PDA

View Full Version : ♔. ஆ! 10! ♔. - முதல் சுற்று



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14

ஓவியன்
11-09-2008, 03:24 AM
4) ஓவியன் நீங்கள் விண்வெளிக்கு சென்று கொண்டு இருக்கிறீர்கள். பாதி வழியில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு அழைப்பு வருகிறது உங்கள் தாயாருக்கு ச்கவீனம்( ஒரு கதைக்கு, அப்படி நடக்ககூடாது) உங்களை உடனே பார்த்தால்தான் பிழைக்க முடியும்.உங்களை அழைக்கிறார்கள். உங்கள் பயணத்தை பாதி வழியில் நிறுத்தினால் உங்கள் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படும், நீங்கள் அதிகாரிகல் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டும் என்னும் பல சிக்கல்கள் வரும். என்ன செய்வீர்கள்?

இதில் சிந்திக்க ஒன்றுமேயில்லை சுட்டி...!!

என்னுடைய பணி, பதவி எல்லாம் பணத்துடன் சம்மந்தப் பட்டது...
அது என் உழைப்பால் உருவானவை, மீண்டும் என்னால் உருவாக்க முடியும்....

ஆனால், என் அன்னை...
என்னை உருவாக்கியவரல்லவா அவர், பாசத்துடன் சம்பந்தப்பட்ட ஒப்பற்ற உறவல்வா அவர்...??

இப்படி ஒரு சிக்கல் எப்போது வந்தாலும், என் அன்னையை நோக்கியே என்றும் என் எண்ணமும் செயலும் சிறகடிக்கும்....

ராஜா
11-09-2008, 04:14 AM
சுட்டியின் கேள்வியின் இறுதிப்பகுதியான "என்ன செய்வீர்கள்..?" என்பதற்கு தங்கள் பதில் என்ன தம்பி..?

அமரன்
11-09-2008, 07:45 AM
வினாக்கணை தொடுத்த கெட்டிச் சுட்டிக்கு நன்றி.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நகைச்சுவை நிகழ்ச்சிகளின் தரத்தின் காரணம் ராஜா அண்ணாவின் அனுபவப் பகிர்வால் தெளிவானது.

இளசு அண்ணாவின் மன்றப்பற்று எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் அண்ணா இப்படித்தான் என்பது எனக்கு ஏற்கனவே தெரிந்ததே

அறிஞரே சிறுக அளித்த நறுங்(க்)குணப் பதில்..:icon_b:

ஓவியனின் தாய்ப்பாசம் மெச்சினேன்..

ஓவியா
11-09-2008, 05:08 PM
7) ஓவியா, உங்கள் அம்மா இப்போது உங்கள் முன்னால் தோன்றினால்?

நன்றி சுட்டி.

அம்மா என் தெய்வமே, என் அமுதே, என் கனியே, என் தமிழே (என் தாய் தமிழ் அல்ல) என் அன்பு தாயே, ஆருயிர் அன்னையே என்று தலைவர் ராமசந்திரன் போல் வசனம் பேசி ஓடி கட்டிக்கொண்டு ஆனந்த கண்ணீர் விடுவேன் ஏன்று யாரும் நினைத்தால் ..... அதான் இல்லை.


ப்ரக்டிகலா யோசிப்போமா!!

இப்பொழுது நான் கண்களை மூடிக்கொண்டு உன்மையாக இது நடந்தால் எப்படியிருக்குமென்று யோசித்து.... இதோ எழுதுகிறேன்.


'ஆ அம்மா' ஒ மை ஃகாட் மை லவ்வபல் மம்மி' என்று முதலில் அதிர்ச்சிக்கொள்வேன்.

கடவுளுக்கு நன்றி கூறிக்கொண்டே வாசலுக்கு செல்வேன்

பின் புன்னகையுடன் வாருங்கள் அம்மா. என்று கனிவோடு அழைப்பேன்.

நானும் நெருங்கிச்சென்று இருக கட்டியணைத்து அப்படியே கண்ணைமூடி ஒருகணம் அவரை உணர்வில் பெற்றுக்கொள்வேன்.

பின் ஒரு அன்பு முத்தம் கொடுப்பேன்.

அவர் கொடுக்கும் முத்தத்தை பெற்றுக்கொள்வேன்.

நெஞ்செல்லாம் ஏதோ படபடக்க சுகமா அம்மா, எப்படி இருக்கீங்க? என்று புன்னகைத்தவாறே கேட்பேன்.

நல்லா இருக்கேன். என் கட்டபொம்மனே, ஞானதங்கமே நீ எப்படி இருக்கிறாய் என்று அவர் கேட்க, சுகமென்று சொல்வேன்.

இப்பொழுது மனதில் ஆனந்தம் கரைபுரண்டு ஓட ஒரு துளி கண்ணீர் என் கண்களில் எட்டிப்பார்க்கின்றது.....

அது மெல்ல என் கன்னங்களில் விழுந்து என் கன்னத்தில் நீர்க்கோலம் வரைகிறது.

அப்படியே, என்னை விட ஆழமாக அழும் என் அம்மாவின் கண்களை துடைத்தும் விடுவேன்.

இத்தனை வருடமாக நீங்கள் என்னுடன் உடலால் இல்லை என்பது மட்டுமே உண்மை, எப்பொழுதுமே நீங்கள்தான் எனக்கு முதல் தெய்வம், இது என்றும் அழியாத உண்மை என்று சொல்லி அவரை அமர வைப்பேன்.

23 வருடமாக தாயில்லாமல் நான் வாழ்ந்த துயரத்தை அப்படியே அவர் மடியில் தலை வைத்து சாய்த்து ஒரு நொடியில் மறந்து போவேன்.

வேறு ஒன்றுமே கேட்க தோன்றாமல் மௌனமாய் இருப்பேன்.

என் தாயை மீண்டும் காணவும், அவரை என் கைகளில் தாங்கவும், என்னை பூமியில் சொர்கம் காண செய்த அந்த கடவுளுக்கு நன்றி கூறி................................அப்படியே அவர் மடியில் உயிர் துறப்பேன்.
-
-
-
-
-
-
-
-
-
உயிர் போகவில்லை என்றால்....-
-
-
-
-
-
- இனி என்னுடனே இருக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கிக்கொள்வேன், காலன் எங்களை பிரிக்கும் வரை, அவரை என் கைக்குள் வைத்து தெய்வமாய் பூஜித்து தாங்குவேன்.




***********************************************************************

பின் குறிப்பு:
(என் அம்மா, என் வீரத்தை பாராட்டி கட்டபொம்மன் என்று அழைத்தார் என்று நீங்க நினைத்தால், :D:D அதான் இல்லை, நான் சின்னப்பிள்ளையிலே நல்லா தஞ்ஞாவூர் பொம்மையாட்டம் கொளுமொளுனு இருப்பேனாம், எல்லாரும் கண் வைப்பாங்களாம் அதான், முதலில் செல்லமாக பொம்மை என்று ஆரம்பித்து பின் கட்டபொம்மன் ஆகிவிட்டேன்.... )

தீபன்
12-09-2008, 01:57 AM
கட்டைப் பொண்ணுதான் கட்டப்பொம்மு ஆகிடுச்சோன்னு நெனச்சன் கட்டப்பொம்மி....!

சுட்டிபையன்
12-09-2008, 05:40 AM
மன்னிக்கவும் கடைசி கேள்வி தாமரைக்கு உரியது

ராஜா
12-09-2008, 10:47 AM
உணர்ச்சிகரமான காட்சியொன்றை ஓவியா கண்முன் நிறுத்திவிட்டார். கண்ணை விட்டும், மனதைவிட்டும் அக்காட்சி நீங்க வெகுகாலம் பிடிக்கும்.

தாய் முகம் (புகைப்படத்தில்கூட) கண்டறியாதவன் என்கிற வகையில் என்னால் தங்கையின் தவிப்பை 100 விழுக்காடு உணரமுடிகிறது.

இன்னொரு அதிசய ஒற்றுமைகூட உள்ளது. என் இளைய மகனுக்கு நாங்கள் வைத்திருக்கும் செல்லப்பெயரும் "பொம்மை" தான். சிறுவயதில் அவன் கண் இமைகள் 'பார்பீ' பொம்மை போல இருக்கும்.



அதுசரி... தஞ்ஞாவூர் எங்கேப்பா இருக்கு..?

அமரன்
13-09-2008, 09:30 AM
2) அமரன், எங்கள் ஈழத்து மாவிரர்களுக்கு ஒரு சின்ன கவிதை ஒன்று சொல்லுங்க

என்னைய்யா என்னைய இப்படி மாட்டி விட்டுட்டீர்.. அவர்களைப் பற்றி எழுத என்னால் இயலாது. நீவிர் கேட்டத்துக்கு இணங்க என்னால் இயன்றதை சொல்கிறேன் கவிதையாக..

நீரும் நெருப்பும்
ஒருங்கே அமைந்த
முரண் முட்கள்.

விழிகளை குவித்தாலும்
ஒளிதனை வீசும்
கண்ணின் மணிகள்..

புலியும் கிளியும்
ஒன்றாய் வசிக்கும் வண்ணம்
ஆட்சி செய்யும்
நவீன நளமகாராசர்கள்.

இதமாய் பதமாய்
விதவிதமாய் சமர்சமைத்த
வீர நளபாகர்கர்கள்..

இனமானம் காக்க
தினம் தினம் தீக்குளித்த
நவீன சீதைகள்..

எப்படி சொன்னாலும்
இப்படி சொல்லலாமே என்று
எண்ணவைக்கும்
எண்ணங்களை கடந்தவர்கள்
மாவீரர்கள்..

ராஜா
13-09-2008, 09:35 AM
எப்படி சொன்னாலும்
இப்படி சொல்லலாமே என்று
எண்ணவைக்கும்
எண்ணங்களை கடந்தவர்கள்
மாவீரர்கள்..

:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:

ஓவியா
13-09-2008, 09:39 AM
கட்டைப் பொண்ணுதான் கட்டப்பொம்மு ஆகிடுச்சோன்னு நெனச்சன் கட்டப்பொம்மி....!

;) அம்மா செல்லமா அழைக்கும் பெயர் அது. :D






உணர்ச்சிகரமான காட்சியொன்றை ஓவியா கண்முன் நிறுத்திவிட்டார். கண்ணை விட்டும், மனதைவிட்டும் அக்காட்சி நீங்க வெகுகாலம் பிடிக்கும்.

தாய் முகம் (புகைப்படத்தில்கூட) கண்டறியாதவன் என்கிற வகையில் என்னால் தங்கையின் தவிப்பை 100 விழுக்காடு உணரமுடிகிறது.

இன்னொரு அதிசய ஒற்றுமைகூட உள்ளது. என் இளைய மகனுக்கு நாங்கள் வைத்திருக்கும் செல்லப்பெயரும் "பொம்மை" தான். சிறுவயதில் அவன் கண் இமைகள் 'பார்பீ' பொம்மை போல இருக்கும்.



அதுசரி... தஞ்ஞாவூர் எங்கேப்பா இருக்கு..?


அஹஹஹஹஹ் அது தஞ்ஜாவூர் என்று நினைக்கிறேன். அது உங்க நாட்டில் தான் இருக்காம் பூலோகம் சொல்லுச்சி :D


ஓ உங்களுக்கும் மம்மி கிடையாதா!!


இந்த கேள்வி கேட்ட சுட்டிக்கும் நோ மம்மி, பதில் சொன்ன எனக்கும் நோ மன்மி, திரியின் உரிமையாளர் உங்களுக்கும் நோ மம்மி...... பேசாம 'நோ மம்மி'னு ஒரு சங்கத்தை ஆரம்பிப்போமா!!! (தமாசுக்கு)

ராஜா
13-09-2008, 09:48 AM
இருபத்தைந்தாயிரம் பார்வைகள்..!



அயராது உழைக்கும் என்னவன் அமருக்கும்...


இனிதே துவக்கி வைத்த இளசுவுக்கும்...


அனுமதி அளித்த அறிஞருக்கும்...


முதல் வாழ்த்துகளைத் தெரிவித்ததோடல்லாது, திரியின் வளர்ச்சிக்கு தங்களால் இயன்றதை தயக்கமின்றிச் செய்யும் தம்பிகள் ஓவியன், அக்னிக்கும்..


பங்கேற்ற.. பதிலளித்த... பார்வையிட்ட அனைத்து உறவுகளுக்கும்...


நன்றி.. நன்றி... நன்றி..!!!

ராஜா
13-09-2008, 09:58 AM
;)

இந்த கேள்வி கேட்ட சுட்டிக்கும் நோ மம்மி, பதில் சொன்ன எனக்கும் நோ மன்மி, திரியின் உரிமையாளர் உங்களுக்கும் நோ மம்மி...... பேசாம 'நோ மம்மி'னு ஒரு சங்கத்தை ஆரம்பிப்போமா!!! (தமாசுக்கு)


நோ.... மம்மி..!

(வேண்டாமம்மா..!)

(அதுசரி.. மம்மிதான் இல்லே.. மன்மிகூடவா இல்லே..?)

அமரன்
13-09-2008, 12:47 PM
இருபத்தையாயிரம் பார்வைகள்.. ஈராயிரத்து ஐந்நூறு பதிவுகள்..
நிச்சயமாக சாதனை திரி.
சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றியும் பாராட்டும் வாழ்த்தும்..

ராஜா
14-09-2008, 09:37 AM
மற்றோரும் பதிலளிக்கலாமே..!

poornima
14-09-2008, 09:51 AM
ஆபத்தாந்தவர்களை எல்லாம் ஆபத்தில் சிக்கவைத்து ஆ'பத்து கேள்வியா
என ஆச்சரியப்பட வைத்து இப்போது அசாதாரணமாய் ஆ!பத்து இருபத்தைந்தாயிரம் பதிவுகளை கடந்து கொண்டிருக்கிறது..பாராட்டுகள்..

(பார்ட்டி எதுவும் இல்லையா.. நல்லாயிருங்க :-) )

kavitha
14-09-2008, 10:59 AM
இன்றுதான் இந்தப்பதிவைக் கண்ணுற முடிந்தது சகோதரரே... எனவேதான் இந்தத்தாமத பதில்.
என்னையும் உங்கள் கேள்விப்பட்டியலில் இணைத்துக்கொண்டமைக்கு நன்றி.

9) கவிதா:
நான் மன்றத்தில் படித்தவரை உங்களின் எழுத்துகளுக்கு உணர்ச்சிகள் அதிகம். உங்களின் தமிழ் எழுத்துகளுக்கு முன் மாதிரி யார்?

எனது கவிதைகளைப்பற்றிய உங்களது கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது.நன்றி.
முன்மாதிரி என்று யாரும் இல்லை சகோதரரே. தேசிய கவி. பாரதியின் சீற்றமும்,தைரியமும், தீர்க்கதரிசனமும் எனக்கு மிகப்பிடித்தவை.

உங்களின் கருத்துகள் மற்றவர்களிடம் வித்தியாசம் படும் பொழுது எப்படி உணர்வீர்கள்.
நிச்சயமாக சந்தோசப்படமாட்டேன். ஒருவித அந்நியத்தன்மையை உணர்வேன். என்னால் அவர்களோடு ஒத்துப்போகமுடியாத போது தாமரைஇலைநீராக நிற்பேன்.
என்பிடியில் நியாயம் இருக்கிறதென்றால் அதற்காக தொடர்ந்து போராடுவேன்.... நல்வெற்றி கிட்டும்வரை. :)

kavitha
14-09-2008, 11:05 AM
பூர்ணிமா உங்களின் - இறுதிநாள் கற்பனைக்கவிதை படித்தேன். அருமை. வாழ்த்துகள்.

இளசு
14-09-2008, 11:19 AM
கவீ, நலமா?

சுருக் பதில்களில் பொதிந்த நறுக் கருத்துகளை உள்வாங்கினேன்.

பாராட்டுகள்.

இமாலயச்சாதனை நிகழ்த்தும் அன்பு ராஜா அவர்களுக்கும்
அவருக்குத் துணை நிற்கும் அமரன்,அக்னி,ஓவியனுக்கும்
என் மகிழ்ச்சியான வாழ்த்துகள்!

ராஜா
14-09-2008, 12:10 PM
உங்களின் கருத்துகள் மற்றவர்களிடம் வித்தியாசம் படும் பொழுது எப்படி உணர்வீர்கள்.

நிச்சயமாக சந்தோசப்படமாட்டேன். ஒருவித அந்நியத்தன்மையை உணர்வேன். என்னால் அவர்களோடு ஒத்துப்போகமுடியாத போது தாமரைஇலைநீராக நிற்பேன்.
என்பிடியில் நியாயம் இருக்கிறதென்றால் அதற்காக தொடர்ந்து போராடுவேன்.... நல்வெற்றி கிட்டும்வரை. :)

:icon_b:அதே :icon_b: அதே..!:icon_b:

ஷீ-நிசி
14-09-2008, 12:15 PM
சுட்டியின் கேள்விகள் அதற்கு வந்த பதில்களும் ஒவ்வொன்றும் அருமை!

இந்த திரி 100 பக்கம் தாண்டியதற்கும், 25,000 பார்வைகள் விழுந்தமைக்கும் பாராட்டுக்கள்! நன்றிகள்! வாழ்த்துக்கள்!

சூரியன்
14-09-2008, 02:37 PM
25,000 பார்வைகளை தாண்டி வெற்றி நடை போடுகிறது.
இது இன்னும் அதிகரிக்க வேண்டும்.

lolluvathiyar
15-09-2008, 01:24 PM
25000 பார்வையை ஈர்த்து 2500 பதிவுகள் கடந்து 100 பக்கம் தான்டிய இந்த திரி உன்மையில் சரியான சாதனை செய்திருகிறது. திரி ஆரம்பித்த ராஜாவும் அதை திறம்பட நடத்திய மற்றவர்களுக்கு பாராட்டுகள்

அறிஞர்
15-09-2008, 01:42 PM
25000 பார்வை கொண்ட பதிவுக்கு வாழ்த்துக்கள்..

ஆரம்பித்த ராஜாவுக்கு வாழ்த்துக்கள் பல..

கலந்துக்கொண்ட உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்...

mgandhi
15-09-2008, 06:01 PM
ராஜாவுக்கு வாழ்த்துக்கள்

கலந்துக்கொண்டவர்களுக்கு பாராட்டுகள்

அமரன்
15-09-2008, 06:24 PM
அடுத்த கணையாளரை அழைக்கும் நேரம் நெருங்கி விட்டது என்று எண்ணுகிறேன். அதற்கான முயற்சிகளை தொடங்குகிறேன்.

ராஜா
16-09-2008, 05:35 AM
அடுத்த கணையாளரை அழைக்கும் நேரம் நெருங்கி விட்டது என்று எண்ணுகிறேன். அதற்கான முயற்சிகளை தொடங்குகிறேன்.

:icon_b::icon_b::icon_b:

அதுதான் அமர்..!

பாராட்டு மழையில் நனைந்தாலும் கடமையை மறவாமல் கண்ணும் கருத்துமாக நிறைவேற்ற முன்னிற்பவர் என் அமர்..!

நீங்கள் இத்திரியின் பெரும்பேறு..!

அன்புரசிகன்
18-09-2008, 09:17 AM
5) அன்பு, நீங்கள் ஒரு புதிய கணனி இயங்கு மென்பொருள் தொகுப்பை உர்ய்வாக்குகிறீர்கள். அதில் மிக முக்கிய என்று நீங்கள் இணைக்கும் முக்கிய வசதி எது? ஏன்? அதற்க்கு என்ன பெயர் வைப்பீர்கள்? ஏன்?


இந்த கேள்விக்கான பதிலை தர பிரவீனை அழைக்கிறேன். சுட்டி மற்றும் ராஜா அவர்கள் சம்மதித்தால்.........

வேலைப்பளு - அறியாமை யால் இதற்கு பதில் தர முடியவில்லை. மன்னியுங்கள்.

praveen
18-09-2008, 12:30 PM
இந்த கேள்விக்கான பதிலை தர பிரவீனை அழைக்கிறேன். சுட்டி மற்றும் ராஜா அவர்கள் சம்மதித்தால்.........

வேலைப்பளு - அறியாமை யால் இதற்கு பதில் தர முடியவில்லை. மன்னியுங்கள்.

இதோ அன்பு சார்பில் நான் பதில் தருகிறேன். பிழை இருப்பின் பொறுத்தருள்க.


5) அன்பு, நீங்கள் ஒரு புதிய கணனி இயங்கு மென்பொருள் தொகுப்பை உர்ய்வாக்குகிறீர்கள். அதில் மிக முக்கிய என்று நீங்கள் இணைக்கும் முக்கிய வசதி எது? ஏன்? அதற்க்கு என்ன பெயர் வைப்பீர்கள்? ஏன்?

இந்தக்கேள்வி தானே,

சரியான படி முதலில் கேள்வியை மாற்றி பின் பதில் தருகிறேன்

5) அன்பு, நீங்கள் ஒரு புதிய கணினி இயங்கு மென்பொருள் (operating System) தொகுப்பை உருவாக்குகிறீர்கள். அதில் மிக முக்கியம் என்று நீங்கள் இணைக்கும் முக்கிய வசதி எது? ஏன்? அதற்க்கு என்ன பெயர் வைப்பீர்கள்? ஏன்?


வன்பொருள்களையும் மென்பொருள்களை இனைக்கும் கெர்னல் எனப்படும் இயங்குநிரலே அந்த முக்கிய வசதி, இதில்லாமல் வண்பொருட்களை மென்பொருட்களுடன் ஒத்திசைவாக்கவோ வேலை செய்ய வைக்கவோ இயலாது, இது அவசியமான ஒன்று என்பதால் இதில்லாமல் இயங்குதளம் நிறைவு பெறாது. நான் அப்படி ஒரு மென்பொருள் செய்தால் அந்த கர்னல் என்பதற்கு பதில் அறிஞர் என்ற பெயரே வைப்பேன். ஏனென்றால் அவர்தான் இங்கே தமிழ்மன்றத்தையும் நம்மையும் ஒருங்கினைத்து நடாத்தி செல்கிறார்.


மற்றும் ஒரு பதில்
கற்பனையான பதில். இதுவரை இல்லாத இனைக்கும் வசதி என்றால் (வயர் நெட்வொர்க், வயர்லெஸ் நெட்வொர்க் என வந்து விட்டது) மனத்தின் படி கம்ப்யூட்ட்ரை கட்டுப்படுத்தும்/இனைக்கும் வசதி. இதன் மூலம் கம்ப்யூட்டரை நாம் தொடமலே நமது எண்ண அலைகள் படி இயக்க மற்றும் தகவல் பரிமாறி கொள்ள செய்யலாம்.

அதற்கு எண்ண அலையகம் என்று பெயர் சூட்டலாம்.

தீபன்
18-09-2008, 02:08 PM
பிரவீன், உங்கள் கற்பனைப்பதில்கூட சாத்தியமானதே. எதுக்கும் முற்கூட்டியே உங்கள் திட்டத்தை பதிவு செய்து வைத்துவிடுங்கள்.

ராஜா
20-09-2008, 08:07 AM
சில்வர் ஜூப்ளி (25) ஆயிரம் பார்வைகள் காணும் திரிக்கு புதிய கேள்வியாளராக இளம் அறிஞர் ஷிப்லி அவர்களை அமர் அனுமதியுடன் அறிவிக்கிறேன்..

வாங்க ஷிப்லி வாங்க..!

shibly591
20-09-2008, 11:31 AM
நன்றி ராஜா அண்ணா.............

வினாக்களை நாளை கேட்கிறேன்..

கொஞ்சம் கால அவகாசம் தேவை....

அமரன்
20-09-2008, 08:51 PM
நாளை என்னும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கேன் திருநாளைத்தருவார் என்ற நம்பிக்கையுடன்.

shibly591
21-09-2008, 12:01 AM
இதோ எனது ஆ-பத்து திரிக்கான வினாக்கள்....

01)ஓவியா

நீங்கள் ஒரு நல்ல கவிஞர்.மன்றத்தில் உங்கள் கவிதைகளுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.உண்மையில் ஒரு கவிதையில் இரண்டு பெரும் விடயங்கள் அதிகம் தாக்கம் செலுத்துகின்றன.ஒன்று அனுபவம்.மற்றயது கற்பனை.வெறும் கற்பனை யதாரத்தமான படைப்பாய் அமையாது.அதே போன்று வெறும் அனுபவத்தை எழுதும்போது கவித்துவத்திலிருந்து அது நழுவிவிடும்.இதைப்பற்றிய உங்கள் கருத்து என்னவென்று அறிய வேண்டுகிறேன்

02)அமரன்

வணக்கம் அமரன்.உங்களிடம் மனிதம் சம்பந்தமாய் ஒரு கேள்வி.மனிதர்கள் மீதான உறவுகள் இன்றைய அவசர உலகில் வலுவிழந்து வருவது கண்கூடு.இதையெல்லாம் தாண்டி உறவுகளையெல்லாம் பலப்படுத்தஎத்தகைய நடவடிக்கைகளை கையாள முடியும்?இன்னும் சில காலத்தின் பின் இப்போதிருக்கும் கொஞ்ச நஞ்ச உறவுகளும் இல்லாதொழிந்து விடுமா?

03)விராடன்

வணக்கம் விராடன் அண்ணா..உங்களிடம் காதல் சம்பந்தமான ஒரு கேள்வி.இன்றைய நவ நாகரிக காதல் ஜோடிகள் காதல் என்ற பெயரில் நிறைய தவறுகள் இழைக்கிறார்கள்.உண்மையில் பெற்றோர்களின் தவறான வளர்ப்பா ?அல்லது அமையும் நண்பர்களின் தவறான வழிகாட்டல்களா இதில் அதிகளவு தாக்கம் செலுத்துகிறது.

04)உதயசூரியன்

வணக்கம் உதயசூரியன்.வாழ்க்கையில் உங்களை அதிகம் பாதித்த நபர் ஒருவரையும் அவர் சார்ந்த மறக்க முடியாத சம்பவம் ஒன்றையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்

05)பூர்ணிமா

வணக்கம்.;.தற்போது நூல்களின் வருகை அதிகரித்த வண்ணமே உள்ளது.இது ஒரு புறம் வரவேற்கப்படவேண்டியதே.என்றாலும் காத்திரமான நூல்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.இதற்கு என்;ன காரணம் என்று நீங்கள் கருதுகிறீல்கள் ?

06)முகிலன்

தங்களைக்கவர்ந்த விஞ்ஞானி யார்?காரணம் என்ன?தமிழில் விஞ்ஞான ரீதியிலான நூல்கள் கணிசமாக வெளிவருகின்றதா?இல்லையெனில் உங்கள் பார்வையில் என்ன காரணமாக இருக்கும்?

07)குளிர்தழல்
மன்றத்தின் புதிய கவிஞர் நீங்கள்.வாழ்த்துக்கள்
.உங்களைக்கவர்ந்த பாடல்கள் பத்தை எங்களிடம் பகிர முடியுமா?

08)லோஜினி

நீங்கள் ஒரு சட்டத்துறை மாணவி என அறிகிறேன்.உண்மையில் சட்டங்கள் எவ்வளவு இறுக்கமாக இருந்தாலும் குற்றச்செயல்களின் எண்ணிக்கையில் குறைவேயில்லையே..இதைப்பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

09)சிவா.ஜி

வணிகப்பத்திரிகைகளில் வரும் பெரும்பாலான சிறுகதைகள்
மிக மோசமாக இருக்கின்றன. அதற்கென ஒரு வாசகர் கூட்டம் இருக்கிறதா?
இல்லை ஆழமாகப் படிக்காதவர்களை அந்தக் கூட்டத்தில் சேர்த்துவிட்டார்களா?

10)சுவேதா

வணக்கம்.இன்றைய நாளில் பெண்ணியம் சார்ந்த படைப்புக்கள் அதிகரித்த வண்ணமேயுள்ளது.ஆண்களும் இத்தகைய பெண்ணியம் சார்ந்த படைப்புகடகளை எழுதத்தொடங்கிவிட்டார்கள்.இதை வரவேற்க முடியுமா?அல்லது பெண்களின் பிரச்சினைகளை பெண்கள் மட்டுமே பேச வேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீரா?

ஓவியா
21-09-2008, 12:11 AM
ஷிப்லி, உங்களுடையை ஒரு கேள்விய படித்து நான் அதிகாலை 1 மணிக்கு விழுந்து விழுந்து சிரித்தேன்.

ஏன் தெரியுமா??

நீங்கள் உதயசூரியன் அண்ணனிடம் கேட்ட கேள்விக்கு அவர் 'ரஜினி' என்று தான் பதில் சொல்லுவார் என்று யோசனையில் பதில் வந்தது!!!! :D:D:D:D

(உதயசூரியன் அண்ணா, என்னை மன்னிக்கவும். மனம் கேளாமல் மனதில் வந்ததை சொல்லி விட்டேன்)

*************************************************************************

மதுரையண்ணா ஆஸ்ட்ரேலியா சென்றுள்ளார்.

சுனித் விடுப்பில் சென்றுள்ளார்.


(என்று நினைக்கிறேன்)

shibly591
21-09-2008, 12:18 AM
நன்றி ஓவியா...

அதிகாலை 1 மணிக்கு அநியாயத்துக்கு உங்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்து விட்டேனே..மன்னியுங்க...

அது சரி...எலலோரும் விழுந்து விழுந்து சிரிக்கிற என்று சொல்றாங்களே....உண்மையில் விழமால்தானே சிரிக்கிறம்...(முறைத்து பார்ப்பது புரிகிறது...)

shibly591
21-09-2008, 12:32 AM
நன்றி ஓவியா....

சுனைத்தின் வினாவுக்கு நீங்களே பதிலளியுங்கள்.அந்த வினா உங்கள் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதேபோல மதுரைவீரனுக்கான வினாவை முகிலனுக்கு மாற்றுகிறேன்

நன்றிகள்

சுவேதா
21-09-2008, 03:14 AM
இன்றைய நாளில் பெண்ணியம் சார்ந்த படைப்புக்கள் அதிகரித்த வண்ணமேயுள்ளது.ஆண்களும் இத்தகைய பெண்ணியம் சார்ந்த படைப்புகடகளை எழுதத்தொடங்கிவிட்டார்கள்.இதை வரவேற்க முடியுமா?அல்லது பெண்களின் பிரச்சினைகளை பெண்கள் மட்டுமே பேச வேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீரா?

நிச்சயமாக வரவேற்க முடியும் பெண்களின் பிரச்சனைகளை பெண்களே பேசுவதை விட ஆண்களும் சேர்ந்து பேசலாம் பேசினால்
பல பிரச்சனைகள் தீர வாய்ப்பு உள்ளது அத்துடன் ஆண்கள் என்ன எண்ணுகின்றார்கள் என்று பெண்களாலும் இலகுவில் புரிந்து கொள்ளலாம் மற்றும் பெண்கள் என்ன எண்ணுகின்றார்கள் என்பதையும் ஆண்கள் புரிந்து கொள்ளலாம் இது மிகவும் வரவேற்க கூடிய கூற்றாக நான் கருதுகின்றேன்.

shibly591
21-09-2008, 03:23 AM
நன்றி சுவேதா...

ஆண்கள் தரப்பிலிருந்து இதுபோன்ற கவிதைகள் வரும்போது சிலவேளைகளில் ஆதிக்க மனப்பான்மை மேலோங்க வாய்ப்பிருக்கிறதே.மேலும் கவிதையின் உள்ளார்ந்தம் சிலவேளை பிழைத்துப்போகவும் வாய்ப்புள்ளதாக பல பெண்கள் கருத்துச்சொல்கிறார்கள் இல்லையா..?

உங்கள் கருத்தை நான் வழிமொழிகிறேன்..ஆனால் எல்லாப்பெண் படைப்பாளிகளும் பெண்ணியமே பேசிக்கொண்டிருப்பது ஒரு கட்டத்தில் அலுத்துப்போகக்கூடிய அபாயம் இருக்கிறது என்பதை ஏற்க முடியுமா?

விகடன்
21-09-2008, 06:39 AM
ஷிப்லி, உங்களுடையை ஒரு கேள்விய படித்து நான் அதிகாலை 1 மணிக்கு விழுந்து விழுந்து சிரித்தேன்.



பலமாக அடி கிடி ஒன்றும் படவில்லையே....
விழுப்புண், உரஞ்சல் ஏதும்.....

shibly591
21-09-2008, 07:47 AM
விராடன் அண்ணா...

உங்களிடம் ஒரு கேள்வி கேட்டிருக்கிறானே...அதற்கு பதிலளிக்க தயாராகுங்கள்..

காதலைப்பற்றி அது ஏனோ தெரியவில்லை உங்களிடம் தான் கேட்கத்தோன்றியது

poornima
21-09-2008, 08:37 AM
05)பூர்ணிமா

வணக்கம்.;.தற்போது நூல்களின் வருகை அதிகரித்த வண்ணமே உள்ளது.இது ஒரு புறம் வரவேற்கப்படவேண்டியதே.என்றாலும் காத்திரமான நூல்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.இதற்கு என்;ன காரணம் என்று நீங்கள் கருதுகிறீல்கள் ?



கேள்வி கேட்க அழைத்தமைக்கு முதற்கண் நன்றி ஷீப்லி..

வாசிப்பு பற்றிய ஆர்வம் இப்போது நிறைய தழைத்தோங்கி வந்து கொண்டிருக்கிறது. இணையத்தில் வலைப்பூக்களின் பட்டியலில் தமிழ் பெரும்பான்மையும் - வருடந்தோறும் நடக்கும் புத்தகக் கண்காட்சி
வருடாவருடம் முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருப்பதும் சிறந்த உதாரணங்களாக காட்ட முடியும்.

வாசிப்பு அடுத்த கட்ட நிலையில் தீவிரமாய் எழுதத் தோன்றுகிறபோது நீங்கள் குறிப்பிட்ட படியான விபத்துகள் தொடங்குகிறது. எழுதுவோர் வசதியான ஆளாக இருந்துவிடின் அவரே பதிப்பகத்தில் பிரசுரமும் செய்து எவராவது கொஞ்சமே கொஞ்சம் பிரபலமானவரிடம் முன்னுரை அணிந்துரை இதெல்லாம் வாங்கி எங்கேனும் இடம்பிடித்து விழா நடத்தி வெளியிட்டு விடுகிறார்கள்.இது சமீபத்தில் தொற்று நோய்போல்
அதிகமாகி கொண்டிருக்கிறது.

காத்திரமான நூல்கள் அதிகம் இல்லை என்பது ஒரு குறிப்பிடத் தகுந்த குறையே.. ஆனால் நவீன எழுத்தாளர்கள் ஓரளவு இதை நிவர்த்தி செய்து வருகிறார்கள். எஸ்.ரா,ஜெயமோகன்,நாஞ்சில் நாடன் தொடங்கி இன்னபிற எழுத்தாளார்கள் இவ்வகையான முயற்சிக்கு வித்திட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கவனிக்கத் தக்க கவலை ஒன்றும் உண்டு. நீண்ட நெடிய கருத்தாழமுள்ள காத்திரமான நாவல்களை எழுதிய பெரும் எழுத்தாளர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த தளத்தைவிட்டு நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.அல்லது முன்னைப் போல் இல்லை.

மகிழ்ச்சிக்குரிய விஷயம் ஒன்றும் உண்டு. அது எழுத்தாளர்களைக் கொண்டாடும் விஷயம்.இதை ஏனோ நம் சமூகம் செய்ததேயில்லை.வண்ணத்திரை சிற்பிக்கு சமூகம் தரும் அலப்பறையும் பெருவிழாவும் அதே தாக்கத்தை எழுத்தில் வடிக்கும் படைப்பாளிக்கு பெரிதாய் தந்ததேயில்லை.அது இப்போது மாறியிருக்கிறது.எழுத்தாளர்களும் கவனிக்கப்படுகிறார்கள். எழுத்தாளர்களும் கண்டுகொள்ளப்படுகிறார்கள்.இது ஆரோக்கியமான விஷயம்.

வாழ்நாள் முழுக்க கனமான விஷயங்களையும் எளிதாகத் தந்ததாலேயே சுஜாதா லைட் ரீடிங் ரைட்டர் எனவும் அடையாளப்படுத்தப்பட்டார்.காத்திரமான விஷயங்கள் அவர் எழுதவில்லையா என்ன?

ஜெயகாந்தன்,ஜானகிராமன்,அகிலன்,அசோகமித்திரன் காலகட்டத்திய நாவல்கள் காத்திரமாய் இருந்ததற்கு அப்போதைய சமூக பின்னணியும் ஒரு முக்கிய காரணியாக இருந்திருக்க கூடும்.இப்போது அது இல்லையோ என்னவோ..

shibly591
21-09-2008, 08:49 AM
நன்றி பூர்ணிமா..

தெளிவான உங்கள் பதிலில் நிறைய தெரிந்து கொண்டேன்..

நன்றிகள் மீண்டும் மீண்டும்

இளசு
21-09-2008, 08:54 AM
தூண்டில் கேள்விகளை வீசிய ஷிப்லிக்கு[ பாராட்டுகள்..

புரிந்துணர்வை வளர்க்கச் சொல்லும் சுவேதா பதில் - நன்று!

பூர்ணிமா, உங்கள் பதிலை இருமுறை வாசித்து உள்வாங்கினேன். நன்றி!
உங்கள் ஊடுருவும் தெளிந்த பார்வை மூலம் விளக்கங்கள் சில கிடைத்தன.

ராஜா
21-09-2008, 12:56 PM
நன்றி ஷிப்லி..!

கொக்கிகளின் வீச்சு பரவலான சுற்றளவுக்கு (இதுவரை சிக்காத சில மீன்களை குறிவைத்து) வீசப்பட்டிருப்பது கண்டு மிக மகிழ்ச்சி.

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து, சரியான உறவுகளிடம் பொருத்தமான வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. (உ-ம்; அமர்).

மீண்டும் நன்றி.

சுவேதா
21-09-2008, 01:33 PM
நன்றி சுவேதா...

ஆண்கள் தரப்பிலிருந்து இதுபோன்ற கவிதைகள் வரும்போது சிலவேளைகளில் ஆதிக்க மனப்பான்மை மேலோங்க வாய்ப்பிருக்கிறதே.மேலும் கவிதையின் உள்ளார்ந்தம் சிலவேளை பிழைத்துப்போகவும் வாய்ப்புள்ளதாக பல பெண்கள் கருத்துச்சொல்கிறார்கள் இல்லையா..?

உங்கள் கருத்தை நான் வழிமொழிகிறேன்..ஆனால் எல்லாப்பெண் படைப்பாளிகளும் பெண்ணியமே பேசிக்கொண்டிருப்பது ஒரு கட்டத்தில் அலுத்துப்போகக்கூடிய அபாயம் இருக்கிறது என்பதை ஏற்க முடியுமா?

கவிதையின் உள்ளார்ந்தம் பிழைத்துப் போனால் என்ன பெண்கள் எழுதும் போது கூட தவறு ஏற்படாதா என்ன?

எல்லாப்பெண் படைப்பாளிகளும் பெண்ணியமே பேசிக்கொண்டிருப்பது ஒரு கட்டத்தில் அலுத்துப்போகக்கூடிய அபாயம் வராது ஏனெனில் காலம் செல்ல செல்ல ஒவ்வொன்றும் மாறிக்கொண்டே போகின்றது ஆகையால் அவர்களும் மாற்றக் கூடும்..

shibly591
22-09-2008, 06:52 AM
நன்றி சுவேதா....

தெளிவான விளக்கங்களை அள்ளித்தெளித்தீர்கள்..

சரியான ஒருவரிடம்தான் அந்தக்கேள்வியை நான் கேட்டிருக்கிறேன் என்ற ஆத்ம திருப்தி எனக்குள்....

தொடர்ந்து சிறப்பான பதிவுகள் தர வாழ்த்துக்கள்.

உதயசூரியன்
22-09-2008, 08:24 AM
04)உதயசூரியன்

வணக்கம் உதயசூரியன்.வாழ்க்கையில் உங்களை அதிகம் பாதித்த நபர் ஒருவரையும் அவர் சார்ந்த மறக்க முடியாத சம்பவம் ஒன்றையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்


திடீரென்று கேள்வியை கேட்டு புட்டிங்க..
முதற்கன் நன்றி ஷிப்லி அவர்களே..
ஓவியாவின் கிண்டலும் நியாயம் தான்.. அந்த வரிசையில் நிறைய பேர் வருவார்கள் ஓவியா..

உங்கள் கேள்வியில்.. அதிகம் பாதித்த ஒருவர் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்..
என்னை பொருத்த வரை.. ஒவ்வொரு விஷயங்களிலும் அதிகம் பாதித்தவர்கள்.. நிறைய பேர்கள்..
அதில் கலைஞர், ஸ்டாலின் என்று அரசியல் பாதிப்புகள் தான் என்றிருந்தாலும்.. அதையும் தாண்டி விதைகளை விதைத்த.. எனது தந்தை மிக பெரிய முக்கியமானவர், அதே போல் எனது 11 மற்றும் 12 ம்வகுப்பு தொழிற்கல்வி ஆசிரியர்..
இவ்விருவரும் தான்.. என்னை.. என் கொள்கைகளை நானே முடிவு செய்ய..
சமுதாயத்துக்கு நல்ல கருத்துக்களை மட்டும் கூறி எடுத்து சொல்ல, பகுத்தறிவு மற்றும் நல்ல ஒரு தலைவரை.. உள்வாங்க காரணமானவர்கள்..

என் தந்தைக்கும், எனது ஆசிரியருக்கும்.. எனது நன்றிகளை இன்னேரத்தில் செலுத்துகிறேன்..
மேலும் பல விஷயங்களில்.. குடும்ப விஷயங்களில் பலரும் பல தருணங்களில் என்னை பாதித்தவர்கள்..


நிறைய விஷயங்களை இங்கே என்னால் சொல்ல முடியும்.. இருந்தாலும் ஒரு கசப்பான ஒரு விஷயம் இங்கே சொல்ல விழைகிறேன்..
எனக்கு ரோல் மாடலாக இருந்த என் தந்தை.. பகுத்தறிவு, தொழிலாளர்கள் பிரச்சினை என்று பல விஷயங்களை சொல்லி தந்த எனது தந்தை..
அவரை விட நான் தீவிர கொள்கையாக இருந்ததை கிண்டல் செய்த போதும்..
எனது தம்பி திருமணத்தின் போது பெண் வீட்டிற்கு நேரிடையாக வரதட்சினையாக பணம் கேட்டதும் அதை நான் மட்டும் எதிர்த்ததும்.. மிக பெரிய பாதிப்பு.. எனது தம்பி.. என்னை விட அதிகம் சம்பளம் வாங்குபவர்..
எனது தம்பியிடம் அப்பா வரதட்சினை கேட்டதை சொன்ன போது.. அவனும் அதை ஆமோதித்து சொன்ன பதில்.. இன்றைய இளைஞர்கள் எங்கே சென்று கொன்டிருக்கிறார்கள் என்பதை எனக்கு உணர்த்தியது..
அன்று.. எனது தந்தை எனது தந்தை மேலும் பெண் வீட்டாரிடம் நிறைய டிமான்டும்.. பணத்தை பங்கு சந்தையில் போட போவதாகவும் சொன்னார்.. யாரும் பேசமுடியாது என் தந்தையிடம்..
அப்படி ஒரு மரியாதையானவர்..
ஆனாலும் என்னால் அவரின் அந்த தவறை பொறுத்து கொள்ள இயலாமல்.. அப்பொழுதே.. எனது எதிர்ப்பை சொல்லி ஒதுங்கி கொண்டேன்..
அதன் காரனமாக.. இன்றும் என்னை எனது தம்பியும் எனது தந்தையும்.. ஒதுக்கி வைத்துள்ளனர்..

என்னால் சாதாரனமாக எடுத்துகொள்ள முடியவைல்லை.. அந்த சம்பவத்தை..

ரணம் இன்னும் உண்டு.. ஆனாலும்.. வலிய பெற்றோரிடம் பேசி கொன்டு தானிருக்கிறேன்..

இது பல பாதிப்பு நிகழ்ச்சிகளில் ஒன்று தான்..
நன்றி

வாழ்க தமிழ்

சிவா.ஜி
22-09-2008, 08:46 AM
09)சிவா.ஜி

வணிகப்பத்திரிகைகளில் வரும் பெரும்பாலான சிறுகதைகள்
மிக மோசமாக இருக்கின்றன. அதற்கென ஒரு வாசகர் கூட்டம் இருக்கிறதா?
இல்லை ஆழமாகப் படிக்காதவர்களை அந்தக் கூட்டத்தில் சேர்த்துவிட்டார்களா?

*******______________________________________

வணிகப் பத்திரிக்கை என்பது ஆழமான படிப்பாளிகளுக்காக பிரசுரிக்கப்படுவதில்லை. அவசரயுகத்தில் வேகமாய் இயங்கும் பலருக்கும் ஆழ்ந்து வாசித்து, கருத்தை உள்வாங்கிக்கொள்ளுமளவுக்கு நேரமிருப்பதில்லை.

அதனாலேயே சிறுகதைகளும் ஆழமான கருத்துக்களைக் கொன்டு வருவதில்லை. அந்த நேரத்துக்குப் படித்து சிறிய புன்முறுவலையோ, லேசான திரில்லையோ, சின்னதான சஸ்பென்ஸையோ அடைய வைப்பதில் மட்டுமே அந்த சிறுகதைகளின் பங்கு உள்ளது. வாசிக்கும் வாசகர்களும் அதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.

நல்ல தரமான கதைகளை வாசிக்க விரும்புபவர்கள் இலக்கியப்பத்திரிக்கைகளில் வரும் கதைகளைப் படித்து திருப்தியடைந்துகொள்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இணையதளங்களில் வரும் பல கதைகள் மிக மிக நல்ல தரமுள்ளதாய் இருக்கின்றன. குறிப்பாக ஈழத்தமிழர்களின் கதைகள் நெஞ்சைத் தொடுகின்றன. அன்பு ரசிகனின் புல்லட் கோதுகள் அப்படிப்பட்ட தரம்வாய்ந்த கதை.

வணிகரீதியான பத்திரிக்கைகளில் சற்றுத் தரமான சிறுகதைகள் என்றால் தற்போது ஆனந்தவிகடனிலும், கல்கியிலும் மாத்திரமே வருகின்றன. குமுதம் செய்யும் இலக்கியக் கொலைக்கு பிராயச்சித்தமாக தீராநதி என்ற பத்திரிக்கையை வெளியிடுகிறார்கள்(இன்னமும் வெளிவருகிறதா தெரியவில்லை)

நீங்கள் சொல்வதைப்போல வணிகப் பத்திரிக்கைகள் தங்கள் வாசகர்களையும் அதற்கேற்றார்போலத்தான் கொண்டிருக்கின்றன.

தங்கள் கேள்வியில் என்னையும் இணைத்துக்கொண்டதற்கு நன்றி ஷிப்லி.

ராஜா
22-09-2008, 11:45 AM
உதயசூரியனின் நெஞ்சுரம் மிக்க பதில், திரி ஆசிரியன் என்றமுறையில் என்னைப் பெருமைகொள்ளச் செய்திருக்கிறது. எவ்வித இடர்வரினும், எதிர் நிற்பவர் தந்தையே என்றாலும் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்கும் உதயா, பாசத்தையும் விட்டுக்கொடுக்கவில்லை. அரிய பல நல்ல குணாதிசயங்களின் தொகுப்பாகத் தெரிகிறார் உதயா.

வாழ்த்துகள்..!


சிவாஜியின் பத்திரிகைத் திறனாய்வு கச்சிதம்..!

நன்றி நண்பர்களே..!

அமரன்
22-09-2008, 01:04 PM
பல்துறைசார் வினாக்கொத்து. தேவையான விடயங்களை உள்ளடக்கியுள்ளது. மனமார்ந்த பாராட்டுகள் ஷிப்லி.
தேவையான அளவு சொற்களுடன் தெளிவாகச் சொன்ன பதில்கள் ஒவ்வொன்றும் சிந்தையை விட்ட அகலாதிருக்க வேண்டியன. அனைத்து பதிலாளர்களும் பாராட்டுக்கள்.
எனக்குரிய கேள்விக்கான விடையுடன் விரைவில் வருகின்றேன்.

ராஜா
23-09-2008, 04:23 AM
வாங்க... வாங்க..!

அமரன்
23-09-2008, 09:38 AM
02)அமரன்


வணக்கம் அமரன்.உங்களிடம் மனிதம் சம்பந்தமாய் ஒரு கேள்வி.மனிதர்கள் மீதான உறவுகள் இன்றைய அவசர உலகில் வலுவிழந்து வருவது கண்கூடு.இதையெல்லாம் தாண்டி உறவுகளையெல்லாம் பலப்படுத்தஎத்தகைய நடவடிக்கைகளை கையாள முடியும்?இன்னும் சில காலத்தின் பின் இப்போதிருக்கும் கொஞ்ச நஞ்ச உறவுகளும் இல்லாதொழிந்து விடுமா?
ராஜா அண்ணா எதை வைத்து எனக்குப் பொருத்தமான கேள்வி என்றாரோ தெரியவில்லை.. அதை இவ்வாறு பொருத்திக் கொள்ளலாம். வாழையடி வாழையாக வரும் எமது வம்ச பரம்பரையில் என் அடிக்கு நான் தலைமகன். புலம்பெயர்ந்து மாறுபட்ட சூழலில் வசித்து வரும் என்னடியினரை ஒரு குடையின் கீழ் கொண்டுவரவேண்டியது எனது தலையாய கடமை. அதை ஓரளவுக்கு சிறப்பாக செய்து வருகின்றேன். அந்தக் குடையின் கீழான ஆட்சிமொழி தமிழ். தமிழ் மீது எனக்கு பற்று ஏற்பட இந்த சுயநலமும் ஒரு காரணம். இராச்சியத்தின் இராணுவம் உறவுச்சங்கிலி.

மனிதன் மீதான உறவுகள் அன்றைய உலகில் பொரிச்ச மீன் போன்றது. இன்றைய உலகில் குழம்பு மீன் போன்றது. மீன் கரைந்தாலும் குழம்பில்தான்.. அது சேருவதும் எம்மில்தான்.

நான்<<<<அம்மா<<<<அம்மாவின் அம்மா(அம்மம்மா)<<<<அம்மம்மாவின் அம்மா(ஆச்சி) என்னும் முதன்மைச்சங்கிலிகளில் ஒன்றை எடுத்துப் பார்ப்போம். ஆச்சியின் கல்யாண வயசு 14/15. அம்மம்மாவின் கல்யாணவயசு 16/17. அம்மாவின் கல்யாண வயசு 19/20. என் தலைமுறைப் பெண்களில் திருமணவயசு 23/24.. ஆச்சிக்கும் என் தலைமுறைப் பெண்களுக்கும் இடையான கல்யாண வயசு வேறுபாடு அண்ணளவாக 7. ஆச்சிக்காலத்தில் ஒருவரின் ஆயுசுக்காலம் சராசரியாக 85. அம்மம்மாக் காலத்தில் சராசரியாக 75. அம்மாவின் காலத்தில் 68>70. என்காலத்திலும் 68>70 என்றே வைத்துக்கொள்வோம். ஆச்சிக்காலத்துக்கும் என்காலத்துக்கும் இடையான ஆயுசுக்குறைவு 15.

கல்யாண வயசு வேறுபாடு+ஆயுசுக்குறைவு வேறுபாடு=7+15=22. என் வயசு 28. ஆச்சியுடனான என் வாழ்வுக்காலம் 6. அதுவே அம்மாகாலத்தில் அதிகம்.. அம்மம்மா காலத்தில் இன்னும் அதிகம்.. அடுத்தடுத்த சந்ததியில்.. !!?

இதுக்குக் காரணம் எது? என்ற கேள்விக்கு அறிவு முதிர்ச்சி என்று பதில் கிடைக்கும்..

ஒருவர் அல்லது இருவர் வேலைக்குப் போவது இன்றைய உலகு. பிள்ளைகள் பள்ளிக்கு, கல்லூரிக்குப் போவதும் அதிகரித்த நிலை. பார்வைக்கு அவசர யுகத்தில் அன்னியோன்யம் குறைந்ததாக ஒரு மாயை. உள்ளார்ந்து பார்த்தால்.... உள்ளே போய்ப் பார்ப்போம்..

வேலையாட்களும் முதியோரும் இல்லாத வீட்டின் பரபரப்பான காலை வேளை. அம்மா மும்முரமாக வேலையில்.. எக்கச்சக்க வேலை.. அப்பா அம்மாவுக்கு ஒத்தாசையாக அல்லது அம்மாவுக்கு வேலைச் சுமை ஏற்றியபடி. பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்பும் முனைப்பில். அம்மாவுக்கு அப்பாவின் ஒத்தாசை இருந்தால் பிரச்சினை இல்லை. இல்லாவிட்டால் அம்மாவின் நிலை எண்ணெயில் போட்ட கடுகு. மத்தியானச் சாப்பாடு வேறு தயார் செய்யவேண்டும் என்ற கடுகடுப்பு. அதை குடும்பத்தாரிடம் குறிப்பாக சிறுபராயத்தவரிடம் வெளிக்காட்டும் போது அவர்களிடம் சின்னதாக ஒரு விசனம். இந்த இடத்தில் உறவுகள் இற்றுப்போகும் அபாயம் உண்டு.

ஏகப்பட்ட களேபரங்களுக்கு நடுவில் அவரவரும் தமது தளங்களுக்கு சென்றுவிட்டனர்.. பாடசாலையையும், அலுவலகத்தையும் கண்முன் நிறுத்துங்கள். எத்தனை வகையான உறவுகள்.. எத்தனை வகையான அணுகுமுறைகள்.. அந்தக்காதில் இந்த உறவுகளின் அளவு எவ்வளவு குறைவு!!! அவற்றுள் திளைத்து திணறி மறுபடியும் வீட்டுக்கு..

