PDA

View Full Version : அவள்

இலக்கியன்
16-08-2007, 03:38 PM
http://img522.imageshack.us/img522/5562/1907282744hf6.jpg (http://imageshack.us)

(நிலா)
வான் வெளியில்
வண்ண நிலா
பொட்டு வைத்த
வட்ட நிலா
சேயைத்தாலாட்டும்
தங்கத்தாய் அவளா

(விண்மீன்)
கார் இருளில்
விண் தாரகையா
கண் சிமிட்டும்
பெண் காரிகையா
காதலன் விழிகளில்
காதல் பைங்கிளியா

(வானவில்)
வான வில்லின்
வர்ண ஜாலங்களா
கண்களில் அவள்
காமா பாணங்களா
மேகத்தில் தீட்டிய
மேனகைதான் அவளா

(பூமி)
பொறுமையில் அவள்
பெண் பெட்டகமா
உயிர் கொடுத்த
உன்னத சித்திரமா
சுமைதாங்கும்-அந்த
தூண்கள் அவள்தானா

(தமிழ்)
கவிதைகளில் அவள்
காதல் கற்பனையா
இனிக்கின்ற தமிழ்
தேன் சுவை உச்சமமா
பேசும் மொழிகளின்
தாயும் அவள்தானா

அமரன்
16-08-2007, 05:06 PM
காலங்களில் அவள் வசந்தம் பாடலின் சாயலில் அமைந்த சந்தங்களில் கொள்ளைகொள்ளும் தேன்கிண்ணம் இக்கவிதை. கல்லிலே கலைநயம் கண்டோருடன் இயற்கையில் அவள் நயம் கண்டு இணைந்து செந்தமிழ்பெண்ணவளோ எனக்கேட்டு விருந்து படைந்த இலக்கியனுக்குபாராட்டுக்களும் நன்றியும்.

இலக்கியன்
16-08-2007, 05:11 PM

இயற்கையைப் பெண்ணாகப்போற்றி பல கவிஞர்கள் கவிதைகள் பாடல்கள் புனைந்தார்கள் அதேபோல அந்தபால் கடலை நக்கிப்பார்க்க இந்த இலக்கியன் எனும் பூனைக்கு ஆவல் அதன் வெளிப்பாடு இந்த வரிகள். நன்றி அமரன் உங்கள் அழகான பின்னூட்டத்திற்கு

ஓவியன்
16-08-2007, 10:28 PM
உங்களது முயற்சிக்குப் எனது பாராட்டுக்கள் இலக்கியன், ஆனால் எங்கேயோ கேட்ட மாதிரி உணர்வதை மட்டும் என்னால் ஏனோ தவிர்க்க முடியாமலுள்ளது............

இலக்கியன்
17-08-2007, 09:11 AM
உங்களது முயற்சிக்குப் எனது பாராட்டுக்கள் இலக்கியன், ஆனால் எங்கேயோ கேட்ட மாதிரி உணர்வதை மட்டும் என்னால் ஏனோ தவிர்க்க முடியாமலுள்ளது............

வணக்கம் ஓவியன் கருத்துக்கு நன்றி
நான் பாடல்களின் மெட்டை கருவாக வைத்து புனையவில்லை இந்தக்கவிதை

இளசு
17-08-2007, 08:52 PM
இலக்கியப்பால் அருந்திய கவி அன்னம் என
இலக்கியனை வாழ்த்தலாம்...

பாராட்டுகள் இலக்கியன்... பெயருக்குப் பெருமை சேர்க்கிறீர்கள்..

சிவா.ஜி
18-08-2007, 05:32 AM
ஒவ்வொரு கருவுக்கும் ஒவ்வொருவிதமாய் கவி வடித்து உள்ளத்தை கொள்ளைக்கொண்டுவிட்டீர்கள் இலக்கியன். வாழ்த்துக்கள்.

இலக்கியன்
18-08-2007, 06:50 PM
கருத்துக்கள் தந்த அணைவருக்கும் நன்றி

இலக்கியன்
28-09-2007, 07:18 PM
இலக்கியப்பால் அருந்திய கவி அன்னம் என
இலக்கியனை வாழ்த்தலாம்...

பாராட்டுகள் இலக்கியன்... பெயருக்குப் பெருமை சேர்க்கிறீர்கள்..

நன்றி அண்ணா உங்கள் வாழ்த்துக்கு

இலக்கியன்
28-09-2007, 07:19 PM
ஒவ்வொரு கருவுக்கும் ஒவ்வொருவிதமாய் கவி வடித்து உள்ளத்தை கொள்ளைக்கொண்டுவிட்டீர்கள் இலக்கியன். வாழ்த்துக்கள்.

நன்றி சிவாஜி அண்ணா
ஊக்கம் கொடுக்கும் கருத்துக்களுக்கு நன்றி