PDA

View Full Version : ஹரி பொட்டர் 7 விமர்சனம்



рооропрпВ
19-08-2007, 04:31 AM
http://i76.photobucket.com/albums/j37/mayooresan/Harry%20Potter/normal_harry_potter_7.jpg
ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரிЕЕ. கடைசியாக ஹரி பொட்டர் புத்தகத் தொடர் முடிவிற்கு வந்துவிட்டது. எதிர்பார்த்தது போலவே புத்தகம் செம ஹிட்டு. உலகம் முழுவது ஏங்கி ஏங்கித் தவமிருந்த ஹரி இரசிகர்களுக்கு (என்னையும் சேர்த்து) நல்ல ஒரு விருந்தாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது. கடந்த வாரம் இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தேன். வாசித்து முடித்தவுடன் ரொம்பவே ஃபீலிங்கா இருந்திச்சு. ஹரியையும் அவரோட நண்பர்களையும் ஹொக்வாட்ஸ் பாடசாலையும், தும்புத்தடியில் பறந்து விளையாடும் குயிடிச் கேமையும் இனிக் காண முடியாது என்று நினைக்கின்றபோது நெஞ்செல்லாம் அடைத்து விட்டது.



சரி சரி.. என்னுடைய சுய புலம்பலை விட்டுவிட்டு கதையோட்டத்தை கொஞ்சம் அலசிப் பார்ப்போம். வழமையாக பிரைவெட் ரைவில் ஆரம்பிக்கும் கதை இந்த முறை மல்போய் குடும்பத்தில் வீட்டில் ஆரம்பிக்கின்றது. அங்கே குரங்குப் பயல் வொல்டமோட் ஒரு இரகசியக் கூட்டத்தை நடத்துகின்றதுடன், வழமைபோல அவாடா கெடாவ்றா (கொலை செய்யும் மந்திரம் Ц மந்திர உலகில் மன்னிக்கப்பட முடியாத மூன்று மந்திரங்களுள் ஒன்று) மந்திரத்தை வேறு பாவித்துத் தொலைக்கின்றார்.



முன்னய பாகத்தில் முடிவு செய்தபடியே ஹரி மீண்டும் பாடசாலைக்குச் செல்வதில்லை என்று முடிவெடுக்கின்றார். அது போல அந்த ஹேர்மானிப் பொண்ணும் ரொண்ணும் தாங்களும் ஹரி உடன் சேர்ந்து எஞ்சியிருக்கும் ஹொக்கிரஸ்சை (வால்டமோட்டின் உயிர் நிலைகள்) அழிக்க முடிவு செய்கின்றனர். இதனால் இவர்களும் ஹரியின் பாடசாலைக்கு செல்வதில்லை என்று முடிவு செய்கின்றனர்.



இதன் பின்னர் ஓடர் ஒஃப் பீனிக்ஸ் ஹரியை அவரது பிரவைட் ரைவ் வீட்டில் இருந்து பரோவிற்கு (ரொண்ணின் வீடு) அழைத்து வருகின்றர். வரும் வழியில் வானத்தில் பறந்தவாறே சண்டைபோட வேண்டிய தேவை ஏற்படுகின்றது. ஹரி மயிரிழையில் தப்பினாலும் முக்கியமான ஒரு ஓடர் அங்கத்தவர் இறந்துவிடுகின்றார். யார் எவர் இறந்தார் என்றெல்லாம் சொல்ல முடியாது தேவையானால் புத்தகத்தை வாசித்து ஹரி நட்புறவு மன்றத்தில் இணைந்து கொள்ளுங்கள்.



பாரோவில் மீண்டும் ஹரி, ரொண், ஹர்மானி, ஹரியின் டயல் ஜின்னி போன்றோர் சந்தித்துக் கொள்கின்றனர். கடந்த பாகத்திலேயே ஹரி ஜின்னியை விட்டுப் பிரிந்துவிட்டாலும் இன்னமும் காதலில் வயப்பட்டு தவிக்கிறார் பாவம், அந்தப் பெட்டை கூடத்தான்.



கொஞ்ச நாட்களில் ஹரியின் பிறந்தநாள் வருகின்றது, அதற்கு டொங்ஸ், அவர் கணவன் லூபின் (ஹரியின் முன்னய ஆசிரியர்), ஹக்ரிட் போன்றோர் வருகின்றனர். பிறந்த நாள் நடக்கும் போது மந்திர தந்திர அமைச்சர் வீஸ்லி வீட்டிற்கு வந்து ஹரி, ஹர்மாணி, ரொண் இந்த மூன்று பேருக்கும் டம்பிள்டோர் விட்டுச் சென்ற பொருட்கள் என்று சில பொருட்களைக் கொடுத்துவிடுகின்றார். ஆயினும் இந்தச் சந்திப்பு அவ்வளவு சந்தோஷமாக முடியவில்லை.



