PDA

View Full Version : சந்திப்பு



rocky
17-08-2007, 02:02 PM
இன்று எதிர்பாராமல் எதிர்பட்டாள் அவள்,
கையில் குங்குமத்துடன் கோவில் வாசலில்,
இதே கோவிலின் முன்பு என்னுடன்
சண்டையிட்டு நெற்றியில் பொட்டுவைத்தவள்,
இன்று என்னைக் கண்டவுடன்
முகத்தை திருப்பி நின்றாள்,
அவளைக் காண்பதற்காகவே வாய்ப்புகளை
ஏற்படுத்திக்கொண்ட நாட்களுண்டு, ஆனால்
எதிர்வருபவளை ஏறிட்டுப் பார்க்கும்
தைரியம் இன்றில்லை.
என் மாமன் மகளை காதலிக்க
நான் தயங்கவில்லை, ஆனால்
மாற்றானுக்கு மனைவியாகப் போகும்
அவளை இன்று பார்ப்பதற்க்கும் பயப்படுகிறேன்.
என்னைப் பார்த்த நொடியே
தலைகுனிந்து அவள் நடந்தாள்
தடம் மாறி நான் நடந்தேன்.

ஆதவா
17-08-2007, 03:52 PM
வணக்கம் ராக்கி,
நீண்ட நாட்களுக்குப் பிறகு கவிதையோடு வந்திருக்கிறாய்...

கவிதையைப் பொறுத்தவரை மணத்திற்கு தயாராக இருக்கும் ஒரு பெண்ணை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் நடக்கும் கவிதை நாயகனைப் பற்றியது என்றாலும் கவிதை இன்னும் சிறப்புடன் அமைத்திருக்கவேண்டும். ஆனாலும் உன் முயற்சிக்கு நிச்சயம் என் பாராட்டு உண்டு.

தலை குனிந்து என்ற வார்த்தையை இருமுறை பயன்படுத்தத் தேவையில்லை...

மாற்றான் மனைவியை நோக்காதே என்பதையும் விட ஒரு படி மேலே போய் மாற்றானுக்கு மனைவியாகப் போகிறவளையும் நோக்காதே என்று சொன்ன கருத்து மிக உயரிய கருத்து.... கவிதைப் பட்டறையில் கொஞ்சம் உலவு. பல விஷயங்கள் புரியவரும் என்று நினைக்கிறேன்.

சந்திப்பை தவிர்த்த அந்த உள்ளம் போலவே உனது உள்ளம் என நானறிவேன்.

வாழ்த்துக்கள்..

இலக்கியன்
17-08-2007, 04:08 PM
காதலினால் தடம்மாறிய வாழ்க்கை
வாழ்த்துக்கள் தொடரட்டும்

சிவா.ஜி
18-08-2007, 05:10 AM
ஆதவா சொன்னதை விட வேறு சொல்ல எதுவுமில்லை.பண்பாட்டை அழகாய் எடுத்துச்சொல்லும் கவிதை.வாழ்த்துக்கள் ராக்கி.

ஷீ-நிசி
18-08-2007, 05:40 AM
ப்ழைய காதல், பழைய காதலி, பழைய நினைவுகள்... இன்று எதிர்நோக்கும் தைரியம் இல்லை??! ஏன்?? ஆயிரம் கேள்விகளோடு பார்க்குமே தன் பழைய காதலியரின் கண்களை எல்லா காதலரின் கண்களும்..... இதில் தவறேதும் இல்லையே....

கவிதைத்தனம் மிஸ்ஸிங் ராக்கி... தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

இளசு
18-08-2007, 06:20 AM
கதையாய் ஒரு கவிதை!

பாதித்த நிகழ்வுகளை, பொங்கும் சிந்தனையை
சுருக்கமாக, செதுக்கிச் சொல்ல கவிதை ஒரு நல்ல வழி..

அம்முயற்சியில் ராக்கிக்கு வெற்றியின் முதல் படி கிட்டிவிட்டது..
வாழ்த்துகள்... இன்னும் மேலேற!

