PDA

View Full Version : ♔. ஆ! 10! ♔. - முதல் சுற்று

Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14

ஓவியா
04-12-2008, 04:22 PM
இல்லை என் இரண்டு கேள்விக்கும் நாந்தான் பதிலளிப்பேன்.

நாளை கண்டிப்பாக பதில் வரும்.

என் கேள்வி எனக்குதான் இல்லனா அருவா வரும்.

சிறுபிள்ளை
05-12-2008, 02:44 AM
"நமக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப்பார்த்து
நிம்மதி நாடு"

என்ற வார்த்தைக்கமைய....... ஐயோ அவன் வாழ்க்கை அப்படியிருக்கே நமக்கு அப்படி கிடைக்கல்லியேன்னு எப்போ நினைக்க ஆரம்பிக்கின்றோமோ அப்பவே பொறாமை, குரோதம், வஞ்சகம் என்று பல கொடிய நோய்கள் நம் உள்ளக்கதவை தட்டும்.... அவைக்கு மட்டும் நாம் கதவை திறந்து விட்டுட்டோம்னு வைங்க........... அப்புரம் நாம வெளியில போய் விட வேண்டியதுதான்........ நம்ம நிம்மதியான வாழ்வுக்கு அதோட முற்றுப்புள்ளி. எனவே எப்பவுமே போதும் என்று நினைப்பதோடு... வாழ்க்கையில் எதையாவது உருப்படியா சாதிக்கனும்கிற கனவும் இருக்கனும்.

!

இதுதான் நாரதரே..வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டுசெல்லக்கூடிய தாரக மந்திரம்..இதை அனைவரும் புரிந்துகொண்டால்..என்றும் இன்பமே எல்லாம் இன்பமே

ஓவியா
05-12-2008, 10:56 AM
///பெண் ஒரு காலத்தில் தெய்வமாக வணங்கப்பட்டாள்.///

ஏலே டம்பீ, எந்தக் காலத்தில் பெண் தெய்வமாக வணங்கப்பட்டாள்?

பெண் தெய்வமாக வணங்கப்பட்டாள் என்பதை நான் எப்பொழுதுமே காற்றில் வந்த ஒரு விசயமாகவே உணருகிறேன். இது எங்கு? எப்பொழுது? எப்படி நடந்தது? யார் யாருக்கு? எத்தனை சதவீதம்? என்று யாரிடமாவது கேட்டால் ‘எனக்கு தெரியாது’ என்ற பதிலே பலரிடம் மிஞ்சும். எங்க வீட்டு பெரியவர்களும் இதில் அடங்குவார்கள். ஏன் என்னிடமும் கேட்டால் ‘ஓஃப் பிலீஸ் போர்கிவ் மி, ஐ டோண்ட் ஃனொவ் பேபி’ என்ற பதிலே வரும். இவை தேதியில்லா குறிப்புகள் போல, புராணங்களில் மட்டுமே நடக்கும் விசயம் என்பது என் சுயக்கருத்து. புனிதவதி அம்மையார், என் அவ்வை பாட்டி என சில சமயப் பெண்களை நான் வரிசையில் சேர்க்கவில்லை, காரணம் இவர்களை ஒரு சிலர் மட்டுமே தெய்வமாக நினைத்து மரியாதை செய்வதாக நான் கேட்டுள்ளேன்; அதுவும் ஆன்மீக அடிப்படையில்...

நான் பெரும்பான்மை பெண்களை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நம் அம்மா=தெய்வம், மனைவி!!, தமக்கை!!!, பாட்டி!!!, அத்தை!! மகள்!!, பேத்தி!! என இவர்களெல்லாம் நமக்கு தெய்வம்தான் என்று நாம் மட்டுமே இவர்களை நம் நெஞ்சில் சேர்த்துக் கொள்ளலாமே தவிர அடுத்தவர்களுக்கு இவர்கள் யார்?? அதைப் போன்று அடுத்த வீட்டுப்பெண்ணையும், பக்கத்து வீட்டு பாவைகளையும், திண்ணையில் உலவும் பல்லில்லா பாட்டிகளையும், கூட்டத்தில் போராடும் மகளிர்களையும், வெளியில் நடமாடும் மற்ற சாதாரண பெண்களையும் நம்மால் தெய்வமாக காண முடியுமா? ம்ஹூம் ‘நோ வேய்’. என் முடிவு, பெண்கள் எப்பொழுதுமே தெய்வமாக வணங்கப்படவில்லை!!! வணங்கப்படவும் மாட்டாள்.

///அதேகாலத்திலேயே அடிமையாகவும் நடத்தப்பட்டாள்.///

ஆமாம் பெண்ணடிமைத்தனம் வெகு உயர்வான சதவிகிதத்தில் எப்பொழுதுமே மேலோங்கிய வண்ணமாக பல்லாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன என்பதை நான் மறுக்காமல் ஏற்றுக்கொள்கிறேன்.

இது எதனால்?

முதல் காரணம் திடமான உடலாலும் வலுவான மனதாலும் பெண்கள் ஆண்களுக்குச் சரிநிகராக இல்லாத பட்சத்தில் அவள் அடிமைத்தனத்தை வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டு இன்றும் வாழ்க்கையைத் தொடர்கிறாள்… அன்றைய காலந்தொட்டு இன்றைய காலம் வரை பெரும்பாலான பெண்கள், வீர ஆண் சிங்கங்களுக்கு ஒருவகை போதைப் பொருளாகவும், காட்சிப் பொருளாகவும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அடிமைகளாகவும், இருந்திருக்கிறார்கள். இது அப்படியே பெண்களின் மனதினுள் சென்று, தான் எப்பொழுதுமே ஆண்களுக்கு அடிமைப் பட்டே இருக்க வேண்டும் என்ற மாயை ஆழ வேரூன்றியும் விட்டன. அத்துடன், தாம் மார்க்கெட்டில் விலைபோகும் ஒரு அலங்கார பொருள் போல எப்பொழுதும் கவர்ச்சியாகவே இருக்கவேண்டும் என்ற எண்ணமும் இவர்களுக்குச் சிறுவயதிலே கூடுகட்டி, இன்றும் பெண்கள் இவைகளை அறிந்தும் அறியாமலும் விரும்ப ஆரம்பித்து விட்டனர்.

பெண், கல்வி கற்றால் கேள்வி கேட்பாள் என்று அறிவுக் கண்ணையும் அன்று மூடி வைத்த காலமுண்டு, இது போல பல கொடுமைகள். பல்லாயிரம் வருடங்களாக இந்த பெண்ணடிமைச் சித்ரவதையிலிருந்து போராடி இன்று ஓரளவு உயர்வு கண்டாலும், இன்னும் பல நாடுகளில் பெண்ணடிமை ஒழியவில்லையென்றே சொல்லலாம். உதாரணம் : மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா நாடுகள் இன்னும் பெண்ணடிமையைச் சார்ந்தே பூமி சுழற்சியில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றன... ஒரு பெண்ணிற்க்கு காம உணர்வுகள் கூட இருக்கக்கூடாது என்று இன்றும் ஆப்பிரிக்க மக்கள் 'கலாச்சாரம் என்று' பொய் போர்வையில் என்னென்ன அட்டூழியங்கள் அங்கு புரிகிறார்கள் என்று சொல்ல எனக்கு வாய்கூசுகிறது.

மது விளம்பரத்திற்க்கு பெண்களின் அறைகுறை ஆடை படங்கள், வருடம் பிறந்ததும் காலண்ட்ரில் குளிக்கும் பெண்களின் அழகு பிம்பங்கள், டூ பீசில் உலக அழகிப் போட்டிகள், (இந்த மிஸ் உலகம், மிஸ் பிரபஞ்சம், மிஸஸ் உலகம்,. மிஸ் நாடு, மிஸ் மாநகரம், மிஸ் சிட்டி, மிஸ் ஜட்டி என்று போட்டிகளின் செலவுத் தொகையைக் கண்டால் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா... கண்ணைக் கட்டுதே ; உலகில் சோற்றுப்பஞ்சம்... கண்ணிருந்தால் பிரபஞ்சமே அழும்)

///பெண் கொடுமைகளை நினைத்தாலே (என்னைப் போன்ற) ஆண்களுக்கு தாமும் இப்படி நடத்தாமல் நல்லவிதமாக சுதந்திரமாக நடத்தவேண்டும் என்ற எண்ணம் வரும்.////

அப்படியா, மிக்க சந்தோஷம், உன் எண்ணம் நிறைவேற என் வாழ்த்துக்கள். உனக்கு கருணை மனசு என்று மன்றத்துக்கே தெரியுமே!!!

என் அனுபவத்தில் இன்றைய ஆண்களில் பலர் பெண்களை நன்கு பேணி காக்கின்றனர். பாசமழையைக் கொட்டி தங்களின் அழகிய உள்ளத்தில் ‘பெண்ணடிமையில்லை’ என்பதை பரைசாற்றுகின்றனர். துணிமணியெல்லாம் துவைத்து கொடுத்து (நன்றி:மொக்கையண்ணா), சமையல் செய்து கொடுத்து (நன்றி:நல்லவாத்தியார்) உடல் சுகமில்லாத நேரத்தில் காலெல்லாம் பிடித்து விட்டு (நன்றி: ) நாங்களும் செய்வொம்லே என்று அனைத்தையும் பகிர்ந்து வாழ்கின்றனர், பல வீடுகளில் பெண்கள்தான் உள்ளூர் எசமானிகளாக உலவுகின்றனர். (நன்றி; ராஜா அண்ணா) அன்பும் பாசமும் நிறைந்த அழகிய குடும்பமாக வாழ்கின்றனர். ஒரு சில ஆண்கள் உண்மையிலே பெண்களை அளவிற்க்கு அதிகமாகவே நேசித்து, மதித்து, அவளுக்கு சுதந்திரத்தை அள்ளி வழங்கி அமைதியாக வாழ்கின்றனர், அதில் சிலர் அன்புக்கு அடிமைபட்டு கிடப்பதையும் நான் கண்டுள்ளேன், இது குறைந்த சதவீதமே!!!

///சரி இப்போ உங்களுக்கு இரு கேள்விகள்.///

அப்படியா, மிக்க நன்றி.

///1. நீங்கள் பெண்ணாகப் பிறக்காமல் ஆணாகப் பிறந்திருந்தால் என்னென்ன செய்திருக்கமுடியும்? ////

முதல் வேலையாக ‘தேவர் மகன்’ போல நல்ல அடர்த்தியாக மிசையை வளர்த்து வைத்துக்கொண்டு, வெள்ளை நீலக் கோடு போட்ட ஒரு ஆண்டிப்பட்டி டவுசரை மாட்டிகிட்டு, வேட்டிய பாதியா மடிச்சு கட்டிகினு, ஒரு மொட்டக்கை பனியன போட்டுகிட்டு, ஒரு ஹோண்டா பைக் வாங்கி அதுலே உக்காந்துகிட்டு, 120’ல் ரோட்டில் சும்மா பறந்து பறந்து ஜாலியா விசிலடிச்சிகிட்டு, வெட்டியா ஊரை சுத்தோ சுத்துனு சுத்திட்டு கடைசியா பஞ்சாயத்து தலைவரோட ஒரே பொண்ணை கூட்டிகிட்டு ஓடி போயிருப்பேன்னு தானே நினைச்சே!! அதான் இல்லை.

ஆதவா!! அதே சூழ்நிலையில் வளந்த என் சொந்தத்திலும் பெண்ணடிமைத்தனத்தை சிலர் இலைமறைகாய் போல் செய்கின்றனர். இதை பார்க்க பார்க்க, கேட்க கேட்க எனக்கு ரத்தம் சூடாகும். அதனாலே நான் பலசமயம் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் ஒதுங்கியே உள்ளேன். இந்த பெண்ணடிமைத்தனம் முதலில் வீட்டில்தான் ஆரம்பிக்கிறது, முக்கியமாக கணவன் மனைவி உறவில் பின் அப்பா மகள் உறவில்.. கணவனுக்கும் அப்பாக்களுக்கும் இது அடிமைத்தனம் என்று தெரியாது அதான் பிரச்சனையே!! பின் இதை பார்க்கும் ஆண் பிள்ளைகளுக்கு பெண் என்றுமே அடிமை என்பதுபோன்ற ஒரு உணர்வு அப்பொழுதே துளிர்விடும். அப்பாக்களோ பிள்ளைகளை நன்கு வளர்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலே அறியாமல் செய்கின்றனர். பல கணவர்களிடம் கேட்டு நான் அறிந்த ஒரு விசயம், பெண்ணை ஏன் அடிமை போல் நடத்துகிறார்கள் என்றால் முதல் காரணம் மற்ற ஆண்களின் மத்தியில் இவர்களுக்கு வீரமான குடும்பத் தலைவன், வீட்டில் இவர் வச்சதுதான் சட்டம், கணவனுக்கு அடங்கிய மனைவி என்று நல்ல மரியாதைப் பட்டங்கள் கிடைக்குமாம். இது (வெள்ளை கருப்பு மக்கள்) வெஸ்டர்ன் கலாச்சாரத்திலும் இருக்கிறது.. ஆப்பிரிக்கா நாடுகளில் அதிகமாம். சீன, ஜப்பான், மலேசியா என பல கலாச்சாரத்தில் இப்படித்தான். அடப்பாவமே’. அதற்காக பெண்ணை அடிமைப்படுத்துவதா!!

நான் ஆணாக பிறந்திருந்தால் இதே உணர்வுகள் வருமா என்று எனக்குத் தெரியாது. இருப்பினும் ஒருவனின் மனம் அவன் வளர்க்கப்படும் சுற்றுச்சூழலையொட்டியும் எங்கு எப்படி வளர்க்கப்படுகிறான் என்பதையொட்டியும் சார்ந்தே அமையும். தற்பொழுது நான் வளர்ந்த உறவுகளுடன் இதைப் போலவே ஒரு ஆண்மகனாக வளர்ந்திருந்தால் ஒவியாவைப் போலவே எண்ணியிருக்கலாம். அதாவது பெண்களை/ஆணகள் இருவரையும் எப்பொழுதும் மதிக்கவேண்டும், (பெண்களின்) அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து பண்பாக நடத்த வேண்டும், அவளும் நம்மைப்போல் ஒரு சகா உயிருள்ள பொருளே!! என்ன வேறுபாடு? பாலுருப்புகள் மட்டுமே!! மற்ற விசயங்களில் சரிக்குசமமாக இருக்கும் ஒரு ஜீவனை எப்படி அடிமைபடுத்த முடியும்??!!

இது சரி இது தவறு என்று அவரவர் சிந்தனையினுள் தானே உதிக்க வேண்டும் ஆதவா... நல்லது கெட்டதை யோசிக்கும் சிந்தனைத்திறன் நம்மிடமிருந்தானே வருகிறது…. ம்ஹூம் ஒருவேளை இது முடியவில்லையென்றால் நல்ல நெறிகளைக் கற்று அறிந்தும், பிறர்கூற கேட்டும், தானே உணர்ந்து, தன் தவறை திருத்தியும் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். நான் பெண்ணடிமையாக மட்டுமல்ல; ஆணடிமையாகவும் இருக்கக்கூடாது என்று எண்ணியிருக்கலாம்..

//2. ஆணாகப் பிறப்பதை விரும்புகிறீர்களா? (beyonce இன் If I Were A Boy- என்ற பாடலைக் கேட்டதிலிருந்து இக்கேள்வியை உங்களிடம் [மட்டும்] கேட்கவேண்டும் என்று நினைத்தேன்.. வாய்ப்பிருந்தால் அப்பாடலைக் கேட்கவும்)//////

அஹ்ஹஹஹ் நல்ல கேள்வி.

அந்த பாடலில் ஒரு உண்மையை நான் கண்டேன், எந்த நாட்டில் பிறந்தாலும் சரி, எந்த மதத்தைப் பின் பற்றினாலும் சரி, எந்த கலாச்சாரத்தில் வளர்ந்தாலும் சரி, ஏதோ ஒரு வகையில் பல ஆண்களால் பல பெண்கள் எப்பொழுதுமே காயப்படுத்தப் படுகின்றனர், அழவைக்கின்றனர்.

அய்யோ ஏன்டா பெண்ணாகப் பிறந்தேன் என்று சில சமயம் சலித்துக் கொண்டாலும், ஆணாகப் பிறக்க வேண்டும் என்றுமே ஆசைப்பட்டதில்லை, காரணம் நான் மனிதர்களை ஆண் பெண் என்று பேதம் பிரித்துப் பார்ப்பதில்லை! ஆண்கள் என்றால் உயர்வான, சிறப்பான, பிறப்பு என்றும் பெண்கள் என்றால் ஆண்களைவிட சற்று தாழ்ந்த பிறப்பு என்றும் எப்பொழுதுமே எனக்குத் தோன்றியதில்லை, ஆண் பெண் இருவருக்குள்ளும் வேற்றுமை எதுவுமில்லை என்பதே என் கருத்து. பாலியல் உறுப்பும், உடல் வலிமையும், மன திடமும் ஆண்களுக்கு அதிகமாக இருக்கலாம் ஆனால் மனிதன் என்பதில் இருவரும் சமமே.

அப்படியே ஆணாகப் பிறக்கும் பட்சத்தில், நன்கு கற்றறிந்த ஒரு அறிவாளியாக திகழவேண்டும் என்பதே என் அவா, அறிவுச்சுடர் இளசு அல்லது சிந்தனைச் செம்மல் தாமரை அண்ணா போல. ஆணாகப் பிறந்தாலும் பெண்களை எந்த விதத்திலும் காயப் படுத்தக்கூடாது என்பதே என் விருப்பம், ஆனால் சில பஜாரி பெண்களுக்கு இப்படித்தான் ஆணாதிக்க கணவன் அமைய வேண்டும் என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

நம் சிந்தனை எழுத்தாளர் லியோமோகன் ஒரு கதையில் சூசகமாக சொல்லிய விசயம் இப்பொழுதும் என் மனதில் அப்படியே இருக்கின்றது ‘எப்படியும் படித்து முடித்துவிட்டு வீட்டில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்குடுக்கும் பெண்களுக்கு எதுக்கு உயர்கல்வி? அந்த சீட்டை ஒரு ஆண்மகனுக்குக் கொடுத்தால் அவனாவது வாழ்வில் முன்னேற உதவியா இருக்குமே என்று’ (சரியாக நினைவில்லை ஆனால் கரு இப்படித்தான் இருந்தது) கதையில் வந்தாலும் பெண்களை ஆண்கள் எப்படியெல்லாம் சுமையாக நினனக்கிறார்கள் கடவுளே என்று அன்று தோன்றியது. (லியோ, கோபம் வேண்டாம், நீங்கள் பெண்ணடிமையை விரும்பாதவர் என்பதும் எனக்குத் தெரியும்.)

உலகில் அதிகமான கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குடி, புகை, சூது, (முதலாளிகள்) விபச்சாரம், போதைப்பொருள், கடத்தல், பெண்களை ஏமாற்றி விற்றல், தீவிரவாதம், மதவெறி, இனவெறி, ஜாதிவெறி, பொய், பித்தலாட்டம், புளுகு பிரச்சாரம், பேராசை, இரண்டு பொண்டாட்டி, ஊருக்கு ஒரு வைப்பாட்டி, பதவி வெறி, முக்கியமாக சுயநலம் என உலகில் கண்டுபிடிக்கப்பட்ட அத்தனை கெட்ட விசயங்களிலும் ஆண்களே அதிகமானதாக இருப்பதால் மீண்டும் பெண்ணாகப் பிறப்பதே மேல் என்பதே என் பேராசை.

///பெண் சுதந்திரம் எந்த அளவு வரையிலும் இருக்கவேண்டும்?///

பெண் சுதந்திரம் என்பது என்னப்பா? யார் பெண்ணுக்குச் சுதந்திரம் கொடுக்க வேண்டும்? ஏன் பெண்ணுக்குச் சுதந்திரம் கொடுக்க வேண்டும்? யாராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி இது. அய்யோ மார்பு துடிக்குதடி கண்ணம்மா என்று அன்று புவி மாந்தர்களுக்கு பாரதி நொந்தது இன்றும் எனக்கு வலிக்கிறது.

ஒரு பெண் அவளுடைய சுதந்திரத்தை எப்பொழுது எந்த ஆணிடம் எங்கே கொடுத்தாள்? இதுவரை எந்த பெண்ணுமே தன் சுதந்திரத்தை எந்த ஆணிடமும் எப்பொழுதும் கொடுக்கவில்லை. ஆண்களாகவே அவளிடமிருந்து அதை வழுக்கட்டாயமாக பறித்துக் கொண்டார்கள். இதுதான் உண்மை. என்றோ பறித்துக்கொண்டு, அன்றே அவளை அடக்கி அடிமையாக்கி ஆண்டார்கள். இன்று விழித்தெழும் பெண்களிடம் எவ்வளவு கொடுக்கலாம் என்று பேரம் பேசுகிறார்கள்!! என்னப்பா நியாயம்.. நகைப்பாகயில்லை?

காட்டில் ஒரு பெண் சிங்கம் உலாவ, தான் விரும்பியதைச் செய்ய என்றாவது ஆண்சிங்கத்திடம் அனுமதி கேட்டதுண்டா? பின் ஏன் ஆறறிவு படைத்த நாம் மட்டும் இப்படி?? பெண்ணை அடிக்கலாமா, பெண்ணுக்கு சுதந்திரம் கொடுக்கலாமா, பெண் சொல் கேட்கலாமா, என்று நமக்குள் கேட்டுக்கொள்கிறோம்?

சரி உலகம் இன்னும் சரிவர மாறாமல் அப்படியே இருப்பதால், உன் கேள்விக்கு பதில் இதோ...

இன்றைய காலகட்டத்தில் பெண் சுதந்திரத்திற்க்கு அளவுகோல் அவசியம் தேவைதான், அளவு இல்லையென்றால் அதே ஆண்களின் மாய வலையில் சிக்கி அவர்கள் கண்மூடித்தனமாக வாழ்வைக் கெடுத்துக்கொள்ளவும் வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு பெண் தன்முழு சுதந்திரத்தை அடைய சில அடிப்படை சுதந்திரங்கள் அவளுக்கு அவசியம் கொடுக்கப்பட வேண்டும். அதில் முக்கியமான ஒன்று கல்வி கற்றலும் கைத்தொழிலும்.

ஏழ்மைக் கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களுக்கும் எப்படியாவது போராடி ஆரம்ப நிலைக் கல்வியாவது அவசியம் கொடுக்க வேண்டும். முக்கியமாக கிராமப் பெண்களுக்கும் எழுத படிக்கத் தெரியவேண்டும். உலகில் படிக்கத்தெரிந்த பெண்களைவிட படிக்கத் தெரியாத பெண்களின் எண்ணிக்கையே அதிகம். இடைநிலை பெண்களுக்கு எதிர்கால திட்டமிருந்தால் பெற்றோர் உதவாவிட்டாலும் அதை தடுக்கக் கூடாது. மேல்நிலை பெண்களுக்குக் கல்வி மற்றும் ஆற்றல் அடிப்படையில் சமுதாயத்தில் அங்கீகாரம் இருக்க வேண்டும். (தற்பொழுது இது அதிகம் புழக்கத்தில் உள்ளது) கல்வியின் வழி வாழ்க்கை கண்கள் திறக்க, பின் நல்லது கெட்டதூ அறிந்து அவர்களுக்கு தேவையான சுதந்திர அளவுகோலை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் பாதிக்கா வண்ணம் அவளின் விருப்பு-வெறுப்புகள் இருக்கிருந்தால் அந்த அளவு சுந்த்திரமே தற்சமயம் அவளுக்கு போதும்.

அதேசமயம் பல பெண்கள் இருக்கும் சுதந்திரத்தை சரிவர பயன்படுத்தாமல் சுதந்திரம் என்ற பேரில், கும்பத்திற்க்கும், சமுகத்திற்க்கும் செய்யும் அட்டூழியங்களை பேச ஆரம்பித்தால் ஓய்யாது...

///அல்லது வரம்பில்லாமல் (ஆண்களைப் போன்று) இருக்கவேண்டுமா?///

சுதந்திரம் ஆண்களைபோல் இருக்க வேண்டும் என்றும் அவசியமில்லை, அதே சமயம் எங்கு சுதந்திரம் அவசியமோ அங்கு புத்திசாலியாக அதை கேட்டு, அல்லது போராடி பெற்று பயன்படுத்தவேண்டும். ஆண்கள் இவர்களை அடக்கி ஒடுக்கி ஆளாமல் தேவையறிந்து விட்டுக்கொடுப்பதினால் பெண் வரம்பு மீர அவசியமில்லை.

ஆண்களின் ‘கிரைம்ரேட்’ இன்று உலகில் பல பகுதிகளில் அதிகரித்துகொண்டே செல்கையில் பெண்கள் தனக்கும் சுதந்திரம் உண்டு என்று சிந்திக்காமல் ஒளி கண்ட விட்டில் பூச்சிபோல் அபாயம் அறியாமல் அதைத் தவறாகப் பயன் படுத்தினால் நட்டம் இவர்களுக்கே!! இந்த மாதிரியான சூழ்நிலையில் ஆண்கள் அவர்களுக்கு நல்லது கெட்டதைப் புரியவைக்க அன்பை ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் அடிமைத்தனத்தை அல்ல.

இன்றைய காலத்திற்க்கேற்ப்ப சுதந்திரம், வரம்புகளுக்குள் இருப்பதே சிறப்பு. அவசியமும் கூட. இல்லை என்றால் பெண்மைக்கென்று உள்ள அழகும், குணாதிசயங்களும் இந்த முழு சுதந்திரம் அவாளிடமிருந்து அவளறியாமலே பறித்துவிடும்.

எங்கும், எவரும், எப்பொழுதாகினூம் 'கலாச்சாரம், சம்பிரதாயம், கட்டளை' என்ற பெயரில் பெண்ணை அடிமையை பயன்படுத்தினால் அவர்கள் அனைவருக்கும் என் கன்டனங்கள்.

நன்றி வணக்கம்.

- ஓவியா
பாரதி காணா புதுமைப்பெண். ;)

************************************************************************************************

ஒரு விசயம், நான் எந்த ஒரு ஆணுக்கும் எதிரியல்ல. :) என் பதிவில் நான் ஒட்டு மொத்த ஆண்களையும் குறிவைத்து எழுதவில்லை.
இப்படிதான் பல ஆண்கள் பெண்னடிமைக்கு துணை புரிகின்றனர் என்று மட்டுமே எழுதினேன்.

சொல்லப் போனால் என் சொந்தம், பந்தம், ஆசான், உற்றார், உறவினர், நண்பர்கள் என என்னை
பாராட்டி சீராட்டி மகிழ்வித்த பெருமையும் என் காயங்களுக்கு மருந்திட்டவர்களும் ஆண்களே என்று சொல்லலாம். ;)

ஓவியா என்ற இந்த வாசச்செடிக்கு நீர் விட்டு வெற்றித்திருமகளாய் வளர்த்த பெருமை எப்பொழுதும் ஆண் சமூகத்திற்க்கே சேரும்.

நன்றி.

ராஜா
05-12-2008, 11:19 AM
பாசமலரின் பதிலைப் படிக்கும்போது,

நான் முதன்முதல் மன்றம் வந்தபோது ஓவியாவின் கையெழுத்தாக இருந்த சொற்றொடர் நினைவுக்கு வந்தது. (அதையே பதிலின் இறுதிப்பகுதியில் ஓவியா இட்டிருக்கிறார்..!)

வீட்டுப்பெண்களின் மீது உண்மையான பாசம் வைத்திருப்போர் பட்டியலில் என் பெயரையும் இணைத்திருப்பதற்கு நன்றி. ( கால் கை பிடிக்கும் அன்பரின் பெயரை திருத்தியிருக்க வேண்டாம்.. அச்செய்கையில் தவறேதுமில்லை.)

நெடிய பதிலில் பெண்ணடிமை, பெண்ணுரிமை, அவை செயல்படுத்தப்படும் விதம் ஆகியவற்றை பிரச்சார நெடியின்றி அழகாக விவரித்திருக்கிறார்.

அம்மா ஓவி.. இவ்வளவு அழகா சிந்திக்கிறே.. அழகாவும் பதில் சொல்றே.. ஆனா ஏம்மா அடிக்கடி திரி பக்கம் வரமாட்டேங்கறேன்னு கேட்டு குமட்டுல குத்தணும்ன்னு ஒரு ஆசை கிளம்பி ஆட்டோ சத்தம் கேட்டு அமுங்கிட்டுது..!

ஓவியா
05-12-2008, 06:17 PM
அண்ணா,
காதக்கொடுங்க, ஒரு ரகசியம். கலயாணத்திற்க்கு முன்பே படியிலிருந்து விழுந்த பெண்ணின் காலை மாப்பிள்ளை பிடித்து விட்டார் என்றால் ஊரார் என்ன நினைப்பாங்க அதான் மாப்பிள்ளைக்கு :redface::redface:வெட்கமா:redface::redface: இருக்கும்னு விட்டுவிட்டேன் ;)

இங்கு வந்து படிக்க நேரமில்லை அண்ணா. இந்தியாவரும் பொழுது குமட்டுல குத்தி சந்தோசப்படுங்கள்.

கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா.

ராஜா
06-12-2008, 02:20 AM
வேற யாரும் பதில் சொல்லாம இருக்கீகளாப்பு..?

சிறுபிள்ளை
06-12-2008, 04:40 AM
ஓவியாவின் பதில் அருமையாக உள்ளது. மிகவும் தெளிவாக படம் பிடித்து காட்டி உள்ளார். கருத்துக்கும் பதிலுக்கும் நன்றி ஓவியா

சிவா.ஜி
06-12-2008, 04:54 AM
இதுதான் ஓவியா என்று பறைசாற்றும் பதில். தங்கையை மெச்சுகிறேன். நல்லாயிரும்மா...!!!

ஆதவா
06-12-2008, 05:27 AM
[COLOR="Purple"][B][I]பல பூச்செடிகளைப் பார்க்கும்பொழுது எனக்கு உங்கள் ஞாபகம்தான் வரும். எங்கள் வீட்டில் மல்லிகை, போன்ற வாசமிகுந்த பூச்செடிகளை நட்டு அழகு பார்க்கவேண்டும் என்பது என் ஆசை.. இவற்றை எப்படி நடுவது? அதாவது அதற்கு விதைகள் இருக்கின்றனவா? என்னென்ன பூஞ்செடிகள் நடலாம்?

அனைத்தும் முடிவில் மறைமுகமாக கூறுவது இயற்கையை வெல்ல முடியாது என்பதுதான்.

மிக்க நன்றி முகிலன். என்ன எதிர்பார்த்தேனோ அது அப்படியே கிடைத்தது குறித்து மகிழ்ச்சி. இப்போது வீட்டருகே சுவர் எழுப்பும் வேலை நடந்து கொண்டிருப்பதால் பல செடிகளை அகற்றவேண்டியதாகப் போய்விட்டது. மீண்டும் செடிகள் நடும் நேரம் வரும்பொழுது உங்கள் குறிப்புகளை நிச்சயம் பயன்படுத்திக் கொள்வோம்...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், சங்க இலக்கியம், காவியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்பற்று பாடல்கள், திராவிட இலக்கியங்கள், புதுகவிதைகள், நவீன இலக்கியங்கள்.. என்று இலக்கியம் தன் பயனத்தை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது..

சரியான ஒருவரிடம்தான் இக்கேள்வியைக் கேட்டிருக்கிறேன் என்ற பெருமை எனக்கு ஆதி.. சொல்லப்போனால் எனக்கு இலக்கிய ருசியறிந்தது ரொம்பவே கம்மி.. பலமுறை ஏங்கியிருக்கிறேன். ஒருமுறை நம் மன்றத்தில் அம்மா என்று அழைக்கப்படும் JPL அவர்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது அவர்கள் சொன்னபோதுதான் நாம் புதிதாக ஏதாவது எழுதியிருக்கிறோமா என்று சிந்திக்கவே வைத்தது....

சங்கத்தில் பாடாத பாடல், உதிக்காத கற்பனை இன்னும் என்னென்னவெல்லாம் மண்ணுள் புதைந்தனவோ...???

பதிலுக்கு நன்றி ஆதி..

பாரதி வேண்டுமென கேட்பேன்.

எத்தனையோ சொல்ல நினத்து அற்பாயுளில் நம்மைவிட்டு நீங்கிவிட்ட பாரதி சொல்ல நினைத்த அத்தனையையும் சொல்ல வேண்டும். அன்றைய நிலைக்கே ஆத்திரப்பட்டவன், இன்றைய நிலைக்கு எரிமலையாவான். அவன் ரௌத்திரம் நன்மை பயக்கும். இன்றைய இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டி கிடைப்பான். புதுக்கவிதைக்கு தாத்தா என்று சொல்லிக் கொள்பவர்களெல்லாம் இந்த கொள்ளுத்தாத்தாவைப் பார்த்து சொல்லிக்கொள்ளாமல் ஓடுவார்கள். முக்கியமாய் தமிழ்த்தாய் அகமகிழ்வாள். இடையில் இழந்த என் புத்திரனை மீண்டும் அடைந்தேனென முகம் மலர்வாள்.

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து ஆதவா. எனக்கு கம்பன், வள்ளுவன், இளங்கோவை விட பாரதியைத்தான் அதிகம் தெரியும்.

என்ன நினைத்தேனோ அதைச் சொல்லியிருப்பது கண்டு அகம் மகிழ்கிறேன் அண்ணா.

உங்கள் திரில் அனுபவமும் கண்ணுல் நிழலாடியது. மற்ற புலவர்களைக்
காட்டிலும் பாரதி புலமை நிறைந்தவனாக இருப்பான் என்பது என் கருத்து..

அதீத புலமை மிக்கவர்களை மட்டும் சுயநலம் மிக்க இறைவன் உடனே எடுத்துக் கொள்கிறான்...

ஆதவா
06-12-2008, 05:33 AM
முதல் வேலையாக ‘தேவர் மகன்’ போல நல்ல அடர்த்தியாக மிசையை வளர்த்து வைத்துக்கொண்டு, வெள்ளை நீலக் கோடு போட்ட ஒரு ஆண்டிப்பட்டி டவுசரை மாட்டிகிட்டு, வேட்டிய பாதியா மடிச்சு கட்டிகினு, ஒரு மொட்டக்கை பனியன போட்டுகிட்டு, ஒரு ஹோண்டா பைக் வாங்கி அதுலே உக்காந்துகிட்டு, 120’ல் ரோட்டில் சும்மா பறந்து பறந்து ஜாலியா விசிலடிச்சிகிட்டு, வெட்டியா ஊரை சுத்தோ சுத்துனு சுத்திட்டு கடைசியா பஞ்சாயத்து தலைவரோட ஒரே பொண்ணை கூட்டிகிட்டு ஓடி போயிருப்பேன்னு தானே நினைச்சே!! அதான் இல்லை.

எங்கும், எவரும், எப்பொழுதாகினூம் 'கலாச்சாரம், சம்பிரதாயம், கட்டளை' என்ற பெயரில் பெண்ணை அடிமையை பயன்படுத்தினால் அவர்கள் அனைவருக்கும் என் கன்டனங்கள்.

நன்றி வணக்கம்.

- ஓவியா
பாரதி காணா புதுமைப்பெண். ;)

ஒரு விசயம், நான் எந்த ஒரு ஆணுக்கும் எதிரியல்ல. :) என் பதிவில் நான் ஒட்டு மொத்த ஆண்களையும் குறிவைத்து எழுதவில்லை.
இப்படிதான் பல ஆண்கள் பெண்னடிமைக்கு துணை புரிகின்றனர் என்று மட்டுமே எழுதினேன்.

சொல்லப் போனால் என் சொந்தம், பந்தம், ஆசான், உற்றார், உறவினர், நண்பர்கள் என என்னை
பாராட்டி சீராட்டி மகிழ்வித்த பெருமையும் என் காயங்களுக்கு மருந்திட்டவர்களும் ஆண்களே என்று சொல்லலாம். ;)

ஓவியா என்ற இந்த வாசச்செடிக்கு நீர் விட்டு வெற்றித்திருமகளாய் வளர்த்த பெருமை எப்பொழுதும் ஆண் சமூகத்திற்க்கே சேரும்.

நன்றி.

அக்கா// லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த உங்கள் பதிவைப் பார்த்து மிரண்டு போய்விட்டேன்.. பிஸியான சூழ்நிலையிலும் எனக்காக மிக நீண்ட விரிவான பதிலை டைப் அடித்து கொடுத்தமைக்கு நன்றி நன்றி நன்றி...

கிட்டத்தட்ட நான் கேட்டவர்களிடம் கேட்டது கிடைத்தது.. அதைப் போன்றே உங்களிடமும்..

பெண்கள் ஆரம்பம் முதல் என்னைச் சூழ்ந்து இருக்கிறார்கள். பெண் வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் நான்... எத்தகைய பெண்ணுக்குப் பலியாகப் போகிறேன் (:D) எதிர்பார்ப்புகள் என்ன? தோல்விகள் என்ன? எல்லாமே தெரிந்துகொண்டேன்..

உங்கள் கருத்துக்களுக்கு மாற்று கருத்தே இல்லை... வணங்குகிறேன்..

அன்புடன்
ஆதவன்..

ராஜா
06-12-2008, 11:38 AM
சிறப்பானதொரு கேள்வித் தொகுப்பை நல்கி, திரியை பெருமைப்படுத்திய தம்பி மூர்த்திக்கும், பதிலளித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி.. நன்றி..!

Keelai Naadaan
06-12-2008, 04:49 PM
மூர்த்தி அவர்களின் கேள்விகளும் நண்பர்களின் பதிலும்,,,
மயங்க வைக்கின்றன.
மனதை கசிய வைக்கின்றன.
யோசிக்க வைக்கின்றன
பிரமிக்க வைக்கின்றன
ரசிக்க வைக்கின்றன
கலங்க வைக்கின்றன
வியக்க வைக்கின்றன

நிரன்
06-12-2008, 09:30 PM
எல மக்கா உங்க உப்புடியும் ஒன்டு நடக்குது..:eek:
இன்று நான் பல கேள்விகளையும் பலரின் வித்தியாசமான பதில்களையும் கண்டு களித்தேன். இது போன்று ஒரு திரியை
தந்த ராஜா அண்ணாவுக்கு என் நன்றிகளும் பாராட்டுதலும். போகும் வழியில் பொற்காசு கிடந்ததுபோல். நான் மன்றத்தை வலம் வந்த போது ஆ!பத்தில் மாட்டி விட்டேன். :nature-smiley-006: (இனி உதுக்கு மறக்காம வரணும்..... யாள்றாதான் போடுவன் என்ன யாரவது கேள்வி என்டு கேட்டால் அளுதுடுவன் )

சூரியன்
07-12-2008, 01:42 PM
ஓவியா அக்காவின் பதில்கள் அருமை.
அடுத்த கேள்வி யாருடையது.
அமரன் அண்ணா?

ஓவியா
08-12-2008, 10:57 PM
ஓவியாவின் பதில் அருமையாக உள்ளது. மிகவும் தெளிவாக படம் பிடித்து காட்டி உள்ளார். கருத்துக்கும் பதிலுக்கும் நன்றி ஓவியா

மிக்க நன்றி சிறுபிள்ளை.

கொஞ்சம் அதிகமாகவே எழுதிவிட்டேன் போலிருக்கு, (பரிட்சைக்கு மார்க்கவாங்க எழுதி எழுதியா இப்படி ஆகிவிட்டேன்)

நேரமிருந்தால் இன்னும் ஆழமாக எழுதலாம். :)

********************************************************************************************************

இதுதான் ஓவியா என்று பறைசாற்றும் பதில். தங்கையை மெச்சுகிறேன். நல்லாயிரும்மா...!!!

மிக்க நன்றி அண்ணா.

பெரும்பாலும் நான் முகமுடி அணிவது வேகு குறைவு. இதான் நான் அப்படினு 'நச்'சுனு சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருப்பேன். :)

ஓவியா
08-12-2008, 11:06 PM
அக்கா// லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த உங்கள் பதிவைப் பார்த்து மிரண்டு போய்விட்டேன்.. பிஸியான சூழ்நிலையிலும் எனக்காக மிக நீண்ட விரிவான பதிலை டைப் அடித்து கொடுத்தமைக்கு நன்றி நன்றி நன்றி...

கிட்டத்தட்ட நான் கேட்டவர்களிடம் கேட்டது கிடைத்தது.. அதைப் போன்றே உங்களிடமும்..

பெண்கள் ஆரம்பம் முதல் என்னைச் சூழ்ந்து இருக்கிறார்கள். பெண் வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் நான்... எத்தகைய பெண்ணுக்குப் பலியாகப் போகிறேன் (:D) எதிர்பார்ப்புகள் என்ன? தோல்விகள் என்ன? எல்லாமே தெரிந்துகொண்டேன்..

உங்கள் கருத்துக்களுக்கு மாற்று கருத்தே இல்லை... வணங்குகிறேன்..

அன்புடன்
ஆதவன்..

இளகிய மனம் படைத்த நீ கண்டிப்ப ஒரு பலியாடுதான் :D:D ச்ச்சும்மா ச்சும்மா ;).

நான் கருத்து பதிந்தபின் சிலர் வந்து படித்து விட்டு ஒன்ருமே சொல்லாமல் சென்று விட்டார்கள், என்னக்குள் ஒரு ஓசை எழுந்து 'ஓவி நீ ஆண்களுக்கு எதிரிப்போல்' பதிவு போட்டு விட்டாயோ என்று கேட்டது.... அதான் :mini023:

என் கருத்து உண்மையாகவே சிறப்பா இருக்கா!!!! பயந்துகொண்டுதான் பதித்தேன், எனக்கே யாராவது ஆட்டோ அனுப்பினால் :lachen001:

நன்றி ஆதவா.

ஓவியா அக்காவின் பதில்கள் அருமை.
அடுத்த கேள்வி யாருடையது.
அமரன் அண்ணா?

அருமையாவா இருக்கு!! எனக்கு நம்பிக்கையில்லை, காரணம் பலர் விமர்சிக்கவில்லையே!!!! 'சம் தின்க் ரோங்' :redface:

***********************************************************************************************

மூர்த்தி,
கோவம் வேண்டாம், நான் ரொம்பவே பிசி, இன்னும் 15 நாளைக்கு மன்றமே வரமுடியாதுனு நினைக்கிறேன். நாளைக்கு உன் கேள்விக்கு பதில் அவசியம் வரும். நன்றிப்பா.

தாம்திப்பதற்க்கு மன்னிக்கவும்.

ரங்கராஜன்
10-12-2008, 06:21 AM
ராஜா அண்ணா
அடுத்த கேள்வி தொகுப்பை ஆரம்பிக்கலாமே?

ஓவியா
10-12-2008, 12:28 PM
////நீங்கள் யாராவது வாயை திறந்தாலே வாயிலே போடுகிற டைப்பு,///

அப்படியா!! சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி, இனித் திருத்திக்கொள்ள முயல்கிறேன். சும்மா யாரையும் குற்றம் சொல்ல மாட்டேன், தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுவேன்.

///எதையும் நெத்தி பொட்டில் அடிப்பது போல சொல்வது உங்க ஸ்டைல்.///

ஆமாம். முதுகில் குத்துவதைவிட நெற்றியில் அடிப்பது வீரனுக்கு அழகு. சரி என்றால் சரி பிழை என்றால் பிழை. அதற்காக நான் சொல்வது எல்லாம் சரி என்றும் ஆகாதுலே. எப்பொழுதுமே முடிந்தவரை நேருக்கு நேராக நல்லது கெட்டதைச் சொல்ல முற்படுவேன், ஆனால் யாரையும் அவமதிக்க மாட்டேன். நிறைகளை முன் பாராட்டி, குறைகளை பின் தனிமடலிலே சொல்ல முற்படுவேன், பலமுறை சொல்லியும் கேட்காமல் இருப்பவர்களுக்கு மட்டுமே நேராகவே பின்னூட்டத்தில் தவறைச் சொல்லிவிடுவேன். யாரையும் போக விட்டு பின் புறம் சொல்ல மாட்டேன்.

ஆனால் பாருங்கள், இந்த நெத்தி பொட்டில் அடிப்பது போல் பேசுவது எல்லா காரியத்திற்கும் உதவாது. யாரையாவது நம்பி, அளவுக்கு அதிகமா பாசம் வைத்தால், அவர்கள் வேசம் போட்டது, போடுவதும் கூட என் கண்களுக்கு தெரியாது. தெரிந்தபின், பாசப் போரில் மட்டும் என்னால் அடித்தேன் புடித்தேன் என்று எதையும் நேராக சொல்ல முடியாது. அவர்களை விட்டு விலகவும் முடியாது உடனே மறக்கவும் முடியாது. மனதிற்க்குள் வைத்து புழுங்கி புழுங்கியே தவிப்பேன். நானும் சராசரி பெண்தான். நூறு உறவுகள் இருக்கும் அவர்களுக்கு நம் உணர்வுகள் எங்கு புரியும்?. அவர்களைப்போல் கல் மனதாகவும் கறையாமலும் இருக்க முடியாது, மனதில் வைத்து நிதம் அழமட்டுமே முடியும்.

///உங்களுக்கு பிடித்து இருந்தால் மனதார பாராட்டுறீங்க. ///

ஆமாம் தக்க தருணத்தில் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று நான் நினைத்தால் யோசிக்காமல் பாராட்டி விடுவேன். அது யாராக இருந்தாலும் சரி. எதிரியாக இருந்தாலும் சரி நண்பனாக இருந்தாலும் சரி.

ஒருவரின் உழைப்பை அவசியம் பாராட்டியே ஆகவேண்டும் என்பது என் பாலிசி. நான் முதலில் மன்றம் வந்த பொழுது முதல் 999 பதிவுகளில், ஒரு திரி மட்டும்தான் நான் திறந்த திரி. 999 தில் பாதிக்கு மேல் நான் மற்றவரின் திரிகளை பாராட்டி எழுதிய விமர்சனங்களும், லூட்டியடித்த பின்னூட்டங்களும்தான். இன்று!!!! மன்றம் எனக்கு, கண்ணிழந்த மனிதன் முன் ஓவியம் வைத்த கதையாகி விட்டது!!!

///எந்த வித ஐஸும் இல்லாமல் நீங்கள் பாராட்டும் பாணி எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு ///

அப்படியா!! மிக்க நன்றி, ஐஸ் வைக்கும் பழக்கம் எனக்கு எப்பொழுதுமே இல்லைபா. முற்றிலும் செய்யமாட்டேன் என்றால் அது பொய்யுரைக்கிறேன் என்றாகிவிடும்.. வெகு சில சமயம் அதுவும் என் ஆசிரியர்களுக்கும், மேலதிகாரிகளுக்கும் மட்டுமே வேண்டிய பொழுது முகஸ்துதி பாடுவேன். இருப்பினும் தமிழ்மன்றத்தில் பாராட்டில் பேதம் பார்ப்பது மிகப்பெரிய தவறு.

சிலர், எந்த திரி எடுத்தாலும் தனக்கு பிடித்தவரை அதில் இழுத்து ஆஹா, ஓஹோ’னு பாராட்டுவதும், விமர்சிப்பதும் அவர்களுக்கு மட்டும் வாழ்த்தை அன்பை பிழிந்து போடுவதும், இன்னொருவருக்கு ஏதோ கடமைக்கு இரண்டு வரியில் போட்டு செல்வது கூட என் கண்களுக்கு, அவர்கள் உண்மையிலே பேதம் பார்க்கிறார்கள் என்பது போல் தெரிகிறது, :redface::redface: இனி நானும் ஐஸ் வைக்க கற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.

///எல்லாரும் ஒண்ணு சொல்றாங்களேனு நீங்க அதை அமோதிப்பதும் இல்லை///

அதே அதே சபாபதி. ஆமாம் சாமி போடுவது, கூட்டத்தில் கோவிந்தா போடுவது, ஜால்றா அடிப்பது இதெல்லாம் என் பழக்க வழக்கத்தில் மிக மிக குறைவு. பின்னே, நமக்குனு ஒரு மூளையை கடவுள் கொடுத்துள்ளாரே!! அதைப் பயன்படுத்தி, நன்கு யோசித்து எது சரியோ, எது நியாயமோ, எது நீதியோ, எது நேர்மையோ அதையே ஆமோதிப்பேன், அது சரி/தவறு என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம். என் சிந்தனைக்கு உட்பட்டதையே ஆமோதிப்பேன், ஆனால், சில நேரங்களில் நாம் ஆமோதித்தது தவறாக இருக்கும் பட்சத்தில், சரியானதை ஏற்றுக்கொள்வேன்.

///அதேபோல எல்லாரும் திட்டுறாங்களேன்னு நீங்க திட்டுவதும் இல்லை////

அதேதான். பாராட்ட ஊரே கூட வேண்டும் அப்பொழுதுதான் அவனுக்கு /அவளுக்கு மதிப்பு, மரியாதை, கவுரவம் உண்டாகும். இது ஒருவருக்கு சத்துணவு போல். அதைப்போல் ஊரே திரண்டு திட்டுவது என்பது ஒருவருடைய தவறை சுட்டிக் காட்டுவதைவிட அவருக்கு மனதளவில் பாதிப்பை உண்டாக்கி அவையில் கூனிக்குறுகச் செய்யும் ஒரு செயலே. இது அவருடைய தவறை திருத்த வழி செய்யாது, மாறாக ஒரு வகை தாழ்மை குணத்தை அவரிடம் விதைத்து விடும், பின் அவர்களிடமிருக்கும் நல்ல ஆற்றலை அழித்துவிடும்.

