Log in

View Full Version : சின்னப்பூவின் சின்னஅவதாரம் கவிதாயினி



பூமகள்
20-08-2007, 08:04 AM
பூமகளின் பூக்களில் சில...!

அன்பான மன்றத்து அன்பு நெஞ்சங்களுக்கு,

இந்த பூமகளின் பணிவான வணக்கங்கள்..! பூமகள் என்னை மன்றத்துதாய் மடி கவிதாயினியாய் ஏற்றுத் தாலாட்டியதற்கு கவி பாடும் குழந்தையின் நன்றிகள் கோடி.

தமிழ் ஆர்வம் என்னுள் ஆரம்பித்தது என் ஆரம்பக் கல்வி நாட்களில்.. என்னுள் தமிழ் திறன் வளர்த்த பெருமை மகாக்கவியையும் பாவேந்தரையுமே சாரும்.

இசையார்வம் அதிகமாதலால், மகாகவியின் கவியே என் இசையாய் உருவெடுக்கும் பள்ளி போட்டிகளில்.

கட்டுரை போட்டி, பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி என அனைத்தும் தமிழ் தீயை வளர்த்தன என்னுள்..

கல்லூரி வாழ்க்கையின் பிடியில் சிக்கி, தமிழ் படைக்க இயலாதவள் ஆனபோது நிஜமாய் மனம் அழுதது இன்னும் என் நினைவில்...

மகிழ்ச்சி தந்தது நம் தமிழ் மன்றம் என்னை தம் குழந்தையாக ஏற்று... :)

எனக்கு பிடித்தமான கவிஞர் வைர கவிஞர் வைரமுத்து அவர்களே.
அவரின் முதல் நாவல் கவி "தண்ணீர் தேசம்" என் தமிழ்த் தாகத்தை தணித்தது.

அவரின் "கொஞ்சம் தேனீர் நிறைய வானம்", "வைரமுத்து கவிதை தொகுப்புகள்" ஆகியன என் மனம் கவர்ந்த படைப்புகள்.

அவரின் சுயசரிதை கவியான "இதுவரை நான் வைரமுத்து" அவரை எனக்கு மேலும் அறிமுகப்படுத்தியது..

என் குட்டிப் படைப்புகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
1.அறிமுகம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11522)

2. புதிய கவிதைகள்

கருத்த காலம்..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14614)
ஈரவெளிக் காற்று..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14597)
ஐஸ்கிரீமும் நானும்..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14493)
முள்ளாகும் முல்லைகள்..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14448)
பரணின் தூசிலிருந்து..! - நானும் கனவும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13975)
என்னாடி......!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14064) (குறுங்கவி)
மழை..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13979) (குறுங்கவி)
கிளை தேடி..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13843)
ஓடாத கணங்கள்..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13603)
மழை!-(கவிதைப் போட்டி கவி) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13602)
தாய்க்கிழவியின் தவிப்பு..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13246)
இருளும் ஒளியும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13168)
தீபத் திருநாள்..!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13134)
வௌவால் காவியம்..!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=292869#post292869)
மழை வேண்டி..!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=281635#post281635)
பிறவா பிறையே...!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=278786#post278786)
தேடல்...!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=275561#post275561)
அம்மா...!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=273521#post273521)
ஏன் போனாய்?? (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=272464#post272464)
அவசரம்...!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=271587#post271587)
பிச்சைக்காரி..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=268766#post268766)
தோழியே உனக்காக..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=268214#post268214)
முகமூடி மனிதர்கள்..!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12065)
பஞ்சு மேகம்..!! (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=264049&postcount=1)
சத்தமாய்...! (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=263211#post263211)
வெளிச்சம் தேடி..!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=261837#post261837)
தாய்த்தொடர் வண்டி..!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=261203#post261203)
ஒரு பத்திரிக்கையாளன் நிலை (போட்டிக் கவி) (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=260993#post260993)
சிறு பூவிற்கு வாழ்த்து..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=260888#post260888)
நேசத்தின் சுகந்தம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11680)
நிதர்சனம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11738)
இயற்கையின் கைதி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11617)

