PDA

View Full Version : முடிவில்லாப் பாதை



jpl
21-08-2007, 04:57 PM
முடிவில்லாப் பாதை

முடிவில்லாப் பாதையில் நடக்கின்றோம்..
வாழ்க்கைப் பாதையில் நடப்பதைப் போல்,
சாலையில் பயணிப்பது போலவே
வாழ்க்கை பயணத்தை ஆரம்பிக்கின்றோம்.
இணைபிரியா தண்டவாளம் தன்னில்
தொடர்வண்டியின் தொடர் ஓட்டம்.
வாழ்க்கைப் பாதையிலோ
இணைகளின் இணையிலா இணைப்பு
எதிர்பாராத் திருப்பங்களும்,வளைவுகளும்
இயங்குகின்றன வாழ்க்கைப் பாதையை,
பாதைகளுக்கு முடிவில்லை..
ஆனால்
சந்திக்கின்றோம் ஒரு நாள்
நம் முடிவினை.

Infinite life road
Walking on long endless roads,
such like as our life.
Starting our journey of the life
such like as the road.
Rails are moving on
Unique parallel railroad.
Put together couple
Unique life path.
Hairpin turns are directed
Life drives.
endless road, but
meet one day
end of our life.

நான் எழுதிய ஆங்கிலக் கவிதையும்,அதன் தமிழாக்கமும்.
ஆங்கிலக் கவிக்கு அனுமதி இல்லை என்றால் நீக்கி விடவும்.

ஆதவா
21-08-2007, 05:24 PM
முடிவில்லா பாதையில் நம் முடிவைக் காண்கிறோம்...

அருமையான கவியும் கூட. நாம் பயணம் செல்லும் ஒவ்வொரு வாழ்வுப் பாதையும் முடிவில்லாதவைகள்.. ஒரு வாழ்வு ஓட்டத்தை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். அதனுள் பிரச்சனைகளும்...

இணைகளின் இணையிலா இணைப்பு
எதிர்பாராத் திருப்பங்களும்,வளைவுகளும்
இயங்குகின்றன வாழ்க்கைப் பாதையை,

தண்டவாளப் பாதையில் செல்லும் வண்டியாய்.... பொருத்தமான உவமை.

ஒரு யதார்த்தமான பயணத்தில் (சாலையில் பயணிப்பதுபோல) பயணியாக
தொடர்வண்டியின் ஓட்டமாக
திருப்பங்களும் வளைவுகளும் நிறைந்துமாக
முடிவில்லாமல் முடிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம்..

சிறப்பான தத்துவம்..

பாராட்டுக்கள்

ஷீ-நிசி
21-08-2007, 05:27 PM
பாதைகளுக்கு முடிவில்லை..
ஆனால்
சந்திக்கின்றோம் ஒரு நாள்
நம் முடிவினை.

நிதர்சனமான வாழ்க்கை வரிகள்..... வாழ்த்துக்கள்!

அமரன்
21-08-2007, 05:31 PM
வாழ்க்கையின் தத்துவத்தை அழகாக சொன்ன கவிதை. நன்றிகலந்த பாராட்டுக்கள்.

இளசு
21-08-2007, 06:41 PM
வாருங்கள் கவிஞையே..

மாளாக்காதல், தேடலுக்குப் பிறகு மறுவரவு.. மகிழ்ச்சி!

அந்தாதி கண்டு ஆதியந்தம் தேடல் நடந்தது...


இங்கே ஆங்கிலமும் தமிழுமாய் உங்கள் ஆக்கம்..

பாராட்டுகள்!


வாழ்க்கையைப் பயணம் என ஒப்பிடுவது எனக்கு மிகப்பிடித்த ஒன்று..


பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்...


கவியரசர் வரிகள் இவை...

இன்னொரு தெலுங்குக்கவிதையின் கருத்து:

எல்லாரும் ஏதோ வண்டியில்.. எதோ ஒரு பெட்டியில்..
எல்லாருக்கும் எண்ணம் : இது என் வண்டியில்லை..
இவர்கள் என் சகபயணியில்லை..
அதோ அடுத்த நிறுத்தம் என் வண்டி வரும்..
அங்கே என் சகப்யணிகள் என் தெரிவு..
என் தகுதிக்கு அந்த வண்டியே தகுந்த வண்டி..
என் தரத்துக்கு நான் போகும் ஊர் இன்னும் பெரிய ஊர்...


பயணம் தொடரும்... சகபயணிகள் மாறுவர்..
நிறுத்தம் வரும்....
அது பயண வண்டி மாற்றம் அல்ல...
பயணத்தின் முடிவு..



