PDA

View Full Version : நகர மருமகள்



சிவா.ஜி
21-08-2007, 05:06 AM
பேத்தியின் விவரிப்பில்
நிகழ்வுகள் உணரும் பாட்டியும்,
பேரனின் வாசிப்பில்
உலகம் படிக்கும்
கல்லாத தாத்தாவும்...
இல்லாதது ஒரு குறைதான்!

மின்னணு சாதன சுகத்துடன்
இந்த வீடும் ஒரு சிறைதான்!

ஒவ்வொரு உள்ளத்துக்கும்
உள்ளதொரு உறைதான்!

ஒருவர் மீது ஒருவரின்
அன்பும் ஒரு எல்லை வரைதான்!

பள்ளிவிட்டு வரும் பிள்ளைகள்
சுமை இறக்கி
சோர்வு சுமக்கிறார்கள்....

அலுவல் முடிந்த கணவனோ.
குளம்பிக் குடித்து
கோபம் துப்புகிறான்...

அரசிப் பட்டம் கட்டிய
அடிமையாய் அன்றாடம்
மாள்கிறாள்.....

ஆயிரம் வலிகளோடு
அடுப்பங்கரை
ஆள்கிறாள்........

எப்போதாவது வந்துபோகும்
அப்பா,அம்மா.....
அப்போது மட்டும்
மகளாய் வாழ்கிறாள்...!

இணைய நண்பன்
21-08-2007, 07:24 AM
வாழ்வின் உள் நிகழ்வை அழகாக கவிதையில் தெளிவு படுத்தி இருக்கிறீங்க.தொடரட்டும் உங்கள் பணி

சிவா.ஜி
21-08-2007, 07:34 AM
நன்றி இக்ராம்.

வெண்தாமரை
21-08-2007, 07:45 AM
உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகளை படைக்கும் நண்பர் சிவாக்கு வாழ்த்துக்கள்..

இலக்கியன்
21-08-2007, 07:55 AM
ஆயிரம் வலிகளோடு
அடுப்பங்கரை
ஆள்கிறாள்........

நியமானவரிகள் வலிகளுடன் வாழ்த்துக்கள் சிவா ஜி

சிவா.ஜி
21-08-2007, 07:57 AM
உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகளை படைக்கும் நண்பர் சிவாக்கு வாழ்த்துக்கள்..

நன்றி வெண்தாமரை....ஒரு பெண்ணின் வலி ஒரு பெண்ணுக்குத்தான் தெரியுமென்பார்கள்.....என்னாலும் உணர முடிந்தவைகளை வரிகளாக்கினேன்.

சிவா.ஜி
21-08-2007, 07:59 AM
ஆயிரம் வலிகளோடு
அடுப்பங்கரை
ஆள்கிறாள்........

நியமானவரிகள் வலிகளுடன் வாழ்த்துக்கள் சிவா ஜி

மிக்க நன்றி இலக்கியன்.எல்லா நகர மருமகள்களும் பட்டின சுகம் மனதார அனுபவிப்பதில்லை.இப்படிப்பட்ட இக்கட்டில் இருப்பவர்களும் உண்டு.

பூமகள்
21-08-2007, 08:03 AM
ஒரு பெண்ணின் வலி ஒரு பெண்ணுக்குத்தான் தெரியுமென்பார்கள்.....என்னாலும் உணர முடிந்தவைகளை வரிகளாக்கினேன்.

"மாதராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா..." என்றாலும் வலிகள் நிறைந்ததே பெண்கள் வாழ்க்கை..

அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்... பாராட்டுக்கள்.. சிவா.ஜி அவர்களே..

அமரன்
21-08-2007, 08:09 AM
நகரம். மனிதர்களினதும் வாகனங்களினதும் மூச்சுக்காற்றினால் ஆன நரகம். ஒருவர் மூச்சின் உஷ்ணத்தை மற்றவர் உணர்ந்தாலும் உணர்ச்சிகளை உணர்வதில்லை. அதற்கான நேரங்கள் கிடைப்பதில்லை என்பது அவர்கள் சொல்லும் காரணம். உணர்ச்சிகளை உணர்வதற்கு கணப்பொழுது போதும் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை அல்லது தெரிந்தும் நகரத்துக்கே உரிய எச்சரிக்கை உணர்வு மேலிட்டு மறைக்கிறது. வெளியே மட்டுமல்ல உள்ளேயும்.

