PDA

View Full Version : உழைப்பு



இணைய நண்பன்
20-08-2007, 04:37 PM
http://www.filehive.com/files/0820/1girl.JPG

படிக்கும் வயது
பட்டினி வாழ்க்கை

உயிர் வாழ
உயிரை பணயம் வைத்து
உழைக்கிறாள்

திருடர் நிறைந்த உலகில்
திருடாமல் உழைக்கும்
திருமகள் இவள்!

மனோஜ்
20-08-2007, 04:46 PM
திருத்தமாக திருப்தியாக
தீங்கை அறிந்து திவினை அறிந்தும்
திருந்தமான பெண்குழுந்தையை
திவிரமாக கவிதைவடித்தது அருமை இக்ராம்

அமரன்
20-08-2007, 04:58 PM
முதலில் பலூன் இப்போது கழியில் நடக்கும் சிறுமி. சின்னஞ்சிறுசுகளின் கனவுகள் கருகுவதைப் பார்த்து கருகும் மனம் உங்களது. அதற்காக முதலில் வாழ்த்துக்கள் இக்ராம். பிச்சை எடுக்காது திருடாது அந்தரத்தில் ஆடும் வாழ்க்கையை அசையாது வைத்திருப்பதுக்கு அந்தரத்தில் நடக்குது ஒரு குருத்து. கனத்த கருக்கவிதை கனக்க வைக்கிறது மனதை.

ஆதவா
20-08-2007, 05:16 PM
படத்திற்கேற்ற கவிதை... மிக அழகாய்.... அதுவும் குறைந்த வரிகளில்....

பாராட்டுக்கள் இக்ராம்.. நாமெல்லாம் அந்த வேடிக்கை மனிதர்கள் தாம்....

கவிதைக்கு 500 படத்திற்கு 250

ஷீ-நிசி
21-08-2007, 03:26 AM
படத்தேர்வு மிக அருமை....

கவிதையில் இன்னும் வரி(லி)கள் கூடியிருக்கலாம்....

ஆனால், சமூக கவிதைக்கான முயற்சி பாராட்டுக்குரியது....

வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

சிவா.ஜி
21-08-2007, 04:35 AM
பெற்றவனே அறியாத அந்த பிஞ்சின் வேதனையை..உணர்ந்த கவியுள்ளத்துக்கு வாழ்த்துக்கள்.மன உணர்வுகளை வார்த்தைகளில் முழுமையாக கொண்டு வருவதில் கொஞ்சம் சிக்கலிருப்பதைப்போல தெரிகிறது...வந்துவிடும்.தொடர்ந்து முயலும்போது எல்லாமே கைவரும்.பாராட்டுக்கள் இக்ராம்.

பூமகள்
21-08-2007, 05:05 AM
உன்னதமான கவி கரு... நல்ல சமூக தேடல் உங்கள் கவிகளில் தெரிகிறது.
100 சதவீதம் பொருத்தமான படம்... அழகு...

அந்தரத்தின் ஆட்டத்தால் தான்
இப்பெண் குழந்தை
வாழ்கிறது இவ்வுலகில்
ஆட்டங்காணாத ஒரு வயிற்று உணவேனும்
கிடைக்கப் பெற்று....


உங்களுக்கு படம் எங்கிருந்து கிடைக்கிறது.... ???!!!!

கொஞ்சம் எனக்கும் தாருங்களேன்.......:aktion033:

இணைய நண்பன்
21-08-2007, 05:18 AM
உங்கள் வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே

இலக்கியன்
21-08-2007, 08:01 AM
திருடர் நிறைந்த உலகில்
திருடாமல் உழைக்கும்
திருமகள் இவள்!

ஆம் நியமான வரிகள் தொடரட்டும் உங்கள் கவிதைக*ள்

இணைய நண்பன்
21-08-2007, 07:33 PM
திருடர் நிறைந்த உலகில்
திருடாமல் உழைக்கும்
திருமகள் இவள்!

ஆம் நிய*மான*வ*ரிக*ள் தொட*ர*ட்டும் உங்க*ள் க*விதைக*ள்

நன்றி இலக்கியன்

ஓவியன்
24-08-2007, 04:53 AM
இவர்களது வாழ்க்கையும் தொழிலும் ஒன்றே........!
கரணம் தப்பினால் மரணம்........!

திருமகள் தான் இவள்........
ஆனால் இந்த சிறுவர்களை வைத்துப் பிழைக்கிறார்களே, ஒரு சிலர்.........

அவர்களை நாம் என்ன செய்ய...........?