றாலே குறும்புதான், எங்கள் மன்ற கமல், இனைய-சாட்டில் செய்த குறும்பான செயலை சொல்லுங்களேன்)

மயூரேசன்
இந்த இள வயதில், கல்லூரி அனுபவங்கள் எப்படி இருக்கின்றன, ஒரு சிலவற்றை பகிருங்களேன். சக மாணவியரைப்பற்றி உங்கள் கருத்து என்ன? சக மானவியிடம் இருக்கும் நட்பானது காதலாக மாற சந்தர்ப்பம் உண்டா? அப்படி காதலாக மாறுவது சரிதானா?
(கொசுறு கேள்வி, மயூரி என்றால் மயில் என்று அர்த்தமாகும், மயூரேசனின் அர்த்தம் என்ன?)

லொள்ளு வாத்தியார்
ஒருமுறை, உங்கள் பதிவில், சொந்த அடையாளங்களுடன் இனையத்தில் உலாவந்து பதிவுகளை மேற்கொண்டதால் மன்ற மறவர்களின் சந்திப்பில் கலந்து கொள்ள இயலாது என்று சொல்லியிருந்தீர்கள். அதில் என்ன பிரச்சினை, நீங்கள் சந்தித்த பிரச்சினைகளை பகிருங்களேன்,
(கொசுறு கேள்வி, இங்கே லொள்ளு பன்னும் வாத்தியார் கல்லூரி மற்றும் வீட்டில் எப்படி?)

ஷீ-நிசி
கவிதைகளுக்காகவே வலைப்பதிவு ஒன்றை வைத்திருக்கின்றீர்களே, கவிதையென்றால் ரெம்ப பிடிக்குமோ? ஒவ்வொரு கவிஞனுக்கும் உந்துதலானது காதலேயன்றி வேறெதும் இறாது. உங்களின் உந்துசக்தி எது?
(கொசுறு கேள்வி-1: உங்கள் கவிகளிளேயே பிரமாதமாக கருதுவது எது வெளியிடுங்களேன்)
(கொசுறு கேள்வி-2: எனது கல்லூரி நாட்களின் காதலி தற்பொழுது வேறொருவரை மனமுடித்து நல்ல முறையில் சந்தோஷமாக குழந்தைகளுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கின்றார், ஒருவேளை என்னை மனமுடித்திருந்தால்கூட இந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்திருப்பள்ளோ தெரியலை. அவளது சந்தோஷத்தினை கான எனக்கு ரெம்பவும் சந்தோஷமாகவும் இருக்கிறது, இந்த சந்தோஷத்தை என்னால் தரமுடியலையே என்ற வருத்தமும் இருக்கிறது. இந்த சந்தோஷ/வருத்தின் வெளிப்பாடை எனக்கு ஒரு கவிதையாக தர முடியுமா?
__________________

அக்னி
28-09-2007, 10:07 AM
அக்னி போன்ற திறனாய்வாளர்கள் மற்றவர்களின் பதில்களைப் படித்து பின்னூட்டம் போட முயலும்போது, தங்கள் பதிவுகள் இடைஞ்சலாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..!

அண்ணா...
எனக்கு முடி சூட்டி விட்டாற்போல பெருமையாக உணருகின்றேன்...

அமரன்
28-09-2007, 10:10 AM
கலகலப்பு தேவைதான்.. முழுக்க முழுக்க சீரியசாக ஒரு திரி விளங்கினால் நன்றாக இருக்காது..
ஆனால்..
அக்னி போன்ற திறனாய்வாளர்கள் மற்றவர்களின் பதில்களைப் படித்து பின்னூட்டம் போட முயலும்போது, தங்கள் பதிவுகள் இடைஞ்சலாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..!
நன்றி.
உண்மைதான் அண்ணா...தெரிந்தும் எல்லை மீறிவிட்டோம்...மன்னிக்கவும்...அந்தப்பதிவுகள் அரட்டைப்ப்குதிக்கு மாற்றப்படுகிறது..

பென்ஸ்
28-09-2007, 10:44 AM
வாத்தியார்...

ஒரு சிறு கேள்விக்கான ஒரு சுய ஆய்வு கொடுத்த வெளிச்சம் .. அபாரம்....
முதிற்சியை காட்டும் முதல் அறிகுறிதானே சுய ஆய்வு...
பல இடங்களில் அலை வரிசை ச்மமாய் ஒத்து போனாலும், ஆங்கிலையோர்தான் எல்லாம் கரணம் என்று சில இடங்களில் கருத்துகளை ஒத்து போக முடியவில்லை....

பணி பளு சிறிது இருப்பதால், என் சுய ஆய்வை செய்ய நேரமில்லாமல் ஒரு கேள்வி எனக்காக காத்திருக்கிறது.

ராஜா
28-09-2007, 10:47 AM
ராஜா
சுடர், விளையாட்டு என்று மன்ற மக்களை கவர்ந்து கலக்கும் ராஜா அவர்களே எப்படி இப்படியெல்லாம் புதிது புதிதாக கண்டுபிடிக்கின்றீர்கள், உங்கள் வாழ்க்கையிலும், தொழிலிலும் இதே மாதிரித்தான் அனைவரையும் கவர்ந்து கலக்குகிறீர்களா? அடுத்த திட்டம் என்ன?
(கொசுறு கேள்வி: டில்லிக்கு ராஜான்னாலும் பள்ளிக்கு பிள்ளைதான் எங்கள் ராஜா தன் குடும்ப உறுப்பிணர்களிடம் எப்படி?)

ஹி..ஹி.. நல்ல கேள்வி.. நன்றி.

எனக்கு முறைப்பெண்கள் அதிகம்.. அதே போல பங்காளிகளும் அதிகம்.. எங்களுக்குள் முறைப்பெண்களை யார் அதிகம் கவருவதென்று பெரும் போட்டியே நடக்கும். மற்ற விடயங்களில் ஒருவருக்கொருவர் உயிரைக் கொடுக்கத் தயாராக இருக்கும் நாங்கள், முறைப் பெண்களை கவரும் விடயத்தில் ஒரு மௌன யுத்தமே நடத்துவோம். அனைவரிலும், படிப்பு மற்றும் அழகு போன்ற அம்சங்களில் நம்ம சைடு ரொம்ப வீக்.

இதை மறைக்கும் முயற்சியாக நான் நகைச்சுவை, மற்றும் புதுமையாக எதையாவது செய்து அசத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அதற்கு நல்ல பலனும் இருந்தது.அதுவே பின்னர் என் தொழிலுக்கும், வாழ்க்கைக்கும் நல்ல பலன் கொடுத்தது.

ஓட்டலுக்குப் போனால், நம் டேபிளுக்கு சர்வர் தாமதமாக வந்தால் நீங்கள் கோபம் கொள்ளக்கூடும். வருடத்தில் முக்கால்வாசி நாட்கள், பயணத்தில் இருந்த நான் அப்படி எத்தனை முறை கோபம் கொள்வது..?

ஆடி அசைந்து வரும் சர்வரிடம் மற்ற டேபிள் சர்வர்களைக் காட்டி சிரித்துக்கொண்டே சொல்வேன்..

" தலைவா.. அந்த தொகுதி எம் எல் ஏ வை பாருங்க.. எப்படி சேவை செய்யறாங்க.. நீங்க தொகுதி பக்கம் தலை காட்டவே மாட்டேங்கறீங்களே.. கொஞ்சம் எட்டிப்பாருங்க தலைவா..!!"

பின் என்ன..? தோசையில் ஒரு ஸ்பூன் எண்ணெய் அதிகமாக ஊற்றி முறுவலாக வரும்.. எப்போது போனாலும் நமக்கு ராஜ மரியாதை காத்திருக்கும்..!

அப்படிதான் ஒரு முறை என் நண்பன் ஒரு சிடுமூஞ்சி சர்வரைக் காட்டி, "இவனைச் சிரிக்க வை.. பிரியாணிக்கு நான் காசு தருகிறேன்" என்று சவால் விட்டான். நன்கு ஒரு பிடி பிடித்தேன்.. ஆனால் என் பாச்சா எதுவும் அந்தச் சர்வரிடம் பலிக்கவில்லை. சாப்பிட்டு முடித்து, இலையை எடுக்கும்போது, சர்வர், " இலையை எடுக்காதீங்க..வச்சிடுங்க" என்றார்..
நான் கடைசி முயற்சியாக அவரிடம் சொன்னேன்.. " அது எப்படி.. இலைக்கும் சேர்த்துதானே எங்களுக்கு பில் போடறீங்க..? அப்போ இலை எங்களைச் சேர்ந்ததுதானே..? நாங்க வீட்டுக்கு இலையை எடுத்துட்டுப் போகப் போறோம்.. நீங்க தடுக்க முடியாது.. டேய் கோவாலு.. ரெண்டு எலையையும் சுருட்டி பேண்ட் பாக்கெட்டுல வச்சுக்க..!" என்றேன்... சர்வர் மட்டுமல்லாது அக்கம்பக்க டேபிளில் சாப்பிடுவோரும் சிரித்த சிரிப்பில் கோவாலு வயிறெரிந்துகொண்டே பில்லைக் கொடுத்தான்.

இதைத் தற்புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை.. நீங்களும் கலகலப்பான சுபாவத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.. வாழ்க்கையில் வெற்றி நடை போடலாம் என்று உணர்த்துவதற்காகச் சொல்கிறேன்.

அடுத்தத் திட்டம்..?

மன்றத்தில் இன்னுமொரு அசத்தல் திரி ஆரம்பிக்க வேண்டும்..அதற்காக சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

குடும்ப உறவுகளிடம் ராஜா எப்படி..?

இதே ராஜாதான் அங்கும்.. மனைவி, மக்களிடம் நல்ல தோழன்..

முன்பு ஒருமுறை பெங்களூரில் உணவகம் செல்லும்போது, என் மகன் என் தோளில் கை போட்டுக்கொண்டு என்னுடன் பேசிக்கொண்டு வந்தார்.. சர்ரென்று ஒரு கார் வந்து நின்றது.. என் மகனின் உயர் அதிகாரி திரு. ராகவேந்திர குல்கர்னி..! என் மகன் அவரிடம் தந்தையென்று அறிமுகம் செய்துவைக்க, அவர் இன்னதென்று அறியமுடியாத உணர்ச்சியைக் காட்டி விழித்தார்.இன்னும் அவர் அதை மறக்காமல் என் மகனிடம் சொல்லி சொல்லி வியப்பாராம். யு ஹாவ் அ நைஸ் டாட் ராஜேஷ்வர்..!

சின்னவர் இப்போது இறுதியாண்டு பி டெக். ..... முதல் செம் முடிவுகள் வந்தபோது, "அப்பா.. 3 சப்ஜெக்ட் ஊத்திகிச்சுப்பா..ஒவ்வொரு செம்முக்கு ஒண்ணொண்ணா க்ளியர் பண்ணிடறேன்.. ஓகேவா" என்று இயல்பாக என்னிடம் சொல்லி அதை நிறைவேற்றிக் காட்டியவர்.

என் குடும்பத்தோரை நான் கட்டுப்படுத்தியதுமில்லை.. அவர்கள் எல்லை மீறியதுமில்லை.. இனிமையான தென்றலாய் இறைவன் ஆதரவுடன் நடைபோட்டுக்கொண்டிருக்கிறோம்.

உள்ளம் திறக்க வைத்த நல்ல கேள்விகளுக்கு நன்றி சக்தி.

ஷீ-நிசி
28-09-2007, 11:59 AM
அருமையான பதில்.. ராஜா சார்... உள்ளம் கவர்ந்தது...

lolluvathiyar
28-09-2007, 12:01 PM
சூப்பர் பதில் ராஜா, உங்கள் சுபாவம் எங்களை மிகவும் கவர்ந்தது. இந்த மன்றத்தில் சேர்ந்தபோது நான் ஒருவன் தான் வயசானவனாக இருப்பேன் என்று கொஞ்சம் மமதையுடன் இருந்தேன். ஆனால் உங்கள் மகன்கள் வயசை கேட்டு நான் ஆடிபோய்விட்டேன். நமக்கும் மேல கிழடுக இங்க நிரைய பேரு இருக்காங்க என்று லேட்ட தான் தெரியுது. ஆனா உங்க சேட்டைய பாத்தா காலேஜு பசங்க பொன்னுக தோத்துருவாங்க போல இருக்கு.

அடுத்த திட்டம் என்ன சஸ்பென்ஸாக வச்சிருக்கீங்க.
எனக்கு ஒரு ஐடியா தோனுது. உருப்பினர் பேட்டி என்று ஒரு தனி பாகம் ஆரம்பிச்சு. அதில் ஒவ்வொரு உருப்பினருக்கு ஒரு தனி திரி தொடங்கி. மத்தவங்க எல்லாரும் அங்க அவர பேட்டி எடுக்கராப்ல ஒரு பகுதி தொடங்கினா எப்படி. அதுல மத்தவங்க கேள்வி மட்டும் தான் கேட்கனும், அரட்டை கூடாது என்று ஒரு விதியும் வச்சுகலாம்.

ஷீ-நிசி
28-09-2007, 12:09 PM
கவிதைகளுக்காகவே வலைப்பதிவு ஒன்றை வைத்திருக்கின்றீர்களே,
கவிதையென்றால் ரெம்ப பிடிக்குமோ? ஒவ்வொரு கவிஞனுக்கும் உந்துதலானது காதலேயன்றி வேறெதும் இறாது.
உங்களின் உந்துசக்தி எது?

வலைப்பதிவு

ஆம்! கவிதைக்கெனவே என் வலைப்பதிவினை தொடங்கினேன்.
எல்லோரையும் என் கவிதைகள் எளிதில் செல்ல வேண்டும் என்றே!
ரொம்ப பிடிக்கும்!

உந்துசக்தி

என்னைப் பொருத்தவரை
காதல் என்பது இப்பூமியில்
இல்லாதிருந்தால்
கவிதை என்பது
இல்லாதிருந்திருக்கும்!

எனக்கும் உந்துசக்தி காதல்தான்..

காதல் என்ற நம்
சொந்த வாழ்க்கையில்
நாம் நடித்த திரைப்படத்தின்
அழகிய விமர்சனம் தான் கவிதை.

உலகை ரசிக்கவைக்கும்
உன்னதம் கவிதை..

வார்த்தை வழியே வழிந்து
தேற்றும் அற்புத நண்பன்.. கவிதை!

உங்கள் கவிகளிளேயே பிரமாதமாக கருதுவது எது வெளியிடுங்களேன்?

எல்லா கவிதைகளுமே எனக்கு பிடித்தமானது. அதில்
இந்த மூன்று கவிதைகள் எனக்கு எப்பொழுதும் அதிகம்பிடிக்கும்.

போர்க்களமா வாழ்க்கை
http://shenisi.blogspot.com/2006/12/blog-post_13.html

மெளனமான நேரம்
http://shenisi.blogspot.com/2007/03/blog-post.html

நிலவு களவு போனது
http://shenisi.blogspot.com/2006/12/blog-post_1576.html

எனது கல்லூரி நாட்களின் காதலி தற்பொழுது
வேறொருவரை மனமுடித்து நல்ல முறையில்
சந்தோஷமாக குழந்தைகளுடன் குடும்பம்
நடத்திக்கொண்டிருக்கின்றார்,
ஒருவேளை என்னை மனமுடித்திருந்தால்கூட
இந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்திருப்பள்ளோ தெரியலை.
அவளது சந்தோஷத்தினை கான
எனக்கு ரெம்பவும் சந்தோஷமாகவும் இருக்கிறது,
இந்த சந்தோஷத்தை என்னால் தரமுடியலையே
என்ற வருத்தமும் இருக்கிறது.
இந்த சந்தோஷ/வருத்தின் வெளிப்பாடை
எனக்கு ஒரு கவிதையாக தர முடியுமா?

உங்கள் காதலி இன்னொருவனுடன் மணமுடித்த நிலையிலும்,
அவளின் சந்தோஷத்தில் நீங்கள் சந்தோஷம் காணும் மனநிலை,
என்னால் அவளை இத்தனை சந்தோஷமாய் வைத்திருக்க இயலுமா
என்று நிஜம் பேசும் உங்களை நினைக்கையில் மிகவும் வியப்புக்கொள்கிறது என்மனம்.

ஆயிரமாயிரம் ஆசைகள்
அமிழ்ந்துபோனதடி அடிமனதில்!

நீ இன்னொருவனின் கரம்
பற்றின அந்த நொடிப்பொழுதில்!

விழிகள் கண்ணீரை வடித்தே
வறண்டு போகின!

வருடங்களோ! உன்னை
நினைத்தே உருண்டோடின!

இதோ!!!

என்னெதிரே வருகிறாள்,
மீண்டும் என் காதல் தேவதை...

அவளையே உரித்தபடி
அவள் கரங்களை பிடித்தபடி!
ஒரு குட்டி தேவதை!

அதிர்ஷட தேவதையை
தோளோடு அணைத்தபடி,
அந்த அதிர்ஷ்டசாலி!

அவள் தங்க இதழ்களில்,
சிந்தி வழிந்தன புன்னகைகள்!

அவள் சங்கு கழுத்தில்,
நிறைந்திருந்தன பொன்னகைகள்!

கண்கள் கண்ட காட்சியில்
மனம் புன்னைகைத்தது!

என் அடிமனதில்
அமிழ்ந்திருந்த ஆசைகளனைத்தும்

இதோ!
இவனால்!
இங்கே!
இன்று!

உயிர்த்தெழுந்திருக்கிறது!

நெருங்கிவிட்டாள்
அவனவள்! என்னருகே!

முட்டி கொள்ளுமோ?!
எங்களின் நினைவுகள்!

சற்றேனும் என்னால்,
சிறைப்பட்டு விடுமோ?!
அவளின் சந்தோஷங்கள்!

நொடியும் தாமதிக்காமல்
என் பாதங்களின் பாதையை
திருப்பிக் கொண்டேன்!

அவள் நிழலும் கூட
என் மீது விழாதபடி.......

அதோ!
என்னை கடந்து செல்கிறது!

என் காதல்...................
-------------------------

நன்றி நண்பரே!

அக்னி
28-09-2007, 12:12 PM
நாம் அனைவரும் 'அவரவர் பிறந்த ஊரே சிறப்பு' என நினைப்பது போலவே, எனக்கும் பார்த்ததில் என் கிராமம்தான் மிக மிக அழகானது.
பொற்தட்டில் உண்டாலும், சிவப்புக்கம்பளங்களில் நடந்தாலும், பஞ்சணைமெத்தையில் துயின்றாலும்,
எம் மண்ணின் வாசமும், பாதங்களில் தரும் குறுகுறுப்பும், புளுதியும் தரும் சுகம் அலாதிதான்...
பாரதி அண்ணாவின் பதிலிலும் அது மிளிர்கின்றது.
பாரதி அண்ணாவின் மனதில் நிழலாடும், அந்தக் கூக்குரல்கள் இன்னமும் ஓயவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக கதறுகின்றன.
அந்தக் கதறல்கள் என்று அற்றுப் போகுமோ,
அன்று பாரதியின் கனவுகள் மெய்ப்படும்.

அழகிய பதில், உணர்வைத் தட்டிப் பார்க்கின்றது...
பாராட்டுக்கள் பாரதி அவர்களே...

ராஜா
28-09-2007, 12:19 PM
சூப்பர் பதில் ராஜா, உங்கள் சுபாவம் எங்களை மிகவும் கவர்ந்தது. இந்த மன்றத்தில் சேர்ந்தபோது நான் ஒருவன் தான் வயசானவனாக இருப்பேன் என்று கொஞ்சம் மமதையுடன் இருந்தேன். ஆனால் உங்கள் மகன்கள் வயசை கேட்டு நான் ஆடிபோய்விட்டேன். நமக்கும் மேல கிழடுக இங்க நிரைய பேரு இருக்காங்க என்று லேட்ட தான் தெரியுது. ஆனா உங்க சேட்டைய பாத்தா காலேஜு பசங்க பொன்னுக தோத்துருவாங்க போல இருக்கு.

அடுத்த திட்டம் என்ன சஸ்பென்ஸாக வச்சிருக்கீங்க.
எனக்கு ஒரு ஐடியா தோனுது. உருப்பினர் பேட்டி என்று ஒரு தனி பாகம் ஆரம்பிச்சு. அதில் ஒவ்வொரு உருப்பினருக்கு ஒரு தனி திரி தொடங்கி. மத்தவங்க எல்லாரும் அங்க அவர பேட்டி எடுக்கராப்ல ஒரு பகுதி தொடங்கினா எப்படி. அதுல மத்தவங்க கேள்வி மட்டும் தான் கேட்கனும், அரட்டை கூடாது என்று ஒரு விதியும் வச்சுகலாம்.

அப்படி ஒண்ணும் வயசாகிடலே வாத்தியாரே.. 48 வயசெல்லாம் இளம் வயதுதானே..? என்ன .. சின்ன வயசிலேயே கல்யாணம் ஆகிப்போச்சு..

புதுத் திரி தொடர்பான உங்க ஐடியா சூப்பர்..

ஒரு செயல் வடிவம் தயாரிச்சு உங்க தனி மடலுக்கு அனுப்பறேன்.. பார்த்துட்டு சொல்லுங்க..!

lolluvathiyar
28-09-2007, 12:23 PM
கவிதைபற்றி சரியான நபரிடம் கேள்வி கேட்கபட்டு சரியான பதிகள் பெறபட்டு விட்டன. சூப்பர் ஷீ நிசி

என்னைப் பொருத்தவரை
காதல் என்பது இப்பூமியில்
இல்லாதிருந்தால்
கவிதை என்பது
இல்லாதிருந்திருக்கும்!

அருமையான விளக்கம். என்னை பொருத்தவரை மனித வாழ்கையில் காதல் மட்டுமல்ல அமைதி, வன்முரை, உழைப்பு, சோம்பேறிதன இப்படி அனைத்து நல்லது கெட்டதுக்கும் காதல் காரனமாகிறது என்று தோன்றுகிறது

வாத்தியார்...
ஆங்கிலையோர்தான் எல்லாம் கரணம் என்று சில இடங்களில் கருத்துகளை ஒத்து போக முடியவில்லை....

ஆம் பென்ஸ் அதற்க்கு காரனம் நாம் படித்த மெக்காலெ கல்வி அமைப்பு நம்மை அப்படி ஏமாற்றி விட்டது. உன்மையான (உலக) வரலாறு , அதன் பின்னனிகள் படித்து பார்த்தால் ஆங்கிலேயர்களின் கைவரிசை தெரியும். நாம் பொருமையாக வேறு திரியில் இதை பற்றி விவாதிக்கலாம்

அக்னி
28-09-2007, 12:26 PM
இங்கு அப்படி என்ன நான் லொள்ளு பன்னுகிறேன். வீட்டிலும் லொள்ளு பிடிச்சவன் தான் ஆனா எல்லாத்துக்கும் வட்டிக்கு முதலா திருப்பி தந்து விடுவார்கள். ஆனாலும் நான் திருந்தியபாடு இல்லை.
ஒரே வார்த்தையில் சொல்லுவதானால்,
தெளிவுடை லொள்ளு வாத்தியார்
எனலாம்...

வாத்தியார் தன்னை எதற்கும் லாயக்கில்லாதவர் என்று சொல்லித் தொடங்கி,
முடிக்கும்பொழுது, எதற்கு இவர் லாயக்கில்லை என்ற கேள்வியை எமக்குள் எழுப்பிவிட்டார்...

நிறைகுடங்கள் தளம்புவதில்லை. (என்னைப் போன்ற வெறும்குடங்களும்தான்)
அந்த ரகம் வாத்தியார்...
எந்தக் கடின வேளையிலும், மகிழ்ந்திருக்கும் நகைச்சுவைப் பெருஞ்செல்வம் வாத்தியாரிடம் நிறைவாகவே... என்றும் குறையாதிருக்கட்டும்...

அடையாளங்கள் மனிதனுக்குத் தேவைதான்.
ஆனால், சந்தர்ப்பம், உறவு, நேரம், இடம் பொறுத்து, ஒவ்வொருவரின் அடையாளங்கள் மாறுபட்டு வெளிப்படலாம்.
அந்தவகையில், தமிழ்மன்றத்தில் உங்கள் அடையாளம் சிறப்பாகவே, அழகாகவே வெளிப்படுகின்றது என்றே நான் எண்ணுகின்றேன்.

பாராட்டுக்கள் வாத்தியாரே...

ராஜா
28-09-2007, 12:27 PM
நல்ல பதில் ஷீ..!

[அதற்கு மேல் எழுதாதற்கு, காரணம் உங்களுக்கே புரியும்..! ]

அக்னி
28-09-2007, 12:33 PM
என் குடும்பத்தோரை நான் கட்டுப்படுத்தியதுமில்லை.. அவர்கள் எல்லை மீறியதுமில்லை.. இனிமையான தென்றலாய் இறைவன் ஆதரவுடன் நடைபோட்டுக்கொண்டிருக்கிறோம்.

உள்ளம் திறக்க வைத்த நல்ல கேள்விகளுக்கு நன்றி சக்தி.
ராஜா அண்ணா...
உங்களைப் போன்றவரே எனது தந்தையும்...
எனது நண்பர்களே உரிமையாக, கேட்டு நிறைவேற்றிக் கொள்ளுவார்கள்.
அந்த வகையில் ஒரு தந்தைக்குரிய முன்மாதிரிகையை தெரிந்து கொள்ள வைத்திருக்கின்றீர்கள் உங்கள் பதிலில்...

அதுசரி,
அத்தனை முறைப்பெண்களா...?
அதிகம் இல்லை கொஞ்சமாக பொறாமை...

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பதாக சொன்னார்கள்.
ஆனால், ராஜா அண்ணாவிற்குப் பிறகு ஒரு பட்டாளமே இருக்கு...
நண்பர்களே கவனிக்க...

என்றும் இனிமையாக இருக்க வாழ்த்துகின்றேன், குடும்பத்துடனும், எங்களுடனும்...

அக்னி
28-09-2007, 12:43 PM
என்னைப் பொருத்தவரை
காதல் என்பது இப்பூமியில்
இல்லாதிருந்தால்
கவிதை என்பது
இல்லாதிருந்திருக்கும்!

எனக்கும் உந்துசக்தி காதல்தான்..

ஷீ-நிசி அவர்களே...
என்னை அதிகம் கவர்வது உங்கள் கவிதையில் நீங்கள் காட்டும் கூர்ந்த கவனிப்புக்கள்...
அத்தோடு எளிமையான, அலங்காரத்தின் உச்சநிலை வரிகள்....

ஒரு கருவை எடுத்துக் கொண்டால்,
அந்தக் கருவின் நிலை, அதன் சூழ்நிலை, மனநிலை, உள்நிலை, வெளிநிலை என்று அனைத்து நிலைகளிலும் உங்கள் கவிதை விரிவதுண்டு.

உந்துசக்தி காதல் என்றீர்கள்...
அப்போ, குறித்த வயது தாண்டிய பின்னர்தான் கவிதைக்களம் திறந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.
ஆயினும்,
உங்கள் கவிதைகளின் மகிழ்வும், வளர்வும் சொல்கின்றது உங்கள் காதலின் ஆழமும், மோகமும்...

என்றும் இன்பமான காதல் உங்களை தளுவியபடியே இருக்க வாழ்த்துகின்றேன்...

ராஜா
28-09-2007, 01:01 PM
நன்றி ஷீ, வாத்தியார், அக்னி..!

lolluvathiyar
28-09-2007, 01:17 PM
தமிழ்மன்றத்தில் உங்கள் அடையாளம் சிறப்பாகவே, அழகாகவே வெளிப்படுகின்றது என்றே நான் எண்ணுகின்றேன்.
பாராட்டுக்கள் வாத்தியாரே...

யோசித்து விடபட்ட பின்னூட்டும். உங்கள் அனைத்து பின்னூட்டங்களும் அப்படிதான் இருகிறது. மிக்க நன்றி அக்னி

அப்படி ஒண்ணும் வயசாகிடலே வாத்தியாரே.. 48 வயசெல்லாம் இளம் வயதுதானே..?

ஆமாமாம் 48 வயசு இளம் வயசுதான், அதே சமயம் 40 வயசில் ... குணம் வரும் சொல்லுவாங்கல்ல, அந்த குணம் வராம பாத்துக்குங்க.
ராஜா நாமெல்லா என்றும் மார்கன்டேயன் சரியா

பூமகள்
28-09-2007, 01:39 PM
கலகலப்பு தேவைதான்.. முழுக்க முழுக்க சீரியசாக ஒரு திரி விளங்கினால் நன்றாக இருக்காது..
ஆனால்..
அக்னி போன்ற திறனாய்வாளர்கள் மற்றவர்களின் பதில்களைப் படித்து பின்னூட்டம் போட முயலும்போது, தங்கள் பதிவுகள் இடைஞ்சலாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..!
நன்றி.
மன்னியுங்கள் ராஜா அண்ணா...:traurig001:
நான் தான் ஆரம்பித்தேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.:icon_rollout:

மயூ
28-09-2007, 01:41 PM
இந்த இள வயதில், கல்லூரி அனுபவங்கள் எப்படி இருக்கின்றன, ஒரு சிலவற்றை பகிருங்களேன். சக மாணவியரைப்பற்றி உங்கள் கருத்து என்ன? சக மானவியிடம் இருக்கும் நட்பானது காதலாக மாற சந்தர்ப்பம் உண்டா? அப்படி காதலாக மாறுவது சரிதானா?
(கொசுறு கேள்வி, மயூரி என்றால் மயில் என்று அர்த்தமாகும், மயூரேசனின் அர்த்தம் என்ன?)

இளவயது.. அப்படி இப்படியெல்லாம் சொல்லி உசுப்பேத்திக் கதை கறக்கலாம் என்றால் அதுதான் இந்த மயூரேசனிடம் முடியாது.... :cool:

கல்லூரி அனுபவங்கள்... நிச்சயமாக என் மிகுதி வாழ்க்கையின் பசுமையான நினைவுகளாக இருக்கும். முதன் முதலாக பல்கலைக்கழகத்திற்குள் சென்றது இன்று போல் உள்ளது.. ஆனால் கிட்டத்தட்ட இரண்டரைவருடங்கள் முடிந்துவிட்டன... இன்னமும் மீதம் உள்ளது ஒரு 6 மாதங்களே.

அனுபவம் ஒன்று.... ம்....ஆ..
பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படிக்கும் போது எமது சீனியர்ஸ் எமக்கு ஒரு வரவேற்பு உபசாரம் வைப்பார்கள். எங்கள் பல்கலைக்கழகத்தில் இந்த வரவேற்பு உபசாரம் கொஞ்சம் சிறப்பாக நடைபெறும். அதாவது மாணவர்கள் ஜோடி ஜோடியாகப் செல்லவேண்டும்.

இந்த நிகழ்வுக்கு பொடியங்கள் சென்று தமக்கு விருப்பமான பெட்டையிடம் முதலே பேசி ரிசர்வ் பண்ணி வைக்கவேண்டும். எங்கட பச்சில இருக்கிற தமிழ் பொடியங்கள் எல்லாரும் வெக்கம் காரணமாகவும், மண்டைக் கனம் காரணமாகவும் எந்தவொரு பெட்டையிடமும் கேட்கவில்லை.

இப்படியே இருக்க எங்கள் வகுப்பில் ஒரு பெட்டை இருந்தார், மண்டைக் கனம் என்றால் ரொம்ப அதிகம். இவளைக் கேட்டால் என்கூட வரமாட்டாள் என்று யாரும் அவளிடம் ரைபண்ணக்கூட இல்லை.

வரவேற்பு உபசார நிகழ்வுக்கு முதல்நாள் நான் கணனி ஆய்வு கூடத்தில் இருந்து இணையத்தைத் துளாவிக்கொண்டு இருந்தேன். அப்போது பக்கத்தில் இருந்த அந்தப் பெட்டை என் நண்பனிடம் ஏதோ குசு குசு வென்று பேசுவது கேட்டது. முதலில் நான் அசண்டைசெய்யாவிட்டாலும் பின்னர் அது என்னைப் பற்றிய பேச்சு என்று அறிந்து கொண்டேன்.
அந்த நண்பன் பேசத் தொடங்கினான்..
"டேய் மச்சாங்! நாளைக்கு இவ உன்னோட வரவேற்பு நிகழ்வுக்குப் போக விருப்பமாமடா... இல்லையெண்டு மட்டும் சொல்லிடாத" என்று கூறினாான்...

வலிய வரும் வாய்ப்பை நான் ஏன்விட.. நான் ஆம் என்று சொல்லி வரவேற்பு வைபவத்திற்கு இருவரும் ஒன்றாகச் சென்றோம். உள்ளே செல்லும் போது நமது சீனியர்ஸின் கட்டளைப் படி ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு தான் செல்லவேண்டும். ரிசர்வ் பண்ண முடியாதவ பொடியங்களுக்க வாசலில் வைத்து ரிசர்வாகாத பெட்டைகளை ரண்டம் முறையில் ஜோடி சேர்த்து வைப்பார்கள்.

இது என் பல்கலைக் கழக வாழ்க்கையின் முதலாவது கலாச்சார அதிர்ச்சி.. இதன் பின் பலப் பல அதிர்ச்சிகள்.. இதுக்குப் பிறகு கிளப் வேலை அப்படி இப்படி என்று ஆதவனுக்குத் தெரியும் கிளப்பில நான் எவ்வளவு ஒழுங்காக வேலை செய்கின்றேன் என்று.... ஆயினும் காலப்போக்கில் சிங்களவரின் கலாச்சாரம் பழக இந்தவிடயங்கள் எல்லாம் பெரிதாகத் தெரியாது.

சரி.. இனி சகமாணவியர் பற்றிய கருத்து....
எங்கட பச்சில தமிழ் பெட்டைகள் இல்லை... களனிப் பல்கலைக்கழகம் என்றாலே அங்க தமிழரை அவ்வளவாகக் காண முடியாது.. இந்தப் பல்கலைக்கழகம் மொழிகள், சிங்களச் கலாச்சாரம் போன்ற பாடநெறிகளுக்ககே பிரபலமானது.
சிங்களப் பெட்டைகளைப் பற்றி சொல்வதானால், அவர்களின் குணாதிசயம் ஒவ்வொரு பக்கல்ட்டி, டிப்பார்ட்மென்ட் பொறுத்து மாறுபடும். கலைப்பீட மாணவியர்தான், எம்மைப் போன்ற விஞ்ஞாண பீட மாணவரின் விசிறிகள். எங்கள் விஞ்ஞாண பீட மாணவியரோ கொஞ்சம் தலைக்கனம் பிடித்தவர்கள்.
பொதுவாக சிங்களப் பெட்டைகளுடன் பழகும் போது, ஒரு தமிழ் பெட்டையுடன் கதைப்பது போல 100 வீதம் கவனமாகக் கதைக்கத் தேவையில்லை.. தேவையானதைச் சொல்லிவிட்டு, நான் அதைச் சொல்லேல இதைச்சொன்னான் என்று குளப்பிவிடலாம்.. உண்மையிலெயே நிசமான நண்பர்கள். 100 வீதம் நம்பிப் பழகலாம். தமிழ் பெட்டைகள் மாதிரி பெரிய தலைக்கனம் கிடையவே கிடையாது... ஐயோ.. பெரிய தீசிசே எழுதலாம் போல இருக்கு....

நட்பு காதலாக மாறுவதற்கான சந்தர்ப்பம் உண்டு. அதில் தப்பு எதுவும் இல்லை. ஆனால் காதலிக்க முன்னர் அது வெறும் உடற் கவர்ச்சியில்லை ஒரு காரணத்தால்தான் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றோம் என்பதைப் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதைவிட உங்கள் குடும்பத்திற்குச் செய்யவேண்டியதையும் மறந்துவிடாதீர்கள். காதல் செய்வது குற்றமேயல்ல.

மயூரேசன் என்பதன் அர்த்தம் பலதடவை பலபேருக்குச் சொல்லியாகிவிட்டது.. சரி இன்று உங்களுக்கும் இன்னும் ஒருதடவை...
என் பெயரின் அர்த்தம் கணபதி. அதாவது ஒரு தடவை அசுரர்களுடன் சண்டையிட வாகனம் இல்லாமல் விநாயகர் இருந்திருக்கின்றார். அப்போது தேவர்கள் சேர்ந்து மயிலை வாகனமாகக் கொடுத்தார்களாம். மயிலில் பயனித்த விநாயகருக்கு மயூரேசன் என்று பெயர் கொடுத்தார்களாம். இதுதான் என் பெயரின் பின்ணனி.

என்னிடமும் கேள்விகேட்ட உங்களுக்கு மிக்க நன்றி சக்திவேல்.. நேரமின்மையினுள் அவசரமாக எழுதிய பதில் பிழைகளைப் பொறுத்தருளவும்.:icon_rollout: (நான் சின்னப்புள்ளையில்ல)

மலர்
28-09-2007, 02:00 PM
மயூ உங்கள் பதில்

இளமை புதுமை

ராஜா
28-09-2007, 02:28 PM
காதல் செய்வது குற்றமேயல்ல.அதைவிட உங்கள் குடும்பத்திற்குச் செய்யவேண்டியதையும் மறந்துவிடாதீர்கள்.

சபாஷ் மயூர்.. அசத்திட்டீங்க..!

பூமகள்
28-09-2007, 02:34 PM
அன்பு கமல் அண்ணா...
கோர்வையான பதில்... நிறைய தெரியாத விசயங்களை மென்பொருள் துறை பற்றி (நானும் அந்த துறை சேர்ந்தவள் தான்) தெரிந்து வியந்தேன்.

அடுத்தது நம் இந்தியாவில்தான் அதிக மென்பொருள் வல்லுனர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.... அதில் நம் நிச்சயம் பெருமை பட்டுக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு உலக புகழ் பெற்ற Microsoft நிறுவனத்தில் கிட்டதட்ட 60 சதவிகிதம் நமது இந்தியர்கள் தான். அடுத்தது Adobe அதில் 54 சதவிகிதம். அதில் சீதாராமன் நாரயணன் என்பவர் Photoshop மென்பொருளுக்கு இரண்டாவது மென்பொருள் பெறியாளராக இருக்கிறார். உலகிலேயே மிகஅதிகமாக Photoshop மென்பொருள் உபயோபடுத்தப்படுகிறது. அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். அவருக்கு சம்பளம் மிக அதிகம். ஆனால் நல்ல உழைப்பாளி. அது அவருக்கு அவருடைய திறமைக்கு கிடைத்த பரிசு.
அசத்தலான பதில்... கொசுறு பதில் சிரிக்க வைத்தது.
பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் கமல் அண்ணா.

