PDA

View Full Version : ♔. ஆ! 10! ♔. - முதல் சுற்று

Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14

ஓவியன்
16-09-2007, 08:07 PM
உங்களின் கலை கற்கும் தீரா தாகம் விரைவில் தீர கடவுளை அனுதினமும் வேண்டுகிறேன் ஓவியன் அண்ணா.

மிக்க நன்றி பூமகள்!, உங்கள் அன்புக்குத் தலை வணங்குகிறேன்.

ஷீ-நிசி
17-09-2007, 02:42 AM
சிறப்பான கேள்விகள் கமலக்கண்ணன்...

சிறப்பான பதில்கள் அளித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்!

க.கமலக்கண்ணன்
17-09-2007, 05:08 AM
உங்கள் கேள்வியில் சற்று மயக்கம் உள்ளது... மன்றத்தின் வாழ்க்கையில் என்று நினைத்து பதில் தருகிறேன்...

என்னை இந்த மன்றத்திற்கு வருவதற்கு ஏதுவாக இருந்தவர் ஓவியன்... தமிழில் பதிய முடியும் என்ற ஒரே ஒரு தகமை கொண்டு இன்றுவரை மன்றத்தில் தாக்குப்பிடித்துக்கொண்டிருக்கிறேன்... பின்னர் என்னை வழிகாட்டியவர் ஓவியா அக்கா.... அவர் தான் என்னை மன்றத்தில் என்னை செப்பனிட்டவர் எனலாம்...

அதன் பின் உதவியாளர் என்ற பதவி... அந்த சமயத்தில் அறிஞர் இளசு அண்ணா போன்றவர்கள் வழிகாட்டினர்...

என்றும் வழிகாட்டியர்களை மறக்க கூடாது

என்பதை நினைவில் வைத்து அவர்களை போற்றியது அருமை

எல்லையில்ல அந்த குணத்திற்காகவே நீங்கள் பற்பல ஆண்டுகள் வழமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

உண்மையில் முதலில் நான் சாதாரணமாகத்தான் பதிந்து கொண்டிருந்தேன்.... 1000 ஆவது பதிவுக்கு ஏதாவது வித்தியாசமாக பதிவோம் என நினைத்து முயன்ற முயற்சி எல்லாம் தோற்றது...
ஏதாச்சும் உல்டா பண்ணுவோம் என்று கூட நினைத்தேன்.... அப்போது தான் வாழ்த்து திரியில் ஒரு பதிவு வந்தது....

பளார் என்பது போல் ஒரு உணர்வு.. என்மேல் இத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்கு தகுந்தால் போல் இருக்கவேண்டும் என்ற முடிவு அன்று எடுத்தேன். நான் நானாகவே இருந்தேன். இருந்து கொண்டிருக்கிறேன்...

எப்போதும் மற்றவர்களை விட சற்று மாறுபட்ட விதத்தில் நம்முடைய நடவடிக்கை

என்றும் நம்மை தனியாக அடையாளம் காட்டு

என்பதில் ஐயம் இல்லை நண்பா...

மொத்தத்தில் என்னை திறம்பட வழிநடத்தியதில் ஓவியா அக்காவுக்கு பெரும் பங்கு உண்டு....

அவர் தற்சமயம் தனிப்பட்ட பிரச்சனை என்ற நொண்டிச்சாட்டு கொடுத்து தப்பிக்கப்பார்க்கிறார்.... நம்மளைப்போல் இன்னும் பலரை வழிநடத்த அவர் மீண்டும் வரவேண்டும் என்பது என் ஆவல்...

எழிலரசி ஓவியா தற்போது இல்லை என்பதில்

எனக்கும் மிகுந்த வருத்தமாகத்தான் இருக்கிறது

எல்லோருக்கும் கடமை ஒன்று இருக்கிறது அல்லவா, அதை முடித்துவிட்டு

எப்படியும் வந்து நம்முடன் கலந்து தன் பணியை தொடர்வார்

என்று நம்வோம். நான் வியந்த தங்க மங்களில் இவரும் ஒருவர். இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்...

எளிமையாகவும் இனிமையாகவும் பலர் பின்பற்ற கூடிய வகையில் பதில் தந்த அன்பு ரசிகனுக்கு மிக்க நன்றி...

க.கமலக்கண்ணன்
17-09-2007, 05:12 AM
அன்பிற்கினிய ஓவியன் அண்ணா...

உங்களின் மனத்தில் உள்ள ஆழமான உணர்வுகளை மன்றத்தில் பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஓவியன் அண்ணா.:icon_give_rose:

கோபத்தினை நமக்குள் வைக்காமல் வெளிக்கொண்டுவரும் வடிகாலாய் நீங்கள் ஓவியத்தை பயன்படுத்தியது சரியான உத்தி.

சினம் எப்படியேனும் வெளிப்படுத்திவிட வேண்டும் வெளியில்.

சினத்தை நமக்குள் பூட்டினால் நம்முள் ஆன்மா அழிய ஆரம்பித்திருக்கும் கொஞ்சம் கொஞ்சமாய்..!!

உங்களின் கலை கற்கும் தீரா தாகம் விரைவில் தீர கடவுளை அனுதினமும் வேண்டுகிறேன் ஓவியன் அண்ணா.

அருமையான பதில்

அன்பு தங்கையே உன்னுடைய

அழகான பதிலை இன்னும் காணுமே

க.கமலக்கண்ணன்
17-09-2007, 06:44 AM
சிறப்பான கேள்விகள் கமலக்கண்ணன்...

சிறப்பான பதில்கள் அளித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்!

மிக்க நன்றிகள் ஷீ-நிசி

மிளிர்கின்ற உங்களின் பராட்டுக்கு நன்றி...

ராஜா
17-09-2007, 08:34 AM
அடுத்த கேள்வியாளர் : 'அகரக் கவிதைச் சிகரம்' கமலக்கண்ணன்.
--------------------------------------------------------------------

1. மலர்
எனக்கு தங்கை என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் துர்திஷ்டவசமாக கூடபிறந்த தங்கை சொர்க்கத்திற்கு சென்று விட்டார். நீங்கள் எனக்கு தங்கையாக இருந்து நான் உங்கள் கூடபிறந்த அண்ணனாக இருந்தால் என்ன என்ன அன்பு கட்டளைகளையிடுவீர்கள் ?

2. அமரன்
உங்களின் முதல் தமிழ் கவிதையை எழுதுவதற்கு நடந்த நிகழ்ச்சி என்ன?
(நான் அகரவரிசை எழுதுவேன் என்று நினைத்தே இல்லை. ஒரு முறை சென்னையில் இருந்த போது தினமலரும் f.m. வானொலியும் இணைந்து நிகழ்ச்சி நடத்திய போது, அதை விமர்சிக்க மிக எதார்த்தமாக எழுதிய கவிதை முதல் பரிசு பெற்றது. அந்த பரிசை பெறுவதற்குள் கிட்டதட்ட பத்து அகரவரிசையில் எழுதி முடித்ததேன். அதன் பிறகு யாருக்காவது திருமணம் பிறந்தநாள் என்றால் நிச்சயம் எனது அகரவரிசை கவிதை எதிர்பார்க்கும் அளவிற்கு அந்த நிகழ்ச்சி அமைந்து விட்டது. இன்று தமிழ்மன்றம் மட்டும் அல்லாமல் பலபேருக்கு என்னை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது போன்று உங்களின் முதல் கவிதைக்கு காரணம் இருக்கும் அல்லவா அதை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.)

3. அன்புரசிகன்
உங்களின் குறுகாலத்தில் அதிக பதிப்பை கண்டு வியந்திருக்கிறேன். தற்போது நம்மன்றத்தின் பொறுப்பார் ஆகிவிட்டீர்கள். இந்த தருனத்தில் உங்கள் வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயித்ததற்கு காணரமானவர் யார் ? அவருக்கு நம் தளத்தின் மூலம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

4. பூமகள்
உங்களின் வாழ்க்கையில் நடந்த மிக மறக்க முடியாத தினம் என்று எதை நினைக்கீறீர்கள்... ஏன்?

5. aren
நீங்கள் சிங்கப்பூரில் தொழிலாதிபராக இருக்கிறீர்கள் என்று உங்களின் பின்னுட்டத்தை வைத்து அறிந்து கொண்டேன். இப்பொழுது நீங்கள் இருக்கும் உயரத்திற்கு முதல் படி என்று இருக்கும் அல்லவா, அதை ஏற்படுத்தி கொடுத்தவர் யார்? அவருக்கு என்ன சொல்ல விருமபுகிறீர்கள். இந்த அளவிற்கு முன்னேற்றத்தில் மிக சோதனையான தருனங்கள் இருக்கும் அது என்ன? எப்படி வெளியே வந்தீர்கள்?...

6. ஆதவா
இப்பொழுதும் என் மனைவி நான் நம்மன்றத்திற்குள் வந்தால் " ஆதவாவை பார்க்க போய்விட்டார்" என்பார். அதுபோல உங்களின் கவிதை படைப்பது பற்றிய திரி மிகவும் கவர்ந்து விட்டது அவருக்கு, இந்த திரி தொடங்க சிந்தனை வந்த சூழ்நிலையை விளக்க முடியுமா ?

7. ஓவியன்
ஓவியம் மிகவும் பிடிக்குமா? உங்களின் ஓவியத்தால் விளைந்த நன்மைகளை கூறுங்கள். ஏன்னெறால் நானும் ஒரு ஓவியன்.

8. இதயம்
உங்களின் ஒவ்வொரு பின்னூட்டமும் அருமை. அதற்கு எவ்வாறு யோசிக்கிறீர்கள். நம்மன்றதிற்கு அந்த ரகசியத்தை சொன்னால் மற்றவர்களுக்கும் பணனாக இருக்கும்.

9. மனோஜ்
உங்களின் அவரவர் பணியிலேயே பின்னூட்டம் அளிக்கும் திறமையை பார்த்து வியந்திருக்கிறேன். நீங்கள் தமிழ் இலக்கியம் படித்தவரா அல்லது கேள்வி ஞானமா? விளக்கவும்.

10. மீனாகுமார்
தாங்கள் லண்டனில் இருப்பதாக அறிகிறேன். லண்டலின் நமது தமிழ் மக்கள் வேலைக்குச் செல்ல என்ன தகுதிகள் வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?
__________________

ராஜா
17-09-2007, 08:37 AM
மலர், பூமகள் ...!

நீங்க ரெண்டுபேருமே பதில் சொல்லுவதில் சூப்பர் ஸ்டார்ஸ்.. மத்தவங்க பதிலுக்கு கருத்து மட்டும் சொல்லிட்டுப் போயிடறீங்களே.. உங்க பதிலை எப்போம்மா சொல்லப் போறீங்க..?

மீனாகுமார்
17-09-2007, 09:52 AM
உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி ராஜா மற்றும் அமரன் (அமரன் சற்றே கீழே கவனியுங்கள்)

10. மீனாகுமார்
தாங்கள் லண்டனில் இருப்பதாக அறிகிறேன். லண்டலின் நமது தமிழ் மக்கள் வேலைக்குச் செல்ல என்ன தகுதிகள் வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?

எந்த வேலைக்கு செல்ல வேண்டுமானாலும் முதலில் தேவையானவை தன்நம்பிக்கை, சிறிது அறிவுத்திறன் மற்றும் விடாமுயற்சி. இந்த மூன்றும் கொஞ்சம் பொறுமையும் இருப்பின் வெற்றி நமதே. இது போக உங்களுக்கு இங்கிலாந்தில் வேலை செய்யும் வேலை-அனுமதி ( ஒர்க் பெர்மிட் மற்றும் விசா ) தேவை. பலவிதமான விசாக்கள் உள்ளன. விசா பற்றி மேலும் தகவல் வேண்டுமாயின் உங்கள் வேலையும் தற்போது உள்ள படிப்பு மற்றும் அனுபவங்களைக்கூறி கேட்கவும்.

உங்கள் கேள்வி மிகவும் பொதுப்படையாக இருப்பதால் இவ்வாறு பொதுவாக பதில் அளித்திருக்கிறேன். இதன் உள்ளார்ந்த தகுதிகள் நீங்கள் எந்த வேலைக்கு தயாராக உள்ளீர்கள் என்பதைப் பொறுத்து அமையும். அந்த துறையில் இங்கு உள்ள ஓர் அலுவலகத்தில் வேலையில் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றால் வேலையை ஆரம்பிக்கலாம்.
.

பூமகள்
17-09-2007, 10:49 AM
4. பூமகள்
உங்களின் வாழ்க்கையில் நடந்த மிக மறக்க முடியாத தினம் என்று எதை நினைக்கிறீர்கள்... ஏன்?

இந்த அன்புத்தங்கையை மறவாமல் அழகான கேள்வி கேட்ட என் அன்பு அண்ணன் கமலக்கண்ணன் அவர்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்..!!:nature-smiley-002:

என் வாழ்வில் மறக்கவே முடியாத பல அழகான தினங்கள் இன்னும் மனத்தில் ஆழமாய் இருக்கிறது.:)

ஆனால் ஒரு சம்பவத்தை மட்டும் கேட்டதால்.. எதனைச் சொல்வதென்றே புரியவில்லை..:confused:

எல்லோருக்கும் இருப்பது போல் எனக்கும் என் கல்லூரி நாளில் நடந்த ஒரு சம்பவம் என்னால் என்றுமே மறக்கவே முடியாத தினமாக அமைத்துவிட்டது.:music-smiley-009:

பட்டாம் பூச்சியாய் கல்லூரியில் நுழைந்து இறுதி ஆண்டுக் கல்விப்பயணம் ஆரம்பித்திருந்த வேளை. கல்லூரி நான்காம் ஆண்டு. உல்லாசச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர் வகுப்பு மாணவர்கள். 4 நாட்கள் சுற்றுலா.

முதல் நாள் இரவு ஆட்டம் பாட்டத்துடன் கிளம்பியது. பேருந்தினுள்ளும் தொடர் வண்டியை ஓட்டி வந்தனர் என் வகுப்பு மாணவர்கள். எல்லா புதுப் பாடல்களுக்கும் புது நடனத்தை:music-smiley-009: புகுத்தி எங்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர் மற்றும் சிலர்.:music-smiley-008:

காலையில் விடிந்ததும் நாங்கள் சென்று சேர்ந்த இடம் மைசூர். ஊர் சுற்றி முதல் நாள் இரவு அசதியின் உச்சத்தில் மீண்டும் எங்களின் தங்கிடம் தேடி வந்தோம்.

அடுத்த நாள் ஆசிரியர் தினம். ஆகவே.. எங்களோடு வந்த ஆசிரியர்களுக்காக விசேசமாக கேக் வாங்கி அவர்களை வெட்டச் செய்து மகிழ்ச்சியாய் கொண்டாடினோம்:food-smiley-007: ஆசிரியர் தினத்தை சரியாய் நள்ளிரவு 12 மணிக்கு.

அந்த மகிழ்வுடனே இரு தினங்களையும் மைசூரில் கழித்து அடுத்த இடத்தை நோக்கி பயணப்பட்டிருந்தோம். அடுத்து நாங்கள் சென்றது பெங்களூர். அன்று கிருஷ்ணர் ஜெயந்தி ஆகவே முதலில் நாங்கள் சென்றது "இஸ்கான் டெம்பில்". பல வளைவுகளைக் கொண்டு மிக நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்தோம் தரிசனத்திற்காய். கூட்ட நெரிசல் வேறு. எங்கள் வகுப்பு மாணவர்கள் என்னோடு வந்த தோழிகள் அனைவருக்கும் எங்கள் முன்னாலும் பின்னாலும் பாதுகாப்பாய் இறுதி வரை கூட்டிச் சென்றதை இன்று வரை என்னால் மறக்கவே முடியாது.

கூட்டத்தில் பல இடர்களை கடந்து கண்ணியமாய் எங்களை பாதுக்காத்து காப்பாற்றிய நல்லுள்ளம் படைத்த மாணவர்களை நிச்சயம் நான் இங்கு நினைவு கூற கடமைபட்டிருக்கிறேன்.:icon_clap:

என் குடும்பம் அப்போது மிகுந்த கஸ்டமான சூழலில் இருந்தது. சுற்றுலா செலவும் அங்கு உணவருந்தவுமே என் பெற்றோர் கொடுத்த பணம் சரியாக இருந்தது. என் உயிர் தோழி என்னோடு எல்லா சமயத்திலும் கூடவே இருந்தாள். என் பணம் முழுக்க என் சாப்பாட்டிற்கும் அங்கு பூங்கா அனுமதிச் சீட்டு வாங்கவும், புகைப்படம் எடுக்க வசூலிக்கும் கட்டணத்திற்குமே சரியாய் போனது. இதற்கிடையில் மெஜஸ்டிக் என்ற இடத்தில் சில பொருட்களை வாங்க தோழிகளோடு சென்றேன்.

என் அருமை தோழியுடன் நானும். ஒரு துணிக்கடைக்குச் சென்றோம்.அங்கு அழகழகாய் சுடிதார்கள் நியாயமான விலையில். எந்த பெண்ணுக்கும் ஆடைகள் மேல் பிரியம் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. எனக்கும் சின்ன மனத்தில் குட்டி ஆசை.

ஒரு துணியேனும் அங்கு சென்று எடுத்துவிடுவது என்று. ஆனால் என் எதிர்பார்ப்புக்களை முறியடித்தது என் கைவசம் இருந்த நிதி நிலமை.

ஒரு துணியை ஆசையாய் எடுத்து பார்த்தவண்ணம் இருந்தேன். என் தோழியும் வேறு அவளுக்காய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

என் பட்ஜெட்டில் எனக்கு பிடித்த கலரில் துணியை செலக்ட் செய்தேன். ஆனால்... எடுக்க பணம் இல்லை. அவள் என்ன நினைத்தாலோ அவள் செலக்ட் செய்ததை வேண்டாம் என்று சொல்லி என் துணிக்கு பணம் தந்தாள். அன்புடன் என் கை பற்றி, "வைத்துக் கொள் மிகவும் ஆசை பட்டாய் என்று எனக்கு தெரியும். மெதுவாக உன்னால் முடிந்த போது பணம் கொடு" என்று சொன்ன நிமிடத்தையும் அந்த நாளையும் என்னால் என் வாழ்வில் மறக்கவே முடியாது.
என் கண்கள் பனித்ததை அவள் பார்த்திருக்கக் கூடுமோ என்னமோ... அவள் சிரித்தாள் ஆறுதலாய் என் கை பற்றி. நான் வார்த்தை வர இயலாமல் ஒரு கணம் தடுமாறி பின் என் மனமாற நன்றி சொன்னேன் அவளிடம்.

என்னடா இது??? ஒரு துணியை தோழி வாங்கிக் கொடுத்ததற்கா இத்தனை ஆர்பாட்டமான விவரிப்பு என்று யாரேனும் நினைக்கக் கூடும்.

ஆனால், வாழ்க்கையில் நான் அன்றிருந்த சமயம், எனது ஆசையை நிறைவேற்ற அவள் எடுத்த அந்த சிரத்தை என்னால் இன்னும் மறக்கவே முடியவில்லை. நான் மறந்தால் அது என் நட்பிற்கு நான் செய்யும் துரோகம். பின்னர் அதற்கான பணம் அவள் வாங்க மறுத்தும் கொடுத்து விட்டேன் என்றாலும்.. அவளின் அந்த உணர்வை நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.:icon_clap:

அடுத்த நாள் தான் நான்காம் நாள். இறுதியாக பெங்களூரின் அழகை ரசித்து விட்டு சரியாக ஒரு மணி அளவில் கோவை நோக்கி பயணமானோம்.:sport009:

சுமார் 2 மணி அளவில் ஓசூர் நோக்கி பேருந்து போய்க் கொண்டிருந்தது. பேருந்தில் பாதிப்பேர் தூங்கியவண்ணம் இருந்தனர். தொலைக்காட்சியில் குஷி படம் குஷியாய் ஓடிக் கொண்டிருந்தது. ஜோதிகா கோவத்தில் சிவந்தவண்ணம் இருந்தார்.

அப்போது தான் அந்த அடுத்த மறக்க முடியாச் சம்பவம் நடந்தது.:icon_shok: நாங்கள் பயணம் செய்த பேருந்து நிலை தடுமாறியது.:huh: நாங்களும் பயத்தில் நிலை தடுமாற, ஓட்டுனர் தன் கட்டுப்பாட்டிற்குள் பேருந்தை கொண்டுவருவதற்குள் ஒரு இரு சக்கர வாகனத்தில் மோதிவிட்டிருந்தது.:icon_wacko:

நடந்தது இது தான், சாலையின் ஓரம் நின்றிருந்த ஒரு லாரி மெதுவாக புறப்பட எத்தனிக்க,அதன் பின்புறம் இரு பெண்கள் இருசக்கர வாகனத்தில் அந்த லாரியை ஓவர் டேக் செய்ய முயல,எங்கள் பேருந்து லாரியிலும் மோதாமல், பக்கச் சுவரிலும் மோதாமல் நிறுத்த முயலும் போது அந்த இரு சக்கரவாகனத்தின் மீது லேசாக மோதியது.

என் வகுப்பு பசங்கள் உடன் இறங்கி உடனே அவர்களைத் தூக்க, பேருந்தில் என் வகுப்பு மாணவி.. "வீல்..!!" என்று சத்தமிட்டாள். கூட்டம் கூடியது.

அந்த பெண்ணிற்க்கு தலையில் அடிப்பட்டிருந்தது,கூடியிருந்த கூட்டம் எங்களை முறைக்க ஆரம்பித்தது தமிழ்நாட்டிற்க்கும்,கர்நாடகாவுக்கும் பிரச்சினை இருந்த நேரமது,ஓட்டுனரை பாதி பேர் ஏகவசனத்தில் திட்ட ஆரம்பித்திருந்தனர்.
காவல் துறை வந்தது,ஓட்டுனர் எதோதோ கெஞ்சி பார்த்தார்,பேருந்தை காவல் நிலையத்திற்கு கொண்டுச் சென்றார்கள். எங்களுடன் வந்திருந்த ஆசிரியர்களுக்கும் என்ன செய்வதென்றேதெரிய வில்லை. இவ்வளவு களேபரமும் நடந்துக் கொண்டிருக்க இருட்ட ஆரம்பித்து விட்டது..

விபத்தில் காயமுற்ற அந்த பெண்மணியின் கணவரை தொடர்பு கொண்டு கெஞ்சியதில் அவர் இரவு தான் காவல் நிலையத்திற்கு வரவேன் என்று சொல்லி விட்டார். ஓட்டுனர் அந்த டிராவல்ஸ் கம்பெனியின் உரிமையாளை தொடர்பு கொண்டு பேசுவதும் காவல் நிலைத்திற்குள் போவதுமாக இருந்தார்.:sport-smiley-008:

என்னோடு சேர்த்து அனைத்து மாணவிகளும் பேருந்திலேயே அமர்ந்து காவல் நிலையத்தின் முன் சிறைபட்டிருந்தோம். மகிழ்ச்சியாய் முடிய வேண்டிய பயணம்... இப்படி ஆகிவிட்டதே என்ற கவலை எல்லார் மனத்திலும். மதியம் 2 மணிக்கு நடந்த சம்பவம் இரவு 8 மணி ஆகியும் முடியவில்லை. அங்கேயே நாங்கள் அனைவரும்.

இருட்ட ஆரம்பிக்க, எங்களின் பாதுகாப்பு கருதி, என் வகுப்பு மாணவர் ஒருவரின் உறவினர் வீட்டில் மாணவிகள் அனைவரையும் அழைத்துச் சென்று தங்க வைத்தனர். எங்களின் துணிப்பைகள் எல்லாம் பேருந்திலேயே இருந்தன. கவலை தோய்ந்த முகத்தோடு ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிய வண்ணம் காத்துக் கிடந்தோம்.:icon_ush: எங்களுக்காய் சில மாணவர்கள் எங்களோடும்.. சிலர் பேருந்திற்கு பாதுகாப்பாயும்.. முழித்துக் கிடந்தனர்.

அங்கே என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் கையில் காசும் இல்லாமல் திரும்பிப் போகும் வழி தெரியாமல் விழித்தவண்ணம் கிடந்தோம்.:icon_wacko:

இரவு முழுக்க தூங்காமல் இருந்தோம்.:sprachlos020: ஒரு வழியாய் பேருந்தை விட்டுவிட்டனர் என்ற நல்ல செய்தி காதில் விழுந்தது. :medium-smiley-002:உடன் புறப்பட்டு மகிழ்ச்சியாய் திரும்ப பேருந்தில் ஏறி கோவை நோக்கி பயணப்பட்டோம்.:auto003:
இதற்கிடையில் ஓட்டுனர் பதற்றமாய் இருந்தததால் பேருந்து இரு முறை சாலையின் ஓரத்திற்கு சென்றது. என் மாணவர்கள் தூங்காமல் விழித்திருந்து அவரிடன் பேசிய வண்ணமே நல்ல படியாய் எங்களை சுமார் காலை 11 மணி அளவில் கோவைக்கு கொண்டு சேர்த்தனர்.:icon_rollout: கல்லூரி அன்று நடந்துகொண்டிருந்தது. அன்றைய தினம் கண்டிப்பாக வரவேண்டும் என்று எங்கள் துறை தலைவர் (HOD)சொன்னது என் நினைவுக்கு வந்தது. :icon_wink1:ஆனால்.. உடல் அசதியும் வலியும் இந்தச் சம்பவத்தால் தூங்காமல் இருந்த கண்ணும் என்னை வீட்டிலேயே தூங்கச் செய்துவிட்டிருந்தன...:062802sleep_prv: :smilie_bett:

இந்த சம்பவங்கள் உண்டான அந்த நாட்களை என்னால் என்றும் மறக்கவே முடியாது.:icon_rollout:

ஷீ-நிசி
17-09-2007, 12:30 PM
உங்களுக்கு மிக அருமையான தோழி கிடைத்திருக்கிறார்கள் பூமகள்...

மனம் நெகிழ்ச்சியடைந்தது..

வாழ்க்கையில் இப்படியான உறவுகளை இழந்தால்தான் நாம் வருத்தபடவேண்டும். மற்றவற்றிற்கு வருத்தபடுவதைக் காட்டிலும்...

வாழ்த்துக்கள் பூமகள்!

க.கமலக்கண்ணன்
17-09-2007, 12:47 PM
அன்பு தங்கையே பூமகள்...

அசத்தாலான சற்றே நீண்ட பதில்

அசதியாக இருக்கிறது. சற்று பொறுமையாக படித்துவிட்டு

அதற்கான பின்னூட்டத்தை பதிக்கிறேனே...

தாமரை
17-09-2007, 01:05 PM
கையைப் பிடிச்சிட்டா, கையிலே ஒண்ணும் வைத்திருக்க முடியாது என்ற அர்த்ததிலேயே செல்வன் அண்ணா அப்படிக் கூறினார்.........

இப்பதான் இந்த மரமண்டைக்கு கொஞ்சம் புரியுது...........:D

நன்றிங்க பென்ஸ் அண்ணா....:)

கை பிடித்து நடத்தல்.. மூன்று காரணங்களுக்காக

1. வாழிகாட்டுதல்
2. வழி காட்டச் சொல்லுதல்..
3. கல்யாணம்

ராஜா
17-09-2007, 01:05 PM
மீனாகுமாரின் பதில் தெளிவு.. நிதர்சனமான உண்மையும்கூட.. தகுதியுள்ளோர் நிச்சயம் தக்கவகையில் பயன்படுத்திக்கொள்ளப்படுவார்கள் என்ற உண்மை தொக்கி நிற்கும் பதிலுக்கு நன்றி.

பூமகள் அனுபவமும் மிகச்சிறப்பு.. சனிக்கிழமைக்கு அடுத்தது ஞாயிறு என்பது எவ்வளவு சர்வ நிச்சயமோ, அவ்வளவு நிச்சயம் பூமகளின் பதிலும் அசத்தலாக இருக்கும் என்பதும்..

இருவருக்கும் பாராட்டுகள்.

பூமகள்
17-09-2007, 01:15 PM
வாழ்க்கையில் இப்படியான உறவுகளை இழந்தால்தான் நாம் வருத்தபடவேண்டும். மற்றவற்றிற்கு வருத்தபடுவதைக் காட்டிலும்...
வாழ்த்துக்கள் பூமகள்!

உண்மை தான் ஷீ-நிசி. உங்களின் வாழ்த்திற்கும் உடன் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் கோடி.

பூமகள்
17-09-2007, 01:19 PM
அன்பு தங்கையே பூமகள்...
அசத்தாலான சற்றே நீண்ட பதில்
அசதியாக இருக்கிறது. சற்று பொறுமையாக படித்துவிட்டு
அதற்கான பின்னூட்டத்தை பதிக்கிறேனே...

பொறுமையாக பார்த்துக் கொடுங்க அண்ணா. மிக நீண்ட பதிலுக்காக மன்னிக்கவும்.

பூமகள்
17-09-2007, 01:21 PM
பூமகள் அனுபவமும் மிகச்சிறப்பு.. சனிக்கிழமைக்கு அடுத்தது ஞாயிறு என்பது எவ்வளவு சர்வ நிச்சயமோ, அவ்வளவு நிச்சயம் பூமகளின் பதிலும் அசத்தலாக இருக்கும் என்பதும்..

மிக்க நன்றிகள் ராஜா அண்ணா. உங்களின் ஊக்கம் கண்டு மிகுந்த சந்தோசம்.:icon_rollout:

சிவா.ஜி
17-09-2007, 01:27 PM
"உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கெ
இடுக்கண் களைவதாம் நட்பு"-

என்பதுபோல

உடுக்கை விரும்பிய நிதியில்லா தோழிக்கு ஆங்கே
இடுக்கண் களைந்த நட்பு.

அந்த நட்பை இன்றளவும் நினைவு கூறும் பூமகளை மனதார பாராட்டுகிறேன்.
சுற்றுலா சந்தோஷம் அந்த ஒற்றை சம்பவத்தால் களையிழந்ததை நினைத்து வருத்தமாக இருக்கிறது.அதே சமயம் அந்த இக்கட்டான சூழலிலும் நம் இளைஞர்கள் எத்தனை பக்குவமாக நடந்து கொண்டார்கள் என்பதைப் பார்க்கும்போது நமது இளைய சமுதாயத்தின் மீது பெருமிதம் தோன்றுகிறது.
சம்பவங்களை சுவைபடச் சொல்வதில் தானொரு வித்தகியென்பது மீண்டும் தெளிவாகிறது.வாழ்த்துக்கள் பூமகள்.

பூமகள்
17-09-2007, 01:30 PM
அழகாய் சொன்னீர்கள் சிவா அண்ணா.
உங்களின் ஊக்கமே என்னும் மேலும் எழுதச் சொல்லித் தூண்டுகின்றன...!!
மிக்க நன்றிகள் அண்ணா.

மலர்
17-09-2007, 04:05 PM
உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி ராஜா மற்றும் அமரன் (அமரன் சற்றே கீழே கவனியுங்கள்)

1. மலர்
எனக்கு தங்கை என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் துர்திஷ்டவசமாக கூடபிறந்த தங்கை சொர்க்கத்திற்கு சென்று விட்டார். நீங்கள் எனக்கு தங்கையாக இருந்து நான் உங்கள் கூடபிறந்த அண்ணனாக இருந்தால் என்ன என்ன அன்பு கட்டளைகளையிடுவீர்கள் ?

இல்லாத உறவுகளின் ஏக்கம் எல்லோருக்கும் உண்டு....

மீண்டும் என்னை கேள்வி கேட்டு அழைத்து கொண்டு வந்த கமலக்கண்ணன் அண்ணாவிற்கு என்னுடைய நன்றிகள்

அன்பு அண்ணா உடன் பிறந்தால் மட்டும் தான் தங்கையா. மன்றத்தில் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே....எனக்கு உடன் பிறந்த அண்ணன் கிடையாது.. சிறுவயதில் அண்ணன் இல்லையே என்று கவலைப்பட்டதில்லை.ஆனால் கொஞ்சம் வளர்ந்ததும் அதிகமாக ஏங்கிய உறவு இதுவாக தான் இருக்கும்.
அரவணைப்பதில் அன்னையாய்
கண்டிப்பதில் தந்தையாய்
தோள் கோடுக்கும் நல்ல தோழனாய்
எனக்கு ஒரு அண்ணனை தராத கடவுள் எனக்கு ஒரு நல்ல அக்காவை கொடுத்ததற்காய் நன்றி சொல்ல நான் கடமைபட்டுள்ளேன்.
இறைவன் தராத இந்த உறவும் தமிழ்த்தாய் மூலமாக இந்த அழகான தமிழ்மன்றத்தில் எனக்கு கிடைத்துவிட்டது.. தமிழ் மன்றத்துக்கு என்னுடைய நன்றிகள்
தெரியுமா எங்கள் ஊரில் உடன் பிறந்த அண்ணனை(நெருங்கிய உறவு) அண்ணாச்சி என்று தான் அழைப்பார்கள்..
அன்பு கட்டளை என்றால்இது நீங்கள் அறியாததோ இல்லை உங்களுக்கு தெரியாததோ கிடையாது நீங்கள் கேட்டதால் தருகிறேன்..
பத்துமாதம் கருவில் சுமந்து
பாராட்டி சீராட்டி வளர்த்த நம் அம்மா அப்பாவை அவர்களின் இறுதி காலம் வரை கண்கலங்காமல் நம்மோடு வைத்துருப்பதுதான்..நம் நாட்டை பொறுத்தவரை எந்த பெற்றோரும் திருமணம் ஆகி சென்ற பெண்ணை சார்ந்தோ அல்லது அந்த பெண்ணுடனோ நிச்சயம் இருக்க மாட்டார்கள்..பெரும்பாலும் மகனோடு தான் இருப்பார்கள்.அவர்களின் முதிர்ந்த வயதிலும் அவர்களை பாரமாக எண்ணாமல் பாசமாக வைத்திருக்க வேண்டும்...

1.எல்லா தங்கையும் முதலில் எதிர்பார்ப்பது தன் அண்ணன் தன்னிடம் பாசமாக பேசவேண்டும் எனபதுதான்!

2. தலைமுறை இடைவெளி காரணமாக தாய் தந்தையிடம் பகிர்ந்துகொள்ள முடியாதவற்றை பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு அண்ணன் தோழனாக நடந்துகொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பது.

3. கடைசிவரை கூடவருவதால் தாய்தந்தையைவிட தன் அண்ணன் தன்னிடம் அதிக தாயன்புடன் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது.

4. எந்த இடத்திலும் தன் அண்ணன் தனக்காக தலைக்குனிய கூடாதென்று நினைப்பது.

5. தன்னைவிட தன் அண்ணன் எப்பொழுதும் ஒருபடி மேலே இருக்கவேண்டுமென்று விரும்புவது.

6. கட்டுபாடுகளுடன் கூடிய சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் தனக்கு தன் அண்ணன் எப்போதும் அளிக்க வேண்டுமென்று நினைப்பது.

7. தவறு நேர்ந்துவிட்டால் எதிரியாக கருதி தண்டிக்காமல் குழந்தையாக எண்ணி கண்டிக்க வேண்டுமென்று எண்ணுவது.

8. கடைசியாக இந்த மாதிரி கடினமான கேள்விகளை கேட்டு தங்கச்சியை கஷ்டப்படுத்த கூடாது என்பது.

(இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று தான் நினைத்தேன்....
நான் நேரத்தை சரியாக திட்டமிடாததால்..எழுத முடியவில்லை.... மன்னிக்க)

மலர்
17-09-2007, 04:09 PM
மலர், பூமகள் ...!

நீங்க ரெண்டுபேருமே பதில் சொல்லுவதில் சூப்பர் ஸ்டார்ஸ்.. மத்தவங்க பதிலுக்கு கருத்து மட்டும் சொல்லிட்டுப் போயிடறீங்களே.. உங்க பதிலை எப்போம்மா சொல்லப் போறீங்க..?

அடேங்கப்பா... ஒரு பெரிய பனிப்பாறையை அப்படியே தூக்கி தலையில வச்ச மாதிரி இருக்கு.....
யக்கோவ் உங்களுக்கு எப்படி.............?

ஹா,,,,ஹா எங்க பதில நாங்களும் சொல்லிட்டோமில்ல....

பூமகள்
17-09-2007, 04:11 PM
தங்கை மலர்..:icon_clap:
சுருங்கச் சொல்லி சுறுக்கென்று நம் மன்றத்து அண்ணாச்சிகளுக்கு அன்புக் கட்டளையும் இட்டுவிட்டாய்..!!:icon_shades:
பதில் அழகு தங்கையே... !!:icon_good:
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்..!!:aktion033:
என் சார்பிலும் இந்த கட்டளையை அண்ணாக்கள் நிறைவேற்ற வேண்டும் எப்போதும்...!!:icon_give_rose:

மலர்
17-09-2007, 04:15 PM
Originally Posted by kamalk023
4. பூமகள்
உங்களின் வாழ்க்கையில் நடந்த மிக மறக்க முடியாத தினம் என்று எதை நினைக்கிறீர்கள்... ஏன்?

பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறந்த கல்லூரி நினைவுகள் எப்போதும் நம்மை விட்டு நீங்காது...
அதிலும் இது போன்ற சில அனுபவங்கள் நம் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விடும்.....

ஓவியன்
17-09-2007, 05:39 PM
பூமகள்!

சின்னச் சின்ன சம்பவங்கள் கூட அது நடைபெறும் பின்னணியைக் கொண்டு மனதில் ஆழப் பதிந்து விடுவது வழமை........

அப்படியே உங்கள் பதிலும்.........

பாராட்டுக்கள் ஒரு அழகான நட்பினால் ஆசிர்வதிக்கப் பட்டிருப்பமைக்கு....

பூமகள்
17-09-2007, 05:47 PM
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அன்புத்தங்கை மலர்.

பூமகள்
17-09-2007, 05:49 PM
நன்றிகள் ஓவியன் அண்ணா.
அந்த அன்பிற்கினிய நட்பு என்றும் தொலையாமல் இருக்க அனுதினமும் கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறேன்.

ஓவியன்
17-09-2007, 05:51 PM
கை பிடித்து நடத்தல்.. மூன்று காரணங்களுக்காக

1. வாழிகாட்டுதல்
2. வழி காட்டச் சொல்லுதல்..
3. கல்யாணம்

ஆஹா செல்வண்ணா!, எல்லாம் சரிதான் ஆனால்,
இப்படியும் ஒரு காரணம் இருக்கு என்று பென்ஸ் அண்ணா சொல்லுறாரே...??? :icon_rollout:

என்னை கண்டவுடன் ஒரு நண்பனை போல ஓடி வந்து கையை பிடித்து கொள்ளுவான் (காலை வாரத்தான்) அது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

மொத்ததில
இன்றய தாமரை = நாளைய அனிருத்.

ஓவியன்
17-09-2007, 05:55 PM
[COLOR="Blue"]
(இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று தான் நினைத்தேன்....
நான் நேரத்தை சரியாக திட்டமிடாததால்..எழுத முடியவில்லை.... மன்னிக்க)

பரவாயில்லை சகோதரி, உங்களது இந்த மனப்பாங்கு ஒன்றே நிறைய வாசித்த திருப்தியைத் தருகிறது நமக்கு........:)

பூமகள்
17-09-2007, 06:09 PM
அடேங்கப்பா... ஒரு பெரிய பனிப்பாறையை அப்படியே தூக்கி தலையில வச்ச மாதிரி இருக்கு.....
யக்கோவ் உங்களுக்கு எப்படி.............?

ஹா,,,,ஹா எங்க பதில நாங்களும் சொல்லிட்டோமில்ல....

ஆமாம் டா..எனக்கும் இமயமலை அளவு ஐஸ் வச்சமாதிரிதான் இருந்திச்சி..
அதனால் ஜலதோசம் வேறு பிடிச்சிருச்சுன்னா பார்த்துக்கோயே...!!:sport-smiley-018:
நம்ம கிட்ட பதில் வாங்க என்னவெல்லாம் சொல்லவேண்டியதா இருக்கு பாரு....!!! ஹீ ஹீ...!!:icon_rollout:

இளசு
17-09-2007, 06:48 PM
அடடா என்னமா அசத்துகிறார்கள் நம் மன்ற உறவுகள்..

அமரனின் பிரிவு, தனிமை மேலெழுப்பிய கவிரசனை-ஆக்கம்
ஓவியனின் வர்ண நேசம், சாதனை பாதியில் நிற்கும் ஏக்கம்
அன்புவின் பாதை மறக்காத பண்பாட்டு உச்சம்
மனோஜின் தனித்துவப் பாணியின் விளக்கம்
இதயத்தின் தரமான பின்னூட்டங்களின் பின்னால் உள்ள மனவெளிச்சம்..
பூமகளின் தோழி தந்த நெகிழ்ச்சி... விபத்தால் வந்த உடல்+மன அயர்ச்சி..
மலரின் அன்புக்கட்டளைக்கு ஆளான ''அண்ணாச்சி''கள்
மீனாகுமாரின் நிதானமான வேலைவாய்ப்பு முதல்தகவல்...

கமலக்கண்ணனின் அற்புதக்கேள்விகள்..
ராஜாவின் தீர்க்கதரிசனம்
அமரனின் நெறிகாட்டல் + வழிநடத்தல்..

வெற்றித்திரிக்கு உற்சாக வாழ்த்துகள்!

ராஜா
17-09-2007, 07:24 PM
நன்றி மலர்..!

மணமாகி புகுந்தவீடு செல்லும் ஒவ்வொரு பெண்ணின் உள்ளக்கிடக்கையையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.. நியாயமான கோரிக்கையே.. அன்புக்கட்டளையென்றும் சொல்லலாம்.

அழகிய பதில்.

ராஜா
17-09-2007, 07:27 PM
அன்பின் அமர்..!

அடுத்த கேள்வியாளரை அழைக்கலாமா..?

அமரன்
17-09-2007, 07:30 PM
அன்பின் அமர்..!

அடுத்த கேள்வியாளரை அழைக்கலாமா..?

அழைக்கலாமே....மன்றத்தின் தங்கமங்கை அருமைத் தங்கை பூமகளை அழைப்போமா அண்ணா...