பள்ளியில் பிள்ளைகளுக்கு, அலுவலகத்தில் தலைவனுக்கு மன உளைச்சல். வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு வெறுமை தரும் மன உளைச்சல். தலைவிக்கு அனைவரையும் சேர்த்து சுமக்கும் உழைப்பினால் வந்த மன உளைச்சல். அவரவர் அயர்ச்சி அவரவருக்கு இருக்கும்போது ஒரு கணம் தோளில் கைபோட்டு அல்லது தோளுடன் தொள்சேர்த்து அணைப்பதற்கு நினைப்பதில்லை. ஏன்? நொடிப்பொழுது என்பது நகரத்தில் கோடி கணங்களுக்கு சமானமானதா? சிந்திக்கவைத்தது சிவாவின் காவியதலைவி பாத்திரம். பாராட்டுக்கள் சிவா.

குறைகள் குறைவானாலும் குறைவான கவித்துவம் எளிமையில் கழுவிய கறைகளின் எச்சமாக கொஞ்சமாகத் தெரிகிறது. தொடருங்கள்

மனோஜ்
21-08-2007, 08:10 AM
சிறப்பான கவிதை இன்னும் அடுப்பாங்கரை மட்டும் இல்லை தற்பொழுது நகரத்து பெண்கள் அலுவலகத்தை முடித்து அடுப்பாங்கரையும் கவனிப்து இன்னும் கடினமானது
கவிதை அழகாய் உணர்த்துகிறது பெண்ணின் மனதுயரத்தை நன்றி சிவா.ஜீ

சிவா.ஜி
21-08-2007, 08:13 AM
நன்றி பூமகள்,மிக நன்றாக சொன்னீர்கள்.

சிவா.ஜி
21-08-2007, 08:17 AM
அடேயப்பா....அமரன் உளவியல் உண்மைகளை சில வரிகளில் அழகாக எழுதி விட்டீர்களே...வாவ்..
அதுமட்டுமல்ல....குறையுளது என்பதையும் குறையேதுமில்லா நல்ல தமிழில் உரைத்தது அருமை. எந்த சிறு குறையானாலும்...பெரிய குறையானாலும் கண்டிப்பாக சுட்டிக்காட்டுங்கள் தயவுசெய்து.

இதயம்
21-08-2007, 08:23 AM
மனிதர்களின் மன உணர்வுகளை, வாழ்வின் எதார்த்தங்களை அடிப்படையாக கொண்டு கவி புனைவதில் வெற்றியடைந்து வருகிறீர்கள். இது உங்களின் கவித்திறனை மேலும் மெருகேற்றும் என்பதிலும் சந்தேகமில்லை. நகர வாழ்க்கையின் அடிப்படை உறவுகள் எப்படி கையாளப்படுகின்றன என்பதை அழகாக எடுத்துரைத்திருக்கிறீர்கள். அதிலும் உங்களின் கடைசி வரிகளான* கவிதை நாயகி "நகர மருமகள்" பற்றிய

எப்போதாவது வந்துபோகும்
அப்பா,அம்மா.....
அப்போது மட்டும்
மகளாய் வாழ்கிறாள்...!

என்ற வரிகள் மிக, மிக அற்புதமானவை. எத்தனை தான் உள்ளங்கையில் வைத்து தாங்கும் கணவன் தனக்கு கிடைத்தாலும் பெண்ணுக்கு தன் பெற்றோர் மூலம் கிடைக்கும் அன்பும், பாதுகாப்பும், ஆதரவும் மிக, மிக பிடித்தவை. அது வாழ்க்கை முழுதும் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்பதால் கூட அதன் மேல் ஈர்ப்பு வந்திருக்கலாம்.! கணவன் தன் மனைவியை முதலில் காதலியாக, பிறகு குடும்ப பாரம் சுமக்கும் தலைவியாக, அடுத்து பிள்ளைகளை பேணி வளர்க்கும் பாதுகாவலராக என்று அவன் பார்வை மாறிக்கொண்டே போகிறது. ஆனால், பெற்றோர்களுக்கு தன் பெண் என்றும் அவர்களை சந்தோஷப்படுத்தும் செல்லக்குழந்தை தான். என் தாயின் பெற்றோர் என் வீட்டுக்கு அவரை பார்க்க வரும்போது என் தாய்க்கு பிடித்த சிறுபிள்ளைத்தனமான தின்பண்டங்களை பேரன் பேத்தி எடுத்த என் அம்மாவுக்கு வாங்கி வருவதை கண்டு அதை உணர்வேன். இந்த உணர்வை வேறு எந்த உறவிலும் காண இயலாது. நிறைவான படைப்பு..! வாழ்த்துக்கள் சிவா..!