அக்னி
28-09-2007, 02:40 PM
இளவயது.. அப்படி இப்படியெல்லாம் சொல்லி உசுப்பேத்திக் கதை கறக்கலாம் என்றால் அதுதான் இந்த மயூரேசனிடம் முடியாது.... :cool:

அப்போ ஏன் மயூ இவ்ளோ பெரிய பதிவு... (சும்மா... சும்மா..)

அப்புறம் மிக முக்கியமாக...
இலங்கையில் பெட்டை என்று இளம் பெண்களை அழைப்பதுண்டு... (தமிழ்தான்)

பல்கலைக்கழகம், பலதைப் பழகும், அல்லது பழக்குவிக்கும் அனுபவக்கூடம்...
அந்த வாய்ப்புக்கள் அநேகம் பேருக்கு கிடைத்துவிடுவதில்லை.
இளம் வயதில் மனமொன்றிய படிப்பு மட்டுமே, இந்த பெறுமதி மிக்க அனுபவ வாழ்வை கிடைக்கச்செய்யும்.
அந்த வகையில், மயூருக்கு நிறைந்த பாராட்டுக்கள்...
தொடர்ந்தும் உங்கள் கல்விகள் சிறப்பாக நிறைவேறி சமுதாயத்தில் உயர வாழ்த்துகின்றேன்...

ராஜா அண்ணா கோடிட்டுக் காட்டியதைப் போல,

காதல் செய்வது குற்றமேயல்ல.அதைவிட உங்கள் குடும்பத்திற்குச் செய்யவேண்டியதையும் மறந்துவிடாதீர்கள்.

இந்த வரிகள் உங்கள் மனப்பக்குவத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது

வாழ்த்துக்கள்...

பூமகள்
28-09-2007, 03:20 PM
மயூ.. நல்லா சொன்னீங்க பல்கலைக் கழக அனுபவத்தை...ஆனால் கொஞ்சம் அதிகமாகவே ஒட்டு மொத்தமாக தமிழ் பெண்களைக் குற்றம் சாட்டியது கொஞ்சம் நெருடுகிறது.
ஆனாலும் உங்களின் அசத்தலான பதிலில் உங்கள் நாட்டில் இருக்கும் பல்கலைக் கழக கலாச்சாரத்தை அழகாக படம் பிடித்துக் காட்டியிருந்தீர்கள்.
பாராட்டுக்கள்..!
தொடர்ந்து உங்கள் கல்விப் பயணம் இனிதே வளர இந்த அன்புச் சகோதரியின் வாழ்த்துக்கள்.
பின் குறிப்பு: உங்களின் கல்லூரி தமிழ் பெண்கள் யாரும் இந்த பதிலைப் பார்த்திராமல் பார்த்துக்கோங்க....!! ஹீ ஹீ..!!

சிவா.ஜி
29-09-2007, 04:56 AM
வாத்தியாரின் பதிலில் திறனாய்வு வித்தகர் அக்னி சொல்லியிருந்ததுபோல லாயக்கில்லாதவெனென்று ஆரம்பித்து எத்தனை விஷய ஞானம் உள்ளவர் என்பதை வெகு அடக்கமாக வெளிப்படுத்திவிட்டார்.தமிழ்மன்றத்திற்கு கிடைத்த ஒரு மிக நல்ல விவாதிப்பாளர்,நல்ல நகைச்சுவையாளர்,எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல மனிதநேயமுள்ளவர்.வாழ்த்துக்கள் வாத்தியார்.

ராஜாசார்...அவரின் வாழ்க்கையே ஒரு பாடம்தான்.எதிலும் வித்தியாசம் காட்டும் அவர் தன் பிள்ளைகளை வளர்க்கும்விதம் குறித்து சொல்லி எப்படி தன் பிள்ளைகளை தோழனாக வளர்ப்பதென்று மற்றவருக்கும் பாடம் சொல்லிவிட்டார்.சான்றோருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பதைப்போல ராஜா சாருக்கு செல்லும் உணவு விடுதிகளிளெல்லாம் சிறப்பு கவனிப்பு.அசத்தல் பதில் ராஜாசார்.

ஷீ-நிசியின் கவித்துவமான பதில் மனதைக் கவர்ந்துவிட்டது.காதலின் சக்தியை அழகாக சொன்னவர்..அதோடான கடமையையும் கோடிட்டுக்காட்டி எங்கள் பார்வையில் உயர்ந்துவிட்டார்.கேள்வியாளரின் வேண்டுகோளுக்கு அவரளித்திருக்கும் கவிதை பிரமாதம்.வாழ்த்துக்கள் ஷீ-நிசி.

சிவா.ஜி
29-09-2007, 05:01 AM
பல்கலைகழக வாழ்க்கையை கண்முன்னே நிறுத்திவிட்டார் மயூ.பெட்டைகளின் மனவியலில் பட்டம் பெறுமளவுக்கு தேர்ந்துள்ளார்.அங்கிருக்கும் தமிழ் பெண்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் தலைக்கணம் இருக்கலாம்.எங்கள் தமிழ்நாட்டின பெண்கள் தலைநகரில் மட்டும் கொஞ்சம் தலையில் பாரத்தோடு இருப்பார்கள்.மற்ற இடங்களில் அடக்கமோ அடக்கம்தான்.அதுவும் கோவைப் பெண்கள் நல்ல திறமைசாலிகள் அதே சமயம் மிக மென்மையானவர்கள்.வாழ்த்துக்கள் மயூ.

ஷீ-நிசி
29-09-2007, 05:09 AM
அனைவருக்கும் என் நன்றிகள்!

க.கமலக்கண்ணன்
29-09-2007, 07:11 AM
இதே ராஜாதான் அங்கும்.. மனைவி, மக்களிடம் நல்ல தோழன்..

முன்பு ஒருமுறை பெங்களூரில் உணவகம் செல்லும்போது, என் மகன் என் தோளில் கை போட்டுக்கொண்டு என்னுடன் பேசிக்கொண்டு வந்தார்.. சர்ரென்று ஒரு கார் வந்து நின்றது.. என் மகனின் உயர் அதிகாரி திரு. ராகவேந்திர குல்கர்னி..! என் மகன் அவரிடம் தந்தையென்று அறிமுகம் செய்துவைக்க, அவர் இன்னதென்று அறியமுடியாத உணர்ச்சியைக் காட்டி விழித்தார்.இன்னும் அவர் அதை மறக்காமல் என் மகனிடம் சொல்லி சொல்லி வியப்பாராம். யு ஹாவ் அ நைஸ் டாட் ராஜேஷ்வர்..!

என் குடும்பத்தோரை நான் கட்டுப்படுத்தியதுமில்லை.. அவர்கள் எல்லை மீறியதுமில்லை.. இனிமையான தென்றலாய் இறைவன் ஆதரவுடன் நடைபோட்டுக்கொண்டிருக்கிறோம்.

அன்புள்ள ராஜா அவர்களுக்கு உங்களின்

அசத்தலான பதிலை பார்த்ததும் என் கண்களிலே கண்ணீர்

அழுகையாக வருகிறதோ எனக்கு... சிறிய வயதியே

அன்னையும் தந்தையும் இழந்ததால் பலவற்றை இழந்திருக்கிறேன்

அன்பை சேர்ந்து உங்களின்

அசர வைக்கு பதிலை கண்டு ம்ம்ம் எனக்கு கொடுத்து வைக்க வில்லையே

அசட்டுதனமான எண்ணம் மேலிடுகிறது... உங்கள் மகனின் உயர்

அதிகாரி திரு. ராகவேந்திர குல்கர்னி..! சொன்னது போல

அருமையான தந்தையாக மட்டும்

அல்ல நல்ல நண்பனாகவும் கிடைத்திருக்கிறீர்கள் உங்கள் மகனுக்கு

அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் உங்கள் மகனாக நான் பிறக்க வேண்டும்....

அடைக்கிறது என் கண்களில் நீர்...

க.கமலக்கண்ணன்
29-09-2007, 07:15 AM
எனக்கும் உந்துசக்தி காதல்தான்..

காதல் என்ற நம்
சொந்த வாழ்க்கையில்
நாம் நடித்த திரைப்படத்தின்
அழகிய விமர்சனம் தான் கவிதை.

உலகை ரசிக்கவைக்கும்
உன்னதம் கவிதை..

வார்த்தை வழியே வழிந்து
தேற்றும் அற்புத நண்பன்.. கவிதை!

உங்களின் வியக்க வைக்கும் பதில் அருமை

உண்மையான காதல் இருந்தால்

உளமார கவிதை படைக்கமுடியும் என்பது மறுக்க முடியாத

உண்மை. அருமையான பதில் ஷீ நிசி...

க.கமலக்கண்ணன்
29-09-2007, 07:19 AM
அன்பு கமல் அண்ணா...
கோர்வையான பதில்... நிறைய தெரியாத விசயங்களை மென்பொருள் துறை பற்றி (நானும் அந்த துறை சேர்ந்தவள் தான்) தெரிந்து வியந்தேன்.

அசத்தலான பதில்... கொசுறு பதில் சிரிக்க வைத்தது.
பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் கமல் அண்ணா.

மிக்க நன்றி என் அன்பு தங்கையே...

பூமகள்
29-09-2007, 02:09 PM
அன்பு ராஜா அண்ணா,
உங்களின் பதிலிலிருந்தே தெரிகிறது நீங்கள் எத்தகைய சிறந்த தந்தையாகவும், நண்பராகவும் விளங்குகிறீர்கள் என்று....!!
உங்களின் அன்புத் தங்கையாக நான் இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்ற அடைமொழியை மெய்பித்துக் காட்டியிருக்கிறீர்கள்.
பாராட்டுகள் அண்ணா.

அன்பு ஷீ-நிசி அன்பரே,
உங்களின் அசத்தலான பதில் கண்டு அசந்துவிட்டேன்.
கவிதை பற்றிய உங்களின் கருத்து அருமை..!
கவிதையோ...............அதனினும் அருமை.. எந்த வரியை மேற்கோள் காட்டுவது என்றே விளங்காமல் இருக்கிறேன். அத்தனை வரிகளும் வைரங்களாய் ஜொலிக்கின்றன.
உங்களின் வரிகளைப் படித்து ஒரு கணம் கண்ணீர் பெருகியது அந்த கவிதையின் நாயகரைப் போல நினைத்து... :traurig001:
அது தான் ஒரு கவிஞரின் வெற்றி என்று கருதுகிறேன். படிப்பவர் மனத்தில் படைத்தவரின் உணர்வுகள் அப்படியே வந்து சேர வைப்பது தான் கவிதைக்கு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றி..!!:icon_b:
அத்தகைய வகையில் உங்களின் கவிதை வாழ்கின்றது மனங்களில் என்பது திண்ணம்.:icon_rollout:
தொடர்ந்து எங்களுக்கு மேலும் பல கவிதைகள் தாருங்கள்.

அன்புத் தோழி,

சூரியன்
29-09-2007, 03:26 PM
மயூ அண்ணா அருமையான பதிலை தந்துள்ளீர்..

சக்திவேல்
29-09-2007, 11:37 PM
பார்த்ததில் என் கிராமம்தான் மிக மிக அழகானது. ஊரின் இரண்டு பக்கமும் ஆறுகள், சற்றுத்தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலை, சாலையின் இருமருங்கிலும் குடை பிடிக்கும் மரங்கள், பெரும்பான்மையான வகை காய்கறிகளும், பழங்களும், தானியங்களும் விளையும் பச்சைப்பசேலென்ற தோட்டங்கள், வயல்கள், வெயில் காலம் தவிர்த்து மற்ற எல்லா காலங்களிலும் அருமையான சூழல் ... இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.

உங்கள் ஊரை நேரில் வந்து பாக்கனும்போல ஆவலாக இருக்கின்றது.

"யெப்பே... என்ன விட்டிருப்பே" என்ற அலறல் நினைக்க நினைக்க வேதனையாக இருக்கின்றது.

மனித நேயத்தினை வளர்க்கவேண்டுமென்ற கனவு மெய்ப்பட வாழ்த்துகின்றேன். நன்றி.

சக்திவேல்
29-09-2007, 11:59 PM
ஹிந்து மத பற்று சம்மந்தமாக ஒரு சாதர்ன குடிமகன் பேசுவது என்பது தமிழகத்திலும் தலிபன் காலத்து ஆப்கானித்தானிலும் ஆபத்தானவை என்று அனைவரும் அறிந்த விசயம் தானே.

நீங்கள் விரும்புவது என் அடையாளங்களை அல்ல, லொள்ளுவாத்தியாரின் கருத்துகளை. இதையும் நான் அறிவேன்.என் அடையாளங்கள் தெரிந்தால் ஏமாற்றம் அடைவீர்கள்.

அடையாளம் (Identity) என்று ஒன்று வரும் போது கருத்துகள் மணம் திறந்து சொல்ல முடியாது. கருத்தும் அடையாளமும் என்று பொருந்தாது.

புரிகிறது வாத்தியார் அவர்களே மனதில் உள்ள என்னங்களை வெளிப்படையாக சொல்லமுடியாமல் முகமூடி மாட்டவேண்டிய சூழ்நிலை இருக்கத்தான் செய்கிறது. முகமூடி மாட்டும் பட்சத்தில், துனிச்சலாக நிறைய விஷயங்களை பட்டவர்த்தனமாக சொல்ல முடிகிறது. ஆனால் அதுவே ஒரு அளவுக்கு மேல் போகும்போதுதான் நிறைய முகமூடிகள் தோன்றி கருத்துப்போர் உண்டாகின்றது, இனைய விவாத, கருத்து மற்றும் வலைப்பூ தளங்கள்தான் முதன்மை ஊடகங்களாக மாறப்போகின்றன. கூகிள் தயவால், விஷயங்கள் காட்டுத்தீபோல விரைவாக பரவுகின்றன.

செய்திகள் மற்றும் கருத்துப்பரவல்களின் ஊடகங்கள் அதிகம் இல்லாத அந்தகாலங்களில், செய்தித்தாள்கள், மற்றும் ரேடியோ மட்டுமே இருந்தன. தொலைபேசிகள்கூட சமீபத்தில்தான் பரவலாக்கப்பட்டு இருக்கின்றன. இனையத்தில் இமாலய வளர்ச்சியானது ஊடகத்தின் போக்கையே மாற்றிவிட்டது, எவரும் எப்பொழுதும் எதைப்பற்றியும் கருத்துச்சொல்லலாம், அந்த கருத்துக்களும் செய்தித்தாள்களைவிட அதிவிரைவாக பரவுகின்றது. இந்தமாதிரியான ஊடகத்தின் புதிய பரிமானம் எதில் போய் முடியப்போகின்றதோ தெரியலை. ஒன்றுமட்டும் நன்றாக தெரிகின்றது, இதெல்லாம் நல்லதுக்கு இல்லை.

இங்கு அப்படி என்ன நான் லொள்ளு பன்னுகிறேன். வீட்டிலும் லொள்ளு பிடிச்சவன் தான் ஆனா எல்லாத்துக்கும் வட்டிக்கு முதலா திருப்பி தந்து விடுவார்கள். ஆனாலும் நான் திருந்தியபாடு இல்லை.
ம்ம் அதுதானே லொள்ளு வாத்தியார். கலக்குங்க

சக்திவேல்
30-09-2007, 12:12 AM
எனக்கு முறைப்பெண்கள் அதிகம்.. அதே போல பங்காளிகளும் அதிகம்.. எங்களுக்குள் முறைப்பெண்களை யார் அதிகம் கவருவதென்று பெரும் போட்டியே நடக்கும். மற்ற விடயங்களில் ஒருவருக்கொருவர் உயிரைக் கொடுக்கத் தயாராக இருக்கும் நாங்கள், முறைப் பெண்களை கவரும் விடயத்தில் ஒரு மௌன யுத்தமே நடத்துவோம். அனைவரிலும், படிப்பு மற்றும் அழகு போன்ற அம்சங்களில் நம்ம சைடு ரொம்ப வீக்.

என் குடும்பத்தோரை நான் கட்டுப்படுத்தியதுமில்லை.. அவர்கள் எல்லை மீறியதுமில்லை.. இனிமையான தென்றலாய் இறைவன் ஆதரவுடன் நடைபோட்டுக்கொண்டிருக்கிறோம்.

முறைப்பென்னை கவரும் போட்டியில் நீங்கள்தானே வென்றிருப்பீர்கள். இதைப்பார்த்தது எனக்கு வருஷம்16 திரைப்படம்தான் ஞாபகம் வருகின்றது. முறைப்பென்னான குஷ்புவை கவர முறைப்பையன் கார்த்திக்கும் இன்னொரு முறைப்பையன் நடத்தும் யுத்தங்களை இயக்குனர் பாஸில அவர்கள் மிக நன்றாக எடுத்திருப்பார். அதிலும் அந்த பாத்ரூம் காட்சி மிக அருமையாக இருக்கும். அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் உணர்ச்சிகளை வெளிக்காட்டுகின்றனர் என்று மிக அற்புதமாக படமாக்கப்பட்டு இருக்கும். அந்தமாதிரி இக்கட்டில் மாட்டினீர்களா?

நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம். அதன் வேந்தர் ராஜா அவர்களுக்கு குடும்பம் சிறக்க, நல்வாழ்த்துக்கள்.

சக்திவேல்
30-09-2007, 12:27 AM
என்னைப் பொருத்தவரை
காதல் என்பது இப்பூமியில்
இல்லாதிருந்தால்
கவிதை என்பது
இல்லாதிருந்திருக்கும்!

எனக்கும் உந்துசக்தி காதல்தான்..

நினைதேன் நன்பரே காதலன்றி வேறெதும் ஒருவனை கவிதைப்பித்தனாக்க முடியாது என்று.

காலமெல்லாம் காதல் வாழ்க.

===============================

போர்க்களமா வாழ்க்கை
கொடுத்ததை
திரும்பக் கேட்டால்
கோமாளி என்பான்;
இரக்கப்பட்டு விட்டுவிட்டாலோ
ஏமாளி என்பான்!
...
...
...
வீணாய்
ஒலித்துக்கொண்டிருக்கும்
ஓநாய்களின்ஒப்பாரி சத்தமிது..
தானாய் குறைந்து விடும்;
ஒரு நாள் காணாமலே
கறைந்து விடும்!

இந்தவரிகள் மிக நன்றாக இருக்கின்றன.

அப்புறம், கலக்கிட்டீங்க,
என் பழைய காதலியின் சந்தோஷத்தினை கண்ட சந்தோஷத்தினை மிக அருமையாக வடித்திருக்கின்றீகள், நன்றி மற்றும் மென்மேலும் பல சாதனைகள், கவிதையில் செய்ய நல்வாழ்த்துக்கள்.

ராஜா
30-09-2007, 04:57 PM
அனைவருக்கும் நன்றி..!

சுகந்தப்ரீதன்
01-10-2007, 03:02 AM
எப்படி நண்பரே... ஆறு கேள்விய ஒரே கேள்வின்னு கேட்குறீங்க..? சரி சரி பதில் சொல்லுறேன்!

பெண் மனதின் ஆழத்தை அளவிடவே முடியாது என்று சொல்லுகிறார்களே, அப்படியா?
ஆணின் மனதைவிட பெண்ணின் மனது ஆழமானதுதான் அதை யாராலும் மறுக்க முடியாது.ஆனால் அதை அளக்க முடியாமல் போனதற்க்கு காரணம் கடலையளக்க கைத்தடியை கொண்டுப்போன நம்மவர்களைதான் சாரும். தங்களோட இயலாமையை மறைக்க ஆண்கள் அத்தனை பேரும்(என்னையும் சேர்த்துதான்) பெண் மனதின் ஆழத்தை அளக்க முடியாதுன்னு கதையை அப்படியே திருப்பி விட்டுட்டாங்க (குப்புற வீழ்ந்தாலும் மீசையில மண்ணு ஒட்டுலன்ன கதைதான்)!

அப்படியென்றால், அது இயற்கையாகவே யாராலும் அளவிடமுடியாததா?
அப்படிதான் தோன்றுகிறது நண்பரே..!

காட்டிலிருந்து களைப்போடு என் தாய் வீட்டுக்கு வரும் வேளையில்தான் பள்ளிமுடித்து பட்டாம்பூச்சியாய் நானும் என் சகோதரியும் வீட்டுக்கு போவோம்.வீட்டிலிருக்கும் கொஞ்ச உணவையும் எங்களுக்கு இட்டுவிட்டு தனக்கு பசியில்லை என்றுகூறி பட்டினியோடு அடுத்தவேளை உணவுக்கு அடுப்பெரித்த என் அன்னையை நினைக்கையில் ஒவ்வொரு தாயின் அன்பையும் என்னால் உணரமுடிகிறது ஆனால் அதன் ஆழம் இவ்வளவுதான் என்று உரைக்கமுடியவில்லை!

வீட்டில் யாராவது ஒருவர்தான் படிக்கமுடியும் என்ற நிலை வந்தபோது சுயநலத்தால் என் பெற்றோர் என்னை தேர்ந்தெடுக்க சரி தம்பி படிக்கட்டும் என்று சொல்லி தங்கள் எதிர்காலத்தை பற்றி சிறிதும் சிந்திக்காமல் என்னைவிட நன்றாக படித்த என்னிரு மூத்த சகோதரிகளும் படிப்பை பாதியிலேயே நிறுத்திகொண்டு தங்களின் வாழ்வை கிராமம் என்னும் சிறு வட்டத்திற்க்குள்ளேயே அமைத்து கொண்டதை நினைக்கையில் ஒவ்வொரு சகோதரியும் சகோதரனுக்கு செய்யும் தியாகத்தையும் அதன்பின் இருக்கும் வலியையும் ஆழத்தையும் என்னால் கண்ணீருடன் உணரமுடிகிறது ஆனால் அதன் எல்லை இவ்வளவுதான் என்று என்னால் வரையறுக்க முடியவில்லை!

தோள் சாய்ந்து தூங்கும் தோழனின் தூக்கம் கலைந்துவிடக் கூடாதென்று தன் தோள்வலியையும் தாங்கிகொள்ளும் தோழிகளை காண்கையில் அவர்களின் நட்பின் ஆழத்தை உணரமுடிகிறது ஆனால் அதன் ஆழம் இத்தனை தூரம்தான் என்று என்னால் உறுதியாக சொல்லமுடியவில்லை!

இப்படியே காதலி, மனைவி, மகள் என்று சொல்லிகொண்டே போகலாம் ஆனால் எந்த இடத்திலும் நம்மால் பெண்ணின் மனதை உணரமுடியுமே தவிர அதன் ஆழம் இவ்வளவுதான் என்று யாராலும் அரிதியிட்டு கூறிவிட முடியாது! பெண் மனதின் ஆழம் ஆணுக்கு மட்டுமல்ல ஏன் அந்த பெண்ணுக்கே தெரியாது என்பதுதான் நிதர்சனம்.ஒருசில பெண்கள் இப்படி இருப்பதில்லையே என்று நீங்கள் கேட்டால் அதற்கு காரணம் அவளின் தந்தையோ, சகோதரனோ, தோழனோ, காதலனோ, கணவனோ இல்லை மகனோ இப்படி யாராவது ஒரு ஆண் தன் கடமையை செய்ய தவறி இருப்பது அவளின் வாழ்வை உற்று நோக்கினால் உங்களுக்கே புரியும்!

இல்லை பெண்தான் வலிந்து மறைக்கின்றாளா?. அப்படியென்றால் அதன் காரணம் என்ன?

பெண் எங்கேயும் எதையும் வலிந்து மறைப்பதில்லை வலியோடுதான் மறைக்கிறாள் அதற்கு காரணம் இங்கே நமக்கிருக்கும் சுதந்திரம் அவர்களுக்கு இல்லை என்பதுதான். நீங்கள் காதலை மையபடுத்தி இந்த கேள்வியை கேட்டிருப்பதால் அதை வைத்தே பதில் தருகிறேன். காதலில் ஆணும் பெண்ணும் சேர்ந்தே சம்மந்தபட்டிருந்தாலும் இங்கே ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளைவிட பெண் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.முதலில் வீட்டில் எதிர்ப்பு பின் சமுதாயத்தின் எதிர்ப்பு அதையும் மீறி அவள் ஒரு ஆணை கைப்பிடிக்கையில் ஓடிப்போனவள் என்ற ஒரு பட்டம் அதையெல்லாம் விட கைப்பிடித்தவனே சமயத்தில் கைகழுவிவிடுவது அதன்பின் அவள் இந்த சமுதாயத்தில் அவள் அனுபவிக்கும் கொடுமை இப்படி காதல் என்பது ஆண்களுக்கு ஆனந்த விளையாட்டாகவும் பெண்களுக்கு ஆபத்தான விளையாட்டாகவும் இருப்பதால்தான் பெரும்பாலும் பெண்கள் தங்கள் விருப்பங்களையும் உணர்வுகளையும் தங்களுக்குள்ளேயே போட்டு பூட்டி புதைத்து விடுகிறார்கள்.இதை அவர்கள் விருப்பத்தோடு செய்யவில்லை வருத்தத்தோடுதான் செய்கிறார்கள்.

(கொசுறு கேள்வி: நீங்கள் ஒரு பெண்ணின் மனதை அளவிட்டதை அறிவேன்? அளக்க முடிந்ததா?)

என்ன நண்பா... என்னவோ எனக்காக நீங்கதான் தூதுபோன மாதிரி இவ்வளவு உறுதியா சொல்றீங்க...? என்னடா இவ்வளவு உறுதியா சொல்லிட்டாரேன்னு கண்ணுல விளக்கண்ண விட்டுகிட்டு என்னோட ஆட்டோகிராப்ப புரட்டி பாத்த நான் நேசிச்ச பொண்ணுங்களோட லிஸ்டு அனுமார்வாலு மாதிரி நீண்டுகிட்டே போகுது... சரி இதுல நம்பல நேசிச்சபொண்ணுங்க எத்தனை பேருன்னு பாத்தா எங்கவீட்டு கோழியிட்ட முட்டைதான் எனக்கு ஞாபகம் வருது. நமக்கு மின்னல் மாதிரி காதல் அப்ப அப்ப வந்துட்டு போகும்.அது ஏன் வருது எதுக்கு வருதுன்னு நாம ஆராயரது கிடையாது. உதாரணத்துக்கு பேருந்துல ஏறுனா முதல்ல நம்மோட ராஜபார்வை பொண்ணுங்க இருக்குற பக்கம் போகும் அங்க அழகா இருக்குற (நம்ப காதலுக்கு இந்த ஒரு தகுதி போதுங்க.. அதுக்காக நான் அழகான்னுல்லாம் கேள்வி கேட்ககூடாது!) ஒரு பொண்ண பாத்து பிக்ஸ் பண்ணிகிட்டு அவ அனுமதியில்லாமலே அவள காதலிக்க உட்காந்துடும் நம்ப மனசு.அவ பேருந்தவிட்டு இறங்குற வரைக்கும் அவதான் நம்ப காதல் தேவதை அதன்பிறகு அவ யாரோ நாம யாரோ?!

இப்படி நிறைய காதல் நமக்குண்டுங்க... சில பொண்ணுங்க நாம பாத்தா சிரிக்கும்( எதுக்குன்னு தெரியாது) சிலது சிடுசிடுன்னு மூஞ்ச தூக்கி வச்சிக்கும் சிலது கண்டுக்கவே கண்டுக்காது இன்னும் சில பொண்ணுங்க திரும்பி பார்க்கும் ஆனா என்ன பாத்துதா இல்ல என் பக்கத்துல இருக்குறவன பாத்துதான்னு எனக்கு தெரியாது..?! நாம எதையுமே பெருசா எடுதுக்குறதும் கிடையாது ஞாபகம் வச்சிகிறதும் கிடையாது.இருந்தாலும் அஞ்சுவருசம் ஒரே வகுப்புல படிச்சும் ஒரு முறைகூட என்கிட்ட பேசாம கடைசிவரைக்கும் கண்ணாலயே பேசிட்டு கண்ணீர்விட்டு போன பள்ளிதோழியை மட்டும் இன்னைக்கும் மறக்க முடியலிங்க... நாங்க ரெண்டுபேரும் பேசிக்காததுக்கு பெருசா காரணம்ஒன்னுமில்லீங்க.. பொட்டபுள்ளைகிட்ட உனக்கு என்னடா பேச்சுன்னு எங்கவாத்தி அடிப்பாரேன்னு எனக்கு பயம்... எங்கிட்ட பேசுனது அவவீட்டுக்கு தெரிஞ்சா வீட்டுல உதைப்பாங்களேன்னு அவ பயந்திருக்கனும்... காதல்ன்னா என்னான்னு தெரியாத வயசுல (இப்பல்லாம் பள்ளிகூடம் போற பயலுகலுக்கு எல்லாமே தெரியுதுங்க..) ஒரு பையனும் பொண்ணும் பேசிக்கிறதுக்கு அப்ப எத்தனை தடை பாத்தீங்களா நம்ப சமூகத்துல... ஆனாலும் நாங்க புத்திசாலியாச்சே(?) வாயால பேசுனாதான அடிக்கிறாய்ங்கன்னு கண்ணாலியே பேசுனம்ல...! களவாணி பயலுகளால எங்கள கண்டுபுடிக்கவே முடியலீல்ல..!

பாத்தீங்களா நண்பரே... இதுக்குதான் என்கிட்ட கேள்விகேட்க கூடாதுங்கிறது.. நீங்க எதியோ எதிர்பாத்து கேள்விகேட்க நான் எதையோ உளரிகிட்டு இருக்கேன்..! சரி விசயத்துக்கு வருவோம்.. இப்படியே கவலையில்லாம ஒருதலை ராகம் பாடிகிட்டிருந்த எனக்கு கல்லூரியில படிக்கையில திடீர்ன்னு ஒரு தேவதைய பாத்ததும் இருதலைகொல்லி எறும்பா மாட்டிகிட்டு இம்சைபடனும்னு ஆசை வந்துட்டுது.. அதுக்கு காரணம் நானில்லீங்க.. எவளாவது நம்பள பாக்கமாட்டாளான்னு ஏங்கிகிட்டு இருக்குற நேரத்துல அழகான ஜூனியர் பட்சி அலைவரிசை அனுப்பனா எவனுக்குதான் ஆசைவராது (ஆசைதானே அடிப்படை துன்பத்துக்கு காரணம்).. கொஞ்சம்கூட யோசிக்காம கண்ணமூடிகிட்டு கற்பனைய வளக்க ஆரம்பிச்சுட்டேன் நானும்..! அவ எந்த நேரத்துல எங்க இருப்பான்னு தெரிஞ்சுகிட்டு அங்கபோயி அவள பாக்குறதே பொழப்பா மாறிபோச்சு நமக்கு(கவனிங்க..பாக்கறது மட்டும்தான் பேசறது இல்ல?)

அவகிட்ட பேசுனும்னு ஆசையிருந்தும் பேசமுடியாம போனதுக்கு காரணம் பாழப்போன தாழ்வுமனப்பான்மைதான்... பின்ன என்னங்க அவளுக்கு தலைநகரம் நமக்கு குக்கிராமம், அவ ரதி மாதிரி இருப்பா நாம மன்மதன் மாதிரி இருக்கிறதுல்ல, அவ வகுப்புல முதல் மதிப்பெண் வாங்குவா நாம வகுப்புல கடைசி பெஞ்சுலதான் உட்கார விருப்பப்படுறது (குள்ளமா இருக்கன்னு சிலநேரம் தூக்கி முத பெஞ்சுல உட்கார வச்சிடுவானுங்க படுபாவி பயலுக..) இப்படி நிறைய விசயங்கள்ல எனக்கும் அவளுக்கும் வித்தியாசம் இருந்ததால எனக்கு தாழ்வுமனப்பான்மை உருவானதுல ஆச்சரியபடுறதுக்கு எதுவுமில்லீங்க ஆனாலும் அவ என்ன பாத்தா.. அது எதுக்குன்னுதான் எனக்கு இதுவரைக்கும் தெரியல.. (இந்த இடத்துல அவ மனச என்னால அளக்க முடியல)

இப்படியே போயிகிட்டு இருந்தப்ப திடீர்ன்னு பாத்தா அவ அவுங்க இயர் பையன் ஒருத்தன்கூட சுத்த ஆரம்பிச்சுட்டா.. உடனே நம்பகூட நண்பன்னு சொல்லிட்டு திரிஞ்ச நாலு நாதாரி பயலுகளும் வேண்டாமுண்டா மச்சான் விட்டுறுன்னு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டானுங்க...(நண்பன திட்டுறன்னு பாக்குறீன்களா.. அவனுங்கதான உன்னதாண்டா பாக்குறான்னு சொல்லி என்ன ஏத்திவிட்டவனுங்க..) சரிடா நான் அந்த பொண்ண பாக்கல அவ என்ன பாக்காம போனான்னா நான் நீங்க சொல்றபடி நடந்துக்குறேன்னு சொன்னேண்.. நல்லவேளை அவ என்ன காப்பாத்திட்டா ( அவ எனக்காக செஞ்ச ஒரே காரியம் அவனுங்களுகிட்ட இருந்து என்ன காப்பத்துனதுதான்?)

ஆனாலும் கடைசியில் கல்லூரியவிட்டு வரவரைக்கும் அவகிட்ட பேசமட்டும் எனக்கு துணிச்சல் வரலீங்க.. அப்புறம் வாழ்க்கை நம்பல எங்கெங்கியோ பந்தாடினப்ப கூட அவள மறக்கமுடியல.. அப்ப அப்ப அவ வீட்டுக்கு வாழ்த்துமடல் அனுப்பறது அவ மின்னஞ்சல் முகவரிக்கு உருகி உருகி கடிதம் எழுதுறதுன்னு அவள நானும் தொடர்ந்துகொண்டே இருந்தேன்.. நான் செஞ்சது சரியா தப்பான்னு எனக்கு தெரியாது.. ஆனா அந்த நேரத்துல என் வாழ்க்கையில நான் அனுபவிச்ச சில கஷ்டங்கள் எனக்கு வாழ்வின்மீது விரக்திய ஏற்படுத்தியிருந்தது.அப்ப இந்த ஒரு விசயம்தான் எனக்கு ஆறுதலா இருந்தது என்முகவரியை தெளிவா எழுதிதான் அனுப்புவேன் (ஒருவேளை பதில்போட மாட்டாளாங்குற நப்பாசையில) ஆனா அவ எதுக்கும் பதில் அனுப்புனதுமில்ல.. எனக்கு இந்தமாதிரி அனுப்பாதன்னு சொன்னதுமில்ல... (இந்த இடத்துலயும் என்னால அவ மனச அளக்க முடியல.. பிடிச்சிருந்தா பதில் அனுப்பியிருக்கனும் இல்ல அனுப்பாதன்னு சொல்லியிருக்கனும்
ஆனா அவ இந்த ரெண்டையுமே செய்யல அது ஏன்னு தெரியல)

இப்படியே மூனுவருசம் ஓடிச்சி எனக்கும் வாழ்க்கையில கொஞ்சம் பிடிப்பு வந்ததும் அவளோட பிறந்தநாளுக்கு அவவீட்டுக்கே போன் பண்ணி (ஒருமுறைகூட அவகிட்ட நேர்ல பேசுனது கிடையாது) வாழ்த்து சொல்லுற அளவுக்கு துணிச்சலும் வந்தது. வாழ்த்திட்டு அப்படியே விசாரிச்சேன் ஏன் எனக்கு பதில் போடமாட்டேங்கிறன்னு.. அவ சொன்னா நீங்க யாருன்னே எனக்கு தெரியல அப்புறம் எப்படி நான் பதில் போடமுடியுமுன்னு..( இது பச்சபொய்ன்னு என்னால சத்தியம் பண்ணமுடியும்ஆனா அவ ஏன் அப்படி சொன்னான்னுதான் தெரியல) நான் எதையும் வெளிகாட்டிக்காம நீயும் ஒரு பையனும் காதலிச்சீங்களே என்னாச்சுன்னு கேட்டேன்.. பிரிஞ்சுட்டோம்ன்னு சர்வசாதாரணமா சொன்னா.. ஏன்னு கேட்டேன் வீட்டுல பிரச்சனை விலகிட்டோம்னா.. அதுக்குமேல பழசகிண்டி அவள ரணப்படுத்த நான் விரும்பல.. சரி நண்பர்களா இருப்போம்ன்னு சொல்லி அவகிட்ட அலைபேசி எண்ண கேட்டேன் கொஞ்சம்கூட தயங்காம குடுத்தா...அப்புறம் எப்ப திருமணமுன்னு கேட்டேன்.. வீட்டுல பாத்துகிட்டு இருக்கிறதா சொன்னா..சரி நான் அப்புறம் பேசுறன்னு சொல்லி கட் பண்ணிட்டேன்...

அதன்பிறகு பத்துநாள் கழிச்சி போன் பன்னுனேன் பரஸ்பரம் விசாரிப்புக்கு அப்புறம் தமிழ்நாட்டுல என்ன விசேசம்னு கேட்டேன்... ஒன்னுமில்ல எனக்குதான் அடுத்த மாசம் கல்யாணமுன்னு சொன்னா.. சின்னதா மனசுல வலிச்சது.. இருந்தாலும் மாரியாதைக்காக வாழ்த்திட்டு போன வச்சிட்டேன்.. ஏற்கனவே நிறைய ஏமாற்றங்களையும் அவமானங்களையும் வாழ்க்கையில சந்திச்சிட்டதால இந்த ஏமாற்றம் என்ன பெருசா பாதிக்கல.. அதுமட்டுமில்லாம விரும்புனவன விட்டுட்டு வேற ஒருத்தன மணக்க போற அவளோட வலியை நினைக்கையில என்னோடவலி எனக்கு பெருசா தெரியல..

