PDA

View Full Version : தலையணை சுகம்alaguraj
23-08-2007, 07:32 AM
பட்டினத்தார் துறவியாக ஊர் ஊராக அலையும் போது நடந்த நிகழ்ச்சி இது.

ஒரு முறை அசதியில் வயல் வரப்பில் தலை வைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தார். அந்த வழியே சென்ற பெண்கள் இருவர் 'இந்தச் சாமியாரைப் பாரேன். எல்லாத்தையும் விட்டுட்டு வந்தும் தலைக்கு தலையணை வேணுங்கற சுகம் மட்டும் போகலையே. தலைக்கு வரப்பு தேவைப்படுது பாரு' என்று சொல்லிக் கொண்டே சென்றனர். அதனைக் கேட்டுத் துணுக்குற்றப் பட்டிணத்தார் உடனே வரப்பில் இருந்து தலையை எடுத்து வயல் வெளியிலேயே வைத்துக் கொண்டு உறங்கினார்.

அவ்வழியே சென்ற பெண்கள் மீண்டும் திரும்பி வந்தனர். அப்போது பட்டினத்தார் வரப்பிலிருந்து தலையை எடுத்துக் கீழே வைத்திருப்பதைப் பார்த்து, 'ஆகா. இந்தச் சாமியாரைப் பாரடி. ஒரு சொல் பொறுக்க மாட்டேங்கறார். நாம தலையணை சுகம் தேவையா இவருக்குன்னு கேட்டோம். உடனே வரப்புல இருந்து தலையை எடுத்துக் கீழ வச்சுட்டாரு. என்ன இருந்தாலும் நம்மளை யாரும் தப்பா சொல்லிடக்கூடாது, இன்னும் நான் என்ற எண்ணம் போகலை பாரு' என்றாள் அந்தப் பெண்.

படிக்காத அந்தப் பெண்களின் அறிவின் பெருமையை எண்ணி வியந்தார் பட்டினத்தார்.

பின்னர் பட்டினத்தார் உணர்ந்து கொண்டார் வந்தது வேறு யாருமல்ல, அம்பிகைதான் என்று.

gayathri.jagannathan
23-08-2007, 07:38 AM
தவறு செய்தாலும் சுட்டிக் காட்டினால் பொறுக்காத மக்கள் நிறைய உண்டு இங்கு...

ஆனால் ,தனக்கு தெரியாததை யார் சொன்னாலும் கேட்டு மேற்கொள்கின்ற பட்டினத்தாரின் பாங்கு வியக்க வைக்கின்றது...

சிவா.ஜி
23-08-2007, 07:41 AM
மிகப்பெரிய தத்துவங்களையும்..மிகச்சாதாரனமாக சொல்வது கிராமத்து பெண்களுக்கே உரிய அரிய திறமை.பட்டுத்தான்.....பட்டினத்தாராய் ஆனார் அந்த பட்டினத்தார்.....ஆனால் இப்போதெல்லாம் எத்தனைப் பட்டும் திருத்திக்கொள்ளாத பட்டனத்தார்தான் அதிகம்.

அமரன்
23-08-2007, 07:54 AM
சுவையான சம்பவம். சொல்வது யாராகினும் நல்லது எனில் கவனத்தில்கொள்ளவேண்டும் என்ற கருத்து விதைத்த சம்பவம். பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி அழகுராஜ்.

மனோஜ்
23-08-2007, 08:29 AM
நல்ல கதை நன்றி

தளபதி
23-08-2007, 09:20 AM
இந்த கதையை படித்ததும், எனக்கு முல்லாவும் அவரது மகனும் குதிரையில் சென்றக்கதைத்தான் ஞாபகம் வருகிறது.

இருவரும் ஒரு குதிரையில் அமர்ந்து செல்லும்போது, அவ்வழி வந்த மனிதர்கள் "பாரு, இரண்டு பேர் ஒரு குதிரையில் ஏறிக்கொண்டு செல்வதை??" என்று சொல்ல, உடனே, முல்லா, தான் இறங்கிக்கொண்டு, மகனை மட்டும் குதிரையில் அமர்த்திவிட்டு, அவர் குதிரையுடன் நடந்து சென்றார்.

