PDA

View Full Version : ஒப்பந்தம்



aren
20-08-2007, 03:21 PM
ஒப்பந்தம்
நம் இருவருக்கும்
ஒப்பந்தம்!!!

இருவரும் வாழ்க்கையில்
ஒரு நிலை வரும்வரை
நம் காதல்
நம்முடனே இருக்கும்
நம் சந்திப்பும்
மனதளவிலேயே இருக்கும்
நேரடியாக இருக்காது!!!

இன்று நான் நல்ல வேலையில்
ஊர் திரும்பினால்
நீ திருமதியாக
இன்னொருத்தன் வீட்டு
அடுப்பங்கரையில்!!!

ஒப்பந்தம்
வெறும்
வெத்துப்பேப்பர்
மனதினிலே!!!

அமரன்
20-08-2007, 03:32 PM
மனங்கள் இணையும் திருமணம் பதிவுசேய்யப்படும்போது எழுதப்பட்ட ஒப்பந்தமாக உருமாறுகிறது. காதல் அப்படியல்ல. மனசளவில் மலர்வது (விதி என்று ஒன்று இருந்தால் விதி விலக்குகளும் இருக்கும்). எழுதப்படாத பல ஒப்பந்தங்கள் பல தன்னகத்தே அமையப்பெற்றது. காதல் பந்தத்துக்கு ஒப்புதல் கொடுக்காது பல முட்டுக்கட்டைகளை போடுவார்கள் வெளியாட்களும் உள்ளாட்களும்.

காதலர்கள் ஏணியாக நினைத்து வைத்தது தடையாக ஆகியுள்ளது. காரணம் எமது கற்பனைக்கு. மனதில் வெற்றுப்பேப்பர். சுவைக்கின்றது. தொடருங்கள் ஆரென் அண்ணா.

தாமரை
20-08-2007, 03:39 PM
ஒப்பந்தம்
நம்பிக்கையில்லா
இருவருக்கு மத்தியில்
ஒப்புக்கு வைத்துக் கொள்ளும்
பந்தம்

ஆதவா
20-08-2007, 04:04 PM
ஒப்பந்தங்கள் தற்காலிகமானவை... அந்த செயலே அப்படித்தான்... நிரந்தர ஒப்பந்தங்களுக்கு எவரும் கையசைப்பதில்லை.. எவரின் மனமும் நிரந்தரமுமில்லை. எவனோ ஒருத்திக்கு புருஷனாகவும் எவனோ ஒருவனுக்கு மனைவியாகவும் போக இருக்கும் காதலர்களின் ஒப்பந்தம் பாலைவனத்து மணலில் செய்துவைத்த சிற்பம் போலத்தான்....

அமரனின் விமர்சனம் நன்று.

தாமரை அண்ணாவின் கவிதை மேலும் அழகூட்டுகிறது...

மூவருக்கும் பாராட்டுக்கள்

ஷீ-நிசி
21-08-2007, 04:17 AM
மனதளவில் பந்தம் தொடர்ந்தால்.. மணப்பந்தல் அமையும் வரை காத்திருக்கும் காதல்...

இல்லாவிட்டால்...
தாமரை சொன்னதுபோல்
ஒப்பந்தங்கள் வெறும் ஒப்புக்கு தான் இருக்கும்..

கவிதையின் கரு நன்று....

சிவா.ஜி
21-08-2007, 04:20 AM
காலாவதியாகும் ஒப்பந்தம்...காலமெல்லாம் நிலைத்திருக்கும் பந்தம்....பந்தத்திற்கான ஒப்பந்தம் நிலையற்றது..நல்ல கரு.வாழ்த்துக்கள் ஆரென்.

இலக்கியன்
21-08-2007, 08:03 AM
நியமானவரிகள் வாழ்த்துக்கள்

ஓவியன்
24-08-2007, 05:23 AM
காற்றிலே எழுதிய கவிதை தானோ
நாம் காதல் ஒப்பந்தமும்................?

அரசியல், சமூகம்
எல்லாவற்றிலுமே
மீறப்படும் ஓப்பந்தங்கள்
காதலையும் விட்டு
வைக்கவில்லையே..................

ஏக்கமூட்டிய வரிகள அருமை ஆரென் அண்ணா!.

ஓவியன்
24-08-2007, 05:27 AM
ஒப்பந்தம்
நம்பிக்கையில்லா
இருவருக்கு மத்தியில்
ஒப்புக்கு வைத்துக் கொள்ளும்
பந்தம்

அசத்தல் பின்னூட்டக் கவி செல்வன் அண்ணா!.

பந்தமாக ஒட்ட வைக்காவா?
இல்லை
பந்தமாக எரிய வைக்கவா?
ஒப்பந்தம்.........................!

அக்னி
28-08-2007, 04:36 PM
காதலில் பந்தம்,
வாழ்வில் பிரகாசிக்கும்...
காதலில் ஒப்பந்தம்,
வாழ்வை கருக்கிவிடும்...

ஆரென் அவர்களின் கவியும், தொடர்ந்த பின்னூட்டங்களும் அருமை...
பாராட்டுக்கள்...

இளசு
28-08-2007, 08:55 PM
காற்றும் மழையும் காலவெள்ளமும் சுழலும் பெருக
நிற்கச் சொன்ன இடத்தில் இல்லை என்று படகை
நொந்துகொள்வதில் என்ன பயன்?

சமூகத்தில் ஆண் பாறை... பெண் ஆற்றுப்படகு.. பலநேரங்களில்!
நங்கூரங்கள் எல்லாப் படகுகளுக்கும் சாத்தியப்படுவதில்லை!

பாராட்டுகள் அன்பின் ஆரென்!
நெஞ்சில் ஓர் ஆலய நினைவு எனக்கு!

aren
29-08-2007, 02:14 AM
இந்தப் பதிவை பார்வையிட்டவர்களுக்கும் படித்து பின்னூட்டம் இட்டவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

நன்றி வணக்கம்
ஆரென்