PDA

View Full Version : பிஞ்சு மேகம்



ஷீ-நிசி
21-08-2007, 07:17 AM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Photo%20Poems/PinjuMegam.jpg



வானுக்கும், பூமிக்குமான
வானுயர்ந்த பாதையில்....

வெள்ளை மேகமொன்று,
பிள்ளை வடிவில் இறங்கியது!
பூமியின் எல்லையில்!

எந்த தேவதைக்கு
பிறந்த தேவதையோ?!

தேவதைகள்,
வானில்தானே இருக்கும்!!

பூமிக்கு இறங்கியதால்,
இந்த பூமியும் வானமாகியது!!
கருப்பு வெள்ளை வர்ணமாகியது!

தேவதை பிரசவித்த..
தேவ பிள்ளையின்
பிம்பத்தை பிரசவித்ததில்..

நீரலைகளெல்லாம்,
தேனலைகளாய் ஆனது!

பிஞ்சு மேகத்தின்
பஞ்சு பாதம் பட்டதும்...

நீரிலிருந்த செவ்விதழ்களெல்லாம்,
ஒவ்வொன்றாய் மேலேறி,
செந்நிறப் பூக்ககளாகின!
மேக குழந்தையின்,
பொன்னிறப் பூக்கரங்களிலே!

வெட்கமென்ன?!
வெள்ளுடை தரித்த,
வெண்பிஞ்சுமேகமே!

கொஞ்சம் நிமிர்ந்து பார்..
உன் பார்வையில்,
பஞ்சாக மாறட்டும் -எங்களின்
நஞ்சான மனங்கள்!

இணைய நண்பன்
21-08-2007, 07:21 AM
அற்புதமான கவிதை..அழகூட்டும் படம்

"கொஞ்சம் நிமிர்ந்து பார்..
உன் பார்வையில்,
பஞ்சாக மாறட்டும் -எங்களின்
நஞ்சான மனங்கள்"
ஆழமான சிந்தனையை தூண்டும் வரிகள்.வாழ்த்துக்கள் நண்பா

ஷீ-நிசி
21-08-2007, 07:27 AM
நன்றி இக்ராம்....

சிவா.ஜி
21-08-2007, 07:40 AM
புதிதாய் பிறந்த மேகமாய், வெண்துணி சுருட்டலுக்கிடையே பிரகாசிக்கும் முகம்...எத்தனை அழகு. விவரிப்பும் வர்ணனையும் பிரமாதம்.வாழ்த்துக்கள் ஷீ.

ஷீ-நிசி
21-08-2007, 07:58 AM
நன்றி சிவா....

இலக்கியன்
21-08-2007, 07:58 AM
அழகான சொல் அலங்காரம் கொண்டவரிகள் அந்த வெண்மேகம் போல வாழ்த்துக்கள்

அமரன்
21-08-2007, 08:25 AM
புதிதாகப் பிறந்த சின்னஞ்சிறு பிஞ்சின் கொஞ்சும் சிரிப்பும், பஞ்சு மேனியும் வெண்வானில் உலாவரும் கருநிலாவும் ஒன்றை ஒன்று விஞ்ச உலகத்திடம் கெஞ்சும் என் மனம் "இம்மழலைக்காக ஆவது மாறமாட்டாயா? மழலையாலாவது மாறமாட்டாயா?". அதே கேள்வி ஷீயின் மனதில் இருந்தது போலும். கவித்துவமாக வெளிபட்டுள்ளது. ஒவ்வொரு குழந்தையும் தேவதை தானே.

கறுப்பு வெள்ளைப் படத்தில் வண்ணங்களைத் தூவி வர்ண ஓவியமாக்குகிறது வரிகளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும். அந்த வண்ண வார்த்தைகளில்

வெட்கமென்ன?!
வெள்ளுடை தரித்த,
வெண்பிஞ்சுமேகமே!

இந்த வார்த்தைகள் ஒட்டிக்கொள்கின்றன. மின்னல்கள் பல வெட்டுகின்றன. ஏன் இந்த வெட்கம்.? குனிந்து இருப்பதால் வெட்கமாகத் தெரிகிறதா? அவள் வரவில் ஏற்பட்ட சடுதியான மாற்றங்கள் வெட்கத்தை மலரச்செய்ததா? பாழ்பட்ட உலகில் பாலான நான் வந்து விட்டேனே என்பதலா? எதுவும் இல்லை. ஷீயின் ஜால தேனமுத கவிதையின் அழகினால் தன்னழகு குறைந்ததது என வெட்கித்தலைகுனிகிறது வெண்மேகப் பிஞ்சு. பாராட்டுக்கள் ஷீ. தொடருங்கள்.

ஷீ-நிசி
21-08-2007, 09:00 AM
நன்றி இலக்கியன்....

நன்றி அமரன்... மிக மிக அழகிய விமர்சனம்.....