அமரன்
17-09-2007, 07:39 PM
சிறப்பான உதைப்புக் கேள்விகள்
ஒன்றையொன்று விஞ்சும் பதிலகள்
சுவைத்த திருப்தியில் பாராட்டுப்பத்திரம்
பாராட்டிற்கு திருப்பமாய் நன்றி நவிலல்...
எல்லாமே கலக்கல்..நன்றி அனைவருக்கும்.

ராஜா
17-09-2007, 07:49 PM
மன்றத்தின் தங்கமங்கை அருமைத் தங்கை பூமகளை அழைக்கலாமே...!

பூமகள்
18-09-2007, 04:06 AM
என்னைத் தேர்வு செய்து வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா.
ஆ பத்து கேள்விகளோடு வருகிறேன் விரைவில்.:sport-smiley-018:

ஆதவா
18-09-2007, 05:43 AM
இப்பொழுதும் என் மனைவி நான் நம்மன்றத்திற்குள் வந்தால் " ஆதவாவை பார்க்க போய்விட்டார்" என்பார். அதுபோல உங்களின் கவிதை படைப்பது பற்றிய திரி மிகவும் கவர்ந்து விட்டது அவருக்கு, இந்த திரி தொடங்க சிந்தனை வந்த சூழ்நிலையை விளக்க முடியுமா ?

வாய்ப்பளித்த கண்ணன் அவர்களுக்கும் என்னை ஞாபகம் வைத்திருக்கும் அண்ணிக்கும் எனது நன்றிகள்...

பொதுவாக ஏதாவது சிந்தனை செய்துகொண்டிருப்பது எனது மனத் தொழில். காலக் கட்டாயம். விழிகளுக்குள் நெரண்டிக் கொண்டிருக்கும் காட்சிகளின் பிம்பங்களை எடுத்து மனதோடு குழைத்து குழைத்து வைத்திருப்பேன். ஒவ்வொரு தொழிலுக்கும் பாடம் இருக்கும். என்னைப் பொறுத்தவரை கவிதை ஒரு தொழிலாய் கொண்டால் அதற்கு பாடம் இருக்கிறதா என்று சிந்தித்திருப்பேன்...........

இதுதான் சரியான சூழல் என்று சொல்வதற்கில்லை. எனினும் தொடங்குவதற்கு முன் ஏகப்பட்ட சிந்தனைகள் செய்தது உண்மை. நானே இந்த தொழிலில் அனா ஆவன்னா எனும்போது இங்கிருப்பவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்தேன்... அப்பறமாக நானே என்னை சமாதானம் சொல்லி ஆரம்பித்தேன்....

என்ன சமாதானம்? நாம் சொல்லிக் கொடுத்தால் அது பாடம்.......... நாம் சொன்னால் அது நம் கருத்து அல்லது எனது அனுபவம்...........

எனது அனுபவத்தைத்தான் அங்கே எழுதுகிறேன்.... சற்றே பாட வடிவில்.

ராஜா
18-09-2007, 07:01 AM
நன்றி ஆதவா..!

ராஜா
18-09-2007, 07:09 AM
மன்ற உறவுகளை மனம் திறக்கவைக்கும் வகையில் கேள்விகள் கேட்ட கண்ணன் அவர்கட்கும், சிறப்பாக பதிலளித்த உறவுகளுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்..!

பென்ஸ்
18-09-2007, 07:18 AM
[B]

[COLOR="DarkSlateGray"]இந்த அன்புத்தங்கையை மறவாமல் அழகான கேள்வி கேட்ட என் அன்பு அண்ணன் கமலக்கண்ணன் அவர்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்..!!:nature-smiley-002:

என் வாழ்வில் மறக்கவே முடியாத பல அழகான தினங்கள் இன்னும் மனத்தில் ஆழமாய் இருக்கிறது.:)

ஆனால் ஒரு சம்பவத்தை மட்டும் கேட்டதால்.. எதனைச் சொல்வதென்றே புரியவில்லை..:confused:

எல்லோருக்கும் இருப்பது போல் எனக்கும் என் கல்லூரி நாளில் நடந்த ஒரு சம்பவம் என்னால் என்றுமே மறக்கவே முடியாத தினமாக அமைத்துவிட்டது.:music-smiley-009:

அன்பின் பூமகள்...
நினைவுகள் மூளையில் ஒரு லைபிரரில் புத்தகம் அடுக்கி வைக்க பட்டிருக்கும் என்று வாசிக்க பட்டிருக்கிறேன், ஆனால் இந்தனை அருமையாக அவற்றை எழுதும் போது அதை உங்கள் எழுத்துகள் ஊர்ஜித படுத்துகின்றன....

என்ன சொன்னாலும் கல்லூரி நாட்க்கள் இனிமைதான்....
மீண்டும் வராத
மீண்டு வர முடியாத இனிய நாட்கள்...

நட்பு என்பது நான் நினைப்பதை நீ செய்வதுதானே...
உங்கள் தேவை அறிந்து, பலன் எதிர்பாராமல்...
பலன் எதிர்பாராத உறவுகள் மிக அரிது தோழி...
அந்த வகை தோழி கிடைத்தது உங்களுக்கு பெருமை...
அந்த வகை சம்பவத்தையும் பெருமையாக சொன்னது எனக்களுக்கு பெருமை...

அட நிங்க கூட போலிஸ் ஸ்டேசன் போயிருக்கிங்களா... நான் என்னவோ ஆதவன், நான், லொள்ளுவாத்தியார் இப்படி சிலரை தான் ரொம்ம்ம்ம்ப நல்லவன் என்று நினைத்திருந்தேன்...

மிக தெளிவாக பதிவு...
முக அழகான சுயதேடல்...

வாழ்த்துகள்...

தாமரை
18-09-2007, 08:24 AM
ஆஹா செல்வண்ணா!, எல்லாம் சரிதான் ஆனால்,
இப்படியும் ஒரு காரணம் இருக்கு என்று பென்ஸ் அண்ணா சொல்லுறாரே...??? :icon_rollout:

பென்ஸூக்கு தலையைத்தான் வார முடியாதே!!!:lachen001::lachen001:
காலையாவது வாரலாம்னுதான்;);)

அமரன்
18-09-2007, 09:40 AM
அன்புத்தங்கை...தங்க மங்கை....செந்தமிழ் நங்கை...எங்கேம்மா போயிட்டே...வாம்மா....ஆபத்து தாம்மா...!

பூமகள்
18-09-2007, 10:37 AM
அன்பு மன்றம் தந்த பாச உறவுகளே...!!
என் மீது நம்பிக்கை வைத்து, அன்பு கொண்டு எனக்கு ஆ பத்தில் கேள்வி கேட்க வாய்ப்பளித்த மன்றத்து என் அண்ணாக்களுக்கு என் பணிவான நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.:icon_rollout:

என் ஆ பத்துக் கேள்விகள் இதோ...!!

1. அறிஞர் - கொஞ்சும் சாட்டையினாலும் பண்பட்ட மனத்தாலும் அற்புதமாய் மன்றத்தை நிர்வகிக்கும் அறிஞர் அண்ணாவிடம் ஒரு கேள்வி கேட்க எனக்கு நீண்ட நாள் ஆசை.
நீங்கள் ஆராய்ச்சித் துறையில் இருப்பதாக அறிந்தேன். உங்களின் ஆராய்ச்சிப் பணியில் நிச்சயம் அற்புதமான பல நிகழ்வுகள் நடந்திருக்கும். அவற்றில் உங்களுக்கு பிடித்தமான நாங்கள் அறியக் கூடிய அறிவியல் விசயங்கள், சாகசங்கள், வித்தியாசமான அனுபவங்கள் ஏதேனும் இருப்பின் எங்களோடு பகிரவும்.
சொந்த நாட்டை விட்டு இருக்கும் உங்களுக்கு மேலை நாட்டின் கலாச்சாரம் எந்த அளவு உங்கள் குழந்தைகளை ஆக்ரமித்துள்ளது என்று நினைக்கிறீர்கள்? எப்படி அவர்களுக்கு நம் பண்பாட்டைப் பற்றி தெளிவுபடுத்துகிறீர்கள்? இதன் மூலம் பல வெளிநாட்டு வாழ் நண்பர்கள் பயனடைவர் என்று நம்புகிறேன்.

2. ஓவியன் - புதியவராய் நான் வந்த போது என்னை அன்புடன் வரவேற்று குழந்தை போல் கைபிடித்து மன்றத்தில் நடைபழக்கியது அன்பு ஓவியன் அண்ணாவையே சேரும். அந்த வகையில் உங்களை கை பிடித்து உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சந்தர்பத்தில் யாரேனும் கண்டிப்பாய் வழிநடத்தியிருப்பர். அந்த அற்புதமான நபரைப் பற்றி எங்களோடு பகிர இயலுமா?

3. இலக்கியன் - உங்களின் ஆதீத தமிழ் பற்றும் இலக்கிய ஆர்வமும் கவித்திறனும் கண்டு வியந்திருக்கிறேன். உங்களிடம் இந்த தமிழ் பற்றுக்கு தூண்டுகோளாய் இருந்தவர் யார்?
உங்களிடம் இலக்கிய ஆர்வத்தை எப்படி யாரால் வளர்க்கப்பட்டது??
உங்கள் கவிதைகளில் சந்தங்கள் அழகாய் அமைகின்றன. நிலவைப் பற்றிய வர்ணிப்புக்கள் அதிகம் பார்க்கமுடிகிறது. ஏதேனும் விசேச காரணம் இருக்கிறதா?

4. சிவா.ஜி - எதையும் எளிதில் புரிந்து சரியாக விமர்சிக்கும் உங்களின் பாங்கு கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். கதாகாலட்சேபம் திரி உங்களிடம் இருக்கும் நாடகத்திறனையும்
அழகாக பறைசாற்றுகிறது. உங்களின் நாடகத்திறனை என்று நீங்கள் உணர ஆரம்பித்திருந்தீர்கள்? எப்படி அதைச் செப்பனிட்டீர்கள்?

நீங்கள் பல தரப்பட்ட மக்களை உங்கள் வாழ்வில் சந்திக்க நேர்ந்திருக்கும். அப்படி சந்தித்ததில் உங்களால் மறக்கவே முடியாத மனிதர் யார்? ஏன்?

5. லொள்ளுவாத்தியார் - உங்களின் தமிழ் பற்றும் விவாத நடையும் வரலாற்றுச் சிந்தனையையும் அனைவரும் அறிவர். நீங்கள் கோவை என்பதால் ஒரு கேள்வி.
கோவையில் தகவல் தொழில் நுட்பப்பூங்கா வருவதாய் சொல்கின்றனர். அப்படி வந்தால் பல நன்மைகளுக்கு இடையில் சென்னைக்கு அடுத்தபடியாய் கலாச்சார சீரழிவு இங்கும் வரும் என்பது திண்ணம். அதனை தவிர்த்து நம் கொங்கு மண்டலமாம் கோவையின் தனித்தன்மை மறையாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்?

6. இதயம் - உங்களின் படைப்புக்கள் அனைத்துமே சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமைந்திருக்கின்றன. அரசியல் திரியிலும் கலகலப்புடன் பங்கு பெற்று எங்கள் இதயத்தில் நீங்காமல் இடம் பெற்றுவிட்டீர்கள்.
உங்களிடம் ஒரு கேள்வி. உங்களின் இதயத்தைத் திறந்து சொல்லுங்கள். பெண்களுக்கு சுதந்திரம் எந்த அளவிற்கு அவர்களின் வீட்டில் கொடுக்கப்படுகிறது??
"ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம்" என்ற கூற்று உண்மையாக்கும் தினம் வந்துவிட்டதா?

7. அக்னி - பெயருக்கு ஏத்தபடியே உங்களிடம் அதீத தீபோன்ற தமிழ் பற்று, கவித்திறன், ஆராய்ந்து உடன் கவியோடு பின்னூட்டம் இடும் திறன், இப்படி பலவற்றைப் பார்த்து வியந்து விழித்திருக்கிறேன்.
நீங்கள் வெளிநாட்டில் இருப்பதாக தெரியும். உங்கள் எதிர்கால சந்ததிகளுக்கு எப்படி தமிழ்ப்பற்றையும் தமிழறிவையும் புகட்ட உத்தேசித்துள்ளீர்கள்?? வழிமுறைகளைச் சொன்னால் பலர் பயனடைவர்.

8. அமரன் - சரியான வார்த்தை வசியக்காரர். உங்களின் படைப்புக்கள் படித்து அழுதுவிடுவேன் அதனைப் படித்து முழுதும் தெளியும் அறிவு இல்லாமல் இருக்கிறதே என்று.
உங்களைப்பார்த்து கொஞ்சம் பொறாமை கூட தலைதூக்கும் என்னில். அன்புக் கட்டளைகளால் மன்றத்தை நெறிப்படுத்துவதில் வல்லவர்.
நீங்கள் சமீபத்தில் படித்து ரசித்த இலக்கியப் புத்தகம் எது? அல்லது தமிழில் உங்களின் மனம் கவர்ந்த புத்தகம் எது? ஏன்?

9. ஷீ-நிசி - உங்களின் அழகான விமர்சனமும் படைப்புக்களும் உங்களை இன்னும் அழகாய் அடையாளப்படுத்துகின்றன மன்றத்தில்.
தமிழ் மன்றத்தின் தூண் ஆன பிறகு உங்களின் மன நிலை எப்படி இருக்கு?
உங்களின் கவிகளைப் பார்க்கையில் ஒரு தேர்ந்த திறமை பளிச்சிடுகிறது. உங்களின் கவி ஆர்வத்தைத் தூண்டியது யார் அல்லது எது?

10. இளசு - மன்றத்தில் அன்பு வழிநடத்தலுக்குக் சொந்தக்காரர். உங்களிடம் நாங்கள் கற்க நிறைய இருக்கிறது.
இன்றைய தமிழ் இளைஞர்களின் தமிழ் ஆர்வம் எப்படி உள்ளது? அவர்களை தமிழ் பற்றாளராக மாற்ற என்ன செய்யலாம்?

ஆதவா
18-09-2007, 10:53 AM
கேட்டுட்டாங்கய்யா!
கேட்டுட்டாங்கய்யாஆ////

நல்லவேளை தப்பிச்சேங்க பூமகள்.... :D

அக்னி
18-09-2007, 10:54 AM
விட்ட இடத்திலிருந்து திரியை வாசித்துக்கொண்டு வந்தேன்.
அனுபவமா.., அதில் கிடைத்த படிப்பினையா.., வழிநடத்தலா.., வழிவந்த தடங்களா...
என்று அனைவரின் பதில்களும் தடங்கலில்லாமல், அழகாக ஆழமாக...
அனைவருக்கும் பாராட்டுக்கள்...

இவ்வளவு உறவுகள் பதிலிறுத்துவிட்டார்களே; பதில்களுக்கு எனது பின்னூட்டங்களோ இல்லையே; என்ன செய்யலாம் என்று குழம்பியபடி வாசித்து முடிக்கையில், பூமகளின் வினாக்கொத்தில் நானும்...

சந்தோஷமாய் உணர்கின்றேன்... ஆனால், மிகவும் அழுத்தமான கேள்வியினால், ஆறுதலாய் பின்னர் பதிலிடுகின்றேன்...

ஓவியன்
18-09-2007, 11:08 AM
அம்மா பூ மகள் கொஞ்சம் அவகாசமெடுத்துப் பதிலளிக்கிறேனே...!!! :)

ராஜா
18-09-2007, 11:10 AM
நன்றி பூமகள்..!

கேள்விகளில் தங்களின் தமிழ் ஆர்வமும், பண்பாடும் நன்கு புலப்படுகிறது.

நல்லதொரு கேள்வித் தொகுப்பு..!

அக்னி
18-09-2007, 11:10 AM
அம்மா பூ மகள் கொஞ்சம் அவகாசமெடுத்துப் பதிலளிக்கிறேனே...!!! :)
யார்ட காச எடுக்க போறீங்க..?

பூமகள்
18-09-2007, 11:11 AM
அன்பு அன்கியாரே, ஓவியரே... மற்றும் அனைத்து கேள்வியாளர்களும் நேரம் எடுத்தே பதிலளிக்கவும். அவசரம் இல்லை. அழகான பதில்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

க.கமலக்கண்ணன்
18-09-2007, 12:58 PM
நான் தற்போது வெளியூரில் இருப்பதால் உங்களின் அருமையான பதில்களுக்கு வந்து பின்னோட்டம் தருகிறேன்..

சிவா.ஜி
18-09-2007, 01:04 PM
[B]என் ஆ பத்துக் கேள்விகள் இதோ...!!

4. சிவா.ஜி - எதையும் எளிதில் புரிந்து சரியாக விமர்சிக்கும் உங்களின் பாங்கு கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். கதாகாலட்சேபம் திரி உங்களிடம் இருக்கும் நாடகத்திறனையும் அழகாக பறைசாற்றுகிறது. உங்களின் நாடகத்திறனை என்று நீங்கள் உணர ஆரம்பித்திருந்தீர்கள்? எப்படி அதைச் செப்பனிட்டீர்கள்?
நீங்கள் பல தரப்பட்ட மக்களை உங்கள் வாழ்வில் சந்திக்க நேர்ந்திருக்கும். அப்படி சந்தித்ததில் உங்களால் மறக்கவே முடியாத மனிதர் யார்? ஏன்?

அன்பு தங்கையின் கேள்விக்கு உரியவனானதில் மகிழ்ச்சி.
முதலில் பின்னூட்ட சங்கதியிலிருந்து தொடங்குகிறேன்.நான் மன்றம் வந்த புதிதில்(அழைத்து வந்த இதயம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி)ஓரிரு வார்த்தைகளில் பின்னூட்டமிட்டு வந்தேன்.பிறகு ஆதாவாவின் விமர்சனம் செய்வது எப்படி என்றா திரியிலிருந்து எவ்வளவோ தெரிந்து கொண்டேன்.பதிவுகளைப் படைப்பவர் ஆர்வமாக எதிர்பார்ப்பது பின்னூட்டங்களையே.அதுவும் அவர்கள் சொல்லவந்ததை சரியாக புரிந்து கொண்டு விளக்கமாய் பின்னூட்டமிட்டால் அவர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.(எனக்கும் அப்படித்தான்)இந்த வித்தையை வெகு சிறப்புடன் கையாண்டு வரும் மிகச்சிறந்த பின்னூட்டக்காரர்கள் இளசு,பென்ஸ்,ஆதவா,ஓவியன்,அக்னி,அமரன்,இதயம்..மற்றும் பலர்.பல நேரங்களில் புரிதலுடன் பின்னூட்டமிட்டுவிடுவேன்..சில நேரங்களில்,பெரும்பாலும் அமரன் மற்றும் ஆதவாவின் எழுத்துக்கள் புரியாமல் எதையோ எழுதி 'ங்ஏ' என்று விழித்ததுண்டு. இப்போதுதான் தட்டி,முட்டி இவர்கள் அமைத்துக்கொடுத்த பாதையில் பயணிக்கத்தொடங்கியுள்ளேன்.அதற்குள் இப்படி ஒரு கேள்வி.
அடுத்து என் நாடகத்திறன்...எங்கள் குடும்பமே மிக கலாட்டாவான குடும்பம்.என் தந்தைக்கு சந்தோஷம் வந்து விட்டால் தண்ணீர் தவளையை எடுத்து தாளமிட்டு பாடத்துவங்கி விடுவார்.நானும் என் அக்காவும் ஆடுவோம்,அண்ணன்கள் பக்கத்தாளமிடுவார்கள்.இந்த சூழலில் வளர்ந்ததால் இயல்பாகவே எனக்கு மேடைக்கூச்சம் இல்லாமல் போய்விட்டது.பள்ளிக்காலங்களில் என்னுடன் படித்த சுந்தரவடிவேலு என்ற நன்பன் நல்ல நாடக எழுத்துக்காரன். அவன் எழுதிய நாடகத்தில் 9-ஆம் வகுப்பு படிக்கும்போது முதன்முதலாய் மேடையேறினேன்.அந்த மொத்த நாடகத்தில் நான் பேசிய வசனம் "எஸ் பாஸ்" இவ்வளவுதான்.பின்னர் மும்பைதான் என்னை ஒரு நல்ல நாடக நடிகனாக்கியது.எங்கள் தமிழ்மன்றத்தில் இருந்த நாடகக்குழுவின் சார்பில் நிறைய நாடகங்களை மேடையேற்றியிருக்கிறோம்.அப்போது Times Of India-வில் கலை இலக்கிய விமர்சகராய் இருந்த திருமதி.பத்மா அவர்கள் தன்னுடைய எல்லா விமர்சனங்களிலும் என்னைப்பற்றி எழுதுவார்.அது எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்தது.எங்கள் நாடகக்குழுவுக்காக வெளியிடத்திலிருந்து நாடகங்களை வாங்குவோம்.பின்னர் நானும் எங்கள் இயக்குநர் திரு.வெங்கட் அவர்களும் re-write செய்வோம்.அப்போது கிடைத்த நல்ல அனுபவம் என்னையும் ஒரு நாடக எழுத்தாளனாய் மாற்றி எங்கள் குழுவுக்காக நானே சில நாடகங்களை எழுத வைத்தது.

மூன்றாவதாக(என்னம்மா பூமகள் ஒரேயடியா இப்படி மூணு கேள்வி கேட்டுபுட்டியே)என் வாழ்வில் மறக்க முடியாத மனிதரென்றால் என்னுடைய 10-ஆம் வகுப்பின் வகுப்பாசிரியர் திரு.கலியமூர்த்தி அவர்கள்.மிகச் சிறந்த மனிதர்.கோபம் என்றால் என்னவென்றே தெரியாதவர்.பாடங்களுக்கு அப்பாற்பட்டு பல வாழ்வியல் விஷயங்களை அந்த வயதில் எங்களுக்கு உணர்த்தியவர்.ஒருமுறை அவர் வீட்டுக்கு எங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் அழைத்திருந்தார்.மிக அன்பாக உபசரித்த அவருடைய மனைவியவர்களைப் பார்த்து எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி.மிக கறுப்பாய்,தூக்கலான பற்களோடு எங்கள் ஆசிரியரின் களையான,அழகான முகத்துக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாமல் இருந்தார்.பின்னர் அவரைப்பற்றி தெரிந்து கொண்ட போதுதான் அவர் இமயமாய் எங்களிடையே உயர்ந்தார்.தன் மாமன், தனக்காக எவ்வளவோ செய்த தாய்மாமன், தன் மகளுக்கு திருமணம் முடிக்க முடியாமல் மனம் நொந்து தற்கொலை முயற்சிக்கு இறங்கியபோது,அதுவரை எந்த விவரமும் தெரியாமல் இருந்த எங்கள் ஆசிரியர் தானே வலிய சென்று அவர் மகளைத் திருமணம் செய்துகொள்வதாகக்கூறி,அப்படியே செய்தும் கொண்டார்.ஆனால் பரிதாபத்திற்காக செய்ததாக அவரின் மனைவி சிறிதும் நினைத்துவிட வாய்ப்பே இல்லாமல் அவருடன் என்றும் இன்முகத்துடன் இல்லறம் நடத்தி வந்தார்.கடந்த வருடம் சூரியனார் கோவிலுக்குப் போயிருந்தபோது அருகிலிருக்கும் அவருடைய வீட்டிற்கும் போய் அவரின் ஆசி வாங்கி வந்தேன்.அதே கலியமூர்த்தி சார்...மாறா புன்னகை,அதே அன்பான உபசரிப்புடன் அவரின் திருமதி...கண்கள் பனிக்க திரும்பி வந்தேன்.

பூமகள்
18-09-2007, 04:07 PM
அன்பு சிவா அண்ணா,

உங்களின் பின்னூட்டத்திறன் வளர்த்த விதம், வீட்டில் கச்சேரி செய்து வளர்ந்த உங்கள் நாடகக்கலை, இன்றும் மறக்காமல் நினைவு கூர்ந்து வகுப்பாசிரியரைப் போய் பார்க்கும் உங்களின் மாண்பு, ஆசிரியரின் தியாகம் என்று கூறி மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கண்கள் பனிக்கவும் செய்துவிட்டீர்கள்...!:4_1_8:

நேர்த்தியாக கோர்த்து, நேரம் எடுத்து சிரத்தையுடன் தங்கையின் கேள்விக்கு பதிலளித்தமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா.:icon_clap:

பாராட்டுக்கள் அண்ணா.:aktion033: அழகான பதில்.

(எங்களுக்கும் கொஞ்சம் உங்களின் நடனத்தைக் காட்டுவீர்களா அண்ணா?? :icon_wink1:)

அமரன்
18-09-2007, 04:34 PM
சிலர் பின்னூட்டங்களிலோ நிறைய இருக்கும்.....அப்படியான சிலரில் ஒருவர் சிவா. படைப்பைப் படித்து கருவைபிடித்து அதை வடித்து எளிமையாக்கி தருவதில் வல்லவர். அவரின் இந்த ஆற்றலுக்கு காரணம் மன்றம் என்பது மகிழ்வு தருகின்றது..அவரால் மன்றுக்கும் மன்றால் அவருக்கும் பெருமை...நல்ல குடும்ப சூழ்நிலை ஒருவனை கலைஞனாக்குகிறது என்பதுக்கு சிவா இன்னொரு உதாரணம்...சிவாவின் வாத்தியாரில் நான் சிவாவையே காண்கின்றேன்..காரணம் சுவையான சம்பவங்கள் பகுதியில் அவரது பதிவு...

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11168

பூமகள்
18-09-2007, 04:38 PM
அட நிங்க கூட போலிஸ் ஸ்டேசன் போயிருக்கிங்களா... நான் என்னவோ ஆதவன், நான், லொள்ளுவாத்தியார் இப்படி சிலரை தான் ரொம்ம்ம்ம்ப நல்லவன் என்று நினைத்திருந்தேன்...

ஆஹா....:medium-smiley-075:
என்னை பென்ஸ் அண்ணா ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவ னு சொல்லிட்டாரே....!! :medium-smiley-100:

மிக தெளிவாக பதிவு...
முக அழகான சுயதேடல்...
வாழ்த்துகள்...

மிக்க நன்றிகள் பென்ஸ் அண்ணா.. உங்களின் ஊக்கம் கண்டு மிக்க மகிழ்ச்சி.:medium-smiley-065:

ஓவியன்
18-09-2007, 04:46 PM
அன்பான சிவா!

கலாட்டாவான கலைக் குடும்பமே உங்கள் கலைக்கு ஆதாரமாக இருந்தது என்பது உண்மையே, ஒருவரை கலைஞராக மாற்றுவதில் அவரது குடும்பச்சூழல் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பது உங்கள் வாழ்க்கையிலும் நிரூபணமாகியுள்ளது.
________________________________________________________________________________________
ஒரு நல்ல சந்தர்பம் உங்களுக்கு கிடைத்திருக்கின்றது உங்கள் நாடககலையார்வத்தை மெருகேற்ற......
அதனைச் சரிவர பயன்படுத்திய அன்பு சிவாவுக்கு பாராட்டுக்கள்!!!:)
_________________________________________________________________________________________
உண்மைதான், உங்கள் கலியமூர்த்தி ஆசிரியர் உண்மையில் ஒரு அபூர்வப் பிறவியே, அத்தகைய இலட்சியபுருசனின் வார்ப்பிலே வடிக்கப்பட்ட உங்கள் பண்பு ஒன்றே போதுமே அந்தப் பெருந்தகையின் பெருமை சொல்ல.........

பாராட்டுக்கள் சிவா.

ஷீ-நிசி
18-09-2007, 05:35 PM
9. ஷீ-நிசி - உங்களின் அழகான விமர்சனமும் படைப்புக்களும் உங்களை இன்னும் அழகாய் அடையாளப்படுத்துகின்றன மன்றத்தில்.
தமிழ் மன்றத்தின் தூண் ஆன பிறகு உங்களின் மன நிலை எப்படி இருக்கு?
உங்களின் கவிகளைப் பார்க்கையில் ஒரு தேர்ந்த திறமை பளிச்சிடுகிறது. உங்களின் கவி ஆர்வத்தைத் தூண்டியது யார் அல்லது எது?

நன்றி பூமகள்..

விமர்சனம் படைப்புகள்

எனக்கு கவிதைகளை
படிக்கவும் பிடிக்கும்.
படைக்கவும் பிடிக்கும்.

இதில் முன்னானதில்
நிறைய கற்றுகொள்ளலாம்!
பின்னானதில்
நிறைய கற்றுகொடுக்கலாம்!

எல்லா கவிதைகளையும்
அனுஅனுவாய்
விமர்சிக்க விரும்பினாலும்,
கவிதைகள்..
அலை அலையாய் மிதந்து
வந்து கொண்டிருப்பதால்,

எல்லாவற்றிற்கும்
விமர்சனம் எழுத
நேரம் ஒத்துழைக்கவில்லை.

நேரம் வரும்...
நேரம் இல்லை என்று
சொல்லாமலிருக்க!!!

தமிழ் மன்றத்தின் தூண்.....

நிச்சயம் சந்தோஷம்தான்....
உண்மையிலேயே....
படைப்புகளின் எண்ணிக்கையில்
பட்டங்கள் மாறுகின்றன..

மன்றத்தில் மனம்
நிறைவடையும் வரையில்
என்னாலான, என்னால் ஆன
படைப்புகளை
பரிமாறியிருக்கிறேன்.

மன்றத்தில் ஓர் நாள்
நான் வராமல் போகலாம்...
இந்த தூண் இல்லாமலும்
போகலாம்..

ஆனால் மன்றத்தில்
என படைப்புகள்
நிச்சயம் இம்மன்றத்திற்கு
தூணாய் இருக்கும்.

கவி ஆர்வம்

காதல் எனக்கு இறைவன் அளித்தவரம்
கவிதை எனக்கு காதல் அளித்த வரம்

கவிதை எழுத தெரியுமா என்றாள்
என்னிடம் ஒரு தேவதை..

கண்ட கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தவன்..
அங்கங்கே கண்ட கவிதைகளை
எழுதிக்கொண்டிருந்தவன்...

அவளுக்காய் காணாத கவிதை
கற்பனை கவிதை
ஒன்றை எழுத ஆரம்பித்தேன்.

பின்னர் கண்ட கவிதை
காணாத கவிதை எல்லாம்
எழுதிக்கொண்டிருந்தேன்..

கவிதைகளின் பைபிள்
வைரமுத்துவின் எல்லா கவிதைகளும்
அடங்கிய மிகப்பெரிய தொகுப்பினை
ஆசை தீர தீரப் படித்தேன்..

ஆனால்
ஆசை தீர தீர தீரவில்லை.....

ஒவ்வொன்றாய் விளங்கியது...

நான் கவிதையில்
வட்டமடித்துக்கொண்டிருந்தது
வானத்தில் அல்ல...
வீட்டின் கூரையிலென்று...

கவிதையும் காதலும்
இயற்கையை ரசிக்கவைக்கும்
என் மூன்றாம் கண்ணை
திறந்துவைத்தன.....

கண்கள் பார்த்தன!
மனம் ரசித்தன!
விரல்கள் பிரசவித்தன!
கவிதைகள் தவழ ஆரம்பித்தன!!

நன்றி பூமகள்

இலக்கியன்
18-09-2007, 05:49 PM
அன்புத்தோழி பூகமளுக்கு என் அன்பான வணக்கம் என்னையும் உங்கள் கேள்விக்களைகளுக்குள் அடக்கியமைக்கு நன்றிகள் நான் இப்போதுதான் இந்த பதிவு பார்த்தேன் நாளை பதிலுடன் வருகிறேன்

ஓவியன்
18-09-2007, 06:19 PM
அன்பான ஷீ!!!

அழகுக் கவிதையில் தெளிவான பதில்கள்......

வழமைபோன்றே இலயிக்க வைத்த வரிகள் தாங்கி நின்பதோ அழகு பதில்கள்....

உங்கள் காதலுக்கு என் வாழ்த்துக்கள் அதனாலால் தானே இன்று நீங்களும் ஒரு கவிஞனாக, இந்த மன்றத்தின் தூணாக உங்கள் படைப்புக்களும்....

உங்களுக்கு நேரம் இல்லை மன்றில் உங்கள் படைப்புக்களைப் பதிக்க என்று சொல்லும் நிலை இல்லாது போக என் வாழ்த்துக்கள்!.

அமரன்
18-09-2007, 06:54 PM
ஷீ...
கற்றுக்கொண்டவையும்
கற்றுக்கொடுத்தவையும்
பெற்றுக் கொடுத்தவை பல..!
முற்றும் தேன் வை பலா...!
ஷீ...
வருங்காலம் பெருங்காலம்.
பெருங்காலம் பெருங்காலமாக
வருங்காலம் வகைசெய்யும்...!

ராஜா
18-09-2007, 07:17 PM
நன்றி சிவா..!
கலியமூர்த்தி ஆசிரியர் போன்றவர்கள், பாடங்களாகவே வாழ்கின்றவர்கள்..அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள ஏராளம் உள்ளன... வகுப்பில் மட்டுமல்ல..வாழ்க்கையிலும்தான்..

நன்றி ஷீ..
தங்கள் கவித்துவமான பதிலில் உள்ள சொல்நயம் உங்களுக்கு என் இதயத்தில் இன்னும் உயர்வான இடத்தை கொடுக்கச் சொல்கிறது..

எங்கள் இளைஞர்கள் பேரில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.. உங்களால் பாரதம் அடைந்திடும் உன்னதம்..!

ஷீ-நிசி
19-09-2007, 03:30 AM
பதிலுக்குப் பதில் பேசின :) அனைவருக்குமே என் நன்றிகள்!

இதயம்
19-09-2007, 05:25 AM
6. இதயம் - உங்களின் படைப்புக்கள் அனைத்துமே சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமைந்திருக்கின்றன. அரசியல் திரியிலும் கலகலப்புடன் பங்கு பெற்று எங்கள் இதயத்தில் நீங்காமல் இடம் பெற்றுவிட்டீர்கள்.
உங்களிடம் ஒரு கேள்வி. உங்களின் இதயத்தைத் திறந்து சொல்லுங்கள். பெண்களுக்கு சுதந்திரம் எந்த அளவிற்கு அவர்களின் வீட்டில் கொடுக்கப்படுகிறது??
"ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம்" என்ற கூற்று உண்மையாக்கும் தினம் வந்துவிட்டதா?

இதென்ன வம்பாய் போயிற்று..?! இந்த ஆ..பத்து திரி "விடாது கருப்பு" கதையாக தொடர்ந்து பூமராங் போல் மீண்டும், மீண்டும் என்னைத் தாக்கிக்கொண்டிருக்கிறதே..!! பொதுவாக கேள்வி, பதில் இது இரண்டிலும் பங்கெடுக்க ஒரு தகுதியும், திறமையும் வேண்டுமென்று நினைப்பவன் நான். அதிலும் குறிப்பாக சிறந்த கேள்வி கேட்கவே ஒரு தனித்திறமை வேண்டும். ஒரு பதிலின் முழுப்பயனை, அதை வெளிக்கொணர கேட்கப்படும் சிறப்பான கேள்வியே தீர்மானிக்கிறது என்பதால் கேள்வியே பதிலைக்காட்டிலும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில் கேட்கப்படும் கேள்வி சிறப்பாய் இருந்தால் தான் அதனால் வரும் பதில் சிறப்பாய் இருப்பதோடு, அதைக்கொண்டு அடுத்தவருக்கு பயனும் இருக்கும். அதன் அடிப்படையில் இங்கே கேட்கப்பட்டிருக்கும் சகோதரி பூமகளின் கேள்விகள் மிகச்சிறப்பான முறையில் சிந்திக்கப்பட்டு, தொடுக்கப்பட்ட கேள்விகளாக தெரிகின்றன. எனவே, அவரின் கேள்விகளை தொடர்ந்து வரும் பதில்களும் சிறப்பாய், பயனுள்ளதாய் இருக்கும் என்பது என் நம்பிக்கக. சகோதரி பூமகள் பற்றி சில வரிகள்.நம் மன்ற நந்தவனத்தில் சமீபத்தில் பூத்து, பாசம் என்ற வாசத்தை வஞ்சகமில்லாமல் வாரி வழங்கி கொண்டிருக்கும் வண்ண மலர் இவர்..! அவரின் கவிதைகளில் காணப்படும் சிந்தனைகள், கற்பனைகள், செய்திகள், உயர் கருத்துக்கள் என்னை மிகவும் கவர்கின்றன. அவர் இது போல் மேலும், மேலும் பல ஆயிரம் படைப்புக்களை படைத்து நம்மை சிறப்பிக்க வேண்டும் என்பது நான் அவருக்கு இடும் அன்புக்கட்டளை. அவர் என்னை நோக்கி தொடுத்த கேள்விக்கணையை பொறுத்தமட்டில் என்னிடம் மிகவும் ஆழ்ந்த சிந்தனையை உள்ளடக்கிய ஒரு கேள்வியை தான் கேட்டிருக்கிறார், அதுவும் "இதயம் திறந்து சொல்லுங்கள்" என்ற நிபந்தனையோடு..! "இதயத்திடமே" இதயம் திறக்கச்சொன்ன அவரின் சிந்தனை புதிராகவும், புதிதாகவும் தான் இருக்கிறது. பாராட்டுக்கள் பூமகளுக்கு..!!

சரி.. கேள்விக்கு வருகிறேன். முதல் கேள்வி "பெண்களுக்கு சுதந்திரம் எந்த அளவிற்கு அவர்களின் வீட்டில் கொடுக்கப்படுகிறது??" இந்த கேள்வியை எனக்குள் உள்வாங்கும் போது அதைத் தொடர்ந்து உள்ளுக்குக்குள் சில உபகேள்விகளும் முளைப்பதை என்னால் மறுக்க முடியவில்லை. பெண் என்றால் யார்..? தாய், மனைவி, மகள், சகோதரி உள்ளிட்ட உறவுகளா..? அல்லது சமூகத்தின் பார்வையில் பார்க்கப்படும் ஒரு பொதுவான பெண்ணா..? அடுத்து பெண் சுதந்திரம் என்ற நிலை எங்குள்ளதை பற்றி கேட்கப்படுகிறது.? உலகளவிலா, இந்தியாவிலா, தமிழகத்திலா, நாம் வாழும் சமூகச்சூழலிலா, இல்லை வீடு என்ற ஒரு சிறு வட்டத்திற்குள்ளா..? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலாக, பொதுவாக "சமூகத்தில் வாழும் ஒரு பெண்" என்பவளுக்கு சமூகம் கொடுக்கும் சுதந்திரம் எந்த அளவிற்கு உள்ளது என்று சிந்தித்து பதிலளிக்க நினைக்கிறேன்.

சரியாகச்சொல்லவேண்டுமென்றால் சுதந்திரம் என்பதன் உண்மையான அர்த்தத்தை அதை கொடுக்க வேண்டிய அவளின் உறவுகளும், அவள் வாழும் சமூகமும், அதை பயன்படுத்த வேண்டிய பெண்ணும் கூட தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. இதை நாம் வாழும் சூழலில் நடைபெறும் முரண்பாட்டு சம்பவங்களே உறுதிப்படுத்துகின்றன. அதற்கு போவதற்கு முன் பெண் சுதந்திரம் என்றால் உண்மையில் என்ன என்பதை சொல்ல விரும்புகிறேன். பெண் என்பவள் இறைநம்பிக்கையின் அடிப்படையில் ஆணுக்கு இணையாக படைக்கப்பட்டவள். பகுத்தறிவு சித்தாந்தத்தின் அடிப்படையிலும் அதே கருத்து தான் வைக்கப்படுகிறது. உடலியல் ரீதியாக உடல் கூறுகள் சிலவற்றில் பெண் என்பவள் பலவீனமுள்ளவளாக இருப்பதும் உண்மை. அந்த பலவீனங்கள் கூட ஆண்களின் சந்தோஷத்திற்கும், சமூக அங்கீகாரத்திற்கும் வலுசேர்க்கிறது என்பதால் அவற்றைக்கொண்டு பெண்ணை மட்டம் தட்டுவது என்பது ஏற்கமுடியாத விஷயம் மட்டுமல்ல, பெண்ணுக்கு ஆண் செய்யும் துரோகமும் கூட..! அதை விடுத்து, ஒரு பெண்ணுக்கு சமூகத்தில், குடும்பத்தில் தேவையான கருத்து சுதந்திரம், உரிமை ஆகியவற்றை தராமல் அவளை ஒரு போகப்பொருளாக, விளம்பர உத்தியாக, பயன்படுத்தி விட்டெறியும் வீண் பொருளாகத்தான் இன்றைய காலகட்டத்திலும் பெண்ணை சமூகம் மற்றும் அதனுள் பெரும் பங்கு வகிக்கும் ஆண் வர்க்கமும் நடத்திவருகிறது என்பது வேதனையிலும் வேதனை. ஒரு சமூகத்தில் பெண்ணாணவள் எத்தனை பெரிய அந்தஸ்தில் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் உயர ஆணை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலையை இந்த சமூகம் திட்டமிட்டு ஏற்படுத்தி வைத்திருக்கிறது. அதே போல் ஒரு குடும்பத்தில் பெண் தன் கணவனை விட படிப்பில், பதவியில் உயர்வில் இருந்தாலும் வீட்டில் மனைவி என்ற நிலைக்கு வரும் போது கணவன் சொல்வது தவறாக இருந்தாலும் அதை ஏற்று நடக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. பெண்ணுக்கு அந்தக்காலம் தொட்டு இந்தக்காலம் வரை சமூகம் அவளுக்கு பல விலங்குகளை போட்டு அவள் தன்னம்பிக்கை, திறமை, அறிவு ஆகியவற்றை அடக்கி வைத்திருக்கிறது. பெண் எத்தனை உயர்வுகளை கொண்டிருந்தாலும் அவள் ஆணின் காலடியில் சரணடைந்து கிடக்க வேண்டும் என்ற ஆணாதிக்க சமுதாயத்தின் சதிக்கு ஒவ்வொரு நாளும் அவள் பலியாகிக்கொண்டு தான் இருக்கிறாள்.