−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

உங்கள் கவிதையில் −


தண்டவாள இணை −− வாழ்க்கைத் துணை!
இரண்டும் அருகருகே − ஆனால் இரண்டும் ஒன்றல்ல!
இரண்டும் ஒரே பாதை −− ஆனால் முடிவுகள் ஒன்றல்ல!


ஆழ யோசிக்க வைக்கும் வரிகள்... பாராட்டுகள் மீண்டும்..

ஏனோ தமிழாக்கம் இன்னும் செதுக்கப்படலாம் என படுகிறது..
எப்படி என எனக்குப் புரிபடாமலே அப்படி படுகிறது...

மிக மிக அவசரமாய் தமிழாக்கம் செய்தீர்களா?

இணைய நண்பன்
21-08-2007, 07:32 PM
நல்ல கவிதை.வாழ்த்துக்கள்

மனோஜ்
21-08-2007, 08:34 PM
பயணங்கள் என்றும் ஒன்றாய் இருப்பதில்லை மாறிடும்
அதைஉணர்த்தும் கவிதை அருமை

jpl
22-08-2007, 02:03 AM
ஆதவா,ஷீ−நிசி,அமரன்,இக்ராம்,மனோஜ் ஆகியோருக்கு நன்றி.
உண்மை இளசு இன்னும் கொஞ்சம் நன்றாக எழுதியிருக்கலாம்.
"முடிவில்லா பாதையில் நம் முடிவைக் காண்கிறோம்"
ஆதவாவின் இவ்வரிகளைக் காணும் போது எனக்கும் தோன்றிற்று இன்னும்
நன்றாக எழுதியிருக்கலாம் என்று...

இன்னுமொரு கவிதையும் உண்டு இளசு..
தாயின் பரிவு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7417)

ஓவியன்
22-08-2007, 02:11 AM
முடிவின்றி ஓடி முடிவைத் தேடும்.........
யதார்த்தத்தை செதுக்கி வரிகளிலேற்றி இரு கவிதைகள்............

பின்னூட்டங்கள் கவிதைக்கு மேலும் அழகு சேர்த்தன......
பாராட்டுக்கள் ஜெயபுஸ்பலதா அவர்களே!

சிவா.ஜி
22-08-2007, 04:36 AM
பயணமென்பதே ஆச்சர்யங்கள் நிறைந்ததுதான்..அதிலும் வாழ்க்கையை ஒரு பயணமாகப் பயணிக்கும்போது...எதிர்பாராத எத்தனையோ திருப்பங்கள்...
இணைகளும் துணைகளும் வழிப்பயணத்தில்..ஆனால் முடிவில் நிறுத்தம் வரும்போது நாம் மட்டும்.நல்லதொரு சுவாரசியமான கவிதை.பின்னூட்டங்களும் அருமை.வாழ்த்துக்கள் ஜெயபுஷ்பலதா.

இலக்கியன்
22-08-2007, 05:54 PM
வாழ்க்கைப் பாதைக்கு ஒரு கவிதை நியம்

பூமகள்
22-08-2007, 06:09 PM
அழகாய் கோர்த்த எதார்த்தம் நிறைந்த உண்மை. உங்களோடே சற்று நேரம் நானும் பயணித்துப் போனேன் வாழ்க்கை பயணத்தில்.

வாழ்த்துக்கள் சகோதரி... இன்னும் பல கவி படைக்க பூமகளின் வாழ்த்துக்கள்.

அக்னி
22-08-2007, 10:19 PM
வாழ்க்கைப் பயணத்தில்,
நிறுத்தங்களும், திருப்பங்களும்,
வரலாம்...
ஆனால்,
தீர்மானிக்காத பயணங்கள்...
திசை தேடியே.., கழியும்...
தீர்மானித்த பயணங்கள்...
திசை நாடியே.., தொடரும்...

பாராட்டுக்கள்... jpl...

jpl
03-05-2013, 01:24 AM
மிக்க தாமதமான நன்றிகள் ஓவியன்..

jpl
03-05-2013, 01:29 AM
நன்றி சிவா.. என்றென்றும் மன்றத்தில் இருப்பதால் தபால் பெட்டி நிரம்பி வழிகிறது என கருதுகிறேன்..

jpl
03-05-2013, 01:30 AM
நன்றி இலக்கியன்

jpl
03-05-2013, 01:32 AM
நன்றி பூமகள்..

jpl
03-05-2013, 01:34 AM
இக் கவிதைக்குப் பின்னூட்ட பயணம் நன்று..நன்றி அக்னி..