PDA

View Full Version : ஆசைகள்

இலக்கியன்
17-08-2007, 03:16 PM
நான் பிறந்த மண்ணை
தொட்டுப்பார்க்க ஆசை

வேப்பமரத்து நிழலில்
படுத்து உறங்க ஆசை

பலாமரத்து கனியை
பறித்து தின்னஆசை

மாமரத்துக் காயை
குத்திதின்ன ஆசை

புளியமரத்து பழத்தை
சூப்பித்தின்னஆசை

பனை மரத்துகள்ளை களவா
குடித்துப் பார்க்க ஆசை

ஒடியல் மா புட்டு
சாப்பிடத்தான் ஆசை

தேக்க மரத்துக்கிளியை
பிடித்து வளர்க்க ஆசை

தமிழ் வாத்தியாரிடம்
குட்டு வாங்கத்தான் ஆசை

கோவில் மணியை ஒருக்கா
அடித்துப்பார்க்க ஆசை

கிணற்று தண்ணிரை
அள்ளி குளிக்க ஆசை

கொடிகாமத்து தேங்காய்
கொறித்து தின்ன ஆசை

கீரிமலைக் கேணியில்
நீச்சல் அடிக்கத்தான் ஆசை

காங்கேசந்துறை சுண்ணாம் போடு
வெத்திலை போட ஆசை

ஜாதியம் பேசும் நாக்கை
வெட்டிவிட ஆசை

சீனதம் வாங்கும் கோழை
தலையை தாக்கிவிட ஆசை

பெண்கள் கையை இழுப்பவன்
கையை முறித்து விட ஆசை

சிங்களப்படையை மண்ணை விட்டு
துரத்தி விட ஆசை

பொங்கிஎழும் மக்கள் படையுடன்
சேர்ந்துவிட ஆசை

மாணவரின் பேனாவை பறிக்கும்
கயவன் நெஞ்சில் குத்திவிட ஆசை

பேரினவாதம் பேசும் பிக்குவின்
காவியை களற்றி விட ஆசை

காட்டிக் கொடுக்கும் கயவனை
மண்டையில் போட ஆசை

சொந்தமண்ணை மீட்க நானும்
அங்கு போக ஆசை

மாவீரர் தியாகத்தை
என் கவியில் பாட ஆசை

கரும்புலிகள் வீரத்தை புதிய
புறநானுற்றில் எழுதிவிட ஆசை

அகதி என்ட சொல்லை மாற்றி
தமிழ் புலி ஆகி விடஆசை

மலரும் தமிழ்ழிழத்தை
பார்த்துவிட ஆசை

இலக்கியன்
17-08-2007, 03:25 PM
ஆசைகள் கனவுகள் சுமப்பது மனித இயல்பு இலக்கியனின் மறுபக்கத்தில் உள்ள ஆசைகள் என்ன எனவும் சற்று ஆவேசமாக கூறியிருக்கின்றேன். இது கடந்த வருடம் எழுதிய கவிதை

இளசு
17-08-2007, 09:10 PM
சொந்த ஆசைகளும், சொந்த மண்ணுக்கான ஆசைகளும்
குந்தகம் இன்று உங்களுக்கு ஈடேற எனது ஆசை!

வாழ்த்துகள் இலக்கியன்!

aren
18-08-2007, 12:48 AM
சின்ன சின்ன ஆசைகள்
சிறகடித்துப் பறக்கின்றன
அனைத்து ஆசைகளும்
ஈடேறிட வாழ்த்துக்கள்.

கவிதை அருமையாக வந்திருக்கிறது. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
18-08-2007, 05:07 AM
சின்னச்சின்ன ஆசைகளாகத் துவங்கிய கவிதை ஆவேசமாய் மாறி,ஆத்திரத்தில் சாடி,ஆதங்கத்தில் முடிவடைந்துள்ளது.
உங்கள் ஆசைகளெல்லாம் நிறைவேறிட பிரார்த்திப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாத நிலை. வாழ்த்துக்கள் இலக்கியன்

தளபதி
18-08-2007, 10:18 AM
ஏக்கத்தை ஆசைகளாய் !! உங்கள் ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள் மற்றும் பிராத்தனைகள்.

அமரன்
18-08-2007, 12:59 PM
சின்ன சின்ன ஆசைகள அல்ல இவை
சன்னங்களால் தொலைத்த ஆசைகள்.
பல இலக்கியன்கள் நம்பிக்கையுடன்
இவை தொலைதூரத்தில் இல்லைஎன ....

