PDA

View Full Version : மன்ற மேற்ப்பார்வையாளர் கவனத்துக்கு



சக்திவேல்
22-08-2007, 10:20 PM
இந்தியா மதசார்பற்றநாடு என்று ஏன் சொல்லுகின்றோம் என்றதிரியில், பலரும் சொன்ன கருத்துக்கள் அப்படியா அனுமதிக்கப்பட்டு, நான் அத்திரியில் என் பதிலை ஒரு பின்னூட்டமாக பதித்த மறுநிமிடமே பூட்டப்பட்டு யாரும் படிக்கும் முன்னர் நீக்கப்பட்டது. ஆனால் பண்பட்டவர்பகுதியில் ஒரு திரி, பூட்டப்பட்டு யாரும் பதில் சொல்ல முடியாமல், மற்றவர்கள் பார்வைக்காகமட்டும் வைக்கப்பட்டுள்ளது.

கவணிக்க வேண்டுகிறேன்.

அறிஞர்
22-08-2007, 10:39 PM
எந்த பதிவு அன்பரே...

பொதுவாக பதிந்தவருக்கு சொல்லிவிட்டு மாற்றுவோம்.

எந்த பதிப்பு என கொஞ்சம் தெளிவாக கொடுக்க இயலுமா..

சக்திவேல்
22-08-2007, 10:49 PM
கற்பனை செருப்பு பேட்டி - செருப்பு எம்எல்ஏ. என்ற பதிவு, பூட்டப்படும் பிறகு நீக்கப்படும் என்று இளசு அவர்கள் சொல்லியிருந்தார்

அறிஞர்
22-08-2007, 10:53 PM
அந்த பதிவை என்னால் காண இயலவில்லை..

யாருடைய பதிவு அது...

சக்திவேல்
22-08-2007, 10:59 PM
நன்பர் அறிஞர் அவர்களே

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11529

இதை பார்க்கமுடியவில்லையா உங்களால்?

அறிஞர்
22-08-2007, 11:04 PM
இந்த பேட்டியால் என்ன பயன் எனத்தெரியவில்லை.

நண்பர் இளசுவிடம் விவரம் கேட்கிறேன்.. அல்லது அவரே இங்கு பதில் கூறுவார்.

சக்திவேல்
22-08-2007, 11:17 PM
ஒருவர் பதிந்த கருத்தை பிரச்சினையான பதிவு என்று, பூட்டிவைத்துவிட்டால் என்ன பொருள். பதிந்தகருத்தை எல்லோரும் படிக்கலாம், மாற்றுகருத்து யாரும் பதிக்க முடியாது என்றுதானே பொருள்?

அதுபோலவே, நான், இந்தியா மதசார்பற்றநாடு என்று ஏன் சொல்லுகின்றோம் என்றதிரியில் பின்னூட்டமிட்டதையும் பூட்டி அப்படியே வைத்திருக்கலாமே, எல்லோரும் படித்துகொன்டாவது இருந்திருப்பார்களே. ஏன் நீக்கிவிட்டீர்கள்?

அறிஞர்
22-08-2007, 11:24 PM
ஒருவர் பதிந்த கருத்தை பிரச்சினையான பதிவு என்று, பூட்டிவைத்துவிட்டால் என்ன பொருள். பதிந்தகருத்தை எல்லோரும் படிக்கலாம், மாற்றுகருத்து யாரும் பதிக்க முடியாது என்றுதானே பொருள்?

அதுபோலவே, நான், இந்தியா மதசார்பற்றநாடு என்று ஏன் சொல்லுகின்றோம் என்றதிரியில் பின்னூட்டமிட்டதையும் பூட்டி அப்படியே வைத்திருக்கலாமே, எல்லோரும் படித்துகொன்டாவது இருந்திருப்பார்களே. ஏன் நீக்கிவிட்டீர்கள்?

நீங்கள் சொல்கிறபடி பூட்டி வைக்கப்பட்டுள்ளது... நீக்கவில்லையே.. பண்பட்டவர் பகுதியில் சென்று படியுங்கள்.

இதில் மதசார்பற்ற நிலை எங்கு வருகிறது? தேவையற்ற வாதத்தை தவிருங்கள்...

நாம் வளர இன்னும் பல காரியங்களை சிந்திக்க வேண்டியிருக்கிறது... அரசியல்வாதிகள் நாட்டை குட்டிச்சுவராக்குவது போதும்... இங்கு பயனுள்ள, அனைவரும் இரசிக்க கூடிய தகவல்களை கொடுப்போம். வளருவோம்.

