PDA

View Full Version : தாய்த்தொடர்வண்டி...!!பூமகள்
23-08-2007, 08:02 AM
http://img32.picoodle.com/img/img32/9/8/23/poomagal/f_29753021299m_bb6793e.jpg

நள்ளிரவு ரயில் பயணம்
நங்கூரமிட்ட நிமிடங்கள்..
நகரும்மெல்ல நினைவலைகள்..

மழைத்தூரல் பட்டு
மனம் நனையும் விந்தை..

பனிக்காற்று படிந்துவந்து
சில்லிப்பூட்டும்
சின்ன உள்ளத்தை..

தண்டவாள தாளத்தோடே
ஒய்யார நினைவோட்டம்..

வெளிச்ச மின்மினிகளாய்
ஆங்காங்கே தெரியும்
அகங்கள் அழகே..
சன்னலோர பயணத்துக்கு
ஈடில்லையென்றுணர்த்தும்..

கவிகள் பல ஆக்கும்
அந்த பயணத்தின் ஆரம்பமே..

துணைக்கு வரும் நிலவு மட்டும்
துடைத்து விடும் இரவை மெல்ல..

தூக்கத்தை விடுத்து
தூரவானம் பார்த்தபடி
சொர்க்கம் எட்டும்
சன்ன எண்ணோட்டம்..

தாயின் மடியில்
துய்த்த நினைவை
திரும்ப வைக்கும்
தாய்த்தொடர்வண்டி..!!

சிவா.ஜி
23-08-2007, 08:10 AM
அடடா....தொடர்வண்டியின் அசைவை தாய்மடிக்கு ஒப்பிட்டு பார்த்த அழகான கவிதை.மனசு லேசாகிறது.அனுபவித்ததின் மிச்சம் வந்து நினைவூட்டி மகிழ்விக்கிறது. விவரணங்கள் பொருத்தமாய் பொருந்துகிறது.

நல்லிரவு ரயில் பயணம்
நங்கூரமிட்ட நிமிடங்கள்..
நகரும்மெல்ல நினைவலைகள்..
நங்கூரமிட்ட நிமிடங்கள்......அழகான வார்த்தைப் பிரயோகம்.சிறிய எழுத்துப்பிழை மட்டும் மாற்றப்படவேண்டும்....நள்ளிரவு என்று.
மீண்டும் ஒரு உள்ளம் தொடும் கவிதை.வாழ்த்துக்கள் பூமகள்.

பூமகள்
23-08-2007, 08:23 AM
நல்லிரவு ரயில் பயணம்
நங்கூரமிட்ட நிமிடங்கள்..
நகரும்மெல்ல நினைவலைகள்..
நங்கூரமிட்ட நிமிடங்கள்......அழகான வார்த்தைப் பிரயோகம்.சிறிய எழுத்துப்பிழை மட்டும் மாற்றப்படவேண்டும்....நள்ளிரவு என்று.
மீண்டும் ஒரு உள்ளம் தொடும் கவிதை.வாழ்த்துக்கள் பூமகள்.

தங்களின் விமர்சனத்திற்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் சகோதரரே.
தாங்கள் அன்புடன் சுட்டிக்காட்டிய படி.. நான் எழுத்துப் பிழையை சரிசெய்து விட்டேன்.
நாம் நல்லிரவை − நல்ல இரவு என்றும் பொருள் கொள்ளலாமே...???
அதன்படி தான் நான் நினைத்து எழுதினேன்.

நன்றிகள் அன்பரே.

சிவா.ஜி
23-08-2007, 08:26 AM
மன்னிக்கவும் பூமகள்,,நிலவு,அமைதி என்றதும் நள்ளிரவோ என்று நினைத்துவிட்டேன்.அழகான சொல்லைத்தான் பயன்படுத்தியிருக்கிறீர்கள்.
தவறுக்கு வருந்துகிறேன்.

