PDA

View Full Version : நீ...



ப்ரியன்
16-08-2007, 11:57 AM
நீ...
****

நீ
மௌனம் மொழியும்
கவிதை!

*

நீ
தேன் சுரக்கும்
பட்டாம்பூச்சி!

*

நீ
உயிர் சூடும்
பூ!

*

நீ
எழுதா
கவிதை!

*

நீ
என் காதலுக்கான
தண்டணை!

*

- ப்ரியன்.

இணைய நண்பன்
16-08-2007, 12:04 PM
நீ−2
−−−

நீ
காதல் மொழி பேசும்
தேசம்
*

நீ
தேன் குடிக்கும்
வண்டு

*

நீ
வரையாத
ஓவியம்

*

நீ
என் காதலுக்கான
அன்பளிப்பு

இதயம்
16-08-2007, 12:11 PM
நீ..
தொடா
வானம்.!

நீ..
சுடா
தீ..!

நீ..
வாடா
மலர்..!


நீ
ஓடா
மான்..!

நீ
பாடா
தேனீ..!


நீ
கரையா
சர்க்கரை..!

நீ
உறையா
பனிக்கட்டி..!

நீ..
வரையா
ஓவியம்..!

நீ
இறையா
நட்சத்திரம்..!

நீ
குறையா
செல்வம்..!

நீ
மறையா
நிலவு..!

சிவா.ஜி
16-08-2007, 12:16 PM
அப்படி போடுங்க அருவாளை....ஒரு மிகச்சிறந்த கவிதையால் மட்டுமே வாசிப்பவரையும் கவி பாடத் தூண்டும்.ப்ரியனின் கவிதையும் இக்ராம் மற்றும் இதயத்தின் கவிதையும் பிரமாதம்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

aren
16-08-2007, 12:26 PM
ப்ரியன் அவர்களின் கவிதைக்கு பின்னூட்டக் கவிதைகளாக இக்ராமும், இதயமும் பிரமாதம். இதை வெறும் வார்த்தைகளால் சொல்லமுடியாது. மூவருக்கு என்னுடைய இ−பணமுடிப்பு உடனே.

அமரன்
16-08-2007, 12:29 PM
நீ என்பது நானாக இருந்தால் எப்படி இருக்கும் என ஏங்க வைத்த கவிதைகள். பாராட்டுக்கள் மூவருக்கும். காதலில் வன்முறையை(அப்படிப்போடு அருவாளை) கலக்கும் சிவாவுக்கு கண்டனம்.(ச்சும்மா)

இணைய நண்பன்
16-08-2007, 12:32 PM
நன்றி நண்பர்களே.சிவா.ஜி,அரேன்,அமரன்

இதயம்
16-08-2007, 12:34 PM
நீ
பூங்கா
வாசம்..!

நீ
பொங்கா
எரிமலை..!

நீ
நீங்கா
உயிர்..!

நீ
மங்கா
புகழ்..!

நீ
(ஸ்ரீ)லங்கா
தமிழ்..!

இதயம்
16-08-2007, 12:41 PM
நீ
விழுங்கா
உணவு..!

நீ
துலங்கா
உண்மை..!

நீ
வழங்கா
பரிசு..!

நீ
கலங்கா
தமிழச்சி..!

சிவா.ஜி
16-08-2007, 12:42 PM
யாருங்க அந்த ஸ்ரீ........!!!

இதயம்
16-08-2007, 12:47 PM
நீ
படிக்கா
கவிதை..!

நீ
வெடிக்கா
மொட்டு..!

நீ
துடிக்கா
இதயம்..!

நீ
அடிக்கா
அப்பா..!

நீ
கடிக்கா
குலோஜாமூன்..!

நீ
நடிக்கா
(கவர்ச்சிக்)கன்னி..!

இதயம்
16-08-2007, 12:49 PM
யாருங்க அந்த ஸ்ரீ........!!!

காதலியை இனிமையான இலங்கைத்தமிழோடு ஒப்பிட்டிருக்கிறேன்..! குடும்பத்தில் குழப்பம் பண்ண ஏன் கொலை வெறியோடு அலைகிறீர்கள்..!:musik010::musik010:

இதயம்
16-08-2007, 12:52 PM
நீ
இடிக்கா
மாளிகை..!