பள்ளிச்சிறார்கள் வீட்டுக்கு வரும்போது யாரும் இல்லாவிட்டால் சூன்ய பிரபஞ்சத்தில் சஞ்சரிக்க நேரிடும். அதுக்கான மாற்று ஏற்பாடுகளாக என்னென்ன செய்யப்படுகின்றன.
பேரன்மார் வீட்டில் விடப்படுகின்றார்கள் - பேரன்கள் உறவு வலுப்படுகிறது..
டியூசனுக்கு அனுப்புகிறார்கள் - அங்கே சில பிள்ளைகள், ஆசிரியர் உறவு வலுப்படுகிறது.
விளையாட்டு பிராக்டிஸ் - அங்கேயும் சில உறவுகள்..
இதே போல அலுவலகம் சென்ற அம்மாவுக்கும் அப்பாவுக்கும் புதுப்புது உறவுகளை முளைக்க வைக்குது அவசர ஜெகம்.

இப்படியாக உறவுகள் பரம்பலடையும் போது அடர்த்தி குறைந்ததாகத் தோற்றப்பாடு ஏற்படுகிறது. அதுக்காக வலுவிழந்ததாக அர்த்தப்படுத்த இயலவில்லை.

அன்றைய நாளின் பொன்மாலைப் பொழுது.. இல்லை இல்லை.. மாலைக் கருக்கல்.. அம்மா,அப்பா,பிள்ளைகள் சங்கமம்.... இங்கே உள்ளது வலுவாக்கல் யுக்தி.

குழந்தைகள் என்னதான் பேரன் பேத்தி நண்பர்கள் என்று அன்றைய பொழுதின் அனுபவங்களை கொட்டினாலும் அம்மா அப்பாவிடம் சொல்ல சில விடயங்கள் வைத்திருப்பார்கள்.. அவை மீள் ஒளிபரப்பாகக் கூட இருக்கலாம்.. அப்படிச்சொல்லும் அந்த சந்தர்ப்பத்தை கொடுத்தால் குழந்தைகள் மனதில் அன்றைய ஓட்டம் ஜீவதத்துக்கு அவசியம் என்பது ஊன்றப்படுகிறது.. காலப்போக்கில் வேர் விட்டு தழைத்து பெரு விருட்சமாகிறது.

உறவுகள் வலுவாக உரமாகும் அந்த சந்தர்ப்பங்களை கொடுக்கவேண்டும்.. கொடுக்கிறார்கள்.. கொடுப்பார்கள்-ஜீவத்துக்காக ஓடுபவர்கள்..


மாறாக பகட்டுக்கான ஓட்டம் என்றால்.. அது இந்தக்காலத்தில் மட்டுமன்றி தொன்று தொட்டு வருவது. அதன் விளைவுகள் தான் நீங்கள் சொன்ன வலுவிழப்புகள்.

அடுத்ததாக வாரக்கடைசி விடுமுறைகள்..இதர குறுகிய, நீண்டகால விடுமுறைகள். அவற்றை தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளாக எல்லார் மனதிலும் பதியும் படி செய்ய வேண்டும். அவை நெருங்க எதிர்பார்ப்புக் கூட வேண்டும். அந்த நாட்களில் நெருக்கம் கூடும்.. உறவு வேர்கள் அகலாமகவும் வலுவாகவும் படரும்.

ஆனால் இந்த நாட்களை நினைத்து ஏங்க வைக்கக் கூடாது. நிச்சயமாக ஏங்க வைக்க மாட்டார்கள் வாழ்வதுக்காக ஓடுபவர்கள். இது போலத்தான் வேலை நிமித்தம் புலம் பெயர்ந்து வாழும் நண்பர்கள் ஆண்டுக்கொரு முறை பூக்கும் விடுமுறைப் பூக்காலத்தை உறவை வலுப்படுத்தி வாழ்வை வசந்தமாக்கலாம். அதை செய்கிறார்கள்.


இதை விட வேறு என்ன உள்ளது சொல்வதற்கு...

அந்தரத்தில் பறக்கும் வண்ணத்திரை சண்டை சாகசங்களில் பயன்படுத்தும் நூல்கள் கண்களுக்கு தெரிவதில்லை. ஆனால் அவர்கள் ஜீவிதத்துக்கு அவை எவ்வளது உதவியாக உறுதியாக உள்ளன. அத்தைகய தங்கூசி இழையை போன்றவை தற்போதைய உறவுகள். கண்ணுக்கு தென்படாது. ஆனால் வலுவானது..

ஓட்டத்தின் அவசியத்தை உணர்த்தாதவர்களுக்காக.. உறவுகளின் வலுவிழப்பை தடுக்கச் சில..

நான் வாழும் நாட்டில் பள்ளிகளில் ஒவ்வொரு பாடவேளையின் பின்னும் சசிறு இடைவேளை. மதிய உணவுக்கு குறைந்த செலவில் கேன்டீன் வசதி. நிதானமான கற்பித்தல் மாலை ஐந்து மணிவரை தொடரும். ஐந்திலிருந்து ஆறு/ஏழு வரை பள்ளியில் கொடுத்த வீட்டுவேலைகளை மாணவர்கள் செய்ய உதவி.. எல்லாம் முடித்து பிள்ளைகள் வீட்டுக்கு வரும்போது சற்றுக் களைத்திருப்பார்கள். வீட்டுக்கு வந்ததும் வேலையால் வந்து ஆறி அமர்ந்த பெற்றோருடன் அளவளாவும் போது பிள்ளைகளின் களைப்பு போன இடம் தெரியாது. கொண்டாட்டங்களை விடுமுறை நாளில் வைத்து எல்லாரையும் முக்கியப்படுத்தலாம். இதை கடைப்பிடிக்கலாம் எந்த நாடும்

நான் சொன்னவற்றை உறவுகள் வலுவிழந்து வருகின்றன என்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் உறவுகளைப் பலப்படுத்த என் ஆலோசனையாகக் கொள்ளுங்கள்.


வாய்ப்புக்கு நன்றி..

ராஜா
23-09-2008, 09:52 AM
அமரினுடைய பதிலின் முதல் வரியில் எழுப்பப்பட்ட ஐயம் மிகுந்த கேள்விக்கு, மிச்ச வரிகளே சரியான விடையாக அமைந்திருப்பதை (அவர் பதிலைப் படிக்கும்) அனைவரும் உணர்வார்கள்.

பதிலைப் பதிவுசெய்யும்போது, அன்பின் அமரின் உள்ளத்தில் ஏற்பட்ட உணர்ச்சிப்பெருக்கை என்னால் நன்கு உணரமுடிகிறது.

உறவுகளுக்கிடையே நிலவ வாய்ப்புள்ள தொடர்புக் குறைபாடுகளையும், அவற்றை நிவர்த்திக்கக்கூடிய வழிமுறைகளையும் நன்கு அலசியிருக்கிறார்.

நல்ல கேள்விக்காக ஷிப்லிக்கும், நல்ல பதிலுக்காக அமருக்கும் நன்றி.

shibly591
23-09-2008, 10:07 AM
இப்படியொரு உருக்கமான பதிலை நான் அமரனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை

அருமையான விளக்கங்கள்..

நன்றி அமரன் அண்ணா..

சுவேதா
23-09-2008, 11:07 AM
நன்றி சுவேதா....

தெளிவான விளக்கங்களை அள்ளித்தெளித்தீர்கள்..

சரியான ஒருவரிடம்தான் அந்தக்கேள்வியை நான் கேட்டிருக்கிறேன் என்ற ஆத்ம திருப்தி எனக்குள்....

தொடர்ந்து சிறப்பான பதிவுகள் தர வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி:)

ஓவியா
23-09-2008, 02:14 PM
எனக்கு வாய்ப்பு வளங்கிய ஷிப்லிக்கு எனது நன்றிகள். தாமதத்திற்க்கு மன்னிக்கவும்.


நீங்கள் ஒரு நல்ல கவிஞர்.

பதில்: நான் என்றுமே என்னை ஒரு கவிஞர் என்று எண்னியதில்லை. அந்த பட்டியலிலும் சேர்த்ததே இல்லை, ஏதோ எனக்குள் தோன்றும் சில வார்த்தைகளை ஒரு கோர்வையாக்கி எழுதுகிறேன். என்னை கவிஞர் என்று ஒரு உண்மை கவிஞர் சொல்வதை கேட்டு ஆனந்தப்பட்டேன். மிக்க நன்றி.


மன்றத்தில் உங்கள் கவிதைகளுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பதில்: ஆமாம், ஆனாலும் ஒரு விசயம் எப்பொழுது நான் இங்கு ரக்ஷபந்தன் கொண்டாட ஆரம்பித்தேனோ அன்றிலிருந்து பலருக்கு நான் ஒரு சகோதரியாக மட்டுமே தெரிகிறேன். என் பாசத்தை மட்டுமே நினைவுகூர்கின்றனர்... சில சமயம் என் எழுத்துக்களும் திறமையும் பாசத்தால் புதைக்கப்பட்டு விட்டனவோ என்று எனக்குள் கேள்வி எழுகிறது.


உண்மையில் ஒரு கவிதையில் இரண்டு பெரும் விடயங்கள் அதிகம் தாக்கம் செலுத்துகின்றன. ஒன்று அனுபவம். மற்றயது கற்பனை.

பதில்: ஆம் முற்றிலும் உண்மை. ஆனால் காபி அடித்து எழுதுபவர்களுக்கு இவை இரண்டுமே இல்லை :), காபி என்று நான் சொல்வது வரிக்கு வரி அப்படியே திருடி எழுதுவது மட்டுமல்ல, கருவை திருடி வார்த்தைகளை மாற்றி எழுதுவதும் காபிதான்.


வெறும் கற்பனை யதாரத்தமான படைப்பாய் அமையாது.
அதே போன்று வெறும் அனுபவத்தை எழுதும்போது கவித்துவத்திலிருந்து அது நழுவிவிடும். இதைப்பற்றிய உங்கள் கருத்து என்னவென்று அறிய வேண்டுகிறேன்,

பதில்: ஆம் அனுபவத்தில் பிறக்கும் கவிதை உணர்வுபூர்வமாகவும் பெரும்பாலும் உண்மையாகவும் இருக்கலாம், ஒருவரின் வலியோ அல்லது சந்தோஷமோ அவை நம் உணர்வுகளை தூண்டி ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்தும். கற்பனையில் பிறப்பவை நடைமுறைக்கு அப்பாற்ப்பட்டவையாக இருக்கும், சில சமயம் கற்பனை கவிதைகூட பலமுறை நடமுறைபடுத்தினால் அது ஒருநாள் அனுபவ கவிதையாக மாறலாம்.


(அனுபவம்) //ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம்// இந்த கவிதையை படிக்கும் பொழுது நமக்கு வரும் உணர்வு,
(கற்பனை) //நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்// இதில் வருவதில்லை.


நன்றி.

shibly591
23-09-2008, 02:17 PM
நன்றி ஓவியா...

சீரிய வரிகளில் வித்தியாசமாக பதில் தந்திருக்கிறீர்கள்..

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சமர்ப்பணம்...

தொடருங்கள் உங்கள் பதிவுகளை.

ஓவியா
23-09-2008, 02:24 PM
நன்றி ஷிப்லி, ஆனால் இன்னும் அதிகம் எழுதலாம். நான் கொஞ்சம் பிசியாக உள்ளேன், தாமதத்திற்க்கு மீண்டும் ஒரு மன்னிப்புகள் வேண்டுகிறேன்.

நன்றி.

shibly591
23-09-2008, 11:54 PM
நன்றி ஷிப்லி, ஆனால் இன்னும் அதிகம் எழுதலாம். நான் கொஞ்சம் பிசியாக உள்ளேன், தாமதத்திற்க்கு மீண்டும் ஒரு மன்னிப்புகள் வேண்டுகிறேன்.

நன்றி.

அதற்கென்ன...ஓய்வு கிடைக்குமபோது இன்னும் ஆழமாகவும் நீளமாகவும் பேசுவோம்

நன்றி ஓவியா

ராஜா
25-09-2008, 03:57 AM
பதிலளிக்க வேண்டிய மற்ற உறவுகளையும் அன்புடன் அழைக்கிறோம்..!

mukilan
25-09-2008, 04:03 AM
அன்பு ஷிப்லி, என்னையும் ஆ 10ல் இழுத்து விட்டமைக்கு நன்றி. உங்களைக் கவர்ந்த விஞ்ஞானி யார்? கண்களில் எந்த கண் சிறந்தது? ஆனால் அந்த அளவிற்கு சிக்கலான கேள்வியா? யாரோ ஒருவர்தான் என்றால் என்ன செய்ய முடியும். விரைவில் வருகிறேன்.

mukilan
26-09-2008, 01:49 AM
06)தங்களைக்கவர்ந்த விஞ்ஞானி யார்?காரணம் என்ன?தமிழில் விஞ்ஞான ரீதியிலான நூல்கள் கணிசமாக வெளிவருகின்றதா?இல்லையெனில் உங்கள் பார்வையில் என்ன காரணமாக இருக்கும்?

ஆ 10ல் என்னை நிச்சயமாக மாட்டி விட்டீர்கள் ஷிப்லி. உணவுக்கும், உடைக்கும் முக்கிய ஆதாரமான வேளாண்துறையில் உள்ள விஞ்ஞானிகள் எத்தனையோ பேர்! ஒவ்வொருவரும் ஒவ்வொரு இன்றியமையாத கண்டுபிடிப்புகள் கொடுத்திருக்கிறார்கள். உயிர்காக்கும் மருத்துவர்கள், கடவுளுக்கு ஒப்பாக அல்லவா மதிக்கிறோம்! அந்த துறையில் விஞ்ஞானிகள் கண்டறிந்து சொல்லியதை குறைத்தா மதிப்பிட முடியும். வாழ்வின் எல்லாவித சுகங்களுக்கும் காரணகர்த்தாவான பொறியியலாளர்கள் அவர்களை விட்டு விட்டால் நான் தட்டச்சுவதும் நீங்கள் வாசிப்பதும் இந்த நிமிடம் சாத்தியமாயிருக்காது::eek:.வானியல் வல்லுனர்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன?

வலது கண் சிறந்ததா? இடது கண் சிறந்ததா?

விஞ்ஞானி என்றால் ஒரு பொருளைக் கண்டறிந்தாலோ அல்லது உயிர்களின் இயக்கங்களை ஆராய்ந்து சொல்வதோலோ கிட்டும் பெயரென்றால் என்னை கவர்ந்தவர்கள் எண்ணவியலாதவர்களாயிற்றே.

ஆனாலும் நான் சொன்ன ஒவ்வொரு துறையிலும் ஆராய்ச்சியாளர்கள் பெரும்பாலும் முன்னர் கண்டறிந்து சொன்ன ஒரு தகவலின் நீட்சியாக, அதுவும் சில ஆராய்ச்சிக்கூடங்கள் வழியாகத்தான் கண்டறிந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களில் சற்று மாறுபட்டவர்தான் ஐன்ஸ்டீன். சார்பியல் கோட்பாடுகள் கண்டறிந்த ஐன்ஸ்டீனின் பெரும்பாலான கண்டுபிடிப்புகள் வெறும் வெள்ளைத்தாளும், பேனாவும் கொண்டு மட்டுமே கணிக்கப்பட்டவை, அதுவும் வறுமையில், யூதர்களுக்கெதிரான அடக்குமுறைகள் இருந்த காலத்தில் முனைந்து சாதித்துக் காட்டியவர் இந்த யூத இனத்து இயற்பியல் மேதை. இந்தியா அப்துல்கலாமை ஜனாதிபதி ஆக்கி அழகுபார்த்தது போல இஸ்ரேலும் ஐன்ஸ்டீனை ஜனாதிபதியாக்க முனைந்தது. அதை பண்போடு மறுத்து விட்டார். அவரை வானளாவ புகழ்ந்தவர்களைப் பார்த்து பரந்த இந்த அறிவியல் நதியின் கரையில் ஒதுங்கிய கூழாங்கற்களில் சிலவற்றைக்கண்ட சிறுவன் என தன்னடக்கத்தோடு கூறினார். அவரது மறைவிற்குப் பின் அவர் மூளை எப்படிப்பட்டது என ஆராய்ந்தார்கள் என்றால் அவர் அறிவுக்கூர்மைக்கு வேறென்ன எடுத்துக்காட்டு வேண்டும்.

தமிழில் கணிசமான அறிவியல்சார் நூல்கள் வெளிவருகின்றனவா? இல்லை என்பது பொதுப்படையான பதில். ஆனால் முன்னைக்காட்டிலும் அதிகம் என்பது மகிழக்கூடிய விடயம். அச்சு ஊடகம் என்பது மிகுந்த கட்டுப்பாடு மிக்கதாக 15 ஆண்டுகளுக்கு முன்வரை இருந்தது. அதனால் பதிப்பகத்தார் விரும்பி ஏற்றுக்கொண்டு பதிக்க விரும்பும் நூல்கள் மட்டுமே வெளிவந்தன. அதில் மனவளம் வளர்க்க உதவியது கொஞ்சமே கொஞ்சம்தான். பஞ்சாங்கத்தில் பதினைந்து வகைகள் வந்தன. ராசிபலன் மலர்களும், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த புத்தகங்களும்தான் பெரும்பாலும் வந்தன. ஆனால் காலமாற்றத்தில் அனைவருக்கும் கல்வி கிட்டியதில் அறிவு சார் பதிப்புகளுக்கான தேடல்கள் அதிகரித்து விட்டன. எது? எப்படி? ஏன்? என்ற முதல் படி நூலாக சுஜாதா போன்றோர் அறிவியலை எளிமையாக அனைவருக்கும் புரியும் படி சொல்லிக் கொடுத்ததால் பெரும்பாலானோர்க்கு அறிவியல் பால் ஈர்ப்பு வந்தது. அச்சு ஊடகத்தின் வீண் கட்டுப்பாடுகள் குலைய இணையமே முதல் காரணம்.முக்கியமாக தமிழில் கணிணியில் தட்டச்ச காரணமாய் இருந்த உமர் தம்பி அவர்களின் பங்கு அளப்பரியது. கட்டற்ற சுதந்திரம் வழங்கும் இணையவழி ஊடகம் வந்தபின் அறிவியல்தமிழ் அபரிதமான வளர்ச்சி அடைந்திருக்கிறது. இனிமேல் நூல்களாக வராவிட்டாலும் கேட்டதும் கிடைக்கும்படி இணையத்தில் அறிவியல்தமிழ் செய்திகள் பரவலாகக் கிட்டும் என்பது என் நம்பிக்கை.

shibly591
26-09-2008, 09:49 AM
நன்றி முகிலன்..

தெளிவான அதே நேரம் பயன்மிகு விளக்கங்கள்..

ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தமைக்கு நன்றிகள்...

இன்னும் பதிலளிக்காதோரை விரைந்து பதிவளிக்க தாழ்மையுடன் அழைக்கிறேன்..

ராஜா
26-09-2008, 11:04 AM
அறிவியலாளர்கள் குறித்த முகிலனின் விரிவான விளக்கம் பிரமிக்க வைத்தது. அவர் கூறியதுபோல ஒவ்வொரு துறையும் முக்கியமானதே.

இணையத்தமிழின் விரிவடைதலால் பயன்பெற்ற எண்ணற்றோரில் நானும் ஒருவன் என்கிற வகையில், 'எதிர்காலத்தில் அறிவியல் தமிழில் இன்னும் விரிவடையும்' என்ற முகிலனின் நம்பிக்கை விதை மரமாவதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

நன்றி முகில்..!

ராஜா
29-09-2008, 03:34 AM
வேற யாருப்பா இன்னும் பதிலளிக்காம இருக்கீங்க..?

கொஞ்சம் சிரமம் பார்க்காம வந்து சொல்லிட்டுப் போங்கப்பு..!

அமரன்
30-09-2008, 05:24 PM
அடுத்த கேள்வியாளரை அழைக்க பூர்வாங்க நடவடிக்கைகளில் இறங்கிவிட்டேன்.. அதற்குள் இதுவரை பதிலளிக்காதோர் பதிலளிக்க வேண்டுகின்றேன்..

ராஜா
01-10-2008, 11:42 AM
╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬
அன்பின் அமர்.. அடுத்து யார்..?
╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬

அக்னி
01-10-2008, 04:28 PM
╬═╬═╬═╬═╬═╬ ஆ! 10..! ╬═╬═╬═╬═╬═╬

:icon_b::icon_b::icon_b:
யாருப்பா... ஆ10 க்கு வேலியடைத்து விட்டது..?

அமரன்
02-10-2008, 06:29 AM
╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬
அன்பின் அமர்.. அடுத்து யார்..?
╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬═╬
எல்லாரும் பிசியா இருக்காங்க... விரைவில் ஒருவரை அழைத்து வர முயல்கின்றேன் அண்ணா.

ராஜா
02-10-2008, 07:44 AM
அடுத்து உறவுகளின் மனக்கேணியில் கேள்வித் தூண்டில் வீச அன்பு நண்பர் பாரதி அவர்களை என்னவன் அமரின் அனுமதியோடு அழைக்கிறேன்..!

வருக .... பாரதி(ர) வருக..!

பாரதி
03-10-2008, 01:18 AM
எனக்கும் ஆ...பத்தில் வினாக்களைத் தொடுக்க வாய்ப்பளித்த அமரன், ராஜாவிற்கு மனமார்ந்த நன்றிகள். மன்ற உறவுகள் அனைவரிடமும் கேட்க நினைக்கும் கேள்விகள் ஏராளமாக இருந்தாலும், இப்போதைக்கு தோன்றுவதையும் தற்போது மன்றத்திற்கு தடையின்றி வர வாய்ப்பிருப்பவர்களையும் கருத்தில் கொண்டு என் வினாக்களைத் தொடுக்கிறேன்.

1. மணியா அண்ணா:
வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்த தருணம் குறித்து சொல்லுங்கள் அண்ணா..

2. கவிதா:
இதுவரை படித்ததில் உங்களை மிகவும் கவர்ந்த கவிதையை இங்கே அலசுங்கள்.

3. பென்ஸ்:
உங்கள் பதில்களில் இருந்தும், பின்னூட்டங்களில் இருந்தும் உங்கள் தாயார் மிகவும் நகைச்சுவை உணர்வுடன் உள்ளவர் என்று தெரிகிறது. நீங்களும் அப்படித்தான் இருப்பீர்கள் என நம்புகிறேன். சமீபத்தில் உங்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவையை எங்களுடன் பகிருங்கள்.

4. முகிலன்:
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர்வாழக்கூடிய மிகப்பிரமாண்டமான மரங்களைத் தந்த மிகச்சிறிய விதைகள் குறித்து நீங்கள் நினைப்பது என்ன?

5. கீழைநாடான்:
சிறுகதைகளை இப்படித்தான் எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்போது உங்களுக்குத் தோன்றியது?

6. லியோ மோகன்:
தனியாக தளம் நடத்துவது; தமிழ்மன்றம் போன்ற தளங்களில் பங்கேற்பது - இரண்டில் உங்களுக்கு அதிக பலனுள்ளதாக தோன்றுகிறது?

7. சிவா.ஜி:
பல நாடுகளிலும் பணிபுரிந்த உங்களுக்கு தாயகம் தவிர்த்து பிடித்த இடம் அல்லது இடங்களை காரணத்துடன் கூறுவீர்களா சிவா...?

8. பிரவீண்:
உங்களை மிகவும் கவர்ந்த இணையத்தளம் ஒன்றைக்குறித்தும், மிகவும் பலனுள்ளது என கருதும் இணையத்தளம் குறித்தும் அறியத்தாருங்கள்.

9. அக்னி:
விளையாட்டு வினையாகும் என்பார்கள் இல்லையா - அப்படி ஏதேனும் உங்கள் வாழ்விலும் நடந்திருக்கிறதா?

10. இளசு அண்ணா:
இத்தனை ஆண்டுகால மருத்துவப்பணியில் உங்களுக்கு முழு மன நிறைவு அளித்த நிகழ்வு குறித்து நினைவு கூற முடியுமா அண்ணா..?(கூடவே இந்த சந்தேகத்தையும் தீர்க்க முடியுமா அண்ணா...? மருத்துவப்பணியில் இருப்பவர்கள் குறித்து கூறும் போது " அவர் டாக்டரா பிராக்டீஸ் செய்கிறார்" எனக்கூற என்ன காரணம்?)

மதி
03-10-2008, 01:29 AM
அமர்க்களமான கேள்விகள்....பாரதியண்ணா.

உறவுகளின் பதிலுக்கு காத்திருக்கிறேன்.

அமரன்
03-10-2008, 06:24 AM
சந்தேகமே இல்லை.. பாரதி அண்ணாவால் இந்த திரி மேலும் மெருகுபெற்றது. கேள்விகளில் அவருடைய கூர்ந்து பார்க்கும் பாங்கு அப்பட்டமாய் தெரிகிறது. அழைப்பை ஏற்று ஆ!10ஐ தந்தமைக்கு நன்றி அண்ணா.. அனைத்து பதில்களையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைத்து விட்டீர்கள்.

மனோஜ்
03-10-2008, 07:11 AM
பாரதி அண்ணாவின் கேள்விகள் அருமை
பதிலல்களும் சிறப்பாக அமையும் என்ற ஏதிர்பார்புடன்

leomohan
03-10-2008, 07:11 AM
6. லியோ மோகன்:
தனியாக தளம் நடத்துவது; தமிழ்மன்றம் போன்ற தளங்களில் பங்கேற்பது - இரண்டில் உங்களுக்கு அதிக பலனுள்ளதாக தோன்றுகிறது?



நன்றி பாரதி அவர்களே.

எதையும் சுயமாக செய்து பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் தான். அது வெற்றியடைகிறதா தோல்வியடைகிறதா என்பதை விட என்னால் செய்ய முடியுமா என்று சோதனை பார்த்து திருப்தி அடைவதில் அலாதி திருப்தி கிடைக்கிறது.

1985 பாரதியார் சிறுவர் சங்கம் என்று துவக்கினோம் பள்ளியில். அது ரேடியா அண்ணாவின் நிகழ்ச்சிகள் கேட்டதால் வந்த ஆர்வம்.
1986ல் தேனீ எனும் கைப்பிரதி துவக்கினேன் சில நண்பர்களுடன் சேர்ந்து. அது 1978ல் என்னுடைய குடும்ப நண்பர் அவருடைய சிறுவயதில் ஆரம்பித்ததாக எனக்கு கூறியபோது எழுந்த ஆர்வம்.
1987ல் விழுப்புரம் வாடகை நூல் நிலையம் கைப்பிரதியை எல்லாம் லைப்பரரியில் வைக்க முடியாது என்று சொன்ன போது நண்பர்களுடன் பல புத்தகங்களை சேர்த்து,வீட்டில் அப்பாவின் உதவியுடன் மர அலமாரியில் நூலகமே நடத்தினோம்.

கணினி துறைக்கு வந்த பிறகு பல இணைய குழுக்களையும் தளங்களையும் உருவாக்கியிருக்கிறேன். யாஹூ குழு கணினி பிணையத்திற்காக உருவாக்கி 1999-2001 வரையில் அந்த பகுதியில் முதல் குழுவாக இருந்தது. பிறகு அதிகப்படியான ஸ்பாம் காரணமாக உறுப்பினர் சேர்கை பூட்டிவிடப்பட்டது.


2005-6ல் மீண்டும் தமிழார்வம் தோன்ற தேனீ மாத இதழ் மீண்டும் உயிர் பெற்று பிடிஎப் வடிவில் வலம் வந்தது. அந்த நேரத்தில் தான் இணையத்தில் தமிழ் தளங்களை பற்றி அறிந்து ஆர்வம் உருவானது. பிறகு இதேனீ இணையதளம் உருவானது.

பல மன்றங்களில் உறுப்பினராக சேர்ந்து பல தமிழ் தளங்களை தினமும் படிக்க துவங்கினேன். ஆனால் இணையத்தில் அதிகம் உலவிய பிறகு தமிழார்வம் பரந்த மனமும் மட்டுறுத்தல் செய்ய பலரும் இருக்கும் சில களங்கள் மாத்திரமே செல்வதோடு நிறுத்திக் கொண்டேன். பல தமிழ் தளங்களும் கருத்துக் களங்களும் மாத்திரம் குப்பை என்றும் உணர தோன்றியது. தமிழ் இணையதளங்கள் பாதுகாப்பற்றது என்பதையும் உணர முடிந்தது.

இதேனீ இணையதளம் தமிழில் ஒரு தளம் உருவாக்கும் ஆசையின் தீர்வு. ஆக அது வெற்றி. ஆனால் மற்ற பணிகளுக்கிடையே அதை நிர்வகிப்பது கடினமாக இருக்கிறது. இளசு அண்ணா முன்பு சொன்னது போல between passion and profession, profession gets priority. என்றாவது வேலை குறைவாக இருக்கும் போது அதற்கும் நேரம் ஒதுக்குவேன்.

இதேனீ கருத்துக் களம் பல்லாயிரம் பேர் சேர்ந்து தற்போது வெற்றிகரமாக சென்றுக் கொண்டிருக்கும் தளங்களை தோற்கடிப்பது அல்ல நோக்கம். புலிகளை பார்த்து பூனை கோடு போட்டுக் கொள்ள முடியுமா. அல்லது குருவை சீடன் மிஞ்ச முடியுமா. இந்த முயற்சியில் நான் ஒரு ஏகலைவன். ஏனென்றால் இன்னொரு தளம் வருவதை எந்த தமிழ் தளத்தினரும் விரும்புவதில்லை. ஆனால் ஆங்கில தளங்களை பாருங்கள் அதீத அறிவு பரிமாற்றங்களால் பல்லாயிரம் தளங்கள் உருவாகியுள்ளன. அதுவே தமிழ் தளங்கள் குறைவாக இருப்பதற்கு ஒரு காரணம். பல பேரிடம் கேட்டாலும் எப்படி செய்கிறார்கள் என்பதை பகிர்ந்துக் கொள்ள விரும்புவதில்லை.

அட கணினிதுறையில் தானே இருக்கிறோம். முயன்று பார்த்தால் என்ன என்று துவங்கினோம். திறமூல மென்பொருளை இறக்கி, அதை தமிழ் படித்தி அதில் நேராக தமிழ் தட்டச்சு செய்யும் வசதிகளை ஏற்றி, தமிழில் தூதூவன் - messenger, தமிழில் அரட்டை chatting, தமிழ் வானொலி, தமிழ் இ-லேர்னிங்க் என்று அனைத்தையும் முயன்று பார்த்து செய்ய முடியும் என்று ஆறுதல் அடைந்தே பிறகு ஓய்வடைந்தோம்.

அதை தொடர்வதோ அல்லது அதை உலக தமிழ் களங்களிலே நம்பர் ஒன் ஆக்கவதோ குறிக்கோள் அல்ல. அதற்கு தற்போது நேரமும் இல்லை. ஆனால் என்றாவது செய்ய வேண்டும் என்று தோன்றினால் அதற்கான ஞானம் இருக்கிறது. அதை தேடிக் கொண்டோம் என்ற மகிழ்ச்சி இருக்கிறது.

இப்போது உங்கள் கேள்விக்கு வருகிறேன்.

பலன் - இணையத்தில் தமிழ் ஒரு பொழுதுபோக்கு. அத்துடன் சேர்ந்து தகவல் பரிமாறிக்கு கொள்வது ஒரு போனஸ்.

அதிக பலன் - தமிழ் மன்றம் போன்ற established தளங்களில் தான் அதிகம். காரணம் பல நூறு உறுப்பினர்கள், பல்லாயிரம் பதிவுகள். பல தகவல்கள் ஒரே இடத்தில் காண வாய்ப்பு.

நாங்கள் தொடங்கிய தளங்களில் - அதை உருவாக்கியதோடு சரி. பங்களிப்புகளில் இல்லை. தமிழ் கருத்துக்களத்தில் பங்கு பெறும் கூட்டம் மிகக் குறைவு. அவர்கள் ஏற்கனவே established forumங்களில் மட்டுமே பங்களிக்க விரும்புகிறார்கள். புத்தம் புதியதாக ஏதாவது செய்தால் மட்டும் அவர்கள் மற்ற தளங்களுக்கு செல்கிறார்கள். சிலர் ஒரு களத்திற்கே Loyalஆக இருக்கிறார்கள். சிலர் பல இடங்களில் உலவினாலும் மீண்டும் ஒரு களத்திற்கே வந்துவிடுகிறார்கள். இது comfort feeling மட்டும் ஏற்படுத்திக் கொண்ட நட்பு காரணம்.

தமிழ் மன்றம் உலக தமிழர்களை இணைப்பது போன்று ஒரு அருமையான காரியம் செய்துக் கொண்டிருக்கிறது. மட்டுறுத்துதல் அருமை. உறுப்பினர்களின் தரம் நல்ல தரம். மென்பொருள் நன்றாக உள்ளது. இடைமுகம் அருமையாக உள்ளது. சஞ்சிகை ஆரம்பித்த முயற்சியும் அருமை. வாழ்த்துகள்.

நன்றி பாரதி அவர்களே.

பாரதி
03-10-2008, 07:24 AM
உங்களின் பணிப்பளுவிலும் வினாவிற்கு நேரம் ஒதுக்கி உடனே விரிவாக பதில் அளித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி மோகன்.

உங்களின் புத்தகப்பணிகளுக்கு முன்பாகவே சிறுவர் சங்கம், கையெழுத்துப்பிரதி, நூலகம், இணையத்தில் தமிழாக்கப்பணிகள், மின் நூல்கள் என பல விடயங்களிலும் உங்களின் பங்களிப்பு வியப்பை ஊட்டுகிறது. உங்களைப்போன்றவர்கள் இணைந்திருப்பதால் தமிழ்மன்றமும் உவகை கொள்கிறது; நாங்களும் பெருமை கொள்கிறோம்.

நேரமும் வாய்ப்பும் அமையும் சமயத்தில் உங்கள் படைப்புகளைத் தமிழ்மன்றத்தில் தொடருங்கள். என் சந்தேகத்தைத் தீர்த்தமைக்கு மிக்க நன்றி மோகன்.

சிவா.ஜி
03-10-2008, 07:44 AM
7. சிவா.ஜி:
பல நாடுகளிலும் பணிபுரிந்த உங்களுக்கு தாயகம் தவிர்த்து பிடித்த இடம் அல்லது இடங்களை காரணத்துடன் கூறுவீர்களா சிவா...?

அன்பு பாரதிக்கு நன்றி.

பணி நிமித்தமாக பல நாடுகளில் பணிபுரிந்திருக்கிறேன். சில இடங்களில் சில மாதங்கள், சில இடங்களில் சில வருடங்கள்.

இவற்றில் எனக்கு மிகவும் பிடித்த இடம், நாடு என்றால் கசகஸ்தான் என்றுதான் சொல்லுவேன்.

காரணங்கள்.....

ஏற்கனவே வளைகுடா நாடுகளில் வாழ்ந்ததால், அங்கு இந்தியருக்கு கிடைக்கும் "மரியாதையை" நன்கு உணர்ந்தவனென்பதால், இந்த நாட்டில் இந்தியர்களை உளமார நேசிக்கும் மக்களைப் பார்த்ததும் மனது மகிழ்ச்சியில் கூத்தாடியது.

இந்த நாட்டுக்கு வரும்வரை எங்கள் வாழ்க்கைமுறை இயந்திரத்தனமாகவே இருந்து வந்துள்ளது. காலை எழுந்து பணிக்குப் போவதிலிருந்து பணி முடிந்து திரும்ப வந்து கூட்டுக்குள் அடைவது வரை எல்லாமே மாற்ற*மின்றி தொடர்ந்த சலிப்பான வாழ்க்கை. உடன் பணிபுரிபவர்கள் மனதார தங்கள் வீட்டுக்கு அழைப்பதைக்கூட செய்யமுடியாத கடுமையான சட்ட திட்டங்கள்.

சோஷியல் வாழ்க்கை என்பதை மொத்தமாக மறந்து விட்டிருந்தேன். ஆனால் இந்த நாட்டுக்கு வந்தபிறகுதான் நமது நாட்டிலிருப்பதைப்போல உணர்ந்தேன். உடன் பணிபுரிபவர்கள் வீடுகளுக்கு விருந்தினனாய் செல்வது, அவர்களின் விசேஷங்களில் பங்கு கொள்வது, அவர்களது கஷ்ட நஷ்டங்களில் ஆறுதலாக உடனிருந்தது என ஒரு சராசரி வாழ்க்கையை வாழ முடிந்தது.

வாழ்க்கைமுறை அப்படியென்றால், இந்த நாட்டின் இயற்கை அழகு கண்களுக்கு மட்டுமல்ல உள்ளத்துக்கும் உற்சாகமூட்டக்கூடியது. ஆறுமாதங்கள் வெள்ளையாடை உடுத்திய தேவதைகளாய் சாலையோர மரங்கள், எங்கெங்கும் காணக்கிடைக்கும் வெள்ளைப் போர்வையாய் பனிவிழுந்த பரப்புகள், பனிக் கொட்டும் நாட்களில் அதைக் கையில் பிடித்து உற்சாகமாய் விளையாடியது...இவையெல்லாமே எனக்குப் புத்தம்புது அனுபவங்கள்.

*மைனஸ் 40 டிகிரி குளிரில் உடலின் ஒருபாகம் கூட வெளித்தெரியாமல் கம்பளி ஆடைகளால் பொதிந்துகொண்டு பனி மீது நடக்கும்போது மனத்துக்குள் பாரதியாரின் "வெள்ளிப்பனிமலையின் மீதுலாவுவோம்" என்ற பாடல்வரிகள் தோன்றி, உற்சாகமளிக்கும்.

வெயில் காலங்களிலோ இரவு பதினோரு மணிவரை பிரகாசிக்கும் சூரியன் எனக்கு மிகப் புதிது. எட்டு மணியிலிருந்து 11 மணிவரை கிரிக்கெட் விளையாடிய அற்புதத் தருணங்கள், காலை மூண்றரைக்கே உதித்துவிடும் சூரியனால், அறைக்குள் செயற்கை இருட்டை உருவாக்கி படுக்கையில் கிடந்த விடியல்கள், உற்சாகமாய் போய் வந்த சுற்றுலாக்கள், இன்னமும் பழமை மாறாக் கிராமங்கள், கிராமத்தின் அன்பான மனிதர்கள் என எத்தனை அருமையான அனுபவங்கள்?


கடைகளில் பொருள் வாங்கச் சென்றால், எத்தனைக் கூட்டமிருந்தாலும் இந்தியருக்கு முன்னுரிமைக் கொடுத்து நம்மை சிறப்பாகக் கவனிக்கும் அந்த நாட்டுக் கடைச் சிப்பந்திகளின் புன்னகைப் பூத்த நட்பான முகம் பார்த்து நெஞ்சம் பெருமையால் விம்மும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அந்த நாட்டைவிட்டு வந்தபோது, என்னுடன் பணிபுரிந்த தோழிகளும், நான் என் உடன்பிறவாத் தங்கையாக நினைக்கும் குல்நாராவும் அழுத அழுகை...என்னை அந்த நாட்டில் வசித்த நாட்களை ஆயுள்முழுதும் மறக்க வைக்காது.


சுகமான நினைவுகளை மீண்டும் அசைபோட வைத்த கேள்விக்கு மிக்க நன்றி பாரதி.

kavitha
03-10-2008, 08:22 AM
கேள்விக்கு நன்றி பாரதி. கவிதை + அலசல் விரைவில் தருகிறேன்.

பாரதி
03-10-2008, 08:49 AM
உங்கள் உள்ளக்கிடக்கையை, உளமார நேசித்த கஜக்கிஸ்தானை, அதன் மக்களை நினைத்து நாங்களும் மகிழ்கிறோம் சிவா. வெளிநாட்டு வாழ்க்கை என்பது வேதனையானது என்பதைப் பொய்யாக்கிய அந்த இனிய வாழ்வை நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி சிவா.

கவிதையை அலச முன்வந்து பதில்தந்த கவீக்கும் நன்றி.

praveen
03-10-2008, 09:55 AM
8. பிரவீண்:
உங்களை மிகவும் கவர்ந்த இணையத்தளம் ஒன்றைக்குறித்தும், மிகவும் பலனுள்ளது என கருதும் இணையத்தளம் குறித்தும் அறியத்தாருங்கள்.


நான் கணிப்பொறியாளன் ஆதலால் எனது துறை சம்பந்தமாக தினமும் பல தளங்களுக்கு செல்வதுண்டு. எனவே குறிப்பிட்ட மற்றும் எனக்கு பிடித்த இணயத்தளம் என்றால் அது தமிழ்மன்றமே. வேறு எந்த தளமும் நான் தினமும் பெரு விருப்பத்துடன் அனைத்து இடத்திலும் இருந்து சென்று பார்ப்பதில்லை. மற்றபடி அநேக இந்திய தளங்களில் மெம்பராக இருக்கிறேன் என்றாலும் மற்றவை என்னை கவர்ந்ததாகவோ அல்லது நான் அங்கே பங்களித்ததோ இல்லை என்பதே உண்மை. ஒவ்வொரு தளத்திலும் மொபைல் போனுக்காக அல்லது சினிமா பாடல்களுக்காக அல்லது வேறு பல மென்பொருள்களுக்க்காக என்று உறுப்பினாராக இருக்கிறேன். இங்கே மட்டும் தான் எனது மனதிருப்திக்காக உறுப்பினராக இருக்கிறேன்.

மிகவும் பயனுள்ளதும் நான் எங்கே சென்றாலும், இங்கே இருந்து தான் இனையத்தை தொடங்குவேன் என்றால் அது கூகிள் தளம் தான். ஆம் கூகிள் தளம் மூலமே நான் எந்த புது விசயம்/தளத்தையும் தேடுவேன். முழு தள முகவரி கிடைத்தாலும் நான் கூகிள் சர்ச்ல் இட்டு (அதிர்ஸ்டம் என் பக்கம் என்பதை அழுத்தி) தான் பின் செல்வேன். சில நேரம் ஒரு எழுத்து மாறியிருந்தாலும் வேறு விசம தளத்திற்கு உலாவி கொண்டுசெல்வதை அறிந்திருக்கிறேன். எனவே எனது கணினியாக இருந்தாலும் எனது மதிப்பு வாய்ந்த வாடிக்கையாளர்கள் கணினியிலும் நான் கூகிள் தளம் மூலமே முதல் பிரவுஸ் செய்வேன்.

மேலும் கூகிள் தள சேர்ச் மூலமே நான் பல விசயங்களை தினமும் பெறுகிறேன். பிரவுசரை திறந்த உடனே என் கை தானகவே கூகிள்.கோ.இன் என டைப் செய்து விடும் அளவிற்கு கூகிள் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளேன். அது இதுவரை பொய்த்ததில்லை.

பாரதி
03-10-2008, 11:15 AM
அட... என்ன வியப்பு! லியோமோகனைப்போன்றே நீங்களும் உங்கள் மனதில் தமிழ்மன்றத்திற்கு தந்திருக்கும் இடத்தைப்பார்த்து மகிழ்கிறேன். அது மட்டுமன்றி உங்களைப்போலவே ஒவ்வொரு நாளும் நானும் செல்லும் கூகிள் தேடுபொறி உங்களையும் கவர்ந்திருப்பது திருப்தி அளிக்கிறது.

உடனே வந்து வினாவிற்குரிய பதில் அளித்தமைக்கும் தமிழ்மன்றத்தில் நீங்கள் வைத்திருக்கும் பற்றிற்கும் என் மனமார்ந்த நன்றி பிரவீண்.

ராஜா
03-10-2008, 03:37 PM
சிறப்பான கேள்விகளுக்கு சிந்தை அள்ளும் பதில்கள்..!

நன்றி நண்பர்களே..!

பென்ஸ்
03-10-2008, 04:16 PM
நன்றி பாரதி அவர்களே.

...........................................

நன்றி பாரதி அவர்களே.


மோகன்....
ராஜாவின் ஆ...பத்து நல்ல பணியைதான் செய்து கொண்டிருக்கிறது...
பாரதியின் கேள்விகள் சரியாக , சரியான நபரை கேட்டதாலோ...இல்லை, எந்த கேள்விக்கும் சரியான பதில் கொடுக்கும் திறன் உங்களிடம் இருப்பதாலோ, உங்கள் பதிலின் பாதிப்பு அதிகமாகவே இருந்தது...
"கேள்வி கேக்குறது சுலபம், பதில் சொல்லுறது கஷ்டம்.." அப்படின்னு சொல்லலாம், ஆனா நீங்க இந்த வாக்கியத்தை போய்யாக்கியதால், நானும் எத்துனை வேகமாக பதில் சொல்லவேண்டுமோ அத்தனை வேகமாக சொல்லனும்....
இனையம் வந்த புதிதில் நானும் பல இடங்களுக்கு சென்றேன், ஆனால் தமிழ் மன்றத்தில் நிலையாய் இருக்க வைத்துவிட்டது தமிழ்....
ஆனால் தொடர்ந்து பல இடங்களில் சமமாக பங்களித்து வந்த நீங்கள் மேலே கூறிய ஒவ்வொன்றிக்கும் என் தலை "ஆமா" என்று அசைந்தது...
வாழ்த்துகள்...

பென்ஸ்
03-10-2008, 04:19 PM
கூகிள் தளம் மூலமே நான் எந்த புது விசயம்/தளத்தையும் தேடுவேன். முழு தள முகவரி கிடைத்தாலும் நான் கூகிள் சர்ச்ல் இட்டு (அதிர்ஸ்டம் என் பக்கம் என்பதை அழுத்தி) தான் பின் செல்வேன். சில நேரம் ஒரு எழுத்து மாறியிருந்தாலும் வேறு விசம தளத்திற்கு உலாவி கொண்டுசெல்வதை அறிந்திருக்கிறேன். எனவே எனது கணினியாக இருந்தாலும் எனது மதிப்பு வாய்ந்த வாடிக்கையாளர்கள் கணினியிலும் நான் கூகிள் தளம் மூலமே முதல் பிரவுஸ் செய்வேன்.

மேலும் கூகிள் தள சேர்ச் மூலமே நான் பல விசயங்களை தினமும் பெறுகிறேன். பிரவுசரை திறந்த உடனே என் கை தானகவே கூகிள்.கோ.இன் என டைப் செய்து விடும் அளவிற்கு கூகிள் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளேன். அது இதுவரை பொய்த்ததில்லை.

அதே.. அதே....
பிரவின்... பாருங்க இருவர் வேறு வேறு இடத்தில் இருந்து ஒரே மாதிரியாண செயலை செய்கிறொம்....
வியப்பும் விந்தையும்தான்.. ஆனால் உண்மை...

leomohan
03-10-2008, 07:35 PM
உங்களின் பணிப்பளுவிலும் வினாவிற்கு நேரம் ஒதுக்கி உடனே விரிவாக பதில் அளித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி மோகன்.

உங்களின் புத்தகப்பணிகளுக்கு முன்பாகவே சிறுவர் சங்கம், கையெழுத்துப்பிரதி, நூலகம், இணையத்தில் தமிழாக்கப்பணிகள், மின் நூல்கள் என பல விடயங்களிலும் உங்களின் பங்களிப்பு வியப்பை ஊட்டுகிறது. உங்களைப்போன்றவர்கள் இணைந்திருப்பதால் தமிழ்மன்றமும் உவகை கொள்கிறது; நாங்களும் பெருமை கொள்கிறோம்.

நேரமும் வாய்ப்பும் அமையும் சமயத்தில் உங்கள் படைப்புகளைத் தமிழ்மன்றத்தில் தொடருங்கள். என் சந்தேகத்தைத் தீர்த்தமைக்கு மிக்க நன்றி மோகன்.

ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக புதியதாக எதுவும் எழுதவில்லை. கற்பனை செத்துவிட்டதோ என்று பயமாக இருக்கிறது. இதுவரை எழுதியதை விட நன்றாக எழுதவேண்டும் என்ற பாரம் இருக்கிறது. நல்ல கருவிற்கு மனம் ஏங்குகிறது. ஒருவேளை Technical Writing என்று Gear மாற்றியதால் வந்த விவகாரமோ என்று தோன்றுகிறது.

Management Science in Mahabharat எனும் தலைப்பில் எழுத தகவல் சேகரித்துக் கொண்டிருந்தேன். அதுவும் தடைபட்டுவிட்டது. இடையில் இரண்டு அருமையான Projectகளில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்ததால் பல ஆண்டுகளுக்கு பிறகு வேலையிலும் ஆர்வம் அதிகரித்துவிட்டது. Mid-Career Crisis வேறு வந்து தொளைக்கிறது. தாயகம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஓங்கி வளர ஆரம்பித்துவிட்டது.

இந்த சூழலில் புதியதாக எழுத மனம் வரவில்லை.

எழுதினால் கட்டாயம் இங்கு பதிப்பேன்.

கை தட்டுவதற்கும் தலையில் குட்டுவதற்கும் இளசு அண்ணா பென்ஸ் பாரதி ஆரென் ஓவியா அமரன் அன்புரசிகன் மனோஜ் சிவா.ஜி தாமரை அண்ணா மதி லொள்ளு வாத்தியார் மோகன் காந்தி ஐயா செல்வமுரளி ஏஆர்ஆர் ஐயா என்று பெரிய குடும்பமே இருக்கிறது மன்றத்தில். விடுபட்டவர்கள் உதைக்க வேண்டாம். :lachen001:

leomohan
03-10-2008, 07:37 PM
மோகன்....
ராஜாவின் ஆ...பத்து நல்ல பணியைதான் செய்து கொண்டிருக்கிறது...
பாரதியின் கேள்விகள் சரியாக , சரியான நபரை கேட்டதாலோ...இல்லை, எந்த கேள்விக்கும் சரியான பதில் கொடுக்கும் திறன் உங்களிடம் இருப்பதாலோ, உங்கள் பதிலின் பாதிப்பு அதிகமாகவே இருந்தது...
"கேள்வி கேக்குறது சுலபம், பதில் சொல்லுறது கஷ்டம்.." அப்படின்னு சொல்லலாம், ஆனா நீங்க இந்த வாக்கியத்தை போய்யாக்கியதால், நானும் எத்துனை வேகமாக பதில் சொல்லவேண்டுமோ அத்தனை வேகமாக சொல்லனும்....
இனையம் வந்த புதிதில் நானும் பல இடங்களுக்கு சென்றேன், ஆனால் தமிழ் மன்றத்தில் நிலையாய் இருக்க வைத்துவிட்டது தமிழ்....
ஆனால் தொடர்ந்து பல இடங்களில் சமமாக பங்களித்து வந்த நீங்கள் மேலே கூறிய ஒவ்வொன்றிக்கும் என் தலை "ஆமா" என்று அசைந்தது...
வாழ்த்துகள்...

நன்றி பென்ஸ். உண்மைக்கு ஞாபக சக்தி தேவையில்லை என்று Four Frames கல்யாணம் (முன்பு Good Luck கல்யாணம்) அவர்கள் அடிக்கடி கூறுவார். சுஜாதா பிலிம்ஸ் ப்ரவ்யூ தியேட்டரின் தரை தளத்தில் எங்கள் அலுவலகம் இருந்த காலம் அது. அவரிடம் கற்பதற்கு முன்பே நான் இதை பின்பற்றி வந்தாலும் நச் என்று ஒருவரியில் - உண்மைக்கு ஞாபக சக்தி தேவையில்லை. அதனால் மனதில் இருப்பதை அப்படியே எழுதினேன். அவ்வளவே.

Keelai Naadaan
05-10-2008, 04:03 PM
அன்பிற்கினிய நண்பர் பாரதிக்கு,
தங்களின் கேள்வி வட்டத்தில் என்னையும் இணைத்தமைக்கு மிக்க நன்றி.

தங்களின் வினா:
சிறுகதைகளை இப்படித்தான் எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்போது உங்களுக்குத் தோன்றியது?

எப்போது என சரியாக நினைவில்லை. 90-களில் இருக்கலாம்.
பள்ளி பருவத்திலேயே கதைகள் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது.
நம்முடைய எழுத்துலக முன்னோர்கள் பலரின் கதையை படிக்கும் போது அதில் ஒரு ஈர்ப்பு, பாதிப்பு ஏற்பட்டது. முதலில் நாவல்கள் தான் அதிகம் படித்தேன். ஓரளவுக்கு பழம்பெரும் எழுத்துலக பிரம்மாக்கள் பலரின் நாவலையும் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அவற்றை படிக்கும்போது அதில் சொல்லப்படும் வர்ணணைகள், செய்திகள் எனக்கும் எழுத ஆசைமூட்டியது.
ஒருமுறை தமிழ் துணைப்பாட நூலில் சிறுகதைகள் படித்த போது அந்த கதைகள் மனதில் ஆழமாய் பதிந்தது.
இளம் வயதில் என்னை பாதித்த சில சிறுகதைகள்..
ஒருபிடி சோறு - ஞானபீட தந்தை ஜெயகாந்தன்
நொண்டி பிள்ளையார் - ஜெகசிற்பியன்
கேதாரியின் தாயார் - கல்கி
காண்டாமணி - தி.ஜானகிராமன்
உண்மையே உன் விலை என்ன - சோ
இன்னும் சில.
இவை உண்மையிலேயே மிகவும் அற்புதமான கதைகள். இளம் வயதில் இவற்றை படித்ததால் இவற்றின் பாதிப்பு அதிகம்.
கேதாரியின் தாயார் படித்து விட்டு அழுததாக நினைவு. சிறுகதை சொல்லும் உத்தி அவர்களிடமிருந்துதான் அறிந்தேன் என சொல்லலாம்.
எழுது ஆரம்பித்த பின்பு, இப்படித்தான் எழுத வேண்டும் என நினைத்தது...!! சரியாக தெரியவில்லை. இருப்பினும் மனதில் பதிந்த சிலவற்றை சொல்ல ஆசை.

