PDA

View Full Version : ♔. ஆ! 10! ♔. - முதல் சுற்று

Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14

பாலகன்
12-08-2008, 12:53 PM
2. லொள்ளு வாத்தியார்
ஆபாத்தில் சிக்கவைத்தாலும் வச்சாரு பெரிய ஆபத்துல சிக்க வச்சுட்டாரு. வம்பு பன்னி மாட்டிய ஏதாவது ஒரு நிகழ்வை பற்றி கேட்கிறார். ம் என்ன சொல்ல எத்தனை சொல்ல சின்ன வயசுல என் வாழ்கையே வம்புல தான் நிறைந்திருந்தது, அதுவும் குறிப்பா எல்லா வமபும் மாட்டாமல் போனதில்லை.

அப்போ உங்க வாழ்க்கை சின்ன வயசுல லொள்ளு பன்னி லொள்ளு பன்னியே அடிவாங்கி கம்பி மேல நடந்துட்டு வந்த மாதிரியே இருக்குல்ல வாத்தியாரே வம்புன்னு ஒன்னு இருந்தா அதுல நாம மாட்டாம போவோமா? என்ன வாத்தி நான் சொல்லுறது

இந்த உலகில் யார் உத்தமன் நல்லவன் யோக்கியன் தீயவன், அயோக்கியன் என்று தெரியாது ஏதாவது செய்து மாட்டாமல் இருக்கும் வரை அவன் உத்தமன், மாட்டியவ அயோக்கியன். அவன தான் வம்புல மாட்டிட்டானு சொல்லறோம். ஒருவருக்கும் தெரியாது என்று நினைத்து நாம் எந்த காரியமும் செய்ய முடியாது. ஏன்னா நாம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் எங்காவது சில சாட்சிக கன்டிப்பா பதிவாகி இருக்கும். அது எந்த சமயத்துல வெளிபடும் என்று ஆண்டவனுக்கு தான் தெரியும்.

அய்யய்யோ ஆரம்பிச்சிட்டாருய்யா, ஆரம்பிச்சிட்டாருய்யாயாயாயாயயா, தத்துவம் சொல்லுறத ஆரம்பிச்சிட்டாருய்யா, ஆனாலும் இந்த தத்துவம் நம்ம எல்லாரோட வாழ்க்கையிலும் சரியா பொறுந்துதே, வாத்தியார்னாலே தத்துவம் இல்லாம ஒரு பதிப்போ அல்லது பதிலோ இருக்க முடியுமா? நீங்க சொன்ன மாதிரி சந்தர்ப்பம் கிடைக்கிற வரைக்கும் தான் ஒருவன் நல்லவனா இருக்க முடியும்னு சொல்ல வர்றீ்ங்க இல்ல வாத்தி?

"அன்பே நான் உன்னை காதலிக்கிறேன் அதனால் நீயும் என்னை காதலி." இவ்வளவுதான் கடித்தத்தில் இருந்தது. இன்னொரு தாளில் பின்குறிப்பும் ஒன்று இனைத்திருந்தேன். "அன்பே ஒருவேலை நீ வேறு யாராவதை காதலித்தால் இந்த கடித்தத்தை கிழித்து போட வேன்டாம் உனக்கு பதிலாக நூர்ஜகானிடம் இதை தந்து விடு"

இந்த மாதிரி ஒரு கடிதம் எழுதினதுக்கு உங்களை அடிக்காம பின்ன என்ன செய்வாங்களாம், லொள்ளு வாத்திங்கிறது சரியா தான் இருக்குது,, அது சரி அந்த நூர்ஜகான்ங்கிறது யாரு அவளோட தங்கையா? அப்புறம் பிகரு செட் ஆச்சா அதையும் சொல்லிடுங்களேன்.

வாத்தியோட பதில்னாலே சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இருக்காது மனுசன் வாழ்க்கையை நல்லா அனுபவிச்சிருக்காரு (காதுல புகையா வருது)

உங்க பதிலுக்கு ரொம்ப நன்றி வாத்தியாரே

வெற்றி
12-08-2008, 01:14 PM
வாத்தியின் சிறப்பே அவரின் யதார்த்தம் மற்றும் உண்மை...வாழ்க..வாத்தியார்....

உங்க பதில் உண்மையிலேயே அருமை திரு. மொக்கை சார்...
(ராசா அண்ணன் மொக்கை மொக்கைன்னு சிரிப்புகள் போடுறாறே அந்த மொக்கை ஒருவேளை நீங்க தானா?)

எனக்கும் ராஜா அண்ணனுக்கும் ஆர்குட் - இல் இருந்தே தொடர்பு உள்ளது.....வித விதமாக பெயரில் போட்டுக்கொண்டு இருந்தார்.........பிறகு அந்த கற்பனை பாத்திரத்துக்கு மொக்கை என பெயர் வைத்தார்....
அது நானா என்பதை ராஜா அண்ணன் தான் சொல்லவேண்டும்

அது சரி அது என்ன சார்....?????????????!!!!!!!!!!:confused::confused:
உள்குத்து ஏதும் உண்டா??

ஆகா ஊரு ஒன்னு கூடிட்டாங்கப்பா, திரி மறுபடியும் களைகட்டிருச்சின்னு நினைக்கிறேன்
நீங்க வந்தா களை கட்டிவிடும் என பலருக்கு தெரியும்....

பாலகன்
12-08-2008, 01:24 PM
எனக்கும் ராஜா அண்ணனுக்கும் ஆர்குட் - இல் இருந்தே தொடர்பு உள்ளது.....வித விதமாக பெயரில் போட்டுக்கொண்டு இருந்தார்.........பிறகு அந்த கற்பனை பாத்திரத்துக்கு மொக்கை என பெயர் வைத்தார்.... அது நானா என்பதை ராஜா அண்ணன் தான் சொல்லவேண்டும்....

அப்போ அது நிச்சயமா நீங்களாதான் இருக்கும், ஏன்னா ஆர்குட் ல் இருந்து தொடர்பு இருக்கே, (எப்படி மடக்குனேன் பாருங்க)

அது இன்னா உங்க பதிலுக்கு பின்னுட்டம் வரைலைன்னு ஒரே அழுகாச்சியா அழுதீங்க, வாத்தியோட கலக்கல் மலரும் நினைவுகளை பத்தி ஒன்னுமே சொல்லாம ஒரு வரியில முடிச்சிட்டீங்க, சின்ன வயசுல எப்படி உடம்பை ரணகளமா வச்சிருந்திருக்காரு நம்ம வாத்தியாரு

வெற்றி
12-08-2008, 01:34 PM
வரைலைன்னு ஒரே அழுகாச்சியா அழுதீங்க, வாத்தியோட கலக்கல் மலரும் நினைவுகளை பத்தி ஒன்னுமே சொல்லாம ஒரு வரியில முடிச்சிட்டீங்க, சின்ன வயசுல எப்படி உடம்பை ரணகளமா வச்சிருந்திருக்காரு நம்ம வாத்தியாரு
ஏன்னா அதைப்படித்ததும் அதுவும் அந்த கடைசி வரியில் வீட்டம்மாவுக்க்கு மிச்ச விசயம் தெரியாதுன்னு ஒரு சிக்ஸர் அடிச்சார்ரு பாருங்க..அங்கே தான் .........அங்கேயே தான் எனக்கு எனக்கு ஒரு டவுட்.....சொல்லாம
விட்டதுக்கே ரணகளமா ஆகி இருக்கே உடம்பு..சொல்லி இருந்தா !!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வாத்தி என்ற ஒரு உத்தமரை நாம் இழந்து இருக்க கூடும் ..

தவிர அந்த வரிகள்......வாத்தியடம் கேள்வி கேட்க எனக்கு ஒரு டிப்ஸ் கொடுத்து விட்டார்,,,அது தான்....!!!
அது என்ன கேள்வி என கேட்டு கேள்வித்தாளை அவுட் ஆக்கி விடாதீர்கள்

பாலகன்
12-08-2008, 01:39 PM
வாத்தி என்ற ஒரு உத்தமரை நாம் இழந்து இருக்க கூடும் ..

வாத்தியார் பொறந்ததில் இருந்து வாங்கின அடிகளிலேயே இது தான் பலமான அடின்னு நினைக்கிறேன்.

உண்மையை சொல்லுறவங்க தெய்வத்துக்கு சமம்னு சொல்லுவாங்க நம்ம வாத்தியும் எல்லா இடத்திலேயும் உண்மையையே சொல்லிக்கிட்டு வர்றாரு

ராஜா
12-08-2008, 02:03 PM
எனக்கும் ராஜா அண்ணனுக்கும் ஆர்குட் - இல் இருந்தே தொடர்பு உள்ளது.....வித விதமாக பெயரில் போட்டுக்கொண்டு இருந்தார்.........பிறகு அந்த கற்பனை பாத்திரத்துக்கு மொக்கை என பெயர் வைத்தார்....
அது நானா என்பதை ராஜா அண்ணன் தான் சொல்லவேண்டும்

எனக்கு வந்திருக்கும் டெஸ்டி'க்களில் (டெஸ்டிமோனியல் க்கு தமிழில் என்னன்னு சொல்லணும்ப்பா..?) நான் மிக விரும்புவது நண்பர் சாமியினுடையதுதான்.

மொக்கை துணுக்குகள் ஆர்க்குட்டில் பிரபலமாகத் துவங்கும்போது, சாமியிடமிருந்து ஒரு ஸ்கிராப்..

"என்ன வச்சு காமெடி கீமடி பண்ணலியே...?"

அன்றிலிருந்து மொக்கச்சா என் உள்ளத்தில் பசைபோல் ஒட்டிக்கொண்டார்.

மொக்கை துணுக்குகளுக்கு காரணம் ஒரு பழைய கதை. அது தொடர்பான நபர் (நம் நண்பர் மொக்கச்சா அல்ல..!) நம் மன்றில் இருப்பதால் மேற்கொண்டு விவரிக்க விரும்பவில்லை.

ஆனால் ஒன்று.. மொக்கை துணுக்குகள் இவ்வளவு பிரபலம் பெறும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அதற்காக ஒரிஜினல் மொக்கைக்கு ஒரு சபாஷ்..!

வெற்றி
12-08-2008, 02:09 PM

மிக மிக நன்றி அண்ணா ...மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது....

பாலகன்
12-08-2008, 02:18 PM
எனக்கு வந்திருக்கும் டெஸ்டி'க்களில் (டெஸ்டிமோனியல் க்கு தமிழில் என்னன்னு சொல்லணும்ப்பா..?) நான் மிக விரும்புவது நண்பர் சாமியினுடையதுதான்.

மொக்கை துணுக்குகளுக்கு காரணம் ஒரு பழைய கதை. அது தொடர்பான நபர் (நம் நண்பர் மொக்கச்சா அல்ல..!) நம் மன்றில் இருப்பதால் மேற்கொண்டு விவரிக்க விரும்பவில்லை.

ஆனால் ஒன்று.. மொக்கை துணுக்குகள் இவ்வளவு பிரபலம் பெறும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அதற்காக ஒரிஜினல் மொக்கைக்கு ஒரு சபாஷ்..!

டெஸ்டிமோனியல் என்றால் சாட்சி சொல்வது அல்லது தன்னிலை விளக்கம் என நினைக்கிறேன்

அண்ணே நீங்க தாராளமா அந்த பழைய கதையை சொல்லலாம், நம்ம மொக்கைச்சாமி தம்பி தப்பாவே நினச்சிக்க மாட்டாரு அவரு ரொம்ப நல்லவருருருருருருரு (என்ன மொக்ஸ் நான் சொல்றது சரியா?)

பின்ன இருக்காதா? மொக்கை துணுக்குள் செம்ம காமெடியாச்சே (நம்ம சர்தார்ஜி ஜோக் மாதிரி) கலக்குறீங்க ராஜா அண்ணே

அந்த ஆர்குட் மேட்டரை கொஞ்சம் தனிமடலில் சொன்னீங்கன்னா நானும் வந்து கலந்துக்குவேன்

Keelai Naadaan
12-08-2008, 02:45 PM
உங்கள் பதிலால் நான் முழுதிருப்தி அடைந்தேன்

அன்பு கலந்த நன்றிகள் அழகிய மணவாளன்.
எல்லோரிடமும் அவர்களுக்கு தக்கவாறு கேள்வி கேட்ட உங்களது திறனை எண்ணி மிகவும் வியக்கிறேன்.

பாலகன்
12-08-2008, 03:23 PM
அன்பு கலந்த நன்றிகள் அழகிய மணவாளன்.
எல்லோரிடமும் அவர்களுக்கு தக்கவாறு கேள்வி கேட்ட உங்களது திறனை எண்ணி மிகவும் வியக்கிறேன்.

அதுதானே நம்ம ஸ்பெசாலிட்டியே, என்ன நம்மளோட பெரியவங்கல்லாம் வந்து போற இடம்ங்கறதால வால சுருட்டிக்கிட்டு இருக்கேன்

அமரன்
12-08-2008, 03:34 PM
தமிழ்குமார் பதில் மட்டுந்தானே நிலுவையில் உள்ளது. அது வரும் வரை காத்திருக்காது அடுத்த சாவிகளைத் தந்து மக்கள் மனங்களை திறக்க வைக்கலாமோ??

Keelai Naadaan
12-08-2008, 04:09 PM
அனைவரின் கருத்தும், விருப்பமும் ஒன்றாகவே இருந்தால் துணிக்கடைகளில் ஏன் இவ்வளவு டிசைன்கள் வைத்திருக்கப் போகிறார்கள்..?!!!

அருமையான வரிகள்...எளிதில் மனதில் பதியும்படி.

[COLOR="Red"]1. எனக்கு எல்லாம் தெரியும் என்ற மனிதன் தன்னை மேம்படுத்திக்கொள்ள முடியாமல் போகிறான்
ஏதும் தெரியாது என நினைக்கும் மனிதன் ஜடமாகிப்போகிறான்
தெரிந்து கொண்டே இருக்க வேண்டும் என என்னும் மனிதன் தான் தெளிவு பெறுகிறான்...
தெளிவு என்பது தவறு செய்ய செய்ய வரும் ஒரு வகை பக்கவிளைவு
ஆக மொக்கை என்ற சொல்.. தவறு செய்யும் மனிதனை...தெளிவு பெற்ற மனிதன் சுட்டிக்காட்டும் ஒரு நிகழ்வே..
தெளிவான பதில். உங்களுடைய, மற்றும் வாத்தியாருடைய நகைச்சுவை உணர்வை எண்ணி வியக்கிறேன். மேலும் மன்மதனின் நகைச்சுவை திரிகளும் ரசிக்கும்படி உள்ளது.

பாலகன்
12-08-2008, 04:13 PM
தமிழ்குமார் பதில் மட்டுந்தானே நிலுவையில் உள்ளது. அது வரும் வரை காத்திருக்காது அடுத்த சாவிகளைத் தந்து மக்கள் மனங்களை திறக்க வைக்கலாமோ??

தமிழ் குமார் இன்று இரவுக்குள் பதில் அளித்துவிடுவார்,, அமரன் அவர்கள் சொன்னதுபோல திரு.மொக்ஸ் அடுத்த கணைகளை தொடுக்கலாம்

அமரன்
12-08-2008, 04:15 PM
தமிழ் குமார் இன்று இரவுக்குள் பதில் அளித்துவிடுவார்,, அமரன் அவர்கள் சொன்னதுபோல திரு.மொக்ஸ் அடுத்த கணைகளை தொடுக்கலாம்

என்னே ஒரு ஈடுபாடு அழகியமணவாளா..
மெச்சினேன் உங்களை..

மொக்கை ஏவுகணைகளைக் காணும் ஆர்வத்துடன்,

Keelai Naadaan
12-08-2008, 04:15 PM
அதுதானே நம்ம ஸ்பெசாலிட்டியே, என்ன நம்மளோட பெரியவங்கல்லாம் வந்து போற இடம்ங்கறதால வால சுருட்டிக்கிட்டு இருக்கேன்
எனக்கு தெரியாதே சாமி..!:lachen001:

பாலகன்
12-08-2008, 04:27 PM
என்னே ஒரு ஈடுபாடு அழகியமணவாளா..
மெச்சினேன் உங்களை..

மொக்கை ஏவுகணைகளைக் காணும் ஆர்வத்துடன்,

ஆகா, பெரியவங்க என்னை புகழுறீங்க, எனக்கு வெக்க வெக்கமா இருக்குது.....

நண்பர் தமிழ்குமாரை நான் செல்பேசியில் தொர்புகொள்ளும் வசதி இருந்ததால் அவரிடம் விசயத்தை சொல்லிவிட்டேன்.....

அவர் வருவார் பதில் தருவார்

பாலகன்
12-08-2008, 04:28 PM
எனக்கு தெரியாதே சாமி..!:lachen001:

என்னாது சாமியா (விக்ரம்)? நான் பில்லா......... அதுதுதுதுதுதுததத

ராஜா
12-08-2008, 04:49 PM
சபாஷ் பில்லா..!

யப்பா...

இப்பவே கண்ணக் கட்டுதே..!

இன்னும் மொக்கச்சா வந்து என்ன கூத்து அடிக்கப்போறாரோ..!

பாலகன்
12-08-2008, 05:07 PM
இப்பவே கண்ணக் கட்டுதே..!

இன்னும் மொக்கச்சா வந்து என்ன கூத்து அடிக்கப்போறாரோ..!

தப்பிக்கவே முடியாத பிடிவாரண்ட் தமிழ்குமாருக்கு போட்டாச்சு, இன்னும் அரைமணி நேரத்தில் பதில் வந்துவிடும்.

ராசா அண்ணே எல்லாரும் பதில் தந்துட்டா அடுத்து நான் என்ன செய்யவேன்டும். (எனக்கு ஏதாவது மொய் கிய் வருமா? இல்ல நான் யாருக்காவது (சிறந்த) மொய் வைக்கனுமா?)

tamilkumar
12-08-2008, 05:29 PM
தமிழ்குமார்னு பெயரை வைத்துகொன்டு தமிழ் மன்றம் பக்கமா அடிக்கடி வராததால் உங்களுக்கு இந்த (தண்டனை) கேள்வி, நீங்க ஒரு போட்டியை நடத்துவதாக வைத்துகொள்வோம், அதில் நிறைய போட்டியாளர்கள் பங்கேற்ற வேன்டுமென்றால் ஆக்கபூர்வமாக நீங்கள் என்ன செய்யவேன்டும்,, ( குறுக்கு வழியில் அல்ல)

அட பாவி மக்கா... இங்கிட்டு வராமல் இருந்ததுக்கு இம்புட்டு பெரிய தண்டனையா? சரி பதில்சொல்ல முயற்சிக்கிறேன்.

நான் ஒரு போட்டியை நடத்தினால்? ஹி... ஹி...... ஏனுங்ண்ணா இந்த கொலைவெறி?:)

போட்டியை அறிவிக்கிறதுக்கு முன்னால் நம்ம மன்றத்திலே பிரபலமாக இருக்கனும்.

எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கிற சக்தி இருக்கனும். ஏன்னா நம்ம மக்கா அப்படிப்பட்ட ஆளுங்க.

ஜெயிச்சா அன்புத்தொல்லை பண்ணுவாங்க...

தோத்துப்புட்டா கொஞ்சம் அதிகமாகவே தொல்லை பண்ணுவாங்க....

பார்வையாளர்களை கவரும் வகையில் போட்டிக்கு கவர்ச்சியான தலைப்புகள் வைக்கலாம்.

உதாரணமாக

1.இந்தியாவின் தங்க மகன் அபினவ். மன்றத்தின் தங்கமகன் யாரு?

2.ஒரு ஆட்டம் ஆடித்தான் பாருங்கண்ணே...

3.ஏலே.. உள்ளே வந்தேன்னா அம்புட்டுதேன்...

4.வீட்லே சொல்லிட்டு வந்துட்டிங்களா?

5.ஸ்ஸ்.... இப்பவே கண்ணைக் கட்டுதே!......

தாமதத்திற்கு அழகிய மணவாளனிடமும், மற்ற நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

அன்புடன்
தமிழ்குமார்

ராஜா
12-08-2008, 05:37 PM
ராசா அண்ணே எல்லாரும் பதில் தந்துட்டா அடுத்து நான் என்ன செய்யவேன்டும். (

செய்ய வேண்டியதை எல்லாம் அழகா செய்துட்டீங்க..!

பதில் சொன்னவங்களுக்கு ஒரு நன்றியச் சொல்லிட்டு மொக்கச்சாவை முறைப்படி அழையுங்க பில்லா..!

( உங்களைப் போல, அடுத்து பதில் சொல்றவங்களை மற்றவர்களும் தேர்வு செய்துட்டா எனக்கும் அமருக்கும் தொல்லையே இல்லை.. நன்றி பில்லா..!)

பாலகன்
12-08-2008, 05:40 PM
அட பாவி மக்கா... இங்கிட்டு வராமல் இருந்ததுக்கு இம்புட்டு பெரிய தண்டனையா? சரி பதில்சொல்ல முயற்சிக்கிறேன்.

நான் ஒரு போட்டியை நடத்தினால்?

தாமதத்திற்கு அழகிய மணவாளனிடமும், மற்ற நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

சொக்கத் தங்கம்ய்யா நீயி உன்னைய நம்ம்ம்ம்பிபிபி நான் இங்க நம்ம அமரன் அண்ணாவுக்கு வாக்கு கொடுத்துட்டேன், சரியான நேரத்துல வந்து என்ட மானத்த நீங்க காப்பாத்துனீரு, நீ நல்லாயிருப்பய்யா

சரி விசயத்துக்கு வர்றேன்

பில்லாவோட கேள்வி (அடியை) ஒருவழியா வலிக்காத மாதிரியே காமிச்சிக்கிட்டு பதில் செல்லி தப்பிச்சிக்கிட்டீரு ம்

இனியாவது அடிக்கடி வந்து எட்டிபாரும்

அன்புடன்

இளசு
12-08-2008, 05:51 PM
தாமதமாக வந்தாலும் தரமாக பதில் சொன்னாரய்யா நம்ம தமிழ்குமார்..

ஐந்து தலைப்பிலும் மன்றத்திரிகள் விரைவில் கிளம்பலாம்.. !

அழகிய மணவாளனின் அழகிய பணிக்கும்
ஆழ்ந்து பதில் தந்த அனைவருக்கும் பாராட்டுகள்..

ராஜா, அமர், அக்னி, அன்பு, ஓவியன் கூட்டணிக்கு ஜே!

மொக்கைக்கு உற்சாக வரவேற்பு!

பாலகன்
12-08-2008, 05:52 PM
செய்ய வேண்டியதை எல்லாம் அழகா செய்துட்டீங்க..!

( உங்களைப் போல, அடுத்து பதில் சொல்றவங்களை மற்றவர்களும் தேர்வு செய்துட்டா எனக்கும் அமருக்கும் தொல்லையே இல்லை.. நன்றி பில்லா..!)

பில்லாவாச்சே முன்னாடியே மாஸ்டர் ப்ளான் போட்டுட்டோம்ல

இதனால மகா மன்ற மக்களே, நான் தெரிவிச்சிக்கிறது என்னான்னா, ஆ10ல் பில்லாவோட கேள்விகளுக்கு (அம்புகளுக்கு) மிகவும் அருமையாகவும், நக்கல் நையான்டி குசும்பு, அறிவு, தெரிவு, தெளிவு மற்றும் தெய்வபக்தி என பல பரிமானங்களில் பதில் தந்த அன்பு மன்றத்து சொந்தங்களாகிய ஆ பத்தின் பதில் நாயகர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

(ஆ)பத்து கேள்விகளை பில்லாவின் கையிலிருந்து பறித்துக்கொன்டு அடுத்த சுற்றுக்கு ஓட தயாராகும் தொடர் ஓட்ட நாயகன் திரு,திரு,திரு. (திருதிருன்னு முழிக்கிறது தெரியாம இருக்க கருப்பு கண்ணாடி போட்டிருக்கும் அன்பு சொந்தம் திரு.மொக்கைச்சாமி அவர்கள்

(ஆஆஆ10101010 போச்சே என் கைய விட்டு போச்சே, நாலு பேருக்கு சேர்ந்து ஓடுனாதானே அது தொடர் ஓட்டப்பந்தயம் - ம் மனசை தேத்திக்கிட்டேன்)

தீபன்
13-08-2008, 04:00 AM
சாமின்னாலே லேட்டாத்தானா வரும்....?

ராஜா
13-08-2008, 04:28 AM
வாருங்கள் மொக்கச்சாமி அவர்களே..!

கோடி சனம் காத்துக் கிடக்கு..!

lolluvathiyar
13-08-2008, 06:10 AM
குழந்தை..அறிவாளி,,பைத்தியக்காரன்
இவர்கள் மூவரை சுற்றியும் எப்போதும் பத்து பேர் இருந்து கொண்டே இருப்பார்கள்..

ஆகா என்ன ஒரு தத்துவம், அதுபோல மொல்லமாறி, கேப்மாறி, முடிச்சுஅவுக்கி, தெல்லவாரி, அரசியவாதி, தீவிரவாதி இவர்களை சுற்றியும் எப்போதும் 100 பேர் இருந்து கொன்டே இருப்பார்கள்.

டீச்சர் எல்லாம் எதுக்கு அடிச்சாங்க..?
மாணவனின் கருத்துப் பிழைக்காகவா... எழுத்துப் பிழைக்காகவா..?

டீச்சர்கிட்ட அடிவாங்கியே வாழ்கையை ஓட்டியவன் நான். எழுத்து பிழை, கருத்து பிழை, இலக்கன பிழை, கனித பிழை இன்னும் என்னன்ன பிழை இருக்கிறதோ அத்தனைக்கும் அடிவாங்கி விட்டார் இந்த லொள்ளுவாத்தியார். வாழ்கையில் டீச்சரிடம் மட்டும் அடிவாங்க வில்லை சுத்தி சுத்தி அடிவாங்கியே பழக்க பட்டவர் இதோ அதை ஒரு வருடத்துக்கு முன்பு கவிதையாகவே தந்திருகிறேன்

சுத்தி சித்தி அடிவாங்க (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11010)

எழுத்துப்பிழைன்னா வாத்தி வாழ்நாள் பூராவுமில்ல அடி வாங்க வேண்டியிருக்கும்..?!!!

ஐயா இதயம் அவர்களே, ஏன் ஏன் இப்படி உன்மைகளை பப்ளிக்ல போட்டு மானத்த வாங்கறேள்

வம்புன்னு ஒன்னு இருந்தா அதுல நாம மாட்டாம போவோமா? என்ன வாத்தி நான் சொல்லுறது

கன்டிப்பா மாட்டாம இருக்க முடியாது, வம்புக்கு அவ்வளவு பவர் இருக்கு.

நீங்க சொன்ன மாதிரி சந்தர்ப்பம் கிடைக்கிற வரைக்கும் தான் ஒருவன் நல்லவனா இருக்க முடியும்னு சொல்ல வர்றீ்ங்க இல்ல வாத்தி?

சந்தர்பம் எல்லாருக்கும் கிடைக்கும், அப்படி இல்லாவிட்டால் ச ந்தர்பத்தை உருவாக்கி கொள்வது என்பது ஒரு பெரிய விசயம் அல்ல. நான் சொன்னது மாட்டி கொள்ளும் வரைதான் எல்லாரும் நல்லவங்க. கெட்டவங்க என்பது ஜஸ்ட் மாட்டிட்டாங்க அவ்வளவுதான்.

அது சரி அந்த நூர்ஜகான்ங்கிறது யாரு அவளோட தங்கையா? அப்புறம் பிகரு செட் ஆச்சா அதையும் சொல்லிடுங்களேன்.

அழகிய மணவாளனே, அடியேன் வாங்கிய அடிகளெல்லாம் உங்களுக்கு பத்தாதா, மேலும் சன்னமா பழைய குப்பைகளை கிளரி பைனல் அடி பேட்டல் (Fatal) அடியா வாங்க வக்க முடிவு செய்து விட்டீர்களோ. நான் இந்த விளையாட்டுக்கு வரல சாமி

அடுத்த மொக்கசாமி வாங்க ஆபாத்தான கேள்விகளுடன்

ராஜா
13-08-2008, 06:16 AM
வாத்தியாரய்யா..

கிறுக்கு திரி உங்களால தடைபட்டு நிக்குது.

கொஞ்சம் கவனிங்க..!

மன்றத்தில் இது அதிரடி வாரமா இருக்கு.. ஒரு அள்ளு அள்ளுவோம்..!

வெற்றி
13-08-2008, 11:56 AM
என் ஆ....பத்து
இவை யார் மனதையும் புண் படுத்தும் நோக்கில் கேட்கப்பட்டவை அல்ல..நான் தெரிந்து கொள்ளவேண்டும் என நினைக்கும் கேள்விகளே...அதையும் மீறி கடுப்பேற்றினால் சிரித்து விடுங்கள்..சிரியஸ் ஆகாதீர்கள்:

லொள்ளுவாத்தியார் :-

மனைவியிடம் அடி வாங்குதல் என்பது ஒரு சுகமான அனுபவம்...அந்த அடி மறக்க முடியாத படி இருக்கவும் கூடும் (விளையாட்டாக செல்லமாக அடித்தல் இந்த கணக்கில் சேராதுநிச்சயம்உங்களுக்கு அந்தஅனுபவம்இருக்கும்அதைப்பற்றி சொல்லுங்களேன்
(அப்படி ஏதும் இல்லை என நீங்கள்துண்டு போட்டு தாண்டினாலும்நான்நம்ப மாட்டேன் ஏனெனில் நானே வாங்கி இருக்கிறேன்...எனும் போது )

தீபன் :-
தமிழ் பல வட்டார பரிமாணங்களில் தன்னை புதுப்பித்துக்கொள்ளும்ஒருமொழி இதை விடுத்து ஒரு கேள்வி உங்களிடம் ..தமிழ்நாட்டுமக்கள்
பேசும் தமிழைநீங்கள்எப்படி பார்க்கிறீர்கள்...அதை ஒரு வட்டார
பாஷையாகவா? அல்லது மொழி கொலையாகவா?

அழகிய மணவாளன் :-

மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள்.....
ஆரம்ப காலத்தில் குருகுலகல்விதான் உலகமெங்கும் இருந்ததாக வரலாறு சொல்கிறதுஆனால் காலப்போக்கில் பள்ளி கல்லூரி என மாறி விட்டது...அதானால் உங்களிடம் வைக்கும் கேள்வி கல்வி கற்று முடியும் காலம் வரை மாணவனின் கல்வி மற்றும் ஒழுக்கம்யார் பொறுப்பு பெற்றேரா அல்லது ஆசிரியரா?? அதிக நேரம் அவர்கள் பள்ளி/கல்லூரிகளில் இருப்பதால் ஆசிரியர் தானே
பொறுப்பு....!!!!ஆனால் பெற்றோர்மேல் பல சமயங்களில் பழி வருவதேன்???

ராஜா அண்ணன் :-

உங்களிடம் கேள்வி ஏதும் இல்லை ஒரு பேட்டியின் ஒரு பகுதி உங்கள பார்வைக்கு அந்த வரிகள் உங்கள் கண்ணோட்டத்தில் எப்படி தெரிகிறது என
சொன்னால்போதும்
"ராத்திரி 2மணிக்கு ஏதேச்சையா ஏந்திரித்து பார்த்தால்அவர் வாய்முழுக்கவெற்றிலைசீவல்போட்டு குதப்பிக்கொண்டு ஒரு கையால்தலையை சொறிந்து கொண்டு இருப்பார் இன்னொறு கையின் நகத்தை கொடூரமாக கடித்துக்கொண்டு யோசித்துக்கொண்டு இருப்பார் அது போன்றபல சமயத்தில் நான் அவர் மேல் மிகவும் பாவப்பட்டது உண்டுசில சமயம் அழுதும் இருக்கிறேன் "
இந்த பேட்டி திருமதி க்ரேசி மோகனிடம் உங்கள் கணவரின் நகைச்சுவை எழுத்துக்கள் பற்றி கூறுங்கள் என கேட்ட போது அவர் சொன்னது .....

இதயம் :- நல்லவராக இருப்பது (அதாவது நம் மனசாட்சிப்படி) எளிதா ? கடினமா?
(உங்கள் அவதார் தான் இந்த கேள்வியை கேட்க தூண்டியது மிகச்சிறிய கேள்விதான் ஆனால் பதில்!!!!)

அகத்தியன் :-
பாரதி ஒரு அபூர்வ கவிஞன் ..பெருமாலும் இன்றையஅனைத்து கவிகளும் அவரின் வழித்தோன்றல்கள் தான் ஆனால் பாரதியிடம் இருந்த ஏதோ ஒன்று மற்றவர்களிடம் இல்லை என எனக்கு தோன்றுகிறது..அந்த ஒன்று கோபம் என நான் நினைக்கிறேன்..
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்...??

உதயசூரியன் :- திராவிடகட்சி அல்லாத ஒரு கட்சி வந்தால்தான் தமிழகம் உருப்படும் என அனேகம் பேர் பேசி நான் கேட்டு
இருக்கிறேன்...உங்களிடமும் யாரேனும் சொல்லி இருக்க கூடும்!! இந்த வாதத்தை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?
(தேசிய கட்சிகள் இருக்கும் பல மாநிலங்களை விட நாம் மிக
நன்றாகத்தான்இருக்கிறோம் என்பதை நான் அறிவேன்...நான் கேட்பது புள்ளி விபரம் அல்ல..உங்கள் அடி மனதின் பதில்)

ஷீ−நிசி :-

உங்கள் பெயர் என்னை மிகவும் கவர்ந்த பெயர்..பெயருக்கான காரணம்?

ஓவியா :-

எப்போபாத்தாலும் அதைப்படிக்கப்போறேன்..இதைப்படிக்கப்போறேன்னு
சொல்லுவீங்களே நீங்கள் இது வரை என்னென்ன படித்து இருக்கிறீர்கள் ?? (ஒரு பொது அறிவுக்காக கேட்கிறேன்)

இளசு அண்ணா :-
என் மருத்துவ நன்பர் "இந்த மாசம் ரொம்ப கஷ்டம் காருக்கு கூட டியூ கட்ட முடியாதுபோல இருக்கு ஏன்னா கேஸ் ஏதும் வரவே இல்லை என என்னிடம் சொல்லி வருந்தினால் நான் அவருக்காக வருத்தபடலாமா? அல்லது நல்லவேளை இந்த மாதம் மக்கள் அதிகம் நோய்வாய்படவில்லை என சந்தோசம் கொள்ளலாமா??

அடுத்த ஆ........பத்து எள் என்றால் எண்ணை
ஆலையே அழைத்து வரும் சுட்டிபையன்

அமரன்
13-08-2008, 11:58 AM
நல்ல கேள்விகள்.. நன்றி மொக்கைச்சாமி..

வாத்தியார் ஏற்கனவே கேள்வி கேட்டுட்டாரென்று நினைக்கின்றேன்..

வெற்றி
13-08-2008, 12:01 PM
நல்ல கேள்விகள்.. நன்றி மொக்கைச்சாமி..
வாத்தியார் ஏற்கனவே கேள்வி கேட்டுட்டாரென்று நினைக்கின்றேன்..

நன்றற திரு அமரன் அவர்களே அடுத்த ஆ.....பத்து சுட்டிபையன்

ராஜா
13-08-2008, 12:26 PM
ஆஹாஹாஹா...

மொக்கச்சாமி, கொக்கிச்சாமியா கேள்வி கேட்டுருக்காரப்போவ்..!

எல்லாமே எதிர்பார்ப்பைத் தூண்டும் கேள்விகள்..!

வாங்க மக்கா.. !

பாலகன்
13-08-2008, 12:56 PM
அழகிய மணவாளன் :-
அதானால் உங்களிடம் வைக்கும் கேள்வி கல்வி கற்று முடியும் காலம் வரை மாணவனின் கல்வி மற்றும் ஒழுக்கம்யார் பொறுப்பு பெற்றேரா அல்லது ஆசிரியரா?? அதிக நேரம் அவர்கள் பள்ளி/கல்லூரிகளில் இருப்பதால் ஆசிரியர் தானே
பொறுப்பு....!!!!ஆனால் பெற்றோர்மேல் பல சமயங்களில் பழி வருவதேன்???

ஓய் மொக்கை, நான் உம்மை கேள்வி கேட்டேங்கறதுக்காக அம்பை புடிச்சி திருப்பியும் எம்மேலேயே உட்டுப்புட்டீரே, ம் இதுக்கெல்லாம் அசருவோமா? யாருகிட்ட நம்ம கிட்டேயேவா?

உங்களிடம் வைக்கும் கேள்வி கல்வி கற்று முடியும் காலம் வரை மாணவனின் கல்வி மற்றும் ஒழுக்கம் யார் பொறுப்பு பெற்றேரா அல்லது ஆசிரியரா??

இதற்கு என்னுடைய பதில் - மாணவன் தான் பொறுப்பு, ஆம் ஒவ்வொரு மாணவனும் அவனவன் கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் தானே பொறுப்பு ஏற்கவேன்டும். தனது பொறுப்பை பெற்றவர்களிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ கொடுத்துவிட்டு எந்த ஒரு மாணவனும் முன்னுக்கு வரமுடியாது, ஆம் பொறுப்புள்ள மாணவனே, பிற்காலத்தில் நல்ல குடிமகனாகிறான். நல்ல குடிமகன்களால் மட்டுமே நல்ல சமுதாயத்தை தரமுடியும், பொறுப்பற்று ஊதாரியாக திரியும் மாணவர்கள் பற்றி அலசிப்பார்த்தோமேயானால் பெற்றவர்கள் கொடுக்கும் பாக்கெட் பணமும், அதீத அன்பும் ஆதரவுமே அவர்கள் பொறுப்பற்றவர்களாய் திரிய முக்கிய காரணமாய் சில நேரங்களில் அமைந்துவிடுகிறது. எனக்கு தெரிந்து என் பெற்றோர்கள் என் ஆசிரியரிடம் என்னை பற்றி சொல்லும் போது, இவனது ரென்டு கண்களை மட்டும் விட்டுவிடுங்கள், வேற எங்கே வேனும்னா அடியுங்க ஆனா இவன் படிச்சா போதும்ன்னு சொல்லுவாங்க.

சிறுவயதிலேயே தனது எதிர்காலத்தை பற்றிய கனவு ஒவ்வொரு மாணவனுக்கும் இருக்கவேன்டும், வளர்ந்து பெரியவனாக ஆகும் சூழலில் அவனது எதிர்கால கனவுகளை நனவாக்க அவன் பாடுபடவேன்டும். தன் வயிறு நிரம்ப வேன்டுமானால் நாம் தான் உணவை உண்ணவேன்டும், ஒரு குறிப்பிட்ட காலம்வரை தான் பெற்றவர்கள் ஊட்டுவார்கள். தன் வாழ்க்கையின் அடித்தளத்தை மற்றவரை நம்பி கட்டுபவனால் வாழ்வில் ஒருநாளும் முன்னேரவே முடியாது.

அதனால் மாணவர்கள் தங்கள் நிலையை உணர்ந்து நன்கு படித்து முன்னுக்கு வர பாடுபடவேன்டும்,,,

அதிக நேரம் அவர்கள் பள்ளி/கல்லூரிகளில் இருப்பதால் ஆசிரியர் தானே, பொறுப்பு....!!!!ஆனால் பெற்றோர்மேல் பல சமயங்களில் பழி வருவதேன்???

ஒவ்வொரு முறையும் மாணவனின் கல்வி தரம் குறையும் போதும், பெற்றவர்கள் ஆசிரியர்களை சாடுவதும், ஒழுக்கம் சீர்கெடும் வேளைகளில் பள்ளி நிர்வாகம் பெற்றவர்களை சாடுவதையும் நிறுத்திவிட்டு, அந்த மாணவனிடமே கவுன்சிலிங் முறையில் பேசி அவனது பலகீனங்களை கண்டு சரி செய்ய முன்வரவேன்டும்,, இன்று இது பல பள்ளிகளில் இன்று நடைமுறையில் உள்ளது. அதே வேளைகளில் பெற்றவர்கள் மாணவனது முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் வகையில் எந்நேரமும் அவனுக்கு சப்போர்ட்டாக செயல்படுவதை நிறுத்திவிட்டு, ஆசிரியர்களுடன் சேர்ந்து அவனது வளர்ச்சிக்காக பாடுபடவேன்டும்.

வெற்றி
13-08-2008, 01:16 PM
உங்களிடம் வைக்கும் கேள்வி கல்வி கற்று முடியும் காலம் வரை மாணவனின் கல்வி மற்றும் ஒழுக்கம் யார் பொறுப்பு பெற்றேரா அல்லது ஆசிரியரா??

இதற்கு என்னுடைய பதில் - மாணவன் தான் பொறுப்பு, ஆம் ஒவ்வொரு மாணவனும் அவனவன் கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் தானே பொறுப்பு ஏற்கவேன்டும். தனது பொறுப்பை பெற்றவர்களிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ கொடுத்துவிட்டு எந்த ஒரு மாணவனும் முன்னுக்கு வரமுடியாது, ஆம் பொறுப்புள்ள மாணவனே, பிற்காலத்தில் நல்ல குடிமகனாகிறான். நல்ல குடிமகன்களால் மட்டுமே நல்ல சமுதாயத்தை தரமுடியும்,

மிக நல்ல பதில் .பிறர் மேல் பழி போட்டு தப்பிச்செல்லும் என் போன்ற மாணவர்களுக்கு இந்த பதில் ஒரு சாட்டையடி...
தெளிந்தேன்...

அதிக நேரம் அவர்கள் பள்ளி/கல்லூரிகளில் இருப்பதால் ஆசிரியர் தானே, பொறுப்பு....!!!!ஆனால் பெற்றோர்மேல் பல சமயங்களில் பழி வருவதேன்???
ஒவ்வொரு முறையும் மாணவனின் கல்வி தரம் குறையும் போதும், பெற்றவர்கள் ஆசிரியர்களை சாடுவதும், ஒழுக்கம் சீர்கெடும் வேளைகளில் பள்ளி நிர்வாகம் பெற்றவர்களை சாடுவதையும் நிறுத்திவிட்டு, அந்த மாணவனிடமே கவுன்சிலிங் முறையில் பேசி அவனது பலகீனங்களை கண்டு சரி செய்ய முன்வரவேன்டும்,, இன்று இது பல பள்ளிகளில் இன்று நடைமுறையில் உள்ளது. அதே வேளைகளில் பெற்றவர்கள் மாணவனது முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் வகையில் எந்நேரமும் அவனுக்கு சப்போர்ட்டாக செயல்படுவதை நிறுத்திவிட்டு, ஆசிரியர்களுடன் சேர்ந்து அவனது வளர்ச்சிக்காக பாடுபடவேன்டும்.

இந்த பதில் அனைவருக்கும் பொதுவான சரியான விளக்கம்..இந்த உங்கள் விளக்கம் படித்த படிக்கப்போகும் ஒவ்வெறுவருக்கும் மிக மிக பயனுள்ளதாகவும் தங்களை ஒரு முறை ஒப்பிட்டு பார்க்கவும் திருத்திக்கொள்ளவும் நிச்சயம் உதவும் என நான் உறுதியாக நம்புகிறேன்

பாலகன்
13-08-2008, 01:33 PM
முதல்பாதியில் இன்னும் நிறைய சேர்த்திருக்கிறேன்,,, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதை அதிகபடுத்துகிறேன்..

பாலகன்
13-08-2008, 01:35 PM
மிக நல்ல பதில் .பிறர் மேல் பழி போட்டு தப்பிச்செல்லும் என் போன்ற மாணவர்களுக்கு இந்த பதில் ஒரு சாட்டையடி...
தெளிந்தேன்...

அய்யா சாமி இப்படி சொல்லிட்டா உங்க வயசு குறைஞ்சிடுமா? (எப்படியெல்லாம் வயசை குறைச்சி காட்டுறாங்கப்பா)

இந்த பதில் அனைவருக்கும் பொதுவான சரியான விளக்கம்..இந்த உங்கள் விளக்கம் படித்த படிக்கப்போகும் ஒவ்வெறுவருக்கும் மிக மிக பயனுள்ளதாகவும் தங்களை ஒரு முறை ஒப்பிட்டு பார்க்கவும் திருத்திக்கொள்ளவும் நிச்சயம் உதவும் என நான் உறுதியாக நம்புகிறேன்

மிக்க நன்றி நண்பரே

உதயசூரியன்
13-08-2008, 01:35 PM
[FONT="Arial Unicode MS"]
உதயசூரியன் :- திராவிடகட்சி அல்லாத ஒரு கட்சி வந்தால்தான் தமிழகம் உருப்படும் என அனேகம் பேர் பேசி நான் கேட்டு
இருக்கிறேன்...உங்களிடமும் யாரேனும் சொல்லி இருக்க கூடும்!! இந்த வாதத்தை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?
(தேசிய கட்சிகள் இருக்கும் பல மாநிலங்களை விட நாம் மிக
நன்றாகத்தான்இருக்கிறோம் என்பதை நான் அறிவேன்...நான் கேட்பது புள்ளி விபரம் அல்ல..உங்கள் அடி மனதின் பதில்)
[/COLOR][/B][/SIZE]

என்னால் தொடர்ந்து தளத்திற்கு வரமுடியாது.. எப்பொழுது வேண்டுமானாலும் தடை படலாம்..
அது போன்றதொரு சூழ்னிலையில் தான் பில்லா முன்னரே தெரிவித்ததனால் இத்திரியில் கலந்து கொண்டேன்...

இப்படி திடு திப்புன்னு புடிச்சி உள்ள தூக்கி போட்டா எப்படிண்ணே..
மொக்கை சாமி அண்ணே.. என்னையும் மதிச்சு கேள்வி கேட்ட உங்களுக்கு.. என்.. நன்றி..

நீங்கள் கேட்ட வற்றிற்கு காலம் தாழ்த்தாமல்.. உடனே பதில் தந்தும் விடுகிறேன்..

உங்கள் கேள்வியிலேயே.. என் பதிலையும் சொல்லி விட்டீர்கள்..
ஆம்... பல தேசிய கட்சிகளின் வளர்ச்சிகளை விட நம் தமிழ் நாட்டின் வளர்ச்சி அதிகம்..
அது தான் பதில்.. பொதுவான பதிலும் கூட..

இருந்தாலும்.. நீங்கள் கேட்ட உள் மனது பதில்..

திராவிட கட்சியில்லாமல் வரவேண்டும் என்று பொது மக்கள் யாரும் சொல்வதாக தெரிகிறதோ இல்லையோ.. சில கட்சிகள்.. இவ்விரு கட்சிகளையும் சாராதிருக்கும் நிலையில் பேட்டிகளில் சொல்வதுண்டு.. அது ஒரு அரசியல்.. சமாளிப்பு அவ்வளவே..

திராவிடம்.. தென்னிந்தியர்களை குறிப்பிடுவது.. இருந்த போதும்.. தற்போது.. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் மட்டும் தான் அவ்வார்த்தையை உபயோக படுத்துகிறது..
நம்மை சுற்றியிருக்கும் மூன்று சகோதர மானிலங்களை பெரும்பகுதி நேரம் ஆண்டதும்.. தேசிய கட்சிகளே..

அவர்களின் கீழ் தரமான அரசியலை மூன்று மானிலத்திலும் இருந்து நாம் தொடர்ந்து கண்டு வருகின்றோம்..
இன்னுங்கேட்டால்.. தேசிய கட்சிகளின் தேசியம் தவிக்க வாய்க்கு தண்ணி தராமல் தடை போட்டது தான் மிச்சம்..
இதனால் தான் எனக்கு இந்தியா மேல் வெறுப்பு வந்தது..

இங்கிருந்து குரல் கொடுக்கும்.. அக்கட்சியின் பிரதி நிதிகள் திராவிடர் அல்லாமல் யார்..

திராவிட கட்சிகளினால் தான் இத்தகைய எதிர்ப்புகளுக்கு இடையில்..தேவைகளை போராடி பெற்று தரமுடிந்தது...
நம்மை பார்த்து அவர்கள் மானிலத்தில் அத்தியாவசிய சேவைகளை பெருக்கினார்கள்.. என்பது நிதர்சன உண்மை..

அவர்களால் மட்டுமே.. தமிழக நலன்கள் பாது காக்க படும்..
மற்றவர்களும் தன் கட்சி பெரிய கட்சியாக வர வேன்டும் என்றால் திராவிட கட்சிகளை திட்ட வேண்டும் என்று.. கூப்பாடு இடுகிறார்கள்..

ஆங்கிலேய காலத்திலும் நமது நாடு நாணய நோட்டினில் தமிழை சேர்த்து 5 மொழிகளிலே..அச்சிட்டு வெளியிட்டனர்..
தேசியம் பேசிய கட்ச்சிகளுக்குள்.. தீண்டாமையை தவிடு பொடியாக்கியது.. திராவிட கட்சிகளின் வெற்றி..

இன்னும் சொல்லலாம்..

திராவிட கட்சிகள்.. உயிருள்ளா ஜீவன்கள்..
தேசிய கட்சியின் தலைமை.. டெல்லிகாரன்கள்
தமிழனை கீழே இறக்குவதில் தான் குறியாக இருப்பான்..
திராவிட மானில கட்சிகள்.. சுயமாக தனியாக.. தேவைகளை கேட்டு பெறும்..
அதுவும்.. தி.மு.க. ஆண்ட காலங்களில்.. மத்தியில் கூட்டாட்சி .. மானிலத்தில் சுயாட்ச்சி என்பதை நிறுவி.. அவர்களையும் வாழ வைத்து.. தமிழகத்திற்கு.. பல முதலீடுகளையும்.. உற்பத்தி நிலையங்களையும் கொண்டு வந்தனர்..

தேசிய கட்ச்சியாக இருந்திருந்தால்.. தலையில் தட்டி மூலையில் உட்கார சொல்லியிருக்கும் தலைமை...
அவ்வளவே..

இன்னும் ஒன்று திராவிட கட்சிகள்... தி.மு.க. மட்டுமே.. அல்லது அதனை சார்ந்துள்ள கட்சிகளே..ஏனென்றால்.. அ.தி.மு.க.வுக்கு அத்தகைய குற்ற சாட்டுக்களை.. கண்டு கொள்வதே இல்லை.. அதில் இருக்கும் இரண்டாம் தலைவர் முதல் உறுப்பினர் வரை.. யாரும்..கிளப்புகளில் வேலை செய்வது போல் இருக்கிறார்கள்..
உணர்வு பூர்வமான எந்த எதிர்ப்பும் அவர்கள் காட்ட மாட்டார்கள்.. காட்டவும் முடியாது
காட்டவும் தெரியாது..

ஏனெனில்.. அன்று எம்.ஜி.ஆருடன் பிரிந்து சென்றவர்கள் இல்லை இவர்கள்.. இவர்களுக்கும் தெரியும்.. பிழைப்புக்காக ஒரு திராவிட கட்சியில் ஒரு ஆரியரை தலைவரை வைத்துள்ளதும் முக்கிய காரணம்..

அதனால் தான்.. தி.க. மற்றும்.. தி.முக விற்கும் தான் பொருந்தும் என்ற நிலை பாடாகிவிட்டது..
அவர்கள் தான் பதிலும் அளிக்கின்றனர்...

அரசியல் சூடாக தான் இருக்கும்.. ஆனால் இதில் சூட்டை முடிந்த அளவு தவிர்த்திருக்கிறேன்..
கேள்வியிலேயே.. பதில் இருந்ததால்...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

பாலகன்
13-08-2008, 01:46 PM
என்னால் தொடர்ந்து தளத்திற்கு வரமுடியாது.. எப்பொழுது வேண்டுமானாலும் தடை படலாம்..
அது போன்றதொரு சூழ்னிலையில் தான் பில்லா முன்னரே தெரிவித்ததனால் இத்திரியில் கலந்து கொண்டேன்...

இப்படி திடு திப்புன்னு புடிச்சி உள்ள தூக்கி போட்டா எப்படிண்ணே..
மொக்கை சாமி அண்ணே.. என்னையும் மதிச்சு கேள்வி கேட்ட உங்களுக்கு.. என்.. நன்றி..

நீங்கள் கேட்ட வற்றிற்கு காலம் தாழ்த்தாமல்.. உடனே பதில் தந்தும் விடுகிறேன்..

உங்கள் கேள்வியிலேயே.. என் பதிலையும் சொல்லி விட்டீர்கள்..

அரசியல் சூடாக தான் இருக்கும்.. ஆனால் இதில் சூட்டை முடிந்த அளவு தவிர்த்திருக்கிறேன்..
கேள்வியிலேயே.. பதில் இருந்ததால்...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

கேள்வியிலேயே பதில் என்று சொல்லியே உங்கள் பதிலை சொன்னவிதம் மிக மிக அருமை சூரியரே,

திராவிடர்களுக்கு இருக்கும் ஒரே தொல்லையே தேசிய கட்சிகள் தான், ஒருவீட்டுக்கு ஒருவர் பலியாகலாம் என்ற கோட்பாடு உடையவர்கள், அதனால் தான் என்னவோ தமிழனை பலிகோடுத்து (விட்டார்கள்) கொடுத்துகொன்டிருக்கிறார்கள், இங்கே இருக்கும் அரைவேக்காடு தேசியம் பேசும் தேசிய தலைவர்களை நினைச்சாலே சிரிப்பு சிரிப்பா வருது.

அறிக்கை அரசியல் செய்யும் தலைவர்கள் மத்தியில் சொன்னதை தான் செய்யும் செய்வதை சொல்லும் இதயம் இன்னும் இருப்பது என்போன்றவர்களுக்கு மகிழ்ச்சியே

வாழ்க தமிழ்

வெற்றி
13-08-2008, 01:47 PM
இத்தனை கஷ்டத்தில் பதில் அளிக்க ஓடி வந்தமைக்கு மிக்க நன்றி....

அரசியல் சூடாக தான் இருக்கும்.. ஆனால் இதில் சூட்டை முடிந்த அளவு தவிர்த்திருக்கிறேன்..
கேள்வியிலேயே.. பதில் இருந்ததால்...
மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.....நீங்கள் அதிகம் கோபப்படாமல் பதில் அளித்தவிதம் ....

இங்கிருந்து குரல் கொடுக்கும்.. அக்கட்சியின் பிரதி நிதிகள் திராவிடர் அல்லாமல் யார்..
திராவிட கட்சிகளினால் தான் இத்தகைய எதிர்ப்புகளுக்கு இடையில்..தேவைகளை போராடி பெற்று தரமுடிந்தது...
நம்மை பார்த்து அவர்கள் மானிலத்தில் அத்தியாவசிய சேவைகளை பெருக்கினார்கள்.. என்பது நிதர்சன உண்மை..
அவர்களால் மட்டுமே.. தமிழக நலன்கள் பாது காக்க படும்..
மற்றவர்களும் தன் கட்சி பெரிய கட்சியாக வர வேன்டும் என்றால் திராவிட கட்சிகளை திட்ட வேண்டும் என்று.. கூப்பாடு இடுகிறார்கள்..

