PDA

View Full Version : இந்திய நண்டு -மீனாகுமார்
22-08-2007, 03:13 PM
நீங்கள் இந்த கதையை ஏற்கனவே பல்வேறு விதங்களில் கேட்டிருக்கக்கூடும். இருப்பினும் இதை நம்மனதிள் எப்போதும் வைத்துக் கொண்டு நம் குற்றத்தை களைய வேண்டும் என்பதற்காக இங்கே கொடுக்கிறேன்.

ஒருமுறை கடவுள் நரகத்திற்க்கு விஜயம் செய்தார். அப்போது அங்கே மூன்று ஆழ்கிணறுகள் இருந்தன. முதல் கிணற்றின் மூடி சரியாக மூடப்படாமல் லேசாக திறந்திருந்தது. அதன் பக்கத்திலே "தயவு செய்து மூடியைத் திறந்து வெளியே செல்லாதீர்கள்" என்று அறிவிப்பு பலகை இருந்தது. இரண்டாவது கிணற்றின் மூடி பலவித குறுக்கு நெடுக்கான கம்பிகளால் வலுவாக மூடப்பட்டிருந்தது. மூன்றாவது கிணற்று மூடி மூடாமல் திறந்தே கிடந்தது. இதை நோக்கிய கடவுள் எமதர்மராஜனிடம் இந்த மூன்று கிணறுகளின் மூடி இப்படி இருப்பதற்கான காரணத்தை வினவினார்.

அதற்கு எமதர்மராஜன், கருணையின் வடிவாகிய இறைவனே, முதல் கிணறு அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்குமாகும். அவர்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே கீழ்ப்படிபவர். அதனால் இந்த கிணற்றின் மேலே வர நேர்ந்தால் இந்த அறிவிப்பு பலகையை படித்து விட்டு உள்ளேயே சென்று விடுவர்.

இந்த இரண்டாவது கிணறு, சீனர்கள் மற்றும் ஜப்பான்காரர்களுக்குமாகும். அவர்கள் ஒருவரோடு ஒருவர் துணை கொண்டு இந்த நரக கிணற்றை விட்டு வெளியேற அனைத்து முயற்சிகளும் செய்வர். அதனால், இந்த கிணறு வலுவாக மூடப்பட்டிருக்கிறது.

இந்த மூன்றாவது கிணறு, இந்தியர்களுக்காகவே. அவர்களிடம் ஒற்றுமை என்பது அறவே கிடையாது. இந்தியர்களுக்கு எதிரி இந்தியர்களே. ஒருவர் முயற்சி செய்து மேலே ஏறி வர முயன்றால் மற்றொருவர் அவரை இழுத்து கீழே தள்ளிவிடுவார். இப்படியே ஒவ்வொருவரும் மாறி மாறி வெளியே வர முயற்சி செய்து கொண்டுதான் இருப்பார்களே தவிர ஒருவரும் வெளியே வரமாட்டார். எனவே தான், இந்த கிணறு திறந்தே இருக்கிறது என்றார்.

இதே கதையை நண்டுகள் மூலமாகவும் கூறுவர். ஒரு நண்டு வெளியேற முற்பட்டால் மற்ற நண்டு அதை இழுத்துவிடும் என்ற உவமையைக் காட்டி கூறுவதும் உண்டு.

தங்கவேல்
23-08-2007, 03:03 AM
இந்தியர்களிடம் ஒற்றுமை இருக்கு அக்கா. அதை பிரிப்பது அரசியல் வாதிகள். நண்டுடன் மனிதனின் குணத்தை ஒப்பிடுவது என்பது ? வேலை கெட்டவர்கள்தான் இப்படிபட்ட பழமொழியினை சொல்லிவைத்து இருக்கின்றார்கள்..

ஓவியன்
23-08-2007, 03:07 AM
இந்தக் கதையை நான் முன்னரே கேள்விப்பட்டாலும், நீங்கள் இங்கே அதனை மீண்டும் தந்த பாணி அழகு...........

ஒற்றுமையை வலியுறுத்தச் சொல்லப்படும் கதையிது, இதிலிருந்து எம்மை நாமே திருப்பிப் பார்க்கவேண்டும் நாம் இழுத்து விழுத்தும் நண்டாக இருக்கிறோமா இல்லை ஏற உதவும் ஏணியாக இருக்கிறமோ என்று...............

மாதவர்
23-08-2007, 03:12 AM
கதையின் நீதி யோசிக்க வேண்டியது

சிவா.ஜி
23-08-2007, 05:32 AM
சில உண்மைகள் மாறாதது...மாற்றப்படமுடியாதது.இதுவும் அப்படித்தான்.இதே கதையை என் பேரனின் மகனும் அவன் மகனுக்குச் சொல்வான்.தன் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு உழைத்தாலே போதும்..மற்றவரை நினைத்து பொறாமை கொண்டு..அவரையும் வளரவிடாமல்..தானும் வளராமல்....வருந்த வைக்கும் மாந்தர்கள்.
சுவையாகத் தந்திருக்கும் மீனாகுமாருக்கு வாழ்த்துக்கள்.

lolluvathiyar
23-08-2007, 05:49 AM
சரியன விளக்கத்தை தான் தந்திருகிறார்கள். முற்றிலும் உன்மையான*து.