3. காதல் கவிதைகள்

உறைந்த நிமிடம்..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13339) (மன்றத்தில் ஒட்டிவைத்த என் முதல் கவி..!:))
நான்(ண்)! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13513)
காதலித்துப் பார்...!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13447)
காதல் பரணி..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13448)
ஏனடி இப்படி?? (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=280846#post280846)
மௌனம்....!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=268043#post268043)
பிரிவு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11638)
பத்திரமா உன்னிடம்...?? (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=259641#post259641)
சுடும் நிஜம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11591)
பிரபஞ்ச பிரயாசை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11552)
அன்பே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11551)

4. பண்பட்டவர் படைப்பு

வலியின் விழி நீர்..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14239)

5. இதர படைப்புகள்

4000பதிவு-பூ பெற்ற பூச்செண்டு..!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14770)
பூங்கிளி கதை...!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14211)
அதிகம் நீரருந்தினால் ஆபத்தா...?? (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14285)
மின்னிதழாசிரியருக்கு பூவின் பரிசு..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14173)
கல்லூரியில் தவறவிடப்பட்ட பூ..!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13990)
தமாசு : சூடான செய்திகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13595)
பாரத விலாசில் பூ...!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13849)
கிருஸ்த்மஸில் பூ வைத்த செ(கே)க்..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13961)
3000ஆவதுபதிவு-பூவின் முதல் அ(ப)டி..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13744)
நகரும் தாஜ்மகால்??(நிஜம்-ஆதாரத்துடன் பூ) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13795)
விமான நிலையமும் பூவகமகிழ்வும்..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13485)
உலகின்"பெரிய"தலைகளைகண்டுபிடிக்கவாங்க! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13369)
காந்தி ஜெயந்தி கவியரங்கத்தில் வைரமுத்து (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12916)
அரிய தாவரங்களின் படங்கள்..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12979)
சுகிசிவத்தின் "வெற்றி நிச்சயம்!" இ-புக் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13046)
2000வது பதிவு-பூவின் புதுப் பொ(லிவு)ழுது..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12968)
அந்நிய முதலீடுகள் : பகற்கொள்ளையின் மறுபெயர் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12927)
பூவின் குறும்பாககுண்டாகலாம் வாங்க! - 2 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12888)
பூவின் குறும்பாக குண்டாகலாம் வாங்க...!!(படங்களுடன்) (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=281222#post281222)
கோடிகளில் புரளும் ஆன்மீக வர்த்தகம்...!!(பொது விவாதம்,அலசல் கண்ணோட்டம்) (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=278216#post278216)
சிரிங்கப்பூ...............!!(புதுநகைப்பூ..!!) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12195)
500வது படைப்பு − கொக்கரக்கோ குமாங்கோ பூமகளைக் காணலைங்கோ..!!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12083)
எங்கே நிற்கிறாய் இப்போது?-கார்ட்டூன் படங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12077)
நகைச்சுவைப் படங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12004)
வாழ்வியல் நியதி − கார்ட்டூன் படங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12028)

6. சிறு கதை/ தொடர்கதைகள்

ஒரு மாலை இளவெயில் நேரம்..! - (சிறுகதை) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13657)
பருவநட்சத்திரங்கள்....! - ( முதல் தொடர்கதை) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12812)
1000ஆவது பதிப்பு-"வழி மாறா பயணம்.......!!"(முதல் சிறுகதை) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12434)

6. திரை விமர்சனங்கள்

ஆர்டிஃபிசியல் இண்டலிஜெண்ட்(AI) - விமர்சனம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=283587&posted=1#post283587)
BHAHBAN - பாஃபன் திரைப்பட விமர்சனம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12606)
ஓம்சாந்திஓம்-விமர்சனம்-பூவின் பார்வையில் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13823)

7. ஒ(லி)ளிப்பூக்கள்

பூவின் ஒ(லி)ளிப்பூக்கள்...!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12755)
மாவீரன் லொள்ளரின் காதல் கீர்த்தனை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12754)
(V) பூவின் அசை இசை நகை கலவை...!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12785)
பூவின் அன்பு மன்ற அண்ணாக்களுக்காக...!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12753)


நன்றிகளோடு,

ஆதவா
20-08-2007, 08:29 AM
பூமகள் அவர்களுக்கு...