ஆதவா
21-08-2007, 09:34 AM
காட்சியழகுக் கவிஞர் என்று இளசு அண்ணா சொன்னதில் ஐயம் எள்ளளவிலும் இல்லை....

நிஜத்தில் யாரேனும் வருவார்களா என்று ஏங்கியது போய் நிழலிலாவது வரக்கூடுமா என்று ஐயப்பட்டு பாடும் ஒர் கவி. பிள்ளையாகட்டும் பெருமாளாகட்டும் துயர் துடைக்கவேண்டாம், துயர் ஏற்படுத்தாதவாறாவது வரலாமில்லையா?

தேவதைகளின் நிழல் கண்டதில்லை நாம்... தேவதைகளை மிக அருகிலே வைத்துக் கொண்டே. உருவாக்கப்படும் தேவதைகள் நம் தேவைகளுக்கு உரு மாற்றப்படுகிறது.. வானில் இருப்பவைகளை துர்தேவதைகளாகவே எடுத்துக் கொள்ளுங்கள்.. மண்ணில் கிடக்கின்றன எண்ணில்லாதவைகள்.

பஞ்சாக மாறி பறந்துபோகட்டும், நஞ்சு மனங்கள்.

நெஞ்சிலே வடு சுமந்தவர்கள் அஞ்சியாவது சாகட்டும் என்று வரம் கேட்டிருக்கலாம்.. பஞ்சாக மாறியென்ன சாதகமா செய்வார்கள்.. கெஞ்சிக் கூத்தாடி நிழல் பட்ட இடத்தை நிற்கவைத்து கும்பிட வைத்தாலும் அஞ்சிலார் அவர்கள்.... நஞ்சு மனங்கள் நஞ்சாகவே இருக்கட்டும். பஞ்சுடையோரைக் காக்கச் சொல்லுங்கள். காற்று பட்டு விலகும் மேகமாய் காதல் பட்டு விலகட்டும் என்று நினைப்போரை முதலில் காப்பற்றலாமே!!

கவிதை எதுகைகள் நிறைந்து அழகாய் அமைந்திருக்கிறது. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். அமரனின் விமர்சனம் அட்ட்காசமாகவும் இருக்கிறது... தொடர்க மக்களே!

படத்திற்கு 100,
கவிதைக்கு 200
அழகுக்கு 100

அமரனுக்கு விமர்சனம் 100
வாழ்த்துக்கள் நண்பர்களே!

மனோஜ்
21-08-2007, 09:39 AM
மிக சிற்பான ஒரு கவிதை படத்தை கருவாக கவிதை வடித்துள்ளது கவிதையில் உண்மையம் மென்மையும் மிக மிக அருமை ஷீ

இதயம்
21-08-2007, 09:42 AM
கவிதை வரிகள் மனதை கொள்ளை கொள்கின்றன. பிஞ்சு தேவதை, நஞ்சு மன வார்த்தை பிரயோகம் இன்றைய மனித சமூகத்தின் சுயநல உலகை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. பாராட்டுக்கள் அழகான, அக்கரையுள்ள உள்ள கவிதைக்கு..!

ஷீ-நிசி
21-08-2007, 10:20 AM
நன்றி ஆதவா.. கவிதையின் வேறு கோணத்தில் அலசியது....

நஞ்சு பஞ்சாகவோ... ஆகாமலோ போகட்டும்.... பஞ்சாக இருப்பது நஞ்சாக வேண்டாமே... உண்மைதானே....

நன்றி மனோஜ்... ந*ன்றி இத*ய*ம்...

அக்னி
22-08-2007, 10:55 PM
அருமையான விளிப்புக்கள்... கவரும் சொல்லாடல்... அதுதான் ஷீ−நிசி கவிதை என்று மீண்டும் உணர்த்தும் கவிதை...
பாராட்டுக்கள் பல...

படமும், ஆர்ப்பரிக்கும் கடலும், குனிந்த தலையும், கரங்கள் தாங்கிய மலர்ச்செண்டும், விரல்கள் பிய்த்துத் தூவும் இதழ்களும்,
என் மனதிலும் சில வரிகளைத் தருகின்றது...

வானமிருந்து இறங்கினாள் தேவதை...
பரந்த நீர்ப்பரப்பில்,
தேடித் தேடி தூவினாள்,
மலரிதழ்களை...
ஆழிப்பேரலை விழுங்கிய,
மலருடல்களுக்கு...

ஷீ-நிசி
23-08-2007, 03:45 AM
அருமையான விளிப்புக்கள்... கவரும் சொல்லாடல்... அதுதான் ஷீ−நிசி கவிதை என்று மீண்டும் உணர்த்தும் கவிதை...
பாராட்டுக்கள் பல...

படமும், ஆர்ப்பரிக்கும் கடலும், குனிந்த தலையும், கரங்கள் தாங்கிய மலர்ச்செண்டும், விரல்கள் பிய்த்துத் தூவும் இதழ்களும்,
என் மனதிலும் சில வரிகளைத் தருகின்றது...

