PDA

View Full Version : ♔. ஆ! 10! ♔. - முதல் சுற்று

Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14

அமரன்
17-02-2009, 08:06 AM
அமரு...
பாஸானதுக்கு மிட்டாய் உண்டா....

நான் வெற்றிக் கொடிதான் கட்டி இருக்கேன். தேசியக் கொடி ஏத்தல. எத்தனை ஜென்மம் எடுத்தாலும்...:D:D

arun
17-02-2009, 04:25 PM
நிரன் ஏற்கனவே ஆ10ஐ கொடுத்து விட்டார் மதி.
இப்போ இன்னொரு சூரியனை கூப்பிடுவோம்.
வாருங்கள் ஆருண். தாருங்கள்

எனக்கு ஆ 10 ஆ ? இல்லை நான் கேள்வி கேட்க போகிறவர்களுக்கு ஆபத்தா என்று தெரியவில்லை .... :D :D :D :D

கூடிய விரைவில் எனது கேள்விகளை இங்கு தொடுக்கிறேன் அனைவரும் தயாராக இருங்கள் :medium-smiley-065::medium-smiley-065::medium-smiley-065:

நிரன்
17-02-2009, 04:39 PM
அருண்.... நல்ல பெரிய ஆப்பா செட் பண்ணிக் கொண்டு வாங்க:D:D

முக்கியமா உங்களைக் கூப்பிட்டாரே அவருக்கு நல்லா வையுங்க.
எப்பவும் நழுவிக் கொண்டே போறவருங்க.:D

வாழ்த்துக்கள் அருண் உங்கள் கேள்வியில் சிலர் திரிப்பக்கமே away modeல இருக்கட்டும்:icon_b:

arun
17-02-2009, 05:02 PM

கவலைப்படாதீர்கள் இதை சொன்னவருக்கும் சேர்த்து வச்சிட்டா போச்சு :D :D :D

நிரன்
17-02-2009, 05:19 PM
விடுப்பில் போக வேண்டி இருக்கு இதுதான் நல்ல சமயம் என்று
நினைக்கிறேன்.:icon_rollout:

அமரன்
17-02-2009, 07:51 PM
முடிந்தளவு விரைவாகக் கொண்டு வாருங்கள் ஆருன்.
கேட்டதும் கொடுக்க ஒத்துக்கொண்டமைக்கு நன்றிகள் பல.

நிரனுக்கு வைத்த ஆப்புக்கு ஸ்பெசல் தாங்க்ஸ்.

தாமரை
18-02-2009, 03:04 AM
இதுவரை கேள்விகேட்டோர் பட்டியல் இருக்கா? தயார் பண்ணிட்டா மிச்சம் ஒரு பத்து பேர் லிஸ்டை ரெடி பண்ணி வச்சிடலாம்.. :) இப்ப நேரமில்லைன்னு யாரும் சொல்ல மாட்டங்க இல்ல..

அமரன்
18-02-2009, 08:26 PM
நல்ல ஐடியா. லிஸ்டு தயாராகிட்டிருக்கு.

arun
18-02-2009, 09:08 PM
ஆ 10ல் கேள்விகளை கேட்பதற்கு என்னை அழைத்தமைக்கு அமரன் அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் எனது கேள்விகளுக்கு கூடிய விரைவில் அன்பின் உறவுகளிடம் இருந்து பதில்களை எதிர்பார்க்கிறேன்

1.எனது முதல் கேள்வி சிவா அவர்களுக்கு

தாங்கள் துபாயில் இருப்பது அனைவரும் அறிந்ததே அதை சார்ந்து ஒரு கேள்வி

ஒரு முறையேனும் ஒட்டக பால் குடித்துள்ளீர்களா அல்லது எப்போதும் ஒட்டக பாலில் தான் டீ குடிப்பீர்களா? ::)

2.தாமரை அவர்களுக்கு

அனைத்து திரிகளிலும் தங்களின் அலசல் பதிவுகளை பார்த்து வியந்து இருக்கிறேன் இது எப்படி சாத்தியமாகிறது ?

3.மதி அவர்களுக்கு

காதல் பற்றிய தங்களின் உண்மையான கருத்து என்ன ? உண்மையை மட்டும் தான் சொல்ல வேண்டும் :D

4.ஆதவா அவர்களுக்கு

தங்களின் குறும்பு பதில்களை ரசித்து படித்து இருக்கிறேன் நிஜமாகவே நீங்கள் குறும்பு மனிதர் தானா? :D

5.காந்தி அவர்களுக்கு

மன்றத்தில் உடனடி செய்திகள் மற்றும் பல செய்திகளை உடனுக்குடன் தருகிறீர்கள் அதற்கு ரொம்ப பொறுமை தேவை தங்களிடம் கேட்கும் கேள்வி என்னவெனில் பொறுமைக்கு ஏதேனும் ஓர் எல்லை உண்டோ?

6.நாட்டாமை அவர்களுக்கு

தங்களின் பெயர் காரணம் என்ன ? :D
7. ஷீ நிசி அவர்களுக்கு

கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி

என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இது , தங்களின் கையெழுத்தில் இடம்பெற ஏதேனும் ஸ்பெஷல் காரணங்கள் உண்டா ? :)

8 . லீலுமா அவர்களுக்கு

பெண்கள் எப்போதுமே புரியாத புதிர் இது பல ஆண்களால் சொல்லப்படுகிறது இது உண்மையா? எதனால் இப்படி சொல்லப்படுகிரது என்று நினைக்கிறீர்கள் ?

9. ஆரென் அவர்களுக்கு

சிங்கப்பூர் ஒரு மினி சென்னையா ? கொஞ்சம் சொல்லுங்களேன்

10.லோஷன் அவர்களுக்கு

தாங்கள் பண்பலை ரேடியோவில் இருப்பதை அனைவரும் அறிவோம் நேரடி ஒலிபரப்பின்போது நடந்த சுவையான ஒரு அனுபவத்தை எங்களிடம் பகிர்ந்து கொள்ளவும்

நண்பர்களே தங்களின் பதில்களை ஜாலியாக சுவையாக கூடிய விரைவில் பதிக்க வேண்டுகிறேன்

நன்றி

தாமரை
18-02-2009, 11:57 PM
2.தாமரை அவர்களுக்கு

அனைத்து திரிகளிலும் தங்களின் அலசல் பதிவுகளை பார்த்து வியந்து இருக்கிறேன் இது எப்படி சாத்தியமாகிறது ?

நன்றி

ரொம்ப எளிதான விஷயம் அருண், முதலில் மனிதனோட சிந்தனை முறையை பார்ப்போம்

http://i326.photobucket.com/albums/k413/stselvan/mind-process-1.gif

இதில் சிவப்பு வண்ணமிட்ட பாதைகளை அதிகமாக உபயோகிப்பதால்தான்.

என்னுடைய மிகப்பெரிய பலம் என்பது எனது நினைவு அடுக்குகளில் இருக்கிறது. காரணம், தகவல்கள் அடுக்கி வைக்கப்படும் முறை.

எந்த ஒரு சின்ன தகவல் என்றாலும், மனதில் உள்வாங்கிப் பதியும் பொழுதே பல கோணங்களில் அதை பார்த்து காட்சியாய் பதிவு செய்கிறேன். ஒவ்வொரு தகவலுக்கும் முப்பரிமாண வடிவம் தந்துதான் பதிகிறேன்.

எனவே அது சம்பந்தமான இன்னொரு தகவல் தட்டுப்படும் பொழுது முப்பரிமாணத்தில் முதல் தகவல் உள்ளதால் எப்படிச் சரியாகப் பொருந்துகிறது என எளிதில் புரிந்து விடுகிறது.. ஒரு தகவலைக் கொண்டு, அது சம்பந்தமான பல தகவல்களை மூளை நினைவடுக்குகளில் இருந்து எடுப்பது எளிதாக இருக்கிறது.

மனச் சிந்தனைச் செயலியின் - வெளிப்பாட்டை செயலாக்காமல் மனதிற்கு மீண்டும் அதை ஒரு உணர்வாக ஃபீட்பேக் (பின்னூட்டம்) செய்து சற்று முன்னே போகிறேன் - இது நடந்தால் இது, இது நடந்தால் இது ஒரு திரைப்படத்தையே கற்பனைக் காட்சிகளாக மூளையில் பதிகிறேன்

ஆழம் செல்லுதல். அதாவது மேலோட்டமாக பார்க்காமல் ஒரு மூன்று நான்கு அடுக்குகள் உள்ளே சென்று பார்க்கிறேன்.. என் மனதில் தோன்றும் இந்த கற்பனைத் திரைக்காட்சிகள் எண்ணத்தை எழுத்துகளாக்க உதவுகின்றன.

நான் எண்ணுவதில் எழுதுவது ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இருக்காது. இது எல்லோருக்கும் சாத்தியம்.. குழந்தைகளுக்கு கூட.. புரிந்து சாதகம் செய்தால்.

குழந்தைகளுக்கு இதை பழக்குதல் மிக எளிது. :icon_rollout: :icon_rollout: :icon_rollout: பெரியவர்களுக்கு இப்பாதைகள் உபயோகிக்கப்படாமல் இருந்தால் சிந்தனைத் தடைகள் இருக்கும். வழக்கமாக உபயோகிக்கும் மன - மூளை இணைப்புகளையே அதிகம் உபயோகிக்க விழைகிறோம். அதனால் மனத்தடைகள் உண்டு..

இதை அறியாமலேயே நான் பயின்றிருந்தாலும் அறிய வைத்தது குழந்தைகள்தான்.

இந்த சர்க்யூட் ஒவ்வொரு மனிதனிலும் உண்டு, உணர்ந்து உபயோகித்தால் போதும்.

கண்மணியின் எண்ணங்களும் மின்சாரமும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15275) கட்டுரையை இந்த வரைபடத்தில் மனம்-செயலியில் பொருத்திப் பார்க்கவும். :D:D:D

ஷீ-நிசி
19-02-2009, 12:36 AM
7. ஷீ நிசி அவர்களுக்கு

கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி

என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இது , தங்களின் கையெழுத்தில் இடம்பெற ஏதேனும் ஸ்பெஷல் காரணங்கள் உண்டா?

நன்றி அருண்!

எனக்கும் பிடித்த வரிகள்தான் இவை... ஸ்பெஷல் காரணம் என்றெல்லாம் ஒன்றுமில்லை.. ரேடியோ மிர்ச்சி ஆரம்பித்த புதிது. நான் கவிதைகள் மெயில் செய்வேன். தேவா என்ற RJ அதை வானொலியில் பலமுறை வாசித்திருக்கிறார். தேவா காபி நேரம் என்ற காலைப்பொழுதினில் வரும் அந்த நிகழ்ச்சி! அதில் அவர் எனக்கு நன்கு பழக்கமானார். ஒருநாள் அவரை சந்திக்க அந்த ரேடியோ அலுவலகத்தில் போனேன். அப்பொழுது அடுத்த சில தினங்களில் நட்பு தினம் வர இருந்தது. அவர் என்னை ஒர் சொன்னார். சரி என்று நான் ஒரு நட்பு கவிதை எழுதினேன். கண நேரத்தில் என்று தான் ஆரம்பிக்கும் அந்த கவிதை. அந்த கவிதையின் முழுவடிவம் நான் தவறவிட்டுவிட்டேன்.. " மிகப்பெரிய பதிவியில் இருப்பவனையும் ஒருமையில் அழைக்கும் உரிமை இந்த உறவுக்குத்தான் உண்டு என்றெல்லாம் வரும்"

சரியாக நட்பின் தினம் அன்று அவர் எனக்கு செல்பேசியில் அழைத்து இன்னும் 5 நிமிடத்தில் நான் உங்களை அழைப்பேன். கவிதை தயார்செய்துகொள்ளுங்கள். அப்படியே வாசிக்கவேண்டும். ரிக்கார்டிங் ஆகப்போகிறது என்றார். எனக்கு லைவ் ரிக்கார்டிங் என்றதும் கை, வாய் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. நமக்கு இது புதிதாச்சே.. வேண்டாம்னு கூட சொல்லிடலாம்னு நினைச்சேன். சொன்னமாதிரி அடுத்த 5 நிமிடத்தில் என்னை அலைபேசியில் அழைத்து நான் ஸ்டார்ட் சொன்னதும் வாசிங்கனு சொன்னாங்க.... ஸ்டார்ட்....... கவிதை எப்படி சொல்லி முடிச்சேன்னு எனக்கே தெரியலை. அடுத்த ஒரு மணி நேரம் கழித்து வானொலியில் என் கவிதை குரலை நானே ரசித்தேன்... இது நடந்தது ரேடியோ மிர்ச்சி ஆரம்பித்த புதிதில்....

பழைய ஞாபகங்களை மீட்டெடுக்க உதவினீர்கள் நன்றி அருண்!

நாட்டாமை
19-02-2009, 02:45 AM
6.நாட்டாமை அவர்களுக்கு
தங்களின் பெயர் காரணம் என்ன ? :D
இந்த லொள்ளுதானே வேணாமிங்கிறது...

இவ்ளோநேரமும்.... நல்லாதானைய்யா
போயிட்டு இருந்திச்சி...
ஏன் ஏன்....ஏன் இந்த கொலைவெறி............??

நான் பாட்டுக்கு அமேதியா... ஒரு ஓரத்துல நின்னு பாத்துட்டு இருக்கிறேன்...

அது புடிக்கலையா... உங்களுக்கு.... ???

தூங்கிகிட்டு இருக்குற சிறுத்தையை தட்டி எழுப்புறதே வேலையாபோச்சி...

சரி....
சரி....
சீக்கிரம் பதிலோட வருகிறேன்

மதி
19-02-2009, 03:52 AM
3.மதி அவர்களுக்கு

காதல் பற்றிய தங்களின் உண்மையான கருத்து என்ன ? உண்மையை மட்டும் தான் சொல்ல வேண்டும் :D

ஏன்.. ஏன்.. ஏன்...???
நாட்டாம சொன்ன மாதிரி இதுவரைக்கும் நல்லா தானேய்யா போய்க்கிட்டு இருந்துச்சு. இப்படி மாட்டிவிட்டுட்டா..

ம்ம்.. என்ன கேட்டீங்க...? காதல் பத்தின என் கருத்தா...ஸ்ஸ்ஸ்ஸ்.

காதல் சுகமான அனுபவம்னு நண்பர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன். என் அனுபவத்தை சொல்றதுக்கு முன் எனக்கு தெரிஞ்ச காதல்கள் எப்படின்னு பார்ப்போம். மன்றத்துல மொக்கை போட்டு ரொம்ப நாள் ஆச்சு. சரியா சந்தர்ப்பம் ஏற்படுத்திக் குடுத்துட்டீங்க.

என்னுடம் ஐந்து வருஷமாக பணிபுரிகிறான் அவன். இனிய நண்பன். பத்து வருஷமாக ஒரு பெண்ணை காதலித்தான். பள்ளிக்கூடத்திலிருந்தே. அந்தப் பெண்ணும் இவனும் இறுதியாக திருமணம் என்ற நிலைக்கு வந்த போது பெண்வீட்டில் மிகுந்த எதிர்ப்பு. காதல் திருமணம் செய்தால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்று. இருவரும் மனம் தளரவில்லை. இருவருடங்களுக்கும் மேல் காத்திருந்தனர். இறுதியில் பெண்ணின் தாயார் சம்மதிக்க உறவினர் நண்பர்கள் சூழ இனிதே அவர்கள் திருமணம் நடைபெற்றது. இன்று தங்கக்கட்டி போல் ஒரு வயதில் பையன் அவர்களுக்கு. அழகான பொம்மை போல்.

என் உறவினர் வீட்டில் நடந்தது. பெண் அப்பா சம்மதிக்கவில்லை. அடி உதை போல். அலைபாயுதே மாதிரி ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டு தனிக்குடித்தனம் போயாச்சு. அப்புறம் உறவுகளுக்குத் தெரிந்து மறுபடி திருமணம் செய்து வைத்தார்கள்.

மற்றுமொரு உறவினர் வீட்டில் நடந்தது. பெண் ஐந்து வருடக் காதல். யாருக்கும் தெரியவில்லை. திடீரென்று ஒரு நாள் கல்யாணம் செய்தால் அவனை தான் செய்வேன் என்றிருக்கிறாள். வீட்டில் எதிர்ப்பு. அதனால் கோவித்துக் கொண்டு வீட்டை விட்டு ஹாஸ்டலில் சிலகாலம் இருந்தாள். வீட்டிற்கு கொடுத்துக் கொண்டிருந்த பணத்தை நிறுத்தினாள். வீடு வாங்க கடன் பத்திரத்தில் கையெழுத்து போட முடியாதென்று கடைசி நேரத்தில் கழுத்தறுத்தாள். இப்படி எல்லோரையும் சித்ரவதை செய்து இறுதியில் நெருங்கிய சொந்தங்கள் சிலர் மட்டுமிருக்க கோயிலில் திருமணம் நடந்தது.

எல்லாமே காதல் தான். காதல் ஒரு அழகான அனுபவம். அடுத்தவரை துன்புறுத்தாத வரைக்கும். காதல் யாரையும் துன்புறுத்தாது. அப்படி துன்பம் வந்தால் அது காதல் இல்லை.:D:D

மேற்சொன்ன சம்பவங்களில் நான் கற்றுக் கொண்டது. காதலில் நிதானமும் பொறுமையும் மிக முக்கியம். காதல் என்றால் அளவுகடந்த அன்பென்பர். ஆனால் பல தருணங்களில் காதலால் வீட்டார் நம் மேல் வைத்திருந்த அன்பு கெடுகிறது. நாம் அவர்கள் மேல் வைத்திருந்த அன்பும் குறைகிறது.

ஆதலினால் காதல் செய்வீர்.. அதனால் அன்புவெள்ளம் நம்மைச்சுற்றி எங்கும் பெருக்கெடுத்தால் மட்டும்.

இவ்வளவு சொன்னவன் என் கதையை மட்டும் சொல்லலேன்னு யாரும் வருத்தப்படக்கூடாதில்ல. ஏகப்பட்ட பேரை காதலித்திருக்கிறேன். ஆனால் யார்கிட்டேயும் காதலை சொல்லியதில்லை. அவ்ளோ பயம். அதே மாதிரி எந்த பொண்ணாவது என்கிட்ட கொஞ்சம் அந்நியோன்யமா பழக வந்தா.. அந்த இடத்திலேர்ந்து எடுப்பேன் பாருங்க ஒரு ஓட்டம். போலிஸ் ட்ரெயினிங்க்ல கூட அப்படி யாரும் ஓடிருக்க மாட்டாங்க.. அந்தளவுக்கு கோழை.. :D:D:D

நானெல்லாம் "முரளி" மாதிரி ஒரு மைலுக்கு அப்பால இருந்து பார்த்து உருகணும். அவ்ளோ தான். பக்கத்துல வந்துட்டா கை காலெல்லாம் உதற ஆரம்பிச்சுடும்..:icon_ush::icon_ush: (அதிகமா சொல்லிட்டேனோ..??:eek::eek:)

என்ன பண்ண.. வீட்டில அவ்ளோ ஸ்டிரிக்டு.. ஸ்டிரிக்டு.. ஸ்டிரிக்டு...:rolleyes::cool::cool:

ஓவியன்
19-02-2009, 04:35 AM
1.எனது முதல் கேள்வி சிவா அவர்களுக்கு

தாங்கள் துபாயில் இருப்பது அனைவரும் அறிந்ததே அதை சார்ந்து ஒரு கேள்வி
ஒரு முறையேனும் ஒட்டக பால் குடித்துள்ளீர்களா அல்லது எப்போதும் ஒட்டக பாலில் தான் டீ குடிப்பீர்களா? ::)

ஆஹா, ஆஹா...!!

என்னே ஒரு கேள்வி...!! :icon_b:

:huepfen024: :sport-smiley-018: :icon_clap: :icon_dance: :music-smiley-009: :spudnikbackflip: :sport-smiley-019: :icon_36: :medium-smiley-002: :medium-smiley-080: :medium-smiley-075: :icon_rollout:

aren
19-02-2009, 04:49 AM
தாமரை அவர்கள் எழுதியது புரிந்தது மாதிரி இருந்தது ஆனால் புரியவில்லை அப்படித்தானே. என*க்கும் அப்ப*டித்தான்.

அதுதான் தாமரை அவர்களின் ஸ்பாலிடி.

ஒன்றும் புரியாமல்
கடுப்புடன்
ஆரென்

aren
19-02-2009, 04:51 AM
மதி உங்களுடைய காதலைப் பற்றி சொல்லாமல் ஊராரின் காதல் பற்றி சொல்கிறீர்களே.

நீங்கள் பாஷை தெரியாமல் கஷ்டப்படுவதைப் பற்றி எழுதியிருக்கலாமே.

aren
19-02-2009, 04:52 AM
9. ஆரென் அவர்களுக்கு

சிங்கப்பூர் ஒரு மினி சென்னையா ? கொஞ்சம் சொல்லுங்களேன்

நான் மன்றம் வருவதே அபூர்வர். அதிலும் இப்படி கேள்வி கேட்டு என்னை மாட்டிவிட்டீர்களா? பதிலுடன் வருகிறேன்.

மதி
19-02-2009, 05:46 AM
மதி உங்களுடைய காதலைப் பற்றி சொல்லாமல் ஊராரின் காதல் பற்றி சொல்கிறீர்களே.

நீங்கள் பாஷை தெரியாமல் கஷ்டப்படுவதைப் பற்றி எழுதியிருக்கலாமே.
சொல்லியிருக்கிறேனே.... பல காதல் பத்தி.. :D:D

தாமரை
19-02-2009, 05:59 AM
தாமரை அவர்கள் எழுதியது புரிந்தது மாதிரி இருந்தது ஆனால் புரியவில்லை அப்படித்தானே. என*க்கும் அப்ப*டித்தான்.

அதுதான் தாமரை அவர்களின் ஸ்பாலிடி.

ஒன்றும் புரியாமல்
கடுப்புடன்
ஆரென்

ஆரென் இது புரிந்தால் பகுத்தறிவு என்னன்னு புரிந்துவிடும். புரியலைன்னா ஹி ஹி....:lachen001::lachen001::lachen001:

இந்த முறையை நான் உண்டாக்கிய விதத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்..

ஒரு முறை ஜி-சாட்டில் ஓவியன் பகுத்தறிவு மனிதனுக்கு மட்டும்தான் இருக்கா விலங்குக்கும் உண்டா என்று கேட்டார்.

பகுத்தறிவு என்றால் என்ன அப்படின்னு கேட்டேன்.

ஒரு விஷயத்தை ஆராய்ந்து எது நல்லது எது கெட்டது என்று அறியும் அறிவுன்னு சொன்னார்.

அப்போ அப்படியே விலங்குகளோட இயல்புகளை ஆராய்ந்தேன்.. மனசுக்குள்ள தான்

இப்போ அந்த சிந்தனைச் சங்கிலியைப் பாருங்க...

பகுத்தறிவுன்னா உண்மையில் என்ன?

அது ஒரு அறிவு கிடையாது...ஆராய்ட்சி மனப்பான்மை .. இதைப் பகுத்தறிவு என்கிறோம்

பகுத்தறிவு விலங்குகளுக்கு இல்லைனு பலர் சொல்வாங்க. ஆனால் விலங்குகளுக்கும் பகுத்தறிவு உண்டு.

முதல்ல பகுத்தறிவுன்னா என்னன்னு பார்ப்போம்.

ஒரு மேஸ்ல எலியை விட்டா.. அது முதன் முறை தடுமாறும். அதையே திரும்ப விட்டா அதுவா ஒரு வழி அமைச்சுக்கும். அது ஒரு பகுத்தறிவு.

சிம்பன்ஸி, ஒரு குச்சியை விட்டு கரையானைப் பிடிச்சு திங்கும் அது பகுத்தறிவு..

ஏன் குரங்கு மாலையைப் பிய்த்துப் போடுவது கூட பகுத்தறிவு தான். அது ஆராய்ச்சி மனப்பான்மையோட பிய்க்கும்

அதே மாதிரி கண்ணாடியை வச்சா மிருகங்களுக்கு கொஞ்ச நாளில் கண்ணடியில் தெரிவது தான்தான் என்று தெரிந்து விடும். அதுவும் பகுத்தறிவுதானே

புத்தகங்கள் சொல்லுறது பிழையா என்று கேட்கத் தோணுதா?

புத்தகங்கள் மனிதனால் எழுதப்பட்டவை. பகுத்தறிவு என்பதை புத்தகத்தில் படிப்பதற்கும் நிஜமாவே பகுத்தறிவு உள்ளதற்கும் இது தான் வித்தியாசம்

கீரிகள் பாம்புடன் போராடிய பின்னால் போய் பச்சிலைகளில் புரண்டு காயத்தை ஆத்திக்கும்.

நாய்கள், புல்லைத் தின்று ஜீரணமாகத உணவை கக்கும்
முதலை தன் வாயில் பறவைகளை அனுமதிக்கும் பற்களை துப்புரவு பண்ண

இவையெல்லாம் பகுத்தறிவு இல்லாம அதுங்களுக்கு எப்படித் தெரியும்?

எறும்புகள், எலிகள் தானியங்களை ஏன் சேமிக்குது?

காக்கை ஏன் உணவு கிடைச்சா உறவை அழைக்குது?

நில நடுக்கம் வருவது பறவைகளுக்கு எப்படிப் புரியுது?

யாரோ எழுதியதை நம்பாம, நாம கண்ணால பாத்து காதால கேட்டு அறிந்த விஷயங்களியும் ஒப்பிட்டு பார்த்து உண்மயை அறிவதுதான் பகுத்தறிவு...

ஒரு மனுஷனுக்கு குழந்தையை எப்படித் தூக்கறது அப்படின்னு சொல்லித் தரணும். ஆனா ஆட்டுக்கோ மாட்டுக்கோ யார் சொல்லித்தர்ரா? பூனைகள் தூக்கிக் கொண்டு திரிவதைப் பார்த்திருக்கேன். அத்தனை லாவகம்

பகுத்தறிவில்லாமல் எப்படி வந்தது இந்த அறிவு?

தமிழர்கள் தான் ஆறாவது அறிவு பகுத்தறிவு என்று சொல்றாங்க. ஆனா ஆங்கிலேயரைப் பொறுத்த வரை ஆறாவது அறிவு ஈ.எஸ்.பி .. எக்ஸ்ட்ரா சென்சரி பர்சப்ஷன், அதாவது கற்பனையான ஒரு உணர்வு. மனதில் தோன்றும் ஒரு சின்ன ஜோசியம். இது நடக்கப் போகுது ஒரு எண்ணம் வருதே அதுதான்

சிக்ஸ்த் சென்ஸ் அப்படின்னு நம்ம மனோஜ் நைட் சியாமளன் படத்தில அதைத்தான் சொல்லி இருப்பார்.

மற்ற எல்லா பாஷைகளிலும் சென்ஸ் என்பது ஐந்துதான். ஆறாவது அறிவு என்பது எக்ஸ்ட்ரா சென்ஸ். அது மனிதர்களில் சில பேருக்கு மட்டுமே இருக்கும்.

ஆறாவது அறிவு என்பது பகுத்தறிவுன்னு யாரு வரையறை செஞாங்கன்னு பார்த்தா..

அது தொல்காப்பியர்.

தாவரங்களுக்கு ஓரறிவு, புழுவுக்கு ரெண்டறிவு, எறும்புக்கு மூன்றறிவு இப்படிச் சொல்லி, விலங்குகளுக்கு ஐந்தறிவு - மனிதன் மற்றும் அவரைப் போன்றோருக்கு ஆறாம் அறிவு பகுத்தறிவு உண்டு என சொல்லப்பட்டு இருக்கும்

ஐம்பொறிவழி அமைந்த புலன் அறிவுகள்

உலகின் எல்லாவகை உயிர்களும் புலனறிவு கொண்டவையே. புலனறிவு என்பது ஓரறிவு முதல் ஆறறிவுவரை உள்ளது. இது அறிவின் பொறிபுலன் வழியான இயங்குநிலைப் பகுப்பு.

ஓரறிவு

இது மெய்யாகிய பொறிவழி அறிய வரும் ஊறு-தொடுதலறிவு எனும் அறிவு. தொடுதலறிவு உள்ளவை புல், மரம், செடி, கொடி முதலியவை.

ஈரறிவு

வாய் எனும் பொறிவழி அறிவதாகிய சுவை என்னும் புலன். மெய், வாய் ஆகியவற்றின்வழி ஊரு,சுவை என்ற இரண்டுவகை அறிவுள்ள புழு, நத்தை, சங்கு, சிப்பி முதலியவை.

மூவறிவு

மூக்கு என்னும் பொறிவழி புலப்படும் மணம் அல்லது நாற்றம் எனும் அறிவு அல்லது புலன். எறும்பு, கறையான், பூச்சிகள் முதலியவை மெய்,வாய்,மூக்கு எனும் பொறிகள் வழி ஊறு,சுவை, மணம் என்னும் மூவகை அறிவுள்ள உயிர்களிற் சிலவாகும்.

நாலறிவு

கண் எனும் பொறிவழி புலப்படும் காணுதல்- ஒளி என்னும் அறிவு. நண்டு,தும்பி, பாம்பு முதலியவை மெய்,வாய்,மூக்கு, கண் எனும் பொறிகள்வழி ஊறு, சுவை, நாற்றம், ஒளி எனும் நால்வகை அறிவும் பெற்ற உயிர்களிற் சிலவாகும்.

ஐயறிவு

செவி அதாவது காது எனும் பொறிவழி புலப்படும் ஓசை என்னும் அறிவு. பறவை, விலங்குகள் முதலியவை மெய்,வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள் வழி ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை எனும் ஐந்தறிவும் பெற்ற உயிர்களாகும்.

ஆறறிவு

மனம் எனும் அகக்கருவி வழியாக நல்லதுகெட்டது பிரித்தறியும் பகுத்தறிவு உடைமையே ஆறாவது அறிவு. இதுதான் ஆறாவது புலன். இதைப் பெற்றிருந்தும் பயன்படுத்தாதவர்கள் மக்கள் உருவில் இருக்கும் விலங்குநிலையினரே ஆவர். இந்த ஆறாம் புலனைப் பயன்படுத்தி அல்லவை நீக்கி நல்லவை ஆக்கி வாழ்பவரே மக்கள் எனப்படுவர். அல்லாத பிறர் அனைவரும் மாக்கள் (விலங்குகள்) எனப்படுவர்.

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே

புல்லும் மரனும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

நந்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

சிதலும் எறும்பும் மூவறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

நண்டும் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

மாவும் புள்ளும் ஐயறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

ஆறறிவு உள்ளது மனிதன் மட்டுமல்ல.. பிறவும் உண்டு என்றுதான் அவர் சொல்லி இருக்கார்.

அப்படின்னா மனுஷனுக்கும் விலங்குகளுக்கும் என்ன வித்தியாசம்னு கேட்கறீங்களா?

நாம் நம்மை ரொம்ப உயர்வா நினைச்சுக்கறோம்.. அதுதான் வித்தியாசம். ஏன் அப்படி நினைச்சுக்கிறோம் டார்வின் சொன்ன கூர்ர்ப்பின் பிரகாரமா? அல்லது நம்ம மட்டும் புதுசு புதுசாக் கத்துக்கிறோம்... பழசிலிருந்து புதுசா உருவாக்குறோம் என்கிற மமதையா?

மற்றவை உருவாக்கவே இல்லைன்னு சொல்ல முடியாது.. மற்றவை கோடிக் கோடி ஆண்டுகளுக்கு முன்பே முயன்று தெளிந்து கூட இருக்கலாம்.. முயற்சியை கைவிட்டு இயற்கையோடு இருப்போம்னு முடிவு கூட செய்திருக்கலாம். இல்லாட்டி இல்லாமலே போய்விடுவோம் என்பதுவும் அவை புரிந்து கொண்டிருக்கலாம்

கனவுகள் மிருகங்களுக்கு வருமா.. என்று இன்னொரு கேள்வி பிறக்குது மனசில

மனம் என்ற ஒன்று இருந்தால் கனவு என்ற ஒன்று இருந்தே இருக்கும். மனம் என்ற ஒன்று தான் நினைவுகளை அலசுகிறது.. நாய் வாலாட்டிக் குழைகிறது இல்லை குரைக்கிறது என்பதே அதற்கு மனம் என்ற ஒன்று இருக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டு

அப்போ சிரிக்கத் சிரிக்கத் தெரிந்த மிருகம்னு மனுஷனை சொன்னது சரியான்னு யோசிக்கணும்.

ஏன் குரங்கு கூட சிரிக்குமே. நாய் கூடத்தான் சிரிக்கும்...

நாய் குட்டிகளோடு அம்மா நாய் விளையாடுவதைப் பார்த்து இருக்கீங்களா? அப்போ ஒரு ஃபோட்டோ எடுத்துக்கோங்க..

ஒரு நாய்க்குட்டியை மட்டும் தனியா இருக்கும் போது ஒரு அறையில் பூட்டிட்டு..அப்ப ஒரு ஃபோட்டோ எடுங்க..

நாயின் முகத்தில் சந்தோஷம் எப்படித் தெரியும் என்பது புரியும்... மகிழ்ச்சியின் வெளிப்பாடு சிரிப்பு

ஏக்கம், சந்தோஷம், மோகம், கோபம், பயம் இப்படி பல உணர்வுகளை நாய்கள் காட்டுவதை நாம் பார்க்கிறோம். இத்தனை உணர்வுகளுமே மனம் சம்பந்தப் பட்டவை..

பயந்தவனைத் துரத்தும் நாய் எதிர்ப்பவனை துரத்துவதில்லை. அப்ப அது யோசிச்சுச் செய்யுதா யோசிக்காம செய்யுதா?

ஆக மொத்தம் பார்த்தா நாம நம்மை ரொம்ப உயர்வா நினைச்சிட்டிருக்கோம். பகுத்தறிவுப் பகலவன் அப்படின்னு கற்பனை உலகத்தில் மிதக்கறோம்.

அந்தக் கற்பனையை மறந்திட்டு நிஜத்திற்கு வருவதுதான்..

பகுத்தறிவு

இதையே கொஞ்சம் மாத்தி எழுதலாமான்னு யோசிக்கிறேன்..

தொல்காப்பியர் சொன்னது சரியாக் கூட இருக்கலாம். அதை அர்த்தப்படுத்திக்கிறதில மனுஷங்க தப்பு செய்யலாம்.

பகுத்தறிவுன்னா நல்லது எது கெட்டது எதுன்னு தெரிஞ்சிக்கறது இல்லை..

மனம் என்னும் ஒரு புலன் மூலம் உணர்ந்த உணர்வுகளைக் கொண்டு சேகரிக்கும் அறிவுன்னு சொல்லலாம்.

பகுத்தறிவு எப்படிக் கிடைக்குது என்று சொல்கிறார் தொல்காப்பியர்?

மனம் என்னும் புலன் வழியாக.

அதாவது மனம் என்பது புலனாக செயல்படணும்

ஒரு பிராஸஸிங் சர்க்யூட் எடுத்தம்னா

இன்புட் பிராஸஸ் யூனிட்டுக்குப் போகும்

பிராஸஸ் யூனிட் மெமரி யூனிட்டோட துணையுடன் பிராஸஸ் பண்ணி அவுட்புட் தரும்.

புலன்கள் இன்புட் - மனம் பிராஸஸ் யூனிட்(மூளையின் ஒருபகுதி) - மெமரி (மூளையின் இன்னொரு பகுதி) - அவுட்புட் - பொறிகள்(கை, கால், நாக்கு இப்படி)

இது எல்லா உயிரினங்களுக்கும் உண்டு...

ஆனால் மனம் ஒரு புலனா செயல்படுவது மனிதனுக்கு மட்டும்தான்.. அதே மாதிரி மனம் ஒரு பொறியாகவும் செயல்படுவது மனிதனுக்கு மட்டும்தான்..

நல்லா கவனிச்சுப் பார்த்தீங்கன்னா என்னதான் புத்திசாலித்தனமா செயல்படறதா தோன்றினாலும்.. நான் சொல்லி இருக்கிற சிம்பிள் பிராஸஸ்தான் அனைத்து விலங்குகளிடமும் காணப்படும்..

ஆனால் மனம் ஒரு புலனா, இன்புட்டை தரக்கூடியதாகவும்.. பொறியா சிந்தனைச் செயலாக்கக் கூடியதாகவும்.. சிந்தனை மீண்டும் ஒரு சென்ஸாக அதாவது உணர்வாக ஃபீட் பேக் லூப்பாகவும் உள்ள அமைப்பு மனிதனின் மூளையில் அமைந்திருப்பதுதான் விஷேசம்..

ஆனால் இந்த ஃபீட் பேக் லூப் இருக்கே அது விலங்குகளிடம் கிடையாது. அதனால்தான் வாழ்க்கைக்கு நேரடியாக சம்பந்தப் படுத்தாத எதைப் பற்றியும் அவை சிந்திப்பது இல்லை. முழுவதும் புற உணர்வுகளைச் சார்ந்தே அவற்றின் அறிவு அமைந்து விடுகிறது..அதாவது ஆகாயத்தில் கோட்டை கட்டுவது என்பது விலங்குகளிடம் இருக்காது. விலங்குகளின் செயல்களுக்கு நேரடி லாஜிக் இருக்கும்.

இப்ப யோசிச்சுப் பாருங்க..

பகுத்தறிவு என்பது நல்லது கெட்டது என பிரித்து அறிவது அல்ல.

மனம் ஒரு புலனாக செயல்பட்டு...

அதன் மூலம் பெறும் அறிவு...

பகுத்தறிவு...

மனிதனுக்கு ஏற்படும் ஒவ்வொரு உணர்வும் செயலாக நேரிடையாக வெளிப்பட வேண்டிய அவசியம் இல்லை..

அது ஒரு கற்பனையான உணர்வாக ஃபீட் பேக்கா போய் மறுபடியும் மறுபடியும் பிராஸஸ் ஆவது மனிதன் மனதிலே..

அப்போ கற்பனைத் திறன் தான் பகுத்தறிவா என்றால் --உதை விழும்...

அறிவு என்பது உணர்வுகளின் வழியாக நாம் சேகரிக்கும் டேட்டா...

கற்பனை என்பது மனப்புலனின் உணர்வு.. இன்புட்..

இதன் வழியாக சேகரிக்கும் டேட்டா தான் பகுத்தறிவு...

இப்ப சொல்லுங்க

பகுத்தறிவு என்பது புரிஞ்சதா?

மிருகங்களுக்கு பகுத்தறிவு உண்டா?

இப்போ ரொம்பத் தெளிவா இருக்குமே..

இனிமே விளக்கம் கேப்பீங்களா? கேப்பீங்களா? கேப்பீங்களா?:violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010:

மதி
19-02-2009, 06:03 AM
முடி..................ல

ஆதவா
19-02-2009, 06:05 AM
படம் போட்டு காண்பிச்ச தாமரை அண்ணாவுக்கும்
ரேடியோவில் பேசிய ஷீ-நிசிக்கும்
சறுக்கிவிட்டு கிறுக்கிவிட்டு போகும் நாட்டாமைக்கும்
காதலி நெருங்கினால் கை கால் நடுங்கும் மதிக்கும்

வந்தனங்கள்........

உண்மையைச் சொல்லப் போனா, நான் குறும்பால்லாம் எழுதினதில்லைங்க.. (குழப்பமா வேணும்னா நிறைய எழுதியிருக்கேன்)

குறும்புத்தனம் என்பது சில நேரங்களில் வரும்... குழந்தைங்களோடு, நெருங்கிப் பழகுகிறவர்களோடு, இப்படி..... எல்லா நேரங்களிலும் அப்படி இருக்க முடியாதில்லையா!!!!

எனக்கு குறும்புத்தனம் புடிக்கும்... ஓவரா பண்ணினா புடிக்காது!!!

வாய்ப்ப்புக்கு நன்றி அருண்

ஆதவா
19-02-2009, 06:09 AM
இனிமே விளக்கம் கேப்பீங்களா? கேப்பீங்களா? கேப்பீங்களா?

டேய் ஆதவா... உனக்கு இது தேவையா..... இனிமே இந்த பக்கம் வராதே!!!!!

அப்படின்னு மனசு சொல்லுதுங்க......

நீங்க ஓவரா ஆராய்ட்சி பண்ரீங்க.... ஒரு நாள் இல்ல ஒருநால் தலையில இரண்டு கொம்பு முளைச்சு நிக்கும் பாருங்க...

ஓவியன்
19-02-2009, 06:38 AM
பகுத்தறிவு பற்றி என் நண்பரொருவர் அதிமேதாவித்தனமாகப் பேசி வைக்க, நான் செல்வண்ணாவுடன் பேசிய போது கிடைத்தது இந்த ஜி-சாட்.....!! :)

அவர் கூறியது இதுதான், விலங்குகளுக்கு பகுத்தறிவு இல்லை...!!

அவருக்கு விளக்கம் கொடுக்க நான் செல்வண்ணாவுடனான சாட்டிலிருந்த கருத்துக்களை கூறி வைக்க, அந்த நண்பரோ கப்-சிப்..!! :D:D:D

செல்வா
19-02-2009, 07:47 AM
நீங்க ஓவரா ஆராய்ட்சி பண்ரீங்க.... ஒரு நாள் இல்ல ஒருநால் தலையில இரண்டு கொம்பு முளைச்சு நிக்கும் பாருங்க...

இப்ப என்ன சொல்றீங்க தாமரை அண்ணாவுக்கு நான்கு தலை என்றா...

அது சரி நான்கு தலையில ரெண்டு கொம்பு இடிக்குதே...

குற்றம் கண்டுபிடிப்பதே குறியாக
செல்வா....

loshan
19-02-2009, 10:08 AM
சுவாரஸ்யமான ஒரு திரி..
எல்லோர் பதில்களும் ரசிக்க வைத்தன..

தாமரை அண்ணா பதில் தானே கேட்டாங்க.. அதற்காக இப்படி ஒரு பாகவதமா? தாங்க முடியல.. சீரியசா ஒரு சீரியல் தரமுடியும்னா அது உங்களால தான்.. ஒரு மினி டிஸ்கவரியெ காட்டிட்டீங்க..

வம்புக்கு என்னை இழுத்த அருண் நன்றிப்பா நன்றி..
அடுத்ததாக எனது பதிலுடன் வருகிறேன்..

loshan
19-02-2009, 10:17 AM
லோஷன் அவர்களுக்கு

தாங்கள் பண்பலை ரேடியோவில் இருப்பதை அனைவரும் அறிவோம் நேரடி ஒலிபரப்பின்போது நடந்த சுவையான ஒரு அனுபவத்தை எங்களிடம் பகிர்ந்து கொள்ளவும்

அழைத்ததற்கு நன்றி அருண்..

