PDA

View Full Version : உன்னருகில் நானிருந்தால்.....!



வசீகரன்
23-08-2007, 02:31 PM
உனதருகில் இருக்கையிலே இதயம்
சிலிர்க்கிறேன்....

உளமலர்ந்து உரைக்கும் மொழிகளில்
உயிர் துளிர்க்கிறேன்...

கனி வாய் மலர்ந்து
கனிவாய் கனிந்து கதைகள் பல
கதைத்திடு கண்ணே...!

கணம் இமைக்காமல் காது மடுத்து
கதைப்புகளை கவிதையாக்கி
காதல் சிறப்பேன் முன்னே...

காலம் பல கடந்து காதல்
தடம் நடந்து காவியம் படைப்போம்
பெண்ணே..!

என்றும் தமிழுடன்
வசீகரன்

அக்னி
23-08-2007, 02:37 PM
காலம் பல கடந்து,
காதல் தடம் நடந்து.
கவரும் சொல்லாடல்... பாராட்டுக்கள் வசீகரன்...

காதல் வந்தது,
இதயம் துளிர்த்தது...
காதல் சென்றது...
இரத்தம் துளிர்த்தது...

அமரன்
23-08-2007, 03:09 PM
அப்ப்பா என்னே மழை...காத்து இல்லை. ஆனாலும் தூவானம் அதிகமாக இருக்கே...தாழ்வாரத்தையும் தாண்டி பூட்டிய வீட்டுக்குள்ளும் வருகிறதே...! ஓ..காதல் வானம் சிந்தும் மழையல்லவா..அதுதான் இப்படி.
அருமை வசீகரன். பாராட்டுக்கள். தொடருங்கள்.

வசீகரன்
24-08-2007, 05:20 AM
நன்றி அக்னி அவர்களே.....!

வசீகரன்
24-08-2007, 05:22 AM
அப்ப்பா என்னே மழை...காத்து இல்லை. ஆனாலும் தூவானம் அதிகமாக இருக்கே...தாழ்வாரத்தையும் தாண்டி பூட்டிய வீட்டுக்குள்ளும் வருகிறதே...! ஓ..காதல் வானம் சிந்தும் மழையல்லவா..அதுதான் இப்படி.
அருமை வசீகரன். பாராட்டுக்கள். தொடருங்கள்.
நன்றி அமரன் அவர்களே....!

சிவா.ஜி
24-08-2007, 05:24 AM
காதலுரைக்கும் காந்த வரிகள். கடைசி வரிகள் கவிதையின் மகுடமாக ஜொலிக்கிறது.வாழ்த்துக்கள் வசீகரன்.

வசீகரன்
24-08-2007, 05:48 AM
காதலுரைக்கும் காந்த வரிகள். கடைசி வரிகள் கவிதையின் மகுடமாக ஜொலிக்கிறது.வாழ்த்துக்கள் வசீகரன்.
மிக்க நன்றி அன்பரே...

ஓவியன்
26-08-2007, 02:08 AM
மனம் கவர்ந்தவள் செய்கை எல்லாமே இன்பமே எல்லாக் காதலுனுக்கும்...........

நல்ல வார்த்தைத் தெரிவுகள் வசீகரன் − வாழ்த்துக்கள்!.