பூமகள்
23-08-2007, 09:32 AM
மன்னிக்கவும் பூமகள்,,நிலவு,அமைதி என்றதும் நள்ளிரவோ என்று நினைத்துவிட்டேன்.அழகான சொல்லைத்தான் பயன்படுத்தியிருக்கிறீர்கள்.
தவறுக்கு வருந்துகிறேன்.

பரவாயில்லை சிவா.ஜி அவர்களே.. நீங்களும் சரியான சொல்லைத்தான் சுட்டிக் காட்டினீர்கள்..
நன்றிகள் சகோதரரே.

அமரன்
23-08-2007, 09:49 AM
எழுத்துக்கள் வசீகரிக்கின்றன. நங்கூரமிட்ட நிமிடங்கள் வார்த்தைபிரயோகம் வருடுகிறது. ஒரு ரயில் பயணத்தின் ஒலியையும் ஒளியையும் கவித்துவமாக நோக்கியதில் திறமை பளிச்சிடுகின்றது. மீண்டும் ஒரு பாராட்டு பூமகளுக்கு.

ரயில் பயணம் தொடர்பான எனது நினைவலைகளை தட்டி விட்டது கவி.

கரையில் உள்ள காற்றை
மொத்தமாக வாங்கிகொண்டு
மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கும்
தொடருந்தில் நானும்....!


தண்டவாளத் தாளத்துக்கு
மெட்டுக்கட்டி பாட்டிசைத்து
நர்த்தனமிடும் அலைகள்..!

கையசைத்து ஆர்ப்பரிக்கும்
மணலில் வீடு கட்டி
மகிழும் மழலைக் கூட்டம்
பதிலுக்கு அசைக்க முன்
பார்வையில் மறைந்திருக்கும்...

கறுப்பான முட்புதர்களை போல்
யன்னல் திறந்த ரயிலை
தண்ணீரடித்து குளிப்பாட்டி
களித்திருக்கும் காளையர் கூட்டம்.

தாயல்ல தொடர் வண்டி
புதிய உலகின் நுழைவாசல்

பூமகள்
23-08-2007, 10:03 AM
எழுத்துக்கள் வசீகரிக்கின்றன. நங்கூரமிட்ட நிமிடங்கள் வார்த்தைபிரயோகம் வருடுகிறது. ஒரு ரயில் பயணத்தின் ஒலியையும் ஒளியையும் கவித்துவமாக நோக்கியதில் திறமை பளிச்சிடுகின்றது. மீண்டும் ஒரு பாராட்டு பூமகளுக்கு.

ரயில் பயணம் தொடர்பான எனது நினைவலைகளை தட்டி விட்டது கவி.

கையசைத்து ஆர்ப்பரிக்கும்
மணலில் வீடு கட்டி
மகிழும் மழலைக் கூட்டம்
பதிலுக்கு அசைக்க முன்
பார்வையில் மறைந்திருக்கும்...

தாயல்ல தொடர் வண்டி
புதிய உலகின் நுழைவாசல்

ஆகா... மிகச் கச்சிதமான சொல்லாடல் அமர் அண்ணா. அழகான பின்னூட்டக் கவி. என் கவி, உங்கள் கவியால் மேலும் அழகுடன் மிளிர்கிறது.
தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி அண்ணா.

இணைய நண்பன்
23-08-2007, 10:10 AM
அழகான கவிதை.பார்த்தேன் ரசித்தேன்.நன்றி

பூமகள்
23-08-2007, 10:15 AM
அழகான கவிதை.பார்த்தேன் ரசித்தேன்.நன்றி

நன்றிகள் அன்புச் தோழர் இக்ராம் அவர்களே..!

lolluvathiyar
23-08-2007, 11:54 AM
ரயில் பயனத்தை தித்திக்கும் கவிதையாய் எழுதியது அருமைசன்னலோர பயணத்துக்கு
ஈடில்லையென்றுணர்த்தும்..
கவிகள் பல ஆக்கும்
அந்த பயணத்தின் ஆரம்பமே..