பாராட்டிய அதே நேரம் குறையையும் குறிப்பிட்டால் அது உங்கள் கவிப்பயணத்தில் ஏற்படும் இடையூறுகளை தவிர்த்து பயணம் சுகமாக அமையும் என்பதால் குறிப்பிடுகிறேன். "நகர மருமகள்" என்ற தலைப்பிட்டுவிட்டு இந்த கவிதையின் நாயகியை பற்றி அதிகம் எழுதாமல் தாத்தா, பாட்டி, கணவன், குழந்தைகள் என்று எல்லோரையும் போல் குறிப்பிட்டது சிறிய முரண் என்று தோன்றுகிறது. அல்லது தலைப்பை "நகர வாழ்க்கை" என்று மாற்றியிருந்தால் பொருத்தமாக இருக்கும் (ஆனால், இது என்னை கவர்ந்திருக்காது. காரணம், உங்களின் அற்புதமான கடைசி வரிகள்..!!)

சிவா.ஜி
21-08-2007, 08:57 AM
மிக மிக அருமையான பின்னூட்டத்திற்கு என்னுடைய இதயப்பூர்வமான நன்றிகள்.ஒரே ஒரு வருத்தம்தான். அந்த பின்குறிப்பையும் தெளிவாகவே இட்டிருக்கலாம்.ஏனென்றால் அதுதான் மிக முக்கியமான தேவை.
எனினும்...ஒரு சிறு விளக்கம்...தாத்தா,பாட்டி இல்லாதகுறை..அதாவது அப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த அந்த பெண்ணுக்கு.....தன்னுடைய தாய் தந்தையரோ அல்லது தன் கணவரின் தாய் தந்தையரோ இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆதங்கம். சொல்லவந்த கருவே நகரத்து மருமளானாலும்...வீடே சிறையாகிப்போனது...பிள்ளைகளும்,கனவரும் அனுசரனையாக இல்லாமல் போனது, என்பதெல்லாம் அவளை வருந்த வைக்கிறது என்பதுதான். அதனால்தான் அவர்களைக் குறிப்பிட வேண்டி வந்தது.
மீண்டும் மன்மார்ந்த நன்றிகள் இதயம்.

ஆதவா
22-08-2007, 04:39 AM
அமரன், இதயம் மீறி வேறு கருத்துக்கள் உள்ளதோ.? அருமை... ஆனால் பழைய கருவாயிற்றே! ஒரு மனைவியின் (அல்லது பெண்ணின்) இறுதிகட்ட ஆறுதல்.. அவளின் பெற்றோரின் வருகையில்..

நகர மருமகள் பலர் வேறுவிதமாகவும் இருக்கிறார்கள்....

வாழ்த்துக்கள் சிவா.ஜி.

சிவா.ஜி
22-08-2007, 04:43 AM
சரிதான் ஆதவா..பழைய கள் புதிய மொந்தையில்.காதலைப்போல இல்லத்தரசிகளின் அல்லல்களும் இன்னும் நிறைய சொல்லப்படலாம்...வேறுவேறு விதங்களில்.ஆமாம்...நகரம் பெற்றெடுத்த நகர மருமகள்கள் ஒரு விதம்...நகரம் தத்தெடுத்த நகர மருமகள்கள் வேறுவிதம்.இவள் கிராமத்தில் பூத்த பூ...நகரத்தில் பதியனிடப்பட்டவள்..இன்னும் வேர்பிடிக்கவில்லை. நன்றி ஆதவா.

lolluvathiyar
23-08-2007, 03:51 PM
சிவா ஜி கொஞ்ச நாளா கவிதை கலக்குறீங்க. இந்த கவிதை வார்த்தைகள் அருமை. ஓரளவு (ஓரளவு மட்டுமே) உன்மையும் இருகிறது.
பென்னின் ஏக்கத்தை புரிந்து எழுதபட்டது



மின்னணு சாதன சுகத்துடன்
இந்த வீடும் ஒரு சிறைதான்!

