PDA

View Full Version : அவசர உதவி வேண்டும் !



தங்கவேல்
18-08-2007, 06:28 AM
துபாயில் ஒரு இறக்குமதி ஏற்றுமதி கம்பெனி பதிவு செய்ய வேண்டும், கடை வாடகை, தொலைபேசி பெறும் விதம், வங்கி கணக்கு மற்றும் இதர பதிவு செலவுகள் எவ்வளவு பிடிக்கும் ?

துபாயில் கம்பெனி பதிவு செய்ய என்னனென்ன விதிமுறைகள் என்றும் தெரியவேண்டும்.

அவசர உதவி...

பதில்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்

அன்புரசிகன்
18-08-2007, 07:07 AM
அமீரக நண்பர்கள்தான் உதவவேண்டும்...

மத்திய கிழக்கில் இவ்வாறான நடவெடிக்கைகளுக்கு முதலில் உங்களுக்கு ஒரு sponsor இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

பாரதி
18-08-2007, 01:55 PM
அன்பு நண்பரே,

எனக்கு அனுபவம் இல்லை என்பதால் உங்கள் கேள்விக்கு முறையாக பதில் அளிக்க இயலவில்லை. சரியான விசா இருந்தால் தொலைபேசி, வங்கிக்கணக்கு எல்லாம் எளிதாக வாங்கி விடலாம். கீழ்க்கண்ட சுட்டிகள் உங்களுக்கு உதவும் என்று எண்ணுகிறேன்.

http://www.uae.gov.ae/Government/business.htm

http://extranet.dubaided.gov.ae/Extranet/gn/e-Services/TradeLicense/

http://www.lowtax.net/lowtax/html/dubai/jdbobs.html

இளசு
18-08-2007, 10:06 PM
வணிக வங்கிக்கணக்கை அயல்நாட்டில் தொடங்குவதற்கு
மிகக் கடுமையான விதிகள் உள்ளன..

துபாய் பற்றி எனக்குத் தெரியாது..

ஆனாலும் வங்கிக்கணக்கை அந்நாட்டில் வசிக்கும் உரிமை, அந்நாட்டு முகவரி உள்ளவர், வங்கி மேலாளரை நேரில் சந்தித்தால் மட்டுமே சில நாடுகளில் தொடங்க முடியும்..

அதற்குமுன் தொழில் நிறுவனம் அந்நாட்டில் சட்டப்படி பதிவு செய்திருக்கப்படவேண்டும்...

ஒரு இயக்குநர், ஒரு செயலர் − குறைந்தபட்சம் வேண்டும்.
பங்குகள் யார் பெயருக்கு என்ற சான்றிதழ் வேண்டும்..

நிறுவனக் காசோலையில் கையொப்பமிடும் உரிமை உள்ள அனைவரையும்
மேலாளர் நேரில் பார்க்க விரும்பலாம்..

(துபாய்க்கு இவை பொருந்துமா என அங்குள்ள நண்பர்கள் சொல்லுங்கள்)

aren
19-08-2007, 12:59 AM
துபாயில் தொழில் தொடங்க முதலில் உங்களுக்கு அங்கேயுள்ள அமீரக குடியுரிமை பெற்ற ஒருவர் உங்களுடன் சேர்ந்து தொழில் தொடங்கவேண்டும். தனியாக தொழில் தொடங்க முடியாது. ஆனால் நீங்கள் வெறும் ஏற்றுமதி இறக்குமதி மட்டுமே செய்ய வேண்டுமாயின் இன்னொரு வழியுண்டு.