அருமையாக இருந்தாலும் நீங்கள் போட்ட ரயில் படத்துக்கு பொருந்தாது. படத்தில் இருப்பது நீராவி என்ஞின் வண்டி (இன்று புலக்கத்தில் இல்லை). அதில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தால் முகமெல்லாம் புகை அடித்து கொண்டே இருக்கும்

இந்த வகை வண்டியில் நான் சிறியனாக இருக்கும் போது பயனம் செய்திருகிறேன்

அக்னி
23-08-2007, 12:18 PM
தாய்மையின் பரிவோடு,
பாதுகாப்போடு,
ஆயிரம் கருக்கள் சுமக்கும்,
கருவறைகளின் தொகுப்பு..,
புகையிரதம்...

வித்தியாசமான ஒரு கவிப்பூ தந்த பூமகளுக்குப் பாராட்டுக்கள்...
விமர்சித்த சிவா.ஜி,
பதில் கவியில் சிறப்பித்த அமரன்,
நுணுக்கமான பார்வையில், ஆராய்ந்த லொள்ளுவாத்தியார்,
அனைவரின் சிறப்பான பின்னூட்டங்களுக்கும் பாராட்டுக்கள்...

இனியவள்
23-08-2007, 07:20 PM
அழகிய கவி பூமகள் வாழ்த்துக்கள்

பூமகள்
24-08-2007, 05:03 AM
தாய்மையின் பரிவோடு,
பாதுகாப்போடு,
ஆயிரம் கருக்கள் சுமக்கும்,
கருவறைகளின் தொகுப்பு..,
புகையிரதம்...

வித்தியாசமான ஒரு கவிப்பூ தந்த பூமகளுக்குப் பாராட்டுக்கள்...


ஆகா... ஒருபக்கத்தில் நான் சொல்லவந்ததை.. 4 வரிகளில் அடக்கிவிட்டீரே.. அருமை அக்னி அவர்களே...
தாயின் கருவறை தொகுப்பாய் புகையிரதம் பார்த்த சிந்தனை அற்புதம்..

பாராட்டுதலுக்கு நன்றி அண்ணா.

பூமகள்
24-08-2007, 05:07 AM
ரயில் பயனத்தை தித்திக்கும் கவிதையாய் எழுதியது அருமை

அருமையாக இருந்தாலும் நீங்கள் போட்ட ரயில் படத்துக்கு பொருந்தாது. படத்தில் இருப்பது நீராவி என்ஞின் வண்டி (இன்று புலக்கத்தில் இல்லை). அதில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தால் முகமெல்லாம் புகை அடித்து கொண்டே இருக்கும்

இந்த வகை வண்டியில் நான் சிறியனாக இருக்கும் போது பயனம் செய்திருகிறேன்

மிக்க நன்றி வாத்தியார் அவர்களே.. எனக்கு ரயில் பற்றி உங்கள் அளவுக்கு பரிச்சியம் இல்லை.. நீராவி என்ஞின் ரயில் என்று நீங்கள் சொல்லியே நானறிந்தேன்.
தகவலுக்கு நன்றி சகோதரரே... :nature-smiley-003:

பூமகள்
24-08-2007, 07:56 AM
அழகிய கவி பூமகள் வாழ்த்துக்கள்

நன்றிகள் சகோதரரி.. தங்களின் அன்பிற்கும் வாழ்த்துக்களுக்கும்.. :nature-smiley-002:

இலக்கியன்
24-08-2007, 09:10 AM
தொடர் வண்டிப்பயணம் அற்புதமாக சித்தரித்தீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி. நானும் பயணம் செய்யும் போதும் ஒரு கடதாசியும் பேனாவும் என் கையில் இருக்கும்

ஷீ-நிசி
24-08-2007, 09:21 AM
தாயின் மடியில்
துய்த்த நினைவை
திரும்ப வைக்கும்
தாய்த்தொடர்வண்டி..!!