எல்லோரும் திட்டும் பொழுது நான் அரவணைப்பேன், தவறை யாரும் சுட்டிக் காட்டாத பொழுது நான் கொட்டிக் காட்டுவேன். அதுதான் ஓவியா.

///அப்படி இருந்து உங்களை மன்றமே கொண்டாடுது (எனக்கு ஏன்னு தெரியலை),///

இது உண்மையென்றால் எனக்கு மிக்க சந்தோஷம். பலர் என்னிடம் காட்டும் இங்கு எப்பொழுதும் காட்டும் அன்பை கண்டு இது அப்படியே என்றும் இருக்கவேண்டும் என்று என் மனதும் விரும்புகிறது, கடவுளிடமும் வேண்டுகிறேன். யார் யார் உண்மையான அன்பை என்னிடம் காட்டுபவர்கள் என்றும், காட்டாதவர்கள் என்றும் என் நெஞ்சுக்கு நன்கு தெரியும். உண்மையிலே என் நட்பை மனதார ஏற்றிருந்தால் நான் என்ன தவறு செய்தாலும் அவர்கள் ஒருகாலமும் என்னை ஒதுக்கி வைக்க மாட்டார்கள். என்னிடம் பேசாமலும் இருக்கவும் மாட்டார்கள். அப்படி ஒதுக்கினால் அது போலிப் பாசம், எல்லாம் ஒரு வேசம். அதில் உண்மையில்லை. எதோ ஒரு டைம்ஃபாசுக்கு நட்பு கொண்டதாகிவிடும்.

ஆனால் ‘என்னை மன்றமே கொண்டாடுது’ என்பது முற்றிலும் உண்மையில்லை என்று நான் நினக்கிறேன். சுமாராக 1-2 நண்பர்களுக்கு என்னைப் பிடிக்காது, இது எனக்கும் தெரியும் அவர்களுக்கும் தெரியும். :D உலகில் அனைவருக்கும் அனைவரையும் பிடிக்காதே!!! சிலர் மரத்திற்க்கு மரம் தாவும் குரங்குபோல் நட்புகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். புதிதாக ஒன்று வர பழையதை மறந்து விடுவார்கள். மற்றவரின் சொல்ப்பேச்சு கேட்டு முடிவெடுக்கும் குணம் உள்ளவர்கள், தன் நண்பனை தானே புரிந்துக்கொள்ள முடியாத அளவு ஒரு பிறவிகுணம். ஆனால் காட்டிக் கொள்ள மாட்டார்கள். நாமாக பின்னூட்டங்களையும் அவர்கள் ஓதும் வேதங்களையும் கண்டு புரிந்து கொள்ள வேண்டும்,

ஒருவர் மட்டும் இருக்கார், ஏன்டா மன்றம் வந்தேன் என்று கடந்த ஒன்றரை வருடமாக என்னை நானே அனுதினமும் நொந்து கொள்ள வைக்கும் அளவு இட்டுச்சென்று விட்டார். அன்பாக இருப்பது போலவே எப்பொழுதும் :Dபாவனை:D செய்வார். என்ன செய்ய!! பெண் மனம் எல்லாவற்றையும் நம்பும், ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

அதனால் மன்றமே என்னை கொண்டாடுவதில்லை, ஆனாலும் மன்றம் என்னை கொண்டாடுது :D

////இந்த அதிரடினாலே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பெற்றது என்ன?, இழந்தது என்ன?////

அதிரடியா!!! ஹி ஹி ஹி. இல்லைபா நான் நானாகவே எப்பொழுதும் இருக்கிறேன். பெற்றது என்றால் அதிக பாராட்டும் அதிக கண்ணீரும்.

நல்ல விசயங்களுக்குத் துணிச்சலாக பின்னூட்டம் போடும் பொழுது பாராட்டு மாலைகளுடன், நல்ல உறவும் நட்பும் கிடைக்கப் பெற்றேன். என் நல்ல நட்பு வட்டத்தில் பல சான்றோர்கள் இருக்கின்றனர்,; பென்சு, முகிலன், லியோ, மன்மி, கவி, மீரா, என இன்னும் சிலர்…. என் தைரியத்தைப் பாராட்டி கண்ணீரைத் துடைக்கும் அன்பான ‘கைகள்’ என் அண்ணன்கள் இருக்கின்றனர் தாமரை அண்ணா, பாரதி அண்ணா, மனோஜி அண்ணா, சிவாஜி அண்ணா, இதயம் அண்ணா, ராஜா அண்ணா, ஆரேன் அண்ணா, உள்ளதை உள்ளபடி சொல்வதினால் என் பேச்சை கேட்கும் பல நல்ல தம்பிகள் தங்கைகள் இருக்கின்றனர் ஆதவா, பிரதீப், ஷி, மதி, அமரன், அன்பு, மனோஜ், அக்னி, விராடா, சூரியன், ஆதி, நீங்க99, மலர், பூ.............ர்ணிமா என இன்னும் பலர்.

எனக்கு நானே பெற்றது தன்னம்பிக்கை, நான் எடுக்கும் முடிவு பல சமயம் சரியானதாகவே இருக்கும், யாருக்கும் தீங்காக இருக்காது, அதனால் நான் யாருக்கும் பயந்தோ அல்லது கட்டுப்பட்டோ இல்லாமல் சுதந்திரமாக உலாவுவது. முக்கியமாக முகமூடி இல்லாமல் நேர்மையாக இருப்பது.

முன்பு எனக்கு ஆண்களின் உணர்வுகளைப் பற்றி சரியாகத் தெரியாது, என்ன சொன்னாலும் உடனே நம்பி விடுவேன், இங்கு அதிகமான ஆண்கள் உலாவும் இடமாக இருப்பதால், மன்றம் வந்த பொழுதும் அப்படிதான் சிலரை நம்பினேன். பின் சில ஆண்களின் எழுத்துக்களை படித்து, விமர்சித்து, வாதிடுவதால் பல ஆண்களுக்கு பல முகம் உண்டு, என்பதை அறிந்து, ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் பெற்றுள்ளேன்.

சிலசமயம் அதிகமானோர் ஒரு விசயத்தை ஆதரிக்கும் பொழுது நான் எதிர்த்தால் ‘பிரச்சனை பண்ணறேன், கூட்டம் சேர்த்து சண்டை போடறேன், என் மகுடிக்கு சிலர் ஆடுகிறார்கள், எனக்கு பல ஜால்றாக்கள் இங்கு உள்ளனர் என்றும்….. அப்படி இப்படி என்று அவச்சொல்லுக்கும் பலமுறை ஆளாகியுள்ளேன். நான் அப்படியில்லை என்று நன்கு தெரிந்தவர்கள், உயரிய இடத்திலுருப்பவர்கள் நம்மைப் புரிந்தவர்கள் சிலர் இதையெல்லாம் கண்டு, படித்து, காணததுபோல் கண்னை முட்டிக்கொண்டனர். அதுதான் எனக்கு வேதனையே!! எனக்குப் பச்சோந்தி போல் பல வேசங்கள் போடத் தெரியாது, பாசம் இருப்பதுபோல் நடிக்கவும் தெரியாது. அதனால் இதெல்லாம் கேட்டு சில சமயம் அழுததுண்டு, பல சமயம் இவர்களை நினைத்து சிரித்ததுமுண்டு.

இன்னும் ஒரு பரிசு பெற்றேன்…அடேங்கப்பா!!! அது சொல்ல முடியாத ரகசியம்.

வந்த புதிதில் நான் மிகவும், மென்மையான குணத்துடன் இருந்தேன் என்பதை என் முந்தய பதிவுகள் சொல்லும். பென்சுக்கு பழைய ஓவியாதான் ரொம்பப் பிடிக்கும், பென்சு, மன்றம்தான் என்னை மாத்திடுச்சி!!

சொல்லப்போனால் இங்கு அதிகமாக கண்ணீரைதான் இழந்துள்ளேன். சில புகழ் மாலைகள். பல வசைமாலைகள்.

இதையெல்லாம் மீறி கடந்த ஒன்றரை வருடமாக ஒரு அன்பு போராட்டம் வேறு, எப்படா இந்த மாயைக் குழியிலிருந்து வெளியில் வருவேன் என்பது போல் நிம்மதியிழந்து தவிக்கிறேன், கண்டிப்பாக உதவ மாட்டார் என்று தெரிந்தும் உதவிக்கு கடவுளிடம் வேண்டுகிறேன்.

ஒருவருக்கு மட்டும் வாயளவில், ;) பலருக்கு மனதளவில் :):) எப்பொழுதும் நான் மன்றத்துச் செல்ல குழந்தைதான். :sport-smiley-002::medium-smiley-080::sport-smiley-002:

நன்றி.

அன்புடன்
மன்றத்துச் செல்லம்
- ஓவியா

***************************************************************************************************************

என் மனதில் உள்ளதை அப்படியே எழுதினேன், யாருக்கும் மணம் புண்பட்டிருந்தால் நானே பொருப்பு, அவர்கள் என்னை மன்னிக்கவும்.

ஓவியா
10-12-2008, 12:38 PM
என்னை மதித்து, எனக்கும் கேள்விகளை வழங்கிய என் அன்பு தம்பிகள் ஆதவா மற்றும் மூர்த்தி இருவருக்கும் எனது நன்றிகள்.

ஆற்றல் மிகுந்த படைப்பாளிகளின் பட்டியலில் நீங்கள் இருவரும் என்றும் மன்றத்தில் இருப்பீர்கள் என்ப்பதில் துமியளவும் ஐயமில்லை.

நீங்கள் இருவரும் எழுத்துழகில் சாதனைப் பெற்று என்றென்றும் புகழ் மாலைகளுடன் உலாவ எனது வழ்த்துக்கள்.

திரியின் சொந்தகாரர் எங்கள் ராஜா அண்ணாவிற்க்கு என் நன்றிகள்.

மற்ற பங்கேற்ப்பாளர்களே தயவு செய்து என்னை மன்னியுங்கள். உங்கள் பதிவுகளை படித்து கருத்திட எனக்கு நேரம் போதவில்லை. :traurig001:

ரங்கராஜன்
10-12-2008, 01:02 PM
என் மனதில் உள்ளதை அப்படியே எழுதினேன், யாருக்கும் மணம் புண்பட்டிருந்தால் நானே பொருப்பு, அவர்கள் என்னை மன்னிக்கவும்.

நன்றி ஓவியா அவர்களே (அக்காவாக இருந்தாலும் அப்படி அழைப்பது எனக்கே டிரமேட்டிக்காக இருப்பதால், அவர்களே என்று அழைப்பதே உத்தமம் என்று தோன்றுகிறது. அதனால் நீங்கள் என் அக்கா இல்லை என்று ஆகிவிடாது, புரிதலை நாடி)
உங்களின் பதில்களை படித்தேன், உண்மையை சொல்ல வேண்டும் என்றால், முன்பு எனக்கு உங்கள் மீது கொஞ்சம் கோபம் இருந்தது, எனென்றால் "எண்டா இது ஒரு கேள்வி கேட்டு இவ்வளவு நாள் ஆச்சே, பதில் சொல்லுவோம்னு அவங்களுக்கு ஒரு டீசன்சீ வேண்டாம், அப்படி என்ன பிசி இரண்டு வரி வார்த்தைகள் எழுதகூட நேரம் இல்லையாம், இது கொஞ்சம் ஓவர் தான்" என்று என் மனதிற்க்குள் உங்களின் பதிலை படிக்கும் வரை நினைத்து இருந்தேன், ஆனால் படித்த பின் தான் தெரிந்தது, ஏன் நீங்க இவ்வளவு டைம் எடுத்தீர்கள் என்று.

1. உங்களை தவறாக நினைத்ததுக்கு மன்னிக்கவும்.

2. யாரோ ஒருவன் கேட்ட கேள்வி என்று அவமதிக்காமல் அழகாக இவ்வளவு பெரிய, அருமையான பதிலை தந்ததுக்கு நன்றிகள் கோடி.

3. உங்களை இன்னும் கொஞ்சம் களப்பி விட்டால் பல விஷயங்கள் எல்லாம் வெளியே வரும் போல!!!!!!!!!!!!!!!!!!

4. யாரோ ஒருவர் சொன்னது போல நீங்க வித்தியாசமானவர் தான்.

5. திட்டுவதிலும் உங்கள் பாசம் இருக்கதான் செய்யுது, உங்களின் பாசமலர்களுக்கு.

6. வாழ்க்கை உங்களுக்கு பல விஷயத்தை கற்று கொடுத்து இருக்குனு நினைக்கிறேன்.

7. கடைசியாக "மன்றம் ஏன் உங்களை கொண்டாடுதுனு இப்ப புரியுது"

ஆதவா
10-12-2008, 01:29 PM
என்னை மதித்து, எனக்கும் கேள்விகளை வழங்கிய என் அன்பு தம்பிகள் ஆதவா மற்றும் மூர்த்தி இருவருக்கும் எனது நன்றிகள்.

ஆற்றல் மிகுந்த படைப்பாளிகளின் பட்டியலில் நீங்கள் இருவரும் என்றும் மன்றத்தில் இருப்பீர்கள் என்ப்பதில் துமியளவும் ஐயமில்லை.

நீங்கள் இருவரும் எழுத்துழகில் சாதனைப் பெற்று என்றென்றும் புகழ் மாலைகளுடன் உலாவ எனது வழ்த்துக்கள்.

திரியின் சொந்தகாரர் எங்கள் ராஜா அண்ணாவிற்க்கு என் நன்றிகள்.

மற்ற பங்கேற்ப்பாளர்களே தயவு செய்து என்னை மன்னியுங்கள். உங்கள் பதிவுகளை படித்து கருத்திட எனக்கு நேரம் போதவில்லை. :traurig001:

எங்கள் இருவரையும் பாராட்டிய உங்களை என்றென்றும் மறக்க மாட்டேன்....

பென்ஸ் : அதுசரி எங்கடா ஓவயாவுக்கு பதில்?

ஆதவா : ஆவ்........

ஆதவா
10-12-2008, 01:33 PM
http://tamilmantram.com/vb/customavatars/avatar1488_42.gif

ஓவியா
மன்றத்தின் சுடர்
பண்பட்டவர்

அக்கா பிசியா இருக்கிறதால.... அக்கா சார்பில பதில்... (ஹி ஹி.. மன்னிச்சுக்கோங்க அக்கா)

1. உங்களை தவறாக நினைத்ததுக்கு மன்னிக்கவும்.

அப்படியா? நல்லது..

2. யாரோ ஒருவன் கேட்ட கேள்வி என்று அவமதிக்காமல் அழகாக இவ்வளவு பெரிய, அருமையான பதிலை தந்ததுக்கு நன்றிகள் கோடி.

அப்படியா? நல்லது

3. உங்களை இன்னும் கொஞ்சம் களப்பி விட்டால் பல விஷயங்கள் எல்லாம் வெளியே வரும் போல!!!!!!!!!!!!!!!!!!

அப்படியா? நல்லது

4. யாரோ ஒருவர் சொன்னது போல நீங்க வித்தியாசமானவர் தான்.

அப்படியா? நல்லது

5. திட்டுவதிலும் உங்கள் பாசம் இருக்கதான் செய்யுது, உங்களின் பாசமலர்களுக்கு.

அப்படியா? நல்லது

6. வாழ்க்கை உங்களுக்கு பல விஷயத்தை கற்று கொடுத்து இருக்குனு நினைக்கிறேன்.

அப்படியா? அப்படித்தான் என்று நினைக்கிறேன்

7. கடைசியாக "மன்றம் ஏன் உங்களை கொண்டாடுதுனு இப்ப புரியுது"

அப்படியா? நல்லது

__________________
பழைய பறவை ஒன்று பறந்து வந்ததே....
எனது நெஞ்சை மறந்து போனதே
எங்கே மனிதன் யாருமில்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்..

ரங்கராஜன்
10-12-2008, 01:36 PM

---------------------
:D

ஆதவா
என்னங்க இது, என்ன வச்சி காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே :traurig001:

ஆதவா
10-12-2008, 01:42 PM
ஆதவா
என்னங்க இது, என்ன வச்சி காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே :traurig001:

ஹி ஹி ஹி....

மத்தவங்கள வெச்சு காமெடி பன்றது எவ்வளவு அலாதி சுகம் தெரியுங்களா??? :D

ரங்கராஜன்
10-12-2008, 01:44 PM
ஹி ஹி ஹி....

மத்தவங்கள வெச்சு காமெடி பன்றது எவ்வளவு அலாதி சுகம் தெரியுங்களா??? :D

ஆமாம் ஆமாம்
ஆனா நான் காமெடி பண்ணாதான் மன்றமே என்னை உதைக்க வருது, :traurig001: :icon_rollout:

ஆதவா
10-12-2008, 01:49 PM
ஆமாம் ஆமாம்
ஆனா நான் காமெடி பண்ணாதான் மன்றமே என்னை உதைக்க வருது, :traurig001: :icon_rollout:

காமெடியில ஒருத்தர் அடிக்க, ஒருத்தர் (நீங்க) அடி வாங்கிகிட்டே இருக்கணும்..... :D

ரங்கராஜன்
12-12-2008, 01:27 PM
ஹலோ எனி படி ஹோம், யாரையும் காணுமே எங்க போனாங்க எல்லோரும்................

ராஜா
12-12-2008, 02:04 PM
அடுத்து ஒருவரை கேள்வித்தொகுப்பு தர அழைக்கும் முயற்சியில் நம் அமர் இருக்கிறார். வெகுவிரைவில் இத்திரி புத்துயிர் பெறும்..!

ரங்கராஜன்
12-12-2008, 02:17 PM
அடுத்து ஒருவரை கேள்வித்தொகுப்பு தர அழைக்கும் முயற்சியில் நம் அமர் இருக்கிறார். வெகுவிரைவில் இத்திரி புத்துயிர் பெறும்..!

அன்பு அண்ணா
அது என்ன முயற்சியில்?, கேள்விகள் வாங்குவது ரொம்ப கஷ்டமான விஷயம் போல, நண்பர் அமரனை கேட்டா தான் தெரியும்

ஆதவா
12-12-2008, 02:27 PM
ஹலோ எனி படி ஹோம், யாரையும் காணுமே எங்க போனாங்க எல்லோரும்................

விளக்கு வைக்க போயிருப்பாங்க.... :aetsch013:

(அப்படீன்னா நீங்க ஒருத்தருதான் வேலைவெட்டி இல்லாம இருக்கீங்கன்னு நினைக்கிறேன்..):D

ஓவியா
12-12-2008, 03:22 PM
நன்றி ஓவியா அவர்களே (அக்காவாக இருந்தாலும் அப்படி அழைப்பது எனக்கே டிரமேட்டிக்காக இருப்பதால், அவர்களே என்று அழைப்பதே உத்தமம் என்று தோன்றுகிறது. அதனால் நீங்கள் என் அக்கா இல்லை என்று ஆகிவிடாது, புரிதலை நாடி)
உங்களின் பதில்களை படித்தேன், உண்மையை சொல்ல வேண்டும் என்றால், முன்பு எனக்கு உங்கள் மீது கொஞ்சம் கோபம் இருந்தது, எனென்றால் "எண்டா இது ஒரு கேள்வி கேட்டு இவ்வளவு நாள் ஆச்சே, பதில் சொல்லுவோம்னு அவங்களுக்கு ஒரு டீசன்சீ வேண்டாம், அப்படி என்ன பிசி இரண்டு வரி வார்த்தைகள் எழுதகூட நேரம் இல்லையாம், இது கொஞ்சம் ஓவர் தான்" என்று என் மனதிற்க்குள் உங்களின் பதிலை படிக்கும் வரை நினைத்து இருந்தேன், ஆனால் படித்த பின் தான் தெரிந்தது, ஏன் நீங்க இவ்வளவு டைம் எடுத்தீர்கள் என்று.

1. உங்களை தவறாக நினைத்ததுக்கு மன்னிக்கவும்.

பிரச்சனை இல்லை, மன்னிப்பு கேட்டு உயர்ந்து விட்டீர்கள்.

2. யாரோ ஒருவன் கேட்ட கேள்வி என்று அவமதிக்காமல் அழகாக இவ்வளவு பெரிய, அருமையான பதிலை தந்ததுக்கு நன்றிகள் கோடி.

யாரோ ஒருவனா!!! ஏலே நீர் தமிழ் மன்ற உறவுபா. பெரிய பதில்தான், ஆனால் அழகா இல்லை, காரமா இருக்கு :lachen001:

3. உங்களை இன்னும் கொஞ்சம் களப்பி விட்டால் பல விஷயங்கள் எல்லாம் வெளியே வரும் போல!!!!!!!!!!!!!!!!!!

பலியாடா ஆக்கியாச்சா!!! இப்பவே பலருக்கு கோபம் வந்து என்னை அன்புவின் எதிரியை கவனிக்க திரியில் பின்னி எடுத்திருப்பார்கள். சாமி ஆளவிடுங்கப்பா.

4. யாரோ ஒருவர் சொன்னது போல நீங்க வித்தியாசமானவர் தான்.

எல்லாருமே என்னை வித்தியாசமான பொண்ணாதான் பார்ப்பாங்க, ஆனால் எனக்கு நான் எப்பொழுதுமே ஒரு சராசரி பெண்தான். என்ன வாய் கொஞ்சம் நீளம்...:D

5. திட்டுவதிலும் உங்கள் பாசம் இருக்கதான் செய்யுது, உங்களின் பாசமலர்களுக்கு.

ஆமாம் என்னை திட்டினாலும் நான் திட்டினாலும் என் பாசமலர் சொந்தங்களுக்கு என்மேல்/ அவர்கள் மேல் அதிக பிரியம்தான்.

6. வாழ்க்கை உங்களுக்கு பல விஷயத்தை கற்று கொடுத்து இருக்குனு நினைக்கிறேன்.

ஆமாம் சாமி. இன்னும் என்னவெல்லாம் கற்க போறேனே!!! ஈஸ்வரா!!! நீலகண்டா!! மஹாதேவா...... (விஸ்வநாதனை கூப்பிடாமல் போனால் எப்படி) விஸ்வநாதா!!

7. கடைசியாக "மன்றம் ஏன் உங்களை கொண்டாடுதுனு இப்ப புரியுது"

ஏன்? ஏன்? ஏன்? :redface::redface: நான் அழகான ராட்ஷி அல்ல, புதுனையான ராட்ஷி.. :lachen001::lachen001:

மூர்த்தி, நீங்கள் மரியாதைக் கொடுக்க விரும்பும் பொழுது பணிவுடன் நான் அதை ஏற்றுக்கொள்வதே உங்களுக்கு நான் வழங்கும் மரியாதை.

ஆனால் இந்த ஒரு பின்னூட்டத்திற்க்கு மட்டும்தான் 'அவர்களே' என்று அனுமதி. இனிமேல் ஓவியாக்கா என்றே கூப்பிடுங்கள், இல்லையென்றால் ஓவியா அல்லது ஓவி.

சில நேரம் நம் சூழ்நிலை மற்றவர் கண்ணுக்கு நமக்கு டீசன்சி இல்லாதது போலவே காட்டும். அதற்க்கு என்ன செய்ய வேண்டும். காலத்திலே செய்ய வேண்டியதை செய்ய வேண்டும்.

(முடியாத பட்சத்தில் மாற்று வழி 'தப்பு தாளங்கள் ரஜினி போல் இதற்க்கு போய் அலட்டிகலாமா' என்று புன்னகைத்தவாரே தொடரவேண்டிதான். :eek:)

மீண்டும் உமக்கு என் நன்றிகள்.

ஓவியா
12-12-2008, 03:29 PM
எங்கள் இருவரையும் பாராட்டிய உங்களை என்றென்றும் மறக்க மாட்டேன்....

பென்ஸ் : அதுசரி எங்கடா ஓவயாவுக்கு பதில்?

ஆதவா : ஆவ்........

ஹி ஹி ஹி ஹி, பென்சுமேலே உனக்கு பயமே இல்லாமல் போச்சு!!!!!!!!!!!!!! இரு மகனே உமக்கு கோவமன்னன், சூறப்புலி, பென்ச்சுகிட்ட வத்திவைக்கிறேன்.

**************************************************************************************************

http://tamilmantram.com/vb/customavatars/avatar1488_42.gif

ஓவியா
மன்றத்தின் சுடர்
பண்பட்டவர்

அக்கா பிசியா இருக்கிறதால.... அக்கா சார்பில பதில்... (ஹி ஹி.. மன்னிச்சுக்கோங்க அக்கா)

1. உங்களை தவறாக நினைத்ததுக்கு மன்னிக்கவும்.

அப்படியா? நல்லது..

2. யாரோ ஒருவன் கேட்ட கேள்வி என்று அவமதிக்காமல் அழகாக இவ்வளவு பெரிய, அருமையான பதிலை தந்ததுக்கு நன்றிகள் கோடி.

அப்படியா? நல்லது

3. உங்களை இன்னும் கொஞ்சம் களப்பி விட்டால் பல விஷயங்கள் எல்லாம் வெளியே வரும் போல!!!!!!!!!!!!!!!!!!

அப்படியா? நல்லது

4. யாரோ ஒருவர் சொன்னது போல நீங்க வித்தியாசமானவர் தான்.

அப்படியா? நல்லது

5. திட்டுவதிலும் உங்கள் பாசம் இருக்கதான் செய்யுது, உங்களின் பாசமலர்களுக்கு.

அப்படியா? நல்லது

6. வாழ்க்கை உங்களுக்கு பல விஷயத்தை கற்று கொடுத்து இருக்குனு நினைக்கிறேன்.

அப்படியா? அப்படித்தான் என்று நினைக்கிறேன்

7. கடைசியாக "மன்றம் ஏன் உங்களை கொண்டாடுதுனு இப்ப புரியுது"

அப்படியா? நல்லது

__________________
பழைய பறவை ஒன்று பறந்து வந்ததே....
எனது நெஞ்சை மறந்து போனதே
எங்கே மனிதன் யாருமில்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்..

அப்படியா? நல்லது.

ஆமாம் ஆமாம்
ஆனா நான் காமெடி பண்ணாதான் மன்றமே என்னை உதைக்க வருது, :traurig001: :icon_rollout:

எதிர்கால தமிழ் நாட்டு தலைவர் ரிதிஷ் வாழ்க.:D:D:D

நாயகனின் மகளீரணி தலைவி - ஓவியா.

ரங்கராஜன்
12-12-2008, 05:00 PM
எதிர்கால தமிழ் நாட்டு தலைவர் ரிதிஷ் வாழ்க.:D:D:D

நாயகனின் மகளீரணி தலைவி - ஓவியா.

என்ன அறிவு என்ன அறிவு, எப்படி போயிண்டை பிடிச்சேன் பாத்தேலா, என்பது போல பிடிச்சிட்டீங்க, கற்பூரம் தான் (வாசனை தெரியுமோ?)

ரங்கராஜன்
12-12-2008, 05:04 PM
விளக்கு வைக்க போயிருப்பாங்க.... :aetsch013:

(அப்படீன்னா நீங்க ஒருத்தருதான் வேலைவெட்டி இல்லாம இருக்கீங்கன்னு நினைக்கிறேன்..):D

சாரு, கோயம்புத்தூரில் கலக்டரோ, ஒரு பியூன் வேலை வாங்கி தரது.........

ஆதவா
13-12-2008, 03:10 AM
ஹி ஹி ஹி ஹி, பென்சுமேலே உனக்கு பயமே இல்லாமல் போச்சு!!!!!!!!!!!!!! இரு மகனே உமக்கு கோவமன்னன், சூறப்புலி, பென்ச்சுகிட்ட வத்திவைக்கிறேன்.

பென்ஸா? எனக்கா..... ஹா ஹா ஹா..... நெவர்.. :p

அப்படியா? நல்லது.

நான் சொல்லல???? :D

சாரு, கோயம்புத்தூரில் கலக்டரோ, ஒரு பியூன் வேலை வாங்கி தரது.........

உண்மையிலேயே கலெக்டர்தாங்க....... நமக்கு வேலை கலெக்ட் பண்றது... (என்னன்னு கேக்காதீங்க:p)

ஆதவா
13-12-2008, 03:12 AM
விளக்கு வைக்க போயிருப்பாங்க.... :aetsch013:

(அப்படீன்னா நீங்க ஒருத்தருதான் வேலைவெட்டி இல்லாம இருக்கீங்கன்னு நினைக்கிறேன்..):D

சாரு, கோயம்புத்தூரில் கலக்டரோ, ஒரு பியூன் வேலை வாங்கி தரது.........

அப்படீன்னா நான் சொன்னது உண்மைதானா??? அட ராமா....

ராஜா
13-12-2008, 06:34 AM
சவாலே சமாளி திரியில் இணைந்து கலக்கிவரும் இளம்புயல் அய்யாவை கேள்வித்தொகுப்பு நல்குமாறு என்னவன் அமரின் இசைவோடு வேண்டுகிறேன்..!

வாருங்கள் அய்யா..!

ராஜா
13-12-2008, 07:06 AM
கடந்த கேள்வித்தொகுப்பைத் தந்த மூர்த்திக்கும், பதிலளித்த உற*வுகளுக்கும் நன்றி..!

:icon_b::icon_b::icon_b::icon_b:

அய்யா
13-12-2008, 07:07 AM
இம்மாபெரும் திரியில் பங்களிக்க என்னை அழைத்தமைக்கு நன்றி ஏ.ஆர்.ஆர்.அய்யா மற்றும் அமரன் அண்ணா!

10 உறுப்பினர்களிடம் கேள்வி தொடுக்கவேண்டுமோ? அவ்வளவு பேரை நான் அறியேன். முடிந்தவரை முயற்சிக்கிறேன்.

கேள்விகளை விரைவில் தொடுக்கிறேன்.

அய்யா
15-12-2008, 02:59 AM
இம்மாமன்றத்தில் நான் ஓரளவு அறிந்த நண்பர்களிடம் என் சிறுபிள்ளைத்தனமான கேள்விகளைத் தொடுக்கிறேன். சிரமம் பாராது பதிலளிக்க வேண்டுகிறேன். ஏதேனும் தவறிருப்பின் தயவுசெய்து மன்னிக்கவும்.

1. அமரன் அண்ணா; தமிழ் மன்றத்தில் என்னை நோக்கி நீண்ட முதல் நட்புக்கரத்துக்கு சொந்தக்காரர் நீங்கள்! உங்களிடம் முதலில் வினவுவதில் மகிழ்கிறேன்.

? : மன்றப் பொறுப்பாளராக திறம்படச் செயலாற்றி வருகிறீர்கள். இந்தப்பணியில் நிறைய இனிய நிகழ்வுகள் இருக்கக்கூடும். அவற்றில், உங்களுக்கு நீங்களே சபாஷ் சொல்லி கழுத்துப்பட்டியை உயர்த்திக்கொண்ட சம்பவமொன்றை எங்களிடம் பகிர்ந்துகொள்ள இயலுமா?

2. ஆதவா அண்ணா; பல்துறை வித்தகர் நீங்கள்! உங்களிடம் கவிதை குறித்த வினாவை விடுக்க விரும்புகிறேன்.

? : பொதுவாக, கவிஞர்களுக்கு கவிபாட கொஞ்சம் கடினமான கருப்பொருள் என்று எதுவும் உண்டா? ( மிகவும் எளிதான கருப்பொருள் காதல் என்பதாக எண்ணற்ற இணையக்கவிஞர்கள் வாயிலாக அறிந்தேன். கடினம் எதுவென அறிந்திட விழைந்தேன்.) ஆமெனில் அது எது?

3. இளசு அண்ணா ; இம்மன்றத்திற்கு முதன்முதல் நான் அடியெடுத்து வைத்து, கண்ணுற்ற எண்ணற்ற பதிவுகளில் பெரும்பாலானவை உங்களுடையவையே!

? : அறிவியலின் தேடலுக்கும், தாக்கத்துக்கும் அளவென்பதே இல்லையென்று தோன்றுகிறது. எனினும் அறிவியலின் நெடிய கரங்கள் அவ்வளவாக அணுகமுடியாத துறையென்று எதுவுமுண்டா? ஆமெனில் அது எது?

4. ஏ.ஆர்.ஆர். அய்யா ; நீங்கள் அன்றாடம் உறுப்பினர்களுக்கு அனுப்பும் நகைச்சுவையும், பொதுஅறிவுத் துணுக்குகளும் ஆர்க்குட் தமிழில் வெகு பிரபலம். மிக அதிகமாக உறுப்பினர்களிடையே தமிழில் முன்னனுப்பப்படும் செய்தியும் உங்கள் மடல்களாகத்தான் இருக்குமென எண்ணுகிறேன்.

? : உங்கள் ஆர்க்குட் குழுமங்களின் உறுப்பினன் நான். உங்களின் மடல் ஒன்றின் மூலமே இந்த தமிழ்மன்றப் புதையலை கண்டெடுத்தேன். இந்த தினசரி மடற்சேவைத் திட்டம் உங்கள் மனதில் எவ்வாறு உருவாயிற்று?

5. ஓவியா அக்கா ; மன்ற உறவுகளிடையே மிகுந்த மதிப்புக்கும், அன்புக்கும், (ஆட்டோ பயம் கலந்த) மரியாதைக்கும் உரியவர் நீங்கள்!

? : உறுப்பினர்களின் பதிவுகளில் தவறென்றால் தட்டிக்கேட்பீர்கள். சரியென்றால் தட்டிக்கொடுப்பீர்கள். உங்கள் இயல்பு வாழ்க்கையிலும் இந்தப் போக்கை கடைப்பிடிப்பதுண்டா? ஆமெனில் அந்தப்போக்கு காரணமாக எதிர்கொள்ளும் இடர்களை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?

6. சிவா.ஜி அண்ணா ; திகில் கதைகள் மட்டுமல்லாது அனைத்து கதைகள் எழுதுவதிலும் வித்தகர் நீங்கள்! உங்கள் சிறுகதைகளில் அவற்றுக்கான இலக்கணம் எள்ளளவும் குறையாமல் இருக்கும்.

? : இந்த தம்பிக்காக, 20 வரிகளில் அனைத்து இலக்கணங்களுடன் ஒரு திடீர் திகில் சிறுகதை தரமுடியுமா?

7. மதுரை அண்ணா ; சவாலே திரியில் பெரும்பாலும் முதல் பதிவு உங்களுடையதாகவே இருக்கும். அந்த அளவுக்கு மின்னல் வேகச் சிந்தனைக்கு சொந்தக்காரர் நீங்கள்!

? : திரைத்துறை தொடர்பான உங்கள் நகைச்சுவைப் பதிவைக் கண்ணுற்றதால் இதைக் கேட்கிறேன். ரஜினியும் வடிவேலுவும் பெண்பார்க்கப் போகிறார்கள். பெண் அசின். மாப்பிள்ளை வடிவேலு. தோழனாக ரஜினி! ஒரு சிறு நாடகம் ஒரே காட்சியில் அமைத்துத் தரவியலுமா?

8. கீழை அண்ணா ; சிறுகதையைக்கூட தகவல் களஞ்சியமாக அமைத்துத் தருமளவுக்கு பொதுஅறிவுப் புலி நீங்கள்!

? : இன்றைய நாளில் இந்திய பாகிஸ்தான் போர் மூண்டால் உண்மையான வெற்றி யாருக்கு? இழப்புகளும், போருக்கு பிந்தைய தாக்கங்களும் (இரு நாடுகளிலும்) எவ்வாறு இருக்கும்?

9. மூர்த்தி அண்ணா ; மன்றத்தின் சகல பிரிவுகளிலும் கலக்கிவருகிற நீங்கள், வெகுவிரைவிலேயே மனங்கவர் பதிவாளர் தகுதியைப் பெற்றவர்.

? : உங்களின் மிகச்சிறந்த சிறுகதையொன்றுக்கு அவ்வளவாகப் பின்னூட்டங்கள் இல்லையென்றும், அதேநேரத்தில் பதிவாகியிருக்கும் வேறொருவரின் சுமாரான கதைக்கு பார்வைகளும் பின்னூட்டங்களும் குவிகிறதென்றும் கொள்வோம்; அப்போது ஒரு படைப்பாளியாக உங்கள் மனநிலை எவ்வாறிருக்கும்?

10. நாரதர் அண்ணா ; நீங்கள் ஒரு ஊடகவியலாளரென அறிகிறேன். அவ்வகையில் சில செய்திகள் சாதாரண மக்களான எங்களைவிட, உங்களைப் போன்றோருக்கு முன்கூட்டியும், முழு அளவிலும் தெரிந்திருக்கும்.

? : தமிழீழம் சமீபத்தில் சாத்தியமாகக்கூடிய ஒன்றுதானா? இல்லை இன்னும் நாளெடுக்குமா? உங்கள் நோக்கில் அது மலர்வதெப்போது?

ரங்கராஜன்
15-12-2008, 04:27 AM

நன்றி அய்யா தம்பி (அல்லது) தம்பி அய்யா (எப்படி கூப்பிட்டாலும் இடிக்குதே)
என்னிடம் உங்களின் கேள்வியை கேட்டதற்க்கு, சகல விஷயங்களா?, எனக்கு தெரிந்து நான் இதுவரை சிறுகதை பகுதியில் இருந்து வேறு எதற்க்கும் என் பங்கையை தந்தது இல்லை. கவிதை பகுதியில் பதிய ஆசை தான், ஆனால் அங்கு எல்லாரும் உண்மையாகவே கவிதைகளை எழுதறாங்க. அதுவும் எனக்கு வரும் எழுத்துபிழைகளுக்கு நான் சாதாரணமாக வாக்கியம் எழுதினாலே, அது கவிதை மாதிரி தான் இருக்கு (எழுத்து பிழையில் அர்த்தம் மாறிடுது"). விளையாட்டு பகுதியில் போய், விதிகளை படிக்காமல் எதாவது கிறுக்குதனம் செய்து, விளையாட்டை தடை செய்து விடுகிறேன். காமெடியான விஷயங்களை பதிப்பதாக நினைத்துக் கொண்டு, நான் பதிக்கும் விஷயங்கள் எனக்கே டிரேஜடியாக முடிகிறது. அதனால் சிறுகதையில் மட்டும் கவனம் செலுத்துகிறேன்.

மனங்கவர் பதிப்பாளர்கள் பட்டம் கிடைத்ததுக்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சி தான். என்னை தேர்ந்து எடுத்த நண்பர்களுக்கு நன்றி.

உங்களின் கேள்வி நன்றாக இருக்கிறது. ஏனென்றால் இது அனைவருக்கும் பொருந்தும் கேள்வி, இங்கு அனைவருமே படைப்பாளிகள் தான். உங்களின் கேள்விக்கு என்னுடைய உண்மையான பதில், எனக்கு ரொம்ப அவமானமாக இருக்கும், வருத்தமாக இருக்கும், கஷ்டமாக இருக்கும்.

அதே போல கலைஞர்கள் (எழுத்தாளர், நடிகன், இசை கலைஞன், சித்திரைகாரர்) எல்லோரும் அவர்களின் படைப்பை, அவர்கள் சந்தோஷத்திற்க்காக செய்வது கிடையாது. எல்லாம் மற்றவர்களுக்காக தான். அதனால் கலைஞர்களே அவர்களின் படைப்பில் சிறந்தது எது என்று சொன்னால், அது சிறந்த படைப்பு ஆகிவிடாது. மற்றவர்கள் சொல்லவேண்டும். அதே போல மற்றவர்களின் சிறந்த படைப்பை, இல்லை என்று சொல்லும் உரிமை எனக்கு இருக்கு, ஒரு வாசகனாக மட்டும்.

என்னுடைய சிறந்த படைப்பு என்று சொல்ல எனக்கு உரிமையில்லை, அதனால் எனக்கு பிடித்த படைப்பு, என்னுடைய "சக்காளத்தி" என்னும் சிறுகதைக்கு இந்த கதி தான் ஏற்பட்டது. அதில் ஒரு கிராமத்து ஏழை முதிர்கன்னியின் சோகத்தை, அவஸ்தையை, நேசத்தை, ஆசையை சொல்ல முயற்சி செய்தேன். அந்த கதைக்கு நேர்மையாக கொடுக்க வேண்டிய வர்ணனைகளை கொடுத்தேன், பாத்திரங்களின் குணத்திற்க்கு தகுந்தார் போல (சில கவுச்சி வார்த்தைகள்) தந்தேன். கதையை வித்தியாசமாக சொல்லும் சிறு முயற்சியாக வேறு மாதிரி தந்தேன். ஆனால் கதையை பண்பட்டவர் திரிக்கு மாத்தீட்டாங்க. எனக்கு கஷ்டமாக இருந்தது, அப்பொழுது அந்த பண்பட்டவர் பகுதி என்பது எனக்கு எதோ டேலிட் பண்ண விஷயங்கள் எல்லாம் சேரும் டிராஷ் பாக்ஸாக தான் பட்டது. ரொம்ப சோர்ந்து விட்டேன். உண்மையில் நடுவில் எனக்கு கதைகளை சிந்திக்கவே முடியவில்லை. அப்புறம் இரண்டு நாள் கழித்து நண்பர் அமரனிடம் போனில் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது என்னுடைய ஆதங்கத்தை சொன்னேன். அவர் எவ்வளவோ சொன்னார்.

"நம் மன்றத்தில் பெண்களும் இருக்காங்க, அப்புறம் புதிதாய் வருபவர்கள் எல்லாம் இதை படித்து விட்டு வேறு மாதிரியான தளம் என்று நினைத்து விடகூடாது. அதனால் தான் பண்பட்டவர் திரிக்கு மாற்றினோம், அதில் பண்பட்டவர்கள் மட்டும் படிக்கும் வாய்ப்பு இருப்பதால் பிரச்சனை எழாது" என்று எவ்வளவோ சொல்லி பார்த்தார். ஆனால் எனக்கு சமாதானம் ஆகவில்லை, என்னுல் நான் கேட்டுக் கொண்டேன்

"இதுவரை எந்த சகோதிரிகளாவது புகார் செய்து இருக்காங்களா?, ஆண்களாகிய நாமே ஏன் அவர்களின் உரிமையை பறிக்கவேண்டும், ஒதுக்கவேண்டும்" என்று என்னுல் மேதாவித்தனமான கேள்விகளை கேட்டுக் கொண்டேன். அவரின் பதிலில் நான் திருப்தி அடையவில்லை என்று புரிந்துக் கொண்ட அமரன் கடைசியாக சூப்பரா, சில வார்த்தைகள் சொன்னார்.

"இதோ பாருங்க மூர்த்தி, உங்கள் கதை பண்பட்டவர் திரிக்கு போய்விட்டது, அதனால் யார் கண்ணிலும் படாது அப்படியே மறைச்சிரும்னு நினைக்காதீங்க. உங்கள் எழுத்தை விரும்பி படிப்பவர்கள், உங்களுடைய படைப்பு எங்கு இருந்தாலும் தோண்டி எடுத்து படிப்பார்கள். அதே போல பிடிக்கவில்லை என்றால் முகப்பில் இருந்தாலும் படிக்கமாட்டார்கள்" என்றார். எனக்கு செருப்பால் அடித்தது போல இருந்தது, என்ன அருமையான விஷயத்தை அசால்டாக புரியவைத்து விட்டார் அமரன். (ஆனால் சின்ன விஷயத்தை தான் நேராக சொல்லாமல் குழப்புவார், ஹா ஹா ஹா). அதனால் அய்யாவின் கேள்விக்கு இதுதான் என் பதில்

விமர்சனங்களை வைத்து ஒரு கதையை எடை போட முடியாது, கூடாது. விமர்சனங்கள் வராதற்க்கு நிறைய காரணம் இருக்கலாம்.

என்னை பாதித்த கதைகளுக்கு நான் விமர்சிப்பதில்லை (அமரன் சொன்னது)
நேரமின்மை (எல்லாரும் சொல்வது)
என்னை பாதிக்கவில்லை (நான் சொல்வது)

என பல காரணங்கள் இருக்கும். ஒரு எழுத்தாளனாக ஒரு பகுதி மக்களை தான் திருப்தி படுத்த முடியும், அதாவது ஒரே வேவ்-லேங்தில் இருப்பவர்களை. அதே போல மறுபகுதி மக்களை திருப்திபடுத்த அவர்களின் எண்ணத்தில் எழுத வேண்டும், அதுதான் எழுத்தாளனின் வெற்றி, ஆனால் அதில் முதல் பகுதியினர் திருப்தி அடையமாட்டார்கள். அதனால் ஒரு எழுத்தாளனால் எப்பொழுதும் அனைவரையும் ஒரு சேர திருப்திபடுத்த முடியாது.

நன்றி

அய்யா
15-12-2008, 05:36 AM
நன்றி அண்ணா. நீங்கள் என்னை தம்பி என்றோ, அய்யா என்றோ அழைக்கலாம்.

உங்கள் பதிலில் சில இடங்களில் என்னையறியாமலேயே சிரித்துவிட்டேன். உங்களுக்கு இயல்பான நகைச்சுவை இலகுவாக வருகிறது.

ஒரு படைப்பாளி அனைவரையுமே திருப்திப்படுத்தவியலாதென்னும் அரிய உண்மையை உங்கள் பதிலிலிருந்து இன்று அறிந்தேன். பின்னூட்டங்களின்மைக்கும் பல காரணங்களிருக்கக்கூடுமென்றும் அறிந்தேன்.

முதல் பதிவாளராக வந்து முதிர்ச்சியான விளக்கம் தந்து சிறப்பித்துவிட்டீர்கள்.

மீண்டும் நன்றி.

ராஜா
15-12-2008, 08:28 AM
நன்றி மூர்த்தி..!

உங்கள் 'சக்களத்தி'க்குப் பின்னால் இப்படி ஒரு மறுபக்கம் இருப்பதை இன்றுதான் தெரிந்துகொண்டேன்.

அவளுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் வருந்துகிறேன்.

அமரன்
15-12-2008, 08:44 AM
ஆ!10 இல் என்னையும் இணைத்த அய்யாவுக்கு நன்றி. விரைவில் பதிலுடன் வருகிறேன்.

மதுரை மைந்தன்
15-12-2008, 08:53 AM
நண்பர் அய்யா அவர்களே நீங்க எனனை மாட்டி விட்ட மாதிரி சாரி கேட்ட மாதிரி ஒரு காமெடி எழுதியிருக்கேன். இதில் எவ்வளவு குறைகள் இருக்கிறதோ அதற்கு தகுந்த மாதிரி கழித்துக் கொண்டு சிரித்து வையுங்கள்.
______________________________________________________________________

ரஜினி: கண்ணா வடிவேலு. நாம பொண்ணு பார்க்க போற இடம் பெரிய இடம். அங்க வந்து அமைதியா இருக்கணும். எல்லாம் நான் பாத்துக்கறேன்.

வடிவேலு: என்னது பெரிய இடம் சின்ன இடம். நாங்களும் பெரிய இடம் தான். என்னோட பிரதருக்கு துபாயில 20 எண்ணைக் கிணறு இருக்குனு சொன்னயா?

ரஜினி: இப்டியெல்லாம் பொய் சொல்ல எனக்கு வராது; ஆளை விடு. ரோபோ பட வேலை தலைக்கு மேல இருக்கு

வடிவேலு: கோவிச்சுக்காதீங்க பிரதர். வேணும்னா இப்படி சொல்றீங்களா. நான் துபாய்ல கேக்கிறான் மேக்கிறான் கமபெனியில மானேஜரா இருக்கேன்னு சொல்றீஙகளா?

ரஜனி: பார்த்தா துபாயில ஒட்டகம் மேய்க்கறவன் மாதிரி இருக்கே. உன்னை எப்படி மானேஜர்னு சொல்றது?

வடிவேலு: சரிப்பா. உனக்கு என்ன தோணறதோ அதை சொல்லிக்க. அப்புறம் இந்த பொண்ணு எப்படி இருக்கும்னு சொல்லு

ரஜனி: உனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்?

வடிவேலு: நல்ல சிவப்பா அளகா கண்ணுக்கு லட்சணமா இருக்கணும்.

ரஜனி: வடிவேலு உனக்கு எங்கயோ மச்சம் இருக்கு. நாம பார்க்க போற பொண்ணு நீ சொல்ற மாதிரியே இருக்கா.

வடிவேலு: பிரதர் எனக்கு டௌட்டா இருக்கு. என்னை வைச்சு காமெடி கீமெடி பண்ணலையே? சரி. பொண்ணு பேர் என்ன?

ரஜனி: அசின்.

வடிவேலு: என்ன இது பேரு அசின் பிசின்னுட்டு. அழகா கண்ணாத்தா பூங்குழலி அங்கயற்கண்ணி னு இருக்கக்கூடாதா?

ரஜனி: ஏம்பா உன்னோட பெயர் கமல் விஜய் அஜீத்னு இருக்கக்கூடாதான்னு அந்த பொண்ணு எதிர் பார்த்தா என்ன பண்ணுவே?

வடிவேலு: இப்போ நீ எங்கே கூட்டி போற?

ரஜனி: இந்த பொண்ணை பார்க்கத் தான்.