கதையில் பெண்களை படைக்கும் போது அவர்களை உங்கள் தாயாகவும் சகோதரியாகவும் நினைத்து எழுதுங்கள் - காந்தி

"எங்கே போகிறோம்" என்ற அகிலனின் கதையில் வரும் ஒரு ஏழை எழுத்தாளர் கதாபாத்திரம் காசுக்காக கண்டதையும் எழுத மாட்டேன் என்ற நிலையில் பேசும் ஒரு வசனம் "எழுது கோல் தெய்வமடா"

"படத்தில் சரியானதை சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. தவறானதை நியாயப்படுத்தாதே" பாக்யராஜ் பாண்டியராஜனுக்கு சொன்னதாக படித்த நினைவு.

மேற்கண்ட வார்த்தைகள் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.
மேலும் பல எழுத்தாளர்களின் கதைகளை படிக்கும்போது அந்த கதை நம் கண்முன்னே நடப்பதை போலவே இருக்கும்.
அந்த மாதிரி எழுதும் போது மனதில் ஆழமாய் பதியும் என உணர்ந்துள்ளேன்

அவற்றை சொல்ல ஆரம்பித்தால் தனி திரியே தொடங்க வேண்டும். எனக்கும் கதைகளைப் பற்றி சிலாகித்து பேச தனி திரி தொடங்க ஆசை.
நண்பர்களின் அபிப்ராயம் அறிய ஆவல்.

நீங்கள் கேட்ட கேள்விக்கு சரியான பதிலை தந்துள்ளேனா என தெரியவில்லை. மனதில் பட்டதை சொன்னேன்.
மன்றத்தில் நான் இரண்டு கதைகள் மட்டுமே பதிந்துள்ளேன். என்னிடம் இந்த கேள்வியை கேட்டமைக்கு மிகவும் நன்றி.
இதை என் கதைக்கான அங்கீகாரமாக பாராட்டாக எண்ணி மகிழ்கிறேன்.

இளசு
05-10-2008, 04:09 PM
போன பக்கத்தில் உதயசூரியன், அமரன், முகிலன் பதில்கள்
இந்தப்பக்கத்தில் லியோமோகன், சிவாஜி, பிரவீண் பதில்கள்
என எல்லாமும் வாசித்துப் பிரமித்தாலும், --
பணிப்பளுவால் என்னால் விரிவாய்ப் பின்னூட்டம் தர இயலாமல்
தள்ளிப்போய்விட்டது..

ஒவ்வொருவரின் ஆழ்ந்த பதிலும் படித்தேன்.. அறிந்தேன்..
மதித்தேன்.. இரசித்தேன்.. பாராட்டுகள் அனைவருக்கும்!



பேரிதயப்பாரதியின் அருமையான வினாப்பட்டியலில்
எனக்கும் ஓரிடம்.. நன்றி பாரதி!




10. இளசு அண்ணா:
இத்தனை ஆண்டுகால மருத்துவப்பணியில் உங்களுக்கு முழு மன நிறைவு அளித்த நிகழ்வு குறித்து நினைவு கூற முடியுமா அண்ணா..?(கூடவே இந்த சந்தேகத்தையும் தீர்க்க முடியுமா அண்ணா...? மருத்துவப்பணியில் இருப்பவர்கள் குறித்து கூறும் போது " அவர் டாக்டரா பிராக்டீஸ் செய்கிறார்" எனக்கூற என்ன காரணம்?)

இத்தனை ஆண்டு உண்டவற்றில் முழு திருப்தி அளித்த உணவு எது எனக் கேட்டால்?

தினசரிப் பணி அப்படி தினமும் உண்பது போல் இன்றியமையாத நிகழ்வாகிவிட்டது பாரதி..

பல சிறப்பு நிறைவுகள்..

பதிலுக்காக என் மனக்கூடையில் கிளறினால்..
பல நினைவுகள்.. நிழலாடல்கள்.

எடுத்துக்காட்டாய் ஒன்று :

அவருக்கு தென் தமிழகத்தில் வாசம்.
வயது 50க்கும் மேல்.
ஆயுசுக்கும் அவருக்கு ''சீதபேதி''.
வாரக்கணக்கில் - நாளொன்றுக்கு பலமுறை..
இரத்தமும் சீதமும் கலந்து...
தீராத , மீண்டும் மீண்டும் வீறுகொண்டு தாக்கும் கொடுமை..

பல பேரைப் பார்த்தாயிற்று..
மல சோதனை.. அமீபியாஸிஸ் அல்லது பேக்டீரியல் டிசண்ட்டரி என
பல முறை ''ஆண்ட்டிபயாடிக்'' சிகிச்சைகள்..

கொஞ்சம் தேறுவார்.. மீண்டும் சறுக்குவார்..
உடல் நலிந்துகொண்டே போனது..

என்னிடம் வந்த அன்றே ''Colonoscopy'' செய்து, அவருக்கு
''Ulcerative Colitis'' என்ற பெருங்குடல் அழற்சிநோயைக் கண்டறிந்தேன்.

அவருடைய நோயின் தீவிரத்துக்கேற்ற சிகிச்சை பரிந்துரைத்தேன்.
ஓரிரு நாளில் மீண்டும் வந்து பார்க்கச் சொன்னேன்.
மருத்துவமனை இருந்த ஊரிலேயே அவர் உறவினர் வீட்டில் அன்றிரவு தங்கியவர்...

அடுத்த நாள் என்னப்பார்க்க வந்தவுடன்,
அவரினும் சிறியவனான என் பாதம் பணிய வந்தார்.
நான் பதறி எழுத்து தோள்தாங்கி நிறுத்தினேன்.

அவர் முகத்தில் தெளிவு.. தேஜஸ்.. கொஞ்சமாய் அரும்பிய ஆனந்தக்கண்ணீர்..

ஒரு நாள் சரியான மருந்து உட்கொண்ட மாத்திரத்தில்
அவர் உள்ளமும் உடலும் உய்த்துணர்ந்துகொண்டன -
இனி உய்வோம் என..

'அச்சிகிச்சை குடல் உபாதையை மட்டுமன்றி, அவரின் மொத்த உடலும் மனமும் இதுநாளும் அனுபவித்த சொல்லொணா
ஓர் தளர்ச்சியையும் நீக்கத்தொடங்கிவிட்டதன் உற்சாகத் தொடக்கம் அது..

அவர் கேட்டார்: ஏன்? இத்தனை நாளும் இப்படி யாரும் செய்யவில்லை?

என் மேல் விழுந்த மழைத்துளியே பாடலை விஞ்சிய வினா அது!

நான் சொன்னேன் : சரியான இடம், சரியான நபர்.. எனப் பொருந்த நேற்றுவரை ஆனது. என் மேலை அனுபவம், நான் கையாளக்கற்றக் கருவி..இவையே இது கைக்கூடக் காரணங்கள்..

சில ஆண்டுகள் முன்புவரை நானும் உங்களுக்கு இன்னொரு '' கோர்ஸ் ஆண்ட்டிபயாடிக்'' கொடுத்தே அனுப்பியிருப்பேன்..

இன்றும் அவர் நல்ல நலம்..

இதுபோல் கோவை முதல் தஞ்சை வரை பல '' விருந்து'' அனுபவ முழு நிறைவுகள் நிறைய..

பகிர நேரம் இல்லாத பஞ்சம் மட்டுமே , பாரதி!

-----------------------------------------------------

கல்வி பெரிது.. வாழ்வு சிறிது!
ஹிப்போகிரேட்ஸ் சொன்னது..

நான் படிக்கும்போது '' எயிட்ஸ்'' நோய் நூலில் இல்லை..
எம் ஆர் ஐ ஸ்கேன் இல்லை..
இன்று அந்த அறிதல்கள் முழுமையாய் என் பயன்பாட்டில்..

நாளை வரக்கூடியவையும்
நாளை மறுநாள் என் பயன்பாட்டில் -
எனவே நான் அறிந்துகொண்டே இருக்க வேண்டும்!

கடைசி நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கும்வரை
கற்றலும் தேறலும் அவசியம்.. மிக மிக அவசியம்..

அதனால் முழுநேரத் தொழிலுமே எங்களுக்குப் '' பயிற்சி'தான்..

ஒரே கருவிபோல் பல செய்யலாம்..
ஒரே கட்டடம் போல பல கட்டலாம்..

ஒரே வகை மனிதர் என இல்லை!

ஒருவர் போல் மற்றவர் இல்லை என்பதைத் தவிர ஒற்றுமை மனிதரில் இல்லை!

ஒரு இருபது வயது இளைஞனுக்கு வந்த நிமோனியாவுக்கும்
எண்பது வயது முதியவருக்கு வந்த நிமோனியாவுக்கும்
ஒரே சிகிச்சை பொருந்தாது..

இரு சமய வயது பெண்களுக்கு வந்த அனிமீயா
இரு வேறு துருவங்களான காரணிகளால் இருக்கலாம்..

இன்று அந்த சிகிச்சையைத் தாங்கிய இந்நபர்
நாளை அதே சிகிச்சையால் ஊறு அடையலாம்..

மாறா மாற்றங்கள் நிறைந்த இத்தொழிலை -
என்றுமே பயிற்சி என்றழைப்பது நியாயமே!

( இன்று என் பயணம்.. இன்னும் ஐந்து நாட்கள் பயிற்சிக்காக வெளியூருக்கு.. அதுவரை எனக்கு மன்ற விடுமுறை..)

இப்போது சொல் பாரதி..

இந்த சொல்வழக்கு நியாயந்தானே!

-----------------------------------------

சில வகை நோய்கள், அதன் தீர்வுகள்
பலவகை மனிதர்கள் - போல்

சில வகைக் குற்றங்கள், சட்டங்கள்
பலவகை மனிதர்களை அணுகும்
வழக்குரைஞர்களும் '' பிராக்டீஸ்தான்'' செய்கிறார்கள் -
கவனித்தீர்களா நண்பர்களே!

-------------------------------

விடுப்புக்குப் பின் சந்திப்போம்!

செல்வா
05-10-2008, 04:25 PM
மன்றத்தில் நான் இரண்டு கதைகள் மட்டுமே பதிந்துள்ளேன். என்னிடம் இந்த கேள்வியை கேட்டமைக்கு மிகவும் நன்றி.
இதை என் கதைக்கான அங்கீகாரமாக பாராட்டாக எண்ணி மகிழ்கிறேன்.
தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் நண்பரே... நான் அதிகமாகச் சிறுகதைகள் வாசிப்பதில்லை... வாசித்தாலும் விரைவில் மறந்து விடுவேன் சில கதைகள் மட்டும் என்மனதில் நீங்கா இடம் பிடிக்கும். அந்த வகையில் உங்களின் தேடல் சிறுகதை என் மனதை மிகக் கவர்ந்தது பல இடங்களில் இதை நான் சொல்லியிருக்கிறேன்.

கவலைப்படாமல் இன்னும் நிறைய எழுதுங்கள்.

பாரதி
05-10-2008, 04:58 PM
சிறுகதைகளை இப்படித்தான் எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்போது உங்களுக்குத் தோன்றியது?

எப்போது என சரியாக நினைவில்லை. 90-களில் இருக்கலாம்.
பள்ளி பருவத்திலேயே கதைகள் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது.
நம்முடைய எழுத்துலக முன்னோர்கள் பலரின் கதையை படிக்கும் போது அதில் ஒரு ஈர்ப்பு, பாதிப்பு ஏற்பட்டது. முதலில் நாவல்கள் தான் அதிகம் படித்தேன். ஓரளவுக்கு பழம்பெரும் எழுத்துலக பிரம்மாக்கள் பலரின் நாவலையும் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அவற்றை படிக்கும்போது அதில் சொல்லப்படும் வர்ணணைகள், செய்திகள் எனக்கும் எழுத ஆசைமூட்டியது.
ஒருமுறை தமிழ் துணைப்பாட நூலில் சிறுகதைகள் படித்த போது அந்த கதைகள் மனதில் ஆழமாய் பதிந்தது.
இளம் வயதில் என்னை பாதித்த சில சிறுகதைகள்..
ஒருபிடி சோறு - ஞானபீட தந்தை ஜெயகாந்தன்
நொண்டி பிள்ளையார் - ஜெகசிற்பியன்
கேதாரியின் தாயார் - கல்கி
காண்டாமணி - தி.ஜானகிராமன்
உண்மையே உன் விலை என்ன - சோ
இன்னும் சில.
இவை உண்மையிலேயே மிகவும் அற்புதமான கதைகள். இளம் வயதில் இவற்றை படித்ததால் இவற்றின் பாதிப்பு அதிகம்.
கேதாரியின் தாயார் படித்து விட்டு அழுததாக நினைவு. சிறுகதை சொல்லும் உத்தி அவர்களிடமிருந்துதான் அறிந்தேன் என சொல்லலாம்.
எழுது ஆரம்பித்த பின்பு, இப்படித்தான் எழுத வேண்டும் என நினைத்தது...!! சரியாக தெரியவில்லை. இருப்பினும் மனதில் பதிந்த சிலவற்றை சொல்ல ஆசை.

கதையில் பெண்களை படைக்கும் போது அவர்களை உங்கள் தாயாகவும் சகோதரியாகவும் நினைத்து எழுதுங்கள் - காந்தி

"எங்கே போகிறோம்" என்ற அகிலனின் கதையில் வரும் ஒரு ஏழை எழுத்தாளர் கதாபாத்திரம் காசுக்காக கண்டதையும் எழுத மாட்டேன் என்ற நிலையில் பேசும் ஒரு வசனம் "எழுது கோல் தெய்வமடா"

"படத்தில் சரியானதை சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. தவறானதை நியாயப்படுத்தாதே" பாக்யராஜ் பாண்டியராஜனுக்கு சொன்னதாக படித்த நினைவு.

மேற்கண்ட வார்த்தைகள் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.
மேலும் பல எழுத்தாளர்களின் கதைகளை படிக்கும்போது அந்த கதை நம் கண்முன்னே நடப்பதை போலவே இருக்கும்.
அந்த மாதிரி எழுதும் போது மனதில் ஆழமாய் பதியும் என உணர்ந்துள்ளேன்

அவற்றை சொல்ல ஆரம்பித்தால் தனி திரியே தொடங்க வேண்டும். எனக்கும் கதைகளைப் பற்றி சிலாகித்து பேச தனி திரி தொடங்க ஆசை.
நண்பர்களின் அபிப்ராயம் அறிய ஆவல்.

நீங்கள் கேட்ட கேள்விக்கு சரியான பதிலை தந்துள்ளேனா என தெரியவில்லை. மனதில் பட்டதை சொன்னேன்.
மன்றத்தில் நான் இரண்டு கதைகள் மட்டுமே பதிந்துள்ளேன். என்னிடம் இந்த கேள்வியை கேட்டமைக்கு மிகவும் நன்றி.
இதை என் கதைக்கான அங்கீகாரமாக பாராட்டாக எண்ணி மகிழ்கிறேன்.

அன்பு நண்பரே,

விளக்கமான விடைக்கு நன்றி.

உங்களின் மனவோட்டத்தில் உங்களை பாதித்த கதாசிரியர்கள் யார் என்பதையும் எங்களால் அறிந்து கொள்ள முடிந்தது.

நல்லதை நினைத்து, நல்லதையே படைக்க வேண்டும் என்ற எண்ணத்தை உங்களுக்குள் விதைத்த கதைகளுக்கும் அவற்றின் ஆசிரியர்களுக்கும், நல்ல படங்களின் மூலம் நல்கருத்துக்களை தர விளைந்த படைப்பாளிகளுக்கும் நன்றி. இது மன்ற உறவுகள் சிலருக்கும் கதைகள் எழுதும் போது பயன்படக்கூடும்.

இரண்டு கதைகள் மட்டும் என்பது முக்கியமல்ல; எழுதியவை உங்களுக்கு மன திருப்தியையும், படித்தவர்களுக்கு ஒரு கணமாவது சிந்திக்க வைக்கக்கூடிய கருத்துக்களை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும். எண்ணிக்கை ஒரு பொருட்டல்ல, எண்ணம்தான் முக்கியம்.
உங்களின் 'தேடல்' உண்மையான திருப்தியை அனைவருக்கும் வழங்கட்டும்.

மன்றத்தில் சிறுகதைகள் படைத்துவரும் எல்லா உறவுகளையும் இந்த சமயத்தில் நினைவுகூர்ந்து பாராட்டுகிறேன் - வாழ்த்துகிறேன்.

வினாவிற்கான சரியான விடையைக் கண்டதையும், தொடர்ந்து பிழையின்றி உங்கள் பதிவுகள் அமைவதையும் எண்ணி மகிழ்கிறேன்.

உங்கள் விருப்பப்படியே உங்கள் எண்ணங்களைக்கூற தனித்திரி தொடங்கலாம் நண்பரே.

மீண்டும் நன்றி.

பாரதி
05-10-2008, 05:23 PM
இத்தனை ஆண்டு உண்டவற்றில் முழு திருப்தி அளித்த உணவு எது எனக் கேட்டால்?

தினசரிப் பணி அப்படி தினமும் உண்பது போல் இன்றியமையாத நிகழ்வாகிவிட்டது பாரதி..

பல சிறப்பு நிறைவுகள்..

பதிலுக்காக என் மனக்கூடையில் கிளறினால்..
பல நினைவுகள்.. நிழலாடல்கள்.

எடுத்துக்காட்டாய் ஒன்று :

''Ulcerative Colitis'' என்ற பெருங்குடல் அழற்சிநோயைக் கண்டறிந்தேன்.

அவருடைய நோயின் தீவிரத்துக்கேற்ற சிகிச்சை பரிந்துரைத்தேன்.
ஓரிரு நாளில் மீண்டும் வந்து பார்க்கச் சொன்னேன்.

அடுத்த நாள் என்னப்பார்க்க வந்தவுடன்,
அவரினும் சிறியவனான என் பாதம் பணிய வந்தார்.
நான் பதறி எழுத்து தோள்தாங்கி நிறுத்தினேன்.

அவர் முகத்தில் தெளிவு.. தேஜஸ்.. கொஞ்சமாய் அரும்பிய ஆனந்தக்கண்ணீர்..

ஒரு நாள் சரியான மருந்து உட்கொண்ட மாத்திரத்தில்
அவர் உள்ளமும் உடலும் உய்த்துணர்ந்துகொண்டன -
இனி உய்வோம் என..

அவர் கேட்டார்: ஏன்? இத்தனை நாளும் இப்படி யாரும் செய்யவில்லை?

என் மேல் விழுந்த மழைத்துளியே பாடலை விஞ்சிய வினா அது!

நான் சொன்னேன் : சரியான இடம், சரியான நபர்.. எனப் பொருந்த நேற்றுவரை ஆனது. என் மேலை அனுபவம், நான் கையாளக்கற்றக் கருவி..இவையே இது கைக்கூடக் காரணங்கள்..

சில ஆண்டுகள் முன்புவரை நானும் உங்களுக்கு இன்னொரு '' கோர்ஸ் ஆண்ட்டிபயாடிக்'' கொடுத்தே அனுப்பியிருப்பேன்..

பகிர நேரம் இல்லாத பஞ்சம் மட்டுமே , பாரதி!

-----------------------------------------------------

கல்வி பெரிது.. வாழ்வு சிறிது!
ஹிப்போகிரேட்ஸ் சொன்னது..

நான் படிக்கும்போது '' எயிட்ஸ்'' நோய் நூலில் இல்லை..
எம் ஆர் ஐ ஸ்கேன் இல்லை..
இன்று அந்த அறிதல்கள் முழுமையாய் என் பயன்பாட்டில்..

நாளை வரக்கூடியவையும்
நாளை மறுநாள் என் பயன்பாட்டில் -
எனவே நான் அறிந்துகொண்டே இருக்க வேண்டும்!

கடைசி நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கும்வரை
கற்றலும் தேறலும் அவசியம்.. மிக மிக அவசியம்..

அதனால் முழுநேரத் தொழிலுமே எங்களுக்குப் ''பயிற்சி'தான்..

ஒரே கருவிபோல் பல செய்யலாம்..
ஒரே கட்டடம் போல பல கட்டலாம்..

ஒரே வகை மனிதர் என இல்லை!

ஒருவர் போல் மற்றவர் இல்லை என்பதைத் தவிர ஒற்றுமை மனிதரில் இல்லை!

ஒரு இருபது வயது இளைஞனுக்கு வந்த நிமோனியாவுக்கும்
எண்பது வயது முதியவருக்கு வந்த நிமோனியாவுக்கும்
ஒரே சிகிச்சை பொருந்தாது..

இரு சமய வயது பெண்களுக்கு வந்த அனிமீயா
இரு வேறு துருவங்களான காரணிகளால் இருக்கலாம்..

இன்று அந்த சிகிச்சையைத் தாங்கிய இந்நபர்
நாளை அதே சிகிச்சையால் ஊறு அடையலாம்..

மாறா மாற்றங்கள் நிறைந்த இத்தொழிலை -
என்றுமே பயிற்சி என்றழைப்பது நியாயமே!

( இன்று என் பயணம்.. இன்னும் ஐந்து நாட்கள் பயிற்சிக்காக வெளியூருக்கு.. அதுவரை எனக்கு மன்ற விடுமுறை..)

இப்போது சொல் பாரதி..

இந்த சொல்வழக்கு நியாயந்தானே!

-----------------------------------------

சில வகை நோய்கள், அதன் தீர்வுகள்
பலவகை மனிதர்கள் - போல்

சில வகைக் குற்றங்கள், சட்டங்கள்
பலவகை மனிதர்களை அணுகும்
வழக்குரைஞர்களும் '' பிராக்டீஸ்தான்'' செய்கிறார்கள் -
கவனித்தீர்களா நண்பர்களே!

-------------------------------

விடுப்புக்குப் பின் சந்திப்போம்!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எதிர்பார்த்திருந்தாலும் எப்போதையும் போல எல்லாவற்றையும் விஞ்சி விடுகிறது உங்கள் பதில்!

பஞ்சம் இல்லா நேரம் உங்களுக்கு வாய்த்து, பலவற்றையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

பொதுவாக., நீங்கள் கூறியபடியே பலரும் "ஏன் இதுவரை யாரும் இப்படி செய்யவில்லை?" என்ற எண்ணத்தில் உள்ளவர்கள்தான். உங்கள் பதில் அந்த தவறான கண்ணோட்டத்தை சீர் செய்ய உதவும் அண்ணா.

'செய்யும் தொழிலே தெய்வம்' என்பதை தவறாமல் கடைபிடித்து வரும்
உங்களைப்போல "கைராசி" மருத்துவர்கள் கிடைக்க மன்றமும் இந்த மண்ணும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

உங்களை விருந்துகளால் மட்டுமல்ல, விருதுகளாலும் நிறைக்க வைக்க எதிர்காலம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

பயிற்சி குறித்து எங்களுக்கு விளக்கமளித்த உங்கள் பதில் வெகு நேர்த்தி அண்ணா. தொடர்ந்து கற்றுக்கொள்ளுதலும்,
கைரேகையும் கண்மணியும் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதருமே தனித்துவம் கொண்டவர்கள்தான்' அதனால் தனிப்பட்ட நபர்களுக்கு தனித்தனி தீர்வுகள் என்ற முறையில் நோய்தீர்க்க முயலும் அணுகுமுறையும் வியக்க வைக்கின்றன அண்ணா.

அத்தனைப்பணிப்பளுவிலும் எங்களுக்கும் இடம் ஒதுக்கி, சிறப்பான பதில் தந்து காலமெல்லாம் அன்பில் ஆட்டிப்படைத்து வரும் அண்ணனுக்கு அன்பு.

உங்கள் விடுப்பும் அதில் பெற-தரப்போகும் பயிற்சியும் உங்களுக்கு மன நிறைவை வழங்கட்டும் அண்ணா. எல்லாம் நல்லபடியாக நடக்கும். சென்று வாருங்கள் அண்ணா.

leomohan
05-10-2008, 08:33 PM
என் மேல் விழுந்த மழைத்துளியே.....நெஞ்சை தொட்ட பதில் இளசு அண்ணா. உங்கள் பணி அளப்பரியது.

சிவா.ஜி
06-10-2008, 04:07 AM
மோகனின் பதிலில் அவரது தேர்ந்த, தெளிந்த அறிவார்த்தமான வெளிப்பாட்டைக் காணமுடிந்தது. எப்போதுமே என்னை பிரமிக்க வைக்கும் சிறந்த சிந்தனையாளர் மோகன். மிகச் சிறந்த படைப்பாளி. எல்லாவற்றுக்கும் மேல் உண்மையாளர். வாழ்த்துகள் மோகன்.

கீழைநாடானின், தேடலை எங்கிருந்து தொடங்கினாரென்று அறியும்போது மிகப் பெரிய மரியாதை அவர்மீது உருவாகிறது. நல்ல கதை சொல்லியாய் மேலும் சிறப்புற வாழ்த்துகள்.

இளசுவின் பதில்.....சிகரம். நீண்ட காலமாய் அவதிப்பட்டு, நல்ல கைகளின் ஆதரவான தடவல் கிடைத்து, நிம்மதியடையும்போது அனைவர் மனதிலும் எழும் கேள்வி..."இதுவரை ஏன் யாரும் இதை செய்யவில்லை?" எல்லோருக்கும் கிடைக்குமா இந்த மைதாஸ் தொடுதல்? சிலிர்க்க வைக்கிறது உங்கள் சேவைகளின் வீச்சு. பிரமிக்க வைக்கிறது பதிலின் இரண்டாம் பாகம். கற்றுக்கொள்வதும், அதை கடைபிடிப்பதும், வாழ்நாள் முழுதும் தொடரும் வேள்விதானே. அருமை இளசு.

தாமரை
06-10-2008, 06:17 AM
Management Science in Mahabharat எனும் தலைப்பில் எழுத தகவல் சேகரித்துக் கொண்டிருந்தேன். அதுவும் தடைபட்டுவிட்டது. இந்த சூழலில் புதியதாக எழுத மனம் வரவில்லை.

எழுதினால் கட்டாயம் இங்கு பதிப்பேன்.

கை தட்டுவதற்கும் தலையில் குட்டுவதற்கும் இளசு அண்ணா பென்ஸ் பாரதி ஆரென் ஓவியா அமரன் அன்புரசிகன் மனோஜ் சிவா.ஜி தாமரை அண்ணா மதி லொள்ளு வாத்தியார் மோகன் காந்தி ஐயா செல்வமுரளி ஏஆர்ஆர் ஐயா என்று பெரிய குடும்பமே இருக்கிறது மன்றத்தில். விடுபட்டவர்கள் உதைக்க வேண்டாம். :lachen001:


கைதட்ட மட்டுமல்ல, உதவவும் காத்திருக்கிறோம். ஆரம்பிக்கும் பொழுது சொல்லுங்கள்.

ராஜா
07-10-2008, 09:41 AM
பதிலளித்த பண்பாளர்கள் அனைவருக்கும் பணிவான நன்றி..!

Keelai Naadaan
07-10-2008, 02:44 PM
மன்றத்தில் சிறுகதைகள் படைத்துவரும் எல்லா உறவுகளையும் இந்த சமயத்தில் நினைவுகூர்ந்து பாராட்டுகிறேன் - வாழ்த்துகிறேன்.

வினாவிற்கான சரியான விடையைக் கண்டதையும், தொடர்ந்து பிழையின்றி உங்கள் பதிவுகள் அமைவதையும் எண்ணி மகிழ்கிறேன்.

உங்கள் விருப்பப்படியே உங்கள் எண்ணங்களைக்கூற தனித்திரி தொடங்கலாம் நண்பரே.

மீண்டும் நன்றி.
தங்களின் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிகவும் நன்றி நண்பரே.
நம் மன்றத்தில் சிலரை நினைத்து பிரமிப்பாக இருக்கும். தங்களின் கேள்விகளையும் பதில் அளித்துள்ள அருமை நண்பர்கள் மோகன், சிவா.ஜி, பிரவீண், இளசு அனைவரின் பதிலையும் படித்து மிகவும் பிரமிக்கிறேன். மனதில் மேலும் மேலும் அவர்கள் மேல் மரியாதை உயர்கிறது.
மன்றத்தில் அவர்களின் ஈடுபாடு மகிழ்ச்சியளிக்கிறது.
அருமையான திரியை துவங்கிய ராஜா அவர்களுக்கு பணிவான நன்றிகள்.

வேலைபளு சற்று குறைந்தவுடன் கதைகள் பற்றிய திரியை தொடங்குகிறேன்.
மீண்டும் நன்றி

leomohan
07-10-2008, 02:51 PM
கைதட்ட மட்டுமல்ல, உதவவும் காத்திருக்கிறோம். ஆரம்பிக்கும் பொழுது சொல்லுங்கள்.

நன்றி அண்ணா. இதைப் பற்றி விரைவில் ஒரு திரி துவக்கி விபரங்களை பகிர்ந்துக் கொள்ளலாம். பங்குபெறும் அனைவரும் இதில் இணை எழுத்தாளர்களாக ஆகலாம்.

நன்றி.

leomohan
07-10-2008, 02:52 PM
மோகனின் பதிலில் அவரது தேர்ந்த, தெளிந்த அறிவார்த்தமான வெளிப்பாட்டைக் காணமுடிந்தது. எப்போதுமே என்னை பிரமிக்க வைக்கும் சிறந்த சிந்தனையாளர் மோகன். மிகச் சிறந்த படைப்பாளி. எல்லாவற்றுக்கும் மேல் உண்மையாளர். வாழ்த்துகள் மோகன்.

கீழைநாடானின், தேடலை எங்கிருந்து தொடங்கினாரென்று அறியும்போது மிகப் பெரிய மரியாதை அவர்மீது உருவாகிறது. நல்ல கதை சொல்லியாய் மேலும் சிறப்புற வாழ்த்துகள்.

இளசுவின் பதில்.....சிகரம். நீண்ட காலமாய் அவதிப்பட்டு, நல்ல கைகளின் ஆதரவான தடவல் கிடைத்து, நிம்மதியடையும்போது அனைவர் மனதிலும் எழும் கேள்வி..."இதுவரை ஏன் யாரும் இதை செய்யவில்லை?" எல்லோருக்கும் கிடைக்குமா இந்த மைதாஸ் தொடுதல்? சிலிர்க்க வைக்கிறது உங்கள் சேவைகளின் வீச்சு. பிரமிக்க வைக்கிறது பதிலின் இரண்டாம் பாகம். கற்றுக்கொள்வதும், அதை கடைபிடிப்பதும், வாழ்நாள் முழுதும் தொடரும் வேள்விதானே. அருமை இளசு.

நன்றி சிவா. தொடர்ந்து நல்ல படைப்புகளை தந்துக் கொண்டிருக்கிறீர்கள். நன்றி. வாழ்த்துகள்.

Keelai Naadaan
07-10-2008, 03:09 PM
தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் நண்பரே... நான் அதிகமாகச் சிறுகதைகள் வாசிப்பதில்லை... வாசித்தாலும் விரைவில் மறந்து விடுவேன் சில கதைகள் மட்டும் என்மனதில் நீங்கா இடம் பிடிக்கும். அந்த வகையில் உங்களின் தேடல் சிறுகதை என் மனதை மிகக் கவர்ந்தது பல இடங்களில் இதை நான் சொல்லியிருக்கிறேன்.

கவலைப்படாமல் இன்னும் நிறைய எழுதுங்கள்.
தாங்கள் தரும் ஊக்கத்துக்கு மிக மிக நன்றி நண்பரே.

ராஜா
07-10-2008, 04:05 PM
நம் மன்றத்தில் சிலரை நினைத்து பிரமிப்பாக இருக்கும். தங்களின் கேள்விகளையும் பதில் அளித்துள்ள அருமை நண்பர்கள் மோகன், சிவா.ஜி, பிரவீண், இளசு அனைவரின் பதிலையும் படித்து மிகவும் பிரமிக்கிறேன். மனதில் மேலும் மேலும் அவர்கள் மேல் மரியாதை உயர்கிறது.
மன்றத்தில் அவர்களின் ஈடுபாடு மகிழ்ச்சியளிக்கிறது.

அருமையான திரியை துவங்கிய ராஜா அவர்களுக்கு பணிவான நன்றிகள்.



இந்தத் திரியின் நோக்கமே அதுதான் கீழை நாடான்..!

மன்றத்திலுள்ளோரின் மாண்புகளை எல்லோரும் அறிந்துகொள்ளவேண்டுமென்பதே எங்கள் அவா..!

நன்றி..!

பாரதி
07-10-2008, 05:54 PM
வினாக்களுக்கு விடையளிக்க வருமாறு மன்ற உறவுகள் மணியா அண்ணா, கவிதா, பென்ஸ், முகிலன், அக்னி ஆகியோரை அன்புடன் அழைக்கிறேன்.

மன்மதன்
08-10-2008, 12:50 PM
அப்பப்பா.. எத்தனை எத்தனை புதிய விசயங்களை இந்த திரி மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது.. மன்ற சந்திப்பில் அனைவரும் சந்தித்தால் கூட இது மாதிரி பகிர்தல் கிடைக்குமா என்ற சந்தேகமே..

திரியின் நாயகருக்கு நன்றிகள்..

இளசு அண்ணாவிடம் கற்றுக்கொண்டே இருக்கலாம்..
மருத்துவதுறையை ஏன் ‘பிராக்டிஸ்’ என்று சொல்கிறார்கள்
என்ற கேள்விக்கு இப்பொழுதுதான் எனக்கு பதில் தெரிந்தது.

லியோ மோகனின் தமிழ் தாகத்தை அறிந்துகொள்ளவும் முடிந்தது.
மோகன் பல சாதனைகள் படைக்க வேண்டும்..

பொருத்தமான கேள்விகளை தொடுத்த பாரதிக்கு பாராட்டுகள்..!!

சூரியன்
08-10-2008, 01:31 PM
நன்றி பாரதி அவர்களே.
தமிழ் மன்றம் உலக தமிழர்களை இணைப்பது போன்று ஒரு அருமையான காரியம் செய்துக் கொண்டிருக்கிறது. மட்டுறுத்துதல் அருமை. உறுப்பினர்களின் தரம் நல்ல தரம். மென்பொருள் நன்றாக உள்ளது. இடைமுகம் அருமையாக உள்ளது. சஞ்சிகை ஆரம்பித்த முயற்சியும் அருமை. வாழ்த்துகள்.

நன்றி பாரதி அவர்களே.

மிகவும் அருமையான பதில் மோகன் அண்னா.

leomohan
08-10-2008, 01:37 PM
அப்பப்பா.. எத்தனை எத்தனை புதிய விசயங்களை இந்த திரி மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது.. மன்ற சந்திப்பில் அனைவரும் சந்தித்தால் கூட இது மாதிரி பகிர்தல் கிடைக்குமா என்ற சந்தேகமே..

திரியின் நாயகருக்கு நன்றிகள்..

இளசு அண்ணாவிடம் கற்றுக்கொண்டே இருக்கலாம்..
மருத்துவதுறையை ஏன் ‘பிராக்டிஸ்’ என்று சொல்கிறார்கள்
என்ற கேள்விக்கு இப்பொழுதுதான் எனக்கு பதில் தெரிந்தது.

லியோ மோகனின் தமிழ் தாகத்தை அறிந்துகொள்ளவும் முடிந்தது.
மோகன் பல சாதனைகள் படைக்க வேண்டும்..

பொருத்தமான கேள்விகளை தொடுத்த பாரதிக்கு பாராட்டுகள்..!!

நன்றி மன்மதன் அவர்களே. நலமா.

leomohan
08-10-2008, 01:38 PM
மிகவும் அருமையான பதில் மோகன் அண்னா.

நன்றி சூரியன் அவர்களே.

மன்மதன்
08-10-2008, 02:16 PM
நன்றி மன்மதன் அவர்களே. நலமா.
நலம் மோகன்.. நீங்கள் நலமா?

பென்ஸ்
09-10-2008, 09:42 PM
3. பென்ஸ்:
உங்கள் பதில்களில் இருந்தும், பின்னூட்டங்களில் இருந்தும் உங்கள் தாயார் மிகவும் நகைச்சுவை உணர்வுடன் உள்ளவர் என்று தெரிகிறது. நீங்களும் அப்படித்தான் இருப்பீர்கள் என நம்புகிறேன். சமீபத்தில் உங்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவையை எங்களுடன் பகிருங்கள்.

கேள்விக்கு நன்றி பாரதி....

அம்மாவை விட்டு தொலைவில் இருப்பது எத்துனை வருத்தமானது
என்பதை முதல் முறையாக உணர்கிறேன்....
சென்ற முறை வெளிநாடு பயணம் என்னை அவரிடம் இருந்து 3 மாதங்கள் பிரித்து வைதது...
இம்முறை ஆறுமாதங்கள் ஆகி.. இன்னும் ஆறுமாதங்கள் என்று என்னும் போது கடினமாக இருக்கிறது...

ஆனால் நல்ல துணைவி ஒரு தாயின் பங்கை சில இடங்களில் நிறைவேற்றிவிடுகிறாள்...
(சில இடங்களில் மட்டுமே முடியும்), இதனால் அந்த கடினம் அதிகமாய் உணராதவனாய்....

நம்மளை வச்சு காமடி பன்னுறதில என் அம்மாவுக்கு
சளைத்தவரில்லை என் துணைவியாரும்...

இங்கு வந்து முதல் நாள், என்னை அலுவலக நண்பர் என்
அப்பார்ட்மென்டின் வாசலிலில் இருந்து அழைத்து செல்லுவதாக சொல்லி இருந்தார்.
நான் ரெடியாக சிறுது நேரமாகவே..
அவசர அவசரமாக வீட்டை விட்டு வேளியேரி, படியிறங்கி (வேறும் நாலு படிதாங்க)
வேளியே போக எத்தனிக்க, முகத்திலும் , முட்டியிலும் சம்மட்டியால் யாரோ அடித்தது போல்...
ஒரு நொடி பட்டாம்பூச்சியேல்லாம் தலைக்கு மேல் சுற்ற...

"என்னங்க..!!!" என்று ஒரு அலறல்...
என்முன்னால் என் முகத்தின் வடிவத்தை எடுக்க முயன்று தோற்று
போன பைபர் கண்ணாடி கதவு (அட இவ்வளவு பெருசா இருக்குமா) ,
பின்னால் என்னை நோக்கி ஓடி வரும் துனைவி...

ஓடி அருகில் வந்தவரை தூரத்திலையே நிறுத்தினேன்.
எனக்கு காயம் பட்டாலோ, வெட்டு பட்டாலோ என்னை யாரும் நெருங்குவதையோ,
பரிதாப படுவதையோ நான் சிறு வயதில் இருந்தே விரும்பியதில்லை..

எனக்கு வாய் ரத்ததால் புளிக்க ஆரம்பித்திருந்தது.
அருகில் வந்து நான் நார்மல் ஆகி விட்டேன் என்று நினைத்து
"நீங்க போன வேகத்தை பார்த்து, ஒருவேளை நீங்க சூப்பர் மேன் மாதிரி
கண்ணாடியை வழியா நுழைந்து போயிடுவிங்களோன்னு நினைத்தேன்" என்றதும்...

சிவப்பு பல் காட்டி சிரிக்க ஆரம்பித்தேன்...

பாரதி
10-10-2008, 02:39 AM
பதில் அளித்து சிறப்பித்தமைக்கு நன்றி பென்ஸ்.

உங்கள் தாயார் மட்டுமல்ல உங்கள் துணைவியாரும் உங்களுக்கு எல்லாவிதத்திலும் உதவி வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி.

உங்கள் பதிவு என்னை ஏமாற்றவில்லை. வெகு நேர்த்தியான பதில். பாராட்டு பெஞ்சமின்.

ஆனால் என்ன சில விடயங்களை மறைத்ததில்தான் சற்றே எனக்கு வருத்தம். உங்கள் மூக்கு, முட்டி குறித்து அதிகம் சொல்லவில்லையே! உங்கள் முட்டி முட்டியதில் கதவுக்கு எந்த அளவு சேதம் ஏற்பட்டது? அந்த நிகழ்வுக்குப் பின்னர் உடைந்த கதவை மாற்ற எவ்வளவு செலவாயிற்று? விபத்துக்கு என்ன காரணம் என்பதை கண்டறிய அமெரிக்கப் புலனாய்வுத்துறை ஈடுபடுத்தப்பட்டதா இல்லையா? - இவற்றையும் தெளிவாக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

இந்த நிகழ்வு மூலம் இன்னொன்று தெளிவானது - எவ்வளவு பதட்டமான சூழல் என்றாலும், நீங்கள் வெற்றிலை - பாக்கு போட்டு (இதையும் நீங்க சொல்லவில்லை, பார்த்தீர்களா?), சிரித்த முகத்துடன் சிவப்புப்பல் காட்டுபவர் என்பது!

mukilan
10-10-2008, 02:52 AM
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர்வாழக்கூடிய மிகப்பிரமாண்டமான மரங்களைத் தந்த மிகச்சிறிய விதைகள் குறித்து நீங்கள் நினைப்பது என்ன?

ஒவ்வொரு முறையும் எனக்கான கேள்விகள் சற்று கடினமாக இருந்தாலும், என்னை மிகவும் சிந்திக்க தூண்டும் விதத்தில் கேள்விகள் கேட்பதில் மன்ற உறவுகள் சளைத்தவர்கள் இல்லை என்பதில் மனம் மகிழ்கிறது. இப்படியான கேள்விகளுக்கு எப்படிப் பதில் அளிக்கப் போகிறேன் என வியப்பிலேயே காலந்தள்ளி விட்டேன். இரு வாரங்களாக பணியிடத்தில் சிறு பிரச்சினை அதனால் மனதில் நிம்மதி சற்றுக் குறைவு. எனவேதான் தாமதாமான பதில்.என்னை ஆ10ல் பங்கேற்கச் செய்ததற்கு நன்றி பாரதி அண்ணா.

இயற்கை நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள் அடடா என வாய்பிளக்க வைப்பன. அப்படி ஒன்றுதான் இந்த விதை அமைப்பும். எப்படி ஒரு மரம் இருக்க வேண்டும், அதன் இலை அமைப்பு, பூவின் நிறம், மணம் என சிறந்த ஒரு மென்பொருள் நிரலி போலத்தான் மரங்களின் விதைகளும்.

உருவத்தையும் தோற்றத்தையும் வைத்து யாரையும் எடை போடக்கூடாது என்பதற்கு விதைகளை விட வேறென்ன எடுத்துக்காட்டு இருந்து விடக்கூடும்.சின்னஞ்சிறிய அமைப்பு கொண்ட அந்த விதைகளின் எண்ணங்கள் பெரிது. அதனால்தான் அவ்விதைகள் பெரும் மரமாக விளைகின்றன.

விதைகள் மேலும் சொல்லும் பாடங்கள்.

ஒரு மரத்தின் விதையாக இருந்தாலும் வெவ்வேறு நிலங்களில் விதைக்கப் படும்பொழுது அதன் வளர்ச்சியில் வேறுபாடு காணப்படுகிறது. வளர்பருவத்தில் நல்ல வளர்சூழ்நிலைகள் இருந்தால் அந்த மரம் செழிப்பாக உறுதியாக வளர்கிறது. மனிதர்களும் அப்படித்தானே! குழந்தைப் பருவத்தில் போஷாக்கான உணவும், அன்பும், அறிவுறுத்தலும் இருந்தால் ஒருவன் அறிவாளியாக வளர்வதில் என்ன விந்தை. தலைக்கணம் ஏறும் ஒவ்வொரு தருணத்திலும் இதை நினைவில் கொள்ளலாம். நம்மைப்போலவே மற்றவருக்கும் வாய்ப்புகள் கிட்டி இருந்தால் நம்மை விட அறிவாளியாக இருக்கலாம் அல்லவா? எனவே நாமே சிறந்தவர் என்ற எண்ணம் இலையுதிர்கால இலை போல ஓடிப்போகட்டும்.

விதைகள் மண்ணில் புதைக்கப்பட்டாலும் தனக்கேற்ற சூழ்நிலை வரும்வரை மண்ணிலேயே இருக்கும். தனக்கான சூழ்நிலை வந்ததும் மண்ணைக்கீறி வெளிப்படும். மனிதனும் துன்பமான காலகட்டங்களிலோ அல்லது சரியான வாய்ப்பு கிட்டாத காலங்களிலோ அமைதி காத்து தனக்கான வாய்ப்பைத் தேட வேண்டும். கிட்டிய வாய்ப்பை கெட்டியாகப் பற்றிக் கொண்டு எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி பெறுதல் வேண்டும்.

பாரதி
10-10-2008, 03:19 AM
உருவத்தையும் தோற்றத்தையும் வைத்து யாரையும் எடை போடக்கூடாது என்பதற்கு விதைகளை விட வேறென்ன எடுத்துக்காட்டு இருந்து விடக்கூடும்.சின்னஞ்சிறிய அமைப்பு கொண்ட அந்த விதைகளின் எண்ணங்கள் பெரிது. அதனால்தான் அவ்விதைகள் பெரும் மரமாக விளைகின்றன.

விதைகள் மேலும் சொல்லும் பாடங்கள்.

ஒரு மரத்தின் விதையாக இருந்தாலும் வெவ்வேறு நிலங்களில் விதைக்கப் படும்பொழுது அதன் வளர்ச்சியில் வேறுபாடு காணப்படுகிறது. வளர்பருவத்தில் நல்ல வளர்சூழ்நிலைகள் இருந்தால் அந்த மரம் செழிப்பாக உறுதியாக வளர்கிறது. மனிதர்களும் அப்படித்தானே! குழந்தைப் பருவத்தில் போஷாக்கான உணவும், அன்பும், அறிவுறுத்தலும் இருந்தால் ஒருவன் அறிவாளியாக வளர்வதில் என்ன விந்தை. தலைக்கனம் ஏறும் ஒவ்வொரு தருணத்திலும் இதை நினைவில் கொள்ளலாம். நம்மைப்போலவே மற்றவருக்கும் வாய்ப்புகள் கிட்டி இருந்தால் நம்மை விட அறிவாளியாக இருக்கலாம் அல்லவா? எனவே நாமே சிறந்தவர் என்ற எண்ணம் இலையுதிர்கால இலை போல ஓடிப்போகட்டும்.

விதைகள் மண்ணில் புதைக்கப்பட்டாலும் தனக்கேற்ற சூழ்நிலை வரும்வரை மண்ணிலேயே இருக்கும். தனக்கான சூழ்நிலை வந்ததும் மண்ணைக்கீறி வெளிப்படும். மனிதனும் துன்பமான காலகட்டங்களிலோ அல்லது சரியான வாய்ப்பு கிட்டாத காலங்களிலோ அமைதி காத்து தனக்கான வாய்ப்பைத் தேட வேண்டும். கிட்டிய வாய்ப்பை கெட்டியாகப் பற்றிக் கொண்டு எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி பெறுதல் வேண்டும்.

அன்பு முகில்,

சொந்தவாழ்க்கை மற்றும் பணிச்சூழல், இவையிரண்டும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்கும் சமயத்தில் மன்றம் வாருங்கள் - பதிவுகளைத்தாருங்கள். உங்கள் பணிச்சிக்கல் கதிரவன் கண்ட பனித்துளி போல காணாமல் போகட்டும்.

கேள்விகளால் அல்ல ; அதற்கு மன்ற உறவுகள் தரும் அருமையான பதில்களால் மட்டுமே அவை பெருமை பெறும்.

எதிர்பார்த்தது போலவே மிகவும் சிறப்பான சிந்தனையூட்டும் பதில்! உருவத்தை கண்டு எள்ளி நகையாடாதே ; காலம் வரும் காத்திரு ; முயற்சி செய் - வெற்றி நிச்சயம் முதலான அரிய கருத்துக்களை விதைகளில் புகுத்தி, வியப்பில் ஆழ்த்தி விட்டீர்கள்!!

உளமார்ந்த பாராட்டு முகில்.

ராஜா
10-10-2008, 01:15 PM
அன்பின் அமர்..

வேறு யாரும் பதிலளிக்கவேண்டியிருக்கிறதா..?

அமரன்
11-10-2008, 09:23 AM
அன்பின் அமர்..

வேறு யாரும் பதிலளிக்கவேண்டியிருக்கிறதா..?


மூவர் பதிலளிக்க வேண்டும் அண்ணா. விரைவில் அளிப்பார்கள் என்று நம்புகின்றேன்.

ராஜா
20-10-2008, 09:46 AM
அன்பின் அமர்..


அடுத்த உறவை அழைப்போமா..?

அமரன்
20-10-2008, 10:11 AM
அடுத்த அன்பரை அழைக்க ஆரம்பகட்ட வேலைகளை தொடங்கிவிட்டேன் அண்ணா.
அதற்குள் பாரதி அண்ணாவின் கேள்விகளுக்கு பதிலளிக்காதோரைப் பதிலளிக்க வேண்டுகின்றேன்.

shibly591
20-10-2008, 10:13 AM
அடுத்தது யார்..???

ஆவலுடன் நாங்கள்....

பாரதி
20-10-2008, 06:16 PM
கடந்த முறை அழைத்த அமரனுக்கும், வாய்ப்பளித்த ராஜா அவர்களுக்கும் நன்றி.

மிகு அலுவலில் இருப்பவர்களை, அவர்கள் நிலைமை அறியாமல் வினாக்களைத் தொடுத்ததற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

திரி தொடர்ந்து பிரகாசிக்க இனிய வாழ்த்து.

ராஜா
30-10-2008, 03:34 AM
அடுத்ததாக ஆ! 10 ல் பங்கேற்க, அன்பு நண்பர் "நாராயணா" புகழ் நாரதர் அவர்களை என்னவன் அமரின் இசைவோடு அழைக்கிறேன்..

வாருங்கள் நாரதரே.. மன்றம் ஆவலோடு உங்கள் கேள்விகளை எதிர்நோக்கியிருக்கிறது..!

poornima
30-10-2008, 07:00 AM
வாங்க நாரதர்... இந்த வாரம் கலகங்களால் ரண களம் தான்.. :-)
அதகளம் பண்ணுங்கள் உங்கள் கேள்விகளால்

மதி
30-10-2008, 07:07 AM
வர்றாரு...வர்றாரு...
வரப் போறாரு......

கலக மாமணி... அடுத்த அமெரிக்க ஜனாதிபதி...
மாகனம் பொருந்திய ஸ்ரீமான் நாரதரே...

சீக்கிரம் வந்து கேள்விகளைத் தொடுங்க..

பார்க்கலாம்.. எவ்வளவு குழப்பங்களை உங்கள் கேள்விகள் ஏற்படுத்தப் போகுதுன்னு.. :)

அமரன்
30-10-2008, 07:53 AM
அகழ்ந்ழெடுக்கும் வண்ணம் கேள்விகளை தொடுத்த பாரதி அண்ணாவுக்கும்,
சிறப்பாக பதில் கொடுத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றியும் பாராட்டும்.
வேலைச்சுமைக்கு மத்தியில் பங்களிக்க இசைந்த நாராவுக்கு நன்றி.

kavitha
30-10-2008, 10:07 AM
மூவர் பதிலளிக்க வேண்டும் அண்ணா. விரைவில் அளிப்பார்கள் என்று நம்புகின்றேன்.
__________________
அமரன்

தாமத பதிவுக்கு மன்னிக்க!
எழுத்துரு பிரச்சனை இப்போது தான் தீர்ந்தது.
சமீபத்தில் என்னை கவர்ந்த கவிதை இதோ:


எழுது எழுது
எனக்கு ஒரு கடிதம் எழுது
என்னை நேசிக்கிறாய் என்று அல்ல
நீ வேறு எவரையும்
நேசிக்கவில்லை என்றாவது
எழுது

சிவா.ஜி
30-10-2008, 10:55 AM
நீண்ட நாட்களுக்குப் பிறகு மன்றம் வந்த தங்கை கவிதாவுக்கு வாழ்த்துகள்.

உங்களுக்குப் பிடித்த கவிதை உண்மையாகவே அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கிறது. அழகான குறுங்கவிதை.

அமரன்
30-10-2008, 11:18 AM
தாமத பதிவுக்கு மன்னிக்க!
எழுத்துரு பிரச்சனை இப்போது தான் தீர்ந்தது.
சமீபத்தில் என்னை கவர்ந்த கவிதை இதோ:


எழுது எழுது
எனக்கு ஒரு கடிதம் எழுது
என்னை நேசிக்கிறாய் என்று அல்ல
நீ வேறு எவரையும்
நேசிக்கவில்லை என்றாவது
எழுது

நினைவில் வைத்து பதிலளித்ததே பெரியவிடயம். நன்றி.

உங்களைப் பிடித்த கவிதை எனக்கும் பிடித்தது.

Narathar
30-10-2008, 11:27 AM
அன்பு சொந்தங்களே.......
கேள்விகளை தயாரித்துக்கொண்டிருக்கின்றேன்...
சிக்கிரமே கேள்விகளோடு வருகின்றேன்

பாரதி
30-10-2008, 03:27 PM
சமீபத்தில் என்னை கவர்ந்த கவிதை இதோ:

எழுது எழுது
எனக்கு ஒரு கடிதம் எழுது
என்னை நேசிக்கிறாய் என்று அல்ல
நீ வேறு எவரையும்
நேசிக்கவில்லை என்றாவது
எழுது


மனதை அலசிய கவிதையை இங்கே எழுதிய கவிக்கு எனது நன்றியும் பாராட்டும் உரித்தாகட்டும்.