நீ
வடிக்கா
பொற்சிலை..!

நீ
குடிக்கா
மது..!

நீ
ஒடிக்கா
கரும்பு..!

நீ
முடிக்கா
கதை..!

சிவா.ஜி
16-08-2007, 12:52 PM
காதலியை இனிமையான இலங்கைத்தமிழோடு ஒப்பிட்டிருக்கிறேன்..! குடும்பத்தில் குழப்பம் பண்ண ஏன் கொலை வெறியோடு அலைகிறீர்கள்..!:musik010::musik010:

ஓஹோ.....இலங்கையில இருக்கிற அந்த பொண்ணோட பேர் தமிழ்−ஆ...அழகான பெயர். வாழ்த்துக்கள் இதயம்.

வெண்தாமரை
16-08-2007, 12:53 PM
வாவ் சூப்பர்.. அழகாக அசத்திவீட்டீர்கள்..

இதயம்
16-08-2007, 12:57 PM
நீ
காணா
அன்னம்..!

நீ
தோணா
கற்பனை..!

நீ
கோணா
குணம்..!


நீ
மேனா
மினுக்கி..!

இதயம்
16-08-2007, 01:00 PM
நீ
தீண்டா
நாகம்..!

நீ
தாண்டா
எல்லை..!

நீ
தூண்டா
கிளர்ச்சி..!

நீ
சீண்டா
சில்மிஷம்..!

நீ
ஏண்டா
அழகு..?!

இதயம்
16-08-2007, 01:05 PM
நீ
கறக்கா
பால்..!

நீ
பறக்கா
புறா..!


நீ
பிறக்கா
குழந்தை..!


நீ
துறக்கா
இன்பம்..!


நீ
மறக்கா
காதலி..!

நீ
திறக்கா
சொர்க்கம்..!

நீ
இறக்கா
காதல்..!

வெண்தாமரை
16-08-2007, 01:11 PM
நீ நீ..
உங்க மனைவியை நினைத்து கவிதை அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

இதயம்
16-08-2007, 01:15 PM
நீ
சுட்டா
விரல்..!

நீ
குட்டா
கை..!

நீ
கொட்டா
மழை..!

நீ
எட்டா
கனி..!

நீ
வெட்டா
வாழை..!

நீ
பட்டா
நிலம்..!

நீ
சொட்டா
தேன்..!

நீ
தொட்டா
இன்பம்..!

இதயம்
16-08-2007, 01:24 PM
நீ
தீரா
பசி..!

நீ
ஆறா
சோறு..!

நீ
கூறா
நகைச்சுவை..!

நீ
பாரா
அதிசயம்..!

நீ
ஏறா
சிகரம்..!

நீ
மாறா
கொள்கை..!

நீ
சோரா
மழலை..!

நீ
வாரா
சுனாமி..!

நீ
கோரா
நிவாரணம்..!

நீ
மேரா
லடிக்கி..!:nature-smiley-008:

இதயம்
16-08-2007, 01:29 PM
நீ
வணங்கா
சிலை..!

நீ
சிணுங்கா
செல்ஃபோன்..!

நீ
முணங்கா
காமுகி..!

நீ
இணங்கா
பசு..!

நீ
சுணங்கா
வீராங்கனை..!!

இலக்கியன்
16-08-2007, 02:32 PM
கவிதைகளால் கவிதை பிறப்பித்தீர் வாழ்த்துக்கள்

இதயம்
18-08-2007, 05:31 AM
அப்படி போடுங்க அருவாளை....ஒரு மிகச்சிறந்த கவிதையால் மட்டுமே வாசிப்பவரையும் கவி பாடத் தூண்டும்.ப்ரியனின் கவிதையும் இக்ராம் மற்றும் இதயத்தின் கவிதையும் பிரமாதம்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

சிறு சொற்களை கொண்டு கவி புனைவது சற்று எளிதாகவே தெரிகிறது, இது கவி என ஏற்கப்படும் பட்சத்தில்..! வலிகளுடன் இருந்தாலும், மெல்லிய நடையே பயணத்தின் தூரத்திற்கு வலு சேர்க்கும். அவ்வகையில் செய்த சிறு முயற்சி இது. இதனால் கிடைக்கும் சக்தி கொண்டு பெருங்கவிதை படைக்க முடியும் என்ற நம்பிக்கை வருகிறது.

