PDA

View Full Version : மன்ற மின்னஞ்சல்கள் குறித்து சிறு உதவி தேī



வசந்தகுமார்
22-08-2007, 06:25 AM
நண்பர்களே,

என்னால் மன்றத்திலுருந்து வரும் மின்னஞ்சல்களை படிக்க முடிவதில்லை.
தமிழ் எழுத்துறுக்களுக்கு பதிலாக Garbled Text-ஐ (தமிழாக்கம் தெரியவில்லை) தான் காண்கிறேன்.

உதாரணம்:-
==================================================
Dear vasanthns,

சாராகுமார் has just replied to a thread you have
subscribed to entitled - வசந்தின் வணக்கம் -
in the உங்களை அறிமுகம் forum of
தமிழ் மன்றம்.

This thread is located at:
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11799&goto=newpost

==================================================

இந்த பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது?
உதவும் உள்ளங்களுக்கு நன்றி.
(Thanks in advance - என்பதை எப்படி தமிழில் சொல்வது??)

இப்படிக்கு,
வசந்தகுமார்.

அன்புரசிகன்
22-08-2007, 06:41 AM
இங்கு (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=254689&postcount=5)நான் கொடுத்த விளக்கத்தை பாருங்கள். அங்கு கொடுக்கப்பட்டுள்ள சுட்டியையும் அவதானியுங்கள்...
இது யுனிக்கோட் பிரச்சனையே...
அத்துடன் முதலில் இதை முயலுங்கள். உங்கள் இணைய உலாவியில் View>Encoding > Unicode(UTF 8) அல்லது View>Encoding > More> Unicode(UTF 8) கொடுத்து முயன்று பாருங்கள்... இது உங்கள் கணிணியில் யுனிக்கோடிற்கான வசதி நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலே சரிப்படும்.

நன்றி என்பது இங்கு தேவையற்ற ஒன்று... எம்முடன் இணைந்தே இருங்கள். அதுபோதும்.

முயன்று சரிப்பட்டுவிட்டதா என கூறுங்கள்.

சிவா.ஜி
22-08-2007, 06:46 AM
(Thanks in advance - என்பதை எப்படி தமிழில் சொல்வது??)

இப்படிக்கு,
வசந்தகுமார்.

முன்கூட்டிய நன்றிகள்.இப்படி உபயோகிக்கலாமே.

வசந்தகுமார்
22-08-2007, 07:07 AM
அன்புரசிகனுக்கு,
என்னுடைய உலாவியில் "Character Encoding"-ஐ யுனிகோடுக்கு மாற்றினால் எழுத்துறுக்கள் சரியாக உள்ளன. ஆனால் ஒவ்வொறு முறையும் இதனை செய்ய வேண்டியுல்லது.
நான் FireFox(நெருப்புநரி??) பயன்படுத்துகின்றேன். நன்றிகள்.

சிவா.ஜி,
அருமையான தமிழாக்கத்திற்கு நன்றி!!!

அன்புரசிகன்
22-08-2007, 07:51 AM
நெருப்பு நரியில்
View > Character Encoding இல் எனக்கு UTF 8 ஆனது நிரந்தரமாகவே தெரிவுசெய்யப்பட்டுள்ளதே. எதற்கும் View > Character Encoding > Auto-Detect என்பதில் Off ஐ தெரிவு செய்துவிடுங்கள்.
எனது எண்ணப்படி Off என்பது தான் default ஆக இருக்கும்...

வசந்தகுமார்
22-08-2007, 07:58 AM
நெருப்புநரியில் நீங்கள் சொல்வது போல் தான் எல்லா அமைப்புகளும் உள்ளது. இருந்தும் ஒரு பக்கத்திலுருந்து மற்றொரு பக்கத்திற்கு செனறவுடன் "Western (ISO-8859-1)"-க்கு மாறிவிடுகிறது. Tools -> Options -> Content -> Fonts & Colours -> Advanced -> Default Character Encoding-ஐ யுனிக்கோடுக்கு மாற்றினாலும் வேலை செய்வதில்லை.

அன்புரசிகன்
22-08-2007, 08:06 AM
இதை (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=253230&postcount=8) முயன்றாகிவிட்டதா???

வசந்தகுமார்
22-08-2007, 08:33 AM
நான் விண்டோஸ் 2000−ஐ உபயோக படுத்துகிறேன். மேல் குறிப்பிட்ட அமைப்புகள் என் இயங்குதளத்திற்கு பொருந்தாது. அவை விண்டோஸ் XP-க்கு உண்டானவை என கருதுகிறேன்.