PDA

View Full Version : தாய்ப்பாசம்..வெண்தாமரை
21-08-2007, 01:06 PM
அதிகாலை பொழுது புலர்ந்தது.. எப்பவும் அதிகாலை 5 மணிக்கு
எழுந்துவிடும் இனியா இன்று ஏனோ 7 மணியாகியும் எழுந்திரிக்கவில்லை.. அன்று அவளுக்கு பிறந்தநாளும் கூட.. தனி அறையில்தான் தூங்குவாள்.. ஒரே பெண் என்பதால் செல்லம் அதிகம்.... அலாறம் அடித்துக் கொண்டிருக்கிறது.. வானொலி இரைந்து கொண்டிருக்கிறது.. ஏனோ அவள் எழுந்திரிக்கவில்லை.. அம்மா அவள் அறை கதவை திறந்து உள்ளே சென்றாள்.. எல்லா அப்படியே இருக்க போட்டது போட்டபடி.. அவளது மேஜையில் ஒரு கடிதம்.. பிரித்து பார்த்த அம்மாவுக்கு அதிர்ச்சி!..

அன்புள்ள அம்மா!

உன்னை விட்டு பரிய மனமில்லை.. மன்னித்துவிடு.. எனக்கு எந்தகுறையும் வைக்கவில்லை. ஆனால் என் மனம் விரும்பியவனை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.. ஆனால் நான் ஏற்றுக்கொண்டேன்.. எனக்கு இன்றைக்கு பிறந்தநாள். இந்த நாளில் எனக்கு 21 பிறக்கிறது.. இன்று எனக்கும் என் அவருக்கும் திருமணம்.. கண்டிப்பாக வந்து எங்களை ஆசீர்வாதம் செய்யணும்.. என் அம்மாவுக்கு இனியாவின் இனிய முத்தம்..

இப்படிக்கு
உன் அன்புமகள்
இனியா..

பிரித்து படித்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனாள். இவள் ஏன் இப்படி செய்ய வேண்டும்.. என்ற வினாவும் கூட எனென்றால் .. படிப்பை முடித்து 2 வருடம் வீட்டில் இருக்கிறாள்.. 3 நாளைக்கு முன்னாடிதான் மாப்பிள்ளை வீட்டுகாரர்கள் பெண் பார்க்க வந்தார்கள்.. அதற்குள் இப்படி ஏன்.. என்னிடம் சொல்லி இருக்க கூடாதா? இல்லை.. என்னிடமும் அவள் அப்பாவிடம் சொல்ல பயமா?? பலவிதமான வினாக்கள். குழம்பி போனாள்.. நாளை ஊர் என்ன சொல்லும்.. சொந்தபந்தங்கள் என்ன சொல்லும் என நினைத்து மருகி போனாள்.. தட்டுதாடுமாறி கீழே இறங்கி வந்து அவள் கணவனிடம் சொன்னாள் நம்ம குழந்த போயிட்டாங்க.. என்றாள். என்ன என்பதற்குள் தொலைபேசி அலறியது.................

தொடரும்..

kampan
21-08-2007, 01:16 PM
அலறிய தொலைபேசிய யார் எடுத்தார்? அப்புறம் என்ன ஆச்சு? ஆர்வத்தை தூண்டிவிட்டு சென்றுவிட்டீரே? தொடர்ச்சி எப்போ?

paarthiban
21-08-2007, 04:22 PM
சுவாரசியான தொடக்கம். தொடருங்கள் வெண்தாமரை அவர்களே.

−− நன்றி வணக்கம்

சிவா.ஜி
22-08-2007, 04:26 AM
காதல் படுத்தும் பாடா..அல்லது இவள் படும் பாடா இந்த முடிவெடுக்கத்தூண்டியது...பொறுத்திருந்து பார்ப்போம்...வெண்தாமரை என்ன சொல்கிறாரென்று.

gayathri.jagannathan
22-08-2007, 05:14 AM
கதையை நீங்க முடிச்சு, நான் முழுசா படிச்ச பின்னாடி தான் பின்னூட்டம்....

