Log in

View Full Version : லட்ச ரூபாய் கார் ஜனவரியில் வெள்ளோட்டம்



தங்கவேல்
21-08-2007, 01:45 AM
டாடா கார் நிறுவனம், ஒரு லட்சம் ரூபாய் விலையில் விற்பனை செய்ய உள்ள காரை, ஜனவரி மாதம் வெள்ளோட்டம் விட உள்ளது. டில்லியில், ஜனவரி மாதம் 10ம் தேதி, வாகன கண்காட்சி நடக்கிறது. அதில், தன் புது இண்டிகா, இண்டிகோ மாடல் கார்களுடன், இந்த ஒரு லட்சம் ரூபாய் காரை அணிவகுக்கச் செய்கிறது டாடா. மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில், டாடா நிறுவனம், தன் புது கார் தொழிற்சாலையை அமைத்துள்ளது. அங்கு, ஒரு லட்சம் ரூபாய் காரை தயாரித்து வருகிறது. சிங்கூரில், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நிலம் தர மறுத்ததால், ஆலை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. எனினும், மார்க்சிஸ்ட் அரசு தன் முடிவில் திடமாக இருந்ததால், டாடா நிறுவனம், ஆலையை அமைத்து தயாரிப்பை ஆரம்பித்துவிட்டது. இங்கு தயாரிக்கப்பட்ட முதல் ஒரு லட்சம் ரூபாய் காரை, டில்லி கண்காட்சியில் வைக்கத் திட்டமிட்டுள்ளது டாடா நிறுவனம். ஐந்து பேர் அமர்ந்து பயணம் செய்யக்கூடிய இந்த காரில், 30 எச்.பி., இன்ஜின் பொருத்தப்படுகிறது. டாடா நிறுவன அதிகாரிகள் கூறுகையில், 'நிறுவனத்தின் கனவு திட்டம் ஒரு லட்சம் ரூபாய் கார். அதற்கான வடிவமைப்பு எல்லாம் தயாராகி, கார் தயாரிப்பு திட்டம் இறுதி செய்யப்பட்டுவிட்டது. அதனால், திட்டமிட்டபடி, நாங்கள் கார்களை விற்பனைக்கு அனுப்புவோம்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். டாடாவின் ஒரு லட்சம் ரூபாய் கார் திட்டம், சர்வதேச அளவில், பிரபல கார் நிறுவனங்களின் கவனத்தை திருப்பியுள்ளது. பிரான்சின் பிரபல நிறுவனம் ரெனால்ட், இந்தியாவின் பிரபல ஆட்டோமொபைல் நிறுவனம் பஜாஜுடன் கைகோர்த்து, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் விலையில் கார் தயாரித்து விற்கும் திட்டத்தை தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

செய்தி உதவி : தினமலர்

ஓவியன்
21-08-2007, 01:58 AM
ஒரு லட்சம் ரூபாயிலேயே ஒரு காரா............?

இதனால் பல நடுத்தரக் குடும்பங்களின் கார் ஆசை நிறைவேறும்...........
அதனை நிறைவேற்ற வழி சமைத்த டாட்டா நிறுவனத்திற்குப் பாராட்டுக்கள், அந்த செய்தியினை இங்கே பகிர்து கொண்ட தங்கம் அண்ணாவிற்கு நன்றிகள்........!!!

தங்கவேல்
21-08-2007, 02:17 AM
ஒரு கார் வாங்கவேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறுமா ? தெரியவில்லை. பார்ப்போம்...கார் எப்படி இருக்கும் என்று.. ஓவியன் வந்தால் ஒரு இலவச ரவுண்டு உண்டு..

ஓவியன்
21-08-2007, 02:56 AM
ஓவியன் வந்தால் ஒரு இலவச ரவுண்டு உண்டு..

எனக்கு ஒரு இலவச ரவுண்டா..........!!! :D
நன்றி அண்ணா.......!!! :D

ipsudhan
21-08-2007, 03:57 PM
இனி மாத சம்பளம் வாங்கும் நடுத்தர மக்களும் கார் வாங்கலாம்,
பார்ப்போம், இனி தெருவுக்கு ஒரு கார் இருக்கலாம்.

அறிஞர்
21-08-2007, 04:38 PM
சென்னையில் இப்பவே... டிராபிக் நெரிசல்...

ஒரு லட்சம் ரூபாய் கார் வந்தால்..... ரொம்ப கஷ்டம் தான்.

இனி பள்ளிக்கூட மாணவர்கள்... கல்லூரி மாணவர்கள்.. கார்களில் வலம் வருவர்...
வயலுக்கு உழவர்கள் காரில் செல்வார்கள்...

mgandhi
21-08-2007, 07:07 PM
தகவலுக்கு நன்றி

richard
21-08-2007, 07:31 PM
உன்மையில் இந்த காரை ஒரு லட்சம் ரூபாய்க்கு தருவார்களா?