வடிவேலு: அட போப்பா நீ வேற அந்த பொண்ணு சிவப்பா இருக்கும்னு சொல்லறே. நானோ கரிக் கட்டை. நான் எப்படி வறது?

ரஜனி: கவலைப் படாதே கண்ணா. சிவாஜி படத்தில என்னை சிவப்பா ஆக்கின மேக்கப் மேன் கிட்ட முதல்ல நாம போய் உன்னை செக்க செவேல்னு மாத்திடுவோம்.

அவ்வாறே சிவப்பு வடிவேலுவும் ரஜினியும் பெண் வீட்டை அடைய பெண்ணின் அப்பா அவர்களை வரவேற்கிறார்.

பெண்ணின் அப்பா: மாப்பிளை என்ன பண்ணிக்கிட்டிருக்காரு.

வடிவேலு: போண்டா சாப்பிட்டக்கிட்டிருக்கேன்.

பெண்ணின் அப்பா: மாப்பிளை ரொம்ப தமாஷ் பண்றாரு.

ரஜனி: அது தானே அவரோட தொழில்.

பெண்ணின் அப்பா: எனக்கு விளங்கலையே?

ரஜனி (வடிவேலு சைகை காட்டுவதை பொருட்படுத்தாமல்) : உங்க மாப்பிளை தமிழ் சினிமாவில பெரிய காமெடி ஆக்டர்.

உள்ளுக்கிருந்து வந்த பெண்ணின் அம்மா பெண்ணின் அப்பா காதில் ஏதோ கூற " மன்னிச்சுங்க இப்போ வந்துடறேன்" னு சொல்லி அவர் உள்ளே செல்கிறார். அங்கு மணப்பெண்

அசின்: " அப்பா நான் பெரிய ஹீரோயின். என்னைப் போய் ஒரு காமெடியனுக்கு கட்டி வைக்கிறீங்களே? தமிழ் சினிமா உலகத்தில இந்த மாதிரி நடந்திருக்கா?".

பெண்ணின் அப்பா: இப்போ என்னம்மா பண்றது?

அசின்: நீங்க போய் அவங்க கூட இருங்க. நான் அங்க வந்து என்ன பண்றேன்னு பாருங்க?

பெண்ணின் தந்தை கூடத்திற்கு சென்று கூட்டத்துடன் அமர்கிறார்.

வடிவேலு: பொண்ணை எப்போ காட்டப் போறீங்க?

ரஜனி (தாழ்ந்த குரலில் வடிவேலுவிடம்): அமைதி அமைதி.

பெண்ணின் அப்பா: அம்மா அசினு மாப்பிளை வடிவேலு வந்திருக்காக கூட அவரோட நண்பர் வந்திருக்காக நம்ம சாதி சனமெல்லாம் வந்திருக்காக. வாம்மா வந்து எல்லோருக்கும் வணக்கம் சொல்லு.

அசின் கையில் காபி டமளர்களடங்கிய தட்டுடன் வருகிறார். வடிவேலுவிடம் காபியை நீட்டிய அசின் கண்களை உருட்டி பார்க்க வடிவேலு பயந்து பின் வாங்குகிறார். அசின் தட்டை கீழே வைத்து விட்டு " ராரா சரசக்கு ராரா......" என்று பாடி ஆட வடிவேலு "அய்யோ செத்தேன் இது சந்திரமுகி பேயில்ல" என்று சொல்லி துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓடி விடுகிறார். ரஜனி ஓடாமல் " லக்கலக்கலக்க.." என்று சொல்ல அசின் சிரித்துக் கொண்டே " கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு" என்று பாட பெண்ணின் தந்தை ரஜனியை மாப்பிளையாக ஏற்றுக் கொள்கிறார்.

சிவா.ஜி
15-12-2008, 09:22 AM
அய்யாவின் கேள்விக்கு மூர்த்தியின் பதிலில் அவரது தெளிவு தெரிகிறது. அதோடு சொன்ன அனைத்திலும் உண்மை இருக்கிறது. படைப்பாளிகளுக்கு சரியான அளவில் பின்னூட்டம் கிடக்காதபோது லேசாக வருத்தம் இருக்கத்தான் செய்யும்.

அதை வெளிப்படையாக சொன்னது அருமை. அமரனைப் பற்றி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. ஆக இந்த பதில் அழகடைவது அழகான உண்மைகளால். வாழ்த்துகள் மூர்த்தி.

ஓவியா
15-12-2008, 09:29 AM
5. ஓவியா அக்கா ; மன்ற உறவுகளிடையே மிகுந்த மதிப்புக்கும், அன்புக்கும், (ஆட்டோ பயம் கலந்த) மரியாதைக்கும் உரியவர் நீங்கள்!

ஹி ஹி ஹி அப்படியா!! ஆமாம் சிலருக்கு நான் அப்படிதான்.

? : உறுப்பினர்களின் பதிவுகளில் தவறென்றால் தட்டிக்கேட்பீர்கள்.

ஆமாம். தவறை சுட்டிகாட்டுவது நல்லதுதானே!!

சரியென்றால் தட்டிக்கொடுப்பீர்கள்.

ஆமாம். தட்டிக்கொடுப்பது 'வைட்டமின்' போல் மனதிற்க்கும், ஆர்வத்திற்க்கும் சிறந்தது.

உங்கள் இயல்பு வாழ்க்கையிலும் இந்தப் போக்கை கடைப்பிடிப்பதுண்டா?

சட்டியில் உல்லதுதானே அகப்பையில் வரும். ஆமாம், நான் எப்பொழுதுமே இப்படிதான். நான் கடைப்பிடிக்காததை மற்றவர்களுக்கு அட்வைஸ் செய்ய மாட்டேன்.

ஆமெனில் அந்தப்போக்கு காரணமாக எதிர்கொள்ளும் இடர்களை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?

இந்த போக்கினால் நன் பெற்றது பல நல்ல நண்பர்கள். சில நல்ல விரோதிகள். தோழமை பகைமை இவைகளில் தோழமையே அதிகமாக பெற்றுள்ளேன். இதில் இடர்கள் என்றால் கொஞ்சம் குறைவுதான். சமாளிப்பு என்றால், நண்பர்களிடம் நல்லகெட்ட பெயர், விரோதிகளிடம், ஆககடைசியாக அவர்களின் பிடியிலே விட்டுக்கொடுத்து செல்வது.
*****************************************************************************************************

தம்பி அய்யா, உங்களின் கேள்வி பட்டியளில் என்னையும் சேர்த்ததற்க்கு மிக்க நன்றி.

நல்ல விரிவான பதில் கொடுக்க வேண்டும் என்பதே என் எண்ணம், இருப்பினும் என்னால் இன்று முடியவில்லை. இதைபோல் உள்ள ஒரு கேள்வியைதான் மூர்த்தியும், (உங்களுக்கு முன் பதிந்த கேள்வி தொகுப்பில்) கேட்டார், இன்று நேரமில்லாத பட்சத்தில் அந்த விடையை மீண்டும் இந்த கேள்விக்கு சுட்டிக்காட்டுகிறேன். இது சரியான வழியல்ல என்பது தெரியும், நேரம் இல்லாத பட்சத்தில் இதை செய்கிறேன்.

மன்னிக்கவும். :redface::redface:

நன்றியுடன்
- ஓவியாக்கா.

சிவா.ஜி
15-12-2008, 09:33 AM
மதுரை சார்...கையைக் குடுங்க...அட்டகாசம் பண்ணிட்டீங்க. அசத்தலா இருக்கு. ரொம்ப இயல்பான நகைச்சுவை. உண்மையாகவே ரசித்து மகிழ்ந்தேன். பாராட்டுக்கள்.

ராஜா
15-12-2008, 09:45 AM
நண்பர் அய்யா அவர்களே நீங்க எனனை மாட்டி விட்ட மாதிரி சாரி கேட்ட மாதிரி ஒரு காமெடி எழுதியிருக்கேன். இதில் எவ்வளவு குறைகள் இருக்கிறதோ அதற்கு தகுந்த மாதிரி கழித்துக் கொண்டு சிரித்து வையுங்கள்.
______________________________________________________________________

அசின் கையில் காபி டமளர்களடங்கிய தட்டுடன் வருகிறார். வடிவேலுவிடம் காபியை நீட்டிய அசின் கண்களை உருட்டி பார்க்க வடிவேலு பயந்து பின் வாங்குகிறார். அசின் தட்டை கீழே வைத்து விட்டு " ராரா சரசக்கு ராரா......" என்று பாடி ஆட வடிவேலு "அய்யோ செத்தேன் இது சந்திரமுகி பேயில்ல" என்று சொல்லி துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓடி விடுகிறார். ரஜனி ஓடாமல் " லக்கலக்கலக்க.." என்று சொல்ல அசின் சிரித்துக் கொண்டே " கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு" என்று பாட பெண்ணின் தந்தை ரஜனியை மாப்பிளையாக ஏற்றுக் கொள்கிறார்.[/COLOR][/B][/SIZE]

இதனை இதனால் இவர் முடிக்கும் என்றாய்ந்து அய்யா தொடுத்த கணைக்கு, மிகச்'சிரி'யாக பதில் அளித்த அன்பு மதுரைக்கு பாராட்டுகள் பலப்பல..! பலே.. பலே..!! பல்லே.. பல்லே..!!!

இன்ட்ரொடக்ஷனிலேயே ஆரம்பித்த அசத்தல் கடைசிவரை டெம்போ குறையாமல் செல்கிறது..!

அன்பு மதுரை..! இவ்வளவுநாளா நீங்க படா சீரியஸ் பார்ட்டின்னு நெனச்சிருந்தேன்..!!

சிவா கை கொடுத்ததுக்கப்புறம், நானும் உங்க கையை குலுக்க விரும்பறேன்..!

சிவா.ஜி
15-12-2008, 09:58 AM
6. சிவா.ஜி அண்ணா ; திகில் கதைகள் மட்டுமல்லாது அனைத்து கதைகள் எழுதுவதிலும் வித்தகர் நீங்கள்! உங்கள் சிறுகதைகளில் அவற்றுக்கான இலக்கணம் எள்ளளவும் குறையாமல் இருக்கும்.

? : இந்த தம்பிக்காக, 20 வரிகளில் அனைத்து இலக்கணங்களுடன் ஒரு திடீர் திகில் சிறுகதை தரமுடியுமா?

அய்யா இருந்தாலும் உங்களுக்கு என் மீது இவ்வளவு நம்பிக்கை கூடாது. ஏதோ ஏழைக்குத் தகுந்த எள்ளுருண்டையாக
என்னால் முடிந்ததை எழுதிக் கொண்டிருக்கிறேன். இப்படி இருபது வரியில் திகில் கதை என்றால்...இப்போதும் ஏதோ என்னால் முடிந்தது.

இனி கதை..........

சாலை நனைந்திருந்தது. கறுப்புச் சாலை இருளைப் பூசிக்கொண்டு மேலும் கறுப்பாய் இருந்தது. சாலை சில்லிட்டாலும் அதன் மீது படுத்துக்கிடந்தான் அவன். தூரத்தில் ஒற்றை விளக்கு வெளிச்சம். மெல்லியதாய் தொடங்கி சத்தமாய்க் கேட்ட இருசக்கரவாகனத்தின் எஞ்சின் ஓசை இவனை சமீபித்ததும் அமைதியானது.

சட்டென்று எழுந்தவன் கத்தியை ஓட்டுநனின் கழுத்தில் வைத்தான்.

“பர்ஸ், வாட்ச், செல்போன் எல்லாத்தையும் சத்தமில்லாம எடுத்துக்கொடுத்துட்டுப் போ”

அந்த இருட்டிலும் இருசக்கரவாகன ஓட்டியின் பல்வரிசை பளிச்சிட்டது. அடப்பாவி சிரிக்கிறானா...என்னைப் பத்தி தெரியாது ஒரு கீறு கீறினாத்தான் வழிக்கு வருவான் என நினைத்துக்கொண்டே கத்தியில் அழுத்தத்தை அதிகரிக்க நினைப்பதற்குள், அவனது கை முறுக்கப்பட்டது.

சட்டென்று இழுத்ததில் அவனும் வாகனமோட்டியும் கீழே விழுந்தார்கள். கூடவே வாகனமோட்டியின் ரெயின்கோட்டுக்குள்ளிருந்து அந்த கைத்துப்பாக்கியும் விழுந்தது. சட்டென்று தாவியெடுத்த கத்திக்காரன் சடாரென்று அதை பிரயோகித்தான். சுருண்டு விழுந்த வாகனஓட்டி எழுவதற்குள் அவனது வண்டியை எடுத்துக்கொண்டு விரைந்தான்.

தன் அறைக்கு வந்தவன் பயந்திருந்தான். இதுவைரை செய்யாத ஒன்று கொலை. அவசரத்தில் செய்துவிட்டேன். இறந்திருப்பானோ. வெகு அருகில் சுட்டதால் நிச்சயம் இறந்திருப்பான். என்னைக் காட்டிக்கொடுக்கும் ஒரே பொருள் அவனது இந்த வாகனம்தான். எரித்துவிட வேண்டும். இங்கு கூடாது. ஒதுக்குப் புறமாகப் போய்விடவேண்டும். யோசித்து எழுந்து வெளியே வந்து வாகனத்தில் அமர்ந்து ஸ்டார்ட் செய்ய முயலும்போது அவனெதிரே சுடப்பட்டவன் நின்றுகொண்டிருந்தான்.

அதிர்ந்தான்....எப்படி....?

உடன் இன்னும் இரண்டு போலீஸார். திறந்திருந்த ரெயின்கோட்டுக்குள் தெரிந்த குண்டுதுளைக்காத உடையைப் பார்த்ததும், வாகனம் சரிய அவனும் மயங்கி சரிந்தான்.

பணிமுடிந்து திரும்பிக்கொண்டிருந்த கமாண்டோவைத்தான் தாக்கியிருக்கிறோமென்று மயக்கத்திலேயே உணர்ந்தான்.

“நல்லவேளை ஊழல் செய்யாமல் வாங்கப்பட்ட புல்லட் புரூஃப் ஆடையானதால் தப்பித்தேன். அவ்ளோ குளோஸ் ரேஞ்ச்”

மதுரை மைந்தன்
15-12-2008, 09:59 AM
மதுரை சார்...கையைக் குடுங்க...அட்டகாசம் பண்ணிட்டீங்க. அசத்தலா இருக்கு. ரொம்ப இயல்பான நகைச்சுவை. உண்மையாகவே ரசித்து மகிழ்ந்தேன். பாராட்டுக்கள்.

நணபர் சிவா.ஜி அவர்களுக்கு என் நன்றி. நகைச்சுவையாக எழுதுவது கொஞசம் கடினம் பொதுவாக. ஆனால் இங்கு நண்பர் அய்யா கொடுத்த கான்செப்ட் கொஞ்சம் ஈஸியாக இருந்தது. ஏனெனில் நான் வடிவேலு நகைச்சுவையின் பெரிய விசிறி.

நண்பர் அய்யாவுக்கு என் மனமார்ந்த நன்றி இந்த வாய்ப்பை தந்தற்கு.

ராஜா
15-12-2008, 10:02 AM
5. ஓவியா அக்கா ; மன்ற உறவுகளிடையே மிகுந்த மதிப்புக்கும், அன்புக்கும், (ஆட்டோ பயம் கலந்த) மரியாதைக்கும் உரியவர் நீங்கள்!

நன்றியுடன்
- ஓவியாக்கா.

நன்றி பாசமலரே..!

கடந்த சில கேள்விகளுக்கு நீ அளித்திருந்த விரிவான பதில்களை சுவைத்த எங்களின் எதிர்பார்ப்பு கூடியமையாலோ என்னவோ, இந்த பதிலில் கொஞ்சம் நிறைவு குறைவாயிருப்பது போல ஒரு உணர்வு..!

நேரமில்லை என்று நீ சுட்டியிருந்தாலும் பாழும் மனம் பாசமலரிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறது.

எவ்வாறாயினும், கிடைத்த குறுகிய நேரத்தில் பதிவிட்டமைக்கு நன்றி.

மதுரை மைந்தன்
15-12-2008, 10:07 AM
இதனை இதனால் இவர் முடிக்கும் என்றாய்ந்து அய்யா தொடுத்த கணைக்கு, மிகச்'சிரி'யாக பதில் அளித்த அன்பு மதுரைக்கு பாராட்டுகள் பலப்பல..! பலே.. பலே..!! பல்லே.. பல்லே..!!!

இன்ட்ரொடக்ஷனிலேயே ஆரம்பித்த அசத்தல் கடைசிவரை டெம்போ குறையாமல் செல்கிறது..!

அன்பு மதுரை..! இவ்வளவுநாளா நீங்க படா சீரியஸ் பார்ட்டின்னு நெனச்சிருந்தேன்..!!

சிவா கை கொடுத்ததுக்கப்புறம், நானும் உங்க கையை குலுக்க விரும்பறேன்..!

உங்களது பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பர் ராஜா அவர்களே. நகைச்சுவையாக கதை எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தது. ஒரு நகைச்சுவை கதை " கலாட்டா கல்யாணம்" என்ற ஒனறை விரைவில் பதிவு செய்ய விருக்கிறேன். அதற்கு உங்களது ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன்.

ராஜா
15-12-2008, 10:12 AM
6. சிவா.ஜி அண்ணா ; திகில் கதைகள் மட்டுமல்லாது அனைத்து கதைகள் எழுதுவதிலும் வித்தகர் நீங்கள்! உங்கள் சிறுகதைகளில் அவற்றுக்கான இலக்கணம் எள்ளளவும் குறையாமல் இருக்கும்.......

...... அவ்ளோ குளோஸ் ரேஞ்ச்”

சபாஷ் சிவா..!

க்ளோஸ் ரேஞ்ச் சிறுகதை ஹை கிளாஸ் ரேஞ்ச்..!!!

20 வரிகளுக்குள் இவ்வளவு திருப்பங்களும், சஸ்பென்சும் வைக்க இயலுமா என்று வியக்கவைக்கும் கதை..!

சும்மாவா சொல்றாங்க.. திகில் கதை மன்னன்னு..!!

அசத்திட்டீங்க..!

சிவா.ஜி
15-12-2008, 10:21 AM
ஆஹா...ராஜா சாரின் பாராட்டு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐந்து நிமிடம் யோசித்து பத்து நிமிடத்தில் தட்டச்சி, பிழைதிருத்தி பதித்தேன். எத்தனையோ கதை பதித்தாலும் அங்கு கதையார்வம் உள்ளவர்கள் மட்டும்தான் வருவார்கள் ஆனால் இந்த திரி சான்றோர் பலரும் பங்கெடுக்கும் மரியாதைக்குரிய திரி. அதனால் மிக பயத்துடனே இருந்தேன். பிதாமகரின் பாராட்டுக்கிடைத்ததில் பயமகன்று சந்தோஷப்படுகிறேன்.

மிக்க நன்றி ராஜா சார்.

மதுரை மைந்தன்
15-12-2008, 10:31 AM
சிவா.ஜி சார் உங்க திகில் கதை பிராமதம். எப்படி குறுகிய அவகாசத்தில் ரத்தின சுருக்கமாக ஒரு திகில் கதையை உங்களால் தர முடிகிறது. நான் தொப்பி அணிவதில்லை. அணிந்திருந்தால் ஹாட்ஸ் ஆப் பண்ணியிருப்பேன். பாராட்டுக்கள்.

ராஜா
15-12-2008, 10:33 AM

அதே... அதே..!

ஆதவா
15-12-2008, 12:02 PM
2. ஆதவா அண்ணா; பல்துறை வித்தகர் நீங்கள்! உங்களிடம் கவிதை குறித்த வினாவை விடுக்க விரும்புகிறேன்.

? : பொதுவாக, கவிஞர்களுக்கு கவிபாட கொஞ்சம் கடினமான கருப்பொருள் என்று எதுவும் உண்டா? ( மிகவும் எளிதான கருப்பொருள் காதல் என்பதாக எண்ணற்ற இணையக்கவிஞர்கள் வாயிலாக அறிந்தேன். கடினம் எதுவென அறிந்திட விழைந்தேன்.) ஆமெனில் அது எது?

ஆ-பத்தில் என்னிடம் கேள்வி கேட்டதற்கு நன்றி அய்யா.... (அண்ணா என்று அழைக்காதீர்கள்.. ப்ளீஸ்)

முதலில்.... பல்துறை வித்தகர் என்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர். பல துறைகள் இருப்பதே எனக்குத் தெரியாது. :D

சரி.... இப்பொழுது கேள்விக்கு வருவோம்.

காதல் கவிதைகள் இன்று யார் யாரெல்லாமோ எழுதுகிறார்கள். வார்த்தைகளில் நளினமோ, புதுமையோ ஏதுமின்றி, ஏதோ காதல் கடிதம் எழுதுவதைப் போன்று எழுதுவதைக் கவிதையாக நினைத்துக் கொள்கிறார்கள். அதற்காக அவர்களைத் தவறாகச் சொல்லவில்லை. அந்த படியிலிருந்து அடுத்த படிக்குத் தாவிச் செல்ல அவர்கள் எப்பொழுதும் முனைவதில்லை. இதுதான் தவறு. காதல் கவிதைகள் எழுதுவது மிக மிக எளிதுதான்.. நீங்கள் எந்த ஒரு விசயத்தையும் அதில் நுழைக்கலாம். அப்படி நுழைக்காத விசயமே இல்லை எனும் அளவுக்கு இப்பொழுது கவிதைகள் பல்கிப் பெருகிவிட்டன. சில குறிப்பிட்ட வார இதழ்களில் இப்படியொரு மோசம் நடந்துவருகிறது.

உதாரணத்திற்கு..

அன்பே,
நீ என்னைக் கொள்ளை கொண்ட
மணல் லாரி

விழிக் குண்டுகளால்
என்னை சிதறடித்த
தீவிரவாதி

........ etc..

இப்படி கிடைத்த கேப்பிலெல்லாம் கவிதைகளைச் சொறுகுகிறார்கள்.. கவிதை புத்தகங்கள் கூட காதல் கவிதைகள் அடங்கிய தொகுப்புக்களே அதிகம் எழுதப்படுகிறதாம். இது ஒரு பிரசுரம் சொல்ல நான் கேட்டது.

சரி, கடினமான கருப்பொருள் என்பது என்ன? எது கடினம் என்று எப்படி வரையறுக்க முடியும்? உண்மைக் கவிஞன் எல்லையற்றுக் கிடப்பான். அவனுள் தோண்டத் தோண்டச் சுரப்பது கவிதை.. ஒவ்வொரு கவிஞனுக்குள்ளும் பலவிதமான வடிவங்கள், ரசனைகள்... ஆனால் எழுதமுடியாத கரு என்று யாரும் எக்கருவையும் விட்டுவைத்ததில்லை.... ஒருவேளை அக்கவிஞனுக்கு அது எழுதத் தெரியாமல் போயிருக்கலாம். அதை அடுத்தவன் செய்யக் கூடும்.

நான் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் கருக்கள், பெண்கள் சம்பந்தப்பட்டது. ஏனெனில் அதற்கு நான் பெண்ணுக்குள் நுழைய வேண்டும்.. இருப்பினும் ஒன்றிரண்டு கொடுத்திருக்கிறேன்.. அடுத்து, காமத் தலைப்புக்கள். கத்தி மேல் நடப்பதைப் போன்றது. சிறிது தவறினாலும் நன்றன்று.

மற்றபடி எக்கவிஞர்களுக்கும் எக்கருவும் கடினமல்ல..

அன்புடன்
ஆதவன்/

ஆதவா
15-12-2008, 12:08 PM
மதுரை அண்ணே,,,, கலக்கீட்டீங்க.. உண்மையிலேயே ரஜினி இடத்தில் ரஜினியையும் வடிவேலு இடத்தில் அவரையும் நினைத்துத்தான் படித்தேன்.....

வாழ்த்துக்கள்.... சாரே!

நிரன்
15-12-2008, 01:19 PM
ஆதவா அண்ணா போன்ற இயற்கவிஞ்ஞர்களிடம்
கடினம் என்பது பற்றி கேட்டால்.... அவருடைய அகராதியில்
அந்தப்பக்கம் காணப்படாது அய்யா!!! பிறவிக் கவிஞ்ஞர்களுக்கும்
இடையில் வருபர்க்கும் ஒப்பிட முடியுமா??... என்னைக் கேட்டால்
ஒப்பி்ட முடியாது என்றுதான் கூறுவேண்:D:D

(ஆதவா அண்ணா ரகசியமா வைச்சிருக்க வேண்டியதை இப்படியா பப்ளிக் பண்ணுறது கவிதை போல் எழுதும் கவியைக் கூறினேண்..):icon_ush::icon_ush:

ராஜா
15-12-2008, 01:25 PM
நன்றி ஆதவா..!

ஹி..ஹி.. கவிதைக்கும் எனக்கும் காததூரம்.. எனக்கு எந்தப்பொருளுமே கடினம்தான்..!

நீங்கள்ளாம் கில்லாடிகப்பா..!

ஆதவா
15-12-2008, 02:10 PM
ஆதவா அண்ணா போன்ற இயற்கவிஞ்ஞர்களிடம்
கடினம் என்பது பற்றி கேட்டால்.... அவருடைய அகராதியில்
அந்தப்பக்கம் காணப்படாது அய்யா!!! பிறவிக் கவிஞ்ஞர்களுக்கும்
இடையில் வருபர்க்கும் ஒப்பிட முடியுமா??... என்னைக் கேட்டால்
ஒப்பி்ட முடியாது என்றுதான் கூறுவேண்:D:D

(ஆதவா அண்ணா ரகசியமா வைச்சிருக்க வேண்டியதை இப்படியா பப்ளிக் பண்ணுறது கவிதை போல் எழுதும் கவியைக் கூறினேண்..):icon_ush::icon_ush:

இதெலென்ன நிரஞ்சன் இயல்கவிஞர் பிறவிக் கவிஞர் எல்லாம்.... :)

நிரஞ்சன்..... நீங்கள் நினைப்பது போலில்லை... சிலசமயம் மனம் வெறுமையாகி எந்தக் கவிதையும்... எந்த வார்த்தையும் கைகொடுக்காது.. நமக்கும் சிலசமயங்களில் அந்தப்பக்கங்கள் காணாமல் போய்விடுவதுண்டு....

அதேபோல்.... ஈழக் கவிதைகளோ, அல்லது வேறுநாட்டுக் கலாச்சாரத்துடன் கூடிய கவிதைகளோ எழுத நினைக்கும்பொழுது மனம் யோசிக்கத் தோன்றுகிறது.. நமக்கென உருவாக்கப்பட்டிருக்கும் வட்டத்திற்குள்ளே நாம் எழுதுகிறோமா அல்லது நமக்கு அடுத்த(வர்) பரிமாணங்கள் கிடைக்கப்பெறவில்லையோ என்று யோசிக்கிறேன்..

கடினம் என்று இதுவரையிலும் எண்ணாத வரையிலும் எதுவும் கடினமாகத் தோன்றவில்லை... அப்படியொரு கருவிற்கு நான் முயற்சித்தால் எனக்கும் புரியும்...............

நிரஞ்சன்... ஆதவன் அண்ணனில்லையப்பா.. சும்மா.. "ஆதவா" என்றே அழையுங்கள்..

நிரன்
15-12-2008, 02:50 PM

நன்றி அண்ணா....

சி........ சி...... ஆதவா:aetsch013:

அய்யா
15-12-2008, 02:50 PM
:aetsch013::lachen001::aetsch013:

நான் நினைத்தவாறே தூள் கிளப்பிவிட்டீர்கள் அண்ணா!
மிகவும் அழகாக வந்திருக்கிறது. திரும்பத்திரும்பப் படித்து மகிழ்ந்தேன். நன்றி!

அய்யா
15-12-2008, 02:57 PM
:icon_good::icon_good:.

நீங்கள் உண்மையிலேயே புதுமைப்பெண்தானக்கா!
கச்சிதமான பதிலால் நெஞ்சில் நிறைகிறீர்கள்.நன்றி!

அய்யா
15-12-2008, 03:04 PM
:medium-smiley-089::medium-smiley-088::medium-smiley-089:

மிகத்திறமைசாலியண்ணா நீங்கள்! பிரமிப்புடன் பாராட்டுகிறேன்.
மிகக்குறுகிய நேரத்தில் இப்படியொரு கதையைத் தரும் உங்களின் மனோவேகம் அபாரம்!

அய்யா
15-12-2008, 03:09 PM
:209::209::209:

உண்மையான பதிலில் உள்ளம் நிறைந்தீர்கள் ஆதவா!

அய்யா
15-12-2008, 03:13 PM
ஆ!10 இல் என்னையும் இணைத்த அய்யாவுக்கு நன்றி. விரைவில் பதிலுடன் வருகிறேன்.

பொறுமையாக வாருங்கள் அமரனண்ணா! காத்திருக்கிறேன்.

அய்யா
15-12-2008, 03:29 PM
மற்றோர் பதில்களும் காண விரும்புகிறேன். வாருங்கள் அண்ணன்மாரே!

rajudoss
15-12-2008, 03:57 PM
நல்ல முயற்சி

ராஜா
15-12-2008, 04:07 PM
நல்ல முயற்சி

இந்தத் திரியைப் பார்வையிடும் 308 வது உறவு ராஜு தாசுக்கு நல்வரவு..!

Keelai Naadaan
15-12-2008, 04:12 PM
[I]8. கீழை அண்ணா ; சிறுகதையைக்கூட தகவல் களஞ்சியமாக அமைத்துத் தருமளவுக்கு பொதுஅறிவுப் புலி நீங்கள்!

? : இன்றைய நாளில் இந்திய பாகிஸ்தான் போர் மூண்டால் உண்மையான வெற்றி யாருக்கு? இழப்புகளும், போருக்கு பிந்தைய தாக்கங்களும் (இரு நாடுகளிலும்) எவ்வாறு இருக்கும்?

அன்பிற்கினிய அய்யா,
கேள்வி வட்டத்துக்குள் என்னையும் சேர்த்தமைக்கு மிகவும் நன்றி.
என்னை பொது அறிவு புலி என தப்புகணக்கு போட்டு விட்டீர்கள்.
கதைகளின் சிறப்புக்காக, கதாபாத்திரங்களின் தொழிலைப்பற்றி சொல்வதும் சில சமயங்களில் விஷயங்களை சேகரித்து எழுதுவதும் உண்டு. அவ்வளவுதான்.

ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.
ஆனால் (தயவுசெய்து) கொஞ்சம் கால அவகாசம் தரவும்.

அன்புடன்

arun
15-12-2008, 06:22 PM
நீண்ட நாட்களுக்கு பிறகு ஆ-பத்துக்கு வருகிறேன்

அனைவரின் பதில்களும் அருமை

சிவா அவர்களின் கதை சூப்பரோ சூப்பர் அதுவும் அவர் கதையை எவ்வளவு நேரத்தில் படைத்தேன் என சொன்னதை கேட்டு வியந்தேன்

மதுரை வீரனின் காமெடி சூப்பர்

மூர்த்தி அவர்களின் ஆதங்கம் நியாயமானது தான்

ஆதவா அவர்களின் பதிலும் சூப்பர்

ஓவியா குறைவாக சொன்னாலும் நிறைவாக சொல்லி உள்ளீர்கள்

அனைவருக்கும் எனது :aktion033::aktion033::aktion033::aktion033::food-smiley-004::food-smiley-004::food-smiley-004:

ரங்கராஜன்
16-12-2008, 04:24 AM
திரு.சிவா
உங்களின் கதையை படித்தேன், 20 வரிகளில் ஒரு திகில் கதை எழுதுவது மிகவும் கஷ்டம், இருந்தும் அதை சிறப்பாக செய்து இருக்கீங்க. என்னது கதையை எதோ ஏழைக்குத் தகுந்த எள்ளுருண்டையாக எழுதுறீங்களா?, நீங்கள் பணக்காரனுக்கு தகுந்த முந்திரி உருண்டை. இன்னும் பல நல்ல படைப்புகளை தாருங்கள்.

திரு. மதுரை சார்
நகைச்சுவை என்பது எல்லோருக்கும் வந்துடாது, ஆனால் உங்களுக்கு நல்லா வருது, ஏனென்றால் சிந்திப்பது அனைத்தும், எழுதும் பொழுது நகைச்சுவையாக இருக்காது. ஆனால் உங்கள் வரிகளில் அது தெரிகிறது. நீங்கள் உங்கள் போட்டோவை முதலில் பதித்து இருந்தீர்கள், நான் பார்த்து இருக்கிறேன் (சற்று என் ஆதர்ஸன எழுத்தாளர் சுஜாதாவை போல இருப்பீர்கள்), வயது ஏறக்குறைய அவருடையது தான் இருக்கும் என்று நினைக்கிறேன் (தோற்றத்தில் மட்டும் தான், எழுத்தில் அவரை போலவே இன்னும் நீங்கள் பிறந்த குழந்தையே). இந்த வயதிலும் நகைச்சுவையாக எழுதுவது என்பது மிகவும் கடினம், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் நகைச்சுவையாக? எதாவது எழுதினால் அது கண்டிப்பாக என்னுடைய கல்லூரி, பள்ளி காலங்களில் நிகழ்ந்ததாக இருக்கும். இப்பொழுதெல்லாம் நகைச்சுவையாக சிந்திக்க வரமாட்டுது (இந்த வயதிலே). ஆனால் நீங்கள் நகைச்சுவையை அருமையாக எழுதுறீங்க, வாழ்த்துக்கள். ஒரு வாசகனின் விருப்பமாக எடுத்துக் கொண்டு, உங்களின் அடுத்த சிறுகதையாக இளமை ததும்பும் ஒரு காதல் கதையை எழுதுங்கள். நன்றி

ராஜா அண்ணா
"யூ டூ புருடஸ்". என் சக்களத்தி கதையின் சக்களத்திகளில் நீங்களும் ஒருவரா?. அதனால் தான் "என்னத்த சொல்ல" என்று விமர்சனம் எழுதி இருந்தீங்களா. ராஜா அண்ணா ஸ்டேண்டப் ஆன் தீ பேஞ்சு. (சும்மா ..... சும்மா). அதற்க்கு நீங்களும் காரணம் என்று சொல்லி வருந்துனீர்களே............., பெரிய மனுசன் பெரிய மனுசன் தான்.

ஓவியா சீஸ்டர்
இடி இடிக்கிறது, மின்னல் கிழிக்கிறது, மழை கொட்டுகிறது, கடல் பொங்குகிறது, ஏன் இவ்வளவு ஸ்பீடா பதில் தந்தீங்க, ஒரு இரண்டு மாசம் ஆவும்னு நினச்சேன்.

மதுரை மைந்தன்
16-12-2008, 05:16 AM
திரு. மதுரை சார்
நகைச்சுவை என்பது எல்லோருக்கும் வந்துடாது, ஆனால் உங்களுக்கு நல்லா வருது, ஏனென்றால் சிந்திப்பது அனைத்தும், எழுதும் பொழுது நகைச்சுவையாக இருக்காது. ஆனால் உங்கள் வரிகளில் அது தெரிகிறது. நீங்கள் உங்கள் போட்டோவை முதலில் பதித்து இருந்தீர்கள், நான் பார்த்து இருக்கிறேன் (சற்று என் ஆதர்ஸன எழுத்தாளர் சுஜாதாவை போல இருப்பீர்கள்), வயது ஏறக்குறைய அவருடையது தான் இருக்கும் என்று நினைக்கிறேன் (தோற்றத்தில் மட்டும் தான், எழுத்தில் அவரை போலவே இன்னும் நீங்கள் பிறந்த குழந்தையே). இந்த வயதிலும் நகைச்சுவையாக எழுதுவது என்பது மிகவும் கடினம், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் நகைச்சுவையாக? எதாவது எழுதினால் அது கண்டிப்பாக என்னுடைய கல்லூரி, பள்ளி காலங்களில் நிகழ்ந்ததாக இருக்கும். இப்பொழுதெல்லாம் நகைச்சுவையாக சிந்திக்க வரமாட்டுது (இந்த வயதிலே). ஆனால் நீங்கள் நகைச்சுவையை அருமையாக எழுதுறீங்க, வாழ்த்துக்கள். ஒரு வாசகனின் விருப்பமாக எடுத்துக் கொண்டு, உங்களின் அடுத்த சிறுகதையாக இளமை ததும்பும் ஒரு காதல் கதையை எழுதுங்கள். நன்றி

அன்பு நண்பர் மூர்த்தி அவர்களே

என்னை அந்த மாபெரும் எழுத்தாளர் சுஜாதாவுடன் ஒப்பிட்டிருக்கிறீர்கள். நன்றி. ஆனால் நான் அதற்கு தகுதி படைத்தவனல்ல எழுத்திலும் வயதிலும் சரி. சுஜாதா அவர்கள் இறக்கும் போது 70 வயதை தாண்டி விட்டார். நான் அவருக்கு 15 வயது குறைந்தவன். நீங்கள் சொல்வது போல் ஒரு இளமை ததும்பும் காதல் கதையை தொடர் கதையாக (கதை கொஞசம் நீளமானது) தயாரித்து இருக்கிறேன். கதையில் சற்று வித்தியாசமாக சமபவங்களுக்கு ஏற்ற திரைப் பாடலகளை தரலாம் என்றும் இருக்கிறேன். உங்களது ஆதரவு அந்த கதைக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.

ரங்கராஜன்
16-12-2008, 05:23 AM

கண்டிப்பா கண்டிப்பா

அமரன்
16-12-2008, 09:10 AM
(ஆனால் சின்ன விஷயத்தை தான் நேராக சொல்லாமல் குழப்புவார், ஹா ஹா ஹா)..

. அமரனைப் பற்றி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. .

நடத்துங்கய்யா நடத்துங்க..:)

அமரன்
16-12-2008, 09:54 AM
அமரன் அண்ணா; ? : மன்றப் பொறுப்பாளராக திறம்படச் செயலாற்றி வருகிறீர்கள். இந்தப்பணியில் நிறைய இனிய நிகழ்வுகள் இருக்கக்கூடும். அவற்றில், உங்களுக்கு நீங்களே சபாஷ் சொல்லி கழுத்துப்பட்டியை உயர்த்திக்கொண்ட சம்பவமொன்றை எங்களிடம் பகிர்ந்துகொள்ள இயலுமா?

என்னை வினவி என்னையே வினவவைத்த கேள்வி. நிதானமாகவும் அவதானமாகவும் வார்த்தைச் சரங்களை தேர்ந்தெடுத்து வீசவேண்டிய நிலைக்கு தள்ளிய வேள்வி. நிர்வாக இரகசியத்தின் வாடை வீசக்கூடாது. எவரையும் பதம் பார்க்கக் கூடாது. அதே நேரம் இதமா தொடும் கூர்மை இருக்கவேண்டும். ஓரளவுக்கு முயல்கிறேன்.

முதலில் மன்றப் பொறுப்பாளராக திறம்படச் செயலாற்றி வருகிறேனா என்றால் இல்லை என்பேன். மன்றத்தோட்டம் சுத்தமாக மட்டுமல்லாது எல்லா வகையிலும் நிறைந்தும் இருக்க வேண்டும். இரண்டையும் செவ்வனே செய்யும் ஒருவரே சிறப்பான பொறுப்பாளர். சுத்தத்தில் திறம்படச் செயலாற்ற நிறைவை பேணுவதில் திறமையாக செயற்பட முடியவில்லை. மரத்தின் இலைகள் உதிர்ந்து சருகாகி அல்லது அழுகி அசேதனமாகி தோட்டத்துக்கு வளமாகலாம். சில காரணங்களால் சருகுகள் பற்றியோ பற்றவைக்கப்பட்டோ தோட்டத்துக்கு நாசம் விளைக்கலாம். அப்படி நடந்தது என்பதுக்காக மரத்தை தறிக்கக் கூடாது. மரத்தின் கிளைபரவலை முடக்கக் கூடாது. எல்லாச் சந்தர்ப்பத்திலும் நான் அப்படி இருந்தேனா என்றால் இல்லை என்ற பதிலே எனக்குக் கிடைக்கிறது. மரம் பட்டுப்போவதுக்கும் அதன் பலன் கெட்டுப்போவதுக்கும் கட்டுப்படுவதும் தோட்டக்காரன்/ காவல்காரன் தானே பொறுப்பு. அதனால் திறம்படச் செயலாற்றும் பொறுப்பாளர் என்ற நிறைவு எனக்குள் என்றுமே ஏற்பட்டதில்லை.

நிலமை இப்படி இருக்க காலரை தூக்கி விட்ட இனிய நிகழ்வு எப்படி இருக்கும். அப்படி நிகழ்ந்திருந்தாலும் அதுக்குக் காரணம் நானில்லை. முன்னோடிப் பொறுப்பாளர்கள். அவர்கள் அமைத்த பாதையில், சாலையோர திசைகாட்டிகளின் உதவியுடன், கூடவரும் வழிகாட்டிகளின் துணையுடன் பயணிக்கும் என்னால் எப்படி என் வெற்றிகளுக்கு சொந்தம் கொண்டாட முடியும். கலரை தூக்கிவிட முடியும். பெரியவர்கள் செய்வதை பார்த்து தானும் செய்த சின்னக்குழந்தையின் சந்தோசம் எனக்கு என்றுமே ஏற்பட்டதில்லை; பெரியவர்கள் வேண்டுமானால் சந்தோசப் பட்டிருக்கலாம். இது மன்றத்திலும் வாழ்விலும் எனக்குப் பொருந்தும்.

மிகவும் உன்னிப்பாக தேடியதில், காலரை தூக்கி விட்ட சந்தர்ப்பங்கள் சில தட்டுப்படுகிறன. ஆங்காங்கே மிகவும் குறைந்தளவில் சிந்தப்பட்ட/ உதிர்க்கப்பட்ட முட்களை மிதிக்காது, மிதித்தாலும் தைத்த வலியைக் கோபமாக மாற்றி கொக்கியில் மாட்டாது போன மிகவும் குறைந்தளவு சந்தர்ப்பங்களை நினைத்து இப்போது காலரை தூக்கி விட்டுக்கொள்கிறேன்.

இதைப்படிச்சுட்டு மூர்த்தி மறுபடியும் ஆரம்பிக்கப் போறார். :)

மன்றம் தாண்டி நிகழ்ந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன். ஏனெனில் இது ஒன்றுதான் யாரும் எனக்குச் சொல்லித்தராமல் நான் செய்தது. காலரை தூக்கி விட்டதும் இந்த ஒரு சந்தர்ப்பத்தில்தான். என் பணியில் குறித்த ஒரு பிரதேசத்தின் தலைமையாளர் தனிச்சையாகச் செயல்பட்டார். நிர்வாகக் குழறுபடிகள் பலதை செய்தார். பிரதேச வேலைத்திட்டங்கள் ஸ்தம்பிதமாகி விட்டது. அவரை பொறுப்பிலிருந்து விடுவிக்க இயலாது. விடுவித்தால் பணிக்கு பாதிப்பு. கிளையே இயங்க இயலாத நிலையும் வரலாம். என்ன செய்யலாம் என்ற ஒரு ஆலோசனை நடந்தபோது அவர் அப்போதிருந்த பதவியை விட உயர்பதவியை வழங்கி தலைமைச்செயலகத்தில் ஒரு பொம்மையாக இருத்தலாம்னு சொன்னேன். அந்த யோசனைக்கு தக்க பலன் கிடைத்தது. அப்போது காலரை தூக்கி விட்டேன் படு ஸ்டைலாக.

வாய்ப்புக்கு நன்றி அய்யா. படித்து சகிக்கப்போகும் அனைவருக்கும் சேர்த்து நன்றி.

ராஜா
16-12-2008, 10:20 AM
அடக்கத்தின் மறுவுருவம் அமரனிடம் அய்யா இப்படி ஒரு கேள்வியை வீசியபோதே எனக்குத் தெரியும்.. பதிலும் இப்படித்தானிருக்கும் என்று..!

மன்றம் தாண்டி நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் அந்த சம்பவம், அர்த்த சாத்திரம் எழுதிய அறிஞரொருவரை எனக்கு நினைவுபடுத்துகிறது..!

தங்கள் பணி எங்கும் சிறக்கட்டும் அமர்..!

சூரியன்
16-12-2008, 10:27 AM
மிகவும் அற்புதமான பதில் அமர் அண்ணா.

Narathar
16-12-2008, 10:28 AM
10. நாரதர் அண்ணா ; நீங்கள் ஒரு ஊடகவியலாளரென அறிகிறேன். அவ்வகையில் சில செய்திகள் சாதாரண மக்களான எங்களைவிட, உங்களைப் போன்றோருக்கு முன்கூட்டியும், முழு அளவிலும் தெரிந்திருக்கும்.

? : தமிழீழம் சமீபத்தில் சாத்தியமாகக்கூடிய ஒன்றுதானா? இல்லை இன்னும் நாளெடுக்குமா? உங்கள் நோக்கில் அது மலர்வதெப்போது?

பதில் சொல்ல மிக மிக மிக கடினமான கேள்வியொன்றை கேட்டுள்ளீர்கள்.

இதற்கு பதில் எனக்கல்ல போராடிக்கொண்டிருக்கும் போராளிகளுக்கும் அவர்களை ஒடுக்க நினைக்கும் அரசாங்கத்துக்கும் தெரியாத ஒன்று! ஆனால் என்னை நம்பி கேட்டிருக்கின்றீர்கள் பார்ப்போம்.......

கொஞ்சம் காலம் தாருங்கள் விடை தருகின்றேன்..........

நிரன்
16-12-2008, 11:08 AM
கொஞ்சம் காலம் தாருங்கள் விடை தருகின்றேன்..........

நாரா நன்றாகத்தான் சமாளிக்கிறார் :D:D

(பாவம் நாரதர் வசமா மாட்டிக்கிட்டார் ஆப்பு கண்ணுக்கு தெரியாதுங்கோவ்):D

நிரன்
16-12-2008, 11:23 AM
அமரன் அண்ணா பதில்கள் மிகவும் அருமையானவை.
உங்கள் பதில்களில் ஒரு மன்றப் பொறுப்பாளர் உணர்வே தோன்றவில்லை. ஒரு ஆசான் கூறிய நற் புத்திமதியென்றே கூறலாம்
நடுனிலைக் கருத்து.+நல்ல அறிவுரை.

நன்றி அமரன் அண்ணா+அய்யா

ராஜா
16-12-2008, 01:21 PM
4. ஏ.ஆர்.ஆர். அய்யா ; உங்கள் ஆர்க்குட் குழுமங்களின் உறுப்பினன் நான். உங்களின் மடல் ஒன்றின் மூலமே இந்த தமிழ்மன்றப் புதையலை கண்டெடுத்தேன். இந்த தினசரி மடற்சேவைத் திட்டம் உங்கள் மனதில் எவ்வாறு உருவாயிற்று?

நன்றி அய்யா..!

சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் என் மகனின் நண்பரொருவர் ஆர்க்குட்டை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலும்கூட, எனது ஆங்கில அறிவென்பது மிகக் குறைவானதுதான். அதற்கும் தீர்வாக, இ கலப்பையையும் அவரே எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

மெல்ல மெல்ல என் மகனின் நண்பர்கள், அவர்களின் நண்பர்களென நட்பு வட்டம் பெருகிற்று. அப்போது அவர்களுக்கு சில நகைச்சுவைத் துணுக்குகளை ஸ்கிராப் செய்வதுண்டு. அதற்கு ஆதரவும் பாராட்டும் குவிந்தன.

ஒருமுறை ஒருவர் எனக்கு ஸ்கிராப் செய்திருந்தார்..

" அப்பா.. உங்களின் நகைச்சுவைத் துணுக்குகள் எனக்கு புத்துணர்ச்சியைத் தருகின்றன. மனச்சோர்வையும், வெறுமையையும் தரும் என் பணியினூடே உங்கள் நகைச்சுவைகள் எனக்கு உற்சாகம் தருகின்றன. தமிழ் எழுத்துகளைக் காணும்போது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. முடிந்தவரை எனக்கு அனுப்பி உதவுங்கள் அப்பா..!"

அப்போது இதுபற்றி என் மகனிடம் தெரிவித்தபோது, அவர் சொன்னார்.. "உண்மைதானப்பா.. கணிணித் திரையில் தொடர்ச்சியாக ப்ரொக்ராம்களை எழுதிக்கொண்டும், சரிபார்த்துக்கொண்டும், தவறுகளைக் களைந்துகொண்டும் பணியாற்றும் எண்ணற்றோர் கிட்டத்தட்ட இயந்திரமாகவே மாறிவருகின்றனர். உங்கள் உதவியால் அவர்களுக்கு ஒரு சிறு புத்துணர்வு கிடைக்குமென்றால் அதை இயன்றவரை செய்யுங்கள்..!"

பின்னர் என் மகன், குழுமங்கள் அமைக்கும் முறையையும் சொல்லித் தந்தார். அவ்வாறு உருவானவையே என் ஆர்க்குட் நகைச்சுவைக் குழுமங்கள்..! அவற்றைத் துவக்கி தினமும் என் உறுப்பினர்களுக்கு நகைச்சுவை மடல் அனுப்பி வருகிறேன்.

மீண்டும் ஒருநாள், வேறொரு உறவின் செய்தி எனக்கு இன்னுமொரு சேவையாற்றும் வாய்ப்பைத் தந்தது.

அவரது செய்தி..