கடைசியா அவள் கல்யாணத்துக்கு இரண்டுநாள் முன்னால போன்பண்ணி அவளுக்கு வாழ்த்து தெரிவிச்சுட்டு இனி உனக்கு நான் எதுவும் அனுப்ப மாட்டேன்னு சொன்னேன்.ஏன்னு என்ன கேட்டா.. நீதான் பதில் அனுப்ப மாட்டேங்கிறீயே அதுமட்டுமில்லாம இதுவரைக்கும் நீ தனியா இருந்த இனி அப்படியில்லீயேன்னு சொன்னேன்.. அதுக்கு அவ இதுல என்ன பிரச்சனை நீ அனுப்புன்னு சொன்னா (இங்கேயும் அவள புரிஞ்சிக்க முடியல).. சரி நீ வட இந்தியாவுக்கு(அங்கதான் அவள் கணவனுக்கு வேலை) போனதுக்கு அப்புறம் எனக்கு கால்பண்ணுன்னு சொன்னேன் கண்டிப்பா பண்ணுறேன்னு சொன்னா (ஆனா கண்டிப்பா பண்ண மாட்டான்னு எனக்கு தெரியும்)... இதுவரைக்கும் அவள் கால்பண்ணவும் இல்லை பண்ணவும் மாட்டா... அவ நம்பர கண்டுபுடிச்சி அவகிட்ட பேசுறது எனக்கு ஒன்னும் பெரியவிசயமில்லை.. அப்படி நான் பேசினாக்க கண்டிப்பா என்கிட்ட அவ பேசமாட்டேன்னு சொல்ல மாட்டா... அவ என்னை விரும்புனாளா இல்லியான்னு என்னால உறுதியா சொல்ல முடியாது ஆனா அவ ஒருபோதும் என்ன வெறுக்கலன்னு மட்டும் கண்டிப்பா சொல்ல முடியும்.. இப்பவும் என்னால அவகிட்ட தொடர்பு கொண்டு பேசமுடியும் ஆனா நான் அப்படி செய்யல.. அதுக்கு காரணம் சில உறவுகளை தொடரும் போட்டு தொடர்வதைவிட முற்றும் போட்டு முடிப்பதே முழுமையாக இருக்கும் என்பதால்தான்!

இப்போதெல்லாம் எனக்கு மின்னல் காதல் வருவதேயில்லீங்க.. எப்பவாது அவளோட ஞாபகம் மட்டும் வரும் அப்பயெல்லாம் என் விழியோரம் இருதுளி நீர் அரும்பும் அவ்வளவுதான்.அதில் ஒரு துளி அவளுக்காக இன்னொரு துளி எனக்காக..!

[எப்படியோ கொசுறு கேள்வின்னு சொல்லி குட்டைய குழப்பி மீன புச்சிட்டாரு சக்திவேலு அண்ணாச்சி... சரி சரி நீங்க கண்ண தொடைச்சிகிட்டு கிளம்புங்க.. படம் முடிஞ்சுடுச்சி!]

lolluvathiyar
01-10-2007, 12:45 PM
சுகந்தபிரீத்தன் உங்களுக்கு கேட்க பட்ட கேள்விக்கு நீங்க மிக பெரிய அதே சமயம் உன்மையான ரசிக்கும் படியா லெக்சர் தந்திருக்கீங்க. இது போன்ற பெரிய பதிப்பு நீங்க பதிச்சு நான் பாத்ததேஇல்ல. அந்த அளவுக்கு பெண்னின் ஆழம் உங்களை ஆழமாக்கி விட்டது.
உங்கள் அனுபவத்தை நீங்கள் விளக்கிய விதம் அருமை.
இறுதியில் கன்னீர வந்து விட்டதோ, கவலை இல்ல துடைத்து விட நாங்கள் இருகிறோம்

சக்திவேல்
02-10-2007, 02:55 AM
நன்பர் சுகந்தபிரீதனே

பதில்களை அழகாக ஆரம்பித்து, அருமையாக கொண்டுசென்று கடைசியில் சோகத்தில் முடித்துவிட்டீரே.

"ஆறு அதும் ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல ஆழம் எது ஐய்யா அந்த பொம்பள மனசு தான்யா"

என்பது உங்கள் அனுபவத்திலும் உண்மையாகி விட்டதே இப்படி ஒரு சோகக்கதையை சொல்லி மனத்தை கனமாக்கிவிட்டீர்களே, உங்கள் மனம் எப்படி இதை தாங்கிக்கொண்டது?

ம்ம்ம் சரி விடுங்கள், உங்களின் மனம் கவரும் வகையில் இன்னொரு தேவதை கிடைத்து சந்தோஷமாக வாழ நல்வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
02-10-2007, 04:18 AM
பெண்ணின் மன ஆழத்தை மிக அழகாக அலசியுள்ளீர்கள் ப்ரீதன்.கொசுறு கேள்விக்கு வாழ்க்கைச்சம்பவத்தை அழகான சிறுகதையாகச் சொல்லி மனதை அசைத்துவிட்டீர்கள்.பாராட்டுக்கள்.

சுகந்தப்ரீதன்
02-10-2007, 04:19 AM
சுகந்தபிரீத்தன் உங்களுக்கு கேட்க பட்ட கேள்விக்கு நீங்க மிக பெரிய அதே சமயம் உன்மையான ரசிக்கும் படியா லெக்சர் தந்திருக்கீங்க. இது போன்ற பெரிய பதிப்பு நீங்க பதிச்சு நான் பாத்ததேஇல்ல. அந்த அளவுக்கு பெண்னின் ஆழம் உங்களை ஆழமாக்கி விட்டது.
உங்கள் அனுபவத்தை நீங்கள் விளக்கிய விதம் அருமை.
இறுதியில் கன்னீர வந்து விட்டதோ, கவலை இல்ல துடைத்து விட நாங்கள் இருகிறோம்

மிக்க நன்றி வாத்தியாரே...! யாருகிட்டயாவது கொட்டனும்னு ரொம்ப நாளா நினைச்சிகிட்டு இருந்தேன் வாழ்ப்பு கிடைச்சதும் வெளில வந்துடுச்சி... ம்ற்றபடி எல்லாம் நலமே வாத்தியாரே...!

சுகந்தப்ரீதன்
02-10-2007, 04:21 AM
நன்பர் சுகந்தபிரீதனே

பதில்களை அழகாக ஆரம்பித்து, அருமையாக கொண்டுசென்று கடைசியில் சோகத்தில் முடித்துவிட்டீரே.

"ஆறு அதும் ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல ஆழம் எது ஐய்யா அந்த பொம்பள மனசு தான்யா"

என்பது உங்கள் அனுபவத்திலும் உண்மையாகி விட்டதே இப்படி ஒரு சோகக்கதையை சொல்லி மனத்தை கனமாக்கிவிட்டீர்களே, உங்கள் மனம் எப்படி இதை தாங்கிக்கொண்டது?

ம்ம்ம் சரி விடுங்கள், உங்களின் மனம் கவரும் வகையில் இன்னொரு தேவதை கிடைத்து சந்தோஷமாக வாழ நல்வாழ்த்துக்கள்.

எனக்கு இந்த வாழ்ப்பை அளித்த உங்களுக்குதான் நண்பரே நான் ந*ன்றி சொல்ல வேண்டும்...! வாழ்த்துக்கள் நண்பரே...!

சுகந்தப்ரீதன்
02-10-2007, 04:22 AM
பெண்ணின் மன ஆழத்தை மிக அழகாக அலசியுள்ளீர்கள் ப்ரீதன்.கொசுறு கேள்விக்கு வாழ்க்கைச்சம்பவத்தை அழகான சிறுகதையாகச் சொல்லி மனதை அசைத்துவிட்டீர்கள்.பாராட்டுக்கள்.

உண்மைதான் சிவா... சிலநேரங்களில் சினிமாவைவிட கனமாக இருக்கிறது நிஜவாழ்க்கையின் சம்பவங்கள்... நன்றி சிவா..!

ராஜா
02-10-2007, 04:44 AM
சுகந்தன் ஒரு விளையாட்டுப்பிள்ளை [மட்டுமே] என்று நினைத்திருந்த என் எண்ணத்தை அசைத்துப் போட்டுவிட்ட தெளிவான பதில்.. இந்தக் கேள்விக்கு வேறு யாரும் இவ்வளவு அருமையாக பாதிலளித்திருக்க இயலாதென்றே தோன்றுகிறது.

சபாஷ் சுகந்தன்.

ஷீ-நிசி
02-10-2007, 05:46 AM
ஏய்! ப்ரீதன் வாவ்.. என்ன அருமையான பதில். உங்க பதிலை படிக்கறதுக்கு முன்னாடி ராஜா சாரின் பின்னூட்டம் படித்தேன். அதுல இந்தக் கேள்விக்கு உன்னத்தவிர வேற யாரும் இவ்வளவு சிறப்பா பதில் அளித்திருக்க முடியாதுன்னு போட்டு இருந்தாரு. அத பார்த்துட்டு அப்படி என்ன சிறப்பா எழுதியிருக்கேன்னு பார்த்தேன். உண்மைதான்.

அதுக்கு காரணம் சில உறவுகளை தொடரும் போட்டு தொடர்வதைவிட முற்றும் போட்டு முடிப்பதே முழுமையாக இருக்கும் என்பதால்தான்!
ரொம்ப ரசித்தேன்.....

வாழ்த்துக்கள்!

சுகந்தப்ரீதன்
02-10-2007, 06:15 AM
சுகந்தன் ஒரு விளையாட்டுப்பிள்ளை [மட்டுமே] என்று நினைத்திருந்த என் எண்ணத்தை அசைத்துப் போட்டுவிட்ட தெளிவான பதில்.. இந்தக் கேள்விக்கு வேறு யாரும் இவ்வளவு அருமையாக பாதிலளித்திருக்க இயலாதென்றே தோன்றுகிறது.

சபாஷ் சுகந்தன்.

மிக்க நன்றி அண்ணா...!

சுகந்தப்ரீதன்
02-10-2007, 06:16 AM
ஏய்! ப்ரீதன் வாவ்.. என்ன அருமையான பதில். உங்க பதிலை படிக்கறதுக்கு முன்னாடி ராஜா சாரின் பின்னூட்டம் படித்தேன். அதுல இந்தக் கேள்விக்கு உன்னத்தவிர வேற யாரும் இவ்வளவு சிறப்பா பதில் அளித்திருக்க முடியாதுன்னு போட்டு இருந்தாரு. அத பார்த்துட்டு அப்படி என்ன சிறப்பா எழுதியிருக்கேன்னு பார்த்தேன். உண்மைதான்.

ரொம்ப ரசித்தேன்.....

வாழ்த்துக்கள்!

மிக்க நன்றி நண்பரே...!

ராஜா
02-10-2007, 06:22 AM
ஆ! பத்து.. கேள்வியாளர் : கூர்மையும் வலுவும் கொண்ட சக்தி வேல்..!
----------------------------------------------------------------------------------

சுகந்தப்ரீதன்
சுகந்தப்ரீதன் அவர்களே, பெண் மனதின் ஆழத்தை அளவிடவே முடியாது என்று சொல்லுகிறார்களே, அப்படியா? அப்படியென்றால், அது இயற்கையாகவே யாராலும் அளவிடமுடியாததா இல்லை பெண்தான் வலிந்து மறைக்கின்றாளா?. அப்படியென்றால் அதன் காரணம் என்ன?
(கொசுறு கேள்வி: நீங்கள் ஒரு பெண்ணின் மனதை அளவிட்டதை அறிவேன்? அளக்க முடிந்ததா?)

தாமரை
தன்நலம் கருதாமல் பிறருக்காக நிறைய செய்தவர்கள் எல்லோருமே பெரும்பாலும் வாழ்வில் கஷ்ட்டப்பட்டுதான் இருந்திருக்கின்றார்கள். ஏன் அப்படி? ஒருவேளை அவர்களை பொறுத்தவரையில் சந்தோஷமாகத்தான் இருந்திருப்பார்களோ? நல்லது செய்வது அவர்களுக்கு கேடா?
(கொசுறு கேள்வி: தாமரை என்றாலே குளிர்ச்சிதான், புகைப்படத்தில் எங்கள் தாமரையின் தோரனை, அரசியல்வாதியா இல்லை கல்யான மாப்பிள்ளையா? ஏன் இப்படி)

தளபதி
மகிழ்சியுடன் வாழும் வழிகள் சொன்ன தளபதியாரே, கோப உணர்ச்சி மனிதனுக்கு தேவையா?. உங்கள் பதிலுக்கு காரணம் விளக்கமாக சொல்லுங்கள்?
(கொசுறு கேள்வி: உங்களை கோபப்பட வைத்த சம்பவம் மற்றும் உங்களின் அந்த கோபத்தின் விளைவை பகிருங்கள்)

பென்ஸ்
எந்த ஒரு விஷயமும் இரண்டு நிலைகளைக்கொண்டது என்பது உலகறிந்த உண்மை. (இரவு-பகல், நேர்மை-கயமை, அறிவாளி முட்டாள்) இரண்டில் ஒன்று ஆரம்பத்தில் அதிகமாக இருக்கும், கால ஓட்டத்தில், நிலைத்து நிற்கவேண்டிய தேவையில் குறைவான பகுதி மெல்ல மேலேறும் ஒரு நிலையில் சமமாகும் பிறகு அதிகமாகும், இதுவும் உலகறிந்த உண்மை. அது போல மனித வாழ்வானது நிறைய இரு நிலைகளை கொண்டிருக்கின்றது, அறிவு, செல்வம், வீரம் இவையெல்லாம் மக்களிடையே சமநிலைக்கு வருமா? இயற்கையின் நியதியானது சமநிலைக்கு வருதல்தான், அது மனிதனிடம் நடக்குமா? ஏன்?
(கொசுறு கேள்வி: கார்களில் மதிப்பானது பென்ஸ்-கார், எங்கள் மன்றத்தின் பென்ஸிடம் உள்ள மதிப்பான விசயங்கள் என்ன?

பாரதி
உங்கள் ஊரிலே எடுத்தபடம் கருத்தம்மா. அப்படி அழகான ஊரா உங்கள் ஊர்?. பென் குழந்தைகளை கொல்லும் வழக்கம் உங்கள் ஊர் கிராமங்களில் உள்ளனவே. பென் குழந்தைகள் வளர்ந்து வாழ்க்கை என்னும் கஷ்டத்தில் அடிபட்டு அலறும் பரிதாபத்தை கன்கொண்டு கான சகியாமல் துடிப்பதைவிட பாசத்தை வளர்க்கும் முன்பே, வலிகளை உணரும் முன்பே, கொன்றுவிடலாம் என்று செய்கிறார்களா? இல்லை திருமனம் மற்றும் செய்முறைக்கு நிறைய செலவாகுமே என்ற சுயநலத்தில் அப்படி செய்கிறார்களா?
(கொசுறு கேள்வி: காலத்தை மீறி கனவுகண்டு தன் வாழ்க்கையை அழித்துக்கொண்டவர், மகா கவி பாரதி, எங்கள் பாரதியின் கனவுகள் என்னென்ன? )

ராஜா
சுடர், விளையாட்டு என்று மன்ற மக்களை கவர்ந்து கலக்கும் ராஜா அவர்களே எப்படி இப்படியெல்லாம் புதிது புதிதாக கண்டுபிடிக்கின்றீர்கள், உங்கள் வாழ்க்கையிலும், தொழிலிலும் இதே மாதிரித்தான் அனைவரையும் கவர்ந்து கலக்குகிறீர்களா? அடுத்த திட்டம் என்ன?
(கொசுறு கேள்வி: டில்லிக்கு ராஜான்னாலும் பள்ளிக்கு பிள்ளைதான் எங்கள் ராஜா தன் குடும்ப உறுப்பிணர்களிடம் எப்படி?)

kamalk
கம்ப்யூட்டர் மென்பொருள் பணிக்கு இவ்வளவு சம்பளம் தருகின்றார்களே சரிதானா? இந்த இள வயதில் இவ்வளவு பணத்தை வைத்துக்கொண்டு கெட்டுதானே போவார்கள்? இல்லையா?
(கொசுறு கேள்வி: கமல் என்றாலே குறும்புதான், எங்கள் மன்ற கமல், இனைய-சாட்டில் செய்த குறும்பான செயலை சொல்லுங்களேன்)

மயூரேசன்
இந்த இள வயதில், கல்லூரி அனுபவங்கள் எப்படி இருக்கின்றன, ஒரு சிலவற்றை பகிருங்களேன். சக மாணவியரைப்பற்றி உங்கள் கருத்து என்ன? சக மானவியிடம் இருக்கும் நட்பானது காதலாக மாற சந்தர்ப்பம் உண்டா? அப்படி காதலாக மாறுவது சரிதானா?
(கொசுறு கேள்வி, மயூரி என்றால் மயில் என்று அர்த்தமாகும், மயூரேசனின் அர்த்தம் என்ன?)

லொள்ளு வாத்தியார்
ஒருமுறை, உங்கள் பதிவில், சொந்த அடையாளங்களுடன் இனையத்தில் உலாவந்து பதிவுகளை மேற்கொண்டதால் மன்ற மறவர்களின் சந்திப்பில் கலந்து கொள்ள இயலாது என்று சொல்லியிருந்தீர்கள். அதில் என்ன பிரச்சினை, நீங்கள் சந்தித்த பிரச்சினைகளை பகிருங்களேன்,
(கொசுறு கேள்வி, இங்கே லொள்ளு பன்னும் வாத்தியார் கல்லூரி மற்றும் வீட்டில் எப்படி?)

ஷீ-நிசி
கவிதைகளுக்காகவே வலைப்பதிவு ஒன்றை வைத்திருக்கின்றீர்களே, கவிதையென்றால் ரெம்ப பிடிக்குமோ? ஒவ்வொரு கவிஞனுக்கும் உந்துதலானது காதலேயன்றி வேறெதும் இறாது. உங்களின் உந்துசக்தி எது?
(கொசுறு கேள்வி-1: உங்கள் கவிகளிளேயே பிரமாதமாக கருதுவது எது வெளியிடுங்களேன்)
(கொசுறு கேள்வி-2: எனது கல்லூரி நாட்களின் காதலி தற்பொழுது வேறொருவரை மனமுடித்து நல்ல முறையில் சந்தோஷமாக குழந்தைகளுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கின்றார், ஒருவேளை என்னை மனமுடித்திருந்தால்கூட இந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்திருப்பள்ளோ தெரியலை. அவளது சந்தோஷத்தினை கான எனக்கு ரெம்பவும் சந்தோஷமாகவும் இருக்கிறது, இந்த சந்தோஷத்தை என்னால் தரமுடியலையே என்ற வருத்தமும் இருக்கிறது. இந்த சந்தோஷ/வருத்தின் வெளிப்பாடை எனக்கு ஒரு கவிதையாக தர முடியுமா?
__________________

ராஜா
02-10-2007, 06:25 AM
மற்ற உறவுகளும் பதிலளிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்..!

பென்ஸ்
02-10-2007, 04:59 PM
பென்ஸ்
எந்த ஒரு விஷயமும் இரண்டு நிலைகளைக்கொண்டது என்பது உலகறிந்த உண்மை. (இரவு-பகல், நேர்மை-கயமை, அறிவாளி முட்டாள்) இரண்டில் ஒன்று ஆரம்பத்தில் அதிகமாக இருக்கும், கால ஓட்டத்தில், நிலைத்து நிற்கவேண்டிய தேவையில் குறைவான பகுதி மெல்ல மேலேறும் ஒரு நிலையில் சமமாகும் பிறகு அதிகமாகும், இதுவும் உலகறிந்த உண்மை. அது போல மனித வாழ்வானது நிறைய இரு நிலைகளை கொண்டிருக்கின்றது, அறிவு, செல்வம், வீரம் இவையெல்லாம் மக்களிடையே சமநிலைக்கு வருமா? இயற்கையின் நியதியானது சமநிலைக்கு வருதல்தான், அது மனிதனிடம் நடக்குமா? ஏன்?
(கொசுறு கேள்வி: கார்களில் மதிப்பானது பென்ஸ்-கார், எங்கள் மன்றத்தின் பென்ஸிடம் உள்ள மதிப்பான விசயங்கள் என்ன?

மன்னிக்க சக்திவேல், ராஜா...

பதிலை கேள்வியில் சுமந்து என்னிடம் கொடுத்த சக்திவேலுக்கு நன்றி...

இயற்கையின் நியதி சமநிலைக்கு வருவதுதான்....

வரும்.... வீரம், அன்பு, செல்வம் எல்லாம் சமநிலைக்கு வரும்... ஆனால் அதன் பிறகு மனிதன் என்று ஒரு ஸ்பிசிஸ் இல்லாமல் போகும் என்பதே உண்மை..

எல்லாம் சமமாகும் போது,
எல்லாம் கிடைக்கிறது-- அல்லது
ஒன்றும் கிடைகாமல் போகும்...

கிடைக்காமல் போகும் பச்சத்தில் -- பிடுங்க முயற்ச்சி வரும், ஆனால் அடுத்தவரும் அதே வீரம் , அதே அறிவு... வெல்வது கடினம்

எல்லாம் கிடைக்கும் போது -- எதுவும் தேவையில்லை என்ற எண்னம்...

தேவை இல்லை என்றால் தேடல் இல்லை...
தேடல் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை....

சில நாட்க்களுக்கு முன்பு வானத்தில் காணப்படும் "பிளாக் கோல்ஸ்" எனப்படும் "கறுப்பு ஓட்டை"களை பற்றி வாசிக்க நேர்ந்தது... எந்த ஒரு கிரகமும் புவியிர்ப்பு விசை மற்றும் அதில் இருக்கும் ஹைடிரஜன் அனுக்களால் உன்டாகும் சென்ட்ரிபீட்டல் விசை இவற்றால் இருக்கும்.. இதனால் அது தன் நிலையை காத்துகொள்ளும். சூப்பர்நோவ எனப்படும் வெடிப்பு நடக்கும் போது, அது தன் எல்லா ஹைடிரஜனையும் இழந்துவிடும்.. இதனால் புவியிர்ப்பு விசைமட்டும் இருக்கும்.இதனால் அதன் எடை (mass) "இன்பினிட்" (Infinite) அளவு சென்று விடும், அதன் டென்சிட்டியும்(density) இன்பினிட் அளவு சென்று விடும். இதனால் அதில் மோதும் வெளிச்சம் எதுவும் திரும்பாது, என்பது தியரி....

சமநிலை என்பது என்னை பொறுத்தவரை, எதாவது ஒரு பொருள் அதன் நிலையை காத்துகொள்ள தேவையான நிலை.
வரும் மாற்றத்தால் அதற்கே அழிவு என்றால் அது அந்த குறிப்பிட்ட பொருளுக்கு சமநிலையற்றதாக இருக்கலாம்...
ஆனால் அது "வேறு எதோ ஒரு சூழ்நிலை"யை சமமாக வைத்து கொள்ள நடக்கும் செயல்...

இப்போ நம்ம கதைக்கு வருவோம்...
பூமியில் இரவு, பகல் இரண்டும் மாறி மாறி வருவதால் தாம் நமது மனித இனம் வாழ வசதியாக இருக்கிறது...
சூரியன் 1 சதவிகிதம் அதிகமாக அடித்தாலும் எல்லா கடலும் வேறும் பாலைதான்... அல்லது பனி உருகி எல்லா நிலமும் தண்ணீர்தான்....

அது போலவே மனிதமும்...
அறிவு , செல்வம், வீரம் எல்லாம் வேறுபாடக இருக்க வேண்டும்... முதலில் இது மனிதம் வாழ தேவையானது, இரண்டாவது இது நம் இன பெருக்கத்தை கட்டு படுத்த இயற்கை கொடுத்திருக்கும் ஒரு முரண்...
மனிதர்கள் ரோம்ம்ம்ப நல்லவர்களாக மாறி உலக போர், ஜாதிசண்டை என்று ஒருவரை ஒருவர் கொன்று இதை கட்டுபடுத்தாத நேரம்...
காண்சர், ஏயிட்ஸ் , பிளேக், இதை எல்லாம் கட்டுபடுத்தும் போதும் இன்னும் புதியதாய் இன்னும் ஒன்று...
இடையிடையே சுனாமி, நில நடுக்கம் என்று எல்லாம் சமநிலையாய்....

வளர்ந்து வரும் ஜனதோகையால், தேவை அதிகமாகும் ..
இருப்பு குறையும், அது போராகும்...
போரால் வரும் சாவு.. சாவினால் தேவை குறையும்...
இப்படியே எல்லாம் சம நிலையாய்....

இப்படியே நானும் குழம்பி, உங்களையும் குழப்பி...
சமநிலை தேவையில்லை என்று முடித்து.....

கொசுறு பதில்:
பென்ஸ் கார் மதிப்பானது... மதிப்பு எவ்வாறு நிர்னையிக்க படுகிறது..
வேகத்திற்க்கு மதிப்பு - பேராரி கார்
பிக்கபிர்க்கு - மேக்லாரன்
அழகிற்க்கு - ஆல்பா ரோமியோ
பணத்திற்க்கு - ரோல்ஸ் ராய்ஸ்

என்ரு ஒவ்வொருவரும் ஒன்றை குறிவைத்து செய்யபடும்... பென்ஸ், ஒரு வேளை எல்லாவற்றிக்கும் மதிப்பு கொடுப்பதாலோ??? தெரியலை...

ஆனால் என்னிடம் இருக்கும் மதிப்பான விசயம் நான் கொஞ்சம் கோபம், கொஞ்சம் வேகம், கொஞ்சம் காதல், கொஞ்சம் பொறாமை, கொஞ்சம் அன்பு என்று எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் கலந்து செய்த கலவை...
இதனால் ..நான் திறமைசாலியல்ல , ஆனால் முட்டாளுமல்ல
நல்லவனுமல... கெட்டவனுமல்ல...
தெளிவாகவே குழப்பமானவன்.... அது என்னிடம் மதிபானதாக நான் கருதுவது....

மற்றவர்கள் என்னிடம் மதிப்பானதாக , அவர்களுக்கு எது தேவையோ அதை கண்டு சொல்லி இருக்கிறார்கள்....

ராஜா
02-10-2007, 06:12 PM
நன்றி பென்ஸ்..

எல்லாமே சமநிலைக்கு வந்துவிட்டால் வாழ்க்கை, சுவையும் அர்த்தமும் அற்றுப் போய்விடும் நிலை உருவாகலாம் என்று அழகாகச் சொல்லியுள்ளீர்கள்..

கொசுறு கேள்விக்கு கார்கள் பற்றிச் சொன்ன தகவல்களும் அருமை..!

ராஜா
02-10-2007, 06:15 PM
ஆ! பத்து.. கேள்வியாளர் : கூர்மையும் வலுவும் கொண்ட சக்தி வேல்..!
----------------------------------------------------------------------------------

சுகந்தப்ரீதன்
சுகந்தப்ரீதன் அவர்களே, பெண் மனதின் ஆழத்தை அளவிடவே முடியாது என்று சொல்லுகிறார்களே, அப்படியா? அப்படியென்றால், அது இயற்கையாகவே யாராலும் அளவிடமுடியாததா இல்லை பெண்தான் வலிந்து மறைக்கின்றாளா?. அப்படியென்றால் அதன் காரணம் என்ன?
(கொசுறு கேள்வி: நீங்கள் ஒரு பெண்ணின் மனதை அளவிட்டதை அறிவேன்? அளக்க முடிந்ததா?)

தாமரை
தன்நலம் கருதாமல் பிறருக்காக நிறைய செய்தவர்கள் எல்லோருமே பெரும்பாலும் வாழ்வில் கஷ்ட்டப்பட்டுதான் இருந்திருக்கின்றார்கள். ஏன் அப்படி? ஒருவேளை அவர்களை பொறுத்தவரையில் சந்தோஷமாகத்தான் இருந்திருப்பார்களோ? நல்லது செய்வது அவர்களுக்கு கேடா?
(கொசுறு கேள்வி: தாமரை என்றாலே குளிர்ச்சிதான், புகைப்படத்தில் எங்கள் தாமரையின் தோரனை, அரசியல்வாதியா இல்லை கல்யான மாப்பிள்ளையா? ஏன் இப்படி)

தளபதி
மகிழ்சியுடன் வாழும் வழிகள் சொன்ன தளபதியாரே, கோப உணர்ச்சி மனிதனுக்கு தேவையா?. உங்கள் பதிலுக்கு காரணம் விளக்கமாக சொல்லுங்கள்?
(கொசுறு கேள்வி: உங்களை கோபப்பட வைத்த சம்பவம் மற்றும் உங்களின் அந்த கோபத்தின் விளைவை பகிருங்கள்)

பென்ஸ்
எந்த ஒரு விஷயமும் இரண்டு நிலைகளைக்கொண்டது என்பது உலகறிந்த உண்மை. (இரவு-பகல், நேர்மை-கயமை, அறிவாளி முட்டாள்) இரண்டில் ஒன்று ஆரம்பத்தில் அதிகமாக இருக்கும், கால ஓட்டத்தில், நிலைத்து நிற்கவேண்டிய தேவையில் குறைவான பகுதி மெல்ல மேலேறும் ஒரு நிலையில் சமமாகும் பிறகு அதிகமாகும், இதுவும் உலகறிந்த உண்மை. அது போல மனித வாழ்வானது நிறைய இரு நிலைகளை கொண்டிருக்கின்றது, அறிவு, செல்வம், வீரம் இவையெல்லாம் மக்களிடையே சமநிலைக்கு வருமா? இயற்கையின் நியதியானது சமநிலைக்கு வருதல்தான், அது மனிதனிடம் நடக்குமா? ஏன்?
(கொசுறு கேள்வி: கார்களில் மதிப்பானது பென்ஸ்-கார், எங்கள் மன்றத்தின் பென்ஸிடம் உள்ள மதிப்பான விசயங்கள் என்ன?

பாரதி
உங்கள் ஊரிலே எடுத்தபடம் கருத்தம்மா. அப்படி அழகான ஊரா உங்கள் ஊர்?. பென் குழந்தைகளை கொல்லும் வழக்கம் உங்கள் ஊர் கிராமங்களில் உள்ளனவே. பென் குழந்தைகள் வளர்ந்து வாழ்க்கை என்னும் கஷ்டத்தில் அடிபட்டு அலறும் பரிதாபத்தை கன்கொண்டு கான சகியாமல் துடிப்பதைவிட பாசத்தை வளர்க்கும் முன்பே, வலிகளை உணரும் முன்பே, கொன்றுவிடலாம் என்று செய்கிறார்களா? இல்லை திருமனம் மற்றும் செய்முறைக்கு நிறைய செலவாகுமே என்ற சுயநலத்தில் அப்படி செய்கிறார்களா?
(கொசுறு கேள்வி: காலத்தை மீறி கனவுகண்டு தன் வாழ்க்கையை அழித்துக்கொண்டவர், மகா கவி பாரதி, எங்கள் பாரதியின் கனவுகள் என்னென்ன? )

ராஜா
சுடர், விளையாட்டு என்று மன்ற மக்களை கவர்ந்து கலக்கும் ராஜா அவர்களே எப்படி இப்படியெல்லாம் புதிது புதிதாக கண்டுபிடிக்கின்றீர்கள், உங்கள் வாழ்க்கையிலும், தொழிலிலும் இதே மாதிரித்தான் அனைவரையும் கவர்ந்து கலக்குகிறீர்களா? அடுத்த திட்டம் என்ன?
(கொசுறு கேள்வி: டில்லிக்கு ராஜான்னாலும் பள்ளிக்கு பிள்ளைதான் எங்கள் ராஜா தன் குடும்ப உறுப்பிணர்களிடம் எப்படி?)

kamalk
கம்ப்யூட்டர் மென்பொருள் பணிக்கு இவ்வளவு சம்பளம் தருகின்றார்களே சரிதானா? இந்த இள வயதில் இவ்வளவு பணத்தை வைத்துக்கொண்டு கெட்டுதானே போவார்கள்? இல்லையா?
(கொசுறு கேள்வி: கமல் என்றாலே குறும்புதான், எங்கள் மன்ற கமல், இனைய-சாட்டில் செய்த குறும்பான செயலை சொல்லுங்களேன்)

மயூரேசன்
இந்த இள வயதில், கல்லூரி அனுபவங்கள் எப்படி இருக்கின்றன, ஒரு சிலவற்றை பகிருங்களேன். சக மாணவியரைப்பற்றி உங்கள் கருத்து என்ன? சக மானவியிடம் இருக்கும் நட்பானது காதலாக மாற சந்தர்ப்பம் உண்டா? அப்படி காதலாக மாறுவது சரிதானா?
(கொசுறு கேள்வி, மயூரி என்றால் மயில் என்று அர்த்தமாகும், மயூரேசனின் அர்த்தம் என்ன?)

லொள்ளு வாத்தியார்
ஒருமுறை, உங்கள் பதிவில், சொந்த அடையாளங்களுடன் இனையத்தில் உலாவந்து பதிவுகளை மேற்கொண்டதால் மன்ற மறவர்களின் சந்திப்பில் கலந்து கொள்ள இயலாது என்று சொல்லியிருந்தீர்கள். அதில் என்ன பிரச்சினை, நீங்கள் சந்தித்த பிரச்சினைகளை பகிருங்களேன்,
(கொசுறு கேள்வி, இங்கே லொள்ளு பன்னும் வாத்தியார் கல்லூரி மற்றும் வீட்டில் எப்படி?)

ஷீ-நிசி
கவிதைகளுக்காகவே வலைப்பதிவு ஒன்றை வைத்திருக்கின்றீர்களே, கவிதையென்றால் ரெம்ப பிடிக்குமோ? ஒவ்வொரு கவிஞனுக்கும் உந்துதலானது காதலேயன்றி வேறெதும் இறாது. உங்களின் உந்துசக்தி எது?
(கொசுறு கேள்வி-1: உங்கள் கவிகளிளேயே பிரமாதமாக கருதுவது எது வெளியிடுங்களேன்)
(கொசுறு கேள்வி-2: எனது கல்லூரி நாட்களின் காதலி தற்பொழுது வேறொருவரை மனமுடித்து நல்ல முறையில் சந்தோஷமாக குழந்தைகளுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கின்றார், ஒருவேளை என்னை மனமுடித்திருந்தால்கூட இந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்திருப்பள்ளோ தெரியலை. அவளது சந்தோஷத்தினை கான எனக்கு ரெம்பவும் சந்தோஷமாகவும் இருக்கிறது, இந்த சந்தோஷத்தை என்னால் தரமுடியலையே என்ற வருத்தமும் இருக்கிறது. இந்த சந்தோஷ/வருத்தின் வெளிப்பாடை எனக்கு ஒரு கவிதையாக தர முடியுமா?
__________________

ராஜா
02-10-2007, 06:17 PM
அன்பின் அமர்..

80% பதில்கள் வந்துவிட்டன.. அடுத்த கேள்வியாளரை அழைப்போமா..?

ராஜா
03-10-2007, 07:05 AM
மன்ற உறவுகளிடம் மனம் கவரும் வினாக்களைத் தொடுத்த அன்புத்தம்பி சக்திவேலுக்கும், அன்போடு பதிலளித்த பண்பாளர்களுக்கும் பணிவான நன்றிகள்.

ராஜா
03-10-2007, 07:07 AM
அடுத்து எங்கள் அன்புக்குரிய மாம்ஸ் வம்பு ரசிகரை ஆ! பத்து உருவாக்க ஆர்வத்தோடு அழைக்கிறோம்..!

lolluvathiyar
03-10-2007, 07:08 AM
பென்ஸ் அவர்களின் சமநிலை கருத்துகள். மிக அருமை, நன்றாக விளக்கியும் குழப்பியும் உள்ளார்.
அவரின் விளக்கங்களை பார்க்கும் கன்னோட்டம் பொருத்து விளங்கி கொள்வார்கள் அல்லது குழப்பி கொள்வார்கள்.
இயற்கை சமநிலை யை மனிதன் மீருவதால் தான் பேரழிவை சந்திக்க செரிடுகிறது)
பாராட்டுக*ள் பென்ஸ்

ராஜா அடுத்த* கேள்வியாள*ரை தேர்தெடுக்க* நேர*ம் வந்து விட்ட*து என்றே க*ருதுகிறேன்

அன்புரசிகன்
03-10-2007, 07:12 AM
அடுத்து எங்கள் அன்புக்குரிய மாம்ஸ் வம்பு ரசிகரை ஆ! பத்து உருவாக்க ஆர்வத்தோடு அழைக்கிறோம்..!

இதுவர நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு....
திடீரென்று ஏன் இத்தன (கொலவெறி) பாசம்.

ஏம்பா அமரா ஏதாச்சும் தள்ளுபடி இல்லயா...? (10 -> 5) (சும்மா)

இன்று மாலைவரை பொறுத்தருளுக.... முயலுகிறேன்....

அமரன்
03-10-2007, 07:20 AM
வாங்க அன்புசார்... (கழுத்துல மாலையோட..தெரியுதா) வாங்க.. அட்டகாசம் பண்னுங்க.. தீபாவளிக்கு நாளிருக்கு.. தள்ளுபடில்லாம் இப்போ இல்லை..

ஆனந்தத்துடன்,

அன்புரசிகன்
03-10-2007, 07:32 AM
வாங்க அன்புசார்... (கழுத்துல மாலையோட..தெரியுதா) வாங்க.. அட்டகாசம் பண்னுங்க.. தீபாவளிக்கு நாளிருக்கு.. தள்ளுபடில்லாம் இப்போ இல்லை..
ஆனந்தத்துடன்,

அதுசரி... அங்கே ஓரு சைட்டா இருந்து அக்னி சிரிப்பது தெரியுதுது... அடுத்தது நீங்கதான் அக்னி. 10 ஐ ரெடி பண்ணி வையுங்க...

ஓவியன்
03-10-2007, 07:55 AM
வாங்க அன்புசார்... (கழுத்துல மாலையோட..தெரியுதா) வாங்க.. அட்டகாசம் பண்னுங்க.. தீபாவளிக்கு நாளிருக்கு.. தள்ளுபடில்லாம் இப்போ இல்லை..

ஆனந்தத்துடன்,

ஐயோ ஜாலி, ஜாலி!!!

:icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout:

ராஜா
03-10-2007, 07:58 AM
வாங்க அன்புசார்... (கழுத்துல மாலையோட..தெரியுதா) வாங்க.. அட்டகாசம் பண்னுங்க.. தீபாவளிக்கு நாளிருக்கு.. தள்ளுபடில்லாம் இப்போ இல்லை..

ஆனந்தத்துடன்,

ஹி..ஹி..

எங்க ஊர்ல, ஆட்டை கோயிலுக்கு [?] அழைச்சுகிட்டு போகும்போது மாலை போட்டுதான் அழைச்சுட்டுப் போவாங்க..!

க.கமலக்கண்ணன்
03-10-2007, 08:29 AM
ஹி..ஹி..

எங்க ஊர்ல, ஆட்டை கோயிலுக்கு [?] அழைச்சுகிட்டு போகும்போது மாலை போட்டுதான் அழைச்சுட்டுப் போவாங்க..!

வடிவேலு பார்த்திபன் நடித்த வெற்றி கொட்டு படத்தின்

வலுவான நகைசுவைபகுதி நினைவுக்கு

வருகிறது... அன்புரசிகனின் கேள்விகளுக்காக காத்திருக்கிறோம்...

