PDA

View Full Version : அழிக்காதே



இனியவள்
19-08-2007, 06:35 PM
இயற்கையே நீ கொடுத்த
வளத்ததை நாம் எடுத்து
உன்னை அழிக்கின்றோம்.

நீயோ மீண்டும் மீண்டும்
கொடுக்கின்றாய் நன்மைகள்
நாம் நலமாய் வாழ்ந்திட....

நன்மை செய்திடில் பதிலுக்கு
தீமை செய்யாதே மானிடா.

பலவழிகளில் உன்னைக்
காத்திடும் இயற்கையை
காக்காவிடினும் அழித்திடாதே.

வருங்காலம் கண்ணுற்று நோக்காமல்
போய்விடும் அழகிய இயற்கையை...

தர தர பெறுகின்றாய்
வெட்டி வெட்டி எரிக்கின்றாய்
வெட்ட வெட்ட முளைக்கின்றது
அதையே
வேரொடு அழிக்க முனைகின்றாய்
உன் லாபத்திற்காய்.

நீ அழிப்பது மரத்தையல்ல
உன் வருங்கால சந்ததியினரின்
நல்வாழ்வை...

ஒரு மரத்தை நீ அழித்தாலும்
ஆக்கிவிடு பல மரங்கள்.
என்றும் உனக்கு நிழலாய் இருந்து
இயற்கை
அனர்த்தங்கள் இன்றி
உன்னைக் காப்பாற்றிடும்...

அமரன்
19-08-2007, 07:28 PM
உலகெங்கும் பரந்திருக்கும் கடல்கள்
மழையாக மாற தேவை மரங்கள்.
எம்மால் களங்கமாகும் காற்றை
கற்புள்ளதாயாக்க தேவை மரங்கள்.

அழிக்காதே அவற்றை
அளித்துவிடு அவற்றை
வருங்காலத்துக்காய்...!


காதல் பூமியில் பூத்த
குறிஞ்சிப்பூ இக்கவிதை..
பாராட்டுக்கள் இனியவள்.

இளசு
19-08-2007, 08:53 PM
சூழல் காக்கும் ஆர்வம்..
அடுத்தடுத்த தலைமுறைக்கு நாம் செய்யவேண்டிய கடமை..

எத்தனை எழுதினாலும் தகும்..

வாழ்த்துகள் இனியவள்!

சிவா.ஜி
20-08-2007, 05:00 AM
தரு அது
உன்னதத்தின் உரு!
அறுக்காதே,அதை
கறுக்காதே..மானிடா
பின் உன்னை
எரிக்கவும்
எதுவும்
மிஞ்சியிருக்காது...
உனக்காகவேனும்
ஒரு மரம் நட்டு வளர்!
நல்ல சமூக சிந்தனையுள்ள கவிதையளித்த இனியவளுக்கு வாழ்த்துக்கள்

இலக்கியன்
21-08-2007, 08:57 AM
இயற்கையை காத்து சுற்றுபுற சூழலைப்பாதுகாக்க வேண்டியது எமது கடமை அதை உள்வாங்கியவரிகள் வாழ்த்துக்கள்

இளசு
21-08-2007, 07:16 PM
பின் உன்னை
எரிக்கவும்
எதுவும்
மிஞ்சியிருக்காது...
உனக்காகவேனும்
ஒரு மரம் நட்டு வளர்!


மனிதன் தன் மனதில் புதைக்க வேண்டிய கருத்து!


வாழ்த்துகள் சிவா!

ஓவியன்
24-08-2007, 05:41 AM
வெட்டி வெட்டி
எரிக்கின்றோம்
வெட்டி எரிப்பது
எம் எதிர்காலத்தை
என்று அறியாமல்.........!

பாராட்டுக்கள் இனியவள் அழகான கருவைச் சுமந்த அருமையான கவிதைக்கு..........! :nature-smiley-003:

alaguraj
24-08-2007, 07:04 AM
இனிய இன்றைய தலைமுறையே
நீ வெட்டுவது மரமல்ல*
உனது வம்சத்தின் சுவாசம்

இன்று நீ சோலையில்
நாளை அவன் பாலையில்
தன்னந்தனியாக*

ஒற்றைமர நிழலுக்காய்
உயிர்களை ஓட வைக்கதே

அக்னி
24-08-2007, 11:49 PM
பிறந்தபொழுது
தொட்டிலாய் தாலாட்டியவை...
வாழும்பொழுது
எம்மால் குதறப்பட்ட போதிலும்...
சாகும்பொழுதிலும்
சிதையாய்த் தாங்குகின்றதே...
மனங்கள் உணரும்பொழுது,
மரங்கள் இருக்குமா..?

பாராட்டுக்கள் இனியவள்...
அமரன், ஓவியன், சிவா.ஜி, அழகுராஜ் அனைவரின் கவிதைகளும்,
அண்ணாவின் கருத்துக்களும் அருமை...