சரி.. பெண்ணின் சுதந்திரம், உரிமை பறிப்போவதற்கு சமுதாயம், ஆண் மட்டும் தான் காரணமா..? இல்லை, அதில் பெண்ணின் பங்கும் இருக்கிறது என்றால் நம்ப கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், உண்மை..! அடக்குமுறைகளுக்குள் அடிமைப்பட்டு கிடக்கும் பெண்ணினம் அதிலிருந்து வெளி வர நினைக்கும் போது தன்னுடைய சுயலாபங்களுக்காக ஆண் வர்க்கம் கொடுக்கும் சில தீய வழிகளை சுதந்திரம், உரிமை என்று நம்பி தீமையின் பக்கம் தன்னையறியாமலேயே பெண்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். சுதந்திரம் என்றால் உடை குறைத்து ஒய்யார நடை போடுவதும், ஒழுக்கத்தை துறந்து ஊர் மேய்வதும், உணர்ச்சிகளுக்கு அடிமையாகி சீரழிவதும், காமத்தை கைக்குள் கொண்டு கண்டபடி வாழ்வதுமாக பெண்கள் சிதைந்து கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய உரிமைகளுக்காக போராட வேண்டிய உடம்பும், குரலும் சுதந்திரம் என்ற பெயரில் ஆண்களின் இச்சைகளுக்கு தீனியாகிக்கொண்டிருக்கிறது. கூண்டுக்குள்ளேயே இருந்து பழகிவிட்ட கிளி, அதை திறந்து வெளியே செல்ல அனுமதித்தாலும், கிளிக்காரனின் கையிலிருக்கும் ஒரு நெல் மணியை கொத்தி எடுத்துக்கொண்டு மீண்டும் கூண்டுக்குள்ளேயே சென்றடையும் அப்பாவி கிளியின் நிலையில் தான் இன்னும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களின் பார்வைகள், திறமைகள் சுருங்கி ஒரு சிறு கூண்டுக்குள் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். அதற்குள் வாழவும் பழகிக்கொண்டு விட்டார்கள். அவர்களுக்கு வானம் தான் எல்லை என்பதை உணராமல் வட்டத்திற்குள் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் பெண்கள் சிந்தனைகள், கேள்விகள், திறமைகளை வெளிப்படுத்த முடியாத, அல்லது வெளிப்படுத்த விரும்பாத பேசா மடந்தைகள் ஆகிவிட்டார்கள்.

சகோதரியின் அடுத்த கேள்வி.. "ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம்" என்ற கூற்று உண்மையாக்கும் தினம் வந்துவிட்டதா?". ஆண் வர்க்கம் பெண்ணுக்கு உண்மையான சுதந்திரம், உரிமையை கொடுக்காதவரை, பெண் தன் சுதந்திரம், உரிமையின் உண்மை அர்த்தம் புரியாத வரை "ஆணுக்கு பெண் சரி நிகர் சமானம்" என்பது கேலிக்கூத்தான வாக்கியமாகத்தான் இருக்கும். ஒரு மனிதனை உயர்வுக்கு கொண்டு செல்லும் சிந்தனை, செயல்பாடு, திறமை, உழைப்பு ஆகியவற்றில் பெண்கள் எந்த ரீதியிலும் குறைந்தவர்கள் இல்லை. இன்னும் சொல்லப்போனால் உணர்வுகளை, உணர்ச்சிகளை அவர்கள் கட்டியாள்வதில் ஆண்களை விட அவர்கள் வல்லவர்கள் என்பதால் ஆணுக்கு சற்று மேலேயே சாதிக்கக்கூடியவர்கள் பெண்கள். உதாரணத்திற்கு, ஆயிரம் தொழிலாளிகள் வேலை பார்க்கும் ஒரு நிறுவனத்தில் நிர்வாகி என்பவர் தான் முதுகெலும்பு. தொழிலாளி என்னதான் உயிரைக்கொடுத்து வேலை செய்தாலும் அந்த நிறுவனத்தின் உயர்வு என்பது உடலுழைப்பு அதிகம் செய்யாத அந்த நிர்வாகியை கொண்டே அமைகிறது. காரணம், தொழிலாளிகளின் உடலுழைப்பை பயனுள்ள முறையில் பயன்படுத்துவது நிர்வாகியின் நிர்வாகத்தில் இருக்கிறது. அந்த ரீதியில் ஆணை விட பெண் உடல் ரீதியாக பலவீனமானவள் என்ற உடற்கூறு உண்மை பெண்ணின் உயர்வுக்கு தடையாக இருக்கிறது என்ற பொய்க்கருத்தை சிதறடித்து விடுகிறது. உடலளவிலும், மனதளவிலும் இன்பத்தை பரிமாற திருமணம் என்ற பந்தத்தின் மூலம் இணையும் ஆண், பெண் இருவரில் தியாகம், அன்பு, நேர்மை, உழைப்பு என்று அனைத்திலும் அதிகம் சிறந்து விளங்கும் பெண்ணிடம் வரதட்சிணை வாங்கும் ஆணின் செயலை யாராவது நியாயப்படுத்த முடியுமா..?

கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறைந்து, பெண்கள் கொஞ்சம், கொஞ்சமாக வலுப்பெற்று வருகிறார்கள் என்று தோன்றுகிறது. அதற்கு அவர்களின் கல்வித்தரம் உயர்ந்ததும் ஒரு காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மற்றபடி, என்றைக்கு பெண்ணிற்கான உண்மையான சுதந்திரம், உரிமைகள் சமூகத்திலிருந்து, ஆணிடமிருந்து அவளுக்கு அளிக்கப்படுகிறதோ அன்று தான் "ஆணுக்கு பெண் சரிநிகர் சமானம்" என்ற வாக்கு உண்மையாகும். அது வரை இந்த கருத்து வெறும் கனவே..!

ராஜா
19-09-2007, 05:46 AM
நன்றி இதயம்..

பெண்கள் சுதந்திரம் குறித்த தங்கள் கருத்துகள் மிகவும் சிறப்பானவை.
பெண்களுக்கு சரிசமமான மரியாதையும், சுதந்திரமும் கொடுக்கவேண்டிய அதே நேரத்தில், அந்த சுதந்திரத்தை, பெண்களும் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டிய பொறுப்பும், கடமையும் அவர்களுக்கு இருக்கிறது என்ற உரத்த சிந்தனையை உள்ளடக்கிய பதில்..!

ஷீ-நிசி
19-09-2007, 05:59 AM
சிறப்பான பதில் இதயம்.....

பூமகள்
19-09-2007, 06:10 AM
என் கேள்விக்கு என் எதிர்பார்ப்புக்களையே முறியடிக்கும்படியான பதிலை அளித்து என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதற்கு அன்புத் தோழர் மெல்லிய இதயமும் பாசமும் மிகுந்த ஷீ-நிசி அவர்களுக்கும்
என் இதயத்தில் அன்பின் விளக்கமாய் வீற்றிருக்கும் இதயம் aண்ணாவிற்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் கோடி!!:icon_rollout:

அன்புத் தோழர் ஷீ-நிசி...

உங்களின் கவித்துவமும் உங்களின் அற்புதமான மனமும் உங்களின் அழகிய பதிலில் தெளிந்தோம்.
மற்றுமொரு அழகிய வைர பதில் ஷீ-நிசியிடம் இருந்து வந்தது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி.

உங்களின் கவித்தாகம் வைரமுத்துவின் கவிமழையால் கூட தீராமல் இருந்ததை பகர்ந்த விதம் அற்புதம்.
அப்படி இருந்ததால் தான் எங்களுக்கு அழகான ஒரு சொல்வித்தைக் கவிஞர் கிடைத்திருக்கிறார். அதற்காக அவருக்கு எங்கள் நன்றிகள்.

மன்றத்துடனான உங்கள் உறவு உங்களின் துடிப்பைப் போன்றது. என்றும் உங்களின் கவித்துடிப்பால் மன்றத்தை வாழ வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு என்றும் உள்ளது.

அருமை அண்ணன் இதயம் அவர்களே..

உங்களிடம் எந்த நோக்கத்தில் இந்த கேள்வியைக் கேட்டேனோ அதே போல் என் மனம் போலவே உங்களின் பதில்கள் அமைந்ததில் எனக்கு கண்கள் மகிழ்ச்சியில் பனித்துவிட்டன.
இவ்வளவு அழகான தெளிந்த நடையில் மிகச் சிறப்பான முறையில் உங்கள் பதில் இருந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆணும் பெணும் சரிநிகர் ஆவது அவர் அவர் சரியான முறையில் கிடைத்த சுதந்திரத்தைப் பயன்படுத்துவதில் தான் உள்ளது என்று ஆணி அடித்தார் போல் சொல்லிய விதம் அருமை.

இத்தகைய அழகான கருத்துக்களை உங்களிடம் இருந்து பெற வேண்டியே சற்று கடினமான கேள்வி ஆயினும் உங்களிடம் இந்த கேள்வியைக் கேட்டேன். எனக்கு உங்கள் மேல் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை மேலும் வலுவாக்கும் விதத்தில் உங்களின் பதில்களும் அமைந்திருந்தன.

என் இதயம் திறந்து சொல்கிறேன்..... பாராட்டுக்கள் இதயம் அண்ணா.

lolluvathiyar
19-09-2007, 07:36 AM
மன்றத்தில் பல பெரிய தலைகள் இருக்க என்னிடம் கேள்வி தொடுத்த பூமகளுக்கு நன்றி. அதுவும் என் குணத்தை பற்றி நன்றாகவே கனித்து வைத்திருகிறீர்கள். உங்கள் கேள்வி கோவைக்கு தகவல் தொழில் நுட்ப பூங்கா வருவது கலாரார சீரழிவு வருவது பற்றியது.

[B]5. லொள்ளுவாத்தியார் - கோவையில் தகவல் தொழில் நுட்பப்பூங்கா வருவதாய் சொல்கின்றனர். அப்படி வந்தால் பல நன்மைகளுக்கு இடையில் சென்னைக்கு அடுத்தபடியாய் கலாச்சார சீரழிவு இங்கும் வரும் என்பது திண்ணம். அதனை தவிர்த்து நம் கொங்கு மண்டலமாம் கோவையின் தனித்தன்மை மறையாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்?

கலாசார சீரழிவு என்பதற்க்கு சரியான விளக்கம் சொல்ல முடியாது. உடைமாற்றமா (டி சர்ட் + ஜீன்ஸ்), அல்லது மெட்டீரியலிசம் (அதிகமாக செலவு செய்வது), அல்லது ஒரு படி மேலே போய் டேட்டிங் கலாசாரமா?

உடை மாற்றம் என்ற கோனத்தில் பார்த்தால் கோவையில் அது மாறி நீண்ட நாள் ஆகி விட்டது. உன்மையை சொல்ல போனால் டி சர்ட் கலாசாரம் கோவையிலிருந்துந்தான் மற்ற பகுதிகளுக்கு பரவியது. இங்கு தானே அவை தயாரிக்க படுகிறது (திருப்பூர்). உடை மாற்றத்தை கோவை மக்கள் நீண்ட காலத்துக்கு முன்னமே ஏற்று கொண்டு விட்டார்கள். அடுத்தது பணபுலக்கம், இது கோவையில் முன்னமே இருக்கும் ஒன்றுதான். இங்கு தானே தமிழகத்தின் செல்வந்தர்கள் இருகிறார்கள். ஆகையால் அதிலும் ஒன்றும் பெரிய மாற்றம் வந்துவிடமுடியாது. கோவை என்பது உற்பத்தி தொழில் நகரம் ஆகையால் இங்கு ஏற்கனமே ஆட்கள் பற்றாகுரை உள்ள நகரம் தான் 5 டிஜிட் சம்பளம் என்பது கோவைக்கு புதிதல்ல. மேலும் சென்னை அளவுக்கு இல்லாவிட்டாலும் சிறிதளவு கலாசாரம் கோவையில் சிரழிந்து தான் போயிருகிறது.

அடுத்தது டேட்டிங்க் கலாசாரம் வருமோ என்ற ஒரு பயம். காரனம் சென்னையில் தொழில் நுட்ப பூங்கா பெருகியதால் அங்கு வளர்ந்த டேட்டிங் கலாசாரம் ஒரு வேலை இங்கும் பரவி விடுமோ என்று உங்கள் அச்சம். சென்னை வேறு கோவை வேறு, சென்னை நகரம் 50 ஆண்டுகளுக்கு முன்னரே கலாசார சீரழிவுக்கு பெயர் போன நகரம். பீச்சுகள் நிரைந்த நகரம். சென்னை ஒரு பாரம்பரிய சுற்றுலா நகரம், அங்கு கலாசார சீரழிவுக்கு ஏற்ற வகையிலேயே தொழில்கள் வசதிகள் (Infrastructure) நீண்டகாலமாக உள்ளது. மேலும் சினிமா துரை இருக்கும் நகரம். சினிமா துரை எங்கு இருகிறதோ அங்கு கலாசார சீரழிவு ஏற்பட்டே தீரும். ஆனால் இவை அனைத்தும் கோவையில் இல்லை.

மேலும் சென்னையில் வேலை செய்பவர்கள் பெரும்பகுதியினர் சென்னையை சேர்ந்தவகள் அல்ல, ஆனால் கோவைக்கு ஐடி பார்க் வந்தால் இங்கு வேலைக்கு சேர்பவர்கள் பெரும்பகுதி இந்த ஏரியா காரர்களாக தான் இருக்க முடியும். காரனம் ஐடி துரையை சார்ந்தவர்கள் பெரும்பான்மை மக்கள் கோவை ஈரோடு மக்கள். அந்த அடிபடையில் பார்த்தால் அவர்கள் கிட்டதட்ட உள்ளூரில் தான் வேலை செய்கிறார்கள். அந்த என்னம் இருந்தாலே கலாசாரம் ஓரளவுக்கு பாதுகாக்க படும்.

ஐடி பார்கை விட்டு வெளியே வந்தால் சென்னையை போல் நினைத்த இடத்தில் எல்லாம் ஆட்டம் போடும் வசதி கோவைக்கு கிடையாது. அங்கு பீச்கள் ஏராளம், அறிமுகம் இல்லாமல் தங்கும் லாட்ஜ்கள் அதிகம். ஒருவர் முகமும் தெரியாது. இப்படி பல பல. ஆனால் கோவையில் ஐடி பார்கை விட்டு வெளியே வந்தால் ஏதாவது தூரத்து சொந்தகாரர்கள் முகத்தில் விழிக்க வேண்டி இருக்கும்.

மேலும் சென்னை நகரம் முற்றிலும் மல்டி எத்னிக் கல்சர் கொண்ட நகரம். ஆனால் கோவை பலதரபட்ட இன மக்கள் இருந்தாலும் கவுண்டர்கள் பெரும்பான்மையும் ஆதிக்கமும் கொண்ட ஊர். அடுத்து பூர்வீகமாக நிரைய நாயகர்கள் , செட்டியார்களும், முஸ்லீம்கள் உள்ள ஊர். நான் சொல்ல வருவது சில ஜாதிகளின் பூர்வீக செல்வாக்கு உள்ள ஊர். ஆகையால் ஓரளவுக்கு கட்டுபாடு இருக்கும். ஆனால் சுதந்திரத்தை பாதிக்காது. அதனால் கோவை சென்னையை போல் கலாசார சீரழிவு வராது. கொங்கு மண்டலம் பத்திரமாக இருக்கும்.

ஆகையால் பயபட வேண்டியதில்லை. மேலும் ஒருவேலை அப்படி தவிர்க்க முடியாமல் சீரழிவு வருமானால். அதை தடுக்க முயல்வது வீன் வேலை. தடுக்க முடியாது. ஏற்று கொள்ளும் மனபக்குவம் அடைந்து கொள்ள வேண்டும். கூலுக்கும் ஆசை மீசை ஆசை பட முடியாது.

கலாராசம் அவ்வளவாக பாதிக்கபடாவிட்டாலும் வேறு தீமைகள் இருகிறது. ஆனால் அவற்றை பற்றி விரிவாக எழுத முடியாது.

சிவா.ஜி
19-09-2007, 07:36 AM
நன்றி பூமகள்,அமரன்,ஓவியன்,ராஜா சார்...மன்ற உறவுகளுக்கிடையில் வாழ்வதை பெரு மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

சிவா.ஜி
19-09-2007, 07:39 AM
ஷீ-நிசியின் கவித்தேடலும்,மன்ற பங்களிப்பையும் அவருக்கே உரிய கவி நடையில் சொல்லி எங்கள் உள்ளம் கொள்ளை கொண்டுவிட்டார்.காதலால் பிறந்த கவிதை...இன்னும்..இன்னும் மெருகேறி..இங்கு அற்புதமாய் ஜொலிக்கிறது.வாழ்த்துக்கள் ஷீ.

சிவா.ஜி
19-09-2007, 07:44 AM
வாத்தியார் அய்யா...உங்களுக்கே உரித்த அலசலைக் காண்கிறேன்.கலாச்சார சீரழிவு என்பதற்கான வரையறை எதுவும் பொதுவாக வ்குக்கப்படவில்லை என்பதை சொன்ன நீங்கள்,அப்படிப்பட்ட சீரழிவு கோவையில் அளவுக்கு அதிகமாக ஏற்பட வாய்ப்பில்லையென்பதையும் வெகு அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.மிக அருமையான பதில். வாழ்த்துக்கள் தலைவரே.

lolluvathiyar
19-09-2007, 07:52 AM
பூமகளின் கேள்விக்கு சிவா ஜி யின் பதில் அவரை பற்றி உயர்த்தி காட்டி விட்டது. ஷீ நிசி தன் கவிதையாலேயே ரசிக்கும் பதில் தந்து விட்டார்.
அடுத்தது இதயம் ஒரு கருத்துக்கு நீன்ட விளக்கம் தருவதில் கெட்டிகாரர். அதுவும் பூமகளின் இந்த கேள்வி சரியான இடத்தை நோக்கி தான் கேட்கபட்டிருகிறது. பெண் உரிமையை பற்றி யாரிடம் மிக சிற்ந்த வகையில் பதில் வருமோ அவரிடமே கேட்க பட்டுவிட்டது.
வாழ்த்துகள்

பூமகள்
19-09-2007, 08:26 AM
அன்பு வாத்தியார் அண்ணா...

நம் ஊர் கோவையைப் பற்றி இத்தனை தெளிவாக விளக்கி, என்னை உங்கள் பதிலால் குளிரச் செய்துவிட்டீர்கள். மிக்க நன்றிகள் அண்ணா.
எங்கே நம் பண்பாடு பாதிக்கப்படுமோ என்ற எண்ணம் என் மனத்தில் நீண்ட நாளாய் அமர்ந்து பயமுறுத்திக்கொண்டிருந்தது. அதனை உங்களின் ஆழமான அல்சல் போக்கிவிட்டது.

உங்களின் பதில் அருமையிலும் அருமை. கிளப்பிட்டீங்க வாத்தியாரே...!!

ராஜா
19-09-2007, 09:36 AM
பயப்பட வேண்டியதில்லை. மேலும் ஒருவேளை அப்படித் தவிர்க்க முடியாமல் சீரழிவு வருமானால். அதை தடுக்க முயல்வது வீண் வேலை. தடுக்க முடியாது. ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அடைந்து கொள்ள வேண்டும். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைப்பட முடியாது.

கலாச்சாரம் அவ்வளவாக பாதிக்கப்படாவிட்டாலும் வேறு தீமைகள் இருக்கிறது. ஆனால் அவற்றை பற்றி விரிவாக எழுத முடியாது.

தெள்ளத் தெளிவான பதில்..

வாத்தியார் ஒரு கட்டற்ற களஞ்சியம்.. எந்த பொருள் குறித்தும் அவர் விபரங்கள் வைத்திருப்பார்.. அதுமட்டுமல்ல.. அவற்றை தேங்காய் உடைப்பதுபோல் அதிரடியாகச் சொல்வதிலும் அவருக்கு நிகர் அவரே..!

நன்றி வாத்தியாரே..!

அமரன்
19-09-2007, 10:59 AM
அமரன்- சரியானவார்த்தைவசியக்காரர். உங்களின்படைப்புக்கள்படித்துஅழுதுவிடுவேன்அதனைப்படித்துமுழுதும்தெளியும்அறிவுஇல்லாமல்இருக்கிறதேஎன்று.
உங்களைப்பார்த்துகொஞ்சம்பொறாமைகூடதலைதூக்கும்என்னில். அன்புக்கட்டளைகளால்மன்றத்தைநெறிப்படுத்துவதில்வல்லவர்.
நீங்கள்சமீபத்தில்படித்துரசித்தஇலக்கியப்புத்தகம்எது? அல்லதுதமிழில்உங்களின்மனம்கவர்ந்தபுத்தகம்எது? ஏன்?

மன்றத்து ஆபத்தில் மாட்டுவதை மட்டும் விரும்புகின்றனது மனம். மீண்டும் சிக்கவைத்த சிக்கலில்விட்ட பூமகளுக்கு நன்றி...உங்கள் கொத்தில் எனக்கான வினாவை தமிழையும், என்னையும் நன்கறிந்த நண்பர்கள் காணநேர்ந்தால் நிச்சயம் நகைப்பார்கள். சிலர் இறைவா காப்பாற்று எனநேர்வார்கள்....எனது தமிழ் என்னும்போது அது மழலை கிறுக்குவது/பேசுவது போன்றது. அதில் தேர்ந்தவர்கள் தேர்ந்தெடுத்து பாராட்டும்போது ஆனத்தப்பெருக்கு என்னுள். அதைப்பார்த்து வெள்ளப்பெருக்கு உங்களுக்கு...தமிழ் என்னில் சிக்கி சீரழிவதை இப்படி வஞ்சமாக சொல்லியிருக்கவேண்டாம்..அதை விடுவோம் பிரதான கேள்விக்கு வருவோம்...

இலக்கியம் மரத்தின் பச்சையம்போன்றது. அது எனக்குப் பரிச்சயம் இல்லாதது. சின்னவயதில்(பத்து வரைக்கும்) பாட்டி சொன்ன செவிவழிக்கதையும் தாத்தா பாடித்தூங்கவைத்த நாட்டுப்புறப்பாட்டுகளும், கூத்துப்பாட்டுகளும், நளமகராசன்,மகாபாரதம்,இராமயணம் போன்ற பாடல்களும்தான் எனது பாதையின் கிளையை தீர்மானித்தன. அவற்றில் இருந்த தமிழைவிட மெட்டுக்களே என்னைக்கவர்ந்தன. இசையில் கவனம் செலுத்தினேன். அப்பபோ மேடைகளில் பேச்சுப்போட்டி...அவ்வளவுதான்..
அப்புறம் பத்த்தாவது வகுப்புவரை சித்திரக்கதைகள்,அம்புலிமாமா, கோகுலம் போன்றனவற்றில் தமிழ்படித்தேன். ஈழத்து பாடவிதானத்தில் இலக்கியம் தொட்டுக்கொள்ளும் சட்னியாக இருக்கும்..எட்டுப்பாடம் படித்த பத்தாவதில் ஏழில் சிறப்புத்தேர்ச்சிபெற்றேன்..தமிழில் சாதாரணதேர்ச்சி...இதைவிட எனது தமிழ்ப்புலமையை சிறப்பாக வெளிப்படுத்த முடியாது...

தொடர்ந்த கல்வித்துறை காரணமாக தமிழ் அன்னியாகியது....என்னை என்குடும்பத்தினரே நாடுகடத்தி சிலவருடங்களின் பின்னர் மன்றம் கிடைத்தது...தமிழ் வசீகரித்தது..தாத்தா,பாட்டி தந்த தமிழ்களை அசைபோடவைத்தது..அவற்றைத்தான் நான் துய்த்த இலக்கியமாக உணர்கின்றேன்..தவிர மன்றத்தில் உள்ள இலக்கியம்தொடர்பான அனைத்தும் படித்துக்கொண்டு இருக்கின்றேன்....

என்னைக் கவர்ந்த புத்தகம் நெப்போலியனின் சரித்திரம்..அது வாழ்க்கையில் பலவற்றைக் கற்றுக்கொள்ள ஏதுவானது...தமிழில் பாவேந்தர்,மகாகவி,வைரமுத்து,காசி ஆனந்தன் கவிதைகள் என்னைக்கவர்ந்தவை...அதில் என்னுடன் அதிகம் நெருங்கிப்பழகுவது பாவேந்தர் கவிதைகள்...எல்லாம் உள்ளடக்கிய கவிகள் அவை என்பது எனது தாழ்மையான கருத்து...

இலக்கியன்
19-09-2007, 11:43 AM
3. இலக்கியன் - உங்களின் ஆதீத தமிழ் பற்றும் இலக்கிய ஆர்வமும் கவித்திறனும் கண்டு வியந்திருக்கிறேன். உங்களிடம் இந்த தமிழ் பற்றுக்கு தூண்டுகோளாய் இருந்தவர் யார்?
உங்களிடம் இலக்கிய ஆர்வத்தை எப்படி யாரால் வளர்க்கப்பட்டது??
உங்கள் கவிதைகளில் சந்தங்கள் அழகாய் அமைகின்றன. நிலவைப் பற்றிய வர்ணிப்புக்கள் அதிகம் பார்க்கமுடிகிறது. ஏதேனும் விசேச காரணம் இருக்கிறதா?

வணக்கம் பூமகள்
அழகான தமிழில் என் மீது தொடுத்த கேள்விகளுக்கு விடை கான விளைகின்றேன். நான் பிறந்த மண் தமிழர்கள் வாழும் பூமி ஆகவே இயல்பாகவே தமிழில் பேசும் ஆற்றல் எனக்கு ஏற்ப்பட்டது.

தமிழ் மொழி மூலக்கல்வி பெற்றமையால அந்த ஆற்றல்களை
வளம் படுத்த அது ஊன்று கோலாக அமைந்தது எனலாம்.

எனது பூர்வீக மண் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் அடக்கப்பட்டு கைப்பற்றப்பட்டு இராணுவ சூனியப்பிரதேசமாகி விட்டது. ஆதலால் தாய் மண்மீதும் மொழிமீதும் எனக்கு மிகுதியான பற்றுதல் ஏற்பட்டது. ஒரு இனம் அடக்கப்படும் போது அந்த இனத்தவர்கள் மொழிமீது தாய் நிலம் மீதும் பற்று கொள்வது இயல்பானதே. அதன் பிரதிபலிப்பும் இதற்கு காரணமாக அமையும்.

தமிழ் மொழி மூலக்கல்வி கற்றதினால் எனக்கு வாசிப்பு பழக்கம் அதிகமாகிவிட்டது. சிறு பிராயத்தில் தமிழ் நாடேளுகள் வீரகேசரி ஈழநாடு முரசொலி உதயன் போன்ற பத்திகைகளும் கோகுலம் அம்புலிமாமா ராணி காமிக்ஸ் கல்கண்டு ஆனந்தவிகடன் கல்கி
போனற புத்தகங்கள் வாசிப்பதனால் தமிழில் இயல்பாகவே சி
று தேர்ச்சி ஏற்பட்டது எனலாம்.

உயர்தரம் கல்வி கற்ற போது நான் கலைத்துறை தெரிவு
செய்து தமிழ் இலக்கண இலக்கிய நூல்கள் கற்கும் வாய்ப்பு
ஏற்பட்டது அதன் பால் ஒரு வித ஈர்ப்பும் இருந்தது எனலாம். பல்கலைக்களகம் சென்று படிப்பு தொடர நாட்டு நிலமைகள் கை கொடுக்கவில்லை.

எனக்கு அ எழுத பழக்கிய சிறுவர் பிராயத்து ஆசிரியர் நினைவுகள் இன்னும் பசுமையாக நன்றி செலுத்தும்.

இலக்கிய நூல்கள் எனக்கு வகுப்பு பாடங்களாக அமைந்தமையால்
தமிழ் இலக்கிய வரலாறு படிக்க கூடிய வாய்ப்பு கிட்டியது. என்கவிதை ஆற்றல்கள் பள்ளிப்பராயத்தில் ஏற்பட்டது அனால் அது குடத்துள் விளக்காக இருந்தது

எனக்கு ஒரு நண்பர் இருந்தார் அவர் ஜெர்மனி நாட்டில் தாதியாக வேலை செய்கின்றார் அவரும் ஒரு கவிஞர் அவரின் நட்பு எனக்கு ஏற்பட்டது என்னிடம் உள்ள இயற்கை காட்சிகளை அவருக்கு அனுப்பி வைப்பேன் அவரும் அந்த படங்களுக்கு கவிதை வரைவார்.

ஒருநாள் ஒரு இணையத்தளத்தில் எனக்கு ஒரு வாழ்த்துக்கவிதை படைத்து அதைப்பார்வையிடும் படி கூறினார் நானும் பார்த்து அதற்கு ஒரு பதில் கவிதை வரைய முற்பட்டு எழுதி அனுப்பினேன் அதற்கு நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்தன அதனைத்தொடர்ந்து புலம் பெயவாழ்வின் அவலங்கள் நிலமைகளை கவிதையாக வடித்தேன்

கவிதை என்பது கடல் போல பரந்தது அதில் ஒரு துளிகூட நானக இருப்பேனோ தெரியவில்லை. இன்னும் நிறைய எழுத வேண்டும் என்பது என் ஆவல்.

நிலவு பற்றிய கவிதைகள் கூடுதலாக அமைந்தமைக்கு காரணம் நான் இயற்கையை இரசிப்பதனால் என நினைக்கிறேன். என் கிராமத்து வாழ்வில் நிலாமுற்றத்தில் உறவுகள் கூடி குலாவிய அந்த மகிழ்ச்சிகளின் நினைவுகள் மட்டுமே என் நெஞ்சில். நாம் நாடு திரும்பினாலும் போக முடியாத இடமாகிவிட்டது எம் ஊர்

இசைகளையும் கலைகளையும் இரசிப்பேன் அதுதான் இப்படியான சந்தக்கவிதைகள் பிறக்க காரணமாக அமைந்து இருக்கலாம். அத்துடன் எதுகை மோனையும் ஒரு சந்தத்தைக்கொடுக்கும் அதை நான் கையாள்வதனால் இருக்கலாம்
நன்றி

ராஜா
19-09-2007, 11:50 AM
அமர் ஒரு நிறைகுடம்.. என்றுமே தளும்பியதே இல்லை..
நீங்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், உங்கள் அருமையை நாங்கள் அறிவோம்.

இயற்கை இரசிகர் இலக்கியனின் பதிலும் சிறப்பே.. கவிஞர்கள் என்றுமே என் இதயத்தில் மிக உயர்வான இடத்தைப் பிடித்திருக்கிறார்கள்.. இலக்கியனும் அவ்வாறே..!

சிவா.ஜி
19-09-2007, 12:56 PM
அமரன்,ராஜா சார் சொன்னதையே நான் வழி மொழிகிறேன்.திறமையுள்ள இடத்து அடக்கமும் சேர்ந்திருப்பது அரிது.நீங்கள் அந்த அரிய வகை.விரும்புகின்ற நூல்களே சொல்கின்றன உங்கள் சிந்தனையின் தரத்தை.அவையாவும் இட்டுவிட்டன உங்களிடம் தமிழ் உரத்தை.இன்று விருட்சமாய் நீங்கள் இந்த மன்றத்தில்.
வாழ்த்துக்கள் அமரன்.

lolluvathiyar
19-09-2007, 01:01 PM
அமரன் இலக்கியன் இருவருமே தங்கள் தமிழ் வளர்ந்த காரனத்தை அழகாக விளக்கி இருகிறார்கள். அம*ரன் தன் தமிழ் தொடர்புகள் விட்டு பின்னாளில் மன்றம் மூலம் பட்டை தீட்டி கொண்டதாக சொல்லி இருப்பது உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது
இலக்கியன் ஒரு வரியை தெளிவாக சொன்னார்கள், ஒரு இனம் ஒடுக்கபடும் போது அதன் மீது மனிதனுக்கு பற்று அதிகமாகும். 100 சதம் சரி

சிவா.ஜி
19-09-2007, 01:02 PM
வாழ்த்துக்கள் இலக்கியன்.தமிழ்மீது உங்களுக்கிருக்கும் ஆர்வம் உங்கள் கவிதைகளில் வழிகிறது.அந்த சுவையை நாங்களும் உணர்கிறோம்.கவிஞன், இயற்கையின் காதலனாக இருப்பதில் வியப்பில்லை.உங்கள் ரசிப்பை,கவி விருந்தாய் எங்களுக்கும் தருகின்ற உங்களுக்கு பாராட்டுக்கள்.

அறிஞர்
19-09-2007, 01:19 PM
இந்த அன்புத்தங்கையை மறவாமல் அழகான கேள்வி கேட்ட என் அன்பு அண்ணன் கமலக்கண்ணன் அவர்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்..!!:nature-smiley-002:

என் வாழ்வில் மறக்கவே முடியாத பல அழகான தினங்கள் இன்னும் மனத்தில் ஆழமாய் இருக்கிறது.:)

ஆனால் ஒரு சம்பவத்தை மட்டும் கேட்டதால்.. எதனைச் சொல்வதென்றே புரியவில்லை..:confused:

எல்லோருக்கும் இருப்பது போல் எனக்கும் என் கல்லூரி நாளில் நடந்த ஒரு சம்பவம் என்னால் என்றுமே மறக்கவே முடியாத தினமாக அமைத்துவிட்டது.:music-smiley-009:

இந்த சம்பவங்கள் உண்டான அந்த நாட்களை என்னால் என்றும் மறக்கவே முடியாது.:icon_rollout:
கண்டிப்பாக மறக்கமுடியாது.... நல்ல அனுபவங்கள்... அந்த நேரங்களில் இருக்கும் திக் திக்... திக்.. அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும்...

பூமகள்
19-09-2007, 01:27 PM
உண்மை தான் அறிஞர் அண்ணா. அனுபவித்தவருக்கே அந்த திகில் புரியும். உங்களின் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி.
ஆனால் எங்கே அண்ணா உங்களின் அழகான ஆ பத்து கேள்விக்கான பதில்????:smilie_abcfra:

அறிஞர்
19-09-2007, 01:49 PM
1. அறிஞர் - கொஞ்சும் சாட்டையினாலும் பண்பட்ட மனத்தாலும் அற்புதமாய் மன்றத்தை நிர்வகிக்கும் அறிஞர் அண்ணாவிடம் ஒரு கேள்வி கேட்க எனக்கு நீண்ட நாள் ஆசை.

[/COLOR]

மன்றத்தில் வருகிற அனைவரும் தனிப்பட்ட முறையில் நல்லவர்களே... நண்பர்களே... சிலர் குழப்பத்தை ஏற்படுத்த விளையும் போது... கொஞ்சம் சாட்டையை எடுக்கவேண்டியிருக்கிறது.. யாரும் தாக்கும்விதத்தில் உபயோகிப்பதில்லை.. மன்றத்தின் நலனுக்கே அவ்வாறு செய்கிறேன்... சிலருக்கு... நான் கடுமையாக இருப்பதாக நினைக்கிறார்கள்... என்னை நன்கு அறிந்த சிலருக்கே... என் குண நலன்கள் தெரியும்....

இந்த பகுதிக்கு அவ்வளவாக வருவதில்லை.. தங்கையின் ஆர்வத்திற்காக பதிலளிக்கிறேன்...

[B]
நீங்கள் ஆராய்ச்சித் துறையில் இருப்பதாக அறிந்தேன். உங்களின் ஆராய்ச்சிப் பணியில் நிச்சயம் அற்புதமான பல நிகழ்வுகள் நடந்திருக்கும். அவற்றில் உங்களுக்கு பிடித்தமான நாங்கள் அறியக் கூடிய அறிவியல் விசயங்கள், சாகசங்கள், வித்தியாசமான அனுபவங்கள் ஏதேனும் இருப்பின் எங்களோடு பகிரவும்.
முன்பு ஆராய்ச்சி பற்றி இளசுவின் கேள்வியில் கூறியுள்ளேன்...
Originally Posted by இளசு
7) அறிஞர் :
ஆராய்ச்சிகள் பணி, ஊதியம் தந்தாலும், கூடவே திருப்தியும் அளிக்கின்றன..

இதுவரை அதிக திருப்தி தந்த ஆராய்ச்சி எது?

ஆராய்ச்சி என்றால் ஏற்ற தாழ்வுகள் அதிகம்...

சில ஆராய்ச்சிகளை.. எந்த வசதியும் இல்லாத இடத்தில் ஆரம்பித்து... அதில் சில பயனுள்ள தகவல்களை கண்டுபிடிக்கும்பொழுது... அதில் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது.

என்னுடைய முனைவர் பட்டம் பெற ஆராய்ச்சி செய்த பொழுது.... நானோ தொழில் நுட்பத்தில் சில சர்க்கரை மூலக்கூறுகளை சிறிய நானோபார்ட்டிக்கலில் இணைத்தேன். பின் அவற்றை விந்தணுக்களுடன் இணைத்து இனச்சேர்க்கையில் ஏற்படும் விளைவுகளுக்கான (பழைய விதிகளுக்கு ஒத்துபோகும்) ஆதாரத்தை கண்டுபிடித்தேன். இதற்கு நான் செலவிட்ட 3 வருடங்கள்... கடுமையானது. அதே நேரத்தில் அது ஆராய்ச்சி பிரதியாக வெளியான பொழுது ஏற்பட்ட மகிழ்ச்சி அளவிடமுடியாதது.

[B]
சொந்த நாட்டை விட்டு இருக்கும் உங்களுக்கு மேலை நாட்டின் கலாச்சாரம் எந்த அளவு உங்கள் குழந்தைகளை ஆக்ரமித்துள்ளது என்று நினைக்கிறீர்கள்? எப்படி அவர்களுக்கு நம் பண்பாட்டைப் பற்றி தெளிவுபடுத்துகிறீர்கள்? இதன் மூலம் பல வெளிநாட்டு வாழ் நண்பர்கள் பயனடைவர் என்று நம்புகிறேன்.
தொலைந்து விட்ட இன்பங்கள்... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7914) என்ற தலைப்பில் சில அனுபவத்தை வெளியிட்டேன். நான் சிறு வயதில் அனுபவித்த பல அனுபவங்களை அவர்கள் அனுபவிப்பதில்லை.. ஆனால் அவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்கள்.. பெரியது. 9 மாதம் முதல் விமானத்தில் பறக்கிறார்கள்... அவர்களுடைய எண்ணங்கள் எல்லாம் பெரியதாக உள்ளது (பெரிய வீடு, நல்ல விலையுயர்ந்த கார்.... வாங்க வேண்டும் என்பது போல்). ஆசைப்பட்டதை உடனே வாங்கி மகிழுகிறார்கள்... பெரும்பாலும் அவர்கள் தங்கள் செயல்களை தாங்களே செய்ய வேண்டும் என்ற பொறுப்பு உள்ளது. கலாச்சாரம் இது வரை பாதிக்கப்படவில்லை... வீட்டில் பேச்சு மொழி தமிழ்தான்.. ஆங்கிலம் பேசினால் எந்த பரிசுப்பொருளும் கிடையாது... என மொழி முதல்... எல்லாவற்றிலும் கலாச்சாரத்தை விடாமல் இருக்க முயலுகிறோம். குழந்தைகள்.. தரையில் அமர்ந்து உணவு சாப்பிடவே விரும்புவார்கள். பள்ளியில் நிலை வேறு. சாப்பாடு... வீட்டு சாப்பாடு தான்.. (இட்லி, தோசை, இடியாப்பம், பணியாரம்... சாம்பார், ரசம்...). இப்பொழுது பிசா, பர்கர் அவர்களை கவர ஆரம்பித்துள்ளது... வளர வளர...

வெளியில் பீச், பார்க், கடைகள்.. செல்லும்பொழுது, மற்றவர்களை பார்க்கிறார்கள்.. அது சிறிதளவு பாதிப்பை தருகிறது.. பள்ளிக்கூட அனுபவம் அவர்கள் கலாச்சாரத்தை மாற்றக்கூடும்... முடிந்தவரை.. நம் கலாச்சாரம், பண்பாட்டை பாதுகாக்க முயற்சிக்கிறோம்.

மனோஜ்
19-09-2007, 02:13 PM
பூமகளின் கேள்வியும் உறவுகளின் பதில்களும் அருமை
உறவுகளின் வாழ்க்கை பதிவுகள் ஆவது சிறப்பு

க.கமலக்கண்ணன்
19-09-2007, 02:14 PM
இந்த அன்புத்தங்கையை மறவாமல் அழகான கேள்வி கேட்ட என் அன்பு அண்ணன் கமலக்கண்ணன் அவர்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்..!!:nature-smiley-002:

என் வாழ்வில் மறக்கவே முடியாத பல அழகான தினங்கள் இன்னும் மனத்தில் ஆழமாய் இருக்கிறது.:)

என் அருமை தோழியுடன் நானும். ஒரு துணிக்கடைக்குச் சென்றோம்.அங்கு அழகழகாய் சுடிதார்கள் நியாயமான விலையில். எந்த பெண்ணுக்கும் ஆடைகள் மேல் பிரியம் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. எனக்கும் சின்ன மனத்தில் குட்டி ஆசை.

ஒரு துணியேனும் அங்கு சென்று எடுத்துவிடுவது என்று. ஆனால் என் எதிர்பார்ப்புக்களை முறியடித்தது என் கைவசம் இருந்த நிதி நிலமை.

ஒரு துணியை ஆசையாய் எடுத்து பார்த்தவண்ணம் இருந்தேன். என் தோழியும் வேறு அவளுக்காய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

என் பட்ஜெட்டில் எனக்கு பிடித்த கலரில் துணியை செலக்ட் செய்தேன். ஆனால்... எடுக்க பணம் இல்லை. அவள் என்ன நினைத்தாலோ அவள் செலக்ட் செய்ததை வேண்டாம் என்று சொல்லி என் துணிக்கு பணம் தந்தாள். அன்புடன் என் கை பற்றி, "வைத்துக் கொள் மிகவும் ஆசை பட்டாய் என்று எனக்கு தெரியும். மெதுவாக உன்னால் முடிந்த போது பணம் கொடு" என்று சொன்ன நிமிடத்தையும் அந்த நாளையும் என்னால் என் வாழ்வில் மறக்கவே முடியாது.
என் கண்கள் பனித்ததை அவள் பார்த்திருக்கக் கூடுமோ என்னமோ... அவள் சிரித்தாள் ஆறுதலாய் என் கை பற்றி. நான் வார்த்தை வர இயலாமல் ஒரு கணம் தடுமாறி பின் என் மனமாற நன்றி சொன்னேன் அவளிடம்.

என்னடா இது??? ஒரு துணியை தோழி வாங்கிக் கொடுத்ததற்கா இத்தனை ஆர்பாட்டமான விவரிப்பு என்று யாரேனும் நினைக்கக் கூடும்.

ஆனால், வாழ்க்கையில் நான் அன்றிருந்த சமயம், எனது ஆசையை நிறைவேற்ற அவள் எடுத்த அந்த சிரத்தை என்னால் இன்னும் மறக்கவே முடியவில்லை. நான் மறந்தால் அது என் நட்பிற்கு நான் செய்யும் துரோகம். பின்னர் அதற்கான பணம் அவள் வாங்க மறுத்தும் கொடுத்து விட்டேன் என்றாலும்.. அவளின் அந்த உணர்வை நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அன்பு தோழி எடுத்து கொடுத்த உடை வேண்டுமானால் சிறியதாக

அல்லது பெரியதாக இருந்திருக்கலாம் ஆனால்

அந்த தோழியின் பாசம்தான் பெரிது

அதைவிட அந்த சம்பவத்தை மிக

அழகாக நினைவு கூர்ந்து எங்கனை எல்லாம் கலங்க வைத்த

அற்புதமான பூமகளின் மனதில்

அண்ணன்களாக நாங்கள் வீற்றிருப்பது எங்களின் பாக்கியம் தங்கையே

அற்புதமாக விளக்கிய அன்பு தங்கைக்கு

அன்பான நன்றி என்று சொல்ல விருப்பவில்லை, வாழ்த்துக்களுடன்...

க.கமலக்கண்ணன்
19-09-2007, 02:33 PM
இல்லாத உறவுகளின் ஏக்கம் எல்லோருக்கும் உண்டு....

மீண்டும் என்னை கேள்வி கேட்டு அழைத்து கொண்டு வந்த கமலக்கண்ணன் அண்ணாவிற்கு என்னுடைய நன்றிகள்

அன்பு அண்ணா உடன் பிறந்தால் மட்டும் தான் தங்கையா. மன்றத்தில் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே....எனக்கு உடன் பிறந்த அண்ணன் கிடையாது.. சிறுவயதில் அண்ணன் இல்லையே என்று கவலைப்பட்டதில்லை.ஆனால் கொஞ்சம் வளர்ந்ததும் அதிகமாக ஏங்கிய உறவு இதுவாக தான் இருக்கும்.
அரவணைப்பதில் அன்னையாய் கண்டிப்பதில் தந்தையாய் தோள் கோடுக்கும் நல்ல தோழனாய்

எனக்கு அப்படியே தங்கையே...

என்னுடைய தங்கை

எனக்கு 5 வயதிருக்கும் போது இறைவனடி சேர்ந்த போது

என்னிடம் அதை உணரும் சக்தி இல்லை. சற்று வளர்ந்த பின்

எப்பொழுதும் அந்த நினைகள் வாட்டி எடுத்திருக்கின்றன

என்பது மறுக்க முடியாத உண்மை

பத்துமாதம் கருவில் சுமந்து
பாராட்டி சீராட்டி வளர்த்த நம் அம்மா அப்பாவை அவர்களின் இறுதி காலம் வரை கண்கலங்காமல் நம்மோடு வைத்துருப்பதுதான்..நம் நாட்டை பொறுத்தவரை எந்த பெற்றோரும் திருமணம் ஆகி சென்ற பெண்ணை சார்ந்தோ அல்லது அந்த பெண்ணுடனோ நிச்சயம் இருக்க மாட்டார்கள்..பெரும்பாலும் மகனோடு தான் இருப்பார்கள்.அவர்களின் முதிர்ந்த வயதிலும் அவர்களை பாரமாக எண்ணாமல் பாசமாக வைத்திருக்க வேண்டும்...

இன்றும் தாய் தந்தையை தனியே தவிக்க விடும்

இளைய சமுதயத்தை பார்க்கும் போது வெறுப்பாக

இருக்கிறது. நமக்கு நடக்க பழக்கபடுத்துவதிலிருந்து

இருபது வயதில் வேலைக்கு செல்லும் வரை அனைத்துக்கும்

இந்த பெற்றோர்கள் தேவை படுகிறார்கள். தங்கள் தேவை முடிந்த உடன்

இலகுவாக தூக்கி போட்டு விட்டு சென்று விடுகிறார்கள்.

இன்றல்ல என்றோ நினைத்தது எனது மானார் மாமியார் வயதான காலத்தில்

இறைவனுக்கு தொண்டு செய்வது போல அவர்களை என் வீட்டில் வைத்து

இனிமையாக பராமரிப்பேன். என்று மலருக்கு உறுதி சொல்கிறேன்...

1.எல்லா தங்கையும் முதலில் எதிர்பார்ப்பது தன் அண்ணன் தன்னிடம் பாசமாக பேசவேண்டும் எனபதுதான்!

2. தலைமுறை இடைவெளி காரணமாக தாய் தந்தையிடம் பகிர்ந்துகொள்ள முடியாதவற்றை பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு அண்ணன் தோழனாக நடந்துகொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பது.

3. கடைசிவரை கூடவருவதால் தாய்தந்தையைவிட தன் அண்ணன் தன்னிடம் அதிக தாயன்புடன் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது.

4. எந்த இடத்திலும் தன் அண்ணன் தனக்காக தலைக்குனிய கூடாதென்று நினைப்பது.

5. தன்னைவிட தன் அண்ணன் எப்பொழுதும் ஒருபடி மேலே இருக்கவேண்டுமென்று விரும்புவது.

6. கட்டுபாடுகளுடன் கூடிய சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் தனக்கு தன் அண்ணன் எப்போதும் அளிக்க வேண்டுமென்று நினைப்பது.

7. தவறு நேர்ந்துவிட்டால் எதிரியாக கருதி தண்டிக்காமல் குழந்தையாக எண்ணி கண்டிக்க வேண்டுமென்று எண்ணுவது.

8. கடைசியாக இந்த மாதிரி கடினமான கேள்விகளை கேட்டு தங்கச்சியை கஷ்டப்படுத்த கூடாது என்பது.

மின்னுகிறதம்மா உன்னுடைய அன்பு கட்டளைகள்

மின்சாரம் பாய்ந்து ஒலி பெருக்கியில் ரகுமானின் இசை போல அதிர்கிறது ஒவ்வொன்றும்

மிளிர்கின்ற உன் கட்டளைக்கு முழுதாக என்னால் ஈடு கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில்

- அன்பு அண்ணன்.... கமலகண்ணன்...

க.கமலக்கண்ணன்
19-09-2007, 02:42 PM
பொதுவாக ஏதாவது சிந்தனை செய்துகொண்டிருப்பது எனது மனத் தொழில். காலக் கட்டாயம். விழிகளுக்குள் நெரண்டிக் கொண்டிருக்கும் காட்சிகளின் பிம்பங்களை எடுத்து மனதோடு குழைத்து குழைத்து வைத்திருப்பேன். ஒவ்வொரு தொழிலுக்கும் பாடம் இருக்கும். என்னைப் பொறுத்தவரை கவிதை ஒரு தொழிலாய் கொண்டால் அதற்கு பாடம் இருக்கிறதா என்று சிந்தித்திருப்பேன்...........
இதுதான் சரியான சூழல் என்று சொல்வதற்கில்லை. எனினும் தொடங்குவதற்கு முன் ஏகப்பட்ட சிந்தனைகள் செய்தது உண்மை. நானே இந்த தொழிலில் அனா ஆவன்னா எனும்போது இங்கிருப்பவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்தேன்... அப்பறமாக நானே என்னை சமாதானம் சொல்லி ஆரம்பித்தேன்....

என்ன சமாதானம்? நாம் சொல்லிக் கொடுத்தால் அது பாடம்.......... நாம் சொன்னால் அது நம் கருத்து அல்லது எனது அனுபவம்...........
எனது அனுபவத்தைத்தான் அங்கே எழுதுகிறேன்.... சற்றே பாட வடிவில்.

நன்றி ஆதவா அழகாகன பதிலை மிக அற்புதமாக அனைவரும்

நலம் பெறும் வகையில் தந்ததற்கு நன்றிகள் நம் கற்றவற்றை மற்றவர்களுக்கு

நடத்தும் வகைகயில் சொல்லிக் கொடுத்தால் என்றாவது அது கண்டிப்பாக

நமக்கு உதவும் என்பதில் ஐயமில்லை, மிக்க நன்றி ஆதவா உங்களின் பதிலுக்கு

க.கமலக்கண்ணன்
19-09-2007, 02:55 PM
அற்புதமான கேள்விகள் பூமகள்

அழகிய பதில் சிவா.ஜி,

அருமையான கவிதையில் பதில் ஷீ-நிசி,

அதிரும் உண்மையான பதில் இதயம்

அறிவான வாத்தியார் பதில்

அமரனை கவர்ந்த புத்தகங்கள் வல்லமை படைத்தது

அழகிய இலக்கண இலக்கியனின் பதில்

அறிஞரின் ஆய்வின் விளக்கம்

அற்புதம்

அய்யகோ கலக்கு கலக்கு என்று கலக்குகிறார்களே அனைவரும்...

பூமகள்
19-09-2007, 03:11 PM
தமிழ் என்னில் சிக்கி சீரழிவதை இப்படி வஞ்சமாக சொல்லியிருக்கவேண்டாம்..அதை விடுவோம் பிரதான கேள்விக்கு வருவோம்...

உண்மையைச் சொன்னேன். வஞ்சப்புகழ்ச்சி என்றால் எப்படி அமர் அண்ணா??:traurig001:

என்னைக் கவர்ந்த புத்தகம் நெப்போலியனின் சரித்திரம்..அது வாழ்க்கையில் பலவற்றைக் கற்றுக்கொள்ள ஏதுவானது...தமிழில் பாவேந்தர்,மகாகவி,வைரமுத்து,காசி ஆனந்தன் கவிதைகள் என்னைக்கவர்ந்தவை...அதில் என்னுடன் அதிகம் நெருங்கிப்பழகுவது பாவேந்தர் கவிதைகள்...எல்லாம் உள்ளடக்கிய கவிகள் அவை என்பது எனது தாழ்மையான கருத்து...

உங்களின் தமிழ் புலமையை நீங்கள் செப்பனிட்ட விதத்தை அறிந்து மகிழ்ந்தோம். உங்களின் தாத்தா பாட்டி உங்களைச் செதுக்கிய விதம் மற்றும் பாவேந்தர் கவிகள் உங்களின் மனம் கவர்ந்த விதம் இவற்றை இவ்வளவு அழகாய் கோர்த்து எடுத்து இயம்பியதற்கு மிக்க நன்றிகள் அமர் அண்ணா.

ராஜா
19-09-2007, 03:42 PM
நன்றி அறிஞரே..!

நம் கலாச்சாரமும், பண்பாடும் தொடரவேண்டும், என்ற தங்கள் எண்ணம் நன்கு புலப்படுகிறது.தங்கள் செல்வங்களும் பெற்றோர் விருப்பமறிந்து செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

பூமகள்
19-09-2007, 03:58 PM
அன்பு இலக்கியரே..!
உங்களின் பயணத்தில் தமிழ் எப்படி துணையானது என்பதையும் உங்களின் கவி ஆரம்பித்த விதத்தையும் அழகாய் விளக்கியிருந்தீர்கள்.
உங்களின் இலக்கிய ஆர்வமும் தமிழ் புலமையும் தேசப்பற்றும் நன்றாகவே உங்களின் பதிலில் பளிச்சிடுகிறது.
நிலா முற்றம் தந்த சொந்தங்களின் நினைவு எங்களையும் ஏங்கவைக்கவே செய்கிறது.
பாராட்ட வார்த்தைகள் இல்லை. அற்புதமான சந்தக் கவியில் தமிழை விளையாடும் உங்களின் பாங்கு கண்டு மன்றமே அசந்து நிற்கிறது.
அழகான ரசனைமிக்க கவிஞர். இன்னும் இன்னும் நிறைய எழுத வேண்டும் நீங்கள்.
இந்த பூமகளின் கேள்விக்கு பொறுமையாய் பதிலளித்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்..!!
வாழ்த்துக்கள் இலக்கியரே...!

பூமகள்
19-09-2007, 04:52 PM
தொலைந்து விட்ட இன்பங்கள்... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7914) என்ற தலைப்பில் சில அனுபவத்தை வெளியிட்டேன். நான் சிறு வயதில் அனுபவித்த பல அனுபவங்களை அவர்கள் அனுபவிப்பதில்லை.. ஆனால் அவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்கள்.. பெரியது. 9 மாதம் முதல் விமானத்தில் பறக்கிறார்கள்... அவர்களுடைய எண்ணங்கள் எல்லாம் பெரியதாக உள்ளது (பெரிய வீடு, நல்ல விலையுயர்ந்த கார்.... வாங்க வேண்டும் என்பது போல்). ஆசைப்பட்டதை உடனே வாங்கி மகிழுகிறார்கள்... பெரும்பாலும் அவர்கள் தங்கள் செயல்களை தாங்களே செய்ய வேண்டும் என்ற பொறுப்பு உள்ளது. கலாச்சாரம் இது வரை பாதிக்கப்படவில்லை... வீட்டில் பேச்சு மொழி தமிழ்தான்.. ஆங்கிலம் பேசினால் எந்த பரிசுப்பொருளும் கிடையாது... என மொழி முதல்... எல்லாவற்றிலும் கலாச்சாரத்தை விடாமல் இருக்க முயலுகிறோம். குழந்தைகள்.. தரையில் அமர்ந்து உணவு சாப்பிடவே விரும்புவார்கள். பள்ளியில் நிலை வேறு. சாப்பாடு... வீட்டு சாப்பாடு தான்.. (இட்லி, தோசை, இடியாப்பம், பணியாரம்... சாம்பார், ரசம்...). இப்பொழுது பிசா, பர்கர் அவர்களை கவர ஆரம்பித்துள்ளது... வளர வளர...

வெளியில் பீச், பார்க், கடைகள்.. செல்லும்பொழுது, மற்றவர்களை பார்க்கிறார்கள்.. அது சிறிதளவு பாதிப்பை தருகிறது.. பள்ளிக்கூட அனுபவம் அவர்கள் கலாச்சாரத்தை மாற்றக்கூடும்... முடிந்தவரை.. நம் கலாச்சாரம், பண்பாட்டை பாதுகாக்க முயற்சிக்கிறோம்.

அன்பு அறிஞர் அண்ணா,

உங்களின் ஆராய்ச்சிப் பணி பற்றி இன்னும் அறிய எண்ணியே உங்களிடம் இந்த கேள்வியைக் கேட்டேன். இளசு அண்ணா எனக்கு முன்னமே இந்த கேள்வி உங்களிடம் கேட்டது மகிழ்ச்சியே...!

ஆராய்ந்து கண்டு பிடித்து அதனை வெளியிட்ட போது நீங்கள் அடையும் மகிழ்ச்சி பிரசவித்த பின் மழலை முகம் காணும் தாயின் மகிழ்ச்சியைப் போன்ற உன்னதமான ஒன்று. உங்களின் மகிழ்வையும் என்னால் உணர முடிகிறது. பாராட்டுக்கள் அறிஞரே..!

தொலைத்து விட்ட இன்பங்கள் பதிவு அருமை. கால மாற்றம் எவ்வண்ணம் நம்மை செதுக்குகிறது என்று அழகாகச் சொன்னீர்கள்.
உங்களின் அன்பான வளர்ப்பும், அங்கு இருக்கும் சூழல் இடர்களால் இளைய குழந்தைகளின் நிலையும் அழகாக எடுத்தியம்பிய விதம் ஒரு பொறுப்பான பெற்றோராகவும் உங்களை எங்கள் முன் காட்டுகிறது.
நிச்சயம் இனியும் உங்கள் வளர்ப்பாலும் வழிகாட்டுதலாலும் குழந்தைகள் நம் பண்பாட்டை மறக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை என்னில் மேலோங்கி உள்ளது.

அன்பான, பண்பான தந்தையாய் உங்களின் வழியில் அவர்களும் நடப்பர் என்பது திண்ணம்.

வாழ்த்துக்கள் அறிஞர் அண்ணா!!

அமரன்
19-09-2007, 05:22 PM
உண்மையைச் சொன்னேன். வஞ்சப்புகழ்ச்சி என்றால் எப்படி அமர் அண்ணா??:traurig001:

இதுதான் அண்ணன் தங்கை செல்லச் சண்டைங்கிறது. அண்ணன் செல்லமாக சீண்ட தங்கைபொய்கோபம் காட்ட ஜாலித்திருவிழாவாட்டம் வீடு களைகட்டும்.

பூமகள்
19-09-2007, 05:31 PM
இதுதான் அண்ணன் தங்கை செல்லச் சண்டைங்கிறது. அண்ணன் செல்லமாக சீண்ட தங்கைபொய்கோபம் காட்ட ஜாலித்திருவிழாவாட்டம் வீடு களைகட்டும்.
அப்படி வாங்க வழிக்கு..!!:huepfen024: தங்கையை சமாதானம் செய்ய அண்ணன் அன்பளிப்பு தர வேண்டும்.:icon_wink1:
எங்கே இந்த தங்கைக்கு இ-பணம் பரிசு...??
அப்போ தான் தங்கை உங்களிடம் பேசுவாள்.. இல்லைனா... உங்களோடு கா விட்டுவிடுவாள்...:sport-smiley-018: போங்க அண்ணா...:traurig001:

அமரன்
19-09-2007, 05:33 PM
அட எல்லா தங்கைகளும் ஒரே மாதிரித்தான் இருக்காங்க.

பூமகள்
19-09-2007, 05:42 PM
அட எல்லா தங்கைகளும் ஒரே மாதிரித்தான் இருக்காங்க.
என்னன்னா அப்படி சொல்லிபுட்டீங்க நீங்க...???!!!:smilie_abcfra:
இந்த பூமகளைப் பார்த்து இப்படி சொல்லிபுட்டாரே.. அண்ணன் அமரு....??!!!!:traurig001:

(அப்பாடா... எப்படியோ எனக்கு 500 இ-பணம் வந்தாச்சி..:icon_dance:)
நன்றிங்கண்ணோவ்...!!:icon_rollout:
:sport-smiley-018:

அறிஞர்
19-09-2007, 05:47 PM
என்னன்னா அப்படி சொல்லிபுட்டீங்க நீங்க...???!!!:smilie_abcfra:
இந்த பூமகளைப் பார்த்து இப்படி சொல்லிபுட்டாரே.. அண்ணன் அமரு....??!!!!:traurig001:

(அப்பாடா... எப்படியோ எனக்கு 500 இ-பணம் வந்தாச்சி..:icon_dance:)
நன்றிங்கண்ணோவ்...!!:icon_rollout:
:sport-smiley-018:

நிறைய பணம் வைத்திருக்கிறாய்.. போல... நானும் ஆதவனும்.. கொள்ளையடிக்க வரப்போகிறோம்...

பூமகள்
19-09-2007, 06:31 PM
அஹா...:huh: கிளம்பிட்டாங்கையா... கிளம்பிட்டாங்கையா....!!:violent-smiley-010:

ஒரு அண்ணன் அன்பாய் தருவதை இன்னொரு அண்ணன் பிடுங்குவதா.......?!!!:ohmy:

இது என்ன நியாயம் அண்ணா.....??? :icon_nono:

இதைக் கேட்க ஆளில்லையா ?? :082502now_prv:

இந்த பூமகளுக்காய் பேச ஒருவரும் இல்லையா மன்றத்தில்........??? :medium-smiley-100:

ஓவியன்
19-09-2007, 06:36 PM
அன்பான தங்கை பூமகளுக்கு....
கொஞ்சம் பொறுத்துக்குங்க என்னோட பதில் விரைவில் வரும்.....

அன்புரசிகன்
19-09-2007, 06:57 PM
இந்த பூமகளுக்காய் பேச ஒருவரும் இல்லையா மன்றத்தில்........??? :medium-smiley-100:

வந்துட்டே...................ன்...

அறிஞரே.... கனக்க அடிக்கப்படாது....
தெரியும் தானே... கெட்ட கோபம் வரும்.....

(கொஞ்சமா 10000 ஐ அடிச்சு ஆழுக்கு பாதி பாதி)

பூமகள்
19-09-2007, 07:19 PM
வந்துட்டே...................ன்...
அறிஞரே.... கனக்க அடிக்கப்படாது....
தெரியும் தானே... கெட்ட கோபம் வரும்.....
(கொஞ்சமா 10000 ஐ அடிச்சு ஆழுக்கு பாதி பாதி)
இப்படி எல்லா அண்ணாவும் சேர்ந்து கொண்டால் எப்படி???:icon_rollout::traurig001:

அன்புரசிகன்
19-09-2007, 07:22 PM
இப்படி எல்லா அண்ணாவும் சேர்ந்து கொண்டால் எப்படி???:icon_rollout::traurig001:

நான் அண்ணன் இல்லை. தம்பி. சோ.............. பிரச்சனை இல்லிங்கோ...

ஓவியன்
19-09-2007, 07:24 PM
எச்சரிக்கை

இங்கே எனது அன்புத் தங்கை பூமகளின் இ-பணத்தைக் கொள்ளை அடிப்பவர்கள் மீது ஓவியன் போர் தொடுப்பான்....

(சுட்டால் நாமளும் சுடுவோமிலே.......):D

அன்புரசிகன்
19-09-2007, 07:29 PM
எச்சரிக்கை

இங்கே எனது அன்புத் தங்கை பூமகளிம் இ-பணத்தைக் கொள்ளை அடிப்பவர்கள் மீது ஓவியன் போர் தொடுப்பான்....

(சுட்டால் நாமளும் சுடுவோமிலே.......):D

அமரன்: தோசை தானே....
ஓவியன்: இல்லை
அமரன்: இல்ல பரோட்டாவா....?
ஓவியன்: இல்ல பரோட்டாவும் இல்லை. பரோட்டாவும் இல்லை.
அமரன்: அட வடையா....
ஓவியன்: (புன்முறுவல் பூக்கிறார் :p)
அமரன்: (மனதுக்குள்...) அதுல பெருமை வேற... செலக்ட் பண்ணி சுடூறார்...:wuerg019:

ஓவியன்
19-09-2007, 07:39 PM

அட போங்க அன்பு!

உங்களுக்கு என்னாச்சு, நான் சொன்னது சுட்டால் நாமளும் சுடுவம் எண்டு தான், நீங்க என்ன சுட்டாலும் நாம திருப்பி சுடுவோம்.....

அதாவது நாம என்னத்தை சுடுவோம் என்பது நம்மிலே தங்கவில்லை, உங்களிலேயே தங்கியுள்ளது...

அய்யோ அய்யோ....
இது கூட புரியாம அமரன் கேள்வி கேட்க.....
அதைச் சொல்ல நீர் ஒரு போஸ்டை வேஸ்ட் பண்ண...

சின்னப் புள்ளைத்:icon_rollout: தனமாலே இருக்கு...... :D

அக்னி
20-09-2007, 11:30 AM
அன்பு தங்கையின் கேள்விக்கு உரியவனானதில் மகிழ்ச்சி.

சிவா.ஜி அவர்களின் ஆசிரியப்பற்று ஒவ்வொருவர் மனதிலும் பற்றியிருக்கவேண்டிய, பற்று...
எனது ஆசிரியர்களையும் இந்த நேரத்தில் மனதார கௌரவிக்கின்றேன்.

பின்னூட்ட சங்கதி...
எல்லாம் சரி, பாராட்டுக்கள்... ஆனால், அக்னியின் பெயர் இருப்பது சரியானதா என்று ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

சிறுவயதின் நிகழ்வுகள் ஒரு மனிதனாகும்போது, தாக்கங்களை தரும் என்பதற்கு சிவா.ஜி, ஒருஎடுத்துக்காட்டு.
நல்லவை என்றால், திறமையான மனிதனாகவும், தீயவை என்றால், சமுதாயத்திற்கு ஒவ்வாத மனிதனாகவும் மாற்றிவிடும் வல்லமை, குடும்பக்கட்டமைப்புக்கே முதலில் உரித்து என்பது அனைவருக்கும் இருக்கவேண்டிய தெளிவு.

சிவா.ஜியின் ஒரு சிறந்த நாடககலைஞராக மிளிர்கின்றமைக்கு, அவர் குடும்ப பின்னணியே முதற்காரணம்.

எனவே, நாமும் எமது குடும்பத்தில், சூழலில் வளரும் தலைமுறைக்கு,
சிறந்த வழிகாட்டியாக இல்லாவிடினும், இருளூட்டாது வாழ திடசங்கற்பம் கொள்வோம்...

அக்னி
20-09-2007, 11:36 AM
கண்கள் பார்த்தன!
மனம் ரசித்தன!
விரல்கள் பிரசவித்தன!
கவிதைகள் தவழ ஆரம்பித்தன!!

கவிதையில் உருவான பதில்...
அருமை....
மூன்றாவதாய் கற்பனைக்கண் திறந்தமை சிறப்பு.
அனைவருக்கும் மூடியே இருக்கும் கற்பனைக்கண், மனதின் ரசிப்பில்
திறக்கப்பட்டால்,
கவிதை மட்டுமல்ல, விமர்சனம் முதல் விஞ்ஞானம் வரை வெற்றி கொள்ளலாம்...
இல்லையா ஷீ-நிசி..?

அக்னி
20-09-2007, 11:44 AM
கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறைந்து, பெண்கள் கொஞ்சம், கொஞ்சமாக வலுப்பெற்று வருகிறார்கள் என்று தோன்றுகிறது. அதற்கு அவர்களின் கல்வித்தரம் உயர்ந்ததும் ஒரு காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மற்றபடி, என்றைக்கு பெண்ணிற்கான உண்மையான சுதந்திரம், உரிமைகள் சமூகத்திலிருந்து, ஆணிடமிருந்து அவளுக்கு அளிக்கப்படுகிறதோ அன்று தான் "ஆணுக்கு பெண் சரிநிகர் சமானம்" என்ற வாக்கு உண்மையாகும். அது வரை இந்த கருத்து வெறும் கனவே..!
இதயத்தின் பதிற்சிறப்பு...
தன்னை தானே முதலில் கேட்டுக் கொள்வது.
இதயத்தின் பதிலிலிருந்து நான் கற்றுக் கொள்வது என்னவென்றால்,
ஒரு விமர்சனமோ, அல்லது பதிலோ வழங்க வேண்டும் என்றால்,
அதனை வழங்கும் போது, கேட்டவருக்கு வாசித்தவருக்கும் எதுவுமே தெரியாது; எனது பதில் மூலம் தான் தெரிந்து கொள்ளப்போகின்றார்கள்; என்ற நிலையிலிருந்து தொடங்கவேண்டும் என்பதே.

பெண் அடக்குமுறை முற்றாவதும், அதனால் பிரசவிக்கப்பட வேண்டிய பெண்விடுதலை முழுமையாவதும்...
இரண்டும் இருபாலார் கையிலும் என்பது நிதர்சனம்.
புரிந்து கொண்டு, மகாகவியின் கற்பனை உலகத்தை, நிர்மாணிக்க, ஒற்றுமையாக, புரிந்துணர்வோடு, விட்டுக்கொடுத்தலோடு, கட்டியெழுப்புவோம்...

அக்னி
20-09-2007, 11:51 AM
ஆகையால் பயபட வேண்டியதில்லை. மேலும் ஒருவேலை அப்படி தவிர்க்க முடியாமல் சீரழிவு வருமானால். அதை தடுக்க முயல்வது வீன் வேலை. தடுக்க முடியாது. ஏற்று கொள்ளும் மனபக்குவம் அடைந்து கொள்ள வேண்டும். கூலுக்கும் ஆசை மீசை ஆசை பட முடியாது..
மன்றத்தில் எத்தனை தலைகள் இருந்தாலும், லொள்ளுடன் தெள்ளிய பதில் உங்களிடமிருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை, எனக்கும் உண்டும்.
அது தொடர்ந்தும் கிடைக்கவேண்டுமென்ற சுயநல வாழ்த்துக்கள்...

வாத்தியார் சொன்னதைப்போல, கூழை தவிர்க்கவும் விருப்பமில்லை. மீசையை எடுக்கவும் முடியாது.
ஒரே வழி, கூழைக்குடித்துவிட்டு, மீசையை நன்றாகச் சுத்தம் செய்துவிடுவதுதான்.

அக்னி
20-09-2007, 11:57 AM
தொடர்ந்த கல்வித்துறை காரணமாக தமிழ் அன்னியாகியது....என்னை என்குடும்பத்தினரே நாடுகடத்தி சிலவருடங்களின் பின்னர் மன்றம் கிடைத்தது...தமிழ் வசீகரித்தது..தாத்தா,பாட்டி தந்த தமிழ்களை அசைபோடவைத்தது..அவற்றைத்தான் நான் துய்த்த இலக்கியமாக உணர்கின்றேன்..தவிர மன்றத்தில் உள்ள இலக்கியம்தொடர்பான அனைத்தும் படித்துக்கொண்டு இருக்கின்றேன்....

கால ஓட்டத்தில், குடும்பமே எம்மை நாடுகடத்திவிடும் துர்ப்பாக்கிய நிலை...
காலம் மாறும் அமரன்... ஒன்றுகூடி, உறவுகளோடு சேர்ந்து வாழும் அந்த நாளின் இனிமைக்காக, இன்றைய தனிமைகளை சகித்திடுவோம்.

உங்களது ஒவ்வொரு பதில்களும் தரம்கூடிச்செல்லும் வைரங்கள்...
உங்களது, தமிழின்கூர்ப்பு, தமிழ் மன்றத்தினால் சிறப்பான மாற்றாம் பெறுகின்றது என்பதில் எனக்கும் பெருமையே...
ஏனென்றால், சமகாலத்தில் நானும் தமிழ்மன்றோடு வாழும் பெருமை.

சிறப்பான, வளமான சீரிய நிலையில், மன்றத்தில் மட்டுமல்லாது, உலகிலும் புகழ்பெற வாழ்த்துகின்றேன்....

சிவா.ஜி
20-09-2007, 01:10 PM
பின்னூட்ட சங்கதி...
எல்லாம் சரி, பாராட்டுக்கள்... ஆனால், அக்னியின் பெயர் இருப்பது சரியானதா என்று ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

அதென்ன இப்படி சொல்லிவிட்டீர்கள் அக்னி...உங்கள் அருமையான பின்னூட்டக்கவிதைகளின் ரசிகன் நான்.அசலை இன்னும் ஜொலிக்கவைக்கும் சாயல் கவிதைகளைக் கொடுத்து படைத்தவரையும்,படித்தவரையும் மகிழச்செய்யும் ரசாயனவித்தையுள்ள பின்னூட்டங்கள் உங்களுடையது.அதனால் சரிபார்க்க வேண்டிய தேவையில்லை.
பதிலுக்கு உங்கள் பதில் அருமை.நன்றி அக்னி.

அக்னி
20-09-2007, 01:22 PM

மிக்க நன்றி சிவா.ஜி...
பெருமைதரும் தமிழ் மன்றிற்கே, அனைத்தும் சமர்ப்பணம்...

lolluvathiyar
20-09-2007, 02:35 PM
அட சாமி இதுவரை 600 பதிப்ப தாண்டிருச்சு இந்த பகுதி. நன்பர்களே இங்கு சிறிது சீரியசாக இருங்கள். விளையாட்டு இங்கு வேண்டாம் என கருதுகிறேன்

அக்னி
20-09-2007, 02:52 PM
இலக்கியனின் தமிழ் வளர்ச்சி, சுயதேடலின் பலன் எனலாம்...
ஏனெனில், ஒரு ஆக்கிரமிப்பின் நெருக்குதலில் வளர்த்த மகவல்லவா..?

கவிதை என்பது கடல் போல பரந்தது அதில் ஒரு துளிகூட நானக இருப்பேனோ தெரியவில்லை. இன்னும் நிறைய எழுத வேண்டும் என்பது என் ஆவல்.
தன்னடக்கம், உங்களை உயர்த்தும்...
என்றும் சிறப்புற, ஆவல் நிறைவுற வாழ்த்துகின்றேன்.

அக்னி
20-09-2007, 03:05 PM
இதற்கு நான் செலவிட்ட 3 வருடங்கள்... கடுமையானது. அதே நேரத்தில் அது ஆராய்ச்சி பிரதியாக வெளியான பொழுது ஏற்பட்ட மகிழ்ச்சி அளவிடமுடியாதது..
ஒரு செயலின் முடிவு, பலனாகும் போது அடையும் மகிழ்வு அளவிடமுடியாததே...
அறிஞரின் ஆராய்ச்சி தொடர்பான பதில், கடினப்பட்டு உழைத்துப்பெறும் பலனின் மகிழ்வை வெளிப்படுத்துகின்றது.
அவர்தம் பணியில் மென்மேலும் சிறப்புற வாழ்த்துகின்றேன்.

பூமகள்
20-09-2007, 03:18 PM
அழகான பின்னூட்டங்களில் அசத்துவது இருக்கட்டும் அக்னியாரே...
உங்களின் அருமையான ஆ பத்து கேள்விக்கான பதில் எங்கே??

மன்றத்தின் மாமனிதர் இளசு அண்ணன், மன்றத்தின் ஒப்பற்ற கவிஞர் ஓவியன் அண்ணன்.... ஆகியவர்களின் பதில்களையும் இன்னும் காணோமே??

அண்ணாக்களே ஓடிவாங்கோ......!! பூமகளின் கேள்விக்கு விடையோடுவாங்கோ....!!

க.கமலக்கண்ணன்
20-09-2007, 03:30 PM
போடுங்கையா

போடுங்கையா பூமகளுக்கு பதில

போடுங்கையா...

இளசு
20-09-2007, 10:06 PM
[10. இளசு - மன்றத்தில் அன்பு

வழிநடத்தலுக்குக் சொந்தக்காரர். உங்களிடம் நாங்கள் கற்க நிறைய இருக்கிறது.
இன்றைய தமிழ் இளைஞர்களின் தமிழ் ஆர்வம் எப்படி உள்ளது? அவர்களை தமிழ் பற்றாளராக மாற்ற என்ன

செய்யலாம்?

மிக்க நன்றி பூமகள்..

என்னை இம்மகாத்திரியில் மீண்டும் பங்குபெற அழைத்தமைக்காக
நன்றி சொன்னாலும், என் சொந்த விருப்பம் ஒன்றை இங்கே
பதிவு செய்கிறேன்..

மிக ஆர்வமான நம் மன்றச் சொந்தங்கள் பலர் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இங்கே அழைப்பது
பன்மடங்கு சிறப்பாய் இருக்கும் என்பது என் எண்ணம்.

பழைய முகமான எனக்கு மீண்டும் மீண்டும் வெளிச்சம் தருவதைவிட
பல புதிய, உற்சாக முகங்கள் இத்திரிவெளிச்சம் பட்டு
அவர்களின் மனச்சாளரங்கள் வழியே மன்றம் இன்னும் அவர்களை
அறிய அமையும் நல்வாய்ப்புகள் அவை என்பது என் கருத்து..

உங்கள் கேள்விக்கு:

அன்பு வழிநடத்தல்...

அன்புமயமாய் மாறிவிடவேண்டும் என்பது ஆழ்மன விருப்பம்தான்..
நான் என்னவாக என்னை எண்ணியிருக்கிறேன் என்பதைவிட
நான் என்னவாக செயல்பட்டிருக்கிறேன் என்பதே முக்கியம்.

உணர்வுக்கொந்தளிப்புகள், ஆர்ப்பரிக்கும் கருத்துச்சுழல்களில் சிக்கி
நான் அடிக்கடி அன்பைக் கைவிட்டவன், கைவிடுபவன்..

அந்த நிலைகள் நல்லவேளையாக தற்காலிகநிலைகளே..

அன்புமயம் என்பதைவிட , மகிழ்ச்சி மயம், உற்சாக மயம்..
இப்படி என் செயல்பாடுகளைச் சொல்லலாம்..

எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பது எனது நிலைப்பாடு.
மற்ற நிலைகள் அதில் ஏற்படும் தற்காலிக விலகல்கள்..
ஈஃக்லுபிரியம் சிதைந்த கணங்கள்...
அதனால் கோபம், வருத்தம், அயர்ச்சி வந்தால்
ஆக்கபூர்வ மாற்றுகள் செய்து மீண்டும் விரைவாக
என் இயல்புக்கு திரும்பும் குணம் எனது...

யாரையும் புண்படுத்த நான் விரும்பியதே இல்லை..
(கடன் கொடுத்தால், பின் அவரை நான் தவிர்ப்பேன் -
என்னைக் கண்டால் அவர் குறுகுறுக்கக்கூடும் என்பதால்)
எம்பத்தி எனக்கு அதிகம்...
என்னை எப்படி மற்றவர் நடத்தப்படவேண்டும் என விரும்புகிறேனோ
அப்படி மற்றவரை நான் நடத்தவேண்டும்...
அதை மீறி நான் பலரை மனம் புண்பட செய்திருக்கிறேன் -
எனக்கு அதில் நியாயம் என பட்ட கணங்களில்..

பலவீனமானவரைப் புண்படுத்தியவர்களை
நான் வீம்பாய் இடைபுகுந்து புண்படுத்தியிருக்கிறேன்..

ஆனாலும் இதுபோன்ற காரணங்களுக்காகக்கூட
யாரையும் நோகடிக்க நான் உண்மையில் விரும்பவில்லை..
ஏன்? என் சுயநலம்!

யாரையாவது நான் புண்படுத்தினால்
காயம்பட்டவர்களுக்கும் அதிகமாக மனவலி எனக்கு வருவதுதான்..
(என் பக்கம் நியாயம் என நான் எண்ணினாலும்கூட..)

இந்த என் பலவீனத்தை மறைக்க ஒரே ஆயுதம்-
என் இயல்பான மகிழ்ச்சிமய மனநிலையைத் தக்கவைக்க பாதுகாப்பு -

நான் இயன்றவரை மற்றவரைக் கடுமையாய்/புண்படுத்தாமல் இருப்பதுதான்!

என் ' அன்பு வழிநடத்தலின்' இரகசியம் இதுதான் பூமகள்!

என்னிடம் கற்க -

அப்படி எதுவும் இல்லை..
மன்றத்தில் நான் கற்றது -
நாம் ஒவ்வொருவரும் மற்றவரிடம் கற்க ஏராளம் உள்ளது..

கர்வம் என்னும் மூடி போடாமல்
நாம் அறிவு என்னும் பானை திறந்திருந்தால்
இட்டு நிரப்ப எத்தனையோ பேர்!
என்றும் - இறுதிவரை இன்னும் புதிதாய் இட
இடம் இருக்கும் அதிசயப்பானை நாம்!

கற்றல் என்பது மூச்சு போல..
கடைசிவரை உடன்வரும் செயல்!

இன்றைய இளைஞர்களின் தமிழார்வம் -

மன்றத்தைப் பார்த்தால் செழிப்பாக..
மற்றபடி பார்த்தால் -?

இணையம், மற்ற ஊடகங்களுக்கு ஏற்ப வடிவம் பொலிந்து
தமிழன்னை இன்றைய தலைமுறையையும் அவள்பால்
ஈர்த்துதான் இருக்கிறாள்..

தாய்மொழிச் சுவை, அதன் பெருமை அறிவது -
பொருள் சார்ந்த ஒரு நுகர்வு அல்ல!
அது உணர்வு, தார்மீகம், அடையாளம், சுயமரியாதை சார்ந்தது.

சுயத்தை இழந்து சொர்க்கமே அடைந்தாலும்?????

நம் இளைஞர்கள் தம் சமூக அடையாளம், சுயம் இவற்றில்
கவனமாகவே இருக்கிறார்கள்...

தமிழார்வம் வளர்க்க?

1) தமிழகத்தில் தமிழ் எழுதப்படிக்கத் தெரியாமல் பள்ளிக்கல்வி முடிக்கலாம்
என்பது முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும்.
2) தமிழாசிரியர் பணி என்பது ஊதிய, கௌரவ வகையில் உயர்த்தப்பட வேண்டும்.
3) கண்ணாளனே, நறுமுகையே, ஆம்பல் - என நல்லச் சொற்களை
திரைஇசை எனும் கவர்ச்சித்தேரில் வலிந்து அடிக்கடி ஏற்றி
இளையதலைமுறை மனதில் இறக்கவேண்டும்.
4) பணக்கல்வி தாண்டி , கூடவே மனவள மொழிக்கல்வியின் அத்தியாவசியத்தை
ஒவ்வொரு தமிழ்ப்பெற்றோரும் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும்..
உதாரணமாய் செயல்களால் நடந்து காட்டவேண்டும்.
5)நூலகங்களுக்கு உண்மையான மறுமலர்ச்சி தரவேண்டும்.
6)இணையத்தமிழ், அறிவியல் தமிழுக்கு ஒருங்கிணைந்த அமைப்பு உழைக்கவேண்டும்..
பல்முனை விரயம் தவிர்க்கவேண்டும்.. நல்லதை ஒரு குழு செய்தால், மற்றவர்
அதை ஏற்று அரவணைக்கவேண்டும்... ஆளாளுக்கு நாட்டாமை ஆவேன் என்றால் ஆகாது.
7)அத்திக்காய், பார்த்தேன் ரசித்தேன் போன்ற தரமான தமிழ்த்திரைப்பாடல்களை
ஊடகங்கள், பாடநூல்கள் மூலம் நன்றாய் அலசி, அதன் சுவையை
இளைய காதுகளுக்குள் இனிமையாய் ஊற்ற வேண்டும்.
8)அரசியல், குழுமனப்பான்மை குறைந்து, நல்ல படைப்புகள் - அதிக எண்ணிக்கையில்
ஆண்டுதோறும் அங்கீகாரம் பெற்று பெரிய பணப்பரிசுகள் வழங்கவேண்டும்.
9)காந்தமான ஊடக நட்சத்திரங்கள் அவர்களின் படங்கள், நிகழ்ச்சிகளின் ஊடாக
'நல்ல தமிழை'' ஆங்காங்கேவாவது பாய்ச்ச வேண்டும்.
10) பல வடிவங்களிலும் குழந்தை, சிறுவர்களைக் குறிவைத்து நல்லதமிழ்ப் படைப்புகள்
(கதை, பாட்டு, குறுந்தகடும் நூல், கேலிச்சலனப்படங்கள்..... என)..
இணையத்தமிழ் ஆரம்பப்பள்ளியிலேயே அறிமுகம் ஆகவேண்டும்.
ஐந்திலேயே தமிழன்னை மேல் அன்பை வளர்த்துவிட்டால்,
அறுபதுகளில் இப்படி கவலைப்பட அவசியம் குறைந்துபோகும்..