திரியில் இடமளித்த ப்ரியன், கூட வந்து ஆதரவு தந்த இக்ராமுடன் சேர்த்து உங்களுக்கும் என் நன்றிகள்..!

இதயம்
18-08-2007, 05:32 AM
ப்ரியன் அவர்களின் கவிதைக்கு பின்னூட்டக் கவிதைகளாக இக்ராமும், இதயமும் பிரமாதம். இதை வெறும் வார்த்தைகளால் சொல்லமுடியாது. மூவருக்கு என்னுடைய இ−பணமுடிப்பு உடனே.

உங்களின் இதய கருத்து வடிப்புக்கும், பண முடிப்புக்கும் என் நன்றிகள் ஆரென்..!

இதயம்
18-08-2007, 05:35 AM
நீ என்பது நானாக இருந்தால் எப்படி இருக்கும் என ஏங்க வைத்த கவிதைகள். பாராட்டுக்கள் மூவருக்கும். காதலில் வன்முறையை(அப்படிப்போடு அருவாளை) கலக்கும் சிவாவுக்கு கண்டனம்.(ச்சும்மா)

காதலில் அமர கவிதைகளை படைக்கும் அமரனின் வாழ்த்து அமரத்துவம் வாய்ந்தது. நன்றிகள் அவருக்கு..!!

காதல் வன்முறைக்கு, வன்முறை தான் பதில்.! சிவாவை போட்டுவிடுங்களேன், உங்கள் கவிதையால்..!:thumbsup:

இதயம்
18-08-2007, 05:39 AM
வாவ் சூப்பர்.. அழகாக அசத்திவீட்டீர்கள்..

காதலுக்கு மேன்மையளிப்பவர்கள் பெண்கள். காரணம், அவர்களின் ஒழுக்கம், அழகு, மென்மை, நாணம்..! நான் எழுதியதை ஒரு பெண்ணே பாராட்டியது காதலே என்னை பாராட்டியது போல் பெருமையாக உணர்கிறேன்.! நன்றி காதலுக்கு.. மன்னிக்க...வெண்தாமரை என்ற பெண்ணுக்கு..!

இதயம்
18-08-2007, 05:41 AM
கவிதைகளால் கவிதை பிறப்பித்தீர் வாழ்த்துக்கள்

நான் விரும்பும் இலக்கியம், இலக்கியன் உருவில் வந்து வாழ்த்தியது கண்டு நெஞ்சம் மகிழ்ச்சியில் நிறைகிறது. வாழ்த்துக்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்..!

இளசு
18-08-2007, 07:09 AM
ஆஹா....

என்ன நடக்குது இங்கே!!

ப்ரியனின் தனிப்பாணி முதல் கவிதை..
உடனே இக்ராமின் வினையூக்கப் பின் கவிதை!

அப்புறம்.. அப்புறம்
இதயத்தின் தொடர் சிறுசாரல் மழை!

அதிலும் அடிக்கா அப்பா! அப்பப்பா!

பல மென்மழைத்துளிகள் இடையே
சில ஆலங்கட்டிகளும் ( மேனா மினுக்கி போல சில)
அவற்றை அகற்றி... துளிளைக் கோர்த்தால்
அழகிய அன்பு நனையலில் அவள்!

மிக மிக நேர்த்தியான கவித்தொடருக்கு
என் சிறப்பு பாராட்டுகள் இதயம்!

சாரலுக்கு 1200 − ஆலங்கட்டிகள் வகையறா தள்ளுபடி 200..

ஆக 1000 அன்பளிப்பு உங்களுக்கு!