" அய்யா.. உங்கள் நகைச்சுவைகளைப் படித்து மனம் மகிழ்வதுடன், நல்ல தமிழையும் அறிகிறோம். ஓரளவு பிழையின்றி தமிழில் எழுத கற்று வருகிறோம். நன்றி..!"

இது என் சேவைக்கான இன்னொரு பலனையும் அறியச் செய்தது. அதன் தொடர்பாக உருவானவைதான், பொது அறிவுத் தனியினங்கள். தமிழ் வழியே பல்துறைக் கருத்துகளையும் ஏராளமானோருக்கு தினமும் அனுப்பி வருகிறேன்.

இந்தச் சேவை எனக்கு மனநிறைவைத் தருவதோடு, எழுத்தாளர்கள், ( சூரியன் எஃப்.எம். அறிவிப்பாளினி உள்ளிட்ட) ஊடகத்துறையில் உள்ளோர், ( நீதியரசர் உள்ளிட்ட) சமுதாயத்தின் உயர்மட்டத்தில் உள்ளோர், கல்விப் பணியாற்றுவோர் என ஏராளமான நண்பர்களையும் பெற்றுத் தந்திருக்கிறது.

மிக மனநிறைவான பணி இது..!

நகைச்சுவையால் அவர்கள் மனதையும், பொது அறிவுத் தகவல்களால் அவர்கள் மூளையையும் வளப்படுத்த என்னால் ஆன இனிய சேவை..!

ஆதவா
16-12-2008, 01:38 PM
முதலில் மன்றப் பொறுப்பாளராக திறம்படச் செயலாற்றி வருகிறேனா என்றால் இல்லை என்பேன்.

பொய்தான் சுடுகிறது அமரன்.. பெயருக்கு பொறுப்பாளனாக இருந்து பொறுப்பற்றுத் திரிந்தவன் என்பது பலர் அறிந்த ஒன்று. ஆனால் திறம்பட செயலாற்றி வரவில்லை என்று நீங்கள் சொல்வது என்னால் ஏற்க முடியாதது..
ஏனெனில்...

மற்ற எப்பொறுப்பாளரையும் விட அதிகம் வேலை செய்தவர் நீங்கள் என்பது பலர் அறிந்த உண்மை...

நிலமை இப்படி இருக்க காலரை தூக்கி விட்ட இனிய நிகழ்வு எப்படி இருக்கும்.

பல இருக்கின்றன அமரன்... ஆனால் எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது.. கூடாது..

மன்றம் தாண்டி நிகழ்ந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன். ஏனெனில் இது ஒன்றுதான் யாரும் எனக்குச் சொல்லித்தராமல் நான் செய்தது. காலரை தூக்கி விட்டதும் இந்த ஒரு சந்தர்ப்பத்தில்தான். என் பணியில் குறித்த ஒரு பிரதேசத்தின் தலைமையாளர் தனிச்சையாகச் செயல்பட்டார். நிர்வாகக் குழறுபடிகள் பலதை செய்தார். பிரதேச வேலைத்திட்டங்கள் ஸ்தம்பிதமாகி விட்டது. அவரை பொறுப்பிலிருந்து விடுவிக்க இயலாது. விடுவித்தால் பணிக்கு பாதிப்பு. கிளையே இயங்க இயலாத நிலையும் வரலாம். என்ன செய்யலாம் என்ற ஒரு ஆலோசனை நடந்தபோது அவர் அப்போதிருந்த பதவியை விட உயர்பதவியை வழங்கி தலைமைச்செயலகத்தில் ஒரு பொம்மையாக இருத்தலாம்னு சொன்னேன். அந்த யோசனைக்கு தக்க பலன் கிடைத்தது. அப்போது காலரை தூக்கி விட்டேன் படு ஸ்டைலாக.

மன்றத்திலும் நிங்கள் எப்படி நடந்திருப்பது கண்டு வியந்திருக்கிறேன்...

அய்யா
16-12-2008, 04:27 PM
அன்பிற்கினிய அய்யா,
கேள்வி வட்டத்துக்குள் என்னையும் சேர்த்தமைக்கு மிகவும் நன்றி.
என்னை பொது அறிவு புலி என தப்புகணக்கு போட்டு விட்டீர்கள்.
கதைகளின் சிறப்புக்காக, கதாபாத்திரங்களின் தொழிலைப்பற்றி சொல்வதும் சில சமயங்களில் விஷயங்களை சேகரித்து எழுதுவதும் உண்டு. அவ்வளவுதான்.

ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.
ஆனால் (தயவுசெய்து) கொஞ்சம் கால அவகாசம் தரவும்.

அன்புடன்

சரி அண்ணா! நீங்கள் வரும்வரை காத்திருக்கிறேன்!

அய்யா
16-12-2008, 04:35 PM
[COLOR=black] :angel-smiley-023::angel-smiley-023::angel-smiley-023:

சங்கு சுட்டாலும் வெண்மை தரும். பொன்னைப் புடம் போடப்போட பொலிவு வரும்!

நன்றி அமரனண்ணா!

அய்யா
16-12-2008, 04:38 PM
பதில் சொல்ல மிக மிக மிக கடினமான கேள்வியொன்றை கேட்டுள்ளீர்கள்.

இதற்கு பதில் எனக்கல்ல போராடிக்கொண்டிருக்கும் போராளிகளுக்கும் அவர்களை ஒடுக்க நினைக்கும் அரசாங்கத்துக்கும் தெரியாத ஒன்று! ஆனால் என்னை நம்பி கேட்டிருக்கின்றீர்கள் பார்ப்போம்.......

கொஞ்சம் காலம் தாருங்கள் விடை தருகின்றேன்..........

சரி அண்ணா! நீங்கள் வரும்வரை காத்திருக்கிறேன்!

அய்யா
16-12-2008, 04:43 PM
:nature-smiley-009::nature-smiley-009::nature-smiley-009:

உங்கள் சேவை இன்னும் விரிவடைந்து எண்ணற்றோர் பயன்பெறட்டும்!

Keelai Naadaan
16-12-2008, 05:07 PM
[I]
? : இன்றைய நாளில் இந்திய பாகிஸ்தான் போர் மூண்டால் உண்மையான வெற்றி யாருக்கு? இழப்புகளும், போருக்கு பிந்தைய தாக்கங்களும் (இரு நாடுகளிலும்) எவ்வாறு இருக்கும்?
பரப்பளவு, மக்கள்தொகை, ராணுவபலம் எல்லாமே இந்தியாவைவிட பாகிஸ்தானில் குறைவே. ஏற்கனவே இரண்டுமுறை தோற்றுள்ளது.
இருப்பினும் போர் மூண்டால் உண்மையான வெற்றி தீவிரவாதிகளுக்கு தான்.

போர் உண்டானால் நூற்றுகணக்கில் உயிர்பலி ஏற்படும். உயிர்பலி மட்டுமல்ல, பலர் உடல் ஊனமாவார்கள். அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.
இங்கே உயிர்பலி என்பதை மட்டும் பார்க்காமல் அவர்கள் குடும்பத்தாரின் வேதனையையும் நாம் யோசிக்க வேண்டும்

தீவிரவாதிகள் நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பார்கள். சீனா மறைமுக உதவி செய்யக்கூடும்.

வளைகுடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் இந்திய-பாகிஸ்தானி மக்களிடையே மனக்கசப்பு ஏற்படும்.

பொதுவாகவே சீர்கெட்டுப்போன இந்திய பாகிஸ்தான் உறவு மேலும் மோசமாகும்.

தற்போதைய நிலையில் உலகமே பொருளாதார நிலையில், மந்தமாய் இருக்கும் போது இப்போது சண்டையிட்டு கொண்டால்,
இரு நாடுகளின் பொருளாதார நிலை இன்னும் மோசமாகலாம்.

உள்நாட்டில் விலைவாசி உயரும். உடனடியாக இந்திய ஒற்றுமைப்பற்றி எல்லோரும் பேசுவோம். ஆனால் நாட்கள் கடந்தபின்பு மதக்கலவரங்கள் ஏற்படக்கூடும்.

காந்தியடிகள் எவ்வளவோ மன்றாடியும் தனியாக பிரிந்து போன சகோதரர்கள் பாகிஸ்தானியர். பாகிஸ்தான் கவர்னர் ஜெனரலாக பதவியேற்ற, பாகிஸ்தானை பிரித்த முகம்மது அலி ஜின்னா பதவியேற்று பதின்மூன்று மாதங்களில் நோய்வாய்ப்பட்டு இறந்தாராம்.

அவர் டாக்டர்களிடம் சொன்ன கடைசி வார்த்தை "நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறே, இந்தியாவை இரண்டாக பிரித்தது தான்". என்பதாக படித்த நினைவு.

நான் பணிபுரியும் அலுவலகத்தில் (அபுதாபி-துபாய் பிரிவில்) நிறைய பேர் பாகிஸ்தானியர் இருக்கிறார்கள். எனக்கு சில பாகிஸ்தான் நண்பர்கள் உண்டு.
எல்லோரும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறார்கள்.
ஆறெழு வருடங்களுக்கு முன்பு எனக்கு எனக்கு பாகிஸ்தான் என்றால் சற்று கோபம் ஏற்படும். இப்போது அந்த கோபம் அவசியமற்றது என புரிந்து கொண்டேன்.
இரு நாட்டினரும் காழ்ப்புணர்ச்சி வளர்த்துக்கொள்வது நல்லதல்ல.
பாகிஸ்தான் ஒன்றும் வளர்ந்த நாடல்ல. அங்கிருக்கும் பலரும் அங்கும் பலர் குடும்பம், மனைவி மக்களை பிரிந்து வேறு நாடுகளுக்கு சென்று பணிபுரிகிறார்கள்.
அங்கும் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகம்.

போர் என்பது கடைசி வழியாக இருக்க வேண்டும். அமைதி பேச்சு நாசமாக வேண்டும் என்ற தீவிரவாதிகளின் தூண்டிலில் இரு அரசுகளும் சிக்க கூடாது.

உங்களுடைய கேள்விக்கு இது சரியான பதிலா என தெரியவில்லை. இருப்பினும் மனதில் பட்டதை சொன்னேன்.
வாய்ப்பளித்தமைக்கு மிகவும் நன்றி.

அன்புடன்

Narathar
16-12-2008, 05:14 PM
உங்கள் பதிலில் யதார்த்ததை உணர்கின்றேன் கீழைநாடான் அவர்களே....
உண்மையில் போர் மூண்டால் வெற்றி தீவிரவாதிகளுக்குத்தான்!
சரியாகச்சொன்னீர்கள்.......

Keelai Naadaan
16-12-2008, 05:20 PM
உங்கள் பதிலில் யதார்த்ததை உணர்கின்றேன் கீழைநாடான் அவர்களே....
உண்மையில் போர் மூண்டால் வெற்றி தீவிரவாதிகளுக்குத்தான்!
சரியாகச்சொன்னீர்கள்.......
மிக நன்றி நாரதரே.

அய்யா
16-12-2008, 05:40 PM
:icon_b::icon_b::icon_b:

விரிவான ஆய்வு! உண்மையில் உங்கள் மூலம் தெரிந்துகொள்ளவே இக்கேள்வியைக் கேட்டேன். ஒரு மாணவன் ஆசிரியரிடம் விளக்கம் கேட்டுத் தெளிவதைப்போல.

நன்றி கீழை அண்ணா!

நிரன்
16-12-2008, 07:14 PM
பதில்கள் நன்றாக உள்ளது நாடான் அண்ணா!

போர் உருவாவதால்.. யாருக்கும் எந்த லாபமும்
ஏற்படப்போவதில்லை. உயிர்ச்சேதங்களும்... பொருளாதார
நெருக்கடியும்தான் மிஞ்சும்.அதற்கு உதாரணமாக
அண்மை நாடான இலங்கையையே நாம் எடுத்துக் கொள்ளலாம்

நன்றி :icon_b:

ராஜா
17-12-2008, 02:28 AM
கீழையாரின் பதில் மேலோங்கி நிற்கிறது..!

கடினமான கேள்வியென்றாலும், கவனமெடுத்து சிறந்த பதிலளித்து சிறப்பித்தமைக்கு நன்றி நண்பரே..!

ராஜா
17-12-2008, 06:21 AM
இம்மாமன்றத்தில் நான் ஓரளவு அறிந்த நண்பர்களிடம் என் சிறுபிள்ளைத்தனமான கேள்விகளைத் தொடுக்கிறேன். சிரமம் பாராது பதிலளிக்க வேண்டுகிறேன். ஏதேனும் தவறிருப்பின் தயவுசெய்து மன்னிக்கவும்.

1. அமரன் அண்ணா; தமிழ் மன்றத்தில் என்னை நோக்கி நீண்ட முதல் நட்புக்கரத்துக்கு சொந்தக்காரர் நீங்கள்! உங்களிடம் முதலில் வினவுவதில் மகிழ்கிறேன்.

? : மன்றப் பொறுப்பாளராக திறம்படச் செயலாற்றி வருகிறீர்கள். இந்தப்பணியில் நிறைய இனிய நிகழ்வுகள் இருக்கக்கூடும். அவற்றில், உங்களுக்கு நீங்களே சபாஷ் சொல்லி கழுத்துப்பட்டியை உயர்த்திக்கொண்ட சம்பவமொன்றை எங்களிடம் பகிர்ந்துகொள்ள இயலுமா?

2. ஆதவா அண்ணா; பல்துறை வித்தகர் நீங்கள்! உங்களிடம் கவிதை குறித்த வினாவை விடுக்க விரும்புகிறேன்.

? : பொதுவாக, கவிஞர்களுக்கு கவிபாட கொஞ்சம் கடினமான கருப்பொருள் என்று எதுவும் உண்டா? ( மிகவும் எளிதான கருப்பொருள் காதல் என்பதாக எண்ணற்ற இணையக்கவிஞர்கள் வாயிலாக அறிந்தேன். கடினம் எதுவென அறிந்திட விழைந்தேன்.) ஆமெனில் அது எது?

3. இளசு அண்ணா ; இம்மன்றத்திற்கு முதன்முதல் நான் அடியெடுத்து வைத்து, கண்ணுற்ற எண்ணற்ற பதிவுகளில் பெரும்பாலானவை உங்களுடையவையே!

? : அறிவியலின் தேடலுக்கும், தாக்கத்துக்கும் அளவென்பதே இல்லையென்று தோன்றுகிறது. எனினும் அறிவியலின் நெடிய கரங்கள் அவ்வளவாக அணுகமுடியாத துறையென்று எதுவுமுண்டா? ஆமெனில் அது எது?

4. ஏ.ஆர்.ஆர். அய்யா ; நீங்கள் அன்றாடம் உறுப்பினர்களுக்கு அனுப்பும் நகைச்சுவையும், பொதுஅறிவுத் துணுக்குகளும் ஆர்க்குட் தமிழில் வெகு பிரபலம். மிக அதிகமாக உறுப்பினர்களிடையே தமிழில் முன்னனுப்பப்படும் செய்தியும் உங்கள் மடல்களாகத்தான் இருக்குமென எண்ணுகிறேன்.

? : உங்கள் ஆர்க்குட் குழுமங்களின் உறுப்பினன் நான். உங்களின் மடல் ஒன்றின் மூலமே இந்த தமிழ்மன்றப் புதையலை கண்டெடுத்தேன். இந்த தினசரி மடற்சேவைத் திட்டம் உங்கள் மனதில் எவ்வாறு உருவாயிற்று?

5. ஓவியா அக்கா ; மன்ற உறவுகளிடையே மிகுந்த மதிப்புக்கும், அன்புக்கும், (ஆட்டோ பயம் கலந்த) மரியாதைக்கும் உரியவர் நீங்கள்!

? : உறுப்பினர்களின் பதிவுகளில் தவறென்றால் தட்டிக்கேட்பீர்கள். சரியென்றால் தட்டிக்கொடுப்பீர்கள். உங்கள் இயல்பு வாழ்க்கையிலும் இந்தப் போக்கை கடைப்பிடிப்பதுண்டா? ஆமெனில் அந்தப்போக்கு காரணமாக எதிர்கொள்ளும் இடர்களை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?

6. சிவா.ஜி அண்ணா ; திகில் கதைகள் மட்டுமல்லாது அனைத்து கதைகள் எழுதுவதிலும் வித்தகர் நீங்கள்! உங்கள் சிறுகதைகளில் அவற்றுக்கான இலக்கணம் எள்ளளவும் குறையாமல் இருக்கும்.

? : இந்த தம்பிக்காக, 20 வரிகளில் அனைத்து இலக்கணங்களுடன் ஒரு திடீர் திகில் சிறுகதை தரமுடியுமா?

7. மதுரை அண்ணா ; சவாலே திரியில் பெரும்பாலும் முதல் பதிவு உங்களுடையதாகவே இருக்கும். அந்த அளவுக்கு மின்னல் வேகச் சிந்தனைக்கு சொந்தக்காரர் நீங்கள்!

? : திரைத்துறை தொடர்பான உங்கள் நகைச்சுவைப் பதிவைக் கண்ணுற்றதால் இதைக் கேட்கிறேன். ரஜினியும் வடிவேலுவும் பெண்பார்க்கப் போகிறார்கள். பெண் அசின். மாப்பிள்ளை வடிவேலு. தோழனாக ரஜினி! ஒரு சிறு நாடகம் ஒரே காட்சியில் அமைத்துத் தரவியலுமா?

8. கீழை அண்ணா ; சிறுகதையைக்கூட தகவல் களஞ்சியமாக அமைத்துத் தருமளவுக்கு பொதுஅறிவுப் புலி நீங்கள்!

? : இன்றைய நாளில் இந்திய பாகிஸ்தான் போர் மூண்டால் உண்மையான வெற்றி யாருக்கு? இழப்புகளும், போருக்கு பிந்தைய தாக்கங்களும் (இரு நாடுகளிலும்) எவ்வாறு இருக்கும்?

9. மூர்த்தி அண்ணா ; மன்றத்தின் சகல பிரிவுகளிலும் கலக்கிவருகிற நீங்கள், வெகுவிரைவிலேயே மனங்கவர் பதிவாளர் தகுதியைப் பெற்றவர்.

? : உங்களின் மிகச்சிறந்த சிறுகதையொன்றுக்கு அவ்வளவாகப் பின்னூட்டங்கள் இல்லையென்றும், அதேநேரத்தில் பதிவாகியிருக்கும் வேறொருவரின் சுமாரான கதைக்கு பார்வைகளும் பின்னூட்டங்களும் குவிகிறதென்றும் கொள்வோம்; அப்போது ஒரு படைப்பாளியாக உங்கள் மனநிலை எவ்வாறிருக்கும்?

10. நாரதர் அண்ணா ; நீங்கள் ஒரு ஊடகவியலாளரென அறிகிறேன். அவ்வகையில் சில செய்திகள் சாதாரண மக்களான எங்களைவிட, உங்களைப் போன்றோருக்கு முன்கூட்டியும், முழு அளவிலும் தெரிந்திருக்கும்.

? : தமிழீழம் சமீபத்தில் சாத்தியமாகக்கூடிய ஒன்றுதானா? இல்லை இன்னும் நாளெடுக்குமா? உங்கள் நோக்கில் அது மலர்வதெப்போது?

மீதமுள்ள இருவரும் பதிலளித்தால் அடுத்த உறவை அழைக்கலாம்..!

சிவா.ஜி
17-12-2008, 06:29 AM
கீழையாரின் பதிலில் பரந்த பார்வையும், ஆராய்ந்து அறிந்து கொடுத்த விளக்கமும் காணக்கிடைக்கிறது. நீங்கள் சொல்லும் கருத்துகள் நிச்சயம் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை.

அருமையான பதில் கீழைநாடாரே......வாழ்த்துகள்.

ஆதவா
17-12-2008, 06:46 AM
கீழையாரின் பதில் சிறப்பாக இருக்கிறது.... வாழ்த்துக்கள் சார்.

ராஜா
17-12-2008, 06:52 AM
பரப்பளவு, மக்கள்தொகை, ராணுவபலம் எல்லாமே இந்தியாவைவிட பாகிஸ்தானில் குறைவே. ஏற்கனவே இரண்டுமுறை தோற்றுள்ளது. இருப்பினும் போர் மூண்டால் உண்மையான வெற்றி தீவிரவாதிகளுக்கு தான்.

போர் உண்டானால் நூற்றுகணக்கில் உயிர்பலி ஏற்படும். உயிர்பலி மட்டுமல்ல, பலர் உடல் ஊனமாவார்கள். அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.இங்கே உயிர்பலி என்பதை மட்டும் பார்க்காமல் அவர்கள் குடும்பத்தாரின் வேதனையையும் நாம் யோசிக்க வேண்டும்

தீவிரவாதிகள் நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பார்கள். சீனா மறைமுக உதவி செய்யக்கூடும்.வளைகுடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் இந்திய-பாகிஸ்தானி மக்களிடையே மனக்கசப்பு ஏற்படும்.பொதுவாகவே சீர்கெட்டுப்போன இந்திய பாகிஸ்தான் உறவு மேலும் மோசமாகும்.

தற்போதைய நிலையில் உலகமே பொருளாதார நிலையில், மந்தமாய் இருக்கும் போது இப்போது சண்டையிட்டு கொண்டால், இரு நாடுகளின் பொருளாதார நிலை இன்னும் மோசமாகலாம். உள்நாட்டில் விலைவாசி உயரும். உடனடியாக இந்திய ஒற்றுமைப்பற்றி எல்லோரும் பேசுவோம். ஆனால் நாட்கள் கடந்தபின்பு மதக்கலவரங்கள் ஏற்படக்கூடும்.

காந்தியடிகள் எவ்வளவோ மன்றாடியும் தனியாக பிரிந்து போன சகோதரர்கள் பாகிஸ்தானியர். பாகிஸ்தான் கவர்னர் ஜெனரலாக பதவியேற்ற, பாகிஸ்தானை பிரித்த முகம்மது அலி ஜின்னா பதவியேற்று பதின்மூன்று மாதங்களில் நோய்வாய்ப்பட்டு இறந்தாராம். அவர் டாக்டர்களிடம் சொன்ன கடைசி வார்த்தை "நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறே, இந்தியாவை இரண்டாக பிரித்தது தான்". என்பதாக படித்த நினைவு.

நான் பணிபுரியும் அலுவலகத்தில் (அபுதாபி-துபாய் பிரிவில்) நிறைய பேர் பாகிஸ்தானியர் இருக்கிறார்கள். எனக்கு சில பாகிஸ்தான் நண்பர்கள் உண்டு. எல்லோரும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறார்கள்.
ஆறெழு வருடங்களுக்கு முன்பு எனக்கு எனக்கு பாகிஸ்தான் என்றால் சற்று கோபம் ஏற்படும். இப்போது அந்த கோபம் அவசியமற்றது என புரிந்து கொண்டேன்.

இரு நாட்டினரும் காழ்ப்புணர்ச்சி வளர்த்துக்கொள்வது நல்லதல்ல.
பாகிஸ்தான் ஒன்றும் வளர்ந்த நாடல்ல. அங்கிருக்கும் பலரும் அங்கும் பலர் குடும்பம், மனைவி மக்களை பிரிந்து வேறு நாடுகளுக்கு சென்று பணிபுரிகிறார்கள். அங்கும் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகம்.

போர் என்பது கடைசி வழியாக இருக்க வேண்டும். அமைதி பேச்சு நாசமாக வேண்டும் என்ற தீவிரவாதிகளின் தூண்டிலில் இரு அரசுகளும் சிக்க கூடாது.

உங்களுடைய கேள்விக்கு இது சரியான பதிலா என தெரியவில்லை. இருப்பினும் மனதில் பட்டதை சொன்னேன்.
வாய்ப்பளித்தமைக்கு மிகவும் நன்றி.

அன்புடன்

உங்கள் பதிலில் யதார்த்ததை உணர்கின்றேன் கீழைநாடான் அவர்களே....
உண்மையில் போர் மூண்டால் வெற்றி தீவிரவாதிகளுக்குத்தான்!
சரியாகச்சொன்னீர்கள்.......

விரிவான ஆய்வு! உண்மையில் உங்கள் மூலம் தெரிந்துகொள்ளவே இக்கேள்வியைக் கேட்டேன். ஒரு மாணவன் ஆசிரியரிடம் விளக்கம் கேட்டுத் தெளிவதைப்போல.

நன்றி கீழை அண்ணா!

பதில்கள் நன்றாக உள்ளது நாடான் அண்ணா!

போர் உருவாவதால்.. யாருக்கும் எந்த லாபமும்
ஏற்படப்போவதில்லை. உயிர்ச்சேதங்களும்... பொருளாதார
நெருக்கடியும்தான் மிஞ்சும்.அதற்கு உதாரணமாக
அண்மை நாடான இலங்கையையே நாம் எடுத்துக் கொள்ளலாம்

நன்றி :icon_b:

கீழையாரின் பதில் மேலோங்கி நிற்கிறது..!

கடினமான கேள்வியென்றாலும், கவனமெடுத்து சிறந்த பதிலளித்து சிறப்பித்தமைக்கு நன்றி நண்பரே..!

கீழையாரின் பதிலில் பரந்த பார்வையும், ஆராய்ந்து அறிந்து கொடுத்த விளக்கமும் காணக்கிடைக்கிறது. நீங்கள் சொல்லும் கருத்துகள் நிச்சயம் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை.

அருமையான பதில் கீழைநாடாரே......வாழ்த்துகள்.

கீழையாரின் பதில் சிறப்பாக இருக்கிறது.... வாழ்த்துக்கள் சார்.

இந்தக் கேள்வித் தொகுப்பின் சூப்பர் ஹிட் பதில்..!!!

பாராட்டுகள் கீழை நாடன்..!

இடம் பார்த்து தூண்டில் வீசிய அய்யாவுக்கும் நன்றி..!

Narathar
17-12-2008, 07:09 AM
கொஞ்சம் காலம் தாருங்கள் விடை தருகின்றேன்..........

நாரா நன்றாகத்தான் சமாளிக்கிறார் :D:D
அப்போ இளசுவும் நானும்தானா பாக்கி?
இன்றிரவுக்குள் விடைதருகின்றேன்..

[COLOR="Silver"]

(பாவம் நாரதர் வசமா மாட்டிக்கிட்டார் ஆப்பு கண்ணுக்கு தெரியாதுங்கோவ்):Dஎன்ன நிரஞ்சனாரே......
சந்தோஷப்படுறீங்களோ....?
நாங்களும் ஆப்பெடுத்து வருவோம்ல? :lachen001:

அப்போ இளசுவும் நானும்தானா பாக்கி?
இன்றிரவுக்குள் விடை தர முயற்சிக்கின்றேன்.....

மதுரை மைந்தன்
17-12-2008, 08:51 AM
நான் நினைத்தவாறே தூள் கிளப்பிவிட்டீர்கள் அண்ணா!
மிகவும் அழகாக வந்திருக்கிறது. திரும்பத்திரும்பப் படித்து மகிழ்ந்தேன். நன்றி!

மிக்க நன்றி அய்யா நண்பரே. எனக்குள் இருக்கும் நகைச்சுவை எழுத்தை வெளிக் கொணர வாய்ப்பளித்தற்கும மிக்க நன்றி. பொதுவாக எல்லோரும் தங்களுக்கு நகைச்சுவை பிடிக்கும் எனபார்கள். குறிப்பாக பெண்கள் தங்களது வரப் போகும் கணவர் நகைச்சுவை உணர்வு உள்ளவராக இருக்க வேண்டும் எனபார்கள். அதற்காக அவர்கள் காமெடி நடிகர்களை மணக்க முன் வருவார்களா?. மன்றத்து நண்பர்களில் நகைச்சுவையை பாராட்டும் உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.

ஆதவா
17-12-2008, 09:45 AM

யோசிக்க வேண்டிய கேள்வி.

எல்லாம் பேச்சுக்குத்தான் போலிருக்கிறது....

நன்றி மதுரையாரே

நிரன்
17-12-2008, 09:56 AM
என்ன நிரஞ்சனாரே......
சந்தோஷப்படுறீங்களோ....?
நாங்களும் ஆப்பெடுத்து வருவோம்ல? :lachen001:

அப்போ இளசுவும் நானும்தானா பாக்கி?
இன்றிரவுக்குள் விடை தர முயற்சிக்கின்றேன்.....

இரவை நோக்கிய பாதையில் என் கால்கள்:angel-smiley-026:

Narathar
17-12-2008, 04:01 PM
10. நாரதர் அண்ணா ; நீங்கள் ஒரு ஊடகவியலாளரென அறிகிறேன். அவ்வகையில் சில செய்திகள் சாதாரண மக்களான எங்களைவிட, உங்களைப் போன்றோருக்கு முன்கூட்டியும், முழு அளவிலும் தெரிந்திருக்கும்.

? : தமிழீழம் சமீபத்தில் சாத்தியமாகக்கூடிய ஒன்றுதானா? இல்லை இன்னும் நாளெடுக்குமா? உங்கள் நோக்கில் அது மலர்வதெப்போது?

ஈழப்பிரகடனம் என்பது காலத்துக்கு காலம் இலங்கை அரசியலில் வந்துபோன ஒரு அரசியல் அரிதாரம் பூசியவார்த்தை என்பது எனது கருத்து!

1977 ஆம் ஆண்டு இந்த வார்த்தையைப்பயன் படுத்தி திரு.அமிர்தலிங்கம் அவர்கள் இலங்கை அரசியல் வரலாற்றிலேயே இல்லாதவாறு மக்கள் ஆதரவைப்பெற்று பாராளுமன்றத்தில் "எதிர்க்கட்சி தலைவர்" என்ற பதவியைப்பெற்றார். ஆனால் வழக்கமான அரசியல்வாதிபோல அவர் ஈழத்தை மறந்தார் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வை நாடினார். முடிவு இங்குள்ளவர்கள் பலர் அறிந்ததே......

1990 களில் மறைந்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி *மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜயவர்த்தனே அவர்களுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பலனாக இடைக்கால மாகாணசபை முதலமைச்சராக நியமிக்கப்பட்ட திரு வரதராஜப்பெருமாள் அவர்கள் அவரது ஈழ அரசியல் கேள்விக்குறியானபோது இந்த வார்த்தையை தானும் கையிலெடுத்தார்.

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது ஒருவர் இந்த ஈழக்கேள்வியை கேட்டு அவரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கினார். அந்த ஊடகவியலாளரது கேள்வி "ஈழ கோரிக்கையை கைவிடும் எவருக்கும் மரணதண்டணை எனும் உங்களது கொள்கை இன்னும் உள்ளதா?" என்பதாகும். சர்வதேசம் இவர் என்ன சொல்கின்றார் என்று உற்று நோக்கும் நிலையிலும், சமாதானப்பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தநிலையிலும் அவர் "ஆம் அது அப்படியேதான் உள்ளது" என்று சொன்னார். ஒரு தமிழ் தலைவனாக ஈழக்கொள்கையை விட்டுவிட்டால் அதன் அரசியல் வடிவம் எவ்வாறு விவகாரமாக்கப்படும், விகாரமாக்கப்படும் என்பதை உணர்ந்தே அவர் அந்த நிலையில் யதார்த்தத்தையும் தாண்டி ஆம் என்று சொல்ல நேரிட்டது.

ஏனெனில் என்ன தான் பேச்சுக்கள் நடந்தாலும், போர் நிறுத்தங்கள் ஏற்பட்டலும் ஈழமே முடிந்த முடிவு என்பது தமிழர்கள் மத்தியில் போராளிகளாலும், ஏன் சிங்கள அரசாலும் ஆணித்தரமாக பதிக்கப்பட்டு விட்டது. அதனால்தான் ஈழ கோரிக்கையை கை விட்டு அரசியல் நீரோட்டத்தில் இணைந்த தமிழ் அரசியல்வாதிகளால் சோபிக்க* முடியவில்லை. தற்போது களத்திலுள்ள போராளிகளும் அமைதி நடவடிக்கை என்பது ஈழத்தை அடைவதற்கான படித்தளமென்றே கூறிவந்தார்கள் அப்போது! ஏன் இப்போதும்தான். சில வேளைகளில் சர்வதேச அழுத்தம் காரணமாகவோ அல்லது இந்திய அழுத்தம் காரணமாகவோ இவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை மேசையில் அமர நேரிட்டால் அப்படித்தான் கூறுவார்கள். ஆனால் அப்படி ஒரு நிலை வருமா என்பதி கேள்விக்குறியாய் இருந்த போதும், அரசியலில் எதுவும் நடக்கலாம்.

இவ்வாறு ஈழமென்பது தமிழர் இரத்தத்தில் பதிந்த ஒன்று. ஆனால் அப்படிப்பட்ட ஈழப்பிரகடனத்தை ஏன் விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வமாக செய்யவில்லை? காரணமிருக்கின்றது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பிரகடனத்தை செய்துவிடமுடியாது. அதற்கென்று சில சர்வதேச வரைமுறைகள் இருக்கின்றன, அவை சரியாக அமையாத பட்சத்தில் பிரகடனம் பிசுபிசுத்துப்போகும்.

ஒரு தனிநாடு பிரகடனப்படுத்தப்படுவதாயின்

பிரகடனம் செய்பவர்கள் கைவசம் குறிப்பிட்ட அளவு நிலப்பரப்பு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்

பிரகடனம் செய்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தனி இனமாக இருக்க வேண்டும்.

அவர்களிடம் நிர்வாக கட்டமைப்பொன்று இருக்க வேண்டும்

எல்லாவற்ருக்கும் மேலாக அந்த பிரகடனத்தை சில நாடுகளாவது ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவற்றையெல்லாம் மனதில் வைத்து கணக்குப்போட்டவர்கள், அதற்கான கால அவகாசம் இன்னும் வரவில்லையாதலால் காத்திருக்கின்றார்கள்.

ஆனால் தற்போது சிங்கள அரசு வரைமுறையின்றி தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள போர் இயந்திரத்தால். இதுவரைகாலமும் கேள்விக்குறியாக இருந்த தமிழக தொப்புள்கொடி உறவுகளது ஆதரவுக்கரம் மீண்டும் நீண்டுள்ளது.

இந்த ஆதரவு காரணமாக இந்திய அரசியல் ஸ்திரத்தன்மையே கேள்விக்குறியாகுமளவுக்கு விவகாரம் பூதாகரமானதால் இந்திய அரசு இப்போது அடக்கிவாசிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் உள்ளது. ஆனால் நட்டத்தில் ஒரு இலாபம் போல மும்பை தாக்குதலானது இலங்கைப்பிரச்சனையை கொஞ்சம் ஆரப்போட அவர்களுக்கு அவகாசத்தை வழங்கியுள்ளது.

சர்வதேசம் கொஞ்சம் கொஞ்சமாக இலங்கை அரசை கண்டிக்க ஆரம்பித்துள்ளது. பல நாடுகளில் தமிழராதரவு குரல்கள் எழுந்தபடியுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தி பலஸ்தீனம் ஆரம்பத்தில் செய்ததுபோல வேறு நாடொன்றிலிருந்து தனிநாட்டுப்பிரகடனம் செய்யும் முஸ்தீபுகளில் தமிழர் விடுதலை கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் இரங்கியுள்ளார்கள். அவர்கள் இந்த பிரகடனத்தை வெளியிட்டு போதிய அளவு ஆதரவு இல்லாமல் போனாலும் அது புலிகளை அரசியல் அல்லது லொஜிக்கலாக பாதிக்காது ஏனெனில் அவர்கள் ஜனநாயகவாதிகள் இவர்கள் போராளிகள். அந்த பிரகடனம் வெற்றியளித்து எதிர்பார்த்ததுபோல் ஆதரவு கிடைத்தால் நிலை வேறாக இருக்கும். ஆனால் அப்படியொரு பிரகடனம் வெளிவந்து அது அங்கீகரிக்கப்படுமா என்பது கேள்விக்குறிதான்.

நான் ஆரம்பத்தில் சொன்னதுபோல இதுவும் ஒரு சோதணைமுயற்சியாக மேற்கொள்ளப்படப்போகின்றது என்றுதான் நான் சொல்வேன்..... வந்தால் மலை, போனால்.........

உங்கள் எதிர்பார்ப்பைபோல ஈழம் நாளை அமையலாம், அல்லது அடுத்த வருடம் அமையலாம், அல்லது இன்னும் பத்தாண்டுகளில் மலரலாம், இல்லை நூற்றாண்டே ஆகலாம்....சொல்வதற்கில்லை. இது போராளிகளில் மட்டுமல்லாது புரக்காரணிகளிலும் தங்கியுள்ளது என்பதுதான் என் கருத்து.

செப்டெம்பர் 11 தாக்குதல், ஒஸாமா, இந்திய அரசியல், இந்திய தீவிரவாதம், அமெரிக்காவின் இலங்கை நிலைகள் மீதான கொள்கை என்று பல புரக்காரணிகளும் ஈழமமைவதை தீர்மானிக்கும்.

அத்தோடு இந்தியா ஒரு நாளும் தனி ஈழமமைவதை அனுமதிக்கப்போவது இல்லை. ஏனெனில் வெளிவாரியாகப்பார்த்தால் இது அண்ணியப்பிரச்சனையாக தோன்றினாலும் இது அவர்களது உள் வீட்டு விவகாரங்களில் செல்வாக்கு செழுத்தப்படக்கூடிய ஒரு பிரச்சனை. உணர்வு ரீதியாக பார்ப்பதை விடுத்து யதார்த்த நோக்கில் பார்த்தால் அது புரியும்.

சிறு சிறு குழுக்களாக இருந்த போராட்டக்குழுக்களுக்கு ஆயுதம் வழங்கி தேவையான பணத்தை வழங்கி அவர்களை வளர்த்துவிட்டது இந்திய அரசுதான் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. இந்தக்கருத்துக்கு பலத்த எதிர்ப்பு வருமென்று தெரியும். ஆனாலும் இது இங்கு சொல்லப்பட்டே ஆகவேண்டிய ஒன்று. இன்று பாகிஸ்தான் தன் நாட்டு நலனுக்காக பயங்கரவாதிகளை எப்படி இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்துகின்றார்களோ அப்படித்தான் ஆரம்பத்தில் இந்தியா இந்தப்பிரச்சனையை கையாண்டது என்பதுதான் உண்மை. ஆனால் இப்போது வளர்த்த கடாக்கள் அவர்களது மாரளவுக்கு வளர்ந்திருக்கின்றார்கள்..............

போராளிகளுக்கு தேவையாகவிருந்தது ஆதரவு, அது அவர்களுக்கு கிடைத்தபோது பற்றிப்பிடித்து சாணக்கியமாக அதை பயன்படுத்திக்கொண்டார்கள். ஆனால் காலப்போக்கில் அவர்களது நோக்கங்கள் திசை மாறியபோது இவர்களும் திசைமாறினார்கள். அதனால் இனி இந்தியா போராளிகளை நம்பப்போவதும் இல்லை, போராளிகள் இந்தியாவை நம்பப்போவதும் இல்லை.

இந்த பிரதான புரக்காரணியானது, அதாவது "இந்திய அரச ஆதரவு" தமிழீழத்துக்கு கிடைக்கும் வரை ஈழம் என்பது கேள்விக்குறிதான்.

இவை எனது தனிப்பட்ட கருத்துக்களே அன்றி முடிந்த முடிவுகளல்ல என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். முதலில் இந்தக்கேள்விக்கு பதில் தராமல் இருப்போம் என்றுதான் நினைத்தேன். ஆனால் என்னை நம்பி கேள்வி கேட்ட அய்யாவின் எதிர்பார்ப்பை பொய்யாக்க விரும்பவில்லை, அதுதான் எழுதினேன்.

ஈழம் எனும் சொல் எவ்வளவு சக்திவாய்ந்தது என்பது எனக்குத்தெரியும், அது பலரது கனவு, பலருக்கு அதுதான் வாழ்க்கை, பலருக்கு அது ஜீவனோபாயம் பலருக்கோ அது சிம்ம சொப்பனம் எனவே ஈழம் என்பதில் பலருக்கு பலதரப்பட்ட கருத்துக்கள் இருக்கும். இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே...........................

Keelai Naadaan
17-12-2008, 05:13 PM
அன்பிற்கினிய நாரதரே, மிகவும் ஆழ்ந்த சிந்தனையோடு கூடிய மிகவும் அற்புதமான பதிலை தந்திருக்கிறீர்கள்.

தனி ஈழம் என்பது பற்றி நம் மன்ற நண்பர்களிடம் மாறுபட்ட கருத்துகள் இருப்பதனால் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்து அரை நூற்றாண்டுகளாகியும் இந்திய பாகிஸ்தான் உறவு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை நினைத்து பார்க்கிறேன்.

Keelai Naadaan
17-12-2008, 05:29 PM
இந்தக் கேள்வித் தொகுப்பின் சூப்பர் ஹிட் பதில்..!!!

பாராட்டுகள் கீழை நாடன்..!

இடம் பார்த்து தூண்டில் வீசிய அய்யாவுக்கும் நன்றி..!
நண்பர்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

உண்மையில் சாதாரணமான நடைமுறை வாழ்வை ஒட்டிய பதிலை மட்டுமே நான் தந்தேன்.

பணி நிமித்தமாக என்னால் மற்ற கேள்வி பதில்களை படித்து பின்னூட்டம் இட முடியவில்லை. நண்பர்கள் மன்னிக்கவும்.

விரைவில் படிக்கிறேன். நன்றி

அன்புடன்

நிரன்
17-12-2008, 06:47 PM
தாமதமாக இட்ட பதில் என்றாலும் மிகவும் ஒரு ஆழ்ந்த கருத்தை கூறி இருக்கிறீர்கள் நாரா என் உள்ளம் கனிந்த பாரட்டுக்கள் மற்றும் இரவுக்கிடையில் தருவேன் என்ற செல்லைக்காப்பாற்றியதற்கு மிகவும் நன்றி

நீங்கள் கூறியதன் பின்னரேதான் எனக்கு

ஒரு தனிநாடு பிரகடனப்படுத்தப்படுவதாயின்

* பிரகடனம் செய்பவர்கள் கைவசம் குறிப்பிட்ட அளவு நிலப்பரப்பு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்
* பிரகடனம் செய்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தனி இனமாக இருக்க வேண்டும்.
* அவர்களிடம் நிர்வாக கட்டமைப்பொன்று இருக்க வேண்டும்
* எல்லாவற்ருக்கும் மேலாக அந்த பிரகடனத்தை சில நாடுகளாவது ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இப்படியென்றும் இருப்பதே எனக்க தெரிந்தது. பொதுவாகவே எனக்கு அரசியலில் நாட்டம் குறைவு அதனால் பெரும்பாலான அரசியல் தொடர்பானவற்றை தவிர்த்துக் கொள்வேன் .
ஆனால் உங்கள் தனிப்பட்ட கருத்தை மிகவும் ரசித்தேன் மற்றும் இதில் பலதை தெரிந்தும் கொண்டேன் நல்லதொரு விடயத்தை தெளிவாக தந்தமைக்கு மீண்டும் என் பாரட்டுக்கள் மற்றும் இக் கேள்வியை தொகுத்த அய்யா அவர்களுக்கும் என் நன்றிகள்

ராஜா
18-12-2008, 03:06 AM
மிக்க நன்றி அய்யா நண்பரே. எனக்குள் இருக்கும் நகைச்சுவை எழுத்தை வெளிக் கொணர வாய்ப்பளித்தற்கும மிக்க நன்றி. .

இந்தத் திரியின் நோக்கமே அதுதான் நண்பரே..!

ஒவ்வொருவருக்குள்ளும் ஏராளமானத் திறமைகள் புதைந்து கிடக்கின்றன. ஆனால் அவற்றை எல்லாம் மற்றவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. உதாரணமாக, நீங்கள் அறிவியல் சார்ந்த விடயங்களில் வல்லவர் என்பது மட்டுமே எனக்குத் தெரிந்திருந்தது. ஆனால் அய்யாவுக்கு, உங்களின் மற்றொரு திறமையான நகைச்சுவை பற்றி தெரிந்திருக்கிறது. அந்தப் பொருளில் கேள்வி கேட்டு உங்கள் நகைச்சுவைத் திறனை மன்றம் முழுதும் அறியவைத்திருக்கிறார்.

எதிர்காலத்தில், இங்கு கேள்வித்தொகுப்பு தர வரும் வேறொரு உறவு, உங்களின் இன்னொரு பரிமாணம் அறிந்து அத்திறமையை மன்றம் அறியச் செய்வார்.

ஆக, ஒவ்வொரு உறவுக்குள்ளும் இருக்கும் அனைத்து திறமைகளையும், அனைவரும் அறிய வைக்க உதவுவதே இந்தத் திரியின் நோக்கம்.

அந்த நோக்கம் சரியான வழியில் நிறைவேறிக்கொண்டிருக்கிறது என்று அவ்வப்போது உங்களைப் போன்றோர் சான்றளிக்கும்போது, ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கிறேன்.

நன்றி அன்பு மதுரை..!

அய்யா
18-12-2008, 12:31 PM
ஈழப்பிரகடனம் என்பது காலத்துக்கு காலம் இலங்கை அரசியலில் வந்துபோன ஒரு அரசியல் அரிதாரம் பூசியவார்த்தை என்பது எனது கருத்து!

ஈழம் எனும் சொல் எவ்வளவு சக்திவாய்ந்தது என்பது எனக்குத்தெரியும், அது பலரது கனவு, பலருக்கு அதுதான் வாழ்க்கை, பலருக்கு அது ஜீவனோபாயம் பலருக்கோ அது சிம்ம சொப்பனம் எனவே ஈழம் என்பதில் பலருக்கு பலதரப்பட்ட கருத்துக்கள் இருக்கும். இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே...........................

நீண்ட பதிவு இட்டு சிறப்பித்தமைக்கு நன்றியண்ணா!

உங்கள் பதிலில் நிறைய விடயங்களைத் தெரிந்துகொண்டேன். விரைவில் தமிழீழம் மலர்ந்து இலங்கைத்தமிழ்மக்கள் நிம்மதிப்பெருமூச்சுவிட அளவற்ற அருளாளன் கருணை புரிவானாக.

Keelai Naadaan
19-12-2008, 11:43 AM
விமர்சனங்களை வைத்து ஒரு கதையை எடை போட முடியாது, கூடாது. விமர்சனங்கள் வராதற்க்கு நிறைய காரணம் இருக்கலாம்.

அதனால் ஒரு எழுத்தாளனால் எப்பொழுதும் அனைவரையும் ஒரு சேர திருப்திபடுத்த முடியாது.

நன்றி[/COLOR]

மூர்த்தியின் கருத்து உண்மையானது. :icon_b::icon_b:
சிலரின் விமர்சனத்தாலோ, பாராமுகத்தாலோ ஒரு கதையின் சிறப்பை தீர்மானிக்க முடியாது. உலகின் ரசனை பலவகைப்பட்டது.
சமீபத்தில் எஸ்.ராதாகிருஷ்ணன் என்பவர் ஒரு நேர்காணலில் பின்வருமாறு கூறியிருந்தார்
"ஒரு பிரபலமான வெகுஜனப்பத்திரிக்கைக்கு எனது சிறுகதை ஒன்றை அனுப்பியிருந்தேன். "திருமணங்கள் வெறும் நிகழ்ச்சியல்ல" என்ற அந்த கதை பிரசுரத்துக்கு தகுதியல்ல என குறிப்பிட்டு உடனடியாக எனக்கே திரும்பி வந்தது........
...... பின்னர் அதே கதை சிவசங்கரியும் பாலகுமாரனும் நடுவர்களாக இருந்த "அமுதசுரபி" சிறுகதை போட்டியில் முதல் பரிசுக்குரிய கதையாக தேர்வு செய்யப்பட்டது.
பின்னர் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றது.
அதற்கு பின்னர் அரசின் பிலிம் டிவிஷன் அதே கதையைக் குறும்படமாக தயாரித்தது.
ஆகவே மூர்த்தி கூறுவது போல் பினூட்டங்களை மட்டும் வைத்து கதையை எடை போட இயலாது

ராஜா
20-12-2008, 05:10 AM
சிறப்பான கேள்வித்தொகுப்பைத் தந்த அய்யாவுக்கும்,

அக்கேள்விகளுக்கு அரிய பதில்களைத் தந்த உறவுகட்கும் நெஞ்சார்ந்த நன்றி..!

அடுத்து,

ஆ! 10 திரியை, இந்தப்பிரிவிலேயே அதிக பார்வைகள் கொண்ட திரியாக மாற்ற இருக்கும் உறவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்..!!

அய்யா
20-12-2008, 05:25 AM
என்னுடைய சிறுபிள்ளைத்தனமான கேள்விகட்கு,

பெருந்தன்மையுடன் பதிலளித்த அனைத்து மேதகு உறுப்பினர்களுக்கும் இதயங்கனிந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

வாய்ப்பளித்த ஏ.ஆர்.ஆர்.அய்யாவுக்கும் நன்றி.

Narathar
20-12-2008, 06:01 AM
அன்பிற்கினிய நாரதரே, மிகவும் ஆழ்ந்த சிந்தனையோடு கூடிய மிகவும் அற்புதமான பதிலை தந்திருக்கிறீர்கள்.