வானமிருந்து இறங்கினாள் தேவதை...
பரந்த நீர்ப்பரப்பில்,
தேடித் தேடி தூவினாள்,
மலரிதழ்களை...
ஆழிப்பேரலை விழுங்கிய,
மலருடல்களுக்கு...

அடடா... அக்னி.... நீங்கள் எழுதிய கொஞ்சம் கவிதையும்... கொஞ்சும் கவிதையாய்... மின்னுகிறது..

நன்றிகளும்! வாழ்த்துக்களும்!

பூமகள்
23-08-2007, 06:52 AM
அழகு வரிகள்... ஆர்பரிக்கும் படம்... அருமையான கவிநடை.. அற்புதம்..
"தேவதை பிரசவித்த..
தேவ பிள்ளையின்
பிம்பத்தை பிரசவித்ததில்..

நீரலைகளெல்லாம்,
தேனலைகளாய் ஆனது!"

கவியினூடே இட்டுச் சென்ற ஷீ−நிதி அவர்களுக்கு பாராட்டுக்கள் கோடி.
ஒரு கேள்வி.. எங்மே கிடைக்கிறது தங்களுக்கு இம்மாதிரி அற்புதமான படங்கள்??

பிஞ்சுமேகத்திற்கு என் அன்பளிப்பு 250 இ−பணங்கள்.

ஷீ-நிசி
23-08-2007, 07:40 AM
அழகு வரிகள்... ஆர்பரிக்கும் படம்... அருமையான கவிநடை.. அற்புதம்..
"தேவதை பிரசவித்த..
தேவ பிள்ளையின்
பிம்பத்தை பிரசவித்ததில்..

நீரலைகளெல்லாம்,
தேனலைகளாய் ஆனது!"

கவியினூடே இட்டுச் சென்ற ஷீ−நிதி அவர்களுக்கு பாராட்டுக்கள் கோடி.
ஒரு கேள்வி.. எங்மே கிடைக்கிறது தங்களுக்கு இம்மாதிரி அற்புதமான படங்கள்??

பிஞ்சுமேகத்திற்கு என் அன்பளிப்பு 250 இ−பணங்கள்.


நன்றி பூமகள்.. எனக்கும் மிக பிடித்தமான வரிகளை மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள்..

இந்த படம் எனக்கு நண்பர் ஒருவர் மெயிலில் அனுப்பியிருந்தார்.. பார்க்கும்போதே கவிதை எழுதிட கை பரபரத்தது..

விளைவு... இந்த கவிப்பிரசவம்....

நன்றி பூமகள்!

lolluvathiyar
23-08-2007, 12:03 PM
தனியாக கவிதையை படித்து பார்த்தேன். அவ்வளவாக புரியவில்லை
அதே படத்துடன் இருப்பதை படித்து பார்த்தால் தான் நன்றாக புரிகிறது.
படத்தோடு ஒன்றி தான் படைத்தீரோ

சாராகுமார்
23-08-2007, 12:45 PM
ஷி−நிசி அவர்களே,கவிதையும் அருமை.படமும் அருமை.கலக்கிட்டீங்க.

ஷீ-நிசி
23-08-2007, 02:41 PM
வாத்யாரே.. கவிதை படத்திற்காகத்தான் எழுதினேன்.... நன்றி வாத்யாரே!

நன்றி சாராகுமார்...

lolluvathiyar
23-08-2007, 03:29 PM
வாத்யாரே.. கவிதை படத்திற்காகத்தான் எழுதினேன்.... நன்றி வாத்யாரே!

நன்றி சாராகுமார்...

அது தெரிந்து விட்டது ஷீ நிசி எதற்க்கும் தனியாக படித்து பார்க்கலாம் என்று ஒரு முயற்ச்சி செய்து பார்த்தே (மனதில் படத்தை நினைக்காமல்)
அதை தான் அப்படி குறிப்பிட்டேன்

ஷீ-நிசி
23-08-2007, 04:06 PM
அது தெரிந்து விட்டது ஷீ நிசி எதற்க்கும் தனியாக படித்து பார்க்கலாம் என்று ஒரு முயற்ச்சி செய்து பார்த்தே (மனதில் படத்தை நினைக்காமல்)
அதை தான் அப்படி குறிப்பிட்டேன்

ஓ! புரிந்துகொண்டேன்.... நன்றி வாத்தியாரே!

இனியவள்
23-08-2007, 06:38 PM
அழகிய கவிதைக்கு முன்
வார்த்தைகள் மெளனிக்கின்றன ஷீ

வாழ்த்துக்கள் ஷீ

ஷீ-நிசி
24-08-2007, 03:40 AM
அழகிய கவிதைக்கு முன்
வார்த்தைகள் மெளனிக்கின்றன ஷீ

வாழ்த்துக்கள் ஷீ

நன்றி இனியவளே!