PDA

View Full Version : கூண்டுக்கிளி



இலக்கியன்
21-08-2007, 08:50 AM
http://img266.imageshack.us/img266/4981/animal20parrotrt4.jpg (http://imageshack.us)


விடுதலை வேண்டும்
என்கின்ற மானிடா

இறக்கை அடிக்கும்
பச்சைகிளி நானடா

என்னைச் சிறைப்படுத்தி
அழகு பார்ப்பது ஏனடா

அழகா இருப்பது−என் தப்பா
நீயும் சொல்லடா

உனக்கு இருக்கும் உரிமை
எனக்கு ஏன் இல்லையா?

இது என்ன நியாயம்
நீயும் சொல்லடா?

இலக்கியன்
21-08-2007, 09:13 AM
விடுதலை சுகந்திரம் பற்றி சிந்துக்கும் மனிதன் மற்றய உயிரினங்களை கொடுமைப்படுத்தி சிறைப்படுத்துவது சரியா என்கின்ற வினாத்தொடுக்கும் கவிதை இது

மனோஜ்
21-08-2007, 09:22 AM
கிளி

ஒன்றை சென்னால் திரும்ப சொல்வேன்
நன்றை செய்தால் நன்றி மறவேன்
பயிற்சி செய்தால் வணக்கம் சொல்வேன்
பச்சை எங்கள் வர்ன்னம்

பச்சவந்தி எங்கள் குணம் அல்ல
ஒன்றை சென்னால் உருப்படி இல்லை
நன்றை செய்தால் நன்றி மறப்பவன்
பயிற்சி செய்வான் மாக்களாய் மாற மனிதன்

இலக்கியன்
22-08-2007, 07:56 AM
கிளி

ஒன்றை சென்னால் திரும்ப சொல்வேன்
நன்றை செய்தால் நன்றி மறவேன்
பயிற்சி செய்தால் வணக்கம் சொல்வேன்
பச்சை எங்கள் வர்ன்னம்

பச்சவந்தி எங்கள் குணம் அல்ல
ஒன்றை சென்னால் உருப்படி இல்லை
நன்றை செய்தால் நன்றி மறப்பவன்
பயிற்சி செய்வான் மாக்களாய் மாற மனிதன்

பின்னுட்டவரிகள் நன்றாக உள்ளது

சிவா.ஜி
22-08-2007, 08:05 AM
சுதந்திரம் நாடும் மனிதன்....அதே சுதந்திரத்தை இன்னொரு உயிருக்கு மறுப்பது என்ன நியாயம்...?கிளியின் கேள்வி சிந்த்திக்கவைப்பது.
வாழ்த்துக்கள் இலக்கியன்.

Narathar
22-08-2007, 08:06 AM
கிளிகளை மட்டுமல்ல மானிடப்பிறவிகளே
இங்கு கம்பிக்கூட்டிற்குள் வாடுகிறார்கள்

கிளி அழகாய் பிறந்தது தப்பென்றால்
நாங்கள் தமிழராய் பிறந்தது

இணைய நண்பன்
22-08-2007, 10:59 AM
சுதந்திரம் தேடி போராடும் மனிதன்−கிளியை கூட்டுக்குள் அடைப்பது அநியாயம்.அருமையான கவிதை

அமரன்
22-08-2007, 11:14 AM
சபாஷ்..சரியான கேள்வி. உனக்குச் சுதந்திரம் எனக்கு சிறையா.? கிளி கேட்கிறது. கிளியின் உருவகத்தில் மனிதர் பலரைக் காண்கின்றேன். பாராட்டுக்கள் இலக்கியன்.

தளபதி
22-08-2007, 11:24 AM
கிளி மிகவும் கோபத்தில் உள்ளது. மனிதனின் அழகையும் வித்தியாசத்தையும் தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று இவ்வாறு செய்கிறான்.

ஆனாலும் சில மனிதர்கள் தாங்கள் வளர்க்கும் பிராணிகளிடம் மிகவும் அன்பு செலுத்துவார்கள். கிளியே!! பொறுமை கொண்டு சிறிது காலம் எங்களுடன் இருந்து பழகிப்பார், பிறகு "போ" என்றாலும் போகமாட்டாய்.

ஒரு கிளி, என் தாத்தா வீட்டிற்கு அதன் இறகில் அடிப்பட்டு வந்து விழுந்தது. என் தாத்தா அதைப் பராமரித்து வளர்த்தார். அது, அதன் இறகு சரியாகி பறக்க ஆரம்பித்தப் பின்னும் எங்களை விட்டு விலகவில்லை. எங்களுடன் இருந்தது. யாரேனும் அதைப் பார்க்காமல் சென்றால் அவர்களைக் கூப்பிட்டு பேசும் அளவுக்கு எங்களுடன் பழகியது.