மறுநாள் பில் (ரொன்னின் சகோதரன் ஒருவர்), ஃபேளோரா இருவருக்கும் திருமணம் நடக்கின்றது. திருமணம் நடக்கும போது கிங்ஸ்லி போட்ட பட்ரோனம் மந்திரம் வந்து ஒரு செய்தியை கலியாண மண்டபத்தில் உதிர்க்கின்றது. அதாவது டெத் ஈட்டர்ஸ் (பிணம் தின்னிகள் என்று சொல்லலாம், அதாவது வொல்டமோட்டின் அடியாட்கள்) மந்திர தந்திர அமைச்சைக் கைப்பற்றிவிட்டதாகவும் அங்கிருந்த மந்திர தந்திர அமைச்சரை டெத் ஈட்டர்ஸ் கொலை செய்துவிட்டதாகவும் செய்தி வருகின்றது. உடனே அங்கிருந்து மற்றவர்கள் தப்பி ஓட ஆரம்பிக்கின்றனர்.



இந்தக் கட்டத்தில் இருந்து ஹரி, ஹர்மாணி, ரொண் மூவரும் ஓடுகின்றார்கள், ஓடுகின்றார்கள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடுகின்றார்கள். கடைசியில் பல பல விடயங்களை கண்டுபிடித்து வொல்டமோட்டின் உயிர்நிலைகளை ஒன்றொன்றாகக் கைப்பற்றுகின்றார்கள். மொத்தம் ஏழு உயர் நிலைகள் இருந்தாலும் அதில் எத்தனை கைப்பற்றப்பட்டது, எத்தனை அழிக்கப்பட்டது என்பதெல்லாம் நான் சொல்ல முடியாது.



மந்திர தந்திர அமைச்சைக் கைப்பற்றிய வொல்டமோட் அணியினர், மந்திர தந்திர அமைச்சில் மட்டுமல்ல, ஹாக்வாட்ஸ் பாடசாலையிலும் கடும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றனர். அதன்படி ஸ்னேப் பாடசாலை அதிபர் ஆகின்றார், பழையபடி அம்ரிச் மீண்டும பாடசாலைக்குள் நுழைகின்றார். இதைவிட மட்பிளட் (தூய்மையற்ற இரத்தம் என்று இகழப்படும் மந்தர குடும்பத்தில் பிறக்காமல் மந்தரம் கற்றோர்) மக்கள் மீது கடும் சட்டங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. பலர் அஸ்கபான் சிறைச்சாலைக்கு அனுப்பப்படுகின்றனர்.



இதேவேளை டம்பிள்டேர் ஹரி, ரொண், ஹர்மாணிக்கு விட்டுச்சென்ற பொருட்களில் இருந்து அவர்கள் டெத்லி ஹலோவ்ஃஸ் எனம் விடயதானம் பற்றி அறிந்துகொள்கின்றனர். அதாவது ஒரு யாரையும் வெற்றி கொள்ளும் ஆற்றல் மிக்க மந்திக்கோல், ஒரு மறையவைக்கும் துணி (ஹரியிடம் இது ஏற்கனவே உள்ளது), இறந்தவர்களை மீட்டு எடுக்கும் ஒரு கல்லு. இந்த மூண்று பொருட்களும் சேர்ந்து ஒருவரிடம் இருந்தால் அந்த நபரை மரணம் வெல்ல முடியாது. இவற்றில் எத்தனையை ஹரியும் அவர் நண்பர்களும் கண்டு பிடித்தார்கள் என்பதையும் என்னால் சொல்ல முடியாது!!!!



டொபி, ஸ்னேப் போன்றவர்கள் இங்கே கதையின் பெரும் பாகத்தில் வராவிட்டாலும் மனதில் ஒட்டிவிடும் பாத்திரங்கள். இங்கே ஸ்னேப்பின் காதல் கதைபற்றியும் காட்டப்படுகின்றது. அதாவது ஸ்னேப் லில்லியுடன் (ஹரியின் தாயார்) காதல் வயப்பட்டிருந்த விடயம் சொல்லப்படுகின்றது. ஆனால் சினோப்பின் காதல் ஒருதலை இராகமாக முடிந்ததுதான் சோகம், இடையில் வரும் ஜேம்ஸ் (ஹரியின் தந்தை) லில்லியை காதலித்துவிடுகின்றார்.



ஆறாம் பாகம் போலவே இந்தப் பாகத்திலும் கடைசிக் காட்சிகள் ஹாக்வார்ட்ஸ் பாடசாலையில் நடக்கின்றது. சண்டையில் ஹரியனால் தாபிக்கப்பட்ட டம்பிள்டோர் ஆமி, ஓடர் ஒஃப் பீனிக்ஸ், ஹாக்வார்ட்ஸ் பாடசாலை ஆசிரியர்கள், பல நலன் விரும்பிகள் என்போர் சேர்ந்து டெத் ஈட்டர்சை எதிர்க்கின்றனர். இராட்சத மனிதர்களும் டெத் ஈட்டர்சுடன் இணைந்து பாடசாலையைகத் தாக்குகின்றனர்.