இதயம்
18-08-2007, 07:58 AM
கவிதையின் முழு அங்கீகாரம் படித்தவர்களின் மனம் நிறைந்த பாராட்டு..! மன்றத்தில் இளசு அவர்களின் பாராட்டு அதையும் தாண்டிய பெரும் அங்கீகாரம், கௌரவம் என்பது எண்ணம், நம்பிக்கை..! அது எனக்கு கிடைத்ததை மிகப்பெருமையாக கருதுகிறேன். இதை விட எனக்கென்ன வேண்டும், எனக்குள் இருக்கும் கவிச்சிறுவன் நடைபயில தொடங்க..?! ஆம்.. அவன் தொடங்கி விட்டான் தன் பயணத்தை மழலை நடையோடு..!

மெல்லிய சாரலோடு, அவ்வப்போது ஆல*ங்கட்டியும் விழுந்தது உண்மைதான். காரணம், ஆல*ங்கட்டியும் சில நேரங்களில் அவசியப்படுகிறது. உதா. மென்மையால் மேன்மையடையும் காதலிலும், காமத்திலும் வன்முறை அவ்வப்போது விரும்பப்படுவதுண்டு. அதை மனதில் கொண்டு தான் ஆல*ங்கட்டியை அதிரடியாய் விழச்செய்தேன்.

என் எழுத்துக்கு கவி அங்கீகாரம் கொடுத்த நண்பர் இளசு, மன்ற நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்..!

இதயம்
18-08-2007, 08:00 AM
நீ
அறுக்கா
வாள்..!


நீ
கருக்கா
மேகம்..!

நீ
பருக்கா
பாவை..!

நீ
உருக்கா
பொன்..!


நீ
முறுக்கா
காதலி..!

நீ
வெறுக்கா
இதயம்..!


நீ
மறுக்கா
கொடையாளி..!

நீ
(உயிர்) எடுக்கா
கொலையாளி..!

இளசு
18-08-2007, 08:08 AM
காதலிலும், காமத்திலும் வன்முறை அவ்வப்போது விரும்பப்படுவதுண்டு. அதை மனதில் கொண்டு தான் ஆல*ங்கட்டியை அதிரடியாய் விழச்செய்தேன்.

.!

ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹா! ரசித்தேன் இதயம்...!

நெய் வடியும் வெண்பொங்கலில்
நடுநடுவே நாவை வருடும் கருமிளகு..

அளவோடும் அவ்வப்போதும்
அதிர்வாய்.. கொஞ்சம் எதிர்பார்க்காதபோதும்...!!

நீங்கள் சொல்லும் மென் −வன்மை!!!!


ஒப்புக்கொள்கிறேன்.. சுவைகூட்டல் நோக்கத்தை!




அடுத்து வந்த சாரலுக்கும்
அடுத்தடுத்து வரப்போகும் கவிமழைக்கும்
வாழ்த்துகள்... !!

இதயம்
18-08-2007, 08:14 AM
நீ
ஏற்கா
மதம்..!

நீ
விற்கா
கல்வி..!

நீ
கற்கா
கலவி..!

விகடன்
18-08-2007, 08:14 AM
நீ என்ற தனி எழுத்தை மையமாகக் கொண்டே இவ்வளவு எழுதமுடியுமா என்றௌ ஏங்க வைத்துவிட்டீர்கள் ப்ரியன், இக்ராம், இதயம். மூவரிற்கும் பாராட்டுக்கள்.

பூமகள்
18-08-2007, 08:18 AM
நீ
பார்க்கா
பிரபஞ்சம்..!

நீ
சுவைக்கா
அமிர்தம்..!

நீ
அழியா
மாற்றம்..!

நீ
தூரா
மழை..!

நீ
சலிக்கா(த)
தமிழ்..!

நீ
அறியா
உன்னதம்...!

நீ
மரியா
மனிதம்...!

நீ
எழுதா
என்கவி...!


அற்புதம் ப்ரியன் அண்ணா. வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்..!
அனைத்து சகோதர்களுக்கும் வாழ்த்துக்கள்..!

இதயம்
18-08-2007, 08:21 AM
நீ
விளங்கா
புதிர்..!