தனி ஈழம் என்பது பற்றி நம் மன்ற நண்பர்களிடம் மாறுபட்ட கருத்துகள் இருப்பதனால் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

நன்றி கீழைநாடான் அவர்களே............
நானும் இந்தக்கேள்விக்கு பெருந்தயக்கத்துடன் தான் பதில் தந்தேன்....

தாமதமாக இட்ட பதில் என்றாலும் மிகவும் ஒரு ஆழ்ந்த கருத்தை கூறி இருக்கிறீர்கள் நாரா என் உள்ளம் கனிந்த பாரட்டுக்கள் மற்றும் இரவுக்கிடையில் தருவேன் என்ற செல்லைக்காப்பாற்றியதற்கு மிகவும் நன்றி

நன்றி நிரஞன்...................
த்யங்கித்தயங்கி இருந்த எனக்கு உங்களது ஊக்கம்தான் பதிலை எழுதும் தைரியத்தை தந்தது.......

எனக்கு தெரிந்தவற்றை எழுதினேன்! அவ்வளவே

நீண்ட பதிவு இட்டு சிறப்பித்தமைக்கு நன்றியண்ணா!

உங்கள் பதிலில் நிறைய விடயங்களைத் தெரிந்துகொண்டேன். விரைவில் தமிழீழம் மலர்ந்து இலங்கைத்தமிழ்மக்கள் நிம்மதிப்பெருமூச்சுவிட அளவற்ற அருளாளன் கருணை புரிவானாக.

பாமர மக்களின் நிம்மதிப்பெர்மூச்சுத்தான் நம் எல்லோரது பிரார்த்தனையும்!

நிரன்
20-12-2008, 09:29 AM
நன்றி நிரஞன்...................
த்யங்கித்தயங்கி இருந்த எனக்கு உங்களது ஊக்கம்தான் பதிலை எழுதும் தைரியத்தை தந்தது.......

எனக்கு தெரிந்தவற்றை எழுதினேன்! அவ்வளவே

நன்றி நாரா அவா்களே.....
மன்றத்தில் நாட்டமும் மற்றவா்களுக்கு ஊக்கமும் எம்மிடம் என்றும் குறைவதில்லை.
உங்களுக்கு தெரிந்தவற்றை எழுதினீா்கள் அதில் யாமறியா பலதை அறிந்தேன்.

நிரன்
20-12-2008, 09:33 AM
மற்றும் அமரன் அண்ணா ஒரு வெடிகுண்டை கையில் வைத்துக்கொண்டு ஆ10 ஐ....! வலம் வருகிறார் குண்டை ஆ10 போட்டு வெடிக்க வைத்த பின் நான் வருகிறேன்:D:D:D

ராஜா
20-12-2008, 09:46 AM
மற்றும் அமரன் அண்ணா ஒரு வெடிகுண்டை கையில் வைத்துக்கொண்டு ஆ10 ஐ....! வலம் வருகிறார் குண்டை ஆ10 போட்டு வெடிக்க வைத்த பின் நான் வருகிறேன்:D:D:D

:confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused:

நிரஞ்சா... என்னப்பா சொல்றே..?

நிரன்
20-12-2008, 09:56 AM

அதுதாங்க அது...................:eek::smilie_abcfra: :D:D:D:D:D:D:D

ராஜா
20-12-2008, 11:19 AM
அதுதாங்க அது...................:eek::smilie_abcfra: :D:D:D:D:D:D:D

செய்யுங்கப்பா.. செய்யுங்க..! என்னா ஒரு வில்லத்தனம்..?

( என்னமா ட்ரெய்னிங் கொடுத்து அனுப்பியிருக்காங்கய்யா.. :traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..! )

நிரன்
20-12-2008, 11:22 AM

எல்லாம் மன்றத்தில் கற்றதே:D:D:D
கற்றது கையளவு கல்லாதது மன்றளவு:aetsch013:

சூரியன்
20-12-2008, 11:27 AM
எல்லாம் மன்றத்தில் கற்றதே:D:D:D
கற்றது கையளவு கல்லாதது மன்றளவு:aetsch013:

அவரா நீங்க :confused:

என்ன கொடுமை சார்.:icon_rollout:

ராஜா
20-12-2008, 11:29 AM
சமீப காலமாக மன்றத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் பதிவிட்டுக் கலக்கிவரும் அன்புத்தம்பி நிரஞ்சனை, ஆ!10 க்கான கேள்வித்தொகுப்பு தர என்னவன் அமரின் இசைவோடு அழைக்கிறேன்..!

வாங்க நிரஞ்சன்.. உங்கள் ஸ்டெயிலில் அசத்துங்க..!

சூரியன்
20-12-2008, 11:35 AM
வாங்க நிரஞ்சன்.
தொடுங்க உங்களின் கேள்விகளை!

ராஜா
20-12-2008, 11:37 AM
வாங்க நிரஞ்சன்.
தொடுங்க உங்களின் கேள்விகளை!

அன்பு நிரஞ்சன்..!

மேலே இருக்கும் திருப்பூர் பார்ட்டியையும் கோர்த்துவுடுங்கப்பு..!

அய்யா
20-12-2008, 11:41 AM
அடுத்து நிரஞ்சன் அண்ணாவா!

குறும்புத்தனமான கேள்விகளை எதிர்பார்க்கலாம்.

வாங்கண்ணா.

நிரன்
20-12-2008, 11:47 AM
அன்பு நிரஞ்சன்..!

மேலே இருக்கும் திருப்பூர் பார்ட்டியையும் கோர்த்துவுடுங்கப்பு..!

சீக்கிறமே வாரணுங்கோவ்:D:D

சூரியன்
20-12-2008, 11:50 AM
அன்பு நிரஞ்சன்..!

மேலே இருக்கும் திருப்பூர் பார்ட்டியையும் கோர்த்துவுடுங்கப்பு..!

ஒரு முடிவோட கிளம்பீட்டீங்க போல*

நம்மால முடியல விட்டுருங்க.:traurig001:

நிரன்
20-12-2008, 12:10 PM
அன்பான மன்ற நண்பா்கட்கும் சக உறவுகட்கும்....!

என்னையும் ஆ 10 அல் கேள்விகள் கேட்க அழைத்தமைக்கு அமரன் அண்ணாவுக்கு நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

மற்றும் என்னை வினாவுக்கு துாண்டும் வகையில் ஊக்கமளிக்கும்
ராஜா அண்ணா நண்பா் சூரியன் மற்றும் அய்யா அவா்கட்கும் என் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்....

மன்றத்தில் எனக்கு தெரிந்த மற்றும் பெரிதும் அறிமுகமில்லாத நண்பா்களிடமும் சக தமிழுறவுகளிட்காகவும் நான் வெகு விரைவில் கேள்வியைத் தொகுத்து உங்கள் முன் சமா்ப்பிக்கிறேன்...

நன்றி:)

நிரன்
20-12-2008, 12:11 PM
ஒரு முடிவோட கிளம்பீட்டீங்க போல*

நம்மால முடியல விட்டுருங்க.:traurig001:

ஆ 10 க்கு வந்தாலே ஆபத்துத்தான்:D

நிரன்
20-12-2008, 12:15 PM
அடுத்து நிரஞ்சன் அண்ணாவா!

குறும்புத்தனமான கேள்விகளை எதிர்பார்க்கலாம்.

வாங்கண்ணா.

இளம் புயல் அய்யா நீங்களே என்னை அண்ணா என்றழைக்கலாமா!!:D

அண்ணா வேண்டாம் நிரஞ்சன் மட்டுமே போதும்:)

(வயசு கூடீட்டோண்னு மனசுக்குள்ள ஃபீலிங் வருது):D

சூரியன்
20-12-2008, 12:15 PM
ஆ 10 க்கு வந்தாலே ஆபத்துத்தான்:D

தெரிஞ்சே வந்து மாட்டிக்கிட்டேன்.:traurig001::traurig001::traurig001:

நிரன்
20-12-2008, 12:17 PM
சமீப காலமாக மன்றத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் பதிவிட்டுக் கலக்கிவரும் அன்புத்தம்பி நிரஞ்சனை, ஆ!10 க்கான கேள்வித்தொகுப்பு தர என்னவன் அமரின் இசைவோடு அழைக்கிறேன்..!

வாங்க நிரஞ்சன்.. உங்கள் ஸ்டெயிலில் அசத்துங்க..!

அண்ணோவ் உங்களுக்கும்தானுங்கோவ்:icon_ush:

(எல மக்கா ராசவுக்கும் இலையொன்ன போடுடா:D:D)

ராஜா
20-12-2008, 12:44 PM
அண்ணோவ் உங்களுக்கும்தானுங்கோவ்:icon_ush:

(எல மக்கா ராசவுக்கும் இலையொன்ன போடுடா:D:D)

நல்லா கெளப்புறாருய்யா பீதிய..!

Narathar
20-12-2008, 02:35 PM
எங்கே நிரஞ்சன் அசத்துங்க.......

அய்யா
20-12-2008, 02:50 PM
இளம் புயல் அய்யா நீங்களே என்னை அண்ணா என்றழைக்கலாமா!!:D

அண்ணா வேண்டாம் நிரஞ்சன் மட்டுமே போதும்:)

(வயசு கூடீட்டோண்னு மனசுக்குள்ள ஃபீலிங் வருது):D

மூத்தவர்கள், நெருக்கமான பழக்கம் இல்லாத சம வயதுக்காரர்கள் முதலியோரை அன்புடனும் மரியாதையுடனும் வாய் நிறைய மனம் நிறைய அண்ணா என்று அழைப்பது எங்கள் வழக்கம்.

எனினும் உங்களை இனி உங்கள் விருப்பப்படியே அழைக்கிறேன் நிரஞ்சன்!

நிரன்
20-12-2008, 03:06 PM
எங்கே நிரஞ்சன் அசத்துங்க.......

நீங்களுமா நாரா....
நாளை ஐரோப்பாவில் ஆதவன் வருமுன் 10 போருக்கான ஆ 10 ஐ தீண்டி வைக்கிறேன்

Narathar
20-12-2008, 04:14 PM
நீங்களுமா நாரா....
நாளை ஐரோப்பாவில் ஆதவன் வருமுன் 10 போருக்கான ஆ 10 ஐ தீண்டி வைக்கிறேன்

இந்த வின்டர்ல எப்போ ஆதவன் வந்து...... :)
நாராயணா!!!!

வெணும்னா நம்ம மன்ற ஆதவரை அங்கு அனுப்பலாம்,

நிரன்
20-12-2008, 04:29 PM
இந்த வின்டர்ல எப்போ ஆதவன் வந்து...... :)
நாராயணா!!!!

வெணும்னா நம்ம மன்ற ஆதவரை அங்கு அனுப்பலாம்,

கரெக்டா பொயின்டை பிடிச்சிட்டீங்க

இப்பத்தான் ஒரு கேள்விக்கு பதிலளிச்சீங்க இன்னுமொன்டா:D:D

Narathar
21-12-2008, 03:40 AM
கரெக்டா பொயின்டை பிடிச்சிட்டீங்க...............
இப்பத்தான் ஒரு கேள்விக்கு பதிலளிச்சீங்க இன்னுமொன்டா:D:D

நிரஞ்சரே! உங்களது கேள்விகளைத்தான் எதிர்பார்த்திருக்கோம்.........

என்னிடம் கேள்வியாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

வேண்டவே வேண்டாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஒரு ஆப்பு நால்லாவே போதும்! :D

சூரியன்
21-12-2008, 09:32 AM
இன்னும் யாரும் சிக்கலயா? :lachen001:

நிரன்
21-12-2008, 10:14 AM
மன்றத்தில் இம்முறை ஆ 10 ற்கான வினாவை
வினாவுவதற்கு என்னை அழைப்பு விடுத்திருந்ததையடுத்து இங்கே என்
கேள்விகளை சமா்ப்பிக்கிறேன். இக் கேள்விகள் சில மற்றவா்களின்
உணற்சிகளை மையமாகக் கொண்டும் சில எல்லோரையும்
சங்கடமில்லாது சந்தோசத்தை மட்டுமே கெடுக்கும் வகையில்
தொகுத்துள்ளேன். இக் கேள்விகளில் ஏதேனும் தவறாக இருப்பின்
அதற்காக என்னை தாழ்மையுடன் மன்னிக்குமாறு கேட்டுக்
கொள்கிறேன்

__________________________________________________________________________________________

எனது முதலாவது கேள்வி மன்றத்தின் நிர்வாகி அறிஞரிடம்,
தங்களால் இவ் வினாவுக்கு முழுமையான பதிலளிக்க நேரம் இல்லையென்று என்னறிவுக்குத் தெரியும்.
இவ் வினாவிற்கு உங்களால் முடிந்த ஒரு சிறு பதிலைத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

தாங்கள் மன்றத்தின் நிர்வாகி மற்றும் மன்றம் தொடங்கிய போதே மன்றத்திற்கான உங்கள் பணிகளும் ஆரம்பமாகி விட்டன. ஆரம்ப காலத்தில மிகவும் குறைந்தளவே உறுப்பினா்கள் அங்கம்வகித்திருப்பார்கள். அவ் வேளையில் நீங்கள் மன்றத்தினுாடாக எப்படி தமிழை வளா்க்க போகிறேன் என்று ஒரு கனம் யோசித்ததுண்டா? தற்பொழுது மன்றத்திற்கு பல புதிய உருப்பினா்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனா். இது உங்கள் மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கிறதா இல்லை சந்தோசத்துடன் கூடிய சிறிதொரு பயத்தையும் கொடுக்கிறதா?

__________________________________________________________________________________________

மன்ற பொருப்பாளரும் அன்புக்குரிய நண்பருமான நம்ம அமரன் அண்ணாவை இரண்டாவது கேள்வியாளராக அமா்த்தியுள்ளேன்.

நீங்கள் மன்றத்தில் பல போட்டிகளை தலைமை தாங்கி நடத்தியுள்ளீா் இறுதியில் வாக்கெடுப்பு முலாம் வெற்றியாளர் மன்றத்தில் அறிவிக்கப்படும். வாக்கெடுப்பு மூலம் கவிதைகயோ கதைகளையோ தோ்ந்தெடுத்தாலும் உங்கள் மனதிற்கு பிடித்த படைப்பு என்று நீங்கள் கருதியிருப்பீா்கள். நீங்கள் வெற்றி பெரும் என்று நினைத்த கவிதையோ கதையோ 2 அல்லது 3ம் இடத்திற்கு தள்ளப்படுகையில் உங்கள் மனம் அதனை ஈடுகொடுக்குமா? அத்தருனத்தில் உங்கள் மனம் என் நிலையில் இருக்கும்?

மற்றும் ஒரு சந்தேகம் நீங்கள் மன்றத்திற்கு 14000+ பதிவுகளை கொடுத்திருக்கிறீங்க. ஆனால் உங்க இணைவு திகதி 16 Feb 2007,
மேறிகூறிய திகதியிலா நீங்க இணைந்தீங்க? இல்லாட் ஒரு பில்டப்புக்கு அப்படியா?:D

__________________________________________________________________________________________

மூன்றவது கேள்வியை எக் கேள்விக்கும் முகம் சுழிக்கா பதிலளிக்கும் எங்கள் சிவா.ஐி அண்ணாவை அமா்த்துகிறேன்.

தாங்கள் துபாயில் வேலை செய்வதாக அறிந்தேன் அதனால் என்னறிவில் எட்டிய வினாவதை உங்களிடம் வினாவ விரும்புகிறேன்.

நீங்கள் வெள்நாட்டில் பணியாற்றுவதன் மூலம் உங்களுக்கு அந்நாட்டவரின் மூலம் வேலைத்தளத்தில் ஏதாவது கசாப்பான அணுபவங்கள் நிகழ்ந்ததுண்டா? அவ்வேளையில் நீங்கள் தாய்நாட்டை நினைத்து அதனை பெரிதும் இழந்து விட்டோமே என்று என்னிய தருனங்கள் ஏதேனும் உண்டா? இதனால் ஏன் பிறநாட்டவரிற்கு கீழ் நாம் வேலை செய்ய வேண்டும் என்று மனம் பிரிவினை ஏற்படுத்தியதுண்டா?
அப்பிரிவினையை சில (குடும்பம் போன்ற )காரணங்கள் துாக்கி எறிந்ததுண்டா?

__________________________________________________________________________________________

பலதிரிகளிலும் கதை நகைச்சுவையென பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் சக நண்பா் மதுரைமைந்தன் அவா்களை நான்காவதாக வரிசையில் அமா்த்துகிறேன்.

உங்களுடைய விஞ்ஞானக் கதையினை நான் இன்றுதான் படித்தேன் அங்கே தாங்கள் இட்டிருந்த ஒரு கருத்தையும் கவன்த்தேன் அதனை மையமாகக்கொண்டு இக்கேள்வியை தங்களிடம் கேட்க ஆசைப்படுகிறேன்.

நீங்கள் தற்பொளுது மன்றத்திற்கு கதை மற்றும் நகைச்சுவைகள் என்பன வழங்கிக்கொண்டிருக்கிறீா்கள். ஆனால் உங்கள் மனம் எதிர்பார்த்த ஆதரவு அதற்கு கிடைக்கவில்லையென என்னறிவுக்கு எட்டியது. அப்படி உங்கள் மனம் திருப்திப்படா விட்டாலும் மன்றத்திற்கு படைத்துக் கொண்டிருக்கிறீா்கள், நீங்கள் எப்பொளுதேணும் வருந்தியதுண்டா எதிர்பார்த ஆதரவு இல்லையென? எப்பொளுதேனும் சிந்தித்ததுண்டா ஏன் நான் மென்மேலும் படைக்க வேண்டும் என்று?

__________________________________________________________________________________________

ஐந்தாவதாக நம்மக்கா.ஆட்டோ ராணி என்றழைக்கப்படும், லன்டன் தாதாவுமான மிஸ் தமிழ்மன்றம், அக்கா ஓவியாவை அன்புடன் அழைக்கிறேன்.. யக்கோவ் இங்க எங்கயாவது சுத்தினால் இங்கயும் கொஞ்சம் வாங்க.:icon_clap:

தாங்கள் கவிதைப்போட்டியில் 3 தடவைகள் வெற்றியீட்டியதை மையமாகக் கொண்டு இக்கேள்வியை கேட்ட அவாவில் உள்ளேன் மன்றத்தில் சில நாட்களாக எனக்கு எழுந்து கொண்டிருக்கும் ஒரு சந்தேகம்.

நீங்கள் மன்றத்திற்கு அற்புதமாக கவிதைகளைப்படைத்திருக்கிறீா்கள் நிச்சயமாக எந்தவெரு சுழலை மையமாகக் கொண்டும் உங்களால் கவிதையைவடிக்க முடியும், இவ்வளவு திறமையுள்ள நீங்கள் எப்பொளுதேனும் கவிதை எழுத முடியாத சுழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறீங்களா? மனம் வெறுமையான நேரத்தில் கவிதைகளே வராத சந்தா்பங்கள் உண்டா? அப்படியிருந்தால் அதைத்தாருங்கள்.

மற்றும் இப்ப எல்லாம் நீங்க கவிதைப்போட்டில பங்கெடுக்கிறதே இல்லயே ஏன் 3 Awads க்கு மேல Showcase இல் வைக்க அழகில்லை என்றா:D

__________________________________________________________________________________________

அடுத்தாக நம்ம திரியோட ஆசான். மற்றும் எல்லோரையும் சிரிக்க வைக்கும் காமெடியன் என்றுகூட அழைக்கலாம் அதுதாங்க
நம்ம அன்பு வெள்ளம் ராஐா அண்ணா, அண்ணாவை கொம்பட்டபுள் ஆ ஆற்றிற்கு பக்கத்தில் ஆறாக அமா்த்துகிறேன்

உங்கள் படைப்புக்கள் பல நான் பார்த்துச்சிரித்துள்ளேன் அதனால் எனக்கெளுந்த கேள்வி அதை உங்களிடம் கொடுக்கின்றேன்

நீங்கள் எத்தனையோ சிரிப்பு வெடிகளை போட்டிருப்பீங்க அதில் நீங்கள் இப்பொளுது கூட ஒரு கனம் நினைத்தால் வயிறு குலுங்கும் சம்மவங்கள் அல்லது வெடிகள் உண்டா? அப்படி இருந்தால் அதை எங்களுக்கு ஒரு முறை தாருங்கள். உங்கள் சூழல் அல்லது குடும்பத்திலாகவும் இருக்கலாம்.

__________________________________________________________________________________________

ஏழவதாக உலகமெங்கும் அவன் ஒளி எட்டிக்கொண்டிருக்கும் அவனில்லையேல் அகிலமில்லை கிட்டச்சென்றால் பஸ்பம்
இவா் கிட்டச்சென்றால் மனம் தங்கபுஸ்பம்... ஓவா் பில்டப்பை நிப்பாட்டீட்டு ஆதவா என்று மன்றம் அதிரும் படியாக கத்துகின்றேன்:icon_clap:

உங்களுடைய பல கவிதைகள் மற்றும் தற்பொளுது தந்து கொண்டிருக்கும் மார்கழி சம்பந்தானவை படித்துக்கொண்டிருக்கிறேன்
ஆனால் உங்கள் சில கவிதைகளைப்பார்த்தால் எனக்கு ஓன்றுமே புரிவதில்லை. எல்லாம் சுத்த சூனியமாகவே தோன்றுகிறது.
இதையெல்லாம் எங்கயாவது பழைய ஒலைச்சுவட்டில் இருந்து சுட்டீங்களா?:rolleyes: இல்லையெனின் தங்கள் பாட்டனார் யாராவது புலவரா?:D

__________________________________________________________________________________________

எட்டாவதாக கையிலே எட்டாத, கிட்ட நாமென்றும் முட்டாத முட்டும் வேளையில் நம்முயிர் நம்மிலிருக்காது, ஆனால் இவா் அப்படியல்ல பனிமலையில் இருக்கும் அக்னி என்றும் சுகத்தையே தருபவா்.

மன்றத்தில் தற்பொளுது பெரும்பாலும் பழக நோ்ந்தது அதையடுத்து
உங்களிடம் அறுவாய் வெட்டும் வாங்கியதுண்டு
அதனால் ஒரு கேள்வியை வேடிக்கையாக உங்கள்முன் வெட்டுகிறேன்

நீங்கள் ஒரு வானொலி அல்லது தொலைக்காட்சி ஒலிபரப்பு நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறீா்கள் என்று கற்பனையில் முழ்குங்கள். உங்களிம் ஒரு நேயா்விருப்பம் என்றொரு தொல்லை பேசி நிகழ்வொன்றை ஒப்படைத்தால் வீட்டிலிருந்தே
நேயா்களை அறுப்பதற்கு தயராக்ச் செல்வீங்களா? இல்லாட்டி நிகழ்ற்சியிலேயே யோசனை செய்து நேயா்களை அறுப்பீங்களா?:D
உங்களுக்கு அறுக்கும் குறுக்குக் கேள்விகள் மற்றவருடன் பழகிவந்ததா?
இல்லையென்றால் மன்றத்தில ஸ்பெசல் ரெய்னிங்கா?

__________________________________________________________________________________________

ஒன்பதாவதாக உலகம் சுற்றும் வாலிபன் கட்டப் பிரம்மச்சாரி மன்ற மனங்கவா் பதிவாளா் எனக்கும் நெருக்கமானவா். அவரின் படைப்புக்கள் ரசித்தவை பல ருசித்தவை பல நம்ம நாரயணா நாரயணா .... நாரதா்

உங்கள் பெயரை நினைத்த பொளுது இக்கதாப்பாத்திரத்தை நான் உங்களுக்காக யோசித்தேன். நீங்கள் தற்பொளுது உள்ள புனைப்பெயா் கதாபாத்திரமாகவே உங்களை ஆக்கிக் கொண்டு இவ்வினாவுக்கு விடையளியுங்க எஸ்கேப் ஆகிறது என்றெல்லாம் நினைக்க கூடது:D

தற்பொளுது உங்களுக்கு 23 வயது என்றென்னுங்கள் உங்களிடம் ஒரு அழகாக பெண்வந்து நான் உங்களை விரும்புகிறேன் உங்களை மணம்செய்து வாழ்நாளை உங்களுடனே கழிக்க வேண்டுமென்றால்
நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீா்களா? இல்லை என்றால் இக்கதாப்பாத்திரத்தினுாடாக நீங்கள் அப்பெண்னிற்கு நீஙகள் கூறும் அறிவுரை என்ன?

__________________________________________________________________________________________

மன்றத்தில் பல திரிகளுக்கும் புயல் காற்று வீசிக்கொண்டிருக்கிறது, பல இடங்களின் பெயா் அறிய வழிவகுத்தவா், புதிதாக இணைந்தாலும் மன்றத்திற்காக பாடுபட்டுக்கொண்டிருப்பவா் பெரிதும் மற்றவா்கட்கு அறிமுகமில்லாதவா் அவரை இத்த்ரிக்கும் எட்டிப்பார்க்க வைக்கும் நோக்கில் அன்பு அண்ணன் தமி்ழ்தாசன்
அவா்ளை ஆ 10 ன் என் இறுதி ஆட்டத்தில் ஆட வருமாறு அழைக்கிறேன்.

நீங்கள் மன்றத்திற்கு நுழையும் முன்பு அதாவது மன்றத்தை வெளியிலிருந்து பார்க்கும் பொளுது உங்களுக்கு தமிழ் மன்றம் பற்றி ஏற்பட்ட உணா்வு என்ன? மன்றத்தில் தற்பொளுது தாங்கள் பதிவுகள் பதிக்கும் பொளுதும் தங்கள் திரிகள் கொளுந்து விட்டுக்கொண்டிருப்பதையும் தாங்கள் எவ்வாறு கருதுகிறீா்கள்? இதனை ஒரு கவிதையாக வடியுங்களேன்..!
எனக்குத் தெரியும் உங்களால் முடியும் என்று அதனால்தான் இது போன்றெரு வினாவை உங்களிடம் கேட்கிறேன்.

=============================================================================

எனக்கு 10 கேள்விகளுக்கு மட்டுமே வாய்பு
இருப்பதையென்னி கவலையடைகிறேன், என் மனதிலும் தாள்களிலும்
15 போருக்கான கேள்வியை தொகுத்தேன் அதில் 10 மட்டுமே ஆ 10
இல் என்னால் தற்பொளுது தரமுடியும் அடுத்த முறை
வாய்ப்புக்கிடைப்பின் என் எண்ணிக்கையில் விடுபட்டவா்களுக்கு
வில்லங்கம்தான்:D

மற்றும் என்னுடைய கேள்விகளை தயவு செய்து தவறாக எடுக்க
வேண்டாம். இது மற்றவா்களை சந்தோசப்படுத்தும் ஒரு செயலாக
எடுக்கவும். கோமாளியாக இருந்தாலும் 100 போ் சிரித்து மகிழ்வது நம்
ஒருவரால்தானே:D

விடையளிக்க காத்துக்கொணடிருக்கும் அன்பு உள்ளங்களுக்கும் பின்னுாட்டங்களில் அசத்தும் நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள்:icon_b:

நன்றி:)

நிரன்
21-12-2008, 10:17 AM
நிரஞ்சரே! உங்களது கேள்விகளைத்தான் எதிர்பார்த்திருக்கோம்.........

என்னிடம் கேள்வியாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

வேண்டவே வேண்டாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஒரு ஆப்பு நால்லாவே போதும்! :D

நாரா உங்கள் ஆப்பு இலக்கம் 9பது :D:D

நிரன்
21-12-2008, 10:19 AM
இன்னும் யாரும் சிக்கலயா? :lachen001:

5 போ்ல ஒராளா எஸ்கேப் ஆகிட்டீங்க அடுத்த முறை ஆப்பு கென்போம்:D:D

சூரியன்
21-12-2008, 10:24 AM
அழகான கேள்விகள் நிரஞ்சன் அண்ணா.
பொறுத்திருந்து பார்ப்போம் விடைகளை..

சூரியன்
21-12-2008, 10:27 AM
5 போ்ல ஒராளா எஸ்கேப் ஆகிட்டீங்க அடுத்த முறை ஆப்பு கென்போம்:D:D

நல்ல வேளை நான் தப்பிச்சேன்.:D

என்ன வில்லத்தனம்.:sprachlos020:

நிரன்
21-12-2008, 10:30 AM
அழகான கேள்விகள் நிரஞ்சன் அண்ணா.
பொறுத்திருந்து பார்ப்போம் விடைகளை..

நிரஞ்சன் சரி அது என்ன அண்ணா?
அண்ணா வேண்டாம், நிரஞ்சன் மட்டுமே போதும்.

(எனக்கு அண்ணா யாரும் இல்லங்கோவ் ):D

சூரியன்
21-12-2008, 10:33 AM
நிரஞ்சன் சரி அது என்ன அண்ணா?
அண்ணா வேண்டாம், நிரஞ்சன் மட்டுமே போதும்.

(எனக்கு அண்ணா யாரும் இல்லங்கோவ் ):D

உங்க வயசுக்கு தாங்க அந்த அண்ணா.

சரியா பெரியவரே.:aetsch013:

நிரன்
21-12-2008, 10:44 AM
உங்க வயசுக்கு தாங்க அந்த அண்ணா.

சரியா பெரியவரே.:aetsch013:

கிளம்பீட்டாங்கையா ஒரு பிளானோட:rolleyes: 18 வயது பச்சைப்பாலகனைப் பார்த்து இப்படியா செல்லுறது:medium-smiley-045:

சூரியன்
21-12-2008, 10:51 AM
கிளம்பீட்டாங்கையா ஒரு பிளானோட:rolleyes: 18 வயது பச்சைப்பாலகனைப் பார்த்து இப்படியா செல்லுறது:medium-smiley-045:

18வயசு பாலகனா?
சரி அழுவாதீங்க நம்பீட்டோம்.:D
அதென்ன பச்சை பாலகன் பச்சைகலர்லயா இருப்பீங்க?:rolleyes::rolleyes:

நிரன்
21-12-2008, 11:21 AM
18வயசு பாலகனா?
சரி அழுவாதீங்க நம்பீட்டோம்.:D
அதென்ன பச்சை பாலகன் பச்சைகலர்லயா இருப்பீங்க?:rolleyes::rolleyes:

நம்புங்கையோவ்..... நம்புங்க

நான் சிரிக்கிறதில தெரியல்லையா நான் பச்சை கலர் என்று:D

சூரியன்
21-12-2008, 11:23 AM
நம்புங்கையோவ்..... நம்புங்க

நான் சிரிக்கிறதில தெரியல்லையா நான் பச்சை கலர் என்று:D

தெரியுது ஆனா? :rolleyes:

நிரன்
21-12-2008, 11:28 AM
தெரியுது ஆனா? :rolleyes:

அதுக்கு பறகு ஆ.......:D ஒரு தமிழ் வகுப்பெடுக்கலாம் எடுக்கலாம்

சூரியன்
21-12-2008, 11:30 AM
அதுக்கு பறகு ஆ.......:D ஒரு தமிழ் வகுப்பெடுக்கலாம் எடுக்கலாம்

நீங்க கத்துக்கிறீங்களா?:D

நிரன்
21-12-2008, 11:35 AM
நீங்க வகுப்பெடுத்தா நாங்க கொஞ்சப்போ் வாறம் :music-smiley-012:

ஒருமாதிரி இன்னொரு புதுப்பக்கம் வந்திட்டம். வெற்றிகரமாக ஒரு பக்கத்தை முடிச்சிட்டம் ... இனியும் ஒரு பக்கம் முடிக்க யோசனை இருக்கா!!!!:aktion033:

சூரியன்
21-12-2008, 11:38 AM

சரி இன்னிக்கே பிளைட் புடிச்சு இந்தியா கிளம்புங்க நாளைக்கு வகுப்பு எடுக்க ஆரம்பிச்சுடலாம்.

ஒருமாதிரி இன்னொரு புதுப்பக்கம் வந்திட்டம். வெற்றிகரமாக ஒரு பக்கத்தை முடிச்சிட்டம் ... இனியும் ஒரு பக்கம் முடிக்க யோசனை இருக்கா!!!!:aktion033:

நீங்க ரெடின்னா நான் ரெடி.

நிரன்
21-12-2008, 11:42 AM
ஆதவா வோ அக்னி யோ கூறியது போன்று முதலாவது தான் முயல்கொம்பு .... அதைக்கண்டு பிடிச்சாலும் சரி மாடு பிடிச்சாலும் சரி:aetsch013:
(பிடிச்சால் சரி)

நீங்க சென்னா சரிதாணுங்க:icon_b:

சூரியன்
21-12-2008, 11:44 AM
ஆதவா வோ அக்னி யோ கூறியது போன்று முதலாவது தான் முயல்கொம்பு .... அதைக்கண்டு பிடிச்சாலும் சரி மாடு பிடிச்சாலும் சரி:aetsch013:
(பிடிச்சால் சரி)

நீங்க சென்னா சரிதாணுங்க:icon_b:

நம்ம நால முயற்கொம்பெல்லாம் பிடிக்க முடியாது,மாட்டோட கொம்ப வேனா பிடிக்கலாம்.

மதுரை மைந்தன்
21-12-2008, 11:50 AM
உங்களுடைய விஞ்ஞானக் கதையினை நான் இன்றுதான் படித்தேன் அங்கே தாங்கள் இட்டிருந்த ஒரு கருத்தையும் கவன்த்தேன் அதனை மையமாகக்கொண்டு இக்கேள்வியை தங்களிடம் கேட்க ஆசைப்படுகிறேன்.

நீங்கள் தற்பொளுது மன்றத்திற்கு கதை மற்றும் நகைச்சுவைகள் என்பன வழங்கிக்கொண்டிருக்கிறீா்கள். ஆனால் உங்கள் மனம் எதிர்பார்த்த ஆதரவு அதற்கு கிடைக்கவில்லையென என்னறிவுக்கு எட்டியது. அப்படி உங்கள் மனம் திருப்திப்படா விட்டாலும் மன்றத்திற்கு படைத்துக் கொண்டிருக்கிறீா்கள்இ நீங்கள் எப்பொளுதேணும் வருந்தியதுண்டா எதிர்பார்த ஆதரவு இல்லையென? எப்பொளுதேனும் சிந்தித்ததுண்டா ஏன் நான் மென்மேலும் படைக்க வேண்டும் என்று?

அன்பு நண்பர் நிரஞசனுக்கு என் மனதில் உறுத்திக் கொண்டிருக்கும் இந்த கேள்விக்கு பதிலளிக்க வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி. மன்றத்தில் என் படைப்புக்களை பதிவு செய்து விட்டு அதற்கு உடனே பின்னூட்டங்களை எதிர் பார்த்து ஏமாறுவது என் வாடிக்கை ஆகி விட்டது. இதற்காக மன்றத்து நண்பர்களை குறை கூறவில்லை. ஏனென்றால் எனது எதிர் பார்ப்புகள் அதிகமாக இருக்கலாம். ஆனால் நிச்சயமாக ஒரு பின்னூட்டமாவது வந்து விட்டால் என் உற்சாகம் மீண்டும் தலை தூக்கிறது; அதனால் தான் நான் தொடர்ந்து பதிவு செய்கிறேன். எனது படைப்புக்களுக்கு பின்னூட்டஙகளை நான் எதிர் பார்ப்பது போல் தான் மற்ற நண்பர்களும் எதிர் பார்க்கிறார்கள் என்பதை உணர்கிறேன். அவர்களின் படைப்புக்களை பாராட்டி நான் பின்னூட்டம் போடவில்லையென்றால் எப்படி நான் அவர்களிடமிருந்து எதிர் பார்க்க முடியும்?.

சில வாரங்கள் முன் நான் ஒரு கதை 'மணியான நண்பன்' என்ற தலைப்பில் பதிவு செய்தேன். அந்த கதைக்கு ஒரு பின்னூட்டம் வராததால் மனம் நொந்து அக்கதையை எடுத்து விட்டேன். அச்சமயம் வந்த மன்றத்து நண்பர்களின் பின்னூட்டங்கள் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. எனது விஞ்ஞானி கதையை ஒரு தேர்ந்த எழுத்தாளர் கையாண்டிருந்தால் அது நிச்சயம் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும்.். நான் ஒரு பொழுது போக்கு எழுத்தாளன். நண்பர் மூர்த்தி கூறுவது போல எனது எழுத்துக்கள் raw writing. .

இதிலெல்லாம் ஒரு முக்கியமான விசயம் மன்றத்தின் பால் எனக்குள்ள ஈர்ப்பு. ஆங்கிலத்தில் addiction என்று சொல்லுவார்கள். நான் தொடர்ந்து பதிவு செய்ய தீர்மானித்துள்ளேன். பின்னூட்டங்கள் வந்தாலும் வராவிட்டாலும்.

சூரியன்
21-12-2008, 11:58 AM

அண்ணா உங்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் வரதற்கு மேலும் பல காரணங்கள் இருக்காலாம்.
இதில் மிகவும் முக்கியமான ஒன்று நேரமின்மையே.

நீங்கள் மற்றவர்களுக்கு பின்னூட்டம் அளித்தாலும் அளிக்காவிட்டாலும் நமது மன்ற நண்பர்கள் உங்களின் படைப்புகளை படித்தால் நிச்சயம் அதற்குரிய கருத்தை சொல்வார்கள்.

தொடர்ந்து உங்களின் படைப்புகளை தாருங்கள்.

நிரன்
21-12-2008, 12:05 PM
எனது கேள்விக்கு தங்களின் பதிலைக் கண்டு மகிழ்கின்றேன்
மேலும் தங்கள் கதை படித்த பின்னரே எனக்கு உங்களிடம்
இப்படியான தொரு வினாவை விடுக்க வேண்டும் என்று எழுந்தது.
உங்கள் படைப்புக்களுக்கு பின்னுாட்டங்கள் மிகக்குறைவாக கிடைக்கிறதென்ற
உங்கள் கவலைக்கு வருந்துகின்றேன்.. கதைகள் நன்றாக இருக்கும் பட்சத்தில்
அதற்கு கருதிதுகள் நிச்சயம் வரும்
அது எழுத்தாளா் என பேதம் பார்க்காது. மற்றும் தற்பொளுது பெரும்
எழுத்தாளராக உள்ளவா்களெல்லாம் முதலில் ஒரு சிறு புள்ளிதான்
எவரும் பிறக்கும் பொளுதே கவிஞ்ஞனாகவே.. கதாசிரியராகவே ஆவதில்லை
இவ்வுலகில் படைக்கும் படைப்புக்கள்தான் ஒருவனை அந்நிலைக்கு உயா்த்திச் செல்கிறது.
கண்டிப்பாக நீங்கள் தொடா்ந்தும் உங்கள் பணியைத்தொடருங்கள்
கண்ணிப்பாக உங்கள் மனம் எதிர் பார்த்ததை விட பன்மடங்கு கருத்துக்கள் குவியும்.

அதற்கு என் வாழ்த்துக்கள்:icon_b:

நிரன்
21-12-2008, 12:07 PM
மன்றத்தில் இம்முறை ஆ 10 ற்கான வினாவை
வினாவுவதற்கு என்னை அழைப்பு விடுத்திருந்ததையடுத்து இங்கே என்
கேள்விகளை சமா்ப்பிக்கிறேன். இக் கேள்விகள் சில மற்றவா்களின்
உணற்சிகளை மையமாகக் கொண்டும் சில எல்லோரையும்
சங்கடமில்லாது சந்தோசத்தை மட்டுமே கெடுக்கும் வகையில்
தொகுத்துள்ளேன். இக் கேள்விகளில் ஏதேனும் தவறாக இருப்பின்
அதற்காக என்னை தாழ்மையுடன் மன்னிக்குமாறு கேட்டுக்
கொள்கிறேன்

__________________________________________________________________________________________

எனது முதலாவது கேள்வி மன்றத்தின் நிர்வாகி அறிஞரிடம்,
தங்களால் இவ் வினாவுக்கு முழுமையான பதிலளிக்க நேரம் இல்லையென்று என்னறிவுக்குத் தெரியும்.
இவ் வினாவிற்கு உங்களால் முடிந்த ஒரு சிறு பதிலைத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

தாங்கள் மன்றத்தின் நிர்வாகி மற்றும் மன்றம் தொடங்கிய போதே மன்றத்திற்கான உங்கள் பணிகளும் ஆரம்பமாகி விட்டன. ஆரம்ப காலத்தில மிகவும் குறைந்தளவே உறுப்பினா்கள் அங்கம்வகித்திருப்பார்கள். அவ் வேளையில் நீங்கள் மன்றத்தினுாடாக எப்படி தமிழை வளா்க்க போகிறேன் என்று ஒரு கனம் யோசித்ததுண்டா? தற்பொழுது மன்றத்திற்கு பல புதிய உருப்பினா்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனா். இது உங்கள் மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கிறதா இல்லை சந்தோசத்துடன் கூடிய சிறிதொரு பயத்தையும் கொடுக்கிறதா?

__________________________________________________________________________________________

மன்ற பொருப்பாளரும் அன்புக்குரிய நண்பருமான நம்ம அமரன் அண்ணாவை இரண்டாவது கேள்வியாளராக அமா்த்தியுள்ளேன்.

நீங்கள் மன்றத்தில் பல போட்டிகளை தலைமை தாங்கி நடத்தியுள்ளீா் இறுதியில் வாக்கெடுப்பு முலாம் வெற்றியாளர் மன்றத்தில் அறிவிக்கப்படும். வாக்கெடுப்பு மூலம் கவிதைகயோ கதைகளையோ தோ்ந்தெடுத்தாலும் உங்கள் மனதிற்கு பிடித்த படைப்பு என்று நீங்கள் கருதியிருப்பீா்கள். நீங்கள் வெற்றி பெரும் என்று நினைத்த கவிதையோ கதையோ 2 அல்லது 3ம் இடத்திற்கு தள்ளப்படுகையில் உங்கள் மனம் அதனை ஈடுகொடுக்குமா? அத்தருனத்தில் உங்கள் மனம் என் நிலையில் இருக்கும்?

மற்றும் ஒரு சந்தேகம் நீங்கள் மன்றத்திற்கு 14000+ பதிவுகளை கொடுத்திருக்கிறீங்க. ஆனால் உங்க இணைவு திகதி 16 Feb 2007,
மேறிகூறிய திகதியிலா நீங்க இணைந்தீங்க? இல்லாட் ஒரு பில்டப்புக்கு அப்படியா?:D

__________________________________________________________________________________________

மூன்றவது கேள்வியை எக் கேள்விக்கும் முகம் சுழிக்கா பதிலளிக்கும் எங்கள் சிவா.ஐி அண்ணாவை அமா்த்துகிறேன்.

தாங்கள் துபாயில் வேலை செய்வதாக அறிந்தேன் அதனால் என்னறிவில் எட்டிய வினாவதை உங்களிடம் வினாவ விரும்புகிறேன்.

நீங்கள் வெள்நாட்டில் பணியாற்றுவதன் மூலம் உங்களுக்கு அந்நாட்டவரின் மூலம் வேலைத்தளத்தில் ஏதாவது கசாப்பான அணுபவங்கள் நிகழ்ந்ததுண்டா? அவ்வேளையில் நீங்கள் தாய்நாட்டை நினைத்து அதனை பெரிதும் இழந்து விட்டோமே என்று என்னிய தருனங்கள் ஏதேனும் உண்டா? இதனால் ஏன் பிறநாட்டவரிற்கு கீழ் நாம் வேலை செய்ய வேண்டும் என்று மனம் பிரிவினை ஏற்படுத்தியதுண்டா?
அப்பிரிவினையை சில (குடும்பம் போன்ற )காரணங்கள் துாக்கி எறிந்ததுண்டா?

__________________________________________________________________________________________

பலதிரிகளிலும் கதை நகைச்சுவையென பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் சக நண்பா் மதுரைமைந்தன் அவா்களை நான்காவதாக வரிசையில் அமா்த்துகிறேன்.

உங்களுடைய விஞ்ஞானக் கதையினை நான் இன்றுதான் படித்தேன் அங்கே தாங்கள் இட்டிருந்த ஒரு கருத்தையும் கவன்த்தேன் அதனை மையமாகக்கொண்டு இக்கேள்வியை தங்களிடம் கேட்க ஆசைப்படுகிறேன்.

நீங்கள் தற்பொளுது மன்றத்திற்கு கதை மற்றும் நகைச்சுவைகள் என்பன வழங்கிக்கொண்டிருக்கிறீா்கள். ஆனால் உங்கள் மனம் எதிர்பார்த்த ஆதரவு அதற்கு கிடைக்கவில்லையென என்னறிவுக்கு எட்டியது. அப்படி உங்கள் மனம் திருப்திப்படா விட்டாலும் மன்றத்திற்கு படைத்துக் கொண்டிருக்கிறீா்கள், நீங்கள் எப்பொளுதேணும் வருந்தியதுண்டா எதிர்பார்த ஆதரவு இல்லையென? எப்பொளுதேனும் சிந்தித்ததுண்டா ஏன் நான் மென்மேலும் படைக்க வேண்டும் என்று?

__________________________________________________________________________________________

ஐந்தாவதாக நம்மக்கா.ஆட்டோ ராணி என்றழைக்கப்படும், லன்டன் தாதாவுமான மிஸ் தமிழ்மன்றம், அக்கா ஓவியாவை அன்புடன் அழைக்கிறேன்.. யக்கோவ் இங்க எங்கயாவது சுத்தினால் இங்கயும் கொஞ்சம் வாங்க.:icon_clap:

தாங்கள் கவிதைப்போட்டியில் 3 தடவைகள் வெற்றியீட்டியதை மையமாகக் கொண்டு இக்கேள்வியை கேட்ட அவாவில் உள்ளேன் மன்றத்தில் சில நாட்களாக எனக்கு எழுந்து கொண்டிருக்கும் ஒரு சந்தேகம்.

நீங்கள் மன்றத்திற்கு அற்புதமாக கவிதைகளைப்படைத்திருக்கிறீா்கள் நிச்சயமாக எந்தவெரு சுழலை மையமாகக் கொண்டும் உங்களால் கவிதையைவடிக்க முடியும், இவ்வளவு திறமையுள்ள நீங்கள் எப்பொளுதேனும் கவிதை எழுத முடியாத சுழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறீங்களா? மனம் வெறுமையான நேரத்தில் கவிதைகளே வராத சந்தா்பங்கள் உண்டா? அப்படியிருந்தால் அதைத்தாருங்கள்.

மற்றும் இப்ப எல்லாம் நீங்க கவிதைப்போட்டில பங்கெடுக்கிறதே இல்லயே ஏன் 3 Awads க்கு மேல Showcase இல் வைக்க அழகில்லை என்றா:D

__________________________________________________________________________________________

அடுத்தாக நம்ம திரியோட ஆசான். மற்றும் எல்லோரையும் சிரிக்க வைக்கும் காமெடியன் என்றுகூட அழைக்கலாம் அதுதாங்க
நம்ம அன்பு வெள்ளம் ராஐா அண்ணா, அண்ணாவை கொம்பட்டபுள் ஆ ஆற்றிற்கு பக்கத்தில் ஆறாக அமா்த்துகிறேன்

உங்கள் படைப்புக்கள் பல நான் பார்த்துச்சிரித்துள்ளேன் அதனால் எனக்கெளுந்த கேள்வி அதை உங்களிடம் கொடுக்கின்றேன்

நீங்கள் எத்தனையோ சிரிப்பு வெடிகளை போட்டிருப்பீங்க அதில் நீங்கள் இப்பொளுது கூட ஒரு கனம் நினைத்தால் வயிறு குலுங்கும் சம்மவங்கள் அல்லது வெடிகள் உண்டா? அப்படி இருந்தால் அதை எங்களுக்கு ஒரு முறை தாருங்கள். உங்கள் சூழல் அல்லது குடும்பத்திலாகவும் இருக்கலாம்.

__________________________________________________________________________________________

ஏழவதாக உலகமெங்கும் அவன் ஒளி எட்டிக்கொண்டிருக்கும் அவனில்லையேல் அகிலமில்லை கிட்டச்சென்றால் பஸ்பம்
இவா் கிட்டச்சென்றால் மனம் தங்கபுஸ்பம்... ஓவா் பில்டப்பை நிப்பாட்டீட்டு ஆதவா என்று மன்றம் அதிரும் படியாக கத்துகின்றேன்:icon_clap:

உங்களுடைய பல கவிதைகள் மற்றும் தற்பொளுது தந்து கொண்டிருக்கும் மார்கழி சம்பந்தானவை படித்துக்கொண்டிருக்கிறேன்
ஆனால் உங்கள் சில கவிதைகளைப்பார்த்தால் எனக்கு ஓன்றுமே புரிவதில்லை. எல்லாம் சுத்த சூனியமாகவே தோன்றுகிறது.
இதையெல்லாம் எங்கயாவது பழைய ஒலைச்சுவட்டில் இருந்து சுட்டீங்களா?:rolleyes: இல்லையெனின் தங்கள் பாட்டனார் யாராவது புலவரா?:D

__________________________________________________________________________________________

எட்டாவதாக கையிலே எட்டாத, கிட்ட நாமென்றும் முட்டாத முட்டும் வேளையில் நம்முயிர் நம்மிலிருக்காது, ஆனால் இவா் அப்படியல்ல பனிமலையில் இருக்கும் அக்னி என்றும் சுகத்தையே தருபவா்.