கேட்ட கேள்வியின் பதிலை இங்கேயே பெற்றேன்...மிக்க மகிழ்ச்சி..

திராவிட கட்சியில்லாமல் வரவேண்டும் என்று பொது மக்கள் யாரும் சொல்வதாக தெரிகிறதோ இல்லையோ.. சில கட்சிகள்.. இவ்விரு கட்சிகளையும் சாராதிருக்கும் நிலையில் பேட்டிகளில் சொல்வதுண்டு.. அது ஒரு அரசியல்.. சமாளிப்பு அவ்வளவே..

அப்படி போடுங்க அருவாளை...

ஷீ-நிசி
13-08-2008, 02:06 PM
ஷீ−நிசி :-

உங்கள் பெயர் என்னை மிகவும் கவர்ந்த பெயர்..பெயருக்கான காரணம்?

நான் ரகசியமா வச்சிருக்கறத நீங்க பொதுவில கேட்கறீங்களே! சரி பரவாயில்லை...

எனக்கு பிடித்த இருவரின் முதல் பெயர்கள்!

பாலகன்
13-08-2008, 02:47 PM
நான் ரகசியமா வச்சிருக்கறத நீங்க பொதுவில கேட்கறீங்களே! சரி பரவாயில்லை...

எனக்கு பிடித்த இருவரின் முதல் பெயர்கள்!

ரொம்ப சின்னதா இருந்தாலும் பரவாயில்லை, மறுக்காமல் சொன்னீங்களே.

அருமை

lolluvathiyar
13-08-2008, 03:00 PM
லொள்ளுவாத்தியார் :-
மனைவியிடம் அடி வாங்குதல் என்பது ஒரு சுகமான அனுபவம்...அந்த அடி மறக்க முடியாத படி இருக்கவும் கூடும் (விளையாட்டாக செல்லமாக அடித்தல் இந்த கணக்கில் சேராதுநிச்சயம்உங்களுக்கு அந்தஅனுபவம்இருக்கும்அதைப்பற்றி சொல்லுங்களேன்
(அப்படி ஏதும் இல்லை என நீங்கள்துண்டு போட்டு தாண்டினாலும்நான்நம்ப மாட்டேன் ஏனெனில் நானே வாங்கி இருக்கிறேன்...எனும் போது )

மொக்கசாமி இந்த கேள்வியை குறிப்பாக என்னிடம் தான் கேட்க வேன்டும் என்று எத்தனை நாள் திட்டம் போட்டிருந்தீர்கள்? இதுக்காவே காத்திருந்தது போல ஆபத்தில் கேட்டு வீட்டீர்கள். இது ஆபத்து கேள்வி அல்ல ஆப்பு கேள்வி என்றால் பொருத்தமாக இருக்கும்.

சரி சரி இந்த கேள்வியை என்னிடம் கேட்டது தான் சிறந்ததாக இருக்கும் ஏன்னா இந்த மன்றத்தில் மனைவியிடம் அதிகமா அடிவாங்கிய புன்னியவான் நான் ஒருவனாக தான் இருக்கும் ( நான் அடிவாங்காத இடமே இல்லை என்பது வேறு விசயம்)

அப்படி ஏதும் இல்லை என நீங்கள்துண்டு போட்டு தாண்டினாலும்நான்நம்ப மாட்டேன்

அப்படி நான் சொல்லவே மாட்டேன் அப்படி சொல்ல வாய்பே இல்லை. சொன்னா மன்றத்துல ஒருத்தரும் நம்பவே மாட்டாங்க.

ஏனெனில் நானே வாங்கி இருக்கிறேன்...எனும் போது

இது ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ரொம்ப ஓவர தெரியல. ம் என்ன பன்னறது உன்மையும் அதுதானே சம்சாரத்துகிட்ட அடிவாங்காத ஆள் யாராச்சும் ஒருத்தராவது இருப்பாங்களானு நானும் தேடி சலிச்சு போயிட்டேன். இன்னும் கிடைக்கல

விளையாட்டாக செல்லமாக அடித்தல் இந்த கணக்கில் சேராது

ஹிஹி நிஜமா அடிச்சதையே என்னால கனக்கு போட முடியல இதுல விளையாட்ட அடிச்சதை வேற கேக்கறீங்க.
(காத கிட்ட கொன்டு வாங்க உங்க கிட்ட மட்டும் ஒரு சீக்ரெட் உன்மையை சொல்கிறேன் என் மனைவி விளையாட்டா அடிக்கிற மாதிரி நிஜ கோபத்தை காட்டி அடி பின்னிருவாங்க, அப்புரம் ஓ ஓவர பட்டிருச்சா சொல்லி காயத்த அழுத்தி தேச்சு வேற விடுவாங்க. இத ரகசியமா வச்சுக்குங்க யார் கிட்டயும் சொல்லிறாதீங்க குறிப்பா பென் உருப்பினர்களிடம் மட்டும் சொல்லிறாதீங்க)

மனைவியிடம் அடி வாங்குதல் என்பது ஒரு சுகமான அனுபவம்

என்ன சுகமான அனுபவமா, என்ன மொக்கசாமி சொல்லறீங்க, ஓ உங்களுக்கு அனுபவம் குரைவு. இரவு தலையானையில் அடிவாங்குவது, சமயல் ரூமில் கரன்டியில் அடிவாங்குவது ஹாலில் டீவி ரிமோட் கன்ட்ரோலில் அடிவாங்குவது எதுவும் சிக்கலீனா கையாலேயே அடிவாங்குவது எல்லாம் சுகமான அனுபவங்களா. என் மனைவியை உங்க வீட்டுக்கு அனுப்பி வச்சு உங்க மனைவிக்கு டிரெயினிங் கொடுக்க சொல்றேன். அதுக்கு பிறகு சொல்லுங்க பாப்போம் சுகமான அனுபவமானு.

அந்த அடி மறக்க முடியாத படி இருக்கவும் கூடும் [/COLOR]

ஆமாம் இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் மறக்கவே முடியாது. எப்படி மறக்க முடியும் விழும்புன்களின் தழும்புகள் இருக்கும் போது மறக்க முடியுமா?

நிச்சயம்உங்களுக்கு அந்தஅனுபவம்இருக்கும்அதைப்பற்றி சொல்லுங்களேன்

எத்தனைய சொல்லறதுனுதான் தெரியல சரி ஒரு இதோ சில அனுபவங்கள் (எதுதெக்கு அடிவாங்கினேன் என்ற விசயங்களை கிளர வேண்டாம்)

முதல் அடிவாங்கிய வரலாறு
ஒருமுரை போர் நடந்து கொண்டு இருந்தது. இருபக்கமும் சொல்லம்புகள் பாய்ந்து கொண்டு இருந்தது, ஆரம்ப காலங்கலி சன்டை நடக்கும் போது நான் அவ்வபோது நிதானமாக கை நீட்டுவது வழக்கம் அப்படிதான் அன்னிக்கு கொஞ்ச கை நீட்டீட்டேன். இதோ மன்ற நேயர்களின் சந்தோசத்துகாக உரையாடலுடன் தருகிறேன்

திருமதி லொள்ளுவாத்தியார் : "என்னங்க தொட்டதுகெல்லா அடிக்கறீங்க"
லொள்ளுவாத்தியார் (கொஞ்சம் திமிருடன்) : "அப்படிதான்டி அடிப்பேன், என்னடி பன்னுவ" என்று சொல்லி இன்னும் ஒரு அடி அடித்து காட்டினேன்.
திருமதி லொள்ளுவாத்தியார் : " வேன்டாங்க சும்மா சும்மா அடிச்சீங்கன்னா நானும் திருப்பி அடிக்க வேன்டி வரும்"
லொள்ளுவாத்தியார் : "எங்க அடி பாக்கலாம்" என்று கையை ஓங்க என் கையை ஒரு இரும்பு கரம் தடுத்தது (என் மனைவியின் கரம் இரும்பு கரம் என்று அன்று தான் தெரிந்தது) ஒரே தள்ளு நான் கொஞ்சம் பின்னால போக வேன்டியாருச்சு. அப்புரம் மீன்டும் கையை பிடிச்சு ஒரு முருக்கு "ஐயோ அம்மா" என்று கத்தி முடிப்பதற்க்குள் தோல் பட்டையில் ஒரு குத்து பிறகு வயிற்றில் ஒரு குத்து. பிறகு வரிசையாக சில இடங்களில் குத்து விழுந்தது நான் அதர்ச்சியாகி விட்டேன். கொஞ்சம் நிலை குழைந்து விழுந்து விட்டேன். ஓடி வந்து என்னை எழுப்பி விட்டாள் "ஐயையோ என்னங்க எங்காவது அடி கிடி பட்டிருச்சா" என்று கேட்டாள். எதுக்கு ஒருவேலை விழவில்லை என்று தெரின்தால் மீண்டும் அடியை துவங்குவதற்காக இருக்குமோ என்று பயந்து "போதுமடி போதும் " என்று அடங்கி விட்டேன். அதன் பிறகு நாலு நாள் அவுங்ககிட்ட பேசவே இல்ல (பயம் தான்) அதன் பிறகு பல முரை அடிவாங்கி விட்டேன்.

அடிகடி அடிக்கறதா இருந்தா நேக்கு தெரிந்து தப்பிச்சுகலாம் ஆனா என்னுடை மன்புமிகு சம்சாரம் அவர்கள் (அடி வாங்கிய பிறகு இப்படிதானே அழைக்கனும்) எப்ப அடிப்பாங்கனு சொல்லவே முடியாது 6 மாசத்துக்கு ஒருக்கா தீடீர் அதிரடி தாக்குதல் நடத்திருவாங்க.

ஒருமுரை நடுராத்திரி வரை சொற்போர் நீடித்தது. "சரி போதும் இனி பேசாம தூங்குங்க" என்று சொன்னால் ஆனால் நான் தூங்காமல் கத்தி கொன்டே இருந்தேன். தலையானையை கையில் எடுத்தால் "குபீர்". பிறகு சைலன்ட்

ஒருமுரை நன்பர்களுடன் தன்னி அடித்து விட்டுக்கு லேட்டா வந்தேன் (எப்பவாச்சு நடக்கறதுதானுங்க) கதவு திறக்கபட்டது உள்ளே நுழைந்தேன், போய் லுங்கிக்கு மாறும் வரை எதுவும் பேசவில்லை. படுக்கையை நெருங்கியவுடன் "டமால் டமால் டமால்" பிறகு மடார் என்று ஒரே சத்தம் எல்லாம் 1000 ருபாய் செலவுது செய்து வந்த போதையும் முற்றிலும் இறங்கி விட்டது.

நான் என் மனைவியிடம் முதல் அடிவாங்கி புள்ளி விபரங்கள்

முதல் அடி : திருமனமான இரன்டாவது வருடத்தில்
பகலில் வாங்கிய அடிகளின் என்னிக்கை : குரைவுதான் ஏன்னா நான் பகலில் வீட்டில் இருப்பதில்லை
இரவில் வாங்கிய அடிகளின் என்னிக்கை : என்னிக்கை நினைவு இல்லை
ஒரே இரவில் வாங்கிய அடிகளின் என்னிக்கை : 8
அதிகபட்சமாக ஒரே வாரத்தில் வாங்கிய அடிகளின் என்னிக்கை : 3
குத்துமதிப்பாக உத்திரவாதமாக ஒரு வருடத்தில் வாங்கும் அடிகள் : 4
அடிவாங்கியதால் ஏற்பட்ட காயங்கள் : "எல்லாமே உள்காயங்கள் தான்"
அடிக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் : கை, சீமாறு (சீவகட்டைக்கு டீசன்டான பெயர்), தலையனை, நோட்டு புத்தகம், கரும்பு. இன்னும் பல ஆயுதங்கள்.

சம்சாரத்துகிட்ட அடிவாங்கரது ஒன்னும் கேவலமில்லீங்க, மனைவி என்பது நமக்கு தாய்போல. தப்பு செய்யாம இருக்க முடியுமா? ஆடி கறக்கற மாட்ட ஆடிதான் கறக்கனும் பாடி கறக்கற மாட்ட பாடிதான் கறக்கனும். அதுபோல அடிச்சு திருத்தர புருசனை அடிச்சுதானே திருத்தனும். அவ்வபோது அடி மூலம் தான் கனவன் மனைவி என்பவள் தங்களது உரிமையை நிலை நாட்டி கொள்வது. அடிக்கிற கைதானே அனைக்கும். குழந்தையின் கீரல்கள் தந்தைக்கு வலிக்காது, என் மனைவி எனக்கு குழந்தைதானே அவள் அடிகள் எனக்கு வலிக்காது. அடிவாங்கிய பிறகு எனக்கு அவள் மீது உள்ள காதல் அதிகரித்ததே தவிர குரையவில்லை.

என் மனைவியிடம் அடி வாங்கினேன், வாங்கி கொண்டு இருக்கிறேன், வாங்குவேன்

மன்றத்து உறவுகளுக்கு இன்று இன்பமான செய்திகளை தந்து விட்டேன் அனைவரும் சந்தோசத்தில் நாலு நாள் தூங்க மாட்டங்கனு நினைகிறேன்.

பென்ஸ்
13-08-2008, 03:10 PM
மன்றத்து உறவுகளுக்கு இன்று இன்பமான செய்திகளை தந்து விட்டேன் அனைவரும் சந்தோசத்தில் நாலு நாள் தூங்க மாட்டங்கனு நினைகிறேன்.

:D:D:D:D:D:D
:D:D:D:D:D:D

யவனிகா
13-08-2008, 03:12 PM
வாத்தியாரண்ணா...நெசந்தான? நம்பவே முடியலை...?

அண்ணிகிட்ட ட்யூசன் வரவா?

எத்தனை நாளைக்குத்தான் நல்ல புள்ளையாவே இருக்கிறது?

tamilkumar
13-08-2008, 03:13 PM
சம்சாரத்துகிட்ட அடிவாங்காத ஆள் யாராச்சும் ஒருத்தராவது இருப்பாங்களானு நானும் தேடி சலிச்சு போயிட்டேன். இன்னும் கிடைக்கல

வாத்தியாரே... நான் இருக்கிறேன் வாத்தியாரே.. ஏன்னா எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை.:)

சம்சாரத்துகிட்ட அடிவாங்கரது ஒன்னும் கேவலமில்லீங்க, மனைவி என்பது நமக்கு தாய்போல. தப்பு செய்யாம இருக்க முடியுமா? ஆடி கறக்கற மாட்ட ஆடிதான் கறக்கனும் பாடி கறக்கற மாட்ட பாடிதான் கறக்கனும். அதுபோல அடிச்சு திருத்தர புருசனை அடிச்சுதானே திருத்தனும். அவ்வபோது அடி மூலம் தான் கனவன் மனைவி என்பவள் தங்களது உரிமையை நிலை நாட்டி கொள்வது. அடிக்கிற கைதானே அனைக்கும். குழந்தையின் கீரல்கள் தந்தைக்கு வலிக்காது, என் மனைவி எனக்கு குழந்தைதானே அவள் அடிகள் எனக்கு வலிக்காது. அடிவாங்கிய பிறகு எனக்கு அவள் மீது உள்ள காதல் அதிகரித்ததே தவிர குரையவில்லை.

என் மனைவியிடம் அடி வாங்கினேன், வாங்கி கொண்டு இருக்கிறேன், வாங்குவேன்

மன்றத்து உறவுகளுக்கு இன்று இன்பமான செய்திகளை தந்து விட்டேன் அனைவரும் சந்தோசத்தில் நாலு நாள் தூங்க மாட்டங்கனு நினைகிறேன்.

இவ்வளவு புள்ளிவிபரத்தோட சொல்லி எங்களை எல்லாம் கலங்க வைச்சதும் இல்லாமல் கடைசியிலே வழக்கம்போல தத்துவத்தையும் எடுத்து விட்டுட்டிங்களே வாத்தி...

எப்படியோ அருமையான பதில் சொல்லி அசத்திட்டிங்க.................

தீபா
13-08-2008, 03:23 PM
(காத கிட்ட கொன்டு வாங்க உங்க கிட்ட மட்டும் ஒரு சீக்ரெட் உன்மையை சொல்கிறேன் என் மனைவி விளையாட்டா அடிக்கிற மாதிரி நிஜ கோபத்தை காட்டி அடி பின்னிருவாங்க, அப்புரம் ஓ ஓவர பட்டிருச்சா சொல்லி காயத்த அழுத்தி தேச்சு வேற விடுவாங்க. இத ரகசியமா வச்சுக்குங்க யார் கிட்டயும் சொல்லிறாதீங்க குறிப்பா பென் உருப்பினர்களிடம் மட்டும் சொல்லிறாதீங்க)

ஐ!! எனக்குத் தெரிஞ்சு போச்சே!!!! :D :D

தீபா
13-08-2008, 03:30 PM
சூப்பர் பதில் வாத்தியார் அண்ணா!! எதையும் மறைக்காமல் சொல்லும் உங்கள் பதில் அருமை.

ஓவியா
13-08-2008, 03:42 PM
அய்யோ நல்ல வாத்தியார் அண்ணா, உங்க பின்னூட்டத்தை படிசுட்டு போன் போட்டு ஒரு சின்ன கூட்டத்தை என் அறையில் கூட்டி,
வடை சாப்பிட்டுக்கொண்டே நாங்க கும்பலா உங்கள லூட்டியடிச்சு குபீர்-குபீர்னு சிரிக்கிறோம்.....
*********************************************************************************************************************************************************************

ஓவியா :-

எப்போபாத்தாலும் அதைப்படிக்கப்போறேன்..இதைப்படிக்கப்போறேன்னு
சொல்லுவீங்களே நீங்கள் இது வரை என்னென்ன படித்து இருக்கிறீர்கள் ?? (ஒரு பொது அறிவுக்காக கேட்கிறேன்)

கேள்விக்கு நன்றி மொக்கையண்ணா, பதிலுடன் நாளை வருவேன்.

ராஜா
13-08-2008, 06:28 PM
வாத்தியார் பதில் சூப்பர்..!

arun
13-08-2008, 06:39 PM
வாத்தியார்,அழகிய தமிழ்மகன்(பில்லா) உதய சூரியனின் பதில்கள் அருமை

ராஜா
13-08-2008, 06:41 PM
ராஜா அண்ணன் :-

உங்களிடம் கேள்வி ஏதும் இல்லை ஒரு பேட்டியின் ஒரு பகுதி உங்கள பார்வைக்கு அந்த வரிகள் உங்கள் கண்ணோட்டத்தில் எப்படி தெரிகிறது என சொன்னால்போதும்..

"ராத்திரி 2மணிக்கு ஏதேச்சையா ஏந்திரித்து பார்த்தால்அவர் வாய்முழுக்கவெற்றிலைசீவல்போட்டு குதப்பிக்கொண்டு ஒரு கையால்தலையை சொறிந்து கொண்டு இருப்பார் இன்னொறு கையின் நகத்தை கொடூரமாக கடித்துக்கொண்டு யோசித்துக்கொண்டு இருப்பார் அது போன்றபல சமயத்தில் நான் அவர் மேல் மிகவும் பாவப்பட்டது உண்டுசில சமயம் அழுதும் இருக்கிறேன் "

இந்த பேட்டி திருமதி க்ரேசி மோகனிடம் உங்கள் கணவரின் நகைச்சுவை எழுத்துக்கள் பற்றி கூறுங்கள் என கேட்ட போது அவர் சொன்னது .....

_________________________________________________________________

என்னப்பா இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டீங்க..? நான் யோசிக்கறதப் பார்த்து உங்க அண்ணியும் பாவப்பட்டுக்கிட்டு இருந்தாலும் இருப்பாங்க.

அந்த பேட்டியில கிரேசி யார் நகத்தைக் கடிக்கிறார்ன்னு சொல்லாம விட்டுட்டாங்களே.. இவங்க வேற அழுவேன்னு சொல்லியிருக்காங்க.. அப்படி கொடூரமா கடிக்கப்பட்ட நகம் யாருடையதோ..?

வெற்றிலை சீவல் போடுவார்ன்னு சொல்லியிருக்காங்க.. நம்ம ஏ.ஆர்.ஆர். சீவல் போடுவாரா.. இல்லே வேற சீவல் போடுவாரா..?

தலையைச் சொறிவது கூட பாவமா இருக்கும்ன்னு சொல்றாங்களே.. (அப்போ தினம் தினம் புருஷனுக்கு பேண் பார்க்க மாட்டாங்களா..?) , ஏதாவது தகராறில், பூரிக்கட்டையால் அடிச்சது வலிக்குதோ.. பாவம் வலி தாங்காம எழுந்து உக்காந்துட்டாரோன்னு வருத்தப்பட்டுருப்பாங்களோ..?

ஒரு கையால் தலையை சொறிஞ்சுகிட்டு, இன்னொரு கையில் நகத்தை கடிச்சுகிட்டே, வெற்றிலையையும் குதப்பிகிட்டு யோசிக்கிறாரே.. நல்ல ஐடியா கிடைச்சு, "ஆஹா"ன்னு கத்தினா.. வெற்றிலை சீவல் எச்சிலை "புளிச்"சுன்னு நம்ம மேல துப்பிடுவாரோன்னு பயந்து வருத்தப்பட்டுருப்பாங்களோ..?

ராத்திரி ரெண்டு மணிக்கு எழுந்து பார்த்திருக்காங்க.. இவர் தலையை சொறிஞ்சிருக்கார்.. அப்போ பரட்டைத் தலையா இருந்திருக்கும்.. வாயில் வெற்றிலை சீவல் வேறு.. அப்போ வாய் பூரா செக்கச் செவேல்ன்னு இருந்திருக்கும்.. ஏதோ பிசாசுன்னு நெனைச்சு அலறியிருப்பாங்களோ..?

யோசிக்கிறவர் மேல் பாவப்பட்டிருக்கேன்னு சொல்லியிருக்காங்களே.. யோசிக்கிறது அவ்வளவு பரிதாபமான செயலா..? இல்லே கிரேசி யோசிச்சா அவருக்கு உடம்புக்கு ஏதும் வந்துடப்போகுதுன்னு வருத்தப்பட்டுருப்பாங்களோ..?

ஐயோ.. என்னால முடியலப்பா.. ஏம்பா மொக்கை.. என்னைப் பார்த்தா உனக்கு பாவமாவே இல்லியா..? எனக்கு ஏம்பா இப்படி ஒரு கேள்வி கொடுத்தே..?

திரு. & திருமதி கிரேசியிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இதயம்
13-08-2008, 07:50 PM
இதயம் :- நல்லவராக இருப்பது (அதாவது நம் மனசாட்சிப்படி) எளிதா ? கடினமா?
(உங்கள் அவதார் தான் இந்த கேள்வியை கேட்க தூண்டியது மிகச்சிறிய கேள்விதான் ஆனால் பதில்!!!!)
ராஜா அண்ணன் என்னையும், உங்களையும் "நல்லவரு, வல்லவரு"-ன்னு சொன்னப்போ, அது உண்மையில் நானா, இல்ல..மொக்கையா..?-ன்னு ஒரு மொக்கை கேள்வி கேட்டதுக்கு என்னை, சக்கையாக்க நீங்க கேட்ட சதிகார கேள்வி தான் இது.! மோசம் பண்ணிட்டிங்களே மொக்கை..?!!

உங்கள் கேள்வியிலேயே பெரும் முரண் இருப்பதாக உணர்கிறேன் மொக்கை அவர்களே..! நான் அடிக்கடி மன்றத்தில் கிண்டலுக்காக என்னை நானே "ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவன்" என்று சொல்லிக்கொண்டதால் அதை உண்மை என்று நீங்கள் நம்பி, ஒரு நல்லவரிடம் கேட்கவேண்டிய கேள்வியை என்னிடம் கேட்டுவிட்டீர்கள். உங்களுக்கு ஒரு தகவல், நான் நல்லவனல்ல, நல்லவனாக இருக்க முயன்று கொண்டிருப்பவன்.!! இருந்தாலும் நல்லவன் என்பது இது வரை நான் போகாத ஊர் என்றாலும், அது நான் போய்ச்சேர நினைக்கும் ஊர் என்பதால் அது தொடர்பில் எனக்கு தெரிந்த சிலவற்றை இங்கே சொல்ல நினைக்கின்றேன்.

நல்லவர் என்பதற்கு மனசாட்சியின் உதவியுடன் ஒருவர் ஒழுக்கம், உண்மை, பொதுநலம், நேர்மை, நாணயம், கண்ணியம் உள்ளிட்ட உயர்ந்த பண்புகளை பேணுபவர் என்று நம்புகிறேன். நான் இதயம் என்பதை என் புனைப்பெயராகவும், அவதாராகவும் வைத்திருப்பதற்கான காரணத்தை என் அறிமுகத்திலேயே கொடுத்திருக்கின்றேன். அதைப்பார்க்காமல் இந்த கேள்வியை கேட்ட உங்களைப்பார்த்தால் பெரும் அப்பாவியாக தெரிகிறது. எது தொடர்பாகவும் "முடியுமா, முடியாதா..?" என்ற கேள்வி கேட்பதற்கு முன் "முடியும்" என்ற தரப்பில் கொஞ்சமேனும் வாய்ப்புகள் இருக்கவேண்டும் என்பதை உணர்ந்து நடுநிலையுடன் கேட்க வேண்டியது கேள்வியாளரின் கடமை. ஆனால் உங்கள் கேள்வியில் "ஒருவன் நல்லவனாக இருப்பது எளிது தான்" என்று சொல்வதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இருப்பதாக தோன்றவில்லை. ஊருக்கு நல்லவனாக இருப்பவனை விட மனசாட்சிப்படி நல்லவனாக இருப்பவர்கள் மட்டுமே என்னைப்பொருத்தவரை அக்மார்க் நல்லவர்கள். மற்றவர்களெல்லாம் "நல்லவர்" என்ற போர்வை போர்த்திய நல்லவ(கள்ள)ர்கள்..!!

"மனசாட்சிப்படி" என்ற வார்த்தை வருகிற போதே போலித்தனம், நடிப்பு என்பதெல்லாம் அடிபட்டு போகிறது. நான் மேற்சொன்ன பண்புகள் அவசியம் என்று வரும் பொழுது அதன் வெற்றி வாய்ப்பு சதவீதம் அதளபாதாளத்தை அடைகிறது. இக்காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் மற்றும் எல்லாவற்றிலும் ஒழுக்கம், உண்மை, நேர்மை, நாணயம், பொதுநலம் என்பதை எப்பொழுதும், எங்கும் ஒருவன் பின்பற்ற முடியுமா..? அப்படி பின்பற்றினால் இந்த சமூகம் அவனை பிழைக்க விடுமா.? நிச்சயம் முடியாது. அது அவனின் இயல்பான வாழ்க்கையை சிதைத்து சின்னாபின்னப்படுத்தி விடும். உலகில் இருக்கும் எத்தனை நல்லவனும் பல சந்தர்ப்பங்களில் தன் நல்லவனுக்கான கொள்கையை துறந்து, மேற்சொன்ன உயர் பண்புகளை மறந்து சில செயல்களை சில முறையேனும் செய்ய வேண்டி வருகிறது. அந்த வகையில் மனசாட்சிப்படி ஒருவன் முழுமையாக நல்லவனாக இருப்பது என்பது கடினம் என்பதை விட முடியாத காரியம் என்பது தான் உண்மை. வேண்டுமானால் கொஞ்சம் நல்லவன் என்று சொல்லிக்கொள்ளலாம்..!! அந்த "கொஞ்சம் நல்லவர்கள்" தான் நம் தேசத்தில் "நல்லவர்கள்" என்று போற்றப்படுகிறார்கள்..!!

தீபன்
14-08-2008, 01:36 AM
தீபன் :-
தமிழ் பல வட்டார பரிமாணங்களில் தன்னை புதுப்பித்துக்கொள்ளும்ஒருமொழி இதை விடுத்து ஒரு கேள்வி உங்களிடம் ..தமிழ்நாட்டுமக்கள்
பேசும் தமிழைநீங்கள்எப்படி பார்க்கிறீர்கள்...அதை ஒரு வட்டார
பாஷையாகவா? அல்லது மொழி கொலையாகவா?

என்னை எதுக்கு இந்த கேள்விக்கு தெரிவு செய்தீர்களென புரியவில்லை. மொழிகளின் தன்மையை ஆய்ந்து பதிலளிக்கும் அளவுக்கெனக்கு ஆழ்ந்த புலமையில்லை. ஆனாலும் ஒரு பாமரனின் பார்ர்வையில் உங்கள் கேள்விக்கு விடைதர முயல்கிறேன்.

தமிழ் நாட்டு தமிழை வட்டார தமிழாக சொல்ல முடியாது. ஏனெனில், தமிழ் நாட்டுக்குள்ளேயே பல வட்டார வளக்குகள் உள்ளன. அதில் தவறிருப்பதாக எனக்கு படவில்லை. அது காலப்போக்கில் ஏற்படும் இயல்பான, தேவையான மாற்றமும்கூட. இல்லாவிட்டால் நாம் இன்றும் தொல்காப்பிய தமிழை பேசிக்கொண்டிருந்தால் பிறமொழிக்காரர்கள் எம்மை வேற்றுகிரகவாசிகளென எண்ணி மிரண்டுகொண்டிடுப்பர்.

ஆனால், தமிழ்நாட்டில் வட்டாரவழக்குகளாக மாறியது மட்டுமல்லாமல் பாசன், ஸ்ரைல் என்ற பெயரில் தமிழ் அனாவசியமாக சிதைக்கப்படுகிறது. தேவையான மாற்றங்களுக்கு மேலதிகமாக தேவையற்ற திரிபுகளும் உள்வாங்கப்படுகிறது. இது அப்பட்டமான தமிழ் கொலையே.

சரியான தமிழில் கதைத்தால் புரிந்து கொள்ள முடியாதிருப்பதானது தமிழ் தெரியாதென்பதைதானே குறிக்கும். அப்படி தமிழ் தெரியாதவர்களால் பயன்படுத்தபடும் தமிழ் வட்டாரவழக்குகளாகவா இருக்க முடியும்? எனவே நிச்சயமாக தமிழ் கொலைதான்.
(வட்டார வழக்குகளாயிருப்பின் ஏனைய வட்டார வழக்கு தமிழையும் புரிந்துகொள்ளமுடியும். ஏனெனில், எல்லா வட்டாரவழக்கிலும் அடிப்படை தமிழ் மாறாது.)

ஆங்கில கலப்பு, பிற திராவிட மொழிக்கலப்பு, வடமொழிக் கலப்பு என தமிழரிடையே தமிழின் சதவீதம் வெகுவாக குறைந்து விட்டது. (அதிலும், மேட்ராஸ் பாசை எனப்படும் சென்னைத்தமிழைவிட பிற மொழிகளான தெலுங்கு, மலையாளம் போன்றவை அதிகமாக தமிழோடு ஒத்துப்போவதுபோலிருக்கிறது.)

இதுதமிழ்நாட்டில் மட்டும்தான் நடக்கிறதென்றில்லை. ஆனாலும் தமிழரிடையே இந்த தமிழ்கொலை ஏற்பட பிரதான காரணி தமிழ்நாடே. தமிழக திரைப்படங்கள், தொடர் நாடகங்கள், பத்திரிகைகள் உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் அதனால் ஒட்டுமொத்த தமிழரிடையே, தமிழ் மொழியினிடையே இருக்கும் தன்செல்வாக்கை உணர்ந்து பொறுப்புடன் செயற்பட வேண்டியது தமிழ்நாட்டின் கடமை.

என் பார்வையில் என கேட்டதால் சொன்னேன். மற்றப்படி, இதிலுள்ள சரி, பிழைகளை மன்றப் பெரியோர்கள்தான் சொல்ல வேண்டும்.

நன்றி.

ராஜா
14-08-2008, 03:57 AM
"மனசாட்சிப்படி" என்ற வார்த்தை வருகிற போதே போலித்தனம், நடிப்பு என்பதெல்லாம் அடிபட்டு போகிறது. நான் மேற்சொன்ன பண்புகள் அவசியம் என்று வரும் பொழுது அதன் வெற்றி வாய்ப்பு சதவீதம் அதளபாதாளத்தை அடைகிறது. இக்காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் மற்றும் எல்லாவற்றிலும் ஒழுக்கம், உண்மை, நேர்மை, நாணயம், பொதுநலம் என்பதை எப்பொழுதும், எங்கும் ஒருவன் பின்பற்ற முடியுமா..? அப்படி பின்பற்றினால் இந்த சமூகம் அவனை பிழைக்க விடுமா.? நிச்சயம் முடியாது. அது அவனின் இயல்பான வாழ்க்கையை சிதைத்து சின்னாபின்னப்படுத்தி விடும். உலகில் இருக்கும் எத்தனை நல்லவனும் பல சந்தர்ப்பங்களில் தன் நல்லவனுக்கான கொள்கையை துறந்து, மேற்சொன்ன உயர் பண்புகளை மறந்து சில செயல்களை சில முறையேனும் செய்ய வேண்டி வருகிறது. அந்த வகையில் மனசாட்சிப்படி ஒருவன் முழுமையாக நல்லவனாக இருப்பது என்பது கடினம் என்பதை விட முடியாத காரியம் என்பது தான் உண்மை. வேண்டுமானால் கொஞ்சம் நல்லவன் என்று சொல்லிக்கொள்ளலாம்..!! அந்த "கொஞ்சம் நல்லவர்கள்" தான் நம் தேசத்தில் "நல்லவர்கள்" என்று போற்றப்படுகிறார்கள்..!!

ஒரு அண்ணன் என்னும் முறையில் எண்ணி பெருமைப்படக்கூடிய பதில்..! அன்புத்தம்பியிடமிருந்து...!!

ஒப்புக்காகவோ, அல்லது மற்றவர்களைக் கவர்வதற்காகவோ, வேறுமாதிரி சொல்லாமல், நிதர்சனம் ஒளிரும் தீர்க்கமான பதில்..!

நல்லதொரு விளக்கம் அறிய உதவிய மொக்கச்சாவின் கேள்விக்கும் நன்றி..!

சிவா.ஜி
14-08-2008, 04:45 AM
வாத்தியாரின் ஒளிவுமறைவில்லாத ஓப்பன் பதில் டாப். சரியான நபரிடம், சரியான கேள்வி கேட்டு எங்களை சந்தோஷத்தில்(பின்ன ஒரு வாத்தியாரே அடிவாங்குவதை கேட்டு எப்படி சந்தோஷப்படாமல் இருக்கமுடியும்?)ஆழ்த்திய மொக்கைக்கு நன்றி. சூப்பர் வாத்தியாரே...!!!

சுகந்தப்ரீதன்
14-08-2008, 05:29 AM
வீட்டுல எலி வெளியில புலிங்கறதை ஒத்துக்கிட்ட எங்க வாத்தியாருக்கு ஒரு ஓ போடுங்கோ மாக்கா.......!!:sprachlos020:

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ:icon_rollout::icon_rollout::icon_rollout:

lolluvathiyar
14-08-2008, 05:48 AM
ஒருவன் முழுமையாக நல்லவனாக இருப்பது என்பது கடினம் என்பதை விட முடியாத காரியம் என்பது தான் உண்மை.

ஐயோ ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவர் இதயம் அவர்களே இப்படி சொல்லலாமா? நல்லவனாக இருக்க முடியாதா. முடியும் கன்டிப்பாக ஒருவன் என்னை போல ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவனாக இருக்க முடியும்.
எப்படி என்று கேட்கும் முன்பு, நல்லவனாக இருக்க முடியாது என்பதுக்கு என்ன காரனம் என்றால் நல்லவன் என்றால் அதுக்கு நீங்கள் சொன்ன விளக்கம் தான்

நல்லவர் என்பதற்கு மனசாட்சியின் உதவியுடன் ஒருவர் ஒழுக்கம், உண்மை, பொதுநலம், நேர்மை, நாணயம், கண்ணியம்

இத்தனை கடினமான காரியத்தை சொல்லி இதை கடைபிடித்தால் தான் நல்லவனாக இருக்க முடியும் என்றால் பிறகு எப்படி ஒருவன் நல்லவனாக இருக்க முடியும். முடியவே முடியாது.

என்னை பொருத்தவரை நல்லவன் என்பதற்க்கு ஒரே விளக்கம் இருந்தால் போது யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாமல் வாழ வேன்டும். இந்த ஒரு பன்பை மட்டுமே பின்பற்றினால் நாம் அனைவருமே ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவர்கள்.

நானே ரொம்ப நல்லவனாகும் இதயம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரே.

இளசு
14-08-2008, 06:24 AM
இதயத்தின் யதார்த்தமான பதில்
வாத்தியாரின் முதுகு உரிந்த மன்னிக்கவும் மனம் திறந்த பதில்
அழகிய மணவாளனின் ''ஐடியல் ''பதில் ( பக்குவம் வரும் வயது வரை - பிள்ளைகளுக்கு ஒழுக்கம் என்பதன் விளக்கம் மனதில் படியும் வரை - அதற்கு எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டியவர்கள் சுற்றி இருக்கும் அனைவருமே)
ராஜா அவர்களின் சுவைச்சீவல் பதில்..

--- வரவழைத்த மொக்கைச்சாமிக்குப் பாராட்டுகள்!

இளசு
14-08-2008, 06:37 AM
[FONT="Arial Unicode MS"]
இளசு அண்ணா :-
என் மருத்துவ நண்பர் "இந்த மாசம் ரொம்பக் கஷ்டம்! காருக்குக் கூட டியூ கட்ட முடியாதுபோல இருக்கு ஏன்னா கேஸ் ஏதும் வரவே இல்லை என என்னிடம் சொல்லி வருந்தினால் நான் அவருக்காக வருத்தப்படலாமா? அல்லது நல்லவேளை இந்த மாதம் மக்கள் அதிகம் நோய்வாய்ப்படவில்லை என சந்தோசம் கொள்ளலாமா?

தர்மசங்கடம்னா இதுதான் மொக்கை!

பல வழிகள் தோன்றுகின்றன -

1) போட்டி கிளினிக் தொடங்கிக் கூட்டத்தை இழுத்தவர் போலி டாக்டர் எனப் புரளி கிளப்பலாம்..

2) வரும் மாதம் - ஒரு நோயாளி வந்தால், இன்னொரு நோயாளிக்கான சிகிச்சை இலவசம் என அறிவிக்கலாம்.

3) நண்பருக்கு நீங்கள் ஒரு பட்டை Zantac பரிசளிக்கலாம்..

4) எந்நேரமும் ''டென்ஷன்'' - டென்ஷன் குறைக்க டி.வி.. டி.வி பார்க்கும்போது நொறுக்ஸ்..
துரித உணவு..துரிதப் பணம்.. பெரும்பணம்..
மன உளைச்சல் விஷயங்களை மட்டும் மாடுகள் போல் மறுபடி மறுபடி விழுங்கி, உமிழ்ந்து அசைபோடும் மனப்பாங்கு ( Rumination)-
நம் மக்கள் இப்படி இருக்கையில் நோய்கள் குறைவது நிரந்தரமா என்ன?

டியூ கட்ட மட்டுமல்ல, பெட்ரோல் போடும் அளவுக்கே வருமானம் வரும்..கலங்காதே என அவரைத் தேற்றலாம்.

ஓவியா
14-08-2008, 11:25 AM
ஓவியா :-

எப்போபாத்தாலும் அதைப்படிக்கப்போறேன்..இதைப்படிக்கப்போறேன்னு
சொல்லுவீங்களே நீங்கள் இது வரை என்னென்ன படித்து இருக்கிறீர்கள் ?? (ஒரு பொது அறிவுக்காக கேட்கிறேன்)

உங்களின் கேள்வி-பதில் தேர்வாளர்களில் என்னையும் இணைத்ததற்க்கு மிக்க நன்றி அண்ணா.

மிகவும் சுலபமான கேள்வியா இருக்கே!! :)

கடந்த இரண்டு வருடங்களாக நான் அதிகம் படித்தது தமிழ் மொழிதான் அதுவும் மன்றத்து பதிவுகள்தான்.

(இங்கு உருப்பினராகும் பொழுது என்னுடைய முதுகலை பட்டப்படிப்பினை படித்துக்கொண்டிருந்தேன், ஒரு வேலை அதுதான் பரிட்சை...பரிட்சைனு ஓடியிருப்பேன்)

இது வரை என்னென்ன
வாழ்வு சிறக்க ஓரளவு கல்வி பயின்றுள்ளேன். எத்தனை பட்டம் என்று சொல்ல விரும்பவில்லை. (மன்னிக்கவும், அது நானே தம்பட்டம் அடிப்பதாகி விடும்.) என்னுடைய அனைத்து பட்டப்படிப்பும் (சான்றிதழ்களும்) இங்கிலாந்து பல்கலைகலகங்களை சேர்ந்ததுதான். ஜப்பான் அரசாங்கம் வழங்கிய உயர்ந்த சான்றிதழ் ஒன்று. மலேசிய அரசாங்கம் கொடுத்த சான்றிதழ்கள் பல. இளைஞர் /மகளிர்/ பொதுநல சேவையென அரசாங்கம் மற்றும் அரசாங்க சார்பற்ற மேம்ப்பாடு வழிகள் என, பயிற்சி பட்டரைகளில் வாங்கியது மட்டும் ஒரு 40 சான்றிதழ்கள் இருக்கும். நாட்டியத்திற்க்காக சில.

அடுத்த படிப்பு பீ.எச்.டிதான் அதுவும் இன்னும் 10 ஆண்டுகள் சென்றபிந்தான் தொடருவேன். :lachen001:

கடந்த இரண்டு வருடமாக மனிதர்களும் அவர்களில் செய்ககைகளையும் நிரைய கற்று வருகிறேன். அப்படியே வாழ்க்கை என்னும் படிப்பினையும் நன்கு கற்று வருகிறேன், அவ்வளோதான்.

இனி
குடும்ப கல்வியை தொடர ஆவலாய் உள்ளேன். (:D:D:D அட உண்மையை சொல்லறேனுங்க. :redface::redface: வயசு ஆகுதில்லே)

வாய்ப்பிற்க்கு நன்றி மொக்க அண்ணா.

வணக்கம்

தீபா
14-08-2008, 12:01 PM
டியூ கட்ட மட்டுமல்ல, பெட்ரோல் போடும் அளவுக்கே வருமானம் வரும்..கலங்காதே என அவரைத் தேற்றலாம்.

இதிலிருந்து அண்ணனுக்கு ஓவர் இன்கம்னு தெரியுது!!!! :D

அகத்தியன்
14-08-2008, 01:05 PM
நன்றி மொக்கை என்னை மீண்டும் ஆ10 இல் இழுத்துவிட்டமைக்காக. அதுவும் என் மானசீக கவிஞன் பாரதி பற்றி என்னிடம் கேட்டமைக்காக விஷேட நன்றி.

உண்மைதான் உங்கல் கேள்வயில் உள்ள யதார்த்தம் எல்லோரையும் சுடும். கவிஞன்/ கலைஞன் என்பவன்,

"பிறர் கண்ணீரை தன் கண்களில் வடிப்பவன்"

என யாரோ சொன்ன ஒன்று எனக்கு நினைவு வருகின்றது. எவ்வளவு உண்மையான வார்த்தை அது. அம்மனப்பாங்கு உள்ள ஒருவந்தான் மனிதம் பற்றி பேசும் தகுதி கொண்டவன், அவனிடம்தான் உண்மையான நெஞ்சுரம் காணப்படும். அது பாரதியிடம் இருந்தது. அவன் ஒரு யுகக் கவிஞன், காலத்தை வென்றவன். நெஞ்சினை உரம் கொள்ளச்செய்யும் பாடல்கள் அவனது மனிதத்தினை எங்கும் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன.

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்,
அதை அங்கொரு காட்டிடை பொந்திலே வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட...தத்தரிகிட.தித்தோம்"

என ஆனந்த கூத்தாடும் பாரதி.. தனது கவியின் மூலம் தழலினை எதற்கெல்லாமோ குறியீடாக்கிச்செல்கின்றான்.

இன்றைய மனிதர்களின் நிலையினை, எந்தவொரு சமரசத்திற்குள்ளும் அகப்படாமல் போட்டுடைப்பதில் அவனுக்கு நிகர் அவனேதான்.

"நெஞ்சு பொறுக்குதில்லையே-இந்த
நிலைகெட்ட மானிடரை நினைந்து விட்டால்
அஞ்சி அஞ்சி சாவார் -
இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே

வஞ்சனை பேய்கள் என்பார்
அந்த மரத்தில் என்பார்.
இந்த குளத்தில் என்பார்,
கோயில் முகட்டில் துஞ்சுது என்பார்........"

என செல்கிறது அவனது கவிதை- ஒவ்வொரு மனிதன் பற்றிய கணிப்பீடுகளுடனும் அவனது பயங்கள் பற்றிய விமர்சனங்களுடனும்.. உண்மையில் அவன் பயம் என்பதற்கு வேலியில் நின்று பார்த்ததன் விளைவே இதை எழுத இயன்றதாக இருக்கும் என்பது என் அனுமானம்.

இன்றையவர்கள் எழுதுகின்றனர். ஆனால் அவர்கள் கைகள் எதற்காகவாவது ஒன்றிற்காக கட்டப்பட்டிருக்கும். அது பொருளாதாரமோ இல்லை கொள்கைகளோ எதுவோ.... அதனால், இன்றுள்ளவர்களிடம் அதனை காண இயலாமல் இருக்கின்றது.

இது சரியா? தவறா என்பது மற்றொரு விவாதப்பொருள். அதனை பற்றி இன்னொருவர் கேள்விக்கு விட்டுவிடுவோம்.
பாரதியிடம் இருந்த ரௌத்திரம் எந்தக்கவிஞனிடமும் இருந்திருக்காது என்பதே என் திண்ணமான எண்ணம். அப்படியில்லாவிட்டால்,

"காலா வாடா உன்னை காலால் மிதிக்கிறேன்" என காலனையே சவாலுக்கு அழைத்திருப்பானா?

உலமனதில் சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவனும் கோபம் கொள்ள கூடியவந்தான். ஆனால் இன்று அது மனிதன் வகுத்துள்ள பலவரையறைகளின் காரணமாக அது மறைக்கப்ப்பட்டு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிரந்தரமாக தூங்கவைக்கப்பட்டுள்ளது. ஆனால் பாரதி அதனை முறையாக பயன்படுத்தினான். கவிதைகளினை ஆயுதமாக்கின்னான்; தன் கோபங்களினை வார்த்தைகளாஇ கொணர்ந்தான். அதுவே இன்றும் கன்ன்று கொண்டு இருக்கின்றது.

"என் பாட்டுத்திறத்தாலே இந்த பரினையே பாலித்திட வெண்டும்"

என்று கனவு கண்டவன் பாரதி. அவனது கனவு உண்மையாகிப்போனது. அதற்கு காரணமும் அவனது ரௌத்திரம் தான். உம்மையும் எம்மையும் நோக்கி அவன் சொல்கின்றான்.

"தேடிச்சோஒறு நிதம் தின்று,
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி,
மனம் வாட பல பணிகள் புரிந்து,
நரை கூடி கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையென பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப்போல் நான் வீழ்வென நினைத்தாயோ??"

என்ற வன் கேழ்வியில் எத்தனை பேரின் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தினை சொல்லிச்செல்கின்றான். இதற்கு ஒரு ஓருமை தேவை. அது அவனுக்கு மட்டுமே வாய்த்த ஒன்று.

இன்றைய இளைஞர்கள் எழுத முனைகின்றனர். ஆனால் அவர்களின் கவனம் எதையாவது ஒன்ரினை பின்பற்றி மட்டுமே செல்கின்றது என்பது எனது தாழ்மையன எண்ணம். எனக்கு எதுவும் ஆகாதவரை நான் எதிலும் ஈடுபடுவதில்லை என்ற மனநிலை இன்று பெருகிவிட்டது.

இதனோடு, இன்றைய தமிழ் இலக்கிய உலகில் நான் காணும் இன்னொரு பண்பு எதையும் வித்தியாசப்படுத்த முனைவது, இதன் மூலம் எதிர்பார்ப்பது ஒரு கவன ஈர்ப்பு தவிர வேறொன்றுமில்ல. நான் இங்கு கூற வந்த வித்தியாசப்படுத்தல்-- தேவையற்ற சில குப்பை இலக்கியங்கள் பற்றி கூறுகின்றேன். ஆரோக்கியமான புதிது புனைதல்கள் வரவெற்கப்படக்கூடியதே.

இவைகளிலே இன்றைய எழுத்தாளர்களின் கவனங்கள் செல்கின்றன.

இப்படி பலப்பல காரணிகளினால் இன்றையவர்களிடம் பாரதியிடம் கண்ட ரௌத்திரம் இல்லாமல் இருக்கின்றது. அவன் பின் வந்தவர்களிடமும் அது இருந்திருந்தால் நாமும் நம் சமூகமும் என்றோ எழுந்திருக்கும்.

அது இனிவருமா என்று கேட்டால்......

ராஜா
14-08-2008, 01:11 PM
பாசமலர் 2007 ......

வாழ்க்கையைப் படிக்கிறேன் என்று சொன்ன நாட்டியப் பேரொளிக்கு வாழ்த்துகள்..!

நல்லதொரு துணை அமைய திருமலை தெய்வம் அருள் தரும்.

சீக்கிரம் மருமக்களை காணும் ஆசையில்..

அண்ணா..!

ராஜா
14-08-2008, 01:24 PM
அகத்தியனின் பதிலில் பாரதியின் முழுப்பரிமாணத்தையும் நான் அறிந்தேன். யாருக்காகவும், எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளாமல், தன்னெஞ்சறிவது பொய்யற்க என பாரதி பாடிவைத்த* கவிதைகள் காலத்தை விஞ்சி நிற்கும் சூத்திரத்தை கணக்காய்ச் சொன்ன அகத்தியருக்கு நன்றி..!

ஷீ-நிசி
14-08-2008, 02:45 PM
வாத்தியின் அடி வாங்கும் படலம்... சிரிப்பை வரவழைத்தன!

யவனிகா
14-08-2008, 04:12 PM
ஓவியா...அகத்தியனின் பதில்கள்...ஓவியா பட் படீர் வெளிப்படையாகப் பேசுபவர்.
பெரிய படிப்பாளி போல...நல்ல பதில் தோழி. அகத்தியரின் ரௌத்திரம் பழகு...பாத்து பழகவேண்டும் போல...கனல் தெரிக்கிறது.

பூமகள்
14-08-2008, 05:41 PM
அழகிய மணாளரின் பதில் மிகச் சரியான பாடம்..!!
பாராட்டுகள் பில்லாண்ணா. :)

லொள்ளுவாத்தியாரின் பதிலில்
வாத்தியாரின் பிரம்பு.. யார் கையிலென்று விளங்கியது..!! :D:D

மனம் திறந்த பதிலால் வீட்டில் இன்னும் இரண்டு பொதி மாத்து வாங்காமல் இருக்க வேண்டிக்கொள்கிறேன் வாத்தியார் அண்ணா..

ஏன் அண்ணா... அண்ணி மன்றம் பக்கம் வர மாட்டாங்களா??

ஆனாலும் கடைசியில் சொன்ன கருத்து அற்புதம்.. கலக்கிட்டீங்க..!! :)

மற்ற பதில்களை இன்னும் படிக்கலை..
படித்துவிட்டு விமர்சிக்கிறேன்..

நல்ல கேள்விகள் கேட்ட மொக்க சாமி அண்ணாவுக்கு பாராட்டுகள்..!!

Keelai Naadaan
15-08-2008, 06:19 AM
"பிறர் கண்ணீரை தன் கண்களில் வடிப்பவன்"

இன்றைய மனிதர்களின் நிலையினை, எந்தவொரு சமரசத்திற்குள்ளும் அகப்படாமல் போட்டுடைப்பதில் அவனுக்கு நிகர் அவனேதான்.

இப்படி பலப்பல காரணிகளினால் இன்றையவர்களிடம் பாரதியிடம் கண்ட ரௌத்திரம் இல்லாமல் இருக்கின்றது. அவன் பின் வந்தவர்களிடமும் அது இருந்திருந்தால் நாமும் நம் சமூகமும் என்றோ எழுந்திருக்கும்.
நன்றிகள். பாராட்டுக்கள் அகத்தியன்.
பாரதியைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் பிற கவிஞர்களிடமிருந்து வேறுபட்டுள்ள அவருடைய சிறப்பை தெளிவாய் சொல்கிறது. சுதந்திரம் வாங்கும் முன்னரே

"ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று"

என்றும், பெண்பிள்ளைகளை மேல்படிப்புக்கு கல்விநிலையத்தில் சேர்க்க மறுத்த காலத்தில் தன் மகளையும் சேர்க்க முடியாத நிலையிலேயே

"ஏட்டையும் பெண்கள் தொடுவது தீதென்று
எண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்"

என எதிர்கால நிகழ்வை நிகழ்காலத்தில் சிந்தித்து பாடிய கவிஞன் உலக அளவில் எனக்கு தெரிந்து நம் பாரதி மட்டுமே.
அவருடைய அல்லது அவருக்கு முந்தைய காலத்தில் வேறு யாரெனும் இதுபோல் எழுதியிருந்தால் அறிய ஆவல்.
தைரியம் எந்த கடையில் வாங்க முடியும்..? எல்லா தமிழ் புத்தக கடையிலும் வாங்கலாம். பாரதியின் கவிதை புத்தகமாய்.
அதற்கு நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள அக்கினி குஞ்சு பாடலும் தேடிச்சோறு நிதந்தின்று பாடலுமே சான்று.. இன்னும் அச்சமில்லை அச்சமில்லை எனபன போன்ற பாடலையும் சொல்லலாம்.

Keelai Naadaan
15-08-2008, 06:35 AM
சிறுவயதிலேயே தனது எதிர்காலத்தை பற்றிய கனவு ஒவ்வொரு மாணவனுக்கும் இருக்கவேன்டும், வளர்ந்து பெரியவனாக ஆகும் சூழலில் அவனது எதிர்கால கனவுகளை நனவாக்க அவன் பாடுபடவேன்டும். தன் வயிறு நிரம்ப வேன்டுமானால் நாம் தான் உணவை உண்ணவேன்டும், ஒரு குறிப்பிட்ட காலம்வரை தான் பெற்றவர்கள் ஊட்டுவார்கள். தன் வாழ்க்கையின் அடித்தளத்தை மற்றவரை நம்பி கட்டுபவனால் வாழ்வில் ஒருநாளும் முன்னேரவே முடியாது.