எனது வலைப்பூ (http://loshan-loshan.blogspot.com)வில் வானொலி வறுவல்கள் (http://loshan-loshan.blogspot.com/search/label/வானொலி) என்ற பெயரில் வானொலி ஒளிபரப்பின்போது விடப்படுகிற சுவாரசயமான தவறுகளை யார் மனம் புண்படாமலும் எழுதிவருகிறேன்..

அதிலிருந்து நான் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம்..

கிளம்பீட்டான்யா...
(http://loshan-loshan.blogspot.com/2008/12/blog-post_2169.html)
2006ஆம் ஆண்டு சூரியன் FMஇல் நான். அப்போது நான் முகாமையாளர்.ஒரு மேடை நிகழ்ச்சிக்காக நகைச்சுவை நடிகர் (விஜயகாந்துக்கு மட்டும் இவர் வில்லன்) வடிவேலு வந்திருந்தார்..

இரவு நேரம் எங்கள் பிரபலமான மாலை நிகழ்ச்சியில் இவரை நான் பேட்டி காண்பதாக ஏற்பாடு..கொஞ்சம் தாமதமாகத் தான் வந்தார்.. வரும் போதே பேட்டி களை கட்டும் என்பது அவர் கண்களிலே தெரிந்தது..

கண்களைக் குருடாக்கும் பிரகாசமான செம்மஞ்சள் சட்டையுடன் (இதுமாதிரியான நிறத்தில் ஆடைகளை அண்ணன் ராமராஜனும்,வடிவேலுவும் மட்டுமே அணிவார்கள்) வந்தார் வடிவேலு..

அவரது வழமையான கலகலப்புடன் பேட்டி களை கட்டியது.. தொலைபேசியில் நேயர்களும் வந்து வடிவேலுவிடம் கேள்விகள் கேட்டார்கள். தனது பிரபலமான திரைப்பட வசனங்களை வடிவேலு தனக்கே உரிய பாணியில் பேசி,நடித்து கலக்கினார்.

எனது கேள்விகளை ரொம்ப அவதானித்து சுவாரஸ்யமாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்..ஒரு கொஞ்ச நேரத்தில் குரல் தழு தழுத்து, ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டவராக அவருக்கே உரிய மதுரைத் தமிழில் "உன் தமிழுக்கு நான் அடிமைய்யா..ரொம்ப அருமையா தமிழ் பேசுறே.. "அப்பிடி இப்பிடின்னு ஒரு பாராட்டு விழாவே நடத்தீட்டார்.

எனக்குப் பெரிய பெருமை தான்.. உற்சாகம் ரொம்பவே கூடிப் போச்சு..

வடிவேலுவின் சில வசனங்களை நானும் சொல்லிக் காட்டினேன்.. அவரும் ரசித்தார்..

சற்று நேரத்தில் தொலைபேசி வழியாக ஒரு பெண் நேயர்..

"வடிவேலு அண்ணனிடம் ஒரு கேள்வி" என்று கேட்டார்..

"என்னம்மா கேக்கப் போறே" - வடிவேலு.

"உங்க பிரபலமான வசனம் ஒன்று சொல்லுங்களேன்" அந்த நேயர்.

"என்ன வசனம்மா?" - வடிவேலு..

"கிளம்பீட்டான் எண்டு சொல்லுவீங்களே ..அது " என்றார் அந்தப் பெண்..

அது என்ன வசனம் என்ற மாதிரி ,குழப்பமாய் என்னைப் பார்த்தார் வடிவேலு..அவருக்கு உதவி செய்யும் நோக்கில், கிட்டத் தட்ட அவரது ஸ்டைலில் "கிளம்பீட்டான்யா கிளம்பீடான்யா" என்று நான் சொன்னது தான் தாமதம்,தொலைபேசி அழைப்பிலிருந்த அந்தப் பெண்"நன்றி வடிவேலு அண்ணா.. அப்படியே படத்துல சொன்னது மாதிரியே இருந்துது" என்று அழைப்பை வைத்து விட்டார்..

வடிவேலு என்னைப் பார்த்த பார்வை இருக்கே,கிட்டத் தட்ட இப்ப விஜயகாந்தை அவர் பார்க்கிற மாதிரி..

நல்ல காலம் அவர் கவுண்டமணி இல்லை.. ;)

http://loshan-loshan.blogspot.com/2008/12/blog-post_2169.html

arun
19-02-2009, 04:56 PM
தாமரை

சாட் எல்லாம் போட்டு தாங்கள் சொன்னதில் ஆச்சர்யம் ஏதுமில்லை ஒரே ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் தங்களது விளக்கம் அருமை பதில்களையும் பதிலுக்கான விளக்கத்தையையும் கொடுத்தமைக்கு நன்றி

மதி

சூப்பர் கலக்கிட்டிங்க கடைசில உங்கள பத்தி கொஞ்சமா சொல்லி இருக்கீங்க நன்றி

ஷீ நிசி

தங்களது நினைவலைகளை பகிர்ந்து கொண்டீர்கள் பழைய நினைவுகள் என்றுமே இனிமையானவை இளமையானவை

ஆதவா தங்களது பதிவுக்கு நன்றி

லோஷன் கடைசி வரிகளை நினைத்து பார்த்தேன் சிரிப்பை அடக்க முடியவில்லை சுவையாக பதில் அளித்து உள்ளீர்கள் நன்றி

arun
19-02-2009, 05:02 PM
இந்த லொள்ளுதானே வேணாமிங்கிறது...

தூங்கிகிட்டு இருக்குற சிறுத்தையை தட்டி எழுப்புறதே வேலையாபோச்சி...

சரி....
சரி....
சீக்கிரம் பதிலோட வருகிறேன்

சிறுத்த களம் இறங்கிடுச்சி :D :D

சீக்கிரம் பதிலோட வாங்க

arun
19-02-2009, 05:06 PM
இவ்வளவு சொன்னவன் என் கதையை மட்டும் சொல்லலேன்னு யாரும் வருத்தப்படக்கூடாதில்ல. ஏகப்பட்ட பேரை காதலித்திருக்கிறேன். ஆனால் யார்கிட்டேயும் காதலை சொல்லியதில்லை. அவ்ளோ பயம். அதே மாதிரி எந்த பொண்ணாவது என்கிட்ட கொஞ்சம் அந்நியோன்யமா பழக வந்தா.. அந்த இடத்திலேர்ந்து எடுப்பேன் பாருங்க ஒரு ஓட்டம். போலிஸ் ட்ரெயினிங்க்ல கூட அப்படி யாரும் ஓடிருக்க மாட்டாங்க.. அந்தளவுக்கு கோழை.. :D:D:D

நானெல்லாம் "முரளி" மாதிரி ஒரு மைலுக்கு அப்பால இருந்து பார்த்து உருகணும். அவ்ளோ தான். பக்கத்துல வந்துட்டா கை காலெல்லாம் உதற ஆரம்பிச்சுடும்..:icon_ush::icon_ush: (அதிகமா சொல்லிட்டேனோ..??:eek::eek:)

என்ன பண்ண.. வீட்டில அவ்ளோ ஸ்டிரிக்டு.. ஸ்டிரிக்டு.. ஸ்டிரிக்டு...:rolleyes::cool::cool:

பல விஷயங்களின் என்னோடு ஒத்து போகிறீர்கள் ஆனால் காதல்னு சொன்னா மட்டும் தான் ஓட்டம் :D :)

arun
19-02-2009, 05:09 PM
ஆஹா, ஆஹா...!!

என்னே ஒரு கேள்வி...!! :icon_b:

:huepfen024: :sport-smiley-018: :icon_clap: :icon_dance: :music-smiley-009: :spudnikbackflip: :sport-smiley-019: :icon_36: :medium-smiley-002: :medium-smiley-080: :medium-smiley-075: :icon_rollout:

நன்றி நன்றி நன்றி :D :D :D :D :D :D

நாட்டாமை
20-02-2009, 07:27 AM
வடிவேலு என்னைப் பார்த்த பார்வை இருக்கே,கிட்டத் தட்ட இப்ப விஜயகாந்தை அவர் பார்க்கிற மாதிரி..
நல்ல காலம் அவர் கவுண்டமணி இல்லை.. ;)

கற்பனையில்
வடிவேலை கடைசியில் மட்டும் கவுண்டமணியாக நினைத்து பார்த்தேன்..... :):)
ஆகா... எங்கேயோ இடி முழக்கம் கேட்டதே...

நாட்டாமை
20-02-2009, 07:32 AM
கண்மணியின் எண்ணங்களும் மின்சாரமும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15275) கட்டுரையை இந்த வரைபடத்தில் மனம்-செயலியில் பொருத்திப் பார்க்கவும். :D:D:D
[/FONT][/COLOR][/B]
மொத்தத்தையும் அள்ளி ஒரு வேர்டில கொப்பி பேஸ்ட் செய்து வச்சிருக்கேன்...
ம்ம்ம்ம்... எல்லாம் படிச்சி ஏதாச்சும் தெளியுதான்னு பாக்கலாம்....

நாட்டாமை
20-02-2009, 07:34 AM
மன்றத்துல மொக்கை போட்டு ரொம்ப நாள் ஆச்சு. சரியா சந்தர்ப்பம் ஏற்படுத்திக் குடுத்துட்டீங்க.
அட... மொக்கையிலும் உள்ள மேட்டர் இருக்கே.... :):)

தாமரை
20-02-2009, 08:13 AM
மொத்தத்தையும் அள்ளி ஒரு வேர்டில கொப்பி பேஸ்ட் செய்து வச்சிருக்கேன்...
ம்ம்ம்ம்... எல்லாம் படிச்சி ஏதாச்சும் தெளியுதான்னு பாக்கலாம்....

அடங்கொப்புரானே..

ஒரே வார்த்தையில அவ்வளவு பெரிய கட்டுரைய அடக்கிட்டீங்களா?

அப்படி என்ன வார்த்தை அது?

மொக்கை? :icon_rollout:

மதி
20-02-2009, 08:19 AM
எச்சூஸ்மீ...என்னைப் பத்தி ஏதும் பேசலியே..?

mania
20-02-2009, 09:00 AM
ஆரென்.........ஆரென்........ஆரென்......ஒரு தரம்.... இரு தரம்...... மூணு தரம்....எங்கப்பா இந்த ஆரென்???? ஹாரன் அடிச்சி கூப்பிடுங்கப்பா.....:D:D:D
அன்புடன்
மணியா..:D:D

நிரன்
20-02-2009, 02:20 PM
அருமையான கேள்வித் தொகுப்பு அருண்.

சிவா அண்ணாவின் கேள்வி மிக குசும்புத்தனம்:D..

சிலரின் பதில்களைப்படித்தேன் மதி அண்ணா நழுவீட்டார் அதே போல நாட்டாமையும் செம்போட எஸ்கேப் ஆகீட்டார்:D

தமரை அண்ணாவின் பதில் :eek::eek: விளக்கம் கேட்டதிற்கு இப்படியா!! தாங்க முடியல்லை.

ஆதவாவின் பதில்கள் ஓடும் புளியம் பழமும் போல இருந்தது:D

லோஷன் அண்ணாவின் பதில்கள் மிக நகைச்சுவையாக இருந்தது:D இதை வாசிக்கும் பொழுது கவுண்டமணி செந்தில் ஞாபகந்தான் வருகிறது.

அமரர் இம்முறை தப்பிச்சிட்டாரு..:D மாட்டாமலா போவாரு...

arun
20-02-2009, 04:26 PM

நன்றி நிரன்

தாங்கள் கூட தப்பித்து விட்டீர்கள் அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கிறதா என்று பார்ப்போம் :D

சிவா.ஜி
22-02-2009, 04:00 AM
1.எனது முதல் கேள்வி சிவா அவர்களுக்கு

தாங்கள் துபாயில் இருப்பது அனைவரும் அறிந்ததே அதை சார்ந்து ஒரு கேள்வி

ஒரு முறையேனும் ஒட்டக பால் குடித்துள்ளீர்களா அல்லது எப்போதும் ஒட்டக பாலில் தான் டீ குடிப்பீர்களா? :

என்னை வடிவேலு ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டீங்களே அருண். சும்மா வெள்ளாட்டுக்கு சொன்னேன்.

ஓமானில் இருந்தபோது ஒட்டகப்பால் குடித்திருக்கிறேன். நாங்கள் பணி செய்தது பாலைவனத்தில். வேலிக்கு அப்பால் ஓமான் பெண்கள் ஒட்டகப்பாலைக் கொண்டுவருவார்கள். அவர்களுக்கு எங்கள் பணியில் துண்டித்துப்போடும் மின் கம்பிகளைக் கொடுத்து பதிலுக்கு ஒட்டகப்பாலை வாங்கிக்குடிப்போம்.

ஒட்டகபாலின் விஷேஷம் அதை காய்ச்சாமல் குடிப்பதுதான். கறந்த சில நிமிடங்களிலேயே அதைக் குடிக்க வேண்டும். இல்லையென்றான் அதனுள் புழு உருவாகிவிடும். உடலுக்கு சூடு. இது தெரியாமல் முதல்முறை நிறையக் குடித்துவிட்டு பட்ட அவஸ்தை....யப்பா....ம்ஹீம்...சொல்ல முடியாது.

ஆனா டீயெல்லாம் போட்டுக்குடிக்க முடியாது. அதெல்லாம் நம்ம வடிவேலு அண்ணாச்சிதான் குடிப்பாரு!!!

அன்புரசிகன்
22-02-2009, 04:32 AM
சிவா அண்ணா... ஒரு சந்தேகம் எனக்கு... முன்பிருந்தே இந்திய சினிமாக்களில் துபாயில் எண்ணைக்கிணறு இருக்கு. ஒட்டகப்பால் குடிப்பாங்க என்றாங்களே.. உண்மையிலேயே முன்பு எண்ணைக்கிணறு இருந்ததா??? :D :D

ஐ.அ.இராச்சியத்தில் உள்ள மாநிலங்களில் துபாயில் எண்ணைக்கிணறுகள் இல்லை என்று இங்கு நான் வந்து கண்டுகொண்டது. கத்தாரில் உள்ளது. ஓமானில் உள்ளது. சவூதியில் உள்ளது. அதை எல்லாம் சினிமாவில் ஒரு படத்தில் கூட சொன்னதில்லை. :D :D :D

சரி சரி. சிவா அண்ணாவுக்கு துபாயில் எத்தனை கிணறுகள் (பொதுவாகவே) இருக்கிறது...? முடிய பிச்சிக்கிட்டு பதில சொல்லுங்க....

சிவா.ஜி
22-02-2009, 06:02 AM
ஆமா அன்பு. எனக்குத் தெரிஞ்சி துபாய்ல எண்ணைக்கிணறு இல்லை. ஆனா நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கு வளைகுடா நாடுன்னாலே துபாய்தான் தெரியும். மற்ற நாடுகளைப்பற்றி அவ்வளவா தெரியாது. இப்பகூட நான் எந்த நாட்டுல இருந்தாலும், அக்கம் பக்கம் இருக்கிறவங்க துபாய்ல இருக்கிறவர்ன்னுதான் சொல்றாங்க.

துபாய்ல எண்ணைக்கிணறே இல்லைங்கறபோது எனக்கு மட்டும் எப்படி இருக்கும்?

(முடியை பிச்சுக்க முடியாதே....தெரிஞ்சிக்கிட்டே இப்படி கேக்கறது குசும்புதானே?)

arun
22-02-2009, 04:30 PM
1.எனது முதல் கேள்வி சிவா அவர்களுக்கு

தாங்கள் துபாயில் இருப்பது அனைவரும் அறிந்ததே அதை சார்ந்து ஒரு கேள்வி

ஒரு முறையேனும் ஒட்டக பால் குடித்துள்ளீர்களா அல்லது எப்போதும் ஒட்டக பாலில் தான் டீ குடிப்பீர்களா? :

என்னை வடிவேலு ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டீங்களே அருண். சும்மா வெள்ளாட்டுக்கு சொன்னேன்.

ஓமானில் இருந்தபோது ஒட்டகப்பால் குடித்திருக்கிறேன். நாங்கள் பணி செய்தது பாலைவனத்தில். வேலிக்கு அப்பால் ஓமான் பெண்கள் ஒட்டகப்பாலைக் கொண்டுவருவார்கள். அவர்களுக்கு எங்கள் பணியில் துண்டித்துப்போடும் மின் கம்பிகளைக் கொடுத்து பதிலுக்கு ஒட்டகப்பாலை வாங்கிக்குடிப்போம்.

ஒட்டகபாலின் விஷேஷம் அதை காய்ச்சாமல் குடிப்பதுதான். கறந்த சில நிமிடங்களிலேயே அதைக் குடிக்க வேண்டும். இல்லையென்றான் அதனுள் புழு உருவாகிவிடும். உடலுக்கு சூடு. இது தெரியாமல் முதல்முறை நிறையக் குடித்துவிட்டு பட்ட அவஸ்தை....யப்பா....ம்ஹீம்...சொல்ல முடியாது.

ஆனா டீயெல்லாம் போட்டுக்குடிக்க முடியாது. அதெல்லாம் நம்ம வடிவேலு அண்ணாச்சிதான் குடிப்பாரு!!!

ஏதாவது ஒரு கேள்வியாவது கலகலப்பாக இருக்கட்டுமே என்று தான் கேட்டேன் எனது கேள்விக்கு நேரம் ஒதுக்கி பதில் கொடுத்தமைக்கு நன்றி

arun
22-02-2009, 04:33 PM
ஆமா அன்பு. எனக்குத் தெரிஞ்சி துபாய்ல எண்ணைக்கிணறு இல்லை. ஆனா நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கு வளைகுடா நாடுன்னாலே துபாய்தான் தெரியும். மற்ற நாடுகளைப்பற்றி அவ்வளவா தெரியாது. இப்பகூட நான் எந்த நாட்டுல இருந்தாலும், அக்கம் பக்கம் இருக்கிறவங்க துபாய்ல இருக்கிறவர்ன்னுதான் சொல்றாங்க.

துபாய்ல எண்ணைக்கிணறே இல்லைங்கறபோது எனக்கு மட்டும் எப்படி இருக்கும்?

(முடியை பிச்சுக்க முடியாதே....தெரிஞ்சிக்கிட்டே இப்படி கேக்கறது குசும்புதானே?)

ஆம் சரியாக சொன்னீர்கள் மக்களுக்கு துபாய் என்று தான் சொல்ல வருகிறது போய் வந்தவர்களுக்கு மட்டுமே வேறு வேறு நாடு என்று தெரிகிறது

தாமரை
24-02-2009, 02:20 AM
5.காந்தி அவர்களுக்கு

மன்றத்தில் உடனடி செய்திகள் மற்றும் பல செய்திகளை உடனுக்குடன் தருகிறீர்கள் அதற்கு ரொம்ப பொறுமை தேவை தங்களிடம் கேட்கும் கேள்வி என்னவெனில் பொறுமைக்கு ஏதேனும் ஓர் எல்லை உண்டோ?

6.நாட்டாமை அவர்களுக்கு

தங்களின் பெயர் காரணம் என்ன ? :D

8 . லீலுமா அவர்களுக்கு

பெண்கள் எப்போதுமே புரியாத புதிர் இது பல ஆண்களால் சொல்லப்படுகிறது இது உண்மையா? எதனால் இப்படி சொல்லப்படுகிரது என்று நினைக்கிறீர்கள் ?

9. ஆரென் அவர்களுக்கு

சிங்கப்பூர் ஒரு மினி சென்னையா ? கொஞ்சம் சொல்லுங்களேன்

நன்றி

விரைந்து வந்து பதில்தர வேண்டுகோள் விடுக்கிறேன்.

samuthraselvam
24-02-2009, 07:11 AM
தாமதத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன். நேரமின்மையால் தான் இந்த தாமதம்.

பெண்களை புரியாத புதிர் என்று நினைக்கும் ஆண்களில் நீங்களும் ஒருவர்தானே?

பொதுவாக பெண்கள் எந்த ஒரு விசயத்தில் முடிவெடுப்பதானாலும் அதை அலசி ஆராய்ந்து தான் இறுதி முடிவுக்கு வருவார்கள். சில விசயங்களில் அப்படி அல்ல. பெண்களின் மனம் என்ன நினைக்கும் என்பது யாருக்கும் புரியாது. சில சமயம் பெண்களுக்கே கூட..

மேலும் பெண்கள் அதிகம் பயப்படக்கூடியவர்கள். அதனால் அதிகம் யோசிப்பார்கள். அந்த யோசனையில் வந்த முடிவு என்பது ஆழமாக சிந்தித்தால் மட்டுமே உணரமுடியும். அப்படி ஆண்களால் அவ்வளவு ஆழமாக சிந்திக்க முடியாததினால் அவள் எடுத்த முடிவினால் அவர்களுக்கு புரியாததினால் அப்படி நினைக்கலாம்.

ஆழ் கடலும் அழுத்தமான பெண்ணும் ஒன்று தான். கடலை தூரத்திலிருந்து பார்த்தல் அதன் ஆர்பரிப்பு மட்டும் தான் தெரியும். ஆழ்கடலில் மூழ்கிப் பார்த்தால் தான் அதன் அமைதி புரியும். அதுபோல் பெண்களை மேலோட்டமாகப் பார்த்தால் புதிர் தான். அவளின் மன ஆழத்திற்கு சென்று பார்த்தால் தான் புரியும்.

ஒரு பெண்ணின் வலிகள், மனம் சார்ந்த கருத்துக்கள், சமூகத்திற்கு தான் சொல்ல வந்த விசயங்கள்,பெண்ணின் தேடல்கள், அவளின் நினைப்புக்கள் ஆகின ஆண்களின் கண்ணோட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும். பெண்ணின் இது மாதிரியான சிந்தனைகளை ஆண்கள் பெண்களின் கண்ணோட்டத்தின் வழியாக பார்க்க முடியாது.

மேலும் சில பெண்களுக்கு ஒருநிலையான மனம் இருப்பதில்லை.
மதில்மேல் பூனை போல் இருப்பவர்களும் உண்டு. சரியான நிலையான முடிவு எடுக்க முடியாமல் திணறுவார்கள். ஒரு சமயம் ஒருமாதிரி பேசுவார்கள், மற்றொரு சமயம் இன்னொருமாதிரி பேசுவார்கள். அந்த இடத்தில் இருக்கும் ஆண்களுக்கு 'என்னடா இது? இவ என்ன நினைக்கிறாள், என்ன எதிர்பார்க்கிறாள்' என்று புரியாமல் தடுமாறுவார்கள்.

இதனால் தான் சில பெண்களை புரியாத புதிர் என்று அவளை புரிந்துகொள்ள முயற்சி செய்யாத பல ஆண்களால் சொல்லப்படுகிறது. இது என்னுடைய எண்ணம்.

சிவா.ஜி
24-02-2009, 08:31 AM
இதனால் தான் சில பெண்களை புரியாத புதிர் என்று அவளை புரிந்துகொள்ள முயற்சி செய்யாத பல ஆண்களால் சொல்லப்படுகிறது. இது என்னுடைய எண்ணம்.

ரொம்ப சரியா சொல்லியிருக்கம்மா. புரிந்துகொள்ள முயற்சி செய்யாதவர்கள்தான் அப்படி சொல்லியிருப்பார்கள்.

நல்ல விளக்கம். பாராட்டுக்கள் லீலுமா.

தாமரை
24-02-2009, 10:24 AM
திரியின் 100வது பக்கத்தில் கேள்வி கேட்பதற்க்கு அழைத்த எல்லோருக்கும் நன்றி
10) உங்களுக்கு தமிழில் பிடித்த வார்த்தை என்ன? ஏன்?

:icon_rollout::icon_rollout::wuerg019:

மன்னிக்கவும் கடைசி கேள்வி தாமரைக்கு உரியது

எப்பவோ கேட்ட கேள்விதான். இப்பதான் கவனிச்சேன். ஒரு தனிமடல் போட்டிருக்கக் கூடாதா?

இந்தக்கேள்விக்கு டக்குன்னு என்ன பதில் சொல்றதுன்னு யோசிச்சேன். அம்மா, தமிழ் இப்படி சமாளிப்பு பதில்கள் எழுதவேணாம். அடிக்கடிச் சொல்லுற முருகா வேணாம்.. வாழ்க்கையில நான் அதிகம் பிடிச்சு உபயோகிச்ச வார்த்தையை யோசிக்கறேன்...

கல்லூரிக் காலங்களில் நான் மிக அதிகமா கவிதைகளை எழுதிய போது அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை கண்ணே..! :icon_ush:

கண் மேல எனக்கு எப்பவுமே ஒரு கண்ணு உண்டு.

கண் என்றால் இடம் என்றும் பொருளுண்டு. இடம் என்றால் இடப்பக்கம் என்றும் பொருளுண்டு. இடப்பக்கம் என்றாலே பெண்மைதான் நினைவுக்கு வரும்..

ஐம்புலன்களில் கண்ணின் பங்கு மிகப் பெரிது. மனிதர்கள் கண்ணிற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை மற்ற உறுப்புகளுக்கு அளிப்பதும் இல்லை.

ஆமா எனக்கு ஏன் கண் பிடிக்கும்?

அப்படித்தானே அம்மா நம்மளைக் கூப்பிடுவாங்க. :icon_rollout: அந்த வார்த்தையைக் கேட்கும் போது மனசுக்கு டக்குன்னு தைரியம் வரும்.

நம்மளை கண்ணே என்று அழைப்பவர்களும், நாம கண்ணே என்று அழைப்பவர்களும் நம்ம வாழ்க்கையையே அர்த்தமுள்ளதாக மாத்தறாங்க

கண் - ரொம்ப எளிமையான வார்த்தைதான்.. ஆனால் அதில் இணைந்து வரும் அன்பு, அக்கறை, பாதுகாப்பு உணர்ச்சி இதுக்காகவெல்லாம் சேர்த்து

கண் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

சிவா.ஜி
24-02-2009, 10:45 AM
கோவைப்பக்கம் தாய்மார்கள் அன்போடு கண்ணு என்று அழைக்கும்போது கண்ணீர் வந்துவிடும். மனசெல்லாம் நெகிழ்ந்துவிடும். அப்படியொரு ஆச்சர்ய வார்த்தை அது.

அழகா சொல்லியிருக்கீங்க தாமரை.

அய்யா
24-02-2009, 03:12 PM
நன்றி அருண்!

எனக்கும் பிடித்த வரிகள்தான் இவை... ஸ்பெஷல் காரணம் என்றெல்லாம் ஒன்றுமில்லை.. ரேடியோ மிர்ச்சி ஆரம்பித்த புதிது. நான் கவிதைகள் மெயில் செய்வேன். தேவா என்ற RJ அதை வானொலியில் பலமுறை வாசித்திருக்கிறார். தேவா காபி நேரம் என்ற காலைப்பொழுதினில் வரும் அந்த நிகழ்ச்சி! அதில் அவர் எனக்கு நன்கு பழக்கமானார். ஒருநாள் அவரை சந்திக்க அந்த ரேடியோ அலுவலகத்தில் போனேன். அப்பொழுது அடுத்த சில தினங்களில் நட்பு தினம் வர இருந்தது. அவர் என்னை ஒர் சொன்னார். சரி என்று நான் ஒரு நட்பு கவிதை எழுதினேன். கண நேரத்தில் என்று தான் ஆரம்பிக்கும் அந்த கவிதை. அந்த கவிதையின் முழுவடிவம் நான் தவறவிட்டுவிட்டேன்.. " மிகப்பெரிய பதிவியில் இருப்பவனையும் ஒருமையில் அழைக்கும் உரிமை இந்த உறவுக்குத்தான் உண்டு என்றெல்லாம் வரும்"

சரியாக நட்பின் தினம் அன்று அவர் எனக்கு செல்பேசியில் அழைத்து இன்னும் 5 நிமிடத்தில் நான் உங்களை அழைப்பேன். கவிதை தயார்செய்துகொள்ளுங்கள். அப்படியே வாசிக்கவேண்டும். ரிக்கார்டிங் ஆகப்போகிறது என்றார். எனக்கு லைவ் ரிக்கார்டிங் என்றதும் கை, வாய் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. நமக்கு இது புதிதாச்சே.. வேண்டாம்னு கூட சொல்லிடலாம்னு நினைச்சேன். சொன்னமாதிரி அடுத்த 5 நிமிடத்தில் என்னை அலைபேசியில் அழைத்து நான் ஸ்டார்ட் சொன்னதும் வாசிங்கனு சொன்னாங்க.... ஸ்டார்ட்....... கவிதை எப்படி சொல்லி முடிச்சேன்னு எனக்கே தெரியலை. அடுத்த ஒரு மணி நேரம் கழித்து வானொலியில் என் கவிதை குரலை நானே ரசித்தேன்... இது நடந்தது ரேடியோ மிர்ச்சி ஆரம்பித்த புதிதில்....

பழைய ஞாபகங்களை மீட்டெடுக்க உதவினீர்கள் நன்றி அருண்!

அடடே!

அப்போ வானொலி புகழ் ஷீ நிசி அண்ணா என்று சொல்லலாம்தானே?

சனரஞ்சகமான பதில் அண்ணா!

அய்யா
24-02-2009, 03:15 PM
1.எனது முதல் கேள்வி சிவா அவர்களுக்கு

தாங்கள் துபாயில் இருப்பது அனைவரும் அறிந்ததே அதை சார்ந்து ஒரு கேள்வி

ஒரு முறையேனும் ஒட்டக பால் குடித்துள்ளீர்களா அல்லது எப்போதும் ஒட்டக பாலில் தான் டீ குடிப்பீர்களா? :

என்னை வடிவேலு ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டீங்களே அருண். சும்மா வெள்ளாட்டுக்கு சொன்னேன்.

ஓமானில் இருந்தபோது ஒட்டகப்பால் குடித்திருக்கிறேன். நாங்கள் பணி செய்தது பாலைவனத்தில். வேலிக்கு அப்பால் ஓமான் பெண்கள் ஒட்டகப்பாலைக் கொண்டுவருவார்கள். அவர்களுக்கு எங்கள் பணியில் துண்டித்துப்போடும் மின் கம்பிகளைக் கொடுத்து பதிலுக்கு ஒட்டகப்பாலை வாங்கிக்குடிப்போம்.

ஒட்டகபாலின் விஷேஷம் அதை காய்ச்சாமல் குடிப்பதுதான். கறந்த சில நிமிடங்களிலேயே அதைக் குடிக்க வேண்டும். இல்லையென்றான் அதனுள் புழு உருவாகிவிடும். உடலுக்கு சூடு. இது தெரியாமல் முதல்முறை நிறையக் குடித்துவிட்டு பட்ட அவஸ்தை....யப்பா....ம்ஹீம்...சொல்ல முடியாது.

ஆனா டீயெல்லாம் போட்டுக்குடிக்க முடியாது. அதெல்லாம் நம்ம வடிவேலு அண்ணாச்சிதான் குடிப்பாரு!!!

//////// கறந்த சில நிமிடங்களிலேயே அதைக் குடிக்க வேண்டும். இல்லையென்றான் அதனுள் புழு உருவாகிவிடும். உடலுக்கு சூடு.///////

இதுவரை நான் அறியாத புதுத் தகவல் அண்ணா!

பகிர்ந்தமைக்கு நன்றி!

அறிஞர்
24-02-2009, 03:27 PM
//////// கறந்த சில நிமிடங்களிலேயே அதைக் குடிக்க வேண்டும். இல்லையென்றான் அதனுள் புழு உருவாகிவிடும். உடலுக்கு சூடு.///////

இதுவரை நான் அறியாத புதுத் தகவல் அண்ணா!

பகிர்ந்தமைக்கு நன்றி! இணையத்தில் சுட்ட தகவல்கள்..
பசு, எருமைப் பாலை விட ஒட்டக பால் மிகவும் சுகாதாரமானது. இவற்றின் பாலை விட ஒட்டக பாலில் 3 மடங்கு கால்சியம், விட்டமின் சி போன்றவை அதிகமாக உள்ளன.
ஒட்டகப் பாலின் மருத்துவ குணங்கள் அளவிடற்கரியது.

ஒட்டகப் பாலில் உள்ள மருத்துவ பலன்களில் ஆண்மையின்மையை போக்கும் பலனும் உள்ளது.

இந்திய சந்தையில் ஒட்டகப் பாலுக்கு உள்ள வரவேற்பைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக ராஜஸ்தான் பால் சங்கம் (ஆர்எம்எஃப்) அண்மையில் ஒட்டகப் பால் பாக்கெட்டுகள் விற்பனையை அறிமுகப்படுத்தியது.

தற்போது ஒட்டகப் பால் பாக்கெட்டுகள் ஜெய்ப்பூர், பிகானிர், புதுடெல்லி மற்றும் புதுடெல்லியில் உள்ள சராஸ் பால் கடைகளில் கிடைக்கின்றன.

வாடிக்கையாளர்களுக்கு ஒட்டகப் பாலின் மருத்துவ குணங்கள் தெரிந்திருந்த போதிலும், நகர்ப்புறங்களில் ஒட்டகப் பால் கிடைப்பதில்லை. தற்போது ஆர்எம்எஃப்-ன் சராஸ் கடைகளில் இது கிடைக்கிறது.

ஒட்டகப் பாலில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் தவிர ஆண்மையின்மையை போக்கக்கூடிய திறனுடன் சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில், ஒட்டகப் பாலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக ஆர்எம்எஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அய்யா
24-02-2009, 03:30 PM
மேலதிகத் தகவல்களுக்கு நன்றி அறிஞர் அண்ணா!!!

அய்யா
24-02-2009, 03:48 PM
மேற்சொன்ன சம்பவங்களில் நான் கற்றுக் கொண்டது. காதலில் நிதானமும் பொறுமையும் மிக முக்கியம். காதல் என்றால் அளவுகடந்த அன்பென்பர். ஆனால் பல தருணங்களில் காதலால் வீட்டார் நம் மேல் வைத்திருந்த அன்பு கெடுகிறது. நாம் அவர்கள் மேல் வைத்திருந்த அன்பும் குறைகிறது.

ஆதலினால் காதல் செய்வீர்.. அதனால் அன்புவெள்ளம் நம்மைச்சுற்றி எங்கும் பெருக்கெடுத்தால் மட்டும்.

நல்ல தெளிவான பதில் மதியண்ணா!

அசத்தலாக பதிலளிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே!

arun
24-02-2009, 04:15 PM
தாமதத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன். நேரமின்மையால் தான் இந்த தாமதம்.

பெண்களை புரியாத புதிர் என்று நினைக்கும் ஆண்களில் நீங்களும் ஒருவர்தானே?

மேலும் சில பெண்களுக்கு ஒருநிலையான மனம் இருப்பதில்லை.
மதில்மேல் பூனை போல் இருப்பவர்களும் உண்டு. சரியான நிலையான முடிவு எடுக்க முடியாமல் திணறுவார்கள். ஒரு சமயம் ஒருமாதிரி பேசுவார்கள், மற்றொரு சமயம் இன்னொருமாதிரி பேசுவார்கள். அந்த இடத்தில் இருக்கும் ஆண்களுக்கு 'என்னடா இது? இவ என்ன நினைக்கிறாள், என்ன எதிர்பார்க்கிறாள்' என்று புரியாமல் தடுமாறுவார்கள்.

.

ஆம் நான் கூட அப்படி தான் நினைக்கிறேன் அதற்கான பதிலையும் தாங்கள் கொடுத்து விட்டீர்கள்

தங்களது தெளிவான மற்றும் விளக்கமான பதிலுக்கு எனது நன்றி

arun
24-02-2009, 04:18 PM
அறிஞர் அவர்களின் மேலதிக தகவல்களுக்கு நன்றி

சென்னையில் கிடைத்தால் கூட நன்றாக தான் இருக்கும் ஆனால் ஒரிஜினல் ஒட்டக பால் கிடைக்குமா என்பது சந்தேகம் தான் ....

arun
25-02-2009, 07:00 PM
5.காந்தி அவர்களுக்கு

மன்றத்தில் உடனடி செய்திகள் மற்றும் பல செய்திகளை உடனுக்குடன் தருகிறீர்கள் அதற்கு ரொம்ப பொறுமை தேவை தங்களிடம் கேட்கும் கேள்வி என்னவெனில் பொறுமைக்கு ஏதேனும் ஓர் எல்லை உண்டோ?

6.நாட்டாமை அவர்களுக்கு

தங்களின் பெயர் காரணம் என்ன ?

9. ஆரென் அவர்களுக்கு

சிங்கப்பூர் ஒரு மினி சென்னையா ? கொஞ்சம் சொல்லுங்களேன்

உறவுகளே சீக்கிரம் தங்களின் பதில்களை தாருங்கள்

அமரன்
25-02-2009, 08:47 PM
அழைப்பை ஏற்று உடன் கேள்விக்கொத்தை தந்த ஆருனுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.
ரொம்ப எளிதான விஷயம் அருண், முதலில் மனிதனோட சிந்தனை முறையை பார்ப்போம்

http://i326.photobucket.com/albums/k413/stselvan/mind-process-1.gif

இதில் சிவப்பு வண்ணமிட்ட பாதைகளை அதிகமாக உபயோகிப்பதால்தான்.

என்னுடைய மிகப்பெரிய பலம் என்பது எனது நினைவு அடுக்குகளில் இருக்கிறது. காரணம், தகவல்கள் அடுக்கி வைக்கப்படும் முறை.

எந்த ஒரு சின்ன தகவல் என்றாலும், மனதில் உள்வாங்கிப் பதியும் பொழுதே பல கோணங்களில் அதை பார்த்து காட்சியாய் பதிவு செய்கிறேன். ஒவ்வொரு தகவலுக்கும் முப்பரிமாண வடிவம் தந்துதான் பதிகிறேன்.

எனவே அது சம்பந்தமான இன்னொரு தகவல் தட்டுப்படும் பொழுது முப்பரிமாணத்தில் முதல் தகவல் உள்ளதால் எப்படிச் சரியாகப் பொருந்துகிறது என எளிதில் புரிந்து விடுகிறது.. ஒரு தகவலைக் கொண்டு, அது சம்பந்தமான பல தகவல்களை மூளை நினைவடுக்குகளில் இருந்து எடுப்பது எளிதாக இருக்கிறது.

மனச் சிந்தனைச் செயலியின் - வெளிப்பாட்டை செயலாக்காமல் மனதிற்கு மீண்டும் அதை ஒரு உணர்வாக ஃபீட்பேக் (பின்னூட்டம்) செய்து சற்று முன்னே போகிறேன் - இது நடந்தால் இது, இது நடந்தால் இது ஒரு திரைப்படத்தையே கற்பனைக் காட்சிகளாக மூளையில் பதிகிறேன்

ஆழம் செல்லுதல். அதாவது மேலோட்டமாக பார்க்காமல் ஒரு மூன்று நான்கு அடுக்குகள் உள்ளே சென்று பார்க்கிறேன்.. என் மனதில் தோன்றும் இந்த கற்பனைத் திரைக்காட்சிகள் எண்ணத்தை எழுத்துகளாக்க உதவுகின்றன.

நான் எண்ணுவதில் எழுதுவது ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இருக்காது. இது எல்லோருக்கும் சாத்தியம்.. குழந்தைகளுக்கு கூட.. புரிந்து சாதகம் செய்தால்.

குழந்தைகளுக்கு இதை பழக்குதல் மிக எளிது. :icon_rollout: :icon_rollout: :icon_rollout: பெரியவர்களுக்கு இப்பாதைகள் உபயோகிக்கப்படாமல் இருந்தால் சிந்தனைத் தடைகள் இருக்கும். வழக்கமாக உபயோகிக்கும் மன - மூளை இணைப்புகளையே அதிகம் உபயோகிக்க விழைகிறோம். அதனால் மனத்தடைகள் உண்டு..

இதை அறியாமலேயே நான் பயின்றிருந்தாலும் அறிய வைத்தது குழந்தைகள்தான்.

இந்த சர்க்யூட் ஒவ்வொரு மனிதனிலும் உண்டு, உணர்ந்து உபயோகித்தால் போதும்.

கண்மணியின் எண்ணங்களும் மின்சாரமும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15275) கட்டுரையை இந்த வரைபடத்தில் மனம்-செயலியில் பொருத்திப் பார்க்கவும். :D:D:D

அண்மையில் ஆனந்த விகடனில் ஒரு கட்டுரையாளர் சிந்தனை என்பது கற்றுக் கொடுக்கப்படக் கூடியது என்ற கருத்துப்பட சொல்லி இருந்தார். எடுத்துக்காட்டுடன் விளக்கியும் இருந்தார். எனக்குத்தான் எதுவுமே புரியவில்லை. இந்த மரமண்டைக்கு இப்படி ஆணிபோலச் சொன்னாத்தான் புரியும் போல.

அமரன்
25-02-2009, 08:51 PM
" மிகப்பெரிய பதிவியில் இருப்பவனையும் ஒருமையில் அழைக்கும் உரிமை இந்த உறவுக்குத்தான் உண்டு என்றெல்லாம் வரும்"

எனக்கு அதிகம் பிடித்தது நட்பு. அதை உங்கள் கையெழுத்தாகக் கண்டபோது உங்களை இன்னும் அதிகம் பிடித்தது. நீங்கள் மேற்கோளிட்ட வரிகள் உண்மையானவை. இதனாலேயே சில குடும்பங்களில் குழப்பம் விளைந்ததும் உண்டு ~ தவறான புரிதலால்..

அமரன்
25-02-2009, 08:59 PM
காதலைப் பற்றி சொல்லி மதி உரைத்திருப்பது சிறப்பு.

இவ்வளவு சொன்னவன் என் கதையை மட்டும் சொல்லலேன்னு யாரும் வருத்தப்படக்கூடாதில்ல. ஏகப்பட்ட பேரை காதலித்திருக்கிறேன். ஆனால் யார்கிட்டேயும் காதலை சொல்லியதில்லை. அவ்ளோ பயம். அதே மாதிரி எந்த பொண்ணாவது என்கிட்ட கொஞ்சம் அந்நியோன்யமா பழக வந்தா.. அந்த இடத்திலேர்ந்து எடுப்பேன் பாருங்க ஒரு ஓட்டம். போலிஸ் ட்ரெயினிங்க்ல கூட அப்படி யாரும் ஓடிருக்க மாட்டாங்க.. அந்தளவுக்கு கோழை.. :D:D:D

நானெல்லாம் "முரளி" மாதிரி ஒரு மைலுக்கு அப்பால இருந்து பார்த்து உருகணும். அவ்ளோ தான். பக்கத்துல வந்துட்டா கை காலெல்லாம் உதற ஆரம்பிச்சுடும்..:icon_ush::icon_ush: (அதிகமா சொல்லிட்டேனோ..??:eek::eek:)

என்ன பண்ண.. வீட்டில அவ்ளோ ஸ்டிரிக்டு.. ஸ்டிரிக்டு.. ஸ்டிரிக்டு...:rolleyes::cool::cool:

ஹஹ்ஹா..
நான் கூட உங்களை மாதிரித்தான் மதி
எனக்கு வீட்ல ஒரே கடி. கட்டு அறுத்து விட்டும் எங்கும் கட்டுபட மாட்டேங்கிறியேன்னு.