Narathar
30-10-2008, 06:20 PM
மன்றத்தில் அதிகமதிகம் புதியவர்கள் இணைந்துகொண்டிருக்கின்றார்கள்,
அவர்களை நாம் ஆரம்பகாலத்து அங்கத்தவர்களைப்போல ஆதரித்து
அலவலாவுவது குறைவு என்பது எனது அபிப்பிராயம்........ அதில் பல அங்கத்தவர்களை
பற்றி நாங்கள் அதிகமாக அறிந்துகொள்ளவில்லை.......... எனவே அவர்களில்
ஐந்து பேரை தெரிந்து அவர்களிடம் எனது முதல் பாதி கேள்விகளையும்,
புதியவர்கள் நம் மூத்த உறுப்பினர்களைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக
அவர்களில் ஐந்து பேரிடமும் எனது மீதி ஐந்து கேள்விகளை தொடுக்கின்றேன்...........

பரஸ்பர அறிமுகமே எனது பத்துக்கேள்விகளதும் நோக்கமாகையால் பெரும்பாலும்
தனிப்பட்ட விடயங்களையே கேள்வியாக தொடுத்துள்ளேன்.............


==========================================================================================



எனது முதல் கேள்வி மன்றத்தில் சமீபத்தில் இணைந்து பலரும் வியக்கும் படி
நாளொரு சிறுகதை தந்துகொண்டிருக்கும் தக்ஷணாமூர்த்தி (மூர்த்திd99) அவர்களுக்கு..........

1. மூர்த்தி அவர்களே...( அப்படி அழைக்கலாம்தானே?) நிங்கள் மன்றத்தில்
இணைந்துகொண்ட பின்னர்தான் கதைகளை எழுதுவதாக கூறியிருந்தீர்கள்.
அத்தோடு எழுத்தாளர் சுஜாதாவின் அபிமானிஎன்றும் உங்களை கூறிக்கொண்டீர்கள்.
மகிழ்ச்சி! இதோ உங்கள் கற்பனைக்கு வேலை தருகின்றேன்...........

இன்னும் சில வருடங்களில் நீங்கள் ஒரு பெரிய எழுத்தாளர் ஆகிவிட்டீர்கள்
என்று வைத்துக்கொள்ளுங்கள்....... அந்த மனநிலையிலிருந்துகொண்டு மன்றத்தைப்பற்றி,
அதில் நீங்கள் எழுதிய ஆரம்ப கதைகள் பற்றி, அதற்கு வந்த விமர்சனங்கள் பற்றி
ஒரு பத்திரிகைக்கு பேட்டியளிக்கின்றீர்கள்......... (அப்படி நடக்க வேண்டுமென்று
ஆசைகளோடு இதை கேட்கின்றேன்..... )

என்னவெல்லாம் சொல்வீர்கள் மன்றத்தைப்பற்றி?


============================================================================================


எனது இரண்டாவது கேள்வியும் ஒரு புதியவரை நோக்கியதே....... அவர் பாபு
நிழலுக்கு உயிர் பகுதியில் எனக்கு அறிமுகமானவர், மன்றத்தில் அதிகம் படைப்புக்களை
இவர் இன்னும் தராத போதும் நிச்சயமாக மன்றத்தில் பிரகாசிப்பார் என்ற நம்பிக்கை
எனக்கிருக்கின்றது........

2. மன்றத்தில் அறிமுகமாகும் போதே மன்ற சொந்தங்களின் நட்பை நாடி நின்றீர்கள்.
ஹாங் காங்கில் வேலை செய்வதாக உங்கள் ப்ரோபைல் சொல்கிறது. அந்த நாட்டில்
உங்கள் நட்பு வட்டாரத்தைப்பற்ரி சொல்லுங்கள்... அப்படி ஒரு வட்டம் இல்லையெனில்
ஏன் உருவாக்கிக்கொள்ளவில்லை என்ற காரணத்தை கூறுங்கள்...அத்தோடு உங்களைப்பற்றியும்
உங்கள் தாய் நாட்டு நட்பு வட்டத்தைப்பற்றியும் கொஞ்சம் எழுதுங்கள்.



=============================================================================================



எனது அடுத்த கேள்வி திரு: நாம்செக் அவர்களுக்கு, உங்களை பல திரிகளில் சந்த்தித்திருக்கின்றேன்
ஆனால் ஒரு சில நாட்களுக்கு முன்னர் மனித சங்கிலி வெற்றித்தொடரில் உங்களை கொஞ்சம்
கடுப்படிக்க வைத்தேன் ஞாபகமா? அந்த அறிமுகமே உங்களிடமும் ஒரு கேள்வியை கேட்க வேண்டும்
என்று நினைக்கவைத்தது.... இந்தக்கேள்வியும் உங்களைப்பற்றி மன்றத்தில் இன்னும் கொஞ்சம் நானும்
மற்றவர்களும் அறிந்து கொள்வதற்காகத்தான்......

3. ஆன்மீகத்தில் அதிக நாட்டமுள்ள நீங்கள் சொந்தமாக போக்குவரத்து தொழில் நடத்துகின்றீர்கள்,
அத்தோடு அரசியலிலும் உங்களுக்கு ஈடுபாடு உண்டு என்பதை உங்கள் சமீபத்திய பதிப்பொன்று
வெளிக்காட்டியது...... உங்களிடம் கிளைக்கேள்விகளாக மூன்று கேள்விகளை கேட்கின்றேன்....




ஆன்மீக ஈடுபாடு எப்படி ஏற்பட்டது?
தொழில் எப்படி நடக்கிறது?
மனித சங்கிலி நடத்துவதால் ஈழ பிரச்சனைக்கு முடிவு வருமா?





=============================================================================================



அடுத்து நான் கேள்வி கேட்க விரும்புவது மற்றுமொரு இலங்கை நண்பரான பார்த்திபனிடம்,
இவரை தற்போது நான் மன்றத்தில் அடிக்கடி காண்கின்றேன்... அது தொடரவேண்டுமென்ற விருப்பத்தோடு

4. அன்பின் பார்த்திபனே..... தொழில் நிமித்தம் வெளிநாட்டில் வசிப்பதாக கூறியிருந்தீர்கள்,
வெளிநாட்டில் வாழ்வதென்பது பெரும்பாலும் நாம் விரும்பி ஏற்றுக்கொள்ளும் ஒரு விடயமல்ல
என்றாலும் நம் நாட்டின் நிலவரம் நம்மையெல்லாம் "போ..." என்று விரட்டியடிக்கிறது........
என்றாலும் வரும் சவால்களுக்கெல்லாம் முகம் கொடுத்து நாம் நம் தாய் நாட்டிலேயே
வாழ முடியாதா? நம் பாதுகாப்பையும் நம் குடும்பத்தவரது திருப்தியையும் நாடி வெளிநாடு சென்றுவிட்டு
அங்கிருந்துகொண்டு போராளி வேஷம்கட்டுபவர்களைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?


===========================================================================================




அடுத்து நான் கேள்வி கேட்க விரும்புவது இறைநேசன் அவர்களிடம்..............
தன் முயற்சியில் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தனை நினைவு படுத்துபவை உங்கள் ஆன்மிக பதிப்புக்கள்...
ஆனால் அந்தப்பதிப்புக்களில் மட்டுமே தங்கியிருப்பது நான் உங்களில் காணும் ஒரு குறை!
என்றாலும் விட்டுக்கொடுக்காது வாதம் புரியும் உங்களின் மன உறுதி எனக்கு பிடித்திருக்கிறது....

5. நீங்கள் சொல்லவரும் ஆன்மிக கருத்துக்களுக்கு எதிராக நம் மன்ற அறிவியல் ஆர்வலர்களும்
பெரியார் கொள்கை விரும்பிகளும் பல இடங்களில் எதிர்த்து வாதிடும்போது.. ஏன் உங்களைப்போன்ற
ஆன்மிக வாதிகளால் மற்றவர் பார்வையிலிருந்தும் குறித்த பிரச்சனையை நோக்க முடிவதில்லை?
அறிவியலுக்கும் ஆன்மிகத்துக்கும் இடையில் ஒரு சிறு நூலிடை வித்தியாசம்தான் இருக்கின்றது
என்று நான் சொல்கின்றேன் அது சார்பாக உங்கள் கருத்து என்ன?




============================================================================================



அடுத்த கேள்வியை நான் கேட்க விரும்புவது என்னைவிட மன்றத்தில் மூத்தவாரான திரு. மனோ.ஜிஅவர்களிடம்....

6. நம் மன்ற அங்கத்தவர்களையெல்லாம் ஒரே இடத்தில் ஒன்று கூட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள்.
அந்த முயற்ச்சி எந்த அளவில் இருக்கின்றது? அந்நிகழ்வு சார்பாக மன்றத்தில் புதிதாக இணைந்து
சிறப்பாக பங்களிப்பு செய்யும் புதியவர்களிடமிருந்து என்ன பங்களிப்பை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?



============================================================================================



மன்றத்தில் என் மரியாதைக்குரிய மற்ருமொரு அன்பு சொந்தம் திரு அரேன் அவர்கள்.. இதோ
எனது அடுத்த கேள்வி அவரிடம்

7. தற்போது நீங்கள் சிங்கப்பூரில் வசித்தாலும் தென்னக தமிழ் சினிமாவோடு தொடர்புடையது
உங்கள் குடும்பம். அப்படித்தானே? தற்போது சினிமாவில் தோன்றியுள்ள "ரீ-மேக், ரீ- மிக்ஸ்" மோகம்
பற்றி தங்களது தனிப்பட்ட கருத்து என்ன? இது ஒரு ஆரோகியமான போக்கா?



============================================================================================



எனது அடுத்த கேள்வி மன்றத்தின் நிர்வாகி நம்ம அறிஞரிடம், எனக்குத்தெரியும் உங்களுக்கு
நிறைய வேலைப்பழு....... அதனால் பத்தே பத்து வார்த்தைகளில் விடை தாருங்கள்

8.


மன்ற தலைமை பதவியென்பது?
மன்றத்தில் உங்கள் முதல் படைப்பு?
தமிழ் மன்றம் என்பது?
தங்கள் தொழில்?
தங்களின் வசிப்பிடம்?
செல்ல ஆசைப்படும் இடம்?
மிக்க மகிழ்ச்சியான தருணம்?
மிக வருந்திய தருணம்?
திரு இராசகுமாரன் அவர்கள்?
தொல்லைதரும் நாரதர்?





===========================================================================================



அடுத்த கேள்வி நாம் தலையென்று வாஞ்சையோடு அழைக்கும் திரு மணியா அவர்களிடம்..

9. மன்றத்தில் அதிகமான அங்கத்தவர்களை நேரில் சந்தித்தவர் நீங்களாகத்தான் இருக்க முடியும்.
சந்தித்தவர்களை வரிசைப்படுத்தி அவர்களில் உங்களை மிகவும் கவர்ந்தவர் யாரென்றும் ஏனென்றும்
சொல்லுங்கள்?

மாட்டிவுட்டேனா? நாராயணா!!!!! :)



===========================================================================================





அடுத்த கேள்வி மன்றில் குரு என்று அன்பாக அழைக்கப்படும் திரு ராஜேஸ் (rajeshkrv) அவர்களுக்கு

10. சினிமா பாடல்களில் ஆழ்ந்த அறிவுடையவர் நீங்கள்.......... சினிமா பாடல்களோடு இவ்வளவு
ஈடுபாடு வரக்காரணம் என்ன? சமீபத்திய சினிமா பாடல்களின் போக்கு ஆற்ரோக்கியமானதுதானா?


சரி அன்பர்களே........ நான் எனது கேள்விகளை கேட்டாயிற்று.
இனி நம் சொந்தங்கள் ஓடி வந்து பதில் சொல்லட்டும்.......

மதி
30-10-2008, 06:57 PM
ஆஹா.... நாரதரே...
எடுத்த காரியத்தில் கண்ணும் கருத்துமாக... ஒவ்வொருவரைப்பற்றியும் நன்கு ஆராய்ந்து உள்வாங்கி அழகான கேள்விக்கணைகளை சரமாக தொடுத்திருக்கிறீர்கள்..

அதற்கு பாராட்டுக்களைப் பிடியுங்கள் முதலில்..

உங்களது கேள்விகளுக்கு உறவுகள் தரப்போகும் பதிலைக் காண ஆவலுடன் இருக்கிறேன். அனைவருக்கும் கேள்விகளுடன் தனிமடல் அனுப்பிவிட்டீர்கள் தானே?

பாலகன்
30-10-2008, 08:10 PM
ராஜா அண்ணே எப்படி இருக்கீங்க

அமரன்
30-10-2008, 09:41 PM
சற்று சோர்வுடன் இருக்கும் மன்றம்
உற்சாகமாக கலகலக்கப் போவது திண்ணம்.
நன்றியும் பாராட்டும் நாரதரே!

இறைநேசன்
31-10-2008, 04:14 AM
அடுத்து நான் கேள்வி கேட்க விரும்புவது [COLOR="red"][B]இறைநேசன் அவர்களிடம்..............

என்னை தெரிவு செய்து ஏற்றதொரு வினாவை எழுப்பிய நாரதர் அவர்களுக்கு நன்றி பகருகிறேன்!

தாங்களின் கேள்விக்கு தக்கதொரு பதிலை விரைவில் தருகிறேன்.
அன்புடன்
இறைநேசன்

ரங்கராஜன்
31-10-2008, 09:23 AM
அன்புள்ள நாரதரே

என் கண்கள் இப்பொழுது ஆனந்த கண்ணீரில் மிதக்கிறது. நான் என்ன என்று சொல்வேன், என்னையும் மதித்து மன்றத்தில் மூத்தவர் ஆகிய நீங்கள், உங்களின் முதல் கேள்வியை எனக்காக ஒதுக்கியதில், என்னுடைய தன்னடக்கத்தையும் மீறி எனக்கு மார்தட்ட தோன்றுகிறது. சுஜாதா ஐயாவின் இறுதி அஞ்சலியில் எனக்கு நடந்த சம்பவங்களை நான் எவ்வளவு பெருமையாக உணர்ந்தேனோ, அந்த அளவுக்கு உங்களின்
கேள்வியினால் பெருமையாக உணர்கிறேன். கண்ணீருடன் நன்றிகள். சரி நாம் விஷயத்திற்கு வருவோம், நீங்கள் கூறியபடி பிற்காலத்தில் நான் எழுத்தாளனாக உருவேடுத்தால்?. அந்த பேட்டியை தந்து இருக்கிறேன்.
(கொஞ்சம் தலைக்கனமாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்)

பிரபல பத்திரிக்கையில்

நேயர்களே!

அனைவரும் தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். அந்த சந்தோஷத்துடன் நாங்கள் இந்த வாரத்தில் இருந்து நம்முடைய பத்திரிக்கையின் விலையை 15 ரூபாயில் இருந்து, 20 ரூபாயாக ஏற்றி இருக்கிறோம்,தயவு செய்து வாசகர்கள் ஏற்றுக்கொள்ளவும்,........நீங்கள் தீட்டுவது காதில் விழுகிறது, வாங்கிய விலையைக்கு உங்களை திருப்திபடுத்த நாங்கள் 30-ம் பக்கத்தில் உங்களுக்கு ஒரு ஆச்சர்யத்தை வைத்து இருக்கிறோம்.

-நாரதர்-



பக்கம் 30

இப்பொழுது உள்ள இளம் எழுத்தாளர்களில் தவிர்க்க முடியாதவர் திரு. தக்*ஷ்ணா மூர்த்தி அவர்கள். அவர் யார், எப்படி இருப்பார்,இளைஞனா?, அல்லது இளைஞன் என்று சொல்லிக் கொள்ளும் வயதானவரா?. தெரியாது, முத்ல முறையாக நமக்கு பேட்டி தர சம்மதித்து இருக்கிறார். சென்னை முகப்பேறில் உள்ள அவருடைய சின்ன வீட்டிற்க்குள் நுழைந்தோம். வாசலிலே வரவேற்றார். ஆம் எழுத்தாளர் தக்*ஷ்ணா மூர்த்தி உண்மையில் ஒரு இளைஞன் தான், அவருடைய சுவையான பேட்டி.

நாரதர் : வணக்கம் மூர்த்தி, நீங்கள் இளைஞனாக இருப்பீர்கள் என்று நினைத்தேன் ஆனால் இவ்வளவு சின்ன வயது என்று
எதிர்ப்பாக்கவில்லை?


மூர்த்தி : ஆஹா அப்படியா, அப்ப கண்டிப்பா மதியானம் நீங்க சாப்பிட்டு தான் போக வேண்டும்.

(இருவரும் சிரிக்கிறார்கள்)

நாரதர் : உங்க குடும்பத்தை பற்றி கொஞ்சம் சொல்லுங்க

மு : தயவு செய்து இந்த கேள்விய உங்க ஐந்தாவது கேள்வியா போட்டுக்கோங்க

நா : சரி அறிவியல் ஆசான் சுஜாதாவை பற்றி?

மு : உலகமே சொல்லுதே இதில் நான் என்ன தனியா சொல்ல, நான் எழுதுவதற்க்கு காரணம் அவர் தான், அதேப் போல நான்
லேட்டா எழுத ஆரம்பித்தற்கும் காரணமும் அவர் தான்.

நா : ஏன்? எப்படி?

மு : அந்த இலக்கிய மேதை இருக்கும் பொழுது, நான் கதை எழுதினா, அது தமிழுக்கு செய்யும் துரோகம்.

நா : சரி துரோகம்னு முடிவாயிடுச்சினா, அவர் இல்லாத பொழுது எழுதுறது அதைவிட துரோகம் தானே?

மு : எழுதாமலே இருந்தா அவரின் எழுத்தையெல்லாம் படிச்சதுக்கு அர்த்தமே இல்லாம போய்டும், கிணறில் போட்டது போல

நா : உங்களின் ஊக்கத்துக்கு யார் காரணம்?

மு : உலகத்தில் இருக்கும் எல்லா தமிழர்களுக்கு தெரிந்த ஒரு internet தளம் எது?

நா : google

மு : அதுக்கு அடுத்து

நா : தமிழ் மன்றம்

மு : அந்த ஒரே தளம் தான், என்னற்ற இயக்குனர்கள், பத்திரிக்கையாளர்கள், விமர்சகர்கள், எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை பெற்றது எங்கள் தமிழ்மன்றம். அங்கு தான் நான் தப்பு தப்பாக எழுத கற்றுக் கொண்டேன், இந்த வருடம் சிறந்த குறுப்படத்திற்க்கான தேசியவிருது வாங்கிய வழித்துணையை சிறுகதையாக அங்கு(மன்றத்தில்) தான் எழுதினேன். அதற்க்கு முதல் விமர்சனம் எழுதிய திரு.மதியை மறக்க மாட்டேன், அதை படித்து விட்டு மனதார
பாராட்டினார். அவர் மட்டும் “என்னடா கதை இது, முதல் கதையே சுடுகாடா?” என்று எழுதி இருந்தால், என்னுடைய ஆசைகள் முளையிலே கிள்ளப்பட்டு இருக்கும். அப்புறம் நடுநிலையான விமர்சனம் எழுதிய திரு. அமரன் அவர்கள், ஒவ்வொரு கதை எழுதிய பின் இவரின் விமர்சனத்திற்க்காக காத்து கிடப்பேன். அப்புறம் சிவா,shilyb08 இவர்கள் அனைவரும் நான் எழுதியது தப்பு என்றால் அல்லது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நெத்தி பொட்டில் அடித்தது போல எது தவறு,
அல்லது எதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்று விமர்சித்து விடுவார்கள் அதான் என்னை மெருக்கெற்றியது. கடைசியா நாரதர் “நீங்க பெரிய எழுத்தாளனா வருவீங்கன்னு” என்னை அடிக்கடி உற்ச்சாகம் செய்த என்னுடைய நலம் விரும்பி, நான் தினமும் என் அறை கண்ணாடியில் என் முகத்தை ஒரு எழுத்தாளனாக பார்க்கும் பொழுது எனக்கு பின்னாள் முகம் தெரியாத நாரதரின் பிம்பம் தெரியும்.

நா : சரி என்னுடைய ஐந்தாவது கேள்வி?

மு : என் குடும்பத்தை பற்றி தானே. என்னுடைய அம்மா நான் 11 வயதாக இருக்கும் பொழுதே இறந்து விட்டார், நாங்கள் திருப்பதி செல்லும் பொழுது ஒரு பஸ் வந்து எங்கள் காரை இடித்து விட்டது, அந்த இடத்திலே என் அம்மா கண் முன்னாடியே இறந்து விட்டார், என்னுடைய அப்பா அந்த துக்கம் தாளாமல் வேறு ஒரு கல்யாணம் செய்துக் கொண்டு சென்று விட்டார். நான் சொந்தங்களின் வீடுகளில் சுழற்ச்சி முறையில் வாழ்ந்தேன். பொறியியல் படிப்பை முடித்தேன், இப்பொழுது ஒரு வளரும் கம்பனியில் அனிமேட்டராக பணிபுறீகிறேன். நீங்கள் பேட்டியை ஆரம்பிக்கும் போது நான் இதை சொல்லி இருந்தால் ஆரம்பமே சோகமாக இருந்து இருக்கும் அதான் அப்புறம் கேட்க சொன்னேன்.

நா : சாரி சார்

மு : நீங்க எதுக்கு சாரி சொல்றீங்க, நீங்களா அந்த பஸ்ச ஓட்டினு வந்து இடிச்சிங்க

(சோகமான சூழ்நிலை மறைந்து இருவரும் சிரித்தனர்.)

நா : தப்பா நினைக்க கூடாது, உங்க கதைகள் பெரும்பாலும் சோகத்திலே இருப்பதற்க்கு, உங்கள் சின்ன வயதி நடந்த இந்த சம்பவம் காரணமா?

மு : இருக்கலாம், என்னுடைய சொந்த கருத்து ஒரு கதை எழுதும் பொழுது, அந்த கதை வாசகனின் வாழ்க்கையோடு கொஞ்சமாக
சம்மந்தம் படுத்த வேண்டும், சொல்ல வந்த கருத்தை வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல கொஞ்சம் சோகமாக இருக்க வேண்டும்.

நா : ஏன் அதே கருத்தை சோகம் இல்லாமல், சிரிப்புடன் கண்களில் தூசி எடுப்பது போல சொல்லலாமே

மு : நல்ல உவமை, உங்கள் வாழ்க்கையில் நடந்த சிரிப்பு சம்பவங்களையும், சோக சம்பவங்களையும் நினையுங்கள்?. சிரிப்பு சம்பவங்களே விட சோக சம்பவங்கள் தான் முதலில் ஞாபகம் வரும். அதான் மனித மனது.

நா : சரி சாவுயில்லாமல் ஒரு கதையை உங்களால் தர முடியாதா?, உங்கள் கதைகளில் எப்பொழுதும் இரு வேறு உலகத்தை ஓப்பிடுகிறீர்களே ஏன்?

மு : முதல் கேள்விக்கான பதில் மனித வாழ்க்கையில் மிகவும் துயரமான சம்பவம் என்பது மரணம், ஆனால் இன்றைய தேதிக்கு இறந்தவரின் வீட்டில் இரண்டாவது நாள் டீ.வி சீரியல் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள், ஒரு வாரத்திற்க்குள் அசைவம் சமைக்கிறார்கள், சாலையில் அடிப்பட்டு இறந்து கிடக்கும் பிணத்தை பஸ்சில் இருந்த படியே பார்த்து விட்டு கையில் இருக்கும் வேர்க்கடலையை சாப்பிடுகிறோம், இரவு செய்திகளில் யுத்தத்தில் இறந்து கிடக்கும் பிணங்களை பார்த்துக் கொண்டு இரவு உணவு சாப்பிடுகிறோம், சாப்பிட்டு விட்ட இளம் தம்பதிகள் எந்த உணர்வும் இல்லாமல் கலவியல் இன்பத்தை அனுபவிக்கிறார்கள். மனித மனங்கள் மறுத்துப் போய் கொண்டு இருக்கிறது, அதை துளிர்க்கவைக்க என்னால் முடிந்ததை
எழுதுகிறேன்.
இரண்டாவது கேள்விக்கான பதில் இரு வேறு உலகங்களை காட்டுகிறேன், ஆம் எப்பொழுதும் வெயில் இருந்து நிழலை பார்த்தால் தான் வெயிலின் கோரம் தெரியும், நிழலின் அருமை புரியும்.

நா : எழுத்தாளனாக இருக்கிறீர்கள் அப்ப கண்டிப்பா காதல் விவகாரம் இருக்கும்?

மு : உண்மை தான், எழுத்தாளன் ஆயிற்றே அதனால் காதல் தவிர்க்க முடியாதது தான், அதே போல காதல் தோல்வியும் தான்.

நா : ஏன் என்ன ஆச்சு?

மு : கல்லூரி காலத்தில் நடந்தது, கஷ்டப்படுபவர்களை பார்த்தால் அவருக்கு உதவி செய்லாம், ஆனால் அவர்கள் கூட சேர்ந்து நாமும் கஷ்டப்பட முடியாது, அப்படி பாவம் பார்த்து கஷ்டப்பட்டால், அந்த பாவ உணர்வு எப்பொழுது வேண்டுமனாலும் மறையலாம். அந்த மாதிரி பரிதாபதிற்க்கும் காதலுக்கும் வித்தியாசம் எனக்கு தெரியாதனால் வந்தது காதல் தோல்வி.

நா : கவலைப்படாதீர்கள், உங்களுக்கு அழகான மனைவி கிடைப்பாங்க சார்

மு : (சிரித்துக்கொண்டு) பிரச்சனையே அதான் சார், அவங்களும் அதே ஆசையுடன் காத்து இருக்காங்க சார், அதான் எனக்கு இன்னும் கல்யாணமே ஆக மாட்டுது.

நா : (சிரித்துக்கொண்டு) சார், தப்போ, ரைட்டோ, எல்லத்துக்கும் ஒரு பதில் வச்சிருக்கிங்க. சரி உங்க புகைப்படம் ஒண்ணு குடுங்க, எங்க பத்திரிக்கையில போட வாசகர்கள் ஆவலா இருக்காங்க.

மு : சார், தப்பா நனச்சிக்காதீங்க, ஒரு எழுத்தாளனுடைய எழுத்துதான் வாசகர்களை ஊக்கப்படுத்தும், எழுத்தாளனின் புகைப்படத்தைவிட. அதனால் புகைப்படம் வேண்டாம், உங்கள சந்திச்சது ரொம்ப சந்தோஷம், உங்க பேரு?

நா : நாரதர்.

சற்று யோசித்து உள்ளே இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து வந்து தந்து

மு : நான் ஒரு எழுத்தாளனா ஆகனும்னு வாழ்த்திய முதல் ஆத்மாவோட புனைப் பெயர் வச்சிருக்கிங்க, அதானால உங்களை வருத்தப்படவைக்க விரும்புல இந்தாங்க.

http://www.4shared.com/file/69113517/6730fdd3/scan0024_copy.html



நா : (புகைப்படத்தை பார்த்தபடி) சார் இதுக்கு நீங்க தராமலே இருந்து இருக்கலாம், மூஞ்சே சரியா தெரியல

மு :(சிரித்துக் கொண்டு) எனக்கு நாரதர் ஆசையும் நிறைவேறனும், என் ஆசையும் நிறைவேறனும் அதான், வெளிச்சமாக இருப்பது உங்களுக்காக,
இருட்டா இருப்பது எனக்காக.

இந்த பேட்டியில் எதாவது தலைகனத்துடன் பேசி இருந்தால் மன்னிக்கவும்- நிகழ்கால தக்ஷ்ணாமூர்த்தி

MURALINITHISH
31-10-2008, 09:35 AM
நாரதர் கேட்ட கேள்விக்கு பதிலே கதையாக
மனிதமனம் எப்போதும் சோகத்தைதான் நினைத்து பார்க்கும் அதிலும் உங்கள் சோகம் :frown::frown::frown:

கேட்ட கேள்விக்கு பதிலை கூட உடனே கதையாய் எழுதி கொடுக்கும் உங்கள் திறமைக்கு ஒரு :icon_b: :icon_b: :icon_b:

kavitha
31-10-2008, 09:59 AM
அனைத்தும் மழைத்துளி போல முத்து முத்தான கேள்விகள். பதில்களைக்காண வெகு ஆவலாய் இருக்கிறது. கேள்விகளுக்கு நன்றி நாரதர் அண்ணாச்சி.

பாபு
31-10-2008, 10:10 AM
நன்றி நாரதரே.

இந்த மன்றத்தில் எனக்கு செல்வா, மதுரைவீரன் ஆகிய சிலர் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள். செல்வா மூலம் தான் நான் இங்கு வந்தேன் என்று ஏற்கனவே என் அறிமுகத் திரியில் கூறியிருக்கிறேன். மற்றபடி வேறு யாராவது வேறு பேரில் (எனக்குத் தெரிந்த ஆனால் இங்கு வேறு புனைப்பெயரில்) இருப்பார்களேயனால் எனக்குத் தெரியவில்லை.

இந்த மன்றத்தில் எனக்கு முதல் முதலில் திரியில் அறிமுகமானவர் அமரன். பிறகு நாரதர். கொஞ்சம் ஷிப்லி கவிதைகள் படித்தேன். கொஞ்சம் தீபன். என்னால் நிறைய நேரம் இதற்காக ஒதுக்கமுடியவில்லை என்று நிஜமாய் வருந்துவது உண்டு.

எனக்கு இங்கு ஹாங்காங்கில் சில நண்பர்கள் உண்டு, கொஞ்சம் ஹிந்தி நண்பர்கள், கொஞ்சம் தமிழ் நண்பர்கள். தமிழ் நண்பர்கள் எல்லாரும் என் அண்ணன் மூலமாக அறிமுகமானவர்கள். நிறைய பேசும் நேரமெல்லாம் இங்கு கிடையாது. ஏதோ தொலைபேசியிலோ அல்லது நேரில் பார்த்தாலோ வணக்கம் சொல்லிக்கொள்வதோடு சரி. பண்டிகை நேரத்தில் நண்பர்கள் வீட்டிற்கும் செல்வது உண்டு. அவ்வளவுதான்.

சொல்லிக்கொள்ளும்படி நண்பர்கள் என்றால் நான் வேலை பார்த்த துலியா தான். (தற்போது மாலேகாவ்ன் என்ற இடத்தில் குண்டு வெடிப்பு நடந்ததால் இங்கு ஊரடங்கு என்று நீங்கள் பேப்பரில் படித்திருக்கலாம்.) இங்கு எனக்கு நிறைய நண்பர்கள். நான் பிறந்த ஊருக்கு சமமாக நினைப்பதால் இங்கு என் நண்பர்களும் அதிகம். இப்போதும் நான் தொலைபேசியில் அடிக்கடி பேசும் நண்பர்கள் இருக்கிறார்கள் இந்த ஊரில்.

மற்றபடி என்னைப்பற்றி சொல்ல அதிகம் இல்லை. கொஞ்சம் கவிதை, அதிக வேலைச்சுமையுடன் ஹாங்காங்கில் வசித்துவருகிறேன். ஒரு வருடம் முன்பு தான் திருமணம் ஆனது. வாழ்க்கை நல்லபடியாய் போய்க்கொண்டிருக்கிறது.

Narathar
31-10-2008, 10:28 AM
அன்புள்ள நாரதரே

என் கண்கள் இப்பொழுது ஆனந்த கண்ணீரில் மிதக்கிறது. நான் என்ன என்று சொல்வேன், என்னையும் மதித்து மன்றத்தில் மூத்தவர் ஆகிய நீங்கள், உங்களின் முதல் கேள்வியை எனக்காக ஒதுக்கியதில், என்னுடைய தன்னடக்கத்தையும் மீறி எனக்கு மார்தட்ட தோன்றுகிறது. சுஜாதா ஐயாவின் இறுதி அஞ்சலியில் எனக்கு நடந்த சம்பவங்களை நான் எவ்வளவு பெருமையாக உணர்ந்தேனோ, அந்த அளவுக்கு உங்களின்
கேள்வியினால் பெருமையாக உணர்கிறேன். கண்ணீருடன் நன்றிகள்.

கண்ணீர் எல்லாம் எதற்கு அன்பு நண்பரே.....
நல்லவிடயங்களை எங்கு கண்டாலும் பாராட்டி
ஊக்கிவிக்கவேண்டியது நமது கடமையல்லவா?
அதைத்தான் செய்தேன்..........

உங்கள் எழுத்து நடையும், வேகமும் என்னை கவர்ந்திருந்தது...
அதை ஊக்குவிக்க வேண்டுமென்ற உந்துதலே
உங்களை முதல் கேள்வி கேட்க வைத்தது

இதே ஊக்கத்துடன் தொடர்ந்து எழுதுங்கள்.

க.கமலக்கண்ணன்
31-10-2008, 12:26 PM
உங்கள் பதில் மிகவும் அருமையான பதிவு. நன்றி மட்டும் அல்ல, வாழ்த்துக்களும் சொல்ல விழைகிறேன்... நிகழ்கால தக்ஷ்ணாமூர்த்தி

மதி
31-10-2008, 12:47 PM
பாபு மற்றும் மூர்த்தி... அழைப்பை ஏற்று உடனே தங்கள் முத்தான பதில்களை பதிந்தமைக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்

ராஜா
31-10-2008, 02:11 PM
நாரதரின் கேள்வித்தொகுப்பில் கடும் உழைப்பு தெரிகிறது.. நன்றி..!

மூர்த்தியின் பதிலில் கலகலப்பும் கவனமும் தெரிகிறது.. நன்றி..!

என் மண்ணின் மைந்தன் பாபுவின் பதிலில் கச்சிதம் தெரிகிறது.. நன்றி..!

பில்லாவின் விசாரிப்பில் அன்பு தெரிகிறது.. நன்றி..!

Mano.G.
31-10-2008, 02:48 PM
அன்பான நாரதர் எனும் புனைபெயரில் மன்றத்தில் உலாவந்து பலரையும் கலாய்க்கும்
(இயற்பெயர் தெரியவில்லை) எனதன்பு சகோதரரே, மன்ற உறவுகளை ஒன்றிணைத்து விழா
சிங்கார சென்னையில் நடத்தாலாம் என எண்ணி மலேசிய சகோதரர் டாக்டர் அண்ணாதுரையுடன் உரையாடிய பொழுது அவரின் உற்சாகமான
வார்த்தைகள் என்னை உசுப்பி, அந்த விழாவினை வருகிர டிசம்பர் மாதம் 21ம் நாள் நமது தலை மணியாவின் தலைமையில் நடத்த எண்ணி நமது மன்றத்தில் அதற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என பதிவுகள் இட்ட பொழுது நல்ல வரவேற்பு கிட்டியது, ஆனால் தங்கள் வருகையை தம்பி மன்மதனின் தனிமடலில் பதிவு செய்து கொள்ளுங்கள், அதற்கான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது என அறிவிப்பு செய்த பொழுது ஆதரவு சற்றுமங்கி போனது, ஆனால் முன்வைத்த காலை பின்வைக்க கூடாது என எனது சென்னை வருகையை இன்று தான் (31/10/2008)உறுதிபடுத்தினேன் வருகிர டிசம்பர் 19ம் நாள் முதல் டிசம்பர் 26 தமிழ்நாட்டில் இருப்பேன். முடிந்த மட்டும் மன்ற உறவுகளை சந்திக்க எண்ணமும் கொண்டுள்ளேன். இம்முறை மதுரை மற்றும் பாண்டிச்சேரி செல்லவும் எண்ணியுள்ளேன்.

டிசம்பர் 21 திகதிக்கு இன்னமும் 50நாட்கள் இருக்கின்றன, இந்த நிகழ்வினை புத்துயிர் கொடுத்து புது உத்வேகத்தோடு நடத்த மீண்டும் சகோதர சகோதரிகளின் ஆதரவும் வருகையும் எதிர்பார்க்கிரேன்.


மனோ.ஜி

அறிஞர்
31-10-2008, 09:02 PM
எனது அடுத்த கேள்வி மன்றத்தின் நிர்வாகி நம்ம அறிஞரிடம், எனக்குத்தெரியும் உங்களுக்கு
நிறைய வேலைப்பழு....... அதனால் பத்தே பத்து வார்த்தைகளில் விடை தாருங்கள் 8.




மன்ற தலைமை பதவியென்பது?

ரோஜா (சிறிய முட்களுள்ள) படுக்கைப் போன்றது.
ஒரு விதத்தில் சந்தோசம்.
சில மனகசப்புகள் உறுப்பினர்களிடையே வருவது... வருத்தத்தை தரும்...
குடும்பத்தில் இது சகஜம் தானே.

மன்றத்தில் உங்கள் முதல் படைப்பு?
சரியாக நியாபகம் இல்லை. உருப்படியாக எழுதினது என்றால் "அம்மா" என்ற கதை.

தமிழ் மன்றம் என்பது?
வாழ்க்கையில் ஒன்றாக கலந்துவிட்ட ஒன்று....

தங்கள் தொழில்?
ஆராய்ச்சி (கரிம வேதியியல், நானோடெக்னாலாஜி)

தங்களின் வசிப்பிடம்?
தற்பொழுது - அமெரிக்கா...

செல்ல ஆசைப்படும் இடம்?
அப்படி பெரிய ஆசை எல்லாம் இல்லை. எங்கிருந்தாலும் சந்தோசம், சமாதானத்துடன் இருக்கவேண்டும் என்பதே ஆசை...

மிக்க மகிழ்ச்சியான தருணம்?
ஆராய்ச்சியில் சாதிக்கும்பொழுது மிகுதியான மகிழ்ச்சி உருவாகும். தீவிரவாதிகள் வெடிகுண்டு, நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்களால் பெரிய அழிவை உருவாக்குகிறார்கள். அந்த வெடிகுண்டு, நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்களை கண்டுபிடிக்கும் தன்மையிலுள்ள பொருளை தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். தற்பொழுது பிரசித்தப்பெற்ற MIT, USAயில் கண்டுபிடித்த பொருளை அமெரிக்க ராணுவம் பயன்படுத்துகிறது.

தற்சமயம் நான் தயாரித்துள்ள ஒரு பாலிமர் அதைக்காட்டிலும் பல சிறப்புத்தன்மைகளைக் கொண்டுள்ளது. அதை கண்டுபிடித்த நிகழ்வு, மிக மகிழ்ச்சியான நிகழ்வு. இந்த ஆராய்ச்சி முழுவதும் வெற்றியடைந்தால்.. பல நன்மைகள் ஏற்படும்.

மிக வருந்திய தருணம்?
உறவுகளை இழப்பது....
நல்ல நண்பர்கள் சரியாக புரிந்துக்கொள்ளாமல் போய் பிரிவு ஏற்படுவது

திரு இராசகுமாரன் அவர்கள்?
நல்ல மனிதர். தன்னுடைய உழைப்பையும், பணத்தையும் பலருக்காக கொடுத்து வாழும் நல்ல நபர்.

தொல்லைதரும் நாரதர்...
அன்பு தொல்லைகள்தானே...
அளவு மீறும் பொழுது.. அன்பாக சொன்னால் திருத்திக்கொள்பவர்.
சாட் பண்ணும்பொழுது... குடும்ப காரியங்களை பகிர்ந்துக் கொண்டிருக்கிறோம்.
நல்ல நண்பர்.

rajeshkrv
01-11-2008, 12:10 AM
நாரதரின் கேள்விக்கான பதில்

சினிமா பாடல்களில் ஆழ்ந்த அறிவுடையவர் நீங்கள்.......... சினிமா பாடல்களோடு இவ்வளவு
ஈடுபாடு வரக்காரணம் என்ன

நாரதரின் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள் அது போல் இந்த கேள்வி பதில் பகுதியும் மிகவும் நன்றாகவே அமையும் என்பதில் எள்ளளவும் எனக்கு ஐயம் இல்லை.

மன்றத்தில் குரு என்று என்னை எல்லோரும் அழைக்க காரணம் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு இளசு அவர்கள் தான் காரணம். எனது ரசனையை கண்டு அவர் என்னை அப்படி அழைக்கலானார். அதற்கு தகுதியானவனா நான் என்று நானே என்னை பல* முறை கேட்டுக்கொண்டதுண்டு .

என்னையும் மதித்து கேள்வி கேட்டதற்கு நாரதருக்கு என் முதற்க்கண் நன்றிகளை சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.


என் சொந்த ஊர் மதுரை. பள்ளி பருவம் முதல் இலங்கை வானொலி கேட்டு வளர் ந்த எத்தனையோ இசை நெஞ்சங்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்வதில்
பெருமைப்படுகிறேன் ஏனென்றால் இன்றைய இலங்கை வானொலி அன்றைய வானொலி போல் இல்லை காரணம் விளம்பரதாரர் நிகழ்ச்சிகள்.

இலங்கை வானொலி, திருச்சி விவிதபாரதி மற்றும் மதுரை வானொலி நிலையங்களில் பாடல்களை கேட்டு வளர்ந்தேன். குறிபாக இலங்கை வானொலியிலும் சிங்கப்பூர் வானொலியிலும் ஒரு பாடலைபற்றி அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்வார்கள்.பாடியவர் இசையமைப்பாளர், பாடலாசிரியர், வெளிவந்த ஆண்டு என அனைத்தும் சொல்வார்கள். அது தான் பாடல்களின் மீதும் இம்மாதிரியான விஷயங்கள் மீதும் எனக்கு ஏற்பட்ட முதல் ஈர்ப்பு.

அது என்னமோ எனக்கு கிடைத்த ஆற்றலோ இல்லை எதுவோ ஒரு தடவை கேட்டால் இவை அனைத்தும் என் நினைவில் நன்றாக பதிந்து விடும். அது தான் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சிகளில் எந்த சொல்லில் பாட சொன்னாலும் பாட்டு சொல்ல உதவியாக இருந்தது. இப்படியாக வளர ஆரம்பித்த ஆர்வம் ஒரு முறை கிருஷ்ண ஜெயந்தியன்று கேட்ட குருவாயூருக்கு வாருங்கள் பாடலினால் அதிகமாகியது. இந்த பாடலை பற்றி என் தந்தையிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். அப்பொழுது தான் இசையரசி திருமதி பி.சுசீலா பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அது முதல் எம்.எஸ்.வி மற்றும் சுசீலா பெயர்களை கேட்டால் கூடுதல் கவனமாக பாடல்களை கேட்க ஆரம்பித்தேன். படங்களை பாடல்களுக்காக பார்க்க ஆரம்பித்தேன்.

படிக்கும் போது குறிப்பாக கணக்கு போட்டு பார்க்கும் போது வானொலி கேட்டுக்கொண்டு படிக்க அனுமதி கிடைத்தது ஏனென்றால் அதைக் கேட்டால் தான் கணக்கு ஒழுங்காக வரும் என்ற நிலையில் இருந்தது.

இது தான் பாடல்களில் ஆர்வம் உண்டான கதை. பிறகு திருமதி சுசீலா, கண்ணதாசன், வாலி என எல்லோரும் என்னை பாத்த்த கலைஞர்கள் ஆனார்கள். அதற்காக மற்ற பாடல்களை கேட்க மாட்டேன் என்றோ கேட்டதில்லை என்றோ இல்லை. எல்லா பாடல்களையும் கேட்பேன் ஆனால் பழைய பாடல்கள் அதிலும் இவர்களின் பாடல்கள் என்றால் கவனமாக கேட்ப்பேன். வரிகளும் நினைவில் பதிந்து போகும்


சமீபத்திய சினிமா பாடல்களின் போக்கு ஆரோக்கியமானதுதானா?

இந்த கேள்விக்கு பதிலளிப்பது சற்று கடினம். என் பதில் சற்று காட்டமாகக்கூட இருக்கும்.

இன்றைய சினிமாப்பாடல்களுக்கு போக்கு இருக்கிறதா ?? போக்கற்று போய்க்கொண்டிருக்கிறது.

எல்லா பாடல்களையும் சொல்லவில்லை ஆனாலும் 90% பாடல்கள் மன்மத ராசா சாயலில் தான் வருகிறது. அது தான் வியாபாரமும் ஆகிறது.

பாலிவுட்டில் "SEX SELLS" கோலிவுட்டில் " KUTHU PATTU/GAANA SELLS" .


வரைமுறை என்பது சிறிதளவும் இல்லாமல் எதை வேண்டுமானாலும் எழுதலாம், இரைச்சலும் கூத்துமாக இருந்தால் போதும் என்றுதான் இன்றைய இசை இருக்கிறது.


பழைய பாடல்களை கேளுங்கள். Technology
வளராத கால கட்டதில் கூட பல புதுமைகளை இசைப்பேரரிஞர்கள் செய்து காட்டியிருக்கின்றனர். ஆனால் பாடலின் இனிமையும் அழகும் குறையாத விதமாக செய்தார்கள்.


பாடகர்களும் ஒவ்வொரு பாடலையும் பரீட்சை எழுதுவது போல் சிரமம் கொண்டு பிழையில்லாமல் , மொழியை சிதைக்காமல் பாடினார்கள். எல்லோரும் சிரத்தைமேற்க்கொண்டு செய்தார்கள்

உதாரணத்திற்கு " நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே" பாடலின் இடையில் வரும் சீட்டி ஓசையைவைத்தே ஒரு மெட்டை உருவாக்கி வேறு ஒரு படத்தின் பாடலுக்கு தயாராகிவிட்டாராம் எம்.எஸ்.வி. இதை கவிஞரிடம் சொல்ல கவிஞரோ வார்த்தைகள் தேவையில்லையா என்று உறுமி பின் நடிகர்திலகத்திடம் சென்று சொல்ல நடிகர் திலக*மோ "என்னடா என்னை 3 நிமிஷம் சீட்டி அடிச்சுக்கிட்டே நடிக்க சொல்றியா என கிண்டல் செய்து பின் உருவான பாடல் தான் " யாரந்த நிலவு ".

பாடலுக்கு அருமையான மெட்டை எம்.எஸ்வி கொடுத்திருக்க, டி.எம்.எஸ்ஸோ ஒரு போதுமில்லாமல் குரலில் கம்பீரத்தை குறைத்துக்கொண்டு மென்மையாக அழகாக பாடியிருக்க , கவிஞரோ வார்த்தைகளில் தூள் கிளப்பியிருக்க நடிகர் திலகமோ இதையெல்லாம் மிஞ்சும் விதமாக என்ன செய்யலாம் என படப்பிடிப்ப்பை 2 நாட்கள் ஒத்திவைத்து யோசித்து பின் அற்புதமாக திரையில் நடித்திருப்பாரே இது தானய்யா தொழில் பக்தி இது இன்று உண்டா என்றால் பதில் என்ன ????????????
http://www.youtube.com/watch?v=DiT-X33VZ0k

Narathar
01-11-2008, 03:58 AM
ஆஹா.... நாரதரே...
எடுத்த காரியத்தில் கண்ணும் கருத்துமாக... ஒவ்வொருவரைப்பற்றியும் நன்கு ஆராய்ந்து உள்வாங்கி அழகான கேள்விக்கணைகளை சரமாக தொடுத்திருக்கிறீர்கள்..

அதற்கு பாராட்டுக்களைப் பிடியுங்கள் முதலில்..

உங்களது கேள்விகளுக்கு உறவுகள் தரப்போகும் பதிலைக் காண ஆவலுடன் இருக்கிறேன். அனைவருக்கும் கேள்விகளுடன் தனிமடல் அனுப்பிவிட்டீர்கள் தானே?

நன்றி மதியவர்களே.........உங்களின் கேள்விகளுக்கான பாராட்டுக்கு.... :)


சற்று சோர்வுடன் இருக்கும் மன்றம்
உற்சாகமாக கலகலக்கப் போவது திண்ணம்.
நன்றியும் பாராட்டும் நாரதரே!

வசமா மாட்டிவுட்டுட்டு பாராட்டு வேரயா?
"மெக்ஸிமம்" இரண்டு அல்லது மூன்று வரியில் பின்னூட்டமிட்டுக்கொண்டிருந்தவனை... பத்துப்பேரிடம் கேள்வி கேட்கச்சொல்லி...
ஒரு நாள் முழுக்க எழுத வச்சுட்டீர்..............

இதுக்கு இ பணம் தந்தேயாகனும்!!!!!!

சிலரிடம் கொடுத்து ஏமாந்ததை இப்படியாவது வசூல் செய்ய வேணுமல்லாவா???

நாராயணா!!!!!


என்னை தெரிவு செய்து ஏற்றதொரு வினாவை எழுப்பிய நாரதர் அவர்களுக்கு நன்றி பகருகிறேன்!

தாங்களின் கேள்விக்கு தக்கதொரு பதிலை விரைவில் தருகிறேன்.
அன்புடன்
இறைநேசன்

தங்களின் தக்க பதிலுக்காக காத்திருக்கின்றோம்..........

சீக்கிரமே தருவீர்கள் தானே????

Narathar
01-11-2008, 04:08 AM
நன்றி நாரதரே.

இந்த மன்றத்தில் எனக்கு செல்வா, மதுரைவீரன் ஆகிய சிலர் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள். செல்வா மூலம் தான் நான் இங்கு வந்தேன் என்று ஏற்கனவே என் அறிமுகத் திரியில் கூறியிருக்கிறேன்................

மற்றபடி என்னைப்பற்றி சொல்ல அதிகம் இல்லை. கொஞ்சம் கவிதை, அதிக வேலைச்சுமையுடன் ஹாங்காங்கில் வசித்துவருகிறேன். ஒரு வருடம் முன்பு தான் திருமணம் ஆனது. வாழ்க்கை நல்லபடியாய் போய்க்கொண்டிருக்கிறது.




நன்றி பாபு , உங்களின் அழகிய ரத்தினச்சுருக்கமான பதிலுக்கு.....

மன்றத்தில் தொடர்ச்சியாக இணைந்திருங்கள்....
இன்னும் நல்ல பல ஆக்கங்களை கொடுங்கள்...
பணிச்சுமையா? என்னைப்போல நேரம் கிடைக்கும் போது சிறந்த படைப்புக்களை பாராட்டவாவது செய்யுங்கள்.

உங்களுக்கு மன்றத்திலும் ஒரு அழகிய நட்பு வட்டம் உருவாகும்.....




சொல்லிக்கொள்ளும்படி நண்பர்கள் என்றால் நான் வேலை பார்த்த துலியா தான். (தற்போது மாலேகாவ்ன் என்ற இடத்தில் குண்டு வெடிப்பு நடந்ததால் இங்கு ஊரடங்கு என்று நீங்கள் பேப்பரில் படித்திருக்கலாம்.) இங்கு எனக்கு நிறைய நண்பர்கள். நான் பிறந்த ஊருக்கு சமமாக நினைப்பதால் இங்கு என் நண்பர்களும் அதிகம். இப்போதும் நான் தொலைபேசியில் அடிக்கடி பேசும் நண்பர்கள் இருக்கிறார்கள் இந்த ஊரில்.


உங்கள் அபிமான ஊர் துலியாவைப்பற்றி.......
அங்குள்ள நண்பர்கள், அனுபவங்களை பிறிதொரு சந்தர்ப்பத்தில் நேரம் அமையும் போது மன்றத்தில் சுவையான சம்பவங்கள் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.....

தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்

Narathar
01-11-2008, 11:22 AM
டிசம்பர் 21 திகதிக்கு இன்னமும் 50நாட்கள் இருக்கின்றன, இந்த நிகழ்வினை புத்துயிர் கொடுத்து புது உத்வேகத்தோடு நடத்த மீண்டும் சகோதர சகோதரிகளின் ஆதரவும் வருகையும் எதிர்பார்க்கிரேன்.


மனோ.ஜி

அந்த ஒன்றுகூடல் நிச்சயமாக வெற்றிபெற வேண்டுமென்று
மனதார வாழ்த்துவதுடன்..... முடிந்தால் நிச்சயமாக நானும்
கலந்து கொள்வேன் என்பதையும் இங்கு சொல்லி வைக்க
விரும்புகின்றேன்.....

சில தேவைகளுக்காக இந்தியா செல்ல வேண்டியுள்ளது... முடியுமானவரை அவற்றை தள்ளிப்போட்டு எமது நிகழ்ச்சிகளிலும்
பங்கு பற்றக்கூடிய விதத்தில் வர முயற்சிக்கின்றேன்....

எல்லாம் சாதகமாக அமைந்து,
ஒன்றுகூடல் வெற்றிகரமாக நடைபெற எனது
பிரார்ததனையுடன் கூடிய வாழ்த்துக்கள்.


அன்பான நாரதர் எனும் புனைபெயரில் மன்றத்தில் உலாவந்து பலரையும் கலாய்க்கும்
(இயற்பெயர் தெரியவில்லை)

எனது தனிப்பட்ட விபரங்களை ஆரம்ப காலங்களில்
உங்களோடு தனிமடலில் பகிர்ந்து கொண்டுள்ளேன்...:)

நீங்கள் மறந்துவிட்டீர்கள் போலும்,
பரவாயில்லை இன்னொரு தனிமடலில்
சொல்கின்றேன்

சூரியன்
01-11-2008, 01:56 PM
அன்புள்ள நாரதரே

என் கண்கள் இப்பொழுது ஆனந்த கண்ணீரில் மிதக்கிறது.

இந்த பேட்டியில் எதாவது தலைகனத்துடன் பேசி இருந்தால் மன்னிக்கவும்- நிகழ்கால தக்ஷ்ணாமூர்த்தி

அழகான கேள்விக்கு அற்புதமான பதில்.
(நீங்கள் கொடுத்துள்ள சுட்டி சரியாக வேலை செய்யவில்லை அதை கவனிக்கவும்.)