நீங்கள் Jabel Ali Free Trade Authorityயுடன் உறவுகொண்டு அவர்கள் மூலம் தொழில் தொடங்கலாம். நீங்கள் உங்கள் தேவைக்கேற்ப அவர்களிடமிருந்து இடத்தை வாடகைக்கு எடுக்கவேண்டும். மேலும் அவர்களே உங்களுக்கு லோகல் ஸ்பான்ஸாராக செயல்படுவார்கள். உங்கள் விசா மற்றும் வங்கி கணக்கு ஆகியவற்றை எடுக்க அவர்கள் உதவிடுவார்கள். மிகவும் எளிதான முறை இதுதான். அவர்களுடைய இணைய முகவரியை கீழே கொடுத்துள்ளேன்:

http://www.jafza.co.ae/jafza/index.aspx

aren
19-08-2007, 01:02 AM
கீழேயுள்ள விஷயத்தைப் படித்துப் பாருங்கள். ஜபால் அலியில் தொழில் தொடங்கினால் உங்களுக்கு கிடைக்கும் லாபங்கள்:

Incentives for Your Business

Jafza offers many incentives to make doing business with us easy and profitable.

100% foreign ownership: The ability to operate your business as a wholly owned entity, without any need for local partnership

Corporate taxes are not applicable for a period of 50 years, a concession that is renewable. Companies may transfer any capital as required

No import or re-export duties

No personal income taxes

No currency restrictions

No restriction on hiring foreign employees

Owned premises on leased land can be mortgaged: A company established in the Free Zone that has built its own facility may mortgage its premises to any bank or financing company for any of their debts or obligations

Access to abundant energy makes it cost-effective for clients to conduct production operations

http://www.jafza.co.ae/jafza/content/section2.asp

தங்கவேல்
19-08-2007, 01:44 AM
மொத்தமாக எவ்வளவு செலவு பிடிக்கும் என்று தெரியுமா ? சொல்லுங்களேன்.. ப்ளீஸ்..

aren
19-08-2007, 07:03 AM
வெறும் அலுவலகம் மட்டும் வேண்டுமாயின், அதற்கான வாடகை Dhs. 1900.00 per Square Meter per Annum. குறைந்தது 30 Square Meterஆவது எடுக்க வேண்டும். அப்படியானால் 57000 திர்ஹம் வாடகையாக மட்டும் செலவாகும். அது தவிற அவர்களுடைய ஒரு தட்வை சார்ஜாக திர்ஹம் 10,500.00 முதலில் தரவேண்டும் அதில் 5500/- திர்ஹம் லைசென்ஸிற்காக சென்றுவிடும், அவர்களுடைய சார்ஜ் 5000/- திர்ஹம். அதன்பிறகு வருடா வருடம் 5500/- திர்ஹம் லைசென்ஸிற்காக கொடுக்கவேண்டு மேலும் வாடகை 57000/- திர்ஹம் கொடுக்கவேண்டும்.

இதுதான் செலவும். அதி தவிற வேலை செய்பவர்களுக்கு செலவு செய்யவேண்டும். அலுவலகத்தில் வேலை செய்யும் ஆட்களுக்கு குறைந்தது 2000/- திர்ஹம் மாதச்சம்பளம் கொடுக்கவேண்டும். அது தவிற விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு 3500/- முதல் 4500/- வரை மாதச்சம்பளம் கொடுக்கவேண்டும். பின்னர் இதற செலவுகள் ஒவ்வொரு கம்பெனியின் அளவுகோலைப்பொருத்தே அமையும். நீங்கள் மூன்று விசா வரை 30 சதுரமீட்டர் அபீஸ் வைத்திருந்தால் பெறமுடியும்.

எனக்குத் தெரிந்து இதுதான். மேலும் விபரங்களுக்கு நீங்களே தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
19-08-2007, 07:04 AM
மறந்துவிட்டேன். ஒரு திர்ஹம் என்பது நம் இந்திய ரூபாய் 12.50 ஆகிறது.

தங்கவேல்
19-08-2007, 09:36 AM
நன்றி ஆரென். கண்ணைக்கட்டி காட்டுல விட்ட மாதிரி இருந்தது முன்பு. இப்போது விலகிவிட்டது உங்களின் உதவியால்..

aren
19-08-2007, 12:27 PM
நீங்கள் நான் கொடுத்த விஷயத்தை மட்டும் நம்பாமல் நீங்களே நேரடியாக அவர்களை தொடர்புகொண்டு பேசுங்கள். இன்னும் பல விஷயங்கள் தெரியவரும்.