PDA

View Full Version : பத்திரமா உன்னிடம்..??



பூமகள்
20-08-2007, 11:57 AM
http://img32.picoodle.com/img/img32/9/8/20/poomagal/f_img0681m_55f0f5c.jpg

பத்திரமா உன்னிடம்..
படிப்பாய் என
நான் தந்த நோட்டுப்புத்தகமும்..
மடிப்பாய் தந்த எழுத்தோவியமும்...??


பத்திரமா உன்னிடம்..
திகைப்பாய்
நான் தந்த நாணமும்..
நகைப்பாய் நறும்பிய
புன்னகையும்...??


பத்திரமா உன்னிடம்..
என்றோ நாம்
ஒன்றாய் பயணித்த
ரயில் பயணச்சீட்டும்...
என்றோ தொலைத்துவிட்ட என்
முதல் தொலைபேசி எண்ணும்..??


பத்திரமா உன்னிடம்..
உனக்காய் சேமித்த
சீர்கொண்ட சிப்பிகளும்..
எனக்கான நினைவாய்
நிதம் நினைவுறுத்தும் கைக்கடிகாரமும்...??


பத்திரமா உன்னிடம்..
நான் கடைசியாய்
விட்டு வந்த
உனக்கான கண்ணீரும்...
உயிர் கொன்று
கொடுத்து வந்த
நமக்கான காதலும்.....????!!!!

அமரன்
20-08-2007, 12:16 PM
பிரிவின் பின்னரும்
பிரியாதிருக்கும்
காதலுக்கு
பட்டா போடும்
பத்திரம்
இந்த பத்திரமா'க்கள்.
****************************
'பத்திரமா'
ஒரு பாத்திரமாக
காதல் சொன்ன கவிதை
பவித்திரம்....!

பாராட்டுப் பத்திரம்
படிக்கின்றேன் பூமகளுக்கு.

பூமகள்
20-08-2007, 12:26 PM
பிரிவின் பின்னரும்
பிரியாதிருக்கும்
காதலுக்கு
பட்டா போடும்
பத்திரம்
இந்த பத்திரமா'க்கள்.
****************************
'பத்திரமா'
ஒரு பாத்திரமாக
காதல் சொன்ன கவிதை
பவித்திரம்....!

அருமையான வரிகள் சகோதரரே...
நன்றிகள் அம*ர் அண்ணா..
உங்களின்
பாராட்டுப் பத்திரத்திற்கு
நன்றி பதிக்கிறாள்
பூமகள்
பத்திரமாய் பத்திரத்தில்...
பவித்திரமாய்..!!

சிவா.ஜி
20-08-2007, 12:32 PM
பத்திரமாய் காதல் சரித்திரம் சொல்லும் கச்சிதமாய் வரிகள்.
சின்னச்சின்ன நினைவூட்டல்களாய், மரணித்த காதலை
மறுப*டி மனவலியோடு சொல்லும் வாக்கியங்கள்.

மீண்டுமொரு அழகுணர்வோடு பூமகள் அளித்துள்ள அருமையான கவிதை.
வாழ்த்துக்கள் பூமகள்.

ஆதவா
20-08-2007, 12:38 PM
பாதுகாத்தல் காதல் அணுக்களின் பணி
பத்திரப்படுத்துதல் பாதுகாவலனின் கடமை

அதிரவைக்கும் ஞாபகச் சங்கை ஊதி பத்திரமா என்று எழுத்திலே செதுக்கி வைத்து பாதுகாவலனின் நெஞ்சுக்குள் திணித்த கவிதை. ஒன்றா இரண்டா? ஓராயிரம் ஞாபங்கள் அகத்திலிருக்கும். ஆற்றல் இருந்தால் அனைத்தும் அவளறியக் கூடும்.

முகவரி தொலைந்தாலும் முகம் தொலைவதில்லை. ஓரிடத்தில் சேமித்து வைத்த கவிதைகளும் அலைவதில்லை. பத்திரப்படுத்திய ஞாபக அலைகள் நெஞ்சைத் தாக்கும் என்பதில் சந்தேகமில்லை. அன்றோடு அவள் அழுத வாழ்வுக்கு பத்திரம் சேர்க்காமல் போகிறவன் பாதுகாவலனில்லை.

நெஞ்சில் சுரந்தால் அது காதல்
நெஞ்சிலேயே இறந்தால்?