அழகிய மணவாளன் உங்களுடைய கருத்துக்களை பள்ளிக்கூடங்களின் அறிவுப்பு பலகைகளிலே பதிக்கவேண்டும். மாணவர்களுக்கு அவசியமான கருத்துக்கள். பாராட்டுக்கள். நன்றிகள்.

Keelai Naadaan
15-08-2008, 07:43 AM
இனி
குடும்ப கல்வியை தொடர ஆவலாய் உள்ளேன். (:D:D:D அட உண்மையை சொல்லறேனுங்க. :redface::redface: வயசு ஆகுதில்லே)

நமது மன்றத்திலேயே பூமகள், ஓவியா இந்த இருவர் மீதும் எனக்கு ஒருவித ஆச்சர்யம் உண்டு. அவர்களது பேசும்பாங்கு எழுத்துக்களை பார்த்தால்
என்னை விட இளையவர்கள் என்ற எண்ண தோன்றும். அவர்களுடைய படைப்புகளை பார்த்தால் என்னை விட மூத்தவர்கள் என்ற எண்ண தோன்றும்.
ஓவியா, நீங்கள் குடும்ப கல்வியிலும் பல பல நற்சான்றிதழ்கள் வாங்க வாழ்த்துக்கள்

Keelai Naadaan
15-08-2008, 08:04 AM
மனசாட்சிப்படி ஒருவன் முழுமையாக நல்லவனாக இருப்பது என்பது கடினம் என்பதை விட முடியாத காரியம் என்பது தான் உண்மை. வேண்டுமானால் கொஞ்சம் நல்லவன் என்று சொல்லிக்கொள்ளலாம்..!! அந்த "கொஞ்சம் நல்லவர்கள்" தான் நம் தேசத்தில் "நல்லவர்கள்" என்று போற்றப்படுகிறார்கள்..!!
இதயம் உங்களது நல்லவன் பற்றிய கருத்துகள் இன்றைய நிலையை அருமையாய் விவரிக்கிறது.
பாலசந்தரின் "அவர்கள்" படத்திலே ஒரு வசனம்.

"நீ நல்லா வாழ ஆசப்படுறியா? இல்ல நல்லவளா வாழ ஆசப்படுறியா?"

என்பார் மாமியார் கதாப்பாத்திரம். இதுதன் இன்றைய நிலை. வி.எஸ்.காண்டேகரின் கடைசி நாவலான அமுதக்கொடி-யிலே ஒரு வசனம்

"இந்த உலகில் எல்லோருமே குற்றவாளிகள் என நீ நினைக்கிறாய். உண்மையை சொல்லட்டுமா? உலகில் எவருமே குற்றவாளி அல்ல"

வெற்றி
15-08-2008, 10:08 AM
வாத்தியார் அவர்களே ........
உங்களை பதிலை நீங்களே போட்ட சொஞ்ச நேரத்திலேயே படிச்சி விட்டேன் (சிரித்தேன்,,,சிரித்தேன் கண்ணில் நீர்வரும் வரை சிரித்தேன்.........அனால் அவரச வேலை காரணமாக பின்னூட்ட்ம இட வில்லை)
வரிக்கு வரி எதார்த்தம் ..உண்மை..நிஜம்..என ஒரு ஜனரஞ்சக கலவையாக இருந்தது உங்கள் பதில் ........பல வரிகள் உங்கள் அனுபவம் என்றாலும் அதில் இருக்கும் கற்பனை கலவையை நான் அறிவேன்.....
நான் வாங்க வேண்டும் (தெரிந்து கொள்ள வேண்டும் எப நினைத்த பதில் கிழே )
நன்றி வாத்தியார்

சம்சாரத்துகிட்ட அடிவாங்கரது ஒன்னும் கேவலமில்லீங்க, மனைவி என்பது நமக்கு தாய்போல. தப்பு செய்யாம இருக்க முடியுமா? ஆடி கறக்கற மாட்ட ஆடிதான் கறக்கனும் பாடி கறக்கற மாட்ட பாடிதான் கறக்கனும். அதுபோல அடிச்சு திருத்தர புருசனை அடிச்சுதானே திருத்தனும். அவ்வபோது அடி மூலம் தான் கனவன் மனைவி என்பவள் தங்களது உரிமையை நிலை நாட்டி கொள்வது. அடிக்கிற கைதானே அனைக்கும். குழந்தையின் கீரல்கள் தந்தைக்கு வலிக்காது, என் மனைவி எனக்கு குழந்தைதானே அவள் அடிகள் எனக்கு வலிக்காது. அடிவாங்கிய பிறகு எனக்கு அவள் மீது உள்ள காதல் அதிகரித்ததே தவிர குரையவில்லை.
என் மனைவியிடம் அடி வாங்கினேன், வாங்கி கொண்டு இருக்கிறேன், வாங்குவேன்

அப்பறம் ஒரு சேதி பயிற்சி கொடுக்க சொல்லி அனுப்பவா என கேட்டு இருந்தீர்கள் அல்லவா ....வேண்டாம் ..தேவைபாடாது ..எனெனில் மீன் குஞ்சுக்கு யாரும் நீந்த கற்றுத்தர தேவையில்லை...(ஹிஹிஹி)
எங்க உடம்புலையும் காயம் இருக்கு இல்லை

பாலகன்
15-08-2008, 10:24 AM
அழகிய மணவாளன் உங்களுடைய கருத்துக்களை பள்ளிக்கூடங்களின் அறிவுப்பு பலகைகளிலே பதிக்கவேண்டும். மாணவர்களுக்கு அவசியமான கருத்துக்கள். பாராட்டுக்கள். நன்றிகள்.

உங்கள் பாராட்டுக்களால் உள்ளம் குளிர்ந்து போனேன் கீழை நண்பா

வெற்றி
16-08-2008, 04:02 AM
நான் ரகசியமா வச்சிருக்கறத நீங்க பொதுவில கேட்கறீங்களே! சரி பரவாயில்லை...

எனக்கு பிடித்த இருவரின் முதல் பெயர்கள்!

மிக்க நன்றி...
ரகசியம் காப்பாற்றி அதே நேரம் பதிலும் சொல்லிய சாமர்த்தியம்...
மிக்க வியந்தேன்...
மீண்டும் சொல்கிறேன் உங்கள் பபயர்ர் எனக்கு மிகவும் பிடிக்கும்

வெற்றி
16-08-2008, 04:10 AM
ராஜா அண்ணன் :-
திரு. & திருமதி கிரேசியிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.[/COLOR]

ஏன்..ஏன் அண்ணா இப்படி எல்லாம் விபரீதமாக சிந்திக்கிறீர்கள்??
பொதுவாக நகைச்சுவை என்பது மிக பெரிய வரப்பிரசாதம்...
அனைவராலும் முடியாது..அந்த பணியை ஓவ்வில்லாமல் செய்தத வரும் நீங்கள் பல்லாண்டு வாழ்வேண்டும் என நினைக்கும் உங்கள் பல தம்பிகளில் நானும் ஒருவன்...
நகைச்சுவை வடிவம் எப்படி எல்லாம் ஒரு படைப்பாளியால் கொடுக்கப்பபபடும் என மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என நினைத்து கேட்கப்பட்ட ஒன்று தான் உங்கள்இடம் வைக்கப்பட்ட வாதம்..
ஆனாலும் மிகுந்த அவையடக்கம் காட்டி அதிலும் சிரிக்க வைத்த நீங்கள் ......
மீண்டும் நிருபித்து விட்டிர்கள்...உங்கள் முத்திரையை வாழ்த்துக்கள் அண்ணா

வெற்றி
16-08-2008, 04:13 AM
அந்த வகையில் மனசாட்சிப்படி ஒருவன் முழுமையாக நல்லவனாக இருப்பது என்பது கடினம் என்பதை விட முடியாத காரியம் என்பது தான் உண்மை. வேண்டுமானால் கொஞ்சம் நல்லவன் என்று சொல்லிக்கொள்ளலாம்..!! அந்த "கொஞ்சம் நல்லவர்கள்" தான் நம் தேசத்தில் "நல்லவர்கள்" என்று போற்றப்படுகிறார்கள்..!!

உங்களின் விபரமான தெளிவான விளக்கம் கண்டு வியந்தேன்..
குறிப்பாக மனசாட்சிக்கும் நிஜத்திக்கும் இருக்கும் வித்தியாசதிற்க்கான உங்கள் ஒப்பீடு மிக அருமை.....

இயல்பான உண்மை பதில் மிக்க நன்றி

வெற்றி
16-08-2008, 04:19 AM
இதுதமிழ்நாட்டில் மட்டும்தான் நடக்கிறதென்றில்லை. ஆனாலும் தமிழரிடையே இந்த தமிழ்கொலை ஏற்பட பிரதான காரணி தமிழ்நாடே. தமிழக திரைப்படங்கள், தொடர் நாடகங்கள், பத்திரிகைகள் உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் அதனால் ஒட்டுமொத்த தமிழரிடையே, தமிழ் மொழியினிடையே இருக்கும் தன்செல்வாக்கை உணர்ந்து பொறுப்புடன் செயற்பட வேண்டியது தமிழ்நாட்டின் கடமை.
நன்றி.

உங்களின் (இலங்கை தமிழர் ) பார்வையில் தமிழ் நாட்டின் தமிழ் பற்றிய கேள்வி தான்
நன்றி உங்களின் எண்ண வெளிப்பாட்டை பகிர்ந்தமைக்கு
சரி செய்ய முயர்சிக்கிறோம் ...(இனி வரும் சந்ததிகள் மூலம்)

என் பார்வையில் என கேட்டதால் சொன்னேன். மற்றப்படி, இதிலுள்ள சரி, பிழைகளை மன்றப் பெரியோர்கள்தான் சொல்ல வேண்டும்.
இந்த கேள்வி உங்கள் கேட்கப்பட்டதே.....

தீபன்
16-08-2008, 05:41 AM
உங்களின் (இலங்கை தமிழர் ) பார்வையில் தமிழ் நாட்டின் தமிழ் பற்றிய கேள்வி தான்
நன்றி உங்களின் எண்ண வெளிப்பாட்டை பகிர்ந்தமைக்கு
சரி செய்ய முயர்சிக்கிறோம் ...(இனி வரும் சந்ததிகள் மூலம்)

ஆ....பத்து இப்போ மொக்கை வசம்!!!!
பதில் சொல்ல வேண்டியவர்கள்
(அகத்தியன், இதயம், இளசு, ஓவியா, தீபன், ராஜா, ஷீ-நிசி, lolluvathiyar)

பதில் சொன்னதுக்கு பதிலாக உங்கள் பதில் பதிவு இடப்பட்டபின்னும் பதில் சொல்லவேண்டியவர்கள் பட்டியலில் பதில் சொன்னவர்கள் பெயரும் இருக்கும் காரணம் என்ன? அல்லது, அவர்கள் சொன்னவற்றை பதில்களாகவே நீங்கள் அங்கீகரிக்கவில்லையா...? (கேள்வி கேட்டு ஆப்பா வைக்கிறிங்க... நாங்களும் வைப்பமில்ல....)

அமரன்
16-08-2008, 01:46 PM
மன்னிக்க வேண்டும்..

சில காரணங்களால் இப்பக்கம் வர இயலவில்லை. அனைவரும் பதில் தந்திருந்தால் அடுத்த கொக்கியாளரை அழைக்கலாமே..
சுட்டிப்பையனை மொக்கைச்சாமி முன்மொழிந்ததாக நினைவு. சுட்டி அடிக்கடி மன்றத்துக்கு மட்டம் போட்டு விடுவான். எனவே திரி தூங்காதிருக்க இன்னொருவரை கூப்பிடலாம் என்பது என் பணிவான ஆலோசனை.

அந்த இன்னொருவரை மொக்கைச்சாமி/ராஜாண்ணா/நான் கூட்டியும் வரலாம்..

அண்ணா என்ன சொல்கின்றீர்கள்..

இளசு
16-08-2008, 05:50 PM
. கவிஞன்/ கலைஞன் என்பவன்,

"பிறர் கண்ணீரை தன் கண்களில் வடிப்பவன்"

..... அது பாரதியிடம் இருந்தது. அவன் ஒரு யுகக் கவிஞன், காலத்தை வென்றவன்.
பாரதியிடம் இருந்த ரௌத்திரம் எந்தக்கவிஞனிடமும் இருந்திருக்காது என்பதே என் திண்ணமான எண்ணம். பாரதி அதனை முறையாக பயன்படுத்தினான்.

-----

அது இனிவருமா என்று கேட்டால்......

ஒவ்வொரு வரியும் சம்மட்டி அடியாய் - நெஞ்சு வலித்தது அகத்தியன்.
நிஜம் சுடும். வலிக்கும்.

இந்த சூடும் வலியும் ஒரு சங்கைச் சுட்டு வெண்மையாக்கலாம்.
ஒரு பாளத் தங்கம் சொக்கத்தங்கமாகலாம்..

இன்னொரு யுகக்கவிஞனை தமிழ்த்தாய் நிச்சயம் ஈன்றிடுவாள்.
ஏனெனில் அவள் நித்திய கன்னித்தாய்!

அகத்தியனின் அகம் எரித்த திரிபுர பதிலுக்கு என் வந்தனம்!

அகத்தியன்
17-08-2008, 04:29 AM

இளசுவின் பிரார்த்தனை பலிக்கட்டும்.

சமூகம் சார் கோபங்களும் அதை அடி ஒற்றிய மனிதாபிமானமும் அவனிடம் நிறைந்து காணப்பட்டன.

" இனி ஒரு விதி செய்வோம் அதை எந்நாளும் காப்போம். தனியொரு மனிதனுக்குணவில்லை எனில் இச்செகத்தினை அழித்துடுவோம்."

என பாடியவன்.

"அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பதில்லையே,
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்-
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

பிச்சை வாங்கி உண்ணும் நிலை வந்து விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே,
இச்செகத்திலுள்ளோரல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லைய"

என முழக்கமிட்டவன் பாரதி.

சமூகம் சார் கோபங்களும் அதை அடி ஒற்றிய மனிதாபிமானமும் ஒன்றாக வரும் கவிஞன் ஜனித்தால், நான் மட்டுமல்ல தமிழே போற்றும்.

ராஜா
18-08-2008, 06:16 AM
அனைவரும் பதில் தந்திருந்தால் அடுத்த கொக்கியாளரை அழைக்கலாமே..
சுட்டிப்பையனை மொக்கைச்சாமி முன்மொழிந்ததாக நினைவு. சுட்டி அடிக்கடி மன்றத்துக்கு மட்டம் போட்டு விடுவான். எனவே திரி தூங்காதிருக்க இன்னொருவரை கூப்பிடலாம் என்பது என் பணிவான ஆலோசனை.

அந்த இன்னொருவரை மொக்கைச்சாமி/ராஜாண்ணா/நான் கூட்டியும் வரலாம்..

அண்ணா என்ன சொல்கின்றீர்கள்..

யப்பா அமரு..!

அடுத்து ஒரு உறவை நீயே கூட்டிவாப்பா..!

அப்படியே திரி பத்திகிட்டு எரியணும்.. !

அமரன்
18-08-2008, 08:36 AM
கொக்கி போட்டு பதில் கொணர்ந்த மொக்கைச்சாமிக்கும் தித்திப்பான பதில்கள் தந்த இனிய உறவுகளுக்கும் பதில்களை அலசிய அன்பு நெஞ்சங்களுக்கும் பணிவான நன்றிகள்.

யப்பா அமரு..!

அடுத்து ஒரு உறவை நீயே கூட்டிவாப்பா..!

அப்படியே திரி பத்திகிட்டு எரியணும்.. !
அண்ணல் ஆணையிட்டால் அது நடந்துவிடும்..
அக்னியின் அம்சம், அன்பின் தீபம் அருமை நண்பன் தீபனை அழைப்போம்.

வாருங்கள் தீபன்.. தாருங்கள் தீபாவளி..

தீபன்
18-08-2008, 08:45 AM
அண்ணல் ஆணையிட்டால் அது நடந்துவிடும்..
அக்னியின் அம்சம், அன்பின் தீபம் அருமை நண்பன் தீபனை அழைப்போம்.

வாருங்கள் தீபன்.. தாருங்கள் தீபாவளி..

பெரிய பில்டப்பெல்லாம் பண்ணாதிங்கப்பா... தீபாவளியா தீ வளியான்னு கேள்விகளின்பின் தான் தெரியும். அதிகம் காக்க வைக்க மாட்டேன்... விரைவில் கேள்விக் கணைகளுடன் வருகிறேன்.

ராஜா
18-08-2008, 09:03 AM
தீபத்தின் ஒளி காண ( உணர அல்ல..) ஆவலுடன் காத்திருக்கிறேன்..!

தீபன்
18-08-2008, 09:04 AM
ஆ 10இல் ஆப்புவைக்க இந்தமுறை என்னை அழைத்துள்ளார்கள். பதிலளிப்பதைவிட கடினம் கேள்விகேட்பதுதான். இயன்றவரை முயன்றுள்ளேன். பதில்களிட ஓடியாங்க…! :icon_b:

ஆ பத்தில் ஆ பத்து பத்துத்தான்… ஆனால் ஆபத்து ஈர்பத்து பேருக்கு…! ஆமா… ஒவ்வொரு வினாவும் இருவரிடம் கேட்கப்படும்… இருவேறுபட்ட பார்வைகளில் பெறப்படும் பதில்கள் ஆ பத்திற்கு புதுப்பொலிவை தருமென எண்ணுகிறேன். என் கேள்விப்பட்டியலில் மூத்தவர்களை விட்டுவிட்டேன்…. கிறுக்குத்தனமான கேள்விகளை கேட்டு அவர்களிடம் வாங்கிக்கட்டிக்கொள்ள நான் தயாரில்லை..! :icon_ush:

போர்க்களத்துள் நுளைவோம்… காயங்கள் படாதிருப்பது உங்களைப் பொறுத்தது..! :icon_rollout:

ஆ பத்து அளைக்கிறது உங்களை…. :lachen001::lachen001::lachen001:

(1) தென்றல், விராடன்
(2) யவனிகா, அக்னி
(3) பூமகள், அன்புரசிகன்
(4) ஷிப்லி, தமிழ்அம்பு
(5) அமரன், கிஷோர்
(6) மறத்தமிழன், அகத்தியன்
(7) ஆதி, ஓவியன்
(8) ஓவியா, செல்வா
(9) மலர், பிராடி
(10) அனு, மதுரகன்

(அனைவருக்கும் தனிமடல் அனுப்பப்பட்டுள்ளது.)

முதல் கணைக்கு தென்றல், விராடன்:
பெண் இலக்கியவாதிகள், சிந்தனைவாதிகள் தங்களின் கருப்பொருளாக பெரும்பாலும் பெண்களின் பிரச்சினைகளையே முன்வைக்கின்றனர். அதையும் தாண்டி மொத்த மனிதர்களுக்குமான பிரச்சினைகளில் கவனமெடுப்பது அரிது. இந்தக் கருத்தோடு நீங்கள் ஒத்துப் போகிறீர்களா? இல்லையா? ஏன்?

இரண்டாவது கணைக்கு யவனிகா, அக்னி:
குளிர் நாடுகளாக இருந்தாலும் ஆடைக்குறைப்பு செய்து அங்கங்களை காட்டி கவர்ச்சியாக தம்மை வெளிப்படுத்தும் மனப்பாங்கு மேலைநாட்டு பெண்களுக்கே உண்டு. அந்தவகையில் பெண்கள் தங்களையே கவர்ச்சிப் பொருளாக எண்ணும் இயல்பு அந்நாடுகளில்தான் இருக்கிறது. எனவே, கீழைத்தேய பெண்களைவிட மேலைநாட்டு பெண்களே அதிகளவில் அவமதிக்கப்படுகிறார்களென்ற வாதத்தை ஏற்றுகொள்கிறீர்களா..? இல்லையா? ஏன்?

மூன்றாவது கணைக்கு பூமகள், அன்புரசிகன்:
ஒரே இனத்தவர்களாயிருந்தும் அயல்நாட்டில் அவலங்கள் நிகளழும்போது அங்கு என்ன நடக்கிறதென்பதே தெரியாது அந்நாட்டு பிரச்சினைகளின் அடிப்படையைகூட தெரிந்துகொள்ள முயற்சிக்காமல் பொழுதுபோக்கு அம்சங்களிலும் தங்கள் சொந்த வேலைகளிலும் மட்டும் மூழ்கிப் போயிருக்கும் பலரைப்பற்றி உங்கள் பார்வை என்ன?

நான்காவது கணைக்கு ஷிப்லி, தமிழ்அம்பு:
இருசாரரின் போராட்டத்துக்கிடையில் அகப்பட்டு அப்பாவி மக்கள் பாதிக்கப் படுகிறார்களென பொதுவாக அடிக்கடி அறிக்கைகள் வரும். ஆனால் அந்த இருசாரரும்கூட அப்பாவி மக்களிடையேயிருந்துதானே உருவாகின்றனர். எனவே அதன் விளைவுகளை ஏற்கவேண்டியதும் அவர்களின் கடமைதானே. பிறகெப்படி அப்பாவி மக்கள் அநியாயமாக பாதிக்கப்படடுகிறார்களென சொல்ல முடியும்?

ஐந்தாவது கணைக்கு அமரன், கிஷோர்:
ஒருவரை சங்கடப்படுத்தும் அல்லது காயப்படுத்தும் வாதங்களை தவிர்க்கவேண்டுமென மன்றில் அடிக்கடி எச்சரிக்கைகள் வரும். அப்படி இருப்பது சாத்தியமா? அப்படி 100வீதம் இருந்தால் மன்றம் எப்படி இருக்கும்?

ஆறாவது கணைக்கு மறத்தமிழன், அகத்தியன்:
ஈழப் போரின் இன்றைய நிலை என்ன? தமிழர் தரப்பு உண்மையிலேயே பலவீனப்பட்டுப் போயுள்ளதா? வன்னிக் களமுனையில் என்னதான் நடக்கிறது? என்னதான் நடக்கப்போகிறது?

ஏழாவது கணைக்கு ஆதி, ஓவியன்:
யுத்தம் தவிர்க்கப்படவேண்டிய ஒன்றென்றால் அந்த யுத்தம் ஏற்பட காரணமாயமைந்த பிரச்சினையை அகிம்சை வளியில் தீர்க்க முடியுமா…? எல்லா இடங்களிலும் இது சாத்தியமா..? வன்முறையை வளியாககொண்ட எந்த போராட்டமாவது வெற்றிபெற்றதில்லையா..?

எட்டாவது கணைக்கு ஓவியா, செல்வா:
காமத்தையும் ஒரு கலையாக கண்டு காப்பியங்கள் படைத்தது நம் தமிழ். ஆனால், இன்று அதை ஒரு ஆபாசமாக நோக்குவதும் தேவையான இடங்களில் பேசுவதை தவிர்ப்பதுவும் ஏன்? காதலுக்கு இணையான மரியாதை காமத்திற்கு இல்லயா? (மன்றத்தில்கூட அவற்றை ஒதுக்கி வைத்துள்ளார்கள்.) இது தமிழரின் முன்னேற்றத்தை பல்வேறு விதங்களில் பாதிக்கிறதென்பதை ஏற்கிறீர்களா? ஏன்?

ஒன்பதாவது கணைக்கு மலர், பிராடி:
தமிழ்நாட்டின் சினிமா ரசனை கலைத்தாகத்தின் வெளிப்பாடா? கவர்ச்சித்தாகத்தின் வெறித்தனமா…? இது ஒரு ஆரோக்கியமான நிலையில் இருக்கிறதா..? இல்லையெனில் இந்தபோக்கை மாற்ற என்ன செய்யலாம்?

பத்தாவது கணைக்கு அனு, மதுரகன்:
மனிதன் முன்னேறிக் கொண்டிருக்கிறான். ஆனால் முன்னேற்றமில்லாத காலங்களில் இருந்த அமைதி தற்போது கிடைப்பதில்லையே… பிறகெதற்காக இந்த முன்னேற்றம்? மனிதர்கள் உயிரோடு இருப்பது முக்கியமா? உயிர்ப்போடு இருப்பது முக்கியமா? இதற்கென்ன தீர்வு?

அவ்வளவுதான். ஓடியாங்க ஓடியாங்க…
(அட, கேள்விய விட்டிட்டு என்னைநோக்கி ஏன் ஓடியாறிங்க… ஆஹா… நீங்க அவுங்களா… அப்ப நான் மாட்டிக்கிட்டனா….. எஸ்கேப்…)

அமரன்
18-08-2008, 09:14 AM
கத்தி மேல ஏத்தி விட்டு கத்திக் கூப்பிடுறீங்களே தீபன். நீ விரிச்ச வலையில் சீக்கிரம் போய் சிக்கிக்கய்யா என்று எள்ளித் தள்ளுது உள்மனது. பத்துக் கேள்வியில் இருபது பேரைக் கோர்த்து விட்ட புத்திசாலித்தனத்தை என்னவென்று சொல்லுவது. வார்த்தைகளே அகப்படவில்லை..

பதில்கள் தேங்காது பாய்ந்து வந்தால் தேம்பலில் திரி அணையாதிருக்கும்.

கேள்விக்கு நன்றிகள் தீபன்.. பதிலுக்கு வாழ்த்துகள் தீபங்களே..

ராஜா
18-08-2008, 09:21 AM
ஆ! பத்து ஆப்பது, இருப்பது இருபது பேர்களுக்கு..!

ஈர் பத்து பதில்களில் ஈர்ப்பது எதுவென ஆவலிருக்கு..!

தீபன்
18-08-2008, 09:29 AM
கேள்விக்குள் சிக்காத கெக்கலிப்பில் திரியின் நாயகர்...
இருக்கையா ஆப்புமக்கும் பதில் முடிவில்....!

ராஜா
18-08-2008, 09:33 AM
கேள்விக்குள் சிக்காத கெக்கலிப்பில் திரியின் நாயகர்...
இருக்கையா ஆப்பு மக்கும் பதில் முடிவில்....!

:traurig001::traurig001::traurig001::traurig001:

அமரன்
18-08-2008, 09:34 AM
அய்யோ...
அப்படியே அள்ளுது தெள்ளு தமிழ்.

தீபன்
18-08-2008, 09:36 AM
சரியாக 3 ஆண்டுகளின் முன்....
மன்றத்தோடு நான் ஐக்கியமாகிய தினம் இன்று.
என் 3 ஆண்டு பயணத்தின் நினைவுப் பதிவாக ஆ பத்து வினாத்தொகுப்பை வழங்கமுடிந்ததையிட்டு மகிழ்ச்சி.
வினாக்களை வழங்க அழைத்த அமரனுக்கும் நன்றிகள்.

தீபன்
18-08-2008, 09:40 AM
ஆப்பு மக்கும்

என் கேள்விகள் அவ்வளவு மோசமாவா இருக்கு.... நீங்களும் அழுது என்னயும் அழவைக்கிறிங்களே...

:traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:

ஓவியன்
18-08-2008, 11:37 AM
என்ன இது தீப்..!!

திடுதீப்பென ஆபத்தில மாட்டி விட்டிட்டீங்களே...??

சரி, சரி முடிந்தவரை விரைவாக பதிலுடன் வருகிறேன்..!! :)

அகத்தியன்
18-08-2008, 11:48 AM
பேருக்கேத்த மாதிரி,

"பத்தவச்சிட்டியே பரட்ட"

வருவேன் பதிலுடன் வருவேன்..

ஓவியா
18-08-2008, 11:58 AM
ஆ 10இல் ஆப்புவைக்க இந்தமுறை என்னை அழைத்துள்ளார்கள். பதிலளிப்பதைவிட கடினம் கேள்விகேட்பதுதான். இயன்றவரை முயன்றுள்ளேன். பதில்களிட ஓடியாங்க…!

எட்டாவது கணைக்கு ஓவியா, செல்வா:
காமத்தையும் ஒரு கலையாக கண்டு காப்பியங்கள் படைத்தது நம் தமிழ். ஆனால், இன்று அதை ஒரு ஆபாசமாக நோக்குவதும் தேவையான இடங்களில் பேசுவதை தவிர்ப்பதுவும் ஏன்? காதலுக்கு இணையான மரியாதை காமத்திற்கு இல்லயா? (மன்றத்தில்கூட அவற்றை ஒதுக்கி வைத்துள்ளார்கள்.) இது தமிழரின் முன்னேற்றத்தை பல்வேறு விதங்களில் பாதிக்கிறதென்பதை ஏற்கிறீர்களா? ஏன்?

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச் கண்ணை கட்டுதே மக்கா!! சோட கொடுங்கப்பா.

யாராவது பழம் தின்று கொட்டை போட்டவர்களா பார்த்து இந்த கேள்விய கேட்க்ககூடாதா.....ஏன்னா எனக்கு இன்னும் டும்-டும் ஆகவில்லை (மண்டு, இது பொது அறிவு கேள்வுனு யாரோ குட்டுவது தெரியுது), செல்வாவுக்கும் ஆகி இருக்காது என்று நினைக்கிறேன். இருப்பினும் இந்த கேள்விக்கு விடைய தேட முயற்ச்சிக்கிறேன்.....

நன்றி தீபன்.

சுகந்தப்ரீதன்
18-08-2008, 12:14 PM
என்னது செல்வாவுக்கு கல்யாணமாகலையா..?? ஓவியக்கா..நீங்க அவரோட இலக்கியசோலைக்கு கொஞ்சம் போயிட்டு வாங்க.. அப்புறம் நானே செல்வாவுக்கு கல்யாணம் ஆகலைன்னு சொன்னாக்கூட நீங்க நம்ப மாட்டீங்க...!!:smilie_abcfra::aetsch013:

தீபா..(யாரதுன்னு கேட்கக்கூடாது சொல்லிப்புட்டேன் ஆமாம்..) நல்லாவே பத்தவச்சிருக்கப்பா..திரியை..??!! பார்க்கலாம் எங்க எங்க பத்துதுன்னு..:wuerg019::icon_rollout:

tamilambu
18-08-2008, 01:47 PM
ஆ 10இல் ஆப்புவைக்க இந்தமுறை என்னை அழைத்துள்ளார்கள். பதிலளிப்பதைவிட கடினம் கேள்விகேட்பதுதான். இயன்றவரை முயன்றுள்ளேன். பதில்களிட ஓடியாங்க…! :icon_b:

நான்காவது கணைக்கு ஷிப்லி, தமிழ்அம்பு:
இருசாரரின் போராட்டத்துக்கிடையில் அகப்பட்டு அப்பாவி மக்கள் பாதிக்கப் படுகிறார்களென பொதுவாக அடிக்கடி அறிக்கைகள் வரும். ஆனால் அந்த இருசாரரும்கூட அப்பாவி மக்களிடையேயிருந்துதானே உருவாகின்றனர். எனவே அதன் விளைவுகளை ஏற்கவேண்டியதும் அவர்களின் கடமைதானே. பிறகெப்படி அப்பாவி மக்கள் அநியாயமாக பாதிக்கப்படடுகிறார்களென சொல்ல முடியும்?

அவ்வளவுதான். ஓடியாங்க ஓடியாங்க…
(அட, கேள்விய விட்டிட்டு என்னைநோக்கி ஏன் ஓடியாறிங்க… ஆஹா… நீங்க அவுங்களா… அப்ப நான் மாட்டிக்கிட்டனா….. எஸ்கேப்…)

வணக்கம் தீபன் அவர்களே!
என்போன்ற அப்பாவிகளுக்கு ஆப்படிப்பதில் உங்களுக்கு அப்படி என்னையா சந்தோசம்???
சரி விடுங்க.... இப்படி பகிரங்கமா ஆப்படிச்சிட்டிங்களே....!!! களட்ட முடியுமா என்று முயற்சிப்பதை தவிர வேறு வழி ஏது?

உங்கள் கேள்வியில் ஒரு சின்ன சந்தேகம்:
இருசாரரின் போராட்டம் என்று குறிப்பிட்டிருப்பது பொதுவாகவா அல்லது எமது ஈழப்போராட்டமா?
இரண்டைப்பற்றியும் என்று கூறிவிடாதீர்கள்.
ஏனெனில் அது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையாக எழுதவேண்டிவரும்.
எனது அறிவுக்கு அதெல்லாம் சரிவராது.

விகடன்
18-08-2008, 02:32 PM
கேள்வி என்ற பெயரில் என்னை கத்திவிளிம்பில் சாகசம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
எப்படித் தொடங்குவது என்ற குழப்பத்திலுள்ளேன் தீபன். எப்படியும் தொடங்கிடவேண்டும் என்ற முயற்சியையும் விடவில்லை.
பார்க்கிறேன்.

அன்புரசிகன்
18-08-2008, 03:03 PM
மூன்றாவது கணைக்கு பூமகள், அன்புரசிகன்:
ஒரே இனத்தவர்களாயிருந்தும் அயல்நாட்டில் அவலங்கள் நிகளழும்போது அங்கு என்ன நடக்கிறதென்பதே தெரியாது அந்நாட்டு பிரச்சினைகளின் அடிப்படையைகூட தெரிந்துகொள்ள முயற்சிக்காமல் பொழுதுபோக்கு அம்சங்களிலும் தங்கள் சொந்த வேலைகளிலும் மட்டும் மூழ்கிப் போயிருக்கும் பலரைப்பற்றி உங்கள் பார்வை என்ன?

:eek: :eek: :eek:

SORRY... Out of Syllabus.

என்னது சின்னப்புள்ளத்தனமா இப்படி? அமரன் ஆதவனின் கவிதைகள் போல கேள்வி.... முயல்கிறேன்....

:eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek:

மதுரகன்
18-08-2008, 04:59 PM
மனிதன் முன்னேறிக் கொண்டிருக்கிறான். ஆனால் முன்னேற்றமில்லாத காலங்களில் இருந்த அமைதி தற்போது கிடைப்பதில்லையே… பிறகெதற்காக இந்த முன்னேற்றம்? மனிதர்கள் உயிரோடு இருப்பது முக்கியமா? உயிர்ப்போடு இருப்பது முக்கியமா? இதற்கென்ன தீர்வு?

என்னுடைய பதிலை கொஞ்சம் கொஞ்சமாக தர எண்ணுகிறேன்..

அதற்கு முன் உங்களது வினாவிலுள்ள ஐயப்பாடுகளை தீர்த்துவையுங்கள்...

மனிதன் முன்னேறிக்கொண்டிருக்கிறான் என்றீர்கள்..
எந்த அடிப்படையிலான முன்னேற்றத்தை குறிப்பிடுகிறீர்கள்
மனிதத்துவத்தின் முன்னேற்றமா..
வாழ்க்கைத்தரத்தின் முன்னேற்றமா
பொருளாதார அடிப்படையிலான முன்னேற்றமா..?
அல்லது வெறுமனே தொழினுட்ப அடிப்படையிலான முன்னேற்றமா..
ஆத்மீக முன்னேற்றமா..
எந்த முன்னேற்றம் என்று கூறினால்தான் அந்த கண்ணோட்டத்தில் உங்கள் கேள்வியை அணுக முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து..

நிச்சயமாக மனிதன் உயிரோடு இருப்பதை விட உயிர்ப்போடு இருப்பதுதான் முக்கியம்..
என் சொந்தக்கருத்து மனிதனாக இருப்பதில் எதுவுமில்லை
மனிதப்பண்புகளுடன் இருங்கள் அதுதான் வாழ்க்கை..
இது பற்றிய மேலதிக விளக்கத்தையும் உங்கள் பதிலளிப்பின்பின்தொடர்கிறேன் சகோதரன் தீபன் அவர்களே..

மறத்தமிழன்
18-08-2008, 06:09 PM
ஆறாவது கணைக்கு மறத்தமிழன், அகத்தியன்:
ஈழப் போரின் இன்றைய நிலை என்ன? தமிழர் தரப்பு உண்மையிலேயே பலவீனப்பட்டுப் போயுள்ளதா? வன்னிக் களமுனையில் என்னதான் நடக்கிறது? என்னதான் நடக்கப்போகிறது?

வணக்கம்,
என்ன தீபன் இப்படி ஒரு பொறி. வாழ்வது விருப்பமில்லையா? இருக்கட்டும். வீழும் இனம் அல்லவே நாம். பொறிகளுக்குள் அகப்பட்டு பொறி கலங்காமல் சீறி எழும் இனம். கால நீரோட்டம் கண்டபடி ஓடுகிறது. அனுபவசாலிகளின் அனுமானம் பொய்த்துப்போகும் எம் களமுனைகளில். பதில் தருகிறேன். பொறுத்தருள்க.

தீபன்
19-08-2008, 01:13 AM
கத்தி மேல ஏத்தி விட்டு கத்திக் கூப்பிடுறீங்களே தீபன். நீ விரிச்ச வலையில் சீக்கிரம் போய் சிக்கிக்கய்யா என்று எள்ளித் தள்ளுது உள்மனது. பத்துக் கேள்வியில் இருபது பேரைக் கோர்த்து விட்ட புத்திசாலித்தனத்தை என்னவென்று சொல்லுவது. வார்த்தைகளே அகப்படவில்லை..

பதில்கள் தேங்காது பாய்ந்து வந்தால் தேம்பலில் திரி அணையாதிருக்கும்.

கேள்விக்கு நன்றிகள் தீபன்.. பதிலுக்கு வாழ்த்துகள் தீபங்களே..
அதிலொரு தீபம் நீங்களும்... உங்களுக்கும் சேர்த்தே வாழ்த்த சொல்லிட்டு பதிலோடு வாங்க...

ஆஹா....
ஆப்பு அடிச்சிட்டாங்கய்யா...அடிச்சிட்டாங்க...!
ஏன்...ஏன் ..இந்த கொல வெறி தீபன் உங்களுக்கு
விரைவில் என் பதிலுடன்.....
இதென்ன பெரிய ஆப்பு... இதெல்லாம் உங்களுக்கு சும்மா சும்மா.... கலக்குங்க வந்து!

என்ன இது தீப்..!!

திடுதீப்பென ஆபத்தில மாட்டி விட்டிட்டீங்களே...??

சரி, சரி முடிந்தவரை விரைவாக பதிலுடன் வருகிறேன்..!! :)
இதென்ன ஆபத்து... நீங்க இருப்பதே ஆபத்தோடதானாமே... உண்மையா...? சரி சரி.... வந்து இதயும் ஒரு கை பாருங்க....

பேருக்கேத்த மாதிரி,

"பத்தவச்சிட்டியே பரட்ட"

வருவேன் பதிலுடன் வருவேன்..
முடியே இல்லன்னு கவலப்பட்டுகிட்டு இருக்கிறவன வெறுப்பேத்தி பழிவாங்கிறியளா... ம்ம்ம்ம்... விரைவா வந்து அணைக்கபாருங்க...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச் கண்ணை கட்டுதே மக்கா!! சோட கொடுங்கப்பா.

யாராவது பழம் தின்று கொட்டை போட்டவர்களா பார்த்து இந்த கேள்விய கேட்க்ககூடாதா.....ஏன்னா எனக்கு இன்னும் டும்-டும் ஆகவில்லை (மண்டு, இது பொது அறிவு கேள்வுனு யாரோ குட்டுவது தெரியுது), செல்வாவுக்கும் ஆகி இருக்காது என்று நினைக்கிறேன். இருப்பினும் இந்த கேள்விக்கு விடைய தேட முயற்ச்சிக்கிறேன்.....

நன்றி தீபன்.
பழசுகள கேட்டா அது பண்பட்டவர்கள் பகுதிக்கு போறமாதிரியாயிடுமே...:lachen001: ம்ம்ம்... டும் டும் ஆகனும்னா கொஞ்சமாவது தெரிஞ்சிருக்கணும்... இந்த கேள்வியே அதுக்கொரு அச்சாரமாயிருக்கட்டுமே... உங்க விடைதேடும் முயற்சி விரைவில் ஈடேற வாழ்த்துக்கள்.

வணக்கம் தீபன் அவர்களே!
என்போன்ற அப்பாவிகளுக்கு ஆப்படிப்பதில் உங்களுக்கு அப்படி என்னையா சந்தோசம்???
சரி விடுங்க.... இப்படி பகிரங்கமா ஆப்படிச்சிட்டிங்களே....!!! களட்ட முடியுமா என்று முயற்சிப்பதை தவிர வேறு வழி ஏது?

உங்கள் கேள்வியில் ஒரு சின்ன சந்தேகம்:
இருசாரரின் போராட்டம் என்று குறிப்பிட்டிருப்பது பொதுவாகவா அல்லது எமது ஈழப்போராட்டமா?
இரண்டைப்பற்றியும் என்று கூறிவிடாதீர்கள்.
ஏனெனில் அது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையாக எழுதவேண்டிவரும்.
எனது அறிவுக்கு அதெல்லாம் சரிவராது.
என் கேள்வி பொதுவானதுதான். வேண்டுமானால் உதாரணத்துக்கு ஈழப்போரை நீங்கள் எடுத்துக்கொண்டு உங்கள் கருத்தை அதனடிப்படையில் ஆதாரத்துடன் முன்வையுங்களேன். (இது எப்பிடி இருக்கு...!)

கேள்வி என்ற பெயரில் என்னை கத்திவிளிம்பில் சாகசம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
எப்படித் தொடங்குவது என்ற குழப்பத்திலுள்ளேன் தீபன். எப்படியும் தொடங்கிடவேண்டும் என்ற முயற்சியையும் விடவில்லை.
பார்க்கிறேன்.
எந்த சமரசத்திற்கும் இடம்கொடாது மனதில் படுவதை எழுத்தில் வடியுங்கள்.... குழப்பம் வராது... பார்த்தது போதும்... விடை பகிர வாருங்கள்.

:eek: :eek: :eek:

SORRY... Out of Syllabus.

என்னது சின்னப்புள்ளத்தனமா இப்படி? அமரன் ஆதவனின் கவிதைகள் போல கேள்வி.... முயல்கிறேன்....

:eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek:
ஆங்கிலத்தில் பதிவு... மன்ற விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கட்டாயம் கேள்விக்கு விரிவான பதிலை தரவேண்டுமென உத்தரவிடுகிறேன்.

என்னுடைய பதிலை கொஞ்சம் கொஞ்சமாக தர எண்ணுகிறேன்..

அதற்கு முன் உங்களது வினாவிலுள்ள ஐயப்பாடுகளை தீர்த்துவையுங்கள்...

மனிதன் முன்னேறிக்கொண்டிருக்கிறான் என்றீர்கள்..
எந்த அடிப்படையிலான முன்னேற்றத்தை குறிப்பிடுகிறீர்கள்
மனிதத்துவத்தின் முன்னேற்றமா..
வாழ்க்கைத்தரத்தின் முன்னேற்றமா
பொருளாதார அடிப்படையிலான முன்னேற்றமா..?
அல்லது வெறுமனே தொழினுட்ப அடிப்படையிலான முன்னேற்றமா..
ஆத்மீக முன்னேற்றமா..
எந்த முன்னேற்றம் என்று கூறினால்தான் அந்த கண்ணோட்டத்தில் உங்கள் கேள்வியை அணுக முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து..

நிச்சயமாக மனிதன் உயிரோடு இருப்பதை விட உயிர்ப்போடு இருப்பதுதான் முக்கியம்..
என் சொந்தக்கருத்து மனிதனாக இருப்பதில் எதுவுமில்லை
மனிதப்பண்புகளுடன் இருங்கள் அதுதான் வாழ்க்கை..
இது பற்றிய மேலதிக விளக்கத்தையும் உங்கள் பதிலளிப்பின்பின்தொடர்கிறேன் சகோதரன் தீபன் அவர்களே..
நீங்கள் சொன்ன எல்லாம் சேர்த்துதான் முன்னேற்றம் என்பது. அனால் அதில் சிலதில் மனிதன் முன்னேறவில்லை. (உதாரணம்-ஆன்மீகம்).
உங்கள் கருத்தை முடிந்தவரை ஒவ்வொரு அடிப்படையிலும் ஆரய்ந்த்து முன்வையுங்கள். பிரதானமாக அறிவியல் முன்னேற்றம்.

வணக்கம்,
என்ன தீபன் இப்படி ஒரு பொறி. வாழ்வது விருப்பமில்லையா? இருக்கட்டும். வீழும் இனம் அல்லவே நாம். பொறிகளுக்குள் அகப்பட்டு பொறி கலங்காமல் சீறி எழும் இனம். கால நீரோட்டம் கண்டபடி ஓடுகிறது. அனுபவசாலிகளின் அனுமானம் பொய்த்துப்போகும் எம் களமுனைகளில். பதில் தருகிறேன். பொறுத்தருள்க.
உங்கள் முன்னுரையிலேயே பதிலின் சாராம்சம் தெரிகிறது... விரிவான பதிலை எதிர்பார்க்கிறேன்..!

என்னதிது.... பதில் சொல்ல வாங்கன்னா எல்லோருமே இப்பிடி ட்ரெயிலர மட்டும் போட்டு நழுவுறிங்க.... சிலர் கேள்விக்கு எதிர் கேள்வி கேட்டு எஸ்கேப் ஆக பாக்கிறாங்க... அவங்க அவங்களுக்கு புரிஞ்ச கோணத்துல பதில்சொல்ல வேண்டியதுதானே....

(சரிபாதிப்பேர் ட்ரெயிலராவது போட்டாங்க... மீதிப் பேர் அதுவுமில்ல... )

சரி, பதிலாளிகளுக்கு ஒரு உற்சாக அறிவிப்பு....

முதலில் பதிலளிக்கும் 5 பேருக்கு தலா 500 ஈ பணம் வழங்குவார் நம் திரியின் நாயகர் ராஜா அண்ணா...!!!!
(பதில்களின் முடிவில் உங்களுக்கு உள்ள ஆப்புன்னு நான் சொன்னது இதத்தான் ராஜாண்ணா....:eek:- என்ன பண்றது... லஞ்சம் குடுக்காட்டா இந்த காலத்தில எதுவும் ஆகமாட்டேங்குதே....:sprachlos020:).

தீபன்
19-08-2008, 01:26 AM
என்னது செல்வாவுக்கு கல்யாணமாகலையா..?? ஓவியக்கா..நீங்க அவரோட இலக்கியசோலைக்கு கொஞ்சம் போயிட்டு வாங்க.. அப்புறம் நானே செல்வாவுக்கு கல்யாணம் ஆகலைன்னு சொன்னாக்கூட நீங்க நம்ப மாட்டீங்க...!!:smilie_abcfra::aetsch013:

தீபா..(யாரதுன்னு கேட்கக்கூடாது சொல்லிப்புட்டேன் ஆமாம்..) நல்லாவே பத்தவச்சிருக்கப்பா..திரியை..??!! பார்க்கலாம் எங்க எங்க பத்துதுன்னு..:wuerg019::icon_rollout:
ஓவியாவைபோல செல்வாவும் அனுபவமில்லன்னு சாக்கு போக்கு சொல்லமுன்னம் பெரிய ஆப்பா வச்சிட்டின்க சுகந்தா...(யாருன்னு நீங்களும் கேக்கப்படாது...)
பத்தவைக்கணும்னு நினனைக்கல... ஆனா அதுவா அங்க அங்க பத்திக்கும்னு தோணுது... பாக்கலாம்...!

(வடிவேல் பாணியில்)
ஆஹா.......ஆஹா..
மாட்டிடீங்களா....மாட்டிடீங்களா...!
தீபன் தம்பி கேள்வி ...கேட்டாலும் கேட்டார்....
திரி முழுக்க புலம்பலா புலம்பி கிடக்குதையா...
நாந்தேன் பேந்த பேந்த,...முழிச்சிட்டிருக்கேன்னா.....எல்லாருடைய நிலமையும் அப்படித்தானோ (ஆப்படிதானோ?)
சந்தோசமையா..சந்தோசம்...
நல்லாயிருங்க..நல்லாயிருங்க...

என்ன ஒரு வில்லத்தனம்... :eek:

ஈர்பத்து பேருள் முதலாளாக முதல் பதிலை தந்துள்ளீர்கள். (சற்று விரிவாகவே தந்திருக்கலாம்). நன்றி.
அனைவரின் விடைகளின்பின் அதுபற்றி தொகுப்புரையில் சொல்கிறேன்.

விகடன்
19-08-2008, 05:04 AM
முதல் கணைக்கு தென்றல், விராடன்:
பெண் இலக்கியவாதிகள், சிந்தனைவாதிகள் தங்களின் கருப்பொருளாக பெரும்பாலும் பெண்களின் பிரச்சினைகளையே முன்வைக்கின்றனர். அதையும் தாண்டி மொத்த மனிதர்களுக்குமான பிரச்சினைகளில் கவனமெடுப்பது அரிது. இந்தக் கருத்தோடு நீங்கள் ஒத்துப் போகிறீர்களா? இல்லையா? ஏன்?

ஒத்துப்போகிறேன்,

உங்களுடைய கேள்வியிலேயே அதற்கான விடையும் பொதிந்திருக்கிறது தீபன்.
அதுதானே "பெண் இலக்கியவாதிகள்" என்று சொல்லிவிட்டீர்கள்.

ஓவியன்
19-08-2008, 06:05 AM
ஏழாவது கணைக்கு ஆதி, ஓவியன்:
யுத்தம் தவிர்க்கப்படவேண்டிய ஒன்றென்றால் அந்த யுத்தம் ஏற்பட காரணமாயமைந்த பிரச்சினையை அகிம்சை வளியில் தீர்க்க முடியுமா…? எல்லா இடங்களிலும் இது சாத்தியமா..? வன்முறையை வளியாககொண்ட எந்த போராட்டமாவது வெற்றிபெற்றதில்லையா..?

என்னைப் பொறுத்த வரை யுத்தமென்பது எந்தவொரு பிரச்சினைக்குமான இறுதித் தீர்வாக அமையாது, ஆனால் இறுதித் தீர்வுக்கான வாசலைத் திறந்து வைக்கும்...

பின்வரும் கருத்தினைக் கவனியுங்கள்...

"இந்தப் போரில் ஒருவர் வெற்றி பெறுவார். மற்றவர் தோல்வி காண்பார். ஆனால், போரின் பின்னர் நாட்டின் சாம்பல் மேட்டில் நின்றாவது வெற்றி பெற்றவரும் தோல்வி கண்டவரும் ஒரே மேசையில் அமர்ந்து பேசத்தான் வேண்டும். உங்களுக்கே வெற்றி என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நாமே வெற்றி பெறுவோம் என்று நாங்கள் நினைக்கின்றோம். ஆனால், பெறுமதியான பகையாளிகள் என்ற வகையில் ஒருவரை மற்றவர் மதிப்பதற்கான வாய்ப்பை எம்மிடம் இருந்து அபகரித்து தவறிழைத்து விடாதீர்கள். இணக்கமான கருத்தைக் கொண்டவர்களாக இல்லாவிட்டாலும் நீங்களும் நாங்களும் எதிரிகளாக இருந்தாலும் உங்களை மதிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை எங்களுக்குத், தாருங்கள்".

இது தன்னாட்டின் விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதையும் செல்வழித்த நெல்சன் மண்டேலாவின் புகழ் பூத்த சொல்லாடல் ஒன்றின் தமிழாக்கம். எல்லா இடத்திலும் இறுதியாக எந்த ஒரு பிரச்சினையை பேசித்தான் தீர்க்க வேண்டும். ஆனால் அந்த நிலையை எட்டுவதற்கு எல்லா இடங்களிலும் அஹிம்சை துணை போவதில்லை என்பதே யதார்த்தம். ஏனென்றால் வாளை வைத்துக் கொண்டு வன்முறை செய்பவனிடம் வா, வந்து இறுதித் தீர்வைப் பேசித் தீர்ப்போம் என்று கையில் வெள்ளைத் துணியை வைத்துக் கொண்டு வினவ முடியாது. அப்படி வினவினால், அவனது வாளுக்கு அடுத்த இரை நாமாகவும் இருக்கக் கூடும்.

''ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணும்'' அதே போல முட்டுற மாட்டை அடித்துத்தான் கறக்கணும்...!!.

இங்கே சீனப் பெருந்தலைவர் 'மாவோ சேதுங்' அவர்களின் கருத்தொன்றையும் கூறுவது நலனாக அமையும்...

''நாம் எந்த ஆயுததை எடுப்பது என்பதை நமது எதிரிகள் தீர்மானிக்கிறார்கள்''

இதனை விளக்க வேண்டியதில்லை, இதுதான் யதார்த்தம், அஹிம்சையை மதிப்பவர்களிடன் அஹிம்சா முறையிலும் வன்முறையாளனனிடம் வன்முறையாலுமே பிரச்சினைக்கான இறுதித் தீர்வுக்கான வாசலைத் திறக்க முடியும்.

பூமகள்
19-08-2008, 12:30 PM
மூன்றாவது கணைக்கு பூமகள், அன்புரசிகன்:
ஒரே இனத்தவர்களாயிருந்தும் அயல்நாட்டில் அவலங்கள் நிகளழும்போது அங்கு என்ன நடக்கிறதென்பதே தெரியாது அந்நாட்டு பிரச்சினைகளின் அடிப்படையைகூட தெரிந்துகொள்ள முயற்சிக்காமல் பொழுதுபோக்கு அம்சங்களிலும் தங்கள் சொந்த வேலைகளிலும் மட்டும் மூழ்கிப் போயிருக்கும் பலரைப்பற்றி உங்கள் பார்வை என்ன?
நல்ல கேள்வி பாராட்டுகள் தீபன் அவர்களே. கேள்வியில் என்னை சிக்க வைத்தமைக்கு நன்றிகள்.

கேள்விக்கு பதிலளிப்பதற்கான பக்குவமும் தெளிவும் எனக்கிருப்பதாக நான் உணரவில்லை.

இருப்பினும் எனக்கு தோன்றிய பதில் தர முயல்கிறேன்.

அடுத்த நாட்டில் வாழும் சக இனத்தவர் வரை ஏன் போக வேண்டும்...??!! எனக்கு புரியவில்லை.

அண்டை வீட்டில் நடந்து வரும் துன்பங்களையே எத்தனை பேர் அறிவர்??

சக மனிதர் மீதான அக்கறை நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. பொருள் தேடும் உலகில் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் கூட்டம் தனி மனிதர்களாக மாறி வருகிறது.

இந்த சமூக மாற்றத்தின் விளைவே.. ஒரு பக்கம் அநீதி நடக்க.. "எனக்கு நேராத வரை நான் கவலைப்பட மாட்டேன்" என்ற அலட்சியப்போக்கு..!!

தீ வந்து தன் விரல் சுட்டால் தான்..
உண்மை வலி புரியும்..

சிலருக்கு பட்டால் தான் புரியும்..

அடுத்த நாட்டில் நம்மவர் என்பதால் மட்டும் கவலைப்பட வேண்டும் என்ற வாதத்தை நான் ஏற்க மாட்டேன்.

