PDA

View Full Version : பாவையும் பார்வையும்

சுகந்தப்ரீதன்
23-08-2007, 03:40 AM
எத்தனையோ பார்வைகள்
என்னவளை நோக்கி!
என்னவளின் பார்வையோ
என்னை நோக்கி!

அழகாய் பார்த்தாள்
முதல்பார்வை − அதில்
அடியோடு மறந்தேன்
என்வாழ்வின் சோர்வை!

அன்பாய் வீசினாள்
ஒருபார்வை அம்பை!
அடிமையாய் வீழ்ந்தேன்
பாவையின் அ(ம்)ன்பால்!

கண்களால் மீட்டினாள்
அவள் காதல்கீதத்தை!
மனதுக்குள் இசைத்தேன்
நான் மௌனராகத்தை!

காத்திருந்தேன் நான்
கடமைகளை மறந்து!
காணாமலே போனாள்
என்னையும் கடந்து!

கனிய தொடங்கியது
காதலும் அவளுக்கு!
களிப்புடன் இருந்தேன்
கற்பனைதான் எனக்கு!

மெல்ல விலகினாள்
என்னை விட்டு!
மெலிய தொடங்கினேன்
அவளை விட்டுவிட்டு!

இன்று வாழ்கிறாள்
யாரோ ஒருவனுடன்!
ஏனோ வாழ்கிறேன்
இன்னும் நினைவுகளுடன்?!

ஓவியன்
23-08-2007, 03:59 AM
கனவுகளும் நினைவுகளும்
மட்டும் தானோ
காதலின் பரிசுகள்...........!

என் மனதை உறுத்திய வரிகள் சுகந்தா.........
கரு பழமை என்றாலும் அதற்கு நீங்கள் கொடுத்த வரிகளின் பரிமாணம் அழகு.........

உங்கள் கவிதைகள் இன்னும் ஒரு படி மேல் நோக்கி ஏறிவிட்டன.....

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.......!

சிவா.ஜி
23-08-2007, 04:39 AM
எத்தனையோ பார்வைகள்
என்னவளை நோக்கி!
என்னவளின் பார்வையோ
என்னை நோக்கி!

இப்படி இருந்தவள்.....

இன்று வாழ்கிறாள்
யாரோ ஒருவனுடன்!

இப்படியானபின்........

ஏனோ வாழ்கிறேன்
இன்னும் நினைவுகளுடன்?!

இது எதற்கு...?

நினைவுகளின் சுமையால் இளைத்தால்....அவற்றை இழப்பதே மேல்...வாழ்க்கை வாழ்வதற்கே....உள்ளத்தை உணராதவளின் நினைவுகளை இல்லாமல் ஆக்கிவிட்டு..நில்லாமல் தொடரவேண்டும் இந்த அன்பு வாழ்க்கையை...வாழ்த்துக்கள் ப்ரீதன்.

அமரன்
23-08-2007, 09:05 AM
காதல்..
பிரபஞ்ச சுழற்சியின்
எத்தன விசையோ.
வியக்க வைக்கிறது...!

அப்படியானால்
காதலர் பிரிந்தும்
தொடர்ந்து சுழல்கிறதே எப்படி?
வியர்க்க வைக்கிறது.

இணைந்த காதலா
புதிதாக பிறந்த காதலா
தலை சுற்றியது
இக்கவி கண்ணில் படுவரை

காதல் நினைவுகளே
சுழலும் பூமிக்கு அச்சாணி.

ரம்மியமான வார்த்தைப் பிரயோகங்களுடன் கூடிய காதல் ஓவியம். பழசானலும் புதுசானாலும் குளிர்ச்சி தருபவை அல்லவா ஓவியங்கள். பாராட்டுக்கள் சுகந்தன்

sadagopan
23-08-2007, 09:22 AM
எத்தனையோ பார்வைகள்

இன்று வாழ்கிறாள்
யாரோ ஒருவனுடன்!
ஏனோ வாழ்கிறேன்
இன்னும் நினைவுகளுடன்?!

நினைத்து நினைத்து ரசித்து கொண்டிருக்கிறேன்

நீயும் நானும் காதலித்த அந்த நாட்களை

ஒருவேளை நாம் திருமணம் செய்திருந்தால் இந்த ரசனை தெரிந்திருக்காதோ?
_________________________________________________________________________
இனிய நினைவுக*ளை திரும்பி பார்க்க*வைத்த திரு சுகந்தப்ரீதன் அவ*ர்க*ளுக்கு என் மானமார்ந்த* ந*ன்றிக*ள்
நட்புடன்