சூழ்நிலைச் சக்கரங்கள் சுழன்று வந்து நின்றாலும் காலம் சென்ற பாதையை திரும்பிப் பார்க்காதுதானே? வெகு சிலரே பழைய காலங்களைச் சிந்திக்கிறார்கள். இவளூம்.. அவன் சிந்தித்திருக்கக் கூடுமா? பெரும்பாலும் காதலை தற்கொலைக்கு இட்டு புது ஜனனத்திற்கு மாறாமல் இருப்பவர்கள் தான் பழழய காதலை சிந்திப்பார்கள். அல்லது புது ஜனனத்தில் புத்துணர்ச்சியில்லையேல் புதைந்தழுது பத்திரப்படுத்தியதை நெஞ்சில் பத்திரப் படுத்துவார்கள்.

ஒன்றாய் பயணித்த
ரயில் பயணச்சீட்டும்...

பத்திரப்படுத்துதலில் நினைவுகள் வேறு பொருட்கள் வேறு. உயிர் உருக உள்ளம் திருக, நெஞ்சத்தில் மஞ்சமிட்டு துஞ்சிய காதலை பத்திரப்படுத்தாமல் "உயிர் கொன்று கொடுத்து வந்த நமக்கான காதலுமாய்" என்று பாடிக்கொண்டிருக்க

இங்கே பத்திரப்படுத்தாதது யார்?

ஓவியன்
21-08-2007, 06:22 AM
கவிச்சமரில் உதித்த கருவை அப்படியே பத்திரமாக புது வரிகளிலேற்றி இங்கே பதித்த பாங்கு அழகு பூமகள்....! :aktion033:

வீட்டிலே இருந்து எங்கேயாவது வெளியே புறப்பட்டால் பத்திரமாக போய் வா மகனே எனும் தாய் பாசம்.......
பாடசாலைகளில் எதாவது விளையாட்டுக்களில் ஈடுபடுகையில் தம்பி பத்திரமாக என்ற ஆசிரியரின் கவனம்......
எதாவது வம்பு தும்புகளில் மாட்டுகையில் டேய் பத்திரம் என்ற நண்பர்களின் எச்சரிக்கை........
சிக்கல் சிரமமான விடயங்களில் ஈடுபடுகையில் கவனம், பத்திரமாக என்று கலங்கு அன்பான காதலி/துணைவியின் ஏக்கம்.........

என்று பல வடிவங்கள் இந்த "பத்திரமாக.." என்ற வார்த்தைக்கு இருப்பினும் எல்லாம் பொதுவாக இயம்பி நிற்பது எதிர்பார்ப்பையும் அது இனிதே நடைபெற வேண்டுமென்ற நம்பிக்கையையுமே......

அந்த நம்பிக்கை தான் காதலின் அஸ்திவாரமே, அந்த அஸ்திவாரம் ஆடிப்போனால் காதல் எனும் கட்டிடத்தை கட்டியெழுப்ப இயலாது.......!

ஷீ-நிசி
21-08-2007, 06:34 AM
பத்திரமா உன்னிடம்.....

விடை கிடைத்ததா... சின்ன சின்ன நிகழ்வுகள் கோர்த்து பத்திரமாய் பார்த்து பார்த்து கட்டின கவிதை.. பூமகள்.. வாழ்த்துக்கள்! (படம் ரொம்ப சூப்பர்ங்க)

பூமகள்
21-08-2007, 08:32 AM
பல வடிவங்கள் இந்த "பத்திரமாக.." என்ற வார்த்தைக்கு இருப்பினும் எல்லாம் பொதுவாக இயம்பி நிற்பது எதிர்பார்ப்பையும் அது இனிதே நடைபெற வேண்டுமென்ற நம்பிக்கையையுமே......

அந்த நம்பிக்கை தான் காதலின் அஸ்திவாரமே, அந்த அஸ்திவாரம் ஆடிப்போனால் காதல் எனும் கட்டிடத்தை கட்டியெழுப்ப இயலாது.......!

அஸ்திவாரம் ஆக்கியவனே, ஆட்டிவிட்டு போனால் ஆடித்தானே போகும் பெண்ணின் உள்ளம்.. அதுவே இக்கவியின் கரு.. நியாபகப்படுத்தும் பாணியில் காதலி காதலனிடம் பத்திரப்படுத்தியுள்ளாயா நம் நினைவுகளை என்று கேட்பதாக எழுதியுள்ளேன்.

அழகாகப் புரிந்து தெளிவாக விமர்சித்ததற்கு நன்றிகள் கோடி.