சோமாலியாவில் பட்டினியால் சாகும் குழந்தைகளைப் பார்க்கையிலும் கண்கள் கசிய வேண்டும்..

ஹிரோசிமாவில் அணு குண்டு தாக்குதலில் இன்றளவும் ஊனத்தோடு பிறக்கும் மழலைகள் பார்க்கையிலும் மனதில் வலிக்க வேண்டும்..

ஒரு இனத்தவர் என்பது கடந்து... மானுடம் முழுக்க எங்கெல்லாம் அநீதியால் மனித நேயம் தகர்ந்து தாக்கப்படுகிறதோ... அங்கெல்லாம் மனிதம் விழித்தெழச் செய்ய வேண்டும்.. சமூக விழிப்புணர்வும்.. தான்.

தான், தன் நலம், தனது சந்தோசம் என்ற குறுகிய மனப்பான்மையும் விட்டு வெளிவந்தால் ஒழிய இத்தகையோரின் எண்ணிக்கை குறையாது.

மாற்றம் வர.. மனங்கள் மாற வேண்டும்.. வரும் தலைமுறையின் மனங்களில் இந்த விழிப்புணர்வை விதைப்பது நம் கடமையும் கூட.

தீபா
20-08-2008, 07:10 AM
[B][COLOR="Purple"](1) தென்றல், விராடன்

முதல் கணைக்கு தென்றல், விராடன்:
பெண் இலக்கியவாதிகள், சிந்தனைவாதிகள் தங்களின் கருப்பொருளாக பெரும்பாலும் பெண்களின் பிரச்சினைகளையே முன்வைக்கின்றனர். அதையும் தாண்டி மொத்த மனிதர்களுக்குமான பிரச்சினைகளில் கவனமெடுப்பது அரிது. இந்தக் கருத்தோடு நீங்கள் ஒத்துப் போகிறீர்களா? இல்லையா? ஏன்?

ஆ பத்து என்ற எண்ணச்சரத்தில் என்னை நுழைத்தமைக்கு நன்றி. அதனொடு புதுமையாக இருபத்து பெயரைத் தேர்ந்தெடுத்துக் கேட்டதும் அழகு.

இலக்கியம் அது படிப்பவரின் பார்வைக்குட்பட்டு படைப்பாளியின் பாலினப் பிரிவுக்கு ஆட்படுவது இலக்கிய முன்னேற்றத்திற்கான தடைகல் என்றே சொல்வேன்.

உடல்மொழி காமம் சார்ந்து எழுதப்படுவது மட்டும் எண்ணப்படுவது அது எழுதப்பட்ட பாலினத்தை முன் கொண்டே கருத்து அழுத்திவைக்கப்படுகிறது. இது தவிர்க்கப்படவேண்டியது. சமூகம் சார்ந்த படைப்புகளும் வரத்தான் செய்கின்றன. ஆணாதிக்க யுகத்தில் தம்மை நிலை நிறுத்திக் கொள்ள கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள் பெண்ணிலக்கியவாதிகள். உங்கள் கேள்வி கூட ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுதான்.

நம் மன்றத்தில் திருமதி.கவிதா அவர்களின் உதிர்தலும் அவ்வாறான வகையில் பார்க்கப்பட்டது. கவிதை சிந்திய கரு'ப்புள்ளி, தாக்கமறியா அநந்தவாதிகளின் கண்பட்டு பாலின ஆடையுடன் பார்க்கப்படுவதும் வேதனைக்குரியதே! (அதே கவிதை விவாதிக்கப்பட்டதும் அருமை.)

பெண்ணிலக்கியவாதிகள் ஒற்றைக் கதிர்புல்லறுக்கும் போலிகள் அல்ல. மொத்த மனிதர்களுக்குமான பிரச்சனைகளைக் கையாளும் பொழுதும், அது மறக்கப்பட்டு உடல்மொழி, கற்பு, காமம் என்று ஒளிபுகா காட்டை வெட்டவெளிச்சமாக்குகிறார்கள். முழுமையாக உரித்த மொழியைக் கையாளும் பொழுது, பெண் என்பவள் சொல்லாடலிற் தணிக்கை வேண்டாமா என்ற நிலைப்பாட்டினைக் கொண்டுவந்து உங்களைப் போன்றே "பொதுவியலைத் தொடாமல்" இருக்கிறார்கள் என்ற பொத்தாம் பொதுவான முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.

வாய்ப்பளித்தமைக்கு நன்றி
அன்புடன்
தென்றல்

ஆதி
20-08-2008, 08:04 AM

சிறப்பான பதில் தென்றலவர்களே.. வாழ்த்துக்கள்..

பெண் படைப்பாளிகள் தொடாத கருவே இல்லை என்று சொல்லுமளவு இன்று பல படைப்புகள் வந்துவிட்டனர்.. குட்டி ரேவதியின் கவிதைகளையும் பால் பார்க்காமல் வாசியுங்கள் புரியும் தோழர்களே..

தீபன்
20-08-2008, 12:24 PM
இருபது பேருள் இதுவரை ஐவர் (கிஷோர், விராடன், ஒவியன், பூமகள், தென்றல்) விடையளித்து முதல் 5இடத்தை பெற்று ராஜா அண்ணனிடமிருந்து 500 ஈ காசுகளை பெறும்வெற்றியாளர்களாகின்றனர். :icon_b::icon_b::icon_b:
ஏனையோர் எப்ப பதில் தர போறிங்க.... விரைந்து வந்து பத்த வையுங்க மக்கா.....:icon_b:

சரி, இதுவரைவந்த விடைகளை பார்க்கலாம்.:mini023:

ஐந்தாவது கணைக்கு அமரன், கிஷோர்:
ஒருவரை சங்கடப்படுத்தும் அல்லது காயப்படுத்தும் வாதங்களை தவிர்க்கவேண்டுமென மன்றில் அடிக்கடி எச்சரிக்கைகள் வரும். அப்படி இருப்பது சாத்தியமா? அப்படி 100வீதம் இருந்தால் மன்றம் எப்படி இருக்கும்?

வணக்கம் தீபன்..
உங்களது வினாவிற்கு எனது பதில்...சாத்தியமில்லை என்பதேயாகும்.
என்னுடைய எண்ணப்படி....
ஒருவரை சங்கடப்படுத்தும்,அல்லது காயப்படுத்தும்
வாதங்களை இயலுமானவரை தவிர்க்க முயலுதல்
என்பதே ஓரளவுக்காவது சாத்தியமானது,
அதுதான் ஆரோக்கியமான வாதமாகவும் அமையும்.
ஆரோக்கியமான வாதம் என்பதானது கருத்து சுதந்திரம் பறிபோகத எல்லைவரை...தொடரலாம்!
குறிப்பாக வில்லங்கவாதம், விதண்டாவாதம்
போன்றவற்றால் ஒருவரை..காயப்படுதல் என்பது முற்றிலும்
தவறான ஒன்று.
இருந்தாலும்...
யுத்தம் என்று வருகிற போது
அப்பாவிகள் பாதிக்கப்படுவதை எப்படி தடுக்க முடியாதோ,
அது போலவே ...வாதங்கள் ..சில பல நேரங்களில்
வதங்கள் ஆவதையும் தவிர்க்கமுடியாது என்பதே என் கருத்து.

உங்கள் பல பின்னூட்டங்களிலேயே உங்கள் கருத்துக்கள் பிரதிபலிக்கத்தான் செய்கிறது. நீங்கள் சொlல்வதும் சரியாகத்தான் தெரிகிறது. ஆனால் விளக்கமாக சொல்லாமல் நீங்கள் நழுவிவிட்டதுபோல தெரிகிறது... அது, சிலவேளை மற்றவர்களை காயப்படுத்தலாம் என்ற எண்ணத்திலா என்ற சிறு சந்தேகம் என்னுள்...!
ஆனாலும், சிறப்பாக உங்கள் கருத்தை வெளிப்படுத்தியதற்கு என் நன்றிகள். பொறுத்திருந்து பார்ப்போ மற்றையவரின் பார்வையை...!

முதல் கணைக்கு தென்றல், விராடன்:
பெண் இலக்கியவாதிகள், சிந்தனைவாதிகள் தங்களின் கருப்பொருளாக பெரும்பாலும் பெண்களின் பிரச்சினைகளையே முன்வைக்கின்றனர். அதையும் தாண்டி மொத்த மனிதர்களுக்குமான பிரச்சினைகளில் கவனமெடுப்பது அரிது. இந்தக் கருத்தோடு நீங்கள் ஒத்துப் போகிறீர்களா? இல்லையா? ஏன்?

ஒத்துப்போகிறேன்,

உங்களுடைய கேள்வியிலேயே அதற்கான விடையும் பொதிந்திருக்கிறது தீபன்.
அதுதானே "பெண் இலக்கியவாதிகள்" என்று சொல்லிவிட்டீர்கள்.
கேள்வியையே பதிலாக்கி கேள்வியைவிட சுருக்கமாக பதிலளித்து சமாளித்து விட்டீர்கள். உங்கள் பதில் அந்த கருத்தை ஆமோதிப்பதாக அமைகிறது... இதற்கு பதிலாக நீங்கள் மன்ற பெண்புலிகளிடம் என்ன பாடுபடப்போகிறீர்களோ.... 2வரியில் பதில் சொன்ன நீங்கள் அதற்கு பக்கம் பக்கமாக பதில்சொல்லி சமாளிக்கவேண்டியிருக்கும்...! இப்பவே பாருங்க, அடுத்த பதில் எப்பிடி காட்டமா இருக்குன்னு....
(பத்திக்குமா....)

இலக்கியம் அது படிப்பவரின் பார்வைக்குட்பட்டு படைப்பாளியின் பாலினப் பிரிவுக்கு ஆட்படுவது இலக்கிய முன்னேற்றத்திற்கான தடைகல் என்றே சொல்வேன்.

உடல்மொழி காமம் சார்ந்து எழுதப்படுவது மட்டும் எண்ணப்படுவது அது எழுதப்பட்ட பாலினத்தை முன் கொண்டே கருத்து அழுத்திவைக்கப்படுகிறது. இது தவிர்க்கப்படவேண்டியது. சமூகம் சார்ந்த படைப்புகளும் வரத்தான் செய்கின்றன. ஆணாதிக்க யுகத்தில் தம்மை நிலை நிறுத்திக் கொள்ள கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள் பெண்ணிலக்கியவாதிகள். உங்கள் கேள்வி கூட ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுதான்.

நம் மன்றத்தில் திருமதி.கவிதா அவர்களின் உதிர்தலும் அவ்வாறான வகையில் பார்க்கப்பட்டது. கவிதை சிந்திய கரு'ப்புள்ளி, தாக்கமறியா அநந்தவாதிகளின் கண்பட்டு பாலின ஆடையுடன் பார்க்கப்படுவதும் வேதனைக்குரியதே! (அதே கவிதை விவாதிக்கப்பட்டதும் அருமை.)

பெண்ணிலக்கியவாதிகள் ஒற்றைக் கதிர்புல்லறுக்கும் போலிகள் அல்ல. மொத்த மனிதர்களுக்குமான பிரச்சனைகளைக் கையாளும் பொழுதும், அது மறக்கப்பட்டு உடல்மொழி, கற்பு, காமம் என்று ஒளிபுகா காட்டை வெட்டவெளிச்சமாக்குகிறார்கள். முழுமையாக உரித்த மொழியைக் கையாளும் பொழுது, பெண் என்பவள் சொல்லாடலிற் தணிக்கை வேண்டாமா என்ற நிலைப்பாட்டினைக் கொண்டுவந்து உங்களைப் போன்றே "பொதுவியலைத் தொடாமல்" இருக்கிறார்கள் என்ற பொத்தாம் பொதுவான முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.

வாய்ப்பளித்தமைக்கு நன்றி
அன்புடன்
தென்றல்
என் கேள்வியையே ஆணாதிக்க சிந்தனையென திசைதிருப்பி விட்டீர்கள்... இதுவே அக்கூற்றுக்கு வலுச்சேர்ப்பது போலில்லையா...?
(பொதுவான ஒரு கருத்தை சொல்லி அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்க கேட்டதே அக்கேள்வி. அதெப்படி ஆணாதிக்க சிந்தனையாகும்...? அப்படி பார்த்தால் எதையும் பெண்ணியம், ஆணாதிக்கம் என்ற கண்ணோட்டத்தில் நோக்கும் ஒரு பெண்ணின் பார்வையாகத்தானே அமைகிறது. இது அந்த கூற்று உண்மைதான் என்று மறைமுகமாக சொல்கிறதே... அதைத்தான் சொன்னேன்..!)
மேலும், என் கேள்வியில் பெண்கள் பாலியல் விடயங்களை பேசுவதில்லை என குறுகிய வட்டத்துள் குறுக்கவில்லை. மனிதர்களின் பொதுவான பிரச்சினைகளைவிட பெண்களின் பிரச்ச்னைகளிலேயே அதிக கவனத்தை செலுத்துகின்றனர் என்றே குறிப்பிட்டிருந்தேன். இன, மத, மொழி, தேசிய, பன்னாட்டு பிரச்சினைகளை கருப்பொருளாக கைக்கொள்வது ஒப்பீட்டளவில் குறைவென்பதையே சுட்டி கேட்டிருந்தேன். உங்கள் பதில், கேள்வியின் சிறுபகுதியை மட்டும் தொட்டு அதைக்கொண்டு கேள்வியின் தன்மையையே திசைதிருப்புவதாக அமைகிறது. பலர் பாலினப் பார்வையுடன் பெண்களின் படைப்புக்களை அணுகுவதாக சொல்வதும் தவறு... ஒருசில சந்தர்ப்பங்களை வைத்து பொதுவான முடிவிற்கு வருவது சரியல்ல என்பதுகூட உங்கள் கருத்துதானே..!
வினாவிற்கு நழுவாமல் வந்து உங்கள் கருத்தை தெளிவாக தந்தமைக்கு நன்றி தென்றல்.

ஏழாவது கணைக்கு ஆதி, ஓவியன்:
யுத்தம் தவிர்க்கப்படவேண்டிய ஒன்றென்றால் அந்த யுத்தம் ஏற்பட காரணமாயமைந்த பிரச்சினையை அகிம்சை வளியில் தீர்க்க முடியுமா…? எல்லா இடங்களிலும் இது சாத்தியமா..? வன்முறையை வளியாககொண்ட எந்த போராட்டமாவது வெற்றிபெற்றதில்லையா..?

என்னைப் பொறுத்த வரை யுத்தமென்பது எந்தவொரு பிரச்சினைக்குமான இறுதித் தீர்வாக அமையாது, ஆனால் இறுதித் தீர்வுக்கான வாசலைத் திறந்து வைக்கும்...

பின்வரும் கருத்தினைக் கவனியுங்கள்...

இது தன்னாட்டின் விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதையும் செல்வழித்த நெல்சன் மண்டேலாவின் புகழ் பூத்த சொல்லாடல் ஒன்றின் தமிழாக்கம். எல்லா இடத்திலும் இறுதியாக எந்த ஒரு பிரச்சினையை பேசித்தான் தீர்க்க வேண்டும். ஆனால் அந்த நிலையை எட்டுவதற்கு எல்லா இடங்களிலும் அஹிம்சை துணை போவதில்லை என்பதே யதார்த்தம். ஏனென்றால் வாளை வைத்துக் கொண்டு வன்முறை செய்பவனிடம் வா, வந்து இறுதித் தீர்வைப் பேசித் தீர்ப்போம் என்று கையில் வெள்ளைத் துணியை வைத்துக் கொண்டு வினவ முடியாது. அப்படி வினவினால், அவனது வாளுக்கு அடுத்த இரை நாமாகவும் இருக்கக் கூடும்.

''ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணும்'' அதே போல முட்டுற மாட்டை அடித்துத்தான் கறக்கணும்...!!.

இங்கே சீனப் பெருந்தலைவர் 'மாவோ சேதுங்' அவர்களின் கருத்தொன்றையும் கூறுவது நலனாக அமையும்...

இதனை விளக்க வேண்டியதில்லை, இதுதான் யதார்த்தம், அஹிம்சையை மதிப்பவர்களிடன் அஹிம்சா முறையிலும் வன்முறையாளனனிடம் வன்முறையாலுமே பிரச்சினைக்கான இறுதித் தீர்வுக்கான வாசலைத் திறக்க முடியும்.
நன்றி ஓவியன். தெளிவான உறுதியான உண்மையான பதில். வாசலை திறந்தால்தானே இறுதி பேச்சுக்கள் ஆரம்பிக்க முடியும்... அப்படியானால் வன்முறையும் தவிர்க்கப்பட முடியாத ஒன்றே. உங்கள் பதிலின்சுருக்கம் இதுதானே...!
பகத் சிங்கிற்கும் நேதாஜிக்கும் இந்திய விடுதலையில் பங்கில்லையா...?
அழகாக நிறுவியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். நன்றி.

மூன்றாவது கணைக்கு பூமகள், அன்புரசிகன்:
ஒரே இனத்தவர்களாயிருந்தும் அயல்நாட்டில் அவலங்கள் நிகளழும்போது அங்கு என்ன நடக்கிறதென்பதே தெரியாது அந்நாட்டு பிரச்சினைகளின் அடிப்படையைகூட தெரிந்துகொள்ள முயற்சிக்காமல் பொழுதுபோக்கு அம்சங்களிலும் தங்கள் சொந்த வேலைகளிலும் மட்டும் மூழ்கிப் போயிருக்கும் பலரைப்பற்றி உங்கள் பார்வை என்ன?

அடுத்த நாட்டில் வாழும் சக இனத்தவர் வரை ஏன் போக வேண்டும்...??!! எனக்கு புரியவில்லை.

அண்டை வீட்டில் நடந்து வரும் துன்பங்களையே எத்தனை பேர் அறிவர்??

சக மனிதர் மீதான அக்கறை நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. பொருள் தேடும் உலகில் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் கூட்டம் தனி மனிதர்களாக மாறி வருகிறது.

இந்த சமூக மாற்றத்தின் விளைவே.. ஒரு பக்கம் அநீதி நடக்க.. "எனக்கு நேராத வரை நான் கவலைப்பட மாட்டேன்" என்ற அலட்சியப்போக்கு..!!

தீ வந்து தன் விரல் சுட்டால் தான்..
உண்மை வலி புரியும்..

சிலருக்கு பட்டால் தான் புரியும்..

அடுத்த நாட்டில் நம்மவர் என்பதால் மட்டும் கவலைப்பட வேண்டும் என்ற வாதத்தை நான் ஏற்க மாட்டேன்.

சோமாலியாவில் பட்டினியால் சாகும் குழந்தைகளைப் பார்க்கையிலும் கண்கள் கசிய வேண்டும்..

ஹிரோசிமாவில் அணு குண்டு தாக்குதலில் இன்றளவும் ஊனத்தோடு பிறக்கும் மழலைகள் பார்க்கையிலும் மனதில் வலிக்க வேண்டும்..

ஒரு இனத்தவர் என்பது கடந்து... மானுடம் முழுக்க எங்கெல்லாம் அநீதியால் மனித நேயம் தகர்ந்து தாக்கப்படுகிறதோ... அங்கெல்லாம் மனிதம் விழித்தெழச் செய்ய வேண்டும்.. சமூக விழிப்புணர்வும்.. தான்.

தான், தன் நலம், தனது சந்தோசம் என்ற குறுகிய மனப்பான்மையும் விட்டு வெளிவந்தால் ஒழிய இத்தகையோரின் எண்ணிக்கை குறையாது.

மாற்றம் வர.. மனங்கள் மாற வேண்டும்.. வரும் தலைமுறையின் மனங்களில் இந்த விழிப்புணர்வை விதைப்பது நம் கடமையும் கூட.
அருமையான மனிதாபிமானப் பதில். கேள்வியில், அயல் நாட்டவர், எம்மவர் என்பதற்காக மட்டும் அக்கறைகொள்ள வேண்டுமென கேட்கவில்லை. அயல் நாடாய், ஒரே இனமாய் இருந்தும்கூட என்றே கேட்டிருந்தேன். இதற்கே முடியாதவர்கள் ஒட்டுமொத்த உலகில் எப்படி கவனமெட்டுக்கமுடியும் என்ற அர்த்தத்தில் அப்படி கேட்டிருந்தேன்.
ஆனாலும், என் கேள்வியின் வட்டத்தை இன்னும் விஸ்தரித்து ஒட்டுமொத்த மனித குலத்தின் மேலும் நாம் கொண்டிருக்கவேண்டிய கரிசனையை அழகாக எடுத்தியம்பிய பூமகளிற்கு நன்றிகள்.

தீபா
20-08-2008, 12:40 PM
என் கேள்வியையே ஆணாதிக்க சிந்தனையென திசைதிருப்பி விட்டீர்கள்... இதுவே அக்கூற்றுக்கு வலுச்சேர்ப்பது போலில்லையா...?
(பொதுவான ஒரு கருத்தை சொல்லி அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்க கேட்டதே அக்கேள்வி. அதெப்படி ஆணாதிக்க சிந்தனையாகும்...? அப்படி பார்த்தால் எதையும் பெண்ணியம், ஆணாதிக்கம் என்ற கண்ணோட்டத்தில் நோக்கும் ஒரு பெண்ணின் பார்வையாகத்தானே அமைகிறது. இது அந்த கூற்று உண்மைதான் என்று மறைமுகமாக சொல்கிறதே... அதைத்தான் சொன்னேன்..!)
மேலும், என் கேள்வியில் பெண்கள் பாலியல் விடயங்களை பேசுவதில்லை என குறுகிய வட்டத்துள் குறுக்கவில்லை. மனிதர்களின் பொதுவான பிரச்சினைகளைவிட பெண்களின் பிரச்ச்னைகளிலேயே அதிக கவனத்தை செலுத்துகின்றனர் என்றே குறிப்பிட்டிருந்தேன். இன, மத, மொழி, தேசிய, பன்னாட்டு பிரச்சினைகளை கருப்பொருளாக கைக்கொள்வது ஒப்பீட்டளவில் குறைவென்பதையே சுட்டி கேட்டிருந்தேன். உங்கள் பதில், கேள்வியின் சிறுபகுதியை மட்டும் தொட்டு அதைக்கொண்டு கேள்வியின் தன்மையையே திசைதிருப்புவதாக அமைகிறது. பலர் பாலினப் பார்வையுடன் பெண்களின் படைப்புக்களை அணுகுவதாக சொல்வதும் தவறு... ஒருசில சந்தர்ப்பங்களை வைத்து பொதுவான முடிவிற்கு வருவது சரியல்ல என்பதுகூட உங்கள் கருத்துதானே..!
வினாவிற்கு நழுவாமல் வந்து உங்கள் கருத்தை தெளிவாக தந்தமைக்கு நன்றி தென்றல்.

மன்னிக்கவேண்டும். நான் சரியாகச் சொல்லவில்லையோ என்று எண்ணுகிறேன். நான் உங்கள் கேள்வியைப் பொதுவாகவே எடுத்துக் கொண்டேன்.

பொதுவாக பெண் எல்லாவற்றையும் படைக்கிறாள். அது இன்னொரு பெண்ணிற்கும் தெரிகிறது. இதில் பெண்களின் பிரச்சனைகளை மட்டுமே கவனமெடுத்து படைக்கிறாள் என்று சொல்வது ஆண்கள்தான். அதனால்தான் உங்கள் கேள்வியிலுள்ள கூற்று ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு என்றேன். பேதம் பார்ப்பது படைப்பில் ஆகாது என்றுதான் சொன்னேனே ஒழிய, வாழ்வியலில் ஆகாது என்று சொல்லவில்லை.

இன்னும் விளங்கச் சொல்லவேண்டுமெனில், படைப்புகளை மையப்படுத்தி பேதம் பார்ப்பது தவறு. பெண்ணியத்தை அழகாகச் சொன்ன ஆண்களும் உண்டு. ஆனால் அங்கே கேள்வி இல்லை.. ஏனெனில் அது ஆணாகப் பட்டது. அதற்காக நான் ஆணாதிக்கம், பெண்ணியம் என்று பிரிப்பதாக நீங்கள் கருதவேண்டாம். அது சொல்லவேண்டிய கட்டாயத்தில் சொல்லப்பட்டது.

ஒப்பீட்டளவில் குறைவு என்பதும் தவறு. முழுமையாக பெண் இலக்கியவாதிகளின் படைப்புகளைப் படிக்கவில்லை என்றுவேண்டுமானால் கருதலாம்.

பலர் பாலினப் பார்வையுடன் பெண்களின் படைப்புக்களை அணுகுவதாக சொல்வதும் தவறு... ஒருசில சந்தர்ப்பங்களை வைத்து பொதுவான முடிவிற்கு வருவது சரியல்ல என்பதுகூட உங்கள் கருத்துதானே..!

ஒருசில சந்தர்ப்பங்கள் மட்டும் இருந்திருந்தால், பெண்ணீயப்படைப்புகள் பெண்சார்ந்து அல்லாமல் பொதுவான பார்வையாகவே கருதப்பட்டிருக்கும்.. உங்கள் கேள்வியே எழுந்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும்..

நம் மன்றத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பல பிரச்சனைகளை முன்வைத்து எழுதும் பெண்கள் இருக்கிறார்களே!!

தீபன்
20-08-2008, 12:46 PM
மன்னிக்கவேண்டும். நான் சரியாகச் சொல்லவில்லையோ என்று எண்ணுகிறேன். நான் உங்கள் கேள்வியைப் பொதுவாகவே எடுத்துக் கொண்டேன்.

பொதுவாக பெண் எல்லாவற்றையும் படைக்கிறாள். அது இன்னொரு பெண்ணிற்கும் தெரிகிறது. இதில் பெண்களின் பிரச்சனைகளை மட்டுமே கவனமெடுத்து படைக்கிறாள் என்று சொல்வது ஆண்கள்தான். அதனால்தான் உங்கள் கேள்வி ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு என்றேன்.

விளக்கத்திற்கு நன்றி தென்றல். மேலே சிவப்பில் உள்ளது உங்கள் கேள்வியிலுள்ள கூற்று ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு என்றிருக்கவேண்டுமென்பதைதான் நான் சொல்ல வந்தேன்.

தீபா
20-08-2008, 12:49 PM
விளக்கத்திற்கு நன்றி தென்றல். மேலே சிவப்பில் உள்ளது உங்கள் கேள்வியிலுள்ள கூற்று ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு என்றிருக்கவேண்டுமென்பதைதான் நான் சொல்ல வந்தேன்.

ஆங்.. மிகச்சரி.. :)

ஆதி
20-08-2008, 12:55 PM
ஏழாவது கணைக்கு ஆதி, ஓவியன்:
யுத்தம் தவிர்க்கப்படவேண்டிய ஒன்றென்றால் அந்த யுத்தம் ஏற்பட காரணமாயமைந்த பிரச்சினையை அகிம்சை வழியில் தீர்க்க முடியுமா…? எல்லா இடங்களிலும் இது சாத்தியமா..? வன்முறையை வழியாககொண்ட எந்த போராட்டமாவது வெற்றிபெற்றதில்லையா..?

சாமாதானத்தை எந்திர ஆயுதங்களோடு தேடினால் எப்படி கிட்டும்..

என்னைப் பொருத்தமட்டில் அகிம்சையை விட பலமான ஆயுதம் வேறொன்றுமில்லை.. எந்த சாமான்யனும் எயந்திர ஆயுதங்களை ஏந்தலாம்.. அதை ஏந்த இரு கைகளும் உடலில் கொஞ்சம் வலிமையும் போதும்.. அன்பென்னும் ஆயுதம் ஏந்த முதிர்ந்த மனப்பக்கும், கொஞ்சமும் செறிவு தளராத உறுதி, எழுக்கடலைப் போல நிறைந்த நிதானம் மற்றும் பலப் பல தகுதிகள் அவசியம்..

எந்திர ஆயுதத்தின் வெற்றி பிணக்குவியலின் மத்தியில்தான் கொண்டாடப் படும்.. அப்போது இறப்பின் வலிகளைவிட வெற்றியின் களிப்பொன்றும் பெரிதாக தெரியாது.. கலிங்கம்தான் சாம்ராட் அசோகனுக்கு புத்தம் கொடுத்து..

துப்பாக்கிகளும் குண்டுகளும் பதிலுக்கு பதில் கொடுக்கலாம்.. ஆனால் அவைகள் போர்த்துவக்கத்திற்கான ஆரம்ப கேள்விக்கு பதிலாகாது.. அது மட்டுமின்றி பல இழப்புகளை கொடுக்கும்.. இழப்புகள் அதிகமாக அதிகமாக போராட்டத்திலுள்ளவர்களி எண்ணிக்கை குறையும்.. குறைய குறைய போராட்டத்தின் வலிமை தேயும்.. அன்பினால் புரிய படுகிற போரில் இழப்புகள் அதிகம் இருப்பதில்லை.. அதனால் அந்த போரின் வலிமையும் குறைவதில்லை..

எந்திர ஆயுதத்தால் போரை வேண்டுமானால் வெல்லலாம்.. போரின் நோக்கம் நிச்சயம் முழு வெற்றி அடையாது.. வெற்றிக்கு பிறகு வென்றவர்களால் நிர்மானிக்கப்படுகிற ராஜ்ஜியம் ராணுவ ராஜ்ஜியமாகத்தான் இருக்கும்..

தீபன்
20-08-2008, 03:36 PM
ஏழாவது கணைக்கு ஆதி, ஓவியன்:
யுத்தம் தவிர்க்கப்படவேண்டிய ஒன்றென்றால் அந்த யுத்தம் ஏற்பட காரணமாயமைந்த பிரச்சினையை அகிம்சை வளியில் தீர்க்க முடியுமா…? எல்லா இடங்களிலும் இது சாத்தியமா..? வன்முறையை வளியாககொண்ட எந்த போராட்டமாவது வெற்றிபெற்றதில்லையா..?

சாமாதானத்தை எந்திர ஆயுதங்களோடு தேடினால் எப்படி கிட்டும்..

என்னைப் பொருத்தமட்டில் அகிம்சையை விட பலமான ஆயுதம் வேறொன்றுமில்லை.. எந்த சாமான்யனும் எயந்திர ஆயுதங்களை ஏந்தலாம்.. அதை ஏந்த இரு கைகளும் உடலில் கொஞ்சம் வலிமையும் போதும்.. அன்பென்னும் ஆயுதம் ஏந்த முதிர்ந்த மனப்பக்கும், கொஞ்சமும் செறிவு தளராத உறுதி, எழுக்கடலைப் போல நிறைந்த நிதானம் மற்றும் பலப் பல தகுதிகள் அவசியம்..

எந்திர ஆயுதத்தின் வெற்றி பிணக்குவியலின் மத்தியில்தான் கொண்டாடப் படும்.. அப்போது இறப்பின் வலிகளைவிட வெற்றியின் களிப்பொன்றும் பெரிதாக தெரியாது.. கலிங்கம்தான் சாம்ராட் அசோகனுக்கு புத்தம் கொடுத்து..

துப்பாக்கிகளும் குண்டுகளும் பதிலுக்கு பதில் கொடுக்கலாம்.. ஆனால் அவைகள் போர்த்துவக்கத்திற்கான ஆரம்ப கேள்விக்கு பதிலாகாது.. அது மட்டுமின்றி பல இழப்புகளை கொடுக்கும்.. இழப்புகள் அதிகமாக அதிகமாக போராட்டத்திலுள்ளவர்களி எண்ணிக்கை குறையும்.. குறைய குறைய போராட்டத்தின் வலிமை தேயும்.. அன்பினால் புரிய படுகிற போரில் இழப்புகள் அதிகம் இருப்பதில்லை.. அதனால் அந்த போரின் வலிமையும் குறைவதில்லை..

எந்திர ஆயுதத்தால் போரை வேண்டுமானால் வெல்லலாம்.. போரின் நோக்கம் நிச்சயம் முழு வெற்றி அடையாது.. வெற்றிக்கு பிறகு வென்றவர்களால் நிர்மானிக்கப்படுகிற ராஜ்ஜியம் ராணுவ ராஜ்ஜியமாகத்தான் இருக்கும்..

நன்றி ஆதி. அகிம்சையின் மகத்துவத்தை தெளிவாக சொல்லிவிட்டீர்கள். ஓவியனின் பார்வைக்கு முற்றிலும் மாறுபட்ட பார்வை உங்களுடையது. ஆனாலும் பொதுவாக சொல்லிவிட்டீர்கள். உங்கள் பதில் ஓவியன் சொன்னதுபோல் எல்லா சந்தர்ப்பங்களிலும் சரிவருமா என்பது சந்தேகமே...! உன்னை கொல்லவரும் பசுவையும் கொல்லல்லாம் என சொன்னவர் விவேகானந்தர். இல்லையேல் இந்தியா ஏழைகளின் வயிற்றிலடித்துக்கொண்டுஅணுகுண்டு தயாரிக்க வேண்டிய அவசியமென்ன...?

ஆனாலும் உங்கள் கருத்தை தெளிவாக அழகாக சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

kampan
20-08-2008, 03:54 PM
நல்ல கேள்வி பாராட்டுகள் தீபன் அவர்களே. கேள்வியில் என்னை சிக்க வைத்தமைக்கு நன்றிகள்.

கேள்விக்கு பதிலளிப்பதற்கான பக்குவமும் தெளிவும் எனக்கிருப்பதாக நான் உணரவில்லை.

இருப்பினும் எனக்கு தோன்றிய பதில் தர முயல்கிறேன்.

அடுத்த நாட்டில் வாழும் சக இனத்தவர் வரை ஏன் போக வேண்டும்...??!! எனக்கு புரியவில்லை.

அண்டை வீட்டில் நடந்து வரும் துன்பங்களையே எத்தனை பேர் அறிவர்??

சக மனிதர் மீதான அக்கறை நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. பொருள் தேடும் உலகில் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் கூட்டம் தனி மனிதர்களாக மாறி வருகிறது.

இந்த சமூக மாற்றத்தின் விளைவே.. ஒரு பக்கம் அநீதி நடக்க.. "எனக்கு நேராத வரை நான் கவலைப்பட மாட்டேன்" என்ற அலட்சியப்போக்கு..!!

தீ வந்து தன் விரல் சுட்டால் தான்..
உண்மை வலி புரியும்..

சிலருக்கு பட்டால் தான் புரியும்..

அடுத்த நாட்டில் நம்மவர் என்பதால் மட்டும் கவலைப்பட வேண்டும் என்ற வாதத்தை நான் ஏற்க மாட்டேன்.

சோமாலியாவில் பட்டினியால் சாகும் குழந்தைகளைப் பார்க்கையிலும் கண்கள் கசிய வேண்டும்..

ஹிரோசிமாவில் அணு குண்டு தாக்குதலில் இன்றளவும் ஊனத்தோடு பிறக்கும் மழலைகள் பார்க்கையிலும் மனதில் வலிக்க வேண்டும்..

ஒரு இனத்தவர் என்பது கடந்து... மானுடம் முழுக்க எங்கெல்லாம் அநீதியால் மனித நேயம் தகர்ந்து தாக்கப்படுகிறதோ... அங்கெல்லாம் மனிதம் விழித்தெழச் செய்ய வேண்டும்.. சமூக விழிப்புணர்வும்.. தான்.

தான், தன் நலம், தனது சந்தோசம் என்ற குறுகிய மனப்பான்மையும் விட்டு வெளிவந்தால் ஒழிய இத்தகையோரின் எண்ணிக்கை குறையாது.

மாற்றம் வர.. மனங்கள் மாற வேண்டும்.. வரும் தலைமுறையின் மனங்களில் இந்த விழிப்புணர்வை விதைப்பது நம் கடமையும் கூட.

பதில்கள் எழுதுவதற்கு பொருத்தமானது ஆனால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியானதே? உங்கள் பதில் எப்படியென்றால் அப்பா அம்மாவை ஆதரிக்க மறந்தவன் ஆயலவரை ஆதரிப்பான் என்பது போல் இருக்கிறது. எங்களுக்க நம்பிக்கை இருக்கிறது என்றோ ஒரு நாள் எங்களுக்கு உங்கள் ஆதரவு கிடைக்கும் என்று. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.

மதுரகன்
20-08-2008, 04:38 PM
முன்னேற்றம் என்பது அமைதிக்காக ஏற்படவில்லை அது பல துறை நோக்கம் கண்டு உண்டானது. உ-ம் : வேலைகளை எளிதாக்க, தகவல் பரிமாற்றத்தினை எளிதாக்க. இம்முன்னேற்றங்கள் நேரடியாக அமைதியைப்பறிக்காவி்ட்டாலும் அவற்றின் மூலமாக ஏற்பட்ட போட்டி அமைதிக்குலைவிற்கு காரணமாகிவிட்டது.

அறிவயல் முன்னேற்றத்தை எடுத்துக்கொண்டால் சகல துறைகளும் அதன் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றது இதன் காரணமாக வேலைகள் எளிதாக்கப்பட்டது உடனடி விளைவு நீண்டகால விளைவுகளைப்பார்த்தால் பல தொழிலாளர்கள் வேலையிழக்க இது காரணமானது...

அதிகளவு மாசுக்கள் சூழலில் விடுவிக்கப்பட்டது இதன் தொடர்ச்சி ஓசோனில் ஓட்டை பச்சை வீட்டுவிளைவு என நீண்டுகொண்டிருக்கின்றது..

எரிபொருளை பெற்றுக்கொள்வதிலுள்ள போட்டி உலக நாடுகளிடையே ஆதிக்கப்போர் நடைபெறுவதில் வந்து நிற்கின்றது.
இது ஆயுதங்களின் விருத்திக்கும் அணு ஆயுதங்களின் விருத்திக்கும் வழிவகுத்து ஆபத்தை அதிகரித்துள்ளது..

முந்தைய காலங்களில் ஒரு போர் ஏற்பட்டால் வரக்கூடிய அழிவைவிட இப்போது வரக்கூடிய அழிவு அதிகரித்துள்ளது.

சுருங்கச்சொன்னால் அறிவியல் வளர்ச்சியின் னைத்து பயன்களையும் அனுபவித்துக்கொண்டிருக்கும் மனிதன் அத்துடன் எப்போது வெடிக்கும் என்று தெரியாத ஒரு வெடிகுண்டை வீட்டில் வைத்திருக்கும் மனநிலையில்தான் வாழ்கிறான்.

எனவே அறிவியல் முன்னேற்றம் அமைதியைக் குலைத்துவிட்டதெனவோ உண்மைதான். பாலைவனத்தில் மழையைக்கண்ட ஒருவன் பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காது அதில் நனைவதைப்போல மனிதன் எதிர்காலத்தை சிந்திக்காது விஞ்ஞானத்தை விருத்தி செய்துவிட்டான்..

ஆகவே இந்த வளர்ச்சிதேவைதானா..
நான் முதலேயே கூறியபடி மனிதன் முன்னேற்றத்தினை ஏற்படுத்திக்கொண்ட நோக்கம் வேறு..
அங்கு நாம் தீமைகளைத்தவிர்த்து தேறிய நன்மைகளைக்கணக்கி்ட வேண்டும்..
முன்னேற்றம் என்ற சொல்லே மனித வாழ்க்கைத்தரத்தின் உயர்வைத்தான் குறிக்கிறது..
ஆகவே அங்கு தேறிய விளைவு நன்மைதான் என்பதை உணர்ந்துகொள்ளமுடிகின்றது..
தொழில்நுட்பவியல் விருத்தி நோய்களை அதிகரித்துவிட்டதென்னவோ உண்மை உண்மைதான் உண்டானநோய்களை தீர்க்கவும் அதே தொழில்நுட்பம்தானே உதவுகின்றது..
எதிர்காலத்தில் நோய்கள் ஏற்படாது தடுக்கவும் அதுதானே உதவுகின்றது..
1930களில் மனித சராசரி ஆயுள் 40 ஆகவிருந்து இப்போது 72.5(இலங்கையில்) ஆக உயர்ந்திருப்பது முன்னேற்றமில்லையா..
அம்மை போன்ற உயிர்கொல்லி நோய்கள் மனிதகுலத்திலிருந்து விரட்டப்பட்டது
முன்னேற்றமில்லையா..?

அடுத்து சழூகவியல் முன்னேற்றத்தை பாருங்கள் தீண்டாமை, சாதிக்கொடுமைகள் எல்லாம் உச்சம் பெற்றிருந்த காலம்போய் இனம் மதம் கடந்து திருமணம் செய்வது சாதாரணமாய் ஆகியுள்ளது முன்னேற்றம் இல்லையா..

ஏதாவது அசிங்கத்தை மிதித்துவிட்டால் காலை மட்டும் கழுவுவோர், தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படும் மக்கள் முகத்தில் முழித்தாலே குளிக்கும் அந்த கேவலமான பழக்கத்தை மாற்றியது முன்னேற்றமில்லையா..?

தனிமனித ஆதிக்க மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி மலர்ந்தது முன்னேற்றமில்லையா..

மனிதன் உயிர்ப்புடன் இருப்பது அவன் உயிருடன் இருப்பதைவிட அவசியமானது..
மனிதனாக இருப்பதைவிட மனிதப்பண்புகளுடன் இருப்பது மேலானது..
இதன்படி மனிதப்பண்புகள் தற்போது முன்னேற்றமடைந்துள்ளது..
இது தற்காலிகமாக ஏற்பட்டுள்ள அமைதியின்மையை விரைவில் போக்கும்..
இலங்கையில் ஒரு தனிமனிதன் பாதிக்கப்படும்போது கண்காணா தேசமொன்றில் ஆர்ப்பாட்டம் செய்யும் கலாசாரத்தை உருவாக்கியிருப்பது மனித முன்னேற்றமில்லையா..

மனிதன் முன்னேறிக்கொண்டிருக்கிறான்...
மாற்றமடையாதவர்கள் காலத்தால் அழிக்கப்படுகின்றனர்..

சுகந்தப்ரீதன்
21-08-2008, 02:37 AM
பதில்கள் எழுதுவதற்கு பொருத்தமானது ஆனால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியானதே? உங்கள் பதில் எப்படியென்றால் அப்பா அம்மாவை ஆதரிக்க மறந்தவன் ஆயலவரை ஆதரிப்பான் என்பது போல் இருக்கிறது. எங்களுக்க நம்பிக்கை இருக்கிறது என்றோ ஒரு நாள் எங்களுக்கு உங்கள் ஆதரவு கிடைக்கும் என்று. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.மன்னிக்கவும் கம்பரே..!! தங்களின் பதிவிலிருந்து தாங்கள் எங்களை தவறாக புரிந்துகொண்டதாகவே எனக்கு தோன்றுகிறது...!! அம்மா அப்பாவை ஆதரிக்காமல் அயலானை ஆதரிக்க சொல்லவில்லை பூமகளின் பதில்... அதை மீண்டும் மறுமுறை ஒருமுறை படியுங்கள்...!! அம்மா அப்பாவை மட்டும் நேசிக்காமல் அவர்களுடன் சேர்த்து அயலாரையும் நேசியுங்கள் என்ற அர்த்தத்தில்தான் எழுதப்பட்டுள்ளது..!! அதாவது நான் நீ என்ற சிறுவட்டத்துக்குள் குறுகி விடாமல் நாம் என்ற பெருவட்டத்துக்குள் ஒன்றாய் வலம் வர சொல்கிறது..அவ்வளவே..!!

சுகந்தப்ரீதன்
21-08-2008, 02:44 AM
மனிதன் முன்னேறிக்கொண்டிருக்கிறான்...
மாற்றமடையாதவர்கள் காலத்தால் அழிக்கப்படுகின்றனர்..மாற்றமில்லையேல் மனிதனுக்கு ஏற்றமில்லை என்பதை மிகத்தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள் மதுரகன்..!!

ஆதி
21-08-2008, 08:59 AM
நன்றி ஆதி. அகிம்சையின் மகத்துவத்தை தெளிவாக சொல்லிவிட்டீர்கள். ஓவியனின் பார்வைக்கு முற்றிலும் மாறுபட்ட பார்வை உங்களுடையது. ஆனாலும் பொதுவாக சொல்லிவிட்டீர்கள். உங்கள் பதில் ஓவியன் சொன்னதுபோல் எல்லா சந்தர்ப்பங்களிலும் சரிவருமா என்பது சந்தேகமே...! உன்னை கொல்லவரும் பசுவையும் கொல்லல்லாம் என சொன்னவர் விவேகானந்தர். இல்லையேல் இந்தியா ஏழைகளின் வயிற்றிலடித்துக்கொண்டுஅணுகுண்டு தயாரிக்க வேண்டிய அவசியமென்ன...?

ஆனாலும் உங்கள் கருத்தை தெளிவாக அழகாக சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

தீபன், விவேகானந்தர் மகாஞானிதான் எந்த மாற்று கருத்தில்லை, அதற்காக அவர் சொன்ன அத்தனையையும் ஏற்க வேண்டும் என்பது அவசியமில்லையே..

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

அன்னியரை அன்பினால் அடிபனிய வைத்தவர்கள்.. பிரிந்து சென்ற சகோதர்களை பிணங்களாக்க அணு ஆயுதம் தயாரிப்பது வருத்தத்திற்கு உரியதுதான்.. கண்டிக்க தக்கதுதான் இது என் திண்ணமான கருத்து.. ஆயுதம் ஏந்தி வென்றிருந்தால் வரலாறுகள் இரண்டாம் சிலுவைப் பாடு சென்று காந்தியின் மரணத்தை வர்ணித்திருக்காது.. பிறருக்காய் மறித்ததனால்தான் உலக வரலாறே ஒருவனின் பிறப்புக்கு முன் பிறப்புக்கு பின் என்று பிரிக்கப்பட்டது.. ஈரமற்றவராக இருந்தாலும் பண்போடும் தெரசாலை அன்னை என்று அழைக்கிறார்கள்..

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

தீபன்
21-08-2008, 11:20 AM
நன்றி ஆதி. உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும், உங்கள் பதிலென்பதால் ஏற்றுக்கொள்கிறேன். இதுபற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் விவாதப் பகுதியில் வாதிப்போம்.

ஆதி
21-08-2008, 11:28 AM
நன்றி ஆதி. உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும், உங்கள் பதிலென்பதால் ஏற்றுக்கொள்கிறேன். இதுபற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் விவாதப் பகுதியில் வாதிப்போம்.

நிச்சயமாய் விவாதிப்போம் தீபன்.. நாமிருவரும் நிற்கிற பூமி சூழல் வேறு.. நிச்சயம் என் கருத்தை உங்களால் ஏற்க முடியாது என்று எனக்கு தெரியும்.. நான் புறாக்களுக்கு மத்தியில் இருந்து கொண்டு சமாதனம் பேசலாம்.. ஆனால் புண்களுக்கு மத்தியில் இருக்க உங்கள் வலிகள் எனக்கு புரியாதுதான்.. என்பதை ஏற்று கொள்கிறேன் தீபன்..

பூமகள்
21-08-2008, 11:45 AM
பதில்கள் எழுதுவதற்கு பொருத்தமானது ஆனால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியானதே? உங்கள் பதில் எப்படியென்றால் அப்பா அம்மாவை ஆதரிக்க மறந்தவன் ஆயலவரை ஆதரிப்பான் என்பது போல் இருக்கிறது. எங்களுக்க நம்பிக்கை இருக்கிறது என்றோ ஒரு நாள் எங்களுக்கு உங்கள் ஆதரவு கிடைக்கும் என்று. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.
மன்னிக்கவும் கம்பரே..!! தங்களின் பதிவிலிருந்து தாங்கள் எங்களை தவறாக புரிந்துகொண்டதாகவே எனக்கு தோன்றுகிறது...!! அம்மா அப்பாவை ஆதரிக்காமல் அயலானை ஆதரிக்க சொல்லவில்லை பூமகளின் பதில்... அதை மீண்டும் மறுமுறை ஒருமுறை படியுங்கள்...!! அம்மா அப்பாவை மட்டும் நேசிக்காமல் அவர்களுடன் சேர்த்து அயலாரையும் நேசியுங்கள் என்ற அர்த்தத்தில்தான் எழுதப்பட்டுள்ளது..!! அதாவது நான் நீ என்ற சிறுவட்டத்துக்குள் குறுகி விடாமல் நாம் என்ற பெருவட்டத்துக்குள் ஒன்றாய் வலம் வர சொல்கிறது..அவ்வளவே..!!
கம்பர் அவர்கள் எனது பதிலை புரிந்து கொள்ளவில்லை.

வலியோடும் செல்லடியோடும் துடிக்கும் உங்களின் வேதனை எங்களுக்கு நன்கு புரிகிறது.

சுகந்தப்ரீதனின் புரிதல் தான் என் பதிலின் கரு.

புரிந்திருப்பீர்களென நம்புகிறேன்.

சுகுவுக்கு எனது விசேட நன்றிகள்.

நீதிக்காகவும் தகுந்த உரிமைக்காகவும் போராடித் துயர் படும் மனிதர் அனைவருக்கும் மக்களின் ஆதரவு வேண்டுமென்பதே என் எண்ணமும்.

விடியும் காலம் வெகு தொலைவில் இல்லை கம்பர் அவர்களே.

ஓவியா
21-08-2008, 03:45 PM
எட்டாவது கணைக்கு ஓவியா, செல்வா:
காமத்தையும் ஒரு கலையாக கண்டு காப்பியங்கள் படைத்தது நம் தமிழ். ஆனால், இன்று அதை ஒரு ஆபாசமாக நோக்குவதும் தேவையான இடங்களில் பேசுவதை தவிர்ப்பதுவும் ஏன்? காதலுக்கு இணையான மரியாதை காமத்திற்கு இல்லயா? (மன்றத்தில்கூட அவற்றை ஒதுக்கி வைத்துள்ளார்கள்.) இது தமிழரின் முன்னேற்றத்தை பல்வேறு விதங்களில் பாதிக்கிறதென்பதை ஏற்கிறீர்களா? ஏன்?

சபாஷ் தீபன். அனைத்து கேள்விகளும் அருமை, இதுவரை வந்த அத்தனை பதில்களும் அட்டகாசம். ஒரு அடிதடியான கேள்வியை எனக்கு கொடுத்து என்னை யோசிக்க செய்த உங்களுக்கு நன்றிகள்.

முதலில் ஒரு சுவையான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன் .... :redface::redface: என் நாட்டில் 15 வயதில்தான் பாலியல் கல்வியின் முதலடியாக இனவிருத்தி பாடம் படிப்போம், ஒவ்வொரு தலைப்பிற்க்கும் ஒரு முறை தேர்வு நடக்கும். அப்பொழுது நான் ஒரு புதுப்பள்ளிக்கு மாற்றலாகி சென்ற நேரம்.
இந்தத்தலைப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று நான் முதலிடம் பிடிக்க, மெய்யாலுமே அப்பொழுது அப்பாவியான என்னை மொத்த மாணவர்களும் ஒரு வாரமாக கிண்டலத்து மகிழ்ந்தனர். :D:D:D

*******************************************************************************************************************************

நான் இதுவரை காமத்தை ஒரு கலையாக வடித்த எந்த காப்பியங்களும் படித்ததில்லை. ஆனால் தேன் சுவை சொட்டும் குறளோவியம் மட்டும் நாழிதளில் ஒரு சில பக்கங்கள் படித்துள்ளேன்.... இந்த விசயத்தில் பசிக்கும் பொழுது உண்ணுவோம் என்று விட்டு விட்டேன். உன்மையிலே இந்த கேள்விக்கு பதிலளிக்க நான் ரொம்பவே தடுமாறிப்போனேன். என்னைப்பொருத்த வரை காமம் ஒரு தனிமனிதனின் அந்தரங்க விசயம்.

இந்தக் கேள்வியை நிர்வாகிகள், மூத்தோர் கிட்ட தானே கேட்கவேண்டும்.... மன்றத்தில் என்ன வரணும் என்று வழிகாட்டுபவர்கள் அவர்கள் தானே!.. என்னைக் கேட்டதால் என் கருத்தைச் சொல்கிறேன்.

வீட்டில் சமையலறை, ஹால், பெட்ரூம், பாத்ரூம் என இருப்பது போல ஒவ்வொரு கலைக்கும் ஒரு இடம் இருக்கும். அதைப் போல இந்தக் கலைக்கும் அதற்குரிய ஒரு இடம் இருக்கும் அங்குக் கற்கலாம் விவாதிக்கலாம். எல்லாவற்றையும் பொதுவில்தான் விவாதிக்க வேண்டுமென்பது சரியல்ல :)

அவரவர் இடத்தில் இருந்து கொண்டால் அவரவருக்கு மரியாதை.

பழந்தமிழர் பண்பாடா நாம் இன்றும் பின்பற்றி வருகிறோம்? பண்பாட்டளவில் மிகப் பெரிய மாற்றமும் மனமுதிர்ச்சி அளவில் மிகப் பெரிய மாற்றமும் காலம் தோறும் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. ஆகவே அன்றிருந்தது போல் இன்றில்லையே என்று வருத்தப்படுதல் மிகப் பெரியத் தவறு.

இது தமிழரின் முன்னேற்றத்தைப் பாதிக்கிறதா என்றால் இல்லை என அடித்துச் சொல்ல முடியும்.

காமம் பொது இடங்களில் இல்லாமல் இருப்பதால் பிரச்சனை இல்லை. கணவன் மனைவியரிடையே இல்லாமல் இருந்தால் தான் முன்னேற்றம் பாதிக்கப்படும்.

காமம் என்பது வேறு உடற்கூறியல் போன்ற மருத்துவ முறைகள் வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பும் குழப்பவாதிகள் தான் பாலியல் படிப்பு என முழங்குகிறார்கள்.

காமம் என்பது ஒரு நுண்கலை. அதை முகர, விவரிக்க, விவாதிக்க அதற்குண்டான பண்பாடும் பக்குவமும் வேண்டும். இல்லாவிட்டால் ஆபாசம் என்ற எல்லைக் கோட்டை தாண்டிப்போகும். அதனால் தான் பண்பாடு என்ற வேலி கட்டி அதைக் காக்கிறோம்.

காதல் - காமம் இரண்டுக்கும் சம அந்தஸ்து வேண்டாமா என்று கேட்டால் - !!! இதற்கு இப்போதைக்கு என் பதில் மௌனம் தான். பல விவாதத் திரிகள் இவற்றை விவாதித்து இருக்கின்றன. எவையுமே உருப்படியாய் ஒரு பதில் சொன்னதில்லை.

ஆகவே இதற்கான சரியானப் பதில் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. காதல் என்றால் என்ன என்பதையும் இன்னும் ஒரு கருத்துக்கு வரவில்லை. காமம் என்றால் என்ன என்றும் ஒரு ஒத்த கருத்துக்கு வரவில்லை. அப்படி இருக்க.. இரண்டையும்ம் எப்படி ஒப்பிட்டுச் சொல்வது?