அமரன்
25-02-2009, 09:07 PM
பார்வை இருக்கே,கிட்டத் தட்ட இப்ப விஜயகாந்தை அவர் பார்க்கிற மாதிரி..

நல்ல காலம் அவர் கவுண்டமணி இல்லை.. ;)

ஹஹ்ஹ்ஹா..

வானலை சிர்ப்பலை ஒரு ரகம் என்றால் அதை உங்கள் நடையில் எழுதியமை இன்னொரு ரகம். அதிலும் கடைசி வாக்கியம் ரசம்.

அமரன்
25-02-2009, 09:11 PM
ஓமானில் இருந்தபோது ஒட்டகப்பால் குடித்திருக்கிறேன். !!!

ஓமானிலா.. முடி.............................ல..

லீலுமா... சூப்பர்மா..

அன்புரசிகன்
26-02-2009, 12:58 AM
ஓமானிலா.. முடி.............................ல..

Blease. (Please) தயவு செய்து முடி ஐ பற்றி கதைக்காதிக்க. அது Bigi Braableeam (Big Problem) . (சிவா அண்ணா... இத ஒரு அரபியின் ஸ்டைலில் படித்துப்பாருங்கள்... அவர்களுக்கு P என்ற உச்சரிப்பு வராது):lachen001:

samuthraselvam
26-02-2009, 08:58 AM
ரொம்ப சரியா சொல்லியிருக்கம்மா. புரிந்துகொள்ள முயற்சி செய்யாதவர்கள்தான் அப்படி சொல்லியிருப்பார்கள்.

நல்ல விளக்கம். பாராட்டுக்கள் லீலுமா.

நன்றி அண்ணா.. ஒரு விசயத்தை என்ன என்று தெரியும் முன்பு "அது என்னவாக இருக்கும்?. அது எப்படி இருக்கும்?. ஏன் இப்படி இருக்கு? இப்படித்தானோ? அப்படித்தானோ?" என்ற எதிபர்ப்புக்களும் குழப்பங்களும் அதிகமாக இருக்கும். ஆனால் அதைப் பற்றி தெரிந்தபின் "அட இதுதானா..! இதைப்போய் என்னமாய் கற்பனை செய்தேன்!" என்று இருக்கும். அதுபோல்தான் எதையும் உண்மையாக அறிய முற்படும் போது அது எளிதாக புரியும். பெண்ணின் மனம் மட்டுமல்ல. இது எல்லா விஷயத்துக்கும் தான்.

நிரன்
28-02-2009, 10:00 AM
ஹிம் இன்னும் 3 பேர்!

நாட்டாமை எஸ்கேப் ஆகிட்டார்:D

மீதி2 போரும் திரிப்பக்கமே எட்டிப்பார்க்கல்ல...

கொஞ்சம் விரைவில் பதில் வந்தால் அடுத்த ஆ10 ற்கு கேள்வி தொடுக்க invite பண்ணலாமே:D

அமரன் அண்ணா.. சொல்லுங்க முடிவ..

mgandhi
01-03-2009, 04:32 AM
காந்தி அவர்களுக்கு

மன்றத்தில் உடனடி செய்திகள் மற்றும் பல செய்திகளை உடனுக்குடன் தருகிறீர்கள் அதற்கு ரொம்ப பொறுமை தேவை தங்களிடம் கேட்கும் கேள்வி என்னவெனில் பொறுமைக்கு ஏதேனும் ஓர் எல்லை உண்டோ?

அனைவரும் மன்னிக்கவும்.. தாமதித்தர்க்கு (பொறுமைக்கு)
பொறுமை கடலினும் பெரிது, பொறுத்தவர் பூமியாள்வார்....
என்ற பழமொழிகள் எல்லாம் பொறுத்தவரின் மேன்மையை உணர்த்துவதாகும்.
காந்தியடிகள் அத்தகைய மேன்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்.
தொழிலின் காரணமாகத் தென்னாப்பிரிக்காவிற்குச் சென்றுவிட்டு இந்தியாவிற்கு வந்திருந்தபோது, பத்திரிக்கையாளர்கள் தென் ஆப்பிரிக்காவின் நிலையைப் பற்றி கேட்டனர்.
அப்பேட்டியில் தென் ஆப்பிரிக்காவைப் பற்றி எவ்வித குறைபாடுமின்றி காந்தியடிகள் கருத்தளித்திருந்தார். அப்படியிருந்தும், அந்நாட்டுப் பத்திரிக்கைகள் தென் ஆப்பிரிக்காவைப் பற்றிக் காந்தியடிகள் மிக மோசமாகப் பேட்டியளித்ததாகக் கட்டுரைகள் வெளியிட்டன. ஆகவே, இச்செய்தி அந்நாட்டு மக்களிடம் காந்தியடிகள் மீது வெறுப்பினைத் தோற்றுவித்திருந்தது.
இந்த விவரத்தை அறியாத காந்தியடிகள் மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்குக் கப்பலில் சென்று இறங்கியபோது, அடையாளம் கண்டு கொண்ட சிலர், அவரை வழி மறைத்தனர். அடுத்த நிமிடத்தில் ஆளுக்கு ஆள் அடிக்கத் தொடங்கினர். அடிகளைத் தாங்க முடியாத காந்தியடிகள் அருகிலிருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டு சாய்ந்தார். அந்த நிலையிலும் விடாது அவர் மீது, கற்களைக் கொண்டு வீசத் தொடங்கினர். அந்த நேரத்தில் அவ்வழியே வந்த காவல் அதிகாரியின் மனைவி ஒருவர், தன் கைக்குட்டையால் கல் எறிதலைத் தாங்கிக் கொண்டு, காந்தியடிகளையும் எவரும் அடிக்க முடியாத அளவில் குறுக்கே நின்று காத்து நின்றார்.
இவ்விஷயம் காவலர்களுக்குத் தெரிய வரவே, அவ்விடம் நோக்கி விரைந்து வந்தனர். காவலரைக் கண்டதும் காந்தியடிகளைத் தாக்கியவர்கள் ஓடிவிட்டனர்.காவலர் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்று, அவரைத் தாக்கியவர்களைப் பற்றி புகார் எழுதிக் கொடுக்கச் சொல்லினர்.
“வேண்டாம் அய்யா, அவர்கள் உண்மை நிலவரம் தெரியாது ஆத்திரப்பட்டு அடித்துவிட்டனர். உண்மை நிலவரம் அறிந்தபின்பு ஆத்திரப் பட்டவர்களெல்லாம் வருந்த நேரிடும். அதனால் எனக்கு யார் மீதும் கோபமோ – வெறுப்போ இல்லை. அவர்கள் மீது புகார் கொடுக்கவும் விருப்பமில்லை அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காது விட்டு விடுங்கள்,” என்று காந்தியடிகள் கூறிவிடடார்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
– குறள்

பொறுமைக்கு எல்லை என்பதே இல்லை அது அவர் அவர் மன வலிமை யை பொருத்தது.

நிரன்
01-03-2009, 12:11 PM
உங்களின் பதில்கள் வரும் என எதிர் பார்கவேயில்லை, எனது அவ்வென்னத்தை முறியடித்துவிட்டீர்கள்.

இந்தியாவின் தெய்வங்களில் ஒன்றான காந்தியடிகளைப்பற்றி எமக்கும் அறியந்தந்து
பொருமைக்கு எல்லையே இல்லை என்ற உங்கள் பதில் மிக அருமை.

உங்கள் பதிலுக்கு தலைவணங்குகிறேன் மோகன் காந்தி அவர்களே!

நன்றிகள் கோடி.

அய்யா
01-03-2009, 02:38 PM
நன்றி மோகன் காந்தியண்ணா..!

தங்கள் செய்திச் சேவை மகத்தானது!. அதுவும் தினம் தவறாது அளிப்பதற்காக தாங்கள் செலவிடும் நேரமும் உழைப்பும் வெறும் வார்த்தைகளால் அளவிட இயலாது!

காந்தியார் பற்றிய சம்பவத்தைச் சொல்லி, பொறுமைக்கு இலக்கணம் கற்றுத்தந்துள்ளமை பாராட்டத்தக்கது!

என்றும் உங்கள் சேவை எங்களுக்குத் தேவை!!

ரங்கராஜன்
01-03-2009, 02:46 PM
வாழ்த்துக்கள் காந்தி அவர்களே
நான் மன்றம் சேர்ந்ததில் இருந்து கவனித்து வருகிறேன், சரியாக இரவு குறிப்பிட்ட நேரத்துக்கு வருவார், செய்திகளை தருவார். மன்றத்தில் இவர் ஒரு ஆச்சர்யம், எந்த எதிர்பார்ப்பும் இன்றி இவர் செய்யும் பணி, இவர் மன்றத்தின் மீது வைத்து இருக்கும் அக்கறையும் ஈடுபாட்டையும் காட்டுகிறது, தொடருங்கள் காந்தி, வாழ்த்துக்கள்

mgandhi
01-03-2009, 04:12 PM

மிக்க நன்றி daks

mgandhi
01-03-2009, 04:16 PM
நன்றி மோகன் காந்தியண்ணா..!

தங்கள் செய்திச் சேவை மகத்தானது!. அதுவும் தினம் தவறாது அளிப்பதற்காக தாங்கள் செலவிடும் நேரமும் உழைப்பும் வெறும் வார்த்தைகளால் அளவிட இயலாது!

காந்தியார் பற்றிய சம்பவத்தைச் சொல்லி, பொறுமைக்கு இலக்கணம் கற்றுத்தந்துள்ளமை பாராட்டத்தக்கது!

என்றும் உங்கள் சேவை எங்களுக்குத் தேவை!!

மிக்க நன்றி அய்யா

mgandhi
01-03-2009, 04:17 PM
உங்களின் பதில்கள் வரும் என எதிர் பார்கவேயில்லை, எனது அவ்வென்னத்தை முறியடித்துவிட்டீர்கள்.

இந்தியாவின் தெய்வங்களில் ஒன்றான காந்தியடிகளைப்பற்றி எமக்கும் அறியந்தந்து
பொருமைக்கு எல்லையே இல்லை என்ற உங்கள் பதில் மிக அருமை.

உங்கள் பதிலுக்கு தலைவணங்குகிறேன் மோகன் காந்தி அவர்களே!

நன்றிகள் கோடி.
மிக்க நன்றி நிரன்

சிவா.ஜி
01-03-2009, 04:17 PM
மோகன் காந்தி அவர்களின் செய்திப்பறிமாறல் மிகச் சிறந்த சேவை. தவறாது அவர் அளித்து வரும் இந்த சேவைக்கு நான் தலை வணங்குகிறேன். பொறுமையின் எல்லை அவரவரைப் பொறுத்தது என பொருத்தமான பதில் அளித்த உங்களுக்கு பாராட்டுக்கள்.

mgandhi
01-03-2009, 04:58 PM
மோகன் காந்தி அவர்களின் செய்திப்பறிமாறல் மிகச் சிறந்த சேவை. தவறாது அவர் அளித்து வரும் இந்த சேவைக்கு நான் தலை வணங்குகிறேன். பொறுமையின் எல்லை அவரவரைப் பொறுத்தது என பொருத்தமான பதில் அளித்த உங்களுக்கு பாராட்டுக்கள்.

மிக்க நன்றி சிவா.ஜி

அமரன்
02-03-2009, 07:37 AM
அருமையான எடுத்துக்காட்டுடன் பொறுமையின் பெருமையை குறுகத்தறித்த குறள்போல் சொல்லிவிட்டீர்கள். பாராட்டுகளும் நன்றியும் உரித்தாகட்டும் காந்தி அவர்களே!

அமரன்
02-03-2009, 07:45 AM
சிறந்த வினாக்கணைகளை தொடுத்து சிறந்த பதில்களை கொய்ந்து தந்த ஆருனுக்கு நன்றி.

ஆழமான சிந்தனையுடன் பதில்களைத் தந்தவர்களும் தர இருப்பவர்களும் நெஞ்சார்ந்த நன்றி

பதில்களைச் சுவைத்து, திரிக்கு நெய் கூட்டி சுடரைப் பிரகாசிக்க வைத்த அனைவருக்கும் நன்றி.

இன்னும் இருவர் பதில் அளிக்க வேண்டிய நிலையில் அடுத்த கேள்வியாளராக லீலுமா அவர்களை அழைக்கிறேன்.

ஆருனின் கேவிக்க பதிலளிக்காத இரு அன்பர்களும் பதிலலளிக்க வேண்டுகிறேன்.

நிரன்
02-03-2009, 01:50 PM
லீலுமா வாங்க வந்து உங்க கைவரிசைக் காட்டுங்க :)

(யாரோட தொப்பி பறக்கப்போதோ:D)

arun
04-03-2009, 02:28 AM
காந்தி அவர்களுக்கு

அழகான எடுத்துக்காட்டுடன் பொறுமைக்கு எல்லையே இல்லை என அருமையாக எடுத்து சொல்லி உள்ளீர்கள்

தங்களின் பொறுமை நாங்கள் அனைவரும் அறிந்ததே தங்களின் பதிலுக்கு எனது நன்றி மன்றத்தில் தங்களின் சேவை இடையறாது தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

samuthraselvam
05-03-2009, 08:51 AM
[QUOTE]லீலுமா வாங்க வந்து உங்க கைவரிசைக் காட்டுங்க :)

யாரோட தொப்பி பறக்கப்போதோ:D

அப்படி எல்லாம் கஷ்டமான கேள்வி கேட்டு தொல்லை கொடுக்க மாட்டேன்.
சுலபமா பதில் சொல்லுற மாதிரி கேள்விதான் கேட்பேன்.
சின்னப்புள்ளத் தனமா இருந்தா சகிச்சுட்டு பதில் சொல்லுங்க மக்களே...!

samuthraselvam
05-03-2009, 08:57 AM
அனைவருக்கும் வணக்கம்..

"♔. ஆ! 10! ♔. அழைக்கிறது!..! " இந்தத்திரியில் என்னை கேள்வி கேட்க அழைத்ததற்கு நன்றி...!

நிரன் சொன்னது போல் கஷ்டமான கேள்வியெல்லாம் கிடையாது. ரொம்ம்ம்ப சுலபமான கேள்விகள் தான். இன்னும் நிறையப் பேரை கேட்க கேள்விகள் உள்ளது. முதலில் பத்து பேர் என்பதால் அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கு போது மற்றவரைக் கேட்கிறேன். சரி கேள்விகளுக்கு போகலாமா?

1. தாமரை அண்ணாவிற்கு முதல் கேள்வி....
நீங்கள் ஒரு கேள்விக்கு பதில் கொடுத்தால் அந்தப்பதில் படிக்கும்போது புரிவது போலவும் பின் படித்ததை நினைவு படுத்திப் பார்த்தல் புரியாத மாதிரி (சூப்பர் ஸ்டார் மாதிரி) இருக்கே அதன் ரகசியம் என்ன? மேலும் நீங்கள் குவாண்டிட்டி ஈட்டர் இல்லை குவாலிட்டி ஈட்டர் என்று சிவா.ஜி அண்ணா சொல்லி இருக்கிறார். அதனால் விளைந்தது இந்தக்கேள்வி. ஒருவரிடம் இல்லாத விசயத்தைதான் அவர்களால் அதிகம் பேசப்படுகிறதா?

2. சிவா.ஜி அண்ணாவுக்கு,
ஒரு மனிதனை மாமனிதன் ஆக்குவது எது? வாழ்வில் வளர எப்படி செயல்பட வேண்டும்?

3. ஆதி அண்ணாவுக்கு அடுத்த கேள்வி,
மனம் எப்போது முதிர்ச்சி அடைகிறது?
போதும் என்ற மனம் வர என்ன செய்ய வேண்டும்?

4. அடுத்து ஓவியா அக்காவுக்கு,
பெண்களை உயரவிடாமல் தடுப்பது ஆண்களா? அல்லது பெண்களேவா?
பெண்கள் ஆண்களுக்குச் சமம் என்ற கருது பற்றிய தங்களின் எண்ணம் என்ன?

5. அடுத்து அறிஞருக்கு,
பெண்களைப் பற்றிய தங்களின் அதாவது ஆண்களின் எண்ணம் என்ன?
பெண்ணடிமை இன்னும் உள்ளதா? அல்லது காலம் மாறி ஆண் அடிமை வந்துவிட்டதா?

6. லோஷன் அண்ணாவுக்கு அடுத்த கேள்வி,
நாம் நாமாக இருக்க செய்யவேண்டியது என்ன?
மனிதனுக்கு தன்னடக்கம் + தன்னம்பிக்கை எவ்வளவு முக்கியம்?

7. அடுத்து சசிதரன் அண்ணாவுக்கு,
தனிமை ஒரு மனிதனை எப்படியெல்லாம் யோசிக்கவைக்கும்?
எந்தத் தருணத்தில் ஒரு மனிதனுக்கு தனிமை மிக அவசியம் என்று நினைக்கிறீர்கள்?

8. அடுத்து தக்ஸ் அண்ணாவுக்கு,
இந்த அவசர உலகில் பாசத்தைப் பற்றிய உங்களின் கருத்து என்ன?
நேசத்தின் எல்லை எதுவரை?
தொல்லை என்று நீங்கள் நினைக்கும் அல்லது தொல்லை கொடுக்கும் உறவுகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ரத்த பாசம் மட்டும் தான் உண்மையான பாசமா?

9. ஆதவா அவர்களுக்கு,
நம் மன்றத்து அங்கத்தினரை எல்லாம் ஒரே இடத்தில் சந்தித்தால் யார்யாரிடம் என்னென்ன கேள்விகளை கேட்பீர்கள்? ஒரு பட்டியல் கொடுக்கவும்.

10. அமரன் அவர்களுக்கு அடுத்த கேள்வி,
உங்களை பிரம்மிக்க வைத்த ஒரு நபர் பற்றி...

அனைவரும் விரைவில் வந்து பதிலளிக்க வேண்டுகிறேன்.

நிரன்
05-03-2009, 10:20 AM
கேள்விகளைத் தொகுத்த லீலுமாவுக்கு என் நன்றிகள்.
உங்கள் கேள்விகள் அனைத்தும் அழகாக உள்ளது.

ஓவியா அக்கா சில காலமாக மன்றத்திற்கு வருவது குறைந்ததனால் அவரின் கேள்விக்கு பதில் வருமோ தெரியவில்லை.

சரி சரி மற்ற எல்லாரும் வரிசையா வாங்க பதிலளிக்க.இம்முறையும் அமரூ நழுவிக் கொண்டு போகும் பதில்தானோ:rolleyes:

பதிலளிக்கவிருக்கும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.. நழுவலாம் என்று நினைக்கிறவங்களுக்கு :waffen093: சொல்லிப்புட்டன்

தாமரை
05-03-2009, 10:53 AM
1. தாமரை அண்ணாவிற்கு முதல் கேள்வி....
நீங்கள் ஒரு கேள்விக்கு பதில் கொடுத்தால் அந்தப்பதில் படிக்கும்போது புரிவது போலவும் பின் படித்ததை நினைவு படுத்திப் பார்த்தல் புரியாத மாதிரி (சூப்பர் ஸ்டார் மாதிரி) இருக்கே அதன் ரகசியம் என்ன? மேலும் நீங்கள் குவாண்டிட்டி ஈட்டர் இல்லை குவாலிட்டி ஈட்டர் என்று சிவா.ஜி அண்ணா சொல்லி இருக்கிறார். அதனால் விளைந்தது இந்தக்கேள்வி. ஒருவரிடம் இல்லாத விசயத்தைதான் அவர்களால் அதிகம் பேசப்படுகிறதா?
.

சூப்பர் ஸ்டார் பதிலுக்கும் என்னோட பதிலுக்கும் ஒப்பிட முடியாது..

நான் எழுதுவது என் எண்ணங்கள் அவ்வளவுதான் அதைப் படிக்கும் போது ஒரு ரோலர் கோஸ்ட் ரைட் போற மாதிரி இன்பமா இருக்கும். ரைட் போயிட்டு வந்த பின்னால எத்தனை டர்ன், எவ்வளவு உயரம், எவ்வளவு வேகம், எவ்வளவு நேரம்னு யோசிச்சுப் பார்த்தா ஒண்ணும் புரியாது,

ரோலர் கோஸ்டர் மாதிரி நான் ஒரே திசையில சீரான வேகத்தில போறது கிடையாது. சில விஷயங்களை ரொம்ப விலாவரியா பேசறேன்.. சில விஷயங்களை பயங்கர வேகத்தில் கடந்து போயிடறேன்..

தப்பு என் பேரில்தான். இதை மற்றவர்கள் புரிஞ்சிக்க முடியுமா என்று நான் யோசிப்பதில்லை. இருப்பதை கொட்டி விடுகிறேன்..

போன பதிலுக்கு கூட பாருங்க, பெரிசா எழுத வேணாம்னு படம் போட்டு காட்டினேன்.. அதில இருக்கிற ஒவ்வொரு அம்புக்குறியிட்ட பாதையிலும் நாம பயணம் போயி உள்ள சுத்திப் பார்த்தாதான் புரியும். ஆனால் யாருக்கு டயம் இருக்கு?

அதில்லாம இன்னொரு அடிப்படைக் காரணமும் இருக்கு, காரணம் நாம பள்ளியில் படித்து வளர்ந்த வகை.

பள்ளியில் எத்தனை பாடங்களை புரிஞ்சு படிச்சிருப்போம்?

எங்க கணக்கு வாத்தியார் கொஞ்சம் என்னை வித்தியாசமாத்தான் டீல் பண்ணுவாரு.. எதாவது ஒரு தியரத்தை கொடுத்து இது தப்புன்னு புரூஃப் பண்ணு என்பாரு..

சில சமயங்களில் அந்த தியரங்களின் லிமிட்டேஷனைக் கண்டு பிடிச்சுக் கொடுத்திருக்கேன். சில சமயம் ஏன் தப்பாகாது அப்படின்னு விலாவாரியா சொல்லி இருக்கேன்... இப்படிக் கோக்கு மாக்கா சிந்திச்சே பழகின மனசு.. மனசில எத்தனை பாதைகள் இருக்கோ அத்தனையிலும் நடந்து பழகிய மனசு.. சின்ன சின்ன விஷயத்திலும் ஆழம் பார்க்க துடிக்குது..

உதாரணமா,

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

இதைப் படிச்சா, உடனே பொதுவா, படிப்பதை தெளிவா பிழையில்லாம படிக்கணும். கற்று முடித்த பின்னால் அதில் அறிந்த அறிவின் படி வாழவேண்டும் அப்படின்னு சொல்லிட்டு அடுத்த குறளுக்கு ஓடிப்போவங்க..

நான் கசடற என்றால் பிழையில்லாமல் என்று ஒரு அர்த்தம்.. அழுக்கு நீங்க என்று ஒரு அர்த்தம். நம் அறியாமை, மூட நம்பிக்கைகள், தவறான கருத்துக்கள் போன்ற கசடுகள் அற.. நமது மனம் தெளிவு பெற தெளிவா படிப்பது முக்கியமா இல்லை தெளியப் படிக்கிறது முக்கியமா? நாம படிப்பதால் மனம் தெளிவடைய வேண்டும் . குழம்பக் கூடாது.

இப்படி பல அர்த்தங்களைப் பார்த்து அதில் எனக்குப் பொருத்தமா படறதை எடுத்துப் போடறேன்.

கேள்விப்படாத விஷயங்கள். புது விஷயங்கள், நம்முடைய மேல் நினைவடுக்குல இருக்கும். பழகின விஷயங்கள் மெல்ல அடித்தட்டுக்குப் போகும்.

இதைப் பற்றி விளக்கம், இருக்கும் லிங்கைப் இப்போது இணைத்து விட்டேன்.. (:D)

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=151378&postcount=139

நான் எழுதுவது புதுமையாக இருப்பதால் அப்போதைக்கு புரிகிறது. ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு மறந்து போகிறது. என்னுடைய எழுத்துக்களை நிறையப் படிச்சவங்களுக்கு பசு மரத்தாணி போல பதியும். வேணும்னா அமரன், பென்ஸ், மதி போன்றவர்களை கேட்டுப்பாருங்க..

எல்லாவற்றையும் மறந்திட்டு இதை மட்டும் ஞாபகம் வச்சிக்குங்க..

சந்து பொந்துகளில் ஒரு பயணம் போனால் வந்த வழி மறந்து போவது போல நான் எழுதியதை மறந்து விடுகிறீர்கள்

நான் எழுதும் ஸ்டைல் பொதுவாக படிக்கக் கிடைக்காதது. சிந்தனைகளின் கோணங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. அதனால் படிக்கும் போது புரிந்தது அப்புறம் குழப்புகிறது.

ஒரு கருத்தை மட்டும் ஒரே கோணத்தில் மட்டும் எழுதினால் மனதில் நிற்கும்.

தேசிய நெடுஞ்சாலையில் போற மாதிரி.

நான் அப்படி எழுதுவதில்லை. இதுதான் காரணம்,

இரண்டாம் கேள்வி.. சாப்பாட்டு விஷயம்.. அடுத்த பதிவாக எழுதுகிறேன்

தாமரை
05-03-2009, 11:51 AM
1. தாமரை அண்ணாவிற்கு முதல் கேள்வி....
நீங்கள் நீங்கள் குவாண்டிட்டி ஈட்டர் இல்லை குவாலிட்டி ஈட்டர் என்று சிவா.ஜி அண்ணா சொல்லி இருக்கிறார். அதனால் விளைந்தது இந்தக்கேள்வி. ஒருவரிடம் இல்லாத விசயத்தைதான் அவர்களால் அதிகம் பேசப்படுகிறதா?
.

அதை சிவாஜி சொல்லலை. நான்தான் சொன்னேன்.

தன்னிடம் இல்லாததைப் பற்றிக் கவலைப் படுவது பொதுவான மனித குணம். ஆனால் அந்த மனித குணத்திற்கும் நான் சாப்பாட்டைப் பற்றி பேசுவதற்கும் சம்பந்தம் இல்லை..

100 பேர் வரவேண்டிய பார்ட்டிக்கு 99 பேர் வந்தா வராத ஒருத்தரைப் பற்றிப் பேசி பாதிப் பொழுது ஓடிப்போயிரும்.

இல்லாத ஒன்றைப் பற்றி அடிக்கடிப் பேசுகிறவர்கள் அதை அடைய ஆசைப்படுகிறார்கள். அதனால்தான் அதைப் பற்றி பேசுகிறார்கள். நமக்கு கிடைக்காது என்று முடிவு செய்துவிட்டதைப் பற்றி நாம் பேச விரும்புவதில்லை

ஆனால் இதற்கும் சமையல் சாப்பாடு பற்றி நான் பேசுவதற்கும் சம்பந்தமில்லை.

நான் சாப்பாட்டை பற்றி மிகவும் சிலாகித்துப் பேசுவதற்கு காரணம் ..

சற்று யோசிச்சுப் பாருங்க,,, மனுஷன் எதை எதை எப்படி எப்படி சமைச்சு சாப்பிடலாம் என ருசி ருசியா எவ்வளவு ஆராய்ட்சி செய்து கண்டு பிடிச்சிருக்கான் பாருங்க.

சமையலில் உள்ள நுட்பங்கள். மருத்துவமும் ருசியும் கலந்த அறிவியல் சமையல்.

ஆறு வருஷம் சமயலை ஒரு கடமையாப் பார்க்காம, ஒரு பொழுது போக்கா பார்க்காம இரசிச்சு, அனுபவிச்சு கற்றுக் கொண்ட நுட்பங்கள் அதனால் ஏற்படும் வியப்புகள் இப்படி கடவுளை எப்படி வியக்கிறோமோ, நமக்குப் பிடிச்ச தலைவர்களை எப்படி வியக்கிறோமோ இன்னும் சரியாச் சொல்லப்போனா, காதலி ஐஸ்கிரீம் சாப்பிட்டா அதிகம் சிலிர்ப்பது ஐஸ்கிரீமா அவல் உதடுகளா என சிலிர்க்கும் காதலனைப் போல (:D) அப்படி நான் வியப்பதால் அதிகம் அதைப் பற்றிப் பேசறேன். கிடைக்காததால் இல்லை..

பொழிப்புரை: ஒரு விஷயத்தைப் பற்றி அதிகம் பேசணறம்னா

1. அந்த விஷயம் ரொம்பப் பிடிச்சு இருக்கணும்.
2. கண்ணுக்கெட்டின தூரத்தில ஆனா கைக்கெட்டாத தூரத்தில இருக்கணும்

நான் சாப்பாடு விஷயத்தில் காட்டும் இரசனைக்கு இந்தப் பதில் பொருந்தாது, அது ஒரு மாதிரி பக்திப் பரவசம். இறைவா உன் கருணையே கருணை அப்படின்னு கண்ணீர் விட்டு பரவசம் ஆவாங்க இல்லையா? அந்த உணர்ச்சி.

ஆதவா
05-03-2009, 03:46 PM
ஆ10ல் அழைத்தமைக்கு நன்றி சகோதரி.
ஒரே இடமாக அல்லாமல் அங்கங்கு சந்திப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. அனைவரும் ஒரே இடத்தில் கூடுவது என்பது தமிழ்மன்றத்தினரால் இயலாத காரியம்.. எதிர்காலத்தில் நிகழலாம். பெரும்பாலும் கேட்கவேண்டிய கேள்விகளை மன்றத்திலேயே கேட்டுவிடுகிறோம்... நேரில் கலாய்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. மற்றபடி கேட்க நினைக்கும் கேள்விகள் என்று மனதில் ஏதும் இல்லை.
நான் முன்பின் தெரியாத நபராக இருந்தாலும் பார்த்தவுடன் முதலில் கேட்கும் கேள்வி : நல்லா இருக்கீங்களா./// என்பதுதான்..

சசிதரன்
05-03-2009, 04:00 PM
ஆ 10 -ல் அழைப்பு விடுத்ததற்கு நன்றி சகோதரி... உங்கள் அனைத்து கேள்விகளும் அருமை... கடந்த இரண்டு நாட்களாக ஒரு பெரிய அலுவலக சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறேன்... கூடிய விரைவிலேயே பதிலுடன் வருகிறேன்...:)

சிவா.ஜி
05-03-2009, 04:03 PM
2. சிவா.ஜி அண்ணாவுக்கு,
ஒரு மனிதனை மாமனிதன் ஆக்குவது எது? வாழ்வில் வளர எப்படி செயல்பட வேண்டும்?

என்னையும் ஆ 10 ல் அழைத்ததற்கு நன்றி தங்கையே.

இப்போதைய காலக்கட்டத்தில் முதலில் மனிதனாக இருக்கவே பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது. பிறகுதான் மாமனிதர். என் அறிவுக்கு எட்டியவரை சொல்ல முயற்சிக்கிறேன். என்னைவிட மிகப்பெரிய சான்றோர் இந்த மன்றத்தில் உண்டு. அவர்கள் இன்னும் அழகாக சொல்லுவார்கள்.

மாமனிதனாக முக்கியத் தகுதியாக நான் கருதுவது...சொல்லும் செயலும் ஒன்றாய் இருக்கவேண்டும். பாரபட்சமில்லாத பார்வை வேண்டும். அனைவரையும் அங்கீகரிக்கவேண்டும். மனதில் அழுக்கு இருக்கக்கூடாது. தன்னைப்பற்றி மட்டும் சிந்திக்காமல் மற்றவரைப்பற்றியும் சிந்திக்க வேண்டும். தவறு செய்யக்கூடாது...தவறி செய்தால் மன்னிப்புக்கேட்க தயங்கக்கூடாது. அதேபோல மன்னிக்கவும் தயங்கக்கூடாது.

விருமாண்டி படத்தில் கமல் சொல்வதைப்போல மன்னிப்புக் கேக்கறவன் மனுஷன், மன்னிக்கிறவன் மாமனுஷன்.

அடிக்கடி தன்னை ஆத்மபரிசோதனைக்கு ஆட்படுத்திக்கொள்ள வேண்டும். கோழையாக வேதாந்தம் பேசாமல் கொடுமை கண்டு ரௌத்திரம் கொள்ள வேண்டும்.
எல்லா மனிதர்களையும், அவர்களின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும்.

என் அறிவுக்கு எட்டியதை மட்டுமே இங்கே சொல்லியிருக்கிறேன்.

அடுத்த கேள்விக்கு சுருக்கமாகவே சொல்கிறேன். பிரச்சனைகளே வரக்கூடாது என நினைப்பவன் வாழ்க்கையில் வெற்றியடைவதில்லை. எந்தப்பிரச்சனையையும் எதிர்கொண்டு முறியடிப்பவனே வெற்றி கொள்கிறான். வாழ்க்கையில் வெற்றியடைய முக்கியமானது சரியான இலக்கு நிர்ணயம், அதை அடைவதற்கான விடா முயற்சி, கிடைக்கும் அத்தனை சந்தர்ப்பங்களையும் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளுதல், தேவையான உதவிகளை தயங்காமல் கேட்டுப்பெறுவது.....எல்லாவற்றுக்கும் மேலாக வெற்றி கிட்டிவிட்டது என நினைத்து தேங்கிவிடாமல், தன்னைத்தானே எல்லா சமயத்திலும் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டியது கட்டாயம்.

நன்றி லீலுமா.

ரங்கராஜன்
05-03-2009, 04:22 PM
நன்றி பாசமலரே

என்னிடம் உங்களின் கேள்வியை கேட்டதற்கு, என்னை விட இந்த கேள்வியை தாமரை அண்ணாவிடம் அல்லது சிவாஜி அண்ணாவிடம் கேட்டு இருந்தால் சரியான முதிர்ச்சியான பதில் கிடைத்து இருக்கும், இவர்களைவிட தலை மணியா, மனோஜீ அண்ணாவிடம் கேட்டு இருந்தால் இன்னும் அருமையான பதில்கள் கிடைத்து இருக்கும். வயது ஏற ஏற வாழ்க்கையில் பல கேள்விக்கு விடைகள் தெரியும், வாழ்க்கையின் பல முடிச்சுகள் அவிழும். அப்படிப்பட்ட அவிழா முடிச்சி தான் இந்த பாசம், அன்பு, உணர்வு எல்லாம்.

கற்காலத்தில் வாழ்க்கை என்பது survival of the fittest என்ற தியரி படி தான் இருந்தது, அவர்கள் வாழ அவர்களுக்குள்ளே வெட்டிக் கொண்டனர். அப்புறம் கலாச்சாரம் வளர வளர அந்த வெட்டுதல் வீரமாக மாறியது, சட்டதிட்டங்கள் உருவானது.......... இப்பொழுது இந்த அவசர உலகத்தில் மறுபடியும் அந்த கற்காலத்தை நோக்கி தான் போய் கொண்டு இருக்கிறோம். பின் வரும் காலங்களில் பாசத்துடன் இருப்பவர்களை சிறையில் அடைக்கவும், அவர்களிடம் இருந்து அவர்கள் சந்ததிகளுக்கு அந்த பாச உணர்வை உண்டு பண்ணும் ஜீன்களை பரவாமல் இருக்க அவைகளை களையும் தொழில்நட்பத்தின் நுனியில் இருக்கிறோம் நாம். கண்ணீர் சுரபிகளும், கருப்பைகளும், அழிக்கப்பட்டு இயந்திரத்தின் உதவியுடன் வாழப்போகிறோம் நாம். சுருங்கச் சொன்னால் பாசத்தின் அழிவு காலம் எப்பொழுதோ தொடங்கி விட்டது. அதன் மறைவை நோக்கி போய் கொண்டு இருக்கிறோம் நாம்.

தொல்லை என்று நீங்கள் நினைக்கும் அல்லது தொல்லை கொடுக்கும் உறவுகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

எப்பொழுதும் ஈர மண்ணை விட காய்ந்த மண் தான் தண்ணீரை சீக்கிரமாகவும், அதிகமாகவும் உறுஞ்சும், பாறை மீது என்ன தான் தண்ணீரை ஊற்றினாலும் அது உறுஞ்சாது மாறாக ஆவியாகத் தான் போகும். பாசமும் அது போலத்தான் நீங்கள் பாசம் காட்டும் நபர், ஈர மண்ணா, காய்ந்த மண்ணா, அல்லது பாறையா என்று முதலில் முடிவு செய்துக் கொண்டு அப்புறம் பாசத்தை காட்டுங்க. அதை கவனிக்காமல் பாறை மீது தண்ணீரை ஊற்றிக் கொண்டு, அது பலன் தரும் என்று காத்துக் கொண்டு இருக்காதீர்கள். அப்படி உண்மையிலே பாறை மீதான உங்களின் பாசம் எதையும் எதிர்பார்க்காத பாசமாக இருந்தால், கண்டிப்பாக பாறையின் இடுக்கில் ஒரு நாள் செடி முளைக்கும், கவலை வேண்டாம்.

ரத்த பாசம் மட்டும் தான் உண்மையான பாசமா?

அது என்ன ரத்தபாசம், தோள் பாசம் எல்லாம். அப்படி எல்லாம் பாசத்துக்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது. உடன் பிறந்த அண்ணன் தம்பிகள் தான் வெட்டிக் கொண்டு சாகிறார்கள், கலவரத்தில் முகம் பார்க்காதவனை கூட உயிருடன் கொளுத்துகிறான். அதனால் பாசத்திற்கு எந்த தகுதியும் கிடையாது. பாசம், அன்பு, காதல், உணர்வு எல்லாம் கடைசி கட்டத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறது, நமக்கு வரும் சந்ததியினருக்கு படிப்பை சொல்லிக் கொடுப்பதற்கு முன் பாசத்தை, அன்பை, மதிப்பை சொல்லிக் கொடுக்க வேண்டும், அப்படி செய்தால் தான், வருங்காலத்தில் தாய்பாலை கடைகளில் விற்பதை தடுக்க முடியும்........

வாய்ப்பை கொடுத்த பாசமலருக்கு நன்றி

அறிஞர்
05-03-2009, 05:21 PM
5. அடுத்து அறிஞருக்கு,
பெண்களைப் பற்றிய தங்களின் அதாவது ஆண்களின் எண்ணம் என்ன?
பெண்ணடிமை இன்னும் உள்ளதா? அல்லது காலம் மாறி ஆண் அடிமை வந்துவிட்டதா?
என்னைப்பொறுத்தவரை.. ஆண், பெண் என்று பிரித்து பார்ப்பதில்லை. இருபாலரிலும் நல்ல குணம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சிலர் காரியம் ஆகவேண்டுமென்றால், காலை பிடிப்பர்.. பின் வாரிவிடுவர்.

பெண்ணடிமை, ஆணடிமை என்பது இடம், சூழலை பொறுத்தது. பெண்ணடிமை இன்னும் சில இடங்களில் இருக்கிறது.. (குறிப்பாக கிராமங்களில், ஆணதிக்கத்தில் வாழ்ந்த ஆண்கள் மத்தியில்.... ஆணிற்கு தான் அதிகாரம்.. ஆண் சொல்வது போல் எல்லா இடங்களில் செயல்படவேண்டும் என்பது போல்). ஆணடிமையும் சில இடங்களில் இருக்கிறது (குறிப்பாக அதிகம் சம்பாதிக்கும் சில பெண்கள், சில பணக்கார பெண்கள் மத்தியில்).

பல இடங்களில் (ஆண்கள்/பெண்கள்) ஒருவருக்கொருவர் மதிப்பு, மரியாதைக் கொடுத்து செல்கின்றனர். இது ஆரோக்கியமான விசயம். சமீப காலங்களில் நல்ல முன்னேற்றம்.

arun
06-03-2009, 02:31 AM
லீலுமா : தங்களின் கேள்வி தொகுப்பு அருமை

தாமரை : வழக்கம் போலவே நாண்ட ஒரு பதிலை புரியும்படி மனதில் பதியும் படி கொடுத்து உள்ளார்

சிவா ஜி : அழகாக ஒரு எடுத்துக்காட்டு கொடுத்து பதில் சொல்லி உள்ளீர்கள்

ஆதவா : :icon_b: :icon_b:

தக்ஸ் : எனது கருத்து படி தங்களிடம் இந்த கேள்வி சரியாக தான் கேட்கப்பட்டு இருக்கிறது அழகாக விளக்கம் கொடுத்து உள்ளீர்கள்

அறிஞர் : சுருக்கமாக சொன்னாலும் அழகாக சொல்லி உள்ளீர்கள்

samuthraselvam
06-03-2009, 08:28 AM
பதில் கொடுத்த தாமரை அண்ணாவுக்கு நன்றி.... ம்ம்ம்ம்ம்ம்.......
ரத்தின சுருக்கம்ன்னு ஒரு வார்த்தை இருக்கு தெரியுமா அண்ணா? அதை கொஞ்சநாள் உபயோகிச்சுப் பாருங்க..

ஒரு கருத்தை மட்டும் ஒரே கோணத்தில் மட்டும் எழுதினால் மனதில் நிற்கும்.

தேசிய நெடுஞ்சாலையில் போற மாதிரி.

நான் அப்படி எழுதுவதில்லை. இதுதான் காரணம்,

நாம் போய்ச் சேரவேண்டிய இடத்துக்கு போய்ச் சேர நெடுஞ்சாலையில் போனா சீக்கிரமாப் போகலாம். அதைவிட short cut இருந்தா இன்னும் சீக்கிரம் போகலாம்.

காதலி ஐஸ்கிரீம் சாப்பிட்டா அதிகம் சிலிர்ப்பது ஐஸ்கிரீமா அவல் உதடுகளா என சிலிர்க்கும் காதலனைப் போல (:D) அப்படி நான் வியப்பதால் அதிகம் அதைப் பற்றிப் பேசறேன். கிடைக்காததால் இல்லை..

எது கிடைக்காததால் ஐஸ்கிரீமா இல்ல கா.......யா?

நான் சாப்பாடு விஷயத்தில் காட்டும் இரசனைக்கு இந்தப் பதில் பொருந்தாது, அது ஒரு மாதிரி பக்திப் பரவசம். இறைவா உன் கருணையே கருணை அப்படின்னு கண்ணீர் விட்டு பரவசம் ஆவாங்க இல்லையா? அந்த உணர்ச்சி.

இதிலேயே தெரிகிறதே உங்களுக்கு சாப்பாடுதான் கடவுளுன்னு.....