பென்ஸ்
03-10-2007, 08:44 AM
நன்றி பென்ஸ்..

எல்லாமே சமநிலைக்கு வந்துவிட்டால் வாழ்க்கை, சுவையும் அர்த்தமும் அற்றுப் போய்விடும் நிலை உருவாகலாம் என்று அழகாகச் சொல்லியுள்ளீர்கள்..

கொசுறு கேள்விக்கு கார்கள் பற்றிச் சொன்ன தகவல்களும் அருமை..!

ராஜா...

உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி...
நீங்கள் குழம்பாமல் இருக்கிறிர்களா...???
2 காரணம் இருக்கலாம்... முதலாவது.. நீங்கள் சரியாக படிக்கவில்லை அல்லது உங்களிடம் இருந்து நான் என் குழப்பதை தீர்த்து கொள்ளலாம் :)

பென்ஸ்
03-10-2007, 08:50 AM
பென்ஸ் அவர்களின் சமநிலை கருத்துகள். மிக அருமை, நன்றாக விளக்கியும் குழப்பியும் உள்ளார்.
அவரின் விளக்கங்களை பார்க்கும் கன்னோட்டம் பொருத்து விளங்கி கொள்வார்கள் அல்லது குழப்பி கொள்வார்கள்.
இயற்கை சமநிலை யை மனிதன் மீருவதால் தான் பேரழிவை சந்திக்க செரிடுகிறது)
பாராட்டுக*ள் பென்ஸ்

ராஜா அடுத்த* கேள்வியாள*ரை தேர்தெடுக்க* நேர*ம் வந்து விட்ட*து என்றே க*ருதுகிறேன்

நன்றி வாத்தியார்...

உங்களிடம் இருந்து முதல் பாராட்டு வாங்கி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்... நன்றி..

இது ஒரு குழப்பமான சப்ஜேக்ட்... இது பற்றி பலமுறை மொட்டை மாடியில் மல்லாக்க படுத்து நச்சத்திரத்தை எண்ணும் முயற்ச்சியின் போது யோசித்து இருக்கிறேன்... விடை கிடைக்க வில்லை, குழப்பத்தில் இருக்கும் நான் குழப்பதானே முடியும்...

எங்கே செல்லும் இந்த பாதை...!!!
போனால் தானே தெரியும்...

சிவா.ஜி
03-10-2007, 10:47 AM
பென்ஸ் எழுதியிருந்ததை முதலில் படிக்கும்போது அவரே குறிப்பிட்டிருந்ததைப் போல கொஞ்சம் புரிந்தும் கொஞ்சம் குழம்பியும் தெரிந்தது. ஆனால் மீண்டும்,மீண்டும் படித்தபோதுமுக்கால்வாசி புரிந்துவிட்டது.ஆனால் என்ன புரிந்தது என்று தேர்வெல்லாம் எழுத சொல்லக்கூடாது.(எந்த தேர்வுல நாம் புரிஞ்சி படிச்சி எழுதியிருக்கோம்)
ஆனால் மூளையின் ஒரு ஓரத்தில் அதன் உள்கருத்து உட்கார்ந்து விட்டதென்னவோ உண்மை.தேவை வரும்போது மூளை இதை உபயோகப்படுத்திக்கொள்ளும்.

அக்னி
03-10-2007, 11:21 AM
எப்படி நண்பரே... ஆறு கேள்விய ஒரே கேள்வின்னு கேட்குறீங்க..? சரி சரி பதில் சொல்லுறேன்!

நன்றாக, பெண்ணின் மன ஆழம் பற்றி சுழியோடி இருக்கின்றீர்கள்.
பாராட்டுக்கள் சுகந்தப்ரீதன்...
ஆழம் மட்டுமல்ல வலிமயானதும்கூட பெண்மனம்.
இல்லையென்றால்,
பிரசவ வலியின் வேதனையை, மழலை முகம் கண்டு, பாலூட்டும்போது,
மறைத்திட அல்லது மறந்திட முடியுமா?

தாய், சகோதரி, காதலி, மனைவி என்று அனைத்து நிலைகளிலும், அலசியிருக்கின்றீர்கள்.
தவிர, ஆணின் முயலா நிலையே, பெண்ணின் மன ஆழத்தின் வெற்றி என்றும் கூறியுள்ளீர்கள்.
ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், மறுபக்கம் பார்ப்போமானால்,
பெண்மன ஆழமே ஆண்களுக்கு, அறிந்துகொள்ள இயலா நிலையைத் தருகின்றது எனலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக,
உங்கள் அனுபவம்,
பெண் மன ஆழத்தையும், உங்கள் மன சோகத்தையும் அடக்கிக் கொண்ட இரு துளிக் கண்ணீர்...
அடர்த்தியான உங்கள் காதல், என்றால் தவறேயில்லை என எண்ணுகின்றேன்.

வசந்தங்கள் என்றும் உங்களைத் தழுவி நிற்க வாழ்த்துகின்றேன்...

அக்னி
03-10-2007, 11:34 AM
தேவை இல்லை என்றால் தேடல் இல்லை...
தேடல் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை....

அழகான, சத்தியமான வரிகள்.
மனதிலிருத்திக்கொள்ள வேண்டிய தத்துவம்...
நன்றி பென்ஸ் அண்ணா...

மனித இயல்புகளின் சமனிலை, இயற்கைச் சமனிலையோடு, சமாந்தரமாக செல்வது, விந்தைதான்.
மனித செயலின் விளைவுகள், இயற்கை சமனிலையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.
இயற்கை, மனித செயல்களை கட்டுப்படுத்துகின்றது.

இலகுவில் புரிய முடியாத புறநிலைதான்.

பிச்சி
03-10-2007, 12:07 PM
6. பிச்சி
கவிதையை தவிர வேற ஏரியா பக்கமே வரமாட்டீங்க. அதனால உக்களிடம் பொதுவான கேள்வியே கேட்க படுகிறது. ஆண்களை பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன.

எனக்கு மற்றவர்களைப் போல அதிக நேரம் இன்டர் நெட்டில் உலாவ நேரம் கிடைக்காது. அத்னால் கவிதை மட்டும் படித்துவிட்டு சென்றுவிடுவேன்.

இன்க்கே இருப்பவர்கள் எல்லாருமே ஆண்கள் தான். ஒருசில பெண்கள் மட்டுமே இங்கே வருகிறார்கள். என்னைப் பொறுத்தவ்ரையிலும் ஆண்கள் திருமணத்திற்குப் பிறகு மாறிவிடுவார்கள். தனக்குப் பிடித்த பெண்கள் வேறு ஆண்களைப் பார்த்தால் அவர்களுக்குப் பிடிக்காது. என்று சில பொதுவான காரணங்கள் இருக்கிறது. இருந்தாலும் ஆண்களிடம் மென்மை இருக்கிறது. எங்களைவிட பக்குவம் இருக்கிறது. தைரியம் இருக்கிறது. இப்படி சொல்லிட்டே போகலாம்.

அன்புடன்
பிச்சி

அக்னி
03-10-2007, 12:16 PM
எனக்கு மற்றவர்களைப் போல அதிக நேரம் இன்டர் நெட்டில் உலாவ நேரம் கிடைக்காது. அத்னால் கவிதை மட்டும் படித்துவிட்டு சென்றுவிடுவேன்.

இன்க்கே இருப்பவர்கள் எல்லாருமே ஆண்கள் தான். ஒருசில பெண்கள் மட்டுமே இங்கே வருகிறார்கள்.
மன்றத்தில் எப்போதும் சங்கமிக்க காலம் விரைந்து வரட்டும் உங்களிடம்.

பிச்சி... இங்கே இருப்பவர்களில் ஆண்கள் அதிகம் தான்.
ஆனால், குறைவாயிருப்பதற்கே, பெறுமதி அதிகம்.
அதைவிட, இங்க கொஞ்சமா பொண்ணுங்க இருந்தே, அனைவரையும் கலாய்க்கிறாங்கம்மா...
அதில சிக்கி, தவித்து, முக்கி, மூழ்குவதும் ஆண்கள்தானம்மா...
நிலைமை இப்பிடி இருக்கிறது...

தவிர, ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் உள்ள இயல்பே தனக்குரியவர் அடுத்தவரைப் பார்ப்பதை விரும்பாமை.
அது, அன்பின் ஆழமாக இருக்கும்வரை வாழ்வு சிறப்பு...
சந்தேகத்தின் ஆரம்பம் என்றால் கசப்பு வாழ்வு...

பிச்சி
03-10-2007, 12:28 PM

க*லாய்ப்ப*தில் பெண்க*ளுக்கு நிக*ர் ஆண்க*ள் இல்லை. க*ண்ணீர் விடுவ*த*ற்கும் நிக*ர் ஆண்க*ள் இல்லை. எங்க*ளை மென்மையாக* ப*டைத்த*து இறைவ*ன் குற்ற*ம்.

நாங்க* பாக்க*ற*துக்கு கொஞ்ச*ம்தான் ஆனா உங்க*ளை எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுவிடுவோம். அதுதான் ம*க*ளிர் ச*க்தி.

அன்பு
பிச்சி

அக்னி
03-10-2007, 12:32 PM
க*லாய்ப்ப*தில் பெண்க*ளுக்கு நிக*ர் ஆண்க*ள் இல்லை. க*ண்ணீர் விடுவ*த*ற்கும் நிக*ர் ஆண்க*ள் இல்லை. எங்க*ளை மென்மையாக* ப*டைத்த*து இறைவ*ன் குற்ற*ம்.

கலைக்காத வரைக்கும் நன்றி தாய்க்குலமே...

பென்ஸ்
03-10-2007, 12:49 PM
க*லாய்ப்ப*தில் பெண்க*ளுக்கு நிக*ர் ஆண்க*ள் இல்லை. க*ண்ணீர் விடுவ*த*ற்கும் நிக*ர் ஆண்க*ள் இல்லை. எங்க*ளை மென்மையாக* ப*டைத்த*து இறைவ*ன் குற்ற*ம்.

நாங்க* பாக்க*ற*துக்கு கொஞ்ச*ம்தான் ஆனா உங்க*ளை எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுவிடுவோம். அதுதான் ம*க*ளிர் ச*க்தி.

அன்பு
பிச்சி

இந்த இடத்தில் எனக்கு கொஞ்சம் உங்களுடன் ஒத்து போகமுடியலை பிச்சி...
பெண்கள் பொதுவாகவே ஆண்களைவிட உடலாலும், மனதாலும் பலவீனமானவர்கள்....
நீங்கள் ஒரு ஆணின் குணாதிசயத்தை எண்ணைக்கையை வைத்து இடுவோமேயானால் அது கொடுக்கும் நார்மல் கர்வை(Normal curve) எடுத்து கொள்ளுவோம், அதே போல பெண்ணின் அதே குணாதிசயத்திற்கு உரிய நார்மல் கர்வை எடுத்து கொள்ளுவோம், இந்த இரு கர்வையும்(curve) ஒன்றின் மேல் ஒன்றில் வைத்தால் அதன் மீன்(Mean) பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாகவே இருக்கும்...
சின்ன உதாரணம் உயரம், ஈகூ (E.Q)...

இதில் +1 சிக்மாவுக்கு(sigma) மேலே உள்ள ஆண்களை எல்லாம் நான் மாச்சிஸ்மோவாக(Machismo) பார்க்கிறென்... இவர்கள் அனைவருக்கும் தலைவராக இருக்கவே விரும்புவர், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும்...

அன்புரசிகன்
03-10-2007, 01:32 PM

எப்பவிலிருந்து இப்படியெல்லாம்,???? புதுஸ்ஸா இல்லா இருக்கு...........

lolluvathiyar
03-10-2007, 01:32 PM
பிச்சி லேட்டா வந்தாலும் சிரத்தையா பார்த்து பதில் சொல்லி லேட்டஸ்டா இருக்கீங்க.

6. பிச்சி
இருந்தாலும் ஆண்களிடம் மென்மை இருக்கிறது.

இந்த ஒரு வரிபோதும் நீங்கள் ஆண்களை நன்றாக புரிந்து வைத்திருகிறீர்கள் என்று காட்ட

கலாய்ப்பதில் பெண்களுக்கு நிகர் ஆண்கள் இல்லை. கண்ணீர் விடுவதற்கும் நிகர் ஆண்கள் இல்லை.

ரொம்ப டச் பண்ணீட்டீங்களே, பெண் பெயரில் நிறைய பேர் வரலாம்
நீங்கள் பெண் என்பதை தெரிந்து கொன்டேன், இந்த வரியாலே

அடுத்து என் அருமை தம்பி அன்புரசிகரே சீக்கிரம் வாருங்கள் கேள்விகளோடு

ராஜா
03-10-2007, 01:40 PM
எப்பவிலிருந்து இப்படியெல்லாம்,???? புதுஸ்ஸா இல்லா இருக்கு...........

மாம்ஸ்.. இந்தப் பஞ்சாயத்து எல்லாம் அப்புறம்..

முத்லில் கேள்வியைப் போடுங்க..!

மனோஜ்
03-10-2007, 01:41 PM
அனைவரது பதில்களும் அருமை
அடுத்த கேள்வி தாபா அன்பு

பூமகள்
03-10-2007, 02:05 PM
பெண் மனதின் ஆழத்தை அளவிடவே முடியாது என்று சொல்லுகிறார்களே, அப்படியா?
ஆணின் மனதைவிட பெண்ணின் மனது ஆழமானதுதான் அதை யாராலும் மறுக்க முடியாது.ஆனால் அதை அளக்க முடியாமல் போனதற்க்கு காரணம் கடலையளக்க கைத்தடியை கொண்டுப்போன நம்மவர்களைதான் சாரும். தங்களோட இயலாமையை மறைக்க ஆண்கள் அத்தனை பேரும்(என்னையும் சேர்த்துதான்) பெண் மனதின் ஆழத்தை அளக்க முடியாதுன்னு கதையை அப்படியே திருப்பி விட்டுட்டாங்க (குப்புற வீழ்ந்தாலும் மீசையில மண்ணு ஒட்டுலன்ன கதைதான்)!

எப்படியோ அழகாய் பதிலில் சொல்லி எங்க கிட்டயிருந்து எஸ்கேப் ஆயிட்டீங்க... :p :cool: வாழ்த்துகள் ப்ரீதன் அண்ணா.:icon_b:

அப்படியென்றால், அது இயற்கையாகவே யாராலும் அளவிடமுடியாததா?
அப்படிதான் தோன்றுகிறது நண்பரே..!

காட்டிலிருந்து களைப்போடு என் தாய் வீட்டுக்கு வரும் வேளையில்தான் பள்ளிமுடித்து பட்டாம்பூச்சியாய் நானும் என் சகோதரியும் வீட்டுக்கு போவோம்.வீட்டிலிருக்கும் கொஞ்ச உணவையும் எங்களுக்கு இட்டுவிட்டு தனக்கு பசியில்லை என்றுகூறி பட்டினியோடு அடுத்தவேளை உணவுக்கு அடுப்பெரித்த என் அன்னையை நினைக்கையில் ஒவ்வொரு தாயின் அன்பையும் என்னால் உணரமுடிகிறது ஆனால் அதன் ஆழம் இவ்வளவுதான் என்று உரைக்கமுடியவில்லை!

வீட்டில் யாராவது ஒருவர்தான் படிக்கமுடியும் என்ற நிலை வந்தபோது சுயநலத்தால் என் பெற்றோர் என்னை தேர்ந்தெடுக்க சரி தம்பி படிக்கட்டும் என்று சொல்லி தங்கள் எதிர்காலத்தை பற்றி சிறிதும் சிந்திக்காமல் என்னைவிட நன்றாக படித்த என்னிரு மூத்த சகோதரிகளும் படிப்பை பாதியிலேயே நிறுத்திகொண்டு தங்களின் வாழ்வை கிராமம் என்னும் சிறு வட்டத்திற்க்குள்ளேயே அமைத்து கொண்டதை நினைக்கையில் ஒவ்வொரு சகோதரியும் சகோதரனுக்கு செய்யும் தியாகத்தையும் அதன்பின் இருக்கும் வலியையும் ஆழத்தையும் என்னால் கண்ணீருடன் உணரமுடிகிறது ஆனால் அதன் எல்லை இவ்வளவுதான் என்று என்னால் வரையறுக்க முடியவில்லை!

தோள் சாய்ந்து தூங்கும் தோழனின் தூக்கம் கலைந்துவிடக் கூடாதென்று தன் தோள்வலியையும் தாங்கிகொள்ளும் தோழிகளை காண்கையில் அவர்களின் நட்பின் ஆழத்தை உணரமுடிகிறது ஆனால் அதன் ஆழம் இத்தனை தூரம்தான் என்று என்னால் உறுதியாக சொல்லமுடியவில்லை!

அசத்தல் அண்ணா. மிகச் சரியாக அளந்திருக்கிறீர்கள் ஆழம் இது தான் என்று சொல்ல முடியாத விசயங்களை..!! :icon_rollout:மனம் நிறைந்தது உங்களின் பதில் பார்த்து..!! வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்..!!:icon_b:

இல்லை பெண்தான் வலிந்து மறைக்கின்றாளா?. அப்படியென்றால் அதன் காரணம் என்ன?
பெண் எங்கேயும் எதையும் வலிந்து மறைப்பதில்லை வலியோடுதான் மறைக்கிறாள் அதற்கு காரணம் இங்கே நமக்கிருக்கும் சுதந்திரம் அவர்களுக்கு இல்லை என்பதுதான்.

மிகச் சரி. ஆசைகள் ஏதேனும் ஒரு காரணத்திற்காய் மறைத்தே வாழ வேண்டிய நிர்பந்தத்தில் தான் இன்று பல பெண்கள் இருக்கிறார்கள். காரணம், ஆண்கள் எது செய்தாலும் அவன் ஆம்பிளப் பிள்ளை அப்படித்தான் இருப்பான்...என்ற சமூகக் கண்ணோட்டம். பெண் பிள்ளைகள் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற வரைமுறை.. அது கடந்து சாதிக்கத் துடிக்கும் பெண்ணிற்கு அடங்காபிடாறி என்ற அவப்பெயர்...!!
மிகச் சரியான பதில்கள் ப்ரீதன் அண்ணா.:icon_b:
வாழ்த்துகள்..!!

தளபதி
03-10-2007, 03:06 PM
ஆ! பத்து.. கேள்வியாளர் : கூர்மையும் வலுவும் கொண்ட சக்தி வேல்..!
----------------------------------------------------------------------------------
தளபதி
மகிழ்சியுடன் வாழும் வழிகள் சொன்ன தளபதியாரே, கோப உணர்ச்சி மனிதனுக்கு தேவையா?. உங்கள் பதிலுக்கு காரணம் விளக்கமாக சொல்லுங்கள்?
(கொசுறு கேள்வி: உங்களை கோபப்பட வைத்த சம்பவம் மற்றும் உங்களின் அந்த கோபத்தின் விளைவை பகிருங்கள்)

[/COLOR][/SIZE]
__________________

நன்றி. சக்திவேல். வேலை பழுவின் காரணமாக என்னால் உடன் பதில் தரமுடியாமைக்கு வருந்துகிறேன்.
இந்த கேள்வியை, மிக முக்கியமான கேள்வியாக கருதுகிறேன். கோப உணர்ச்சி தேவையா?? என்ற கேள்விக்கு ஆம், இல்லை என்று பதில் வேண்டுமானால், முதலில் "கோபம் என்றால் என்ன?" என்று நாம் அறிய வேண்டும். கோபம் என்பது மனிதனுக்கு உள்ள ஒரு சாதாரண உணர்ச்சி. கடவுள் நிறைய யோசித்து நமக்கு அருளிய உணர்ச்சிகளில் இதுவும் ஒன்று. எனவே கோப உணர்ச்சி தேவையில்லை என்று ஒதுக்கிவைக்க முடியாது. மனிதனுக்கு கோப உணர்ச்சி தேவை. கோபப்படுவது கெட்டவிசயமில்லை.

ஆனால் கோபங்கள் மூலம் நிறைய சமயங்களில் கெட்டதை விசயங்கள் அதிகமாக வரவேற்கப்படுவதால் மனிதனிடம் இந்த கேள்வி வருகிறது. கோபம் எப்போது வருகிறது?????.
நாம் எதிர்பார்த்தது கிடைக்காத போது, நடக்காத போது வருகிறது.
நமது இயலாமை வெடிக்கும் போது வருகிறது.

கோபத்தை நாம் சரியான முறையில் வெளிபடுத்தாதபோது அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி கோபம் என்பதை மிக கொடுமையான உணர்ச்சியாக நமக்கு தோன்ற செய்துவிடுகிறது. இந்த கோபத்தையே சரியான முறையில் பயன்படுத்தினால் நிச்சயம் நல்ல பயன்கள் கிடைக்கும். தனது நாட்டுக்கு பசி பட்டினிகளைப் போக்க காமதேனு பசு கிடைக்கவில்லை என்று வசிஷ்டர் மேல் கோபத்தில் விசுவாமித்திரர் உருவானார். அவரே தான் அனுப்பிய மனிதனுக்கு சொர்க்கத்தில் இடமில்லை என்று திரிசங்கு சொர்க்கம் உருவாக்கினார். தன்னை இளக்காரமாக ஏதோ கூறினார் என்று யுவராஜ்சிங் 6 சிக்ஸர் அடித்தது இல்லால் 12 பந்தில் 50 ஓட்டங்கள் குவித்தார். கோபம் நல்லது தான் அதை சரியான முறையில் வெளிப்படுத்தும் போது.

ஆனால் நாம் பயப்படும் கோபம் வேறுவிதமானது, சிறிய விசங்களுக்கு பெரிய அளவில் உணர்ச்சி வசப்பட்டு, கொலை, பழி, வெட்டு, நாசங்கள், அடித்தல், கெட்டவார்த்தைகள் பிரயோகம் என்று எதிர்மறையாக கோபத்தை வெளிபடுத்தி நம்மையும் காயப்படுத்தி, மற்றவரையும் காயப்படுத்தி, உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு அழியும் போது கோபம் வேண்டாம் தேவையில்லை என்று உணரப்படுகிறது. ஆனால் நாம் கோபத்தை எவ்வாறு வெளிபடுத்தவேண்டும் என்று புரிந்து கொண்டுவிட்டோமேயானால், கோபம் ஒரு சாதாணர உணர்ச்சியாக மாறி நல்லதைக் கொடுக்கும்.

நான் ஒரு சின்ன கதை சொல்ல விரும்புகிறேன்.

ஒரு குழந்தையில்லாத தம்பதியருக்கும் 12 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த அன்பான தம்பதியருக்கு அந்த குழந்தை மிகப் பெரிய வரமாக போற்றி வளர்த்து வந்தார்கள். அந்த குழந்தை 2 வயது ஆனது. ஒருநாள் காலை, அந்த கணவன் திறந்திருந்த மருந்து புட்டியைப் பார்த்தான். அவன் அலுவலம் செல்லும் அவசரத்தில் இருந்ததால் மனைவியிடம் அந்த மருந்து புட்டியை மூடி பாதுகாப்பாக அலமாரியில் வைக்கச்சொன்னான். மனைவியும் சரியென்றாள். ஆனால், சமயலறையில் வேலை என சென்று இதை செய்ய மறந்தே போனாள்.

அங்கே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, அந்த மருந்து பாட்டிலை எடுத்து அனைத்தையும் குடித்து விட்டது. அது மிக விஷத்தன்மை வாய்ந்த மருந்து, அது பெரியவர்களுக்கே மிகச் சிறிதளவே கொடுக்க வேண்டியது. கொடுமை!! அந்த குழந்தை மயங்கிவிழ, அன்னை அலறி அடித்துக் கொண்டு ஆஸ்பத்திரி எடுத்துச் செல்ல, வழியிலேயே குழந்தை இறந்துவிட்டது.

அந்த தாய், 12 வருடங்கள் குழந்தையில்லாமல் தவித்து பெற்று எடுத்த அந்த குழந்தை இறந்ததாலும், காலையில் கணவன் சொல்லியும் தமது மறதியால் நடந்துவிட்ட கொடுமையால் கலங்கி போனாள். விக்கித்து கிடந்தாள். அவள் பயங்கரமான மிக கொடுமையான இந்த நிலையில் எப்படி தனது கணவனை பார்ப்பது என்று தெரியாமல் அடைத்து போய் நின்றாள். இந்த விசயம் கேள்விப்பட்டு கணவன் ஆஸ்பத்திரி அலறிக் கொண்டு வந்தான், இறந்த அந்த குழந்தையைக் கண்டான். கண்ணீர் விட்டான். கண்ணீரும் கம்பலையுமாய் நின்ற தன் மனைவியைப் பார்த்தான், அவளருகில் சென்று 4 வார்த்தைகள் சொன்னான்.

மனிதன் மிக கடுமையாக கோபப்படக்கூடிய அந்த நேரத்தில் என்ன சொல்லியிருக்கமுடியும்.???

அந்த கணவன் தன் மனைவியிடம் சென்று அவளைத் தன் மார்பில் சாய்த்துக் கொண்டு, "நான் உன்னுடன் எல்லாவற்றிலும் துணையிருப்பேன்", என்றான்.

யாரும் எதிர்பார்க்க முடியாத ஒரு முதிர்ச்சியான பதிலை அந்த கணவன் சொன்னான். குழந்தை இறந்துவிட்டது. அதை திரும்பவும் கொண்டுவரமுடியாது. இதில் அந்த அன்னையின் மேல் மட்டும் குற்றம் கண்டுபிடிப்பது தவறு. அந்த கணவன் கூட அந்த மருந்து பாட்டிலை எடுத்து அதை மூடி அலமாரியில் வைத்திருக்கலாம். யாரையும் இந்த செயலுக்கு முழுப்பொறுப்பு என்று சொல்லிவிடமுடியாது. அவளுக்கும் மிகக் கொடுமையான இழப்பு இருக்கிறது. இங்கு கோபம் எதை சாதிக்கமுடியும். அந்த மனைவிக்கு தேவை அந்த சமயத்தில் பரிதாபமும் அரவணைப்பும் தான். அதைத்தான் அந்த கணவன் தன் மனைவிக்குக் கொடுத்தான்.

நான் கோபப்பட்ட சம்பவம், ம்ம்ம்ம்ம்ம்!!!

நான் வாரத்தில் ஒருநாள் காலையிலேர்ந்து மாலை வரை சாப்பிடாமல் சாப்பிடாமல் இருப்பதை வழக்கமாக இருக்கத் தொடங்கினேன். அப்போது, என்னவள் என்னிடம் இரவு விரதம் முடித்து சாப்பிட என்ன வேண்டும் என்றாள். நான் சாப்பிடவும் அது எளிதில் ஜீரணமாக இருக்கும்படியுமான சாப்பாடை செய்யச்சொல்லி விட்டு சென்றேன். இரவு அலுவலகத்திலிருந்து வந்ததும் விரதம் முடிக்க பழச்சாறு கேட்க, என்னவள், பழச்சாறு செய்யவில்லை, எளிதாக ஜீரணமாக* இட்லி செய்திருப்பதாக கூற, எங்கிருந்தோ வந்தது, மிகக் கொடுமையான கோபம். விரதம் முடிக்க பழச்சாறு தரவேண்டும் என்ற அறிவு இல்லையா?? என்று கத்த, அவள், "நான்தான் கேட்டேனே!! என்ன சாப்பாடு செய்யட்டும் என்று, நீங்கள் சொல்லியிருந்தால் நான் செய்திருப்பேனே!!" என்று சொல்ல, நான் இன்னும் கோபமாகி, "எல்லாம் நான் சொல்லவேண்டுமா?? உனக்கு என்று புத்திகிடையாதா?" என்றவுடன், என்னவள் படாரென்று கண்ணீருடன் விலகினாள். "ஏன் என்னுள் இவ்வளவு கோபம்" தெரியவில்லை. சாப்பிட்டதும் ஏதும் பேசாமல் படுக்கைக்குச் சென்று தூங்கிவிட்டேன். தூங்கும்முன் என்னுள் எழுந்த எண்ணம் "என்னடா இது, இந்த நாள் நல்லவே இல்லை"

நான் காலையில் 4.30 மணிக்கு எழுந்திருப்பேன். எனக்கு சாப்பாடு செய்து கொடுப்பதற்காக* என்னவள் 3.30 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவாள். எனக்கு 4.30க்கு அலாரம் அடித்ததும் தான் நான் விழித்தேன். அலாரமும் என்னவள் தான் வைத்திருக்கிறாள். எழுந்ததும் நேற்று இரவு நடந்து கொண்டது மிகவும் கேவலமாக எனக்குப் பட்டது. நான் குற்றவுணர்வுடன் சமயலறை சென்றேன். என்னவள் சமயலைறையில் பம்பர*மாக சுற்றிக்கொண்டிருந்தாள். நான் வந்ததும் அவள் வேகம் மெல்ல குறைந்தது, நான், "இனிமேல் விரதம் முடிக்க எனக்கு பழச்சாறு எதுவும் வேண்டாம்" என்றேன். சட்டென்று திரும்பி சிரித்துக் கொண்டே முறைத்தாள். "இனிமேல் நீங்கள் விரதம் முடிக்க பழசாறு ரெடியாக இருக்கும், ஓகேயா!! சந்தோசமாக கிளம்புங்கள்" என்றாள். அந்த நாள் சந்தோசமாக விடிந்தது.
அந்த முந்தின இரவில் நான் பட்ட கோபம் தேவையில்லாதது.

பென்ஸ்
03-10-2007, 03:28 PM
தளபதி...

என் அலைவரிசைகளை அப்படியே , ஆனால் இன்னும் அழகாக வார்த்தைகளாய் வடித்து இருக்கிறிர்கள்...

பார்த்து அசந்து விட்டேன்... பின்ன நான் நினைப்பதை நீங்கள் எழுதினால் பின்னர் எவ்வாறு இருக்கும்... கலக்கல்... அருமை... ஆகா...
மிக நேர்த்தியான, தெளிவான சிந்தனை. (என்னை போல இருக்கிறது என்பதால் அல்ல... ஹி ஹீ....)

வாழ்த்துகள்...

தாமரை
03-10-2007, 03:28 PM
தாமரை
தன்நலம் கருதாமல் பிறருக்காக நிறைய செய்தவர்கள் எல்லோருமே பெரும்பாலும் வாழ்வில் கஷ்ட்டப்பட்டுதான் இருந்திருக்கின்றார்கள். ஏன் அப்படி? ஒருவேளை அவர்களை பொறுத்தவரையில் சந்தோஷமாகத்தான் இருந்திருப்பார்களோ? நல்லது செய்வது அவர்களுக்கு கேடா?
(கொசுறு கேள்வி: தாமரை என்றாலே குளிர்ச்சிதான், புகைப்படத்தில் எங்கள் தாமரையின் தோரனை, அரசியல்வாதியா இல்லை கல்யான மாப்பிள்ளையா? ஏன் இப்படி)

இப்படி மொட்டையாச் சொன்னா எப்படி.. நம்ம பென்ஸூ சுகமா இல்லியா? இல்லை நல்லவர் இல்லியா?

அவர்கள் கஷ்டப்படுகிறார்களா இல்லை தம்மை வருத்திக் கொள்கிறார்களா?? கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால் தெரியும்..

நல்லவர்கள் எல்லோருமே தனிப்பட்டு அடையாளம் காணப்படுவதில்லை. அந்த நல்லவர்களில் சாதனைகளைப் படைப்போரே அடையாளம் காணப்படுகிறார். சோதனை இல்லாமல் சாதனை இல்லை. எனவே நல்லவர்கள் அனைவரும் கஷ்டப்படுவது போல ஒரு மாயை இருக்கிறது.

எத்தனையோ நல்லவர்கள் எந்த வித விளம்பரங்களும் இன்றி சந்தோஷ வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளோர் இல்லை. இவருக்கு என்ன சோதனை வந்தது.. வாய்ப்பு கிடைத்தால் இவரும் கெட்டவர்தான் என்ற கண்ணோட்டத்தில் பலரைச் சந்தேகக் கண்ணோடு வைத்திருக்கிறோம்.

ஒருவரை நல்லவர் என்று நம்ப அவர் சோதனைகளைச் சந்தித்து தடுமாறாமல் இருக்க வேண்டும் என நிர்ணயம் செய்து கொண்டு விட்டு நாமே நல்லவர்கள் கஷ்டப்படுவார்கள் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி விட்டதாக ஒரு நொடியேனும் நாம் சிந்தித்திருக்கிறோமா?

நல்லவராய் இருப்பதற்கும் கஷ்டப்படுவதற்கும் சம்பந்தமே இல்லை. சிலர் நல்லவர்களாய் இருக்க கஷ்டப்படுகின்றனர்.. அவ்வளவுதான்.

நல்லவர்களாக இருக்கும் பலருக்கு மற்றவர்களால் நடக்கும் தீமையை பொறுத்துக் கொள்ள இயல்வதில்லை. எனவே அதை மாற்ற முயல்கிறார். ஒரு நல்லவரை கெட்டவராக்கவோ நல்லவரைக் கெட்டவராக்கவோ கஷ்டப் பட்டுதான் ஆகவேண்டும். ஏனெனில் ஒரு மனிதனை அவனது இயல்பான நம்பிக்கையிலிருந்து மாற்ற முயல்கிறோம். ஆனால் ஒவ்வொரு முறை சிறு தடங்கல் ஏற்படும்பொழுதெல்லாம் அந்தப் பழைய இயல்பு நிலை திரும்பி விடுகிறது.

ஒவ்வொரு மனிதன் வளரும் பொழுது அவனுக்கென்று ஒரு இயல்பான குணாதிசயம் அவனது சூழ்நிலை வளர்ப்பு, அவனுக்கு கிடைக்கும் செய்திகள் தகவல்கள் அவனது உணர்வுகள் இதைப் பொறுத்து ஒரு இயல்பு ஏற்படுகிறது. அவரவர் இயல்பு அவரவருக்கு சௌகரியமாய் இருக்கிறது. இதில் சிலரின் இயல்புகள் மற்றவர்களைப் பாதிப்பது இல்லை. இவர்கள் சாதாரண மனிதர்களாக மக்கள் அடையாளம் காண்கின்றனர். சிலரின் இயல்பு மற்றவர்களைப் துன்புறுத்துகிறது.. இவர்களை கெட்டவர்கள் என்கிறார்கள்.. சிலரின் இயல்பு மற்றவர்களை மகிழ வைக்கிறது.. இவர்களை நல்லவர்கள் என்கிறார்கள்.. இதில் நல்லவர்களாக அறியப்படுபவர்கள்ளும் கெட்டவர்களாக அறியப் படுபவர்கள்ளும் மற்றவர்களின் இயல்பை மாற்ற முனைகிறார்கள். அதற்காக அவர்கள் செலவிடும் உழைப்பை நாம் கஷ்டம் என்கிறோம்.

ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கினால் மக்களின் இயற்கையான சுபாவம் மாறும். மன்றத்தின் மூலம் நான் செய்ய எண்ணுவதும் அதுதான். சூழ்நிலைக்கேற்ற்ப இயல்பாய் மனம் மாறுபவர்கள் போதும், யாரையும் கட்டாயமாய் இதைச் செய் இதைச் செய்யாதே என்றுச் சொல்லுதல் பலமுறை எதிர்மறை வினைகளையே உருவாக்கும். அதைக் கட்டுப்படுத்த கஷ்டப் படத்தான் வேண்டும்.

படத்தில் உள்ள தோரணை கல்யாண மாப்பிள்ளை தான். அது என் திருமண உடை. கலாச்சார உடையணிதல் நாள் கொண்டாடிய போது அலுவலகத்திற்கு அணிந்து வந்தது.

அரசியலுக்காக ஒரு சீருடையாய் அதை நான் கருதுவதில்லை.

பணிப்பளு அதிகம் இருப்பதால் மன்றம் வர இயலவில்லை. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

பூமகள்
03-10-2007, 03:53 PM
அற்புதமான விளக்கம் தாமரை அண்ணா. தாமதமாக வந்தாலும்.. அசத்தல் பதிலில் அசத்திட்டீங்க...!!

நல்லவராய் இருப்பதற்கும் கஷ்டப்படுவதற்கும் சம்பந்தமே இல்லை. சிலர் நல்லவர்களாய் இருக்க கஷ்டப்படுகின்றனர்.. அவ்வளவுதான்.
ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு.
"We Find Comfort among those who agree with us, growth among those who don't !!"
உங்களின் பதில் அதை நினைவுபடுத்தியது. வாழ்த்துகள் அண்ணா.

பென்ஸ்
03-10-2007, 04:08 PM
இப்படி மொட்டையாச் சொன்னா எப்படி.. நம்ம பென்ஸூ சுகமா இல்லியா? இல்லை நல்லவர் இல்லியா?
.

என்னை நல்லவன்னு சொல்லுற சில நல்லவங்களுல நீரும் ஒருத்தர்... இன்னொருத்தன் அனிருத்...
நீர் என்னை நல்லவன் என்று சொல்லுகிறீர்...
அனிருத் என்னை "ரொம்ம்ம்ம்ப நல்லவன்" என்று வடிவேல் ஸ்டைலில் சொல்லுவான்.

நெருங்கி பழகியவர்களுக்கு மட்டும்தானே மனிதனின் ஒரு பக்கமாவது முழுமையாக தெரியும்... நன்றி தாமரை....

நேரமின்மை.... உங்கள் சிறிய பதிலை பார்க்கும் போதே புரிந்தது... ஆனாலும் தியரிகள் , கட்டுரை போல் பக்கங்கள் நிரப்பாது....

ஒவ்வொரு மனிதன் வளரும் பொழுது அவனுக்கென்று ஒரு இயல்பான குணாதிசயம் அவனது சூழ்நிலை வளர்ப்பு, அவனுக்கு கிடைக்கும் செய்திகள் தகவல்கள் அவனது உணர்வுகள் இதைப் பொறுத்து ஒரு இயல்பு ஏற்படுகிறது. அவரவர் இயல்பு அவரவருக்கு சௌகரியமாய் இருக்கிறது. இதில் சிலரின் இயல்புகள் மற்றவர்களைப் பாதிப்பது இல்லை. இவர்கள் சாதாரண மனிதர்களாக மக்கள் அடையாளம் காண்கின்றனர். சிலரின் இயல்பு மற்றவர்களைப் துன்புறுத்துகிறது.. இவர்களை கெட்டவர்கள் என்கிறார்கள்.. சிலரின் இயல்பு மற்றவர்களை மகிழ வைக்கிறது.. இவர்களை நல்லவர்கள் என்கிறார்கள்.. இதில் நல்லவர்களாக அறியப்படுபவர்கள்ளும் கெட்டவர்களாக அறியப் படுபவர்கள்ளும் மற்றவர்களின் இயல்பை மாற்ற முனைகிறார்கள். அதற்காக அவர்கள் செலவிடும் உழைப்பை நாம் கஷ்டம் என்கிறோம்.
.