சக்திவேல்
23-08-2007, 01:35 AM
அறிஞர் அவர்களே,
நான் இரண்டு திரிகளைப்பற்றி சொல்லிக்கொன்டு இருக்கின்றேன்.

1)திரியின் பெயர் "இந்தியா மதசார்பற்றநாடு என்று ஏன் சொல்லுகின்றோம்" (நான் பதிந்த ஒரு பின்னூட்டம் காரனமாக இது நீக்கப்பட்டுவிட்டது.)

2). திரியின் பெயர் "கற்பனை செருப்பு பேட்டி" (இது நீக்கப்படாமல் இருக்கின்றது).

என்னுடைய கேள்வி : ஏன் முதலாவது திரியைமட்டும் அடியோடு நீக்கிவிட்டீர்கள்? ஏன் இரண்டாவது திரியை நீக்காமல் இருக்கிறீர்கள்?

aren
23-08-2007, 01:59 AM
நண்பர் சக்திவேல் அவர்களே,

இங்கே மேற்பார்வையாளர்களாகவும் உதவியாளர்களாகவும் இருப்பவர்கள் அனைவரும் இதை ஒரு உதவியாகவே செய்கிறார்கள். இதை முழுத்தொழிலாக செய்யவில்லை. சில சமயங்களில் அவர்கள் வேலை பளூ காரணமாக முழுமையாக மன்றத்தில் ஈடுபடமுடியாமல் போகும். அதனால் கவனித்திருக்க மாட்டார்கள்.

பூட்டிய திரியை உடனே அகற்றி நடவடிக்கை எடுப்பார்கள்.

இந்த விஷயத்தை இத்தோடு தயவுசெய்து நிறுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியன்
23-08-2007, 02:22 AM
விளக்கத்திற்கு நன்றி ஆரேன் அண்ணா!

அந்த திரி நீக்கப்பட்டது, இனிமேலும் இவ்வாறான பிரச்சினைகளை வராதிருக்க எல்லோரும் ஒன்றாக சேர்ந்தே இயங்குவோம்.

இளசு
23-08-2007, 06:10 AM
இங்கே மேற்பார்வையாளர்களாகவும் உதவியாளர்களாகவும் இருப்பவர்கள் அனைவரும் இதை ஒரு உதவியாகவே செய்கிறார்கள். இதை முழுத்தொழிலாக செய்யவில்லை. சில சமயங்களில் அவர்கள் வேலை பளூ காரணமாக முழுமையாக மன்றத்தில் ஈடுபடமுடியாமல் போகும். அதனால் கவனித்திருக்க மாட்டார்கள்.

பூட்டிய திரியை உடனே அகற்றி நடவடிக்கை எடுப்பார்கள்.

.

நன்றி வணக்கம்
ஆரென்

மிக்க நன்றி அன்பின் ஆரென்..


சில திரிகளை சில தினங்களுக்கு பூட்டிவைப்பது − பின்னர் அகற்றுவது
வழக்கமான மன்ற நடைமுறை..

இங்கே அதைச் செயல்படுத்துவதில் தாமதம்..

சுட்டிக்காட்டிய நண்பர் சக்திவேலுக்கு நன்றி..

செயல்படுத்திய ஓவியனுக்கு நன்றி..


வேறு ஏதாவது இதுபோல் விடுபட்டிருந்தாலும் சுட்டிக்காட்டுங்கள்... நன்றி..

lolluvathiyar
23-08-2007, 06:20 AM
என்னை பொருத்தவரை திரியை பூட்டுவதும் நீக்குவதும் தவறானது என்று தான் சொல்லுவேன்.
ஹிந்து மதத்தை பற்றி யார் என்ன அவதூறாக எழுதினாலும் அதை யாரும் நீக்க சொல்லி கோருவதில்லை. காரனம் சகிப்பு தன்மை. அதனால் நீக்க படுவதில்லை.
ஆனால் இதே மற்ற மதங்களை பற்றி செய்திதாளில் வருவதை கூட எழுதிவிட்டால் கூட மன்றத்தில் மத அவதூறு என்று குற்றசாட்டு எழுந்து திரி பூட்டும் படி ஆகிறது.
இது எனக்கு இந்த மன்றத்தில் மிகவும் வேதனை தரும் செயலாக இருகிறது. மற்றபடி மன்றத்தில் நிரை பயனுள்ள விசயங்கள் இருகிறது.