மனோஜ்
21-08-2007, 08:25 PM
பலரது கார் கணவு நினைவாக பொவது அருமை

இணைய நண்பன்
21-08-2007, 09:01 PM
தகவலுக்கு நன்றி நண்பா

அமரன்
21-08-2007, 09:03 PM
விலைகுறைவில் அறிஞர் சொல்வதுபோல் நெரிசலும் அதிகரிக்குமே...!
பகிர்வுக்கு நன்றி தங்கவேல்.

சிவா.ஜி
22-08-2007, 05:26 AM
ஒரு லட்சமென்று இப்போது சொல்வார்கள்..பிறகு எல்லாம் சேர்த்து இவ்வளவு என்று இன்னும் அதிகமான ஒரு தொகையை சொல்வார்கள்.இருந்தாலும் அதிகமானவர்கள் வாங்கக்கூடிய விலைதான்.இளசு சொன்னதைப்போல் இனி பால்காரரும் காரில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தகவலுக்கு நன்றி தங்கவேல்.

தங்கவேல்
22-08-2007, 07:54 AM
வரி தனி என்று வாங்குவார்கள் என தகவல் வந்து இருக்கின்றது.

Narathar
22-08-2007, 08:00 AM
சென்னையில் இப்பவே... டிராபிக் நெரிசல்...

ஒரு லட்சம் ரூபாய் கார் வந்தால்..... ரொம்ப கஷ்டம் தான்.

இனி பள்ளிக்கூட மாணவர்கள்... கல்லூரி மாணவர்கள்.. கார்களில் வலம் வருவர்...
வயலுக்கு உழவர்கள் காரில் செல்வார்கள்...


ஷங்கர் படத்தில் கிராபிக்ஸ் விளையாட்டுபோலிருக்கிறது உங்கள் ஆசை

கனவு மெய்ப்பட வேண்டும்

மலர்
22-08-2007, 08:05 AM
ஏன் நடக்காதா என்ன..தொலைக்காட்சியும் செல்போனும் முதலில் எட்டாக்கனியாக தானே இருந்தது.....ஆனால் இப்போது எல்லோரிடமும் இருக்கிறது...
நிச்சயம் கனவு மெய்படும்..

தங்கவேல்
25-08-2007, 02:16 AM
ஆமாம் மலர். நீங்கள் சொல்லுவது உண்மைதான். சாத்தியமே...

saguni
25-08-2007, 06:42 PM
அதைத்தருவது பிரபலமான டாடா நிறுவனம் என்பதால் தரத்தில் குறையேதும் இருக்காது. ஆனால் பெட்ரோல் செலவு மற்றும் சுற்றுப்புறக்கேடு மட்டும்தான் இடிக்கிறது

க.கமலக்கண்ணன்
28-08-2007, 12:27 PM
ஐய்யா வீட்டிலே ஆளுக்கு ஒரு கார் வைத்துக் கொள்ளலாம்...

சூரியன்
14-12-2007, 04:00 PM
நல்ல தகவல்.
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

நுரையீரல்
16-12-2007, 05:36 AM
ஒரு லட்சத்துக்கு கார் ஓ.கே.. அப்படியே தண்ணியில ஓடுற மாதிரி கார் கண்டுபிடிச்சா இன்னும் நல்லா இருக்கும்.. இப்ப இருக்கற பெட்ரோல் விலையே பைக் ஓட்டும் மக்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை.... இதிலே கார் வேறயா....

குடிக்கிறது கஞ்சியானாலும் நம்ம மக்களுக்கு வெட்டி பந்தாவும், ஆசைகளும் மட்டும் நிற்கவே நிற்காது..

மேலைநாடுகளில் பாருங்கள் - மக்கள் டிரைனிலோ, பஸ்ஸிலோ தான் வேலைக்கு செல்கிறார்கள்... முதலாளியும், தொழிலாளியும் ஒரே டிரைனில் வேலைக்குச் செல்வதையும் பார்க்கலாம்... எனக்கு என்னவோ மாட்டுவண்டிப் பயணம் தான் இன்றும் பிடித்திருக்கிறது....

க்சே.. க்சே... ஏய்.. போ.. போ...

saguni
16-12-2007, 07:46 AM
இந்தியா ஏழை நாடல்ல... இனி ஏழைகளின் கனவை நிறைவேற்றும் நாடு

மாதவர்
17-01-2008, 01:59 AM
சொன்னதுபோல ஒரு லட்சம் ரூபாய் கார் வந்தேவிட்டது
ரத்தன் டாடா அவர்கள் தில்லி வாகன கண்காட்சியில் அவரே ஒட்டி வந்துள்ளார்.