வெண்தாமரை
22-08-2007, 08:31 AM
மறுமுனையில் ஒரு முரடான ஆண்குரல் உன் மகள் உயிரோடு வேண்டுமானால் 10 இலட்;ச ரூபாய் வேண்டும்.. உடனே நான் சொல்லும் இடத்திற்கு வா என அழைத்தான்.. சொன்னப்படி பணத்தோடு மட்டும் வரவேண்டும். என்றான்..

மறுபடியும் நான் உங்களை அழைப்பேன் என்று கூறி போனை கட் செய்தான்.. நேரம் போக போக பெற்றமனசு என்ன செய்யும் அய்யோ என் மகளை காணவிலலை . போலிசிலும் சொல்ல மனம் இல்லை.. என்னா தொழிற் அதிபர் மகளை காணவில்லை என கொட்ட எழுத்தில் பத்திரிக்கைகளில் நாளை வரும்.. என்ன செய்ய என தாவியாய் தவித்;தார்.. தன் மகளை என் பாடு பாடுத்தகிறார்களோ என..

சரியாக மாலை 7.00 மணி தொலைப்பேசி அலறியது மீண்டும்
அவனே.. பணம் கொண்டு வர வேண்டிய வழி முறைகளை சரியாக சொன்னான். என் மகளிடம் போனை குடு என்றார் தூக்;கி எறிந்தான் இந்தா.. அப்பா எனக்கு பயமா இருக்குதுபா.. என்னை காப்பாற்றுங்கள் என்றாள்.. நான் வரனேன்மா என அவளை தேற்றினார்;.. உனக்கும் யாருக்கும் திருமணம் நான் உங்களை விட்டு போறேன்னு ஒரு கடிதம் எழுதி வைத்து இருக்க என்றார். அது இவன் சொல்லிதான் நான்
எழுதியது என்றாள்.. உடனே போனை அவனிடம் கொடு என்றார்.. கொடுத்தாள் ஏ நீ யாருடா? உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? ஏ இப்படி பண்ணுற என்றார்.

என்ன சம்பந்தமான்னா கேட்கிற.. இருக்;குடா இருக்கு..இவ்வளவு சந்தோசமா இருந்த என் குடும்பத்தில் குண்டை தூக்கி போட்ட உன்னை எப்படி மறக்க முடியும்;? ஞாபகம் இருக்க உன் 23- வயதில் நடந்த நிகழ்ச்சி நல்லா யோசிச்சு பாரு............... அது சரி அத விடுடா. இப்ப நீ பணத்தை எடுத்துகிட்டு ஒரு மருத்துவமனையின் பெயரை சொன்னான் அங்கே வா என்றான்.. உடனே இதோ ஐந்தே நிமிடத்தில் அங்கே இருப்பேன் என்றார்.. வெள்ளை நிற மாருதி கார் சர்ரென பறக்கிறது..................

(தொடரும்)

அமரன்
22-08-2007, 08:44 AM
உச்சக்காட்சியில் ஆரம்பித்து தொடர்ந்து ஒரே வேகத்துடன் பயணிக்கின்றது கதை. எளிமையான வசன அமைப்பு இலகுவாக புரிய வைக்கின்றது. தொடருங்கள்..
(காயத்ரி அக்காவின் இரட்டைப்பதிவு அகற்றப்பட்டது.)

SathishVijayaraghavan
22-08-2007, 11:01 AM
நன்று.

அடுத்த பகுதிக்காக...

ஓவியா
02-09-2007, 12:34 AM
ஏலே கதை செம்ம சூப்பரா போகுது, இப்பப்போய் தொடரும் கார்ட் போட்டுட்டு எங்கலே போனீங்க!!!!

வெள்ளைத்தாமரை மேடம் வந்து கதைய தொடருங்க, நன்றி

கதை 120 இஸ்பீடுலே போகுதே!!! தூள்.