பூமகள்
21-08-2007, 08:51 AM
பத்திரமாய் காதல் சரித்திரம் சொல்லும் கச்சிதமாய் வரிகள்.
சின்னச்சின்ன நினைவூட்டல்களாய், மரணித்த காதலை
மறுபடி மனவலியோடு சொல்லும் வாக்கியங்கள்.

மீண்டுமொரு அழகுணர்வோடு பூமகள் அளித்துள்ள அருமையான கவிதை.
வாழ்த்துக்கள் பூமகள்.

அன்புச் சகோதரர் சிவா.ஜி அவர்களின் பாராட்டுதலுக்கு நன்றிகள்.
மரணித்த காதல் ஜீரணிக்க முடியாமல் தவிக்கும் காதலியின் நிலையே இது.

தொடர்ந்து விமர்சியுங்கள்..!

பூமகள்
21-08-2007, 09:02 AM
பாதுகாத்தல் காதல் அணுக்களின் பணி
பத்திரப்படுத்துதல் பாதுகாவலனின் கடமை

முகவரி தொலைந்தாலும் முகம் தொலைவதில்லை. ஓரிடத்தில் சேமித்து வைத்த கவிதைகளும் அலைவதில்லை. பத்திரப்படுத்திய ஞாபக அலைகள் நெஞ்சைத் தாக்கும் என்பதில் சந்தேகமில்லை. அன்றோடு அவள் அழுத வாழ்வுக்கு பத்திரம் சேர்க்காமல் போகிறவன் பாதுகாவலனில்லை.

நெஞ்சில் சுரந்தால் அது காதல்
நெஞ்சிலேயே இறந்தால்?

ஒன்றாய் பயணித்த
ரயில் பயணச்சீட்டும்...

பத்திரப்படுத்துதலில் நினைவுகள் வேறு பொருட்கள் வேறு. உயிர் உருக உள்ளம் திருக, நெஞ்சத்தில் மஞ்சமிட்டு துஞ்சிய காதலை பத்திரப்படுத்தாமல் "உயிர் கொன்று கொடுத்து வந்த நமக்கான காதலுமாய்" என்று பாடிக்கொண்டிருக்க

இங்கே பத்திரப்படுத்தாதது யார்?

அன்புத் தம்பி ஆதவா அவர்களே...

ஆழமாய்ச் சிந்தித்து கவித்துவத்தோடே விமர்சித்ததற்கு எங்ஙனம் நான் நன்றி சொல்வேன்.... !!!!!! அசத்திவிட்டீர்கள்...:icon_clap:



பத்திரப்படுத்துதலில் நினைவுகள் வேறு பொருட்கள் வேறு.

பத்திரப் படுத்திய பொருட்களே நினைவுச் சங்கிலிகளை கோர்த்துத் நியாபகப்படுத்தும் சாவி.

ஆகையால் தான் பயணச் சீட்டை பத்திரமா என்று வினவினேன்.


இங்கே பத்திரப்படுத்தாதது யார்?

இங்கே... பத்திரப்படுத்தாமல் தம் காதலைத் தொலையச் செய்து போவது காதலனே....

பத்திரப்படுத்திய நினைவுகளிலே காதலி மட்டும் தனியாய்...

பூமகள்
21-08-2007, 09:06 AM
பத்திரமா உன்னிடம்.....

விடை கிடைத்ததா... சின்ன சின்ன நிகழ்வுகள் கோர்த்து பத்திரமாய் பார்த்து பார்த்து கட்டின கவிதை.. பூமகள்.. வாழ்த்துக்கள்! (படம் ரொம்ப சூப்பர்ங்க)


விடை தேடி அலைவதே வாழ்க்கை... விடை கிடைக்கா சோகத்தில் காதலி..
விடை கிடைக்க மேலுள்ள திரி பார்க்கவும்.
தங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் கோடி..!

தொடர்ந்து விமர்சியுங்கள்..!!

இலக்கியன்
21-08-2007, 09:06 AM
அழகான கவிதை பத்திரமாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

பூமகள்
21-08-2007, 09:08 AM
அழகான கவிதை பத்திரமாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

நன்றி சகோதரரே...
பத்திரமாய் வாழ்த்தியதற்கு...! :nature-smiley-008:

சுகந்தப்ரீதன்
21-08-2007, 09:51 AM
பத்திரமா உன்னிடம்..
நான் கடைசியாய்
விட்டு வந்த
உனக்கான கண்ணீரும்...
உயிர் கொன்று
கொடுத்து வந்த
நமக்கான காதலும்.....????!!!![/COLOR]

பத்திரமாய் இருக்கின்றன*
உன் நினைவுகள்
என் இதயமெனும் பாத்திரத்தில்!
யாருக்கும் கொடுக்காம*ல்
இன்னும் என்னிட*ம்
என்றைக்காவ*து நீவ*ந்து கேட்பாயென?!