மின்னனு இல்லாமல் இருந்தால் அந்த சிரை பட தேவை இல்லை. சிரை படுத்துவதே மின் அனு சாதனங்கள்தான்.



ஒருவர் மீது ஒருவரின்
அன்பும் ஒரு எல்லை வரைதான்!


அந்த எல்லையை புரிந்து கொண்டாலே குடும்பத்தில் எந்த பிரச்சனையும் வராது.



அரசிப் பட்டம் கட்டிய
அடிமையாய் அன்றாடம்
மாள்கிறாள்.....

காதலுக்கு அடிமை படுவது இருபாலரின் விருப்பமே.
சுகமான அடிமைதங்கள். கடமையை அடிமைதனம் என்றால் குடும்பம் நடத்த முடியுமா



ஆயிரம் வலிகளோடு
அடுப்பங்கரை
ஆள்கிறாள்........

இப்பதா காஸ் ஸ்டவ், கிரைன்டர்,...... வலி ஏது



எப்போதாவது வந்துபோகும்
அப்பா,அம்மா.....
அப்போது மட்டும்
மகளாய் வாழ்கிறாள்...!

அற்புதமான வரிகள் மனதார பாராட்டுகிறேன்.
அப்பா அம்மா வந்து போன பின் சில நாள் மனைவியாய் இருக்க மாட்டள்

இன்னொரு முக்கியமான விசயம் கவிதைக்கு இந்த தலைப்பு மிக மிக அருமையாக பொருந்தி இருகிறது

ஷீ-நிசி
23-08-2007, 04:02 PM
நகர மருமகள்..... கூட்டு குடும்பத்திலில்லை இந்த கவிதையின் நாயகி....
கணவன் பணிக்கு சென்றிட... பிள்ளை பள்ளி சென்றிட, இவள் மட்டும் ஹாலுக்கும், அடுப்பங்கரைக்கும் பயணம் செய்து கொண்டிருப்பாள்...


எப்போதாவது வந்துபோகும்
அப்பா,அம்மா.....
அப்போது மட்டும்
மகளாய் வாழ்கிறாள்...!


ஒவ்வொரு மருமகளும் விரும்பி ஏற்றுகொள்ளும் சுமைதானே இந்த தனிமை...


மேற்கோள் காட்டபட்ட வரிகளில் உணர்வுகள் பிரதிபலிக்கிறது சிவா.. வாழ்த்துக்கள்!

இனியவள்
23-08-2007, 06:43 PM
வசதியான வாழ்க்கையை
ஏற்படுதிக் கொடுத்து
விட்டோம் சந்தோஷமாக
இருப்பாள் என் குடும்பத்தலைவி
என நினைத்து குடும்பத் தலைவர்கள்
அன்பெனும் பொக்கிஷத்தை மட்டும்
கொடுக்கத் தவறிச் சென்று விடுகின்றனர்


அழகிய கவிதை சிவா வாழ்த்துக்கள்

சிவா.ஜி
24-08-2007, 04:44 AM
வாத்தியாரின் அலசல் அவரின் தனிபாணியில்...மின்ணணு சாதனங்கள்,காஸ்,குக்கர் எல்லாம் சரிதான்...பலர் இதை அப்படியே ஏற்றுக்கொண்டு அதுதான் வாழ்க்கை என்று வாழ்ந்து முடிந்துவிடுகிறார்கள்.எல்லாம் இருந்தும் தேவைப்படும் அன்பு கிடைக்காதபோதுதான் பிரச்சனையே..இந்த கவிதையிலும் அப்படிப்பட்ட கணவரும்,பிள்ளைகளும் இருப்பதால்தான் இந்த மருமகள் வேதனிக்கிறாள்.
மனமார்ந்த நன்றி வாத்தியாரே.

சிவா.ஜி
24-08-2007, 04:46 AM
மிக்க நன்றி ஷீ−நிசி.பெரும்பான்மைகள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டு..விதிவிலக்குகள்தான் பேசப்படுகிறது.இந்த நாயகியும் அப்படிபட்ட சூழலில் தவிப்பதால் அந்த உணர்வை கவிதையாக்கினேன்.