இதயம்
23-08-2007, 06:41 AM
ஹிந்து மதத்தை என்றில்லை. எந்த மத விவாதங்களும் இங்கே தேவையில்லை என்றே தோன்றுகிறது. காரணம், அதற்கான புரிந்துணர்வும், சகிப்புத்தன்மையும், உண்மை அறியும் நிலையும் நமக்குள் குறைவாக இருக்கிறது. மதவிவாதங்கள் ஆரோக்கிய தோற்றத்துடன் தோன்றி அவை அநாகரீக விவாதங்களோடு தொடர்கிறது. எனவே ஆன்மீகம், மூடநம்பிக்கைகள், தீவிரவாதம் போன்றவற்றை விவாதிக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் மதங்களை நுழைத்து உள்நோக்கத்துடன் ஏற்படுத்தப்படும் திரிகளை இனம் கண்டு அதற்கு பூட்டு மட்டும் போடாமல் உடன் நீக்கிவிடுவது சிறந்தது. காரணம், அது நீக்கப்படாமல் இருந்தால் அது படிப்பவர்களின் மனதை புண்படுத்தும். இது போன்ற திரிகளை தொடர்ந்து ஏற்படுத்துபவர்களுக்கு ஆரம்ப எச்சரிக்கை செய்யப்பட்டு, அதை அவர் தொடரும் பட்சத்தில் அவர் கணக்கை முடக்க வேண்டும்.

எத்தனை அழகான மன்றம் இது..? இதில் சிலர் குழப்பம் விளைவிப்பது வேதனையை தருகிறது.! ஆன்மீக உணர்வு என்பதும ஒருவரையொருவர் காயப்படுத்திக்கொள்ளாமல் கனிவுடன் புரிந்து கொள்ளத்தான்.! அந்த கொள்கை தளத்தை கொலைக்களமாக பயன்படுத்துவது வேதனையளிக்கிறது. இனிமேலாவது இது போன்ற விஷயங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். என்னைப்பொருத்தவரை இந்து மதம் மிக, மிக சகிப்புத்தன்மை உள்ள மதம் தான். ஆனால், அது விமர்சிக்கப்படும் போது இந்துக்களாலேயே கண்டிக்கப்படுவதில்லை. அதற்கான காரணம், அதன் பலதரப்பட்ட சமய பிரிவுகளும், கொள்கைகளும் காரணமாய் இருக்கலாம். அதற்காக அம்மத உணர்வுகளை தாக்குவது ஏற்புடையதல்ல. பிடித்தவர்கள் அதை பின்பற்றட்டும், பிடிக்காதவர்கள் அமைதியாக இருக்கட்டும். அதை விடுத்து மத உணர்வுகளை தாக்குவது தரங்கெட்ட செயல்.! சக்திவேல் அவர்கள் சொன்னது போல் முரணான திரியை பூட்டாமல், உடனடி முடிவாக திரியை "தீர்த்துக்கட்டி" விடுவது தான் சிறந்தது..!!

lolluvathiyar
23-08-2007, 08:26 AM
எந்த மத விவாதங்களும் இங்கே தேவையில்லை என்றே தோன்றுகிறது. காரணம், அதற்கான புரிந்துணர்வும், சகிப்புத்தன்மையும், உண்மை அறியும் நிலையும் நமக்குள் குறைவாக இருக்கிறது.

அப்படி அல்ல நன்பரே, மன்ற நன்பர்கள் உன்மையில் நல்ல மெச்சுரிட்டியுடன் தான் விவாதிகிறார்கள். ஒரு சிலருக்கு இல்லாவிட்டாலும் புரிவதும் சகிப்புதன்மையும் விவாதம் மூலம் வளரும்.



மதவிவாதங்கள் ஆரோக்கிய தோற்றத்துடன் தோன்றி அவை அநாகரீக விவாதங்களோடு தொடர்கிறது.

இங்கு தான் உடனே திரியை பூட்டுவதை விட, அநாகரீக விவாதங்களை நீக்கி விடலாம். இதை தான் நான் மேலே கூறினேன், அநாகரீகமானது எது என்று தீர்மானிப்பதில் தவறுகள் நடகின்றது. அது ஒருதலைபட்சமாக செயல்பட்டால் அதை சுட்டிவது தவறா?
ஹிந்து மதத்துக்கு ஆதரவாக பதிவு செய்பவர்கள், மாற்று கருத்துகளுக்கு பதில் தான் தருகிறார்கள். அநாகரீகம் புன்படுத்துதல் என்று புகார் செய்வதில்லை. திரியை பூட்ட கோரிக்கை விடுப்பதில்லை



என்னைப்பொருத்தவரை இந்து மதம் மிக, மிக சகிப்புத்தன்மை உள்ள மதம் தான். ஆனால், அது விமர்சிக்கப்படும் போது இந்துக்களாலேயே கண்டிக்கப்படுவதில்லை.
ஆம் காரனம் நாங்கள் விவாதங்களை பதித்தவரின் பின்னனியை பார்பதில்லை. அந்த கருத்துகளை மட்டும் பார்கிறோம். மேலும் கருத்து சுதந்திரத்தில் நாங்கள் தலையிடுவதில்லை. கருத்து சுதந்திரத்தை அனுமதிப்பது தான் இந்த மதத்தின் உயரிய கோட்பாடு.