தாமரை
06-03-2009, 08:55 AM
பதில் கொடுத்த தாமரை அண்ணாவுக்கு நன்றி.... ம்ம்ம்ம்ம்ம்.......
ரத்தின சுருக்கம்ன்னு ஒரு வார்த்தை இருக்கு தெரியுமா அண்ணா? அதை கொஞ்சநாள் உபயோகிச்சுப் பாருங்க..

.....

மக்களே அம்மிணி சொன்ன மாதிரி ரத்தினச்சுருக்கமா இனிமே எழுதறேன்.
புரியலைன்னா அம்மிணியைக் கேட்டுக்கோங்க.

:D:D:D

சசிதரன்
06-03-2009, 09:38 AM
7. அடுத்து சசிதரன் அண்ணாவுக்கு,
தனிமை ஒரு மனிதனை எப்படியெல்லாம் யோசிக்கவைக்கும்?

தனிமை ஒரு மனிதனை மனிதனாய் யோசிக்க வைக்கும். மனிதன் தன்னைத் தானே சந்திக்கும் களம் தனிமை. சிலர் தனிமையை ஆயுதமாக்கி தன்னை வெல்கிறார்கள். பலருக்கு தனிமை ஆயுதமாகி பலியாகி போகிறார்கள்.

தனிமையில் ஒரு மனிதன்
தான் வாழ்ந்த வாழ்க்கையை திரும்பி பார்க்கிறான்.
வாழும் வாழ்க்கையை அலசி பார்க்கிறான்.
வாழப் போகும் வாழ்க்கையை முடிவு செய்கிறான்.

எந்தத் தருணத்தில் ஒரு மனிதனுக்கு தனிமை மிக அவசியம் என்று நினைக்கிறீர்கள்?

என்னுடைய கருத்துப்படி.. ஒரு மனிதன் சிந்திக்கும் நேரங்களில் தனிமை அவசியம். மனிதனுடைய வாழ்க்கையை அவனுடைய எண்ணங்கள் தீர்மானிக்கிறது. எண்ணங்களை அவனுடைய சூழல் முடிவு செய்கிறது.
மனிதன் தன்னை ஆத்மபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள தனிமை அவசியம். தான் யார் என்று ஒரு மனிதன் அறிய தனிமை நிச்சயம் அவசியமே...

என் மனதிற்கு தோன்றிய கருத்துக்களை கூறியுள்ளேன் சகோதரி... வயதிலும் அனுபவத்திலும் பெரியவர்கள் இந்த மன்றத்தில் பலர் உள்ளனர். ஏதேனும் தவறாக கூறியிருந்தால் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக்
கொள்கிறேன். எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி சகோதரி...:)

arun
07-03-2009, 02:14 AM
தனிமை ஒரு மனிதனை மனிதனாய் யோசிக்க வைக்கும். மனிதன் தன்னைத் தானே சந்திக்கும் களம் தனிமை. சிலர் தனிமையை ஆயுதமாக்கி தன்னை வெல்கிறார்கள். பலருக்கு தனிமை ஆயுதமாகி பலியாகி போகிறார்கள். ...:)

சசிதரன் மிகவும் சரியாக சொல்லி உள்ளீர்கள் தனிமை ஒரு மனிதனை எந்த மாதிரி வேண்டுமானாலும் ஆக்கலாம்

ஆனாலும் தனிமை மிகவும் கொடுமை

samuthraselvam
07-03-2009, 03:19 AM
பதில் கொடுத்த ஆதவா அவர்களுக்கும் சிவா.ஜி அண்ணாவுக்கு நன்றிகள்...!

நான் முன்பின் தெரியாத நபராக இருந்தாலும் பார்த்தவுடன் முதலில் கேட்கும் கேள்வி : நல்லா இருக்கீங்களா./// என்பதுதான்..

இது நம் ரத்தத்தில் ஊறிப்போன நலம் விசாரிப்பு இல்லையா? நம் விருந்தோம்பலில் முதலில் நிற்பதுவும் இந்தக் கேள்விதான். ஆதவா அவர்களுக்கு நன்றி!!

என்னையும் ஆ 10 ல் அழைத்ததற்கு நன்றி தங்கையே.

மாமனிதனாக முக்கியத் தகுதியாக நான் கருதுவது...சொல்லும் செயலும் ஒன்றாய் இருக்கவேண்டும். பாரபட்சமில்லாத பார்வை வேண்டும். அனைவரையும் அங்கீகரிக்கவேண்டும். மனதில் அழுக்கு இருக்கக்கூடாது. தன்னைப்பற்றி மட்டும் சிந்திக்காமல் மற்றவரைப்பற்றியும் சிந்திக்க வேண்டும். தவறு செய்யக்கூடாது...தவறி செய்தால் மன்னிப்புக்கேட்க தயங்கக்கூடாது. அதேபோல மன்னிக்கவும் தயங்கக்கூடாது.

அடிக்கடி தன்னை ஆத்மபரிசோதனைக்கு ஆட்படுத்திக்கொள்ள வேண்டும். கோழையாக வேதாந்தம் பேசாமல் கொடுமை கண்டு ரௌத்திரம் கொள்ள வேண்டும்.
எல்லா மனிதர்களையும், அவர்களின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும்.

என் அறிவுக்கு எட்டியதை மட்டுமே இங்கே சொல்லியிருக்கிறேன்.

பிரச்சனைகளே வரக்கூடாது என நினைப்பவன் வாழ்க்கையில் வெற்றியடைவதில்லை. எந்தப்பிரச்சனையையும் எதிர்கொண்டு முறியடிப்பவனே வெற்றி கொள்கிறான். வாழ்க்கையில் வெற்றியடைய முக்கியமானது சரியான இலக்கு நிர்ணயம், அதை அடைவதற்கான விடா முயற்சி, கிடைக்கும் அத்தனை சந்தர்ப்பங்களையும் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளுதல், தேவையான உதவிகளை தயங்காமல் கேட்டுப்பெறுவது.....எல்லாவற்றுக்கும் மேலாக வெற்றி கிட்டிவிட்டது என நினைத்து தேங்கிவிடாமல், தன்னைத்தானே எல்லா சமயத்திலும் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டியது கட்டாயம்.

நன்றி லீலுமா.

நன்றி. நீங்கள் சொன்னது மிகவும் நிதர்சனமான உண்மை தான் அண்ணா.

samuthraselvam
07-03-2009, 04:00 AM
ஒரு மனிதனை உயர்த்துவது அவனுடைய சிந்தனை, பொறுமை, ஆற்றல், சில நேரப் பேச்சு, பல நேரம் செயல்பாடு & மௌனம், நேரம் தவறாமை போன்ற நற்குணங்கள். இதெல்லாம் இருந்தால் வாழ்வில் வளர எந்தத்தடையும் இருக்காது என்பது என் கருத்து.

samuthraselvam
07-03-2009, 04:24 AM
டக்ஸ் அண்ணா முதலில் பாசமலர் என்று கூறியதற்கு நன்றி..!

அனுபவப் பட்ட பெரியோர்களுக்கு பாசத்தைப் பற்றியும் அதன் அருமையும் நன்றாகத் தெரியும். ஆனால் வயதில் சிறியவரான உங்களைப் போன்ற இளையவர்களிடம் கேட்டால்தான் தற்காலத்தில் அன்பின் நிலை என்ன என்பதை தெரியும் என்பதால்தான் அருண் அவர்கள் கூறியபடி தங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன்.

பாசத்தின் அழிவு காலம் எப்பொழுதோ தொடங்கி விட்டது. அதன் மறைவை நோக்கி போய் கொண்டு இருக்கிறோம் நாம்.

இதிலிருந்து பாசமலர் என்பது வெறும் வார்த்தைகள் என்று தெரிகிறது.

பாறை மீது தண்ணீரை ஊற்றிக் கொண்டு, அது பலன் தரும் என்று காத்துக் கொண்டு இருக்காதீர்கள். அப்படி உண்மையிலே பாறை மீதான உங்களின் பாசம் எதையும் எதிர்பார்க்காத பாசமாக இருந்தால், கண்டிப்பாக பாறையின் இடுக்கில் ஒரு நாள் செடி முளைக்கும், கவலை வேண்டாம்.

இந்த பாசம் இருந்தும் இல்லாத காலத்தில் ஈர மண் என்பது எங்கே இருக்கிறது. பாறையிலேயே தண்ணீர் ஊற்ற வேண்டியது தான். நீங்கள் சொன்னதுபோல் என்றாவது ஒருநாள் அதில் கண்டிப்பாக செடி முளைக்கும்

பதில் கொடுத்ததற்கு மிக்க நன்றி பாசக்கார அண்ணா...!

samuthraselvam
07-03-2009, 04:42 AM
என்னைப்பொறுத்தவரை.. ஆண், பெண் என்று பிரித்து பார்ப்பதில்லை. இருபாலரிலும் நல்ல குணம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சிலர் காரியம் ஆகவேண்டுமென்றால், காலை பிடிப்பர்.. பின் வாரிவிடுவர்.

பெண்ணடிமை, ஆணடிமை என்பது இடம், சூழலை பொறுத்தது. பெண்ணடிமை இன்னும் சில இடங்களில் இருக்கிறது.. (குறிப்பாக கிராமங்களில், ஆணதிக்கத்தில் வாழ்ந்த ஆண்கள் மத்தியில்.... ஆணிற்கு தான் அதிகாரம்.. ஆண் சொல்வது போல் எல்லா இடங்களில் செயல்படவேண்டும் என்பது போல்). ஆணடிமையும் சில இடங்களில் இருக்கிறது (குறிப்பாக அதிகம் சம்பாதிக்கும் சில பெண்கள், சில பணக்கார பெண்கள் மத்தியில்).

பல இடங்களில் (ஆண்கள்/பெண்கள்) ஒருவருக்கொருவர் மதிப்பு, மரியாதைக் கொடுத்து செல்கின்றனர். இது ஆரோக்கியமான விசயம். சமீப காலங்களில் நல்ல முன்னேற்றம்.

பதிலுக்கு நன்றி ஐயா..! நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆண்களின் உதவிகளைச் சார்ந்த பெண்களை, அவர்களில் தன் எண்ணங்களை திணிப்பது, அவர்களுக்கு விருப்பமில்லாத செயல்களை செய்யச்சொல்வது போன்ற செயல்களையே ஆணாதிக்கம். கிராமத்திலும் தற்ப்பொழுது சில மாற்றங்கள் நிகழ்கிறது. பாலினம் பார்க்காது ஒருவருக்கொருவர் மதிப்பளித்தால் போதும்.

samuthraselvam
07-03-2009, 04:43 AM
விமர்சனத்திற்கு நன்றி அருண்!!!

தக்ஸ் : எனது கருத்து படி தங்களிடம் இந்த கேள்வி சரியாக தான் கேட்கப்பட்டு இருக்கிறது அழகாக விளக்கம் கொடுத்து உள்ளீர்கள்

தக்ஸ் : எனது கருத்து படி தங்களிடம் இந்த கேள்வி சரியாக தான் கேட்கப்பட்டு இருக்கிறது அழகாக விளக்கம் கொடுத்து உள்ளீர்கள்

samuthraselvam
07-03-2009, 04:52 AM
மக்களே அம்மிணி சொன்ன மாதிரி ரத்தினச்சுருக்கமா இனிமே எழுதறேன்.
புரியலைன்னா அம்மிணியைக் கேட்டுக்கோங்க.

:D:D:D

எனக்கு இந்த ரெண்டு வரிகள் என்னான்னு புரியலையே..! யாராவது தாமரை அண்ணாவ கூப்பிட்டு பதில் கேளுங்கோ..அவரு தான் நல்ல விளக்கமா பதில் போடுவார். எங்கே அவரு. அண்ணா...அண்ணா...அண்ணா...அண்ணா... எங்கே போய்டீங்க..?:icon_rollout::icon_rollout::icon_rollout:

ஒரு கருத்தை சொன்னா இப்படியெல்லாம் நாட்டுல வம்ப புடுச்சு கொண்டுவந்து விடுவாங்கன்னு தெரியல சாமீ. :icon_ush::icon_ush:

samuthraselvam
09-03-2009, 07:32 AM
சசிதரன் அருமையா பதில் சொல்லிஇருக்கீங்க.. !

தனிமை ஒரு மனிதனை மனிதனாய் யோசிக்க வைக்கும். மனிதன் தன்னைத் தானே சந்திக்கும் களம் தனிமை. சிலர் தனிமையை ஆயுதமாக்கி தன்னை வெல்கிறார்கள். பலருக்கு தனிமை ஆயுதமாகி பலியாகி போகிறார்கள்.

தனிமையில் ஒரு மனிதன்
தான் வாழ்ந்த வாழ்க்கையை திரும்பி பார்க்கிறான்.
வாழும் வாழ்க்கையை அலசி பார்க்கிறான்.
வாழப் போகும் வாழ்க்கையை முடிவு செய்கிறான்.

என்னுடைய கருத்துப்படி.. ஒரு மனிதன் சிந்திக்கும் நேரங்களில் தனிமை அவசியம். மனிதனுடைய வாழ்க்கையை அவனுடைய எண்ணங்கள் தீர்மானிக்கிறது. எண்ணங்களை அவனுடைய சூழல் முடிவு செய்கிறது.
மனிதன் தன்னை ஆத்மபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள தனிமை அவசியம். தான் யார் என்று ஒரு மனிதன் அறிய தனிமை நிச்சயம் அவசியமே...

இந்த வரிகள் அருமை.. !

தாமரை
10-03-2009, 12:19 PM
3. ஆதி அண்ணாவுக்கு அடுத்த கேள்வி,
மனம் எப்போது முதிர்ச்சி அடைகிறது?
போதும் என்ற மனம் வர என்ன செய்ய வேண்டும்?

4. அடுத்து ஓவியா அக்காவுக்கு,
பெண்களை உயரவிடாமல் தடுப்பது ஆண்களா? அல்லது பெண்களேவா?
பெண்கள் ஆண்களுக்குச் சமம் என்ற கருது பற்றிய தங்களின் எண்ணம் என்ன?

6. லோஷன் அண்ணாவுக்கு அடுத்த கேள்வி,
நாம் நாமாக இருக்க செய்யவேண்டியது என்ன?
மனிதனுக்கு தன்னடக்கம் + தன்னம்பிக்கை எவ்வளவு முக்கியம்?

10. அமரன் அவர்களுக்கு அடுத்த கேள்வி,
உங்களை பிரம்மிக்க வைத்த ஒரு நபர் பற்றி...

அனைவரும் விரைவில் வந்து பதிலளிக்க வேண்டுகிறேன்

மதி
10-03-2009, 01:24 PM
, காதலி ஐஸ்கிரீம் சாப்பிட்டா அதிகம் சிலிர்ப்பது ஐஸ்கிரீமா அவல் உதடுகளா என சிலிர்க்கும் காதலனைப் போல (:D) அப்படி நான் வியப்பதால் அதிகம் அதைப் பற்றிப் பேசறேன்.
உங்க பதில் எல்லாம் சரி.. நான் எழுதிக் கொண்டிருக்கும் கதையில் வரும் சம்பவத்தை காப்பிரைட்ஸை மீறி பயன்படுத்தியுள்ளதால் வன்மையாகக் கண்டி(டு)க்கறேன்...:D:D:D:D

தாமரை
10-03-2009, 02:42 PM
நல்லா உத்துப்பாருங்க. உங்கள் வரிகளுக்கு பின்னால் உங்கள் படமும் போட்டிருக்கேன்...

அமரன்
10-03-2009, 02:43 PM
வந்துட்டேன்...
நாளைக் காலை பதிலுடன் வருகிறேன்.

loshan
11-03-2009, 07:25 AM
6. லோஷன் அண்ணாவுக்கு அடுத்த கேள்வி,
நாம் நாமாக இருக்க செய்யவேண்டியது என்ன?
மனிதனுக்கு தன்னடக்கம் + தன்னம்பிக்கை எவ்வளவு முக்கியம்?

ஆறுதலாக ,தெளிவாக,உண்மையாக பதிலா அளிக்கவேண்டும் என்று தான் தாமதித்தேன்.. இன்று தருகிறேன்..

மீண்டும் இந்தத் திரியில அழைத்தமைக்கு நன்றிகள்..

மற்ற எல்லோருடைய பதில்களும் அருமை,கலக்கல்,சுவை..

நன்றி லீலுமா(சமு.செல்)

அமரன்
11-03-2009, 07:48 AM
Originally Posted by samuthraselvam http://www.tamilmantram.com/vb/images/styles/images_pb/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=409123#post409123)
10. அமரன் அவர்களுக்கு அடுத்த கேள்வி,
உங்களை பிரம்மிக்க வைத்த ஒரு நபர் பற்றி...

வினா அழைப்பிதலுக்கு மிகவும் நன்றி லீலுமா.

நான் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் என்னை பிரமிக்க வைக்கிறார்கள். அவர்களில் முதலானவர் என் அன்னை.

நான் பிறந்து ஓராண்டு ஆகமுன்னரே என் தந்தை அகாலமானார். இருபது வயதில் ஒரு வயது மகனுடன் புகுந்த வீட்டைப் பகைத்து விட்டு பிறந்த வீட்டில் ஒரு கைப்பெண் வாழ்வது எவ்வளவு கடினமானது. அதிலும் அவள் வேலைக்குப் போனால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எத்தகையது.

இதுவரைக்கும் நாம் வசித்த ஊரில் எல்லாம் ஒரு பார்வை கூட அம்மாவை நோக்கி தப்பாக வீசப்பட்டிருக்காது. ஒரு சொல் கூட அம்மாவை மானபங்கப்படுத்தி இராது. அம்மாவுடன் நட்பு பூண்ட ஒவ்வொரு உள்ளமும் அம்மாவை ஆராதிக்கும். இதெல்லாம் அம்மாவுக்கு எப்படி சாத்தியமானது. ஒரு வேளை வன்முறை விழுக்காடு அறவே இல்லாத அம்மாவின் மெல்லினப் போக்கா. வேறு ஏதாவதா. எண்ணும் ஒவ்வொரு கணமும் என்னை பிரமிக்க வைப்பதும் பலவற்றைக் கற்றுத் தருவதும் அம்மா என்ற மந்திரச்சொல்தான்.

இன்றளவும் எனக்காக மட்டும் வாழும் அவருக்கும் எனக்கும் எப்போதும் உரசல் இருக்கும். இருவரின் வாழ்க்கை வேரில் பெருத்த வேறுபாடு.. முரண்பாடு.. இதிகாசங்கள், புராணங்கள், சில இலக்கியங்கள், பழந்தமிழர் வாக்குகள் எனப் பல அமைத்த பாதையில் சரியானதை தெரிவுசெய்து அதன் வழியே பயணிப்பது அம்மாவின் அடிப்படை. காலப் போக்கில் பயணித்து சரியான பாதையை அமைத்து அந்த வழியே போவது என் அடிப்படை.

இந்த முரண் முள்தான் எம்மிருவரையும் தைக்கிறதோ என்றும் எண்ணுவதுண்டு.

வாய்ப்புக்கு நன்றி லீலுமா.

அய்யா
11-03-2009, 02:49 PM
கடவுள் ஒவ்வொருவர் வீட்டிலும் இருப்பது சாத்தியமில்லை என்பதனால்தான் அன்னையரைப் படைத்தான் என்னும் கூற்று இன்னுமொருமுறை உங்கள் பதிவின் மூலம் மெய்ப்பிக்கபட்டிருக்கிறது.

நீங்கள் மிகவும் கொடுத்துவைத்தவர் அமரனண்ணா!

arun
12-03-2009, 04:09 AM
அமரன் உரசல்கள் சின்ன சின்ன சண்டைகள் இருந்தாலும் ஆழ்மனதில் உள்ள பாசம் என்றும் மாறாது சரி தானே?

samuthraselvam
12-03-2009, 06:12 AM
பதில் கொடுத்த அமரன் அண்ணாவுக்கு என் நன்றிகள்..!
நம்மை முதல் முதல்லாக பிரம்மிக்க வைக்கும் நபர் அம்மா...
பொருத்தமாக சொல்லி உள்ளீர்கள் அண்ணா..

அமரன்
12-03-2009, 09:41 AM
அய்யா.
பொதுவாகவே உறவுகள் விடயத்தில் நான் கொடுத்து வைத்தவன். மரணம் தவிர்த்து வேறெதுவும் எந்த உறவையும் என்னை விட்டு விலக்கியதில்லை. அன்னையைப் பொறுத்தவரை நான் மிகவும் அதிட்டசாலி.
அருண்.
உங்கள் மாற்றுக் கருத்துக்கு மாற்று ஏதுமில்லை.
லீலுமா.
என்னைப் பேசவைத்த உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லனும். உங்கள் கருத்து என்றும் மாறாதது.

பூமகள்
12-03-2009, 10:48 AM
அமர் அண்ணா,

உங்கள் பதில் படித்து பிரமித்தேன்.. என்ன எழுதுவதென்று தெரியவில்லை.. ஆயினும் ஏதாவது சொல்ல மனம் துடிக்கிறது..

இத்தகைய அமரரை பெற்று உருவாக்கிய அன்னைக்கு ஈடேதுமில்லை..

பழந்தமிழர் பாதை அம்மாவுக்கு வெற்றி நடைபோட உதவியதென்றால்.. உங்களுக்கு எதார்த்த பாதை உதவுகிறது.. போகும் பாதைகள் வேறாயினும் பாதைகள் எல்லாம் நல்லவை தானே... நன்மைக்காகத் தானே...??!!

மனம் திறந்து பதிலளித்தமைக்கு நன்றிகள் அமரன் அண்ணா...

இத்தகைய பதிலை இவரிடம் கேட்க வைத்த லீலுமாவுக்கு என் அன்பும் நன்றியும். :)

சிவா.ஜி
12-03-2009, 04:21 PM
அருமையான பதிவு அமரன். மேலும் உயரத்துக்கு சென்றுவிட்டீர்கள். அற்புதமான அன்னையை அடைந்த நீங்கள் உண்மையிலேயே மிகவும் கொடுத்துவைத்தவர். உங்களை ஈந்து மன்றத்துக்கு அளித்த அந்த போற்றுதலுக்குரிய அன்னையை வணங்குகிறேன்.

ரங்கராஜன்
12-03-2009, 05:23 PM
அமரன் உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை, நான் மன்றத்தில் சேர்ந்து இரண்டும் நாள் கழித்து உங்களுடன் ஜீ டாக்கில் பேசினேன், அப்பொழுது உங்களை பற்றியும் உங்களின் குடும்பத்தை பற்றியும் கேட்டேன். பதில் சரி வர வரவில்லை, நானும் உங்கள் இடத்தில் இருந்தாலும் இதை தான் செய்து இருப்பேன். ஆனால் உங்கள் அம்மா மீது நீங்கள் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறீர்கள் என்று தெரிந்துக் கொண்டேன். உங்களிடம் பேசிய அன்று எனக்கு தூக்கம் வரவில்லை, அப்படி தூக்கத்தை கலைக்கும் அளவுக்கும் நாம் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை, உங்கள் குடும்பத்தை பற்றியும் நீங்கள் என்னிடம் எதுவுமே சொல்லவும் இல்லை, அம்மா இலங்கையில் இருக்கிறார்கள் என்பதை தவிர (உங்க அப்பா இறந்து விட்டார் என்பதே இப்பொழுது உங்களின் பதிவை பார்த்து தான் தெரிந்துக் கொண்டேன்). அன்று இரவு எனக்கு எதோ முகம் தெரியாத இலங்கையில் தனியாக வாடும் ஒரு அன்னையின் முகம் மட்டும் நிழலாடியது. அப்படி என்னை துரத்திய நினைவுகளை தான் ஈழத்தாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17975) என்ற சிறுகதையாக எழுதினேன். என்னுடைய மூன்றாவது கதையோ, நான்காவது கதையோ அது. ஆனால் இன்றும் அதை இன்னும் கொஞ்சம் நன்றாக எழுதி இருக்கலாமே என்ற எண்ணம் என்னை அறித்துக் கொண்டு இருக்கிறது. சரி இதுக்கும் அமரனுக்கும் என்ன சம்பந்தம், அமரனால் தான், நான் இந்த கதையே எழுதினேன். அமரனை பற்றி எனக்கு எதுவும் தெரியாது, ஒரு முறை மட்டும் தான் பேசி இருக்கிறேன், மூன்று முறை சாட் செய்து இருக்கிறேன், பத்து முறை மன்றத்தில் அவரின் பின்னூட்டங்களுக்கு பதில் தந்து இருக்கிறேன், அவ்வளவே. ஆனால் அமரனின் அடி பேஸ் குரலும், வாக்கியத்துக்கு நடுவில் உதிக்கும் சிரிப்பும், இவை எல்லாம் தான் ராமபத்திரனின் கதாபாத்திரம் ஆயின. கதையின் போக்கு க்கும், அமரனின் கதைக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், கதை வரக் காரணமாக இருந்த கதையின் கரு அமரன் தான்.

அமரன் அம்மாவை பற்றிய உங்களின் வார்த்தைகள் எந்த ஒரு ஜிகினாவும் இல்லாமல், நேரடியாக இதயத்தில் இருந்து வந்து இருக்கிறது, அப்படியே எங்கள் இதயத்தில் இறங்கி விட்டது. அன்பின் ஆணி வேரே அம்மா தான்.

loshan
13-03-2009, 07:47 AM
லோஷன் அண்ணாவுக்கு அடுத்த கேள்வி,
நாம் நாமாக இருக்க செய்யவேண்டியது என்ன?
மனிதனுக்கு தன்னடக்கம் + தன்னம்பிக்கை எவ்வளவு முக்கியம்?

தன்னடக்கம், தன்னம்பிக்கை,தனித்துவம்.. இம்மூன்றுமே ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த,ஒன்றோடொன்று சம்பந்தப் பட்ட,ஒன்றிலொன்று தங்கியிருக்கும் வாழ்க்கையின் முன்னேற்றத்தில் அத்தியாவசியப்படுகின்ற விடயங்கள்.

தனிமனிதனின் வாழ்க்கையின் அத்தியாவசியக் கூறுகளான இந்த மூன்று விடயங்களும் ஒரு சமூகவியல் சமன்பாட்டின் அடிப்படையில் வாழ்க்கையின் சமநிலையைப் பேணுகின்றன.

இவை ஒவ்வொன்றின் தனிப்பட்ட அதிகரிப்பும்,குறைவும் இன்னொன்றைப் பாதிக்கவே செய்யும்.

இந்த உலகத்தின் சரித்திர புருஷர்களாக உலகை மாற்றிக்காட்டிய மாமனிதர்கள் எல்லோருமே தனித்துவம் வாய்ந்தவர்கள்.அவர்களின் தனித்துவமே இன்றுவரை அந்த உலகமகா புருஷர்களின் சிறப்பம்சங்களாகக் கருதப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன.

தனித்துவத்தையே இலகுபடுத்தி நாம் நாமாக வாழ்வது என்று சொல்கிறோம்.
நாம் நாமாக வாழ்வதற்கு,எங்கள் வாழ்க்கையின் தனித்துவமே பிரதான அடிப்படையாக அமைகிறது.சுலப உதாரணமாக சொல்வதாக இருந்தால் மாறுபடாமையும்,மாசுபடாமையும் முக்கிய அளவுகோல்கள்.

தன்னம்பிக்கை அளவுகடந்து அதிகரிக்கும் போதும், தன்னடக்கம் அளவில் குறைந்து தற்பெருமை அதிகரிக்கும் போதும், மனிதனின் முன்னேற்றம் தடைப்படுகிறது.. கர்வம் அப்போது அதன் பெயர்..

மாறாக, தன்னம்பிக்கை குறைந்து எங்களிலேயே நம்பிக்கையீனம் தோன்றும்போதும், தன்னடக்கம் அதிகமாகி,எங்களையே நாங்கள் தேவைக்கு அதிகமாக தாழ்த்திக் கொள்ளும்போதும்,தாழ்வு மனப்பாங்கு எனும் மன நோய் எங்கள் முன்னேற்றத்தைப் பாதிக்கிறது..

இதனால் இவ்விரண்டையும் ஒரு சமநிலையில் பேணுபவன் வாழ்க்கையில் ஜெயிக்கிறான்..

கஜினி படத்தில் சூரியா சொல்வது போல (அது இயக்குனர் முருகதாசின் வசனம் என்று நம்புகிறேன்)"என்னால் முடியும்" என்று நினைப்பது தன்னம்பிக்கை. "என்னால் மட்டுமே முடியும்" என்று நினைப்பது கர்வம்.

தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இருக்கிறது.

தன்னம்பிக்கை எல்லா சாதனைகளுக்கும் மூல காரணமாக உள்ளது. கர்வம் எல்லா அழிவுக்கும் காரணமான விஷமாக உள்ளது.

பல தலைவர்கள், அரசியல்வாதிகள் முக்கியமாக சர்வாதிகாரிகள் வாழ்க்கைகளை இதற்கான உதாரணங்களாகக் காட்டலாம்.தன்னம்பிக்கை அவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்தையும்,அவர்கள் மூலமாக மக்களுக்கும்,நாடுகளுக்கும் ஏற்றத்தையும் கொடுக்கிறது.

எப்போது தன்னம்பிக்கை அளவை மீறி கர்வமாக மாற ஆரம்பிக்கிறதோ, அன்று மாக்கள்,நாடு, இறுதியாக அவர்களுக்கே அது அழிவாக மாறுகிறது. நல்ல உதாரணங்கள் ஹிட்லரும்,முசோலினியும்.

மாபெரும் சமூக மாற்றங்களை ஏற்படுத்தி மக்கள் ஆதரவைப் பெற்றிருந்த இவ்விருவரும்,தங்கள் பாதைகள் மாறியதால் வரலாற்றில் அழியா வழுக்களை ஏற்படுத்தி சர்வாதிகாரிகள் ஆகி அழிவு தந்தவர்களாக மாறினர்.

ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையிலும் இந்த இரண்டுமே இதே விளைவுகளையே ஏற்படுத்தக் கூடியவை. அதுவே இயற்கையின் நியதி.

தத்தம்மை உயர்வாக நினைக்கும் அதே சமயம் மற்றவர்களைத் தாழ்வாக நினைக்கவும் ஆரம்பித்தால் கர்வம் நுழைய ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். தன் சாதனைகளைப் பெருமைப்படுத்தியும், மற்றவர் சாதனைகளை சிறுமைப்படுத்தியும் நினைப்பதும் கர்வமே. தன் தவறுகளை தவறுகளே அல்ல என்று சாதிப்பதும் கர்வத்தின் ஒரு குணமே. மற்றவர்களுடைய சிறு தவறுகளையும் சுட்டிக் காட்டி மகிழ்வதும் கர்வத்தின் தன்மையே. தனக்கு எதிரான எதையும் சகிக்க முடியாததும், மற்றவர் சாதனையை ரசிக்க முடியாததும் கர்வத்தின் செயல்களே.

எங்கேயோ படித்தது..

இதற்கு மாறாக நம்பிக்கையீனமும், அளவுக்கு மீறிய தன்னடக்கமும் தாழ்வு மனப்பான்மையை எம்முள் ஏற்படுத்தி எங்கள் முன்னேற்றத்துக்கு தடை போட்டு விடும்.பெரியவர்கள்,கற்றோர்,அறிஞ்சர் முன்னால் அடக்கம் காட்டி மரியாதை செய்வது வேறு;எல்லோருக்குமடிஎன்,எல்லோருக்கும் அடங்குவேன் என்று எம்மை நாமே தாழ்த்தி, எல்லாவற்றிலும் தோற்றுப் போவது வேறு..இந்த வித்தியாசம் எங்கள் வாழ்க்கையிலேயே மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி விடும்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றோருக்கும்,தோற்றுப் போனவருக்கும் இடையிலான வேறுபாடே இது தான்.. நாமாக முன்வராது,முயற்சிக்காது வெற்றி என்ற முனைப்பு கிட்டாது..அடங்கிப் போதல் அளவுக்கு மீறிப் போகையில் வெற்றி எம்மை விட்டு வெகு தொலைவு போய் விடும்..

எனவே நாம் நாமாக வாழ்கிற தனித்துவமானது இந்த அளவுகோல்களின் சமநிலையில் நிர்ணயிக்கப்படுகிறது.

இனி ஒருவன் 'நான் நானாக இருக்கிறேன்' என்று சொன்னால் அவன் தன்னம்பிக்கை உடையவன் என்று நினைத்துக் கொள்ளுங்கள்..அதையே அவன் அடிக்கடி பெருமையோடு சொல்லிக் கொண்டால் அவன் தன்னடக்கம் இல்லாதவன் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

தன்னடக்கம் மீறாத,தன்னம்பிக்கை குறையாத ஒருவனே தனித்துவமானவனாக வாழ்கிறான்.

ஆதி
13-03-2009, 09:45 AM
//3. ஆதி அண்ணாவுக்கு அடுத்த கேள்வி,
மனம் எப்போது முதிர்ச்சி அடைகிறது?
போதும் என்ற மனம் வர என்ன செய்ய வேண்டும்?
//

அறிவுக்கு முதிர்ச்சி உண்டு, மனமுதிர்ச்சி என்று ஒன்று உண்டா ? என்றால் இல்லை என்பதுதான் என் கருத்து..

மனமொரு முடிவிலி வெளி.. அதை அடக்க தெரியாதவர்க்கு..

மனமொரு துளி.. அதை அடக்க தெரிந்தவர்க்கு..

மனதில் இருவகை உண்டு, வெளிமனம், உள்மனம்..

வெளிமனத்தைதான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம், வெளிமனம் நாம் விழித்திருக்கும் போது விழித்திருக்கும், நாம் தூங்கும் போது தூங்கிவிடும்..
(தூங்கும் போது என்பது கண்மூடி உறங்குதலை மட்டுமல்ல, கண் திறந்து உறங்குதல் என்பதும் கூடதான்)

உள் மனம் அப்படியல்ல, எந்நேரமும் விழித்திருக்கும்.. எப்போதும் தூங்காது.. நமக்குள் இருந்து கொண்டு நம்மையே வேறொரு நபராய் இருந்து கவனிக்கும்..

வெளி மனதுக்கு மறக்க தெரியும்.. உள்மனதுக்கு மறதி என்பதே கிடையாது..

உதாரணமாக, வீட்டு சாவியை எங்கேயோ வைத்துவிட்டு தேடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம், யோசித்து யோசித்துப் பார்ப்போம் ஞாபமே வராது, தொலைந்தேவிட்டது என்று முடிவுக்கு வரும் சூழலில், திடீர் என்று பொறியில் தெரிக்கும் இங்கே வைத்தோம் என்று, அதுதான் உள்மனம்..

உண்மையில் நாம் அந்த சாவியை எங்கே வைத்தோம் என்று உள்மனதுக்கு தெரியும், ஆனால் ஞாபகம் மூட்டாமல், வெளிமனம் கண்டு பிடிக்கிறதா என்று காத்திருக்கும், முடியாத பட்சத்தில் இங்கேதான் வைத்தாய் போய் பார் என்று ஞாபகப்படுத்தும்..

இத்தகைய உள்மனத்தின் ஆற்றலை கண்டு கொண்டவர்கள், அதன் முழு ஆற்றலையும் முழு நேரமும் பயன்படுத்த அதனை அடக்கி தன் ஆட்சிக்கு உட்படுத்த வேட்கை கொள்கிறார்கள்.. அதற்காகவே அவர்கள் தியானமும் செய்கிறார்கள்..

ஹிப்னாடிசம் மெஸ்மரிசம் செய்பவர்களும், உள்மனத்தின் உதவியோடே மற்றவர்களை தம் வசப்படுத்துகிறார்கள்.. இது கூட ஒருவகை மனக்கட்டுப்பாடுதான் ஆனால் மனப்பக்குவம் அல்ல..

மனப்பக்குவம் என்பது..

"ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவதாகும்"

மனக்கட்டுப்பாடு கொண்டவர்கள் மேதைகள்

மனப்பக்குவப்பட்டவர்கள் ஞானிகள்..

மேதைகள் - philosophers - philosophy(கிரேக்கச் சொல்)..

philo - love

sophy - wisdom

philosophy - love of wisdom

இந்த மேதைகள், ஒளியின் பாதையை அறிந்து கொண்டவர்கள்..

ஞானிகள் ஒளியாகவே இருப்பவர்கள்..

போதும் எனும் மனம் வரும் போது மனிதன் உலகுக்கு ஒளியாக இருப்பான்..

வாய்ப்புக்கு நன்றி தங்கையே..

நிரன்
13-03-2009, 01:18 PM
லீலுமாவின் 9 கேள்விகளுக்கு பதில் வந்தாயிற்று அனைத்தும் ஒவ்வெறு வகையில் நன்றாகவே உள்ளது.

1கேள்விதான் இருக்கிறது ஓவியா அக்காவினது.. ஆனால் தற்பொழுது யக்காவ இந்தப்பக்கமே காண்பது இல்லை.. அதனால் அந்தக் கேள்விக்கு பதில் வருமென நம்ப முடியாதே!

பதிலளித்த அனைவருக்கும் நன்றிகள்.

அமரன் அண்ணா!

உங்கள் வார்த்தைகளில் உண்மையான அன்பினையே காட்டியுள்ளீர்கள். தக்ஸ் அண்ணா கூறியது போன்று உங்கள் இதயத்திலிருந்து எழுந்ததாகவே என்னால் உணரமுடிகிறது. '' மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்'' என்று ஒரு பாடல் உள்ளது.. நல்ல மனைவி அமைவதன் மூலம் நல்லவொரு தாயும் உருவாகிறாள் என்று உணர்ந்தேன்.

லோஷன் அண்ணாவின் தன்னடக்கம், தன்னம்பிக்கை மிக அருமையாகக் கூறியிருக்கிறீர்கள். மனிதனுக்கு கர்வம் அதிகரிக்கும் போதும் நான் என்ற அகங்காரம் வரும் பொழுதும் இருக்கும் வெற்றிகளும், வரவிருப்பவையும் மிகத்தொலைவிலே சொன்று விடும் என்ற உங்கள் கருத்து மிக அருமையாகவுள்ளது.

ஆதி அண்ணாவின் உள்மனம் வெளிமனம் என்று கொடுத்த விளக்கம் மிக அருமை முதன் முதலில் மனிதனுக்கு மனங்களில் வகைகள் உள்ளது என அறிந்திருக்கிறேன்.

சற்று பிந்திய பதில்கள் என்றாலும் அனைத்தும் மிக அருமையாக உள்ளது.

அனைவருக்கும் வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகளும்.

க.கமலக்கண்ணன்
13-03-2009, 01:34 PM
நன்றியும் பாராட்டுக்களும் லோஷன் உங்களுக்கு தன்னம்பிக்கை என்ற உடன் நான் விடையளிக்க ஆசையாக இருந்தது. ஆனால் கேள்வி உங்களுக்கு... நான் என்ன எழுதலாம் என்று யோசித்தேனே அதை அப்படி அடி பிசகாமல் வெளிப்படுத்தியது மிக மிக அருமை....

நான் உருவாக்கிய நாள்காட்டியில் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18787) கூட அதை வரிகளாக்கி படைத்திருந்தேன்

தன்னம்பிகையை பற்றி அனைத்தையும் லோஷன் மிக அழகாக தெளிவாக சொல்லிவிட்டார். புதிதாக சொல்ல ஏதும் இல்லை...

தன்னம்பிகை நமது இதயம் வரை இருக்க வேண்டும் தலையை தொட்டால் தலைகனம் ஆகிவிடும்...

கேள்வி கேட்டு நல்ல பதிலை வரவழைத்த லீலுமாக்கு மிக்க நன்றி பிற்காலத்த்தில் சாதனை படைத்தவர்கள் நமது மன்றத்தில் சேர்ந்த பின் இவ்வளவு சாதனை படைக்க முடிந்தது என்று பேட்டி அளித்தால் அதில் உங்கள் அனைவருக்கும் பங்கு உண்டு....

நன்றியுடன்...

அமரன்
13-03-2009, 04:50 PM
பூமகள், சிவா, தக்ஸ்.
உங்கள் கருத்துகள் அனைத்தும் என்னைச்சேரக் காரணமும் அவளே.
தக்ஸ்..
உங்களுடனான முதலுரையாடலில் சிலதைச்சொன்னேன். அதனைக் கேட்ட நீங்கள் அப்படி என்றால் பல கதைகள் இருக்குமே; எழுதுங்கள் என்றீர்கள். அப்போது மறுத்தேன். இப்போது மொத்தத்தையும் ஒரு வரியில் சொல்லி இணையதில் முதல் முதலாக மன நிர்வாணக் கோலம் தரித்தேன். இது தொடரும் என்றே தோன்றுகிறது.

அமரன்
13-03-2009, 04:55 PM
அருமையான கேள்விகளையும் அவற்றுக்கு இணையான பதில்களையும் தந்த உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி. இங்கே இன்னொன்றைச் சொல்ல வேண்டும். இந்த திரி சுடர்வதில் நான் மந்தமாகச் செயல்பட்டால் உடனடியாகத் தொடர்புகொண்டு என்னை விரட்டுவது நிரன். அவனுக்கும் என் இதயமார்ந்த நன்றி.

ஆ10 இல் அடுத்தாக அசத்த இளங்கவிப்புயல், மதிக்கு சரிநிகர் மொக்கைப் போட்டியாளர் சசிதரனை அழைக்கிறேன்.

சசிதரன்
14-03-2009, 01:05 AM

//மொக்கைப் போட்டியாளர் சசிதரனை அழைக்கிறேன்.//:sprachlos020::sprachlos020:
என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி அமரன் அண்ணா... மிக விரைவில் கேள்விகளுடன் வருகிறேன்...:)

ரங்கராஜன்
14-03-2009, 03:44 AM
//மொக்கைப் போட்டியாளர் சசிதரனை அழைக்கிறேன்.//:sprachlos020::sprachlos020:
என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி அமரன் அண்ணா... மிக விரைவில் கேள்விகளுடன் வருகிறேன்...:)

சசி அவர்களே

அமரன் சொன்னது உங்களை மொக்கை போட்டியாளர் என்று அர்த்ததில் இல்லை, சிவாஜி அண்ணாவின் ஒரு திரிக்கு சூப்பராக மொக்கையாக பதில் தந்து இரண்டு முறை பரிசை வென்ற உங்களை மொக்கை போட்டியாளர் என்று குறிப்பிட்டார். முதலில் இந்த மாதிரி கேள்வி பதிலில் எல்லாம் மதியை அடித்துக் கொள்ள முடியாது, மொக்கையான பதில் தருவதில் மதியை மிஞ்ச ஆள் இல்லை, அவர் பெயரே மொக்கை மதி. ஆனால் அவருக்கு நிகராக நீங்கள் வந்து விட்டீர்கள் என்று தான் அந்த வரிக்கான அர்த்தம். தப்பாக எதுவும் இல்லை. நன்றி

அமரன்
14-03-2009, 07:09 AM
மொக்கை மதிக்கு சரிநிகர் போட்டியாளர் என்று வந்திருக்க வேண்டுமோ. உடனடியாக ஏற்றமைக்கு நன்றி சசி. வினாக்கொத்துடன் முடிந்தளவு விரைந்து வாங்க.

samuthraselvam
14-03-2009, 07:50 AM
லோஷன் அண்ணாவுக்கும் ஆதி அண்ணாவுக்கும் நன்றி...!
அனைவரின் பதிலையும் படித்து விமர்சித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்ற்களை உரித்தாக்குகிறேன்....!

samuthraselvam
14-03-2009, 07:56 AM
என் கேள்விகளுக்கு பதிலளித்த அனைவருக்கும் நன்றி.. !
ஓவியா அக்காவுக்கு மன்றம் வர நேரமில்லை என்பதால் அந்தக் கேள்வியை நேரமும் பிரியமுமிருந்தால் பூமகள் அவர்களை பதிலளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

4. அடுத்து ஓவியா அக்காவுக்கு,
பெண்களை உயரவிடாமல் தடுப்பது ஆண்களா? அல்லது பெண்களேவா?
பெண்கள் ஆண்களுக்குச் சமம் என்ற கருது பற்றிய தங்களின் எண்ணம் என்ன?