உங்கள் கவிதைகளை பலர் பாராட்டக் கண்டேன். மன்றத்தில் மீரா, பிச்சி, ஓவியா மற்றும் இனியவளோடு நீங்களும் மகளிரணியில் இணைந்தமை மனமகிழ்ச்சியை அளிக்கிறது. இன்னும் உங்கள் கவிதையின் ஆழம் வரை நான் செல்லவில்லை. அதற்கு மன்னிக்கவும். எனக்குண்டான நேரம் அம்மாதிரி. கவிதையைப் படிக்க அவசரமில்லாத நேரம் வேண்டும். ஆனால் இப்போது ஏனோ அவசரநிலையில் இருப்பதாக உணருகிறேன்.

மேலும் இந்த பகுதியை இன்னும் சில கவிஞர்கள் உபயோகப்படுத்தவில்லை என்பது தெளிவு. (எனக்கும் "கோடு" பிரச்சனை) நீங்கள் உபயோகப்படுத்தி அறிமுகப்படுத்தியமமக்கு பொறுப்பாளர்கள் சார்பில் நன்றியும் ரசிகன் சார்பில் வாழ்த்துக்களும்...

மேன்மேலும் பல கவிதைகள் படைத்து இந்த இடத்தை நிரப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பூமகள்
20-08-2007, 10:22 AM
நன்றி ஆதவா அண்ணாவே..!
நேர*ம் கிடைக்கையில் எம் ப*டைப்புக*ளைப் ப*டித்து விம*ர்சியுங்க*ள்.

ந*ன்றிக*ளோடு,

சிவா.ஜி
20-08-2007, 10:31 AM
கவிதாயினி பூமகளுக்கு முதலில் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.காதலைக் கவிபாட பலருண்டு.அதேபோல் காதலை எத்தனை முறை பாடினாலும் அலுப்பதில்லை.உங்களின் கவிதைகளில் காதலே வித்தியாசப்படுகிறது.சம்பிரதாயமான ஐந்தாறு வார்த்தைகளைக் கொண்டு கோர்த்துக்கட்டியதல்ல உங்கள் கவிதைகள்.அதனை உங்கள் முதல் கவிதையிலிருந்து நீங்கள் நிரூபித்து வருகிறீர்கள்.
வித்தியாசமான கருக்களை மிக வித்தியாசமான முறையில் அழகாய் வழங்கிவருகிறீர்கள்.உங்களின் பிரபஞ்ச பிரயாசை அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.கவிச்சமரில்..சடுதியில் எழுதும் கவியிலும் உங்கள் தனி முத்திரையை தரமாகப் பதிக்கிறீர்கள்.
உங்களை இம்மன்றம் பெற்ற மற்றொரு சொத்தாக நினைக்கிறேன்.இன்னும்..இன்னும்..வளர வாழ்த்துக்கள்.

அமரன்
20-08-2007, 11:42 AM
பூகளின் கவிதைகள் பேசின மன்றத்தில்
பூமகள் கவியாகப் பேசுகிறார் இன்று.
இரண்டிலும் நான் காண்பது தமிழாறு.




தமிழ் ஆர்வம் என்னுள் ஆரம்பித்தது என் ஆரம்பக் கல்வி நாட்களில்.. என்னுள் தமிழ் திறன் வளர்த்த பெருமை மகாக்கவியையும் பாவேந்தரையுமே சாறும்.