சூரியன்
01-11-2008, 02:04 PM
அன்பான நாரதர் எனும் புனைபெயரில் மன்றத்தில் உலாவந்து பலரையும் கலாய்க்கும்
(இயற்பெயர் தெரியவில்லை) எனதன்பு சகோதரரே, மன்ற உறவுகளை ஒன்றிணைத்து விழா
சிங்கார சென்னையில் நடத்தாலாம் என எண்ணி மலேசிய சகோதரர் டாக்டர் அண்ணாதுரையுடன் உரையாடிய பொழுது அவரின் உற்சாகமான
வார்த்தைகள் என்னை உசுப்பி, அந்த விழாவினை வருகிர டிசம்பர் மாதம் 21ம் நாள் நமது தலை மணியாவின் தலைமையில் நடத்த எண்ணி நமது மன்றத்தில் அதற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என பதிவுகள் இட்ட பொழுது நல்ல வரவேற்பு கிட்டியது, ஆனால் தங்கள் வருகையை தம்பி மன்மதனின் தனிமடலில் பதிவு செய்து கொள்ளுங்கள், அதற்கான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது என அறிவிப்பு செய்த பொழுது ஆதரவு சற்றுமங்கி போனது, ஆனால் முன்வைத்த காலை பின்வைக்க கூடாது என எனது சென்னை வருகையை இன்று தான் (31/10/2008)உறுதிபடுத்தினேன் வருகிர டிசம்பர் 19ம் நாள் முதல் டிசம்பர் 26 தமிழ்நாட்டில் இருப்பேன். முடிந்த மட்டும் மன்ற உறவுகளை சந்திக்க எண்ணமும் கொண்டுள்ளேன். இம்முறை மதுரை மற்றும் பாண்டிச்சேரி செல்லவும் எண்ணியுள்ளேன்.

டிசம்பர் 21 திகதிக்கு இன்னமும் 50நாட்கள் இருக்கின்றன, இந்த நிகழ்வினை புத்துயிர் கொடுத்து புது உத்வேகத்தோடு நடத்த மீண்டும் சகோதர சகோதரிகளின் ஆதரவும் வருகையும் எதிர்பார்க்கிரேன்.


மனோ.ஜி


நிச்சயம் அனைவரின் ஆதவும் இதற்கு இருக்கும் அண்ணா.

Narathar
02-11-2008, 09:33 AM
8.




மன்ற தலைமை பதவியென்பது?

ரோஜா (சிறிய முட்களுள்ள) படுக்கைப் போன்றது.
ஒரு விதத்தில் சந்தோசம்.
சில மனகசப்புகள் உறுப்பினர்களிடையே வருவது... வருத்தத்தை தரும்...
குடும்பத்தில் இது சகஜம் தானே.

தொல்லைதரும் நாரதர்? ...............................................................நல்ல நண்பர்.



நான் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் அதிகமாகவே
சொல்லிவிட்டீர்கள்! நன்றி :)

மன்றில் உலவிக்கொண்டிருக்கும் இளம் நெஞ்சங்களுக்கு
நம்ம அறிஞர் எப்படிப்பட்டவர் என்று உணர்த்ததான்
இந்த பரஸ்பர கேள்வியை உங்கள் முன் வைத்தேன்

அழகிய பதிலால் அசத்தி விட்டீர்கள் :icon_b:

Narathar
02-11-2008, 09:49 AM
நாரதரின் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள் அது போல் இந்த கேள்வி பதில் பகுதியும் மிகவும் நன்றாகவே அமையும் என்பதில் எள்ளளவும் எனக்கு ஐயம் இல்லை.

நாராயணா!!!! :lachen001: :lachen001: :lachen001:




என்னையும் மதித்து கேள்வி கேட்டதற்கு நாரதருக்கு என் முதற்க்கண் நன்றிகளை சொல்ல கடமைப்பட்டுள்ளேன்..

என்னை மதித்து பதில் சொன்ன உங்களுக்கும் எனது நன்றிகள்........



என் சொந்த ஊர் மதுரை. பள்ளி பருவம் முதல் இலங்கை வானொலி கேட்டு வளர் ந்த எத்தனையோ இசை நெஞ்சங்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்வதில்
பெருமைப்படுகிறேன் ஏனென்றால் இன்றைய இலங்கை வானொலி அன்றைய வானொலி போல் இல்லை காரணம் விளம்பரதாரர் நிகழ்ச்சிகள்..

அப்போ என் குரலை கேட்டதுண்டா???
ஹா ஹா... நல்ல வேளையாக கேட்டிருக்க மாட்டீர்கள்.
கேட்டிருந்தால் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் மீதுள்ள மதிப்பை குறைத்துக்கொண்டிருப்பீர்கள்!!



படிக்கும் போது குறிப்பாக கணக்கு போட்டு பார்க்கும் போது வானொலி கேட்டுக்கொண்டு படிக்க அனுமதி கிடைத்தது ஏனென்றால் அதைக் கேட்டால் தான் கணக்கு ஒழுங்காக வரும் என்ற நிலையில் இருந்தது..

எங்க ஊர் டீ வியில் நைட்ரைடர் என்ற ஒரு தொடர் போட்டார்கள், அதைப்பார்த்துக்கொண்டே படித்த ஞாபகத்தை கிளரிவிட்டீர்கள் போங்கள்!!!



இன்றைய சினிமாப்பாடல்களுக்கு போக்கு இருக்கிறதா ?? போக்கற்று போய்க்கொண்டிருக்கிறது..

அதே! அதே!! சபாபதே!!!


உதாரணத்திற்கு " நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே" பாடலின் இடையில் வரும் சீட்டி ஓசையைவைத்தே ஒரு மெட்டை உருவாக்கி ..................................... பின் உருவான பாடல் தான் " யாரந்த நிலவு "..


அருமையான அந்த நிகழ்வை எஸ் பீ பீயவர்கள் வாயாலே சொல்லகேட்கவைத்த உங்களுக்கு என் நன்றிகள்.

namsec
02-11-2008, 11:55 AM
எனது அடுத்த கேள்வி [B][COLOR="red"]திரு: நாம்செக் அவர்களுக்கு, உங்களை பல திரிகளில் சந்த்தித்திருக்கின்றேன்
ஆனால் ஒரு சில நாட்களுக்கு முன்னர் மனித சங்கிலி வெற்றித்தொடரில் உங்களை கொஞ்சம்
கடுப்படிக்க வைத்தேன் ஞாபகமா? அந்த அறிமுகமே உங்களிடமும் ஒரு கேள்வியை கேட்க வேண்டும்
என்று நினைக்கவைத்தது.... இந்தக்கேள்வியும் உங்களைப்பற்றி மன்றத்தில் இன்னும் கொஞ்சம் நானும்
மற்றவர்களும் அறிந்து கொள்வதற்காகத்தான்......

3. ஆன்மீகத்தில் அதிக நாட்டமுள்ள நீங்கள் சொந்தமாக போக்குவரத்து தொழில் நடத்துகின்றீர்கள்,
அத்தோடு அரசியலிலும் உங்களுக்கு ஈடுபாடு உண்டு என்பதை உங்கள் சமீபத்திய பதிப்பொன்று
வெளிக்காட்டியது...... உங்களிடம் கிளைக்கேள்விகளாக மூன்று கேள்விகளை கேட்கின்றேன்....




ஆன்மீக ஈடுபாடு எப்படி ஏற்பட்டது?
தொழில் எப்படி நடக்கிறது?
மனித சங்கிலி நடத்துவதால் ஈழ பிரச்சனைக்கு முடிவு வருமா?





==========================================================================

1. என் தந்தை ஆன்மிகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர் அதன் மூலம் எனக்கு

2. தொழில் சுமார் மேலும் புதிதாக ரியல் எஷ்டேட் தொழில் அரம்பித்துள்ளேன் அருமையாக உள்ளது

3. கன்டிப்பாக முடியாது

பார்த்திபன்
02-11-2008, 07:08 PM
வணக்கம் நாரதர்.

சுதந்திரப்பறவையாக படிப்பதில் மட்டும் அக்கறை காட்டிவந்த என்னையும் மதித்து எனக்கென ஒரு கேள்வியை கொடுத்து பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள். அதற்கு முதற்கண், நன்றிகள்

கோடிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்விடத்தில் என்னைப்பற்றிய சிறு அறிமுகத்தை தந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நான் இலங்கையில், யாழ்ப்பாணத்தில் பிறந்து இடம்பெயர்வு என்ற அலைகளில் அடிக்கப்பட்டு இறுதியாக மத்தியகிழக்கில் பணியின் நிமித்தம் (தற்காலிகமாக) ஒதுங்கியிருக்கிறேன்.

நிரந்தரமற்ற உலகில் நிலையான முகவரி இல்லாது அலைந்து திரியும் ஈழத்தமிழர்களில் நானும் ஒருவன் என்பதை சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

மன்றத்திலிருக்கும் அன்புரசிகன், ஓவியன், விராடன், கம்பன், சுடரவன் போன்றவர்களை நன்கு அறிந்தவன். இன்னும் சுருக்கச் சொல்லப்போனால், பரீட்சயமானவனும் கூட. ஆமாம்.

பல்கலைக்கழகத்தில் இவர்கள் படிக்கும் காலத்தில் நானும் படித்திருந்தேன். அன்புரசிகன் சில மாதகாலங்களுக்கு முன்னர் வரை என்னுடன் பணிபுரிந்திருந்தார். அப்போது அவரின் தமிழ்மன்றத்தின் மீதான அபரிமிதமான ஈர்ப்பை பார்த்து நானும் அதன் பால் ஈர்க்கப்பட்டேன். எனது பங்களிப்பும் இருக்கவேண்டும் என்று சிந்திப்பேன். எவ்வழியில் என்பது தெரியாது சிந்தனைகளை பதங்கமாக்கிவிடுவேன்.

இனி நாம் கேள்விக்கு வருவோம்..

நம் நாட்டின் நிலவரம் நம்மையெல்லாம் "போ..." என்று விரட்டியடிக்கிறது........
என்றாலும் வரும் சவால்களுக்கெல்லாம் முகம் கொடுத்து நாம் நம் தாய் நாட்டிலேயே வாழ முடியாதா?

நல்லதொரு கேள்வி. இதேகேள்வியை ஒத்த கேள்வி சிலகாலங்களுக்கு முன்னர் அன்புரசிகனிடம் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு தன்னுடைய அனுபவத்தில் இரண்டை உதாரணமாக சொல்லியதுடன் வெளிநாட்டிற்கு வந்ததால் பெற்றார் அடையும் நிம்மதிபற்றியும் சொல்லியிருந்தார்.(மேலதிக விளக்கத்திற்கு இதே திரியில் 2164 ஆவது பதிவை பார்க்க). அவர் தன்னுடைய அனுபவம் என்ற ரீதியில்த்தானே சொல்லியிருக்கிறார், அது மற்றவர்களுக்கு எப்படிப்பொருந்தும் என எண்ணவேண்டாம்.அன்புரசிகன் சொல்லிய அனுபவம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு வியூகமாக அமையப்பெற்றிருக்கும். அவ்வளவுதான்.

ஆக மேற்படி கேள்விக்கு பதில் என்ற ரீதியில் அதையே ஒத்த பதிவை மீள பதியத்தேவை இல்லை என நினைக்கிறேன். ஆகையால் அடுத்த வினாவிற்கு செல்கிறேன்.


நம் பாதுகாப்பையும் நம் குடும்பத்தவரது திருப்தியையும் நாடி வெளிநாடு சென்றுவிட்டு, அங்கிருந்துகொண்டு போராளி வேஷம்கட்டுபவர்களைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

நல்லதொரு வினா.

வெளிநாடு சென்றோர்களில் பலர் தமது சிறு வயதுக்காலத்திலேயே சென்றுவிட்டனர். அவர்களுக்கு விவரம் தெரியாத காலப்பகுதியிலேயே பெற்றோர் உறவினர்களில் முயற்சியால் வெளிநாடு போய்விட்டார்கள்.
ஏனையோர் பல இழப்புக்களை சந்தித்து சந்ததியில் இருப்போரையாவது காப்பாற்றி விடுவோம் என்ற அங்கலாய்ப்பில் பெற்றோரின் உந்துதலால் வெளிநாட்டிற்கு சென்றோரும், வேலை, படிப்பின் நிமித்தம் வெளிநாட்டிற்கு சென்றோரும் இருக்கின்றனர்.

இவர்களில் கணிசமான வீதமானோர் தமது உயிரைக்காப்பாற்றிக்கொள்வதற்காக வெளிநாடு ஓடியவர்கள் அல்ல. தாம் வெளிநாடு செல்வதால் பலர் பல வழிகளில் நிம்மதி அடைவார் என்ற காரணத்தாலேயே செல்கின்றனர். அப்படிச்சென்றோரும், சிறுவயதில் சென்று பின்னர் விவரம் தெரிந்து கொண்டவர்களும், தமது தாய் நாட்டை பற்றி சிந்திப்பதும் தமது இன,தேசப்பற்றை வெளிப்படுத்துவதும் தவறு என்று கருதமுடியாது. நாட்டிலிருந்து வெளியே சென்றோர் எல்லோரும் உணர்ச்சிகள் அற்ற ஜடங்கள் கிடையாது. அவர்களுக்கும் இனப்பற்று,
தேசப்பற்று, மொழிப்பற்று போன்றவை இருக்கிறது. ஆகவே அவர்கள் தமது இன அழிப்பிற்கு எதிராக குரல் கொடுப்போராக, இன அழிப்பை எதிர்ப்போரிற்கு சார்ந்து பேசுபவர்களாக இருப்பதும் ஒரு வகை போராட்டம்தான். இப்படிப்பட்ட இன, மொழி உணர்வுமிக்கோரை அங்கீகரிக்கவேண்டும், .


ஆனால் ஒரு சிலர் எல்லாரையும் விட உச்சத்துக்குப் சென்று, தானே முதன் நிலை போராளி என்பது போன்று பேசுகின்றனர். சற்றேனும் தமது கருத்துக்கு முரண்படுவோரை அதட்டுவதும், துரோகிகள் போன்று சித்தரித்து கதைப்பதும் காணக்கூடியதாக இருக்கிறது. ஆழ்ந்து நோக்கினால் தாயகத்தில் அவர்களுக்கு விடத்தலிலையளவேனும் மரியாதை இருக்காது. இப்படிக் கூறி கொண்டு தாமும் தாயக விடியலில் அதீத அக்கறை உள்ளோர் என்று காட்டிக்கொள்ள முனைகின்றனர். இவர்கள் ஒருவகையில் பார்த்தால் பச்சோந்திகள்தான். இவர்களில் பெரும்பாலானோர் தாயகத்திலிருந்தபோது பயந்தவர்களிற்கான பட்டியலில் முதன் நிலை வகித்தோராக இருப்பர். தற்போது தாம் வாழும் சூழலில் தான் விடும் அறிக்கைகளால் தனக்கு எந்த பிரச்சினையும் வராது என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு போராளிவேஷமிட்டு திரிவார்கள்.

இவர்களால் தாயகத்திற்கு ஒரு பயனும் கிடையாது.....
------------------------------------------------------------------------------------

இளசு
02-11-2008, 07:39 PM
....

நம்மளை வச்சு காமடி பன்னுறதில என் அம்மாவுக்கு
சளைத்தவரில்லை என் துணைவியாரும்...

...

மழைவிட்டும் தூவானம் விடாத நிலை பென்ஸூக்கு..

உங்கள் அன்னையாரின் இடத்துக்கேற்ற நல்ல நகைச்சுவை உணர்வை
உங்கள் பல பதிவுகளில் படித்து ரசித்து மதித்தவன் நான்..

அந்தப் பாதையில் இணையும் அமைந்த ''அதிர்ஷ்டக்காரப் பயபுள்ள''
பென்ஸூக்கு இதமான வாழ்த்துகள்...!

இளசு
02-11-2008, 07:43 PM
இளம் வயதில் என்னை பாதித்த சில சிறுகதைகள்..
ஒருபிடி சோறு - ஞானபீட தந்தை ஜெயகாந்தன்
நொண்டி பிள்ளையார் - ஜெகசிற்பியன்
கேதாரியின் தாயார் - கல்கி
காண்டாமணி - தி.ஜானகிராமன்
உண்மையே உன் விலை என்ன - சோ

கதையில் பெண்களை படைக்கும் போது அவர்களை உங்கள் தாயாகவும் சகோதரியாகவும் நினைத்து எழுதுங்கள் - காந்தி

"எங்கே போகிறோம்" என்ற அகிலனின் கதையில் வரும் ஒரு ஏழை எழுத்தாளர் கதாபாத்திரம் காசுக்காக கண்டதையும் எழுத மாட்டேன் என்ற நிலையில் பேசும் ஒரு வசனம் "எழுது கோல் தெய்வமடா"

"படத்தில் சரியானதை சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. தவறானதை நியாயப்படுத்தாதே" பாக்யராஜ் பாண்டியராஜனுக்கு சொன்னதாக படித்த நினைவு.

. என்னிடம் இந்த கேள்வியை கேட்டமைக்கு மிகவும் நன்றி.
இதை என் கதைக்கான அங்கீகாரமாக பாராட்டாக எண்ணி மகிழ்கிறேன்.

அன்புள்ள கீழைநாடன்,

உங்களின் இந்தப்பகிர்வின் மூலம் உள்ளத்துக்கு இன்னும் நெருக்கமாயும்
மதிப்பில் இன்னும் உயரமாயும் நீங்கள்...

என் மனமார்ந்த பாராட்டுகள்..
இப்படி ஒரு பதிலைக் கொணர்ந்த வினா ஈந்த பாரதிக்கு நன்றி!

இளசு
02-11-2008, 07:46 PM
நேரமின்மையால் இதற்கு முந்தைய நற்பதில்களை தக்க முறையில் பாராட்டத் தவறி
மன உறுத்தல்..

அதனால் இயன்றவரை இன்று முயல்கிறேன்..

நண்பர் நாரதரின் மிகத் துல்லியமான வினாக்கொத்தும்
அதற்கு இதுவரை பதில்களாய் விழுந்த இரத்தினங்களையும்
விரைவில் அலச வருவேன்..

திரிநாயகர் ராஜா, தளபதி அமரனுக்கு என் நன்றியும் அன்பும்..

இளசு
02-11-2008, 07:51 PM
06) ஐன்ஸ்டீன். சார்பியல் கோட்பாடுகள் கண்டறிந்த ஐன்ஸ்டீனின் பெரும்பாலான கண்டுபிடிப்புகள் வெறும் வெள்ளைத்தாளும், பேனாவும் கொண்டு மட்டுமே கணிக்கப்பட்டவை, . அவரை வானளாவ புகழ்ந்தவர்களைப் பார்த்து [B][COLOR="Red"]பரந்த இந்த அறிவியல் நதியின் கரையில் ஒதுங்கிய கூழாங்கற்களில் சிலவற்றைக்கண்ட சிறுவன் என தன்னடக்கத்தோடு கூறினார்.

சுஜாதா போன்றோர் அறிவியலை எளிமையாக அனைவருக்கும் புரியும் படி சொல்லிக் கொடுத்ததால் பெரும்பாலானோர்க்கு அறிவியல் பால் ஈர்ப்பு வந்தது.

தமிழில் கணிணியில் தட்டச்ச காரணமாய் இருந்த உமர் தம்பி அவர்களின் பங்கு அளப்பரியது. .

ஷிப்லியின் முக்கியமான இந்தக் கேள்விக்கு
முகிலனின் அறிவார்ந்த இந்தப்பதில் - பாராட்டுகளுக்குரியது..


அறிவியல் மைல்கற்களில் ஐன்ஸ்டீன் பற்றி எழுதப்போகும்
நாளுக்காக நானும் தவமிருக்கிறேன் முகில்ஸ்..

இணையத்தால் அறிவியற்தமிழுக்கு விளையும் நன்மைகளுக்கு
உன் மரபணு மாற்றப் பயிர்கள் தொடரே ஒரு தக்க சாட்சி..

இன்னும் எழுத நேரம் உனக்கு அமைய வேண்டும் என்பதே என் கட்சி..

இறைநேசன்
03-11-2008, 03:12 AM
அடுத்து நான் கேள்வி கேட்க விரும்புவது [COLOR="red"][B]இறைநேசன் அவர்களிடம்..............
தன் முயற்சியில் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தனை நினைவு படுத்துபவை உங்கள் ஆன்மிக பதிப்புக்கள்...
ஆனால் அந்தப்பதிப்புக்களில் மட்டுமே தங்கியிருப்பது நான் உங்களில் காணும் ஒரு குறை!


நண்பர் நாரதரின் நயமிக்க வினாக்களுக்கு நல்லதோர் விட்டயளித்த நல்லோர் எல்லோருக்கும் எனது அன்பின் வாழ்த்துக்கள்!

மன்றத்தின் மற்றெல்லா பகுதியிலுள்ள பங்கேற்று இணைந்து இன்புற எல்லையற்ற விருப்பம் எனக்கு என்றுமே உண்டு. ஆகினும் அடியேன் என் எண்ணப்படி எதுவும் எழுவது இல்லை! .பம்பாய் பட்டணத்தில் பலகாலம் வாழ்ந்தபோது, படப்பாடல்கள் மேல் பயித்தியமாய் பற்றுகொண்டேன்! சொகப்பாடலேன்றால் சொர்க்கத்தையே அதில்கண்டேன், மேலோடி பாடல் என்றல் மெய்மறந்து கேட்டிடுவேன்! அனேக நண்பர்களுடன் அன்பாக அரட்டைகள் அடித்திடுவேன்
மதுவிலே மூழ்கினான் மனமயங்கி வாழ்ந்திருந்தேன், பெண்களை பற்றி பேசுவதே பேரின்பம் என நினைத்தேன்! நினைத்ததெல்லாம் செய்துவந்தேன் நிலையற்ற இந்த உலகினிலே!

ஆனால் ஆண்டவரை அறிந்தபின் அப்படியே மாறிவிட்டேன் அவருக்கே அடிமையாய், அவர்சொலேதுவோ அதன்படி நடந்து அடுத்தவருக்கு அழியாத ஆனந்த இன்பம் ஈட்டுவது எதுவோ அதயே பாங்காய் பதிக்க விரும்புகிறேன்!


தாங்களின் தரமிக்க கேள்விக்கு தற்போது வருவோம்!



நீங்கள் சொல்லவரும் ஆன்மிக கருத்துக்களுக்கு எதிராக நம் மன்ற அறிவியல் ஆர்வலர்களும்
பெரியார் கொள்கை விரும்பிகளும் பல இடங்களில் எதிர்த்து வாதிடும்போது.. ஏன் உங்களைப்போன்ற
ஆன்மிக வாதிகளால் மற்றவர் பார்வையிலிருந்தும் குறித்த பிரச்சனையை நோக்க முடிவதில்லை?

அண்டத்தின் அற்புதத்தை அணுவிலிருந்து அறிந்துகொண்டு
ஆண்டாண்டாய் ஆராய்ந்து, அற்புதமாய் இயம்பிவரும்
அறிவியல் ஆர்வலர்களுக்கு அடியேன் நான் எதிரியல்ல!
மூடபழக்கமெல்லாம் முற்றுபெற வேண்டுமென்று
முனைப்போடு செயல்பட்டு, அனல்போல புறப்பட்டு
முன்னிருந்த தடைகளெல்லாம் முறியடித்து முயன்றுவந்த
பெரியார் என்னும் பெருமகனின் பேரறிவு கொள்கைகளுக்கு
பெரியதோர் எதிர்ப்பு எனக்கில்லை என்றுமே!

நான் சொல்வதெல்லாம்
இயற்க்கைக்கெல்லாம் தலைவனான இறைவனென்று ஒருவருண்டு
அனைத்துக்கும் மேலான ஆண்டவர் ஒருவருண்டு
எல்லாவற்றிக்கும் மேலான எம்பெருமான் ஒருவருண்டு
சகலத்துக்கும் மேலான சர்வ வல்லவர் ஒருவருண்டு என்பதே!

எல்லாம் அறிந்தவர் எவருமில்லை இவ்வுலகில். இருநூறு ஆண்டுக்குமுன் இல்லைஎன்று சொன்னதல்லாம் இன்று அனுபவித்து இனிதே நாம் வாழ்கின்றோம் அனுபவமே அரிதான பாடம் அறியவேண்டும் என்ற ஆவலே அடுத்த நிலை அறியச்செய்யும். அறிவியல் என்பது அனைவருக்கும் பொது. அவர்கள் அறிந்த அறிவியலை அடியேன் அறிந்துள்ளேன் ஆனால் ஆண்டவரை அறிவதென்பது அனைவராலும் இயலாது!

காதல் கருணை பாசம் நேசம் கசப்பு இனிப்பு காமம் கோபம் பசி தூக்கம் பட்டினி இன்பம் துன்பம் இவைஎல்லாம் அனுபவித்தே அறிய முடியும்!
ஆறு வயது சிறுவனுக்கு காமம் என்றால் புரியாது
அறுபது வயது பெரியவர்க்கு அத்தனையும் அத்துப்படி
அதுபோல்,
இறைவனை அறிவதும் ஓர் இன்பமான அனுபவம் அதை இயம்புவதேனப்து இங்கு இயலாத காரியம்!
அனுபவித்தால் அறிந்துகொள்ளலாம், அறியாததை தெரிவில்லை என்கலாம். ஆனால் இல்லவே இல்லை என்று இறுதியாக் இயம்புவது இவ்வுலகத்தில் என்றுமே ஏற்ற்ப்புடயது அல்ல!



அறிவியலுக்கும் ஆன்மிகத்துக்கும் இடையில் ஒரு சிறு நூலிடை வித்தியாசம்தான் இருக்கின்றது
என்று நான் சொல்கின்றேன் அது சார்பாக உங்கள் கருத்து என்ன?


அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் அதிக தூரம் எதுவுமில்லை
நூலிழை தூரம் என்ற நுட்பமாக எடுத்துரைத்த
அறிவான வாதம் தன்னை அடியேனும் ஆமோதிப்பேன்
அப்படியே ஏற்றிடுவேன்! ஆகினும்;

அறிவியலுக்கும் ஆண்டவருக்கும் ஆயிரம் மைல் தூரம் என்றே
அறிவுறுத்த விரும்புகிறேன் அதுவேதான் உண்மை என்பேன்!

தன்னம்பிக்கையும் தளராத முயற்ற்சியும்
நுண்ணிய அறிவும் நூதன சிந்தனையும்
சாதிக்க முடியுமென்ற சக்திமிக மனத்திடமும்
என்னால் முடியுமென்ற எழுட்சிமிகு எண்ணமும்
தன்னகத்தே கொண்டவரே தகுதியுள்ள அறிவியலார்

ஆண்டவனை அறிவதோ அதற்க்கேதிரானது

அவனன்றி ஒன்றுமில்லை அடியேன் நான் எதுவமில்லை
எவன் நினைத்தும் ஆவதில்லை ஏற்ற்க்கவில்லை இறைவனென்றால்
மண்ணினால் எனை படைத்தார் மறுபடியும் திரும்பச்செய்வார்
என்னதான் முயன்றாலும் என்னால் ஏதும் ஆவதில்லை
கொஞ்சமும் பெருமையின்றி நெஞ்சில் ஏதும் நெருடலின்றி
தஞ்சமென நின்றாலே தாங்கிடுவார் தன் கரத்தல்

அறிவியலால் அண்டத்தின் அற்ப்புதங்கள் அத்தனையும் அறியலாம்
ஆண்டவரின் படைப்புகளை அடிப்படையிலிருந்து ஆராயலாம், ஆன்மீகத்தின் தன்மைகளை ஆழமாக அறியலாம்
ஆனால் ஆண்டவரை அறிவதென்பது முடியவே முடியாதென்பதே என் முடிவான பதில்!.
நன்றி
இறைநேசன்

Narathar
04-11-2008, 04:59 AM
வணக்கம் நாரதர்.

சுதந்திரப்பறவையாக படிப்பதில் மட்டும் அக்கறை காட்டிவந்த என்னையும் மதித்து எனக்கென ஒரு கேள்வியை கொடுத்து பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள். அதற்கு முதற்கண், நன்றிகள்

கோடிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களை நிறைய எழுதவைக்க வேண்டும் என்பதுதானே எனது அவாவே???



உங்கள் கேள்வியில் நியாயம் தோன்றுகிறது. இன்றும் பலர் நான் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசும் போது நீ படித்தது அரச செலவில். ஆதரிப்பது அரசின் எதிரியையா என்பர்... இதற்கு நான் பட்ட அனுபவங்களை தந்தாலே போதும் என நினைக்கிறேன்...


நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் வந்ததா தெரியவில்லை. ஆனால் உங்கள் கேள்வியிலிருந்து எனது மனக்கண்ணிற்கு தோன்றிய விடையங்களை இங்கு பகிர்ந்திருக்கிறேன்.... புரியாவிடின் கூறுங்கள்... இன்னொரு விதத்தில் தருகிறேன்.

எனது முதல் கேள்விக்கு பதிலாய் நீங்கள் சுட்டிய அன்புரசிகரின் பதிலை சென்று படித்துப்பார்த்தேன்....

நாணயத்துக்கு எப்போதும் இரண்டு முகம் என்பதுபோல அவரது கருத்தும் ஏற்கக்கூடியதாகவே இருக்கின்றது. அவரது பதிலே உங்கள் பதிலாக நீங்களும் சொல்வதால் அதையும் ஏற்றுக்கொள்கின்றேன்.



ஒரு சிலர் எல்லாரையும் விட உச்சத்துக்குப் சென்று, தானே முதன் நிலை போராளி என்பது போன்று பேசுகின்றனர். சற்றேனும் தமது கருத்துக்கு முரண்படுவோரை அதட்டுவதும், துரோகிகள் போன்று சித்தரித்து கதைப்பதும் காணக்கூடியதாக இருக்கிறது. ஆழ்ந்து நோக்கினால் தாயகத்தில் அவர்களுக்கு விடத்தலிலையளவேனும் மரியாதை இருக்காது. இப்படிக் கூறி கொண்டு தாமும் தாயக விடியலில் அதீத அக்கறை உள்ளோர் என்று காட்டிக்கொள்ள முனைகின்றனர். இவர்கள் ஒருவகையில் பார்த்தால் பச்சோந்திகள்தான். இவர்களில் பெரும்பாலானோர் தாயகத்திலிருந்தபோது பயந்தவர்களிற்கான பட்டியலில் முதன் நிலை வகித்தோராக இருப்பர். தற்போது தாம் வாழும் சூழலில் தான் விடும் அறிக்கைகளால் தனக்கு எந்த பிரச்சினையும் வராது என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு போராளிவேஷமிட்டு திரிவார்கள்.

நீங்கள் மேற்சொன்னதைப்போன்றவர்களின் லொள்ளைப்பார்த்த பிறகுதான் இவ்வாரான கேள்வியொன்றை உங்களிடம் கேட்கத்தோன்றியது......

சிறப்பான பதிலுக்கு நன்றி

இறைநேசன்
05-11-2008, 06:53 AM
நன்றி [B][COLOR="Red"]


தங்களின் தக்க பதிலுக்காக காத்திருக்கின்றோம்..........

சீக்கிரமே தருவீர்கள் தானே????

நண்பர் நாரதர் அவர்களே தங்களில் வினாவுக்கு
நானெழுதிய பதிலில் தவறு அல்லது மாற்றுக்கருத்து ஏதாவது இருக்கிறதா?

தங்களில் விமர்சனம் இதுவரை இல்லையே!
அன்புடன்
இறைநேசன்

ராஜா
05-11-2008, 07:20 AM
அண்டத்தின் அற்புதத்தை அணுவிலிருந்து அறிந்துகொண்டு
ஆண்டாண்டாய் ஆராய்ந்து, அற்புதமாய் இயம்பிவரும்
அறிவியல் ஆர்வலர்களுக்கு அடியேன் நான் எதிரியல்ல!
மூடபழக்கமெல்லாம் முற்றுபெற வேண்டுமென்று
முனைப்போடு செயல்பட்டு, அனல்போல புறப்பட்டு
முன்னிருந்த தடைகளெல்லாம் முறியடித்து முயன்றுவந்த
பெரியார் என்னும் பெருமகனின் பேரறிவு கொள்கைகளுக்கு
பெரியதோர் எதிர்ப்பு எனக்கில்லை என்றுமே!

நான் சொல்வதெல்லாம்
இயற்க்கைக்கெல்லாம் தலைவனான இறைவனென்று ஒருவருண்டு
அனைத்துக்கும் மேலான ஆண்டவர் ஒருவருண்டு
எல்லாவற்றிக்கும் மேலான எம்பெருமான் ஒருவருண்டு
சகலத்துக்கும் மேலான சர்வ வல்லவர் ஒருவருண்டு என்பதே!


நன்றி
இறைநேசன்


அற்புதம் நண்பரே..!

இறை நம்பிக்கையாளர் அனைவருமே பகுத்தறிவுப் பகலவன் கருத்துகளை எல்லாம் கண்மூடித்தனமாக எதிர்த்தே தீரவேண்டும் என்ற வழக்கத்தில் நம்பிக்கையில்லாத சிலரில் நானுமொருவன்.

உங்கள் முழுப்பதிலையும் கண்டு வியந்து நிற்கிறேன்.. ஒரு மாமேதையின் வரிகளாகவே அவை தெரிகின்றன.

வாழ்த்துகளும் பாராட்டுகளும்..!

Narathar
05-11-2008, 10:10 AM
நண்பர் நாரதர் அவர்களே தங்களில் வினாவுக்கு
நானெழுதிய பதிலில் தவறு அல்லது மாற்றுக்கருத்து ஏதாவது இருக்கிறதா?

தங்களில் விமர்சனம் இதுவரை இல்லையே!
அன்புடன்
இறைநேசன்

அப்படியொன்றுமில்லை இறைநேசனவர்களே.......
மன்னிக்க வேண்டும் தங்கள் பதிலுக்கு உடனே பதில் போடாமைக்கு!
உண்மைய்யில் மற்ற உருப்பினர்கள் என்ன சொல்கின்றார்கள் என்று
பார்த்துவிட்டு அதற்குப்பிறகு எழுதலாம் என்றிருந்தேன்......

தங்கள் பதிலில் ஒரு தவறும் இல்லை.....
எனக்கு அப்போதே தெரியும் உங்கள் பதில் இப்படித்தான் வரப்போகின்றதென்றும். உண்மையில் நான் ஆரம்பத்தில் சொன்னது
போல் எனது நோக்கமே உங்கள் கருத்தை , உணர்வுகளை மற்றோரும் உணரவேண்டுமென்பதே!!!!!

நன்றி தங்களின் விரிவான பதிலுக்கு............

உண்மையில் உங்களைப்போலவே நானும் ஒரு இறைநேசன் என்பதை
சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகின்றேன், ஆனால் உங்களலவுக்கு
இன்னும் இல்லை..... :)

இன்னும் பாடல்கள் கேட்கின்றேன்
சினிமா பார்க்கின்றேன்
பெண்களை ரசிக்கின்றேன்..
மதுவை சுவைக்காவிட்டலும், சுவைப்பவர்களை வெறுப்பதில்லை...

Narathar
05-11-2008, 10:12 AM
1. என் தந்தை ஆன்மிகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர் அதன் மூலம் எனக்கு

2. தொழில் சுமார் மேலும் புதிதாக ரியல் எஷ்டேட் தொழில் அரம்பித்துள்ளேன் அருமையாக உள்ளது

3. கன்டிப்பாக முடியாது

நன்றி திரு நாம்செக் அவர்களே
உங்களது விளக்கமானதும், சுருக்கமானதுமான பதிலுக்காக!!! :)

மதுரை மைந்தன்
05-11-2008, 10:35 AM
இறை நேசன் அவர்களே உங்களின் கீழ்க்கண்ட கருத்துக்களுடன் எனக்கு ஒப்புதல் இல்லை.

நான் சொல்வதெல்லாம்
இயற்க்கைக்கெல்லாம் தலைவனான இறைவனென்று ஒருவருண்டு
அனைத்துக்கும் மேலான ஆண்டவர் ஒருவருண்டு
எல்லாவற்றிக்கும் மேலான எம்பெருமான் ஒருவருண்டு
சகலத்துக்கும் மேலான சர்வ வல்லவர் ஒருவருண்டு என்பதே!

இறைவன் என்பது பார்ககும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு சக்தி யாகவே கருதுகிறேன். இது அறிவியல் அடிப்படையிலும் ஒத்துப் போகிறது. ஆன்மீகத்தில் அத்வைத கோட்பாட்டின் படி ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று. இறைவன் என்பவர் அனைத்து மானிடருள்ளும் அனைத்து பொருடகளினுள்ளும் இருக்கிறார். ஆனால் உங்கள் கூற்றின் படி இறைவன் எனபவரைத் தனிப் படுத்திப் பார்ப்பது தவறு என்பது என் கருத்து.

ராஜா
05-11-2008, 10:50 AM
அன்பு மதுரை..!

நான் ஏற்கனவே சொல்லியிருந்தபடி...

"ஒரு விடயம் குறித்த நமது உறவுகளின் பார்வை என்ன" என்று அறியும் திரி இது.

அவ்வாறு ஒருவர் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு இந்தத் திரியில் (மட்டும்) மாற்றுக்கருத்து தெரிவிக்கும் மரபு இல்லை என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..

புரிதலுக்கு நன்றி..!

மதுரை மைந்தன்
05-11-2008, 10:59 AM
அன்பு மதுரை..!

நான் ஏற்கனவே சொல்லியிருந்தபடி...

"ஒரு விடயம் குறித்த நமது உறவுகளின் பார்வை என்ன" என்று அறியும் திரி இது.

அவ்வாறு ஒருவர் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு இந்தத் திரியில் (மட்டும்) மாற்றுக்கருத்து தெரிவிக்கும் மரபு இல்லை என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..

புரிதலுக்கு நன்றி..!

அன்பு ராஜா அவர்களே

மரபு அறியாமல் நான் போட்ட பின்னூட்டத்தை நீக்க முடியுமென்றால் அதை நான் வரவேற்கிறேன்.

ராஜா
05-11-2008, 11:05 AM
நீங்கள் (விரும்பினால்) அதை தக்கமுறையில் திருத்திவிடலாம்.. நன்றி..!

இறைநேசன்
05-11-2008, 12:35 PM
இனிப்பான கருத்துக்களை பதிந்த இனியவர்கள் ராஜா மற்றும் நாரதர் அவர்களுக்கு இறைவனின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்!

அன்பர் மதுரை வீரன் அவர்களே உங்கள் கேள்வி கருத்து செரிவுள்ளதே! சிந்துக்க வைக்கும் கேள்வியை கேட்டமைக்கு நன்றி!

வேறு ஒரு பகுதியில் அதற்க்கான விவாதத்தை விரைவில் வைத்துக்கொள்ளலாம்!
அன்புடன்
இறைநேசன்

ராஜா
06-11-2008, 03:20 AM
அன்பர் மதுரை வீரன் அவர்களே உங்கள் கேள்வி கருத்து செரிவுள்ளதே! சிந்துக்க வைக்கும் கேள்வியை கேட்டமைக்கு நன்றி!

வேறு ஒரு பகுதியில் அதற்க்கான விவாதத்தை விரைவில் வைத்துக்கொள்ளலாம்!
அன்புடன்
இறைநேசன்

சபாஷ்..! சரியான போட்டி..!!

இரு அறிவாளர்கள் விவாதிக்கும்போது என் போன்றோருக்கு புதிய, நல்ல செய்திகள் கிடைக்கும்..!

Narathar
06-11-2008, 03:55 AM
அரேன் அவர்களதும்
தலையவர்களதும் பதிலுக்காக காத்திருக்கின்றோம்.........

mania
06-11-2008, 05:37 AM
அரேன் அவர்களதும்
தலையவர்களதும் பதிலுக்காக காத்திருக்கின்றோம்.........

மெகா சீரியல் ரேஞ்சிலே ஒரு கேள்வியை இரண்டு வரியிலே கேட்டிட்டு பதிலுக்கு காத்திருக்கீங்ககளா.....:D
நாராயணா.....இது உனக்கே நியாயமா தெரியுதா....!!!!!:rolleyes:
பதி நேரம் நான் ஊரிலேயே இருப்பதில்லை.....
அரேன்......:rolleyes: நீங்கதான் கொஞ்சம் காப்பாத்தனும்.... ஹி...ஹி...ஹி...
அசடு வழியலுடன்
மணியா :D:D

ராஜா
06-11-2008, 06:02 AM
மெகா சீரியல் ரேஞ்சிலே ஒரு கேள்வியை இரண்டு வரியிலே கேட்டிட்டு பதிலுக்கு காத்திருக்கீங்ககளா.....:D
நாராயணா.....இது உனக்கே நியாயமா தெரியுதா....!!!!!:rolleyes:
பதி நேரம் நான் ஊரிலேயே இருப்பதில்லை.....
அரேன்......:rolleyes: நீங்கதான் கொஞ்சம் காப்பாத்தனும்.... ஹி...ஹி...ஹி...
அசடு வழியலுடன்
மணியா :D:D



அண்ணா..!

அவசரமா பதிவு போட்டீங்களா..? உங்களிடம் அவ்வளவாக காணப்படாத எழுத்துப்பிழைகள் இருக்கின்றனவே..!

:)

mania
06-11-2008, 06:07 AM
அண்ணா..!

அவசரமா பதிவு போட்டீங்களா..? உங்களிடம் அவ்வளவாக காணப்படாத எழுத்துப்பிழைகள் இருக்கின்றனவே..!

:)

ம்ம்ம்ம்ம்........நக்கீரா.......:D:D:D நாரதரே பண்ணும்போது......:rolleyes:
அன்புடன்
மணியா...:D

ஓவியா
06-11-2008, 09:10 PM
Originally Posted by பென்ஸ்
....

நம்மளை வச்சு காமடி பன்னுறதில என் அம்மாவுக்கு
சளைத்தவரில்லை என் துணைவியாரும்...

...


அம்மா கையிலும் அடிவாங்கி, மனைவி கையிலும் அடிவாங்கும் கனவன் மத்தியில் நீங்க ரொம்ப உசந்து நிக்கறீங்களே பென்சு :D:D பாக்கியசாலிதான்.

ராஜா
08-11-2008, 04:34 AM
அமர் அடுத்த உறவை அழைப்போமா..?

அமரன்
10-11-2008, 08:04 AM
அதுக்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளேன் அண்ணா. விரைவில் அழைக்க முடியுமென்று நம்புகிறேன்.

Narathar
11-11-2008, 03:31 AM
மெகா சீரியல் ரேஞ்சிலே ஒரு கேள்வியை இரண்டு வரியிலே கேட்டிட்டு பதிலுக்கு காத்திருக்கீங்ககளா.....:D
நாராயணா.....இது உனக்கே நியாயமா தெரியுதா....!!!!!:rolleyes:
பதி நேரம் நான் ஊரிலேயே இருப்பதில்லை.....

அடுத்த சந்திப்பின் போது உங்களிடம் செல்லத்திட்டு வாங்கனும்ல?
ஹா ஹா..........
என்ன அப்படி வேலை?
உங்க வேலையெல்லாம் உங்க சகாக்களை பார்க்கசொல்லிபுட்டு
மன்றவேலைகளை பாருங்க தலை....!!! :lachen001:

நாராயணா!!!!!!


அரேன்......:rolleyes: நீங்கதான் கொஞ்சம் காப்பாத்தனும்.... ஹி...ஹி...ஹி...
அசடு வழியலுடன்
மணியா :D:D

இதுல அரேனை துணைக்கழைக்கின்றார்..........
அவரை இந்தப்பக்கமே காணலியே???

ராஜா
18-11-2008, 07:57 AM
அடுத்து..

ஆதவா.. கேள்விச் சங்கு ஊத வா .. என்று என்னவன் அமரின் இசைவோடு அழைக்கிறேன்..!

ஆதவா
18-11-2008, 09:20 AM
ஆதி :

நாட்டுப்புறப்பாடல்களாக இருந்து ஏட்டில் ஏறி நெறிபடுத்தி இலக்கணம் வகுத்து, இலக்கணங்கள் கடந்து, இலக்கணங்கள் மீறி, இசங்களும் குறியீடுகளுமாக குடும்பம் நடத்தி, துளிப்பாக்களாக தொட்டில்கட்டி ஒரு கட்டுக்குள் அடங்கியிராமல் அணுப்பிளவாய் வீரிய ஆற்றலுடன் கடந்து வீறுநடை போடும் கவிதை எனும் மனித எண்ணங்கள் நாளை எப்படி இருக்கும் என்று எண்ணுகிறீர்கள்? அதன் வடிவம், பொருள், நடை என்று ஏதாவது மாற்றம் இருக்கும் இல்லையா? நாளை நடப்பது நாமறியோம் எனினும் உங்களுக்கென ஒரு கருத்து இருக்கும் இல்லையா, அதைப் பற்றி தயவுடன் கூறுங்களேன்...????

ஓவியன்..

நீங்கள் ஒரு ஓவியர் என்பது அறிந்த விசயமே, கிட்டத்தட்ட ஓவியமும் கவிதைகளும் ஒரே மாதிரியான பாதை உடையவை, ஆரம்பகால சுவற்றோவியத்திலிருந்து இம்பீரியலிசம், சர்ரிலிசம், எக்ஸ்பிரசனிசம், க்யூபிசம் கடந்து இப்பாதையின் நீட்சி எதுவரையிலும் இருக்கும்? ஓவியர்களாகப் பிறப்பது சாபமா? வரமா? சிலசமயங்களில் உங்கள் எண்ணங்களுக்குக் கட்டுப்படாத ஓவியங்கள் குறித்து நீங்கள் என்ன எண்ணுவீர்கள்?

மன்மதன் :

உலகின் பொதுமொழிகள் பலவுண்டு.. அதில் நகைச்சுவையும் உண்டு. நகைச்சுவையின் போது மனம் இளகி சிலசமயங்களில் குழந்தையாகவே மாறிவிடுவதும் உண்டு.

நகைச்சுவையாளர்கள் மட்டும் ஏன் அடிவாங்கிக் கொண்டு, முட்டாள் தனமாக நடந்து கொண்டு இருப்பதை மக்கள் ரசித்து சிரிக்கிறார்கள். (தமிழ்படங்களைப் பொறுத்தமட்டில்)... மற்றவன் ஏமாளியாகவோ, பலவீனமாகவோ இருப்பதை மக்கள் ரசிக்கிறார்களா? அல்லது அப்படி ரசிக்கும்படியான பாதையில் தமிழ் சினிமா செல்கிறதா?

ஓவியா :

பெண் ஒரு காலத்தில் தெய்வமாக வணங்கப்பட்டாள். அதேகாலத்திலேயே அடிமையாகவும் நடத்தப்பட்டாள். பெண் கொடுமைகளை நினைத்தாலே (என்னைப் போன்ற) ஆண்களுக்கு தாமும் இப்படி நடத்தாமல் நல்லவிதமாக சுதந்திரமாக நடத்தவேண்டும் என்ற எண்ணம் வரும்... சரி இப்போ உங்களுக்கு இரு கேள்விகள்..

நீங்கள் பெண்ணாகப் பிறக்காமல் ஆணாகப் பிறந்திருந்தால் என்னென்ன செய்திருக்கமுடியும்? ஆணாகப் பிறப்பதை விரும்புகிறீர்களா? (beyonce இன் If I Were A Boy- என்ற பாடலைக் கேட்டதிலிருந்து இக்கேள்வியை உங்களிடம் [மட்டும்] கேட்கவேண்டும் என்று நினைத்தேன்.. வாய்ப்பிருந்தால் அப்பாடலைக் கேட்கவும்)

பெண் சுதந்திரம் எந்த அளவு வரையிலும் இருக்கவேண்டும்? அல்லது வரம்பில்லாமல் (ஆண்களைப் போன்று) இருக்கவேண்டுமா?


பென்ஸ் :


சூழ்நிலைகள் தான் ஒரு மனிதனின் வளர்ச்சிக்குக் காரணம்.. ஒத்த சூழ்நிலை உடைய இருவர்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில், ஒரே வயதாக வளரும்பொழுது அவர்கள் எண்ணம் மட்டும் மாறக் காரணம் என்ன?

தான் சரியாகச் செய்கிறோமா? அல்லது தவறு செய்கிறோமா என்று எண்ணாமல் தான் செய்ததே சரிதான் என்று ஒரேபக்க வாதமாக நின்று கொண்டிருப்பதால்தான் தவறுகள் பெருகுகின்றன. மனித மனதைப் படிக்கத் தெரியும் உங்களுக்கு உங்கள் மனதையே படிக்கத் தெரியாமல் மேற்சொன்னமாதிரி ஒரு பக்கமாக பிடிவாதமாக நின்றிருக்கிறீர்களா? ஆம் என்றால் நீங்கள் நிறைய எழுதக்கூடும், இல்லையென்றால் குறைவாக எழுதிவிடுவீர்கள். ஆகவே இன்னொரு கேள்வி : ஒருவர் மனதைப் புரியவேண்டுமென்றால் முதலில் நாம் எவ்வாறு இருக்கவேண்டும்? நம் மனநிலை எப்படி இருக்கவேண்டும்?? (மாட்டிக்கிட்டீங்களா?)

முகிலன் :

பல பூச்செடிகளைப் பார்க்கும்பொழுது எனக்கு உங்கள் ஞாபகம்தான் வரும். எங்கள் வீட்டில் மல்லிகை, போன்ற வாசமிகுந்த பூச்செடிகளை நட்டு அழகு பார்க்கவேண்டும் என்பது என் ஆசை.. இவற்றை எப்படி நடுவது? அதாவது அதற்கு விதைகள் இருக்கின்றனவா? என்னென்ன பூஞ்செடிகள் நடலாம்?

ஆனால் உங்களுக்கு இது கேள்வி இல்லை...

அறிவியல் வேகமாக வளர்ந்து வரும் இச்சூழ்நிலையில்... பெண் வழி பிறந்த மனிதர்கள் போய், பெண்களே இல்லாமல் ஆண்களின் துணையில்லாமல் குழந்தைகள் பிறக்கும் வழி தெரிந்துகொண்டனர்.. இதைப் போன்று எல்லா செடிகொடிகளும் கண்டுபிடிக்கப்படுமா? அதாவது இயற்கைக்கு மாற்றாக செயற்கைச் செடிகளைக் கண்டுபிடிப்பார்களா?

அப்படி (மிகவேகமாக வளரும்) செயற்கை செடிகொடிகள் மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் இயற்கை அழிந்துவிடுமா?


சிவா.ஜி.


திகில் கதைகளை இப்படி திகிலாக எழுதும் நீங்கள் உண்மையிலேயே திகில் அடைந்த நிகழ்வை எங்களுடன் பகிர்ந்துகொள்வீர்களா?


உண்மையான சமூக அக்கறையும் தமிழ் பற்றும் உங்களிடம் கண்டிருக்கிறேன். (ஒரு பதிவில் "தமிழ் யாருடைய தயவிலும் வாழவில்லை என்ற கருத்தில் ஒருவரைச் சாடியிருந்தீர்கள்.)
அத்தகைய தமிழ்பற்று மிக்க உங்களிடம் தமிழ்தாய் தோன்றி,

வள்ளுவன்,
இளங்கோ,
கம்பன்,
பாரதி,
கண்ணதாசன்

இந்த ஐவரில் ஒருவரை மட்டும் மீட்டுத் தருகிறேன். ஆனால் அந்த தமிழறிஞரை என்ன காரணத்தினால் மீட்கிறீர்கள் என்று கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?

ப்ரவீன் :

விண்டோஸும் மவுசுமாகப் பார்த்து கிட்டத்தட்ட பத்துவருடங்களுக்கு மேல் ஆகிவிட்டாலும் விண்டோஸ் இன்னும் ஓட்டையாகவே இருக்கிறது ஏன்? மிகப்பெரிய நிறுவனத்தில் அந்த ஓட்டை அடைக்கத் திறமை மிகுந்த மனிதர்கள் இல்லையா?

நாளைய கணிணி உலகம் எவ்வாறு இருக்கும்?


சிறுபிள்ளை :

மன்றத்தில் ஜோவியலாகப் பழகும் புதியவரான நீங்கள் நிஜத்தில் இப்படிப்பட்டவரா? தன்னை சிறுபிள்ளை என்று தாழ்வுடன் கூறிக்கொள்வதில் நீங்கள் வருத்தப்படவில்லையா? சரி இனி உங்களுக்கான கேள்வி

உங்களைக் கண்டு உங்களுக்குத் தெரிந்தவர் யாரோ ஒருவர் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொண்டால் நீங்கள் சும்மா இருப்பீர்களா? அல்லது அவர்களின் குணம் கண்டு உதாசீனப்படுத்துவீர்களா? அப்படி செய்பவர்கள் உங்கள் மனதிற்கு உகந்தவராக இருந்தால் என்ன செய்வீர்கள்? உங்கள் விரோதியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

மூர்த்தி:

வாழ்க்கை நிகழ்ச்சியைக் கூட சுவையாக, அழுத்தமாகத் தரமுயலும் நீங்கள், எந்த சப்ஜெக்ட்டை என்னால் சரியாக வாசகர்களுக்குத் தர இயலாது என்று எண்ணுவீர்கள்?

பெண்மை என்பதைப் பற்றி உங்கள் வரையறை என்ன?

ராஜா
18-11-2008, 09:57 AM
கேள்வித்தொகுப்புக்கு நன்றி ஆதவா..!

அறிவாளர் ஆதவா அனுப்பிய கேள்விக்கணைகளுக்கு உறவுகள் தரப்போகும் நிறைவான பதில்கள் காண மனம் விழைகிறது..!

சிவா.ஜி
18-11-2008, 09:58 AM
ஆதவாவின் அசத்தலான மற்றும் அறிவுப்பூர்வமான கேள்விகள் சபாஷ் போட வைக்கின்றன. பதில் சொல்லப் போகிறவர்களும் சாமான்யமானவர்கள் அல்ல...எனவே..பதில்களை சுவைக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.

ஓவியன்
18-11-2008, 10:11 AM
ஆஹா, திருப்பூர் திருமகனின் கேள்விக் கணைக்களில் நானும் அகப்பட்டுக் கொண்டேனா...?? :sprachlos020:

சரி, சரி நான் கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டு பதிலளிக்கிறேன்...