சசிதரன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்..! கேக்குற கேள்வியில ஆளாளுக்கு ஒக்காந்து யோசிக்க இடம் தேடி ஓடனும் ..

அமரன்
14-03-2009, 07:59 AM
ஓவியா அக்காவுக்கு மன்றம் வர நேரமில்லை என்பதால் அந்தக் கேள்வியை நேரமும் பிரியமுமிருந்தால் பூமகள் அவர்களை பதிலளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சபாஷ்.. சரியான மாற்றீடு.

சசிதரன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்..! கேக்குற கேள்வியில ஆளாளுக்கு ஒக்காந்து யோசிக்க இடம் தேடி ஓடனும் ..

என்ன ஒரு கொல வெறி.

சசிதரன்
14-03-2009, 10:58 AM
சசி அவர்களே

அமரன் சொன்னது உங்களை மொக்கை போட்டியாளர் என்று அர்த்ததில் இல்லை, சிவாஜி அண்ணாவின் ஒரு திரிக்கு சூப்பராக மொக்கையாக பதில் தந்து இரண்டு முறை பரிசை வென்ற உங்களை மொக்கை போட்டியாளர் என்று குறிப்பிட்டார். முதலில் இந்த மாதிரி கேள்வி பதிலில் எல்லாம் மதியை அடித்துக் கொள்ள முடியாது, மொக்கையான பதில் தருவதில் மதியை மிஞ்ச ஆள் இல்லை, அவர் பெயரே மொக்கை மதி. ஆனால் அவருக்கு நிகராக நீங்கள் வந்து விட்டீர்கள் என்று தான் அந்த வரிக்கான அர்த்தம். தப்பாக எதுவும் இல்லை. நன்றி

தவறாக நினைக்கவில்லை தக்ஸ்... உண்மைய வெளிப்படையா சொல்லிட்டாரேன்னு ஒரு ரியாக்சன் கொடுத்தேன்..:D:D:D... விளக்கத்திற்கு நன்றி நண்பரே..:)

சசிதரன்
14-03-2009, 11:00 AM
மொக்கை மதிக்கு சரிநிகர் போட்டியாளர் என்று வந்திருக்க வேண்டுமோ. உடனடியாக ஏற்றமைக்கு நன்றி சசி. வினாக்கொத்துடன் முடிந்தளவு விரைந்து வாங்க.

கண்டிப்பாக அமரன் அண்ணா... நாளை மாலைக்குள் கேள்விகளை கேட்டு விடுகிறேன்..:)

சசிதரன்
14-03-2009, 11:05 AM
சசிதரன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்..! கேக்குற கேள்வியில ஆளாளுக்கு ஒக்காந்து யோசிக்க இடம் தேடி ஓடனும் ..

ரொம்ப நன்றி சகோதரி..:) முதல்ல நான் ஒக்காந்து கேள்விய யோசிக்கிறேன்..:D

samuthraselvam
14-03-2009, 11:32 AM
சபாஷ்.. சரியான மாற்றீடு.

என்ன ஒரு கொல வெறி.

நன்ற அண்ணா...!:p

இது கொல வெறி இல்லை. நல்ல கேள்வி பிறக்க வேண்டும் என்பதால் சசிதரனின் அறிவு வெறியை கிளப்ப போட்ட பிட்டு. :icon_rollout::icon_rollout:

நிரன்
14-03-2009, 12:20 PM
மொக்கை சசி வாங்கையா வாங்க :D (மொக்கை பட்ட உயர்வோ:rolleyes::D)

உங்க கேள்வில துண்டைக் காணம் துணியைக்காணம் என்று ஓட வேண்டும்:D:D:D

சசிதரன்
14-03-2009, 05:43 PM
என்னை ஆ 10-ல் கேள்வி கேட்க அழைத்த அமரனுக்கு என் நன்றிகள், நான் இன்னும் மன்ற நண்பர்களிடம் நெருங்கி பழகவில்லை. ஆனால் அவர்களின் படைப்புகளில் இருந்து அவர்களுக்கு என்று ஒரு பிம்பம் என் மனதில் இருக்கிறது. அது சரியா? தவறா? என்று தெரியவில்லை. அந்த பிம்பத்தின் படி என்னுடைய மனதில் ஏற்பட்ட சில சந்தேகங்களை அவர்களிடமே கேள்வியாக கேட்க இருக்கிறேன். யாரும் தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள், என் மனதில் தோன்றிய கேள்விகளை உண்மையுடன் கேட்கிறேன். கேள்விகள் ஏதும் காட்டமாக இருப்பது போல் தோன்றினால் மன்னித்து விடுங்கள்.. மனதில் தோன்றிய கேள்விகளை நேரிடையாக இனிப்பு முலாம் ஏதும் பூசாமல் கேட்கவே விரும்புகிறேன்...:)

1.லீலுமா

சகோதிரியே, பெண்கள் ஆண்கள் இருவரில் பொதுவாக மனதளவில் பலம் பொருந்தியவர்கள் பெண்கள் என்று சொல்வார்கள். அதை

பற்றிய உங்கள் கருத்து என்ன?

2.அமரன்

உங்களின் கடந்த பதிலை பார்த்து ரசித்தேன், அன்னையை பற்றி உங்களின் கருத்துக்கள் மனதை தொட்டது? அதனால் உங்களிடம் இந்த
கேள்வியை கேட்கிறேன். அதற்கு முன் ஒரு கேள்வி உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை தானே? அப்படியென்றால் உங்களின் வருங்கால மனைவியை பற்றி உங்களின் கனவு + எதிர்ப்பார்ப்பு என்ன?, திருமணம் ஆகியிருந்தால் உங்கள் மனைவியை பற்றிய கருத்து என்ன? மறைக்காமல் உண்மையை சொல்லுங்கள்.

3.சிவா அண்ணா

கதை, கவிதை, விவாதம், விமர்சனம் என்று அனைத்து துறையிலும் அசத்தும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் முதல் முதலில் படைத்த படைப்பு எது?, சிறந்த படைப்பாக நீங்கள் கருதும் உங்களின் படைப்பு எது? சிறந்த படைப்பாக கருதுவதின் காரணம் என்ன?

4.தாமரை அண்ணா

உங்களின் வாதங்களை பல திரிகளில் பார்த்து ரசித்திருக்கிறேன். எதிர் கருத்து கூறுபவர்கள் பதில் சொல்ல முடியாதபடி அருமையாக கருத்து கூறுவதில் தேர்ந்தவர் நீங்கள். உங்கள் வாதங்கள் நூறு சதவிகிதம் சரி என்று நீங்கள் எப்பொழுதும் நம்புவீர்களா? உங்கள் கருத்துக்களுக்காக வாதம் செய்வீர்களா அல்லது வாதத்திற்காக கருத்து கூறுவீர்களா?

5.தக்ஸ்

மன்றத்தில் 33 சிறுகதைகளை இதுவரை கொடுத்து உள்ளீர்கள், இதில் எத்தனை உங்கள் வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டது? உங்கள் கதையின் கதாபாத்திரங்களை பெரும்பான்மையாக படைப்பது உங்கள் பிரதிபலிப்பாகவா அல்லதும் நீங்கள் காணும் மனிதர்களின் பிரதிபலிப்பாகவா??

6.ஆதி

மிக அற்புதமான கவிதைகளுக்கு சொந்தக்காரர் நீங்கள். உங்களின் கவிதைகள் எல்லாம் நிகழ்வுகளை பார்த்த அடுத்த நொடியில் பிறக்கும் கவிதையா, அல்லது அந்த கருக்களை அடைக்காத்து நினைத்து பார்த்து கவிதை குழந்தையை பெறுவீர்களா?

7.இளசு அண்ணா

மன்றத்தின் பூஸ்டு நீங்கள், உங்களை பற்றி எனக்கு ஒண்ணுமே தெரியாது, ஆனால் தெரிந்துக் கொள்ள ஆசையாக இருக்கிறது.
எல்லோரும் பெரியண்ணா என்றழைக்கும் உங்களை பற்றியும், குடும்பத்தை பற்றியும், முக்கியமாக உங்களின் வயதைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

8.லோஷன்

மீடியா தொழில் இருக்கும் நீங்கள் பலரை பேட்டி கண்டு இருப்பீர்கள் அதனால் உங்களுக்கு ஒரு சூடான கேள்வி. உங்களின் விமர்சனம் ஒன்றை படித்தேன். அதில் விமர்சனங்களை தவறாக எழுதுபவர்களை சாடி இருந்தீர்கள். நீங்கள் ஒரு படைப்பை விமர்சனம் செய்யும்பொழுது, அதனை எப்படி கையாள்வீர்கள்? ஒருவரின் விமர்சனத்தில் குறைகள் இருப்பதாக நீங்கள் நம்பும்பொழுது, உங்கள் விமர்சனத்தில் மற்றொருவர் குறை சொன்னால் அதனை ஏற்றுக் கொள்வீர்கள? உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

9.அன்புரசிகன்

ஜாலியான டைப்பான உங்களிடம் ஒரு கேள்வி. அனைவரின் படைப்பையும் ஜாலியாக கலாய்க்கும் நீங்கள் உங்களின் படைப்புகளை ஏன் மன்றத்தில் அதிகமாக பதிவதில்லை? மன்றத்தில் நீங்கள் அதிகம் விரும்புவது எத்தகைய படைப்புகளை?

10.நிரன்
நீங்கள் ஜெர்மனியில் இருப்பதால் இந்த கேள்வி.. ஹிட்லரை பற்றிய நினைவிடங்களுக்கு சென்றிருக்கிறீர்களா? நாசியின் சோக சரித்திரங்களை அருகில் பார்க்கும்போது எப்படி உணர்ந்தீர்கள்? உங்கள் மனநிலை எப்படி இருந்தது? ஜெர்மனியை பற்றிய சுவையான தகவல் எதாவது இருந்தால் சொல்லுங்களேன்?

தாமரை
14-03-2009, 07:29 PM
4.தாமரை அண்ணா

உங்களின் வாதங்களை பல திரிகளில் பார்த்து ரசித்திருக்கிறேன். எதிர் கருத்து கூறுபவர்கள் பதில் சொல்ல முடியாதபடி அருமையாக கருத்து கூறுவதில் தேர்ந்தவர் நீங்கள். உங்கள் வாதங்கள் நூறு சதவிகிதம் சரி என்று நீங்கள் எப்பொழுதும் நம்புவீர்களா? உங்கள் கருத்துக்களுக்காக வாதம் செய்வீர்களா அல்லது வாதத்திற்காக கருத்து கூறுவீர்களா?

ஒரே வரியை மீண்டும் மீண்டும் சொல்வதற்கு மன்னிக்கவும்

--------------------------------------------------------------------------------

நான் சொல்வது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்குத் தெரியாது!
ஆனால் என் இதயத்திற்கும் கடவுளுக்கும் விசுவாசமாக, நான் எனக்கு உண்மை எனத் தெரிந்ததைச் சொல்கிறேன்..

---------------------------------------------------------------------------------

அதாவது நான் எனக்குச் சரி என்று தோன்றுவதை மட்டுமே சொல்கிறேன். அது தவறாகவும் இருக்கலாம் என்பதை என் மனம் அறியும். அது தவறு என்று உணரும் அதே நொடியில் நான் என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.

சில இடங்களில் தெளிவாகவே சொல்லி விடுவேன். இது நடைமுறையில் பெரிதாய் நடக்கச் சாத்தியமில்லை. ஆனால் இயன்ற வரை கடைபிடித்தால் இன்னின்ன நன்மைகள் உண்டு எனச் சொல்லி இருப்பேன்

தொழிலும் சமுதாய நோக்கும்
போனஸ் அல்லது ஊக்கத்தொகை

இப்படி சிலதிரிகள் அதற்கு உதாரணமாய் உண்டு.

விவாதமோ கதையோ விமர்சனமோ, என் மனதில் அந்தக் கருத்தை குறைந்த பட்சம் பத்து கோணங்களில் பார்த்த பின்னால் என் மனதில் உண்டாகும் எண்ணங்களையே எழுதுகிறேன். ஏறத்தாழ என்ன எதிர்வாதங்கள் உண்டு அதற்கு என்ன பதில் உண்டு என்பதும் மனதிற்குள் முன்பே உண்டு.

ஒரு கருத்து உண்மையென்று நம்புவதால்தான் நான் அதற்காக வெளியில் வாதிடுகிறேன், நான் மற்றவருடன் வாதிடுவதை விட என் மனதுக்குள் என்னுள் இருக்கும் பலரிடம் நான் மிக மிக அதிகமாக வாதிட்டு இருக்கிறேன். அமரனுக்கு சற்று அதிகமாக இதைப் பற்றித் தெரியும் என நினைக்கிறேன். கேட்கப்படும் கேள்விகள் வைக்கப்படும் விவாதங்கள் என் மனதில் ஏற்கனவே தோன்றி அதற்கு ஏற்கனவே பதில் அளிக்கப்பட்ட காரணத்தினால் உடனே என்னால் பதிலைக் கொடுத்து விட முடிகிறது.

என்னுள் வாதிக்கும் பொழுது, வாதத்திற்கு கருத்தை வைத்தல் - கருத்திற்கு வாதத்தை வைத்தல் கருத்தை எதிர்த்து கேள்வி கேட்டல், கருத்தின் பயன்களை ஆராய்தல், பின்விளைவுகளை பக்க விளைவுகளை யொசித்தல் வெளியிருந்து நோக்கல், உட்புகுந்தாராய்தல் என பலப்பல கோணங்களை பார்த்து வைத்திருப்பேன்..

பிறரோட கோணங்களை கருத்துக்களை ஆராயவோ மாட்டீங்களா என்று கேட்க நாக்கு துடிப்பது புரிகிறது. உடனே நடைமுறைப் படுத்தக் கூடிய விஷயங்களுக்கு பலரின் ஆலோசனைகளை நாடவே செய்கிறேன். எனக்குள் இப்படிச் செய்யலாம் என்று முடிவு செய்வதற்கு முன்பே அந்த ஆலோசனைகளைக் கேட்டு விடுகிறேன். அதனால் முடிவுவெடுப்பது எளிதாகி விடுகிறது. நான் ஒரு முடிவு எடுக்கும் முன்பு அதற்குரிய அடிப்படை ஆதாரங்கள் என்னிடம் இருக்கும். என்னிடமிருக்கும் ஆதாரங்கள் அழுத்தம் திருத்தமாய் என்னுள் நம்பிக்கை தரவில்லையென்றால் அந்த விவாதத்தில் நான் கலந்து கொள்வது இல்லை.

ஆனால் வாதம் என்று வரும்பொழுது வாதிப்பவர்கள் அதைத்தானே செய்கிறார்கள்.. அதனால் அவர்களின் வாதங்களை எதிர்கருத்துக்களாக பார்க்காமல் ஆலோசனைகளாக பார்க்கிறேன். ஆனால் அந்தக் கோணம் எனக்குப் புதியதாக இருந்தால் மட்டுமே அது புதிய ஆலோசனை. அந்தக் கோணத்தை, அந்தத் தகவலை ஏற்கனவே நான் யோசித்து இருந்தால் அதற்கு என் மனதில் எழும்பிய அந்த மாற்றுக் கருத்தை வெளிப்படுத்துகிறேன்.

பொதுவாக,

வாதத்திற்காக கருத்தை வைப்பது - கருத்துக்காக வாதத்தை வைப்பது..இரண்டுமே நல்லது.

என்னுடைய சில மிகச்சிறந்த வாதங்கள் இவை இரண்டும் இருந்ததால் தான் மிகத் தெளிவான கருத்துகள் வெளிவந்தன.

நான் கருத்துக்காக வாதம் வைப்பேன். ஆதவாவோ, விக்ரமோ அல்லது வேறு யாராவதோ வாதத்திற்காக கருத்தை வைப்பார்கள்.

வாதத்திற்காக கருத்தை வைப்பதன் நோக்கம் அதற்கு எதிரான கருத்தை இன்னும் தெளிவாக விவரமாக அறிந்து கொள்ளல் ஆகும்

இராவணன் நல்லவனா கெட்டவனா?
ஆத்திகம் நாத்திகம் ஒரு தெளிவு
தேடிக்கொண்டிருக்காதே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7248)
சலனம்
உணவகங்களில் டிப்ஸ் கொடுப்பது சரியா தவறா

இப்படி பல திரிகளில் இவை இரண்டும் இருப்பதைக் காணலாம்.

கடி ஜோக் திரிகளில் அந்த கடிக்கு பதில் கடி கொடுப்பதையும் பார்த்து இருப்பீர்கள்.

உதாரணமாக..

பொங்கலுக்கு லீவு விடறாங்க.. வடைக்கு லீவு விடுவாங்களான்னு பிரதீப் கேட்டிருப்பார்.

அதுக்கு பொங்கலுக்கு லீவு விட்டா நீங்க ஏன் வேலை செய்ய மாட்டேங்கறீங்க.. நீங்க என்ன பொங்கலா? கேட்டா பொங்கிருவீங்க தானே.. அப்படின்னு கேட்டிருப்பேன். இது வாதத்திற்கு கருத்தை வைப்பது. இதை நான் விவாதத்திரிகளில் செய்வது இல்லை. கவிதைத் திரிகளில் செய்வேன், இதற்கு மிகச் சிறந்த உதாரணம்

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6994

இன்னும் பல இலாவணிக் கவிதைகள் (பதிலுக்கு பதில் கவிதைகள்) எழுதி கவிதையின் கருவை விவாதித்து இருப்பேன்.

சுருக்கமாகச் சொன்னால்

வாதிடும்போது நான் எதுசரி என்று எண்ணுகிறேனோ அதைத்தான் சொல்கிறேன். என் கருத்துக்களுக்காக வாதிடுகிறேன், வாதத் திரிகளில் என் கருத்தை மட்டும் எழுதுகிறேன்.

மற்றைய இடங்களில் வாதத்திற்காக தெளிவிற்காக பலமுறை கருத்துக்களை வைக்கிறேன், இதையும் சிந்தியுங்கள் என்பது போல..

அமரன்
14-03-2009, 10:56 PM
எம்பா சசீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.. நீங்கமட்டுந்தானா அல்லது கூட்டணியா. நிசமாவே ஆபத்து தாக்கிட்டுதே...

ரங்கராஜன்
15-03-2009, 04:50 AM
மன்றத்தில் 33 சிறுகதைகளை இதுவரை கொடுத்து உள்ளீர்கள், இதில் எத்தனை உங்கள் வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டது? உங்கள் கதையின் கதாபாத்திரங்களை பெரும்பான்மையாக படைப்பது உங்கள் பிரதிபலிப்பாகவா அல்லதும் நீங்கள் காணும் மனிதர்களின் பிரதிபலிப்பாகவா??

நன்றி சசி

சிறுகதைகள் எழுதுவது என்பது எனக்கு ஒரு மேஜீக்காக தான் உணர்கிறேன், அதுக்கு எந்த வரையறையும் நான் வைத்துக் கொள்வது கிடையாது. இதை தான் முதலில் செய்ய வேண்டும், இதை கடைசியில் செய்ய வேண்டும் என்று எந்த விதமான சட்டத்திட்டங்களை நான் வைத்துக் கொள்வது கிடையாது. குறிப்பாக என் மனம் போனப் போக்கில் தான் கருக்களை படைப்பேன். நீங்கள் குறிப்பிட்ட 33 சிறுகதைகளிலும் நான் அனைத்தையும் சிறுகதைகளாக அங்கீகரிக்கவில்லை, அதில் கண்டிப்பாக ஒரு 10 கதைகள் ஒரு ஜாலிக்காக எழுதியது, அவை சிறுகதைகள் ஆகாது.

அப்புறம் என்னுடைய கதாப்பாத்திரங்களை நான் எனக்குள் இருந்து எடுக்கிறேனா? என்று கேட்டு இருந்தீர்கள். கதாபாத்திரங்களை மூன்று விதமாக உருவாக்கலாம்

1. மற்றவர்களை வைத்து உருவாக்குவது.

2. தன்னை வைத்தே உருவாக்குவது.

3. மற்றவர்கள் இடத்தில் தன்னை வைத்து கற்பனையுடன் உருவாக்குவது.

கற்பனை fantacy கதாபாத்திரங்கள் (spiderman, batman, superman) தனி வகை. நான் மேலே சொன்ன மூன்று வகைகள் தான் கதாபாத்திரங்களை
படைப்பேன். சில கதைகளில் கதாபாத்திரங்கள் மனிதல் நிற்கும், சிலதில் கதைகள் நிற்கும், சிலதில் காட்சிகள் நிற்கும். நான் எழுதிய கதைகளில் இருந்தே சில உதாரணங்களை தருகிறேன்.

மற்றவர்களை வைத்து உருவாக்குவது.

நான் எழுதிய சக்களத்தி கதையில் வரும் செண்பகம் என்ற கதாபாத்திரத்தை ஒரு அக்காவை பார்த்து உருவாக்கியது. அதில் எந்த கற்பனையையும் சேர்க்கவில்லை.

தன்னை வைத்தே உருவாக்குவது.

கடைசிநாள், எது காதல்? முதலிய சில சிறுகதைகள் இந்த முறைப்படி உருவானது.

மற்றவர்கள் இடத்தில் தன்னை வைத்து கற்பனையுடன் உருவாக்குவது

அவனது, வழித்துணை போன்ற சிறுகதைகளில் இதில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் நாம் நேரில் பல முறை பார்த்து இருப்போம், அவர்கள் இடத்தில் நம்மை பொருத்தி, ஒரு நிகழ்வுக்கு நாம் அவர் இடத்தில் இருந்தால் என்ன செய்வோம் என்று உருவாக்குவது தான் இந்த முறை. இந்த முறைக்கு உள்வாங்குதல் மிக அவசியம். பல எழுத்தாளர்கள் இந்த முறையை தான் கையாள்வார்கள். அவர்கள் படைப்புக்கு கதாபாத்திரங்களில் ஹீரோவாக நடிப்பது அவர்களுக்குள் இருக்கும் நல்ல எண்ணங்கள் தான், வில்லனாக இருப்பது அவர்களுக்குள் இருக்கும் தீய எண்ணங்கள் தான். இரண்டு வெவ்வெறு எல்லை குணாதிசியங்கள் வருவதும் எழுத்தாளன் என்ற ஒருவனிடம் இருந்து தான்.

நான் மேலே சொன்ன மூன்று முறையில் உருவான கதையில் வரும் கதாபாத்திரங்களில் இருக்கும் அழுத்தம், சோகங்கள் வித்தியாசப்படும். சிலது மனதை தொடாது, சிலது மனதை விட்டு அழியாது, சிலது மனதிலே ஏறாது. இதில் முக்கியமான ஒன்று அந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் நீங்களாகவோ, அல்லது உங்களுக்கு தெரிந்தவராகவோ, இல்லை நீங்கள் விரும்புகிறவர்கள் யாராவது இருந்தால் கதை உங்களை சீக்கிரம் ரீச் ஆகும்.

கண் எதிரே ஒருவன் உயிர் போவதை நீங்கள் பார்த்து இருந்தால் மனிதாபிமானம் என்ற கதை உங்களுக்கு பிடிக்கும்.

உங்கள் காதலியின் மீது வெறிதனமான அன்பு, காதல் வைத்து இருந்தால் நீ எனக்கு வேண்டும் என்ற கதை உங்களுக்கு பிடிக்கும்.

இரண்டாந்தாரமாக வாக்கப்பட்ட போன அக்காவோ தங்கையோ உங்களுக்கு இருந்தால் உங்களுக்கு சக்களத்தி கதை பிடிக்கும்.

ஒரு விதவையின் சுக துக்கங்களை நீங்கள் பார்த்து இருந்தீர்கள் என்றால் ஒழிச்சிப்போ சனியனே என்ற கதை உங்களுக்கு பிடிக்கும்.

பல கதைகளின் வெற்றியை தீர்மானிப்பதே கதையில் வரும் கதாபாத்திரங்கள் தான். வாசகனின் கற்பனைக்கு எல்லையே இல்லை எந்த கதாபாத்திரத்தில் வேண்டுமானாலும் அவன் மனம் ஏறி அமர்ந்துக் கொள்ளும், என்ன அது அவனை பாதித்த பாத்திரமாக இருக்க வேண்டும், அவ்வளவே. எப்பொழுதும் ஒரே மாதிரி கதை கருக்களையும், கதாபாத்திரங்களை படைக்க எனக்கு பிடிக்காது, என் 33 சிறுகதைகளில் அனைத்துமே ஒவ்வொரு கருக்களையும், கதாபாத்திரங்களையும் கொண்டது, இதற்கு காரணம் என் கதையின் முதல் வாசகன் நான் என்பதால்.

நான் கதைகள் உருவான கதை என்று ஒரு திரியில் என்னுடைய கதைகள் எனக்கு தோன்றிய இடங்களும், அதற்கு காரணமாக இருந்தவர்களையும் பற்றி எழுதி வருகிறேன். அதை நேரம் கிடைக்கும் பொழுது ஒரு முறை படித்தீர்கள் என்றால், உங்களின் இந்த கேள்விக்கு முழுமையான பதில் கிடைக்கும் என்று நினைக்கிறேன். இந்த வாய்ப்பை கொடுத்த உங்களுக்கு என்னுடைய நன்றி.

பூமகள்
15-03-2009, 05:51 AM
4. அடுத்து ஓவியா அக்காவுக்கு,
பெண்களை உயரவிடாமல் தடுப்பது ஆண்களா? அல்லது பெண்களேவா?
பெண்கள் ஆண்களுக்குச் சமம் என்ற கருத்து பற்றிய தங்களின் எண்ணம் என்ன?ஓவியா அக்காவுக்கான கேள்வி எனக்கு திசை மாற்றிக் கொடுத்து மாட்டி விட்டதற்கு நன்றிகள் லீலுமா...

இதை வரவேற்று ஆமோதித்த அருமை அமர் அண்ணாவுக்கு என் அன்பு கண்டனங்கள்... ;)

--

1. பெண்களை உயர விடாமல் தடுப்பது எதுவென நீண்ட நேரமாக யோசித்துக் கொண்டே இருந்தேன்.. என் அறிவுக்கு எட்டிய பதிலை இங்கு பதிக்கிறேன்..

"முயற்சி திருவினையாக்கும்"

"முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்"

"முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்"

இப்படி ஒருவரின் முயற்சி பற்றி பல்வேறு பரிமாணங்கள் நம்மிடையே உலவினாலும், அந்த முயற்சிக்கு தடையாக இருக்கும் காரணிகள் எதுவென ஆராய்ந்து அதைக் களைபவர்களே வெற்றி நாயகர்களாக நம்மிடையே திகழ்கிறார்கள்..

பொதுவாக.. இன்றைய கால கட்டத்தில் ஆண்/பெண் முன்னேற்றம் என்பது என்னைப் பொறுத்தவரை பொதுவாகவே அணுக வேண்டுமென நம்புகிறேன்.. யாருடைய வெற்றியாயினும் அவரவர் எதிர்கொள்ளும் சவால்களும், வாழ்வியல் சூழல்களுமே முக்கிய காரணிகளாக அமையும்.

அவ்வகையில் பெண்களுக்கு உண்டாகும் தடைக் கற்கள் ஆண்களை விட சில சதவிகிதம் அதிகமாவே இருக்கச் செய்கிறது. ஆயினும், வாய்ப்பு கிட்டினால் அதனை முறியடித்து வெற்றி நடைபோடும் எத்தனையோ பெண்கள் இருக்கவே செய்கிறார்கள். ஆயினும், அந்த வாய்ப்பும் அதற்கான தகுதியும் வளர்த்துக் கொள்ள இயலாத சூழலில் இன்றும் பல பெண்கள் அறியாமையில், நெடுந்தொடர்களில் தன்னிலை தொலைத்தவர்களாகவே இருப்பது வேதனை..

ஆக.. பெண்கள் முன்னேற்றத்துக்கு காரணமாக இருப்பதும் அதனை தடுப்பதும் அவரவர் எதிர்கொள்ளும் சூழலும் அவரவர் கொண்ட திறனையும் பொறுத்தது. இன்றளவில் பெண்களின் திறனை போற்றி, அவளின் தனித்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்க இன்றைய நம் தலைமுறையினர் மனமாற்றம் அடைந்திருக்கின்றனர்.. இது வரவேற்கத்தக்கது.

ஆயினும், சில அழகியல் சார்ந்த விசயங்களிலும், பொழுதுபோக்கு ஆடம்பர பொருட்களின் மேல் உள்ள நாட்டத்தாலும் பெண்கள் இன்னும் முன்னேற அவர்களாகவே தடை ஏற்படுத்திக் கொள்வதாக நான் நம்புகிறேன்..

ஆணோ/பெண்ணோ.. எவராயினும் ஒருவரின் வெற்றிக்கு தடை கல்லாக இருக்க எப்போதுமே முடியாது.. அவ்வகையில் இருக்க இன்றைய சட்டமோ சமூகமோ அனுமதிக்காத நல்ல சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன்..

2. "ஆணுக்கு பெண் சரி நிகர் சமானம்"

இன்றைய அவசர நவீன உலகில், ஆண்/பெண் என்ற பேதங்கள் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. இருவருமே மனித இனத்தின் பிரதி நிதிகள் என்ற முறையில் இணைந்து களம் இறங்கி போராடி ஜெயிக்கக் கற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சில உடல்/குண வேறுபாடுகள் தவிர, ஆணும் பெண்ணும் எவ்வகையிலும் வித்தியாசப்படுவதாகவோ, உயர்வாகவோ தாழ்வாக எண்ணவோ அவசியமில்லையென்பது என் கருத்து.

இன்றைய கால கட்டத்தில் பல முக்கிய பணிகள் மேற்கொள்ள இருபாலரின் அறிவும் ஆற்றலும் புரிந்துணர்வும் இன்றியமையாததாகிறது. இவர்களின் கூட்டுமுயற்சி பல இமாலயச் சாதனையை உண்டாக்குகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

பெண் என்பவள், அடுத்த தலைமுறை உருவாக்கத்துக்கும், குடும்ப உறவுகளின் நலன் பேண மட்டுமல்லாது, அவளின் தனித்துவம் மாறாமல் அதையும் காப்பாற்றி முன்னேற வழி செய்வது ஒவ்வொரு ஆண்மகனின் கடமை மட்டுமல்ல.. அதுவே முறையானதும் கூட.

இன்றளவில் ஆண்/பெண் என்ற பேதங்கள் நம் நாட்டில் தான் அதிகம் வித்தியாசப்படுத்தப்படுவதாக நான் கருதுகிறேன்.

பல நாடுகளில் இவ்வகை பேதங்கள் முற்றிலுமாகவே அழிக்கப்பட்டு ஒரு சிறந்த வரவேற்கத் தகுந்த சூழல் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

அத்தகைய சூழல் இந்தியாவிலும் வர வேண்டும். அப்போது பெண் சிசு கொலைகள் குறையும்.. வரதட்சணை கொடுமைகள் மாறும்.. அந்த நாளுக்காக உங்களோடு நானும் காத்திருக்கிறேன்.

பதிலளிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு என் நன்றி.. (அமர் அண்ணா, இது உங்க வேலை தானே.. நற நற நற.... :D :D)

சிவா.ஜி
15-03-2009, 06:00 AM
3.சிவா அண்ணா

கதை, கவிதை, விவாதம், விமர்சனம் என்று அனைத்து துறையிலும் அசத்தும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் முதல் முதலில் படைத்த படைப்பு எது?, சிறந்த படைப்பாக நீங்கள் கருதும் உங்களின் படைப்பு எது? சிறந்த படைப்பாக கருதுவதின் காரணம் என்ன?

ஆ 10ல் அழைத்தமைக்கு நன்றி சசி.

அனைத்திலும் கலந்துகொள்ள களம் கிடைத்ததால்தான் கலந்துகொள்கிறேனே தவிர...அனைத்தும் தெரிந்ததால் இல்லை.

1983 ல் மும்பையில் இருந்தபோது ஒரு கையெழுத்துப்பத்திரிக்கை நடத்திக்கொண்டிருந்தோம். பூபாளம் என்ற பெயரில். அதற்கு நான் ஆசிரியராக இருந்தேன். அதன் முதல் இதழுக்கு ஒரு கதை எழுதினேன்.
“கடிதங்களே கவலையாக” என்ற தலைப்பில். அதுதான் எனது முதல் படைப்பு.

முதன்முதலில் வீட்டை விட்டு வெளியூருக்கு வேலைக்கு வந்திருக்கும் இளைஞனுக்கு அவன் வீட்டிலிருந்து வரும் கடிதங்கள், ஆரம்ப விசாரிப்புகளுக்குப் பிறகு கனமான விஷயங்களை தாங்கி வர ஆரம்பிக்கிறது. வீட்டிலிருந்தவரை அவனுடன் இதைப்போன்ற கனமான விஷயங்களை யாரும் சொன்னதில்லை, ஆலோசித்ததில்லை...ஆனால் இப்போது அக்காவின் அலுவலகத்தில் அவளுக்கு நடக்கும் பாலியல் ரீதியான தொல்லைகள், அப்பாவின் கடன்பிரச்சனை, அண்ணனுக்கும் அண்ணிக்கும் இடையிலிருக்கும் கருத்துவேறுபாட்டால் வரும் சண்டைகள் என அனைத்தும் அவனுக்கு கடிதங்களாக வருகிறது.

ஆரம்பத்தில் வீட்டிலிருந்து வரும் கடிதங்களுக்காக காத்துக்கொண்டிருந்தது போய்...கடிதம் வந்தாலே கவலைகொள்கிற அளவுக்குப் போய்விடுகிறது. இதுதான் அந்தக்கதையின் கரு.

நான் எழுதிய கதைகளில் எனக்கு ஓரளவுக்கு திருப்தி தந்தது ‘கோஹினூர் கொலைகள்' என்ற தொடர்கதைதான். ஏனெனில் அதற்காக நிறைய செய்திகளை சேகரித்தேன். புத்தகங்களைப் படித்தேன். அதுமட்டுமல்ல....நமது மன்ற உறவுகளுக்குப் பிடித்த கதை. அதனால் எனக்கும் பிடித்த கதை.

samuthraselvam
15-03-2009, 07:47 AM
1.லீலுமா

சகோதிரியே, பெண்கள் ஆண்கள் இருவரில் பொதுவாக மனதளவில் பலம் பொருந்தியவர்கள் பெண்கள் என்று சொல்வார்கள். அதை

பற்றிய உங்கள் கருத்து என்ன?

பெண்களை வாழ்வின் ஆதாரம் எனவும் பெண்கள் இல்லையெனில் உலகில் சிருஷ்டிகள் இல்லை எனவும் அனைவரும் அறிவோம். அத்தகைய பெண்களுக்கு கண்டிப்பாக எந்த ஒரு விஷயத்துக்கும் மனோதைரியம் அவசியம். அந்த மன பலம் பெண்ணுக்குள் இருப்பதை எந்த சூழ்நிலையில் பிறர் காணும்படி அமைகிறது? என்பதைப் பொறுத்தே மனம் எந்த அளவு பலம் அடைந்துள்ளது என்பதை அறிய முடியும்.

உதாரணமாக, கணவரானாலும் சரி சமூகத்திலும் சரி எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசாதவள் தன் கணவனுக்கோ அல்லது தன் குழந்தைக்கோ அல்லது தன் குடும்பதிற்க்கோ ஒரு ஆபத்து வரும்போது ருத்ரதாண்டவமே ஆடுவாள்.

அதே, கணவன் வாழ்நாள் முழுவதும் துன்பத்தைத் தவிர வேறு எதையும் தராமல் போனாலும் அவன் சாவுக்கோ அல்லது அவன் பிணிக்கோ அவள் & அவளின் பெண்மை கண்டிப்பாக கண்ணீர் விடும்.

எனவே மனோபலம், மனோதைரியம் என்பது எல்லாப் பெண்களுக்குள்ளும் கண்டிப்பாக இருக்கும். அதற்கு தகுந்த சூழ்நிலை அமையும்போது மட்டுமே வெளிப்படும்.

ஆண்கள், பிறரை சார்ந்தே இருக்க வேண்டும். பெண்ணின் துணை இல்லாமல் கண்டிப்பாக ஒரு ஆணால் வாழ்க்கை நடத்த முடியாது.

ஆண்கள்கூட திருமணம் செய்யாமல் தனித்து வாழ்ந்தாலும், ஏதாவது ஒரு விதத்தில், ஏதாவது ஒரு சமயத்தில், ஏதாவது ஒரு பெண்ணைச் சார்ந்தே இருக்க வேண்டும். அது மனைவியாகவோ அல்லது அன்னையாகவோ அல்லது மகளாகவோ அல்லது மற்ற யாராவது ஒரு பெண்ணாகவோ இருக்கலாம்.

கணவனை இழந்த ஒரு பெண் தூற்றும் சமூகத்திலும் தன் குழந்தைகளை நல்ல தன்னம்பிக்கையோடு வளர்த்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவாள்.

உதாரணம் என் முந்தைய கேள்விக்கு அமர் அண்ணாவின் பதிலே....!!

நான் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் என்னை பிரமிக்க வைக்கிறார்கள். அவர்களில் முதலானவர் என் அன்னை.

நான் பிறந்து ஓராண்டு ஆகமுன்னரே என் தந்தை அகாலமானார். இருபது வயதில் ஒரு வயது மகனுடன் புகுந்த வீட்டைப் பகைத்து விட்டு பிறந்த வீட்டில் ஒரு கைப்பெண் வாழ்வது எவ்வளவு கடினமானது. அதிலும் அவள் வேலைக்குப் போனால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எத்தகையது.

இதுவரைக்கும் நாம் வசித்த ஊரில் எல்லாம் ஒரு பார்வை கூட அம்மாவை நோக்கி தப்பாக வீசப்பட்டிருக்காது. ஒரு சொல் கூட அம்மாவை மானபங்கப்படுத்தி இராது. அம்மாவுடன் நட்பு பூண்ட ஒவ்வொரு உள்ளமும் அம்மாவை ஆராதிக்கும். இதெல்லாம் அம்மாவுக்கு எப்படி சாத்தியமானது. ஒரு வேளை வன்முறை விழுக்காடு அறவே இல்லாத அம்மாவின் மெல்லினப் போக்கா. வேறு ஏதாவதா. எண்ணும் ஒவ்வொரு கணமும் என்னை பிரமிக்க வைப்பதும் பலவற்றைக் கற்றுத் தருவதும் அம்மா என்ற மந்திரச்சொல்தான்.

அதே ஒரு ஆண் மனைவியை இழந்தால், விரைவாக மற்றொரு துணையை மிக விரைவாக தேடிக்கொள்வார்கள். இதனை நாம் நிறைய இடங்களில் பார்த்திருக்கிறோம்.

அதற்காக துணையை இழந்தவர்கள் மற்றொரு துணையை தேடிக்கொள்வது, தவறு என்று கூறவில்லை. இன்னொரு துணையை தேடாமலே தன் நம்பிக்கையால், தன் முயற்சியால், தன் மன பலத்தால் யாருடைய உதவியும் நாடாமல் வாழ்வில் வியக்கவைக்கும் ஒரு ஜீவன், பெண்.

இதை பல ஆண்கள் சொல்லக்காரணம், ஒரு விதவைத் தாயாரின் கஷ்ட நஷ்டங்களையும் சமூகத்தில் தனியாகப் போராடும் ஒரு பெண்ணின் (ஒவ்வொரு பெண்ணின்) துன்பங்களையும் தன்னுடையதாக்கிப் பார்க்கும் மனப் பக்குவத்தினை பெற்றமையால்தான்.

தனியான பெண் மட்டுமல்ல கணவனின் துணையான பெண் கூட தன் திறமையோடு தன் கணவனின் திறமையையும் சேர்த்து தன் இல்லறத்தை நல்லறமாக்கி தன் குலத்தையே தழைக்கச் செய்வாள்.

உடல் வலிமை என்று பார்த்தல், ஆண்கள்தான்.

ஆனால் பெண்களும் பலசாலிகள் தான்.
ஈழத்தில் போர் புரியும் பெண் புலிகள்,
மிலிட்டரியில் உள்ள பெண்கள்,
பெண் காவலர்கள்,
சரித்திரதில் ஜன்சிராணி,
புலமையில் ஒவ்வையார்,
வற்றிய கங்கைக்கு தன் தவத்தால் நீர் ஊறவைத்த அத்திரி முனிவரின் மனைவி அனசூசை,

ஏன் சத்தியவான் சாவித்திரி கதை தெரியும் அல்லவா? மனபலம் இல்லை என்றால் எமனிடமே தன் கணவனின் உயிரை மீட்டுத் தர முடியுமா?

இது என் பொதுவான கருத்து.

samuthraselvam
15-03-2009, 08:02 AM
என் வேண்டுகோளை ஏற்று பதிலலித்த பூமகள் அக்காவுக்கு நன்றி.. பாவம் அமரன் அண்ணா, அவரெல்லாம் ஐடியா கொடுக்கல, நான் தான்.

நிரன்
15-03-2009, 01:20 PM
சசீசீசீசீ ............ இப்படியெல்லாம் செய்திட்டீங்களே:confused: வரலாறு என்ற பாடத்தையே வெறுப்பவர் பட்டியலில் நான்... என்றாலும் நீங்கள் கேட்டதால் மிகவிரைவில் வருகிறேன்

ரங்கராஜன்
15-03-2009, 01:28 PM
பூமகளின் பதில் நன்றாக இருந்தது.