அது இறந்தபோது, எங்கள் குடும்பத்தினர் ஒருவர் இறந்துவிட்டது போல் அனைவரும் அழுதது இன்னும் என் நினைவில் உள்ளது.

இலக்கியன்
22-08-2007, 06:12 PM
கருத்துக்கள் தந்த அணைவருக்கும் நன்றி

இளசு
22-08-2007, 07:59 PM
சிறகொடிந்த இரு கூண்டுக்கிளிகளுக்கு
பிறந்த கிளிகள் − இளஞ்சிறகுகளுடன்!

தலைமுறை மாறும்போது − இந்த
தலையெழுத்தும் மாறும்!

வாழ்த்துகள் இலக்கியன்!

அக்னி
22-08-2007, 10:27 PM
ஆகாயமே எல்லையென,
சிறகுவிரித்த கிளிகள்..,
சிறையில்...
மனிதனின் ரசனை...
உயிர்களின் வேதனை...

பாராட்டுக்கள் இலக்கியன்...

lolluvathiyar
23-08-2007, 03:37 PM
கவிதை அருமை, உன்மை. உனவு தேவைக்கு விலங்குகளை கொடுமை படுத்தலாம் அது படைப்பின் இலக்கனம். ஆனால் பொழுது போக்குக்கு உயிர்களை வதைக்கலாமா.


அழகா இருப்பது−என் தப்பா
நீயும் சொல்லடா


ஆகா அருமையான வரிகள்.
தளபதியின் விளக்கமும் அருமை

இனியவள்
23-08-2007, 07:03 PM
சிறகுவிர்த்துப் பறக்க
முயல்கின்றேன்
சிறைபிடித்து அழகு
பார்க்கின்றாய் என்னை

அழகிய கவிதை இலக்கியன் வாழ்த்துக்கள்

இலக்கியன்
25-08-2007, 08:41 AM
கருத்துக்கள்தந்த இளசு அக்னி வாத்தியார் இனியவள் அணைவருக்கும் நன்றி

பூமகள்
26-08-2007, 03:48 AM
கிளி போன்ற கவி...!!:nature-smiley-002: அருமை.
கிளி பற்றிய கவி படிக்கையில் என் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம் நியாபகம் வருகிறது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

நான் என் பள்ளிப் பருவத்தில் பச்சை கிளி வளர்க்க எண்ணி ஒரு கிளி வாங்கி வந்தேன். அதற்கு "சீனு" என்று பெயரிட்டு வளர்த்தேன். அது ஏனோ என்னோடு பழக மறுத்து கோபமாகவே இருந்தது..கூண்டில் அடைத்ததால் கோவம். இறக்கைகள் வெட்டப்பட்டிருந்தது. பூனை கடிக்கும் என்று கூண்டில் வளர்த்தேன்.
அதன் கூண்டு வாசலில் இருந்தது. அதிகாலையில் நிறைய கிளிகள் வானில் பறக்கும் நிலை பார்த்து தினம் தினம் அது பறக்கத் துடிக்கும் துடிப்பு கண்டு மனம் வருந்தி பல நாள் அழுதிருக்கிறேன்.
ஆனால் வெளி விட்டால் அதனால் பறக்க இயலா நிலை. அதன் இறகுகள் வளரும் வரை காத்திருந்தேன். தினமும் அதற்கு பறக்க பயிற்சி கொடுத்தேன்.
சரியாக ஒரு மாதம் கழித்து அதனை பறக்க விட்டேன் சுதந்திரமாய்..!!
மட்டற்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும் வேறு வேடர் கையில் என் சீனு மாட்டாதிருக்க கடவுளை தினமும் வேண்டுகிறேன்!!

அதற்கு உண்ணக் கொடுத்த மாதுளைகள் எல்லாம் அதன் கால் பட்டு கீழே விழுந்து இன்னும் எங்கள் வீட்டில் மாதுளை மரமாய் உள்ளது. அதன் பழங்களைச் சுவைக்கையில் அதன் முகம் இன்னும் என் கண் முன் நிழலாடுகிறது.

நிற்க,
அழகான கவி.. என் அப்போதைய மன நிலையை உங்களின் கவி சொன்னது போல் உள்ளதால் என் வாழ்வில் நடந்த சம்பவத்தை இங்கு பகிர்ந்தேன்.

வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் தோழரே..!!:nature-smiley-002:

இலக்கியன்
29-08-2007, 06:18 PM
நன்றி தோழி உங்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வையும் தந்தீர்கள்.