நீ
கலங்கா
மனம்..!

நீ
முழங்கா
மந்திரம்..!

நீ
துலங்கா
செப்புச்சிலை..!

நீ
புழங்கா
அரண்மனை..!

இதயம்
18-08-2007, 08:30 AM
நீ
அள்ளா
வைரம்..!

நீ
கிள்ளா
மலர்..!

நீ
நில்லா
தேர்..!

நீ
சொல்லா
சிந்தனை..!

நீ
கொள்ளா
போதைப்பொருள்..!

நீ
வெல்லா
வீராங்கனை..!

நீ
தள்ளா
தாய்..!

நீ
கொல்லா
குற்றவாளி..!

பூமகள்
18-08-2007, 08:48 AM
நீ
முடியா
வாழ்க்கை..!

நீ
தடியா
தாரகை..!

நீ
சுமக்கா
பாரம்...!

நீ
அரும்பா
தளிர்..!

நீ
விசும்பா
துயர்...!

நீ
துடைக்கா
இரவு..!

நீ
வெடிக்கா
பஞ்சு...!

நீ
முளையா
விருட்சம்...!

இதயம்
18-08-2007, 11:22 AM
நீ
உடுத்தா
சேலை..!

நீ
படுத்தா(த)
குழந்தை..!

நீ
தடுத்தா
நியாயம்..!

நீ
கொடுத்தா
முத்தம்..!

நீ
எடுத்தா
பாக்கியம்..!

இதயம்
18-08-2007, 11:28 AM
நீ
வாழா
அன்னம்..!

நீ
சோழா
பூரி..!

நீ
கூலா
கோக்..!

நீ
ஆளா
தேசம்..!

நீ
வீழா
சாம்ராஜ்யம்..!

நீ
மீளா
சொர்க்கம்..!

பூமகள்
18-08-2007, 11:30 AM
நீ
அனிச்சையான
இச்சை..!

நீ
தவறாத
சரி...!

நீ
தீராத
தாகம்..!

நீ
கவியான
மொழி..!

நீ
மற்றோர்
நகபதி..!

ஓவியன்
18-08-2007, 11:40 AM
பிரியன் உங்கள் கவிதை அழகென்றால் , நீங்கள் எடுத்துக் கொடுத்த அடியை தாளம் பிசகாமல் பின்பற்றி வரும் இதயத்தையும் பூமகளையும் என்னவென்பது..............

நண்பர்களே மனதிழந்து இரசித்தேன் பல இடங்களில், மனதார பாராட்டுகிறேன் − மீள மீள வருவேன் உங்கள் வரிகளில் கொஞ்சி விளையாடும் தமிழ் அழகை பருகி இரசிக்க..............

இதயம்
18-08-2007, 12:10 PM
நீ
கொழுக்கா
குதிரை..!

நீ
குலுக்கா
(நாட்டியத்)தாரகை..!

நீ
பழுக்கா
நெல்லி..!

நீ
உலுக்கா
நாவல்(மரம்)..!

நீ
வெளுக்கா
இரவு..!

நீ
அலுக்கா
பாடம்..!

நீ
சலிக்கா
விளையாட்டு..!

இதயம்
18-08-2007, 12:18 PM
நீ
உழுகா
நிலம்..!

நீ
ஒழுகா
தேனடை..!

நீ
விழுகா
பைசா கோபுரம்..!

நீ
அழுகா
மழலை..!

நீ
புழுகா
அரசியல்வாதி..!

நீ
முழுகா
பொண்டாட்டி..!

ஓவியன்
18-08-2007, 12:18 PM
நீ
அனிச்சையான
இச்சை...!

வித்தியாசமான முரண் உவமை − பாராட்டுக்கள் பூமகள்.....

இதயம் பின்னுறீங்களே − அருமையோ அருமை............

பூமகள்
18-08-2007, 12:47 PM
நீ
சிரியா
புன்னகை..!

நீ
மரியா
மின்மினி..!

நீ
பரியா
கண்மணி..!

நீ
புரியா
பாவுகம்...!


நீ
வரியா
வரியிலார்...!