மகாகவியினதும் பாவேந்தரினதும் கவிதைகளின் பிழிந்த சாறாக உங்கள் கவிதைகள் இருக்கும் என்பதை உங்களை அறியாது இயம்பியதை இரசித்தேன் பூமகள். வாழ்க.வளர்க.

பூமகள்
20-08-2007, 12:46 PM
நன்றிகள் சிவா.ஜி மற்றும் அமர் சகோதரர்களுக்கு.
என்னை மேலும் மேலும் கவி புனைய வைக்கின்றன தங்களைப் போன்ற பெரியோரின் ஊக்கங்கள்......!!

namsec
20-08-2007, 01:15 PM
வாழ்த்துகளுடன் கூடிய வரவேற்ப்பு பெயருக்கு எற்றபடி கவி+தா+நீ

ஷீ-நிசி
20-08-2007, 02:04 PM
வாழ்த்துக்கள் பூமகள்... தொடருங்கள்!

ஓவியன்
20-08-2007, 02:25 PM
பூமகள்!!!
பெயரே ஒரு சொற் கவிதை....
முட்டி மோதிப் புறப்படும்
வரிகள் எல்லாமே கவிதைகள்.........

உங்கள் கவிதைகளில்
சிலவற்றில் மெய்மறந்தவன்
நான் − ஆதலினால்
சின்ன அவதாரம் என்பதை
என்னால் ஏற்க இயலாது
மன்னித்து விடுங்கள்.........

உங்கள் பெரிய அவதாரம்.......!:)
இன்னமும் விஸ்வரூபமாகி.........
மன்றத்தாய்க்கும் அதனால்
உங்களுக்கும் நமக்கும்
ஏன் எல்லோருக்குமே
பெருமை சேர்க்கட்டும்........!

aren
20-08-2007, 03:07 PM
பூமகள்,

உங்கள் கவிதைகள் அழகாக இருக்கின்றன. படிக்க இதமாகவும் இருக்கின்றன. ஆனால் என்ன சில சமயங்களில் என்னால் அதை புரிந்துகொள்ளமுடியவில்லை. சில வார்த்தைகள் நான் கேள்விப்பட்டிராதவை, ஆகையால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதற்கு தமிழ் சரியாகத் தெரியாதது ஒரு காரணமாக இருக்கலாம்.

வாருங்கள், வந்து கலக்குங்கள். மகளீர் அணியில் சேர்ந்து ஒரு கை பாருங்கள். அதற்கு என் வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

lolluvathiyar
20-08-2007, 03:17 PM
மரைக்காமல் உன்மையை கூறி கொண்டு வெட்க படுகிறேன்
நான் உங்கள் கவிதைகளை அதிகம் படித்ததில்லை பூமகளே.

ஆனால் நீங்கள் தேர்ந்தெடுத்திற்க்கும் பெயரையும் அவதாரையும் பார்த்தாலே உங்கள் ரசனை ஓரளவுக்கு பிடிபட்டது.

இந்த அறிமுகத்தை பார்த்தபின் உங்களின் கவிதைகள் அருமையாக இருக்கும் என்று தோண்றுகிறது. நிச்சயம் படித்துவிடுவேன் பூமகளே

சுகந்தப்ரீதன்
21-08-2007, 04:24 AM
பூ போன்ற வரிகள்....புன்னகை சிந்தும் தமிழ்தாய்....வாழ்த்துக்கள் பூமகள்!
அதிகம் நான் மன்றம் வருவதில்லை....அதனால் எனக்கு இப்பொழுதுதான் அறிமுகமாகின்றன உங்களின் வைரவரிகள்.....ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்....மிகவும் ரசித்தேன் உங்கள் அறிமுகத்தையும் அறியாத முகத்தையும்?!