சிவா.ஜி
18-11-2008, 10:17 AM
ஆஹா, திருப்பூர் திருமகனின் கேள்விக் கணைக்களில் நானும் அகப்பட்டுக் கொண்டேனா...?? :sprachlos020:

சரி, சரி நான் கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டு பதிலளிக்கிறேன்...

கொஞ்சமே கொஞ்சம் தான்.....விரைவில் வரவேண்டும்.....

ஓவியன்
18-11-2008, 11:55 AM
கொஞ்சமே கொஞ்சம் தான்.....விரைவில் வரவேண்டும்.....

என்னிடம் நேரம்
கொஞ்சம்
பஞ்சமென்பதால்,
கொஞ்சமென்பது
கொஞ்சம் கொஞ்சமாய்
பஞ்சமில்லாமல் போகிறதே...!! :traurig001:

ரங்கராஜன்
18-11-2008, 11:57 AM
நன்றி ஆதவா
என்னிடம் கேள்வியை கேட்டதுக்கு

1. வாழ்க்கை நிகழ்ச்சியைக் கூட சுவையாக, அழுத்தமாகத் தரமுயலும் நீங்கள், எந்த சப்ஜெக்ட்டை என்னால் சரியாக வாசகர்களுக்குத் தர இயலாது என்று எண்ணுவீர்கள்?

என்னால் எழுத முடியாத களங்கள் நிறைய இருக்கிறது. ஒரு கதைசொல்லி என்பவன் கதாபாத்திரத்தின் சதைகளுக்குள் சென்று சிந்திக்க வேண்டும் என்று சொல்வார்கள். அப்படி சிந்திக்க எல்லா கதைசொல்லியாலும் இயலாது. ஏனென்றால் ஒரு பிச்சக்காரினின் வாழ்க்கையை பற்றி எழுத வேண்டும் என்றால், அதற்க்காக பிச்சக்காரனாய் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று இல்லை, அவனை பார்த்தால் போதும், கவனமாக பார்த்தாலே போதும். நாம் தட்டை ஏந்துவதுக்கும், பிச்சைகாரன் ஏந்துவதுக்கும் உள்ள வித்தியாசத்தை கவனித்தாலே அவரை பற்றி எழுதி விடலாம். ஆனால் பிச்சக்காரனையே பார்க்காமல் அவரை பற்றி ஒரு கதை எழுத முடியாது(என்னுடைய ஈழத்தாய் கதைப் போல). அதனால் இப்பொழுது எனக்கு இருக்கும் அனுபவத்தை வைத்துக் கொண்டு என்னால் பல விஷயங்களைப் பற்றி எழுத முடியாது, (சந்தோஷமான குடும்பகதை, அப்பாவின் அன்பை பற்றி, முழுமையான நகைச்சுவை கதை, பேய் கதைகள் ஒருவேளை கல்யாணம் ஆன எழுதலாம் ஹா ஹா)



2. பெண்மை என்பதைப் பற்றி உங்கள் வரையறை என்ன?

என்னை ஏன் இந்த் கேள்வியை கேட்டீர்கள் என்று சிரிப்பாக இருக்கு, ஏனென்றால் நேற்று தான் பஸ்ஸில் வரும் பொழுது அழகான 2 வயது பெண் குழந்தையை பார்த்து ச்சே நானும் பொம்பளையா பிறந்து இருக்கலாமே என்று நினைத்தேன், இன்று என்னை பார்த்து இந்த கேள்வியை நீங்கள் கேக்குறீங்க அதான் சிரிப்பை அடக்க முடியவில்லை. என்னுடைய வாழ்க்கையில் பெண்கள் எப்பவுமே இருக்காங்க அம்மாவா, சகோதிரியா, சகியா, காதலியா. நான் சின்ன வயதில் கோ-எட்டு(இருபாலர் பயிலும்) பள்ளியில் தான் சேருவேன் என்று அடிவாங்கி வெற்றி பெற்றது இன்னும் எனக்கு நினைவு இருக்கு. என் அம்மா போல ஒரு இரும்பு மனிஷியை நான் பார்த்தது இல்லை. தினமும் எங்கள் வீட்டுக்கு காய்கறி மூட்டையை தூக்கி கொண்டு வந்து விற்க்கும் 97 வயது பாட்டியின் சக்திக்கு முன்னால், உலகத்திலே சக்திவாய்ந்த ஆண்னின் பலம் ஒன்னும் இல்லை. பெண்களின் மன உறுதிக்கு முன்னால் ஒன்றும் நிக்க முடியாது. ஆண்கள் பெண்களை உடல் அளவில் மட்டும் அசைக்க முடியும் ஆனால் மன அளவில் தொட கூட முடியாது. கோடி ஆண்கள் நம்மை தங்க தட்டில் தாங்கினாலும் ஒரு பெண்ணின் விரல் நம் தலையை வருடுவதற்க்கு ஈடு ஆகுமா?. என்னை கேட்டால் பெண்கள் நினைத்தால் எது வேண்டும் என்றாலும் செய்யலாம், ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். என் வாழ்க்கையில் பெண்கள் மிக முக்கியம். என்னுடைய வாழ்க்கையில் பல மாறுதல்களுக்கு அவர்கள் தான் காரணம். ஒரு குடும்பத்தில் ஆண் சரியில்லை என்றால் பரவாயில்லை, ஆனால் பெண் சரியில்லை என்றால் குடும்பமே காலி. அதனால் என் ஓட்டு எப்பவுமே பெண்களுக்கு தான், மனசாட்சிக்கு கட்டுப்பட்ட பெண்களுக்கு மட்டும் தான்

மன்மதன்
18-11-2008, 01:23 PM
மன்மதன் :

உலகின் பொதுமொழிகள் பலவுண்டு.. அதில் நகைச்சுவையும் உண்டு. நகைச்சுவையின் போது மனம் இளகி சிலசமயங்களில் குழந்தையாகவே மாறிவிடுவதும் உண்டு.

நகைச்சுவையாளர்கள் மட்டும் ஏன் அடிவாங்கிக் கொண்டு, முட்டாள் தனமாக நடந்து கொண்டு இருப்பதை மக்கள் ரசித்து சிரிக்கிறார்கள். (தமிழ்படங்களைப் பொறுத்தமட்டில்)... மற்றவன் ஏமாளியாகவோ, பலவீனமாகவோ இருப்பதை மக்கள் ரசிக்கிறார்களா? அல்லது அப்படி ரசிக்கும்படியான பாதையில் தமிழ் சினிமா செல்கிறதா?


தமிழ் படங்களை பொறுத்த மட்டில் என்பதை என்னால்
ஏற்றுக்கொள்ள முடியாது.

சார்ளி சாப்ளின் , லாரல் ஹார்டி காலத்திலிருந்தே நாம்
அப்படித்தான் பழகிக்கொண்டோம் போல.. தமிழ் சினிமா
நகைச்சுவை மன்னர்களான கலைவாணர், எம்.ஆர்.ராதா
போன்றவர்களின் நகைச்சுவை காட்சிகளில் சமுதாய சிந்தனை
இருக்கும். இவர்கள் அடி வாங்கி நடிக்கவில்லை. நடித்தாலும்
நமக்கு சிரிப்பு வராது. அதே நேரம் நாகேஷ் வந்து தடுக்கி
விட்டு விழுந்தால் தியேட்டரில் எழும் சிரிப்பு சத்தம் இருக்கே..அடடா..


நகைச்சுவையாளர்கள் மட்டும் ஏன் அடிவாங்கிக் கொண்டு
இதில்தான் விஷயமே உள்ளது.. அவர்களை நாம் நகைச்சுவையாளர்களாக
மனதில் உள்வாங்கிக்கொண்டோம். அவர் அடி வாங்கினால் நமக்கு
நகைச்சுவையாக இருக்கும். ஆனால் கதாநாயகன் அடி வாங்கினால்..?
எல்லாம் மனது சம்பந்தப்பட்டது..


மற்றவன் ஏமாளியாகவோ, பலவீனமாகவோ இருப்பதை மக்கள்
ரசிக்கிறார்களா?கண்டிப்பா இல்லை.. இரக்கம்தான் வரும்.. சில
நேரம் சூழ்நிலையை பொறுத்து ரசிப்பதோ / ரசிக்காமல் இருப்பதோ
ஏற்படும்..

சன் டிவியில் - அசத்தப்போவது யாரு - ஸ்டேண்டப் காமெடியில்
ஏற்கனவே நகைச்சுவையை பற்றி ஏகப்பட்ட லெக்சர் கொடுத்திருப்பதால்
நானும் அதையே சொல்லி போர் அடிக்க விரும்பவில்லை..

நாமெல்லாம் குரங்குகளிலிருந்து வந்தவர்கள் என்று சொல்வார்கள்.
ஒருவேளை இந்த நகைச்சுவை உணர்வு கூட அதிலிருந்தே வந்ததாக
இருக்கலாம்..

http://www.youtube.com/watch?v=ogIJSNVjJP8
நகைச்சுவையில் ஒரு குரங்கு, புலிக்குட்டியை கலாய்த்தால்தான் சிரிப்பு வரும்.. அதுவே ஒரு புலி குரங்குவை இம்சித்தால் .....

http://www.youtube.com/watch?v=3TRTH-MH0Tg
எனக்கு பிடித்த பொது மொழி இரண்டு..
ஒன்று நகைச்சுவை.. அடுத்தது மௌனம்.

praveen
18-11-2008, 01:34 PM
ப்ரவீன் :

விண்டோஸும் மவுசுமாகப் பார்த்து கிட்டத்தட்ட பத்துவருடங்களுக்கு மேல் ஆகிவிட்டாலும் விண்டோஸ் இன்னும் ஓட்டையாகவே இருக்கிறது ஏன்? மிகப்பெரிய நிறுவனத்தில் அந்த ஓட்டை அடைக்கத் திறமை மிகுந்த மனிதர்கள் இல்லையா?

நாளைய கணிணி உலகம் எவ்வாறு இருக்கும்?


மைக்ரோசாப்டிற்கு வக்காலத்து வாங்கும் அளவிற்கு அந்த நிறுவனம்+தயாரிப்பு முழுமையும் எனக்கு தெரியாது... அதை அதிகம் பயன்படுத்தியவன் என்ற முறையில் சொல்கிறேன்.

நீங்கள் ஓட்டை என்பது அதன் சர்வீஸ் பேக் வெளியீட்டு தரும் முறை பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஏனைய இயங்கு தளங்களும் இம்மாதிரி பொத்தல்களை அடைக்க பேட்சஸ் தருகின்றன.

மைக்ரோசாப்ட் வெளியீடு பலதரப்பட்ட ஹார்டுவேர், சூழல்கள் இவற்றில் பாவிக்கப்படுவதால் பிரச்சினைகள் நிறைய புதிது புதிதாக தோண்றுகிறது, மேலும் பீட்டா வெளியீடு இட்டு அவர்கள் முதலிலே அந்த ஓட்டைகளை அடைத்தாலும் முழுவெளியிட்டிலே பரவலாக அந்த பிரச்சினைகள் அறியப்படுகிறது.

அதை பூசி மறைக்காமால் அதற்கு அடுத்த நபர் தீர்விற்கு விடாமல் அவர்களே பேட்சஸ்/சர்வீஸ்பேக் தருவது தான் சிறப்பு.

நாளைய கணினி உலகம் ஓப்பன் சோர்ஸை மட்டுமே பிரதானமாக கொண்டு இருக்கும் என்று எல்லோராலும் சொல்லப்பட்டாலும் மைக்ரோசாப்ட் மாதிரி நிறுவனங்கள் ஆட்சிசெலுத்தி கொண்டு தான் இருக்கும். ஏனென்றால் பல ஆண்டுகள் இந்த கணினி உலகத்தில் இருப்பதால் அவர்களால் இன்னும் நிறைய திறம்பட தர முடியும். அவர்களும் தந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

குறை இல்லாத மனிதன் யார், யார் ஒருவர் தன் குறைகளை கண்டு அதற்கு தீர்வும் கண்டு பிடிக்கிறாரோ அவரே சிறந்தவர் ஆக விளங்குவார்.

செல்வா
18-11-2008, 02:03 PM
குறை இல்லாத மனிதன் யார், யார் ஒருவர் தன் குறைகளை கண்டு அதற்கு தீர்வும் கண்டு பிடிக்கிறாரோ அவரே சிறந்தவர் ஆக விளங்குவார்.
அருமை அண்ணா.... மிக மிக இரசித்தேன் தங்கள் பதிலை. வீழ்வது பலவீனம் வீழ்ந்து கிடப்பதோ மதியீனம் என்பார்கள்.

மதி
18-11-2008, 02:11 PM
ஆஹா.. அசத்தலான ஆதவனின் கேள்விகளுக்கு உறவுகளின் பதில்கள் அருமை.. :)

ராஜா
18-11-2008, 02:12 PM
வாக்கு எண்ணிக்கை நாளன்று தொலைக்காட்சியில் சொல்வது போல அடுத்தடுத்து பதில்கள் வரத்துவங்கியுள்ளன..!

திருமணம் ஆனபிறகு நகைச்சுவை மற்றும் பேய்க்கதைகள் எழுதப்போவதாகச் சொன்ன மூர்த்தியின் பதிலில் இளமைக்குறும்பு தெரியும் அதே நேரத்தில்,

ஒரு குடும்பத்தின் மாண்பு பெண்ணின் செயற்பாடுகளில்தான் உள்ளது என்று சொன்ன விதத்தில் மன முதிர்ச்சி தெரிகிறது..!

ஹாட்ஸ் ஆஃப் மூர்த்தி..!


மன்மதனின் பதிலில் நமது நகைச்சுவை உணர்வு குறித்த பல விடயங்களை அறிந்துகொள்ள முடிகிறது.

என் இணையத்தொடர்பு மிக குறைவான வேகம் கொண்டதாக இருப்பதால் அவர் அளித்திருக்கும் சிரிப்புக்காட்சிகளை பார்க்க இயலவில்லை..! :(

நன்றி மன்மதன்..!



/////// குறை இல்லாத மனிதன் யார், யார் ஒருவர் தன் குறைகளை கண்டு அதற்கு தீர்வும் கண்டு பிடிக்கிறாரோ அவரே சிறந்தவர் ஆக விளங்குவார்.///

சிறப்பான வரிகள்.. சிந்திக்கத் தூண்டுபவையும் கூட..!

நன்றி ப்ரவீண்..!

பென்ஸ்
18-11-2008, 04:33 PM
பென்ஸ் :


சூழ்நிலைகள் தான் ஒரு மனிதனின் வளர்ச்சிக்குக் காரணம்.. ஒத்த சூழ்நிலை உடைய இருவர்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில், ஒரே வயதாக வளரும்பொழுது அவர்கள் எண்ணம் மட்டும் மாறக் காரணம் என்ன?

தான் சரியாகச் செய்கிறோமா? அல்லது தவறு செய்கிறோமா என்று எண்ணாமல் தான் செய்ததே சரிதான் என்று ஒரேபக்க வாதமாக நின்று கொண்டிருப்பதால்தான் தவறுகள் பெருகுகின்றன. மனித மனதைப் படிக்கத் தெரியும் உங்களுக்கு உங்கள் மனதையே படிக்கத் தெரியாமல் மேற்சொன்னமாதிரி ஒரு பக்கமாக பிடிவாதமாக நின்றிருக்கிறீர்களா? ஆம் என்றால் நீங்கள் நிறைய எழுதக்கூடும், இல்லையென்றால் குறைவாக எழுதிவிடுவீர்கள். ஆகவே இன்னொரு கேள்வி : ஒருவர் மனதைப் புரியவேண்டுமென்றால் முதலில் நாம் எவ்வாறு இருக்கவேண்டும்? நம் மனநிலை எப்படி இருக்கவேண்டும்?? (மாட்டிக்கிட்டீங்களா?)

ஒரே தோற்றமுள்ள இரட்டைகுழந்தைகளாக இருந்தாலும், ஒரு தூண்டுதலுக்கான விளைவு செயல் ஒரே வடிவத்தில் இருந்தாலும் (The response to the stimulus can follow the same pattern), அவர்கள் ஐக்கியூ ஒரே அளவில் இருந்தாலும்... நாளடைவில் அவர்கள் தன்னுடைய காகினிட்டிவ் பிகேவியரை வளர்க்கும் முறை அவர்களுக்கு கிடைக்கும் தூண்டுதல், அதற்க்கு அவர்கள் கொடுக்கும் மறுசெயலுக்கான விளைவுகள் ஒன்று போல் இருக்க சாத்தியமாவதில்லை.... (ஏன் என்றால் நம்முடைய வாழ்வில் கூட ஒரு செயலுக்கான மறுவிளைவு திரும்ப திரும்பவும் நடப்பதில்லை, அதே போல் இவர்கள் செய்யும் செயலுக்கான மறுவிளைவும் ஒரே போல் இருக்க வாய்ப்பில்லை) இதனாலையே அவர்களது சிந்தனை வடிவமும், செயலும் சிறிது சிறிதாக மாறி போகின்றன என்பது என்னுடைய வாதம்.... (எல்லோரும் அவரவருக்குஒரு தியரி வைக்கும் போது, எல்லோருடையதையும் சேர்த்து நம்ம நமக்கும் ஒரு தியரி வைக்க வேண்டியதுதான்)

இப்போ என் கேள்விக்கு போவோமா....
இல்லை என்று சொல்லி பதிலை சிறியதாக்க ஆசைதான்... ஆனா பொய் சொல்லவும் விரும்பவில்லை அதே போல் இது பொய் என்று ஒரு சிறு குழந்தையாலும் சொல்ல முடியும்.

மனித ம்னங்களை முழுவதுமாக படிக்க தெரிந்தால் நான் கடவுள் அல்லவா...!!!!
தினம் தினம் எனக்கும் போராட்டம் தான், வீடு, அலுவலகம், நண்பர்கள், ச்முக வாழ்க்கை என்று எல்லா இடங்களிலும் நானும் நானாய் பலமுறை அது தவறு என்று தெரிந்தும், பிடிவாதமாய் இருந்திருக்கிறேன்....
இதனால் இழப்பு வருகிறது...
ஆனால்... என் வயதில் ஒவ்வொரு நாளும் கூட கூட, என் தோல்விகள், என் இழப்புகள் அனுபவ குவியலாய் என் முடிவுகளை எடை போட்டு , நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவெடுக்க வைக்கிறது... என் செயலில் ஒவ்வொரு நாளும் இந்த முன்னேற்றத்தை காண என்னால் முடிகிறது...
என் துணையாரால் கோபமாக சொல்லும் வார்த்தைகளை கேட்டு , மறுத்தோ, திரும்பவும் கோபமாகவோ பேச தெரிந்தவனுக்கு அந்த கோபத்தின் காரணத்தையும், வேரையும், அதன் ஆழத்தையும் புரிய முடிகிறது... அது என் தவறுகளால் மட்டுமே எனக்கு என் குறைகளை சுட்டி காட்ட முடிந்தது...
அலுவலகத்தில், என் மேலதிகாரிகள் பலருக்கும், என் கீழே பணிபுரியும் சிலருக்கும் என்னை பிடிக்காது என்பது எனக்கு தெரியும், இவை என் சிறு சிறு பிடிவாதமோ, அல்லது அகங்காரமோ அல்லது உணர்ச்சி மிகுந்த செயல்களாலோ தான் என்று எனக்கு நன்றாகவே தெரியும், அதை இன்னும் சரி செய்யும் முயற்ச்சிகள் செய்ய என் தவறுகளும், இழப்புகளும் உதவுகின்றன....
பல நல்ல நண்பர்களை இழந்த பின் தான் அவர்களின் அருமை தெரிகிறது... இழந்த பின் நொந்து பலனில்லை என்பதை உணர்வதால் இன்று என்னையே மாற்றி கொள்ள வேன்டி வருகிறது... அதுவும் என் சுயத்தை பாதிக்காமல்.

இந்த தவறுகளும், அதன் மூலம் கிடைக்கும் படிப்பினைகளும் , அதன் மூலம் வரும் மாற்றங்களும் வாழ்வின் எல்லை வரை தொடரும்....

கீதாவின் கிறுக்கல்களில் வாசித்த வரிகள்...
"யான் பெற்ற துன்பங்கள்
நீ பெறவே வேண்டாமென்று
கற்று வந்த பாடங்களைக்
கனிவுடனே எடுத்துச் சொன்னால்
தலைமுறை இடைவெளியென
தள்ளியிருக்கச் சொன்னாய்
பதின்ம வயதென்றாலே
பட்டால்தான் புரியுமோ?"


கடைசி கேள்விக்கு பதில் ஒரே வரிதான் ஆதவா....
"உன்னை அவர்கள் இடத்தில் நிறுத்தி பார், இருத்தி பார்க்காதே..!!!!" :icon_b:

மதுரை மைந்தன்
19-11-2008, 01:40 AM
நன்றி ஆதவா
என்னிடம் கேள்வியை கேட்டதுக்கு

1. வாழ்க்கை நிகழ்ச்சியைக் கூட சுவையாக, அழுத்தமாகத் தரமுயலும் நீங்கள், எந்த சப்ஜெக்ட்டை என்னால் சரியாக வாசகர்களுக்குத் தர இயலாது என்று எண்ணுவீர்கள்?

என்னால் எழுத முடியாத களங்கள் நிறைய இருக்கிறது. ஒரு கதைசொல்லி என்பவன் கதாபாத்திரத்தின் சதைகளுக்குள் சென்று சிந்திக்க வேண்டும் என்று சொல்வார்கள். அப்படி சிந்திக்க எல்லா கதைசொல்லியாலும் இயலாது. ஏனென்றால் ஒரு பிச்சக்காரினின் வாழ்க்கையை பற்றி எழுத வேண்டும் என்றால், அதற்க்காக பிச்சக்காரனாய் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று இல்லை, அவனை பார்த்தால் போதும், கவனமாக பார்த்தாலே போதும். நாம் தட்டை ஏந்துவதுக்கும், பிச்சைகாரன் ஏந்துவதுக்கும் உள்ள வித்தியாசத்தை கவனித்தாலே அவரை பற்றி எழுதி விடலாம். ஆனால் பிச்சக்காரனையே பார்க்காமல் அவரை பற்றி ஒரு கதை எழுத முடியாது(என்னுடைய ஈழத்தாய் கதைப் போல). அதனால் இப்பொழுது எனக்கு இருக்கும் அனுபவத்தை வைத்துக் கொண்டு என்னால் பல விஷயங்களைப் பற்றி எழுத முடியாது, (சந்தோஷமான குடும்பகதை, அப்பாவின் அன்பை பற்றி, முழுமையான நகைச்சுவை கதை, பேய் கதைகள் ஒருவேளை கல்யாணம் ஆன எழுதலாம் ஹா ஹா)



2. பெண்மை என்பதைப் பற்றி உங்கள் வரையறை என்ன?

என்னை ஏன் இந்த் கேள்வியை கேட்டீர்கள் என்று சிரிப்பாக இருக்கு, ஏனென்றால் நேற்று தான் பஸ்ஸில் வரும் பொழுது அழகான 2 வயது பெண் குழந்தையை பார்த்து ச்சே நானும் பொம்பளையா பிறந்து இருக்கலாமே என்று நினைத்தேன், இன்று என்னை பார்த்து இந்த கேள்வியை நீங்கள் கேக்குறீங்க அதான் சிரிப்பை அடக்க முடியவில்லை. என்னுடைய வாழ்க்கையில் பெண்கள் எப்பவுமே இருக்காங்க அம்மாவா, சகோதிரியா, சகியா, காதலியா. நான் சின்ன வயதில் கோ-எட்டு(இருபாலர் பயிலும்) பள்ளியில் தான் சேருவேன் என்று அடிவாங்கி வெற்றி பெற்றது இன்னும் எனக்கு நினைவு இருக்கு. என் அம்மா போல ஒரு இரும்பு மனிஷியை நான் பார்த்தது இல்லை. தினமும் எங்கள் வீட்டுக்கு காய்கறி மூட்டையை தூக்கி கொண்டு வந்து விற்க்கும் 97 வயது பாட்டியின் சக்திக்கு முன்னால், உலகத்திலே சக்திவாய்ந்த ஆண்னின் பலம் ஒன்னும் இல்லை. பெண்களின் மன உறுதிக்கு முன்னால் ஒன்றும் நிக்க முடியாது. ஆண்கள் பெண்களை உடல் அளவில் மட்டும் அசைக்க முடியும் ஆனால் மன அளவில் தொட கூட முடியாது. கோடி ஆண்கள் நம்மை தங்க தட்டில் தாங்கினாலும் ஒரு பெண்ணின் விரல் நம் தலையை வருடுவதற்க்கு ஈடு ஆகுமா?. என்னை கேட்டால் பெண்கள் நினைத்தால் எது வேண்டும் என்றாலும் செய்யலாம், ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். என் வாழ்க்கையில் பெண்கள் மிக முக்கியம். என்னுடைய வாழ்க்கையில் பல மாறுதல்களுக்கு அவர்கள் தான் காரணம். ஒரு குடும்பத்தில் ஆண் சரியில்லை என்றால் பரவாயில்லை, ஆனால் பெண் சரியில்லை என்றால் குடும்பமே காலி. அதனால் என் ஓட்டு எப்பவுமே பெண்களுக்கு தான், மனசாட்சிக்கு கட்டுப்பட்ட பெண்களுக்கு மட்டும் தான்

ஆதவா வின் கேள்விகளுக்கு மிக நேர்த்தியாக பதிலளித்திருக்கிறீர்கள். கதாசிரியர் பற்றி உங்கள் பதிலில் நேர்மையும் தன்னடக்கமும் தெரிகிறது. எனது பாராட்டுக்கள்.

சிறுபிள்ளை
19-11-2008, 03:09 AM
சிறுபிள்ளை :

மன்றத்தில் ஜோவியலாகப் பழகும் புதியவரான நீங்கள் நிஜத்தில் இப்படிப்பட்டவரா? தன்னை சிறுபிள்ளை என்று தாழ்வுடன் கூறிக்கொள்வதில் நீங்கள் வருத்தப்படவில்லையா? சரி இனி உங்களுக்கான கேள்வி

உங்களைக் கண்டு உங்களுக்குத் தெரிந்தவர் யாரோ ஒருவர் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொண்டால் நீங்கள் சும்மா இருப்பீர்களா? அல்லது அவர்களின் குணம் கண்டு உதாசீனப்படுத்துவீர்களா? அப்படி செய்பவர்கள் உங்கள் மனதிற்கு உகந்தவராக இருந்தால் என்ன செய்வீர்கள்? உங்கள் விரோதியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?




நண்பரே முதலில் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னையும் மதித்து என்னிடம் ஒரு கேள்வி கேட்டிருக்கிறீர்கள். முடிந்தவரை அதற்கு பதில் அளிக்கிறேன்.

நான் யாரிடமும் எவரிடமும் எளிதில் ஒட்டிக்கொள்வேன். என் குணாதிசயம் அப்படி. யாரையும் தாழவாக நான் நினைக்க மாட்டேன்.

உனக்கும் கீழே உள்ளர்வர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு



எனக்கு பிடித்த தாரக மந்திர வரிகள் இது. என்றும் இது போலவே வாழ விரும்புகிறேன். சிறுபிள்ளை என்று சொல்லிக்கொள்வதில் சிறிதேனும் தாழ்வு எனக்கில்லை.

எல்லாம் தெரிந்துவிட்ட பிறகும் எல்லாம் எனக்குத் தெரியும் எல்லாம் எனக்கு தெரியும் என்று சொல்லிகொள்வதிலேயே மாபெரும் அகந்தை ஒளிந்துள்ளது. அதற்கு கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு உபதேசித்த கீதைதான் சான்று.

தன்னால்தான் பாண்டவ போர் ஜெயித்தது என்று சொன்ன அர்ஜீனனிடம் நீ கொஞ்சம் கீழே இறங்கு என்று சொன்னார். இது அரிஜூனனுக்கு கோபத்தை வரவழைத்தது. எப்போதும் தேரோட்டியாக இருக்கும் கண்ணன் இறங்கிவிட்டுதானே தன்னை இறக்குவார் ஆனால் போர் முடிந்த பிறகு தன்னை இறங்க சொல்கிறாரே என்று வியந்தான் இறங்கினான். கொஞ்ச நேரத்தில் கண்ணன் தேரை விட்டு இறங்கிய அடுத்த கணம் தேர் தீப்பற்றி எறிந்தது. அந்த அளவுக்கு உக்கிரத்தையும் அக்கினியையும் கண்ணன் தேரோட்டியாக இருந்து தாங்கி இருந்தான் என்பதை பின்புதான் அறிந்தான் அர்ஜூனன். அவனது அகங்காரமும் அந்த தேரோடு எரிந்து சாம்பலானது.

என்னைப்பொருத்தவரையில் மனதுக்கு உகந்தவர் உகாதவர் என்பதெல்லாம் கிடையாது. சிறுபிள்ளைத்தனமாக என்னிடம் நடந்துகொள்ளும்போது நானும் சிறுபிள்ளைத்தனமாக அவரிடம் விளையாடுவேன். எனக்கு அதில் ஒரு இன்பமிருக்கும். சிறுவர்களோடு விளையாடி பாருங்கள் உங்கலுக்கு அது புரியும். ஆனால் வேனுமென்றே என்னை கோபப்படுத்த வேண்டும் என்றெண்ணீ என்னிடம் விளையாடுபவர்களை ஒன்றும் சொல்ல மாட்டேன். முடிந்த வரையில் கூலாக பேசிக்கொண்டுதான் இருப்பேன். அப்படியும் என்னை மிகவும் கோபப்படுத்தினால் அங்கிருந்து சென்று விடுவேன் மற்றொறு நாள் அதற்கு பதிலளிப்பேன். அப்போதும் அவர் கோபமாக இருந்தால் நான் என் வழியில் சென்றுவிடுவேன். அவ்வளவுதான்.

யாரையும் துன்புறுத்துவது எனக்கு பிடிக்காத ஒன்று. முடிந்த வரையில் அனைவருக்கும் நன்மை செய்து வாழ வேண்டும் என்று நினைப்பவன் நான்.

ஆதவா
19-11-2008, 06:54 AM
அனைவரின் பதிலுக்கும் என் கருத்துக்களை விரைவில் தருகிறேன்....


வேலைப்பளு காரணமாக சாம்பவி அவர்களால் பதில் சொல்ல இயலாதெனினும்
இக்கேள்வி வேறு ஒருவருக்கு மாற்றப்படுகிறது.. கேள்வியும் மாற்றப்படுகிறது.

சிவா.ஜி.


திகில் கதைகளை இப்படி திகிலாக எழுதும் நீங்கள் உண்மையிலேயே திகில் அடைந்த நிகழ்வை எங்களுடன் பகிர்ந்துகொள்வீர்களா?


உண்மையான சமூக அக்கறையும் தமிழ் பற்றும் உங்களிடம் கண்டிருக்கிறேன். (ஒரு பதிவில் "தமிழ் யாருடைய தயவிலும் வாழவில்லை என்ற கருத்தில் ஒருவரைச் சாடியிருந்தீர்கள்.)
அத்தகைய தமிழ்பற்று மிக்க உங்களிடம் தமிழ்தாய் தோன்றி,

வள்ளுவன்,
இளங்கோ,
கம்பன்,
பாரதி,
கண்ணதாசன்

இந்த ஐவரில் ஒருவரை மட்டும் மீட்டுத் தருகிறேன். ஆனால் அந்த தமிழறிஞரை என்ன காரணத்தினால் மீட்கிறீர்கள் என்று கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?

ராஜா
19-11-2008, 07:08 AM
அன்பின் ஆதவா..!

சிவாவுக்கு தனிமடல் மூலம் தெரியப்படுத்திவிட்டீர்கள் தானே..?

ரங்கராஜன்
19-11-2008, 07:10 AM
என்னைப்பொருத்தவரையில் மனதுக்கு உகந்தவர் உகாதவர் என்பதெல்லாம் கிடையாது. சிறுபிள்ளைத்தனமாக என்னிடம் நடந்துகொள்ளும்போது நானும் சிறுபிள்ளைத்தனமாக அவரிடம் விளையாடுவேன். எனக்கு அதில் ஒரு இன்பமிருக்கும். சிறுவர்களோடு விளையாடி பாருங்கள் உங்கலுக்கு அது புரியும். ஆனால் வேனுமென்றே என்னை கோபப்படுத்த வேண்டும் என்றெண்ணீ என்னிடம் விளையாடுபவர்களை ஒன்றும் சொல்ல மாட்டேன். முடிந்த வரையில் கூலாக பேசிக்கொண்டுதான் இருப்பேன். அப்படியும் என்னை மிகவும் கோபப்படுத்தினால் அங்கிருந்து சென்று விடுவேன் மற்றொறு நாள் அதற்கு பதிலளிப்பேன். அப்போதும் அவர் கோபமாக இருந்தால் நான் என் வழியில் சென்றுவிடுவேன். அவ்வளவுதான்.

யாரையும் துன்புறுத்துவது எனக்கு பிடிக்காத ஒன்று. முடிந்த வரையில் அனைவருக்கும் நன்மை செய்து வாழ வேண்டும் என்று நினைப்பவன் நான்.

நண்பரே
உங்களின் வார்த்தை அருமை அருமை, நீங்கள் உண்மையில் இப்படி வாழ்பவர் என்றால் கண்டிப்பாக நான் தலை தாழ்த்தி பாராட்டுகிறேன்.

சிவா.ஜி
19-11-2008, 07:32 AM
என்னையும் உங்கள் கேள்விக்கணைகளில் சேர்த்துக்கொண்டதற்கு நன்றி ஆதவா. விரைவில் பதிலுடன் வருகிறேன்.

இறைநேசன்
19-11-2008, 07:44 AM
யாரையும் துன்புறுத்துவது எனக்கு பிடிக்காத ஒன்று. முடிந்த வரையில் அனைவருக்கும் நன்மை செய்து வாழ வேண்டும் என்று நினைப்பவன் நான்.[/B]

மிக அருமையான வரிகள்! அனைவரும் அறிந்து, அனுபவித்து, அடிபணியவேண்டிய வரிகள்!

உங்கள் வார்த்தைகள் உள்ளத்தை தொடுகிறது அன்பரே!

ஆதவா
19-11-2008, 01:34 PM
நண்பரே முதலில் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னையும் மதித்து என்னிடம் ஒரு கேள்வி கேட்டிருக்கிறீர்கள். முடிந்தவரை அதற்கு பதில் அளிக்கிறேன்.

யாரையும் துன்புறுத்துவது எனக்கு பிடிக்காத ஒன்று. முடிந்த வரையில் அனைவருக்கும் நன்மை செய்து வாழ வேண்டும் என்று நினைப்பவன் நான்.[/B]

சிறுபிள்ளை!! இங்கே யாருக்கும் யார் தாழ்வில்லை... தன் பெயரால் தாழ்வுபடுத்திக் கொண்டீர்கள் என்ற ஆதங்கம் ஆரம்பம் முதலே இருந்தது. மேலும், மன்றத்தில் அனைவரும் சமம் என்ற முறையில் உங்களிடம் கேள்வி கேட்டேன்..

குழந்தைகள் என்றால் எனக்கு இஷ்டம் சிறுபிள்ளை.. அதை எனக்குச் சொல்லத் தெரியாது.. ஏனெனில் இன்னமும் நான் குழந்தைதான்...

நன்றி..... :icon_b:





கடைசி கேள்விக்கு பதில் ஒரே வரிதான் ஆதவா....
"உன்னை அவர்கள் இடத்தில் நிறுத்தி பார், இருத்தி பார்க்காதே..!!!!" :icon_b:

என் இனிய பென்ஸ் அண்ணா இந்த வகை பதில்கள்தான் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

தவறுகள்தான் நம்மை உயர்த்துபவை... தவறுகளும் அது எங்கே நடக்கிறது என்ற முடிச்சை அவிழ்க்கும் சூக்குமமும் புரிந்துகொண்டவர்களுக்கு வாழ்வில் எல்லாம் சுகம் தான் இல்லையா?

எப்போதும் போல உங்கள் பதில் மேன்மையே! (சங்கு சுட்டாலும் வெண்மை தரும்)




குறை இல்லாத மனிதன் யார், யார் ஒருவர் தன் குறைகளை கண்டு அதற்கு தீர்வும் கண்டு பிடிக்கிறாரோ அவரே சிறந்தவர் ஆக விளங்குவார்.

உங்கள் பதில் நிறைவைத் தருகிறது. விண்டோஸ் பழகிப் பழகி அது ஒரு User Friendly யாக இருந்தாலும் சில ஓட்டைகள் எனக்கு இன்னும் பிடிக்காதது. Linux அளவுக்கு செக்யூரிட்டி கிடையாது. (மேலும் பணம் கட்டி வாங்கவேண்டும் :mad:)

மிக்க நன்றி பிரவீன்..


தமிழ் படங்களை பொறுத்த மட்டில் என்பதை என்னால்
ஏற்றுக்கொள்ள முடியாது.


எனக்கு பிடித்த பொது மொழி இரண்டு..
ஒன்று நகைச்சுவை.. அடுத்தது மௌனம்.

மிக்க நன்றி மன்மி. ஆங்கிலப்படங்களில் அவ்வகை உண்டு, ரோவன் முட்டாள் தனமாக நடித்ததால்தான் பீன்ஸ் என்றாலே துள்ளிக் கொண்டு போய் பார்க்கிறோம்... சிரிப்புக்களில் டயலாக் காமெடி உண்டு. அது அந்தந்த லோக்கல் பாஷைகளின் தடுக்கல்களை வைத்தும் எழுதப்படும். அதனால் அது ஆங்கிலம் தாண்டி தமிழ் வர வாய்ப்பில்லை.. மேலும் ஆங்கிலப்படங்களில் அடிவாங்குவது போன்ற படங்கள் நான் பார்த்ததில்லை..

புலி, குரங்கு சிந்தனை ரொம்பவே அற்புதம்.

அதுசரி, மெளனம் ரொம்ப பிடிக்குமா? சிலசமயங்கள் மெளனம் நம்மையே கொல்லும் சக்தி கொண்டது அல்லவா? அப்போது கூடவா?:D


நன்றி ஆதவா
என்னிடம் கேள்வியை கேட்டதுக்கு

[

உடனடி பதிலளித்த மூர்த்திக்கு நன்றி.

சிறந்த கதைசொல்லியாக பரிணமித்துக் கொண்டிருக்கும் உங்களிடம் இக்கேள்வி கேட்டது குறித்து பெருமிதம் கொள்கிறேன். பெண்கள் குறித்த உங்கள் கருத்துக்கள் அனைத்தும் வரவேற்கத்தக்கன. என்னை ரசிகனாய், கவிஞனாய், மாற்றிய சக்தி பல பெண்களுக்கு உண்டு. பெண்கள் ஆக்கவே செய்கிறார்கள். வீணெனப்பட்டதை அழிக்கச் செய்கிறார்கள்.

ஒரு கதாசிரியன் எதுவரையிலும் எழுதலாம்? மனமூளையின் இண்டு இடுக்களில் நுழைந்து எழுத முடியுமா? புதுமைப்பித்தனின் ஒரு கதை படித்து மிரண்டு போனேன். சு.ரா கதைகளில் உள்ள நெருக்கமான இலக்கியம் படித்து, கதைகள் எழுதினால் தரமுள்ளதாக இருக்கவேண்டும் என்று எனக்குள் விதிகள் வளர்த்துக் கொண்டேன்... ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப கதைகளும் ஆசிரியர்களும் தோன்றுவார்கள்.... எழுதுதலுக்கு முடிவில்லை...

நன்றி மூர்த்தி..

mukilan
19-11-2008, 11:48 PM
பல பூச்செடிகளைப் பார்க்கும்பொழுது எனக்கு உங்கள் ஞாபகம்தான் வரும். எங்கள் வீட்டில் மல்லிகை, போன்ற வாசமிகுந்த பூச்செடிகளை நட்டு அழகு பார்க்கவேண்டும் என்பது என் ஆசை.. இவற்றை எப்படி நடுவது? அதாவது அதற்கு விதைகள் இருக்கின்றனவா? என்னென்ன பூஞ்செடிகள் நடலாம்?

ஆனால் உங்களுக்கு இது கேள்வி இல்லை...

அறிவியல் வேகமாக வளர்ந்து வரும் இச்சூழ்நிலையில்... பெண் வழி பிறந்த மனிதர்கள் போய், பெண்களே இல்லாமல் ஆண்களின் துணையில்லாமல் குழந்தைகள் பிறக்கும் வழி தெரிந்துகொண்டனர்.. இதைப் போன்று எல்லா செடிகொடிகளும் கண்டுபிடிக்கப்படுமா? அதாவது இயற்கைக்கு மாற்றாக செயற்கைச் செடிகளைக் கண்டுபிடிப்பார்களா?

அப்படி (மிகவேகமாக வளரும்) செயற்கை செடிகொடிகள் மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் இயற்கை அழிந்துவிடுமா?

உங்கள் கேள்விக்கு என் நன்றி ஆதவா.

முதலில் மல்லிகை போன்ற பூச்செடிகளை நடுவது பற்றி....

பூ, போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் பெரும்பாலும் பாலுறவால் பெருக்கப்படுவதில்லை. மாறாக ஒட்டுக்கட்டுதல், பதியன் போடுதல் போன்ற முறைகளால்தான் பெருக்கம் செய்யப்படுகின்றன. ஒட்டுக்கட்டுதல், பதியன் போடுதல் போன்ற பாலுறவற்ற இனப்பெருக்கம் (Asexual or Vegetative reproduction) மரபணுக்களை அப்படியே நிறுத்தி வைப்பதால் அத்தகைய தாவரங்கள் விரும்பப்படுகின்றன. தவிரவும் இந்தப் பூக்கள் கனியாவது மிகுந்த சிரமம்.

பெண்களே இல்லாமல் ஆண்களின் துணையில்லாமல்..... குழந்தைகள் பிறக்கவே இல்லை. சோதனைக்குழாய் முறையில் ஒரு பெண்ணின் கருமுட்டையுடன் ஆணின் விந்தணுக்களைச் செலுத்தி அது நன்கு கூடியவுடன் பின்னர் மீண்டும் தாயின் கர்ப்பப்பையிலேயே வைத்து 10 மாதகாலம் அந்த தாய் சுமந்து பின்னர் குழந்தை பெறப்படும். இதில் கருமுட்டையும் விந்தணுவும் கூடுவது சோதனைக்குழாயில் நடக்கும். பின்னர் அது மீண்டும் தாயின் கர்ப்பப்பைக்குள் செலுத்தப்பட்டு விடும். இங்கே சோதனைக்குழாய் என்பதும் நாம் வேதியியல் ஆய்வகங்களில் கண்ட சோதனைக் குழாயைக் குறிப்பிடவில்லை.In Vitro என்றால் இலத்தீன் மொழியில் உடலை விட்டு வெளியில்(கண்ணாடிக்குள்) என்று பொருள். அப்படியானால் கண்ணாடிக்குடுவைகள், கண்ணாடி வட்டுகள் போன்றவற்றில் இத்தகைய முயற்சியை செய்வார்கள். இப்படி வெளிக்கருவுறுதல் செய்வதற்கு In Vitro Fertilization என்று பெயர். இயல்பாக உடலுக்குள் (In Vivo) நடக்கும் கருவுறுதல் In Vivo Fertilization என்றழைக்கப்படும்.

தாவரங்களிலும் சேர முடியாத மகரந்தங்களையும், அண்டங்களையும் இணைக்க இது போன்ற வெளிக் கருவுறுதல் செய்ய முடியும். அதை மீண்டும் முழு தாவரமாக உருவாக்கவே முடியும். தாவரங்களின் Totipotency என்ற குணம் ஒரு சிறு செல்லில் இருந்து முழுதாவரத்தை உருவாக்கும் சாத்தியத்தை அளிக்கிறது. விலங்கினங்களில் அது சாத்தியமில்லை. எப்படியாயினும் தாவரத்தின் அந்த சிறு செல் வர தாவர செல் தேவை. வெளிக்கருவுறுதல் செய்ய ஆண், பெண் (விலங்கினங்களுக்கு) தேவை. இயற்கையின் பங்களிப்பின்றி எதுவும் சாத்தியமில்லை.

இயற்கைக்கு மாறாக செடிகளை இனப்பெருக்கம் வேண்டுமானால் செய்யலாம். ஆனால் துவக்கம் இயற்கையில் இருந்துதான் துவங்க வேண்டும். இயற்கையை வெல்வது மிகக் குறைந்த அளவே சாத்தியம்.

அப்படி (மிகவேகமாக வளரும்) செயற்கை செடிகொடிகள் மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் இயற்கை அழிந்துவிடுமா? என்ற இந்த கேள்விக்கான நேரடிப் பதில் ஆமாம். ஒரு குறிப்பிட்ட தாவரத்தையே நாம் மீண்டும் மீண்டும் பயிர்செய்தால் அது மற்ற இனங்களை வளர விடாது அல்லவா? அப்படித்தான் இயற்கையில் சமநிலை பாதிக்கப்படும் சூழ்நிலை வரும்.

ஆனால் எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக இயற்கையே அந்த சமநிலை அற்ற தன்மையை அகற்ற ஒரு வழி கண்டு கொள்ளும். இது ஆருடம் போலவோ அருள்வாக்கு போலவோ சொல்லவில்லை. அறிவியல் ரீதியாகவே சொல்கிறேன். ஒரு இனம் அமுக்கப் படும் போது அது எப்படியாவது வாழ்ந்து விடுவதற்காக தன்னில் பல மாற்றங்களை உருவாக்கி கொள்ளும் என்கிறார் டார்வின். அப்படி மாற்ற முடியாதது அழிந்து போகும்.
யுகங்களுக்கு முன் சர்வ வல்லமை படைத்த டைனோசார்கள் இருந்தன. எங்கே போயின? என்ற கேள்விக்கு பல்வேறு பதில்கள் உள்ளன. ஆனால் அது அனைத்தும் முடிவில் மறைமுகமாக கூறுவது இயற்கையை வெல்ல முடியாது என்பதுதான்.

ஆதி
20-11-2008, 04:01 AM
ஆதி :

நாட்டுப்புறப்பாடல்களாக இருந்து ஏட்டில் ஏறி நெறிபடுத்தி இலக்கணம் வகுத்து, இலக்கணங்கள் கடந்து, இலக்கணங்கள் மீறி, இசங்களும் குறியீடுகளுமாக குடும்பம் நடத்தி, துளிப்பாக்களாக தொட்டில்கட்டி ஒரு கட்டுக்குள் அடங்கியிராமல் அணுப்பிளவாய் வீரிய ஆற்றலுடன் கடந்து வீறுநடை போடும் கவிதை எனும் மனித எண்ணங்கள் நாளை எப்படி இருக்கும் என்று எண்ணுகிறீர்கள்? அதன் வடிவம், பொருள், நடை என்று ஏதாவது மாற்றம் இருக்கும் இல்லையா? நாளை நடப்பது நாமறியோம் எனினும் உங்களுக்கென ஒரு கருத்து இருக்கும் இல்லையா, அதைப் பற்றி தயவுடன் கூறுங்களேன்...????

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், சங்க இலக்கியம், காவியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்பற்று பாடல்கள், திராவிட இலக்கியங்கள், புதுகவிதைகள், நவீன இலக்கியங்கள்.. என்று இலக்கியம் தன் பயனத்தை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது..

கால சூழ்நிலைக்கேற்ப கவிதைகள் தங்களின் நடையை, வடிவமைப்பை, பாடு பொருளை ஏந்திக்கொண்டன. யாப்புக்குள் நின்ற கவிதைகளானாலும், யாப்பை கடந்த கவிதையானாலும் அதன் வகைகளில் பெரிய வித்யாசத்தை காட்டிவிட முடியவில்லை என்பதே என் கருத்து. உதாரனமாக குறியீடு கவிதைகள், முந்தோன்றிய மூத்த சங்க இலக்கியமான நற்றினையில் குறியீடுகளை அதிகமாக காணலாம்..

நெய்தல்

கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரத்தவர்
நீல் நிற புன்னகைக் கொழு நிழல் அசைஇ
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு
‘அலரே அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை
அரிய ஆகும் நமக்கு’ எனக் கூறின்.
கொண்டும் செல்வர்கொல் – தோழி! – உமணர்
வெண் கல் உப்பின் கொள்ள சாற்றி
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்
மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக்
கருங் கால் வெண் குருகு வெரூஉம்
இருங் கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே ?

தோழி! கடற்கரைச் சோலையில் உள்ள சிறுகுடியிலிருந்து கடலின் மேற் செல்லும் மீனவர் நீல நிறப் புன்னை மர நிழலிலே தங்குவர், குளிர்ந்த பெரும் பரப்பை உடைய கடலின் மேற் செல்லுதற்குரிய செவ்வி பார்த்து, முறுக்குண்ட வலையைப் பிரித்துக் காய விடுவர். அத்தகைய துறையை உடைய தலைவனிடம் நீ சென்று ‘நமக்கு உண்டாகிய பழிச்சொல்லை அன்னை அறிந்தால் இனி இங்குத் தங்கிக் கள்வொழுக்கத்தில் வாழ்தல் அரிதாகும்’ என்று கூறினால், உப்பு வாணிகர் வெண்மையான கல்லுப்பின் விலை கூறிக் கூட்டமாகிய ஆனிரையை ஒலியெழுப்பிப் போகச் செய்யும் வழியில் செல்லும் வண்டிகள் மணல் பரப்பில் மடுத்து முழங்கும் ஓசையை கேட்டு வயல்களில் உள்ள கருங்கால் வெண்குருகுகள் அஞ்சுகின்ற கரிய உப்பங்கழி சூழ்ந்த நெய்தல் நிலத்திலே உள்ள தம் ஊர்க்கு நம்மை அழைத்துக் கொண்டு போவாரோ ?

1) கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரத்தவர்
நீல் நிற புன்னகைக் கொழு நிழல் அசைஇ
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி
அம் கண் அரில் வலை உணக்கும்

மீனவர் புன்னை மர நிழலில் இருந்து கடலில் செல்லத் தக்க காலம் பார்க்கும் போது வலையை காய வைப்பர் என்பது, தலைவன் சிறைப்புறத்திலே இருந்து தலைவியைக் கூடுவதற்கு யாருமில்லாத காலம் பார்க்கும் நிலையை உணர்த்திற்று

2) உமணர்
வெண் கல் உப்பின் கொள்ள சாற்றி
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்
மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக்
கருங் கால் வெண் குருகு வெரூஉம்

வண்டி செல்லும் ஓசைக்குக் குருகு அஞ்சுமென்பது, தலைவன் மணமுரசு ஒலிப்ப வந்து வரைவு மேற்கொள்கையில் அலர் கூறுவார் அஞ்சி ஒடுங்குவர் என்பதை உணர்த்தியது.

இந்த பாடலில் நெய்தற் தினைக்கேற்பக் குறியீடுகள் அமைந்திருக்கிறது. இலக்கியம் காலத்திற்கேற்ப மாறினாலும் அது பழமையில் இருந்து விலகி சென்றுவிடாது. என்னத்தான் புதுகவிதை யாப்பை மீறி எழுத முயற்சித்தாலும், எதுகை மோனை என்ற சுவையை வண்ணப்பா என்னும் சந்தங்களை நாம் கவிதையில் பயன்படுத்ததான் செய்கிறோம்.

“Winners don't do different things. They do things Differently” - சிவ்கேராவின் இந்த வரிகள் சாரம் புது மற்றும் நவீன கவிதைகளுக்கும் பொருந்தும், என்னதான் மரபை கடந்து எழுத ஆரம்பித்தாலும் அவைகள் முழுக்க முழுக்க புதியவைகளோ நவீனமானவைகளோ அல்ல.

சங்க இலக்கியத்தின் நடையை சாரமாக கொண்டே புதுகவிதைகளும் நவீனக்கவிதைகளும் புனையப்படுகின்றன, கவிதைகளின் வார்த்தைகளில், வடிவங்களில் மாற்றமிருந்தாலும், சங்க இலக்கியத்தும் இன்றைய இலக்கியத்துக்கும் பெரும் வேறுபாடு ஒன்றுமில்லை.

இன்னும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நவீனத்தின் தாக்கம் அதிகமாய் இருக்கும், வார்த்தைகளில் குறியீடுகள் சொல்வதை கடந்து கணிதக் குறிகளில் குறியீடு சொல்ல ஆரம்பித்திற்கிறது நவீன இலக்கியங்கள், இதனால் வார்த்தைகள் பயன்பாடு குறைவது மட்டுமல்லாமல், கவிதைகளில் அளவும் குறைகிறது. மக்களும் வேகமான வாழ்க்கையில் மூழுக்கி கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு நின்று படித்து, சிந்தித்து சிலாகிக்க நேரமில்லை, அதனால் எதிர்க்காலத்தில் திருக்குறள் போன்று இரண்டடி கவிதைகள் பெரும் ஆக்ரமிப்பு செய்தாலும் ஆட்சர்யமில்லை. எவையாக இருந்தாலும் அவை பழையவைகளில் இருந்தே ஒரு புதிய வடிவம் பெற்று எழும்.

--------------

வாய்ப்பளித்தமைக்கு நன்றி ஆதவா.

சிவா.ஜி
20-11-2008, 05:09 AM
சிவா.ஜி.


திகில் கதைகளை இப்படி திகிலாக எழுதும் நீங்கள் உண்மையிலேயே திகில் அடைந்த நிகழ்வை எங்களுடன் பகிர்ந்துகொள்வீர்களா?