ஏ.கா இந்த திரிகளை எடுத்து கொள்வோம்
இந்தியா மதசார்பற்றநாடு என்று ஏன் சொல்லுகின்றோம்
இதில் எந்த மதத்தை தாழ்த்தி அல்லது உயர்த்தி பதிக்கபட்டது. நமது நாட்டை ஆண்ட ஒரு குடும்பம் எத்தனை மதங்களை உள்ளடக்கியது என்று கூறபட்டிருகிறது. அதில் ஏதாவது பொய் செய்தி இருந்ததா?
ஏதாவது மதத்தின் மீது குற்றசாட்டு இருந்ததா?

கற்பனை செருப்பு பேட்டி
இந்த திரியில் நகைசுவையாக பதித்த ஒரு கதை. இது சமீபத்தில் நடந்த ஒரு உன்மை சம்பவத்தை வைத்து நகைசுவையாக எழுதபட்டது. இதில் தவறு செய்த மக்கள் பிரதி நிதிகளை கின்டல் செய்து எழுதபட்டது.
இது என்த வகையிலும் மத உனர்வை புன்படுத்தும் படி எழுதபடவில்லை. பூட்டு போடும் அளவுக்கு எந்த குரையும் இருந்ததாக நான் கருதவில்லை.

இன்னொரு திரி தீவிரவாதம் பற்றியது.
அதில் நான் இஸ்லாமிய தீவிரவாதத்தை பற்றி எழுதி இருந்தேன். மோகனும் இஸ்மாமிய மதத்தில் தீவிரவாதம் வர காரனம் என்ன என்று விளக்கி இருந்தார். இஸ்லாமிய நன்பர் அதற்க்கு மாற்று கருத்து தந்திருக்க வேண்டும். தொடர்ந்து சென்றிருந்தால் இஸ்லாம் தீவிரவாத த்துக்கும் இஸ்லாமுக்கும் உன்மையில் தொடர்பு இல்லை. அதன் மூல காரனம் என்ன என்று நானே அக்கு வேறாக ஆனி வேறாக (இப்ப தான் இந்த கேள்விக்கு கிறுக்கு பட்டம் பெற்றேன்) விளக்கி இருப்பேன்.
ஆனால் அதை பூட்டுவதிலேயே குறியாக இரு ந்தது வருத்தமளிக்கிறது. ஏதோ நன்பர் மட்டும் கண்டுபிடித்து எழுதுவது போலவும் குற்றசாட்டு, அனைத்து பத்திரிக்கையிலும் என்ன கூறபடுகிறதோ அதை தான் கூறபடுகிறது. அது தவறில்லையே.


இதை மட்டும் நான் சொல்லவில்லை. நன்பர் சுட்டி யின் ஒரு திரியில் இந்திய அரசாங்கத்தை பற்றி எழுதபட்டதை நான் வன்மையாக கன்டித்திருந்தேன். விளக்கமும் தந்தேன். ஆனால் திரியை முடக்க சொல்லி கோரவில்லை. துரதிஸ்டவசமாக அந்த திரி மூட பட்டது கூட எனக்கு மன வேதனையே அளித்தது. எந்த திரியையும் மூட கூடாது என்பதே என் கருத்து.


கவிதை கதை போன்ற பொழுது போக்கு அம்சம் நமக்கு முக்கியமானது. இடையில் சிறிது விவாதம் செய்தும் கொள்வது கூட ஒரு என்டெர்டன்மென்ட் தான்.
மக்கள் விரும்புவது கருத்து சுதந்திரம். சமூகத்தில் அதற்க்கு இடமில்லை. ஆனால் அதற்க்கு இங்கு கூட இல்லை என்று நிலை என்று நினைக்கும் போது வருத்தமாக இருகிறது.

விவாதங்கள் ஆரோக்கியமாக செல்ல சில கன்டிப்புகள் அவசியம்தான் நான் ஏற்றுகொள்கிறேன். ஆனால் விவாதமே கூடாது என்று முடக்குவது சரியானதாக தெரியவில்லை.

