PDA

View Full Version : அப்பா அம்மா.



சாராகுமார்
23-08-2007, 12:39 PM
அப்பா அம்மா
வளர்த்தார்கள்
கஷ்டப்பட்டு..
படிக்க வைத்தார்கள்
கஷ்டப்பட்டு..
வேலை வாங்கி தந்தார்கள்
கஷ்டப்பட்டு..
கல்யாணம் செய்து வைத்தார்கள்
கஷ்டப்பட்டு..

கடைசியில்
அநாதை இல்லத்தில்
கஷ்டப்பட்டு.

அக்னி
23-08-2007, 12:44 PM
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு
நஷ்டப்பட்டாலும்,
இஷ்டப்பட்டு வாழ்த்தும்
உள்ளங்கள் அல்லவா
பெற்றவர்கள்...

காலத்திற்கேற்ற கவியொன்று...

இன்று உன் பெற்றோர்...
நாளை நீயும் பெற்றோர்...
உணராத உள்ளங்களின்,
உணர்ச்சியில்லாத செயலாக்கம்...
முற்றுப்பெறவேண்டிய,
புறக்கணிப்பு...

பாராட்டுக்கள் சாராகுமார்...

இதயம்
23-08-2007, 12:46 PM
கசக்கும் உண்மையை சொல்லும் கவிதை.! இந்த மருந்து கசந்தாலும் காலம் இளைஞர்களுக்கு புகட்ட வேண்டும் என்பது என் விருப்பம்.

பாராட்டுக்கள் சாரா..!

சிவா.ஜி
23-08-2007, 12:55 PM
இன்று பெருமளவில் நடந்துகொண்டிருக்கும் கொடுமை இது.அக்னியின் கூற்றுபோல நாளை இவர்கள் நிலையும் இதுதானென்று ஏன் இந்த கல்நெஞ்சுக்காரர்களுக்கு தெரிவதில்லை. உணர்த்தும் கவிதை வாழ்த்துக்கள் சாராகுமார்.

இணைய நண்பன்
23-08-2007, 12:58 PM
நல்ல கருத்து.சாராகுமார் உங்கள் சேவை வளரட்டும்...

ஷீ-நிசி
23-08-2007, 02:51 PM
அப்பா அம்மா
வளர்த்தார்கள்
கஷ்டப்பட்டு..
படிக்க வைத்தார்கள்
கஷ்டப்பட்டு..
வேலை வாங்கி தந்தார்கள்
கஷ்டப்பட்டு..
கல்யாணம் செய்து வைத்தார்கள்
கஷ்டப்பட்டு..

கடைசியில்
அநாதை இல்லத்தில்
கஷ்டப்பட்டு.

அப்பா அம்மா....

வளர்த்தார்கள்,
கஷ்டப்பட்டு!

படிக்க வைத்தார்கள்,
கஷ்டப்பட்டு!

வேலை வாங்கி தந்தார்கள்,
கஷ்டப்பட்டு!

கல்யாணம் செய்து வைத்தார்கள்,
கஷ்டப்பட்டு!
(கல்யாணம் முடித்தார்கள்...னு வார்த்தைகளை சுருக்கலாம்)

கடைசியில்...
வாழ்க்கையை கழிக்கிறார்கள்,
கஷ்டப்பட்டு....

முதியோர் இல்லத்தில்.....


சாராகுமார்.. உங்க கவிதைதான்... மாற்றவில்லை... படிப்பவர் கவிதையை உணரும் விதம் எங்கே பிரித்தால் அழகாக மாறும் என்று மாற்றி மாற்றி பாருங்கள்.. இந்த வகை கவிதையில் கடைசி வரிகள் தான் கவிதையை தூக்கி நிறுத்தும்.


அவங்க எல்லாம் கஷ்டப்பட்டு செய்தாங்க... கடைசியில் அநாதை இல்லத்தில் இருக்கிறாங்க.. இத வச்சி தான் வடிச்சிருக்கீங்க கவிதையை.. அதனால் அந்த அநாதை இல்லத்தில் இருக்கிறாங்கனு கடைசியா சொன்னா நல்லாருக்கும்! அநாதை இல்லம் என்பதை முதியோர் இல்லத்தில்னு மாத்தியிருக்கேன்..

தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!

அமரன்
23-08-2007, 03:01 PM
தாமரை இலை நீர்களாக பெற்றோரின் நிலமை.
பாராட்டுக்கள் சாராகுமாருக்கும் அக்னிக்கும்.
கவியை கவினாக்கிய ஷீக்கு அன்பான கட்டளை தொடர்க...

அக்னி
23-08-2007, 03:03 PM
தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!

நானும் கற்றுக் கொண்டேன் ஷீ−நிசி... நன்றி...

சாராகுமார்
23-08-2007, 03:04 PM
ஷி−நிசி அவர்களே,உங்கள் கவிதை அருமை.

ஷீ-நிசி
23-08-2007, 03:18 PM
ஷி−நிசி அவர்களே,உங்கள் கவிதை அருமை.

ஏற்றுகொள்ளும் உங்கள் பண்பிற்கு, அன்பிற்கு தலை வணங்குகிறேன்....

ஒரு திருத்தம்... என் கவிதையல்ல.. உங்கள் கவிதை...

நான் பொட்டு வைத்து பூ வைத்து அழகு பார்த்தால், நீங்கள் பெற்றெடுத்த குழந்தை எனதாகிவிடுமா?!

சாராகுமார்
23-08-2007, 03:27 PM
[QUOTE=ஷீ-நிசி;261622]ஏற்றுகொள்ளும் உங்கள் பண்பிற்கு, அன்பிற்கு தலை வணங்குகிறேன்....

ஒரு திருத்தம்... என் கவிதையல்ல.. உங்கள் கவிதை...

நான் பொட்டு வைத்து பூ வைத்து அழகு பார்த்தால், பொட்டு வைத்து பூ வைத்தால் தான் அழகு நண்பரே.

]

lolluvathiyar
23-08-2007, 03:31 PM
கவிதை அருமை சாராகுமார்


கடைசியில்
அநாதை இல்லத்தில்
கஷ்டப்பட்டு.

இந்த காலத்துல பிள்ளைகளோட இருப்பவதை விட அனாதை இல்லம் கஷ்டமானது அல்ல, சுகமானது

இனியவள்
23-08-2007, 07:17 PM
கஷ்டங்களின் மத்தியில்
கடமையை அன்போடு
செய்தவர்களை...

கஷ்டமின்றி அனுப்பி
வைக்கின்றோம் முதியோர்
இல்லம்..

இன்று வந்தவளின்
வார்த்தைக்கு அடிமையாகி
எம்மை வளர்த்து ஆளாக்கிவிட்ட
தெய்வங்களை உதறித் தள்ளிவிடுகிறது
எமக்குள்ளே மிருகமாய் வளர்ந்து
விட்ட ஆசைகள்

வாழ்த்துக்கள் தோழரே கவிக்கு

ஷீயின் பின்னூட்டத்தில் கற்றுக்கொண்டேன்
நிறைய நன்றி ஷீ