இப்படி ஒரு கிலுகிலுப்பான கேள்விக்கு நன்றி. :D:D

உதவிய ஒரு உள்ளத்திற்க்கும் நன்றி.

வணக்கம்.

தாமரை
21-08-2008, 04:42 PM
காதல் என்றால் என்ன என்பதையும் இன்னும் ஒரு கருத்துக்கு வரவில்லை. காமம் என்றால் என்ன என்றும் ஒரு ஒத்த கருத்துக்கு வரவில்லை. அப்படி இருக்க.. இரண்டையும் எப்படி ஒப்பிட்டுச் சொல்வது?

. :D:D

கொஞ்சம் விளக்கமாகச் சொல்லப் போனால் வள்ளுவனின் காமத்துப் பால் குற்ள்களைப் படித்தால் - கிடைக்கும் சுவை

இன்றைய பல காதல் கவிதைகள் அதே சுவையைத் தானே தந்து கொண்டிருக்கின்றன.

அதை நம் மன்றத்தில் இல்லையென்றுச் சொன்னால் காமம் என்பது என்ன என்பதன் வரையறை மாறித்தானே இருக்கிறது. :D :D :D

arun
21-08-2008, 06:31 PM
]

வீட்டில் சமையலறை, ஹால், பெட்ரூம், பாத்ரூம் என இருப்பது போல ஒவ்வொரு கலைக்கும் ஒரு இடம் இருக்கும். அதைப் போல இந்தக் கலைக்கும் அதற்குரிய ஒரு இடம் இருக்கும் அங்குக் கற்கலாம் விவாதிக்கலாம். எல்லாவற்றையும் பொதுவில்தான் விவாதிக்க வேண்டுமென்பது சரியல்ல :)

வணக்கம்.

தங்களது பதிலில் என்னை கவர்ந்த வரிகள் இவை

இது தான் சரியான பதிலும் என்று எனக்கு தோன்றுகிறது

அமரன்
21-08-2008, 08:30 PM
ஐந்தாவது கணைக்கு அமரன், கிஷோர்:

ஒருவரை சங்கடப்படுத்தும் அல்லது காயப்படுத்தும் வாதங்களை தவிர்க்கவேண்டுமென மன்றில் அடிக்கடி எச்சரிக்கைகள் வரும். அப்படி இருப்பது சாத்தியமா? அப்படி 100வீதம் இருந்தால் மன்றம் எப்படி இருக்கும்?

என்னை நோக்கி நல்லதொரு கேள்வியை தொடுத்துள்ளார் தீபன். அதற்கு சிறப்பான முறையில் பதிலடி கொடுக்க என்னால் இயலுமோ தெரியாது. இருந்தாலும் முயல்கிறேன்.

வாதப் பிரதிவாதங்களின் முடிவில் சமூகத்துக்கு பயனுள்ள விளைவை எது தருகிறதோ அதுதான் விவாதம். சமூகக் கண்ணோட்டத்துடன் ஆடும் ஒருவனால் இன்னொருவனை எப்படி காயப்படுத்த முடியும். சத்தியமாகச் சாத்தியமில்லை. காயங்கள் இல்லாத வாதம்தான் சாத்தியம்.

காயம் இல்லை என்றால் வலி இல்லை என்று அர்த்தம் இல்லை. புண் வேறு.. நோ வேறு.. நீண்டநேரம் விடாப்பிடியாக நின்றால் கால் புண்ணாவதில்லை. ஆனால் கடுக்கும்... தைலம் போட்டாலோ ஒத்தடம் கொடுத்தாலோ வலி போயே போச்சு.. உண்மையான வாதத்திலும் அப்படித்தான். புண்கள் இருக்காது. கொண்ட கருத்தில் நீண்ட நேரம் நின்ற நோ இருக்கும். வாதத்தால் கிடைத்த தைல விளைவின் மணம் மூச்சுடன் கலந்த நொடியில் அதுவும் போய் விடும்..

அப்படியான விவாதங்கள் மன்றத்தில் ஆளுமை செய்தால், சமூதத்தின் முதன்மை தூண்களில் தமிழ்மன்றம்மும் ஒன்று என்று மின்னும் காலம் மலரும். மன்ற மக்கள் சமூக நல வினையர்கள் என்ற உயர் அந்தஸ்தை பெறுவார்கள்.

நினைச்சாலே சும்மா குளிருதில்ல..

இவ்வளவுதான் தோன்றுகிறது.. கிளைக்கேள்விகள் முளைத்தால் அதை வெட்டி பிறிதொரு மன்றத்தோட்டப் பாத்தியில் நடுங்கள். என்னால் இயன்றவரை பதிலீரத்துடன் உரம் கலந்து தந்து கனி பறிப்போம்.

கேள்வியை வீணடித்திருந்தால் என் மனப்பூர்வமான மன்னிப்பு.

தீபன்
22-08-2008, 01:28 AM
பத்தாவது கணைக்கு அனு, மதுரகன்:
மனிதன் முன்னேறிக் கொண்டிருக்கிறான். ஆனால் முன்னேற்றமில்லாத காலங்களில் இருந்த அமைதி தற்போது கிடைப்பதில்லையே… பிறகெதற்காக இந்த முன்னேற்றம்? மனிதர்கள் உயிரோடு இருப்பது முக்கியமா? உயிர்ப்போடு இருப்பது முக்கியமா? இதற்கென்ன தீர்வு?

முன்னேற்றம் என்பது அமைதிக்காக ஏற்படவில்லை அது பல துறை நோக்கம் கண்டு உண்டானது. உ-ம் : வேலைகளை எளிதாக்க, தகவல் பரிமாற்றத்தினை எளிதாக்க. இம்முன்னேற்றங்கள் நேரடியாக அமைதியைப்பறிக்காவி்ட்டாலும் அவற்றின் மூலமாக ஏற்பட்ட போட்டி அமைதிக்குலைவிற்கு காரணமாகிவிட்டது.

அறிவயல் முன்னேற்றத்தை எடுத்துக்கொண்டால் சகல துறைகளும் அதன் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றது இதன் காரணமாக வேலைகள் எளிதாக்கப்பட்டது உடனடி விளைவு நீண்டகால விளைவுகளைப்பார்த்தால் பல தொழிலாளர்கள் வேலையிழக்க இது காரணமானது...

அதிகளவு மாசுக்கள் சூழலில் விடுவிக்கப்பட்டது இதன் தொடர்ச்சி ஓசோனில் ஓட்டை பச்சை வீட்டுவிளைவு என நீண்டுகொண்டிருக்கின்றது..

எரிபொருளை பெற்றுக்கொள்வதிலுள்ள போட்டி உலக நாடுகளிடையே ஆதிக்கப்போர் நடைபெறுவதில் வந்து நிற்கின்றது.
இது ஆயுதங்களின் விருத்திக்கும் அணு ஆயுதங்களின் விருத்திக்கும் வழிவகுத்து ஆபத்தை அதிகரித்துள்ளது..

முந்தைய காலங்களில் ஒரு போர் ஏற்பட்டால் வரக்கூடிய அழிவைவிட இப்போது வரக்கூடிய அழிவு அதிகரித்துள்ளது.

சுருங்கச்சொன்னால் அறிவியல் வளர்ச்சியின் னைத்து பயன்களையும் அனுபவித்துக்கொண்டிருக்கும் மனிதன் அத்துடன் எப்போது வெடிக்கும் என்று தெரியாத ஒரு வெடிகுண்டை வீட்டில் வைத்திருக்கும் மனநிலையில்தான் வாழ்கிறான்.

எனவே அறிவியல் முன்னேற்றம் அமைதியைக் குலைத்துவிட்டதெனவோ உண்மைதான். பாலைவனத்தில் மழையைக்கண்ட ஒருவன் பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காது அதில் நனைவதைப்போல மனிதன் எதிர்காலத்தை சிந்திக்காது விஞ்ஞானத்தை விருத்தி செய்துவிட்டான்..

ஆகவே இந்த வளர்ச்சிதேவைதானா..
நான் முதலேயே கூறியபடி மனிதன் முன்னேற்றத்தினை ஏற்படுத்திக்கொண்ட நோக்கம் வேறு..
அங்கு நாம் தீமைகளைத்தவிர்த்து தேறிய நன்மைகளைக்கணக்கி்ட வேண்டும்..
முன்னேற்றம் என்ற சொல்லே மனித வாழ்க்கைத்தரத்தின் உயர்வைத்தான் குறிக்கிறது..
ஆகவே அங்கு தேறிய விளைவு நன்மைதான் என்பதை உணர்ந்துகொள்ளமுடிகின்றது..
தொழில்நுட்பவியல் விருத்தி நோய்களை அதிகரித்துவிட்டதென்னவோ உண்மை உண்மைதான் உண்டானநோய்களை தீர்க்கவும் அதே தொழில்நுட்பம்தானே உதவுகின்றது..
எதிர்காலத்தில் நோய்கள் ஏற்படாது தடுக்கவும் அதுதானே உதவுகின்றது..
1930களில் மனித சராசரி ஆயுள் 40 ஆகவிருந்து இப்போது 72.5(இலங்கையில்) ஆக உயர்ந்திருப்பது முன்னேற்றமில்லையா..
அம்மை போன்ற உயிர்கொல்லி நோய்கள் மனிதகுலத்திலிருந்து விரட்டப்பட்டது
முன்னேற்றமில்லையா..?

அடுத்து சழூகவியல் முன்னேற்றத்தை பாருங்கள் தீண்டாமை, சாதிக்கொடுமைகள் எல்லாம் உச்சம் பெற்றிருந்த காலம்போய் இனம் மதம் கடந்து திருமணம் செய்வது சாதாரணமாய் ஆகியுள்ளது முன்னேற்றம் இல்லையா..

ஏதாவது அசிங்கத்தை மிதித்துவிட்டால் காலை மட்டும் கழுவுவோர், தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படும் மக்கள் முகத்தில் முழித்தாலே குளிக்கும் அந்த கேவலமான பழக்கத்தை மாற்றியது முன்னேற்றமில்லையா..?

தனிமனித ஆதிக்க மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி மலர்ந்தது முன்னேற்றமில்லையா..

மனிதன் உயிர்ப்புடன் இருப்பது அவன் உயிருடன் இருப்பதைவிட அவசியமானது..
மனிதனாக இருப்பதைவிட மனிதப்பண்புகளுடன் இருப்பது மேலானது..
இதன்படி மனிதப்பண்புகள் தற்போது முன்னேற்றமடைந்துள்ளது..
இது தற்காலிகமாக ஏற்பட்டுள்ள அமைதியின்மையை விரைவில் போக்கும்..
இலங்கையில் ஒரு தனிமனிதன் பாதிக்கப்படும்போது கண்காணா தேசமொன்றில் ஆர்ப்பாட்டம் செய்யும் கலாசாரத்தை உருவாக்கியிருப்பது மனித முன்னேற்றமில்லையா..

மனிதன் முன்னேறிக்கொண்டிருக்கிறான்...
மாற்றமடையாதவர்கள் காலத்தால் அழிக்கப்படுகின்றனர்..
தெளிவாக விளக்கமாக விரிவாக பதில் தந்தமைக்கு நன்றி மதுரகன்.
மனிதனின் சராசரி ஆயுள் கூடியது, மனிதாபிமான பண்புகள் பக்குவப்பட்டமை எல்லாம் முன்னேற்றமே.... என் கேள்விகூட இந்த முன்னேற்றத்தால் முன்னரிருந்த அமைதி, திருப்தி இப்போ கிடைக்கிறதா என்பதே...? புதிதாக பிரச்சினைகளை உருவாக்கிவிட்டு அவற்றை தீர்க்க புது வளிகளை கண்டுபிடிப்பது முன்னேற்றமாக இருந்தாலும் அதுவே மேலும் பல பிரச்சனைகளுக்கு காரணமாகி மேலும்முன்னேற வேண்டிய தேவையை உருவாக்குகிறது... இது தேவையா...? இவற்றைபற்றி விவாதிக்க வெளிக்கிட்டால் இதுவும் பெரும் விவாதமாகிவிடலாம். பார்க்கலாம் அனு என்ன சொல்லபோகிறாரென....

எட்டாவது கணைக்கு ஓவியா, செல்வா:
காமத்தையும் ஒரு கலையாக கண்டு காப்பியங்கள் படைத்தது நம் தமிழ். ஆனால், இன்று அதை ஒரு ஆபாசமாக நோக்குவதும் தேவையான இடங்களில் பேசுவதை தவிர்ப்பதுவும் ஏன்? காதலுக்கு இணையான மரியாதை காமத்திற்கு இல்லயா? (மன்றத்தில்கூட அவற்றை ஒதுக்கி வைத்துள்ளார்கள்.) இது தமிழரின் முன்னேற்றத்தை பல்வேறு விதங்களில் பாதிக்கிறதென்பதை ஏற்கிறீர்களா? ஏன்?

முதலில் ஒரு சுவையான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன் .... :redface::redface: என் நாட்டில் 15 வயதில்தான் பாலியல் கல்வியின் முதலடியாக இனவிருத்தி பாடம் படிப்போம், ஒவ்வொரு தலைப்பிற்க்கும் ஒரு முறை தேர்வு நடக்கும். அப்பொழுது நான் ஒரு புதுப்பள்ளிக்கு மாற்றலாகி சென்ற நேரம்.
இந்தத்தலைப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று நான் முதலிடம் பிடிக்க, மெய்யாலுமே அப்பொழுது அப்பாவியான என்னை மொத்த மாணவர்களும் ஒரு வாரமாக கிண்டலத்து மகிழ்ந்தனர். :D:D:D

*******************************************************************************************************************************

நான் இதுவரை காமத்தை ஒரு கலையாக வடித்த எந்த காப்பியங்களும் படித்ததில்லை. ஆனால் தேன் சுவை சொட்டும் குறளோவியம் மட்டும் நாழிதளில் ஒரு சில பக்கங்கள் படித்துள்ளேன்.... இந்த விசயத்தில் பசிக்கும் பொழுது உண்ணுவோம் என்று விட்டு விட்டேன். உன்மையிலே இந்த கேள்விக்கு பதிலளிக்க நான் ரொம்பவே தடுமாறிப்போனேன். என்னைப்பொருத்த வரை காமம் ஒரு தனிமனிதனின் அந்தரங்க விசயம்.

இந்தக் கேள்வியை நிர்வாகிகள், மூத்தோர் கிட்ட தானே கேட்கவேண்டும்.... மன்றத்தில் என்ன வரணும் என்று வழிகாட்டுபவர்கள் அவர்கள் தானே!.. என்னைக் கேட்டதால் என் கருத்தைச் சொல்கிறேன்.

வீட்டில் சமையலறை, ஹால், பெட்ரூம், பாத்ரூம் என இருப்பது போல ஒவ்வொரு கலைக்கும் ஒரு இடம் இருக்கும். அதைப் போல இந்தக் கலைக்கும் அதற்குரிய ஒரு இடம் இருக்கும் அங்குக் கற்கலாம் விவாதிக்கலாம். எல்லாவற்றையும் பொதுவில்தான் விவாதிக்க வேண்டுமென்பது சரியல்ல :)

அவரவர் இடத்தில் இருந்து கொண்டால் அவரவருக்கு மரியாதை.

பழந்தமிழர் பண்பாடா நாம் இன்றும் பின்பற்றி வருகிறோம்? பண்பாட்டளவில் மிகப் பெரிய மாற்றமும் மனமுதிர்ச்சி அளவில் மிகப் பெரிய மாற்றமும் காலம் தோறும் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. ஆகவே அன்றிருந்தது போல் இன்றில்லையே என்று வருத்தப்படுதல் மிகப் பெரியத் தவறு.

இது தமிழரின் முன்னேற்றத்தைப் பாதிக்கிறதா என்றால் இல்லை என அடித்துச் சொல்ல முடியும்.

காமம் பொது இடங்களில் இல்லாமல் இருப்பதால் பிரச்சனை இல்லை. கணவன் மனைவியரிடையே இல்லாமல் இருந்தால் தான் முன்னேற்றம் பாதிக்கப்படும்.

காமம் என்பது வேறு உடற்கூறியல் போன்ற மருத்துவ முறைகள் வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பும் குழப்பவாதிகள் தான் பாலியல் படிப்பு என முழங்குகிறார்கள்.

காமம் என்பது ஒரு நுண்கலை. அதை முகர, விவரிக்க, விவாதிக்க அதற்குண்டான பண்பாடும் பக்குவமும் வேண்டும். இல்லாவிட்டால் ஆபாசம் என்ற எல்லைக் கோட்டை தாண்டிப்போகும். அதனால் தான் பண்பாடு என்ற வேலி கட்டி அதைக் காக்கிறோம்.

காதல் - காமம் இரண்டுக்கும் சம அந்தஸ்து வேண்டாமா என்று கேட்டால் - !!! இதற்கு இப்போதைக்கு என் பதில் மௌனம் தான். பல விவாதத் திரிகள் இவற்றை விவாதித்து இருக்கின்றன. எவையுமே உருப்படியாய் ஒரு பதில் சொன்னதில்லை.

ஆகவே இதற்கான சரியானப் பதில் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. காதல் என்றால் என்ன என்பதையும் இன்னும் ஒரு கருத்துக்கு வரவில்லை. காமம் என்றால் என்ன என்றும் ஒரு ஒத்த கருத்துக்கு வரவில்லை. அப்படி இருக்க.. இரண்டையும்ம் எப்படி ஒப்பிட்டுச் சொல்வது?

இப்படி ஒரு கிலுகிலுப்பான கேள்விக்கு நன்றி. :D:D

உதவிய ஒரு உள்ளத்திற்க்கும் நன்றி.

வணக்கம்.
ஒண்ணுமே தெரியாதின்னு சொன்னதெல்லாம் பொய்தானே....! இந்த போடு போடுறிங்க....
சரி, எல்லா இடத்திலயும் இதுபற்றி கதைக்கணும்னு நானும் சொல்லல.... கேள்விய கவனமா பாருங்க, தேவையான இடத்திலும் பேசத் தயங்குவதுன்னுதான் கேட்டிருக்கன். என் கேள்வியின் நோக்கம், காமம் சார்ந்த விடயங்களை நாம் ஒளித்து ஒளித்து வைப்பதால்தான் இளஞர்களிடையே அது பெரும் மோகத்தை உண்டுபண்ணுகிறது. அவர்களின் பெரும்பகுதி நேரம் அதுசார்ந்த விடயங்களிலேயே களிந்துவிடுகிறது... (பலர் காதலும்கூட அந்தவகையிலேயே அமைகிறது...). இதுவே சாதாரண விடயமாக எம்மிடையே அமைந்திருந்தால் இந்த்நிலை இருந்திருக்காது...! இளஞர்களின் பார்வை வேறு துறைகளில் விழுந்திருக்கும். (சினிமா மோகம்கூட பெரியளவில் இருக்காது).
அதற்காக காமத்தை எல்லா இடங்களிலும் சாதாரணமாக கையாளலாம் எனவில்லை. ஆனால், அதுவும் கோபம், மகிழ்ச்சி, சிரிப்பு போல சாதராண ஒரு உணர்வுதான். அபூர்வமன ஒன்றல்ல. அதெற்கெனவுள்ள கட்டுப்பாடுகளுடன் அவையும் அணுகப்படகூடியதே என்ற தெளிவு இருப்பின் வீணான தேடல்கள் இருக்காது. இது சமுதாய முன்னேற்றத்துக்கும் உதவும்.
இது என் பார்வை. உங்கள் பார்வையும் சரிதான். அழகாக எடுத்து சொல்லி 00ஆகவிருந்த கேள்விக்கு முன்னால் 1போட்ட உக்களுக்கு நன்றி.
(கிளுகிளுப்பான கேள்வியா... அடடா.... மன்றத்தலைகளிடம் என்ன மாட்டிவிடாம ஓயமாட்டிங்க போலிருக்கே.... அதென்ன உதவிய ஒரு உள்ளம்..? இதெக்கெல்லாமா ரியூசன் வச்சுப்பிங்க...?:lachen001:)

ஐந்தாவது கணைக்கு அமரன், கிஷோர்:
ஒருவரை சங்கடப்படுத்தும் அல்லது காயப்படுத்தும் வாதங்களை தவிர்க்கவேண்டுமென மன்றில் அடிக்கடி எச்சரிக்கைகள் வரும். அப்படி இருப்பது சாத்தியமா? அப்படி 100வீதம் இருந்தால் மன்றம் எப்படி இருக்கும்?

வாதப் பிரதிவாதங்களின் முடிவில் சமூகத்துக்கு பயனுள்ள விளைவை எது தருகிறதோ அதுதான் விவாதம். சமூகக் கண்ணோட்டத்துடன் ஆடும் ஒருவனால் இன்னொருவனை எப்படி காயப்படுத்த முடியும். சத்தியமாகச் சாத்தியமில்லை. காயங்கள் இல்லாத வாதம்தான் சாத்தியம்.

காயம் இல்லை என்றால் வலி இல்லை என்று அர்த்தம் இல்லை. புண் வேறு.. நோ வேறு.. நீண்டநேரம் விடாப்பிடியாக நின்றால் கால் புண்ணாவதில்லை. ஆனால் கடுக்கும்... தைலம் போட்டாலோ ஒத்தடம் கொடுத்தாலோ வலி போயே போச்சு.. உண்மையான வாதத்திலும் அப்படித்தான். புண்கள் இருக்காது. கொண்ட கருத்தில் நீண்ட நேரம் நின்ற நோ இருக்கும். வாதத்தால் கிடைத்த தைல விளைவின் மணம் மூச்சுடன் கலந்த நொடியில் அதுவும் போய் விடும்..

அப்படியான விவாதங்கள் மன்றத்தில் ஆளுமை செய்தால், சமூதத்தின் முதன்மை தூண்களில் தமிழ்மன்றம்மும் ஒன்று என்று மின்னும் காலம் மலரும். மன்ற மக்கள் சமூக நல வினையர்கள் என்ற உயர் அந்தஸ்தை பெறுவார்கள்.

நினைச்சாலே சும்மா குளிருதில்ல..

இவ்வளவுதான் தோன்றுகிறது.. கிளைக்கேள்விகள் முளைத்தால் அதை வெட்டி பிறிதொரு மன்றத்தோட்டப் பாத்தியில் நடுங்கள். என்னால் இயன்றவரை பதிலீரத்துடன் உரம் கலந்து தந்து கனி பறிப்போம்.

கேள்வியை வீணடித்திருந்தால் என் மனப்பூர்வமான மன்னிப்பு.

ரொம்ப கனவு காண்றிங்க அமரா.... இம்ம்ம்... நடந்தால் நல்லாத்தான் இருக்கும்..!
நீங்கள் சொல்வதுபோல காயப்படுத்தாத வாதங்களே உண்மையில் சமூக நோக்கிலான வாதங்களென்பதில் எனக்கு உடன்பாடில்லை. காரணம், காயம்வர காரணம் தனியே வாதம் செய்பவர் மட்டுமல்ல, எதிர்வாதம் செய்வபரும்தான். உதாரணத்திற்கு, சமூக நோக்கோடு சாதிகள் இல்லை என்ற வாதத்தை நான் கடுமையாக வலியுறுத்தும் போது சாதிகள் வேண்டும் என்ற சார்போடு இருக்கும் எதிர் வாதக்காரர் சற்று இளகிய மனத்தினராயும் இருந்தால் நிச்ச்யம் காயப்படவே செய்வார். அதற்காக நான் செய்த வாதம் சமூக நோக்கற்றதென்றாகிவிடாது. அவர் காயப்படுகிறரென்பதற்காக என் கருத்துக்களை சொலாவிட்டால் அது ஆரோக்கியமான வாதமுமாகாது. அது நியாயமுமாகாது. நான் சொல்ல வருவது, காயப்படுவது சிலவேளை காயப்படுபவரின் தவறாகவும் இருக்கலாம் என்பதே.
அண்மைக்காலமாக மன்றில் பலரும் கருத்துக்கள் சொல்கையில் ஏதோ ஒருவித தயக்கத்துடன் சொல்வதுபோல தென்படுகிறது. மற்றவர்கள் காயப்பட்டுவிடுவார்களோ என்ற அதீத முன்னெச்சரிக்கையால் சொல்லவேண்டிய நியாயமான கருத்துக்களை கூட சொல்லாமல் விடுவதுபோல தெரிகிறது. அதன் வெளிப்பாடுதான் இந்த கேள்வி.
காயத்துக்கும் வலிக்கும் இடையில் அதிக வித்தியாசமிலை. சிலவேளை காயத்தைவிட வலி அதிக வேதனையாகவும் இருக்கும். அதனல் அந்த ஒப்பீடு சரியாக வராதென நினைக்கிறேன்.
ஆனாலும், கிடுக்கிபிடியாய் போட்ட கேள்விக்கு அழகாக சமாளித்து உங்கள் நிலையையும் தெளிவாக உறுதிப்படுத்தி விளக்கமாக அதே சமயம் நழுவலாக அற்புதமாக விடையளித்துள்ளீர்கள் அமரா...
(வாதத்தைபற்றிய கேள்வியிலேயே வாதம் வளரக்கூடாதுன்னு பதில் கேள்வி முளைத்தால் வெட்டி வேறிடத்தில் நடுங்களென வாதத்தின் வீரியத்தை குறைக்கும் உங்கள் சாமர்த்தியம் புல்லரிக்கவைக்கிறது...!)

தீபன்
22-08-2008, 01:31 AM
காதல் என்றால் என்ன என்பதையும் இன்னும் ஒரு கருத்துக்கு வரவில்லை. காமம் என்றால் என்ன என்றும் ஒரு ஒத்த கருத்துக்கு வரவில்லை. அப்படி இருக்க.. இரண்டையும்ம் எப்படி ஒப்பிட்டுச் சொல்வது?

காதல் - சொப்ட் வயர் (software)
காமம் - ஹார்ட் வயர் (hardwae):icon_b:

தீபன்
22-08-2008, 01:39 AM
ஆ பத்து அளைக்கிறது உங்களை…. :lachen001::lachen001::lachen001:
ஆ பத்தின் ஈர் பத்து பேருள் இன்னும் பதிலளிக்காமல் டிமிக்கி விடுபவர்கள் கீழே.... விரைந்து வாருங்கள் மக்களே....
(இதில் பலர் பதில் தருவதாக முன்னோட்டம் விட்டவர்களென்பது குறிப்பிடத் தக்கது.)

(2) யவனிகா, அக்னி
(3) அன்புரசிகன்
(4) ஷிப்லி, தமிழ்அம்பு
(6) மறத்தமிழன், அகத்தியன்
(8) செல்வா
(9) மலர், பிராடி
(10) அனு

tamilambu
22-08-2008, 02:43 AM
மன்னிக்கவேண்டும் தீபன் அவர்களே.
நான் வெளிநாடு ஒன்றுக்கு (கனடா) சென்றுள்ளதால் உங்களது கேள்விக்கு பதில்தர சற்றுத் தாமதம் ஏற்படுகிறது. ஓரிரு நாட்களில் வீடு திரும்பியதும் விரைவாக பதில் தருகிறேன்.

அமரன்
22-08-2008, 07:20 AM
(வாதத்தைபற்றிய கேள்வியிலேயே வாதம் வளரக்கூடாதுன்னு பதில் கேள்வி முளைத்தால் வெட்டி வேறிடத்தில் நடுங்களென வாதத்தின் வீரியத்தை குறைக்கும் உங்கள் சாமர்த்தியம் புல்லரிக்கவைக்கிறது...!)

உங்கள் பதிவில் விவாதங்கள் முறிக்கப்படுகின்றன என்ற சாதுரியமான குற்றச்சாட்டு இழையோடுகிறது. விவாதத்தை இவ்விழையில் தொடர்ந்தால் இவ்விழை ஈடாடும். அதுக்காக ஒரு இடம் இருக்கு.. அங்கே வெச்சுக்குவோம் கச்சேரியை..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17308 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17308)

தீபன்
22-08-2008, 12:21 PM

மன்னிக்கவும். உங்கள் இணைப்பை கவனிக்காமல் என் பதிவை இங்கு இட்டுவிட்டேன். அதை அங்கு இடம் மாற்றிவிட்டேன். நன்றி.

வெற்றி
23-08-2008, 03:39 AM
நம் மக்கள் இப்படி இருக்கையில் நோய்கள் குறைவது நிரந்தரமா என்ன?
டியூ கட்ட மட்டுமல்ல, பெட்ரோல் போடும் அளவுக்கே வருமானம் வரும்..கலங்காதே என அவரைத் தேற்றலாம்.

அசத்தல் பதில் மிக்க நன்றி

கடந்த இரண்டு வருடங்களாக நான் அதிகம் படித்தது தமிழ் மொழிதான் அதுவும் மன்றத்து பதிவுகள்தான்.
(இங்கு உருப்பினராகும் பொழுது என்னுடைய முதுகலை பட்டப்படிப்பினை படித்துக்கொண்டிருந்தேன், ஒரு வேலை அதுதான் பரிட்சை...பரிட்சைனு ஓடியிருப்பேன்)
இது வரை என்னென்ன
வாழ்வு சிறக்க ஓரளவு கல்வி பயின்றுள்ளேன். எத்தனை பட்டம் என்று சொல்ல விரும்பவில்லை. (மன்னிக்கவும், அது நானே தம்பட்டம் அடிப்பதாகி விடும்.) என்னுடைய அனைத்து பட்டப்படிப்பும் (சான்றிதழ்களும்) இங்கிலாந்து பல்கலைகலகங்களை சேர்ந்ததுதான். ஜப்பான் அரசாங்கம் வழங்கிய உயர்ந்த சான்றிதழ் ஒன்று. மலேசிய அரசாங்கம் கொடுத்த சான்றிதழ்கள் பல. இளைஞர் /மகளிர்/ பொதுநல சேவையென அரசாங்கம் மற்றும் அரசாங்க சார்பற்ற மேம்ப்பாடு வழிகள் என, பயிற்சி பட்டரைகளில் வாங்கியது மட்டும் ஒரு 40 சான்றிதழ்கள் இருக்கும். நாட்டியத்திற்க்காக சில.
இனி
குடும்ப கல்வியை தொடர ஆவலாய் உள்ளேன். (:D:D:D அட உண்மையை சொல்லறேனுங்க. :redface::redface: வயசு ஆகுதில்லே)
வணக்கம்

ஓஓ அவ்வளே படிச்சி இருக்கீங்களா அக்கா..ஆனாலும் உங்களுக்கு தன்னடக்கம் ரொம்ப ஜாஸ்தி அக்கா ....

நன்றி மொக்கை என்னை மீண்டும் ஆ10 இல் இழுத்துவிட்டமைக்காக. அதுவும் என் மானசீக கவிஞன் பாரதி பற்றி என்னிடம் கேட்டமைக்காக விஷேட நன்றி.
இப்படி பலப்பல காரணிகளினால் இன்றையவர்களிடம் பாரதியிடம் கண்ட ரௌத்திரம் இல்லாமல் இருக்கின்றது. அவன் பின் வந்தவர்களிடமும் அது இருந்திருந்தால் நாமும் நம் சமூகமும் என்றோ எழுந்திருக்கும்.

ஆஹா புட்டு புட்டு வைச்சி விட்டீர்கள்....பாரதியின் கோபத்தை

பதில் சொன்னதுக்கு பதிலாக உங்கள் பதில் பதிவு இடப்பட்டபின்னும் பதில் சொல்லவேண்டியவர்கள் பட்டியலில் பதில் சொன்னவர்கள் பெயரும் இருக்கும் காரணம் என்ன? அல்லது, அவர்கள் சொன்னவற்றை பதில்களாகவே நீங்கள் அங்கீகரிக்கவில்லையா...? (கேள்வி கேட்டு ஆப்பா வைக்கிறிங்க... நாங்களும் வைப்பமில்ல....)

ஆஹா இது தான் சொந்த சிலவில் நானே வைத்துக்கொண்ட சூனியம்..
மன்னிக்கவும் அண்ணா வேளை பளு ,...மற்றும் மின் தடை (நான் தமிழ் நாட்டில் இருக்கிறேன் ஹிஹிஹி) யால் மன்றம் வர இயலவில்லை...
கேள்விகள் யார் மனதையோ அல்லது நம்பிக்கையையோ பாதித்து இருந்தால் மன்னிக்கவும்
பதில் அளித்த அனைவரரக்கும் நன்றிகள் (நிஜமாகவே என் மனதில் பல நாட்ட்களாக கேட்ட நினைத்த கேள்விகள் இவை )

தீபன் அண்ணாவுக்கும் அதை ஒட்ட வைத்த ராஜா அண்ணாவுக்கும் சிறப்பு நன்றிகள்

அமரன்
23-08-2008, 08:44 AM
நாட்களாகியும் இன்னும் சில உறவுகள் நேரத்தின் பிடியில் சிக்கி இருப்பதால் பதில் அளிக்கவில்லை. அடுத்த அன்பரை ஆ10 தர அழைப்போமா அண்ணா

ராஜா
23-08-2008, 01:05 PM
அடுத்தவர் தயாரா..?

அழையுங்கள்..!!

அமரன்
23-08-2008, 01:06 PM
அவரைக் கேட்கவே தேவல அண்ணா.. அவரு யாரு.. நம்ம மதிகாரு..

ராஜா
23-08-2008, 02:14 PM
அலகா..?

ரண்டி.. ரண்டி மதிகாரு..!

அமரன்
23-08-2008, 06:04 PM
திங்கள் உதிப்பார்...
அதுவரை
மற்றோர் பதில்கள் உதிர்ப்பர்

ராஜா
24-08-2008, 12:53 PM
திங்கள் உதிப்பார்...
அதுவரை
மற்றோர் பதில்கள் உதிர்ப்பர்

அருமையான சொல் விளையாட்டு அமர்..!

மிகவும் இரசித்தேன்..!

திங்களாரே.. திங்களன்று (ப)தி(யு)ங்கள்..!

ராஜா
25-08-2008, 05:20 AM
மதியாரே.. மன்றம் வருவாரே..!

மதியோடு கேள்விகள் பதிவாரே..!

அதிவேக பதில்கள் பதிவோரே..

துதிபாடி அழைத்தோம் வாரீரே..!!

மதி
25-08-2008, 11:50 AM
வந்தேன் வந்தேன்....
அலுவலகத்தில் இணையம் மிக மெதுவாக உள்ளது. அமரன் எப்படியோ மாட்டிவிட்டுட்டார்.

நாளை மாலைக்குள் கேள்விகளுடன் வருகிறேன். அதுவரை இதுவரை பதிலளிக்காதோர் பதிலளியுங்களேன்...

tamilambu
25-08-2008, 01:56 PM
தாமதத்திற்கு மன்னிக்கவும்.

வணக்கம் தீபன்!

உங்களது கேள்வி: இருசாரரின் போராட்டத்துக்கிடையில் அகப்பட்டு அப்பாவி மக்கள் பாதிக்கப் படுகிறார்களென பொதுவாக அடிக்கடி அறிக்கைகள் வரும். ஆனால் அந்த இருசாரரும்கூட அப்பாவி மக்களிடையேயிருந்துதானே உருவாகின்றனர். எனவே அதன் விளைவுகளை ஏற்கவேண்டியதும் அவர்களின் கடமைதானே. பிறகெப்படி அப்பாவி மக்கள் அநியாயமாக பாதிக்கப்படடுகிறார்களென சொல்ல முடியும்?

மேலதிக சேர்க்கை: வேண்டுமானால் உதாரணத்துக்கு ஈழப்போரை நீங்கள் எடுத்துக்கொண்டு உங்கள் கருத்தை அதனடிப்படையில் ஆதாரத்துடன் முன்வையுங்களேன்.

எனது பதில்:
நீங்கள் கேட்ட கேள்வியில் உள்ளது போல் ஈழத்தில் நடப்பது "இருசாரரின் போராட்டம்" அல்ல. ஈழத்தமிழர்கள் உரிமைகளுக்காக போராடுகிறார்கள் - அது போராட்டம். அரசு அந்த உரிமைகளை கொடுக்க மறுத்து, அவர்களது போராட்டத்தை நசுக்க யுத்தம் செய்கிறது - அது அடக்குமுறை யுத்தம். நான் சொல்வது சரியென நினைக்கிறேன்.

ஈழ பிரச்சினையை எடுத்துக்கொண்டால் அங்கே ஆயுதம் உள்ளவர்கள் இரு பிரிவினர் (விடுதலைப் புலிகள், இலங்கை இராணுவம்), ஆயுதம் இல்லாதவர்கள் இரு பிரிவினர் (தமிழ் மக்கள், சிங்கள மக்கள்).

நீங்கள் கூறும் அப்பாவி மக்கள் இந்த ஆயுதம் இல்லாத தமிழ் மற்றும் சிங்கள மக்களே. இவர்களில் ஆயுதம் இல்லாத அதாவது அப்பாவி சிங்கள மக்களை எடுத்துக்கொண்டால் , ஈழ போராட்ட வரலாற்றில் இவர்கள் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் மிக மிக குறைவு. ஆனால் இந்த வகை அப்பாவி மக்கள் பாதிப்படையும் ஒருசில - சிறிய சந்தர்ப்பங்கள்கூட ஊதி பெருதாக்கப்பட்டு அறிக்கைகளாக, கண்டனங்களாக வெளிவரும். உடனடியாக அவர்களுக்கான நிவாரணமும் கிடைத்துவிடும்.

மறுதரப்பான அப்பாவித் தமிழ்மக்களை எடுத்துக்கொண்டால், உண்மையில் ஈழ போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்த மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். அதிலும் தற்போது இந்த மக்களின் நிலை மிக மிக மோசமான நிலையில் உள்ளது. இருந்த போதும் இந்த தமிழ் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படும்போது மட்டும் அரசோ அல்லது அதுசார்ந்த நிறுவனங்களோ பெரிதாக கண்டுகொள்வதில்லை. அதுமட்டுமல்லாமல் உலக நாடுகள் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள்கூட வெறும் அறிக்கைகளுடன் நிறுத்திக்கொள்கின்றன. மேலும் பாதிக்கப்படும் மக்கள் பயங்கரவாதிகள் என அரசால் முத்திரையும் குத்தப்படும். அது பிறந்து 3 மாதங்களேயான குழந்தையானாலும் கூட.....

எனவே ஈழ போராட்டத்தில் பாதிக்கப்படும் அப்பாவி பொதுமக்கள் தமிழர்களே. (மிகச்சிறிய அளவில் அப்பாவி சிங்கள மக்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மையே.)

யுத்தம், போர் அல்லது நீங்கள் கேட்டதுபோல் போராட்டம் என்பதற்கு சில ஒழுங்குமுறைகள் மற்றும் கட்டுபாடுகள் உள்ளன. அவற்றினை பேணுவதற்காக உரிய முறையில் வடிவமைக்கப்பட்ட சட்டதிட்டங்கள் உள்ளன. அதனைக் கண்காணிக்க சர்வதேச நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் யுத்தத்தில் நேரடியாக ஈடுபடாத பொதுமக்கள் அதன்மூலம் பாதிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அந்த மக்கள் மீது தெரிந்தே தாக்குதல் நடத்துவது மிகப்பெரிய குற்றம்.

எனவே ஈழப்போரில் அப்பாவி மக்கள் திட்டமிட்ட அடிப்படையில் தாக்குதல்களுக்கு உள்ளாவது தவிர்க்கப்படவேண்டிய - தடுக்கப்பட வேண்டிய ஒன்றே.

ராஜா
25-08-2008, 04:17 PM
வேற யாருப்பா பாக்கி இருக்கீங்க..?

அமரன்
25-08-2008, 04:21 PM
வேற யாருப்பா பாக்கி இருக்கீங்க..?
அக்னி.. யவனிகான்னு சிறு பட்டியலே இருக்குண்ணா... ஆமை வேக இணையம் மதியை மறைக்குது.. நாளை மாலை கேள்விக்கதிர்கள் பரவும்.. (தலைப்பு நல்லா இருக்கு அண்ணா)

தீபன்
26-08-2008, 03:48 AM

தாமதமா வந்தாலும் தரமாத்தான் தந்திருக்கீங்க பதிலை. உண்மைதான். உங்கள் ஈழப்போராட்டம் பற்றிய பார்வை சரியானதே. ஆனாலும் யார் என்ன சொன்னாலும் நடைமுறையில் பலன் இருக்கப்போவதில்லை. நன்றி தமிழம்பு உங்கள் குறிதப்பாத பதிலுக்கு...!

தீபன்
26-08-2008, 03:57 AM
வேற யாருப்பா பாக்கி இருக்கீங்க..?

(2) யவனிகா, அக்னி
(3) அன்புரசிகன்
(4) ஷிப்லி
(6) மறத்தமிழன், அகத்தியன்
(8) செல்வா
(9) மலர், பிராடி
(10) அனு

பத்து கேள்விகள்... பத்துப் பதில்கள் பெறப்பட்டுவிட்டன.... ஆகவே பத்துக்கு பத்து.... (இருபது பேரிடம் கேட்டாத்தான் பத்து பேரிடமாவது பதிலை எதிர்பார்க்க முடியுது...!)

அடிக்கடி மன்றம் உலவும் பலரும்கூட விடைதர முயலாதலால் கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்களுக்கு விருப்பமில்லை என்பதை புரிந்துகொண்டு அடுத்த ஆ பத்து தொடர வாழ்த்துக்கள்.:icon_b:

tamilambu
26-08-2008, 04:11 AM
தீபன் அவர்களே....
பதில் தராதவர்களுக்கு இன்னமும் கொஞ்சம் அவகாசம் கொடுக்கலாமே.....
ஏனென்றால் உங்களது கேள்விகள் கொஞ்சம் கனதியானவை. எனவே கால அவகாசம் தேவை.

ராஜா
26-08-2008, 06:26 AM
மற்ற உறவுகளும் தவறாமல் பதிலளிக்க வேண்டுகிறேன்..!

மதி
26-08-2008, 10:03 AM
ஆபத்தில் என்னை மாட்டிவிட்ட ராஜா அண்ணனுக்கும் அமரனுக்கும் என் நன்றி. :D:D:D. நேரிடையாவே விஷயத்துக்கு வருகிறேன். இதோ என் கேள்விகள்:

--------------------------------------------------------------------------
ஐரேனிபுரம் பால்ராசைய்யா:

இதுவரை இருபது நாடகங்களுக்கும் மேலாக எழுதி அரங்கேற்றியிருப்பதாக சொன்னீர்கள். திரையரங்குகளிலும் தொலைக்காட்சி பெட்டிகளிலும் மூழ்கிவிடும் மக்களின் கவனம் மீண்டும் நாடகத்தில் மேல் படர நாடகக் கலைஞர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் என்னென்ன..????
--------------------------------------------------------------------------
Poornima

மன்றத்தில் சமீபத்தில் இணைந்த கவிதாயினி நீங்கள். தேடல் கவிதைகள் மூலம் அறியப்படுபவர். நாளை உலகத்தின் இறுதிநாள், யாரும் பிழைக்க வழியேயில்லை என்று அறியும் சமயத்திலே மனிதனின் (அறிவியல் சாராத) தேடல் என்னவாயிருக்கும்? அதைப் பற்றி ஒரு கவிதை ப்ளீஸ்.
--------------------------------------------------------------------------
தங்கவேல்

கற்பனைக்காக… உங்களை உலகின் சர்வாதிகாரி ஆக்கினால் நீங்கள் செய்யும் முதல் பத்து வேலைகள் என்ன?
--------------------------------------------------------------------------
SathyaThirunavukarasu

கவிதை எழுதினால் தான் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும், மோட்சம் கிடைக்கும் என்று உங்களிடம் சொன்னால் நீங்கள் எதைப்பற்றி எழுதுவீர்கள்? என்ன கவிதை எழுதுவீர்கள்?
--------------------------------------------------------------------------

சுகந்தப்ரீதன்

உறவுகளால் என்றும் சிக்கலே என்கிறேன் நான். இதனை ஆதரித்தும் எதிர்த்தும் பதில் தருக.
--------------------------------------------------------------------------
mgandhi

செய்தி சோலையினை எங்களுக்கு தொகுத்து வழங்கும் அன்பான மன்ற உறுப்பினர். ஒரு சின்ன கற்பனை. ஒரு நாள் உலகில் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு சாதனங்களும் செயலிழந்து விட்டால்… தொலைக்காட்சி, வானொலி, தொலைப்பேசி அனைத்தும் செயலிழந்துவிட்டால்… மக்களால் எந்த செய்தியுமே அறிந்து கொள்ள முடியாத சூழ்நிலை. அத்தகைய சூழலில் உலகம் எவ்வாறிருக்கும்? எத்தகைய குழப்பம் ஏற்படும்? என்னென்ன நன்மைகள் விழையும்?
--------------------------------------------------------------------------
விராடன்

காதலில் தோற்றால் தாடி வைத்துக் கொள்வது சரியா தவறா? வேடிக்கையான விளக்கம் தருக.
--------------------------------------------------------------------------
நம்பிகோபாலன்

காதற் கவிஞர் நீங்கள். இணையம் இன்று இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. இணையத்தின் மூலம் பார்க்காமலேயே காதல் செய்வது பற்றி உங்களின் கருத்து?
--------------------------------------------------------------------------
சாலைஜெயராமன்

மனித வாழ்க்கையில் புரிதல் என்பது எதனிலிருந்து ஆரம்பிக்கிறது? தத்துவமாய் ஒரு விடை தாருங்கள்.
--------------------------------------------------------------------------
மதுரை வீரன்

நிலவில் மனிதன் கால் பதித்தான் என்கிறார்கள் ஒரு சாரார். இல்லை அது வெறும் நாடகம் தான் என்கிறார்கள் மறு சாரார். இவற்றில் எதில் உண்மை அதிகம் இருக்கிறது?

அமரன்
26-08-2008, 10:13 AM
தன்மை அறிந்து பொழிந்தது
தண்ணிலா....கேள்விகளை..
நன்றிகள்...
கண்ணுகளா..
மொழியுங்கள் பதில்களை
முன்வாழ்த்துகள்.

ராஜா
26-08-2008, 10:21 AM
நன்றி மதி..!

நல்ல கேள்வித்தொகுப்பு..!

விடைகள் வரும் வழி பார்த்து காத்திருக்கிறோம்..!

விகடன்
26-08-2008, 12:37 PM
காதலில் தோற்றால் தாடி வைத்துக் கொள்வது சரியா தவறா? வேடிக்கையான விளக்கம் தருக.

கட்டாயமாகத்தாடி வளர்க்க வேண்டும்.

காதலிக்கும் காலங்களில் காதலியை வருடியவண்ணம் இருந்த கை காதல் முறிந்து/தெறித்து தனித்து இருக்கும்போது வருட ஒன்று வேண்டாமா?
வருட வேண்டுமென்பதற்கு யாரையாவது வாடகைக்கா அமர்த்த முடியும்.....

இல்லை
ஏதாவது பொருளையா கொண்டு திரியமுடியும்?
தாடியாக இருந்தால் அது நாடியோடையே இருக்கும்.
தடவுதலில் அடிமைப்பட்டோர் எல்லோரும் தேவைப்படும்போது தடவிக்கொள்ளலாம்.

இந்தக்காலங்களில் நம்மவரில் பலர், நம்மவர்களுக்கு கீழ் பணிபுரிவதை விரும்புவதில்லை. அதற்கு நம்மவர் அளிக்கும் மரியாதை, சம்பளம் ஒரு புறமும் சுய கௌரவம் மறுபுறமும் இருக்கிறது. இதனாலேயே பலர் வெள்ளையனின் நிர்வாகத்திற்குக்கீழ் பணிபுரிய விரும்புகின்றனர். அதனால் அவர்களுடைய கலாச்சாரத்தை குறைந்த பட்சமேனும் நடை, உடை பாவனையிலாவது வெளிக்காட்டவேண்டிய கட்டாயத்திற்குள்ளாகின்றனர்.

அதிகுறைந்த பட்சமாக பார்வைக்கேனும் இருத்தல் வேண்டுமெல்லவா. அதனாலேயே பலர் தாடி, மீசை எடுத்து தமது பால் (ஜொல்லு என்றும் வைத்துக்கொள்ளலாம்) வடியும் முகத்தை காட்டவேண்டிய கட்டாயத்திற்கு உள்வாங்கப்படுகின்றனர். இதனாலேயே எதிர்காலத்தில் சந்ததியில் தாடி மீசை நலிந்து ஒரு காலத்தில் அது அற்ற ஆடவனாக உருவகிக்கும் அபாயமுள்ளது... (அதுதாங்க கூர்ப்பு). அந்தக்காலத்தில் “ஆதிகால மனிதர்களுக்கு தாடி மீசை எல்லாம் இருந்தது" என்று பாடப் புத்தகத்தில் படிக்கையில் அவர்கள் நம்ம முடியாத நிலைக்கு தள்ளப்படலாம். அதை உறுதிப்படுத்த சிலராவது அந்தக் காலங்களிலும் தாடியோடு இருக்க வேண்டாமா. இப்படி காதலில் தோல்வியுற்றோரை தாடி வளர்க்க சொல்லிவந்தால், ( தேவைப்படின் சட்டம்கூட இயற்றலாம்.) இவர்கள் மூலம் ஜனிக்கும் சந்ததியாவது தாடி மீசை வளரும் எச்சங்களாக இருக்கக்கூடுமல்லவா...

அதுதான் இல்லாவிட்டாலும்,

வளர்க்கும் தாடியை பார்க்கும் பெண்கள் அதன் உட்பொருளை விளங்கி அனுதாபப்பட்டு நீ, நான் என்று போட்டி போட்டு அவனை காதலிக்க முனைய வாய்ப்புண்டல்லவா? இவ்வுலகில்த்தானே பார்த்தவுடனேயே நம்பி ஏமாளிகளாகும் பெண்களுக்கா பஞ்சமில்லை?
ஆக மொத்தத்தில் தாடி வளர்ப்பதால் அனுகூலங்களே அன்றி பிரதிகூலங்கள் இல்லை. ஆகவே காதலில் தோல்விகண்ட மக்கா, விடாதீங்க, காதல்தான் வசப்படாவிட்டாலும் தாடியையாவது வசப்படுத்திவைத்துக் கொள்ளுங்கள்.

இதனுடன் உங்கள் சார்பான கருத்தையும் முன்வைக்கலாம்.

மதி
26-08-2008, 01:42 PM
ஆஹா... தாடி வைத்தலின் அருமை பெருமை எல்லாம் எடுத்துரைத்து விளங்க வைத்த அண்ணன் விராடனுக்கு நன்றி பல.. :)

ராஜா
26-08-2008, 01:55 PM
தாடி பற்றிய பதிலை ஓடி வந்து பதிவு செய்த விராடருக்கு கோடி நன்றி..!

நானும் ஒரு தாடிக்காரன் என்பதால், ( தாடிக்கான காரணம் என்னை நெருங்கியோர் மட்டும் அறிவர்..!) விராடர் முன்வைத்த பல காரணங்களை ஏற்கிறேன்..!

என் தாடி குறித்து வினவுவோருக்கு நான் அளிக்கும் பதில்களில் சில..

என்னங்க தாடி வளர்க்கறீங்க..?

வசதி, வாய்ப்பைத்தான் வளர்த்துக்க முடியல.. தாடியையாவது வளர்த்துக்கலாமேன்னுதான்..

தாடி வச்சிருக்கீங்களே.. எந்த ஊருக்கு..? (கோவிலுக்கு)

மன்னார்குடி பார்பர் ஷாப்புக்கு..!

தாடிக்கு என்னங்க காரனம்..?

நீங்கள்ளாம் தாடி வளர்த்தா அதுக்கு காரணம் பிசி.. நாங்க வளர்த்தா அதுக்கு காரணம் 'பசி'..!

அடடே.. என் புராணம் வளர்ந்துகிட்டே போகுதே.. தாடி போல..

விராடரே... சூப்பர் பதில்..!

மதி
26-08-2008, 01:56 PM
அட...தாடிக்கு பின் இவ்வளவு பெரிய புராணம் இருக்குதா...? ராஜாண்ணே மிக்க நன்றி உங்க ரகசியங்கள பகிர்ந்துக்கிட்டதுக்கு... :)

விகடன்
26-08-2008, 02:28 PM
விராடன்

காதலில் தோற்றால் தாடி வைத்துக் கொள்வது சரியா தவறா? வேடிக்கையான விளக்கம் தருக.

இனி இல்லை என்று சொல்வதானால் எப்படி சொல்லலாம்...
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இல்லை. நிச்சயமாக தாடியே வளர்க்கக் கூடாது...

காதல் தெறித்துப்போன பின்னும் அதையே நினைத்து நினைத்து கவலைப்பட வளர்க்கும் நினைவுச் சின்னமா அந்தத்தாடி?

இன்னும் சொல்லப்போனால், தாடி நாடியிலிருந்து கடந்த கால காதல் நினைவுகளை ஞாபகப்படுத்துமே தவிர வேறொன்றுமில்லை.

வளர்ந்த தாடியால் முகமும் அழகாக கழுவ முடியாது. அழுக்கும் அகலாது. தேவையில்லாத சொறிதான் வந்து சேரும். இன்னும் தாடி அதிகமாகிவிட்டால் ஈர், பேன், தேவதாசைப் போல தான்னை பாவித்து (நாயுடன்) வாழ்ந்தால் தெள்ளுக்கூட குடிகொண்டுவிடும்.

வீதியோரங்களில் எச்சில் துப்ப முடியாது, பொது இடத்தில் ஓரு ஆகாரத்தை உண்ண முடியாது. மீறினால் அவை வாயினருகிலிருக்கும் தாடியில் ஒட்டிக்கொள்ளும். பார்ப்போரிற்கு அருவருப்பை வரவழைக்கும். அதனால் அவர்கள் முகத்தை சுழிக்க தாடி வளர்த்ததன் பிரதிகூலம் விளங்காமல் வளர்த்தோர் மனங்கூன..... ஏன் இப்படிப்பட்ட இடர்ப்பாடெல்லாம்.

தும்மலுடன் தடிமன் வந்திட்டால் ஒவ்வொரு தடவையும் தும்மி விட்டு கவனமாக துடைக்க வேண்டும். இல்லாவிட்டால் முகத்திலிருக்கும் உரோமங்களில் ஒட்டி இழுபட்டு, அதுவும் பார்ப்போரிற்கு அருவருப்பை தாராளமாக அள்ளி வழங்கிவிடும்.

இதுவே வயது முதிர்ந்துவிட்டால் தாடி கறுப்பாகவும் தலை முடி வெளுத்தும் வளரத்தொடங்கும். முதலில் தலைமுடி தான் நரைக்கும் என்று சொல்லுறேங்க.
அப்படி இருவேறுபட்ட நிறத்திலிருக்கும் உரோமத்தை ஒரு நிறத்திற்கு கொண்டுவரவேண்டும். அதற்கு தேவையற்ற பூச்சுச் செலவு.. சிலர் சொல்லலாம், சவரம் செய்யவும் செலவகும் என்று. ஆனால் அதற்கான செலவு குறைவுங்க. அதோட அதனால் அனுகூலந்தான் அதிகம்.