உண்மையான சமூக அக்கறையும் தமிழ் பற்றும் உங்களிடம் கண்டிருக்கிறேன். (ஒரு பதிவில் "தமிழ் யாருடைய தயவிலும் வாழவில்லை என்ற கருத்தில் ஒருவரைச் சாடியிருந்தீர்கள்.)
அத்தகைய தமிழ்பற்று மிக்க உங்களிடம் தமிழ்தாய் தோன்றி,

வள்ளுவன்,
இளங்கோ,
கம்பன்,
பாரதி,
கண்ணதாசன்

இந்த ஐவரில் ஒருவரை மட்டும் மீட்டுத் தருகிறேன். ஆனால் அந்த தமிழறிஞரை என்ன காரணத்தினால் மீட்கிறீர்கள் என்று கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?

முதல் கேள்விக்கு...

வாழ்க்கையில் நடந்த திகில் சம்பவம் என்று நினைக்கும்போது...பேய், பிசாசு சமாச்சாரமெல்லாம் எதுவும் சம்பவிக்கவில்லை. சிறியவயது முதலே எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை அதனால் பயமுமில்லை. இப்போது நினைத்தாலும் பகீரென்ற உணர்வு தோன்றும் நிகழ்வுகள் சில நிகழ்ந்துள்ளன.


பத்தாவது முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்க வசதியில்லாதபோது, கிடைத்த வேலைகளை செய்து வந்தேன். அப்போது என் மூத்த அண்ணன் ஒரு பொருட்களை வினியோகிக்கும் நிறுவனத்தின், சரக்கு கொண்டு செல்லும் வாகனத்தின் ஓட்டுநராய் இருந்தார். அப்போது ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த தர்மபுரி மாவட்டம் முழுவதும் பயணித்து பொருட்களை வினியோகம் செய்யும் வாகனத்தின் ஓட்டுநர் என்னுடைய அண்ணன். சீனியர் சேல்ஸ்மேன் பஷீர். அவருக்கு உதவியாக என்னையும் சேர்த்து மூன்று பேர் மாவட்டம் முழுவதும்பயணம் செய்து கொண்டிருந்தோம்.பழைய மெட்டடோர் வேன் அது.


அந்த பயணத்தினிடையில் ஒருநாள் ஹோசூரிலிருந்து தேன்கனிக்கோட்டை என்ற ஊருக்கு சென்றுவிட்டு திரும்ப கிருஷ்ணகிரிக்கு வேறு வழியில் வந்து கொண்டிருந்தோம்.இரவு 9 மணியாகிவிட்டிருந்தது.நல்ல மழை. சாலை ஒரு இடத்தில் தாழ்ந்திருந்தது. காட்டாறு பாயும் பாதை அது. பாலம் ஏதுமில்லை. சாதாரண நாட்களில் வறண்டிருக்கும். மழைக்காலத்தில் மட்டும் நீர் ஓடிக்கடக்கும். அன்றும் அப்படித்தான் லேசான நீரோட்டம் இருந்தது. கடந்துவிடலாமென்று முடிவு செய்து என்னுடைய அண்ணன் வண்டியை செலுத்தினார். தண்ணீரில் சற்றுதூரம் போனதும் நீர்வரத்து அதிகமாக வண்டிக்குள் தண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது.


ஆற்றுக்கு நடுவில் எஞ்சின் அணந்துவிட்டது. எவ்வளவு முயன்றும் ஸ்டார்ட் ஆகவில்லை. தண்ணீர் மட்டமும், வேகமும் கூடிக்கொண்டே இருந்தது. கதவைத் திறந்து கீழேயும் இறங்க முடியவில்லை. பின்னால்
வைத்திருந்த சரக்குகள் 90 சதவீதம் தீர்ந்துவிட்ட நிலையில் வண்டியின் பாரமும் குறைவாக இருந்ததால்..தண்ணீரின் வேகத்துக்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. லேசாக ஆட ஆரம்பித்ததும் எங்கள் மூன்று பேருக்குமே மனதில் திகில் பரவத் தொடங்கிவிட்டது.


அண்ணன் மீண்டும் மீண்டும் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முயன்றுகொண்டே இருந்தார். ம்ஹீம்...சாலையில் படுத்துக்கொண்ட சவலை மாடாக மாறிவிட்டிருந்தது. அவ்வளவுதான் நம்ம கதி. இன்னைக்கு ஆத்தோட போக வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது...பின்னாலிருந்து ஒரு வாகனத்தில் ஹெட்லைட் சிக்னல் கிடைத்தது. அண்ணன் ஜன்னலுக்கு வெளியே தலை நீட்டி முடிந்தவரை சத்தமாக உதவி வேண்டுமென்று கத்தினார்.


பின்னால் வந்தது ஒரு டிப்பர் லாரி. அந்த ஆற்றை சுலபமாகக் கடந்துவிடும். அந்த லாரியை மெதுவாக ஓட்டிக்கொண்டுவந்து எங்கள் வேனின் பின்புறத்தில் லேசாக இடித்தார். அண்ணன் புரிந்துகொண்டு கியரை நியூட்ரலில் போட்டதும், அந்த லாரியால் எங்கள் வேனை தள்ளிக் கொண்டுவந்து கரை சேர்த்தார்.

அந்த டிப்பர் லாரியின் டிரைவருக்கு நெகிழ்வோடு நன்றிகூறினோம். அதற்கு அவர்,

”ஆபத்துல உதவலன்னா என்ன மனுஷன்? ஸ்டார்ட் ஆகுதான்னு பாருங்க. இல்லன்னா நான் போய் யாராவது மெக்கானிக்கை அனுப்பறேன்” என்றார்.

அப்படியே அனுப்பியும் வைத்தார்.விடியற்காலையில் வீடு வந்து சேர்ந்தோம்.


அடுத்த பதில்...



இளங்கோ, கம்பன் இந்த இருவரும் மீண்டு வந்தாலும், இன்றைய இலக்கிய உலகைப் பார்த்து நொந்துபோவார்கள். ஏதாவது விருது வழங்கும் குழுவுக்குத் தலைவராகப் போட்டு, பாடாவதி படைப்புகளை படிக்கும்படி செய்து நோகடித்துவிடுவார்கள் அரசு நடத்துவோர். அந்த துன்பம் அவர்களுக்கு வேண்டாம்.


2000 வருடங்களுக்கு முன்பே எந்தக் காலத்துக்கும் பொருந்துமாறு எல்லாத் துறைகளைப் பற்றியும் எழுதிய அந்த பெருமகனாரைப் பற்றி சில சந்தேகங்கள் எழுப்புகிறார்கள் சிலர். குறள் ஒருவரால் எழுதப்பட்டதல்ல,அவர் அந்தனரா...இப்படி சில்லறை சந்தேகங்களை தீர்த்துவைக்குமாறு அவரை தொல்லை செய்துவிடுவார்கள். அதனால் அவரும் வேண்டாம். அங்கேயே நிம்மதியாய் இருக்கட்டும்.

இன்றைய ராப் இசைக்கும், வார்த்தைகளை அமுக்கிவிடும் வேக இசைக்கும் பாட்டெழுத முடியாமல் பரிதாப நிலைக்கு கண்ணதாசனைத் தள்ள எனக்கு விருப்பமில்லை.

பாரதி வேண்டுமென கேட்பேன். எத்தனையோ சொல்ல நினத்து அற்பாயுளில் நம்மைவிட்டு நீங்கிவிட்ட பாரதி சொல்ல நினைத்த அத்தனையையும் சொல்ல வேண்டும். அன்றைய நிலைக்கே ஆத்திரப்பட்டவன், இன்றைய நிலைக்கு எரிமலையாவான். அவன் ரௌத்திரம் நன்மை பயக்கும். இன்றைய இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டி கிடைப்பான். புதுக்கவிதைக்கு தாத்தா என்று சொல்லிக் கொள்பவர்களெல்லாம் இந்த கொள்ளுத்தாத்தாவைப் பார்த்து சொல்லிக்கொள்ளாமல் ஓடுவார்கள். முக்கியமாய் தமிழ்த்தாய் அகமகிழ்வாள். இடையில் இழந்த என் புத்திரனை மீண்டும் அடைந்தேனென முகம் மலர்வாள்.

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து ஆதவா. எனக்கு கம்பன், வள்ளுவன், இளங்கோவை விட பாரதியைத்தான் அதிகம் தெரியும்.

ராஜா
20-11-2008, 07:46 AM
சிவாவின் அனுபவம் பேசுகிறது..!

முதல் பதிலிலும், 2 வது பதிலின் முதல் பகுதியிலும்..!

மெட்டடோர் வேனைப் போன்று உழைப்பதும், உபத்திரவம் கொடுப்பதும் வேறு இல்லை.

சைலன்சர் வழியாக தண்ணீர் எஞ்சினுக்கும் புகுந்திருக்க வேண்டும்.. அதனால்தான் அணைந்துவிட்டது.

உண்மையில் நீங்கள் மூவரும் தப்பித்தது தெய்வாதீனமே..!

Keelai Naadaan
23-11-2008, 10:28 AM
ஆதவன் அவர்களின் கேள்விகளும் மன்ற உறவுகளின் பதிலும் மிக மிக அருமை.

ஓவியா
23-11-2008, 01:33 PM
ரொம்ப பிசியா இருக்கிறேன் மக்களே.

மன்ற மக்களும் ஆதவனும் என்னை மன்னிக்க வேண்டும்.

என் பதில் இன்று அல்லது நாளை வரும்.

ராஜா
24-11-2008, 11:30 AM
திரியை பார்வையிட்டு சிறப்பித்த 300 உறவுகட்கும் நெஞ்சார்ந்த நன்றி..!


"பொத்தனூர்"பிரபு, aam537, abulhassan248, ahamedsham, alaguraj, amvijay, anandanks, anil, aravindaan, aren, arsvasan16, arun, asok_03, avsd2002, azesjaffar, அகத்தியன், அக்னி, அதிரடி அரசன், அனாமிகா, அன்புரசிகன், அமரன், அய்யா, அரசன், அரவிந்த், அறிஞர், அழகிய மணவாளன், ஆதவா, ஆதி, ஆர்.ஈஸ்வரன், இக்ராம், இதயம், இனியவன், இராஜேஷ், இறைநேசன், இலக்கியன், இளசு, உதயசூரியன், எண்ணம், என்னவன் விஜய், எஸ்.எம். சுனைத் ஹஸனீ, ஐரேனிபுரம் பால்ராசய்யா, ஓவியன், ஓவியா, கஜினி, கனவுத்தோழன், கமலகண்ணன், கலைவேந்தன், காவியா, கிஷோர், சக்திவேல், சாம்பவி, சாராகுமார், சாலைஜெயராமன், சிறுபிள்ளை, சிவா.ஜி, சுகந்தப்ரீதன், சுஜா, சுடரவன், சுட்டிபையன், சுபன், சுவேதா, சூரியன், செந்தமிழரசி, செல்வா, ஜெகதீசன், ஜெயாஸ்தா, தங்கவேல், தமிழன், தமிழ் தொண்டன், தமிழ் ரசிகன், தமிழ்தாசன், தாமரை, திவ்யா, திவ்வியராஜ், தீபன், துளித்துளியா, தென்னவன், நம்பிகோபாலன், நாகரா, நுரையீரல், நேசம், பகுருதீன், பாபு, பாரதி, பார்த்திபன், பிச்சி, பிரசன்னா, பூந்தோட்டம், பென்ஸ், மகுடம் மோகன், மதி, மதுரகன், மதுரா, மதுரை மைந்தன், மனோஜ், மன்மதன், மயூ, மர்மயோகி, மறத்தமிழன், மலர், மலர்விழி, மாதவர், மீனாகுமார், மீரா, மொக்கச்சாமி, ரகுபதி, ரதி, ராஜா*, வசந்தகுமார், வசீகரன், விகடகவி, விஜி, விராடன், வெங்கட், வெண்தாமரை, ஷீ-நிசி, ஸ்ரீதர், balaa, balusmca, Basheera, batcha, btecharul, chandramohans, darshen, deenet, dhanussh, dmoorthy, drrslm, ezhumalai, gans5001, geminisenthil, guru, Hayah Roohi, Hoshee, ilango, jackie100, Jasithas, jey, jpl, k.kama98, kadalan, kalaiselvan21, kalyanii2002, kamal_aldeen, kampan, karamkumar, karikaalan, kathalan, kavinila, kavitha, Keelai Naadaan, kottalam, krishnanmca_mku, krk, kulirthazhal, latiff, lenram80, leomohan, logini, lolluvathiyar, madhan, majestykannan, malan, manchula, mania, manilovesu, manithamagan, Mano.G., Manuneedhi, Maruthu, Mathu, mathura, maxman, mayuran.maha, meera, mera, mgandhi, minmini, moorthy-kv, mukilan, MURALINITHISH, murthyd99, Muthuvijayan, namsec, Narathar, Naren, natarajprakash, novalia, paarthiban, paramsothy, parimaala, pathman, peribala, pgk53, pjsathish, pkarthi28, poo, poornima, pradeepkt, prady, praveen, PREMSURYA, psiyappan, pulikesi, puppy, puspaviji, rahumathullah123r34, rajatemp, rajdevanand, rajeshkrv, rajkulan, rama, ramanan4u, Ramki, Ranjitham, rekha, rithik, rlaks84, rocky, roomar, RRaja, sadagopan, saguni, sakthim, santhan, Saravanan.S, saravana_blr, sarcharan, sasi6666, sasikumar, SathyaThirunavukkarasu, selvamurali, senthil40in, senthilk, senthilkumarsb, shakthi, Shanmuhi, shibly591, shivasevagan, sifania, sivakumars, SivaS, slgirl, slwaran, snraman, sns, srimariselvam, srinikanna, sriram, subapriya jeyaprakash, sujeendran, surekka, suren@dc.ca, suwadish, svenkat, Syed, s_mohanraju, tamilambu, tamilkumar, testtest, thangasi, Thirumurugan, tkpraj, umesh, unas, uzair, vasanthan.chase, velanctakila, venkai, venkataramananj, vigneshpari, vimalag, vinodh, vinoth07, virumaandi, visu_raj87, viveka, vjkumar_72@yahoo.com, xathish

ராஜா
25-11-2008, 05:55 AM
ரொம்ப பிசியா இருக்கிறேன் மக்களே.

மன்ற மக்களும் ஆதவனும் என்னை மன்னிக்க வேண்டும்.

என் பதில் இன்று அல்லது நாளை வரும்.


இன்றும் போச்சு.. நாளையும் போச்சு..

தங்காச்சி பேச்சு.. டகால்டி ஆச்சு..!

(ஏதோ ஆட்டோ வர்றாப்பல தெரியுதே.. S <> S)

geminisenthil
26-11-2008, 12:14 PM
ஆகா, தலைவரே பென்ஸ். ஆ..பத்தை என்னிடம் கொடுக்க அன்பை வேறு துணைக்கு அழைக்கிறீர்களா!!அன்பால் அழைத்தால் மறுப்பேது.

தமிழை தமிழில் கற்கவேண்டும். ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் கற்கவேண்டும். இந்தக்கூற்று சரியா தவறா?: பதில் − சரி. ஒரு மொழியை அந்த மொழியில் கற்றுக்கொள்ளும்போது மட்டுமே அது முழுமைபெற முடியும். இத்துடன் இந்த கேள்விக்கு பதில் முடிந்துவிட்டதாக எண்ணாமல்,

எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எனது கல்லூரி நாட்களில் நான் நான்கு வார்த்தைகள் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்றால் நடுங்கி, உளறி, வேர்த்துக்கொட்டி சொல்லவந்ததை சொல்லாமல் குழப்பிவிடுவேன். இந்த தாழ்வு மனப்பான்மையால், ஆங்கிலம் பேசும் நபர்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, என்னைப் போல் உளறிக் கொட்டும் நபர்களாய் பார்த்து நட்பு வைத்துக்கொண்டேன். ஆங்கிலத்தின் மேல் எங்களுக்கு இருந்த கோபத்தை அதை பேசுபவர்களிடம் கிண்டலும் கேலியுமாய் வெளிப்படுத்தினோம். நாங்கள் நன்றாகப் படித்து மதிப்பெண்கள் வாங்கினாலும் ஆங்கிலத்தில் பேசமுடியவில்லை என்ற எண்ணம் எங்களுக்குள் இருந்தது. கல்லூரியில் நான் செய்த இந்த வேலை, வேலைக்கு சென்றவுடன் பப்பு வேகவில்லை. நான் நிறைய அவமானப்பட்டு விட வாய்ப்பிருந்தது. எனக்குள் தீப் பற்றிக் கொண்டது. நான் தனியாளாக்கப் பட்டுவிட்டதை உணர்ந்தேன். எனது தவறு புரிந்தது. எனினும் எனது வட்டத்தைப் பெரிதாக்கவில்லை. நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். சில புத்தகங்கள் ஒன்றுமே புரியாது "பெப்பே" என்று படித்துவிட்டு அந்த புத்தகத்தை எழுதியவரை திட்டிக்கொண்டிருப்பேன்.

அந்த நேரத்தில் எனது அலுவலகத்தில் learning centre specialtist வேலைக்கு சேர்ந்த பெண் எனக்குத் தோழியானார். நான் என்னை சுற்றி போட்டுக்கொண்டுள்ள வட்டத்தை நன்றாக புரிந்து கொண்டுவிட்டார். ஆங்கிலத்தில் அனைவருடனும் சரளமாக பேசும் அவர், என்னிடம் மட்டும் தமிழில் பேச ஆரம்பித்தார். நான் மெல்ல மெல்ல அவரைப் புரிந்து கொண்டு நம்மை இவர் நிச்சயம் கிண்டல் செய்யமாட்டார் என்று உறுதியானவுடன் எனது ஆங்கிலத்தில் பேசமுடியாத பிரச்சனையைக் கூறினேன்.

அவர் என்னை நன்றாக புரிந்துவிட்டிருந்தபடியால், சிரிக்கவும் இல்லை, சீரியஸாகவும் இல்லை, மிகச்சரளமாக, "பேச முடியாதது ஒரு பிரச்சனை இல்லை, பேச ஆரம்பிக்காததுதான் பிரச்சனை" என்றார்.

"நான் தவறாகப் பேசி யாரவது சிரித்துவிட்டால் என்னால் தாங்கமுடியாது" என்றேன்.

கடவுள்தான் அந்த மெச்சுரிட்டியை அவருக்கு கொடுத்திருக்கவேண்டும், மிக எளிதாகக் கூறினார், "உங்கள் தாய்மொழியில் பேசும்போது தவறு வந்து அதைப் பார்த்து யாராவது சிரித்தால்தான் நீங்கள் இந்த அளவுக்கு வருந்தவேண்டும். தாய் மொழியே கற்றுக்கொள்ளும் போது தவறு வந்து அதை சரிசெய்ததால்தானெ இப்போது சரளமாக பேசமுடிகிறது. தாய்மொழியில்லாமல் பிறகு எதில் பேசும்போதும் அதில் தவறு வந்தால் கவலை ஏன்?? நாம் கற்றுக் கொள்ளும்போது தவறு வருவது இயற்கைத்தானே? தவறு வரும்போது தான் அதை சரிசெய்யமுடியும்". பேசச்சொன்னார். நான் நிறைய மனத்தடங்களுக்கிடையில் பேசினேன். அவரும் பேசினார். ஒரு இடத்தில் நின்றுவிட்டேன். உடனே, நான், "வேண்டுமானால் பதிலை எழுதுகிறேன்" என்றேன்.

கொஞ்சம் கொஞ்சமாக எனது தாழ்வுமனப்பான்மை என்ற இருளுக்கு நடுவே மெல்லிய ஒளியை வீசினார். "நாம் பேசாமல் இருப்பதனால் நமக்கு ஆங்கிலம் பேசவரும் என்று யாரும் நினைத்துவிடமாட்டார்கள். உங்களால் நன்றாக இலக்கண சுத்தமாக ஆங்கிலத்தில் எழுதமுடிகிறது, ஆனல் பேசமுடியவில்லை, ஏனெனில் நீங்கள் ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் பழகவில்லை" என்றார்.

நான் அவள் பேசுவதில் ஒன்றிப்போனேன். "ஆம், நீங்கள் ஆங்கிலத்தில் பேசும் போது, பிறர் பேசுவதை தமிழில் மொழிபெயர்க்கிறீர்கள், பிறகு புரிந்து கொள்கிறீர்கள், பிறகு தமிழில் அதற்கு பதில் யோசித்து, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறீர்கள், அதை வெளியே பேசுகிறீர்கள். இதற்கு நிறைய நேரம் பிடிப்பதனால் நீங்கள் பேசுவதை விட எழுதுவதில் ஆர்வம் காட்டுகிறீர்கள். உங்கள் உள்ளும் என்னைவிட நல்ல ஆங்கிலம் இருக்கிறது, அதை பயன்படுத்துவதில்தான் குழப்பம். நாம் சரளமாக ஒரு மொழியில் பேசவேண்டுமெனில் அந்த மொழியிலேயே சிந்திக்கவேண்டும், அதன் வழியிலேயே பேசவேண்டும், இடையில் தாய்மொழிக்கு மாற்றி பேசும்போது நாம் வார்த்தைகள் இல்லாமல் தடுமாறி தோற்றதாய் உணருவோம். என்ன சொல்வது என்பதை ஆங்கிலத்திலேயே யோசித்து பேசுங்கள்" என்றார்.

பிறகென்ன, விக்ரமன் படம் மாதிரி சின்ன சின்னதாக பேச ஆரம்பித்து முழுமையாக பேச ஆரம்பித்தேன். அந்த இனிய கடுமையான நினைவுகளுடன், இந்த சமயத்தில் அந்த தோழிக்கு நன்றி சொல்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.






"எனது பேராசிரியர் காலம் சென்ற திரு.எம்.எஸ்.நாடார் அவர்கள் "ஆங்கிலத்திலேயே சிந்திக்க வேன்டும்" என்று பலமுறை கூறுவதுண்டு. இது எப்படி சாத்தியமாகும் என பலமுறை குழம்பியதுண்டு. பிறகு தான் எனக்கு புரிந்தது. தமிழ் மொழியை ஒழுங்காக கற்றுக்கொண்டாலே, பேசினாலே ஆங்கிலத்தில் மிக எளிதாக பேசமுடியும் என்று."

உங்களது அனுபவம் எனக்கு சிறந்த புத்தகம்...நன்றி நண்பரே!

ஓவியா
27-11-2008, 11:50 AM
:redface:
இன்றும் போச்சு.. நாளையும் போச்சு..

தங்காச்சி பேச்சு.. டகால்டி ஆச்சு..!

(ஏதோ ஆட்டோ வர்றாப்பல தெரியுதே.. S <> S)

அண்ணா மன்னிக்கவும், ஒரு சின்ன ட்ரேய்னிங் சென்று இன்றுதான் வந்தேன்.... .

இன்னும் விடை கொடுக்கவில்லையே என்று எனக்கு வெட்கமாகதான் இருக்கு இருப்பினும் என்ன செய்ய :redface::redface: அனேகமா இன்று வரலாம்.

மன்னிக்கவும் மக்களே..

ராஜா
02-12-2008, 05:13 AM
:redface:

அண்ணா மன்னிக்கவும், ஒரு சின்ன ட்ரேய்னிங் சென்று இன்றுதான் வந்தேன்.... .

இன்னும் விடை கொடுக்கவில்லையே என்று எனக்கு வெட்கமாகதான் இருக்கு இருப்பினும் என்ன செய்ய :redface::redface: அனேகமா இன்று வரலாம்.

மன்னிக்கவும் மக்களே..

Posted : 27-11-2008, 06:20 PM

:)

ராஜா
02-12-2008, 06:54 AM
அடுத்து ஆ! 10 ! ஐத் தொடர...

அன்புத்தம்பி மூர்த்தியை என்னவன் அமரின் இசைவோடு அழைக்கிறேன்..!

மதி
02-12-2008, 07:02 AM
வாங்க மூர்த்திண்ணே..வாங்க..

ரங்கராஜன்
02-12-2008, 07:51 AM
என்னை அழைத்த ராஜா அண்ணாவுக்கும், நண்பர் அமரன் அவர்களுக்கும் நன்றி
நான் இப்பொழுது வெளியூரில் இருப்பதால் எனக்கு இரண்டு நாள் அவகாசம் வேண்டும், தருவீர்களா?, டிசம்பர் 4 இரவு நான் கேள்விகளை கேட்டு விடுகிறேன். நன்றி

ராஜா
02-12-2008, 07:58 AM
அவ்வாறே ஆகட்டும் தம்பி..!

ரங்கராஜன்
02-12-2008, 10:15 AM
வணக்கம் நண்பர்களே
என்னிடம் ஆ 10 கேள்விகள் கேட்கும் பொறுப்பு தரப்பட்டுள்ளது, இரண்டு நாள் அவகாசம் கேட்டு இருந்தேன், ஆனால் அதனால் ராஜா அண்ணா ஆரம்பித்த திரி இரண்டு நாள் தடைப்பட கூடாது என்பதற்காக உடனே கேட்டு விடுகிறேன். எனக்கு சிலரிடம் தான் அறிமுகம் இருக்கு, அதனால் அந்த உரிமையில் தான் கேள்வி கேட்கிறேன். யாரும் தப்பாக நினைக்க வேண்டாம்.


திரு.அமரன்

எல்லொருக்கும் சொந்த மண் மீது, சொந்த ஊர் மீது ஒருவகை பாசம் இருக்கும், ஏன் காதல் என்று கூட சொல்லலாம். நான் சின்ன வயதில் இருந்து குடும்ப சூழ்நிலை காரணமாக பல ஊர்கள் மாறியதால் எனக்கு அந்த மாதிரி எந்த ஊர் மீதும், இடத்தின் மீதும் ஆர்வம் இல்லை. ஆனால் என் நண்பர்கள் அனைவரும் வருடம் ஒருமுறை திருவிழா அல்லது குலசாமி விழா என்று தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் பொழுது ஒருவித தாழ்வு மனப்பான்மை எனக்கு வரும். அந்த மாதிரி நீங்கள் உலகத்தில் சில நாடுகளுக்கு சென்று உள்ளீர்கள், நிறைய வசதிகளை அனுபவித்து இருப்பீர்கள். அப்படி இருக்கையில் ஏன்றாவது ஒரு நாள் உங்களின் தாயகம் பற்றிய நினைவு உங்களை வாட்டி இருக்கா?, உலகத்திலே நீங்கள் விரும்பும் இடம் எது?.


திரு.நாரதர்

உங்களை பற்றி நீங்கள் ஜீ-போனில் சொல்லியதும், வாழ்க்கையின் நிறை, குறைகளை மனநிறைவோடு ஏற்றுக்கு கொண்டு வெற்றி நடைப்போடும் ஒரு மனிதனாக தான் எனக்கு தோன்றுகிறது. வாழ்க்கையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள், மனநிறைவோடு வாழ்க்கையை கழிக்க எங்களை போன்ற இளைஞர்களுக்கு உங்களின் டீப்ஸ் என்னவோ?

திரு.மதி

உங்களின் அப்பாவின் எதிர்பார்ப்பு என்ற கட்டுரையை பார்த்தால், நீங்கள் படிப்பில் கொஞ்சம் கெட்டிக்காரர் தான் என்று புலப்படுகிறது?, படிப்பால் உயர்ந்த நீங்கள், உங்களின் படிப்பு திறமையால் கிடைத்த சிறந்த கெளரவம் என்று எதை கூறுவீர்கள்?, அதே போல படிப்பால் நீங்கள் இழந்தது என்ன (சிறுவயது சிலுமிஷங்கள்)?

ராஜா அண்ணா

அண்ணா உங்களின் வயது 49 என்று இருக்கு, பொதுவாக அந்த வயதில் எல்லோருக்கும் ஒரு முக்தி நிலையில் தான் இருப்பார்கள் அதாவது தேவையில்லமல் பேச மாட்டார்கள், அந்த வயதுக்கு உரிய ஈகோ இருக்கும். ஆனால் உங்களிடத்தில் இது எதுவுமே இல்லையே ஏன்?, உங்களின் உண்மையான வயது என்ன? எப்படி உங்களால் டக்கால்டி, சில்பான்ஸ், போன்ற வார்த்தைகளை அழகாக உரிய இடத்தில் பயண்படுத்த முடியுது. உடனுக்குடன் நெக்கல், கையெழுத்தில் கிண்டல் இதை அனைத்தையும் பார்த்தல் உங்களின் வயது மீது எனக்கு சந்தேகமாக இருக்கு?????????, நீங்கள் ஆரம்பிக்கும் திரிகள் மட்டும் எப்படி வெற்றி அடைகின்றன, உண்மையான பதில் தேவை அண்ணா?????????

திரு.சிவா

நீங்கள் துபாயில் இருக்கீங்கனு நினைக்கிறேன், அதுவும் தனியாக, உங்களின் குடும்பம் இங்கே இருக்குனு நினைக்கிறேன். தீபாவளியை போனில் கொண்டாடினீர்கள் என்று சொன்னீர்கள். என்றாவது ஒரு நாள் குழந்தைகளையும், அண்ணியையும் பார்க்கவேண்டும் என்று தோன்றும் பொழுது உங்களின் மனதில் என்ன தோன்றும்.
என்னடா இது வாழ்க்கை என்று வெறுக்குமா?, இல்லை குழந்தைகளுக்கு தானே இப்படி கஷ்டப்படுகிறோம் என்று சந்தோஷப்படுமா?. எப்படி நீங்கள் அந்த நினைவில் இருந்து மீண்டு வருவீர்கள்?.

?.சாம்பவி

உங்களின் ஸ்டேயிலே தவறு நடந்தால் மட்டும் திருத்துவது தான். நான் அவசரத்தில் செய்த தவறுகளைக் கூட மிக அழகாக எனக்கு சுட்டிக் காட்டுவீர்கள், அடுத்த நிமிடம் எனக்கு ஒரு private message வரும் நிறைய முறை வந்து இருக்கு, நானும் திருத்தி இருக்கேன். ஆனால் ஒரு முறைக்கூட என்னுடைய (யாருடைய) படைப்பையும் நீங்கள் பாராட்டியதில்லை எனக்கு இன்னும் அது வருத்தம் தான். ஏனென்றால் என்னை வழிநடத்தி பாராட்ட நம் மன்றத்தில் பல வாத்தியார்கள் இருக்காங்க, இருந்தாலும் நான் கொட்டி வாங்கிய வாத்தியாரிடம் பாராட்டு வாங்கினால் அதன் பெருமையே தனி தானே. நீங்கள் அந்த மாதிரி ஏன் எல்லாருடைய படைப்பையும் பிடித்து இருந்தால் பாராட்டக்கூடாது?

?.ஓவியா

நீங்கள் யாராவது வாயை திறந்தாலே வாயிலே போடுகிற டைப்பு, எதையும் நெத்தி பொட்டில் அடிப்பது போல சொல்வது உங்க ஸ்டைல். உங்களுக்கு பிடித்து இருந்தால் மனதார பாராட்டுறீங்க. எந்த வித ஐஸும் இல்லாமல் நீங்கள் பாராட்டும் பாணி எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு. எல்லாரும் ஒண்ணு சொல்றாங்களேனு நீங்க அதை அமோதிப்பதும் இல்லை, அதேபோல எல்லாரும் திட்டுறாங்களேன்னு நீங்க திட்டுவதும் இல்லை. அப்படி இருந்து உங்களை மன்றமே கொண்டாடுது (எனக்கு ஏன்னு தெரியலை), இந்த அதிரடினாலே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பெற்றது என்ன?, இழந்தது என்ன?

சிறுபிள்ளை

எனக்கு பின் மன்றத்தில் சேர்ந்து வளர்ச்சியில் எனக்கு உலைவைக்கும் உங்களை பார்த்தால் பொறாமையாக இருக்கு, எதையும் ஜாலியாக எடுத்துக் கொள்ளும் உங்களின் வாழ்க்கையில் உங்களை கோவப்படவைத்த சம்பவம் எது?

இறைநேசன்

மன்றத்தில் இருக்கும் மிகவும் மென்மையான மனிதர்களில் நீங்களும் ஒருவர், இறை நம்பிக்கை அதிகம் உள்ளவர் நீங்கள். மனிதர்களை பிரித்து ஒதுக்கிவைத்திருக்கும் இந்த மதத்தை பற்றிய உங்களின் கருத்து என்ன?, மதம் உண்மையில் மனிதர்களிடம் தேவையா?

திரு.தாமரை

வாழ்க்கையில் நீங்கள் பார்த்தவரை மனிதர்கள் எத்தனை வகையாக இருக்கிறார்கள்?, நீங்கள் வாழ்க்கையில் சந்தித்த வித்தியாசமான மனிதரை பற்றி சொல்லுங்கள்?

நம் மன்ற உறவுகளிடம் நான் உரிமையுடன் கேட்ட கேள்விகளை யாரும் தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள்....... நன்றி

ராஜா
02-12-2008, 10:58 AM
பாராட்டுதலுக்குரிய கேள்வித் தொகுப்பு..!

5 வயதுக் குழந்தையொன்று தன் தகப்பன் மடியில் அமர்ந்துகொண்டு, தனக்குத் தோன்றும் சந்தேகங்களை கேள்விகளாக்கி விடை தேடுவது போன்ற வெள்ளந்தியான சாயல் உன் கேள்வித்தொகுப்பில் தென்படுகிறது மூர்த்தி..!

எதிர்பார்ப்பைத் தூண்டும் இந்த எதார்த்தமான கேள்விகளுக்கு எல்லோரும் தவறாது விடையளித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..!

தாமரை
02-12-2008, 11:13 AM
விளையாடுறீங்களா? அஞ்சு வயசுப் புள்ள கேக்கிற கேள்வியா இது..

மூளையில் ஹிப்போகேம்பஸ்ல மனிதரில் குணங்கள் 768 அதை முதன் முதல் தொகுத்தவர் xxxxx அப்படின்னு விஜய் டி.வி. விளம்பரதாரர் நிகழ்ச்சி ஓடுது.

ம்ம்ம் பார்க்கலாம்.

சூரியன்
02-12-2008, 12:45 PM
நல்ல அருமையான் கேள்வி தொகுப்பு மூர்த்தி அண்ணா.
பொறுத்திருந்து அனைவரின் பதில்களையும் பார்ப்போம்.

மதி
02-12-2008, 01:20 PM
திரு.மதி

உங்களின் அப்பாவின் எதிர்பார்ப்பு என்ற கட்டுரையை பார்த்தால், நீங்கள் படிப்பில் கொஞ்சம் கெட்டிக்காரர் தான் என்று புலப்படுகிறது?, படிப்பால் உயர்ந்த நீங்கள், உங்களின் படிப்பு திறமையால் கிடைத்த சிறந்த கெளரவம் என்று எதை கூறுவீர்கள்?, அதே போல படிப்பால் நீங்கள் இழந்தது என்ன (சிறுவயது சிலுமிஷங்கள்)?



திருவுக்கும் மதிக்கும் இடையிலுள்ள புள்ளியை நீக்கினால் வருமே அவங்களைத் தான் இன்னும் தேடுறேன்.(தாமரை போதுமா..இங்கேயும் அந்த விஷயத்த இழுத்தாச்சு...:eek::D:eek::D)

திரு. மதின்னு மரியாதையுடன் கூப்பிட்டுட்டீங்க. கொஞ்சம் மனசு கஷ்டமாயிடுச்சு.
அப்புறம் உங்க கேள்வி என்னைய ரொம்பவும் சிந்திக்க வச்சுடுச்சு.

படிப்பா.. அப்படின்னா என்று கேட்கமாட்டேன். அதே சமயம் நீங்க சொன்ன "படிப்பால் உயர்ந்த" என்ற பதத்தை படிக்கும் போது ஏகப்பட்ட யோசனைகள். உங்க கேள்விக்கு போகும் முன் சின்ன ஃப்ளாஷ்பேக். நானும் கதை சொல்லணும்ல.

படிப்பில கெட்டிக்காரன்னு கிடையாது. ஆனா சின்னவயசுலேர்ந்து ஏதாச்சும் சொல்லிக் கொடுங்கன்னு அம்மாவ தொல்ல பண்ணுவேனாம். அப்புறம் பள்ளிக்கு சேர்ந்தவுடன் ஏனோ தெரியல "முதல் ரேங்க்" எடுக்கற கெட்ட பழக்கம் வந்துடுச்சு. இதனால் 'படி'ன்னு அப்பாக்கு சொல்ல முடியல. ஆனாலும் வீட்ல படிக்காம (எங்க படிப்பேன்னு கேட்காதீங்க) பையன் வெட்டியா இருக்கறானேன்னு ஹிந்தி க்ளாஸ், கராத்தே, ஓவியம், பரதநாட்டியம்னு அனுப்ப ஆரம்பிச்சார். ஹிஹி எல்லாத்துலேயும் அரைகுறை..போதும் சுய தம்பட்டம் அடிச்சது.

என்ன சொல்ல வந்தேன்னா.. உண்மைய சொல்லணும்னா நான் கொஞ்சம் நல்லா படிக்கற பையன் தான். (இல்லேன்னு சொன்னா மிதிக்க ஆளுங்க காத்திட்டு இருக்காங்க) ஆனா நான் படிக்கன்னு ஒதுக்குன நேரம் ரொம்ப ரொம்ப குறைவு. அதை வகுப்புல கேட்டத வச்சு எழுதற கேள்வி ஞானம் அது இதுன்னு எடுத்துக்கோங்க. ஆனா கல்லூரி இறுதி வரை அதிகமா கஷ்டப்படாம தான் வந்தேன். அதனால இழந்தேன்னு சொல்றதுக்கு பெரிதாய் ஒன்னுமில்லை. எல்லோருக்கும் இருக்கும் குறும்புத்தனங்கள், விளையாட்டுகள்..எல்லாம் உண்டு. இழந்தேன்னு சொன்னா.. (கோச்சுக்கக்கூடாது..:D:D) படின்னு அப்பாவும் சரி அம்மாவும் சரி சொன்னதில்ல. அதிக நேரம் படிக்கலேன்னாலும் எப்படியாச்சும் மார்க் வாங்கிடுவேன்னு அவங்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஒருவேளை படிப்பு சம்பந்தமா யாராச்சும் திட்டு வாங்கியிருந்தாங்கன்னா.. அந்த அனுபவத்தை நான் இழந்தேன்னு சொல்லலாம்..

இன்னொன்னு கண்டிப்பா சொல்லியே ஆகணும். இவ்ளோ நல்ல அப்பா அம்மா... இந்த வருஷம் மார்ச் மாசம் பாடாபடுத்திட்டாங்க. என் பணி சம்பந்தமா ஒரு சர்ட்டிஃபிகேஷன் பண்ணனும். அதுக்கு நாலு வருஷம் அனுபவம் வேணும். எட்டு வருஷம் பத்து வருஷம் அனுபவம் ஆனவங்க தான் அதை எழுதுவாங்க. நான் வீம்புக்கு எழுதலாம்னு பணம் கட்டியாச்சு. சம்பந்தப்பட்ட பரிட்சையில நான் எழுதினது தான் ரொம்ப கஷ்டமானது. ஆனா பணம் கட்டியாச்சு. இதுல என்னன்னா..இதுவரை செலவு பண்ணினது அப்பா பணம். இது நான் சம்பாதிக்கும் பணம். (தலைக்கனமில்ல...கொஞ்சம் பெருமை). ஆனா அப்பாக்கும் அம்மாக்கும் என்ன பயமோ... பரிட்சைக்கு ஒரு மாசம் முன்னாடியே தினமும் போன் பண்ணி இன்னிக்கு படிச்சியா..படிச்சியான்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. அதெல்லாம் ஜுஜூபின்னு வாய்சவடால் விட்டுட்டு கடைசி மூணு நாள் மட்டும் படிச்சிட்டு போய் எழுதினேன். ஒரு வருஷமா படிச்சு கோட்ட விட்டவங்க மத்தியில நான் பாஸ். பல நேரம் எனக்குள் தோன்றும் ஒரே ஒரு விஷயம். பொதுவில் சொல்லக்கூடாது..இருந்தாலும்..."நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்.."

படிப்புத் திறமையால் உங்களுக்குக் கிடைத்த கௌரவம். அது ஒரு சம்பவச்சங்கிலி.:D:D. (திரும்பக் கதையா...)
ஏற்கனவே அப்பாவின் எதிர்பார்ப்புலேயும் கடந்த கால நினைவுகள்லேயும் தொட்டிருப்பேன். கல்லூரி இறுதியாண்டு ஒருமாதிரி நான் எதிர்பார்த்திருந்த சாஃப்ட்வேர் கம்பெனியிலெல்லாம் கேம்பஸில் வேலைக் கிடைக்காமலிருக்க நொந்துப் போயிருந்தேன். நண்பர்களின் ப்ராஜக்ட் ஐடியா என் பேரில் அனுப்பப்பட்டாலும் அனுப்பப்பட்ட விண்ணப்பங்களில் என் பர்சண்டேஜ் அதிகமிருந்ததாலே ஐ.ஐ.எஸ்.சியில் ப்ராஜக்ட் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டேன். அங்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாலேயே நான் கனவிலும் நினைத்துப் பார்க்காத என் கம்பெனியால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இப்போது ஐந்து வருடம் தாண்டி வெற்றிகரமாக ஒரே கம்பெனியில் ஒரே டீமில் குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன். :D:D:D. அதனால இப்போ இருக்கற நிலைமைக்கு படிப்பே காரணம். இல்லையில்லை என் மார்க்கே காரணம். (படிப்புக்கும் மார்க்கும் வித்தியாசம் இருக்குல்ல)

நான் சாஃப்ட்வேருமில்லை ஹார்ட்வேருமில்லை...

பி.கு: சின்ன வயசுப் பையன் என்கிட்ட இப்படி கேட்டா நான் என்ன பண்ணுவேன். இந்த கேள்விய நீங்க வாழ்க்கையில நிறைய சாதிச்சவங்ககிட்டேல்ல கேட்டிருக்கணும்.. :traurig001::traurig001::traurig001:

ராஜா
02-12-2008, 01:31 PM
ம்ம்ம்ம்ம்ம்ம் சூப்பர்...!

இம்புட்டு கெட்டிக்காரப் புள்ளைங்கறது இன்னிக்குதாம்பா தெரிஞ்சது..! மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்.. நல்லாருப்பா தம்பி..!!

நல்ல கேள்வி கேட்ட இன்னொரு தம்பிக்கும் நன்றி..!

மதி
02-12-2008, 01:43 PM
கெட்டிக்காரனானு தெரியல.. இல்லாட்டி 5 வருஷமா ஒரே கம்பெனியில இருப்பேனா.. ஆனாலும் உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கு நன்றிண்ணா

அமரன்
02-12-2008, 03:59 PM
கேட்டதும் ஒப்புக்கொண்டார்..
சில நாட்கள் அவகாசம் கேட்டார்.
கொடுத்தது முடியமுன் கொடுத்து விட்டார்.
எனக்கு கொட்டும் கொடுத்தார்.

"ராஜா"ங்கம் இருநாள் தூங்குவதே அபத்தம். நீ என்னடான்னா பல சமயங்கள்ள பல நாள் தூங்க விடுறியா ந்னு ஓங்கி ஒரு குட்டு.

நல்ல கேள்விகள். அப்படின்னு பாராட்டாத்தான் ஆசை.. ஆனாலும் என்னை மாட்டினதால் சொல்ல மாட்டேன்..

ராஜா
02-12-2008, 04:25 PM
நல்ல கேள்விகள். அப்படின்னு பாராட்டாத்தான் ஆசை.. ஆனாலும் என்னை மாட்டினதால் சொல்ல மாட்டேன்..


அட சும்மா இருங்கப்பு.. ரொம்ப நாள் கழிச்சு ஒருத்தர் அமர் கடலில் முத்து எடுத்திருக்கார்ன்னு நாங்கள்ளாம் மகிழ்ச்சியா இருக்கோம்..!

வழக்கம்போல அசத்துங்க..!

geminisenthil
03-12-2008, 04:20 AM
கேள்வி கேட்பது சுலபம்....
பதில் சொவது மிக எளிது...
ஆக....
யாருடைய தலை உருள போகிறதோ....
மிக ஆர்வமாக இருக்கிறது....

சிறுபிள்ளை
03-12-2008, 04:48 AM
அடடே நம்மளையும் மதிச்சி ஒரு கேள்வி கேட்டுப்புட்டாரே இந்த மூர்த்தி..ம்ம்ம்..அதிலும் ரொம்ப சிரமமான கேள்வியா இருக்கே... நாமலே ஒரு ஜாலி டைப் ஆசாமி.... நாம கோபப்பட்ட விசயம் எதுவா இருக்கும்... இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சி சொல்லுறேன். உண்மையிலேயே நான் கோபப்பட்டதுன்னு பாத்தா ரொம்ப கம்மிதான்..அதனால யோசிக்க வேண்டியுள்ளது. ரொம்ப கம்மினா ஈசியா நாபகத்துக்கு வருமேன்னு நீங்க நினைக்கலாம் ஆனா மறப்போம் மன்னிப்போம் அப்படிங்கிறது என்னோட கொள்கை.. அதனாலதான் யோசிக்கிறேன். சீக்கிரமா விடையோடு வருகிறேன் மூர்த்தி.

சிறுபிள்ளை

தாமரை
03-12-2008, 05:10 AM
திரு.தாமரை

வாழ்க்கையில் நீங்கள் பார்த்தவரை மனிதர்கள் எத்தனை வகையாக இருக்கிறார்கள்?, நீங்கள் வாழ்க்கையில் சந்தித்த வித்தியாசமான மனிதரை பற்றி சொல்லுங்கள்?

நம் மன்ற உறவுகளிடம் நான் உரிமையுடன் கேட்ட கேள்விகளை யாரும் தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள்....... நன்றி

வாழ்க்கையில் நான் பார்த்த மனிதர்கள் .. ரொம்ப ஜோக்கடிக்கறீங்க மூர்த்தி. ஜெர்க் ஆகாம கேளுங்க. இந்தப் பிரிவினைகள் எல்லாம் தற்காலிகமான பிரிவினைகள். எதாவது ஒரு விஷயம் அல்லது கோணம் எடுத்துகிட்டா அதில தற்காலிகமா மனிதர்களை வசதிக்கேற்ப 2 லிருந்து 10, 15 வகையா பிரிக்கலாம். ஆனால் கோணங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.

அதை விடக் கொடுமை என்னன்னா, ஒரு மனிதனுக்குள்ளயே பல விதமான மனிதர்கள் இருக்காங்க.. அறிவாளியும் இருக்கான் அப்பாவியும் இருக்கான். தைரியசாலியும் இருக்கான். கோழையும் இருக்கான். அன்பானவனும் இருக்கான். அதிகாரமானவனும் இருக்கான். அதனால் மனிதனை வகைப்படுத்தாம இயல்புகளை, செயல்களை வகைப்படுத்தறது தான் முக்கியம்.


இந்த வித்தியாசங்கள் தான் ஒவ்வொருவருக்கும் தனித்துவத்தையும் முக்கியத்துவத்தையும் அளிக்கின்றது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் உயர்ந்தவரே. நாம் அனைவரும் கடவுளின் சிறப்புக் குழந்தைகள்.

இந்தச் சிறப்புகள் நாம் ஒருவர் மற்றவர் மீது மதிப்பும் அன்பும் கொள்வதற்கு காரணமாய் அமைகிறது. எனவே வேறுபட்டோரைக் காணும் பொழுது அன்பு, மரியாதை, மகிழ்ச்சி போன்றவற்றை வெளிப்படுத்தத் தயங்குதல் கூடாது.

வேறுபாடுகள் நம்மை மற்ற மனிதர்களிடம் இருந்து பிரித்து வைக்க அல்ல. அத்தனை வேறுபாடுகளையும் மனதால் களைந்தால் மட்டுமே உண்மை என்பது தன்னை வெளிப்படுத்தும்.

இது என் மகனுக்காக நான் எழுதியது. வகைகள் தற்காலைகம். நிரந்திரமில்லை. அதனால நிரந்தரமா இங்கச் சொல்ல மாட்டேன்.

மேலே இவ்வளவு சொல்லிட்டு கீழே நான் வித்தியாசமானவராக நினைப்பவர்னு கீழே யாரைச் சொல்ல.

ஆனாலும் நீங்க எல்லாம் வித்தியாசமானவர்னு நினைக்கிற ஒருத்தரா அவருக்கு அளிக்கப்பட்ட மூன்று கேள்விகளுக்கு ஒரே மூச்சில உண்மையான பதில்களை எழுத முயற்சி செய்யறேன்.


--------------------------------------------------------------------
1.மன்றத்தில் குவியும் படைப்புக்களைப் பற்றிய தங்கள் பொதுவான கருத்துக்கள் என்ன? மரபு சார்ந்த படைப்புக்கள் மன்றத்தில் குறைவு என தங்களுக்குத் தோன்றுகிறதா? அவ்வாறெனின் அத்தகைய படைப்புக்களை கொணர நீங்கள் தரும் ஆலோசனைகள் என்ன?

2. உங்கள் தமிழறிவு ஊற்றின் மூலம் எது?

3. உங்களின் ஸ்டேயிலே தவறு நடந்தால் மட்டும் திருத்துவது தான். நான் அவசரத்தில் செய்த தவறுகளைக் கூட மிக அழகாக எனக்கு சுட்டிக் காட்டுவீர்கள், அடுத்த நிமிடம் எனக்கு ஒரு private message வரும் நிறைய முறை வந்து இருக்கு, நானும் திருத்தி இருக்கேன். ஆனால் ஒரு முறைக்கூட என்னுடைய (யாருடைய) படைப்பையும் நீங்கள் பாராட்டியதில்லை எனக்கு இன்னும் அது வருத்தம் தான். ஏனென்றால் என்னை வழிநடத்தி பாராட்ட நம் மன்றத்தில் பல வாத்தியார்கள் இருக்காங்க, இருந்தாலும் நான் கொட்டி வாங்கிய வாத்தியாரிடம் பாராட்டு வாங்கினால் அதன் பெருமையே தனி தானே. நீங்கள் அந்த மாதிரி ஏன் எல்லாருடைய படைப்பையும் பிடித்து இருந்தால் பாராட்டக்கூடாது?[/COLOR]



குவியும் படைப்புகள் எல்லாவற்றையும் பற்றிக் கருத்துக்கள் இல்லை.

இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை.

இருப்பதில் இருப்பதை பிரித்துப் பார்க்கிறேன். நல்லதில் நெருடலை சுட்டுகிறேன். மற்றதை அப்படியே விடுகிறேன்.

என்ன சொல்ல வருகிறது என வாசிப்பதில் மனமில்லை.

என்ன சொல்லியாக வேண்டும் என யோசிப்பதில் மனமில்லை.

குவிகிறது பலநூறு, அதில் கவர்கிறது சிறுகூறு,. மரபோ புதுசோ கட்டுகளில் இல்லை வலிமை. சொல்லும் பொருளும் பிணைந்திருகிய கலவை மட்டும் போதும். உலக இயல்பும் இதுதானே.

நான் படித்துக் கொண்டிருக்கிறேன், இன்னும் கற்றுக் கொண்டு இருக்கிறேன், எத்தனையெத்தனை கோணங்கள், பாடங்கள் எங்கெங்கெங்கு இருக்கிறதோ தேடிக் கொண்டிருக்கிறேன்.

யாரெல்லாம் என்னைச் சிந்திக்கத் தூண்டுகின்றார்களோ அவர்களிடமிருந்தெல்லாம் கற்கிறேன். யாரெல்லாம் என் சிந்தனைக்கு சவால் விடுகின்றாரோ அவர்களிடமிருந்தெல்லாம் கற்கிறேன். வழமையில் வாழ்க்கை வலிக்கிறது. புதுமையில் மனம் லயிக்கிறது.

வருவதெல்லாம் வரட்டும். தடைகளில்லை, என் வார்த்தைகள் போலியாய் வருவதில்லை. தட்டிக் கொடுக்கம் பெரியவர் மத்தியில் சந்தேகம் கேட்கும் குழந்தை நான்.. குழந்தையிடம் பாராட்டை எதிர்பார்க்கலாமா?

ஒவ்வொருவரிடமும் நான் வியப்பதைக் கற்கிறேன்.. கற்பதை வியக்கிறேன்,
இன்னும் எட்டவேண்டிய தூரம் வெகுதூரம்.

இயல்பாய் என்னை இருக்க விடுங்கள். கேள்விகள் வேண்டாம் ஆய்வுகள் வேண்டாம். சின்னதாய் வாழ்கிறேன், சின்னவை செய்கிறேன், சின்னவள் தானே.. சகித்து விடுங்கள்.

ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க வேண்டுமா? இது என்ன கொடுமை. இதில் என்ன இருக்கிறது புதுமை.

என்ன புதுசா இருக்கு? ஏக்கத்துடன் சுற்றும் குழந்தையை பல்லாக்கில் ஏற்றி பாதபூஜையா?

தட்டிக் கொடுப்பது பாராட்டுவது எல்லாம் மிகப் பெரிய கலைகள். நான் பெரியவை காணும் பொழுது வியக்க மட்டுமே செய்கிறேன்.

சின்னவள் நான். கற்க வேண்டியது கோடி,.. கற்றுக் கொடுங்கள்.

------------------------------------------------------------------

ம்ம்ம் - இவங்க ஒரு வித்தியாசமானவர்தானே. உங்களுக்கு இருக்கலாம்

எனக்கு?

இல்லைங்க....