சடகோபன்

மனோஜ்
23-08-2007, 09:25 AM
உண்மைகள் உரிக்கபடும் பொழுது மனம் சிறிது வெதும்பும் வெதும்பிய மனதை வேரு விதையில் முலைத்திடல் அவசியம் இல்லா விட்டால் மனது தரிசு நிலமாய் விடும் விளைச்சல்கள் அவதானிப்பதுதான் விவசாயம் அது பொல வாழ்வில் ஏற்படும தரிசுகளை நீங்கி மனம் விளைச்சலை எதிர் நிச்சலுடன் சமாளிப்பது தான் வாழ்க்கை நிரோடு சென்றால் அது செத்தமீனாவது உண்மை என்றும் உயிராக செயல்பட முயற்சித்தல் சிறப்பு

சுகந்தப்ரீதன்
23-08-2007, 12:21 PM
கனவுகளும் நினைவுகளும்
மட்டும் தானோ
காதலின் பரிசுகள்...........!

என் மனதை உறுத்திய வரிகள் சுகந்தா.........
கரு பழமை என்றாலும் அதற்கு நீங்கள் கொடுத்த வரிகளின் பரிமாணம் அழகு.........

உங்கள் கவிதைகள் இன்னும் ஒரு படி மேல் நோக்கி ஏறிவிட்டன.....

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.......!

நன்றி நண்பா!

சுகந்தப்ரீதன்
23-08-2007, 12:22 PM
[COLOR="Red"]

நினைவுகளின் சுமையால் இளைத்தால்....அவற்றை இழப்பதே மேல்...வாழ்க்கை வாழ்வதற்கே....உள்ளத்தை உணராதவளின் நினைவுகளை இல்லாமல் ஆக்கிவிட்டு..நில்லாமல் தொடரவேண்டும் இந்த அன்பு வாழ்க்கையை...வாழ்த்துக்கள் ப்ரீதன்.

உண்மைதான் சிவா....எனது நன்றிகள்!

சுகந்தப்ரீதன்
23-08-2007, 12:24 PM
காதல் நினைவுகளே
சுழலும் பூமிக்கு அச்சாணி.

சுகந்தன்

அமரன் மட்டுமே மன்றத்துக்கு அச்சாணி.
நன்றி நண்பரே!

சுகந்தப்ரீதன்
23-08-2007, 12:26 PM
நினைத்து நினைத்து ரசித்து கொண்டிருக்கிறேன்

நீயும் நானும் காதலித்த அந்த நாட்களை

ஒருவேளை நாம் திருமணம் செய்திருந்தால் இந்த ரசனை தெரிந்திருக்காதோ?
சடகோபன்

முன்பே சொல்லிவிட்டேன் கா.மு கா.பி பற்றி!

நன்றி நண்பரே!

சுகந்தப்ரீதன்
23-08-2007, 12:28 PM
உண்மைகள் உரிக்கபடும் பொழுது மனம் சிறிது வெதும்பும் வெதும்பிய மனதை வேரு விதையில் முலைத்திடல் அவசியம் இல்லா விட்டால் மனது தரிசு நிலமாய் விடும் விளைச்சல்கள் அவதானிப்பதுதான் விவசாயம் அது பொல வாழ்வில் ஏற்படும தரிசுகளை நீங்கி மனம் விளைச்சலை எதிர் நிச்சலுடன் சமாளிப்பது தான் வாழ்க்கை நிரோடு சென்றால் அது செத்தமீனாவது உண்மை என்றும் உயிராக செயல்பட முயற்சித்தல் சிறப்பு

அய்யோ அண்ணா...எதுக்கு இத்தனை விளக்கம்
எல்லாம் க*ற்ப*னைதான்?!

இருந்தாலும் ந*ல்ல* ஒரு உந்துத*ல் உங்க* வாக்கிய*த்தில்
வாழ்த்துக்க*ளும் ந்ன்றிக*ளும் ந*ண்ப*ரே!

இனியவள்
23-08-2007, 07:26 PM
கடந்து சென்ற
காதலை நினைவுகள்
கொண்டு மீட்டிப்பார்த்து
காலத்தோடு சேர்த்து
விரயமாக்குகின்றனர் வாழ்வையும்..

கடந்தவைகளை மறந்து விடு
முடியாவிடின் நினைக்காதிரு
வரப்போகும் வாழ்வை
புன்னகையோடு ஏற்றுவிடு

வாழ்த்துக்கள் சுகந்

சுகந்தப்ரீதன்
25-08-2007, 10:40 AM
..

கடந்தவைகளை மறந்து விடு
முடியாவிடின் நினைக்காதிரு
வரப்போகும் வாழ்வை
புன்னகையோடு ஏற்றுவிடு

வாழ்த்துக்கள் சுகந்

மிக்க நன்றி இனியா.....(எங்க போனிங்க ஆளையே காணும்?)