பொது இடங்களில் பிறர் நெருங்கி இருக்க மாட்டார்கள். குழந்தைகளையும் அண்ட விடமாட்டார்கள்.
இதெல்லாம் தேவைதானா?

காதல் தோல்வி எப்படி வந்தால் என்ன? எம்மை வேண்டாம் என்று விட்டுச் சென்றவர் நலமுடன் இருக்க நாம் ஆண் மட்டும் எதற்கு தாடி வளர்க்க வேண்டும். ஆணிற்கு மட்டுந்தான் தாடி வளர்வதால் என்கிறீர்களா?
அப்படியானால் காதலிக்கும்போது வளரவில்லையா?

காதலிக்கையில் பல நேர நெருக்கடிகளுக்கு மத்தியில் தன்னை அழகுபடுத்த செலவழித்தவர்கள் காதல் தெறித்தபோது எதற்காக அழகுபடுத்தலை நிறுத்த வேண்டும். காதல் தெறித்தபோது/ முறிந்தபோதுதான் அதிகமாக நேரம் கிடைக்கும். அவ்வேளைகளில் பொறுமையுடன் தாடி மீசை என்று சவரம் செய்து அழகுபடுத்திக்கொள்ளலாம். கொள்ளவேண்டும். இதுதானே இன்னோர் கிளியோப்பற்றா மயங்க ஏதுவாக இருக்கும் :D .

விகடன்
26-08-2008, 02:29 PM
தாடி பற்றிய பதிலை ஓடி வந்து பதிவு செய்த விராடருக்கு கோடி நன்றி..!

நானும் ஒரு தாடிக்காரன் என்பதால்,

கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டீர்களோ ராஜா என்று தோன்றுகிறது.

ராஜா
26-08-2008, 02:49 PM
கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டீர்களோ ராஜா என்று தோன்றுகிறது.

அப்படியா தோன்றுகிறது..?

அவசரம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்.. என் தாடி பற்றிய பதிலையா..?

அல்லது..

உங்கள் பதில் குறித்து நான் பாராட்டியதையா..?

_______________________________________________________

சந்தேகத்துடன் தாடியைத் தடவியபடி...

கருந்தாடி "வேந்தன்"..!

tamilambu
26-08-2008, 02:50 PM
என்ன விராடன் அவர்களே.....

இப்ப காதலில் தோத்துப் போனவங்க தாடி வைத்துக்கொள்ளலாமா? வேண்டாமா?

ஆம் அல்லது இல்லை பிளீஸ்.

எனது நண்பருக்கு அறிவுரை கூறுவதற்கு கேட்கிறேன்.

ஓவியன்
26-08-2008, 03:07 PM
ஒரே கேள்வியை இரண்டு வெவ்வேறுபட்ட கோணத்தில் அலசி வேடிக்கையாகப் பதிலளித்த விராடருக்கு ஒரு சபாஸ்...!! :)

பதில்களைப் பார்த்து சிரித்தே விட்டேன்...!! :)

விராடா, எனக்கு ஒரு சந்தேகம்...!!
தாடியைப் பற்றி உமக்கேது இத்தனை ஞானம்...??? :D:D:D

அகத்தியன்
26-08-2008, 03:39 PM
மன்னித்துவிடுங்கள் மக்களே. கொஞ்சம் பணிச்சுமையுடன் வேறு பிரச்சினைகளாலும் இப்பக்கம் வரமுடியவில்லை. தீபனின் கேள்விக்கு பதிலளிக்க நான் இப்போது தயார் முடியும் என்றால் அனுமதி தாருங்கள். தீபா, மன்னித்துக்கொள்ளப்பு

ராஜா
26-08-2008, 03:47 PM
கேள்வியையும், கேட்டவரையும் குறிப்பிட்டு பதிலளியுங்கள் அகத்தியரே..!

உங்கள் பதில் படிக்க எங்களுக்கும் ஆவல்தான்..!

அகத்தியன்
26-08-2008, 03:47 PM
இலங்கையின் யுத்தம் உரிமைக்கான போர் ஒரு பக்கம் நடக்கின்றா போதும் இன்னொரு பக்கம் புதுமையான பல போர்கள் அதனை சுற்றி நடப்பது உற்று நோக்குபவர்களுக்கு புரியும். அதில் முக்கியமானது. தொடர்பூடகங்கள்.. உண்மயில் இலங்கையில் என்ன நடைபெறுகின்றது? யுத்தத்தின் போக்கு எப்படி உள்ளது? பாத்திக்கப்படுகின்ற மக்களின் நிலை என்ன? என்பது பற்றி எல்லாம் உண்மையான நிலவரங்கள் எந்த வொரு சாதாரண குடிமகனுக்கும் எட்டுவதில்லை. அப்படி எட்டக்கூடாது என்பதில் அரசாங்கம் மிக ஜாக்கிரதையாக உள்ளது. இரு தரப்பாரும் தங்களுக்கு சாதகமான செய்திகளினையும், எதிர்தரப்பின் மனநிலையினை சிதைக்கும் முயற்சிக்காக பல வதந்திகளினையும் தமக்கு சார்பான ஊடகங்கள் மூலம் வெளியிட்டுக்கொண்டே உள்ளன. அதனால் மக்களும் இதில் இப்போது அவ்வளவாக கணக்கெடுப்பதில்லை. அப்படி இல்லாவிட்டால் தமக்கு சார்பான சேதிகளினை ஒரு கொண்டாட்ட மனநிலையில் எடுத்துக்கொள்கின்றனர். இதுதான் இலங்கையில் இன்று நடக்கும் யுத்தம் பற்றிய எனது கருத்து.

மேலும் தீபன் தமிழ் தரப்பின் பலம் பலவீனம் பற்றி கேட்டிருந்தார். அது தொடர்பில் எந்த அனுமானத்தினையும் என்னை பொறுத்த வரையில் சொல்ல கூடிய வகையில் நானில்லை. ஐதற்கும் நான் மேற் சொன்ன காரணங்கலினைகூறலாம். ஆனாலும் தமிழ் மக்களிற்கான உரிமைகள் வெல்லப்பட வேண்டும் என்ற தீர்மானத்துடன் இருக்கும் கடைசித்தமிழன் வரை இது பலவீனப்படுத்தப்படுகின்றதா? இல்லை படப்போகின்றதா என்பது வேண்டாத கேள்வி என்றே படுகின்றது. அதோடு, தனது சொந்த ஊரில் வெளியூர்காரன் ஒருவனுக்கு அடிப்பது இலகு. ஏனெனில் எம்மூரின் ஒவ்வோரு அங்குலமும் எமக்கு அத்துப்படியாக இருக்கும் எங்கு வைத்து அடித்துவிட்டு எங்கு பதுங்கலாம் என்பது எமக்கு தெரியும் ஆனால் வெளியாளுக்கு???? அதுதான் இன்று இலங்கை ராணுவத்தின் நிலை என நான் கருதுகின்ரேன்.
வன்னி நிலப்பரப்பின் வாழ்ந்து பழக்கப்பட்ட புலிகளுக்கு இது சாதகமான ஒரு நிலை. இவ்வருட இருத்திக்குள் புலிகளினை ஒளிப்பதாக பகிரங்க சூளுரைத்த இலங்கையின் ராணுவத்தளபதி அதனை வாபஸ் பெற்றிருப்பதும், புலிகளின் போரியல் தந்திரங்களின் ஆழத்தினையும் அவர்களின் போரியல் திறனினையும் மரைமுகமாக ஒப்புக்கொண்டது போலவே எனக்குப்படுகின்றது.

இனி நடப்பது என்ன என்றால் யாருக்கும் தெரியாது. பேச்சுவார்த்தை என்ற பெயரில் மீண்டும் இழுத்தடிப்புகள் நிகழலாம். அல்லது முழுமூச்சான யுத்தம் நாட்டினை சின்னாபின்னப்ப்டுத்தலாம்

எவ்வறான போதும், அல்லல்படுவது சாதாரண ஏழைகள்தான். கொள்கை வகுப்பளர்களும். ஆணையிடுவோரும் எப்போதும் நலமாகவும் மகிழ்வாகவும்தான் இருக்கின்றனர்.

அனைவ்ரும் இன்புற்றிருக்க இறைவனை பிரார்த்திப்போம். இது தவிர எதை சொல்வது தீபா?

சாலைஜெயராமன்
26-08-2008, 07:26 PM
மனித வாழ்க்கையில் புரிதல் என்பது எதனிலிருந்து ஆரம்பிக்கிறது? தத்துவமாய் ஒரு விடை தாருங்கள்

=======================================================================================================
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்

கண்டேன் அன்னையை கற்பினுக்கினிய கண்களினால்

இது அனைவருக்கும் ரொம்ப பழக்கமான அதிகம் கேள்விப்பட்ட கம்பராமாயண இலக்கிய வாசகங்கள். இரண்டு சம்பவங்களும் வெவ்வேறு இடத்தில் நடந்த போது கூறப்பட்ட வாசகங்களாக இருந்தாலும், இரண்டும் நோக்குதலின் அளவைக் சரியான கோணத்தில் கொண்டிருப்பது புரிதல் என்ற ஒற்றுமையை உள்ளடக்கிய ஒரு செயல்வினையால்தான். இந்த இரண்டு நோக்குதலிலும் புரிதல் என்ற ஒரு வினையானது சரியான முறையில் தவறேதுமின்றி நடந்தேறியதால் ஒரு மாபெரும் காப்பியத்தில் முக்கிய இடத்தை இந்த இரு நிகழ்வுகளும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த இரு நோக்கில் ஒன்று இராமபிரான் தன் இல்லத்தாளாக வரவிருக்கும் தன் பத்தினியை நோக்கியது. மற்றொன்று தூதனாக வந்த அனுமன் தன் குருபத்தினியை நோக்கியது. இரண்டிலும் உள்ள ஒற்றுமையாதெனில் இந்த இரு நிகழ்வுகளிலும் கதாபாத்திரங்கள் தங்களை அதற்குமுன் ஒருவரைப் நேரில் பார்த்து அறிமுகமில்லாத காலகட்டத்தில் ஏதோ ஒரு பொதுவான அனுமானங்களைக் கொண்டு சொல்லப்பட்டவை. இரண்டிலும் புரிதல் என்ற செயல்வினை சரியாக வேலை செய்ததால் குழப்பங்கள் ஏற்படாது காரியங்கள் செம்மையாக நடந்தேறின.

அதாவது இராமன் சீதையை மணமுடித்ததும், அனுமன் தூதனாக வந்து தன் பணியை சிறப்பித்ததும் ஆகும்.

இதே அனுமன் சீதாபிராட்டியை காண்பதற்கு முன் இலங்கையில் முதலில் கண்டது மண்டோதரியைத்தான். அழகிலும் தோற்றத்திலும் சீதைக்கு இணையாக அவள் இருந்ததால் இராணவனின் படுக்கையறையில் அவளைக் கண்ட அனுமனுக்கு அவர்களை சீதை என முதலில் நினைக்க வைத்தது. இருப்பினும் உடன் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டதற்கு முக்கிய காரணம் சீதாபிராட்டியின் கற்பின் தன்மையை அனுமன் சரியாகப் புரிந்து வைத்திருந்ததால்தான். ஒரு அன்னிய ஆடவனுடன் துகில் கொண்டிருப்பவளை அன்னை சீதாதேவியுடன் ஒப்பிட்ட தன் தவறை நினைத்து அனுமன் வேதனைப் பட்டதாக கம்பராமாயணம் கூறுகிறது.

தன் ஒரு நோக்கிலேயே யுகங்களைக் கடந்து தனக்கு மனைவியாக வர இருப்பவள் இவள்தான் என்று இராமபிரானைத் தீர்மானம் கொள்ள வைத்தது பார்த்த ஒரு பார்வையிலேயே சீதையின் தகுதியை இராமன் தனக்குள் புரிந்து கொண்டதால்தான்

ஆக புரிதல் என்பது பல கோணங்களில் நிகழ்ந்தாலும், புரியாத சில காரணங்களால்தான் இன்றைய தீவிரவாதமும், மதச் சண்டைகளும் நம் அன்னை இந்தியாவை பல கூறுகளாகப் பிரித்து வைத்திருக்கிறது. மொழியாலும், இனத்தாலும் அனைவரும் பிரிந்திருந்தாலும், தேசபக்தி என்ற ஒன்றை அனைவரும் சரியான முறையில் புரிந்து வைத்திருப்பதால்தான் நமது நாடு இன்னமும் ஒரு தனித்துவத்தோடு விளங்கிவருகிறது. இது ஒரு முரண்பாடாக இருந்தாலும் ஆச்சர்யப்படவைக்கும் ஒரு விசித்திரமான உண்மை.

எல்லா மதங்களின் அடிப்படை கொள்கை அன்புதான்.

மதத்தின் அடிப்படைத் தத்துவத்தை புரிந்து கொள்ளாத காரணத்தால்தான் மதத்தின் பெயரால் இன்று நடக்கும் அடிதடிகள். வெடிகுண்டு கலாச்சாரங்கள்.

ஒரு நாட்டை இன்னொரு நாடு சரியாக மதிக்காததும், அழிக்க நினைப்பதும் ஒன்றை ஒன்று சரியாகப் புரிந்து கொள்ளாததால்.

அண்டை அயலானோடும், சுற்றத்தோடும் பகைமை பாராட்டுவதும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாததுதான்.

சமுதாயத்தில் அறிவின் தன்மையைப் புரிந்து கொள்ளாத அறியாமையினால்தான் நோயும், வறுமையும்.

மக்களின் தேவையைப் புரிந்து கொள்ளாததால்தான் ஆட்சியில் குழப்பம். ஏற்ற தாழ்வுகள் சமுதாயத்தின் சீர்கேடுகள் ஏழை பணக்காரன் வித்தியாசம் அனைத்தும் ஒன்றை ஒன்று சரியாகப் புரிந்து கொள்ளாததால்தான்.

வாழ்க்கையை சரியாகப் புரிந்து கொள்ளாத இளைஞர் சமுதாயம் தற்கொலையைத் தீர்வாக நினைப்பது.

பெற்றோர் பிள்ளைகளைப் புரிந்து கொள்ளாதிருப்பது,

கணவன் மனைவிக்கிடையேயுள்ள புரிதல் பலவீனங்கள்.

காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வேறுபாடைப் புரிந்து கொள்ளாத யுவ யுவதிகளின் நாகரீகக் கலாச்சாரம் இவையனைத்தும் சமுதாய முன்னேற்றத்திற்கான தடைக்கற்கள் என்பதை புரியவைக்க இயலாத அதிகார வர்க்கம் போன்ற எல்லா சமூகத்தின் அவலங்களும் புரிதல் என்ற ஒரு சித்தாந்தத்தை வைத்து பின்னிப் பிணைந்துள்ளது.

எங்கு புரிதல் இல்லையோ அங்கு ஆரோக்கியம் இல்லை. அவலங்கள்தான் இருக்கும்.

மேலே சொல்லப்பட்ட கேடுகள் அனைத்தும் அன்பு என்ற ஒரு இறைக்குணம் இல்லாத மக்களிடையே ஏற்படும் சமுதாய அவலங்கள்.

எனவே புரிதல் என்பது மாசற்ற கருணையினாலும் சகிப்புத் தன்மையினாலும் ஒரு விஷயத்தை அணுகும் போது அன்பு என்னும் பண்பின் மூலமாகத்தான் ஆரம்பிக்கிறது என்பது என் தாழ்மையான கருத்து.

புரிதல் இருக்கும் இடத்தில் விட்டுக் கொடுத்தல் இருக்கும் அன்பு இருந்தால்தான் விட்டுக் கொடுக்கும் பண்பு வளரும். அன்பு இருக்கும் இடத்தில் புரிதல் மட்டுமல்ல மெய் புனைதலும் இருக்கும்.

எனவே புரிதல் என்பது அன்பினில் இருந்து ஆரம்பிப்பது.

சாலைஜெயராமன்
26-08-2008, 07:36 PM
இனி நடப்பது என்ன என்றால் யாருக்கும் தெரியாது. பேச்சுவார்த்தை என்ற பெயரில் மீண்டும் இழுத்தடிப்புகள் நிகழலாம். அல்லது முழுமூச்சான யுத்தம் நாட்டினை சின்னாபின்னப்ப்டுத்தலாம்

எவ்வறான போதும், அல்லல்படுவது சாதாரண ஏழைகள்தான். கொள்கை வகுப்பளர்களும். ஆணையிடுவோரும் எப்போதும் நலமாகவும் மகிழ்வாகவும்தான் இருக்கின்றனர்.

அனைவ்ரும் இன்புற்றிருக்க இறைவனை பிரார்த்திப்போம். இது தவிர எதை சொல்வது தீபா?

மிக மிக வேதனையைத் தந்த பின்னூட்டம். ஆணையிடுவோர் பாதுகாப்பான இடத்தில் இருந்தால்தான் ஆணையிடமுடியும். கொள்ளை வகுப்பவன் கொள்ளை அடிக்கும்போதுதான் வகுக்கமுடியும். அல்லல் உறுவது ஏழைபாழைகள், பெண்கள், குழந்தைகள்.

என்ன சத்தியமான மனதை நெருடும்/சுடும் உண்மைகள். என்றுதான் இலங்கையில் அமைதி திரும்புமோ. இறைவா அனைத்து உள்ளங்களிலும் உன் கருணை புகுந்து நற்சிந்தனையைத் தரவேண்டும். இனியாவது இரத்ததின் விலையை கொலைகாரச் சிந்தனையுடையோர் உணரவேண்டும்.

போதும் இந்த இரணகளம். அன்புப் பூங்காவாக இலங்கை தேசம் மலர வேண்டும். இறைவா அனைவருக்கும் நல்ல புத்தியைக் கொடு.

யாசிக்கிறோம். அன்பை யாசிக்கிறோம். அல்லல்கள் அகல யாசிக்கிறோம். அன்பின் முகத்தை யாசிக்கிறோம். இறைவா ஏறெடுத்துப்பார் என் சகோதரர்களை. சண்டைகள் ஓயட்டும் சமாதானம் பூக்கட்டும். மன்றத்தின் சார்பாக பிராத்தனை செய்வோம்.

அமரன்
26-08-2008, 08:31 PM
எண்பதுகளில் எல்லாரும் தாடி வெச்சிருந்தார்களாம். அந்தக் காலகட்டத்தில் பிறந்த விராடனின் தாடிப்பதில் சுப்பர்ப்.

விரத காலத்தில் சவரம் செய்யக்கூடாதென்று ஒரு மூடநம்பிக்கை. நம்மூரில் முடிவெட்டினால், சவரஞ்செய்தால் தலையில தண்ணி வார்க்காமல் வீட்டுக்குள் விட மாட்டார்கள். துடக்கு என்று சப்பைக் கட்டுவார்கள். விரத காலத்திலும் இதைத்தான் சொல்வார்கள். காதலில் தோற்றவர்கள் கூட ஒருவகையான விரதர்கள்தான். அடுத்த காதலுக்காக அல்லது அடுத்துக் காதலிக்காதிருப்பதுக்காக..

சுகாதார முறைப்படி தாடி கேடி. முகத்தில் படும் சூரியஒளிச்செறிவு குறைவு.. கிருமித் தொற்று அதிகம்..

நன்றியும் பாராட்டும் விராடா..

அமரன்
26-08-2008, 08:43 PM
ஈழத்தின் களமுனை நிலவரங்கள் களத்தில் நிற்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. அது போல புலிகளின் பலம்,பலவீனம் அவர்களால் மட்டும் கணக்கிடக் கூடியது. இதை எழுதிக்கொண்டிருக்கும் போது செய்தி சொல்கிறது திருமலையில் புலிகளின் விமானம் குண்டு வீசி உள்ளதாம். கிளிநொச்சிக்கு கிட்டத்து ஊரில் இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணிக்கும் புலிகளுக்கும் சண்டையாம். செய்தி ஊடகங்கள் சொல்வதை கேட்கத்தான் முடிகிறது. செய்தி ஊடகங்கள் கள முனை உண்மையைச் சொல்ல வேண்டாம். மனிதத்தை சொல்லட்டும்.. நாட்டின் உண்மை நிலையைச் சொல்லட்டும்.. எதிர்காலத்தை எடுத்தியம்பட்டும். அதுவே போதும் ஈழத்தில் சுபீட்சம் பரவ...

தமது கை ஓங்கியதும் பேச்சுக்கான முயற்சிகளை திரை மறைவில் அரசு செய்வதாகவும் செய்தி கசிகிறது. போராட்டம் நிரந்தரத்தீர்வை தராது என்பதில் எல்லாரும் தெளிவாகத்தான் உள்ளனர். அரசியல் நோக்கங்களுக்காக விரும்பியோ விரும்பாமலோ போரை முன்னெடுக்க வேண்டிய சுழ்நிலை.

கூர்மையான நோக்கில் பதில் தந்த அகத்தியனுக்கு பாராட்டும் நன்றியும். உங்களை காண்பதில் பெரு மகிழ்ச்சி...

தீபன்
26-08-2008, 11:01 PM
நன்றி அகத்தியன். தெளிவாக விரிவாகா ஆனால் தாமதமாக தரமாக பதில் தந்தமைக்கு. சில விடயங்களை பெற சில விலைகள் செலுத்தப்படுவது தவிர்க்கமுடியாததுதான். விரைவில் நல்ல செய்தி வரும். காத்திருப்போம்.

இளசு
26-08-2008, 11:35 PM
புரிதலின் தொடக்கம் அன்பு என்ற சாலை அவர்களின் பதில் மிக அருமை!
அன்பின் அடித்தளம் சக மரியாதையாய் இருக்கவேண்டும் என்பது என் எண்ணம்.

அகத்தியன் பதிலுக்கு சாலை அவர்களின் கருத்தும் வேண்டுதலும் - இணைகிறேன்.

விராடனின் காதல் தோல்வி -நேர மிச்சம் - அடிக்கடி மழிக்கும் முத்தாய்ப்பு அருமை!

மதுரை மைந்தன்
26-08-2008, 11:43 PM
அன்பு மதி அவர்களே

மிகவும் கடினமான கேள்வி ஒன்றை என் முன் வைத்துள்ளீர்கள். எனது சிற்றறிவிற்குத தெரிந்த பதிலை நான் தருகிறேன்.

முதற்கண்

" எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப் பொருள் மெயப் பொருள் காண்பதறிவு"

என்ற வள்ளுவர் வாக்கை நாம் நினைவு கொள்ள வேண்டும்.

அமெரிக்கா உண்மையில் சந்திரனில் மனிதனை இறக்கவில்லை என்று ஒரு சிலர் வாதித்தனர். இதற்கான அவரது வாதங்கள் இவையாகும்.

1. சந்திரனில் அமெரிக்க கொடி காற்றில் பறப்பது போல் நாசா படங்களை வெளியிட்டது. சந்திரனில் காற்றே இல்லை என்ற நிலையில் இது எவ்வாறு சாத்தியம்?

கொடியில் இருக்கும் சுருக்கங்களை வைத்து இவ்வாறு கேள்வி எழுப்புகிறார்கள். நமக்குத் தெரியும் எந்த துணியையும் பெட்டியில் வைத்து எடுக்கும் போது சில சுருக்கங்களைத் தவிர்க்க முடியாது என்று. சந்திரனில் பறக்க விடவதற்கான கொடியை விண்கலத்தில் ஒரு பெட்டியில் வைக்கப் படடிருந்ததே இதன் காரணம்.

2. நீல் அம்ஸ்ட்ராங் என்ற அமெரிக்க விண் வெளி வீரர் முதல் காலடி வைத்ததை கீழிருந்து படம் பிடிக்கப் பட்டிருக்கிறது. இது எவ்வாறு சாத்தியம்?

விண்கலத்தின் அடிப்பாகத்தில் பொருத்தப்பட்டிருந்த காமிராவைக் கொண்டு அநத புகைப் படம் எடுக்கப் பட்டிருக்கிறது.

3. மற்றுமொரு புகைப்படத்தில் இரண்டு அமெரிக்க விண் வெளி வீரர்களின் நிழல்களும் வேறுவேறு நீளத்தில் காணப்படுகிறது. ஆதவனின் வெளிச்சத்தை மட்டுமே கொண்ட சந்திரனில் இது எவ்வாறு சாத்தியம்?

இந்த படத்தை மறுப்பாளர்கள் தங்கள் வாதத்திற்கு ஏற்ப மாற்றியிருக்கிறார்கள் என்பதே உண்மை

இப்படி பல வாதங்களை வைத்து அமெரிக்கா சந்திரனுக்கு மனிதனை அனுப்ப வில்லை அது ஒரு மோசடி எனபவர்களின் நோக்கம் என்ன என்று பார்த்தால் இவர்கள் இந்த வாதங்களை புத்தகமாக வெளியிட்டு பணம் பண்ணுவதே என்று தெளிவாகின்றது.

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் இவர்களின் வாதங்களுக்கு மறுப்புத் தெரிவிக்க மறுத்ததே இவர்களுக்கு சாதகமாயிற்று புத்தகத்தை வெளியிடவதில். நாசாவின் மறுப்புத் தெரிவிக்காததின் காரணம் மறுப்பு வெளியிட்டால் இவர்களுக்கு அங்கீகாரம் அளித்ததாகி விடும் என்பதே. மேலும் இந்த வாதங்களை பொது மக்களுக்கு விளக்குவற்கு மக்களின் விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப அறிவின் பற்றாக்குறையும் ஒரு காரணம்.

அமெரிக்கா மனிதனை சந்திரனுக்கு அனுப்பியது மோசடி என்றால் அச்சமயம் அமெரிக்காவை விட விண்வெளி ஆராய்ச்சியில் முன்னடைந்த நாடான சோவியத் யூனியன் அதைக் கண்டறிந்து உலகத்திற்கு பறை சாற்றியிருக்கும் இருவருக்கும் இடையே இருந்த பனிப் போர் காரணமாக. ஆனால் அது அவ்வாறு செய்ய வில்லை.

ஆகவே 1000,000 கோடி ரூபாய் (25 பில்லியன் டாலர்) செலவிட்டு பல விஞ்ஞானிகள் தொழில் நுட்ப வல்லுனர்கள் முயற்சியில் நடந்த இந்த வரலாறு சிறப்பு மிக்க நிகழ்வை நாம் போற்று வோம்.

இப்பகுதியில் பங்கேற்க வாய்ப்பளித்மைக்கு மிக்க நன்றி

இளசு
26-08-2008, 11:57 PM
மதி கேட்ட மதிப்பூர்வமான கேள்விக்கு மதுரைவீரனின் பதில் அருமை.

அந்தந்த உயிர் அப்படி அப்படியே அமைத்தவன் இறை என்பார்!

டார்வின் பரிணாமம் சொன்னால், அந்தப் பரிணாமத்தையும் அளித்தவர் கடவுள் என
மேல்வாதம் செய்வார்.

அப்புறம் ஏன் மிருக விழிகள் பல மில்லியன் ஆண்டுகளாக 20 முறை மாற்றி மாற்றி இன்னும் சிறப்பாகி - better version -
ஆனாலும் இன்னும் குறைகளோடு ( blind spot)?

Evolution, Natural selection - இத்தனை நிரூபிக்கப்பட்ட பிறகும்,
இறைவன் படைத்தான் என்று நம் பிள்ளைகளுக்குக் கற்பிக்க நாணுகிறோமா என்ன?

சந்திரனை பாம்பு விழுங்குவதால் கிரகணம் என்பார் எப்படி சந்திரனில் மனிதன்
கால் வைத்ததை ஒப்புவார்?

அறிவியல் நிரூபித்த பிறகும், சந்தேக/சமயச் சாயம் பூசிப் பிழைப்பை ஓட்டும்
கூட்டம் - உலகப் பொது நியதி..

...

மதுரை மைந்தன்
27-08-2008, 12:24 AM
அமெரிக்கா சந்திரனுக்கு மனிதனை அனுப்பிய நிகழ்வை ஒட்டி வந்த ஒரு சுவையான தகவல்.

சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருக்கையில் பந்து பக்கத்து வீட்டருகே சென்று விட்டது. அதை எடுக்கச் சென்ற சிறுவனின் காதுகளில் பக்கத்து வீட்டு கணவன் மனைவியினரின் உரத்த பேச்சு காதில் விழுந்தது. மனைவி கணவனிடம் கோபமாக ' நீ ஒருக்காலும் என்னுடன் படுக்க முடியாது. பக்கத்து வீட்டுப் பையன் சந்திரனில் காலடி எடுத்து வைத்தால் கூட அது நடக்காது'. இதைக் கேட்ட அந்த சிறுவன் சந்திரனில் முதல் அடி வைத்த நீல் ஆமஸ்ட்ராங். அவர் சந்திரனில் இறங்கியதும் இந்த நிகழ்ச்சி அவர் நினைவுக்கு வந்ததாம்.

ராஜா
27-08-2008, 03:32 AM
வீரரின் நிலாப் பயணம் குறித்த நிறுவல்கள் ஏற்கும்படியாக உள்ளன. ரஷ்யா மறுக்கவில்லை என்னும் வாதம், எல்லா சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி. நன்றி வீரன்.

சின்னப் புள்ளைக விளையாடும்போது, பக்கத்து வீட்டுப்பக்கம் ஒரு காதை வச்சுக்கங்கப்பா..!

விகடன்
27-08-2008, 07:01 AM
விராடா, எனக்கு ஒரு சந்தேகம்...!!
தாடியைப் பற்றி உமக்கேது இத்தனை ஞானம்...??? :D:D:D

என ஓவியன். உங்களுக்கே தெரியுந்தானே... நானும் காதலும், ராகுவும் கேதுவும் மாதிரி.
காதலில் மண்ணை கவ்வினால்த்தானே எந்த முடிவு எடுக்க வேண்டுமென்று குழம்புவதற்கு. இது முழுக்க முழுக்க வெளியே இருந்து நடுநிலமையுடன் எழுதப்பட்டவை :D .

விகடன்
27-08-2008, 07:02 AM
விரத காலத்தில் சவரம் செய்யக்கூடாதென்று ஒரு மூடநம்பிக்கை. நம்மூரில் முடிவெட்டினால், சவரஞ்செய்தால் தலையில தண்ணி வார்க்காமல் வீட்டுக்குள் விட மாட்டார்கள். துடக்கு என்று சப்பைக் கட்டுவார்கள். விரத காலத்திலும் இதைத்தான் சொல்வார்கள். காதலில் தோற்றவர்கள் கூட ஒருவகையான விரதர்கள்தான். அடுத்த காதலுக்காக அல்லது அடுத்துக் காதலிக்காதிருப்பதுக்காக..

சுகாதார முறைப்படி தாடி கேடி. முகத்தில் படும் சூரியஒளிச்செறிவு குறைவு.. கிருமித் தொற்று அதிகம்..

நன்றியும் பாராட்டும் விராடா..
அடடா...
இப்படியும் சில விடயங்கள் இருக்கிறதே...
இதற்குத்தான் கூட்டு முயற்சி வேண்டுமென்பது.
பொதுவாக என் மூளை சிந்திக்க, சிறப்பாக உங்கள் மூளை சிந்திக்கிறது.
இதேபோல் உங்கள் அனைவரிடமுமிருந்து எதிர்பார்க்கிறேன்.

பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அமர்

விகடன்
27-08-2008, 07:02 AM
என்ன விராடன் அவர்களே.....
இப்ப காதலில் தோத்துப் போனவங்க தாடி வைத்துக்கொள்ளலாமா? வேண்டாமா?
ஆம் அல்லது இல்லை பிளீஸ்.

இதெல்லாம் காதலை தொலைத்தவர்கள் கவலைப்படவேண்டிய விடயம் மட்டுமே இல்லை தமிழம்பு...
கூடவே தாடியும் வளருவோராக இருக்கவேண்டும். அப்படியானால்த்தான் அவர்களுக்கு இரு தெரிவிருக்கும். அதெலெதை எடுப்பது என்று குழம்பக்கூடும்.
ஆக, தாடி மீசை சரளமாக வளரவேண்டும் :D
அதோட காதல் காலைவாரியுமிருக்க வேண்டும். எப்படி உங்கள் வசதி. பூரண விடயத்தை அளித்தால் மேற்கொண்டு சொல்லவேண்டியதை சொல்லலாம்......

எனது நண்பருக்கு அறிவுரை கூறுவதற்கு கேட்கிறேன்.நம்பீட்டேங்க.

நம்பிகோபாலன்
27-08-2008, 07:04 AM
என்னையும் உங்கள் கேள்வி திரிக்கு மாட்டியதில் மதிக்கு மிக்க நன்றி.
ஒரு விஷயத்தை ஆராயும் பொழுது அதனுடைய நல்லது கெட்டது ஆராய்வது என் பழக்கம்..

இணையத்தில் காதல் (சாதகம்)

ஆண், பெண் இருவரும் தங்கலின் பகிர்தலையும் எதிர்ப்பார்பினையும் தெரிவித்து கொண்டு காதலிக்க ஆரம்பிக்கலாம். இணையத்தின் மூலம் இதயதில் இவர்களின் காதல் வலு பெறுவதர்க்கு சாத்யங்கள் மிக குறைவு. முக்கியமான சாதகம் செலவு குறைவு.

இணையதில் காதல் எவ்ளொ தூரம் சாத்தியமில்லை என்பதை பார்ப்போம்.

இணையத்தின் மூலம் காதல் இதய்த்தில் ப்ரதிபலிக்கும் என்றால் சந்தேகமே.
என் கண்ணோட்டத்தில் காதலுக்கு புரிதலும், பகிர்தல் (விட்டு கொடுத்தல்) மிக முக்கியமான விஷயமாக கருதுகிறேன்.
இன்றைய விட்டுகொடுத்தலும் , பகிர்தலும் எதிர்காலத்தில் வாழும் நாட்களுக்கு ஒரு முன் மாதிரி இருக்கும்.

இணையத்தின் காதல் புரிதலுக்கு வழிவகுக்கும் -- விட்டுகொடுத்தல் ?

காதலுக்கு உண்மையாக இருப்பது மிக அவசியம், இணையத்தில் அது சந்தேகமே.

காத்தலும் காத்திருத்தலும் காதலின் சுகம் , இணையத்தின் வாய்ப்பு மிக குறைவு.

திரைபடங்களில் வேண்டுமானால் சாத்தியாமாக இருக்கலாம், என்னை பொறுத்தவரை நிஜ வாழ்க்கைக்கு கஷ்டம்தான்.

poornima
27-08-2008, 07:24 AM
Poornima

மன்றத்தில் சமீபத்தில் இணைந்த கவிதாயினி நீங்கள். தேடல் கவிதைகள் மூலம் அறியப்படுபவர். நாளை உலகத்தின் இறுதிநாள், யாரும் பிழைக்க வழியேயில்லை என்று அறியும் சமயத்திலே மனிதனின் (அறிவியல் சாராத) தேடல் என்னவாயிருக்கும்? அதைப் பற்றி ஒரு கவிதை ப்ளீஸ்.

முதலில் ஒரு சின்ன பின்குறிப்பு

நான் கவிதை எழுதுவதில் சிறந்த ஆள் எல்லாம் அல்ல.கவிதாயினி என்ற பட்டம் எனக்கு உகந்ததல்ல. ஆனால் அவ்விதம் நீங்கள் அழைப்பதை உறுதிப்படுத்த ஆவல் இருக்கிறது?

கவிதை?

விரைவில் வருகிறேன்.கொஞ்சம் அலுவல் பணியில் இருக்கிறேன்.

நன்றி.

இரண்டாம் முறையாக இந்தப் பகுதியில் பதில் அளிக்க வாய்ப்பு தந்தமைக்கு..

மதி
27-08-2008, 08:29 AM
சாலையண்ணா...புரிதலின் அவசியத்தையும் மகத்துவத்தையும் தெளிவாக சொன்னீர்கள். புரிதலும் அன்பும் இருந்தால் உலகில் சமாதானமும் சந்தோஷமும் தழைத்தோங்கும் என புரிகிறது.

மதுரை வீரன் சார்...
நிலவில் மனிதன் கால் பதித்தது பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. அத்துடன் கொசுறு செய்தியும் தந்தமைக்கு மிக்க நன்றி. இனி ராஜாண்ணா சொன்னது போல் பக்கத்து வீட்டு பசங்களைப்பற்றி பார்த்து பேச வேண்டும்.

நம்பிகோபாலன்...
காதலுக்குத் தேவை புரிதலும் விட்டுக் கொடுத்தலும். இணையத்தில் புரிதலுக்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் விட்டுக் கொடுத்தலுக்கு இல்லை. சரியான கோணத்தில் அலசியமைக்கு நன்றி.

பூர்ணிமா....
யாரும் தன்னை பெரிய கவிதாயினி அல்லது கவிஞர் என்று பறை சாற்றிக் கொண்டதில்லை. அவர் படைப்பின் தரம் புரிந்தவர் அவருக்கு கவிஞர் என்று பெயரிடுவர். உங்கள் கவிதையினைப் படிக்க ஆவலோடு காத்திருக்கிறோம்.

சுகந்தப்ரீதன்
27-08-2008, 09:01 AM
சுகந்தப்ரீதன்
உறவுகளால் என்றும் சிக்கலே என்கிறேன் நான். இதனை ஆதரித்தும் எதிர்த்தும் பதில் தருக.உறவுகளால் என்றும் சிக்கலே..!!ஏனெனில் உறவுகளுக்கு இன்னொரு பெயர் உரிமை கொண்டாடுதல்..!! இந்த உரிமை கொண்டாடுதல்ஒரு எல்லையை கடக்கும்போது பெரும்சிக்கலாகி விடுகிறது..!! உரிமை என்ற பெயரில் மற்றவர்களின் உரிமையில் தலையிடுட்டு அவர்களின் உரிமையை பறிப்பதே இந்த உறவுகளுக்கு வேலையாப்போச்சு..!!
உதாரணமாக மதி பெங்களூரில் ஒரு பெண்ணை காதலிக்கிறான்(ர்) என்றுவைத்துக் கொள்வோம் (உண்மையாகக்கூட இருக்கலாம்..)!! அதை தக்க தருணத்தில் வீட்டில் சொல்ல காத்துக்கொண்டிருப்பான்.. அந்த நேரத்தில் அவனது அத்தை வந்து மதியோட அப்பாவிடம் உரிமையுடன் என் பெண்ணைத்தான் உன் மகனுக்கு கட்டனும் என்பார்..!! இன்னொரு புறம் அவனது மாமா வந்து மதியோட அம்மாவிடம் என் மகளைத்தான் மதி மணக்கனும் என்பார்..!! இந்த பக்கம் மதியோட காதலி எப்ப என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக போறீங்கன்னு அறிப்பார்..!! இதுல மதியோட மதியில மயங்கி அவனோட மேனேஜர் வேற எம்பொண்ணு மதியழகியை நீதான் கட்டிக்கனும்ன்னு மதியை வற்புறுத்துவாரு...பாவம் மதி என்ன முடிவெடுப்பான்..??

அவனால் யாராவது ஒரு உறவைத்தான் திருப்தி படுத்த முடியும்ங்கிறப்போ மற்றவர்களுக்கு அதனால் மனவருத்தம் ஏற்படுமேன்னு மதிக்கு மனவருத்தமாகி .ச்சே..ச்சே.. இந்த உறவுகளால் எப்போதும் சிக்கல்தாம்ப்பா. எது எதுலதான் தலையிடனும்ன்னு விவஸ்தையே இல்லாமபோச்சு.. மனுசன் நிம்மதியா ஒருத்தியை காதலிச்சி கட்டிக்கலாம்ன்னு பார்த்தா அங்கேயும் குறுக்கவந்து உரிமையை பறிக்கிறாங்களேன்னு நொந்து நூடுல்ஸ்டன் நெப்போலியனோட உறவை ஏற்படுத்திக்குவான்..!! இந்த உறவு அந்த உறவைவிட சிக்கலானதுன்னு அவனுக்கு அப்ப தெரியாது..!!

இதுவொரு உதாரணம்தான்.. இப்படி சகோதரிகளுடன் சகோதரர்களுடன் நண்பர்களுடன் என்று இன்னும் நிறைய இடங்களில் உறவுகளால் ஏற்படும் சிக்கல்களை சொல்லிக்கிட்டே போகலாம்.. அப்புறம் படிக்கிற உங்களுக்கு சிக்கலாயிடும்.. அதனால உங்களோட நலன்கருதி இத்துடன் உறவுகளுக்கு எதிரான எனது ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்..!!

உண்மையில் என்னைப் பொறுத்தவரை உறவுகளால் என்றுமே சிக்கல் கிடையாது.. உறவுகளுக்கு இடையேயான புரிதலில்தான் சிக்கலே..!! ஏனெனில் உறவுகள் என்பதே மெல்லிய உணர்வுகளாலானது..!! உறவுகளில் நெருங்கிய சொந்தம், தூரத்து சொந்தம், நட்பு, காதல் என பல்வேறு பரிணாமங்கள் உள்ளன..!!நாம் பிறக்கும்போதே அம்மா அப்பா என்ற உறவுகள் உருவாகிவிடுகின்றன.. அதனை தொடர்ந்து மற்றவைகளும் வந்துஒட்டிக்கொள்கின்றன..!! இதை நம்மால் தவிர்க்க இயலாது.. அதே சமயம் இது ஒன்றும் இயல்பாக வந்ததும் அல்ல..!!

ஆதிகாலத்தில் காட்டில் மிருகங்களை போல் சுற்றி திரிந்த மனிதஇனம் காலப்போக்கில் நாகரிக வளர்ச்சியால் கூடிவாழ கற்றுக்கொண்டது..!!அப்படி கூடிவாழ கற்றுக்கொண்ட ஒவ்வொரு கூட்டமும் தனக்கென தனிபட்டதொரு பண்பாட்டு உறவுமுறையை உருவாக்கிக்கொண்டது..!! அப்படி பண்பாட்டு வளர்ச்சியால் விளைந்ததுதான் இன்றைய நாகரீகஉறவுகள்..!!கட்டுப்பாடில்லாமல் சுற்றிதிரிந்த மனிதனை இன்று சமுதாய கட்டுக்குள் வைத்து வாழவைப்பதே இந்த உறவுகள்தான் என்றால் அது மிகையாகாது..!!தனிமனித ஒழுக்கத்திற்க்கும் வளர்ச்சிக்கும் உறவுகளே உறுதுணையாய் இருக்கின்றன..!! உறவுகளின் உதாசீனத்திற்க்கு ஆளாகிவிடுவோமோ என்ற அச்சம்தான் சமூகத்தில் பெரும்பாலான மக்களை குற்றமற்றவர்களாக வைத்திருக்கிறது..!! தனிமனித ஒழுக்கம்தான் சமூக ஒழுக்கமாகிறது.. அதுவே நாட்டின் ஒழுக்கமாகவும் மாறுகிறது.. இதற்கு அடிப்படையாய் இருப்பது உறவுகளே..!!

ஆனால் இத்தகைய பலம் வாய்ந்த உறவுகள் பலவீனமடைந்து வருகின்றன என்பதைத்தான் இன்றைக்கு சமூகத்தில் பெருகிவரும் அனாதை இல்லங்களும் முதியோர் இல்லங்களும் குடும்பநல வழக்குகளும் பறைசாற்றுகின்றன..!! இதற்கு காரணம் உறவுகளுக்கு இடையே சரியானபுரிதலும் விட்டுக்கொடுத்தலும் இல்லாமல் போவதுதான்..!! உறவுகளின் அருமை ஆரம்பத்திலும் முடிவிலும்தான் மனிதனுக்கு அதிகம் புரிகிறது... இடையில் இளமையில் பொருளாதார போராட்டத்தில் புரிதலில் ஏற்படும் சிறுதடுமாற்றத்தால் அவை சிக்கலாக தோன்றுகிறது அவ்வளவே..!!

குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்பார்கள்.. சுற்றம் பார்க்கின் குற்றமேயில்லை என்பேன் நான்..!!ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதிலும் சரியான புரிதலிலும்தான் உறவுகள் பலமடைகின்றன..!! உறவுகளுக்கு உதவுவதையும் அன்பு செலுத்துவதையும் சுயநலம் என்று சுருக்கமாக சொல்லிவிட முடியாது.. அது ஒருகட்டுக்குள் அமைந்த பொதுநலம்..!! சராசரி மனிதர்களால் அதைத்தான் செய்யமுடியும்..!! அதை அனைவரும் சரிவர செய்தாலே பெரும்பாலான சமூக பிரச்சனைகளை சரிசெய்து விடலாம்..!! ஏனெனில் பல உறவுகள் இணைந்த குடும்பங்களின் கூட்டணியைத்தான் நாம் சமூகம் என்கிறோம்..!!

பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கோளும் ஏதோ ஒன்றை மையமாக கொண்டு இயங்குவதைப் போலத்தான் நம்வாழ்வும் உறவுகளை ஆதாரமாக கொண்டே இயங்குகிறது..!! அவற்றின் அருமை அருகிலிருக்கையில் நமக்கு புரியாது விலகி செல்கையில்தான் நமக்கு விளங்கும்..!! இதைத்தான் ஒருக்கவிதையில் "எரியும்போது பரவிய வெளிச்சத்தைவிட அணைந்தபோது இழந்த வெளிச்சமே என்னை ஆட்கொள்கிறது" என்று ஒருவர் எழுதியிருப்பார்..!!

கடைசியாக "சொந்தம் என்பதும் பந்தம் என்பதும் வேருவிட்ட இடம்; இதை விட்டால் இங்கே பற்றிவாழ மண்ணில் வேறு எந்த இடம்..?" இதை சரியாக புரிந்துக் கொண்டால் "சின்ன சின்ன கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு.. அட சின்னசின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு"ன்னு நீங்களும் பாட ஆரம்பிச்சிடுவீங்க..!!

வாய்ப்பளித்தமைக்கு நன்றி..!!

விகடன்
27-08-2008, 01:15 PM
சுருக்கமான முறையில் இணையத்தினூடான காதலின் சாத்தியத்தையும் அசாத்தியைத்தையும் அலசிவிட்டுச் சென்றிருக்கிறீர்கள் நம்பிகோபால்.
பாராட்டுக்கள்.

விகடன்
27-08-2008, 01:36 PM
மிகவும் சுவாரச்யமாக பதிலெழுதிச் சென்றிருக்கிறீர்கள் சுகந்தன். இதற்குப் பின்னரும் மதி என்னை கேள்வி கேப்பாரா? என்று மறைமுகமாக எங்களிடம் கேற்பதுபோல இருக்கிறது உக்கள் பதில்கள்.

படிக்கையிலேயே சிரித்துக்கொண்டு படித்தேன். பக்கத்திலிருப்பவன் என்னை ஒருவாறாக பார்க்கிறான்.

பெருமழை பெய்து ஓய்ந்ததைப்போல தனிமனித பிறப்பிலிருந்த சமூகம்வரை எழுதியிருக்கிறீர்கள். ஆங்காங்கே பாவித்த சொற்பிரயோகம், பழமொழிகள் அருமை.
பாராட்டுக்கள் சுகந்தப்ரீதன்.

சுகந்தப்ரீதன்
28-08-2008, 04:54 AM
மிகவும் சுவாரச்யமாக பதிலெழுதிச் சென்றிருக்கிறீர்கள் சுகந்தன். . உங்களை விடவா நான் சுவராசியமாய் எழுதியிருக்கிறேன்..??:confused::sprachlos020:

இதற்குப் பின்னரும் மதி என்னை கேள்வி கேப்பாரா? என்று மறைமுகமாக எங்களிடம் கேற்பதுபோல இருக்கிறது உக்கள் பதில்கள். ஏன்..ஏன்..இப்படியெல்லாம் போட்டு கொடுக்கிறீங்க அப்பு..??:sauer028:

படிக்கையிலேயே சிரித்துக்கொண்டு படித்தேன். பக்கத்திலிருப்பவன் என்னை ஒருவாறாக பார்க்கிறான். இதை படிக்கிறதுக்கு முன்னாடி நீங்க அவன்கிட்ட பேசியிருப்பீங்க.. அதான் உங்களையே ஒருவாறா பார்த்துக்கிட்டு இருந்திருப்பான்..!!

பெருமழை பெய்து ஓய்ந்ததைப்போல தனிமனித பிறப்பிலிருந்த சமூகம்வரை எழுதியிருக்கிறீர்கள். ஆங்காங்கே பாவித்த சொற்பிரயோகம், பழமொழிகள் அருமை.
பாராட்டுக்கள் சுகந்தப்ரீதன்
மிக்க நன்றி அண்ணாச்சி..!!

SathyaThirunavukkarasu
28-08-2008, 04:57 AM
SathyaThirunavukarasu

கவிதை எழுதினால் தான் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும், மோட்சம் கிடைக்கும் என்று உங்களிடம் சொன்னால் நீங்கள் எதைப்பற்றி எழுதுவீர்கள்? என்ன கவிதை எழுதுவீர்கள்?

முதலில் என்னை மன்னிக்கவும், உங்களின் கேள்விக்கு உடனடியாக பதில் அளிக்காதற்கு

ஏன் எனக்கு இந்த கேள்வி,எனக்கு கவிதை எழுதவே தெரியாது நன்கு கவிதைகளை ரசிக்க மட்டுமே தெரியும் ஆனால் கவிதை எழுதவரவில்லையே என்ற வருத்தம் நம் மன்றம் வந்தபின் அடிக்கடி தோன்றுகின்றது. அதனால் எப்படியாவது மிகவும் கடினப்பட்டு எழுத முயற்சி செய்வேன்

அதில் நான் எழுத நினைப்பது நம் உறவுகளைப்பற்றியும் அதன் மகத்துவம் பற்றியும் உறவுகளின் பலம்,பலவீனம், குடும்ப உறவுகள் அதன்முக்கியத்துவம்,பற்றியும் எழுதுவேன்

காத்திருக்கின்றேன்....
நான்........
பிறக்க போகும் குழந்தைக்காக.......

............

...............
மிக்க நன்றி எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு

poornima
28-08-2008, 05:40 AM
தேடல் - கவிதை
குறிப்பு : கவிதையில் வன்முறை இருக்கலாம்.. கவிதையே வன்முறையானால்:-)
================

எழுதிய கவிதையின்
இறுதிவரிகளை
சரிபார்த்துக் கொண்டிருக்கிறான்
இறைவன்..

எங்கே துவங்கிய பயணம்
என்று எவருக்குமே
தெரியவில்லை
இறங்கும் இடத்திற்கு
மட்டும் சரியாக
வந்து சேர்ந்திருக்கிறார்கள்

மறந்துவிட்ட கரடி
பொம்மையினை
இன்னமும்
தேடிக் கொண்டிருக்கிறது
குழந்தை

செய்த பாவங்கள்
எல்லாம் சேர்ந்து
வருமோ என்னுடன்
கலக்கத்தில் சிலர்

செய்யாத பாவங்களை
செய்திருக்கலாமோ
என்ற குழப்பத்தில்
சிலர்

சேர்த்து வைத்த
வங்கிக் கணக்குகளை
செலவு செய்திருக்கலாமோ
வெள்ளைத் துண்டுகள்
வேதனைகளில்

அழியாத் அறிவியல்
சாதனைகள் படைத்த
நாமும் அழியத்தான்
போகிறோமோ
ஆதங்கத்தில்
அறிவியல் விஞ்ஞானிகள்

மொட்டை மாடியின் வடாம்
இஸ்திரிக்கு கொடுத்த புடவை
சீரியல்போது வராத மின்வெட்டு
சீட்டுக்கட்டிக் கொண்டிருக்கும் பணம்
வைரமூக்குத்தி வாங்கித் தராத கணவன்
எதிர்வீட்டுக்காரியின் புதிய கார்
கவலைகளும் சேர்ந்திருக்கின்றன
அவளுக்கான துக்கத்தில்

வருவாயிலும்
வாழ்க்கையிலும்
இன்னும் எதிலுமே
திருப்தியடையாமல்
செத்துப் போகும்
மனிதனின் தேடல்களும்
அவனுடனே முடிந்துபோகிறதே
தவிர
தேடல் முற்றுப்பெறவில்லை
தத்துவம் சொல்லும்
ஞானிக்கும் சஞ்சலம்

குரூரமாவே அறியப்படும்
யாருக்குமே பிடிக்காத
எல்லோரையும் நேசிக்கும்
சமநிலை கோட்பாட்டுடன்
ஓரமாய் நின்றபடி
புன்னகையுடன்
பார்த்துக் கொண்டிருக்கிறது
உங்கள் அனைவரையும்
ஒன்று சேர்த்த பெருமை
எனக்குத்தானே
என்றபடி மரணம்...

மதி
28-08-2008, 06:15 AM
சுகந்தண்ணே..

உங்களுக்கு இரண்டு முறை பதில் போட்டும் "Page Cannot be Displayed". ஏனோ தெரியவில்லை. அப்புறம்... நீங்க சொல்வது போல் பெங்களூரில் மதி காதலிக்க வில்லையாம். உளவுத்துறை செய்தி இது. மேலும் நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து வந்த தகவல் என்னவென்றால்... உறவுக் குழப்பங்களே இல்லை என்றும் மாமா அல்லது அத்தை பெண்ணாவது இருந்திருக்கலாம் பொழுது போகும் என்றும் ஆங்காங்கே தெரியும் மேகத்தையும் வானத்தையும் பார்த்து புலம்பிக் கொண்டிருக்கிறானாம். இதுல வெந்த புண்ல வேலை பாய்ச்சுவது போல் உங்கள் பதில். உங்களுக்கே அடுக்குமா....

உறவுகளை நல்லாவே அலசியிருக்கீங்க... :)

மதி
28-08-2008, 06:16 AM
SathyaThirunavukarasu

கவிதை எழுதினால் தான் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும், மோட்சம் கிடைக்கும் என்று உங்களிடம் சொன்னால் நீங்கள் எதைப்பற்றி எழுதுவீர்கள்? என்ன கவிதை எழுதுவீர்கள்?

முதலில் என்னை மன்னிக்கவும், உங்களின் கேள்விக்கு உடனடியாக பதில் அளிக்காதற்கு

ஏன் எனக்கு இந்த கேள்வி,எனக்கு கவிதை எழுதவே தெரியாது நன்கு கவிதைகளை ரசிக்க மட்டுமே தெரியும் ஆனால் கவிதை எழுதவரவில்லையே என்ற வருத்தம் நம் மன்றம் வந்தபின் அடிக்கடி தோன்றுகின்றது. அதனால் எப்படியாவது மிகவும் கடினப்பட்டு எழுத முயற்சி செய்வேன்

அதில் நான் எழுத நினைப்பது நம் உறவுகளைப்பற்றியும் அதன் மகத்துவம் பற்றியும் உறவுகளின் பலம்,பலவீனம், குடும்ப உறவுகள் அதன்முக்கியத்துவம்,பற்றியும் எழுதுவேன்

காத்திருக்கின்றேன்....
நான்........
பிறக்க போகும் குழந்தைக்காக.......