ஆதவா, ஷீ − பின்னூட்டங்கள் சிறப்பு!

aren
18-08-2007, 10:59 AM
ராக்கி நன்றாக ஆரம்பித்திருக்கிறீர்கள். தொடருங்கள். உங்களின் கரு அருமை. எழுத எழுத இன்னும் மின்னும் உங்கள் கவிதை வரிகள். அதற்கு என் வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

rocky
18-08-2007, 03:17 PM
அனைவருக்கும் எனது நன்றிகள், இதை கிட்டத்தட்ட வாக்கியமாக அமைத்ததாகவே தோன்றுகிறது கவிதைத்தனத்திற்கு இனி நிச்சயமாக முயற்ச்சிக்கிறேன். நன்றிகள்.

ஆதவா
18-08-2007, 03:21 PM
கதையாய் ஒரு கவிதை!

பாதித்த நிகழ்வுகளை, பொங்கும் சிந்தனையை
சுருக்கமாக, செதுக்கிச் சொல்ல கவிதை ஒரு நல்ல வழி..
அம்முயற்சியில் ராக்கிக்கு வெற்றியின் முதல் படி கிட்டிவிட்டது..
வாழ்த்துகள்... இன்னும் மேலேற!

ஆதவா, ஷீ − பின்னூட்டங்கள் சிறப்பு!

ஆமாம் அண்ணா... சரியாகச் சொன்னீர்கள். அடங்க முடியா உணர்சிகள், ஆழ்மனது துக்கங்கள், சொல்லமுடியா வார்த்தைகள் ஆகியனை அனைத்தும் சொல்லக்கூடிய ஒரு வழி கவிதை,... அணிகளின் உதவியால் திட்டக்கூட செய்யலாமே!! (வஞ்சப்புகழ்ச்சி) இந்த களம் மனத்திருப்தியை சம்பாதித்துத் தரும் என்பதில் ஐயமில்லை. சம்பாதனைகளை மட்டுமே எதிர்நோக்கி உள்ளவர்களுக்கு மருந்தாகவும் இருக்கும் என்பதில் துளியும் ஆச்சரியமில்லை...

ஆதவா
18-08-2007, 03:23 PM
அனைவருக்கும் எனது நன்றிகள், இதை கிட்டத்தட்ட வாக்கியமாக அமைத்ததாகவே தோன்றுகிறது கவிதைத்தனத்திற்கு இனி நிச்சயமாக முயற்ச்சிக்கிறேன். நன்றிகள்.

முயற்சி திருவினையாக்கும்... இங்கே முயன்று கவிதைத் திறன் படைத்தவர்கள் நிறைய பேர்... (என்னையும் சேர்த்து..) அதெல்லாம் இருக்கட்டும். சம்பளம் வாங்கியாச்சா? (ட்ரீட் ட்ரீட்...)

lolluvathiyar
19-08-2007, 07:13 AM
உங்கள் கவிதை முயற்ச்சி நன்றாக இருகிறது.
ஆனால் இன்னும் உரை நடை போலவே இருகிறது.
சிறிது மெருகேற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும்

அமரன்
19-08-2007, 06:30 PM
ஆதவா சொன்னதுபோல் பிறர்மனை நோக்குவது தவறானது என்பதை தாண்டி பிறர்மனை ஆகப்போறவளையும் பார்க்காதே என்ற அருமையான கருவைத் தாங்கியுள்ள கரு. இதை ஆண்களுணர்ந்தால் பெண்களைக் கிண்டல் செய்வதன் மூலமும் இதர வழிகள் மூலமும் ஏற்படும் விபரீதங்கள் தவிர்க்கப்படுமே. உணர்வார்களா மக்கள். தொடருங்கள். சிகரம் தொடுங்கள்.

இனியவள்
19-08-2007, 06:51 PM
ரொக்கி உங்கள் கவிதை
நன்று வாழ்த்துக்கள்