சிவா.ஜி
24-08-2007, 04:48 AM
நூற்றுக்கு நூறு சரி இனியவள்..தேவைப்படும் அன்பு கிடைக்காத பட்சத்தில் அதற்காக மனது ஏங்கத்தானே செய்யும்.மிக்க நன்றி.

ஓவியன்
25-08-2007, 10:27 AM
உலகம் முன்னேற்றம் என்னும் விளைவு எமக்குத் தந்த பரிசுகளில் ஒன்று.........!
கிராமத்து வாசத்தை நகர இரைச்சலிலே தொலைத்து விட்டு
நகர மருமகள்
நகர முடியாத
நரகத்து மருமகளாக மாறிய கொடுமை.............!

சின்ன சின்ன ஆசைகளைத் தொலைத்து விட்டு, கணவனுக்காகவும் குழந்தைகளுக்குகாகவும் ஓடாகத் தேயும் உங்கள் கவிதை நாயகி உண்மையிலே கடவுளுக்கு சமமானவளே..............!

கணவனும், பிள்ளைகளும் அவள் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி அவளையும் சந்தோசப் படுத்தினால் அவர்களது வாழ்க்கை எவ்வளவு சந்தோசமாக நகரும்.........!!! :nature-smiley-002:

அழகான வரிகள் சிவா − பாராட்டுக்கள்!.

சிவா.ஜி
25-08-2007, 10:44 AM
நன்றி ஓவியன்..நகர மருமகளின் நரகவேதனையுணர்ந்த வரிகள் உங்கள் பின்னூட்டம்.

அக்னி
25-08-2007, 11:24 AM
நகரத்தில் புதுவாழ்வு...
பூரிப்போடு வந்தால்..,
வந்ததும்தான் தெரிந்தது,
(தலை)எழுத்துக்கள் மாறியது...
நரகத்தில் புற்றுவாழ்வு...

பாராட்டுக்கள் சிவா.ஜி...
ஆனால், வாழ்வின் எதிர்காலம் சிறக்கவேண்டுமானால்,
நகரத்தில் சிறைப்படுவது, இன்றைய காலத்தில் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டதே...

சிவா.ஜி
25-08-2007, 01:16 PM
லட்சக்கணக்கான மருமகள்கள் நகரங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறர்கள்.நான் சொல்லியிருப்பது நகரவாழ்க்கையில் இருந்துகொண்டு வீட்டிலுள்ளோர் அன்பை பூரணமாய் பெறாமல்,வெளியிலிருந்தும் பெறமுடியாமல் அவதிப்படும் அந்த மருமகளைப் பற்றிதான்.
நீங்கள் சொன்னதைப் போல பிள்ளைகளின் நல்ல எதிர்காலத்துக்கு நகர வாழ்க்கைதான் நல்லது.வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக்கொடுத்துவிடலாம்..ஆனால் நல்ல மனிதனாக சமைக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அக்னி.

சாராகுமார்
25-08-2007, 03:13 PM
நகர மருமகள்
சில நேரம்
மருகும் மருமகள்
வெளி வேசத்தில்
மகிழம் மருமகள்.
சிவா.ஜி.வாவ்.அருமையான கவிதை.

சிவா.ஜி
26-08-2007, 04:42 AM
அசத்திட்டீங்க சாராகுமார்.மருகும் மருமகள்... அழகான சொற்பிரயோகம்.
மிக்க நன்றி.

இளசு
29-08-2007, 08:50 PM
இல்லத்தரசி..பெயரில்!
இல்லச்சிறை அடிமை உண்மையில்!

நுகத்தடியில் சிக்கிய மாட்டு நிலை..
பல பெண்களுக்கும் சில ஆண்களுக்கும்..

சந்ததி நலம் எனும் எண்ணெய் எடுக்க
செக்குமாடாய் சில தம்பதிகள்...

கவிதை நாயகிக்கு என் புரிதல்கள் உண்டு... ஆனால் தீர்வுகள்?


வாழ்த்துகள் சிவா!

(நண்பர்களின் பின்னூட்டங்களின் செழுமை சொல்லும்
சிவாஜியின் இக்கவிதையின் வளமை!)