சண்டையோ சண்டை அப்படி ஒரு சண்டை. பச்சை நிற ஒளியும், சிவப்பு நிற ஒளியும் எங்கும் பறக்கின்றது. இந்த இறுதி யுத்தம் மிக முக்கியமானது. கதையின் மிக இறுக்கமான கட்டத்தில சில பல முக்கியமான பாத்திரங்கள் இங்கே இறந்துவிடுகின்றனர். மனதைக் கனக்கவைக்கும் நிகழ்வுகள் பல நடந்தேறுகின்றன. மொத்தம் 50 பேர் இந்த யுத்ததில் தன்னுயிரை தியாகம் செய்கின்றனர்.



திருமதி.வீஸ்லி அவர்கள் பெலாட்ரிக்சை (ஹரியின் காட் ஃபாதரைக் கொலை செய்த பெண்) மந்திரத்தால் எதிர்கொள்கின்றார். இதன் போது ஒரு வார்த்தையால் பெலாட்ரிக்சைத் திட்டுவார் பாருங்கள், இவரா அது என்று நினைக்க வைக்கும்.



இவ்வாறு யுத்தத்தின் முடிவு பிராபசியில் எதிர்வு கூறப்பட்டவாறு நடந்தேறுகின்றது. அதாவது ஹரி அல்லது வொல்டமோட் சாக வேண்டும். யார் இறந்தார்? அல்லது இருவரும் இறந்தனரா என்பதெல்லாம் நீங்கள் வாசித்து அறிந்துகொள்ள வேண்டிய விடயங்கள்.



ரெளலிங் முன்பு கூறியவாறு டம்பிள்டோர் சாவில் இருந்து மீண்டுவரவில்லை, அது போல ஸ்னேப்பு நல்லவரா கெட்டவரா என்ற ஆராய்ச்சிக்கும் கடைசியில் விடை கிடைக்கும், வீஸ்லி குடும்பத்தில் யார் இறந்தார் என்பதை வாசித்து அறியுங்கள்.



எதிர்வு கூறப்பட்டவாறு கதையின் கடைசி வசனம் ஸ்கார் என்ற சொல்லுடன் உள்ளது. கதையின் கடைசி அத்தியாயம் 19 ஆண்டுகளின் பின்னர் நடக்கும் சில நிகழ்வுகளைக் காட்டுகின்றது. வாசிக்க வாசிக்க மனம் நிறைந்துவிட்டது. ஆனாலும் ஹர்மானியை இவ்வளவு வயதாக்கிக் காட்டியிருக்க வேண்டாம். என் இதயம் சுக்கு நூறாக உடைந்துவிட்டது போங்கள்!!!. எங்கிருந்தாலும் வாழ்கЕЕ.

ஹரி வெறியர்களுக்கு மீண்டும் நல்ல ஒரு விருந்து. கடைசி விருந்து என்று நினைக்கும் போதுதான் மனம் கனத்துவிடுகின்றது.



IТm gonna miss you Harry!!!!!

роЖродро╡ро╛
19-08-2007, 05:40 AM
உமக்கு ரெளலிங்க் வெச்சாரய்யா வேட்டு.. இனிமே ஹாரி ஹாரின்னு அலையமாட்டேல்ல.... சரி சரி//அந்த ஏழு புஸ்தகத்தையும் பார்சல் அனுப்பு///// நானும் படிக்கலாம்னு இருக்கேன்....

நல்ல விமர்சனம்.... கடைசியில யார் செத்தாங்கனு பிரதிப் அண்ணாக்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிறேன்..

рооропрпВ
19-08-2007, 10:36 AM
7 இ-புத்தகம் அனுப்பட்டா??? நான் படிச்சதே இரவலில.... 7ம் புத்தகம் இ-புத்தகத்தில இதில உனக்குப் பாசலில வேற அனுப்பிறதா??? பரவாயில்லை..... ஆட்டோல 7 புத்தகம் அனுப்புறன்

sowmiyaksr
20-11-2018, 04:01 AM
ро╣ро╛ро░ро┐ рокро╛роЯрпНроЯро░рпН 7 рокрпБродрпНродроХроЩрпНроХро│рпБроорпН роТройрпНро▒ро╛роХ роЗро░рпБроХрпНроХро┐ройрпНро▒родро╛? родропро╡рпБ роЪрпЖропрпНродрпБ рокроХро┐ро░ро╡рпБроорпН .

роиройрпНро▒ро┐,
роЪрпМрооро┐ропро╛