ஓவியன்
20-09-2007, 10:35 PM
யாரையாவது நான் புண்படுத்தினால்
காயம்பட்டவர்களுக்கும் அதிகமாக மனவலி எனக்கு வருவதுதான்..
(என் பக்கம் நியாயம் என நான் எண்ணினாலும்கூட..)

அன்பான அண்ணா!

என்னே ஒரு மனப்பாங்கு, உங்கள் அன்பு மழையில் நனைய நாங்கள் கொடுத்து வைத்தவர்களே...
அதற்கு நன்றிகள் கோடி......

ஓவியன்
20-09-2007, 10:39 PM
[B][COLOR="Teal"]2. ஓவியன் - புதியவராய் நான் வந்த போது என்னை அன்புடன் வரவேற்று குழந்தை போல் கைபிடித்து மன்றத்தில் நடைபழக்கியது அன்பு ஓவியன் அண்ணாவையே சேரும். அந்த வகையில் உங்களை கை பிடித்து உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சந்தர்பத்தில் யாரேனும் கண்டிப்பாய் வழிநடத்தியிருப்பர். அந்த அற்புதமான நபரைப் பற்றி எங்களோடு பகிர இயலுமா?

அன்புத்தங்கை பூமகளுக்கு....

ஆபத்தில் பத்தில் ஒரு பங்கை எனக்கும் அனுப்பிய உங்கள் அன்புக்கு நன்றிகள், ஆனாலும் இளசு அண்ணாவின் கருத்தே என் கருத்தும் புதியவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது நலம் பயக்குமென்பதே.....

என் வாழ்க்கைப் பாதையை ஒரு தடவை திரும்பிப் பார்த்தால், இன்றைய ஓவியனின் பின்னே நீங்கள் குறிப்பிட்ட தகமையுள்ள பல அற்புதமான நபர்கள் கலங்கரை விளக்கங்களாக பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் எல்லோரையும் இங்கே எடுத்தியம்ப இயலாத துர்பாக்கியசாலியாக நானிருப்பதால் ஒருவரைப் பற்றி மட்டும் கூறலாமென எண்ணி அவரைப் பற்றிக் கூறவும் எத்தனிக்கின்றேன்.

என் வாழ்க்கையின் சில கசப்பான சம்பவங்களால் நிரம்பவே அடிபட்டு நொறுங்கிய நிலையில் என் பல்கலைக் கழக வாழ்க்கையை ஆரம்பித்த காலமது. வாழ்க்கையில் எனக்கென்று ஒரு பிடிப்புமே இருந்ததில்லை. இப்படித்தான் வாழவேண்டுமென அப்போது நான் நினைத்ததில்லை. நினைத்த படி வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் மனதெங்கும் வியாபித்திருந்தமையால் எப்படியோ வாழ்ந்தால் சரியென ஒரு ஜடமென வாழ்ந்து கொண்டிருந்தேன்.

அப்போது என் வாழ்க்கையில் நட்பாக மையம் கொண்டு தென்றலாக வந்து புயலாக அடித்தது ஒரு அன்புப் புயல். அதன் ஆவேசத் தாக்குதலில் நிலை குலைந்திருந்த நான் சரியான பாதைக்கு கொண்டு வரப்பட்டேன். என் வாழ்க்கைக்கு நானே அர்த்தம் காண வைத்தது அந்த நட்பு. அந்த நட்பின் அன்புக் கட்டளைகளுக்காக என்னை நானே மாற்றினேன், அந்த மாற்றங்களால் பூத்து சிரித்தது அந்த நட்பு, வேறு எந்த பிரதிபலனும் எதிர் பாராமல். உடை, நடை, பாவனை, நோக்கம், சிந்தனை எல்லாவற்றையுமே ஒரு நட்பினால் சீரமைக்க முடியுமா...?
ஆமெனக் கண்டேன் என் வாழ்க்கையில், ஆண் பெண் பேதங்களுக்கு அப்பால் நட்பின் புனிதத்தை உணர்த்திய அந்த நட்பு என்னை ஆரத் தழுவ ஆரம்பித்த சில காலங்களிலேயே என்னில் நானே புதிய வேகம், புதிய மாற்றம் உருவாகக் கண்டேன். அந்த மாற்றங்களிலும் வேகத்திலும் என் வாழ்வின் அர்த்ததை இனம் கண்டு அதனை நோக்கி உன்னத நடை பயிலுகின்றேன்....

தனக்காக வாழாது நமக்காக உயிர் விடும் அந்த நட்பு, காலம் தந்த கொடை எனக்கு, அது என் வாழ் நாளெல்லாம் தொடரட்டுமென இறைவனை இரைஞ்சுகிறேன்.....

பென்ஸ்
21-09-2007, 03:47 AM
யாரையாவது நான் புண்படுத்தினால்
காயம்பட்டவர்களுக்கும் அதிகமாக மனவலி எனக்கு வருவதுதான்..
(என் பக்கம் நியாயம் என நான் எண்ணினாலும்கூட..)
.

அன்பின் இளசு...

உங்கள் ஒவ்வொரு பதிவின் போதும் உங்கள் மேல் உள்ள அன்பும், மரியாதையும் அதிகரிப்பதே ஒரு உண்மை.
நம்மை பற்றி நல்லதை மட்டும் சொன்னாலும் உள்ளதாய், அதை புரிந்து , புரியவைத்து...

எல்லோரும் உங்களை போல இருக்கவேண்டிய அவசியமில்லை...
ஆனால் உங்கள் பாதிப்பு கண்டிப்பாக எங்களுக்கு இருக்கும்.

பென்ஸ்
21-09-2007, 03:59 AM
தனக்காக வாழாது நமக்காக உயிர் விடும் அந்த நட்பு, காலம் தந்த கொடை எனக்கு, அது என் வாழ் நாளெல்லாம் தொடரட்டுமென இறைவனை இரைஞ்சுகிறேன்.....

அன்பின் ஓவியன்,

கவிமதியின் நட்புகாலத்தில் ஒரு கவிதை வரும்

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்தேன்
நமக்கான
நட்பை...
நம் நட்பும், உன் நட்பை போலவே என்று தொடர நானும் பிராத்திகிறேன்...

ராஜா
21-09-2007, 04:56 AM
கர்வம் என்னும் மூடி போடாமல்
நாம் அறிவு என்னும் பானை திறந்திருந்தால்
இட்டு நிரப்ப எத்தனையோ பேர்!
என்றும் - இறுதிவரை இன்னும் புதிதாய் இட
இடம் இருக்கும் அதிசயப்பானை நாம்!

இளசு இளசுதான்..!

உங்கள் ஒவ்வொரு வருகையும் இந்தத் திரிக்கு இனிய அங்கீகாரம்..!

ராஜா
21-09-2007, 05:02 AM
வேறு எந்த பிரதிபலனும் எதிர் பாராமல். உடை, நடை, பாவனை, நோக்கம், சிந்தனை எல்லாவற்றையுமே ஒரு நட்பினால் சீரமைக்க முடியுமா...?
ஆமெனக் கண்டேன் என் வாழ்க்கையில்,

நண்பர்கள் ஆயிரம் இருக்கலாம்.. ஆனால் நல்ல நட்பு என்பது ஆயிரத்தில் ஒன்று. இடுக்கண் களைவது மட்டுமல்லாது, இடுக்கணுக்கு நண்பன் ஆட்படாமல், நல்லாசிரியனாய் கற்பிப்பதும் நட்பே..

ஓவியரே.. அவ்வகையில் நீங்கள் கொடுத்து வைத்தவர்.

ராஜா
21-09-2007, 05:10 AM
ஆ! பத்து. கேள்வியாளர்: பாமகள்..மன்றக் கோமகள்...எங்கள் பூமகள்.

1. அறிஞர் - கொஞ்சும் சாட்டையினாலும் பண்பட்ட மனத்தாலும் அற்புதமாய் மன்றத்தை நிர்வகிக்கும் அறிஞர் அண்ணாவிடம் ஒரு கேள்வி கேட்க எனக்கு நீண்ட நாள் ஆசை.
நீங்கள் ஆராய்ச்சித் துறையில் இருப்பதாக அறிந்தேன். உங்களின் ஆராய்ச்சிப் பணியில் நிச்சயம் அற்புதமான பல நிகழ்வுகள் நடந்திருக்கும். அவற்றில் உங்களுக்கு பிடித்தமான நாங்கள் அறியக் கூடிய அறிவியல் விசயங்கள், சாகசங்கள், வித்தியாசமான அனுபவங்கள் ஏதேனும் இருப்பின் எங்களோடு பகிரவும்.
சொந்த நாட்டை விட்டு இருக்கும் உங்களுக்கு மேலை நாட்டின் கலாச்சாரம் எந்த அளவு உங்கள் குழந்தைகளை ஆக்ரமித்துள்ளது என்று நினைக்கிறீர்கள்? எப்படி அவர்களுக்கு நம் பண்பாட்டைப் பற்றி தெளிவுபடுத்துகிறீர்கள்? இதன் மூலம் பல வெளிநாட்டு வாழ் நண்பர்கள் பயனடைவர் என்று நம்புகிறேன்.

2. ஓவியன் - புதியவராய் நான் வந்த போது என்னை அன்புடன் வரவேற்று குழந்தை போல் கைபிடித்து மன்றத்தில் நடைபழக்கியது அன்பு ஓவியன் அண்ணாவையே சேரும். அந்த வகையில் உங்களை கை பிடித்து உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சந்தர்பத்தில் யாரேனும் கண்டிப்பாய் வழிநடத்தியிருப்பர். அந்த அற்புதமான நபரைப் பற்றி எங்களோடு பகிர இயலுமா?

3. இலக்கியன் - உங்களின் ஆதீத தமிழ் பற்றும் இலக்கிய ஆர்வமும் கவித்திறனும் கண்டு வியந்திருக்கிறேன். உங்களிடம் இந்த தமிழ் பற்றுக்கு தூண்டுகோளாய் இருந்தவர் யார்?
உங்களிடம் இலக்கிய ஆர்வத்தை எப்படி யாரால் வளர்க்கப்பட்டது??
உங்கள் கவிதைகளில் சந்தங்கள் அழகாய் அமைகின்றன. நிலவைப் பற்றிய வர்ணிப்புக்கள் அதிகம் பார்க்கமுடிகிறது. ஏதேனும் விசேச காரணம் இருக்கிறதா?

4. சிவா.ஜி - எதையும் எளிதில் புரிந்து சரியாக விமர்சிக்கும் உங்களின் பாங்கு கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். கதாகாலட்சேபம் திரி உங்களிடம் இருக்கும் நாடகத்திறனையும்
அழகாக பறைசாற்றுகிறது. உங்களின் நாடகத்திறனை என்று நீங்கள் உணர ஆரம்பித்திருந்தீர்கள்? எப்படி அதைச் செப்பனிட்டீர்கள்?

நீங்கள் பல தரப்பட்ட மக்களை உங்கள் வாழ்வில் சந்திக்க நேர்ந்திருக்கும். அப்படி சந்தித்ததில் உங்களால் மறக்கவே முடியாத மனிதர் யார்? ஏன்?

5. லொள்ளுவாத்தியார் - உங்களின் தமிழ் பற்றும் விவாத நடையும் வரலாற்றுச் சிந்தனையையும் அனைவரும் அறிவர். நீங்கள் கோவை என்பதால் ஒரு கேள்வி.
கோவையில் தகவல் தொழில் நுட்பப்பூங்கா வருவதாய் சொல்கின்றனர். அப்படி வந்தால் பல நன்மைகளுக்கு இடையில் சென்னைக்கு அடுத்தபடியாய் கலாச்சார சீரழிவு இங்கும் வரும் என்பது திண்ணம். அதனை தவிர்த்து நம் கொங்கு மண்டலமாம் கோவையின் தனித்தன்மை மறையாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்?

6. இதயம் - உங்களின் படைப்புக்கள் அனைத்துமே சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமைந்திருக்கின்றன. அரசியல் திரியிலும் கலகலப்புடன் பங்கு பெற்று எங்கள் இதயத்தில் நீங்காமல் இடம் பெற்றுவிட்டீர்கள்.
உங்களிடம் ஒரு கேள்வி. உங்களின் இதயத்தைத் திறந்து சொல்லுங்கள். பெண்களுக்கு சுதந்திரம் எந்த அளவிற்கு அவர்களின் வீட்டில் கொடுக்கப்படுகிறது??
"ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம்" என்ற கூற்று உண்மையாக்கும் தினம் வந்துவிட்டதா?

7. அக்னி - பெயருக்கு ஏத்தபடியே உங்களிடம் அதீத தீபோன்ற தமிழ் பற்று, கவித்திறன், ஆராய்ந்து உடன் கவியோடு பின்னூட்டம் இடும் திறன், இப்படி பலவற்றைப் பார்த்து வியந்து விழித்திருக்கிறேன்.
நீங்கள் வெளிநாட்டில் இருப்பதாக தெரியும். உங்கள் எதிர்கால சந்ததிகளுக்கு எப்படி தமிழ்ப்பற்றையும் தமிழறிவையும் புகட்ட உத்தேசித்துள்ளீர்கள்?? வழிமுறைகளைச் சொன்னால் பலர் பயனடைவர்.

8. அமரன் - சரியான வார்த்தை வசியக்காரர். உங்களின் படைப்புக்கள் படித்து அழுதுவிடுவேன் அதனைப் படித்து முழுதும் தெளியும் அறிவு இல்லாமல் இருக்கிறதே என்று.
உங்களைப்பார்த்து கொஞ்சம் பொறாமை கூட தலைதூக்கும் என்னில். அன்புக் கட்டளைகளால் மன்றத்தை நெறிப்படுத்துவதில் வல்லவர்.
நீங்கள் சமீபத்தில் படித்து ரசித்த இலக்கியப் புத்தகம் எது? அல்லது தமிழில் உங்களின் மனம் கவர்ந்த புத்தகம் எது? ஏன்?

9. ஷீ-நிசி - உங்களின் அழகான விமர்சனமும் படைப்புக்களும் உங்களை இன்னும் அழகாய் அடையாளப்படுத்துகின்றன மன்றத்தில்.
தமிழ் மன்றத்தின் தூண் ஆன பிறகு உங்களின் மன நிலை எப்படி இருக்கு?
உங்களின் கவிகளைப் பார்க்கையில் ஒரு தேர்ந்த திறமை பளிச்சிடுகிறது. உங்களின் கவி ஆர்வத்தைத் தூண்டியது யார் அல்லது எது?

10. இளசு - மன்றத்தில் அன்பு வழிநடத்தலுக்குக் சொந்தக்காரர். உங்களிடம் நாங்கள் கற்க நிறைய இருக்கிறது.
இன்றைய தமிழ் இளைஞர்களின் தமிழ் ஆர்வம் எப்படி உள்ளது? அவர்களை தமிழ் பற்றாளராக மாற்ற என்ன செய்யலாம்?

ராஜா
21-09-2007, 05:12 AM
அன்பின் அமர்..!

நம் அக்கினியார் பதிலளித்ததும் அடுத்த உறவை அழைக்கலாம்தானே..?

அமரன்
21-09-2007, 07:00 AM
அக்னி ஆபத்து அப்பால் நகர விரைந்து வாருங்கள்...

அக்னி
21-09-2007, 07:27 AM
7. அக்னி - பெயருக்கு ஏத்தபடியே உங்களிடம் அதீத தீபோன்ற தமிழ் பற்று, கவித்திறன், ஆராய்ந்து உடன் கவியோடு பின்னூட்டம் இடும் திறன், இப்படி பலவற்றைப் பார்த்து வியந்து விழித்திருக்கிறேன்.
முதலில், பிந்திய எனது பதிலுக்காக, திரியின் அண்ணல் ராஜா அண்ணாவிடமும், அமரன், கேள்வியில் என்னை இணைத்துக் கொண்ட தங்கை பூமகள், மற்றும் அனைவரிடமும் மன்னிக்க வேண்டுகின்றேன்.

பூமகளின் கேள்வியில் அலங்கரிக்கப்பட்டமை எனக்கு சந்தோஷமே...
அந்த அலங்காரம் எனக்கு மிகையா அல்லது தகுமா என்ற சந்தேகம் இருப்பினும்,
அந்த நிலைக்கு நான் உயரவேண்டும் என்ற உறுதியை தருவதென்னமோ உண்மைதான்.
அந்தவகையில் தமிழ்மன்றத்திற்குத் தலைவணங்குகின்றேன்.

இனி கேள்விக்கு வருவோம். என்னாலியன்ற அளவு பதில்தர முனைகின்றேன்.

நீங்கள் வெளிநாட்டில் இருப்பதாக தெரியும். உங்கள் எதிர்கால சந்ததிகளுக்கு எப்படி தமிழ்ப்பற்றையும் தமிழறிவையும் புகட்ட உத்தேசித்துள்ளீர்கள்?? வழிமுறைகளைச் சொன்னால் பலர் பயனடைவர்.
புலம்பெயர்ந்த வாழ்வுநிலை என்பது, மிகுந்த சிக்கலுக்குட்படுவது இந்த நிலையில்தான். மொழி, கலாச்சாரம் போன்றவற்றின் அடுத்த தலைமுறை நோக்கிய கடத்துகை என்பது, புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கும் மிகப்பெரும் பிரச்சினைதான்.

வளர்ந்தபின் வெளிநாடு வந்தவர்களிடம் தமிழறிவு இயல்பாக இருந்தாலும், இங்கேயே பிறப்பவர்களிடம் தமிழ் என்பது புகுத்தப்படுவதில் மிகத் தெளிவாக இருத்தல் வேண்டும். புகுத்த முற்பட்டு, அவர்கள் விலத்திவிடும் நிலைக்கு வந்துவிடக்கூடாது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச்சமூகம்,
அன்றாட வாழ்வில் இரு சமூக, கலாச்சார, பழக்கவழக்க நிலைகளில் வாழ வேண்டிய கட்டாய தேவை காலத்தின் கட்டாயமாகவே உள்ளது.
வீட்டின் உள்ளே ஒரு சூழல், வீட்டைவிட்டு வெளியேறினால், அதாவது, பாடசாலையோ வேலைத்தளமோ அல்லது வேறெந்த இடமோ செல்லினும் இன்னொரு சூழல்...

ஆக, பெரியவர்களை விட்டு விடுவோம். அவர்களிடம் போதிய தமிழ் வாசம் வீசுகின்றது.
சிறியவர்களைப் பொறுத்தவரை,
அவர்கள் வீட்டில், தாய்நாடு சார்ந்த மொழி, உணவு, உடை, பழக்கவழக்கங்களில் இருந்து, பாடசாலைக்குச் செல்லும்போது, அனைத்திலும் மாற்றம் காண வேண்டியவர்களாகின்றார்கள். பாடசாலைச் சூழலில் எமது கலாச்சாரம் என்பது முற்றாகவே கூடுதலாக இருப்பதில்லை. முதலில் அச்சப்பட்டாலும், பின்னர் பாடசாலையுடன் இயைந்து போகும் வாழ்வில் அவர்கள் இணைந்து கொண்டாலும், ஒரு முகமூடி அணிந்த வாழ்வு போன்றே அவர்கள் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகின்றார்கள்.
ஏனென்றால், வீடு வந்ததும் மீண்டும் எமது கலாச்சார சூழலுக்குள், மீண்டும் தள்ளப்பட்டு, தமது பாடசாலை வேலைகளை செய்யவேண்டியுள்ளது. இதனாலேயே அவர்கள் மிகுந்த குழப்பத்திற்குள்ளாவதுண்டு. எனவே, அவர்களுக்கேற்ற சூழலை நாம் உருவாக்கித் தராவிடின், அவர்களது படித்தல் எனும் செயற்பாடு, குழப்பப்பட்டுவிடும்.

இந்த விடயத்தில் பெற்றோர் கவனமாக இருத்தல் வேண்டும். சில பெற்றோர், தமது பிள்ளைகள் தமிழ் மொழி சார்ந்து இருப்பதைவிட, தாம் வாழும் நாடு சார்ந்து இருக்கவே விரும்புவதுண்டு. அதனைப் பெருமையாகக் கூட நினைப்பவர்களும் உண்டு.
இதனால், அவர்கள், குழந்தைப் பருவத்திலேயே தமிழை தமது பிள்ளைகளிடமிருந்து ஒளித்துவிடுகின்றார்கள். பின்னாளில் தமிழ் கதைக்க முடியாது முற்றாகவே மறக்கடிக்கப்பட்டு, மாற்றப்பட்டவர்களாய் மாறி வளருகின்றார்கள்.

எனவே, வெளிநாடுகளில் தமிழை வளர்க்க என்ன செய்ய வேண்டுமென்றால்,
வீட்டில், குழந்தைகளின் சிறுவயதில், தமிழில் உண்டு, உரையாடி, வாழ்ந்து, பழக வேண்டும். இதனால், திணிப்பு இல்லாமல் இயல்பாகவே தமிழ் இணைந்து கொள்ளும்.
பாடசாலை செல்லும் நாட்களின் ஆரம்பம், அவர்களால் விரும்பப்படாவிட்டாலும்கூட, படிப்பித்தல் முறைகளினாலும் மற்றும் சமவயது குழந்தைகளுடன் சேரும்போது இயல்பாகவே கவரப்பட்டு, ஆர்வப்பட்டு, வாழும் நாட்டின் மொழியையும் கலாச்சாரத்தையும் கற்றுவிடுகின்றார்கள்.
வளர்ந்த பின்னர் அவர்களே பாகுபடுத்தி வாழ்ந்துகொள்வார்கள்...

அதேபோல,
வார இறுதி நாட்களில் தமிழ் பாடசாலைகள் கூடுதலாக அனைத்து நாடுகளிலும் நடைபெறுவதுண்டு. தவிர, தமிழ் விழாக்கள், போட்டிகள் கூட நடாத்தப்படுவதுண்டு. இவற்றில், கலந்து கொள்ளுதலும், எமது அடுத்த தலைமுறையை தமிழ் என்ற இனிமைக் கலாச்சாரத்தினுள் இயல்பாகவே ஈடுபாடு கொள்ள வைக்கும். (சிலர் தமது நடை உடை பாவனைகளால் இந்நிகழ்வுகளில் மேலைத்தேய கலாச்சாரத்தை திணிக்கமுயல்வதும் நடைபெறுவதுண்டு.)

அறுதியாகக் கூறின்,
தமிழைத் திணித்தால் அதனில் நின்று தள்ளிவாழ முனையும் குழந்தைகள்,
இனிமைத் தமிழை இயல்பாக நடைமுறைவாழ்வின் அங்கங்களாக கொண்டு வாழ்ந்தால்,
செந்தமிழ்... இயல்பாகவே அடுத்த தலைமுறையைச் சேரும்...

ஓவியன்
21-09-2007, 07:51 AM
உண்மைதான் அக்னி!

நம் எதிர்கால சந்ததியினர் மீது தமிழினைத் திணிக்காமல் அதுவாகவே அவர்களில் ஊறுமாறு செய்ய வேண்டும். இதிலே பெற்றோரது பங்களிப்பு மிக மிக முக்கியமானது.

தெளிவான, யதார்த்தமான பார்வைக்குப் பாராட்டுக்கள் நண்பா!.

ஓவியன்
21-09-2007, 07:57 AM
நண்பர்கள் ஆயிரம் இருக்கலாம்.. ஆனால் நல்ல நட்பு என்பது ஆயிரத்தில் ஒன்று. இடுக்கண் களைவது மட்டுமல்லாது, இடுக்கணுக்கு நண்பன் ஆட்படாமல், நல்லாசிரியனாய் கற்பிப்பதும் நட்பே..

ஓவியரே.. அவ்வகையில் நீங்கள் கொடுத்து வைத்தவர்.
உண்மைதான் அண்ணா, ஒரு நல்ல நட்பினால் உலகத்தில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.

மிக்க நன்றிகள் உங்கள் பின்னூட்டத்திற்கு....

அன்பின் ஓவியன்,

கவிமதியின் நட்புகாலத்தில் ஒரு கவிதை வரும்

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்தேன்
நமக்கான
நட்பை...
நம் நட்பும், உன் நட்பை போலவே என்று தொடர நானும் பிராத்திகிறேன்...

ஆண், பெண் நட்பு பற்றிய அறிவுமதியின் அந்த கவிதைத் தொகுதி எனக்கு ரொம்பவே பிடிக்கும்.......

மிக்க நன்றிகள் அண்ணா!!!. :)

ராஜா
21-09-2007, 08:31 AM
நன்றி அக்னி..!

காத்திருந்து படிக்க மிகத் தகுதியான பதில்தான்..

புலம் பெயர்ந்தோர், குழந்தைகள் வளர்க்கும்போது, உங்கள் வார்த்தைகளை வேதமாகவே கொள்ளலாம்..

அமரன்
21-09-2007, 08:33 AM
அடுத்து சகலதுறை ஆட்டக்காரர் சரித்திர(!)புகழ் வாத்தியாரை பந்துவீச அழைப்போமா?

ஓவியன்
21-09-2007, 08:38 AM
ஆகா!!!

ஆனால் அவர் பத்து பவுன்ஸர்கள் போடப் போகிறார்......:)

அமரன்
21-09-2007, 08:39 AM
ஆகா!!!

ஆனால் அவர் பத்து பவுன்ஸர்கள் போடப் போகிறார்......:)
ஓவியா..!அபாயகரமான பந்துகள்தானே ஆபத்துக்கு காரன்டி.:D:D

ராஜா
21-09-2007, 08:45 AM
அவ்வாறே செய்யலாம் அமர்..!

கச்சேரியைக் களைகட்டச் செய்யும் இரகசியம் அறிந்தவர் அவர்..!

இசைவு தெரிவித்தார் என்றால் அறிவிப்பு போட்டுவிடலாம்..!

ராஜா
21-09-2007, 08:49 AM
மன்ற உறவுகளிடம் சிறப்பான வினாக்கணைகளைத் தொடுத்த பூமகளுக்கும், விடையளித்த பெருந்தகையாளர்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ராஜா
21-09-2007, 08:51 AM
மன்றத்தின் அதிரடி கருத்து வீச்சாளர் வாத்தியார் அவர்களை நம் உறவுகளுக்கு பந்துவீச பணிவுடன் அழைக்கிறோம்..!

அமரன்
21-09-2007, 08:55 AM
வாத்தியாரே..! உள்ளேன் ஐயா சொல்லிட்டுங்களேன்.
அன்புடன்

அக்னி
21-09-2007, 08:56 AM
இளசு அண்ணாவின் தீர ஆராய்ந்து வந்த பதிலும்,
ஓவியனின் நட்பின் பாசப்பதிலும்,
சிறப்பு...

அடுத்ததாக வ(வா)ர இருப்பது வா(வ)த்தியாரா...?

பலே பலே...

lolluvathiyar
21-09-2007, 09:21 AM
வாத்தியாரே..! உள்ளேன் ஐயா சொல்லிட்டுங்களேன்.
அன்புடன்

உள்ளேன் ஐயா,
விரைவில் கேள்விகளுடன் வருகிறேன்,
கேள்வி கேட்க அழைத்தன் நன்பர்களுக்கு நன்றி

ஓவியன்
21-09-2007, 09:40 AM
வாத்தியாரே..! உள்ளேன் ஐயா சொல்லிட்டுங்களேன்.

என்ன கொடுமை இது வாத்தியாரையே உள்ளேன் ஐயா சொல்ல சொல்லுறீரே....??? :D

அமரன்
21-09-2007, 09:42 AM
என்ன கொடுமை இது வாத்தியாரையே உள்ளேன் ஐயா சொல்ல சொல்லுறீரே....??? :D
எத்தனைதரம் எங்களை சொல்ல சொல்லி இருப்பாங்க...சந்தர்ப்பம் கிடைக்கும்போது சர்ப்பமாக வேண்டாமோ.:p:p

க.கமலக்கண்ணன்
21-09-2007, 01:02 PM
வாங்கையா

வாத்தியார் ஐயா

வாயார உங்களின் கேள்விகளை

வார்த்தைகளின் கோர்வையோடு படிக்க காத்திருக்கிறோம்..

பூமகள்
21-09-2007, 01:33 PM
கர்வம் என்னும் மூடி போடாமல்
நாம் அறிவு என்னும் பானை திறந்திருந்தால்
இட்டு நிரப்ப எத்தனையோ பேர்!
என்றும் - இறுதிவரை இன்னும் புதிதாய் இட
இடம் இருக்கும் அதிசயப்பானை நாம்!

கற்றல் என்பது மூச்சு போல..
கடைசிவரை உடன்வரும் செயல்!
அற்புதமான வரிகள் இளசு அண்ணா. உங்களின் வழிகாட்டுதலும் வழிமுறையும் நிச்சயமாய் நல்லதொரு தமிழ் ஆர்வலர்களை இம்மண்ணில் உருவாக்கும் என்பது திண்ணம்.
மட்டற்ற மகிழ்ச்சி. தாமதமாயினும் அருமையான பதிலோடு வந்து அசத்திவிட்டீர்.
உங்களின் அன்புவழிகாட்டுதலில் உங்களின் அழகிய மனத்தினை எங்களோடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா.

பூமகள்
21-09-2007, 01:58 PM
மன்றத்து ஓவியக் கவிஞர் ஓவியன் அண்ணா,
உங்களின் வாழ்வை வளமாக்கிய அந்த நட்பினைக் கண்டு ஒரு கணம் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். இன்று அன்பான ஓவியன் அண்ணாவை எனக்கு தேடித்தந்த மன்றத்தோடு அழகிய உங்களின் நட்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
உங்களின் ஆழகான வாழ்வை செம்மையாக்கியதில் பெரும் பங்கு தூய்மையான நட்பின் மூலம் அமைந்தது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி.
அந்த நட்பு என்றும் ஆழமாய் தொடர வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்.
உங்களின் பதிலுக்கு மிக்க நன்றிகள் ஓவியன் அண்ணா.

மன்றத்து தீரக் கவிஞர் அக்னி,

தமிழைத் திணித்தால் அதனில் நின்று தள்ளிவாழ முனையும் குழந்தைகள்,
இனிமைத் தமிழை இயல்பாக நடைமுறைவாழ்வின் அங்கங்களாக கொண்டு வாழ்ந்தால்,
செந்தமிழ்... இயல்பாகவே அடுத்த தலைமுறையைச் சேரும்...
உங்களின் அழமான அலசலுடனான பதில் அருமையிலும் அருமை. எங்களுக்கு தாமதமாயினும் அழகிய பதிலோடு வந்து அசத்திவிட்டீர்.
தமிழை திணிக்காமல் இயல்பாய் குழந்தைகளுக்குள் ஏற்ற வேண்டிய வழிகளை செம்படச் சொன்னீர்கள் அக்னியாரே..!!!
நிச்சயம் எங்களுக்கு உபயோகமாய் இருக்கும்.
மிக்க நன்றிகள்.

lolluvathiyar
21-09-2007, 02:55 PM
எனக்கு பதில் தான் ஓரளவுக்கு சொல்ல தெரியும், ஆனால் கேள்வி எல்லாம் கேட்க தெரியாது. என்னை கொண்டு வந்து ஆ பத்தில் மாட்ட வைத்து விட்டர் ஆருயிர் அமரன். சரி புது வித முயற்ச்சி ஏன் விட வேண்டும் என்று இந்த வம்பில் வழிய வந்து தலையை கொடுத்து விட்டேன். நாம் எப்பவுமே குப்பற விழுந்தாலும் மீசையில மன் ஒட்டலைனு சொல்லர ஆளாச்சே. இதில் இதுவரை ஆபத்தில் அதிகமாக சிக்காதவர்களை தான் சிக்க வைக்கலாம் என்ற நல்ல என்னத்தில்
இதோ கேள்விகளை தொடுகிறேன்.

1. சிவசேவகன்
ஐயா சதா சிவமயம் என்று இருகிறீர்கள். அதுவும் சைவ மதத்தை பற்றியே பதிப்பவர் நீங்கள். பிரம்மசர்யம் இயற்கைக்கு முரனானது, அவசியமற்றது என்று சொல்கிறேன். அதை பற்றிய உங்கள் கருத்து என்ன என்று டைப் அடித்து விளக்கவும்?

2. மலர்
அன்பு தங்கையே, சேர்ந்து 4 மாசம் ஆச்சு, இதுவரை கிட்டதட்ட 750 பின்னூட்டங்களுக்கு மேல் பதிச்சாச்சு. அனைவரிடமும் நல்ல பழகி பாப்புலரும் ஆகியிருக்கீங்க. ஆனா இதுவரை ஒரு திரி கூட தொடங்கவில்லையே. ஏன்?

3. மீனாகுமார்
தமிழ் மணம் நிரைந்த மீனாகுமார், தமிழ் சம்மந்தபட்ட உங்கள் பதிவுகள் வன்முரை தெரிகிறது என்று நான் குற்றம் சாட்டுகிறேன். வேறு மொழிகளை அதிகமா சாடுவதாக படுகிறது. இந்த குற்றசாட்டுக்கு உங்கள் மறுமொழி என்ன?

4. சுட்டிபையன்
தனிஈழம் விரும்பும் ஈழதமிழ் மைந்தனே, உன்னிடம் ஒரு விசித்திரமான கேள்வி தொடுக்கிறேன். நல்ல குணம் படைத்த ஒரு சிங்கள பெண் உனக்கு காதல் கடிதம் தந்து விட்டாள். நீங்கள் விரும்பும் தகுதிகள் அனைத்தும் இருகிறது. உங்கள் முடிவு என்னவாக இருக்கும் (மொழிக்கு முதலிடமா காதலுக்கு முதலிடமா). (ஒழுங்கா வந்து பதில் சொல்லனும் கனவில் மூழ்க கூடாது)

5. உதயசூரியன்
நீங்கள் கலைஞர் திரு மு. கருனாநதியின் பக்தர் என்பதை வெளிபடையாக காட்டி உலாவுபவர். அரசியல் சாராத உதயசூரியன் எப்படி இருப்பார். அதவாது உங்களுக்கு தி.மு.க அல்லாத மற்ற முகங்கள் நிச்சயம் இருக்கும். அதை பற்றி கொஞ்சம் சொல்லுவீர்களா?

6. பிச்சி
கவிதையை தவிர வேற ஏரியா பக்கமே வரமாட்டீங்க. அதனால உக்களிடம் பொதுவான கேள்வியே கேட்க படுகிறது. ஆண்களை பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன.

7.மனோஜ்
தமிழ் மன்றத்தில் அரசியல் தேர்தல் திரியில் நீங்கள் வெற்றிபெற்றதாக அறிவித்த போது உங்களுக்கு எப்படி இருந்தது. உங்கள் உனர்ச்சிகளை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

8. சக்திவேல்
உங்கள் பதிப்புகளிலேயே கடவுள்கள் பைத்தியக்காரகளாக இருக்கவேண்ட (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11795) இந்த பதிப்பு நீங்கள் மிகவும் கஸ்டபட்டு உருவாக்கிய பதிப்பாக கருதுகிறேன். மிகவும் ரசிக்கும்படி எழுதி இருந்தீர்கள். ஆதற்க்கு வேறும் 7 பேர் மட்டுமே விமர்சனங்கள் தந்திருகிறார்கள். இதை பற்றி நீங்கள் வருத்தபட்டது உண்டா? உங்கள் மன நிலை எப்படி இருந்தது.

9. இனியவள்
உங்கள் கவிதைகளில் அதிகமாக காதல் ஏக்கம் தான் தெரிகிறதே. ஏதாவது சிறப்பு காரனம் இருகிறதா?

10. சித்தர் (நாம்செக்)
பொதுவாக சிந்த மருத்துவத்தில் மாமிசம் உன்ன கூடாது என்பார்கள். அதற்க்கு ஏதாவது காரனம் இருகிறதா?

நன்பர்களே முடிந்த வரை இந்த ஆபத்து வலையில் சிக்காதர்களை தேடி பிடித்து கேள்வி கேட்டு விட்டேன். தனி மடல் மூலம் பிடித்து இழுத்து வரவேண்டும்.

அமரன்
21-09-2007, 03:02 PM
கேள்விகளும் உறவுகளும் சிறப்பான தெரிவு..நான் குறிவைத்த சிலரை வாத்தியாரும் குறிவைத்து ஆபத்தில் சிக்க வைத்திருகின்றார். நன்றி வாத்தியாரே...!

பூமகள்
21-09-2007, 03:07 PM
சரியான நபர்களுக்கு அசத்தலான கேள்விகள். வாழ்த்துக்கள் வாத்தியாரே..!
பதில்களை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்.

மீனாகுமார்
21-09-2007, 03:30 PM
3. மீனாகுமார்
தமிழ் மணம் நிரைந்த மீனாகுமார், தமிழ் சம்மந்தபட்ட உங்கள் பதிவுகள் வன்முரை தெரிகிறது என்று நான் குற்றம் சாட்டுகிறேன். வேறு மொழிகளை அதிகமா சாடுவதாக படுகிறது. இந்த குற்றசாட்டுக்கு உங்கள் மறுமொழி என்ன?

.

கேள்வி கேட்கத்தெரியாது என்று பம்மிவிட்டு மிகவும் அருமையான கேள்வி கேட்டுள்ளீர்கள்.... அட்டகாசம்... இது அல்வா சாப்பிடுற மாதிரி..
இதற்கு இரு வரியில் பதில் கொடுத்திட முடியாது. பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன். வார இறுதியில் எனக்கு இணைய தொடர்பு கிடையாததால் திங்கட்கிழமை பதிவிடுகிறேன்.. பொறுத்தருள்வீர்.

சக்திவேல்
21-09-2007, 04:18 PM
8. சக்திவேல்
உங்கள் பதிப்புகளிலேயே கடவுள்கள் பைத்தியக்காரகளாக இருக்கவேண்ட (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11795) இந்த பதிப்பு நீங்கள் மிகவும் கஸ்டபட்டு உருவாக்கிய பதிப்பாக கருதுகிறேன். மிகவும் ரசிக்கும்படி எழுதி இருந்தீர்கள். ஆதற்க்கு வேறும் 7 பேர் மட்டுமே விமர்சனங்கள் தந்திருகிறார்கள். இதை பற்றி நீங்கள் வருத்தபட்டது உண்டா? உங்கள் மன நிலை எப்படி இருந்தது.

இல்லை வாத்தியாரே என்னைப்பறுத்தவரை இப்படிப்பட்ட ஒரு பதிவை பதித்ததே மிகப்பருமையான திருப்தி தரும் விசயம் ஆகும். எவ்வளவோ பதிவுப்பகிர்வுகளையும், உள்ளக்கிடக்கைகளையும் பதிக்கநினைத்து முடியாமமல் இருக்கும்போது ஒரு பதிவினை அளிப்பது மிக திருப்தியான விஷயம் ஆகும். தங்களைப்போன்றோரின் வாழ்த்துக்கள் நிச்சயாமாக மேலும் சந்தோஷத்தை அதிகப்படுத்தும் என்ற உன்மை மறுப்பதற்க்கு இல்லை. நிறையபேர் கருத்துசொல்லனும் என்ற பேராசையும் இல்லை, எவரேனும் ஒருவர் சொன்னால் போதும், மற்றவர் மனம் கவர்ந்தேன் இல்லை மற்றவ்ர்களின் உள்ளக்கிடக்கையை சரியாக கணித்திருக்கின்றேன் என்ற திருப்தி இருக்கும்.
"கடவுள் பைத்தியக்காரர்களாக இருக்கவேன்டும்" திரியானது எல்லோர் மனதையும் கவரும் என்று சொல்லமுடியாதல்லவா. தங்கைப்பாசம் திரியில், சிவா.ஜிவர்கள் பாராட்டி இருந்தார். "காட்டு ஆட்டின் தாய்ப்பசம்", திரியில் அமரன் அவர்கள் பாரட்டியிருந்தார், அதுபோல ஒவ்வொரு திரியும் ஒவ்வொரு வகையில் ஒவ்வொருவரை கவரும் இல்லை கவராமல் போகும்.
ஒரு சிலர் ரசித்தாலும் கருத்துச்சொல்லாமல் போவர் அதுக்கு காரனம் பல இருக்கும்.
தோழி ஓவியா அவர்களின் கருத்து ரசிக்கும்படியாக இருக்கும். அவர் எனது கருத்தைபாராட்டிவிட்டு யரேனும் ஏதும் நினைத்துவிடுவார்களோ என்ற நினைப்பில், ஏன் பாராட்டினேன் என்று விளக்கம் வேறு தருவார்.
அதான் வாத்தியாரே, சுருங்கச்சொல்லின், எழுதும் திருப்திதான் எனக்கு முதன்மையானது, பாராட்டுக்கள் விமர்சனங்கள் எல்லாம் இரன்டாம் பட்சமே.

சூரியன்
21-09-2007, 04:27 PM
வாத்தியாரே எல்லாரையும் மாட்ட விடுறீங்க..

ராஜா
21-09-2007, 04:32 PM
நன்றி சக்தி..!

ஒரு நேர்மையான படைப்பாளனின் அடையாளம் நீங்கள் சொன்னதுதான்..
அதிகமானவர்களைக் கவரும் விதத்திலோ, திருப்திப்படுத்தும் விதத்திலோ ஒரு படைப்பு இருக்கவேண்டுமானால், சில சமரசங்கள் செய்துகொள்ளத்தான் வேண்டியிருக்கலாம்.. ஆனால் படைப்பில் திருப்தி காணும் ஒரு உண்மையான படைப்பாளிக்கு இந்த ஒப்பனைகள் எதுவும் தேவையில்லை.

