PDA

View Full Version : சிறு பூவிற்கு வாழ்த்து..!



பூமகள்
22-08-2007, 11:17 AM
http://img31.picoodle.com/img/img31/9/8/22/poomagal/f_Pappa4com_a025ad2.jpg

ஆயிரம் பூக்கள்
இயைந்த மாலை
அழகாய் பிறந்து
வந்தது இன்றே..!

வசந்தகால வனப்பு
கொண்டே
வாசமுடனே
வந்தது இன்றே..!

வாஞ்சை கொண்டே
வெள்ளி மின்னல்
வானம் விட்டே
வந்தது இன்றே..!

வாசல் தேடி
வானவில் கோடி
வண்ணவெள்ளமாய்
வந்தது இன்றே..!

வாழ்த்துக் கூறி
ஆசி வழங்க
அக்கா வந்தேன்
அன்பு கொண்டே..!

வாழ்வு முற்றும்
இன்பம் காண
இனிய வாழ்த்து
கூறினேன் நன்றே..!

வாழ்க நீ..!
வளர்க மேலும்..!
வானம் கூட
தொட்டுவிடும் தூரமே..!! :angel-smiley-026:

அமரன்
22-08-2007, 11:26 AM
ஒவ்வொரு புதிய உறவும் பூமியில் மலரும்போது எண்ணற்ற எண்ணங்கள் உறவுகள் உள்ளத்தில். அவற்றின் வெளிப்பாடே வாழ்த்துக்கள். பூமகளின் வாழ்த்தும் அத்தைகையதே..!வாழ்த்து மட்டும் சொல்லாது வாழ வழியும் சொல்கிறார் இறுதி நான்கு வரிகளில்.
எண்ணங்களை எழுத்துகளாக்கி வர்ணங்களை கோர்த்து புனையப்பட்ட மாலையின் வண்ணம் கொள்ளைகொள்கிறது. வாழ்த்துக்கு பாராட்டுச் சொல்லி வளர வாழ்த்துகின்றேன்.


சின்ன சின்ன சொல்லெடுத்து
வண்ணச் சொல்லடுக்கால்
கட்டிய மாலையில் சொட்டிய
துளிகளை சேர்த்துவைத்த
தேன் கிண்ணம் இக்கவிதை.

பூமகள்
22-08-2007, 11:32 AM
வாழ்த்து மட்டும் சொல்லாது வாழ வழியும் சொல்கிறார் இறுதி நான்கு வரிகளில்.
எண்ணங்களை எழுத்துகளாக்கி வர்ணங்களை கோர்த்து புனையப்பட்ட மாலையின் வண்ணம் கொள்ளைகொள்கிறது. வாழ்த்துக்கு பாராட்டுச் சொல்லி வளர வாழ்த்துகின்றேன்.

நன்றிகள் அண்ணா.. இதை நான் புதிதாய் இவ்வையகத்தில் பிறக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் சமர்பிக்கிறேன்..!:icon_rollout:

இணைய நண்பன்
22-08-2007, 11:56 AM
பல வர்ணங்களில் வடிவமைத்த கவிவரிகள்.அழகான வரிகள்..மனதை கவரும் சின்னஞ் சிறிசின் படம்...வாழ்த்துக்கள் பூமகள்

பூமகள்
22-08-2007, 12:39 PM
பல வர்ணங்களில் வடிவமைத்த கவிவரிகள்.அழகான வரிகள்..மனதை கவரும் சின்னஞ் சிறிசின் படம்...வாழ்த்துக்கள் பூமகள்
தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி அன்புத்தோழர் இக்ராம் அவர்களே....!!:nature-smiley-003:

அக்னி
22-08-2007, 03:50 PM
சுமக்க வைத்தாய்...
காக்க வைத்தாய்...
வலி தந்தாய்...
இறுதியில்,
மகிழ்வைத் தந்தாய்...
நீ பூமி தொட்ட நாளில்,
தொடங்கிய மகிழ்வு...
நீ வானம் தொடும் நாளிலும்,
அனைவர் மனதிலும்,
வருடலாய், தழுவி நிற்கட்டும்.
வாழ்த்துக்கள்...

பாராட்டுக்கள் பூமகள்...

பூமகள்
22-08-2007, 03:54 PM
சுமக்க வைத்தாய்...
காக்க வைத்தாய்...
வலி தந்தாய்...
இறுதியில்,
மகிழ்வைத் தந்தாய்...
நீ பூமி தொட்ட நாளில்,
தொடங்கிய மகிழ்வு...
நீ வானம் தொடும் நாளிலும்,
அனைவர் மனதிலும்,
வருடலாய், தழுவி நிற்கட்டும்.
வாழ்த்துக்கள்...