சிவா அண்ணா கையெழுத்து பத்திரிக்கை எல்லாம் நடத்தி இருக்கிறீர்களா?? ம்ம்ம்ம்ம். சரி கோஹினூர் கொலைகள் என்ற கதையின் சுட்டி கொடுத்து இருக்கலாமே.

லீலுமா, உங்களின் பதிலை படித்து பிரமித்தேன். உங்களின் பெயரை போடாமல் இருந்து இருந்தால் இது தாமரை அண்ணனின் பதில் என்று நினைத்து இருப்பார்கள். அந்த அளவுக்கு அருமையாக இருந்தது.

தாமரை அண்ணாவிடம் இந்த கேள்வியை நான் கேட்கணும் என்று நினைத்து இருந்தேன். சில முறை பேசும் பொழுது கேட்டும் இருக்கேன் என்று நினைக்கிறேன். ஆனால் சரியான பதில் வந்தது கிடையாது. இந்த முறையும் அவர் பதில் எனக்கு திருப்தி தரவில்லை. தன்னுடைய கருத்தில் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் ஒருவரால் மனதார விவாதிக்கவே முடியாதே, அப்புறம் எப்படி அண்ணா நம் விவாதத்தை தொடர்வது. சந்தேகங்களுடன் இருக்கும் பட்சத்தில் நாம் ஆணித்தரமான விவாதங்களை வைக்க முடியாதே, அப்படி வைத்தாலும் எதிர்வாதிடுவோர் உங்கள் கருத்தை வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்ளும் பட்சத்தில் தவறான கருத்து தழைத்து விடுகிறதே.

அன்புரசிகன்
15-03-2009, 06:07 PM
9.அன்புரசிகன்

ஜாலியான டைப்பான உங்களிடம் ஒரு கேள்வி. அனைவரின் படைப்பையும் ஜாலியாக கலாய்க்கும் நீங்கள் உங்களின் படைப்புகளை ஏன் மன்றத்தில் அதிகமாக பதிவதில்லை? மன்றத்தில் நீங்கள் அதிகம் விரும்புவது எத்தகைய படைப்புகளை?

உண்மையை சொன்னால் பானையில் இருந்தால் தானே அகப்பையில் வருவதற்கு...:D சொந்தமாக எழுத எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. சிலநேரங்களில் அது இன்னொருவரின் திரியில் அது ஒரு பதிவாகிவிடும். தனியாக ஒரு திரி ஆரம்பிக்கும் அளவிற்கு தகுந்ததென்றால் ஆரம்பித்திடலாம். அவ்வாறு ஏதும் எனக்கு தோன்றியதில்லை.

நான் ஆரம்பிப்பதில் இருக்கும் அடுத்த பிரச்சனை அதை சரியாக முடிக்க இயலாமை/(தெரியாது:icon_ush:). அதற்கு நேரமும் ஒரு காரணியாக அமைந்துவிடுகிறது.

அதனால் மற்றவர்களுடைய திரியில் சற்றே கலாய்ப்பாக பதிவது எனது வழமை. அது கூட தற்காலங்களில் சற்றே மட்டுப்படுத்திவிட்டேன். :)

மற்றப்படி இந்தப்பதிவு தான் பிடிக்கும். இப்படியான பதிவுகள் பிடிக்காது என்று நான் எந்த வரையறையும் பெரிதாக வைக்கவில்லை. ஆனால் அநேகமாக கதைகள், நகைச்சுவைகள் பகுதியில் எனது மன்ற நேரத்தினை செலவிடுவேன். ராஜா மன்மதன் அண்ணர்களின் நகைச்சுவைகளை அதிகம் விரும்பிப்படிப்பேன். சிவா அண்ணாவின் நகைச்சுவை மற்றும் கதைகளுக்கு அடிமை.:icon_03:

சிவா.ஜி
16-03-2009, 07:23 AM
சிவா அண்ணா கையெழுத்து பத்திரிக்கை எல்லாம் நடத்தி இருக்கிறீர்களா?? ம்ம்ம்ம்ம். சரி கோஹினூர் கொலைகள் என்ற கதையின் சுட்டி கொடுத்து இருக்கலாமே.

இதோ தக்ஸ் அந்த சுட்டி.

கோஹினூர் கொலைகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16535)

சசிதரன்
16-03-2009, 06:24 PM
அடடா.. பட பட-னு பதில் எழுதி தள்ளிட்டீங்களே எல்லோரும்... நான்தான் தாமதமா வந்துட்டேனா??:D அலுவலகத்தில் ரொம்ப பிழியறாங்க:traurig001::traurig001:... இணையதளத்தையும் தடை பண்ணிட்டாங்க...:(.. அதான் வர முடியலை... விரைவில் விரிவான பதில்களோடு வரேன்...:) விடையளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி..:) விடயளிக்காத உள்ளங்களும் சீக்கிரம் விடையளித்து நல்ல உள்ளங்களா மாறிடுங்க..:D:D

அமரன்
17-03-2009, 07:44 AM
அருமையான கேள்விகள். ஆழமான பதில்கள். ஒவ்வொரு வரியையும் உள்ளார்ந்து நுகர்ந்து அனுபவித்து சுவைத்தேன். தாமரை அண்ணா, பூமகள், லீலுமா, தக்ஸ் என எல்லார் சிந்தனையும் மின்னுகிறது. ஆரோக்கியம் தருகிறது. பாராட்டுகளும் நன்றியும்.

தாமரை
17-03-2009, 01:16 PM
தாமரை அண்ணாவிடம் இந்த கேள்வியை நான் கேட்கணும் என்று நினைத்து இருந்தேன். சில முறை பேசும் பொழுது கேட்டும் இருக்கேன் என்று நினைக்கிறேன். ஆனால் சரியான பதில் வந்தது கிடையாது. இந்த முறையும் அவர் பதில் எனக்கு திருப்தி தரவில்லை. தன்னுடைய கருத்தில் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் ஒருவரால் மனதார விவாதிக்கவே முடியாதே, அப்புறம் எப்படி அண்ணா நம் விவாதத்தை தொடர்வது. சந்தேகங்களுடன் இருக்கும் பட்சத்தில் நாம் ஆணித்தரமான விவாதங்களை வைக்க முடியாதே, அப்படி வைத்தாலும் எதிர்வாதிடுவோர் உங்கள் கருத்தை வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்ளும் பட்சத்தில் தவறான கருத்து தழைத்து விடுகிறதே.

நமக்கு முற்றிலும் தெரியாத விஷயத்தைப் பற்றி ஒரு கோணத்தில் ஆதரித்து விவாதம் செய்வதற்கு பொருள் தேடல் என்பதாகும். இதன் அடிப்படை நோக்கம் அடுத்த கோணத்தைப் பற்றி மற்றவரிடம் இருந்து அறிந்து கொள்வதாகும்.

இந்த அடிப்படையை அறிந்து கொண்டால் விவாதம். இல்லாவிட்டால் பிடிவாதம்.

விவாதத்தில் இருகோணங்கள் மட்டுமே என்பதுதான் தவறு. இது சரி என்பதால் அது தவறு என்று அர்த்தம் அல்ல. அது தவறு என்றால் இது சரி என்று அர்த்தமில்லை. என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் எல்லாம் சரியாகி விடும்.

யார் உயர்ந்தவர் தலையா - மனோ,ஜி யா என்றால்

தலை உயர்ந்தவர் என்றால் மனோ.ஜி தாழ்ந்தவர் என்று அர்த்தம் அல்ல. இருவரும் உயர்ந்தவர்கள். இருவரில் யார் மேலோங்கி நிற்கிறார்கள் என்றுதான் விவாதம்,

வாதத்திற்காக ஒருத்தரை தவறான முறையில் இழித்துக் கூறுதல் தவறு. எனக்கு மனோ.ஜியைப் பற்றி அதிகம் தெரியாது என்பதால் தலை பற்றி உயர்வாகப் பேசலாம். மனோ.ஜி யைப் பற்றி இன்னொருவர் பேசலாம், ஆனால் அவருக்கும் மனோ.ஜியைப் பற்றி கொஞ்சம் தான் தெரியும் எனக் கொள்வோம்.

முடிவு தவறாக இருக்கலாம். ஆனால் தலையைப் பற்றியும் மனோ.ஜியைப் பற்றியும் பலரும் அறிந்து கொண்டிருப்பார்கள்.இருவரின் நற்குணங்களும் வெளிப்பட்டிருக்கும். மனோ.ஜி முன்பை விட சற்று உயர்ந்த இடத்தை என் மனதில் பெற்றிருப்பார். தலை இதுவரை இருந்த இடத்திலே தான் இருப்பார். ஆக

உண்மையில் பார்த்தால் தலை உயர்ந்தவர் என்று முடிவு செய்தாலும்.. தலை முன்பு என் மனதில் இருந்தாரோ அதே இடத்தில் தான் இருப்பார். ஆனால் மனோ.ஜி முன்பு இருந்த இடத்தை விட சற்று உயர்ந்த இடம் பெற்றிருப்பார்.

அப்படியானால் உண்மையான வெற்றியை அடைந்தவர் மனோ.ஜி தானே..

இதற்காகத்தான் கேள்விகள் கேட்பதை தடுக்கக் கூடாது. முடிந்த வரை விளக்க வேண்டும்.

(இப்படியே நான் எழுதிக் கொண்டிருந்தால் திருப்பதியில் இருந்தும், பழனியில் இருந்தும் தாமரை இனி எழுதக் கூடாது என தடை உத்தரவு வரலாம்.:lachen001:)

பரஞ்சோதி
17-03-2009, 01:27 PM
ஆஹா! ஆஹா!

எப்படிங்க, ஒரு முடி-வோடு முடி-வில்லாத படி எழுத முடி-வு செய்றீங்க

- சொட்டை தலையுடன்

அய்யா
17-03-2009, 05:23 PM
ஆஹா! ஆஹா!

எப்படிங்க, ஒரு முடி-வோடு முடி-வில்லாத படி எழுத முடி-வு செய்றீங்க

- சொட்டை தலையுடன்

நல்லா முடி'ச்சு போடுறிங்கப்பூ ஒரு முடி*'வோடதான் வந்திருக்கீங்க போல!

தாமரை
17-03-2009, 05:48 PM
ஆஹா! ஆஹா!

எப்படிங்க, ஒரு முடி-வோடு முடி-வில்லாத படி எழுத முடி-வு செய்றீங்க

- சொட்டை தலையுடன்

தலையின் கவனத்திற்கு. :D

(போட்டுக் கொடுப்போமில்ல)

பரஞ்சோதி
17-03-2009, 06:00 PM
தலை தலையில சுத்தி போட்டா கூட டோப்பாவை கழட்டமாட்டாரு தெரியுமா?

சசிதரன்
19-03-2009, 05:41 AM
மிகவும் அருமையான மற்றும் சுவையான பதில்கள்...

சிவா அண்ணா.. உங்கள் கோஹினூர் கொலைகள் கதையை விரைவில் படித்துவிட்டு வருகிறேன்..:)

தக்ஸ்... நீங்கள் கதாபாத்திரங்களை உருவாக்கும் விதம் பற்றி விளக்கியமைக்கு நன்றி... நீங்கள் சொன்ன கதைகளில் சில நான் இன்னும் படிக்கவில்லை.. படித்துவிட்டு கருத்து தெரிவிக்கிறேன்..:)

தாமரை அண்ணா... உங்கள் கருத்துக்களை முதல் இரண்டு வரிகளிலேயே தெளிவா சொல்லிட்டீங்க...:)

லீலுமா... பெண்களின் மனபலத்தை பற்றிய உங்கள் கருத்துக்கள் மிக அருமை...:)

ஆதி அண்ணா, இளசு அண்ணா, லோஷன், அமரன் அண்ணா மற்றும் நிரன்... இன்னும் உங்க பதில் வரலியே... :smilie_abcfra:

அமரன்
19-03-2009, 07:36 AM
2.அமரன்

உங்களின் கடந்த பதிலை பார்த்து ரசித்தேன், அன்னையை பற்றி உங்களின் கருத்துக்கள் மனதை தொட்டது? அதனால் உங்களிடம் இந்த
கேள்வியை கேட்கிறேன். அதற்கு முன் ஒரு கேள்வி உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை தானே? அப்படியென்றால் உங்களின் வருங்கால மனைவியை பற்றி உங்களின் கனவு + எதிர்ப்பார்ப்பு என்ன?, திருமணம் ஆகியிருந்தால் உங்கள் மனைவியை பற்றிய கருத்து என்ன? மறைக்காமல் உண்மையை சொல்லுங்கள்.

சசி..

ஏற்கனவே கல்யாணம் ஆகி இருந்தால் இந்தக் கேள்வியால் என்ன விளைவாகும்.
இனிமேத்தான் பொண்ணு அமையணும்னா இந்தக் கேள்வியால என்னாகும்.
இந்த இரண்டை விட ஆபத்தாகத் தெரிவது, பொண்ணு அமைந்து அவுங்க இந்தக் கேள்விக்கான என் பதிலைப் படிப்பது.

நிசமாவே இந்தவாட்டிதான் எனக்கு ஆ 10:):).

கோப்பையில் குடி இருக்கையில் நண்பர்கள் வளைத்துப் பிடித்ததில் தப்பிக்கச் சொன்னது பாட்டில் எடுத்தால் கையில் கிளாசுடனும் சைடிஸ்ஸுடனும் வந்து நிக்கனும்.

உயிர்தோழி கேட்கும் போது சிறுமுறுவலுடன் சொன்னது நிச்சயமாக உன்னைப் போல வேண்டவே வேண்டாம்.

குடும்பத்தினர் கேட்டபோது சொன்னது - "எப்படிப்பட்டவ தேவை, தேவை இல்லை என்பதுக்கு உதாரணங்கள் நம்ம குடும்பத்திலேயே இருக்கு. அதன்படி பார்த்து முடிவு செய்யுங்க"

நாலாவதாக ஆ10. என்னையே நான் கேக்கும்படியாக சந்தர்ப்பம் அமைத்து விட்டது. நன்றி.

தோப்பில் நேரங் களிப்பதில் எனக்கு அலாதி விருப்பம். அதன் அமைவு, கட்டமைப்பு.. ஏன் சருகுகள் கூட என்னை திருடாமல் இருந்ததில்லை.

ஒவ்வொரு மரமும் தனியாக இருந்தாலும் ஒருமைப் பட்டு ஒன்றுக்கொன்று உதவி.. மனிதர்கள், மிருகங்கள், சூழல் எனப் பலவற்றுக்கு உதவி... புதிதாய்ப் பிறக்க வைப்பது சோலை.

என்னைப் பொறுத்தவரை இணையும் அப்படித்தான் இருக்கவேண்டும். தன்னம்பிக்கை எந்தளவுக்கு அவசியமோ அந்தளவுக்கு தனிச்சுதந்திரமும் அவசியம். அதே நேரம் இருவர் சார்ந்தவர்களை இணைத்து ஒரு வளமான சோலையை அமைக்கக் கூடியவராக இருத்தல் வேண்டும். சுருங்கக் கூறின் தானாகவும் இருக்கவேணும்.. நாமாகவும் இருக்கவேடும்.. ஒரு போதும் தாந்தானாக இருக்கக் கூடாது.. (கிளம்பிட்டான்யா.. கிளம்பிட்டான்). அப்படியானவர்களை எப்படி இனம் காண்பது.

என்னைப் பொறுத்த மட்டில் இங்காணல் என்பது முக்கியமானதல்ல. திருமணம் எனும்போது அது இரண்டாம் பிறப்பு என்பது என் கருத்து. அந்தப் பிறப்பை சிறப்பாக வளர்த்தெடுப்பது பரஸ்பரம் உண்டு. என்னால் அது முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் ஏராளமாக உண்டு.

சசியின் கேள்விக்கு சரியாகப் பதில் அளித்தேனோ தெரியவில்லை. உண்மைச் சொன்னேன் என்பது உண்மை.

பூமகள்
19-03-2009, 08:10 AM
தோப்பில் நேரங்களிப்பதில் எனக்கு அலாதி விருப்பம். அதன் அமைவு, கட்டமைப்பு.. ஏன் சருகுகள் கூட என்னை திருடாமல் இருந்ததில்லை.
ஒவ்வொரு மரமும் தனியாக இருந்தாலும் ஒருமைப் பட்டு ஒன்றுக்கொன்று உதவி.. மனிதர்கள், மிருகங்கள், சூழல் எனப் பலவற்றுக்கு உதவி... புதிதாய்ப் பிறக்க வைப்பது சோலை.
இவ்வரிகளின் என் நிலைப்பாட்டை உணர்ந்தேன் அமர் அண்ணா.. அசத்தல் எடுகோள்.. :)

என்னைப் பொறுத்தவரை இணையும் அப்படித்தான் இருக்கவேண்டும். தன்னம்பிக்கை எந்தளவுக்கு அவசியமோ அந்தளவுக்கு தனிச்சுதந்திரமும் அவசியம். அதே நேரம் இருவர் சார்ந்தவர்களை இணைத்து ஒரு வளமான சோலையை அமைக்கக் கூடியவராக இருத்தல் வேண்டும். சுருங்கக் கூறின் தானாகவும் இருக்கவேணும்.. நாமாகவும் இருக்கவேண்டும்.. ஒரு போதும் தாந்தானாக இருக்கக் கூடாது.. (கிளம்பிட்டான்யா.. கிளம்பிட்டான்). அப்படியானவர்களை எப்படி இனம் காண்பது.
அசத்தல் பதில்.. கிளாஸ் அண்ணா.. திருமணத்துக்கு முன்பே எத்தனை ஒரு தெளிவு..

உங்கள் மனம் தெளிந்த நீரோடையென்பதைப் பறைசாற்றும் மற்றொரு சான்று..

பாராட்டுகள் அமர் அண்ணா... பதிலால் மனம் நிறைத்(ந்)தீர்கள்..:icon_b::icon_b:

அமரன்
19-03-2009, 08:16 AM
(இப்படியே நான் எழுதிக் கொண்டிருந்தால் திருப்பதியில் இருந்தும், பழனியில் இருந்தும் தாமரை இனி எழுதக் கூடாது என தடை உத்தரவு வரலாம்.:lachen001:)

டைம் மெனேஜ்மென்ட்.

samuthraselvam
20-03-2009, 06:22 AM
அமரன் அண்ணா...!!
உங்களின் பதில் வியக்கவைக்கிறது.

உங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வது போலவே உங்களின் வாழ்க்கை துணை விரைவாக அமைய வாழ்த்துக்கள்.

இளசு
20-03-2009, 08:00 AM
மீண்டும் களைகட்டும் இத்திரியில் இரு சுற்று கேள்வி-பதில்கள் முடிந்து இன்று மூன்றாம் சுற்றில் சசியின் அழகிய சுற்று.... ( தலை சுத்துதா எல்லாருக்கும்..?)

முந்தைய சுற்றுகளில் அருமையான கேள்விகள், அசத்தலான பதில்கள் -
மேலோட்டமாய்க் கண்ணுற்றாலும், ஆழ்ந்து வாசித்து பின்னூட்டம் இட இயலாமல்
போனதால், கொஞ்சம் குறுகுறு குற்ற உணர்வுடன்
இந்தப்பக்கம் எட்டிப்பார்க்காமலே போய்க்கொண்டிருந்த என்னைக்
கட்டி இழுத்து வந்த சசிக்கு நறநற நன்றி..

அதிலும் இன்னொரு தனிமடலும் அனுப்பி இழுத்த பாரதிக்கு நறநறநற நன்றி..

சிவா, தாமரை, பாமகள், தக்ஸ், அமரன், லீலுமா உள்ளிட்ட அனைவரின்
மனம் நிறைக்கும் ( நன்றி பாமகள்) பதில்களை வாசிப்பதற்குள்
எனக்கு பணிக்கான நேரம் நெருங்கிவிட்டது...
எனக்கான கேள்வியும் மறந்தேவிட்டது...

சசி
என் வயது 46
என் பணி - மருத்துவம்
எனக்கு ஒரே ஒரு மனைவி
இரு பிள்ளைகள் - ஒரு மகன், ஒரு மகள்
என் காதலி தமிழ்
உடலுக்காக உணவு..
உயிருக்காக ரசனை

தலை, பாரதி, கரிகாலன் அண்ணல் ஆகியோரிடம் சொல்லியிருக்கிறேன் -
என்னைப்பற்றி நான் சொல்வதைவிட, என் எழுத்துகள் மட்டுமே சொல்லவேண்டும்..
என் மனம், ரசனை, எண்ணங்கள் பற்றி அவை எழுப்பும் பிம்பமே சொலிக்கவேண்டும் - என..

அந்த வகையில் உன் வினா எனக்கு நல்ல நிறைவை அளித்தது.
(நற நற அற்ற) நன்றி சசி ..

சிவா.ஜி
20-03-2009, 08:20 AM
அமரனின் எதிர்பார்ப்புகள் சொல்கின்றன...அமரன் எத்தனை தெளிவாக இருக்கிறார் என்று. அசத்தலான பதில் பாஸ். உங்கள் இதயத்துடன் இணைந்த இணை கிடைக்க மனமார்ந்த வாழ்த்துகள்.

சிவா.ஜி
20-03-2009, 08:25 AM
இளசுவின் இந்த குறும்பு கொப்பளிக்கும் பதில் உற்சாகத்தை வரவழைக்கிறது.(ஒரே ஒரு....)

நம்மைப்பற்றி நாம் சொல்வதைவிட நம் எழுத்துக்கள் சொல்லவேண்டுமென்பது எத்தனை உண்மை?

மகிழ்வோடும், நலத்தோடும் வாழ நீங்கள் சொன்ன இந்த
உடலுக்காக உணவு..
உயிருக்காக ரசனை

இருவரிகளே போதும்.

மதி
20-03-2009, 08:51 AM
அமரண்ணே....
உங்க எண்ணப்படியே இணை கிடைத்து என்றென்றும் இணைந்திருக்க வாழ்த்துகள்.

சசிதரன்
20-03-2009, 01:59 PM
கலக்கலா பதில் சொல்லியிருக்கிங்க அமரன் அண்ணா... உங்கள் எண்ணப்படியே துணை அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா... :)

சசிதரன்
20-03-2009, 02:03 PM
சசி
என் வயது 46
என் பணி - மருத்துவம்
எனக்கு ஒரே ஒரு மனைவி
இரு பிள்ளைகள் - ஒரு மகன், ஒரு மகள்
என் காதலி தமிழ்
உடலுக்காக உணவு..
உயிருக்காக ரசனை

தலை, பாரதி, கரிகாலன் அண்ணல் ஆகியோரிடம் சொல்லியிருக்கிறேன் -
என்னைப்பற்றி நான் சொல்வதைவிட, என் எழுத்துகள் மட்டுமே சொல்லவேண்டும்..
என் மனம், ரசனை, எண்ணங்கள் பற்றி அவை எழுப்பும் பிம்பமே சொலிக்கவேண்டும் - என..

அந்த வகையில் உன் வினா எனக்கு நல்ல நிறைவை அளித்தது.
(நற நற அற்ற) நன்றி சசி ..

மருத்துவர் அண்ணன் அல்லவா கிடைத்திருக்கிறார்..:);)
//என் காதலி தமிழ்
உடலுக்காக உணவு..
உயிருக்காக ரசனை//

ரொம்ப நல்ல வரிகள் அண்ணா... எத்தனை உண்மை..:)

//எனக்கு ஒரே ஒரு மனைவி//

இது சாதாரணமா சொன்னதா.. இல்லை ஏக்கத்தோட சொன்னதா??..:D:D

ரங்கராஜன்
20-03-2009, 02:45 PM
அமரன் சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க............. அட்லீஸ்டு சாப்பாடு லிஸ்டாவது மன்றத்தில் போடுங்க.....

இளசு அண்ணா,

எனக்கு ஒரே ஒரு மனைவி

என்ன ரொம்ப வருத்தப்படுறீங்க போல, அண்ணியோட போன் நம்பர் கொடுங்க நான் போட்டு கொடுக்கிறேன், என்ன ஒரு வில்லத்தனம்.....

சசிதரன்
20-03-2009, 02:53 PM
என்ன ஒரு கொலை பசியில இருந்திருந்தா தக்ஸ் லிஸ்டாவது கொடுங்க-னு கேட்டிருப்பாரு...:D:D

நிரன்
22-03-2009, 02:03 PM
10.நிரன்
நீங்கள் ஜெர்மனியில் இருப்பதால் இந்த கேள்வி.. ஹிட்லரை பற்றிய நினைவிடங்களுக்கு சென்றிருக்கிறீர்களா? நாசியின் சோக சரித்திரங்களை அருகில் பார்க்கும்போது எப்படி உணர்ந்தீர்கள்? உங்கள் மனநிலை எப்படி இருந்தது? ஜெர்மனியை பற்றிய சுவையான தகவல் எதாவது இருந்தால் சொல்லுங்களேன்?

ரொம்ம்ம்ம்...ப நன்றிப்பா சசி..... (இப்படி எல்லாம கேள்வி கேட்பது )

உண்மையைச் சொல்லனும் என்றால் இந்தக் கேள்விக்கும் எனக்கு சம்பந்தமே இல்லாதது. :D

ஹிட்லரை பற்றிய நினைவிடங்களுக்கு சென்றிருக்கிறீர்களா? நாசியின் சோக சரித்திரங்களை அருகில் பார்க்கும்போது எப்படி உணர்ந்தீர்கள்? உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

ஹிட்லரைப் பற்றிய நினைவிடங்களுக்கு நான் சென்றதில்லை, ஆனால்
நாசிப்படைகள் இறுதியாக வீழ்ந்த நகரத்திற்குச் சென்றிருக்கிறேன். நாசிப்படைகளுக்கும் தற்பொழுது இலங்கையில் நடந்து வரும் யுத்தத்திற்கும் பெரும் வித்தியாசம் இல்லை. (நாசிகளால் இடம்பெற்ற அழிவைக்காட்டிலும் ஈழத்தில் கொடூரம் ) மற்றும் இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜெர்மனியில் மிகவும் பாதிக்கப்பட்ட நகரமான டிரேஸ்டன் எனும் இடத்திற்கும் சென்றுள்ளேன் இந்நகரமும் வரலாறுகளால் மறைக்கப்பட முடியாத கொடூரங்களைத் தழுவியவற்றுள் ஒன்றாகும். அது தவிர ஹிட்லர் மற்றும் நாசிகள் தொடர்பான இடத்திற்கு இன்னும் செல்லவில்லை.

ஜெர்மனியை பற்றிய சுவையான தகவல் எதாவது இருந்தால் சொல்லுங்களேன்?

ஜெர்மனி பற்றிச் சுவையான சம்பவங்கள் பல உள்ளன. என்னை முதன்முதலில் பெரிதும் சிந்திக்க வைத்தது அந்நாட்டு மக்கள்தான். தமிழ்க் கலாச்சாரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது மேலத்தைய நாட்டுக்கலாச்சாரம். (எல்லோருக்கும் அது தெரிந்ததுதான்)

உண்மையைச் சொன்னால் நாம் பல விடயத்தில் தயங்குவோம் ஆனால் அவர்களைப் பார்த்ததும் எனக்கு வியப்பாக இருந்தது. பிற நாட்டுக்காரன் என்ற எண்ணங்கள் இல்லாமல் எந்நேரமும் முகம் மலர்ந்து மற்றவருடன் பழகும் குணம் என பல வகையில் கவர்ந்தவர்கள். இது வரை நான் சந்தித்த மனிதர்கள் எல்லாம் மிகவும் அருமையானவர்கள்தான், ஏதோ ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்தவர்கள்.

அதே போல் பல தமிழர்களையும் தற்பொழுது வசித்துவரும் நகரத்தில் சந்தித்துள்ளேன். ஆனால் இதுவரை எனக்கு ஒரு தனிப்பட்ட தமிழ் நண்பர்களும் இங்கே இல்லை. காரணம் வீண் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காகவே.

வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால்,

தானும் தன்பாடும்.
பிறரும் பிறர் செயற்பாடும்.

எனவும் தமிழர்களில் இன்னமும் இங்கே உள்ளனர். (இவை நான் நேரில் கண்டவைதான்).ஆனால் நான் ஜெர்மன் நாட்டவர்களில் முதல் பிரிவினரைத்தான் பார்த்துள்ளேன். 2வது பிரிவினரை இன்னும் பார்த்ததில்லை.

இவை சுவையான தகவல்களா தெரியவில்லை, ஆனால் மக்களில் மன நிலையில், என் மனதிற்கு சுவையானவும் கசப்பானதுமானதொரு தகவல்.

2வதாக சுவையான தகவல் என்றால், கட்டடக்கலை + இயற்கை என்பவற்றைக் கூறலாம், உதாரணமாக நான் வசித்துவரும் நகரத்தைப் எடுத்துக் கொண்டால் (இந்நகரம் மட்டுமல்ல பல இடங்கள் இப்படித்தான்)

Bremenல் எங்கு பார்த்தாலும் பழைய காலத்திலிருந்தே இருக்கும் கட்டடங்கள்தான் அதிகம். (யெர்மனியில் பல இடங்களில்) இயற்கை வளங்கள் அளித்துவிடாமலும் அதே வேளை, தொழில் நுட்ப வளர்ச்சியையும் அதிகரித்துவருகின்றனர்.

இவ்வாறு பல சுவையான தகவல்கள் இருக்கின்றன.

எவ்வளவு சுவையானவை இங்கு இருந்தாலும் தாய் மண்ணில் வாழும் சந்தோசமே வேறு, எங்கு சென்றாலும் அதனை அனுபவிக்க முடியாது அது எம் தாய் நாட்டிற்கே உரிய சிறப்பு. ஒவ்வெரு மனிதனுக்கும் அதுதான் ஆனந்தம்.

சசி இன்னும் தகவல் தேவையென்றால் ஒரு பிளைட் பிடிச்சு நேர இங்க வாங்க :D:D டிக்கட் வீசா 2ற்கும் என்ன செய்வது என்று சின்னப் புள்ளத்தனமாக் கேட்கப்படாது.

உங்கள் கேள்விக்கு சரியான பதில் கொடுத்தேனா தெரியவில்லை, தற்பொழுது தேர்வு நடை பெறுவதால் என்னால் கூடிய நேரம் மன்றத்திற்கு ஒதுக்க முடியவில்லை. தாமதத்திற்கு குறைவிளங்காதீர். விரைவில் திரும்புகிறேன்.

நன்றி

அமரன்
24-03-2009, 03:47 PM
நல்லதொரு நாட்டுக்குறிப்பு நிரன்.
ஜெர்மனியின் தனிப்பெருஞ்சிறப்புகளில் ஒன்று சாலைகளும் போக்குவரத்தும். ஐதான குடிமனைத் தொகுதிகளுக்கிடையானா தூரம் மிக அதிகம். ஆனால் அதனை அசால்டாக குறுந்தூரமாக்கும் மேஜிக் ஜெர்மன் சாலைகளுக்கு உண்டு. பெருமளவு சாலைகளில் வேகக்கட்டுப்பாடு இல்லை. ஆனாலும் விபத்துகள் குறைச்சல். எனக்குத் தெரிந்து வாகனம் ஐரோப்பாவாசிகளில் வேக விரும்பிகளின் விருப்பிடம் ஜேர்மன்.
உணவு விடயத்தில் ஜேர்மனியர் தாராள மயமாக்கிகள். அநேகம் பேர் பூசினார்போல் உடல்வாகு கொண்டவர்கள்.
சரி.. அடுத்த ஆபத்தஆளரை அழைப்போமா.

ரங்கராஜன்
24-03-2009, 04:41 PM
நல்ல தகவல் நிரன்

எனக்கு குட் பாய் லெனின், டவுன்ஃபால், சின்லர்ஸ் லிஸ்டு போன்ற ஆங்கில படங்களை பார்த்த பின் எனக்கு ஜெர்மனி மேல் ஒரு ஈர்ப்பு, அதுவும் இல்லாமல் மற்ற வெளிநாடுகளை ஒப்பிடும் பொழுது இங்கு விலைவாசி குறைவாமே (அப்படியா) அதனால் அந்த நாட்டின் மேல் ஒரு காதல்.........

நிரன்
24-03-2009, 06:29 PM

:rolleyes: குறைவா!!!!
ரூபாயில் விலை இல்லை அண்ணா.. யுரோ:D:D

இங்கு வந்த புதிதில் பற்பசை (கோல்கேட்) வாங்குவதற்கு இலகுசந்தைக்குச் சென்றிருந்தேன் அப் பற்பசையில் விலை 3.99யுரே என்று இருந்தது.. அப்பற்பசை யெர்மனியில்த்தான் உற்பத்தி செய்கிறார்கள்.. (இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யவில்லை)

இனி நீங்களே முடிவு செய்யுங்கள்.. சாதரணமாக ஒரு மனிதனுக்கு 2000யுரே மாதந்தச் சம்பளம் என்றால், உணவு உடை உறையுள் மற்றும் நாட்டிற்கு செலுத்த வேண்டிய வரி..... இவையெல்லாம் போக இறுதியில் முயற்கொம்புதான்... தமிழர் என்றால் ஊரில் இருக்கும் அம்மா அப்பா உறவுகள் என அவர்களையும் கவனிக்க வேண்டிய கட்டாயக் கடமைகளும் உள்ளதே.

ரங்கராஜன்
24-03-2009, 06:32 PM

ஐய்யோ அப்ப நம்ம கனவு நாட்டை மாற்ற வேண்டியது தான், அயர்லேண்டில் விலைவாசி எப்படி?????:aetsch013::aetsch013::aetsch013:

நிரன்
24-03-2009, 07:33 PM
ஐய்யோ அப்ப நம்ம கனவு நாட்டை மாற்ற வேண்டியது தான், அயர்லேண்டில் விலைவாசி எப்படி?????:aetsch013::aetsch013::aetsch013:

ஏப்பா யாரு அந்த அயர்லேண்டாம் அயர்லாந்து இருக்கிறது!!!! 2009 விலை வாசி அறிக்கையை கொஞ்சம் சமர்பியுங்க :D:D

சூரியன்
25-03-2009, 07:22 AM
அனைவரும் அழகான பதில்களை சொல்லியிருக்கின்றனர்.
அமரன் அண்ணாவின் பதில் தெளிவு.!

அமரன்
25-03-2009, 10:34 AM
ஒன்றுக்கொன்று குறைவில்லாத கேள்விகளாலும் பதில்களாலும் பதில் கருத்துகளாலும் இழையை அலங்கரித்த அனைவருக்கும் நன்றி.

அடுத்த அலங்கார முதலாக அன்பு அண்ணன் பரஞ்சோதியை அழைக்கிறேன்.

வாங்கண்ணா..

பரஞ்சோதி
26-03-2009, 04:57 PM
மன்ற நண்பர்களுக்கு வணக்கம்.

ராஜா அண்ணாவின் ஆபத்து திரி அசத்தல் திரி, அது வெற்றிகரமாக செல்கிறது, அவருக்கும், அதில் பங்கேற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

திடிரென்று என்னை கேள்விகள் கேட்க தம்பி அமரன் அழைத்தவுடன் முடியாது என்று சொல்ல மனம் வரவில்லை.

யாரிடம் என்ன கேள்வி கேட்பது, இதுவரை யார் என்ன என்ன கேள்விகளை சந்திச்சாங்க என்பதை அறிய முடியாமல் தவிக்கிறேன். விரைவில் கேள்விகளோடு வருகிறேன்.

சிவா.ஜி
26-03-2009, 05:02 PM
வாங்க தம்பி...வாங்க...மாட்டுனியளா....கேளுங்க.....கொடுக்கப்படும்......

பரஞ்சோதி
26-03-2009, 06:28 PM
ஆபத்து கேள்விகளை தற்போதைக்கு ஆ-ஞ்சு (5) கேள்விகளாக கேட்டுவிட்டு, பின்னர் மீதி கேள்விகளை தொகுக்கிறேன்.

தக்ஸ்: மூர்த்தி தம்பி, உங்களுக்கும் எழுத்தாளர் சுஜாதா அவர்களும் இடையேயான அற்புதமான உறவை பற்றி சொன்னீங்க தானே. அது மட்டுமல்ல சின்ன வயசில் சாமி கூட ஆடியிருக்கீங்க.

இப்போ ஒரு நாள் உங்க கோடம்பாக்கத்து நண்பரை கலாய்க்க போறீங்க, எதிர்பாராத விதமாக முன்னாள் கவர்ச்சி மற்றும் குணசித்திர நடிகை சில்க் ஸ்மிதாவின் ஆவி உங்க உடம்பில் புகுந்து விட்டது. என்ன என்றால் அந்த ஆவி நான் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டேன், அதற்கு பலி வாங்க வேண்டும் என்கிறார்.

இப்போ நீங்க ஆரம்பிங்க. என்ன விசேஷம் என்றால் நீங்க இரவில் சில்க் ஸ்மிதாவாகவே மாறிடுவீங்க. காலையில் தக்ஸ், இரவில் சில்க், எப்படி பழிவாங்குவீங்க, யாரை என்பதை கதையாக சொல்லுங்க.

(ஏண்டா இவனை மன்ற கூட்டத்தில் அண்ணே, உடனே மன்றம் வாங்க்ண்ணே என்று அழைத்தோம் என்று நினைக்கிறீங்களா?)

என் நம்பிக்கை வீண் போகாது, உங்க திறமையை காட்டுங்க.

ரங்கராஜன்
26-03-2009, 06:42 PM
ஆபத்து கேள்விகளை தற்போதைக்கு ஆ-ஞ்சு (5) கேள்விகளாக கேட்டுவிட்டு, பின்னர் மீதி கேள்விகளை தொகுக்கிறேன்.

தக்ஸ்

எதிர்பாராத விதமாக முன்னாள் கவர்ச்சி மற்றும் குணசித்திர நடிகை சில்க் ஸ்மிதாவின் ஆவி உங்க உடம்பில் புகுந்து விட்டது.

எப்படி பழிவாங்குவீங்க, யாரை என்பதை கதையாக சொல்லுங்க.?

பரம்ஸ் அண்ணா ஹா ஹா நீங்க கேட்ட கேள்வியை பார்த்தவுடன் எனக்கு ஒரு சீன் தான் ஞாபகம் வந்தது. கண்டிப்பாக உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்றேன், கொஞ்சம் அவகாசம் கொடுங்க........... அதுக்கு முன்னாடி எனக்கு ஞாபகம் வந்த சீன் என்னனு காட்றேன் கொஞ்சம் பாருங்க ஹா ஹா ஹா

http://www.youtube.com/watch?v=krptuzbFh3I

அறிஞர்
26-03-2009, 07:03 PM
பரம்ஸ் அண்ணா ஹா ஹா நீங்க கேட்ட கேள்வியை பார்த்தவுடன் எனக்கு ஒரு சீன் தான் ஞாபகம் வந்தது. கண்டிப்பாக உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்றேன், கொஞ்சம் அவகாசம் கொடுங்க........... அதுக்கு முன்னாடி எனக்கு ஞாபகம் வந்த சீன் என்னனு காட்றேன் கொஞ்சம் பாருங்க ஹா ஹா ஹா

இந்த பதிவு சிரிப்பு பகுதியில் இருப்பதற்கான அர்த்தம் தெளிவா தெரியுது... :cool::cool::cool::cool:

பரஞ்சோதி
26-03-2009, 07:17 PM
2) அறிஞர்: அன்புத்தோழரே! நீங்களும் உங்க குழுவினரும், இதுவரை மனித இனத்தின் காலடியே படாத இடம் என்று ஒரு பயங்கர குகைக்கு ஆராய்ச்சி செய்ய செல்றீங்க. அங்கே உங்க கண்ணுக்கு மட்டுமே ஒரு பயங்கரமான இனம் வாழ்வது தெரிகிறது. அந்த இனம் அக்குகையை விட்டு வெளியே வந்தால் மனித இனமே பூண்டோடு அழிய வாய்ப்பு இருக்குது, ஆனாலும் உங்க மனம் அந்த புதிய இனத்தைப் பற்றிய ஆராய்ச்சி செய்ய தூண்டுகிறது. இந்நிலையில் நீங்க என்ன செய்வீங்க?

(ஹி ஹி அந்த இனம் உங்களை மட்டும் கண்டால் ஏதும் செய்வதில்லை, அது என்ன இனப் பாசமோ எனக்கு தெரியாது சாமி:)

பரஞ்சோதி
26-03-2009, 07:23 PM
3) ஓவியன்: இன்று உங்க மனைவிக்கு பிறந்த நாள், கடந்த இரு தினங்களாக வீட்டில் சண்டை, ஆனாலும் ஒருவழியாக சமாதானம் செய்து, இன்று மாலை ஷாப்பிங், சினிமா, ஹோட்டல் எல்லாம் அழைச்சிட்டு போறேன், ஒரு மாத சம்பளம் முழுவதும் உன் செலவுக்கு தான் என்று சொல்லி விடுறீங்க, ஆனால் அன்று மாலை வேலை முடிச்சிட்டு கிளம்பும் போது பார்த்து மிக மிக அவசியம் முடிக்க வேண்டிய வேலை, செய்யலைன்னா கம்பெனிக்கு பெரிய நஷ்டம் வரும், இந்நிலையில் இரவு 12 மணி வீட்டு கதவை தட்டுறீங்க. தட்டும் போது நீங்க என்ன சொல்லி தங்கையை சமாளிப்பீங்க. முன் அனுபவம் இருந்தால் அதை அப்படியே சொல்லிடுங்க. நாங்க எல்லாம் டாக்டர் பட்டமே வாங்கியச்சுல்ல, உங்க ஐடியா மதி தம்பி போன்றோருக்கு சில சமயம் பயன்படும் பாருங்க.

பரஞ்சோதி
26-03-2009, 07:27 PM
4) தாமரையார் : அன்புத்தோழரே! விவாதத்திறமை, அறிவுப்பூர்வமான கண்ணோட்டம் எல்லாம் நான் மட்டுமல்ல எல்லோரும் அறிந்ததே. தற்போதைய இலங்கை, ஈழத்தமிழர்களின் சூழ்நிலையை மாற்றி அமைக்கும் பொறுப்பும், அதற்கான கட்டளையை உலக நாடுகள் ஏன், கொடியவன் ராஜபக்சேவே உங்களிடம் கொடுத்தால், என்ன செய்வீங்க? விரிவான பதில் வேண்டும்.

பரஞ்சோதி
26-03-2009, 07:29 PM
5) பூமகள் : தங்கை உங்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இருந்தாலும் உங்களை முழுமையாக அடையாளம் காட்டாமல் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பம், உங்களை கவர்ந்த நட்புகள், கல்லூரி வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான விசயங்களை முடிந்தவரை சுருக்கமாக சொல்லுங்க.

பரஞ்சோதி
26-03-2009, 07:31 PM
மீதி கேள்விகள் விரைவில் வரும்.

