PDA

View Full Version : கேள்விகள்



rocky
18-08-2007, 03:18 PM
எதற்காக என்னை வெறுத்தாள் அவள்?

அரைகுரை ஆங்கிலம் பேசாததாலா?
ஆடம்பரமாய் ஆடைகள் அணியாததாலா?
இரவல் வாங்கியேனும் இருசக்கரவானத்தில் வராததாலா?
காலம் தெரியாமல் கைப்பேசியில் பேசாததாலா?
உன்னைத்தவிர மற்ற பெண்களுடனும் தோழமையுடனிருந்ததாலா?
ஒப்பனைகளற்ற உண்மை நிறம் கண்டதாலா?
நீ மட்டும்தான் உலகிலேயே அழகி என்று பொய் சொல்லாததாலா?

எதற்காக என்னை வெறுத்தாள் அவள்?
பொய்கள் கவிதைக்கு மட்டும்தானே அழகு,
காதலுக்குமா?.

பின் குறிப்பு : இல்லை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்றதாலா?
(நகைச்சுவைக்காக இப்படியும் வைத்துக்கொள்ளலாம்).

அன்புரசிகன்
18-08-2007, 03:22 PM
றொக்கி... இப்படிச்செய்து தான் உங்கள் காதலை வாழவைக்கவேண்டுமா...? :D :D :D

அதிலும் அவள் உங்களை வெறுத்ததே நன்று. (உங்களுக்கு)

rocky
18-08-2007, 03:23 PM
றொக்கி... இப்படிச்செய்து தான் உங்கள் காதலை வாழவைக்கவேண்டுமா...? :D :D :D

அதிலும் அவள் உங்களை வெறுத்ததே நன்று. (உங்களுக்கு)

நிச்சயமாக அன்பு அவர்களே, நாணும் அதையே விரும்புகிறேன். பின்னூட்டத்திற்க்கு நன்றிகள்.

ஆதவா
18-08-2007, 03:46 PM
உண்மை சில சமயங்களில் மறைந்துபோகும்.. ஆனால் தோற்காது.. இளமையும் இன்பமும் எத்தனை நாளைக்கு வரும்? மறைக்கப்படவேண்டிய உண்மைகளை மறைத்தால் தான் நாளை உண்மை காக்கப்படும்... நீங்கள் சொல்லாவிடில் இன்னொருவன் சொல்லுவான்... அப்போது என்ன செய்வீர்கள் :D.


எதற்காக என்னை வெறுத்தாள் அவள்?

அரைகுரை ஆங்கிலம் பேசாததாலா?

அரைகுறை ஆங்கிலம் வேண்டாம்,, முழுத் தமிழில் பேசலாமே??


ஆடம்பரமாய் ஆடைகள் அணியாததாலா?

ஆடம்பர உடைகள் வேண்டாம்.. அழுக்கு உடைகள் வேண்டாமே?


இரவல் வாங்கியேனும் இருசக்கரவாகணத்தில் வராததாலா?

இரவல் வாகனம் வேண்டாம் ; அவளை அழைத்துச் செல்ல பஸ்ஸிலாவது செல்லலாமே?


காலம் தெரியாமல் கைப்பேசியில் பேசாததாலா?

கைப்பேசியில் பேசாமல் காதல் வளருமா?


உன்னைத்தவிர மற்ற பெண்களுடனும் தோழமையுடனிருந்ததாலா?

பெண்கள் இங்கே தான் வித்தியாசப்படுவாங்க.. (உன்னாலே உன்னாலே படம் பார்க்கலையா?)


ஒப்பனைகளற்ற உண்மை நிறம் கண்டதாலா?

இதென்ன..? நீ கண்டதா? அவள் கண்டதா?


நீ மட்டும்தான் உலகிலேயே அழகி என்று பொய் சொல்லாததாலா?

உலக அழகி கூட வேண்டாம்.... நீ அழகி என்றாவது சொல்லியிருக்கணுமே??



எதற்காக என்னை வெறுத்தாள் அவள்?
பொய்கள் கவிதைக்கு மட்டும்தானே அழகு,
காதலுக்குமா?.

பொய்யழகுக் கவிதைகளைவிட மெய்யழகுக்கவிதைகளுக்குத்தான் சூடு அதிகம் ராக்கி... அவை சுட்டால் தாங்காது..