பாராட்டுக்கள் இலக்கியன்.

இலக்கியன்
18-08-2007, 06:46 PM
சொந்த ஆசைகளும், சொந்த மண்ணுக்கான ஆசைகளும்
குந்தகம் இன்று உங்களுக்கு ஈடேற எனது ஆசை!

வாழ்த்துகள் இலக்கியன்!

ஆசைகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்புடன் நன்றி

இலக்கியன்
18-08-2007, 06:47 PM
சின்ன சின்ன ஆசைகள்
சிறகடித்துப் பறக்கின்றன
அனைத்து ஆசைகளும்
ஈடேறிட வாழ்த்துக்கள்.

கவிதை அருமையாக வந்திருக்கிறது. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

உங்கள் கருத்துக்கு நன்றி ஆரென்

இலக்கியன்
18-08-2007, 06:48 PM
சின்னச்சின்ன ஆசைகளாகத் துவங்கிய கவிதை ஆவேசமாய் மாறி,ஆத்திரத்தில் சாடி,ஆதங்கத்தில் முடிவடைந்துள்ளது.
உங்கள் ஆசைகளெல்லாம் நிறைவேறிட பிரார்த்திப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாத நிலை. வாழ்த்துக்கள் இலக்கியன்

சிவாஜி குமரன் அமரன் அணவருக்கு நன்றி

ஆதவா
18-08-2007, 09:04 PM
ஆசைகள் அழகானவை.... உங்கள் ஆசைகள் யாவும் நடக்ககூடியவைகள்.... மெய்யழகுக் கவிதை... வாழ்த்துக்கள் இலக்கியன்.

lolluvathiyar
19-08-2007, 07:05 AM
ஆசை கவிதை உங்கள் ஆதங்கத்தை காட்டுகிறது.
இரைவன் ஆசியால் உங்கள் ஆசை அடுத்த தலைமுரையாவது அடையட்டும் என்று வேண்டுகிறேன்

இலக்கியன்
19-08-2007, 04:44 PM
ஆசை கவிதை உங்கள் ஆதங்கத்தை காட்டுகிறது.
இரைவன் ஆசியால் உங்கள் ஆசை அடுத்த தலைமுரையாவது அடையட்டும் என்று வேண்டுகிறேன்

ஆதவா, லொள்ளுவாத்தியார் இருவர் கருத்துக்கும் நன்றி

இனியவள்
19-08-2007, 05:56 PM
உங்கள் ஆசை மட்டுமல்ல
இலக்கியன் யாழில் பிறந்து
இன்று பிறந்த மண்ணுக்கே
அன்னியனாய் போய்விட்ட
அனைவரினதும் ஆசையும்
இதுவே..

உங்கள் ஆசைகள் அனைத்தும்
அழகாய் நிறைவேறிட வாழ்த்துக்கள்

இலக்கியன்
21-08-2007, 07:51 AM
உங்கள் ஆசை மட்டுமல்ல
இலக்கியன் யாழில் பிறந்து
இன்று பிறந்த மண்ணுக்கே
அன்னியனாய் போய்விட்ட
அனைவரினதும் ஆசையும்
இதுவே..

உங்கள் ஆசைகள் அனைத்தும்
அழகாய் நிறைவேறிட வாழ்த்துக்கள்

ஆம் சகோதரி
உங்கள் கருத்துக்கு நன்றி

ஓவியன்
24-08-2007, 05:03 AM
புலம் பெயர்ந்த ஈழத்திருமகன் ஒவ்வொருவரது உள்ளத்திலும் ஒளிந்திருந்து எட்டிப் பார்க்கத் துடிக்கும் ஆசைகள் அழகாக கவியாக்கியமைக்குப் பாராட்டுக்கள்...........!

இலக்கியா கிட்டத்தட்ட இதே போன்ற ஏக்கக் கவிதைகள் இரண்டு இதோ உங்களுக்காக...........