மன்றத்தில் தற்பொளுது பெரும்பாலும் பழக நோ்ந்தது அதையடுத்து
உங்களிடம் அறுவாய் வெட்டும் வாங்கியதுண்டு
அதனால் ஒரு கேள்வியை வேடிக்கையாக உங்கள்முன் வெட்டுகிறேன்

நீங்கள் ஒரு வானொலி அல்லது தொலைக்காட்சி ஒலிபரப்பு நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறீா்கள் என்று கற்பனையில் முழ்குங்கள். உங்களிம் ஒரு நேயா்விருப்பம் என்றொரு தொல்லை பேசி நிகழ்வொன்றை ஒப்படைத்தால் வீட்டிலிருந்தே
நேயா்களை அறுப்பதற்கு தயராக்ச் செல்வீங்களா? இல்லாட்டி நிகழ்ற்சியிலேயே யோசனை செய்து நேயா்களை அறுப்பீங்களா?:D
உங்களுக்கு அறுக்கும் குறுக்குக் கேள்விகள் மற்றவருடன் பழகிவந்ததா?
இல்லையென்றால் மன்றத்தில ஸ்பெசல் ரெய்னிங்கா?

__________________________________________________________________________________________

ஒன்பதாவதாக உலகம் சுற்றும் வாலிபன் கட்டப் பிரம்மச்சாரி மன்ற மனங்கவா் பதிவாளா் எனக்கும் நெருக்கமானவா். அவரின் படைப்புக்கள் ரசித்தவை பல ருசித்தவை பல நம்ம நாரயணா நாரயணா .... நாரதா்

உங்கள் பெயரை நினைத்த பொளுது இக்கதாப்பாத்திரத்தை நான் உங்களுக்காக யோசித்தேன். நீங்கள் தற்பொளுது உள்ள புனைப்பெயா் கதாபாத்திரமாகவே உங்களை ஆக்கிக் கொண்டு இவ்வினாவுக்கு விடையளியுங்க எஸ்கேப் ஆகிறது என்றெல்லாம் நினைக்க கூடது:D

தற்பொளுது உங்களுக்கு 23 வயது என்றென்னுங்கள் உங்களிடம் ஒரு அழகாக பெண்வந்து நான் உங்களை விரும்புகிறேன் உங்களை மணம்செய்து வாழ்நாளை உங்களுடனே கழிக்க வேண்டுமென்றால்
நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீா்களா? இல்லை என்றால் இக்கதாப்பாத்திரத்தினுாடாக நீங்கள் அப்பெண்னிற்கு நீஙகள் கூறும் அறிவுரை என்ன?

__________________________________________________________________________________________

மன்றத்தில் பல திரிகளுக்கும் புயல் காற்று வீசிக்கொண்டிருக்கிறது, பல இடங்களின் பெயா் அறிய வழிவகுத்தவா், புதிதாக இணைந்தாலும் மன்றத்திற்காக பாடுபட்டுக்கொண்டிருப்பவா் பெரிதும் மற்றவா்கட்கு அறிமுகமில்லாதவா் அவரை இத்த்ரிக்கும் எட்டிப்பார்க்க வைக்கும் நோக்கில் அன்பு அண்ணன் தமி்ழ்தாசன்
அவா்ளை ஆ 10 ன் என் இறுதி ஆட்டத்தில் ஆட வருமாறு அழைக்கிறேன்.

நீங்கள் மன்றத்திற்கு நுழையும் முன்பு அதாவது மன்றத்தை வெளியிலிருந்து பார்க்கும் பொளுது உங்களுக்கு தமிழ் மன்றம் பற்றி ஏற்பட்ட உணா்வு என்ன? மன்றத்தில் தற்பொளுது தாங்கள் பதிவுகள் பதிக்கும் பொளுதும் தங்கள் திரிகள் கொளுந்து விட்டுக்கொண்டிருப்பதையும் தாங்கள் எவ்வாறு கருதுகிறீா்கள்? இதனை ஒரு கவிதையாக வடியுங்களேன்..!
எனக்குத் தெரியும் உங்களால் முடியும் என்று அதனால்தான் இது போன்றெரு வினாவை உங்களிடம் கேட்கிறேன்.

=============================================================================

எனக்கு 10 கேள்விகளுக்கு மட்டுமே வாய்பு
இருப்பதையென்னி கவலையடைகிறேன், என் மனதிலும் தாள்களிலும்
15 போருக்கான கேள்வியை தொகுத்தேன் அதில் 10 மட்டுமே ஆ 10
இல் என்னால் தற்பொளுது தரமுடியும் அடுத்த முறை
வாய்ப்புக்கிடைப்பின் என் எண்ணிக்கையில் விடுபட்டவா்களுக்கு
வில்லங்கம்தான்:D

மற்றும் என்னுடைய கேள்விகளை தயவு செய்து தவறாக எடுக்க
வேண்டாம். இது மற்றவா்களை சந்தோசப்படுத்தும் ஒரு செயலாக
எடுக்கவும். கோமாளியாக இருந்தாலும் 100 போ் சிரித்து மகிழ்வது நம்
ஒருவரால்தானே:D

விடையளிக்க காத்துக்கொணடிருக்கும் அன்பு உள்ளங்களுக்கும் பின்னுாட்டங்களில் அசத்தும் நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள்:icon_b:

நன்றி:)

நிரன்
21-12-2008, 12:10 PM
சூரியன் அண்ணோவ் இன்னும் 9 போ்:080402gudl_prv:
நாரதா் கேள்விய பாத்திட்டு எஸ்கேப்:D

சூரியன்
21-12-2008, 12:17 PM
சூரியன் அண்ணோவ் இன்னும் 9 போ்:080402gudl_prv:
நாரதா் கேள்விய பாத்திட்டு எஸ்கேப்:D

கண்டிப்பா எல்லாரும் வருவாங்க.:icon_b:

(சரி நேரமாச்சு நான் கிளம்பறேன் வீட்டுல தேடுவாங்க.)

ரங்கராஜன்
21-12-2008, 03:19 PM
நிரஞ்சனைப் போல பதில்களுக்காக ஆவலுடன் நானும் காத்து இருக்கிறேன்

நிரன்
21-12-2008, 03:24 PM
நிரஞ்சனைப் போல பதில்களுக்காக ஆவலுடன் நானும் காத்து இருக்கிறேன்

உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி அண்ணா காத்திருப்போம்... மதுரைமைந்தனின் விடை மட்டுமே தற்பொளுது வெளியாகியுள்ளது..

(நேற்று நடந்த மன்ற நிகழ்வு புகைப்படம் வெளியாகிவிட்டதா?):rolleyes:

அமரன்
21-12-2008, 09:24 PM
இன்ஸ்டன்டா(காப்பி)கவும் இன்ரஸ்டிங்காகவும் வினாக்கணை ஏவிய நிரஞ்சனுக்கு நன்றி.
என் கேள்விக்கு என்ன பதில் என்று என்னையே நான் கேட்கிறேன். கிடைத்ததும் உங்களுக்கு தருகிறேன்.

கலாய்ப்பும், கலாட்டாவாகவும் கோர்த்து மாலை கட்டும் நண்பர்களுடன் சேர்ந்து நானும் மகிழ்கிறேன். முகத்தை மறைக்காதளவுக்கு மாலை இருக்கட்டும் மக்களே.

நிரன்
21-12-2008, 09:35 PM

நன்றி அமரன் அண்ணா ....
தங்கள் விடையுக்காய் காத்திருக்கிறோம்:)

பாலகன்
22-12-2008, 12:46 AM
நிரஞ்சன் உங்க கேள்விகள் அனைத்தும் அபாரம்.. அமர்க்களம்

மதுரைக்காரரின் பதிலை கண்டேன், அவரின் ஆதங்கம் புரிகிறது... எனக்கும் இதுபோன்ற அனுபவங்கள் வேறு சில இடங்களில் நிகழ்ந்ததுன்டு, கடமையை செய்துவிட்டு போயிட்டே இருங்கண்ணே, எல்லாம் சரியாயிடும்.....

தொடரட்டும் ஆ10 சேவை.... ராஜா அண்ணே நலமா?

Narathar
22-12-2008, 01:22 AM
நான் தொடர்ந்து பதிவு செய்ய தீர்மானித்துள்ளேன். பின்னூட்டங்கள் வந்தாலும் வராவிட்டாலும்.

நல்ல முடிவு................

உண்மையில் பல பதிவுகளை மேம்போக்காக படித்துவிட்டு செல்கின்றோம், ஆனால் அதற்கு பதிலை எதிர்பார்த்திருக்கும் அந்த பதிவாளரின் மனநிலையைப்பற்றி நாம் யோசிப்பதில்லை........ உங்கள் பதிவில் அந்த பதிவாளரின் வலியை இன்னும் புரிந்து கொண்டேன்!

ஆனால் நீங்கள் எடுத்திருக்கும் முடிவு அருமையானது......... நீங்கள் உங்கள் பங்கிற்கு எழுதிக்கொண்டே செல்லுங்கள்.

ராஜா
22-12-2008, 03:28 AM
[COLOR="Blue"][B]அன்பு நண்பர் நிரஞசனுக்கு என் மனதில் உறுத்திக் கொண்டிருக்கும் இந்த கேள்விக்கு பதிலளிக்க வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி. மன்றத்தில் என் படைப்புக்களை பதிவு செய்து விட்டு அதற்கு உடனே பின்னூட்டங்களை எதிர் பார்த்து ஏமாறுவது என் வாடிக்கை ஆகி விட்டது.

சில வாரங்கள் முன் நான் ஒரு கதை 'மணியான நண்பன்' என்ற தலைப்பில் பதிவு செய்தேன். அந்த கதைக்கு ஒரு பின்னூட்டம் வராததால் மனம் நொந்து அக்கதையை எடுத்து விட்டேன்.

நன்றி நண்பரே..!

தங்களுக்கு இருக்கும் நியாயமான மனக்குறை எனக்கும் உண்டு..!

நான் இப்போது சொல்லப்போகும் விடயங்களை, மன்றத்து நண்பர்கள் சர்ச்சைக்குரியதாக எடுத்துக்கொள்ளாமல், நேரான பொருளில் பரிசீலிக்க வேண்டுகிறேன்.

நான் தமிழ் மன்றம் தவிர வேறு சில களங்களிலும் பங்கேற்றிருக்கிறேன். நாம் ஒரு பதிவோ அல்லது திரியோ போட்டால், அந்தக் களங்களின் பொறுப்பாளர்களோ, வழிநடத்துனர்களோ உடனடியாக ஓடோடி வந்து பாராட்டிப் பின்னூட்டமிடுவார்கள். அதைப் பார்த்த மற்ற உறுப்பினர்களும் தங்கள் பங்குக்கு பின்னூட்டம் போடுவார்கள். ஒரு படைப்பாளிக்கு இதைவிட நியாயமான மகிழ்ச்சி வேறென்ன இருக்க முடியும்? நான் முன்பு பங்கேற்ற களமொன்றில் இந்த ஊக்குவிப்பு மிக அதிகம். அதன் காரணமாகவே, அக்களத்தில் ஒரு ஆண்டில் சுமார் 24,000 பதிவுகள் என்னால் இடமுடிந்தது. அனேகமாக இது ஒரு ( தமிழ்க்களச்) சாதனையாகவும் இருக்கக்கூடும்.

ஆனால், அக்களத்தைவிட இங்கு உறுப்பினர்கள் வருகை அதிகம். பொறுப்பாளர்கள் நடமாட்டமும் மிக அதிகம்.. பாராமுகமும் .... அதிகம்..!

நாமெல்லாம் பல்வேறு அலுவல்களுக்கிடையே, இங்கு வந்து பதிவுகள் போடுகிறோம். நம் நேரத்தையும், பணத்தையும் செலவிடுகிறோம். அப்பதிவுகள் பொறுப்பாளர்கள் கண்ணுக்கே தெரியவில்லையெனில் மற்ற* உறுப்பினர்களைக் குற்றம் சொல்லமுடியுமோ?

சரியான முறையில் உரமிட்டு, தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படும் தாவரமே அதிக பலனைக் கொடுக்கும். ஒரு உறுப்பினரோ, அல்லது திரியோ மிகப் பிரபலமடைந்தால் அது மன்றத்துக்குத்தான் பெருமை என்ற பெருந்தன்மையும், விசால மனப்பான்மையும் உள்ள பொறுப்பாளர்கள் அதிகமிருந்தால் அது ஒரு களத்துக்கு மிகப்பெரிய வரம்.. மாறாக அழுக்காறு வளருமேயானால் அது சாபமாகும்.

என் இந்தப் பதிவை சரியான முறையில் விருப்பு வெறுப்பற்று பரிசீலித்து, நம் மன்றத்துக்கு வருகைதரும் உறுப்பினர் அனைவரையும் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு களத்தை வளப்படுத்தினாலும் சரி.. அல்லது எனது இந்தப் பதிவுக்காக என்மீது நடவடிக்கை எடுத்தாலும் சரி.. இந்தப் பதிவைக் கண்டும் காணாதது போல விட்டாலும் சரி.. அல்லது இதை பொருளற்றதாகக் காட்டும் நோக்கில் ஏதாவது சமாதானம் சொன்னாலும் சரி.. எதுவானாலும் பொறுப்பாளர்கள் விருப்பமே..!

என் மனதில் நீண்டநாட்களாக உறுத்திக்கொண்டிருந்த ஒரு பாரத்தை இறக்கிவைத்துவிட்டேன்.

பாரதி
22-12-2008, 05:48 AM
மதுரை மைந்தன் மற்றும் இராஜா அவர்களின் பின்னூட்டங்கள் அவர்களது நியாயமான ஆதங்கத்தையும், மன்றத்தின் மேல் இருக்கும் அன்பினையும் வெளிக்காட்டுகிறது.

நீங்கள் கூறியதைப்போல பல பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் இடாமல் சென்றவர்களில் நானும் ஒருவன். இது சரியல்ல என்றாலும், நான் பணி செய்யும் இடத்தில் நேரம் மற்றும் இணைய வசதிகள் பிரச்சினைகள் காரணமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் பதிவுகளை முழுமையாக படித்து முடிக்கவே முடிவதில்லை.

விடுமுறைக்காலத்தில் நான் இதை ஈடுகட்டியிருக்க வேண்டும். ஆனால் அதை நான் செய்ததில்லை. பின்னூட்டங்களை பொறுத்த மட்டில் இளசு அண்ணாவை வழிகாட்டியாக கொண்டு பின்னூட்டம் இடவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கிறது; செயல்படுத்துவதில் என்னிடம் இருக்கும் திறமையின்மை காரணமாக தேக்கம் ஏற்படுகிறது.

வரும் காலங்களில் இதை படிப்படியாக போக்குவதற்கு இன்னும் முயற்சி செய்வேன்.

மீண்டும் ஒரு முறை அறிவுறுத்தியமைக்கு நன்றி நண்பர்களே.

ராஜா
22-12-2008, 06:15 AM
என் பின்னூட்டத்தை பாசிட்டிவாக எடுத்துக்கொண்டமைக்கு நன்றி திரு. பாரதி..!

நண்பர் இளசுவைப் போல குறைந்தது இன்னும் இரு பொறுப்பாளர்கள் மன்றம் முழுதும் வலம் வந்து ஊக்குவித்தால் அதைப்போன்ற டானிக் வேறு எதுவுமில்லை.

பதிவாளர்களுக்கு மற்ற*வர்களின் உற்சாகப்படுத்தல்தான் மிகச்சிறந்த எரிபொருள்..!

சிவா.ஜி
22-12-2008, 06:43 AM
உங்கள் ஆதங்கம் புரிகிறது ராஜாசார். மன்றத்திலும் ஒரு காலம் அப்படி இருந்தது. பதிவிட்ட மறு வினாடி பின்னூட்டம் விழுந்திருக்கும். உற்சாகமான நாட்கள் அவை.

ஆனால் தற்சமயம் தொடர்ந்து மன்றம் வரும் உறவுகள் எல்லோரும் மிகப் புதியவர்களே. அதுமட்டுமல்லாமல்...வெட்டி ஒட்டுதல் அதிகமாகிவிட்டது. பிரச்சனைக்குரிய திரிகளைப் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. சமீப காலங்களில் அப்படிப்பட்ட திரிகள் நிறைய தொடங்கப்பட்டது உங்களுக்கே தெரியும்.

நானும் சிலகாலம் வேறு தளங்களில் என் படைப்புகளைப் பதித்திருக்கிறேன். எவ்வளவுதான் அருமையான படைப்பாக இருந்தாலும், ஒருவரி, இருவரி பின்னூட்டங்கள்தான் கிடைக்கும். இங்குள்ளதைப்போல அலசல்களுடன் கூடிய, அரோக்கியமான பின்னூட்டங்களை நான் அங்கு கண்டதேயில்லை. அதனால் வெறுத்துப்போய்தான் அங்கு போவதேயில்லை என முடிவு செய்துவிட்டேன்.

இங்கு தற்போதைய சூழ்நிலையில்..அதிக பின்னூட்டங்களை எதிர்பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது. ஒரு பொறுப்பாளனாய் மட்டுமல்ல ஒரு படைப்பாளனாகவும் எனக்கு இது வருத்தமே. வெட்டி ஒட்டும் பதிவுகளுக்கும், கடன்வாங்கிய பதிவுகளுக்கும் பின்னூட்டமிட எனக்கு மனது ஒத்துழைக்கவில்லை. சொந்தப் படைப்புகள் அப்படி கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருந்தால் அதில் எனக்கு மனவருத்தம் உண்டு.

அதேபோல புதியவர்களை ஊக்குவிக்க நம் மன்றம் என்றும் பின்வாங்கியதில்லை. பாரதி சொன்னதைப்போல சில இடர்பாடுகளால்தான் இந்த பின்னூட்டக்குறைவே தவிர ஒதுக்குதலல்ல நோக்கம். உங்கள் மனவருத்தத்தை சொல்லிவிட்டீர்கள். இனி இந்த நிலையில் மாற்றம் கொண்டுவர நிச்சயம் என்னால் ஆன பங்கை அளிப்பேன்.

ஆதவா
22-12-2008, 09:35 AM
உங்களுடைய விஞ்ஞானக் கதையினை நான் இன்றுதான் படித்தேன் அங்கே தாங்கள் இட்டிருந்த ஒரு கருத்தையும் கவன்த்தேன் அதனை மையமாகக்கொண்டு இக்கேள்வியை தங்களிடம் கேட்க ஆசைப்படுகிறேன்.

நீங்கள் தற்பொளுது மன்றத்திற்கு கதை மற்றும் நகைச்சுவைகள் என்பன வழங்கிக்கொண்டிருக்கிறீா்கள். ஆனால் உங்கள் மனம் எதிர்பார்த்த ஆதரவு அதற்கு கிடைக்கவில்லையென என்னறிவுக்கு எட்டியது. அப்படி உங்கள் மனம் திருப்திப்படா விட்டாலும் மன்றத்திற்கு படைத்துக் கொண்டிருக்கிறீா்கள்இ நீங்கள் எப்பொளுதேணும் வருந்தியதுண்டா எதிர்பார்த ஆதரவு இல்லையென? எப்பொளுதேனும் சிந்தித்ததுண்டா ஏன் நான் மென்மேலும் படைக்க வேண்டும் என்று?

அன்பு நண்பர் நிரஞசனுக்கு என் மனதில் உறுத்திக் கொண்டிருக்கும் இந்த கேள்விக்கு பதிலளிக்க வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி. மன்றத்தில் என் படைப்புக்களை பதிவு செய்து விட்டு அதற்கு உடனே பின்னூட்டங்களை எதிர் பார்த்து ஏமாறுவது என் வாடிக்கை ஆகி விட்டது. இதற்காக மன்றத்து நண்பர்களை குறை கூறவில்லை. ஏனென்றால் எனது எதிர் பார்ப்புகள் அதிகமாக இருக்கலாம். ஆனால் நிச்சயமாக ஒரு பின்னூட்டமாவது வந்து விட்டால் என் உற்சாகம் மீண்டும் தலை தூக்கிறது; அதனால் தான் நான் தொடர்ந்து பதிவு செய்கிறேன். எனது படைப்புக்களுக்கு பின்னூட்டஙகளை நான் எதிர் பார்ப்பது போல் தான் மற்ற நண்பர்களும் எதிர் பார்க்கிறார்கள் என்பதை உணர்கிறேன். அவர்களின் படைப்புக்களை பாராட்டி நான் பின்னூட்டம் போடவில்லையென்றால் எப்படி நான் அவர்களிடமிருந்து எதிர் பார்க்க முடியும்?.

சில வாரங்கள் முன் நான் ஒரு கதை 'மணியான நண்பன்' என்ற தலைப்பில் பதிவு செய்தேன். அந்த கதைக்கு ஒரு பின்னூட்டம் வராததால் மனம் நொந்து அக்கதையை எடுத்து விட்டேன். அச்சமயம் வந்த மன்றத்து நண்பர்களின் பின்னூட்டங்கள் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. எனது விஞ்ஞானி கதையை ஒரு தேர்ந்த எழுத்தாளர் கையாண்டிருந்தால் அது நிச்சயம் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும்.். நான் ஒரு பொழுது போக்கு எழுத்தாளன். நண்பர் மூர்த்தி கூறுவது போல எனது எழுத்துக்கள் raw writing. .

இதிலெல்லாம் ஒரு முக்கியமான விசயம் மன்றத்தின் பால் எனக்குள்ள ஈர்ப்பு. ஆங்கிலத்தில் addiction என்று சொல்லுவார்கள். நான் தொடர்ந்து பதிவு செய்ய தீர்மானித்துள்ளேன். பின்னூட்டங்கள் வந்தாலும் வராவிட்டாலும்.

அருமையான பதில் மதுரை விஞ்ஞானியே!

எழுதி என்ன பயன்?
எழுதாமல் விட்டு என்ன பயன் என்று நமக்குள்ளாகவே கேள்விகள் குடைந்துகொண்டிருந்தால் நம் எழுத்து முறை மட்டுமல்ல, வாழ்க்கை முறைகூட மாறலாம்.

உங்கள் படைப்புக்களில் அவ்வளாக பங்குபெற இயலாவிடினும் நிச்சயம் என் ஆதரவு உங்களுக்கு உண்டு

நிரன்
22-12-2008, 09:38 AM
நன்றி ராஐா அண்ணா!
உங்கள் மனதில் இருக்கும் சுமையை இறக்கு இங்கே விடுக்கப்பட்ட கேள்வி அதை இறக்கியதையடுத்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மன்றத்தில் என் போன்று சாதாரனமானவா்கள் பின்னுட்டமிடுவதை விட மன்ற பொருப்பாளா்கள் அல்லது மன்ற துாண்கள் போன்று பெரும் பதவியில் உள்ளவா்கள் அங்கு சென்று பின்னுாட்டமளிக்கையில் படைப்பவா் நெஞ்சில் மகிழ்ச்சி பொங்கும் மன்ற பெரியோர்கள் பின்னுாட்டமிட்டதையடுத்து கண்டிப்பாக மற்றவா்களும் அதற்கு
பின்னுாட்டமிடுவார்கள். பின்னுாட்டம்தான் ஒரு படைப்பாளனுக்கு ஊட்டச்சத்து
தற்பொளுது சில நாட்களாக மன்றத்திற்கு வருகைதர போதுமான நேரங்கள் கிடைத்ததையிட்டு பலருடன் நெருக்கமாக பழக வாய்ப்பு கிடைத்தது. அதையென்னியும் நான் மகிழ்கிறேன். என்னால் முடிந்தவரை மற்றவா்களின் படைப்பை படிக்கிறேன் அத்தோடு அதற்கு என்னறிவுக்கெட்டிய பின்னுாட்டத்தையும் கொடுக்கிறேன்.....இதை விட மன்ற பெரியோர்கள் கொடுக்கையில் இன்னும் ஊக்கம் அதிகமாகும். நான் முன்பு மன்றத்தில் இணையும்பொளுது சிவா அண்ணா கூறிய காலம் என்று நினைக்கிறேன்
அப்பொளுதெல்லாம் கவிதையோ வேறு ஏதேனும் படைப்புக்கள் வந்தால்
படைப்புக்கள் பின்னே பின்னுாட்டமும் வரும் ஆனால் இப்பொளுது பலா்
அதற்காக மன்றத்தில் ஏங்குகின்றனா். மதுரைமைந்தன் அவா்கள் கூறிய ஒரு விடயம்
அவா் கதையை வேரு யாரவது சிறந்த எழுத்தாளா் எழுதியிருந்தால் அதற்கு
பினனுாட்டங்கள் கிடைக்க அதிக வாய்புன்டு என்று. நானும் சில வேளைகளில்
அதனைச்சிந்திப்பதுண்டு அவா் கூறியது போன்று மன்றத்தில் சிறந்த கதையாசிரியா் அதைனைக் கொடுக்கும் பட்சத்தில் கண்டிப்பாக அதிக பின்னுாட்டங்கள் கிடைத்திருக்கும். சில வேளைகளில் நான் மன்றத்தில் கண்ட காட்சி என் மனதை உறுத்துவதனால் அதனைக் கூற விரும்புகிறேன்
சில வேளைகளில் மன்றத்தில் படைப்புகளுக்கு கருத்துக்கள் குவிவதில்லை படைப்பாளியை நினைவில் வைத்துத்தான் அதிகமாக பின்னுாட்டங்கள் குவிகின்றன இது நான் மன்றத்தில் நான் சில வேளைகளில் கண்ட காட்சியே.
என்னுள்ளுருத்திய விடயத்தையும் கூறியுள்ளேன் இதனால் வரும் பின்வி்ளைவுகளெதுவாக இருந்தாலும் அதனை நான் முகம் கொடுக்கின்றேன்
நன்றி

நிரன்
22-12-2008, 09:40 AM
இன்னும் 9 பேருக்காக காத்திருக்கிறோம்...........

சிவா.ஜி
22-12-2008, 09:52 AM
மூன்றாவது கேள்வியை எக் கேள்விக்கும் முகம் சுழிக்கா பதிலளிக்கும் எங்கள் சிவா.ஜி அண்ணாவை அமர்த்துகிறேன்.

தாங்கள் துபாயில் வேலை செய்வதாக அறிந்தேன் அதனால் என்னறிவில் எட்டிய வினாவதை உங்களிடம் வினாவ விரும்புகிறேன்.

நீங்கள் வெள்நாட்டில் பணியாற்றுவதன் மூலம் உங்களுக்கு அந்நாட்டவரின் மூலம் வேலைத்தளத்தில் ஏதாவது கசாப்பான அணுபவங்கள் நிகழ்ந்ததுண்டா? அவ்வேளையில் நீங்கள் தாய்நாட்டை நினைத்து அதனை பெரிதும் இழந்து விட்டோமே என்று என்னிய தருனங்கள் ஏதேனும் உண்டா? இதனால் ஏன் பிறநாட்டவரிற்கு கீழ் நாம் வேலை செய்ய வேண்டும் என்று மனம் பிரிவினை ஏற்படுத்தியதுண்டா?
அப்பிரிவினையை சில (குடும்பம் போன்ற )காரணங்கள் தூக்கி எறிந்ததுண்டா?

அன்பு நிரஞ்சன் முதல் வரியிலேயே என்னை சாச்சுப்புட்டீங்களே....

நீங்கள் கேட்டதைப்போல “கசாப்பான” அனுபவம் இல்லையென்றாலும் கசப்பான அனுபவம் நிறைய உள்ளது.

தற்சமயம் துபாயில் இருக்கிறேன். பல நாடுகளிலும், பல நாட்டவர்களுடனும் பணிபுரிந்திருந்தாலும்...கசப்பான அனுபவம் என ஏற்பட்டது...பாலஸ்தீனியர்களுடன் பணியாற்றியபோதுதான். நிறைய சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும்...ஒரு சோற்று பதமாக ஒரே நிகழ்ச்சி..

சவுதியில் அப்போது எங்கள் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. பாலைவனம். ஜூன்மாத 52 டிகிரி வெயில். நான் என்னுடைய தரக்கட்டுப்பாட்டு பணிக்காக ஒரு இடத்தில் நின்றுகொண்டிருந்தேன். நமது இந்திய தொழிலாளர்கள் அந்த வேகாத வெயிலில் வெந்து கொண்டிருந்தார்கள். குடிதண்ணீர் தீர்ந்து விட்டதால் இரண்டு பேர் சென்று ஒரு தெர்மாஸில்(பெரிய அளவு) தண்ணீர் நிரப்பி சுமந்து கொண்டு வந்து இறக்கி வைத்தார்கள்.

அந்த நேரம் ஒரு வாகனம் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ஒரு பாலஸ்தீனியன்..தன்னுடன் கொண்டு வந்திருந்த காலியான தெர்மாஸை அங்கே வீசிவிட்டு, நமது தொழிலாளர்கள் கொண்டுவந்து வைத்திருந்த தண்ணீர் நிரம்பிய தெர்மாஸை எடுத்துக் கொண்டு போக முயன்றான்.

“இது எங்களுக்காக கொண்டு வந்திருக்கிறோம். உங்களிடம்தான் வாகனம் இருக்கிறதே அதில் போய் எடுத்துக்கொள்ளுங்கள் எங்களுக்கு தாகமாய் இருக்கிறது”

என்று சொன்னதற்கு அவன் சொன்ன பதிலால்...நானடைந்த ஆத்திரத்துக்கு அளவேயில்லை..

“தாகமாயிருக்கிறதா...தண்ணீர் குடிக்கவில்லையென்றால் செத்துவிடுவீர்களா...? பரவாயில்லை. 50 இந்தியன் செத்தாலும் பரவாயில்லை ஒரு பாலஸ்தீனியன் சாகக்கூடாது. இந்தத் தண்ணீரை எங்களுக்காக எடுத்துப்போகிறேன். மீண்டும் போய் உங்களுக்கு கொண்டு வாருங்கள்” என்று சொல்லிவிட்டு தண்ணீரை எடுத்துக்கொண்டு போய்விட்டான்.

இவர்களிடத்தில் பணிபுரியவேண்டியிருக்கிறதே என மிக வருந்தினேன். எத்தனைதான் பொருளாதாரத்தில் தாழ்ந்திருந்தாலும் நமது தாய்நாட்டில் நாம் முதல்தர குடிமகன்...ஆனால் இங்கோ தரமேயில்லாத இயந்திரங்களாக இருக்கவேண்டியுள்ளதே என வருத்தப்பட்டேன்.

ஆனால், எதையாவது ஒன்றை இழந்துதான் ஒன்றை பெறமுடியுமென்ற சொல்லிருப்பதைப்போல நாங்கள் எதையாவது ஒன்றையல்ல...பலதை இழந்துதான் பணம் பண்ணுகிறோம். எதிர்பார்த்துதான் வருவதால்...அதிகம் பாதிக்கப்படுவதில்லை. இருந்தாலும் இப்படிப்பட்ட சில சமயங்களில் சற்றே வருத்தம் ஏற்படத்தான் செய்கிறது.

ஆனால்...நீங்கள் சொன்னதைப்போல குடும்பம், நாம் வந்த நோக்கம், நமக்குமுன் உள்ள சில பிரச்சனைகள் என எல்லாமும் சேர்ந்துதான் நம்மை பொறுமை காக்க வைக்கின்றன. உண்மையிலேயே சொல்லப்போனால் நான் இந்தியாவில் இருந்தவரை மிகவும் முன்கோபக்காரனாய் இருந்தேன். இப்போது மிகப் பொறுமைகாக்கும் குணத்தை அடைந்திருக்கிறேன்.

(தனிப்பட்டமுறையில் எனக்கு சில கசப்பான அனுபவம் நான் சார்ந்த மதத்தால் ஏற்பட்டதுதான். சவுதியில் உள்ள முத்தவா என சொல்லப்படும் மத குருமார்களால்)

ஏற்பட்ட அனுபவங்களை உண்மையாக சொல்லவேண்டுமென்பதால்...இதை சொல்கிறேன். ஆனால் நான் எந்த மதத்தினருக்கும், எந்த நாட்டினருக்கும் எதிரியல்ல.

உங்கள் கேள்வியில் என்னையும் இணைத்துக்கொண்டதற்கு நன்றி நிரஞ்சன்.

அய்யா
22-12-2008, 09:58 AM
சிவா அண்ணாவின் அனுபவம் துணுக்குறச் செய்தது மட்டுமல்லாது, நாம் வாழுமிடம் எத்தகைய சுவர்க்கம் என்று சிந்தித்துப்பார்க்கவும் வைத்தது.

சூரியன்
22-12-2008, 10:06 AM
மிகவும் உருக்கமான பதில் சிவா அண்ணா.

நான் உங்களிடம் ஒன்று கேட்கின்றேன்.
இந்தியர்கள் எங்கு சென்றாலும் ஏன் இப்படி தரக்குறைவாக நடத்துகின்றார்கள்?
இதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணம் உண்டா?

சிவா.ஜி
22-12-2008, 10:19 AM
மிகவும் உருக்கமான பதில் சிவா அண்ணா.

நான் உங்களிடம் ஒன்று கேட்கின்றேன்.
இந்தியர்கள் எங்கு சென்றாலும் ஏன் இப்படி தரக்குறைவாக நடத்துகின்றார்கள்?
இதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணம் உண்டா?

அதற்குக் காரணம் நமது அரசாங்கம்தான் சூரியன். பிலிப்பைன்ஸ் நாட்டு அரசாங்கம் அவர்களின் தொழிலாளர்களுக்கென்று குறைந்தபட்ச சம்பளத்தையும், வசதிகளையும் நிர்ணயித்திருக்கிறது. ஆனால் இந்தியாவில்தான் அப்படி எந்த தொகையும் நிர்ணயிக்கப்படவில்லை. அதனால் மிகக்குறைந்த சம்பளத்துக்கு இந்தியத்தொழிலாளிகளை அழைத்து வந்து வேலை வாங்குகிறார்கள். இப்போதெல்லாம் தாய்லாந்திலிருந்தும், சீனாவிலிருந்தும் நிறைய தொழிலாளர்கள் பணிபுரிய வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் அவர்களின் அரசாங்கம் உறுதுணையாக இருக்கிறது.

அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால்..அவர்களது தூதரகங்களிலிருந்து ஓடி வந்து உதவி செய்கிறார்கள். ஆனால் நமது இந்தியத் தூதரகங்களில் இருப்பவர்களோ...உதவி செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை...மனம்நோகும்படியாக நடந்துகொள்கிறார்கள். அதனால் இந்தியர்களுக்கு எந்த உதவியும் இல்லை என தீர்மானமாகத் தெரிந்துகொண்டு அவர்களைக் கேவலமாக நடத்துகிறார்கள்.

தமிழ்தாசன்
22-12-2008, 10:20 AM
அன்புள்ளங்களே! வணக்கம்.

என்னையும் இப்பக்கத்தில் விடைதேடி அழைத்த அன்புத்தம்பி(சரியோ?) நிரஞ்சன் அவர்கள் அழைத்தமைக்கு மகிழ்ச்சி.
எனக்கு பதில் கூறிப் பழக்கமில்லை( சிறுவயதில் உண்டு) பின் எனது பணி கேள்விகேட்பதாக மாறியது) ஆனாலும் இப்போ என்னைதயார் படுத்தி வருகிறேன்.
ஆகவே தம்பி நிரஞ்சன் அவர்களின் கேள்விக்கு என் பதில் வரும். எனது கேள்வி 10 வது. ஆகவே முன்னவர்களின் பதில் வந்த பின் தருவேன்.
எனக்கு பதில் இப்போது தர விருப்பம்.
ஆனாலும் அவர்களின் பதில் வந்த பின் தருவதே பொருத்தம்.

காரணம் எனக்கான கேள்வியின் கருவும் அப்படி அமைந்தமையே!. ஆகவே நிறைவாக என் பதில் அமைவதில் நீங்கள் குறைவிளங்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

நிரன்
22-12-2008, 10:22 AM
நன்றி சிவா அண்ணா...!

உங்கள் பதிலில் நமது மக்கள் எவ்வளவு கஸ்டத்துக்கு மத்தியில் அரபு நாடுகளில்
பாடுபடுகின்றனா் என்பதை அறிந்து கொண்டேன் அந் நோக்கிலேயே உங்களிடம்
இவ் வினாவுக்கான விடையை எதிர் பார்த்து காத்திருந்தேன் உங்கள் பதிலையடுத்து
தமிழா்கள் சொந்த அடிக்கடி நினைத்து ஏங்குவதுண்டு என்பதை அறிந்து கொண்டேன்

மீண்டும் என் நன்றியைத் தெர்வித்துக் கொள்கிறேன்.

சூரியன்
22-12-2008, 10:27 AM
அதற்குக் காரணம் நமது அரசாங்கம்தான் சூரியன். பிலிப்பைன்ஸ் நாட்டு அரசாங்கம் அவர்களின் தொழிலாளர்களுக்கென்று குறைந்தபட்ச சம்பளத்தையும், வசதிகளையும் நிர்ணயித்திருக்கிறது. ஆனால் இந்தியாவில்தான் அப்படி எந்த தொகையும் நிர்ணயிக்கப்படவில்லை. அதனால் மிகக்குறைந்த சம்பளத்துக்கு இந்தியத்தொழிலாளிகளை அழைத்து வந்து வேலை வாங்குகிறார்கள். இப்போதெல்லாம் தாய்லாந்திலிருந்தும், சீனாவிலிருந்தும் நிறைய தொழிலாளர்கள் பணிபுரிய வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் அவர்களின் அரசாங்கம் உறுதுணையாக இருக்கிறது.

அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால்..அவர்களது தூதரகங்களிலிருந்து ஓடி வந்து உதவி செய்கிறார்கள். ஆனால் நமது இந்தியத் தூதரகங்களில் இருப்பவர்களோ...உதவி செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை...மனம்நோகும்படியாக நடந்துகொள்கிறார்கள். அதனால் இந்தியர்களுக்கு எந்த உதவியும் இல்லை என தீர்மானமாகத் தெரிந்துகொண்டு அவர்களைக் கேவலமாக நடத்துகிறார்கள்.

மிகவும் வருந்தக்க செய்தி அண்ணா.
மற்ற நாடுகளை போல ஏன் நமது அரசாங்கமும் இதுபோல் செய்ய கூடாது?
இதை எந்த அதிகாரியின் பார்வைக்கு எடுத்துச்சென்றால் தீர்வு கிடைக்கும்?

நிரன்
22-12-2008, 10:33 AM
மிகவும் உருக்கமான பதில் சிவா அண்ணா.

நான் உங்களிடம் ஒன்று கேட்கின்றேன்.
இந்தியர்கள் எங்கு சென்றாலும் ஏன் இப்படி தரக்குறைவாக நடத்துகின்றார்கள்?
இதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணம் உண்டா?

இந்தியா்களுக்கு மட்டுமல்ல இலங்கையில் இனப்பிரச்சினை காரணமாக இடம்பெயரும் மக்கள் இலங்கையை விட்டு வெளியேறினால் போதும்
என்ற நோக்கில் வெள்நாடு செல்லும் முகவா்கள் மூலமாக செல்கின்றனா்.
இதனால் அரபு நாடுகளுக்காவது சென்று விடலாம் என்று எண்ணி செல்கின்றனா்
அங்கேயும் பிரச்சினைகள் கூடும் பட்சத்தில் செய்வதற்கு வேறு வழி இல்லாமல்
பொருமையற்றவா்கள் கூட தமக்குத்தாமே ஆறுதல் படுத்தி பொருமையை
வரவழைத்துக் கொள்கின்றனா் இதற்குப்பெயா் பயம் என்று சொல்லவும் முடியாது
வேறு வழிகள் இல்லாமை என்றே கூறுவது சரியான தொன்றாகும்
இது இலங்கையருக்கு மட்டுமல்ல எம் இந்திய தமிழருக்கும் உரியதொரு சொத்தாகும்.

நன்றி

சிவா.ஜி
22-12-2008, 10:34 AM
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காகவே ஒரு துறையமைத்து அதற்கு ஒரு அமைச்சரையும் நடுவண் அரசு நியமித்திருக்கிறது. அவரும் இருக்கிறார். சும்மா இருக்கிறார். நெல்வயலைவிட எண்ணெய் வயல் கொடுக்கும் சன்மானம் பெரிதல்லவா?

சூரியன்
22-12-2008, 10:37 AM

நீங்கள் சொல்வது உண்மைதான் அண்ணா.

நிரன்
22-12-2008, 10:37 AM
அன்புள்ளங்களே! வணக்கம்.

என்னையும் இப்பக்கத்தில் விடைதேடி அழைத்த அன்புத்தம்பி(சரியோ?) நிரஞ்சன் அவர்கள் அழைத்தமைக்கு மகிழ்ச்சி.
எனக்கு பதில் கூறிப் பழக்கமில்லை( சிறுவயதில் உண்டு) பின் எனது பணி கேள்விகேட்பதாக மாறியது) ஆனாலும் இப்போ என்னைதயார் படுத்தி வருகிறேன்.
ஆகவே தம்பி நிரஞ்சன் அவர்களின் கேள்விக்கு என் பதில் வரும். எனது கேள்வி 10 வது. ஆகவே முன்னவர்களின் பதில் வந்த பின் தருவேன்.
எனக்கு பதில் இப்போது தர விருப்பம்.
ஆனாலும் அவர்களின் பதில் வந்த பின் தருவதே பொருத்தம்.

காரணம் எனக்கான கேள்வியின் கருவும் அப்படி அமைந்தமையே!. ஆகவே நிறைவாக என் பதில் அமைவதில் நீங்கள் குறைவிளங்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

நன்றி அண்ணா.....!

உங்கள் விருப்பம்போலவே நீங்கள் எல்லோரும் பதிலிட்ட பின்
தங்கள் பதிலை இடுங்கள் நாங்கள் காத்திருக்கிண்றோம்...

(மற்றும் தாங்கள் ஆசிரியரா? ஏனென்றால் ஆசிரியா்கள் மட்டுமே கேள்வி கேட்பதை தொளிலாக கொண்டிருப்பார்கள். எனது மனதிலெளுந்த சந்தேகம்)

நிரன்
22-12-2008, 10:39 AM
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காகவே ஒரு துறையமைத்து அதற்கு ஒரு அமைச்சரையும் நடுவண் அரசு நியமித்திருக்கிறது. அவரும் இருக்கிறார். சும்மா இருக்கிறார். நெல்வயலைவிட எண்ணெய் வயல் கொடுக்கும் சன்மானம் பெரிதல்லவா?

ஆம் அண்ணா நீங்கள் சொல்வது சரியான தொன்றுதான்

(லஞ்சம் என்ற சொல் ஓடும் அதிகாரிகளிடம் மனிதாபிமானம் இருகவா போகிறது)

ராஜா
22-12-2008, 11:05 AM
நன்றி ராஐா அண்ணா!

உங்கள் மனதில் இருக்கும் சுமையை இறக்கு இங்கே விடுக்கப்பட்ட கேள்வி அதை இறக்கியதையடுத்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மன்றத்தில் என் போன்று சாதாரனமானவா்கள் பின்னுட்டமிடுவதை விட மன்ற பொருப்பாளா்கள் அல்லது மன்ற துாண்கள் போன்று பெரும் பதவியில் உள்ளவா்கள் அங்கு சென்று பின்னுாட்டமளிக்கையில் படைப்பவா் நெஞ்சில் மகிழ்ச்சி பொங்கும் மன்ற பெரியோர்கள் பின்னுாட்டமிட்டதையடுத்து கண்டிப்பாக மற்றவா்களும் அதற்கு
பின்னுாட்டமிடுவார்கள். பின்னுாட்டம்தான் ஒரு படைப்பாளனுக்கு ஊட்டச்சத்து

நன்றி நிரஞ்சன்..!

நான் மற்றெல்லோரையும்விட அதிக நேரம் இம்மாமன்றத்தில் செலவிடுபவன் என்று நினைக்கிறேன். அவ்வகையில் எனக்கு பல விடயங்கள் புரிய வந்திருக்கின்றன.

அவ்விடயங்களில் பொதுவில் சொல்லக்கூடிய சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.

ஒரு பதிவுக்கு, இளசு அவர்களும் சிவா போன்ற பொறுப்பாளர்களும் பின்னூட்டமிட்டு, அவர்களின் பெயர்,,,, கடைசியாக பதிவிட்டவர் என்று காட்சிப்படுத்தப்படும்போது, பார்வைகள் மிகுவதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். அவர்களின் பெயர்களுக்கு அப்படி ஒரு மரியாதை உண்டு.

சில நல்ல பதிவுகள், பார்வைகள் மிகுந்திருந்தாலும், பின்னூட்டங்களின்றி ஆழ அமிழ்ந்து போகும் அவலங்களையும் கண்டிருக்கிறேன்.

தங்கள் பெயருக்கு பார்வைகளைக் கவர்ந்திருக்கும் திறன் இருப்பது கூட தெரியாமல் சில பொறுப்பாளர்கள் இருக்கிறார்களோ என்று நான் ஐயுறுவதும் உண்டு..!

எத்தனையோ களங்கள் மலிந்திருந்தாலும், நம் களத்தைத் தேடிப்பிடித்து வந்து, தான் அறிந்தவற்றை நம் உறவுகள் தங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு பதிவிடும்போது ( அது ஒத்தி ஒட்டியதாக இருந்தாலும்கூட, அதுவரை மன்றத்தில் பதிவிடப்படாத ஒரு சுவையான தகவலாக இருக்கும் பட்சத்தில்..) அந்தப் பதிவுகளுக்கு ஒரு இரண்டு வரி பின்னூட்டம் இடக்கூட இயலாத அளவுக்கு நேரமின்மையும், பணிப்பளுவும் இருப்பதாக சிலர் கூறும்போது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..! ( முற்றுப்புள்ளி இல்லாத இந்த சொற்றொடர், மதியம் பார்த்த கமல் பேட்டியின் பாதிப்பு.. புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.)

தவறிருந்தால் பொறுத்தருள்க..!

சிவா.ஜி
22-12-2008, 11:08 AM
புரிந்துகொண்டேன் ராஜாசார். இனி நீங்கள் வருந்துமாறு இருக்காது. தெளியவைத்தமைக்கு நன்றி.

ராஜா
22-12-2008, 11:13 AM
அவன் சொன்ன பதிலால்...நானடைந்த ஆத்திரத்துக்கு அளவேயில்லை..

இவர்களிடத்தில் பணிபுரியவேண்டியிருக்கிறதே என மிக வருந்தினேன்.

பாதகம் செபவரைக்கண்டு ரௌத்ரம் கொள்ள இயலாத தருணங்கள் பலவற்றில் நீங்கள் விவரித்த தருணமும் ஒன்று சிவா..!

குடும்பத்துக்காக மன அளவில் சிலுவை சுமக்கும் பல வெளிநாடுவாழ் உறவுகளை நான் அறிவேன்.

வாழ்க்கை நாடகத்தில் நமக்களிக்கப்பட்ட மோசமான காட்சிகளில் அதுவும் ஒன்று என்ற அளவில் புறந்தள்ளுங்கள்..!

நீங்கள் சென்றிருப்பது புலிவேட்டைக்கு.. எதிர்ப்படும் எலிகளின்பால் உங்கள் மன ஒருமிப்பை செலவழிக்காதீர்கள்..!

ஆதவா
22-12-2008, 11:33 AM
சிவா.ஜி அண்ணா. இந்த நிலைமை எதிரெதிர் மதத்தார் இருக்கும் இடத்தில் ஏற்படக்கூடிய சகஜம் இல்லையா?

கசாப்பு - கசப்பு , ரசித்தேன்.. ஆதங்க வரிகளைக் கண்டு வருந்தினேன்..

ஒரு இழப்பு, ஒன்றைப் பெறும்.... உங்கள் அனுபவம் அது...

ராஜா
22-12-2008, 12:11 PM
எல்லோரையும்
சங்கடமில்லாது சந்தோசத்தை மட்டுமே கெடுக்கும் வகையில்
தொகுத்துள்ளேன்.

கெடுக்கும் வகையிலா..?

திரி பறக்கும் வேகத்தைப் பார்த்தா அப்படித் தெரியலியேப்பா..!

ராஜா

உங்கள் படைப்புக்கள் பல நான் பார்த்துச்சிரித்துள்ளேன் அதனால் எனக்கெளுந்த கேள்வி அதை உங்களிடம் கொடுக்கின்றேன்

நீங்கள் எத்தனையோ சிரிப்பு வெடிகளை போட்டிருப்பீங்க அதில் நீங்கள் இப்பொளுது கூட ஒரு கனம் நினைத்தால் வயிறு குலுங்கும் சம்மவங்கள் அல்லது வெடிகள் உண்டா? அப்படி இருந்தால் அதை எங்களுக்கு ஒரு முறை தாருங்கள். உங்கள் சூழல் அல்லது குடும்பத்திலாகவும் இருக்கலாம்.

[/QUOTE]

நிறைய இருக்கின்ற*ன..!

அவற்றை இரசிக்க நீங்கள் என் இடத்தில் இருந்து அக்காட்சிகளைக் காணவேண்டும். முயற்சி செய்யுங்கள்..!

ஒரு ஞாயிற்றுக்கிழமை. மனிதனின் ஆயுளை தொ.கா. அரக்கன் ஸ்வாஹா செய்யாத 15 ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டம். என் வியாபாரத்தை முடித்துவந்தபின் ஒரு பகற்பொழுதில் சற்று கண்ணயர்ந்த நேரம்..