என்னை மிகவும் கவர்ந்த பதில் உங்களுடையது.

மீனாகுமார்
21-09-2007, 04:34 PM
3. மீனாகுமார்
தமிழ் மணம் நிரைந்த மீனாகுமார், தமிழ் சம்மந்தபட்ட உங்கள் பதிவுகள் வன்முரை தெரிகிறது என்று நான் குற்றம் சாட்டுகிறேன். வேறு மொழிகளை அதிகமா சாடுவதாக படுகிறது. இந்த குற்றசாட்டுக்கு உங்கள் மறுமொழி என்ன?

.

முதலில் இந்த பெரிய மடலைப் படிக்கும் முன்... நான் யாவரையும் மிக்க மரியாதையுடன் மதிப்பவன். எல்லோரையும் அவர்களின் கொள்கைகளையும் மதிப்பவன். யாரையும் பழிப்பது என் நோக்கமல்ல. மேலே படியுங்கள்...

வாத்தியாரைய்யா... உங்களைப்பற்றி எனக்கு சிறிதளவே தெரியும். இருப்பினும் எனக்கு தெரிந்ததை வைத்து கூறுகிறேன். உங்களையும் என்னையும் மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தோமேயானால் நீங்கள் உங்கள் வாழ்வில் கடந்து வந்த பாதையும் நான் என் வாழ்வில் கடந்து வந்த பாதையும் வேறுவேறாக இருக்கும்.

என் 22 வயது வரை கோபமே வந்தது கிடையாது. அப்போது உலகமும் எனக்கு தெரியாது. சில வருடங்களுக்கு முன்னர் உலகம் தெரிந்த பின்னர் மிகவும் ஆழமாக சிந்தித்தேன். இவ்வாறு செய்யக்கூடாது, இருப்பினும் என் சிந்தனை இப்படி ஓடியது::: ஒரு நேர்மையான ஓர் அரங்கில் தமிழ் மொழி சிறந்ததா இல்லை ஆங்கிலம் சிறந்ததா என்று போட்டி வைத்துப் பார்த்தால் சந்த நயத்திலிருந்து, சொல் நயம் வரை ஆங்கிலம் தமிழுக்குப் பின்னால் வெகு தூரம் இருக்கும் என்பது என் முடிவு. சில ஆங்கில பாடலைக் கேட்டால் வாயில் சிறு கற்களைப் போட்டுக் கொண்டு உரைநடை பேசுவது போல் இருக்கும். ஆனால், இத்தனை நல்ல சுவையும் தகுதிகளும் தமிழுக்கு இருந்தும் தமிழ் ஏன் உலகை ஆளவில்லை (இங்கு ஆளவில்லை என்ற சொல் சற்று கடுமையானது. பரவுவது.. இல்லை பயன்படுத்துவது என்பது சரியாக இருக்கும். இருப்பினும் விவாதத்திற்காக இதை பயன்படுத்துவதற்கு உரிமை கோருகிறேன்) என்ற வினா எழுந்தது. அப்போது தான் புரிந்தது, ஒரு மொழி புகழ் பெற அதன் சுவை மட்டும் போதாது. அதை உபயோக்கிக்கும் மக்கள் வலிமையுடன் இருக்க வேண்டும் என்று. ஆங்கிலத்தில் கூற வேண்டுமானால்...

The Success behind English is not the language itself, but the PEOPLE behind it.

வெள்ளைக்காரர்கள் வலுக்கட்டாயமாக அவர்களின் மொழியை சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பல நாடுகளில் புகுத்தினார்கள். சில நூறாண்டுகளுக்கு முன்னர் அவர்கள் செய்த ரவுடித்தனத்தின் பலனை இன்று அவர்கள் அனுபவி்க்கிறார்கள் (உதாரணம்- ஆங்கிலக் குழந்தைகள் இன்று தொழில்நுட்பம் கற்றுக் கொள்ள அவர்கள் தாய் மொழி தவிர வேறு மொழி கற்க வேண்டியதில்லை). மேலும் இன்று அவர்களிடம் நிறைய பணம் இருப்பதால் அதை தொழில் நுட்ப வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறார்கள். அதிலும் முன்னேறுகிறார்கள்.

தமிழ் எப்படி உலகை ஆள முடியும் ???

என்னிடம் பல கோடி அமெரிக்க வெள்ளி கொடுத்து அதை செலவு செய்ய சொன்னால், முதலில் அந்த பணத்தை தற்போதுள்ள தொழில்நுட்பத்தையெல்லாம் தமிழுக்கு மாற்ற உத்தரவிடுவேன். பின்னர், அனைத்து துறைகளிலும் தமிழில் ஆராய்ச்சி செய்யுமாறு வல்லுநர்களை ஏவிவிடுவேன். சில ஆண்டுகளில் தொழில்நுட்பம் தமிழில் வளர்ந்த பிறகு தமிழ் கற்றவருக்கு மட்டுமே அதை பயன்படுத்த அனுமதி கொடுப்பேன். இப்போது... யாவரும் முதலில் தமிழ் கற்றால் தான் தொழில்நுட்பம் பெற முடியும் என்ற நிலை வந்தால் தான் தமிழ் கற்பர். இப்படித்தான் தமிழால் உலகை ஆள முடியும்.

அறிவுரை-

இது பயங்கர வன்முறை என்று நீங்கள் கூறுவது எனக்கு கேட்கிறது. ஆனால் ஒன்றை உற்று நோக்க வேண்டும். எந்த மொழியானாலும் சம்மதம். எந்த மதமானாலும் எனக்கு சம்மதம் என்று கூறுபவர்கள் இந்தியர்களைப் பார்த்து மட்டும் தான் the so-called அறிவுரை கூறுவார்கள். இதே அறிவுரையை ஜார்ட் புஷ்ஷுக்கும், பின் லாடனுக்கும் இல்லை வேறு எந்த நாடானாலும் சரி, அங்கு சென்று அறிவுரை கூறுவார்களா..

மொழி என்றால் அது பிற மொழிக்கும் இடம் தர வேண்டும். கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. இதே அறிவுரையை ஜார்ஜ் புஷ்ஷோ இல்லை ஐ.நா.வோ ஏற்றுக் கொண்டு உலகில் உள்ள எல்லா பள்ளிக்கூடங்களிலும் தமிழை கற்றுக் கொடுப்பார்களா ??? இது சாத்தியமா.. சரி தமிழை ஏன் கற்றுக் கொடுக்க வேண்டும்.. வேறு எந்த மொழியாயினும் 3 மொழியை கற்க வேண்டும் என்று உலகில் எல்லா பள்ளிக்கூடத்திலும் ஆணையிடுவார்களா... நமக்கு அறிவுரை கூறுபவர்கள் இதை முயன்று பார்க்கட்டும்.

எல்லா மதத்திற்கும் இடம் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டு அவர்கள் தங்கள் நாட்டில் இருக்கும் சர்ச்சுகளையும் மசூதிகளையும் பராமரிக்க செலவிடும் பணத்தில், இனி சிறு தொகையை இந்து மற்றும் புத்த கோவில்கள் கட்டி பராமரிப்பதற்கும் இசைவார்களா ???

சமமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுபவர்கள் எல்லாம் ஏன் நம்மைப் பார்த்து மட்டும் கூற வேண்டும் ??? இவர்கள் வேறு யாரிடமும் இதே அறிவுரையைக் கூற மாட்டார்கள்.

தீவிரமாக இருப்பது என்பது இயல்பாக நம்முடைய ரத்தத்தில் இல்லாத பண்பு. நாம் என்ன சொன்னாலும் வெகுவாக ஆராயாமல் ஏற்றுக் கொள்வோம். நம்முடைய இந்த பண்பே மிக சிறந்த பண்புதான். ஐடியலான உலகில் இது மிகவும் போற்றத்தக்கது. ஆனால் இந்த உலகம் அப்படிப்பட்டதல்ல. உலகில் இருக்கும் யாவரும் கையில் கத்தியுடனும் ஆயுதத்துடனும் இருக்கும் போது நாம் மட்டும் ஏதும் இல்லாமல் நான் நல்ல பிள்ளை என்று இருந்தால் நம்மை ஒருவன் குத்தி கொன்று விட்டுத்தான் போவான். 17 முறை தோற்ற கோரி முகமதுவை ( பெயர் சரியா தெரியவில்லை) பாவம் பிழைத்துப்போ என்று உயிர் பிச்சை கொடுத்தவர் காஷ்மீர் ராஜா. 18 வது முறை அவன் ஜெயித்த பின்னே முதலில் அவன் செய்தது அந்த காஷ்மீர் ராஜாவைக் கொடூரமாக குத்திக் கொன்றது தான். அந்த அனுபவத்திலிருந்து நாம் இன்னும் பாடம் கற்கவில்லையென்றால்.....

அது மட்டுமா. காந்தியடிகளின் அகிம்சைப் போராட்டம் மிகவும் தெய்வீகமானது. ஆனால், அதை மனிதர்களுக்கு எதிராகத்தான் பயன்படுத்தனுமே தவிர ஆங்கிலேய மிருகங்களுக்கு எதிராக அல்ல.. உதாரணத்துக்கு ஜாலியன் வாலாபாக் படுகொலையின் போது காந்தியடிகளும் அந்த கூட்டத்தில் இருந்திருந்தால் அவர் அப்போவே வன்முறை தீவிரவாதத்துக்கு பலியாகியிருப்பார். ஏதோ அவர் செய்த புண்ணியம்... சுதந்திர காற்றை சுவாசித்து விட்டு அதே வன்முறைக்கு கோட்சேவால் பலியானார்.

சிங்கள ராணுவம் செய்யும் அட்டூழியங்களைப் பார்த்தும் சாந்தமாக அமைதியாக இருந்தால் நமக்கு வேறு பெயர். இல்லை காந்தியடிகளின் அகிம்சையை கடைப்பிடித்திருந்தால் இன்று என்னவாகியிருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. சமாதானம் கூறும் பிறர் எல்லாம் அடுத்தவனுக்கு சோறு ஆக்கிப் போடுபவர்கள் போல். சோற்றில் விசம் இருக்கிறதா இல்லை பல்லி இருக்கிறா என்பது பற்றிய கவலை அவர்களுக்கிருக்காது.

இதற்காக நான் வன்முறையில் ஈடுபடுங்கள் என்று கூறவில்லை. வம்பு சண்டைக்கு போகாதீர்கள். ஆனால் அதே சமயம் வந்த சண்டையை விடாதீர்கள் என்ற கோட்பாடு நன்று என்றுதான். கூறுகிறேன்.

மேலும், ஆங்கிலத்துக்கு சொந்தக்காரர்களான வெள்ளைக்காரர்கள் பொதுவாக நற்குணம் படைத்தவர்கள் அல்ல. அவர்களின் குணங்கள் பல மிருகங்களின் குணங்களுக்கு ஒப்பாகும். இதில் இன்னும் நான் சுட்டிக்காட்டி கூற விரும்பவில்லை. அவர்களின் ஆங்கிலம் பரவி புகழ் பெற்ற அளவிற்கு அவர்களுக்குத் தகுதியும் கிடையாது. இன்று நான் இங்கிலாந்தில் ஏதோ ஒரு ஊரில் தெருவில் நடந்து போனால் என் மேல் கல் எறிகிறார்கள். இன்னொரு ஊரில் குடித்து முடித்த பீர் பாட்டிலை என் மேல் எறிகிறார்கள். இன்னொரு ஊரில் என்னை கைபிடித்து இழுத்து வம்பு சண்டைக்கு இழுக்கிறார்கள். கேட்கவே கூசும் தகாத வார்தைகளைக் கூறி திட்டுகிறார்கள் வீதிகளில். சில ஊர்களில் இரவு 7 மணிக்கு மேல் நடமாடவே முடியவில்லை. கேட்டால் இனவெறியாம். 12 வயதிலிருந்து 23 வயது வரையுள்ள வாலிபர்கள் எல்லாம் கையில் கத்தி இல்லை துப்பாக்கியோடு அலைகிறார்கள். நான் இது நம் நாடு இல்லை என்ற ஒரே காரணத்தினால் பொறுத்தப்போகிறேன். என் உடமைக்கோ உயிருக்கோ ஆபத்து வந்தால் ஒரு கை பார்த்து விடுவேன். இங்கு உள்ள காவல் நிலையத்தில் வேலை பார்ப்பதற்கு ஆட்கள் இல்லை. பல காவல் நிலையங்களை மூடுகிறார்கள். இவர்களெல்லாம் ராணுவத்தினராய் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் சுரண்டி, பிச்சை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் மேலே கூறியிருக்கும் சம்பவங்கள் எல்லாம் மிகச் சிறியதே. பொறுத்துக் கொள்ளக்கூடியதே.

சரி எங்கோ ஆரம்பித்து எங்கோ போய்விட்டேன்... தாய் மொழியில் கல்வி கற்பது என்பது மிக முக்கியமான பிறப்புரிமை. இந்த உரிமையை நாம் தான் நமக்கு கொடுக்க வேண்டும். பின் லாடன் வந்து கொடுக்க மாட்டான்.

இது புண்பட்ட நெஞ்சு.. அது தான் அவ்வப்போது சிறிது வன்முறை காட்டுவது போல் எழுதிவிடுகிறது...

பூமகள்
21-09-2007, 04:36 PM
நல்ல பதில் சக்திவேல் சகோதரரே..!
நல்ல படைப்பாளிக்கு அழகு திருப்தி அவரின் படைப்புக்களைப் படைப்பதில் தான் இருக்கவேண்டும். விமர்சனங்களுக்கு அடிமையாகி ஒப்பனை செய்யக் கூடாது என்று கூறிய கருத்து அருமையிலும் அருமை.

பாராட்டுக்கள்.

சூரியன்
21-09-2007, 04:40 PM
சக்திவேல் அவர்களே வாத்தியாரின் கேள்விக்கு நல்ல அழகான,ஆழமான* பதிலை தந்திருக்கிறீர்கள்....

ராஜா
21-09-2007, 05:16 PM
நன்றி மீனா குமார்..!

தங்களின் பதில் எனக்கு ஒரு சிம்மத்தின் சீற்றமாகவே படுகிறது.. உங்களைப் போன்ற இளைஞர்கள் இன்னும் பலர் இருந்தால் நம் வெல்லத் தமிழ் இனி மெல்லச் சாகாது. தங்களுடைய தமிழுணர்வு மிகவும் நியாயமானதே.

நிறைய செய்திகளை உங்கள் விடையிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.

namsec
21-09-2007, 05:28 PM
10. சித்தர் (நாம்செக்)
பொதுவாக சிந்த மருத்துவத்தில் மாமிசம் உன்ன கூடாது என்பார்கள். அதற்க்கு ஏதாவது காரனம் இருகிறதா?

சித்தமருத்துவத்தில் மருந்து எடுத்துகொள்ளும் பொழுது பத்தியம்(உணவு உண்ணுவதில் கட்டுபாடு) இருக்க வேண்டும்.

பத்தியம் இருக்கும் பச்சத்தில் மருந்து நன்றாக வேலை செய்யும் அதை தவறும் பச்சத்தில் விலைவுகள் மாறுபடும் இதுவே காரணம்

ராஜா
21-09-2007, 05:47 PM
நன்றி சித்தரே..!

இனியவள்
21-09-2007, 06:47 PM
9. இனியவள்
உங்கள் கவிதைகளில் அதிகமாக காதல் ஏக்கம் தான் தெரிகிறதே. ஏதாவது சிறப்பு காரனம் இருகிறதா?

நன்றி வாத்தியாரே :)

மலரின் வர்ணங்களில் கவர்ந்திழுக்கப்பட்டு செல்லும் வண்டு போல்
சிறு வயதில் இருந்து அன்புக்காக ஏங்கிய இதயம் அந்த அன்பை
இன்னொர் இதயம் தரும் போது அதை ஏற்றுக்கொண்டு
அழகாய் காதல் வானில் தத்தளித்துக் கொண்டிருந்த பறவை நான்
வாத்தியாரே..

அடடா என்னடா இது இந்த வயதில் காதலா என்று எல்லாம் கேட்கக் கூடாது :p ஜந்து வருட காதல் ஓர் நிமிடத்தில் உடைந்து செல்ல
கடலில் தத்தளித்த ஓர் எறும்பாய் நான் கண்ணீர் என்னும் கடலில்
தத்தளித்துக் கொண்டிருக்கும் போது எனது தோழர்களின் தேற்றுதலால்
சோகம் என்னும் கடலில் இருந்து மீண்டு என் மனதில் வலிகளை கவிதையாக்கி இங்கு பதிந்தேன்..

எனது கையெழுத்து கூறுவது போல் என் கவிதைகள்
கண்கள் மூடிச் சிந்தித்தவைகள் அல்ல
இதயம் கதறிச் சிதறியவைகள்...

என் ஓவ்வொரு கவிதைகளின் என் உணர்வுகளின் வெளிப்பாடு...

என் வாழ்வில் நடந்த அந்தச் சம்பவம் என் கவிதைப் பயணத்தின்
ஆரம்பமும் முடிவும் கூட....

நன்றி

மனோஜ்
21-09-2007, 08:37 PM
இனியவள் காதல் சிலருக்கு தேன் சிலருக்கு விஷம்
விஷம் அறிந்திவிட்டால் அப்படியே விட்டுவிட மாட்டார்கள் சமூகம் என்ற மருத்துவ மனையில் திருமணம் என்ற மருந்தை எடுத்து கொள்ளுங்கள் காயங்கள் தானாய் ஆறும்
வாழத்துக்கள் மீன்டும் புத்துனர்வாய் வாழ

மனோஜ்
21-09-2007, 09:23 PM
7.மனோஜ்
தமிழ் மன்றத்தில் அரசியல் தேர்தல் திரியில் நீங்கள் வெற்றிபெற்றதாக அறிவித்த போது உங்களுக்கு எப்படி இருந்தது. உங்கள் உனர்ச்சிகளை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

நான் உண்மையை சொல்கிறோன்
நான் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்க வில்லை
நான் விளையாட்டுக்கா பதிந்தேன் அங்கு முதல் திரியை கவணித்தால் தெரியும் அனைத்தும் நானே என்று பதிந்திருப்போன் பின் ஏனே ஏன் நான் முயற்சிக்க குடாது என்று நினைத்தேன் அதற்கேற்றார் போல இக்ராம் என்னுடன் இனைந்தார் பின் மலர் தங்களின் கடிதத்தால் அனைவரையும் கவர்ந்தார் மோலும் சாராகுமார் மற்றும் கமலகண்ணண் சக்திவேல் அழுகுராஜ் என் அன்பிற்குரிய இளசு அண்ணா மற்றும் என் தகபுக கட்சி உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவும் மன்ற உறவுகள் அனைவரது அன்புதான் இதற்கு காரணம்

உண்மையில் அரசியலில் எனக்கு அதிகமாக இல்லை இல்லை கொஞ்சம் குட ஈடுபாடு கிடையாது ஆனால் இந்த சின்ன விளையாட்டிலே இத்தனை கஸ்டம் எனில் உண்மையில் எத்தனை கஸ்டம் என்பதை நன்கு புரிந்து கொண்டேன்

இந்த நிலையில் ஓட்டு ஆரம்பித்ததிலிருந்தே ஓவியருக்கும் எனக்கும் ஓட்டு ஒரே சரியாக விழிந்து வந்ததுதான் என் ஆர்வத்தை மிகவும் துண்டியது என்ன சொல்வது ஒரு குழுந்தையை பெற்றேடுக்கும் தயின் மனநிலை எனக்கு
உண்மையில் தேள்வி என்றதும் அதைபற்றி கவலை கொள்ள வில்லை பின் வெற்றி என்றதும் அதே குழுந்தையை பெற்றோடுத்த தாயின் மனநிலை

என்னை வெற்றி பெற செய்த அனைத்து மன்ற உறவுகளுக்கும் நன்றி :icon_b:

உங்கள் வாக்கை நான் உண்மையில் அரசியல் விளையாட்டுக்காக மட்டும் இல்லை என்னை மதிக்கும் ஒரு அன்பு இதயமாக கருதுகிறோன் அதற்காக ஓவியனுக்கு ஓட்டு பொட்டவுங்க இதயம் இல்லாதவங்களானு கோக்க குடாது அவுங்களும் என் இதயம் தான்

கோள்வியை தந்த வாத்தியரே உங்க மனது எப்படி இருந்தது ?
உங்கள் கேள்விக்கும் ஆ10 நடத்தி வரும் ராஜா அண்ணாவிற்கும் அமரன் அவர்களுக்கும் என் நன்றிகள்

சிவா.ஜி
22-09-2007, 05:30 AM
ஒரே ஒருநாள் மன்றம் வரவில்லை...ஆ''பத்தில் அசத்தலான பல பதில்கள் பதிவாகிவிட்டன. பூமகளின் கேள்விகளுக்கான பதில்களில் இளசுவின் பதிலில் கற்றுக்கொடுக்க எதுவுமில்லை என்று சொல்லியே ஒரு பல்கலைகழகம் கற்றுக்கொடுக்காதையெல்லாம் கற்றுக்கொடுத்துவிட்டார்.அவர் பதிலில் இருந்த ஒரு பகுதி மிக மிக முக்கியமாக உடனே செயல்படுத்த வேண்டியது...நூலகங்களின் மறுமலர்ச்சி.நான் என்னுடைய சிறு பிராயத்தில் நூலகமே கதியாக கிடந்து படித்த புத்தகங்கள் என் தமிழை எவ்வளவோ நன்றாக்கியது.ஆனால் இந்த தலைமுறைக்கு அந்த பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது.எதுவென்றாலும் மின்புத்தகம் கிடைக்குமா என்றுதான் கேட்கிறார்கள்.நூலகங்களின் பயன்பாடு நிச்சயமாய் தமிழ் வளர்க்கும்.
அக்னியின் பதிலில் அடுத்த தலைமுறைக்கு தமிழை சொந்தமாக்க பெற்றோர்கள்தான் முயலவேண்டுமென்று சொல்லியிருப்பது மிக மிக முக்கியமாய் கவனிக்கப்படவேண்டியதாகும்.தமிழ்நாட்டை விட்டு அலுவல் காரணமாக வெளிமாநிலங்கள்,வெளிநாடுகளில் இருப்பவர்களின் குழந்தைகள் தமிழ் படிக்க,பேச தங்கள் வீட்டைத் தவிர பொருத்தமான இடம் வேறென்னவாக இருக்க முடியும்.அழகான கருத்தை தெளிவாக சொன்ன அக்னிக்கு வாழ்த்துக்கள்.

lolluvathiyar
22-09-2007, 07:23 AM
வாத்தியாரே, சுருங்கச்சொல்லின், எழுதும் திருப்திதான் எனக்கு முதன்மையானது, பாராட்டுக்கள் விமர்சனங்கள் எல்லாம் இரன்டாம் பட்சமே.

நான் எதிர்பார்த்ததை விட மிக ஆழமாக எதார்த்தமாக பதிலளித்து விட்டீர்கள் சக்திவேல். உங்களுடைய அந்த பதிப்பை நான் மிகவும் ரசித்து படித்தவன். நீங்கள் அதை எழுத எவ்வளவு சிரமபட்டிருப்பீர்கள் என்று எனக்கு தோன்றியது. ஆனால் அதற்க்கு அதிகமாக பின்னூட்டம் வராமல் இருந்ததை கண்டு வருந்தியதால் தான் இந்த கேள்வி கேட்க தொன்றியது. அதற்க்கு உங்கள் பதில் மிக அருமை. நன்றி

இது புண்பட்ட நெஞ்சு.. அது தான் அவ்வப்போது சிறிது வன்முறை காட்டுவது போல் எழுதிவிடுகிறது...

மீனாகுமார் உங்கள் உனர்ச்சிகள் நன்றாக புரிந்து விட்டது. வன்முரை என்னம் எதிரியை அழிகிறதோ இல்லையே முதலில் நம்மை அழிக்கும். அதனால் தான் அப்படி ஒரு கேள்வி கேட்டேன். மற்றபடி புன்படுத்த அல்ல. பொருத்தமான தெளிவான பதில் தந்தற்க்கு மிக்க நன்றி

ராஜா
22-09-2007, 08:00 AM
நன்றி இனி..!

இனிய பெயருக்குள் ஒரு துன்பியல் சம்பவம் இருப்பது அறிந்து இதயம் வலிக்கிறது.

கற்பனைகள் அழகாக வேண்டுமானால் இருக்கலாம்..ஆனால் உண்மைக் கவிவரிகள் வலி[மை] மிகுந்தவை.

தம்பி மனோஜ் கூறியுள்ளது போல, எவ்விதக் காயத்தையும் ஆற்றும் மாமருந்து நம் மன்றம்.

தோல்விகள் நமக்கு துன்பம் கொடுக்க வருபவை அல்ல.. நம்மை இன்னும் எச்சரிக்கையாக இருக்கவைக்கும் ஆசான்கள் அவை..

ராஜா
22-09-2007, 08:05 AM
நன்றி மனோஜ்..

வெற்றியால் மகிழ்ச்சி.. ஆனால் தோல்வியைக் கண்டு துவண்டுவிட மாட்டேன் என்று சொன்னது ஒரு தலைவனுக்கு இருக்கவேண்டிய மனோநிலை.. இச்சிறு வயதில் அந்த மனப்பாங்கு உங்களுக்கு கிட்டியிருக்கிறது..

இன்னும் ஏராளமான வெற்றிகள் உங்களை வந்து சேரட்டும்..!

ஆதவா
22-09-2007, 09:51 AM
அன்பு தங்கையின் கேள்விக்கு உரியவனானதில் மகிழ்ச்சி.
முதலில் பின்னூட்ட சங்கதியிலிருந்து தொடங்குகிறேன்.நான் மன்றம் வந்த புதிதில்(அழைத்து வந்த இதயம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி)

அதே கலியமூர்த்தி சார்...மாறா புன்னகை,அதே அன்பான உபசரிப்புடன் அவரின் திருமதி...கண்கள் பனிக்க திரும்பி வந்தேன்.

உங்களின் நாடக எழுத்துக்கான வழி தெரிந்தது. எந்த ஒரு மனிதன் முடங்கிக் கிடக்காமல் கிடைக்கின்ற பொழுதை அல்லது கிடைக்கின்ற வேலையை நோண்டித் தெரிந்துகொண்டானாகில் அவனே திறமையாளனும் புத்திசாலியுமாவான்.. அதற்கு சான்றாக நீங்கள். நீங்கள் நன்றாக ஆடுவதாக குறிப்பிட்டீர்கள். அதற்கென தனிப்பயிற்சி ஏதும் எடுத்திருந்தீர்களா?
உங்கள் ஆசிரியர்..... மறக்கமுடியாதவர்... படித்த எனக்கே இன்னும் செய்தி மறக்கமுடியவில்லை. அவர் அதிக காலம் வாழ நாம் வாழ்த்தலாம்..

ஆதவா
22-09-2007, 09:54 AM
[quote=பென்ஸ்;273051]அட நிங்க கூட போலிஸ் ஸ்டேசன் போயிருக்கிங்களா... நான் என்னவோ ஆதவன், நான், லொள்ளுவாத்தியார் இப்படி சிலரை தான் ரொம்ம்ம்ம்ப நல்லவன் என்று நினைத்திருந்தேன்...

[quote]

இந்த வஞ்சப்புகழ்ச்சியை வன்மையாக கண்டிக்கிறேன்....

ஆதவா
22-09-2007, 10:03 AM
நன்றி பூமகள்..

விமர்சனம் படைப்புகள்

கண்கள் பார்த்தன!
மனம் ரசித்தன!
விரல்கள் பிரசவித்தன!
கவிதைகள் தவழ ஆரம்பித்தன!!

நன்றி பூமகள்

கவிதையாகவே பதில்...

கவிஞர்களுக்குப் பிடிக்கவேண்டும்.
மற்ற கருவும்
மற்றவர் கருவும்..

உங்களின் கவிதையில் நாங்கள் கற்றுக் கொண்டது எவ்வளவோ..

ஒத்துழைக்காத நேரங்கள் நானறிவேன். மற்றும் அதுவே தற்காலிகமோ நிரந்தரமோ அல்ல. (ரொம்ப உளறுகிறேனோ?) நேரம் அமையும் நண்பரே! அன்று அலையலையாய் என்ன சுனாமியாகவே கவிதைகள் வந்தாலும் நீங்கள் விமர்சனம் இடுவீர்கள்...

மன்ற தூண்... இங்கே யாரும் யாரையும் மறப்பதில்லை. அன்று கலக்கிய நண்பன் பிரியன் முதல் மைதிலி வரை யாரையும் மன்றம் மறக்கவில்லை...

நான் கவிதையில்
வட்டமடித்துக்கொண்டிருந்தது
வானத்தில் அல்ல...
வீட்டின் கூரையிலென்று...

நீங்கள் மட்டுமல்ல. நானும் தான்.

lolluvathiyar
22-09-2007, 10:09 AM
பத்தியம் இருக்கும் பச்சத்தில் மருந்து நன்றாக வேலை செய்யும் அதை தவறும் பச்சத்தில் விலைவுகள் மாறுபடும் இதுவே காரணம்

விள*க்க*மான* ப*தில் அல்ல*வா த*ங்க*ளிட*ம் இரு ந்து எதிர்பாத்தேன். குறைவாக* த*ந்து விட்டீட்க*ளே. ஒரே வ*ரியில் பொருத்த*மான* ப*தில்
ந*ன்றி

என் வாழ்வில் நடந்த அந்தச் சம்பவம் என் கவிதைப் பயணத்தின்
ஆரம்பமும் முடிவும் கூட....

உள்ள* கிள*ர்ச்சிக*ளை தெரிய*த*ன*மாக* தூண்டிவிட்டேனோ என்று அஞ்சுகிறேன். எதுவமே ந*ல்லவைகள் ஆர*ம்ப*மாக*வும், தீய*வைக*ள் முடிவாக* இருக்க*ட்டும்.

ஓவியருக்கும் எனக்கும் ஓட்டு ஒரே சரியாக விழிந்து வந்ததுதான் என் ஆர்வத்தை மிகவும் துண்டியது என்ன சொல்வது ஒரு குழுந்தையை பெற்றேடுக்கும் தயின் மனநிலை எனக்கு உண்மையில் தேள்வி என்றதும் அதைபற்றி கவலை கொள்ள வில்லை பின் வெற்றி என்றதும் அதே குழுந்தையை பெற்றோடுத்த தாயின் மனநிலை

மிகவும் பக்குவமான பதில மனோஜ், உங்கள் மன நிலையை பெருந்தன்மையாக கூறியதற்க்கு மிக்க நன்றி

ஆதவா
22-09-2007, 10:19 AM
கேள்வி "பெண்களுக்கு சுதந்திரம் எந்த அளவிற்கு அவர்களின் வீட்டில் கொடுக்கப்படுகிறது??" இந்த கேள்வியை எனக்குள் உள்வாங்கும் போது அதைத் தொடர்ந்து உள்ளுக்குக்குள் சில உபகேள்விகளும் முளைப்பதை என்னால் மறுக்க முடியவில்லை. பெண் என்றால் யார்..? தாய், மனைவி, மகள், சகோதரி உள்ளிட்ட உறவுகளா..? அல்லது சமூகத்தின் பார்வையில் பார்க்கப்படும் ஒரு பொதுவான பெண்ணா..? அடுத்து பெண் சுதந்திரம் என்ற நிலை எங்குள்ளதை பற்றி கேட்கப்படுகிறது.? உலகளவிலா, இந்தியாவிலா, தமிழகத்திலா, நாம் வாழும் சமூகச்சூழலிலா, இல்லை வீடு என்ற ஒரு சிறு வட்டத்திற்குள்ளா..? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலாக, பொதுவாக "சமூகத்தில் வாழும் ஒரு பெண்" என்பவளுக்கு சமூகம் கொடுக்கும் சுதந்திரம் எந்த அளவிற்கு உள்ளது என்று சிந்தித்து பதிலளிக்க நினைக்கிறேன்.

.!

இதயம் திறந்து மடைமடையாய் கொட்டிய இரத்தமாய் இருக்கிறது பதில். ஆழ அமர்ந்து எழுதியிருக்கிறீர்கள். கேள்வி கேட்டபடியே உங்கள் பதில் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் இருப்பதில் ஐயமில்லை. ஒரு கேள்விக்கு உபகேள்வி அமைத்து அனைவருக்கும் புரியும் வரை எழுதியிருப்பது பாராட்டுக் குரியது.

பெண் பற்றி ஏற்கனவே ஒரு திரியில் எழுதியது ஞாபகத்திற்கு வருகிறது. உங்களின் மதிப்பும் மரியாதையும் பெண்களின் மீதான உற்று நோக்கலும் அதனை விடாது தெரிந்துகொண்ட ஆர்வமும் எழுத்தில் வடித்த விதமும் பாராட்டுதற்குரியதே!

கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறைந்து, பெண்கள் கொஞ்சம், கொஞ்சமாக வலுப்பெற்று வருகிறார்கள் என்று தோன்றுகிறது

உண்மைதான்... ஆரோக்கியமான வளர்ச்சியில் சென்றுகொண்டிருக்கிறது உலகம். பண்டைய காலங்களில் தமிழகத்தில் இருந்த பெண்களின் முன்னேற்றத்தைவிட இன்றைக்கு பல விதிகள் உடைந்து வளர்ந்து கொண்டிருக்கிறது.

உலகத்தில் ஓர் நாள் பெண்களின் ஆக்ரமிப்பு நிகழ்ந்தாலும் வியப்பதற்கில்லை.

ஆதவா
22-09-2007, 10:29 AM
மன்றத்தில் பல பெரிய தலைகள் இருக்க என்னிடம் கேள்வி தொடுத்த பூமகளுக்கு நன்றி. அதுவும் என் குணத்தை பற்றி நன்றாகவே கனித்து வைத்திருகிறீர்கள். உங்கள் கேள்வி கோவைக்கு தகவல் தொழில் நுட்ப பூங்கா வருவது கலாரார சீரழிவு வருவது பற்றியது.

கலாராசம் அவ்வளவாக பாதிக்கபடாவிட்டாலும் வேறு தீமைகள் இருகிறது. ஆனால் அவற்றை பற்றி விரிவாக எழுத முடியாது.

வாத்தியாரின் அலசலில் உண்மை நிறையவே இருக்கிறது.
என்னதான் திருப்பூரில் இருந்தாலும் கோவையைப் பற்றி அவ்வளவாக எனக்குத் தெரியாது. கோவையில் நண்பர்கள் உறவினர்கள் என்று பலருண்டு எனினும் அவ்வளவாக வந்ததில்லை.

கோவையை விட சென்னையைப் பற்றி எனக்குத் தெரியும். ஒருவருடம் அங்கே இருந்ததன் விளைவு. எனினும் கோவையோடு சென்னை ஒப்பீடு செய்த வாத்தியாரின் கருத்தே என்னுடையதும்..

கோவை பெருந்துறை ஈரோடு சுற்றி உள்ள கல்லூரிகள் கணக்கின் படி பார்த்தாலும் கோவைக்கு வரும் ஐடி பார்க்கில் அதிகம் கலக்கப்போகிறவர்கள் இங்குள்ளவர்களே!!

அருமையான அலசல் பதில்... நன்றி வாத்தியாருக்கும் பூமகளுக்கும்..

ஆதவா
22-09-2007, 10:42 AM
மன்றத்து ஆபத்தில் மாட்டுவதை மட்டும் விரும்புகின்றனது மனம். மீண்டும் சிக்கவைத்த சிக்கலில்விட்ட பூமகளுக்கு நன்றி...உங்கள் கொத்தில் எனக்கான வினாவை தமிழையும்,

என்னைக் கவர்ந்த புத்தகம் நெப்போலியனின் சரித்திரம்..அது வாழ்க்கையில் பலவற்றைக் கற்றுக்கொள்ள ஏதுவானது...தமிழில் பாவேந்தர்,மகாகவி,வைரமுத்து,காசி ஆனந்தன் கவிதைகள் என்னைக்கவர்ந்தவை...அதில் என்னுடன் அதிகம் நெருங்கிப்பழகுவது பாவேந்தர் கவிதைகள்...எல்லாம் உள்ளடக்கிய கவிகள் அவை என்பது எனது தாழ்மையான கருத்து...

சிறுவயதிலிருந்தே இலக்கியங்களை நெஞ்சினுள் புகட்டிய உங்களை மனமார பாராட்டுகிறேன்.
உங்களைக் கவர்ந்த புத்தங்களில் மேலும் சில கூட்டிக் கொள்ளுங்கள். கல்கியின் படைப்புகள், புதுமைப்பித்தன் மற்றும் இன்றைய பிரபலமாகாத கவிஞர்கள் சிலர் (ஞானக்கூத்தன், மகுடேசுவரம்ன், விஜயன், நா.காமராசன் ) ஆகியோரின் படைப்புகளை சேர்த்திக் கொள்ளுங்கள்>..

இலக்கியன்
22-09-2007, 10:44 AM
வணக்கம் மீனா குமார் உங்கள் கருத்து மிகவும் சரியானதாகப்படுகின்றது ஆங்கில மொழி அடிமைகளாக்கப்பட்ட நாட்டில் திணிக்கப்படது அதனால் அதன் வளச்சி பொருகியுள்ளது. உங்கள் தமிழ் உணரவுக்கு தலை வணங்குகின்றேன் வாழ்த்துக்கள்

இலக்கியன்
22-09-2007, 10:45 AM
வாத்தியார் நல்ல கேள்வி தொடுத்தீர்கள் பாராட்டுக்கள் ஜயா

சூரியன்
22-09-2007, 10:50 AM
நன்றி வாத்தியாரே :)

[B]
அடடா என்னடா இது இந்த வயதில் காதலா என்று எல்லாம் கேட்கக் கூடாது :p ஜந்து வருட காதல் ஓர் நிமிடத்தில் உடைந்து செல்ல
கடலில் தத்தளித்த ஓர் எறும்பாய் நான் கண்ணீர் என்னும் கடலில்
தத்தளித்துக் கொண்டிருக்கும் போது எனது தோழர்களின் தேற்றுதலால்
சோகம் என்னும் கடலில் இருந்து மீண்டு என் மனதில் வலிகளை கவிதையாக்கி இங்கு பதிந்தேன்.

என் வாழ்வில் நடந்த அந்தச் சம்பவம் என் கவிதைப் பயணத்தின்
ஆரம்பமும் முடிவும் கூட....நன்றி

அழ*கான* ப*திலை சொல்லியிருக்கிறீர்க*ள்....

ஆதவா
22-09-2007, 11:30 AM
இலக்கியன்.....

உங்களின் இலக்கிய அறிவைத் தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி.
கவிதை என்பது கடல் போல பரந்தது அதில் ஒரு துளிகூட நானக இருப்பேனோ தெரியவில்லை. இன்னும் நிறைய எழுத வேண்டும் என்பது என் ஆவல்.

உண்மைதான்... கடல் அளவு கொண்டவர்களும் எவருமில்லை, கடுகளவாவது இல்லாதவர்களும் எவருமில்லை..
நல்ல பதில்..

அமரன்
22-09-2007, 11:34 AM
உங்களைக் கவர்ந்த புத்தங்களில் மேலும் சில கூட்டிக் கொள்ளுங்கள். கல்கியின் படைப்புகள், புதுமைப்பித்தன் மற்றும் இன்றைய பிரபலமாகாத கவிஞர்கள் சிலர் (ஞானக்கூத்தன், மகுடேசுவரம்ன், விஜயன், நா.காமராசன் ) ஆகியோரின் படைப்புகளை சேர்த்திக் கொள்ளுங்கள்>..
வழிகாட்ட உங்களைப்போலப் பலர் இருக்கும்போது தமிழில் சிறுதுரும்பை துய்க்கும் எண்ணம் இனிமையாக ஈடேறும். நன்றி என்று கூறி இத்துடன் முடிக்காமல் தொடர்ந்து எதிர்பார்க்கும்

ஆதவா
22-09-2007, 11:45 AM
மிக்க நன்றி பூமகள்..

என்னை இம்மகாத்திரியில் மீண்டும் பங்குபெற அழைத்தமைக்காக
நன்றி சொன்னாலும், என் சொந்த விருப்பம் ஒன்றை இங்கே
பதிவு செய்கிறேன்..

1) தமிழகத்தில் தமிழ் எழுதப்படிக்கத் தெரியாமல் பள்ளிக்கல்வி முடிக்கலாம்
என்பது முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும்.
2) தமிழாசிரியர் பணி என்பது ஊதிய, கௌரவ வகையில் உயர்த்தப்பட வேண்டும்.
3) கண்ணாளனே, நறுமுகையே, ஆம்பல் - என நல்லச் சொற்களை
திரைஇசை எனும் கவர்ச்சித்தேரில் வலிந்து அடிக்கடி ஏற்றி
இளையதலைமுறை மனதில் இறக்கவேண்டும்.
4) பணக்கல்வி தாண்டி , கூடவே மனவள மொழிக்கல்வியின் அத்தியாவசியத்தை
ஒவ்வொரு தமிழ்ப்பெற்றோரும் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும்..
உதாரணமாய் செயல்களால் நடந்து காட்டவேண்டும்.
5)நூலகங்களுக்கு உண்மையான மறுமலர்ச்சி தரவேண்டும்.
6)இணையத்தமிழ், அறிவியல் தமிழுக்கு ஒருங்கிணைந்த அமைப்பு உழைக்கவேண்டும்..
பல்முனை விரயம் தவிர்க்கவேண்டும்.. நல்லதை ஒரு குழு செய்தால், மற்றவர்
அதை ஏற்று அரவணைக்கவேண்டும்... ஆளாளுக்கு நாட்டாமை ஆவேன் என்றால் ஆகாது.
7)அத்திக்காய், பார்த்தேன் ரசித்தேன் போன்ற தரமான தமிழ்த்திரைப்பாடல்களை
ஊடகங்கள், பாடநூல்கள் மூலம் நன்றாய் அலசி, அதன் சுவையை
இளைய காதுகளுக்குள் இனிமையாய் ஊற்ற வேண்டும்.
8)அரசியல், குழுமனப்பான்மை குறைந்து, நல்ல படைப்புகள் - அதிக எண்ணிக்கையில்
ஆண்டுதோறும் அங்கீகாரம் பெற்று பெரிய பணப்பரிசுகள் வழங்கவேண்டும்.
9)காந்தமான ஊடக நட்சத்திரங்கள் அவர்களின் படங்கள், நிகழ்ச்சிகளின் ஊடாக
'நல்ல தமிழை'' ஆங்காங்கேவாவது பாய்ச்ச வேண்டும்.
10) பல வடிவங்களிலும் குழந்தை, சிறுவர்களைக் குறிவைத்து நல்லதமிழ்ப் படைப்புகள்
(கதை, பாட்டு, குறுந்தகடும் நூல், கேலிச்சலனப்படங்கள்..... என)..
இணையத்தமிழ் ஆரம்பப்பள்ளியிலேயே அறிமுகம் ஆகவேண்டும்.
ஐந்திலேயே தமிழன்னை மேல் அன்பை வளர்த்துவிட்டால்,
அறுபதுகளில் இப்படி கவலைப்பட அவசியம் குறைந்துபோகும்..