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10422

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10497

இலக்கியன்
25-08-2007, 08:36 AM

மிக்க நன்றி ஓவியன் படித்தேன் அந்தக்கவிதைகளும்

மனோஜ்
25-08-2007, 08:42 AM
ஆசைகள் அனோகம் அனைத்தும் நிரைவேற ஆசைபடும் உங்கள் ஆசைகள் கவிதைஆனது அருமை அவைகள் நிறைவேற வாழ்த்துக்கள்

இலக்கியன்
25-08-2007, 08:46 AM
ஆசைகள் அனோகம் அனைத்தும் நிரைவேற ஆசைபடும் உங்கள் ஆசைகள் கவிதைஆனது அருமை அவைகள் நிறைவேற வாழ்த்துக்கள்

ஆசைகள் நிறைவேற வாழ்த்திய உங்களுக்கு நன்றி மனோஜ்

அக்னி
25-08-2007, 11:49 AM
ஆசைகள்..!
எட்டுத்திசைகளிலும்
பரவிவாழும்,
அகதித் தமிழருக்கு,
இதுவரை எட்டாத
ஆசைகள்...
பட்டியலிட்டு பட்டியலிட்டு,
ஏக்கமாக மாறிப்போன,
ஆசைகள்...
ஆனால்,
ஆசைகள் துறந்து,
மண்ணின் புளுதியை,
செந்நீர் தெளித்து,
அடக்கும் மறவர்களால்,
நிறைவேறப்போகும் ஆசைகள்...
காத்திருப்போம் அந்த
நாளுக்காய்,
ஆசைகளுடன், அவர்களுக்கான,
போற்றுதல்களையும்
வளர்த்துக்கொண்டே...

பாராட்டுக்கள் இலக்கியன்...
ஏக்கத்தில் தொடங்கி, உணர்ச்சிப் பிளம்பாக எரியும் கவிதை...
தொடருங்கள்...

பூமகள்
26-08-2007, 03:30 AM
உங்களின் உள்ளத்து ஆசைகளை அழகாக கோர்த்துச் செதுக்கியுள்ளீர்கள்..
தமிழராய் பிறந்த அனைவரது ஆசையும் உங்கள் ஆசை நிறைவேற வேண்டியே...!!
அழகுக் கவிதை..ஆசைக் கவிதை.. பாராட்டுக்கள்..!! சொல்லாடல் அற்புதம்.
வாழ்த்துக்கள் இலக்கியன்!!
இலக்கியன் என்ற பெயரை உங்கள் ஒவ்வொரு படைப்பும் நிரூபிக்கிறது......... :nature-smiley-002:

உங்கள் ஆசை நிறைவேற பிராத்தனைகளோடு,

இலக்கியன்
29-08-2007, 06:20 PM
ஆசைகள்..!
எட்டுத்திசைகளிலும்
பரவிவாழும்,
அகதித் தமிழருக்கு,
இதுவரை எட்டாத
ஆசைகள்...
பட்டியலிட்டு பட்டியலிட்டு,
ஏக்கமாக மாறிப்போன,
ஆசைகள்...
ஆனால்,
ஆசைகள் துறந்து,
மண்ணின் புளுதியை,
செந்நீர் தெளித்து,
அடக்கும் மறவர்களால்,
நிறைவேறப்போகும் ஆசைகள்...
காத்திருப்போம் அந்த
நாளுக்காய்,
ஆசைகளுடன், அவர்களுக்கான,
போற்றுதல்களையும்
வளர்த்துக்கொண்டே...

பாராட்டுக்கள் இலக்கியன்...
ஏக்கத்தில் தொடங்கி, உணர்ச்சிப் பிளம்பாக எரியும் கவிதை...
தொடருங்கள்...

அழகான பின்னுட்டம் நன்றி அக்னி

இலக்கியன்
29-08-2007, 06:22 PM
உங்களின் உள்ளத்து ஆசைகளை அழகாக கோர்த்துச் செதுக்கியுள்ளீர்கள்..
தமிழராய் பிறந்த அனைவரது ஆசையும் உங்கள் ஆசை நிறைவேற வேண்டியே...!!
அழகுக் கவிதை..ஆசைக் கவிதை.. பாராட்டுக்கள்..!! சொல்லாடல் அற்புதம்.
வாழ்த்துக்கள் இலக்கியன்!!
இலக்கியன் என்ற பெயரை உங்கள் ஒவ்வொரு படைப்பும் நிரூபிக்கிறது......... :nature-smiley-002:

உங்கள் ஆசை நிறைவேற பிராத்தனைகளோடு,

அழகான* கருத்துக்கள் தோழி பாராட்டுக்கள்