பூமகள்
21-08-2007, 08:05 AM
பூ போன்ற வரிகள்....புன்னகை சிந்தும் தமிழ்தாய்....வாழ்த்துக்கள் பூமகள்!
அதிகம் நான் மன்றம் வருவதில்லை....அதனால் எனக்கு இப்பொழுதுதான் அறிமுகமாகின்றன உங்களின் வைரவரிகள்.....ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்....மிகவும் ரசித்தேன் உங்கள் அறிமுகத்தையும் அறியாத முகத்தையும்?!

நன்றி சகோதரரே..
தொடர்ந்து மன்றம் வாருங்கள்... விமர்சியுங்கள்..!

பூமகள்
21-08-2007, 08:10 AM
மரைக்காமல் உன்மையை கூறி கொண்டு வெட்க படுகிறேன்
நான் உங்கள் கவிதைகளை அதிகம் படித்ததில்லை பூமகளே.

ஆனால் நீங்கள் தேர்ந்தெடுத்திற்க்கும் பெயரையும் அவதாரையும் பார்த்தாலே உங்கள் ரசனை ஓரளவுக்கு பிடிபட்டது.

இந்த அறிமுகத்தை பார்த்தபின் உங்களின் கவிதைகள் அருமையாக இருக்கும் என்று தோண்றுகிறது. நிச்சயம் படித்துவிடுவேன் பூமகளே

மறைக்காமல் உண்மை சொல்வதற்கு மிகப்பெரிய மனம் வேண்டும். அது தங்களிடம் நிறைய உள்ளது. நன்றி தங்கள் விமர்சனத்திற்கு. சமயம் கிடைக்கையில் என் கவிகளை படித்து விமர்சியுங்கள்.

மனோஜ்
21-08-2007, 08:18 AM
சிறப்பான கவிதைகளை எங்களுக்கு தரும் பூமகளுக்கு என் நன்றிகள்
கவிதையில் குழுந்தையான நீங்கள் இளவரசியாக மாற என்வாழ்த்துக்கள்

பூமகள்
21-08-2007, 08:20 AM
சிறப்பான கவிதைகளை எங்களுக்கு தரும் பூமகளுக்கு என் நன்றிகள்
கவிதையில் குழுந்தையான நீங்கள் இளவரசியாக மாற என்வாழ்த்துக்கள்

நன்றிகள் மனோஜ் அண்ணா. தங்களைப் போல் பெரியோரின் ஆசி கிடைத்தால் விரைவில் ஆவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இனியவள்
23-08-2007, 06:32 PM
வாழ்த்துக்கள் பூமகள்

உங்களுடைய இந்த அறிமுகம் கூட
கவிதையாகவே தோன்றுகிறது

அழகிய கவிதைகளை இயற்கையின்
நிறங்கள் குறையாமல் அழகு தமிழில்
தரும் பூமகளுக்கு என் வாழ்த்துக்கள்

தொடரட்டும் உங்கக் கவிப் பயணம் தோழியே

பூமகள்
23-08-2007, 06:49 PM
அழகிய கவிதைகளை இயற்கையின்
நிறங்கள் குறையாமல் அழகு தமிழில்
தரும் பூமகளுக்கு என் வாழ்த்துக்கள்

மிக்க நன்றி சகோதரி இனியவள் அவர்களே... உங்களின் ஆசியுடன் இனிதே முயல்கிறேன்.

அக்னி
24-08-2007, 05:43 PM
மகாகவியின் வரிகளில் தொடங்கிய உங்கள் தமிழ் வாழ்வு,
காலங்கள் கடந்தும் வாழும் அந்தப் புரட்சிக்கவியின் வரிகள் போன்று,
புகழ்பெற்றுச் சிறக்க வாழ்த்துக்கள் கூறி,
மன்றத்தின் கவிச்சாரலில் நனையவும் பொழியவும் வரவேற்கின்றேன்...