வாழ்த்துக்க*ள் பூம*க*ள்! வ*சிக*ரிக்கும் வ*ரிக*ளுக்கு!

பூமகள்
21-08-2007, 11:54 AM
பத்திரமாய் இருக்கின்றன
உன் நினைவுகள்
என் இதயமெனும் பாத்திரத்தில்!
யாருக்கும் கொடுக்காமல்
இன்னும் என்னிடம்
என்றைக்காவது நீவந்து கேட்பாயென?!


வாழ்த்துக்கள் பூமகள்! வசிகரிக்கும் வரிகளுக்கு!

அழகுக் பின்னூட்டக் கவியுடன் வாழ்த்தியதற்கு நன்றிகள் சகோதரர் சுகந்தப்ரீதன் அவர்களே..!

அரசன்
21-08-2007, 01:52 PM
பத்திரமாக பாத்துக்கோங்க! வாழ்த்துக்கள் பூ!

பூமகள்
21-08-2007, 02:05 PM
பத்திரமாக பாத்துக்கோங்க! வாழ்த்துக்கள் பூ!

நன்றி அரசரே... பரிசில்(இ−பணம்) எங்கே அரசே....???? தங்களின் வள்ளல் தன்மை இம்மன்றம் அறியச் செய்யுங்கள்.....!:icon_wink1:

அரசன்
21-08-2007, 02:11 PM
நன்றி அரசரே... பரிசில்(இ−பணம்) எங்கே அரசே....???? தங்களின் வள்ளல் தன்மை இம்மன்றம் அறியச் செய்யுங்கள்.....!:icon_wink1:



அரசரன் என்ற பெயரில் இவ்வளவு பின் விளைவு உள்ளதா. இது தெரியாம போய்விட்டதே. எதிர்பாரா தருணம், என் இ−பணம் இடம்பெயரும்.
உங்கள் படைப்புகளை தொடர்ந்து கொடுக்க என் வாழ்த்துக்கள்.

பூமகள்
21-08-2007, 02:25 PM
அரசரன் என்ற பெயரில் இவ்வளவு பின் விளைவு உள்ளதா. இது தெரியாம போய்விட்டதே..

ஹி ஹி ஹி... மாட்டிக் கொண்டீரா அரசே...??? :icon_03:

எதிர்பாரா தருணம், என் இ−பணம் இடம்பெயரும்.
உங்கள் படைப்புகளை தொடர்ந்து கொடுக்க என் வாழ்த்துக்கள்

நல்லது அரசே..அதைக் கொஞ்சம் விரைந்து செய்தால் நலம்... பரிசிலை பெற காக்க வைக்க மாட்டீர் என்ற நம்பிக்கையில்...;)

அக்னி
27-08-2007, 01:47 PM
சொத்தல்லாவா உன் காதல்...
பத்திரமா இருக்கு
என் இதயபெட்டகத்தில்...

பெட்டகத்தின்,
திறவுகோல் உன்னிடம்...
வந்து போ,
தினமும் என்னிடம்...

பரிசோதிக்கவல்ல,
மேலும் மேலும்,
நான் சேமிக்க...

பாராட்டுக்கள் பூமகள்...

கவிச்சமரில் நான் எழுதிய கவிதை ஒன்று, நினைவுக்கு வருகின்றது...
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=204897&postcount=158 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=204897&postcount=158)

பூமகள்
27-08-2007, 03:31 PM
சொத்தல்லாவா உன் காதல்...
பத்திரமா இருக்கு
என் இதயபெட்டகத்தில்...

பெட்டகத்தின்,
திறவுகோல் உன்னிடம்...
வந்து போ,
தினமும் என்னிடம்...

பரிசோதிக்கவல்ல,
மேலும் மேலும்,
நான் சேமிக்க...

பாராட்டுக்கள் பூமகள்...

கவிச்சமரில் நான் எழுதிய கவிதை ஒன்று, நினைவுக்கு வருகின்றது...
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=204897&postcount=158 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=204897&postcount=158)

அழகான பின்னூட்டக்கவி.... நீங்கள் ஏற்கனவே படைத்த கவிதை கண்டு வியந்தேன்.... நன்றிகள் அண்ணா.