தாமரை
18-08-2007, 03:52 PM
எதற்காக என்னை வெறுத்தாள் அவள்?

அரைகுரை ஆங்கிலம் பேசாததாலா?
ஆடம்பரமாய் ஆடைகள் அணியாததாலா?
இரவல் வாங்கியேனும் இருசக்கரவானத்தில் வராததாலா?
காலம் தெரியாமல் கைப்பேசியில் பேசாததாலா?
உன்னைத்தவிர மற்ற பெண்களுடனும் தோழமையுடனிருந்ததாலா?ஒப்பனைகளற்ற உண்மை நிறம் கண்டதாலா?
நீ மட்டும்தான் உலகிலேயே அழகி என்று பொய் சொல்லாததாலா?

எதற்காக என்னை வெறுத்தாள் அவள்?
பொய்கள் கவிதைக்கு மட்டும்தானே அழகு,
காதலுக்குமா?.

பின் குறிப்பு : இல்லை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்றதாலா?
(நகைச்சுவைக்காக இப்படியும் வைத்துக்கொள்ளலாம்).


அதாவது விரும்பிய பின் வந்த வெறுப்பு இது..

பாதி வரை எங்களிடம் கேட்டு விட்டு சட்டென அவளிடம் கேட்டு விட்டு பிறகு எங்களிடம் கேட்கிறீர்கள்.. என்ன பிரச்சனை என்று எமக்குப் புரிந்து விட்டது! .. அதேதான்... :party009: :party009:

ஆதவா
18-08-2007, 03:56 PM
அதாவது விரும்பிய பின் வந்த வெறுப்பு இது..

பாதி வரை எங்களிடம் கேட்டு விட்டு சட்டென அவளிடம் கேட்டு விட்டு பிறகு எங்களிடம் கேட்கிறீர்கள்.. என்ன பிரச்சனை என்று எமக்குப் புரிந்து விட்டது! .. அதேதான்... :party009: :party009:

ஒன்று கவனித்தீர்களா அண்ணா,,,

உன்னைத்தவிர மற்ற பெண்களுடனும் தோழமையுடனிருந்ததாலா

அப்படியென்றால் அவளோடும் அவன் தோழமை மட்டுமே கொண்டிருந்தானா? எங்கேயோ இடிக்குதே????

மனோஜ்
18-08-2007, 04:00 PM
பெண்மனதை அறியமுயற்சியா முடியாத காரியம் நண்பா

lolluvathiyar
19-08-2007, 07:11 AM
ராக்கி நீங்கள் கவிதையும் எழுதுவீர்களா.
இது கவிதை அல்லவே உன்மைகள்
இந்த மாதிரி ஆட்களை ஏமாற்ற இப்படி செய்தால் ஏமாறுவது நம்மல்லவா

aren
19-08-2007, 12:40 PM
எந்த ஒரு பெண்ணும் அவளுடையவன் வேறு பெண்களுடன் பேசுவதை விரும்பமாட்டாள். அங்கேதான் உங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

கவிதை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.

இளசு
19-08-2007, 01:52 PM
இளமையில் வந்துபோகும் வைரஸ் இது ராக்கி..
அடுத்த வைரஸ் வரை இது தாங்கும்...

கவிதைக்குப் பாராட்டுகள்!

ஷீ-நிசி
19-08-2007, 03:46 PM
எதற்காக என்னை வெறுத்தாள் அவள்?
பொய்கள் கவிதைக்கு மட்டும்தானே அழகு,
காதலுக்குமா?.


ராக்கி! கவிதையில் இந்த முடிவு வரிகள் மிக அழகாக இருந்தன.. இன்னும் முன்னேற வாழ்த்துக்கள்!

அமரன்
19-08-2007, 06:07 PM
நியாயமான கேள்விகள்.
கவிதை முடித்த விதம் நன்று.
வாழ்த்துக்கள்.

ஓவியன்
19-08-2007, 06:17 PM
கவிதை வாசித்து முடித்ததும் கண்களின் முன்னே தோன்றியது உன்னாலே உன்னாலே திரைப் படம், ஆதவனின் விமர்சனத்திலிருந்து அதுவும் தப்பவில்லை..........

ரொக்கி வித்தியாசமாக இருந்தது, உங்கள் கவிக்கு சிறப்பு சேர்த்தது உங்கள் நண்பனின் அழகான கவிப்பார்வை............

பாராட்டுக்கள் இருவருக்குமே.......