தொடர்வண்டியில் அமர்ந்து அது தண்டவாளத்தில் ஆடியபடி செல்லும் உணர்வினை, ஒரு தாயின் மடியில் பயணிப்பதாய் ஒப்பிட்ட அழகு, சில பயணங்களில் கிடைக்கத்தான் செய்கிறது...


கூடவே வரும் நிலா....
பின்னோக்கி செல்லும் மரம், செடிகள்...
அங்கங்கே தோன்றி மறையும்
செயற்கை ஒளிகள்...

கம்பி வழியே வந்து செல்லும்.. சொல்லும் பல சேதியினை...

மனம் மட்டும் ஆயிரமாயிரம் எண்ணங்களால் அலைமோதிகொண்டிருக்கும்...

வாழ்த்துக்கள் பூமகள்...

இரயில் வண்டியில் பயணித்த ஓர் உணர்வு...

பூமகள்
24-08-2007, 09:31 AM
தொடர் வண்டிப்பயணம் அற்புதமாக சித்தரித்தீர்கள் வாழ்த்துக்கள்.
நன்றிகள் இலக்கியன்... தொடர்ந்து விமர்சியுங்கள்.. :medium-smiley-065:

பூமகள்
24-08-2007, 09:39 AM
வாழ்த்துக்கள் பூமகள்...
இரயில் வண்டியில் பயணித்த ஓர் உணர்வு...

ஆமாம் ஷீ−நிசி. அத்தகைய பயணம் தரும் சுகமே அலாதி.
நன்றிகள் சகோதரரே...!:nature-smiley-009:

ஓவியன்
25-08-2007, 11:37 AM
ஈழத்தின் தென் பகுதியில் படிப்புக்காக தங்கி இருந்து பின் விடுமுறைகளில் நீண்ட இரயில் பயணம் ஒன்றின் முடிவில் பிறந்த மண்ணைத் தொட்ட எத்தனையோ தொடரூந்து இரவுகளை ஞாபக்ப் படுத்தியது உங்கள் கவிதை பூமகள்!. அப்போது எனக்கு அந்த பிரயாணங்கள் பிடிப்பதில்லை, தூக்கம் தொலைத்து ஏக்கம் பிடித்து அபாயகரமான பிரதேசங்களூடு பயணித்து (அந்த பகுதிகளின் நிலமை அப்படி.......) தன் அசைவோடு நம்மையும் குலுக்கி, குலுக்கி ஒவ்வொரு எலும்புகளையும் இடம் மாற்றி வேதனைகளைத் தந்ததாகவே எனக்கு ஞாபகம்............!

ஆனால் அந்த வேதனைகளின் முடிவிலே உதிக்கப் போகும் பிறந்த மண்ணின் வாசத்தை நினைக்கையில் அந்த சுமைகளெல்லாம் சுகமாகிவிடும். வீட்டுக் கதவைத் தட்டி உள்ளே நுளைகயில் ஓடிவந்து கால்களைச் சுற்றி என்னைக் கட்டியணைத்து வரவேற்கும் என் செல்ல நாயைக் கண்டவுடனேயே அந்த தொடரூந்தே என் ஞாபகப் பேழையில் இருந்து நழுவி விடும். வீட்டினுள் ஓடிச் சென்று அம்மாவின் மடியில் தலை வைக்கையில் அந்த வலிகளெல்லாம் பறந்து விடும்.........!

ஆனால் இங்கே உங்கள் கவிதை அந்த நான் கண்ட யதார்த்ததிற்கு நேர் விரோதமாக எழிலூட்டி, எங்கே நான் அந்தக் காலங்களில் இனிமையான இரயில் பயணங்களை இனிமையாக அனுபவிக்காமல் இழந்து விட்டேனோ என்று ஏங்க வைக்கின்றது சகோதரி...........