பக்கத்து அறையில் என் ஆறு வயது (இளைய) மகனும், அவரது நண்பரும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். நண்பர் ஏதோ சத்தம்போட, எங்கள் சின்னவர் சொன்னார்..

ரமணன் : ஸ்ஸ்ஸ்ஸ் சத்தம் போடாதே..! பக்கத்து ரூம்ல எங்கப்பா தூங்கிட்டு இருக்காங்க..!

நண்பர் : உங்க டாடி என்ன வேலை பண்றாங்க..?

ரமணன் : லயனுக்கு போவாங்க..

நண்பர் : லயன்னா..?

ரமணன் : வியாபாரம்..!

நண்பர் : எங்க டாடியையும் லயனுக்கு அழச்சிட்டுப் போகச் சொல்லுடா..!

ரமணன் : ஏண்டா.. உங்கப்பாதான் ஆபீஸ்ல வேலை பாக்கறாங்களே..!

நண்பர் : ஆபீஸ்ல எங்க டாடி பாவம்டா..! ரொம்பக் கஷ்டப்பட்டு வேலை செய்யறார்.. வீட்டுல உங்க டாடிபோல தூங்கவே மாட்டார்.. இன்னிக்குகூட கஷ்டப்பட்டு வேலை செய்யறார்..!

ரமணன் : ஏண்டா..? உங்க அப்பாவுக்கு வேலை பாக்கறதே கஷ்டமா..? இல்லே கஷ்டமான வேலையா..?

( இந்த இடத்தில் உங்களுக்கு சிரிப்பு வரவில்லையெனில் நீங்கள் என் சூழ்நிலையில் இருந்து பார்க்கவில்லையென்று பொருள்..!)

இன்னொரு நிகழ்வு..

கொலு நாட்கள்.. அதுவும் ஒரு மதிய நேரம்தான்.. எங்கள் 3 வயதேயான மூத்த மகனிடம் என் துணைவியார் பொம்மைகளைக் காட்டி சொன்னார்..

நாயைப் பார்த்து குரை..!

லொள்.. லொள்..

பூனையைப் பார்த்து கத்து..!

மியாவ்.. மியாவ்..

கோழியைப் பார்த்து கொக்கரி..!

இப்போது செய்வதறியாமல் ஒரு கணம் திகைத்த என் மூத்த மகன், அடுத்த கணம் சுதாரித்தார்.. கொக்கு பொம்மையை கையில் எடுத்தார்..அதன் கழுத்தை அரிவாள் மணையில் வைத்து அரிவதுபோல் சைகை செய்தார்.. கொக்கரிகிறாராம்..!

சின்ன அரும்புகள், செய்யும் குறும்புகள் எண்ண எண்ண எந்தன் உள்ளம் இனித்திடும்..

இன்னும் எவ்வளவோ..

நானும் எங்கள் சின்னவரும் ( 5 வயது) இணைந்து டி.வி.கேம் விளையாடினோம். நாங்கள் ஒரு அணி.. கம்ப்யூட்டர் ஒரு அணியாக சண்டையிட்டோம். பத்து பதினைந்து முறை விளையாடியும் நாங்கள் தோற்றுப்போனோம்.. எங்கள் சின்னவர் அழத் தயாரானார்..

அவர் நிலை பொறாது நான் ஆட்டத்தில் எளிமையான அமைப்பைத் தேர்ந்தெடுத்தேன். இம்முறை எங்களுக்கே வெற்றி..!

சின்னவர் பெருமையுடன் சொன்னார்..

"அதுகளும் தெரிஞ்சுக்கட்டும்.. நாமளும் மாடர்ன் தான்னு..!"

மேலே உள்ள வரி ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தின் கேப்ஷன் வார்த்தைகள்.. ஆனால் அது என்ன தயாரிப்புக்கான விளம்பரம் என்று கேட்காதீர்கள்..!

நிரன்
22-12-2008, 01:37 PM
நன்றி ராஐா அண்ணா..........!

உங்கள் வாழ்க்ககையில் நடந்த ஒரு சுவையான சம்பவத்தை எம்முடன் பகிர்ந்தமைக்கு. மிக்க நன்றி...... தமிழ் மன்றத்தில் வருவதையடுத்து நான் பல தருனங்களில் பல ஆக்கங்களை பார்த்து
வாய்விட்டு சிரித்துள்ளேன் இப்பொளுது நீங்கள் மேலே தந்த
ஒரு நகைச்சுவையையும் ரசிதது மட்டுமல்லாது ருசித்தும் அணுபவித்தேன். முன்பு சில சமயங்களில் எனது அக்கா (கஸின்) என்னை பயித்தியம் பிடித்து விட்டதா என்று கேட்பார் காரணம் நான் கணினித் திரையை பார்த்து சி்ரித்துக்கொண்டிருப்பதையடுத்து இப்பொளுது எனக்கு ஒரு கூட்டாக என் அக்காவும் சேர்ந்தே மன்றத்தை அனுபவிப்பார். மற்றும் உங்களைப்போன்று நல்லதொரு தந்தையார் கிடைத்த தங்கள் பிள்ளைகள் மிகவும் அதிஸ்டசாலிகள். எல்லா குழந்தைகளுமே என் அப்பா ஒரு நட்புணா்வோடு பழகவேண்டும் என்று ஆசைப்படுவார்கள் என்னைப்பொறுத்த வரையில் அதுவே சிறந்தது என்று கூறுவேண். இதனால் பிள்ளைகளின் மக கஸ்டங்கள் என்ன என்பது நாம் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும் அன்பை மட்டுமே கொடுத்தால் பிள்ளைகளை கண்டிக்க வேண்டிய நிலை எப்பொளுதும் ஏற்படாது .... உங்கள் குடும்பத்திலும் குழந்தைகளை கண்டிக்கும் அவசியமே இருக்காது என்று நான் நினைக்கின்றேன்....

இது போன்று என்றும் குடும்பத்துடன் சந்தோசத்தை மட்டுமே பெறவேண்டும் என்று கூறிக்கொண்டு அதற்காக என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்:icon_b:

மிக்க நன்றி....!

நிரன்
22-12-2008, 01:49 PM
நன்றி நிரஞ்சன்..!

நான் மற்றெல்லோரையும்விட அதிக நேரம் இம்மாமன்றத்தில் செலவிடுபவன் என்று நினைக்கிறேன். அவ்வகையில் எனக்கு பல விடயங்கள் புரிய வந்திருக்கின்றன.

அவ்விடயங்களில் பொதுவில் சொல்லக்கூடிய சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.

காலமும் நேரமும் பொன்போன்றது என்று கூறியிருக்கிறார்கள்..... அளவுக்கு மீறிய காலமும் நேரமும் தற்பொளுது கிடைக்கிறது எவ்வளவு காலம் தொடருமென்று தெரியாது... தொடரும் வரை மன்றத்தில் தொடரலாம் என்று நினைத்து எனக்கு கிடைத்த நேரத்தில் மன்றத்தில் இணைந்திருக்கிறேன்...

(பொதுவில் செல்லமுடியாவிட்டால் ரகசிய தனிமடல் கொடுங்கள் ஏதாவது திருத்திக்கொள்ளும் விடயமெனின்)

ராஜா
22-12-2008, 02:09 PM
நன்றி ராஐா அண்ணா..........!

உங்கள் வாழ்க்ககையில் நடந்த ஒரு சுவையான சம்பவத்தை எம்முடன் பகிர்ந்தமைக்கு. மிக்க நன்றி......

நன்றி நிரஞ்சன்..!

உண்மைதான்.. பிள்ளைகளை வளர்ப்பது ஒரு கலை..! மிகுந்த நுட்பமான செயல்..! பேசும் பொற்சித்திரங்களான அவர்களின் மனம் வாடாமல் நல்வழிப்படுத்துவது என்பது சாதாரண விடயம் அல்ல..!

அவர்களை நம் நண்பர்களாகப் பாவித்து நடத்தினால் மட்டுமே கைவரக்கூடிய சாதனை..!

என் பெரிய மகன் தன் நண்பர்களோடு இருசக்கர வாகன உல்லாசப்பயணம் செல்ல விரும்பி என்னிடம் இசைவு கேட்டார்.. அவர்கள் பயணத்திட்டத்தில், ஊட்டி மைசூர் போன்ற ஊர்களும் இருந்தன. எனக்கு உள்ளூர பயமிருந்தாலும் அவர் சென்றுவர அனுமதித்தேன். அவர் கிளம்புமுன் பழகுநர் உரிமம் வாங்கித் தந்தேன். பயண நாளன்று தலைக்கவசமும் அலை பேசியும் வாங்கிவந்து கொடுத்தேன். எங்கள் நிறுவனத்தின் கோவை, ஊட்டி முகவர்களின் முகவரியையும் தொலைபேசி எண்ணையும் குறித்துக்கொள்ளச் செய்தேன்.

கிளம்பும் போது,

உங்கள் பயணத்தை நன்கு அனுபவியுங்கள்.. இதுபோன்ற இளமைப்பருவ கேளிக்கைகள் இன்னும் ஏராளம் உள்ளன. அவற்றையும் எதிர்காலத்தில் நீங்கள் அனுபவிக்கவேண்டும்.. அதற்காக, பத்திரமாக வந்து சேருங்கள்.. எவ்வித ரிஸ்கும் எடுக்காதீர்கள்..!

என்று சொல்லியனுப்பினேன்.

"அப்பா.. எங்க பேரண்ட்ஸ் கிட்ட கேட்டப்போ பெர்மிஷன் கொடுக்கல. பொய் சொல்லிட்டுதான் சில பேர் வந்திருக்கோம்.. ஆனா நீங்க ராஜேஷுக்கு, பெர்மிஷன் கொடுத்ததோடு, நாங்களே பொறுப்பு உணர்வதுபோல அழகா புத்தி சொல்லி அனுப்பி வைக்கிறீங்க.. நாங்க பத்திரமா போயிட்டு வரோம்பா ..!" என்று சொல்லிவிட்டு அனைவரும் கிளம்பினர். தினமும் இரவு தொலைபேசி விவரம் சொன்னார்கள். பத்திரமாக வந்தும் சேர்ந்தார்கள்.

பிள்ளைகளின் நியாயமான விருப்பங்களுக்கு தடை நில்லாத பெற்றோர்கள், தங்கள் செல்வங்கள் நேர்மையானவர்களாக வளரக் காண்பார்கள்..!

நிரன்
22-12-2008, 02:11 PM
மன்றத்தில் இம்முறை ஆ 10 ற்கான வினாவை
வினாவுவதற்கு என்னை அழைப்பு விடுத்திருந்ததையடுத்து இங்கே என்
கேள்விகளை சமா்ப்பிக்கிறேன். இக் கேள்விகள் சில மற்றவா்களின்
உணற்சிகளை மையமாகக் கொண்டும் சில எல்லோரையும்
சங்கடமில்லாது சந்தோசத்தை மட்டுமே கெடுக்கும் வகையில்
தொகுத்துள்ளேன். இக் கேள்விகளில் ஏதேனும் தவறாக இருப்பின்
அதற்காக என்னை தாழ்மையுடன் மன்னிக்குமாறு கேட்டுக்
கொள்கிறேன்

__________________________________________________________________________________________

எனது முதலாவது கேள்வி மன்றத்தின் நிர்வாகி அறிஞரிடம்,
தங்களால் இவ் வினாவுக்கு முழுமையான பதிலளிக்க நேரம் இல்லையென்று என்னறிவுக்குத் தெரியும்.
இவ் வினாவிற்கு உங்களால் முடிந்த ஒரு சிறு பதிலைத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

தாங்கள் மன்றத்தின் நிர்வாகி மற்றும் மன்றம் தொடங்கிய போதே மன்றத்திற்கான உங்கள் பணிகளும் ஆரம்பமாகி விட்டன. ஆரம்ப காலத்தில மிகவும் குறைந்தளவே உறுப்பினா்கள் அங்கம்வகித்திருப்பார்கள். அவ் வேளையில் நீங்கள் மன்றத்தினுாடாக எப்படி தமிழை வளா்க்க போகிறேன் என்று ஒரு கனம் யோசித்ததுண்டா? தற்பொழுது மன்றத்திற்கு பல புதிய உருப்பினா்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனா். இது உங்கள் மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கிறதா இல்லை சந்தோசத்துடன் கூடிய சிறிதொரு பயத்தையும் கொடுக்கிறதா?

__________________________________________________________________________________________

மன்ற பொருப்பாளரும் அன்புக்குரிய நண்பருமான நம்ம அமரன் அண்ணாவை இரண்டாவது கேள்வியாளராக அமா்த்தியுள்ளேன்.

நீங்கள் மன்றத்தில் பல போட்டிகளை தலைமை தாங்கி நடத்தியுள்ளீா் இறுதியில் வாக்கெடுப்பு முலாம் வெற்றியாளர் மன்றத்தில் அறிவிக்கப்படும். வாக்கெடுப்பு மூலம் கவிதைகயோ கதைகளையோ தோ்ந்தெடுத்தாலும் உங்கள் மனதிற்கு பிடித்த படைப்பு என்று நீங்கள் கருதியிருப்பீா்கள். நீங்கள் வெற்றி பெரும் என்று நினைத்த கவிதையோ கதையோ 2 அல்லது 3ம் இடத்திற்கு தள்ளப்படுகையில் உங்கள் மனம் அதனை ஈடுகொடுக்குமா? அத்தருனத்தில் உங்கள் மனம் என் நிலையில் இருக்கும்?

மற்றும் ஒரு சந்தேகம் நீங்கள் மன்றத்திற்கு 14000+ பதிவுகளை கொடுத்திருக்கிறீங்க. ஆனால் உங்க இணைவு திகதி 16 Feb 2007,
மேறிகூறிய திகதியிலா நீங்க இணைந்தீங்க? இல்லாட் ஒரு பில்டப்புக்கு அப்படியா?:D

__________________________________________________________________________________________

மூன்றவது கேள்வியை எக் கேள்விக்கும் முகம் சுழிக்கா பதிலளிக்கும் எங்கள் சிவா.ஐி அண்ணாவை அமா்த்துகிறேன்.

தாங்கள் துபாயில் வேலை செய்வதாக அறிந்தேன் அதனால் என்னறிவில் எட்டிய வினாவதை உங்களிடம் வினாவ விரும்புகிறேன்.

நீங்கள் வெள்நாட்டில் பணியாற்றுவதன் மூலம் உங்களுக்கு அந்நாட்டவரின் மூலம் வேலைத்தளத்தில் ஏதாவது கசாப்பான அணுபவங்கள் நிகழ்ந்ததுண்டா? அவ்வேளையில் நீங்கள் தாய்நாட்டை நினைத்து அதனை பெரிதும் இழந்து விட்டோமே என்று என்னிய தருனங்கள் ஏதேனும் உண்டா? இதனால் ஏன் பிறநாட்டவரிற்கு கீழ் நாம் வேலை செய்ய வேண்டும் என்று மனம் பிரிவினை ஏற்படுத்தியதுண்டா?
அப்பிரிவினையை சில (குடும்பம் போன்ற )காரணங்கள் துாக்கி எறிந்ததுண்டா?

__________________________________________________________________________________________

பலதிரிகளிலும் கதை நகைச்சுவையென பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் சக நண்பா் மதுரைமைந்தன் அவா்களை நான்காவதாக வரிசையில் அமா்த்துகிறேன்.

உங்களுடைய விஞ்ஞானக் கதையினை நான் இன்றுதான் படித்தேன் அங்கே தாங்கள் இட்டிருந்த ஒரு கருத்தையும் கவன்த்தேன் அதனை மையமாகக்கொண்டு இக்கேள்வியை தங்களிடம் கேட்க ஆசைப்படுகிறேன்.

நீங்கள் தற்பொளுது மன்றத்திற்கு கதை மற்றும் நகைச்சுவைகள் என்பன வழங்கிக்கொண்டிருக்கிறீா்கள். ஆனால் உங்கள் மனம் எதிர்பார்த்த ஆதரவு அதற்கு கிடைக்கவில்லையென என்னறிவுக்கு எட்டியது. அப்படி உங்கள் மனம் திருப்திப்படா விட்டாலும் மன்றத்திற்கு படைத்துக் கொண்டிருக்கிறீா்கள், நீங்கள் எப்பொளுதேணும் வருந்தியதுண்டா எதிர்பார்த ஆதரவு இல்லையென? எப்பொளுதேனும் சிந்தித்ததுண்டா ஏன் நான் மென்மேலும் படைக்க வேண்டும் என்று?

__________________________________________________________________________________________

ஐந்தாவதாக நம்மக்கா.ஆட்டோ ராணி என்றழைக்கப்படும், லன்டன் தாதாவுமான மிஸ் தமிழ்மன்றம், அக்கா ஓவியாவை அன்புடன் அழைக்கிறேன்.. யக்கோவ் இங்க எங்கயாவது சுத்தினால் இங்கயும் கொஞ்சம் வாங்க.:icon_clap:

தாங்கள் கவிதைப்போட்டியில் 3 தடவைகள் வெற்றியீட்டியதை மையமாகக் கொண்டு இக்கேள்வியை கேட்ட அவாவில் உள்ளேன் மன்றத்தில் சில நாட்களாக எனக்கு எழுந்து கொண்டிருக்கும் ஒரு சந்தேகம்.

நீங்கள் மன்றத்திற்கு அற்புதமாக கவிதைகளைப்படைத்திருக்கிறீா்கள் நிச்சயமாக எந்தவெரு சுழலை மையமாகக் கொண்டும் உங்களால் கவிதையைவடிக்க முடியும், இவ்வளவு திறமையுள்ள நீங்கள் எப்பொளுதேனும் கவிதை எழுத முடியாத சுழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறீங்களா? மனம் வெறுமையான நேரத்தில் கவிதைகளே வராத சந்தா்பங்கள் உண்டா? அப்படியிருந்தால் அதைத்தாருங்கள்.

மற்றும் இப்ப எல்லாம் நீங்க கவிதைப்போட்டில பங்கெடுக்கிறதே இல்லயே ஏன் 3 Awads க்கு மேல Showcase இல் வைக்க அழகில்லை என்றா:D

__________________________________________________________________________________________

அடுத்தாக நம்ம திரியோட ஆசான். மற்றும் எல்லோரையும் சிரிக்க வைக்கும் காமெடியன் என்றுகூட அழைக்கலாம் அதுதாங்க
நம்ம அன்பு வெள்ளம் ராஐா அண்ணா, அண்ணாவை கொம்பட்டபுள் ஆ ஆற்றிற்கு பக்கத்தில் ஆறாக அமா்த்துகிறேன்

உங்கள் படைப்புக்கள் பல நான் பார்த்துச்சிரித்துள்ளேன் அதனால் எனக்கெளுந்த கேள்வி அதை உங்களிடம் கொடுக்கின்றேன்

நீங்கள் எத்தனையோ சிரிப்பு வெடிகளை போட்டிருப்பீங்க அதில் நீங்கள் இப்பொளுது கூட ஒரு கனம் நினைத்தால் வயிறு குலுங்கும் சம்மவங்கள் அல்லது வெடிகள் உண்டா? அப்படி இருந்தால் அதை எங்களுக்கு ஒரு முறை தாருங்கள். உங்கள் சூழல் அல்லது குடும்பத்திலாகவும் இருக்கலாம்.

__________________________________________________________________________________________

ஏழவதாக உலகமெங்கும் அவன் ஒளி எட்டிக்கொண்டிருக்கும் அவனில்லையேல் அகிலமில்லை கிட்டச்சென்றால் பஸ்பம்
இவா் கிட்டச்சென்றால் மனம் தங்கபுஸ்பம்... ஓவா் பில்டப்பை நிப்பாட்டீட்டு ஆதவா என்று மன்றம் அதிரும் படியாக கத்துகின்றேன்:icon_clap:

உங்களுடைய பல கவிதைகள் மற்றும் தற்பொளுது தந்து கொண்டிருக்கும் மார்கழி சம்பந்தானவை படித்துக்கொண்டிருக்கிறேன்
ஆனால் உங்கள் சில கவிதைகளைப்பார்த்தால் எனக்கு ஓன்றுமே புரிவதில்லை. எல்லாம் சுத்த சூனியமாகவே தோன்றுகிறது.
இதையெல்லாம் எங்கயாவது பழைய ஒலைச்சுவட்டில் இருந்து சுட்டீங்களா?:rolleyes: இல்லையெனின் தங்கள் பாட்டனார் யாராவது புலவரா?:D

__________________________________________________________________________________________

எட்டாவதாக கையிலே எட்டாத, கிட்ட நாமென்றும் முட்டாத முட்டும் வேளையில் நம்முயிர் நம்மிலிருக்காது, ஆனால் இவா் அப்படியல்ல பனிமலையில் இருக்கும் அக்னி என்றும் சுகத்தையே தருபவா்.

மன்றத்தில் தற்பொளுது பெரும்பாலும் பழக நோ்ந்தது அதையடுத்து
உங்களிடம் அறுவாய் வெட்டும் வாங்கியதுண்டு
அதனால் ஒரு கேள்வியை வேடிக்கையாக உங்கள்முன் வெட்டுகிறேன்

நீங்கள் ஒரு வானொலி அல்லது தொலைக்காட்சி ஒலிபரப்பு நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறீா்கள் என்று கற்பனையில் முழ்குங்கள். உங்களிம் ஒரு நேயா்விருப்பம் என்றொரு தொல்லை பேசி நிகழ்வொன்றை ஒப்படைத்தால் வீட்டிலிருந்தே
நேயா்களை அறுப்பதற்கு தயராக்ச் செல்வீங்களா? இல்லாட்டி நிகழ்ற்சியிலேயே யோசனை செய்து நேயா்களை அறுப்பீங்களா?:D
உங்களுக்கு அறுக்கும் குறுக்குக் கேள்விகள் மற்றவருடன் பழகிவந்ததா?
இல்லையென்றால் மன்றத்தில ஸ்பெசல் ரெய்னிங்கா?

__________________________________________________________________________________________

ஒன்பதாவதாக உலகம் சுற்றும் வாலிபன் கட்டப் பிரம்மச்சாரி மன்ற மனங்கவா் பதிவாளா் எனக்கும் நெருக்கமானவா். அவரின் படைப்புக்கள் ரசித்தவை பல ருசித்தவை பல நம்ம நாரயணா நாரயணா .... நாரதா்

உங்கள் பெயரை நினைத்த பொளுது இக்கதாப்பாத்திரத்தை நான் உங்களுக்காக யோசித்தேன். நீங்கள் தற்பொளுது உள்ள புனைப்பெயா் கதாபாத்திரமாகவே உங்களை ஆக்கிக் கொண்டு இவ்வினாவுக்கு விடையளியுங்க எஸ்கேப் ஆகிறது என்றெல்லாம் நினைக்க கூடது:D

தற்பொளுது உங்களுக்கு 23 வயது என்றென்னுங்கள் உங்களிடம் ஒரு அழகாக பெண்வந்து நான் உங்களை விரும்புகிறேன் உங்களை மணம்செய்து வாழ்நாளை உங்களுடனே கழிக்க வேண்டுமென்றால்
நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீா்களா? இல்லை என்றால் இக்கதாப்பாத்திரத்தினுாடாக நீங்கள் அப்பெண்னிற்கு நீஙகள் கூறும் அறிவுரை என்ன?

__________________________________________________________________________________________

மன்றத்தில் பல திரிகளுக்கும் புயல் காற்று வீசிக்கொண்டிருக்கிறது, பல இடங்களின் பெயா் அறிய வழிவகுத்தவா், புதிதாக இணைந்தாலும் மன்றத்திற்காக பாடுபட்டுக்கொண்டிருப்பவா் பெரிதும் மற்றவா்கட்கு அறிமுகமில்லாதவா் அவரை இத்த்ரிக்கும் எட்டிப்பார்க்க வைக்கும் நோக்கில் அன்பு அண்ணன் தமி்ழ்தாசன்
அவா்ளை ஆ 10 ன் என் இறுதி ஆட்டத்தில் ஆட வருமாறு அழைக்கிறேன்.

நீங்கள் மன்றத்திற்கு நுழையும் முன்பு அதாவது மன்றத்தை வெளியிலிருந்து பார்க்கும் பொளுது உங்களுக்கு தமிழ் மன்றம் பற்றி ஏற்பட்ட உணா்வு என்ன? மன்றத்தில் தற்பொளுது தாங்கள் பதிவுகள் பதிக்கும் பொளுதும் தங்கள் திரிகள் கொளுந்து விட்டுக்கொண்டிருப்பதையும் தாங்கள் எவ்வாறு கருதுகிறீா்கள்? இதனை ஒரு கவிதையாக வடியுங்களேன்..!
எனக்குத் தெரியும் உங்களால் முடியும் என்று அதனால்தான் இது போன்றெரு வினாவை உங்களிடம் கேட்கிறேன்.

=============================================================================

எனக்கு 10 கேள்விகளுக்கு மட்டுமே வாய்பு
இருப்பதையென்னி கவலையடைகிறேன், என் மனதிலும் தாள்களிலும்
15 போருக்கான கேள்வியை தொகுத்தேன் அதில் 10 மட்டுமே ஆ 10
இல் என்னால் தற்பொளுது தரமுடியும் அடுத்த முறை
வாய்ப்புக்கிடைப்பின் என் எண்ணிக்கையில் விடுபட்டவா்களுக்கு
வில்லங்கம்தான்:D

மற்றும் என்னுடைய கேள்விகளை தயவு செய்து தவறாக எடுக்க
வேண்டாம். இது மற்றவா்களை சந்தோசப்படுத்தும் ஒரு செயலாக
எடுக்கவும். கோமாளியாக இருந்தாலும் 100 போ் சிரித்து மகிழ்வது நம்
ஒருவரால்தானே:D

விடையளிக்க காத்துக்கொணடிருக்கும் அன்பு உள்ளங்களுக்கும் பின்னுாட்டங்களில் அசத்தும் நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள்:icon_b:

நன்றி:)

அமரன்
22-12-2008, 02:33 PM
மன்ற பொருப்பாளரும் அன்புக்குரிய நண்பருமான நம்ம அமரன் அண்ணாவை இரண்டாவது கேள்வியாளராக அமா்த்தியுள்ளேன்.

நீங்கள் மன்றத்தில் பல போட்டிகளை தலைமை தாங்கி நடத்தியுள்ளீா் இறுதியில் வாக்கெடுப்பு முலாம் வெற்றியாளர் மன்றத்தில் அறிவிக்கப்படும். வாக்கெடுப்பு மூலம் கவிதைகயோ கதைகளையோ தோ்ந்தெடுத்தாலும் உங்கள் மனதிற்கு பிடித்த படைப்பு என்று நீங்கள் கருதியிருப்பீா்கள். நீங்கள் வெற்றி பெரும் என்று நினைத்த கவிதையோ கதையோ 2 அல்லது 3ம் இடத்திற்கு தள்ளப்படுகையில் உங்கள் மனம் அதனை ஈடுகொடுக்குமா? அத்தருனத்தில் உங்கள் மனம் என் நிலையில் இருக்கும்?

மற்றும் ஒரு சந்தேகம் நீங்கள் மன்றத்திற்கு 14000+ பதிவுகளை கொடுத்திருக்கிறீங்க. ஆனால் உங்க இணைவு திகதி 16 Feb 2007,
மேறிகூறிய திகதியிலா நீங்க இணைந்தீங்க? இல்லாட் ஒரு பில்டப்புக்கு அப்படியா?:D

பல போட்டிகளுக்கு தலைமை தாங்கினீர்கள் என்று தலை மை தாங்கும் ஆளாக என்னை அடையாளப்படுத்தி விட்டீர்களே நிரஞ்சன். ஏதோ உங்கள் நண்பர் என்று வயிற்றில் பாலை வார்க்கிறீர்கள் என்று பார்த்தால் அண்ணா என்றழைத்து மறுபடியும் வேதாளத்தை முருங்கை மரம் ஏற்றி விட்டீர்கள்.

அதென்னவோ தெரியவில்லை அண்மைக் காலமாக என்னை நோக்கி எய்யப்படும் கேள்விக்கணைகள் யாவும் பத்த வெச்சிட்டியே பரட்டை ரகமாகவே உள்ளது. எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து யோசிப்பாங்களோ.

படைப்புகள் விடயத்தில் ஒரு ரசிகனாக என்னிடம் தடுமாற்றம் இருக்கும். ஒரு படைப்பு வார்த்தையாலம் காட்டி கவரும். இன்னொன்று கட்டழகு காட்டி சுண்டி இழுக்கும். இன்னொன்றோ கருத்தாழம் காட்டி மயக்கும். அதனால வாக்களிக்க முதல் போராட்டம் நிச்சயம். இறுதியில் நான் விழுவது கருத்தாழக் குழியில்.

அப்படி அளித்த வாக்குடன் பலர் ஒத்துப் போகவில்லை எனும் போது சிறு வருத்தம் ஏற்படச் செய்யும். ஆனாலும் பலருக்கு பிடித்துள்ளது ஆகையால் எனக்குப் புலப்படாத விசேடங்கள் ஏதாவது இருக்கிறதா என்று ஆழமாகப் பார்ப்பேன். அப்படியும் எதுவும் பிடிபடாத பட்சத்தில் என் திறமை அந்தளவுதான் என்று சமாதனப்படுத்தி விடுவேன். என்ன ஒரு வருத்தம் என்றால் இத்தனை போட்டியில் வாக்களித்தும், எத்தனையோ ஆக்கங்களை படித்தும் என் திறமையை இதுவரை வளர்த்துக்கொள்ளவில்லை என்பதுதான்.

என்னதான் நடித்தாலும் சமயங்களில் சுயம் தன்னை வெளிக்காட்டுவது போல் சில தடவைகள் பிடிவாதக்காரன் என்ற எனது சுயம் வேப்பிலை கையில் எடுத்து முடிவுகளின் உடுக்கை சத்தத்தில் உருவேறி பயங்கரமாக ஆடும். அந்த வேளைகளில் அதனை மலையேற செய்ய நான் படாத பாடு பட வேண்டி இருக்குமோ என்று சோகப்படும் போது யாராவது ஒரு சக நிர்வாகி போட்டி நடைமுறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று கற்பூரம் கொளுத்தி அடத்தை மலையேற்றுவார்.

இன்னொன்று சொல்ல வேண்டும். போட்டி எனும் போது இள நுங்கு போல சீவியதும் சீறிப்பாயும் வகையில் படைப்புகள் இருக்க வேண்டும். மாதுளை போல சுவர்களை உடைத்து ஆடைகளை களைந்து கருக்களை பார்க்க வேண்டிய நிலை போட்டி படைப்புகளுக்கு கொடுக்கவே கூடாது என்று தாமதாக உணர்த்தப்பட்டேன். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்தது போல் அந்தக் கருத்து எனக்குள்.
நிலை என்ன என்ற உங்கள் கேள்விக்கு இதைவிட நேரடியாகப் பதிலளிக்க எனக்குத் தெரியாத நிர*ஞ்சா. அதே நேரம் போட்டி முடிவுகள் எல்லாம் தப்பானவை என்று சொல்லயும் வரவில்லை நான்.

கொசுறுக்கேள்வி ஒன்று கேட்டிருக்கீங்களே.. குசும்பரய்யா நீங்கள். நான் சேர்ந்த தேதிதாங்க அது. பதினான்காயிரத்தில் தேரிய பதிவுகள் என்றால் ஐந்நூருதாங்க. மற்றதெல்லாம் வெற்று வேட்டுங்க. ரைமிங்கா சொல்றதென்றால் அஞ்சு நூறு விவேகம். மிச்ச நூறு வேகம்.
வாய்ப்புக்கு நன்றி.

ராஜா
22-12-2008, 02:41 PM
இந்தக் கேள்வித்தொகுப்பில் நான் ஆவலுடன் எதிர்பார்த்த பதில்களுள் அமரினதும் ஒன்று..!

வழக்கம்போலவே எந்தப் பொறியிலும் சிக்காத... அதேநேரத்தில் சொல்ல நினைப்பதை சந்தேகமற உணர்த்தும் பாங்கு அமருக்கு மட்டுமே கைவந்த கலை..!

கழுவுகிற மீனில் நழுவுகிற மீனய்யா நீர்..!

அய்யா
22-12-2008, 02:55 PM
அமரனண்ணாவின் பதிலில் இலக்கிய நயம் மேலோங்கி நிற்கிறது!

அது என்ன அண்ணா? உங்களிடம் மட்டும் தமிழன்னை இளந்தளிராய் வளைகிறாள்; முதிர் பழமாய் சுவை தருகிறாள்! ????

அமரன்
22-12-2008, 03:28 PM
நிரஞ்சன் மூட்டிய அடுப்பில் ஆக்கப்பட்ட விடைகள் யாவும் சுவையாக உள்ளன. (என்னதையும் சேர்த்துட்டேன் கண்டுக்காதீங்க) அதில் மிகவும் சூடான ஒன்றாக படைப்புகளுக்கு பதிலிடல் அமைந்து விட்டது.

நகைச்சுவைகள் வரவேற்பைப் பெறுகின்றன. அதிலும் தொடர் தோரணமாக அமைபவற்றில் இரசிகர்கள் மட்டுமே பதிகிறார்கள். மற்றவர்களோ பார்த்துவிட்டு போய் விடுகிறார்கள். அவர்களுள் மனதில் பதிவைத்தவர்களும் இருக்கலாம். கவிதைகள், கதைகள் போன்ற படைப்புகள் பக்கம் எட்டிப் பார்ப்போர் மிகக் குறைவு. அப்படியான நிலையில் பாராமுகம், பாராபட்சம் அதிக வேதனை தருவன.

பாராட்டுகள் என்ற ஒற்றை வார்த்தை சந்தோசத்தைத் தரும் என்று உணர்ந்தும் அதனை நான் விரும்புவதில்லை. ஏனெனில் நிறை குறை ஆய்வு என்பதால் விளையும் மிகுந்த சந்தோசத்தை பரிசளிக்கலாமே என்பதால். ஆனால் இதுவும் இல்லாமல் அதுவும் இல்லாமல் இருப்பதை விட ஏதாவது ஒன்று சந்தோசத்தைக் கொடுக்கட்டுமே; ஊக்கம் கொடுக்கட்டுமே; மேலும் மேலும் வளரச் செய்யட்டுமே என்று எண்ண வைக்கும்படியாக அமைந்துள்ளன உறவுகளின் உணர்வலைகள். மாற்றங்கள் மட்டுந்தானே மாறாதவை.

இன்னொன்றையும் நான் உணரவேண்டும். பின்னூட்டமும் அன்பு போலத்தான்.

என் படைப்புகளுக்கு பின்னூட்டம் கிடைக்காவிட்டால் நான் சந்தோசப்படுவேன். பிழையில்லாமல் எழுதி விட்டேனே என்று பெருமிதப்படுவேன். தவறாகப் பாதை காட்டும் படைப்புகளுக்கு அதிக பின்னூட்டங்கள் கிடைப்பதும் மன்றத்தில் உண்டுதானே.:)

நிரன்
22-12-2008, 04:26 PM
நன்றி அமரன் (அண்ணா வேண்டாம் என்று ரொம்ப ஃபீல் பண்ணுறீங்க:aetsch013:)

உங்கள் பதில்கள் சுவை கலந்த நகையாக உள்ளது....

அத்தோடு ராஐா அண்ணா கூறியதுபோல கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் போல விரிக்கிற வலையெல்லாம் ஐம் பன்னிக்கொண்டு போறீங்க ஒரு நாள் யாருட்டையாவது நீங்க வசமா ஆ10 ல மாட்டனும் என்று நான் பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கிறேன், (பக்கத்த ஒரு கோயிலும் இல்ல) இல்லையெனின் அருகிலிருக்கும் கிறீஸ்தவ தேவலயத்திற்கு சென்று மெளுகுதிரி ஏற்றுகிறேன்:D மன்ற ஆ10க்கள் சூழ ஆசியுடன் இருங்கள்.:D

குசும்புத்தனமா எழுந்த கேள்விய குசும்பாத்தான கேட்க முடியும்:D

நன்றி

பாலகன்
22-12-2008, 04:30 PM
நிரஞ்சா உங்கள் கேள்விகள் ஒன்னுஒன்னும் பிரமாதம்.... அனைவரையும் திறமையுடன் சமாளிக்கும் அரவணைக்கும் தங்களின் தலைமை பாங்கு எம்மை வியக்க செய்கிறது... உங்கள் வேகம் பாராட்டுக்குரியது

நிரன்
22-12-2008, 04:42 PM
நிரஞ்சா உங்கள் கேள்விகள் ஒன்னுஒன்னும் பிரமாதம்.... அனைவரையும் திறமையுடன் சமாளிக்கும் அரவணைக்கும் தங்களின் தலைமை பாங்கு எம்மை வியக்க செய்கிறது... உங்கள் வேகம் பாராட்டுக்குரியது

தங்கள் பாராட்டுக்கு நன்றி மகாபிரபு அவா்களே......
இதில் என் பங்கு வெறும் கேள்விதான், விடையளிக்கும் விதமே கேள்விக்கு மேலும் அழகைத் தருகிறது.

நன்றி:)

arun
22-12-2008, 05:57 PM
நிரஞ்சனின் கேள்விகள் பிரமாதம்

மிகவும் உருக்கமான உண்மையான பதிலை சிவா அவர்கள் கொடுத்துள்ளார் நெகிழ்வான பதில் தான்

மதுரை வீரனின் பதிலில் உள்ள ஆதங்கம் உண்மையானது மற்றும் நியாயமானது

ராஜா அவர்களின் பதிலும் அருமை

இன்னும் 7 பேர் பாக்கி இருக்கிறதா??...

பாலகன்
22-12-2008, 06:14 PM
தங்கள் பாராட்டுக்கு நன்றி மகாபிரபு அவா்களே......
இதில் என் பங்கு வெறும் கேள்விதான், விடையளிக்கும் விதமே கேள்விக்கு மேலும் அழகைத் தருகிறது.

நன்றி:)

உங்கள் அடக்கம் போற்றுதற்குரியது... தொடரட்டும் உங்கள் சேவை... இன்னும் 7 பேர் தான்

நிரன்
22-12-2008, 06:16 PM
நிரஞ்சனின் கேள்விகள் பிரமாதம்

மிகவும் உருக்கமான உண்மையான பதிலை சிவா அவர்கள் கொடுத்துள்ளார் நெகிழ்வான பதில் தான்

மதுரை வீரனின் பதிலில் உள்ள ஆதங்கம் உண்மையானது மற்றும் நியாயமானது

ராஜா அவர்களின் பதிலும் அருமை

இன்னும் 7 பேர் பாக்கி இருக்கிறதா??...

நன்றி அருன்...........

ஆம் இன்னும் 7பேர்தான் பாக்கி காத்திருப்போம்.........;)

ராஜா
23-12-2008, 05:01 AM
யாருங்க "அந்த 7 ஆட்கள்..!"

சீக்கிரமா வாங்(குங்க)கப்பு..!

ராஜா
23-12-2008, 05:39 AM
நிரஞ்சனின் கேள்விகள் பிரமாதம்

இன்னும் 7 பேர் பாக்கி இருக்கிறதா??...

உங்கள் அடக்கம் போற்றுதற்குரியது... தொடரட்டும் உங்கள் சேவை... இன்னும் 7 பேர் தான்

நன்றி அருன்...........

ஆம் இன்னும் 7பேர்தான் பாக்கி காத்திருப்போம்.........;)

யாருங்க "அந்த 7 ஆட்கள்..!"

சீக்கிரமா வாங்(குங்க)கப்பு..!

கணக்கு உதைக்கிற மாதிரி இருக்கே..!

1) மதுரை,

2) சிவா,

3) ராஜா,

4) அமர்..

சாய்ஞ்சா சாயற பக்கமே சாயற ................ !

சிவா.ஜி
23-12-2008, 06:18 AM
ராஜாசாரின் பதிலில் காணக்கிடைத்த வீட்டுக்காட்சிகள் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுத்தது. ஆம்...பிள்ளைகளை வளர்ப்பது ஒரு கலை. அது எனக்கு என் தந்தை மூலம் நன்றாகவே அறியக்கிடைத்தது. உங்களைப்போன்றோரின் அனுபவத்தில் மேலும் அறிந்துகொள்கிறேன். நன்றி ராஜாசார்.

சிவா.ஜி
23-12-2008, 06:20 AM
அட..அட...அட...அமரன் பதில் டாப். எப்படி பொறி வெச்சாலும் தப்பிச்சுடுராரே மனுஷன். அதுவும் அழகான தமிழில் சுவையாகப் பதில் சொல்லி...

அருமை அமரன்.

ராஜா
23-12-2008, 06:28 AM
மன்றத்தில் இம்முறை ஆ 10 ற்கான வினாவை வினாவுவதற்கு என்னை அழைப்பு விடுத்திருந்ததையடுத்து இங்கே என் கேள்விகளை சமர்ப்பிக்கிறேன். இக் கேள்விகள் சில மற்றவர்களின் உணர்ச்சிகளை மையமாகக் கொண்டும் சில எல்லோருக்குயம் சங்கடமில்லாது சந்தோசத்தை மட்டுமே கொடுக்கும் வகையில் தொகுத்துள்ளேன். இக்கேள்விகளில் ஏதேனும் தவறாக இருப்பின் அதற்காக என்னை மன்னிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்
கொள்கிறேன்
__________________________________________________________________________________________

எனது முதலாவது கேள்வி மன்றத்தின் நிர்வாகி அறிஞரிடம்..

தங்களுக்கு இவ்வினாவுக்கு முழுமையான பதிலளிக்க நேரம் இல்லையென்று என்னறிவுக்குத் தெரியும்.
இவ்வினாவிற்கு உங்களால் முடிந்த ஒரு சிறு பதிலைத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

தாங்கள் மன்றத்தின் நிர்வாகி. மன்றம் தொடங்கிய போதே மன்றத்திற்கான உங்கள் பணிகளும் ஆரம்பமாகி விட்டன. ஆரம்ப காலத்தில மிகவும் குறைந்தளவே உறுப்பினர்கள் அங்கம்வகித்திருப்பார்கள். அவ் வேளையில் நீங்கள் மன்றத்தினூடாக எப்படி தமிழை வளர்க்க போகிறோம் என்று ஒரு கண*ம் யோசித்ததுண்டா? தற்பொழுது மன்றத்திற்கு பல புதிய உறுப்பினர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இது உங்கள் மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கிறதா இல்லை சந்தோசத்துடன் கூடிய சிறிதொரு பயத்தையும் கொடுக்கிறதா?

__________________________________________________________________________________________

மன்ற பொருப்பாளரும் அன்புக்குரிய நண்பருமான நம்ம அமரன் அண்ணாவை இரண்டாவது கேள்வியாளராக அமா்த்தியுள்ளேன்.

நீங்கள் மன்றத்தில் பல போட்டிகளை தலைமை தாங்கி நடத்தியுள்ளீா் இறுதியில் வாக்கெடுப்பு முலாம் வெற்றியாளர் மன்றத்தில் அறிவிக்கப்படும். வாக்கெடுப்பு மூலம் கவிதைகயோ கதைகளையோ தோ்ந்தெடுத்தாலும் உங்கள் மனதிற்கு பிடித்த படைப்பு என்று நீங்கள் கருதியிருப்பீா்கள். நீங்கள் வெற்றி பெரும் என்று நினைத்த கவிதையோ கதையோ 2 அல்லது 3ம் இடத்திற்கு தள்ளப்படுகையில் உங்கள் மனம் அதனை ஈடுகொடுக்குமா? அத்தருனத்தில் உங்கள் மனம் என் நிலையில் இருக்கும்?

மற்றும் ஒரு சந்தேகம் நீங்கள் மன்றத்திற்கு 14000+ பதிவுகளை கொடுத்திருக்கிறீங்க. ஆனால் உங்க இணைவு திகதி 16 Feb 2007,
மேறிகூறிய திகதியிலா நீங்க இணைந்தீங்க? இல்லாட் ஒரு பில்டப்புக்கு அப்படியா?

__________________________________________________________________________________________

மூன்றவது கேள்வியை எக் கேள்விக்கும் முகம் சுழிக்கா பதிலளிக்கும் எங்கள் சிவா.ஐி அண்ணாவை அமா்த்துகிறேன்.

தாங்கள் துபாயில் வேலை செய்வதாக அறிந்தேன் அதனால் என்னறிவில் எட்டிய வினாவதை உங்களிடம் வினாவ விரும்புகிறேன்.

நீங்கள் வெள்நாட்டில் பணியாற்றுவதன் மூலம் உங்களுக்கு அந்நாட்டவரின் மூலம் வேலைத்தளத்தில் ஏதாவது கசாப்பான அணுபவங்கள் நிகழ்ந்ததுண்டா? அவ்வேளையில் நீங்கள் தாய்நாட்டை நினைத்து அதனை பெரிதும் இழந்து விட்டோமே என்று என்னிய தருனங்கள் ஏதேனும் உண்டா? இதனால் ஏன் பிறநாட்டவரிற்கு கீழ் நாம் வேலை செய்ய வேண்டும் என்று மனம் பிரிவினை ஏற்படுத்தியதுண்டா?
அப்பிரிவினையை சில (குடும்பம் போன்ற )காரணங்கள் துாக்கி எறிந்ததுண்டா?

__________________________________________________________________________________________

பலதிரிகளிலும் கதை நகைச்சுவையென பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் சக நண்பா் மதுரைமைந்தன் அவா்களை நான்காவதாக வரிசையில் அமா்த்துகிறேன்.

உங்களுடைய விஞ்ஞானக் கதையினை நான் இன்றுதான் படித்தேன் அங்கே தாங்கள் இட்டிருந்த ஒரு கருத்தையும் கவன்த்தேன் அதனை மையமாகக்கொண்டு இக்கேள்வியை தங்களிடம் கேட்க ஆசைப்படுகிறேன்.

நீங்கள் தற்பொளுது மன்றத்திற்கு கதை மற்றும் நகைச்சுவைகள் என்பன வழங்கிக்கொண்டிருக்கிறீா்கள். ஆனால் உங்கள் மனம் எதிர்பார்த்த ஆதரவு அதற்கு கிடைக்கவில்லையென என்னறிவுக்கு எட்டியது. அப்படி உங்கள் மனம் திருப்திப்படா விட்டாலும் மன்றத்திற்கு படைத்துக் கொண்டிருக்கிறீா்கள், நீங்கள் எப்பொளுதேணும் வருந்தியதுண்டா எதிர்பார்த ஆதரவு இல்லையென? எப்பொளுதேனும் சிந்தித்ததுண்டா ஏன் நான் மென்மேலும் படைக்க வேண்டும் என்று?

__________________________________________________________________________________________

ஐந்தாவதாக நம்மக்கா.ஆட்டோ ராணி என்றழைக்கப்படும், லன்டன் தாதாவான மிஸ் தமிழ்மன்றம், அக்கா ஓவியாவை அன்புடன் அழைக்கிறேன்.. யக்கோவ் இங்க எங்கயாவது சுத்தினால் இங்கயும் கொஞ்சம் வாங்க.

தாங்கள் கவிதைப்போட்டியில் 3 தடவைகள் வெற்றியீட்டியதை மையமாகக் கொண்டு இக்கேள்வியை கேட்கும் அவாவில் உள்ளேன் மன்றத்தில் சில நாட்களாக எனக்கு எழுந்து கொண்டிருக்கும் ஒரு சந்தேகம்.

நீங்கள் மன்றத்திற்கு அற்புதமாக கவிதைகளைப்படைத்திருக்கிறீர்கள். நிச்சயமாக எந்தவொரு சுழலை மையமாகக் கொண்டும் உங்களால் கவிதையை வடிக்க முடியும், இவ்வளவு திறமையுள்ள நீங்கள் எப்பொழுதேனும் கவிதை எழுத முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறீங்களா? மனம் வெறுமையான நேரத்தில் கவிதைகளே வராத சந்தர்ப்பங்கள் உண்டா? அப்படியிருந்தால் அதைத்தாருங்கள்.

மற்றும் இப்ப எல்லாம் நீங்க கவிதைப்போட்டில பங்கெடுக்கிறதே இல்லயே ஏன் 3 Awads க்கு மேல Showcase இல் வைக்க அழகில்லை என்றா

__________________________________________________________________________________________

அடுத்தாக நம்ம திரியோட ஆசான். மற்றும் எல்லோரையும் சிரிக்க வைக்கும் காமெடியன் என்றுகூட அழைக்கலாம் அதுதாங்க
நம்ம அன்பு வெள்ளம் ராஐா அண்ணா, அண்ணாவை கொம்பட்டபுள் ஆ ஆற்றிற்கு பக்கத்தில் ஆறாக அமா்த்துகிறேன்

உங்கள் படைப்புக்கள் பல நான் பார்த்துச்சிரித்துள்ளேன் அதனால் எனக்கெளுந்த கேள்வி அதை உங்களிடம் கொடுக்கின்றேன்

நீங்கள் எத்தனையோ சிரிப்பு வெடிகளை போட்டிருப்பீங்க அதில் நீங்கள் இப்பொளுது கூட ஒரு கனம் நினைத்தால் வயிறு குலுங்கும் சம்மவங்கள் அல்லது வெடிகள் உண்டா? அப்படி இருந்தால் அதை எங்களுக்கு ஒரு முறை தாருங்கள். உங்கள் சூழல் அல்லது குடும்பத்திலாகவும் இருக்கலாம்.

