PDA

View Full Version : முன்பும் பின்பும்



சுகந்தப்ரீதன்
20-08-2007, 04:23 AM
முன்பு.......
பூவாய் மணமாய்
நிலவாய் ஒளியாய்
தாயாய் சேயாய்
அழகாய் தோன்றினாய்!
பின்பு.......
என்னிடம் என்னவளாய்
இல்லாமல் எதிரியாய்
மன்னிக்கவும் மனைவியாய்
ஏனடி நீ மாறினாய்?!

அமரன்
20-08-2007, 12:05 PM
க.மு வில் எல்லாம் காதல்காலடியில்
க.பியில் காப்பிக்கே அவளடியில்.
பாராட்டுக்கள் பிரீதன்

சிவா.ஜி
20-08-2007, 12:35 PM
கால மாற்றம்...காதலில் மாற்றம்......
நேற்றைய காதலி இன்றைய மனைவி...இருந்தும்...
காதலில்லா வாழ்க்கை...!
சுவைபடச் சொன்ன ப்ரீதனுக்கு வாழ்த்துக்கள்.

இலக்கியன்
21-08-2007, 09:11 AM
வாழ்க்கையில் இது எல்லாம் சகஜம் வாழ்த்துக்கள்

மனோஜ்
21-08-2007, 09:14 AM
க.முன் காமம்
க பின் விரக்தி
விடுபட
க.முன் அன்பு
க.பின் விட்டுகொடுத்தல் அருமை பிரீதன்

சுகந்தப்ரீதன்
21-08-2007, 09:44 AM
நன்றி நண்பர்களே! வாழ்த்திய உங்கள் அனைவருக்கும்!

பூமகள்
21-08-2007, 12:33 PM
க.முவோ.. க.பியோ...
என்றுமே ஒருவரை ஒருவர்
புரிந்திருந்தால்
வாராது இவ்வெண்ணம்.
பரஸ்பர புரிதலே...
இனிமையான வாழ்வு தரும்..

அழகான கவி... காதலின் நோக்கமே... புரிந்துகொள்ளுதலும் புரிந்துகொள்ளப் படுதலும் தானே...!

சுகந்தப்ரீதன்
22-08-2007, 04:16 AM
காதலின் நோக்கமே... புரிந்துகொள்ளுதலும் புரிந்துகொள்ளப் படுதலும் தானே...!

மிக தெளிவாக கூறிவிட்டீர்கள்! மிக்க ந்ன்றி சகோதரி!

ஓவியன்
26-08-2007, 02:12 AM
உண்மைக் காதலைக் கல்யாணத்தின் முன் பின் என பிரித்துவிட முடியாது சுகந்தா.........

அப்படிப் பிரிக்க முடிந்தால், அல்லது பிரித்துப் பார்க்க முயன்றால் அது உண்மைக் காதலே அல்ல..........!

சுகந்தப்ரீதன்
26-08-2007, 04:33 AM
உண்மைக் காதலைக் கல்யாணத்தின் முன் பின் என பிரித்துவிட முடியாது சுகந்தா.........

அப்படிப் பிரிக்க முடிந்தால், அல்லது பிரித்துப் பார்க்க முயன்றால் அது உண்மைக் காதலே அல்ல..........!

உண்மைதான் நண்பா....எனக்கு புரிகிறது.....இன்னும் சிலருக்கு புரியலியே?

நான்றி ஓவியரே....!

அக்னி
06-09-2007, 11:21 AM
மாற்றங்கள்...
எனது பார்வையிலா..?
பாவையே உன்னிலா..?
தேற்றிடவும் தேறிடவும்,
நாம்தானே மாற்றிட வேண்டும்
மனங்களை...

பாராட்டுக்கள் சுகந்தப்ரீதன்...

சுகந்தப்ரீதன்
06-09-2007, 11:25 AM
மாற்றங்கள்...
எனது பார்வையிலா..?
பாவையே உன்னிலா..?
தேற்றிடவும் தேறிடவும்,
நாம்தானே மாற்றிட வேண்டும்
மனங்களை...

பாராட்டுக்கள் சுகந்தப்ரீதன்...

மாலை மாற்றியதும்
மாறுவதுதானோ....
மனங்களின் வேலை?

மிக்க* ந*ன்றி அக்கினியாரே...!

அக்னி
06-09-2007, 11:31 AM
மாலை மாற்றியதும்
மாறுவதுதானோ....
மனங்களின் வேலை?

மிக்க* ந*ன்றி அக்கினியாரே...!

மனங்கள் இடம் மாறி
மாலை மாற்றினால்,
இனிக்கும் வாழ்க்கை...
மாலை மாற்றியபின்,
மனங்கள் தடம் மாறினால்...
கசக்கும் வாழ்க்கை...

சுகந்தப்ரீதன்
08-09-2007, 04:35 AM
மனங்கள் இடம் மாறி
மாலை மாற்றினால்,
இனிக்கும் வாழ்க்கை...
மாலை மாற்றியபின்,
மனங்கள் தடம் மாறினால்...
கசக்கும் வாழ்க்கை...

தடம் மாறுவதும்
தடுமாறுவதும் தானே
இந்த மானிட வாழ்க்கை?

வாழ்த்துக்கள் அக்னி...!

வசீகரன்
08-09-2007, 05:13 AM
சொந்த அனுபவமோ.... சுகந்தரே....

அமரன் அவர்களின் பின்னூட்டம் சிரிக்க* வைத்த*து...!

வசீகரன்...

சுகந்தப்ரீதன்
08-09-2007, 07:34 AM
சொந்த அனுபவமோ.... சுகந்தரே....

அமரன் அவர்களின் பின்னூட்டம் சிரிக்க* வைத்த*து...!

வசீகரன்...

வசீகரரே...

நான் ரொம்ப சின்னபையன்...கால்நூற்றாண்டுதான் ஆகிறது இப்பூமிக்கு வந்து..... அன்றாட வாழ்க்கையில் நடப்பதைதான் எழுதினேன்...எனக்கு வருகிறவள் இதை படித்தாள் என்னவளாய் இருப்பாள் என்ற ஏக்கத்தில் எழுதியதாய் எடுத்துக்கொள்ளலாம்...! மற்றபடி நம்ப எல்லாம் பிரம்மசாரிங்கன்ணா...?!