இந்தியர்களிடம் ஒற்றுமை இருக்கு அக்கா. அதை பிரிப்பது அரசியல் வாதிகள்.

அந்த அரசியல்வாதிகளும் இந்தியர்களே. அவர்கள் பேச்சை கேட்பதும் இந்தியர்களே.
இன்று விவசாயம் செய்ய என்ன உழைப்பு வேண்டும். ஆனால் என்ன வருமானம் வருகிறது. எந்தெந்த* சட்டங்களால் அவை நசுக்க படுகின்றன. மற்றும் தொழில்சாலைகள் உற்பத்தி செய்யும் போது என்னென்ன அழிவுகள் நேரிடுகிறது. அதன் வருமானம் எப்படி பகிர படுகிறது. அதன் உற்பத்தி பொருட்கள் எங்கு செல்கின்றன. இறுதி பயன் யாருக்கு கிடைக்கிறது என்பதை நன்றாக கனக்கு போட்டு பார்த்தால் இந்த தத்துவம் மிக தெளிவாக புரியும்.

இயற்கையின் நியதியை மாற்ற முடியாது

அமரன்
23-08-2007, 09:15 AM
ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்தும் கதை. ஏற்கனவே கேட்டிருந்தாலும் உங்கள் தமிழில் படிக்கும் போது அதிக சுவையாக தெரிகிறது மீனாகுமார். பாராட்டுக்களும் நன்றியும்.

தளபதி
23-08-2007, 11:40 AM
எமதர்மராஜனுக்கும் வேலை வந்துவிட்டது. பலமுறை இந்தியர்கள் ஒருவரின் ஒருவர் துணை கொன்டு வெளிவந்துவிட்டனர். எனவே, மூன்றாவது கிணற்றை மூடிக்கொண்டிருக்கின்றார்.

ஒற்றுமை காப்போம். நன்மை அடைவோம்.

மீனாகுமார்
23-08-2007, 04:39 PM
இந்தியன்தான் இந்தியனுக்கே எதிரி. திரு தங்கவேல் ஐயா கூறுவது போல் இது முற்றிலும் சரியல்ல. இதை சரியாகக் கூற வேண்டுமாயின் சில இந்தியர்கள் இந்தியர்களுக்கே எதிரி. அதற்கு பல உதாரணங்கள் உள்ளன. ஒரு சம்பவம். இங்கிலாந்தில் நம் நண்பர் ஒருவர் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு இந்திய மேலதிகாரி. இவருக்கு கீழ் சில இந்தியர்களும் சில வெள்ளைக்காரர்களும் வேலை பார்க்கிறார்கள். ஒரு நாள் இவருக்கு கீழ் இருக்கும் இந்தியர் ஒருவர் பணிக்கு தாமதமாக வந்துவிட்டார். முன்னறிவிப்பு எதுவும் இல்லை. இதைக் கண்டு ஆத்திரமுற்ற நம் மேலதிகாரி கூட்ட நேரத்தில் எல்லோர் முன்னிலையிலும் அந்த ஊழியரை திட்டி விட்டார். இது போல் திரும்பவும் நடக்க கூடாது என்று கண்டிப்பும் கூட. நம் ஊழியர் சற்றே மன வருத்தமுற்றார். சில வாரங்கள் கழித்து ஒரு வெள்ளைக்கார ஊழியர் இதே போல் செய்து விட்டார். அப்போது இதே மேலதிகாரி கண்டும் காணாதது போல் இருந்து விட்டார். ஒரு சிறு கேள்வி கூட கேட்கவில்லை. காரணம் எதுவாகவும் இருக்கட்டும். ஆனால் இந்த மனப்பான்மை தவறானது. பெரிய பெரிய கம்பெனிகளில் சீன மேலாளர்கள் சீனர்களுக்குத்தான் அதிக வேலை வாய்ப்பு கொடுத்து தம்மிடம் வைத்துக் கொள்வார்கள். நம் மக்களில் சிலர் (ஆம் சிலர்..) இந்தியர்களுக்கே வாய்ப்பு கொடுப்பதில்லை. இந்த மன போக்கும் வருத்தத்துக்குரியது

மீனாகுமார்
23-08-2007, 04:41 PM
எமதர்மராஜனுக்கும் வேலை வந்துவிட்டது. பலமுறை இந்தியர்கள் ஒருவரின் ஒருவர் துணை கொன்டு வெளிவந்துவிட்டனர். எனவே, மூன்றாவது கிணற்றை மூடிக்கொண்டிருக்கின்றார்.

ஒற்றுமை காப்போம். நன்மை அடைவோம்.

உண்மைதான்... நல்ல மனப்போக்கையே எல்லோருக்கும் கற்றுக் கொடுத்து மிகவும் முன்மாதிரியாக இருப்பது அவசியம். இவர்களைப் பார்த்து மற்றவர்களும் பின்பற்றினால் நன்று. நண்டு கதை பழைய கதையாக வேண்டும்.