PDA

View Full Version : எறும்பு...



மன்மதன்
16-08-2007, 01:30 PM
இதை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=1108)படித்ததும் இது நியாபகம் வந்தது..

ஒருதடவை தலை வீட்டுக்கு ஆதவா வந்த போது , தல வீட்டில் எறும்புகள் வராம இருக்க சாக்பீஸால் கோடு போட்டிருந்தார்..

அத பார்த்ததும் நம்ம ஆதவரு..

'தலை , இறந்தவர் சடலத்தை சுற்றி ஏன் சாக்பீஸால் கோடு போடுறாங்கன்னு இப்பத்தான் புரியுது' என்றார்..



தலைக்கு ஒண்ணுமே புரியல..

ஆதவரு சொன்னாரு.. 'அட அப்பத்தானே எறும்புகள் மொய்க்காது '... ஆஹா என்ன ஒரு கண்டுபிடிப்பு.... :D :D

அமரன்
16-08-2007, 01:40 PM
அவர்தான் அறிவிலாதவராச்சே..

lolluvathiyar
16-08-2007, 01:45 PM
அவர்தான் அறிவிலாதவராச்சே..

இதுமாதிரி உன்மைகளை போட்டு உடைத்தற்க்கு வன்மையாக பாராட்டுகிறேன்

ஆதவா
16-08-2007, 05:59 PM
இந்த அறிவியல் உண்மையை உலகம் என்றாவது ஒருநாள் நம்பும்... காத்திருக்கிறேன்..

sadagopan
17-08-2007, 05:02 AM
அவர்தான் அறிவிலாதவராச்சே..

அவர் அறிவில் + ஆதவரா

விகடன்
17-08-2007, 07:11 AM
அவர் அறிவில் + ஆதவரா

இது ரொம்ப ஓவர் சடகோபன்.
கூடிய விரைவில் உங்களுக்கென ஒரு திரி, உங்களி சாகசங்களை எடுத்திரைக்கும் முகமாக நம்ம ஆதவாவினால் ஆரம்பிக்கப்படும்... பட்சி சொல்கிறது..

ஓவியன்
17-08-2007, 10:14 AM
இந்த அறிவியல் உண்மையை உலகம் என்றாவது ஒருநாள் நம்பும்... காத்திருக்கிறேன்..

நிச்சயமாக................!

இந்த உலகமே இப்படித்தான் ஆதவா!

சாக்ரடிசைக் கூட அந்தக் காலத்திலே பைத்தியம் என்று தான் சொன்னாங்க..............! :nature-smiley-003:

ஓவியன்
17-08-2007, 10:20 AM
அவர் அறிவில் + ஆதவரா
உங்களுக்காக செல்வன் அண்ணாவின் கவிதை வரிகள்...........

கவிதை என்பது இயல்-ஆதவரே
கண்மூடி நடக்க இயலாதவரே
கவிக்கு அழகு இசை-ஆதவரே
கேடுகள் செய்ய இசையாதவரே

ஆடலும் பாடலும் கலை-ஆதவரே
ஆசைகள் வந்து கலையாதவரே
ஊடல்கள் கூடல்கள் இல்-ஆதவரே
ஊக்கத்தில் குறைவு இல்லாதவரே

உணர்வுகள் இல்லாதது கல்-ஆதவரே
உண்மைக்கு ஒவ்வாதது கல்லாதவரே
மணக்கும் மல்லிகை மலர்-ஆதவரே
மயக்கும் புகழ்ச்சிக்கு மலராதவரே

மொழிகளின் தொடக்கம் சொல்-ஆதவரே
மெய்யினை அன்றி சொல்லாதவரே
அழியும் உயிர்முதல் செல்-ஆதவரே
அல்லது பக்கம் செல்லாதவரே

ஆமையிடம் தோற்றது முயல்-ஆதவரே
அடுக்காய் தோற்பர் முயலாதவரே
பூமியை காத்தல்நம் பணி-ஆதவரே
புல்லர்கள் யார்க்கும் பணியாதவரே

அணிவதில் உயர்ந்தது உடை-ஆதவரே
அன்பன்றி எதற்கும் உடையாதவரே
மனிதம் உயர்ந்தது அறிவில்-ஆதவரே
மனிதம் மறந்தோர் அறிவில்லாதவரே

mania
17-08-2007, 10:24 AM
நல்ல டைமிங் ஓவியன்....
அன்புடன்
மணியா...

அமரன்
18-08-2007, 08:25 AM
அவர் அறிவில் + ஆதவரா

சரியாகக் கண்டு பிடித்துவிட்டீர்களே.
இதையும் உலகம் விரைவில் உணரும்
காத்திருக்கும் கிளி
அமரன்

மனோஜ்
18-08-2007, 09:13 AM
ஆ தவர் இல்லை அவரு அதான் இந்த மூல

இதயம்
18-08-2007, 09:19 AM
நிச்சயமாக................!

இந்த உலகமே இப்படித்தான் ஆதவா!

சாக்ரடிசைக் கூட அந்தக் காலத்திலே பைத்தியம் என்று தான் சொன்னாங்க..............! :nature-smiley-003:

வஞ்சப்புகழ்ச்சியில் உங்கள மிஞ்ச ஆள் இல்ல ஓவியன்.!:D இது தெரியாம ஆதவன் உங்களை ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவர்னு நெனச்சிக்கிட்டிருப்பாரு.. பாவம்..!!:D:D

அமரன்
18-08-2007, 09:20 AM
இந்தக்காலத்தில் என சொல்லவில்லையே...! கலகம் ஏற்படுத்தி கூட்டணியை கலைக்க நினைக்கின்றீங்களா..?

இதயம்
18-08-2007, 09:28 AM
இந்தக்காலத்தில் என சொல்லவில்லையே...! கலகம் ஏற்படுத்தி கூட்டணியை கலைக்க நினைக்கின்றீங்களா..?

இதை "கலகக்காரர்கள் சங்கத்தின்" மாநில தலைவர் சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்..!!:D:D