பிறகு வந்த மனிதர்கள், "பாரு, வயதானவன் நடந்து வர, சின்ன பையன் குதிரையில் அமர்ந்து வருவதை??" என்றுக் கூற, உடனே, பையன் இறங்கிக் கொண்டு தந்தையை குதிரையில் ஏற்றிவிட்டான்.

பிறகு வந்த மனிதர்கள், "பாரு, சின்ன பையன் நடந்துவர, பெரிய மனிதர் குதிரையில் அமர்ந்து வருகிறார்". என்று கூற. "என்னடா இது?? பெரிய வேதனையாக போய்விட்டது" என்று, இருவரும் இற்ங்கிக்கொண்டு, குதிரையுடன் நடந்து சென்றனர்.

பிறகு வந்தவர்கள், "பாரு, குதிரையை வைத்துக்கொண்டு இருவரும் நடந்து செல்வதை??" என்று கூற. முல்லா மிகவும் குழம்பிப்போனார். பிறகு "இனி சொந்தமாக முடிவு எடுப்பது" என்று முடிவு எடுத்தார்.

நன்றி அழகு.. பெரியோர்களின் வாழ்வில் நிறைய நிகழ்ச்சிகள், நெஞ்சை உருக்குவதாகவும், வாழ்க்கைக்கு முக்கியமானதாகவும் இருக்கும். நன்றி.

மீனாகுமார்
23-08-2007, 03:45 PM
அருமையான கதைகள் தந்த அழகுக்கும் தளபதிக்கும் நன்றிகள்....

வளர்க உங்கள் கதைகள்..

ஷீ-நிசி
23-08-2007, 03:48 PM
பட்டினத்தார் கதையும் முல்லா கதையும் சிறப்பாக இருந்தன.....

நாம் நமக்காக வாழவேண்டும்... அடுத்தவருக்காக வாழக்கூடாது...

நன்றி நண்பர்களே!

அறிஞர்
23-08-2007, 07:15 PM
இரு கதைகளும் அருமை...

சொந்த புத்தி வேண்டும்... நான் என்ற நினைப்பு மாறனும்.

தங்கவேல்
24-08-2007, 02:11 AM
பட்டினத்தார் , முல்லா கதைகள் − சொந்த புத்தி வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றன.. நல்ல கருத்தும் கதையும் தந்த அழகுக்கு வாழ்த்துக்கள்.

aren
24-08-2007, 02:16 AM
உன்னிடம் இருக்கும் மூளையை உபயோகித்து முடிவுகள் எடு. மற்றவர்கள் சொல்படி எதுவும் செய்யாதே என்று சொல்லும் கதைகள். நன்றாக இருக்கின்றன. தொடருங்கள்.

ஓவியன்
24-08-2007, 03:04 AM
சில விடயங்களில் நாமாகவே சிந்தித்தே முடிவெடுக்க வேண்டும் என்பதற்கு அழகான எடுத்துக்காட்ட்டுக்கள் இரு அழகிய கதைகளும்.......

அருமை அழகுராஜ், தளபதி!
தொடர்ந்து இவ்வாறான கதைகளைத் தாருங்கள்!.

மாதவர்
24-08-2007, 03:13 AM
நல்ல நீதி

saguni
27-08-2007, 12:07 PM
முல்லாகதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. தற்போது அவற்றைப்படிப்பதே அரிதாகிவிட்டது. பட்டினத்தார் கதையும் அருமை. தந்த உங்களுக்கு நன்றி

அக்னி
27-08-2007, 12:12 PM
பிறர் கருத்துக்களைக் கேட்பினும், சிந்தித்து செயலாற்றுதலே, நம்மை நாமாக வைத்திருக்கும் என்பதை உணர்த்தும் இரு கதைகளும் அருமை...
நன்றி!