__________________________________________________________________________________________

ஏழாவதாக உலகமெங்கும் அவன் ஒளி எட்டிக்கொண்டிருக்கும் அவனில்லையேல் அகிலமில்லை கிட்டச்சென்றால் பஸ்பம்
இவர் கிட்டச்சென்றால் மனம் தங்கபுஸ்பம்... ஓவர் பில்டப்பை நிப்பாட்டீட்டு ஆதவா என்று மன்றம் அதிரும் படியாக கத்துகின்றேன்

உங்களுடைய பல கவிதைகள் மற்றும் தற்பொழுது தந்து கொண்டிருக்கும் மார்கழி சம்பந்தமானவை படித்துக்கொண்டிருக்கிறேன்
ஆனால் உங்கள் சில கவிதைகளைப்பார்த்தால் எனக்கு ஓன்றுமே புரிவதில்லை. எல்லாம் சுத்த சூனியமாகவே தோன்றுகிறது.
இதையெல்லாம் எங்கயாவது பழைய ஒலைச்சுவட்டில் இருந்து சுட்டீங்களா? இல்லையெனின் தங்கள் பாட்டனார் யாராவது புலவரா?
__________________________________________________________________________________________

எட்டாவதாக கையிலே எட்டாத, கிட்ட நாமென்றும் முட்டாத முட்டும் வேளையில் நம்முயிர் நம்மிலிருக்காது, ஆனால் இவர் அப்படியல்ல பனிமலையில் இருக்கும் அக்னி என்றும் சுகத்தையே தருபவர்.

மன்றத்தில் தற்பொழுது பெரும்பாலும் பழக நோ்ந்தது அதையடுத்து
உங்களிடம் அருவா வெட்டும் வாங்கியதுண்டு
அதனால் ஒரு கேள்வியை வேடிக்கையாக உங்கள்முன் வெட்டுகிறேன்

நீங்கள் ஒரு வானொலி அல்லது தொலைக்காட்சி ஒலிபரப்பு நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறீர்கள் என்று கற்பனையில் மூழ்குங்கள். உங்களிம் ஒரு நேயர் விருப்பம் என்றொரு தொல்லை பேசி நிகழ்வொன்றை ஒப்படைத்தால் வீட்டிலிருந்தே நேயர்களை அறுப்பதற்கு தயாராக்ச் செல்வீங்களா? இல்லாட்டி நிகழ்ச்சியிலேயே யோசனை செய்து நேயர்களை அறுப்பீங்களா?

உங்களுக்கு அறுக்கும் குறுக்குக் கேள்விகள் மற்றவருடன் பழகிவந்ததா? இல்லையென்றால் மன்றத்தில ஸ்பெசல் ரெய்னிங்கா?
__________________________________________________________________________________________

ஒன்பதாவதாக உலகம் சுற்றும் வாலிபன் கட்டப் பிரம்மச்சாரி மன்ற மனங்கவர் பதிவாளர் எனக்கும் நெருக்கமானவர். அவரின் படைப்புக்கள் ரசித்தவை பல ருசித்தவை பல நம்ம நாரயணா நாரயணா .... நாரதர்.

உங்கள் பெயரை நினைத்த பொழுது இக்கதாப்பாத்திரத்தை நான் உங்களுக்காக யோசித்தேன். நீங்கள் தற்பொழுது உள்ள புனைப்பெயர் கதாபாத்திரமாகவே உங்களை ஆக்கிக் கொண்டு இவ்வினாவுக்கு விடையளியுங்க எஸ்கேப் ஆகிறது என்றெல்லாம் நினைக்க கூடது

தற்பொழுது உங்களுக்கு 23 வயது என்றெண்ணுங்கள் உங்களிடம் ஒரு அழகாக பெண்வந்து நான் உங்களை விரும்புகிறேன் உங்களை மணம்செய்து வாழ்நாளை உங்களுடனே கழிக்க வேண்டுமென்றால்
நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா? இல்லை என்றால் இக்கதாப்பாத்திரத்தினூடாக நீங்கள் அப்பெண்ணுக்கு கூறும் அறிவுரை என்ன?

__________________________________________________________________________________________

மன்றத்தில் பல திரிகளுக்கும் புயல் காற்று வீசிக்கொண்டிருக்கிறது, பல இடங்களின் பெயர் அறிய வழிவகுத்தவர், புதிதாக இணைந்தாலும் மன்றத்திற்காக பாடுபட்டுக்கொண்டிருப்பவர் பெரிதும் மற்றவர்கட்கு அறிமுகமில்லாதவர் அவரை இத்திரிக்கும் எட்டிப்பார்க்க வைக்கும் நோக்கில் அன்பு அண்ணன் தமி்ழ்தாசன்
அவர்க*ளை ஆ 10 ன் என் இறுதி ஆட்டத்தில் ஆட வருமாறு அழைக்கிறேன்.

நீங்கள் மன்றத்திற்கு நுழையும் முன்பு அதாவது மன்றத்தை வெளியிலிருந்து பார்க்கும்பொழுது உங்களுக்கு தமிழ் மன்றம் பற்றி ஏற்பட்ட உணர்வு என்ன? மன்றத்தில் தற்பொழுது தாங்கள் பதிவுகள் பதிக்கும்பொழுதும் தங்கள் திரிகள் கொளுந்து விட்டுக்கொண்டிருப்பதையும் தாங்கள் எவ்வாறு கருதுகிறீர்கள்? இதனை ஒரு கவிதையாக வடியுங்களேன்..!

எனக்குத் தெரியும் உங்களால் முடியும் என்று அதனால்தான் இது போன்றொரு வினாவை உங்களிடம் கேட்கிறேன்.

=============================================================================

பதிலளியுங்கள் உறவுகளே..!

அமரன்
23-12-2008, 07:01 AM
இந்தக் கேள்வித்தொகுப்பில் நான் ஆவலுடன் எதிர்பார்த்த பதில்களுள் அமரினதும் ஒன்று..!

வழக்கம்போலவே எந்தப் பொறியிலும் சிக்காத... அதேநேரத்தில் சொல்ல நினைப்பதை சந்தேகமற உணர்த்தும் பாங்கு அமருக்கு மட்டுமே கைவந்த கலை..!

கழுவுகிற மீனில் நழுவுகிற மீனய்யா நீர்..!

நன்றி அமரன் (அண்ணா வேண்டாம் என்று ரொம்ப ஃபீல் பண்ணுறீங்க:aetsch013:)

உங்கள் பதில்கள் சுவை கலந்த நகையாக உள்ளது....

அத்தோடு ராஐா அண்ணா கூறியதுபோல கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் போல விரிக்கிற வலையெல்லாம் ஐம் பன்னிக்கொண்டு போறீங்க ஒரு நாள் யாருட்டையாவது நீங்க வசமா ஆ10 ல மாட்டனும் என்று நான் பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கிறேன், (பக்கத்த ஒரு கோயிலும் இல்ல) இல்லையெனின் அருகிலிருக்கும் கிறீஸ்தவ தேவலயத்திற்கு சென்று மெளுகுதிரி ஏற்றுகிறேன்:D மன்ற ஆ10க்கள் சூழ ஆசியுடன் இருங்கள்.:D

குசும்புத்தனமா எழுந்த கேள்விய குசும்பாத்தான கேட்க முடியும்:D

நன்றி

அட..அட...அட...அமரன் பதில் டாப். எப்படி பொறி வெச்சாலும் தப்பிச்சுடுராரே மனுஷன். அதுவும் அழகான தமிழில் சுவையாகப் பதில் சொல்லி...

அருமை அமரன்.

ஹும்.. நான் பேந்தப் பேந்த முழிக்கிறதைப் பார்க்க எந்தளவு எதிர்பார்ப்போட இருக்காங்கப்பா. இவுங்க மத்தியில வாழுறதே பெரிய ரிஷ்குத்தான் போல. :):D

அமரனண்ணாவின் பதிலில் இலக்கிய நயம் மேலோங்கி நிற்கிறது!

அது என்ன அண்ணா? உங்களிடம் மட்டும் தமிழன்னை இளந்தளிராய் வளைகிறாள்; முதிர் பழமாய் சுவை தருகிறாள்! ????

அதே அன்னை கடாட்சம் உங்கள் பக்கமும் இருப்பதை இட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அய்யா.

ராஜா
23-12-2008, 07:16 AM
ஹும்.. நான் பேந்தப் பேந்த முழிக்கிறதைப் பார்க்க எந்தளவு எதிர்பார்ப்போட இருக்காங்கப்பா. இவுங்க மத்தியில வாழுறதே பெரிய ரிஷ்குத்தான் போல. :):D

:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:

Narathar
23-12-2008, 08:00 AM
.பாலஸ்தீனியர்களுடன் பணியாற்றியபோதுதான். நிறைய சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும்...ஒரு சோற்று பதமாக ஒரே நிகழ்ச்சி..

எனக்கு நீங்கள் இந்த நிகழ்வை முன்னமே மன்றத்தில் பகிர்ந்து கொண்டதாக ஞாபகம்.... அப்படியா சிவா?????

மிகவும் மனவேதனையளிக்கிறது அவர்களது நடத்தை! அங்கு அந்த வெயிலில் பாடுபடும் உறவுகளுக்காக பதைக்கிறது மனது!

தனிப்பட்டமுறையில் எனக்கு சில கசப்பான அனுபவம் நான் சார்ந்த மதத்தால் ஏற்பட்டதுதான். சவுதியில் உள்ள முத்தவா என சொல்லப்படும் மத குருமார்களால்

ஏற்பட்ட அனுபவங்களை உண்மையாக சொல்லவேண்டுமென்பதால்...இதை சொல்கிறேன். ஆனால் நான் எந்த மதத்தினருக்கும், எந்த நாட்டினருக்கும் எதிரியல்ல.

ஒரு தனிப்பட்ட மதத்தினரை மட்டுமல்ல தென் கிழக்காசிய மக்கள் அனைவரையும் அவர்கள் கீழ்த்தரமாகத்தான் நடத்துகின்றார்கள் என்று அங்கு சென்றுவருபவர்கள் மூலம் அறிகின்றேன்.....

மிகவும் மனம் வருந்தத்தக்க செய்தி! தற்போது அங்கு நல்ல வேதனம் வழங்கப்படுவதாகவும், நல்ல தொழில் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் பலர் சொல்லியும் நான் அந்தப்பக்கம் திரும்பிப்பார்க்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஐரோப்பிய சம்பளத்தைவிட அதிகமான சம்பளம் அங்கு கிடைக்கிறதாமே....

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காகவே ஒரு துறையமைத்து அதற்கு ஒரு அமைச்சரையும் நடுவண் அரசு நியமித்திருக்கிறது. அவரும் இருக்கிறார். சும்மா இருக்கிறார். நெல்வயலைவிட எண்ணெய் வயல் கொடுக்கும் சன்மானம் பெரிதல்லவா?

நம் அரசியல் வாதிகள் எப்போ திருந்தி? எப்போ நம்மவர்களுக்காக குரல் கொடுப்பார்களோ??

நாராயணா!!!!

Narathar
23-12-2008, 10:02 AM
இந்த இடத்தில் உங்களுக்கு சிரிப்பு வரவில்லையெனில் நீங்கள் என் சூழ்நிலையில் இருந்து பார்க்கவில்லையென்று பொருள்..!

இன்னொரு நிகழ்வு..

கொக்கு பொம்மையை கையில் எடுத்தார்..அதன் கழுத்தை அரிவாள் மணையில் வைத்து அரிவதுபோல் சைகை செய்தார்.. கொக்கரிகிறாராம்..!

சின்ன அரும்புகள், செய்யும் குறும்புகள் எண்ண எண்ண எந்தன் உள்ளம் இனித்திடும்..

"அதுகளும் தெரிஞ்சுக்கட்டும்.. நாமளும் மாடர்ன் தான்னு..!"

மேலே உள்ள வரி ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தின் கேப்ஷன் வார்த்தைகள்.. ஆனால் அது என்ன தயாரிப்புக்கான விளம்பரம் என்று கேட்காதீர்கள்..!

தங்கள் சொந்த அனுபபவங்களையே....
இங்கு ஜாலியாக பகிர்ந்துகொண்ட உங்கள்
விடையை ரசித்தேன். வாழ்த்துக்கள்!

அது என்ன விளம்பரமென்று சத்தியமா எனக்கு தெரியாதுங்கோவ்! :eek:

நிரன்
23-12-2008, 10:20 AM
நாரா......
தங்களை இங்கே கண்டமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன் :)

(தங்களுக்கும் ஒரு ஆப்பு உள்ளதே அதை கவினிச்சீங்களா:aetsch013:)

நிரன்
23-12-2008, 10:22 AM
இன்னும் ஏழு பேரல்ல 6 பேர் மட்டுமே.....:D:D

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி ராஐா அண்ணா.;)

(கணக்கு வாத்தியார் கண்டால் தலைலதான் குட்டு விழும்):D:D

நிரன்
23-12-2008, 10:25 AM
ஹும்.. நான் பேந்தப் பேந்த முழிக்கிறதைப் பார்க்க எந்தளவு எதிர்பார்ப்போட இருக்காங்கப்பா. இவுங்க மத்தியில வாழுறதே பெரிய ரிஷ்குத்தான் போல. :):D

பேந்தப் பேந்த முழிக்கிறதுக்காகத்தானே அடிக்கட் ஆ10 தீண்டுகிறது:sprachlos020::sprachlos020::D:D:D:D

அய்யா
23-12-2008, 12:30 PM
என்ன? இன்றைக்கு எவரும் பதிலளிக்கக் காணோமே! என்னாயிற்று?

Narathar
23-12-2008, 06:47 PM
நாரா......
தங்களை இங்கே கண்டமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன் :)

(தங்களுக்கும் ஒரு ஆப்பு உள்ளதே அதை கவினிச்சீங்களா:aetsch013:)

நாங்க இந்தப்பக்கம் வந்துபோய்கிட்டுத்தான் இருக்கமப்பு!
சீக்கிரம் தருகின்றேன் பதிலை
நேரில் வந்தால் தருகின்றேன் ......யை..!!!

ஜெர்மனிதானே.... 10 பவுண் பட்ஜட் பிளைட் பிடிச்சாவது வருவேன்... அல்லது இருக்கவே இருக்கு ஓவியாவின் ஆட்டோ சேர்விஸ்

நிரன்
23-12-2008, 07:00 PM

நீங்க இந்தப்பக்கம் உலாவுறது தெரியும்.... அந்தக் கேள்வியைக் கண்டும்
காணமல் போய் வி்டுவீங்களா என்று ஒரு மனப்பீதி:D
ரயன்ஏா் றொம்ப சீப் ஏா்போட்ல வந்து விசாரிச்சா அட்ரஸ் தருவாங்க.:aetsch013:
தைக்கு பிறகு என்றால் நானே வந்து உதையை ரிசிவ் பண்ணுவன்:D

அக்காவோட ஆட்டோ ஐரோப்பா டுரோ..... மண்ணென்னை நான் ஊத்துறன் (ஆட்டோவுக்கு):food-smiley-015::sprachlos020: இல்லாட்டி நம்ம சிவா அண்ணா இருக்காரு துபாயில எண்ணைக் கிணறோட:rolleyes:

சூரியன்
25-12-2008, 01:01 PM
நல்ல பதில்கள் அமர் அண்ணா.

ரங்கராஜன்
27-12-2008, 03:24 PM
என்ன ஆச்சி யாரையும் காணும், எங்க ராஜா அண்ணாவை காணும், சூப்பரான திரி இப்படி சுருண்டு இருக்கே.

நிரன்
27-12-2008, 03:32 PM
2009 வரவேற்பதில் எல்லோரும் ஆர்வமாக உள்ளனா் போன்று தென்படுகிறது

காத்திருப்போம் .......

(என்னுடைய கேள்விக்கு பதில் வருமென நான் நம்பிக்கையிழந்து விட்டேன்:frown:)

ரங்கராஜன்
27-12-2008, 03:34 PM
2009 வரவேற்பதில் எல்லோரும் ஆர்வமாக உள்ளனா் போன்று தென்படுகிறது

காத்திருப்போம் .......

(என்னுடைய கேள்விக்கு பதில் வருமென நான் நம்பிக்கையிழந்து விட்டேன்:frown:)

இழக்காதே தம்பி, பதில் தராத அனைவருக்கும் ஒரு தனிமடல் போட்டு விடு.

Narathar
27-12-2008, 03:39 PM
2009 வரவேற்பதில் எல்லோரும் ஆர்வமாக உள்ளனா் போன்று தென்படுகிறது

காத்திருப்போம் .......

என்னுடைய கேள்விக்கு பதில் வருமென நான் நம்பிக்கையிழந்து விட்டேன்:frown:)

உண்மையும் அதுதானப்பு........
பதில் தருகின்றேன் கவலை வேண்டாம்!

நிரன்
27-12-2008, 03:52 PM
உண்மையும் அதுதானப்பு........
பதில் தருகின்றேன் கவலை வேண்டாம்!

:):):):):):):):):):)

தமிழ்தாசன்
27-12-2008, 04:56 PM
வணக்கம்! அன்புள்ளங்களே!

என்னையும் பதில் தேடி இப்பக்கம் அழைத்த அன்புத்தம்பி
கலக்கல் கவிதை மன்னர் நிரஞ்சன் அவர்களே! உங்களுக்கு என் மனம்நிறை மகிழ்ச்சி!

பலரும் இணைந்த பின் எனது பதிலை நிறைவாகத்தரலாம் என்றிருந்தேன்.
ஆனால் இத்திரியோ? அல்லது மன்றத்தின் எக்கருத்தாக்களாலும் ஆரம்பிக்கப்பட்ட எத்திரியும் சோடைபோக நாம் விடக்கூடாது என்பதனால் என் பதிலை உடன் தருகிறேன்.

மன்றத்தில் பல திரிகளுக்கும் புயல் காற்று வீசிக்கொண்டிருக்கிறது, பல இடங்களின் பெயர் அறிய வழிவகுத்தவர், புதிதாக இணைந்தாலும் மன்றத்திற்காக பாடுபட்டுக்கொண்டிருப்பவர் பெரிதும் மற்றவர்கட்கு அறிமுகமில்லாதவர் அவரை இத்திரிக்கும் எட்டிப்பார்க்க வைக்கும் நோக்கில் அன்பு அண்ணன் தமி்ழ்தாசன்
அவர்க*ளை ஆ 10 ன் என் இறுதி ஆட்டத்தில் ஆட வருமாறு அழைக்கிறேன்.

நீங்கள் மன்றத்திற்கு நுழையும் முன்பு அதாவது மன்றத்தை வெளியிலிருந்து பார்க்கும்பொழுது உங்களுக்கு தமிழ் மன்றம் பற்றி ஏற்பட்ட உணர்வு என்ன? மன்றத்தில் தற்பொழுது தாங்கள் பதிவுகள் பதிக்கும்பொழுதும் தங்கள் திரிகள் கொளுந்து விட்டுக்கொண்டிருப்பதையும் தாங்கள் எவ்வாறு கருதுகிறீர்கள்? இதனை ஒரு கவிதையாக வடியுங்களேன்..!

எனக்குத் தெரியும் உங்களால் முடியும் என்று அதனால்தான் இது போன்றொரு வினாவை உங்களிடம் கேட்கிறேன்.

மனிதப்புதுவுலகாம் கணனிக்கலையுலகில்
தமிழும் பவணிவரும் உலகம் வியந்ததிங்கே!
எழுந்த தமிழினத்தின் எல்லைகள் உலகுதாண்டிவிரைந்ததிங்கே!

எத்தனை படைத்தனன் தமிழோன், தமிழால்லெழுந்திங்கே
எண்திசை படைக்கிறான் உலகால் அளவுகானா முழக்கமிட்டே!

இவைகண்டுமகிழ்ந்த என்மனதில்
விழுந்த கதைபேரதிராய்!
இரண்டாயிரத்து நான்குதான்
நான்வசமானேன்!
கனணிவலை வீழ்ந்தேன்!

எந்தன்பணியதனில்
எரிச்சலுற்றார், விசவாயுக்கிருமிகாள்சில
சிந்தைசிதறலால் திரண்டதமிழ்சொற்கள்
வசைபாடி விசம்சிந்தல் என்மேல்
விழுந்தக்காள்விரண்டு
விரைந்துயா ழ்களம்கரை கண்டேன்.
அதுகண்டு வலைவரும் தளங்களில்
என்மனம்நாடவில்லை.

பொருத்தக்காள்
அன்பன்வந்தான் தந்தான்
மன்றத்தறிமுகம்
வருத்தமில்லா மனம் கொண்டு
வலம்வந்து ஒருமுகம்
விருப்பமுற்றேன்.
தனிமனிதச்சாடலில்லா
அழகுமன்றக் கருத்தாக்கள்
தரும்விருந்து வியப்பிலுற்றேன்.
விரைந்தேன்!
தமிழ்மணம் கண்டு கரைந்தேன்!

எந்தன் படைப்புகளை மனம் கொண்டணைத்திங்கே!
சிந்தை சிறகடிக்க புதியதமிழ்சிறகை தந்தவர்பலரிங்கே!
மந்தை மனமில்லா மாபெரும் குணம் கொண்டாரிங்கே!
சந்தை போலல்லாமல் அத்தனையும் முத்துகளிங்கே!
விந்தை என்னவென்றால் யாரையும் அணைக்கும்
முகமறியா பேரறிஞர் சபையிங்கே!!
எந்தன் திரிமட்டுமன்றி
அத்தனைத்திரிகளுக்கும்
நேரம் வரும்போதெல்லாம் வாழ்த்தும், வரவேற்பும் - தமிழ்
எண்ணெய் ஊற்றும், போற்றும் பலர்கொண்ட
மன்றம் மனம் வாழ்த்தும் என்றும்.
அண்மையிணைந்த என்னையும்
ஆபத்தில் ஆரோக்கியமாய்
அழைத்தஅன்புத்தம்பி நிரஞ்சனுக்கும்,
மன்றத்துறவுகளே உங்கட்கும் என் மகிழ்வுகள்!

வாழ்க! வாழ்க!

அடுத்து......

தா..தீ..தோம்..நம். வணக்கம் தந்தோம்!

வணக்கம் அன்புள்ளங்களே!

இனிய இந்த தளத்தில்,
கலையும் கலை சார்ந்த உள்ளங்களும்
அலையும் அலை சார்ந்த எண்ணங்களும்
நிலையில்லா இந்த வாழ்வுதனில் நிலைத்திடுமோ நம் கனவுகள்?
என, படைப்புகளை தந்துக்கொண்டிருக்கும்
உங்கள் அனைவரோடும்
'உலகின் எங்கோ ஓர் மூலையில் நிகழும் நிகழ்வுகள்
எங்களுக்கு தெரியாது போகினும்
நம் நினைவில் வரும் நிகழ்வுகளின் படைப்பாக்கத்துடன்
உங்களுடன்,
மகிழ்வுடன் இணைந்துக்கொள்கிறேன்'

புலத்தமிழனாக நான் தற்பொழுது ஐரோப்பாவில்,
அன்பான மனைவியுடனும், பாசமிகு மகளுடனும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்.

நண்ப உறவின் அன்புடன்,
நேசமுடன்...
தமிழ்தாசன்.

என்று மன்றத்தில் இணைந்தேன். இணைந்தபோது உடனே மன்றப்பாங்குடன் எனை வரவேற்றும், எனது முதற்படைப்புக்கு உடன் புத்துணர்வனையும் தந்து மன்றத்துறவுகள் அரவணைத்த பாங்கு என் இவ்வாழ்த்துக்கு உள்ளம் பொங்கி பிரவாகித்தது.

தமிழ் மன்றம் வாழ்க!

என வாழ்த்த வேண்டும் என்ற என் மன ஆழத்தின் பொங்கு தமிழ் உணர்வே! வாழ்த்துக்கு காரணம்.

காரணம் அண்மையில்தான் எனது இணைவு.

ஆனாலும் பற்பல இணையத் தளங்கள் கருத்துப்பரிமாற்றத்துக்கு வழி கொடுத்துள்ளபோதும் தமிழ் மன்றத்தின் பணிப்பாங்கு தனித்துவத்துடன், தனி நபர் முறையற்ற கருத்தாடல்களுக்கு இடம் கொடாதபோக்கும், இணையத்தின் படைப்பபாக்க கர்த்தாக்கள் ஓவ்வொருவரும் கண்ணியமான,நட்பான, இனிதான அணுகுமுறையுடன் தங்கள் கருத்துகக்களை தருவதும், அவர்களின் படைப்புகள் அனைத்தும் புதிய பிறப்பாக்கத்தையும்,வியப்பையும் எனக்குள் ஆழ்த்துகின்றன.

இத் தள தரமான படைப்புகள் அத்தனையும் அச்சுப்பதிவாக வழிவேண்டும் என்பதே என் அவா.
நடந்தால் முதல் மனதாய் மகிழ்வேன்.

மன்றதத்தையும், நிர்வாக மற்றும் ஒருங்காளர்களையும், படைப்பாளரர்களையும், என்னை இத் தளத்துடன் இணைய வைத்த நட்புள்ளத்தையும் வாழ்த்தும் என் மனம்.

வாழ்க மன்றம்!
தமிழ் வாழ,
தமிழ் தேசம் உருவாக
தரணி வாழ் தமிழரே!
ஒன்றாவோம்.

எனது ஆரம்பம் முதல் இக்காலவரையான மன்றத்திலான பதிவுகள்.

"தமிழ்தாசன் இன் மன்றப் பக்கங்கள்" (http://www.tamilmantram.com/vb/search.php?searchid=502109)"

நிரன்
27-12-2008, 05:48 PM
உங்கள் பதிலில் வாழ்வின் ஒரு பகுதியே கவிவடிவில் கண்டேன்.......
காலையில் மன்றத்தில் நான் எனது கையெளுத்தாக பதிந்த
வார்த்தைகள் உங்களுக்கு இது என் மெய்யெழுத்தாக
வலிக்காமல் வாழ்க்கையில்லை வலியேதான் வாழ்வுமில்லை
வாழ்வில் எதையும் நாம் எதிர்பார்ப்பதில்லை எதிர்பார்ப்புகள் சில
வேளைகளில் தோற்றுவிடலாம் அது எதிர்பார்த்தவரிடம் கூட
இருக்கலாம் வாழ்க்கையில் சுருண்டு போகத நிமிடங்கள் அணைத்தும் எமக்கே சொந்தம்....

மன்ற உறவுகள் பற்றியும் கவியில் உணர்ந்தேன் அதில் உங்கள் மனம்
அவர்களை வைத்திருக்கும் நிலை கண்டேன்:)

இனிய இந்த தளத்தில்,
கலையும் கலை சார்ந்த உள்ளங்களும்
அலையும் அலை சார்ந்த எண்ணங்களும்
நிலையில்லா இந்த வாழ்வுதனில் நிலைத்திடுமோ நம் கனவுகள்?

நிலையில்லாதது நம் வாழ்வு மட்டுமே நம் நற் படைப்புக்களுக்கு
என்றுமே உயிருன்டு அவைக்கென தனி அவையுண்டு
நம் தமிழ்மன்றம் அதற்கொரு எடுத்துக்காட்டு...

இத் தள தரமான படைப்புகள் அத்தனையும் அச்சுப்பதிவாக வழிவேண்டும் என்பதே என் அவா.
நடந்தால் முதல் மனதாய் மகிழ்வேன்.

கனவுகளைக்கூட நனவுகளாக்கலாம் நம்மில் அசையா மனவுறுதியிருந்தால்

உங்கள் பதிலை கவிமூலமும் கவி சார்ந்த வரிமூலமும் தாங்கள்
இங்கே தந்தமைக்கு மிக்கநன்றி.. அண்ணா!

நான் எதிர்பார்த்ததை விட அருமையாக உள்ளது உங்கள் பதில்கள்
தொடர்ந்தும் உங்கள் நற்படைப்புகளுக்காக காத்திருக்கிறோம்..

மற்றும் உங்கள் அன்பான மனைவி, பாசமிகு மகளுடன் மேலும்
மேலும் சந்தோசமக வாழ என் வாழ்த்துக்கள்:icon_b:

நன்றி

சிவா.ஜி
28-12-2008, 04:19 AM
தமிழ்தாசனின் அழகு தமிழில், சந்த சிங்காரிப்பில் மன்றம் குறித்தக் கருத்து மனதை மகிழ்விக்கிறது. அழகான பதில் தந்து சந்தோஷிக்கவும், சிந்திக்கவும் வைத்த தமிழ்தாசன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

தமிழ்தாசன்
28-12-2008, 12:49 PM
மிக்க மகிழ்ச்சி அன்பர்கள்
நிரஞ்சன் அவர்களே!
சிவா.ஜி அவர்களே!

நம் வாழ்நாள் காலமதில்
இம் மன்றத்தில் படைப்புக்கள்,
தந்த காலமும் பதிவாகியது.
எனவே தமிழ்மன்றமும் நம் வாழ்வுப்பங்கானது,
இம் மன்றம் வலம் வரும் பலரின் எண்ணலைகள்,
திசைகள் வேறாகினும் ‘தமிழ்‘ அதனால் இணைந்தேன்.
வேறு காரணங்கள் திசைகளைத் திருப்பினாலும் தமிழ் அதனால் தொடர்ந்தேன்.தொடர்கிறேன்,தொடர்வதும் காலத்தின் கைகளில்தான், நம் கைகளிலும்தான்.

நிரன்
28-12-2008, 07:44 PM
__________________________________________________________________________________________

எனது முதலாவது கேள்வி மன்றத்தின் நிர்வாகி அறிஞரிடம்,
தங்களால் இவ் வினாவுக்கு முழுமையான பதிலளிக்க நேரம் இல்லையென்று என்னறிவுக்குத் தெரியும்.
இவ் வினாவிற்கு உங்களால் முடிந்த ஒரு சிறு பதிலைத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

தாங்கள் மன்றத்தின் நிர்வாகி மற்றும் மன்றம் தொடங்கிய போதே மன்றத்திற்கான உங்கள் பணிகளும் ஆரம்பமாகி விட்டன. ஆரம்ப காலத்தில மிகவும் குறைந்தளவே உறுப்பினா்கள் அங்கம்வகித்திருப்பார்கள். அவ் வேளையில் நீங்கள் மன்றத்தினுாடாக எப்படி தமிழை வளா்க்க போகிறேன் என்று ஒரு கனம் யோசித்ததுண்டா? தற்பொழுது மன்றத்திற்கு பல புதிய உருப்பினா்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனா். இது உங்கள் மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கிறதா இல்லை சந்தோசத்துடன் கூடிய சிறிதொரு பயத்தையும் கொடுக்கிறதா?

__________________________________________________________________________________________

மன்ற பொருப்பாளரும் அன்புக்குரிய நண்பருமான நம்ம அமரன் அண்ணாவை இரண்டாவது கேள்வியாளராக அமா்த்தியுள்ளேன்.

நீங்கள் மன்றத்தில் பல போட்டிகளை தலைமை தாங்கி நடத்தியுள்ளீா் இறுதியில் வாக்கெடுப்பு முலாம் வெற்றியாளர் மன்றத்தில் அறிவிக்கப்படும். வாக்கெடுப்பு மூலம் கவிதைகயோ கதைகளையோ தோ்ந்தெடுத்தாலும் உங்கள் மனதிற்கு பிடித்த படைப்பு என்று நீங்கள் கருதியிருப்பீா்கள். நீங்கள் வெற்றி பெரும் என்று நினைத்த கவிதையோ கதையோ 2 அல்லது 3ம் இடத்திற்கு தள்ளப்படுகையில் உங்கள் மனம் அதனை ஈடுகொடுக்குமா? அத்தருனத்தில் உங்கள் மனம் என் நிலையில் இருக்கும்?

மற்றும் ஒரு சந்தேகம் நீங்கள் மன்றத்திற்கு 14000+ பதிவுகளை கொடுத்திருக்கிறீங்க. ஆனால் உங்க இணைவு திகதி 16 Feb 2007,
மேறிகூறிய திகதியிலா நீங்க இணைந்தீங்க? இல்லாட் ஒரு பில்டப்புக்கு அப்படியா?:D

__________________________________________________________________________________________

மூன்றவது கேள்வியை எக் கேள்விக்கும் முகம் சுழிக்கா பதிலளிக்கும் எங்கள் சிவா.ஐி அண்ணாவை அமா்த்துகிறேன்.

தாங்கள் துபாயில் வேலை செய்வதாக அறிந்தேன் அதனால் என்னறிவில் எட்டிய வினாவதை உங்களிடம் வினாவ விரும்புகிறேன்.

நீங்கள் வெள்நாட்டில் பணியாற்றுவதன் மூலம் உங்களுக்கு அந்நாட்டவரின் மூலம் வேலைத்தளத்தில் ஏதாவது கசாப்பான அணுபவங்கள் நிகழ்ந்ததுண்டா? அவ்வேளையில் நீங்கள் தாய்நாட்டை நினைத்து அதனை பெரிதும் இழந்து விட்டோமே என்று என்னிய தருனங்கள் ஏதேனும் உண்டா? இதனால் ஏன் பிறநாட்டவரிற்கு கீழ் நாம் வேலை செய்ய வேண்டும் என்று மனம் பிரிவினை ஏற்படுத்தியதுண்டா?
அப்பிரிவினையை சில (குடும்பம் போன்ற )காரணங்கள் துாக்கி எறிந்ததுண்டா?

__________________________________________________________________________________________

பலதிரிகளிலும் கதை நகைச்சுவையென பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் சக நண்பா் மதுரைமைந்தன் அவா்களை நான்காவதாக வரிசையில் அமா்த்துகிறேன்.

உங்களுடைய விஞ்ஞானக் கதையினை நான் இன்றுதான் படித்தேன் அங்கே தாங்கள் இட்டிருந்த ஒரு கருத்தையும் கவன்த்தேன் அதனை மையமாகக்கொண்டு இக்கேள்வியை தங்களிடம் கேட்க ஆசைப்படுகிறேன்.

நீங்கள் தற்பொளுது மன்றத்திற்கு கதை மற்றும் நகைச்சுவைகள் என்பன வழங்கிக்கொண்டிருக்கிறீா்கள். ஆனால் உங்கள் மனம் எதிர்பார்த்த ஆதரவு அதற்கு கிடைக்கவில்லையென என்னறிவுக்கு எட்டியது. அப்படி உங்கள் மனம் திருப்திப்படா விட்டாலும் மன்றத்திற்கு படைத்துக் கொண்டிருக்கிறீா்கள், நீங்கள் எப்பொளுதேணும் வருந்தியதுண்டா எதிர்பார்த ஆதரவு இல்லையென? எப்பொளுதேனும் சிந்தித்ததுண்டா ஏன் நான் மென்மேலும் படைக்க வேண்டும் என்று?

__________________________________________________________________________________________

ஐந்தாவதாக நம்மக்கா.ஆட்டோ ராணி என்றழைக்கப்படும், லன்டன் தாதாவுமான மிஸ் தமிழ்மன்றம், அக்கா ஓவியாவை அன்புடன் அழைக்கிறேன்.. யக்கோவ் இங்க எங்கயாவது சுத்தினால் இங்கயும் கொஞ்சம் வாங்க.:icon_clap:

தாங்கள் கவிதைப்போட்டியில் 3 தடவைகள் வெற்றியீட்டியதை மையமாகக் கொண்டு இக்கேள்வியை கேட்ட அவாவில் உள்ளேன் மன்றத்தில் சில நாட்களாக எனக்கு எழுந்து கொண்டிருக்கும் ஒரு சந்தேகம்.

நீங்கள் மன்றத்திற்கு அற்புதமாக கவிதைகளைப்படைத்திருக்கிறீா்கள் நிச்சயமாக எந்தவெரு சுழலை மையமாகக் கொண்டும் உங்களால் கவிதையைவடிக்க முடியும், இவ்வளவு திறமையுள்ள நீங்கள் எப்பொளுதேனும் கவிதை எழுத முடியாத சுழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறீங்களா? மனம் வெறுமையான நேரத்தில் கவிதைகளே வராத சந்தா்பங்கள் உண்டா? அப்படியிருந்தால் அதைத்தாருங்கள்.

மற்றும் இப்ப எல்லாம் நீங்க கவிதைப்போட்டில பங்கெடுக்கிறதே இல்லயே ஏன் 3 Awads க்கு மேல Showcase இல் வைக்க அழகில்லை என்றா:D

__________________________________________________________________________________________

அடுத்தாக நம்ம திரியோட ஆசான். மற்றும் எல்லோரையும் சிரிக்க வைக்கும் காமெடியன் என்றுகூட அழைக்கலாம் அதுதாங்க
நம்ம அன்பு வெள்ளம் ராஐா அண்ணா, அண்ணாவை கொம்பட்டபுள் ஆ ஆற்றிற்கு பக்கத்தில் ஆறாக அமா்த்துகிறேன்

உங்கள் படைப்புக்கள் பல நான் பார்த்துச்சிரித்துள்ளேன் அதனால் எனக்கெளுந்த கேள்வி அதை உங்களிடம் கொடுக்கின்றேன்

நீங்கள் எத்தனையோ சிரிப்பு வெடிகளை போட்டிருப்பீங்க அதில் நீங்கள் இப்பொளுது கூட ஒரு கனம் நினைத்தால் வயிறு குலுங்கும் சம்மவங்கள் அல்லது வெடிகள் உண்டா? அப்படி இருந்தால் அதை எங்களுக்கு ஒரு முறை தாருங்கள். உங்கள் சூழல் அல்லது குடும்பத்திலாகவும் இருக்கலாம்.

__________________________________________________________________________________________

ஏழவதாக உலகமெங்கும் அவன் ஒளி எட்டிக்கொண்டிருக்கும் அவனில்லையேல் அகிலமில்லை கிட்டச்சென்றால் பஸ்பம்
இவா் கிட்டச்சென்றால் மனம் தங்கபுஸ்பம்... ஓவா் பில்டப்பை நிப்பாட்டீட்டு ஆதவா என்று மன்றம் அதிரும் படியாக கத்துகின்றேன்:icon_clap:

உங்களுடைய பல கவிதைகள் மற்றும் தற்பொளுது தந்து கொண்டிருக்கும் மார்கழி சம்பந்தானவை படித்துக்கொண்டிருக்கிறேன்
ஆனால் உங்கள் சில கவிதைகளைப்பார்த்தால் எனக்கு ஓன்றுமே புரிவதில்லை. எல்லாம் சுத்த சூனியமாகவே தோன்றுகிறது.
இதையெல்லாம் எங்கயாவது பழைய ஒலைச்சுவட்டில் இருந்து சுட்டீங்களா?:rolleyes: இல்லையெனின் தங்கள் பாட்டனார் யாராவது புலவரா?:D

__________________________________________________________________________________________

எட்டாவதாக கையிலே எட்டாத, கிட்ட நாமென்றும் முட்டாத முட்டும் வேளையில் நம்முயிர் நம்மிலிருக்காது, ஆனால் இவா் அப்படியல்ல பனிமலையில் இருக்கும் அக்னி என்றும் சுகத்தையே தருபவா்.

மன்றத்தில் தற்பொளுது பெரும்பாலும் பழக நோ்ந்தது அதையடுத்து
உங்களிடம் அறுவாய் வெட்டும் வாங்கியதுண்டு
அதனால் ஒரு கேள்வியை வேடிக்கையாக உங்கள்முன் வெட்டுகிறேன்

நீங்கள் ஒரு வானொலி அல்லது தொலைக்காட்சி ஒலிபரப்பு நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறீா்கள் என்று கற்பனையில் முழ்குங்கள். உங்களிம் ஒரு நேயா்விருப்பம் என்றொரு தொல்லை பேசி நிகழ்வொன்றை ஒப்படைத்தால் வீட்டிலிருந்தே
நேயா்களை அறுப்பதற்கு தயராக்ச் செல்வீங்களா? இல்லாட்டி நிகழ்ற்சியிலேயே யோசனை செய்து நேயா்களை அறுப்பீங்களா?:D
உங்களுக்கு அறுக்கும் குறுக்குக் கேள்விகள் மற்றவருடன் பழகிவந்ததா?
இல்லையென்றால் மன்றத்தில ஸ்பெசல் ரெய்னிங்கா?

__________________________________________________________________________________________

ஒன்பதாவதாக உலகம் சுற்றும் வாலிபன் கட்டப் பிரம்மச்சாரி மன்ற மனங்கவா் பதிவாளா் எனக்கும் நெருக்கமானவா். அவரின் படைப்புக்கள் ரசித்தவை பல ருசித்தவை பல நம்ம நாரயணா நாரயணா .... நாரதா்

உங்கள் பெயரை நினைத்த பொளுது இக்கதாப்பாத்திரத்தை நான் உங்களுக்காக யோசித்தேன். நீங்கள் தற்பொளுது உள்ள புனைப்பெயா் கதாபாத்திரமாகவே உங்களை ஆக்கிக் கொண்டு இவ்வினாவுக்கு விடையளியுங்க எஸ்கேப் ஆகிறது என்றெல்லாம் நினைக்க கூடது:D

தற்பொளுது உங்களுக்கு 23 வயது என்றென்னுங்கள் உங்களிடம் ஒரு அழகாக பெண்வந்து நான் உங்களை விரும்புகிறேன் உங்களை மணம்செய்து வாழ்நாளை உங்களுடனே கழிக்க வேண்டுமென்றால்
நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீா்களா? இல்லை என்றால் இக்கதாப்பாத்திரத்தினுாடாக நீங்கள் அப்பெண்னிற்கு நீஙகள் கூறும் அறிவுரை என்ன?

__________________________________________________________________________________________

மன்றத்தில் பல திரிகளுக்கும் புயல் காற்று வீசிக்கொண்டிருக்கிறது, பல இடங்களின் பெயா் அறிய வழிவகுத்தவா், புதிதாக இணைந்தாலும் மன்றத்திற்காக பாடுபட்டுக்கொண்டிருப்பவா் பெரிதும் மற்றவா்கட்கு அறிமுகமில்லாதவா் அவரை இத்த்ரிக்கும் எட்டிப்பார்க்க வைக்கும் நோக்கில் அன்பு அண்ணன் தமி்ழ்தாசன்
அவா்ளை ஆ 10 ன் என் இறுதி ஆட்டத்தில் ஆட வருமாறு அழைக்கிறேன்.

நீங்கள் மன்றத்திற்கு நுழையும் முன்பு அதாவது மன்றத்தை வெளியிலிருந்து பார்க்கும் பொளுது உங்களுக்கு தமிழ் மன்றம் பற்றி ஏற்பட்ட உணா்வு என்ன? மன்றத்தில் தற்பொளுது தாங்கள் பதிவுகள் பதிக்கும் பொளுதும் தங்கள் திரிகள் கொளுந்து விட்டுக்கொண்டிருப்பதையும் தாங்கள் எவ்வாறு கருதுகிறீா்கள்? இதனை ஒரு கவிதையாக வடியுங்களேன்..!
எனக்குத் தெரியும் உங்களால் முடியும் என்று அதனால்தான் இது போன்றெரு வினாவை உங்களிடம் கேட்கிறேன்.

நிரன்
28-12-2008, 07:47 PM
இன்னும் 5 வி்டைகளுக்காக வினாக்கள் காத்திருக்கிறது:mini023:

(அதில எத்தனைபேரோட விடை வருதோ)

தமிழ்தாசன்
28-12-2008, 07:49 PM
வரும்! வரும்!
வெகு விரைவில் பதில்கள் வரும்

தமிழ்தாசன்
31-12-2008, 12:18 PM
இன்னும் 5 வி்டைகளுக்காக வினாக்கள் காத்திருக்கிறது:mini023:

அடுத்து யாருடைய பதில்?

ரங்கராஜன்
03-01-2009, 02:08 AM
என்ன ஆச்சுப்பா, அருமையாக போய் கொண்டு இருந்த திரி இப்படி அனாதையாக நிற்கிறது, எங்க ராஜா அண்ணா, அமரன், கேள்வியை கேட்டவர் மற்றும் பதில் சொல்ல வேண்டியவர்கள். சீக்கிரம் வாங்கப்பா

Mano.G.
03-01-2009, 04:11 AM
மன்ற ஆரம்ப காலங்களில் எனது ஞாபகத்தில்
மன்ற முதல் நிர்வாகி இளவல் இளசு தான் என்று நினைக்கிரேன்.
இளசு ஒவ்வொரு புது அங்கத்தினரின் அறிமுகத்திலும் தனது வரவேற்பு
இருக்கும். தனது விமர்சனங்களாலும் பின்னூட்டங்களாலும் அனைவரையும் கவர்ந்தவர் (பாசத்தாலும்) அதே போல மன்றத்தின் இரண்டாவது நிர்வாகியாக நமது
அன்பு சகோதரர் அறிஞர், இவரும் இளவல் இளசு போல ஒவ்வொரு புது
அறிமுகத்திலும் தமது வரவேற்பு இருக்கும். அதைவிட மன்றம் சற்று தோய்வுறும்போது மீண்டும் உற்சாகமூட்டி தட்டி எழுப்பி விடுவது இவரே.

மன்ற நிர்வாகிகள் என்பதற்கு ஏற்றவர்கள்.

மனோ.ஜி

அமரன்
03-01-2009, 09:10 AM
என்ன ஆச்சுப்பா, அருமையாக போய் கொண்டு இருந்த திரி இப்படி அனாதையாக நிற்கிறது, எங்க ராஜா அண்ணா, அமரன், கேள்வியை கேட்டவர் மற்றும் பதில் சொல்ல வேண்டியவர்கள். சீக்கிரம் வாங்கப்பா

ஓரிரு நாட்கள் அவகாசம் கொடுங்க. பழையபடி களைகட்ட வைப்போம் ராஜா அண்ணாவின் அனைத்து திரிகளையும்.

ரங்கராஜன்
06-01-2009, 04:56 AM
ஓரிரு நாட்கள் அவகாசம் கொடுங்க. பழையபடி களைகட்ட வைப்போம் ராஜா அண்ணாவின் அனைத்து திரிகளையும்.

ஏன் ராஜா அண்ணனுக்கு என்ன ஆச்சு, அவர் வரமாட்டாரா????, ரொம்ப நாள் ஆளை காணலையே!!!!!!!!!!!

நிரன்
20-01-2009, 02:43 PM
சரி அமரன் அண்ணா என்னுடைய கேள்விக்குத்தான் யாரும் பதிலளிக்கவில்லை
தங்களது அரவனைப்புத் திரி துாங்கிக் கொண்டிருக்கிறதே மீண்டும் நண்பர்களை
இங்கே அழைப்போம் புதிய கேள்விக்காக கேள்வியாளரையும் நீங்களே
தெரிவு செய்து விடுங்கள்

arun
02-02-2009, 04:51 PM
உறவுகளே என்ன ஆயிற்று இந்த திரி ?

அமரன்
16-02-2009, 05:57 PM
உறவுகளே என்ன ஆயிற்று இந்த திரி ?

ராஜா அண்ணாவின் வரமின்மையாலும் என் நேரமின்மையாலும் உறங்கிவிட்டது. தொடர்ந்து வரும் பத்து நாட்களுக்கு ஓரளவுக்கு நேரம் கிடைக்கும் என நம்புகிறேன். அதானால திரியை தூண்டி விடலாம்.

ஆ 10 உடன் யார் முன்வருகிறீர்கள்.

நிரன்
16-02-2009, 06:02 PM
ஆ 10 உடன் யார் முன்வருகிறீர்கள்.

மன்றத்தில் அதிகம் முன்னிற்கும் அல்லது அதிகமாக பங்களிக்கும் உறவை நீங்களே அழைக்கலாமே!

மதி
17-02-2009, 01:17 AM
நிரனே சரியானவர்.. :D

அமரன்
17-02-2009, 07:38 AM
நிரன் ஏற்கனவே ஆ10ஐ கொடுத்து விட்டார் மதி.
இப்போ இன்னொரு சூரியனை கூப்பிடுவோம்.
வாருங்கள் ஆருண். தாருங்கள்

மதி
17-02-2009, 07:48 AM
நல்ல தேர்வு..

அமரன்
17-02-2009, 07:51 AM
நல்ல தேர்வு..

ஆத்தா நான் பாசாயிட்டேன்.

நாட்டாமை
17-02-2009, 07:55 AM
ஆத்தா நான் பாசாயிட்டேன்.
அமரு...
பாஸானதுக்கு மிட்டாய் உண்டா....

ஓவியன்
17-02-2009, 08:00 AM
இப்போ இன்னொரு சூரியனை கூப்பிடுவோம்.
வாருங்கள் ஆருண். தாருங்கள்

ஆமா, அது யாருங்க...?? :D:aetsch013::D

ஆத்தா நான் பாசாயிட்டேன்.

ஆஹா, அமரன் சொல்லவேயில்லை...

உங்க ஆத்தாவும் மன்றத்திலே இருக்காங்களா...?? :D:D:D

அமரன்
17-02-2009, 08:04 AM
ஆஹா, அமரன் சொல்லவேயில்லை...

உங்க ஆத்தாவும் மன்றத்திலே இருக்காங்களா...?? :D:D:D

ஹி...ஹி.... ஓராண்டுக்குள்ள இவ்வளவா..
ஆத்தா என்றுதான் சொன்னேன். என்னாத்தா என்று சொல்லலையே.