PDA

View Full Version : புழுங்கல்அரிசி, ஓட்ஸ் ரத்த அழுத்தம் தடுகĮ



தளபதி
21-08-2007, 03:49 AM
புழுங்கல்அரிசி, ஓட்ஸ் ரத்த அழுத்தம் தடுக்க நல்லது!

நீங்கள் புழுங்கல் அரிசி சாதம் சாப்பிடுபவரா? மக்காச்சோளம், ஓட்ஸ் சாப்பிடும் பழக்கம் உண்டா? உங்களுக்கு ரத்த அழுத்த பிரச்னை வரவே வராது! அமெரிக்க மருத்துவ நிபுணர்கள், சமீபத்தில் கண்டுபிடித்துள்ள மருத்துவ உண்மை இது. ஆய்வு அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது: தானிய வகை உணவுகளில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மருத்துவ குணம் உள்ளது. அசைவ உணவு சாப்பிடும் வழக்கம் இருந்தாலும், ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது, தானிய உணவை உண்டால், ரத்த அழுத்த பாதிப்பு வராது. புழுங்கல் அரிசி சாப்பிட்டு வருவோருக்கு, அதில் உள்ள மருத்துவ குணம், உடல்நலனுக்கு மிக நல்லது. இதுபோல, கோதுமை மூலம் தயாரிக்கப்படும் உணவுகள், மக்காச்சோளம், ஓட்ஸ் உணவும், ரத்த அழுத்தம் வராமல் தடுக்கின்றன. "ஓட்மீல்' உணவாக சாப்பிடுவதுடன், "ஓட்ஸ்' பானமாகவும் குடிக்கலாம். தானிய உணவுகளில், சத்துக்கள் மிக அதிகம். இவற்றில், நார்ச்சத்து அதிகம் இருக்கிறது; உடலில் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய, "ஆன்டிஆக்சிடென்ட்' ரசாயனமும் உள்ளது. "ப்ரோட்டீன்' சத்தும், இதில் அதிகம். தினமும் மூன்று வேளையும் தானிய வகை உணவு சாப்பிட்டு வருவோருக்கு, இதனால் அதிக பலன் கிடைக்கிறது. புழுங்கல் அரிசி சாப்பிடுவோர், கோதுமையில் பல வகை உணவு தயாரித்து, இரவில் சாப்பிடலாம். பெண்கள், பொதுவாக சாப்பிடுவது குறைவு. அதனால், நாள்தோறும்,நான்கு வேளையாக, தானிய உணவுகளை, சாப்பாடாகவும், பானமாக தயாரித்தும் சாப்பிட்டு வருவது நல்லது. அமெரிக்காவில் , இது தொடர்பாக 25 ஆயிரம் பேரிடம் , "ஆன் லைன்' சர்வே எடுக்கப்பட்டது. தானிய உணவு சாப்பிட்டு வந்தவர்களுக்கு ரத்த அழுத்தம் சீராக இருப்பது தெரியவந்தது. தானிய உணவை சாப்பிடாமல், பாக்கெட் உணவுகள், குளிர்பானங்கள் சாப்பிட்டு வந்தவர்களுக்கு, ரத்த அழுத்தம் சீராக இல்லாததும் தெரிந்தது. இவ்வாறு, ஆய்வு அறிக்கையில் , நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ந*ன்றி − தின*ம*ல*ர்.

lolluvathiyar
23-08-2007, 03:18 PM
ஓட்ஸ் தமிழ் பெயர் என்ன?