மன்ற கன்கானிப்பாளர்களே, மூத்த உருப்பினர்கள் பலர் சும்மா இருக்கையில் மன்றத்தில் இனை ந்து ஆறு மாதம் கூட முடியாத நிலையில் இப்படி அதிகபிரசங்கியாக எழுதுகிறான் என்று தவறாக நினைக்க வேண்டாம். என் வயது தந்த அனுபவம் காரனமாக தான் உரிமையுடன் தீர பரிசீலிக்காமல் திரிகளை பூட்ட வேண்டாம் ஆலோசனையை உங்கள் முன் வைக்கிறேன்.

ஆனால் உங்கள் கஷ்டமும் எனக்கு புரியாமல் இல்லை. மன்றத்துக்கு ஏதாவது விசமதனம் செய்பவர்களிடம் இருந்து இருக்கும் பொக்கிசங்களை காப்பாற்றி நன்பர்கள் அமைதியாக வழிநடத்த நீங்கள் செய்ய வேண்டிய பொருப்பும் உங்கள் தலையில் சுமத்த பட்டிருகிறது.
உங்கள் நிலமை ஒல்லுக்கு ஒரு பக்க இடி, மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி என்பது போலவே இருக்கிறது. (ஆகா அடுத்த* கிறுக்கு கேள்வி த*யார்)

மற்றபடி மன்ற விதிகளுக்கு உட்பட்டு தான் என்றுமே நான் இருப்பேன் எனபதையும் உறுதி படுத்துகிறேன்

அமரன்
23-08-2007, 08:35 AM
அன்பான உறவுகளுக்கு....!
சக்திவேல் இத்திரியை தொடங்கியநோக்கம் ஒரு திரி பூட்டியதும் அகற்றப்பட்டது. இன்னொன்று பூட்டியும் அப்படியே உள்ளது என்ன காரணம் என அறிய விரும்பிய நியாயமான கேள்விக்காக. அந்த நோக்கத்தை விட்டு திரி பூட்டப்பவடுவது சரியா தவறா என்னும் பாதையில் திரியை இட்டுச்செல்வதை தவிருங்கள். தயவுசெய்து புதிய விதிமுறைகளை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11843) படித்து எமக்கு ஒத்துழைப்பு நல்குங்கள்.
உங்கள் புரிதல், ஒத்துழைப்புக்கு நன்றி.
அன்புடன்
அமரன்

சக்திவேல்
23-08-2007, 01:27 PM
மண்ணிக்கவேன்டும் மேற்பார்வையாளர்களே, பிரதி பலண்கள் நோக்காமல், தன்னார்வத்துடன், மன்றப்பணியில் ஈடுபடும் தங்களின் இனையற்ற செயல் பங்களிப்பை புரிந்துகொள்ளாமல், கேட்டுவிட்டேன். நல்ல ஒத்துழைப்பை தருகிறேன்.


எத்தனை அழகான மன்றம் இது..? இதில் சிலர் குழப்பம் விளைவிப்பது வேதனையை தருகிறது.! ஆன்மீக உணர்வு என்பதும ஒருவரையொருவர் காயப்படுத்திக்கொள்ளாமல் கனிவுடன் புரிந்து கொள்ளத்தான்.!

இதயம் அவர்களின் இதயப்பூர்வமான கருத்து அருமை.



மன்றத்துக்கு ஏதாவது விசமதனம் செய்பவர்களிடம் இருந்து இருக்கும் பொக்கிசங்களை காப்பாற்றி நன்பர்கள் அமைதியாக வழிநடத்த நீங்கள் செய்ய வேண்டிய பொருப்பும் உங்கள் தலையில் சுமத்த பட்டிருகிறது.
உங்கள் நிலமை ஒல்லுக்கு ஒரு பக்க இடி, மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி என்பது போலவே இருக்கிறது.

வாத்தியார் சொன்னது சரி. வாத்தியாரே, "இந்தியா ஏன் மதசார்பற்றநாடு இல்லையென்று சொல்கிறோம்" என்ற திரியில், பொதிந்து கிடக்கும் எண்ணம் என்ன என்பதை நான் சொன்னதுக்குத்தான், அந்த திரி பூட்டி, நீக்கப்பட்டது. மீண்டும் அதை இங்கு உயிர்ப்பிக்க வேன்டாம்.

அறிஞர்
23-08-2007, 03:30 PM
சக்திவேலில் புரிந்துக்கொள்ளுதலுக்கு நன்றி...

இதயம், வாத்தியாரின் கருத்துக்கள் மற்றவர்கள் இன்னும் மன்றத்தை புரிந்துக்கொள்ள வகை செய்கிறது.

உங்களின் ஆதரவால், இன்னும் மன்றம் சிறக்கட்டும்.