பாராட்டுக்கள் பூமகள்...
அழகுக்கவியோடு அழமாய் சொன்னீர் என் கவியை... நன்றி நண்பரே... !:)

ஷீ-நிசி
22-08-2007, 04:14 PM
கலர் கலரா வாழ்த்துக்கள்.. சிறு பூவிற்கு ஒரு பூ(மகள்)விடமிருந்து,,,,,


வாழ்த்துக்கள்!

மனோஜ்
22-08-2007, 04:21 PM
புதிய பூவிற்கு ஒரு அழகு பூ கவிபாடியது அருமை

பூமகள்
22-08-2007, 04:51 PM
புதிய பூவிற்கு ஒரு அழகு பூ கவிபாடியது அருமை

பூவின் கவிக்கு வாழ்த்திய மனோரஜ்சித உள்ளத்திற்கு நன்றிகள்.

இலக்கியன்
22-08-2007, 05:32 PM
புதிதாக பூத்த மழலை மலருக்கு வடித்த கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

பூமகள்
22-08-2007, 05:53 PM
நன்றிகள் அன்புச் சகோதரர் இலக்கியன் அவர்களே...!

சிவா.ஜி
23-08-2007, 11:54 AM
ஒரு உயிர் பூத்து புது உறவு மலர்ந்தது.
அழுதுகொண்டே பிறந்தாலும்..இனி
அழாதிருக்க அக்காக்கள் உண்டு!
வாழ்த்திலேயே வாழ்க்கை சொல்லும்
பூமகளின் புதுக்கவிதை
புத்தம் புது மழலைக்கு
பூமாலை..நல்ல பாமாலை...

வாழ்த்துக்கள் பூமகள்

lolluvathiyar
23-08-2007, 11:59 AM
பிறந்த குழந்தைக்கு பூமகள் அக்காவாய் இருந்து பாடிய கவிதை அழகு ததும்புகிறது இனிய படத்துடன். பின்னூட்டங்கள் பின்னி விட்டன*

ஓவியன்
24-08-2007, 05:48 AM
உன் தாய் மாதங்கள் பத்து
சுமந்த வலிகள் எல்லாம்
ஒற்றைச் சிரிப்பினால்
உதிர வைத்த பூவே......!

வாழ்க நீ பல்லாண்டு
உன் கள்ளமில்லா
உள்ளத்தை கற்றுக்கொடு
இந்த கள்ளம் மிக்க
உலகிற்கும்................!

சிறு பூவிற்கு வாழ்த்துக் கவி படைத்த பெரிய பூவிற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...........!!! :nature-smiley-003:

பூமகள்
24-08-2007, 05:55 AM
ஒரு உயிர் பூத்து புது உறவு மலர்ந்தது.
அழுதுகொண்டே பிறந்தாலும்..இனி
அழாதிருக்க அக்காக்கள் உண்டு!
வாழ்த்திலேயே வாழ்க்கை சொல்லும்
பூமகளின் புதுக்கவிதை
புத்தம் புது மழலைக்கு
பூமாலை..நல்ல பாமாலை...

வாழ்த்துக்கள் பூமகள்
நன்றிகள் சிவா.ஜி அவர்களே... அழகான பின்னூட்டக் கவி.. பாராட்டுதலுக்கு நன்றிகள்.. அண்ணா.

பூமகள்
24-08-2007, 05:58 AM
பிறந்த குழந்தைக்கு பூமகள் அக்காவாய் இருந்து பாடிய கவிதை அழகு ததும்புகிறது இனிய படத்துடன். பின்னூட்டங்கள் பின்னி விட்டன

நன்றிகள் அருமை சகோதரர் லொள்ளுவாத்தியார் அவர்களே..!!
எமது கற்பனைத் தங்கைக்காய் எழுதிய கவி... உங்களின் உள்ளம் கொள்ளை கொண்டதை அறிந்து மகிழ்கிறேன்.

பூமகள்
24-08-2007, 06:02 AM
வாழ்க்க நீ பல்லாண்டு
உன் கள்ளமில்லா
உள்ளத்தை கற்றுக்கொடு
இந்த கள்ளம் மிக்க
உலகிற்கும்................!

சிறு பூவிற்கு வாழ்த்துக் கவி படைத்த பெரிய பூவிற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...........!!! :nature-smiley-003:

அழகான பின்னூட்டக் கவி.... கள்ளமில்லா உள்ளம் கற்றுத்தரச் சொல்லும் சிந்தனை அருமை... நன்றிகள் அன்புச் சகோதரர் ஓவியர் அவர்களே...:innocent0002: