PDA

View Full Version : மன்ற பொறுப்பாளர்களுக்கு/ சோதிடம் தனித்தி

Narathar
22-08-2007, 08:51 AM
மன்ற பொறுப்பாளர்களுக்கு / சோதிடம் தனித்திரி

மன்ற பொறுப்பாளர்களுக்கு..............

ஜோதிடம் ஜாதகம் என்பது உண்மையோ பொய்யோ... ஆனால் அதை நம்பும் பலர் நம்மில் இருக்கின்றார்கள்.

ஏன் நம் மன்றத்தில் இருக்கின்றார்கள்.

ஜோதிடம் சம்பந்தமான தகவல்களை அங்கொன்றும் இங்கொன்றுமாய் பார்க்கின்றேன்....

அதற்கென்று ஒரு தனிப்பகுதி ஆரம்பித்தால் என்ன?

இங்கு பல ஜோதிடர்கள் உலாவுவதை அவர்கள் பதிப்பில் காண்டதனாலே இக்கோரிக்கையை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்

ஆதவா
22-08-2007, 08:54 AM
ஜோதிடத் தகவல்களை சில திரிகள் மூலமாக சொல்லிவிடமுடியும்.. அதற்குத் தனிப்பகுதி வேண்டுமா என்பது குறித்து நிர்வாகி முடிவெடுக்கவேண்டும்...

இதை அறிஞர் கணக்கில் கொள்வார்...

richard
22-08-2007, 09:00 AM
மற்றவர்களுக்கு எந்த உபத்திரவம் இல்லாமல் தனி திரி தொடங்கலாம் நம் மன்றம் இதை நிறைவேற்றும் என நம்புகிறேன்

Narathar
22-08-2007, 09:42 AM
மற்றவர்களுக்கு எந்த உபத்திரவம் இல்லாமல் தனி திரி தொடங்கலாம் நம் மன்றம் இதை நிறைவேற்றும் என நம்புகிறேன்

இதைத்தான் நானும் சொல்ல வந்தேன்.............
தனித்திரியிருந்தால் அதை நம்புகிறவர்கள்
மற்றும் அதைப்பற்றி அறியவிரும்புகிறவர்கள்
அங்கு வரலாம்............

மற்ரவர்கள் கண்டுக்காமல் விட்டுவிடலாம்

அமரன்
22-08-2007, 09:59 AM
அன்பு நண்பர் நாரதரே...!
மன்றவிதிகளுக்கு உட்பட்டு எந்த ஒரு திரியையும் ஆரம்பிக்கலாம். அந்த வகையில் ஜோதிடம் தொடர்பான திரியை ஆன்மீகப்பகுதியில் ஆரம்பிக்கலாம்.

ஓவியன்
22-08-2007, 10:08 AM
ஜோதிடம் சம்மந்தமான விடயங்கள் இதுவரை ஆன்மிகப் பகுதியிலேயே இடம் பெற்றுவருகின்றன, ஜோதிடம் சம்மந்தமான விவாதங்கள் மட்டுமே விவாதப் பகுதியில் இடம் பெற்றுவருகின்றன இந்த நடைமுறை தொடர்ந்து ஏற்றுக்கொள்ளக் கூடியது என்பது எனது கருத்து.

இதயம்
22-08-2007, 10:20 AM
ஜோதிடக்கருத்துக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தவை என்ற கருத்து நிலவுவதால், அந்த வகை கருத்துக்களை பதிய ஏதுவான ஆன்மீக மன்றத்தில் இடுவதில் யாதொரு மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது. அதை விடுத்து விவாதப்பகுதிகளில் பதித்தால் அது தேவையற்ற வீண் விவாதங்களை ஏற்படுத்தி நோக்கத்தை சிதைத்துவிடும். மற்றபடி அதற்காக தனி பகுதி ஒதுக்கலாம் என்ற நாரதரின் யோசனை ஏற்கக்கூடியதல்ல..! இதன் இறுதி முடிவை மன்ற நிர்வாகிகள் எடுப்பார்கள்.

lolluvathiyar
22-08-2007, 11:23 AM
ஜோதிடத்தை பற்றிய தகவல்கள் ஆண்மீக பகுதியில் வைக்கலாம். முல்லை மன்றம் மல்லி மன்றம் இருப்பது போல ஆண்மீகத்துக்கு என்று தனி மன்றம் அமைத்து அதில் கீழ கொடுக்க பட்டபடி உட்பிரிவுகள் வைத்து விடலாம்.

தியானம் யோகாசனம்
மதம் சம்மந்த பட்ட கருத்துகள்
கோவில்/ பூஜை செய்திகள்
சித்தர்கள் முனிவர்கள்
ஜோதிடம் வாஸ்த்து சாஸ்திரம்

இப்படி பிரிக்கலாம்

இப்படியான வாத விவாதங்களை தவிர்ப்பதற்காகவே தனிப்பகுதி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறுகின்றேன்.......................

ஏனென்றால் இது நம்பிக்கை சம்பந்தப்பட்டது.... சிலரது மனதை இலகுவாக நோகடிக்க கூடியது என்பதால் தான் இக்கோரிக்கையை வைத்தேன்

Narathar
22-08-2007, 11:25 AM
ஜோதிடத்தை பற்றிய தகவல்கள் ஆண்மீக பகுதியில் வைக்கலாம். முல்லை மன்றம் மல்லி மன்றம் இருப்பது போல ஆண்மீகத்துக்கு என்று தனி மன்றம் அமைத்து அதில் கீழ கொடுக்க பட்டபடி உட்பிரிவுகள் வைத்து விடலாம்.

தியானம் யோகாசனம்
மதம் சம்மந்த பட்ட கருத்துகள்
கோவில்/ பூஜை செய்திகள்
சித்தர்கள் முனிவர்கள்
ஜோதிடம் வாஸ்த்து சாஸ்திரம்

இப்படி பிரிக்கலாம்

இது ந*ல்ல* யோச*ணையாக* என*க்கும் ப*டுகிற*து

ஓவியன்
22-08-2007, 11:37 AM
அன்பான நாரதரே இந்த விடயம் சார்பாக நிர்வாகம் ஒரு இறுதி முடிவை நிச்சயமாக முன்வைக்கும். அதுவரை காத்திருப்போமே.......

தங்கவேல்
22-08-2007, 01:39 PM
நாரதர் எனக்கு தமிழ் நாட்டின் மிகச்சிறந்த ஜோதிடர் ஒருவர் நண்பர். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவரே அழைத்து சில விஷயங்களை சொல்லுவார். அதன்படி நடந்து கொள்வேன்.. இந்த திரி தேவையா என்று நிர்வாகி தான் முடிவு செய்யவேண்டும். தனிமடலுக்கு நன்றி..

richard
22-08-2007, 01:57 PM
ஜோதிடத்தை பற்றிய தகவல்கள் ஆண்மீக பகுதியில் வைக்கலாம். முல்லை மன்றம் மல்லி மன்றம் இருப்பது போல ஆண்மீகத்துக்கு என்று தனி மன்றம் அமைத்து அதில் கீழ கொடுக்க பட்டபடி உட்பிரிவுகள் வைத்து விடலாம்.

தியானம் யோகாசனம்
மதம் சம்மந்த பட்ட கருத்துகள்
கோவில்/ பூஜை செய்திகள்
சித்தர்கள் முனிவர்கள்
ஜோதிடம் வாஸ்த்து சாஸ்திரம்

இப்படி பிரிக்கலாம்

ந*ல்ல* க*ருத்துக்க*ள் ஆசிரிய*ரே ம*ன்ற*ம் நிச்ச*ய*ம் நிறைவேற்றும்

namsec
22-08-2007, 03:15 PM
ஜோதிடம் ஆன்மிகம் சம்மந்த பட்டது அதனால் ஆன்மிக தலைப்பில் பதிப்பது சிறந்தது இதற்க்கு தனியாக ஒரு தலைப்பு தேவையில்லை என நினைக்கிறேன்

அறிஞர்
22-08-2007, 03:50 PM
தற்சமயம் இது சம்பந்தப்பட்ட திரிகளை ஆன்மீக பகுதியில் தொடருங்கள்.

மற்ற ஆலோசகர்கள், மேற்பார்வையாளர்களுடன் கலந்து பேசி ஒரு முடிவெடுப்போம்.

Narathar
24-08-2007, 12:46 PM
நன்றி அறிஞ*ரே!!!