தற்காலிக சிக்மன்ட் பிரட் என்று சொல்லுவேன் உங்களை இதை வாசித்து விட்டு... மிக நேர்த்தியான உள ஆய்வு... வாழ்த்துகள் தாமரை...

அன்புரசிகன்
03-10-2007, 07:28 PM
என்னை இந்த திரிக்கு கேள்விகேட்க வைத்த உள்ளங்களுக்கு ரொம்ப நன்றி கூறி இதோ சில கேள்விகள்.... கேள்விகள் குழந்தைப்பிள்ளைத்தனமாக :icon_rollout: இருக்கும் பட்சத்தில் நீங்கள் கேள்விகளை தவிர்க்கலாம். அதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. தவிர கேள்விகளை மாற்றியமைக்கும் உரிமையையும் ராஜா அவர்களுக்கு கொடுக்கிறேன்.

<<<>>>

அண்ணன் மணியா: உங்களை நான் சென்னையில் சந்தித்தபோது நான் உங்களுக்காக ஊகித்த உருவமும் (உங்கள் குரலின் அடிப்படையில்) நேரில் கண்ட உருவத்திற்கும் நிறையவே வேறுபாடு இருந்தது. வாழ்க்கையில் இவ்வாறு ஊகிப்பது சரியா தவறா? நீங்கள் இவ்வாறு ஊகித்து நடந்த நகைச்சுவைச்சம்பவம் ஒன்று சொல்லுங்களேன்.

அண்ணன் அறிஞர்: ஏதோ ஒரு திரியில் உங்களுக்கு ஓரளவு நிர்வகிக்கும் திறமை உண்டு என்று பார்த்த ஞாபகம். உண்மைதான். ஆனால் பத்து வயது சிறுவர்கள் நூறு பேரை நிர்வகிப்பதா அல்லது இருபது வயது கொண்ட பத்துப்பேரை நிர்வகிப்பதா இலகுவானது? இரண்டிலும் நீங்கள் காணும் மாபெரும் சிக்கல் ஒன்றொன்று கூறுங்களேன்.

மாப்ஸ் ரவுசு புகழ் ராஜா: நகைச்சுவைப்படைப்புகளிலும் உணர்ச்சிபூர்வமான கதைகளிலும் உங்களுக்கு நிகர் நீங்களே தான். இந்தியா வல்லரசாக தேவையான விடையங்கள் இரண்டு தாருங்கள். ஒன்று நகைச்சுவையாகவும் மற்றது உணர்ச்சிபூர்வமாகவும் இருக்கவேண்டும் மாப்பு.

அண்ணன் மன்மதன்: மாற்றம் என்பது மாற்றமில்லாதது. தகவல் தொழில் நுட்பம் மூலம் மட்டும் தான் காதல் என்கிற நிலை வரும் என்று நீங்கள் கருதுகிறீர்களா இல்லையா? ஏன்?

மலர்: உலகில் பெண்களுக்கு ஆண்கள் 7:1 என்ற விகிதத்தில் உள்ளதென்கிறார்கள். நம் கலாச்சாரத்தில் சீதனம் என்ற பேய் வர இது ஒருகாரணம் இருக்கும் என கருதுகிறீர்களா இல்லையா? காரணம் என்ன? (நம்கலாச்சாரத்தை மட்டும் கருத்தில் கொள்ளவும்)

அண்ணன் பென்ஸ்: தமிழை தமிழில் கற்கவேண்டும். ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் கற்கவேண்டும். இந்தக்கூற்று சரியா தவறா? ஏன்?

லி-மோகன்: தற்காலத்தில் ஊட்டச்சத்து அற்ற உணவுப்பதார்த்தங்கள் (unhelthy foods) நம் வாழ்வில் பல காண்கிறோம்; உண்கிறோம். இதனால் பல பிரச்சனைகள் வருகிறது. பல நோய்கள் வருகிறது. இதை தடுக்க நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று கருதுகிறீர்கள். ஒரு நாட்டின் வளர்ச்சியை இது எவ்வாறு பாதிக்கிறது.

அக்னி: ஒரு பூ உதிர்ந்தால் இன்னொரு பூ.... இன்னொரு பூ பூத்தாலும் முதலில் பூத்த பூ வருவதில்லை என்ற மையக்கருவை காதலுடன் ஒப்பிட்டு பல திரைப்படங்கள் வந்துள்ளன. இதுபற்றி உங்களின் எண்ணம் யாதோ?

சிவாஜி: நீங்கள் அடிக்கடி பொருட்களை தொலைத்து மனைவியிடம் திட்டுவாங்கிய நிகழ்வுகள் இருந்திருக்கும். கேள்வி இதுதான். ஒருவர் இவ்வாறு பொருட்க்களை அடிக்கடி தொலைப்பதற்கு பல காரணங்கள் இருக்கும். அதில் சில சொல்லுங்களேன்.

இனியவள்: யாரும் தொலைத்த பொருட்க்களை நாம் கண்டெடுக்கும் பட்சத்தில் அதை உரியவரிடம் சேர்க்கும் எண்ணம் நம்மில் பலரிடம் இல்லையே.... எதனால்? சில காரணங்கள் சொல்லுங்கோ....

நன்றி

அமரன்
03-10-2007, 07:59 PM
நான் போட்ட மாலையை பத்துபேருக்கு பிச்சுப் போட்ட புத்திசாலி,கில்லாடி,மகாராசா....ரொம்ப நன்றி..
பதில்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.

அன்புரசிகனைபோல
நமட்டு சிரிப்புடன்

அன்புரசிகன்
03-10-2007, 08:04 PM
நான் போட்ட மாலையை பத்துபேருக்கு பிச்சுப் போட்ட புத்திசாலி,கில்லாடி,மகாராசா....ரொம்ப நன்றி..
பதில்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.

அப்போ நான் பிச்சுப்போட்டன் என்கிறீங்க.....

அமரன்
03-10-2007, 08:18 PM
பிச்சிட்டீங்கல்ல....
அப்படியே ஒரு மடலையும் பத்து பேருக்கு பிச்சு அனுப்பிடுங்கப்பு..இல்லைன்னா பிச்சுப்புடுவேன் பிச்சு.

மனோஜ்
03-10-2007, 08:21 PM
அன்பு அசத்தல் கோள்வி பார்போம் உறவுகளின் பதிகள்

அன்புரசிகன்
03-10-2007, 08:28 PM
பிச்சிட்டீங்கல்ல....
அப்படியே ஒரு மடலையும் பத்து பேருக்கு பிச்சு அனுப்பிடுங்கப்பு..இல்லைன்னா பிச்சுப்புடுவேன் பிச்சு.
:traurig001::traurig001::traurig001:
அனுப்புறேன்.:icon_rollout:

அன்பு அசத்தல் கோள்வி பார்போம் உறவுகளின் பதிகள்
சும்மா வுடாதீங்க பீலா... நம்மளப்பத்தி நமக்குத்தெரியாதா?

அறிஞர்
03-10-2007, 10:29 PM
அண்ணன் அறிஞர்: ஏதோ ஒரு திரியில் உங்களுக்கு ஓரளவு நிர்வகிக்கும் திறமை உண்டு என்று பார்த்த ஞாபகம். உண்மைதான். ஆனால் பத்து வயது சிறுவர்கள் நூறு பேரை நிர்வகிப்பதா அல்லது இருபது வயது கொண்ட பத்துப்பேரை நிர்வகிப்பதா இலகுவானது? இரண்டிலும் நீங்கள் காணும் மாபெரும் சிக்கல் ஒன்றொன்று கூறுங்களேன்.

நிர்வகிக்கும் திறமை என நம்ம மக்களா.. கிளப்பி விட்டது.. என்னை பொறுத்தவரை எல்லாருக்குமே திறமை இருப்பதாக நம்புகிறேன்.

நிர்வாகம் செய்யும்பொழுது, கீழ் இருப்பவர்களுக்கு நம் மீது நம்பிக்கை வரவழைக்கவேண்டும். இவரால் நமக்கு எந்த பாதிப்பும் வராது. இவர் செய்யும் செயல்கள் நன்மைக்காக தான் இருக்கும் என்ற அவர்கள் நம்ப வேண்டும்.

என்னை பொறுத்தவரை சிறியவரோ/பெரியவரோ... ஒவ்வொரிடமும் ஒரு தனித்திறமை இருக்கிறது என நம்புகிறேன். திறமையில்லாத ஆள் யாருமில்லை... ஒவ்வொரிடமும் உள்ள திறமையை கண்டுபிடித்து பாராட்டும் பொழுது அந்த மனிதருக்கு நம்மேல் ஒரு மரியாதை/பாசம் வருகிறது. அதன் பின் நாம் அவர்களை கையாளும்பொழுது வேலை எளிதாகிறது.

வயதை கொண்டும், படிப்பை கொண்டும் மக்களை இரு வகையாக பிரிக்கலாம்.

தாங்கள் கேட்ட வயது அடிப்படையில்,
20 வயது கொண்ட பத்து பெயரை நிர்வகிப்பது எனக்கு எளிது.
ஆனால் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு 10 வயது பையன்கள் 100 பேரை கையாளுவது எளிதாக இருக்கலாம்.

என்னை பொறுத்தவரையில் சிறுவர்கள் 100 பேர் என்பது.. கொஞ்சம் கடினமான காரியம். தனித்தனியாக யாரையும் புரிந்துக்கொள்வது கடினம். அவர்களுக்கு ஒரு சில விசயத்தை (எல்லா விசயமும் அல்ல) விளக்கினாலும் புரியாது (மெச்சூரிட்டி இல்லாததால்). சில நேரம் கடினமாக கையாண்டால் தான் பயப்படுவார்கள். சில நேரம் அன்புக்கு ஏங்குவார்கள்... இவர்களே 20 பேர் என்றால் கையாளுவது எளிது. 100 பேர் கடினம்.

20 வயது என்றாலும் வேலை மிக எளிதானது அல்ல. 20 வயதில் உள்ள ஒவ்வொருவருக்கு எதிர்காலத்தை குறித்து புரியவைக்கவேண்டும்.
20 வயதில் எதையாவது சாதிக்கும்பொழுது அல்லது பொறுப்போடு செய்யும்பொழுது, அது எதிர்காலத்திற்கு அது எப்படி உதவும் என புரியவைத்தால் நம் வேலை எளிதாக இருக்கும்.

எல்லா நேரமும் அன்பு காட்டினால், தலையில் மிளகாய் அரைத்துவிடுவார்கள். அதே நேரத்தில், எல்லா நேரமும் நம் பவரை காட்டி கெடுபிடியாகவும் வேலை வாங்க இயலாது...

தனிப்பட்ட முறையில் ஒவ்வொரும் நல்லவரே.. ஆனால் சிலர் வேண்டுமென்றே மற்றவர் தூண்டுதலால், பிரச்சனை செய்வார்கள். பிரச்சனை வரும்பொழுது... பிரச்சனைக்குரிய காரணத்தை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். காரணமானவருக்கு 2, 3 முறை எச்சரிப்பு கொடுத்து சற்று கடின நடவடிக்கை எடுத்தால்.. மற்றவருக்கும் கொஞ்சம் பயம் வரும். எப்பொழுதும் கடின நடவடிக்கை விரும்புவதில்லை. அன்போடு (சற்று கண்டிப்போடு) நடத்தி செல்லவே முயலுவேன்.

தளபதி
04-10-2007, 03:55 AM
தளபதி...

என் அலைவரிசைகளை அப்படியே , ஆனால் இன்னும் அழகாக வார்த்தைகளாய் வடித்து இருக்கிறிர்கள்...

பார்த்து அசந்து விட்டேன்... பின்ன நான் நினைப்பதை நீங்கள் எழுதினால் பின்னர் எவ்வாறு இருக்கும்... கலக்கல்... அருமை... ஆகா...
மிக நேர்த்தியான, தெளிவான சிந்தனை. (என்னை போல இருக்கிறது என்பதால் அல்ல... ஹி ஹீ....)

வாழ்த்துகள்...

மிகவும் நன்றி. பென்ஸ். இதே சுகத்தை நானும் பல நண்பர்களிடம் அனுபவித்திருக்கிறேன். நம் அலைவரிசையைப் போலவே அவர்கள் அலைவரிசையும். அதை சரியாக புரிந்து கொண்டு அவர்களுடன் இன்னும் என் வாழ்க்கையில் இணைந்திருக்கிறேன். நாங்கள் சந்தித்துவிட்டாலோ, போனில் பேச ஆரம்பித்துவிட்டாலோ நாங்கள் எங்களை மறந்து சந்தோசமாக இருப்போம். மீண்டும் ஒருவரை கண்டதில் மகிழ்ச்சி.

சிவா.ஜி
04-10-2007, 05:05 AM
அசத்திட்டீங்க தள(ல)பதி.நியாயமான கோபம் கண்டிப்பாகத் தேவை அதே சமயம் தேவையில்லாமல் அடிக்கடி கோபப்படுபவர் தன் மரியாதையை இழக்கிறார்.'ஆமா இவர் எதுக்கெடுத்தாலும் கோபப்படுவார்..நீ வேலையைப் பார்' என்று அந்த கோபம் உதாசீனப்படுத்தப்படும்.என்னுடைய அப்பாவிற்கு கோபமே வராது..ஆனால் ஏதோ ஒரு சமயத்தில் அவர் கோபப்படும்போது எங்களுக்கு பயமாக இருக்கும்.ஏனென்றால் சரியான காரணம் இல்லாவிட்டால் அவர் கோபப்படவே மாட்டார்.நீங்கள் சொன்னதைப்போல நமக்கு ஏற்படும் கோபம் நல்ல விளைவுகளைத் தரும் பட்சத்தில் கோப உணர்வும் நல்லதே.
அதனால்தான் பாரதியும் சொல்லியுள்ளார் ரௌத்திரம் கொள் என்று.
பாராட்டுக்கள்.

அன்புரசிகன்
04-10-2007, 05:31 AM
அசத்தல் பதில் அண்ணா. 10 வருட இடைவெளிக்கான வித்தியாசத்தை உங்களுக்கு உரித்தான முறையில் பதிலாகத்தந்தது அருமை.

எல்லா நேரமும் அன்பு காட்டினால், தலையில் மிளகாய் அரைத்துவிடுவார்கள். அதே நேரத்தில், எல்லா நேரமும் நம் பவரை காட்டி கெடுபிடியாகவும் வேலை வாங்க இயலாது...

என் தந்தை அடிக்கடி சொல்லும் வசனம் இது. இந்த குணாதிசயம் இருப்பவரிடம் நல்ல முகாமைத்துவப்பண்பும் நிர்வகிக்கும் இயல்பும் இருக்கும்.

என் கேள்விக்கு பதில்தந்த அண்ணலுக்கு நன்றிகள்.

leomohan
04-10-2007, 05:41 AM
லியோமோகன்: தற்காலத்தில் ஊட்டச்சத்து அற்ற உணவுப்பதார்த்தங்கள் (unhealthy foods) நம் வாழ்வில் பல காண்கிறோம்; உண்கிறோம். இதனால் பல பிரச்சனைகள் வருகிறது. பல நோய்கள் வருகிறது. இதை தடுக்க நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று கருதுகிறீர்கள். ஒரு நாட்டின் வளர்ச்சியை இது எவ்வாறு பாதிக்கிறது.

நன்றி அன்புரசிகன்.

ஒவ்வொருவரும் தம் கலாச்சாரத்திற்கு ஒட்டிய உணவுகளை உண்டாலே இந்த பிரச்சனை இருக்காது.

கிராமங்களிலும் சிறுநகரங்களிலும் காலையில், மதியத்தில், இரவில் என்று மூன்று வேளை உணவு சமைக்கப்படுகிறது. அதனால் பிரிஜ்ஜில் வைத்து பல நாள் உண்ணும் பழக்கம் இல்லை.
நகரங்களில் விரைவு வாழ்கையில் பால் processed for long life, தயிர் long life, Ready Made உணவு வகைகள் இப்போது சமீபகாலங்களில் தயிர் சாதத்திற்கு கூட Ready Made விளம்பரம், பிறகு வெளிநாட்டு உணவுவகைகள் நம் தட்ப வெட்ப நிலைகளுக்கு ஒவ்வாதவை. இங்கு எந்த பண்டம் எடுத்தாலும் Ingredients படித்துவிட்டே வாங்க வேண்டியதாகிருக்கிறது. ஏனென்றால் கண்ட பதார்த்தத்திலும் beef gelatin போட்டு விடுகிறார்கள்.

ஆக நாம் கலாச்சாரத்தை விட்டு உணவு உண்பதில் மட்டும் அல்ல, உடை உடுத்துவது, சிந்திப்பது, வாழ்கை முறையை ஏற்படுத்திக் கொள்வது இவை அனைத்துமே கவனமாக கையாளப்பட வேண்டிய விஷயங்கள்.

சிவா.ஜி
04-10-2007, 05:51 AM
சிவாஜி:[/COLOR] நீங்கள் அடிக்கடி பொருட்களை தொலைத்து மனைவியிடம் திட்டுவாங்கிய நிகழ்வுகள் இருந்திருக்கும். கேள்வி இதுதான். ஒருவர் இவ்வாறு பொருட்க்களை அடிக்கடி தொலைப்பதற்கு பல காரணங்கள் இருக்கும். அதில் சில சொல்லுங்களேன்.[/COLOR][/B]

அன்பு உங்களுக்கு என்மேல் ஏதாவது கோபமிருந்தால் அடுத்தமுறை தமிழ்நாட்டுக்கு வரும்போது என் வீட்டிற்கு வந்து உங்களுக்குப் பிடித்த புட்டு சாப்பிட்டுக்கொண்டே என்னை திட்டி விடுங்கள்.இங்கே எல்லோர் முன்னாலும் நான் திட்டு வாங்கியதை சொல்லச்சொல்லி படுத்துறீங்களே.

நன்றாகத் தெரிந்துதான் இந்த கேள்வியை என்னிடம் கேட்டிருப்பரென்று நினைக்கிறேன்.நல்லவேளை நீங்கள் திட்டு வாங்கிய அனுபவத்தைச் சொல்லுங்கள் என்று கேட்காமல் விட்டாரே..ரொம்ப நல்லவரு...

அடிக்கடி இப்படி பொருட்களை தொலைப்பது..பெரும்பாலும் குழப்பத்திலிருக்கும்போதுதான்.ஏதோ ஒரு வேலைக்காக ஒரு இடத்துக்கு போவோம்..நாம் எதிர்பார்த்த விதத்தில் அந்த வேலை முடியாது..அதனால் லேசான பதட்டம் ஏற்படும்.தற்காலிகமாக மூளையின் செயல்பாடு மந்தித்துவிடும்.கோர்வையாக எதையும் செயல்படுத்தமுடியாது.அந்த சமயத்தில் நம் கையில் கொண்டுவந்ததை சுத்தமாக மறந்துபோக நேரிடும்.சில சமயங்களில் திரும்ப யோசித்து எங்கே வைத்தோம் என்பதை நினைவுபடுத்திக்கொள்வோம். ஆனால் பல சமயங்களில் அந்த சம்பவத்தின் போது மூளை நம்மோடு ஒத்துழைக்காததால் அந்த சம்பவம் பதிந்தே இருக்காது.பிறகென்ன தொலைத்த பொருள் போயே போயிந்தி...

சில சந்தர்ப்பங்களில் நம் சிந்தனையைக் கலைக்கும் விதமாக யாரோ ஒருவர் நம்மோடு பேசுவார் அல்லது சில சம்பவங்கள் நிகழும்..அந்த நேரத்தில்..கடைசியாக மூளையில் பதிந்தவை மட்டுமே பிரதானமாக இருந்து விடுவதால் அலைபேசி,பேனா,மூக்குக்கண்ணாடி,ஏதாவது காகிதம் இவையெதுவுமே நினைவில் இல்லாமல் வைத்த இடத்திலேயே இருந்துவிடும்.

சில நேரங்களில் அலட்சியமும் ஒரு காரனமாகிவிடுகிறது.

எனவே பொதுவாகக் கூறும்போது எந்த காரியத்துக்காக நாம் போகிறோமோ அது நம் மனது ஏற்கனவே கற்பனை செய்திருந்தபடி சுமுகமாக முடிந்துவிட்டால் சரியாக எல்லாவற்றையும் செய்துவிடுவோம்.இல்லையெனில்...தொலைப்போம்..
பிறகு..திட்டுதான்.வேறென்ன செய்வது.மனைவியிடம் அந்த நேரத்தில் மனோதத்துவமா பேச முடியும்.அப்படி பேசினால் அவரிடமிருந்து கூடுதல் டோஸ்தான் கிடைக்கும்"தொலைக்கறதையும் தொலைச்சிட்டு இப்ப நொண்டிச்சாக்கு வேற" சொல்வதுமட்டுமல்லாமல் கடைசியாக ஒரு பார்வை பார்ப்பார்களே.....அது இன்னும் கொடுமைடா சாமி.
(பொதுவாகக் கேட்டதால் தப்பித்தேன்...நான் தொலைத்ததற்கான சில காரணங்களைக் கேட்டிருந்தால்...அதை நானும் சத்திய சந்தனாக இங்கு சொல்லியிருந்தால்...அதை என் மனைவி படிக்கும் சந்தர்ப்பம் நேர்ந்துவிட்டால்.....:sport-smiley-008:)

தளபதி
04-10-2007, 05:55 AM
அட, நம்ம தலைவர். சிவாஜி. உங்கள் சிந்திக்கும் கோணம் எப்போதும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். அதை இப்போதும் நிரூபித்துள்ளீர்கள்.

ஷீ-நிசி
04-10-2007, 07:19 AM
அனைவரின் பதிலும் மிக சிறப்பு...

அன்பு கேள்வியில் சுவை இருக்கிறது.. கொஞ்சம் காரமும் சேர்த்திருக்கலாம் :) (சும்மா)

தளபதியின் பதில் மனதை ஒரு மாதிரி ஆக்கியது. கோபம்.. யோசிக்க வேண்டிய ஒன்று...

ராஜா
04-10-2007, 04:23 PM
நான் போட்ட மாலையை பத்துபேருக்கு பிச்சுப் போட்ட புத்திசாலி,கில்லாடி,மகாராசா....ரொம்ப நன்றி..
பதில்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.

அன்புரசிகனைபோல
நமட்டு சிரிப்புடன்

ஏன் மாட்டீங்க..? மாட்டாம தப்பிச்சுட்டீங்கல்ல..?!!!

பூமகள்
05-10-2007, 05:13 AM
தளபதியின் பதில் கோபப்படாமல் இருக்க வேண்டிய அவசியத்தையும் கோபம் எப்போதுபடவேண்டும் என்பது பற்றியும் அழகாய் சொல்லியது. பாராட்டுகள்.
தாமரையின் பதில் சிந்திக்க வைத்தது.
அறிஞரின் பதில் எப்போதும் போல் அறிவுப் பூர்வமான அலசல் பதில். அவரின் நிர்வகிக்கும் திறனை அறிந்துகொள்ள முடிந்தது.
பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் அனைவருக்கும்..!!

ராஜா
05-10-2007, 07:33 AM
மாப்ஸ் ரவுசு புகழ் ராஜா: . இந்தியா வல்லரசாக தேவையான விடையங்கள் இரண்டு தாருங்கள். ஒன்று நகைச்சுவையாகவும் மற்றது உணர்ச்சிபூர்வமாகவும் இருக்கவேண்டும் மாப்பு.

வரலாற்றில் மாப்புக்கு ஆப்பு வைத்த முதல் மாம்ஸ்-க்கு டாங்ஸ்..!

இந்தியா வல்லரசாக...

எல்லா அரசியல்வாதிகளையும் தூக்கில் போடணும்.. அறிவியல் அறிஞர் அப்துல் கலாம் அவர்களை அதிபர் ஆக்கணும்.. மக்களுக்கு படிப்பறிவும் நாட்டுப்பற்றும் வேண்டும்.. அனைத்துக் கல்வியாளர்களும் தங்கள் உழைப்பையும், சேவையையும் தாய்நாட்டுக்கே நல்க வேண்டும்.. அவ்வாறு செய்யும் அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்க வேண்டும்.. ம்னிதனை இனத்தால் வேறுபடுத்திப் பார்க்கும் ஈனம் ஒழிய வேண்டும்.

இதெல்லாம் நடந்தால் இந்தியா வல்லரசுதான்..

மாம்ஸ்.. இதெல்லாம்,நான் உணர்ச்சிபூர்வமா சிந்திச்சுதான் சொல்லியிருக்கேன்.. உங்க எல்லாருக்கும் அது நகைச்சுவையாத் தெரிஞ்சா நான் பொறுப்பில்லே..!

சிவா.ஜி
05-10-2007, 07:39 AM
அசத்தல் ராஜா சார்.ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.பதில் சொல்லியிருப்பதெல்லாம் நடந்தால் நிச்சயம் இந்தியா வல்லரசுதான்.ஆனால் நடக்காது என்வே இது நகைச்சுவையாகத்தான் போய்விடும்.சூப்பர்.வாழ்த்துக்கள்.

க.கமலக்கண்ணன்
05-10-2007, 07:46 AM
20 வயதில் எதையாவது சாதிக்கும்பொழுது அல்லது பொறுப்போடு செய்யும்பொழுது, அது எதிர்காலத்திற்கு அது எப்படி உதவும் என புரியவைத்தால் நம் வேலை எளிதாக இருக்கும்.

எல்லா நேரமும் அன்பு காட்டினால், தலையில் மிளகாய் அரைத்துவிடுவார்கள். அதே நேரத்தில், எல்லா நேரமும் நம் பவரை காட்டி கெடுபிடியாகவும் வேலை வாங்க இயலாது...

உங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் மிக அற்புதமான

உண்மை. ஒவ்வொருவரின் ஆற்றலை அறிந்து

உள்ளம் நோகாமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால்

உயர்ந்த இடத்தில் செல்வது என்பது உறுதி....

lolluvathiyar
05-10-2007, 10:40 AM
அன்புரசிகனின் கேள்வி மிக அபாரம் இன்னும் நிரைய பேர் தலையை சொறிந்து கொண்டு இருப்பார்கள். பாவம்

நாம் எதிர்பார்த்தது கிடைக்காத போது, நடக்காத போது வருகிறது.
என்னவள், பழச்சாறு செய்யவில்லை,

மிக அருமையான விளக்கம் தளபதி, எதிபார்பதை தவிர்த்து விட்டால் கோபம் குரையலாம் அல்லவா

என்னவள், பழச்சாறு செய்யவில்லை,
எங்கிருந்தோ வந்தது, மிகக் கொடுமையான கோபம். விரதம் முடிக்க பழச்சாறு தரவேண்டும் என்ற அறிவு இல்லையா?? .

விரதம் எடுக்கும் நோக்கமே கோபத்தை குறைக்கதான். மேலும் உங்கள் மனைவியிடம் காட்டும் கோபம் ஒரு வகை கொஞ்சல் போலதான் அளவோடு காட்டும் வரையில்

[B]தாமரை
ஒரு நல்லவரை கெட்டவராக்கவோ நல்லவரைக் கெட்டவராக்கவோ கஷ்டப் பட்டுதான் ஆகவேண்டும்.

தாமரை ஒரு சம்ஜட்டை கையில் எடுத்து விட்டால் அதை தீவிரமாக அலசாமல் இருக்க மாட்டார்.

என்னை பொறுத்தவரையில் சிறுவர்கள் 100 பேர் என்பது.. கொஞ்சம் கடினமான காரியம்.

சிறுவர்களை ரெண்டு அடி அடித்து விடலாம் ஆனால் பெரியவர்களை அடித்து விட முடியுமா?
அருமையான விளக்கம் அறிஞர் அவர்களே

ஒவ்வொருவரும் தம் கலாச்சாரத்திற்கு ஒட்டிய உணவுகளை உண்டாலே இந்த பிரச்சனை இருக்காது.

ஒரு வார்த்தை சொன்னாலும் அது திரு வார்த்தை என்பதற்கு இந்த வார்த்தை மிகவும் பொருந்தும்.

டின் புட், பிராசஸ்ட் உணவுகள் (Tinned Food, Preserved Foods, Aerated Waters )எந்த கலாசாரத்துக்கும் பொரு ந்தாத உணவு. அவை காப்பிடலிஸத்தின் (Captilism) மாயவலை. கட்டாயம் தீமையானது

இந்தியா வல்லரசாக...
எல்லா அரசியல்வாதிகளையும் தூக்கில் போடணும்..

கூடவே அரசு அதிகாரிகளையும் சேர்த்துகனும். அவர்கள் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல காரனம்.
சூப்பர் பதில் ராஜா

தொலைப்போம்..
பிறகு..திட்டுதான்.வேறென்ன செய்வது.மனைவியிடம் அந்த நேரத்தில் மனோதத்துவமா பேச முடியும்

மிக சரியான வார்ததை சிவா, மனைவியிடம் மனோதத்துவம் பேசினால் நம்மை மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்து சென்று விடுவார்கள்.

மலர்
05-10-2007, 03:47 PM
என்னை இந்த திரிக்கு கேள்விகேட்க வைத்த உள்ளங்களுக்கு ரொம்ப நன்றி கூறி இதோ சில கேள்விகள்....

மலர்: உலகில் பெண்களுக்கு ஆண்கள் 7:1 என்ற விகிதத்தில் உள்ளதென்கிறார்கள். நம் கலாச்சாரத்தில் சீதனம் என்ற பேய் வர இது ஒருகாரணம் இருக்கும் என கருதுகிறீர்களா இல்லையா? காரணம் என்ன? (நம்கலாச்சாரத்தை மட்டும் கருத்தில் கொள்ளவும்)

உலக அளவில் சீதனம் என்ற ஒரு பேய் வர இது ஒரு காரணமாக இருக்கலாம்..ஆனால் இது மட்டும் தான் காரணம் என்று கிடையாது..
நம்முடைய கலாச்சாரத்தை மட்டும் கருத்தில் கொண்டால்
1)ஆண்பிள்ளைகளுக்கு மட்டும் தான் சொத்தில் பங்கு அதனால் பெண் பிள்ளைகளுக்கு நகையாகவோ அல்லது பணமாகவோ திருமணத்தின் போது மாப்பிள்ளள வீட்டாரிடம் கொடுத்து விடுவார்கள்..
அவர்களும் பெண் வீட்டாரிடம் இருந்து சீதனம் அல்லது வரதட்சணை என்ற பெயரில் மாப்பிள்ளையின் சிறுவயது படிப்புசெலவு முதல் கல்யாண நாள் வரையில் அவனுக்காக செலவுசெய்த மொத்த பணத்தையும் பெற்றுக்கொண்டு அவனை அந்த பெண்வீட்டாரிடம் விற்றுவிடுவார்கள்..
2)தன் பெண் புகுந்த வீட்டிலும் வசதியாக வாழ வேண்டும் என்ற விருப்பம்
3)நம் பிள்ளைக்கு தானே செய்கிறோம் என்ற பாசம்
4)தங்களின் கவுரவத்திற்காக இது இரண்டு வீட்டிற்கும் போருந்தும்
கொஞ்சம் வசதியான வீட்டில் உள்ளவர்களுக்கு என்றால் வரதட்சனையோ அல்லது சீதனமோ பிரச்சனையாய் இராது.ஆனால் நடுத்தர வர்க்கத்தினரை போறுத்தவரை அவர்கள் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கும் கேள்வி இது..?

பெண்களின் பார்வையில்
என்னை போறுத்தவரை நம்முடைய கலாச்சாரத்தில் ஆணாதிக்கம் அதிகம்.
திருமணம் செய்து கொள்ளும் ஆணை விட பெண் அதிகம் படித்தவளாக இருக்கக்கூடாது என்பது எழுதப்படாத சட்டம் ஆகி விட்டது இதனால் பல பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை அதிகம் படிக்க வைத்தால் அதற்கேற்ற மாப்பிள்ளையை பார்க்க வேண்டும் என்று படிப்பை கூட பாதியில் நிறுத்தி விடுவார்கள்.
சீதனத்தை பொறுத்தவரை எந்த இடத்திலும் ஆண்கள் பேசுவது கிடையாது. மாப்பிள்ளையின் தாயோ அல்லது சகோதரியோ தான் பேசுவார்கள்..
இது ஒரு பெண்ணே பெண்ணுக்கு இழைக்கும் தீங்கு

ஆண்களின் பார்வையில்
வாழ்ந்தாலும் ஏசும்..
தாழ்ந்தாலும் ஏசும் உலகம் இது
வரதட்சணை வாங்காமல் திருமணம் மாப்பிள்ளைக்கு ஏதோ குறையுள்ளது என்று சொல்லுவார்கள்..வாங்கினால் இவ்வளவு வாங்குகிறார்களே என்பார்கள்..எனக்கு தெரிந்து எந்த ஆணும் வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்தது கிடையாது..அதை எந்த பெற்றோரும் விரும்புவதும் கிடையாது..

ஒரு உதாரணத்துக்கு
என்னுடைய அண்ணனுக்கு இப்போது திருமணம் ஏற்பாடாகியுள்ளது..
என்னுடைய பெரியப்பாவும் பெரியம்மாவும் படித்தவர்கள். என் அண்ணனும் படித்து ஒரு நல்ல வேலையில் இருப்பவர்.ஆனால் பெண்வீட்டில் எவ்வளவு நகை பணம் என்று எல்லாமே பேசி முடித்து விட்டார்கள்..
போன வாரம் நான் அங்க போயிருந்த போது நானும் என் அக்காவும் சேர்ந்து புது வீடு,புது வண்டி (பெண் வீட்டில் இருந்து தான்)ம்ம்..புது மாப்பிள்ளைக்கு வருது என்று நேரடியாகவே கிண்டல் அடித்தோம்..

சீர்வரிசை பற்றி பேசும் போது இதெல்லாம் நம்ம வீட்டில் தான் இருக்கே என்று சொன்ன வார்த்தைக்கே ஒரு முறைப்போடு கூடிய திட்டு கிடைத்ததுதேவையா..

என்னை பொறுத்தவரை திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் எப்படி திருட்டை ஒழிக்க முடியாதோ அது போல இதுவும்

பென்ஸ்
05-10-2007, 05:04 PM
அண்ணன் பென்ஸ்: தமிழை தமிழில் கற்கவேண்டும். ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் கற்கவேண்டும். இந்தக்கூற்று சரியா தவறா? ஏன்?

அன்பு...
இந்த கேள்வியை நான் அடுத்தவருக்கு கொடுக்க உரிமை உண்டு என்றால், என் அன்பு "தளபதி"க்கு கொடுக்க விரும்புகிறேன்....

நீங்களே இதை எனக்காக கொடுத்துவிடுங்களேன்....

அன்புரசிகன்
05-10-2007, 05:22 PM
அன்பு...
இந்த கேள்வியை நான் அடுத்தவருக்கு கொடுக்க உரிமை உண்டு என்றால், என் அன்பு "தளபதி"க்கு கொடுக்க விரும்புகிறேன்....

நீங்களே இதை எனக்காக கொடுத்துவிடுங்களேன்....

ஆகட்டும் அண்ணா... அறிவித்துவிடுகிறேன்...

அன்புரசிகன்
05-10-2007, 05:40 PM
மாப்ஸ் ரவுசு புகழ் ராஜா: . இந்தியா வல்லரசாக தேவையான விடையங்கள் இரண்டு தாருங்கள். ஒன்று நகைச்சுவையாகவும் மற்றது உணர்ச்சிபூர்வமாகவும் இருக்கவேண்டும் மாப்பு.

வரலாற்றில் மாப்புக்கு ஆப்பு வைத்த முதல் மாம்ஸ்-க்கு டாங்ஸ்..!

இந்தியா வல்லரசாக...

எல்லா அரசியல்வாதிகளையும் தூக்கில் போடணும்.. அறிவியல் அறிஞர் அப்துல் கலாம் அவர்களை அதிபர் ஆக்கணும்..

தூக்கில் போடுதல் என்பது எந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு,?:sprachlos020: ஏனென்றால் அப்புறம் அவுங்க தப்பிடுவாங்களே... அவுங்க தூக்கு > ஆயுள் > வருட சிறைத்தண்டனை > விடுதலை என்று வெளியில் வந்திடுவாய்ங்க...:D

பதில்கள் சூப்பர் மாப்பு... நன்றி...

அன்புரசிகன்
05-10-2007, 05:43 PM
:sprachlos020::eek:பதில் வந்தாச்சா.... அப்பாடா.... :p:D

என்னை பொறுத்தவரை திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் எப்படி திருட்டை ஒழிக்க முடியாதோ அது போல இதுவும்

உங்கள் முடிவுரை கடுகு பொன்றதென்றாலும் மிகக்காரமானது... நன்றி தலிவி....

போனஸ் கேள்வி: ஆமா.... யார திருடன் என்கிறீங்க???

lolluvathiyar
06-10-2007, 11:27 AM
1)ஆண்பிள்ளைகளுக்கு மட்டும் தான் சொத்தில் பங்கு அதனால் பெண் பிள்ளைகளுக்கு நகையாகவோ அல்லது பணமாகவோ திருமணத்தின் போது மாப்பிள்ளள வீட்டாரிடம் கொடுத்து விடுவார்கள்..

இந்த ஒரு பாயின்ட் தான் முக்கியமான பாயின்ட். இதற்க்கு பல காரனம் இருகிறது. சிறு விவசாயிடம் 5 − 10 ஏக்கர்தான் இருக்கும். விவசாயத்தை பொருத்தவரை கிட்ட தட்ட 5 ஏக்கருக்கு ஒரு கினரு தான் இருக்கும். இந்த இடத்தில் தான் கினறு அமைய முடியும். விவசாய நிலத்தை கூறு போட்டால் ஒருவருக்கு நல்ல பூமியும், இன்னொருவருக்கு சுமாரான பூமியும் போய்விடும். மேலும் நிலம் சிறுக்க சிறுக்க நல்ல வெள்ளாமை செய்ய முடியாது. ஒரு வீட்டில் 2 ஆண் பிள்ளைகள் பிறந்தாலே அடுத்த தலைமுரையில் விவசாயம் அழிந்து விட கூடிய சூல் நிலையில் இருக்கும் போது எங்கேயோ அனுப்பு பென்னுக்கும் சொத்து தந்தால் அவளால் அதில் வெள்ளாமை பன்ன முடியாமல் வீனாக்கி விடும். அதற்க்காக ஆண்பிள்ளைகள் அந்த சொத்துக்கு உன்டான விலை போல வரதட்சனை தந்தார்கள்.