இளசு அண்ணாவின் தமிழ் பற்றிய பதிவில் பல விஷயங்கள் தெரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. அவரது ஒவ்வொரு பதிவிலும் கூட.

நான் மன்றத்தில் இணைந்ததிலிருந்து இளசு அண்ணாவின் பெரும் பதிவு இதுதான். வழங்க காரணமாக இருந்த பூமகளுக்கு எனது நன்றி.

அன்பு வழிநடத்தலே சிறந்த தலைமைக்கான காரணம் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்..... மன்றம் கற்றுக் கொடுத்தவைகள் பல.. நான் கண்ட ஆசிரியர்களும் பல.... இரண்டுக்கும் பொருத்தமானவர் நீங்கள்..

க.கமலக்கண்ணன்
22-09-2007, 12:39 PM
வாத்தியாரின் அருமையான கேள்விகள்

வாய்ப்பை மிக அருமையாக பயன்படுத்தினார் மீனாகுமார்,

வார்த்தைகளை மிக அழகாக கோர்த்து பதிலில் அசத்தினார் மனோஜ்

வாழ்க்கை இங்கே மிக அற்புதமாக அலசப்படுகிறது...

மனோஜ்
22-09-2007, 07:28 PM
நன்றி மனோஜ்..

வெற்றியால் மகிழ்ச்சி.. ஆனால் தோல்வியைக் கண்டு துவண்டுவிட மாட்டேன் என்று சொன்னது ஒரு தலைவனுக்கு இருக்கவேண்டிய மனோநிலை.. இச்சிறு வயதில் அந்த மனப்பாங்கு உங்களுக்கு கிட்டியிருக்கிறது..

இன்னும் ஏராளமான வெற்றிகள் உங்களை வந்து சேரட்டும்..!

அண்ணாவின் ஆசி பெற்றதில் அதிக மகிழ்ச்சி நன்றி அண்ணா

ராஜா
24-09-2007, 08:15 AM
ஆ! பத்து. கேள்வியாளர் : சாத்திரம் கற்ற வாத்தியார்..
------------------------------------------------------------------------------------------------------------
1. சிவசேவகன்
ஐயா சதா சிவமயம் என்று இருகிறீர்கள். அதுவும் சைவ மதத்தை பற்றியே பதிப்பவர் நீங்கள். பிரம்மசர்யம் இயற்கைக்கு முரனானது, அவசியமற்றது என்று சொல்கிறேன். அதை பற்றிய உங்கள் கருத்து என்ன என்று டைப் அடித்து விளக்கவும்?

2. மலர்
அன்பு தங்கையே, சேர்ந்து 4 மாசம் ஆச்சு, இதுவரை கிட்டதட்ட 750 பின்னூட்டங்களுக்கு மேல் பதிச்சாச்சு. அனைவரிடமும் நல்ல பழகி பாப்புலரும் ஆகியிருக்கீங்க. ஆனா இதுவரை ஒரு திரி கூட தொடங்கவில்லையே. ஏன்?

3. மீனாகுமார்
தமிழ் மணம் நிரைந்த மீனாகுமார், தமிழ் சம்மந்தபட்ட உங்கள் பதிவுகள் வன்முரை தெரிகிறது என்று நான் குற்றம் சாட்டுகிறேன். வேறு மொழிகளை அதிகமா சாடுவதாக படுகிறது. இந்த குற்றசாட்டுக்கு உங்கள் மறுமொழி என்ன?

4. சுட்டிபையன்
தனிஈழம் விரும்பும் ஈழதமிழ் மைந்தனே, உன்னிடம் ஒரு விசித்திரமான கேள்வி தொடுக்கிறேன். நல்ல குணம் படைத்த ஒரு சிங்கள பெண் உனக்கு காதல் கடிதம் தந்து விட்டாள். நீங்கள் விரும்பும் தகுதிகள் அனைத்தும் இருகிறது. உங்கள் முடிவு என்னவாக இருக்கும் (மொழிக்கு முதலிடமா காதலுக்கு முதலிடமா). (ஒழுங்கா வந்து பதில் சொல்லனும் கனவில் மூழ்க கூடாது)

5. உதயசூரியன்
நீங்கள் கலைஞர் திரு மு. கருனாநதியின் பக்தர் என்பதை வெளிபடையாக காட்டி உலாவுபவர். அரசியல் சாராத உதயசூரியன் எப்படி இருப்பார். அதவாது உங்களுக்கு தி.மு.க அல்லாத மற்ற முகங்கள் நிச்சயம் இருக்கும். அதை பற்றி கொஞ்சம் சொல்லுவீர்களா?

6. பிச்சி
கவிதையை தவிர வேற ஏரியா பக்கமே வரமாட்டீங்க. அதனால உக்களிடம் பொதுவான கேள்வியே கேட்க படுகிறது. ஆண்களை பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன.

7.மனோஜ்
தமிழ் மன்றத்தில் அரசியல் தேர்தல் திரியில் நீங்கள் வெற்றிபெற்றதாக அறிவித்த போது உங்களுக்கு எப்படி இருந்தது. உங்கள் உனர்ச்சிகளை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

8. சக்திவேல்
உங்கள் பதிப்புகளிலேயே கடவுள்கள் பைத்தியக்காரகளாக இருக்கவேண்ட இந்த பதிப்பு நீங்கள் மிகவும் கஸ்டபட்டு உருவாக்கிய பதிப்பாக கருதுகிறேன். மிகவும் ரசிக்கும்படி எழுதி இருந்தீர்கள். ஆதற்க்கு வேறும் 7 பேர் மட்டுமே விமர்சனங்கள் தந்திருகிறார்கள். இதை பற்றி நீங்கள் வருத்தபட்டது உண்டா? உங்கள் மன நிலை எப்படி இருந்தது.

9. இனியவள்
உங்கள் கவிதைகளில் அதிகமாக காதல் ஏக்கம் தான் தெரிகிறதே. ஏதாவது சிறப்பு காரனம் இருகிறதா?

10. சித்தர் (நாம்செக்)
பொதுவாக சிந்த மருத்துவத்தில் மாமிசம் உன்ன கூடாது என்பார்கள். அதற்க்கு ஏதாவது காரனம் இருகிறதா?

ராஜா
24-09-2007, 08:16 AM
மற்றவர்களும் பதிலளிக்க வேண்டுகிறேன்..!

மலர்
24-09-2007, 08:49 AM
எனக்கு பதில் தான் ஓரளவுக்கு சொல்ல தெரியும், ஆனால் கேள்வி எல்லாம் கேட்க தெரியாது. என்னை கொண்டு வந்து ஆ பத்தில் மாட்ட வைத்து விட்டர் ஆருயிர் அமரன். சரி புது வித முயற்ச்சி ஏன் விட வேண்டும் என்று இந்த வம்பில் வழிய வந்து தலையை கொடுத்து விட்டேன். நாம் எப்பவுமே குப்பற விழுந்தாலும் மீசையில மன் ஒட்டலைனு சொல்லர ஆளாச்சே. இதில் இதுவரை ஆபத்தில் அதிகமாக சிக்காதவர்களை தான் சிக்க வைக்கலாம் என்ற நல்ல என்னத்தில்
இதோ கேள்விகளை தொடுகிறேன்.

2. மலர்
அன்பு தங்கையே, சேர்ந்து 4 மாசம் ஆச்சு, இதுவரை கிட்டதட்ட 750 பின்னூட்டங்களுக்கு மேல் பதிச்சாச்சு. அனைவரிடமும் நல்ல பழகி பாப்புலரும் ஆகியிருக்கீங்க. ஆனா இதுவரை ஒரு திரி கூட தொடங்கவில்லையே. ஏன்?

யாரும் வாத்தியார் கண்ணில் இருந்து தப்ப முடியாது என்பதை மீண்டும் நிரூபித்து வீட்டீர் வாத்தியாரே... வாழ்த்துக்கள்..

நீங்கள் கேட்ட இதே கேள்வியை எனக்கு நானே பலமுறை கேட்டுள்ளேன் எனக்கும் பதிவு தரவேண்டும் என்ற ஆசையே முதலில் மன்ற வந்த புதுசுல என்னுடைய முதல் திரியை இந்த பச்சை சட்டை போலிஸ்கார் எல்லோரும் சேர்ந்து பூட்டி குப்பைக்கு அனுப்பிவிட்டார்கள்(ஹீ..ஹீஏன்னா நான் ஆரம்பித்த திரி அப்படிப்பட்டது)
அப்போ தான் நான் ஒரு முடிவு எடுத்தேன் இனி மன்றத்தில் எல்லா பக்கமும் போய் நல்லா படிச்சி பாத்துதான் திரி ஆரம்பிக்கணுன்னு பாத்தா அதுக்குள்ள நாலு மாசம் ஓடிப்போச்சி அதுக்குள்ள அண்ணன் அவசரப்பட்டு இதையே கேள்வியா கேட்டுட்டாரு

அனைவரிடமும் நல்லா பழகியிருக்கேனா என்றால் நிச்சயம் கிடையாது
எனக்கு தெரிந்தவர்கள் என்றால் அது வெகுசிலரே எனக்கு தெரியாத எத்தனையோ பேர் மிக நல்ல பதிவுகளை கொடுக்கிறார்கள்.. அவர்களை உற்சாகப்படுத்தி ஒரு சில பின்னோட்டம் கூட நான் கொடுத்ததில்லை.. அதற்காக நான் வருந்துகிறேன்

முல்லை மன்றம்
புதிதாக வந்தவர்களும் மன்றத்தின் பெரிய தலைகளும் அடிக்கடி உலாவும் இடம்.. வந்தவர்களை வாங்க என்று அழைக்க மட்டுமே அங்க போறது..

மல்லி மன்றம்
சிரிப்புகள், விடுகதைகள் எனக்கு மிகவும் பிடித்தபகுதி அப்படின்னா வேற பகுதி பிடிக்காதா என்று எடக்கு கேள்வி கேக்கப்படாது
நகைச்சுவை சொந்தமா எல்லாம் எனக்கு தோணாது.. சரி கேள்விபட்டது,எதுலயாவது படிச்சத வச்சி சிரிப்புகள் விடுகதைகள் பகுதியில் ஏதாவது ஆரம்பிக்கலாம் என்றால் நான் புதிதாக ரசித்த நகைச்சுவைகள் நம் மன்றத்தை போறுத்தவரை அது பழையனவையே..ராஜா அண்ணா ரவுசுப்பக்கத்தில் சொந்தமாகவே போட்டு தாக்கிகொண்டிருக்கிறார். சரி SMS ஜோக்கையாவது கோடுக்கலாம் என்றால் அதை நம்ம மன்மதன்ஜீ பிடித்துகோள்வார்.இதுல வேற சுட்டியின் காமெடி தர்பார் வேறு இருக்குது நம்ம வாத்தியாரு அண்ணா சிவாஅண்ணா வேறு கலக்கு கலக்கு என்று கலக்கிட்டு இருக்காங்க...இவங்க விட்டத வேற யாராவது பிடிச்சிக்கிறாங்க ஹீ..ஹீ பாசக்கார புள்ளைங்க நம்மள இங்கேயும் ஆரம்பிக்கவே விடமாட்டேங்கிறாங்க

செவ்வந்திமன்றம் இதுவரை நான் முழுமையாய் பாத்திராத இடம்.. எப்போதாவது தெரியாமல் நுழைந்தால் தான் உண்டு.. அதுவும் சுவறில் பட்ட பந்து போல உள்ளே நுழைந்த வேகத்திலேயே திரும்பி விடுவேன்..
அதற்கும் காரணம் உண்டு. ஒன்று கவிதை எழுத தெரியணும் இல்லன்னா
அதை படித்து பின்னோட்டமாவது தரணும் (நமக்கு தான் பாதி புரியாதே..
பின்ன எப்படி பின்னோட்டம் தாரது அதனால அந்த ஏரியாவே கட் ஆயிடுச்சி.)
இதேநிலை தான் கதம்பம் மன்றத்திலும்...

ரோஜா மன்றம்
நான் கணிணித்துறைக்கு புதிது ஆனால் நான் மன்றத்தின் மூலம் நிறைய கற்றிருக்கிறேன்...இப்போதும் கற்று கொண்டிருக்கிறேன்.. ரோஜா மன்றத்தில் புதிதாக ஒன்றை ஆரம்பிக்கும் அளவுக்கு என்னிடம் தகவல்கள் இல்லை எனலாம்

சாமந்தி மன்றம்
நல்ல பதிவுகளை கொடுக்கும் முயற்சியில் உள்ளேன்... விரைவில் கொடுத்து விடுவேன்...

தாமரை மன்றம்
மன்றத்தில் பெரும்பாலும் இங்கேயே தான் இருப்பேன்... இதில் உள்ள சிறுவர் மையம் எனக்கு ரொம்ப பிடிச்ச இடம்....
மலரை எப்போதும் இங்கே பார்க்கலாம்.....

குறிஞ்சி மன்றம்
போட்டி நடத்தினால் மட்டும் நுழையும் இடம்...

1)மன்றம் என்றாலே சிறுவர்மையமும் சிரிப்புகள் விடுகதைகள்,கல்வி, அறிவியல் பகுதி மட்டும் தான் என்று என்னுடைய வட்டத்தை நானே போட்டு கோண்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
2)சில நல்ல பதிவுகளுக்கு பின்னோட்டம் தரும்போது என்னுடைய பதில் எனக்கே திருப்தியாய் இராது நல்ல பதிவை பின்னோட்டமா தரணும் என்று நினைத்துவிட்டு.. ஒவ்வொன்றையாய் மாற்றி கடைசியில் சப்பென்று ஒரு பதிலை பின்னோட்டமாக தரும் போது எனக்கே கஷ்டமா இருக்கும்
என்னுடைய தமிழும் பதிலும் எனக்கே திருப்தியாய் இருந்தது இல்லை.
அப்படியிருக்கும் போது நானே திரி ஆரம்பிப்பது என்பது.?

வாத்தியார் அண்ணா.. நான் ஒரு திரி கூட தொடங்கலையா.. இப்படியெல்லாம் பொய் சொல்லலாமா எனது அருமையான சகோதரர்களுக்காக ரக்ஷாபந்தன் வாழ்த்து திரி தொடங்கினேனே.

க.கமலக்கண்ணன்
24-09-2007, 08:59 AM
நீங்கள் கேட்ட இதே கேள்வியை எனக்கு நானே பலமுறை கேட்டுள்ளேன் எனக்கும் பதிவு தரவேண்டும் என்ற ஆசையே முதலில் மன்ற வந்த புதுசுல என்னுடைய முதல் திரியை இந்த பச்சை சட்டை போலிஸ்கார் எல்லோரும் சேர்ந்து பூட்டி குப்பைக்கு அனுப்பிவிட்டார்கள்(ஹீ..ஹீஏன்னா நான் ஆரம்பித்த திரி அப்படிப்பட்டது)
அப்போ தான் நான் ஒரு முடிவு எடுத்தேன் இனி மன்றத்தில் எல்லா பக்கமும் போய் நல்லா படிச்சி பாத்துதான் திரி ஆரம்பிக்கணுன்னு பாத்தா அதுக்குள்ள நாலு மாசம் ஓடிப்போச்சி அதுக்குள்ள அண்ணன் அவசரப்பட்டு இதையே கேள்வியா கேட்டுட்டாரு

அனைவரிடமும் நல்லா பழகியிருக்கேனா என்றால் நிச்சயம் கிடையாது
எனக்கு தெரிந்தவர்கள் என்றால் அது வெகுசிலரே எனக்கு தெரியாத எத்தனையோ பேர் மிக நல்ல பதிவுகளை கொடுக்கிறார்கள்.. அவர்களை உற்சாகப்படுத்தி ஒரு சில பின்னோட்டம் கூட நான் கொடுத்ததில்லை.. [B]அதற்காக நான் வருந்துகிறேன்

அன்பு தங்கையே

அசத்தாலான பதில்

அருமையான ஆரம்பம் எப்போதும்

அ விலிருந்து தான் தொடங்குகிறது.

அள்ளித்து உங்களின் அருமையான பதில்களும்

அனைத்து பின்னூட்டங்களும்

அற்புதமே புலி பதுங்குகிறது என்றால் பாய்வதற்காகத்தான்

அன்றி பயந்து

அல்ல எனவே

அனைவரும் பார்த்து படித்து

அசந்து போகிற

அளவில் திரிகளை நீங்கள் தொடங்கிட வாழ்த்துகிறேன்...

ராஜா
24-09-2007, 09:03 AM
ஹா..ஹா..ஹா...

அருமை மலர்.. !

நல்ல திரியாக விரைவில் தருவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்துவிட்டது. அதற்காக நீங்கள் செய்யும் முன்னேற்பாடுகள் சபாஷ் போட வைக்கின்றன.

கலாட்டா சுந்தரியான உங்களுக்கு திரி தொடங்க ஏற்ற இடம் மல்லி மன்றம்தான் என்று எனக்குப் படுகிறது.

அக்னி
24-09-2007, 09:06 AM
அதான் வாத்தியாரே, சுருங்கச்சொல்லின், எழுதும் திருப்திதான் எனக்கு முதன்மையானது, பாராட்டுக்கள் விமர்சனங்கள் எல்லாம் இரன்டாம் பட்சமே.
அசத்தல் பதில் சக்திவேல்...
ஆனால், அந்த திர்யை பார்வையிட்டுப் பின்னூட்டமிடாதவர்களில் நானும் ஒருவன்.
வந்திருந்தேன் அதன் கனதியை பார்த்ததும் பின்னர் பார்ப்போம் என்று ஓடிவிட்டேன்.
ஆனால்,
செய்யும் செயல்கள் ஆக்கம் மிகுந்தவையாயின்,
ஊக்கம் அவசியமானதில்லை...
என்ற தெள்ளிய உண்மையை உங்கள் பதிலில் உணருகின்றேன்...
நன்றி கலந்த பாராட்டுக்கள்...

மலர்
24-09-2007, 09:07 AM
அன்பு தங்கையே

அனைவரும் பார்த்து படித்து

அசந்து போகிற

அளவில் திரிகளை நீங்கள் தொடங்கிட வாழ்த்துகிறேன்...

நன்றி அண்ணா

மலர்
24-09-2007, 09:09 AM
ஹா..ஹா..ஹா...

அருமை மலர்.. !

நல்ல திரியாக விரைவில் தருவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்துவிட்டது. அதற்காக நீங்கள் செய்யும் முன்னேற்பாடுகள் சபாஷ் போட வைக்கின்றன.

கலாட்டா சுந்தரியான உங்களுக்கு திரி தொடங்க ஏற்ற இடம் மல்லி மன்றம்தான் என்று எனக்குப் படுகிறது.

ராஜா அண்ணா எனக்கு முதல்முதலாக மன்றத்தில் பேர் வைத்துள்ளீர்கள்....
நல்லாயிருக்கு.....
மல்லிமன்றமா... நமக்கு ரொம்ப பிடிச்ச இடம்... ஆரம்பிச்சிட்டா போச்சி....

அக்னி
24-09-2007, 09:12 AM
இது புண்பட்ட நெஞ்சு.. அது தான் அவ்வப்போது சிறிது வன்முறை காட்டுவது போல் எழுதிவிடுகிறது...
சூடான அலசல்...
நிலவரங்கள்தான் கலவரங்களாவதும், சுகபலன்களாவதும்...
துரதிஸ்டவசமாக, அதனைத் தீர்மானிக்கும் நிலையில் உலக அளவில் தமிழ் இல்லை.
எம் தேச அளவிலேயே, தமிழை குட்டி வைக்க முனைகின்றார்களே தவிர,
இணைத்துக்கொள்ளும் பக்குவம் உலகிடம் இல்லைதான்...

பாராட்டுக்கள் மீனாகுமார்...

அக்னி
24-09-2007, 09:21 AM
என் வாழ்வில் நடந்த அந்தச் சம்பவம் என் கவிதைப் பயணத்தின்
ஆரம்பமும் முடிவும் கூட....

நன்றி
நச்சுப் பூவிலும் ஒரு தேன் துளியேனும் சுரந்திருக்கும் தேனீக்காய்...
அதேபோல, காதல் என்ற பூவில் சுரந்த கவித்தேன் துளி நீங்கள் இனியவள்...
தேனீ வந்து தேன்கூட்டிற்குள் எடுத்துச் சிறை வைக்க வேண்டுமென்று இனியும் பார்த்திருக்காதீர்கள்...
வாடிவிடுமே என்று அடங்கியுமிருக்காதீர்கள்...
துளித்துளியாய்ச் சிந்துங்கள்...
நிலத்தில் ஆயிரமாயிரம் எறும்புகளேனும், ருசித்து மகிழ்ந்திடும்...

ஆறுதலான நிமிஷங்கள் என்றும் உங்களுக்காய் மலர,
இறைவன் காலமெல்லாம் உங்களுக்கு, ஆசி தர பிரார்த்திக்கின்றேன்...

அக்னி
24-09-2007, 09:24 AM
உண்மையில் அரசியலில் எனக்கு அதிகமாக இல்லை இல்லை கொஞ்சம் குட ஈடுபாடு கிடையாது ஆனால் இந்த சின்ன விளையாட்டிலே இத்தனை கஸ்டம் எனில் உண்மையில் எத்தனை கஸ்டம் என்பதை நன்கு புரிந்து கொண்டேன்

சுவாரசியமான பதில்....
வென்றதற்கு வாழ்த்துக்கள் முதலில்...
ஆனால் முக்கியமான ஒரு விடயத்தை மிகவும் எளிமையாக சொல்லியிருக்கின்றீர்கள்.
அதுதான் மேலே மேற்கோளிடப்பட்டுள்ளதே... அதே தான்...
ஆனால், கஸ்டம் என்பது நேர்மையான அரசியலுக்கு...
இன்றைய அரசியல்தான் தன் இஸ்டத்திற்கு ஆடுகின்றதே...
பின்னர் எங்கு கஸ்டம்..?

பூமகள்
24-09-2007, 02:12 PM
அன்புத் தங்கை மலர்,
அழகான கோர்வையான பதில். சும்மா போட்டு தாக்கிட்டியே..என் தங்கை என்பதை அப்போ அப்போ நிரூபிக்கிறியே... ரொம்ப சந்தோசமா இருக்கு.
வாழ்த்துக்கள் மலர். நீ ரக்சா பந்தன் திரி துவங்கியதை எப்படி நம்ம அண்ணன் வாத்தியார் மறந்தார்?
சரி.. பாவம் அவரை விட்டுவிடலாம்....!!:aetsch013:
நீ இன்னும் நிறைய திரிகள் தொடங்கி எங்களை மகிழ்ச்சி எனும் ஜோதியில் ஐக்கியமாக்குவாய் என்று நம்புகிறேன்.
வாழ்த்துக்கள் "கலாட்டா சுந்தரி" மலர்.

சிவா.ஜி
24-09-2007, 02:19 PM
அன்புத்தங்கை மலரின் பதிலைப் படித்ததும் சந்தோஷமாக இருக்கிறது.வெள்ளந்தியான மனசு இந்த பெண்ணுக்கு என்று பாசம் கூடுகிறது.
தங்கையே வெகு விரவில் நீங்களும் ஒரு திரியை அசத்தலாகத் தொடங்கி கலக்கத்தான் போகிறீர்கள். வாழ்த்துக்கள்.

மலர்
24-09-2007, 02:35 PM
அன்புத் தங்கை மலர்,
அழகான கோர்வையான பதில். சும்மா போட்டு தாக்கிட்டியே..என் தங்கை என்பதை அப்போ அப்போ நிரூபிக்கிறியே... ரொம்ப சந்தோசமா இருக்கு.
வாழ்த்துக்கள் மலர். நீ ரக்சா பந்தன் திரி துவங்கியதை எப்படி நம்ம அண்ணன் வாத்தியார் மறந்தார்?
சரி.. பாவம் அவரை விட்டுவிடலாம்....!!:aetsch013:
நீ இன்னும் நிறைய திரிகள் தொடங்கி எங்களை மகிழ்ச்சி எனும் ஜோதியில் ஐக்கியமாக்குவாய் என்று நம்புகிறேன்.
வாழ்த்துக்கள் "கலாட்டா சுந்தரி" மலர்.

நன்றி அக்கா..... உங்களின் பதிவு என்னை இன்னும் உற்சாகப்படுத்துகிறது....

அதெப்படி விடமுடியும்(நான் உருப்படியாக தொடங்கியதே அது மட்டும் தான்....)அதெல்லாம் விட முடியாது.....
வாத்தியார் அங்கு வந்து வாழ்த்தும் தரவில்லை... பரிசுப்பணமும் தரவில்லை...(ஹீ...இப்போது பரிசுப்பணம் தந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்)

மலர்
24-09-2007, 02:44 PM
தங்கையே வெகு விரவில் நீங்களும் ஒரு திரியை அசத்தலாகத் தொடங்கி கலக்கத்தான் போகிறீர்கள். வாழ்த்துக்கள்.

நன்றி சிவா அண்ணா....

lolluvathiyar
24-09-2007, 02:54 PM
அன்பு தங்கை மலர் என் கேள்விக்கு அருமையான பதில் தந்திருகிறாய் .
இந்த கேள்வி மூலம் நான் உங்களை ஒரு திரிஅளவுக்கு பெரிய படைப்பை பதிக்க வைத்து விட்டேன். விரைவில் ரசிக்கும் கலக்கல் திர்கள் உன்னிடம் இருன்து எதிர்பார்ர்கலாம்.

முதல் திரியை இந்த பச்சை சட்டை போலிஸ்கார் எல்லோரும் சேர்ந்து பூட்டி குப்பைக்கு அனுப்பிவிட்டார்கள்(ஹீ..ஹீஏன்னா நான் ஆரம்பித்த திரி அப்படிப்பட்டது)

அன்னனுக்கு தங்கை தப்பாம பொறந்திருக்கானு புதுமொழி கிடைச்சிருச்சு. நானும் மன்றம் வந்த புதிதில் ஆரம்பித்த 2 திரியும் குப்பைக்கு தான் போச்சு.

நீ ரக்சா பந்தன் திரி துவங்கியதை எப்படி நம்ம அண்ணன் வாத்தியார் மறந்தார்?

இந்த கேள்வியை கேட்கும் முன் நான் மலரின் பிரொபைலில் அதை கவனித்தேன். அதில் 4 வரி மட்டும் இருந்ததால் அதை திரியாக கருதவில்லை. மன்னிக்கவும்.

இந்த திரியில் பதிலளித்த அனைவரையும் நன்றாக ஊக்கபடுத்தி கொண்டிருக்கும் அக்னிக்கு நன்றி

மலர்
24-09-2007, 03:03 PM
[QUOTE=lolluvathiyar;275783]
அன்னனுக்கு தங்கை தப்பாம பொறந்திருக்கானு புதுமொழி கிடைச்சிருச்சு. நானும் மன்றம் வந்த புதிதில் ஆரம்பித்த 2 திரியும் குப்பைக்கு தான் போச்சு.

நன்றி அண்ணா ஹீ.,..ஹீ உங்களின் தங்கை என்று நிரூபிக்க வேண்டாமா..அதான்
அண்ணா இதற்கு பேர்தான் ஆர்வக்கோளாறு என்பார்களாம்...

மீனாகுமார்
24-09-2007, 04:12 PM
மீனாகுமார் உங்கள் உனர்ச்சிகள் நன்றாக புரிந்து விட்டது. வன்முரை என்னம் எதிரியை அழிகிறதோ இல்லையே முதலில் நம்மை அழிக்கும். அதனால் தான் அப்படி ஒரு கேள்வி கேட்டேன். மற்றபடி புன்படுத்த அல்ல. பொருத்தமான தெளிவான பதில் தந்தற்க்கு மிக்க நன்றி

நன்றி மீனா குமார்..!

தங்களின் பதில் எனக்கு ஒரு சிம்மத்தின் சீற்றமாகவே படுகிறது.. உங்களைப் போன்ற இளைஞர்கள் இன்னும் பலர் இருந்தால் நம் வெல்லத் தமிழ் இனி மெல்லச் சாகாது. தங்களுடைய தமிழுணர்வு மிகவும் நியாயமானதே.

நிறைய செய்திகளை உங்கள் விடையிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.

கருத்துக்களைப் பறிமாறிக்கொள்ளும் சந்தர்ப்பத்தை அளித்த திரு ராஜா ஐயாவுக்கு நன்றி.. உறவாட உறவாடத்தானே நம்மிடையே இருக்கும் சுவர்கள் தெறித்தோடும்...

இந்த திரி விதவித மணங்களை வீசும் மலர்களைத் தன்னுள் அடையாளங்காட்டும் ஒரு நந்தவனம்......

இனியவள்
24-09-2007, 05:23 PM
இனியவள் காதல் சிலருக்கு தேன் சிலருக்கு விஷம்
விஷம் அறிந்திவிட்டால் அப்படியே விட்டுவிட மாட்டார்கள் சமூகம் என்ற மருத்துவ மனையில் திருமணம் என்ற மருந்தை எடுத்து கொள்ளுங்கள் காயங்கள் தானாய் ஆறும்
வாழத்துக்கள் மீன்டும் புத்துனர்வாய் வாழ

நன்றி மனோஜ் அண்ணா உங்கள் வாழ்த்துக்கு

வாழ்க்கைக்குள் காதல் இருக்கும்
ஆனால் காதலே வாழ்க்கை அல்லவே
நான் மீண்டும் புத்துணர்வுபெற்று
என் வாழ்வின் ஓவ்வொரு நிமிடங்களையும்
ரசித்து ரசித்து வாழ்கின்றேன் அண்ணா

மீண்டும் நன்றி உங்கள் வாழ்த்துக்கு அண்ணா

இனியவள்
24-09-2007, 05:25 PM
நன்றி இனி..!
இனிய பெயருக்குள் ஒரு துன்பியல் சம்பவம் இருப்பது அறிந்து இதயம் வலிக்கிறது.
கற்பனைகள் அழகாக வேண்டுமானால் இருக்கலாம்..ஆனால் உண்மைக் கவிவரிகள் வலி[மை] மிகுந்தவை.
தம்பி மனோஜ் கூறியுள்ளது போல, எவ்விதக் காயத்தையும் ஆற்றும் மாமருந்து நம் மன்றம்.தோல்விகள் நமக்கு துன்பம் கொடுக்க வருபவை அல்ல.. நம்மை இன்னும் எச்சரிக்கையாக இருக்கவைக்கும் ஆசான்கள் அவை..

நன்றி ராஜா அண்ணா நீங்கள் சொல்வது மிகச் சரியான கூற்று

வாழ்வில் ஓவ்வொரு நிகழ்ச்சிகளும்
ஓவ்வொரு பாடங்களைக் கற்பித்து
செல்கிறது. இதுவும் ஒரு அழகிய
பாடம் எனக்கு :

இனியவள்
24-09-2007, 05:29 PM
உள்ள* கிள*ர்ச்சிக*ளை தெரிய*த*ன*மாக* தூண்டிவிட்டேனோ என்று அஞ்சுகிறேன். எதுவமே ந*ல்லவைகள் ஆர*ம்ப*மாக*வும், தீய*வைக*ள் முடிவாக* இருக்க*ட்டும்.

நன்றி வாத்தியரே
அச்சம் எதற்கு வாத்தியரே
நீங்கள் கூறியபடி
முடிந்தவை முடிந்தவைகள் :p

இனியவள்
24-09-2007, 05:32 PM
மலர் பதில்கள் அனைத்தும் நச் சென்று
கலகலப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள் :)

இனியவள்
24-09-2007, 05:34 PM
நன்றி தோழரே உங்கள்
அன்பிற்கு

நீங்கள் கூறியதற்கு தான் முயற்ச்சித்துக் கொண்டிருக்கிறேன் அக்னி :icon_b:

சுகந்தப்ரீதன்
25-09-2007, 04:29 AM
1)மன்றம் என்றாலே சிறுவர்மையமும் சிரிப்புகள் விடுகதைகள்,கல்வி, அறிவியல் பகுதி மட்டும் தான் என்று என்னுடைய வட்டத்தை நானே போட்டு கோண்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
2)சில நல்ல பதிவுகளுக்கு பின்னோட்டம் தரும்போது என்னுடைய பதில் எனக்கே திருப்தியாய் இராது நல்ல பதிவை பின்னோட்டமா தரணும் என்று நினைத்துவிட்டு.. ஒவ்வொன்றையாய் மாற்றி கடைசியில் சப்பென்று ஒரு பதிலை பின்னோட்டமாக தரும் போது எனக்கே கஷ்டமா இருக்கும்
என்னுடைய தமிழும் பதிலும் எனக்கே திருப்தியாய் இருந்தது இல்லை.
அப்படியிருக்கும் போது நானே திரி ஆரம்பிப்பது என்பது.?

வாத்தியார் அண்ணா.. நான் ஒரு திரி கூட தொடங்கலையா.. இப்படியெல்லாம் பொய் சொல்லலாமா எனது அருமையான சகோதரர்களுக்காக ரக்ஷாபந்தன் வாழ்த்து திரி தொடங்கினேனே.

சின்னபுள்ள தானா நீ... இவ்வளவு பெரிய விளக்கம் கொடுத்திருக்க...?
வாழ்த்துக்கள் மலர்... நல்லாவே வாங்கி கட்டிகிட்டார் நம்ப வாத்தியார்... இதுக்குதான் வாத்தியார சின்ன புள்ளைங்க சவகாசம் வேணாம்கிறது...

பென்ஸ்
25-09-2007, 04:49 AM
உள்ளத்தை தோண்டி உள்ளதை எடுக்கும் வித்தை வாத்தியாரிடம் இருப்பதை தன் கேள்விகள் மூலம் கண்டுகொள்ளமுடிகிறது....
இந்த வகை கேள்விகளை கேட்க இவர் கண்டிப்பாக தான் கேள்வி கேட்டவர்களின் பதிவை மிக சரியாக ஆராய்ந்து, அவற்றை அவர்கள் மனநிலையில் இருந்து உணர்ந்திருக்கவேண்டும்....

மிக சரியான, அருமையான கேள்விகள் வாத்தியார்...

பென்ஸ்
25-09-2007, 04:52 AM
நீங்கள் கேட்ட இதே கேள்வியை எனக்கு நானே பலமுறை கேட்டுள்ளேன் எனக்கும் பதிவு தரவேண்டும் என்ற ஆசையே முதலில் மன்ற வந்த புதுசுல என்னுடைய முதல் திரியை இந்த பச்சை சட்டை போலிஸ்கார் எல்லோரும் சேர்ந்து பூட்டி குப்பைக்கு அனுப்பிவிட்டார்கள்(ஹீ..ஹீஏன்னா நான் ஆரம்பித்த திரி அப்படிப்பட்டது)

ஓஓ.. அவனாஆஆ நீயியி....:eek:

மலர்... உங்கள் பதிவுகளின் சுட்டிதனம் அருமை... சிரிப்பாக ஒரு சீரியஸ் பதிவுபதில்....

வாழ்த்துகள்...

பென்ஸ்
25-09-2007, 05:32 AM
என் ஓவ்வொரு கவிதைகளின் என் உணர்வுகளின் வெளிப்பாடு...

என் வாழ்வில் நடந்த அந்தச் சம்பவம் என் கவிதைப் பயணத்தின்
ஆரம்பமும் முடிவும் கூட....[/B]

நன்றி

தோழி....
நீண்ட பயனத்தின் போது கூட வரும் தோழன் ஒருவன் அதுவரை கட்டிகாத்த மெளனத்தை கலைத்து தன் மனம் திறக்கும் போது வரும் ஒரு பாசம் அது மட்டுமே, என்னுள்ளும்...
இந்த வாழ்கை பயணத்தில் பலர் நம் வாழ்வில் வருவார்...
பலர் உடனே சென்று விடுவர்
பலர் காலத்தின் கட்டயத்தால் பிரிவர் - இவர்களில்
சிலரால் மட்டுமே தன் சுவடுகளை பதித்து செல்ல முடியும்
சுவடுகள் பதியும்போது வரும் வலி
காலம் என்னும் மழையால் அழிக்கபடும்...
இன்னும் புது சுவடுகள்
அடுத்த மழைக்காக காத்திருக்கும்...
இந்த சுவடுகளை தடம் தேடி சென்றால் இவர்கள் விட்டு சென்ற இன்பமான நினைவுகள் பூந்தோட்டமாய் மணம் பரப்பதாண் செய்யும்...

அன்பில் எந்த வலியும் மறைந்து போகும்...
மனம் திறந்த உங்களுக்கு வாழ்த்துகள்...

பென்ஸ்
25-09-2007, 05:35 AM
நான் உண்மையை சொல்கிறோன்
நான் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்க வில்லை

என்னை உங்கள் கட்சியில் சேர்க்கலையே மனோஜ்....
என் அன்பு ஓவியனும் கண்டுகவேயில்லை....
வாத்தியார் கட்சியில் சீட்டு கூட கிடைக்கலை....
நான்யும் கட்சி ஆரம்பிக்கலாம்னு பார்த்தேன்... முடியலை, லேட் ஆயிடுச்சாம்

எப்படியோ... வெற்றி பெற்ற உங்களுக்கு வாழ்த்துகள்...

ஷீ-நிசி
25-09-2007, 05:40 AM
மலர் பதில் முழுவதும் ரொம்ப நேர்த்தியாய் இருக்குது. நீங்க இதுவரை எந்த திரியும் தொடங்காதது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்குது. விரைவில் திரி தொடங்குவீர்கள் என்று நினைக்கிறேன்..:icon_b:

பென்ஸ்
25-09-2007, 05:46 AM
ஷீ , மலரின் முளு பதிவையும் கோட் செய்தமையால், இதை எடிட் செய்கிறேன்...

lolluvathiyar
25-09-2007, 06:06 AM
தான் கேள்வி கேட்டவர்களின் பதிவை மிக சரியாக ஆராய்ந்து, அவற்றை அவர்கள் மனநிலையில் இருந்து உணர்ந்திருக்கவேண்டும்.... வாத்தியார்...

ஓர*ள*வுக்கு ச*ரிதான் பென்ஸ்,முழுசா உன*ர் ந்திருகிறேன் என்றும் சொல்ல* முடியாது, சில*வ*ற்றை யூக*த்தில் அடிப*டையில் அமைகின்ற*ன*

ஷீ-நிசி
25-09-2007, 06:12 AM
ஷீ , மலரின் முளு பதிவையும் கோட் செய்தமையால், இதை எடிட் செய்கிறேன்...

நன்றி பென்ஸ்.....

பென்ஸ்
25-09-2007, 06:18 AM
ஓர*ள*வுக்கு ச*ரிதான் பென்ஸ்,முழுசா உன*ர் ந்திருகிறேன் என்றும் சொல்ல* முடியாது, சில*வ*ற்றை யூக*த்தில் அடிப*டையில் அமைகின்ற*ன*

நீங்கள் உணர்வது சரியான இருக்க வேண்டும் என்று இல்லையே...
நீங்கள் கூறியது போல் , முன் அனுபவங்கள், எல்லாம் சேர்ந்து அனுமானுக்க செய்கின்றன.... அதிக படியான நேரம் அது சரியாக இருக்க வேண்டும் என்றால் நல்ல cognition இருக்க வேண்டும்... அது உங்களிடம் இருக்கிறது என்று சொன்னேன்.

ராஜா
25-09-2007, 08:57 AM
பிச்சி, சுட்டி, உதய சூரியன், சிவசேவகன்......

வாங்கப்பு.. வந்து பதில் சொல்லுங்க..

அடுத்து கேள்வி கேட்க ஆளுகளைக் கூப்பிடனுமல்லோ..

சுட்டிபையன்
25-09-2007, 12:12 PM
மாட்டிவிட்டிடுட்டாருய்யா மாட்டிவிட்டுட்டாரு நம்ம லொள்ளு வாத்தியாரு :traurig001::lachen001::sprachlos020:

அமரன்
25-09-2007, 02:49 PM
மாட்டிவிட்டிடுட்டாருய்யா மாட்டிவிட்டுட்டாரு நம்ம லொள்ளு வாத்தியாரு :traurig001::lachen001::sprachlos020:
இதுதான் பதிலா..சூப்பர் இல்லை சுட்டி..:eek::rolleyes:

உதயசூரியன்
25-09-2007, 03:55 PM
ஆ! பத்து. கேள்வியாளர் : சாத்திரம் கற்ற வாத்தியார்..
------------------------------------------------------------------------------------------------------------

5. உதயசூரியன்
நீங்கள் கலைஞர் திரு மு. கருனாநதியின் பக்தர் என்பதை வெளிபடையாக காட்டி உலாவுபவர். அரசியல் சாராத உதயசூரியன் எப்படி இருப்பார். அதவாது உங்களுக்கு தி.மு.க அல்லாத மற்ற முகங்கள் நிச்சயம் இருக்கும். அதை பற்றி கொஞ்சம் சொல்லுவீர்களா?

?[/COLOR]
காலம் கடந்து.. இங்கு பதில் தருவதற்கு முதலில் என்னை.. மன்னிக்க வேண்டுகிறேன்...