என்ன கேள்வி வரும் என்ற படபடப்பில் கீழ் கண்டவர்கள் காத்திருக்கவும்.

6) தம்பி சூரியன்

7) சிவா-ஜி அண்ணா

8) தம்பி அன்பு ரசிகன்

9) தோழர் அக்னி

10) லீலா தங்கை

அமரன்
26-03-2009, 08:45 PM
அட்டகாசமான கேள்விகள். என் எதிர்பார்ப்பு வீணாகவில்லை. நன்றிண்ணா.

பூமகள்
27-03-2009, 06:44 AM
என்னை ஆபத்தில் மாட்டி விட எத்தனை பேரு தான் கிளம்பிருக்கீங்க??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

இப்படி மாட்டிட்டு முழிப்பதே என் பொழப்பா போச்சு..... ஹ்ம்ம்....

கேள்வி கொஞ்சம் நுட்பமானது தான்.. விளக்கமாக விளங்கிவிடாதபடி விளங்கினாலும் விளங்காத தோற்றுமை வரும்படி பதில் தருகிறேன்... ஹூஹூம்... இப்போயில்ல... அப்புறமா... அப்புறமா...

விடைக்காகக் காத்திருக்கும் பரம்ஸ் அண்ணாவுக்கு அன்பு நன்றிகள்..

இப்போதைக்கு தப்பித்த திருப்தியில்........!! :D:D

சூரியன்
27-03-2009, 06:46 AM
மீதி கேள்விகள் விரைவில் வரும்.

என்ன கேள்வி வரும் என்ற படபடப்பில் கீழ் கண்டவர்கள் காத்திருக்கவும்.

6) தம்பி சூரியன்

7) சிவா-ஜி அண்ணா

8) தம்பி அன்பு ரசிகன்

9) தோழர் அக்னி

10) லீலா தங்கை

அண்ணா சிக்க வச்சுட்டீங்களா?:confused:

அமரன்
27-03-2009, 08:14 AM
கேள்வி கேட்கப்பட்டவர்கள் எல்லாரும் வரிசையாக வந்து பதில் சொல்லுங்கோ.

-அன்பான ஆசானின் உதவியாளன்.

நிரன்
27-03-2009, 11:34 AM
அண்ணா சிக்க வச்சுட்டீங்களா?:confused:

செல்லோம் இப்படிப்பக்க மனசுக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா..

அடடா அக்னியுமா:huepfen024::angel-smiley-010::nature-smiley-006::music-smiley-009::medium-smiley-080::medium-smiley-002:

அறி்ஞர் அண்ணாவோட கேள்வியில் ஒரு குழப்பம் :D

இதுவரை மனித இனத்தின் காலடியே படாத இடம்

என்னதான் இருந்தாலும் இப்படி ஒப்பிட்டு இருக்கப்படாது:D:D

அன்புரசிகன்
28-03-2009, 08:25 AM
இந்நிலையில் இரவு 12 மணி வீட்டு கதவை தட்டுறீங்க. தட்டும் போது நீங்க என்ன சொல்லி தங்கையை சமாளிப்பீங்க. முன் அனுபவம் இருந்தால் அதை அப்படியே சொல்லிடுங்க.
ஏன்??? மனைவியின் தங்கையை ஏன் சமாளிக்கவேண்டுங்கிறேன்??? ஓவியனின் மனைவியைத்தானே சமாளிக்கத்தெரிஞ்சுக்கணும். மனைவியின் தங்கையையும் சமாளிக்கத்தெரிஞ்சிருக்கணுமா??? சொல்லுங்க??? நமக்கும் அப்பால உதவுமில்லே.................... :rolleyes::cool:

பரஞ்சோதி
28-03-2009, 08:33 AM
என்னாச்சு, அறிஞர் குகைக்கு சென்று விட்டார் போலிருக்குது.

தக்ஸ் தம்பி சுமிதா ஆவிக்காக துப்பறிய சென்று விட்டார் போலிருக்குது.

மற்றவர்கள் எங்கே?

இதோ அடுத்த கேள்விகள் விரைவில்...

பரஞ்சோதி
28-03-2009, 08:35 AM
6) தம்பி சூரியன்: உங்களுக்கு அரசியலில் விருப்பம் உண்டா என்று தெரியலை. இருந்தாலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சூரியனின் வெற்றி வாய்ப்பு எப்படி அமையும். சூரியனின் சாதக, பாதகங்களை கொஞ்சம் சொல்லுங்களேன்.

பரஞ்சோதி
28-03-2009, 08:37 AM
7) சிவா-ஜி அண்ணா: நீங்க கவிதை படைப்பதிலும், கதைகள் எழுதுவதிலும் வல்லவர். கட்டுரை சரியாக எழுத வராதுன்னு அன்புரசிகன் தம்பி என்னிடம் சொன்னார். ஆகையால் நீங்க இதுவரை சந்தித்த இந்தியர் அல்லாத நாட்டவரின் நல்ல/கெட்ட குணநலன்களை கொஞ்சம் சொல்லுங்க.

பரஞ்சோதி
28-03-2009, 08:42 AM
8) தம்பி அன்பு ரசிகன்: ஹி ஹி தம்பி, போட்டு வாங்குவது என்பதை இப்போ தான் புரிஞ்சிகிட்டேன். ஏன் இப்படி சொல்றேன்னு இப்போ புரியுமுல்ல.

உங்க பெற்றோர், குடும்பத்தார் அனைவருக்கும் ஒரு பெண்ணை பிடிச்சி போக, உங்களை பெண் பார்க்க அழைச்சிட்டு போறாங்க. நீங்களும் அப்பெண்ணை பார்த்தவுடன் மனசுக்குள் ஜொள்ளுறீங்க (ரசிகனாச்சே, அதனால ரசிக்கிறீங்க :) ), ரொம்ப பிடிச்சி போச்சுது. இப்போ அந்த பெண்ணை திருமணம் செய்ய தயார் என்று சொல்லும் நிலையில் திடிரென்று ஒரு பெண், அங்கே வருகிறார், அவர் தான் பெண்ணின் தங்கை, என்ன கொடுமைன்னா, அந்த பெண்ணின் தங்கையிடம் சில ஆண்டுகளாக பின் தொடர்ந்து, அவமானப்பட்டு, ஒருவழியாக காதலித்தும் இருக்கீங்க. இடையில் பிரச்சனையில் கழண்டுகிட்டீங்க. இப்போ உங்க நிலை என்ன, எப்படி சமாளிப்பீங்கப்பூ.

அமரன்
28-03-2009, 08:45 AM
ஹி...ஹி..
இப்படி வழியாமல் கதையைச் சொல்லுங்க ரசிகரே!

அன்புரசிகன்
28-03-2009, 08:47 AM
7) சிவா-ஜி அண்ணா: நீங்க கவிதை படைப்பதிலும், கதைகள் எழுதுவதிலும் வல்லவர். கட்டுரை சரியாக எழுத வராதுன்னு அன்புரசிகன் தம்பி என்னிடம் சொன்னார். ஆகையால் நீங்க இதுவரை சந்தித்த இந்தியர் அல்லாத நாட்டவரின் நல்ல/கெட்ட குணநலன்களை கொஞ்சம் சொல்லுங்க.
ஏன்......... ஏன்......... எதுக்கு...............

8) தம்பி அன்பு ரசிகன்: ஹி ஹி தம்பி, போட்டு வாங்குவது என்பதை இப்போ தான் புரிஞ்சிகிட்டேன். ஏன் இப்படி சொல்றேன்னு இப்போ புரியுமுல்ல.

உங்க பெற்றோர், குடும்பத்தார் அனைவருக்கும் ஒரு பெண்ணை பிடிச்சி போக, உங்களை பெண் பார்க்க அழைச்சிட்டு போறாங்க. நீங்களும் அப்பெண்ணை பார்த்தவுடன் மனசுக்குள் ஜொள்ளுறீங்க (ரசிகனாச்சே, அதனால ரசிக்கிறீங்க :) ), ரொம்ப பிடிச்சி போச்சுது. இப்போ அந்த பெண்ணை திருமணம் செய்ய தயார் என்று சொல்லும் நிலையில் திடிரென்று ஒரு பெண், அங்கே வருகிறார், அவர் தான் பெண்ணின் தங்கை, என்ன கொடுமைன்னா, அந்த பெண்ணின் தங்கையிடம் சில ஆண்டுகளாக பின் தொடர்ந்து, அவமானப்பட்டு, ஒருவழியாக காதலித்தும் இருக்கீங்க. இடையில் பிரச்சனையில் கழண்டுகிட்டீங்க. இப்போ உங்க நிலை என்ன, எப்படி சமாளிப்பீங்கப்பூ.
ரொம்ப சிம்பிள் விடை ஒன்று இருக்கு... இருந்தாலும் சுத்திவளைச்சு அத பிறகு தாறேன். :lachen001:

பூமகள்
28-03-2009, 11:31 AM
5) பூமகள் : தங்கை உங்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இருந்தாலும் உங்களை முழுமையாக அடையாளம் காட்டாமல் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பம், உங்களை கவர்ந்த நட்புகள், கல்லூரி வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான விசயங்களை முடிந்தவரை சுருக்கமாக சொல்லுங்க.
வம்பில் மாட்டி விட்டு அமைதியாக புன்னகைக்கும் பரம்ஸ் அண்ணாவுக்கு நற நற நன்றிகள் :aetsch013:(நன்றி பெரியண்ணா..)

என்னைப் பற்றி..

நான் சொல்வதை விட என்னையறிந்தவர் சொல்லக் கேட்க இன்னும் சுவைக்கும் என்பது என் நிலைப்பாடு.. இருந்தும் கேட்பதினால் சொல்கிறேன்.. மற்றதை பழகியோர் உரைப்பர்.

என் புனைப்பெயர் பூமகள். பூ என்ற ஒற்றை எழுத்து கொண்டுள்ள மென்மையையும் சுகந்தத்தையும் என்றும் நான் கொண்டிருக்கவும், அனைவருள்ளத்திலும் மகளாக வீற்றிருக்கும் ஆவலிலும் எனக்கு நானே வைத்துக் கொண்ட பெயர் பூமகள்.

படித்தது : பொறியியல் - தகவல் தொழிற்நுட்பம் பிரிவு.

பிடித்தது: இயற்கையின் அனைத்தும், நல்லோர் நட்பு, தமிழ், இசை, வாய்மை, அன்பு.

பிடிக்காதது: மான் வேடத்தில் இருக்கும் ஓனாய்கள், இயற்கைக்கும் மனசாட்சிக்கும் எதிரான அனைத்தும்.

சுவைப்பது: பிடித்தவர்களின் எழுத்துகள், பிடித்தமானவர் கையாலான உணவு.

குடும்பம் பற்றி..

அன்பும் பாசமும் அள்ள அள்ளக் குறையாத அன்னை,
பண்பையும் சமூக நலனையும் அறிவையும் என்னுள் ஏற்றும் நட்பான தந்தை,
அமைதியாக பாரம் எல்லாவற்றையும் தன் தோளில் தாங்கி என்னை இளவரசியாக்கி மகிழும் சகோதரர்,
இல்லம் இனிக்க தேனாக இணைந்திருக்கும் என்னில் பாதி.

இவர்களுடனானது தான் என் இனிய குடும்பம்.

நட்பு என்று வந்தால் அடி மனதிலிருந்து பீறிடும் என் பாசம். உறவாடி உணர்ந்தவர்கள் சொல்லக் கேட்டது இது. நெஞ்சில் நெருக்கமான நட்புகள் பல.

சொந்த வாழ்க்கையில், மன்ற வாழ்க்கையில் என இரு பரிமாணங்களில் நட்புகள் வியக்க வைக்கின்றன..

எட்டு வருடங்கள் ஒன்றாக படித்து புள்ளி மான்களாக துள்ளித் திரிந்த துவக்கப் பள்ளி கால நட்புகள்... எட்டும் தூரத்திலும் தொடர்புக்கான வழிகளும் இல்லை இப்போது.. ஆனால் நெஞ்சில் இன்னும் அதே பாசத்துடன் நான்..

மேல்நிலை பள்ளி கால நட்புகள்.. எதுவும் மனதை உரசவில்லை..

கல்லூரி நட்புகளில்..

கல்லூரி முதலாண்டு முதல் இன்று வரை ஒரே போல் பழகும் ஓர் இனிய நட்பு..
நான்காண்டுகள் நட்பாகி... இறுதியில் எதிரியான ஒரு நட்பு..
நான்காண்டுகள் நட்பின்றி.. இறுதியில் நட்பான ஒரு நட்பு..
நான்கு மாத பழக்கமாயினும் இன்று வரை என் ரோல் மாடலாக இருக்கும் உடன் பிறவா அக்காவாக ஒரு நட்பு..
முப்பது நாட்களே பழகினாலும் உற்ற தோழமையான ஓர் நட்பு..

இப்படி என் சொந்த வாழ்க்கையில் நட்புகள் நீண்டு கொண்டே செல்கின்றன..

மன்ற வாழ்க்கையில் எனக்கு பிடித்தவர் அனைவருமே மன்றத்துக்கு பிடித்தவர்கள் தான்..

என்னை தன் தங்கையாக, மகளாக, நல்ல தோழியாக ஏற்றுக் கொண்ட அனைத்து நல்லுள்ளங்களும் என் நட்புகள் தான்..

என் கல்லூரி வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நிகழ்வை ஏற்கனவே ஆபத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

அதனைப் படிக்க இந்தச் சுட்டிக்குச் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=269428&postcount=6) சென்று நான்காவது பதிலைப் படியுங்கள்.

என்னை ஆபத்தில் சிக்க வைத்து பதிலளிக்க வாய்ப்பளித்த அன்பு பரம்ஸ் அண்ணாவுக்கு என் நன்றிகள். :)

ஓவியன்
28-03-2009, 11:34 AM
3) ஓவியன்: இன்று உங்க மனைவிக்கு பிறந்த நாள், கடந்த இரு தினங்களாக வீட்டில் சண்டை, ஆனாலும் ஒருவழியாக சமாதானம் செய்து, இன்று மாலை ஷாப்பிங், சினிமா, ஹோட்டல் எல்லாம் அழைச்சிட்டு போறேன், ஒரு மாத சம்பளம் முழுவதும் உன் செலவுக்கு தான் என்று சொல்லி விடுறீங்க, ஆனால் அன்று மாலை வேலை முடிச்சிட்டு கிளம்பும் போது பார்த்து மிக மிக அவசியம் முடிக்க வேண்டிய வேலை, செய்யலைன்னா கம்பெனிக்கு பெரிய நஷ்டம் வரும், இந்நிலையில் இரவு 12 மணி வீட்டு கதவை தட்டுறீங்க. தட்டும் போது நீங்க என்ன சொல்லி தங்கையை சமாளிப்பீங்க. முன் அனுபவம் இருந்தால் அதை அப்படியே சொல்லிடுங்க. நாங்க எல்லாம் டாக்டர் பட்டமே வாங்கியச்சுல்ல, உங்க ஐடியா மதி தம்பி போன்றோருக்கு சில சமயம் பயன்படும் பாருங்க.

ஆஹா பரம்ஸ் அண்ணா, ஏதோ சொந்தப் பிரச்சினைக்கு ஆலோசனை கேட்குற மாதிரிலே இருக்கு..!! :D:D:D

ஹீ, ஹீ, ஹீ..!! :D:D:D

முதலிலே நான் ஒன்றைக் கூறியாகணும், நம்ம வீட்டில் இப்போது ஒரு மாதச் சம்பளத்தை அப்படியே செலவழிக்க நானும் சரி, என் மனைவியும் சரி இடம் கொடுப்பதில்லையென்று கங்கணம் கட்டியுள்ளோம். ஏனென்றால் உலகப் பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகள் சேமிப்பின் மகத்துவத்தை நமக்கும் நன்கு உறைக்கவே போதித்துள்ளது. ஒரே ஒரு நாளில் கையிலிருந்த நல்ல வேலையை இழந்து நின்றால் தான், சேமிப்பின் மகத்துவம் எல்லோருக்கும் உறைக்கும்...

எனக்கும் அப்படியே, அதனால் ஒரு மாதச் சம்பளத்தினை அப்படியே ஒரு போதும் செலவழிக்க மாட்டேனென்றாலும் உங்கள் கேள்விக்குப் பதிலளிக்கின்றேன்....

என்னைப் பொறுத்த வகையில் கணவனுக்கும் மனைவிக்குமிடையே நல்ல புரிதலிருந்தால் எந்தப் பிரச்சினை வந்தாலும் இலகுவாக கையாளலாம். ஒவ்வொரு இளம் தம்பதியினரும் சரிவர இந்த புரிதலென்ற பாலத்தைக் கட்டி முடித்திட்டால் பிற்கால வாழ்க்கை செழிப்பாக இருக்கும். ஆண்டவன் புண்ணியத்தில் இந்த புரிதல் என் குடும்பத்தில் சரி வர அமைந்துள்ளது. அதனால் அன்று நேரத்துடன் அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப முடியாவிட்டால் உடனடியாக அலைபேசியில் மனைவிக்கு விடயத்தைக் கூறிவிடுவேன், அதனால் வீணே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க மாட்டார்.

பின்னர் அலுவலகத்தில் பேசி அடுத்த நாளை விடுமுறையாக்கிக் கொள்வேன், அடுத்த நாளை விடுமுறையாக்கிக் கொண்டு வீடு திரும்பும் கணவனை எந்த மனைவியும் கோபத்துடன் எதிர் கொள்ள மாட்டாரே...

அதனால் புரிதல் என்ற துணை கொண்டு, இன்றைய கொண்டாட்டத்தை அப்படியே அலேக்காகத் தூக்கி நாளைய தினத்துக்கு ஷிப்ட் பண்ணிடுவேன். ஒருவர் பிரச்சினை ஒருவர் அறிந்து மற்றும் புரிந்து நடப்பதுதானே வாழ்க்கை, அதனால் என் பிரச்சினையை மனைவி புரிந்து இந்த ஷிப்ட் பண்ணும் நடைமுறையை ஏற்றுக் கொள்ளுவாரென்ற நம்பிக்கை என் மனதில் 'டண்' கணக்கில்....!! :)

பிரச்சினைகளை எப்போதும் பிரச்சினையாகப் பார்த்தால் தானே பிரச்சினை, அதனையே ஒரு வாய்ப்பாக மாற்றி விட்டால் பிரச்சினையில்லையே...

அதாவது பெரிய நஷ்டத்தைத் தடுக்க கம்பனிக்கு உதவி, ஒரு நாள் விடுமுறையைப் பெற்றுக் கொள்வது போல....!! :icon_rollout:

அமரன்
28-03-2009, 12:19 PM
பூமகள்.
விளக்கியும் விளக்காமலும் விளக்கமாக உங்களை விளக்கிய விதத்தில் உங்கள் முகம் நல்ல துலக்கம்.
இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் எப்படி இருக்கவேண்டும் என்று நினைத்தேனோ அப்படியே இருப்பதில் ஆனந்தம்.

ஓவியரே!
உங்கள் அனுபவம் என்னைப் போன்ற சின்னவர்களுக்கு நல்ல பாடம். அதிலும் நம்ம அண்ணன்களின் அண்ணிகளுடன் தங்கையை அறிமுகப்படுத்தாது மிக மிக உபயோகமானது.:D:D

ரங்கராஜன்
28-03-2009, 01:43 PM
தக்ஸ்: மூர்த்தி தம்பி, உங்களுக்கும் எழுத்தாளர் சுஜாதா அவர்களும் இடையேயான அற்புதமான உறவை பற்றி சொன்னீங்க தானே. அது மட்டுமல்ல சின்ன வயசில் சாமி கூட ஆடியிருக்கீங்க.

இப்போ ஒரு நாள் உங்க கோடம்பாக்கத்து நண்பரை கலாய்க்க போறீங்க, எதிர்பாராத விதமாக முன்னாள் கவர்ச்சி மற்றும் குணசித்திர நடிகை சில்க் ஸ்மிதாவின் ஆவி உங்க உடம்பில் புகுந்து விட்டது. என்ன என்றால் அந்த ஆவி நான் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டேன், அதற்கு பலி வாங்க வேண்டும் என்கிறார்.

இப்போ நீங்க ஆரம்பிங்க. என்ன விசேஷம் என்றால் நீங்க இரவில் சில்க் ஸ்மிதாவாகவே மாறிடுவீங்க. காலையில் தக்ஸ், இரவில் சில்க், எப்படி பழிவாங்குவீங்க, யாரை என்பதை கதையாக சொல்லுங்க.

நன்றி பரம்ஸ் அண்ணா

இந்த கேள்வியை நீங்கள் ஜாலியாக என்னை கேட்டு இருக்கிறீர்கள், நானும் ரசித்தேன், ஆனால் இதில் என்ன சிறுகதை எழுத முடியும் என்று தெரியவில்லை. காரணம் சில்க் ஸ்மிதாவை வைத்து நான் கதை எழுதுவது என்றால், அதுவும் அவர் பழிவாங்கும் கதையை எழுதுவது என்றால் சினிமாவில் 1980- 1996 வரை இருந்த முக்கால்வாசி ஆண்களையும், அப்பொழுது ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகளை பழிவாங்க வேண்டும், என் உடம்பு தாங்காது (சில்க் ஆவி என்னுடைய உடம்பில் இருப்பதினால்), அதுவும் இல்லாமல் கண்டிப்பாக இந்த சிறுகதையை பண்பட்டவர் பகுதியில் பதிப்பதாக தான் இருக்கும். காரணம் நம் மன்றத்தில் பல பெண் உறுப்பினர்கள் இருக்கிறார்கள், சிலர் பண்பட்டவர் தகுதியும் பெற்று இருக்கிறார்கள் அதனால் அவர்கள் கண்ணில் அந்த கதை படவாய்ப்பு இருக்கிறது, கதையின் கரு அந்த மாதிரி. அதனால் சிறுகதையாக எழுதுவதை விட்டு உங்களுக்கு அவரை பற்றி சில உண்மை தகவல்கள் தருகிறேன். எனக்கு தெரியும் நீங்கள் அவரின் விவரங்களை கேட்கவில்லை என்று, இருந்தாலும் கேள்வியை எதிர்கொள்ள எனக்கு வேறும் வழியில்லை.

நான் சில்க் சுமிதாவின் வாழ்க்கையை பற்றிய புத்தகத்தை (ஆழி பதிப்பகம், விலை : 90) படித்து இருக்கிறேன், அந்த புத்தகத்தை வாங்க காரணம், ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் என்ற புத்தகம். அதில் சில்க்கை பற்றி பல தகவல் இருந்தது. சில்கின் வாழ்க்கை குறிப்பு எல்லாம் விக்கீபிடியாவில் நிறைய இருக்கிறது, அதில் இல்லாத தகவல்களை தர முயல்கிறேன்.

1. அவருடைய இயற்பெயர் விஜயலட்சுமி, ஆந்திரா மாநிலம், ஏழைக்குடும்பம், குடும்பத்தை காப்பாற்ற ஆரம்பத்தில், உலகத்தின் முதல் பழமையான தொழிலை செய்ய நேர்ந்தது. தன்னுடைய காந்த கண்கள், மற்றும் கிட்டார் போன்ற உடல் அமைப்பினாலும் சினிமா வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. முதலில் சதாரண குரூப் டென்சராக வாழ்க்கையை ஆரம்பித்தவர், பின்னாலில் ஆண்களின் கனவுகன்னியாக வலம் வந்தார்.

ரஜினிகாந்த்க்கு நிகரான புகழை அவர் 1980 களில் பெற்றார், ஒருமுறை ரஜினிகாந்த் ஷூட்டிங் இடத்திற்கு வர தயாரிப்பாளரில் இருந்து, லைட் பாய் வரை எழுந்து நின்று வணக்கம் சொல்ல, சில்க் மட்டும் கால் மேல் கால் போட்டு அமர்ந்துக் கொண்டே வணக்கம் சொன்னாராம். இதில் கடுப்பான ரஜினி அவரை முறைத்தபடி சென்றாராம். நடிகை லட்சுமி சில்கிடம் விவரத்தை கேட்டதும், சில்க் சொன்னாராம். “இல்லக்கா நானே கவர்ச்சியான உடையில் இருக்கிறேன், எப்படா நான் அசைவேன் போட்டோ எடுக்கலாம் என்று எனக்கு எதிரே நிறைய சினி போட்டோகிராப்பர்கள் இருக்கிறார்கள், அதனால் தான் அமர்ந்துக் கொண்டே சொன்னேன்னு சொன்னாராம். வலி நிரம்பிய வார்த்தைகள் அவை. சினிமாவில் பெண்களின் நிலைமை இதுதான் அந்த காலத்தில், இப்பொழுது மாதிரி கதாநாயகிக்கு கோடிகள் எல்லாம் தரமாட்டார்கள்.

தன்னுடைய வாழ்க்கை ஒரு எச்ச வாழ்க்கையாக அவர் ஒரு காலகட்டத்தில் வெறுக்க ஆரம்பித்தார், தன்னை சுற்று இருப்பவர்கள் எல்லாம் தன்னை வைத்து எல்லா விதத்திலும் பண பண்ணுவதை கண்டு வெறுத்தார். தன்னுடைய நெருங்கிய உறவினர் ஒரு டாக்டர் சிவா வோ என்னமோ, அவரை தான் தன்னுடைய மேனேஜராக வைத்து இருந்தார், பல வழிகளில் மேனேஜர் இவரை வைத்து பணம் செய்ய ஆரம்பித்தார். நடிகைக்கு வயதும் ஆனது, பட வாய்ப்பு குறைந்தது, அதுவும் இல்லாமல் நடிகையின் முக்கியமான ஒரு ரகசியம் சினிமா வட்டாரத்திற்கு தெரியவர ஆரம்பித்தது, அது தான் அவரை தற்கொலைக்கு தூண்டியது. சில்க் சுமிதாவுக்கு தன்னுடைய 25 வயதிலே அந்த கொடிய வியாதி வந்து விட்டது, அந்த வியாதி அப்பொழுது நம் நாட்டில் பிரபலம் ஆகவில்லை, இப்பொழுது தான் சந்து பொந்து என்று எல்லா இடத்திலும் வியாதியின் விளம்பரம் போட்டு வைத்து இருக்கிறார்கள் ஆனால் அப்பொழுது இல்லை.

செய்தி வெளியே கசிந்தது, இதனால் பல மன உளச்சலுக்கு ஆளாகினார், பண வரத்து குறைந்து, கடைசியில் விஷயம் பொது மக்களுக்கு தெரிவதற்குள் சென்று விட்டார் (தற்கொலை செய்து கொண்டார்)........ இதுதான் அவரின் உண்மை கதை, இதில் யாரை அவர் ஆவியாக வந்து பழிவாங்குவது........ சினிமாவில் சிரித்துக் ஆடிக் கொண்டு இருக்கும் ஒவ்வொரு நடிகைக்கு பின்னால் மனதை பிழியும் ஒரு சோக நாவலே இருக்கிறது அதை சிறுகதையாக ஆக்குவது மிகமிக கடினம்...............

உங்கள் கேள்வியின் விடை இதுவல்ல, இருந்தாலும் மன்னித்து ஏற்றுக் கொள்ளவும். முதல் முதலில் நடிகைகளின் தற்கொலை கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைத்தவர் சில்க் தான்

பரஞ்சோதி
28-03-2009, 01:54 PM
பூமகள்: தங்கை மிக அழகாக சொல்லியிருக்கீங்க. உங்கள் குடும்பத்தாரின் பாசமும், நண்பர்களின் நட்பும், மன்றத்தின் உறவும் தொடரட்டும்.

ஓவியன்: அருமையான பதில் தம்பி. அழகாக சொன்னீங்க. கம்பெனிக்காக உழைத்து, பின்னர் குடும்பத்திற்காக ஒரு நாள் விடுப்பு எடுக்கும் திட்டம் அருமையோ அருமை. இப்படி செய்யாமல் பல நாட்கள் என் மண்டை வீங்கியிருக்குது :)

தக்ஸ்: தம்பி மூர்த்தி, என்னை முதலில் மன்னிக்கவும், உங்களை தர்மசங்கடப்படுத்தியமைக்கு, மேலும் சில்க் அவர்களின் வாழ்க்கையை உங்கள் மூலமாக முழுமையாக அறிய முடிஞ்சது. அவரது வாழ்க்கை மனதை தொட்டது.

ராஜா
29-03-2009, 01:37 PM
பரம்ஸின் மீதிக் கேள்விகளையும் காண ஆவல் மிகுகிறது..!

ராஜா
29-03-2009, 01:41 PM
. முதல் முதலில் நடிகைகளின் தற்கொலை கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைத்தவர் சில்க் தான்

அல்ல மூர்த்தி..!

சில்க்குக்கு முன்னரே கல்பனா, விஜயஸ்ரீ, ஷோபா, படாபட் என்னும் பெரும் வரிசையே உள்ளது..

அவர்களுக்கு முன்னும் சிலர் இருக்கக்கூடும்..

எனினும் சில்க் பற்றி நீங்கள் தந்திருக்கும் பெரும்பாலான விவரங்கள் எனக்குப் புதியவை..

நன்றி தம்பி..!

ராஜா
29-03-2009, 01:46 PM
என்னைப் பொறுத்த வகையில் கணவனுக்கும் மனைவிக்குமிடையே நல்ல புரிதலிருந்தால் எந்தப் பிரச்சினை வந்தாலும் இலகுவாக கையாளலாம்.

[COLOR="DarkRed"]அருமையான பதில் ஓவியன்..!

கணவன் மனைவி இருவருக்கிடையே புரிந்துணர்வு இருந்தால் வாழ்க்கை சுவர்க்கம்..!

வாழ்த்துகள்...!

பரம்ஸ் நைசா இந்தக் கேள்வியைக் கேட்டு உங்ககிட்ட இருந்து பெரிய தீர்வை கண்டுபிடிச்சிருப்பாரு போல..!

அவருக்கும் வாழ்த்துகள்..!

ராஜா
29-03-2009, 01:53 PM
நன்றி பூமகள்..!

நட்பைப் பற்றி இரத்தினச் சுருக்கமாக விளக்கிய பாங்கு உனக்குமட்டுமே கைவரப்பெற்ற கலை..!

நல்ல பதிலால் திரி மிளிர்கிறது.. நன்றி..!

ராஜா
29-03-2009, 01:58 PM
8) தம்பி அன்பு ரசிகன்: உங்க பெற்றோர், குடும்பத்தார் அனைவருக்கும் ஒரு பெண்ணை பிடிச்சி போக, உங்களை பெண் பார்க்க அழைச்சிட்டு போறாங்க. நீங்களும் அப்பெண்ணை பார்த்தவுடன் மனசுக்குள் ஜொள்ளுறீங்க (ரசிகனாச்சே, அதனால ரசிக்கிறீங்க :) ), ரொம்ப பிடிச்சி போச்சுது. இப்போ அந்த பெண்ணை திருமணம் செய்ய தயார் என்று சொல்லும் நிலையில் திடிரென்று ஒரு பெண், அங்கே வருகிறார், அவர் தான் பெண்ணின் தங்கை, என்ன கொடுமைன்னா, அந்த பெண்ணின் தங்கையிடம் சில ஆண்டுகளாக பின் தொடர்ந்து, அவமானப்பட்டு, ஒருவழியாக காதலித்தும் இருக்கீங்க. இடையில் பிரச்சனையில் கழண்டுகிட்டீங்க. இப்போ உங்க நிலை என்ன, எப்படி சமாளிப்பீங்கப்பூ.

இம்சை அரசருக்கே ஒருத்தர் இம்சை கொடுத்து பேய்முழி முழிக்க வைக்கிறதை பார்க்கும் சுகம் இருக்கே... அதை அனுபவிச்சாதான் புரியும்..

சரி.. சரி... தண்ணியக் குடிச்சுட்டு தெம்பா வாங்க மாம்ஸ்..!

விகடன்
29-03-2009, 02:58 PM
ரசிகனின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். சீக்கிரம் வாங்க அன்பு.

சிவா.ஜி
29-03-2009, 06:11 PM
7) சிவா-ஜி அண்ணா: நீங்க கவிதை படைப்பதிலும், கதைகள் எழுதுவதிலும் வல்லவர். கட்டுரை சரியாக எழுத வராதுன்னு அன்புரசிகன் தம்பி என்னிடம் சொன்னார். ஆகையால் நீங்க இதுவரை சந்தித்த இந்தியர் அல்லாத நாட்டவரின் நல்ல/கெட்ட குணநலன்களை கொஞ்சம் சொல்லுங்க

என்னைப்பத்தி கரெக்ட்டா சொன்ன அன்புக்கு பாராட்டுக்கள்.

நிறைய நாட்டவரோடு பழகியிருந்தாலும்...ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி. என்னுடைய இதற்கு முந்தைய வேலையில் என்னோடு நிறைய ஜப்பானியர்கள் பணி புரிந்தார்கள். என்னுடைய மேலாளரும் ஒரு ஜப்பானியரே. மரியாதைக்கு எடுத்துக்காட்டு அவர்கள்தான். பெயரோடு 'ஸான்' என்பதையும் சேர்த்து(நம்ம ஊர் சார் மாதிரி) அவர்கள் நம்மை அழைப்பதிலேயே அவர்கள் நமக்குக் கொடுக்கும் மரியாதை தெரியும். தேநீர் தயாரித்து கொடுக்கும் ஊழியரையும் அப்படித்தான் அழைப்பார்கள்.

ஒவ்வொரு நாளும் முதல்முறை சந்திக்கும்போது உடலை வளைத்து பணிவோடு அவர்கள் வணக்கம் சொல்லும் முறை மிக சிறப்பானது. வேலை என்று வந்துவிட்டால் அதிலேயே மூழ்கிவிடுவார்கள். அப்படியொரு அர்பணிப்பு. ஆத்மார்த்தம். அங்கு பணிபுரிந்த அனைத்து ஜப்பானியர்களும் விடுமுறையில் தங்கள் நாட்டுக்குப் போய்த் திரும்ப வரும்போது அலுவலகத்தில் இருக்கும் அனைவருக்கும் நிறைய திண்பண்டங்கள் வாங்கி வந்து ஒவ்வொரு மேசையாக கொண்டு வந்து கொடுப்பார்கள்.

தங்கள் கீழ் பணிபுரிபவர்களுக்கு நிச்சயம் ஏதாவது ஒரு பரிசுப்பொருளை வாங்கி வந்து கொடுப்பார்கள். சில நேரங்களில் உடல்நலக்குறைவோடு விடுமுறை எடுக்க முடியாத சூழ்நிலையில் எங்களில் யாராவது அலுவலகம் வந்துவிட்டால், எங்களின் சோர்வைப் பார்த்ததுமே உடனே கட்டாயப்படுத்தி ஓய்வெடுக்க அனுப்பிவிடுவார்கள். மிகச் சிறந்த மனிதநேயமுள்ளவர்களை அங்கே சந்தித்தேன். ஒரு வேலையை அர்ப்பணிப்போடு எப்படி செய்வது என்பதை அவர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.

கொஞ்சமே கொஞ்சம் ஆங்கில அறிவை வைத்துக்கொண்டு மற்றவர்களோடு பேச அவர்கள் சிரமப்படுவதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கும். ஆனால் வேலையில் கில்லாடிகள்.

கெட்டது என எதையும் பார்க்கவில்லை. ஆனால் பெரும்பாலோனோர் சிகெரெட் புகைக்கிறார்கள்.

(நல்லதை கவனித்தவன்...கெட்டதைக் கவனிக்கவில்லை...கெட்டதாக எதுவும் தெரியவில்லை)

பூமகள்
30-03-2009, 02:48 AM
ஹை.. ராஜா அண்ணா வந்தாச்சே.... இனி ஆட்டம் பாட்டத்துக்கு குறைவிருக்காது.....

வாங்க வாங்க ராஜா அண்ணா..

நலமாக இருக்கீங்களா?? அண்ணி, குழந்தைகள் நலம் தானே??

தங்களின் பாராட்டுக்கு நன்றிகள் ராஜா அண்ணா..

--

சிவா அண்ணா...

உங்கள் மூலம் தான் நான் பல நாடுகள் பற்றியும் அவர் தம் கலாச்சாரம், பண்பாடு, பழகும் விதம் பற்றியும் தொடர்ந்து அறிந்து வருகிறேன்.. நீங்க நிஜமாவே அனுபவச் சுரங்கம் அண்ணா..

உங்களின் தங்கையாக இருப்பதில் உண்மையில் பெருமைப் படுகிறேன்.. தங்கையின் அறிவை வளர்ப்பதில் உங்கள் பங்கு மகத்தானதாயிற்றே.. :)

ஜப்பானியர்கள் பற்றி நல்லவை பல கேள்விப்பட்டிருந்தாலும்.. உங்கள் மூலம் அவர் தம் மனித நேயத்தையும் பண்பையும் பார்த்து அகம் மகிழ்ந்தேன்.

சிறப்பான பதில் சிவா அண்ணா. பாராட்டுகள்.

--

ஓவியன் அண்ணா..

அண்ணியைச் சமாளிக்க என்னவெல்லாம் திட்டம் போடுறீங்க... ஆனாலும்.. அந்த ஒரு நாள் லீவு எடுப்பது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.... இதை காட்ட வேண்டியவருக்கு காட்டி வெல்ல முயற்சிக்கிறேன்... (:D :D)

பாராட்டுகள் ஓவியன் அண்ணா... கலக்கல் பதில்.

--

தக்ஸ்..

நீங்கள் சொன்ன புத்தகத்தை நானும் ஒரு நாள் நூலகத்தில் படிக்க நேர்ந்தது.. நூலை முற்றிலும் படிக்க வில்லை.. ஏனெனில் அது தாங்கி வந்த வலி..

உண்மையில் சில்க் இறுதியில் நோயினால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்பது நானறியாததே..

மற்ற செய்திகள் எல்லாம் அதில் படித்து தெரிந்து கொண்டேன்..

பாவம் கவர்ச்சி நடிகைகள் நிலை...

உங்கள் பதில் இப்படித் தான் இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தேன்.. ஒரு படி மேல் சென்று விட்டீர்கள் தக்ஸ்...

பாராட்டுகள்.

பரஞ்சோதி
30-03-2009, 01:31 PM
அருமை, அருமையான பதில் அண்ணா.

நான் ஜப்பானியர்களுடன் பணி செய்யவில்லை, உங்கள் பதிலால் அவர்களோடு பணி புரிய ஆவல் வருது.

பரஞ்சோதி
30-03-2009, 01:35 PM
9. தோழர் அக்னி: உங்கள் பெயர் எனக்கு பிடித்தமான பெயர், சோதியும் அக்னியும் ஒன்று தானே.

உங்களுக்கு மிக மிகப் பிடித்த உலக புரட்சியாளர் யார்? அவரைப் பற்றி சொல்லுங்க.

பரஞ்சோதி
30-03-2009, 01:37 PM
10. சகோதரி, எனக்கு என் மகள் சக்தியை எப்படி எல்லாம் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்குதோ, அதே போல் உங்கள் மகள் சமுத்ரா- செல்லம் அவர்களை எப்படிப்பட்டவராக வளர்க்க ஆசைப்படுறீங்க?

அறிஞர்
30-03-2009, 02:00 PM
2) அறிஞர்: அன்புத்தோழரே! நீங்களும் உங்க குழுவினரும், இதுவரை மனித இனத்தின் காலடியே படாத இடம் என்று ஒரு பயங்கர குகைக்கு ஆராய்ச்சி செய்ய செல்றீங்க. அங்கே உங்க கண்ணுக்கு மட்டுமே ஒரு பயங்கரமான இனம் வாழ்வது தெரிகிறது. அந்த இனம் அக்குகையை விட்டு வெளியே வந்தால் மனித இனமே பூண்டோடு அழிய வாய்ப்பு இருக்குது, ஆனாலும் உங்க மனம் அந்த புதிய இனத்தைப் பற்றிய ஆராய்ச்சி செய்ய தூண்டுகிறது. இந்நிலையில் நீங்க என்ன செய்வீங்க?

(ஹி ஹி அந்த இனம் உங்களை மட்டும் கண்டால் ஏதும் செய்வதில்லை, அது என்ன இனப் பாசமோ எனக்கு தெரியாது சாமி:)
தோழா!!! எனக்கு கேள்வி கேட்கப்பட்டது இன்றுதான் கண்டேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். இப்படியெல்லாம் கேள்வி கேட்க எந்த ஹோட்டலில் ரூம் போட்டு யோசித்திங்க... :traurig001::traurig001::traurig001::traurig001:

"துணிந்தவனுக்கு தூக்கு மேடையும் பஞ்சு மெத்தைதான்" என்ற பாணியில் ஆராய்ச்சி கண்டிப்பா தொடரும். அந்த இனத்திற்கு என் மேல் உள்ள பாசத்தை சரியாக பயன்படுத்த முயற்சிப்பேன்.

ஒருவரை/ஒரு பொருளை எப்படி காண்கிறோம் என்பதே முக்கியம். மஞ்சள் கண்ணாடி போட்டு பார்த்தால் எல்லாம் மஞ்சளாகதான் தெரியும். ஒருவரைப் பற்றி சரியாக அறியாமல் குறை சொல்வது/காண்பது தவறு.

அந்த இனத்துடன் நல்லுறவை வளர்த்து, அதின் குணநலன்களை ஆராய வேண்டும். மனித இனத்தை பூண்டோடு அழிக்க தூண்டும் காரணத்தை கண்டுபிடித்து... அதை மாற்ற முயற்சிப்பேன்.

உயிரோடு பிறந்த எந்த இனத்திற்கும் உணர்வுகள் உண்டு. அதை சரியாக பயன்படுத்தினால் வெற்றி தான். அழிவு சக்திகளையும், ஆக்க சக்திகளாக மாற்ற இயலும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டும்.
(இப்ப.. இந்த எஸ்கேப் போதும் என எண்ணுகிறேன்)

பரஞ்சோதி
30-03-2009, 02:31 PM
சபாஷ் தலை,

உங்கள் கையெழுத்தும் அதை தானே சொல்கிறது.

பாராட்டுகள், மிக அருமையான பதில்.

ராஜா
30-03-2009, 03:05 PM
குறு உருவம் கொண்ட சப்பானிய மக்களின் பெருமனம் அறிந்து வியந்தேன்..!

பகிர்ந்தமைக்கு நன்றி சிவா..!

ராஜா
30-03-2009, 03:07 PM
///////////////////// ஒருவரை/ஒரு பொருளை எப்படி காண்கிறோம் என்பதே முக்கியம். மஞ்சள் கண்ணாடி போட்டு பார்த்தால் எல்லாம் மஞ்சளாகதான் தெரியும். ஒருவரைப் பற்றி சரியாக அறியாமல் குறை சொல்வது/காண்பது தவறு. //////////

மெச்சத் தகுந்த கச்சித பதிவு..!

அறிஞர் பெருமானே... பாராட்டுகள்..!

ராஜா
30-03-2009, 03:10 PM
10. சகோதரி, எனக்கு என் மகள் சக்தியை எப்படி எல்லாம் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்குதோ, அதே போல் உங்கள் மகள் சமுத்ரா- செல்லம் அவர்களை எப்படிப்பட்டவராக வளர்க்க ஆசைப்படுறீங்க?

வண்ணமிட்ட சொற்றொடர் முற்றுப்பெறாதது போன்ற தொனி நிலவுகிறதே..

இல்லை.. புரிவதில் எனக்குதான் குறைபாடா..?

அமரன்
30-03-2009, 03:10 PM
சப்பானியர்களுடன் எனக்கேற்பட்ட அனுபவம்கூட சிவாவினதை ஒத்ததே.
அறிஞரே. நீங்கள் படித்த சமாளிபிக்கேஷன் கோஸை எங்கே படிக்கலாம். அட்ரஸ் பிளீஸ்.

அறிஞர்
30-03-2009, 04:54 PM
சபாஷ் தலை,
உங்கள் கையெழுத்தும் அதை தானே சொல்கிறது.
பாராட்டுகள், மிக அருமையான பதில். ஆராய்ச்சி உலகத்தில் புது கண்டுபிடிப்புகள் இப்படி தான்.

அறிஞரே. நீங்கள் படித்த சமாளிபிக்கேஷன் கோஸை எங்கே படிக்கலாம். அட்ரஸ் பிளீஸ். சொந்த சரக்கை.. மன்றத்திலே படிங்க.. .

///////////////////// ஒருவரை/ஒரு பொருளை எப்படி காண்கிறோம் என்பதே முக்கியம். மஞ்சள் கண்ணாடி போட்டு பார்த்தால் எல்லாம் மஞ்சளாகதான் தெரியும். ஒருவரைப் பற்றி சரியாக அறியாமல் குறை சொல்வது/காண்பது தவறு. //////////

மெச்சத் தகுந்த கச்சித பதிவு..!

அறிஞர் பெருமானே... பாராட்டுகள்..! அண்ணா.. இந்த பெருமான் எல்லாம் வேண்டாம்.....

அனுபவமே நல்ல பாடம்... தாங்கள் அனுபவம் மிகுந்தவர்கள்...

சிவா.ஜி
30-03-2009, 05:16 PM
பரம்ஸின் கேள்விகளுக்கு கிடைத்த பதில்கள் எல்லாமே எதிர்பார்த்தமாதிரியே சிறப்பாக இருந்தது.

அதிலும் பூமகளின் பதிலில் தன் பாசமிகு குடும்பத்தைக் குறிப்பிட்டும், நட்பின் மேன்மையைச் சொல்லியும் அருமையான பதிலை தந்துவிட்டார். அதே பாச உணர்வுகளுடன் என்றும் நலமாய் வாழ வாழ்த்துகிறேன்.

தக்ஸ் ஒரு சிறுகதை கொடுப்பார் என பார்த்தால்...சில்க் ஸ்மிதாவின் சோக கதை சொல்லிவிட்டார். சில்க்கின் மேனஜராக இருந்தவரின் பெயர் ராதாகிருஷ்ணன். மலையாளி. அவர் கிட்டத்தட்ட சில்க்கை ஒரு பணயக்கைதியாகவே வைத்திருந்தார். தன் குடும்பத்தாருக்கு கூட உதவமுடியாமல் வருத்தப்பட்ட சில்க், ராதாகிருஷ்ணனை எதிர்த்து தன் தம்பியின் படிப்புக்கும், குடும்பத்துக்கும் உதவ தீர்மானித்ததை விரும்பாத தாடிக்கார ராதாகிருஷ்ணன்தான் அவரை கொலை செய்துவிட்டு...தற்கொலை போல செட்டப் செய்ததாக அப்போது ஒரு பேச்சு இருந்தது.

அறிஞரின் பதிலில் ஒரு விடாமுயற்சி மற்றும் மனிதநேயமுள்ள ஆராய்ச்சியாளரின் மனதை அறிய முடிந்தது. வாழ்த்துகள் அறிஞர்.

அன்புரசிகனோட பதிலைத்தான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். ஹி...ஹி...!!!

அன்புரசிகன்
30-03-2009, 07:02 PM
மன்னிக்கவேண்டுகிறேன். சற்றே பொறுத்தருளவும். நாளை அலுவலக இடமாற்றம். சைட் லிருந்து நிர்வாக அலுவலகத்திற்கு இடம் மாற்றுகிறார்கள். அதனால் அலுவலகம் போறது தான் தெரியுது. நேரம் ஆகிவிடுகிறது. வீட்டிலும் சற்றே டென்ஷன்.... நாளை மாலை தரமுயல்கிறேன்.

அறிஞர்
30-03-2009, 07:08 PM

பதிலை பெரிய கதையாக எதிர்பார்க்கிறோம்.., :D:D:D

விகடன்
30-03-2009, 07:24 PM
என்ன அன்பு. சைட்டிற்கு ஆப்பா?

தாமரை
31-03-2009, 06:14 AM
4) தாமரையார் : அன்புத்தோழரே! விவாதத்திறமை, அறிவுப்பூர்வமான கண்ணோட்டம் எல்லாம் நான் மட்டுமல்ல எல்லோரும் அறிந்ததே. தற்போதைய இலங்கை, ஈழத்தமிழர்களின் சூழ்நிலையை மாற்றி அமைக்கும் பொறுப்பும், அதற்கான கட்டளையை உலக நாடுகள் ஏன், கொடியவன் ராஜபக்சேவே உங்களிடம் கொடுத்தால், என்ன செய்வீங்க? விரிவான பதில் வேண்டும்.

ரொம்ப கஷ்டமான கேள்வியை மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் கேட்டிருக்கீங்க பரம்ஸ்.. இன்னும் இரண்டு மாசம் மன்றம் வருவதே பெரிய காரியம் என்ற நிலையில் மிகப் பெரிய பதில் எழுத நேரமில்லை.

இருந்தாலும் முடிந்த வரை முயற்சி செய்கிறேன்...

சாக்கு சொல்லுதல், பழி போடுதல் இவற்றைத் தள்ளி வைத்து விட்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று உடனே ஆராய்ந்து செயலில் இறங்குதல் முக்கியத் தேவை என உணரவைப்பேன்.

அன்றைய நிலையில் அது சரி, இன்றைய நிலையில் இது சரி... ஆக காரணங்களைப் பற்றி யோசிக்காமல், பழியை வேறு எதாவது ஒன்றின் மேல் தள்ளி விட முயற்சிக்காமல் உடனே தேவையான முயற்சிகளில் இறங்குவேன்.ட்

1. இலங்கை முழுதுக்குமான அமைதி அவசரச்சட்டம் ஒன்று பிறப்பிப்பேன். அதன்படி அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்படும். வன்முறையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களைத் தனித்தீவிற்கு அனுப்பி வைப்பேன். (இதுக்காக அந்தமான் பகுதியில் ஒரு தீவை ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவிடம் கேட்பேன்.)

2. நாடு முழுதும் முன்பிருந்த குடியிருப்புகளைச் சீர்ப்படுத்த, உலக நாடுகளின் உதவியை நாடுவேன். அவரவர் அவரவரின் சொந்த ஊரில் தன்னுடைய இருப்பிடம் சேர வழிவகை செய்வேன்

3. இதோடு சில குழுக்கள் அமைப்பேன். இந்தக் குழுக்களுக்கு தனித்தனிப் பொறுப்புகள் தரப்ப்படும்.

அ) உலக சுற்றுப்பயணக் குழு : இராஜபக்ஷே, பிரபாகரன் உள்ளிட்ட இப்பிரச்சனைகளில் சம்பந்தப்பட்ட பலம் வாய்ந்த தலைவர்களை, உலகத்தின் இருநூற்று சொச்ச நாடுகளுக்கும் ஒவ்வொரு வார காலம் தங்கி, பண்பாடு, அரச சாசனங்கள், வாழ்க்கை முறை, மனிதம் என பலவகைகளையும் ஆராய்ந்து எல்லாவற்றிலும் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்து இலங்கையின் எதிர்கால அரசியல் சாசனத்திற்கு உலகிலேயே சிறிந்த மானுடம் என்ற பெயர் வருமாறு ஒரு நல்ல அரசியல் சாசனத்தை வகுத்து வரச் சொல்வேன். (இவர்கள் ஒரு முடிவுற்கு வருவதற்குள், இலங்கை விழித்துக் கொள்ளும்...:))

ஆ) காரியக் கமிட்டி : இவர்களின் வேலை, இலங்கையின் இயற்கை வளங்களைக் கொண்டு ஒரு வரைபடம் தயாரித்தல். அதைக் கொண்டு இலங்கையின் இயற்கை வளங்கள் என்னென்ன, என்னென்ன தொழில்கள் எந்தப் பகுதிகளில் முக்கியமானவை? அந்தத் தொழில்களுக்கு தேவையான முதலீடுகள், திறன்கள், அறிவு இப்படி பல விஷயங்களைத் திரட்டி, அவற்றைத் திட்டங்களாகச் சமர்ப்பித்தல். இதைக் கொண்டு ஸ்வர்ண லங்கா - அதாவது தங்க இலங்கை என்ற ஒரு திட்டமாகக் கொண்டுவந்து சமர்ப்பிப்பேன். இத்திட்டங்களை இலங்கை அரசு, இலங்கை மக்கள், உலகவங்கி, ஐ.நா சபை, மற்றும் உலக நாடுகளின் உதவியோடு நிறைவேற்ற ஆரம்பிப்பேன்.

இ) கலை-பண்பாட்டுக் குழு இதில் சகல இன, மத,கலை வல்லுனர்கள் இருப்பார்கள். இவர்கள் இலங்கை முழுதும் பயணிப்பர். ஒவ்வொன்றிலும் இருக்கும் நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்து அவற்றை நடனமாக, நாடகமாக, இசையாக பலவேறு வகைகளாக மக்களுக்கு சென்று சேருமாறு செய்வேன். இதனால் மக்கள் அனைத்து பண்பாடுகளையும் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள இயலும்

ஈ) மதக் குழு மதத்தின் மீது தீவிர பற்றுகொண்டு மக்களை வழிநடத்தும் மதப்பெரியவர்களை கொண்டதாக அமையும் இதில் நானும் பங்குகொள்வேன். மதங்கள் மக்களைப் பாதிக்காமல் இருக்க விவாதங்கள் இங்கு நடத்தப்படும். மதங்கள் மக்களை மதம் பிடித்தோராக மாற்றாமல் இருக்கும் பொருட்டு, மனம் விட்ட கலந்தாய்வுகள் மேற்கொள்ளப்படும். மக்களைப் பிரிக்கும் மத வாதங்களை நீர்த்துப் போகும் வண்ணம் இங்கு நடக்கும் விவாதங்கள் இருக்கும். இதன் வழியாக மத துவேஷங்கள் குறைக்கப் படும்.

உ) செயற்குழு நாட்டில் திட்டமிடப்பட்ட திட்டப்பணிகளை முன்னின்று நிறைவேற்றும் குழு. கட்டமைப்புகளைச் சீர்செய்தல், மனித வள மேம்பாடு, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, போன்ற பல துறைகளிலும் இவர்களின் பணி மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு உறுதி செய்யும் வண்ணம் அமையும்.

ஊ) வெளியுறவு
சிறந்த ராஜதந்திரிகளாக அடையாளம் காணப்படும் நால்வர் குழு அமைக்கப்பட்டு இலங்கை - ஒரு உதாரண நாடு என்பதை அடையாளப்படுத்தும் வகையில் நல்லுறவு வளர்க்கப் பாடுபட வைப்பேன். ஆயுதங்கள், படை பல உதவி போலல்லாது தொழில்நுட்பங்கள், மருத்துவம் போன்ற பயனுள்ள துறைகளில் மட்டும் உறவுகள் மேற்கொள்ளப்பட வகை செய்வேன். இலங்கை ஒரு சமாதானத் தூதுவன் என அறிவித்து அனாவசியப் பாதுகாப்புச் செலவுகளைக் குறைப்பேன்.

4. இலங்கையைப் பற்றிய அனைத்துத் தகவல்கள், குடிமக்கள், சொத்துவிவரங்கள் என அனைத்தையும் கணினி மயமாக்கி அரசு எந்திரத்தின் வேகத்தை அதிகப் படுத்துவேன். லொள்ளுவாத்தியார் பிரதமரானால் பகுதியில் சொல்லி இருக்கும் பல திட்டங்களை செயல்படுத்துவேன்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12144

5. புலம் பெயர்ந்தோர் திரும்பி வர அழைப்பு கொடுத்து அதை உலக மானுட தினமாக அறிவிக்க வைத்து அனைவருக்கும் சிறந்த வரவேற்பு கொடுப்பேன்.

6. உலகம் சுற்றி வந்த தலைவர்களின் பரிந்துரைகளை விவாதித்து புதிய அரசுக் கொள்கைகளை வரையறுக்க விவாத அரங்கு அமைக்கவேண்டும்.. இலங்கையின் இறையாண்மைக் கொள்கைகள் இங்கு வரையறுக்கப்படும்.
ஆனால் இவர்கள் திரும்பி வரும் முன்னரே இலங்கை ஏற்கனவே மாறிப்போயிருப்பதால் இலங்கை மாற்றத்தில் முக்கிய பங்கு கொண்டு குழு உறுப்பினர்களுடனான முதல் கட்ட ஆலோசனை இருக்கும். அதன் பின் இலங்கை முழுதும் ஓராண்டுக்கு இக்குழு பயணப்பட்டு தங்களுடைய திட்டத்தில் தேவையான மாற்றக் குறிப்புகளுடன் வரும்.

7. விவாத அரங்கில் இலங்கையின் புதிய அரசியல் சாசனம் படைக்க என்னுடைய தலைமையில் விவாதங்கள் ஆரம்பிக்கப் படும். உலக நீதிமன்றம், ஐ.நா சபை போன்ற பார்வையாளர்கள் இங்கு பங்கு கொள்வார்கள். தங்க இலங்கை அரசியல் சாசன கட்டமைப்பு இங்கு அமைக்கப்படும். இங்கு வரையறுக்கப்படும் அரசியல் சாசனப்படி, அதன் உட்பிரிவுகள், சட்டங்கள் முதலியவை அமைக்க சட்ட வல்லுனர் குழு அமைக்கப்படும்.

புதிய அரசியல் சாசனம், சீரமைக்கப்பட்ட நாடு, உழைக்கும் மக்கள், தெளிவான கண்ணோட்டம், உயர்ந்த நோக்கு.

இலங்கைப் பிரச்சனையா? அப்படின்னா என்னங்க?

பூமகள்
31-03-2009, 06:53 AM
சரியான நபரிடம் சரியான தருணத்தில் மிகச் சரியான கேள்வி கேட்டிருக்கிறீர்கள் பரம்ஸ் ஜி..

அட்டகாசமான இந்த ஆலோசனைகளை இலங்கை அரசு காதில் போட்டுக் கொண்டால் பல நல்ல விளைவுகள் உருவாகுமே..

மிக சிறப்பான பதில்...

வழக்கம் போல் அசத்தல் தாமரை அண்ணா..

பாராட்டுகள்.

samuthraselvam
31-03-2009, 07:20 AM
ஆஹா...! அண்ணா, எங்கே அண்ணா அலையே காணோம் என்று நினைத்தேன். பரம்ஸ் அண்ணா அழைத்து வந்து விட்டார்.

வழக்கம் போல் உங்கள் பதில் அருமை... பூ அக்க சொன்னது மாதிரி.....

தாமரை
31-03-2009, 11:04 AM
அசத்தலா இல்லையாங்கறதை நாம எப்படிச் சொல்றது தங்கைகளே.. அந்த வேதனைகள் கேட்டும் படித்தும்தானிருக்கிறோம். ஆனால் அந்த மனங்களுக்கு இந்தச் செயல்திட்டம் பிடித்திருக்கா? இது நடந்தால் அவர்கள் இத்தனை நாள் பட்ட துன்பங்களுக்கு அர்த்தம் கிடைக்குமா?

இதை அவர்கள் சொன்னால்தான் நான் அவர்களைச் சற்றாவது புரிந்து கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம்.

பரஞ்சோதி
31-03-2009, 11:14 AM
அறிவுப்பூர்வமான பதிலை நான் எதிர்ப்பார்த்தப்படியே தாமரையாரிடமிருந்து வந்திருக்கிறது.

இத்தனையும் யோசிக்கிற ஒரு நல்ல தலைவன் மட்டும் இலங்கைக்கு ஏன், உலக நாடுகளுக்கு கிடைத்தால் எத்தனை நன்றாக இருக்கும்.

இப்போதைக்கு இலங்கை தமிழ்மக்களுக்கு அமைதியான வாழ்க்கை கொடு இறைவா என்ற வேண்டுதல் மட்டுமே நம்மால் முடிகிறது.

அறிஞர்
31-03-2009, 01:13 PM
செயல்திட்டம் அருமை தாமரை...
செயல்படுத்தினால்.. நிரந்த தீர்வு ஏற்பட வழியுண்டு..

சிவா.ஜி
31-03-2009, 04:15 PM
அப்பா.....நிஜமாவே நடந்தா எப்படியிருக்குன்னு ஏங்க வெச்சுட்டீங்களே தாமரை. அருமையான செயல் திட்டங்கள், சரியான நேரத்தில் சரியான செயற்பாடு, சரியான நபர்கள் என அசத்திட்டீங்க.

அமரன்
01-04-2009, 09:04 AM
இலங்கைப் பிரச்சினைக்கு மிக முக்கியமான காரணிகளாக நான் கருதுபவை.
தவறாக/திரிக்கப்பட்ட வரலாறுகள்.
தவறுகள் பதிக்கபட்ட வரலாறுகள்.
இந்த வரலாறுகளை வைத்து செய்யப்படும் மூளைச்சலவை.
தாமரை அண்ணாவின் செயல்திட்டங்கள் இந்த அடிப்படைகளையும், இன்னும் சில முக்கிய காரணிகளையும் அடியோடு அழித்து விடுகின்றன.

அமரன்
01-04-2009, 09:04 AM
எங்கேப்பா அன்புரசிகன்.

பரஞ்சோதி
01-04-2009, 09:15 AM
அன்பு ரசிகன் சமாளிக்க போயிருக்கிறாராம்.

தாமரை
01-04-2009, 09:26 AM
இலங்கைப் பிரச்சினைக்கு மிக முக்கியமான காரணிகளாக நான் கருதுபவை.
தவறாக/திரிக்கப்பட்ட வரலாறுகள்.
தவறுகள் பதிக்கபட்ட வரலாறுகள்.
இந்த வரலாறுகளை வைத்து செய்யப்படும் மூளைச்சலவை.
தாமரை அண்ணாவின் செயல்திட்டங்கள் இந்த அடிப்படைகளையும், இன்னும் சில முக்கிய காரணிகளையும் அடியோடு அழித்து விடுகின்றன.

எந்த திட்டம் இதைச் செய்யுதுன்னு மக்களுக்கு விளக்கிச் சொல்லிட்டீங்கன்னா, இந்த செயல் திட்டத்தின் மறுபக்கத்தை மக்கள் தெரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்..

அன்புரசிகன்
01-04-2009, 06:07 PM
8) தம்பி அன்பு ரசிகன்: ஹி ஹி தம்பி, போட்டு வாங்குவது என்பதை இப்போ தான் புரிஞ்சிகிட்டேன். ஏன் இப்படி சொல்றேன்னு இப்போ புரியுமுல்ல.

உங்க பெற்றோர், குடும்பத்தார் அனைவருக்கும் ஒரு பெண்ணை பிடிச்சி போக, உங்களை பெண் பார்க்க அழைச்சிட்டு போறாங்க. நீங்களும் அப்பெண்ணை பார்த்தவுடன் மனசுக்குள் ஜொள்ளுறீங்க (ரசிகனாச்சே, அதனால ரசிக்கிறீங்க :) ), ரொம்ப பிடிச்சி போச்சுது. இப்போ அந்த பெண்ணை திருமணம் செய்ய தயார் என்று சொல்லும் நிலையில் திடிரென்று ஒரு பெண், அங்கே வருகிறார், அவர் தான் பெண்ணின் தங்கை, என்ன கொடுமைன்னா, அந்த பெண்ணின் தங்கையிடம் சில ஆண்டுகளாக பின் தொடர்ந்து, அவமானப்பட்டு, ஒருவழியாக காதலித்தும் இருக்கீங்க. இடையில் பிரச்சனையில் கழண்டுகிட்டீங்க. இப்போ உங்க நிலை என்ன, எப்படி சமாளிப்பீங்கப்பூ.

செய்வதறியாது திணறிக்கொண்டிருந்தபோது மனதில் உதித்தது ஒரு திட்டம்... அதாவது பெண்ணுடன் சில நிமிடங்கள் பேசவேண்டும் என்று பக்கத்திலிருந்த பாட்டிக்கு கூறுவேன்... பாட்டியும் அதை அறிவிக்க அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து வருவார்... அப்போது தேனீரை இரண்டு கோப்பையால் ஆற்றிக்கொண்டே என்னை பிடிக்கவில்லை என்று சொல்லுங்கள். நான் மதியை காதலிக்கிறேன். அவரைத்தான் திருமணம் செய்யப்போகிறேன். என்று அடக்கமாக அழுது புலம்புவார். இதென்ன புதுக்கரடியாக உள்ளதே என்று (மதியை அல்ல) ஒருகணம் திகைத்துவிட்டு பின் ஒரு முடிவு கண்முன்னே விடிவெள்ளிபோல் http://www.geocities.com/hislantern/YellowStar_blink.gifhttp://www.geocities.com/hislantern/YellowStar_blink.gifhttp://www.geocities.com/hislantern/YellowStar_blink.gifதோன்றவே பெரியவர்கள் இருக்கும் இடத்திற்கு வருவேன். (நன்றி - ரோஜா)

இந்த நேரத்தில ஒன்றை சொல்லவேண்டும். அங்கே பெண்ணின் தங்கை அதாவது எனது முன்னைநாள் காதலி இருப்பதாக பரம்ஸ் அண்ணா சொன்னார். அவருக்கு பக்கத்தில் நான் அந்த காலத்தில் சேர்த்து சைட் :icon_08::icon_give_rose:அடித்த பெண்ணின் தங்கையின் நண்பி (அழகில் இவர்கள் இருவரிலும் அதாவது பெண் மற்றும் அவரது தங்கை ஐ விட 2 மடங்கு அதிகமானவர் :love-smiley-008::cool-smiley-016:என்று அனுமானித்துக்கொள்ளவும் :D)இருப்பது பற்றி சொல்லமறந்துவிட்டார். நான் பெண்ணின் தங்கையை ஒருவழியாக காதலித்து முடிவு தெரிந்த பின்னர் தான் அந்த நண்பி எனக்கு அறிமுகமானார். (அது என் தவறல்லவே) அவருடன் கொண்ட நெருக்கத்தினால் தான் தங்கையின் காதல் பறிபோனது என்பது உங்களுக்கு தெரிந்திருக்காது....

இப்போ முடிவுக்கு வருகிறேன். இது தான் சரியான தருணம் என்று மனதில் தோன்றவே பெண்ணின் தங்கையின் நண்பியை எனக்கு பிடித்திருக்கிறது. அவரை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று என் முடிவை சபையில் அறிவித்துவிடுவேன். (மீண்டும் நன்றி - ரோஜா)

அப்புறமா என்ன நடக்கும் என்பது உங்களது முடிவுக்கு விட்டுவிடுகிறேன்.:liebe028:

இதெப்டி இருக்கு பரம்ஸானந்தா அண்ணரே....????????????????????:icon_b:

-------

ஏற்படுத்திய காலதாமதத்திற்கு வருந்துகிறேன். வேலைத்தளத்தில் சில பல பிரச்சனைகள்.................... மன்னிக்க...

சிவா.ஜி
01-04-2009, 06:24 PM
அடங்ஙொக்க மக்கா.....அன்பு கில்லாடிதான்...பாக்கப்போன தங்கையைத்தான் பரம்ஸ் சொல்லியிருந்தாரு...அன்பு..அதுக்கும் மேலே போய்...இண்ணொன்னா....? தாங்காதுப்பா...

அக்காவைக் கட்டிக்கிட்டு தங்கைக்கு ஏற்படும் தர்மசங்கடத்தையும், தங்கை மேட்டர் தெரிந்தால் அக்காவின் தாக்குதலையும் ஒருசேர சமாளிச்சுட்டாருய்யா....

ஆனா கதை வசனம் காட்சியமைப்பு...சூப்பரப்பு. அசத்துங்க.

அறிஞர்
01-04-2009, 06:32 PM
மன்றத்தில் நிறைய கதாசிரியர்கள் இருப்பதற்கு சான்றான பதில்.. அன்பு..

அன்புரசிகன்
01-04-2009, 06:49 PM
ஆனா கதை வசனம் காட்சியமைப்பு...சூப்பரப்பு. அசத்துங்க.
பார்த்த படத்தை கொப்பியடிக்க அசத்தல் என்கிறீங்களே........... :lachen001:

மன்றத்தில் நிறைய கதாசிரியர்கள் இருப்பதற்கு சான்றான பதில்.. அன்பு..
என்னை திட்டலியே............... :D

தாமரை
02-04-2009, 06:13 AM
அமரனால் சரியாகச் சொல்ல முடியாமல் தவிக்கிறார் என்று எண்ணுகிறேன்.
கீழ்கண்ட முன்று குழுக்களையும் பாருங்கள்.

அ) உலக சுற்றுப்பயணக் குழு : இராஜபக்ஷே, பிரபாகரன் உள்ளிட்ட இப்பிரச்சனைகளில் சம்பந்தப்பட்ட பலம் வாய்ந்த தலைவர்களை, உலகத்தின் இருநூற்று சொச்ச நாடுகளுக்கும் ஒவ்வொரு வார காலம் தங்கி, பண்பாடு, அரச சாசனங்கள், வாழ்க்கை முறை, மனிதம் என பலவகைகளையும் ஆராய்ந்து எல்லாவற்றிலும் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்து இலங்கையின் எதிர்கால அரசியல் சாசனத்திற்கு உலகிலேயே சிறிந்த மானுடம் என்ற பெயர் வருமாறு ஒரு நல்ல அரசியல் சாசனத்தை வகுத்து வரச் சொல்வேன். (இவர்கள் ஒரு முடிவுற்கு வருவதற்குள், இலங்கை விழித்துக் கொள்ளும்...:))

அதாவது இந்தப் பிரச்சனையில் தலைமை தாங்கி முன் நிற்பவர்களுக்கு வேறு வேலை கொடுத்து ஒருநாலு வருஷம் இலங்கைக்கே வராத மாதிரி செய்து விடுகிறேன்.

இ) கலை-பண்பாட்டுக் குழு இதில் சகல இன, மத,கலை வல்லுனர்கள் இருப்பார்கள். இவர்கள் இலங்கை முழுதும் பயணிப்பர். ஒவ்வொன்றிலும் இருக்கும் நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்து அவற்றை நடனமாக, நாடகமாக, இசையாக பலவேறு வகைகளாக மக்களுக்கு சென்று சேருமாறு செய்வேன். இதனால் மக்கள் அனைத்து பண்பாடுகளையும் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள இயலும்

இது நல்லிணக்கத்தை வளர்க்கும் நோக்கில் இருக்கும். மக்களின் பொழுதை நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் செலவழிக்க வைக்கும். இதனால் வெட்டிப் பொழுதி விபரீதமாக மக்கள் சிந்திப்பது குறையும்.

ஈ) மதக் குழு மதத்தின் மீது தீவிர பற்றுகொண்டு மக்களை வழிநடத்தும் மதப்பெரியவர்களை கொண்டதாக அமையும் இதில் நானும் பங்குகொள்வேன். மதங்கள் மக்களைப் பாதிக்காமல் இருக்க விவாதங்கள் இங்கு நடத்தப்படும். மதங்கள் மக்களை மதம் பிடித்தோராக மாற்றாமல் இருக்கும் பொருட்டு, மனம் விட்ட கலந்தாய்வுகள் மேற்கொள்ளப்படும். மக்களைப் பிரிக்கும் மத வாதங்களை நீர்த்துப் போகும் வண்ணம் இங்கு நடக்கும் விவாதங்கள் இருக்கும். இதன் வழியாக மத துவேஷங்கள் குறைக்கப் படும்.

தாமரை ஓரு விவாதத்தில் ஈடுபட்டால் என்ன நடக்கும் என்று மன்றச் சொந்தங்களுக்கு நல்லாவே தெரியும்.

தவறாக/திரிக்கப்பட்ட வரலாறுகள்.
தவறுகள் பதிக்கபட்ட வரலாறுகள்.
இந்த வரலாறுகளை வைத்து செய்யப்படும் மூளைச்சலவை.

இவையெல்லாம் இங்கு நுணுக்கமான கேள்விகளுக்கு ஆளாக்கப்படும். பதிலே சொல்ல முடியாம பலர் அமைதியாய்யிடுவாங்க. அவங்களுக்குச் சப்போர்ட் பண்ணுகிற தலைவர்கள் எல்லாம் வேர்ல்ட் டூரில் இருப்பதினால ஒண்ணும் செய்ய முடியாம அமைதியாகிடுவாங்க. மக்களுக்கு பல வளர்ச்சி பணிகள் நடப்பதால் கவனம் அதில் இருக்க்கும். அதனால உயர்ந்தவர் தாழ்ந்த்தவர் இதுபோன்ற பல விஷயங்களை இங்க நசுக்கிப் பூண்டோட அழிப்பேன்.

-------------------------------------------------------------

இது மாதிரி எல்லா திட்டங்களுக்குப் பின்னாலும் மறைமுக நோக்கம் வஞ்சப் புகழ்ச்சியில் இருக்கு.

வன்முறையாளர்களை மக்களிடமிருந்து பிரிக்கப் பட்டு நாடு கடத்தப்படுவதும், அதுக்கு ஏன் இந்தியாவிடம் தீவு வாடகைக்கு எடுக்கப் பட வேண்டும் என்பதிலும் இது மாதிரி மறைமுகத் திட்டங்கள் உண்டு.

அதுக்கு தாமரை இதை வஞ்சப் புகழ்ச்சியில் எழுதி இருக்கிறார் என்று மனதில் வைத்துக் க்கொண்டு படித்தால் உண்மை முழுதுமாக புரியும்.

:icon_b::icon_b::icon_b::icon_b:

விகடன்
02-04-2009, 06:26 AM
பெண்ணின் தங்கையின் நண்பியை எனக்கு பிடித்திருக்கிறது. அவரை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று என் முடிவை சபையில் அறிவித்துவிடுவேன்.

மொத்தத்தில், உங்கள் திருமணம் முடியும்வரை மூன்று பெண்களை மடக்கி வைத்திருக்கப்போகிறீர்கள் .
இப்படியே பல அன்பு ரசிகன் உலகிலிருந்தால் விராடன் போன்றோர் துறவறந்தான் பூண்டுகொள்ள வேண்டிவரும் :D .

அமரன்
02-04-2009, 06:57 AM
அண்ணா..
ஈழம் தொடர்பான என் பார்வையைப் எங்கேனும் பதிவு செய்ய வேண்டும் என்பது என்னாசை. ஒரு நிறைவைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் யோசித்த போது எதுவும் சிக்கவில்லை. உங்கள் பதிலில் அந்த நிறைவு இருப்பதால் என் ஆசையைப் பூர்த்தி செய்யலாம் என்று தோன்றுகிறது. ஆனால் நேரம் கைகொடுக்கவில்லை. விரைவில் ஏதாவது உளறுகிறேன்.

பரஞ்சோதி
02-04-2009, 10:19 AM
அப்புறமா என்ன நடக்கும் என்பது உங்களது முடிவுக்கு விட்டுவிடுகிறேன்.:liebe028:
..
ஹா! ஹா!

சிரிக்க வைச்சிட்டீங்கப்பூ. பலே பேர்வழி தான் போங்க. சமர்த்தியமான பதிலுக்கு பாராட்டுகள்.

அப்புறமா என்ன நடக்குமுன்னு கேட்டீங்க தானே. என்ன நடக்கும் எங்க காதில் புகை வரும், :cool008: வயிறு எரியும் :)

samuthraselvam
02-04-2009, 12:01 PM
10. சகோதரி, எனக்கு என் மகள் சக்தியை எப்படி எல்லாம் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்குதோ, அதே போல் உங்கள் மகள் சமுத்ரா- செல்லம் அவர்களை எப்படிப்பட்டவராக வளர்க்க ஆசைப்படுறீங்க?

சமுத்ரா என் மகளாக என் வயிற்றில் பிறந்த என் தாய்.

சமுத்ராவுக்கு நல்ல குணங்களை முதலில் கற்றுக்கொடுப்பேன், கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். அனைத்து நல்ல விசயங்களிலும் அவளுக்கு விளையாட்டைப் போல அவள் போக்கிலேயே சொல்லிக்கொடுப்பேன்.

குழந்தையுடன் பேசும்போது நானும் அவளின் வயதுக்கு மாறி , ஆவலுடன் அவளுடன் பேசுவேன், பாடுவேன், ஆடுவேன்...

இப்படி அவளுடன் விளையாடும் தோழியாக மாறிவிடுவேன். அந்த தோழமை அவளுக்கு உலகில் பார்க்கும், கேட்கும், கற்கும் விடயங்களுக்கு நல்ல ஆசிரியைபோல, நல்ல வழிகாட்டிபோல என்னை எடுத்துக்காட்டும்..

தன் தாய் தனக்கு ஒரு தோழி என்று அவள் மனம் நினைக்கும் போது தாயிடம் எதையும் மறைக்கத் தோன்றாது. தோழியின் துணை நமக்கு இருக்கிறது என எண்ணி அவள் சுதந்திரமாகவும், நம்பிக்கையோடும் செயல்படுவாள். அந்த சுய சிந்தை என்று அவளுக்குள் வருகிறதோ, அன்று என் எண்ணத்தினை அவளுக்குள் திணிக்க மாட்டேன்.

தன் தாய் தனக்கு நல்லது மட்டும் செய்வாள் என்ற நம்பிக்கையை குழந்தைகளின் மனதில் ஏற்படுத்தினால் போதும், அவர்கள் வாழ்க்கையில் வெற்றி என்பது சர்வசாதரனமாகிவிடும்.

அவள் விருப்பப்படி என்ன படிக்க விரும்புகிறாளோ, அதையே நானும் ஏற்பேன். தவறு செய்யும் போது கண்டிப்பேன். அந்தத் தவறை சுட்டிக்காட்டி இது போல் இனியொருமுறை கவனமாக நடந்து கொள்ளசொல்வேன்.

தவறு உணரப்படும்போது அது மன்னிக்கப்பட்டு விட்டதாகவும் உணரப்படும்.

எத்தனை கஷ்டம் வந்தாலும் சிந்தை தெளிவோடும் நல்வழியிலும் நடக்கவே விரும்பு என்பதைக் கற்றுக்கொடுப்பேன்.

8 மாதத்திலேயே "லீலா" என அழைத்தபோதே அவளின் புரிதல் எனக்குப் புரிந்தது.. எதையும் ஒரே தடவையில் புரிந்துகொள்ளும் அவளின் நியாபக சக்தி அவளின் பிற்காலத்தை எனக்கு இப்போதே உணர்த்துகிறது...

வேலை முடிந்து வீட்டுக்குப் போக ஒருநாள் எப்போதும் செல்லும் நேரத்தை விட சற்றே தாமதமாகி விட்டது. சென்றதும் ஓடிவந்து, கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து, வாங்கிவிட்டு கீழே விட்டதும், "அப்பாடி..! இப்போதுதான் வயிறே நிறைந்தது...!!" என்று பெரிய மனுசி போல் பேசிவிட்டு செல்லும் அவளின் பாசத்தால், எனக்கு எத்தனை பொருள், பணம், ஏன்? இந்த அகிலத்தையே எனதாக்கிக் கொண்ட உணர்வு..

இதை நினைக்கும் போதே கண்கள் பனிக்கிறது, என் தாய்மையை நான் உணர்கிறேன். இதை வார்த்தையால் சொன்னால் உணர முடியாது.... அனுபவித்து உணர வேண்டும்.

இரண்டரை வயதிலேயே அப்பாவுக்கு "அப்பா... உனக்கு சாப்பாடு போடுறேன்" என சொல்லியபடி அன்னக் கரண்டி கூட தூக்கத் தெரியாதவள், தட்டிலிருந்து சாப்பாட்டை கீழே சிந்தினாலும் "அப்பத்தா... சாப்பாடு கீழே சிந்தினால், சாமி கண்ணைக் குத்தும்" என என் மாமியாரிடம் சொல்லும் போதும்,"தாத்தா... காப்பி குடிக்க வாங்க..." என என் மாமனாரை அழைக்கும் போதும் வரும் பெருமிதம் இருக்கிறதே..................

அம்மா,அப்பாவுக்கு நல்ல மகளாக, தாத்தா & பாட்டிக்கு நல்ல பேத்தியாக, ஒரு தங்கைக்கோ அல்லது ஒரு தம்பிக்கோ நல்ல அக்காவாகவும், அவள் ஒரு தோழிக்கு நல்ல தோழியாக, கணவனுக்கு நல்ல மனைவியாக, மாமனார்,மாமியாருக்கு நல்ல மருமகளாய், மகனுக்கு, மகளுக்கு நல்ல அம்மாவாக இப்படி அவளின் பரிமாணங்கள் மாறும்போது நான் அவளின் அருகிலிருந்து அவளை ஆராதிக்க வேண்டும்.
அதை அவள் மனமும் விரும்ப வேண்டும். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..

அய்யா
02-04-2009, 05:27 PM
அன்பண்ணாவின் பதில் அருமை!

பூச்சாண்டி காட்டிய கேள்வியை புஸ்வாணம் ஆக்கிவிட்டாரே!

சபாஷ் அன்பண்ணா!!

பரஞ்சோதி
03-04-2009, 08:43 AM
அருமையான பதில் சகோதரி.

நான் முதலில் உங்க பெயரை கண்டு ஆண் என்று நினைத்தேன். பின்னர் உங்க செல்ல மகளின் பெயரையே மன்றத்திலும் வைச்சிருக்கீன்னா, எவ்வளவு பாசமாக இருப்பீங்கன்னு புரிஞ்சது, அதான் இக்கேள்வியை கேட்டேன். அசத்திட்டீங்க.

உங்கள் பதிவு ஒவ்வொரு தாய்க்கும் எடுத்துக்காட்டாக திகழும்.

உங்க செல்ல மகள் அங்கே பெரிய ராஜாங்கத்தையே நடத்திக் கொண்டிருக்கிறார். அவரது சிறப்பான எதிர்காலத்திற்கு நான் இறைவனை வேண்டுகிறேன்.

நல்ல தோழியாக மகளுடன் இருந்து வாங்க. தினம் தினம் குட்டி குட்டி கதைகள் சொல்லுங்க. அவர் சாதிப்பார்.

samuthraselvam
03-04-2009, 09:26 AM

நிச்சயமாய் அண்ணா... ! நீங்கள் இந்த கேள்வியைக் கேட்டதற்கு மிக்க நன்றி அண்ணா... சமுத்ரா என் செல்வம். அதனாலே சமுத்ரசெல்வம் என்று வைத்தேன்.

கதை சொல்வதற்கு தான், நம் மன்றத்தில் உங்களைப் போல் நிறைப்பேர் இருக்கீங்களே.....!! அப்புறம் என்ன எனக்கு கவலை...

உங்களின் ஆசி அவளை உயர்வடைய உபயோகமாகட்டும் அண்ணா...!!!

சூரியன்
05-04-2009, 08:14 AM
6) தம்பி சூரியன்: உங்களுக்கு அரசியலில் விருப்பம் உண்டா என்று தெரியலை. இருந்தாலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சூரியனின் வெற்றி வாய்ப்பு எப்படி அமையும். சூரியனின் சாதக, பாதகங்களை கொஞ்சம் சொல்லுங்களேன்.

இப்படி குதர்க்கமான கேள்வியை கேட்டுட்டீங்களே.:sprachlos020::sprachlos020:
எனக்கும் அரசியலுக்கும் ரொம்போ தூரம்.
நீங்கள் கேட்பது சூரியனின்(தி.மு.க.)வின் நிலையா இல்லை?:confused:

பரஞ்சோதி
05-04-2009, 09:10 AM
அடடா, என்ன சூரியன் இப்படி சொல்லிட்டீங்க.

ஆமாம், தான் திமுகவின் நிலையை தான் சொல்ல சொன்னேன்.

ஆமாம், அக்னி எங்கே? அவரது பதில் இன்னும் வரலை தானே?

அமரன்
05-04-2009, 09:21 PM
அக்னிக்கு வேலைச்சுமை அதிகமாயிட்டுதுண்ணா. சனி ஞாயிறுகளில் சுற்றுலாவும் கூடிட்டுது. வருவான்... தருவான்.. நம்புவோம்.

பரஞ்சோதி
06-04-2009, 06:19 AM
சுடரை வேற யாருடைய கைக்காவது மாற்ற வேண்டும் என்றால் மாற்றலாமே, கை ரொம்ப சுடுது :)

அமரன்
06-04-2009, 07:14 AM
முயற்சிக்கிறேன் அண்ணா!

சூரியன்
09-04-2009, 07:42 AM
திரி நகரட்டும் கண்டிப்பாக என்னுடைய பதிலை தருவேன் பரம்ஸ் அண்ணா.

பரஞ்சோதி
09-04-2009, 09:35 AM
அக்னி தம்பி தற்போதைய சூழ்நிலையில் பதில் கொடுக்க முடியாது போலும், அதே போல் சூரியன் தம்பி, அவர் நேரம் கிடைக்கும் போது பதில் சொல்லட்டும், ஆனால் தேர்தல் முடிவுக்கு முன்னர் வர வேண்டும் :)

ராஜா
13-04-2009, 01:59 PM
சுடரை வேற யாருடைய கைக்காவது மாற்ற வேண்டும் என்றால் மாற்றலாமே, கை ரொம்ப சுடுது :)

இது சுடர் இல்லேப்பா பரஞ்சோதி..!

ஆ! 10!

:)

பரஞ்சோதி
13-04-2009, 07:36 PM
ஹி ஹி

இதுக்கு தான் நீங்க வரணும் என்பது :)

(ஆ-10த்தை கூட அதிகம் நேரம் கை வசம் வைச்சிக்கிறது சரியல்ல தானே :) )

- காயத்திற்கு மருந்து போடும்