சிவா.ஜி
30-08-2007, 04:13 AM
இல்லத்தரசி..பெயரில்!
இல்லச்சிறை அடிமை உண்மையில்!
கவிதை நாயகிக்கு என் புரிதல்கள் உண்டு... ஆனால் தீர்வுகள்?


அந்த புரிதல்கள் தான் இல்லறத்தின் நல்வழி நடத்துநர்களென்பது பலருக்கு புரியாததால்தான்...தவிர்க்கப்படவேண்டிய தர்க்கங்களும்,முறிவுகளும் ஏற்படுகின்றன. மனம் நிறைந்த நன்றி இளசு.

ஓவியா
31-08-2007, 10:11 AM
பேத்தியின் விவரிப்பில்
நிகழ்வுகள் உணரும் பாட்டியும்,
பேரனின் வாசிப்பில்
உலகம் படிக்கும்
கல்லாத தாத்தாவும்...
இல்லாதது ஒரு குறைதான்!

மின்னணு சாதன சுகத்துடன்
இந்த வீடும் ஒரு சிறைதான்!

ஒவ்வொரு உள்ளத்துக்கும்
உள்ளதொரு உறைதான்!

ஒருவர் மீது ஒருவரின்
அன்பும் ஒரு எல்லை வரைதான்!

பள்ளிவிட்டு வரும் பிள்ளைகள்
சுமை இறக்கி
சோர்வு சுமக்கிறார்கள்....

அலுவல் முடிந்த கணவனோ.
குளம்பிக் குடித்து
கோபம் துப்புகிறான்...

அரசிப் பட்டம் கட்டிய
அடிமையாய் அன்றாடம்
மாள்கிறாள்.....

ஆயிரம் வலிகளோடு
அடுப்பங்கரை
ஆள்கிறாள்........

எப்போதாவது வந்துபோகும்
அப்பா,அம்மா.....
அப்போது மட்டும்
மகளாய் வாழ்கிறாள்...!

மிகவும் அருமையான கருவில் அற்புதமான கவிதை.

திரைக்கு பின் நடக்கும் பல விசயங்கள் சாதரண மானிடர்களுக்கு என்றுமே தெரிவதில்லை, இது போல் பலலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.
உங்கள் வரிகள் பிரமாதம். சமூக பார்வையில் கவிதை மின்னுகின்றது. சபாஷ் அண்ணா.

கொசுரு:
எப்படி எடுத்து சொல்லியும் இந்த குழியில் விழ பலர் ஆவலாய்தான் உள்ளனர். ஹி ஹி ஹி :icon_wink1:

சாராகுமார்
31-08-2007, 01:57 PM
அசத்திட்டீங்க சாராகுமார்.மருகும் மருமகள்... அழகான சொற்பிரயோகம்.
மிக்க நன்றி.

நன்றி சிவா.ஜி.

சிவா.ஜி
01-09-2007, 04:40 AM
மிகவும் அருமையான கருவில் அற்புதமான கவிதை.

திரைக்கு பின் நடக்கும் பல விசயங்கள் சாதரண மானிடர்களுக்கு என்றுமே தெரிவதில்லை, இது போல் பலலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.
உங்கள் வரிகள் பிரமாதம். சமூக பார்வையில் கவிதை மின்னுகின்றது. சபாஷ் அண்ணா.

கொசுரு:
எப்படி எடுத்து சொல்லியும் இந்த குழியில் விழ பலர் ஆவலாய்தான் உள்ளனர். ஹி ஹி ஹி :icon_wink1:

நன்றி சகோதரி. உங்கள் கொசுறு சொல்வதைப்போல் பலரும் குழியில் விழுவதில்லை ஓவியா.திருமண பந்தத்தை மிக ஆழகாக கடைபிடித்து வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.சிலரே அதன் முழுப்பரிமாணத்தை அறியாமல்,சில சமயம் அறிந்தும் அலட்சியமாய் நடந்துகொள்வதால்தான் இப்படிப்பட்ட நகர(நரக)) மருமகள்கள் உருவாகி வேதனைப்படுகிறார்கள்.

jpl
01-09-2007, 04:24 PM
மின்னணு சாதன சுகத்துடன்
இந்த வீடும் ஒரு சிறைதான்!

ஒவ்வொரு உள்ளத்துக்கும்
உள்ளதொரு உறைதான்!
வாழ்வின் நிதரிசனத்தை உணர்த்தும் வலி மிகு
வரிகள்...