(மாமனாரே என்று அன்புடன் அழைக்கும் மருமகள் கேள்விக்கு பதில் எழுதச் சங்கடப்படுவார் எனத் தெரியும். விவாதங்கள், தனிமனித ஆசாபாசங்கள் இதெல்லாம் அவருக்குச் சங்கடம் ஏற்படுத்தும். அவர் பதில் எழுதினால் என்ன எண்ணங்கள் அதில் வெளிப்படும் என்பதை என் நடையில் எழுதி இருக்கிறேன். அவர் நடையில் எழுதினால் --:traurig001::traurig001: :traurig001:

அவர் இதற்காக கோபப்படமாட்டார் எனத் திடமாக நம்புகிறேன். மூர்த்தி நீங்களும் கோவப்படாதீங்க. நான் அதிகப்பிரசங்கித்தனம் பண்ணறேன்னு. :D:D:D )

அமரன்
03-12-2008, 07:46 AM
திரு.அமரன்ஏன்றாவது ஒரு நாள் உங்களின் தாயகம் பற்றிய நினைவு உங்களை வாட்டி இருக்கா?, உலகத்திலே நீங்கள் விரும்பும் இடம் எது?

என்னையும் மிதிச்சு மன்னிச்சுக்கோங்க மதிச்சு (திரு ந்னு அடைமொழி கொடுத்திருக்கீங்களே:lachen001:) கேள்வியைக் கேட்டத்துக்கு மிக்க நன்றி மூர்த்தி. உங்கள் கை முகூர்த்தமோ என்னமோ தெரியவில்லை. கேள்வியைக் கேட்டத்திலிருந்து திரு திரு என்ற முழிப்பும் தாயக நினைவுகளின் வாட்டலும் அதிகமாயிட்டுது. சரி.. இப்போ உங்கள் முகத்துக்கு முன்னாடி வளையம் வளையமா போட்டுக்கோங்கோங்க. பின்ன*ணியில் டொய்ங்..டொய்ங் ந்னு இசை சேர்த்துக்கோங்க..

யாழ்ப்பாணத்தில் சண்டை என்றால் முதலடி எனது பூர்வீக ஊருக்குத்தான். பெட்டி படுக்கையோடு ஓடுவதும் எங்களூராந்தான். அதிலும் எங்களைப் போன்ற பிரதான வீதியை அண்டிய வாசிகள் முதன்மை ஓட்டக்காரர்கள். ஆறு வயது வரை அந்த ஊருல சொந்த வீட்ல சந்தோசமான வாழ்க்கை. தனிப்பிள்ளை நான் (இந்த நேரத்தில் நான் எழுதிய கவிதை நினைவுக்கு வந்து குழப்பினால் தொடருங்கள் தெளியும்). ஆனால் எங்கள் வீட்டில் பத்துப் பேர். அதை விட எங்கள் சொந்தத்துக்கே நான் செல்லப்பிள்ளை. என்னைப் பெயர் சொல்லி அழைத்தவர்கள் மிக மிகக் குறைவு. ஏழு வயதுக்குப் பிறகு ஓடுவதும் திரும்புவதுமாய் ஒரு வாழ்க்கை. 1990 களில் ஓடியது ஊரை விட்டு ஓடிய நிரந்த ஓட்டம் ஆனது.

இன்னொரு ஊர். வாடகை வீடு. முற்றிலும் புதிய முகங்கள். அகதி என்ற இழிவு விளிப்பு வேறு. அந்த அகதி என்ற சொல் இழுத்த ஆழக் கோட்டில்தான் முதன் முதலாக வலியை உணர்ந்தேன். அங்கே சில காலம். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள். அந்த ஊர்க்காரருக்கு எங்கள் மேல் பிடிப்பு வர உதவியது அம்மா. நியாயவாதி.. நான் தப்புச் செய்தாலும் என்னைக் காட்டிக் கொடுப்பதோடு இவந்தான் செய்தான் என்று சாட்சி சொல்லி தண்டனை வாங்கித் தரும் அளவுக்கு அறத்தில் சிறந்தவர். 1996 இல் அங்கிருந்தும் ஓட்டம். தென்மராட்சி எனப்படும் பகுதியில் தற்காலிக வாழ்க்கை. அங்கே மீண்டும் பூர்வீக ஊராட்கள். அவர்களுடன் கூடிக் களித்து நாட்கள் கழிந்தன. அங்கிருந்து அதே பட்டாளத்துடன் வன்னிக் காட்டுக்கு.

அங்கே காட்டு மரங்களுடன் நானும். வீட்டை விட்டு முதன் முதலாக வெளியே தங்கினேன். சண்டித்தனம் செய்வது. அது இது ந்னு காளையாட்டம் திமிலுடன் திரிந்த காலம். வீட்லயும் கை கழுவி விட்டுட்டாங்க. பள்ளியில ஏன்னே கேட்குறதில்லை. ஏதோ ஓரளவுக்கு படிப்பு வருங்கிறதால படிச்சிப் புழைக்கட்டும்னு விட்டுப் பிடிச்சாங்க. வீட்ல சமயம் பார்த்துக் காத்திருந்தாங்க போலும். நடுநிலை தேர்வு முடிவுகள் சாதகாம வர மேல்நிலைக் கல்விக்காக கொழுப்புக்கு என்னைப் பார்ஷல் பண்ணிட்டாங்க.

அங்கே மட்டும் என்னவாம். பள்ளியில் வாலாட்ட இயலவில்லை. இங்குதாங்க.. பல முதல்கள். முதல் தொடர்வண்டிப் பிரயாணம்.. முதலாவது திரை அரங்கு அனுபவம். முதல் வானூர்திப் பயணம்.......... பள்ளி தந்த தைரியத்தில் எந்தப் பயமுமில்லாமல் பாதுகாப்பு கெடுபிடிகளுக்குள் அகப்படாமல் பல்லின சூழலில் வாழ்க்கை. நட்பு வட்டாரம் முதன்மை பெற்று குடும்பம் பின்தள்ளப்பட்ட நிலை. கட்டறுத்த காளை ஆட்டம். என்னை விடப் பதினான்கு வயது இளையவளான தங்கை (சித்தி பொண்ணு) எனக்குக் கடிவாளம். தலையில் ஏறி இருந்து ஆட்டிபடைக்கும் அளவுக்கு ஆதிக்கம். உயர்தர தேர்வில் தேர்ச்சி.. கேம்பஸ் படிப்பை குறையில் நிறுத்த வேண்டிய நிலை. வெளிநாட்டுக்கு போக எடுத்த முடிவு. ஸ்டூடண் வீசா கிடைக்கல. அக்னி எழுதிய பசுமை நோக்கிய பயணங்களை தேர்தெடுத்து அதுக்காகக் காத்திருந்த நேரத்தில் கணினிப் படிப்பு. திடீரென் ஒரு நாள் பிளைட்டேறி அடுத்த நாள் பனிப்புலத்தில் கால் பதித்து...

ஒரு வாரத்தில் கடுமையான காய்ச்சல். மருத்துவரிடம் போகலாம் என்றால் மொழிப் பிரச்சினை. ஆங்கிலம் தெரிந்திருந்தும் உரையாடுவதில் மருத்துவர் காட்டிய கஞ்சத்தனம் தாயக நினைவுகள் என்னை வாட்டி எடுக்க வழி சமைத்தது. அதன் பிறகு இப்போ. உங்கள் கேள்வி. இதுவரை உனக்கு அந்த நினைப்பே இல்லையா என்று கேட்கலாம். நான்கு சுவர்கள்.. ஒரு சில மனிதர்கள் என வாழ்க்கை கடந்தாலும் அந்த நினைப்பு வரவில்லை. பல சுமைகள் என் தலையில் உள்ளதால், முழுநேரமும் அதிலே கவனம் செலுத்துவதால், மன்றம் மீது ஏற்பட்ட பற்றால் அவை என்னுள் தொலைந்து போய்விட்டன போலும். இந்தக் கேள்வி ஏன் அவற்றை தேட வைத்தது? அடுத்து நிகழப் போகும் நிகழ்வு காரணமாக இருக்கலாம்.

பிடித்த இடம் என்பதை எதை வைத்து வரையறுப்பது என்று தெரியவில்லை. நான் வசித்த இடம் எல்லாமே எனக்குப் பிடிக்கும். ஆனால் அழகு, நான் விரும்பும் சூழல், பூர்வீக ஊர்வாழ்க்கையை மீட்டெடுத்து தந்த ஜேர்மனியும் நான் அடிக்கடி தொலைபேசும் கொழும்பும் இப்போதைக்கு எனக்குப் பிடித்தமானது. நாளை நிச்சயம் மாறும். எதிர்பார்த்த மாதிரி பதில் இல்லைன்னா மன்னிச்சுக்கோங்க. வாய்ப்புக்கு நன்றி.

சிறுபிள்ளை
03-12-2008, 07:54 AM
சிறுபிள்ளை[/B]

எனக்கு பின் மன்றத்தில் சேர்ந்து வளர்ச்சியில் எனக்கு உலைவைக்கும் உங்களை பார்த்தால் பொறாமையாக இருக்கு, எதையும் ஜாலியாக எடுத்துக் கொள்ளும் உங்களின் வாழ்க்கையில் உங்களை கோவப்படவைத்த சம்பவம் எது?



கோபப்பட வைத்த விசயம் என்று சொல்வதைவிட என்னை மிகவும் ஆதங்கப்பட வைத்த விசயம் என்று சொல்லலாம்.

ஒரு கிராமம். அங்கே மூன்று நண்பர்கள் வசித்து வந்தனர். மூன்று பேருமே எழைக்குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஒருவன் நல்ல படிப்பாளி ஒருவன் நல்ல உழைப்பாளி மற்றொருவன் திறமைசாலி(இப்போது இந்த வார்த்தை அவனுக்கு பொருந்தாது என்றே நினைக்கிறேன்) படிப்பு வந்ததால் நன்றாக படித்தான் படிப்பாளி. இவனுக்கு கஷடம் என்றால் என்னவென்று நன்றாக தெரிந்தவன். அனுபவித்தவன். அடுத்தவன் படிப்பு வராததால் உழைப்பின் இறங்கிவிட்டான். இன்னொருவன் அப்படியும் இப்படியுமாய் இருந்தான்.

படிப்பாளி கடவுளின் அருளால் ஒரு நல்ல நிலைக்கு வந்து தன் நண்பர்களையும் நல்ல நிலைக்கு வரவழைக்க நினைத்து இருவரிடமும் தொழில் தொடங்க கூறுகிறான்.
அப்படி ஆரம்பித்த தொழிலுக்கு மூன்றில் இரண்டு பங்க பணத்தை தானே போட்டு அவர்களை தொழில் நடத்த சொல்லிவிட்டு வேறு ஊருக்கு வேலை விசயமாக சென்றுவிடுகிறான்.

தொழிலை சில நாள் பொருப்பாக நடத்திய நண்பர்களை முழுதும் நம்பிய அவனுடைய நண்பன் மேற்கொண்டு இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்து இன்னும் சிறப்பாக நடத்த வழிசொல்கிறான். இதில் அவன் எந்த பங்கும் கேக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் நல்ல நிலைக்கு வந்தால் போதும் என்பது அவனுடைய நோக்கம்.

இப்படி இறுக்க இரண்டு ஆண்டுகள் அதைப்பற்றி கேக்காமல் இருந்துவிட்டான் அவனது நண்பன். அவன் வெளியூரில் இருப்பதும் ஒரு காரணம். திடிரென்று ஒரு நாள் இருவரிடமும் கணக்கு கேட்கும்போது அவர்களின் பதிலால் நொடுந்து போகிறான் மனம் ஒடிந்து போகிறான்.

ஆமாம் அவர்கள் இருவரும் சொன்னது தொழில் நஷ்டம் அடைந்துவிட்டது என்ற வாசகம்தான். பின்னர் கலந்தாலோசிக்கும்போது தெரிந்த விசயம்...
தொழிலில் வந்த லாபத்தை அவ்வப்போது அவரவர் சொந்த காரியத்திற்காக பயன்படுத்திக்கொண்டதுதான் அவர்களை நஷ்டமடைய வைத்துள்ளது என்பதை மூன்றாவது நண்பன் அதாவது பணம் கொடுத்து உதவிய நண்பன் புரிந்துகொள்கிறான். அவர்களும் கஷ்டத்தை உணர்ந்தவர்கள் தானே அதனால் அவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள் என்று நினைத்தது எவ்வளவு பெரிய தப்பென்று அப்போதுதான் அந்த படிப்பாளி நண்பனுக்கு உரைத்தது.

இருவரும் மாற்றி மாற்றி குறை கூறுகிறார்களேதவிர வாழ்க்கையில் முன்னேர வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இப்படி ஆக்கிவிட்டார்களே என்ற எண்ணம் அந்த படிப்பாளையை மிகவும் பாதித்தது.

ஒருவனாவது அவனுடைய சொந்த காரியத்திற்காக எடுத்துக்கொண்டுள்ளான். அடுத்தவன் அவனது சொந்தங்களூக்காக (இவன் தொழில் செய்யவும் சரி வேறு எந்த விதத்திலும் உதவாதவர்களுக்காக) பணத்தை செலவு செய்துள்ளான்.

இதனால் அவர்களுக்கு மேற்கொண்டு உதவலாமா வேண்டாமா என்று மனம் குழம்பி..தற்போதைக்கு குளம் வற்றட்டும் என்று விட்டு விட்டு வாழ்கிறான் அந்த படிப்பாளி..,

அந்த படிப்பாளி வேறு யாருமில்லை இந்த சிறுபிள்ளைதான்.

இந்த விசயம்தான் என்னை கோபத்தில் ஆழ்த்திய நிகழ்ச்சி என்று சொல்லலாம்.

நன்றி

தாமரை
03-12-2008, 07:57 AM
ம்ம் என் கடலோடி நண்பன் கணேசனை நினைவு படுத்துகிறது சிறுபிள்ளை உங்க அனுபவம்.

இறைநேசன்
03-12-2008, 08:02 AM
இறைநேசன்

[COLOR="blue"]மன்றத்தில் இருக்கும் மிகவும் மென்மையான மனிதர்களில் நீங்களும் ஒருவர், இறை நம்பிக்கை அதிகம் உள்ளவர் நீங்கள். மனிதர்களை பிரித்து ஒதுக்கிவைத்திருக்கும் இந்த மதத்தை பற்றிய உங்களின் கருத்து என்ன?, மதம் உண்மையில் மனிதர்களிடம் தேவையா?

என்னை தேர்ந்தெடுத்து வினா எழுப்பிய நண்பார் மூர்த்தி அவர்களுக்கு நன்றி! அறிய பல பதில்களை அள்ளித்தரும் அனைத்து அன்பர்களுக்கும் நன்றி!

மனிதனை மதம்பிடிக்க வைக்கும் மதங்களின் மேல் விருப்பைவிட வெறுப்பே நிறைந்திருப்பதால் அதைப்பற்றி அதிகம் எழுத அடியேன் விரும்பவில்லை சுருங்கச்சொல்லி முடிக்கிறேன்.

மதம் என்பது இறைவனால் உருவானது அல்ல, அது மனிதர்களால் பின்னப்பட்ட மாயவலை என்றே நான் கருதுகிறேன்! எந்தமதமும் அதைபின்பற்றும் எல்லோரையும் ஏகஇறைவனிடம் கொண்டு சேர்ப்பதில்லை! இறைவன் மதங்களுக்கு அப்பாற்ப்பட்ட மகத்தானவர்!

எல்லா மதங்களின் அடிப்படை கோட்பாடும் "அன்பே பெரிது" என்ற்றியன்புகின்ற போதிலும், அவற்றுள் சடங்கு சம்பிரதாயங்களும் மனித கருத்துக்களுமே மலிந்து கிடக்கின்றன எனவே மகத்தானத்தை விட்டுவிட்டு மாயமானத்தை பின்தொடர மதம் மனிதர்களை திசைதிருப்புகிறது.

சென்னையில் இருந்து மதுரை போகும் போது "அம்புக்குறியோடு மதுரை 450KM" என்று எழுதப்பட்டுள்ள வழிகாட்டிகளை வழிகளில் காணலாம். அதுபோல் இறைவனை அடைய வழியை காட்டும் ஒரு வழிகாட்டியாகவே மதங்களை நான் கருதுகிறேன்! அவை காட்டும் வழியில் அதிவேகமாக முன்னேறுவதை விட்டுவிட்டு அந்த வழி காட்டியை சுற்றி சுற்றி வருவதாலோ அல்லது உன்னுடையது என்னுடையது என்று உரிமைகொண்டடுவதலோ அல்லது அதை
பிடுங்கி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வதாலோ இலக்கை ஒருபோதும் அடையமுடியாது!

இறைவனை அறியவேண்டும் என்ற தணியாத தாகம் உள்ளவருக்கு மதம் என்ற வழிகாட்டியை தேட தேவையே இல்லை! தன்னை தாகத்துடன் தேடுபவர்களுக்கு தானாகேவே வந்து தரிசனம்தரும் தன்மை உள்ளவர் இறைவன் என்பது என் அனுபவ கருத்து!
நன்றி
இறைநேசன்

ராஜா
03-12-2008, 08:07 AM
அன்பின் அமர்..!

என் ஊரில் அடித்த சிறு புயலுக்கே எங்கள் வாழ்க்கை மிகப் பாதிப்புற்றது. ஆனால் வாழ்க்கை முழுதும் புயற்காற்றுகளை எதிர்கொண்டிருக்கும் நீங்கள்... அதிலும் சிறுவயதில் துயர்கள் இல்லா செல்லப்பிள்ளையாகவே வளர்ந்த நீங்கள்.. கண்காணாச் சீமையில் கடமைகளை சரிவர நிறைவேற்றிக்கொண்டும், மன்றச் சேவையிலும் முனைப்புடன் பணியாற்றிக்கொண்டும் இருப்பது என்னைப்பொருத்தவரை செயற்கரிய செயல்தான்..!

நீங்கள் என் இளவல் என்பதில் இன்றுமுதல் இன்னும் அதிகப் பெருமை எனக்கு..!

சிறுபிள்ளை
03-12-2008, 08:11 AM
ம்ம் என் கடலோடி நண்பன் கணேசனை நினைவு படுத்துகிறது சிறுபிள்ளை உங்க அனுபவம்.

என்ன செய்வது நண்பரே.. நாம் அடித்தளமாக இருக்க நினைத்தாலும் அவர்கள் கட்டிடம் பாதி எழுப்பி மீண்டும் எழுப்பிய கட்டிடத்தை இடித்துவிடுகிறார்கள். என்ன செய்வது.

அதிர்ஷ்டம் கதவை தட்டினால் திறக்காமல் இருப்பது அவனது தலைவிதி என்பதா அல்லது அவனது முயலாமை என்று சொல்வதா?

ராஜா
03-12-2008, 08:12 AM
அன்பின் சிறுபிள்ளை..!

எத்தகை படிப்பு இருந்தாலும் அவை பட்டறிவு எனும் பாடத்துக்கு அடுத்ததுதான் என்று தெளிவாக விளக்கியது உங்கள் அனுபவம்.

உதவிக்கரங்களைக்கூட ஒடிக்கும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்..!

ராஜா
03-12-2008, 08:19 AM
அன்பின் இறைநேசன்..!

மதத்தை இறைவனை அடையும் வழிகாட்டி என்ற அளவில் மட்டும் கொள்ளவேண்டும். அதை வாழ்க்கைமுறையாகக் கொண்டு பேதங்களை வளர்க்கலாகாது என்னும் அரிய கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள்..!

இக்கருத்தை எல்லாருமே ஏற்றுக்கொண்டால், இவ்வுலகம் எவ்வளவு இனிமையாக இருக்கும்..!

சிறுபிள்ளை
03-12-2008, 08:28 AM
அன்பின் சிறுபிள்ளை..!

எத்தகை படிப்பு இருந்தாலும் அவை பட்டறிவு எனும் பாடத்துக்கு அடுத்ததுதான் என்று தெளிவாக விளக்கியது உங்கள் அனுபவம்.

உதவிக்கரங்களைக்கூட ஒடிக்கும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்..!

வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவுகளும் செயல்களும் நமக்கு புதுப்புது பாடங்களை கற்றுத்தந்துகொண்டேதானே இருக்கும். எல்லாம் நன்மைக்கே என்ற நினைப்பு என்றும் என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றிருக்கும்.

இறைனேசரின் பதில் மிகவும் ஆழமானது. வணங்குகிறேன்.

சிறுபிள்ளை
03-12-2008, 08:32 AM
அமரனின் பதில் மிகவும் அனுபவம் வாய்ந்த பதிலாக உள்ளது. உங்களின் இந்த பசுமை கால நினைவுகளை பகிர்ந்தமைக்கு என் நன்றிகள். நானும் அறிந்துள்ளேன் ஜெர்மனியில் இன்றும் இலங்கை அகதிகள் மகிழ்வுடம் தனக்கென்றுள்ள இடத்தில் அன்பாக ஆர்ப்பாட்டமில்லாமல் வாழ்ந்து வருகிறார்கள்.

மீண்டும் நன்றி அமரன்

இறைநேசன்
03-12-2008, 08:34 AM
கோபப்பட வைத்த விசயம் என்று சொல்வதைவிட என்னை மிகவும் ஆதங்கப்பட வைத்த விசயம் என்று சொல்லலாம். ஒரு கிராமம். அங்கே மூன்று நண்பர்கள் வசித்து வந்தனர். மூன்று பேருமே எழைக்குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

நல்ல அருமையான சம்பவம் சொல்லியுள்ள சிறுபிள்ளை அவர்களுக்கு நன்றி! உங்களை நோகவைத்த சம்பவமாக அது இருந்தாலும் உங்கள் உள்ளம் உயர்ந்ததே!

உங்கள் கதைபோல மூன்று நண்பர்கள்கொண்ட எங்கள் கதையும் ஒன்றும் உண்டு! ஆனால் ஒரு சிறு வேறுபாடு. நன்றாக படித்த நண்பன் அமெரிக்காவில் போய் வீடுவாங்கி அமரிக்கையாய் செட்டிலாகி, அடுத்த இரண்டு நண்பர்களையும் அறவே கண்டுகொள்ளவில்லை அவ்வளவுதான்!

எங்கிருந்தாலும் வாழ்க!

சிறுபிள்ளை
03-12-2008, 08:39 AM
நல்ல அருமையான சம்பவம் சொல்லியுள்ள சிறுபிள்ளை அவர்களுக்கு நன்றி! உங்களை நோகவைத்த சம்பவமாக அது இருந்தாலும் உங்கள் உள்ளம் உயர்ந்ததே!

உங்கள் கதைபோல மூன்று நண்பர்கள்கொண்ட எங்கள் கதையும் ஒன்றும் உண்டு! ஆனால் ஒரு சிறு வேறுபாடு. நன்றாக படித்த நண்பன் அமெரிக்காவில் போய் வீடுவாங்கி அமரிக்கையாய் செட்டிலாகி, அடுத்த இரண்டு நண்பர்களையும் அறவே கண்டுகொள்ளவில்லை அவ்வளவுதான்!

எங்கிருந்தாலும் வாழ்க!

மறந்துவிடுபவர்களை நான் ஒரு நாளும் மறப்பதில்லை அப்படி மறந்துவிட்டவர்களை நான் ஒரு நாளும் சீண்டுவதுமில்லை.

நான் தற்போது என் நண்பர்களை அப்படியே விட்டுள்ளேன் அவ்வளவே.. ஆனால் கைவிட வில்லை அந்த சம்பவத்திற்காக நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன் என்பதுகூட அவர்களுக்கு தெரியாது..ஆனால் என் மனம் நோகடைந்துவிட்டது என்று அவர்கள் வருந்திய அந்னேரமே அவர்கள் மன்னிக்கப்பட்டுவிட்டார்கள். மீண்டும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பேன் ஆனால் இப்போதல்ல... நேரம் வரும்போது.....அது நடக்கும்.

அய்யா
03-12-2008, 10:38 AM
அமரன் அண்ணா உள்ளிட்ட அனைவரது பதில்களுமே சிறப்பாகவுள்ளன.

பாராட்டுக்கள் நண்பர்களே.

ராஜா
04-12-2008, 05:11 AM
ராஜா அண்ணா

அண்ணா உங்களின் வயது 49 என்று இருக்கு, பொதுவாக அந்த வயதில் எல்லோருக்கும் ஒரு முக்தி நிலையில் தான் இருப்பார்கள் அதாவது தேவையில்லமல் பேச மாட்டார்கள், அந்த வயதுக்கு உரிய ஈகோ இருக்கும். ஆனால் உங்களிடத்தில் இது எதுவுமே இல்லையே ஏன்?,




ஹி..ஹி... அப்போ தேவையில்லாம நிறைய பேசறேன்ன்னு சொல்றே.. ! :)

என் வயதுக்கேற்றவகையில் நான் இல்லாதிருப்பதாக ஒரு தோற்றம் இருக்குமானால் அதற்கு முழுக்காரணம் என் குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கைச்ச்சூழல்தான்.

எனது யாஹூ ப்ரொஃபைலில் கீழ்க்கண்ட வாசகங்கள் இருக்கும்..

"என் பக்தியை இறைவன் அறிவான்..
என் நேர்மையை முதலாளி அறிவார்..
என் மனதை ஊழியர்கள் அறிவர்..
என் காதலை மனைவி அறிவாள்..
குடும்பச் சூழ்நிலையை குழந்தைகள் அறிவர்..
இதைவிடச் சொர்க்கம் வேறென்ன வேண்டும்..?"

இயல்பில் நான் எவ்விதத் திறமையும் அற்றவன்.. உழைப்பும் அதிகமென்று சொல்ல இயலாது. இருப்பினும் உலகின் அனைத்து நன்மைகளும், வசதிகளும் எனக்கு வாய்க்கப்பெற்றிருக்கின்றன. இறைவனின் செல்லப்பிள்ளை நான்.. பின் வேறென்ன கவலை எனக்கு..? இருக்கும்வரை கலக்க வேண்டியதுதானே..?



உங்களின் உண்மையான வயது என்ன? எப்படி உங்களால் டக்கால்டி, சில்பான்ஸ், போன்ற வார்த்தைகளை அழகாக உரிய இடத்தில் பயண்படுத்த முடியுது. உடனுக்குடன் நெக்கல், கையெழுத்தில் கிண்டல் இதை அனைத்தையும் பார்த்தல் உங்களின் வயது மீது எனக்கு சந்தேகமாக இருக்கு?????????,


ஆளை நேரில் பார்த்தால் இதே கேள்வியை எதிர்மறையாக நீ கேட்கக்கூடும்..!

என் மகன்கள் இருவருமே எனக்கு நண்பர்கள். அவர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது முதல் திரைப்படங்கள் செல்வது வரை எதிலுமே எங்களுக்குள் தலைமுறை இடைவெளி கிடையாது. பெரிய மகன் என் தோள் மீது கைபோட்டுக்கொண்டுதான் பேசுவார். சின்னவர் மிகவும் கலாட்டா பேர்வழி. நாங்கள் மூவரும் வெளியில் கிளம்பிவிட்டால் ரகளைதான். எங்கள் கிண்டலுக்கு எவருமே தப்ப இயலாது..! மகன்களின் நண்பர்கள் கூட எங்களுக்கிடையே நிலவும் உறவுமுறையைக்கண்டு, அதிர்ச்சியடைந்து, இலேசான பொறாமையும் தங்கள் வீட்டில் இப்படி இல்லையே என்ற ஆதங்கமும் கொண்டு, பின்னர் எங்களுடன் ஐக்கியமாவார்கள்.

ஒருமுறை எங்கள் வீட்டின் பின்புறத்திலிருக்கும் தெருவில் ஒருவீட்டில் மாமியார் மருமகள் சண்டை.. வாய்ப்பேச்சு முற்றியது. மாடியில் இருந்து நாங்கள் மூவரும் ரசித்துக் கொண்டிருந்தோம்.( கேமோட ஃபர்ஸ்ட் பார்ட் முடிஞ்சு போச்சுப்பா. மெமரி பண்ணிட்டு இப்போ செகண்ட் பார்ட் போகப்போறாங்க பாருங்க _ சின்ன மகன்.)

சின்னவர் என்ன சொல்கிறாரென்று நான் சிந்தித்துக்கொண்டிருக்கும்போதே சண்டை அடுத்த நிலைக்குப் போயிற்று. ( இப்போ ஹேர் ஸ்டைல் மாறப்போகுதுப்பா.. _ பெரிய மகன்.) மாமியாரும் மருமகளும் குடுமியைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்..! மருமகளின் அடி தாங்கமுடியாமல் மாமியார் தெறித்து ஓடினாள். வீட்டுக்குள்ளிருந்து உலக்கையை எடுத்து வந்தாள்.. ( வெப்பன் அப்க்ரேட் பண்ணியாச்சுப்பா.._ சின்னவர்.) மருமகள் அடுத்த வீட்டுக்குள் ஓடிப் பதுங்கினாள். (இன்விசிபிள் மோட் க்கு மாறியாச்சுப்பா.. _ சின்னவர்.)

கொஞ்ச நேரத்தில் கிழவியின் மகன் வந்தான்.. ( இப்போ சீட் கோட் யார் கரெக்டா போடறாங்களோ அவங்கதாம்பா ஜெயிப்பாங்க. _ பெரியவர்.) இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி போட்டுக்கொடுக்க, கடைசியில் மனைவியை நான்கு அறைவிட்டான் அவன். ( டி பக்கிங் ஆயிடுச்சுப்பா.. _ பெரியவர்.) பின்னர் மாமியாரும் மருமகளும் பிலாக்கணம் பாடியபடி அவரவர் வேலையில் ஆழ்ந்தார்கள்.

சாதாரண வீட்டுச்சண்டையையே வேறுபாடான கோணத்தில் பார்க்கும் இரு கணிணி பொறியாளர்களின் தந்தையான நான் இவ்வளவுகூட இல்லாவிட்டால் எப்படி..?




நீங்கள் ஆரம்பிக்கும் திரிகள் மட்டும் எப்படி வெற்றி அடைகின்றன, உண்மையான பதில் தேவை அண்ணா?????????




தோல்வியுற்ற திரிகளும் இருக்கின்றன தம்பி..!

பஞ்ச் கவிதை, ஜமாபந்தி உள்ளிட்ட திரிகள் நான் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதில் எனக்கு வருத்தம் உண்டு. :(


நான் துவக்கிய திரிகள் வெற்றி பெறுவ*தாக நீங்கள் நினைத்தால் அதற்குக் காரணம் நம் உறவுகளின் உற்சாகப் பங்களிப்புதான். என் திறமை எதுவும் இல்லை. ஆ! 10! மற்றும் சுடர் திரியின் வெற்றிக்கு சிறப்புக் காரணம் என்னவன் அமர்..! கிறுக்கு திரியின் வெற்றிக்கு சிறப்புக்காரணங்கள் லொள்ளு வாத்தியார் மற்றும் நண்பர் கண்மணி..! ( இவை போன்ற சிறப்புக்காரணங்களின்மையால்தான் ப்ஞ்ச்'சும் பந்தியும் படுத்துடுச்சுங்க..!)

நான் கருத்துக்களங்களில் பங்கேற்றது சுமார் 2 ஆண்டு காலமாகத்தான்..! அப்போது இருந்த நிலை என்னவென்றால்.... ஒரு சிலர் திரியைத் துவக்கி தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். மற்றவர்கள் கண்ணுற்று பாராட்டி பின்னூட்டமிடுவார்கள். இதுதான் வழக்கத்திலிருந்த முறை. இதை சற்று மாற்ற நினைத்தேன்.

அனைவரின் திறனுமே வெளிப்படும்படி திரிகள் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் நம் உறவுகள் பங்கேற்றுக் கலக்கும் தற்போதைய திரிகள். இந்தக் கருத்தில் எவர் திரிகள் துவக்கினாலும் வெற்றிபெறும்..!
____________________________________________________________________

இந்த பதிலைப் படிக்கும் உறவுகளுக்கு ....

பதில் படு அறுவையா இருந்துச்சுன்னா இந்த பதிலின் முதல் வரியை மீண்டும் ஒருமுறை படிச்சுட்டு தம்பி மூர்த்தியை பாராட்டிட்டுப் போங்க..!

மதி
04-12-2008, 06:02 AM
ஹாஹா...
மாமியார் மருமகள் சண்டைக்கு இப்படியெல்லாமா... ரன்னிங் கமெண்டரி குடுப்பாங்க...?? :)

அன்புரசிகன்
04-12-2008, 06:25 AM
ஒருமுறை எங்கள் வீட்டின் பின்புறத்திலிருக்கும் தெருவில் ஒருவீட்டில் மாமியார் மருமகள் சண்டை.. வாய்ப்பேச்சு முற்றியது. மாடியில் இருந்து நாங்கள் மூவரும் ரசித்துக் கொண்டிருந்தோம்.( கேமோட ஃபர்ஸ்ட் பார்ட் முடிஞ்சு போச்சுப்பா. மெமரி பண்ணிட்டு இப்போ செகண்ட் பார்ட் போகப்போறாங்க பாருங்க _ சின்ன மகன்.)

சின்னவர் என்ன சொல்கிறாரென்று நான் சிந்தித்துக்கொண்டிருக்கும்போதே சண்டை அடுத்த நிலைக்குப் போயிற்று. ( இப்போ ஹேர் ஸ்டைல் மாறப்போகுதுப்பா.. _ பெரிய மகன்.) மாமியாரும் மருமகளும் குடுமியைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்..! மருமகளின் அடி தாங்கமுடியாமல் மாமியார் தெறித்து ஓடினாள். வீட்டுக்குள்ளிருந்து உலக்கையை எடுத்து வந்தாள்.. ( வெப்பன் அப்க்ரேட் பண்ணியாச்சுப்பா.._ சின்னவர்.) மருமகள் அடுத்த வீட்டுக்குள் ஓடிப் பதுங்கினாள். (இன்விசிபிள் மோட் க்கு மாறியாச்சுப்பா.. _ சின்னவர்.)

கொஞ்ச நேரத்தில் கிழவியின் மகன் வந்தான்.. ( இப்போ சீட் கோட் யார் கரெக்டா போடறாங்களோ அவங்கதாம்பா ஜெயிப்பாங்க. _ பெரியவர்.) இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி போட்டுக்கொடுக்க, கடைசியில் மனைவியை நான்கு அறைவிட்டான் அவன். ( டி பக்கிங் ஆயிடுச்சுப்பா.. _ பெரியவர்.) பின்னர் மாமியாரும் மருமகளும் பிலாக்கணம் பாடியபடி அவரவர் வேலையில் ஆழ்ந்தார்கள்.


இதையே மதுர முத்து படிச்சாருன்னா அடுத்த அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி செம ஹிட் ஆகிடும்...

அலுவலகத்தில் நம்மவர்களுடன் பகிர்ந்து அலுவலகத்தையே (நம் பகுதியை) ஒரு நிமிடம் நிலைகுலைய வைத்துவிட்டேன். தற்போதய உலக பொருளாதார பிரச்சனை சோகத்தை மறந்து அனைவரும் சிரித்தார்கள்... :)

ராஜா
04-12-2008, 06:36 AM
ஹி..ஹி.. நன்றி மதி மற்றும் மாம்ஸ்..!

இப்படி தினம் தினம் எங்க வீட்டில் கலாட்டாதான்..!

எல்லாவற்றையும் சொல்ல நினைத்தால், அதுவே ஒரு மெகா திரி ஆயிடும்..!

ம்ம்ம் பார்ப்போம்.. அடுத்த ஆண்டு மே மாதத்துக்குப்பிறகு, "ராஜா - 50" என்ற திரி துவக்கும் திட்டம் இருக்கு. அதில் இதையெல்லாம் போடறேன்..!

அன்புரசிகன்
04-12-2008, 06:41 AM
ம்ம்ம் பார்ப்போம்.. அடுத்த ஆண்டு மே மாதத்துக்குப்பிறகு, "ராஜா - 50" என்ற திரி துவக்கும் திட்டம் இருக்கு. அதில் இதையெல்லாம் போடறேன்..!

அதுக்கு இன்னும் ஆறு மாசம் இருக்கே.............. :rolleyes:

Narathar
04-12-2008, 06:48 AM
திரு.நாரதர்

உங்களை பற்றி நீங்கள் ஜீ-போனில் சொல்லியதும், வாழ்க்கையின் நிறை, குறைகளை மனநிறைவோடு ஏற்றுக்கு கொண்டு வெற்றி நடைப்போடும் ஒரு மனிதனாக தான் எனக்கு தோன்றுகிறது. வாழ்க்கையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள், மனநிறைவோடு வாழ்க்கையை கழிக்க எங்களை போன்ற இளைஞர்களுக்கு உங்களின் டீப்ஸ் என்னவோ?ஆஹா! நம்ம கிட்ட வாழ்க்கையைப்பற்றிய கேள்வியா?

சரி ஏதோ நம்மளையும் ஒரு பெரிய ஆளா நெனச்சி புத்தி சொல்ல கேட்டிருக்காரு நம்ம அருமைத்தம்பி மூர்த்தி! அட்வைஸ்தான் அழுக்காம கொடுக்கலாமே? கொடுத்துட்டா போச்சு!!!

நாராயணா!!!!!

மூர்த்தி வாழ்க்கையில் எப்பவுமே நேற்று நடந்த குறைகளை நாம திரும்பி பார்க்க கூடாது. நடந்தது நடந்து போச்சி........ அதற்கான பரிகாரம் என்ன? அது எனது நாளைய வாழ்வை எவ்வாரு மாற்றும் என்பதை மட்டும் யோசிக்கனும்!

அதுக்காக யொசனையே வாழ்க்கையாகிடக்கூடாது. வாழ்க்கை என்பதை எப்பவும் ரசிச்சு வாழ கத்துக்கனும்.. இன்றைய ஒரு நிமிடம் நம்ம வாழ்நாளில் போச்சுதுன்னா அதை மீண்டும் நாம் கேட்டுப்பெற முடியாதே? அப்படியிருக்கும் போது கவலைகள், துன்பங்களை சதா நினைத்துக்கொண்டு வெந்துகொண்டிருப்பதைவிட "போனால் போகட்டும் என்று விட்டுவிட வேண்டும்" துன்பத்தில் எப்படி இன்பம் காண்பது என்று யோசித்தாலே பாதி வாழ்க்கை இன்பமாகிவிடும்.

எனக்கு இப்போ முப்பத்தைஞ்சு வயசாகுது..... ஆனால் மனதாலும் உடலாலும் நான் இன்னும் இளமையாகத்தான் இருக்கேன் ( என்ன கொஞ்சம் உடல் பருத்துட்டுது... அதுவும் நாளையை பற்றி கவலையில்லாமல் கொஞ்சம் ஓவராவே சாப்பிடுவதால்! ஆனால் டாக்டர் எப்ப நிறுத்தச்சொல்லி சிவப்பு கொடி காட்டராரோ அப்ப நிறுத்துவதற்க்கு இப்பவே மனதை திடப்படுத்திக்கொண்டாயிற்று :D ) இன்னும் ஒரு 10 ஆம் வகுப்பு பையனைப்போலவே யோசிக்கின்றேன். ( இந்திய தொலைக்காட்சிகளில் வரும் அந்த சில எஞின்கள் எப்பவும் சோடை போவதில்லை போல ஹா ஹா) அதனால் உடலையும் மனதையும் சுறு சுறுப்பாக வைத்துக்கொள்ள முடிகின்றது. இதற்கு நாம எப்பவுமே இளமையா இருப்பதா முதலில் நம்பனும், மற்றவர்கள் நமக்கு வயசாயிடுச்சுன்னு சுட்டிக்காட்டிஉனா கூட, அதை ஒரு பொருட்டாக நாம கணக்கிலெடுக்க கூடாது.... ( அதுக்காக வயசு வித்தியாசமில்லாஅமல் ஓவரா ஆட்டம் போட சொல்லலை ) ஆனால் நம்ம மனதை எப்பவுமே இளமையா வச்சுக்க கத்துக்கனும்.

அடுத்தது எப்பவுமே போதுமென்ற மனப்பான்மை வேண்டும், அதற்காக புதிய முயற்சிகளை கைவிடச்சொல்லி கூறவில்லை..... எப்பவுமே நாம வாழும் வாழ்வில் பொஸிடிவ் பக்கங்களை மட்டும் பார்க்கனும்.

"நமக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப்பார்த்து
நிம்மதி நாடு"

என்ற வார்த்தைக்கமைய....... ஐயோ அவன் வாழ்க்கை அப்படியிருக்கே நமக்கு அப்படி கிடைக்கல்லியேன்னு எப்போ நினைக்க ஆரம்பிக்கின்றோமோ அப்பவே பொறாமை, குரோதம், வஞ்சகம் என்று பல கொடிய நோய்கள் நம் உள்ளக்கதவை தட்டும்.... அவைக்கு மட்டும் நாம் கதவை திறந்து விட்டுட்டோம்னு வைங்க........... அப்புரம் நாம வெளியில போய் விட வேண்டியதுதான்........ நம்ம நிம்மதியான வாழ்வுக்கு அதோட முற்றுப்புள்ளி. எனவே எப்பவுமே போதும் என்று நினைப்பதோடு... வாழ்க்கையில் எதையாவது உருப்படியா சாதிக்கனும்கிற கனவும் இருக்கனும்.

அடுத்து இறை கொள்கையில் தெளிவா இருக்கனும். ஒன்னு கடவுளை முழுசா நம்பனும். இல்லைன்னா முழு நாத்திகனா ஆகிடனும். இரண்டுக்கும் நடுவில் இருந்து அல்லாடக்கூடது. கடவுள் பக்தி உள்ளவராயின் மத அனுட்டானங்களுக்கமைய மதவழிபாடுகளில் உங்களை நிலைநிறுத்திக்கொள்ளனும், இல்லைன்னா யோகாசனம், உடற்பயிற்ச்சின்னு உங்க கவனத்தை வைத்திருக்கனும்.

அடுத்து ஆசைகள் நம்மை கட்டுப்படுத்தாமல் ஆசயை நாம கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். எப்பவுமே தவறுகள் செய்ய விளையும்போது ஒரு நிமிடம் யோசிக்கனும்.... இதை செய்வதால் நமக்கு கிடைக்கப்போவது என்ன? இந்த ஓரிரு நிமிட சந்தோஷம் நம் வாழ்வில் எவ்வளவு மாற்றங்களை உண்டு பன்னும்? என்று சற்று யோசிக்க பழகிக்கொள்ள வேண்டும். இதை கெட்டதற்கு மட்டுமல்லாது எல்லா விடயங்களிலும் ஒரு பயிற்சியாக கொண்டுவந்தால் நாம் மிக இலகுவாக நம்மை கட்டுபடுத்திக்கொள்லலாம்.

இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்........ அவையாவும் நீங்க ஏற்கனவே கேட்டவையாத்தான் இருக்க போகின்றது. எனவே உங்கள் உள்ளம் சொல்லும் நல்லதை மட்டும் கேளுங்கள்!

ராஜா
04-12-2008, 06:57 AM
//////// "நமக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப்பார்த்து
நிம்மதி நாடு" ///////

நினைவிற்கொள்ளத்தக்க அரிய வரிகள் நண்பரே..!

ரங்கராஜன்
04-12-2008, 11:29 AM
மன்ற உறவுகள் அனைவரும் அருமையாக பதில் அளித்து இருக்கீங்க

நன்றி மதி
நான் படிப்பில் மக்காக இருந்தாலும் படிக்கும் பசங்களை பார்த்தால் எனக்கு எப்பவுமே பிரமிப்பு தான், 2டு படிக்கும் பொழுது என் பக்கத்தில் உக்கார்ந்து இருக்கும் நண்பன் 12-ஆம் வாய்பாடு முழுசாக சொல்வான் அப்போ படிப்பவர்களை பார்த்து வாய் பிளக்க ஆரம்பித்தேன், இன்னும் பிளந்து கொண்டு தான் இருக்கேன், உண்மையில் நீங்க ஆசிர்வதிக்கப்பட்டவன் தான். பதில் அருமையாக இருந்தது.

நன்றி அமரன்
தன்னை பற்றிய உண்மைகளை வெளியிடும் தைரியம் அனைவருக்கும் இருப்பது இல்லை, ஆனால் நீங்கள் உங்களை உரித்த கோழியாக தொங்க விட்டு விட்டீர்கள். வார்த்தைகள் இருந்த வலி தெரிந்தது, 28 வருட வாழ்க்கையை அழகாக ஒரு பத்தியில் சொல்லி முடிச்சிட்டீங்க. உங்களின் வருங்கால மனைவியும், உங்கள் குழந்தைகளும் நீங்கள் தொலைத்த சந்தோஷங்களை உங்களுக்கு மீட்டு தருவார்கள். all the best


நன்றி சிறுபிள்ளை
என்னது உங்களுக்கு அந்த சம்பவத்தில் வேறு கோபம் மட்டும் தான் வந்ததா, நான் உங்கள் இடத்தில் இருந்தால் இந்த கேள்விக்கு பதிலை நான் சிறைச்சாலையில் இருந்து தான் எழுதிக்கொண்டு இருப்பேன். ஆனால் மனிதநேயமிக்க உங்களை பார்க்க பெருமையாக இருக்கு, தயவு செய்து உங்கள் பெயரை சிறுபிள்ளையில் இருந்து பெரியபிள்ளை என்று மாத்திடுங்க.


நன்றி இறைநேசன்
அருமையான பதில், உண்மையை சொல்லப்போனால் நீங்கள் மதத்தை பற்றி பெருமையாக எழுதுவீர்கள் என்று தான் நினைத்தேன். ஆனால் அருமையாக மனிதனின் மனது தான் எல்லாதிற்க்கும் காரணம் என்று புரியவைத்து வீட்டீர்கள்.


நன்றி தாமரை
நீங்கள் தான் மன்றத்தின் என்சைக்லோபீடியா என்பதினால் தான் உங்களிடம் அந்த கேள்வியை கேட்டேன், உங்களின் பதில் கொஞ்சம் புரிந்தது கொஞ்சம் புரியவில்லை (நான் கொஞ்சம் டியூப் லைட்). நீங்கள் சாம்பவி அவர்களின் கேள்விக்கு பதில் எழுதியதை ரசித்தேன், இது அவர்களிடம் இருந்து வந்து இருந்தால் இன்னும் ரசித்து இருப்பேன்.

நன்றி ராஜா அப்பா
உங்களை போல ஒரு அப்பா எனக்கு இருந்திருந்தால் நான் இந்நேரம் உலகத்தேயே வென்று இருப்பேன். உங்களின் மகன் இருவரும் மிக மிக கொடுத்து வைத்தவர்கள்.


நன்றி நாரதர்
உங்களைப் போலவே உங்கள் வார்த்தைகளும் ரொம்ப கூலாக இருந்தது, கடவுள் பக்தியைப் பற்றி நீங்கள் கூறிய கமெண்டு சூப்பர், அதே போல உங்க அட்வைஸ்-ம் சூப்பர்.

சிவா.ஜி
04-12-2008, 11:40 AM
சிவா

நீங்கள் துபாயில் இருக்கீங்கனு நினைக்கிறேன், அதுவும் தனியாக, உங்களின் குடும்பம் இங்கே இருக்குனு நினைக்கிறேன். தீபாவளியை போனில் கொண்டாடினீர்கள் என்று சொன்னீர்கள். என்றாவது ஒரு நாள் குழந்தைகளையும், அண்ணியையும் பார்க்கவேண்டும் என்று தோன்றும் பொழுது உங்களின் மனதில் என்ன தோன்றும்.
என்னடா இது வாழ்க்கை என்று வெறுக்குமா?, இல்லை குழந்தைகளுக்கு தானே இப்படி கஷ்டப்படுகிறோம் என்று சந்தோஷப்படுமா?. எப்படி நீங்கள் அந்த நினைவில் இருந்து மீண்டு வருவீர்கள்?.

என்னையும் தங்கள் கேள்வியில் இணைத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி மூர்த்தி. இனி பதில்.....

எப்போதாவது அல்ல எப்போதுமே பார்க்கவேண்டுமென்றுதான் விரும்புவேன். அலைபேசியும், இணையமும் அவர்களைப் பார்க்கவும், அவர்களுடன் பேசவும் உதவுவதால் இப்போதெல்லாம் சங்கடமில்லை. அவை இல்லையென்றாலும் எனக்கு இந்த வாழ்க்கையின் மேல் வெறுப்பில்லை. காரணம்....இந்த வாழ்க்கை என்மீது திணிக்கப்பட்டதல்ல...நானாக தேர்ந்தெடுத்தது. பிறகு இந்த வாழ்க்கையைப் பற்றி வருத்தப்பட எனக்கு என்ன அருகதை இருக்கிறது?

ஆரம்பத்தில் வெளிநாடு வருவது அவசியத் தேவைகளுக்கு...பின் அதிலேயே தொடர்வது...ஆடம்பரத்துக்கு. நானும் அதில் ஒருவன்தான். எப்போது வேண்டுமானாலும் இந்த வாழ்க்கையை நிறுத்திக்கொள்ளலாம்....ஆனால் தொடர்வதற்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்கள். அதனால் விரும்பித்தான் இந்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

எனவே அந்த எண்ணமே தோன்றாதபோது, மீண்டுவரவேண்டிய அவசியம் வந்ததில்லை. மேலும் பணத்தை மட்டுமே பார்த்தால் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஊருக்குச் சென்று ஹலோ சொல்லிவிட்டு திரும்ப ஓடி வந்திருப்பேன். ஆனால் எப்போதெல்லாம் பார்க்கும் ஆவல் கூடுகிறதோ...ஓடிப்போய்விடுவேன். விடுமுறை கிடைக்கவில்லையா....வேலையை விட்டுவிடுவேன். அதனால் எப்போதும் எங்கள் குடும்பப்பாசம் நன்றாகவே உள்ளது.

ரங்கராஜன்
04-12-2008, 11:53 AM
நன்றி திரு.சிவா
மிகவும் எதார்த்தமான பதில், குடும்பத்தின் மீது உங்கள் பாசத்தை அழகாக எழுதியுள்ளீர்கள், உங்களின் குடும்பம் இந்த பாசவலையில் கடைசி வரை பின்னி இருக்க வேண்டும் என்று ஆண்டவனை பிராத்திக்கிறேன்

அமரன்
04-12-2008, 12:08 PM
க்ஹும்..
இதே வேகத்தில் எல்லாரும் பதில் தந்தால் என் பாடு திண்டாட்டம் தான். ஆனாலும் அது இனிய கொண்டாட்டம்.

தாமரை
04-12-2008, 12:15 PM
சிம்பிளா பதில்வேணுமா மூர்த்தி.. பொத்தம் பொதுவா மனுஷங்களை வகை வகையா பிரிக்க முடியாது. அந்தந்த நேரத்தில அந்தந்த கோணத்தில எதைப் பத்தி யோசிக்கிறமோ அதைப் பொறுத்துதான் பிரிக்க முடியும். சிம்பிள். இந்த வகைகளை எல்லாம் ஒண்ணு சேர்த்தால் 1200 கோடிக்கு மேல போகும். உலக மக்கள் தொகையே 600 கோடிதான். மூணு வண்ணங்களைக் கலந்து மூணுகோடி வண்ணங்களை உருவாக்குகிற மாதிரி ஒரு 10, 15 காம்பினேஷன்களை வச்சு மனிதர்களைப் பிரிக்க முடியாது. ஏன்னா வண்ணங்கள் ஒண்ணோட ஒண்ணு இணையும்போதுதான் மாறும். இந்தந்த கலப்பு இந்த வண்ணம்னு விகிதாச்சாரம் போட்டுடலாம். மனிதன் அறிவுள்ளவன் தன்னையே மாத்திக்கிற தன்மை உள்ளவன். அவனும் மாறலாம். மாற்றமும் மாறலாம். ஒண்ணுஞ் சொல்லிக்க முடியாது. குத்துமதிப்பா எடை போடவேண்டியதுதான்.


அப்புறம் சாம்பவி, அவங்க இதுவரைக்கும் பதில் சொல்லலை, இந்தக் கேள்விக்கும் பதில் சொல்லமாட்டாங்கன்னு நினைக்கிறேன், அவங்க பதில் சொன்னது சொற்சிலம்பத்துக்கு மட்டும்தான். சொல்லப்போனா அதுகூட பதில்கிடையாது.. அது பதில்கேள்விகள் அவ்வளவுதான்,

உங்க கேள்விகள் அவங்க மனசில கேள்விகளை உற்பத்தி செய்ய முடிந்தால் அவங்க வாய்திறப்பாங்க. அதுதான் ரகசியம்.

ரங்கராஜன்
04-12-2008, 12:22 PM
நன்றி திரு.தாமரை
இப்போ புரிஞ்சது நன்றி, நீங்க சொன்ன மாதிரி சாம்பவி வித்தியாசமான ஆளா தான் இருப்பாங்க போல இருக்கு, நான் கேட்டது அப்படி ஒன்னும் சூப்பர் கேள்வி கிடையாது அதனால் பதில் வராது. அதே போல ஓவியா அக்கா அவங்க இன்னும் ஆதவா கேள்விக்கே பதில் சொல்லல, அதனால் அடுத்த உறவை கேள்வி கேட்க அழைக்கலாமே. நன்றி

ஆதவா
04-12-2008, 12:51 PM
நன்றி திரு.தாமரை
இப்போ புரிஞ்சது நன்றி, நீங்க சொன்ன மாதிரி சாம்பவி வித்தியாசமான ஆளா தான் இருப்பாங்க போல இருக்கு, நான் கேட்டது அப்படி ஒன்னும் சூப்பர் கேள்வி கிடையாது அதனால் பதில் வராது. அதே போல ஓவியா அக்கா அவங்க இன்னும் ஆதவா கேள்விக்கே பதில் சொல்லல, அதனால் அடுத்த உறவை கேள்வி கேட்க அழைக்கலாமே. நன்றி

அவர் பிஸியா இருக்கிறார்... நிச்சயம் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்வார்..... காத்திருக்கிறேன் மூர்த்தி....

அப்பறம்....

ஒரு கேள்வியை நீங்கள் வீணடித்தது குறித்து வருத்தமுறுகிறேன்... என்னைப் போன்றே நீங்களும் வேறு ஒருவரிடம் அக்கேள்வியைக் கேட்டிருக்கலாம்...... :mad: