PDA

View Full Version : மக்கள் யோசிக்கவே மாட்டாங்களா?



தாமரை
19-08-2007, 12:18 PM
ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு பண்ணி அந்த எண்ணெய் இந்த கிரீம்னு தடவி முடியை கறுப்பாக்க முயற்சி பண்ணினா அது என்னவோ வெளுத்து பளீர்னு ரின் வெண்மையாய் இருக்கு...

அதேமாதிரி முகம் வெளுக்கணும்னு எக்கச்சக்கமா செலவு பண்ணி முகத்துக்கு கிரீம் பூசறாங்க.. முகம் என்னவோ கறுத்துகிட்டே போகுது...


தினம் தினம் விதம் விதமா கிரீம் பூசி ஷேவ் பண்ணி ஆஃபடர் ஷேவ் போட்டு வச்சாலும் தாடி வளர்து கிட்டே இருக்கு..என்னென்னவோ எண்ணெய் பூசி எததனை டெக்னிக் பண்ணினாலும் தலை வழுக்கையாகி கிட்டே இருக்கு..


ஆமாம் முகத்துக்கு செய்யறதை தலைக்கும் தலைக்கு செய்யறதை முகத்துக்கும் செஞ்சா என்னவாம்? முகம் வெளுப்பாகி, தாடி மெலிசாயி உதிர்ந்து ..ஷேவ் பண்ற நேரமும் மிச்சம்.

தாடிக்கு பதிலா தலை முடி வளருமே!

மக்கள் யோசிக்கவே மாட்டாங்களா???:icon_hmm::icon_hmm::icon_hmm:

lolluvathiyar
19-08-2007, 12:22 PM
அன்னா அருமையா யோசிக்கரீங்க*
நீங்க உன்மையில் என் லொள்ளர் முன்னேற்ற கட்சியில் சேர வேண்டியவர்தான்

அமரன்
19-08-2007, 12:22 PM
தலைப்பிச்சுக்கிட்டு யோசிக்கவேண்டிய விடயம்.

aren
19-08-2007, 12:24 PM
முதல் ஆளாக தாமரை அவர்கள் முயற்சி செய்வார். அடுத்தது பென்ஸ். பின்னர் அவர்களின் முயற்சி எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டு பின்னர் நாமும் முயற்சிக்கலாம். நல்ல ஐடியாவாகத்தான் இருக்கிறது.

வெண்தாமரை
19-08-2007, 12:25 PM
அழகுபடுத்திகிறதுக்காக ஆயிரகணக்கில் செலவழிப்பாங்க.. ஆனால் ஐந்து ரூபாய் கைகால் சரியில்லாதவருக்கு போடமாட்டார்கள்.. நான் நேரில் கண்டது..

அமரன்
19-08-2007, 12:27 PM
இதை விடச்சூப்பர் ஐடியா.
என்ன போட்டால் கறுக்கும் என்ன போட்டால் வெள்ளையாகும் என தலையைப் பிச்சுக்கிட்டு யோசிப்பதை விட தாடியைப்பிச்சுக்கிட்டு யோசித்தால் சவரம் செய்வதுக்கான நேரம் குறையும். முகம் வெளுக்க என்ன செய்யலாம் என்பதை தாடியைப் பிச்சுக்கிட்டு யோசித்துவிட்டு வருகின்றேன்.

தாமரை
19-08-2007, 12:29 PM
முதல் ஆளாக தாமரை அவர்கள் முயற்சி செய்வார். அடுத்தது பென்ஸ். பின்னர் அவர்களின் முயற்சி எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டு பின்னர் நாமும் முயற்சிக்கலாம். நல்ல ஐடியாவாகத்தான் இருக்கிறது.

பார்த்தீங்களா! மக்கள் இப்பவும் யோசிக்க மாட்டாங்கறாங்க.. ஆனா ஒண்ணு தெரிஞ்சு போச்சு..

ஆரென்னுக்கு தலை வழுக்கையாகி, வெளுத்திருச்சிங்கறதை அப்பட்டமா ஒத்துகிட்டாரு பார்த்தீங்களா? எப்படி இப்படி அநியாயத்திற்கு அப்பாவியா இருக்கீங்க???:icon_v:

aren
19-08-2007, 12:29 PM
இதை விடச்சூப்பர் ஐடியா.
என்ன போட்டால் கறுக்கும் என்ன போட்டால் வெள்ளையாகும் என தலையைப் பிச்சுக்கிட்டு யோசிப்பதை விட தாடியைப்பிச்சுக்கிட்டு யோசித்தால் சவரம் செய்வதுக்கான நேரம் குறையும். முகம் வெளுக்க என்ன செய்யலாம் என்பதை தாடியைப் பிச்சுக்கிட்டு யோசித்துவிட்டு வருகின்றேன்.

உங்களுக்கு வளர்வதே அது ஒன்றுதான். அதையும் பிச்சுக்கிட்டு இருந்தால் என்ன செய்வது.

அமரன்
19-08-2007, 12:52 PM
உங்களுக்கு வளர்வதே அது ஒன்றுதான். அதையும் பிச்சுக்கிட்டு இருந்தால் என்ன செய்வது.

நீங்க ஏன் யோசிப்பதே இல்லை என்று புரியுதுங்க..

aren
19-08-2007, 12:55 PM
நீங்க ஏன் யோசிப்பதே இல்லை என்று புரியுதுங்க..

அப்பவாவது நீங்கள் யோசிக்கிறீர்களா பார்க்கலாம் என்று முயற்சி செய்தேன். ஹீம் ஒன்றுமே ஆகமாட்டேங்குது உங்களிடம். அதன் காரணம் இப்பொழுது மக்களுக்கு புரிந்திருக்கும் என்றே தெரிகிறது.

அமரன்
19-08-2007, 12:59 PM
அப்பவாவது நீங்கள் யோசிக்கிறீர்களா பார்க்கலாம் என்று முயற்சி செய்தேன். ஹீம் ஒன்றுமே ஆகமாட்டேங்குது உங்களிடம். அதன் காரணம் இப்பொழுது மக்களுக்கு புரிந்திருக்கும் என்றே தெரிகிறது.

போங்கண்ணா. மக்கள் யோசிக்கிறாங்களே இல்லைன்னு திரியின் தலைப்பு சொல்லுது. அப்புறம் எங்கே அவங்களுக்கு புரியிறது. ஹும்....

namsec
19-08-2007, 01:04 PM
கண்டிப்பாக நீங்கள்தான் இந்த ஆண்டின் சிறந்த ஆராய்ச்சியாளர்

இளசு
19-08-2007, 01:35 PM
தப்பா முடியறதை முன்னாடியே தப்பாய்ச் செஞ்சா
தப்பு நடக்காம தப்பலாமா?
தப்பு நான்கு மடங்காய் நடந்ததுச்சின்னா
துப்பு கொடுத்தவரை தப்பலாமா?

தாமரை
19-08-2007, 02:16 PM
தப்பா முடியறதை முன்னாடியே தப்பாய்ச் செஞ்சா
தப்பு நடக்காம தப்பலாமா?
தப்பு நான்கு மடங்காய் நடந்ததுச்சின்னா
துப்பு கொடுத்தவரை தப்பலாமா?

அப்பா பதிமூணாவது பதிவிலாவது யாரோ யோசிக்க யோசிக்கறாங்களே!

யோசிக்க ஆரம்பிச்சா, சிக்க மாட்டீங்க.. ஆனா சிக்க ஆரம்பிச்சாத்தானே யோசிக்கறீங்க!!!:ohmy::ohmy::ohmy:

ஓவியன்
19-08-2007, 02:28 PM
யோசிக்க ஆரம்பிச்சா, சிக்க மாட்டீங்க.. ஆனா சிக்க ஆரம்பிச்சாத்தானே யோசிக்கறீங்க!!!:ohmy::ohmy::ohmy:

இல்லையே யோசித்தால் தானே சிக்கும்.........
ஆமாம் யோசித்தால் தானே விடையே சிக்கும்...........! :icon_clap:

தாமரை
19-08-2007, 04:08 PM
இல்லையே யோசித்தால் தானே சிக்கும்.........
ஆமாம் யோசித்தால் தானே விடையே சிக்கும்...........! :icon_clap:

யோசித்தால் தான் விடை சிக்கும்
யோ சிக்கா விட்டால் நீ சிக்கிவிடுவாய்

ஓவியன்
19-08-2007, 06:06 PM
யோசித்தால் தான் விடை சிக்கும்
யோ சிக்கா விட்டால் நீ சிக்கிவிடுவாய்

ஆமாம் அது உண்மைதான்........
யோ சிக்காதலினால் தானே நான் சிக்கினேன் உங்களிடம்............! :icon_blush:

sadagopan
20-08-2007, 07:17 AM
முகத்துக்கு செய்யறதை தலைக்கும் தலைக்கு செய்யறதை முகத்துக்கும் செஞ்சா என்னவாம்? முகம் வெளுப்பாகி, தாடி மெலிசாயி உதிர்ந்து ..ஷேவ் பண்ற நேரமும் மிச்சம்.

தாடிக்கு பதிலா தலை முடி வளருமே!



என்ன ஒரு புத்திசாலிதனம்

(வடிவேல் பாணியில் படிக்க):aktion033:

ஆதவா
20-08-2007, 07:44 AM
முதல் ஆளாக தாமரை அவர்கள் முயற்சி செய்வார். அடுத்தது பென்ஸ். பின்னர் அவர்களின் முயற்சி எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டு பின்னர் நாமும் முயற்சிக்கலாம். நல்ல ஐடியாவாகத்தான் இருக்கிறது.

இதை நான் வரவேற்கிறேன்.

தாமரை
20-08-2007, 07:54 AM
இதை நான் வரவேற்கிறேன்.

வரிசையில் நிறைய பேர் காத்திருக்கிறார்கள் போல இருக்கே!

richard
20-08-2007, 08:09 AM
அனுசக்தி ஒப்பந்தமும் பேடண்ட்ரைட் சர்ச்சையும் செய்தி ஊடகங்களிள் தலையை பிச்சிக்கொண்டு நடக்கையில் இந்த நேரத்தில் ஒரு கலக்கலான முடி வளருமா கொட்டுமா ன்னு ஒரு ஆராய்ச்சி தேவைதான்


ரிச்சி

karikaalan
20-08-2007, 09:18 AM
ரிச்சர்ட்ஜி

இங்கே ஏன் பாலிடிக்ஸ்ங்குறேன்....

தலையப் பிச்சிக்க பல வழிகள்... இதுவும் ஒரு வழி..

ஓவியன்
20-08-2007, 09:24 AM
அனுசக்தி ஒப்பந்தமும் பேடண்ட்ரைட் சர்ச்சையும் செய்தி ஊடகங்களிள் தலையை பிச்சிக்கொண்டு நடக்கையில் இந்த நேரத்தில் ஒரு கலக்கலான முடி வளருமா கொட்டுமா ன்னு ஒரு ஆராய்ச்சி தேவைதான்

ரிச்சி உங்களை மன்றத்துக்கு வரவேற்கின்றேன்........
அத்துடன் உங்களை மன்றத்திலே அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்........

இந்த திரி தொடக்கப்பட்டிருப்பது மன்றத்தின் நகைச்சுவைப் பகுதியில் அரசியல் பேச அரசியல் பகுதி உள்ளது, அங்கே அரசியல் இங்கே நகைச்சுவை அவ்வளவே........

விடயத்தை விளக்கியமைக்கு மிக்க நன்றிகள் கரிகாலன் அண்ணா!.