............

...............
மிக்க நன்றி எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு

சத்யா...
கவிதை எழுதுவது பெருங்கலையல்ல.. நான் சொல்லவில்லை. மன்றத்தின் மூத்த உறுப்பினர்கள் சொல்லுவது. மறக்காமல் மறுக்காமல் பதிலளித்தமைக்கு நன்றி..

மதி
28-08-2008, 06:17 AM
மறுபடியும் தேடலைப் பற்றிய அழகியதொரு கவிதையை கொடுத்தமைக்கு நன்றி பூர்ணிமா...

மதி
28-08-2008, 06:20 AM
இன்னும் பதிலளிக்காத மூவர்... :

ஐரேனிபுரம் பால்ராசைய்யா
தங்கவேலண்ணா...
காந்தி....

சீக்கிரம் தங்கள் பதிலுடன் வந்து ஆபத்து தொடர உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.... :)

ராஜா
28-08-2008, 06:32 AM
நல்ல கவிதை..!

மரண வாயி(லி)ல் நிற்கும் மனிதர்களின் மனவோட்டங்கள் அருமை.

முத்தாய்ப்பாக மரணத்தின் பஞ்ச் டயலாக்..!

சீரியல்போது வராத மின்வெட்டு..??????????

சுகந்தப்ரீதன்
28-08-2008, 08:37 AM
. அப்புறம்... நீங்க சொல்வது போல் பெங்களூரில் மதி காதலிக்க வில்லையாம். உளவுத்துறை செய்தி இது. ஆமாம்.. மதி காதலிப்பது திருச்சியில் மட்டும்தானாம்.. இது பெங்களூரிலிருந்து கிட்டிய உள்துறை செய்தி..!!

உறவுக் குழப்பங்களே இல்லை என்றும் மாமா அல்லது அத்தை பெண்ணாவது இருந்திருக்கலாம் பொழுது போகும் என்றும் ஆங்காங்கே தெரியும் மேகத்தையும் வானத்தையும் பார்த்து புலம்பிக் கொண்டிருக்கிறானாம். அடேய்.. மதி நீ மேல்நோக்கி மேகத்தை பாத்து புலம்பும்போது உன்னையே பொண்ணுங்க எல்லாம் நோக்கிட்டு இருக்காங்கங்கறது உனக்கு தெரியுமா...??:icon_rollout:

மதி
29-08-2008, 04:58 AM
ஆமாம்.. மதி காதலிப்பது திருச்சியில் மட்டும்தானாம்.. இது பெங்களூரிலிருந்து கிட்டிய உள்துறை செய்தி..!!
அடேய்.. மதி நீ மேல்நோக்கி மேகத்தை பாத்து புலம்பும்போது உன்னையே பொண்ணுங்க எல்லாம் நோக்கிட்டு இருக்காங்கங்கறது உனக்கு தெரியுமா...??:icon_rollout:

ஆஹா...திருச்சியிலா.... சொல்லவே இல்லை...

இது தானா சங்கதி இது தெரியாம அவன் புலம்பிக்கிட்டு இருக்கானே... அவன்கிட்ட சொல்லிடறேன் சுபி.. :)

தாமரை
29-08-2008, 05:03 AM
ஆஹா...திருச்சியிலா.... சொல்லவே இல்லை...

இது தானா சங்கதி இது தெரியாம அவன் புலம்பிக்கிட்டு இருக்கானே... அவன்கிட்ட சொல்லிடறேன் சுபி.. :)

அதெல்லாம் நமக்குத் தெரியாதுங்க. ஆனா, கோலாரில எதோ கோளாறு என்பது மட்டும் தெரியும். :D

ஐரேனிபுரம் பால்ராசய்யா
29-08-2008, 01:28 PM
கம்பியூட்டர் வந்த பிறகு டைப்ரைட்டர் புறம் தள்ளப்பட்டதுபோல் தொலைகாட்சிகள் வந்த பிறகு நாடக கலையும் புறம் தள்ளப்பட்டு விட்டன.

நடிகர்கள் என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் அது கடலில் கலக்கும் காயம் போல தொலைக்காட்சிகளில் மூழ்கிகிடக்கும் மக்களை திசை திருப்புவது சற்று கடினம் தான்.

மேடை நாடகங்கள் அதிகம் நடப்பது கோவில் திருவிழாவின் போதுதான். உள்ளூர் நடிகர்கள் வாய்ப்பு கேட்டால் தர மறுப்பார்கள். இந்த நிலை மாறி கோவில் நிர்வாகத்தினர் வாய்ப்புகள் தரவேண்டும். அதுபோல் நடிகர்களும் சிறந்த கதைகளை தெரிவு செய்து சிறப்பாக நடித்து அனைவரையும் கவர வேண்டும்.இது நடந்தால் ஒருவேளை மக்களின் பார்வை நாடகங்கள் மீது திரும்பகூடும்.

மதி
29-08-2008, 02:22 PM
அதெல்லாம் நமக்குத் தெரியாதுங்க. ஆனா, கோலாரில எதோ கோளாறு என்பது மட்டும் தெரியும். :D

கோலாரில் கோளாறா.... ???
நல்ல தலைப்பா இருக்கே...!

சரி...சரி... வேணாம்...ஏன் ராணுவ ரகசியங்கள எல்லாம் வெளிப்படையா சொல்லிக்கிட்டு... :)

மதி
29-08-2008, 02:24 PM
கம்பியூட்டர் வந்த பிறகு டைப்ரைட்டர் புறம் தள்ளப்பட்டதுபோல் தொலைகாட்சிகள் வந்த பிறகு நாடக கலையும் புறம் தள்ளப்பட்டு விட்டன.

நடிகர்கள் என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் அது கடலில் கலக்கும் காயம் போல தொலைக்காட்சிகளில் மூழ்கிகிடக்கும் மக்களை திசை திருப்புவது சற்று கடினம் தான்.

மேடை நாடகங்கள் அதிகம் நடப்பது கோவில் திருவிழாவின் போதுதான். உள்ளூர் நடிகர்கள் வாய்ப்பு கேட்டால் தர மறுப்பார்கள். இந்த நிலை மாறி கோவில் நிர்வாகத்தினர் வாய்ப்புகள் தரவேண்டும். அதுபோல் நடிகர்களும் சிறந்த கதைகளை தெரிவு செய்து சிறப்பாக நடித்து அனைவரையும் கவர வேண்டும்.இது நடந்தால் ஒருவேளை மக்களின் பார்வை நாடகங்கள் மீது திரும்பகூடும்.

பதிலளித்தமைக்கு மிக்க நன்றி பால்ராசைய்யா...
நாடக ஊடகம் இப்போது நலிவடைந்துள்ள நிலைமையில் இருந்தாலும் மக்களிடையே அதை அதிகமாக கொண்டு சேர்க்க ஜனரஞ்சகமாக என்ன மாதிரி வழிமுறைகளை நாடகக் கலைஞர்கள் கையாள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளும் நோக்கில் தான் கேட்டேன்.

அமரன்
31-08-2008, 07:40 AM
பதிலளித்த உள்ளங்களுக்கு நன்றி. விரைவில் அடுத்த கேள்வியாளருடன் வருகின்றேன்.

ராஜா
31-08-2008, 12:59 PM
'மதி'ப்புமிக்க கேள்வித்தொகுப்பு நல்கிய இளவல் மதிக்கும்,

சிறப்புமிக்க பதில்களைப் பதிவுசெய்துள்ள அனைத்து உறவுகட்கும்,

நெஞ்சார்ந்த நன்றிகள்..!!

mgandhi
01-09-2008, 10:48 AM
mgandhi

செய்தி சோலையினை எங்களுக்கு தொகுத்து வழங்கும் அன்பான மன்ற உறுப்பினர். ஒரு சின்ன கற்பனை. ஒரு நாள் உலகில் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு சாதனங்களும் செயலிழந்து விட்டால்… தொலைக்காட்சி, வானொலி, தொலைப்பேசி அனைத்தும் செயலிழந்துவிட்டால்… மக்களால் எந்த செய்தியுமே அறிந்து கொள்ள முடியாத சூழ்நிலை. அத்தகைய சூழலில் உலகம் எவ்வாறிருக்கும்? எத்தகைய குழப்பம் ஏற்படும்? என்னென்ன நன்மைகள் விழையும்?

ஒரு நாள் உலகில் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு சாதனங்களும் செயலிழந்து விட்டால்… தொலைக்காட்சி, வானொலி, தொலைப்பேசி அனைத்தும் செயலிழந்துவிட்டால்… மக்களால் எந்த செய்தியுமே அறிந்து கொள்ள முடியாத சூழ்நிலை. அத்தகைய சூழலில் உலகம் எவ்வாறிருக்கும்?

நன்றி நண்பரே !
நல்ல கற்பனை
மக்களால் எந்த செய்தியுமே அறிந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஒன்று ஏற்பட்டால் பெரும்பாலான மக்கள் மிகவும் குழப்பமாகவும்,நாட்டில் நடக்கும் நல்லது கெட்டது அறிந்து கொள்ள முடியாமல் தவித்து போவார்கள்.

உங்கள் கூற்றுப்படி பார்த்தால் மன்னர்கள் காலத்தில் மக்கள் இப்படிபட்ட சூழ்நிலையில் தான் வாழ்ந்தார்கள். அப்போதும் செய்திகளை மக்கள் அறிந்து கொள்ள முரசும்.தண்டோராவும் பயன் படுத்தப் பட்டன.

இன்று உலகமே சுறுங்கி விட்டது என்று நாம் நினைக்க காரணம் உடனுக்குடன் நடை பெறும் தகவல் பறிமாற்றத்தால் தான். குக்கிராமத்தில் இருக்கும் குப்பனும், சுப்பனும் தன்மக்களை அல்லது மனைவியை அண்டை மாநிலங்களுக்கு தைரியமாக அனுப்புவது தொலை தொடர்பை நம்பியே.

அயல் நாட்டில் இன்று நம் இந்தியர்கள் தம் தாய்நாட்டை மறந்து நிம்தியாக பணிஆற்றுகிறார்கள் என்றால் அது தொலைத் தொடர்பு சாதனைகளை நம்பித்தான்.

உலகம் அனைத்தும் செய்தி பறிமாற்றம் இல்லை என்றால், அதன் வளர்சியில் பெரிய முட்டுகட்டை ஏற்பட்டு, உலகம் நிச்சயமாக இந்த வளர்ச்சியை பெற்றிருக்காது.

எத்தகைய குழப்பம் ஏற்படும்?

செய்தி தாள்கள் இல்லை என்றால் பலசெய்திகள் செய்தியின் உண்மையான கரு உருமாறி விடும்.(சில செய்தி தாள்கள் இப்படிதான் இருக்கிறது)

''காலை காந்திபார்க்கு அருகில் உள்ள காப்பி கடையில் கருப்பாக(ஸ்டாங்காக) காப்பி சாப்பிட்டவன் காந்திபார்கில் வந்து வாந்தி எடுத்தான்.'' இது செய்தி

இந்த செய்தி ஓருவருக்கு ஒருவர் பறிமாரிக் கொண்டுகடைசியாக

'' காந்திபார்கில் ஓருவன் காக்கா,காக்காவா வாந்தி எடுத்தான்''
என்று மாலைக்குள் செய்தி மாறிவிடும்.

அனைத்து தொலைத் தொடர்பு சாதனங்களும் செயலிழந்து விட்டால்....மக்களின் கற்பனை கலந்த செய்திகள் நாட்டில் உலாவரும்.

என்னென்ன நன்மைகள் விழையும்?

டீக்கடை பெஞ்சில் டீ சாப்பிட்டு விட்டும், பெட்டிகடை வாசலில் தம் அடித்துகொண்டும், குட்டிச்சுவர் மேல் அமர்ந்தும்.அன்றையச் செய்திதாளில் வந்த அரசியல்,சினிமா,அந்த அந்த பகுதி பற்றிய செய்திகளை பற்றிய வெட்டிக்கதை பேசும் மக்கள் கூட்டம் இருக்காது.

அமரன்
01-09-2008, 01:02 PM
அண்ணா...
அடுத்த ஆ10 படையை தருவதற்கு நம்பிகோபாலன் தயாராக உள்ளார். உங்கள் அனுமதி கிடைத்தால் புயலெனப் புறப்பட்டு வரும் படைகள்.

ராஜா
01-09-2008, 04:57 PM
அப்படியா..?

வாங்க நம்பி..! வாங்க..!

பாலகன்
01-09-2008, 07:14 PM
ஆகா ஆ10 அருமை- பணி நிமித்தம் வரஇயலவில்லை,,, இனி உங்களுடன் பில்லா மீன்டும்

ஓவியன்
02-09-2008, 03:38 AM
உங்களுடன் பில்லா மீன்டும்

ஆமா, அது யாருங்க பில்லாஆ......??? :aetsch013:

நம்பிகோபாலன்
02-09-2008, 05:26 AM
தமிழ் மன்றத்திற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்.

என்னை கேள்விக்கு அழைத்த நல்ல உள்ளங்களுக்கு என் பணிவார்ந்த வணக்கங்கள்.
பஞ்ச தந்த்ரத்தில் கமல் சொல்லும் வசனம் : கேள்விகேட்பது ஈசி பதில் சொல்லி பாருங்க எவ்ளோ கஷ்டம் பார்த்த தெரியும்ன்னு. அதனை நினைவில் கொண்டு.

இதோ என் 10 கேள்விகள்.

1) நாகரா :
எந்த ஒரு விளக்கத்திற்க்கும் இறைவனோடு ஒப்பிட்டு பார்க்கும் தங்களின் கருத்துக்கள் எப்பொழுது ஆரம்பித்தீர்கள்.
நாத்திகம் பேசுவோரை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்.

2) சிவா.ஜி :
பெண்ண்களை பற்றி தஙளின் உயர்வான கருத்துக்கள் என்னை எப்பொழுதும் ரசிக்க செய்யும். இன்றைய சூழ்நிலையில் விட்டு கொடுத்தல் கணவன் மனைவி இடையே காணாமல் போவதை பற்றி உங்களின் கருத்து.

3) சாலை ஜெயராமன் :
உஙளின் அனுபவத்தை எழுத்தில் ரசிப்பவன் நான்.உதாரணம் : தஙளின் சகோதரி பற்றி நீங்கள் எழுதியவை.
நீங்கள் வாழ்ந்த காலகட்டதிற்க்கும் , இப்பொழுது இளைய தலைமுறையினர் வாழும் வாழ்கைக்கும் வேறுபாடுகள் மிக அதிகம்.
அவ்வாறு பார்க்கும் பொழுது உங்களின் பார்வய் எப்படி இருக்கும். உதாரணம் கண்டிப்பாக தேவை.
4) ஆதி :
தங்களின் எழுத்துக்களை எப்பொழுதும் ரசிக்கும் ரசிகானாய் ஒரு கேள்வி, அன்றைய நாட்களில் தமிழை எழுதியவர்களும் ,விரும்புவர்களும் அதிகமாய் இருந்தற்க்கும் இன்றைய காலகட்டதிற்க்கு குறைவானதற்க்கு காறனாமய் தாங்கள் நினைக்கும் கருத்து. இதனய் எப்படி மாற்றலாம்.

5) ராஜா :
உஙளின் நகைச்சுவை பற்றி எழுத்துகளில் பார்த்திறுக்கும் ஒருவானய் உஙளிடம் ஒரு கேள்வி, கோபமாக தாங்கள் எப்பொழுதுதாவது இருந்ததுண்டா.ஏன்?மற்றவர்வர்கல் கொபம் படும்பொழுது உஙளின் பார்வய் அவர்கள் மீது எப்படி இருக்கும்.
என்னை போல அதிகம் கோபம் படுபவர்களுக்கு தாங்கள் கூறும் நகைசுவையான பதில் என்ன?

6) பூமகள் :
பெண்ணினம் பேசும் உங்களின் கருத்துகள் மிக அதிகமாய் நான் படித்திருக்கிறேன்.
பெண்களின் உரிமை என்று நீங்கல் நினனைப்பது என்ன? ஏன்?

7) யவனிகா :
உஙளின் சாவிகொத்து கவிதையினை கவிசமரில் பார்த்து வியந்தவனில் நானும் ஒருவன்.
எப்படி உங்களால் எல்லா விஷயத்தையும் ரசித்து எழுத முடிகிறது. உடனே கவிதை எழுதி அதன்ய் ரசிக்கும் படியாக மாற்றும் எண்ணங்கள் எப்படி வந்தது.
கவிதையுடன் ஒரு பதில் ப்ளீஸ்
.8) கண்மணி :
என்னையும் உற்சாகமய் எழுதும் ஆர்வத்தை தூண்டியவர்களில் நீங்களும் ஒருவர் என்ற ஆர்வத்தில் ஒரு கேள்வி
உஙளிடம் விவாதம் பண்ணும் பொழுது எதிர்சாராரை எப்படி அனுகுவீர்கள்?
அப்படி உங்கள் வாழ்வில் நீங்கள் வெற்றி பெற்றதும் தோல்வி அடைந்ததும் எதேனும் உள்ளதா?
9) கவிதா:
நான் மன்றத்தில் படித்தவரை உங்களின் எழுத்துகளுக்கு உணர்ச்சிகள் அதிகம். உங்களின் தமிழ் எழுத்துகளுக்கு முன் மாதிரி யார்?
உங்களின் கருத்துகள் மற்றவர்களிடம் வித்தியாசம் படும் பொழுது எப்படி உணர்வீர்கள்.
10) மலர்:
ஆணாதிக்க சமுதாயத்தை நீங்கள் பார்க்கும் பார்வை? தீர்வு என்று நீங்கள் நினைக்கும் விஷயம் என்ன?

ராஜா
02-09-2008, 07:08 AM
5) ராஜா :
உங்களின் நகைச்சுவை பற்றி எழுத்துகளில் பார்த்திருக்கும் ஒருவனாய் உங்களிடம் ஒரு கேள்வி,

கோபமாக தாங்கள் எப்பொழுதுதாவது இருந்ததுண்டா.ஏன்?

நிறைய முறை கோபப்பட்டிருக்கிறேன்.

நம் உழைப்பைப் புரிந்துகொள்ளாமல் போகிறபோக்கில் குறை சொல்பவர்கள் மீது...

நம்மை குறைவாக மதிப்பிடுபவர்கள் மீது..

உள்ளத்தை கணக்கில் எடுக்காமல், உருவத்தையும் தோற்றத்தையும் மட்டும் வைத்து, மதிக்கவோ, ஒதுக்கவோ செய்வோர் மீது...

இனத்தாலும், நிறத்தாலும் நான் உயர்ந்தவன் என்ன்னும் நினைவைக் கொண்டோர் மீது..

தம்மைவிட வலிமை குறைந்தோரின் மேல் அடக்குமுறையையும், அதிகாரத்தையும் பிரயோகிக்கும் ஆணவக்காரர்கள் மீது..

இன்னும்... திறமைக்கும், நியாயத்துக்கும் மீறிய பொருளையும் புகழையும் ஈட்டுவோர் மீது.. அவர்களைத் தெய்வமாக ஆராதிப்போர் மீது..

இப்படி ஏராளமானோர்மீது கோபப்பட்டிருக்கிறேன்.. படுகிறேன்.. படுவேன்..

ஆனால் கோபத்தின் வெளிப்பாடாக வன்முறையை பயன்படுத்தியதே இல்லை.

அவரவர் தவறுக்கேற்ப, தகுதிக்கேற்ப..

சுட்டிக்காட்டி உணரச் செய்வதுண்டு..

மெல்ல ஒதுக்கி மேற்செல்வதுண்டு...

பொறுத்திருந்து பாடம் கற்பிப்பதும் உண்டு..

உரிய இடத்தில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கச் செய்வதுண்டு..

அவர் மருந்தையே தக்க தருணம் பார்த்து அவருக்கு புகட்டுவதுண்டு..

சில சமயங்களில்..

உன்னைத் திருத்துவது என் கடமையல்ல.. உன்னை விட வில்லங்கமான ஆளிடம் இதே வேலையைக் காட்டி, நீ மரண அடி வாங்குவதற்காக, தற்சமயம் ஒன்றுமே சொல்லாமல் உன்னை மறைமுகமாக ஊக்குவிக்கிறேன் என்ற ரீதியில் வாளாவிருப்பதும் உண்டு.

ராஜா
02-09-2008, 07:40 AM
5) ராஜா :

மற்றவர்கள் கோபப்படும்பொழுது உங்க*ளின் பார்வை அவர்கள் மீது எப்படி இருக்கும்.?

யார் மீது தவறு.. யார் பக்கத்தில் நியாயம் என்ற அளவில் அடுத்தவர்களின் கோபத்தை அணுகுவதுண்டு..

என்மீது மற்றவர் கோபப்பட்டால்.. அவர்கள் கோபம் நியாயமென்றால் எவ்வளவு சிறியவர் என்றாலும் மன்னிப்பு கேட்பேன். அப்படியின்றி நியாயமற்று என் மேல் கோபம் கொள்வார்களேயாயின் என் நிலையை விளக்க முயற்சிப்பேன். ஏற்றுக்கொள்ளவில்லையெனில் கவலைப்பட மாட்டேன். அவர் எத்தகையவராக இருந்தாலும் சரியே..!

தங்கள் கேள்வி வேறு இருவர் கோபத்தைப்பற்றியும் பார்வையாளனாக நான் இருந்தால் என்ன செய்வீர்கள்..? என்று தொனிக்குமானால் அதை ஒட்டி சமீபத்தில் ஒரு நிகழ்வு..

உணவகத்தில், வாடிக்கையாளருக்கும் வழங்குநருக்கும் சிறு தகராறு முற்றி அடிதடி என்ற நிலைக்குப் போய்விட்டது.அடுத்த மேசையில் உணவருந்திக்கொண்டிருந்த நான் காட்சிக்குள் புகுந்தேன்.

வாடிக்கையாளரை தனியே இட்டுச் சென்று,

" நண்பரே.. நீங்கள் உண்ணும் உணவுக்கு காசு கொடுக்கிறேன் என்ற அதிகாரத்தில் சற்று அதிகமாகப் பேசிவிட்டீர்கள். நீங்கள் கொடுக்கும் காசு போய்ச்சேர்வது முதலாளிக்கு.. அவரால் எல்லோருக்கும் சேவை அளிக்க இயலாதென்பதால் வழங்குநர்களை வைத்திருக்கிறார்.. அவர் நாம் வைத்த ஆள் அல்ல.. ஒருநாளைக்கு வழங்குநர் நடக்கும் தூரம் எவ்வளவு தெரியுமா..? சமையலறை ஈரத்தில் நடந்து நடந்து எத்தனை பேருக்கு காலில் ஆணி விழுந்து கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா..?

ஆறு மேசைக்கு அவர் ஒரே ஆள்.. ஒவ்வொன்றிலும் 4 பேர்.. ஒவ்வொருவர் விருப்பமும் ஒவ்வொன்று.. அனைத்தையும் நினைவில் வைத்து குழப்பமின்றி வழங்க வேண்டும். கணக்கிடும்போது எதையும் மறந்துவிட்டால் முதலாளி கோபப்படுவார்.. அதிகமாக போட்டுவிட்டதால் நீங்கள் கோபமுறுகிறீர்கள். மாதம் முழுதும், நாள்தோறும் வழங்குநர் படும் அல்லல்களினூடே இவ்வாறு சிறு சிறு தவறுகள் நிகழவே செய்யும்.. பெரிது படுத்தாதீர்கள்.. "

என்று உரையாற்றினேன்.. அவர் நல்லவர்.. ஏற்றுக்கொண்டார்.

வழங்குநரிடமும், உங்கள் ஒவ்வொரு செய்கையும், உணவகத்துக்கு நல்ல பெயரையோ, அல்லது கெட்ட பெயரையோ ஈட்டித்தரும் .. இங்கு உங்களின் பணியின் மேன்மை பிற்காலத்தில் உங்களுக்கு நல்ல வளர்ச்சியைத் தரும்.. என்று உணர்த்தினேன்..!

பின்னர் இருவரும் சமரசமாயினர்.. வழக்கம்போல ஒரு பழைய துணுக்கை அவர்களுக்கு பரிசளித்தேன்..

" வியட்நாமை அமெரிக்காஆக்கிரமித்தபோது, அமெரிக்க வீரர்கள் ஒரு குறிப்பிட்ட உணவகத்துக்கு போய் தேநீர் அருந்துவர். அங்கு ஒரு நலிந்த வியட்நாமியச் சிறுவன் பணி புரிந்தான். அவனை ஓங்கி ஒரு அறை கொடுத்து, "போய் தேநீர் கொண்டுவா.." என்று சொல்லும் வழக்கம் ஒரு அமெரிக்க சிப்பாய்க்கு இருந்தது. ஒருநாள் படை முகாமுக்கு வந்த பாதிரியாரின் நன்னெறி உரையால் மனம் திருந்திய அவ்வீரன், சிறுவனிடம் சொன்னான்..

"தம்பி.. இனி உன்னை நான் அறைய மாட்டேன்.. அன்பாக நடந்துகொள்வேன்.. !"

சிறுவன் சொன்னான்..

"அப்படியென்றால், கழுநீரில் உங்களுக்கு மட்டும் தேநீர் தயாரிக்கும் வேலை எனக்கு இனி இருக்காது..!"

ராஜா
02-09-2008, 07:45 AM
5) ராஜா :

என்னை போல அதிகம் கோபம் படுபவர்களுக்கு தாங்கள் கூறும் நகைச்சுவையான பதில் என்ன?

நியாயமான காரணங்களுக்காக* கோபப்படலாம்..! தவறில்லை.

ரௌத்திரம் பழகுங்கள்.. !

கோபத்தைக் காட்ட உலகிலேயே மனிதன் என்ற உயிரினத்துக்குதான் பல்வேறு வழிகள் உள்ளன. எல்லாவற்றையும் முயன்று பாருங்கள்.. வாழ்த்துகள்..!

நம்பிகோபாலன்
02-09-2008, 08:42 AM
அருமையான பதில்.இது எனக்கு கிடைத்த அருமையான பதிவு என்றே சொல்லலாம்.ராஜா அவர்களுக்கு மிக்க நன்றி..

அமரன்
02-09-2008, 08:48 AM
அருமையான கேள்விகள். ஆழத்துக்குப் போய் அறிவார்த்தமான பதில்களை எடுத்து வரும் கேள்விகள். பாராட்டும் நன்றியும் நம்பி. கேள்விக்கு ஈடாக கோபக்கனல் பற்றிய அண்ணனின் பதில். அசந்தேன். சில சமயங்களில் கோபமும் கொடைக்கானல் ஆகும். அடுத்த பதில்களுக்காக காத்திருக்கின்றேன்.

கண்மணி
02-09-2008, 09:55 AM
8) உங்களிடம் விவாதம் பண்ணும் பொழுது எதிர்சாராரை எப்படி அணுகுவீர்கள்?

அப்படி உங்கள் வாழ்வில் நீங்கள் வெற்றி பெற்றதும் தோல்வி அடைந்ததும் எதேனும் உள்ளதா?
[/COLOR]

எதிர்சாராரா? என்ன நம்பி, அரசியல் கட்சியா நடத்துகிறோம், எதிரியலார் என்று பார்ப்பதற்கு? ஒரு விவாதம்னா நம்ம கருத்து.. மாற்று கருத்து என்றுதான் இருக்கே தவிர எதிராளிகள் என்று யாரும் கிடையாது.

வாதத்தில் எனக்கு எதிராக வாதாடுகிறார்கள் என்று நான் பார்ப்பதில்லை. ஒரு கருத்தைப் பற்றிய நம்முடைய கருத்தைச் சொல்கிறோம். அடுத்தவர் அதற்கு மாற்றான கருத்துகளை வைக்கிறார்கள்.

அவர்களின் கருத்தை பரிசீலனையே செய்து பார்க்காமல் அடுத்தக் கருத்தை வைப்பதை நான் கொஞ்சம் தூரத்திலியே வைத்திருக்கிறேன்.

பலசமயம் நாம பாக்கிற கோணம் பலருக்கு குதர்க்கமா படுது, அப்படி ஒரு கோணம் இருக்குதுங்கறதையே மறுப்பாங்க. அதற்காக அவர்களின் கோணத்திலும் நாம பார்க்காம இருக்க முடியாது.

பாரதியோ, திருவள்ளுவரோ என் காலத்தில இருந்தாலும் மனசுக்குப் பட்டதைச் டக்குன்னு சொல்லுவேன்.. அவர்கிட்ட எப்படிச் சொல்றது அப்படின்னு மென்னு முழுங்க மாட்டேன்..

அவர் மனம் கோணக் கூடாது என்கிற அணுகுமுறை சாதாரண மக்களுக்குச் சரிதான். ஆனால் ஒரு பொது மேடையில் அப்படிப்பட்ட பலகீனம் உள்ளவர்கள் காயப்பட்டுக் கொண்டேதான் இருப்பாங்க. நாம என்னதான் மென்மையாச் சொன்னாலும் அதெப்படிச் சொல்லப் போச்சுன்னு தான் கேட்பாங்க. நான் கடைபிடிப்பது உரலிலே தலையை விட்ட பிறகு உலக்கைக்கு பயந்தா முடியுமா? . பல சமயங்களில் நான் எழுதுவது குறிப்பிட்ட ஒன்றிரண்டு பேருக்கு குத்தலா பட்டிருக்கும். ஆனால் விளக்கம் கேட்டவர்கள் எல்லாம் சந்தோஷமாத்தான் இருக்காங்க. சுருண்டு படுத்த தொட்டாற்சிணுங்கிகளை ஒண்ணுமே செய்யமுடியாது..

சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரைச் சொத்து அதை மாற்ற யாராலும் முடியாது..

கருத்தைப் பற்றியே வாதம் இருக்கும் பட்சத்தில தனிமனிதத் தாக்குதலா சிலர் எடுத்துக்கறது உண்டு. தனிமனிதத் தாக்குதலை கருத்துவிவாதங்களில் கொண்டு வருவதும் உண்டு..

பல பெரிய பண்டிதர்கள் எதிராளி சுண்டைக்காய் என்று எண்ணமிட்டு அகந்தையாய் இருந்து எதைச் சொல்லியும் ஜெயித்துவிடலாம் என்று இருப்பதுண்டு. அதே மாதிரி எதிராளி பெரிய ஆள் நாம ஜாக்கிரதையாய் இருக்கணும் அப்படின்னு பதுங்கிப் பதுங்கி வாதாடறவங்களும் உண்டு..

ஆனா இந்த ஆளுங்களையும் வாதத்தையும் பிரிக்கணுங்க.. யார் சொன்னாங்க அப்படீங்கறது முக்கியமில்லை. என்ன சொன்னாங்க என்பதுதான் முக்கியம்.

என்னைப் பொருத்தவரை எதிராளியை நானாகவே பார்த்துக்கறேன். இன்னொரு கண்மணி.. இதில ஒரு வசதி என்னன்னா அடுத்து நீங்க என்ன சொல்லப் போறீங்க என்பதை ஏறத்தாழ யோசிச்சு வச்சிக்கலாம். என்னோட நானே வாதாடும் போது அடுத்தவங்களை இகழ்வது.. கண்மூடித்தனமா பேசறது இப்படி பல விஷயங்கள் காணாமப் போயிடும். கருத்து மட்டுமே மனசில ஓடும்.

அதனால பல சமயம் நான் சொல்றதில என்ன தப்பு இருக்கு. எது சரின்னு நானே எடுத்துச் சொல்லவும் முடியும்.

மன்றத்தில நான் அதிகம் விவாதிக்கிறது இல்லை. விவாதிக்க நேரமும் என்னிடம் குறைவு.. நான் விவாதத்தில் மன்றத்தில் இதுவரை ஜெயிக்கலை.. காரணம் என் கோணத்தை காட்டி ஒரு ஸ்ட்ராங்கான பாயிண்டைப் போட்டா அதுக்கு பின்னால விவாதம் நின்னு போயிருது, மன்றத்தில் பல விவாதங்கள் அந்திரத்தில தொங்குதே தவிர யாரும் தங்களோட இருப்பைக் கருத்தை விட்டுத் தர்ர மாதிரி இல்லை. அதனால விவாதங்கள் சும்மா ஒரு மேடைப்பேச்சு மாதிரி பலனில்லாம தான் இருக்கு. உன் கருத்து உனக்கு என் கருத்து எனக்கு என்னும் பொழுது விவாதிச்சு என்ன பிரயோசனம்?

இருந்தாலும் சில திரிகளில் விவாதங்கள் ஆரம்பிச்சிருது. இப்படியாகப்பட்ட நேரத்தில விவாதங்கள்ல நான் தோற்றுதான் போகிறேன்.. ஆனால் அது கருத்துக்களால் இல்லை என்பது எனக்கு நல்லாவே தெரியும்.. ஏன்னா என் கருத்துக்கள் எங்கோ மூலையில கிடக்க, அதுவேறுவகையான விவாதமா மாறி இருக்கும்.( நிழல் படக் கவிதையில் பாட்டில் - போத்தல் என ஆரம்பிச்சப்ப நடந்தது)

முழுமையா நடந்த ஒரு விவாதம் உங்க கவிதையில நடந்தது ஆதியோட.. கவனிச்சிருப்பீங்க.. உங்க கவிதையை ஒரு 100 முறையாவது படிச்சு ஒவ்வொரு வார்த்தையையும் அணு அணுவாகப் பார்த்துப் பெரிய கதையே சொல்லி இருப்பேன். சின்ன விஷயம்தான் எவ்வளவு விஷயங்கள் பின்னாடி..எவ்வளவு சிந்தனைகள்.. அந்த அளவிற்கு ஆழமாப் போய் மனம் கோணாம, எதையும் பர்சனலா எடுத்துக்காம கருத்தை கருத்தா மட்டுமே பார்க்கிற விவாதங்கள் இல்லை..

இதைச் சரி செய்ய ஒரு வழி இருக்கு.. விவாதத்திற்கு ஒரு நடத்துனர் இருக்கணும். அவர் விவாதத்தோட ட்ரெண்டை சுருக்கி, ஒரு 10 பதிவுகளுக்கு ஒரு முறை இந்தப் பக்கம் என்ன பிளஸ், அந்தப் பக்கம் என்ன பிள்ஸ், இந்தப் பக்கம் என்ன மைனஸ் அந்தப் பக்கம் என்ன மைனஸ்,, விவாதத் தராசு எப்படி இருக்குண்ணு சொல்லணும். ஆனால் அவர் விவாதம் செய்யக் கூடாது. அதை விவாதிக்கிறவர்கள் ஒத்துக்கணும்.. இல்லைன்னா விவாதம் செய்து பிரயோசனமே இல்லை...

என் வாழ்வில் வெற்றிபெற்றது அப்படின்னா பல பார்வையாளர்களோட மனசை..:icon_b:

தோற்றது என்று நான் எதையுமே நினைக்கிறதில்லை, ஏன்னா என் பார்வைப்படி நான் என்னோடதானே விவாதிக்கிறேன். அப்ப நான் தோத்தா நான் தானே ஜெயித்தேன். :confused::lachen001:

நம்பிகோபாலன்
02-09-2008, 10:17 AM
கண்மணி அக்காவின் பதில் மிக அருமை.
எதிராளிகளை பற்றிய எண்ணங்களும், தன்னை போல எதிராளிகளை நினைப்பதும், கண்மணி அக்கா எங்கேயோ போயிடீங்க....இவ்ளோ நாள் உங்களின் ரசிகன் ...இனி நான் உங்களின் தீவிர ரசிகன்.....

நாகரா
02-09-2008, 12:28 PM
1) நாகரா :
எந்த ஒரு விளக்கத்திற்க்கும் இறைவனோடு ஒப்பிட்டு பார்க்கும் தங்களின் கருத்துக்கள் எப்பொழுது ஆரம்பித்தீர்கள்.

இது சமீப காலமாக எனக்கு வாய்த்திருக்கும் திறமை, தமிழ் மன்றத்தில் சேர்ந்த பின். இதற்கு முன் என் ஆன்மீக வெளிப்பாடுகள் பெருமபாலும் ஆங்கிலத்திலேயே இருந்து வந்தன. இறைவன் என்றால் எங்கும் இறைந்திருப்பவன் நிறைந்திருப்பவன் தானே, ஒவ்வொன்றும் இறைவனின் உன்னத வடிவமே, அது எவ்வளவு திரிந்ததாக மனத்துக்குத் தோன்றினாலும், தூய நோக்கு(Immaculate Concept) வாய்த்தால், மனத்தின் தோற்றப் பிழை நீங்கி, அதில் இருக்கும் இறைமை வெளிப்படும்! Put everything and everyone back into its Source, the Godhead, ஒவ்வொன்றையும் அதன் ஆதியாம் கடவுளில் திருப்பி வை, திரிபு நீங்கி அது இறைத் தெளிவில் நிலைபெறும், அதிசயங்கள் நிகழும்!

இளசு
02-09-2008, 12:39 PM
ஊடகங்களின் தாக்கம் சொன்ன காந்தி அவர்களுக்கும்
ரவுத்திரம் பழகும் பக்குவம் சொன்ன ராஜா அவர்களுக்கும்
வாதம்/விவாதம்/பிடிவாதம் விளக்கிய கண்மணி அவர்களுக்கும்
ஏகம் காணும் யோகம் சொன்ன நாகரா அவர்களுக்கும்
பாராட்டுகள்.

மதிக்கும் நம்பிக்கும் வாழ்த்துகள்!

நாகரா
02-09-2008, 03:02 PM
1) நாகரா :
நாத்திகம் பேசுவோரை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்.

சுமார் இருபது வருடங்கள் கிண்டி பொறியியல் கல்லூரியில் படிக்கத் தொடங்கிய காலம் முதல் நாத்திகனாகவே நான் இருந்திருக்கிறேன், கம்யூனிசம் மற்றும் பெரியாரியத்தால் பெரிதும் ஈர்க்கப் பட்டிருக்கிறேன், அதற்கு முன் பள்ளிப் பருவத்தில் ஆத்திகனாய் இருந்தேன். தற்போது நாத்திகம் ஆத்திகம் கடந்த நான்மீகத்தில் நடை பயின்று வருகிறேன். நான்மீகம் என்று நான் உருவாகியிருக்குஞ் சொற்றொடர் எல்லாவற்றையும் நிபந்தனைகளேதுமின்றி அன்போடு அரவணைக்கும் மெய்யான ஆன்மீகத்தைக் குறிக்கிறது.

நாத்திகம் பேசும் நல்லோரையும், ஆத்திகம் பேசும் ஆன்மீகரையும், நான் எவ்வித பேத பாவமுமின்றி நேசிக்கிறேன்.

நாத்திகம் - கடவுள் இல்லை, இல்லவே இல்லை - உண்மையே, பரம்பொருள் வெட்டவெளியாய் சூன்யமாய் ஏதொன்றாகவும் இல்லாத யாவுங் கடந்த நிலை.
(Transcendent Father)

ஆத்திகம் - இறைவன் உண்டு, நிச்சயமாய் உண்டு - உண்மையே, பரம்பொருள் எங்கும் எதிலும் எப்போதும் நீக்கமற இறைந்திருக்கும் இறைமை(இறை மெய்)
(Immanent Mother)

நாத்திகம் தந்தைக் கடவுளின் அருவ நிலையையும், ஆத்திகம் இறைத் தாய்மையின் உருவ நிலையையுங் குறிக்கின்றன. அருவ உருவ ஒருமையாம் சற்குரு நிலையே நாம் ஒவ்வொருவரும் என்று மெய்யுணர்வு நமக்கு வாய்க்கும் போது நாத்திக ஆத்திகச் சண்டைகள் தொலையும்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற உயர்ந்த கண்ணோட்டத்தைத் தயவோடு செயல்படுத்தும் நாத்திகர்கள் மெய்யான ஆத்திகர்கள்.

ஏழை பசித்திருக்க அப்பசி நீக்க உணவு கொடுக்கும் தயவற்று, கற்சிலைகளுக்கு பாலுந்தேனுங் கொட்டிப் பக்திப் பரவசமடையும் ஆத்திகர்கள் மெய்யான நாத்திகர்கள்.

ஆத்திகரையும் நாத்திகரையும் இணைக்கும் தாரக மந்திரம் அன்பே சிவம்! கமல் அவர்களின் திரைக்காவியம் பார்த்தால் உண்மை தெற்றென விளங்கும்.

கேள்விகளுக்கு நன்றி நம்பி கோபாலன்

ராஜா
02-09-2008, 03:31 PM
பொன்னெழுத்தில் பொறிக்கவேண்டிய வரிகள்..!

ஆன்மீகச் சித்தருக்கான கேள்வி என்ற அளவில், நான் மிகவும் ஆவலோடு உங்கள் பதிலை எதிர்நோக்கியிருந்தேன்.

நாத்தீகம் , ஆத்திகம் இரண்டுக்குமே ஒருசார்பற்ற ஒப்பீட்டையும் விளக்கத்தையும் வழங்கியுள்ளீர்கள். அருமை..!

நல்ல கேள்விக்காக நம்பிக்கும் நன்றி..!

நாகரா
03-09-2008, 04:08 AM
1) நாகரா :
எந்த ஒரு விளக்கத்திற்க்கும் இறைவனோடு ஒப்பிட்டு பார்க்கும் தங்களின் கருத்துக்கள் எப்பொழுது ஆரம்பித்தீர்கள்.

உம் கேள்வியின் தடித்த வரிகள், நாம் இறைவனைப் போன்றே அவரது சாயலில் படைக்கப் பட்டிருக்கும் உண்மை சொல்லும் வேதாகம வரிகளை எனக்கு நினைவூட்டுகின்றன. இவ்வுண்மையை மறந்து, இறைவனை நம்மைப் போல் நமது சாயலில் படைக்கும் அவ காரியத்தை நாம் ஏன் செய்கிறோம்!?

ராஜா
03-09-2008, 10:50 AM
மற்றோரும் விரைந்து பதிலளிக்க வேண்டுகிறோம்..!

சிவா.ஜி
03-09-2008, 06:21 PM
2) சிவா.ஜி : இன்றைய சூழ்நிலையில் விட்டு கொடுத்தல் கணவன் மனைவி இடையே காணாமல் போவதை பற்றி உங்களின் கருத்து.

விட்டுக்கொடுத்தல், விட்டுப்போவதற்கான காரணங்களில் முதலாவதாக இருப்பது, புரிந்துணர்வு இல்லாதிருப்பதுதான்.முன்பெல்லாம், கணவருக்காக மனைவியும், மனைவிக்காக கணவரும் விட்டுக்கொடுப்பதை ஒரு இயல்பான செய்கையாய்த்தான் இருவருமே செய்து வந்தார்கள். ஆனால் இப்போது ஏன் விட்டுக்கொடுக்க வேண்டுமென்ற கேள்வி இருவருக்கும் எழுகிறது. தான், தன்னுடைய சுயம் என்ற உணர்வு மிகப்பெரும் பங்கு வகிக்கிறது.உனக்குப் பிடித்ததை நீ செய், எனக்குப் பிடித்ததை நான் செய்கிறேன். அப்படி செய்யும் செயல்கள் இருவரையுமே பாதிக்காத வரையில் எந்த பிரச்சனையுமில்லை, என இருவருமே ஏதோ ஒரு அர்த்தமற்ற அறிவுஜீவித்தனத்துடன் சிறிய இடைவெளியில் இயங்குவதால்தான்.

கணவனின் சில கொள்கைகள், அதாவது அவனுக்கு இரவல் வாங்குவதோ, கொடுப்பதோ பிடிக்காது என்பதைப் போன்ற கொள்கைகளை மனைவியின் உதவும் குணத்துக்காக விட்டுக்கொடுக்கலாம். “பாவங்க...ஃபங்ஷனுக்கு கட்டிக்க அவகிட்ட பளிச்சுன்னு ஒரு புடவையில்லன்னு வருத்தப்பட்டா...அதான் என்னோட ஒரு புடவையை இரவலா கொடுத்தேன்..” என்ற மனைவியின் இரக்க குணம், கணவனின் கொள்கைக்கு விரோதமானது. ஆனாலும் இங்கு கணவன் விட்டுக்கொடுக்கலாம். அதேப்போல, ”என்னடி முன்னையெல்லாம் யாராவது பெர்ஃப்யூம் போட்டுக்கிட்டு பக்கத்துல வந்தாலே தலையை வலிக்குதுன்னு கத்துவே...இப்ப உங்க வீட்டுக்காரர் போட்டுக்கற பாடி ஸ்பிரேயை எப்படி சகிச்சுக்கற..” என்ற தோழியின் கேள்விக்கு, ‘அவருக்கு வியர்வை நாற்றம் கொஞ்சம் அதிகம், ஆபீஸில் மற்றவரோடு பழகும்போது அது அவருக்கு சங்கடமாக இருப்பதால், ஸ்பிரே உபயோகிக்கிறார். அதனால நானும் இப்ப அதுக்குப் பழகிட்டேன்” என்பது மனைவியின் பதிலாக இருந்தால், இங்கு அது மனைவியின் விட்டுக்கொடுப்பு. இந்த இரண்டு நிகழ்வுகளிலும், விட்டுக்கொடுத்தலுக்கு முக்கியப் பங்கு வகிப்பது புரிந்துணர்வுதான்.
ஆனால், துரதிர்ஷ்ட வசமாக இன்றைய இளம் தம்பதியினர் பலரிடம் இப்படிப்பட்ட புரிந்துணர்வு குறைவாகத்தானிருக்கிறது. அதற்குக்காரணம், யாரும் யாரையும் சார்ந்து இருக்கத் தேவையில்லையென்று இருவருமே நினைப்பதுதான். ஈகோ, சுயத்தின் மீதான அதீத ஈடுபாடு, மெல்லிய உணர்வுகளைத் தாண்டிய வணிகமுறை கணக்குக் கூட்டல்கள்..இதைப்போன்றவைதான் விட்டுக்கொடுத்தல் எனும் அதி அற்புத குணத்தைக் காணாமல் போக்கும் காரணிகள்.

நம்பியின் கேள்விக்கு, எனக்குத் தெரிந்த சில காரணங்களாக இவற்றை என் கருத்தாக மட்டுமே சொல்லியிருக்கிறேன். தன் கேள்விகளில் என்னையும் இணைத்துக்கொண்ட நம்பி கோபாலனுக்கு மிக்க நன்றிகள்.

ராஜா
04-09-2008, 03:59 AM
கணவன் மனைவியின் இனிய இல்லறத்துக்கு அடிப்படை அம்சம் புரிந்துணர்வு என்று தெள்ளத்தெளிவாக உணர்த்தியிருக்கும் சிவாவுக்கு ஒரு சபாஷ்..!

எங்களிடம் ஆசி வாங்கவரும் இளம் தம்பதிகளுக்கு நாங்கள் சொல்லும் வாசகம் இதுவேதான்..

"ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கங்க.. நீங்க ரெண்டு பேரும் ஒத்துமையா இருந்தா உலகமே எதிர்த்து நின்னாலும் சமாளிக்கலாம்.. உங்ககிட்ட ஒத்துமை இல்லேன்னா உலகமே சப்போர்ட்டுக்கு இருந்தாலும் வாழ்க்கை தோல்விதான்.. அந்த ஒற்றுமைக்கு அடிப்படை புரிந்துணர்வே..!"

நம்பிகோபாலன்
04-09-2008, 06:59 AM
நாகரா மற்றும் சிவா அண்ணாவின் பதில் மிக அருமை.மற்றவர்களின் பதிலையும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

சாலைஜெயராமன்
04-09-2008, 03:13 PM
3) சாலை ஜெயராமன் :
உஙளின் அனுபவத்தை எழுத்தில் ரசிப்பவன் நான்.உதாரணம் : தங்களின் சகோதரி பற்றி நீங்கள் எழுதியவை.
நீங்கள் வாழ்ந்த காலகட்டதிற்கும் , இப்பொழுது இளைய தலைமுறையினர் வாழும் வாழ்கைக்கும் வேறுபாடுகள் மிக அதிகம்.
அவ்வாறு பார்க்கும் பொழுது உங்களின் பார்வை எப்படி இருக்கும். உதாரணம் கண்டிப்பாக தேவை.
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
ஆ பத்து பகுதியில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிக்க நன்றி திரு நம்பி கோபாலன்,

எங்கள் காலம் வறுமையில் இனிமை, அன்பு, சகோரத்துவம்

தற்காலம் வளமையில் வெறுமை, அன்பற்ற சுயநல வளர்ச்சி, வெறுமையால் ஏற்பட்ட தனிமை, முதலாளித்துவம் கற்றுக்கொடுத்த பொருளாதாயச் சிந்தனைதான் இந்த வெறுமைக்கு மிக முக்கிய காரணம். இதன் பாதிப்பை அறியாமலே இதை உகந்து நிற்கிறது இன்றைய இளைய தலைமுறை. அது தான் முக்கியமான வேறுபாடாக நான் கருதுகிறேன்.

ஏனென்றால் 1900 களில் இருந்த அதாவது என் வயதொத்த மக்களின் பெற்றோர்களின் காலம் மிகப் பத்தாம் பசலித்தனமான மிக மிக மூட நம்பிக்கைகளின் தாக்கத்தால் சமுதாயம் மிக மிக வன்மமான பாதையில் இருந்தது.

சுதந்தரத்திற்குப் பிறகு பிறந்த அதாவது 1950 ல் இருந்து மிக அழகான விழிப்புணர்வுப் பாதையில் அன்றைய இளைய சமுதாயத்திற்கு நல்ல பல சிந்தனையாளர்கள் கிடைத்தனர். குறிப்பாக திரு ஜெயகாந்தன், கண்ணதாசன், அறிவியல் துறையில் திரு சுஜாதா, எழுத்தாளர்கள் வரிசையில் பல முன்னோடிகள் அன்றைய இளைய தலைமுறைக்கு நல்ல அறிவு சால் பங்களிப்பை நல்கினர்.

தன்னிறைவு என்ற தாக்கம் சுத்தமாக இழந்த சமுதாயம் இன்று அதிகமாக தலையெடுத்துள்ளது. வரும் கால சந்ததியினர் இன்னும் வெறுமைக்குள் தள்ளப்படுவார்களோ என்ற அச்சமும், சொந்த நாட்டிலேயே வேற்றுமையின் கொடுமை சாதி இன மொழிகளைக் கடந்து பொருளாதார அடிப்படையில் ஏற்படப் போகும் அபாயமும் அதிகமாக இருப்பது வேதனையைத் தருகிறது. சமூக விரோத சக்திகள் பொருளீட்டல் என்ற சித்தாந்தில் எது வேண்டுமானாலும் வசதி படைத்தோனாக தன்னை ஆக்கிக் கொள்ள எந்தப் பாதையையும் ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டது. இதில் இன்றைய இளைய சமுதாய மக்களும் அடங்குவர். நகர்ப்புறங்களில் மட்டுமே காணப்பட்ட இந்த சமுதாயக் கேடு ஒற்றுமையாய் கலாச்சாரக் கோட்பாட்டை மதித்து கட்டுக்கோப்பாக வாழ்ந்து வந்த கிராமப்புறங்களிலும் தொற்றிக் கொண்டது நாம் எல்லோரும் அக்கறையுடனும் அச்சத்தோடும் களையவேண்டிய ஒரு சமுதாயச் சீரழிவு. இது ஒரு ஆபத்தான வேறுபாடு என்றுதான் கூற வேண்டும்.

மற்றபடி இன்றைய இளைய சமுதாயத்தின் அபரிமிதமான தொழில் நுட்ப அறிவு, வளமையான வாழ்க்கைக்கு எடுத்துக்கொள்ளும் அக்கறை முதலியவற்றைக் காணும்போது ஒரு பக்கம் வியப்பையும் ஆச்சரியத்தையும் ஊட்டுகிறது.

என் பார்வையை உதாரணத்தோடுதான் கூறவேண்டும் என்று கண்டிப்பாகக் கேட்கப்பட்டதால் அதை ஒரு சிறுகதையாகத் தர விரும்புகிறேன்.

இதோ ஒரு உண்மைக் கதை.

டேய் அம்பி காலங்காத்தாலேயே புஸ்தகமும் கையுமாயிருக்கியே, வேலைல்லாம் அப்படியே கிடக்குடா, வடைமாவை அரைச்சு வையேண்டா என்ற அப்பாவின் குரலைக் கேட்டவுடன் முட்டிக் கொண்டு வந்த அழுகையை கஷ்டப்பட்டு நிறுத்திவிட்டு வேண்டா வெறுப்பாக புஸ்த்தகத்தை மூடிவிட்டு ஆட்டுக் கல் முன் வைக்கப்பட்டிருந்த வடைக்கான மூலப் பொருள்களை வெறுப்போடு பார்த்தான் அம்பி என்ற அனந்தராமன்.

பத்து நிமிஷத்துக்குள்ள அரைக்கலேன்னா புளிச்சுடும்டா அதான் அப்பா அப்படிச் சொன்னார் சமர்த்தா அரைச்சு வைச்சுடா கண்ணா என்று கூறிய அம்மாவைப் பார்த்த அம்பிக்கு அழுகை அதிகமாக வந்தது.
அடுப்படியில் வெந்து வீணாய் நிற்கும் அம்மாவின் அன்பு முகத்தைப் பார்த்ததும் மட மட வென்று அரிசியையும், பருப்பையும் தனியாகப் பிரித்து வேலையைத் தொடங்கினான் அம்பி.

வேலையை முடித்துவிட்டு மெதுவாக அம்மாவிடம் வந்த அம்பியை அன்போடு அரவணைத்த அன்னையிடம், அம்மா நேக்கு நாளைக்குப் பரீட்சைம்மா. இன்னிக்கு ஒரு நா மட்டும் ஸ்கூலுக்குப் போயிட்டு வரேன். இல்லேன்னா பரீட்டை எழுத விடமாட்டாம்மா என்ற பிள்ளையின் ஏக்கக் குரலைக் கேட்ட அந்தத் தாய்க்கும் தன் கையாலாகாத்தனத்தை எண்ணி வருத்தம்தான் அடைய முடிந்தது.