ஓவியா
01-09-2007, 04:30 PM
நன்றி சகோதரி. உங்கள் கொசுறு சொல்வதைப்போல் பலரும் குழியில் விழுவதில்லை ஓவியா.திருமண பந்தத்தை மிக ஆழகாக கடைபிடித்து வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.சிலரே அதன் முழுப்பரிமாணத்தை அறியாமல்,சில சமயம் அறிந்தும் அலட்சியமாய் நடந்துகொள்வதால்தான் இப்படிப்பட்ட நகர(நரக)) மருமகள்கள் உருவாகி வேதனைப்படுகிறார்கள்.

அதே அதே சபாபதி!! :icon_03::icon_03::icon_03:

சிவா.ஜி
02-09-2007, 04:21 AM
வாழ்வின் நிதரிசனத்தை உணர்த்தும் வலி மிகு
வரிகள்...

வலியுணர்ந்த உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஜெயபுஷ்பலதா.

ஓவியா
02-09-2007, 09:33 AM
ஓஓஓஓஓஒ ஜேபிஎல் தான் மேடம் புஷ்பலதாவா!!! நல்லது.

சிவா.ஜி
02-09-2007, 09:51 AM
ஓஓஓஓஓஒ ஜேபிஎல் தான் மேடம் புஷ்பலதாவா!!! நல்லது.

அது சரி...ஓவியா(சீனியர்) மேடத்துக்கே தெரியலையா......?

ஓவியா
02-09-2007, 10:04 AM
என் கண்ணுக்கு இதெல்லாம் தெரியாதுபா!!
நான் ரொம்ப அப்பாவிபுள்ளே, நம்பவில்லையென்றால் என் அறிமுக பதிவை காணுங்கள், எவ்வளவு பால் மனம், அப்பாவி குணம் என்று தெரியும்.

சிவா.ஜி
02-09-2007, 10:06 AM
என் கண்ணுக்கு இதெல்லாம் தெரியாதுபா!!
நான் ரொம்ப அப்பாவிபுள்ளே, நம்பவில்லையென்றால் என் அறிமுக பதிவை காணுங்கள், எவ்வளவு பால் மனம், அப்பாவி குணம் என்று தெரியும்.

அடடா அப்படியா...கொஞ்சம் அந்த திரியோட சுட்டியத்தாறீங்களா எவ்வளவு அப்பாவி என்று பார்க்கலாம்.

ஓவியா
02-09-2007, 10:20 AM
நான் கொடுக்க மாட்டேன், பின் அந்த திரிய எல்லாரும் படிச்சு சிரிப்பாங்க,

ஆனாலும் ஒரு க்லு தாறேன், இதுவரை அதிகமாக திறக்கபட்டதிரியும், மன்ற வால் மக்கள் லூட்டியடிச்ச திரியும், என்னை பார்த்து சிரியோ சிரியோனு சிரிச்ச திரியும், நான் அதிகமாக எழுத்துபிழை செய்த திரியும் அதுவே!!!!!!

அக்னி
03-09-2007, 10:22 PM
அடடா அப்படியா...கொஞ்சம் அந்த திரியோட சுட்டியத்தாறீங்களா எவ்வளவு அப்பாவி என்று பார்க்கலாம்.


நான் கொடுக்க மாட்டேன், பின் அந்த திரிய எல்லாரும் படிச்சு சிரிப்பாங்க,

ஆனாலும் ஒரு க்லு தாறேன், இதுவரை அதிகமாக திறக்கபட்டதிரியும், மன்ற வால் மக்கள் லூட்டியடிச்ச திரியும், என்னை பார்த்து சிரியோ சிரியோனு சிரிச்ச திரியும், நான் அதிகமாக எழுத்துபிழை செய்த திரியும் அதுவே!!!!!!

இதுதான்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6363 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6363)
அந்த அறிமுகத்திரி என்று சுட்டிக்காட்ட மாட்டேன்...
முடிந்தால் கண்டு கொள்ளவும்...

மன்மதன்
04-09-2007, 12:25 PM
நல்ல கவிதை நண்பரே..


ஒருவர் மீது ஒருவரின்
அன்பும் ஒரு எல்லை வரைதான்!

அன்பு எல்லையற்றது என்று சொல்வார்கள்.. ஆனால் நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன்..