இந்த காலத்தில் நகர்புரங்களில் நிலத்தின் மதிப்பு தாருமாராக ஏறி விட்டதால், வரதட்சனையை விட பென்கள் சொத்தில் தான் பங்கு கேட்கிறார்கள்.

என் நன்பன் ஒருவன் வரதட்சனையே வாங்க மாட்டேன் என்று சபதம் செய்தான். ஆனால் எங்கு ஒரே பெண் மட்டும் இருக்கிற வசதியான வீடாக தேடி பெண் எடுத்தான். உள் நோக்கம் புரிந்திருக்கும்.

க.கமலக்கண்ணன்
06-10-2007, 11:49 AM
சீதனத்தை பொறுத்தவரை எந்த இடத்திலும் ஆண்கள் பேசுவது கிடையாது. மாப்பிள்ளையின் தாயோ அல்லது சகோதரியோ தான் பேசுவார்கள்..
இது ஒரு பெண்ணே பெண்ணுக்கு இழைக்கும் தீங்கு

உண்மைதான் மலர், சீர்வரிசை கேட்பது பெண்கள் என்ற

உண்மையை நீங்கள் சொல்லியது சரி. நிறைய இடங்களில் அப்படித்தான் நடக்கிறது.

உளமார பெண்களுக்கு பெண்களே எதிரிகள்... முக்கியமாக கெளரவம் என்ற

உதடளவு சொல் அனைத்து பெண்களையும் அவமதிக்கறது...

உளமார சொல்கிறேன் அருமையான பதில் என் அன்பு தங்கையே...

தளபதி
06-10-2007, 01:10 PM
Originally Posted by அன்புரசிகன்
அண்ணன் பென்ஸ்: தமிழை தமிழில் கற்கவேண்டும். ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் கற்கவேண்டும். இந்தக்கூற்று சரியா தவறா? ஏன்?

அன்பு...
இந்த கேள்வியை நான் அடுத்தவருக்கு கொடுக்க உரிமை உண்டு என்றால், என் அன்பு "தளபதி"க்கு கொடுக்க விரும்புகிறேன்....

நீங்களே இதை எனக்காக கொடுத்துவிடுங்களேன்....

ஆகா, தலைவரே பென்ஸ். ஆ..பத்தை என்னிடம் கொடுக்க அன்பை வேறு துணைக்கு அழைக்கிறீர்களா!!அன்பால் அழைத்தால் மறுப்பேது.

தமிழை தமிழில் கற்கவேண்டும். ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் கற்கவேண்டும். இந்தக்கூற்று சரியா தவறா?: பதில் − சரி. ஒரு மொழியை அந்த மொழியில் கற்றுக்கொள்ளும்போது மட்டுமே அது முழுமைபெற முடியும். இத்துடன் இந்த கேள்விக்கு பதில் முடிந்துவிட்டதாக எண்ணாமல்,

எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எனது கல்லூரி நாட்களில் நான் நான்கு வார்த்தைகள் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்றால் நடுங்கி, உளறி, வேர்த்துக்கொட்டி சொல்லவந்ததை சொல்லாமல் குழப்பிவிடுவேன். இந்த தாழ்வு மனப்பான்மையால், ஆங்கிலம் பேசும் நபர்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, என்னைப் போல் உளறிக் கொட்டும் நபர்களாய் பார்த்து நட்பு வைத்துக்கொண்டேன். ஆங்கிலத்தின் மேல் எங்களுக்கு இருந்த கோபத்தை அதை பேசுபவர்களிடம் கிண்டலும் கேலியுமாய் வெளிப்படுத்தினோம். நாங்கள் நன்றாகப் படித்து மதிப்பெண்கள் வாங்கினாலும் ஆங்கிலத்தில் பேசமுடியவில்லை என்ற எண்ணம் எங்களுக்குள் இருந்தது. கல்லூரியில் நான் செய்த இந்த வேலை, வேலைக்கு சென்றவுடன் பப்பு வேகவில்லை. நான் நிறைய அவமானப்பட்டு விட வாய்ப்பிருந்தது. எனக்குள் தீப் பற்றிக் கொண்டது. நான் தனியாளாக்கப் பட்டுவிட்டதை உணர்ந்தேன். எனது தவறு புரிந்தது. எனினும் எனது வட்டத்தைப் பெரிதாக்கவில்லை. நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். சில புத்தகங்கள் ஒன்றுமே புரியாது "பெப்பே" என்று படித்துவிட்டு அந்த புத்தகத்தை எழுதியவரை திட்டிக்கொண்டிருப்பேன்.

அந்த நேரத்தில் எனது அலுவலகத்தில் learning centre specialtist வேலைக்கு சேர்ந்த பெண் எனக்குத் தோழியானார். நான் என்னை சுற்றி போட்டுக்கொண்டுள்ள வட்டத்தை நன்றாக புரிந்து கொண்டுவிட்டார். ஆங்கிலத்தில் அனைவருடனும் சரளமாக பேசும் அவர், என்னிடம் மட்டும் தமிழில் பேச ஆரம்பித்தார். நான் மெல்ல மெல்ல அவரைப் புரிந்து கொண்டு நம்மை இவர் நிச்சயம் கிண்டல் செய்யமாட்டார் என்று உறுதியானவுடன் எனது ஆங்கிலத்தில் பேசமுடியாத பிரச்சனையைக் கூறினேன்.

அவர் என்னை நன்றாக புரிந்துவிட்டிருந்தபடியால், சிரிக்கவும் இல்லை, சீரியஸாகவும் இல்லை, மிகச்சரளமாக, "பேச முடியாதது ஒரு பிரச்சனை இல்லை, பேச ஆரம்பிக்காததுதான் பிரச்சனை" என்றார்.

"நான் தவறாகப் பேசி யாரவது சிரித்துவிட்டால் என்னால் தாங்கமுடியாது" என்றேன்.

கடவுள்தான் அந்த மெச்சுரிட்டியை அவருக்கு கொடுத்திருக்கவேண்டும், மிக எளிதாகக் கூறினார், "உங்கள் தாய்மொழியில் பேசும்போது தவறு வந்து அதைப் பார்த்து யாராவது சிரித்தால்தான் நீங்கள் இந்த அளவுக்கு வருந்தவேண்டும். தாய் மொழியே கற்றுக்கொள்ளும் போது தவறு வந்து அதை சரிசெய்ததால்தானெ இப்போது சரளமாக பேசமுடிகிறது. தாய்மொழியில்லாமல் பிறகு எதில் பேசும்போதும் அதில் தவறு வந்தால் கவலை ஏன்?? நாம் கற்றுக் கொள்ளும்போது தவறு வருவது இயற்கைத்தானே? தவறு வரும்போது தான் அதை சரிசெய்யமுடியும்". பேசச்சொன்னார். நான் நிறைய மனத்தடங்களுக்கிடையில் பேசினேன். அவரும் பேசினார். ஒரு இடத்தில் நின்றுவிட்டேன். உடனே, நான், "வேண்டுமானால் பதிலை எழுதுகிறேன்" என்றேன்.

கொஞ்சம் கொஞ்சமாக எனது தாழ்வுமனப்பான்மை என்ற இருளுக்கு நடுவே மெல்லிய ஒளியை வீசினார். "நாம் பேசாமல் இருப்பதனால் நமக்கு ஆங்கிலம் பேசவரும் என்று யாரும் நினைத்துவிடமாட்டார்கள். உங்களால் நன்றாக இலக்கண சுத்தமாக ஆங்கிலத்தில் எழுதமுடிகிறது, ஆனல் பேசமுடியவில்லை, ஏனெனில் நீங்கள் ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் பழகவில்லை" என்றார்.

நான் அவள் பேசுவதில் ஒன்றிப்போனேன். "ஆம், நீங்கள் ஆங்கிலத்தில் பேசும் போது, பிறர் பேசுவதை தமிழில் மொழிபெயர்க்கிறீர்கள், பிறகு புரிந்து கொள்கிறீர்கள், பிறகு தமிழில் அதற்கு பதில் யோசித்து, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறீர்கள், அதை வெளியே பேசுகிறீர்கள். இதற்கு நிறைய நேரம் பிடிப்பதனால் நீங்கள் பேசுவதை விட எழுதுவதில் ஆர்வம் காட்டுகிறீர்கள். உங்கள் உள்ளும் என்னைவிட நல்ல ஆங்கிலம் இருக்கிறது, அதை பயன்படுத்துவதில்தான் குழப்பம். நாம் சரளமாக ஒரு மொழியில் பேசவேண்டுமெனில் அந்த மொழியிலேயே சிந்திக்கவேண்டும், அதன் வழியிலேயே பேசவேண்டும், இடையில் தாய்மொழிக்கு மாற்றி பேசும்போது நாம் வார்த்தைகள் இல்லாமல் தடுமாறி தோற்றதாய் உணருவோம். என்ன சொல்வது என்பதை ஆங்கிலத்திலேயே யோசித்து பேசுங்கள்" என்றார்.

பிறகென்ன, விக்ரமன் படம் மாதிரி சின்ன சின்னதாக பேச ஆரம்பித்து முழுமையாக பேச ஆரம்பித்தேன். அந்த இனிய கடுமையான நினைவுகளுடன், இந்த சமயத்தில் அந்த தோழிக்கு நன்றி சொல்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

க.கமலக்கண்ணன்
06-10-2007, 01:18 PM
கொஞ்சம் கொஞ்சமாக எனது தாழ்வுமனப்பான்மை என்ற இருளுக்கு நடுவே மெல்லிய ஒளியை வீசினார். "நாம் பேசாமல் இருப்பதனால் நமக்கு ஆங்கிலம் பேசவரும் என்று யாரும் நினைத்துவிடமாட்டார்கள். உங்களால் நன்றாக இலக்கண சுத்தமாக ஆங்கிலத்தில் எழுதமுடிகிறது, ஆனல் பேசமுடியவில்லை, ஏனெனில் நீங்கள் ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் பழகவில்லை" என்றார்.

அற்புதமான பதில் தளபதி

அருமையான சூழ்நிலையுடன் விளக்கம்

அழுத்தமாக கருத்தை தெரிவித்தற்கு மிக்க நன்றி

அன்புரசிகன்
06-10-2007, 01:23 PM
தமிழை தமிழில் கற்கவேண்டும். ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் கற்கவேண்டும். இந்தக்கூற்று சரியா தவறா?: பதில் − சரி. ஒரு மொழியை அந்த மொழியில் கற்றுக்கொள்ளும்போது மட்டுமே அது முழுமைபெற முடியும். இத்துடன் இந்த கேள்விக்கு பதில் முடிந்துவிட்டதாக எண்ணாமல்,
எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ....

நன்றி தளபதி. இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்.

நான் அவள் பேசுவதில் ஒன்றிப்போனேன். "ஆம், நீங்கள் ஆங்கிலத்தில் பேசும் போது, பிறர் பேசுவதை தமிழில் மொழிபெயர்க்கிறீர்கள், பிறகு புரிந்து கொள்கிறீர்கள், பிறகு தமிழில் அதற்கு பதில் யோசித்து, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறீர்கள், அதை வெளியே பேசுகிறீர்கள். இதற்கு நிறைய நேரம் பிடிப்பதனால் நீங்கள் பேசுவதை விட எழுதுவதில் ஆர்வம் காட்டுகிறீர்கள். உங்கள் உள்ளும் என்னைவிட நல்ல ஆங்கிலம் இருக்கிறது, அதை பயன்படுத்துவதில்தான் குழப்பம். நாம் சரளமாக ஒரு மொழியில் பேசவேண்டுமெனில் அந்த மொழியிலேயே சிந்திக்கவேண்டும், அதன் வழியிலேயே பேசவேண்டும், இடையில் தாய்மொழிக்கு மாற்றி பேசும்போது நாம் வார்த்தைகள் இல்லாமல் தடுமாறி தோற்றதாய் உணருவோம். என்ன சொல்வது என்பதை ஆங்கிலத்திலேயே யோசித்து பேசுங்கள்" என்றார்.

நான் எதிர்பார்த்த பதில் உங்களிடம் இருந்து வந்தது மிக்க மகிழ்ச்சி. அநேகமாக சிலருக்கு இருக்கும் பிரச்சனையே இதுதான். மொழிபெயர்த்து யோசித்து மீண்டும் மொழிபெயர்த்து பேசுவார்கள். (ஒரு 5 வருடங்களுக்கு முன்னும் நானும் அப்படித்தான். அதற்காக இப்போது திறம் என்று அர்த்தமல்ல. மொழிபெயர்த்து பேசுவதை நிறுத்திக்கொண்டேன்.)

மீண்டும் நன்றி தளபதி... பென்ஸண்ணா உங்களிடம் இருந்து இதுபற்றிய ஒரு சிறு விளக்கக்குறிப்பாவது எதிர்பார்க்கிறேன்.

ஆதவா
06-10-2007, 01:39 PM
தளபதி. உங்கள் கருத்திலிருந்து சற்றே முரணாகிறேன்.

தாய்மொழியில் கற்பதே சிறந்தது என்று நானும் கருதுகிறேன். நீங்கள் குறிப்பிட்ட உங்கள் அனுபவத்தில் நீங்கள் கற்றதைப் பற்றி சொல்லவில்லை. ஆரம்ப நிலையில் கற்பவர் தனது தாய்மொழியின் உதவியின்றி ஒரு வார்த்தைகூட கற்க முடியாது. இங்கிருக்கும் பெரும்பாலான ஆங்கிலப்பள்ளிகள் ஆங்கிலத்தை ஆங்கிலத்தின் மூலம் கற்பிப்பதன் மூலம் என்ன ஏற்படுகிறது தெரியுமா? இலக்கணப்பிழைகள் ஏற்படுகின்றன. ஆனால் அதே சமயம் தமிழில் கற்று சிறப்பாக ஆங்கிலத்தில் பேசும் நபர்களை நான் கண்டிருக்கிறேன்.

பேசப்பேசத்தான் மொழிப்பழக்கம் உருவாகும். செந்தமிழும் நாப்பழக்கம் அல்லவா? அந்த வகையில் நீங்கள் பேசும்போது ஒருநொடியேனும் தமிழில் யோசிக்கவில்லையா? ஆங்கிலத்தில் பல வார்த்தைகள் தமிழ்மூலமாக நாம் கற்றுக் கொள்ளமுடியாது. அப்போதுதான் அந்த மொழியின் வாயிலாக நாம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு வரும்.

நான் கற்றது தமிழ் வழியே தான்... எனக்கு பேச்சளவில் பழக்கமில்லை எனினும் இலக்கணப்பிழைகள் ஏற்படுவதில்லை. இன்றைக்கெல்லாம் நீங்கள் சொன்னமாதிரி அவ்வளவு தூரம் நாம் யோசிப்பதில்லை. உடனே பதில் வருகிறது. (இன்னும் தயக்கம் மட்டும் இருக்கிறது. அது போனால் நானும்....)

தளபதி
06-10-2007, 01:54 PM
நன்றி தளபதி. இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்.

நான் எதிர்பார்த்த பதில் உங்களிடம் இருந்து வந்தது மிக்க மகிழ்ச்சி. அநேகமாக சிலருக்கு இருக்கும் பிரச்சனையே இதுதான். மொழிபெயர்த்து யோசித்து மீண்டும் மொழிபெயர்த்து பேசுவார்கள். (ஒரு 5 வருடங்களுக்கு முன்னும் நானும் அப்படித்தான். அதற்காக இப்போது திறம் என்று அர்த்தமல்ல. மொழிபெயர்த்து பேசுவதை நிறுத்திக்கொண்டேன்.)

நண்பரே!! என்னாலும் உங்கள் மனதை உணரமுடிகிறது. இதில் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். ஆங்கிலம் பேசவராமால் நான் ஒரு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு Book review presentation செய்தேன். ஆரம்பத்தில் தடுமாறி தடுமாறி பேசி பேசிக்கொண்டிருந்த நான் மெல்ல மெல்ல அந்த தொகுப்பளிப்பை முடிக்கும்போது நல்ல முன்னேற்றத்தை உணரமுடிந்தது.

அட, என்ன சார் இது.. மீண்டும் அந்த நினைவுகளில் மூழ்கிப் போகிறேன். நன்றி!! அன்புரசிகரே!! உங்கள் கேள்வியால் நல்ல சந்தோசம் அடைந்தேன்.

தளபதி
06-10-2007, 02:26 PM
தளபதி. உங்கள் கருத்திலிருந்து சற்றே முரணாகிறேன்.

தாய்மொழியில் கற்பதே சிறந்தது என்று நானும் கருதுகிறேன். நீங்கள் குறிப்பிட்ட உங்கள் அனுபவத்தில் நீங்கள் கற்றதைப் பற்றி சொல்லவில்லை. ஆரம்ப நிலையில் கற்பவர் தனது தாய்மொழியின் உதவியின்றி ஒரு வார்த்தைகூட கற்க முடியாது. இங்கிருக்கும் பெரும்பாலான ஆங்கிலப்பள்ளிகள் ஆங்கிலத்தை ஆங்கிலத்தின் மூலம் கற்பிப்பதன் மூலம் என்ன ஏற்படுகிறது தெரியுமா? இலக்கணப்பிழைகள் ஏற்படுகின்றன. ஆனால் அதே சமயம் தமிழில் கற்று சிறப்பாக ஆங்கிலத்தில் பேசும் நபர்களை நான் கண்டிருக்கிறேன்.

பேசப்பேசத்தான் மொழிப்பழக்கம் உருவாகும். செந்தமிழும் நாப்பழக்கம் அல்லவா? அந்த வகையில் நீங்கள் பேசும்போது ஒருநொடியேனும் தமிழில் யோசிக்கவில்லையா? ஆங்கிலத்தில் பல வார்த்தைகள் தமிழ்மூலமாக நாம் கற்றுக் கொள்ளமுடியாது. அப்போதுதான் அந்த மொழியின் வாயிலாக நாம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு வரும்.

நான் கற்றது தமிழ் வழியே தான்... எனக்கு பேச்சளவில் பழக்கமில்லை எனினும் இலக்கணப்பிழைகள் ஏற்படுவதில்லை. இன்றைக்கெல்லாம் நீங்கள் சொன்னமாதிரி அவ்வளவு தூரம் நாம் யோசிப்பதில்லை. உடனே பதில் வருகிறது. (இன்னும் தயக்கம் மட்டும் இருக்கிறது. அது போனால் நானும்....)

நண்பரே!! மிகவும் நன்றி. நான் உங்களிடம் இருந்து முரண்படவில்லை. என்னுடன் தான் நீங்கள் இருக்கிறீர்கள். அன்னிய மொழிகள் கற்கும்போது முதலில் தாய்மொழி விளக்கங்கள் புரிதலுக்கு ஏதுவாக இருக்கும், அது நாம் படித்தமுறையும் கூட. ஆனால் தாய் மொழியே எப்போதும் துணையாக கொள்ள முடியாது.

நமக்கு புரிவதற்காக, நம் காலத்தில் "window" என்றால் ஜன்னல் என்று சொல்லிக்கொடுத்ததால், ஒவ்வொரு சொல்லுக்கும் தமிழில் அர்த்தம் தேடி தேடி எந்த இடத்தில் எந்த வார்த்தை போடுவது என்று அர்த்தம் மாற்றி வாக்கியத்தை உருவாக்குகிறோம். அந்த மொழிக்குள்ளே சென்றாக வேண்டும், அப்போது தான் நாம் அந்த மொழியை சரளமாக பேசமுடியும்.

சிவா.ஜி
06-10-2007, 02:35 PM
ஆனால் தாய் மொழியே எப்போதும் துணையாக கொள்ள முடியாது.

நமக்கு புரிவதற்காக, நம் காலத்தில் "window" என்றால் ஜன்னல் என்று சொல்லிக்கொடுத்ததால், ஒவ்வொரு சொல்லுக்கும் தமிழில் அர்த்தம் தேடி தேடி எந்த இடத்தில் எந்த வார்த்தை போடுவது என்று அர்த்தம் மாற்றி வாக்கியத்தை உருவாக்குகிறோம். அந்த மொழிக்குள்ளே சென்றாக வேண்டும், அப்போது தான் நாம் அந்த மொழியை சரளமாக பேசமுடியும்.
ஒரு வேற்றுமொழியை சரளமாகப் பேச நீங்கள் சொன்ன வழிமுறைகள் அருமையானதுதான்.அதிலும் உங்கள் சொந்த அனுபவத்திலிருந்தே அதை சொன்னவிதம் அசத்தலாக இருந்தது.ஆனாலும்,எத்தனைதான் வேற்றுமொழியில் பண்டிதராக இருந்தாலும் தாய்மொழிக்கு தாவி பின் மீண்டுவருவதை சில சமயங்களில் தவிர்க்கமுடியாது.நான் சொல்வது தாய்மொழியில் கற்றவர்களுக்குத்தான்.ஆனால் சிலர் முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் மட்டுமே கற்றுவரும்போதும்,வேற்றுநாட்டில் பிறந்து வளரும்போதும்...அவர்கள் அந்த மொழியிலேயேதான் சிந்திப்பார்கள்.

இனியவள்
06-10-2007, 02:46 PM
[B][COLOR=blue]இனியவள்: யாரும் தொலைத்த பொருட்க்களை நாம் கண்டெடுக்கும் பட்சத்தில் அதை உரியவரிடம் சேர்க்கும் எண்ணம் நம்மில் பலரிடம் இல்லையே.... எதனால்? சில காரணங்கள் சொல்லுங்கோ....
:confused:

பயம் ஒரு காரணமாய் இருக்கலாம்உதாரணத்துக்கு நான் இலங்கையை எடுக்கிறன்..இஞ்சை எல்லாம் எந்த பைக்குள்ளை என்ன குண்டு இருக்கும் எண்டே தெரியேலை பெருசா என்ன சிறுசா ஒரு பொருள் ரோட்ல கண்டாலே பார்த்தும் பார்க்காமலும் போயிடுவினம்..அப்படி ஒரு நிலமை இங்கை சரி அப்படியே ஒரு பொருளை கண்டு எடுத்துக் கொடுக்கலாம் என்று நினைச்சாலும் மனசிலை பயம் வந்திடும் கொண்டு போய் குடுக்க போய் எதாவது சாமன் தொலைஞ்சு இருந்தாலும் எங்களை களவு எடுத்திட்டினம் என்று சொல்லுவினமோ என்று சொல்லி..

மற்றது இந்த வேகமான உலகத்திலை அவையவைக்கு அவையிண்ட வேலையையே பார்க்க நேரம் இல்லை இதிலை ரோட்ல ஒரு பொருள் கண்டு பிடிச்சு அதை எடுத்து கொண்டு போய் குடுத்து நேரம் வீணாய் போயிடும் அதுக்கு நான் என் வேலையை பார்த்தால் ஆவது முன்னேறலாம் என்ற மனப்பான்மை...

அட இந்த பை இவ்வளவு பெருசா இருக்கே இதுக்குள்ளை விலைமதிப்பான பொருள் எதாவது இருக்குமா அடிச்சது லக் எனக்கு என்று சொல்லி சில பேர் (சில பேர் மட்டுமே )அதை எடுத்துக் கொண்டு போயிடுவினம் உரியவர்களுக்கு கொடுக்க வேண்டிய மனப்பான்மை அங்கு மறைந்து போயிடும் சுயநலத்தின் நிமித்தம் எமக்கு உரிமையற்ற பொருளை குடுப்பம் என்ற ஒரு எண்ணமே இல்லாமல் இருக்கினம் சிலர்....

பயம் மற்றும் சுயநலம் இந்த இரண்டும் முக்கிய காரணம் என்று நான் நினைக்கிறன் என் கருத்து மட்டுமே...

lolluvathiyar
06-10-2007, 02:49 PM
அந்த மொழிக்குள்ளே சென்றாக வேண்டும், அப்போது தான் நாம் அந்த மொழியை சரளமாக பேசமுடியும்.

எத்தனைதான் வேற்றுமொழியில் பண்டிதராக இருந்தாலும் தாய்மொழிக்கு தாவி பின் மீண்டுவருவதை சில சமயங்களில் தவிர்க்கமுடியாது.

அவர் விளக்கம் உங்கள் பதிலிலேயே இருகிறது. அந்த சில சமயங்களில் மட்டும் தான் மனதில் மொழிமாற்றம் தேவை படும். பல சமயத்தில் தேவை இல்லை அல்லவா. தளபதி சொன்னது சரியே.
இன்னொரு உன்மையை சொல்லி விடுகிறேன். தமிழ் மொழியில் சில வார்த்தைகள் கூட ஆங்கில மொழிக்கு மொழிமாற்றம் செய்யபட்டால் தான் புரியும். கனினி என்றால் என் மூலைக்கு கம்யூட்டர் என்று மொழிமாற்றம் செய்யபட்டு போனால் தான் புரியும்

இனியவள்
06-10-2007, 02:53 PM
தளபதி உங்கள் அன்றைய நிலை தான்
இன்று எனக்கு எழுத முடிகிற அளவுக்கு
கதைக்க முடிவதில்லை எங்கே பிழை விட்டுவிடுவனோ என் :redface:

பாவம் என் ஆங்கில வாத்தியார் இரண்டு போடு போட்டும்
இன்னும் திருந்தவே இல்லை :icon_rollout:

பதில் அருமை தளபதி வாழ்த்துக்கள்

lolluvathiyar
06-10-2007, 03:00 PM
எடுக்கிறன்..இஞ்சை எல்லாம் எந்த பைக்குள்ளை என்ன குண்டு இருக்கும் எண்டே தெரியேலை பெருசா என்ன சிறுசா ஒரு பொருள் ரோட்ல கண்டாலே பார்த்தும் பார்க்காமலும் போயிடுவினம்..

மிக சரியான பதில் தந்திருகிறீர்கள் இனியவளே, ஆனா உங்கள் பதிலை படிச்சு புரிந்து கொள்வதர்குள்ள படாத பாடு பட்டு போயிட்டேன். காரனம் மொழிமாற்றம் பன்ன வேண்டி இருகிறது, என் மூலையில்.
(இப்ப ஓக்கேவா சிவா ஜி மற்றும் தளபதி. ஈழதமிழுக்கு நம்ம தமிழுக்கு யாராவது ஒரு டிக்சனரி தயார் பன்னுங்கப்பா) ஒருவேல இது இனியவள் தமிழோ.

உன்மையாக சிந்தித்து எழுதிய இனியவளுக்கு பாராட்டுகள்.

இனியவள்
06-10-2007, 03:09 PM
வாத்தியாரே என் தமிழ் புரிந்து கொள்ள கடினமோ :confused:

மன்னிக்க கடினத் தன்மைக்கு :)

lolluvathiyar
06-10-2007, 03:14 PM
வாத்தியாரே என் தமிழ் புரிந்து கொள்ள கடினமோ

மன்னிக்க கடினத் தன்மைக்கு :)

எனக்கு தான் கடினமாக தெரிகிறது. மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. எனக்கு பொதுவா தமிழறிவு குரைவுதான் கோவை தமிழ் மட்டுமே தெரியும். இதே தமிழ் நாட்டில் திண்டுகல், நெல்லை மக்கள் பேசும் தமிழ் கூட புரிவத எனக்கு கஸ்டம்.
தமிழகத்தில் பல தமிழ் பேசுகிறார்கள்.

ஆனால் நீங்கள் பதித்த பதிப்பு புரிய நேரமாகிறது என்று தான் சொன்னேன். சும்மா நக்கல் பன்ன தான் மேலே அவ்வாறு எழுதினேன்

ஆதவா
06-10-2007, 03:37 PM
நண்பரே!! மிகவும் நன்றி. நான் உங்களிடம் இருந்து முரண்படவில்லை. என்னுடன் தான் நீங்கள் இருக்கிறீர்கள். அன்னிய மொழிகள் கற்கும்போது முதலில் தாய்மொழி விளக்கங்கள் புரிதலுக்கு ஏதுவாக இருக்கும், அது நாம் படித்தமுறையும் கூட. ஆனால் தாய் மொழியே எப்போதும் துணையாக கொள்ள முடியாது.

நமக்கு புரிவதற்காக, நம் காலத்தில் "window" என்றால் ஜன்னல் என்று சொல்லிக்கொடுத்ததால், ஒவ்வொரு சொல்லுக்கும் தமிழில் அர்த்தம் தேடி தேடி எந்த இடத்தில் எந்த வார்த்தை போடுவது என்று அர்த்தம் மாற்றி வாக்கியத்தை உருவாக்குகிறோம். அந்த மொழிக்குள்ளே சென்றாக வேண்டும், அப்போது தான் நாம் அந்த மொழியை சரளமாக பேசமுடியும்.

நன்றி நண்பரே!

நான் முன்னமே சொன்னமாதிரி எல்லா வார்த்தைகளையும் தாய்மொழியில் கற்றுக் கொள்ள இயலாது. ஆனால் தமிழ் வழியில் கற்றுக்கொண்ட ஒரு மாணவன் அடுத்த மொழியைக் கற்றுக் கொள்ளூம்போது தாய்மொழியின் துணையின்றி கற்றுக் கொள்ள இயலாது.

ஒரு மொழியை மிகச் சரியாக பேச அதாவது Express செய்ய முதலில் தன் மொழியில் அதே எக்ஸ்ப்ரஸன் வேண்டும். உதாரணத்திற்கு, எனக்கு ஆங்கிலமே தெரியாது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.. கீழ் கண்ட வார்த்தைகளுக்கு எப்படி எனக்கு மிகச் சரியான அர்த்தம் சொல்லிக் கொடுப்பீர்கள்?

Doubt
Doubt
Doubtful
Doubtfully
Doubtfulness

மேற்கண்ட வார்த்தைகளுக்கான அர்த்தம் ஓரிரு எழுத்து மாற்றங்களால் ஏற்படும்..... அதாவது Doubtful என்றால் சந்தேகமான என்றும் Doubtfully என்றால் சந்தேகமாக என்றும் அர்த்தம்... இதை தாய்மொழி அன்றீ வேறெப்படியும் புரியவைக்கமுடியாது.... மேலும் ஒருமுறை நினைவுறுத்துகிறேன். இது கற்பித்தலின் போது....

நன்றி

சக்திவேல்
06-10-2007, 04:44 PM
கோபத்தை நாம் சரியான முறையில் வெளிபடுத்தாதபோது அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி கோபம் என்பதை மிக கொடுமையான உணர்ச்சியாக நமக்கு தோன்ற செய்துவிடுகிறது. இந்த கோபத்தையே சரியான முறையில் பயன்படுத்தினால் நிச்சயம் நல்ல பயன்கள் கிடைக்கும்.

நூற்றில் ஒரு வார்த்தை தளபதியாரே. கோபம் மனிதனுக்கு தேவைதான், இது ஆளுமையின் ஒருஅங்கம் ஆகும், சரியான முறையில் பயன்படுத்தினால் நல்ல நன்மையான விளைவுகளை கொனரலாம்.

அதேபோல கோபத்தை கட்டுப்படுத்துவதும் இன்றியமையாத ஒன்று என்பதை விளக்கிய கதையும் அருமை.

கடைசியாக இல்லாளுடன் கொன்ட கோபம், அதன் பிறகான சமாதானம், அந்தநேரத்தில் நீங்கள் இருவரும் எப்படிப்பட்ட சந்தோஷமான மனநிலையிலிருநிருப்பீர்கள் என்று உணரமுடிகிறது.

நான் எதிர்பார்த்த பதிலையே தநிருக்கின்றீர்கள் தளபதியாரே. தாமதமாக கருத்து சொன்னதுக்கு மண்ணிக்கவும்

தளபதி
07-10-2007, 04:16 AM
தளபதி உங்கள் அன்றைய நிலை தான்
இன்று எனக்கு எழுத முடிகிற அளவுக்கு
கதைக்க முடிவதில்லை எங்கே பிழை விட்டுவிடுவனோ என் :redface:

பாவம் என் ஆங்கில வாத்தியார் இரண்டு போடு போட்டும்
இன்னும் திருந்தவே இல்லை :icon_rollout:

பதில் அருமை தளபதி வாழ்த்துக்கள்

இன்றே பேச ஆரம்பித்து விடுங்கள். உங்களுக்கு நல்ல நண்பராய் தேர்ந்தெடுத்து அவரிடம் பேச ஆரம்பித்து விடுங்கள். பேச பேச வாக்கியங்கள் உங்கள் உள் பதிந்து சீக்கிரமே வெகு சுலபமாக பேச ஆரம்பித்துவிடுவீர்கள். வாழ்த்துக்கள்.

ராஜா
07-10-2007, 05:09 AM
பணிச்சுமை காரணமாக அதிகமாக வர இயலவில்லை..

பதிலளித்தோர் அனைவருக்கும் பாராட்டுகள்..

அன்பின் அமர்.. எல்லோரும் பதிலளித்துவிட்டார்களா..?

அன்புரசிகன்
07-10-2007, 05:28 AM
:confused:

பயம் ஒரு காரணமாய் இருக்கலாம்உதாரணத்துக்கு நான் இலங்கையை எடுக்கிறன்..இஞ்சை எல்லாம் எந்த பைக்குள்ளை என்ன குண்டு இருக்கும் எண்டே தெரியேலை....

நம்மூரின் கொஞ்சும் பேச்சுப்பைந்தமிழ் கண்டு மனம் மகிழ்ந்தேன்....

உங்களின் பதிலில் உள்ள நியாயத்தை கண்டேன்....
நம்நாட்டில் எத்தனையோ பிரச்சனை... அதில் இதுவேறே என்று நகர்ந்திடுவர்.

நன்றி இனியவள்....

சுகந்தப்ரீதன்
07-10-2007, 09:18 AM
ஆண்களின் பார்வையில்
வாழ்ந்தாலும் ஏசும்..
தாழ்ந்தாலும் ஏசும் உலகம் இது
வரதட்சணை வாங்காமல் திருமணம் மாப்பிள்ளைக்கு ஏதோ குறையுள்ளது என்று சொல்லுவார்கள்..வாங்கினால் இவ்வளவு வாங்குகிறார்களே என்பார்கள்..எனக்கு தெரிந்து எந்த ஆணும் வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்தது கிடையாது..அதை எந்த பெற்றோரும் விரும்புவதும் கிடையாது..

என்னை பொறுத்தவரை திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் எப்படி திருட்டை ஒழிக்க முடியாதோ அது போல இதுவும்

எதிர்தரப்பு நியாயத்தையும் மிக அருமையாக கூறி இருக்கீங்க... வாழ்த்துக்கள்... அப்புறம் கடைசியில எல்லாரையும் திருடன்னு சொல்லிட்டீங்க... என்ன திருடன் யாருக்கும் தெரியாம கொள்ளையடிப்பான்... இங்கே பந்தலிட்டு பந்திபோட்டு ஊரகூட்டி எல்லோர் முன்னாலயும் கொள்ளை அடிக்கிறாங்க.. ஆனாலும் இதுவும் திருட்டுதான்... ஒத்துக்குறேன் உங்க கருத்தை..!

தளபதி
07-10-2007, 09:47 AM
நூற்றில் ஒரு வார்த்தை தளபதியாரே. கோபம் மனிதனுக்கு தேவைதான், இது ஆளுமையின் ஒருஅங்கம் ஆகும், சரியான முறையில் பயன்படுத்தினால் நல்ல நன்மையான விளைவுகளை கொனரலாம்.

அதேபோல கோபத்தை கட்டுப்படுத்துவதும் இன்றியமையாத ஒன்று என்பதை விளக்கிய கதையும் அருமை.

நன்றி சக்திவேல். எங்கே தாங்கள் பதில் தராமல் விட்டுவிடுவீர்களோ என்று உம்மென்று உட்கார்ந்திருந்தேன். நல்லவேளை வந்து பதில் தந்து என்னை என் "உம்"மிலிருந்து காப்பாற்றிவிட்டீர்கள். கேள்வியாளரிடமிருந்து வாங்கப்படும் பாராட்டின் மூலம் எனது பதில் முழுமையடைகிறது. நன்றி.

சிவா.ஜி
07-10-2007, 09:49 AM
ஆனால் என்னைக் கேள்வி கேட்ட அன்புக்கு என்மேல் என்ன கோபமோ என் பதிலை எட்டிக்கூடபார்க்கவில்லை....நானும் உம்மென்றுதான் உட்கார்ந்திருக்கிறேன்...எங்கே அன்பு என்று..

இனியவள்
07-10-2007, 09:49 AM
சும்மா நக்கல் பன்ன தான் மேலே அவ்வாறு எழுதினேன் :icon_rollout:

வாத்தியாரே உங்களிடம் எனக்கு பிடித்ததே
இது தான்

இனியவள்
07-10-2007, 09:51 AM
நம்மூரின் கொஞ்சும் பேச்சுப்பைந்தமிழ் கண்டு மனம் மகிழ்ந்தேன்....
உங்களின் பதிலில் உள்ள நியாயத்தை கண்டேன்....
நம்நாட்டில் எத்தனையோ பிரச்சனை... அதில் இதுவேறே என்று நகர்ந்திடுவர். நன்றி இனியவள்....

நன்றி அன்பு..

இனியவள்
07-10-2007, 09:52 AM
ஆனால் என்னைக் கேள்வி கேட்ட அன்புக்கு என்மேல் என்ன கோபமோ என் பதிலை எட்டிக்கூடபார்க்கவில்லை....நானும் உம்மென்றுதான் உட்கார்ந்திருக்கிறேன்...எங்கே அன்பு என்று..

வருவார் அன்பு வருவார்
சிவாவின் பதிலுக்கு பதில்
கூற அன்பு வருவார்

"உம்"மென்று எல்லாம் இருக்க கூடாது
சிவா நான் மிட்டாய் வாங்கித் தாரன்
எங்கை சிரியுங்க பார்ப்பம் :icon_rollout:

தளபதி
07-10-2007, 09:57 AM
ஆனால் என்னைக் கேள்வி கேட்ட அன்புக்கு என்மேல் என்ன கோபமோ என் பதிலை எட்டிக்கூடபார்க்கவில்லை....நானும் உம்மென்றுதான் உட்கார்ந்திருக்கிறேன்...எங்கே அன்பு என்று..

சிலசமயம் உங்கள் பதில்கள் "குபீர்" என்று சிரிப்பைக் கிளப்பிவிடும். இதைப் படித்த மாத்திரத்தில் குபீரென்று சிரித்து வைத்தேன். பக்கத்தில் அடுத்த தடுப்பில் உட்கார்ந்திருந்த ஒரு சவுதி "என்ன?" என்று கேட்க நான் தமிழில் "சும்மா!!" என்றேன். அவன் இன்னும் விழித்துக்கொண்டிருக்கிறான்.

சிவா.ஜி
07-10-2007, 10:03 AM
அதுசரி சவுதியிடம் சும்மா என்று சொன்னால் எப்படி விழிக்காமலிருப்பான்...ஒருவேளை அது அவன் காதில் உருமா(அரபியில் பெண் என்ற் பொருள்)என்று காதில் விழுந்திருக்குமோ...

மலர்
07-10-2007, 10:03 AM
வருவார் அன்பு வருவார்
சிவாவின் பதிலுக்கு பதில்
கூற அன்பு வருவார்

"உம்"மென்று எல்லாம் இருக்க கூடாது
சிவா நான் மிட்டாய் வாங்கித் தாரன்
எங்கை சிரியுங்க பார்ப்பம் :icon_rollout:

இனியா எனக்கும்....
பல்லிமிட்டாய், குச்சி மிட்டாய்
எதுவா இருந்தாலும் எனக்கும் வேணும்...

சிவா.ஜி
07-10-2007, 10:04 AM
வருவார் அன்பு வருவார்
சிவாவின் பதிலுக்கு பதில்
கூற அன்பு வருவார்

"உம்"மென்று எல்லாம் இருக்க கூடாது
சிவா நான் மிட்டாய் வாங்கித் தாரன்
எங்கை சிரியுங்க பார்ப்பம் :icon_rollout:

ஹைய்யா மித்தாயா.....தா தா....:lachen001:

அன்புரசிகன்
07-10-2007, 10:06 AM
ஆனால் என்னைக் கேள்வி கேட்ட அன்புக்கு என்மேல் என்ன கோபமோ என் பதிலை எட்டிக்கூடபார்க்கவில்லை....நானும் உம்மென்றுதான் உட்கார்ந்திருக்கிறேன்...எங்கே அன்பு என்று..

ஓ...... நீங்க பதில் போட்டதை கவனிக்கவில்லை என்று சொல்ல வில்லை. அன்று நான் சற்று வேலைப்பளுவுடன் இருந்ததால் வாசித்துவிட்டு பதில் போடாது சென்றுவிட்டேன். பிறகு மறந்தெ விட்டேன். (உங்களை அல்ல... பதில் போடவேண்டும் என்பதை) மன்னிக்க....

அடிக்கடி இப்படி பொருட்களை தொலைப்பது..பெரும்பாலும் குழப்பத்திலிருக்கும்போதுதான்.
சில சந்தர்ப்பங்களில் நம் சிந்தனையைக் கலைக்கும் விதமாக ......

ஆக கவனக்கலைப்பான்களால் தொல்லை என்கிறீர்கள்.... ஆனால் சிலரை நீங்கள் என்னதான் அவர்களின் கவனத்தை சிதறடிக்க செய்தாலும் இறுதியில் தங்களின் பொருளை மறக்காது எடுத்துச்செல்வது மட்டுமல்லாது அதற்கு போனஸாக இன்னொன்றையும் எடுத்துச்சென்றுவிடுகின்றனரே.... :D

நன்றி சிவாஜி.

(பொதுவாகக் கேட்டதால் தப்பித்தேன்...நான் தொலைத்ததற்கான சில காரணங்களைக் கேட்டிருந்தால்...அதை நானும் சத்திய சந்தனாக இங்கு சொல்லியிருந்தால்...அதை என் மனைவி படிக்கும் சந்தர்ப்பம் நேர்ந்துவிட்டால்.....)

உங்கள் மனைவியின் மின்னஞ்சல் முகவரியைத்தரமுடியுமா??? :D

தளபதி
07-10-2007, 10:09 AM
அதுசரி சவுதியிடம் சும்மா என்று சொன்னால் எப்படி விழிக்காமலிருப்பான்...ஒருவேளை அது அவன் காதில் உருமா(அரபியில் பெண் என்ற் பொருள்)என்று காதில் விழுந்திருக்குமோ...

ஆகா! மறுபடியும் கிளம்பிட்டீங்களா!! இன்னைக்கு அந்த சவுதியிடம் அடிவாங்கி வைக்காமல் விடமாட்டீர்கள் போல இருக்கே. சரி எஸ்கேப் ஆகிடவேண்டியது தான். எதுவாக இருந்தாலும் 2மணிக்குமேல் பார்க்கவேண்டியதுதான்.

தளபதி
07-10-2007, 10:15 AM
ஓ...... நீங்க பதில் போட்டதை கவனிக்கவில்லை என்று சொல்ல வில்லை. அன்று நான் தமிழ் சற்று வேலைப்பளுவுடன் இருந்ததால் வாசித்துவிட்டு பதில் போடாது சென்றுவிட்டேன். ....

:D

என்னது???!! தமிழுக்கு வேலைப் பளுவா?? நீங்களும் தமிழும் வேலைபளுவுடன் இருந்தீர்களா?? தலை சுற்றுகிறது நண்பரே!! அடடே, எனக்கு என் முதுகு தெரியுதே!! நண்பரே!!

(நடிகர் விவேக் பாணியில் படிக்கவும். ..சும்மா.. கலாய்ப்பதற்காக!!)

சிவா.ஜி
07-10-2007, 10:17 AM
ஆக கவனக்கலைப்பான்களால் தொல்லை என்கிறீர்கள்.... ஆனால் சிலரை நீங்கள் என்னதான் அவர்களின் கவனத்தை சிதறடிக்க செய்தாலும் இறுதியில் தங்களின் பொருளை மறக்காது எடுத்துச்செல்வது மட்டுமல்லாது அதற்கு போனஸாக இன்னொன்றையும் எடுத்துச்சென்றுவிடுகின்றனரே.... :D

சில நேரங்களில் அதைபோன்றவர்கள் கூட நாம் பொருட்க்களைத் தொலைப்பதற்கு காரணமாக இருக்கலாமல்லவா...

உங்கள் மனைவியின் மின்னஞ்சல் முகவரியைத்தரமுடியுமா??? :D

என்னவோ இங்கு எழுதியிருக்கிறது..ஆனால் எழுத்து தெளிவாகத் தெரியவில்லை....நிர்வாகிகளே என்ன பிரச்சனை என்று பார்க்க முடியுமா?:icon_ush:

அன்புரசிகன்
07-10-2007, 10:23 AM
என்னது???!! தமிழுக்கு வேலைப் பளுவா?? நீங்களும் தமிழும் வேலைபளுவுடன் இருந்தீர்களா?? தலை சுற்றுகிறது நண்பரே!! அடடே, எனக்கு என் முதுகு தெரியுதே!! நண்பரே!!

(நடிகர் விவேக் பாணியில் படிக்கவும். ..சும்மா.. கலாய்ப்பதற்காக!!)

ஆனைக்கே அடி சறுக்குகிறது. நமக்கு சறுக்காதா... பொறுத்தருள்க தளபதியே...

என்னவோ இங்கு எழுதியிருக்கிறது..ஆனால் எழுத்து தெளிவாகத் தெரியவில்லை....நிர்வாகிகளே என்ன பிரச்சனை என்று பார்க்க முடியுமா?:icon_ush:

நல்ல சமாளிபிக்கேஷன்... :D :D :D

இனியவள்
07-10-2007, 02:05 PM
இனியா எனக்கும்....
பல்லிமிட்டாய், குச்சி மிட்டாய்
எதுவா இருந்தாலும் எனக்கும் வேணும்...

ஆஹா குச்சி ஜஸ் வேண்டாமா மலர்

இனியவள்
07-10-2007, 02:07 PM
ஹைய்யா மித்தாயா.....தா தா....:lachen001:

சிவா எதுக்கு தாதா வைக் கூப்பிடிறீயள்

மலர்
07-10-2007, 02:10 PM
ஆஹா குச்சி ஜஸ் வேண்டாமா மலர்

அதுவும் வேணும் தான்...

இனியவள்
07-10-2007, 02:13 PM
அதுவும் வேணும் தா...

அடடா மலரு என்ன இது
சின்ன பிள்ளைத் தனமா என் பெயரைச்
சொல்லி குச்சி ஜஸ் என்ன கப் ஜஸ்சே வாங்கி
சாப்பிடுங்க காசு எல்லாம் பிறகு அனுப்பி வைக்கிறன் :icon_rollout:

மலர்
07-10-2007, 02:14 PM
அய்யோ இனியவள்...

பச்சை சட்டை யாரோ எட்டி பாக்குற மாதிரி இருக்கு...

இங்க அரட்டை எல்லாம் அடிக்கப்படாது......

தாமரை
08-10-2007, 04:27 AM
"ஆம், நீங்கள் ஆங்கிலத்தில் பேசும் போது, பிறர் பேசுவதை தமிழில் மொழிபெயர்க்கிறீர்கள், பிறகு புரிந்து கொள்கிறீர்கள், பிறகு தமிழில் அதற்கு பதில் யோசித்து, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறீர்கள், அதை வெளியே பேசுகிறீர்கள். இதற்கு நிறைய நேரம் பிடிப்பதனால் நீங்கள் பேசுவதை விட எழுதுவதில் ஆர்வம் காட்டுகிறீர்கள். உங்கள் உள்ளும் என்னைவிட நல்ல ஆங்கிலம் இருக்கிறது, அதை பயன்படுத்துவதில்தான் குழப்பம். நாம் சரளமாக ஒரு மொழியில் பேசவேண்டுமெனில் அந்த மொழியிலேயே சிந்திக்கவேண்டும், அதன் வழியிலேயே பேசவேண்டும், இடையில் தாய்மொழிக்கு மாற்றி பேசும்போது நாம் வார்த்தைகள் இல்லாமல் தடுமாறி தோற்றதாய் உணருவோம். என்ன சொல்வது என்பதை ஆங்கிலத்திலேயே யோசித்து பேசுங்கள்" என்றார்.

.

எனது அனுபவம் என்னவெனில்..

இதேதான்..

பென்ஸூடன் என்னால் ஆங்கிலத்திலோ ஹிந்தியிலோ, கன்னடத்திலோ உரையாட இயலாது. அவரைக் கண்டவுடனேயே எனது தமிழ்ச் செல்கள் உயித்துக் கொள்கின்றன, அதேபோல என்னுடைய மும்பை நண்பர்களைக் காணும் பொழுது ஹிந்திச் செல்கள் உயிர்க்கின்றன. ஒருவருடன் நான் இயல்பாக எம்மொழியில் பேசுகின்றேனோ அதே மொழியில் சிந்திக்கிறேன். அவர்களின் வார்த்தைகளை அப்படியே உள்வாங்கிக் கொள்கிறேன். மொழிமாற்றம் என்பது 100 சதவிகித நல்ல மொழியைத் தருவதில்லை. ஏனென்றால் ஒவ்வொரு மொழிக்கும் அதற்கே உரிய சமுதாயமும் பண்பாடும் அதற்கே உரிய வழக்குச் சொற்கள், பழமொழிகள், இலக்கணங்கள் எனத் தனித்தன்மை உண்டு.

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம் என்பதை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்வீர்கள்? யோசித்துப் பாருங்கள்.. புரியும்...

மன்மதன்
08-10-2007, 07:06 PM
நான் விடுமுறையில் இருப்பதால் தாமதமான பதில்..மன்னிக்க..

அண்ணன் மன்மதன்: மாற்றம் என்பது மாற்றமில்லாதது. தகவல் தொழில் நுட்பம் மூலம் மட்டும் தான் காதல் என்கிற நிலை வரும் என்று நீங்கள் கருதுகிறீர்களா இல்லையா? ஏன்?

மன்மதன் என்ற பெயருக்காக இந்த கேள்வியா?:D

மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது... உண்மை.

நீங்க கேட்க வருவது, இனி எஸ்.எம்,எஸ், இண்டர்நெட் போன்றவற்றின் மூலமாக மட்டுமே காதல் பிறக்கும் என்றுதானே.. இருக்கலாம். இண்டர்நெட் மூலமாக கல்யாணமே நடக்கும் போது காதல் தோன்றாதா.?? ஆனால் தகவல் தொழில் நுட்பம் மூலம் மட்டுமே காதல் என்ற நிலை வராது..முன்னெல்லாம் காதல் கடிதங்கள் மூலம் காதலை வெளிப்படுத்தினர்.. இப்பொழுது தொழில் நுட்பம் வளர்ச்சியடையும் போது அதையும் யூஸ் பண்ணிக்கிறாங்க.

காதல் எந்த உருவிலும் வரும்.. எந்த ஊடகத்திலும் வரும்.. அக்காலத்தில் நளன் அன்னம் விடு தூது அனுப்பியதும் ஒரு ஊடகம்தானே..?

ஊடகம் எதுவாக இருந்தால் என்ன..? உருவாகும் காதல் உண்மையாக இருந்தால் சரி.:)

இந்தக்கேள்விக்கு மற்றவர்களின் பதில்களையும் எதிர்பார்க்கிறேன்..

lolluvathiyar
09-10-2007, 06:26 AM
ஊடகம் எதுவாக இருந்தால் என்ன..? உருவாகும் காதல் உண்மையாக இருந்தால் சரி.:)

அருமையான வரிகள். ஊடகத்தை பொருத்தும் அமையுமல்லவா. அந்த விசயத்தில் இனையம் என்பது 99 சதவீதம் உன்மையானதாக அமையாது

mania
09-10-2007, 06:29 AM
அண்ணன் மணியா:[/COLOR] உங்களை நான் சென்னையில் சந்தித்தபோது நான் உங்களுக்காக ஊகித்த உருவமும் (உங்கள் குரலின் அடிப்படையில்) நேரில் கண்ட உருவத்திற்கும் நிறையவே வேறுபாடு இருந்தது. வாழ்க்கையில் இவ்வாறு ஊகிப்பது சரியா தவறா? நீங்கள் இவ்வாறு ஊகித்து நடந்த நகைச்சுவைச்சம்பவம் ஒன்று சொல்லுங்களேன்.[/COLOR][/B]

பிரிய அன்பு, நீ ஊகிப்பது ஒன்றும் தவறே இல்லை. உண்மையில் சொல்லப்போனால் முகம் தெரியாத எந்த நபருடன் பேசும்போதும் நாம் ஒரு உருவத்தை மனதில் கற்பனை செய்துகொள்வோம் (அவரின் குரலை வைத்து).
ஆனால் அது நம் யூகத்துக்கு சரியாக இருக்கும் என்பது அவசியமில்லை. ஏன் நானும் உன் குரலை வைத்து உன்னை ஒருமாதிரி கற்பனை செய்து வைத்திருந்தேன்....ஆனால் நேரிலே பார்க்கும்போது,.....!!!!???
அப்படியே சரியாக இருந்தாலும் அது ஒன்றும் பெரிய சாதனை என்று சொல்லிக்கொள்ள முடியாது என்பது என் கருத்து.!!!!
உன்னுடைய குரலும் உன்னுடைய தோற்றமுமே என்னை மனதுக்குள் நகைக்க வைத்தது...!!!!அது போல நிறையமுறை நடந்திருக்கிறது.....வேறு ஒரு சம்பவமும் இப்போதைக்கு நியாபகம் வரவில்லை.
(தாமத பதிலுக்கு மன்னிக்கவும்)
அன்புடன்
மணியா..

சிவா.ஜி
09-10-2007, 07:14 AM
[SIZE="1"]
ஊடகம் எதுவாக இருந்தால் என்ன..? உருவாகும் காதல் உண்மையாக இருந்தால் சரி.:)
இந்தக்கேள்விக்கு மற்றவர்களின் பதில்களையும் எதிர்பார்க்கிறேன்..

மிக அருமையான கருத்து.ஆதி முதலே காதலுக்கு அஸ்திவாரமிடுவது...ஒரு முக்கியமான ஊடகம்....பார்வை பறிமாற்றம். அது இல்லாத இண்டெர்னெட் காதல்..சரியான காதலே அல்ல.ஒரு சிறிய வாழ்த்து அட்டை அவனுடையதோ,அவளுடையதோ கையெழுத்தை தாங்கிவந்தால்....அதன் மகத்துவமே தனிதான்.
தகவல் தொழில்நுட்பம் எத்தனை வளர்ந்தாலும்..கண்னோடு கண் பேசும் கலை அழியாது.

சுட்டிபையன்
09-10-2007, 08:30 AM
4. சுட்டிபையன்
தனிஈழம் விரும்பும் ஈழதமிழ் மைந்தனே, உன்னிடம் ஒரு விசித்திரமான கேள்வி தொடுக்கிறேன். நல்ல குணம் படைத்த ஒரு சிங்கள பெண் உனக்கு காதல் கடிதம் தந்து விட்டாள். நீங்கள் விரும்பும் தகுதிகள் அனைத்தும் இருகிறது. உங்கள் முடிவு என்னவாக இருக்கும் (மொழிக்கு முதலிடமா காதலுக்கு முதலிடமா). (ஒழுங்கா வந்து பதில் சொல்லனும் கனவில் மூழ்க கூடாது)

.

எல்லோரும் மன்னிக்கனும் பதில் கொஞ்சம் (நீங்க எல்லாம் திட்டுறது புரியுது,) சரி சரி ரொம்பவே பிந்திட்டுது.

காதலுக்கும், போராட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை. இன்று வரை நான் சிங்களவர்களை சகோதரர்கள் போலவே பார்க்கிறேன் அப்படித்தான் அவர்களுடன் பழகுவது கூடா அப்படித்தான். அதிகாரம் பிடித்த சிலர் தமிழர்களை எதிர்ப்பதற்க்காகா எல்லோரையும் எதிர்க்க முடியுமா? எனக்கு பிடித்ததைப்போல் உள்ள ஒரு சிங்களப்பெண் தனது காதலை சொல்லி இருந்தால் எனக்கு பிடித்திருந்தால் நிச்சையம் ஏற்றுக் கொள்வேன், அதே போல் அந்த காதல் பிடிக்காமல் நிராகரிப்பேனாயினா அது நிச்சையம் மொழி என்ற ஒரு காரணத்தினால் மட்டும் இருக்காது. மொழி, தேசம், இனம், மதம், அந்தஸ்த்து, பணம் எல்லாவற்ரையும் கடந்த தூய அன்புதான் காதல் அந்த ஒரு காதலை இந்த விடயத்திற்க்காக நிராகரிக்கமாட்டேன்.

( யாரும் அப்படி கடிதம் குடுக்கிறாங்க இல்லையே வாத்தியாரு :icon_smokeing::062802sleep_prv::music-smiley-009::medium-smiley-111::music-smiley-008::food-smiley-022:

ராஜா
09-10-2007, 02:06 PM
ஆர்வமுடன் வந்து பதிலளித்தோர் அனைவருக்கும் பணிவான நன்றிகள்..!

அன்புரசிகன்
09-10-2007, 02:11 PM
ஊடகம் எதுவாக இருந்தால் என்ன..? உருவாகும் காதல் உண்மையாக இருந்தால் சரி.:)

ஏற்கிறேன்....

சரி... உங்கள் அனுபவம் எப்படி??? அன்னம் விடுதூதா? புறா விடு தூதா அல்லது sms விடு தூதா?

சிவா.ஜி
09-10-2007, 02:13 PM
ஏற்கிறேன்....

சரி... உங்கள் அனுபவம் எப்படி??? அன்னம் விடுதூதா? புறா விடு தூதா அல்லது sms விடு தூதா?

இந்த விடயத்தில் மன்மதன் எப்போதும் 'கணை விடு' தூதுதான்..அன்பு.

அன்புரசிகன்
09-10-2007, 02:14 PM
பிரிய அன்பு, நீ ஊகிப்பது ஒன்றும் தவறே இல்லை. உண்மையில் சொல்லப்போனால் முகம் தெரியாத எந்த நபருடன் பேசும்போதும் நாம் ஒரு உருவத்தை மனதில் கற்பனை செய்துகொள்வோம் (அவரின் குரலை வைத்து).

நன்றி அண்ணா.... ஆனால் என்னைப்பார்த்தவுடன் கிட்டத்தட்ட இவரை மாதிரி இருப்பான் என்று என்று ஊகித்திருப்பீர்களே... அந்த இவர் யார்???

அல்லிராணி
09-10-2007, 02:21 PM
இந்த விடயத்தில் மன்மதன் எப்போதும் 'கணை விடு' தூதுதான்..அன்பு.

அப்போ மாறன் கணை மகேசனை நோக்கிச் சென்ற காரணம் என்ன சிவாஜி??

சிவா.ஜி
09-10-2007, 02:23 PM
அப்போ மாறன் கணை மகேசனை நோக்கிச் சென்ற காரணம் என்ன சிவாஜி??

மன்மதன் என்றாலே எனக்கு காதல் கணைதான் நினைவுக்கு வருகிறது அல்லிராணி.புராணங்களில் நான் கொஞ்சம் வீக்.நீங்களே சொல்லுங்களேன்...தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறது.

அல்லிராணி
09-10-2007, 02:26 PM
மன்மதன் விளக்கட்டும் பொறுப்போம்.. என் கேள்வியைத் தாங்கள் சரியாய் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன்..

மன்மதனின் கணை காதல் தூது என்றால் அது ஏன் ஆணை நோக்கி எய்யப்பட்டது?

சிவா.ஜி
09-10-2007, 02:29 PM
ஆண்களையேக் கவரும் அழகு படைத்தவரா மகேசன்...அல்லது மாறனின் காதலுக்கு தடையாயிருந்தாரா....

அல்லிராணி
09-10-2007, 02:35 PM
மன்மதன் அனைத்துக் கணைகளையும் மற்றவர் வேண்டுகோள் மற்றும் உத்தரவின் படியே ஏவுகிறான். இதுவரை மன்மதன் தன்னிச்சையாய் முடிவெடுத்து யார்மீதும் கணைசெலுத்தியதாய் கதையில்லை..

காமனின் கணை ஒரு காதல் கூரியர். (நல்ல சினிமா தலைப்பாய் இருக்கா! ஆனால் வைக்க முடியாது. வரிவிலக்கு கிடைக்காது,)

சிவா.ஜி
09-10-2007, 02:38 PM
ஓ...இப்போது புரிகிறது....மாறனின் கணை பாய்ந்ததும் காதலுணர்வு தோன்றிவிடும்....ஆக மாறனின் கணை...ஒரு கிரியாஊக்கி...அப்படித்தானே

அல்லிராணி
09-10-2007, 02:42 PM
ஓ...இப்போது புரிகிறது....மாறனின் கணை பாய்ந்ததும் காதலுணர்வு தோன்றிவிடும்....ஆக மாறனின் கணை...ஒரு கிரியாஊக்கி...அப்படித்தானே

கிரியா ஊக்கி.. கிறுகிறுக்க வைத்து பைத்தியமாய் திரிய வைக்கும் அறியா சிறுக்கி பின்னால்..:icon_rollout:

lolluvathiyar
09-10-2007, 03:28 PM
மொழி, தேசம், இனம், மதம், அந்தஸ்த்து, பணம் எல்லாவற்ரையும் கடந்த தூய அன்புதான் காதல் அந்த ஒரு காதலை இந்த விடயத்திற்க்காக நிராகரிக்கமாட்டேன்.

தாமதமான பதிலாக இருன்தாலும் மிகவும் தரமான பதில் த ந்த சுட்டியை மனமார பாராட்டுகிறேன்.

( யாரும் அப்படி கடிதம் குடுக்கிறாங்க இல்லையே வாத்தியாரு

அப்படி ஒரு வருத்தம் இருந்தா கவலை படாதீங்க, லொள்ளபுரி வரலாற்றில் அப்படி ஒரு காதலியை உங்களுக்கு ஏற்பாடு பன்னி விடுகிறேன்

அமரன்
09-10-2007, 03:32 PM
ராஜா அண்ணா!
அலுவலக விடுமுறையில் இருந்தாலும் தனிப்பட்ட வேலைகள் அதிகம். அன்புரசிகனின் கேள்விகளுக்கு பதிலகள் வந்துவிட்டன..அடுத்த கேள்வியாளரை நாளை அழைக்கலாம் என நினைக்கின்றேன். தாமததிற்கு அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன்.

ராஜா
11-10-2007, 07:09 AM
அனைவருக்கும் நன்றி..!

அடுத்த கேள்வியாளர்..... அன்பு அமரின் கட்டளைப்படி....

ஹி..ஹி.. நாந்தானுங்கோ..!

அமரன்
11-10-2007, 07:18 AM
அழைப்பை மறுக்காது ஏற்றமைக்கு நன்றி அண்ணா. கலக்குங்கள்..முன் வாழ்த்துகள்.

ராஜா
11-10-2007, 08:26 AM
அன்புச் சொந்தங்களுக்கான கேள்விகள்..

1. மணியா அண்ணா :

உங்கள் நகைச்சுவை உணர்வு அபரிமிதமானது.. அடுத்தவர்களின் பதில்களை வைத்தே வார்த்தைகளில் விளையாடி அசத்துகிறீர்கள்.. உங்கள் இரசிகன் நான்.. இனி கேள்வி..

#) உங்களுக்கு பிடித்த தமிழ் நகைச்சுவை நடிகர்கள் யார்.. யார்..?
#)அவர்களிடம் உங்களுக்குப் பிடித்த அம்சங்கள் என்னென்ன..?
#) அவர்கள் நடித்ததில் மிகவும் பிடித்த காட்சிகள் எவை..?
________________________________________________________________

2. வாத்தியார் :

எந்த பொருள் குறித்தும் விரிவாக, திறமையாக விவாதிப்பவர் நீங்கள்..

#) ராமர் பாலம் இருப்பது உண்மை..
#) ராமர் பாலம் என்பது கற்பனை..

மேலே கண்ட இரு தலைப்புகளிலும் நாங்கள் ஏற்கும் வகையில் கருத்து தெரிவியுங்கள் பார்ப்போம்.
________________________________________________________________

3. ஷீ நிசி :

என் இளமைப்பருவ மாதிரியாக உங்களை நான் நினைப்பதுண்டு..

#) என்னை நேரில் கண்டிருக்கிறீர்கள்.. ஹி..ஹி.. என்னைப்பற்றி ஒரு கவிதை வரையுங்களேன்..[உரிமையுடன் கேட்கிறேன்.. விருப்பமில்லாவிட்டாலும் கவிதை சொல்லித்தான் ஆகவேண்டும்..:) ]
_________________________________________________________________

4. சிவாஜி :

உங்கள் பின்னூட்டங்கள் கண்டு உங்கள் பால் பெருமதிப்பு கொண்டிருக்கிறேன்..

#) இனப்பாகுபாடு,[பிறர் என்னும் எதிர் மனநிலையால், திறமைகளை கண்டுகொள்ளாதிருத்தல்], இனவெறி [தமர் என்னும் பாச மனநிலையால் திறமையற்றவர்களை சிபாரிசு மூலம் உயர் நிலைக்கு கொண்டு செல்லுதல்] இரண்டும் இந்திய முன்னேற்றத்தை பாதிக்கின்றன.

இவற்றைக் களைய வழியுண்டா.. உண்டெனில் என்னென்ன..?
_________________________________________________________________

5. பூமகள் :

பின்னூட்டத்தில் பின்னி பெடலெடுக்கும் நீங்கள் கவியரசி என்றும் தெரியும்..

#) நம் இளைய தலைமுறை கலாச்சாரம், பண்பாடு இவற்றிலிருந்து் வழுவாமல் எப்படி வாழ வேண்டும்..?

இதைக் கவியாகத் தாருங்கள்..அதுவும் பிரபல தமிழ்ப் பாடல் மெட்டில் அமைந்திருக்க வேண்டும்.. [[பாடல் தேர்வு : உங்கள் விருப்பம்]].
_________________________________________________________________

6 & 7. இனி & மலர் :

இருவருமே கலாட்டா சுந்தரிகள்.. அதிலும் மலர்... [அவருக்கு ஒரு பெயர் கூட வைத்திருக்கிறேன்.. ஹி..ஹி]

#) உங்களில் ஒருவர் ஒரு சிறுகதையின் முன்பகுதியை எழுத, அடுத்தவர் முடிக்க வேண்டும்.

[யார் முதலில் ஆரம்பிப்பது என்பது மட்டுமே இவ்விடயத்தில் உங்கள் இருவரின் தனிமடல் தொடர்பாக இருக்கும் என்று நம்புகிறேன்].
_________________________________________________________________

8. அக்னி :

திறனாய்வுப் புலிக்கு ஒரு எளிய கேள்வி..

#) இலங்கைப்பிரச்னை குறித்து ஒரு தெளிவான, சுருக்கமான திறனாய்வு.
முடிந்தால் தீர்வுக்கான வழிகள்.
_________________________________________________________________

9. அன்பு மாம்ஸ்.:

உங்களிடம் மறைந்திருக்கும் நகைச்சுவை உணர்வு குறித்து அறிந்தவன் நான்..

#) உங்களிடம் சினிமாவுக்கு கதை கேட்டு கமலஹாசன் வருகிறார்.. ராமாயணக் கதையை, அவர் அறியாமல் உங்கள் கதை போல மாற்றிச் சொல்ல வேண்டும். அதிலும், கமலுக்கு அனுமார் கதாபாத்திரம் என்பதைச் சொல்லி ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும்..

கலக்குங்க பார்க்கலாம்..!
_________________________________________________________________

10. JPL :

உங்களை நான் ஓரளவுக்கு அறிவேன்.. நேரில் சந்தித்துமிருக்கிறோம்..

நம் தமிழ் மன்றத்தில் கவிதைகளுக்கு சரியான திறனாய்வு செய்யப்படுகிறது. ஆனால் சில தளங்களில், செவ்வாய்க்கு அடுத்தது புதன் என்று பிய்த்துப் போட்டு எழுதினால் கூட "ஆஹா.. ஓஹோ" என்று பாராட்டி பின்னூட்டமிடுகிறார்கள்.. இது நல்ல பண்பு என்றாலும்கூட, கவிஞர்களுக்கு செய்யும் துரோகமில்லையா..? கவிதையின் தகுதிக்கு மீறிய பாராட்டுகளால், அவரின் சிந்தனையையும், வளர்ச்சியையும் பெருகவிடாமல் அழுத்தியே வைக்க்கிறோம் என்ற கருத்து சரியா..?
_________________________________________________________________

மன்னியுங்கள் உறவுகளே..

என் சிற்றறிவுக்கு எட்டியவரை கேட்டிருக்கிறேன்.. ஆனால் யாருக்கும் கடினமான கேள்விகள் இல்லை.. ஒருவேளை கடினமாகத் தோன்றினால்கூட சற்று சிந்தித்து, ஊக்கமுடன் முயலுங்கள்.. சிறப்பான விடையை உங்களால் தர முடியும்..

வாழ்த்துகள்..!

பென்ஸ்
11-10-2007, 09:09 AM
ராஜா.... மிக மிக அருமையான கேள்விகள்....
இந்த கேள்விக்கான பதிலுக்கு நான் காத்திருப்பேன் என்பதில் சந்தேகமில்லை...

சுகந்தப்ரீதன்
11-10-2007, 09:21 AM
ராஜா அண்ணா... வயதுக்குறிய முதிர்ச்சியும் உங்களுக்கே உரிய குறும்பும் கேள்வி முழுதும் காணப்படுகிறது... வாழ்த்துக்கள்..!

பூமகள்
11-10-2007, 09:30 AM
ராஜா அண்ணா...
கீழே இருந்து பாத்துட்டே வந்தேன்.. இனி மலர் பேர பாத்துட்டு, என் பேரு இருக்காதுன்னு நம்பி... மேல பார்த்தா...... பூமகள் என்று எம் பேரு....
என் மேல நீங்க வச்சிருக்கிற அன்பை இது காட்டுது. மிகுந்த நன்றிகள்.
பாட்டு எழுத சொல்றீங்க...... மெட்டும் கூடவே...சரி அண்ணா. முயற்சிக்கிறேன் அண்ணா..!!
பதிலோடு வருகிறேன்.

அன்புரசிகன்
11-10-2007, 09:41 AM
மாப்ளே.. மாப்ளே... மாப்பு.... வச்சுட்டாருய்யா அப்பு.............................................:medium-smiley-002:

அதுக்கு முதல்ல எனக்கு ராமாயணம் தெரிஞ்சிருக்க வேணுமே....
ராமா.....

அமரன்
11-10-2007, 09:53 AM
வித்தியாசமான கேள்விகள்...
ஆபத்து சிரிக்க சிந்திக்க வைக்கும் விதத்தில் அமைந்திருப்பது
எதிர்கொள்ளும் உறவுகளின் சாமர்த்திய எதிர்க்கணையை
ஆர்வத்துடன் எதிர்பார்க்க வைத்துவிட்டது....

சிவா.ஜி
11-10-2007, 12:38 PM
ராஜா சார் என்மீது வைத்திருக்கும் அன்புக்கும்,நம்பிக்கைக்கும் எப்படி ஒரு நல்ல பதிலைத் தரப்போகிறேன்......?கொஞ்சம் கஷ்டமான கேள்விதான்.சொல்வதில் கஷ்டமில்லை....ஆனால் சில உண்மைகளையும் சொல்லவேண்டியிருக்கும்...அதுதான் தயக்கமாக இருக்கிறது...இருந்தாலும்..என்னால் முயன்ற அளவு முயற்சிக்கிறேன். இணையம் வேறு மிகுந்த தொல்லைக்கொடுக்கிறது.

மலர்
11-10-2007, 02:25 PM
ஆகா ராஜா அண்ணா....
கவிதை எழுதாம எஸ்கேப் ஆனா கதை எழுத வச்சிட்டீங்களே..:icon_rollout::icon_rollout:
பாவம் நம் மன்ற மக்கள்.....:traurig001::traurig001:

இனியா ஓடியாங்கோ.......
நாம கதை எழுத ஸ்டார்ட் பண்ணலாம்

6 & 7. இனி & மலர் :
இருவருமே கலாட்டா சுந்தரிகள்.. அதிலும் மலர்... [அவருக்கு ஒரு பெயர் கூட வைத்திருக்கிறேன்.. ஹி..ஹி]

அண்ணா என்ன பேரு எனக்கு மட்டும் .... சீக்ரெட்டா முதல்ல

ஹீ..ஹீ.....இது தான் நம்ம மன்றத்துக்கே தெரியுமே அண்ணா
நான் அமைதியான பொண்ணு,ரொம்ப நல்ல பொண்ணுன்னு...

(நிறைய பேரு காதுல புகை வாரதுக்காக உண்மையை மறைக்க எல்லாம் முடியாது)

mania
11-10-2007, 03:06 PM
அன்பு ராஜா, வேலைப்பளு கொஞ்சம் அதிகமாக இருப்பதால் எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவை. கண்டிப்பாக பதில் தருகிறேன். நன்றி
அன்புடன்
மணியா...

ராஜா
11-10-2007, 03:25 PM
ராஜா.... மிக மிக அருமையான கேள்விகள்....
இந்த கேள்விக்கான பதிலுக்கு நான் காத்திருப்பேன் என்பதில் சந்தேகமில்லை...

நானும்... நானும்...!

நன்றி பென்ஸ்..!

ராஜா
11-10-2007, 03:31 PM
ராஜா அண்ணா... வயதுக்குறிய முதிர்ச்சியும் உங்களுக்கே உரிய குறும்பும் கேள்வி முழுதும் காணப்படுகிறது... வாழ்த்துக்கள்..!

நன்றி சுகந்தன்..!

[அடடடா... உங்களை விட்டுட்டேனே..!]

ராஜா
11-10-2007, 03:34 PM
ராஜா அண்ணா...
கீழே இருந்து பாத்துட்டே வந்தேன்.. இனி மலர் பேர பாத்துட்டு, என் பேரு இருக்காதுன்னு நம்பி... மேல பார்த்தா...... பூமகள் என்று எம் பேரு....
என் மேல நீங்க வச்சிருக்கிற அன்பை இது காட்டுது. மிகுந்த நன்றிகள்.
பாட்டு எழுத சொல்றீங்க...... மெட்டும் கூடவே...சரி அண்ணா. முயற்சிக்கிறேன் அண்ணா..!!
பதிலோடு வருகிறேன்.

நன்றி பூமகள்..!

தங்கள் முயற்சி நிச்சயம் வெற்றி பெற்று பாராட்டுகளை அள்ளும்.. !

ராஜா
11-10-2007, 03:38 PM
மாப்ளே.. மாப்ளே... மாப்பு.... வச்சுட்டாருய்யா அப்பு.............................................:medium-smiley-002:

அதுக்கு முதல்ல எனக்கு ராமாயணம் தெரிஞ்சிருக்க வேணுமே....
ராமா.....

இலங்கைக்காரருக்கு தெரியாத ராமாயணமா..? க்ளைமாக்சே உங்க ஏரியாவிலதானே மாம்ஸ் நடந்துச்சு..?

கதை விட ஆரம்பிங்க மாம்ஸ்..!

ராஜா
11-10-2007, 03:50 PM
வித்தியாசமான கேள்விகள்...
ஆபத்து சிரிக்க சிந்திக்க வைக்கும் விதத்தில் அமைந்திருப்பது
எதிர்கொள்ளும் உறவுகளின் சாமர்த்திய எதிர்க்கணையை
ஆர்வத்துடன் எதிர்பார்க்க வைத்துவிட்டது....

அன்பின் அமர்..!

நம்ம ஆளுக அனாயசமா எதிர்கொண்டு, அசத்தப்போறாங்க பாருங்க..!

ராஜா
11-10-2007, 03:53 PM
ராஜா சார் என்மீது வைத்திருக்கும் அன்புக்கும்,நம்பிக்கைக்கும் எப்படி ஒரு நல்ல பதிலைத் தரப்போகிறேன்......?கொஞ்சம் கஷ்டமான கேள்விதான்.சொல்வதில் கஷ்டமில்லை....ஆனால் சில உண்மைகளையும் சொல்லவேண்டியிருக்கும்...அதுதான் தயக்கமாக இருக்கிறது...இருந்தாலும்..என்னால் முயன்ற அளவு முயற்சிக்கிறேன். இணையம் வேறு மிகுந்த தொல்லைக்கொடுக்கிறது.

நன்றி சிவா..!

பொறுமையா வாங்க.. அருமையான பதிலைத் தாங்க..!

