View Full Version : உண்மையான நட்பு.
சாராகுமார்
22-08-2007, 01:27 PM
முகம்
பார்த்து வந்து விடும்
சில நட்புகள்..
அன்பு
பார்த்து வந்து விடும்
ஒரு சில நட்புகள்..
பணம்
பார்த்து வந்து விடும்
பல பல நட்புகள்..
கஷ்டம்
பார்த்து தெரிந்து விடும்
உண்மையான நட்புகள்.
அமரன்
22-08-2007, 01:32 PM
நல்ல நண்பனை இடுக்கண் வரும்போது அறிந்துகொள்ளலாம் என்ற வள்ளுவனின் சொல் தாங்கி வந்த நல்ல கவிதை. பாராட்டுக்கள். தொடருங்கள் சாராகுமார்.
சாராகுமார்
22-08-2007, 01:41 PM
நன்றி அமரன் அவர்களே.என் முதல் கவிதைக்கு உங்களின் முதல் பாராட்டு.
இணைய நண்பன்
22-08-2007, 01:41 PM
கஷ்டம் நஷ்டம் இரண்டிலும் பிரியாத நண்பர்களே நல்ல நண்பர்கள்.நல்ல கவிவரிள்...நன்றி..
சிவா.ஜி
23-08-2007, 05:15 AM
மேன்மையான உறவு நட்பு.அதன் பெருமையை எத்தனை கவி வேண்டுமானாலும் வடிக்கலாம்.உங்கள் முதல் கவிதைக்கு அப்படிப்பட்ட உறவை கருவாக்கியதற்கு பாராட்டுக்கள் சாராகுமார்.
முதல் கவிக்கு ஒரு சிறிய சன்மானம்,250 இ−பணம்
ஓவியன்
24-08-2007, 01:05 PM
கஸ்ரத்திலேயே தெரியும் உண்மை நட்பு.........!
எவ்வளவு உண்மையான வரிகள்..........!
மன்றத்திலே முதல் கவிதை என்று நினைக்கின்றேன் சாரா குமார், பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இன்னும் நிறைய எழுதுங்கள்!. :nature-smiley-003:
சாராகுமார்
24-08-2007, 03:12 PM
கஸ்ரத்திலேயே தெரியும் உண்மை நட்பு.........!
எவ்வளவு உண்மையான வரிகள்..........!
மன்றத்திலே முதல் கவிதை என்று நினைக்கின்றேன் சாரா குமார், பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இன்னும் நிறைய எழுதுங்கள்!. :nature-smiley-003:
நன்றி ஒவியன் அவர்களே நன்றி.