PDA

View Full Version : ஆபிஸ் நகைச்சுவை



pathman
23-08-2007, 05:11 AM
பத்மன் : வெர்க்கிங் டைமில் சீட்டு விளையாடினேன்னு சொல்லி எங்க எம்.டி என் சீட்டை கிழிச்சுட்டார்

க.பூ.க : அடடே அப்புறம் ?

பத்மன் : வேற சீட்டு வாங்கிட்டு வந்து மறுபடியும் விளையாடினோம்


க.பூ.க : என்னது உங்க ஆபிசிஸ்ல லஞ்ச் டைமே கிடையாதா ?

பத்மன் : ஆமாம் யார் யாருக்கு எப்பப்ப முழிப்பு வருதோ அப்பப்ப சாப்பிடுவோம்


பத்மன் : இன்ஸ்பெக்டர் நாங்க எல்லோரும் அசந்து தூங்கிட்டிருந்த நேரத்தில திருடன் வந்து பத்து லட்ச ரூபாய திருடிட்டு போய்ட்டான்

இன்ஸ்பெக்டர் : வீட்ல எதுக்கு அவ்வளவு பணம் வெச்சிருந்தீங்க

பத்மன் : சரியா போச்சு திருட்டு நடந்தது எங்க ஆபிஸ்ல!

lolluvathiyar
23-08-2007, 05:20 AM
அப்ப ஆபீசில் வேலையே நடப்பதில்லையா?

மலர்
23-08-2007, 07:59 AM
ஆகா...இது கூட நல்ல ஆபிஸா இருக்கே...
இந்த ஆபிஸில் ஒரு வேலை கிடைக்குமா...

சிவா.ஜி
23-08-2007, 08:16 AM
நல்ல ஆபீஸ் நல்ல ஊழியர்கள்...வெளங்கினாமாதிரிதான்.....மலரோட சேர்ந்து எனக்கும் ஒரு வேலை பாருங்க பத்மன்...இப்பல்லாம் ராத்திரியில தூக்கமே வர்றதில்ல.

மலர்
23-08-2007, 08:21 AM
ஆபிஸில் தூங்கினால் ராத்திரி எப்படி தூக்கம் வரும்....சிவா.ஜி

சிவா.ஜி
23-08-2007, 08:24 AM
ஆபிஸில் தூங்கினால் ராத்திரி எப்படி தூக்கம் வரும்....சிவா.ஜி

அட இப்ப இருக்கிற ஆபீஸ்ல தூங்க முடியல்லங்க....அதேசமயம் ராத்திரியிலயும் தூக்கமில்ல....அதான் இப்படி ஒரு ஆபீஸ் இருந்தா நல்லாருக்குமேன்னுதான்....ஹீ..ஹீ..ஹீ....

மலர்
23-08-2007, 08:25 AM
அப்படியா....சரி கவலையை விடுங்கள்..
அடித்து பிடித்தாவது பத்மன் ஆபிஸில் வேலை வாங்கி விடலாம்..

சிவா.ஜி
23-08-2007, 08:28 AM
ரொம்ப நன்றிங்க மலர்.எனக்கு முன்னாடியே உங்களுக்கு வேலை கிடைத்தால் கொஞ்சம் எனக்கும் சிபாரிசு பன்னுங்க....

மலர்
23-08-2007, 08:32 AM
பண்ணிடலாம்...சிவா.ஜிக்கு பண்ணாமலா...

தளபதி
23-08-2007, 08:35 AM
மூன்று நகைச்சுவை மட்டும் தானா?? நிறைய எழுதுங்கள், படிக்கக் காத்திருக்கிறோம்.

மனோஜ்
23-08-2007, 08:40 AM
இதுமாதிரி ஆபிஸ் இந்தியாவில் இருந்தா இந்தியா சீக்கிரமா முன்னோறிடும்

அமரன்
25-08-2007, 08:43 AM
ஆஃபீஸ் போலவே அரட்டையால் கலகலப்பாக இருக்கிறது இத்திரி. ஜமாய்ங்க...
-அமரன்