ராஜா
11-10-2007, 03:55 PM
ஆகா ராஜா அண்ணா....
கவிதை எழுதாம எஸ்கேப் ஆனா கதை எழுத வச்சிட்டீங்களே..:icon_rollout::icon_rollout:
பாவம் நம் மன்ற மக்கள்.....:traurig001::traurig001:

இனியா ஓடியாங்கோ.......
நாம கதை எழுத ஸ்டார்ட் பண்ணலாம்

அண்ணா என்ன பேரு எனக்கு மட்டும் .... சீக்ரெட்டா முதல்ல

ஹீ..ஹீ.....இது தான் நம்ம மன்றத்துக்கே தெரியுமே அண்ணா
நான் அமைதியான பொண்ணு,ரொம்ப நல்ல பொண்ணுன்னு...

(நிறைய பேரு காதுல புகை வாரதுக்காக உண்மையை மறைக்க எல்லாம் முடியாது)

நன்றி மலர்..!

உங்கள் ரெண்டுபேரின் கதை வால்க(ள்)..!

ராஜா
11-10-2007, 03:56 PM
அன்பு ராஜா, வேலைப்பளு கொஞ்சம் அதிகமாக இருப்பதால் எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவை. கண்டிப்பாக பதில் தருகிறேன். நன்றி
அன்புடன்
மணியா...

சரிங்க அண்ணா..!

இனியவள்
11-10-2007, 05:01 PM
நன்றி மலர்..!

உங்கள் ரெண்டுபேரின் கதை வால்க(ள்)..!

ராஜா அண்ணா

கதை கதை என்று சொல்லி
இப்படி மலரை புலம்ப விட்டுட்டீயளே

ஹீ ஹீ எப்படியோ மலரு ஆரம்பிச்சு வைப்பா

நான் மங்களம் பாடி முடிச்சு வைக்கிறன் கதையை :icon_rollout:

அமரன்
11-10-2007, 05:04 PM
ஏதோ எம்மை முடிக்காத அளவுக்கு விளக்கமாக சொல்லணும்னா மலரின் சமையல் ரேஞ்சுக்கு இல்லைனா சரி இனியவள்...

இனியவள்
11-10-2007, 05:10 PM
ஏதோ எம்மை முடிக்காத அளவுக்கு விளக்கமாக சொல்லணும்னா மலரின் சமையல் ரேஞ்சுக்கு இல்லைனா சரி இனியவள்...

ஆஹா அமர்

கவலைப் படாதையுங்க
உங்கட உயிருக்கு நாங்கள்
உத்தரவாதம் :D:D:D

அமரன்
11-10-2007, 05:15 PM
நான் என்று மட்டும் சொல்லுங்க இனியவள்...மலர் கொலைவெறியோட இருக்காங்க..

மலர்
11-10-2007, 05:17 PM
இனியாவையும் என்னையும் பிரிக்க நினைக்கும் அமரை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.......

ஷீ-நிசி
12-10-2007, 01:26 PM
ஆஹா.. மிக அழகான, அசர வைக்கும் கேள்விகள். இன்றுதான் பார்த்தேன். விரைவில் எழுதுகிறேன் ராஜா சார்.

அறிஞர்
12-10-2007, 01:28 PM
ராஜா அண்ணாவின் கேள்விகள் அருமை.... பதில்களை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.

jpl
12-10-2007, 04:58 PM
நன்றி ராஜா,,,,,,,,,,,,,
பணிப்பளுவால் இணையம் வருவதே அரிதாகிவிட்ட படியால் மன்றம்
வர இயலவில்லை.தங்களின் கேள்வி:

நம் தமிழ் மன்றத்தில் கவிதைகளுக்கு சரியான திறனாய்வு செய்யப்படுகிறது. ஆனால் சில தளங்களில், செவ்வாய்க்கு அடுத்தது புதன் என்று பிய்த்துப் போட்டு எழுதினால் கூட "ஆஹா.. ஓஹோ" என்று பாராட்டி பின்னூட்டமிடுகிறார்கள்.. இது நல்ல பண்பு என்றாலும்கூட, கவிஞர்களுக்கு செய்யும் துரோகமில்லையா..? கவிதையின் தகுதிக்கு மீறிய பாராட்டுகளால், அவரின் சிந்தனையையும், வளர்ச்சியையும் பெருகவிடாமல் அழுத்தியே வைக்க்கிறோம் என்ற கருத்து சரியா..?
நீங்கள் கூறுவது முற்றிலும்,மறுக்க முடியாத,மறுக்க கூடாத உண்மையே
ஆகும்.
பல உரைநடை பதிவுகள் சங்கடப்படுத்திருக்கின்றன.
ஆனால் காலத்தின் போக்கில் அவைகள் தான் கவிதை என்று ஏற்றூக் கொள்ளபெறுமோ என்றும் ஐயத்தை ஏற்படுத்துகின்றது.
கவிஞர்களுக்கு துரோகமோ என்னவோ தெரியவில்லை.

கவிதையின் தகுதிக்கு மீறிய பாராட்டுகளால், அவரின் சிந்தனையையும், வளர்ச்சியையும் பெருகவிடாமல் அழுத்தியே வைக்க்கிறோம் என்ற கருத்து சரியா..?
இக்கூற்று 100/100 சரியே.
நடை பயிலும் குழந்தை எழுந்து,முயன்று,தத்தித் தடுமாறி நடக்கும்.கீழே
விழும்.பின் எழூம்.அப்பொழுது நாமும் உற்சாகமாக ஊக்குவித்து,கைத்தட்டி,
குழந்தையைக் கொஞ்சி மகிழ்வோம்.
அதுவே அக்குழந்தை நன்றாக நடந்த பிறகு ஓட,படி ஏற வேண்டுமென எதிபார்ப்போம்.
அதாவது அடுத்தடுத்த நிலைக்கு குழந்தை செல்ல விரும்புவோம்..
இக்கூற்றே கவிஞர்களுக்கும் பொருந்தும்.
நமது ஊக்குவிப்பும்,உற்சாகமும் அவர்களின் சிந்தனை ஓட்டத்தை வளப்படுத்துவதாக அமைய வேண்டும்.
ஆனால் அவ்வண்ணம் அமைய கருத்துரை வழங்குபவர்கள் சிறிதளவேனும்
கவிதாஞானம் உடையவர்களாக இருத்தல் அவசியம்.
கவிதா ரசிகர்களுக்கு இத்தளை இல்லை.
கவிதை எழுதுபவர்களை தங்களின் கேள்வி சுய பரிசோசனை உள்ளாக்கும்
என்பதில் ஐயமில்லை.

செவ்வாய்க்கு அடுத்தது புதன் என்று பிய்த்துப் போட்டு எழுதினால் கூட
இதுவும் காலம் காலமாய் இருக்கும் ஒரு வழக்கு தான்.
ஒரு உதாரணம்.
கூந்தல் கறுப்பு,
குங்குமம் சிவப்பு...
(ஆனால் இப்பொழுது இரண்டையுமே மாற்றி விடலாம்.)

நம் தமிழ் மன்றத்தில் கவிதைகளுக்கு சரியான திறனாய்வு செய்யப்படுகிறது.
காரணம் கவிதா விலாசம் பெற்றவர்கள் பலர் இருப்பதால் திறாய்வு திறம்படுகிறது இங்கு.

ராஜா
12-10-2007, 06:09 PM
நன்றி லதா..!

தெளிவாகப் பதிலளித்திருக்கிறீர்கள்..ஊக்குவிப்புக்கும் ஒரு வரையறை உண்டென்பதைச் சொல்லி எங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டுவிட்டீர்கள்.. !

அருமையான பதில்..!

அமரன்
12-10-2007, 06:26 PM
கவிதை எழுதுபவர்களை தங்களின் கேள்வி சுய பரிசோசனை உள்ளாக்கும்
என்பதில் ஐயமில்லை.
மக்கள் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி. பங்கேற்ற ஒருவர் தன்னை கவிதை எழுதுபவராக அடையாளப்படுத்துகிறார். அப்படியா என ஆச்சரியம் காட்டிவிட்டு கவிதை ஒன்று சொல்லுங்கள் என்கிறார் தொகுப்பாளர். அவருக்கு செவிமடுத்த பங்காளர் மக்கள் தொலைக்காட்சியைப் பற்றி ஒரு கவிதை சொல்கிறார். அதில் மக்கள் தொலைக்காட்சியின் மேன்மை பற்றியும் அது எப்படி இதர தொலைக்காட்சிகளில் இருந்து வேறுபட்டுத் தெரிகிறது என்றும் அடக்கி சொல்கிறார். பார்த்துக்கொண்டிருந்தும் கேட்டுக்கொண்டிருந்தும் இருந்த என்கண்களிலும் ஆச்சரியம். இதுதான் கவிதையா?

உரை நடையில் சொல்லவேண்டியதை வார்த்தைகளை மாற்றிச் சொன்னார். அவ்வளவுதான். மாமரத்தில் இருந்த குயில் பாடியது என்பதை மாமரத்தில் பாடிக்கொண்டிருந்தது குயில் என்று எழுதினால் கவிதை என்னும் நிலமை.அதையே ஒன்றன்கீழ் ஒன்றாக நிறுத்தி நிதானித்து சொல்லி இன்னும் மெருகேற்றினால் போச்சு என்பது இப்போதைய நிலைமை. இதைத் தப்பு என்று சொல்லவில்லை. அரிச்சுவடிக் கவிஞர்களுக்கு இது சரியானது. இதைப் பாராட்டுவதும் பொருத்தமானது. அதுவே வளர்ந்த ஒருவருக்கு தட்டிக்கொடுக்கவும் வேண்றைம். தட்டி வைக்கவும் வேண்டும். பல காரணிகளுக்காக அவற்றை என்னாலும் செய்ய முடிவதில்லை.லதா அவர்களின் பதிவைப் பார்த்ததும் மனதில் தோன்றும் நிறை குறைகளை அப்படியே சொன்னால் கவிஞனும் வாசகனும் வளரலாம் என்பதை புரிந்துகொண்டேன்... அப்படியே இருக்க முயற்சி செய்யத்துணிந்து விட்டேன். அர்த்தமான பதிலுக்கு நன்றியும் ஆழமான, அழகான பதிலுக்கு பாராட்டும் நவில்கிறேன்.

இவ்வளவும் சொன்ன எனது கவிதைகளும், விமர்சனங்களும் அப்படி இருப்பதற்காக வெட்கபட்டு, மன்னிப்புக்கோரி திருந்தமுனைகிறேன் என உறுதி கூறுகிறேன். மாற்றுக்குறையாத தங்கக்கவிகள் பலருடன் இணைந்திருப்பதில் பெருமிதம் அடைகிறேன்.

jpl
13-10-2007, 02:53 AM
ராஜா,அமரன் ஆகிய இருவருக்கும் நன்றி.

jpl
13-10-2007, 02:57 AM
லதா அவர்களின் பதிவைப் பார்த்ததும் மனதில் தோன்றும் நிறை குறைகளை அப்படியே சொன்னால் கவிஞனும் வாசகனும் வளரலாம் என்பதை புரிந்துகொண்டேன்...
அத்துடன் வாக்குவாதங்களும்,கருத்து மோதல்களும்(சண்டையைத் தான் அவ்வளவு நாசுக்காக குறிப்பிடுகிறேன்.)வளரலாம் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன் அமரன்.(இதுவும் காலங்காலமாக நடைபெற்று
வருவது தான்)

ராஜா
13-10-2007, 05:19 AM
அத்துடன் வாக்குவாதங்களும்,கருத்து மோதல்களும்(சண்டையைத் தான் அவ்வளவு நாசுக்காக குறிப்பிடுகிறேன்.)வளரலாம் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன் அமரன்.(இதுவும் காலங்காலமாக நடைபெற்று
வருவது தான்)

யாரையோ இடிக்கறாப்பல தோணுதே..!

இங்கே நான் ரொம்ப நல்ல பிள்ளையாக்கும்..!

அமரன்
13-10-2007, 07:02 AM
அத்துடன் வாக்குவாதங்களும்,கருத்து மோதல்களும்(சண்டையைத் தான் அவ்வளவு நாசுக்காக குறிப்பிடுகிறேன்.)வளரலாம் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன் அமரன்.(இதுவும் காலங்காலமாக நடைபெற்று
வருவது தான்)
உண்மைதான். ஆரோக்கிய கொல்லிகளாக வாதப் பிரதிவாதங்கள் அமைந்து விடும் பிரதிகூலம் இல்லாமல் இல்லை. சொல்லும் வரை சொல்லலாம். நேரமும், சக்தியும் வீணாக விரயமாகிறது என தெரிந்தால் பட்டுப் படித்தது போதும் என்ற மனதுடன் விட்டு விலகவேண்டியதுதான்.

ஷீ-நிசி
13-10-2007, 07:02 AM
என் இளமைப்பருவ மாதிரியாக உங்களை நான் நினைப்பதுண்டு..

#) என்னை நேரில் கண்டிருக்கிறீர்கள்.. ஹி..ஹி.. என்னைப்பற்றி ஒரு கவிதை வரையுங்களேன்..[உரிமையுடன் கேட்கிறேன்.. விருப்பமில்லாவிட்டாலும் கவிதை சொல்லித்தான் ஆகவேண்டும்.. ]

ஆறடிக்கும்மேல் உயரம்!
அகன்று விரிந்த உடல்!

சிங்கம் போலவே,
சவரம் செய்யாத முகம்!
சரிபாதியின் ஆசைக்காய்!!!

நீர்தான் (காட்டு) ராஜாவோ?!

பின்னூட்டமிடும்...
வார்த்தைகளில் மட்டுமே
வர்ணம் பூச தெரிந்தவர்!!!

புயலுக்குப் பின் அமைதி!!
சண்டைக்கு பின் சமாதானம்...

அமைதி எங்கிருந்து
வருமென்று தெரியாது....

ஆனால்....

சமாதானம்,
உம் எல்லையிலிருந்துதான்
புறப்படும்....

ஒன்று மட்டும் நிச்சயம்!

கருத்துக்களுக்கு மட்டுமே
நீர் எதிரி!

என்றுமே,
கருத்திட்டவருக்கல்ல.....

(இந்த கவிதை உங்களுடனான என் அனுபவத்தின் அடிப்படையில் எழுதியிருக்கிறேன். நன்றி ராஜா சார்)

jpl
13-10-2007, 07:41 AM
யாரையோ இடிக்கறாப்பல தோணுதே..!

இங்கே நான் ரொம்ப நல்ல பிள்ளையாக்கும்..!
மன்னிக்கவும் ராஜா...
சங்க காலம் தொட்டு,இன்றைய இலக்கிய,திரைக்கவிகள் வரை இன்னும் சர்ச்சைகள் ஒய்ந்தபாடில்லை.அதை தான் காலம் காலமாக என்று குறிப்பிட்டேன்.
ஏன் இடிக்க வேண்டும்.. நான் நேரிலேயே சொல்லிவிடுவேனே.

பூமகள்
13-10-2007, 07:43 AM
அன்புச் சொந்தங்களுக்கான கேள்விகள்..
5. பூமகள் :

பின்னூட்டத்தில் பின்னி பெடலெடுக்கும் நீங்கள் கவியரசி என்றும் தெரியும்..

#) நம் இளைய தலைமுறை கலாச்சாரம், பண்பாடு இவற்றிலிருந்து் வழுவாமல் எப்படி வாழ வேண்டும்..?

இதைக் கவியாகத் தாருங்கள்..அதுவும் பிரபல தமிழ்ப் பாடல் மெட்டில் அமைந்திருக்க வேண்டும்.. [[பாடல் தேர்வு : உங்கள் விருப்பம்]].

அன்பு ராஜா அண்ணா,

என் சிற்றறிவுக்கு எட்டிய வரை ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். உங்களின் கருத்துக்களை மையமாக வைத்து இளைய சமுதாயத்துக்கு தாங்கள் சொல்வது போல எழுதியிருக்கிறேன்...!!

எந்த பாடலின் தாளத்தில் எழுதியிருக்கிறேன் என்று சொல்ல மாட்டேன்.:sport-smiley-018:..!! அது மன்ற உறவுகளே கண்டு பிடித்துச் சொல்லுங்களேன்.....!! :music-smiley-009: :sport-smiley-013: :icon_b:

இதோ என் கவி வரிகள்...!!
:music-smiley-008: :whistling:
(பல்லவி)

சின்ன பொடிப் பயலே...
சூராவளிப் புயலே...
எங்கே உன் பள்ளி...??
படிச்சா நீ கில்லி...!!

எங்கே உன் பள்ளிப்புத்தகம்..??
படிச்சாக்கா நீயும் வித்தகன்...!!
போ போ என கூறுவதேனப்பா..??
சொல்லப்பா சொல்லப்பா... - பள்ளி நீயும்
செல்லப்பா செல்லப்பா....!!

(சரணம்)

கல்லூரி போகையிலே....
கன்னியர பார்க்கையிலே... :icon_wink1:

'செல்'லாலே பேசயிலே..
கண்மூடி ஆசையாலே...

உன் மனசும் பின்னால் போகும்
போயிட்டா திரும்பாது.......!!
அனுப்பிட்டு நீயும் அழுதா...
வாழ்க்கையும் இருக்காது....!!

காதல படிக்கும் போது படிச்சு நீயும் பார்க்காதேன்னு - நான்
தெரிஞ்சவ சொல்றேன் தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ......!!
விவரமா பொழச்சிக்கோ பொழச்சிக்கோ....!!

(பல்லவி - சின்ன பொடிப் பயலே..)

(சரணம்)

சுற்றுலா போகையிலே...
நட்போடு சுத்தயிலே...

கூடாத செய்கையாலே...
கிட்ட வருமே மெல்ல....

சிகரெட்டும் சிநேகிதமாகும்
அதைநீயும் சீண்டாதே...!!

மதுவுமே மயக்கிப்பாக்கும்
மயங்கினா மிஞ்சாதே...!!

வீதியிலே நீயும் போனா எல்லாருமே உன்னையுந்தான்... - 'மா.......மனிதன்னு'
சொல்லனும்... கேளப்பா கேளப்பா...
சாதிச்சு நீ காட்டப்பா காட்டப்பா...!!

(பல்லவி - சின்ன பொடிப் பயலே..!!)

ஆ... தன்னனா... தன்னனா.......
தான தன்னனா.. தன்னனா.....!!

jpl
13-10-2007, 07:44 AM
கருத்துக்களுக்கு மட்டுமே
நீர் எதிரி!

என்றுமே,
கருத்திட்டவருக்கல்ல.....

ஒன்று உரைத்தனை... அதுவும் நன்று உரைத்தனை ஷீ-நிசி.

jpl
13-10-2007, 08:02 AM
உன் மனசும் பின்னால் போகும்
போயிட்டா திரும்பாது.......!!
அனுப்பிட்டு நீயும் அழுதா...
வாழ்க்கையும் இருக்காது....!!
பூமகளின் பூச்சர வார்த்தைகள்... வலிக்காமல்...நம் இளைய தலைமுறையினருக்கு...

பூமகள்
13-10-2007, 08:05 AM
மிகுந்த நன்றிகள் jpl.
பாடலை கண்டுபிடித்துவிட்டீர்களா??

praveen
13-10-2007, 08:12 AM
அன்பு ராஜா அண்ணா,

என் சிற்றறிவுக்கு எட்டிய வரை ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். உங்களின் கருத்துக்களை மையமாக வைத்து இளைய சமுதாயத்துக்கு தாங்கள் சொல்வது போல எழுதியிருக்கிறேன்...!!

எந்த பாடலின் தாளத்தில் எழுதியிருக்கிறேன் என்று சொல்ல மாட்டேன்.:sport-smiley-018:..!! அது மன்ற உறவுகளே கண்டு பிடித்துச் சொல்லுங்களேன்.....!! :music-smiley-009: :sport-smiley-013: :icon_b:

இதோ என் கவி வரிகள்...!!
:music-smiley-008: :whistling:
(பல்லவி)

சின்ன பொடிப் பயலே...
சூராவளிப் புயலே...
எங்கே உன் பள்ளி...??
படிச்சா நீ கில்லி...!!

[/B]

அம்மன் கோவில் கிழக்காலே படத்தில் வரும் சின்ன மனிக்குயிலே பாட்டு தானே அது.

பூமகள்
13-10-2007, 08:18 AM
மிகச் சரியாக கண்டுபிடிப்பு ப்ரவீன் அண்ணா..!!
கலக்கிட்டீங்க...!!
மகிழ்ச்சி..!!
பிடிங்க..... 200 இ-காசு...!!

praveen
13-10-2007, 08:20 AM
உங்கள் பதிலுக்கு நன்றி சகோதரி, (இப்படியும் இபணம் சம்பாதிக்காலாம்னு தெரியாமல் போயிற்றே, இனி இம்மாதிரி திரி பக்கமே சுற்றுகிறேன்).

ராஜா
13-10-2007, 08:39 AM
ஆறடிக்கும்மேல் உயரம்!
அகன்று விரிந்த உடல்!

சிங்கம் போலவே,
சவரம் செய்யாத முகம்!
சரிபாதியின் ஆசைக்காய்!!!

நீர்தான் (காட்டு) ராஜாவோ?!

பின்னூட்டமிடும்...
வார்த்தைகளில் மட்டுமே
வர்ணம் பூச தெரிந்தவர்!!!

புயலுக்குப் பின் அமைதி!!
சண்டைக்கு பின் சமாதானம்...

அமைதி எங்கிருந்து
வருமென்று தெரியாது....

ஆனால்....

சமாதானம்,
உம் எல்லையிலிருந்துதான்
புறப்படும்....

ஒன்று மட்டும் நிச்சயம்!

கருத்துக்களுக்கு மட்டுமே
நீர் எதிரி!

என்றுமே,
கருத்திட்டவருக்கல்ல.....

(இந்த கவிதை உங்களுடனான என் அனுபவத்தின் அடிப்படையில் எழுதியிருக்கிறேன். நன்றி ராஜா சார்)

நன்றி ஷீ..!

இன்று முதல் நான் உண்மையிலேயே ராஜா.. ஒரு பெரும் கவிமகனாரால் பாடப்பெற்று விட்டேனே...!

கவிஞர்கள் தான் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்..!!!

100 பக்க எழுத்து வரிகள் சொல்லாததை ஒரு படம் சொல்லிவிடும் என்பார்கள்.. உங்கள் கவியும் அப்படியே..!

ராஜா
13-10-2007, 08:52 AM
(பல்லவி)

சின்ன பொடிப் பயலே...
சூராவளிப் புயலே...
எங்கே உன் பள்ளி...??
படிச்சா நீ கில்லி...!!

எங்கள் செல்ல மணிக்குயில் பாடிய சின்ன மணிக்குயில் மெட்டிலமைந்த பாடலில் இருக்கும் வரிகள் அறிவுரை முழங்கும் ஆலய மணி.

நான் கேட்டிருந்தது மிகக் கடுமையான கேள்வி என்பது எனக்குத் தெரியும்.

அதை மிக இலகுவாகக் கையாண்டு, மாலை நேர தோட்டத்துக் காற்றை அனுபவித்தவாறு, தெற்கு பார்த்த வீட்டின் வராண்டாவில் ஊஞ்சலில் ஆடியவாறு, சுவையும் மணமும் மிக்க தஞ்சாவூர் காபியை அனுபவித்துப் பருகுவது போன்ற... விருப்பமான உணர்வுடன் என் தங்கை பதிலளித்திருப்பது கண்டு பெருமைப்படுகிறேன்.

நன்றி அம்மா..!

ராஜா
13-10-2007, 08:58 AM
மன்னிக்கவும் ராஜா...
சங்க காலம் தொட்டு,இன்றைய இலக்கிய,திரைக்கவிகள் வரை இன்னும் சர்ச்சைகள் ஒய்ந்தபாடில்லை.அதை தான் காலம் காலமாக என்று குறிப்பிட்டேன்.
ஏன் இடிக்க வேண்டும்.. நான் நேரிலேயே சொல்லிவிடுவேனே.

உண்மைதான் லதா..

நட்பென்பது நகுதற் பொருட்டன்று.. என்ற வரிகளுக்கு வாழும் உதாரணம் நீங்கள்.. நேருக்கு நேராய் குற்றத்தை, குற்றமென்று கூறும் நக்கீர நேர்மையை உங்களிடம் கண்டிருக்கிறேன்.:icon_b:

"மேற்சென்று இடித்தல் பொருட்டு" என்று வைத்துக்கொண்டால் ஒருவேளை என் பின்னூட்டம் பொருந்துமோ..?

:)

ஷீ-நிசி
13-10-2007, 09:03 AM
நன்றி ஷீ..!

இன்று முதல் நான் உண்மையிலேயே ராஜா.. ஒரு பெரும் கவிமகனாரால் பாடப்பெற்று விட்டேனே...!

கவிஞர்கள் தான் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்..!!!

100 பக்க எழுத்து வரிகள் சொல்லாததை ஒரு படம் சொல்லிவிடும் என்பார்கள்.. உங்கள் கவியும் அப்படியே..!

ராஜா அவர்களே! :)... உம்மை பாடின புலவருக்கு சன்மானம் ஏதுமில்லையா......:lachen001:

ஷீ-நிசி
13-10-2007, 09:06 AM
பூமகளின் பாடலுக்கான வரிகள்... மிக ரசிக்க வைத்தன.... நன்றாக இருந்தது!

கஜினி
13-10-2007, 09:21 AM
ஷீநிசியின் பாடலும், பூமகள் அவர்களின் பாடலும் அருமை.

பூமகள்
13-10-2007, 10:40 AM
எங்கள் "செல்ல மணிக்குயில்" பாடிய சின்ன மணிக்குயில் மெட்டிலமைந்த பாடலில் இருக்கும் வரிகள் அறிவுரை முழங்கும் ஆலய மணி.

நான் கேட்டிருந்தது மிகக் கடுமையான கேள்வி என்பது எனக்குத் தெரியும்.

அதை மிக இலகுவாகக் கையாண்டு, மாலை நேர தோட்டத்துக் காற்றை அனுபவித்தவாறு, தெற்கு பார்த்த வீட்டின் வராண்டாவில் ஊஞ்சலில் ஆடியவாறு, சுவையும் மணமும் மிக்க தஞ்சாவூர் காபியை அனுபவித்துப் பருகுவது போன்ற... விருப்பமான உணர்வுடன் என் தங்கை பதிலளித்திருப்பது கண்டு பெருமைப்படுகிறேன்.

நன்றி அம்மா..!
என்னை "செல்ல மணிக்குயில்" என்று அன்போடு அழைத்து எனக்கு புது அடைமொழி கொடுத்த ராஜா அண்ணாவிற்கு நன்றிகள் கோடி..!!
மோதிரக் கையால் மகிழ்ச்சியாய் குட்டு வாங்கிவிட்டேன். மிகுந்த சந்தோசமாக உள்ளது ராஜா அண்ணா...!! :D:D:D:D
எனது திறமையை வளர்க்க புதிய ஒரு பரிமாணத்தில் கேள்வி கேட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா.:icon_rollout:

அமரன்
13-10-2007, 11:04 AM
ராஜா அண்ணா பற்றிய பெரிய விடயங்களை சின்னக்கவியில் சொன்ன ஷீயும்
சின்னமணிக்குயில் சின்னமணிக்குயில் சிந்து மெட்டில் இழைத்த பாடலும் கவர்கிறது.
பாராட்டுதலை விஞ்சிய வார்த்தைகளை தேட வைக்கிறன

அக்னி
13-10-2007, 12:14 PM
அக்னி: ஒரு பூ உதிர்ந்தால் இன்னொரு பூ.... இன்னொரு பூ பூத்தாலும் முதலில் பூத்த பூ வருவதில்லை என்ற மையக்கருவை காதலுடன் ஒப்பிட்டு பல திரைப்படங்கள் வந்துள்ளன. இதுபற்றி உங்களின் எண்ணம் யாதோ?

முதலில்,
எனது மிகவும் தாமதித்த பதிலுக்காக,
அனைவரிடமும் மன்னிப்புக் கோருகின்றேன்.

அன்புரசிகன் அவர்களின், வினாவில் உள்ளது போன்றே,
ஒரு பூ உதிர்ந்தால், இன்னொரு பூ பூக்கும். ஆனால், முதலில் பூத்த காம்பில், அதே இடத்தில் பூக்குமா என்றால் இல்லை. மரத்தில் ஆயிரம் கிளைகள், காம்புகள் இருக்கலாம். ஆனால் ஒரு பூவின் காம்பு அந்த பூவின் ஆயுளின் முடிவுடன் குறிப்பிட்ட அளவேனும் கருகத் தொடங்கிவிடுமே. அத்தோடு அதன் வாழ்வும் முடிவை நோக்கி பயணிக்கத் தொடங்கி விடுமே. அப்புறம் எப்படி, அதே போன்ற பூ வந்தாலும், அதே பூ ஆகும்?

மரம் உலகென்றால், பூவும் காம்பும், ஆண் பெண்ணென்றால், உலகில் புதிது புதிதாய் காதல்கள் தோன்றலாம். ஆனால், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல், மறுபடியும் அதே பரிணாமத்தில் மறுபிறப்பு எடுக்காது என்பதே யதார்த்தம்.

சில பூக்கும் முன் கருகும். சில பூத்ததும் பூ மட்டும் பிரிந்து செல்லும். சில காம்புடன் இணைந்து செல்லும். இவ்வாறே மனிதக் காதலும்...

முடிந்த காதல் மறுபடி முளைக்காது. ஒட்ட வைப்பதிலும் பயனில்லை. பூவிற்கும் காம்பிற்குமான பிரிகையில், பூ நல்லிடம் சேரலாம். இல்லை கசக்கவும் படலாம். காம்பும் கருகி வீழலாம் அல்லது மீண்டும் துளிர்த்து, தன்னருகாக இன்னொரு அழகிய பூவைக் கொள்ளலாம். காதலும் பிரிவை அடைந்தால், இந்நிலையே. பிரிவில் சிறப்பும் வரலாம். வேதனையும் நிகழலாம்.

எது எவ்வாறானாலும், பிரிவு என்பது வேதனையே. ஒரு பிரிவை இன்னொரு வரவால் நிவர்த்திக்க முடியாது. ஆனால், மாற்றிக்கொள்ள முடியும். இளமையிலிருந்து முதுமையடைவதும் ஒருவகையில் பிரிவே. அதற்காக இளமை பிரிகிறதே என்று அனைவரும் மாண்டு போகின்றோமா? இல்லையல்லவா... முதுமையிலிருந்து மீண்டும் இளமையை பெறவும் முடியாதல்லவா...

இளமையின் துடிப்பு, முதுமையில் நிதானமாக மாறுவதைப் போல, காதலிலும் மாறிக்கொள்ளலாம்.

ஆனால், துரோகம் என்ற ஒன்றை நாமாக செய்யாதவரை,
எமக்கு நிகழ்த்தப்படும் துரோகங்களைப் பற்றி நாம் எண்ணவோ,
அதையிட்டு கவலைப்பட்டு உருக்குலையவோ, வாடவோ தேவையில்லை.

"கிடைத்தால் சந்தோஷம்... கிடைக்காவிட்டால் கவலையில்லை..."

திரைப்படங்கள் பொழுதுபோக்கு அம்சமானாலும், எங்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவன என்பது தெளிவு. எனவே நகைச்சுவை, கற்பனைகளை விடுத்து, சில உண்மைகளை திரிவுபடுத்தி வெளிப்படுத்த முடியாது. அந்த வகையில் இந்த வாழ்நிலையும் ஒன்று. திரிவுபட்டால், ஏற்றுக்கொள்ள முடியாது.

கேள்வியின் கருவை சரியாகத் தொட்டிருக்கின்றேனா?
எனது அறிவுக்கு எட்டியவரை, மனதில் பட்டதை தந்திருக்கின்றேன்.
இல்லாவிட்டால் மன்னிக்க....

அக்னி
13-10-2007, 12:39 PM
அதாவது அடுத்தடுத்த நிலைக்கு குழந்தை செல்ல விரும்புவோம்..
இக்கூற்றே கவிஞர்களுக்கும் பொருந்தும்.
நமது ஊக்குவிப்பும்,உற்சாகமும் அவர்களின் சிந்தனை ஓட்டத்தை வளப்படுத்துவதாக அமைய வேண்டும்.

jpl அவர்களின் ஒப்பீடு அருமை. குழந்தையின் அடுத்த வளர்ச்சிப்படிக்கு ஊக்குவிக்கும் நாம், அதற்கு வழிகாட்டுவதை விடுத்து, பாராட்டியபடியே இருப்பின், அக்குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படுவதில் நாமும் காரணியாகின்றோம் என்பதை,
அப்படியே படைப்பாளிகளுக்கு ஒப்பிட்டமை மிகச்சரியே.
எந்த ஒரு படைப்பாளியின் அல்லது முயற்சியின்,
சிறப்புகளையும் அதே சமயம் குறைகளையும் சுட்டிக்காட்டுமிடத்து, அவர்களும் நாமும் மேலும் வளர்ச்சியடையலாம் என்பதை மிக அழகாக தெளிவுபடுத்தியிருக்கின்றீர்கள்.
நன்றி கலந்த பாராட்டுக்கள்...

அக்னி
13-10-2007, 12:44 PM
கருத்துக்களுக்கு மட்டுமே
நீர் எதிரி!

என்றுமே,
கருத்திட்டவருக்கல்ல.....

இந்த வரிகளை வெகுவாக ரசித்தேன்.
அழகிய கவிதை ஷீ-நிசி அவர்களே...
ராஜா அல்லவா அண்ணா...
உங்களுக்கு பொற்கிழி கிடைத்திருக்குமே...

ராஜா அண்ணா, மற்றும் உங்களின் தாடிக்குக் காரணம் உங்களின் சரிபாதி லேடியா...? :icon_b:
அப்பச்சரி...

அக்னி
13-10-2007, 12:50 PM
சின்ன பொடிப் பயலே...
சூராவளிப் புயலே...
எங்கே உன் பள்ளி...??
படிச்சா நீ கில்லி...!!

பாடல் அருமை. கருத்து நகைச்சுவையாக வரிக்கப்பட்டுள்ளது.
பாராட்டுக்கள்...
இப்போதான் jpl அவர்கள் சொன்னார்கள். அதனால் இந்த பாடலிலுள்ள குறையையும் சொல்லியே ஆகவேண்டும்.

இளைய தலைமுறை எனும்போதும், கலாச்சாரம் பண்பாடு வழுவாமை என்னும்போதும்,
ஆண்கள் மட்டும்தானா அடக்கப்படுகின்றார்கள்...:confused:
அப்போ, பெண்கள் இந்த வகைக்குள் இல்லையா? அல்லது 100% நம் கலாச்சாரம் பண்பாட்டைக் கடைக்கொள்கின்றார்களா?

பாதி முகம் அழகு... மறு பாதி எங்கே..?

பூமகள்
13-10-2007, 01:30 PM
அழகான கவி வரிகள் மன்றத்து ராஜா ராஜா அண்ணாவிற்காய்..!!
பாராட்டுகள் ஷீ-நிசி.
அசத்தலா இருக்கு..!!

பூமகள்
13-10-2007, 01:37 PM
இளைய தலைமுறை எனும்போதும், கலாச்சாரம் பண்பாடு வழுவாமை என்னும்போதும்,
ஆண்கள் மட்டும்தானா அடக்கப்படுகின்றார்கள்...:confused:
அப்போ, பெண்கள் இந்த வகைக்குள் இல்லையா? அல்லது 100% நம் கலாச்சாரம் பண்பாட்டைக் கடைக்கொள்கின்றார்களா?

பாதி முகம் அழகு... மறு பாதி எங்கே..?
மிகச் சரியான கேள்வி..!!
இருபாலருக்கும் பொதுவான விசயங்களைத் தான் பாடலில் சொல்லியிருப்பேன்..!!
உதாரணமாக காதல்..!!
கூடா நட்பு... இப்படி பல...!! உங்களின் ஆதங்கம் விளங்குகிறது அக்னி அண்ணா.
இந்த விசயங்கள் இருபாலருக்குமே சொன்னது போல் பொருந்தும் தானே??

அக்னி
13-10-2007, 01:41 PM
இந்த விசயங்கள் இருபாலருக்குமே சொன்னது போல் பொருந்தும் தானே??

சின்ன பொடிப் பயலே...

அப்படி தொடங்கினதால கேட்டேன்...
நகைச்சுவையாய், நல்ல விருந்தாய் இருந்தது. தொட்டுக்கொள்ள சிறிதாய் சண்டையைத் தேடினேன்.
மற்றும்படி உங்கள் திறமைக்கும், முயற்சிக்கும்
எனது அன்பான பாராட்டுக்கள்...

lolluvathiyar
13-10-2007, 03:40 PM
ஆகா கேட்ட கேள்விகளுக்கு பதில்கள் அருமையாக த ந்திருகிறார்கள் நமது மக்கள், பூக்களை வாழ்கையோடு அழகாக ஒப்பிட்டு கொண்டு சென்றார் அக்னி
பூமகளோ, மொத்தத்தில் கல்லூரி வாழ்கையை சரியாக கையாளும் படி எச்சரிகிறார்.
நிசி கவிதை என்றுமே ஒருபடி மேல தான் இருக்கு, அதுவும் முதியரை பற்றி பாடுவது என்றால் கேட்க வா வேன்டும் (அதென்ன சிங்கம் போல சவர செய்த முகம், இடிக்குதே),
லதா வின் விமர்சனங்களுக்கு விமர்சன்ம தருகிறார். கவிதை விமர்சிப்பவர்களுக்கு சிறிதாவது கவிதை அறிவு வேண்டும். அதான் நான் அந்த பக்கமே வருவதில்லை.

மலரையும் இனியவளை முட்ட வச்சுட்டீங்களா, இரண்டு பேருக்கும் எட்டாம் பொருத்தம் என்று பரவலாக பேச்சு அடிபடுகிறது

அடுத்தது என்னிடம் கேள்வி கேட்டுவிட்டார் ராஜா. 3 நாள் மன்றம் திறக்காததால் தாமதமாக பார்த்தற்க்கு மன்னிக்கவும். சரியான கேள்வி தான் சரியான நபரிடம் தொடுக்க பட்டிருகிறதாகவே கருதுகிறேன். விரைவில் பதிலுடன் வருகீறேன்

ஷீ-நிசி
13-10-2007, 04:02 PM
நிசி கவிதை என்றுமே ஒருபடி மேல தான் இருக்கு, அதுவும் முதியரை பற்றி பாடுவது என்றால் கேட்க வா வேன்டும் (அதென்ன சிங்கம் போல சவர செய்த முகம், இடிக்குதே),

சிங்கம் போலவே,
சவரம் செய்யாத முகம்!
சரிபாதியின் ஆசைக்காய்!!!

வாத்தியாரே சரியாகத்தானே இருக்கிறது.....