மீள அத்தகைய பயணங்கள் வருகையில் உங்கள் கவிதையை நினைத்துக் கொள்வேன், அந்த ஏகாந்த சூழலை அனுபவிக்க முயல்கின்றேன்...........

அழகான வரிகள் சுமந்த அழகுக் கவிதைக்குப் பாராட்டுக்கள் பூமகள்!. :aktion033:

பூமகள்
26-08-2007, 06:10 AM
இங்கே உங்கள் கவிதை அந்த நான் கண்ட யதார்த்ததிற்கு நேர் விரோதமாக எழிலூட்டி, எங்கே நான் அந்தக் காலங்களில் இனிமையான இரயில் பயணங்களை இனிமையாக அனுபவிக்காமல் இழந்து விட்டேனோ என்று ஏங்க வைக்கின்றது சகோதரி...........

மீள அத்தகைய பயணங்கள் வருகையில் உங்கள் கவிதையை நினைத்துக் கொள்வேன், அந்த ஏகாந்த சூழலை அனுபவிக்க முயல்கின்றேன்...........
அழகான வரிகள் சுமந்த அழகுக் கவிதைக்குப் பாராட்டுக்கள் பூமகள்!. :aktion033:
ஆமாம் ஓவியரே..
மரணத்தின் வாசல் வழியே பயணிக்கையில் பயணத்தை எப்படி ரசிக்கமுடியும்.??:confused:
முற்பாதையில் நீங்களும் உங்களைப் போன்ற பல்லாயிரக் கணக்கான நம் தமிழ் நெஞ்சங்களும் பயணிப்பது வேதனையான விசயம்...அவர்களை நினைத்து மனம் வருந்துகிறேன்....:traurig001:

இனி வரும் பயணங்களாவது உங்களுக்கும் அனைத்து ஈழத்தமிழர்களுக்கும் சந்தோசம் தரும் தொடருந்துப் பயணமாக அமைய வேண்டிக்கொள்கிறேன்.

நன்றிகள் கோடி உங்களின் அழகான விமர்சனத்திற்கும் வாழ்த்துக்களுக்கும்!!

ஆதவா
29-08-2007, 06:28 PM
தூள் அக்கா..

கருவறையாய் வண்டி.... அக்னியின் நான்குவரியைத் தாண்டி மூளையில் எதுவும் பிடிபடவில்லை...

சில்லிப்பூட்டும் என்றால் என்ன? (சிலிர்ப்பூட்டும் ஆ?)

சில இடங்களில் யோசிக்க வைக்கிறது எழுத்துக்கள். நங்கூரமிட்ட நிமிடங்கள், நிலவு துடைக்கும் இரவு, போன்றவை... இரயில் பயணங்களின் போது பல கவிதைகள் உதிக்கும்.

கீழ்கண்ட கவிதையே பின்னூட்டமாக்கி இடுகிறேன்.. (விரிவான விமர்சனமிடாமைக்கு மன்னிக்கவும்.)


ரயில் ஜன்னலோரங்களில்
ஓரிரு வசதிகள்.
பேருந்தைப் போல
பிச்சையெடுப்பவர் எவருமில்லை.
------------------
கக்கூஸுக்கு அருகே
காய்ந்து போன பிஸ்கட்டை
நக்கிக் கொண்டிருக்கும்
இரு சிறுமிகளோடு
பயணிக்கிறது ரயில்வண்டி
----------------
ஜன்னலோரத்தில் அமர்ந்து
நினைத்தபடி துப்பலாம்.
யார்மீதாவது விழும் என்ற
பயமில்லை.

பூமகள்
07-09-2007, 02:05 PM
அழகுப் பின்னூட்டம் அன்புத் தம்பி ஆதவா.. அருமையான பின்னூட்டக் கவி..!
நன்றிகள் ஆதவா..!