பூமகள்
25-08-2007, 04:43 AM
மன்றத்தின் கவிச்சாரலில் நனையவும் பொழியவும் வரவேற்கின்றேன்...
மிக்க நன்றி சகோதரரே.:icon_blush: தங்களின் ஆசியுடன் இனிதே தொடங்குகிறேன் எனது பயணத்தை..!:082502now_prv:

kampan
26-08-2007, 09:42 AM
பூமகளின் ஒவ்வொரு கவிதைகளும் படிக்கையில் இன்னும் இது போன்று தா மகளே என்று சொல்ல வைக்கிறது. தொடரட்டும் உங்கள் கவி வேட்டை.

பூமகள்
26-08-2007, 10:23 AM
பூமகளின் ஒவ்வொரு கவிதைகளும் படிக்கையில் இன்னும் இது போன்று தா மகளே என்று சொல்ல வைக்கிறது. தொடரட்டும் உங்கள் கவி வேட்டை.

மிக்க நன்றி கம்பரே..!

இளசு
30-08-2007, 06:02 AM
மன்றத்தின் மிக முக்கிய முன்னணிக் கவிஞர்கள் பட்டியலில் நீங்களும்..

பாராட்டுகள் பூமகள்..


கவிதைகள் மனதின் எண்ண ஓட்டங்கள்......கவிதையை நிறுத்துவது மனதினை சிறைபடுத்துவது போல......அது மனதுக்கும் நல்லது அல்ல...உடலுக்கும் நல்லது அல்ல.....,

அன்புடன்
பப்பி

எழுதுவது என்பது வாய்ப்பது!
வாய்ப்பிருக்கும்போதே எழுதிவிடவேண்டும்..

அதை இம்மன்ற வழங்கியதென்பதில் மகிழ்ச்சி..

உங்கள் கவிப்பயணம் முழுமையாய், இனிதாய், வெற்றிகளோடு
என்றும் தொடர வாழ்த்துகள்!

பூமகள்
30-08-2007, 06:56 AM
மன்றத்தின் மிக முக்கிய முன்னணிக் கவிஞர்கள் பட்டியலில் நீங்களும்..

பாராட்டுகள் பூமகள்..
எழுதுவது என்பது வாய்ப்பது!
வாய்ப்பிருக்கும்போதே எழுதிவிடவேண்டும்..
அதை இம்மன்ற வழங்கியதென்பதில் மகிழ்ச்சி..

உங்கள் கவிப்பயணம் முழுமையாய், இனிதாய், வெற்றிகளோடு
என்றும் தொடர வாழ்த்துகள்!

மிக்க நன்றிகள் இளசு அண்ணா. உங்களின் ஆசியுடன் தொடர்கிறேன்.

மாதவர்
30-08-2007, 07:26 AM
பூவே கவிதை
பூச்சூட வா

பூமகள்
30-08-2007, 11:56 AM
பூவே கவிதை
பூச்சூட வா
தங்களின் வரவேற்பிற்கு நன்றிகள் சகோதரே..........!! :)

paarthiban
30-08-2007, 12:28 PM
பூமகளுக்கு வாழ்த்துக்கள்.

பூமகள்
30-08-2007, 12:35 PM
பூமகளுக்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி...நண்பர் பார்த்திபன்.

இலக்கியன்
30-08-2007, 05:46 PM
பூமகளே உன் கவிதைகள்
பூ வாசம்தான்

வீசட்டும் தென்றலாக
விண்ணெங்கும்

மன்றத்தில் மலந்த
மலரவளே

தேன் குடிக்கும் வண்டாக
நாம் இங்கே

படையுங்கள் படையலாக
கவித்தேனை

பூமகள்
30-08-2007, 06:22 PM
பூமகளே உன் கவிதைகள்
பூ வாசம்தான்

வீசட்டும் தென்றலாக
விண்ணெங்கும்

மன்றத்தில் மலந்த
மலரவளே

தேன் குடிக்கும் வண்டாக
நாம் இங்கே

படையுங்கள் படையலாக
கவித்தேனை

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றிகள் அன்பு தோழர் இலக்கியன்...!

நிதம் படைக்க முயல்வேன் − மன்றத்தின்
பதம் தொட்டு வணங்கியே......!!
நன்றிகள் கோடி என் தாய்மடி தமிழ் மன்றமே...!!

baseer
01-02-2008, 07:14 PM
பூமகளே,

தங்களின் அறிமுகம் பார்த்தேன்.
படைப்புக்களைப் பற்றியும் (தலைப்புக்களை பார்த்து) அறிந்தேன்.
(புதியவன் நான். தங்களின் படைப்புக்களை இன்னும் படிக்கவில்லை என்பதை அறிவீராக)

பூமகள் வந்தாள்...
கவி கோடி தந்தாள்...
என்று பாடும் காலம் விரைவில் வர வாழ்த்துகிறேன்.

என்றும் அன்புடன்,
நெல்லை பசீர்.

ஜெகதீசன்
02-02-2008, 09:03 AM
என் இனிய சகோதரியே

தங்களின் காவிய வரிகளில்
மூழ்கி மூழ்கி பரவசமடைகிறேன்.

வாழ்த்த வயதில்லை எனக்கு
நன்றிகள பல.

பூமகள்
02-02-2008, 10:47 AM
பூமகளே,
பூமகள் வந்தாள்...
கவி கோடி தந்தாள்...
என்று பாடும் காலம் விரைவில் வர வாழ்த்துகிறேன்.
வாங்க வாங்க.. பசீர் அண்ணா..!

வந்தவுடன் என் கவித் திரி தங்கள் கண்ணில் பட்டது என் பாக்கியம்.:)

மிக்க நன்றிகள்.

என் கவிகள் அனைத்தையும் வாசித்து விமர்சியுங்கள்.

ஆவலோடு காத்திருக்கிறேன்.

பூமகள்
02-02-2008, 10:49 AM
என் இனிய சகோதரியே

தங்களின் காவிய வரிகளில்
மூழ்கி மூழ்கி பரவசமடைகிறேன்.

வாழ்த்த வயதில்லை எனக்கு
நன்றிகள பல.
வந்தவுடன் அழகாய் இனிய சகோதரி என்று அழைத்து தமிழ்மன்ற குடும்பத்தில் ஒருவராகிவிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி. :)

என் கவிதைகள் வாசித்தமைக்கும் வாசிக்க விரும்பியமைக்கும் எமது நன்றிகள்.

எனது படைப்புகள் படித்து விமர்சியுங்கள் ஜெகதீசன் சகோதரரே..!

meera
03-02-2008, 10:29 PM
பூவின் மனம் மயக்கும் வாசம் அழகாயிருக்கிறது.

நேரமின்மை காரணமாய் இன்னும் சில பதிவுகளை வாசிக்கவில்லை.நேரம் கிடைக்கும் போது நிச்சயம் வாசிக்கிறேன்.

பூவின் வாசம் மேலும் வீச என் வாழ்த்துகள்.

பூமகள்
06-02-2008, 07:15 AM
மிக்க நன்றிகள் தோழி மீரா.
உங்கள் வருகையும் பின்னூட்ட பதிவும் மனம் மகிழச் செய்கிறது.
நேரம் கிடைக்கையில் என் பதிவுகள் படித்து தங்களின் கருத்துகளைத் தாருங்கள் தோழி..! :)

pasaam
16-04-2008, 01:48 PM
பூமகளின் கவிதைகள் பிரமாதம். தொடரட்டும் மேன் மேலும்
- பாசம்=

பூமகள்
16-04-2008, 06:49 PM
பூமகளின் கவிதைகள் பிரமாதம். தொடரட்டும் மேன் மேலும்
- பாசம்=
அன்பு பாசப்பெரியப்பாவின் அழகான வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் பலப்பல..!:)