கண்ணா, அப்பா உன்னை ஸ்கூலுக்கே போவேண்டாம் கடையைப் பாத்துக்கோங்கறார் நீ என்னடான்னா பரீட்டை அது இதுன்னு என்னமோ சொல்றியே. நமக்கெல்லாம் படிக்க குடுத்து வைக்கலைடா. அப்பாவுக்கும் உடம்பு அடிக்கடி படுத்றது. நீ தான் கடையைப் பாத்துக்கணும். அக்கா கல்யாணத்துக்கு வாங்கின கடனை அடைப்பதற்கே நமக்கு இந்த ஜன்மம் போறாதுடா. அப்பாவும் படுத்துண்டா என்ன பண்றது. கடையும் இப்போ ஏதோ கடனை அடைக்ற அளவுக்குப் போறது. இந்த நேரத்திலே நாம கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தாண்டா ஆகணும் கண்ணா என்ற அம்மாவைப் பார்த்து, நீ சொல்றதெல்லாம் சரிதாம்மா நேக்கும் ஆத்துக் கஷ்டம் நன்னா தெரியும், அதனாலதான் கஷ்டப்பட்டு எப்படியாவது படிச்சு ஒரு கவர்மெண்ட் உத்தியோகம் வாங்கிண்டா நேக்கப்பறம் இருக்கும் தம்பி தங்கைகளையும் கரை ஏத்திடலாம்ல இல்லையா என்று பொருப்போடு பேசும் நன்றாகப் படிக்கும் தன் பிள்ளையைப் பார்த்து கண்ணீர் விட்டுச் சென்ற அன்னையின் முகத்தில் இருந்த ஏக்கத்தைக் கண்டு தன் ஆசைகளை மூட்டை கட்டிவைத்துவிட்டு, கடைக்கு வந்த கஸ்டமர்களைக் கவனிக்க ஆரம்பித்தான் அம்பி.

அம்பி கடைசி டேபிளுக்கு சாம்பார் ஊத்து, நடு டேபிளுக்கு இலையைப் போடு என்று கட்டளை பிறப்பிக்கும் தந்தையின் வார்த்தைகளுக்கு ரோபோ போல் செவிசாய்த்து தன் வயதொத்த பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளை ஏக்கத்தோடு பார்த்து பெரு மூச்சு விட்டான் அம்பி.

புளிப்பில்லாமல் செய்யப்படும் இட்லி, தவல வடைக்கென்றே பெயரெடுத்த அம்பியின் அப்பா மணி அய்யரின் சிறிய இட்லிக் கடை அப்பகுதியில் மிகப் பிரபலம். கலெக்டர் அலுவலகம் முதல் கார்ப்பரேஷன் அலுவலகம் வரை மணி அய்யர் கடையின் இட்லியும் வடையும் மிகப் பிரசித்தம். தொழிலில் பக்தியும், ஊராரின் உடல் நலத்திலும் அக்கறை கொண்டு தொழில் நடத்தும் ஒரு கட்டுக் கோப்பான காலகட்டத்தைச் சேர்ந்த மணி அய்யர் கடையின் தரத்தை எந்த வகையிலும் விட்டுக் கொடுத்து நடத்தாத சுபாவம் உடையவர்.
காலை 11 மணி முதல் 12 மணிக்குள் சுற்றுப்புற மக்களுக்கு மணி அய்யர் கடையில் ஒரு வடையாவது சாப்பிட்டால்தான் ஜென்ம சாபல்யம் அடைந்ததைப் போல ஒரு பிரமைத் தோற்றுவித்திருந்தது அந்தக் கடையின் பதார்த்தங்கள். அதிலும் குறிப்பாக அம்பி படிக்கும் பள்ளிக்கூடத்து ஆசிரியர் பெருமக்களுக்கு 11 மணிக்குள் இரண்டு வடையும், பித்தளை டபராவில் தரப்படும் காப்பிக்கும் ஏக டிமாண்ட்.

அம்பியின் கணக்கு வாத்தியார் மீனாட்சி டீச்சருக்கு மணி அய்யர் கடை தவல வடை மீது அதீத மோகம். அனைவரும் இரண்டு வடை சாப்பிட்டார்களென்றால் டீச்சருக்கு கூட ஒண்ணு அவசியம் வேண்டும். அதற்காகவே மற்றவர்களைத் தவிர்த்து தன் வகுப்பில் படிக்கும் நானா, சேச்சு என்ற இரண்டு பையன்களை தனக்கு மட்டும் தனியாக வாங்கிவருவதற்கென்றே தயார் செய்து வைத்திருந்தார்கள்.

நானா என்ற நாராயணும், சேச்சு என்ற சேஷாத்ரியும் அம்பிக்கு மிகவும் உற்ற நண்பர்கள். அவர்களும் மீனாட்சி டீச்சருக்கு வடை வாங்கித் தர வேண்டிய பணியை செவ்வனே செய்து வந்தார்கள். அம்பியும் அவர்களைக் கண்டவுடன் அன்போடு உபசரித்து அன்று பள்ளியில் நடந்த பாடங்கள் நிகழ்ச்சிகளை அக்கறையோடு கேட்டுக் கொள்வான். டேய் அம்பி தமிழ் வாத்தியார் உனக்காக ஹெட்மாஸ்டரிடம் ரொம்ப ரெக்கமண்ட் பண்ணி உன்னை எப்படியாவது பரீட்சை எழுதுவதற்கு ஏற்பாடு பண்ணியிருக்கார். நீயும் எப்படியாவது வாரத்துக்கு ஒரு 3 வகுப்பாவது வரும்படி உன்னிடம் சொல்லச் சொன்னார்.
அதனாலே நீ கண்டிப்பா நாளைக்கு ஸ்கூலுக்கு வந்துடா என்ற நண்பனைப் பார்த்து, நானா, அப்பா நான் ஸ்கூலுக்குப் போகக் கூடாது கடையைப் பாத்துக்கணும்னு கண்டிப்பா சொல்றார்டா, எப்படியாவது நம்ப வாத்தியாரைப் பார்த்து அவரை எங்கப்பாவிடம் பேசச் சொல்லுடா, எனக்கும் உங்களைப் போல டெய்லி ஸ்கூலுக்கு வரணும்னு ரொம்ப ஆசையா இருக்குடா என்ற நண்பனைப் பார்த்து மிகவும் வருத்தப்பட்ட நானாவும், சேச்சுவும் கண்டிப்பா சொல்றோம்டா ன்னு சொல்லிவிட்டு தயாராய் அம்பி கட்டி வைத்திருந்த பார்சலை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு நடையைக் கட்டினார்கள்,

வரும் வழியில் நானாவுக்கு பார்சலில் இருந்த வடையின் அபரிமிதமான வாசனை மூக்கைத் துளைத்து, சேச்சுவிடம் டேய் நாம ரெண்டு பேரும் பார்சல்லேர்ந்து ஒருவடையை எடுத்துச் சாப்பிடுவோமா என்று கேட்டான். அதைக் கேட்டு திடுக்கிட்ட சேச்சு, ஐயோ டீச்சருக்குத் தெரிஞ்சா அடி கொன்னுடுவாங்க, நேக்கு வேண்டாம் என்று அரை மனதோடு சொன்னான்.

இருந்தும் சற்று நேரம் சென்றவுடன் வடையின் சுவை நாவை இழுக்க, சரிடா நானா நாம ஒரு வடையை மட்டும் ஆளுக்குப் பாதி சாப்பிடுவோம், டீச்சர் கேட்டா கீழே விழுந்து மண்ணாயிடுத்துன்னு பொய் சொல்லிடலாம் என்ற யோசனையோடு, இருவரும் ஒரு ஓரமாக பார்சலைப் பிரித்து ஒரு வடையை மட்டும் எடுத்து சாப்பிட்டார்கள். மறுபடி பார்சலைப் பிரித்தது தெரியாமல் அழகாக மடித்து டீச்சரிடம் கொடுத்தார்கள்.

வடை குறைந்ததை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்ட மீனாட்சி டீச்சர் அவர்கள் சொன்ன சமாதானம் எதையும் கேட்காமல் கடைக்குச் சென்று இன்னொரு வடை கண்டிப்பாக வாங்கி வரவேண்டும் நான் காசு தரமாட்டேன் என்ன பண்ணுவீர்களோ தெரியாது போய் வாங்கி வந்தால்தான் ஆச்சு என்று மீனாட்சி டீச்சர் பணிக்கவும் இருவருக்கும் தங்களிடம் காசில்லை என்ற நினைவால் இருவருக்கும் மயக்கமே வந்து விட்டது. அழுது கொண்டே டீச்சர் நாங்கள் தப்பு செய்து விட்டோம், பார்சல்லேர்ந்து நாங்கதான் ஒரு வடையை எடுத்து சாப்பிட்டுவிட்டோம் எங்களை மன்னித்து விடுங்கள் என்று கூறியதுதான் தாமதம் தான் ஏமாற்றப் பட்டுவிட்டோம் என்று உணர்ந்த மீனாட்சி டீச்சர் அவர்கள் இருவரையும் வாசலில் மண்டி போ்ட்டு நிற்க வேண்டுமென்று தண்டனை தந்து விட்டார். கூனிக் குறுகிப் போன இருவரும் டீச்சர் எங்க வீட்டுக்கு நாங்க மண்டி போட்டு வெளிய டீச்சர் நிறுத்தி வைச்சுட்டாங்கன்னு தெரிஞ்சா எங்களை அப்பா உள்ளேயே விடமாட்டார்.

ஏதோ ஆசைப்பட்டு இந்த தப்பைச் செய்து விட்டோம் மன்னித்து விடுங்கள் என்று மன்றாடிய கூக்குரல் எதையுமே காதில் வாங்காமல் பிரம்பால் இரண்டு அடி கொடுத்து விட்டு வெளியில் நிற்க வைத்து விட்டார்கள். மனத்தளவில் மிகவும் பாதிக்கப்பட்ட இருவரும் அன்று முழுவது அழுது கொண்டே மாலையில் அம்பி கடைக்கு வந்து நடந்ததைக் கூறினார்கள்.

அம்பியும் நேரா இங்க வந்திருக்க வேண்டியதுதானே நானே இன்னொரு வடையை தந்திருப்பேன்ல என்று அன்போடு கூறி சமாதானப்படுத்தினான்.

காலங்கள் உருண்டது.

அம்பியும் படிப்பைத் தொடர முடியாமல் பாதியில் விட்டுவிட்டு கடையைக் கவனிக்க ஆரம்பித்து விட்டான். நானாவும் சேச்சுவும் நல்ல வேலையில் இருப்பதாக நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டான்.

ஒரு நாள் காலையில் தன் கடையருகில் வந்த வெளி நாட்டுக்காரில் இருந்து சாப்பிட என்ன இருக்கு என்று மிடுக்காகக் கேட்டுக் கொண்டு தன் கடைக்குள் உள்ளே நுழைந்த டிப்டாப்பான நபர்களைக் கண்டு, சார் இது சுமார் பட்ட கடைதான் நீங்கள்ளால்லாம் சாப்பிடுகிற மாதிரி இடவசதி கூட இல்லே. உங்களுக்கு ஏற்ற உணவு வகைகளும் இங்கே ஒண்ணும் இல்லே என்று சொன்ன அம்பியிடம், தவல வடை இருக்கா அதுவும் ஓரத்திலே ரொம்ப மொறு மொறுப்பா இருக்கணும் என்று சொன்னதுதான் தாமதம் உடனே அம்பி டேய் நானா, சேச்சு எப்படிடா இருக்கீங்க பார்த்து ரொம்ம நாளாச்சு இல்லையா ஏண்டா என் ஞாபகம் இல்லையா என்று மிக உரிமையோடு கேட்டாலும் அவர்களின் பணக்காரத் தோரணை சற்று விலக வைத்தது அம்பியை.

ஆமாண்டா அம்பி நான் அமெரிக்காவிலே இருக்கேன். அதோ அதுதான் என் மனைவி, பக்கத்திலே இருக்கறது என் குழந்தைகள். நேத்துக்குதான் ஊருக்கு வந்தேன். வந்தவுடன் உடனே சேச்சுவைப் பார்த்துவிட்டு அவனையும் கூட்டிண்டு முதல்ல உன்னைப் பாக்கணும்னுதாண்டா இங்கே வந்தேன். எப்படிடா இருக்கே. மேலே படிக்கலையாடா என்ற சரமாரியாக அன்புடன் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அம்பியிடம் கண்ணீர்தான் பதிலாக இருந்தது.

நானா தன் மனைவியை அழைத்து அம்பியை அறிமுகப் படுத்தினான். அம்பி என் 20 ஆண்டு கால நல்ல நண்பன். அபாரமாகப் படிப்பான். நாங்கள் படிக்கும்போது அவன் எந்தப் பாடத்தையும் அப்படியே புஸ்தகத்தில் இருப்பது போல் ஒரு வரி கூட தப்பில்லாமல் அபாரமாக ஒப்பிப்பான். நாங்கள் எல்லாம் சுமாராகப்படிக்கும் காலத்தில் எங்களுக்கு அவன்தான் சந்தேகங்கள் தீர்த்து வைப்பான். படிக்கவேண்டுமென்ற அவனுடைய கனவுகள் ஏழ்மைத் தனத்தால் தகர்க்கப்பட்டது என்று வாயார தன்னைப் புகழ்ந்த தன் நண்பன் முன் சற்றே நெளியத் தொடங்கினான் அம்பி. நண்பர்கள் மூவரும் தங்கள் வாழ்க்கையைப் பற்றி மணிக்கணக்கில் பேசிக் கொண்டனர்.

நடுவில் அம்பி ஒரு தட்டில் அன்று செய்த தவல வடையை எடுத்து வந்து அனைவருக்கும் கொடுத்து சாப்பிடுமாறு உபசரித்தான். ஆசையோடு சாப்பிட வந்த நானாவை அவன் மனைவி தடுத்து அவனுக்கு உள்ள சர்க்கரை வியாதியை ஞாபகப்படுத்தினாள். தன் குழந்தைகளுக்கும் ஒரு வடையைத் தந்தான் நானா. ஓ, it is so dirty. We don't like it என்ற தன் குழந்தைகளைப் பார்த்து, உலகத்திலே ஈடு இணை இல்லாத ஒரு தின்பண்டம் ஒன்று உண்டு என்றால் அது என் அம்பி கடை வடைதான். உங்களுக்கு இதன் பெருமை என்ன தெரியும். என் அன்பு நண்பனின் வடையைச் சாப்பிடுவதற்கென்றே அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறேன். இந்த வடையின் பின்னால் ஒரு கதையே இருக்கு இல்லையா அம்பி என்று அன்று மீனாட்சி டீச்சர் தந்த தண்டனையை மூவரும் வாய் வலிக்கச் சிரித்துக் கொண்டே பகிர்ந்து கொண்டார்கள்.

சற்றே சீரியஸான நானா, ஆமா அம்பி அன்னிக்கு ஒரு வடை கூட வாங்கிச் சாப்பிடுவதற்கு எங்கள் கிட்டே காசில்லை. அதனாலே நீ பார்சல் கட்டும்போது ஓரெமெல்லாம் மொறு மொறுப்பா இருக்குமே அதை மட்டும் எங்களுக்கு ஓசில கொடுப்பே. நாங்க இரண்டுபேரும் போட்டிபோ்ட்டுக் கொண்டு சாப்பிடுவோமே அந்த ருசிக்கு ஈடு இணையா எந்த ஸ்டார் ஹோட்டலிலும் இன்னிக்கு எதுவும் கிடைக்காது.

இதோ இன்னிக்கு எல்லா வசதியும் இருக்கு. என் குழந்தைகளுக்கு பிறக்கும் போதே ஸ்புன் சகிதமான சாப்பாடுதான். அன்று வடையை சாப்பிடுவதற்கு வயது இருந்தது பசி இருந்தது. ஆனால் காசில்லை. இன்று எல்லாம் இருக்கிறது. ஆனால் சாப்பிடமுடியா அவல நிலை. ஏனென்றால் எனக்கு சர்க்கரை வியாதி. என் குழந்தைகளுக்கோ பிஸா போன்ற அந்நியப் பொருட்களைச் சாப்பிட்டதன் பாதிப்பு. அவர்கள் எதோ ஒரு இன்பத்தை தொலைத்து விட்டார்கள் என்றே நினைக்கிறேன் அம்பி.

நாம் அன்று ஏழ்மையுடன் வாழ்ந்த இன்ப மயமான வாழ்க்கை இவர்களுக்கு இன்று கிடைத்து இருக்கிறதா என்றால் இல்லைதான். இயந்தரத்தனமான வாழ்வு. கிடைத்ததை ருசி பார்க்காமல் சாப்பிடும் அவசரம். நிச்சயம் இளைய தலை முறை ஒன்றை இழந்துதான் வாழ்கிறார்கள் என்று தத்துவார்த்தமாக, காலம் மாற்றிய படாடோப வாழ்க்கையைப் போற்றிப் பேசாமல் எதார்த்தமாகப் பேசும் தன் நண்பனை வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டே இருந்தான் அம்பி.

இது ஏதோ கற்பனைக் கதை இல்லை அன்பு நண்பர்களே. நிஜத்தில் நடந்தவைதான்.

அன்றைய காலகட்டத்தில் நட்பு வட்டம் அப்படித்தான் இருந்தது, நட்பில் ஒளிவு மறைவு எதுவும் கிடையாது. வாலிப வயதுக்கான பருவக் கோளாறுகளில் கூட ஒரு நாகரீகம் இருந்தது. தொழில் முறைகள் அனைத்தும் அதனதன் தர்ம நியாயத்தோடு நடந்தது.

பேப்பர் வாங்கக் காசில்லாத நிலையில் இலவச வாசக சாலைதான் எங்களுக்கு வடிகால். செய்திகள் படிக்கும் பழக்கம் அன்றே அனைத்து இளைஞர்களிடம் கண்டிப்பாக இருந்தது. ஒரு சிற்றூரில் வாழ்ந்து வந்த எங்களுக்கு அடிப்படைக் கல்வியைப் போதித்த ஆசிரியர் பெருமக்கள் நல்லாசானாய் இருந்து வாழ்வியலைக் கற்றுக் கொடுத்தார்கள். ஏழ்மையில் படித்த எங்களுக்கு போதிய ஞானம் இருந்தது. சமுதாய அக்கறை இருந்தது. காரல் மார்க்ஸ்ஸையும் கம்யூனிசத்தையும் போதிக்கும் நல்ல அறிவாளிகள் இருந்தார்கள். இளைஞர் சமுதாயத்தோடு கலந்து நல்வழிப்படுத்தும் நெறிமுறையை தங்களிடம் கொண்டிருந்தார்கள்.

நல்ல இசையைக் கேட்டோம். எதிலும் ஒரு தரம் இருந்தது. காம்போதியையும் கல்யாணியையும் அசை போடும் திறனோடு காலையும் நீயே மாலையும் நீயே பாடலையும், கவித்துவமான திரைப்படங்களையும் கண்டு களிக்கும் வாய்ப்பிருந்தது. 40 பைசா டிக்கட் வாங்கக் காசில்லாமல் அதற்காக காசு சேர்த்து திரு சிவாஜி கணேசன், திரு பாலச்சந்தர் திரைப்படங்களை அசைபோடும் அளவிற்கு கல்விஞானத்தைத் தவிர பொது அறிவு ஞானம் இயல்பாக இருந்தது.
ஒரு சிறிய டிரான்ஸ்ஸிஸ்டர் வாங்கக் காசில்லா நிலையில், ஒரு வீட்டில் இருக்கும் வானொலி மூலமாக கொழும்பு வானொலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் அலசி ஆராயும் அமைப்புக் கிட்டியது.
ஆங்கிலக் கல்வி வழி அனைத்தையும் சீரழித்தது என்றால் பொய்யுரை இல்லை. இன்றைய தலைமுறைக்கு ஆங்கலக் கல்வி அகந்தையையும் அடக்கு முறையையும்தான் கற்றுத் தந்ததிருக்கிறது. தாய்மொழி அறிவும் இல்லை. தலைமுறை அறிவும் இல்லை

இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு பிறக்கும்போதே லேப்டாப் வசதியோடும் எலக்டாரினிக் சாதனங்களின் தாக்கத்தோடும் பிறந்து வந்திருந்தாலும், அதன் பயன்பாடை முழுமையாகப் பெற்றிருப்பார்களா என்றால் சந்தேகமே.

அன்றையக் கூட்டுக்குடும்ப வாழ்க்கை பொறுப்புக்களை விருப்பத்தோடு சுமக்க வைத்தது. இன்று தட்டிக் கழிக்கும் மனோபாவம், பிறர் துன்பம் கண்டும் காணாமல் இருக்கும் பாங்கு இவை அனைத்துக்கும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை ஒழிந்ததுதான் காரணம். ..

இன்றைய தலைமுறைக்குத் தேவை ஒரு நல்ல தலைவன் மற்றும் அவன் தரும் நல்லாட்சி. சூது வாதற்ற சமுதாயம், பிறர் நலம் பேணும் நற்பண்பு. இது இன்றைய தலைமுறை மக்களிடம் இருக்கிறதா? மன்றத்தின் ஓட்டெடுப்புக்கு விட்டுவிடுவோமே.

நன்றியுடன்

குறிப்பு அவசரமாக எழுதியது. தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும்.

தாமரை
04-09-2008, 03:48 PM
நாற்பது வயது நிரம்பிய் அனைவருக்குமே இதுபோல சில சுவை நிறைந்த நினைவுகள் இருக்கும். குடும்பக் கட்டுப்பாடு, கூட்டுக் குடும்பச் சிதைவு ஆகியவை தலைமுறை இடைவெளியை அதிகமாக்கி விட புரிதல்கள் குறைந்தன. கலாச்சாரத்தின் ஆற்றுப் பாதை தடைகளால் உடைபட இது போன்ற பிரச்சனைகள் உண்டாயின.

பல வயதினரும் கலந்து பழகும் மன்றம் போன்ற இடங்களில் பண்பு எப்படி மிளிர்வடைகிறதோ அது போன்ற சமுதாயமின்மையே குறை.

சாலை ஐயாவின் இந்த நிழற்படமான கதை அதி அற்புதமாய் பதிலைச் சொல்லி விட்டது.

இளசு
04-09-2008, 06:06 PM
பொறுமையாக சாலை அவர்களின் பதில் முழுவதையும் வாசித்தேன்.

தாமரையின் கருத்தை வழிமொழிகிறேன்.

மிக அழகான பதிலைத் தந்த சாலை அவர்களுக்கு வந்தனம்.

----------------------------------------------------------------

ஆனாலும் ஒரு சந்தேகம் சாலை அவர்களே!

கூத்து, பாகவதர், சிவாஜி, கமல், விக்ரம் என காலகட்டங்கள் மாறிமாறிவர
நம் பாட்டனுக்கு வாய்க்காத சினிமா தகப்பனுக்குக் கிட்ட
தகப்பனுக்கு கிடைக்காத மடிக்கணினி பிள்ளைக்குக் கிடைக்க
இன்றைய பிள்ளைக்குத் தெரியாத நானோ கருவிகள் நாளைக்குக் கிட்ட..

இந்த சுழற்சி வளர்ச்சி அல்லவா?

இன்றைய மடிக்கணினி பிள்ளைகள்
நாளைய நானோ தலைமுறையையும் பார்த்து
'' நீ அதையெல்லாம் மிஸ் பண்ணிட்டே'' என்று சொல்லுமா?

என் மனதில் வந்த ஐயங்களைப் பகிர்கிறேன். நன்றி!

சாலைஜெயராமன்
05-09-2008, 02:22 AM
பின்னூட்டங்களுக்கு நன்றி திரு தாமரை, திரு இளசு.

மன நிறைவையும், தன்நிறைவையும் தரும் எந்த மாற்றங்களும் வரவேற்கத்தக்கவையே. மாற்றங்கள் நிச்சயம் வேண்டும் . அது ஆரோக்கியமானதாகவும் அடிப்படையில் நியாயமானதாகவும், பிறர் சுதந்திரக் குறுக்கீடு இல்லாததாயும் இருத்தல் அவசியம்.

தாமரை
05-09-2008, 03:29 AM
பொறுமையாக சாலை அவர்களின் பதில் முழுவதையும் வாசித்தேன்.

தாமரையின் கருத்தை வழிமொழிகிறேன்.

மிக அழகான பதிலைத் தந்த சாலை அவர்களுக்கு வந்தனம்.

----------------------------------------------------------------

ஆனாலும் ஒரு சந்தேகம் சாலை அவர்களே!

கூத்து, பாகவதர், சிவாஜி, கமல், விக்ரம் என காலகட்டங்கள் மாறிமாறிவர
நம் பாட்டனுக்கு வாய்க்காத சினிமா தகப்பனுக்குக் கிட்ட
தகப்பனுக்கு கிடைக்காத மடிக்கணினி பிள்ளைக்குக் கிடைக்க
இன்றைய பிள்ளைக்குத் தெரியாத நானோ கருவிகள் நாளைக்குக் கிட்ட..

இந்த சுழற்சி வளர்ச்சி அல்லவா?

இன்றைய மடிக்கணினி பிள்ளைகள்
நாளைய நானோ தலைமுறையையும் பார்த்து
'' நீ அதையெல்லாம் மிஸ் பண்ணிட்டே'' என்று சொல்லுமா?

என் மனதில் வந்த ஐயங்களைப் பகிர்கிறேன். நன்றி!

இளசு, இதே கேள்விகளை முன் வைத்து ஒரு விவாதம் ஆரம்பித்தால் எளிதாக இருக்கும். கண்மணியின் ஆலோசனையையும் அதனுள் இணைத்தால் ஆரோக்கியமான பல தகவல்கள் கிடைக்குமென எண்ணுகிறேன்.

நம்பிகோபாலன்
05-09-2008, 05:18 AM
நல்லதொறு ஆத்மார்த்த பதிலை தந்த சாலை அய்யா அவர்கள், என் தந்தை போல ஒர நல்ல விளக்கதை தந்துளார். மிக்க நன்றி.
இளசு அண்ணா சொன்னது போல தனித்திரி ஆரம்பித்து மேலும் கருத்துக்களை அறிய ஆவலாய் உள்ளேன்.

இளசு
05-09-2008, 04:53 PM
மன நிறைவையும், தன்நிறைவையும் தரும் எந்த மாற்றங்களும் வரவேற்கத்தக்கவையே. மாற்றங்கள் நிச்சயம் வேண்டும் . அது ஆரோக்கியமானதாகவும் அடிப்படையில் நியாயமானதாகவும், பிறர் சுதந்திரக் குறுக்கீடு இல்லாததாயும் இருத்தல் அவசியம்.

மிக அழகாகச் சொன்னீர்கள் சாலை அவர்களே!

உங்கள் நிறைவான பதிலால் நெகிழ்ந்திருந்த என நெஞ்சத்தில்
அரும்பிய வினாவுக்கு விடை அளித்தமைக்கு நன்றி..

இத்திரியில் சந்தேகம் கேட்டு, மேலும் மேலும் ஒரே வினா-விடையை அலசுவதைத் தவிர்க்கும்படி நெறி இருப்பதை அறிவேன்.

தாமரை சொன்னபடி , யாராவது தனித்திரி தொடங்கலாம். அதைப் படித்து அறிய, தெளிய நான் தயார்.

சாலை அவர்கள் சொன்ன நீதிக்கதை/சம்பவத்தை மட்டும் எடுத்து அதற்குரிய மன்றத்தில் தனித்திரியாய் இட என் ஆலோசனை. இன்னும் பலர் படிக்க ஏதுவாகும். நன்றி..

இளசு
05-09-2008, 04:56 PM
நாத்திகம் ஆத்திகம் கடந்த நான்மீகத்தில் நடை பயின்று வருகிறேன். நான்மீகம் என்று
நான் உருவாகியிருக்குஞ் சொற்றொடர்
எல்லாவற்றையும் நிபந்தனைகளேதுமின்றி அன்போடு அரவணைக்கும்
மெய்யான ஆன்மீகத்தைக் குறிக்கிறது

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற உயர்ந்த கண்ணோட்டத்தைத்
தயவோடு செயல்படுத்தும் நாத்திகர்கள் மெய்யான ஆத்திகர்கள்.

ஏழை பசித்திருக்க அப்பசி நீக்க உணவு கொடுக்கும் தயவற்று, கற்சிலைகளுக்கு பாலுந்தேனுங் கொட்டிப்
பக்திப் பரவசமடையும் ஆத்திகர்கள் மெய்யான நாத்திகர்கள்.

சிந்திக்கவைக்கும் மிக உயர்ந்த பதில்.

அருமை நாகரா அவர்களே! நன்றி உமக்கு!!

இளசு
05-09-2008, 05:01 PM
2) விட்டுக்கொடுத்தல், விட்டுப்போவதற்கான காரணங்களில் முதலாவதாக இருப்பது,
புரிந்துணர்வு இல்லாதிருப்பதுதான்.

இருவருமே ஏதோ ஒரு [B]அர்த்தமற்ற அறிவுஜீவித்தனத்துடன் சிறிய இடைவெளியில் இயங்குவதால்தான்.

ஈகோ, சுயத்தின் மீதான அதீத ஈடுபாடு, மெல்லிய உணர்வுகளைத் தாண்டிய வணிகமுறை கணக்குக் கூட்டல்கள்..இதைப்போன்றவைதான் விட்டுக்கொடுத்தல் எனும் அதி அற்புத குணத்தைக் காணாமல் போக்கும் காரணிகள்.

கவுன்சலிங் எனப்படும் ஆலோசனைக்கான கையேட்டில் இருக்க வேண்டிய கருத்து!

பாராட்டுகள் சிவா!

இதற்கு ராஜா அவர்களின் பின்னூட்டமும் வாழ்த்துமொழிகளும் கூடுதல் சிறப்பு.
நன்றி ராஜா அவர்களே!

இளசு
05-09-2008, 05:03 PM
தேடல் - கவிதை
குறிப்பு : கவிதையில் வன்முறை இருக்கலாம்.. கவிதையே வன்முறையானால்:-)
================

எழுதிய கவிதையின்
இறுதிவரிகளை
சரிபார்த்துக் கொண்டிருக்கிறான்
இறைவன்..

எங்கே துவங்கிய பயணம்
என்று எவருக்குமே
தெரியவில்லை
இறங்கும் இடத்திற்கு
மட்டும் சரியாக
வந்து சேர்ந்திருக்கிறார்கள்

உங்கள் அனைவரையும்
ஒன்று சேர்த்த பெருமை
எனக்குத்தானே
என்றபடி மரணம்...

மனமார்ந்த பாராட்டுகள் பூர்ணிமா.

உங்களின் தேடல் வரிசையில் இதைத் தனியாக கவிதைகள் பக்கமும் பதியலாமே!

ராஜா
07-09-2008, 01:33 PM
அன்பின் அமர்..!

வேறு யாரேனும் பதிலளிக்காமல் இருக்கிறார்களா..?

அமரன்
08-09-2008, 08:08 AM
அண்ணா..
ஐந்து பதில்கள் வரவேண்டியுள்ளது. பதில் தரவேண்டியவர்களும் மன்றம் வரவேண்டியுள்ளது. அதனால் அடுத்தவரை தேடுகிறேன் கேள்விகளை கேட்க.. கூடுமானவரை விரைவில் அழைத்து வருகின்றேன்.

அமரன்
09-09-2008, 07:20 AM
நம்பிக் கேட்டதும் கொடுத்த நம்பிக்கும்
நம்பி கேட்டதும் கொடுத்த நண்பர்களுக்கும்
நன்றி. நன்றி. நன்றி.

அண்ணா...
அடுத்ததாக சுறு சுறு சுட்டியை கூப்பிடுவோமா..

ராஜா
09-09-2008, 07:37 AM
நம்பிக் கேட்டதும் கொடுத்த நம்பிக்கும்
நம்பி கேட்டதும் கொடுத்த நண்பர்களுக்கும்
நன்றி. நன்றி. நன்றி.

அண்ணா...
அடுத்ததாக சுறு சுறு சுட்டியை கூப்பிடுவோமா..

தம்பி கேட்டா வேண்டாமென்றா சொல்லுவேன்..?

கெட்டிக்காரர் சுட்டியை எட்டி இழுக்க அட்டியில்லை..!

அழையுங்கள் அமர்..!

அமரன்
09-09-2008, 07:39 AM
ஒப்புதல் தந்துவிட்டார்.. இனி(ய) கேள்விகள்தான் பாக்கி.

சுட்டி சுட்டி ஓடிவா.. நில்லாமல் ஓடிவா.. கேள்விப் பூக் கொண்டுவா..

ராஜா
09-09-2008, 01:29 PM
சுட்டியாரே வாங்க.. கேள்விப்

பட்டியலைத் தாங்க..!

சுட்டிபையன்
09-09-2008, 02:00 PM
திரியின் 100வது பக்கத்தில் கேள்வி கேட்பதற்க்கு அழைத்த எல்லோருக்கும் நன்றி
இதோ முதல் கேள்வி எல்லோரையும் மாட்டிவிடும் நம்ம ராஜா சாருக்கு

1) இவ்ளவு நகைச்சுவை அள்ளி வீசுறீங்களே உங்களை திரைப்படத்தில் நகைச்சுவை எழுத கூப்பிட்டால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?(முன்னர் யாராவது கேட்டிருந்தல் தெரிய தரவும், மாற்றப்படும்)

2) அமரன், எங்கள் ஈழத்து மாவிரர்களுக்கு ஒரு சின்ன கவிதை ஒன்று சொல்லுங்க

3) அறிஞர், உங்களுக்கு பிடித்த ஒருவர், சந்திக்க விரும்பும் ஒருவர் திடீர் என்ன்று உங்கள் வீட்டு அழைப்பு மணியை அடித்தால்?

4) ஓவியன் நீங்கள் விண்வெளிக்கு சென்று கொண்டு இருக்கிறீர்கள். பாதி வழியில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு அழைப்பு வருகிறது உங்கள் தாயாருக்கு ச்கவீனம்( ஒரு கதைக்கு, அப்படி நடக்ககூடாது) உங்களை உடனே பார்த்தால்தான் பிழைக்க முடியும்.உங்களை அழைக்கிறார்கள். உங்கள் பயணத்தை பாதி வழியில் நிறுத்தினால் உங்கள் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படும், நீங்கள் அதிகாரிகல் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டும் என்னும் பல சிக்கல்கள் வரும். என்ன செய்வீர்கள்?

5) அன்பு, நீங்கள் ஒரு புதிய கணனி இயங்கு மென்பொருள் தொகுப்பை உர்ய்வாக்குகிறீர்கள். அதில் மிக முக்கிய என்று நீங்கள் இணைக்கும் முக்கிய வசதி எது? ஏன்? அதற்க்கு என்ன பெயர் வைப்பீர்கள்? ஏன்?

6) அக்கினி, உங்கள் முதல்காதல் சில காரணங்களால் கூடமல் உங்கள் காதலையை பிரிகிறீர்கள்(இதுவும் ஒரு கதைக்குதான்) என்னும் ஒரு பெண்ணின் மீது காதல் வருகிறது. இந்த சமயத்தில் முதல் காதலி உங்களுடன் மீண்டும் சேர்ந்து கொள்ள விரும்புகிறார். யாரை தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?

7) ஓவியா, உங்கள் அம்மா இப்போது உங்கள் முன்னால் தோன்றினால்?

8)இளசு, மன்றத்து மென்பொருட்கள் செயலிழந்து மன்றம் சில நாட்களுக்கு இயக்க முடியாமல் போனால்( என்னய்யா எல்லாரும் அப்படி பாக்கிறீங்கள்? சும்மா ஒரு பேச்சுக்குப்பா) என்ன செய்வீர்கள்?

9) மலர், உங்கள் கனவுகள், ஆசைகள் அதிகம் எதை பற்றியதாக இருக்கும்?( ரொம்ப கிறுக்குதனமான கேள்வி என்றால் மன்னிக்கவும்)

10) உங்களுக்கு தமிழில் பிடித்த வார்த்தை என்ன? ஏன்?

:icon_rollout::icon_rollout::wuerg019:

ராஜா
09-09-2008, 02:32 PM
சுட்டி... 10 வது கேள்வி யாருக்குப்பா..?

ராஜா
09-09-2008, 02:38 PM
அப்படியா.. எனக்கு 250 பக்கம்ன்னு காட்டுதே.. :)

பொருத்தமான ஆள்கிட்டதான் போயிருக்கு..

பத்தவச்"சுட்டி"யே... !

ராஜா
10-09-2008, 11:19 AM
என்னாச்சு..?

ஒருவரையும் இந்தப் பக்கம் காணோமே..!

ஒருவேளை தனிமடல் போகவில்லையோ..????

ராஜா
10-09-2008, 12:07 PM
1) ராஜா : உங்களை திரைப்படத்தில் நகைச்சுவை எழுதக் கூப்பிட்டால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

நல்ல கேள்வி..! ( ஏன்னா அதுக்கு என்கிட்ட பதில் இருக்கு..!)

திரைப்படத்துறையில் என்னை இழுத்துவிட எனது ஆர்க்குட் நண்பர் ஒருவர் முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அதற்காக 4 செயல்திட்ட முன்வடிவுகள் செய்து கொடுத்திருக்கிறேன். ( கிராமம், நகரம் சார்ந்த கதைக்களங்க*ளுக்காக இரு வேறு நடிகர்களுக்கு ஏற்றாற்போல் தனித்தனி சிரிப்புக் காட்சிகள் மற்றும் வசனங்கள்.)

எனக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும் நண்பர் விடாமுயற்சியுடன் போராடிக்கொண்டிருக்கிறார். பிரபல சிரிப்பு நடிகர்களுக்காக, சிரிப்புக் காட்சிகள் எழுதுவோர் தற்போது நிறைய பேர் இருக்கின்றனர். அந்தக் கட்டமைப்பை உடைத்து உட்புகுவது மிகக் கடினம்.

என்னுடைய குணாதிசயம், திரைப்படத்துறையில் நான் இணைவதற்கு மிகப்பெரிய எதிரியாக இருக்கும். ஒரு நிகழ்வு அதற்கு உதாரணம்.

இரு மாதங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சி அலைவரிசைக்காக, நகைச்சுவை நிகழ்ச்சி முன்னோடித் தேர்வுக்குப் போயிருந்தேன். நான் பங்கேற்ற பிரிவு நகைச்சுவைத் துணுக்குகள் சொல்வது.

அங்கே நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள், இயக்குநர்களின் அலட்டல் கிட்டத்தட்ட கடவுள் ரேஞ்சுக்கு இருந்தது. (அசல் கடவுள்கூட எளிமையானவராகத்தான் இருப்பார் என்று நம்புகிறேன்.) ஏற்கனவே அந்நிகழ்ச்சியில் பிரபலமாக இருப்பவர்கள் எல்லாம் காலில் விழாக்குறையாக அந்த பொறுப்பாளர்களிடம் பவ்யம் காட்டினர். புதுத் தேர்வ*ர்களைக் கேட்கவா வேண்டும்..? அவர்கள் எதிரில் அமரக்கூட அஞ்சினர். அவர்களைக் காக்காய் பிடிப்பதில் நான் முந்தி.. நீ முந்தி என்று அடித்துக்கொள்ளாதகுறைதான்.

இதெல்லாம் எனக்குப் பழக்கமில்லாத ஒன்று. நான் மரியாதைக்கு ஒரு வணக்கத்தைத் தெரிவித்துவிட்டு ஓரமாக அமர்ந்திருந்தேன். ஒவ்வொருவராக விசாரித்தார்கள். அப்படி விசாரிக்கும்போது அவர்களிடம் காணப்பட்ட திமிரும் கர்வமும் இருக்கிறதே.. ஒருவர் என்னை நீ.. போ.. வா.. என்று ஒருமையில் அழைக்க, நானும் அவ்வாறே வேண்டுமென்றே பதிலளித்தேன். அப்போதே என்னைக் குறி(த்து) வைத்துவிட்டார்கள்.

நிகழ்ச்சி கொடுக்க ஒவ்வொருவராக அழைத்தார்கள். என் பெயரைக் கூப்பிடவே இல்லை. அழைப்பார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை. இறுதியாக வேண்டா வெறுப்பாக என்னை அழைத்தார்கள். ஸ்டாண்டிங் ஜோக் சொல்ல ஏகப்பட்ட பேர் இருக்கிறார்களே.. வேறு என்ன தெரியும் உங்களுக்கு என்று கேட்க, " வேறு ஒன்றும் தெரியாது.. சுயவிவரத்தில் அதைக் குறிப்பிட்டிருக்கிறேன்.. பார்க்கவில்லையா..?" என்று சொன்னேன். அடுத்து என்னை என்ன கேட்பதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். "சரி.. பெர்ஃபார்ம் பண்ணுங்க.." என்றார்கள்.

என்னிடமிருக்கும் மிக நல்ல துணுக்குகளையெல்லாம் ஏற்ற இறக்கத்தோடு சொன்னேன். நிகழ்ச்சி செய்ய வந்தவர்களே சிரித்தார்கள். தகவல் தெரிவிக்கிறோம் போய்வாருங்கள் என்று சொன்னார்கள். வந்துவிட்டேன்.

இதுவரை தகவல் வரவில்லை..!

தொலைக்காட்சி உலகத்திலேயே இப்படி என்றால், திரைப்பட உலகத்தில் இதைப்போன்று நூறு மடங்கு இருக்கும். போலிப்பணிவு, முகத்துதி இவற்றுக்கெல்லாம் நான் பழக்கப்படாத ஆள். அது நமக்கு சரிப்பட்டு வராது. எனவே எனக்கு பெரிய நம்பிக்கைகள் எதுவும் இல்லை.

உதயசூரியன்
10-09-2008, 12:14 PM
அப்படியா.. எனக்கு 250 பக்கம்ன்னு காட்டுதே.. :)

பொருத்தமான ஆள்கிட்டதான் போயிருக்கு..

பத்தவச்"சுட்டி"யே... !

எனக்கும் 100 வது திரி என்று தான் காட்டுது..
ராஜா சார்.. உங்களின் சிரிப்புக்கள் தான்.. உங்களின் பலமான சொத்து.. எல்லோருக்கும் அமையாது.. இது போல்..

என் கண்ணும் படுது உங்க மேல..!!??

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

அறிஞர்
10-09-2008, 01:55 PM
3) அறிஞர், உங்களுக்கு பிடித்த ஒருவர், சந்திக்க விரும்பும் ஒருவர் திடீர் என்ன்று உங்கள் வீட்டு அழைப்பு மணியை அடித்தால்?
மனிதர்கள் எல்லாரையும் ஒரே மாதிரி பார்ப்பதால்... இது வரை எந்த நபர் மீதும் அப்படிப்பட்ட ஈர்ப்பு வந்ததில்லை.

பழைய நண்பர்களோ, பிரபலமானவர்களோ வந்தால் சற்று அதிர்ச்சியுடன்... அவர்களை வரவேற்று.... விருப்பப்படும் உணவை பரிமாறி அனுப்புவோம்.

அறிஞர்
10-09-2008, 01:56 PM
அங்கே நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள், இயக்குநர்களின் அலட்டல் கிட்டத்தட்ட கடவுள் ரேஞ்சுக்கு இருந்தது. (அசல் கடவுள்கூட எளிமையானவராகத்தான் இருப்பார் என்று நம்புகிறேன்.) .
பலர் மனிதர்கள்... தங்களை மனிதராக எண்ணுவதில்லை..

நிறைகுடங்கள் என்றும் தழும்புவதில்லை...

ராஜா
10-09-2008, 03:19 PM
பலர் மனிதர்கள்... தங்களை மனிதராக எண்ணுவதில்லை..

நிறைகுடங்கள் என்றும் தழும்புவதில்லை...

:icon_b::icon_b::icon_b::icon_b:

ராஜா
10-09-2008, 03:21 PM
மனிதர்கள் எல்லாரையும் ஒரே மாதிரி பார்ப்பதால்... இது வரை எந்த நபர் மீதும் அப்படிப்பட்ட ஈர்ப்பு வந்ததில்லை.

பழைய நண்பர்களோ, பிரபலமானவர்களோ வந்தால் சற்று அதிர்ச்சியுடன்... அவர்களை வரவேற்று.... விருப்பப்படும் உணவை பரிமாறி அனுப்புவோம்.

ஆனந்த அதிர்ச்சிதானே..?

இளசு
10-09-2008, 04:42 PM
அன்பு ராஜா அவர்களே,

முன்பே ஒரு தெலுங்கு படத்தில் நடித்தவர்தானே தாங்கள்..!

ஊடக வாய்ப்புகள் உங்கள் சுயமரியாதைக்குப் பங்கம் தராவண்ணம் வாய்க்க வாழ்த்துகள்..

நீங்கள் சென்றது அசத்தப்போவது யாருக்காக என நினைக்கிறேன்...

---------------------------------------------

8)இளசு, மன்றத்து மென்பொருட்கள் செயலிழந்து மன்றம் சில நாட்களுக்கு இயக்க முடியாமல் போனால் என்ன செய்வீர்கள்?

மாட்டிவிட்ட சுட்டிக்கு நன்றி..

கடந்த 5 ஆண்டுகளாய் என்னுள் ஊடாடும் உறவு தமிழ்மன்றம்.
இடையில் ஓராண்டு சில தனிப்பட்ட மன/பணி பாரங்களால் மன்றம் வராமல் இருந்திருக்கிறேன்.
அது விரதம்.. நானாய் மேற்கொண்டது.
பட்டினி அன்று..

வெளிதேசம் போனாலும், ஓரிரு நாளைக்குள் அரிசிச் சோற்றுக்கு ஏங்குவதுபோல்,
மன்றத்துக்கும் ஏங்குபவன் நான்.
எனவே சில நாட்கள் மன்றம் இல்லையானால், ஏக்கமும் வெறியுமாய் மனசு நிச்சயம் பரபரக்கும்.

பாரதி, தலைவர் இராசகுமாரன், அறிஞருக்கு என் அலைபேசி அழைப்பு கொடுக்கும்.

அடிக்கடி இணையம் வந்து, இப்ப சரியாச்சா எனக் கண் பார்க்கும்.

ஆனாலும், இவை நேரிடை வாழ்வு, குடும்பம், பணி இவற்றைக் கிஞ்சித்தும் பாதிக்கா அளவிலேதான் நிச்சயம் இருக்கும்.

வெளிதேச வாசம் - பணி செய்ய, தொழில் கற்க, திரவியம் திரட்ட..

அந்த முதன்மை நோக்கத்தை குந்தகம் செய்யும் வண்ணம் வேறு எதுவுமே- மன்றம் உட்பட - இருக்கக்கூடாது என்பது என் திண்ணம்.

மிக முக்கிய குடும்ப, நட்புகளுக்காக அந்த நாட்களில் மன்றம் வராமல் இருப்பது என் வழக்கமே!

ராஜா
10-09-2008, 05:08 PM
அன்பு ராஜா அவர்களே,

முன்பே ஒரு தெலுங்கு படத்தில் நடித்தவர்தானே தாங்கள்..!

அண்ணலே..!

உங்கள் நினைவாற்றலைப் போற்றுகிறேன்..!

( கதாநாயகியிடம் வம்பு செய்வதுபோன்ற காட்சியில் தோன்றியிருக்கிறேன்..!)

நீங்கள் சென்றது அசத்தப்போவது யாருக்காக என நினைக்கிறேன்...

இந்தப் பொறியில் நான் சிக்கப்போவது இல்லை..! :)

---------------------------------------------

மாட்டிவிட்ட சுட்டிக்கு நன்றி..

கடந்த 5 ஆண்டுகளாய் என்னுள் ஊடாடும் உறவு தமிழ்மன்றம்.
இடையில் ஓராண்டு சில தனிப்பட்ட மன/பணி பாரங்களால் மன்றம் வராமல் இருந்திருக்கிறேன்.
அது விரதம்.. நானாய் மேற்கொண்டது.
பட்டினி அன்று..

வெளிதேசம் போனாலும், ஓரிரு நாளைக்குள் அரிசிச் சோற்றுக்கு ஏங்குவதுபோல்,
மன்றத்துக்கும் ஏங்குபவன் நான்.
எனவே சில நாட்கள் மன்றம் இல்லையானால், ஏக்கமும் வெறியுமாய் மனசு நிச்சயம் பரபரக்கும்.

பாரதி, தலைவர் இராசகுமாரன், அறிஞருக்கு என் அலைபேசி அழைப்பு கொடுக்கும்.

அடிக்கடி இணையம் வந்து, இப்ப சரியாச்சா எனக் கண் பார்க்கும்.

ஆனாலும், இவை நேரிடை வாழ்வு, குடும்பம், பணி இவற்றைக் கிஞ்சித்தும் பாதிக்கா அளவிலேதான் நிச்சயம் இருக்கும்.

வெளிதேச வாசம் - பணி செய்ய, தொழில் கற்க, திரவியம் திரட்ட..

அந்த முதன்மை நோக்கத்தை குந்தகம் செய்யும் வண்ணம் வேறு எதுவுமே- மன்றம் உட்பட - இருக்கக்கூடாது என்பது என் திண்ணம்.

மிக முக்கிய குடும்ப, நட்புகளுக்காக அந்த நாட்களில் மன்றம் வராமல் இருப்பது என் வழக்கமே!

நன்றி நண்பரே..!

மன்றம் குறித்த தங்கள் தெளிவான பதில் பலருக்கு நல்ல அறிவுரையாக இருக்கும்.

ஓவியா
10-09-2008, 09:12 PM
1) ராஜா : உங்களை திரைப்படத்தில் நகைச்சுவை எழுதக் கூப்பிட்டால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

நல்ல கேள்வி..! ( ஏன்னா அதுக்கு என்கிட்ட பதில் இருக்கு..!)

திரைப்படத்துறையில் என்னை இழுத்துவிட எனது ஆர்க்குட் நண்பர் ஒருவர் முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அதற்காக 4 செயல்திட்ட முன்வடிவுகள் செய்து கொடுத்திருக்கிறேன். ( கிராமம், நகரம் சார்ந்த கதைக்களங்க*ளுக்காக இரு வேறு நடிகர்களுக்கு ஏற்றாற்போல் தனித்தனி சிரிப்புக் காட்சிகள் மற்றும் வசனங்கள்.)

எனக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும் நண்பர் விடாமுயற்சியுடன் போராடிக்கொண்டிருக்கிறார். பிரபல சிரிப்பு நடிகர்களுக்காக, சிரிப்புக் காட்சிகள் எழுதுவோர் தற்போது நிறைய பேர் இருக்கின்றனர். அந்தக் கட்டமைப்பை உடைத்து உட்புகுவது மிகக் கடினம்.

என்னுடைய குணாதிசயம், திரைப்படத்துறையில் நான் இணைவதற்கு மிகப்பெரிய எதிரியாக இருக்கும். ஒரு நிகழ்வு அதற்கு உதாரணம்.

இரு மாதங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சி அலைவரிசைக்காக, நகைச்சுவை நிகழ்ச்சி முன்னோடித் தேர்வுக்குப் போயிருந்தேன். நான் பங்கேற்ற பிரிவு நகைச்சுவைத் துணுக்குகள் சொல்வது.

அங்கே நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள், இயக்குநர்களின் அலட்டல் கிட்டத்தட்ட கடவுள் ரேஞ்சுக்கு இருந்தது. (அசல் கடவுள்கூட எளிமையானவராகத்தான் இருப்பார் என்று நம்புகிறேன்.) ஏற்கனவே அந்நிகழ்ச்சியில் பிரபலமாக இருப்பவர்கள் எல்லாம் காலில் விழாக்குறையாக அந்த பொறுப்பாளர்களிடம் பவ்யம் காட்டினர். புதுத் தேர்வ*ர்களைக் கேட்கவா வேண்டும்..? அவர்கள் எதிரில் அமரக்கூட அஞ்சினர். அவர்களைக் காக்காய் பிடிப்பதில் நான் முந்தி.. நீ முந்தி என்று அடித்துக்கொள்ளாதகுறைதான்.

இதெல்லாம் எனக்குப் பழக்கமில்லாத ஒன்று. நான் மரியாதைக்கு ஒரு வணக்கத்தைத் தெரிவித்துவிட்டு ஓரமாக அமர்ந்திருந்தேன். ஒவ்வொருவராக விசாரித்தார்கள். அப்படி விசாரிக்கும்போது அவர்களிடம் காணப்பட்ட திமிரும் கர்வமும் இருக்கிறதே.. ஒருவர் என்னை நீ.. போ.. வா.. என்று ஒருமையில் அழைக்க, நானும் அவ்வாறே வேண்டுமென்றே பதிலளித்தேன். அப்போதே என்னைக் குறி(த்து) வைத்துவிட்டார்கள்.

நிகழ்ச்சி கொடுக்க ஒவ்வொருவராக அழைத்தார்கள். என் பெயரைக் கூப்பிடவே இல்லை. அழைப்பார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை. இறுதியாக வேண்டா வெறுப்பாக என்னை அழைத்தார்கள். ஸ்டாண்டிங் ஜோக் சொல்ல ஏகப்பட்ட பேர் இருக்கிறார்களே.. வேறு என்ன தெரியும் உங்களுக்கு என்று கேட்க, " வேறு ஒன்றும் தெரியாது.. சுயவிவரத்தில் அதைக் குறிப்பிட்டிருக்கிறேன்.. பார்க்கவில்லையா..?" என்று சொன்னேன். அடுத்து என்னை என்ன கேட்பதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். "சரி.. பெர்ஃபார்ம் பண்ணுங்க.." என்றார்கள்.

என்னிடமிருக்கும் மிக நல்ல துணுக்குகளையெல்லாம் ஏற்ற இறக்கத்தோடு சொன்னேன். நிகழ்ச்சி செய்ய வந்தவர்களே சிரித்தார்கள். தகவல் தெரிவிக்கிறோம் போய்வாருங்கள் என்று சொன்னார்கள். வந்துவிட்டேன்.

இதுவரை தகவல் வரவில்லை..!

தொலைக்காட்சி உலகத்திலேயே இப்படி என்றால், திரைப்பட உலகத்தில் இதைப்போன்று நூறு மடங்கு இருக்கும். போலிப்பணிவு, முகத்துதி இவற்றுக்கெல்லாம் நான் பழக்கப்படாத ஆள். அது நமக்கு சரிப்பட்டு வராது. எனவே எனக்கு பெரிய நம்பிக்கைகள் எதுவும் இல்லை.

மிகவும் வேதனைக்குரிய விசயமாக இருக்கின்றது...:redface: வருத்தங்கள்.

தொலைகாட்சியில் சிறுபிள்ளைகளின் கார்டூன்கள் கூட ஹெய், நீ, வா, போ, என்று பெரியவர்களை மட்டுமரியாதயன்றி ஒருமையிலே அழைப்பது போல் வசனங்கள் வருகின்றனவே!!

இதெல்லாம் ஜுஜுபி.

உங்கள் சுயமரியாதையை காப்பாற்றிக்கொள்ள கடவுள் உங்களுக்கு வழங்கிய ஒரு வரம்தான் உங்களை அவர்கள் கூப்பிடாமல் விட்டது என்று நினைத்துக்கொள்வோம்.