எனக்கு..... நிறைய விஷயங்களில்... என்னுடைய போலி முகங்கள் இல்லாமல் நிஜ முகங்களை வைத்து தான் நின்றிருக்கிறேன்...

அது போல் தான் இதுவும்..
இதை தவிர்த்து பார்த்தாலும் நிறைய விஷயங்கள்.. போலி தனமில்லாதவை..
வழி நடத்துதலை சிறுவயதில் இருந்தே கற்றவன்.. பெற்றவன்.. விருப்ப பட்டவன்...

சாதரனமான ஒரு சராசரியாரிக்கும் குறைவான பையன் ..
தாழ்வு மனபானமை அதிகம் கொன்டவன்...
ஒரு கால கட்டம் வரை..
னானிருக்கும் இடம் தெரியாது..
இதற்கு இணையாக.. என் தந்தையின் கம்யுனிச வலர்ப்பும்.. அதற்கு அவர் கொடுத்த விலையும் நன்கு அறிவேண்...
அதே இடத்தில் ஒரு காலத்தில் வேலைக்கு சேர்ந்த போது.... 20 வருடம் கழித்தும் அவரின் நன்பர்களின் பேச்சு என்னை பாதிதது...
இதற்கு இணையாக எல்லோரையும் போல் என் மாமவின் அரசியல் தலைகளுடன் நடக்கும் விவாதங்க்ளை கேட்பேன்..
10 ஆம் வகுப்பில்.. மாணவர் துணை தலைவர் தேர்தலுக்கு ஆயத்தமானேன்.. என் ஆசிரியை யால் தடுக்க பட்டேன்...
12 ஆம் வகுப்பில் நின்றேன் தொல்வியை தழுவினேன்..
என் நனபன் தான் வெற்றி பெற்றான்..( இதில் என்னவென்றால் அவன் மட்டும் நின்றதனால் என் ஆசிரியரே போட்டிக்காக நிற்க வைத்தார்)
எப்பவும் போல் மறக்க முடியாத பட்டாம் பூச்சிகளாக வலம் வந்தேன்..
அனைத்து பெண்களையும் கவரும் மன்மதனாக வலம் வந்தேன்...

ஆனால் யார் பின்னாலும் சுற்றாமல் அவர்களை என் பின்னால் சுற்ற வைத்தேன்..
இத்தனைக்கும் கண்ணே மணியே என்று கொஞ்சாமல்...( சிலரிடம் மட்டும் கொஞ்சினேன்)
இத்தனைக்கும் அனைவரிடமும் சமுதாய பிரச்சினைகளை பேசுவேன்.. ஆதங்கங்களை வெளிபடுத்தியே.. கவர்ந்தேன்..
என் வாழ்வில் காதலும் உன்டு சோகமும் உண்டு.. வென்ற வரலாறும் உண்டும்..

கல்லூரியில் சீனிஅர் மானவர்களுடன் சண்டையிட்டு( அதில் ஒருவர் வெற்றி கொண்டான் பிள்ளை உதய சூரியன்) பின் அவர்களுடனேயே... ருமில் இருந்தும் பொனேன்..

ஜூனிஅர்களை பந்தாடியுள்ளேன்..
நன்பட்னை ஜூனிஅர் அடித்து விட்டதனால் கல்லூரியை ஸ்தம்பிக்க செய்து... வாங்கி கட்டி கொன்டேன்..
பின் அதே ஜூனர் நமக்கு நன்பன்....
கலைஞருக்கு வழியில்லாமல் அப்போதைய முதல்வர் ஜெ வின் விழ நடை பெற்றிருக்கும் போது எங்கள் கல்லுரியில் கொஞ்ச நேரம் தங்கினார்...
அவரை பார்க்க.. வேண்டு மென்றே.. காத்திருந்து இடையில் விழுந்தேன்.. காரை நிறுத்தி.. கவனம் என்று கலைஞர் சொல்லி விட்டு சென்ற் அ நிகழ்ச்சியை மறக்க முடியாது..

அதெ போல்.. வைகோவிற்கு வரவேற்பு கொடுத்ததையும் மறக்க முடியாது...
தமிழிலேயே அனைத்து பாடங்களிலும் பாஸ் ஆனதை மறக்க முடியாது..
இத்தனைக்கும்.. தமிழில் சுமார் ரகம் தான்..
அதற்கப்புரம்.. வாழ்வில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் தான்..

தமிழ் மீது பாசம்..
தமிழ் நாடு மீது பாசம்..
வெளி மானிலத்தில் தமிழரிடம் தான் பொருள் வாங்குவேண்.. முடிந்தவரையில்...
தமிழரிடம் தான் சாப்பிடுவேன்.. முடிந்த வரையில்

என்னை தீவிர தன்மையுடன் மாற்றியது.. வட இந்தியர்கள் தான்..

தி. மு. க. அல்லாத முகங்கள்.. சில..

எனக்கு சிவாஜியை பிடிக்கும்
இயற்கை என்றால் கொள்ளை பிரியம்...
ஓவியம் என் உயிர்..
கவிதை.. சில நேறத்தில் வரும்..
பெரிய தலைவர்களின் துனுக்கு களை.. சிலேடை பேச்சுக்களை ரசிப்பேன்..
நான் செல்லாத இந்திய மானிலங்கள் குறைவு

அரசியலுக்கு அப்பாற்பட்டு கீழே உள்ளதை சொல்கிறேன்

பொய் என்று தெரிந்தும்.. பச்சையாக பொய் சொல்லும் ஜெ வை.. சில நேரங்களில் பிடிக்கும்...
அங்கே என் கண்ணுக்கு மக்கள் தான் ரொம்ப மோசமானவராக தெரிகிறார்கள்...
பி. ஜே பி யில்... வாஜ்பாயை , இல. கனேசன், சுகி சிவம் பிடிக்கும்..

ராஜிவ் காந்தி, இந்திராகாந்தி,எம் ஜி ஆரை உயிருடன் இருந்த காலத்திலேயே பிடிக்காது...

சோனியா காந்தியை பிடிக்கும்,

மருத்துவர் ராம தாசு, ஆர் எம். வீரப்பன், தொல். திருமாவளவன் பிடிக்கும்

தனிபட்ட முறையில் அம்பேட்கரை பிடிக்காது.. (அதற்காக அவரின் கொள்கை சிரந்ததல்ல என்று பொருள் ஆகாது)

இந்திய மானிலத்தில் பிடித்த மானிலம் தமிழகம்...
இயற்கை அழைகில் முதில் கேரளா தான் பிடிக்கும்..
ஆந்திர பெண்கள் என்னை கவர்ந்தவர்கள்...

அசிங்கமான நாற்றம் எடுத்த மானிலம்..
ஒரிசா,பீகார், ஜார்கன்ட்,உ.பி, ம.பி, சட்டிஸ்கர்

கொஞ்சம் அழ்குடன் நாற்றம் எடுத்த மானிலம்...
மேற்கு வங்கம், கிழக்கு இந்திய மானிலங்கள், மகாராஷ்டிரா, டெல்லி, கரியான, ராஜஸ்தான்

மசால படங்களை ரசிப்பேன்.. ஆனால் அது குடும்பத்துடன் இருக்கும் பட்சத்தில்..

எனக்காக மட்டும் எந்த விஷயத்தை ஆதரிப்பதில்லை...
எனக்கு.. சில்க் சுமிதா ரொம்ப பிடிக்கும்.. ஆனால் அதை நான் வெளிக்காட்ட கூடாது..
இதில் கொஞ்சம் பொய் வேண்டும் அதன் முலம்.. என்னை மாடலாக நினைப்பவர்களின் தடம் மாறி விடும் என்பத்னால்.. மற்றவருக்காக சில்க் சுமிதாவை வெறுத்தேன்...

கிரிக்கெட்.. எனது உயிருடன் சம்பந்த பட்ட விளையாட்டு..

காப்டனாக இருந்தவன்..
வாலிபால்.. ஷட்டில் கார்க்...பிடிக்கும்..

கில்லி , கோலி, பம்பரம், காத்தாடி, பல்லாங்குழி, நொண்டி( பாண்டி ஆட்டம்)
அனைத்தும் விளையாடி இருக்கேன்...

போதுமுங்களா..! இல்லை இன்னும் சுருக்கி விடவா...!!!

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

இனியவள்
25-09-2007, 04:04 PM
பதில் அருமை உதய சூரியன்

ஆனால் மற்றவர்களுக்காக எங்களுக்கு பிடித்தவைகளை
மறைப்பதில் எனக்கு உடன்பாடில்லை அது என் கருத்து
தவறாக இருந்தால் மன்னிக்க

உங்கள் பதில் ஒரு நளினம் வாழ்த்துக்கள்

உதயசூரியன்
25-09-2007, 04:10 PM
சாதரனமாக பார்த்தால்.. நீங்கல் சொல்வது உண்மை..
ஆனால்..
சிறுவயதிலேயே.. தய்மை, தந்தை, தலைவர் குணம் கொன்டவர்கள் குற்ற உணர்வுடைய விஷயத்தை.....
வரும் காலத்திற்கு சொல்ல மாட்டார்..

மற்றவர்கலுக்காக நாம் சில தியாகங்கலை செய்து தான் ஆக வேண்டும்..
எல்லோராலும் அது முடியாது.. கூடாது...
நன்றி

ராஜா
25-09-2007, 05:15 PM
நன்றி உதயசூரியன்..

உங்கள் பதிலில் இருக்கும் நேர்மை, முகத்தில் அறையும் எதார்த்தம், இதுதான் நான்.. எள்ளளவும் என்னிடம் கள்ளமில்லை என்று உரத்துச் சொல்லும் துணிவு இத்தனையும் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.

உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ.. நீங்களும் , விருமாண்டி போன்றோரும் இங்கு இருப்பதால் அடக்கி வாசிக்கும் சிலர், வேறு மன்றங்களில் தன் மனம் போன போக்கில் தமிழினத் தலைவர்களைத் தரம் தாழ்ந்து விமரிசனம் செய்யும்போதெல்லாம் உங்களைப் போன்றோர் அங்கு எவரும் இல்லையே என்று நான் நினைப்பதுண்டு.

தொடர்ந்து துணிவுடன் நடைபோடுங்கள் உதயா..!

lolluvathiyar
26-09-2007, 12:59 PM
அன்பு உதயசூரிய அவர்களே, உங்கள் பதிவுகள் அனைத்தும் தி மு க கட்சியை சார்ந்ததாகவே இருந்ததால் தான் இந்த கேள்வியை கேட்க தூன்டியது.
சில காரனங்களுக்காக எனக்கு பிடிக்காத கட்சியில் நீங்கள் இருந்தாலும், தனி மனிதன் உதயசூரியன் என் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டார். நீங்கள் கடந்து வந்த பாதையை நினைத்து ஆச்சரிய பட்டேன். உங்கள் முயற்ச்சி உங்களை உயர்ந்த* நிலைக்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறேன்.

தனிபட்ட மனிதராக இருக்கும் ஒவ்வொரு மனிதனும் உயர்ந்த மனிதனே.
உங்கள் பதில் என்னை மிகவும் பெருமை பட வைத்தது.
உங்களை இப்படி வித்தியாசமாக படைக்க வைத்த பெருமை கூட என்னை சேரும் என்றூ பெருமித படுகிறேன்

எனக்கு.. சில்க் சுமிதா ரொம்ப பிடிக்கும்.. ஆனால் அதை நான் வெலிக்காட்ட கூடாது..

அரசியல், மதம், சாதி, கொள்கை, மொழி என்று எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் இந்த ஒரு விசயத்தில அனைவரிடமும் ஒற்றுமை அதிகம் அல்லவா.

சிவா.ஜி
26-09-2007, 01:17 PM
உதயசூரியனின் வெளிப்படையான பதில் அசத்துக்கிறது.தைரியமான வெளிப்படுத்துதல் எதிரியையும் நேசிக்கவைக்கும்.இவர் இப்படித்தான் என்று தெரியும்போது அவரின் அந்த குணமே அவருக்கு சிறப்பைச் சேர்க்கும்.அந்த வகையில் உங்களை எனக்கு பிடித்திருக்கிறது உதயசூரியன்.
(சில்க் ஸ்மிதாவை எனக்கும் பிடிக்கும்)

shivasevagan
26-09-2007, 01:27 PM
1. சிவசேவகன்
ஐயா சதா சிவமயம் என்று இருகிறீர்கள். அதுவும் சைவ மதத்தை பற்றியே பதிப்பவர் நீங்கள். பிரம்மசர்யம் இயற்கைக்கு முரனானது, அவசியமற்றது என்று சொல்கிறேன். அதை பற்றிய உங்கள் கருத்து என்ன என்று டைப் அடித்து விளக்கவும்?

பிரம்மசர்யம் ஒன்றும் இயற்கைக்கு முரணானது இல்லை.

அதைப்போல ஆன்மீகத்தில் இருந்து வெற்றி பெற பிரம்மசர்யம் ஒன்று தான் அவசியம் என்று இல்லை. இல்வாழ்க்கையில் இருந்துக் கொண்டே முக்தி அடையலாம்.

ராஜா
26-09-2007, 02:33 PM
நன்றி சிவசேவகரே..!

பிரம்மச்சர்யம் இயற்கைக்கு ஏன் முரணானது இல்லையென்று சில காரணங்களையாவது சொல்லியிருக்கலாம்.. பெரும் பெரும் பதிவுகள் இடும் தாங்கள், ஏனோ இங்கு மிகச் சுருக்கமாக முடித்துக்கொண்டு வீட்டீர்கள்..

எப்படியாயினும் இந்தத் திரியை மதித்து வந்து பதிலளித்தமைக்கு வணக்கம் கலந்த நன்றிகள்.

உதயசூரியன்
26-09-2007, 02:43 PM
நன்றி.. அனைவருக்கும்..
அன்று.. நான் பதில் அளித்த பொது... என்னுடைய கன்வர்டர் சரியாக வேலை செய்ய வில்லை..
அதனால்.. நிறைய பிழைகள் ஏற்பட்டு விட்டது...

தமிழ் மீது அக்கறை கொண்டோர் என்னை மன்னிக்கவும்...

முடிந்தால் அதை நான் திருத்தி விடுகிறேன்...

வாழ்க தமிழ்

lolluvathiyar
26-09-2007, 04:03 PM
அன்று.. நான் பதில் அளித்த பொது... என்னுடைய கன்வர்டர் சரியாக வேலை செய்ய வில்லை..
அதனால்.. நிறைய பிழைகள் ஏற்பட்டு விட்டது...

ராம ஜெயம் ஒரு 100 தடவை டைப் அடிச்சா கன்வர்டர் நல்லா வேலை செய்யும்னு நினைகிறேன். எதுக்கு செய்து பாருங்கள்

ஐயோ அடிக்க வராங்க நான் இல்ல நான் இல்ல.
ஜூட் ஜூட் ஜூட் ஜூட்

உதயசூரியன்
26-09-2007, 04:06 PM
உங்களுக்காக வேண்டுமானால் சொல்கிறேன்.....வாத்தியார்

மலர்
26-09-2007, 04:09 PM
ஒரு 100 தடவை டைப் அடிச்சா கன்வர்டர் நல்லா வேலை செய்யும்னு நினைகிறேன். எதுக்கு செய்து பாருங்கள்

எங்க வாத்தியாரு எல்லாம் இப்படி சொன்னால் வெளிய வரும்போது எங்க பசங்க கல்லு தான் வீசுவாங்க....
உங்களுக்கு வசதி எப்படி...?

சுகந்தப்ரீதன்
27-09-2007, 04:14 AM
சாதரனமாக பார்த்தால்.. நீங்கல் சொல்வது உண்மை..
ஆனால்..
சிறுவயதிலேயே.. தய்மை, தந்தை, தலைவர் குணம் கொன்டவர்கள் குற்ற உணர்வுடைய விஷயத்தை.....
வரும் காலத்திற்கு சொல்ல மாட்டார்..

மற்றவர்கலுக்காக நாம் சில தியாகங்கலை செய்து தான் ஆக வேண்டும்..
எல்லோராலும் அது முடியாது.. கூடாது...
நன்றி
உதய சூரியன் என்ன சொல்வதென்று தெரியவில்லை... சில இடங்களில் மாறுபட்டாலும் பல இடங்களில் உங்கள் வாழ்வை ஒத்த நிகழ்வுகள் என்னிடமும் உண்டு.. எனக்கும் வெளிப்படையாக இருப்பதுதான் மிகபிடிக்கும்... ஆனால் சில நேரங்களில் முகமூடியை போட்டு மூடிவிடுகிறது என் முகத்தை சுற்றியுள்ள சூழ்நிலைகள்... வாழ்க தமிழ்.. வளர்க.. தமிழினம்...( உங்களையும் விருமாண்டியையும் சந்திக்கனுமே..?)

ராஜா
27-09-2007, 07:50 AM
சிறப்பான கேள்வித் தொகுப்பை உருவாக்கித் தந்த மரியாதைக்குரிய வாத்தியார் அவர்களுக்கும், அருமையாக பதிலளித்த அன்பு உறவுகளுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..

ராஜா
27-09-2007, 07:52 AM
அடுத்து அன்புச் சொந்தங்களின் ஆழ்மனதை அகழ்ந்து பார்க்க...

அன்புத்தம்பி சக்திவேல் அவர்களை பணிவுடன் அழைக்கிறோம்..

சக்திவேல்
27-09-2007, 10:31 AM
அடுத்து அன்புச் சொந்தங்களின் ஆழ்மனதை அகழ்ந்து பார்க்க...

அன்புத்தம்பி சக்திவேல் அவர்களை பணிவுடன் அழைக்கிறோம்..
வந்துவிட்டேன் நன்பரே, கேள்விக்கனைகளை தயார் செய்து கொண்டிருக்கின்றேன். ஓரிரு நிமிடங்களில் தொடுக்கப்போகின்றேன்.

அமரன்
27-09-2007, 10:32 AM
வாருங்கள் சக்திவேல்....
உங்கள் சக்திமிகு கேள்விகளுக்காக காத்திருக்கும்

lolluvathiyar
27-09-2007, 10:58 AM
பிரம்மசர்யம் ஒன்றும் இயற்கைக்கு முரணானது இல்லை.

ந*ன்றி சிவ*சேவ*க*ன் இன்னும் விள*க்க*மாக* சொல்லி இருந்தால் புரிந்திருக்கும்.

மாட்டிவிட்டிடுட்டாருய்யா மாட்டிவிட்டுட்டாரு நம்ம லொள்ளு வாத்தியாரு

கேட்ட* கேள்விக்கு ப*தில* சொல்லாம*. சீக்கிர*ம் சொல்லு மேன்.

இன்னும் பிச்சி ம*ட்டும் க*ன்னில் தென்ப*ட*வில்லை

அடுத்த* கேள்வியாளராக ச*க்திவேலுக்கு வாழ்த்துக*ள் சீக்கிர*ம் கேள்விக*ளோடு வாருங்க*ள்

சக்திவேல்
27-09-2007, 11:05 AM
சுகந்தப்ரீதன்
சுகந்தப்ரீதன் அவர்களே, பெண் மனதின் ஆழத்தை அளவிடவே முடியாது என்று சொல்லுகிறார்களே, அப்படியா? அப்படியென்றால், அது இயற்கையாகவே யாராலும் அளவிடமுடியாததா இல்லை பெண்தான் வலிந்து மறைக்கின்றாளா?. அப்படியென்றால் அதன் காரணம் என்ன?
(கொசுறு கேள்வி: நீங்கள் ஒரு பெண்ணின் மனதை அளவிட்டதை அறிவேன்? அளக்க முடிந்ததா?)

தாமரை
தன்நலம் கருதாமல் பிறருக்காக நிறைய செய்தவர்கள் எல்லோருமே பெரும்பாலும் வாழ்வில் கஷ்ட்டப்பட்டுதான் இருந்திருக்கின்றார்கள். ஏன் அப்படி? ஒருவேளை அவர்களை பொறுத்தவரையில் சந்தோஷமாகத்தான் இருந்திருப்பார்களோ? நல்லது செய்வது அவர்களுக்கு கேடா?
(கொசுறு கேள்வி: தாமரை என்றாலே குளிர்ச்சிதான், புகைப்படத்தில் எங்கள் தாமரையின் தோரனை, அரசியல்வாதியா இல்லை கல்யான மாப்பிள்ளையா? ஏன் இப்படி)

தளபதி
மகிழ்சியுடன் வாழும் வழிகள் சொன்ன தளபதியாரே, கோப உணர்ச்சி மனிதனுக்கு தேவையா?. உங்கள் பதிலுக்கு காரணம் விளக்கமாக சொல்லுங்கள்?
(கொசுறு கேள்வி: உங்களை கோபப்பட வைத்த சம்பவம் மற்றும் உங்களின் அந்த கோபத்தின் விளைவை பகிருங்கள்)

பென்ஸ்
எந்த ஒரு விஷயமும் இரண்டு நிலைகளைக்கொண்டது என்பது உலகறிந்த உண்மை. (இரவு-பகல், நேர்மை-கயமை, அறிவாளி முட்டாள்) இரண்டில் ஒன்று ஆரம்பத்தில் அதிகமாக இருக்கும், கால ஓட்டத்தில், நிலைத்து நிற்கவேண்டிய தேவையில் குறைவான பகுதி மெல்ல மேலேறும் ஒரு நிலையில் சமமாகும் பிறகு அதிகமாகும், இதுவும் உலகறிந்த உண்மை. அது போல மனித வாழ்வானது நிறைய இரு நிலைகளை கொண்டிருக்கின்றது, அறிவு, செல்வம், வீரம் இவையெல்லாம் மக்களிடையே சமநிலைக்கு வருமா? இயற்கையின் நியதியானது சமநிலைக்கு வருதல்தான், அது மனிதனிடம் நடக்குமா? ஏன்?
(கொசுறு கேள்வி: கார்களில் மதிப்பானது பென்ஸ்-கார், எங்கள் மன்றத்தின் பென்ஸிடம் உள்ள மதிப்பான விசயங்கள் என்ன?

பாரதி
உங்கள் ஊரிலே எடுத்தபடம் கருத்தம்மா. அப்படி அழகான ஊரா உங்கள் ஊர்?. பென் குழந்தைகளை கொல்லும் வழக்கம் உங்கள் ஊர் கிராமங்களில் உள்ளனவே. பென் குழந்தைகள் வளர்ந்து வாழ்க்கை என்னும் கஷ்டத்தில் அடிபட்டு அலறும் பரிதாபத்தை கன்கொண்டு கான சகியாமல் துடிப்பதைவிட பாசத்தை வளர்க்கும் முன்பே, வலிகளை உணரும் முன்பே, கொன்றுவிடலாம் என்று செய்கிறார்களா? இல்லை திருமனம் மற்றும் செய்முறைக்கு நிறைய செலவாகுமே என்ற சுயநலத்தில் அப்படி செய்கிறார்களா?
(கொசுறு கேள்வி: காலத்தை மீறி கனவுகண்டு தன் வாழ்க்கையை அழித்துக்கொண்டவர், மகா கவி பாரதி, எங்கள் பாரதியின் கனவுகள் என்னென்ன? )

ராஜா
சுடர், விளையாட்டு என்று மன்ற மக்களை கவர்ந்து கலக்கும் ராஜா அவர்களே எப்படி இப்படியெல்லாம் புதிது புதிதாக கண்டுபிடிக்கின்றீர்கள், உங்கள் வாழ்க்கையிலும், தொழிலிலும் இதே மாதிரித்தான் அனைவரையும் கவர்ந்து கலக்குகிறீர்களா? அடுத்த திட்டம் என்ன?
(கொசுறு கேள்வி: டில்லிக்கு ராஜான்னாலும் பள்ளிக்கு பிள்ளைதான் எங்கள் ராஜா தன் குடும்ப உறுப்பிணர்களிடம் எப்படி?)

kamalkகம்ப்யூட்டர் மென்பொருள் பணிக்கு இவ்வளவு சம்பளம் தருகின்றார்களே சரிதானா? இந்த இள வயதில் இவ்வளவு பணத்தை வைத்துக்கொண்டு கெட்டுதானே போவார்கள்? இல்லையா?
(கொசுறு கேள்வி: கமல் என்றாலே குறும்புதான், எங்கள் மன்ற கமல், இனைய-சாட்டில் செய்த குறும்பான செயலை சொல்லுங்களேன்)

மயூரேசன்
இந்த இள வயதில், கல்லூரி அனுபவங்கள் எப்படி இருக்கின்றன, ஒரு சிலவற்றை பகிருங்களேன். சக மாணவியரைப்பற்றி உங்கள் கருத்து என்ன? சக மானவியிடம் இருக்கும் நட்பானது காதலாக மாற சந்தர்ப்பம் உண்டா? அப்படி காதலாக மாறுவது சரிதானா?
(கொசுறு கேள்வி, மயூரி என்றால் மயில் என்று அர்த்தமாகும், மயூரேசனின் அர்த்தம் என்ன?)

லொள்ளு வாத்தியார்
ஒருமுறை, உங்கள் பதிவில், சொந்த அடையாளங்களுடன் இனையத்தில் உலாவந்து பதிவுகளை மேற்கொண்டதால் மன்ற மறவர்களின் சந்திப்பில் கலந்து கொள்ள இயலாது என்று சொல்லியிருந்தீர்கள். அதில் என்ன பிரச்சினை, நீங்கள் சந்தித்த பிரச்சினைகளை பகிருங்களேன்,
(கொசுறு கேள்வி, இங்கே லொள்ளு பன்னும் வாத்தியார் கல்லூரி மற்றும் வீட்டில் எப்படி?)

ஷீ-நிசி
கவிதைகளுக்காகவே வலைப்பதிவு ஒன்றை வைத்திருக்கின்றீர்களே, கவிதையென்றால் ரெம்ப பிடிக்குமோ? ஒவ்வொரு கவிஞனுக்கும் உந்துதலானது காதலேயன்றி வேறெதும் இறாது. உங்களின் உந்துசக்தி எது?
(கொசுறு கேள்வி-1: உங்கள் கவிகளிளேயே பிரமாதமாக கருதுவது எது வெளியிடுங்களேன்)
(கொசுறு கேள்வி-2: எனது கல்லூரி நாட்களின் காதலி தற்பொழுது வேறொருவரை மனமுடித்து நல்ல முறையில் சந்தோஷமாக குழந்தைகளுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கின்றார், ஒருவேளை என்னை மனமுடித்திருந்தால்கூட இந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்திருப்பள்ளோ தெரியலை. அவளது சந்தோஷத்தினை கான எனக்கு ரெம்பவும் சந்தோஷமாகவும் இருக்கிறது, இந்த சந்தோஷத்தை என்னால் தரமுடியலையே என்ற வருத்தமும் இருக்கிறது. இந்த சந்தோஷ/வருத்தின் வெளிப்பாடை எனக்கு ஒரு கவிதையாக தர முடியுமா?

அக்னி
27-09-2007, 11:14 AM
வித்தியாசமான கேள்விகள்... சுவாரசியமானவைகூட...
பார்ப்போம் மன்றக்கண்மணிகளின் பதில்களை... அல்லது நழுவுதல்களை...

க.கமலக்கண்ணன்
27-09-2007, 11:18 AM
எல்லா கேள்விகளும் மிகவும் நன்று ஒவ்வொருவருக்கும் மிகசரியாக தொடுத்திருக்கிறீர்கள்...

என்னை இந்த வேள்வியில் இழுத்து வந்தமைக்கு நன்றி சக்திவேல்

என்னுடைய பதிலுடன் வருகிறேன் நண்பா...

ஷீ-நிசி
27-09-2007, 11:22 AM
சக்திவேலின் கேள்விகள் அருமை... பதில் தயாரிக்கிறேன் நண்பரே!

அமரன்
27-09-2007, 11:23 AM
கருத்துகளை அகழ்ந்தெடுக்கும் கூரிய அம்புகள் தொடுத்த சக்திவேலுக்கு பதிலளிக்க மன்றச்சொந்தங்களை அன்போடு அழைக்கின்றேன்...

சிவா.ஜி
27-09-2007, 11:25 AM
மிக அருமையான கேள்விக்கனைகளை சக்திவேல் தொடுத்திருக்க்கிறார்.பதில் தாக்குதல்களைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
நான் ரெடி..ஒரு சுவாரசியமான பதில் விருந்துக்கு..வாங்க மக்களே...

சிவா.ஜி
27-09-2007, 11:27 AM
கருத்துகளை அகழ்ந்தெடுக்கும் கூரிய அம்புகள் தொடுத்த சக்திவேலுக்கு பதிலளிக்க மன்றச்சொந்தங்களை அன்போடு அழைக்கின்றேன்...

இரண்டு வினாடி வித்தியாசத்தில் இரண்டு பேரும் பதித்திருக்கிறோம்.ஏறக்குறைய இரண்டுமே ஒன்றாய் இருப்பதைக் கவனித்தீர்களா அமரன்.

அமரன்
27-09-2007, 11:29 AM
இரண்டு வினாடி வித்தியாசத்தில் இரண்டு பேரும் பதித்திருக்கிறோம்.ஏறக்குறைய இரண்டுமே ஒன்றாய் இருப்பதைக் கவனித்தீர்களா அமரன்.
அட ஆமா..புத்திசாலிங்க அப்படித்தான் சிவா....
யாரது காதுல புகை விடறது அ அ ஓ வா....

சக்திவேல்
27-09-2007, 11:31 AM
நன்றி நன்பர்களே, பதில்களை ஆவலுடன் எதிர் நோக்கியிருக்கின்றேன்.

ராஜா
27-09-2007, 11:56 AM
சக்தியின் கேள்விகள் யுக்தியாதான் இருக்கு..!

வாரோம்யா.. பதிலோடு..!

தளபதி
27-09-2007, 12:16 PM
சக்திவேல் நண்பரே!! பீடிகையுடன் ஆரம்பித்து அழகான வலையில் மாட்டிவிட்டு இருக்கிறீர்கள். உங்கள் திறமை நன்றாக பளிச்சிடுகிறது அந்த கொசுறு கேள்விகளில், குசும்பாய்!! காதோரம் குறுகுறுப்பாய்!! பத்து பேரையும் அண்ணாந்து பார்த்து கொண்டு சிந்திக்க வைத்துவிட்டு ஜாலியா வலம் வந்து கொண்டிருக்கிறீர்கள். நடத்துங்கள்.

க.கமலக்கண்ணன்
27-09-2007, 12:26 PM
என்னை இந்த வேள்வியில் இழுத்து வந்தமைக்கு நன்றி சக்திவேல்

என்னுடைய பதில்...

எப்பொழுதும் மென்பொருள் உருவாக்குவது என்பது அவ்வளவு சாதாரண விசயமல்ல உதாரணத்திற்கு கணனியில் Backup செய்வதற்காக கோப்புகளை ஒரு இருந்து மற்றொரு க்கு நகல் எடுப்பதற்கு c:\kkk\copy . c:\kkk23 இவ்வாறு தட்டச்சு செய்ய வேண்டும். அப்போது தான் kkk விலிருந்து kkk23 க்கு நகல் எடுக்கப்படும். இதில் . மட்டும் விட்டுவிட்டால் kkk23 விலிருந்து kkk க்கு நகல் எடுக்கப்பட்டுவிடும். இது மிக மிக கவனமாக செய்ய வேண்டிய வேலை. சிறிது கவன குறைவு நேர்ந்தாலும் எல்லாவற்றையும் A விலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

அது போல ஒவ்வொரு செயலாக்கத்திற்கும் ஒரு லாஜிக் என்று சொல்லகூடிய நடைமுறை சாத்திய கூற்றை தெரிந்து அவற்றிற்கு கணனி மொழியில் எழுதவேண்டும். அவ்வாறு செய்யும் போது உடன்உடனே பாதுகாக்க(Save) செய்ய வேண்டும். தவறுதலாக மின் தடை ஏற்பட்டால் கடந்த பாதுகாத்ததற்கு (Save) பின் செய்த வேலைகள் அனைத்தையும் மீண்டும் செய்ய வேண்டும். இவ்வளவு நுணுக்கமான வேலைகளை மிக கவனமாக சிறிதும் சோம்பல் இல்லாமல் உடன் உடனே செய்ய வேண்டும்.

அடுத்தது நம் இந்தியாவில்தான் அதிக மென்பொருள் வல்லுனர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.... அதில் நம் நிச்சயம் பெருமை பட்டுக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு உலக புகழ் பெற்ற Microsoft நிறுவனத்தில் கிட்டதட்ட 60 சதவிகிதம் நமது இந்தியர்கள் தான். அடுத்தது Adobe அதில் 54 சதவிகிதம். அதில் சீதாராமன் நாரயணன் என்பவர் Photoshop மென்பொருளுக்கு இரண்டாவது மென்பொருள் பெறியாளராக இருக்கிறார். உலகிலேயே மிகஅதிகமாக Photoshop மென்பொருள் உபயோபடுத்தப்படுகிறது. அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். அவருக்கு சம்பளம் மிக அதிகம். ஆனால் நல்ல உழைப்பாளி. அது அவருக்கு அவருடைய திறமைக்கு கிடைத்த பரிசு.

அவரை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள...
http://en.wikipedia.org/wiki/Seetharaman_Narayanan
http://www.photoshopnews.com/2005/08/01/seethas-fan-club/

Photoshop மென்பொருளில் அவருடைய பெயர்...
http://farm1.static.flickr.com/141/396227479_ec586c74f0.jpg
http://www.photoshopforvideo.com/blog/files/page15_blog_entry177_1.jpg

இப்படி பல நண்பர்கள் பல துறையில் இருக்கின்றனர். அந்த உழைப்பு அவர்களுடைய வயதை மீறி செய்வதால் அவர்களுக்கு தரப்படுகின்ற சம்பளம் சரிதான். மிக சரிதான்.

மனிதர்கள் பல வகை. அதில் நல்லவர்களும் இருக்கிறார்கள். கெட்டவர்களும் இருக்கிறார்கள். டாஸ்மார்கில் வேலை செய்து கொண்டு மதுஅருந்தாத நபர்களும் இருக்கிறார்கள். அதே போல கோயிலில் வேலை செய்பவர்கள் மதுஅருந்தும் பலக்கம் உடையவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது அவர்களுடைய மனதை பொறுத்தது. பணம் அதிகம் வந்தால் இல்லாதவர்களுக்கு பகிர்ந்து அளிக்கும் நல்லவர்களும் இருக்கிறார்கள்...
நான் என்னுடைய பிறந்தநாளுக்கு 100 மனதால் ஊனமுற்ற குழந்தைகளுக்கு உணவளித்த போது அதன் மட்டற்ற மகிழ்ச்சியை உணர்ந்தேன்.

கொசுறுபதில் : ஒரு முறை சென்னையில் இருக்கும் போது எங்கள் நிறுவனத்தில் சாட்டிங்கில் இருந்தேன். பயனாளர் சொல் kamala23, எல்லோரும் என்னை பெண் என்று நினைத்து சாட்டிங் செய்வார்கள். ஒரு சிலரை தவிர மற்றவர்களுக்கு ஆண் என்று சொல்லிவிடுவேன் அவர்கள் போய்விடுவார்கள்... ஒரு முறை ஒருவர் என்னுடன் சாட்டிங் செய்து கொண்டு இருந்தார். நான் பெண் என்று கதை விட்டேன் அவரும் நம்பிவிட்டார். ரொம்ப வழிய ஆரம்பித்தார். அவருடைய விபரங்கள் கேட்ட போதுதான் தெரிந்தது எங்கள் அலுவலகத்தில் பக்கத்து அறையில் இருந்து என்னுடன் சாட்டிங் செய்த விபரம். எனது சக ஊழியரிடம் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தோம். இப்போது நினைத்தால் கூட சிரிப்பு வருகிறது.

அக்னி
27-09-2007, 12:32 PM
என்னை இந்த வேள்வியில் இழுத்து வந்தமைக்கு நன்றி சக்திவேல்

என்னுடைய பதில்...

ஆகா... கமல் அப்போ நீங்க பொண்ணு இல்லையா..?
நல்லவேளை.... ஏமாற முதலே தெரிஞ்சுடுத்து...

தெளிவான பதில்....
உழைப்பால் உயர்பவர்கள் வயது குறைவாக இருந்தாலும், உழைக்கும் நேரம் அவர்களுக்கு அதிகமாகத் தேவைப்படுவதால்,
அவர்கள் பாதை பெரிதும் நேரியதாகவே இருக்கும்...
இந்தக் கருத்தைச் சொன்ன உங்களது பதில் நன்று...

தவிர, உங்கள் குணவியல்புக்குத் தலைவணங்குகின்றேன்....

வாழ்த்துக்கள்....

மலர்
27-09-2007, 12:37 PM
வாழ்த்துக்கள் சக்திவேல்....
அருமையா கேள்விகளை அழகாக கொடுத்துள்ளீர்கள்.....

ராஜா
27-09-2007, 12:39 PM
ஹி..ஹி.. நல்ல கூத்து கமல்.. [கொசுறு பதில்]. அப்புறம் அந்த நபரின் முகம் போன போக்கை கற்பனை செய்துபார்த்தேன்.. ஹையோ.. ஹையோ..

என் மகனும் மென்பொருள் பொறியாளர்தான்.. நீங்கள் சொன்னவற்றையே அவரும் சொல்வார்.. கூடுதலாக அவர் வேறொன்றும் சொல்வார்..

உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகிற மென்பொருளை நாங்கள் முதலில் கற்பனையாகக் கருவுற்று, அதற்கு பெயர் முதல் குணாதிசயங்கள் வரை நிர்ணயித்து, அது வாழ்நாள் முழுதும் செயல்படவேண்டியவை குறித்து தலையெழுத்து எழுதி, உருவாக்குகிறோம்.. நாங்களும் கடவுள் தான்..!

க.கமலக்கண்ணன்
27-09-2007, 12:40 PM
ஆகா... கமல் அப்போ நீங்க பொண்ணு இல்லையா..?
நல்லவேளை.... ஏமாற முதலே தெரிஞ்சுடுத்து...

தெளிவான பதில்....
உழைப்பால் உயர்பவர்கள் வயது குறைவாக இருந்தாலும், உழைக்கும் நேரம் அவர்களுக்கு அதிகமாகத் தேவைப்படுவதால்,
அவர்கள் பாதை பெரிது நேரியதாகவே இருக்கும்...
இந்தக் கருத்தைச் சொன்ன உங்களது பதில் நன்று...

தவிர, உங்கள் குணவியல்புக்குத் தலைவணங்குகின்றேன்....

வாழ்த்துக்கள்....

அக்னி அவர்களே மிக்க நன்றி ...

அது சரி நான் பெண் இல்லை ஆண்...

க.கமலக்கண்ணன்
27-09-2007, 12:42 PM
உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகிற மென்பொருளை நாங்கள் முதலில் கற்பனையாகக் கருவுற்று, அதற்கு பெயர் முதல் குணாதிசயங்கள் வரை நிர்ணயித்து, அது வாழ்நாள் முழுதும் செயல்படவேண்டியவை குறித்து தலையெழுத்து எழுதி, உருவாக்குகிறோம்.. நாங்களும் கடவுள் தான்..!

அப்படியே நீங்கள் சொன்னது சரி நண்பரே

அது மட்டும் அல்ல அனைத்து மென்பொருள்களிலும் பணம்

அளவலாவுவதால் மிகமிக கவனமாக படைக்கும் பூலோகக்கடவுள் என்பது உண்மை தான்...

மலர்
27-09-2007, 12:58 PM
என்னை இந்த வேள்வியில் இழுத்து வந்தமைக்கு நன்றி சக்திவேல்

என்னுடைய பதில்...

கமலக்கண்ணன் அண்ணாவின் பதில்கள் அருமை.....

இப்படி பல நண்பர்கள் பல துறையில் இருக்கின்றனர். அந்த உழைப்பு அவர்களுடைய வயதை மீறி செய்வதால் அவர்களுக்கு தரப்படுகின்ற சம்பளம் சரிதான். மிக சரிதான்.

பொதுவாக கணிணித்துறைக்கு கொடுக்கப்படும் சம்பளம் பற்றி எப்போதும் சர்ச்சை உண்டு.....
என்னை பொறுத்தவரை உங்களின் கருத்து எனக்கு பிடித்துள்ளது....

டாஸ்மார்கில் வேலை செய்து கொண்டு மதுஅருந்தாத நபர்களும் இருக்கிறார்கள். அதே போல கோயிலில் வேலை செய்பவர்கள் மதுஅருந்தும் பலக்கம் உடையவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதுபோன்ற மனிதர்கள் எல்லா இடத்திலும் உண்டு.....

கொசுறுபதில் : எங்கள் அலுவலகத்தில் பக்கத்து அறையில் இருந்து என்னுடன் சாட்டிங் செய்த விபரம். எனது சக ஊழியரிடம் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தோம். இப்போது நினைத்தால் கூட சிரிப்பு வருகிறது.

ஹீ..ஹீ.. இதேமாதிரி எங்க ஆபிஸிலும் ஒரு தடவை நடந்தது....பக்கத்து டீம் லீடர் ஒருவரை என்னுடன் வேலைபார்க்கும் ஒரு தோழி கலாய்த்து கொண்டிருந்தாள்..
இவள் ஆன்லைனில் வந்தாலே அவர் எங்கேயும் திரும்ப மாட்டார்...
ஆனா அவருக்கு திருமணம் ஆயிட்டு.. ஆகலை என்று பீட்டு வேற உட்டுட்டு இருந்தார்....

ஆனா கடைசியா அவர் ரொம்ப துறுவ ஆரம்பித்ததும் இவளே நிறுத்திட்டா......
ஆனா அவரோட ஒவ்வொரு பதிலும் பயங்கர காமெடியா இருக்கும்...
அப்ப எங்க டீமே சிரிச்சிட்டு இருப்போம்....

க.கமலக்கண்ணன்
27-09-2007, 01:02 PM

மிக்க நன்றி அன்பு தங்கையே

மிகுதியான வரவேற்பை அளித்ததற்கு

மிளிர்கின்ற அன்போடு நன்றி... ஹி ஹி ஹி உங்கள் அலுவலகத்திலும் நடந்துள்ளதா...